டோயோட்டோ நிறுவனத்தின் தலைவர் திரு. அகியோ டோயோடாவும் சுசூகி நிறுவன தலைவர் திரு. ஒ. சுசுகியும் புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
டோயோட்டோ - சுசுகி நிறுவனங்களின் வர்த்தகக் கூட்டுறவு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டுறவு மூலம் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் டோயோட்டோ நிறுவனத்திற்கு இருக்கும் சர்வதேச வல்லமையை சிறிய கார்களை குறிப்பாக இந்தியாவிற்கு ஏற்றவாறு கார்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி வலிமை கொண்ட சுசுகி நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை இந்தியா பயன்படுத்த ஏதுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த தொழில்நுட்பத்திற்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் உற்பத்தி வாய்ப்பை அதிகரிக்கும்.
அதனால், இந்த கூட்டுறவு முயற்சி இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும், இந்தியாவில் இருந்து புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உருவாகும்.