According to a recent survey, on an average, 70% of listen to #MannKiBaat regularly and say the programme have enhanced sentiment of positivity in the society: PM Modi
When I had begun #MannKiBaat, I had decided that there should be no politics in it; neither should it be about praising the government's steps nor about Modi: PM
#MannKiBaat is not about government but about our society and an aspirational India: PM Modi
For the bright future of India, the talent of the masses should be encouraged; it is a collective responsibility of us all and #MannKiBaat is a humble and small effort in this direction: PM Modi
Whenever I read a letter or suggestion for #MannKiBaat, I can easily gauge the sentiments and expectations of people: PM Modi
Initiatives like cleanliness, drugs free India, selfie with daughter have been very covered in an innovative manner and furthered by the media: PM Modi during #MannKiBaat
‘Accept’ rather than ‘except’, ‘discuss’ rather than ‘dismiss’, then only communication will be effective: PM Modi during #MannKiBaat
My endeavour is to constantly communicate with the youth through different programmes or social media. I always try to learn from them: PM Modi during #MannKiBaat
If we give our youth an opportunity, give them an open atmosphere to express themselves then they can bring a positive change in the country: PM during #MannKiBaat
The special thing about our Constitution is detailed explanation of our Rights and Duties. The combination of these two will take the country ahead: PM during #MannKiBaat
To complete the historic task of drafting the Constitution, the Constituent Assembly took just 2 years, 11 months and 17 days: PM Modi during #MannKiBaat
Let us all move ahead with the values enshrined in our Constitution and ensure Peace, Progression and Prosperity in our country: PM Modi during #MannKiBaat
No one can forget Dr. Baba Saheb Ambedkar’s invaluable contribution towards our Constitution: PM Modi during #MannKiBaat
Democracy was an intangible part of Baba Saheb’s life: PM Modi during #MannKiBaat
India First was always the core principle of Dr. Ambedkar: PM Modi during #MannKiBaat
Guru Nanak Dev Ji always showed the path of truth, duty, service, compassion and harmony towards society: PM Modi during #MannKiBaat

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம்தேதி, விஜயதசமித் திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும் ஒன்றாகஒரு யாத்திரையை மேற்கொண்டோம்.  மனதின் குரல் என்ற இந்த யாத்திரையின்50ஆவது பகுதி இன்றோடு நிறைவடைகிறது.  அந்த வகையில் இன்று பொன் விழாபகுதி.  இந்த முறை உங்களிடமிருந்து வந்திருக்கும் கடிதங்கள், தொலைபேசிஅழைப்புகள் பெரும்பாலானவை, இந்த 50ஆவது பகுதி தொடர்பாகவேவந்திருக்கின்றன.  MyGovஇல், தில்லியைச் சேர்ந்த அன்சு குமார், அமர் குமார், பட்னாவைச் சேர்ந்த விகாஸ் யாதவ், நரேந்திரமோடி செயலியில் (NarendraModiApp) தில்லியைச் சேர்ந்த மோனிகா ஜெயின், மேற்கு வங்கத்தின் பர்த்வானைச் சேர்ந்தபிரசேன்ஜித் சர்கார், நாக்பூரைச் சேர்ந்த சங்கீதா சாஸ்த்ரி போன்றோர் எல்லாம்கிட்டத்தட்ட ஒரே வகையான வினாவையே எழுப்பி இருக்கிறார்கள்.  அவர்கள் என்னகூறுகிறார்கள் என்றால், நவீன தொழில்நுட்பம், சமூக வலைத்தளம், மொபைல்செயலிகளின் பயன்பாட்டில் காலத்திற்கேற்ப நிபுணத்துவம் பெற்றுள்ள பிரதமர், நாட்டு மக்களோடு தொடர்பு கொள்வதற்காக, வானொலியைத் தேர்ந்தெடுத்ததுஏன்? என்று கேட்டிருக்கிறார்கள். நீங்கள் எழுப்பி இருக்கும் வினா நியாயமானதுதான்; உங்களது ஆர்வம் இயற்கையானதுதான்.  இன்றைய காலகட்டத்தில், கிட்டத்தட்ட வானொலி மறக்கடிக்கப்பட்ட நிலையில், ஏன் மோடி வானொலிவாயிலாகத் தொடர்பு கொள்கிறார்? என்பதே உங்களது கேள்வி. நான் உங்களுக்குஒரு சம்பவத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.  இது நடந்தது 1998ஆம் ஆண்டு. நான்இமாசலப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  மே மாதத்தில் நான் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தேன்.  இமாசலப் பிரதேசமலைப் பகுதிகளில் மாலை நேரத்திலேயே கடும் குளிர் தொடங்கிவிடும். நான்சாலையோர தேநீர்க் கடையோரமாக தேநீர் அருந்துவதற்காக நின்றேன். அது மிகச்சிறிய கடையாக இருந்தது, ஒரே ஒருவர் மட்டும் அவரே தேநீர் தயாரித்து விற்பனைசெய்து கொண்டிருந்தார்.  மேலாடை கூட அணியாத அவர், சாலையோரமாக ஒருசின்ன வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.  அவரிடம் இருந்தகண்ணாடிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த லட்டு ஒன்றை எடுத்து தேநீர்தயாராவதற்குள் முதலில் லட்டு சாப்பிடுங்கள் என்றார். நான் ஆச்சரியப்பட்டு, ஏன், என்ன விஷயம், வீட்டில் யாருக்காவது திருமணம் போன்ற வைபவம் நடந்ததா என்றுகேட்டேன்.  இல்லை இல்லை அண்ணே, உங்களுக்குத் தெரியாதா?  ரொம்பசந்தோஷமான விஷயம் என்று கூறி அவர் உற்சாகத்தில் திளைத்தார்.  அவரிடம்ஏகப்பட்ட சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன, என்ன நடந்தது என்பதைசொல்லுங்கள் என்றேன் நான். அட, இன்னைக்கு இந்தியா வெடிகுண்டுபரிசோதனையை வெற்றிகரமா செஞ்சிருக்கு, என்றார். ஒண்ணும் புரியலையேஎன்றேன் நான்.  இதோ பாருங்கண்ணே, முதல்ல வானொலியை கேளுங்க என்றார்.  அப்போது வானொலியில் அது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அன்றுதான் அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டிருந்ததை, அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள்ஊடகங்களுக்கு அறிவிப்பு செய்த நேரம் அது. இந்த அறிவிப்பைத் தான் இவர்வானொலியில் கேட்டு விட்டு உற்சாகத் துள்ளலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  இந்த வனப்பகுதியில், இத்தனை ஆளரவமற்ற பகுதியில், பனிபடர்ந்த மலைகளுக்குஇடையே, ஒரு சாமான்ய மனிதன், தன்னந்தனியனாக தேநீரை விற்பனை செய்துகொண்டே, நாள் முழுவதும் வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்தவானொலி அளிக்கும் செய்தி அவன் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திஇருக்கிறது என்பதை எல்லாம் பார்த்த போது, ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப்பதிந்தது……. அதாவது வானொலி சாமான்ய மனிதனோடு இரண்டரகலந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

