We will send you 4 digit OTP to confirm your number
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் அதாவது தேசத்தின் சமூக முயற்சிகளின் குரல், தேசத்தின் சாதனைகளின் குரல், மக்கள் அனைவரின் வல்லமையின் குரலான மனதின் குரல் அதாவது தேசத்தின் இளைஞர்களின் கனவுகள், தேசக் குடிமக்களின் எதிர்பார்ப்புக்களின் குரல். எப்போது வரும் என்று, மாதம் முழுவதும் மனதின் குரலுக்காக நான் காத்திருக்கிறேன். அப்போது தானே நேரடியாக என்னால் உங்களோடு கலந்துரையாட முடியும்!! எத்தனையோ செய்திகள், எத்தனையோ தகவல்கள்!! என்னுடைய முயற்சிகள் அனைத்தும் என்ன தெரியுமா – எப்படி முடிந்த அளவு அதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, எவ்வாறு உங்களுடைய ஆலோசனைகளில் சிந்தை செலுத்திப் பரிசீலிப்பது என்பது தான்.
நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பானதொரு தினமாகும். இன்று என்.சி.சி – தேசிய மாணவர் படையின் தினமாகும். தேசிய மாணவர் படை என்ற பெயர் வந்தவுடனேயே நமக்கு நம்முடைய பள்ளி-கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. நானும் கூட என்.சி.சி யின் கேடட்டாக இருந்திருக்கிறேன் என்பதால், இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது என்பதை என்னால் என் அனுபவம் வாயிலாக அறுதியிட்டுக் கூற இயலும். தேசிய மாணவர் படையானது இளைஞர்களிடத்திலே ஒழுங்கு, தலைமைப்பண்பு மற்றும் சேவையுணர்வை ஏற்படுத்துகின்றது. நீங்களே கூட உங்கள் அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கலாம், எப்போதெல்லாம் ஏதேனும் பேரிடர் ஏற்படுகிறதோ, அது வெள்ளப்பெருக்காகட்டும், நிலநடுக்கமாகட்டும், வேறு எந்த ஒரு பேரிடராக இருந்தாலும், அங்கே உதவிக்கரம் நீட்ட நமது என்.சி.சி. கேடட்டுகள் விரைந்து செல்கிறார்கள். இன்று தேசத்தில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டு வாக்கிலே 14 இலட்சம் இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருந்தார்கள். இப்போது 2024இலே 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருக்கிறார்கள். முன்பிருந்ததை விட மேலும் புதிய 5000 பள்ளிகள்-கல்லூரிகளில் இப்போது என்.சி.சி. செயலாற்றுகிறது; மேலும் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், முன்பு தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் இருந்து வந்தது. இப்போதோ தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் தேசிய மாணவர் படையோடு இணைக்கும் இயக்கமும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. நான் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், அதிக எண்ணிக்கயில் தேசிய மாணவர் படையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒரு பணிக்குச் சென்றாலும் கூட, என்.சி.சியில் உங்களுக்குக் கிடைத்த ஆளுமைத்திறன் மேம்பாடு உங்கள் பணிக்காலத்தில் தோள் கொடுக்கும்.
நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் இளைஞர்களின் பங்குபணி மிகவும் பெரியது. இளைஞர்களின் மனங்கள் ஒருமுனைப்புடன் செயலாற்றும் போது தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காக ஆய்வு செய்யும் போது, சிந்திக்கும் போது, கண்டிப்பாக அவர்கள் அருமையான பாதையை அமைக்கிறார்கள். ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், இதை நாம் இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறோம். அடுத்த ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த ஆண்டாகும். இந்த முறை இதை மிகவும் சிறப்பான வகையிலே கொண்டாட வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலே 11-12 ஜனவரியன்று தில்லியின் பாரத மண்டபத்தில் இளைஞர்களின் கருத்துக்களின் மஹாகும்பமேளா நடைபெற இருக்கிறது, இந்த முன்முயற்சியின் பெயர் “வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளைய தலைவர்களின்” உரையாடல். பாரத நாடெங்கிலுமிருந்தும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதிலே பங்கெடுத்துக் கொள்வார்கள். கிராமங்கள், தொகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படிப்பட்ட 2,000 இளைஞர்கள் பாரத மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கெடுக்க ஒன்றிணைவார்கள். யாருக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லையோ, யாருடைய குடும்பத்தின் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அரசியல் பின்புலம் இல்லாததோ, இப்படிப்பட்ட ஒரு இலட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட இளைஞர்கள், புதிய இளைஞர்களை அரசியலோடு இணைக்க தேசத்தில் பலவகையான சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படும். வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளம் தலைவர்கள் உரையாடலும் கூட இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான். இதிலே தேசம் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள். பல தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகளும் இதில் இடம் பெறுவார்கள். நானும் கூட இதிலே அதிக நேரம் கலந்து கொள்வேன். நேரடியாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க இளைஞர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும். தேசம் இந்தக் கருத்துக்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? எப்படி ஒரு உறுதியான திட்டமிட்ட பாதையை ஏற்படுத்த இயலும்? இதன் வரைபடம் தயார் செய்யப்படும். ஆகையால் நீங்களும் தயாராகுங்கள், பாரதத்தை நிர்மாணிக்க இருக்கும், தேசத்தின் வருங்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு மலர இருக்கிறது. வாருங்கள், இணைந்து நாம் தேசத்தை உருவாக்குவோம், தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் அடிக்கடி இப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிப் பேசி வருகிறோம். சுயநலமற்ற தன்மையோடு சமூகத்திற்காகச் செயலாற்றி வரும் இப்படி எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள், இவர்கள் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுபிடித்தளிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள். நாம் நம்முடைய அக்கம்பக்கத்தில் பார்த்தோமேயானால், எத்தனையோ மனிதர்கள் ஏதோ ஒருவகையில் உதவி தேவைப்படுவோராக, தகவல் தேவையிருப்போராக இருக்கிறார்கள். சில இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து இது போன்ற தேவைகளை இட்டுநிரப்புவதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது லக்னௌவில் வசிக்கும் வீரேந்திராவை எடுத்துக் கொள்வோமே, இவர் முதியோருக்கும் டிஜிட்டல் ஆயுள் சான்று பெற்றுத் தருவதில் உதவி புரிகிறார். விதிமுறைகளின்படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆண்டுதோறும் ஒரு முறை ஆயுள் சான்று அளிக்க வேண்டியிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வரை, முதிய ஓய்வூதியதாரர்கள் இதைத் தாங்களே வங்கிகளில் சென்று செலுத்த வேண்டும் என்ற விதிமுறை நிலவி வந்தது. இதனால் நமது முதியவர்களுக்கு எத்தனை சிரமங்கள் இருந்தன என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இப்போதோ, இந்த அமைப்புமுறை மாறிவிட்டது, சுலபமாகிவிட்டது. இப்போது டிஜிட்டல் ஆயுள் சான்று அளிப்பதால் நிலைமை மிகவும் சுலபமாகி விட்டது, முதியவர்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதில்லை. தொழில்நுட்பம் காரணமாக மூத்தோருக்கு எந்த சிரமமும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதில் வீரேந்திரா போன்ற இளைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இவர் தனது பகுதியில் இருக்கும் முதியவர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இது மட்டுமல்ல, இவர் முதியவர்களைத் தொழில்நுட்பத்திறம் படைத்தவர்களாகவும் ஆக்கி வருகிறார். இவரைப் போன்றோருடைய இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக டிஜிட்டல் ஆயுள் சான்று பெறுவோரின் எண்ணிக்கை 80 இலட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. இவர்களிலே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் வயது 80ஐயும் தாண்டி விட்டது.
நண்பர்களே, பல நகரங்களில் முதியவர்களை இந்த டிஜிட்டல் புரட்சியில் பங்குதாரர்களாக ஆக்கும் பணியில் இளைஞர்கள் முன்வந்து ஈடுபட்டுவருகிறார்கள். போபாலின் மகேஷ், மொபைல் வாயிலாக பணம் செலுத்தும் வழிவகையை, தனது பகுதியில் பல முதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த முதியவர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலும் கூட, அதனைப் பயன்படுத்த கற்றுக் கொடுப்போர் யாரும் இல்லை. முதியவர்களை டிஜிட்டல் கைது என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றவும் கூட இளைஞர்கள் முன்வருகிறார்கள். அஹமதாபாதின் ராஜீவ், டிஜிட்டல் கைதின் அபாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மனதின் குரலின் கடந்த பகுதியில் நாம் இந்த டிஜிட்டல் கைது பற்றி உரையாடி இருந்தோம். இது போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் இரையாவது மூத்த குடிமக்கள் தாம். இந்த நிலையில், நாம் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இணையவழி மோசடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும். டிஜிட்டல் கைது என்ற பெயரில் அரசாங்கத்தில் எந்தவிதமான வழிவகையும் இல்லை என்று நாம் மீண்டும் மீண்டும் மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் கைது என்பது முழுப்பொய், மக்களைச் சிக்க வைக்க ஒரு சூழ்ச்சி, நமது இளைய நண்பர்கள் இந்தப் பணியில் முழுமையான புரிந்துணர்வோடு தங்கள் பங்களிப்பை அளித்து வருவதோடு, மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருந்து வருகிறார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக பலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது குழந்தைகளின் படைப்பாற்றல் மேலும் வளர வேண்டும், புத்தகங்களிடம் அவர்களின் நேசம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே முயற்சியாக இருக்கிறது. புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறதல்லவா? இப்போது இந்த நட்பினை மேலும் வலுப்படுத்துவதில் நூலகத்தை விடச் சிறப்பான இடம் வேறு என்னவாக இருக்க முடியும்? நான் சென்னையின் ஒரு எடுத்துக்காட்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையக்களமாக ஆகியிருக்கிறது. இதன் பெயர் பிரக்ருத் அறிவகம். இந்த நூலகம் பற்றிய எண்ணம், தொழில்நுட்ப உலகோடு தொடர்புடைய ஸ்ரீராம் கோபாலன் அவர்களின் கொடை. அயல்நாட்டில் தனது பணியின் போது இவர் நவீன தொழில்நுட்ப உலகோடு இணைந்து வந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில் குழந்தைகளின் படிப்பு மற்றும் கற்றல் பழக்கத்தை மேம்படுத்துவது குறித்தும் சிந்தித்திருக்கிறார். பாரதம் திரும்பிய பிறகு இவர் பிரக்ருத் அறிவகத்தை உருவாக்கியிருக்கிறார். இதிலே 3000த்திற்கும் அதிகமாக புத்தகங்கள் இருக்கின்றன, இவற்றைப் படிக்க குழந்தைகள் சாரிசாரியாக வருகிறார்கள். புத்தகங்களைத் தவிர இந்த நூலகத்தில் பலவகையான செயல்பாடுகளும் கூட குழந்தைகளை ஈர்க்கின்றன. கதைசொல்லும் அமர்வாகட்டும், கலைப்பட்டறைகளாகட்டும், நினைவாற்றல் பயிற்சி வகுப்புகளாகட்டும், ரோபோட்டிக்ஸ் பாடமாகட்டும், மேடைப் பேச்சாகட்டும், இங்கே அனைவருக்கும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கிறது, அது அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
நண்பர்களே, ஹைதராபாதில் Food for Thought நிறுவனமும் கூட பல அருமையான நூலகங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களின் முயற்சியும் கூட, குழந்தைகளுக்கு அதிக அளவிலான விஷயங்கள் குறித்த சிறப்பான தகவல்களோடு கூடவே, படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பது தான். பிஹாரின் கோபால்கஞ்ஜில் பிரயோக் நூலகம் குறித்த உரையாடல் அக்கம்பக்கத்தில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதோடு, படிக்க உதவிகரமாக இருக்கக்கூடிய பல வசதிகளையும் இந்த நூலகம் செய்து கொடுக்கிறது. சில நூலகங்கள் எப்படிப்பட்டவை என்றால், போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுடையவையாக இருக்கின்றன. சமூகத்தை அதிகாரமுள்ளதாக ஆக்க நூலகங்கள் மிகச்சிறப்பான வகையிலே பயனளித்து வருகின்றன என்பது மிகவும் சுகமான செய்தியாக இருக்கிறது. நீங்கள் புத்தகங்களோடு தோழமையை வளர்த்துக் கொண்டு தான் பாருங்களேன், உங்கள் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை உணர்ந்து உங்களுக்கே வியப்பேற்படும்.
என் கனிவான நாட்டுமக்களே, நேற்றுமுன்தினம் இரவு தான் நான் தென்னமெரிக்க நாடான கயானாவிலிருந்து நாடு திரும்பினேன். பாரதத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கயானாவிலும் கூட, ஒரு மினி பாரதம் வாழ்ந்து வருகிறது. இன்றிலிருந்து சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால், கயானாவில் பாரத நாட்டவர், விவசாயக் கூலிகளாகவும், இன்னபிற வேலைகளுக்காகவும் கொண்டு வரப்பட்டார்கள். இன்று பாரத வம்சாவழியினர், அரசியல், வியாபாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் கயானாவில் முன்னணி வகிக்கிறார்கள். கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலியும் கூட பாரத வம்சாவழி வந்தவர் தான், தான் பாரத நாட்டு மரபுவழியைச் சேர்ந்தவர் என்பதில் இவர் பெருமிதம் கொள்கிறார். நான் கயானாவில் இருந்த வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இதை நான் மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கயானாவைப் போலவே உலகில் பல டஜன் நாடுகளில், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் பாரதநாட்டவர் வசிக்கிறார்கள். பல பத்தாண்டுகள் முன்பாக 200-300 ஆண்டுகள் முன்பாக, அவர்களின் முன்னோர் பற்றிய கதைகள் உண்டு. எவ்வாறு அயல்நாடுவாழ் பாரதநாட்டவர், பல்வேறு தேசங்களில் தங்களுக்கென தனி அடையாளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி அவர்கள் அந்த நாடுகளின் சுதந்திர வேள்வியில் பங்கெடுத்துக் கொண்டார்கள், எப்படி தங்களுடைய பாரதிய மரபினை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள் என்பது போன்ற உண்மையான கதைகளைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? நீங்கள் இந்தக் கதைகளை நமோ செயலியிலோ, மைகவ் இலோ, #IndianDiasporaStories என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நண்பர்களே, ஓமான் நாட்டில் நடைபெற்றுவரும் ஒரு அசாதாரணமான செயல்திட்டம் குறித்த சுவாரசியமான தகவல்களை உங்களோடு நான் பகிர விரும்புகிறேன். பல பாரதநாட்டவரின் குடும்பங்கள், பல நூற்றாண்டுகளாகவே ஓமான் நாட்டில் வசித்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தின் கட்ச் பகுதிலிருந்து புறப்பட்டு அங்கே வசித்து வருகிறார்கள். இவர்கள் மகத்துவம் வாய்ந்த ஒரு வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் கூட இவர்களிடம் ஓமானி குடிமை இருக்கிறது என்றாலும் கூட, பாரத நாட்டுணர்வு இவர்களின் நாடிநரம்புகளில் எல்லாம் ஊறியிருக்கிறது. ஓமானின் பாரதநாட்டுத் தூதரகம் மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் துணையோடு ஒரு குழு, இந்தக் குடும்பங்களின் வரலாற்றினைப் பாதுகாக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, இப்போதுவரை, ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவற்றிலே நாட்குறிப்புகள், கணக்குப் புத்தகங்கள், பேரேடுகள், கடிதங்கள் மற்றும் தந்திகள் அடங்கும். இவற்றில் சில ஆவணங்கள் 1838ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்த ஆவணங்களில் உணர்வுகள் நிரம்பியிருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பாக இவர்கள் ஓமானுக்குச் சென்ற போது, இவர்கள் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எப்படி சுகதுக்கங்களை எதிர்கொண்டார்கள், ஓமான் நாட்டுமக்களோடு இவர்களுடைய தொடர்புகள் எவ்வாறு பெருகியது போன்றவை எல்லாம் இந்த ஆவணங்களில் அடங்கியிருக்கின்றன. Oral History Project – வாய்மொழி வரலாறுத் திட்டமும் கூட இந்தக் குறிக்கோளின் ஒரு மகத்துவம் வாய்ந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்தப் பேரிலக்கில், அங்கே இருக்கும் மூத்தோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே தங்களுடைய வாழ்க்கைமுறை குறித்த தகவல்களை விரிவாக அவர்கள் எடுத்துப் பேசியிருக்கிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு வாய்மொழி வரலாற்றுத் திட்டம், பாரத நாட்டிலும் நடந்தேறி வருகிறது. இந்தத் திட்டப்படி, வரலாறு விரும்பிகள் தேசப்பிரிவினை காலகட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தேசத்தில், தேசப்பிரிவினை பயங்கரத்தைக் கண்டவர்கள்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த முயற்சி மேலும் மகத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிறது.
நண்பர்களே, எந்த தேசம் எந்தப் பகுதி தனது வரலாற்றைப் பாதுகாத்து வைக்கிறதோ, அதன் எதிர்காலம் பாதுகாப்பானது. இந்த எண்ணத்தோடு தான் ஒரு முயற்சி நடந்திருக்கிறது. இதிலே கிராமங்களின் வரலாற்றை ஒன்று திரட்டும் வகையில் ஒரு தகவல்திரட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல்பயணம் மேற்கொண்ட பாரதத்தின் பழமையான திறமைகளோடு தொடர்புடைய சான்றுகளைத் திரட்டும் இயக்கம் கூட தேசத்தில் இயங்கி வருகிறது. இது தொடர்பாக லோதலில், ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் கூட உருவாக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர, உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் ஓலைச்சுவடியோ, வரலாற்று முக்கியத்துவமான ஆவணமோ, கையெழுத்துப்படியோ இருந்தால், நீங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் உதவியோடு அதைப் பராமரிக்கலாம்.
நண்பர்களே, ஸ்லோவாகியாவில் நடைபெற்றுவரும் இதேபோன்ற மேலும் ஒரு முயற்சி குறித்துத் தெரிய வந்தது. நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து அதை முன்னெடுத்துச் செல்வதோடு இது தொடர்புடையது. இங்கே முதன்முறையாக ஸ்லோவாக் மொழியில் நமது உபநிஷதங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகளால் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உலகம்தழுவிய தாக்கம் குறித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகமெங்கும் இப்படிப்பட்ட கோடிக்கணக்கானோரின் இதயங்களில் பாரதம் வாழ்ந்து வருகிறது என்பது பெருமிதமளிக்கும் விஷயம்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் இப்படிப்பட்ட சாதனையை இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன், இது உங்களுக்கு பேருவகையையும் அளிக்கலாம், பெருமிதமும் ஏற்படலாம், நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு ஒருவேளை கழிவிரக்கமும் ஏற்படலாம். சில மாதங்கள் முன்பாக நாம் “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” என்ற இயக்கத்தைத் தொடக்கினோம் இல்லையா? இந்த இயக்கத்தின் வாயிலாக தேசமெங்கிலும் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். இந்த இயக்கம் வாயிலாக 100 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன என்ற முக்கியமான கட்டத்தை நாம் தாண்டியிருக்கிறோம் என்பதை நான் மிகுந்த உவகையோடு தெரிவித்துக் கொள்கிறேன். 100 கோடி மரங்கள், அதுவும் வெறும் ஐந்தே மாதங்களில் என்பது நமது நாட்டுமக்களின் இடையறாத முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதோடு தொடர்புடைய மேலும் ஒரு விஷயத்தைக் கேட்டால் நீங்கள் பெருமிதப்படுவீர்கள். தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கமானது இப்போது உலகின் பிற நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. நான் கயானாவில் இருந்த வேளையில், அங்கேயும் கூட இந்த இயக்கத்தை என்னால் கண்ணாரக் காண முடிந்தது. அங்கே என்னோடு கூட கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலி, அவருடைய மனைவியின் தாய், மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் எல்லோரும், தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
நண்பர்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களிலும் இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தின் இந்தோரில், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தில், மரம் நடுவதில் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே 24 மணிநேரத்தில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இந்த இயக்கம் காரணமாக இந்தோரின் ரேவதி குன்றுகளின் வறண்ட பகுதி இப்போது பசுமைப்பகுதியாக உருமாறிவிடும். ராஜஸ்தானத்தின் ஜைசால்மேரில் இந்த இயக்கம் வாயிலாக ஒரு வித்தியாசமான சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே பெண்களின் ஒரு குழு, ஒரு மணிநேரத்தில், 25,000 மரங்களை நட்டிருக்கிறது. தாய்மார்கள், தாயின் பெயரில் ஒரு மரம் நட்டார்கள், மற்றவர்களுக்கும் இப்படிச் செய்ய உத்வேகம் அளித்தார்கள். இங்கே இருக்கும் ஓரிடத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டார்கள் என்பது கூட ஒரு சாதனை தான். தாயின் பெயரில் ஒரு மரம்நடு இயக்கத்தின்படி பல சமூக அமைப்புகள், வட்டாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மரங்களை நட்டு வருகின்றார்கள். எங்கெல்லாம் மரங்களை நட வேண்டியிருக்கிறதோ, அங்கேயெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலே ஒட்டுமொத்த சூழலமைப்பையும் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முயற்சியாக இருக்கிறது. ஆகையால் இந்த அமைப்புகள் சில இடங்களில் மருத்துவத் தாவரங்களை நடுகிறார்கள், சில இடங்களில் புள்ளினங்கள் தங்கியிருக்க மரங்களை நடுகிறார்கள். பிஹாரின் ஜீவிகா சுயவுதவிக் குழுவின் பெண்கள், 75 இலட்சம் மரங்களை நடும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்தப் பெண்களின் ஒட்டுமொத்த கவனமும், பழமரங்களை நடுவதன் மீது இருக்கிறது, இதனால் வருங்காலத்தில் வருவாயும் பெற முடியும்.
நண்பர்களே, இந்த இயக்கத்தோடு இணைந்து, எந்த ஒரு நபரும் தனது தாயின் பெயரில் மரம் நட முடியும். தாய் உடனிருந்தால், அவர்களையும் அழைத்துக் கொண்டு மரம் நடலாம். இல்லையென்றால் அவருடைய படத்தின் முன்னிலையில் கூட நீங்கள் இந்த இயக்கத்தின் பங்குதாரராக ஆகலாம். மரத்தோடு கூட நீங்கள் உங்கள் சுயபுகைப்படம், செல்ஃபியை எடுத்து, அதை மைகவ்.இன் தளத்தில் தரவேற்றம் செய்யலாம். தாயானவள் நமக்கெல்லாம் அளிப்பவற்றுக்கான நன்றிக்கடனை நம்மால் என்றுமே இட்டுநிரப்ப முடியாது என்றாலும், தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, நாம் அவருடைய இருப்பை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.
என் கனிவான நாட்டுமக்களே, நீங்களனைவரும் உங்கள் சிறுவயதில் சிட்டுக்குருவியை உங்கள் வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள், அதன் கீச்சொலியைக் கேட்டிருப்பீர்கள். தமிழிலும் மலையாளத்திலும் இதை குருவி என்றும், தெலுகுவில் இதை பிச்சுகா என்றும், கன்னடத்தில் இதை குப்பி என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி தொடர்பான சம்பவங்கள்-கதைகள் இருக்கின்றன. நம்மருகிலே உயிரிபன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு; ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது. பெருகிவரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாகச் சென்றுவிட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளில் பலர், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்விலே, இந்த இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளையானது, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதைப் பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பாக பயிற்சிகளை அளிக்கிறார்கள். இதற்காக இந்த அமைப்பைச் சேர்ந்த இவர்கள், சிறிய அளவிலான மரவீட்டை உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இதிலே சிட்டுக்குருவி வசிக்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பை எளிதாக வெளிப்புறச் சுவரிலோ, மரத்திலோ பொருத்திவிட முடியும். குழந்தைகள் இந்த இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள், சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைக்கத் தொடங்கினார்கள். கடந்த நான்கு ஆண்டுகளிலே இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கென இப்படி 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது. கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பு காரணமாக அக்கம்பக்கப் பகுதிகளில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. நீங்களும் உங்கள் அருகிலே நடைபெறும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்.
நண்பர்களே, கர்நாடகத்தின் மைசூரூவில் இருக்கும் ஒரு அமைப்பு, குழந்தைகளுக்காக Early Bird என்ற பெயரிலான இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்த அமைப்பானது பறவைகளைகளைப் பற்றி குழந்தைகளுக்குப் புரியவைக்க, சிறப்பானதொரு நூலகத்தை நடத்துகிறது. இதுமட்டுமல்ல, குழந்தைகளிடம் இயற்கையின்பால் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இயற்கைக்கல்வி கிட் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது. இந்த கிட்டிலே, குழந்தைகளுக்கென கதைப்புத்தகம், விளையாட்டுக்கள், செயல்பாட்டுத் தாள்-activity sheet மற்றும் திருகுவெட்டுப் புதிர்கள் ஆகியன அடங்கும். இந்த அமைப்பு, நகரக்குழந்தைகளை கிராமங்களுக்கு இட்டுச் செல்கிறது, அங்கே பறவைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. இது போன்ற முயற்சிகள் மூலம் குழந்தைகளிடம் தங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவற்றைக் கண்டு, புரிந்து கொண்டு பல கண்ணோட்டங்களை ஏற்படுத்த முடியும். மனதின் குரலின் நேயர்களும் கூட இத்தகைய முயற்சிகளைச் செய்து குழந்தைகளின் புரிதலை மேம்படுத்த இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, அரசாங்க அலுவலகம் என்று சொன்னவுடனே மனதிலே கோப்புகளின் குவியல் என்ற காட்சி மனதிலே நிழலாடும். திரைப்படங்களிலும் கூட இப்படித் தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அரசு அலுவலகங்களில் இந்தக் கோப்புகள் தொடர்பாக ஏராளமாக கேலி பேசப்பட்டு வருகின்றது, ஏகப்பட்ட கதைகளும் எழுதப்பட்டு விட்டன. பல்லாண்டுகளாக கோப்புகள், அலுவலகங்களில் தூசிபடிந்த நிலையில் இருந்தன, அங்கே தூய்மையின்மை நிலவி வந்தது. இப்படிப்பட்ட பல பத்தாண்டுகள் பழமையான கோப்புகளையும், குப்பைகளையும் அகற்ற சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. அரசுத் துறைகளில் இந்த இயக்கம் காரணமாக, அற்புதமான விளைவுகள் ஏற்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். தூய்மைப்படுத்தல் காரணமாக கணிசமான இடம் அலுவலகங்களில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அலுவலகத்தில் பணி செய்வோருக்கு ’இது தங்கள் உடைமை’ என்ற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய பணியிடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவமும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
நண்பர்களே, எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே திருமகள் வாசம் செய்கிறாள் என்று மூத்தோர் அடிக்கடி கூற நீங்கள் கேட்டிருக்கலாம். நமது தேசத்திலே குப்பையிலிருந்து கோமேதகம் ஏற்படுத்தும் கருத்து மிகவும் பழமையானது. தேசத்தின் பல பாகங்களில் பயனற்றவை என்று கருதப்படும் பொருட்கள் தொடங்கி, இளைஞர்கள் குப்பையிலிருந்து கோமேதகத்தை உருவாக்கி வருகின்றார்கள். பலவகையான நூதனக் கண்டுபிடிப்புக்களைப் புரிந்து வருகிறார்கள். இவற்றின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள், வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த இளைஞர்கள் தங்கள் முயற்சிகளின் மூலம் நீடித்த வாழ்க்கைமுறைக்கும் உந்துதல் அளித்து வருகிறார்கள். மும்பையின் இரு பெண்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அக்ஷராவும், பிரக்ருதியும், துணித்துண்டுகளிலிருந்து ஃபேஷனுக்கான பொருட்களை உருவாக்கி வருகின்றார்கள். துணிகளை வெட்டித் தைக்கும் போது, மிஞ்சும் துண்டுத்துணிகள் இருக்கிறதல்லவா, இவற்றைக் குப்பை என்று தூர எறிந்து விடுவார்கள். அக்ஷரா-பிரக்ருதியின் குழு, இந்தத் துண்டுத் துணிகளின் குப்பையை ஃபேஷன் பொருளாக மாற்றி விடுகிறது. துண்டுத் துணிகளாலான தொப்பிகள், பைகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
நண்பர்களே, தூய்மை தொடர்பாக உபி மாநிலத்தின் கான்பூரிலும் கூட நல்லதொரு முன்னெடுப்பு நடந்து வருகிறது. இங்கே சிலர் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள், கங்கையின் கரைகளில் பரவியிருக்கும் நெகிழிக் குப்பைகள், இன்னபிற குப்பைகளை எடுக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர் Kanpur Ploggers Group, அதாவது கான்பூர் குப்பை சேகரிப்போர் குழு. இதை சில நண்பர்கள் இணைந்து தொடங்கினார்கள். மெல்லமெல்ல இது மக்கள் பங்களிப்பின் பேரியக்கமாக மாறிவிட்டது. நகரின் பலர் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதன் உறுப்பினர்கள் இப்போது கடைகள் மற்றும் வீடுகளில் இருக்கும் குப்பைகளையும் கூட சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் குப்பை வாயிலாக மறுசுழற்சி ஆலையில் மரங்களுக்கான பாதுகாப்பு வேலி தயாரிக்கப்படுகிறது, அதாவது இந்தக் குழுவானது, குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட மரக்காப்பானைக் கொண்டு தாவரங்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது.
நண்பர்களே, சின்னச்சின்ன முயற்சிகளால் பெரிய வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு, அஸாம் மாநிலத்தின் இதிஷா. இதிஷா படித்தது எல்லாம் தில்லியிலும், புணேயிலும். இதிஷா பெருநிறுவன உலகின் பகட்டான வாழ்க்கையைத் துறந்து, அருணாச்சலத்தின் சாங்கதி நதித்துறையைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுலாப் பயணிகள் காரணமாக அங்கே கணிசமான நெகிழிக் கழிவுகள் திரளத் தொடங்கின. அங்கே ஒருகாலத்தில் தூய்மையாக இருந்த நதி, நெகிழிக் கழிவுகள் காரணமாக மாசடைந்து விட்டது. இதை சுத்தப்படுத்த வட்டார மக்களோடு இணைந்து இதிஷா செயல்பட்டு வருகிறார். இவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள், வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நெகிழிக் கழிவுகளைத் திரட்டி, ஒட்டுமொத்த படித்துறையிலும் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகளை வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகளால் பாரதத்தில் தூய்மை இயக்கத்திற்கு வேகம் கிடைத்து வருகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுவரும் இயக்கம். உங்கள் அருகிலே கூட இப்படிப்பட்டவை நடந்து கொண்டிருக்கலாம். நீங்கள் இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர்பாக கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே. உங்களுடைய எதிர்வினைகள், கடிதங்கள், ஆலோசனைகளுக்காக மாதம் முழுவதும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். மாதம்தோறும் வருகின்ற உங்களுடைய தகவல்கள் என்னை மேலும் சிறப்பாக இயங்க வைக்க உத்வேகம் அளிக்கின்றன. அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில், தேசம் மற்றும் தேசத்தின் மக்களின் புதிய சாதனைகளோடு சந்திப்போம். அதுவரை, நாட்டுமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் அதாவது தேசத்தின் சமூக முயற்சிகளின் குரல், தேசத்தின் சாதனைகளின் குரல், மக்கள் அனைவரின் வல்லமையின் குரலான மனதின் குரல் அதாவது தேசத்தின் இளைஞர்களின் கனவுகள், தேசக் குடிமக்களின் எதிர்பார்ப்புக்களின் குரல். எப்போது வரும் என்று, மாதம் முழுவதும் மனதின் குரலுக்காக நான் காத்திருக்கிறேன். அப்போது தானே நேரடியாக என்னால் உங்களோடு கலந்துரையாட முடியும்!! எத்தனையோ செய்திகள், எத்தனையோ தகவல்கள்!! என்னுடைய முயற்சிகள் அனைத்தும் என்ன தெரியுமா – எப்படி முடிந்த அளவு அதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, எவ்வாறு உங்களுடைய ஆலோசனைகளில் சிந்தை செலுத்திப் பரிசீலிப்பது என்பது தான்.
நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பானதொரு தினமாகும். இன்று என்.சி.சி – தேசிய மாணவர் படையின் தினமாகும். தேசிய மாணவர் படை என்ற பெயர் வந்தவுடனேயே நமக்கு நம்முடைய பள்ளி-கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. நானும் கூட என்.சி.சி யின் கேடட்டாக இருந்திருக்கிறேன் என்பதால், இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது என்பதை என்னால் என் அனுபவம் வாயிலாக அறுதியிட்டுக் கூற இயலும். தேசிய மாணவர் படையானது இளைஞர்களிடத்திலே ஒழுங்கு, தலைமைப்பண்பு மற்றும் சேவையுணர்வை ஏற்படுத்துகின்றது. நீங்களே கூட உங்கள் அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கலாம், எப்போதெல்லாம் ஏதேனும் பேரிடர் ஏற்படுகிறதோ, அது வெள்ளப்பெருக்காகட்டும், நிலநடுக்கமாகட்டும், வேறு எந்த ஒரு பேரிடராக இருந்தாலும், அங்கே உதவிக்கரம் நீட்ட நமது என்.சி.சி. கேடட்டுகள் விரைந்து செல்கிறார்கள். இன்று தேசத்தில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டு வாக்கிலே 14 இலட்சம் இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருந்தார்கள். இப்போது 2024இலே 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருக்கிறார்கள். முன்பிருந்ததை விட மேலும் புதிய 5000 பள்ளிகள்-கல்லூரிகளில் இப்போது என்.சி.சி. செயலாற்றுகிறது; மேலும் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், முன்பு தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் இருந்து வந்தது. இப்போதோ தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் தேசிய மாணவர் படையோடு இணைக்கும் இயக்கமும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. நான் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், அதிக எண்ணிக்கயில் தேசிய மாணவர் படையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒரு பணிக்குச் சென்றாலும் கூட, என்.சி.சியில் உங்களுக்குக் கிடைத்த ஆளுமைத்திறன் மேம்பாடு உங்கள் பணிக்காலத்தில் தோள் கொடுக்கும்.
நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் இளைஞர்களின் பங்குபணி மிகவும் பெரியது. இளைஞர்களின் மனங்கள் ஒருமுனைப்புடன் செயலாற்றும் போது தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காக ஆய்வு செய்யும் போது, சிந்திக்கும் போது, கண்டிப்பாக அவர்கள் அருமையான பாதையை அமைக்கிறார்கள். ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், இதை நாம் இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறோம். அடுத்த ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த ஆண்டாகும். இந்த முறை இதை மிகவும் சிறப்பான வகையிலே கொண்டாட வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலே 11-12 ஜனவரியன்று தில்லியின் பாரத மண்டபத்தில் இளைஞர்களின் கருத்துக்களின் மஹாகும்பமேளா நடைபெற இருக்கிறது, இந்த முன்முயற்சியின் பெயர் “வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளைய தலைவர்களின்” உரையாடல். பாரத நாடெங்கிலுமிருந்தும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதிலே பங்கெடுத்துக் கொள்வார்கள். கிராமங்கள், தொகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படிப்பட்ட 2,000 இளைஞர்கள் பாரத மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கெடுக்க ஒன்றிணைவார்கள். யாருக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லையோ, யாருடைய குடும்பத்தின் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அரசியல் பின்புலம் இல்லாததோ, இப்படிப்பட்ட ஒரு இலட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட இளைஞர்கள், புதிய இளைஞர்களை அரசியலோடு இணைக்க தேசத்தில் பலவகையான சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படும். வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளம் தலைவர்கள் உரையாடலும் கூட இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான். இதிலே தேசம் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள். பல தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகளும் இதில் இடம் பெறுவார்கள். நானும் கூட இதிலே அதிக நேரம் கலந்து கொள்வேன். நேரடியாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க இளைஞர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும். தேசம் இந்தக் கருத்துக்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? எப்படி ஒரு உறுதியான திட்டமிட்ட பாதையை ஏற்படுத்த இயலும்? இதன் வரைபடம் தயார் செய்யப்படும். ஆகையால் நீங்களும் தயாராகுங்கள், பாரதத்தை நிர்மாணிக்க இருக்கும், தேசத்தின் வருங்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு மலர இருக்கிறது. வாருங்கள், இணைந்து நாம் தேசத்தை உருவாக்குவோம், தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் அடிக்கடி இப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிப் பேசி வருகிறோம். சுயநலமற்ற தன்மையோடு சமூகத்திற்காகச் செயலாற்றி வரும் இப்படி எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள், இவர்கள் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுபிடித்தளிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள். நாம் நம்முடைய அக்கம்பக்கத்தில் பார்த்தோமேயானால், எத்தனையோ மனிதர்கள் ஏதோ ஒருவகையில் உதவி தேவைப்படுவோராக, தகவல் தேவையிருப்போராக இருக்கிறார்கள். சில இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து இது போன்ற தேவைகளை இட்டுநிரப்புவதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது லக்னௌவில் வசிக்கும் வீரேந்திராவை எடுத்துக் கொள்வோமே, இவர் முதியோருக்கும் டிஜிட்டல் ஆயுள் சான்று பெற்றுத் தருவதில் உதவி புரிகிறார். விதிமுறைகளின்படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆண்டுதோறும் ஒரு முறை ஆயுள் சான்று அளிக்க வேண்டியிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வரை, முதிய ஓய்வூதியதாரர்கள் இதைத் தாங்களே வங்கிகளில் சென்று செலுத்த வேண்டும் என்ற விதிமுறை நிலவி வந்தது. இதனால் நமது முதியவர்களுக்கு எத்தனை சிரமங்கள் இருந்தன என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இப்போதோ, இந்த அமைப்புமுறை மாறிவிட்டது, சுலபமாகிவிட்டது. இப்போது டிஜிட்டல் ஆயுள் சான்று அளிப்பதால் நிலைமை மிகவும் சுலபமாகி விட்டது, முதியவர்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதில்லை. தொழில்நுட்பம் காரணமாக மூத்தோருக்கு எந்த சிரமமும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதில் வீரேந்திரா போன்ற இளைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இவர் தனது பகுதியில் இருக்கும் முதியவர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இது மட்டுமல்ல, இவர் முதியவர்களைத் தொழில்நுட்பத்திறம் படைத்தவர்களாகவும் ஆக்கி வருகிறார். இவரைப் போன்றோருடைய இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக டிஜிட்டல் ஆயுள் சான்று பெறுவோரின் எண்ணிக்கை 80 இலட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. இவர்களிலே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் வயது 80ஐயும் தாண்டி விட்டது.
நண்பர்களே, பல நகரங்களில் முதியவர்களை இந்த டிஜிட்டல் புரட்சியில் பங்குதாரர்களாக ஆக்கும் பணியில் இளைஞர்கள் முன்வந்து ஈடுபட்டுவருகிறார்கள். போபாலின் மகேஷ், மொபைல் வாயிலாக பணம் செலுத்தும் வழிவகையை, தனது பகுதியில் பல முதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த முதியவர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலும் கூட, அதனைப் பயன்படுத்த கற்றுக் கொடுப்போர் யாரும் இல்லை. முதியவர்களை டிஜிட்டல் கைது என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றவும் கூட இளைஞர்கள் முன்வருகிறார்கள். அஹமதாபாதின் ராஜீவ், டிஜிட்டல் கைதின் அபாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மனதின் குரலின் கடந்த பகுதியில் நாம் இந்த டிஜிட்டல் கைது பற்றி உரையாடி இருந்தோம். இது போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் இரையாவது மூத்த குடிமக்கள் தாம். இந்த நிலையில், நாம் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இணையவழி மோசடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும். டிஜிட்டல் கைது என்ற பெயரில் அரசாங்கத்தில் எந்தவிதமான வழிவகையும் இல்லை என்று நாம் மீண்டும் மீண்டும் மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் கைது என்பது முழுப்பொய், மக்களைச் சிக்க வைக்க ஒரு சூழ்ச்சி, நமது இளைய நண்பர்கள் இந்தப் பணியில் முழுமையான புரிந்துணர்வோடு தங்கள் பங்களிப்பை அளித்து வருவதோடு, மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருந்து வருகிறார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக பலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது குழந்தைகளின் படைப்பாற்றல் மேலும் வளர வேண்டும், புத்தகங்களிடம் அவர்களின் நேசம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே முயற்சியாக இருக்கிறது. புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறதல்லவா? இப்போது இந்த நட்பினை மேலும் வலுப்படுத்துவதில் நூலகத்தை விடச் சிறப்பான இடம் வேறு என்னவாக இருக்க முடியும்? நான் சென்னையின் ஒரு எடுத்துக்காட்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையக்களமாக ஆகியிருக்கிறது. இதன் பெயர் பிரக்ருத் அறிவகம். இந்த நூலகம் பற்றிய எண்ணம், தொழில்நுட்ப உலகோடு தொடர்புடைய ஸ்ரீராம் கோபாலன் அவர்களின் கொடை. அயல்நாட்டில் தனது பணியின் போது இவர் நவீன தொழில்நுட்ப உலகோடு இணைந்து வந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில் குழந்தைகளின் படிப்பு மற்றும் கற்றல் பழக்கத்தை மேம்படுத்துவது குறித்தும் சிந்தித்திருக்கிறார். பாரதம் திரும்பிய பிறகு இவர் பிரக்ருத் அறிவகத்தை உருவாக்கியிருக்கிறார். இதிலே 3000த்திற்கும் அதிகமாக புத்தகங்கள் இருக்கின்றன, இவற்றைப் படிக்க குழந்தைகள் சாரிசாரியாக வருகிறார்கள். புத்தகங்களைத் தவிர இந்த நூலகத்தில் பலவகையான செயல்பாடுகளும் கூட குழந்தைகளை ஈர்க்கின்றன. கதைசொல்லும் அமர்வாகட்டும், கலைப்பட்டறைகளாகட்டும், நினைவாற்றல் பயிற்சி வகுப்புகளாகட்டும், ரோபோட்டிக்ஸ் பாடமாகட்டும், மேடைப் பேச்சாகட்டும், இங்கே அனைவருக்கும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கிறது, அது அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
நண்பர்களே, ஹைதராபாதில் Food for Thought நிறுவனமும் கூட பல அருமையான நூலகங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களின் முயற்சியும் கூட, குழந்தைகளுக்கு அதிக அளவிலான விஷயங்கள் குறித்த சிறப்பான தகவல்களோடு கூடவே, படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பது தான். பிஹாரின் கோபால்கஞ்ஜில் பிரயோக் நூலகம் குறித்த உரையாடல் அக்கம்பக்கத்தில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதோடு, படிக்க உதவிகரமாக இருக்கக்கூடிய பல வசதிகளையும் இந்த நூலகம் செய்து கொடுக்கிறது. சில நூலகங்கள் எப்படிப்பட்டவை என்றால், போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுடையவையாக இருக்கின்றன. சமூகத்தை அதிகாரமுள்ளதாக ஆக்க நூலகங்கள் மிகச்சிறப்பான வகையிலே பயனளித்து வருகின்றன என்பது மிகவும் சுகமான செய்தியாக இருக்கிறது. நீங்கள் புத்தகங்களோடு தோழமையை வளர்த்துக் கொண்டு தான் பாருங்களேன், உங்கள் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை உணர்ந்து உங்களுக்கே வியப்பேற்படும்.
என் கனிவான நாட்டுமக்களே, நேற்றுமுன்தினம் இரவு தான் நான் தென்னமெரிக்க நாடான கயானாவிலிருந்து நாடு திரும்பினேன். பாரதத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கயானாவிலும் கூட, ஒரு மினி பாரதம் வாழ்ந்து வருகிறது. இன்றிலிருந்து சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால், கயானாவில் பாரத நாட்டவர், விவசாயக் கூலிகளாகவும், இன்னபிற வேலைகளுக்காகவும் கொண்டு வரப்பட்டார்கள். இன்று பாரத வம்சாவழியினர், அரசியல், வியாபாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் கயானாவில் முன்னணி வகிக்கிறார்கள். கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலியும் கூட பாரத வம்சாவழி வந்தவர் தான், தான் பாரத நாட்டு மரபுவழியைச் சேர்ந்தவர் என்பதில் இவர் பெருமிதம் கொள்கிறார். நான் கயானாவில் இருந்த வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இதை நான் மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கயானாவைப் போலவே உலகில் பல டஜன் நாடுகளில், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் பாரதநாட்டவர் வசிக்கிறார்கள். பல பத்தாண்டுகள் முன்பாக 200-300 ஆண்டுகள் முன்பாக, அவர்களின் முன்னோர் பற்றிய கதைகள் உண்டு. எவ்வாறு அயல்நாடுவாழ் பாரதநாட்டவர், பல்வேறு தேசங்களில் தங்களுக்கென தனி அடையாளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி அவர்கள் அந்த நாடுகளின் சுதந்திர வேள்வியில் பங்கெடுத்துக் கொண்டார்கள், எப்படி தங்களுடைய பாரதிய மரபினை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள் என்பது போன்ற உண்மையான கதைகளைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? நீங்கள் இந்தக் கதைகளை நமோ செயலியிலோ, மைகவ் இலோ, #IndianDiasporaStories என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நண்பர்களே, ஓமான் நாட்டில் நடைபெற்றுவரும் ஒரு அசாதாரணமான செயல்திட்டம் குறித்த சுவாரசியமான தகவல்களை உங்களோடு நான் பகிர விரும்புகிறேன். பல பாரதநாட்டவரின் குடும்பங்கள், பல நூற்றாண்டுகளாகவே ஓமான் நாட்டில் வசித்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தின் கட்ச் பகுதிலிருந்து புறப்பட்டு அங்கே வசித்து வருகிறார்கள். இவர்கள் மகத்துவம் வாய்ந்த ஒரு வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் கூட இவர்களிடம் ஓமானி குடிமை இருக்கிறது என்றாலும் கூட, பாரத நாட்டுணர்வு இவர்களின் நாடிநரம்புகளில் எல்லாம் ஊறியிருக்கிறது. ஓமானின் பாரதநாட்டுத் தூதரகம் மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் துணையோடு ஒரு குழு, இந்தக் குடும்பங்களின் வரலாற்றினைப் பாதுகாக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, இப்போதுவரை, ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவற்றிலே நாட்குறிப்புகள், கணக்குப் புத்தகங்கள், பேரேடுகள், கடிதங்கள் மற்றும் தந்திகள் அடங்கும். இவற்றில் சில ஆவணங்கள் 1838ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்த ஆவணங்களில் உணர்வுகள் நிரம்பியிருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பாக இவர்கள் ஓமானுக்குச் சென்ற போது, இவர்கள் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எப்படி சுகதுக்கங்களை எதிர்கொண்டார்கள், ஓமான் நாட்டுமக்களோடு இவர்களுடைய தொடர்புகள் எவ்வாறு பெருகியது போன்றவை எல்லாம் இந்த ஆவணங்களில் அடங்கியிருக்கின்றன. Oral History Project – வாய்மொழி வரலாறுத் திட்டமும் கூட இந்தக் குறிக்கோளின் ஒரு மகத்துவம் வாய்ந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்தப் பேரிலக்கில், அங்கே இருக்கும் மூத்தோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே தங்களுடைய வாழ்க்கைமுறை குறித்த தகவல்களை விரிவாக அவர்கள் எடுத்துப் பேசியிருக்கிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு வாய்மொழி வரலாற்றுத் திட்டம், பாரத நாட்டிலும் நடந்தேறி வருகிறது. இந்தத் திட்டப்படி, வரலாறு விரும்பிகள் தேசப்பிரிவினை காலகட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தேசத்தில், தேசப்பிரிவினை பயங்கரத்தைக் கண்டவர்கள்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த முயற்சி மேலும் மகத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிறது.
நண்பர்களே, எந்த தேசம் எந்தப் பகுதி தனது வரலாற்றைப் பாதுகாத்து வைக்கிறதோ, அதன் எதிர்காலம் பாதுகாப்பானது. இந்த எண்ணத்தோடு தான் ஒரு முயற்சி நடந்திருக்கிறது. இதிலே கிராமங்களின் வரலாற்றை ஒன்று திரட்டும் வகையில் ஒரு தகவல்திரட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல்பயணம் மேற்கொண்ட பாரதத்தின் பழமையான திறமைகளோடு தொடர்புடைய சான்றுகளைத் திரட்டும் இயக்கம் கூட தேசத்தில் இயங்கி வருகிறது. இது தொடர்பாக லோதலில், ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் கூட உருவாக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர, உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் ஓலைச்சுவடியோ, வரலாற்று முக்கியத்துவமான ஆவணமோ, கையெழுத்துப்படியோ இருந்தால், நீங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் உதவியோடு அதைப் பராமரிக்கலாம்.
நண்பர்களே, ஸ்லோவாகியாவில் நடைபெற்றுவரும் இதேபோன்ற மேலும் ஒரு முயற்சி குறித்துத் தெரிய வந்தது. நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து அதை முன்னெடுத்துச் செல்வதோடு இது தொடர்புடையது. இங்கே முதன்முறையாக ஸ்லோவாக் மொழியில் நமது உபநிஷதங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகளால் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உலகம்தழுவிய தாக்கம் குறித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகமெங்கும் இப்படிப்பட்ட கோடிக்கணக்கானோரின் இதயங்களில் பாரதம் வாழ்ந்து வருகிறது என்பது பெருமிதமளிக்கும் விஷயம்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் இப்படிப்பட்ட சாதனையை இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன், இது உங்களுக்கு பேருவகையையும் அளிக்கலாம், பெருமிதமும் ஏற்படலாம், நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு ஒருவேளை கழிவிரக்கமும் ஏற்படலாம். சில மாதங்கள் முன்பாக நாம் “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” என்ற இயக்கத்தைத் தொடக்கினோம் இல்லையா? இந்த இயக்கத்தின் வாயிலாக தேசமெங்கிலும் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். இந்த இயக்கம் வாயிலாக 100 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன என்ற முக்கியமான கட்டத்தை நாம் தாண்டியிருக்கிறோம் என்பதை நான் மிகுந்த உவகையோடு தெரிவித்துக் கொள்கிறேன். 100 கோடி மரங்கள், அதுவும் வெறும் ஐந்தே மாதங்களில் என்பது நமது நாட்டுமக்களின் இடையறாத முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதோடு தொடர்புடைய மேலும் ஒரு விஷயத்தைக் கேட்டால் நீங்கள் பெருமிதப்படுவீர்கள். தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கமானது இப்போது உலகின் பிற நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. நான் கயானாவில் இருந்த வேளையில், அங்கேயும் கூட இந்த இயக்கத்தை என்னால் கண்ணாரக் காண முடிந்தது. அங்கே என்னோடு கூட கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலி, அவருடைய மனைவியின் தாய், மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் எல்லோரும், தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
நண்பர்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களிலும் இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தின் இந்தோரில், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தில், மரம் நடுவதில் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே 24 மணிநேரத்தில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இந்த இயக்கம் காரணமாக இந்தோரின் ரேவதி குன்றுகளின் வறண்ட பகுதி இப்போது பசுமைப்பகுதியாக உருமாறிவிடும். ராஜஸ்தானத்தின் ஜைசால்மேரில் இந்த இயக்கம் வாயிலாக ஒரு வித்தியாசமான சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே பெண்களின் ஒரு குழு, ஒரு மணிநேரத்தில், 25,000 மரங்களை நட்டிருக்கிறது. தாய்மார்கள், தாயின் பெயரில் ஒரு மரம் நட்டார்கள், மற்றவர்களுக்கும் இப்படிச் செய்ய உத்வேகம் அளித்தார்கள். இங்கே இருக்கும் ஓரிடத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டார்கள் என்பது கூட ஒரு சாதனை தான். தாயின் பெயரில் ஒரு மரம்நடு இயக்கத்தின்படி பல சமூக அமைப்புகள், வட்டாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மரங்களை நட்டு வருகின்றார்கள். எங்கெல்லாம் மரங்களை நட வேண்டியிருக்கிறதோ, அங்கேயெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலே ஒட்டுமொத்த சூழலமைப்பையும் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முயற்சியாக இருக்கிறது. ஆகையால் இந்த அமைப்புகள் சில இடங்களில் மருத்துவத் தாவரங்களை நடுகிறார்கள், சில இடங்களில் புள்ளினங்கள் தங்கியிருக்க மரங்களை நடுகிறார்கள். பிஹாரின் ஜீவிகா சுயவுதவிக் குழுவின் பெண்கள், 75 இலட்சம் மரங்களை நடும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்தப் பெண்களின் ஒட்டுமொத்த கவனமும், பழமரங்களை நடுவதன் மீது இருக்கிறது, இதனால் வருங்காலத்தில் வருவாயும் பெற முடியும்.
நண்பர்களே, இந்த இயக்கத்தோடு இணைந்து, எந்த ஒரு நபரும் தனது தாயின் பெயரில் மரம் நட முடியும். தாய் உடனிருந்தால், அவர்களையும் அழைத்துக் கொண்டு மரம் நடலாம். இல்லையென்றால் அவருடைய படத்தின் முன்னிலையில் கூட நீங்கள் இந்த இயக்கத்தின் பங்குதாரராக ஆகலாம். மரத்தோடு கூட நீங்கள் உங்கள் சுயபுகைப்படம், செல்ஃபியை எடுத்து, அதை மைகவ்.இன் தளத்தில் தரவேற்றம் செய்யலாம். தாயானவள் நமக்கெல்லாம் அளிப்பவற்றுக்கான நன்றிக்கடனை நம்மால் என்றுமே இட்டுநிரப்ப முடியாது என்றாலும், தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, நாம் அவருடைய இருப்பை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.
என் கனிவான நாட்டுமக்களே, நீங்களனைவரும் உங்கள் சிறுவயதில் சிட்டுக்குருவியை உங்கள் வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள், அதன் கீச்சொலியைக் கேட்டிருப்பீர்கள். தமிழிலும் மலையாளத்திலும் இதை குருவி என்றும், தெலுகுவில் இதை பிச்சுகா என்றும், கன்னடத்தில் இதை குப்பி என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி தொடர்பான சம்பவங்கள்-கதைகள் இருக்கின்றன. நம்மருகிலே உயிரிபன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு; ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது. பெருகிவரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாகச் சென்றுவிட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளில் பலர், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்விலே, இந்த இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளையானது, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதைப் பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பாக பயிற்சிகளை அளிக்கிறார்கள். இதற்காக இந்த அமைப்பைச் சேர்ந்த இவர்கள், சிறிய அளவிலான மரவீட்டை உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இதிலே சிட்டுக்குருவி வசிக்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பை எளிதாக வெளிப்புறச் சுவரிலோ, மரத்திலோ பொருத்திவிட முடியும். குழந்தைகள் இந்த இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள், சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைக்கத் தொடங்கினார்கள். கடந்த நான்கு ஆண்டுகளிலே இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கென இப்படி 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது. கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பு காரணமாக அக்கம்பக்கப் பகுதிகளில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. நீங்களும் உங்கள் அருகிலே நடைபெறும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்.
நண்பர்களே, கர்நாடகத்தின் மைசூரூவில் இருக்கும் ஒரு அமைப்பு, குழந்தைகளுக்காக Early Bird என்ற பெயரிலான இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்த அமைப்பானது பறவைகளைகளைப் பற்றி குழந்தைகளுக்குப் புரியவைக்க, சிறப்பானதொரு நூலகத்தை நடத்துகிறது. இதுமட்டுமல்ல, குழந்தைகளிடம் இயற்கையின்பால் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இயற்கைக்கல்வி கிட் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது. இந்த கிட்டிலே, குழந்தைகளுக்கென கதைப்புத்தகம், விளையாட்டுக்கள், செயல்பாட்டுத் தாள்-activity sheet மற்றும் திருகுவெட்டுப் புதிர்கள் ஆகியன அடங்கும். இந்த அமைப்பு, நகரக்குழந்தைகளை கிராமங்களுக்கு இட்டுச் செல்கிறது, அங்கே பறவைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. இது போன்ற முயற்சிகள் மூலம் குழந்தைகளிடம் தங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவற்றைக் கண்டு, புரிந்து கொண்டு பல கண்ணோட்டங்களை ஏற்படுத்த முடியும். மனதின் குரலின் நேயர்களும் கூட இத்தகைய முயற்சிகளைச் செய்து குழந்தைகளின் புரிதலை மேம்படுத்த இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, அரசாங்க அலுவலகம் என்று சொன்னவுடனே மனதிலே கோப்புகளின் குவியல் என்ற காட்சி மனதிலே நிழலாடும். திரைப்படங்களிலும் கூட இப்படித் தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அரசு அலுவலகங்களில் இந்தக் கோப்புகள் தொடர்பாக ஏராளமாக கேலி பேசப்பட்டு வருகின்றது, ஏகப்பட்ட கதைகளும் எழுதப்பட்டு விட்டன. பல்லாண்டுகளாக கோப்புகள், அலுவலகங்களில் தூசிபடிந்த நிலையில் இருந்தன, அங்கே தூய்மையின்மை நிலவி வந்தது. இப்படிப்பட்ட பல பத்தாண்டுகள் பழமையான கோப்புகளையும், குப்பைகளையும் அகற்ற சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. அரசுத் துறைகளில் இந்த இயக்கம் காரணமாக, அற்புதமான விளைவுகள் ஏற்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். தூய்மைப்படுத்தல் காரணமாக கணிசமான இடம் அலுவலகங்களில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அலுவலகத்தில் பணி செய்வோருக்கு ’இது தங்கள் உடைமை’ என்ற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய பணியிடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவமும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
நண்பர்களே, எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே திருமகள் வாசம் செய்கிறாள் என்று மூத்தோர் அடிக்கடி கூற நீங்கள் கேட்டிருக்கலாம். நமது தேசத்திலே குப்பையிலிருந்து கோமேதகம் ஏற்படுத்தும் கருத்து மிகவும் பழமையானது. தேசத்தின் பல பாகங்களில் பயனற்றவை என்று கருதப்படும் பொருட்கள் தொடங்கி, இளைஞர்கள் குப்பையிலிருந்து கோமேதகத்தை உருவாக்கி வருகின்றார்கள். பலவகையான நூதனக் கண்டுபிடிப்புக்களைப் புரிந்து வருகிறார்கள். இவற்றின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள், வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த இளைஞர்கள் தங்கள் முயற்சிகளின் மூலம் நீடித்த வாழ்க்கைமுறைக்கும் உந்துதல் அளித்து வருகிறார்கள். மும்பையின் இரு பெண்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அக்ஷராவும், பிரக்ருதியும், துணித்துண்டுகளிலிருந்து ஃபேஷனுக்கான பொருட்களை உருவாக்கி வருகின்றார்கள். துணிகளை வெட்டித் தைக்கும் போது, மிஞ்சும் துண்டுத்துணிகள் இருக்கிறதல்லவா, இவற்றைக் குப்பை என்று தூர எறிந்து விடுவார்கள். அக்ஷரா-பிரக்ருதியின் குழு, இந்தத் துண்டுத் துணிகளின் குப்பையை ஃபேஷன் பொருளாக மாற்றி விடுகிறது. துண்டுத் துணிகளாலான தொப்பிகள், பைகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
நண்பர்களே, தூய்மை தொடர்பாக உபி மாநிலத்தின் கான்பூரிலும் கூட நல்லதொரு முன்னெடுப்பு நடந்து வருகிறது. இங்கே சிலர் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள், கங்கையின் கரைகளில் பரவியிருக்கும் நெகிழிக் குப்பைகள், இன்னபிற குப்பைகளை எடுக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர் Kanpur Ploggers Group, அதாவது கான்பூர் குப்பை சேகரிப்போர் குழு. இதை சில நண்பர்கள் இணைந்து தொடங்கினார்கள். மெல்லமெல்ல இது மக்கள் பங்களிப்பின் பேரியக்கமாக மாறிவிட்டது. நகரின் பலர் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதன் உறுப்பினர்கள் இப்போது கடைகள் மற்றும் வீடுகளில் இருக்கும் குப்பைகளையும் கூட சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் குப்பை வாயிலாக மறுசுழற்சி ஆலையில் மரங்களுக்கான பாதுகாப்பு வேலி தயாரிக்கப்படுகிறது, அதாவது இந்தக் குழுவானது, குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட மரக்காப்பானைக் கொண்டு தாவரங்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது.
நண்பர்களே, சின்னச்சின்ன முயற்சிகளால் பெரிய வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு, அஸாம் மாநிலத்தின் இதிஷா. இதிஷா படித்தது எல்லாம் தில்லியிலும், புணேயிலும். இதிஷா பெருநிறுவன உலகின் பகட்டான வாழ்க்கையைத் துறந்து, அருணாச்சலத்தின் சாங்கதி நதித்துறையைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுலாப் பயணிகள் காரணமாக அங்கே கணிசமான நெகிழிக் கழிவுகள் திரளத் தொடங்கின. அங்கே ஒருகாலத்தில் தூய்மையாக இருந்த நதி, நெகிழிக் கழிவுகள் காரணமாக மாசடைந்து விட்டது. இதை சுத்தப்படுத்த வட்டார மக்களோடு இணைந்து இதிஷா செயல்பட்டு வருகிறார். இவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள், வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நெகிழிக் கழிவுகளைத் திரட்டி, ஒட்டுமொத்த படித்துறையிலும் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகளை வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகளால் பாரதத்தில் தூய்மை இயக்கத்திற்கு வேகம் கிடைத்து வருகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுவரும் இயக்கம். உங்கள் அருகிலே கூட இப்படிப்பட்டவை நடந்து கொண்டிருக்கலாம். நீங்கள் இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர்பாக கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே. உங்களுடைய எதிர்வினைகள், கடிதங்கள், ஆலோசனைகளுக்காக மாதம் முழுவதும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். மாதம்தோறும் வருகின்ற உங்களுடைய தகவல்கள் என்னை மேலும் சிறப்பாக இயங்க வைக்க உத்வேகம் அளிக்கின்றன. அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில், தேசம் மற்றும் தேசத்தின் மக்களின் புதிய சாதனைகளோடு சந்திப்போம். அதுவரை, நாட்டுமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.
நண்பர்களே, பாரத நாடு அனைத்துக் காலகட்டங்களிலும் ஏதாவது ஒரு சவாலை சந்தித்து வந்திருக்கிறது, அந்தக் காலங்களில் எல்லாம் அசாதாரணமான வல்லமை படைத்தோர் தோன்றினார்கள், சவால்களைத் திறம்பட எதிர்கொண்டார்கள். இன்றைய மனதின் குரலில், வல்லமையும், தொலைநோக்கும் உடைய இப்படிப்பட்ட இரண்டு மகாநாயகர்களைப் பற்றியே நான் உங்களோடு கலந்து கொள்ள இருக்கிறேன். இவர்களின் 150ஆவது பிறந்த நாளை தேசம் கொண்டாட முடிவு செய்திருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்த ஆண்டின் தொடக்கமாக இருக்கும். இதன் பிறகு நவம்பர் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் 150ஆவது பிறந்த ஆண்டுத் தொடக்கம் வரும். இந்த இரண்டு மாமனிதர்கள், வேறுபட்ட சவால்களை சந்தித்தார்கள் என்றாலும், இருவரின் தொலைநோக்கும் ஒன்றாகவே இருந்தது, அது தான் தேசத்தின் ஒற்றுமை.
நண்பர்களே, கடந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட மாமனிதர்களின் பிறந்த நாள்களை, புதிய சக்தியோடு தேசம் கொண்டாடியது, புதிய தலைமுறையினருக்குப் புதிய உத்வேகத்தை ஊட்டியது. நாம் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில் அது எத்தனை விசேஷமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் தொடங்கி, ஆப்பிரிக்காவின் சின்ன கிராமம் வரை, உலக மக்கள் யாவரும் பாரதத்தின் வாய்மை மற்றும் அகிம்ஸை பற்றிய செய்தியைப் அறிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள், அதை வாழ்ந்தும் பார்த்தார்கள். இளைஞர்கள் முதல் வயதானோர் வரை, இந்தியர்கள் முதல் அயல்நாட்டவர் வரை, அனைவரும் காந்தியடிகளின் உபதேசங்களை, புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டார்கள், புதிய உலக சூழ்நிலையில் அதை அறிந்து கொண்டார்கள். நாம் ஸ்வாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில், தேசத்தின் இளைஞர்கள் பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார சக்தியின் புதிய அர்த்தங்களைப் புரிந்து கொண்டார்கள். நமது மகாபுருஷர்கள் கடந்த காலத்தோடு கடந்து சென்று விடப்போவதில்லை, அவர்களின் வாழ்க்கை நமது தற்கால வாழ்க்கைக்கு, வருங்காலப் பாதையை இவை துலக்கிக் காட்டுகின்றன.
நண்பர்களே, அரசு இந்த மாமனிதர்களின் 150ஆவது பிறந்த ஆண்டினை தேசிய அளவில் கொண்டாட முடிவு செய்திருந்தாலும் கூட, உங்களின் பங்களிப்பு மட்டுமே இந்த இயக்கத்தில் உயிர்ப்பை அளிக்கும், இதை உயிர்பெறச் செய்யும். நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என்று நான் உங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். இரும்பு மனிதர் சர்தார் படேலோடு தொடர்பான கருத்துக்கள்-செயல்களை #Sardar150 என்பதிலே பதிவு செய்யுங்கள்; மண்ணின் மைந்தன் பிர்ஸா முண்டாவின் கருத்தூக்கங்களை #BirsaMunda150 என்பதிலே பதிவு செய்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். வாருங்கள், நாமனைவரும் ஒன்றுபட்டு, பாரதத்தின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம், மரபு தொடங்கி முன்னேற்றம் என்ற இந்த விழாவை முன்னெடுப்போம்.
எனதருமை நாட்டுமக்களே, தொலைக்காட்சியில் சோட்டா பீம் தொடங்கப்பட்ட நாளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள், இல்லையா? குழந்தைகளால் இதைக் கண்டிப்பாக மறக்க இயலாது, சோடா பீம் தொடர்பாக எந்த அளவுக்கு ஆர்வம் இருந்தது!! டோலக்பூரின் இந்த மேளம், பாரத நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளின் குழந்தைகளையும் மிகவும் கவர்ந்து இழுக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். இதைப் போலவே நமது வேறு பிற அனிமேஷன் செய்யப்பட்ட தொடர்களான கிருஷ்ணன், அனுமன், மோடூ-பத்லூ போன்றவற்றை விரும்புவோர் உலகெங்கிலும் இருக்கிறார்கள். பாரதநாட்டின் அனிமேஷன் செய்யப்பட்ட பாத்திரங்கள், நம் நாட்டின் அனிமேஷன் செய்யப்பட்டத் திரைப்படங்கள், நமது உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவை காரணமாக உலகெங்கிலும் இவை விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. நீங்களே கூட கவனித்திருக்கலாம், ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி வெள்ளித் திரை வரை, கேமிங் கன்சோல் தொடங்கி, virtual reality, அதாவது மெய்நிகர் உண்மை வரை, அனிமேஷன் என்பது அங்கிங்கெனாதபடி பரவியிருக்கிறது. அனிமேஷன் உலகத்தில், பாரதம் புதிய புரட்சியைப் படைக்கும் பாதையில் இருக்கிறது. பாரதநாட்டின் கேமிங் துறையும் கூட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சில மாதங்கள் முன்பாக, பாரதத்தின் முன்னணி கேமர்களோடு நான் சந்திக்க நேர்ந்தது, அப்போது தான் இந்திய விளையாட்டுக்களின் ஆச்சரியம் கொள்ளவைக்கும் படைப்புத்திறன் மற்றும் தரம் பற்றித் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது. உண்மையிலேயே, தேசத்தில் படைப்பாற்றல் அலை ஒன்று வீசிக் கொண்டிருக்கிறது. அனிமேஷன் உலகில் இந்தியாவில் தயாரிப்பது, இந்தியர்களால் உருவாக்கப்படுவது என்பது விரவிக் கிடக்கிறது. இன்று பாரதத்தின் திறமைகள், அயல்நாட்டுத் தயாரிப்புக்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இப்போதிருக்கும் ஸ்பைடர்மேனாகட்டும், ட்ரான்ஸ்ஃபார்மர்களாகட்டும், இந்த இரண்டு படங்களிலும் ஹரிநாராயண் ராஜீவின் பங்களிப்பினை மக்கள் மிகவும் மெச்சியிருக்கிறார்கள். பாரதத்தின் அனிமேஷன் ஸ்டூடியோக்கள், டிஸ்னி மற்றும் வார்னர் சகோதரர்களைப் போலவே, உலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன.
நண்பர்களே, இன்று நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் பிரதிபலிக்கும் புத்தம்புது இந்திய உள்ளடக்கம்-விஷயங்களைத் தயாரித்து வருகின்றார்கள். இவை உலகம் நெடுகப் பார்க்கப்பட்டும் வருகின்றன. அனிமேஷன் துறை இன்று எப்படிப்பட்டத் துறையாக ஆகிவிட்டது என்றால், பிற துறைகளுக்கு அது பலமூட்டி வருகின்றது. எடுத்துக்காட்டாக, இப்போதெல்லாம் வீ ஆர் டூரிஸம் மிகவும் பிரபலமாகி வருகிறது. நீங்கள் மெய்நிகர் சுற்றுலா வாயிலாக, அஜந்தாவின் குகைகளுக்குச் சென்று பார்க்கலாம், கோணார்க் ஆலயத்தின் இடைக்கழியில் உலவிவிட்டு வரலாம் அல்லது, வாராணசியின் துறைகளின் ஆனந்தமாகக் கழிக்கலாம். இந்த அனைத்து வீஆர் அனிமேஷனையும், பாரதத்தின் படைப்பாளிகள் தாம் தயார் செய்திருக்கின்றார்கள். இந்த வீஆர் வாயிலாக, இந்த இடங்களைக் கண்டு களித்த பிறகு பலர் மெய்யாகவே இந்தச் சுற்றுலா இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்புகிறார்கள், அதாவது சுற்றுலா இடத்தை மெய்நிகர்க் காட்சி வாயிலாக சுற்றிப் பார்த்த பிறகு மக்களின் மனங்களிலே மெய்யாகவே அங்கே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் கருவியாக இது ஆகி இருக்கிறது. இன்று இந்தத் துறையில் அனிமேட்டர்களோடு கூடவே கதை சொல்பவர்கள், எழுத்தாளர்கள், குரல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கேம் டெவலப்பர்கள், வீஆர் மற்றும் ஏஆர் வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகையால், பாரத நாட்டு இளைஞர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுடைய படைப்புத் திறனுக்கு இறக்கை அளியுங்கள். உலகின் அடுத்த சூப்பர்ஹிட் அனிமேஷன் உங்களுடைய கணிப்பொறியிலிருந்து கூட பிறப்பெடுக்கலாம், யார் அறிவார்கள்!! அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு தீயாய்ப் பரவும் அடுத்தப் படைப்பு உங்களுடையதாக இருக்கலாம்!! கல்விசார் அனிமேஷன்களின் உங்களுடைய புதுமைகள், பெரும் வெற்றியை ஈட்டலாம். வரும் அக்டோபர் 28ஆம் தேதி, அதாவது நாளைய தினம் உலக அனிமேஷன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாருங்கள், நாம் பாரதத்தை உலக அனிமேஷன் ஆற்றல் மையமாக மாற்றும் உறுதிப்பாட்டை ஏற்போம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஸ்வாமி விவேகானந்தர் ஒருமுறை வெற்றிக்கான மந்திரத்தை அளித்தார். அந்த மந்திரம் என்னவென்றால், ஏதோ ஒரு கருத்தை மனதில் கொள்ளுங்கள், அந்த ஒரு கருத்தை உங்கள் வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளுங்கள், அதையே சிந்தியுங்கள், அதைப் பற்றியே கனவு காணுங்கள், அதை வாழத் தொடங்குங்கள். இன்று, தற்சார்பு பாரதம் இயக்கத்தின் வெற்றியும் கூட இதே மந்திரத்தை அடியொற்றிப் பயணித்து வருகிறது. இந்த இயக்கம் நமது சமுக விழிப்புநிலையின் அங்கமாக ஆகி விட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு படிநிலையிலும் நமது உத்வேகமாக ஆகியிருக்கிறது. தற்சார்பு என்பது நமது கொள்கைத் திட்டம் மட்டுமல்ல, நமது பேரார்வமாகவே ஆகியிருக்கிறது. பல ஆண்டுகள் ஆகி விடவில்லை, வெறும் பத்தாண்டுகள் முன்பான விஷயம் தான், ஏதோவொரு நுணுக்கமான தொழில்நுட்பத்தை பாரதத்தில் மேம்படுத்த வேண்டும் என்று அப்போது யாராவது கூறியிருந்தால், பலருக்கு நம்பிக்கையே இருந்திருக்காது, பலர் பரிகாசம் கூட செய்திருப்பார்கள். ஆனால் இன்று அதே மனிதர்கள், தேசத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறார்கள். தற்சார்புடையதாக மாறிவரும் பாரதம், அனைத்துத் துறைகளிலும் அற்புதங்களை அரங்கேற்றி வருகின்றது. நீங்களை சிந்தியுங்கள், ஒரு காலத்தில் செல்பேசிகள் இறக்குமதி செய்துவந்த பாரதம் இன்றோ, உலகின் மிகப்பெரிய செல்பேசித் தயாரிப்பாளராக ஆகியிருக்கிறது. ஒரு காலத்தில் மிக அதிக அளவு பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த பாரதம் இன்றோ, 85 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. விண்வெளித் தொழில்நுட்பத்தில் பாரதம் இன்று, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் தேசமாக அறியப்படுகிறது. இவற்றிலெல்லாம் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அது என்னவென்றால், தற்சார்பு நோக்கிய இந்த இயக்கம் இப்போது ஒரு அரசு இயக்கமாக மட்டுமே நின்று போகாமல், இந்த தற்சார்பு பாரத இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருகிறது என்பது தான். அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த மாதம் தான் லத்தாக்கின் ஹான்லேவில், நாம் ஆசியாவின் மிகப்பெரிய ஒலிவழி இயல்நிலை வரைவி தொலைநோக்கியான மேஸ், அதாவது ‘Imaging Telescope MACE’ஐ நிறுவினோம். இது 4300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. சிந்தியுங்கள், எந்த இடத்தில் பூஜ்யத்திற்குக் கீழே 30 டிகிரிகள் என்ற வெப்பநிலை இருக்கிறதோ, எங்கே பிராணவாயு என்பதே அரிதாக உள்ளதோ, அங்கே நமது விஞ்ஞானிகளும், உள்ளூர் தொழில்துறையும் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இப்படி ஆசியாவின் எந்த தேசமும் இதுவரை செய்தது இல்லை. ஹான்லேவின் இந்தத் தொலைநோக்கி தொலைவான உலகை வேண்டுமானால் பார்க்கலாம் ஆனால், இது நமக்கு மேலும் ஒரு விஷயத்தைச் சுட்டுகிறது, அது தான் தற்சார்பு பாரதத்தின் வல்லமை.
நண்பர்களே, நீங்களுமே கூட ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்சார்பு பாரதத்தின் அதிக அளவு எடுத்துக்காட்டுகள், இப்படிப்பட்ட முயற்சிகளை நீங்களும் பகிருங்கள். நீங்கள் உங்களுடைய அக்கம்பக்கத்திலே என்ன மாதிரியான புதுமைகளைக் கண்டீர்கள், எந்த உள்ளூர் ஸ்டார்ட் அப் உங்களை அதிகம் கவர்ந்தது, சமூக வலைத்தளத்தில் #AatmanirbharInnovationஇலே தகவல்களை அளியுங்கள், தற்சார்பு பாரதக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுங்கள். பண்டிகைகளின் இந்தக் காலத்திலே நாமனைவரும் தற்சார்பு பாரதம் என்ற இந்த இயக்கத்தை மேலும் பலமடையச் செய்வோம். நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் மந்திரத்தோடு நமது கொள்முதலை இணைப்போம். இது புதிய பாரதம், அசாத்தியம் என்பது இங்கே ஒரு சவால் தான், இங்கே இந்தியாவில் தயாரிப்போம் என்பது உலகிற்காகத் தயாரிப்போமாக ஆகி விட்டது, இங்கே அனைத்துக் குடிமக்களும் புதுமைகள் படைப்போராக ஆகியிருக்கிறார்கள், இங்கே அனைத்துச் சவால்களுமே சந்தர்ப்பங்கள் தாம். நாம் பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குவது மட்டுமல்ல, நமது தேசத்தை புதுமைகள் படைத்தலின் உலகளாவிய சக்திபீடமாகவும் பலப்படுத்த வேண்டும்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க வைக்கிறேன்.
###### (audio)
Transcription of Audio Byte
Fraud Caller 1: Hello
Victim : சார் வணக்கம் சார்.
Fraud Caller 1: வணக்கம்.
Victim : சொல்லுங்க சார்.
Fraud Caller 1: பாருங்க, நீங்க எனக்கு வந்திருக்கற எஃப் ஐ ஆர் நம்பர்ல 17 குற்றச்சாட்டுகள் இருக்கு. நீங்க இந்த நம்பரையா பயன்படுத்திட்டு இருக்கீங்க?
Victim : நான் இதை பயன்படுத்தலை சார்.
Fraud Caller 1: இப்ப எங்கிருந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க?
Victim : கர்நாடகாவிலேர்ந்து சார். இப்ப நான் வீட்டுல தான் இருக்கேன்.
Fraud Caller 1: ஓகே, உங்க ஸ்டேட்மெண்டை பதிவு செய்யுங்க, அதுக்குப் பிறகு உங்க நம்பர் ப்ளாக் செய்யப்படும். எதிர்காலத்தில இதனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, ஓகேயா?
Victim : சரி சார்.
Fraud Caller 1: இப்ப நான் உங்களை கனெக்ட் செய்யறேன், அவரு தான் புலனாய்வு அதிகாரி. நீங்க அவருகிட்ட உங்க ஸ்டேட்மெண்டை குடுத்திருங்க. அப்பத் தான் உங்க நம்பர் ப்ளாக் ஆகும். ஓகேயா?
Victim : சரி சார்.
Fraud Caller 1: சொல்லுங்க சார். நான் யாரு கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா? உங்க ஆதார் அட்டையை கொஞ்சம் காமிக்க முடியுமா, சரிபார்க்க விவரம் சொல்ல முடியுமா?
Victim : சார், என்கிட்ட என்னோட ஆதார் அட்டை இப்ப இல்லை, ப்ளீஸ் சார்.
Fraud Caller 1: ஃபோன், உங்க ஃபோன்ல இருக்கும்ல?
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: உங்க ஃபோன்ல உங்க ஆதார் அட்டையோட புகைப்படம் இருக்குமில்லையா?
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: நம்பராவது ஞாபகம் இருக்குமில்லையா?
Victim : இல்லை சார். நம்பரும் நினைவுல இல்லை சார்.
Fraud Caller 1: நாங்க வெறுமனே சரி மட்டும் பார்க்கணும், ஓகே, சரிபார்க்க மட்டும் தான் தேவை.
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: நீங்க பயப்படவே வேண்டாம், நீங்க ஒண்ணும் செய்யலைன்னா பயப்படவே தேவையில்லை. சரியா?
Victim : சரி சார் சரி சார்.
Fraud Caller 1: உங்க கிட்ட ஆதார் அட்டை இல்லைன்னு சொன்னா, சரிபார்க்க எனக்கு ஏதாவது ஒரு ஆவணத்தையாவது குடுங்க!!
Victim : இல்லை சார், நான் கிராமத்திலேந்ர்ந்து வந்திருக்கேன், என்னோட எல்லா ஆவணங்களுமே அங்க வீட்டுல தான் சார் இருக்கு.
Fraud Caller 1: ஓகே
Fraud Caller 2: நான் உள்ள வரலாமா சார்?
Fraud Caller 1: வாங்க.
Fraud Caller 2: ஜய் ஹிந்த்
Fraud Caller 1: ஜய் ஹிந்த்
Fraud Caller 1: இந்த ஆளோட one sided video callஐ பதிவு செய். ஓகே.
########
இந்த ஒலிப்பதிவு வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, இது ஏதோ கேளிக்கைக்கான ஒலிக்குறிப்பல்ல, ஆழமான கவலையளிக்கவல்ல ஒலிக்குறிப்பு இது. நீங்கள் இப்போது கேட்ட உரையாடல், டிஜிட்டல் கைது மோசடி தொடர்பானது. இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட நபருக்கும், மோசடி செய்பவருக்கும் இடையிலானது. டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள். மனதின் குரலின் நேயர்கள் பலர் இது குறித்து நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். வாருங்கள், இந்த மோசடிப் பேர்வழிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், இந்த அபாயகரமான விளையாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்களை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதே போல மற்றவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். முதல் தந்திரமான உத்தி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் தில்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று. இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள். பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும். மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம். “இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”. என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல்ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள். இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”. அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள். இதன் பிறகு வருவது அடுத்த கட்டம். முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”. எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள். முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம். முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும், இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”. தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நிதானியுங்கள், பிறகு சிந்தியுங்கள், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள், இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும்.
நண்பர்களே, நான் மீண்டும் கூறுகிறேன், டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அமைப்புகளின் தரப்பிலிருந்து இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான காணொளி அழைப்பு எண்கள் அரசு அமைப்புக்களின் தரப்பிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான சிம் கார்டுகள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் கூட முடக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியைப் புரிந்து வருகின்றன என்றாலும், டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடந்தேறி வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்துக் குடிமக்களும் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். யாரெல்லாம் இப்படிப்பட்ட சைபர் மோசடிக்கு இரையாகி இருக்கின்றார்களோ, அவர்கள் அதிக அளவு மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் #SafeDigitalIndia என்பதைப் பயன்படுத்தலாம். இந்த சைபர் மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள்-கல்லூரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், இதில் அதிக அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். சமுதாயத்தில் அனைவரின் முயற்சிகள் வாயிலாக மட்டுமே நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, நமது பல பள்ளிக் குழந்தைகள் calligraphy அதாவது எழுத்துக்கலையில் கணிசமான நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள். இதன் வாயிலாக நமது எழுத்து தெளிவாக, அழகாக, ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இன்று ஜம்மு-கஷ்மீரத்தில் இதன் பயன்பாடு உள்ளூர் கலாச்சாரத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஆக்கப் பயன்படுகிறது. அனந்தநாகின் ஃபிர்தௌசா பஷீர் அவர்கள் எழுத்துக்கலையில் வல்லவர். இதன் வாயிலாக உள்ளூர் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களை இவர் வெளிப்படுத்தி வருகிறார். ஃபிர்தௌசா அவர்களின் எழுத்துக்கலையானது, உள்ளூர் மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தன்பால் ஈர்த்து வருகின்றது. இப்படிப்பட்ட ஒரு முயற்சியில், உதம்பூரின் கௌரிநாத் அவர்களும் ஈடுபட்டு வருகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் பழைமையான சாரங்கி வாத்தியம் வாயிலாக டோக்ரா கலாச்சாரம் மற்றும் மரபின் பல்வேறு வடிவங்களை அழகுபடுத்துவதில் இவர் ஈடுபட்டு வருகிறார். சாரங்கியின் சுரங்களோடு சேர்த்து, இவர் தங்களுடைய கலாச்சாரத்தோடு இணைந்த பண்டைய கதைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களையும் கூட, சுவாரசியமான முறையில் வெளிப்படுத்துகிறார். தேசத்தின் பல்வேறு பாகங்களிலும், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கும் இப்படிப்பட்ட பல அசாதாரணமான மனிதர்களை நீங்கள் சந்திக்க நேரலாம். டீ. வைகுண்டம் அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக செரியால் நாட்டுப்புறக் கலையை பிரபலமானதாக ஆக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தெலங்காணாவோடு இணைந்த இந்தக் கலையை முன்னெடுத்துச் செல்ல விழையும் இவருடைய முயற்சி அற்புதமானது. செரியால் ஓவியங்களை உருவாக்கும் செயல்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இது ஒரு காகிதச் சுருள் வடிவத்தில் கதைகளை முன்வைக்கிறது. இதிலே நமது வரலாறு மற்றும் புராணங்கள் முழுமையாகப் பளிச்சிடுகின்றன. சத்திஸ்கட்டின் நாராயண்பூரைச் சேர்ந்த புட்லுராம் மாத்ரா அவர்கள், அபூஜ்மாடியா பழங்குடியின மக்களின் கலையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக இவர் தனது இந்த பெருநோக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். இவருடைய இந்தக் கலை, பெண் குழந்தைகளைக் காப்போம்- அவர்களுக்குக் கல்வியளிப்போம் போன்ற இயக்கத்தோடு மக்களை இணைப்பதில் பேருதவியாக இருந்திருக்கிறது.
நண்பர்களே, இப்போது நாம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே கஷ்மீரத்தின் பள்ளத்தாக்குகள் தொடங்கி, சத்தீஸ்கட்டின் காடுகள் வரை, நமது கலை மற்றும் கலாச்சாரம் புதியபுதிய வண்ணங்களை இரைத்து வருகிறது என்றாலும், இதோடு இந்த விஷயம் முடிந்து போகவில்லை. நமது இந்தக் கலைகளின் நறுமணம் தொலைவான பிரதேசங்கள் வரையும் கூட பரவி வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாரதநாட்டுக் கலை மற்றும் கலாச்சாரத்தில் சொக்கி வருகிறார்கள். உதம்பூரில் எதிரொலிக்கும் சாரங்கி பற்றி நான் பேசிய வேளையில், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவாக, ரஷியாவின் நகரான யாகூத்ஸ்கிலும் கூட பாரதநாட்டுக் கலையின் இனிமையான இசை எதிரொலிப்பது என் நினைவுக்கு வருகிறது. கற்பனை செய்து பாருங்கள், குளிர் நிறைந்த ஒன்றிரண்டு நாட்கள், பூஜ்யத்திற்கு கீழே 65 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, நாலாபுறங்களிலும் பனிப்படலம் ஏதோ வெண்போர்வையை விரித்தது போல இருந்த வேளையில், அங்கே ஒரு அரங்கிலே, பார்வையாளர்கள் மகுடிக்கு முன்பு நாகம் போலே, காளிதாசனின் அபிக்யான சாகுந்தலத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகவும் குளிர்நிறைந்த நகரான யாகூத்ஸ்கிலே, பாரத இலக்கியத்தின் தண்மையை உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? இது கற்பனையல்ல சத்தியம். நம்மனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், ஆனந்தத்தையும் நிரப்பக்கூடிய சத்தியம்!!
நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் லாவோஸ் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அது நவராத்திரி காலம், அங்கே சில அற்புதமான காட்சிகளைக் கண்டேன். அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் ஃபலக் ஃபலம், இதை அரங்கேற்றியிருந்தார்கள், இது தான் லாவோஸின் இராமாயணம். நம்முடைய மனங்களிலே இராமாயணத்தின்பால் இருக்கும் அதே பக்தி, அவர்களுடைய குரல்களிலே அதே அர்ப்பணிப்பு அகியவற்றை நான் அவர்களுடைய கண்களில் கண்டேன். இதைப் போலவே, குவைத்தில் அப்துல்லா அல் பாரூன் அவர்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் பணி வெறும் மொழியாக்கமல்ல, மாறாக இரு மகத்தான கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலம். அவருடைய இந்த முயற்சி, அரபுலகில் பாரதநாட்டு இலக்கியத்தின்பால் புதிய புரிதலை மேம்படச் செய்து வருகிறது. பெரூ நாட்டிலிருந்து மேலும் ஒரு கருத்தூக்கமேற்படுத்தும் எடுத்துக்காட்டு – எர்லிண்டா கார்சியா அவர்கள் அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு பரதநாட்டியக்கலையைக் கற்பித்து வருகிறார், மாரியா வால்தேஸ் அவர்கள் ஒடிசீ நாட்டியத்தைக் கற்பித்து வருகிறார். இந்தக் கலைகளால் கவரப்பட்டு, தென்னமெரிக்காவின் பல நாடுகளில் பாரதநாட்டுப் பாரம்பரிய நடனங்கள் அதிக நறுமணம் பரப்பி வருகிறது.
நண்பர்களே, அயல்நாட்டு மண்ணிலே பாரதத்தின் இந்த எடுத்துக்காட்டுகள், பாரத நாட்டுக் கலாச்சாரத்தின் சக்தி எத்தனை அற்புதமானது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இவை தொடர்ந்து உலகைத் தம்பால் கவர்ந்து வருகின்றன.
எங்கெல்லாம் கலை உள்ளதோ, அங்கெல்லாம் பாரதம் உண்டு,
எங்கெல்லாம் கலாச்சாரம் உள்ளதோ, அங்கெல்லாம் பாரதம் உண்டு.
இன்று உலகனைத்தும் பாரதம் பற்றித் தெரிந்து கொள்ள விழைகிறது, பாரதநாட்டவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அவாவுகிறது. ஆகையால் உங்கள் அருகிலே இப்படிப்பட்ட கலாச்சாரமுன்னெடுப்பு குறித்து #CulturalBridgesஇலே தகவல் தெரிவியுங்கள். மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் குறித்து மேலும் உரையாடுவோம்.
என் இதயம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது, ஆனால் உடலுறுதி குறித்தப் பேரார்வம், ஃபிட் இண்டியாவின் உணர்வு, இதன் மீது எந்தப் பருவநிலையும் தாக்கமேற்படுத்தாது. உடலுறுதி மீது உறுதி கொண்ட யாருக்கும், அது குளிர்காலமாகட்டும், மழைக்காலமாகட்டும், எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பாரதத்திலே இப்போது மக்கள் உடலுறுதி தொடர்பாக மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக ஆகி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் அருகிலே இருக்கும் பூங்காக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். பூங்காக்களில் நடைபயிலும் மூத்தோர், இளைஞர்கள், மற்றும் யோகக்கலையில் ஈடுபட்டு வரும் குடும்பங்களைப் பார்த்து, எனக்கு நன்றாக இருக்கிறது. யோகக்கலை தினம் தொடர்பாக சில நாட்கள் முன்பாக நான் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அங்கே மாரத்தான் போட்டி நடந்தது, அதிலேயும் கூட இந்த உடலுறுதி மீதான ஆர்வத்தை என்னால் காண முடிந்தது. ஃபிட் இண்டியா, அதாவது உடலுறுதியான இந்தியா என்ற இந்த உணர்வு, இப்போது ஒரு மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, நமது பள்ளிகள், குழந்தைகள் எல்லாம் உடலுறுதி மீது இப்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள் என்பதைக் காணும் போது நான் உவப்பெய்துகிறேன். ஃபிட் இண்டியா ஸ்கூல் அவர்ஸ் என்பதும் கூட மிக வித்தியாசமான முன்னெடுப்பு. பள்ளிகள் தங்களுடைய முதல் வகுப்புக் காலத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உடலுறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எத்தனையோ பள்ளிகளில், ஏதோ ஒரு நாளன்று பிள்ளைகளுக்கு யோகக்கலையைப் பயிற்றுவிக்கிறார்கள், சில நாட்களில் ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது, ஒரு நாள் விளையாட்டுத் திறன்கள் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஏதோ ஒரு நாளன்று கபடி-கோகோ போன்ற பாரம்பரியமான விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன, இவற்றின் தாக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. வருகை சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளின் மனச்செறிவும் அதிகரிக்கிறது, அவர்களும் குதூகலம் அடைகிறார்கள்.
நண்பர்களே, இந்த உடல்நலத்தின் சக்தியை என்னால் அனைத்து இடங்களிலும் காண முடிகிறது. மனதின் குரலின் பல நேயர்களும் கூட என்னோடு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் மிகவும் சுவாரசியமான பிரயோகங்களையும் அனுப்பி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, குடும்ப உடலுறுதி மணிநேரம் பற்றி, அதாவது ஒரு குடும்பம், ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு மணிநேரத்தை குடும்பத்தின் உடலுறுதிக்காக ஒதுக்குகிறது. மேலும் ஒரு எடுத்துக்காட்டு, உள்நாட்டு விளையாட்டுக்களின் மறுமலர்ச்சி தொடர்பானது, அதாவது சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமான விளையாட்டுக்களைக் கற்பித்து வருகிறார்கள், அவர்களோடு விளையாடியும் வருகிறார்கள். நீங்களும் கூட உங்களுடைய உடலுறுதி வாடிக்கை தொடர்பான உங்களுடைய அனுபவங்களை #fitIndia என்ற பெயரிலான சமூக ஊடகத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான தகவலை அளிக்க விரும்புகிறேன். இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் பிறந்தநாளன்று, தீபாவளித் திருநாளும் வருகிறது. நாம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதியான தேச ஒற்றுமை தினத்தன்று, ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்வது வழக்கம். தீபாவளி காரணமாக இந்த முறை, அக்டோபர் 29ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமையன்று இந்த ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதிக அளவில் மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசத்தின் ஒருமைப்பாட்டின் மந்திரத்தோடு கூடவே உடலுறுதி மந்திரத்தையும் அனைத்துத் திசைகளிலும் பரப்புங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே. நீங்கள் உங்கள் பின்னூட்டங்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். இது பண்டிகைக்காலம். மனதின் குரல் நேயர்களுக்கு தன்தேரஸ், தீபாவளி, சட்பூஜை, குருநானக் பிறந்தநாள் மற்றும் அனைத்துத் திருநாட்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் முழு உற்சாகத்தோடு பண்டிகைகளைக் கொண்டாடுங்கள். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை என்றும் நினைவில் கொள்ளுங்கள், பண்டிகைக் காலத்தில் உங்களுடைய இல்லங்களிலே உள்ளூர் கடைக்காரர்களிடம் பொருட்களைக் கண்டிப்பாக வாங்க முயற்சி செய்யுங்கள். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் திருநாட்களை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.
