ரெய்சினா பேச்சுவார்த்தைக்கு இடையே 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நிலையிலான குழுவினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (15.01.2020) அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
லாட்வியா வெளியுறவு அமைச்சர் திரு எட்கர்ஸ் ரின்கெவிக்ஸ், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் திரு அப்துலாசிஸ் கமிலோவ், ஹங்கேரி வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பீட்டர் சிஜராட்டோ, ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாக்டர் ஹம்துல்லா மொஹீப், செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு தாமஸ் பீட்ரிக், மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா ஷாஹித், பங்களாதேஷ் செய்தித்துறை அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், எஸ்டோனியா வெளியுறவு அமைச்சர் திரு உருமாஸ் ரெய்ன்சாலு, தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத்துறை அமைச்சர் டாக்டர் நாலேடி பண்டோர், டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் திரு ஜெப்பே கோஃபோட், காமன்வெல்த் தலைமைச் செயலாளர் திருமதி பேட்ரிஷியா ஸ்காட்லாண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு விளாடிமிர் நோரோவ் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பிரதமரை சந்தித்தனர்.
இந்தத் தலைவர்களை இந்தியாவுக்கு வரவேற்ற பிரதமர், 2020 ரெய்சினா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர்களைப் பாராட்டினார். விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டு வரும் பெருமளவிலான முயற்சிகள் பற்றியும், உலக வளர்ச்சிக்கான பெரும் சவால்களைப் போக்குவதற்கும் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார்.