தகவல் பரிமாற்றத்தின் இலக்கும், அதன் ஆழமும் எனும்போது வானொலிக்கு ஈடுவானொலி தான் என்பது என் மனதில் நீக்கமற நிறைந்தது, அதன் வீச்சை என்னால்புரிந்து கொள்ள முடிந்தது.  ஆகையால் நான் பிரதமரான வேளையில் மிகச்சக்திவாய்ந்த ஊடகமான வானொலியின் பால் என் கவனம் திரும்பியதில்ஆச்சரியமேதும் இல்லை.  நான் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பிரதம சேவகன்என்ற வகையில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட வேளையில், தேசத்தின்ஒற்றுமை, நமது உன்னதமான வரலாறு, அதன் வீரம், இந்தியாவின்பன்முகத்தன்மை, நமது கலாச்சாரப் பன்முகத்தன்மை, நமது சமூகத்தின் நாடிநரம்புகளில் பரவியிருக்கும் நல்ல அம்சங்களான, மக்களின் முனைப்புகள், சிக்கனம், பேரார்வம் மற்றும் தியாகம் என பாரதத்தின் இந்தக் கதையை, ஒவ்வொருகுடிமகனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.  தேசத்தின் தொலைதூர கிராமங்கள்முதல் மாநகரங்கள் வரை, விவசாயிகள் தொடங்கி, இளைய தொழில் வல்லுநர்கள்வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற பேரார்வம்தான், மனதின் குரல்பயணத்திற்கு உத்வேகம் அளித்தது. 

ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கடிதங்கள் படிக்கப்பட்டன, தொலைபேசிஅழைப்புகள் கேட்கப்பட்டன, செயலி மற்றும் MyGovஇல் விமர்சனங்கள்கவனிக்கப்பட்டன; இவையனைத்தையும் ஒரே இழையில் இணைத்து, சுவாரசியமான வகையிலே அளிக்கப்பட்டு வந்த இந்த 50 பகுதிகளின் பயணம், இந்த யாத்திரையை நாமனைவருமாக இணைந்து செய்திருக்கிறோம்.  தற்போதுஅகில இந்திய வானொலி, மனதின் குரல் மீதான ஆய்வையும் மேற்கொண்டார்கள்.  அதில் கிடைத்த சில பின்னூட்டங்கள் உள்ளபடியே மிக சுவாரசியமாகஇருக்கின்றன.  யாரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அவர்களில் 70 சதவீதம் பேர் தொடர்ந்து மனதின் குரலைக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.  சமூகத்தில் ஆக்கப்பூர்வமான உணர்வை ஏற்படுத்தி இருப்பதை, மனதின் குரலின்மிகப்பெரிய பங்களிப்பாக பெருவாரியானவர்கள் கருதுகிறார்கள்.  மனதின் குரல்வாயிலாக பெரிய அளவில் மக்கள் இயக்கங்களுக்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது. #indiapositive தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டும் இருக்கிறது.  இவையெல்லாம் நமது நாட்டுமக்களின் மனதில் இருக்கும் ஆக்கப்பூர்வமானஉணர்வை, நேர்மறை உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மனதின் குரல்காரணமாக தன்னார்வ உணர்வு அதிகரித்திருக்கிறது என்று மக்கள் தங்கள்அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டிருப்பது பெரும் மாற்றமாகும்.  மனதின் குரல் காரணமாக மக்கள் விரும்பும் ஊடகமாக வானொலி மாறி இருப்பதுஎனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.  ஆனால் மக்கள் இந்த நிகழ்ச்சியோடுவானொலி வாயிலாக மட்டுமே இணையவில்லை.  தொலைக்காட்சி, எஃப் எம்வானொலி, மொபைல், இணையம், பேஸ்புக் நேரடி ஒலிபரப்பு, பெரிஸ்கோப் தவிரNarendraModi செயலி வாயிலாகவும் மனதின் குரலோடு மக்கள் தங்கள் பங்களிப்பைஉறுதி செய்து வருகிறார்கள்.  மனதின் குரல் மீது நம்பிக்கை வைத்து, இதன்அங்கமாக மாறியதற்கு நான் மனதின் குரல் குடும்பத்தின் அனைத்துஉறுப்பினர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தொலைபேசி அழைப்பு – 1)

     மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களேவணக்கம்.  என் பெயர் ஷாலினிநான்ஐதராபாதிலிருந்து பேசுகிறேன்.  மனதின் குரல் என்பது மக்களுக்கு மிகவும்பிடித்த நிகழ்ச்சி.  தொடக்கத்தில்இதுவுமே கூட அரசியல் மேடையாகி விடும்என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.  ஆனால்இந்த நிகழ்ச்சி மேலும்மேலும் தொடர்ந்த போதுஇதில் அரசியலுக்குப் பதிலாகசமூகப்பிரச்சினைகள்சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே அமைந்ததுஅந்தவகையில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான சாமான்ய மக்கள்வானொலியோடு இணைந்த வண்ணம் இருந்தார்கள்.  மெல்ல மெல்லவிமர்சனங்களும் தேயத் தொடங்கினஎன்னுடைய கேள்வி என்னவென்றால்நீங்கள் இந்த நிகழ்ச்சியை எப்படி அரசியலிலிருந்து விலக்கி வைப்பதில்வெற்றி கண்டீர்கள்?  இதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்என்று உங்களுக்குத் தோன்றவில்லையா அல்லது உங்கள் அரசின்சாதனைகளைப் பட்டியலிட வேண்டும் என்று நீங்கள் எண்ணவில்லையா?  நன்றி.

      உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி.  உங்களின் ஐயம் சரிதான்.  உள்ளபடியே ஒருதலைவருக்கு மைக் கிடைத்து விட்டால், கோடிக்கணக்கானவர்கள் கேட்கிறார்கள்என்றால், வேறு என்ன வேண்டும்?  சில இளைஞர்களும் கூட மனதின் குரலில் வந்தஅனைத்து விஷயங்கள் பற்றியும் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.  அவர்கள்அனைத்துப் பகுதிகள் தொடர்பான சொல் பகுப்பாய்வு மேற்கொண்டு, எந்தெந்தச்சொல் எத்தனை முறைகள் பயன்படுத்தப்பட்டன என்று ஆராய்ச்சி செய்தார்கள்.  எந்தச் சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆய்வுசெய்தார்கள்.  அவர்களின் ஆய்வின் முடிவில் இந்த நிகழ்ச்சி அரசியல் சார்புஇல்லாத ஒன்று என்பதும் ஒரு முடிவாக இருந்தது.  மனதின் குரலைத் தொடங்கியபோது, இதில் அரசியல் என்பதோ, அரசுக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதாகவோஇருக்க கூடாது, இதில் எங்கேயும் மோடி தென்படக் கூடாது என்றுதீர்மானித்திருந்தேன். எனது இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையானஅனைத்து பலங்களும், உத்வேகமும் உங்களிடமிருந்து தான் எனக்குக் கிடைத்தன.  ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும் வரும் கடிதங்கள், இணையவிமர்சனங்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றில் நேயர்களின்எதிர்பார்ப்புகள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.  மோடி வருவார், போவார், ஆனால் இந்த தேசம் என்றைக்கும் நிலைத்து நீடித்திருக்கும், நமது கலாச்சாரம்காலத்தால் அழியாதிருக்கும்.  130 கோடி நாட்டுமக்களின் சின்னச்சின்ன கதைகள்என்றும் மறையாதிருக்கும்.  புதிய கருத்தூக்கம், உற்சாகத்தின் புதிய சிகரங்களுக்குஇந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும்.  நானே கூட சற்றே திரும்பிப்பார்க்கையில், எனக்கும் கூட பெரிய ஆச்சரியம் ஏற்படுகிறது.  யாரோ ஒருவர்தேசத்தின் ஏதோ மூலையிலிருந்து கடிதம் வாயிலாக, சிறிய கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி விற்பனையாளர்களிடம் எல்லாம் நாம் அதிகம்பேரம் பேசக் கூடாது என்று எழுதுகிறார்.  நான் கடிதத்தை வாசிக்கிறேன், இதேஉணர்வு வேறு ஒரு கடிதத்தில் வெளிப்பட்டிருந்தால், அதையும் இதோடுஇணைத்துக் கொள்கிறேன்.  இதோடு எனது அனுபவத்தையும் சேர்த்துஅளிக்கிறேன், உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எப்போது இது, குடும்பங்களுக்கும் வீடுகளுக்கும் சென்று சேர்கிறதோ தெரியாது, ஆனால், சமூகவலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் சுற்றிச் சுற்றி வருகிறது, ஒரு மாற்றத்தைநோக்கி முன்னேறிச் செல்கிறது.  நீங்கள் அனுப்பிய தூய்மை பற்றிய விஷயங்களும்சம்பவங்களும், சாமான்ய மக்களின் ஏராளமான எடுத்துக்காட்டுக்களும், ஒவ்வொரு வீட்டிலும் தூய்மைக்கான ஒரு சிறிய தூதுவரை உருவாக்குகிறது, அந்தத்தூதர் வீட்டில் இருப்பவர்களுக்கு விழிப்பையும் ஏற்படுத்துகிறார், சில வேளைகளில்தொலைபேசி வாயிலாக பிரதமருக்கும் ஆணைகள் பிறப்பிக்கிறார். மகளோடுசெல்ஃபி என்ற இயக்கம், அரியானாவின் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி நாடுமுழுவதிலும், ஏன் அயல்நாடுகளிலும் கூடப் பரவியது, இத்தனை பரவலாக்கம்செய்யும், விழிப்பை ஏற்படுத்தும் வல்லமை எந்த அரசிடமும் இருக்க முடியாது.  சமூகத்தின் ஒவ்வொரு துறையும், பிரபலங்களும் இணையும் போது, சமூகத்தில்சிந்தனை மாற்றத்தின் ஒரு புதிய பரிபாஷையில் கூறப்படும் போது, இதைஇன்றைய தலைமுறை புரிந்து கொள்கிறது, கண்ணுக்குத் தெரியாத விழிப்புணர்வுஏற்படுகிறது.  சில வேளைகளில் மனதின் குரல் பரிகாசம் செய்யவும் படுகிறதுஆனால், என்றுமே எனது மனதில் 130 கோடி நாட்டு மக்கள் வசித்து வருகிறார்கள்.  அவர்கள் மனங்கள் அனைத்தும் என்னுடைய மனமே.  மனதின் குரல் என்பது அரசுசார்ந்த விஷயமல்ல. இது சமூகம் சார்ந்த விஷயம்.  மனதின் குரல், எதிர்பார்ப்புகள்நிறைந்த இந்தியா, பெரு இலட்சியங்கள் நிறைந்த பாரதம் பற்றியது.  பாரதத்தின்அந்தரான்மா அரசியல் அல்ல.  பாரதத்தின் அந்தரான்மா அரசின் சக்தி பற்றியதும்அல்ல.  பாரதத்தின் அந்தரான்மா சமூகநீதி பற்றியது, சமூக சக்தி பற்றியது.  சமூகவாழ்க்கையின் ஆயிரக்கணக்கான கோணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று தான்அரசியல். அரசியலே அனைத்துமாகி விட்டால், இது ஆரோக்கியமானசமுதாயத்திற்கு ஒரு நல்ல அமைப்புமுறை அல்ல.  சில வேளைகளில் அரசியல்சம்பவங்களும் அரசியல்வாதிகளும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்என்றால், சமூகத்தின் வேறுபல திறன்களும், வேறுபல முயற்சிகளும் நசுங்கிப்போகின்றன.  பாரதம் போன்ற தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு சாமான்யமக்களின் திறன்கள் திறமைகள் முயற்சிகள் ஆகியவற்றிற்கு உகந்தஇடமளிக்கப்பட வேண்டும், இதுவே நம்மனைவரின் சமூக பொறுப்பாக வேண்டும்.  மனதின் குரல் என்பது இந்த திசையை நோக்கிய எளிமையான, பணிவான முயற்சிதான்.