*****
பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை
மனதின் குரல் நிகழ்ச்சியின் 115-வது அத்தியாயத்தில், 27.10.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
புதுதில்லி, அக்டோபர் 27, 2024
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.
நண்பர்களே, பாரத நாடு அனைத்துக் காலகட்டங்களிலும் ஏதாவது ஒரு சவாலை சந்தித்து வந்திருக்கிறது, அந்தக் காலங்களில் எல்லாம் அசாதாரணமான வல்லமை படைத்தோர் தோன்றினார்கள், சவால்களைத் திறம்பட எதிர்கொண்டார்கள். இன்றைய மனதின் குரலில், வல்லமையும், தொலைநோக்கும் உடைய இப்படிப்பட்ட இரண்டு மகாநாயகர்களைப் பற்றியே நான் உங்களோடு கலந்து கொள்ள இருக்கிறேன். இவர்களின் 150ஆவது பிறந்த நாளை தேசம் கொண்டாட முடிவு செய்திருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்த ஆண்டின் தொடக்கமாக இருக்கும். இதன் பிறகு நவம்பர் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் 150ஆவது பிறந்த ஆண்டுத் தொடக்கம் வரும். இந்த இரண்டு மாமனிதர்கள், வேறுபட்ட சவால்களை சந்தித்தார்கள் என்றாலும், இருவரின் தொலைநோக்கும் ஒன்றாகவே இருந்தது, அது தான் தேசத்தின் ஒற்றுமை.
நண்பர்களே, கடந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட மாமனிதர்களின் பிறந்த நாள்களை, புதிய சக்தியோடு தேசம் கொண்டாடியது, புதிய தலைமுறையினருக்குப் புதிய உத்வேகத்தை ஊட்டியது. நாம் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில் அது எத்தனை விசேஷமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் தொடங்கி, ஆப்பிரிக்காவின் சின்ன கிராமம் வரை, உலக மக்கள் யாவரும் பாரதத்தின் வாய்மை மற்றும் அகிம்ஸை பற்றிய செய்தியைப் அறிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள், அதை வாழ்ந்தும் பார்த்தார்கள். இளைஞர்கள் முதல் வயதானோர் வரை, இந்தியர்கள் முதல் அயல்நாட்டவர் வரை, அனைவரும் காந்தியடிகளின் உபதேசங்களை, புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டார்கள், புதிய உலக சூழ்நிலையில் அதை அறிந்து கொண்டார்கள். நாம் ஸ்வாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில், தேசத்தின் இளைஞர்கள் பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார சக்தியின் புதிய அர்த்தங்களைப் புரிந்து கொண்டார்கள். நமது மகாபுருஷர்கள் கடந்த காலத்தோடு கடந்து சென்று விடப்போவதில்லை, அவர்களின் வாழ்க்கை நமது தற்கால வாழ்க்கைக்கு, வருங்காலப் பாதையை இவை துலக்கிக் காட்டுகின்றன.
நண்பர்களே, அரசு இந்த மாமனிதர்களின் 150ஆவது பிறந்த ஆண்டினை தேசிய அளவில் கொண்டாட முடிவு செய்திருந்தாலும் கூட, உங்களின் பங்களிப்பு மட்டுமே இந்த இயக்கத்தில் உயிர்ப்பை அளிக்கும், இதை உயிர்பெறச் செய்யும். நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என்று நான் உங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். இரும்பு மனிதர் சர்தார் படேலோடு தொடர்பான கருத்துக்கள்-செயல்களை #Sardar150 என்பதிலே பதிவு செய்யுங்கள்; மண்ணின் மைந்தன் பிர்ஸா முண்டாவின் கருத்தூக்கங்களை #BirsaMunda150 என்பதிலே பதிவு செய்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். வாருங்கள், நாமனைவரும் ஒன்றுபட்டு, பாரதத்தின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம், மரபு தொடங்கி முன்னேற்றம் என்ற இந்த விழாவை முன்னெடுப்போம்.
எனதருமை நாட்டுமக்களே, தொலைக்காட்சியில் சோட்டா பீம் தொடங்கப்பட்ட நாளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள், இல்லையா? குழந்தைகளால் இதைக் கண்டிப்பாக மறக்க இயலாது, சோடா பீம் தொடர்பாக எந்த அளவுக்கு ஆர்வம் இருந்தது!! டோலக்பூரின் இந்த மேளம், பாரத நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளின் குழந்தைகளையும் மிகவும் கவர்ந்து இழுக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். இதைப் போலவே நமது வேறு பிற அனிமேஷன் செய்யப்பட்ட தொடர்களான கிருஷ்ணன், அனுமன், மோடூ-பத்லூ போன்றவற்றை விரும்புவோர் உலகெங்கிலும் இருக்கிறார்கள். பாரதநாட்டின் அனிமேஷன் செய்யப்பட்ட பாத்திரங்கள், நம் நாட்டின் அனிமேஷன் செய்யப்பட்டத் திரைப்படங்கள், நமது உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவை காரணமாக உலகெங்கிலும் இவை விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. நீங்களே கூட கவனித்திருக்கலாம், ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி வெள்ளித் திரை வரை, கேமிங் கன்சோல் தொடங்கி, virtual reality, அதாவது மெய்நிகர் உண்மை வரை, அனிமேஷன் என்பது அங்கிங்கெனாதபடி பரவியிருக்கிறது. அனிமேஷன் உலகத்தில், பாரதம் புதிய புரட்சியைப் படைக்கும் பாதையில் இருக்கிறது. பாரதநாட்டின் கேமிங் துறையும் கூட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சில மாதங்கள் முன்பாக, பாரதத்தின் முன்னணி கேமர்களோடு நான் சந்திக்க நேர்ந்தது, அப்போது தான் இந்திய விளையாட்டுக்களின் ஆச்சரியம் கொள்ளவைக்கும் படைப்புத்திறன் மற்றும் தரம் பற்றித் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது. உண்மையிலேயே, தேசத்தில் படைப்பாற்றல் அலை ஒன்று வீசிக் கொண்டிருக்கிறது. அனிமேஷன் உலகில் இந்தியாவில் தயாரிப்பது, இந்தியர்களால் உருவாக்கப்படுவது என்பது விரவிக் கிடக்கிறது. இன்று பாரதத்தின் திறமைகள், அயல்நாட்டுத் தயாரிப்புக்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இப்போதிருக்கும் ஸ்பைடர்மேனாகட்டும், ட்ரான்ஸ்ஃபார்மர்களாகட்டும், இந்த இரண்டு படங்களிலும் ஹரிநாராயண் ராஜீவின் பங்களிப்பினை மக்கள் மிகவும் மெச்சியிருக்கிறார்கள். பாரதத்தின் அனிமேஷன் ஸ்டூடியோக்கள், டிஸ்னி மற்றும் வார்னர் சகோதரர்களைப் போலவே, உலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன.
நண்பர்களே, இன்று நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் பிரதிபலிக்கும் புத்தம்புது இந்திய உள்ளடக்கம்-விஷயங்களைத் தயாரித்து வருகின்றார்கள். இவை உலகம் நெடுகப் பார்க்கப்பட்டும் வருகின்றன. அனிமேஷன் துறை இன்று எப்படிப்பட்டத் துறையாக ஆகிவிட்டது என்றால், பிற துறைகளுக்கு அது பலமூட்டி வருகின்றது. எடுத்துக்காட்டாக, இப்போதெல்லாம் வீ ஆர் டூரிஸம் மிகவும் பிரபலமாகி வருகிறது. நீங்கள் மெய்நிகர் சுற்றுலா வாயிலாக, அஜந்தாவின் குகைகளுக்குச் சென்று பார்க்கலாம், கோணார்க் ஆலயத்தின் இடைக்கழியில் உலவிவிட்டு வரலாம் அல்லது, வாராணசியின் துறைகளின் ஆனந்தமாகக் கழிக்கலாம். இந்த அனைத்து வீஆர் அனிமேஷனையும், பாரதத்தின் படைப்பாளிகள் தாம் தயார் செய்திருக்கின்றார்கள். இந்த வீஆர் வாயிலாக, இந்த இடங்களைக் கண்டு களித்த பிறகு பலர் மெய்யாகவே இந்தச் சுற்றுலா இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்புகிறார்கள், அதாவது சுற்றுலா இடத்தை மெய்நிகர்க் காட்சி வாயிலாக சுற்றிப் பார்த்த பிறகு மக்களின் மனங்களிலே மெய்யாகவே அங்கே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் கருவியாக இது ஆகி இருக்கிறது. இன்று இந்தத் துறையில் அனிமேட்டர்களோடு கூடவே கதை சொல்பவர்கள், எழுத்தாளர்கள், குரல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கேம் டெவலப்பர்கள், வீஆர் மற்றும் ஏஆர் வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகையால், பாரத நாட்டு இளைஞர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுடைய படைப்புத் திறனுக்கு இறக்கை அளியுங்கள். உலகின் அடுத்த சூப்பர்ஹிட் அனிமேஷன் உங்களுடைய கணிப்பொறியிலிருந்து கூட பிறப்பெடுக்கலாம், யார் அறிவார்கள்!! அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு தீயாய்ப் பரவும் அடுத்தப் படைப்பு உங்களுடையதாக இருக்கலாம்!! கல்விசார் அனிமேஷன்களின் உங்களுடைய புதுமைகள், பெரும் வெற்றியை ஈட்டலாம். வரும் அக்டோபர் 28ஆம் தேதி, அதாவது நாளைய தினம் உலக அனிமேஷன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாருங்கள், நாம் பாரதத்தை உலக அனிமேஷன் ஆற்றல் மையமாக மாற்றும் உறுதிப்பாட்டை ஏற்போம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஸ்வாமி விவேகானந்தர் ஒருமுறை வெற்றிக்கான மந்திரத்தை அளித்தார். அந்த மந்திரம் என்னவென்றால், ஏதோ ஒரு கருத்தை மனதில் கொள்ளுங்கள், அந்த ஒரு கருத்தை உங்கள் வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளுங்கள், அதையே சிந்தியுங்கள், அதைப் பற்றியே கனவு காணுங்கள், அதை வாழத் தொடங்குங்கள். இன்று, தற்சார்பு பாரதம் இயக்கத்தின் வெற்றியும் கூட இதே மந்திரத்தை அடியொற்றிப் பயணித்து வருகிறது. இந்த இயக்கம் நமது சமுக விழிப்புநிலையின் அங்கமாக ஆகி விட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு படிநிலையிலும் நமது உத்வேகமாக ஆகியிருக்கிறது. தற்சார்பு என்பது நமது கொள்கைத் திட்டம் மட்டுமல்ல, நமது பேரார்வமாகவே ஆகியிருக்கிறது. பல ஆண்டுகள் ஆகி விடவில்லை, வெறும் பத்தாண்டுகள் முன்பான விஷயம் தான், ஏதோவொரு நுணுக்கமான தொழில்நுட்பத்தை பாரதத்தில் மேம்படுத்த வேண்டும் என்று அப்போது யாராவது கூறியிருந்தால், பலருக்கு நம்பிக்கையே இருந்திருக்காது, பலர் பரிகாசம் கூட செய்திருப்பார்கள். ஆனால் இன்று அதே மனிதர்கள், தேசத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறார்கள். தற்சார்புடையதாக மாறிவரும் பாரதம், அனைத்துத் துறைகளிலும் அற்புதங்களை அரங்கேற்றி வருகின்றது. நீங்களை சிந்தியுங்கள், ஒரு காலத்தில் செல்பேசிகள் இறக்குமதி செய்துவந்த பாரதம் இன்றோ, உலகின் மிகப்பெரிய செல்பேசித் தயாரிப்பாளராக ஆகியிருக்கிறது. ஒரு காலத்தில் மிக அதிக அளவு பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த பாரதம் இன்றோ, 85 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. விண்வெளித் தொழில்நுட்பத்தில் பாரதம் இன்று, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் தேசமாக அறியப்படுகிறது. இவற்றிலெல்லாம் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அது என்னவென்றால், தற்சார்பு நோக்கிய இந்த இயக்கம் இப்போது ஒரு அரசு இயக்கமாக மட்டுமே நின்று போகாமல், இந்த தற்சார்பு பாரத இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருகிறது என்பது தான். அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த மாதம் தான் லத்தாக்கின் ஹான்லேவில், நாம் ஆசியாவின் மிகப்பெரிய ஒலிவழி இயல்நிலை வரைவி தொலைநோக்கியான மேஸ், அதாவது ‘Imaging Telescope MACE’ஐ நிறுவினோம். இது 4300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. சிந்தியுங்கள், எந்த இடத்தில் பூஜ்யத்திற்குக் கீழே 30 டிகிரிகள் என்ற வெப்பநிலை இருக்கிறதோ, எங்கே பிராணவாயு என்பதே அரிதாக உள்ளதோ, அங்கே நமது விஞ்ஞானிகளும், உள்ளூர் தொழில்துறையும் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இப்படி ஆசியாவின் எந்த தேசமும் இதுவரை செய்தது இல்லை. ஹான்லேவின் இந்தத் தொலைநோக்கி தொலைவான உலகை வேண்டுமானால் பார்க்கலாம் ஆனால், இது நமக்கு மேலும் ஒரு விஷயத்தைச் சுட்டுகிறது, அது தான் தற்சார்பு பாரதத்தின் வல்லமை.
நண்பர்களே, நீங்களுமே கூட ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்சார்பு பாரதத்தின் அதிக அளவு எடுத்துக்காட்டுகள், இப்படிப்பட்ட முயற்சிகளை நீங்களும் பகிருங்கள். நீங்கள் உங்களுடைய அக்கம்பக்கத்திலே என்ன மாதிரியான புதுமைகளைக் கண்டீர்கள், எந்த உள்ளூர் ஸ்டார்ட் அப் உங்களை அதிகம் கவர்ந்தது, சமூக வலைத்தளத்தில் #AatmanirbharInnovationஇலே தகவல்களை அளியுங்கள், தற்சார்பு பாரதக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுங்கள். பண்டிகைகளின் இந்தக் காலத்திலே நாமனைவரும் தற்சார்பு பாரதம் என்ற இந்த இயக்கத்தை மேலும் பலமடையச் செய்வோம். நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் மந்திரத்தோடு நமது கொள்முதலை இணைப்போம். இது புதிய பாரதம், அசாத்தியம் என்பது இங்கே ஒரு சவால் தான், இங்கே இந்தியாவில் தயாரிப்போம் என்பது உலகிற்காகத் தயாரிப்போமாக ஆகி விட்டது, இங்கே அனைத்துக் குடிமக்களும் புதுமைகள் படைப்போராக ஆகியிருக்கிறார்கள், இங்கே அனைத்துச் சவால்களுமே சந்தர்ப்பங்கள் தாம். நாம் பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குவது மட்டுமல்ல, நமது தேசத்தை புதுமைகள் படைத்தலின் உலகளாவிய சக்திபீடமாகவும் பலப்படுத்த வேண்டும்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க வைக்கிறேன்.
###### (audio)
Transcription of Audio Byte
Fraud Caller 1: Hello
Victim : சார் வணக்கம் சார்.
Fraud Caller 1: வணக்கம்.
Victim : சொல்லுங்க சார்.
Fraud Caller 1: பாருங்க, நீங்க எனக்கு வந்திருக்கற எஃப் ஐ ஆர் நம்பர்ல 17 குற்றச்சாட்டுகள் இருக்கு. நீங்க இந்த நம்பரையா பயன்படுத்திட்டு இருக்கீங்க?
Victim : நான் இதை பயன்படுத்தலை சார்.
Fraud Caller 1: இப்ப எங்கிருந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க?
Victim : கர்நாடகாவிலேர்ந்து சார். இப்ப நான் வீட்டுல தான் இருக்கேன்.
Fraud Caller 1: ஓகே, உங்க ஸ்டேட்மெண்டை பதிவு செய்யுங்க, அதுக்குப் பிறகு உங்க நம்பர் ப்ளாக் செய்யப்படும். எதிர்காலத்தில இதனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, ஓகேயா?
Victim : சரி சார்.
Fraud Caller 1: இப்ப நான் உங்களை கனெக்ட் செய்யறேன், அவரு தான் புலனாய்வு அதிகாரி. நீங்க அவருகிட்ட உங்க ஸ்டேட்மெண்டை குடுத்திருங்க. அப்பத் தான் உங்க நம்பர் ப்ளாக் ஆகும். ஓகேயா?
Victim : சரி சார்.
Fraud Caller 1: சொல்லுங்க சார். நான் யாரு கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா? உங்க ஆதார் அட்டையை கொஞ்சம் காமிக்க முடியுமா, சரிபார்க்க விவரம் சொல்ல முடியுமா?
Victim : சார், என்கிட்ட என்னோட ஆதார் அட்டை இப்ப இல்லை, ப்ளீஸ் சார்.
Fraud Caller 1: ஃபோன், உங்க ஃபோன்ல இருக்கும்ல?
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: உங்க ஃபோன்ல உங்க ஆதார் அட்டையோட புகைப்படம் இருக்குமில்லையா?
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: நம்பராவது ஞாபகம் இருக்குமில்லையா?
Victim : இல்லை சார். நம்பரும் நினைவுல இல்லை சார்.
Fraud Caller 1: நாங்க வெறுமனே சரி மட்டும் பார்க்கணும், ஓகே, சரிபார்க்க மட்டும் தான் தேவை.
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: நீங்க பயப்படவே வேண்டாம், நீங்க ஒண்ணும் செய்யலைன்னா பயப்படவே தேவையில்லை. சரியா?
Victim : சரி சார் சரி சார்.
Fraud Caller 1: உங்க கிட்ட ஆதார் அட்டை இல்லைன்னு சொன்னா, சரிபார்க்க எனக்கு ஏதாவது ஒரு ஆவணத்தையாவது குடுங்க!!
Victim : இல்லை சார், நான் கிராமத்திலேந்ர்ந்து வந்திருக்கேன், என்னோட எல்லா ஆவணங்களுமே அங்க வீட்டுல தான் சார் இருக்கு.
Fraud Caller 1: ஓகே
Fraud Caller 2: நான் உள்ள வரலாமா சார்?
Fraud Caller 1: வாங்க.
Fraud Caller 2: ஜய் ஹிந்த்
Fraud Caller 1: ஜய் ஹிந்த்
Fraud Caller 1: இந்த ஆளோட one sided video callஐ பதிவு செய். ஓகே.
########
இந்த ஒலிப்பதிவு வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, இது ஏதோ கேளிக்கைக்கான ஒலிக்குறிப்பல்ல, ஆழமான கவலையளிக்கவல்ல ஒலிக்குறிப்பு இது. நீங்கள் இப்போது கேட்ட உரையாடல், டிஜிட்டல் கைது மோசடி தொடர்பானது. இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட நபருக்கும், மோசடி செய்பவருக்கும் இடையிலானது. டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள். மனதின் குரலின் நேயர்கள் பலர் இது குறித்து நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். வாருங்கள், இந்த மோசடிப் பேர்வழிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், இந்த அபாயகரமான விளையாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்களை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதே போல மற்றவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். முதல் தந்திரமான உத்தி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் தில்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று. இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள். பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும். மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம். “இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”. என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல்ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள். இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”. அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள். இதன் பிறகு வருவது அடுத்த கட்டம். முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”. எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள். முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம். முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும், இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”. தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நிதானியுங்கள், பிறகு சிந்தியுங்கள், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள், இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும்.
நண்பர்களே, நான் மீண்டும் கூறுகிறேன், டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அமைப்புகளின் தரப்பிலிருந்து இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான காணொளி அழைப்பு எண்கள் அரசு அமைப்புக்களின் தரப்பிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான சிம் கார்டுகள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் கூட முடக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியைப் புரிந்து வருகின்றன என்றாலும், டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடந்தேறி வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்துக் குடிமக்களும் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். யாரெல்லாம் இப்படிப்பட்ட சைபர் மோசடிக்கு இரையாகி இருக்கின்றார்களோ, அவர்கள் அதிக அளவு மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் #SafeDigitalIndia என்பதைப் பயன்படுத்தலாம். இந்த சைபர் மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள்-கல்லூரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், இதில் அதிக அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். சமுதாயத்தில் அனைவரின் முயற்சிகள் வாயிலாக மட்டுமே நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, நமது பல பள்ளிக் குழந்தைகள் calligraphy அதாவது எழுத்துக்கலையில் கணிசமான நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள். இதன் வாயிலாக நமது எழுத்து தெளிவாக, அழகாக, ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இன்று ஜம்மு-கஷ்மீரத்தில் இதன் பயன்பாடு உள்ளூர் கலாச்சாரத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஆக்கப் பயன்படுகிறது. அனந்தநாகின் ஃபிர்தௌசா பஷீர் அவர்கள் எழுத்துக்கலையில் வல்லவர். இதன் வாயிலாக உள்ளூர் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களை இவர் வெளிப்படுத்தி வருகிறார். ஃபிர்தௌசா அவர்களின் எழுத்துக்கலையானது, உள்ளூர் மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தன்பால் ஈர்த்து வருகின்றது. இப்படிப்பட்ட ஒரு முயற்சியில், உதம்பூரின் கௌரிநாத் அவர்களும் ஈடுபட்டு வருகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் பழைமையான சாரங்கி வாத்தியம் வாயிலாக டோக்ரா கலாச்சாரம் மற்றும் மரபின் பல்வேறு வடிவங்களை அழகுபடுத்துவதில் இவர் ஈடுபட்டு வருகிறார். சாரங்கியின் சுரங்களோடு சேர்த்து, இவர் தங்களுடைய கலாச்சாரத்தோடு இணைந்த பண்டைய கதைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களையும் கூட, சுவாரசியமான முறையில் வெளிப்படுத்துகிறார். தேசத்தின் பல்வேறு பாகங்களிலும், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கும் இப்படிப்பட்ட பல அசாதாரணமான மனிதர்களை நீங்கள் சந்திக்க நேரலாம். டீ. வைகுண்டம் அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக செரியால் நாட்டுப்புறக் கலையை பிரபலமானதாக ஆக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தெலங்காணாவோடு இணைந்த இந்தக் கலையை முன்னெடுத்துச் செல்ல விழையும் இவருடைய முயற்சி அற்புதமானது. செரியால் ஓவியங்களை உருவாக்கும் செயல்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இது ஒரு காகிதச் சுருள் வடிவத்தில் கதைகளை முன்வைக்கிறது. இதிலே நமது வரலாறு மற்றும் புராணங்கள் முழுமையாகப் பளிச்சிடுகின்றன. சத்திஸ்கட்டின் நாராயண்பூரைச் சேர்ந்த புட்லுராம் மாத்ரா அவர்கள், அபூஜ்மாடியா பழங்குடியின மக்களின் கலையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக இவர் தனது இந்த பெருநோக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். இவருடைய இந்தக் கலை, பெண் குழந்தைகளைக் காப்போம்- அவர்களுக்குக் கல்வியளிப்போம் போன்ற இயக்கத்தோடு மக்களை இணைப்பதில் பேருதவியாக இருந்திருக்கிறது.
நண்பர்களே, இப்போது நாம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே கஷ்மீரத்தின் பள்ளத்தாக்குகள் தொடங்கி, சத்தீஸ்கட்டின் காடுகள் வரை, நமது கலை மற்றும் கலாச்சாரம் புதியபுதிய வண்ணங்களை இரைத்து வருகிறது என்றாலும், இதோடு இந்த விஷயம் முடிந்து போகவில்லை. நமது இந்தக் கலைகளின் நறுமணம் தொலைவான பிரதேசங்கள் வரையும் கூட பரவி வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாரதநாட்டுக் கலை மற்றும் கலாச்சாரத்தில் சொக்கி வருகிறார்கள். உதம்பூரில் எதிரொலிக்கும் சாரங்கி பற்றி நான் பேசிய வேளையில், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவாக, ரஷியாவின் நகரான யாகூத்ஸ்கிலும் கூட பாரதநாட்டுக் கலையின் இனிமையான இசை எதிரொலிப்பது என் நினைவுக்கு வருகிறது. கற்பனை செய்து பாருங்கள், குளிர் நிறைந்த ஒன்றிரண்டு நாட்கள், பூஜ்யத்திற்கு கீழே 65 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, நாலாபுறங்களிலும் பனிப்படலம் ஏதோ வெண்போர்வையை விரித்தது போல இருந்த வேளையில், அங்கே ஒரு அரங்கிலே, பார்வையாளர்கள் மகுடிக்கு முன்பு நாகம் போலே, காளிதாசனின் அபிக்யான சாகுந்தலத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகவும் குளிர்நிறைந்த நகரான யாகூத்ஸ்கிலே, பாரத இலக்கியத்தின் தண்மையை உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? இது கற்பனையல்ல சத்தியம். நம்மனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், ஆனந்தத்தையும் நிரப்பக்கூடிய சத்தியம்!!
நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் லாவோஸ் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அது நவராத்திரி காலம், அங்கே சில அற்புதமான காட்சிகளைக் கண்டேன். அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் ஃபலக் ஃபலம், இதை அரங்கேற்றியிருந்தார்கள், இது தான் லாவோஸின் இராமாயணம். நம்முடைய மனங்களிலே இராமாயணத்தின்பால் இருக்கும் அதே பக்தி, அவர்களுடைய குரல்களிலே அதே அர்ப்பணிப்பு அகியவற்றை நான் அவர்களுடைய கண்களில் கண்டேன். இதைப் போலவே, குவைத்தில் அப்துல்லா அல் பாரூன் அவர்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் பணி வெறும் மொழியாக்கமல்ல, மாறாக இரு மகத்தான கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலம். அவருடைய இந்த முயற்சி, அரபுலகில் பாரதநாட்டு இலக்கியத்தின்பால் புதிய புரிதலை மேம்படச் செய்து வருகிறது. பெரூ நாட்டிலிருந்து மேலும் ஒரு கருத்தூக்கமேற்படுத்தும் எடுத்துக்காட்டு – எர்லிண்டா கார்சியா அவர்கள் அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு பரதநாட்டியக்கலையைக் கற்பித்து வருகிறார், மாரியா வால்தேஸ் அவர்கள் ஒடிசீ நாட்டியத்தைக் கற்பித்து வருகிறார். இந்தக் கலைகளால் கவரப்பட்டு, தென்னமெரிக்காவின் பல நாடுகளில் பாரதநாட்டுப் பாரம்பரிய நடனங்கள் அதிக நறுமணம் பரப்பி வருகிறது.
நண்பர்களே, அயல்நாட்டு மண்ணிலே பாரதத்தின் இந்த எடுத்துக்காட்டுகள், பாரத நாட்டுக் கலாச்சாரத்தின் சக்தி எத்தனை அற்புதமானது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இவை தொடர்ந்து உலகைத் தம்பால் கவர்ந்து வருகின்றன.
எங்கெல்லாம் கலை உள்ளதோ, அங்கெல்லாம் பாரதம் உண்டு,
எங்கெல்லாம் கலாச்சாரம் உள்ளதோ, அங்கெல்லாம் பாரதம் உண்டு.
இன்று உலகனைத்தும் பாரதம் பற்றித் தெரிந்து கொள்ள விழைகிறது, பாரதநாட்டவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அவாவுகிறது. ஆகையால் உங்கள் அருகிலே இப்படிப்பட்ட கலாச்சாரமுன்னெடுப்பு குறித்து #CulturalBridgesஇலே தகவல் தெரிவியுங்கள். மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் குறித்து மேலும் உரையாடுவோம்.
என் இதயம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது, ஆனால் உடலுறுதி குறித்தப் பேரார்வம், ஃபிட் இண்டியாவின் உணர்வு, இதன் மீது எந்தப் பருவநிலையும் தாக்கமேற்படுத்தாது. உடலுறுதி மீது உறுதி கொண்ட யாருக்கும், அது குளிர்காலமாகட்டும், மழைக்காலமாகட்டும், எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பாரதத்திலே இப்போது மக்கள் உடலுறுதி தொடர்பாக மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக ஆகி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் அருகிலே இருக்கும் பூங்காக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். பூங்காக்களில் நடைபயிலும் மூத்தோர், இளைஞர்கள், மற்றும் யோகக்கலையில் ஈடுபட்டு வரும் குடும்பங்களைப் பார்த்து, எனக்கு நன்றாக இருக்கிறது. யோகக்கலை தினம் தொடர்பாக சில நாட்கள் முன்பாக நான் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அங்கே மாரத்தான் போட்டி நடந்தது, அதிலேயும் கூட இந்த உடலுறுதி மீதான ஆர்வத்தை என்னால் காண முடிந்தது. ஃபிட் இண்டியா, அதாவது உடலுறுதியான இந்தியா என்ற இந்த உணர்வு, இப்போது ஒரு மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, நமது பள்ளிகள், குழந்தைகள் எல்லாம் உடலுறுதி மீது இப்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள் என்பதைக் காணும் போது நான் உவப்பெய்துகிறேன். ஃபிட் இண்டியா ஸ்கூல் அவர்ஸ் என்பதும் கூட மிக வித்தியாசமான முன்னெடுப்பு. பள்ளிகள் தங்களுடைய முதல் வகுப்புக் காலத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உடலுறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எத்தனையோ பள்ளிகளில், ஏதோ ஒரு நாளன்று பிள்ளைகளுக்கு யோகக்கலையைப் பயிற்றுவிக்கிறார்கள், சில நாட்களில் ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது, ஒரு நாள் விளையாட்டுத் திறன்கள் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஏதோ ஒரு நாளன்று கபடி-கோகோ போன்ற பாரம்பரியமான விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன, இவற்றின் தாக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. வருகை சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளின் மனச்செறிவும் அதிகரிக்கிறது, அவர்களும் குதூகலம் அடைகிறார்கள்.
நண்பர்களே, இந்த உடல்நலத்தின் சக்தியை என்னால் அனைத்து இடங்களிலும் காண முடிகிறது. மனதின் குரலின் பல நேயர்களும் கூட என்னோடு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் மிகவும் சுவாரசியமான பிரயோகங்களையும் அனுப்பி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, குடும்ப உடலுறுதி மணிநேரம் பற்றி, அதாவது ஒரு குடும்பம், ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு மணிநேரத்தை குடும்பத்தின் உடலுறுதிக்காக ஒதுக்குகிறது. மேலும் ஒரு எடுத்துக்காட்டு, உள்நாட்டு விளையாட்டுக்களின் மறுமலர்ச்சி தொடர்பானது, அதாவது சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமான விளையாட்டுக்களைக் கற்பித்து வருகிறார்கள், அவர்களோடு விளையாடியும் வருகிறார்கள். நீங்களும் கூட உங்களுடைய உடலுறுதி வாடிக்கை தொடர்பான உங்களுடைய அனுபவங்களை #fitIndia என்ற பெயரிலான சமூக ஊடகத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான தகவலை அளிக்க விரும்புகிறேன். இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் பிறந்தநாளன்று, தீபாவளித் திருநாளும் வருகிறது. நாம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதியான தேச ஒற்றுமை தினத்தன்று, ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்வது வழக்கம். தீபாவளி காரணமாக இந்த முறை, அக்டோபர் 29ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமையன்று இந்த ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதிக அளவில் மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசத்தின் ஒருமைப்பாட்டின் மந்திரத்தோடு கூடவே உடலுறுதி மந்திரத்தையும் அனைத்துத் திசைகளிலும் பரப்புங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே. நீங்கள் உங்கள் பின்னூட்டங்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். இது பண்டிகைக்காலம். மனதின் குரல் நேயர்களுக்கு தன்தேரஸ், தீபாவளி, சட்பூஜை, குருநானக் பிறந்தநாள் மற்றும் அனைத்துத் திருநாட்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் முழு உற்சாகத்தோடு பண்டிகைகளைக் கொண்டாடுங்கள். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை என்றும் நினைவில் கொள்ளுங்கள், பண்டிகைக் காலத்தில் உங்களுடைய இல்லங்களிலே உள்ளூர் கடைக்காரர்களிடம் பொருட்களைக் கண்டிப்பாக வாங்க முயற்சி செய்யுங்கள். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் திருநாட்களை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.
நண்பர்களே, நான் இன்று தூர்தர்ஷன், பிரசார்பாரதி மற்றும் ஆல் இண்டியா ரேடியோவோடு தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன். இவர்களுடைய தீவிரமான முயற்சிகள் காரணமாகவே மனதின் குரலின் இந்த மகத்துவம் நிறைந்த கட்டத்தை நாம் எட்ட முடிந்திருக்கிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்திவரும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள், மண்டலத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனதின் குரல் வாயிலாக நாம் எந்த பிரச்சனைகளை எழுப்பினோமோ, ஊடக நிறுவனங்கள் இவற்றை ஒரு இயக்கமாகவே மாற்றினார்கள். நான் அச்சு ஊடகத்திற்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் இதனை வீடுகள்தோறும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அதே போல யூடியூபர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் மனதின் குரல் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை 22 மொழிகளோடு கூடவே, 12 அயல்நாட்டு மொழிகளிலும் கேட்க முடிகிறது. தங்களுடைய பிராந்திய மொழியிலே மனதின் குரலைக் கேட்பதாக மக்கள் என்னிடத்திலே கூறும் போது எனக்கு மிக உவப்பாக இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்ட ஒரு வினா-விடை போட்டி நடைபெற்றுவருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலே யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக் கொள்ளலாம். Mygov.in தளத்திற்குச் சென்று, நீங்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்கலாம், மகத்துவம் வாய்ந்த இன்றைய இந்தத் தருவாயில், நான் மீண்டுமொரு முறை உங்கள் அனைவரின் நல்லாசிகளையும் வேண்டுகிறேன். பவித்திரமான மனத்தோடும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடும், இதைப் போன்றே பாரதநாட்டு மக்களுக்கு நான் வாழ்த்துப்பா பாடிக் கொண்டே இருக்க வேண்டும். தேசத்தின் சமூகசக்தியை நாமனைவரும் இதைப் போன்றே கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் – இதுவே இறைவனிடத்திலே என்னுடைய வேண்டுதல், மக்களாகிய மகேசர்களிடம் என் பிரார்த்தனை.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல்வேறு பாகங்களில் கடும்மழை பெய்துவருகிறது. நீர் சேமிப்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது, நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது. மழைக்கால நாட்களில் சேமிக்கப்படும் நீரானது, நீர் தட்டுப்பாடு மாதங்களில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது, இது தான் ‘Catch the Rain‘ மழைநீரைச் சேமிப்போம் போன்ற இயக்கங்களின் உணர்வாகும். நீர் பாதுகாப்பு தொடர்பாக பலர், பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று. இப்படிப்பட்டதொரு முயற்சியைத் தான் உத்திரபிரதேசத்தின் ஜான்சியில் நம்மால் காண முடிகிறது. ஜான்சி புந்தேல்கண்டில் இருப்பதும், அங்கே நீர்த்தட்டுப்பாடு எத்தனை கடுமையானது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கே ஜான்சியிலே, சில பெண்கள், குராரி நதிக்குப் புத்துயிரூட்டி இருக்கிறார்கள். இந்தப் பெண்கள் சுயவுதவிக் குழுவோடு இணைந்தவர்கள், ஜல் சஹேலி, அதாவது நீர்த் தோழிகளாகி, இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று நடத்தினார்கள். உயிரிழந்து போன குராரி நதியை இந்தப் பெண்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. இந்த நீர்த்தோழிகள், சாக்குகளில் மணலை நிரப்பி, தடுப்பணைகளை ஏற்படுத்தினார்கள், மழைநீர் வீணாகாமல் தடுத்தார்கள், நதியை நீரால் நிரம்பச் செய்தார்கள். இந்தப் பெண்கள் பலநூறு நீர்நிலைகளை உருவாக்கி, அவற்றைப் புத்தாக்கம் செய்யப் புரிந்தார்கள். இதன் காரணமாக இந்தப் பகுதியிலே மக்களுக்கு இருந்த நீர் பிரச்சனை தொலைந்துபோனது, மக்களின் முகங்களிலே மகிழ்ச்சி மீண்டது.
நண்பர்களே, ஒரு புறத்திலே பெண்சக்தி நீர்சக்தியை மேம்படுத்துகிறது என்றால், வேறோர் புறத்தில் நீர்சக்தியும் கூட பெண்சக்தியைப் பலப்படுத்துகிறது. மத்திய பிரதேசத்தின் இரண்டு பெரிய கருத்தூக்கமளிக்கக்கூடிய முயற்சிகள் பற்றிய தகவல் கிடைத்தது. இங்கே டிண்டௌரியின் ராய்புரா கிராமத்திலே ஒரு பெரிய குளத்தை நிறுவியதால், நிலத்தடி நீரின் மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால் ஆதாயம் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கிடைத்தது. இங்கே சாரதா ஆஜீவிகா சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு மீன்வளர்ப்பு என்ற புதிய தொழில் கிடைத்தது. இந்தப் பெண்கள் மீன் அங்காடியைத் தொடக்கினார்கள், இங்கே மீன்களை விற்று தங்களுடைய வருமானத்தைப் பெருக்கியும் கொண்டார்கள். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த பெண்களின் முயற்சியும் மிகவும் பாராட்டுக்குரியது. இங்கே இருக்கும் கோம்ப் கிராமத்தின் பெரிய குளம் வற்றத் தொடங்கிய போது, பெண்கள் இதற்குப் புத்துயிர் அளிக்கும் சவாலை மேற்கொண்டார்கள். ஹரி பகியா சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், குளத்திலிருந்து பெரிய அளவில் தூர்வாறி, குளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வண்டலை வளமற்ற நிலத்தில் கொட்டி அங்கே பழமரங்களைத் நட்டார்கள். இந்தப் பெண்களின் உழைப்பால் குளத்தில் நீர் நிறைந்ததோடு, பயிர்களின் அறுவடையும் கணிசமாக உயர்ந்தது. தேசத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்தேறிவரும் நீர் சேமிப்பின் இத்தகைய முயற்சிகள், நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும். நீங்களும் கூட உங்கள் அக்கம்பக்கத்தில் இப்படிப்பட்ட முயற்சிகளில் கண்டிப்பாக ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுக்க உண்டு.
என் மனம்நிறை நாட்டுமக்களே, உத்தராகண்டின் உத்தரகாசியில் இருக்கும் ஒரு எல்லைப்புறக் கிராமத்தின் பெயர் ஜாலா. இங்கிருக்கும் இளைஞர்கள் தங்களுடைய கிராமத்தைத் தூய்மையானதாக வைக்க, புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கியிருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய கிராமத்திலே தன்யவாத் பிரக்ருதி அல்லது இயற்கைக்கு நன்றி என்ற பெயரிலான இயக்கம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகின்றார்கள். இதன்படி, கிராமத்தில் தினமும் இரண்டு மணிநேரம் வரை துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிராமத்தின் வீதிகளில் இறைந்து கிடக்கும் குப்பைகளை ஒன்று திரட்டி, இவற்றை கிராமத்திற்கு வெளியே குறிப்பிட்டதொரு இடத்தில் கொண்டு சேர்க்கின்றார்கள். இதனால் ஜாலா கிராமம் தூய்மையானதாக ஆகிறது, மக்களிடம் விழிப்புணர்வும் உண்டாகி வருகின்றது. இப்படி கிராமங்கள்தோறும், வீதிகள்-குடியிருப்புப் பகுதிகள் தோறும், தங்கள் இடங்களிலே நன்றி இயக்கத்தைத் தொடக்கினால், எத்தனை பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்திவிட முடியும்!!
நண்பர்களே, தூய்மை தொடர்பாக புதுச்சேரியின் கடற்கரைப் பகுதியிலும் கூட பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கே ரம்யா அவர்கள், மாஹே நகராட்சி மற்றும் இதன் அருகிலே இருக்கும் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தி வழிநடத்தி வருகிறார். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் முயற்சிகள் வாயிலாக மாஹே பகுதியை, குறிப்பாக இங்கே இருக்கும் கடற்கரைப் பகுதிகளை முழுமையான வகையிலே தூய்மையானதாக ஆக்கி வருகிறார்கள்.
நண்பர்களே, இங்கே நான் இரண்டு முயற்சிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால், நமக்கருமே நாம் பார்த்தோமென்றால், தேசத்தின் அனைத்து பாகங்களிலுமே தூய்மை தொடர்பாக ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சி அரங்கேறி வருவதைக் கண்டிப்பாக நம்மால் காண முடியும். சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தூய்மை பாரத் மிஷனின் பத்தாண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இதனை பாரத சரித்திரத்தின் இத்தனை பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கும் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தின் போது நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். தன் வாழ்க்கை முழுவதும் தூய்மை என்ற நோக்கத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த காந்தியடிகளுக்கு இது மெய்யான சிரத்தாஞ்சலிகளாகும்.
நண்பர்களே, இன்று இந்த தூய்மை பாரத இயக்கத்தின் வெற்றி காரணமாகவே ‘Waste to Wealth’ கழிவிலிருந்து செல்வம் என்ற மந்திரம் அனைவருக்கும் பிடித்தமானதாகி இருக்கிறது. மக்கள் ‘Reduce, Reuse மற்றும் Recycle’ கழிவுகளைக் குறைப்பீர், மீள்பயன்படுத்துவீர், மறுசுழற்சி செய்வீர் என்பது குறித்து மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள், இதன் எடுத்துக்காட்டுகளை இயம்ப ஆரம்பித்து விட்டார்கள். கேரளத்தின் கோழிக்கோட்டிலே ஒரு அருமையான முயற்சி பற்றி எனக்குத் தெரிய வந்தது. இங்கே 74 வயதான சுப்பிரமணியன் அவர்கள், 23,000த்திற்கும் மேற்பட்ட நாற்காலிகளை சீர்செய்து, இவற்றை மீள்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறாராம். மக்கள் இவரை ரெட்யூஸ், ரீயூஸ், ரீசைக்கிள், அதாவது ட்ரிப்பிள் ஆர் சேம்பியன் என்றும் அழைக்கிறார்களாம். இவருடைய இந்த வித்தியாசமான முயற்சிகளின் வெளிப்பாடுகளை கோழிக்கோடு சிவில் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களில் காண முடியும்.
நண்பர்களே, தூய்மை தொடர்பாக நடந்துவரும் இயக்கத்தில் நாம் அதிகபட்ச மக்களை இணைக்க வேண்டும், இந்த இயக்கம் மட்டுமே, ஏதோ ஒரு நாளோ, ஓர் ஆண்டோ நடந்து முடிந்துவிடும் இயக்கமல்ல; இது பல யுகங்களாகத் தொடர்ந்து செய்யப்படக்கூடிய பணியாகும். தூய்மை என்பது நமது இயல்பாகவே ஆகும் வரையில் இந்தப் பணி தொடரும். நீங்களும் உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், அண்டை அயலார் அல்லது சக ஊழியர்களோடு இணைந்து தூய்மை இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தூய்மை பாரத இயக்கத்தின் வெற்றியின் பொருட்டு நான் உங்களனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டு மக்களே, நமது மரபு-பாரம்பரியம் குறித்து நம்மனைவருக்கும் பெருமை உண்டு. வளர்ச்சியோடு சேர்ந்து மரபும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். இதன் காரணமாகவே, சில நாட்கள் முன்பு எனது அமெரிக்கப் பயணத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மீண்டும் ஒருமுறை நமது தொனமையான கலைப்படைப்புகள் நாடு மீண்டிருப்பது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக உங்களனைவரின் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் மனதின் குரல் நேயர்களுக்கும் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
நண்பர்களே, எனது அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்க அரசாங்கம் பாரதத்திடம் கிட்டத்தட்ட 300 தொன்மையான கலைப்படைப்புக்களைத் திருப்பிக் கொடுத்தது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பைடன் அவர்கள், பெரும் இணக்கத்தை வெளிப்படுத்தி, டெலாவேரில் உள்ள தன்னுடைய தனிப்பட்ட இல்லத்தில் இவற்றில் சில கலைப்படைப்புக்களை என்னிடத்தில் காட்டினார். திருப்பிக் கொடுக்கப்பட்ட கலைப்படைப்புக்கள், சுடுமண்பாண்டம், கல், யானையின் தந்தம், மரம், வெண்கலம், செம்பு போன்றவற்றால் ஆனவையாக இருந்தன. இவற்றில் பல 4000 ஆண்டுகள் பழைமையானவை. 4000 ஆண்டுகள் பழைமையானவை தொடங்கி, 19ஆம் நூற்றாண்டு வரையிலான கலைப்படைப்புகளை அமெரிக்க திரும்பக் கொடுத்திருக்கிறது. இவற்றில் பூ ஜாடி, கடவுளர்களின் சுடுமண் திருவுருவங்கள் அவற்றின் பட்டைகள், ஜைன தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களைத் தவிர, பகவான் புத்தர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவங்களும் அடங்கும். திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் பல்வேறு அளவுகளில் விலங்கினங்களும் இருக்கின்றன. ஆடவர் பெண்டிர் வடிவிலான ஜம்மு கஷ்மீரத்தின் சுடுமண்ணோடுகள் மிகவும் சுவாரசியமானவையாக இருந்தன. இவற்றில் செம்பாலான பிள்ளையாரின் மூர்த்தங்களும் இருந்தன, இவை தென்னாட்டைச் சார்ந்தவை. திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அதிக எண்ணிக்கையில் பகவான் விஷ்ணுவின் படங்களும் இருந்தன. இவை முக்கியமாக, வட மற்றும் தென் பாரதத்தோடு தொடர்புடையவை. இந்தக் கலைப்படைப்புகளைப் பார்க்கும்போது, நமது முன்னோர்கள் எந்த அளவுக்கு நுணுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. கலை தொடர்பாக அவர்களிடத்திலே ஆச்சரியமான புரிதல் இருந்தது. இவற்றில் பல கலைப்படைப்புகள் கடத்தப்பட்டவை, பிற சட்டவிரோதமான முறைகளில் தேசத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டவை. இவை கடுமையான குற்றங்கள், ஒருபுறத்திலே நம்முடைய மரபைச் சிதைப்பது போன்றதாகும்; ஆனால் ஒரு விஷயம் சந்தோஷமளிப்பது என்னவென்றால், கடந்த பத்தாண்டுகளில், இப்படிப்பட்ட பல கலைப்படைப்புகள், நமது பல தொன்மையான மரபுச் சின்னங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திசையில், இன்று, பாரதம் பல நாடுகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது. நமது மரபின் மீது நாம் பெருமிதம் கொள்ளத் தொடங்கும் போது தான் உலகமும் அதனை மதிக்கும் என்பதே என் நம்பிக்கை என்பதோடு, இதன் விளைவாகவே இன்று உலகின் பல நாடுகள் நம் நாட்டிலிருந்து வெளிச்சென்ற இப்படிப்பட்ட கலைப்படைப்புக்களை நமக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்று எந்த ஒரு சிறுவனிடத்திலும் வினவினால், தாய்மொழி என்றே விடை வரும். நம்முடைய தேசத்திலே சுமார் 20,000 மொழிகளும், வழக்குமொழிகளும் இருக்கின்றன, இவையனைத்தும் யாரோ ஒருவருக்குத் தாய்மொழியாக இருக்கின்றன. சில மொழிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கலாமானாலும், அந்த மொழிகளைப் பாதுகாக்க இன்று வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் புதுமைபுகுத்தல் துணையோடு சந்தாலி மொழிக்கு புதிய அடையாளம் அளிக்கும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. சந்தாலி மொழி நமது தேசத்தின் பல மாநிலங்களில் வசிக்கும் சந்தால் பழங்குடியினச் சமுதாய மக்களின் மொழியாக இருக்கிறது. பாரதம் தவிர, வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இடங்களிலும் கூட சந்தாலி மொழி பேசும் பழங்குடி சமூகத்தார் இருக்கின்றார்கள். சந்தாலி மொழிக்கான இணையவழி அடையாளத்தை உருவாக்க, ஒடிஷாவின் மயூர்பஞ்ஜ்ஜில் வசிக்கும் ராம்ஜீத் டுடு அவர்கள் ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். ராம்ஜீத் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் டிஜிட்டல் தளத்தில், சந்தாலி மொழியோடு தொடர்புடைய இலக்கியத்தைப் படிக்க இயலும், சந்தாலி மொழியில் எழுத இயலும். சில ஆண்டுகள் முன்பாக ராஜ்மீத் அவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிய போது, தனது தாய்மொழியிலே தகவல்களை அனுப்ப முடியவில்லையே என்று வருந்தினார். இதன் பிறகு சந்தாலி மொழியின் எழுத்துருவான ‘ஓல் சிகி’யில் தட்டச்சு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார். தனது சில கூட்டாளிகளின் துணையோடு இவர் ‘ஓல் சிகி’யில் தட்டச்சு செய்யும் நுட்பத்தை மேம்படுத்தினார். இன்று இவருடைய முயற்சிகள் காரணமாக சந்தாலி மொழியில் எழுதப்பட்ட கதைகள் கட்டுரைகள் எல்லாம் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்து வருகின்றன.
நண்பர்களே, நமது உறுதிப்பாடும், சமூகப் பங்களிப்பும் சங்கமிக்கும் போது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அற்புதமான விளைவுகள் மலர்கின்றன. இதற்கான புத்தம்புது எடுத்துக்காட்டுத் தான், ‘அன்னையின் பெயரில் ஓர் மரம்’ – இந்த இயக்கம் அற்புதமான இயக்கமாக மிளிர்ந்திருக்கிறது, மக்களின் பங்களிப்புக்கான இப்படிப்பட்டதொரு எடுத்துக்காட்டு உள்ளபடியே உத்வேகம் தரவல்லது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தேசத்தின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் மக்களின் பங்களிப்பின் துணையோடு ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானம், தெலங்கானா மாநிலங்கள் இலக்கிற்கும் விஞ்சிய எண்ணிக்கையில் மரங்களை நட்டு சாதனைகளைப் படைத்திருக்கின்றன. இந்த இயக்கத்தின்படி உத்தர பிரதேசத்தில் 26 கோடிக்கும் மேற்பட்ட மரங்களும், குஜராத்தில் 15 கோடிக்கும் மேற்பட்ட மரங்களும், ராஜஸ்தானத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மரங்களும் நடப்பட்டிருக்கின்றன. தேசத்தின் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் கூட இந்த இயக்கத்தில் விறுவிறுப்பாக கலந்து கொண்டன.
நண்பர்களே, நமது தேசத்திலே மரம்நடும் இயக்கத்தோடு தொடர்புடைய ஏராளமான எடுத்துக்காட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான் தெலங்காணாவின் கே.என். ராஜஷேகர் அவர்களுடையது. மரம்நடுவதில் இவருக்கு இருக்கும் தீவிர முனைப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சுமார் நான்கு ஆண்டுகள் முன்பாக இவர் மரம்நடும் இயக்கத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் ஒரு மரம் நடுவது என்று இவர் தனக்குத் தானே தீர்மானித்துக் கொண்டார். இந்த உறுதிப்பாட்டை இவர் மிகத் தீவிரமான விரதம் போன்றே கடைப்பிடித்து, 1500க்கும் மேற்பட்ட மரங்களை இதுவரை நட்டிருக்கிறார். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஒரு விபத்துக்கு ஆளான பிறகும் கூட இவர் தனது உறுதிப்பாட்டிலிருந்து சற்றும் தளரவில்லை. இப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளையும் நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். அன்னையின் பெயரில் ஓர் மரம் என்ற இந்த பவித்திரமான இயக்கத்தோடு கண்டிப்பாக நீங்களும் இணைய வேண்டும் என்பதே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.
எனதருமை நாட்டுமக்களே, நமதருகே இருப்போர் சிலர், பேரிடர்க்காலங்களில் தங்கள் பொறுமையை இழப்பதில்லை, மாறாக அதிலிருந்து கற்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர். இவர் தொழில்ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது. இவருடைய இந்த ஈடுபாடு, 1980களில் தொடங்கியது; ஒரு முறை இவருடைய தந்தையாரை நச்சுப்பாம்பு ஒன்று தீண்டிய போது, பாரம்பரியமான மூலிகைகள்-தாவரங்களைக் கோண்டு உடல்நலம் மீட்சி பெறுவதில் உதவிகரமாக இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலைத் தொடக்கினார் இவர். இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன. தனது இந்தப் பூங்காவைத் உருவாக்க இவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் தேடித்தேடி இவர் தொலைதூரங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், தகவல்களைத் திரட்டி இருக்கிறார், பலமுறை மற்றவர்களிடம் உதவிகளையும் கோரியிருக்கிறார். கோவிட் காலத்தில், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று இவருடைய இந்த மூலிகைப் பூங்காவைக் காண தொலைவான பகுதிகளிலிருந்தும் பலர் வருகிறார்கள். இவர் அனைவருக்கும் மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் விளக்குகிறார். சுபஸ்ரீ அவர்கள், பலநூறு ஆண்டுகள் நமது கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அவருடைய மூலிகைப் பூங்காவானது, நமது கடந்தகாலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறது, அவருக்கு நம்முடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, மாறிவரும் காலத்திலே வேலைகளின் தன்மையும் மாறிக்கொண்டே வருகிறது, புதியபுதிய துறைகள் உருவாகி வருகின்றன. எப்படி கேமிங், அனிமேஷன், ரீல் மேகிங், திரைப்படத் தயாரிப்பு அல்லது போஸ்டர் தயாரிப்பு இவை போன்று. இவற்றிலே ஒன்றில் உங்களுடைய திறமையை நன்கு சிறப்பாக உங்களால் வெளிப்படுத்த முயன்றால், உங்கள் திறன்களுக்கு மிகப்பெரிய மேடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் ஒரு வாத்தியக்குழு-பேண்டோடு தொடர்புடையவராகவோ, சமுதாய வானொலிக்காகப் பணியாற்றுபவராகவோ இருந்தால், உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. உங்களுடைய திறமை மற்றும் படைப்புத்திறனை மேம்படுத்த பாரத அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘Create in India’ ‘இந்தியாவில் படைப்போம்’ என்ற கருத்திலான 25 சவால்களைத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சவால்கள் உங்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். சில சவால்கள் இசை, கல்வி மற்றும் Anti-Piracy எனப்படும் படைப்பாற்றல் களவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மீதும் கவனம் செலுத்துவதாக இருக்கின்றது. இந்த ஏற்பாட்டில் பல தொழில்சார் அமைப்புக்களும் பங்கெடுக்கின்றன, இவை இந்த சவால்களுக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளிக்கவிருக்கின்றன. இவற்றில் கலந்து கொள்ள நீங்கள் wavesindia.org என்ற இணையத்தளத்தில் நுழையவும். நாடெங்கிலும் இருக்கும் படைப்பாளிகளிடம் என்னுடைய சிறப்பான வேண்டுகோள், நீங்கள் கண்டிப்பாக இதிலே கலந்து கொள்ளுங்கள், உங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த மாதம் மேலும் ஒரு மகத்துவமான இயக்கத்தின் பத்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றியில், தேசத்தின் பெரிய தொழில்கள் தொடங்கி, சிறிய கடைக்காரர்கள் வரை பலரின் பங்களிப்பும் அடங்கி இருக்கிறது. நான் இந்தியாவில் தயாரிப்போம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இந்த இயக்கத்தால் மிகுந்த ஆதாயம் அடைந்து வருகின்றார்கள். இந்த இயக்கத்தால் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. இன்று பாரதம் தயாரிப்பின் சக்திபீடமாக ஆகி வருகிறது, தேசத்தின் இளைஞர்சக்தி காரணமாக உலகெங்கிலுமுள்ளோர் பார்வையும் நம்மீது தான் குவிந்திருக்கிறது. வாகனத்தயாரிப்பாகட்டும், ஜவுளிகளாகட்டும், விமானங்களாகட்டும், மின்னணுப்பொருட்களாகட்டும், பாதுகாப்புத் தளவாடங்களாகட்டும், அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தேசத்தில் அந்நிய நேரடி முதலீடும் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கூட நமது இந்தியாவில் உருவாக்குவோம் என்பதின் வெற்றிக்குப் பரணி பாடுகிறது. இப்போது நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறோம். முதலாவதாக, தரம் – அதாவது நமது தேசத்தில் தயாரிக்கப்படுபவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல், அதாவது அந்தந்த வட்டாரங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச ஊக்கமளிக்கப்பட வேண்டும். மனதின் குரலில் நாம் #MyProductMyPride குறித்தும் விவாதித்திருக்கிறோம். உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளிக்கப்படுவதால், நாட்டுமக்களுக்கு எந்த வகையில் ஆதாயம் ஏற்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டையும் முன்வைக்கிறேன்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் ஜவுளிக்கென ஒரு பண்டைய பாரம்பரியம் உண்டு. பண்டாரா டஸர் சில்க் ஹேண்ட்லூம். டஸர் வகை பட்டு தனது பிரத்யேகமான வடிவமைப்பு, வண்ணம் மற்றும் உறுதிக்காக பெயர் போனது. பண்டாராவின் சில பாகங்களில் 50க்கும் மேற்பட்ட சுயவுதவிக் குழுக்கள் இதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது. இந்தப் பட்டு விரைவாக அனைவரின் கவனத்தையும் கவரத் தொடங்கியிருக்கிறது, உள்ளூர் சமூகங்களின் அதிகாரப் பங்களிப்புக்கு வழிவகை செய்கிறது, இது தானே இந்தியாவில் உருவாக்குவோம் என்பதன் உணர்வு!!
நண்பர்களே, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில் நீங்கள் மீண்டும் உங்களுடைய பழைய உறுதிப்பாட்டை மறந்துவிட வேண்டாம். எந்த ஒன்றை நீங்கள் வாங்க நேர்ந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருக்க வேண்டும், எந்த ஒரு பரிசுப் பொருளை நீங்கள் அளித்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஏதோ மண்அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதாக ஆகாது. உங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகபட்ச ஊக்கமளித்து, அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை உருவாக்குவதில் இந்திய தொழிலாளி-கைவினைஞரின் வியர்வை சிந்தப்பட்டிருந்தால், பாரத நாட்டுப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், அது நம்முடைய பெருமிதம், இந்த கௌரவத்தை, இந்தப் பெருமிதத்தை நாம் எப்போதும் கொண்டாடுவோம்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இணைந்து பயணித்தது மிகவும் சுகமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியோடு உங்களை இணைத்துக் கொண்டு, உங்களுடைய கருத்துக்கள்-ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உங்களுடைய கடிதங்கள்-கருத்துக்கள்-தகவல்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். சில நாட்கள் கழித்து பண்டிகைகளின் காலம் தொடங்க இருக்கிறது. நவராத்திரி தொடங்க இருக்கிறது, அடுத்த இரண்டு மாதங்கள் வரை பூஜைகள்-வழிபாடுகள், விரதங்கள்-பண்டிகைகள், உற்சாகம்-உல்லாசம் என நாலாபுறங்களிலும் இந்தச் சூழல் பரவியிருக்கும். நான் வரவிருக்கும் பண்டிகைகள் அனைத்திற்குமான நல்வாழ்த்துக்களை உங்களனைவருக்கும் தெரிவிக்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து, அனைத்துப் பண்டிகைகளையும் நன்கு கொண்டாடுங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள், மற்றவர்களையும் உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்யுங்கள். அடுத்த மாதம் மனதின் குரலில் மேலும் புதிய விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.
நண்பர்களே,
தேசத்தின் இளைஞர்களுக்கு விண்வெளித் துறை சீர்திருத்தங்களாலும் கணிசமான ஆதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதால், நாம் ஏன் இன்று மனதின் குரலில் விண்வெளித் துறையோடு தொடர்புடைய நமது இளைய நண்பர்களோடு உரையாடி மகிழக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட் அப்பான, கேலக்ஸி ஐயின் குழுவினர் என்னுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த ஸ்டார்ட் அப்பினை ஐஐடி மதராஸின் முன்னாள் மாணவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் அனைவரும் இன்று நம்மோடு தொலைபேசி-வழித் தொடர்பில் இணைந்திருக்கிறார்கள் – சூயஷ், டேனில், ரக்ஷித், கிஷன், பிரணீத் ஆகியோர். வாருங்கள் இந்த இளைஞர்களின் அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
பிரதமர் – ஹெலோ
அனைத்து இளைஞர்களும் – ஹெலோ
பிரதமர் – வணக்கம்ங்க
அனைத்து இளைஞர்களும் – வணக்கம் சார்
பிரதமர் – நல்லது நண்பர்களே, ஐஐடி மதராஸில ஏற்பட்ட உங்களுடைய நட்பு, இன்றைக்கும் கூட பலமானதா இருக்கறத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதனால தான் நீங்க எல்லாருமா இணைஞ்சு GalaxEyeஐ ஆரம்பிக்க முடிவு செஞ்சீங்க. இன்னைக்கு நான் மேலும் இதுபத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன். கூடவே உங்க தொழில்நுட்பத்தால தேசத்துக்கு எந்த அளவுக்கு நன்மை ஏற்பட இருக்குன்னும் சொல்லுங்க.
சூயஷ் – ஐயா என் பேரு சூயஷ். நீங்க சொன்னா மாதிரி, ஐஐடி மதராஸில சந்திச்சோம், அங்க நாங்க எல்லாரும் எங்க படிப்பை முடிச்சோம், ஆனா வேறவேற வருஷங்கள்ல எங்க பொறியியல் படிப்பை நிறைவு செஞ்சோம். அப்பத்தான் நாங்க என்ன நினைச்சோம்னா, ஹைப்பர்லூப்னு ஒரு ப்ராஜக்ட் இருக்கு, இதை நாம ஒண்ணா சேர்ந்து செய்யலாமேன்னு தோணிச்சு. இதன்படி நாங்க ஆவிஷ்கார் ஹைப்பர்லூப்னு ஒரு குழுவை உருவாக்கினோம், இது தொடர்பா நாங்க அமெரிக்காவுக்கும் பயணிச்சோம். அந்த ஆண்டு அமெரிக்காவுல போட்டியில பங்கெடுக்கப் போன ஒரே ஆசிய அணி நாங்க தான். அங்க நம்ம நாட்டோட கொடியை நாட்டினோம். உலகத்தில சுமார் 1500 அணிகள்ல நாங்க தலைசிறந்த 20 அணிகள்ல ஒண்ணா இருந்தோம்.
பிரதமர் – சரி, நீங்க மேல தொடர்றதுக்கு முன்னால நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
சூயஷ் – ரொம்ப ரொம்ப நன்றிங்க. இந்த சாதனைக்குப் பிறகு எங்களோட நட்பு மேலும் ஆழமாச்சு, இந்த மாதிரியான கடினமான, சிரமங்கள் நிறைஞ்ச திட்டங்களை செய்யத் தேவையான தன்னம்பிக்கை ஏற்பட்டுச்சு. மேலும் இந்த வேளையில தான் ஸ்பேஸ் எக்ஸை பார்த்தோம். விண்வெளித் துறையை அப்ப நீங்க திறாந்து விட்டீங்க. அதில தனியார் பங்களிப்பை உறுதி செய்யற வகையில 2020ல நீங்க ஒரு திருப்புமுனையான தீர்மானத்தை மேற்கொண்டீங்க. இது எங்களுக்கு ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்திச்சு. இப்ப நாங்க என்ன உருவாக்கிட்டு இருக்கோங்கறதையும், அதனால என்ன பயன் அப்படீங்கறது பத்தியும் பகிர்ந்துக்க ரக்ஷித்தை உங்ககூட உரையாட அழைக்க விரும்பறேன்.
ரக்ஷித் – ஐயா, என் பேரு ரக்ஷித். இந்தத் தொழில்நுட்பத்தால நமக்கு எப்படி ஆதாயங்கள் கிடைக்கும்ங்கறது பத்தி நான் பதில் சொல்றேன்.
பிரதமர் – ரக்ஷித், நீங்க உத்தராகண்டில எங்கிருந்து வர்றீங்க?
ரக்ஷித் – சார் நான் அல்மோடாவிலேர்ந்து வர்றேன்.
பிரதமர் – ம்ம், அப்ப நீங்க பால் இனிப்புக்காரங்கன்னு சொல்லுங்க.
ரக்ஷித் – ஆமா சார், ஆமா சார். பால் இனிப்புத் தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சமானது.
பிரதமர் – நம்ம லக்ஷ்ய சேன் இருக்காருல்ல, அவரு தான் அப்பப்ப எனக்கு பால் இனிப்பைத் தருவாரு. சரி ரக்ஷித் சொல்லுங்க.
ரக்ஷித் – எங்களோட தொழில்நுட்பத்தால, விண்வெளியிலிருந்து, மேகங்களைத் தாண்டிப் பார்க்க முடியும், இரவிலயும் கூட இதால பார்க்க முடியும். இதனால தேசத்தின் எந்த ஒரு மூலையா இருந்தாலும், அது மேலிருந்து ஒரு தெளிவான படத்தை எடுக்க முடியும். மேலும் இப்படி கிடைக்கக்கூடிய இந்தத் தரவுகளை வெச்சு, இரண்டு துறைகள்ல மேம்பாட்டை ஏற்படுத்த முடியும். முதலாவதா, பாரதத்தோட பாதுகாப்பை உறுதி செய்யறதுல. நம்மளோட எல்லைப் பகுதிகள், நம்மோட கடல்பகுதிகள், இவை மேல நம்மால கண்காணிப்பை ஏற்படுத்த முடியும். மேலும் எதிரிகளோட செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம், நம்ம இராணுவத்துக்குத் துப்புகளைக் கொடுக்கலாம். இரண்டாவதா, பாரதநாட்டு விவசாயிகளை மேலும் சக்தி படைத்தவர்களா ஆக்கலாம். ஏற்கெனவே நாங்க உருவாக்கியிருக்கற ஒரு பொருளைக் கொண்டு, விண்வெளியிலிருந்து, இரால் வளர்ப்புல ஈடுபட்டிருக்கற விவசாயிகளோட குளங்கள்ல இருக்கற நீரோட தரத்தை, தற்போது இதுக்கு ஆகற செலவுல பத்துல ஒரு பங்கு செலவுல கணக்கிட முடியும். மேலும் நாங்க என்ன விரும்பறோம்னா, உலகத்துக்குச் சிறந்த தரமான செயற்கைக்கோள் படங்களைப் பிடிச்சு, உலகளாவிய பிரச்சனைகளான உலக வெப்பமயமாக்கம் போன்ற சிக்கல்களோட போராடத் தேவையான சிறந்த தரம்வாய்ந்த செயற்கைக்கோள் தரவுகளை அளிக்க விரும்பறோம்.
பிரதமர் – அப்படீன்னா உங்க குழு ஜவானுக்கும் ஜய் போடுவீங்க, கிஸானுக்கும் ஜய் போடுவீங்க இல்லையா?
ரக்ஷித் – ஆமாம் சார், கண்டிப்பா.
பிரதமர் – நண்பர்களே, நீங்க இத்தனை பணிகளை செஞ்சிக்கிட்டு இருக்கீங்களே, உங்களோட இந்தத் தொழில்நுட்பத்தோட துல்லியம் எந்த அளவுன்னு சொல்றீங்களா?
ரக்ஷித் – சார், 50 செ.மீ. resolution அதாவது பிரிதிறன் வரைபடங்கள் இருக்கும். மேலும் ஒரேஒரு முறையில எங்களால சுமார் 300 சதுர கி.மீ. பகுதியோட படத்தைப் பிடிச்சுட முடியும்.
பிரதமர் – நீங்க சொல்றதை எல்லாம் நம்ம நாட்டுமக்கள் கேட்கும் போது அவங்க எவ்வளவு பெருமிதப்படுவாங்கன்னு நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். சரி இப்ப நான் மேலும் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பறேன்.
ரக்ஷித் – சொல்லுங்க சார்.
பிரதமர் – விண்வெளி சூழலமைப்புங்கறது ரொம்பவே துடிப்பானதா ஆயிட்டு வருது. இப்ப உங்களோட குழு, இதில என்ன மாற்றங்களைப் பார்க்கறீங்க?
கிஷன் – என் பேரு கிஷன் சார், நாங்க இந்த GalaxEyeஐ தொடங்கின பிறகுல இருந்தே நாங்க IN-SPACe வர்றதை பார்த்தோம், நிறைய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுறதைப் பார்த்தோம். எடுத்துக்காட்டா ஜியோ ஸ்பேஷியல் டேடா பாலிஸி, அதாவது புவியியல் சார்ந்த தரவுக் கொள்கை, இந்திய விண்வெளிக் கொள்கை. மேலும் நாங்க கடந்த மூன்றாண்டுகள்ல நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்தோம், நிறைய செயல்முறை மாற்றங்கள், நிறைய கட்டமைப்பு மாற்றங்கள், நிறைய வசதிகள், இஸ்ரோவால இவையெல்லாம் நல்ல முறையில செய்யப்பட்டிருக்கு. இப்ப நாங்க இஸ்ரோவுக்குப் போயி எங்க வன்பொருளை ரொம்ப சுலபமா பரிசோதனை செய்ய முடியுது. மூணு வருஷங்களுக்கு முன்னால இந்தச் செயல்முறைகள்லாம் இந்த அளவுக்கு இருக்கல. இதெல்லாம் எங்களுக்கு மட்டுமில்லை, மேலும் பல ஸ்டார்ட் அப்புகளுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்கு. மேலும், அண்மைக்கால அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் காரணமா, இந்த வசதிகள் கிடைக்கறது காரணமா, நிறைய ஸ்டார்ட் அப்புகள் உருவாகவும் ஊக்கமா இருக்கு, இப்படிப்பட்ட ஸ்டார்ட் அப்புகள் வந்து ரொம்ப சுலபமா, பொதுவா மேம்பாட்டை ஏற்படுத்தறதுக்கு அதிக செலவும் நேரமும் ஆகற துறைகள்ல கூட நல்ல மேம்பாடு ஏற்படுத்த முடியும். ஆனா தற்போதைய கொள்கைகள் காரணமாவும், IN-SPACe வந்ததுக்குப் பிறகும், ஸ்டார்ட் அப்புகளுக்கு நிறைய விஷயங்களைச் செய்யறது சுலபமாகியிருக்கு. என் நண்பன் டேனில் சாவ்டாவும் கூட இது தொடர்பா பகிர்ந்துக்க விரும்பறாரு.
பிரதமர் – டேனில் சொல்லுங்க.
டேனில் – சார், நாங்க ஒரு விஷயத்தை கவனிச்சோம், அது என்னென்னா, பொறியியல் படிக்கற மாணவர்களோட சிந்தனைக் கண்ணோட்டத்தில ஒரு மாற்றத்தை கவனிச்சோம். முன்ன எல்லாம் அவங்க வெளிநாட்டுக்குப் போயி விண்வெளித் துறையில மேற்படிப்பை படிக்க விரும்புவாங்க, அங்க வேலை பார்க்க விரும்புவாங்க, ஆனா இப்ப இந்தியாவுலேயே ஒரு விண்வெளி சூழலமைப்பு ரொம்ப நல்லமுறையில வளர்ந்திட்டு இருக்கற நிலையில அவங்க எல்லாம் திரும்ப வந்து இந்தச் சூழலமைப்போட ஒரு அங்கமா ஆக விரும்பறாங்க. இது ஒரு நல்ல பின்னூட்டம் நமக்குக் கிடைக்குது, எங்க கம்பெனியிலேயே கூட, இந்தக் காரணத்தாலேயே சிலர் திரும்ப வந்து வேலை பார்த்திட்டு இருக்காங்க.
பிரதமர் – நீங்க ரெண்டு பேரும் சொன்ன கண்ணோட்டங்கள், அதாவது கிஷனும் சரி, டேனிலும் சரி சொன்ன கருத்துக்கள் மேல பலரோட கவனமும் ஈர்க்கப்பட்டிருக்கும் அப்படீன்னு நான் கண்டிப்பா நம்பறேன். மேலும் ஒரு துறையில சீர்திருத்தம் செய்யப்படும் போது, சீர்திருத்தம் காரணமா எத்தனை வகையான பலன்கள் ஏற்படுது, எத்தனை பேர் ஆதாயம் அடையறாங்க அப்படீங்கறது பத்தி எல்லாம் நீங்க விவரமா எடுத்துச் சொன்னீங்க. ஏன்னு சொன்னா நீங்க அந்தத் துறையிலேயே இருக்கீங்க, அதை உன்னிப்பா கவனிச்சிருப்பீங்க, இதோட கூட நம்ம நாட்டோட இளைஞர்களும் இப்ப இந்தத் துறையில, நம்ம நாட்டிலேயே தங்களோட எதிர்காலத்தை அமைச்சுக்கறாங்க. தங்களோட திறமைகளை இங்க பயன்படுத்த விரும்பறாங்கன்னும் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப அருமையான ஒரு கவனிப்பு. இப்ப நான் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்பறேன். இப்ப ஸ்டார்ட் அப்புகள் மற்றும் விண்வெளித் துறையில வெற்றியடைய விரும்பற இளைஞர்களுக்கு நீங்க தெரிவிக்க வேண்டிய செய்தி என்னவா இருக்கும்?
பிரணித் – நான் பிரணித் பேசறேன், இதுக்கான விடையை நான் அளிக்கறேன்.
பிரதமர் – சொல்லுங்க பிரணித்.
பிரணித் – சார், என்னோட சில ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து நான் ரெண்டு விஷயங்களைத் தெரிவிச்சுக்க விரும்பறேன். முதலாவதா, யாராவது ஸ்டார்ட் அப்பை தொடங்க நினைச்சாங்கன்னா, அதுக்கான நேரம் இது தான். ஏன்னா, உலகம் முழுவதிலயும், இந்தியா தான் மிகவும் வேகமாக வளர்ந்திட்டு வர்ற பொருளாதாரம். இதோட அர்த்தம் என்னன்னா, உங்க கிட்ட ஏராளமான வாய்ப்பு இருக்குங்கறது தான். அடுத்த வருஷம் எங்களோட ஒரு செயற்கைக்கோள் ஏவப்படும்னு நினைச்சு எப்படி நான் 24 வயசுல பெருமைப்படுறேன் இல்லையா, அந்த மாதிரி. இந்த அடிப்படையில நம்ம அரசாங்கம் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கும். அதில எங்களோட ரொம்ப சின்ன பங்களிப்பும் ஒண்ணா இருக்கும். இப்படி தேசிய அளவுல தாக்கம் ஏற்படுத்தும் சில திட்டங்களோட இணைஞ்சு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைச்சுது. இது எப்படிப்பட்ட துறை, என்ன மாதிரியான நேரம் இது அப்படீன்னு பார்க்கும் போது, இது இன்னைக்கு, இப்பக்கூட துவங்கிட்டு இருக்குன்னு சொல்லலாம். நான் என்னோட இளைய நண்பர்கள் கிட்ட சொல்ல விரும்பறதெல்லாம், இந்த வாய்ப்பு தாக்கம் தொடர்பானது மட்டுமில்லை, அவங்களோட தனிப்பட்ட நிதி வளர்ச்சி பத்தினது. உலக அளவிலான ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவது பத்தினது. நாங்க பரஸ்பரம் என்ன பேசிக்குவோம்னா, சின்ன வயசுல எல்லாம் என்ன ஆகணும்னு நினைக்கும் போது, பெரிய நடிகராகணும், விளையாட்டு வீரரா ஆகணும், இப்படி ஏதாவது நினைப்போம் இல்லையா? ஆனா இன்னைக்கு யாராவது வளர்ந்த பிறகு விண்வெளித் துறையில வேலை பார்க்க விரும்பறேன், பெரிய தொழில்முனைவோரா ஆக விரும்பறேன்னு சொன்னா, அது தான் எங்களுக்குப் பெருமையான தருணம். இந்த மொத்த முழு மாற்றத்தில ஒரு சின்ன அங்கமா நாங்க இருக்கோம்.
பிரதமர் – நண்பர்களே, ஒரு வகையில பிரணித், கிஷன், டேனில், ரக்ஷித், சுயஷ் உங்களோட நட்பு எந்த அளவுக்கு ஆழமானதோ, அதே அளவுக்கு உங்க ஸ்டார்ட் அப்பும் ஆழமானது. இதனால தான உங்களால இத்தனை அருமையா பணியாற்ற முடிஞ்சிருக்கு! சில ஆண்டுகள் முன்னால ஐஐடி மதராஸ் போகக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது. அந்த அமைப்போட சிறப்புத்தன்மையை நானே அனுபவிச்சிருக்கேன். மேலும் ஐஐடி தொடர்பா உலகம் முழுவதிலயுமே கூட ஒரு மரியாதை கலந்த உணர்வு இருக்கு. அங்கிருந்து படிச்சுட்டு வெளியேறும் மாணவர்கள், பாரதத்திற்காக பணியாற்றும் போது கண்டிப்பா நல்லதொரு பங்களிப்பை அளிக்கறாங்க. நீங்க எல்லாருக்கும் சரி, விண்வெளித் துறையில பணியாற்றக்கூடிய எல்லா ஸ்டார்ட் அப்புகளுக்கும் சரி என்னோட பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவிச்சுக்கறேன். நீங்க ஐந்து நண்பர்களோடயும் பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. பலப்பல நன்றிகள் நண்பர்களே!!
சுயஷ் – தேங்க்யூ சோ மச்.
எனதருமை நாட்டு மக்களே,
அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான். அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன. பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள். தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள். தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை. கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும்.
நண்பர்களே,
சுதந்திரப் போரின் போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பலர் முன்வந்து பங்கேற்றார்கள், இவர்களுக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இருக்கவில்லை. இவர்கள் தாங்களே முன்வந்து பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள். இன்றும் கூட வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, மீண்டும் ஒருமுறை இதே உணர்வு தேவைப்படுகிறது. நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் என்னுடைய அனைத்து இளைய நண்பர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். உங்களுடைய இந்த அடியெடுப்பு, உங்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்ற வல்லது.
எனக்குப் பிரியமான நாட்டு மக்களே,
இல்லந்தோறும் மூவண்ணக்கொடி – இந்த இயக்கம் இந்த முறை முழுவீச்சில் நடந்தேறியது. தேசத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன. நமது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து இடங்களிலும் மூவண்ணக்கொடி! மக்கள் தங்கள் கடைகளில், அலுவலகங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள். தங்கள் கணிப்பொறிகளில், செல்பேசிகளில், வண்டிகளில் மூவண்ணக் கொடியைப் பறக்கச் செய்தார்கள். மக்கள் அனைவருமாக இணைந்து இப்படிப்பட்ட உணர்வினை எப்போது வெளிப்படுத்துகிறார்களோ, அப்போது அது அந்த இயக்கத்திற்கு மகுடம் சூட்டி விடுகிறது. இப்போது நீங்கள் உங்கள் டிவி திரையில் காணும் படங்கள், இவை ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்தது. இங்கே 750 மீட்டர் நீளம் கொண்ட மூவண்ணக் கொடியோடு கூடிய ஒரு மூவண்ணப் பேரணி நடத்தப்பட்டது, மேலும் இது உலகின் மிகவும் உயரமான சினாப் ரயில்பாலத்தின் மீது நடந்தது. யாரெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தார்களோ, அவர்களுடைய மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பின. ஸ்ரீநகரின் டல் ஏரியிலும் கூட மூவண்ணக்கொடி யாத்திரையின் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களை நாம் அனைவரும் கண்டோம். அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமேங்க் மாவட்டத்திலும் கூட 600 அடி நீளமான மூவண்ணக் கொடியோடு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. தேசத்தின் பிற மாநிலங்களிலும் கூட இதைப் போலவே, அனைத்து வயதினரும், இப்படிப்பட்ட மூவண்ணக்கொடிப் பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். சுதந்திரத் திருநாள் இப்போது ஒரு சமூகத் திருநாளெனவே ஆகி வருகிறது. இதனை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள். மக்கள் தங்களுடைய இல்லங்களையும் கூட மூவண்ண மாலைகளால் அலங்கரிக்கின்றார்கள். சுய உதவிக் குழுக்களோடு இணைந்த பெண்கள், இலட்சக்கணக்கான கொடிகளைத் தயார் செய்கின்றார்கள். இணையவழி வர்த்தகத் தளங்களில் மூவண்ணம் நிரம்பிய பொருட்களின் விற்பனை அதிகரிக்கின்றன. சுதந்திரத் திருநாளின் போது தேசத்தின் நீர்-நிலம்-வானம் என அனைத்து இடங்களிலும் நமது கொடியின் மூன்று நிறங்கள் பளிச்சிட்டன. இல்லந்தோறும் மூவண்ணம் இணையதளத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் படத்தையும் தரவேற்றம் செய்திருந்தார்கள். இந்த இயக்கமானது தேசம் முழுவதையும் ஓரிழையில் இணைத்தது! இது தானே ஒரே பாரதம், உன்னத பாரதம்!!
என் மனம்நிறை நாட்டு மக்களே,
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான அன்பு பற்றி எத்தனையோ திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!! ஆனால் ஒரு நிஜக் கதை இப்போது அசாமிலே நடந்து வருகிறது. அசாமின் தின்சுகியா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான போர்குரியில், மோரான் சமூகத்தவர் வசிக்கிறார்கள். இதே கிராமத்தில் தான் ஹோலோ பந்தர் என்று இங்கே அழைக்கப்படும் ஹூலாக் கிபன் வசிக்கிறது. இந்த கிராமத்தவருக்கும் ஹூலாக் கிபனுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கிராமவாசிகள் இன்றும் கூட, தங்களுடைய பாரம்பரியமான நற்பண்புகளைப் பின்பற்றி வருகிறார்கள். ஆகையால் இந்த கிப்பன் குரங்குகளோடு இருக்கும் உறவுகள் மேலும் பலப்படும் வகையில் அனைத்துச் செயல்களையும் செய்திருக்கிறார்கள். இந்த கிப்பன்ஸ் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் பிடிக்கும் என்று உணர்ந்த போது, உடனடியாக வாழை சாகுபடியை ஆரம்பித்தார்கள். இதைத் தவிர, எப்படி தங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செய்வார்களோ, அதைப் போலவே கிப்பன்ஸ் குரங்குகளின் பிறப்பு-இறப்போடு தொடர்புடைய அனைத்துச் சடங்குகளையும் செய்தார்கள். இவர்கள் கிப்பன்ஸ் குரங்குகளுக்குப் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள். தற்போது மின்கம்பிகளால் இவற்றுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதறிந்து இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள், விரைவாக இதற்கான தீர்வும் காணப்பட்டது. இப்போதெல்லாம் படங்களெடுத்தால் அவற்றுக்கு ஏற்ப இந்த கிப்பன்ஸ் குரங்குகள் போஸ் கொடுக்கின்றன என்று எனக்குச் சொன்னார்கள்.
நண்பர்களே,
விலங்குகளிடம் நேசத்தோடு இருப்பதிலே நமது அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அருணாச்சலைச் சேர்ந்த நமது சில இளைய நண்பர்கள், 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ஏனென்றால், கொம்புகளுக்காகவும், பற்களுக்காகவும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை இவர்கள் தடுத்து அவற்றைக் காக்க விரும்புகிறார்கள். நாபம் பாபு, லிகா நானா ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தக் குழுவானது, விலங்குகளின் பல்வேறு பாகங்களை 3டி பிரிண்டிங் செய்கிறது. விலங்குகளின் கொம்புகளாகட்டும், அவற்றின் பற்களாகட்டும், இவையனைத்தும் 3 டி பிரிண்டிங்கால் தயார் செய்யப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மீண்டும் உடைகள் மற்றும் தொப்பி போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வித்தியாசமான மாற்றுக்களைத் தயாரிப்பதில் மக்கும் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட அற்புதமான முயற்சிகளுக்கு எத்தனை ஆதரவளிக்க முடியுமோ அத்தனையும் அளிக்க வேண்டும். அதிக அளவிலான ஸ்டார்ட் அப்புகள் இந்தத் துறையிலே முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நமது விலங்கினங்கள் பாதுகாக்கப்படும், நமது பாரம்பரியமும் வளப்படும்.
என் உளம்நிறை நாட்டு மக்களே,
மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவாவிலே மிக அருமையான ஒரு விஷயம் நடந்து வருகிறது, இதை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே நமது துப்புரவுப் பணியாள சகோதர சகோதரிகள் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த சகோதர சகோதரிகள், கழிவுப் பொருட்களிலிருந்து செல்வம் ஈட்டுதல் என்ற விஷயத்தை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். இந்தக் குழுவானது ஜாபுவாவின் ஒரு பூங்காவில் சேரும் குப்பைகளைக் கொண்டு, அற்புதமான கலைப்படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றது. தங்களுடைய இந்தப் பணிக்காக அக்கம்பக்கத்திலிருந்து நெகிழிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், டயர்கள், குழாய்கள் ஆகியவற்றைத் திரட்டியிருக்கிறார்கள். இந்தக் கலைப்படைப்புக்களில் ஹெலிகாப்டர்கள், கார்கள், பீரங்கிகள் போன்றவை அடங்கும். அழகான தொங்கும் பூஞ்சட்டிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் டயர்கள், ஓய்வெடுக்கும் இருக்கைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. துப்புரவுப் பணியாளர்களின் இந்தக் குழு, Reduce, Reuse, Recycle, அதாவது குறைவாய் பயன்படுத்தி, மீள்பயன்படுத்தி, மறுசுழற்சி செய்தல் என்ற மந்திரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய முயற்சிகளால் பூங்கா மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கிறது. இதைக் காண வட்டார மக்களோடு சேர்ந்து அக்கம்பக்க மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள்.
நண்பர்களே,
நமது தேசத்தின் பல ஸ்டார்ட் அப் குழுக்களும் கூட சுற்றுச்சூழலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. e -Conscious என்ற பெயருடைய ஒரு குழுவானது, நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சூழலுக்கு நேசமான பொருட்களைத் தயாரித்து வருகிறது. நமது சுற்றுலாத் தலங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் பரவியிருக்கும் குப்பைக்கூளங்களைப் பார்த்த பிறகுதான் இப்படிச் செய்வதற்கான எண்ணமே இவர்களுக்கு வந்ததாம். இப்படிப்பட்ட மனிதர்களின் மேலும் ஒரு குழுவானது, Ecokaari என்ற பெயருடைய ஒரு ஸ்டார்ட் அப்பைத் தொடங்கியிருக்கிறது. இந்த நெகிழிக் கழிவுகளைக் கொண்டு பலவகையான அழகான பொருட்களைத் தயாரிக்கின்றார்கள்.
நண்பர்களே,
பொம்மைகளை மறுசுழற்சி செய்வதும் கூட, நாமனைவரும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு துறை தான். குழந்தைகள் பலர் விரைவாகவே பொம்மைகளிடம் சலித்துப் போய் விடுகின்றனர். அதே நேரத்தில், பொம்மைகளோடு விளையாட மாட்டோமா என்ற ஏக்கக் கனவுகளைக் காணும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எந்தப் பொம்மைகளோடு உங்கள் குழந்தைகள் விளையாடுவதில்லையோ, அவை எங்கே பயனாகுமோ அத்தகைய இடங்களில் நீங்கள் அளிக்கலாமே!! இதுவுமே கூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நல்ல வழியாகும். நாமனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டால் தான் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும், தேசத்தை முன்னேற்றவும் முடியும்.
எனக்குப் பிரியமான நாட்டு மக்களே,
சில நாட்கள் முன்பாக, நாம் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று ரக்ஷாபந்தன் நன்னாளைக் கொண்டாடினோம். அந்த நாளன்று உலகம் முழுவதும் உலக சம்ஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது. இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சம்ஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பானதொரு ஈர்ப்பு தென்படுகிறது. உலகின் பல நாடுகளில் சம்ஸ்கிருத மொழி தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நாம் தொடர்வதற்கு முன்பாக உங்களுக்காக நான் ஒரு சிறிய ஒலிக்குறிப்பை இசைக்க விரும்புகிறேன்.
நண்பர்களே, இந்த ஒலிக்குறிப்பு ஐரோப்பாவின் ஒரு நாடான லிதுவேனியாவோடு தொடர்புடையது. அங்கே வைடிஸ் விடூனஸ் என்ற ஒரு பேராசிரியர், வித்தியாசமானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், இதன் பெயர் “சம்ஸ்கிருதம் ஆன் தி ரிவர்ஸ்”, அதாவது ஆற்றங்கரைகளில் சம்ஸ்கிருதம் என்பதே இதன் பொருள். சிலர் அடங்கிய ஒரு குழுவானது அங்கே ஓடும் நேரிஸ் ஆற்றின் கரையிலே கூடி, அங்கே வேதங்கள் மற்றும் கீதையை ஓதினார்கள். இப்படிப்பட்டதொரு முயற்சி கடந்த சில ஆண்டுகளாக அங்கே நடந்து வருகிறது. நீங்களும் கூட சம்ஸ்கிருதத்தைப் பெருக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வாருங்கள்.
எனதருமை நாட்டு மக்களே,
நம்மனைவரின் வாழ்க்கையிலே உடலுறுதி என்பதற்கு மிகவும் மகத்துவம் உண்டு. உடலுறுதியோடு இருக்க நாம் நமது உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். உடலுறுதியின்பால் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, ஃபிட் இண்டியா இயக்கம் தொடங்கப்பட்டது. ஆரோக்கியமாக இருப்பதற்காக இன்று அனைத்து வயது, அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், யோகக்கலையைப் பயின்று வருகிறார்கள். மக்கள் தங்களுடைய உணவுத் தட்டுக்களில் இப்போதெல்லாம் அருமையான உணவான சிறுதானியங்கள், அதாவது ஸ்ரீ அன்னத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த அனைத்து முயற்சிகளின் நோக்கம் என்னவென்றால், அனைத்துக் குடும்பங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான்.
நண்பர்களே,
நம்முடைய குடும்பங்கள், நமது சமூகம், நமது தேசம், இவை அனைத்தின் எதிர்காலமும் நமது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தே இருக்கின்றன; குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம் அவர்களுக்கு சரியான வகையிலான ஊட்டச்சத்து கிடைப்பது தான். குழந்தைகளின் ஊட்டச்சத்து தான் தேசத்தின் முதன்மை. அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளின் மீது ஆண்டு முழுவதும் நமது கவனம் இருக்கிறது என்றாலும், ஒரு மாதம், தேசமானது இதன் மீது விசேஷ கவனத்தைச் செலுத்துகிறது. இதன் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு இடையே ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படுகிறது. ஊட்டச்சத்து தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊட்டச்சத்து விழாக்கள், ரத்த சோகை தொடர்பான முகாம்கள், சிசுக்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுதல், கருத்தரங்குகள், இணையவழி கருத்துப் பரிமாற்றங்கள் போன்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல இடங்களில் ஆங்கன்வாடிகள் மூலமாக தாய்-சேய் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழுவானது ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களின் அன்னையரைக் கண்காணிக்கின்றது. தொடர்ந்து கவனிக்கின்றது. அவர்களுடைய ஊட்டச்சத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு ஊட்டச்சத்து இயக்கம், புதிய கல்வித் திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது. ஊட்டச்சத்தோடு சேர்ந்த படிப்பு என்ற இயக்கம் வாயிலாக, குழந்தைகளின் சமச்சீரான வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படுகிறது. நீங்களும் கூட உங்கள் பகுதியிலே ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களோடு இணைய வேண்டும். உங்களுடைய ஒரு சிறிய முயற்சியால், ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் அதிக சக்தி கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே,
இந்த முறை மனதின் குரலில் இவ்வளவே! மனதின் குரலில் உங்களோடு உரையாடியது எனக்கு எப்போதும் போலவே நன்றாக இருந்தது. ஏதோ நான் எனது குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து, மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நான் என்றுமே உங்கள் மனங்களோடு தொடர்புடையவனாக இருந்திருக்கிறேன். உங்களுடைய பின்னூட்டங்கள், உங்களுடைய ஆலோசனைகள் ஆகியன எனக்கு மிகவும் மதிப்பானவை. அடுத்த சில நாட்களில் பண்டிகைகள் பல வரவிருக்கின்றன. நான் உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஜன்மாஷ்டமி பண்டிகையும் வரவிருக்கிறது. அடுத்த மாதத் தொடக்கத்தில் பிள்ளையார் சதுர்த்தியும் வரவிருக்கிறது. ஓணம் பண்டிகையும் சில நாட்களில் வந்து விடும். மிலாத் உன் நபிக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே,
இந்த மாதம் 29ஆம் தேதியன்று தெலுகு பாஷா தினம் வரவிருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் அற்புதமானதொரு மொழி. உலகெங்கிலும் இருக்கும் அனைத்துத் தெலுகு மொழி பேசுவோருக்கும், தெலுகு பாஷா தினத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
பிரபஞ்ச வியாப்தங்கா உன்ன,
தெலுகு வாரிகி,
தெலுகு பாஷா தினோத்ஸவ ஷுபாகாங்க்ஷலு.
