- பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மாண்பு மிகு திரு. ஸ்காட் மோசனை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
- இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். உயர்நிலையில் அடிக்கடி நடைபெறும் சந்திப்புகள் மற்றும் பரிமாற்றங்கள் காரணமாக உறவுகளில் ஆக்கபூர்வ உத்வேகம் ஏற்பட்டிருப்பதாக இருவரும் அறிந்தனர். இந்திய – ஆஸ்திரேலிய இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான விருப்பத்தை இருவரும் உறுதிப்படுத்தினர்.
- அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளமையை மேம்படுத்துவதற்கு இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, திறந்தநிலையிலான, வெளிப்படைத் தன்மையான பங்கேற்பு நிலையிலான செயல்பாடுகளை மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்கள் ஒரே திசையை நோக்கியதாக இருப்பதை இரு தலைவர்களும் கவனத்தில் கொண்டனர். இதனால் இரு தரப்பில், பிராந்திய அளவில் மற்றும் பலதரப்பு நிலையில் வாய்ப்புகளை அதிகரிப்பதாக இவை அமைந்திருப்பதை அவர்கள் அறிந்தனர்.
- பாதுகாப்பு விஷயங்களில் ஈடுபாடு மேம்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்ட அவர்கள், கடல்வள துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலின் ஆபத்து குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட நெருக்கமாக இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
- ஜனவரி 2020-ல் இந்தியாவுக்கு வரும்படி ஆஸ்திரேலிய பிரதமருக்கு விடுத்த அழைப்பை பிரதமர் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். ரெய்சினியா பேச்சுவார்த்தை நிகழ்வில் தாம் உரையாற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் வலியுறுத்தினார். அந்தப் பயணத்தில் வெற்றிகரமான பயன்கள் கிடைக்கும் வகையில், முழுமையான ஆயத்தங்கள் செய்வதன் அவசியத்தை இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர்.
Accelerating friendship with Australia.
— PMO India (@PMOIndia) November 4, 2019
Prime Ministers @narendramodi and @ScottMorrisonMP met on the sidelines of the @ASEAN related Summits in Bangkok. pic.twitter.com/JT1BeEFntt