(தொலைபேசி அழைப்பு – 2)

     வணக்கம் பிரதமர் அவர்களேமும்பையிலிருந்து நான் புரோதிமா முகர்ஜிபேசுகிறேன்.  ஐயாமனதின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமானஅகநோக்குதகவல்நேர்மறையான நிகழ்வுகள்சாமான்ய மனிதனின் நல்லசெயல்பாடுகள் நிறைந்திருக்கின்றன.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பாகவும்நீங்கள் எந்த அளவுக்கு தயாரிப்புகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை அறியவிரும்புகிறேன்.

      உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றிகள்.  ஒரு வகையில் உங்கள்கேள்வி இணக்கம் காரணமாக கேட்கப்பட்டிருக்கிறது.  பிரதமரிடம் அல்ல, ஏதோஒரு இணக்கமான நண்பரிடம் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என்ற உணர்வைத்தான் மனதின் குரலின் 50 பகுதிகளின் மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.  இது தானே மக்களாட்சி.  நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக நான் பதில் கூறவேண்டுமென்றால், எந்த தயாரிப்பு முஸ்தீபுகளிலும் நான் ஈடுபடுவதில்லை என்பதுதான்.  உண்மையில், மனதின் குரல் என்பது, எனக்கு மிக எளிதான வேலை.  ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும், மக்களின் கடிதங்கள் வருகின்றன.  MyGovஇலும் NarendraModi Mobile செயலியிலும் மக்கள் தங்கள் கருத்துகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், 1800117800 என்ற கட்டணமில்லாஎண்ணும் இருக்கிறது, இதில் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் செய்திகளைத்தங்கள் குரலிலேயே பதிவும் செய்கிறார்கள்.  மனதின் குரலுக்கு முன்பாக அதிகஅளவில் கடிதங்களையும், கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்வதே என்முயற்சியாக இருக்கிறது.  மனதின் குரல் பகுதி நெருங்கி வரவர, பயணங்களுக்குஇடையே, நீங்கள் அனுப்பிய கருத்துகளையும் உள்ளீடுகளையும் மிக உன்னிப்பாகநான் படிக்கிறேன்.