நண்பர்களே,
நீங்களனைவரும் மழைக்காலத்தில் கவனமாக இருங்கள், மழைநீரைச் சேகரிக்கும் இயக்கத்தில் பங்கெடுக்கவும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ஒரு மரம், தாயின் பெயரில் இயக்கம் பற்றி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதிக அளவிலான மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நட ஊக்கப்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். வரவிருக்கும் நாட்களில் பேரிஸ் நகரிலே, பேராலிம்பிக்ஸ் தொடங்க இருக்கிறது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் அங்கே செல்லவிருக்கிறார்கள். 140 கோடி பாரதீயர்கள், தங்களுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கக்குரல் கொடுப்போம். நீங்களும் கூட #cheer4bharat என்பதோடு இணைந்து, நமது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளியுங்கள். அடுத்த மாதம் நாம் மீண்டும் ஒருமுறை இணைவோம், பல விஷயங்கள் குறித்து உரையாடி மகிழ்வோம். அதுவரை, எனக்கு விடை தாருங்கள். பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!
நண்பர்களே, விளையாட்டு உலகத்தில் இந்த ஒலிம்பிக்ஸிலிருந்து சற்று விலகி, சில நாட்கள் முன்பாக கணித உலகிலும் கூட ஒரு ஒலிம்பிக் நடந்தேறியது. சர்வதேச கணித ஒலிம்பியாட். இந்த ஒலிம்பியாடிலே பாரதத்தின் மாணவர்கள், மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதிலே நமது அணியின் மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக நான்கு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன. சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், மொத்த பதக்கப் பட்டியலில் நமது அணியானது, தலைசிறந்த ஐந்து அணிகளில் ஒன்றாக வெற்றிகரமாக இடத்தைப் பிடித்தது. தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்த்த இந்த மாணவர்களின் பெயர்கள் –
புணேயில் வசிக்கும் ஆதித்ய வேங்கட் கணேஷ், புணேவைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரான சித்தார்த் சோப்டா, தில்லியின் அர்ஜுன் குப்தா, கிரேட்டர் நொய்டாவின் கனவ் தல்வார், மும்பையின் ருஷீல் மாதுர், தவிர குவாஹாடியைச் சேர்ந்த ஆனந்தோ பாதுரி ஆகியோர்.
நண்பர்களே, இன்று மனதின் குரலில் நான் இந்த இளைய வெற்றியாளர்களுக்குச் சிறப்பு வரவேற்பு நல்கியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் இப்போது தொலைபேசியில் நம்மோடு இணைந்திருக்கிறார்கள்.
பிரதமர் – வணக்கம் நண்பர்களே! மனதின் குரலில் நண்பர்கள் உங்களனைவரையும் வரவேற்கிறேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?
மாணவர்கள் – நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் சார்.
பிரதமர் – நல்லது நண்பர்களே, மனதின் குரல் வாயிலா, நாட்டுமக்கள் எல்லாரும் உங்க எல்லாரோட அனுபவங்களையும் கேட்க ரொம்ப ஆவலா இருக்காங்க. நான் முதல்ல ஆதித்யா, சித்தார்த் இவங்க கிட்டேர்ந்து ஆரம்பிக்கறேன். நீங்க புணேயில இருக்கீங்க, இந்த ஒலிம்பியாட் காலகட்டத்தில நீங்க சந்திச்ச அனுபவங்களை எல்லார் கூடவும் பகிர்ந்துக்கங்களேன்.
ஆதித்யா – எனக்கு கணிதத்தில கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க. 6ஆம் வகுப்பு கணிதத்தை என் ஆசிரியர், ஓம்பிரகாஷ் சார் தான் கத்துக் குடுத்தாங்க, பிறகு அவங்க தான் கணிதம் மேல எனக்கு ஆர்வத்தை வளர்த்தாங்க, என்னால நல்லா கத்துக்க முடிஞ்சுது, எனக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சுது.
பிரதமர் – உங்க நண்பர் என்ன சொல்றாரு?
சித்தார்த் – சார் என் பேரு சித்தார்த், நான் புணேலேர்ந்து வரேன். நானும் கூட இப்ப 12ஆம் வகுப்புல தேர்ச்சி பெற்றிருக்கேன். ஐ.எம்.ஓவுல 2ஆவது முறையா பங்கேற்கறேன். எனக்கும் கணிதத்தில ஏகப்பட்ட ஆர்வம் இருக்கு. நான் 6ஆம் வகுப்பு படிக்கறப்ப ஆதித்யாவைப் போலவே ஓம்பிரகாஷ் சார் எனக்கும் பயிற்சி குடுத்தாரு, ரொம்ப உதவி பண்ணாரு. இப்ப நான் கல்லூரிக்காக சி.எம்.ஐ. போறேன், மேலும் கணிதம் மற்றும் சி.எஸ். படிச்சுக்கிட்டு இருக்கேன்.
பிரதமர் – நல்லது. இப்ப அர்ஜுன் காந்திநகர்ல இருக்காருன்னும், கனவ் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவருன்னும் சொன்னாங்க. அர்ஜுன், கனவ், நாங்க இப்ப ஒலிம்பியாட் பத்தித் தான் பேசினோம், ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்க தயாரிப்புக்கள் தொடர்பான விஷயமோ, விசேஷமான அனுபவமோ இருந்தா, அதை சொன்னீங்கன்னா, நேயர்கள் ரொம்ப விரும்புவாங்க.
அர்ஜுன் – வணக்கம் சார், ஜய் ஹிந்த்!! நான் தான் அர்ஜுன் பேசறேன்.
பிரதமர் – ஜய் ஹிந்த் அர்ஜுன்!!
அர்ஜுன் – நான் தில்லியில வசிக்கறேன், எங்கம்மா திருமதி ஆஷா குப்தா தில்லி பல்கலைக்கழகத்தில இயற்பியல் பேராசிரியரா இருக்காங்க, எங்கப்பா திரு. அமித் குப்தா பட்டயக் கணக்காளரா இருக்காரு. நான் என் தேசத்தோட பிரதமரோட பேசிக்கிட்டு இருக்கேங்கறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார். முதன்மையா என் வெற்றிக்கான முழுப் பாராட்டும் எங்கப்பா அம்மாவுக்குத் தான் போய் சேரும். குடும்பத்தில ஒருத்தர் இப்படிப்பட்ட ஒரு போட்டிக்குத் தயார் செய்யறாருங்கற போது, அது அந்த ஒருத்தர் மட்டுமே பங்கெடுக்கற போட்டி கிடையாது, மொத்த குடும்பமுமே இந்தப் போட்டியில பங்கெடுக்குது. முக்கியமா எங்களோட வினாத்தாள்ல 3 கணிதச் சிக்கல்கள் முன்வைக்கப்படுது, அதுக்கு நாலரை மணிநேரத்தில விடை கண்டு பிடிச்சாகணும். அதாவது ஒரு சிக்கலுக்கு விடையை ஒண்ணரை மணி நேரத்தில கண்டுபிடிக்கணும். இதுக்கு நாங்க வீட்டில நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சிக்கல்களோட மணிக்கணக்கா போராட வேண்டியிருக்கும், சில சமயத்தில ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கே கூட ஒரு நாள், ஏன் 3 நாள் கூட ஆயிடும். இதுக்காகவே நாங்க இணையத்தில ப்ராப்ளம்களைத் தேடுவோம். கடந்த ஆண்டு தரப்பட்ட சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்வோம், இப்படியே, மெல்லமெல்ல முயற்சி செய்யும் போது எங்க அனுபவம் அதிகரிக்குது, எங்களுக்கு முக்கியமான தேவையான சிக்கலைத் தீர்க்கும் திறன், அது அதிகரிக்குது. இது எங்களுக்கு கணிதத்தில மட்டுமில்லை, வாழ்க்கையிலயும் ஒவ்வொரு துறையிலயும் உதவிகரமா இருக்கு.
பிரதமர் – நல்லது, ஏதும் விசேஷமான அனுபவம் இருக்கான்னு கனவ் சொல்ல முடியுமா? இந்தத் தயாரிப்புகள் எல்லாத்திலயும் ஏதும் சிறப்பா, நம்ம இளைஞர்களுக்கு சுவாரசியமான ஏதாவது உண்டா?
கனவ் தல்வார் – என் பேரு கனவ் தல்வார், நான் உத்தர பிரதேசத்தின் க்ரேட்டர் நோய்டாவில வசிக்கறேன், 11ஆம் வகுப்பு படிக்கறேன். கணிதம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு கணக்குன்னா உசிரு. எங்கப்பா எனக்கு நிறைய புதிர்களைத் தீர்க்க வைப்பாரு. இது எனக்கு ஆர்வத்தை அதிகரிச்சுது. நான் என் 7ஆம் வகுப்பிலேர்ந்தே ஒலிம்பியாடுக்கான தயாரிப்புகள்ல ஈடுபட ஆரம்பிச்சேன். இதில என் சகோதரியோட பங்களிப்பு ரொம்ப அதிகம். எங்கப்பா அம்மாவும் கூட எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க. இந்த ஒலிம்பியாட் போட்டியை HBCSE நடத்தாறாங்க. இது ஒரு ஐந்து கட்டச் செயல்முறை. கடந்த ஆண்டு எங்க அணியில நான் இருந்தேன், ரொம்ப நெருங்கிட்டேன், ஆனா கிடைக்காம போனது ரொம்ப வருத்தமா இருந்திச்சு. அப்ப எங்கப்பா அம்மா ஒண்ணு சொன்னாங்க, ஒண்ணு நாம ஜெயிக்கறோம், இல்லை கத்துக்கறோம்னு. பயணம் ரொம்ப முக்கியமானதே தவிர, வெற்றிதோல்வி இல்லைன்னாங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, நாம செய்யறதை நாம விரும்பி செய்யணும், அதே போல நாம விரும்பறதை நாம செய்யணும். நாம பயணிக்கறோம்ங்கறது தான் முக்கியமே தவிர, வெற்றி ஒன்று மட்டுமே முக்கியம் என்பதில்லை. நாம ஒரு விஷயத்தை நேசிச்சோம்னா, நமக்கு வெற்றி கண்டிப்பா கிடைக்கும். பயணத்தை ரசிக்கணும்.
பிரதமர் – சரி கனவ், நீங்க கணிதத்திலயும் ஆர்வத்தோட இருக்கீங்க, நீங்க பேசறதைப் பார்த்தா உங்களுக்கு இலக்கியத்திலயும் ஆர்வம் இருக்கா மாதிரி இருக்கே.
கனவ் தல்வார் – ஆமாம் சார்!! என் சின்ன வயசுல நான் பேச்சுப் போட்டி, விவாதங்கள், இதில எல்லாம் நிறைய பங்கெடுப்பேன்.
பிரதமர் – நல்லது, ஆனந்தோ, நீங்க இப்ப குவஹாட்டியில இருக்கீங்க, உங்க நண்பரான ருஷீல் அவரு மும்பையில இருக்காரு. உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் என்ன கேட்க விரும்பறேன்னா, நான் பரீக்ஷா பே சர்ச்சா - தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சில பங்கெடுக்கறேன், இதைத் தவிர வேற நிகழ்ச்சிகள்லயும் மாணவர்களோட உரையாடறேன். நிறைய மாணவர்களுக்கு கணிதம்னு பேரைக் கேட்டாலே உதறல் ஏற்படுதே, ஆனா உங்க ரெண்டு பேருக்கும் கணிதத்தோட எப்படி நட்பு ஏற்பட்டிச்சு?
ருஷீல் மாதுர் – சார், நான் ருஷீல் மாதுர் பேசறேன். சின்ன வயசுல, முத முறையா கூட்டல் கத்துக் குடுக்கறப்ப, கேரி ஃபார்வர்ட் புரிய வைப்பாங்க. ஆனா இந்த கேரி ஃபார்வர்ட் ஏன் செய்யணும்னு சொல்ல மாட்டாங்க. நாம கூட்டு வட்டி பத்தி படிக்கும் போது, இந்தக் கூட்டு வட்டிக்கான ஃபார்முலா எங்கிருந்து வந்திச்சுன்னு நாம யாரும் கேட்க மாட்டோம். என்னைப் பொறுத்த மட்டில கணிதம்ங்கறது சிந்திக்கற, சிக்கல்களைத் தீர்க்கற ஒரு கலையே தான். அதனால நாம கணிதத்தில ஒரு புது வினாவை, அதாவது, இதை நாம ஏன் செய்யறோம்ங்கறதை இணைக்கணும். இப்படி ஏன் ஆகுது? அப்ப, கணிதத்தில அதிக ஆர்வம் ஏற்பட வாய்ப்பிருக்கு. ஏன்னா, எந்த ஒரு விஷயத்தையும் நம்மால புரிஞ்சுக்க முடியலைன்னா, நமக்கு பயம் ஏற்படுறது இயல்பு தானே!! மேலும் எனக்கு என்ன தோணுதுன்னா, நாம எல்லாரும் கணிதம் ஒரு லாஜிக்கான படிப்புன்னு நினைச்சுக்கறோம். ஆனா இதைத் தாண்டி கணிதத்தில நிறைய படைப்புத் திறனும் ரொம்ப அவசியமா தேவைப்படும். ஏன்னா படைப்பாற்றல் இருந்தாத்தான் நம்மால out of the box solutions - வழக்கத்துக்கு மாறான புதுமையான தீர்வுகளைச் சிந்திக்க முடியும், இது ஒலிம்பியாட்ல ரொம்ப பயனுடையதா இருக்கும். ஆகையால தான் கணிதத்தில ஆர்வத்தை அதிகரிக்கறதுல, கணித ஒலிம்பியாடுக்கு ரொம்ப முக்கியமான சம்பந்தம் இருக்கு.
பிரதமர் – ஆனந்தோ, நீங்க ஏதும் சொல்ல விரும்பறீங்களா?
ஆனந்தோ பாதுரி – வணக்கம் பிரதமர் அவர்களே!! நான் குவஹாட்டிலேர்ந்து ஆனந்தோ பாதுரி பேசறேன். நான் இப்பத் தான் 12ஆம் வகுப்பு பாஸ் செஞ்சிருக்கேன். இங்க இருக்கற உள்ளூர் ஒலிம்பியாட்ல நான் 6ஆவது, 7ஆவதுல பங்கெடுத்தேன். அதிலேர்ந்து ஆர்வம் அதிகமாயிருச்சு, இது என்னோட ரெண்டாவது ஐ.எம்.ஓ. ரெண்டு IMOவும் நல்லாவே இருந்திச்சு. ருஷீல் சொல்றதுல எனக்கு முழுச் சம்மதம். மேலும் நான் என்ன சொல்ல விரும்பறேன்னா, யாருக்கு கணிதம்னா பயமோ, அவங்களுக்கு பொறுமை ரொம்ப அவசியம். ஏன்னா நமக்கு கணக்கு எப்படி சொல்லிக் குடுக்கப்படுதுன்னா, ஒரு ஃபார்முலாவை குடுத்து அதை நெட்ரு பண்ண வைப்பாங்க, பிறகு அந்த ஃபார்முலாலேர்ந்து 100 கேள்வியை படிக்க வைப்பாங்க. ஆனா, நீங்க ஃபார்முலாவை புரிஞ்சுக்கறீங்களா இல்லையான்னு யாருக்கும் கவலை இல்லை. ஃபார்முலாவை நெட்ரு பண்ணிட்டுப் போன பிறகு தேர்வுல ஃபார்முலா மறந்து போச்சுன்னா என்ன செய்ய? அதனால தான் சொல்றேன், ஃபார்முலாவை புரிஞ்சுக்குங்க. ருஷீல் சொல்றா மாதிரி, பொறுமையா அதை புரிஞ்சுக்குங்க. ஃபார்முலாவை சரியா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, 100 வினாக்களை தீர்க்க வேண்டியதே இல்லை. ஒண்ணுரெண்டு வினாக்களே போதுமானது, கணிதம் ஒண்ணும் பயப்படற விஷயமே இல்லை.
பிரதமர் – ஆதித்யா, சித்தார்த். நீங்க ஆரம்பத்தில பேசினப்ப சரியா உங்ககூட பேச முடியலை, இப்ப இவங்க எல்லார் சொல்றதையும் கேட்ட பிறகு, உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோணுதா? உங்க அனுபவங்களை சிறப்பான வகையில பகிர விரும்பறீங்களா?
சித்தார்த் – மத்த நாடுகளைச் சேர்ந்தவங்க பலரோட கலந்து பேசியிருக்கேன், நிறைய கலாச்சாரங்கள், நிறைய விஷயம் நல்லா இருந்திச்சு, மத்த மாணவர்களோட தொடர்பு கொண்டு, புரிதலை ஏற்படுத்தறது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் புகழ்மிக்க பல கணிதவியலார்களும் இருந்தாங்க.
பிரதமர் – சரி ஆதித்யா.
ஆதித்யா – ரொம்ப நல்ல அனுபவமா இருந்திச்சு, எங்களை எல்லாம் அவங்க Bath cityல சுத்திக் காமிச்சாங்க, ரொம்ப நல்லநல்ல காட்சிகளைப் பார்த்தோம், பூங்காக்களுக்குக் கூட்டிக்கிட்டு போனாங்க, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கும் கூட்டிக்கிட்டு போனாங்க. ரொம்ப நல்ல அனுபவமா இருந்திச்சு.
பிரதமர் – சரி நண்பர்களே, உங்ககூட பேசறது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு. உங்க எல்லாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த மாதிரியான போட்டிகள்னா அதுக்கு நிறைய கருத்தூன்றிய செயல்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும், மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட சில சமயம் எரிச்சலா இருக்கும். என்னடா இது, இவன் எப்பப்பாரு கூட்டல் கழித்தல்னே காலத்தைக் கடத்தறானேன்னு. ஆனா என் தரப்பிலேர்ந்து உங்க எல்லாருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். நீங்க தேசத்துக்குப் பெருமை சேர்த்திருக்கீங்க, நன்றி நண்பர்களே!!
மாணவர்கள் – நன்றி சார், தேங்க்யூ.
பிரதமர் – தேங்க்யூ,
மாணவர்கள் – தேங்க்யூ சார், ஜய் ஹிந்த்!!
பிரதமர் – ஜய் ஹிந்த்! ஜய் ஹிந்த்!!
மாணவர்களாகிய உங்களனைவரோடும் உரையாடியது மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது. மனதின் குரலில் இணைந்தமைக்கு நான் உங்களனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணிதத்தின் இந்த இளைய ஜாம்பவான்கள் கூறுவதைக் கேட்ட பிறகு, கணிதத்தை ரசிக்கவும் அனுபவிக்கவும் ஒரு உத்வேகம் மற்ற இளைஞர்களுக்கு உண்டாகும் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது நான் கூறவிருக்கும் விஷயத்தைக் கேட்டு பாரதவாசிகள் அனைவரின் தலைகளும், பெருமிதம் பொங்க நிமிர்ந்து நோக்கும். ஆனால் அதற்கு முன்பாக அனைவரிடமும் ஒரு வினாவை முன்வைக்க நான் விரும்புகிறேன். நீங்கள் சராயிதேவு மைதாம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? கேள்விப்பட்டதில்லை என்றால், இனி நீங்கள் இந்தப் பெயரை மீண்டும்மீண்டும் கேட்பீர்கள், பெரும் உற்சாகத்தோடு மற்றவர்களுக்கும் இதைப் பற்றிச் சொல்வீர்கள். அசாமின் சராயிதேவு மைதாம், யுனெஸ்கோ உலக மரபுச் சின்ன இடங்கள் வரிசையில் இடம் பெற இருக்கிறது. இந்தப் பட்டியலில் பாரதத்தின் இது 43ஆவது இடமாகும். ஆனால் வடகிழக்குப் பகுதியைப் பொறுத்த மட்டில், இதுவே முதல் இடமாகும்.
நண்பர்களே, இந்த சராயிதேவு மைதாம் என்றால் என்ன, இதிலே அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்ற வினா உங்கள் உள்ளத்தில் எழலாம். சராயிதேவு என்பதன் பொருள், மலைகளில் இருக்கும் பிரகாசமான நகரம் என்பதே. இது அஹோம் அரசப் பரம்பரையின் முதல் தலைநகரமாக இருந்தது. அஹோம் ராஜவம்சத்தவர்கள், தங்கள் முன்னோர்களின் பூதவுடல்களையும், அவர்களுடைய விலைமதிப்புமிக்க பொருட்களையும் பாரம்பரியமான முறையிலே மைதாமிலே வைத்தார்கள். மைதாம் என்பது சிறப்பான பெரிய மேடான ஒரு அமைப்பு, இதன் மேற்பரப்பில் மண்ணால் மூடி வைக்கப்பட்டிருக்கும், அடிப்பகுதியில் ஒன்று அல்லது மேற்பட்ட அறைகள் இருக்கும். இந்த மைதாமானது, அஹோம் சாம்ராஜ்ஜியத்தின் காலஞ்சென்ற அரசர்கள் மற்றும் பிரபலஸ்தர்கள் மத்தியில் சிரத்தையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தங்களுடைய முன்னோர்களிடத்தில் மரியாதையை வெளிப்படுத்தும் இந்த வழிமுறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த இடத்திலே சமூக அளவிலான வழிபாடுகளும் நடந்தப்படுகின்றன.
நண்பர்களே, அஹோம் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய வேறு பல தகவல்கள் உங்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கும். 13ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த சாம்ராஜ்ஜியம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தது. இத்தனை நீண்ட காலகட்டம் வரை இந்த சாம்ராஜ்ஜியம் நீடித்தது என்பது மிகப்பெரிய விஷயம். அஹோம் சாம்ராஜ்ஜியத்தின் சித்தாந்தமும், நம்பிக்கைகளும் மிகவும் பலமானவையாக இருந்ததால் ஒருவேளை இந்த ராஜவம்ஸம் இத்தனை ஆண்டுக்காலமாக நீடித்திருக்க முடிந்திருக்கலாம். இதே ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதியன்று, அசாத்தியமான சாகஸம், வீரம் ஆகியவற்றின் சின்னமான மகத்தான அஹோம் வீரரான லசித் போர்ஃபுகனுடைய மிகப்பெரிய உருவச்சிலையைத் திறந்து வைக்கும் பெரும்பேறானது எனக்குக் கிடைத்தது என் நினைவில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது, அஹோம் சமூகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் போது எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் உண்டானது. லசித் மைதாமிலே அஹோம் சமூகத்தின் முன்னோர்களுக்கு மரியாதை அளிக்கும் பாக்கியம் கிடைப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். இப்போது சராயிதேவு மைதாமினை உலக மரபுச் சின்ன இடங்களில் ஒன்றாக ஆக்குவதன் பொருள் என்னவென்றால், இங்கே மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். நீங்களும் வருங்காலத்தில் உங்களுடைய பயணத் திட்டங்களில் இந்த இடத்தையும் கண்டிப்பாக இணைத்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களே, தன்னுடைய கலாச்சாரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் தேசத்தால் மட்டுமே முன்னேற முடியும். பாரதத்திலும் கூட இதுபோன்ற பல முயற்சிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் ப்ராஜக்ட் பரி. பரி மண்ணை சுவர்க்கமாக ஆக்கக் கூடியது. பரி அதாவது Public Art of India. இந்தத் திட்டமான பரி, பொதுக்கலையை வெகுஜனங்களுக்குப் பிரியமானதாக ஆக்க, வளர்ந்துவரும் கலைஞர்களை ஒரே மேடையில் நிறுத்துவதற்கான ஒரு பெரிய ஊடகமாக ஆகி வருகிறது. நீங்களே கூட கவனித்திருக்கலாம், சாலையோரங்களில், சுவர்களின் மீது, சுரங்கப் பாதைகளில் மிக அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள், இந்தக் கலைப்படைப்புகளை பரியோடு தொடர்புடைய இந்தக் கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள். இதன் காரணமாக நமது பொதுவிடங்களின் அழகு அதிகரிக்கிறது, அதே வேளையில் நமது கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதிலும் உதவிகரமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தில்லியின் பாரத் மண்டபத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இங்கே தேசமெங்கிலுமிருந்தும் அற்புதமான கலைப்படைப்புகளை நீங்கள் பார்க்கலாம். தில்லியின் சில சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றிலும் கூட நீங்கள் அழகான பொதுக்கலைப்படைப்புக்களைப் பார்க்கலாம். பொதுமக்கள் கலை தொடர்பாக மேலும் பணியாற்ற, நான் கலை மற்றும் கலாச்சார பிரியர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இவை நம்மிடத்திலே நமது வேர்களின் மீது சுகமான பெருமைஉணர்வை ஏற்படுத்தும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது வண்ணங்களைப் பற்றிப் பேசலாம். இவை எப்படிப்பட்ட வண்ணங்கள்? ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தின் 250க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் வளங்களென்ற வண்ணங்களை நிரப்பியவை. கைவினைப் பொருள் தயாரித்தலோடு தொடர்புடைய பெண்கள் முதலில் சின்னச்சின்ன கடைகள் மற்றும் சிறிய வேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனால் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் அவசியம் இருக்கும். ஆகையால் இவர்கள் உன்னதி சுயவுதவிக் குழுவோடு தங்களை இணைத்துக் கொள்ள முடிவெடுத்தார்கள், இணைத்துக் கொண்டு, ப்ளாக் ப்ரிண்டிங் மற்றும் சாயமிடலில் பயிற்சி பெற்றார்கள். துணிகளில் வண்ணங்களின் ஜாலம் செய்யும் இந்தப் பெண்கள் இன்று இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் தயாரித்த படுக்கை விரிப்பு, புடவைகள், துப்பட்டாக்கள் ஆகியவற்றுக்குச் சந்தையில் பெரும் தேவை இருக்கிறது.
நண்பர்களே, ரோஹ்தக்கின் இந்தப் பெண்களைப் போலவே பல்வேறு பாகங்களில் கைவினைஞர்கள், நெசவினை வெகுஜனங்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதில் இணைந்திருக்கிறார்கள். அது ஒடிஷாவின் சம்பல்புரி புடவைகளாகட்டும், மத்திய பிரதேசத்தின் மாஹேஷ்வரி புடவைகளாகட்டும், மஹாராஷ்டிரத்தின் பைட்டாணீ அல்லது விதர்ப்பத்தின் ஹேண்ட் ப்ளாக் ப்ரிண்டுகளாகட்டும், ஹிமாச்சலத்தின் பூட்டிகோ கம்பளிப் போர்வை, கம்பளி ஆடைகள் அல்லது ஜம்மு கஷ்மீரத்தின் கனி மேற்போர்வை ஆகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலும் நெசவு புரியும் வேலை பரந்திருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போதெல்லாம், கைத்தறிப் பொருட்கள் மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருப்பதைக் காணும் போது, இது மிகவும் பலமானதாக, ஆழமானதாக இருக்கிறது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் கைத்தறி உற்பத்தி மற்றும் நீடித்த பாணிக்கு ஊக்கமளித்து வருகின்றன. கோஷா AI, ஹேண்ட்லூம் இண்டியா, டி-ஜன்க், நோவாடேக்ஸ், ப்ரும்மபுத்ரா ஃபேபிள்ஸ் போன்ற பல ஸ்டார்ட் அப்புகளும் கூட கைத்தறிப் பொருட்களை வெகுஜனப்பிரியமானவையாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கின்றன. பலர் தங்களிடங்களில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்களை மேலும் பிரபலமானவையாக ஆக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்ற தகவல் பிடித்த விஷயமாக இருக்கிறது. நீங்களும் கூட ஹேஷ்டேக் மை ப்ராடக்ட் மை ப்ரைட் என்ற பெயரில் சமூக ஊடகத்தில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்கள் பற்றி தரவேற்றம் செய்யுங்கள். உங்களுடைய இந்த முயற்சி, பலரின் வாழ்க்கையையே கூட மாற்ற வல்லது.
நண்பர்களே, கைத்தறியோடு கூடவே நான் காதி பற்றியும் பேச விரும்புகிறேன். உங்களில் பலர் கதராடைகளை முன்பு பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போதெல்லாம் மிகப் பெருமையோடு கதராடைகளை உடுத்தி வருவீர்கள். காதி கிராமோத்யோக் பவனத்தின் வியாபாரம் முதன்முறையாக ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்!! ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய்!! காதிப்பொருட்களின் விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா? 400 சதவீதம். காதிப் பொருட்களின், கைத்தறி ஆடைகளின், இந்த வளர்ந்துவரும் விற்பனை, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பின் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தத் தொழிலோடு மிக அதிக அளவில் பெண்கள் இணைந்திருக்கிறார்கள் எனும் போது, மிகப்பெரிய ஆதாயமும் கூட அவர்களுக்குத் தானே ஏற்படுகிறது!! நான் மீண்டும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்களிடத்திலே வகைவகையான ஆடைகள் இருக்கலாம், நீங்கள் இதுவரை கதராடைகளை வாங்காமலும் கூட இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டு தொடங்குங்கள். ஆகஸ்ட் மாதம் வந்தே விட்டது, இது நாடு சுதந்திரம் அடைந்த மாதம், புரட்சிக்கான மாதம். கதராடைகளை வாங்க, இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் வேறு என்ன இருக்க முடியும்?
என் மனம் நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நான் அடிக்கடி போதைப் பொருட்கள் சவாலைப் பற்றிப் பேசியிருக்கிறேன். தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்களோ என்ற கவலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது. ஆனால் அப்படி அடிமையாகிவிட்டவர்களின் உதவிக்காக, அரசாங்கம் ஒரு சிறப்பான மையத்தைத் திறந்திருக்கிறது, இதன் பெயர் மானஸ். போதைப்பொருட்களுக்கு எதிரான போரிலே இது மிகப்பெரிய முன்னெடுப்பு. சில நாட்கள் முன்பாகத் தான் மானஸின் உதவி எண்ணும், இணைய முகப்பும் துவக்கப்பட்டன. அரசாங்கம் ஒரு இலவச உதவி எண்ணான 1933 என்பதை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதோடு தொடர்பு கொண்டால் கண்டிப்பாகத் தேவையான ஆலோசனைகள் அளிக்கப்படும் அல்லது மறுவாழ்வோடு தொடர்புடைய தகவல்களைப் பெறலாம். யாரிடமாவது போதைப் பொருட்களோடு தொடர்புடைய வேறு தகவல்களும் இருந்தால், அவர்கள் இதே எண்ணோடு தொடர்பு கொண்டு Narcotics Control Bureau – போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடமும் தெரிவிக்கலாம். மானஸ் அமைப்பிடம் தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இரகசியமானவையாக பாதுகாக்கப்படும். பாரதத்தைப் போதைப்பொருட்கள் இல்லாத நாடாக ஆக்குவதில் இணைந்திருக்கும் அனைவரிடத்திலும், அனைத்துக் குடும்பங்களிடத்தாரிடமும், அனைத்து அமைப்புக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், மானஸ் உதவி எண்ணை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
எனதருமை நாட்டுமக்களே, நாளை உலகெங்கும் புலிகள் தினம் கொண்டாடப்படும். பாரதத்திலே புலிகள் என்பவை நமது கலாச்சாரத்தோடு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. நாமனைவரும் புலிகளோடு தொடர்புடைய கதைகள்-சம்பவங்களைக் கேட்டுக்கேட்டுத் தான் பெரியவர்களாகி இருக்கிறோம். எப்படி புலிகளுக்கு இசைவாக வாழ வேண்டும் என்பது, காடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் கிராமவாசிகளுக்கு நன்கு தெரியும். மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே எப்போதும் மோதலுக்கான சந்தர்ப்பமே வராத பல கிராமங்கள் நம்முடைய தேசத்திலே உண்டு. ஆனால், இப்படிப்பட்ட மோதல் நிலை எங்கே வருகிறதோ, அங்கேயும் கூட புலிகளின் பாதுகாப்பிற்காக இதுவரை இல்லாத அளவுக்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் பங்களிப்பின் மூலம் செய்யப்படும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் குல்ஹாடி பந்த் பஞ்சாயத்து – கோடாரிக்குத் தடை விதித்த பஞ்சாயத்து. ராஜஸ்தானின் ரண்தம்போரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த குல்ஹாடி பந்த் பஞ்சாயத்து இயக்கம் மிகவும் சுவாரசியமானது. காடுகளுக்குக் கோடாரிகளைக் கொண்டு செல்ல மாட்டோம், மரங்களை வெட்ட மாட்டோம் என்று உள்ளூர் சமுதாயங்கள், இந்த விஷயம் தொடர்பாக தாமே சபதமேற்றிருக்கிறார்கள். இந்த ஒரு முடிவு காரணமாக இங்கே இருக்கும் வனங்கள், மீண்டுமொரு முறை பசுமையானவையாக ஆகி வருகிறது, புலிகளுக்கும் சிறப்பான ஒரு சூழல் தயாராகி வருகிறது.
நண்பர்களே, மஹாராஷ்டிரத்தின் தடோபா-அந்தரி புலிகள் காப்பிடமானது, புலிகளின் முக்கியமான இருப்பிடங்களில் ஒன்று. இங்கிருக்கும் உள்ளூர் சமூகங்கள், குறிப்பாக கோண்ட் மற்றும் மானா பழங்குடியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், சூழல் சுற்றுலாவை மிகுந்த வேகத்தோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள். இங்கே புலிகள் தழைக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் காடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தின் நல்லமலையில் வசிக்கும் செஞ்சு பழங்குடிகளின் முயற்சியும் உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும். இவர்கள் Tiger Trackers என்ற வகையிலே, காடுகளின் உயிரினங்களின் இயக்கங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்திருக்கிறார்கள். இது தவிர, இவர்கள் அந்தப் பகுதியில் சட்டவிரோதமான செயல்பாடுகளின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இதைப் போலவே உத்தரப் பிரதேசத்திலே பீலிபீத்தில் நடைபெறும் புலிகளின் நேசன் நிகழ்ச்சியும் பேசுபொருளாகி இருக்கிறது. இதிலே உள்ளூர்வாசிகளுக்குப் புலிகளின் நேசன் என்ற வகையிலே பணிக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் புலிகளின் நேசர்கள், புலிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இதைப் போன்று பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே நான் சில முயற்சிகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கிறேன் என்றாலும், மக்களின் பங்கெடுப்பு புலிகளின் பாதுகாப்புக்கு உதவிகரமாக இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே, பாரதத்தில் புலிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிறது. உலகெங்கிலும் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீத எண்ணிக்கை நமது தேசத்திலே இருக்கிறது என்பது பெருமையும், சந்தோஷமும் அளிக்கும் விஷயம். சிந்தித்துப் பாருங்கள்!! 70 சதவீதம் புலிகள்!! இதனால் தான் நமது தேசத்திலே பல்வேறு பாகங்களில் பல புலிகள் சரணாலயங்கள் இருக்கின்றன.
நண்பர்களே, புலிகளின் அதிகரிப்போடு கூடவே நமது தேசத்தின் காட்டுப்பகுதிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதிலும் கூட சமூகங்களின் முயற்சிகள் காரணமாக பெரும் வெற்றி கிட்டி வருகிறது. கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில், ஒரு மரம் அன்னையில் பெயரில் நிகழ்ச்சி குறித்து நாம் பேசியிருந்தோம், இல்லையா? தேசத்தின் பல்வேறு பாகங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இந்த இயக்கத்தோடு தொடர்ந்து இணைந்து வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில நாட்கள் முன்பாக, தூய்மைக்குப் பெயர் போன இந்தோரிலே, ஒரு அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கே, ஒரு மரம் அன்னையின் பெயரில் நிகழ்ச்சியின்படி, ஒரே நாளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன. தங்கள் அன்னையின் பெயரில் மரம் நடும் இந்த இயக்கத்தோடு நீங்களும் கண்டிப்பாக இணையுங்கள், சுயபுகைப்படம் ஒன்றை எடுத்து, அதை சமூக ஊடகத்தில் தரவேற்றமும் செய்யுங்கள். இந்த இயக்கத்தோடு இணையும் போது, உங்களுடைய தாய், பூமித்தாய், இருவருக்கும் விசேஷமான ஒன்றை நீங்கள் செய்ததைப் போல உணர்வீர்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தொலைவில் இல்லை. இப்போது ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியோடு இணைந்த மேலும் ஒரு இயக்கம் இணைகிறது. வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே நாடெங்கிலும் இந்த வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி இயக்கமானது பெரும் உற்சாகத்தோடு நடந்தது. ஏழையோ, பணக்காரரோ, சிறிய வீடோ, பகட்டான மாளிகையோ, அனைவரும் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டு, பெருமித உணர்வை அனுபவித்தார்கள். மூவண்ணக் கொடியோடு கூட சுயபுகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை சமூக ஊடகத்தில் தரவேற்றம் செய்வதிலே பேரார்வம் காணப்பட்டது. ஒரு குடியிருப்புப் பகுதி அல்லது சுற்றுவட்டாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி பறக்கும் போது, சிறிது நேரத்திலேயே விடுபட்ட மற்ற வீடுகளிலும் காணத் தொடங்கி விடும். அதாவது வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கமானது மூவண்ணக் கொடியின் பெருமையைக் கொண்டாடும் ஒரு தனித்தன்மை வாய்ந்த விழாவாக மாறிவிட்டது. இது தொடர்பாக இப்போது பலவகையான நூதனங்களும் கூட நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வரவர, வீடுகளிலே, அலுவலகங்களிலே, வாகனங்களிலே, மூவண்ணக் கொடியைப் பதிக்க, பலவகையான பொருட்கள் வரத் தொடங்கிவிட்டன. சிலரோ, மூவண்ணத்தைத் தங்கள் நண்பர்கள், அண்டை வீட்டார்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். மூவண்ணக் கொடி தொடர்பாக உற்சாகம், கொண்டாட்ட உணர்வு ஆகியன நம்மை ஒருவரோடு ஒருவர் இணைக்கிறது.
நண்பர்களே, முன்பைப் போலவே இந்த ஆண்டும் கூட நீங்கள் harghartiranga.com இலே, மூவண்ணக் கொடியோடு கூடவே உங்களின் சுயபுகைப்படத்தைக் கண்டிப்பாக தரவேற்றம் செய்யுங்கள், இது தொடர்பாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாக, நீங்கள் ஏராளமான கடிதங்களை, தகவல்களை அனுப்புவீர்கள். இந்த ஆண்டும் கூட, நீங்கள் உங்கள் ஆலோசனைகளை எனக்குத் தெரிவியுங்கள். நீங்கள் மைகவ் அல்லது நமோ செயலியிலும் கூட உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம். நான் அதிகபட்ச ஆலோசனைகளை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உரையிலே தெரிவிக்க முயற்சி செய்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இதுகாறும் இணைந்திருந்தது மிகவும் உவப்பாக இருந்தது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், தேசத்தின் புதிய சாதனைகளோடு, மக்களின் பங்கெடுப்பின் புதிய முயற்சிகளோடு, நீங்கள் மனதின் குரலுக்காக உங்கள் ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். வரவிருக்கும் காலத்தில் பல திருவிழாக்கள் வரவிருக்கின்றன. அனைத்துப் பண்டிகைகளுக்குமான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து பண்டிகைகளை ஆனந்தமாகக் கொண்டாடுங்கள். தேசத்திற்காக புதியதாக ஒன்றைச் செய்யத் தேவையான ஆற்றலைத் தொடர்ந்து உங்களிடம் வைத்திருங்கள். பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய நாளுக்காகத் தான் நாம் ஃபிப்ரவரி மாதம் முதல் காத்துக் கிடந்தோம். நான் மனதின் குரல் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன். ஒரு மிகவும் இனிமையான பயன்பாடு உண்டு – இதி விதா புனர்மிலனாய என்பார்கள். இதன் பொருளும் கூட மிகவும் இனிமையானது, நான் விடை பெறுகிறேன், மீண்டும் சந்திப்போம் என்பதாகும் அது. இந்த உணர்வோடு தான் நான், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன் என்று ஃபிப்ரவரி மாதம் உங்களிடம் கூறியிருந்தேன், இன்று மனதின் குரலோடு உங்களிடையே மீண்டும் வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் நலமாய் இருப்பீர்கள், உங்கள் வீடுகளில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இப்போது பருவமழைக்காலமும் வந்து விட்டது, பருவமழைக்காலம் வரும் போது, மனமும் குதூகலத்தில் துள்ளுகிறது. இன்று மீண்டும் ஒருமுறை நாம் மனதின் குரலில், தங்களுடைய செயல்பாடுகளால் தேசத்தில் மாற்றமேற்படுத்திய நாட்டுமக்களைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். மேலும் நாம் நமது வளமான கலாச்சாரம், கௌரவமான வரலாறு, வளர்ச்சியை நோக்கிய பாரதத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.
நண்பர்களே, ஃபிப்ரவரி தொடங்கி இப்போது வரை, எப்போதெல்லாம் மாதத்தின் கடைசி ஞாயிறு வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களுடன் உரையாட முடியவில்லையே என்ற உணர்வு என்னை அழுத்தியது. ஆனால் கடந்த மாதங்களில் நீங்கள் எல்லாம் எனக்கு இலட்சக்கணக்கான செய்திகளை அனுப்பியிருக்கிறீர்கள் என்பதைக் காணும் போது, என் மனதிற்கு மிகவும் உவப்பாக இருக்கிறது. மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு என்னமோ தடைப்பட்டிருக்கலாம் ஆனால், மனதின் குரலில் ஏற்படுத்திய உணர்வினால், தேசத்தில், சமூகத்தில், ஒவ்வொரு நாளும் நல்ல பணிகள், சுயநலமற்ற உணர்வோடு புரியப்படும் பணிகள், சமூகத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தேர்தல் காலத்துச் செய்திகளுக்கு இடையே கண்டிப்பாக மனதைத் தொடக்கூடிய செயல்கள்-செய்திகள் மீது உங்கள் கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாளைத் தான் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், ஹூல் தினம் என்ற வகையிலே கொண்டாடுகிறார்கள். இந்த நாள், வீரர்களான சித்தோ-கான்ஹூவின் அசாத்தியமான சாகசத்தோடு தொடர்புடையது. இவர்கள் அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகளை வலிமையாக எதிர்த்தார்கள். வீரர்கள் சித்தோ-கான்ஹூ, ஆயிரக்கணக்கான சந்தாலி சகாக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை மேற்கொண்டார்கள், இது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? இது 1855ஆம் ஆண்டு நடந்தது, அதாவது 1857 பாரதத்தின் முதல் சுதந்திரப் போருக்கு ஈராண்டுகள் முன்னமேயே நடந்தது. அப்போது ஜார்க்கண்டின் சந்தால் பர்கனாவிலே, நம்முடைய பழங்குடி சகோதர சகோதரிகள், அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவக்கினார்கள். நம்முடைய சந்தாலி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மீது ஆங்கிலேயர்கள் பலவகையான கொடுமைகளைப் புரிந்தார்கள், அவர்கள் மீது பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் அற்புதமான வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களான சித்தோவும் கான்ஹூவும் பலிதானிகளாகினார்கள். ஜார்க்கண்டின் பூமியின் இந்த அமரகாதை படைத்த சத்புத்திரர்களின் பலிதானம், இன்றும் கூட, நாட்டுமக்களுக்கு உத்வேகமளித்து வருகின்றது. இவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பாடலை, சந்தாலி மொழியிலே கேட்போம் வாருங்கள்.
Audio Clip
எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும். அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள். ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பைச் சொரிகிறாள். நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது. நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்? இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில். நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன். நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன். அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள். அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் ஏழைகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும் இல்லத்தரசிகளாகட்டும். இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது. அவர்கள் தங்களின் படங்களை #Plant4Mother மற்றும் #एक_पेड़_मां_के_नाम என்பதில் தரவேற்றுவதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள்.
நண்பர்களே, இந்த இயக்கத்தினால் மேலும் ஒரு ஆதாயம் உண்டு. பூமித்தாயும் நமது தாய்க்கு நிகராக நம்மை கவனித்துக் கொள்கிறாள். பூமித்தாய் தான் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம், ஆகையால் நாம் பூமித்தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகிறது. அன்னையின் பெயரில் மரம் நடும் இயக்கத்தால் நமது அன்னை கௌரவப்படுத்தப்படுகிறாள் என்பதோடு, பூமித்தாயும் காக்கப்படுகிறாள். கடந்த பத்தாண்டுகளாக, அனைவரின் முயற்சிகளாலும், பாரதத்தில் வரலாறுகாணாத வனப்பகுதி விரிவாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அமுதப் பெருவிழாக்காலத்தில், நாடெங்கும் 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாம் இதைப் போலவே நமது அன்னையரின் பெயரில் மரம் நடும் இயக்கத்திற்கு மேலும் விரைவு கூட்ட வேண்டும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் பருவமழையானது வேகமாக தனது வண்ணங்களைப் பரப்பி வருகிறது. மேலும் இந்த மழைக்காலத்தில், அனைவரின் வீடுகளிலும் தேடப்படும் ஒரு பொருள் என்றால் அது குடை. மனதின் குரலில் இன்று ஒரு விசேஷமான குடைகளைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர இருக்கிறேன். இந்தக் குடை நமது கேரளத்திலே தயார் செய்யப்படுகிறது. பார்க்கப்போனால், கேரளத்தின் கலாச்சாரத்திலே குடைகளுக்கென ஒரு விசேஷ மகத்துவமுண்டு. குடைகள் என்பவை அங்கே பல பாரம்பரியங்கள் மற்றும் விதிகள்-பழக்கங்களில் முக்கியமான பங்காற்றுகின்றன. ஆனால் நான் எந்தக் குடை பற்றிப் பேசுகிறேன் என்றால், அது கார்த்தும்பிக் குடை, இவை கேரளத்தின் அட்டப்பாடியிலே தயாரிக்கப்படுகின்றன. இந்த வண்ணமயமான குடைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இவற்றின் விசேஷம் என்னவென்றால், இவை கேரளத்தின் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளால் தயாரிக்கப்படுகிறது என்பது தான். இன்று நாடெங்கிலும் இந்தக் குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை இணையம்வழியும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் குடைகளை வட்டாலக்கி கூட்டுறவு வேளாண் அமைப்பின் மேற்பார்வையில் தயாரிக்கிறார்கள். இந்த அமைப்பின் தலைமை, நமது பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் தலைமையில் அட்டப்பாடியின் பழங்குடியினச் சமூகமானது, தொழில்முனைவின் அற்புதமான எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறது. இந்த அமைப்பு, மூங்கில் கைவினைப்பொருட்களுக்கான ஒரு அலகையும் நிறுவியிருக்கிறது. இப்போது இவர்கள் ஒரு சில்லறை விற்பனை அங்காடியையும், ஒரு பாரம்பரியமான கஃபேயையும் திறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது தங்களுடைய குடைகளையும், இன்னும் பிற பொருட்களையும் விற்பனை செய்வது மட்டுமல்ல, தங்களுடைய பாரம்பரியம், தங்களுடைய கலாச்சாரம் ஆகியவற்றையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது என்பதே உள்ளார்ந்த விஷயம். இன்று கார்த்தும்பி குடைகள், கேரளத்தின் சின்ன கிராமம் தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நமது கொள்கைக்கு இதை விடச் சிறப்பான வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?
என் மனம் நிறை நாட்டுமக்களே, அடுத்த மாதம் இந்த நேரம் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடங்கப்பட்டிருக்கும். நீங்கள் அனைவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நம்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கெடுக்கவிருக்கும் இந்தியக் குழுவின் வீர்களுக்கு நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கின் நினைவுகள் நம்மனைவரின் நினைவுகளிலும் இன்னமும் கூட பசுமையாக இருக்கின்றது. டோக்கியோவில் நமது வீரர்களின் வெளிப்பாடு, பாரதீயர்கள் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகிலிருந்தே நமது தடகள வீரர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தங்களைத் தயார் செய்வதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களையும் கணக்கெடுத்தால், இவர்கள் அனைவரும் சுமார் 900 சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். இது கணிசமான எண்ணிக்கை.
நண்பர்களே, பாரீஸ் ஒலிம்பிக்கில் சில விஷயங்களை நீங்கள் முதன்முறையாகக் காண்பீர்கள். துப்பாக்கிச் சுடும் போட்டியில் நமது விளையாட்டு வீரர்களின் திறமை வெளிவரத் தொடங்கியிருக்கிறது. டேபிள் டென்னிஸில் நமது ஆடவர் மற்றும் பெண்களின் அணிகள் தகுதி பெற்றன. இந்திய ஷாட்கன் அணியில் நமது ஷூட்டர் பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த முறை மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றத்தில் நமது அணியின் வீரர்கள், நாம் முன்பு போட்டியிடாத பிரிவுகளிலும் போட்டிபோட இருக்கிறார்கள். இந்த முறை விளையாட்டுக்களில் ஒரு அலாதியான சிலிர்ப்பை நம்மால் உணர முடியும் என்பதை நீங்களே அனுமானித்துக் கொள்ளலாம். சில மாதங்கள் முன்பாக, உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் நமது மிகச் சிறப்பான செயல்பாடு என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல சதுரங்கம் மற்றும் பேட்மிண்டனிலும் கூட நமது விளையாட்டு வீரர்களும் வெற்றிக் கொடி நாட்டியிருந்தார்கள். நம்முடைய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் கூட மிகச் சிறப்பான செயல்பாட்டைப் புரிவார்கள் என்று நாடு முழுவதும் எதிர்பார்க்கிறது. இந்தப் போட்டிகளில் பதக்கங்களையும் வெல்வார்கள், நாட்டுமக்களின் இதயங்களையும் கொள்ளை கொள்வார்கள். அடுத்து வரவிருக்கும் நாட்களில், பாரதிய அணியைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவிருக்கிறது. நான் உங்களனைவரின் சார்ப்பாகவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன். அப்புறம் ஆம்..... இந்த முறை நம்முடைய #Cheer4Bharat ஆகும். இந்த ஹேஷ்டேக் வாயிலாக நாம் நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவோம். அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து அதிகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வேகத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.... உங்களுடைய இந்த வேகம்...... பாரதத்தின் மாயாஜாலம், உலகிற்கு நம் வீரர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்த பேருதவியாக இருக்கும்.
என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்களனைவருக்கும் ஒரு குரல் பதிவை இசைக்க விரும்புகிறேன்.
Audio Clip
இந்த வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு, நீங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனீர்கள் இல்லையா!! சரி, இதன் பின்னணியில் இருக்கும் விஷயம் முழுவதையும் நான் உங்களிடம் கூறுகிறேன் வாருங்கள்!! உள்ளபடியே இது குவைத் வானொலியின் ஒரு ஒலிபரப்புப் பகுதி. நாமோ குவைத் பற்றிப் பேசுகிறோம், ஆனால் ஹிந்தி எங்கிருந்து வந்தது என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்? ஆனால் குவைத் அரசாங்கம் தனது தேசிய வானொலியில் ஒரு விசேஷமான நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது. அதுவும் ஹிந்தி மொழியில். குவைத் வானொலியில், ஞாயிறுதோறும் இது அரை மணிக்கு ஒலிபரப்பாகும். இதிலே பாரதக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் இடம் பெறும். நமது திரைப்படங்கள் மற்றும் கலையுலகோடு தொடர்புடைய விவாதங்கள் ஆகியன அங்கே இருக்கும் பாரதநாட்டவர்களுக்கு இடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குவைத் நாட்டவர்களும் கூட இதிலே அதிக நாட்டம் காட்டுகிறார்களாம். இந்த அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, இன்று உலகமெங்கிலும் நமது கலாச்சாரம் எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதைக் காணும் போது, எந்த ஒரு இந்தியர் தான் உவப்பெய்த மாட்டார்!! இப்போது துர்க்மெனிஸ்தானிலே இந்த ஆண்டு மே மாதம், அவர்களுடைய தேசியக்கவியின் 300ஆவது நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தின் போது, துர்க்மெனிஸ்தானின் குடியரசுத் தலைவர், உலகின் 24 புகழ்மிக்க கவிஞர்களுடைய உருவச்சிலைகளைத் திறந்து வைத்தார். இவர்களில் ஒரு உருவச்சிலை, குருதேவ் ரவீந்திரநாத் டாகோர் அவர்களுடையதாகும். இது குருதேவருக்கான கௌரவம், பாரதத்துக்கான கௌரவம். இதைப் போலவே ஜூன் மாதம், இரண்டு கரிபியன் தேசங்களான சூரினாம் மற்றும் செயிண்ட் வின்செண்ட் அண்ட் தி க்ரெனாடீன்ஸ் ஆகியன, தங்களுடைய இந்திய மரபினை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடின. சூரினாமிலே இந்திய வம்சாவழியினர் ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதியன்றும், இண்டியன் அரைவல் டே அதாவது இந்தியர்கள் வந்து சேர்ந்த நாள் மற்றும் அயலக இந்தியர்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இங்கே ஹிந்தி மொழியோடு சேர்ந்து, போஜ்புரி மொழியையும் நன்கு பேசுகிறார்கள். செயிண்ட் வின்செண்ட் அண்ட் தி க்ரெனாடீன்ஸில் வசிக்கும் நமது பாரதீய வம்சாவழியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6000. அவர்கள் அனைவருக்கும் தங்களுடைய மரபு பற்றி மிகுந்த பெருமிதம் இருக்கிறது. ஜூன் மாதம் 1ஆம் தேதியன்று இந்தியர்கள் வந்து சேர்ந்த தினத்தை அவர்கள் கொண்டாடிய விதத்தைப் பார்த்தாலே போதும், அவர்களுடைய இந்தியத்தன்மை மீதான பெருமித உணர்வை நம்மால் உணர முடியும். உலகெங்கும் பாரதநாட்டு மரபு மற்றும் கலாச்சாரத்தின் இத்தகைய பரவலைப் பார்க்கும் போது, அனைத்து இந்தியருக்குமே பெருமை மேலோங்குகிறது.
நண்பர்களே, இந்த மாதம் உலகெங்கிலும் 10ஆவது யோகக்கலை தினம் மிகுந்த உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் கொண்டாடப்பட்டது. நானுமே கூட ஜம்மு கஷ்மீரத்தின் ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன். கஷ்மீரத்தின் இளைஞர்களோடு கூடவே இளம் சிறார்களும் சிறுமிகளும் கூட யோகக்கலை தினத்தில் பங்கெடுத்துக் கொண்டு யோகக்கலை பயின்றார்கள். உலகெங்கிலும் யோகக்கலை தினம் பல அருமையான சாதனைகளைப் படைத்திருக்கிறது. சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு பெண்மணியான அல் ஹனௌஃப் ஸாத் அவர்கள், பொதுவான யோகக்கலை நெறிமுறையை முன்னின்று நடத்தினார். ஒரு பிரதானமான யோகக்கலைப் பயிற்சியை, சவுதி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் வழிநடத்துவது என்பது இதுவே முதன் முறையாகும். எகிப்திலும் இந்த முறை யோகக்கலை தினத்தன்று ஒரு புகைப்படப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீலநதிக்கரையோரம், செங்கடலின் கடற்கரைப் பகுதிகளில், பிரமிடுகளுக்கு முன்பாக யோகக்கலை பயிலும் இலட்சக்கணக்கானோரின் படங்கள் மிகவும் பிரபலமாகின, பலராலும் விரும்பப்பட்டன. பளிங்காலான புத்தர் சிலைக்குப் பெயர் போன மியான்மாரின் மாராவிஜயா பகோடா வளாகம் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று அற்புதமான யோகக்கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஹரீனில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் யுனெஸ்கோ மரபுச்சின்னமான புகழ்மிக்க கால் கோட்டையிலும் கூட ஒரு நினைவுகொள்ளத்தக்க யோகக்கலைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆப்சர்வேஷன் டெக்கிலும் கூட மக்கள் யோகக்கலையைப் பயின்றார்கள். மார்ஷல் தீவுகளும் கூட முதன்முறையாக நடந்த, பெரிய அளவில் யோகக்கலை தினத்தின் நிகழ்ச்சிகளில், அவர்களின் குடியரசுத் தலைவரும் பங்கு கொண்டார். பூட்டான் நாட்டின் திம்புவிலும் கூட ஒரு பெரிய யோகக்கலை நிகழ்ச்சி அரங்கேறியது, இதிலே என்னுடைய நண்பரான, பிரதமர் டோப்கேயும் கூட பங்கெடுத்துக் கொண்டார். அதாவது உலகின் பல்வேறு இடங்களிலும் யோகக்கலை பயிலும் ஒரு பரந்துபட்ட பார்வையை நாமனைவரும் கண்டோம். யோகக்கலை தினத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நான் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடத்திலே பழையதொரு விண்ணப்பமும் உண்டு. நாம் யோகக்கலையை வெறும் ஒரு நாள் பயிற்சியாக மட்டுமே அணுகக் கூடாது. நீங்கள் சீரான வகையிலே யோகக்கலையைப் பயில வேண்டும். இதனால் உங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உங்களால் உணர முடியும்.
நண்பர்களே, பாரதத்தின் பல பொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை அதிகம் இருக்கிறது, நாம் நமது நாட்டின் உள்ளூர்ப் பொருட்கள் உலக அளவில் பரவலாக்கப்படுவதைக் காணும் போது, நெஞ்சம் கர்வத்தில் விம்முவது இயல்பான விஷயம் தானே!! இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் அரக்கு காப்பி. அரக்கு காப்பி, ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதன் செறிவான சுவையும் மணமும் உலகப் புகழ் வாய்ந்தவை. அரக்கு காப்பியின் சாகுபடியோடு சுமார் ஒண்ணரை இலட்சம் பழங்குடியினக் குடும்பங்கள் தொடர்புடையனவாக இருக்கின்றன. அரக்கு காப்பியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் கிரிஜன் கூட்டுறவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இங்கிருக்கும் விவசாய சகோதர சகோதரிகளோடு இணைந்து இது செயல்பட்டு, அரக்கு காப்பியைப் பயிர் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாக இங்கிருக்கும் விவசாயிகளின் வருவாய் அதிகம் பெருகியது. இதனால் ஆதாயம் இங்கிருக்கும் கோண்டா டோரா பழங்குடியினச் சமூகத்துக்கும் கிடைத்திருக்கிறது. வருமானத்தோடு கூடவே அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு கௌரவமும் கிடைத்திருக்கிறது. ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களோடு இந்தக் காப்பியைப் பருகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததை நான் இப்போது நினைவு கூருகிறேன். இதன் சுவையைப் பற்றி நான் என்ன சொல்ல, ஆஹா அற்புதம்!! மிகவும் அருமையான காப்பி!! அரக்கு காப்பிக்கு உலகளாவிய பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. தில்லியில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டிலும் கூட காப்பி எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, அப்போது நீங்களும் கூட அரக்கு காப்பியை சுவைத்து மகிழுங்களேன்!!
நண்பர்களே, உள்ளூர்ப் பொருட்களை உலகளாவிய அளவுக்குக் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய ஜம்மு கஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் பின் தங்கிப் போனவர்கள் அல்ல. கடந்த மாதங்களில் ஜம்மு கஷ்மீர் சாதித்துக் காட்டியிருப்பவை, நாடெங்கும் இருக்கும் மக்களுக்கும் கூட ஒரு எடுத்துக்காட்டு. இங்கே, புல்வாமாவிலிருந்து அவரைக்காயின் முதல் தொகுதி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கஷ்மீரில் விளையும் அரியவகைக் காய்கறிகளை ஏன் நாம் உலகிற்கு அறிமுகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் சிலர் மனங்களில் உதித்தது. அப்புறமென்ன!! சகூரா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ராஷீத் மீர் அவர்கள் இதற்காக முதன்முதலில் முன்வந்தார். இவர் கிராமத்தின் பிற விவசாயிகளின் நிலங்களை ஒருங்கிணைத்து, அவரைப்பயிரை விளைவிக்கும் பணியைத் தொடக்கினார், சில காலத்திற்குள்ளாகவே அவரைக்காய் கஷ்மீரிலிருந்து லண்டனைச் சென்றடைந்தது. இந்த வெற்றி, ஜம்மு கஷ்மீரின் மக்களுக்கு வளங்களை அளிக்கும் புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. நம்முடைய நாட்டிலே இப்படிப்பட்ட தனித்துவமான பொருட்களுக்குக் குறைவேதும் இல்லை. நீங்கள் இப்படிப்பட்ட பொருட்களை #myproductsmypride என்பதில் கண்டிப்பாகப் பகிருங்கள். நான் இந்த விஷயம் தொடர்பாக வரவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க இருக்கிறேன்.
मम प्रिया: देशवासिन:
अद्य अहं किञ्चित् चर्चा संस्कृत भाषायां आरभे |
மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.
மனதின் குரலில் திடீரென சம்ஸ்கிருதத்தில் நான் ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் என்னவென்றால், இன்று சம்ஸ்கிருதத்தோடு தொடர்புடைய ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தான் ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கையானது பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. நான் ஆல் இண்டியா ரேடியோ குடும்பத்தாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் சம்ஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், நாம் சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இப்படிப்பட்ட ஒரு முயற்சி பெங்களூரூவில் பலர் செய்து வருகிறார்கள். பெங்களூரூவின் ஒரு பூங்காவான கப்பன் பூங்காவில் இங்கிருப்போர் ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே வாரத்தில் ஒரு முறை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும், குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைவரும் பரஸ்பரம் சம்ஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள். இது மட்டுமல்ல, இங்கே வாதவிவாதங்களின் பல அமர்வுகளும் சம்ஸ்கிருதத்திலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவர்களுடைய இந்த முயற்சியின் பெயர் சம்ஸ்கிருத வார இறுதி. இதன் தொடக்கத்தை ஒரு இணையத்தளத்தின் வாயிலாக, சமஷ்டி குப்பி அவர்கள் செய்தார்கள். சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி பெங்களூரூவாசிகளின் மத்தியிலே, சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானதாகிவிட்டது. நாமனைவரும் இதைப் போன்ற முயற்சிகளில் இணைந்தோம் என்றால், உலகின் இத்தனை தொன்மையான, அறிவியல் செறிவுடைய மொழியின் வாயிலாகப் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பதிப்பில் உங்களோடு இணைந்து பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போது முதல் இந்தத் தொடர் எப்போதும் போலவே தொடரும். அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு புனிதமான ரத யாத்திரை தொடங்கவிருக்கிறது. மஹாபிரபு ஜகன்னாதரின் கிருபையானது நாட்டுமக்கள் அனைவரின் மீதும் பொழிய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அமர்நாத் யாத்திரையும் தொடங்கி விட்டது, அடுத்த சில நாட்களில் பண்டர்பூர் வாரியும் தொடங்கிவிடும். இந்தப் புனித யாத்திரைகளில் பங்குபெறும் அனைத்து பக்தர்களுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். அடுத்து கச்சீ நவவர்ஷ் என்ற ஆஷாடீ பீஜ் பண்டிகையும் வரவிருக்கிறது. இந்த அனைத்து சுபதினங்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். ஆக்கப்பூர்வ உணர்வு நிரம்பிய, மக்களின் பங்கெடுப்புடன் கூடிய இத்தகைய முயற்சிகளை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வீர்கள் என்பதே என் நம்பிக்கை. அடுத்த மாதம் உங்களோடு மீண்டும் இணைய ஆவலோடு காத்திருப்பேன். அதுவரை நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.
நண்பர்களே, சில நாட்கள் கழித்து மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்த விசேஷமான நாளானது, தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்-சக்தியின் பங்களிப்பைப் போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. பெண்களுக்கு சமமான சந்தர்ப்பம் வாய்க்கப்பெறும் போது மட்டுமே உலகம் தன்னிறைவு பெற்றதாக ஆகும் என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார். இன்று பாரதத்தின் பெண்-சக்தி என்பது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது. நமது தேசத்திலே, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் எல்லாம் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகள் முன்பு வரை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா!! ஆனால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது. இன்று, கிராமங்கள்தோறும் ட்ரோன் தீதீ எனும் இந்தப் பெண்களைப் பற்றியே பேச்சாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காணும் போது, இந்த முறை மனதின் குரலில், ஒரு நமோ ட்ரோன் தீதியோடு நாம் ஏன் உரையாடக் கூடாது என்று நான் சிந்தித்தேன். நம்மோடு இந்த வேளையிலே, நமோ ட்ரோன் தீதியான சுனிதா அவர்கள் இணைந்திருக்கிறார். இவர் உத்திர பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர், வாருங்கள், அவரோடு நாம் உரையாடுவோம்.
மோதி ஜி: சுனிதா தேவி அவர்களே, உங்களுக்கு வணக்கம்.
சுனிதா தேவி: வணக்கம் சார்.
மோதி ஜி: சரி சுனிதா அவர்களே, முதல்ல நீங்க உங்க குடும்பம் பத்தி, உங்க பின்னணி பத்தி சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.
சுனிதா தேவி: சார், எங்க குடும்பத்தில ரெண்டு பிள்ளைங்க, நான், என் கணவர், எங்கம்மா.... இவங்க எல்லாம் இருக்காங்க.
மோதி ஜி: நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க சுனிதா ஜி.
சுனிதா தேவி: சார், பி.ஏ. (இறுதியாண்டு) வரை.
மோதி ஜி: அப்புறம் வேலை எனும் போது, வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யறீங்க?
சுனிதா தேவி: வேலைன்னா, விவசாயம் தானுங்கய்யா, வயல் வேலை.
மோதி ஜி: சரி சுனிதா ஜி, இந்த ட்ரோன் தீதியாகற உங்க பயணம் எப்படி தொடங்கிச்சு. உங்களுக்கு எங்க பயிற்சி கொடுத்தாங்க, என்ன மாதிரியான மாற்றம் எல்லாம் ஏற்பட்டிருக்கு, எனக்கு தொடக்கத்திலேர்ந்து ஒண்ணு விடாம சொல்லுங்க.
சுனிதா தேவி: கண்டிப்பா சார். பயிற்சி இங்க நம்ம ஃபூல்புர் இஃப்கோ கம்பெனியில குடுத்தாங்க இலாஹாபாதில, அங்க தான் பயிற்சி கிடைச்சுது.
மோதி ஜி: அதுக்கு முன்னால நீங்க ட்ரோன் பத்தி ஏதும் முன்னபின்ன கேள்விப்பட்டிருந்தீங்களா?
சுனிதா தேவி: சார், கேள்விப்பட்டது கிடையாதுங்க. ஆனா ஒருமுறை மட்டும் சீதாபுர்ல இருக்கற கிருஷி விஞ்ஞான் கேந்திரத்தில பார்த்திருக்கேன். அப்பத் தான் முத முறையா ட்ரோனை நான் பார்த்தது.
மோதி ஜி: சுனிதா ஜி, அது தான் நீங்க முதமுறையா அங்க போனது, சரிதானே!!
சுனிதா தேவி: ஆமாங்க.
மோதி ஜி: முத நாள் உங்களுக்கு ட்ரோனை காண்பிச்சிருப்பாங்க, பிறகு பலகையில எழுதிப் போட்டு கத்துக் குடுத்திருப்பாங்க, காகிதத்தில எழுதி படிக்க வச்சிருப்பாங்க, பிறகு மைதானத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, பயிற்சி குடுத்திருப்பாங்க, இது எல்லாத்தைப் பத்தியும் விவரமா சொல்லுங்களேன்.
சுனிதா தேவி: கண்டிப்பா சொல்றேன் சார். முத நாளன்னைக்கு நாங்க போன அடுத்த நாளிலிருந்து, எங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல கோட்பாடு கத்துக் குடுத்தாங்க, பிறகு ரெண்டு நாள் வரை வகுப்பு நடத்தினாங்க. வகுப்புல ட்ரோன்ல என்னென்ன பாகங்கள் இருக்கு, எப்படிஎப்படி இயக்கறதுன்னு, எல்லா விஷயங்களும் கோட்பாடு வகுப்புல நடத்தினாங்க. 3ஆவது நாளன்னைக்கு சார், எங்களுக்கு தேர்வு வச்சாங்க, அதுக்குப் பிறகு கணிப்பொறியிலயும் ஒரு தேர்வு வச்சாங்க. அதாவது முதல்ல வகுப்பு எடுப்பாங்க, பிறகு தேர்வு எழுதச் சொல்லுவாங்க. பிறகு தான் களப்பயிற்சி; அதாவது எப்படி ட்ரோனை எழும்பச் செய்யணும், எப்படி அதைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும் மாதிரியான விஷயங்கள் எல்லாம் இந்தக் களப்பயிற்சியில கத்துக் கொடுத்தாங்க.
மோதி ஜி: பிறகு ட்ரோன் என்ன வேலை செய்யும்னு கத்துக் கொடுத்தாங்களா?
சுனிதா தேவி: சார் கண்டிப்பா. அதாவது பயிர் இப்ப அறுவடைக்கு தயாராயிட்டு இருக்கு, இப்ப மழை இல்லை ஏதோ காரணத்தால வயல்ல எங்களால, இல்லை வேலையாட்களால நுழைய முடியலைன்னா இவை வாயிலா ரொம்ப ஆதாயங்கள் விவசாயிகளுக்கு ஏற்படும், வயல்ல நாங்க நுழைய வேண்டிய அவசியமே இல்லை. நாம வரப்பு மேல நின்னுக்கிட்டு, வயல்ல ஏதும் புழுபூச்சி நுழைஞ்சிருக்கா, நாம என்ன முன்னெச்சரிக்கை எடுக்கணும், எல்லாத்தையும் நமக்குப் புட்டுபுட்டு வச்சிடும், விவசாயிகளுக்கும் ரொம்ப உதவிகரமா இருக்கும். சார், இந்த ட்ரோனை வச்சு நாங்க இதுவரைக்கும் 35 ஏக்கருக்கு ஸ்ப்ரே செஞ்சிருக்கோம்.
மோதி ஜி: அப்ப இதனால பயனிருக்குன்னு விவசாயிகளுக்கும் புரியுதா?
சுனிதா தேவி: கண்டிப்பா சார். விவசாயிகளுக்கு ரொம்ப சந்தோஷம், அவங்க இதை ரொம்ப பாராட்டிப் பேசறாங்க. இதனால நேரமும் மிச்சப்படுது, எல்லா வேலைகளையும் இதுவே பார்த்துக்குது. தண்ணி, மருந்துன்னு எல்லாத்தையும் இதுவே பார்த்துக்குது, நாம வந்து வயலோட அளவு, எல்லையை சொன்னா மட்டும் போதும், எல்லா வேலையையும் அரை மணி நேரத்தில செஞ்சு முடிக்க முடியுது.
மோதி ஜி: அப்ப இந்த ட்ரோனை பார்க்கவே ஆளுங்க வந்து போவாங்க இல்லை?
சுனிதா தேவி: சார், அதை ஏன் கேக்கறீங்க. ட்ரோனைப் பாக்கவே ஏகப்பட்ட பேருங்க வராங்க. வயல்ல மருந்தடிக்க உங்களைக் கூப்பிடறோம், உதவி செய்யுங்கன்னு பெரியபெரிய விவசாயிகள்லாம் என்கிட்டேர்ந்து நம்பர் வாங்கிட்டுப் போறாங்க.
மோதி ஜி: நல்லது. நான் ஏன் இதைக் கேக்கறேன்னா, லட்சாதிபதி தீதியை உருவாக்கறதுங்கற ஒரு இலக்கு எனக்கு இருக்கு. இன்னைக்கு நீங்க பேசறதை, ஒரு ட்ரோன் தீதி முதமுறையா என் கூட பேசறதை நாடு முழுக்க இருக்கற சகோதரிகள் கேட்டுக்கிட்டு இருக்காங்க, அவங்க கிட்ட நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
சுனிதா தேவி: இன்னைக்கு நான் ஒரே ஒரு ட்ரோன் தீதியா இருக்கலாம், ஆனால் என்னை மாதிரியே ஆயிரக்கணக்கான சகோதரிகள் முன்வந்து என்னை மாதிரியே ட்ரோன் தீதியா ஆகணும், என் கூட ஆயிரக்கணக்கான நபர்கள் இணையும் போது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும், நம்ம எல்லாருக்கும் ட்ரோன் தீதிங்கற அடையாளம் கிடைக்கும்.
மோதி ஜி: சரி சுனிதா அவர்களே, உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த நமோ ட்ரோன் தீதி, இவர் தேசத்தின் விவசாயத்தை நவீனமயமாக்கும் ஒரு மிகப்பெரிய ஊடகமாக ஆகி வருகிறார். என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
சுனிதா தேவி: நன்றி சார். ரொம்ப நன்றி.
மோதி ஜி: நன்றிம்மா.
நண்பர்களே, இன்று தேசத்தில் பெண்-சக்தி பின்தங்கி இருக்கும் துறை என்பது ஏதும் இல்லை. பெண்கள், தங்களின் தலைமைப்பண்பு காரணமாக மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை, நீர்பாதுகாப்பு மற்றும் தூய்மை. வேதிப்பொருள்கள் நமது பூமித்தாய்க்கு அளிக்கும் கஷ்டங்கள், அது தரும் வேதனை-வலி.... இவற்றிலிருந்து நமது பூமித்தாயைக் காப்பாற்றுவதில், தேசத்தின் தாய்மைசக்தி பெரும்பங்காற்றி வருகிறது. தேசத்தின் மூலைமுடுக்கெங்கும் பெண்கள் இப்போது இயற்கை விவசாயத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று தேசத்தில் ஜல்ஜீவன் மிஷன், அதாவது அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டத்தின்படி நடந்துவரும் அனைத்துப் பணிகளுக்கும் பின்னணியில் நீர்க்குழுக்களின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இந்த நீர்க் குழுக்களுக்குத் தலைமையேற்று நடத்துபவர்கள் என்று சொன்னால் அவர்கள் பெண்கள் தாம். இதைத் தவிரவும் கூட சகோதரிகள்-பெண்கள், நீர் பாதுகாப்பிற்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். என்னோடு இப்போது தொலைபேசிவழி இணைந்திருக்கும் பெண்ணின் பெயர் கல்யாணி பிரஃபுல்ல பாடில் அவர்கள். இவர் மஹாராஷ்டிரத்தில் வசிப்பவர். வாருங்கள், கல்யாணி பிரஃபுல்ல பாடில் அவர்களோடு உரையாடி அவருடைய அனுபவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மோதி ஜி: கல்யாணி அவர்களே, வணக்கம்.
கல்யாணி: வணக்கம் சார், வணக்கம்.
மோதி ஜி: கல்யாணி அவர்களே, முதல்ல நீங்க உங்களைப் பத்தியும், உங்க குடும்பம் பத்தியும், நீங்க பார்த்திட்டு இருக்கற வேலை பத்தியும் சொல்றீங்களா?
கல்யாணி: சார், நான் மைக்ரோபயாலஜி, நுண்ணுயிரியல் படிப்பு முதுகலை வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க வீட்டில என்னோட என் கணவர், எங்க மாமியார், எங்க ரெண்டு பசங்க இருக்காங்க. நான் கடந்த மூன்றாண்டுகளா கிராம பஞ்சாயத்தில பணியாற்றிக்கிட்டு வர்றேன்.
மோதி ஜி: அப்புறம் கிராமத்தில விவசாயத்தில ஈடுபட்டிருக்கீங்களா? ஏன்னா உங்ககிட்ட அடிப்படை ஞானமும் இருக்கு, உங்க படிப்பு வேற விவசாயத் தொடர்பு உடையதா இருக்கு, நீங்களும் இப்ப விவசாயத்தோட இணைஞ்சிருக்கீங்க, அந்த வகையில ஏதும் புதிய பரிசோதனை-முயற்சியில ஈடுபட்டிருக்கீங்களா?
கல்யாணி: ஐயா, பத்துவகையான தாவரங்களை ஒண்ணு திரட்டி அது மூலமா ஒரு இயற்கை தெளிப்பானை உருவாக்கியிருக்கேன். இப்ப பார்த்தீங்கன்னா, நாம கிருமிநாசினியைத் தெளிக்கும் போது பயிருக்குத் தீங்கான பூச்சிகளோடு சேர்ந்து, பயிர்களோட வளர்ச்சிக்கு உதவிகரமா இருக்கற புழு-பூச்சிகளும் கூட அழிஞ்சு போயிடுது. மேலும் பூமியும் மாசுபடுது. இந்த வேதிப்பொருள் எல்லாம் நீரோட கலக்கறதால நம்ம உடம்புலயும் தீமையேற்படுத்தும் விளைவுகள் ஏற்படுது. அந்த வகையில நாம மிகக் குறைஞ்ச அளவுலயே பூச்சிக்கொல்லியை பயன்படுத்தணும்.
மோதி ஜி: அப்படின்னா நீங்க முழுமையான இயற்கை விவசாயம் செய்யறீங்கன்னு சொல்லுங்க.
கல்யாணி: ஆமாங்க, இது பாரம்பரியமான விவசாயம்.
மோதி ஜி: இயற்கை விவசாயம் பத்தின உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்களேன்.
கல்யாணி: ஐயா, நம்ம பெண்களுக்கு இதனால செலவு குறைவாச்சு, இந்தப் பொருள் காரணமா அவங்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டிச்சு. இதனால நாங்க பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை நிறுத்திட்டோம். இந்த பூச்சிக்கொல்லியால தான் புற்றுநோய் அதிகமாகுது, நகரங்கள்ல ஒருபக்கம் அதிகமாகுதுங்கறது ஒருபக்கம், கிராமங்கள்லயும் இது அதிகரிக்குதுங்கறதைப் பார்க்கறோம். நாம நம்ம குடும்பங்களோட ஆரோக்கியத்தை உறுதி செய்யணும்னா, இந்த இயற்கை வழி வேளாண்மையை கைக்கொள்றது அவசியம், அந்த வகையில பெண்களும் கூட ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்திட்டு இருக்கோம்.
மோதி ஜி: நல்லது கல்யாணி அவர்களே, நீங்க நீர்மேலாண்மை-நீர்பாதுகாப்பு விஷயத்திலயும் பணியாற்றியிருக்கீங்க இல்லையா? அதில என்ன செய்தீங்க?
கல்யாணி: ஐயா, மழைநீர் சேகரிப்புங்கற வகையில, தொடக்கப்பள்ளி, ஆங்கன்வாடி, கிராமப்பஞ்சாயத்து மாதிரியான அரசுக் கட்டிடங்கள்ல சேருற தண்ணி எல்லாத்தையும் ஓரிடத்தில சேகரிக்கறோம், இது ஒரு recharge shaft, நீர்சேகரிப்பு அமைப்புன்னு வச்சுக்குங்களேன். மழைநீர் விழும் போது, அது நிலத்தடியில ஊறி இறங்கணும், ஆக அதுக்கு ஏத்த வகையில நீர்சேகரிப்புக்கான 20 மீள்நிரப்புச் சுரங்கங்களை நாங்க கிராமத்தில உருவாக்கியிருக்கோம், மேலும் 50 மீள்நிரப்புச் சுரங்கங்களுக்கு ஒப்புதல் கிடைச்சிருக்கு. இப்ப விரைவிலேயே இதுக்கான பணிகளும் தொடங்க இருக்கு.
மோதி ஜி: நல்லது கல்யாணி அவர்களே, உங்களோட உரையாடினதுக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கல்யாணி: ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. உங்களோட பேசுறது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. என் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா நான் உணர்றேன். ரொம்ப நன்றிங்க.
மோதி ஜி: தொடர்ந்து சேவை செய்யுங்கம்மா.
மோதி ஜி: உங்க பேரே கல்யாணி, நீங்க எப்பவுமே நல்லதே செய்வீங்க. நன்றிம்மா, வணக்கம்.
கல்யாணி: நன்றிங்க, வணக்கம்.
நண்பர்களே, சுனிதா அவர்களாகட்டும், கல்யாணி அவர்களாகட்டும், இவர்களைப் போன்ற பெண்-சக்தியின் வெற்றி பல்வேறு துறைகளில் உத்வேகமளிப்பதாக இருக்கிறது. நான் மீண்டுமொருமுறை நமது பெண்-சக்தியின் இந்த உணர்வுக்கு இதயப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நம்மனைவரின் வாழ்க்கையிலும் தொழில்நுட்பத்தின் மகத்துவ மிகவும் அதிகரித்து விட்டது. மொபைல் ஃபோன், டிஜிட்டல் கருவிகள் ஆகியன நம்மனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான பங்கு வகிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் இந்த டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு இப்போதெல்லாம் காட்டு விலங்குகளோடு இசைவு ஏற்படுவதிலும் உதவிகரமாக இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? சில நாட்கள் கழித்து, மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று உலக வன உயிரின நாள் வரவிருக்கிறது. வன உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக வன உயிரின நாளின் கருப்பொருளில் டிஜிட்டல் கண்டுபிடுப்புகள் முதன்மையானதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. நமது தேசத்திலே பல்வேறு பாகங்களிலே வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். கடந்த சில ஆண்டுகளில் அரசு முயற்சிகள் காரணமாக தேசத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் சந்திரபுர் புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை 250க்கும் அதிகமாகி ஆகியிருக்கிறது. சந்திரபுர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் குறைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கே கிராமத்திற்கும் வனத்திற்கும் இடையிலான எல்லையில் காமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கிராமத்துக்கு அருகே புலி ஏதேனும் வரும் போது, செயற்கை நுண்ணறிவின் உதவியால், அந்தப் பகுதி மக்களின் செல்பேசியில் எச்சரிக்கை ஒன்று அளிக்கப்படும். இன்று இந்த புலிகள் சரணாலயத்தின் அருகே இருக்கும் 13 கிராமங்களில் இந்த அமைப்பு காரணமாக மக்களுக்கு மிக வசதியாக இருப்பதோடு, புலிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, இன்று இளைய தொழில்முனைவோரும் கூட வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சூழலியல் சுற்றுலாவின் பொருட்டு, புதியபுதிய புதுமையான கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்திராகண்டின் ரூட்கீயில், ரோட்டர் பிரசிஷன் க்ரூப்ஸ் அமைப்பானது, இந்திய வன உயிரினக் கழகத்துடன் இணைந்து ஒரு ட்ரோனைத் தயாரித்திருக்கிறது. இதன் காரணமாக கேன் நதியிலே முதலைகளின் மீது ஒரு கண் வைத்திருப்பதில் உதவிகரமாக இருக்கிறது. இதைப் போலவே பெங்களூரூவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பகீரா மற்றும் கருட் என்ற பெயர் கொண்ட ஒரு செயலியை ஏற்படுத்தியிருக்கிறது. பகீரா செயலி மூலம் வனச்சுற்றுலாவின் போது வாகனத்தின் வேகம் மற்றும் பிற விதிமுறைகளின் மீது கண்காணிப்பு செலுத்தப்படுகிறது. தேசத்தின் பல புலிகள் சரணாயலயங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் Internet of things ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட கருட் செயலியை ஏதோவொரு சிசிடிவியில் இணைப்பதன் மூலம் உடனுக்குடன் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. வன உயிரினங்களின் பாதுகாப்பு என்ற வகையில் இவை போன்ற அனைத்து முயற்சிகள் வாயிலாக நமது தேசத்தின் உயிரி பன்முகத்தன்மையை மேலும் வளமுடையதாக ஆக்குகின்றன.
நண்பர்களே, பாரதத்திலே இயற்கையோடு இயைந்த இசைவு என்பது நமது கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இயற்கையோடும், வன உயிரினங்களோடும் இசைவான வாழ்க்கையை வாழும் உணர்வோடு நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். நீங்கள் மஹாராஷ்டிரத்தின் மேல்காட் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றால், அங்கே உங்களால் நேரடியாக இதை அனுபவிக்க முடியும். இந்த புலிகள் சரணாலயத்தின் அருகே கட்கலி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினக் குடும்பங்கள், அரசு உதவியோடு தங்களின் வீடுகளை ஹோம் ஸ்டே எனும் தங்கும் விடுதிகளாக மாற்றி விட்டார்கள். இவை வருமானத்திற்கான மிகப்பெரிய சாதனமாக இவர்களுக்கு ஆகியிருக்கிறது. இதே கிராமத்தில் வசிக்கும் கோர்கூ பழங்குடியினத்தவரான பிரகாஷ் ஜாம்கர் அவர்கள், தனது இரண்டு ஹெக்டேர் நிலத்தில் ஏழு அறைகள் கொண்ட தங்கும் விடுதியை ஏற்படுத்தி இருக்கிறார். இவருடைய தங்கும் விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு-குடிநீர் வசதிகளுக்கான ஏற்பாடுகளைக் குடும்பம் செய்து தருகிறது. தங்களுடைய வீடுகளுக்கு அருகே இவர்கள் மருத்துவத் தாவரங்களோடு கூடவே மாமரம், காப்பி ஆகியவற்றையும் நட்டிருக்கிறார்கள். இது சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தை அதிகரிக்கிறது, அதே வேளையில் புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படுகின்றன.
எனதருமை நாட்டுமக்களே, கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசும் போது, உரையாடல் பசுமாடுகள்-எருமைமாடுகளோடு நின்று போகின்றன. ஆனால் ஆடுகளும் கூட ஒரு முக்கியமான கால்நடைச் செல்வங்கள் தாம், இவை அதிக அளவு விவாதப் பொருளாவதில்லை. நாட்டில் பல்வேறு பகுதிகளில், பலர் ஆடுகள் வளர்ப்போடு இணைந்திருக்கிறார்கள். ஒடிஷாவின் காலாஹாண்டியில் ஆடுகள் வளர்ப்பு, கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தோடு சேர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தும் ஒரு மிகப்பெரிய சாதனமாக ஆகி வருகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் ஜயந்தி மஹாபாத்ரா, இவருடைய கணவர் பீரேன் சாஹூ ஆகியோரின் ஒரு மகத்தான தீர்மானம் இருக்கிறது. இவர்கள் இருவரும் பெங்களூரூவில் மேலாண்மை தொழில் வல்லுநர்களாக இருந்தார்கள், ஆனால் இவர்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு காலாஹாண்டியின் சாலேபாடா கிராமத்திற்கு வருவது என்ற முடிவை எடுத்தார்கள். இங்கே இருக்கும் கிராமமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதே வேளையில், அவர்கள் அதிகாரப்பங்களிப்பு உடையவர்களாகவும் ஆக வேண்டும் என்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த இந்த எண்ணத்தோடு இவர்கள் மாணிகாஸ்து அக்ரோ என்ற அமைப்பை நிறுவினார்கள், விவசாயிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். ஜயந்தி அவர்களும், பீரேன் அவர்களும் இங்கே ஒரு சுவாரசியமான மாணிகாஸ்து ஆடுகளை வளர்ப்பதற்கான இடத்தையும் நிறுவினார்கள். இவர்கள் சமூகரீதியாக ஆடுகள் வளர்ப்புக்கு ஊக்கமளித்து வருகிறார்கள். இவர்களுடைய பண்ணையில் கிட்டத்தட்ட பலடஜன் ஆடுகள் இருக்கின்றன. மாணிகாஸ்து ஆடுகள் அமைப்பில் இவர்கள் விவசாயிகளுக்கென முழுமையான ஒரு முறையைத் தயார் செய்திருக்கிறார்கள். இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 24 மாதக்காலத்திற்கு 2 ஆடுகள் அளிக்கப்படுகின்றன. ஈராண்டுகளில் ஆடுகள் 9 முதல் 10 குட்டிகள் வரை போடுகின்றன, இவற்றில் 6 குட்டிகளை அமைப்பு தக்க வைத்துக் கொள்கிறது, மற்றவை ஆடுவளர்க்கும் அந்த குடும்பத்துக்கே அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, ஆடுகளைப் பராமரிக்கத் தேவையான அவசியமான சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இன்று 50 கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த இணையோடு இணைந்திருக்கின்றார்கள். இவர்களுடைய உதவியோடு கிராமத்தவர்கள், கால்நடை வளர்ப்புத் துறையில் தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறார்கள். பல்வேறு துறைகளில் வெற்றியடைந்த வல்லுநர்களும் கூட சிறிய விவசாயிகளின் அதிகாரப் பங்களிப்பு மற்றும் தற்சார்பு நிலைக்காக, புதியபுதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. இவர்களுடைய இந்த முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கும் பாடம் – ‘परमार्थ परमो धर्मः’, பரமார்த்த பரமோ தர்ம: - அதாவது, மற்றவர்களுக்கு உதவுவது தான் முதன்மையான கடமையாகும் என்பதே. இதே உணர்வோடு பயணிக்கும் நமது தேசத்தில், ஏராளமான பேர், தன்னலமற்ற உணர்வோடு மற்றவர்களுக்கு சேவை புரிவதற்கே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நபர் தான், பிஹாரின் போஜ்புரைச் சேர்ந்த பீம் சிங் பவேஷ் அவர்கள். தன்னுடைய பகுதியில் வசிக்கும் முஸஹர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இவருடைய பணிகள் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன. ஆகையால் நாம் ஏன் இன்று இவரைப் பற்றியும் உரையாடக் கூடாது என்று எனக்குப் பட்டது. பிஹாரின் முஸஹர் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக, மிகவும் ஏழ்மையான சமுதாயமாகக் கருதப்படுபவர்கள். இவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமானதாக ஆக வேண்டி, இந்த சமுதாயக் குழந்தைகளின் கல்வி மீது பீம் சிங் பவேஷ் அவர்கள் தனது குவிமையத்தைச் செலுத்தினார். இவர் முஸஹர் பிரிவின் கிட்டத்தட்ட 8000 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தார். குழந்தைகளின் படிப்புக்கான சிறப்பான வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பெரிய நூலகத்தையும் ஏற்படுத்தினார். பீம் சிங் அவர்கள், தன் சமூக உறுப்பினர்களின் அவசியமான ஆவணங்களைத் தயார் செய்யவும், படிவங்களை நிரப்பவும் உதவி புரிந்தார். இதனால் தேவையான ஆதாரங்களைப் பெறுவதில் கிராமவாசிகளுக்கு வசதி ஏற்பட உதவிகரமாக இருக்கும். மக்களின் உடல்நலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தார். கொரோனா பெருந்தொற்று பீடித்த காலத்தில், பீம் சிங் அவர்கள் தன்னுடைய பகுதிவாழ் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மிகவும் ஊக்கப்படுத்தினார். தேசத்தின் பல்வேறு பாகங்களில் பீம் சிங் பவேஷ் அவர்களைப் போன்ற பலர், சமூகத்தில் இப்படி பல நேரிய காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொறுப்பான குடிமகன் என்ற முறையில் நாம் இவரைப் போன்று நமது கடமைகளைப் பின்பற்றி நடப்போம் என்றால், சக்திபடைத்த ஒரு தேசத்தை உருவாக்குவதில் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, பாரதத்தின் அழகே இங்கிருக்கும் பன்முகத்தன்மை நமது கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்களில் கலந்திருப்பது தான். பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் இதை மேலும் பராமரிக்கும் முயற்சிகளில் எத்தனையோ பேர் சுயநலமில்லா உணர்வோடு ஈடுபடுவதைக் காணும் போது எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படிப்பட்ட நபர்கள் பாரதத்தின் அனைத்து இடங்களிலும் உங்களுக்குக் காணக் கிடைப்பார்கள். மொழித் துறையில் பணியாற்றுபவர்களை அதிக எண்ணிக்கையில் நீங்கள் காண இயலும். ஜம்மு கஷ்மீரத்தின் காந்தர்பலைச் சேர்ந்த மொஹம்மத் மான்ஷாஹ் அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாகவே கோஜ்ரி மொழியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர், ஒரு பழங்குடியினச் சமூகமாகும் இது. சிறுவயது முதற்கொண்டே, கல்வி பயில பெரும் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தினமும் 20 கிலோமீட்டர் நடந்து சென்று படிக்க வேண்டியிருந்தது. இதைப் போன்ற சவால்களுக்கு இடையே இவர் முதுகலைப் பட்டம் பெற்றார், தன்னுடைய மொழியைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை உள்ளத்தில் மேற்கொண்டார்.
இலக்கியத் துறையில் மான்ஷாஹ் அவர்களின் செயல்பாடுகளின் சாதனைத் தொடர் என்று பார்த்தால், இவருடைய எழுத்துக்கள் 50க்கும் மேற்பட்ட வெளியீடுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்; இவற்றில் கவிதைகள், நாட்டுப்புற கீதங்கள் ஆகியன அடங்கும். இவர் பல புத்தகங்களை தன்னுடைய மொழியான கோஜ்ரியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
நண்பர்களே, அருணாச்சல பிரதேசத்தின் திரப் பகுதியைச் சேர்ந்த பன்வங்க் லோஸூ அவர்கள் ஒரு ஆசிரியர். இவர் வாஞ்சோ மொழியைப் பரப்ப, தன்னுடைய முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார். இந்த மொழி, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்த், அஸாமின் சில பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. இவர் ஒரு மொழிப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார். இவருடைய வாஞ்சோ மொழியின் ஒரு எழுத்துவடிவத்தைக் கூட தயார் செய்திருக்கிறார். இந்த மொழி வழக்கொழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, வருங்காலத் தலைமுறையினருக்கும் வாஞ்சோ மொழியைக் கற்பித்து வருகிறார்.
