ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடா பிரதமர் மேதகு திரு. ஜஸ்டின் ட்ரூடோவுடன் 27 ஜூன், 2022 அன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட வலுவான ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில், அவர்கள் இந்தியா-கனடா இருதரப்பு உறவுகளை விவாதித்தனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, அத்துடன் மக்கள் இடையேயான உறவுகளை வலுபடுத்துதல் குறித்தும் விவாதித்தனர்.
பரஸ்பர தொடர்புடைய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
Reviewed the full range of India-Canada ties during the fruitful meeting with PM @JustinTrudeau. There is immense scope to boost cooperation in sectors like trade, culture and agriculture. 🇮🇳 🇨🇦 pic.twitter.com/RjqxPvtfOi
— Narendra Modi (@narendramodi) June 27, 2022