     ஒவ்வொரு கணமும் எனது நாட்டு மக்கள், என் மனதிலே வாசம் செய்கிறார்கள். ஆகையால், எப்போது எந்தக் கடிதத்தைப் படித்தாலும், கடிதம் எழுதியவரின்சூழ்நிலை, அவரது மனோபாவம் ஆகியன எனது கருத்தில் பசுமரத்தாணி போலப்பதிந்து விடுகின்றன.  அந்தக் கடிதம் என்னைப் பொறுத்த மட்டில் வெறும் காகிதத்துண்டு அல்ல; உண்மையில் சுமார் 40-45 ஆண்டுகளாகவே நான் ஒரு துறவியின்வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன், தேசத்தின் பெரும்பாலானமாவட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன், தேசத்தின் தொலைதூர மாவட்டங்களில்கணிசமான காலத்தைக் கழித்துமிருக்கிறேன்.  மேலும், இதன் காரணமாக ஒருகடிதம் வரும் போது, அந்த இடம், சூழல் ஆகியவற்றோடு இயல்பான வகையிலேஎன்னால் என்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.  இதன் பிறகு நான் சிலஆதாரபூர்வமான விஷயங்களான கிராமம், நபரின் பெயர் போன்ற விஷயங்களைக்குறித்து வைத்துக் கொள்கிறேன்.  உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனதின் குரலில், குரல் தான் என்னுடையது, ஆனால் எடுத்துக்காட்டுகள், உணர்ச்சிகள், உணர்வு ஆகியன எல்லாம் என்னுடைய நாட்டுமக்களுடையவைதாம்.  நான் மனதின் குரலில் பங்களிப்பு நல்கிய ஒவ்வொரு நபருக்கும் என்நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். இப்படிப்பட்ட லட்சக்கணக்கானோரின்பெயர்களை இன்றுவரை என்னால் மனதின் குரலில் கூற முடியவில்லை ஆனால், இதனாலெல்லாம் ஏமாற்றமடையாமல், தங்கள் கடிதங்களை, தங்கள் கருத்துகளைஅனுப்பி வருகிறார்கள்.  உங்களின் கருத்துகள், உங்களின் உணர்வுகள் என்னுடையவாழ்விலே மிகுந்த மகத்துவம் நிறைந்தவையாக இருக்கின்றன.  உங்கள்அனைவரின் கருத்துகள் முன்பை விட அதிகமாக என்னை வந்து சேரும், மனதின்குரலை மேலும் சுவாரசியமாக, மேலும் தாக்கமேற்படுத்துவதாக, மேலும்பயனுள்ளதாக ஆக்க உங்கள் கருத்துகளின் பங்களிப்பு இருக்கும் என்ற முழுநம்பிக்கை எனக்கு உள்ளது.  எந்தக் கடிதங்கள் எல்லாம் மனதின் குரலில் இடம்பெறவில்லையோ, அந்தக் கடிதங்கள், கருத்துகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகவனிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நான் ஆல் இண்டியாரேடியோ, எஃப் எம் வானொலி, தூர்தர்ஷன், மற்ற தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் உள்ள எனது நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  அவர்களின் முயற்சிகளால் மனதின் குரல் இன்னும்அதிகமான மக்களிடம் சென்று சேர்கிறது.  ஆல் இண்டியா ரேடியோவின் குழு, மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியையும் பல மொழிகளிலும் மொழியாக்கம்செய்து ஒலிபரப்புகிறார்கள்.  சிலர் மிகச் சிறப்பாக மாநில மொழிகளில், மோடிக்குஇணையாக இருக்கும் குரலில், அதே தொனியில் மனதின் குரலை அளிக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்கள் 30 நிமிடங்களுக்கு நரேந்திர மோடியாகவே உருமாறிவிடுகிறார்கள்.  நான் அவர்கள் அனைவரின் திறன்கள், திறமைகளுக்குப்பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்களனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்தநிகழ்ச்சியை உங்கள் மாநில மொழிகளிலும் நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும்என்பது தான்.  நான் ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்; அவர்கள் தங்கள் சேனல்களில்மனதின் குரலைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்திருக்கிறார்கள்.  எந்த ஒருஅரசியல்வாதிக்கும் ஊடகங்களிடம் எப்போதும் மகிழ்ச்சி இருக்காது, மிககுறைவான கவரேஜ் தான் கிடைக்கிறது, அதுவும் எதிர்மறையாக இருக்கிறதுஎன்றெல்லாம் கருதுவார்கள். ஆனால் மனதின் குரலில் எழுப்பப்பட்ட பலவிஷயங்களை ஊடகத்தார் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.  தூய்மை, சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத இந்தியா, மகளுடன் ஒரு செல்ஃபிபோன்ற பல விஷயங்களை ஊடகத்தார் நூதனமான வழிவகைகளில் கையாண்டு, ஒரு இயக்கம் என்ற வகையில் அதை மாற்றி முன்னெடுத்துச் செல்லும் பணியைச்செய்திருக்கிறார்கள்.  தொலைக்காட்சி சேனல்கள் இதை அதிகம் கவனிக்கப்பட்டவானொலி நிகழ்ச்சியாக ஆக்கினார்கள்.  நான் ஊடகங்களுக்கு என்இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள்ஒத்துழைப்பு இல்லாதிருந்தால், மனதின் குரலின் இந்தப் பயணம்நிறைவடையாமல் இருந்திருக்கும்.

(தொலைபேசி அழைப்பு – 3)

     வணக்கம் மோடி அவர்களே!  நான் உத்தராகண்டின் முசோரியிலிருந்து நிதிபகுகுணா பேசுகிறேன்.  நான் இரண்டு இளைஞர்களின் தாய்.  அவர்கள் என்னசெய்ய வேண்டும் என்று கூறப்படுவதை இந்த வயதுடைய பிள்ளைகள்விரும்புவதில்லை என்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்அதுஆசிரியர்களானாலும்பெற்றோர்களானாலும்யாருடைய யோசனைக்கும்செவி மடுப்பதில்லை.  ஆனால் நீங்கள் மனதின் குரலில் ஒரு விஷயத்தைபிள்ளைகளிடம் கூறும் போதுஅதை அவர்கள் இதயபூர்வமாகப் புரிந்துகொள்கிறார்கள்அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.  உங்களதுஇந்த ரகசியத்தைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?  அதாவது எந்தவகையில் நீங்கள் பேசுகிறீர்கள் அல்லது விஷயத்தை எழுப்புகிறீர்கள்எப்படிஅவர்கள் நல்ல முறையில் இதைப் புரிந்து கொண்டு அமல் செய்கிறார்கள்என்பதைக் கூறுங்கள்.  நன்றி.