நண்பர்களே, ஆடல்-பாடல்கள் மூலம் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பலர் நமது தேசத்திலே இருக்கிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கப்பா அம்பாஜி சுகேத்கர் அவர்களுடைய வாழ்க்கையும் இந்த விஷயத்தில் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. இந்த மாநிலத்தின் பாகல்கோட்டில் வசிக்கும் சுகேத்கர் அவர்கள் ஒரு கிராமியப் பாடகர். இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட ”கோந்தலி” பாடல்களைப் பாடியிருப்பதோடு, இந்த மொழியிலே, கதைகளையும் நன்கு பிரச்சாரம் செய்திருக்கிறார். எந்த ஒரு கட்டணமும் பெறாமல், பல மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்திருக்கிறார். பாரதத்திலே உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த இப்படிப்பட்ட நபர்களுக்குக் குறைவே இல்லை, இவர்கள் நமது கலாச்சாரத்தைத் தொடர்ந்து வளப்படுத்தி வருகிறார்கள். நீங்களும் இவர்களிடமிருந்து உத்வேகமடையுங்கள், உங்கள் தரப்பில் ஏதேனும் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். நீங்களும் நிறைவான உணர்வை அனுபவிப்பீர்கள்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக வாராணசியில் நான் இருந்த வேளையில், ஒரு மிகச் சிறப்பான புகைப்படக் கண்காட்சியைப் பார்க்க நேர்ந்தது. காசி மற்றும் அருகிலே இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் காமிராக்களில் படம்பிடித்த கணங்களைக் கண்ட போது அற்புதமானதாக இருந்தது. இதிலே பல புகைப்படங்கள், மொபைல் காமிராக்களிலே எடுக்கப்பட்டவை. உள்ளபடியே, இன்று யாரிடத்தில் செல்பேசி இருக்கிறதோ, அவர் ஒரு content creator, உள்ளடக்க விஷயங்களை உருவாக்குபவராக ஆகி விட்டார். மக்கள் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்த சமூக ஊடகமும் பேருதவியாக இருக்கிறது. பாரதத்தின் நமது இளைய நண்பர்கள் உள்ளடக்க விஷயங்களை உருவாக்கும் துறையில் அற்புதங்களைப் படைத்து வருகிறார்கள். அது எந்த ஒரு சமூக ஊடகத் தளமாக இருந்தாலும் சரி, பல்வேறு விஷயங்கள் குறித்து, பல்வேறு உள்ளடக்கத்தை பகிரக்கூடிய நமது இளைய நண்பர்கள் கண்டிப்பாக அவற்றிலே இருப்பார்கள். சுற்றுலாவாகட்டும், சமூகச் சேவையாகட்டும், பொதுமக்கள் பங்களிப்பாகட்டும், அல்லது உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணமாகட்டும், இவற்றோடு தொடர்புடைய பலவகையான உள்ளடக்க விஷயங்கள், சமூக ஊடகத்தில் காணக் கிடைக்கின்றன. உள்ளடக்க விஷயங்களை உருவாக்கிவரும் தேசத்தின் இளைஞர்களின் குரல் இன்று மிகவும் தாக்கமேற்படுத்துவதாக ஆகி விட்டது. இவர்களுடைய வல்லமைக்கு மதிப்பளிக்கும் வகையிலே National Creators Award, தேசிய படைப்பாளிகள் விருது ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தின் வலுவான குரலாக பல்வேறு பிரிவுகளில் ஒலிக்கும் இவர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். நீங்களும் இத்தகைய சுவாரசியமான உள்ளடக்க விஷயங்களைப் படைப்போரை அறிவீர்கள் என்றால், அவர்களை தேசியப் படைப்பாளிகள் விருதுக்குக் கண்டிப்பாக பரிந்துரை செய்யுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் மேலும் ஒரு இயக்கமான, ‘मेरा पहला वोट - देश के लिए’ என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதைத் தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு. நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு இலாபகரமானதாக இருக்கும். நானும் கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனைப்பதிவேற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள். 18 வயது ஆன பிறகு, 18ஆவது மக்களவைக்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த 18ஆவது மக்களவையும் கூட இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் அடையாளமாக விளங்கும். ஆகையால் உங்களுடைய வாக்கின் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது. பொதுத் தேர்தல்களின் இந்த அமளிக்கு இடையே, இளைஞர்களே, நீங்கள், அரசியல் வழிமுறைகளின் அங்கமாக ஆவதோடு கூடவே, இது தொடர்பாக நடைபெறும் வாதம்-விவாதங்கள் தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். மேலும் நினைவில் வைத்திருங்கள் – என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதை. விளையாட்டுத் துறையாகட்டும், திரைத்துறையினராகட்டும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களாகட்டும், பிற தொழில் வல்லநர்களாகட்டும், அல்லது நமது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ ட்யூப் ஆகட்டும் இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுங்கள், நிபுணர்களே, முதன்முறையாக வாக்களிக்கும் நமது வாக்காளர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தாக்கமேற்படுத்துபவர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே. தேசத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான சூழல் நிலவுகிறது, கடந்த முறையைப் போன்றே, மார்ச் மாதத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியின் கடந்த 110 பகுதிகளாக நாம் இதை அரசின் தாக்கத்திலிருந்து தள்ளி வைத்தே வந்திருக்கிறோம் என்பதே கூட மனதின் குரலின் மிகப்பெரிய வெற்றியாகும். மனதின் குரலில், தேசத்தின் சமூக சக்தி பற்றி பேசப்படுகிறது, தேசத்தின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. இது ஒரு வகையிலே மக்களின் மக்களுக்காக, மக்கள் வாயிலாக தயார் செய்யப்படும் நிகழ்ச்சியாகும். ஆனாலும் கூட அரசியல் கண்ணியத்தைப் பின்பற்றும் வகையில், மக்களவைத் தேர்தல் என்ற இப்போதைய காலகட்டத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதின் குரலின் ஒலிபரப்பு நடைபெறாது. அடுத்த முறை நாம் உரையாடுவது மனதின் குரலின் 111ஆவது பகுதியாக இருக்கும். அடுத்த முறை மனதின் குரலின் தொடக்கம் 111 என்ற சுபமான எண்ணோடு கூடவே இருக்கும், இதை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்!! ஆனால் நண்பர்களே, நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும். மனதின் குரல் வேண்டுமானால் மூன்று மாதங்கள் வரை வராமல் போகலாம் ஆனால், தேசத்தின் சாதனைகள் நின்று போகப் போவதில்லை என்பதால், நீங்கள் மன் கீ பாத் ஹேஷ்டேக்(#) என்பதோடு கூட, சமூகத்தின் சாதனைகளை, தேசத்தின் சாதனைகளை, சமூக ஊடகத்தில் தரவேற்றிக் கொண்டே இருக்கவும். சில நாட்கள் முன்பு தான் ஒரு இளைஞர் நல்லதொரு ஆலோசனையைக் கூறியிருந்தார். அதாவது மனதின் குரலின் இதுவரையிலான பகுதிகளிலிருந்து சின்னச்சின்ன காணொளிகளை, யூ ட்யூப் ஷார்ட்டுகளாக பகிர வேண்டும் என்று கூறியிருந்தார். ஆகையால் மனதின் குரலின் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்கள் இப்படிப்பட்ட குறும்படங்களை நன்கு பகிரவும்.
நண்பர்களே, அடுத்த முறை உங்களோடு உரையாடும் போது, புதிய சக்தி, புதிய தகவல்களோடு வந்து சந்திப்பேன். நீங்கள் உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2024ஆம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது. அமுதக்காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். இரண்டு நாட்கள் முன்பாகத் தான் நாட்டுமக்கள் அனைவரும் 75ஆவது குடியரசுத் திருநாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடினோம். இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டும் கூட, உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் இந்தத் திருநாட்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலே, பாரதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன. பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் மூன்றாவது அத்தியாயத்தில், பாரதத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது; 3ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, இராமன், அன்னை சீதை, லக்ஷ்மணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். பிரபு இராமனின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கும் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; ஆகையினால் தான் ஜனவரி 22ஆம் தேதியன்று, அயோத்தியில் நான் “தெய்வம் முதல் தேசம் வரை” என்று பேசியிருந்தேன், “இராமன் முதல் நாடு வரை” என்றும் கூறியிருந்தேன்.
நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.
என் அருமையான நாட்டுமக்களே, இந்த முறை ஜனவரி 26ஆம் தேதியன்று நடைபெற்ற அணிவகுப்பு, மிகவும் அற்புதமானதாக இருந்தது; ஆனால் மிக அதிக அளவு விவாதப் பொருளானது என்னவோ, அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் சக்தி தான். கர்த்தவ்ய பாதையில், மத்திய பாதுகாப்புப் படையினர், தில்லி போலீசாருடைய பெண்கள் பிரிவு, அணிவகுப்பைத் தொடங்கிய போது, அனைவரும் பெருமிதம் அடைந்தார்கள். பெண்களின் பேண்டு வாத்தியத்தின் அணிவகுப்பு, அவர்களின் அற்புதமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பார்த்த போது, நாட்டிலும், அயல்நாடுகளிலும் உள்ளோர் வியந்து போனார்கள். இந்த முறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 20 அணிகளில் 11 அணிகள் பெண்களின் அணிகளாகவே இருந்தன. இடம்பெற்றக் காட்சி ஊர்திகள் அனைத்திலும் பெண் கலைஞர்களே இருந்ததையும் காண முடிந்தது. நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் கூட, கிட்டத்தட்ட 1500 பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். பல பெண் கலைஞர்கள், சங்கு, நாகஸ்வரம் மற்றும் நாகதா போன்ற பாரதீய இசை வாத்தியங்களை வாசித்து வந்தார்கள். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான DRDO வின் காட்சி ஊர்தி வந்த போது, அதுவும் அனைவரையும் கவனத்தையும் கவர்ந்தது. எப்படி பெண்சக்தியானது நிலம்-நீர்-வானம், இணையம் மற்றும் விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்பது இதிலே வெளிப்படுத்தப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் பாரதம், இப்படிப்பட்ட பெண்கள் வழிகாட்டும் முன்னேற்றம் என்ற மந்திரத்தோடு கூட முன்னேறி வருகிறது.
நண்பர்களே, அர்ஜுன் விருதுகள் வழங்கு விழாவினை நீங்கள் சில நாட்கள் முன்னர் பார்த்திருப்பீர்கள். குடியரசுத் தலைவரின் மாளிகையிலே, தேசத்தின் பல திறமையான விளையாட்டு வீரர்களும், தடகள வீரர்களும் இதிலே கௌரவிக்கப்பட்டார்கள். இங்கேயும் கூட மக்களின் கவனத்தை நன்றாக கவர்ந்த விஷயம் என்றால், அது அர்ஜுன் விருதுகளைப் பெறும் பெண்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தாம். இந்த முறை 13 பெண் தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜுன் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பெண் வீராங்கனைகள், பல பெரிய பந்தயங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள், பாரதத்தின் கொடியை அங்கே பறக்க விட்டிருக்கிறார்கள். உடல்ரீதியான, பொருளாதாரச் சவால்கள் ஆகியவை எல்லாம், இந்த சாகஸம் படைத்த, திறமைவாய்ந்த வீராங்கனைகளின் முன்னே தாக்குப் பிடிக்க முடியவில்லை. மாறிவரும் பாரதத்தில், அனைத்துத் துறைகளிலும் நமது சிறுமிகள், தேசத்தின் பெண்கள் அற்புதங்களை வெளிப்படுத்தி வருகிறர்கள். மேலும் ஒரு துறை உண்டு, அதிலே பெண்கள் தங்களின் அடையாளத்தைப் பொறித்திருக்கிறார்கள் என்றால் அது சுயவுதவிக் குழுக்கள். இன்று பெண்கள் சுயவுதவிக் குழுக்களின் எண்ணிக்கை தேசத்திலே அதிகரித்திருக்கிறது, அவர்களுடைய பணியாற்றும் எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. கிராமங்கள்தோறும் வயல்களிலே, நமோ ட்ரோன் சகோதரிகள், ட்ரோன் வாயிலாக, வேளாண்மையில் உதவி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை. உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச்சிலே, அங்கே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றைத் தயாரிக்கும் பெண்களைப் பற்றித் தெரிய வந்தது. சுயவுதவிக் குழுக்களோடு இணைந்த நிபியா பேகம்புர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் பசுஞ்சாணம், வேப்பிலைகள், பலவகையான மருத்துவத் தாவரங்களைக் கலந்து, உயிரி உரத்தைத் தயார் செய்கிறார்கள். இதைப் போலவே இந்தப் பெண்கள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாயைப் பசை போல அரைத்து, உயிரி பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் இணைந்து உன்னதி ஜைவிக் இகாயி, அதாவது உன்னதி உயிரி அலகு என்ற பெயரிலான அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். உயிரிப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தப் பெண்களுக்கு இந்த அமைப்பு உதவிகரமாக இருக்கிறது. இதன் வாயிலாகத் தயாரிக்கப்படும் உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கான தேவை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று, அருகில் இருக்கும் உள்ள கிராமங்களில் 6000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இவர்களிடமிருந்து உயிரிப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக சுயவுதவிக்குழுவோடு தொடர்புடைய இந்தப் பெண்களின் வருமானம் அதிகரித்திருக்கிறது, அவர்களின் பொருளாதார நிலையும் மேம்பாடு கண்டிருக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, சுயநலமில்லாத உணர்வோடு சமூகத்தையும், தேசத்தையும் சக்தியுடையதாக ஆக்கும் பணியில் ஈடுபடும் நாட்டுமக்களின் முயற்சிகளை மனதின் குரலில் நாம் முன்னிறுத்துகிறோம். அந்த வகையிலே, மூன்று நாட்கள் முன்பாக தேசத்தில் பத்ம விருதுகளை அறிவித்த போது, மனதின் குரலில் இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்த விவாதம் இயல்பாக நடக்கும் ஒன்று. இந்த முறையும் கூட இப்படிப்பட்ட நாட்டுமக்கள் பாலருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டிருந்தன, இவர்கள் களத்தோடு இணைந்து, சமூகத்தில் பெரியபெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயல்களைப் புரிந்திருப்பவர்கள். கருத்தூக்கமளிக்கும் உத்வேகம் நிறைந்த இந்த நபர்களின் வாழ்க்கைப் பயணம் பற்றித் தெரிந்து கொள்வது தொடர்பாக, தேசமெங்கும் அதிக ஆர்வம் காணப்பட்டிருக்கிறது. ஊடகங்களின் தலைப்புச்செய்திகளைத் தாண்டி, செய்தித்தாள்களின் முதல்பக்கங்களுக்கு அப்பால், எந்த ஒரு புகழ் வெளிச்சமும் இல்லாமல் இவர்கள் சமூகச் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாம் இவர்களைப் பற்றி மிகச் சிறிய அளவே ஒரு வேளை அறிந்திருப்போம் ஆனால், இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி அனைத்து விதங்களிலும் விவாதிக்கப்படுகின்றன, மக்களும் இவர்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். பத்மவிருதுகளைப் பெறும் பெரும்பாலானோர், தத்தமது துறைகளில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறார்கள். சிலர் அவசரகால ஊர்திக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள், சிலர் யாருமற்ற அநாதைகளுக்கு குடியிருக்க இடம் அமைத்துத் தருகிறார்கள். சிலர் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, இயற்கைப் பராமரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 650க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பணியிலும் கூட சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். சிலரோ, போதைப்பொருள் மற்றும் மதுபானத்தால் பீடிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சுயவுதவிக் குழுக்கள், குறிப்பாக பெண்சக்தி இயக்கம் வாயிலாக பலர் மக்களை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்ம விருதுகளைப் பெறுபவர்களில் 30 பேர் பெண்கள் என்பது நாட்டுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். இந்தப் பெண்கள், கள அளவில் தங்கள் பணிகள் வாயிலாக சமூகத்தையும், தேசத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, பத்ம விருத்களைப் பெறும் அனைவரின் பங்களிப்பானது, நாட்டுமக்களுக்கு உத்வேகம் அளிக்கவல்லது. இந்த முறை விருது பெறுவோரில் பாரம்பரிய இசை, பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், நாடகத்துறை மற்றும் பஜனை உலகிலே தேசத்திற்குப் பெருமை சேர்ப்போர் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பிராக்கிருதம், மாலவி, லம்பாடி மொழிகளில் பிரமாதமான செயல்களைப் புரிந்தோருக்கும் கூட கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது. அயல்நாடுகளைச் சேர்ந்த பலருக்கு பத்ம விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பணிகளால் பாரத நாட்டு கலாச்சாரம், மரபு ஆகியவற்றுக்குப் புதிய உயர்வு கிடைத்து வருகிறது. இவர்களில் ஃப்ரான்ஸ், தாய்வான், மெக்சிகோ, வங்கதேசத்தைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவார்கள்.
நண்பர்களே, கடந்த ஒரு தசாப்தத்திலே, பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருக்கிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது இது மக்களின் பத்மவாக மாறிவிட்டது. பத்ம விருதுகளை அளிக்கும் முறையில் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதிலே இப்போது தங்களைத் தாங்களே முன்னிறுத்தும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தான், 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த முறை 28 மடங்கு அதிக நியமனங்கள் கிடைத்திருக்கின்றன. பத்ம விருதுகளின் பெருமை, நம்பகத்தன்மை, அதன்மீதான நன்மதிப்பு ஒவ்வொர் ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பது நமக்கு விளங்குகிறது. பத்ம விருதுகளைப் பெறும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு இலக்கு உள்ளது, ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தை நிறைவு செய்யவே பிறப்பெடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. இதன் காரணமாக மக்கள் முழுமையான அர்ப்பணிப்போடு தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். சிலர் சமூக சேவை வாயிலாக, சிலர் இராணுவத்தில் சேர்வது மூலம், சிலரோ அடுத்த தலைமுறைக்குக் கல்வி கற்பிப்பதன் வாயிலாக என்று தங்கள் கடமைகளின்படி ஒழுகி வருகிறார்கள். ஆனால் நண்பர்களே, வாழ்க்கையின் இறுதிக்குப் பிறகும் கூட, சமூக வாழ்க்கையின்பால் தங்களுடைய பொறுப்புக்களை நிறைவேற்றும் சிலரும் கூட நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் கண்டிருக்கும் வழிதான் உடலுறுப்பு தானம். தற்காலத்தில் நாட்டில் ஓராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் மரணத்திற்குப் பிறகு தங்களின் உடலுறுப்புக்களைத் தானமாக அளித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தீர்மானம் எளிதானது அல்ல. ஆனால் இந்தத் தீர்மானம் பலரது உயிர்களைக் காக்கவல்லது. தங்களுடைய நெருங்கிய சொந்தங்களின் இறுதி ஆசைக்கு மதிப்பளித்த அத்தகையோரின் குடும்பங்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று தேசத்திலே பல அமைப்புகள் இந்த திசையிலே பல உத்வேகமளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சில அமைப்புகள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் அதே வேளையில், சில அமைப்புகள் அங்கதானம் செய்ய விருப்பமுடையோரைப் பதிவு செய்வதில் உதவிகரமாகச் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளால் உறுப்புதானம் குறித்த ஆக்கப்பூர்வமான சூழல் தேசத்தில் உருவாகி வருகிறது, மக்களில் உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
என் இனிய நாட்டுமக்களே, நோயாளிகளின் வாழ்க்கையை எளிதாக ஆக்கக்கூடிய, அவர்களின் பிரச்சினைகளைக் குறைக்கக்கூடிய ஒரு நம் நாட்டுக் கண்டுபிடிப்பு பற்றி உங்களிடம் தெரிவிக்க இருக்கிறேன். உங்களில் பலர் ஆயுர்வேதம், சித்தா அல்லது யுனானி மருத்துவமுறைகள் வாயிலாக சிகிச்சையை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த நோயாளிகள், இதே முறையின் வேறு ஒரு மருத்துவரிடம் செல்லும் போது இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சிகிச்சை முறைகளில் நோய்களின் பெயர்கள், சிகிச்சை மற்றும் மருந்துகள் விஷயத்தில் பொதுவான பதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு மருத்துவரும் தங்கள் வழிமுறைப்படி நோயின் பெயர் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை எழுதுகிறார்கள். வேறு ஒரு மருத்துவருக்குப் பலமுறை புரிதலில் கடினத்தை அடிக்கடி இது ஏற்படுத்துகிறது. பல தசாப்தங்களாகத் தொடர்ந்தவரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளோடு தொடர்புடைய தரவுகளையும், அகராதியையும் வகைப்படுத்தியிருக்கிறது, இதிலே உலக சுகாதார அமைப்பும் உதவி புரிந்திருக்கிறது. இருவரின் முயற்சிகளின்படி ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா சிகிச்சை முறைகளில் நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான அகராதியின் தனிக்குறியீடு செய்யப்பட்டுவிட்டது. இந்த தனிக்குறியாக்க முறையின் உதவியால், இப்போது அனைத்து மருத்துவர்களும் மருத்துவக் குறிப்பு அல்லது மருந்துச் சீட்டில் ஒரே மாதிரியான மொழியில் எழுத முடியும். இதனால் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் இந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவரிடம் சென்றீர்களென்றால், அந்த மருத்துவருக்கு இதன் முழு விபரமும் கிடைத்து விடும். உங்களது நோய், சிகிச்சை, மருந்துகள் என்னென்ன, எப்போதிலிருந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறீர்கள், உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை என்ன என அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு இந்தச் சீட்டு உதவிகரமாக இருக்கும். ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு இதனால் மேலும் ஒரு நன்மை உண்டாகும். பிற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும் கூட நோய், மருந்து மற்றும் அதன் தாக்கம் பற்றிய முழுத் தகவலும் கிடைக்கும். ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவும், பல விஞ்ஞானிகளோடு இணைவதாலும் இந்த சிகிச்சை முறை, மேலும் சிறப்பான விளைவுகளை அளிக்கும், மக்களுக்கும் இவற்றின்பால் ஈர்ப்பும் அதிகரிக்கும். இந்த ஆயுஷ் வழிமுறைகளோடு இணைந்திருக்கும் நமது மருத்துவர்கள், இந்தத் தனிக் குறியீட்டு முறையை மிக விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனது நண்பர்களே, ஆயுஷ் சிகிச்சை முறை பற்றிப் பேசி வரும் போது, என் கண்முன்னால் யானுங்க் ஜாமோஹ் லைகோவின் படமும் விரிகிறது. செல்வி. யானுங்க், அருணாச்சல் பிரதேசத்தில் வசிப்பவர், மருத்துவத் தாவரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர். இவர் பழங்குடி மக்களின் பாரம்பரிய சிகிச்சைமுறைக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டி, கணிசமான பணிகளைச் செய்திருக்கிறார். இந்தப் பங்களிப்பிற்காக இவருக்கு இந்த முறை பத்ம விருதும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, இந்த முறை சத்தீஸ்கட்டின் ஹேமசந்த் மாஞ்ஜீ அவர்களுக்கும் கூட பத்ம விருது அளிக்கப்பட்டிருக்கிறது. வைத்யராஜ் ஹேமசந்த் மாஞ்ஜீ அவர்களும் ஆயுத் சிகிச்சை முறையின் துணையோடு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சத்தீஸ்கட்டின் நாராயன்பூரைச் சேர்ந்த ஏழை நோயாளிகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சேவையாற்றி வருகிறார். நமது தேசத்தின் ஆயுர்வேத மற்றும் தாவர மருந்துகளின் அறியப்படாதிருக்கும் களஞ்சியத்தைப் பராமரிப்பதிலே யானுங்க், ஹேமசந்த் போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் வாயிலாக நமக்கிடையேயான உறவு, இது பத்தாண்டுகள் பழமையானதாக ஆகியிருக்கிறது. சமூக ஊடகங்களும், இணையமும் கோலோச்சும் இந்தக் காலகட்டத்திலும் கூட, வானொலி நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடமாக இருக்கிறது. வானொலியின் பலம் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது, இதன் ஆச்சரியமான எடுத்துக்காட்டு, சத்தீஸ்கட்டிலே காணக் கிடைக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாகவே இங்கே மக்களுக்கு விருப்பமான ஒரு நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது. இதன் பெயர் ஹமர் ஹாதீ – ஹமர் கோட். பெயரைக் கேட்டவுடனே வானொலிக்கும், யானைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று எண்ணமிடத் தோன்றும். ஆனால் இதில் தான் வானொலியின் அழகே அடங்கியிருக்கிறது. சத்தீஸ்கட்டில் ஆகாசவாணியின் நான்கு நிலையங்களான அம்பிகாபூர், ராய்பூர், பிலாஸ்பூர் மற்றும் ராய்கட்டில், ஒவ்வொரு மாலையும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது என்பதோடு, சத்தீஸ்கட்டின் காடுகளிலும், அதற்கருகில் இருக்கும் பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த கவனத்தோடு இந்த நிகழ்ச்சியைக் கேட்டு வருகிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். யானைக்கூட்டம் காட்டிலே எந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் ஹமர் ஹாதீ –ஹமர் கோட் என்ற இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல் இங்கிருப்போருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது. வானொலி வாயிலாக யானைகளின் கூட்டம் பற்றிய தகவல் தெரிந்தவுடனேயே மக்கள் எச்சரிக்கை அடைகிறார்கள். எந்தப் பாதையில் யானைகள் பயணிக்கின்றன என்று அறிந்து கொண்டு, அங்கே செல்லாமல் இருப்பதால் அபாயம் தவிர்க்கப்படுகிறது. இதனால் ஒருபுறம் யானைகளின் கூட்டத்தால் இழப்பிற்கான சாத்தியக்கூறு குறைகிறது, மறுபுறத்தில் யானைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதிலும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்தத் தரவுகளின் பயன்பாடு, எதிர்காலத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் உதவிகரமாக இருக்கும். யானைகளோடு தொடர்புடைய தகவல்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இதனால் காடுகளின் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு, யானைகளோடு இசைவாக வாழ்வது எளிதாக ஆகியிருக்கிறது. சத்தீஸ்கட்டின் இந்த விநோதமான முன்னெடுப்பு மற்றும் இதன் அனுபவங்களால் ஆதாயத்தைக் கண்டு, தேசத்தின் பிற வனப்பிரதேசங்களில் வசிப்போரும் இதைப் பின்பற்றி ஆதாயம் அடையலாம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று நாமனைவரும் தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடினோம். நமது கௌரவம்மிக்க ஜனநாயகப் பாரம்பரியங்களுக்கான ஒரு சிறப்பான தினம் ஆகும் இது. இன்று தேசத்தில் சுமார் 96 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்தப் எண்ணிக்கை எத்தனை பெரியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விடவும் மூன்று பங்கு பெரியது. ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகையை விடவும் இது ஒண்ணரை பங்கு அதிகமானது. வாக்குச்சாவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தேசத்தில் இன்று இவற்றின் எண்ணிக்கை சுமார் பத்தரை இலட்சம் இருக்கிறது. பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும், தனது ஜனநாயகக் கடமையைப் பயன்படுத்த இயல வேண்டும் என்பதற்காக, நமது தேர்தல் ஆணையம், ஒரே ஒரு வாக்காளர் இருக்கும் இடங்களிலும் கூட வாக்குச் சாவடியை அமைக்கப்படுகிறது. தேசத்தில் ஜனநாயக மதிப்பீடுகளைப் பலப்படுத்தும் வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமது தேர்தல் ஆணையத்தையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.
நண்பர்களே, இன்று தேசத்தில் உற்சாகமான விஷயம் என்னவென்றால், உலகின் பல நாடுகளில் வாக்களிப்போரின் சதவீதம் குறைந்து வரும் வேளையில், பாரதத்தில் வாக்களிப்போரின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. 1951-52இலே, தேசத்திலே முதன்முறையாக தேர்தல் நடந்த போது, சுமார் 45 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள். இன்று இந்தப் புள்ளிவிவரம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. தேசத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையோடு கூடவே, வாக்களிப்பும் அதிகரித்திருக்கிறது. நமது இளையதலைமுறை வாக்காளர்களுக்கான பதிவிற்கான வாய்ப்பு அதிகம் அளிக்கப்பட வேண்டி, இதற்காக அரசாங்கம் சட்டமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்கிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு சமூக அளவிலும் பல முயற்சிகள் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சிலர் வீடுதோறும் சென்று வாக்களிப்பு பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிக்கிறார்கள், சிலர் சித்திரங்கள் வாயிலாகவும், சிலரோ தெருமுனை நாடகங்கள் மூலமாகவும் இளைஞர்களின் கருத்தைக் கவரும் வகையில் பணிபுரிகிறார்கள். இப்படியான அனைத்து முயற்சிகளும், நமது மக்களாட்சி என்ற உற்சவத்திலே, பல்வேறு வண்ணங்களை இட்டு நிரப்புகிறது. வாக்காளர் பட்டியிலில் உங்கள் பெயரை கண்டிப்பாக இணைத்துக் கொள்ளுங்கள் என்று முதல்முறையாக வக்களிக்கப்போகும் நமது வாக்காளர்களிடம் மனதின் குரல் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன். தேசிய வாக்காளர் சேவைத் தளம் மற்றும் வாக்காளர் உதவி எண் செயலி வாயிலாக, அவர்கள் எளிதாக இதை இணையம் மூலமாக நிறைவு செய்ய முடியும். உங்களுடைய ஒரு வாக்கு, தேசத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடும், தேசத்தின் எதிர்காலமாக ஆகக் கூடும் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இன்று ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று பாரதத்தின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பிறந்த நாளாகும். இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தேசபக்தியின் உதாரணத்தை நிலைக்கச் செய்தவர்கள். பஞ்சாபின் சிங்கமான லாலா லாஜ்பத் ராய் அவர்களுக்கு இன்று தேசம் நினைவாஞ்சலிகளை அளித்து வருகிறது. லாலா அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் எப்படிப்பட்ட வீரராக இருந்தாரென்றால், அந்நிய ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்றுத்தரும் நோக்கத்தில் தனது இன்னுயிரையே ஆகுதியாக அளித்தார். லாலா அவர்களின் ஆளுமையானது சுதந்திரப் போராட்டத்தோடு மட்டும் நின்று போகவில்லை. அவர் மிகுந்த தொலைநோக்குப் பார்வை உடையவராக இருந்தார். பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் பிற அமைப்புக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார் இவர். இவருடைய நோக்கம் அந்நியர்களை நாட்டை விட்டு விரட்டுவது மட்டுமல்ல, மாறாக, தேசத்தைப் பொருளாதாரரீதியாக பலப்படுத்தும் தொலைநோக்கும் கூட இவருடைய எண்ணத்தில் முக்கிய பங்கு வகித்தது. இவருடைய கருத்துக்களும், இவருடைய உயிர்த்தியாகமும் பகத் சிங்கின் மனதிலே பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஃபீல்ட் மார்ஷல் கே. எம். கரியப்பா அவர்களுக்கும் நான் சிரத்தையுடனான அஞ்சலிகளை அளிக்கும் தினம் இன்று. இவர் வரலாற்றின் மகத்துவமான காலத்தில் நமது படைக்குத் தலையேற்று, சாகஸம் மற்றும் வீரத்தின் எடுத்துக்காட்டாக விளங்கினார். நமது இராணுவத்தை சக்தியுடையதாக ஆக்குவதில் இவருடைய மகத்துவமான பங்களிப்பு உண்டு.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, இன்று விளையாட்டு உலகிலேயும் கூட பாரதம் தினம்தினம் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. விளையாட்டுலகில் முன்னேறிச் செல்ல, விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், தேசத்தில் நிறைய விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பன அவசியமானது. இந்த எண்ணத்தோடு கூடவே இன்று பாரதத்தில் புதியபுதிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் சென்னையில் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதிலே தேசத்தின் 5000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தார்கள். இன்று பாரதத்தில் தொடர்ந்து இப்படிப்பட்ட புதிய தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன, இவை காரணமாக விளையாட்டு வீரர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. கடற்கரை விளையாட்டுக்கள் இதே போன்றதொரு தளமாக ஆகியிருக்கிறது. தீவ் தீவிலே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீவ் தீவு, மத்திய யூனியன் பிரதேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள், சோமநாத்துக்கு மிக அருகிலே இது இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தீவில் இந்தக் கடற்கரை விளையாட்டுக்கள் தொடக்கி வைக்கப்பட்டன. இது பாரதத்தின் முதல் பல்விளையாட்டு கடற்கரை விளையாட்டுக்கள் ஆகும். இவற்றிலே டக் ஆஃப் வார், கடல் நீச்சல், பென்காக்சிலாட், மல்லகம்பம், பீச் வாலிபால், பீச் கபடி, பீச் கால்பந்தாட்டம், பீச் குத்துச்சண்டை போன்ற போட்டிகள் நடைபெற்றன. இவற்றிலே அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது, கடல் பகுதிகள் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கூட இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தப் போட்டியில் அதிக அளவில் பதக்கங்களை மத்திய பிரதேசம் வென்றது, இங்கே கடற்கரை என்பதே கிடையாது. விளையாட்டுக்களின்பால் இந்தக் கண்ணோட்டம், எந்த ஒரு தேசத்தையும், விளையாட்டுக்களின் உலகின் மகுடமணியாக ஆக்கவல்லது.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. பிப்ரவரியிலே மீண்டும் ஒருமுறை உங்களை வந்து சந்திப்பேன். நாட்டுமக்களின் சமூக முயற்சிகளால், தனிப்பட்ட முயற்சிகளால் எப்படி தேசம் முன்னேறி வருகிறது, இது குறித்தே நமது கவனம் இருக்கும். நண்பர்களே, நாளை 29ஆம் தேதியன்று காலையில் பரீக்ஷா பே சர்சா, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. தேர்வுகளை எதிர்கொள்வோமின் இது 7ஆவது பதிப்பாகும். அனைவரும் எப்போதும் ஆவலோடு காத்திருந்து கேட்கும் வகையிலான நிகழ்ச்சி இது. இதனால் மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது, அவர்களுடைய தேர்வுகள் தொடர்பான மனவழுத்ததைக் குறைக்கும் முயற்சிகளில் நான் ஈடுபடுகிறேன். கடந்த ஏழாண்டுகளிலே, பரீக்ஷா பே சர்ச்சா, கல்வி மற்றும் தேர்வுகளோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் குறித்து உரையாட ஒரு மிகச் சிறந்த ஊடகமாக ஆகி இருக்கிறது. இந்த முறை இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இதிலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள், தங்கள் உள்ளீடுகளையும் அளித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் முதன்முறையாக 2018இலே இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிய வேளையில் இந்த எண்ணிக்கை வெறும் 22,000ஆக இருந்தது. மாணவச் செல்வங்களுக்கு உத்வேகம் அளிக்கவும், தேர்வுகளின் அழுத்தங்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்பவும், பல நூதனமான முயற்சிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. நாளை சாதனைப் பதிவேற்படுத்தும் எண்ணிக்கையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில், மாணவச் செல்வங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களோடு கலந்து பேசுவது எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்தச் சொற்களோடு நான் மனதின் குரலின் இந்தப் பதிப்பினை நிறைவு செய்கிறேன், உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். விரைவிலேயே நாம் மீண்டும் சந்திப்போம். நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, மனதின் குரலைக் கேட்கும் பலர், கடிதங்கள் வாயிலாக தங்களுடைய மறக்கமுடியாத கணங்களை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள். 140 கோடி பாரத நாட்டவர்களின் சக்தி என்னவென்றால், இந்த ஆண்டு, நமது தேசமானது பல விசேஷமான சாதனைகளைப் படைத்திருக்கிறது. இந்த ஆண்டு தான் நாரீ சக்தி வந்தன் அதிநியம், அதாவது பெண்சக்தியைப் போற்றும் சட்டம் பல ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. பாரதநாடு 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகியிருப்பதில் தங்களுடைய மகிழ்ச்சியை பலர் கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியை பலர் எனக்கு நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நண்பர்களே, இன்று பாரதத்தின் அனைத்து இடங்களிலும் தன்னம்பிக்கை நிரம்பியிருக்கிறது, வளர்ச்சியடைந்த பாரதம் உணர்வு, சுயசார்பு என்ற உணர்வு எங்கும் நிறைந்திருக்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரச் சொற்களின் மகத்துவத்தை தீபாவளியின் போது சாதனை படைக்கும் வர்த்தகம் மூலமாக மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
நண்பர்களே, இன்றும் கூட சந்திரயான் – 3இன் வெற்றி தொடர்பாக பலர் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். என்னைப் போலவே, நீங்களும் கூட, நம்முடைய விஞ்ஞானிகள், குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் தொடர்பாக பெருமிதம் கொள்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, நாட்டூ நாட்டூ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த போது தேசம் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்தது. ‘The Elephant Whisperers’ படத்திற்கு விருது கிடைத்த வேளையில் யார் தான் உவகை பூத்திருக்க மாட்டார்கள்? இவற்றின் வாயிலாக உலகம் பாரதத்தின் படைப்பாற்றலைக் கண்டது, சுற்றுச்சூழலோடு நமக்கிருக்கும் லயிப்பைப் புரிந்து கொண்டது. இந்த ஆண்டு, விளையாட்டுக்களிலும் கூட, நமது தடகள வீரர்கள், வலுவான முறையிலே தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் வென்றார்கள். கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாரத விளையாட்டு வீரர்கள் நன்கு விளையாடி அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டார்கள். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி 20 உலகக் கோப்பையில் நமது பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றி மிகவும் உத்வேகமளிக்க வல்லது. பல விளையாட்டுக்களில் விளையாட்டு வீரர்களின் சாதனைகள் வாயிலாக தேசத்திற்கு பெருமை உண்டானது. இப்போது 2024ஆம் ஆண்டு, பாரீஸ் நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறும், இதற்காக நாடனைத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
நண்பர்களே, நாமனைவரும் இணைந்து முயன்ற போது, நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப் பெரிய ஆக்கப்பூர்வமான தாக்கம் உண்டானது. சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும், என் மண் என் தேசம் போன்ற வெற்றிகரமான இயக்கங்களையும் கண்டிருக்கிறோம். இதில் கோடானுகோடி மக்களின் பங்கெடுப்பு மட்டுமே நம்மனைவருக்கும் சான்று பகர்கிறது. 70,000 அமுத நீர்நிலைகளை நிறுவியது என்பது நமது சமூகரீதியான சாதனை.
நண்பர்களே, எந்த ஒரு தேசம் புதுமைகள் படைத்தலுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கவில்லையோ, அதன் வளர்ச்சி தடைப்படும் என்பது என்னுடைய நம்பிக்கை. புதுமைகள் படைத்தலின் மையமாக பாரதம் ஆகியிருப்பது, நாம் தடைப்படப் போவது இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 2015ஆம் ஆண்டிலே Global Innovation Index - உலக புதுமைகள் படைத்தல் குறியீட்டில் நாம் தரவரிசையில் 81ஆவதாக இருந்தோம். ஆனால் இன்றோ நமது தரவரிசை 40ஐ எட்டியிருக்கிறது. இந்த ஆண்டு பாரதம் விண்ணப்பித்திருக்கும் காப்புரிமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, இதிலே சுமார் 60 சதவீதம் உள்நாட்டு நிதியைச் சார்ந்திருந்திருக்கின்றன. QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்த முறை அதிக எண்ணிக்கையில் பாரதநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருந்தன. இப்படிப்பட்ட சாதனைகளை நான் பட்டியலிடத் தொடங்கினால், இதை என்னால் முழுவதுமாக முடிக்க முடியாது. பாரதநாட்டின் திறமைகள் எத்தனை வல்லமையோடு இருக்கின்றன என்பதற்கு இது ஒரு காட்சி மட்டுமே. தேசத்தின் இந்த வெற்றிகளால், நாட்டுமக்களின் இந்தச் சாதனைகளால், உத்வேகம் பெற வேண்டும், பெருமிதம் கொள்ள வேண்டும், புதிய உறுதிகளை மேற்கொண்டாக வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய குடும்பச் சொந்தங்களே, பாரதம் பற்றி எல்லாத் திசைகளிலும் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை, உற்சாகம் பற்றிப் பேசினோம், இந்த நம்பிக்கையும், உற்சாகமும் மிகவும் நல்லது தான். பாரதம் முன்னேறும் போது, இதனால் அதிக ஆதாயம் அடைவது இளைஞர்கள் தாம். ஆனால் இளைஞர்கள் அதிக உடலுறுதியோடு இருக்கும் போது தான், அவர்களால் இந்த அதிக ஆதாயத்தை அனுபவிக்க முடியும். இப்போதெல்லாம் வாழ்க்கைமுறை தொடர்பான நோய்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது, இது நம்மனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக கவலை அளிக்கும் விஷயமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த மனதின் குரலுக்கு ஃபிட் இண்டியா தொடர்பான உள்ளீடுகளை அனுப்பி வைக்குமாறு நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நீங்கள் எல்லோரும் அளித்த பதில்கள் எனக்கு உற்சாகத்தை அளித்தன. நமோ செயலியில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப்புகளும் கூட எனக்கு ஆலோசனைகளை அனுப்பியிருந்தார்கள், அவர்கள் தங்களுடைய பலவகையான வித்தியாசமான முயற்சிகளைப் பற்றித் தெரிவித்திருந்தார்கள்.
நண்பர்களே, பாரதம் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 2023ஆம் ஆண்டு, சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக இந்தத் துறையில் பணியாற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் வாய்த்தன, இவற்றில் லக்னவில் தொடங்கப்பட்ட கீரோஸ் ஃபுட்ஸ், பிரயாக்ராஜில் தொடங்கப்பட்ட கிராண்ட்மா மில்லட்ஸ் மற்றும் ந்யூட்ராசியூட்டிகல் ரிச் ஆர்கானிக் இண்டியா போன்ற பல ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன. ஆல்பினோ ஹெல்த் ஃபுட்ஸ், ஆர்போரியல் மற்றும் கீரோஸ் ஃபுட்ஸ் ஆகியவற்றோடு இணைந்த இளைஞர்கள், ஆரோக்கியமான உணவு தொடர்பான தேர்வுகள் குறித்து புதியபுதிய நூதனமான கண்டுபிடிப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். பெங்களூரூவின் அன்பாக்ஸ் ஹெல்த்தோடு தொடர்புடைய இளைஞர்கள், எப்படி மக்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்வதில் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதைத் தெரிவித்தார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஈடுபாடு எப்படி வளர்ந்து வருவதைப் போலவே, இந்தத் துறையோடு இணைந்த பயிற்றுநர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஜோகோ டெக்னாலஜீஸ் போன்ற ஸ்டார்ட் அப்புகள், இந்தத் தேவையை நிறைவு செய்வதில் உதவிகரமாக இருக்கிறார்கள்.
நண்பர்களே, இன்று உடல் ஆரோக்கியம் மற்றும் நலன் பற்றிய பேச்சுக்கள் நிறைய நடக்கின்றன, ஆனால் இதோடு தொடர்புடைய ஒரு பெரிய பக்கம் என்பது மனநலம். மும்பையைச் சேர்ந்த இன்ஃபீ-ஹீல் மற்றும் யுவர் தோஸ்த் போன்ற ஸ்டார்ட் அப்புகள், மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றி வருவதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. இது மட்டுமல்ல, இன்று இதன் பொருட்டு, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நண்பர்களே, நான் இங்கே சில ஸ்டார்ட் அப்புகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன், ஏனென்றால், பட்டியல் மிகவும் நீளமானது. ஃபிட் இண்டியா என்ற கனவை மெய்ப்படச் செய்யும் திசையில், புதுப்புது உடல்நல ஸ்டார்ட் அப்புகள் பற்றி எனக்குக் கண்டிப்பாக எழுதி வாருங்கள் என்று நான் உங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து தகவல் அளிக்கும், புகழ்மிக்க நபர்களின் அனுபவங்களை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
முதல் செய்தி, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடையது. இவர் உடலுறுதி, குறிப்பாக மனவுறுதி, அதாவது மனநலன் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார்.
****Audio*****
இந்த மனதின் குரலில் மனநலம் பற்றிப் பேசுவதை என் பேறாகக் கருதுகிறேன். மனநோய்களும், நமது நரம்பியல் அமைப்பை நாம் பராமரிப்பது என்பதும் நேரடியாகத் தொடர்புடையன. நமது நரம்பியல் அமைப்பை நாம் எத்தனை நிலையாகவும், தொந்திரவு இல்லாமலும் வைத்திருக்கிறோம் என்பது, நமக்குள் நாம் எத்தனை இனிமையாக உணர்கிறோம் என்பதைத் தீர்மானம் செய்யும். அமைதி, அன்பு, ஆனந்தம், துயரம், மனவழுத்தம், அளப்பரிய மகிழ்ச்சி என்று நாம் அழைப்பவற்றிற்கு எல்லாம், ஒரு வேதியியல் மற்றும் நரம்பியல் ஆதாரம் உள்ளது. மருந்தியல் என்பது வெளியிலிருந்து வேதிப் பொருட்களைச் செலுத்தி, உடலின் வேதியியல் சீரற்ற நிலையைச் சரி செய்வது என்பது தான். மனநோய்கள் இந்த வகையில் தாம் கையாளப்படுகின்றன; ஆனால் வெளியிலிருந்து வேதிப் பொருட்களை மருந்துகளாக எடுப்பது என்பது மிகவும் தீவிரமான நிலைகளில் ஒருவர் இருக்கும் வேளையில் தான் என்பதை நாம் உணர வேண்டும்.
உள்ளக மனநலச் சூழலாகட்டும், நமக்குள்ளேயான சீரான வேதியியல் ஆகட்டும், அமைதி, சந்தோஷம், ஆனந்தம் என்பன ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையிலும், ஒரு சமூகத்தின் கலாச்சார வாழ்விலும், உலக நாடுகள் எங்கிலும், ஒட்டுமொத்த மனித சமூகத்திலும் கொண்டு வரப்பட வேண்டிய ஒன்று. நமது மனநலனை நாம் புரிந்து கொள்வது முக்கியமானது, மனதின் சீர்நிலை என்பது மென்மையான சிறப்புரிமை. இதனை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். இதன் பொருட்டு யோக முறையில் பல மட்டங்களில் பயிற்சிகள் இருக்கின்றன. இந்தச் செயல்பாட்டின் எளிமையான பயிற்சிகளை மக்கள் மேற்கொள்ளும் போது, அவர்களின் நரம்பியல் அமைப்பில் ஒருவகை சீர்நிலையும், உறுதியான நிதானமும் ஏற்படுத்த முடியும். உள்மன நலனின் தொழில்நுட்பங்களையே நாம் யோகிக் அறிவியல் என்று அழைக்கிறோம். இவற்றை நாம் செயல்படுத்துவோம்.
மிக எளிய முறையில் சத்குரு அவர்கள், இப்படிப்பட்ட சிறப்பான வழிமுறைகளைத் தன்னுடைய உரையிலே முன்வைப்பதில் சமர்த்தராக அறியப்படுபவர்.
வாருங்கள், இப்போது நாம் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்மன்ப்ரீத் கௌர் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம்.
****Audio*****
வணக்கம். நாட்டுமக்களுக்கு மனதின் குரல் வாயிலாக நான் சில விஷயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். மதிப்பிற்குரிய பிரதம மந்திரி நரேந்திர மோதி அவர்களின் ஃபிட் இண்டியா முன்னெடுப்பு தான் என்னுடைய உடலுறுதி மந்திரத்தை உங்களோடு பகிர எனக்கு ஊக்கமளித்தது. அனைவருக்கும் என்னுடைய முதல் ஆலோசனை என்னவென்றால், மோசமான உணவுப்பழக்கம் இருந்தால், அதைத் தாண்டி எந்த ஒரு பயிற்சியும் பயனளிக்காது. அதாவது, நீங்கள் எப்போது உண்கிறீர்கள், என்ன உண்கிறீர்கள் என்பவை பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்மையில் தான் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி மோதி அவர்கள், அனைவரையும் சிறுதானியமான கம்பை உண்ண ஊக்கமளித்தார். இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, நீடித்த விவசாயத்தைச் செய்ய உதவிகரமாக இருக்கிறது, செரிப்பதிலும் எளிதாக இருக்கிறது. சீரான உடற்பயிற்சியும், 7 மணிநேரம் உறக்கமும் உடலுக்கு மிகவும் அவசியமானது, உடலுறுதியோடு இருக்க இது உதவிகரமாக இருக்கிறது.
இதற்காக மிகவும் ஒழுங்கும், சீரான செயல்பாடும் அவசியமாகும். இதன் பலன் உங்களுக்குக் கிடைக்கத் தொடங்கிய பிறகு, தினசரி நீங்களே உடல்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் அனைவரோடும் உரையாடவும், என்னுடைய உடலுறுதிக்கான உத்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நான் மதிப்பிற்குரிய பிரதம மந்திரிக்கு பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
ஹர்மன்ப்ரீத் அவர்களைப் போன்ற புகழ்மிக்க விளையாட்டு வீரர்களின் சொற்கள் கண்டிப்பாக, உங்களனைவருக்கும் உத்வேகமளிக்கும்.
வாருங்கள், கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம். சதுரங்கம் என்ற விளையாட்டிற்கு உறுதியான மனநலம் என்பது எத்தனை அவசியமானது என்பதை நாமனைவருமே அறிவோம் இல்லையா?
****Audio*****
வணக்கம், நான் விஸ்வநாதன் ஆனந்த், நான் சதுரங்கம் விளையாடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், உடலுறுதிக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்று பல வேளைகளில் என்னிடம் கேட்கப்படுவதுண்டு. சதுரங்கம் விளையாட ஏராளமாக ஒருமுகமான கவனமும், பொறுமையும் தேவை. இதற்காக என்னை உளவுறுதியோடும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள நான் மேற்கொள்பவற்றைப் பகிர்கிறேன். வாரம் இருமுறை நான் யோகம் பயில்கிறேன், இருதயப் பயிற்சிகளை வாரம் இருமுறை பயில்கிறேன், உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை, ஸ்ட்ரெட்சிங், பளுதூக்கல் பயிற்சி ஆகியவற்றைச் செய்ய வாரம் ஒரு நாளை ஒதுக்குகிறேன். இவை அனைத்தும் சதுரங்கம் விளையாட மிக முக்கியமானவை.
6 முதல் 7 மணிநேரம் தாக்குப்பிடிக்கத் தேவையான தீவிரமான மூளைச் செயல்பாட்டிற்கு போதுமான சக்தி தேவை, அதே நேரம் சௌகரியமாக அமர்ந்திருக்க, வளைந்து கொடுக்கும் தன்மை தேவை, ஒரு சிக்கலில், பொதுவாக அது ஒரு சதுரங்க விளையாட்டாக இருக்கும், அந்தக் கட்டத்தில் மனதை ஒருநிலைப்படுத்த சுவாஸத்தை ஒழுங்குபடுத்தல் உதவிகரமாக இருக்கும். மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் நான் அளிக்க விரும்பும் உள்ள மற்றும் உடலுறுதிக்கான ரகசியம் என்னவென்றால், மேற்கொள்ளவிருக்கும் பணியின் மீது மனதைச் செலுத்தி, அமைதியாக இருப்பது மட்டுமே. மேலும் ஒரு முக்கியமான உத்தி, இரவில் நல்ல உறக்கத்தில் ஆழ்வது. ஓரிரவில் 4 அல்லது 5 மணிநேரம் மட்டுமே உறங்காதீர்கள். 7 அல்லது 8 மணிநேரமாவது உறங்குவது என்பது மிகவும் குறைந்தபட்சத் தேவை; ஆகையால் நல்ல இரவு உறக்கம் அவ்சியம். அப்போது தான் அடுத்த நாள் காலையில் நீங்கள் அமைதியோடும் நிதானத்தோடும் செயல்பட முடியும். உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுக்குள் இருக்கும் வேளையில், உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளை நீங்கள் எடுக்க மாட்டீர்கள். என்னைப் பொறுத்த மட்டில் உள்ளமும், உடலும் உறுதியாக இருக்க, உறக்கம் என்பது மிக முக்கியமான உத்தி.
வாருங்கள், இப்போது அக்ஷய் குமார் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம்.
****Audio*****
வணக்கம், நான் அக்ஷய குமார், மனதின் குரல் என்னுடைய மனதின் குரலை வெளிப்படுத்த எனக்கு சிறியதொரு வாய்ப்பை அளித்தமைக்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கு நான் என் பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நான் உடலுறுதி தொடர்பாகவும், இயற்கையான வகையிலே உடலுறுதியாகவும் இருப்பதில் எத்தனை பேரார்வம் கொண்டவன் என்பது உங்களனைவருக்கும் நன்றாகத் தெரியும். பகட்டான உடல்பயிற்சி மையங்களை விட அதிகம் நீச்சலடிப்பது, பேட்மிண்டன் விளையாடுவது, படிகளில் ஏறுவது, கரலாக்கட்டை சுற்றுவது, ஆரோக்கியமான உணவை உண்பது போன்றவற்றையே நான் விரும்புகிறேன்; சுத்தமான நெய்யை சரியான அளவு எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால் பல இளைஞர்கள், குண்டாகி விடுவோம் என்ற காரணத்தால் நெய்யைப் பயன்படுத்தாமல் இருப்பதை என்னால் காண முடிகிறது. நமது உடலுறுதிக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, ஏதோ ஒரு திரையுலக நட்சத்திரத்தின் உடலைப் பார்த்து அல்ல. திரையில் தெரியும் நட்சத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. பலவகையான ஃபில்டர்கள், ஸ்பெஷல் இஃபெக்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றைப் பார்த்து, நாமும் நமது உடலை மாற்றியமைக்கத் தவறான வழிமுறைகள், குறுக்குவழிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றோம். இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொண்டு, சிக்ஸ் பேக்குகள்-எய்ட் பேக்குகள் என்றெல்லாம் உடலை ஆக்கிக் கொள்கிறார்கள். நண்பர்களே, இப்படிப்பட்ட குறுக்குவழிகளால் உடல் மேலோட்டமாக கவர்ச்சிகரமாக இருந்தாலும், உள்ளுக்குள்ளே உளுத்துப் போகிறது. குறுக்குவழிகள் உங்கள் வாழ்க்கையைக் குறுக்கி விடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவை குறுக்குவழி அல்ல, நீண்டகால உடலுறுதி. நண்பர்களே, உடலுறுதி என்பது ஒருவகை தவம். அது உடனடி காப்பி அல்லது 2 நிமிட நூடுல்கள் போன்றது இல்லை. இந்தப் புத்தாண்டில், எந்த வேதிப் பொருட்களையும் பயன்படுத்த மாட்டேன், எந்தக் குறுக்குவழி உடல்பயிற்சியையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே உறுதியெடுத்துக் கொள்ளுங்கள், யோகாஸனம் பயிலுங்கள், நன்கு உண்ணுங்கள், நேரத்திற்கு உறங்குங்கள், கொஞ்சம் தியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், மிகவும் முக்கியமாக, நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்களோ, அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்குப் பிறகு, ஃபில்டர் சார்ந்த வாழ்க்கை அல்ல, ஃபிட்டான வாழ்க்கையை வாழுங்கள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். ஜய் மஹாகால்.
இந்தத் துறையில் பல ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன என்பதால், இந்தத் துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் இளைஞரான ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனரையும் உரையாடலில் இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினேன்.
****Audio*****
வணக்கம், நான் ரிஷப் மல்ஹோத்ரா, நான் பெங்களூரூவில் வசிக்கிறேன். மனதின் குரலில் உடலுறுதி தொடர்பான உரையாடல் நடைபெறுகிறது என்பதை அறிந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானே கூட உடலுறுதி உலகினைச் சேர்ந்தவன் தான், பெங்களூரூவில் எங்களுடைய ஒரு ஸ்டார்ட் அப் இருக்கிறது, இதன் பெயர் தகடா ரஹோ. பாரத நாட்டின் பாரம்பரியமான உடல்பயிற்சி முறைகளை வெளிக்கொணர வேண்டியே எங்களுடைய ஸ்டார்ட் அப் உருவக்கப்பட்டிருக்கிறது. பாரதநாட்டின் பாரம்பரியமான உடல்பயிற்சி முறையில் ஒரு அற்புதமான உடல்பயிற்சி இருக்கிறது, இதை கதா வியாயாம் என்பார்கள், எங்களுடைய மொத்த கவனமும் கதா மற்றும் முக்தர் உடற்பயிற்சியிலேயே இருக்கிறது. எப்படி கதாவிலிருந்து அனைத்துப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறீர்கள் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கதா வியாயாம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒன்று, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதநாட்டில் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இதை சிறிய-பெரிய மல்யுத்தப் பயிற்சி மையங்களில் பார்த்திருக்கலாம், எங்களுடைய ஸ்டார்ட் அப் வாயிலாக, நாங்கள் இதற்கு ஒரு நவீன வடிவம் அளித்து மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நாடெங்கிலும் எங்களுக்கு மிகுந்த ஆதரவும் அன்பும் கிடைத்திருக்கிறது. இதைத் தவிர, பாரத நாட்டில் பண்டைய உடற்பயிற்சிகள் பல இருக்கின்றன, உடல்நலம், உடலுறுதி தொடர்பான விதிமுறைகள் இருக்கின்றன, இவற்றை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும், உலகின் முன்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று மனதின் குரல் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். நான் உடலுறுதி உலகைச் சார்ந்தவன் என்பதால், உங்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன். கதா வியாயாம் வாயிலாக நீங்கள் உங்களுடைய பலம், உங்களுடைய சக்தி, உங்களுடைய தோற்ற அமைவு, உங்களுடைய சுவாஸம் ஆகியவற்றைக் கூட சரி செய்து கொள்ள முடியும் என்பதால், கதா வியாயாமை கைக்கொள்ளுங்கள், முன்னேறுங்கள். ஜய் ஹிந்த்.
நண்பர்களே, அனைவரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள் ஆனால், அனைவரின் மந்திரமும் ஒன்று தான் – ஆரோக்கியமாக இருங்கள், உடலுறுதியோடு இருங்கள் என்பது தான். 2024ஆம் ஆண்டைத் துவக்க, உங்களுடைய உடலுறுதியை மேற்கொள்வதைக் காட்டிலும் சிறப்பான உறுதிப்பாடு வேறு என்னவாக இருக்க முடியும்.
என் குடும்ப உறவுகளே, சில நாட்களுக்கு முன்பாக, காசியிலே ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை மனதின் குரலின் நேயர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டிலிருந்து காசி வந்தார்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அங்கே அவர்களோடு உரையாட நான் செயற்கை நுண்ணறிவுக் கருவியான பாஷிணியை பொதுமேடையில் முதன்முறையாகப் பயன்படுதினேன். மேடையிலே நான் ஹிந்தியிலே உரையாடினேன் ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான பாஷிணி காரணமாக, அங்கே இருந்த தமிழர்களால் என்னுடைய உரை, உடனடியாக தமிழில் கேட்க முடிந்தது. காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருந்த தமிழ்ச் சகோதரர்கள் இந்தப் பரீட்சார்த்த முயற்சியால் மிகவும் உற்சாகமடைந்தார்கள். ஒருவர் ஒரு மொழியில் உரையாற்ற, மக்கள் உடனடியாக அந்த உரையைத் தங்களுடைய மொழியில் கேட்கக் கூடிய நாள் தொலைவில் இல்லை. இதே போன்று திரைப்படங்களின் விஷயத்திலும் நடக்கும், அப்போது திரையரங்கில் அமர்ந்திருக்கும் மக்கள், செயற்கை நுண்ணறிவின் துணையோடு உடனடியாக மொழியாக்கத்தைக் கேட்டு ரசிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் நமது பள்ளிகளில், நமது மருத்துவமனைகளில், நமது நீதிமன்றங்களில் பரவலான முறையில் பயன்படுத்தப்படும் போது, எத்தனை பெரிய மாற்றம் ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்!! உடனடி மொழிமாற்றத்தோடு தொடர்புடைய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் மேலும் ஆராய்ச்சி செய்யுங்கள், அவற்றை 100 சதவீதம் பிசிறு இல்லாதவையாக ஆக்குங்கள் என்று நான் இன்றைய இளைஞர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நண்பர்களே, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது மொழிகளை நாம் காப்பாற்றவும் வேண்டும், அவற்றை வளர்த்தெடுக்கவும் வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு பழங்குடியின கிராமம் பற்றி உங்களிடம் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கிராமத்தில் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வியளிக்க ஒரு வித்தியாசமான முன்னெடுப்பு செய்யப்படுகிறது. கட்வா மாவட்டத்தின் மங்கலோ கிராமத்தின் பிள்ளைகளுக்கு குடுக் மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பெயர், கார்த்திக் உராவ் ஆதிவாசி குடுக் ஸ்கூல். இந்தப் பள்ளியில் 300 பழங்குடியினக் குழந்தைகள் படிக்கிறார்கள். குடுக் மொழி, உராவ் பழங்குடியினத்தவர்களின் தாய்மொழி. குடுக் மொழிக்கென எழுத்து வடிவம் உண்டு, இதை தோலங்சிகீ என்ற பெயரிட்டு அழைப்பார்கள். இந்த மொழி மெல்லமெல்ல மறையத் தொடங்கியது, இதைக் காப்பாற்ற, இந்தச் சமுதாயமானது தனது மொழியிலேயே குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டது. இந்தப் பள்ளியைத் துவக்கிய அரவிந்த உராவ், பழங்குடியினப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஒரு தடைக்கல்லாக விளங்கியதால், கிராமத்துக் குழந்தைகளுக்குத் தங்களுடைய தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கத் தொடங்கினார்கள் என்கிறார். அவர்களுடைய இந்த முயற்சி காரணமாக, மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கத் தொடங்கின, கிராமவாசிகளும் அவரோடு தங்களை மேலும் இணைத்துக் கொண்டார்கள். தங்கள் தாய்மொழியிலேயே படிப்பதன் காரணமாக பிள்ளைகளின் கல்வி வேகமாக வளர்ந்தது. நமது தேசத்தில் பல பிள்ளைகள், மொழித் தடைகள் காரணமாக, படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சிரமங்களைத் தொலைக்க, புதிய தேசியக் கல்விக் கொள்கையாலும் கூட உதவிகள் கிடைத்து வருகின்றது. நம்முடைய முயற்சி என்னவென்றால், மொழி என்பது எந்த ஒரு குழந்தையின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் ஒரு தடைக்கல்லாக மாறி விடக்கூடாது என்பது தான்.
நண்பர்களே, நம்முடைய பாரத பூமிக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசத்தின் பெருமைமிகு பெண்கள் பெருமிதம் சேர்த்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிபாய் ஃபுலே அவர்கள், ராணி வேலு நாச்சியார் அவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட இரண்டு ஆளுமைகள். அவர்களுடைய தனித்தன்மை ஒவ்வொரு யுகத்திலும் பெண்சக்தியை முன்னேற்றும் பாதையைத் தொடர்ந்து துலக்கும் விளக்குத் தூண்கள் போன்றவை. இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து, ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று நாமனைவரும் இந்த இருவரின் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறோம். சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே கல்வி மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் அவருடைய பங்களிப்பு நம் கண் முன்பாக வருகிறது. பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக்காக இவர் எப்போதும் ஓங்கிக் குரல் கொடுத்து வந்திருக்கிறார். இவர் தன் காலத்தைத் தாண்டிய முற்போக்கு எண்ணத்தோடு பயணித்தவர், தவறான பழக்கங்களுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டவர். மஹாத்மா ஃபுலே அவர்களோடு இணைந்து இவர் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமான பல பள்ளிகளை நிறுவினார். இவருடைய கவிதைகள் மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், தன்னம்பிக்கையை நிரப்பவும் செய்தன. தேவையான வேளையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும், இயற்கையோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று எப்போதுமே இவர் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறார். இவர் எத்தனை உதார குணம் வாய்ந்தவர் என்பதைச் சொற்களில் வடிக்க முடியாது. மஹாராஷ்டிரத்தில் பஞ்சம் ஏற்பட்ட வேளையில், சாவித்திரிபாயும், மஹாத்மா ஃபுலேவும் பட்டினியால் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் தங்கள் இல்லக் கதவுகளைத் திறந்து விட்டார்கள். சமூகநீதி தொடர்பான இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகளை மிகவும் அரிதாகவே காண முடியும். ப்ளேகு நோய் பற்றிய அச்சம் தீவிரமாகப் பரவியிருந்த போது அவர்கள் தாங்களே உவந்து மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்த வேளையில் இவர்களே கூட இந்த நோயால் பீடிக்கவும் பட்டார்கள். மனிதத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்த இவர்களுடைய வாழ்க்கை இன்றும் கூட பலருக்கு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கிறது.
நண்பர்களே, அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர். தமிழ்நாட்டின் என்னுடைய சகோதர சகோதரிகள் இன்றும் கூட வீரமங்கை வேலு நாச்சியாரின் பெயரை நெஞ்சில் பதித்துப் போற்றி வருகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இராணி வேலு நாச்சியார், எப்படி வீரத்துடன் போராடினார், தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார் என்பது பெரும் உத்வேகத்தை அளிக்க வல்லது. ஆங்கிலேயர்கள் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய இவருடைய கணவர் கொலை செய்யப்பட்டார். இராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எப்படியோ எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், மருது சகோதரர்கள் அதாவது தனது தளபதிகளோடு இணைந்து ஒரு படையை உருவாக்கி, பல ஆண்டுகள் வரை அதை வலுப்படுத்தினார். பிறகு முழுத் தயாரிப்போடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார், மிகவும் நெஞ்சுரத்தோடும் உறுதிப்பாட்டு சக்தியோடும் போரிட்டார். முதன்முறையாகத் படையில் பெண்களுக்கென்று ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தியோர் பட்டியலில் இராணி வேலு நாச்சியாரின் பெயர் தான் முன்னணி வகிக்கிறது. நான் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.
எனது குடும்ப உறவுகளே, குஜராத்தின் டாயராவில் ஒரு பாரம்பரியம் உண்டு. இரவு முழுக்க ஆயிரக்கணக்கான பேர் டாயராவில் பங்கெடுத்து, கேளிக்கையோடு கூடவே ஞானத்தைப் பெறுகிறார்கள். இந்த டாயராவிலே நாட்டுப்புற இசை, நாட்டுப்புற இலக்கியம் மற்றும் நகைச்சுவை என்ற முக்கூடல், அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும். இந்த டாயராவில் ஒரு பிரசித்தமான கலைஞரின் பெயர் பாய் ஜகதீஷ் திரிவேதி அவர்கள். நகைச்சுவைக் கலைஞர் என்ற வகையில் பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார். அண்மையில் தான் பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள் எழுதிய கடிதம் எனக்குக் கிடைத்தது, கூடவே அவர் தனது புத்தகத்தையும் எனக்கு அனுப்பி இருந்தார். புத்தகத்தின் பெயர் - Social Audit of Social Service, இது மிக வித்தியாசமான புத்தகம். இதிலே கணக்குவழக்கு இருக்கிறது, இந்தப் புத்தகம் ஒரு வகையான இருப்பு நிலைக் குறிப்பு. கடந்த 6 ஆண்டுகளில் பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளில் எத்தனை வருமானம் ஈட்டினார், எங்கெங்கே அதை செலவு செய்தார் என்பது பற்றிய கணக்குவழக்குப் புத்தகம் இது. இந்த இருப்பு நிலைக் குறிப்பு ஏன் வித்தியாசமானது என்றால், இவர் தனது வருமானம் முழுவதன் ஒவ்வொரு ரூபாயையும், பள்ளி, மருத்துவமனை, நூலகம், மாற்றுத்திறனாளிகளோடு தொடர்புடைய அமைப்புகள், சமூக சேவை ஆகியவற்றுக்குச் செலவு செய்திருக்கிறார், மொத்தமாக 6 ஆண்டுக்கால கணக்குவழக்கு. 2022ஆம் ஆண்டில் அவருக்கு அவருடைய நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வருமானம் 2 கோடியே, 35 இலட்சத்து, 79 ஆயிரத்து, 674 ரூபாய் என்று புத்தகத்தில் ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாயைக் கூட அவர் தன்னிடத்திலே வைத்துக் கொள்ளவில்லை. உள்ளபடியே இதன் பின்புலத்திலும் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. ஒரு முறை பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள், 2017இலே அவருக்கு 50 வயதாகும் போது, அதன் பிறகு அவருடைய நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வீட்டுக்குக் கொண்டு செல்லப் போவதில்லை, சமூகத்திற்காக செலவு செய்வேன் என்றும் கூறியிருந்தார். 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை, இவர் கிட்டத்தட்ட எட்டே முக்கால் கோடி ரூபாயை, பல்வேறு சமூகச் செயல்களுக்குச் செலவு செய்திருக்கிறார். ஒரு நகைச்சுவைக் கலைஞர், தன்னுடைய சொற்கள் வாயிலாக அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஆனால் உள்ளே எத்தனை மனிதத்தன்மையோடு வாழ்கிறார் என்பது பாயி ஜக்தீஷ் திரிவேதி அவர்களின் வாழ்விலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. இவரிடம் 3 முனைவர் பட்டங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இவர் இதுவரை 75 புத்தகங்களை எழுதியிருக்கிறார், இவற்றில் பலவற்றிற்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சமூக சேவைக்காகவும் கூட பல விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பாயி ஜக்தீஷ் திரிவேதி அவர்களின் சமூக சேவைகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்பச் சொந்தங்களே, அயோத்தி இராமர் கோயில் தொடர்பாக நாடெங்கிலும் பெரும் உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. மக்கள் தங்களுடைய உணர்வுகளை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே, ஸ்ரீ இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக பல புதிய பாடல்கள், புதிய பஜனைப் பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். பலர் புதிய கவிதைகளையும் வடித்திருக்கிறார்கள். இவற்றில் பெரியபெரிய அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் உண்டு, புதிய, வளரும் இளைய நண்பர்களும் கூட, மனதைக் கொள்ளை கொள்ளக்கூடிய வகையில் பஜனைப் பாடல்களை இயற்றியிருக்கின்றார்கள். சில பாடல்களையும், பஜனைப் பாடல்களையும் நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்தும் இருக்கிறேன். கலையுலகம் தனது பிரத்யேகமான பாணியில் இந்த வரலாற்றுப்பூர்வமான தருணத்தில் பங்குதாரராக ஆகி வருகிறது என்பதே என் கருத்து. நாமனைவரும், அனைத்துப் படைப்புக்களையும் பொதுவான ஒரு ஹேஷ்டேகில் பகிரலாமே என்ற எண்ணம் என் மனதில் உதிக்கிறது. #shriRamBhajan ஹேஷ்டேக் ஸ்ரீ ராம் பஜன் என்பதோடு நீங்கள் உங்கள் படைப்புக்களை சமூக ஊடகத்தில் பகிருங்கள். இந்தத் தொகுப்பு, அனைவரையும் இராமமயமாக ஆக்கவல்ல, உணர்வுகளின், பக்தியின் பெருக்காக ஆகி விடும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் என் தரப்பில் இம்மட்டே. 2024ஆம் ஆண்டு இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கவிருக்கிறது. பாரத தேசத்தின் சாதனைகள் அனைத்து பாரத நாட்டவர்களின் சாதனைகள். நாம் 5 உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு, பாரத நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து ஈடுபட்டு வர வேண்டும். எந்த ஒரு வேலையை நாம் செய்தாலும் கூட, எந்த ஒரு முடிவினை நாம் எடுத்தாலும் கூட, இதனால் என் தேசத்திற்கு என்ன கிடைக்கும், இதனால் என் தேசத்திற்கு என்ன சாதகம் ஏற்படும் என்பதே நமது முதன்மையான உரைகல்லாக இருக்க வேண்டும். Nation First - தேசத்திற்கே முதன்மை என்பதை விட மேலான மந்திரம் வேறொன்றுமில்லை. இந்த மந்திரத்தை அடியொற்றி நாட்டுமக்கள் நாமனைவரும், நம்முடைய தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம், தற்சார்புடையதாக மாற்றுவோம். நீங்கள் அனைவரும் 2024ஆம் ஆண்டிலே, வெற்றிகளின் புதிய சிகரங்களை எட்ட வேண்டும், நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உடலுறுதியோடு இருக்க வேண்டும், அளவற்ற ஆனந்தத்தோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. 2024ஆம் ஆண்டிலே, நாம் மீண்டும் ஒரு முறை நாட்டுமக்களின் புதிய சாதனைகள் தொடர்பாக உரையாடுவோம். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.
என் குடும்பச் சொந்தங்களே, நவம்பர் மாதம் 26ஆம் தேதியான இன்றைய தினம், மேலும் ஒரு காரணத்திற்காகவும் மிகவும் மகத்துவம் மிக்கதாக இருக்கின்றது. 1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் பேரவையானது பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 2015ஆம் ஆண்டிலே, நாம் பாபாசாகேப் ஆம்பேட்கரின் 125ஆவது பிறந்த நாளினைக் கொண்டாடிய வேளையிலே, ஒரு எண்ணம் தோன்றியது; அதாவது நவம்பர் மாதம் 26ஆம் தேதியை அரசியலமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அது. அப்போதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், இன்றைய இந்த தினத்தை நாம் அரசியலமைப்புச்சட்ட தினம் என்ற வகையிலே கொண்டாடி வருகிறோம். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட தினத்திற்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாமனைவரும் இணைந்து, குடிமக்களின் கடமைகளுக்கு முதன்மை அளிக்கும் அதே வேளையிலே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டினைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
நண்பர்களே, அரசியலமைப்புச்சட்டத்தின் உருவாக்கலில் ஈராண்டுகளும், 11 மாதங்களும், 18 நாட்களும் ஆகின என்பதை நாமனைவரும் நன்கறிவோம். ஸ்ரீ சச்சிதானந்த சின்ஹா அவர்கள் அரசியலமைப்புச் சட்டப் பேரவையில் வயதில் மிக மூத்த உறுப்பினராக இருந்தார். 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஆய்வு செய்து, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டது. வரைவு தயாரான பிறகு, இதற்கு நிறைவான வடிவம் அளிக்கும் முன்பாக, அதிலே ஈராயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. 1950இலே அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்ட பிறகும், இதுவரை மொத்தம் 106 அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காலம், சூழல், தேசத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசுகள், பல்வேறு காலகட்டங்களில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான உரிமைகளைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 44ஆவது சட்டத்திருத்தம் வாயிலாக, அவசரநிலையின் போது மேற்கொள்ளப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டன என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.
நண்பர்களே, அரசியலமைப்புச்சட்டப் பேரவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள், இவர்களில் 15 பேர் பெண்கள். இப்படிப்பட்ட ஒரு உறுப்பினர் தாம் ஹம்ஸா மெஹ்தா அவர்கள் என்பது உத்வேகமளிக்கும் விஷயம்; இவர் பெண்களின் உரிமைகளுக்கும், நியாயத்துக்குமான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். அந்தக் காலகட்டத்தில், பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டரீதியாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த வெகு சில நாடுகளில் பாரதமும் ஒன்று. தேசத்தின் நிர்மாணத்தில் அனைவரின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்படும் போது, அனைவருக்குமான முன்னேற்றமும் ஏற்படும். அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள், மிகவும் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டது எனக்கு நிறைவை அளிக்கிறது. இந்த வழியை அடியொற்றி இன்று நாடாளுமன்றம், ”நாரீ சக்தி வந்தன் அதிநியம்:, அதாவது பெண்சக்திக்குப் பெருமை சேர்க்கும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டு இது. மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உள உறுதிப்பாட்டிற்கு உரமும், வேகமும் சேர்ப்பதில் மிகவும் உதவிகரமாக இது இருக்கும்.
எனது குடும்ப உறவுகளே, தேச நிர்மாணத்தின் தலைமைப் பொறுப்பை மக்களே ஏற்றுக் கொள்ளும் வேளையிலே, உலகின் எந்த ஒரு சக்தியாலும், அந்த தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து விட முடியாது. பல மாற்றங்களுக்குத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பது என்றால், அது 140 கோடி நாட்டு மக்கள் தாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதற்கான ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு என்று சொன்னால், பண்டிகைக்காலமான இப்போது அதைப் பார்த்தோம். கடந்த மாதங்களில், மனதின் குரலில் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், அவற்றை வாங்குவோம் என்பதில் அழுத்தமளித்திருந்தோம். கடந்த சில நாட்களுக்கு உள்ளாக, தீபாவளி, பையா தூஜ், சட் பூஜை போன்றவற்றின் போது, நாடெங்கிலும் நான்கு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் நடந்திருக்கிறது. இந்த வேளையில், பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் பரபரப்பான உற்சாகம் மக்களிடத்திலே காணக் கிடைத்தது. இப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் கூட கடைகளில் பொருட்களை வாங்கும் வேளையில், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா என்று பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இது மட்டுமல்ல, இணையவழி பொருட்களை வாங்குவோர் கூட பொருட்களை வாங்கும் போது, Country of Origin அதாவது, எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காண மறப்பதில்லை.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கத்தின் வெற்றி எப்படி அதற்கே ஒரு ஊக்கமாக ஆகியிருக்கிறதோ, அதே போல, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் வெற்றி, வளர்ந்த பாரதம்-தன்னிறைவான பாரதத்திற்கான கதவுகளை அகலத் திறந்து கொண்டிருக்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கம், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்குமே பலம் சேர்க்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இது வளர்ச்சிக்கான உத்திரவாதம், இது தேசத்தின் சரிசமமான வளர்ச்சிக்கான உத்திரவாதம். இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் சமமான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். இதன் வாயிலாக, வட்டார உற்பத்திப் பொருட்களின் மதிப்புக்கூட்டலுக்கான பாதையும் பிறக்கிறது, ஒருவேளை உலகப் பொருளாதாரத்தில் ஏற்றம்-வீழ்ச்சி வருமானால், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம், நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.
நண்பர்களே, பாரதநாட்டு உற்பத்திப் பொருட்களிடத்தில் இருக்கும் இந்த உணர்வு, பண்டிகைகளோடு மட்டும் நின்று போய் விடக்கூடாது. அடுத்து திருமணக்காலம் தொடங்கியாகி விட்டது. சில வணிகச் சங்கங்களின் அனுமானம் என்னவென்றால், திருமணங்களின் இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் கோடி ரூபாய் வியாபாரத்திற்கான சாத்தியக்கூறு இருக்கிறதாம். திருமணங்களோடு தொடர்புடைய வாங்குதலிலும் கூட, நீங்கள் அனைவரும் பாரதநாட்டுப் பொருட்களுக்கே மகத்துவம் அளிக்க வேண்டும். மேலும், திருமணப் பேச்சு என்று வரும் போது, ஒரு விஷயம் நீண்டநெடுங்காலமாகவே என் மனதை அரித்துக் கொண்டு வந்தது, என் மனதின் இந்த வலியை நான் என் குடும்ப உறவுகளிடத்திலே தெரிவிக்கவில்லை என்றால் யாரிடம் சென்று தெரிவிக்க? நீங்களே சிந்தித்துப் பாருங்கள், இப்போதெல்லாம் சில குடும்பங்களில் அயல்நாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் ஒரு புதிய பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இது தேவையா என்று யோசியுங்கள். பாரதநாட்டு மண்ணில், பாரத நாட்டவருக்கு இடையே நாம் திருமணங்களைக் கொண்டாடினோம் என்றால், தேசத்தின் பணம், தேசத்திலேயே இருக்கும். தேசத்தின் மக்களுக்கு உங்களுடைய திருமணத்தில் ஏதாவது ஒரு சேவை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும், சிறிய-எளிய ஏழைபாழைகள் கூட தங்கள் குழந்தைகளிடத்திலே உங்களுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுவார்கள். உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற நோக்கத்திற்கு மேலும் உங்களால் வலு சேர்க்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஏன் நாம் நமது நாட்டிலேயே நடத்திக் கொள்ளக்கூடாது? நீங்கள் விரும்பிய அமைப்பு ஒருவேளை இன்று இல்லாமல் இருக்கலாம் ஆனால், நாம் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தால், தாமாகவே அமைப்புகள் மேம்பாடு அடையுமே. இது பெரிய செல்வந்தர்களின் குடும்பங்களோடு தொடர்புடைய விஷயம். என்னுடைய இந்த வலி, பெரியபெரிய குடும்பங்களைச் சென்று எட்டும் என்று நான் நம்புகிறேன்.
எனது குடும்பச் சொந்தங்களே, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், மேலும் ஒரு பெரிய போக்கு காணக்கிடைக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, ரொக்கப்பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கக்கூடிய வழிமுறை மெல்லமெல்லமெல்ல இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து குறைந்து வருவதை நாம் காண்கிறோம். அதாவது இப்போது மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இதுவும் கூட மிகவும் உற்சாகமளிக்கும் விஷயமாகும். நீங்கள் மேலும் ஒரு வேலையைச் செய்யலாம். ஒரு மாதக்காலத்திற்கு, நான் யுபிஐ மூலமோ, ஏதோ ஒரு டிஜிட்டல் வழி மூலமாக மட்டுமே பணத்தை அளிப்பேன், ரொக்கமாக அளிக்க மாட்டேன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் வெற்றி தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு மாதம் ஆன பிறகு, நீங்கள் உங்களுடைய அனுபவங்கள், உங்கள் புகைப்படம் ஆகியவற்றைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள். நான் இப்போதே உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை அளித்து விடுகிறேன்.
எனது குடும்ப உறவுகளே, நமது இளைய நண்பர்கள் தேசத்திற்கு ஒரு பெரிய சந்தோஷமான சமாச்சாரத்தை அளித்திருக்கிறார்கள், இது நம்மனைவரையும் கௌரவத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயமாகும். புத்திக்கூர்மை, கருத்து, புதுமைக்கண்டுபிடிப்பு – இவையே இன்று பாரதநாட்டு இளைஞர்களின் அடையாளம் ஆகும். இதிலே தொழில்நுட்பத்தின் இணைவு காரணமாக அவர்களின் அறிவுசார் இயல்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது, இது உள்ளபடியே தேசத்தின் வல்லமைக்கு வளம் சேர்க்கும் மகத்துவமான முன்னேற்றமாகும். 2022ஆம் ஆண்டிலே, பாரத நாட்டவரின் காப்புரிமைக் கோரல்கள் 31 சதவீதத்திற்கும் மேற்பட்டு அதிகரிப்பினைக் கண்டிருக்கிறது என்பது உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். உலக அறிவுசார் சொத்து அமைப்பு, ஒரு மிகப்பெரிய சுவாரசியமான அறிக்கையை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி, காப்புரிமை கோரும் முதல் பத்து தேசங்கள் விஷயத்தில் கூட இப்படி எப்போதுமே நடைபெற்றது கிடையாது. இந்த அருமையான சாதனைக்காக நான் நமது இளைய நண்பர்களுக்குப் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசம் அனைத்துக் கட்டங்களிலும் உங்களுக்குத் துணை நிற்கிறது என்று இளைய நண்பர்களே, உங்களுக்கு நம்பிக்கை அளிக்க நான் விரும்புகிறேன். அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நிர்வாக மற்றும் சட்டரீதியான மேம்பாடுகளுக்குப் பிறகு, இன்று நமது இளைஞர்கள் புதியதோர் சக்தியோடு, பெரிய அளவில் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்தாண்டுகள் முன்பாக இருந்த புள்ளிவிவரங்களோடு ஒப்பீடு செய்து பார்க்கையில், இன்று, நமது காப்புரிமைகளுக்கு பத்து மடங்கு அதிக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காப்புரிமைகள் மூலம் தேசத்தின் அறிவுசார் சொத்து அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, இதனால் புதியபுதிய சந்தர்ப்பங்களுக்கான வாயிலும் திறக்கிறது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். இதுமட்டுமல்ல, இவை நமது ஸ்டார்ட் அப்புகளின் பலத்தையும், திறனையும் கூட மேம்படுத்துகின்றன. இன்று நமது பள்ளிக்கூடக் குழந்தைகளிடத்திலும் கூட நூதனம் படைக்கும் உணர்வுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அடல் டிங்கரிங்க் லேப், அடல் புதுமைகள் படைக்கும் திட்டம், கல்லூரிகளில் இன்குபேஷன் மையங்கள், ஸ்டார்ட் அப் இண்டியா இயக்கம் போன்ற தொடர் முயற்சிகளின் விளைவுகள் நாட்டுமக்கள் முன்பாக இருக்கின்றது. இதுவும் கூட பாரதத்தின் இளைஞர் சக்தி, பாரதத்தின் நூதனம் படைக்கும் சக்தி ஆகியவற்றுக்கான பிரத்யட்சமான உதாரணங்கள். இதே உணர்வோடு மேலே நாம் பயணித்து வளர்ந்த பாரதம் என்ற நமது உறுதிப்பாட்டினை அடைந்தே தீருவோம்; ஆகையால் தான் நான் மீண்டும்மீண்டும் கூறுகிறேன், ஜய் ஜவான், ஜய் கிஸான், ஜய் விஞ்ஞான், ஜய் அனுசந்தான், அதாவது வாழ்க ஆய்வு.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, பாரத நாட்டிலே பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளாகக் கூடும் திருவிழாக்கள் பற்றி சிலகாலம் முன்பாக மனதின் குரலில் விவாதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது ஒரு போட்டி பற்றிய எண்ணமும் எழுந்தது. மக்கள் திருவிழாக்களோடு தொடர்புடைய புகைப்படங்களை தரவேற்றம் செய்வார்கள் என்பதே அந்த எண்ணம். கலாச்சார அமைச்சகம் இது தொடர்பாக Mela Moments Contest, அதாவது திருவிழா கணங்கள் என்ற ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதிலே ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தார்கள், பலர் பரிசுகளையும் பெற்றார்கள் என்ற விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கலாம். கோல்காத்தாவில் வசிக்கும் ராஜேஷ் தர் அவர்கள், சரக் மேளாவில் பலூன்கள் மற்றும் விளையாட்டுச் சாமான்களை விற்பனை செய்பவரின் அருமையான புகைப்படத்திற்காக பரிசினை வென்றார். இந்தத் திருவிழா ஊரகப்பகுதி வங்காளத்தில் மிகவும் பிரபலமானது. வாராணசியில் ஹோலியைக் காட்சிப்படுத்த அனுபம் சிங் அவர்கள் திருவிழாப் படங்களுக்கான விருதினைப் பெற்றார். அருண்குமார் நலிமேலா அவர்கள், குல்சாயி தசராவோடு தொடர்புடைய ஈர்ப்புடைய கோணத்தை வெளிப்படுத்தியமைக்கு விருதினைப் பெற்றார். இதே போல, பண்டர்புரின் பக்தியை வெளிப்படுத்திய புகைப்படம், மிகவும் அதிகமாக விரும்பப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக இருந்தது, இதை மஹாராஷ்டிரத்தின் ஒரு நபரான ஸ்ரீமான் ராகுல் அவர்கள் அனுப்பியிருந்தார். இந்தப் போட்டியில் பல படங்கள், திருவிழாக்களின் போது கிடைக்கும் வட்டாரத் தின்பண்டங்கள் தொடர்பாகவும் இருந்தது. இதிலே புரலியாவில் வசிக்கும் அலோக் அவிநாஷ் அவர்களின் படம் விருதினை வென்றது. இவர் ஒரு திருவிழாக்காலத்தில் வங்காளத்தின் ஊரகப்பகுதியின் உணவு பற்றிக் காட்டியிருந்தார். பிரணப் பஸாக் அவர்களின் படமும் விருதினைப் பெற்றது. இதிலே பகோரியா மஹோத்சவத்தின் போது பெண்கள் குல்ஃபியை சுவைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் அனுப்பப்பட்டிருந்தது. இதுவும் விருதினைப் பெற்றது. ரூமிலா அவர்கள் சத்திஸ்கட்டின் ஜக்தல்பூரின் ஒரு கிராமத்தில் நடைபெற்ற விழாவிலே, பஜியா தின்பண்டத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த பெண்களைப் படம்பிடித்து அனுப்பியிருந்தார், இதற்கும் பரிசு கிடைத்தது.
நண்பர்களே, மனதின் குரல் வாயிலாக இன்று ஒவ்வொரு கிராமத்தின், ஒவ்வொரு பள்ளியின், ஒவ்வொரு பஞ்சாயத்தின் முன்பாகவும் வைக்கப்படும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து இவை போன்ற போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பது தான். இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என்றால், தொழில்நுட்பம் மற்றும் செல்பேசி ஆகியன வீடுதோறும் சென்றடைந்து விட்டன. உங்களுடைய உள்ளூர் திருவிழா அல்லது பொருள் ஆகட்டும், அவற்றை நீங்கள் உலக அளவுக்குக் கொண்டு செல்ல முடியும்.
நண்பர்களே, கிராமங்கள்தோறும் நடைபெறும் திருவிழாக்களைப் போல நமது நாட்டிலே பல்வேறு வகையான நடனங்கள் என்ற நமக்கே உரித்தான மரபு உள்ளது. ஜார்க்கண்ட், ஒடிஷா, வங்காளம் ஆகியவற்றின் பழங்குடியினத்தவரின் பகுதிகளில் ஒரு மிகவும் பிரபலமான நடனத்தின் பெயர் சஉ. நவம்பர் 15 முதல் நவம்பர் 17 வரை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வோடு ஸ்ரீநகரில் சஉ விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது அனைவரும் சஉ நடனத்தின் ஆனந்தத்தை அனுபவித்தார்கள். ஸ்ரீநகரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சஉ நடனத்தில் பயிற்சி அளிக்கப்பட ஒரு பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைப் போலவே, சில வாரங்கள் முன்பாக, கடுவா மாவட்டத்தில் பஸோஹலி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடம் ஜம்முவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த விழாவில் வட்டாரக் கலைகள், நாட்டுப்புற நடனம் மற்றும் பாரம்பரியமிக்க ராம்லீலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பர்களே, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் அழகு சௌதி அரேபியா நாட்டிலும் கூட அனுபவிக்கப்பட்டு வருகிறது. இதே மாதம் தான் சவுதி அரேபியா நாட்டிலே சம்ஸ்கிருத உத்ஸவ், அதாவது சம்ஸ்கிருத திருவிழா என்ற பெயரில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மிகவும் வித்தியாசமானதாக இருந்தது ஏனென்றால், நிகழ்ச்சி முழுவதுமே சம்ஸ்கிருதத்திலேயே இருந்தது. உரையாடல், இசை, நடனம் என அனைத்துமே சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது, இதிலே அங்கிருக்கும் வட்டார மக்கள் பங்கெடுத்ததையும் காண முடிந்தது.
