பிப்ரவரி 16ந் தேதியன்று தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வந்தபோது, ரிக்ஷாக்காரர் மங்கல் கேவட்டை சந்தித்தார். இந்த ரிக்ஷாக்காரர் தனது மகளின் திருமணத்திற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்
பிரதமர் அலுவலகத்திற்கு கேவட் நேரடியாக சென்று தமது அழைப்பிதழை வழங்கினார். இதனை கவனத்தில் கொண்ட பிரதமர் மோடி, கேவட்டுக்கு தாமே பதில் அனுப்பினார். கேவட் மகளின் திருமணத்தையொட்டி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் கடிதம் எழுதினார். இதனால் கேவட்டும் அவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரதமர் மோடி, தமது வாரணாசி வருகையின்போது, தாமே கேவட்டை சந்தித்தது, பிரதமரை சந்திக்க விரும்பிய அவரை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பிரதமர் மோடியின் துய்மை இந்தியா இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட கேவட், டோம்ரி கிராமத்தில் கங்கைதொடர்ச்சி மலைப்பகுதியில் தூய்மை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று அதனை தாமே தூய்மைப்படுத்தினார். கங்கை அன்னையின் பக்தரான கேவட், இந்த ஆற்றை மேம்படுத்துவதற்கு தமது வருவாயின் ஒரு பகுதியை செலவிடுகிறார்.