      நிதி அவர்களே, உங்களது தொலைபேசி அழைப்புக்கு மிக்க நன்றி.  உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.  நான் செய்து வருவது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் நடந்து கொண்டுதானிருக்கும் என்று கருதுகிறேன்.  எளிமையான மொழியில் சொல்லவேண்டுமென்றால், நான் என்னை அந்த இளைஞருக்கு உள்ளே இருந்து பார்க்கமுயற்சி செய்கிறேன்.  என்னையே நான் அவரது சூழ்நிலையில் பொருத்திப் பார்த்து, அவரது எண்ணங்களோடு இணைவேற்படுத்தி, ஒரு அலைவரிசை இணைப்பைஏற்படுத்த முயல்கிறேன்.  நம்முடைய வாழ்க்கையிலே இருக்கும் பழஞ்சுமைகள்குறுக்கீடு செய்யாத வரையில், யாரையும் புரிந்து கொள்வது எளிதாகி விடுகிறது.  சில வேளைகளில் நமது சார்புநிலைகளே பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிடுகின்றன.  ஏற்பு–மறுப்பு, எதிர்வினைகள் ஏதும் இல்லாமல் எந்த ஒருவிஷயத்தையும் புரிந்து கொள்வதே எனக்கு முதன்மையாக இருக்கிறது.  இப்படிஅணுகும் போது எதிரில் இருப்பவரும் நம்மை சம்மதிக்க வைக்க பலவகையானவாதங்கள் அல்லது அழுத்தம் உண்டாக்குவதற்கு மாறாக, நமது எண்ண ஓட்டத்தில்இணைய முயல்வார்.  ஆகையால் தகவல்பரிமாற்ற இடைவெளி என்பது அற்றுப்போகும், ஒரு வகையில் ஒரே எண்ணத்துடன் இருவரும் சகபயணிகளாகிவிடுவோம்.  எப்போது, எப்படி ஒருவர் தனது கருத்துகளை விடுத்து மற்றவரதுகருத்துகளை ஏற்றுக் கொண்டார் என்பது இருவருக்குமே தெரியாமல் போய் விடும்.  இன்றைய இளைய சமுதாயத்திடம் இருக்கும் சிறப்பே, தங்களுக்கு நம்பிக்கைஏற்படாத வரை ஒன்றை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் ஒன்றின் மீதுநம்பிக்கை கொண்டு விட்டார்களேயானால், அதற்காக எதையும் துறந்து அதைஎட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டு விடுவார்கள் என்பது தான்.  பல வேளைகளில், குடும்பங்களில் பெரியவர்களுக்கும் வளரிளம் பருவத்தில் இருப்பவர்களுக்கும்இடையே தகவல்பரிமாற்ற இடைவெளி இருப்பது பற்றிப் பேசுகிறோம். உண்மையில் பெரும்பாலான வளரிளம் பருவத்தினரிடம் உரையாடுவது என்பதுகுறைந்து போய் இருக்கிறது.  பெரும்பாலான வேளைகளில் படிப்பு பற்றியவிஷயங்கள் அல்லது பழக்கங்கள் அல்லது வாழ்க்கைமுறை தொடர்பாக, இப்படிச்செய், அப்படிச் செய்யாதே என்பதையெல்லாம் தாண்டி, திறந்த மனத்தோடு பேசும்பழக்கம், மெல்ல மெல்ல குடும்பங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது, இதுகவலைதரும் விஷயம்.

     எதிர்பார்ப்புக்கு பதிலாக ஏற்பு, அகற்றுதலுக்கு பதிலாக ஆலோசனை–இப்படிச்செய்யும் போது தான் உரையாடல் வலுப்பெறுகிறது.  பிரத்யேகமான நிகழ்ச்சிகள்அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக இளைஞர்களோடு தொடர்ந்துஉரையாட நான் எப்போதும் முயற்சி செய்து வருகிறேன்.  அவர்கள் என்னசெய்கிறார்கள் அல்லது என்ன நினைக்கிறார்கள் என்பதிலிருந்து நான் எப்போதும்கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.  அவர்களிடம் எப்போதும்கருத்துகளின் களஞ்சியம் கொட்டிக் கிடக்கும். அவர்கள் பெரும்பாலும் ஆற்றல்நிரம்பியவர்களாக, புதுமை எண்ணம் படைத்தவர்களாக, ஒருமுகசிந்தனையுடையவர்களாக இருப்பார்கள்.  மனதின் குரல் வாயிலாக நான்இளைஞர்களின் முயற்சிகளுக்கு, அதிக அளவிலே முக்கியத்துவம் கொடுக்கமுயன்று வருகிறேன். அதிகப்படியான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றகுற்றச்சாட்டு பல வேளைகளில் முன்வைக்கப்படுவதுண்டு.  இளைஞர்கள் வினாஎழுப்புவது என்பது நல்லது தானே!!  ஏன் இது நல்ல விஷயம் என்றால், அவர்கள்அனைத்து விஷயங்களையும் வேரடி மண்ணோடு ஆராய்ச்சி செய்யவிரும்புகிறார்கள் என்பதே பொருள்.  இளைஞர்களிடம் பொறுமை என்பது இல்லைஎன்று சிலர் கூறுவார்கள்; ஆனால் இளைஞர்களிடத்திலே வீணடிக்க நேரமில்லைஎன்றே நான் கருதுகிறேன்.  இந்த விஷயம் தான் இன்றைய இளையதலைமுறையினரை அதிக புதுமைகளைப் படைக்க உதவி செய்கிறது, ஏனென்றால், அவர்கள் காரியங்களை விரைந்து முடிக்க நினைக்கிறார்கள்.  இன்றைய இளைஞர்கள் அதிக திறமைசாலிகள், மிகப்பெரிய விஷயங்கள் பற்றிச்சிந்திக்கிறார்கள் என்று நமக்குப் படுகிறது.  நல்லது, பெரிய கனவுகளைக்காணட்டும், பெரிய வெற்றிகளை அவர்கள் ஈட்டட்டும்.  இது தானே புதிய இந்தியா!!  இளைய தலைமுறையினர், ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யவிரும்புகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.  நான் கேட்கிறேன், இதிலென்ன தவறுஇருக்க முடியும்?  ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதில் வித்தகர்கள், ஆகையால் செய்கிறார்கள்.  நாம் நம்மைச் சுற்றி நம் பார்வையைச் செலுத்தினால், அது சமூக தொழில்முனைவாகட்டும், ஸ்டார்ட் அப்புகளாகட்டும், விளையாட்டுக்களாகட்டும், வேறு துறைகளாகட்டும் – சமுதாயத்தில் மிகப்பெரியமாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் இளைஞர்களே. இந்த இளைஞர்கள், வினாக்களைத்தொடுக்கிறார்கள், கனவுகளைக் காணும் வல்லமை பெற்றிருக்கிறார்கள்.  நாம்இளைஞர்களின் எண்ணங்களை பூமியில் நிலைக்கச் செய்தால், அவற்றுக்கு வடிவம்கொடுக்க சுதந்திரமான சூழலமைத்துக் கொடுத்தால், தேசத்தில் ஆக்கப்பூர்வமானமாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.  அவர்கள் அப்படிச் செய்தும் வருகிறார்கள்.

     எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, குருகிராமிலிருந்து வினிதா அவர்கள்MyGovஇலே, மனதின் குரலில் நீங்கள், நாளை அதாவது, நவம்பர் மாதம் 26ஆம் தேதிவரவிருக்கும் அரசியலமைப்புச் சட்ட தினம் பற்றிப் பேச வேண்டும் என்றுவிரும்புகிறேன். இந்த தினம் ஏன் சிறப்பானது என்றால், நமது அரசியலமைப்புச்சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்ட 70ஆம் ஆண்டில் நாம் கால் பதிக்க இருக்கிறோம்என்று மேலும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

     வினிதா அவர்களே, உங்கள் ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றிகள்.  ஆம், நாளைஅரசியலமைப்புச் சட்ட தினம்.  நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தமகத்தான மனிதர்களை நாம் நினைத்துப் பார்க்கும் தினம் இது.  1949ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அரசியலமைப்புச் சட்ட வரைவை ஏற்படுத்திய இந்தசரித்திரபூர்வமான பணியை நிறைவேற்ற அரசியலமைப்புச் சபைக்கு, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் ஆயின.  கற்பனை செய்து பாருங்கள், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, இந்த மாமனிதர்கள், இத்தனை பரந்த, ஆழமானஅரசியலமைப்புச் சட்டத்தை நமக்களித்திருக்கிறார்கள். அவர்கள்அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மேற்கொண்ட அதிவிரைவு, இன்றும் கூட, நேர நிர்வாகம் மற்றும் உற்பத்தித் திறனுக்கான ஒரு எடுத்துக்காட்டாகத்திகழ்கிறது.  நாமும் நம்முடைய பொறுப்புகளை சாதனை படைக்கும் வகையில்குறித்த நேரத்தில் நிறைவு செய்ய கருத்தூக்கம் அளிக்கிறது.  அரசியலமைப்புச்சபை இந்த மாமனிதர்களின் சங்கமமாக இருந்தது. அதிலிருந்த ஒவ்வொருவரும், பாரதத்தின் மக்கள் சக்திபடைத்தவர்களாக, பரம ஏழையும் திறனுடையவராக ஆகவேண்டும் என்று கருதி, அப்படிப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களதுதேசத்திற்கு அளிக்கும் பேரார்வத்தோடு இருந்தார்கள்.

     நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், உரிமைகள்மற்றும் கடமைகள் பற்றி விரிவாக இதில் விவரிக்கப்பட்டிருப்பது தான்.  குடிமக்களின் வாழ்க்கையில் இவை இரண்டும் இணக்கமாக இருக்கும் போது, தேசம் முன்னேறிச் செல்லும்.  நாம் மற்றவர்களின் உரிமைகளுக்கு மதிப்புஅளித்தோம் என்றால், நமது உரிமைகள் தாமாகவே காக்கப்படும்; இதைப்போலவே நாம் அரசியலமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைநிறைவேற்றினோம் என்றால், நமது உரிமைகளும் தாமாகவே பாதுகாக்கப்படும்.  2010ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் இன்னும் எனக்கு பசுமையாகநினைவிலிருக்கிறது.  அப்போது பாரதத்தின் 60ஆவது குடியரசு தினம், நான்அப்போது குஜராத் மாநிலத்தில் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை யானைமீதேற்றி ஊர்வலமாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்தேன்.  இளைஞர்களிடையே அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வைஅதிகரிக்கவும், அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறுபரிமாணங்களோடு இணைக்கவும் ஒரு நினைவில் கொள்ளத்தக்க நிகழ்வு அது.  2020ஆம் ஆண்டில், ஒரு குடியரசு நாடு என்ற முறையில் நாம் நமது 70 ஆண்டுப்பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறோம், 2022ஆம் ஆண்டிலே நாம் சுதந்திரம்அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது.

     வாருங்கள், நாமனைவரும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைமுன்னெடுத்துச் செல்வோம், நமது தேசத்தில் Peace, Progress, Prosperity – அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றை உறுதி செய்வோம்.

     என் பிரியமான நாட்டுமக்களே, அரசியலமைப்புச் சபை பற்றிப் பேசும்வேளையில், அரசியலமைப்பு சபையின் மையமாக விளங்கிய அந்த மாமனிதரின்பங்களிப்பை என்றுமே மறக்க கூடாது.  அந்த மாமனிதர் தான் வணக்கத்திற்குரியடாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர்.  டிசம்பர் மாதம் 6ஆம் தேதி தான் அவரது மஹாபரிநிர்வாண நாள் அதாவது அவர் அமரர் ஆன நாள்.  நாட்டுமக்கள் அனைவரின்சார்பிலும் பாபா சாஹேபுக்கு என் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்; கோடிக்கணக்கான இந்தியர்கள் கண்ணியத்தோடு வாழும் உரிமையை அவர் தான்பெற்றுத் தந்தார்.  மக்களாட்சி என்பது பாபா சாஹேபின் இயல்போடு கலந்த ஒன்று; பாரதத்தின் ஜனநாயக விழுமியம் என்பது வெளியிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டது அல்ல என்று அவர் கூறுவார்.  ஜனநாயகம் என்ன, நாடாளுமன்றமுறை என்ன என்பதெல்லாம் பாரத நாட்டுக்குப் புதிய விஷயங்களல்ல.  அரசியலமைப்புச் சபையில் அவர் உணர்ச்சிகரமான ஒரு வேண்டுகோள் விடுத்தார்– இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தைப் பேணிக் காக்க, நாம் நமது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபட வேண்டும் என்றார்.  இந்தியர்களான நாம் பல்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைத்து விஷயங்களையும் தாண்டி, நாட்டுநலனையே முன்னிறுத்திச் செயல்படவேண்டும் என்றார்.  India First – இந்தியாவுக்கே முதன்மை என்பது தான் டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கரின் மூலமந்திரமாக இருந்தது.  மீண்டுமொரு முறைவணக்கத்திற்குரிய பாபா சாஹேபுக்கு என் பணிவான அஞ்சலிகள்.