என் குடும்பச் சொந்தங்களே, தூய்மை பாரதம் இப்போது நாடு முழுவதிலும் பிரியமான விஷயமாகி விட்டது, எனக்குப் பிடித்தமான விஷயம் தான் ஐயமில்லை, மேலும் இதோடு தொடர்புடைய செய்தி ஏதேனும் எனக்குக் கிடைத்தால், என்னுடைய மனது இயல்பாகவே அதன்பால் சென்று விடுகிறது. தூய்மை பாரதம் இயக்கமானது, தூய்மையாக இருத்தல்-வைத்திருத்தல், பொது இடங்களில் தூய்மை ஆகியவை தொடர்பாக மக்களின் எண்ணத்தில் மாற்றமேற்படுத்தி இருக்கிறது. இந்த முன்னெடுப்பு இன்று தேசிய உணர்வின் அடையாளமாக மாறி விட்டது, இது கோடிக்கணக்கான நாட்டுமக்களின் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கியிருக்கிறது. இந்த இயக்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை, குறிப்பாக இளைஞர்களிடத்திலே சமூகப் பங்களிப்பிற்கான உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மேலும் ஒரு மெச்சக்கூடிய முயற்சி சூரத்திலே காணக் கிடைக்கிறது. இளைஞர்களின் ஒரு அணியானது இங்கே ப்ராஜெக்ட் சூரத், அதாவது சூரத் திட்டத்தை தொடக்கியிருக்கிறது. தூய்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக சூரத் பகுதியை ஒரு மாதிரி-நகராக மாற்ற வேண்டும் என்பதே இதன் இலக்கு. சஃபாய் சண்டே, அதாவது தூய்மை ஞாயிறு என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சியில் சூரத்தின் இளைஞர்கள் முதலில் பொது இடங்களில், டூமாஸ் கடற்கரையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள். பிறகு இவர்கள் தாபி நதிக் கரைகளில் தூய்மைப்பணியில் மிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டார்கள், சில காலத்திலேயே இதோடு தொடர்புடைய நபர்களின் எண்ணிக்கை 50,000ற்கும் அதிகமானது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மக்கள் அளித்த ஆதரவு, குழுவினரின் மனங்களில் தன்னபிக்கையை அதிகப்படுத்தியது; இதன் பிறகு அவர்கள் குப்பைக் கூளங்களைச் சேகரிக்கும் பணியைத் தொடக்கினார்கள். இந்தக் குழுவானது, இலட்சக்கணக்கான கிலோ அளவுக்கு குப்பைகளை அகற்றியது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கள அளவில் மேற்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட முயற்சி, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
நண்பர்களே, குஜராத்திலிருந்தே மேலும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. சில வாரங்கள் முன்பாக, அம்பாஜியில் பாதர்வீ பூனம் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதிலே 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்ஸம் என்னவென்றால், இந்தத் திருவிழாவிற்கு வந்த அனைவரும் கப்பர் குன்றின் ஒரு பெரிய பகுதியில் தூய்மை இயக்கத்தை மேற்கொண்டார்கள். கோயில்களுக்கு அருகிலே இருக்கும் பகுதிகள் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க இந்த இயக்கம் மிகவும் கருத்தூக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
நண்பர்களே, தூய்மை என்பது ஏதோ ஒரு நாள் கூத்து அல்ல, ஒரு வார இயக்கமல்ல, மாறாக இது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பணியாகும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். நாம் நமக்கருகிலே இருக்கும் சிலரைப் பார்க்கிறோம், அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையுமே தூய்மையோடு தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்துகிறார்கள். தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் வசிக்கும் லோகநாதன் அவர்கள் ஈடிணையில்லாதவர். சிறுவயதிலேயே ஏழைக் குழந்தைகளின் கிழிந்த உடைகளைப் பார்த்து இவர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாவார். இதன் பிறகு இவர் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டார், தனது வருமானத்தின் ஒரு பகுதியில் இவர் தானம் செய்வதைத் தொடக்கினார். பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட வேளையில், லோகநாதன் அவர்கள் கழிப்பறைகளைக் கூட தூய்மை செய்து, ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். கடந்த 25 ஆண்டுகளில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு தனது இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நாடெங்கிலும் நடைபெறும் இவை போன்ற பல முயற்சிகள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், புதியதாக நாமும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பேரார்வத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனது குடும்ப உறவுகளே, 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. நீரைப் பாதுகாப்பது, வாழ்க்கையைக் காப்பதற்கு ஈடான ஒன்று. நாம் சமூகத்தன்மையின் இந்த உணர்வோடு கூட ஒரு பணியைப் புரியும் போது, வெற்றியும் கிடைக்கிறது. இதற்கான ஒரு உதாரணம், தேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாகி வரும் அமுத நீர்நிலைகளும் ஆகும். அமுதப் பெருவிழாக் காலத்தில் பாரதம் 65,000க்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளை உருவாக்கியிருக்கிறது, இது வரவிருக்கும் தலைமுறையினருக்குப் பேருதவியாக இருக்கும். இப்போது நமது பொறுப்பு என்னவென்றால், எங்கெல்லாம் அமுத நீர்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அதைத் தொடர்ந்து நாம் பராமரித்து வர வேண்டும், இவை நீர்பராமரிப்பின் முதன்மையான ஊற்றாக இருந்து வர வேண்டும்.
நண்பர்களே, நீர் பாதுகாப்பு பற்றிய இப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடையே குஜராத்தின் அம்ரேலியில் நடந்த ஜல உத்சவம் பற்றியும் தெரிய வந்தது. குஜராத்திலே 12 மாதங்களும் பெருகியோடும் நதிகளும் இல்லை, ஆகையால் மக்கள் பெரும்பாலும் மழைநீரையே சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. கடந்த 20-25 ஆண்டுகளில் அரசாங்கமும், சமூக அமைப்புக்களும் முயற்சி மேற்கொண்ட பிறகு, நிலைமையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கிறது. இதிலே ஜல் உற்சவத்தின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. அம்ரேலியில் நடந்த ஜல் உற்சவத்தின் போது, நீர் பாதுகாப்பு மற்றும் ஏரிகளின் பராமரிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதிலே நீர் விளையாட்டுக்களுக்கும் ஊக்கமளிக்கப்பட்டது, நீர் பாதுகாப்பு வல்லுநர்களோடு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கெடுத்த மக்களுக்கு மூவண்ண நீரூற்றுக்கள் மிகவும் பிடித்துப் போயிற்று. இந்த நீர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை சூரத்தில் வைர வியாபாரத்திற்குப் பெயர் போன சாவ்ஜி பாயி டோலகியா அவர்களின் நிறுவனம் செய்திருந்தது. நான் இதில் பங்கெடுத்த ஒவ்வொரு நபருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், நீர் பாதுகாப்பிற்காக இப்படிப்பட்ட பணிகளைப் புரிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான குடும்ப உறவுகளே, இன்று உலகெங்கிலும் திறன் மேம்பாட்டின் மகத்துவத்திற்கு ஏற்புத்தன்மை கிடைத்து வருகிறது. நாம் ஒருவருக்கு ஏதோ ஒரு திறனைக் கற்பிக்கும் போது, அவருடைய திறனை மட்டும் நாம் வளப்படுத்தவில்லை, மாறாக வருமானத்திற்கான ஒரு வழியையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஒரு அமைப்பு 40 ஆண்டுகளாக திறன் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்த போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த அமைப்பு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் இருக்கிறது, இதன் பெயர் பெல்ஜிபுரம் யூத் கிளப். திறன் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தும் பெல்ஜிபுரம் யூத் கிளப்பானது, கிட்டத்தட்ட 7000 பெண்களுக்கு அதிகாரப்பங்களிப்பு அளித்திருக்கிறது. இதிலே பெரும்பாலான பெண்கள் இன்று தங்களுடைய சுய முயற்சியில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அமைப்பானது குழந்தைத் தொழிலாளர்களுக்கும் கூட ஏதோ ஒரு திறனைக் கற்பித்து அவர்களை இந்தக் கொடிய வளையத்திலிருந்து மீட்டெடுக்க உதவி புரிகிறது. பெல்ஜிபுரம் யூத் கிளப்பின் குழுவானது, விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் அதாவது FPOக்களோடு தொடர்புடைய விவசாயிகளுக்கும் புதிய திறனைக் கற்பித்து, இதனால் பெரிய அளவில் விவசாயிகளும் அதிகாரப் பங்களிப்பு பெற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள். தூய்மை தொடர்பாகவும் யூத் கிளப்பானது கிராமங்கள்தோறும் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறது. பல கழிப்பறைகளை உருவாக்குவதிலும் கூட இவர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள். இந்த அமைப்போடு தொடர்புடைய அனைவருக்கும், திறன் மேம்பாட்டுப் பணிகளுக்காக பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று தேசத்தின் கிராமங்கள்தோறும் திறன் மேம்பாட்டிற்கென இப்படிப்பட்ட சமூக அளவிலான முயற்சிகளின் தேவை இருக்கிறது.
நண்பர்களே, ஒரு இலக்கினை அடைய சமூகரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது வெற்றியின் உயரமும் கூட மேலும் அதிகமாகி விடுகிறது. நான் உங்கள் அனைவரோடும் லத்தாக்கின் ஒரு உத்வேகமளிக்கக்கூடிய உதாரணத்தைப் பகிர விரும்புகிறேன். நீங்கள் பஷ்மீனா சால்வையைப் பற்றி அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த சில காலமாக லத்தாக்கைச் சேர்ந்த பஷ்மீனா பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. லத்தாக்கி பஷ்மீனா, Looms of Ladakh என்ற பெயரில், உலகெங்கும் உள்ள சந்தைகளைச் சென்று சேர்கிறது. இதைத் தயார் செய்ய 15 கிராமங்களைச் சேர்ந்த 450க்கும் அதிகமான பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். முன்பெல்லாம் இவர்கள் தங்களுடைய தயாரிப்புக்களை அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே விற்று வந்தார்கள். ஆனால் இப்போது டிஜிட்டல் பாரதம் என்ற நிலையில் இவர்கள் தயாரித்த பொருட்கள், நாடெங்கிலும், உலகெங்கிலும் பல்வேறு சந்தைகளைச் சென்றடையத் தொடங்கியிருக்கிறது. அதாவது நமது உள்ளூர் பொருட்கள் உலகளாவிய அளவுக்குச் சென்றிருக்கிறது, இதனால் இந்தப் பெண்களின் வருவாயும் அதிகரித்திருக்கிறது.
நண்பர்களே, பெண்சக்தியின் இப்படிப்பட்ட வெற்றிகள் தேசத்தின் அனைத்து மூலைமுடுக்கெங்கும் காணக் கிடைத்திருக்கின்றன. இத்தகைய விஷயங்களை அதிக அளவில் வெளிக்கொணருவது தான் அவசியமான ஒன்று. இதை வெளிச்சம் போட்டுக் காட்ட மனதின் குரலை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்? நீங்களும் கூட இப்படிப்பட்ட உதாரணங்களை என்னோடு அதிக அளவில் பகிருங்கள். நானும் கூட அவற்றை உங்கள் மத்தியில் கொண்டு தர முழு முயற்சியை மேற்கொள்வேன்.
எனதருமை குடும்பச் சொந்தங்களே, மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட சமூக முயற்சிகள் குறித்து விவாதித்து வந்திருக்கிறோம், இதன் காரணமாக சமூகத்தில் பெரியபெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மனதின் குரலின் மேலும் ஒரு சாதனை என்றால், இது வீடுதோறும் வானொலியை மேலும் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்பது தான். மைகவ் தளத்தில் உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவின் ராம் சிங் பௌத் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. ராம் சிங் அவர்கள் கடந்த சில தசாப்தங்களாகவே வானொலி சேகரிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மனதின் குரலுக்குப் பிறகு தன்னுடைய வானொலி காட்சியகத்தின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதாக இவர் கூறுகிறார். இதே போல மனதின் குரல் அளித்த கருத்தூக்கத்தால் உந்தப்பட்டு, அஹ்மதாபாதுக்கு அருகே ப்ரேரணா தீர்த் புனித அமைப்பு, சுவாரசியமான ஒன்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இதிலே நாடு-அயல்நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழைமையான வானொலிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கே மனதின் குரலின் இதுவரையிலான அனைத்துப் பகுதிகளையுமே செவிமடுக்க முடியும். மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, இவற்றிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், மக்கள் எப்படி மனதின் குரலால் ஊக்கப்பட்டுத் தங்களின் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது தான். இப்படிப்பட்ட மேலும் ஒரு உதாரணம் கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரின் வர்ஷா அவர்களுடையது. தற்சார்பு உடையவராக இவர் ஆக, மனதின் குரல் இவருக்கு உத்வேகமளித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியால் ஊக்கமடைந்து இவர் வாழைப்பழத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தார். இயற்கையின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் வர்ஷா அவர்களின் இந்த முன்னெடுப்பு, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
என் இதயம் நிறைந்த குடும்பச் சொந்தங்களே, நாளை நவம்பர் மாதம் 27ஆம் தேதி, கார்த்திகைப் பௌர்ணமித் திருநாள். இந்த நாளன்று தான் தேவ் தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. காசியிலே தேவ் தீபாவளியைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது. இந்த முறை என்னமோ நான் காசிக்குச் செல்ல இயலாது என்றாலும், மனதின் குரல் வாயிலாக பனாரஸின் மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன். இந்த முறையும் கூட காசியின் படித்துறைகளில் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும், பிரமாதமான ஆரத்தி நடைபெறும், லேஸர் காட்சி நடக்கும், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் நாடு-அயல்நாடுகளிலிருந்து வந்திருப்போர் தேவ தீபாவளியின் ஆனந்தத்தில் திளைப்பார்கள்.
நண்பர்களே, நாளை பௌர்ணமி தினத்தன்று தான் குரு நானக் அவர்கள் பிறந்த நாளும் ஆகும். குரு நானக் அவர்களின் விலைமதிப்பில்லாத செய்தி பாரதத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கும், இன்றும் உத்வேக காரணியாகவும், பேசப்படும் கருத்தாகவும் இருக்கிறது. இது நமக்கு எளிமை, நல்லிணக்கம், மற்றோரிடம் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கான கருத்தூக்கத்தை அளிக்கிறது. குரு நானக் தேவ் அவர்களின் சேவையுணர்வு, சேவைப் பணிகளுக்கான கற்பித்தலை அளித்திருக்கிறது, அதனைப் நமது சீக்கிய சகோதர-சகோதரிகள், உலகெங்கிலும் பின்பற்றி வருவதை நாம் கண்டு வருகிறோம். நான் மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் குரு நானக் தேவ் அவர்கள் பிறந்த நாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. கண்மூடித் திறக்கும் வேளையிலே 2023ஆம் ஆண்டு நிறைவை நோக்கி முன்னேறி விட்டது. ஒவ்வொரு முறையைப் போலவும் நாம் எல்லோரும் என்ன நினைக்கிறோம் என்றால், அட, இத்தனை விரைவாக இந்த ஆண்டு கடந்து விட்டதே, என்று தான். ஆனால், இந்த ஆண்டு கணக்கில்லாத சாதனைகளை பாரதத்திற்கு அளிப்பதாக அமைந்தது, பாரதத்தின் சாதனைகள், ஒவ்வொரு பாரத நாட்டவரின் சாதனைகளும் ஆகும். மனதின் குரல் பாரத நாட்டவரின் இப்படிப்பட்ட சாதனைகளை வெளிப்படுத்துவதில் சக்திவாய்ந்த ஊடகமாக ஆகியிருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை நாட்டுமக்களின் ஏராளமான வெற்றிகளோடு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன். அது வரை எனக்கு விடை தாருங்கள் அன்பு நெஞ்சங்களே. பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, பண்டிகைகளின் இந்தக் கோலாகலத்திற்கு இடையே, தில்லியின் ஒரு செய்தியோடு நான் மனதின் குரலைத் தொடங்குகிறேன். இந்த மாதத் தொடக்கத்தில், காந்தி ஜயந்தியை ஒட்டி, தில்லியில் காதிக்கடை வரலாறு காணாத விற்பனையைச் செய்திருக்கிறது. இங்கே கனாட் ப்ளேஸிலே, ஒரே ஒரு காதி அங்காடியில், ஒரே நாளில் மட்டும், ஒண்ணரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்த மாதம் நடைபெற்று வரும் காதி மஹோத்சவம், மீண்டும் ஒருமுறை வியாபாரத்தில் தனது பழைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. உங்களுக்கு மேலும் ஒரு விஷயம் மகிழ்ச்சியை அளிக்கலாம், பத்தாண்டுகளுக்கு முன்பாக, தேசத்தில் காதிப் பொருட்களின் விற்பனை 30,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது; இப்போது இது பெருகி, ஒண்ணேகால் இலட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. காதிப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதன் பொருள் என்னவென்றால், இதனால் ஆதாயம் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை, பல்வேறு மட்டத்தினருக்கும் சென்றடைந்திருக்கிறது என்பது தான். இந்த விற்பனையால் இலாபம், நமது நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், நமது விவசாயிகள், ஆயுர்வேதத் தாவரங்களை நடுவோர், குடிசைத் தொழில்கள் என அனைவருக்கும் கிடைத்திருக்கிறது, மேலும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் பலமே இதில் தானே அடங்கியிருக்கிறது!! மெல்லமெல்ல, நாட்டுமக்களான உங்களனைவரின் ஆதரவும் பெருகிக் கொண்டே வருகிறது.
நண்பர்களே, இன்று மீண்டுமொரு முறை உங்களிடத்திலே ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன், மிகவும் பணிவோடு மறுபடி இதை சமர்ப்பிக்க விழைகிறேன். நீங்கள் எப்போதெல்லாம் சுற்றுலா செல்கிறீர்களோ, புனித யாத்திரை மேற்கொள்கிறீர்களோ, அப்போதெல்லாம் அங்கே அந்த வட்டாரக் கலைஞர்கள் வாயிலாக உருவாக்கப்படும் பொருட்களை அவசியம் வாங்குங்கள். உங்களுடைய பயணத்தின் மொத்த வரவுசெலவுகளில் வட்டாரத்தில் இந்த உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முக்கியமான முதன்மை அளிப்பது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அது பத்து சதவீதமாகட்டும், 20 சதவீதமாகட்டும், உங்கள் வரவுசெலவினத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, உள்ளூர் பொருட்களை வாங்குவதில் செலவு செய்யுங்கள், அங்கே, அந்த இடத்திலேயே செலவு செய்யுங்கள்.
நண்பர்களே, ஒவ்வொரு முறையைப் போலவும், இந்த முறையும் நமது பண்டிகைகளில், நமது முதன்மையானது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பது என்பதாக இருக்க வேண்டும், நாமனைவரும் இணைந்து நமது கனவை நிறைவேற்றுவோம்; நமது அந்தக் கனவு தற்சார்பு பாரதம். இந்த முறை நம் வீட்டில் ஒளியேற்றும் பொருட்களில், நமது நாட்டுமக்களின் வியர்வையின் மணம் இருக்க வேண்டும், நமது இளைஞர்களின் திறன் இருக்க வேண்டும், அதைத் தயாரிப்பதில் நமது நாட்டுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதாக இருக்க வேண்டும், அன்றாட வாழ்க்கையின் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் சரி, நாம் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும். ஆனால், உங்களிடத்திலே மேலும் ஒரு விஷயம் குறித்து கவனத்தைச் செலுத்த வேண்டுகிறேன். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்ற இந்த உணர்வு, பண்டிகைகளின் போது வாங்கும் பொருட்களோடு நின்று போய் விடக் கூடாது, சில இடங்களில் நானே பார்த்திருக்கிறேன், தீபாவளிக்கு விளக்குகள் வாங்குகிறோம், அல்லது சமூக ஊடகங்களில் இதை உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் கொடுப்போம் என்று பதிவிடுகிறோம். இது மட்டும் அல்ல ஐயா, இது வெறும் தொடக்கம் மட்டுமே. நாம் மேலும், இன்னும் முன்னேற வேண்டும், வாழ்க்கையின் அனைத்துத் தேவைகள் – நமது தேசத்திலே இப்போது அனைத்துமே கிடைக்கின்றன. இந்தப் பார்வை சிறிய கடைக்காரர்களிடம், தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வோரிடம் வாங்குவதோடு மட்டும் குறுகிப் போய் விடக் கூடாது. பாரதம் இன்று, உலகின் பெரிய தயாரிப்பு மையமாக ஆகி வருகிறது. பல பெரிய ப்ராண்டுகள், இங்கே தமது பொருட்களைத் தயாரித்து வருகின்றார்கள். நாம் அந்தப் பொருட்களை வாங்கும் போது, இந்தியாவில் தயாரிப்போம் என்பதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது, மேலும், இதுவுமே கூட உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்றே ஆகிறது. மேலும் ஒரு விஷயம், இப்படிப்பட்ட பொருட்களை வாங்கும் வேளையில் நமது தேசத்தின் பெருமிதமான யுபிஐ டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை வாயிலாகச் செலுத்துங்கள் என்றும் வேண்டிக் கொள்கிறேன், இதை வாழ்க்கையில் ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அந்தப் பொருளோடு கூடவே, அல்லது, அந்தக் கைவினைஞரோடு எடுக்கப்பட்ட சுயபுகைப்படத்தை நமோ செயலியில், என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோன் வாயிலாக. நான் அவற்றில் சில பதிவுகளை சமூக ஊடகத்தில் பகிர்வேன், இதன் வாயிலாக மற்றவர்களுக்கும் கூட உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும் உத்வேகம் உண்டாகும்.
நண்பர்களே, நீங்கள், பாரதத்தில் உருவாக்கப்பட்ட, பாரத நாட்டவரால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தீபாவளியை ஒளிமயமாக்கும் போது, உங்களுடைய குடும்பத்தின் அனைத்துச் சிறிய-பெரிய தேவைகளும் உள்ளூரிலேயே நிறைவடையும் போது, தீபாவளியின் ஒளிவெள்ளம் கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும், அதே வேளையில், அந்தக் கைவினைஞர்களின் வாழ்க்கையில், ஒரு புதிய தீபாவளி ஒளிவிடும், வாழ்க்கையில் ஒரு புது விடியல் புலரும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெறும். பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குங்கள், இந்தியாவில் தயாரிப்பதையே தேர்ந்தெடுங்கள், இதனால் உங்களோடு கூடவே மேலும் கோடிக்கணக்கான நாட்டுமக்களின் தீபாவளி பிரமாதமாக ஆகும், ஜீவனுள்ளதாக ஆகும், ஒளிமயமானதாக ஆகும், சுவாரசியமாகவும் ஆகும்.
எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் 31 என்பது நம்மனைவருக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த நாளன்று தான் நமது இரும்பு மனிதரான சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள் ஆகும். பாரதநாட்டவரான நாமனைவரும் அவரை பல காரணங்களுக்காக நினைவு கூர்கிறோம், மிகுந்த சிரத்தையுடன் வணங்குகிறோம். மிகப்பெரிய காரணம் என்னவென்றால், தேசத்தின் 580க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைப்பதில் அவருடைய ஈடிணையில்லாத பங்களிப்பு. ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31ஆம் தேதியன்று, குஜராத்தில் அமைந்திருக்கும் ஒற்றுமை நினைவுச் சின்னத்தில் ஒருமைப்பாட்டு தினத்தோடு தொடர்புடைய முக்கியமான விழா நடக்கும் என்பதை நாமறிவோம். இந்த முறை, இதைத் தவிர, தில்லியில் கர்த்தவ்ய பாதையில், ஒரு மிகவும் சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தேசத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும், அனைத்து வீடுகளிலிருந்தும் மண்ணைத் திரட்டுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அனைத்து இல்லங்களிலிருந்தும் மண்ணை சேகரித்த பிறகு, அதைக் கலசத்தில் வைத்து, அவை அமுத கலச யாத்திரையாகப் பயணப்பட்டு விட்டது. தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஒன்று திரட்டப்பட்ட இந்த மண்ணைத் தாங்கிய ஆயிரக்கணக்கான கலசங்கள் அடங்கிய அமுத கலச யாத்திரை இப்போது தில்லி வந்தடைந்திருக்கிறது. இங்கே தில்லியில் அந்த மண்ணை ஒரு விசாலமான பாரதக் கலசத்தில் இட்டு, இந்த பவித்திரமான மண்ணைக் கொண்டு தில்லியில் அமுத வனம் நிர்மாணிக்கப்படும். இது தேசத்தின் தலைநகரின் மையப்பகுதியில், அமுத மஹோத்சவத்தின் நேர்த்தியான மரபாக மிளிரும். நாடெங்கிலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் நிறைவு அக்டோபர் 31 அன்று தான் அரங்கேறும். நீங்கள் அனைவரும் இணைந்து இந்த உலகின் மிக நீண்ட காலம் வரை நடைபெற்ற பெருவிழாவினை சாதித்திருக்கிறீர்கள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகட்டும், அல்லது அனைத்து இல்லங்களிலும் மூவண்ணக் கொடி பறக்க விடுவதாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவிலே, மக்கள் தங்களுடைய பகுதியின் வரலாற்றுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கின்றார்கள். இதன் வாயிலாக சமூகசேவைக்குமான அற்புதமான எடுத்துக்காட்டும் காணக் கிடைத்திருக்கிறது.
நண்பர்களே, நான் இன்று உங்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான செய்தியை அளிக்க இருக்கிறேன். குறிப்பாக எனது இளைய சமுதாயச் செல்வங்களுக்கு. இவர்களுடைய இதயங்களில் தேசத்திற்காக எதையாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது, கனவு இருக்கிறது, உறுதிப்பாடு இருக்கிறது. இந்தச் சந்தோஷமான செய்தி, நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது தான் என்றாலும், எனது இளைய நண்பர்களே, உங்களுக்குத் தான் இது அதிக விசேஷமானது. இரண்டு நாட்கள் கழித்துத் தான் அக்டோபர் 31 அன்று ஒரு மிகப்பெரிய நாடு தழுவிய அமைப்புக்கான அடித்தளம் போடப்பட இருக்கிறது, அதுவும் சர்தார் ஐயாவின் பிறந்த நாளன்று. இந்த அமைப்பின் பெயர் – மேரா யுவா பாரத், அதாவது MYBharat. இந்த மைபாரத் அமைப்பானது, பாரதத்தின் இளைஞர்களை தேச நிர்மாணத்தின் பல்வேறு திட்டங்களில் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கும். இது வளர்ந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் பாரதத்தின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டும் ஒரு ஒப்பற்ற முயற்சியாகும். என்னுடைய இளைய பாரதத்தின் இணையதளமான MYBharatம் தொடங்கப்பட இருக்கிறது. நான் இளைஞர்களிடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன், மீண்டும்மீண்டும் வேண்டிக் கொள்கிறேன், என் தேசத்தின் இளைஞர்களே, நமது தேசத்தின் செல்வங்களே, MYBharat.Gov.inஇல் பதிவு செய்து கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் காலமான நாளும் ஆகும். நான் அவர்களுக்கும் கூட, உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.
எனது குடும்பச் சொந்தங்களே, நமது இலக்கியம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை முரசறிவித்துச் சொல்லும் மிகச் சிறப்பான ஊடகங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபோடு தொடர்புடைய இரண்டு மிகவும் உத்வேகமளிக்கும் முயற்சிகளை முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான சகோதரி சிவசங்கரி அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் ஒரு செயல்திட்டத்தை புரிந்திருக்கிறார் – Knit India, Through Literature. இதன் பொருள் என்னவென்றால், இலக்கியம் வாயிலாக தேசத்தை ஓரிழையில் கோர்ப்பது என்பது தான். இவர் இந்தச் செயல்திட்டம் தொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறார். இந்தச் செயல்திட்டம் வாயிலாக இவர் பாரதநாட்டு மொழிகள் 18இல் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் பலமுறை கன்யாகுமாரி தொடங்கி கஷ்மீரம் வரையும், இம்ஃபால் தொடங்கி ஜைசால்மேர் வரையும், தேசம் நெடுக, பல்வேறு மாநிலங்களின் எழுத்தாளர்கள்-கவிஞர்களை நேர்முகம் காண்பதற்காக சிவசங்கரி அவர்கள் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், பயணக் கட்டுரைகளோடு கூட இவற்றைப் பதிப்பித்தும் இருக்கிறார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கிறது. இந்தச் செயல்திட்டத்தின் நான்கு பெரிய தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன, ஒவ்வொரு தொகுதியும் பாரதத்தின் தனித்தனி பாகத்திற்கு என அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இவருடைய இந்த உறுதிப்பாட்டு சக்தி குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.
நண்பர்களே, கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள் அவர்களுடைய பணியும் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது. இவர் தமிழ்நாட்டின் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் போற்றத்தக்க பணியைச் செய்திருக்கிறார். இவர் தனது இந்தக் குறிக்கோளோடு, கடந்த 40 ஆண்டுகளாக இணைந்திருக்கிறார். இதன் பொருட்டு இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கிறார், நாட்டுப்புற கலை வடிவங்களைத் தேடித்தேடி, அவற்றைத் தனது புத்தகத்தில் இடம்பெறச் செய்கிறார். இவர் இதுவரை, கிட்டத்தட்ட 100 புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். இதைத் தவிர பெருமாள் அவர்களுக்கு மேலும் ஒரு பேரார்வமும் உண்டு. தமிழ்நாட்டின் கோயில் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இவர் தோல்பாவைக் கூத்து பற்றியும் நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார், இதனால் ஆதாயம் வட்டார நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைத்து வருகிறது. சிவசங்கரி அவர்கள், ஏ.கே. பெருமாள் அவர்கள் – இவர்கள் இருவரின் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவன. பாரதம் தனது கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய அனைத்து முயற்சிகள் குறித்தும் பெருமிதம் அடைகிறது, இது நமது தேச ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதோடு, தேசத்தின் பெயரையும், தேசத்தின் கௌரவத்தையும், அனைத்தையும் ஓங்கச் செய்யும்.
எனது குடும்பச் சொந்தங்களே, வரவிருக்கும் நவம்பர் மாதம் 15ஆம் தேதின்று நாடெங்கிலும் பழங்குடி மக்களின் பெருமித தினம் கொண்டாடப்படும். இந்தச் சிறப்பான நாளோடு தான் பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாளும் இணைந்திருக்கிறது. பகவான் பிர்ஸா முண்டா நம்மனைவரின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். மெய்யான நெஞ்சுரம் என்றால் என்ன? தனது மனவுறுதிப்பாட்டில் அசையாமல் ஆணித்தரமாக இருப்பது என்று எதைச் சொல்கிறார்கள்? என்பதையெல்லாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். அவர் அந்நிய ஆட்சியை ஒருபோதும் ஏற்கவில்லை. அவர் கற்பனை செய்த சமுதாயத்தில் அநீதிக்கு எந்த ஒரு இடமும் கிடையாது. அனைவருக்கும் சமமான, சமத்துவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. பகவான் பிர்ஸா முண்டா அவர்கள், இயற்கையோடு இணக்கமாக வாழ்வதற்கு மிகவும் உரம் சேர்த்தார். இன்றும் கூட, நமது பழங்குடியின சகோதர-சகோதரிகள், இயற்கையை எப்படிப் பாதுகாக்கிறார்கள், அதைப் பராமரிப்பதில் எத்தனை அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள் என்பது கண்கூடு. நம்மனைவருக்கும், நமது பழங்குடியின சகோதர சகோதரிகளின் இந்தப் பணி மிகவும் உத்வேகம் அளிக்க வல்லது.
நண்பர்களே, நாளை, அதாவது அக்டோபர் 30ஆம் தேதி குரு கோவிந்த சிம்மன் காலமான தினம். நமது குஜராத் மற்றும், ராஜஸ்தானத்துப் பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையில் கோவிந்த குருவிற்கு மிகவுயர்வான மகத்துவம் உள்ளது. கோவிந்த குருவுக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். மான்கட் படுகொலையின் நினைவு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. அந்தப் படுகொலையில் உயிர்த்தியாகம் புரிந்த, பாரத அன்னையின் அனைத்துப் புதல்வர்களுக்கும் என் நினைவாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, பாரதநாட்டிலே பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நிறைவான வரலாறு உண்டு. இதே பாரத பூமியில் தான் பெருமைமிகு திலகா மாஞ்ஜீ அவர்கள், அநீதிக்கு எதிராக சங்கநாதம் முழக்கினார். இதே மண்ணிலிருந்து தான் சித்தோ-கான்ஹூவும் சமத்துவத்திற்கான குரலை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் போராளியான டண்ட்யா பீல் நமது மண்ணிலே பிறந்தார் என்பதில் நமக்குப் பெருமிதம் உண்டு. உயிர்த்தியாகியான வீர் நாராயண் சிம்மனை மிகுந்த சிரத்தையோடு நாம் நினைவில் கொள்கிறோம், இவர் கடினமான சூழ்நிலைகளிலும் தனது மக்களுக்குத் துணை நின்றார். வீர் ராம்ஜி கோண்ட் ஆகட்டும், வீர் குண்டாதுர் ஆகட்டும், பீமா நாயக் ஆகட்டும், இவர்களுடைய நெஞ்சுரம் இன்றும் நமக்கு உத்வேகத்தை அளித்து வருகின்றது. அல்லூரி சீதாராம் ராஜூ அவர்கள், பழங்குடி சகோதர சகோதரிகளின் மனதிலே சுதந்திரத் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்தமைக்கு, தேசம் அவரை இன்றும் நினைவில் ஏத்துகிறது. வடகிழக்கில் கியாங்க் நோபாங்க், ராணி கைதின்யூ போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்தும் நாம் வேண்டுமளவு உத்வேகம் பெறுகிறோம். பழங்குடியின சமூகத்திலிருந்து தான் தேசத்தின் ராஜமோஹினி தேவியும், ராணி கமலாபதி போன்ற வீராங்கனைகளும் நமக்குக் கிடைக்கப் பெற்றார்கள். பழங்குடியின சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கவல்ல ராணி துர்க்காவதி அவர்களின் 500ஆவது பிறந்த நாளை இந்த வேளையில் தேசம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தேசத்தின் அதிகமான இளைஞர்கள், தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின ஆளுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவர்களிடமிருந்து உத்வேகம் அடையலாம் என்பதே என் விருப்பம். தனது பழங்குடியின சமூகத்திற்கு தேசம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது, இவர்கள் தாம் தேசத்தின் சுயமரியாதை மற்றும் மேன்மையை எப்போதுமே மிகவுயர்வாகக் கொண்டு வந்துள்ளார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, பண்டிகைகளின் இந்தக் காலத்தில், இப்போது தேசத்திலே, விளையாட்டுக்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. கடந்த தினங்களிலே ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கூட பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பாரதம் 111 பதக்கங்களை வென்று, ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறது. நான் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டிகள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதற்கான ஏற்பாடுகள் பெர்லினில் நடைபெற்றன. இந்தப் போட்டிகள், Intellectual Disabilities, அறிவுசார் குறைபாடுகள் உடைய நமது விளையாட்டு வீரர்களின் அற்புதமான திறமையை வெளிப்படுத்துகிறது. இந்தப் போட்டிகளில் பாரத நாட்டு அணியானது 75 தங்கப் பதக்கங்கள் உட்பட 200 பதக்கங்களை வென்றிருக்கிறது. Roller skating, உருளைச் சறுக்குப் போட்டி ஆகட்டும், பீச் வாலிபால் ஆகட்டும், கால்பந்தாட்டம் ஆகட்டும், அல்லது லான் டென்னிஸ் ஆகட்டும், பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை சரமாரியாக வென்றார்கள். பதக்கங்கள் வென்ற இந்த வீரர்களின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருந்திருக்கிறது. ஹரியாணாவின் ரண்வீர் சைனி, கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். சிறுவயது முதற்கொண்டே Autism - மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ரண்வீருக்கு, கால்ஃப் விளையாட்டுத் தொடர்பான எந்த ஒரு சவாலாலும் அவருடைய பேரார்வத்துக்குத் தடை போட முடியவில்லை. இவருடைய குடும்பத்தார் அனைவரும் இன்று கால்ஃப் விளையாட்டு வீரர்களாக ஆகி விட்டார்கள் என்ற அளவுக்கு இவருடைய தாயார் கூறுகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய டி. விஷால், நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறார். கோவாவின் சியா சரோதே, பவர்லிஃப்டிங் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட, நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறார். 9 வயதிலே தனது தாயைப் பறிகொடுத்த பிறகு, இவர் தன்னை ஏமாற்றத்தில் மூழ்கிப் போக அனுமதிக்கவில்லை. சத்தீஸ்கட்டைச் சேர்ந்த துர்க்கிலே வசிக்கும் அனுராக் பிரசாத், பவர்லிஃப்டிங்க் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார். இதைப்ழ் போலவே மேலும் ஒரு உத்வேகமளிக்கும் கதை ஜார்க்கண்டின் இந்து பிரகாஷுடையது, இவர் சைக்கில் ஓட்டும் பந்தயத்தில் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்து, தனது வெற்றிக்கு எதிராக எழுப்பப்பட்ட சுவராகத் தனது ஏழ்மையை அவர் கருதவில்லை. இந்த விளையாட்டுக்களில் பாரத நாட்டு விளையாட்டு வீரர்களின் வெற்றி, அறிவுசார் குறைபாடுகளை எதிர்கொள்ளும் பிற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும் கருத்தூக்கம் அளிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் கிராமத்திலே, உங்கள் கிராமத்தின் அருகிலே, இப்படிப்பட்ட குழந்தைகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்திருந்தார்கள், அல்லது வெற்றி பெற்றிருந்தார்கள் என்றால், நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு அவர்களிடம் செல்லுங்கள், அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவியுங்கள், சில கணங்கள் அந்தக் குழந்தைகளோடு கழியுங்கள் என்பதே நான் உங்கள் முன்பாக வைக்கும் வேண்டுகோள். உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படும். இறைவன் அவர்களிடத்திலே நிரப்பியிருக்கும் சக்தியைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும், கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.
என் குடும்பச் சொந்தங்களே, நீங்கள் அனைவரும் புனிதத் தலமான குஜராத்தின் அம்பாஜி கோயிலைப் பற்றி அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மிகவும் மகத்துவமான சக்திபீடமாகும், இங்கே தாய் அம்பாவை தரிசனம் செய்ய நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகிறார்கள். இங்கே கப்பர் மலையின் வழியில் பல்வேறு வகையான யோக முத்ரைகளையும், ஆசனங்களையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் காணப்படும். இந்தச் சிற்பங்களின் விசேஷம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்மையில், இவை ஓட்டை உடைசல்களிலிருந்து உருவாக்கப்பட்டவை, மிகவும் அற்புதமானவை. அதாவது இந்த வடிவங்கள், கழித்துக் கட்டப்பட்ட காயலான் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அம்பாஜி சக்திபீடத்தில் தேவி அன்னையை தரிசனம் செய்வதோடு, இந்த உருவச்சிலைகளும் கூட பக்தர்களை ஈர்க்கும் மையமாக ஆகி விட்டன. இந்த முயற்சியின் வெற்றியைக் கண்டு, என் மனதிலே ஒரு எண்ணம் உதிக்கிறது. பயனற்றவை என்று கழித்துக் கட்டப்பட்ட பொருட்களிலிருந்து இப்படிப்பட்ட கலைப்படைப்புக்களை உருவாக்குவோர் நமது தேசத்திலே பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் குஜராத் அரசிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் போட்டி ஒன்று நடத்தி, இப்படிப்பட்ட நபர்களை அதிலே பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்பதே. இந்த முயற்சியால் கப்பர் மலையின் ஈர்ப்பினை அதிகரிப்பதோடு கூடவே, நாடு முழுவதிலும் கழிவிலிருந்து செல்வம் இயக்கத்தில் ஈடுபட மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
நண்பர்களே, தூய்மை பாரதம், கழிவிலிருந்து செல்வம் பற்றி எப்போதெல்லாம் பேச்சு வருகிறதோ, அப்போதெல்லாம் தேசத்தின் அனைத்து இடங்களிலும் கணக்கேயில்லாத எடுத்துக்காட்டுகள் தேசத்தில் கிடைக்கின்றன. அசாமின் காமரூபம் பெருநகர மாவட்டத்தில் அக்ஷர் ஃபோரம் என்ற பெயர் கொண்ட ஒரு பள்ளி, குழந்தைகளிடத்திலே நீடித்த வளர்ச்சி என்ற உணர்வினை ஏற்படுத்த, பழக்கமாகவே அதை ஆக்க, ஒரு நீடித்த பணியை ஆற்றி வருகிறது. இங்கே படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும், நெகிழிக் கழிவைச் சேகரிக்கிறார்கள், இவை சூழலுக்கு நேசமான செங்கற்கள், சாவிக்கொத்தை போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயனாகிறது. இங்கே மறுசுழற்சி மற்றும் நெகிழிக் கழிவுகளிலிருந்து பொருட்களைத் தயாரிப்பது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. சிறிய வயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, தேசத்தின் கடமையுணர்வுள்ள குடிமக்களாக இந்தக் குழந்தைகளை ஆக்குவதில் மிகவும் உதவிகரமாக விளங்கும்.
எனது குடும்பச் சொந்தங்களே, பெண்சக்தியின் வல்லமை காணப்பெறாத எந்த ஒரு துறையும் இன்று வாழ்க்கையில் இல்லை. அந்த வகையிலே, அனைத்து இடங்களிலும் அவர்களுடைய சாதனைகள் போற்றப்பட்டு வருகின்றன எனும் வேளையிலே, பக்தியையும் சக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு பெண் புனிதையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இவருடைய பெயர் வரலாற்றின் பொன்னான பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் புனிதை மீராபாயின் 525ஆவது பிறந்த நாளை தேசம் இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. இவர் நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு, பல்வேறு காரணங்களுக்காக ஒரு உத்வேக சக்தியாக இருந்திருக்கிறார். ஒருவருக்கு இசையில் நாட்டம் இருந்தால், அவர் இசைக்கே தம்மை அர்ப்பணித்த பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார், ஒருவர் கவிதைகளை விரும்புபவர் என்றால், பக்திரசத்திலே தோய்ந்த மீராபாயின் பஜனைப் பாடல்கள், அவர்களுக்கு அலாதியான ஆனந்தத்தை அளிக்க வல்லவை, ஒருவர் இறைசக்தியில் நம்பிக்கை உள்ளவர் என்றால், மீராபாயின் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கலந்து கரைதல் என்பது அவருக்கு ஒரு பெரிய உத்வேக காரணியாக ஆகக்கூடும். மீராபாய், புனிதர் ரவிதாசைத் தனது குருவாக வரித்தவர்.
गुरु मिलिया रैदास, दीन्ही ज्ञान की गुटकी |
குரு மிலியா ரைதாஸ், தீன்ஹீ ஞான் கீ குட்கீ
அதாவது ரைதாஸர் எனக்கு குருவாகக் கிடைத்தது என்பது, பிரசாத வடிவில் ஞானம் கிடைத்தது போல என்று அவர் கூறியிருக்கிறார்.
தேசத்தின் தாய்மார்கள்-சகோதரிகள், புதல்விகளுக்கு மீராபாய், இன்றும் கூட உத்வேகத்தின் ஊற்று. அந்தக் காலகட்டத்திலும் கூட, அவர் தனக்குள்ளே ஒலித்த குரலுக்குச் செவி மடுத்தார், பழமைவாத, மூடப் பழக்கங்களுக்கு எதிராக நின்றார். ஒரு புனிதை என்ற வகையிலும் கூட அவர் நம்மனைவருக்கும் கருத்துக்கக் காரணியாக மிளிர்கிறார். தேசம் பலவகையான தாக்குதல்களை எதிர்கொண்ட அந்தக் காலத்திலே, அவர் பாரதநாட்டு சமூகம் மற்றும் கலாச்சாரத்துக்கு வலுக்கூட்ட முன்வந்தார். எளிமையிலும், பணிவிலும் எத்தனை சக்தி நிறைந்திருக்கிறது என்பது, நமக்கு மீராபாயின் வாழ்க்கையிலிருந்து தெரிய வருகிறது. நான் புனிதை மீராபாயிக்குத் தலைவணங்குகிறேன்.
என் நெஞ்சம் நிறை குடும்பச் சொந்தங்களே, இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே. உங்களனைவரோடும் நடைபெறும் ஒவ்வொரு உரையாடலும், என்னுள்ளே புதிய சக்தியை நிரப்புகிறது. உங்களுடைய தகவல்களில் நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் நிரம்பிய ஏராளமான தரவுகள் தொடர்ந்து என்னை வந்தடைகின்றன. நான் மீண்டும் உங்களிடத்திலே வேண்டிக் கொள்கிறேன் – தற்சார்பு பாரதம் இயக்கத்திற்கு பலம் கூட்டுங்கள். வட்டாரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் தாருங்கள். எப்படி நீங்கள் உங்கள் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்களோ, அப்படியே உங்கள் சுற்றுப்புறத்தையும், நகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும், ஒருமைப்பாட்டு தினம் என்ற வகையிலே இந்த நாளை தேசம் கொண்டாடுகிறது, தேசத்தின் பல இடங்களில் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நீங்களும் அக்டோபர் 31ஆம் தேதி இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். மிகப்பெரிய எண்ணிக்கையில் நீங்களும் இதிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்துங்கள். மீண்டும் ஒரு முறை, வரவிருக்கும் பண்டிகைகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். நீங்கள் அனைவரும் குடும்பத்தாரோடு சந்தோஷமாகக் கொண்டாடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள், இதுவே என் விருப்பம். மேலும் தீபாவளி சமயத்தில், தவறுதலாகக் கூட தீ விபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். யாருடைய உயிருக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்கட்டும், நீங்களும் கவனமாக இருங்கள், மொத்த பகுதியையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் உங்கள் அனைவருடனும், தேசத்தின் வெற்றியை, நாட்டுமக்களின் வெற்றியை, அவர்களின் உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்த்திருக்கிறது. எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் மிக அதிகம் காணப்படுகின்றன. முதலாவதாக, சந்திரயான் – 3இன் வெற்றிகரமான தரையிறங்கல்; இரண்டாவதாக, தில்லியில் நடைபெற்ற ஜி20இன் வெற்றிகரமான ஏற்பாடுகள். தேசத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்துப் பிரிவிடமிருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், எனக்குக் கணக்கில்லாத கடிதங்கள் கிடைத்திருக்கின்றன. சந்திரயான் – 3இன் லேண்டரானது, சந்திரனின் மீது இறங்கும் தருவாயில் இருந்த போது, கோடிக்கணக்கான மக்கள், பல்வேறு வழிகளில், ஒரே நேரத்தில் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு நொடியின் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோ அமைப்பின் யூ ட்யூப் நேரடி ஒளிபரப்பில், 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வினைக் கண்டார்கள் என்பதே கூட மிகப்பெரிய சாதனை. சந்திரயான் – 3உடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை ஆழமாக இருந்திருக்கிறது என்பது இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயானின் இந்த வெற்றி குறித்து தேசத்தில் இன்றைய காலகட்டத்தில் மிக அருமையான வினா விடைப் போட்டியும் நடைபெற்று வருகிறது; இந்தப் போட்டிக்கு இடப்பட்டிருக்கும் பெயர் – சந்திரயான் – 3 மஹா க்விஸ் ஆகும். மைகவ் தளத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து விட்டார்கள். மைகவ்வின் தொடக்கத்திற்குப் பிறகு, இது எந்த ஒரு வினா விடைப் போட்டி என்று எடுத்துக் கொண்டாலும், மிகப்பெரிய பங்கெடுப்பு என்று கொள்ளலாம். நீங்கள் இதுவரை இதில் பங்கெடுக்கவில்லை என்றால், காலம் இன்னும் கடந்து விடவில்லை, இப்போது கூட இதிலே இன்னும் 6 நாட்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த வினாவிடைப் போட்டியில் நீங்களும் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடத்திலே நான் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான என் குடும்பச் சொந்தங்களே, சந்திரயான் – 3 இன் வெற்றிக்குப் பிறகு ஜி20இனுடைய அருமையான ஏற்பாடுகள், பாரத நாட்டு மக்கள் அனைவருடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது. பாரத் மண்டபமே கூட ஒரு பிரபலஸ்தர் என்ற வகையில் மாறிப் போனது. மக்கள் அதோடு கூட சுயபுகைப்படம், செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள், பெருமிதத்தோடு அதைத் தரவேற்றம் செய்து கொள்கிறார்கள். பாரதம் இந்த உச்சிமாநாட்டிலே ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பினை ஜி 20இன் முழுமையான உறுப்பினராக ஆக்கி, தலைமைப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தது. பாரதம் மிகவும் வளமான தேசமாக இருந்த, அந்தக் காலத்தில், நமது தேசத்திலும் சரி, உலகிலும் சரி, சில்க் ரூட் எனக் கூறப்படும் பட்டுப் பாதை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்தப் பட்டுப் பாதையானது, வணிகத்துக்கான மிகப்பெரிய ஊடுபாதையாக இருந்தது. இப்போது நவீன யுகத்திலே, பாரதமானது மேலும் ஒரு பொருளாதார ஊடுபாதையை ஜி 20இலே முன் வைத்தது. அது என்னவென்றால், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார இடைவழியாகும். இந்த இடைவழி, வரவிருக்கும் ஆண்டுகளில் உலக வணிகத்தின் ஆதாரமாக ஆக இருக்கிறது, மேலும், இந்த இடைவழிக்கான வித்திடல் பாரத மண்ணில் விதைக்கப்பட்டது என்பதற்கு வரலாறு சாட்சியாக விளங்கும்.
நண்பர்களே, ஜி20இன் போது எந்த வகையிலே பாரதத்தின் இளையோர் சக்தி, இந்த ஏற்பாடுகளோடு தொடர்புபடுத்திக் கொண்டது என்பது குறித்து விசேஷமாக விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆண்டு முழுவதும் நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் ஜி20யோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்தத் தொடரில், தில்லியில் மேலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது – ஜி20 யுனிவர்சிட்டி கனக்ட் ப்ரோக்ராம். இந்த நிகழ்ச்சி வாயிலாக நாடெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பரஸ்பரம் இணைவார்கள். இவற்றில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற பல புகழ்மிக்க நிறுவனங்கள் பங்கெடுக்கும். நீங்கள் கல்லூரி மாணவர் என்றால், செப்டம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பாகக் காணுங்கள், இத்துடன் அவசியம் இணையுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பாரதத்தின் எதிர்காலம் தொடர்பாக, இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பாக, இதிலே பல சுவாரசியமான விஷயங்கள் இடம்பெற இருக்கின்றன. நானும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன். நானும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான உரையாடலுக்காகக் காத்திருக்கிறேன்.
என் இனிய குடும்பச் சொந்தங்களே, இன்றிலிருந்து 2 நாட்கள் கழித்து, செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று, ‘உலக சுற்றுலா தினம்’ வரவிருக்கிறது. சுற்றுலா என்பதை இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பது என்பதாக மட்டும் பார்க்கிறார்கள், ஆனால் சுற்றுலாவின் ஒரு மிகப்பெரிய பக்கம், வேலைவாய்ப்போடு தொடர்புடையது. மிகக் குறைந்த முதலீட்டில், மிக அதிகமான வேலைவாய்ப்பினை ஒரு துறையால் உருவாக்க முடியும் என்றால், அது தான் சுற்றுலாத் துறை. சுற்றுலாத் துறையைப் பெருக்குவதில், எந்த ஒரு தேசத்திற்கும் நல்லிணக்கம், அந்த நாட்டின் மீதான ஈர்ப்பு ஆகியன மிகவும் அவசியமானவை. கடந்த சில ஆண்டுகளில் பாரதத்தின்பால் ஈர்ப்பு மிகவும் அதிகப்பட்டிருக்கிறது, ஜி20யின் வெற்றிகரமான ஏற்பாட்டிற்குப் பிறகு உலக மக்களின் ஆர்வம் பாரதம் மீது மேலும் அதிகமாகி இருக்கிறது.
நண்பர்களே, ஜி20 தொடர்பாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பாரதம் வந்திருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் பன்முகத்தன்மை, பல்வேறு பாரம்பரியங்கள், பலவகையான உணவுகள், நமது மரபுகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொண்டார்கள். இங்கே வரும் பிரதிநிதிகள், தங்களுடன் கூட ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொண்டு சென்றார்கள், இதனால் சுற்றுலாவானது மேலும் விரிவாக்கம் அடையும். பாரதத்திடம் ஒன்று மற்றதை விஞ்சும் அளவுக்கு உலக பாரம்பரியச் சின்னங்கள் இருக்கின்றன, இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தான், சாந்திநிகேதனும், கர்நாடகத்தின் பவித்திரமான ஹொய்சளக் கோயில்கள், உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த அட்டகாசமான சாதனையை முன்னிட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2018ஆம் ஆண்டு, சாந்தி நிகேதனைச் சுற்றிப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. குருதேவ் ரவீந்திரநாத் டகோர், சாந்திநிகேதனின் கொள்கை வாக்கியத்தை, ஒரு பண்டைய சம்ஸ்கிருத சுலோகத்திலிருந்து கையாண்டிருக்கிறார். அந்த சுலோகம் –
யத்ர விஸ்வம் பவத்யேக நீடம்
அதாவது, ஒரு சின்னஞ்சிறு கூட்டிற்குள், உலகமனைத்தும் அடங்குதல் என்பதாகும். அதே போல கர்நாடகத்தின் ஹொய்சளக் கோயில்களும் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது, 13ஆம் நூற்றாண்டின் சிறப்பான கட்டிடக்கலைக்காக இது பெயர் பெற்றது. இந்த ஆலயங்களுக்கு, யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தல் என்பது ஆலய நிர்மாணம் தொடர்பான பாரத நாட்டுப் பாரம்பரியத்துக்கான கௌரவம் ஆகும். பாரதத்தில் இப்போது உலகப் பாரம்பரியச் சின்னங்கள் என்று பார்த்தால், அவற்றின் எண்ணிக்கை 42 ஆகும். நம்முடைய அதிகபட்ச வரலாற்று மற்றும் கலாச்சார இடங்களுக்கு, உலகப் பாரம்பரிய இடங்கள் என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே பாரதத்தின் முயற்சியாகும். நீங்கள் எங்காவது சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டீர்கள் என்றால், பாரதத்தின் பன்முகத்தன்மையைச் சென்று காணுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளுங்கள், மரபுச் சின்னங்களைக் காணுங்கள். இதனால், நம்முடைய தேசத்தின் கௌரவமான வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள முடிவதோடு, அந்தப் பகுதி மக்களின் வருமானத்தைப் பெருக்கவும் ஒரு கருவியாக நீங்கள் ஆவீர்கள்.
எனதருமைக் குடும்ப உறவுகளே, பாரத நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பாரதநாட்டு இசை என்பன, இப்போது உலக அளவிலானவை ஆகி விட்டன. உலகெங்கிலும் மக்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டு, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு அன்பான பெண் வாயிலாக அளிக்கப்படும் ஒரு சின்ன ஒலி அமைவைக் கேளுங்கள்.
இதைக் கேட்டு, உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது, இல்லையா!! எத்தனை இனிமையான குரல் பாருங்கள்!! ஒவ்வொரு சொல்லிலும் பாவம் தொனிக்கிறது, இறைவன் மீதான இவருடைய ஈடுபாட்டை நம்மால் அனுபவிக்க முடிகிறது. இந்த மதுரமான குரலுக்குச் சொந்தக்காரப் பெண் ஒரு ஜெர்மானியர் என்றால், நீங்கள் மேலும் கூட ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இந்தப் பெண்ணின் பெயர், கைஸ்மி. 21 வயதான கைஸ்மி இப்பொது இன்ஸ்டாகிராமில் வியாபித்திருக்கிறார், இதுவரை இவர் பாரதநாடு வந்ததே இல்லை என்றாலும், பாரத நாட்டு சங்கீதம் இவரை ஆட்கொண்டிருக்கிறது. பாரத நாட்டை பார்த்திராத ஒருவருக்கு பாரத நாட்டு இசையின் மீதிருக்கும் ருசி மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. பிறப்பிலிருந்தே பார்வைத்திறன் அற்ற மாற்றுத் திறனாளி கைஸ்மி. ஆனாலும், இந்தக் கடினமான சவாலால் அவரை அசாதாரணமான சாதனைகளைப் படைப்பதிலிருந்து தடுக்க முடியவில்லை. இசை மற்றும் படைப்பாற்றல் தொடர்பான அவருடைய பேரார்வம் எப்படிப்பட்டது என்றால், சிறுவயதிலேயே இவர் பாடுவதைத் தொடங்கி விட்டார். ஆப்பிரிக்க மேளம் வாசித்தலை இவருடைய 3ஆம் வயதிலேயே இவர் தொடங்கி விட்டார். பாரதநாட்டு இசையோடு இவருக்கு அறிமுகம் 5-6 ஆண்டுகள் முன்பாக ஏற்பட்டது. பாரத நாட்டு சங்கீதம் அவரை எந்த அளவுக்கு மோகித்து விட்டது என்றால், இவர் அதிலே முழுமையாக ஆழ்ந்து போய் விட்டார். மிகவும் கருத்தூக்கம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இவர் பாரத நாட்டின் பல மொழிகளில் பாடுவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். சம்ஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், அஸாமி, பங்காலி, மராட்டி, உருது என இவையனைத்திலும் இவர் பாடல்களைப் பாடியிருக்கிறார். அந்நிய மொழி பேசுவோருக்கு ஓரிரு வரிகளைப் பேசுவது என்றாலே கூட எத்தனை கஷ்டமாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்; ஆனால், கைஸ்மியைப் பொறுத்த வரையில் இது ஒரு பொருட்டே அல்ல. உங்கள் அனைவருக்கும் அவர் கன்னட மொழியில் பாடிய ஒரு பாடலை ஒலிக்கச் செய்கிறேன்.
பாரத நாட்டுக் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் தொடர்பாக ஜெர்மனியின் கைஸ்மியின் இந்தப் பேரார்வத்தை நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். அவருடைய இந்த முயற்சி, பாரத நாட்டவர் அனைவருக்கும் சிலிர்ப்பை உண்டு பண்ணுவது.
என் இனிமைநிறை குடும்ப உறவுகளே, நம்முடைய தேசத்திலே கல்வி என்பது ஒரு சேவையாகவே பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட உணர்வோடு குழந்தைகளுக்குக் கல்விச் சேவையாற்றும் உத்தராக்கண்டின் சில இளைஞர்களைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது. நைநிதால் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், சிறுவர்களுக்காக ஒரு வித்தியாசமான குதிரை நூலகத்தைத் தொடக்கியிருக்கின்றார்கள். இந்த நூலகத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், செல்ல மிகக் கடினமான இடங்களுக்கும் கூட, இதன் வாயிலாக குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, இந்தச் சேவை இலவசமானதும் கூட. இதுவரை இதன் வாயிலாக நைநிதாலைச் சேர்ந்த 12 கிராமங்கள் இதில் அடக்கம். சிறுவர்களின் கல்வியோடு தொடர்புடைய இந்த நேரிய பணியின் உதவிக்காக, வட்டாரத்து மக்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். இந்தக் குதிரை நூலகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் முயற்சி என்னவென்றால், தொலைவான கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கூடத்தின் புத்தகங்களைத் தவிர, கவிதைகள், கதைகள் மற்றும் அறநெறிக் கல்வி தொடர்பான புத்தகங்களும் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த வித்தியாசமான நூலகம், சிறுவர்களின் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறது.
நண்பர்களே, ஹைதராபாதிலே நூலகத்தோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி பற்றியும் தெரிய வந்தது. இங்கே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியான ஆகர்ஷணா சதீஷ் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறாள். வெறும் 11 வயதே நிரம்பிய இந்தச் சிறுமி, குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு அல்ல, ஏழு நூலகங்களை நடத்தி வருகிறாள். தன்னுடைய பெற்றோருடன் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்ற போது, ஆகர்ஷணாவுக்கு ஈராண்டுகள் முன்பாக உத்வேகம் பிறந்தது. இவருடைய தந்தை நலிந்தோருக்கு உதவும் வகையில் அங்கே சென்றார். சிறுவர்கள் அங்கே அவரிடத்திலே வண்ணம் தீட்டும் புத்தகங்களைக் கோரினார்கள், இந்த விஷயமானது, இந்த இனிமையான சிறுமியின் மனதைத் தொட்டு விட்டது, பல்வேறு வகையான புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தாள். தனது அண்டை அயல்புறங்களில் இருக்கும் வீடுகள், உறவினர்கள், நண்பர்களின் புத்தகங்களைத் திரட்டத் தொடங்கினாள், அதே புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதல் நூலகத்தைத் துவக்கினாள் என்ற செய்தி உங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கலாம். நலிந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு இடங்களில் இந்தச் சிறுமி இதுவரை ஏழு நூலகங்களைத் திறந்திருக்கிறாள், இவற்றில் இப்போது சுமார் 6000 புத்தகங்கள் இருக்கின்றன. சிறுமியான ஆகர்ஷணா எப்படி குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்தெடுக்க பெரிய பணியாற்றுகிறாளோ, இது அனைவருக்கும் உத்வேகம் அளிக்க வல்லதாக இருக்கிறது.
நண்பர்களே, இன்றைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னணுப் புத்தகங்களுடையது என்பது உண்மை தான் என்றாலும், புத்தகங்கள் நமது வாழ்க்கையில் என்றுமே ஒரு நல்ல நண்பன் என்ற பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆகையால், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை நாம் குழந்தைகளிடத்திலே ஊக்கப்படுத்த வேண்டும்.
என் நெஞ்சம்நிறை சொந்தங்களே, நமது சாத்திரங்களில் என்ன கூறியிருக்கிறது என்றால் –
ஜீவேஷு கருணா சாபி, மைத்ரீ தேஷு விதீயதாம்.
அதாவது, உயிர்களிடத்தில் கருணையோடு நடக்க வேண்டும், அவற்றை நமது நண்பர்களாகக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நமது தெய்வங்களின் வாகனங்களே கூட விலங்குகள்-பறவைகள் தாமே!! பலர் கோயில்களுக்குச் செல்கிறார்கள், பகவானை சேவிக்கிறார்கள் என்றாலும், தெய்வங்களின் வாகனங்களின்பால் அவர்களின் கவனம் அதிகம் செல்வதில்லை. இந்த உயிரினங்கள் நமது நம்பிக்கையின் மையத்தில் அவசியம் இருக்க வேண்டும், தேவையான அனைத்து வகைகளிலும் நாம் இவற்றைப் பாதுகாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், தேசத்தில், சிங்கம், புலி, சிறுத்தை, யானை ஆகியவற்றின் எண்ணிக்கை உற்சாகம் அளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது. மேலும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; இவற்றால் இந்த மண்ணில் வசிக்கின்ற பிற உயிரினங்களும் காக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு அலாதியான முயற்சி, ராஜஸ்தானத்தின் புஷ்கரில் செய்யப்பட்டு வருகிறது. இங்கே சுக்தேவ் பட் அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து வன விலங்குகளைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்; இவர்களுடைய அணியின் பெயர் என்ன தெரியுமா? இவர்களுடைய அணியின் பெயர் கோப்ரா. ஏன் இந்த ஆபத்தான பெயர் என்றால், இவர்களுடைய அணியானது இந்தப் பகுதியின் பயங்கரமான நாகங்களை மீட்கும் பணியையும் புரிகிறது. இந்த அணியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களை ஒரு முறை தொலைபேசியில் அழைத்தால் போதும், அழைத்த இடத்திற்குச் சென்று விடுகிறார்கள், தங்கள் குறிக்கோளில் இறங்கி விடுகிறார்கள். சுக்தேவ் அவர்களின் இந்த அணியானது இதுவரை 30,000த்திற்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இந்த முயற்சி காரணமாக மனிதர்களின் அபாயம் நீங்கிய அதே வேளையில், இயற்கையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியானது பிற நோய்வாய்ப்பட்ட உயிரினங்களுக்கும் சேவை புரியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத் அவர்களும் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிவதில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே கூட 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார். அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் இவர் உறுதியாக இருக்கிறார். நண்பர்களே, நேரிய நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது, மிகவும் சந்தோஷம் உண்டாகிறது. உங்களிடத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல் இருந்தால் அவற்றைக் கண்டிப்பாகப் பகிருங்கள்.
என் நெஞ்சம்நிறை உறவுகளே, சுதந்திரத்தின் அமுதக்காலம், தேசத்திற்காக அனைத்துக் குடிமக்களின் கடமைக்காலமும் கூட. தங்களுடைய கடமைகளை நிறைவேற்றும் வேளையிலே, நாம் நமது இலக்குகளையும் அடைய முடியும், நமது இலக்குகளைச் சென்று எட்ட முடியும். கடமையுணர்வு என்பது நம்மனைவரையும் ஒரே இழையில் இணைக்கிறது. உத்தர பிரதேசத்தின் சம்பலில், தேசத்தின் கடமையுணர்வின் ஒரு உதாரணம் காணக் கிடைக்கிறது, இதை நான் உங்களிடத்திலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்களே சிந்தனை செய்து பாருங்கள், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஆயிரக்கணக்கான மக்கள்தொகை, அனைவரும் இணைந்து ஓர் இலக்கு, ஒரு நோக்கத்தை எட்ட, ஒன்றுபட்டு பணியாற்றுவது என்பது அரிதாகவே பார்க்க முடிவது; ஆனால் சம்பலைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருமாக இணைந்து, மக்கள் பங்களிப்பு, சமூக ஒன்றிணைவு ஆகியவற்றின் மிகச் சிறப்பான எடுத்துக்காட்டை நிறுவியிருக்கின்றார்கள். உள்ளபடியே, இந்தப் பகுதியில் பல தசாப்தங்களுக்கு முன்பாக, சோத் என்ற பெயருடைய ஒரு நதி இருந்து வந்தது. அம்ரோஹாவில் தொடங்கி சம்பல் வழியாகப் பயணித்து, பதாயூன் வரை பெருகியோடும் நதியானது, ஒரு காலத்தில் இந்தப் பகுதியின் உயிரூட்டியாக அறியப்பட்டது. இந்த நதியில் நீர் இடைவிடாமல் பெருகியோடிக் கொண்டிருந்தது, இது இங்கிருக்கும் உழவர்களின் வயல்களின் முக்கியமான ஆதாரமாக விளங்கியது. காலப்போக்கில் நதியின் பிரவாகம் குறைந்தது, நதியோடிய வழியிலே ஆக்ரமிப்புகள் ஏற்பட்டு, இந்த நதி காணாமலே போனது. நதிகளைத் தாய் எனவே அழைக்கும் நமது தேசத்திலே, சம்பலின் மக்கள் இந்த சோத் நதியையும் மீள் உயிர்ப்பிக்கும் சங்கல்பத்தை மேற்கொண்டார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சோத் நதிக்கு மீள் உயிர்ப்பளிக்கும் பணியை, 70க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைந்து தொடங்கின. கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள், அரசுத் துறைகளையும் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள். ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே, இந்த மக்கள் நதியின் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான பாதையை புனருத்தாரணம் செய்து விட்டார்கள் என்பது உங்களுக்குப் பேருவகையை அளிக்கும். மழைக்காலம் தொடங்கிய போது, இந்தப் பகுதி மக்களின் உழைப்பு பலனை அளித்தது, சோத் நதியில் நீர் நிரம்பி விட்டது. இந்தப் பகுதிவாழ் உழவர்களுக்கு இது மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக ஆகியது. நதிக்கரைகளில் 10,000த்திற்கும் மேற்பட்ட மரங்களை மக்கள் நட்டார்கள்; இதனால் இதன் கரையோரங்கள் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்கும். நதிநீரிலே, 30,000க்கும் மேற்பட்ட காம்பூசியா மீன்கள் எனும் கொசு மீன்களை விட்டார்கள், இவை கொசுக்களின் பரவலாக்கத்தைத் தடுக்கும். நண்பர்களே, சோத் நதியின் எடுத்துக்காட்டு நமக்கெல்லாம் என்ன கூறுகிறது என்றால், நாம் ஒருமுறை உறுதி செய்து விட்டால், மிகப்பெரிய சவால்களையும் நம்மால் கடக்க முடியும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதைத் தான். நீங்களும் கடமைப்பாதையில் பயணித்து, உங்கள் அருகிலே, இப்படிப்பட்ட மாற்றங்கள் பலவற்றின் ஊடகமாக மாறமுடியும்.
எனக்குப் பிரியமான சொந்தங்களே, நோக்கம் அசைக்கமுடியாததாக இருக்குமேயானால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு இருந்தால், எந்த ஒரு வேலையும் கடினமாகவே இராது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகுந்தலா சர்தார் அவ்ர்கள் இந்த விஷயம் மிகவும் சரியானது என்று நிரூபித்திருக்கிறார்கள். இன்று இவர் பிற பெண்கள் பலருக்கு உத்வேகமாக மாறியிருக்கிறார்கள். சகுந்தலா அவர்கள் ஜங்கல்மஹலின் ஷாத்நாலா கிராமத்தில் வசிப்பவர். நீண்ட காலம் வரை இவருடைய குடும்பத்தினர், தினக்கூலிகளாக வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே சென்று வருதல் கூட மிகவும் சிரமமானதாகவே இருந்தது. இதற்காக இவர் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தீர்மானம் மேற்கொண்டார், வெற்றி பெற்றார், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அப்படி என்ன அற்புதம் நிகழ்த்தி விட்டார் இவர் என்று அறிய ஆவலாக இருப்பீர்கள் இல்லையா!! இதற்கான பதில் ஒரு தையல் இயந்திரத்தில் அடங்கி இருக்கிறது. ஒரு தையல் இயந்திரத்தின் வாயிலாக இவருடைய திறமையானது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துவிட்டது. ஒரு தையல் இயந்திரத்தின் வாயிலாக, இவர் சால் மரம் அதாவது குங்கிலிய மரத்தின் இலைகளின் மீது அழகான வடிவங்களை உருவாக்கத் தொடங்கினார். இவருடைய இந்தத் திறமையானது, குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இவரால் உருவாக்கப்படும் இந்த அற்புதமான கைவினைப்பொருளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. சகுந்தலா அவர்களின் இந்தத் திறன், இவருக்கு மட்டுமல்ல, குங்கிலிய இலைகளைத் திரட்டும் பலருடைய வாழ்க்கையையும் மாற்றியது. இப்போது, இவர், பல பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். தினக்கூலியைச் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பம், இப்போது பிறருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அளவுக்கு உத்வேக காரணியாக இருக்கிறது என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தினக்கூலி வேலையைச் சார்ந்து வாழ்ந்த தன் குடும்பத்தாரை, அவர்கள் கால்களிலேயே நிற்க வைத்திருக்கிறார் இவர். இதன் காரணமாக இவருடைய குடும்பத்தார், பிற பணிகளில் கவனம் செலுத்தத் தேவையான வாய்ப்பு அமைந்திருக்கிறது. மேலும் ஒரு விஷயமும் நடந்தது. சகுந்தலா அவர்களின் நிலைமை சீரடைந்தவுடன், இவர் சேமிக்கவும் தொடங்கி விட்டார். இப்போது இவர் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார், இதனால் இவருடைய குழந்தைகளின் எதிர்காலமும் பிரகாசமானதாக ஆகும். சகுந்தலா அவர்களின் பேரார்வம் குறித்து அவரை எத்தனை பாராட்டினாலும் தகும். பாரத நாட்டவரிடம் இப்படிப்பட்ட திறமைகள்-திறன்கள் நிறைந்து காணப்படுகிறது – நீங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பம் மட்டும் தாருங்கள், கண் சிமிட்டும் நேரத்திற்குள்ளாக என்னவெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள் தெரியுமா!!
எனதருமைச் சொந்தங்களே, தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது காணப்பட்ட காட்சிகளை யாரால் மறக்க முடியும்? உலகத் தலைவர்கள் பலர், அண்ணலுக்குச் சிரத்தையுடன் கூடிய அஞ்சலியைச் செலுத்த ராஜ்காட்டிற்கு வந்தார்கள். உலகெங்கும் இருப்போர் மனங்களில் அண்ணலின் கருத்துக்கள் எத்தனை மதிப்புடையதாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. காந்தி ஜயந்தி தொடர்பாக நாடு முழுவதிலும் தூய்மையோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் தூய்மையே சேவை இயக்கமானது, அதிக வேகம் பிடித்திருக்கிறது. Indian Swachhata Leagueலும் கூட, நிறைய பங்களிப்பை என்னால் காண முடிகிறது. இன்று மனதின் குரல் வாயிலாக, நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தூய்மை தொடர்பாக ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. நீங்களும் நேரம் ஒதுக்கி, தூய்மையோடு தொடர்புடைய இயக்கத்தில் உங்கள் பங்களிப்பை அளியுங்கள். நீங்கள் உங்கள் தெருவிலே, அக்கம்பக்கத்திலே, பூங்காவிலே, நதியிலே, குளத்திலே அல்லது ஏதோவொரு பொதுவிடத்திலே, இந்தத் தூய்மை இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்; எங்கெல்லாம் அமுத நீர்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அங்கே கண்டிப்பாகத் தூய்மைப்பணியை மேற்கொண்டாக வேண்டும். தூய்மையின் இந்த கார்யாஞ்சலி தான் காந்தியடிகளுக்கு நாமளிக்கக் கூடிய மெய்யான நினைவாஞ்சலியாகும். காந்தியடிகளின் பிறந்த நாள் என்ற சந்தர்ப்பத்திலே, நாம் கதரின் ஏதாவது ஒரு பொருளைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
எனதருமைக் குடும்பத்தாரே, நமது தேசத்திலே பண்டிகைக்காலம் தொடங்கி விட்டது. உங்கள் அனைவரின் வீடுகளிலும் புதிதாக ஏதாவது வாங்கும் திட்டம் தீட்டியிருப்பீர்கள். சிலர் நவராத்திரிக்காலத்தில், தங்கள் புதிய பணியைத் தொடங்கலாம் என்று காத்திருக்கலாம். உற்சாகம், உல்லாசம் நிரம்பிய சூழலில் நீங்கள் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை அவசியம் நினைவில் நிறுத்திச் செயலாற்றுங்கள். நீங்கள், பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கே உங்கள் ஆதரவு அமைய வேண்டும். உங்களின் சிறிய சந்தோஷமானது, வேறு ஒருவருடைய குடும்பத்துக்கு மிகப்பெரிய சந்தோஷ காரணியாக ஆகலாம். நீங்கள் பாரத நாட்டுப் பொருட்களை வாங்கும் போது இதன் நேரடி தாக்கமும் ஆதாயமும், நமது உழைப்பாளர்கள், நமது கைவினைஞர்கள், கலைஞர்கள், பிற விச்வகர்மா சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் தொடக்கநிலைத் தொழில்களான பல ஸ்டார்ட் அப்புகளும் கூட உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. நீங்கள் உள்ளூர் பொருட்களை வாங்கினால், ஸ்டார்ட் அப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆதாயம் உண்டாகும்.
என் குடும்பத்தின் கனிவான சொந்தங்களே, மனதின் குரலில் இம்மட்டே. அடுத்த முறை உங்களோடு மனதின் குரலில் நாம் கலக்கும் போது, நவராத்திரியும், தசராவும் கடந்து சென்றிருக்கும். திருவிழாக்களின் காலத்தில் நீங்களும் நிறைவான உற்சாகத்தோடு அனைத்து விழாக்களையும் கொண்டாடுங்கள், உங்களுடைய குடும்பத்தார் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும், இதுவே என்னுடைய வேண்டுதல். இந்த அனைத்துப் பண்டிகைகளுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன், மேலும் புதிய விஷயங்களைக் கொண்டு வருகிறேன், நாட்டுமக்களின் வெற்றிகளோடு நான் வருவேன். நீங்களும், உங்களுடைய தகவல்களை-செய்திகளை எனக்கு அவசியம் அனுப்பி வையுங்கள், உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், நான் காத்துக் கொண்டிருப்பேன். பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை குடும்பத்தாரே, வணக்கம். மனதின் குரலின் ஆகஸ்ட் மாதப் பகுதியில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நிறைவான வரவேற்பை அளிக்கிறேன். இப்படி முன்பு எப்போதாவது நடந்திருக்கிறதா என்று நினைவில் இல்லை, அதாவது மழைக்கால மாதங்களில் இருமுறை மனதின் குரல் நிகழ்ச்சி இடம் பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த முறை அப்படித்தான் நடக்க இருக்கிறது. மழைக்காலம் அதாவது மஹாசிவனுடைய மாதம், உற்சவம் மற்றும் உல்லாசம் நிறைந்த காலம். சந்திரயானுடைய வெற்றியின் கொண்டாட்டம் இந்த உற்சவச் சூழலுக்கு பல பங்கு உல்லாசத்தைச் சேர்த்திருக்கிறது. சந்திரயான் சந்திரனுக்குப் பயணித்து மூன்று நாட்களுக்கும் கூடுதலாக ஆகியிருக்கிறது. இந்த வெற்றி எத்தனை பெரியது என்றால், இதைப்பற்றி நாம் எத்தனை விவாதித்தாலும், அது குறைவே. நான் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே, என்னுடைய பழைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. …….
வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
திடமான உறுதியோடு
அனைத்திடர்களையும் தாண்டி
கரும் இருளை அழித்தொழிக்க
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
என்னுடைய அன்பான குடும்பத்தாரே, ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. மிஷன் சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது, வெல்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளமாக ஆகி இருக்கிறது.
நண்பர்களே, இந்த மிஷனுடைய ஒரு பக்கம் என்னவென்பது பற்றி நான் விசேஷமாக விவாதிக்க விரும்புகிறேன். இந்த முறை நான் செங்கோட்டையிலே கூறியிருந்தேன், அதாவது பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சியை தேசிய இயல்பு என்ற வகையில் வலுவுடையதாக்க வேண்டும். பெண்கள் சக்தியின் வல்லமை இணையும் போது, அங்கே சாத்தியமில்லாதவை கூட சாத்தியமாகின்றன. பாரதத்தின் மிஷன் சந்திரயான், பெண் சக்திக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இந்த மொத்த மிஷனிலும் பல பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனி அமைப்புக்களின் திட்ட இயக்குநர், திட்ட மேலாளர் என பல முக்கியமான பொறுப்புக்களை நிர்வாகித்துள்ளார்கள். பாரதத்தின் பெண்கள், இப்போது எல்லையில்லாதது என்று புரிந்து கொள்ளப்படும் விண்ணுக்கே சவால் விடுக்கின்றார்கள். எந்த ஒரு நாட்டின் பெண்களும், இத்தனை தீவிர ஆர்வம் உடையோராக இருந்தால், அந்த தேசத்தின் வளர்ச்சியை யாரால் தடை செய்ய முடியும்!!
நண்பர்களே, நாம் இத்தனை பெரிய பயணத்தை ஏன் மேற்கொள்ள முடிந்தது என்றால், நமது கனவுயரியது, நமது முயற்சியும் பெரியது. சந்திரயான் மூன்றின் வெற்றியில் நமது விஞ்ஞானிகளோடு கூடவே, பிற துறைகளின் முக்கிய பங்களிப்பும் பெரிய அளவில் இருக்கிறது. அனைத்து பாகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்ய, நாட்டுமக்கள் பங்களிப்பு அளித்திருக்கிறார்கள். அனைவரின் முயற்சிகளும் இருக்கும் போது, வெற்றியும் கிடைத்திருக்கிறது. இந்த சந்திரயான் 3இன் மிகப்பெரிய வெற்றியே இது தான். இனிவருங்காலத்திலும் கூட, நமது விண்வெளித்துறை, அனைவரின் முயற்சியின் வாயிலாக, இப்படி கணக்கற்ற வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்று நான் விழைகிறேன்.
என் குடும்பத்து உறுப்பினர்களே! செப்டம்பர் மாதம், பாரதத்தின் திறமைக்கு சாட்சியாக இருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 தலைவர்கள் மாநாட்டிற்காக பாரதம் முழுத்தயார் நிலையில் இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் பங்கெடுக்க 40 நாடுகளின் தலைவர்களும், பல உலக நிறுவனங்களும் தலைநகர் தில்லிக்கு வருகிறார்கள். தனது தலைமைத்துவத்தின் வாயிலாக பாரதம் ஜி20யை, மேலும் அதிக உள்ளடக்கிய அமைப்பாக ஆக்கியிருக்கிறது. பாரதத்தின் அழைப்பின் பேரில், ஆப்பிரிக்கக் கூட்டமைப்பும் கூட ஜி20யோடு இணைந்து இருக்கும் நிலையில், ஆப்பிரிக்க மக்களின் குரல், உலகின் இந்த முக்கியமான மேடை வரை எட்டியிருக்கிறது. நண்பர்களே, கடந்த ஆண்டு, பாலியில் பாரதம் ஜி20யின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, இதுவரை இத்தனை நடந்திருக்கிறது என்பது நம்மனைவருக்கும் பெருமையளிக்கிறது. தில்லியில் மட்டுமே பெரியபெரிய நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற பாரம்பரியத்திலிருந்து விலகி, நாங்கள் இதை தேசத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு சென்றோம். தேசத்தின் 60 நகரங்களில் இதோடு இணைந்த கிட்டத்தட்ட 200 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜி20 பிரதிநிதிகள் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் மிகவும் பிரியத்தோடு அவர்களுக்கு வரவேற்பு நல்கப்பட்டது. இந்தப் பிரதிநிதிகள் நமது தேசத்தின் பன்முகத்தன்மையைக் கண்டு, நமது துடிப்பு நிறைந்த ஜனநாயகத்தைப் பார்த்து, மிகவும் நல்ல உணர்வை அனுபவித்தார்கள். பாரதத்தில் எத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
நண்பர்களே, ஜி20யின் நமது தலைமைத்துவம், மக்களின் தலைமைத்துவம், இதில் மக்களின் பங்களிப்பு உணர்வு மிக முதன்மையானது. ஜி20யின் 11 ஈடுபாட்டுக் குழுக்களில் கல்வியாளர்கள், குடிமை சமூகத்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தோடு இணைந்தவர்கள் முக்கியமான பங்களிப்பு அளித்தார்கள். இதனை முன்னிட்டு நாடெங்கிலும் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளோடு, ஏதோ ஒரு வகையில் ஒண்ணரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணைந்திருக்கிறார்கள். மக்களின் பங்களிப்பு தொடர்பான நமது இந்த முயற்சியில் ஒன்றல்ல, இரண்டு உலக சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. வாராணசியில் நடைபெற்ற ஜி20 வினாடிவினா போட்டியில் 800 பள்ளிகளிலிருந்து ஒண்ணே கால் இலட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு அதனை உலகச் சாதனையாக்கி இருக்கிறார்கள். அதே வேளையில், லம்பானி கைவினைஞர்களும் கூட அற்புதம் ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார்கள். 450 கைவினைஞர்கள், சுமார் 1800 தனித்துவம் வாய்ந்த அலங்காரங்களின் ஆச்சரியமான தொகுப்பை உருவாக்கி, தங்களுடைய திறத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜி20க்கு வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் நமது தேசத்தின் கலைத்துறையின் பன்முகத்தன்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இதே போன்றதொரு அற்புதமான நிகழ்ச்சிக்கு சூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே நடைபெற்ற புடவை உடுத்திய பெண்களின் நீண்டதூர நடைப்பயணத்தில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 15,000 பெண்கள் பங்கெடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி காரணமாக, சூரத்தின் ஜவுளித் தொழிலுக்கு ஊக்கம் கிடைத்த அதே நேரத்தில், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற கருத்திற்கும் வலு கிடைத்தது, உள்ளூர் பொருட்கள், உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படும் வழியும் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீநகரில் ஜி20யின் கூட்டத்திற்குப் பிறகு கஷ்மீரிலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்வதெல்லாம், வாருங்கள், ஜி20 சம்மேளனத்தை வெற்றி பெறச் செய்வோம், தேசத்தின் பெருமையை நிலைநிறுத்துவோம்.
என் குடும்பத்தாரே, மனதின் குரல் பகுதிகளில் நாம் நமது இளைய தலைமுறையினரின் திறமைகளைப் பற்றி விவாதிக்க சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். இன்று, விளையாட்டுத் துறை என்பது, நமது இளைய விளையாட்டு வீரர்கள் புதியபுதிய வெற்றிகளைத் தொடர்ந்து ஈட்டி வரும் ஒன்றாகும். நான் இன்றைய மனதின் குரலில் பேசப் போகும் ஒரு போட்டியிலே, நமது விளையாட்டு வீரர்கள் தேசத்தின் கொடிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சில நாட்கள் முன்பாக சீனத்தில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்கள் நடந்தன. இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்த முறை பாரதம் இதுவரை நிகழ்த்தியிராத சாதனைச் செயல்பாட்டினைப் புரிந்திருக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் மொத்தம் 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், இதிலே 11 தங்கப் பதக்கங்கள். 1959 முதல் இன்று வரை எத்தனை உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றனவோ, அவற்றில் பெற்ற அனைத்துப் பதக்கங்களைக் கூட்டினாலும் கூட, மொத்தம் 18 தான் வருகிறது. இத்தனை தசாப்தங்களில் வெறும் 18 மட்டுமே; ஆனால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள், 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வகையிலே, உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இளைய வீரர்கள், மாணவர்கள் சிலர் இப்போது தொலைபேசி வாயிலாக என்னோடு இணைந்திருக்கிறார்கள். நான் முதன்மையாக இவர்களைப் பற்றி உங்களிடம் கூறி விடுகிறேன். யுபியில் வசிக்கும் பிரகதி, வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். அசாம் மாநிலத்தில் வசிக்கும் அம்லான், தடகளப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். யுபியில் வசிக்கும் பிரியங்கா ரேஸ் வாக், அதாவது நடைப்பந்தயப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த அபிதன்யா துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்.
- எனக்குப் பிரியமான இளைய வீரர்களே, வணக்கம்.
எல்லோரும் - வணக்கம் சார்.
- உங்களோட பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் முதன்மையா பாரதநாட்டு பல்கலைக்கழகங்கள்லேர்ந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணியின் அங்கத்தினர்களான நீங்க எல்லாரும் நாட்டோட பெயருக்குப் பெருமிதம் சேர்த்திருக்கீங்க, இதுக்கு உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கறேன். நீங்க பல்கலைகழக விளையாட்டுக்கள்ல உங்க செயல்பாட்டை வெளிப்படுத்தி, நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும் தலை நிமிரச் செய்திருக்கீங்க. ஆகையால உங்க எல்லாருக்கும் முதல்ல பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன்.
பிரகதி, நான் உரையாடலை உங்க கிட்டேர்ந்து துவங்கறேன். நீங்க முதல்ல ஒரு விஷயத்தைச் சொல்லுங்க, 2 பதக்கங்களை ஜெயிச்ச பிறகு, நீங்க இங்கிருந்து போன வேளையில இப்படி ஜெயிப்போம்னு நீங்க யோசிச்சீங்களா? இத்தனை பெரிய வெற்றிக்குப் பிறகு நீங்க எப்படி உணர்றீங்க?
பிரகதி – சார் ரொம்ப பெருமையா உணர்றேன் நான். எந்த அளவுக்கு நம்ம தேசத்தோட கொடிய உயரப் பறக்க விட்டு வந்திருக்கேன்னா, ஒரு முறை தங்கத்தை இழந்த போது வருத்தமா இருந்திச்சு, ஆனால் மறுமுறை எனக்கு என்ன தோணிச்சுன்னா, நாம எக்காரணம் கொண்டும் இதுக்குக் கீழ போகக் கூடாதுன்னு தீர்மானிச்சேன். எப்பாடு பட்டாவது நம்ம கொடி தான் தலைசிறந்த நிலையில இருக்கணும்னு முடிவு செஞ்சேன். கடைசியில போட்டியில ஜெயிச்ச போது, அந்த மேடையிலேயே நாங்க எல்லாரும் செம்மையா கொண்டாடினோம். அது ரொம்ப அருமையான கணம். அதை என்னால அளவிடவோ, எடுத்துச் சொல்லவோ முடியாது.
மோதி – பிரகதி நீங்க உடல்ரீதியா பெரிய பிரச்சனையோட தான் வந்தீங்க. அதைத் தாண்டியும் நீங்க வெற்றி பெற்றிருக்கீங்க. இது நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பெரிய உத்வேகம் அளிக்கற விஷயம். உங்களுக்கு என்ன ஆச்சு?
பிரகதி – சார் 2020ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி, என் தலையில ரத்தக்கசிவு ஏற்பட்டிச்சு. நான் வெண்டிலேட்டர் கருவியோட இணைக்கப்பட்டிருந்தேன். நான் உயிர் பிழைப்பேனா இல்லையான்னே தெரியலை, அப்படியே பிழைச்சாலும் என்ன நிலைமைன்னு புரியலை. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி, எனக்குள்ள ஒரு உறுதி இருந்திச்சு, அதாவது நான் கண்டிப்பா திரும்பவும் களத்தில இறங்கணும்னு, அம்பு விடணும்னு. நான் உயிர் பிழைச்சுத் திரும்பவும் களத்துக்கு வந்திருக்கேன்னா, அதுக்குப் பெரும்பங்குக் காரணம் கடவுள் தான், அதன் பிறகு டாக்டர்கள், பிறகு வில்வித்தை.
இப்ப நம்மகூட அம்லன் இருக்காரு. அம்லன், எப்படி தடகளப் போட்டிகள் மீது உங்களுக்கு இத்தனை பெரிய ஆர்வம் ஏற்பட்டிச்சுன்னு சொல்லுங்க.
அம்லன் – வணக்கம் சார்.
மோதி – வணக்கம், வணக்கம்.
அம்லன் – சார், தடகளப் போட்டிகள்ல முதல்ல எல்லாம் எனக்கு நாட்டம் இல்லாம இருந்திச்சு. முதல்ல நான் கால்பந்தாட்டம் தான் அதிகம் விளையாடுவேன். ஆனா என் அண்ணனோட ஒரு நண்பன், அவரு தான் என் கிட்ட, அம்லான், நீ தடகளப் போட்டியில பங்கெடுக்கணும்னு சொன்னாரு. நானும் சரின்னு ஒத்துக்கிட்டு, மாநில அளவிலான போட்டியில போட்டி போட்டேன், ஆனா தோத்துப் போயிட்டேன். அந்தத் தோல்வி எனக்குப் பிடிக்கலை. இப்படி விளையாடி விளையாடி தான் நான் இந்தத் துறைக்கு வந்தேன். பிறகு மெல்லமெல்ல, இப்ப ரொம்ப ஜாலியா இருக்கு. எனக்கும் இது மேல ஆர்வம் அதிகமாயிருச்சு.
மோதி – அம்லான், அதிகமான பயிற்சி எங்க எடுத்துக்கிட்டீங்க.
அம்லான் – பெரும்பாலும் நான் ஹைதராபாதில தான் பயிற்சி எடுத்தேன், சாய் ரெட்டி சார் வழிகாட்டுதல்ல தான். பிறகு நான் புபநேஷ்வருக்கு மாத்திக்கிட்டு, அங்க தொழில்ரீதியா ஆரம்பிச்சேன்.
மோதி - சரி, இப்ப நம்ம கூட பிரியங்காவும் இருக்காங்க. பிரியங்கா, நீங்க 20 கிலோமீட்டர் நடைப்பந்தயக் குழுவில இருந்தீங்க. நாடு முழுக்க நீங்க சொல்றதை கேட்டுக்கிட்டு இருக்கு, அவங்க எல்லாரும் இந்த விளையாட்டுப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறாங்க. நீங்களே சொல்லுங்க, இதில ஈடுபட என்ன மாதிரியான திறன்கள் தேவைன்னு. உங்க முன்னேற்றம் எங்கிருந்து எங்க ஏற்பட்டிருக்குன்னு சொல்லுங்க.
பிரியங்கா – இந்தப் போட்டி ரொம்ப கடினமானது. ஏன்னா, எங்களை கண்காணிக்க 5 நடுவர்கள் இருப்பாங்க, நாங்க ஒருவேளை நடக்காம ஓடினோம்னா, அவங்க எங்களை போட்டியிலேர்ந்து விலக்கிருவாங்க, இல்லைன்னா கொஞ்சம் கூட சாலைலேர்ந்து குதிச்சோம், தாண்டினோம்னாலும் வெளியேத்திருவாங்க. இல்லை கொஞ்சமா முட்டியை மடக்கினோம்னாலும் அவ்வளவு தான். எனக்குக் கூட ரெண்டு முறை எச்சரிக்கை விடுத்தாங்க. அதன் பிறகு நான் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, குறைஞ்சது அந்தக் கட்டத்திலேர்ந்து டீம் மெடலாவது வாங்கணும்னு நினைச்சேன். ஏன்னா நாங்க எல்லாரும் இங்க தேசத்துக்காகத் தான் வந்திருக்கோம். வெறும் கையோட எப்படி திரும்பறது?
மோதி – சரி, உங்க அப்பா, சகோதரர் எல்லாரும் நல்லா இருக்காங்க இல்லையா?
பிரியங்கா – ஆமாம் சார், எல்லாரும் அருமையா இருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் சொல்லுவேன், நீங்க எங்களை இத்தனை ஊக்கப்படுத்தறீங்க, உத்வேகப்படுத்தறீங்க, உண்மையிலேயே எங்களுக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா உலகப் பல்கலைக்கழக விளையாட்டுக்களை எல்லாம் இந்தியாவுல நிறைய கேள்விப்பட்டிருக்கவும் மாட்டாங்க. ஆனா எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது இப்ப, இந்த விளையாட்டுத் தொடர்பாவும், நாங்க இதில இத்தனை பதக்கங்கள் ஜெயிச்சோம்னு எல்லாம் நிறைய ட்வீட்டுகள் வருது, இது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒலிம்பிக்ஸ் அளவுக்கு இதுக்கும் நிறைய ஊக்கம் கிடைச்சுக்கிட்டு வருது.
மோதி – சரி பிரியங்கா, என் தரப்புல வாழ்த்துக்கள். நீங்க நிறைய பெருமை சேர்த்திருக்கீங்க, சரி வாங்க இப்ப அபிதன்யா கூட பேசலாம்.
அபிதன்யா – வணக்கம் சார்,
மோதி- உங்களைப் பத்திச் சொல்லுங்க.
அபிதன்யா – சார், நான் மஹாராஷ்டிரத்தோட கோலாபூர்லேர்ந்து வர்றேன், நான் துப்பாக்கிச் சுடுதல்ல 25எம் விளையாட்டுப் பிஸ்டல்லயும், 10எம் ஏர் பிஸ்டல்லயும், ஆக ரெண்டு போட்டிலயுமே ஈடுபடுறேன். எங்கப்பா அம்மா ரெண்டு பேருமே உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், நான் 2015இல துப்பாக்கிச் சுடுதல்ல ஈடுபட ஆரம்பிச்சேன். நான் ஆரம்பிச்ச காலத்தில கோலாப்பூர்ல அத்தனை வசதிகள் இருக்கலை, பஸ்ஸுல போய், வட்கான்வ்லேர்ந்து கோலாப்பூர் போக ஒண்ணரை மணி நேரம் ஆகும், அதே மாதிரி திரும்பி வரவும் ஒண்ணரை மணிநேரம் ஆகும், அங்க 4 மணிநேரம் பயிற்சி, இப்படி 6-7 மணி நேரம் பயணத்திலயும், பயிற்சியிலயும் செலவாகறதால, ஸ்கூலுக்குப் போக முடியாம போகும். எங்க அம்மா அப்பா சொல்லுவாங்க, கண்ணா, நீ ஒரு வேலை செய், நாங்க உன்னை சனி-ஞாயிறு சுடுதல் மைதானம் கொண்டு போறோம், மத்த நேரம் நீ மத்த விளையாட்டு விளையாடும்பாங்க. நான் சின்ன வயசுல எல்லா விளையாட்டுக்களையும் விளையாடுவேன் ஏன்னா, எங்கப்பா அம்மா ரெண்டு பேருமே விளையாட்டுல நிறைய ஈடுபாடு கொண்டவங்க, ஆனா அவங்களால அதிகம் சாதிக்க முடியலை. பொருளாதார ஆதரவு இருக்கலை. அதிக தெரிதலும் தகவலும் அவங்களுக்கு இருக்கலை அதனால, எங்கம்மாவோட பெரிய கனவு என்னன்னா, நான் தேசத்தோட பிரதிநிதியா இருக்கணும், தேசத்துக்காக பதக்கம் ஜெயிக்கணுங்கறது தான். என்னால அவங்க கனவை நிறைவேத்த முடிஞ்சிருக்கு, இதுக்காக நான் சின்ன வயசுல விளையாட்டுக்கள்ல நிறைய ஆர்வம் எடுத்துக்கிட்டேன், டாய்க்வாண்டோ பழகினேன், அதிலயும் ப்ளாக் பெல்ட் வாங்கியிருக்கேன், பாக்சிங், ஜூடோ, ஃபென்சிங், தட்டு எறிதல் மாதிரியான விளையாட்டுக்கள்ல ஈடுபட்டேன், 2015இல துப்பாக்கிச் சுடுதலை மேற்கொண்டேன். பிறகு, 2-3 ஆண்டுகள் நான் கடுமையா உழைச்சு, முதல் முறையா பல்கலைக்கழக போட்டிகள்ல பங்கெடுக்க மலேஷியாவுக்குத் தேர்வானேன், அதில எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைச்சுது, அங்க தான் எனக்குப் பெரிய ஊக்கம் கிடைச்சுது. பிறகு என் பள்ளியே எனக்கு ஒரு துப்பாக்கிச் சுடுதல் களம் அமைச்சுக் கொடுத்தாங்க, அங்க பயிற்சி செஞ்சு, பிறகு அவங்க என்னை புணேவுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுப்பினாங்க. அங்க ககன் நாரங் விளையாட்டு நிறுவனமான Gun for Gloryஇல நான் இப்ப பயிற்சி மேற்கொண்டு வர்றேன், இப்ப ககன் சார் எனக்கு நிறைய ஆதரவு அளிக்கறாரு, என் விளையாட்டை ஊக்கப்படுத்தறாரு.
மோதி – நல்லது, நீங்க நாலு பேருமே ஏதாவது சொல்ல விரும்பறீங்கன்னா, நான் கேட்க விரும்பறேன். பிரகதியாகட்டும், அம்லான் ஆகட்டும், பிரியங்காவாகட்டும், அபிதன்யாவாகட்டும். நீங்க எல்லாரும் என்னோட இணைஞ்சிருக்கீங்க, ஏதாவது சொல்ல விரும்பறீங்கன்னா நான் கண்டிப்பா கேட்கறேன்.
அம்லான் – சார், எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார்.
மோதி – சொல்லுங்க.
அம்லான் – சார், உங்களுக்கு எந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும் சார்?
மோதி – விளையாட்டு உலகத்தில பாரதம் பெரிய மலர்ச்சியை அடையணும், இதுக்காக நான் இந்த விஷயங்களுக்கு ஊக்கம் கொடுத்துட்டு இருக்கேன். ஆனா ஹாக்கி, கால்பந்தாட்டம், கபடி, கோகோ, இதெல்லாம் நம்ம மண்ணோட இணைஞ்ச விளையாட்டுக்கள், எப்பவுமே, நாம இதில பின்தங்கி இருக்கக் கூடாது, அதே போல வில்வித்தையிலயும் நம்ம வீரர்கள் நல்லா செயல்படுறதை நான் கவனிக்கறேன், அதே போல துப்பாக்கிச் சுடுதல்லயும். ரெண்டாவதா நான் என்ன பார்க்கறேன்னா, நம்ம இளைஞர்கள்ல, ஏன் குடும்பங்கள்லயும் கூட விளையாட்டுக்கள் மேல முதல்ல இருந்த கருத்து, உணர்வு இப்ப இல்லை. முன்ன எல்லாம் குழந்தைங்க விளையாடப் போனா, அதை தடுப்பாங்க, ஆனா இப்ப, காலம் ரொம்ப மாறிப் போச்சு. நீங்க எல்லாரும் வெற்றி மேல வெற்றி குவிக்கறீங்க இல்லை. இது, எல்லா குடும்பங்களுக்கும் கருத்தூக்கமா அமையுது. ஒவ்வொரு விளையாட்டிலயும், எதுல எல்லாம் நம்ம குழந்தைகள் பங்கெடுக்கறாங்களோ, அதில எல்லாம் ஏதோ ஒண்ணை ஜெயிச்சுக்கிட்டு வர்றாங்க. மேலும் இந்தச் செய்தி முக்கியச் செய்தியா நாட்டுமக்கள் கிட்ட கொண்டு போயும் சேர்க்கப்படுது, கண்ணுக்குத் தெரியற வகையில காட்டப்படுது, பள்ளிகள், கல்லூரிகள்ல விவாதப் பொருளாகுது. சரி, எனக்கு ரொம்ப நல்லா இருக்கு உங்களோட பேசினது, என் தரப்பிலேர்ந்து உங்க எல்லாருக்கும் பலப்பல பாராட்டுக்கள், பல நல்வாழ்த்துக்கள்.
அனைவரும் – பலப்பல நன்றிகள். தேங்க்யூ சார். நன்றி.
மோதி – நன்றிகள், வணக்கம்.
எனது குடும்ப உறுப்பினர்களே, இந்த முறை ஆகஸ்ட் 15 அன்று, நாடு அனைவரின் முயற்சியின் சக்தியைக் கண்டது. நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியும் வீடுகள் தோறும் மூவண்ணக் கொடியேற்றுவோம் இயக்கத்தை உண்மையான 'மனங்கள் தோறும் மூவண்ணம் என்ற பிரச்சாரமாக' ஆக்கியது. இந்தப் பிரச்சாரத்தின் போது பல பதிவுகளும் ஏற்படுத்தப்பட்டன. நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியை கோடிக்கணக்கில் வாங்கினார்கள். 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் சுமார் 1.5 கோடி மூவர்ணக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது தொழிலாளர்கள், நெசவாளர்கள், குறிப்பாகப் பெண்களுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த முறை நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை, சுமார் 5 கோடி நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார்கள். இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.
நண்பர்களே, தற்போது, என் மண் என் தேசம், தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் இயக்கம் நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மண்ணைச் சேகரிக்கும் பிரச்சாரம் தொடங்கப்படும். நாட்டின் புனித மண் ஆயிரக்கணக்கான அமுதக் கலசங்களில் ஒன்று திரட்டப்படும். அக்டோபர் இறுதியில், ஆயிரக்கணக்கான அமுதக் கலச யாத்திரை நாட்டின் தலைநகர் தில்லிஐ வந்தடையும். தில்லியில் இந்த மண்ணிலிருந்து அமுதப் பூங்காவனம் உருவாக்கப்படும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் முயற்சியும் இந்தப் இயக்கத்தை வெற்றியடையச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே, இந்த முறை எனக்கு சம்ஸ்கிருத மொழியில் பல கடிதங்கள் வந்துள்ளன. இதற்குக் காரணம், மழைமாதப் பௌர்ணமி நாளில் உலக சம்ஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது.
सर्वेभ्य: विश्व-संस्कृत-दिवसस्य हार्द्य: शुभकामना:
அனைவருக்கும் உலக சம்ஸ்கிருத நாளை ஒட்டி நல்வாழ்த்துக்கள்.
சம்ஸ்கிருதம் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது பல நவீன மொழிகளின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. சம்ஸ்கிருதம் அதன் தொன்மைக்காகவும், அதன் அறிவியல் மற்றும் இலக்கணத்திற்காகவும் அறியப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான அறிவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யோகக்கலை, ஆயுர்வேதம், தத்துவம் போன்ற பாடங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள், இப்போது சம்ஸ்கிருதத்தை அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களும் இந்தத் திசையில் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, சம்ஸ்கிருத மேம்பாட்டு அறக்கட்டளை, யோகக்கலைக்கு சம்ஸ்கிருதம், ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருதம் மற்றும் புத்த மதத்திற்கு சம்ஸ்கிருதம் போன்ற பல படிப்புகளை அளிக்கிறது. 'சம்ஸ்கிருத பாரதி' சம்ஸ்கிருதத்தை மக்களுக்குக் கற்பிக்கும் இயக்கத்தை நடத்துகிறது. இதில், 10 நாட்களில் சம்ஸ்கிருத உரையாடல் புரியலாம் என்ற முகாமில் பங்கேற்கலாம். இன்று மக்களிடையே சம்ஸ்கிருதம் குறித்த விழிப்புணர்வும், பெருமித உணர்வும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் பின்புலத்தில், நாட்டின் சிறப்பானதொரு பங்களிப்பும் உள்ளது. உதாரணமாக, 2020 ஆம் ஆண்டில் மூன்று சம்ஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களின் பல இணைப்புக் கல்லூரிகளும், நிறுவனங்களும் வெவ்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன. ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களில் சம்ஸ்கிருத மையங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நண்பர்களே, நமது தாய் மொழி தான் நம்மை நமது வேர்களுடன் இணைப்பது, நமது கலாச்சாரத்துடன் இணைப்பது, நமது பாரம்பரியத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகம் என்பதை நீங்கள் பல நேரங்களில் கண்டிப்பாக அனுபவித்திருப்பீர்கள். தாய்மொழியுடன் நாம் இணையும் போது, நாம் இயல்பாகவே நமது கலாச்சாரத்துடன் இணைகிறோம். நமது நற்பண்புகளுடன் இணைகிறோம். பாரம்பரியத்துடன் இணைகிறோம், பண்டைய மகத்தான மாட்சிமையுடன் இணைகிறோம். இந்தியாவின் மற்றொரு தாய்மொழி பெருமைமிக்க தெலுங்கு மொழி. ஆகஸ்ட் 29-ம் தேதி தெலுங்கு தினம் கொண்டாடப்படுகிறது.
अन्दरिकी तेलुगू भाषा दिनोत्सव शुभाकांक्षलु |
அனைவருக்கும் இனிய தெலுங்கு தின நல்வாழ்த்துக்கள்.
தெலுங்கு மொழியின் இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைந்துள்ளன. தெலுங்கின் இந்த பாரம்பரியத்தின் பலனை நாடு முழுவதும் பெறுவதை உறுதி செய்வதற்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்களே, மனதின் குரல் நிகழ்ச்சியின் பல பகுதிகளில், சுற்றுலாவைப் பற்றி பேசியுள்ளோம். பொருட்களை அல்லது இடங்களை நீங்களே பார்ப்பது, அவற்றைப் புரிந்துகொள்வது மற்றும் சில கணங்கள் அவையாகவே வாழ்வது வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
கடலை எவ்வளவுதான் வர்ணித்தாலும் கடலை நேரில் பார்க்காமல், அதன் பரந்த தன்மையை நம்மால் உணர முடியாது. இமயமலையை எவ்வளவுதான் வர்ணித்தாலும், இமயமலையைப் பார்க்காமல், அதன் அழகை மதிப்பிட முடியாது. அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போது, நம் நாட்டின் அழகை, நமது நாட்டின் பன்முகத்தன்மையைக் காணச் செல்ல வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் அடிக்கடி வலியுறுத்துகிறேன். நாம் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருந்தாலும், பல வேளைகளில், நம் நகரத்தில், நம் மாநிலத்தில் உள்ள பல சிறந்த இடங்கள்-விஷயங்களைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை.
பல நேரங்களில் மக்கள் தங்கள் நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதில்லை. தனபால் அவர்களுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூரு போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் தனபால். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு சுற்றுலாப் போக்குவரத்துப் பிரிவில் பொறுப்பு கிடைத்தது. இது இப்போது பெங்களூரு தர்ஷினி என்று அழைக்கப்படுகிறது. தனபால் அவர்கள் நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி ஒரு பயணத்தின்போது, ஒரு சுற்றுலாப் பயணி அவரிடம், பெங்களூருவில் உள்ள குளத்தை ஏன் செங்கி குளம் என்று அழைக்கிறார்கள் என்று கேட்டார். அவருக்கு இதற்கான பதில் தெரியவில்லை, மிகவும் வருந்தினார். ஆகையால், தான் தனது அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். தனது பாரம்பரியம் பற்றி அறியும் ஆர்வம், அவரை பல பாறைகளுக்கும் கல்வெட்டுகளுக்கும் அறிமுகம் செய்தது இந்தச் செயலில் தனபால் தன்னை எந்த அளவுக்கு இழந்தார் என்றால், அவர் எபிகிராஃபி, அதாவது கல்வெட்டு ஆராய்ச்சியோடு தொடர்புடைய பட்டயப்படிப்பை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார். அவர் இப்போது ஓய்வு பெற்றாலும், பெங்களூரூவின் சரித்திரத்தை ஆராயும் ஆர்வத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்.
நண்பர்களே, பிரையன் டி. கார்ப்ரன், Brian D. Kharpran பற்றி உங்களுக்குச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேகாலயாவைச் சேர்ந்த இவர், ஸ்பீலியாலஜியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதாவது குகைகளைப் பற்றிய ஆய்வு என்று பொருள். பல ஆண்டுகளுக்கு முன்பு, பல கதை புத்தகங்களைப் படித்தபோது இந்த ஆர்வம் அவரிடம் எழுந்தது. 1964 ஆம் ஆண்டில், அவர் ஒரு பள்ளி மாணவராக தனது முதல் ஆய்வை மேற்கொண்டார். 1990 ஆம் ஆண்டில், அவர் தனது நண்பருடன் இணைந்து ஒரு சங்கத்தை நிறுவினார், இதன் மூலம் மேகாலயாவின் அறியப்படாத குகைகளைப் பற்றி அறியத் தொடங்கினார். இவர் தனது குழுவினருடன் சேர்ந்து, மேகாலயாவின் 1700 க்கும் மேற்பட்ட குகைகளைக் கண்டுபிடித்து, மாநிலத்தை உலக குகை வரைபடத்தில் இடம் பெறச் செய்தார். இந்தியாவின் மிக நீளமான மற்றும் ஆழமான குகைகள் மேகாலயாவில் உள்ளன. பிரையன் அவர்கள் மற்றும் அவரது குழுவினர், உலகில் வேறு எங்கும் காணப்படாத குகைவாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தியுள்ளார்கள். இந்தக் குழுவின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன், அத்துடன் மேகாலயாவின் குகைகளை சுற்றிப் பார்க்க, ஒரு திட்டத்தை உருவாக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
எனது குடும்ப உறுப்பினர்களே, பால்வளத் துறை நமது நாட்டின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் பனாஸ் பால்பண்ணையின் ஒரு சுவாரஸ்யமான முன்னெடுப்பைப் பற்றி அறிந்தேன். பனாஸ் பால்பண்ணை, ஆசியாவின் மிகப்பெரிய பால்பண்ணையாக கருதப்படுகிறது. இங்கு, தினமும் சராசரியாக, 75 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது. இதையடுத்து, பிற மாநிலங்களுக்கும் இது அனுப்பப்படுகிறது. இதுவரை, டேங்கர் லாரிகள் அல்லது பால் ரயில்கள் பிற மாநிலங்களுக்கு சரியான நேரத்தில் பால் வழங்குவதை உறுதி செய்ய பயன்படுத்தப்பட்டன. ஆனால், சவால்கள் குறைந்தபாடில்லை. ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் நிறைய நேரம் ஆனது, சில நேரங்களில் பாலும் அதில் கெட்டுப் போனது. இந்தச் சிக்கலை சமாளிக்க, இந்திய ரயில்வே ஒரு புதிய சோதனையை நடத்தியது. பாலன்பூரிலிருந்து நியூ ரேவாரி வரை, டிரக் ஆன் டிராக் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியது. இதில், பால் லாரிகள் நேரடியாக ரயிலில் ஏற்றப்படுகின்றன. அதாவது, போக்குவரத்துப் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. டிரக் ஆன்-டிராக் வசதியின் பலன்கள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. டெலிவரி செய்ய 30 மணி நேரம் எடுத்துக் கொண்ட பால், இப்போது பாதி நேரத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. இது எரிபொருளால் ஏற்படும் மாசுபாட்டை அகற்றியுள்ள அதே வேளையில், எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்துகிறது. இதனால் லாரி ஓட்டுனர்கள் பெரிதும் பயனடைந்து, அவர்களின் வாழ்க்கையும் சுலபமாகியுள்ளது.
நண்பர்களே, கூட்டுமுயற்சியால் இன்று நமது பால்பண்ணைகளும் நவீன சிந்தனையுடன் முன்னேறி வருகின்றன. பனாஸ் பால்பண்ணை எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது, சாணவிதை உருண்டை மூலம் மரம் வளர்ப்புப் இயக்கம் வாயிலாகத் தெளிவாகிறது. வாராணசி பால் ஒன்றியம் நமது பால் பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரிக்க, உர மேலாண்மை தொடர்பாகவும் செயல்பட்டு வருகிறது. கேரளாவின் மலபார் மில்க் யூனியன் பால்பண்ணையின் முயற்சியும் மிகவும் தனித்துவமானது. இது விலங்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆயுர்வேத மருந்துகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
நண்பர்களே, இன்று பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு, அதைப் பன்முகப்படுத்துபவர்கள் ஏராளம். ராஜஸ்தானத்தின் கோட்டாவில் பால் பண்ணை நடத்தி வரும் அமன்பிரீத் சிங் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பால்பண்ணையுடன் சாணஎரிவாயுவிலும் கவனம் செலுத்தி, இரண்டு சாண எரிவாயு கலன்களை அவர் அமைத்தார். இதனால் மின்சாரத்திற்கான செலவு சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும். இன்று, பல பெரிய பால் நிறுவனங்கள் சாண எரிவாயுவில் கவனம் செலுத்துகின்றன. இந்த வகையான சமூக உந்துதலால் மதிப்புக் கூட்டல் மிகவும் ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற போக்குகள் நாடு முழுவதும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே, இன்று நான் கூற நினைத்தது இவையே. இப்போது பண்டிகைக் காலமும் வந்துவிட்டது. அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். பண்டிகைக் காலங்களில், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 'தற்சார்பு இந்தியா' இயக்கம் என்பது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இயக்கமாகும். பண்டிகைச் சூழல் ஏற்படும்போது, நம் வழிபாட்டுத் தலங்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நிரந்தரமாக அவ்வாறே வைத்திருக்க வேண்டும். அடுத்த முறை உங்களுடன் மனதின் குரலில் நான் பங்கேற்கும் போது, சில புதிய விஷயங்களோடு சந்திப்போம். நாட்டு மக்களின் சில புதிய முயற்சிகள், புதிய வெற்றிகள் குறித்து விவாதிப்போம். விடை தாருங்கள், பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.
நண்பர்களே, மழையின் இந்த நேரம் தான் மரம் நடுதலுக்கும், நீர்ப்பாதுகாப்பிற்கும் மிக உகந்த, அவசியமான நேரம் ஆகும். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் போது உருவாக்கப்பட்ட 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் கூட மெருகேறியிருக்கிறது. இப்போது 50,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது நாட்டுமக்கள் முழுமையான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வோடு, நீர்ப்பாதுகாப்பிற்காக புதியபுதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சில காலம் முன்னதாக, நான் மத்திய பிரதேசத்தின் ஷஹடோலுக்குச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அங்கே பகரியா கிராமத்தின் பழங்குடியினச் சகோதர சகோதரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அங்கே இயற்கையைப் பராமரிப்பது தொடர்பாகவும், நீரைப் பராமரிப்பது தொடர்பாகவும் பேசினோம். பகரியா கிராமத்தின் பழங்குடியின சகோதர சகோதரிகள் இது தொடர்பான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது இப்போது எனக்குத் தெரிய வந்துள்ளது. இங்கே, நிர்வாகத்தின் உதவியோடு, மக்கள் கிட்டத்தட்ட நூறு குளங்களை, நீர் மீள்நிரப்பு அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள். மழைநீர் இப்போது இந்தக் குளங்களுக்குச் செல்கிறது, மேலும் குளங்களின் நீரானது நிலத்தடி நீராக மாறுகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் நிலத்தடி நீரின் மட்டம் மெல்ல மெல்ல மாற்றம் காணும். இப்போது அனைத்து கிராமவாசிகளும், அந்தப் பகுதி முழுவதிலும் சுமாராக 800 குளங்களை மீள்நிரப்பு அமைப்புக்களாக மாற்றும் இலக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதைப் போன்றே ஒரு உற்சாகமளிக்கும் செய்தி, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக, உ.பியில், ஒரு நாளில் மட்டும் 30 கோடி மரங்கள் நடும் சாதனை புரியப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் தொடக்கத்தை மாநில அரசு செய்தது, இதை முழுமையடையச் செய்தவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள். இப்படிப்பட்ட ஒரு முயற்சி, மக்களின் பங்களிப்போடு கூடவே மக்கள் விழிப்புணர்வுக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. நாமனைவரும், மரம் நடுதல், நீரைப் பராமரித்தல் போன்ற இந்த முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, இது ச்ராவணம் என்று சொல்லப்படும் புனிதமான ஆடி மாதம். சதாசிவனான மகாதேவரை வணங்கிப் பூசிப்பதோடு கூடவே, இந்த மாதம் பசுமை மற்றும் சந்தோஷங்களோடு தொடர்புடையது. ஆகையால், இந்த சிரவண மாதம் ஆன்மீகத்தோடு கூடவே கலாச்சாரப் பார்வையும் மகத்துவமும் நிறைந்தது. சிராவண மாதத்தின் ஊஞ்சல்கள், சிராவணத்தின் மருதாணி, சிராவணத்தின் உற்சவங்கள், அதாவது சிராவணம் என்றாலே ஆனந்தம், உல்லாசம் தான்.
நண்பர்களே, நமது இந்த நம்பிக்கை மற்றும் இந்தப் பாரம்பரியங்களில் மேலும் ஒரு பக்கமும் உண்டு. நமது இந்தத் திருநாட்களும் பாரம்பரியமும் நமக்கு இயக்கத்தை அளிக்கின்றன. சிராவணத்திலே சிவத்தைப் பூசிக்கும் வகையிலே, எண்ணற்ற பக்தர்கள் காவட் யாத்திரையை மேற்கொள்கிறார்கள். சிராவண மாதம் காரணமாக இந்த நாட்களில் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு நிறைய பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றார்கள். பனாரஸ் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் இருக்கிறது. இப்போது காசிக்கு ஒவ்வோர் ஆண்டும் பத்து கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அயோத்தி, மதுராபுரி, உஜ்ஜைன் போன்ற புனிதத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது, அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. இவையனைத்தும் நமது கலாச்சார விழிப்புணர்வின் விளைவு தான். இப்போது உலகத்தோர் அனைவரும் நமது புனிதத்தலங்களை நோக்கி வருகிறார்கள். அந்த வகையில் எனக்கு இரண்டு அமெரிக்க நண்பர்களைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது; இவர்கள் கலிஃபோர்னியாவிலிருந்து இங்கே அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள வந்திருந்தார்கள். இந்த அயல்நாட்டு விருந்தினர்கள் அமர்நாத் யாத்திரையோடு தொடர்புடைய சுவாமி விவேகானந்தரின் அனுபவங்கள் குறித்தும் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். இது இவர்களுக்கு அதிக கருத்தூக்கத்தை அளித்து, இவர்கள் தாங்களே அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ள முடிவெடுத்தார்கள். இதை இவர்கள் பகவான் போலேநாத்தின் ஆசிகளாகவே கருதுகிறார்கள். இது தான் பாரதத்தின் சிறப்பு; அதாவது அனைவரையும் அரவணைக்கிறது, அனைவருக்கும் ஏதோ ஒன்றை அளிக்கிறது. இதே போல, ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பெண்மணியான Charlotte Shopa - ஷார்லோட் ஷோபா அவர்களை, சில நாட்கள் முன்பாக நான் ஃப்ரான்ஸ் நாடு சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. இவர் யோகக்கலை பயில்பவர், பயிற்றுநரும் கூட. இவருடைய வயது 100க்கும் அதிகம். இவர் ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்டார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக யோகக்கலையைப் பயின்று வருகிறார். இவர் தனது உடல்நலம் மற்றும் 100 ஆண்டுகள் வாழ முடிந்தமைக்கும் முழுக்காரணம் யோகக்கலை என்று கூறுகிறார். உலகிலே, இவர் பாரதத்தின் யோக விஞ்ஞானம், இதன் சக்தியின் ஒரு முக்கியமான முகமாக ஆகியிருக்கிறார். இவரிடமிருந்து அனைவரும் கற்க வேண்டும். நாம் நமது பாரம்பரியத்தை அங்கீகரிப்பதோடு கூடவே, அதைப் பொறுப்புணர்வோடு உலகின் முன்பாக சமர்ப்பிக்கவும் வேண்டும். இதே போன்ற ஒரு முயற்சி சில நாட்களாக உஜ்ஜயினில் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நாடெங்கிலுமிருந்து 18 ஓவியர்கள், புராணங்களை ஆதாரமாகக் கொண்ட கவரக்கூடிய ஓவியக்கதைகளை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஓவியங்கள் பூந்தி பாணி, நாத்துவாரா பாணி, பஹாடி பாணி, அபப்ரம்ஷ் பாணி போன்ற பல சிறப்பான பாணிகளில் உருவாக்கப்படும். இவை உஜ்ஜைனின் திரிவேணி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். அதாவது சில காலம் கழித்து நீங்கள் உஜ்ஜைன் சென்றால், மஹாகால் மஹாலோகோடு கூடவே, மேலும் ஒரு தெய்வீகமான இடத்தை நீங்கள் தரிசிக்கலாம்.
நண்பர்களே, உஜ்ஜைனில் உருவாக்கம் பெற்று வரும் இந்த ஓவியங்களைப் பற்றிப் பேசுகையில், மேலும் ஒரு விசித்திரமான ஓவியம் என் நினைவிற்கு வருகிறது. இந்தச் சித்திரத்தை ராஜ்கோட்டின் ஒரு ஓவியரான प्रभात सिंग मोडभाई बरहाट, பிரபாத் சிங் மோட்பாய் பர்ஹாட் அவர்கள் உருவாக்கினார். இந்த ஓவியம், சத்ரபதி வீர சிவாஜி மஹாராஜின் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது. சத்ரபதி சிவாஜி மஹராஜாவின் ராஜ்யாபிஷேகத்திற்குப் பிறகு தனது குலதேவியான துல்ஜா மாதாவை தரிசனம் செய்யச் சென்றதை ஓவியரான பிரபாத் பாய் வரைந்திருந்தார். நமது பாரம்பரியங்கள், நமது மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க நாம் அவற்றைப் பராமரிக்க வேண்டும், அவையாகவே நாம் வாழ வேண்டும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று இந்தத் திசையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
என் இனிய நாட்டுமக்களே, பல முறை நாம் சூழலியல், தாவரங்கள், விலங்குகள், உயிரிப் பன்முகத்தன்மை போன்ற சொற்களைக் கேட்கும் போது, இது ஏதோ தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் என்று சிலருக்குப்படுகிறது, ஆனால் அப்படி கிடையாது. நாம் உண்மையிலேயே இயற்கையின் பால் நேசம் கொண்டவர்கள் என்றால், நாம் சின்னச்சின்ன முயற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டில் வடவள்ளியைச் சேர்ந்த ஒரு நண்பரான சுரேஷ் ராகவனுக்கு ஓவியம் வரைதல் என்றால் கொள்ளைப் பிரியம். ஓவியம் என்பது தூரிகை மற்றும் கலையோடு தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், தனது ஓவியங்கள் வாயிலாக மரம் செடிகளையும், உயிரினங்களையும் பற்றிய தகவல்களைப் பராமரிக்க வேண்டும் என்று ராகவன் அவர்கள் தீர்மானித்தார். பல்வேறு தாவரங்கள்-விலங்குகளின் ஓவியங்களைத் தீட்டி அவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார். இப்போது இவர் வழக்கொழிந்து போகும் கட்டத்தில் இருக்கும் பல டஜன் பறவைகள், விலங்குகள், பகட்டு வண்ணமலர்ச் செடியான ஆர்கிட் தாவரங்களை ஓவியங்களாக வரைந்திருக்கிறார். கலையின் வாயிலாக இயற்கைக்குச் சேவை புரியும் இந்த எடுத்துக்காட்டு உண்மையிலேயே அற்புதமானது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று உங்களுடன் மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக சமூக ஊடகத்தில் ஒரு அற்புதமான பேரார்வத்தை ஏற்படுத்தும் விஷயம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மிகவும் துர்லபமான, பண்டைய கலைப்படைப்புக்களை அமெரிக்கா நமக்குத் திருப்பி அளித்தது. இந்தச் செய்தி வெளியான பிறகு சமூக ஊடகங்களில் இந்தக் கலைப்பொருட்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசப்பட்டது. இளைஞர்கள் தங்கள் மரபின் மீது பெருமிதத்தை வெளிப்படுத்தினார்கள். பாரதத்திற்கு மீண்டு வந்த இந்த கலைப்பொருட்கள் 2500 ஆண்டுகள் முதல் 250 ஆண்டுகள் வரை பழமையானவை. இந்த அரிய பொருட்கள், தேசத்தின் பல்வேறு பகுதிகளோடு தொடர்புடையன என்பது உங்களுக்கு மேலும் சந்தோஷத்தை அளிக்கலாம். இவை Terracotta – சுடுமண், கல், உலோகம் மற்றும் மரத்தால் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் சில உங்களுக்கு பேராச்சரியத்தை அளிக்க வல்லவை. நீங்கள் இவற்றைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். இவற்றில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அழகான Sandstone Sculpture, மணற்பாறைச் சிற்பம் உண்டு. இது நடனமாடும் ஒரு அப்சரசின் கலைப்படைப்பு, இது மத்திய பிரதேசத்தோடு தொடர்புடையது. சோழர்கள் காலத்திய பல விக்ரகங்களும் இதிலே அடங்கும். தேவி, முருகப்பெருமானின் விக்ரகங்கள் எல்லாம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, இவை தமிழ்நாட்டின் மகோன்னதமான கலாச்சாரத்தோடு தொடர்புடையவை. பகவான் கணேசனின் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கல விக்கிரகமும் பாரதம் திரும்பியிருக்கிறது. லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் உமா மகேஸ்வரரின் ஒரு விக்கிரகம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது, இதிலே இவர்கள் இருவரும் நந்தியின் மீதமர்ந்து கொண்டிருக்கிறார்கள். கற்களால் உருவாக்கப்பட்ட ஜைன தீர்த்தங்கரர்களின் இரு விக்கிரகங்களும் பாரதம் மீண்டிருக்கின்றன. பகவான் சூரிய தேவனின் இரு திருவுருவங்களும் உங்கள் மனதைக் கொள்ளை கொண்டு விடும். இவற்றில் ஒன்று மணல்பாறையால் உருவானது. மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் மரத்தாலான ஒரு பலகை உள்ளது, இது பாற்கடலைக் கடைதல் நிகழ்வை முன்னிறுத்துவது. 16ஆம்-17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பலகை தென்னாட்டைச் சேர்ந்தது.
நண்பர்களே, இங்கே நான் குறைவான பெயர்களையே குறிப்பிட்டிருக்கிறேன்; ஆனால் பார்க்கப் போனால் இந்தப் பட்டியல் மிக நீண்டது. நமது இந்த விலைமதிப்பற்ற மரபுச்சொத்தை நமக்குத் திருப்பியளித்தமைக்கு நான் அமெரிக்க அரசுக்கு என் நன்றிகளை அளிக்கிறேன். 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் கூட நான் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட போது, அப்போதும் கூட பல கலைப்பொருட்கள் பாரதத்திற்குத் திருப்பியளிக்கப்பட்டன. இப்படிப்பட்ட முயற்சிகளால் நமது கலாச்சாரச் சின்னங்கள் களவாடப்படுவதைத் தடுக்கும் விஷயம் தொடர்பாக, நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலமாக வளமான நமது பாரம்பரியத்தின்பால் நாட்டுமக்களின் பிடிப்பு மேலும் ஆழமாகும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, தேவபூமியான உத்தராகண்டினைச் சேர்ந்த சில அன்னையர்-சகோதரியர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், இது என்னை உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய மகனுக்கு, தங்களுடைய சகோதரனுக்கு நெஞ்சு நிறையநிறைய ஆசிகளை நல்கி விட்டு எழுதியிருக்கிறார்கள், நமது கலாச்சார அடையாளமான போஜபத்ரம் – புரசு இலை எங்கள் வாழ்வாதாரத்திற்கான சாதனமாகும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். எதைப் பற்றிக் கூறுகிறார்கள் என்று தானே எண்ணமிடுகிறீர்கள்?
நண்பர்களே, இந்தக் கடிதத்தை எனக்கு எழுதியிருப்பவர்கள் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த நீதி-மாணா பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெண்கள். இந்தப் பெண்கள் தாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் புரசு இலை மீது ஒரு அருமையான கலைப்படைப்பை ஏற்படுத்தி எனக்கு அளித்தவர்கள். இந்தப் பரிசைப் பெற்று நான் உணர்ச்சிவயப்பட்டேன். பண்டைய காலம் தொட்டே நமது நாட்டிலே நமது சாஸ்திரங்கள், நமது புனித நூல்கள் ஆகியன புரசு இலைகளிலே எழுதப்பட்டு வந்தன. மகாபாரதமுமே கூட இதே போன்று புரசு இலைகளில் எழுதப்பட்டது. இன்று தேவபூமியைச் சேர்ந்த இந்தப் பெண்கள், இந்த புரச இலைகளிலே, மிகவும் அழகான கலைப்படைப்புக்களையும், நினைவுப்பரிசுகளையும் உருவாக்கி வருகிறார்கள். மாணா கிராமத்தின் யாத்திரையின் போது, நான் அவர்களின் இந்த தனித்தன்மையான முயற்சியைப் பாராட்டியிருந்தேன். நான் தேவபூமிக்கு வரும் பயணிகளிடமும் வேண்டிக் கொண்டேன், நீங்கள் அதிக அளவில் உள்ளூர்ப் பொருட்களை வாங்குங்கள் என்றேன். இது அங்கே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று புரச இலையில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள், நல்ல விலைக்கு வாங்குகிறார்கள். புரச இலையின் இந்த பண்டைய பாரம்பரியம், உத்தராகண்டின் பெண்களின் வாழ்க்கையிலே மகிழ்ச்சியின் புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்பியிருக்கிறது. புரச இலையால் புதியபுதிய பொருட்களை உருவாக்குவதற்காக மாநில அரசும், பெண்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருவதை அறிந்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மாநில அரசு புரச மரத்தின் மிக அரிய வகைகளைப் பாதுகாக்கவும் கூட ஒரு இயக்கத்தைத் தொடக்கி இருக்கிறது. எந்தப் பகுதிகள் தேசத்தின் கடைநிலைகள் என்று பார்க்கப்பட்டதோ, அவை இப்போது தேசத்தின் முதன்மை கிராமங்களாக வளர்ச்சிப் பயணத்தில் முன்னேறி வருகின்றன. இந்த முயற்சிகள் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதோடு, பொருளாதார முன்னேற்றத்தின் காரணிகளாகவும் ஆகி வருகின்றன.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை வந்திருக்கும் பல கடிதங்கள் மனதிற்கு மிகுந்த நிறைவையளிப்பவையாக இருக்கின்றன. இவை, தற்போது தான் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு விட்டு வந்திருக்கும் இஸ்லாமியப் பெண்கள் எழுதியிருப்பவை. பல காரணங்களுக்காக அவர்களின் இந்தப் பயணம் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பெண்கள் தங்களுடைய புனித ஹஜ் யாத்திரையை, எந்த ஒரு ஆணின் துணையும் இல்லாமல் நிறைவு செய்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை 50-100 அல்ல, 4,000த்திற்கும் அதிகமாகும், இது ஒரு பெரிய மாற்றமாகும். முதலில், இஸ்லாமியப் பெண்கள் மெஹ்ரம் அதாவது ஆண் துணை இல்லாமல் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது. மனதின் குரல் மூலமாக நான் சவூதி அரப் அரசுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை வெளிப்படுத்துகிறேன். ஆண் துணை இல்லாமல் ஹஜ் செல்லும் பெண்களுக்காக, விசேஷமாக பெண் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே ஹஜ் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றங்கள் முழுமையாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. நமது இஸ்லாமிய தாய்மார்-சகோதரிமார்கள் இது தொடர்பாக எனக்கு நிறைய எழுதியிருக்கிறார்கள். இப்போது அதிகம் பேர்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியோர், குறிப்பாக நமது தாய்மார்-சகோதரிகள் கடிதங்கள் வாயிலாக எனக்கு நல்லாசிகள் வழங்கியிருக்கிறார்கள், இது மிகவும் உத்வேகமளிப்பதாக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, ஜம்மு-கஷ்மீரத்திலே இரவு நேர இசை நிகழ்ச்சிகள் ஆகட்டும், உயரங்களில் பைக்குகளின் பயணங்களாகட்டும், சண்டீகட்டில் உள்ளூர் க்ளப்புகள் ஆகட்டும், பஞ்சாபின் ஏகப்பட்ட விளையாட்டுக் குழுக்களாகட்டும், இவை பற்றியெல்லாம் கேட்கும் போது கேளிக்கை பற்றிப் பேசப்படுகிறது, சாகஸங்கள் பற்றிப் பேசப்படுகிறது என்று தானே உங்களுக்குப் படுகிறது!! ஆனால் விஷயமே வேறு. இந்த ஏற்பாடுகள் அனைத்துமே ஒரு பொதுக் காரணத்தோடு இணைந்தவை. அது என்ன பொதுநோக்குக்காரணம்? போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் தான் இந்த பொதுநோக்குக் காரணம். ஜம்மு-கஷ்மீரத்தின் இளைஞர்களை போதைப் பொருட்களிலிருந்து காக்க பல நூதனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கே இரவுநேர இசை நிகழ்ச்சிகள், பைக் தொடர்கள் பயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சண்டீகட்டிலே இந்தச் செய்தியைப் பரப்ப, உள்ளூர் கிளப்புகள் இதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் இவற்றை வாதா கிளப்புகள் என்று அழைக்கிறார்கள். VADA, வாதா என்று ஆங்கில முதலெழுத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல். Victory Against Drugs Abuse, அதாவது போதைப் பொருட்களுக்கு எதிரான வெற்றி என்பது பொருள். பஞ்சாபின் பல விளையாட்டுக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை உடலுறுதியின் மீது கவனம் செலுத்தும் அதே வேளையில், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடும் விழிப்புணர்வு இயக்கத்தையும் நடத்துகின்றன. போதைப் பழக்கத்திற்கு எதிரான இயக்கத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கெடுத்து வருவது அதிக உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்த முயற்சி, பாரதத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கத்திற்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது. தேசத்தின் வருங்காலத் தலைமுறையினரை நாம் காத்தளிக்க வேண்டும், அவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்தாக வேண்டும். இந்த எண்ணத்தை அடியொற்றி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று போதைப் பொருளிலிருந்து விடுபட்ட பாரதம் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தோடு 11 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்டார்கள். இரண்டு வாரங்கள் முன்பாக பாரதம் போதைப் பொருட்களுக்கு எதிராக மிகப்பெரிய செயல்பாட்டைப் புரிந்திருக்கிறது. போதைப் பொருட்களின் கிட்டத்தட்ட ஒண்ணரை இலட்சம் கிலோ தொகுப்பைக் கைப்பற்றிய பிறகு அதை அழித்திருக்கிறது. நாம் பத்து இலட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்த அலாதியான சாதனையையும் படைத்திருக்கிறோம். இந்த போதைப் பொருட்களின் விலை 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். போதைப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட, இந்த சீரிய இயக்கத்தில் தங்கள் பங்களிப்பை அளித்துவரும் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். போதையின் தீமை, குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பெரிய தீங்காக மாறுகிறது. அந்த வகையில் இந்த அபாயத்துக்கு நிரந்தரமாக முடிவுகட்ட வேண்டும் என்றால், நாம் ஒன்றாக இணைந்து இந்தத் திசையில் முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியம்.
என் பாசமிகு நாட்டுமக்களே, போதைப் பொருட்கள், இளைய தலைமுறையினர் என்று வரும் போது, மத்திய பிரதேசத்தின் உத்வேகமளிக்கும் பயணம் பற்றிப் பேசியே ஆக வேண்டும். இந்த உத்வேகமளிக்கும் பயணம் ஒரு மினி ப்ரேசில் பற்றியது. என்னது, மத்திய பிரதேசத்திலே மினி ப்ரேசிலா என்று தானே நினைக்கிறீர்கள்!! இங்கே தான் ஒரு சின்ன திருப்பம் இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோலில் இருக்கும் ஒரு கிராமம் பிசார்புர். இந்த பிசார்புரைத் தான் மினி ப்ரேசில் என்று அழைக்கிறார்கள். ஏன் மினி ப்ரேசில் என்றால், இந்தக் கிராமம், இந்தியக் கால்பந்தாட்டத்தின் இளம் நட்சத்திரங்களின் கூடாரமாக ஆகி விட்டது. சில வாரங்கள் முன்பாக, ஷஹ்டோலுக்கு சென்றிருந்த போது, அங்கே பல கால்பந்தாட்ட வீரர்களை நான் சந்திக்க முடிந்தது. இது பற்றி நான் நாட்டுமக்களுக்கு, அதுவும் குறிப்பாக என் இளைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் அப்போதே முடிவு செய்தேன்.
நண்பர்களே, பிசார்புர் கிராமம், ஒரு மினி ப்ரேசிலாக ஆனதன் பின்னணியில் இருந்த பயணம் 20-25 ஆண்டுகள் முன்பாகத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில், பிசார்புர் கிராமம் கள்ளச்சாராயத்துக்குப் பேர் போனதாக இருந்தது, மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தது. இந்தச் சூழலில் மிகப்பெரிய பாதிப்பு இங்கிருந்த இளைஞர்களுக்குத் தான் ஏற்பட்டது. முன்னாள் தேசிய ஆட்டக்காரரும், ஒரு பயிற்றுநருமான ரயீஸ் அஹ்மத் தான் இந்த இளைஞர்களின் திறமைகளை அடையாளமறிந்தவர். ரயீஸ் அவர்களிடத்திலே அதிக ஆதாரங்கள்-வசதிகள் இருக்கவில்லை; ஆனால் அவர் முழு முனைப்போடு, இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே, இங்கே கால்பந்தாட்டம் எந்த அளவுக்குப் பிரபலமாகி விட்டது என்றால், பிசார்புர் கிராமத்தின் அடையாளம் என்றால் அது கால்பந்தாட்டம் என்றாகி விட்டது என்றால் பாருங்களேன்!! இப்போது இங்கே கால்பந்தாட்டப் புரட்சியின் பெயரில் ஒரு செயல்திட்டம் நடத்தப்படுகிறது. இந்தச் செயல்திட்டத்தின் படி இளைஞர்கள் இந்த விளையாட்டோடு இணைக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தச் செயல்திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், பிசார்புரிலிருந்து தேசிய மற்றும் மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வந்திருக்கிறார்கள். இந்த கால்பந்தாட்டப் புரட்சி இப்போது மெல்லமெல்ல, அந்தப் பகுதி முழுவதிலும் பரவி வருகிறது. ஷஹ்டோலும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் பரவலான பல பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இங்கே அதிகமான எண்ணிக்கையில் வெளிப்படும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். கால்பந்தாட்டத்தின் பல பெரிய முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் இன்று இங்கே இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்கள். நீங்களே எண்ணிப் பாருங்கள், ஒரு பழங்குடிப்பகுதி, கள்ளச்சாராயத்திற்காகப் பெயர் போனது, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற அவப்பெயர் பெற்றது, இப்போது தேசத்தின் கால்பந்தாட்ட நாற்றங்கால் ஆகியிருக்கிறது. ஆகையினால் தானே சொல்கிறார்கள் – மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று. நமது தேசத்திலே திறன்கள்-திறமைகளுக்குக் குறைவே இல்லை. தேவை என்று வரும் போது, அதை நாம் நாடுகிறோம், தேடுகிறோம், அடைகிறோம். இதன் பிறகு இதே இளைஞர்கள் தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்க்கிறார்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு வழி கோலுகிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் உற்சாகத்தோடு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அமுதப் பெருவிழாவின் போது, தேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன, பன்முகத்தன்மையால் நிறைந்திருக்கின்றன. இந்த ஏற்பாடுகளின் மேலும் ஒரு அழகு என்னவென்றால், இதோடு சாதனை படைக்கும் எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலே நமது இளைஞர்களுக்கு தேசத்தின் மாபெரும் ஆளுமைகளைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. முதல் சில மாதங்களைப் பற்றி மட்டுமே பேசினால், மக்களின் பங்களிப்போடு தொடர்புடைய பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் எழுத்தாளர் சந்திப்புக்கான ஏற்பாடு. இதிலே சாதனை எண்ணிக்கையில் மக்களின் பங்கெடுப்பினைக் காண முடிந்தது. அதே போல, ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியிலே தேசிய சம்ஸ்கிருத சம்மேளனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது வரலாற்றிலே கோட்டைகளின் மகத்துவம் என்ன என்பதை நாமனைவருமே நன்கறிவோம். இதை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு இயக்கமான கோட்டைகளும், கதைகளும், அதாவது கோட்டைகளோடு தொடர்புடைய கதைகளுமே கூட மக்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
நண்பர்களே, இன்று தேசத்தின் நாலாபுறத்திலும் அமுதப் பெருவிழா எதிரொலிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானிகளின் நினைவுகளைப் போற்றும் வகையிலே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆளுமைகளின் நினைவாக, தேசத்தின் இலட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில், சிறப்புக் கல்வெட்டுக்களும் நிறுவப்படும். இந்த இயக்கத்தின்படி தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரையும் மேற்கொள்ளப்படும். தேசத்தின் கிராமம் தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை, தேசத்தின் தலைநகரான தில்லியை வந்தடையும். இந்த யாத்திரையானது, தன்னோடு கூடவே தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, மண்ணோடு சேர்ந்து செடிகளையும் கொண்டு வரும். 7500 கலசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும், செடிகளையும் சேர்த்து, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப்பூங்காவனம் நிர்மாணிக்கப்படும். இந்த அமுதப்பூங்காவனம், ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மிக உன்னதமான அடையாளமாக ஆகும். கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளின் அமுதக்காலத்தை ஒட்டிய 5 உறுதிமொழிகள் குறித்துப் பேசியிருந்தேன். என் மண் என் தேசம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு நாம் இந்த 5 உறுதிமொழிகளை நிறைவேற்றும் சபதமும் ஏற்போம். நீங்கள் அனைவரும், தேசத்தின் புனிதமான மண்ணை கைகளிலே ஏந்தி சபதம் எடுக்கும் வகையிலே உங்களை நீங்களே சுயமாகப்படம் பிடித்து, அதாவது செல்ஃபி எடுத்து, yuva.gov.in இலே கண்டிப்பாகத் தரவேற்றம் செய்யுங்கள். கடந்த ஆண்டு சுதந்திரத் திருநாளன்று, வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்திற்காக, எப்படி நாடு முழுவதும் ஒருங்கிணைந்ததோ, அதே போல நாம் இந்த முறையும் மீண்டும், வீடுகள்தோறும் மூவண்ணத்தைப் பறக்க விட வேண்டும். இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த முயற்சிகளில் நமது கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், தேசத்தின் சுதந்திரத்திற்காக அளிக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற உயிர்த்தியாகங்கள் பற்றிய தெரிதல் உதிக்கும், சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஏற்படும். ஆகையால், நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், இந்த முயற்சிகளோடு கண்டிப்பாக இணைய வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இன்று இம்மட்டே. இன்னும் சில நாட்களில் நாம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்ற மிகப்பெரிய திருநாளின் அங்கமாக ஆவோம். தேசத்தின் சுதந்திரத்தின் பொருட்டு வாழ்ந்து கொண்டிருப்போரையும்-உயிர்த்தியாகம் செய்தோரையும் என்றென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் கனவுகளை மெய்யாக்கும் வகையிலே இரவுபகல் பாராது நாம் உழைக்க வேண்டும், மேலும், நாட்டுமக்களின் இந்த உழைப்பினை, அவர்களின் சமூக மட்டத்திலான முயற்சிகளை முன்னுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு சாதனமாக மனதின் குரல் விளங்கும். அடுத்த முறை, மேலும் சில புதிய விஷயங்களோடு, உங்களை சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.
நண்பர்களே, பிரதமர் என்ற முறையிலே நான் இந்த நல்ல பணியைச் செய்திருக்கிறேன், அந்த பெரிய வேலையை முடித்திருக்கிறேன் என்று பலர் என்னிடத்திலே கூறுகிறார்கள். மனதின் குரலிலேயே கூட எத்தனையோ நேயர்கள், தங்களுடைய கடிதங்களில் பலவாறாகப் பாராட்டியிருக்கிறார்கள். பற்பல செயல்களைக் குறிப்பிட்டு விவரமாக அவற்றைப் பாராட்டியிருக்கிறீர்கள், ஆனால், பாரதத்தின் சாமான்ய மனிதர்களின் முயற்சி, அவர்களுடைய உழைப்பு, அவர்களுடைய பேரார்வம் ஆகியவற்றை நான் காணும் வேளையில், அது என்னுள்ளே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனை பெரிய இலக்காக இருந்தாலும் சரி, எத்தனை கடினமான சவாலாக இருந்தாலும் சரி, பாரத நாட்டவரின் சமூக பலம், சமூக சக்தி, ஒவ்வொரு சவாலுக்குமான தீர்வினை ஏற்படுத்தித் தருகிறது. தேசத்தின் மேற்குக் கரையோரப் பகுதியில் எத்தனை பெரிய சூறாவளி வீசியது என்பதை நாம் 2-3 நாட்கள் முன்பாகத் தான் பார்த்தோம். வேகமாக வீசும் காற்று, கடுமையான மழை. சூறாவளி பிபர்ஜாயானது, கட்ச் பகுதியில் பெருநாசத்தை ஏற்படுத்தி விட்டது என்றாலும், கட்ச்வாசிகள், மிகுந்த உளவுறுதியோடும், தயார்நிலையோடும் இத்தனை பயங்கரமான சூறாவளியை எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்க்கும் போது இது பெருவியப்பு ஏற்படுத்துகிறது. இரண்டு நாட்கள் கழித்து, கட்ச்பகுதி மக்கள், ஆஷாடீ பீஜ் என்ற தங்களுடைய புத்தாண்டினைக் கொண்டாடவிருக்கிறார்கள். ஆஷாடீ பீஜ், கட்ச் பகுதியில் மழையின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது என்பது என்னவோ தற்செயல் நிகழ்வு தான். நான் பல ஆண்டுகளாகவே கட்சிற்குச் சென்று வந்திருக்கிறேன், அங்கே இருப்பவர்களுக்குச் சேவைபுரியும் நற்பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது; அந்த வகையிலே அங்கிருப்போரின் தளராத நம்பிக்கையையும், அவர்களின் நெஞ்சுறுதியையும் பற்றி நான் நன்கறிவேன். 20 ஆண்டுகளுக்கு முன்பாக, பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, இதிலிருந்து மீளவே முடியாது என்று எந்தக் கட்ச் பகுதி குறித்துக் கூறப்பட்டதோ, இன்று அதே மாவட்டம், தேசத்தின் விரைவாக முன்னேற்றம் அடைந்துவரும் மாவட்டங்களில் ஒன்று. இந்தச் சூறாவளியான பிபர்ஜாய் ஏற்படுத்தியிருக்கும் கோரத்தாண்டவத்திலிருந்து கட்ச் பகுதி மக்கள் விரைவிலேயே மீண்டெழுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
நண்பர்களே, இயற்கைப் பேரிடர்களின் மீது யாருக்கும், எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது என்றாலும், கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் பேரிடர் மேலாண்மை தொடர்பான சக்தி மேம்பாடு அடைந்து வருகிறது, இது ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள மிகப்பெரிய வழிமுறை என்றால் அது இயற்கையைப் பேணுதல். இப்போதெல்லாம் பருவமழைக்காலத்தில், இந்தத் திசையில் நமது பொறுப்புகள் மேலும் அதிகரித்திருக்கின்றன. ஆகையால் தான், இன்று தேசத்திலே Catch the Rain, அதாவது மழைநீரைச் சேகரிப்போம் என்பது தொடர்பான இயக்கங்கள் வாயிலாக சமூக ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த மாதங்களில் மனதின் குரலில் நாம் மழைநீர் சேகரிப்புடன் தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகள் பற்றிப் பேசியிருந்தோம். இந்த முறையும் கூட, ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பதில் தங்களின் முழுச்சக்தியையும் செலவழித்து வரும் சிலரைப் பற்றி கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒரு நண்பர் தான், உத்தரபிரதேச மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த துளசிராம் யாதவ் அவர்கள். துளசிராம் யாதவ் அவர்கள் லுக்தரா கிராமப் பஞ்சாயத்தின் தலைவர். பாந்தாவாகட்டும், புந்தேல்கண்ட் பகுதியே கூட தண்ணீருக்காக எத்தனை சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலைச் சமாளிக்க, துளசிராம் அவர்கள் தனது கிராமத்து மக்களோடு இணைந்து அந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினார். துளசிராம் அவர்கள் தன்னுடைய இந்த முயற்சிக்கு ஆதாரமாகக் கொண்டது – வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்துக்கு என்பது தான். இன்று இவருடைய கடின உழைப்பின் விளைவாக, இவருடைய கிராமத்தின் நிலத்தடி நீரின் நிலை மேம்பாடு அடைந்திருக்கிறது. இதே போன்று, உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபுட் மாவட்டத்தின் மக்கள் அனைவரும் இணைந்து, வறண்டுபோன ஒரு நதிக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார்கள். இங்கே பலகாலத்திற்கு முன்பாக நீம் என்ற பெயருடைய ஒரு நதி இருந்து வந்தது. காலப்போக்கில் இது வறண்டு போய் விட்டது என்றாலும், அந்தப்பகுதியின் வட்டாரக் கதைகள், மூத்தோர் கூறக் கேட்டவை எல்லாம் அவர்களுக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தன. கடைசியில், மக்கள் தங்களுடைய இந்த இயற்கை மரபினை, மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்தார்கள். மக்களின் சமூக அளவிலான முயற்சியால் இப்போது நீம் நதியானது, மீண்டும் உயிர் பெற்றுப் பெருகுகிறது. நதி தோன்றும் இடம் அமிர்த நீர்நிலை என்ற வகையில் மேம்பாடும் செய்யப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நதி, ஓடை, கால்வாய்கள், ஏரிகள் ஆகியன வெறும் நீர்நிலைகள் மட்டுமே அல்ல; மாறாக, இவற்றில் வாழ்க்கையின் வண்ணங்களும், உணர்வுகளும் கலந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காட்சியை, சில நாட்கள் முன்பாக மஹாராஷ்டிரத்தில் காண முடிந்தது. இந்தப் பகுதி பெரும்பாலும் வறட்சியில் வாடும் ஒரு பகுதி. 50 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இங்கே நில்வண்டே அணையினுடைய கால்வாய்ப் பணி நிறைவடைய இருக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான், சோதனை செய்யும் பொருட்டு, கால்வாயிலே நீர் திறந்து விடப்பட்டது. அப்போது காணக் கிடைத்த காட்சிகள், இவை உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமானவையாக இருந்தன. கிராமத்தின் மக்கள், ஏதோ ஹோலி-தீபாவளிப் பண்டிகையின் போது கொண்டாடுவது போல ஆடிப்பாடிக் களித்தார்கள்.
நண்பர்களே, மேலாண்மை பற்றிப் பேச்சு எழும் போது, இன்று நான் சத்ரபதி சிவாஜி மஹாராஜை நினைவு கூர இருக்கிறேன். சத்ரபதி சிவாஜி மஹாராஜின் வீரத்தோடு கூடவே அவருடைய மேலாண்மையும், அவருடைய நிர்வாகத் திறனும் நல்ல கற்றலை அளிக்கின்றன. குறிப்பாக, நீர் மேலாண்மை, கடற்படை போன்றவற்றில், சத்ரபதி சிவாஜி மஹாராஜா ஆற்றியிருக்கும் பணிகள், இன்றும் கூட இந்திய நாட்டு வரலாற்றின் பெருமைக்குப் பெருமை சேர்த்து வருகின்றன. அவரால் உருவாக்கப்பட்ட கடற்கோட்டை, இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட, கடலுக்கு நடுவே இன்றும் கூட, பெருமையோடு காட்சியளிக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தான் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ராஜ்யாபிஷேகத்தின் 350 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தச் சந்தர்ப்பம் ஒரு பெரிய மங்கல நிகழ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் மஹாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில், இதோடு தொடர்புடைய மாபெரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகள் முன்பாக 2014ஆம் ஆண்டிலே, ராய்கடிற்குச் சென்று, அந்தப் பவித்திரமான பூமியை விழுந்து வணங்கும் பெரும்பேறு எனக்கு வாய்த்தது என்பது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இந்த வேளையில் நாம் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் நிர்வாகத் திறமைகளை அறிந்து கொள்வதும், அவரிடமிருந்து கற்பதும் நம்மனைவரின் கடமையாகும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் இராமாயணத்தின் இனிமை நிறைந்த அணிலைப் பற்றிக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; இது ராமசேதுவை அமைக்க உதவிபுரிய முன்வந்தது. அதாவது, நோக்கம் நேரியதாக இருந்தால், முயற்சிகள் நாணயமானவையாக இருந்தால், இலக்கு எதுவாக இருந்தாலும், அது கடினமானதாக இராது. பாரதமும் கூட, இன்று, இதே நேர்மையான நோக்கத்தோடு, ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. டிபி என்று அழைக்கப்படும் காசநோய் தான் அந்தச் சவால். 2025ஆம் ஆண்டிற்குள்ளாக, நம்மனைவரின் உறுதிப்பாடான, காசநோயிலிருந்து விடுபட்ட பாரதத்தை உருவாக்குவோம் என்ற இலக்கு மிகமிக முக்கியமானது, அவசியமானது. ஒரு காலத்தில், காசநோய் பீடித்திருக்கிறது என்று அறிந்தவுடனேயே குடும்பத்தினர் விலகிச் செல்ல ஆரம்பித்தார்கள்; ஆனால் இன்றைய காலகட்டத்தில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை, குடும்ப உறுப்பினர்களாக ஆக்கி, அவர்களுக்கு உதவிகள் புரியப்பட்டு வருகின்றன. இந்தக் காசநோயை வேரடி மண்ணாகக் கிள்ளி எறிய, சில நிக்ஷய் நண்பர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தேசத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில், பல்வேறு சமூக அமைப்புகள் காசநோய்க்கு எதிராகத் திரண்டிருக்கிறார்கள். கிராமங்களிலும் ஊரகப்பகுதிகளும், பஞ்சாயத்துக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள், தாங்களே முன்வந்து காசநோயால் பீடித்தவர்களை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பிள்ளைகள், காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். மக்கள் பங்களிப்பின் துணையோடு இந்த இயக்கம் மிகப்பெரிய பலமாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் பங்களிப்பு காரணமாக இன்று தேசத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட காசநோய் பீடித்தவர்கள் தத்தெடுக்கப்பட்டு விட்டார்கள். இந்தப் புண்ணியச் செயலை, காசநோய்க்கெதிரான 85,000 நிக்ஷய் நண்பர்கள் செய்திருக்கிறார்கள். தேசத்தின் பல பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்தச் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள், தங்களுடைய கிராமம் காசநோயிலிருந்து விடுபட்ட கிராமமாக இருக்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்கிறார்கள்.
நைநிதாலின் ஒரு கிராமத்தில் நிக்ஷய் நண்பர்களான தீகர் சிங் மேவாடி அவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்ட ஆறு பேரைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். இதைப் போலவே கின்னௌரின் ஒரு கிராமப் பஞ்சாயத்தின் தலைவரான நிக்ஷய் நண்பர் ஞான் சிங் அவர்களும், தனது வட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து அத்தியாவசிய உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஈடுபட்டிருக்கிறார். பாரதத்தைக் காசநோயிலிருந்து விடுபட்ட தேசமாக ஆக்கும் இலக்கைப் பொறுத்தமட்டில் நமது சிறுவர்களும், இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்லர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனாவிலே, ஏழு ஆண்டுகளேயான சிறுமியான நளினி சிங் அற்புதமான ஒரு செயலைச் செய்திருக்கிறாள். இந்தச் சிறுமி நளினி, செலவுக்குத் தனக்குக் கொடுக்கப்பட்ட தொகை, பாக்கெட் மணி மூலமாக, காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்திருக்கிறாள். சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க பன்றிக்குட்டி வடிவிலே ஒரு பெட்டகம், Piggy Bank என்று ஆங்கிலத்திலே கூறுவார்கள், இது குழந்தைகளுக்கு எத்தனை விருப்பமானது என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் மத்திய பிரதேசத்தின் கட்னியைச் சேர்ந்த 13 வயதே ஆன மீனாக்ஷியும், மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹார்பரின் 11 வயதே ஆன பஷ்வர் முகர்ஜியும் மிக வித்தியாசமான குழந்தைகள். இவர்கள் இருவரும் பிக்கி பேங்கில் சிறுகச் சிறுக சேமித்த தங்களுடைய பணத்தையுமே கூட காசநோயிலிருந்து பாரதம் விடுதலை பெற வேண்டும் என்ற இயக்கத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த உதாரணங்கள் அனைத்தும் உணர்ச்சிகரமானவை, உணர்வுப்பூர்வமானவை, உத்வேகம் அளிப்பவை. வயது குறைவாகவே இருந்தாலும், எண்ணங்கள் பெரியவையாகக் கொண்ட இந்தக் குழந்தைகளை நான் இருதயபூர்வமாகப் பாராட்டுகிறேன்.
என் கனிவான நாட்டுமக்களே, பாரதநாட்டவரான நம்முடைய இயல்பு எப்படிப்பட்டதென்றால், நாம் எப்போதும் புதிய கருத்துக்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் காத்திருப்பவர்களாக இருப்போம். நாம் நமது பொருட்களின் மீது பிரியத்தோடு இருப்போம், புதிய பொருட்களையும் அதே பிரியத்தோடு வரவேற்போம். இதற்கான ஒரு உதாரணம் – ஜப்பானின் உத்தியான மியாவாகி, அதாவது ஏதாவது ஓரிடத்தின் மண் மலடாக இருந்தால், இந்த மியாவாகி உத்தி மூலமாக, அந்தப் பகுதியில், மீண்டும் பசுமையை மலரச் செய்ய ஒரு அருமையான உத்தியாகும். மியாவாகிக் காடுகள் வேகமாகப் பரவுகின்றன, 20-30 ஆண்டுகளிலே உயிரி பன்முகத்தன்மையின் மையமாக ஆகிவிடுகின்றன. இப்போது இதன் பரவலாக்கம், பாரதத்தின் பல்வேறு பாகங்களிலும் நடந்தேறி வருகிறது. நம் நாட்டிலே, கேரளத்தின் ஒரு ஆசிரியரான ராஃபீ இராமநாதன் அவர்கள், இந்த உத்தியின் மூலமாக ஒரு பகுதியின் வரைபடத்தையே மாற்றி விட்டார். உண்மையில், இராமநாதன் அவர்கள், தன்னுடைய மாணவர்களிடத்திலே, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆழமாகப் புரியவைக்க விரும்பினார். இதன் பொருட்டு இவர் ஒரு மூலிகைத் தோட்டத்தை உருவாக்கினார். அவருடைய இந்தத் தோட்டம் இப்போது ஒரு உயிரி பன்முகப் பகுதியாக ஆகி விட்டது. அவருடைய இந்த வெற்றியானது அவருக்கு இன்னும் கூட உத்வேகம் அளித்தது. இதன் பின்னர் ராஃபி அவர்கள், மியாவாகி உத்தி மூலம் ஒரு சின்ன வனத்தை உருவாக்கி, அதற்கு வித்யாவனம் என்ற பெயரும் இட்டார். இத்தனை அழகான பெயரை ஒரு ஆசிரியரால் மட்டுமே சூட்ட முடியும் - வித்யாவனம். இராமநாதன் அவர்களுடைய இந்த வித்யாவனத்திலே, சின்ன இடத்திலேயே கூட 115 வகைப்பட்ட தாவர இனங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட செடிகள் இருக்கின்றன. இவருடைய மாணவர்களும் கூட, இந்தச் செடிகளைப் பராமரிப்பதில் உதவியாக இருக்கின்றார்கள். இந்த அழகான இடத்தைப் பார்க்க, அக்கம்பக்கத்திலிருக்கும் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் என, பெரும் திரளான மக்கள் வருகிறார்கள். மியாவாகி வனங்களை எந்த ஒரு இடத்திலும், ஏன் நகரங்களிலும் கூட எளிதாக வளர்க்க முடியும். சில காலம் முன்பாக, குஜராத்தின் கேவடியாவின் ஏக்தா நகரிலே மியாவாகி வனத்தை நான் திறந்து வைத்தேன். கட்சிலும் கூட 2001ஆம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் நினைவாக மியாவாகி வழிமுறையில் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்ச் போன்ற இடத்தில் இதன் வெற்றியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், கடினத்திலும் கடினமான இயற்கைச் சூழல் நிறைந்த இடத்திலும் கூட இந்த உத்தி எத்தனை வெற்றிகரமாக இருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது. இதைப் போலவே, அம்பாஜி மற்றும் பாவாகடிலும் கூட மியாவாகி வழிமுறை மூலமாக மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. லக்னௌவின் அலீகஞ்ஜ் பகுதியிலும் கூட ஒரு மியாவாகி வனம் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று நான் அறிகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் மும்பையிலும், அதன் அருகிலே இருக்கும் பகுதிகளிலும், இப்படிப்பட்ட 60க்கும் மேற்பட்ட வனங்கள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த உத்தியானது, உலகம் நெடுக விரும்பப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், பாரீஸ், ஆஸ்திரேலியா, மலேஷியா போன்ற பல நாடுகளிலும் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நான் நாட்டுமக்களிடத்திலே, குறிப்பாக, நகரங்களில் வசிப்போரிடத்திலே வேண்டிக் கொள்வதெல்லாம், அவர்கள் மியாவாகி வழிமுறை பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள முயல வேண்டும் என்பதே. இதன் மூலமாக நீங்கள் உங்களின் பூமி மற்றும் இயற்கையை பசுமையாகவும், தூய்மையாகவும் ஆக்க, ஈடற்ற பங்களிப்பை அளிக்க முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நமது தேசத்தின் ஜம்மு காஷ்மீர் பற்றி நன்கு பேசப்படுகிறது. பெருகிவரும் சுற்றுலா பற்றியும், ஜி 20 மாநாடு தொடர்பான அருமையான ஏற்பாடுகள் குறித்தும் என பல காரணங்களுக்காகப் பேசுபொருளாக இருக்கிறது. சில நாட்கள் முன்பாக, மனதின் குரலில் நான் உங்களிடத்திலே கூறியிருந்தேன், எப்படி கஷ்மீரத்தின் நாதரூவானது தேசத்திற்கு வெளியேயும் கூட விருப்பப்பொருளாக ஆகிவருகிறது என்பது. இப்போது ஜம்மு கஷ்மீரத்தின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு அற்புதத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பாரமுல்லாவிலே விவசாயம் நெடுங்காலமாகவே நடந்து வருகிறது என்றாலும் இங்கே பாலுக்கான தட்டுப்பாடு இருந்து கொண்டே இருந்தது. பாரமுல்லாவின் மக்கள் இந்தச் சவாலை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டார்கள். இங்கே பெரிய எண்ணிக்கையில் மக்கள் பால் பண்ணைத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்கள். இந்தப் பணியைச் செய்ய முதலில் முன்வந்தவர்கள் என்றால் அவர்கள் பெண்கள் தாம். அப்படிப்பட்ட ஒரு பெண்மணியின் பெயர் இஷ்ரத் நபி. இஷ்ரத் ஒரு பட்டதாரிப் பெண், இவர் மீர் சிஸ்டர்ஸ் டைரி ஃபார்ம் என்ற பெயரிலான பால் பண்ணையை ஆரம்பித்தார். இவருடைய பால் பண்ணையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 150 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைப் போலவே, சோபோரைச் சேர்ந்த ஒரு நண்பரான வசீம் அநாயத். வசீமிடத்திலே இரண்டு டஜனுக்கு மேற்பட்ட பசுக்கள் இருந்தன; இவர் ஒவ்வொரு நாளும் 200 லிட்டருக்கும் அதிகமான பாலை விற்பனை செய்கிறார். இவருடைய வேலையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்டவர்களின் கடின உழைப்புக் காரணமாகவே, இன்று பாரமுல்லாவில் ஒவ்வொரு நாளும் 5½ இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பாரமுல்லா முழுவதுமே இப்போது ஒரு புதிய வெண்மைப் புரட்சியின் அடையாளமாக மாறி வருகிறது. கடந்த 2½ - 3 ஆண்டுகளாகவே இங்கே 500க்கும் மேற்பட்ட பால்பண்ணை அலகுகள் அமைக்கப்பட்டு வந்தன. நமது தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும், எத்தனை சாத்தியக்கூறுகள் நிறைந்திருக்கின்றன என்பதற்கு பாரமுல்லாவின் பால்பண்ணைத் தொழிலே சாட்சி. எந்த ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களின் சமூகப் பேராவலானது, எந்த ஒரு இலக்கையும் அடைய வல்லது.
என் உளம்நிறை நாட்டுமக்களே, இந்த மாதம், விளையாட்டு உலகமானது பாரதத்திற்கு பல நற்செய்திகளைக் கொண்டு சேர்த்திருக்கிறது. பாரத அணியானது, முதன்முறையாக ஹாக்கிப் போட்டியில் பெண்களுக்கான இளநிலை ஆசியக் கோப்பையை வென்று, மூவண்ணக் கொடிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இதே மாதத்தில், நம்முடைய ஆடவருக்கான ஹாக்கி அணியும் கூட இளநிலை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. இதோடு கூடவே நாம் இந்தப் பந்தயத்தின் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் வெற்றிகளைப் பெற்றிருக்கும் அணி என்ற வகையிலும் பதிவினை ஏற்படுத்தியிருக்கிறோம். இளநிலை துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையிலும் கூட நமது இளநிலை அணியினர் அபாரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்திய அணியானது இந்தப் பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் பந்தயத்தில் வெல்லப்பட மொத்தம் எத்தனை தங்கப் பதக்கங்கள் இருந்தனவோ, அவற்றில் 20 சதவீதத்தை பாரதம் மட்டுமே வென்றிருக்கிறது. இதே ஜூன் மாதத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகளப் போட்டிகளும் நடந்தன. இதிலும் பாரதம் பதக்கப் பட்டியலில், 45 நாடுகள் வரிசையில் முன்னணி மூன்று நாடுகளில் இடம் பிடித்தது.
நண்பர்களே, முன்பெல்லாம் சர்வதேசப் போட்டிகளைப் பற்றி நமக்குத் தெரிய மட்டும் வரும்; ஆனால் அவற்றில் பெரும்பாலும் பாரதத்தின் பெயர் இராது. ஆனால் இன்றோ, அதுவும் கடந்த சில வாரங்களின் வெற்றிகளை மட்டுமே நான் பட்டியலிடுகிறேன் எனும் போதே கூட பட்டியல் இத்தனை நீளமானதாக இருக்கிறது. இது தான் நமது இளைஞர்களின் மெய்யான பலம், சக்தி. இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்-போட்டிகள், இவற்றில் இன்று பாரதம் முதன்முறையாகத் தனது இருப்பைப் பதிவு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீஷங்கர் முரளி, பாரீஸ் டயமண்ட் லீக் போன்ற மிகப் பிரபலமான போட்டியில், தேசத்திற்கு வெண்கலப் பதக்கத்தை வென்றளித்திருக்கிறார். இது இந்தப் போட்டிகளில் பாரத நாட்டின் முதல் பதக்கம் ஆகும். இதே போன்று, மேலும் ஒரு வெற்றி நமது 17 வயதுக்குட்பட்ட பெண்கள் மல்யுத்தப் போட்டிக் குழு தொடர்பானது; இந்தக் குழு, கிர்கிஸ்தானில் வெற்றி பெற்றது. தேசத்தின் இந்த அனைத்துத் தடகள வீரர்கள், அவர்களுடைய பெற்றோர், பயிற்றுநர்கள் என அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்காக நான் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சர்வதேசப் போட்டிகளில், தேசத்திற்கு இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருப்பதன் பின்னணியில், தேசிய அளவில் நமது விளையாட்டு வீரர்களின் கடினமான உழைப்பு இருக்கிறது. இன்று, தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் ஒரு புதிய உற்சாகத்துடன் விளையாட்டுக்களின் ஏற்பாடு நடக்கிறது. இவற்றில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு, விளையாடுதல், வெற்றி பெறுதல், தோற்றல் ஆகியவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. எடுத்துக்காட்டாக, இப்போது உத்திரப் பிரதேசத்தில் நடக்கும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்கெடுத்ததைக் காண முடிந்தது. இந்த விளையாட்டுக்களில் நமது இளைஞர்கள் 11 சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த விளையாட்டுக்களில் பஞ்சாப் பல்கலைக்கழகம், அமிர்தசரசின் குரு நானக்தேவ் பல்கலைக்கழகம், கர்நாடகத்தின் ஜெயின் பல்கலைக்கழகம் ஆகியன பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
நண்பர்களே, இப்படிப்பட்ட போட்டிகளின் ஒரு பெரிய விசயம் என்னவென்றால், இவற்றில் இளம் விளையாட்டு வீரர்களின் பல கருத்தூக்கம் அளிக்கும் கதைகளை நம்மால் பார்க்க இயலும். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் துடுப்புப் படகுப் போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்யதம் ராஜ்குமார், இதில் பங்கெடுத்த முதல் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆனார். பரக்கத்துல்லா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிதி பவைய்யாவுக்கு முட்டியில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்ததைத் தாண்டி, இரும்புக் குண்டை எறியும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். சாவித்திரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் சுபம் பண்டாரேவுக்குக் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் கடந்த ஆண்டு பெங்களூரூவில் நடந்த போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும் இந்த முறை இவர் தடைகளைத் தாண்டும் பந்தயமான ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். பர்த்வான் பல்கலைக்கழகத்தின் சரஸ்வதி குண்டூ, கபடிக் குழுவின் தலைவி. இவர் பல இடர்களைத் தாண்டி இந்த நிலைக்கு முன்னேறியிருக்கிறார். மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடிய பல தடகள வீரர்களுக்கு, TOPS திட்டத்தினால் மிகுந்த உதவிகள் கிடைத்திருக்கின்றன. நமது விளையாட்டு வீரர்கள் எந்த அளவுக்கு விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு வெல்வார்கள்.
என் அன்புநிறை நாட்டுமக்களே, ஜூன் மாதம் 21ஆம் தேதி இப்போது வரவிருக்கிறது. இந்த முறையும் கூட, உலகத்தின் அனைத்து இடங்களிலும் மக்கள் சர்வதேச யோகா தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு யோகா தினத்தின் மையக்கரு, வசுதைவ குடும்பகத்திற்கு யோகா, அதாவது யாதும் ஊரே யாவரும் கேளிருக்கு யோகா என்பதே இதன் பொருள். அனைவரையும் இணைக்கக்கூடிய, அரவணைத்துச் செல்லக்கூடிய யோகாவின் சிறப்பை இந்த உணர்வு வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையைப் போலவும், இந்த முறையும் தேசத்தின் அனைத்து இடங்களிலும், யோகாவோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
நண்பர்களே, இந்த முறை நியூ யார்க்கின் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடத்தில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கிறது. சமூக ஊடகங்களிலே, யோகக்கலை தினம் தொடர்பாக அபரிமிதமான உற்சாகம் கொப்பளிப்பதை என்னால் காண முடிகிறது.
நண்பர்களே, நீங்கள், யோகாவை உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாகக் கடைபிடியுங்கள், இதை உங்கள் அன்றாட செயல்பாட்டின் அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்பதே நான் உங்களிடத்தில் வைக்கும் வேண்டுகோள். இதுவரை நீங்கள் யோகாவோடு இணையவில்லை என்றால், வரவிருக்கும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, நீங்கள் தீர்மானம் மேற்கொள்ள இது மிகவும் அருமையானதொரு சந்தர்ப்பம். யோகக்கலையைப் பயில பெரிய படாடோபம் ஏதும் தேவையில்லை. நீங்கள் யோகாவோடு இணையும் போது உங்கள் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்பதை நீங்களே அனுபவித்து உணருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ரதயாத்திரை தினமாகும். ரதயாத்திரைக்கு என உலகம் முழுவதிலும் ஒரு தனித்துவமான அடையாளம் இருக்கிறது. தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் மிகுந்த கோலாகலத்தோடு பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஒடிஷாவின் புரியில் நடைபெறும் ரதயாத்திரையோ மிகவும் அற்புதமானதாக இருக்கும். நான் குஜராத்தில் இருந்த போது, அஹமதாபாத்திலே நடக்கும் பிரம்மாண்டமான ரதயாத்திரையில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்த ரதயாத்திரைகளில் எப்படி நாடெங்கிலும் இருந்தும், அனைத்துச் சமூகங்களையும், பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பிரவாகமாக வருகிறார்கள் என்பதைக் காணும் வேளையில் இது உள்ளபடியே உயர்வானது, பின்பற்றக் கூடியது. இது நம்பிக்கையோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதையும் பிரதிபலிக்கிறது. இந்தப் புனிதமான வேளையிலே உங்கள் அனைவருக்கும் என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துகள். பகவான் ஜகன்நாதர் நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், சுகம், வளம் ஆகிய நல்லாசிகளை அளிக்கட்டும் என்பதே என் வேண்டுதல்.
நண்பர்களே, பாரதநாட்டுப் பாரம்பரியம், கலாச்சாரத்தோடு தொடர்புடைய உற்சவங்கள் குறித்த பேச்சுக்களில் ஈடுபடும் வேளையில், நான் தேசத்தின் ஆளுநர் மாளிகைகளில் நடைபெற்ற சுவாரசியமான ஏற்பாடுகளைப் பற்றியும் கண்டிப்பாகக் குறிப்பிடுவேன். இப்போது தேசத்தின் ஆளுநர் மாளிகைகளின் அடையாளம் என்றால், சமூக மற்றும் வளர்ச்சிப் பணிகளோடு தொடர்புடையது என்றாகிவிட்டது. இன்று நமது ஆளுநர் மாளிகைகளில், காசநோயிலிருந்து விடுபட்ட பாரதம் இயக்கம், இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய இயக்கம் போன்றவை முன்னணி நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றன. கடந்த காலத்திலே குஜராத், கோவா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், சிக்கிம் ஆகிய இடங்களில், இந்த மாநிலங்களின் நிறுவன நாளை, பல்வேறு ஆளுநர் மாளிகைகளும் எத்தனை உற்சாகத்தோடு கொண்டாடின என்பதே கூட ஒரு எடுத்துக்காட்டான விஷயம். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு வலுசேர்க்கும் வகையிலான ஒரு முன்னெடுப்பு இது.
நண்பர்களே, பாரத நாடு மக்களாட்சியின் தாய். நாம் நமது மக்களாட்சி முறையின் ஆதர்சங்களை தலையானதாகக் கருதுகிறோம், நமது அரசமைப்புச் சட்டத்தை தலையாயது என்று கருதுகிறோம் என்பதால், நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக் கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது பாரத நாட்டு வரலாற்றிலே ஒரு கருப்பு அத்தியாயம். இலட்சக்கணக்கானோர் இந்த அவசரநிலையைத் தங்கள் முழுச்சக்தியோடு எதிர்த்தார்கள். மக்களாட்சியின் ஆதரவாளர்களின் மீது இந்தக் காலகட்டத்தில் எந்த அளவுக்குக் கொடுமைகளும், அநீதிகளும், சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன, எத்தனை துன்பங்களுக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதை நினைக்கும் போது இன்றும் கூட மனம் கொந்தளிக்கிறது. இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மீது பல புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன. சங்கர்ஷ் மேன் குஜராத், அதாவது போராட்டத்தில் குஜராத் என்ற புத்தகத்தை எழுதக்கூடிய வாய்ப்பு அந்தக் காலத்தில் கிடைத்தது. சில நாட்கள் முன்னர் தான் அவசர நிலை மீது எழுதப்பட்ட மேலும் ஒரு புத்தகம் என் பார்வையில் பட்டது. இதன் தலைப்பு, Torture of Political Prisoners in India, அதாவது இந்தியாவில் அரசியல் கைதிகளின் சித்திரவதை. அவசரநிலையின் போது வெளிவந்த இந்தப் புத்தகத்திலே, எப்படி, அந்தக் காலத்தைய அரசு, ஜனநாயகக் காப்பாளர்களிடத்திலே எத்தனை கொடூரமாக நடந்து கொண்டது என்பது விபரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலே ஏராளமான விசயங்களின் ஆய்வுகளும், நிறைய படங்களும் இருக்கின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், தேசத்தின் சுதந்திரத்தையே ஆபத்துக்குள்ளாக்கிய இத்தகைய குற்றங்கள் குறித்து ஒரு மீள்பார்வை பார்க்க வேண்டும். இதன் மூலம், இன்றைய இளைய தலைமுறையினரால் ஜனநாயகத்தின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் பல வண்ணங்கள் நிறைந்த முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மாலை; இதன் ஒவ்வொரு முத்துமே தனித்துவம் வாய்ந்தது, மதிப்புமிக்கது. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் உயிர்ப்புடையது. நாம், சமூக உணர்வோடு கூடவே, சமூகத்தின் பால் கடமை உணர்வு மற்றும் சேவை உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும். அதிகம் கேள்விப்படாத - நமது காதுகளை வந்தடையாத அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே நாம் இங்கே விவாதிக்கிறோம். பல வேளைகளில், மனதின் குரலில் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிய பிறகு, நாட்டுமக்கள் பலருக்கும் இது ஒரு உத்வேக காரணியாக அமைந்து விடுகிறது. தற்போது தான் தேசத்தின் பிரசித்தமான பாரதநாட்டுப் பாரம்பரிய நர்த்தகியான ஆனந்தா ஷங்கர் ஜயந்த் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. தனது கடிதத்தில் அவர், மனதின் குரலின் ஒரு பகுதியைப் பற்றி எழுதியிருக்கிறார். இதிலே நாம் கதை சொல்லுதல், ஸ்டோரி டெல்லிங் பற்றி விவாதித்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில் நாம் இந்தத் துறையோடு தொடர்புடைய மனிதர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்திருந்தோம். மனதின் குரலின் அந்த நிகழ்ச்சியால் கருத்தூக்கம் அடைந்த ஆனந்தா ஷங்கர் ஜயந்த் அவர்கள், குட்டிக நாவலை தயாரித்திருக்கிறார். இது குழந்தைகளுக்காக, பல்வேறு மொழிகளின் கதைகளின் ஒரு மிகச் சிறப்பான தொகுப்பு. இந்த முயற்சி மேலும் ஒரு விஷயத்திற்காகவும் சிறப்பானது ஏனென்றால், இதிலே நமது கலாச்சாரம் மீது நமது குழந்தைகளுக்கு பிடிப்பும், ஆழமும் அதிகப்படும். இந்தக் கதைகளின் சில சுவாரசியமான காணொலிகளையும் தனது யூடுயூப் சேனலிலும் இவர் தரவேற்றம் செய்திருக்கிறார். நாட்டுமக்களின் நல்ல பணிகள், மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதாலேயே இதை இங்கே தெரிவிக்க வேண்டும் என்று எனக்குப் பட்டதால், நான் ஆனந்தா ஷங்கர் ஜயந்த் அவர்களின் இந்த முயற்சி குறித்துக் குறிப்பாக விவாதித்தேன். இதிலிருந்து கற்றுக் கொண்டு அவரும் கூட தனது திறமையால், தேசம் மற்றும் சமூகத்திற்கு சிறப்பான வகையில் பங்களிப்பு நல்க முயற்சி செய்திருக்கிறார். இது தான் பாரதநாட்டவரான நம்மனைவரின் கூட்டுசக்தி. இதுவே தேசத்தின் முன்னேற்றத்திற்குப் புதிய சக்தியை அளிக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே. அடுத்த முறை, புதிய விசயங்களோடு, உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன். மழைக்காலம் இது என்பதால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது நன்கு கவனம் செலுத்துங்கள். மிதமாக உண்ணுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். ஆம், யோகம் பயிலுங்கள். இப்போது பல பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவுக்கு வரவிருக்கின்றது. வீட்டுப்பாடத்தைக் கடைசி தினம் வரை நிலுவையில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் குழந்தைகளிடத்திலே வேண்டிக் கொள்கிறேன். நேரத்தில் வேலையை நிறைவு செய்யுங்கள், கவலைப்படாமல் இருங்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் நெஞ்சம் நிறைய வரவேற்கிறேன். இந்த முறை மனதின் குரலின் இந்தப் பகுதி இரண்டாவது சதத்தின் தொடக்கம். கடந்த மாதம் நாமனைவரும் இதன் சிறப்பான சதத்தினைக் கொண்டாடினோம். உங்களனைவரின் பங்களிப்பு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலம். 100ஆவது பகுதி ஒலிபரப்பான வேளையிலே, ஒருவகையில் நாடு முழுவதும் ஒரே இழையில் இணைந்தது என்று கூறலாம். துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆகட்டும், அல்லது பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லநர்கள் ஆகட்டும், மனதின் குரலானது அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியைப் புரிந்திருக்கிறது. நீங்கள் அனைவரும் மனதின் குரலின் மீது வெளிப்படுத்தியிருக்கும் நேசம், பாசம், இது, இதுவரை காணாதது, உணர்ச்சிவயப்படச் செய்யக்கூடியது. மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நேர மண்டலங்களிலும், ஓரிடத்தில் மாலையாக இருக்கலாம், ஓரிடத்தில் இரவாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த 100ஆவது பகுதியைக் கேட்கத் தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் நியூசிலாந்தின் ஒரு காணொளியை நான் பார்க்க நேர்ந்தது, இதிலே 100 வயது நிரம்பிய ஒரு தாய் தனது நல்லாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மனதின் குரல் தொடர்பாக நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் இருக்கும் மக்களும் சரி, தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். பலர் இதனை ஆக்கப்பூர்வமாக ஆராயவும் செய்திருக்கிறார்கள். மனதின் குரலில் நாடு மற்றும் நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்ற இந்த விஷயத்தைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், உங்களுடைய இந்த நல்லாசிகளுக்காக, மிகுந்த மரியாதையோடு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் மனதின் குரலில் நாம் காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்கமம் பற்றியும், சௌராஷ்டிரத்தின் தமிழ்ச் சங்கமம் குறித்தும் பேசினோம். சில நாட்கள் முன்பாக வாராணசியில், காசி தெலுகு சங்கமமும் அரங்கேறியது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு வலு சேர்க்கும் மேலும் ஒரு அருமையான முயற்சி தேசத்தில் நடந்தேறியது. இந்த முயற்சி தான் இளைஞர்கள் சங்கமம் பற்றியது. இதைப் பற்றி விரிவான முறையில், இந்த முயற்சியோடு தொடர்புடையவர்களிடத்திலேயே ஏன் பேசக் கூடாது என்று நான் சிந்தித்தேன். ஆகையால் இப்போது இரண்டு இளைஞர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பில் இருக்கிறார்கள் – ஒருவர் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த கியாமர் நியோகும் அவர்கள். அடுத்ததாக, பிஹாரைச் சேர்ந்த பெண்ணான விசாகா சிங் அவர்கள். வாருங்கள் முதலில் நாம் கியாமர் நியோகும் அவர்களோடு பேசுவோம்.
பிரதமர்: கியாமர் அவர்களே, வணக்கம்.
கியாமர்: வணக்கம் மோதி ஜி
பிரதமர்: சரி கியாமர் அவர்களே, முதல்ல நான் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன்.
கியாமர்: மோதி ஜி, முதல் விஷயம், உங்களுக்கும், பாரத அரசுக்கும் மிகப்பெரிய நன்றிகளை நான் தெரிவிச்சுக்கறேன்; ஏன்னா நீங்க உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி, என்னோட உரையாற்றறீங்க, எனக்கு ஒரு வாய்ப்பு குடுத்திருக்கீங்க. நான் அருணாச்சல பிரதேசத்தின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில இயந்திரப் பொறியியல் படிப்போட முதலமாண்டுல படிச்சுட்டு இருக்கேன்.
பிரதமர்: வீட்டில என்ன செய்யறாங்க, அப்பா என்ன பண்றாரு?
கியாமர்: என்னோட அப்பா சின்ன அளவுல வியாபாரம் செய்யறாங்க, கொஞ்சம் விவசாயத்திலயும் ஈடுபட்டிருக்காங்க.
பிரதமர்: இளைஞர்கள் சங்கமம் பத்தி உங்களுக்கு எப்படி தெரிய வந்திச்சு, இளைஞர் சங்கமத்துக்குன்னு நீங்க எங்க போனீங்க, எப்படி போனீங்க, என்ன நடந்திச்சு?
கியாமர்: மோதி ஜி, இளைஞர் சங்கமம் பத்தியும், அதில நான் பங்கெடுத்துக்கலாம்னும் என்னோட கல்வி நிறுவனம் தான் எனக்கு சொன்னாங்க. நானும் கொஞ்சம் இணையதளத்தில தேடிப் பார்த்த போது தெரிய வந்திச்சு, இது ரொம்ப சிறப்பான நிகழ்ச்சி, ஒரே பாரதம் உன்னத பாரதம் அப்படீங்கற தொலைநோக்கு வகையில நிறைய பங்களிப்பு அளிக்கக் கூடியதுன்னு தோணிச்சு. மேலும் இதில புதுசா கத்துக்க முடியும்னு பட்ட போது, உடனடியா நான் அந்த இணைய முகவரியில என்னை பதிவு செஞ்சுக்கிட்டேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம் ரொம்ப சுவாரசியமா, நல்லா இருந்திச்சு.
பிரதமர்: நீங்க ஏதாவது தேர்வு செய்ய வேண்டி இருந்திச்சா?
கியாமர்: இணையதளத்தைத் திறந்த போது, அருணாச்சல் காரங்களுக்கு ஒரு தேர்வு இருந்திச்சு. முதல்ல ஆந்திர பிரதேசம்னு இருந்திச்சு; இதில ஐஐடி திருப்பதி இருந்திச்சு, அடுத்தபடியா ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய பல்கலைக்கழகம் இருந்திச்சு. நான் ராஜஸ்தானைத் தான் என் முதல் தேர்வாவும், ஐஐடி, திருப்பதியை என்னோட இரண்டாவது தேர்வாவும் செய்தேன். நான் ராஜஸ்தானுக்காக தேர்வு செய்யப்பட்டேன், நான் ராஜஸ்தான் போயிருந்தேன்.
பிரதமர்: எப்படி இருந்திச்சு ராஜஸ்தான் பயணம்? முத முறையா நீங்க ராஜஸ்தான் போனீங்க இல்லை!
கியாமர்: ஆமாம், நான் முத முறையா அருணாச்சல்லேர்ந்து வெளிய போனேன். ராஜஸ்தானத்துக் கோட்டைகளை எல்லாம் நான் திரைப் படங்கள்லயும், ஃபோன்லயும் மட்டுமே பார்த்திருக்கேன். ஆனா முத முறையா போனப்ப, என்னோட அனுபவம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சு, அங்க இருக்கற மக்கள் நல்லாயிருந்தாங்க, அவங்க ரொம்பவே இனிமையா என்னை நடத்தினாங்க. நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிட்டேன்னு சொன்னா, ராஜஸ்தானத்து ஏரி, அங்க இருக்கறவங்க எப்படி மழைநீர் சேகரிப்பை செய்யறாங்க, இது பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது, இது எனக்கு முன்ன சுத்தமா தெரியாது. அந்த வகையில இந்த ராஜஸ்தான் பயணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திச்சு.