     என் இனிய நாட்டுமக்களே, 2 நாட்கள் முன்பாக நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்றுகுருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  அடுத்த ஆண்டுஅதாவது 2019இல், நாம் அவரது 550ஆவது பிறந்த நாள் விழாவைகொண்டாடவிருக்கிறோம்.  குருநானக் தேவ் அவர்கள் எப்போதும் மனித சமுதாயநலனைப் பற்றியே சிந்தித்தார்.  அவர் சமூகத்தில் எப்போதும் வாய்மை, பணியாற்றுதல், சேவை, கருணை, சகோதரத்துவம் என்ற பாதையையே துலக்கிக்காட்டினார்.  தேசம் அடுத்த ஆண்டு குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடவிருக்கிறது.  இதன் ஒளி, நம் நாட்டில்மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் பிரகாசிக்கும்.  அனைத்து மாநிலஅரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த நன்னாளை மிகச் சிறப்பாககொண்டாடக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.  இதைப் போலவே, குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் உள்ள அனைத்துநாடுகளிலும் கொண்டாடப்படும்.  மேலும் குருநானக் தேவ் அவர்களோடுதொடர்புடைய புனிதமான தலங்கள் அடங்கிய பாதையில் ஒரு ரயிலும்இயக்கப்படும்.  தற்போது நான் இதோடு தொடர்புடைய ஒரு கூட்டத்தில்பங்கெடுத்துக் கொண்ட போது, எனக்கு லக்பத் சாஹிப் குருத்வாரா பற்றியநினைவெழுந்தது.  குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், அந்த குருத்வாராவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  ஆனால் அந்த வட்டாரமக்களோடு இணைந்து, மாநில அரசு அதை புனரமைத்தது என்பது இன்றும் கூடஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

     இந்திய அரசு, ஒரு மகத்துவம் வாய்ந்த தீர்மானத்தைச் செய்திருக்கிறது; அதாவதுகர்தார்புர் வழித்தடம் அமைத்தல், இதனால் நமது நாட்டின் யாத்ரீகர்கள் எளிதாகபாகிஸ்தானின் கர்தார்புரில் இருக்கும் குருநானக் தேவ் அவர்களின் புனிதமானதலத்தில் வழிபட உதவிகரமாக இருக்கும்.

     என் நெஞ்சுக்கினிய நாட்டுமக்களே, மனதின் குரலின் 50ஆவது பகுதிக்குப் பிறகு, நாம் மீண்டும் அடுத்த மனதின் குரலில் சந்திப்போம், மனதின் குரலின்பின்னணியில் இருக்கும் உணர்வுகளை முதன்முறையாக உங்கள் முன்புவெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு இன்று கிட்டியிருக்கிறது, இதற்குக் காரணம்நீங்கள் எழுப்பிய வினாக்கள் தாம், ஆனால் இந்தப் பயணம் தொடர்ந்துநடைபெறும். உங்களுடன் நான் எந்த அளவுக்கு அதிகமாக இணைகிறேனோ, அந்தஅளவுக்கு நமது இந்தப் பயணம் மேலும் ஆழமாக அமையும், அனைவருக்கும்மகிழ்வைக் கூட்டுவதாக அமையும்.  மனதின் குரலால் எனக்கு என்ன கிடைத்ததுஎன்ற கேள்வி சிலரின் மனங்களில் எழலாம்.  மனதின் குரல் வாயிலாக எனக்குக்கிடைத்த பின்னூட்டங்கள், இவற்றில் ஒரு விஷயம் என் இதயத்தைத் தொடுகிறதுஎன்பதை நான் இன்று கூற விரும்புகிறேன்.  குடும்பத்தில் இருக்கும் அனைவரும்ஒன்றாக அமர்ந்து மனதின் குரலைக் கேட்கும் போது, நமது குடும்பத் தலைவர்நம்மிடையே அமர்ந்து, நம்முடைய விஷயங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் என்றே பெரும்பாலானோர் தெரிவித்திருக்கிறார்கள்.  இந்தவிஷயத்தை நான் பரவலான வகையிலே கேள்விப்பட்ட போது, நான்உங்களுடையவன், உங்களைச் சேர்ந்தவன், உங்களிடையே இருப்பவன், நீங்கள்தான் என்னை வளர்த்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது, நெஞ்சம்பனிக்கிறது.  ஒருவகையில் நானும் உங்கள் குடும்ப உறுப்பினராகவே மனதின்குரல் வாயிலாக மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்பேன், உங்களோடுஇணைந்த வண்ணம் இருப்பேன்.  உங்கள் சுகதுக்கங்கள், என்னுடையசுகதுக்கங்கள்.  உங்களுடைய எதிர்பார்ப்புகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். உங்களது ஆசை அபிலாஷைகள், என்னுடைய ஆசை அபிலாஷைகள்.

     வாருங்கள், இந்தப் பயணத்தை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.  மிக்கநன்றி.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister meets with Crown Prince of Kuwait
December 22, 2024

​Prime Minister Shri Narendra Modi met today with His Highness Sheikh Sabah Al-Khaled Al-Hamad Al-Mubarak Al-Sabah, Crown Prince of the State of Kuwait. Prime Minister fondly recalled his recent meeting with His Highness the Crown Prince on the margins of the UNGA session in September 2024.

Prime Minister conveyed that India attaches utmost importance to its bilateral relations with Kuwait. The leaders acknowledged that bilateral relations were progressing well and welcomed their elevation to a Strategic Partnership. They emphasized on close coordination between both sides in the UN and other multilateral fora. Prime Minister expressed confidence that India-GCC relations will be further strengthened under the Presidency of Kuwait.

⁠Prime Minister invited His Highness the Crown Prince of Kuwait to visit India at a mutually convenient date.

His Highness the Crown Prince of Kuwait hosted a banquet in honour of Prime Minister.