பிரதமர்: பாருங்க, மிகப்பெரிய ஆதாயம்னு பார்த்தா, அருணாச்சலும் கூட வீரம் நிறைஞ்ச பூமி, ராஜஸ்தானும் வீரர்களோட பூமி தான். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பலர் இராணுவத்தில இருக்காங்க, மேலும் அருணாச்சல எல்லையில இருக்கற இராணுவத்தினர், அதில ராஜஸ்தான்காரங்க இருந்தாங்கன்னா அவங்க கூட கண்டிப்பா பேசிப் பாருங்க. நான் ராஜஸ்தான் போயிருந்தேன், இது தான் என்னோட அனுபவமா இருந்திச்சுன்னு பேசிப் பாருங்களேன், உங்களுக்குள்ள இருக்கற பரஸ்பர நெருக்கம் ரொம்ப அதிகமாயிடும். சரி, அங்க ஏதும் ஒப்புமைகளை உங்களால பார்க்க முடிஞ்சுதா, அட இது நம்ம அருணாச்சலத்திலயும் இருக்கே அப்படீங்கற வகையில!
கியாமர்: மோதி ஜி, கண்டிப்பா என்னால ஒரு ஒப்புமையைப் பார்க்க முடிஞ்சுது, அது என்னென்னா, நாட்டுப்பற்று தான். மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் பத்தின தொலைநோக்கு மற்றும் உணர்வை என்னால பார்க்க முடிஞ்சுது. ஏன்னா அருணாச்சல்லயும் மக்கள் தாங்கள் பாரத நாட்டவர்கள்ங்கற பெருமித உணர்வு அதிகம் இருக்கறவங்க. இந்த விஷயத்தை என்னால அதிகம் காண முடிஞ்சுது, குறிப்பா இளைய தலைமுறையினர் மத்தியில; எப்படீன்னா நான் அங்க குறிப்பா பல இளைஞர்களோட பேசிப் பார்த்த போது, எனக்கு பல ஒப்புமைகள் மனசுல பட்டுச்சு. அதாவது அவங்க பாரதத்துக்காக ஏதாவது செய்யணும்னு விரும்பறாங்க, நாட்டுப்பற்று நிறைய இருக்கு, இந்த விஷயம் இரண்டு மாநிலங்களைச் சேர்ந்தவங்க கிட்டயும் இருக்கற ஒப்புமையா என்னால பார்க்க முடிஞ்சுது.
பிரதமர்: அங்க நண்பர்களை ஏற்படுத்திக்கிட்டு நெருக்கத்தை உருவாக்கிக்கிட்டீங்களா இல்லை இங்க வந்த பிறகு மறந்துட்டீங்களா?
கியாமர்: இல்லை, நெருக்கத்தை அதிகமாக்கிட்டு இருக்கேன்.
பிரதமர்: ஆஹா…. நீங்க சமூக ஊடகங்கள்ல ஆக்டிவா இருக்கீங்களா?
கியாமர்: ஆமாம், ஆக்டிவா இருக்கேன்.
பிரதமர்: அப்ப நீங்க ப்ளாக்ல கண்டிப்பா எழுதணும், இளைஞர்கள் சங்கமத்தில உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எப்படி இருந்திச்சு, எப்படி அதில பதிஞ்சுக்கிட்டீங்க, ராஜஸ்தான அனுபவம் எப்படி இருந்திச்சுன்னு எழுதணும். இதனால நாடெங்கிலும் இருக்கும் இளைஞர்களுக்கும், ஒரே பாரதம் உன்னத பாரதத்தோட மகிமை என்ன, இந்தத் திட்டம் என்ன அப்படீங்கறது தெரிய வரும். இதை எப்படி இளைஞர்கள் பயன்படுத்திக்க முடியும் அப்ப்டீங்கறதைப் பத்தின முழுமையான உங்க அனுபவத்தை ப்ளாகா நீங்க எழுதணும், பலர் இதைப் படிச்சுப் பயன் பெறுவாங்க.
கியாமர்: கண்டிப்பா எழுதறேங்க.
பிரதமர்: கியாமர் அவர்களே, உங்களோட பேசினது எனக்கு ரொம்ப நல்லா இருந்திச்சு, இளைஞர்களான நீங்க எல்லாரும் தான் தேசத்தோட பிரகாசமான எதிர்காலத்தின் நம்பிக்கைகள். ஏன்னா அடுத்த 25 ஆண்டுகள் ரொம்பரொம்ப மகத்துவமானது. இது உங்க வாழ்க்கைக்கும் சரி, தேசத்தோட வாழ்க்கைக்குமே சரி. அப்ப உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி.
கியாமர்: உங்களுக்கும் நன்றி மோதி ஜி.
பிரதமர்: நன்றி சகோதரா!
நண்பர்களே, அருணாச்சலத்து மக்கள் நெருங்கிப் பழகக்கூடியவர்கள், அவர்களோடு உரையாடுவது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இளைஞர்கள் சங்கமத்தில் கியாமர் ஜியுடைய அனுபவம் மிகச் சிறப்பானதாக இருந்தது. இப்போது பிஹாரின் பெண்ணான விசாகா சிங் அவர்களோடு நாம் உரையாடுவோம் வாருங்கள்.
பிரதமர்: விஷாகா அவர்களே, வணக்கம்.
விஷாகா: முதன்மையா பாரதத்தோட மதிப்புமிக்க பிரதமர் அவர்களுக்கு என்னோட நல்வணக்கங்கள். மேலும் என்னோட கூட இருக்கற எல்லா பிரதிநிதிகள் தரப்பிலிருந்தும் பலப்பல வணக்கங்கள்.
பிரதமர்: நல்லது விசாகா அவர்களே, முதல்ல நீங்க எனக்கு உங்களைப் பத்திச் சொல்லுங்க. பிறகு இளைஞர்கள் சங்கமம் பத்தியும் தெரிஞ்சுக்க விரும்பறேன்.
விசாகா: நான் பிஹாரோட சாசாராம்ங்கற ஒரு நகரத்தில வசிக்கறேன், இந்த இளைஞர்கள் சங்கமம் பத்தி எங்க கல்லூரியோட வாட்ஸப் குழுவுல முதல்ல ஒரு செய்தியா வந்திச்சு. இதுக்கு அப்புறமா இதைப் பத்தின விபரத்தை நான் தேடிப் பிடிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பத் தான் தெரிய வந்திச்சு, இது பிரதமரோட, ஒரே பாரதம் உன்னத பாரதம்ங்கற ஒரு திட்டம் வாயிலாத் தான் இந்த இளைஞர்கள் சங்கமம் அப்படீங்கறதே நடத்தப்படுதுங்கற விபரமே. அப்புறம் நானும் விண்ணப்பிச்சேன், இதில சேரணும்னு எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்திச்சு, இது மூலமா நான் தமிழ்நாட்டைச் சுத்திப் பார்த்துட்டு வந்திருக்கேன். இதில எனக்குக் கிடைச்ச அனுபவம் பத்தி நான் ரொம்பவே பெருமையா உணர்றேன், அதாவது நானும் இந்தத் திட்டத்தில பங்கெடுத்திருக்கேன்னு. இதில பங்கெடுக்க வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் என் நன்றிகளை உங்களுக்குத் தெரிவிச்சுக்கறேன். எங்களை மாதிரியான இளைஞர்களுக்கு இந்த மாதிரியான அருமையான திட்டத்தை உருவாக்கி இருக்கீங்க, இது மூலமா பாரத நாட்டோட பல்வகையான இடங்கள்ல இருக்கற கலாச்சாரங்களுக்கு ஏத்த வகையில எங்களைத் தகவமைச்சுக்க முடியும்.
பிரதமர்: விசாகா அவர்களே, நீங்க என்ன படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
விசாகா: நான் கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டுல படிச்சுட்டு இருக்கேன்.
பிரதமர்: நல்லது விசாகா அவர்களே, நீங்க எந்த மாநிலத்துக்குப் போகணும், எப்படி அணுகணும், இந்த முடிவை எப்படி எடுத்தீங்க?
விசாகா: நான் இளைஞர்கள் சங்கமம் பத்தி இணையத்தில தேடிப் பார்த்த போது, பிஹாரோட பிரதிநிதிகளுக்கும், தமிழ்நாட்டின் பிரதிநிதிகளுக்கும் பரிமாற்றம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். தமிழ்நாடு கலாச்சார ரீதியா ரொம்ப வளமான மாநிலம், பிஹார்காரங்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பறாங்கன்னு தெரிஞ்சுது, இதுக்குனு ஒரு படிவத்தை நிரப்பணும்னு தெரிய வந்திச்சு. உண்மையிலே சொல்றேன், நான் இதை ஒரு பெரிய கௌரவமா உணர்றேன், இதில பங்கெடுத்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
பிரதமர்: முத முறையா நீங்க தமிழ்நாடு போனீங்களா?
விசாகா: ஆமாங்க, முத முறையா போனேன்.
பிரதமர்: சரி, ரொம்ப விசேஷமான நினைவு இல்லை சம்பவம்னு சொன்னா நீங்க எதைச் சொல்லுவீங்க? நாட்டோட இளைஞர்கள் நீங்க சொல்றதை ஆர்வத்தோட கேட்டுக்கிட்டு இருக்காங்க.
விசாகா: சரிங்கய்யா. பயணம் முழுக்கவுமே ரொம்பவும் நினைவுல வச்சுக்கும்படியா இருந்திச்சு. ஒவ்வொரு கட்டத்திலயும் என்னால ரொம்ப நல்லநல்ல விஷயங்களைக் கத்துக்க முடிஞ்சுது. தமிழ்நாட்டுக்குப் போய் பல நல்ல நண்பர்களை என்னால ஏற்படுத்திக்க முடிஞ்சுது. அங்க இருக்கற கலாச்சாரத்துக்கு ஏத்த வகையில என்னை தகவமைச்சுக்க முடிஞ்சுது. அந்த மக்களோட பழகினேன். இதில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னு பார்த்தா, இந்த வாய்ப்பு பலருக்கும் கிடைச்சிருக்காது. அது என்னென்னா, பிரதிநிதிகளான எங்களுக்கு இஸ்ரோவுக்குப் போகற வாய்ப்பு கிடைச்சுது. ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் என்னென்னா, நாங்க ஆளுநர் மாளிகைக்குப் போனப்ப, அங்க தமிழ்நாட்டின் ஆளுநரை சந்திக்க முடிஞ்சுது. இந்த இரண்டு விஷயங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திச்சு, எனக்கு என்ன தோணிச்சுன்னா, நாங்க இப்ப இருக்கற இந்த வயசுல, இந்த இளைஞர் சங்கமம் மட்டும் இல்லைன்னா, இந்த வாய்ப்பு எங்களுக்குக் கண்டிப்பா கிடைச்சிருக்காது. இது எனக்கு ரொம்ப அருமையான, மறக்கவே முடியாத கணங்களா இருந்திச்சு.
பிரதமர்: பிஹார்ல உணவுமுறையே வேற, தமிழ்நாட்டுல வேறயா இருக்கும்.
விசாகா: ஆமாம்.
பிரதமர்: இது எப்படி உங்களுக்கு சரிப்பட்டு வந்திச்சு?
விசாகா: அங்க தென்னிந்திய உணவு தமிழ்நாட்டுல இருந்திச்சு. அங்க போனவுடனேயே எங்களுக்கு தோசை, இட்லி, சாம்பார், ஊத்தப்பம், வடை, உப்புமால்லாம் பரிமாறினாங்க. முதமுறையா நாங்க சாப்பிட்ட போது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திச்சு. அங்க இருக்கற உணவு ரொம்ப ஆரோக்கியமானதா, உள்ளபடியே ரொம்ப சுவையானதா இருந்திச்சு, அருமையா இருந்திச்சு. நம்ம வட இந்திய உணவுலேர்ந்து ரொம்பவே வித்தியாசமானது, எனக்கு அங்க இருந்த உணவு ரொம்ப பிடிச்சிருந்திச்சு, அங்க இருந்த மக்களும் ரொம்ப நல்லவங்க.
பிரதமர்: அப்ப தமிழ்நாட்டுல நண்பர்களை நீங்க ஏற்படுத்திட்டு இருப்பீங்களே?
விசாகா: ஆமாம். நாங்க அங்க திருச்சியில தேசிய தொழில்நுட்பக் கழகத்திலயும், பிறகு சென்னையில இந்திய தொழில்நுட்பக் கழகத்திலயும் தங்கி இருந்தோம். இந்த இரண்டு இடங்கள்லயும் இருந்த மாணவர்களோடயும் எனக்கு நட்பு ஏற்பட்டிச்சு. இதுக்கு இடையில இந்திய தொழில்கூட்டமைப்போட ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வேற இருந்திச்சு. இதில அங்க அக்கம்பக்கத்தில இருந்த கல்லூரிகள்லேர்ந்தும் கூட பல மாணவர்கள் வந்தாங்க. அந்த மாணவர்களோட ஊடாடினோம், இது ரொம்ப நல்லா இருந்திச்சு, நிறைய நண்பர்கள் உருவானாங்க. சில பிரதிநிதிகள் தமிழ்நாட்டிலேர்ந்து பிஹாருக்குப் போயிட்டு இருந்தாங்க, அவங்களோட பேசவும் வாய்ப்பு கிடைச்சுது, பரஸ்பரம் பேசிக்கிட்டோம், ரொம்ப அருமையான அனுபவமா இருந்திச்சு.
பிரதமர்: அப்ப விசாகா அவர்களே, நீங்க கண்டிப்பா ஒரு ப்ளாக் எழுதுங்க, சமூக ஊடகத்தில உங்க மொத்த அனுபவத்தையும் பத்தி எழுதுங்க. ஒண்ணு இந்த இளைஞர்கள் சங்கமம், அப்புறம் ஒரே பாரதம் உன்னத பாரதம் பத்தியும், இன்னொண்ணு, தமிழ்நாட்டு மக்கள் உங்களை எப்படி நேசத்தோட ஏத்துக்கிட்டாங்க, உங்களுக்கு வரவேற்பு அளிச்சாங்க, அவங்களோட பாசம் இது பத்தி எல்லாம் தேசத்துக்கு நீங்க தெரிவிக்கணும் இல்லையா. எழுதுவீங்க தானே?
விசாகா: ஆஹா, கண்டிப்பாய்யா.
பிரதமர்: சரி, அப்ப என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள், பற்பல நன்றிகள்.
விசாகா: ரொம்ப ரொம்ப நன்றி ஐயா, வணக்கம்.
பிரதமர்: தேங்க்யூ சோ மச். வணக்கம்.
கியாமர், விசாகா இவர்கள் இருவருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள். இளைஞர்கள் சங்கமத்தில் நீங்கள் கற்றவை, இவை உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு இணைந்து பயணிக்கட்டும். உங்களுக்கு என் தரப்பிலிருந்து நல்விருப்பங்கள்.
நண்பர்களே, பாரதத்தின் சக்தியே அதன் பன்முகத்தன்மை தான். நமது தேசத்தில் பார்க்கத் தகுந்த இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு தான், நமது கல்வி அமைச்சகம், யுவாசங்கமம், அதாவது இளையோர் சங்கமம் என்ற பெயரிலான ஒரு அருமையான முன்னெடுப்பைச் செய்திருக்கிறார்கள். இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்னவென்றால், மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்பெறச் செய்வதோடு, தேசத்தின் இளைஞர்களுக்கு இடையே பரஸ்பர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பமைத்துக் கொடுப்பது தான். பல்வேறு மாநிலங்களின் உயர்கல்வி நிறுவனங்கள் இதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. யுவாசங்கமத்தில், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற மாநிலங்களின் நகரங்கள்-கிராமங்களுக்குச் செல்கிறார்கள், அங்கே பலவகைப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது. யுவாசங்கமத்தின் முதல் சுற்றிலே கிட்டத்தட்ட 1200 இளைஞர்கள், தேசத்தின் 22 மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். எந்த இளைஞரெல்லாம் இதோடு தங்களை இணைத்துக் கொண்டார்களோ, அவர்கள் தங்களோடு கூடவே கொண்டு வந்திருக்கும் நினைவுகள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இதயங்களில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், வணிகத் தலைவர்கள் எல்லோரும் பாரதத்தில் பல இடங்களில் கழித்திருக்கிறார்கள். நான் பல நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில், தங்களுடைய இளைய பருவகாலத்தில் சுற்றிப்பார்க்கத் தாங்கள் பாரதம் வந்திருப்பதாக அவர்கள் என்னிடத்தில் தெரிவித்ததுண்டு. நிறைய கற்கவும், பார்க்கவும் நமது பாரத நாட்டிலே இருக்கிறது, இது உங்களுடைய உற்சாகத்தை மேலும் மேலும் அதிகரிக்க வல்லது. இந்த உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களைப் பற்றித் தெரிந்து, தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கும் யாத்திரைப்படும் பேரார்வம் உங்களுக்கும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
என் அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது உணர்வுபூர்வமான ஒரு அனுபவம். நாம் வரலாற்றின் நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் போது, இனிவரும் தலைமுறையினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். பல வேளைகளில் அருங்காட்சியகங்கள் நமக்கு புதிய பாடங்களைக் கற்பிக்கின்றன, பல வேளைகளில் பல கற்பித்தல்கள் நமக்குக் கிடைக்கின்றன. சில நாட்கள் முன்பாக, பாரதத்தில் சர்வதேச அருங்காட்சியக எக்ஸ்போவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே, உலகின் 1200க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களின் சிறப்புகள் காட்டப்பட்டன. நமது பாரத நாட்டிலே பல்வேறு வகையான இப்படி பல அருங்காட்சியகங்கள் உண்டு, இவை நமது கடந்த காலத்தோடு தொடர்புடைய பல்வேறு கோணங்களை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக குருகிராமிலே ஒரு விநோதமான அருங்காட்சியகம் உண்டு – ம்யூசியோ கேமரா, இதிலே 1860ற்குப் பிறகு, 8000த்திற்கும் அதிகமான கேமிராக்களின் சேகரிப்பு இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டின் Museum of Possibilities என்பதனை, நமது மாற்றுத் திறனாளி சகோதரர்களை கவனத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள். மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் வாஸ்து சங்கிரஹாலயம் எப்படிப்பட்ட அருங்காட்சியகம் என்றால் இதிலே 70,000ற்கும் மேற்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Indian Memory Project, இது ஒருவகையில் ஆன்லைன் அருங்காட்சியகம். உலகெங்கிலிருமிருந்தும் அனுப்பப்பட்ட படங்கள் மற்றும் கதைகள் வாயிலாக பாரதத்தின் பெருமிதமான வரலாற்றுக் கணங்களை இணைப்பதில் இது முனைந்திருக்கிறது. நாடு துண்டாடப்பட்ட போது அரங்கேறிய படுபயங்கரமான சம்பவங்களோடு தொடர்புடைய நினைவுகளையும் முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளிலும் நாம் பாரதத்தின் புதிய புதிய வகையான அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி சகோதர சகோதரிகளின் பங்களிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட பத்து அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கோல்காத்தாவின் விக்டோரியா நினைவகத்தில், பிப்லோபீ பாரதம் அருங்காட்சியகமாகட்டும், அல்லது ஜலியான்வாலா பாக் நினைவகத்தின் புதுப்பித்தலாகட்டும், தேசத்தின் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதமர்கள் அருங்காட்சியகமாகட்டும், இன்று இது தில்லியில் அமைந்திருக்கிறது. தில்லியிலேயே தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் காவலர்கள் நினைவுச் சின்னம் ஆகியன ஒவ்வொரு நாளும் அநேகர்களின் உயிர்த்தியாகங்கள் பற்றிய நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தாண்டி யாத்திரைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தண்டி நினைவுச் சின்னமாகட்டும், ஒற்றுமைச் சிலை அருங்காட்சியகமாகட்டும்… சரி நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன், ஏனென்றால் நாடெங்கிலும் இருக்கும் அருங்காட்சியகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது, முதன்முறையாக தேசத்தின் அனைத்து அருங்காட்சியகங்கள் பற்றியும் அவசியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் எந்தக் கருப்பொருளை ஆதாரமாகக் கொண்டது, அங்கே எந்த வகையான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது, அங்கே தொடர்பு கொள்ளும் விபரங்கள் பற்றியெல்லாம் ஒரு ஆன்லைன் குறிப்பேடு தொகுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அனைவரிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் – உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது நமது தேசத்தின் இந்த அருங்காட்சியகங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். அங்கிருக்கும் கவரக்கூடிய படங்களை # (ஹேஷ்டேக்) மியூசியம் மெமரீஸில் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள். இதன் வாயிலாக நமது பெருமைமிக்க கலாச்சாரத்துடனான நம்முடைய பிணைப்பு மேலும் பலமாகும்.
என் பாசமிகு நாட்டுமக்களே, நாம் பலவேளைகளில் ஒரு நற்றிணைப் பொன்மொழியைக் கேட்டிருப்போம் – நீரின்றி அமையாது உலகம். நீரில்லாமல் போனால் உலகமே இருக்காது, மனிதர்கள், நாடுகளின் வளர்ச்சி ஸ்தம்பித்துப் போகும். எதிர்காலத்தின் இந்தச் சவாலைக் கவனத்தில் கொண்டு, இன்று நாடெங்கிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏன் நமது இந்த அமிர்த நீர்நிலைகள் விசேஷமானவை என்றால், இவை சுதந்திரத்தின் அமுதகாலத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன, இவற்றிலே மக்களின் அமுத முயற்சிகள் கலந்திருக்கின்றன. 50,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகள் இதுவரை அமைக்கப்பட்டு விட்டன என்ற செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கலாம். இது நீர்ப்பாதுகாப்புத் திசையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முன்னெடுப்பாகும்.
நண்பர்களே, ஒவ்வொரு கோடைக்காலத்திலும் நாம் இதைப் போலவே நீரோடு தொடர்புடைய சவால்கள் குறித்துப் பேசி வருகிறோம். இந்த முறையும் கூட இந்த விஷயத்தை மேற்கொள்வோம்; ஆனால் இந்த முறை நாம் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகளைப் பற்றிப் பேசுவோம். ஒரு ஸ்டார்ட் அப்பின் பெயர் FluxGen. இந்த ஸ்டார்ட் அப், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸால் இயக்கப்படுவது; இந்தத் தொழில்நுட்பம் மூலமாக, நீர் மேலாண்மை தொடர்பான மாற்றினை அளிப்பது. இந்தத் தொழில்நுட்பம், பயன்பாட்டு விதங்களைத் தெரிவிக்கும், நீரைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும். மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பானது LivNSense. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை ஆதாரமாகக் கொண்ட தளமாகும். இதன் துணையோடு நீர் பகிர்மானம் மீது திறமையான வகையிலே கவனத்தைச் செலுத்த முடியும். மேலும் எங்கே எவ்வளவு நீர் வீணாகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு ஸ்டார்ட் அப் இருக்கிறது, இதன் பெயர் கும்பி காகஸ். இந்த கும்பி காகஸானதை உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இவர்கள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஆகாயத் தாமரையிலிருந்து காகிதம் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் நீர்நிலைகளுக்கு ஒரு பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட இந்த ஆகாயத் தாமரையிலிருந்து இப்போது காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நண்பர்களே, பல இளைஞர்கள் நூதனக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். பல இளைஞர்கள் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்திஸ்கட்டின் பாலோத் மாவட்டத்தின் இளைஞர்கள் இதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இங்கிருக்கும் இளைஞர்கள் நீரைப் பாதுகாக்க ஒரு இயக்கத்தைத் தொடக்கியிருக்கின்றார்கள். இவர்கள் வீடுதோறும் சென்று மக்களுக்கு நீர்ப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது, இளைஞர்களின் இந்தக் குழு அங்கே சென்று, நீரின் தவறான பயன்பாட்டை எப்படித் தடுக்க முடியும் என்பது தொடர்பான தகவல்களை அளிக்கிறார்கள். நீரின் சரியான பயன்பாட்டோடு தொடர்புடைய ஒரு ஊக்கமளிக்கும் முயற்சி ஜார்க்கண்டின் கூண்ட்டீ மாவட்டத்தில் நடைபெறுகிறது. கூண்ட்டீ பகுதியில் மக்கள், சாக்குமூட்டைத் தடுப்பு என்ற வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தத் தடுப்பு காரணமாக நீர் சேகரிக்கப்படுவதன் காரணமாக இங்கே கீரை-காய்கறிகளையும் பயிர் செய்ய முடிகிறது. இதனால் மக்களின் வருவாய் அதிகரிப்பதோடு, இந்தப் பகுதியின் தேவைகளும் நிறைவு செய்யப்படுகின்றன. மக்களின் பங்களிப்புடன் கூடிய எந்த ஒரு முயற்சியும், எப்படி பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதற்கு, இந்தக் கூண்ட்டி பகுதி ஒரு கவனத்தை ஈர்க்கும் எடுத்துக்காட்டு. இந்த முயற்சிக்காக இங்கிருக்கும் மக்களுக்குப் பலப்பல பாராட்டுக்களை நான் உரித்தாக்குகிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, 1965ஆம் ஆண்டு யுத்தக்காலத்திலே, நமது முன்னாள் பிரதம மந்திரி லால் பஹாதுர் சாஸ்திரி அவர்கள், ஜய் ஜவான், ஜய் கிஸான் என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். பின்னர் அடல் அவர்களும் இதிலே ஜய் விஞ்ஞான் என்பதனை இணைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்னால், தேசத்தின் விஞ்ஞானிகளோடு கூடவே ஜய் அனுசந்தான், அதாவது ஜய் ஆராய்ச்சி என்பதும் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய மனதின் குரலிலே, நாம் சந்திக்க இருக்கும் இந்த மனிதர் ஜய் ஜவான், ஜய் கிஸான், ஜய் விஞ்ஞான், ஜய் அனுசந்தான் என்ற நான்கையுமே பிரதிபலிக்கக்கூடிய ஒரு நபர். இந்த மனிதர், மஹாராஷ்டிரத்தின் திருவாளர் சிவாஜி ஷாம்ராவ் டோலே அவர்கள். சிவாஜி டோலே அவர்கள் நாஸிக் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்திலே வசிப்பவர். இவர் ஏழ்மையான பழங்குடியின குடியானவக் குடும்பத்தில் பிறந்தவர், ஒரு முன்னாள் இராணுவ வீரரும் கூட. இராணுவத்திலே பணியாற்றிய போது, இவர் தன்னுடைய வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தார். பணி ஓய்வு பெற்ற பிறகு, இவர் புதியதாக ஒன்றைக் கற்க வேண்டும் என்று முடிவெடுத்து, விவசாயத்தில் பட்டயப்படிப்பு முடித்து, ஜய் ஜவான், ஜய் கிஸான் என்ற நிலைக்கு முன்னேறினார். இப்போது ஒவ்வொரு கணமும் இவருடைய முயற்சி என்னவாக இருக்கிறது என்றால், எப்படி விவசாயத் துறையில் தன்னுடைய பங்களிப்பு அதிகமாக இருக்க முடியும் என்பதே. தனது இந்த இயக்கத்தில் சிவாஜி டோலே அவர்கள் 20 நபர்கள் அடங்கிய ஒரு சின்னஞ்சிறிய குழுவை ஏற்படுத்தி, இதிலே சில முன்னாள் இராணுவத்தினரையும் இணைத்துக் கொண்டார். இதன் பிறகு இவருடைய இந்தக் குழுவானது, வெங்கடேஷ்வரா கூட்டுறவு ஆற்றல் மற்றும் வேளாண் பொருள் பதப்படுத்தல் நிறுவனம் என்ற பெயரிலே ஒரு கூட்டுறவு அமைப்பை கையகப்படுத்தியது. இந்தக் கூட்டுறவு அமைப்பு செயலற்றுப் போயிருந்தது, இதற்குப் புத்துயிர் ஊட்டும் சவாலை இவர் மேற்கொண்டார். சில காலத்திலேயே இன்று வெங்கடேஷ்வரா கூட்டுறவு விரிவுபடுத்தப்பட்டு பல மாவட்டங்களிலும் பல்கிப் பெருகி விட்டது. இன்று இந்தக் குழுவானது மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் பணியாற்றி வருகிறது. இதோடு கிட்டத்தட்ட 18,000 பேர் இணைந்திருக்கிறார்கள், இவர்களில் கணிசமானோர் நமது முன்னாள் படையினர். நாஸிக்கின் மாலேகான்விலே இந்தக் குழுவின் உறுப்பினர்கள் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் விவசாயப் பண்ணைகளை நடத்தி வருகிறார்கள். இந்தக் குழுவானது நீர் பாதுகாப்பிற்காகவும் கூட பல குளங்களையும் ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறது. சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர்கள் உயிரி பண்ணைமுறை மற்றும் பால்பண்ணையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் விளைவித்திருக்கும் திராட்சைகள் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் குழுவின் இரண்டு சிறப்பம்சங்கள் என் கவனத்தை அதிகம் கவர்கின்றன – இவை ஜய் விஞ்ஞான் மற்றும் ஜய் அனுசந்தான். இதன் உறுப்பினர்கள் தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய வழிமுறைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால், ஏற்றுமதிக்குத் தேவையான பலவகையான சான்றளிப்புக்களின் மீதும் இவர்களின் கவனம் இருக்கிறது. கூட்டுறவிலிருந்து தன்னிறைவு என்ற உணர்வோடு செயலாற்றி வரும் இந்தக் குழுவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த முயற்சியால் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அதிகாரப்பங்களிப்பு ஏற்படுத்தப்படுவதோடு, வாழ்வாதாரத்துக்கான பல வழிவகைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சியானது மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் கருத்தூக்கம் அளிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
என் கனிவான நாட்டுமக்களே, இன்று மே மாதம் 28ஆம் தேதியானது, மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர் சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாளாகும். அவருடைய தியாகம், சாகஸம் மற்றும் மனவுறுதியோடு தொடர்புடைய சம்பவங்கள் இன்றும் கூட, நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்க்கின்றன. வீர சாவர்க்கர் அவர்கள் அந்தமானிலே கொடூரங்களை அனுபவித்த சிறைச்சாலையின் அறைக்குச் சென்ற தினத்தை என்னால் இன்றும் மறக்க முடியாது. வீர சாவர்க்கரின் ஆளுமை, திடத்தன்மை மற்றும் பரந்துபட்ட மனம் ஆகியவை நிரம்பியது. அவருடைய தைரியமான, சுயமரியாதை நிரம்பிய இயல்பு, அடிமைத்தன உணர்வுக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருந்தது. சுதந்திரப் போராட்டம் மட்டுமல்ல, சமூக சமத்துவம் மற்றும் சமூகநீதிக்காகவும் கூட வீர சாவர்க்கர் புரிந்த செயல்கள் இன்றும் கூட நினைவில் கொள்ளப்படுகின்றன.
நண்பர்களே, சில நாட்கள் கழித்து ஜூன் மாதம் 4ஆம் தேதியன்று கபீர்தாசருடைய பிறந்த நாளும் வருகிறது. கபீர்தாசர் காட்டிய மார்க்கமானது இன்றும் கூட, அன்றைப் போலவே பயனுடையதாக இருக்கிறது. கபீர்தாசர் கூறுவதுண்டு,
கபீரா குவான் ஏக் ஹை, பானி பரே அநேக்.
பர்த்தன் மே ஹீ பேத் ஹை, பானி சப் மே ஏக்.
“कबीरा कुआँ एक है, पानी भरे अनेक |
बर्तन में ही भेद है, पानी सब में एक ||”
அதாவது, குளத்தில் பலவகையான மக்கள் நீர் நிரப்ப வருவார்கள் என்றாலும், குளம் எந்த ஒரு வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை. நீர் என்னவோ அனைத்துப் பாத்திரங்களிலும் ஒன்று போலவே இருக்கிறது. புனிதரான கபீர், சமூகத்தைப் பிளவுபடுத்தும் அனைத்துப் பழக்கங்களையும் எதிர்த்தார், சமூகத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலே ஈடுபட்டார். இன்று, நாம் தேசத்தை முன்னேற்றும் உறுதிப்பாட்டோடு கூடவே முன்னேறி வருகிறோம் எனும் போது நாம் புனிதர் கபீரிடமிருந்து கருத்தூக்கம் பெறுவோம், சமூகத்தை சக்தி படைத்ததாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வோம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தேசத்தின் ஒரு மாபெரும் மனிதரைப் பற்றி நான் இப்போது உங்களிடம் விவாதிக்க இருக்கிறேன், இவர் அரசியல் மற்றும் திரைத் துறையில் தனது அற்புதமான திறமைகளை, ஆழமான முத்திரையை விட்டுச் சென்றிருக்கிறார். இந்த மகத்தான மனிதரின் பெயர் தான் என். டி. ராமாராவ், இவரை நாம் அனைவரும் என் டி ஆர் என்ற பெயரிலே நன்கறிவோம். இன்று என் டி ஆர் அவர்களின் 100ஆவது பிறந்த நாளாகும். தனது பல்நோக்குத் திறமைகளின் துணையால், இவர் தெலுகு திரைப்படங்களின் நாயகனாகவும் விளங்கியதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கானோரின் இதயங்களையும் வென்றிருக்கிறார். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? இவர் பல இதிகாசப் பாத்திரங்களுக்குத் தனது நடிப்புத் திறமையால், மீண்டும் உயிர்ப்பளித்திருக்கிறார். பகவான் கிருஷ்ணர், இராமர் போன்ற இன்னும் பிற பாத்திரங்களில் என் டி ஆரின் நடிப்புத் திறமையை மக்கள் எந்த அளவுக்கு விரும்பியிருக்கிறார்கள் என்றால், அவரை மக்கள் இன்றும் கூட நினைவில் வைத்திருக்கின்றார்கள். என் டி ஆர், திரையுலகோடு கூடவே அரசியலிலும் கூட தனது தனிப்பட்ட முத்திரையை ஏற்படுத்தியிருக்கிறார். இங்கேயும் கூட இவர் மக்களின் முழுமையான அன்பு மற்றும் ஆசிகளைப் பெற்றிருக்கிறார். உலகெங்கிலும் உள்ள இலட்சோபலட்சம் மக்களின் இதயங்களில் இன்றும் இடம் பிடித்திருக்கும் என் டி ராமராவ் அவர்களுக்கு நான் இன்று பணிவான நினைவாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் இன்று இம்மட்டே. அடுத்த முறை, மேலும் சில புதிய விஷயங்களோடு உங்களிடையே வருவேன், அதற்குள் சில பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரித்திருக்கும். பல இடங்களில் மழையும் தொடங்கியிருக்கும். எந்தப் பருவச்சூழலிலும் நீங்கள் உங்கள் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஜூன் 21ஆம் தேதியை நாம் உலக யோகக்கலை தினமாகக் கொண்டாடுவோம். இதற்கான தயாரிப்புக்கள் நம்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி நடந்தேறி வருகின்றன. நீங்கள் இந்தத் தயாரிப்புக்கள் குறித்து, உங்கள் மனதின் குரலை எனக்கு எழுதி வாருங்கள். எந்த ஒரு விஷயம் குறித்தும் தகவல் ஏதும் கிடைத்தால், உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். அதிகபட்ச ஆலோசனைகளை மனதின் குரலில் செயல்படுத்துவதே என் பிரதான முயற்சியாக இருக்கும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். அடுத்த மாதம் சந்திப்போம், அதுவரை எனக்கு விடை தாருங்கள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இலட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன, முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன், உணர்வுகளில் அமிழ்ந்து போனேன், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன், அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன். நீங்கள் மனதின் குரலுடைய 100ஆவது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள் ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேனே – பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்களும் மட்டுமே. மனதின் குரல்….. கோடானுகோடி பாரதநாட்டவர்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.
நண்பர்களே, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி நன்னாள்…. அன்று இந்தப் புனிதத் திருநாளன்று நாமனைவரும் இணைந்து மனதின் குரல் யாத்திரையைத் தொடக்கினோம். விஜயதசமி அதாவது தீமைகளின் மீது நல்லவைகளின் வெற்றித் திருநாள். மனதின் குரலும் கூட, நாட்டுமக்களின் நல்லவைகளின், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின், அற்புதமான திருநாளாகும். இந்த நன்னாள் ஒவ்வொரு மாதமும் வருகிறது, இதற்காக நாமனைவரும் காத்திருக்கிறோம். நாம் இதிலே நேர்மறைத்தன்மையைக் கொண்டாடுகிறோம். நாம் இதிலே மக்களின் பங்களிப்பையும் கொண்டாடுகிறோம். பல வேளைகளில், மனதின் குரல் தொடங்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகி விட்டன, இத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பதை நம்பக் கூட முடியவில்லை. இதன் ஒவ்வொரு பகுதியுமே விசேஷமானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், புதிய எடுத்துக்காட்டுகளின் நவீனம், ஒவ்வொரு முறையும் நாட்டுமக்களின் புதிய வெற்றிகளின் வீச்சு. மனதின் குரலில் ஒட்டுமொத்த நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள், அனைத்து வயதுக்காரர்கள், பிரிவினர்களும் இணைந்தார்கள். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் ஆகட்டும், தூய்மை பாரதம் இயக்கம் ஆகட்டும், கதராடைகளின் மீதான அன்பாகட்டும், இயற்கை பற்றிய விஷயமாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாகட்டும், அமுத நீர்நிலைகளாகட்டும், மனதின் குரலானது எந்த விஷயத்தோடு இணைந்ததோ, அது மக்கள் இயக்கமாக மாறியது, இதை நீங்கள் தான் அப்படி ஆக்கினீர்கள். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஓபாமா அவர்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த போது, இது உலகெங்கிலும் ஒரு விவாதப் பொருளானது.
நண்பர்களே, மனதின் குரல் என்னைப் பொறுத்த மட்டில், மற்றவர்களின் குணங்களைப் போற்றுவதைப் போன்றது. என்னுடைய வழிகாட்டி ஒருவர் இருந்தார் – திரு லக்ஷ்மண்ராவ் ஜி ஈனாம்தார். நாங்கள் அவரை வக்கீல் ஐயா என்று தான் அழைப்போம். அவர் எப்போதும் ஒரு விஷயத்தைக் கூறுவார் – நாம் எப்போதும் மற்றவர்களின் குணநலன்களைப் பாராட்ட வேண்டும், எதிரில் இருப்பவர் உங்களுடைய நண்பராக இருந்தாலும் சரி, உங்களுடைய எதிரியாக இருந்தாலும் சரி, நாம் அவரவருடைய நல்ல இயல்புகளை அறிந்து கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முயல வேண்டும், என்பார். அவருடைய இந்தக் கூற்று எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது. மனதின் குரல், மற்றவர்களின் குணங்களிடமிருந்து கற்க ஒரு மிகப் பெரிய சாதனமாக ஆகி விட்டது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இந்த நிகழ்ச்சியானது, உங்களிடமிருந்து என்னை எப்போதும் விலக்கி வைக்கவே இல்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் குஜராத்தின் முதல்வராக இருந்த வேளையில், அப்போது சாமான்ய மக்களைச் சந்திப்பது, கலந்து பழகுவது என்பது வெகு இயல்பான விஷயமாக நடந்து வந்தது. முதலமைச்சரின் பணிகள் மற்றும் நேரம் இப்படித் தான் இருந்தது, கலந்து பழகும், சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன. ஆனால் 2014ஆம் ஆண்டு, தில்லிக்கு வந்த பிறகு, இங்கே வாழ்க்கை மிக வித்தியாசமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. பணியின் வகை வித்தியாசமானது, பொறுப்பு வித்தியாசமானது, நிலைமைகள்-சூழ்நிலைகளின் கட்டுப்பாடு, பாதுகாப்பு தொடர்பான பகட்டு, குறைவான நேரம். தொடக்கக்கட்ட நாட்களில், நான் வித்தியாசமாக உணர்ந்தேன், ஒரே வெறுமையாக இருந்தது. என்னுடைய தேசத்தின் மக்களுடன் தொடர்பு கொள்வது கூட கடினமாக ஆகிவிடும் இந்த நிலைக்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக நான் வீட்டைத் துறக்கவில்லை. எந்த நாட்டுமக்கள் எனக்கு அனைத்துமாக இருக்கிறார்களோ, அவர்களிடமிருந்தே நான் துண்டிக்கப்பட்டு என்னால் எப்படி இருக்க முடியும்!? இந்தச் சவாலுக்கான தீர்வினை எனக்கு அளித்து, சாமான்ய மக்களோடு என்னை இணைக்கும் பாதையத் துலக்கிக் காட்டியது தான் மனதின் குரல். பதவிச்சுமை, வரைமுறை, ஆகியவை நிர்வாக அமைப்பு எல்லை வரை மட்டுமே இருந்தன; ஆனால் மக்களுணர்வு, கோடானுகோடி மக்களோடு, என்னுடைய உணர்வு, உலகின் பிரிக்க முடியாத அங்கமாகி இருந்தது. ஒவ்வொரு மாதமும் தேசத்தின் மக்களின் ஆயிரக்கணக்கான செய்திகளை நான் படிக்கிறேன், ஒவ்வொரு மாதமும், நாட்டுமக்களின் ஒன்றை மற்றது விஞ்சும் வகையிலான அற்புதமான வடிவங்களை தரிசிக்கிறேன். நாட்டுமக்களின் தவம்-தியாகத்தின் எல்லைகளையும் வீச்சுக்களையும் நான் காண்கிறேன், உணர்கிறேன். நான் உங்களை விட்டு விலகி இருக்கிறேன் என்ற உணர்வே என்னிடம் இல்லை!! என்னைப் பொறுத்த மட்டிலே மனதின் குரல், ஒரு நிகழ்ச்சி அல்ல, இது என்னுடைய நம்பிக்கை, இது என்னுடைய வழிபாடு, என்னுடைய விரதம். மக்கள் இறைவனை பூசிக்கச் செல்லும் போது, பிரசாதத் தட்டோடு திரும்பி வருகிறார்கள் இல்லையா!! என்னைப் பொறுத்த மட்டிலும், இறைவனின் வடிவமான மக்களின் பாதாரவிந்தங்களிலே பிரசாதத்தின் தட்டினைப் போன்றது மனதின் குரல். மனதின் குரல் என்னுடைய மனதின் ஆன்மீகப் பயணமாக ஆகி விட்டது.
தான் என்ற நிலையிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய பயணம் தான் மனதின் குரல்.
நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் தான் மனதின் குரல்.
நானல்ல, நீ தான் என்ற நற்பதிவுப் பயிற்சி மனதின் குரல்.
நீங்களே கற்பனை செய்து பாருங்கள்! என் நாட்டுமக்களில் ஒருவர் 40 ஆண்டுகளாக, வனாந்திரத்திலே, வறண்ட பூமியிலே மரங்களை நட்டு வருகிறார், எத்தனையோ மனிதர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் பாதுகாப்பிற்காக ஏரிகளையும் குளங்களையும் ஏற்படுத்தி வருகிறார்கள், அதனைத் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். ஒருவர் 25-30 ஆண்டுகளாக ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருகிறார், ஒருவர் ஏழைகளுக்கு மருத்துவச் சிகிச்சையில் உதவி வருகிறார். எத்தனையோ முறை மனதின் குரலில் இவர்களை எல்லாம் பற்றிக் குறிப்பிட்டு நான் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். ஆகாசவாணியின் நண்பர்கள் எத்தனையோ முறை இவற்றை மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. இன்று, இவை அத்தனையும் என் கண்களின் முன்னே வந்து செல்கின்றன. என்னை நானே மேலும் மேலும் சமர்ப்பித்துக் கொள்வதற்கு, நாட்டுமக்களின் இந்த முயற்சிகள் தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன.
நண்பர்களே, மனதின் குரலில் யாரைப் பற்றி எல்லாம் நாம் குறிப்பிடுகிறோமோ, அவர்கள் நமது நாயகர்கள், இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை உயிர்ப்புடையதாக, உயிரோட்டமுடையதாக ஆக்கியிருக்கின்றார்கள். இன்று நாம் 100ஆவது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கும் வேளையிலே, என்னுடைய இன்னொரு ஆசை என்னவென்றால், நாம் மீண்டும் ஒரு முறை, இந்த நாயகர்கள் அனைவரையும் அணுகி, அவர்களுடைய பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இன்று நாம் சில நண்பர்களோடு உரையாட முயல்வோம். என்னோடு இப்போது இணைந்திருப்பவர், ஹரியாணாவைச் சேர்ந்த சகோதரர் சுனில் ஜக்லான் அவர்கள். சுனில் ஜக்லான் அவர்கள் என் மனதில் ஏன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றால், ஹரியாணாவின் பாலின விகிதம் பெரும் சர்ச்சைக்குட்பட்டதாக இருந்தது, பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் இயக்கத்தை ஹரியாணாவில் நான் தொடக்கினேன். இதற்கிடையில் சுனில் அவர்கள், மகளோடு செல்ஃபி எடுப்போம் என்ற இயக்கத்தின் மீது என் கவனம் சென்ற போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் அவரிடமிருந்து கற்க முடிந்தது, அது மனதின் குரலில் இடம் பிடித்தது. பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையிலே மகளோடு ஒரு செல்ஃபி இயக்கம் ஒரு உலகாயத இயக்கமாக பரிணமித்தது. இதிலே விஷயம் செல்ஃபி எடுத்துக் கொள்வதோ, தொழில்நுட்பமோ அல்ல, இது மகள் தொடர்பானது, மகளின் முக்கியத்துவம் பற்றியது. வாழ்க்கையில் மகளின் இடம் எத்தனை மகத்தானது என்பது இந்த இயக்கம் வாயிலாக வெளிப்பட்டது. இப்படி ஏராளமான முயல்வுகளின் விளைவாகவே இன்று ஹரியாணாவில் பாலின விகிதாச்சாரம் மேம்பாடு அடைந்திருக்கிறது. இன்று சுனில் அவர்களோடு கலந்து பேசுவோம் வாருங்கள்!!
பிரதமர்: வணக்கம் சுனில் அவர்களே
சுனில்: வணக்கம் சார், உங்க குரலைக் கேட்டவுடனேயே என்னோட சந்தோஷம் அதிகமாயிருச்சு சார்.
பிரதமர்: சுனில் அவர்களே, செல்ஃபி வித் டாட்டர்ங்கறது எல்லாருக்குமே நினைவிருக்கும்…… இப்ப இது மறுபடி விவாதப் பொருளாயிருக்குங்கற வேளையில நீங்க எப்படி உணர்றீங்க?
சுனில்: பிரதமர் அவர்களே, எங்க மாநிலமான ஹரியாணாவுல நீங்க தொடுத்திருக்கற 4ஆவது ‘பாணிபத் போர்’ காரணமா, பெண்களோட முகங்கள்ல புன்சிரிப்பு மலரத் தொடங்கியிருக்கு; உங்க தலைமையில நாடு முழுக்க செய்த முயற்சிகள் காரணமா, உண்மையிலேயே என்னைப் பொறுத்த மட்டிலயும் சரி, ஒரு பெண்ணின் தகப்பன்ங்கற முறையிலயும் சரி, பெண் குழந்தைகளை நேசிக்கறவங்கங்கற வகையிலயும் மிகப் பெரிய விஷயமா நான் பார்க்கறேன்.
பிரதமர்: சுனில் அவர்களே, இப்ப உங்க மகள்கள் எப்படி இருக்காங்க, இப்ப அவங்க என்ன செய்திட்டு இருக்காங்க?
சுனில் : சார் என் பெண்களான நந்தினியும், யாசிகாவும் முறையே 7ஆம் வகுப்பு, 4ஆம் வகுப்புல படிச்சிக்கிட்டு இருக்காங்க, ஓயாம உங்களை பாராட்டிக்கிட்டு இருப்பாங்க; அதுமட்டுமில்லாம, தேங்க்யூ பிரைம் மினிஸ்டர்னு சொல்லி, தங்களோட வகுப்பு சக மாணவர்களோடு சேர்ந்து உங்களுக்குக் கடிதமும் போட்டிருக்காங்க.
பிரதமர்: பலே பலே!! சரி, குழந்தைகளுக்கு என்னோட, மனதின் குரல் நேயர்களோட கொள்ளை ஆசிகளை தெரிவியுங்க.
சுனில்: ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. உங்க காரணமாத் தான் தேசத்தில பெண் குழந்தைகளோட முகங்கள்ல புன்னகை தொடர்ந்து அதிகமாயிட்டு இருக்கு.
பிரதமர்: ரொம்ப ரொம்ப நன்றி சுனில் அவர்களே.
சுனில்: ரொம்ப நன்றி ஐயா.
நண்பர்களே, மனதின் குரலில் நாம் நம் நாட்டின் பெண்சக்தியின் உத்வேகம் அளிக்கவல்ல பல நிகழ்வுகள்-எடுத்துக்காட்டுகள் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது பெரும் நிறைவை அளிக்கிறது. நமது இராணுவமாகட்டும், விளையாட்டு உலகமாகட்டும், நான் எப்போதெல்லாம் பெண்களின் சாதனைகள் பற்றி பேசினேனோ, அப்போதெல்லாம் அவர்களை மனம் நிறையப் பாராட்டியிருக்கிறேன். நாம் சத்தீஸ்கட்டின் தேவுர் கிராமத்தின் பெண்களைப் பற்றிப் பேசியிருந்தோம். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, கிராமங்களின் நாற்சந்திகள், சாலைகள், கோயில்களில் தூய்மைப்பணி செய்வது என்பதை இயக்கமாகச் செய்து வருகிறார்கள். இதைப் போலவே தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள், சூழலுக்கு நேசமான ஆயிரக்கணக்கான சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்தார்கள், இவர்களிடமிருந்தும் தேசம் நன்கு உத்வேகம் பெற்றது. தமிழ்நாட்டிலேயே 20000 பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் இருக்கும் நாக நதிக்கு புத்துயிர் ஊட்டினார்கள். இப்படி எத்தனை எத்தனையோ இயக்கங்களுக்கு நமது பெண்கள் சக்தி தான் தலைமை தாங்கியது, மனதின் குரல் அவர்களின் முயற்சிகளை முன்னிறுத்தக் கூடிய ஒரு மேடையாக மாறியது.
நண்பர்களே, இப்போது நம்மோடு தொலைபேசியில் ஒரு நண்பர் இணைந்திருக்கிறார், இவருடைய பெயர் மன்சூர் அஹமது. மனதின் குரலில், ஜம்மு கஷ்மீரத்தின் பென்சில்-ஸ்லேட்டுகள் பற்றிக் கூறும் வேளையில் மன்சூர் அஹமது அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டோம்.
பிரதமர்: மன்சூர் அவர்களே, எப்படி இருக்கீங்க?
மன்சூர்: தேங்க்யூ சார்.... ரொம்ப நல்லாயிருக்கேங்க.
பிரதமர்: மனதின் குரலோட இந்த 100ஆவது பகுதியில உங்களோட உரையாடுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
மன்சூர்: ரொம்ப நன்றி சார்.
பிரதமர்: சரி, உங்க பென்சில்-பலகை வேலை எப்படி போயிட்டு இருக்கு.
மன்சூர்: ரொம்பவே நல்லா போயிட்டு இருக்கு சார், நீங்க என்னைப் பத்தி மனதின் குரல்ல பேசின பிறகிலிருந்து என் வேலை ரொம்ப அதிகமாயிருச்சுங்கய்யா, மத்தவங்களுக்கும் இந்த வேலை வாயிலா இன்னும் அதிக வேலை வாய்ப்பை அளிக்க முடியுது.
பிரதமர்: எத்தனை நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தறீங்க?
மன்சூர்: இப்ப என் கிட்ட 200க்கும் மேற்பட்டவங்க வேலை செய்யறாங்க.
பிரதமர்: அட பரவாயில்லையே!! ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
மன்சூர்: ஆமாம் சார்….. இன்னும் இரண்டொரு மாதங்கள்ல இதை விரிவாக்கம் செய்ய இருக்கேன், இன்னும் 200 நபர்களுக்கு வேலை கொடுக்க இருக்கேன்.
பிரதமர்: பலே பலே!! இந்தா பாருங்க மன்சூர் அவர்களே….
மன்சூர்: சொல்லுங்க சார்.
பிரதமர்: அன்னைக்கு நீங்க சொன்னது எனக்கு இன்னும் கூட பசுமையா நினைவிருக்கு, இது எப்படிப்பட்ட வேலைன்னா, இதுக்கும் அடையாளம் கிடையாது, செய்யறவங்களுக்கும் அங்கீகாரம் இல்லை, மேலும் உங்களுக்கும் பெரிய கஷ்டம், இது காரணமா உங்களுக்கு பெரிய சிரமங்கள்லாம் ஏற்படுதுன்னு எல்லாம் நீங்க சொல்லிட்டு இருந்தீங்க. ஆனா இப்ப இதுக்கு ஒரு அடையாளம் கிடைச்சுப் போச்சு, 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் நீங்க அளிக்கறீங்க.
மன்சூர்: ஆமாம் சார்… கண்டிப்பா.
பிரதமர்: மேலும் புதிய விரிவாக்கம் செய்து, இன்னும் 200 நபர்களுக்கு வேலை அளிக்க இருக்கீங்க, ரொம்ப இனிப்பான செய்தியை நீங்க அளிச்சிருக்கீங்க.
மன்சூர்: மேலும் சார், இங்க இருக்கற விவசாயிகளுக்கும் கூட இதனால பெரிய ஆதாயம் ஏற்பட்டிருக்கு சார். மரத்தை 2000த்துக்கு வித்திட்டு இருந்தாங்க, இப்ப இதுவே ஒரு மரம் 5000 வரை விலை போயிட்டு இருக்கு சார். அத்தனை தேவை அதிகமாயிருச்சு சார்… மேலும் இதுக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு, நிறைய தேவை அதிகமாயிருக்கு, இப்ப எங்க கிட்ட ஏகப்பட்ட ஆர்டர்கள் இருக்கு, இரண்டொரு மாதங்கள்ல நாங்க விரிவாக்கம் செய்ய இருக்கோம், விரிவாக்கம் செஞ்சு, மூணு நாலு கிராமங்கள்ல எத்தனை பசங்க பொண்ணுங்க இருக்காங்களோ, அவங்களுக்கு வேலையைக் கொடுக்கலாம், அவங்களோட வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும் சார்.
பிரதமர்: பாருங்க மன்சூர் அவர்களே, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்ங்கறதுக்கு வலு சேர்க்கறது எத்தனை முக்கியமானதுங்கறதை நீங்க கள அளவுல அதை செயல்படுத்திக் காட்டியிருக்கீங்க.
மன்சூர்: சரிங்கய்யா.
பிரதமர்: உங்களுக்கும், கிராமத்தில இருக்கற அனைத்து விவசாயிகளுக்கும், உங்களோட பணிபுரியற எல்லா நண்பர்களுக்கும், என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி சகோதரா!
மன்சூர்: ரொம்ப நன்றி சார்.
நண்பர்களே, நமது தேசத்திலே, இப்படி எத்தனையோ திறமை மிக்கவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் தங்களுடைய உழைப்பின் துணையால் வெற்றியின் சிகரம் வரை சென்றடைந்திருக்கிறார்கள். எனக்கு நன்றாக நினைவுண்டு, விசாகப்பட்டினத்தின் வேங்கட முரளி பிரசாத் அவர்கள் தற்சார்பு பாரதம் பற்றிய ஒரு அட்டவணையைப் பகிர்ந்திருந்தார். எப்படி தான் அதிகபட்ச இந்தியப் பொருட்களையே பயன்படுத்துவதாக அவர் விளக்கியிருந்தார். பேதியாவின் பிரமோத் அவர்கள் எல் ஈ டி பல்ப் தயாரிப்பு தொடர்பான ஒரு சின்ன அலகினை அமைத்த போது கட்முக்தேஷ்வரைச் சேர்ந்த சந்தோஷ் அவர்கள் தரை விரிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார், மனதின் குரல் அவர்களுடைய பொருட்களை அனைவரின் முன்னிலையில் கொண்டு வர ஒரு சாதனமாக ஆனது. இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத்தின் பல எடுத்துக்காட்டுகள் தொடங்கி, விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் வரை பல விஷயங்கள் குறித்து மனதின் குரலில் நாம் விவாதித்திருக்கிறோம்.
நண்பர்களே, உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், சில பகுதிகள் முன்பாக நான் மணிப்பூரைச் சேர்ந்த சகோதரி விஜயசாந்தி தேவி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். விஜயசாந்தி அவர்கள், தாமரை நார்களைக் கொண்டு துணி நெசவு செய்கிறார். மனதின் குரலில் அவருடைய வித்தியாசமான, சூழலுக்கு நேசமான விஷயம் பற்றிப் பேசினோம், அவருடைய வேலை மேலும் பிரபலமாகிப் போனது. இன்று விஜயசாந்தி அவர்கள் தொலைபேசித் தொடர்பில் நம்மோடு இருக்கிறார்.
பிரதமர்: வணக்கம் விஜயசாந்தி அவர்களே, எப்படி இருக்கீங்க?
விஜயசாந்தி: சார், நான் நல்லா இருக்கேன்.
பிரதமர்: சரி உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?
விஜயசாந்தி: சார், இன்னும் 30 பெண்களோட இணைஞ்சு பணியாற்றிக்கிட்டு இருக்கேன்.
பிரதமர்: இத்தனை குறுகிய காலத்தில நீங்க 30 நபர்கள் கொண்ட குழுவா ஆயிட்டீங்களா?
விஜயசாந்தி: ஆமாம் சார், இந்த வருஷம் கூட, என் பகுதியில இருக்கற பெண்களோட 100ங்கற எண்ணிக்கையை எட்ட இருக்கேன்.
பிரதமர்: அப்ப 100 பெண்கள்ங்கறது உங்க இலக்கு!!
விஜயசாந்தி: ஆமாம்!! 100 பெண்கள்.
பிரதமர்: சரி, இப்ப மக்கள் இந்த தாமரைத்தண்டு நார் பத்தி பரிச்சயமாயிட்டாங்களா?
விஜயசாந்தி: ஆமாம் சார், இந்தியா முழுக்க ஒலிபரப்பாகுற மன் கீ பாத் நிகழ்ச்சியிலிருந்து எல்லாருக்கும் இது தெரிஞ்சு போச்சு.
பிரதமர்: அப்ப இது ரொம்ப பிரபலமாயிருச்சு!
விஜயசாந்தி: ஆமாம் சார், பிரதமரோட மன் கீ பாத் நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லாருக்கும் தாமரை நார் பத்தித் தெரிய வந்திருச்சு.
பிரதமர்: அப்ப உங்களுக்கு சந்தையும் அதிகமாயிருக்கா?
விஜயசாந்தி: ஆமாம், அமெரிக்காவிலிருந்து கேட்டிருக்காங்க, அவங்களுக்கு மொத்தமா வாங்கணுமாம், பெரிய அளவுல கேட்கறாங்க, அதனால இந்த வருஷத்திலேர்ந்து நான் அமெரிக்காவுக்கும் அனுப்பறதா இருக்கேன்.
பிரதமர்: அப்ப நீங்க இப்ப ஒரு ஏற்றுமதியாளராயிட்டீங்களா?
விஜயசாந்தி: ஆமாம் சார், இந்த ஆண்டு தொடங்கி, நான் நம்ம நாட்டுல தயாரிக்கப்பட்ட பொருளான தாமரை நாரை ஏற்றுமதி செய்ய இருக்கேன்.
பிரதமர்: உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்னு நான் சொன்னா, நீங்க உள்ளூர் பொருட்கள அயல்நாடுகளுக்குன்னு கொண்டு போயிட்டீங்க, இல்லையா!!
விஜயசாந்தி: ஆமாம் சார், என் பொருட்கள் உலகெங்கும் கொண்டு சேர்க்கப்படணும்னு நான் விரும்பறேன் சார்.
பிரதமர்: உங்களுக்கு வாழ்த்துக்கள், அமோகமா செய்யுங்க.
விஜயசாந்தி: ரொம்ப நன்றி சார்.
பிரதமர்: நன்றி நன்றி விஜயசாந்தி அவர்களே
விஜயசாந்தி: நன்றி சார்.
நண்பர்களே, மனதின் குரலின் மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. மனதின் குரல் வாயிலாக எத்தனையோ மக்கள் இயக்கங்கள் பிறப்பெடுத்திருக்கின்றன, வேகம் அடைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நமது விளையாட்டு பொம்மைகள், இவற்றை மீண்டும் நிறுவும் பேரியக்கம் மனதின் குரலிலிருந்து தான் தொடங்கப்பட்டது. இந்திய ரக நாய்கள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் தொடக்கமும் கூட மனதின் குரலிலிருந்து தான் தொடங்கப்பட்டது. நாம் மேலும் ஒரு இயக்கத்தைத் தொடக்கினோம், நாம் சின்னச்சின்ன ஏழை விற்பனையாளர்களிடம் பேரம் பேச வேண்டாமே, சண்டை போட வேண்டாமே என்ற உணர்வைப் பெருக்கினோம். ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணம் என்ற இயக்கம் தொடங்கப்பட்ட போது, அப்போதும் மனதின் குரல், நாட்டுமக்களை இந்த உறுதிப்பாட்டோடு இணைக்கும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியது. இப்படி ஒவ்வொரு எடுத்துக்காட்டும், சமூகத்தில் மாற்றத்திற்கான காரணிகளாக மாறின. சமூகத்திற்குக் கருத்தூக்கமளிக்கும் சவாலை, பிரதீப் சாங்க்வான் அவர்களும் மேற்கொண்டிருக்கிறார். மனதின் குரலில் நாம் பிரதீப் சாங்க்வான் அவர்களின் ஹீலிங் ஹிமாலயாஸ் இயக்கம் பற்றி விவாதித்தோம். அவர் தொலைபேசி இணைப்பில் இப்போது நம்மோடு தொடர்பில் இருக்கிறார்.
பிரதமர்: பிரதீப் அவர்களே, வணக்கம்!
பிரதீப்: சார், ஜெய் ஹிந்த்.
மோதி: ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் சகோதரா!! எப்படி இருக்கீங்க?
பிரதீப்: ரொம்ப நல்லா இருக்கேன் சார். உங்க குரலை கேட்கறது ரொம்ப நல்லா இருக்கு.
பிரதமர்: நீங்க இமயத்துக்கே சிகிச்சை அளிச்சுக்கிட்டு இருக்கீங்க.
பிரதீப்: ஆமாம் சார்.
மோதி: இயக்கமும் நடத்தியிருக்கீங்க. இப்பவெல்லாம் உங்க இயக்கம் எப்படி போயிட்டு இருக்கு?
பிரதீப்: சார், ரொம்ப நல்லாவே போயிட்டு இருக்கு. 2020ஆம் ஆண்டு தொடங்கி, எத்தனை வேலைகளை ஐந்தாண்டுகள்ல நாங்க செஞ்சிட்டு வந்தோமோ, அதெல்லாம் ஒரே வருஷத்தில நடந்து போகுது.
மோதி: பலே பலே!!
பிரதீப்: ஆமாங்க, கண்டிப்பா. சார், தொடக்கத்தில கொஞ்சம் படபடப்பாத் தான் இருந்திச்சு, பயமும் இருந்திச்சு, வாழ்க்கை முழுக்க இதைச் செய்ய முடியுமான்னு கூட தோணிச்சு; ஆனா கொஞ்சம் ஆதரவு கிடைச்சுது, உண்மையைச் சொல்லணும்னா, 2020 வரை நாங்க ரொம்ப போராடிக்கிட்டு இருந்தோம். ரொம்ப குறைவான மக்களே இதோட இணைஞ்சாங்க, ஆதரிக்க அதிகம் பேர் இல்லை. எங்களோட இயக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கலை. ஆனா 2020க்கும் பிறகு, மனதின் குரல்ல நீங்க குறிப்பிட்ட பிறகு, பெரிய அளவுல மாற்றம் ஏற்படத் தொடங்கிச்சு. என்னென்னா, முதல்ல எல்லாம், ஒரு 6-7 சுத்தப்படுத்தும் செயல்பாடுகளையோ, இல்லை ஒரு 10 முறை வரை சுத்தப்படுத்தும் செயல்பாடுகளையோ செய்ய முடிஞ்சுது. இன்னைய தேதியில, தினசரி 5 டன்கள் குப்பைக்கூளங்களை எங்களால திரட்ட முடியுது, அதுவும் பல்வேறு இடங்கள்லேர்ந்து.
மோதி: பரவாயில்லையே!!
பிரதீப்: மனதின் குரல்ல நீங்க குறிப்பிட்ட பிறகு, நீங்க நம்பினா நம்புங்க, நான் கிட்டத்தட்ட கையறு நிலையில தள்ளப்பட்டிருந்த கட்டத்தில, ஒரு மாற்றம் ஏற்பட்டுச்சு பாருங்க!!! என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுச்சு, பெரிய வேகத்தில வேலை நடக்கத் தொடங்கிச்சு, நினைச்சுப் பார்க்காத விஷயங்கள்லாம் நடக்க ஆரம்பிச்சுது. உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். எங்களை மாதிரியான ஆளுங்களை எல்லாம் நீங்க எப்படி கண்டுபிடிக்கறீங்கன்னே தெரியலை. நாங்க இத்தனை தொலைவான இடத்தில, இமய பகுதியில இருந்து பணி புரியறோம். இந்த உயரத்தில வேலை செஞ்சுட்டு இருக்கோம். இந்த இடத்தில எங்களை நீங்க தேடிக் கண்டுபிடிச்சிருக்கீங்களே!!! என்னன்னு சொல்ல!! எங்களோட பணியை உலகத்தோட கண்களுக்கு முன்னால கொண்டு போய் நிறுத்தியிருக்கீங்களே!! எனக்கு இது ரொம்பவே உணர்ச்சிகரமான கணம், இது அப்பவும் சரி, இன்னைக்கும் சரி. அதாவது நம்ம நாட்டோட பிரதம சேவகரோட என்னால உரையாட முடியுதுங்கற விஷயம். இதை விட பேறு அளிக்கக்கூடிய விஷயம் எனக்கு வேறு ஒண்ணுமே கிடையாது.
மோதி: பிரதீப் அவர்களே, நீங்க தான் மெய்யான உணர்வோட இமயமலைச் சிகரங்கள்ல சாதனை செய்திட்டு இருக்கீங்க. உங்க பேரைச் சொன்னவுடனேயே, எப்படி நீங்க மலைகள்ல தூய்மை இயக்கத்தில ஈடுபட்டு வர்றீங்க அப்படீங்கற காட்சி மக்களோட மனங்கள்ல விரியுங்கறதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
பிரதீப்: சரி சார்.
மோதி: மேலும் நீங்க சொன்ன மாதிரி, இப்ப மிகப்பெரிய குழு உருவாகிக்கிட்டு வருது, நீங்களும் இத்தனை பெரிய அளவுல தினசரி பணியில ஈடுபட்டு வர்றீங்க.
பிரதீப்: ஆமாம் சார்.
பிரதமர்: உங்களோட இந்த முயற்சிகள் காரணமா, இது பத்தின விவாதம் காரணமா, இப்ப எல்லாம் மலையேறும் நிறைய நபர்கள் தூய்மை தொடர்பான படங்களை தரவேற்றம் செய்யத் தொடங்கியிருக்காங்க அப்படீன்னு நான் முழுமையா நம்பறேன்.
பிரதீப்: ஆமாம் சார், ரொம்பவே.
மோதி: நல்ல விஷயம் என்னென்னா, உங்களை மாதிரி நண்பர்களோட முயற்சிகள் காரணமா, waste is also wealth, குப்பையும் கூட கோமேதகம் தான் என்பது மக்களோட மனங்கள்ல இப்ப நிலை பெற்றுக்கிட்டு வருது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட இப்ப நடைபெற்றுக்கிட்டு இருக்கு, நமக்கெல்லாம் பெருமிதமா விளங்கக்கூடிய இமயத்தைப் பாதுகாப்பது, பராமரிப்பது ஆகியவற்றில இப்ப சாமான்ய மனிதர்களும் இணையறாங்க. பிரதீப் அவர்களே, எனக்கு ரொம்ப இதமா இருந்திச்சு. பலப்பல நன்றிகள் சகோதரா!
பிரதீப்: தேங்க்யூ சார், ரொம்ப ரொம்ப நன்றி, ஜெய் ஹிந்த்!!
நண்பர்களே, இன்று தேசத்தில் சுற்றுலா மிகவும் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. நமது இயற்கை ஆதாரங்களாகட்டும், நதிகள், மலைகள், குளங்கள் அல்லது நமது புனிதத் தலங்களாகட்டும், இவற்றைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. இவை சுற்றுலாத் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சுற்றுலாவில் தூய்மையோடு கூடவே நாம் Incredible India இயக்கம் பற்றியும் பல வேளைகளில் விவாதித்திருக்கிறோம். இந்த இயக்கத்தின் வாயிலாக மக்களுக்கு முதன் முறையாக, அவர்களுக்கு அருகிலேயே இருந்த பல இடங்களைப் பற்றிய தகவல் தெரிய வந்தது. நாம் அயல்நாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்வதற்கு முன்பாக, முதலில் நமது தேசத்தில் குறைந்த பட்சம் 15 சுற்றுலா இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும், மேலும் இந்த இடங்களுமே கூட நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்களோ, அங்கிருப்பவையாக இவை இருக்கக்கூடாது, உங்கள் மாநிலத்தை விட்டு வெளியே வேறு ஒரு மாநிலத்தில் இவை அமைந்திருக்க வேண்டும். இதைப் போலவே, தூய்மையான சியாச்சின், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி, மின் கழிவுப் பொருட்கள் போன்ற தீவிரமான விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கலந்து வந்திருக்கிறோம். இன்று உலகனைத்துமே சுற்றுச்சூழலின் எந்த விஷயம் குறித்து இத்தனை பிரச்சினையில் சிக்கி இருக்கிறதோ, இதற்கான தீர்வு எனும் போது, மனதின் குரலின் இந்த முயல்வு மிகவும் முதன்மையானது.
நண்பர்களே, மனதின் குரல் தொடர்பாக இந்த முறை மேலும் சிறப்புச் செய்தி யுனெஸ்கோவின் தலைமை இயக்குநரான ஔத்ரே ஆஸூலே அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. 100 பகுதிகளின் இந்த அருமையான பயணத்திற்கான நல்வாழ்த்துக்களை அளித்திருப்பதோடு, சில வினாக்களையும் இவர் எழுப்பி இருக்கிறார். முதலில் யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநரின் மனதின் குரலைச் செவி மடுப்போம், வாருங்கள்!!
யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்: வணக்கம் மாண்புமிகு, பிரியமான பிரதமர் அவர்களே, யுனெஸ்கோ அமைப்பின் சார்பாக மனதின் குரல் வானொலி ஒலிபரப்பின் 100ஆவது பகுதியில் பங்கெடுக்கும் இந்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். யுனெஸ்கோவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு நீண்ட பொதுவான சரித்திரம் உண்டு. நமது கட்டளைகளுக்கு உட்பட்ட அனைத்துத் துறைகளிலும் பலமான கூட்டுக்கள் நமக்கிடையே உண்டு. அது கல்வியாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரம் ஆகட்டும், தகவல் துறையாகட்டும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து இன்று நான் பேச விழைகிறேன். 2030ஆம் ஆண்டிற்குள்ளாக அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு தனது உறுப்பு நாடுகளுடன் யுனெஸ்கோ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு என்ற வகையில், எப்படி இந்த இலக்கை எட்டுவது என்பது குறித்து இந்தியாவின் வழி என்ன என்பதை விளக்க முடியுமா. இந்த ஆண்டு இந்தியா ஜி-20 மாநாட்டிற்குத் தலையேற்கும் வேளையில் கலாச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த நிகழ்விற்காக உலகத் தலைவர்கள் தில்லிக்கு வருகிறார்கள். மாண்புமிகு பிரதமர் அவர்களே, சர்வதேச செயல்திட்டத்தின் முதன்மை இடத்தில் கலாச்சாரத்தையும், கல்வியையும் பொருத்த இந்தியா எப்படி விழைகிறது? இந்த நல்வாய்ப்பிற்கு நான் மீண்டுமொருமுறை நன்றி தெரிவிக்கிறேன், உங்கள் வாயிலாக இந்திய மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். உங்களுக்குப் பலப்பல நன்றிகள்.
பிரதமர்: நன்றி, மாண்புமிகு தலைமை இயக்குநர் அவர்களே. மனதின் குரலின் 100ஆவது பகுதியில் உங்களோடு உரையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கல்வி-கலாச்சாரம் தொடர்பான முக்கியமான விஷயங்களை நீங்கள் எழுப்பியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
நண்பர்களே, யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர், கல்வி மற்றும் கலாச்சாரப் பராமரிப்பு தொடர்பான பாரதத்தின் முயல்வுகள் பற்றித் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களுமே மனதின் குரலில் விருப்பமான விஷயங்களாக இருந்து வந்திருக்கின்றன.
விஷயம் கல்வி பற்றியதாகட்டும், கலாச்சாரம் பற்றியதாகட்டும், இவற்றின் பாதுகாப்பும், பராமரிப்பும் எனும் போது, பாரதத்திலே ஒரு பண்டைய பாரம்பரியம் உண்டு. இந்த நோக்கில், இன்று தேசத்தின் பணி புரியப்பட்டு வருகிறது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. தேசிய கல்வித் திட்டமாகட்டும், மாநில மொழிகளில் கல்வி என்ற தேர்வாகட்டும், கல்வியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாகட்டும், இப்படி அநேக முயல்வுகளை உங்களால் காண முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னால், குஜராத்தில், சிறப்பான கல்வியளிக்கப்படவும், கல்வி இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்கவும், குணோத்ஸவ் ஔர் ஷாலா பிரவேஷோத்ஸவ் போன்ற திட்டங்கள் மக்கள் பங்களிப்பின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்கின. தன்னலமற்ற வகையிலே கல்விப்பணியில் ஈடுபட்ட பலரின் முயற்சிகளை நாம் மனதின் குரலில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கலாம், ஒரு முறை நாம் ஒடிஷாவில் வண்டியில் தேநீர் விற்பனை செய்யும், காலஞ்சென்ற டி. பிரகாஷ் ராவ் அவர்களைப் பற்றியும் விவாதித்திருக்கிறோம், இவர் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதைத் தனது இலக்காகக் கொண்டிருந்தார். ஜார்க்கண்டின் கிராமங்களில் டிஜிட்டல் நூலகத்தைச் செயல்படுத்தும் சஞ்ஜய் கஷ்யப் அவர்களாகட்டும், கோவிட் பெருந்தொற்றின் போது, மின்வழி கற்றல் மூலமாக பல குழந்தைகளுக்கு உதவி புரிந்த ஹேமலதா என்.கே ஆகட்டும், இப்படி அநேக ஆசிரியர்களின் எடுத்துக்காட்டுகளை நாம் மனதின் குரலில் கையாண்டிருக்கிறோம். கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முயற்சிகளுக்கும் கூட மனதின் குரலில் நாம் தொடர்ந்து இடமளித்து வந்திருக்கிறோம்.
இலட்சத்தீவுகளின் கும்மெல் பிரதர்ஸ் சேலஞ்சர்ஸ் கிளப் ஆகட்டும், கர்நாடகத்தின் க்வேமஸ்ரீ ஜி கலா சேதனா போன்ற மேடைகளாகட்டும், தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள், கடிதங்கள் வாயிலாக பல எடுத்துக்காட்டுக்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாம் அந்த மூன்று போட்டிகள் பற்றியும் கூட பேசியிருந்தோமே…… தேசபக்திப் பாடல்கள், லோரி அதாவது தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகியவற்றோடு இணைந்தவை. உங்களுக்கு நினைவிருக்கலாம், தேசமெங்கும் கதை சொல்லிகளின் வாயிலாக கதை சொல்லுதல் மூலம், கல்வியில் பாரத நாட்டு வழிமுறைகள் குறித்தும் ஒரு முறை நாம் பேசியிருந்தோம். சமூக முயற்சிகள் வாயிலாக பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆண்டு நாம் சுதந்திரத்தின் அமுதக்காலத்தில் நடை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஜி20 மாநாட்டிற்குத் தலைமையேற்றுக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவும் கூட கல்வியோடு சேர்ந்து பலவகைப்பட்ட உலகக் கலாச்சாரங்களைச் செறிவானவையாக்க, நமது உறுதிப்பாடு மேலும் பலப்பட்டு இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, நமது உபநிடதங்களின் ஒரு மந்திரம், பல நூற்றாண்டுகளாகவே நமது ஆவியில் கலந்து நமக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறது.
சரைவேதி சரைவேதி சரைவேதி
பயணித்துக் கொண்டே இரு, பயணித்துக் கொண்டே இரு,
பயணித்துக் கொண்டே இரு.
இன்று நாம் இதே சரைவேதி சரைவேதி-பயணித்துக் கொண்டே இரு என்ற உணர்வோடு மனதின் குரலின் 100ஆவது பகுதியை நிறைவு செய்கிறோம். பாரதத்தின் சமூகத்தின் ஊடும் பாவும் பலப்படுத்தப்படுவதில், மனதின் குரலானது ஒரு மாலையின் இழை போல செயல்படுகிறது, இது அனைத்து மனங்களையும் இணைத்து வைக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் நாட்டுமக்களின் சேவை மற்றும் திறமைகள், மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களுக்குக் கருத்தூக்கம் அளித்திருக்கின்றனர். ஒரு வகையில், மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியும், அடுத்த பகுதிக்கான களத்தைத் தயார் செய்தளிக்கிறது. மனதின் குரலில் எப்போதும் நல்லிணக்கம், சேவை உணர்வு, கடமை உணர்ச்சி ஆகியவையே முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்தின் அமுதக்காலத்தில், இந்த நேர்மறை எண்ணமே தேசத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடியது, புதிய உயர்வுகளுக்குக் கொண்டு செல்லக்கூடியது, மனதின் குரலால் ஏற்பட்ட தொடக்கம், அது இன்று புதிய பாரம்பரியமாகவும் ஆகியிருக்கிறது என்பது எனக்கு மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது. இது எப்படிப்பட்ட பாரம்பரியம் என்றால் இதிலே நம்மனைவரின் முயற்சிகளின் உணர்வு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நான் இன்று ஆகாசவாணியின் நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்; இவர்கள் மிகுந்த பொறுமையோடு, இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் பதிவு செய்கிறார்கள். மிகவும் குறைவான காலத்திற்குள்ளாக, மிகவும் விரைவாக மனதின் குரலை பல்வேறு மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தூர்தர்ஷன் மற்றும் மைகவ் இன் நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். விளம்பர இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பும், நாடெங்கிலும் இருக்கும் டிவி சேனல்கள், மின்னணு ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நிறைவாக, மனதின் குரலை வழிநடத்தும், பாரத நாட்டு மக்கள், பாரதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்போர் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இவை அனைத்தையும், நீங்கள் அளிக்கும் உத்வேகம், நீங்கள் தரும் பலத்தால் மட்டுமே சாதிக்க முடிந்திருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் ஒருமுறை மனதார வரவேற்கிறேன். இன்று இந்த உரையாடலைத் தொடங்கும் வேளையில், என் மனதில் நிறைய உணர்வுகள் பிரவாகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. மனதின் குரலுடனான நம்முடைய இந்த இனிமையான இணைவு, 99ஆவது பகுதியாக மலரவிருக்கிறது. பொதுவாக, 99ஆவது பகுதி என்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. கிரிக்கெட்டிலே இதை நெர்வஸ் நைண்டீஸ், அதாவது பதட்டமான 90கள் என்றும் மிகவும் கடினமான படிக்கல்லாகப் பார்ப்பார்கள். ஆனால், பாரதத்தின் மக்களின் மனதின் குரல் எனும் போது, அங்கே அதற்கே உரித்தாக இருக்கும் உத்வேகம் என்பது அலாதியானது. அதே போல மனதின் குரலின் நூறாவது பகுதி குறித்து நாட்டுமக்களின் மத்தியில் பெரும் உற்சாகம் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏராளமான செய்திகள் எனக்கு வருகின்றன, தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமுதகாலத்தைக் கொண்டாடி வரும் வேளையில், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேறி வரும் வேளையில், 100ஆவது மனதின் குரலின் பகுதி தொடர்பாக, உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், தவிப்போடு காத்திருக்கிறேன். காத்திருப்பு என்பது என்னவோ எப்போதும் இருந்தாலும் கூட, இந்த முறை காத்திருப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. உங்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளும் தான் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஒலிபரப்பாகவிருக்கும் 100ஆவது பகுதி மனதின் குரலை நினைவில் கொள்ளத்தக்க விசேஷமானதாக ஆக்கக்கூடியது.
எனக்கு மிகவும் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள், சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதின் சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகளின் சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது, பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள். ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, நவீன மருத்துவ அறிவியலின் இந்தக் காலத்திலே, உறுப்பு தானம் என்பது யாரோ ஒருவருக்கு உயிர் அளிக்கக்கூடிய மிகப்பெரிய வழியாக ஆகியிருக்கிறது. ஒரு நபர் இறந்த பிறகு தனது உடலை தானமளித்தால், அவரால் 8 முதல் 9 நபர்களுக்கு, புதிய ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிறைவை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திலே உறுப்பு தானத்தின்பால் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பது தான். 2013ஆம் ஆண்டிலே நமது தேசத்திலே, உடலுறுப்பு தானம் எனும் போது 5000த்திற்கும் குறைவான அளவிலே தான் இருந்தது; ஆனால் 2022ஆம் ஆண்டிலே, இந்த எண்ணிக்கை அதிகரித்து 15,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. உடலுறுப்பு தானம் செய்யும் நபர்கள், அவர்களுடைய குடும்பங்கள், இப்படிச் செய்வதன் மூலம் உண்மையிலே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே, வெகுகாலமாகவே பெரிய புண்ணிய காரியங்கள் செய்வோரின் மனதின் குரலை அறிந்து கொள்ள வேண்டும், அவற்றை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய மனதின் குரலில் நம்மோடு அன்பே உருவான ஒரு சிறுமி, ஒரு அழகுக் குட்டியின் தந்தை, அவளுடைய தாய் இருவரும் நம்மோடு இணைந்திருக்கிறார்கள். தந்தையாரின் பெயர் சுக்பீர் சிங் சந்து அவர்கள், தாயின் பெயர் சுப்ரீத் கௌர் அவர்கள், இந்தக் குடும்பம் பஞ்சாபின் அமிர்தசரசிலே வசித்து வருகிறது. ஏராளமான பிரார்த்தனைகளுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு அழகுச் சிலை, ஒரு செல்லப் பெண் பிறந்தாள். வீட்டிலிருந்தவர்கள் அவளுக்கு அபாபத் கௌர் என்று பெயரிட்டார்கள். அபாபத்தின் பொருள், பிறருக்குப் புரியப்படும் சேவை, பிறரின் கஷ்டங்களைப் போக்குவது இவற்றோடு தொடர்புடையது. அபாபத் பிறந்து வெறும் 39 தினங்களே ஆன போது அவள் இந்த உலகை நீத்துப் பேருலகுக்குப் பயணப்பட்டாள். ஆனால் சுக்பீர் சிங் சந்து அவர்களும், அவருடைய மனைவி சுப்ரீத் கௌர் அவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடிய தீர்மானத்தை மேற்கொண்டார்கள். 39 நாட்களே வாழ்ந்த அவர்களுடைய செல்லத்தின் உடல் உறுப்புக்களை தானம் அளிப்பது தான் அந்தத் தீர்மானம். நம்மோடு தொலைபேசி இணைப்பில் சுக்பீர் சிங் அவர்களும், அவருடைய திருமதியும் இணைந்திருக்கிறார்கள். அவரோடு உரையாடுவோம் வாருங்கள்.
பிரதமர்: சுக்பீர் அவர்களே வணக்கம்.
சுக்பீர்: வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, சத் ஸ்ரீ அகால்.
பிரதமர்: சத் ஸ்ரீ அகால், சத் ஸ்ரீ அகால் ஜி, சுக்பீர் அவர்களே, இன்றைய மனதின் குரல் தொடர்பாக நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அபாபத் பற்றிய விஷயம் எத்தனை உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது என்றால், இதைப் பற்றி நீங்களே கூறினால் மிகவும் சிறப்பான ஒரு தாக்கம் ஏற்படும்; ஏனென்றால், ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது என்றால், நிறைய கனவுகள், நிறைய சந்தோஷங்களைத் தன்னோடு அது கொண்டு வருகிறது. ஆனால் அந்தக் குழந்தை இத்தனை விரைவாகப் பிரிந்து விடும் எனும் போது எத்தனை கஷ்டமாக இருக்கும், எத்தனை கடினமாக உணர்வீர்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நீங்கள் இப்போது மேற்கொண்டிருக்கும் முடிவை மேற்கொள்ளத் தூண்டியது எது, எப்படி அதை மேற்கொண்டீர்கள் என்பது பற்றியெல்லாம் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா.
சுக்பீர்: சார், இறைவன் எங்களுக்கு மிகவும் அருமையான ஒரு குழந்தையை அளித்தான், மிகவும் இனிமையான செல்லக்குட்டி எங்கள் வீட்டிற்கு வருகை புரிந்தாள். அவளுடைய மூளையில் நரம்புகள் இணைந்து ஒரு முடிச்சுப் போல ஆகியிருக்கிறது என்றும், இதனால் அவளுடைய இதயத்தின் அளவு பெரிதாகி வருவதாகவும், அவள் பிறந்தவுடனேயே எங்களுக்குத் தெரிய வந்தது. நாங்கள் திகைத்துப் போனோம், குழந்தையின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கிறது, மிக அழகாக அவள் இருக்கிறாள், ஆனால் இத்தனை பெரிய பிரச்சினையைத் தாங்கிப் பிறந்திருக்கிறாள் எனும் வேளையில், முதல் 24 மணி நேரம் வரை ரொம்ப நன்றாகவே, இயல்பாகவே இருந்தாள். திடீரென்று அவளுடைய இருதயம் செயலாற்றுவதை நிறுத்தி விட்டது. ஆகையால் நாங்கள் விரைவாக அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே அவளை உயிர்ப்பித்து விட்டார்கள் அப்படீன்னாலும், புரிந்து கொள்ள சமயம் பிடித்தது. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்ன, இத்தனை பெரிய சிக்கல், ஒரு சின்னஞ்சிறிய குழந்தையின் இருதயத்தில் கோளாறு என்று பிறகு தெரிஞ்ச போது, நாங்க அவளை சிகிச்சைக்காக PGI சண்டீகட்டிற்குக் கொண்டு போனோம். அங்கே அந்தக் குழந்தை மிகவும் நெஞ்சுரத்தோடு சிகிச்சைக்காகப் போராடினா. ஆனா நோய் எப்படிப்பட்டதாக இருந்திச்சுனா, இத்தனை சிறிய வயதிலே சிகிச்சை அளிப்பது சாத்தியமாக இருக்கலை. மருத்துவர்கள் அவளை மீளுயிர்ப்பிக்க ரொம்ப பிரயாசைப்பட்டாங்க; ஒரு ஆறு மாசக்காலம் வரை அவள் உயிரை இழுத்துப் பிடிச்சா கூட, அவளுக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து யோசிச்சிருக்க முடியும். ஆனால இறைவனுடைய எண்ணம் வேறாக இருந்திச்சு, வெறும் 39 நாட்கள் ஆன நிலையிலேயே மருத்துவர்கள், அவளுக்கு மீண்டும் இருதயத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது என்பதால், இப்போது நம்பிக்கை குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்கள். நானும் என் மனைவியும் எங்கள் மகள் மிகவும் தைரியத்தோடு எதிர்கொண்டதைப் பார்த்தோம், மீண்டும் மீண்டும் என்ன தோணீச்சுன்னா, இப்போ அவள் பிரிஞ்சுடுவான்னு நினைச்ச போது அவ மீண்டு வந்தாள். அப்போ எங்களுக்குப் பட்ட விஷயம் என்னன்னா, இந்தக் குழந்தையோட வருகைக்கு ஒரு காரணம் இருக்கணும் அப்படீன்னு நினைச்ச போது தான் எங்களுக்கு அதுக்கான விடை கிடைச்சுது. நாங்கள் குழந்தையின் உறுப்புக்களை தானமாக அளிப்போம் என்ற முடிவுக்கு வந்தோம்,. வேறு ஒருவருடைய வாழ்க்கையில் ஒளியேற்றப்படுமே என்று தீர்மானித்த பிறகு, நாங்கள் PGIயின் நிர்வாகப் பிரிவோடு தொடர்பு கொண்டோம், இத்தனைச் சின்ன சிசுவிடமிருந்து சிறுநீரகங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள இயலும் என்று எங்களுக்கு வழிகாட்டினார்கள். இறைவன் எங்களுக்கு மனோபலத்தை அளித்தான், குரு நானக் சாஹபுடைய வழிகாட்டுதல், இந்த எண்ணத்தோடு தான் நாங்கள் தீர்மானித்தோம்.
பிரதமர்: குருமார் அளித்த படிப்பினையை நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். சுப்ரீத் அவர்கள் இருக்கிறார்களா? அவர்களோடு என்னால் உரையாட முடியுமா?
சுக்பீர்: கண்டிப்பா சார்.
சுப்ரீத்: ஹெலோ.
பிரதமர்: சுப்ரீத் அவர்களே, உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
சுப்ரீத்: வணக்கம் சார் வணக்கம். நீங்கள் எங்களோடு உரையாடுவது என்பது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம் சார்.
பிரதமர்: நீங்கள் இத்தனை மகத்தான செயல் புரிந்திருக்கிறீர்கள், நாம் பேசுவது அனைத்தையும் இந்த தேசம் கேட்கும், இதனால் கருத்தூக்கம் அடைந்து இன்னும் பிறரின் உயிரைக் காக்கப் பலரும் முன்வருவார்கள் என்பதே என் கருத்து. அபாபத்துடைய இந்தப் பங்களிப்பு, இது மிகப் பெரியது அம்மா.
சுப்ரீத்: சார், இதுவுமே கூட குரு நானக் பேரரசர் போட்ட பிச்சை தான். அவர் அளிச்ச தைரியத்தில தான் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க முடிஞ்சுது.
பிரதமர்: குருமார்களின் கிருபை இல்லாம எதுவுமே நடக்க முடியாது.
சுப்ரீத்: கண்டிப்பா சார். கண்டிப்பா.
பிரதமர்: சுக்பீர் அவர்களே, நீங்க மருத்துவமனையில இருந்தப்ப, ஆளையே உலுக்கற இந்தச் செய்தியை மருத்துவர்கள் உங்களுக்கு அளிச்ச போது, அதன் பிறகும் கூட ஆரோக்கியமான மனசோட நீங்களும் சரி, உங்க திருமதியும் சரி இத்தனை பெரிய முடிவை எடுத்திருக்கீங்க, குருமார்களோட படிப்பினை காரணமாத் தான் உங்க மனசுல இத்தனை பெரிய உயர்வான எண்ணம் ஏற்பட்டிருக்குங்கறதுல சந்தேகம் இல்லை, உண்மையிலேயே அபாபத்தோட அர்த்தம் சாதாரணமாச் சொன்னா, பிறருக்கு உதவறதுங்கறது தான். குழந்தை அபாபத் இந்தப் பணியை கண்டிப்பாக செய்துவிட்டாள். ஆனா நான் நீங்க தீர்மானிச்ச கணம் பத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன்.
சுக்பீர்: சார் உண்மையில எங்க குடும்ப நண்பரான பிரியா அவர்கள் தன்னோட உடல் உறுப்பை தானமளிச்சாங்க, அவங்க கிட்டேர்ந்தும் கூட எங்களுக்கு உத்வேகம் ஏற்பட்டிச்சு. அப்ப எங்களுக்கு என்ன தோணிச்சுன்னா, உடல்ங்கறது ஐந்து தத்துவங்களால ஆனது, அது மீண்டும் அந்த ஐந்து தத்துவங்களோடவே ஐக்கியமாயிடும். ஒருத்தர் இறந்து போயிட்டாருன்னா, அவருடைய உடல் எரியூட்டப்படுது, இல்லைன்னா புதைக்கப்படுது. ஆனா அவங்களோட உடலுறுப்புகள் உதவிகரமா இருக்கும் அப்படீன்னா, அது நல்ல செயல் தானே. உங்க மகள் தான் இந்தியாவோட மிக இளமையான உறுப்பு தானம் செய்தவர்னு மருத்துவர்கள் எங்க கிட்ட சொன்ன போது எங்களுக்குப் பெருமையா இருந்திச்சு, எந்த நல்ல பெயரை, எங்களைப் பெத்தவங்களுக்கு இதுநாள் வரை எங்களால வாங்கிக் கொடுக்க முடியலையோ, அதை ஒரு சின்னஞ்சிறிய சிசுவான எங்க பொண்ணு எங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கா அப்படீங்கறது ரொம்ப பெரிய விஷயம், இன்னைக்கு உங்களோட நாங்க பேசிட்டு இருக்கும் போதும் நாங்க ரொம்ப பெருமிதமா உணர்றோம்.
பிரதமர்: சுக்பீர் அவர்களே, இன்னைக்கு உங்க மகளோட ஒரே ஒரு அங்கம் தான் உயிர்ப்போட இருக்கு அப்படீங்கறது இல்லை. உங்க மகள் மனித சமூகத்தின் அமர காதைகளின் அமரத்துவம் வாய்ந்த பயணியாயிட்டா. தன்னோட உடல் உறுப்பு வாயிலா, அவ இன்னைக்கும் வாழ்ந்துக்கிட்டு இருக்கா. இந்த பரிசுத்தமான காரியத்துக்காக, நான் உங்களையும், உங்களோட மனைவியையும், உங்க குடும்பத்தாரையும் போற்றறேன்.
சுக்பீர்: நன்றி சார்.
நண்பர்களே, உடலுறுப்பு தானம் செய்யத் தூண்டும் நினைப்பு, நாம் மறையும் போது கூட, வேறு ஒருவருக்கு நல்லது நடக்கட்டும், ஒருவருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் தான். யாரெல்லாம் உறுப்பு தானத்திற்கான காத்திருப்பில் இருக்கிறார்களோ, காத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் கழிப்பது எத்தனை கடினமான காரியம் என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அப்படி ஒரு உடலுறுப்பு தானம் செய்யும் ஒருவர் கிடைத்து விட்டார் என்றால், அவர்களை இறைவனின் வடிவங்களாகவே பார்க்கிறார்கள். ஜார்க்கண்டில் வசிக்கும் ஸ்நேஹலதா சௌத்ரியும் கூட, இறைவனாகவே மாறி பிறருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். 63 வயதான ஸ்நேஹலதா சௌத்ரி அவர்கள் தன்னுடைய இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றைத் தானம் செய்த பிறகு மறைந்து விட்டார். இன்று மனதின் குரல் அவருடைய மகன், சகோதரர் அபிஜீத் சௌத்ரீ அவர்கள் நம்மோடு இணைந்திருக்கிறார். அவர் கூறுவதைக் கேட்போம் வாருங்கள்.
பிரதமர்: அபிஜீத் அவர்களே வணக்கம்.
அபிஜீத்: வணக்கம் சார்.
பிரதமர்: அபிஜீத் அவர்களே, நீங்க எப்படிப்பட்ட தாயின் மகன்னு சொன்னா, உங்களைப் பெற்று உங்களுக்கு உயிரளித்திருக்கிறார் என்பது ஒரு புறம், ஆனால், தான் இறந்த பிறகும் கூட உங்களுடைய தாய் பல பேருக்கு வாழ்க்கை அளித்துச் சென்றிருக்கிறார். ஒரு மகன் என்ற முறையில், அபிஜீத், நீங்க எப்படி உணர்றீங்க?
அபிஜீத்: ஆமாம் சார்.
பிரதமர்: உங்க அம்மா பத்தி சொல்லுங்க, எந்தச் சூழ்நிலையில உறுப்பு தானம் செய்யணும்னு முடிவெடுக்கப்பட்டது?
அபிஜீத்: என் பெற்றோர் ஜார்க்கண்டில சராய்கேலாங்கற ஒரு சின்ன கிராமத்தில வசிக்கறாங்க. கடந்த 25 ஆண்டுகளா தொடர்ந்து காலைவேளை நடை பழகிட்டு வந்தாங்க, தங்களோட வழக்கப்படி, காலையில 4 மணி வாக்கில நடக்க அவங்க வீட்டை விட்டு வெளிய போனாங்க. அந்த நேரத்தில மோட்டார் சைக்கிள்ல வந்த ஒருத்தர் பின்னாடிலேர்ந்து அவங்க மேல மோதினதால, அவங்க கீழ விழுந்து அவங்க தலையில பெரிய அளவில காயம் உண்டாச்சு. உடனடியா நாங்க அவங்களை சராயிகேலாவில இருக்கற சதர் மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். 48 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு அவங்க இங்க பிழைக்கறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவுன்னு மருத்துவர்கள் கையை விரிச்சுட்டாங்க. பிறகு நாங்க அவங்களை விமானம் மூலமா தில்லியில இருக்கற எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். இங்க அவங்களுக்கு 7-8 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டிச்சு. சுமாராயிட்டு இருந்த வேளையில, திடீர்னு அவங்க ரத்த அழுத்தம் ரொம்ப குறைஞ்சு போச்சு, அப்பத் தான் எங்களுக்குத் தெரிய வந்திச்சு அவங்க மூளை இறப்பு ஏற்பட்டுப் போச்சு அப்படீங்கற விஷயம். இந்த வேளையில தான் உறுப்பு தானம் பத்தின நெறிமுறைகளை மருத்துவர் எங்களுக்கு விளக்கினாரு. உறுப்பு தானம் அப்படீங்கற ஒண்ணு பத்தி எங்கப்பா கிட்ட சொல்ல முடியுமா, எந்த அளவுக்கு அவரால அதை உள் வாங்கிக்க முடியும்னு எல்லாம் தெரியலை. ஆனா நாங்க உறுப்பு தானம் பத்தி அவங்களுக்குத் தெரிவிச்சவுடனே, இல்லை இல்லை இதை செஞ்சே ஆகணும், ஏன்னா உங்கம்மா இதைச் செய்யணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தா அப்படீன்னாரு. அம்மாவால பிழைக்க முடியாது அப்படீங்கற வரை நாங்க ரொம்ப நிராசையோட இருந்தோம், ஆனா உறுப்பு தானம் பத்தி விவாதம் தொடங்கின பிறகு, ஏமாற்றம் மாறி ஆக்கப்பூர்வமான உணர்வு ஏற்பட்டிச்சு, நேர்மறை சூழல் உண்டாச்சு. அடுத்த நாளே நாங்க உடல் உறுப்புக்களை தானமா அளிச்சோம். இதைச் செய்யறதுக்கு முன்னால எங்களுக்கு இரவு எட்டு மணிக்கு ஆலோசனை அளிக்கப்பட்டிச்சு. அடுத்த நாளே நாங்க உறுப்பு தானம் செய்தோம். இதில அம்மாவோட கருத்து ரொம்ப பெரிய விஷயம், அவங்க முன்னயே கண் தானம் போன்ற சமூகப் பணிகள்ல ரொம்ப சுறுசுறுப்பா இருந்திருக்காங்க. இந்த எண்ணம் காரணமாத் தான் எங்களால இத்தனை பெரிய விஷயத்தைச் செய்ய முடிஞ்சுது, மேலும் என் அப்பாவோட முடிவு எடுக்கற தன்மை காரணமாத் தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிஞ்சுது.
பிரதமர்: உறுப்புகள் எத்தனை நபர்களுக்குப் பயனாச்சு?
அபிஜீத்: இவங்க இருதயம், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இரண்டு கண்கள் தானமா அளிக்கப்பட்டன, இவை நான்கு பேர்கள் உயிரைக் காப்பாத்தியிருக்கு, இருவருக்குப் பார்வையளிச்சிருக்கு.
பிரதமர்: அபிஜீத் அவர்களே, உங்க அப்பா, உங்க அம்மா ரெண்டு பேருமே வணக்கத்துக்கு உரியவங்க. நான் அவங்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கறேன், உங்க அப்பா இத்தனை பெரிய முடிவை எடுத்திருக்காரு, உங்க குடும்ப உறுப்பினர்களுக்குத் தலைமை தாங்கியிருக்காரு, இது உண்மையிலேயே ரொம்பவே கருத்தூக்கம் அளிக்கற விஷயம் தான், அதே சமயத்தில அம்மாங்கறவங்க அம்மா தான். அவங்களுக்கு ஈடு அவங்க தான், அவங்க ஒரு கருத்தூக்கக் காரணி. ஆனா அம்மாங்கறவங்க பாரம்பரியங்களைத் தாண்டிப் பயணிக்கும் போது, அவங்க பல தலைமுறைகளுக்கு, ஒரு மிகப்பெரிய பலமா ஆகறாங்க. அங்க தானத்திற்காக உங்களோட தாயார் அளிச்சிருக்கும் உத்வேகம், இன்னைக்கு நாடு முழுவதையும் போய் சேருது. உங்களுடைய இந்த பவித்திரமான காரியத்திற்கும், உங்களோட இந்த மகத்தான செயலுக்கும் உங்க குடும்பத்தார் எல்லாருக்கும் பலப்பல பாராட்டுக்கள். அபிஜீத் அவர்களே நன்றி, உங்க தந்தைக்கும் என்னோட வணக்கங்களைக் கண்டிப்பா தெரிவிச்சிருங்க.
அபிஜீத்: கண்டிப்பா சொல்றேன் சார். தேங்க்யூ.
நண்பர்களே, 39 நாட்களே நிரம்பிய அபாபத் கௌர் ஆகட்டும், 63 வயது நிரம்பிய ஸ்நேஹலதா சௌத்ரி ஆகட்டும், இவர்களைப் போன்ற கொடையாளிகள், வாழ்க்கையின் மகத்துவத்தை நமக்குப் புரிய வைத்து மறைந்து விட்டார்கள். நமது தேசத்திலே, இன்று, உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள், இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உடல் உறுப்பு தானம் செய்யும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். அங்க தானத்தை எளிமையாக்கவும், அதை உற்சாகப்படுத்தவும், தேசத்தில் ஒரே மாதிரியான கொள்கை-சட்டம் தொடர்பாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த நோக்கில் தான், அந்தந்த மாநிலத்திலே குடியிருக்க வேண்டும் என்ற விதியை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது, அதாவது, இப்போது தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திற்கும் சென்று, நோயாளி உடலுறுப்பைப் பெற வேண்டிப் பதிவு செய்து கொள்ள இயலும். அரசாங்கமும், உடலுறுப்பு தானத்தின் பொருட்டு 65 வயதுக்கும் குறைவான வயது என்ற வயது வரம்பிற்கும் முடிவு கட்டி விட்டது. இந்த முயற்சிகளுக்கு இடையே, நாட்டுமக்களிடத்தில் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், உடலுறுப்பு தானம் செய்ய, அதிக எண்ணிக்கயில் மக்கள் முன்வர வேண்டும் என்பது தான். உங்களுடைய ஒரு தீர்மானம், பலரின் வாழ்வைக் காப்பாற்றும், வாழ்க்கையை உருவாக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, இது நவராத்திரி காலம், சக்தியை உபாசனை செய்யும் நேரம் இது. இன்று, பாரதத்தின் வல்லமை, புதிய முறையில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது, இதிலே பெரிய பங்களிப்பு என்றால், நமது பெண்சக்தியுடையது. இன்றைய நிலையில், இப்படி பல எடுத்துக்காட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. நீங்கள் சமூக ஊடகங்களில், ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் அவர்களைக் கண்டிப்பாகப் பார்த்திருக்கலாம். சுரேகா அவர்கள், ஒரு சாகஸ வீராங்கனை என்ற வகையில் மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார் – வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டாக அவர் ஆகி இருக்கிறார். இந்த மாதம் தான், தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் இயக்குநர் கார்த்திகீ கோன்ஸால்வேஸ் ஆகியோரின் ஆவணப்படமான ‘Elephant Whisperers’ ஆஸ்கார் விருதினை வென்று, இவர்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். தேசத்தின் மேலும் ஒரு சாதனை, பாபா அணு ஆய்வு மையத்தின் அறிவியலாளர், சகோதரி ஜோதிர்மயி மொஹந்தி அவர்களும் சாதனை படைத்திருக்கிறார். ஜோதிர்மயி அவர்களுக்கு வேதியியலும், வேதியியல் பொறியியலும் என்ற துறையில் IUPACஇன் சிறப்பான விருது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பாரதத்தின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பெண்கள் கிரிக்கெட் அணி, டி 20 உலகக் கோப்பையை வென்று புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதே போல அரசியலின் பால் நீங்கள் நோக்கினால், ஒரு புதிய தொடக்கம் நாகாலாந்திலே நிகழ்ந்திருக்கிறது. நாகாலாந்திலே, 75 ஆண்டுகளில் முதன்முறையாக, இரண்டு பெண் உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தேர்தல்களிலே ஜெயித்து மன்றத்தில் நுழைந்திருக்கிறர்கள். இவர்களில் ஒருவரை நாகாலாந்து அரசு அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது, அதாவது, மாநிலத்தின் மக்களுக்கு முதன்முறையாக ஒரு பெண் அமைச்சர் கிடைத்திருக்கிறார்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, துருக்கியிலே பேரிடர் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் பெருநாசத்திற்கிடையே அங்கிருக்கும் மக்களுக்கு உதவிபுரிய சென்றிருந்த சாகஸமான வீராங்கனைகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களுடைய சாகஸம், அவர்களின் திறமைகள் ஆகியன பற்றி உலகமே பாராட்டி வருகிறது. பாரதம், ஐ.நா. மிஷன் என்ற முறையில் அமைதிப்படையில் பெண்கள் மட்டுமே பிரிவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
இன்று, தேசத்தின் பெண்கள், நமது முப்படைகளிலும், தங்களுடைய வீரத்தின் வெற்றிக் கொடியை ஓங்கிப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். க்ரூப் கேப்டன் ஷாலிஜா தாமி, போர்ப்பிரிவில், ஆணை பிறப்பிக்கும் தகுதி படைத்த முதல் பெண் விமானப்படை அதிகாரியாக ஆகியிருக்கிறார். அவரிடம் கிட்டத்தட்ட 3000 மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் இருக்கிறது. இதைப் போலவே இந்திய இராணுவத்தின், நெஞ்சுரம் மிக்க கேப்டன் சிவா சௌஹானும், சியாச்சினிலே பணியாற்றும் முதல் பெண் அதிகாரியாக ஆகியிருக்கிறார். பூஜ்யத்திற்குக் கீழே 60 டிகிரி செல்ஷியஸ் என்ற பருவநிலை இருக்கும் சியாச்சினிலே, ஷிவா, மூன்று மாதங்களுக்குப் பணியாற்றுவார்.
நண்பர்களே, இந்தப் பட்டியல் எத்தனை நீளமானது என்றால், இங்கே இதுபற்றிய விவாதம் கூட கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள், நமது பெண் செல்வங்கள், இன்று, பாரதம் மற்றும் பாரதத்தின் கனவுகளுக்கு சக்தியளித்து வருகிறார்கள். பெண்சக்தியின் இந்த ஆற்றல் தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயுவாகும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் உலகம் முழுவதிலும் தூய்மையான எரிசக்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி பற்றி நிறைய பேசப்படுகின்றன. உலக மக்களை நான் சந்திக்கும் போது, இந்தத் துறையில் பாரதத்தின் சாதனைபடைக்கும் வெற்றியைப் பற்றிக் கண்டிப்பாக முன்வைக்கிறேன். குறிப்பாக, பாரதம், சூரியசக்தித் துறையில் எந்த வகையில் விரைவாக முன்னேறி வருகிறது என்பதே கூட ஒரு மிகப் பெரிய சாதனையாகும். பாரத நாட்டு மக்கள், பல நூற்றாண்டுகளாகவே சூரியனோடு விசேஷமான தொடர்பு கொண்டவர்கள். நமது நாட்டிலே, சூரியசக்தி தொடர்பாக இருக்கும் விஞ்ஞானப் புரிதல், சூரிய உபாசனை தொடர்பான பாரம்பரியங்கள் ஆகியன, பிற இடங்களிலே குறைவானவையாகவே காணப்படுகின்றன. இன்று, நாட்டுமக்கள் அனைவரும் சூரிய சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்கள், தூய்மையான எரிசக்தி தொடர்பாகத் தங்களுடைய பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைவரின் முயற்சி என்பதன் இந்த உணர்வு தான் பாரதத்தின் சூரியத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் புணேயில், இப்படிப்பட்ட ஒரு அருமையான முயல்வு, என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இங்கே MSR-Olive Housing Society யைச் சேர்ந்தவர்கள் சமூகத்தவர்க்குக் குடிநீர், லிஃப்ட், விளக்குகள் போன்ற சமூகப் பயன்பாட்டு விஷயங்களைப் பொறுத்த மட்டிலே, சூரியசக்தியையே பயன்படுத்துவோம் என்று தீர்மானித்தார்கள். இதன் பிறகு இந்த குடியிருப்பு சமூகத்தினர் அனைவரும் இணைந்து சூரியத் தகடுகளைப் பொருத்தினார்கள். இன்று இந்த சூரியத் தகடுகள் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 90,000 கிலோவாட் மணியளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வோர் மாதமும் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது. இந்தச் சேமிப்பின் ஆதாயம் சமூகத்தின் அனைவருக்கும் கிடைக்கிறது.
நண்பர்களே, புணேயைப் போலவே தமன் – தீவில் இருக்கும் தீவ் பகுதி ஒரு வித்தியாசமான மாவட்டம்; அங்கே இருப்போரும் ஒரு அற்புதமான செயலைப் புரிந்திருக்கிறார்கள். தீவ் என்பது சோம்நாத்துக்கு அருகே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பகல் பொழுதின் அனைத்துத் தேவைகளுக்கும் 100 சதவீதம் தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்தும் பாரதத்தின் முதல் மாவட்டம் தீவ் என்று ஆகியிருக்கிறது. தீவ் பகுதியின் இந்த வெற்றியின் மந்திரம், அனைவரின் முயற்சியே ஆகும். ஒரு காலத்தில் இங்கே மின்சார உற்பத்திக்கான சாதனங்கள் ஒரு சவாலாக இருந்தது. மக்கள் இந்தச் சவாலுக்கான தீர்வை ஏற்படுத்தும் வகையில், சூரியசக்தியைத் தேர்ந்தெடுத்தார்கள். இங்கே பயனற்ற நிலம் மற்றும் பல கட்டிடங்களில் சூரியத்தகடுகள் பொருத்தப்பட்டன. இந்தத் தகடுகள் மூலம், தீவ் பகுதியில், பகல் வேளையில், எத்தனை மின்சாரம் தேவைப்படுகிறதோ, அதை விட அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. இந்தச் சூரியத் திட்டம் வாயிலாக, மின்சாரம் வாங்க ஆன செலவு கிட்டத்தட்ட, 52 கோடி ரூபாய் இப்போது சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழலும் பெரிய அளவில் பாதுகாக்கப்படுகிறது.
நண்பர்களே, புணேயும், தீவும் சாதித்துக் காட்டியிருக்கின்றன. இப்படிப்பட்ட முயல்வுகள் நாடெங்கிலும், மேலும் பல இடங்களிலும் நடந்து வருகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விஷயத்தில் இந்தியர்கள் எத்தனை புரிந்துணர்வு உடையவர்கள் என்பது இதிலிருந்து நன்கு விளங்குகிறது. மேலும், நம்முடைய தேசம், எந்த வகையில் எதிர்காலத் தலைமுறையினருக்காக விழிப்போடு செயல்படுகிறது என்பதும் தெளிவாகிறது. இவை போன்ற அனைத்து பிரயாசைகளுக்கும், நான் என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, நமது தேசத்திலே, காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்றவகையிலே, பல பாரம்பரியங்கள் மலர்ந்திருக்கின்றன. இந்த பாரம்பரியங்கள் தாம், நமது கலாச்சாரத்தின் வல்லமையை அதிகரிக்கின்றன, இதைப் புத்தம்புதிதாக என்றும் துலங்கும்படி இருக்கத் தேவையான பிராணசக்தியை அளிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் தான், இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் காசியிலே தொடங்கப்பட்டது. காசி தமிழ்ச் சங்கமத்திலே, காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் கொண்டாடப்பட்டன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு நமது தேசத்திற்கு பலத்தை அளிக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போது, கற்கும் போது, ஒற்றுமை உணர்வு மேலும் ஆழமாகப் பாய்கிறது. ஒற்றுமையின் இந்த உணர்வோடு கூடவே, அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பாகங்களிலும் சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம் நடைபெற இருக்கிறது. சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம், ஏப்ரல் 17 முதல் 30 வரை நடக்கும். மனதின் குரலின் சில நேயர்கள் கண்டிப்பாக யோசித்துக் கொண்டிருப்பார்கள், குஜராத்தின் சௌராஷ்டிரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று. உள்ளபடியே, பல நூற்றாண்டுகள் முன்னரே கூட, சௌராஷ்டிரத்தின் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களில் குடியேறியிருக்கின்றார்கள். இவர்களை இன்றும் கூட சௌராஷ்ட்ரீ தமிழர்கள் என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுடைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சமூகப் பழக்கங்கள் ஆகியவற்றில், இன்றும் கூட ஆங்காங்கே சௌராஷ்டிரத்தின் சில அம்சங்கள் இணைகின்றன. இந்த நிகழ்ச்சியை மெச்சி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். மதுரையில் வசிக்கும் ஜயச்சந்திரன் அவர்கள், ஒரு நீண்ட, உணர்வுப்பூர்வமான விஷயத்தை எழுதியிருக்கிறார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக ஒருவர் சௌராஷ்டிர தமிழர்களின் இந்த உறவுகளைப் பற்றி எண்ணமிட்டிருக்கிறார், சௌராஷ்டிரத்திலிருந்து தமிழ்நாட்டில் வந்து குடியேறியிருப்பவர்கள் பற்றி விசாரித்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறார். ஜயச்சந்திரன் அவர்களின் இந்தச் சொற்கள், ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர சகோதரிகளின் வெளிப்பாடு.
நண்பர்களே, மனதின் குரல் நேயர்களுக்கு, நான் அஸாமோடு தொடர்புடைய ஒரு செய்தியைப் பற்றிக் கூற விரும்புகிறேன். இதுவும் கூட, ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு பலம் சேர்க்கிறது. நமது வீர லாசித் போர்ஃபுகன் அவர்களின் 400ஆவது பிறந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். வீரர் லாசித் போர்ஃபுகன், முகலாய ஆட்சியின் கொடூரமான பிடியிலிருந்து, குவாஹாடிக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இன்று தேசம், இந்த மாபெரும் வீரனின் அசகாய சூரத்தனத்தைத் தெரிந்து கொண்டு வருகிறது. சில நாட்கள் முன்பாக, லாசித் போர்ஃபுகனின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட கட்டுரை எழுதும் இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட 45 இலட்சம் மக்கள் கட்டுரைகளை அனுப்பியிருந்தார்கள் என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். அதே வேளையில் இது ஒரு கின்னஸ் உலக சாதனைப் பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கலாம். மேலும் மிகவும் பெரிய விஷயம், அதிக உவகையைத் தரும் விஷயம் என்னவென்றால், வீர லாசித் ப்போர்ஃபுகன் மீது எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் கிட்டத்தட்ட 23 பல்வேறு மொழிகளில் எழுதி அனுப்பப்பட்டிருக்கிறது. இவற்றில், அஸாமியா மொழியைத் தவிர, ஹிந்தி, ஆங்கிலம், பாங்க்லா, போடோ, நேபாளி, சம்ஸ்கிருதம், சந்தாலி போன்ற மொழிகளைச் சேர்ந்த மக்கள் கட்டுரைகளை அனுப்பியிருக்கிறார்கள். நான் இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் என் இதயப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கனிவு நிறை நாட்டுமக்களே, கஷ்மீரம் அல்லது ஸ்ரீநகர் பற்றிய விஷயம் எனும் போது, அங்கிருக்கும் பள்ளத்தாக்குகள், டல் ஏரி ஆகியவற்றின் சித்திரங்கள் நம் கண் முன்னே வந்து போகும். நம்மில் அனைவருமே டல் ஏரியின் சுந்தரக் காட்சிகளின் ரம்மியத்தை அனுபவிக்க விரும்புவோம்; ஆனால், டல் ஏரியில் மேலும் ஒரு சிறப்பான விஷயம் உண்டு. இந்த ஏரி, தனது சுவையான தாமரைத் தண்டுகளுக்காகப் பெயர் போனது. தாமரைத் தண்டுகளை தேசத்தின் பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களிட்டு அழைப்பார்கள். கஷ்மீரத்தில் இவற்றை நாதரூ என்றழைப்பார்கள். கஷ்மீரத்தின் நாதரூவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைக் கருதிப் பார்த்து, டல் ஏரியின் நாதரூவைப் பயிர் செய்ய விவசாயிகள் ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அமைப்பிலே கிட்டத்தட்ட 250 விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இன்று இந்த விவசாயிகள், தங்களின் நாதரூவை அயல்நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கி விட்டார்கள். சில நாட்கள் முன்பு தான் இந்த விவசாயிகள், இரண்டு தொகுதிப்புகளை ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த வெற்றி கஷ்மீருக்குப் பெயரை ஈட்டிக் கொடுப்பதோடு, பல விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது.
நண்பர்களே, கஷ்மீரத்து மக்களின் விவசாயத்தோடு தொடர்புடைய மேலும் ஒரு முயற்சி, இப்போது தனது வெற்றியின் மணத்தைப் பரப்பி வருகிறது. நான் வெற்றியின் மணம் என்று ஏன் கூறுகிறேன் என்று தானே நீங்கள் யோசிக்கிறீர்கள்!! ஆம், விஷயம் நறுமணம் பற்றியது, சுகந்தம் தொடர்பானது. உண்மையில், ஜம்மு-கஷ்மீரத்தின் டோடா மாவட்டத்தின் ஒரு பகுதி தான் பதர்வாஹ். இங்கே இருக்கும் விவசாயிகள், பல தசாப்தங்களாக, மக்காச்சோளத்தின் பாரம்பரியமான விவசாயத்தைச் செய்து வந்தார்கள்; ஆனால், சில விவசாயிகள், சற்று வித்தியாசமானதைச் செய்ய யோசித்தார்கள். அவர்கள் மலர் சாகுபடியில் ஈடுபட்டார்கள். இன்று, இங்கே, கிட்டத்தட்ட 2500 விவசாயிகள், லேவண்டர் மலர் சாகுபடி செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கு மத்திய அரசின் அரோமா மிஷன் மூலம் உதவிகள் கிடைத்து வருகின்றது. இந்தப் புதிய விவசாயமானது, விவசாயிகளின் வருமானத்தில் பெரிய ஏற்றத்தை அளித்து, இன்று லேவண்டரோடு சேர்த்து, இவர்களின் வெற்றியின் மணமும், தொலைதூரங்கள் வரை பரவிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, கஷ்மீரம் பற்றிப் பேசும் போது, தாமரை பற்றிப் பேசும் போது, மலர்களைப் பற்றிப் பேசினாலோ, மணம் பற்றிப் பேசும் போது, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் அன்னை சாரதை பற்றிய நினைவு வருவது மிகவும் இயல்பான விஷயம் இல்லையா!! சில நாட்கள் முன்பாகத் தான், குப்வாடாவில் அன்னை சாரதைக்கு ஒரு அருமையான ஆலயம் மக்கள் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னொரு சமயத்தில், சாரதா பீடத்தை தரிசிக்க மக்கள் சென்று வந்த அதே பாதையில் தான் இந்த ஆலயம் இப்போது எழுப்பப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்தக் கோயில் கட்டுமானத்திற்கு மிகவும் உறுதுணையாயிருந்திருக்கிறார்கள். இந்த சுபகாரியத்தில் ஈடுபட்ட, ஜம்மு கஷ்மீரத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பலப்பல வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரல் இம்மட்டே. அடுத்த முறை, மனதின் குரலின் 100ஆவது பகுதியில் உங்களை நான் சந்திக்கிறேன். நீங்களனைவரும், உங்களின் ஆலோசனைகளை அவசியம் அனுப்புங்கள். மார்ச் மாதத்தின் இந்த மாதத்தில், நாம், ஹோலி தொடங்கி நவராத்திரி வரை, பல நிகழ்ச்சிகளிலும் பண்டிகைகளிலும் ஈடுபட்டு இருப்போம். ரமலான் புனித மாதமும் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஸ்ரீ இராம நவமி திருநாளும் வரவிருக்கிறது. இதன் பிறகு மஹாவீர் ஜயந்தி, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை ஆகியவையும் வரும். ஏப்ரல் மாதத்தில் நாம், பாரதத்தின் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த தினங்களைக் கொண்டாட இருக்கிறோம். இந்த இருபெரும் ஆளுமைகள் – மஹாத்மா ஜோதிபா புலே, பாபா சாஹேப் ஆம்பேட்கர் ஆகியோர் தாம். இந்த இரண்டு மாமனிதர்களும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்ட, அசாத்தியமான பங்களிப்புக்களை நல்கினார்கள். இன்று, சுதந்திரத்தின் அமுதக்காலத்தில், இப்படிப்பட்ட மாமனிதர்களிடமிருந்து கற்கவும், தொடர்ந்து உத்வேகமடைவதும் அவசியமாகிறது. நாம் நமது கடமைகளை, அனைத்திலும் முதன்மையானவையாகக் கொள்ள வேண்டும். நண்பர்களே, இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த மாதம், மனதின் குரலின் 100ஆவது பகுதியில், நாம் மீண்டும் இணைவோம், அதுவரை விடை தாருங்கள் அன்புநிறை நாட்டுமக்களே, நன்றி, வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் இந்த 98ஆவது பகுதியில் உங்களனைவரோடும் இணைவதில் எனக்கு ஈடில்லா மகிழ்ச்சி. சதம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம், மனதின் குரலை நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்பால் ஒரு அற்புதமான மேடையாக மாற்றியிருக்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும், எத்தனையோ இலட்சக்கணக்கான செய்திகள் வாயிலாக, பல்வேறு மக்களின் உள்ளத்தின் குரல்கள் என்னை வந்தடைகின்றன. நீங்கள் உங்களுடைய மனதின் சக்தியை நன்கறிவீர்கள்; அதைப் போலவே சமூக சக்தியானது எவ்வாறு தேசத்தின் சக்தியை அதிகரிக்கிறது என்பதை மனதின் குரலின் பலப்பல பகுதிகளில் கவனித்திருக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம், இவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன், ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன். எனக்கு இன்னும் அந்த நாள் நினைவில் இருக்கிறது…… அன்று தான் நாம் மனதின் குரலிலே, பாரதத்தின் பாரம்பரியமான விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிப்பது பற்றிப் பேசினோம், அல்லவா? உடனடியாக பாரதநாட்டு விளையாட்டுக்களோடு இணைவது, அதில் திளைப்பது, அவற்றைக் கற்றுக் கொள்வது பற்றிய எழுச்சி நாட்டில் உருவானது. மனதின் குரலில் நாம் பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றிப் பேசிய போது, நாட்டுமக்கள் இதற்கும் கூடத் தங்கள் கைகளாலேயே மெருகேற்றினார்கள். இப்போது பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் மீது எந்த அளவுக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அயல்நாடுகளிலும் இவற்றுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. மனதின் குரலில் பாரத நாட்டுப் பாரம்பரியங்களில் ஒன்றான கதை சொல்லுதல் பற்றி நாம் பேசினோம், உடனடியாக இதன் புகழ் தொலை தூரங்களையும் சென்றடைந்து விட்டது. மக்கள் மிக அதிக அளவில் பாரத நாட்டுக் கதை சொல்லும் முறைகளின்பால் ஈர்க்கப்படத் தொடங்கினார்கள்.
நண்பர்களே, சர்தார் படேலின் பிறந்த நாளான ஒற்றுமை தினம் தொடர்பாக நாம் மனதின் குரலில் மூன்று போட்டிகள் பற்றிப் பேசினோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் போட்டிகள், தேசபக்திப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் மற்றும் ரங்கோலி என்ற கோலம் போடுதலோடு தொடர்புடையன. நாடெங்கிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரளாக இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறும் போது பேருவகை எனக்கு ஏற்படுகிறது. சிறுவர்கள், பெரியோர், மூத்தோர் என இதில் அனைவரும் பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் தங்களுடைய நுழைவுகளை அனுப்பி இருக்கிறார்கள். இந்தப் போட்டிகளில் பங்கெடுக்கும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள். உங்களில் ஒவ்வொருவருமே ஒரு சாம்பியன் தான், கலையின் சாதகர் தாம். நம்முடைய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தின் மீது உங்கள் இதயங்களில் எத்தனை பிரேமை இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான். ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நண்பர்களே, தாலாட்டு எழுதும் போட்டியிலே முதல் பரிசினை, கர்நாடகத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.எம். மஞ்சுநாத் அவர்கள் வென்றிருக்கிறார். கன்னட மொழியில் எழுதப்பட்ட இவருடைய தாலாட்டுப் பாடலான மலகு கந்தாவிற்காக இவர் இந்தப் பரிசினை வென்றிருக்கிறார். இதை எழுதும் உத்வேகம் தனது தாய், பாட்டி ஆகியோர் பாடிய தாலாட்டுப் பாடல்களால் இவருக்குக் கிடைத்திருக்கிறது. நீங்களும் இதைக் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கும் மிக ஆனந்தமாக இருக்கும்.
உறங்கி விடு, உறங்கி விடு, செல்லமே,
என் புத்திசாலிச் செல்லமே, உறங்கி விடு,
பகல் கடந்து போச்சுது இரவு வந்தாச்சுது
உறக்க மங்கை இப்ப வந்துடுவா.
நட்சத்திரத் தோட்டத்திலிருந்து,
கனவுகளைக் கொண்டு வருவா,
உறங்கி விடு, உறங்கி விடு.
ஜோஜோ…. ஜோ…. ஜோ…
ஜோஜோ…. ஜோ…. ஜோ….
அஸாமின் காமரூபம் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தினேஷ் கோவாலா அவர்கள் இந்தப் போட்டியிலே இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் தாலாட்டுப் பாடலில் வட்டார மண் மற்றும் உலோகப் பாத்திரங்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரபலமான கைவினைத்திறத்தின் முத்திரை இருக்கிறது.
பானை செய்யும் தாத்தா பையோடு வந்திருக்காரு,
பையில அந்தப் பையில என்ன இருக்குது?
பானைத் தாத்தா பையைத் திறந்து பார்த்தாக்க,
பையுக்குள்ள இருந்திச்சுது ஒரு அழகு சட்டுவம்!
எங்க பாப்பா கேட்டா, பானை தாத்தா சொல்லு,
இந்த அழகு சட்டுவம், சொல்லு எப்படி ஆச்சுது!!
பாடல்கள், தாலாட்டுப் பாடல்களைப் போலவே கோலப்போட்டியும் கூட மிகவும் விரும்பப்பட்டதாக இருந்தது. இதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவுக்கு அழகான கோலங்களைப் போட்டு அனுப்பியிருந்தார்கள். இதிலே வெற்றி பெற்ற நுழைவு, பஞ்சாபின் கமல் குமார் அவர்களுடையது தான். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், உயிர்த்தியாகி வீரன் பகத் சிங்கின் மிகவும் அழகான கோலத்தை வரைந்திருந்தார். மகாராஷ்டிரத்தின் சாங்க்லியின் சச்சின் நரேந்திர அவசாரி அவர்கள் தனது கோலம் வாயிலாக ஜலியான்வாலா பாக், அங்கு அரங்கேறிய படுகொலை, உயிர்த்தியாகி உதம் சிங்கின் தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தார். கோவாவில் வசிக்கும் குருதத் வாண்டேகர் அவர்கள் காந்தியடிகள் தொடர்பான கோலத்தை ஏற்படுத்தியிருந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி செல்வம் அவர்களும் கூட சுதந்திரத்தின் பல மகத்தான வீரர்கள் மீது தனது குவிமையத்தைச் செலுத்தியிருந்தார். நாட்டுப்பற்றுப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர் டி. விஜய் துர்க்கா, இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுகுவில் தனது நுழைவை அனுப்பியிருந்தார். இவர் தனது பகுதியில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரரான நரசிம்ம ரெட்டி காருவினால் அதிகக் கருத்தூக்கம் பெற்றிருக்கிறார். நீங்களே கேளுங்களேன், விஜய் துர்க்கா அவர்களின் நுழைவின் ஒரு பகுதியை.
ரேனாடு பகுதியின் சூரியனே,
வீரம் நிறைந்தவனே நரசிம்மா!
சுதந்திரப் போராட்டத்தின் அச்சாணியே, ஆணிவேரே!
பரங்கியனின் கொடுமையான அடக்குமுறை பார்த்து
உன் குருதி கொதித்தது, நெஞ்சு தீயில் வெந்தது!
ரேனாடு பகுதியின் சூரியனே,
வீரம் நிறைந்தவனே நரசிம்மா!!
தெலுகுவிற்குப் பிறகு, இப்போது, உங்களுக்கு ஒரு மைதிலி மொழிப் பகுதியைப் பற்றிக் கூறுகிறேன். இதை தீபக் வத்ஸ் அவர்கள் அனுப்பியிருக்கிறார். இவரும் கூட இந்தப் போட்டியில் பரினை வென்றிருக்கிறார்.
பாரின் பெருமை பாரதம் அண்ணே,
மாட்சிமை உடையது நம் நாடண்ணே,
மூன்று திசையிலும் கடல்கள் சூழும்,
வடக்கில் இமயம் பலமாய் இருக்கும்,
கங்கை யமுனை கிருஷ்ணை காவிரி,
கோசி, கமலா பலான் நதிகள் ஆகும்.
மாட்சிமை உடையது நம் நாடண்ணே,
மூவண்ணத்திலே நம் உயிர்கள் உறையும்.
நண்பர்களே, எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்களுக்கும் இவை கண்டிப்பாகப் பிடித்திருக்கும். போட்டியில் இடம் பெற்றிருக்கும் இவை போன்ற நுழைவுகளின் பட்டியல் மிகவும் நீளமானது. நீங்கள், கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று, இவற்றை உங்கள் குடும்பத்தாரோடு பாருங்கள், கேளுங்கள், உங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இவை இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, விஷயம் பனாரஸ் பற்றியதாக இருந்தாலும், ஷெஹனாய் பற்றியதாக இருந்தாலும், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்களைப் பற்றியதாக இருந்தாலும், என்னுடைய சிந்தையானது இயல்பாகவே அதை நோக்கிச் சென்றுவிடும். சில நாட்கள் முன்பாக, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் இளைஞர் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருதானது இசை மற்றும் நிகழ்த்துக் கலைகள் துறையில் உயர்ந்துவரும் திறமைமிக்கக் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது கலை மற்றும் இசையுலகின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதோடு, இதன் வளத்திற்கும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றது. எந்த இசைக்கருவிகளின் புகழ் காலப்போக்கில் மங்கத் தொடங்கியிருக்கிறதோ, அவற்றில் யார் புத்துயிரைப் புகுத்தியிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். நீங்கள் அனைவரும் இந்த மெட்டினைக் கவனமாகக் கேளுங்கள்…….
இந்த இசைக்கருவி என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு இது என்ன என்பது தெரியாமல் இருக்கலாம். இந்த இசைக்கருவியின் பெயர் சுரசிங்கார் ஆகும், இந்த மெட்டினை ஏற்படுத்தியிருப்பவரின் பெயர் ஜாய்தீப் முகர்ஜி. ஜாய்தீப் அவர்கள், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் விருதினைப் பெறும் இளைஞர்களில் ஒருவராவார். இந்தக் கருவியின் இசையைக் கேட்பது என்பதே கடந்த 50கள், 60களுக்குப் பிறகு இயலாத ஒன்றாகி விட்டது. ஆனால் ஜாய்தீப் அவர்கள், சுரசிங்காரை மீண்டும் பிரபலமடையச் செய்வதில் முழு ஈடுபாட்டாடு இறங்கியிருக்கிறார். இதைப் போலவே சகோதரி, உப்பலப்பு நாகமணி அவர்களின் முயற்சியும் கூட மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது, இவருக்கு மாண்டலின் கருவியில் கர்நாடக இசைக்காக விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் போலவே சங்க்ராம் சிங் சுஹாஸ் பண்டாரே அவர்களுக்கும் வார்க்கரி கீர்த்தனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இசையோடு இணைந்த கலைஞர்கள் மட்டுமே இல்லை. வீ துர்க்கா தேவி அவர்கள், மிகப் பழமையான நாட்டிய வகையான கரகாட்டத்திற்காக இந்த விருதினைப் பெறுகிறார். இந்த விருதின் மேலும் ஒரு வெற்றியாளர், ராஜ் குமார் நாயக் அவர்கள், தெலங்கானாவின் 31 மாவட்டங்களில், 101 நாட்கள் வரை நடக்கக்கூடிய பேரினி ஓடிசி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இன்று, மக்கள் இவரை பேரினி ராஜ்குமார் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். பேரினி நாட்டியம், பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாட்டியம், இது காகதீய வம்சம் கோலோச்சிய காலத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. இந்த வம்சத்தின் வேர்கள் இன்றைய தெலங்கானாவோடு தொடர்புடையது. விருதைப் பெறும் மேலும் ஒரு வெற்றியாளர் சைகோம் சுர்சந்திரா சிங் அவர்கள். இவர் மைதேயி புங் இசைக்கருவியைத் தயாரிப்பதில் வல்லவர் என்று அறியப்படுகிறார். இந்த இசைக்கருவி மணிப்பூரோடு தொடர்புடையது. பூரன் சிங் ஒரு மாற்றுத்திறனாளிக் கலைஞர், இவர் ராஜூலா-மலுஷாஹி, ந்யௌலி, ஹுட்கா போல், ஜாகர் போன்ற பலவகைப்பட்ட இசை வடிவங்களையும் பிரபலமாக்கிக் கொண்டு வருகிறார். இவற்றோடு தொடர்புடைய பல ஒலிப்பதிவுகளையும் இவர் தயாரித்திருக்கிறார். உத்தராக்கண்டின் நாட்டுப்புற இசையில் தனது புலமையை வெளிப்படுத்தி பூரன் சிங் அவர்கள் பல விருதுகளை வென்றிருக்கிறார். போதிய அவகாசம் இல்லாமையால், விருது பெறும் அனைவரின் விபரங்களையும் என்னால் கூற முடியவில்லை; ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றிக் கண்டிப்பாகப் படித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதே போல, இந்தக் கலைஞர்கள் அனைவரும், நிகழ்த்துக் கலைகளை மேலும் பிரபலப்படுத்த, வேர்கள் மட்டத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளித்து வருவார்கள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இண்டியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையிலே பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு செயலி தான், ஈ-சஞ்சீவனி. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை, அதாவது தொலைவான பகுதிகளில் இருந்தவாறே, காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், காணொளி ஆலோசனை வாயிலாக பத்து கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள்!! நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஒரு அலாதியான உறவு – இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் அனைவருக்கும், இந்த வசதியால் பயனடையும் நோயாளிகளுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத நாட்டு மக்கள், தொழில்நுட்பத்தை எவ்வாறு தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு. கொரோனா காலத்தில் ஈ சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டு, எத்தனையோ பேர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பதை நாம் பார்த்தோம். இதைப் பற்றி மனதின் குரலில், ஒரு மருத்துவர், ஒரு நோயாளி ஆகியோரோடு உரையாடிப் பார்க்கலாமே, உங்களிடம் அவர்களின் எண்ணங்களைக் கொண்டு சேர்க்கலாமே, இது எப்படி ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்தேன். நம்மோடு சிக்கிமைச் சேர்ந்த மருத்துவர் மதன் மணி அவர்கள் இணைந்திருக்கிறார். மருத்துவர் மதன் மணி அவர்கள் சிக்கிமில் வசிப்பவர் என்றாலும், இவர் தனது மருத்துவப்படிப்பை தன்பாதிலே முடித்திருக்கிறார், பிறகு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்.டி. மேற்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். இவர் ஊரகப் பகுதிகளில் பல்லாயிரம் மக்களுக்கு தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
பிரதமர்: வணக்கம்… வணக்கம் மதன் மணி அவர்களே.
டாக்டர் மதன் மணி: வணக்கம் சார்.
பிரதமர்: நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.
டாக்டர்: சார்…. சொல்லுங்க சார்.
பிரதமர்: நீங்க பனாரஸில படிசீங்க தானே!
டாக்டர்: ஆமாங்க, நான் பனாரசில தான் படிச்சேன் சார்.
பிரதமர்: உங்க மருத்துவப் படிப்பை அங்க தானே படிச்சீங்க?
டாக்டர்: ஆமாங்க…. ஆமாங்க.
பிரதமர்: சரி, அப்ப நீங்க இருந்த போது இருந்த பனாரஸ், இப்ப மாறியிருக்கு, இதைப் பார்க்க நீங்க போயிருக்கீங்களா?
டாக்டர்: ஐயா பிரதமர் ஐயா என்னால போக முடியலை, நான் சிக்கிமுக்கு வந்த பிறகு அங்க போக முடியலை, ஆனா அங்க பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
பிரதமர்: அப்ப நீங்க பனாரஸை விட்டு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கு?
டாக்டர்: நான் 2006ஆம் ஆண்டு பனாரசை விட்டு வந்தேன் சார்.
பிரதமர்: ஓ…. அப்படீன்னா நீங்க கண்டிப்பா அங்க போய் பார்த்தே ஆகணும்.
டாக்டர்: கண்டிப்பா சார்.
பிரதமர்: நல்லது, நான் உங்களுக்கு ஏன் ஃபோன் பண்ணினேன்னா, நீங்க சிக்கிம்ல, ரொம்ப தொலைவான மலைகள்ல வசிக்கறவங்களுக்கு தொலைபேசிவழியாக ஆலோசனைகள் சொல்கிற விஷயத்தில மிகப்பெரிய சேவைகளைச் செய்யறீங்க.
டாக்டர்: ஆமாம் சார்.
பிரதமர்: மனதின் குரல் நேயர்களுக்கு உங்களோட அனுபவத்தைத் தெரிவிக்கணும்னு நான் விரும்பறேன்.
டாக்டர்: சரி சார்.
பிரதமர்: கொஞ்சம் சொல்லுங்களேன், உங்க அனுபவம் என்ன?
டாக்டர்: அனுபவம்…. என்னோட அனுபவம் ரொம்பவே அருமையானது சார். அது என்னென்னா, சிக்கிம்ல ரொம்ப அருகில இருக்கற பொதுச் சுகாதார மையம்னா, அங்க போகவே மக்கள் வண்டியில பயணிச்சு, குறைஞ்சது அதுக்கே 100-200 ரூபாய் செலவாயிரும். மேலும் மருத்துவர் இருப்பாரா மாட்டாராங்கறது இன்னொரு பிரச்சனை. ஆகையால Tele Consultation, தொலைபேசிவழி ஆலோசனை மூலமா நாங்க மக்களோட நேரடியா தொடர்பு ஏற்படுத்திக்கறோம், தொலைவான பகுதிகள்ல இருக்கற மக்கள் கிட்ட. நல்வாழ்வு ஆரோக்கிய மையத்தில இருக்கற சமுதாய சுகாதார அதிகாரி இருக்காங்களே, அவங்க எங்களுக்கும், தொலைவான பகுதிகள்ல இருக்கற மக்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தறாங்க. மேலும், அவங்களோட ரொம்ப நாளைய நோய்கள், அவை தொடர்பான அறிக்கைகள், அவங்களோட இப்போதைய நிலைமை, இது மாதிரியான எல்லா விவரங்களையும் எங்க கிட்ட அவங்க சொல்லிடுவாங்க.
பிரதமர்: அதாவது ஆவணங்களை உங்களுக்கு அனுப்பிடுவாங்களா?
டாக்டர்: ஆமா ஆமா. ஆவணங்களை அனுப்பவும் செய்வாங்க, அப்படி அனுப்ப முடியலைன்னா, அதைப் படிச்சுக் காட்டியும் கூட எங்களுக்குத் தெரிவிச்சிருவாங்க.
பிரதமர்: அதாவது அங்க இருக்கற நல்வாழ்வு மையத்தோட மருத்துவர் உங்ககிட்ட சொல்லிடுவாரு.
டாக்டர்: ஆமாங்க, நல்வாழ்வு மையத்தில இருக்கற Community Health Officer, சமூக சுகாதார அதிகாரி தான்.
பிரதமர்: பிறகு நோயாளியே அவங்க தங்களோட கஷ்டங்களை உங்ககிட்ட நேரடியாவே சொல்லுவாங்க.
டாக்டர்: ஆமாங்க. நோயாளிகளும் தங்களோட கஷ்டங்களை எங்க கிட்ட சொல்லுவாங்க. பிறகு நாங்க பழைய பதிவுகளைப் பார்த்து, வேற ஏதாவது புதுசா தெரிஞ்சுக்கணுமான்னு விசாரிப்போம். இப்ப ஒருத்தரோட இதயத் துடிப்பைக் கேட்கணும்னா, இல்லை ஒருத்தரோட கால் வீங்கியிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்னா என்ன செய்ய? ஒருவேளை சமுதாய சுகாதார அதிகாரி இதை கவனிக்கலைன்னா, முதல்ல போய் கால்ல வீக்கம் இருக்கா இல்லையான்னு பாருங்க, கண்ணைப் பாருங்க, ரத்தசோகை இருக்கா இல்லையான்னு பாருங்க, இருமல் இருந்துக்கிட்டே இருந்திச்சுன்னா, மார்பை சோதனை செய்யுங்க, அதில ஏதும் ஒலிகள் கேட்குதான்னு பார்க்க சொல்லுங்க.
பிரதமர்: நீங்க தொலைபேசியில பேசுவீங்களா இல்லை காணொளி அழைப்பை பயன்படுத்தறீங்களா?
டாக்டர்: ஐயா நாங்க காணொளி அழைப்பை பயன்படுத்தறோம்.
பிரதமர்: அப்ப உங்களால நோயாளியை பார்க்கவும் முடியுது.
டாக்டர்: ஆமா, நோயாளியை எங்களால பார்க்கவும் முடியுது.
பிரதமர்: அப்ப நோயாளியோட உணர்வு எப்படி இருக்குது?
டாக்டர்: நோயாளிக்கு ரொம்ப இதமா இருக்குது, டாக்டர் நம்மை உன்னிப்பா கவனிக்கறாருன்னு அவரு உணர்றாரு. மருந்தைக் குறைக்கணுமா கூட்டணுமானு அவருக்குக் குழப்பம் இருக்கு; ஏன்னா சிக்கிம்ல இருக்கற பெரும்பாலான நோயாளிங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் தான் உபாதைகள். இந்த நீரிழிவுக்கும், உயர் ரத்த அழுத்தத்துக்கும் மருந்து மாற்றம் செய்ய அவங்க மருத்துவரைப் போய் சந்திக்க ரொம்ப தொலைவு பயணிக்க வேண்டியிருக்கு. ஆனா, தொலைபேசி வழி ஆலோசனை வாயிலா இது அவங்களுக்கு இருந்த இடத்திலேயே கிடைச்சுடுது, மருந்துகளும் கூட உடல்நல மையங்கள்ல, இலவச மருந்துகள் முனைப்பு மூலமா கிடைச்சுப் போகுது. அங்கயிருந்தே மருந்துகளையும் வாங்கிட்டுப் போயிடறாங்க.
பிரதமர்: சரி மதன் மணி அவர்களே, டாக்டர் வந்து பார்க்காத வரைக்கும், நோயாளிகளுக்குப் பொதுவா ஒரு நிம்மதி ஏற்படுறதில்லை, இது பொதுவா அவங்க இயல்பா இருக்குது. அதே போல டாக்டருக்கும் கூட கொஞ்சம் நோயாளியைப் பார்த்தா நல்லாயிருக்கும்னு படும். அந்த வகையில எல்லாம் தொலைபேசி வழி ஆலோசனைன்னு வரும் போது, டாக்டர்கள் எப்படி இதை உணர்றாங்க, நோயாளிகளோட உணர்வு எப்படி இருக்கு?
டாக்டர்: ஆமாம் சார், நோயாளிகள் மருத்துவர்களைப் பார்க்கணும்னு எங்களுக்குமே தோணிச்சுன்னா, நாங்க என்ன செய்யறோம்னா, என்ன என்ன எல்லாம் பார்க்கணும்னு நாங்க நினைக்கறோமோ, அங்க இருக்கற சமுதாய சுகாதார அதிகாரி கிட்ட சொல்லி, வீடியோவிலேயே காட்ட நாங்க சொல்றோம். சில வேளைகள்ல நோயாளிகளை வீடியோவுல பக்கத்தில வந்து காட்டச் சொல்லி, அவங்க பிரச்சனைகள் பத்தி, ஒருத்தருக்கு சருமப் பிரச்சனை இருக்குன்னா, அதை நாங்க காணொளியிலேயே கவனிச்சுடறோம். இதனால அவங்களுக்கும் ஒரு மன நிறைவு ஏற்படுது.
பிரதமர்: அப்புறமா அதுக்கான சிகிச்சைக்குப் பிறகு அவங்களுக்கும் ஒரு நிறைவு உண்டாகி, அவங்க அனுபவம் எப்படி இருக்கு? நோயாளிகள் குணமாகறாங்களா?
டாக்டர்: சார், அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா, நான் இப்ப சுகாதாரத் துறையில இருக்கேன், கூடவே தொலைபேசி வழியா மருத்துவ ஆலோசனையும் செய்யறேன்ங்கற போது, கோப்புகளோட சேர்த்து நோயாளிகளையும் கவனிச்சுக்கறது ரொம்ப அருமையான சுகமான அனுபவமா நான் உணர்றேன்.
பிரதமர்: இதுவரை எத்தனை நோயாளிகளுக்கு நீங்க தொலைபேசி வாயிலா ஆலோசனை அளிச்சிருக்கீங்க?
டாக்டர்: இதுவரை நான் 536 நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கேன்.
பிரதமர்: ஓ… அதாவது இப்ப இது உங்களுக்கு கைவந்த கலைன்னு சொல்லலாம் இல்லையா?
டாக்டர்: ஆமாம் சார், இது ரொம்ப பிடிச்சுப் போச்சு.
பிரதமர்: சரி, உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்க சிக்கிமோட தொலைவான வனங்கள்ல, மலைகள்ல வசிக்கறவங்களுக்கு ரொம்ப சிறப்பான சேவை ஆற்றி வர்றீங்க. மேலும் சந்தோஷம் அளிக்கும் விஷயம் என்னென்னா, தேசத்தின் தொலைவான பகுதிகள்லயும் கூட தொழில்நுட்பம் எத்தனை சிறப்பான முறையில பயன்படுத்தப்படுது அப்படீங்கறது தான். சரி, என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
மருத்துவர்: ரொம்ப ரொம்ப நன்றி சார்.
நண்பர்களே, டாக்டர் மதன் மணி அவர்கள் கூறியதிலிருந்து, ஈ-சஞ்சீவனி செயலியானது, எந்த வகையில் அவருக்கு உதவிகரமாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. டாக்டர் மதன் அவர்களை அடுத்து நாம் மேலும் ஒரு மதன் அவர்களை சந்திக்க இருக்கிறோம். இவர் உத்தர பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் வசிக்கும் மதன் மோஹன் லால் அவர்கள். இப்போது இவரும் கூட தற்செயல் நிகழ்வாக, இவர் இருக்கும் சந்தௌலியும் பனாரஸோடு தொடர்புடையது தான். வாருங்கள் மதன் மோஹன் அவர்களிடமிருந்து, ஈ சஞ்ஜீவனி பற்றி ஒரு நோயாளி என்ற வகையிலே அவருடைய அனுபவம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
பிரதமர்: மதன் மோஹன் அவர்களே, வணக்கம்.
மதன் மோஹன்: வணக்கம், வணக்கம் ஐயா.
பிரதமர்: வணக்கம், சரி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கறதா சொன்னாங்க, சரியா?
மதன் மோஹன்: ஆமாங்கய்யா.
பிரதமர்: மேலும் நீங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைபேசிவழி ஆலோசனை மூலமா உங்க நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கிட்டு வர்றீங்க இல்லையா?
மதன் மோஹன்: ஆமாங்க.
பிரதமர்: ஒரு நோயாளிங்கற முறையில, கஷ்டப்படுறவர்ங்கற வகையில, உங்க அனுபவம் என்னங்கறதை தெரிஞ்சுக்க விரும்பறேன், ஏன்னா நாட்டுமக்கள் வரை இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்க நினைக்கறேன். இன்றைய தொழில்நுட்பம் வாயிலா நமது கிராமங்கள்ல வசிக்கறவங்களும் கூட இதனால எப்படி பயனடையலாம், எப்படி பயன்படுத்தப்படுதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
மதன் மோஹன்: அது என்னென்னா சார், மருத்துவமனைகள் தொலைவுல இருக்கு, நீரிழிவுன்னு சொன்னா, அதுக்கு 5-6 கிலோமீட்டர் பயணிச்சு சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்திச்சு. ஆனா நீங்க ஏற்படுத்தியிருக்கற அமைப்பு மூலமா, நாங்க இப்ப போறோம், எங்களை பரிசோதனை செய்யறாங்க, வெளி மருத்துவர்களோடயும் எங்களை பேச வைக்கறாங்க, மருந்துகளையும் தந்துடறாங்க. இதனால எங்களுக்கு பெரிய ஆதாயம், எல்லா மக்களுக்கும் இதனால ரொம்ப சௌகரியமா இருக்கு.
பிரதமர்: சரி, ஒரே மருத்துவர் ஒவ்வொரு முறையும் உங்களை பரிசோதனை செய்யறாரா இல்லை மருத்துவர்கள் மாறிக்கிட்டே இருக்காங்களா?
மதன் மோஹன்: அங்க இருக்கறவங்களுக்குப் புரியலைன்னா, மருத்துவர் கிட்ட காட்டுறாங்க. அவங்க ஆராஞ்சுட்டு வேற டாக்டர் கிட்ட எங்களைப் பேச வைக்கறாங்க.
பிரதமர்: இப்ப மருத்துவர் உங்களுக்கு அளிக்கற ஆலோசனைகளால உங்களுக்கு முழுப் பயனையும் அடைய முடியுதா?
மதன் மோஹன்: கண்டிப்பா பயனுடையதா இருக்குங்க. இதனால ரொம்பவே உபயோகமா இருக்கு. மேலும் கிராமத்து மக்களுக்கும் இதனால ரொம்ப பயன் இருக்கு. எல்லாரும் அங்க போய் ஆலோசனை கேட்கறாங்க, அண்ணே எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கு, எனக்கு சர்க்கரை இருக்கு, பரிசோதனை செய்யுங்க, மருந்து சொல்லுங்கன்னு கேட்கறாங்க. முன்ன எல்லாம் 5-6 கிலோமீட்டர் தூரம் பயணம் செஞ்சு போயிக்கிட்டு இருந்தாங்க, நீளமான வரிசை இருக்கும், ரத்த பரிசோதனைக்கு பெரிய வரிசை கட்டி நிப்பாங்க. ஒவ்வொரு நாளும் வேதனையா இருக்கும்.
பிரதமர்: அதாவது இப்ப உங்க நேரம் பெரிய அளவுல மிச்சமாகுது!!
மதன் மோஹன்: அது மட்டுமா, பணமும் விரயமாச்சு. ஆனா இப்ப இங்க இலவச சேவைகள் கிடைச்சு வருது.
பிரதமர்: நல்லது, நீங்க உங்க முன்னால ஒரு மருத்துவரை நேரடியா சந்திக்கும் போது ஒரு நம்பிக்கை கண்டிப்பா ஏற்படும். அப்ப மருத்துவர் உங்க நாடிய பிடிச்சுப் பார்க்கறாரு, உங்க கண்களை ஆராயறாரு, உங்க நாக்கை நீட்டச்சொல்லிப் பார்க்கறாரு, அப்ப ஒரு விதமான உணர்வு ஏற்படும். ஆனா இப்ப இந்த தொலைபேசி வழி ஆலோசனைங்கற போது எப்படி நீங்க உணர்றீங்க?
மதன் மோஹன்: ஆமா, கண்டிப்பா நிம்மதியா இருக்கும். அதாவது அவங்க நாடி பிடிச்சுப் பார்க்கறாங்க அப்படீங்கற உணர்வு வித்தியாசமா இருக்கும், ஆரோக்கியமான உணர்வு ஏற்படும். நீங்க ரொம்ப நல்லதொரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கீங்க, இதனால பல பிரச்சனைகள்லேர்ந்து விடுதலை கிடைச்சிருக்கு. போகறதே ஒரு கஷ்டமா இருக்கும், நீளமான வரிசையில நிக்கணும், வண்டிக்கு வாடகை வேற குடுக்கணும்….. ஆனா இப்ப எல்லா வசதிகளும் வீட்டில இருந்தபடியே கிடைச்சுட்டு வருது.
பிரதமர்: சரி மதன் மோஹன் அவர்களே, என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். வயதான இந்த நிலையிலயும் நீங்க தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட்டு இருக்கீங்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தறீங்க. மத்தவங்களுக்கு இதுபத்திச் சொல்லுங்க, இதனால அவங்க நேரவிரயம் தடுக்கப்படும், பணம் மிச்சமாகும், அவங்களுக்குக் கிடைக்கற ஆலோசனைகளைத் தவிர, அவங்களுக்கு நல்ல முறையில மருந்துகளும் கிடைக்கும்.
மதன் மோஹன்: ஆமாம் ஐயா, அருமை.
பிரதமர்: சரி உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள் மதன் மோஹன் அவர்களே.
மதன் மோஹன்: பனாரஸை நீங்க காசி விஸ்வநாத் நிலையமா ஆக்கிட்டீங்க, வளர்ச்சியை ஏற்படுத்திட்டீங்க. என் தரப்பிலிருந்து உங்களுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள் ஐயா.
பிரதமர்: நான் உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கறேன். நான் என்னங்க செஞ்சுட்டேன், பனாரஸ்வாசிங்க தான் பனாரஸை உருவாக்கி இருக்காங்க. இல்லைன்னா, நான் அன்னை கங்கைக்குச் சேவையின் பொருட்டு, அன்னை கங்கையோட அழைப்புக்கு அடிபணிஞ்சேன், அவ்வளவு தான், வேற ஒண்ணும் இல்லை. சரிங்க, உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். வணக்கங்க.
மதன் மோஹன்: வணக்கங்க.
பிரதமர்: வணக்கங்க.
நண்பர்களே, தேசத்தின் சாமான்ய குடிமகனுக்காக, மத்தியத் தட்டு மக்களுக்காக, மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்காக, இந்த ஈ-சஞ்சீவனியானது உயிர்க்கவசமாகத் திகழும் ஒரு செயலி. இது பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் சக்தி. மேலும் இதன் தாக்கத்தை இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பாரதத்தின் யுபிஐயின் சக்தியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகின் எத்தனையோ தேசங்கள் இதன்பால் கவரப்பட்டு இருக்கின்றன. சில நாட்கள் முன்பாக பாரதத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையே, யுபிஐ-பே நௌ இணைப்பு தொடங்கப்பட்டது. இப்போது சிங்கப்பூர் மற்றும் பாரதத்தின் மக்கள் தங்கள் மொபைல் வாயிலாக, அவரவர் தங்கள் நாடுகளுக்குள்ளே எப்படி பணப்பரிமாற்றத்தைச் செய்து கொள்கிறார்களோ, அதைப் போலவே இப்போது பரஸ்பரம் பரிமாற்றத்தைச் செய்து கொள்ள முடியும். மக்களும் இதனால் ஆதாயம் அடையத் தொடங்கிவிட்டர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரதத்தின் ஈ-சஞ்ஜீவனி செயலியாகட்டும், யுபிஐ ஆகட்டும், வாழ்க்கையை சுலபமாக்கும் தன்மையை அதிகரிப்பதில் இவை மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
என் கனிவான நாட்டுமக்களே, ஒரு தேசத்தில் அழிந்து வரும் பறவையினமோ, ஏதோ ஒரு உயிரினமோ, அழிவின் விளிம்பிலிருந்து அவை காப்பாற்றப்படுகிறன, இது உலகிலே பேசுபொருளாக ஆகிறது. நமது தேசத்திலும் கூட இப்படி பல மகத்துவமான பாரம்பரியங்கள் அழிந்து விட்டன, மக்களின் மனங்களிலிருந்து அகன்று விட்டன. ஆனால் இப்போது மக்களின் பங்களிப்புச் சக்தியின் துணையோடு, இவற்றிற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, இது தொடர்பான விவாதத்தை அரங்கேற்ற மனதின் குரலை விடச் சிறப்பான மேடை வேறு என்னவாக இருக்க முடியும்?
நான் உங்களிடத்திலே இப்போது கூறவிருப்பது, இந்தத் தகவல் உள்ளபடியே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வல்லது, நமது மரபின் மீது உங்களுக்குப் பெருமை உண்டாகும். அமெரிக்காவில் வசிக்கும் கஞ்சன் பேனர்ஜி அவர்கள், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின்பால் என் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நான் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். நண்பர்களே, மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பான்ஸ்பேரியாவிலே, இந்த மாதம், த்ரிபேனி கும்போ மொஹொத்ஷோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என்றாலும், இது ஏன் இத்தனை விசேஷமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏன் விசேஷமானது என்றால், இந்த நிகழ்வு 700 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக 700 ஆண்டுகளுக்கு முன்பாக, பங்காலின் திரிபேனியில் நடக்கும் இந்த மஹோத்சவம் தடைப்பட்டுப் போனது. இது நாடு விடுதலை அடைந்த பிறகு தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால், அப்படி நடக்கவில்லை. ஈராண்டுகள் முன்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ‘திரிபேனி கும்போ பொரிசாலோனா ஷொமிதி’ மூலமாக, இந்த மகோத்ச்வத்தை மீண்டும் தொடங்கினார்கள். இந்த ஏற்பாட்டோடு தொடர்புடைய அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு பாரம்பரியத்திற்கு மட்டும் உயிர் அளிக்கவில்லை, மாறாக, நீங்கள், பாரதத்தின் கலாச்சார மரபின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருந்திருக்கிறீர்கள்.
நண்பர்களே, மேற்கு வங்கத்தின் திரிபேனி, பல நூற்றாண்டுகளாகவே ஒரு பவித்திரமான இடமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இதைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புனித நூல்களில், வைணவ இலக்கியங்களில், சாக்த இலக்கியங்களில், இன்னும் பிற வங்காள இலக்கியங்களில் காணப்படுகிறது. பல்வேறு வரலாற்று ஆவணங்களிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், ஒரு காலத்திலே இந்தப் பகுதி, சம்ஸ்கிருதம், கல்வி மற்றும் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியிருந்தது என்பது தான். பல புனிதர்களும், இதை மாக சங்கராந்தியில் கும்ப ஸ்நானம் செய்ய பவித்திரமான இடமாகக் கருதுகிறார்கள். திரிபேனியில் நீங்கள் கங்கைத் துறை, சிவன் கோயில், சுடுமண் சிற்பக்கலையால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கட்டிடங்களைக் காணலாம். திரிபேனியின் மரபை மீள் நிறுவவும், கும்பப் பாரம்பரியத்தின் பெருமைக்குப் புத்துயிர் அளிக்கவும் இங்கே, கடந்த ஆண்டு கும்ப மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கும்ப மஹாஸ்நானம் மற்றும் திருவிழாவானது, இந்தத் துறையில், ஒரு புதிய சக்தியைப் பெருக்கெடுத்து ஓட விட்டிருக்கிறது. மூன்று நாட்கள் வரை, ஒவ்வொரு நாளும் நடைபெறும் கங்கை ஆரத்தி, ருத்ராபிஷேகம் மற்றும் யாகங்களில் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த முறை நடைபெற்ற மஹோத்சவத்தில் பல்வேறு ஆசிரமங்கள், மடங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். வங்காளப் பாரம்பரியங்களோடு தொடர்புடைய பல்வேறு வழிமுறைகளான கீர்த்தனைகள், பாவுல், கோடியோன் நடனங்கள், ஸ்திரீ-கோல், போரேர் கானம், சோஊ-நடனம், மாலைநேர நிகழ்ச்சிகளில், கருத்தைக் கவரும் மையங்களாக ஆகியிருந்தன. தேசத்தின் பொன்னான கடந்த காலத்தோடு நமது இளைஞர்களை இணைக்கும் பாராட்டுக்குரிய முயற்சியாக இது அமைந்திருந்தது. பாரதத்தில் இப்படிப்பட்ட மேலும் பல பழக்கங்கள் இருந்தன, இவற்றை மீளுயிர்ப்பிக்க வேண்டியது அவசியம். இவை பற்றி நடக்கும் விவாதங்கள், இவற்றின்பால் மக்களின் மனங்களில் கண்டிப்பாக உத்வேகத்தை ஊட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
என் அன்புநிறை நாட்டுமக்களே, தூய்மை பாரதம் இயக்கத்தில் நமது தேசத்தில் மக்களின் பங்கெடுப்பு என்பதன் பொருளையே மாற்றி விட்டது. தேசத்தில் எங்காவது யாராவது தூய்மையோடு தொடர்புடையவராக இருக்கிறார், சிலர் இவை பற்றிய தகவல்களை எனக்கு அவசியம் அனுப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒன்றின் மீது என் கவனம் ஈர்க்கப்பட்டது, இது ஹரியாணாவின் இளைஞர்களின் தூய்மை இயக்கம். ஹரியாணாவில் இருக்கும் ஒரு கிராமம், துல்ஹேடி. இங்கிருக்கும் இளைஞர்கள், நாம் பிவானி நகரத்தைத் தூய்மைக்கான ஒரு எடுத்துக்காட்டாக ஆக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். இவர்கள் தூய்மை மற்றும் மக்கள் சேவைக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்தக் குழுவோடு தொடர்புடைய இளைஞர்கள் காலை 4 மணிக்கு பிவானிக்குச் சென்று விடுவார்கள். நகரின் பல்வேறு இடங்களில், இவர்கள் இணைந்து துப்புரவுப் பணியை மேற்கொள்வார்கள். இவர்கள் இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் பல டன் பெறுமானமுள்ள குப்பையை அகற்றியிருக்கிறார்கள்.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒரு மகத்துவம் வாய்ந்த இலக்கு Waste to Wealth குப்பையிலிருந்து கோமேதகம். ஒடிஷாவின் கேந்திரபாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியான கமலா மோஹ்ரானா, ஒரு சுயவுதவிக் குழுவை இயக்கி வருகிறார். இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பால்கவர் மற்றும் பிற பேக் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களைக் கொண்டு கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். இது இவர்களுக்குத் தூய்மையோடு கூடவே வருமானத்தையும் ஈட்டும் ஒரு நல்ல வழிமுறையாக ஆகி வருகிறது. நாம் தீர்மானம் மட்டும் செய்து விட்டால் போதும், தூய்மை பாரதத்திற்கு நமது மிகப்பெரிய பங்களிப்பை நம்மால் அளிக்க முடியும். குறைந்தபட்சம் நெகிழிப் பைகளுக்கு பதிலாகத் துணிப் பைகளைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை நாமனைவரும் மேற்கொண்டாக வேண்டும். உங்களுடைய இந்த உறுதிப்பாடு, உங்களுக்கு எத்தனை நிறைவை அளிக்குமோ, அதே அளவுக்கு இது பிறகுக்குக் கருத்தூக்கமாகவும் அமையும்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நானும் நீங்களும் இணைந்து, உத்வேகமளிக்கும் பல விஷயங்கள் குறித்து, மீண்டும் ஒருமுறை கலந்தோம். குடும்பத்தோடு அமர்ந்து இதைக் கேட்டோம், இப்போது இதை நாள்முழுவதும் அசை போட்டுக் கொண்டிருப்போம். நாம் தேசத்தின் கடமையுணர்வு குறித்து எந்த அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு நமக்குள் சக்தி பிறக்கிறது. இந்த சக்திப் பெருக்கோடு பயணித்து இன்று நாம் மனதின் குரலின் 98ஆவது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கிறோம். இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து ஹோலிப் பண்டிகை வரவிருக்கிறது. அனைவருக்கும் ஹோலிப் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்கள். நாம், நமது பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உறுதிப்பாட்டோடு கொண்டாட வேண்டும். உங்களுடைய அனுபவங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். இப்போது நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை, மீண்டும் புதிய விஷயங்களோடு சந்திப்போம். பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.
நண்பர்களே, தெஹ்ராதூனைச் சேர்ந்த வத்சல் அவர்கள், ஜனவரி 25ஆம் தேதிக்காகத் தான் எப்போதுமே காத்திருப்பதாக எழுதியிருக்கிறார். ஏனென்றால் அந்த நாளன்று தான் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதாகவும், அதே போல, ஜனவரி 25ஆம் தேதி மாலையே கூட, ஜனவரி 26ஆம் தேதிக்கான உற்சாகத்தை அதிகரித்து விடுவதாகவும் எழுதியிருக்கிறார். கள அளவில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சாதனைகளைப் புரிவோருக்கு மக்களின் பத்ம விருதுகள் தொடர்பாக பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முறை பத்ம விருதால் கௌரவிக்கப்படுவோரில், பழங்குடியினத்தவர்களும், பழங்குடியினத்தவர் வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்குமான நல்ல சிறப்பான பிரதிநிதித்துவம் இருக்கிறது. பழங்குடியினத்தோரின் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கையோட்டத்திலிருந்து வேறுபட்டது, அதற்கென சவால்கள் பிரத்யேகமாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும், பழங்குடியினங்கள், தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றார்கள். பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளவும் முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் போலவே T டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டா போன்ற பழங்குடி மொழிகளின் மீதான பணிகளில் ஈடுபட்டு வரும் பல பெரியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நம்மனைவருக்குமே பெருமையளிக்கும் விஷயம். தானீராம் T டோடோ, ஜானும் சிங் சோய், பீ. ராமகிருஷ்ண ரெட்டி அவர்களின் பெயர், இப்போது நாடு முழுவதும் அறியப்படும் பெயர்களாக கௌரவிக்கப்படும். சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினத்தவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஹீராபாயி லோபீ, ரத்தன் சந்த்ர கார், ஈஸ்வர் சந்திர வர்மா அவர்களைப் போல. பழங்குடியினச் சமூகங்கள் நம்முடைய பூமி, நமது மரபுகள் ஆகியவற்றின் பிரிக்கமுடியா அங்கங்களாக இருந்து வந்துள்ளார்கள். தேசம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அவர்களுக்காக செயலாற்றுவோருக்கு மரியாதை, புதிய தலைமுறைகளை உத்வேகப்படுத்தும். நக்சல்வாதம் பாதித்திருக்கும் பகுதிகளிலும் கூட, இந்த ஆண்டு பத்ம விருதுகளின் எதிரொலி ஓங்கி ஒலிக்கின்றது. தனது முயற்சிகள் வாயிலாக, நக்சல்வாதம் பாதித்த பகுதிகளில் வழிதவறிப் போன இளைஞர்களுக்கு சரியான பாதையைக் காட்டியுதவியவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக காங்கேரில் மரத்தில் வேலைப்பாடு செய்யும் அஜய் குமார் மண்டாவீ, கட்சிரௌலீயின் பிரசித்தமான ஜாடீபட்டீ ரங்கபூமியோடு தொடர்புடைய பரசுராம் கோமாஜீ குணே ஆகியோருக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இதைப் போலவே வட கிழக்கில் தங்களுடைய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கும் ராமகுயிவாங்கபே நிஉமே, விக்ரம் பஹாதுர் ஜமாதியா, கர்மா வாங்சூ ஆகியோரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்த முறை பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படுவோரில் பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்,; இவர்கள் இசையுலகை நிறைவடையச் செய்திருக்கிறார்கள். யாருக்குத் தான் இசை பிடிக்காது!! அனைவருக்கும் பிடித்தமான இசை வேறுவேறாக இருக்கலாம், ஆனால், சங்கீதம் என்பது அனைவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. இந்த முறை பத்ம விருதுகளைப் பெறுவோரில், சந்தூர், பம்ஹும், த்விதாரா போன்ற நமது பாரம்பரியமான வாத்தியக் கருவிகளின் இசையைப் பொழிவதில் பாண்டித்தியம் பெற்றோரும் உண்டு. குலாம் மொஹம்மத் ஜாஸ், மோஆ சு-போங்க், ரீ-சிம்ஹபோர் குர்கா-லாங்க், முனி-வேங்கடப்பா, மங்கல் K காந்தி ராய் போன்ற பல நபர்களின் பெயர்கள், நாலாபுறங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, பத்ம விருதுகளைப் பெறும் அநேகம் நபர்கள், நமக்கு மத்தியிலிருந்து வரும் இந்த நண்பர்கள், எப்போதும் தேசத்தை அனைத்திற்கும் மேலாகக் கருதியவர்கள், தேசமே முதன்மை என்ற கோட்பாட்டிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர்கள். அவர்கள் சேவையுணர்வால் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள், இதற்காக அவர்கள் என்றுமே விருதுகளை வேண்டவுமில்லை, விரும்பவுமில்லை. யாருக்காக அவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அவர்களின் முகங்களில் இருக்கும் சந்தோஷம் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய விருதுகள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டவர்களை கௌரவப்படுத்துவதில், நாம் நாட்டுமக்களின் கௌரவத்தை அதிகப்படுத்துகிறோம். பத்ம விருதுகளின் வெற்றியாளர்கள் அனைவரின் பெயர்களையும் என்னால் இந்த சந்தர்ப்பத்தில் கூற முடியாமல் இருக்கலாம்; ஆனால் உங்களனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் பத்ம விருதுகளைப் பெற்ற பெரியோரின் கருத்தூக்கமளிக்கும் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நண்பர்களே, இன்று நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் குடியரசுத் திருநாள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு சுவாரசியமான புத்தகம் குறித்தும் பேச விரும்புகிறேன். சில வாரங்கள் முன்பாகத் தான் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது, இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் பெயர் India – The Mother of Democracy, இதில் பல சிறப்பான கட்டுரைகள் இருக்கின்றன. பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பாரத நாட்டவர்களான நாம் அனைவரும் நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெருமிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடிநரம்புகளில் இருக்கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே விளங்கி வருகிறது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் தான். டாக்டர். அம்பேட்கர் அவர்கள் பௌத்த பிக்ஷு சங்கத்தை, பாரதநாட்டுப் பாராளுமன்றத்தோடு ஒப்பிட்டார்கள். கோரிக்கைகள், தீர்மானங்கள், கோரம் என்ற குறைவெண் வரம்பு, வாக்களித்தல், மேலும் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுதல் தொடர்பாக பல விதிமுறைகள் அதில் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்தூக்கம், அவர் காலத்திய அரசியல் முறைகளிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என்று பாபாசாஹேப் கருதினார்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உண்டு, உத்திரமேரூர். இங்கே 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன போன்று. நமது தேசத்தின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களின் மேலும் ஒரு எடுத்துக்காட்டு, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஸவேஷ்வரரின் அனுபவ மண்டபம். இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடவும் பழமையானது என்பதையறிந்து உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும். வாரங்கல்லைச் சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மிகவும் பிரசித்தமானவை. பக்தி இயக்கமானது, மேற்கு பாரதத்திலே, ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்தப் புத்தகத்திலே, சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. குரு நானக் தேவ் ஜி, அனைவரின் சம்மதத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய பாரதத்தின் உராவ், முண்டா பழங்குடியினத்தவர்களின் சமூகத்தால் இயக்கப்படும், ஒருமித்த கருத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நல்லபல தகவல்கள் இருக்கின்றன. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, எப்படி நமது தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களாட்சியின் உணர்வுகள், ஒரு பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடி வந்திருக்கின்றன என்பதை நன்கு உணர்வீர்கள். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையிலே, நாம், தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், உலகத்தின் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். இதனால் தேசத்தின் ஜனநாயக உணர்வு மேலும் ஆழப்படும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, யோகக்கலை தினத்திற்கும், நம்முடைய பலவகையான சிறுதானியங்களுக்கும் இடையே பொதுவான விஷயம் என்னவென்று நான் உங்களிடம் கேட்டால், இவற்றுக்கிடையே என்ன ஒப்புமை காண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? இரண்டுக்கும் இடையே கணிசமான பொதுவான கூறுகள் உண்டு என்று நான் கூறுவேன் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உள்ளபடியே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச யோகக்கலை தினத்தையும், சர்வதேச சிறுதானிய ஆண்டினையும் பற்றிய தீர்மானத்தை, பாரதம் முன்மொழிந்ததை ஒட்டியே மேற்கொண்டது. இரண்டாவதாக, யோகக்கலையும் உடல்நலத்தோடு தொடர்புடையது, சிறுதானியங்களும் உடல்நலத்துக்கு மகத்துவமான பங்களிப்பை அளிப்பது. மூன்றாவதாக, மகத்துவம் வாய்ந்த விஷயம் – இரண்டுமே மக்கள் இயக்கங்களாக மாறி, மக்கள் பங்கெடுப்பின் காரணமாக புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த வகையில் மக்கள் பரவலான முறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, யோகம் மற்றும் உடலுறுதியைத் தங்களுடைய வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ, இதைப் போலவே சிறுதானியங்களையும் கூட மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். மக்கள் இப்போது சிறுதானியங்களைத் தங்களுடைய உணவுகளில் அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகின்றார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கத்தையும் நம்மால் காண முடிகிறது. இதனால் பாரம்பரியமாகவே சிறுதானியங்களை உற்பத்தி செய்து வந்த சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். உலகம் இப்போது சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதில் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. வேறொரு புறத்தில் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் சங்கங்களான FPOக்களும், தொழில் முனைவோரும் இப்போது சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவது, மக்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் நாந்தயால் மாவட்டத்தில் வசிக்கும் கே.வி. ராமா சுப்பா ரெட்டி அவர்கள், சிறுதானியங்களை விளைவிக்கும் பொருட்டு, தனது நல்ல சம்பளம் தரும் வேலையைத் துறந்தார். தாயாரின் கையால் உருவாக்கப்பட்ட சிறுதானியத் தின்பண்டங்களின் சுவை அவர் நினைவுகளில் எந்த அளவுக்கு ஊறியிருந்தது என்றால், இவர் தனது கிராமத்தில் கம்பு தானியத்தைப் பதனிடும் அலகைத் தொடங்கினார். சுப்பா ரெட்டி அவர்கள், மக்களுக்குக் கம்பு தானியத்தின் ஆதாயங்களையும் எடுத்துக் கூறுகிறார், இதை எளிதாகக் கிடைக்குமாறும் செய்கிறார். மஹாராஷ்டிரத்தின் அலீபாகுக்கு அருகே கேநாட் கிராமத்தில் வசிக்கும் ஷர்மிளா ஓஸ்வால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறுதானிய விளைச்சலில், தனித்தன்மை வாய்ந்த முறையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இவர் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் – திறம்பட்ட விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார். இவருடைய முயற்சிகளின் பலனாக சிறுதானியங்களின் விளைச்சல் மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரித்திருக்கின்றது.
சத்திஸ்கட்டின் ராய்கட் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இங்கே இருக்கும் சிறுதானிய கஃபேயுக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். சில மாதங்கள் முன்பாகத் தான் தொடங்கப்பட்ட இந்த சிறுதானிய சிற்றுண்டியகத்தில் அப்பங்கள், தோசை, மோமோஸ், பீட்ஸாக்கள், மஞ்சூரியன் போன்ற தின்பண்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நான் உங்களிடம் மேலும் ஒரு விஷயம் பற்றிச் சொல்லவா? நீங்கள் entrepreneur என்ற சொல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதாவது தொழில்முனைவோர். ஆனால் நீங்கள் Milletpreneurs பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஒடிஷாவில் Milletpreneurகள் எனப்படும் சிறுதானியத் தொழில்முனைவோர் இப்போதெல்லாம் செய்திகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பழங்குடியினத்தவர் மாவட்டமான சுந்தர்கட்டுக்கு அருகே, 1,500 பெண்களின் சுயவுதவிக் குழுவானது, ஓடிஷா சிறுதானியங்கள் இயக்கத்தோடு இணைந்திருக்கிறது. இங்கே இருக்கும் பெண்கள், சிறுதானியங்களில் குக்கீஸ் தின்பண்டம், ரஸ்குல்லா, குலாப் ஜாமுன், கேக்குகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். சந்தையில் இவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் காரணத்தால், வருவாயும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் கல்புர்கியில் ஆலந்த் புதாயி சிறுதானிய குடியானவர்கள் உற்பத்தியாளர் கம்பெனியானது கடந்த ஆண்டு சிறுதானிய ஆய்வுக்கான இந்தியக் கழகத்தின் மேற்பார்வையில் தனது பணியைத் தொடக்கியது. இங்கே தயாரிக்கப்படும், காக்ரா, பிஸ்கட்டுகள், லட்டு போன்றவை மக்களின் விருப்பத்தைப் பெற்று வருகின்றன. கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில், ஹுல்சூர் சிறுதானிய உற்பத்தியாளர் கம்பெனியோடு தொடர்புடைய பெண்கள், சிறுதானியங்களைப் பயிர் செய்வதோடு கூடவே, அவற்றை மாவாக அரைத்தும் தயார் செய்து கொடுக்கிறார்கள். இதனால் இவர்களின் வருவாயில் கணிசமான அதிகரிப்பும் இருக்கிறது. இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய சத்திஸ்கட்டின் சந்தீப் ஷர்மா அவர்களின் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் இன்று, 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிலாஸ்புரைச் சேர்ந்த இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், எட்டு வகையான சிறுதானியங்களின் மாவையும், சுவையான தின்பண்டங்களையும் தயார் செய்து வருகிறது.
நண்பர்களே, இன்று இந்தியாவின் அனைத்து இடங்களிலும் ஜி-20 மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன, தேசத்தின் ஒவ்வொர் இடத்திலும், எங்கெல்லாம் ஜி-20 மாநாடு நடந்து வருகிறதோ, அங்கெல்லாம் சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துமிக்க, சுவையான தின்பண்டங்கள் இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே கம்பினால் தயாரிக்கப்பட்ட கிச்சடி, அவல் தின்பண்டம், பாயசம், ரொட்டியோடு கூடவே ராகியால் தயாரிக்கப்பட்ட பாயசம், பூரி, தோசை போன்ற தின்பண்டங்களும் பரிமாறப்படுகின்றன. ஜி-20க்கான அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களின் கண்காட்சிகளில், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள், கூளவகைகள், நூடுல்ஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். உலகெங்கும் இருக்கும் இந்திய த்தூதரகங்களிலும் கூட இவற்றின் வெகுஜனவிருப்பத்தை அதிகரிக்க, முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசத்தின் இந்த முயற்சியும், உலகிலே அதிகரித்துவரும் சிறுதானியங்களின் தேவையும், நமது சிறுவிவசாயிகளுக்கு எத்தனை பலத்தை அளிக்கவல்லது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்று எத்தனை வகையான புதியபுதிய பொருட்ள்கள், சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றனவோ, அவையனைத்தும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கின்றன என்பதைக் காணும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் இப்படிப்பட்ட அருமையான தொடக்கத்திற்காகவும், இதைத் தொடர்ந்து மேற்கொண்டு சென்றமைக்கும், மனதின் குரலின் நேயர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, யாராவது உங்களிடத்திலே டூரிஸ்ட் ஹப், அதாவது சுற்றுலாப்பயணிகள் மையமான கோவா பற்றிப் பேசினால், உங்கள் உள்ளத்தில் என்ன எழும்? இயல்பாக, கோவாவின் பெயரைக் கேட்டவுடனேயே, முதன்மையாக அங்கே இருக்கும் அழகான கரையோரங்கள், பீச்சுகள், விருப்பமான உணவுகள் மீதே உங்கள் சிந்தனை ஓடும் இல்லையா! ஆனால் கோவாவில் இந்த மாதம் நடந்த விஷயம், செய்திகளில் அதிகம் காணப்பட்டது. இன்று மனதின் குரலில், நான் இதை, உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பெயர் பர்ப்பில் ஃபெஸ்ட். இந்த ஃபெஸ்டானது, ஜனவரி 6 தொடங்கி 8 வரை பணஜியில் நடந்தது. மாற்றுத் திறனாளிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழா உள்ளபடியே ஒரு அருமையான முயல்வு. 50,000த்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதிலிருந்து, பர்ப்பிள் ஃபெஸ்ட் எத்தனை பெரிய சந்தர்ப்பம் என்பது பற்றிய கற்பனையை இதன் மூலம் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்போது மீராமார் பீச்சிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடிந்தது குறித்து, இங்கே வந்திருந்தவர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். உண்மையில், மீராமார் பீச் என்பது, நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகளுக்காக, அணுகல்தன்மை கொண்ட கோவாவின் பீச்சுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இங்கே கிரிக்கெட் போட்டிகள், டேபிள் டென்னிஸ் போட்டிகள், மாரத்தான் போட்டிகளோடு கூடவே, Deaf Blind Convention 2023 க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கே, வித்தியாசமான பறவைகளை கவனிக்கும் நிகழ்ச்சியைத் தவிர, ஒரு திரைப்படமும் திரையிடப்பட்டது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளும் குழந்தைகளும் இதனை முழுமையாகக் கண்டுகளிக்கும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பர்ப்பிள் ஃபெஸ்டின் மேலும் ஒரு சிறப்பான விஷயம், இதிலே தேசத்தின் தனியார் துறையும் பங்கெடுத்து வருவது தான். அவர்களின் தரப்பிலிருந்து எப்படிப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன என்றால், அவை மாற்றுத் திறனாளிகளுக்கு நேசமானவையாக இருந்தன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலன்களின் பொருட்டு விழிப்புணர்வை அதிகரிக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பர்ப்பில் ஃபெஸ்டை வெற்றிவிழாவாக ஆக்கியமைக்கும், இதோடு தொடர்புடைய அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இதோடு கூடவே, இந்த விழாவை ஏற்பாடு செய்து உதவும் வகையிலே பணியாற்றிய அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Accessible India, அதாவது அணுகல்தன்மை கொண்ட இந்தியா பற்றிய நமது பார்வையை மெய்யாக்க, இந்த வகையான இயக்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
என் மனம் நிறை நாடுமக்களே, இப்போது மனதின் குரலில், நான் மேலும் ஒரு விஷயம் குறித்துப் பேசுகிறேன், இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதம் பொங்கும், மனம் சந்தோஷப்படும் – பலே பலே, மனசு நிறைஞ்சு போச்சு!! என்று குதூகலிக்கும். தேசத்தின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்று, பெங்களூரூவைச் சேர்ந்த Indian Institute of Science, IISc, அதாவது இந்திய அறிவியல் நிறுவனம்; இது அருமையான ஒரு விஷயத்தை நமக்கு அளிக்கிறது. அதாவது இந்த நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில், பாரதத்தின் இரண்டு மகத்துவம் பொருந்திய ஆளுமைகளான ஜம்ஷேத்ஜி டாடாவும், ஸ்வாமி விவேகானந்தரும் உத்வேகக் காரணிகளாக இருந்தார்கள் என்று மனதின் குரலில் நான் முன்பேயே கூட பேசியிருந்தேன். உங்களுக்கும் எனக்கும் ஆனந்தமும், பெருமிதமும் ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டிலே இந்த நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக 145 காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அதாவது, 5 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு உரிமைக்காப்புகள். இந்தச் சாதனை உள்ளபடியே அற்புதமானது. இந்த வெற்றிக்காக நான் IISc யின் குழுவினருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இன்று உரிமைக்காப்புப் பதிவிலே பாரதத்தின் தரவரிசை, 7ஆம் இடத்திலேயும், வர்த்தகச் சின்னங்களைப் பொறுத்த மட்டிலே 5ஆவது இடத்திலும் இருக்கின்றது. உரிமைக்காப்புகள் விஷயத்தில் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் குறியீட்டிலும் கூட பாரதத்தின் தரவரிசையில், தீவிரமான மேம்பாடு காணப்பட்டிருக்கிறது, இப்போது அது 40ஆம் இடத்திற்கு வந்து விட்டது; ஆனால் 2015ஆம் ஆண்டிலே உலகக் கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பாரதம் 80ஆம் இடத்தில் இருந்தது. மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரதம் கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு உரிமைக்காப்புப் பதிவின் எண்ணிக்கை, அயல்நாட்டுப் பதிவை விட அதிகரித்திருக்கிறது. இது பாரதத்தின் அதிகரித்து வரும் விஞ்ஞானத் திறமையையும் காட்டுகிறது.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் அறிவு மிகவும் தலையாயது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். நமது கண்டுபிடிப்பாளர்களும், அவர்களுடைய காப்புரிமைகளும் பாரதத்தின் டெக்கேட் பற்றிய கனவை கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும், நிறைவேற்றி வைக்கும் என்பது என் நம்பிக்கை. இதன் வாயிலாக நாமனைவரும், நமது நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இலாபமடையலாம்.
எனதருமை நாட்டுமக்களே, நமோ செயலியில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பொறியாளரான விஜய் அவர்கள் ஒரு பதிவினைத் தரவேற்றி இருந்தார். இதிலே, மின்பொருள்கழிவு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால், மனதின் குரலில், இது பற்றி நான் விவாதிக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியில் முந்தைய பகுதிகளிலேயே கூட நாம் கழிவிலிருந்து செல்வம் பற்றி பேசியிருக்கிறோம்; ஆனால் வாருங்கள், இன்றும் இதோடு தொடர்புடைய மின்பொருள் கழிவு பற்றிப் பேசுவோம்.
நண்பர்களே, இன்று அனைத்து இல்லங்களிலும் செல்பேசி, லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகள் சாதாரணமானவையாகி விட்டன. நாடெங்கிலும் இவற்றின் எண்ணிக்கை பில்லியன்கணக்கில் இருக்கின்றன. இன்றைய அண்மையான கருவிகள், எதிர்காலத்தின் மின்பொருள் கழிவாகும். எந்தவொரு புதிய கருவியை வாங்கினாலும், பழைய கருவியை மாற்றினாலும், பழைய பொருளை சரியான முறைப்படி கைவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மின்பொருள் கழிவு சரியான வகையிலே கைவிடப்படவில்லை என்று சொன்னால், நமது சுற்றுச்சூழலுக்கும் இதனால் தீங்கு ஏற்படும். ஆனால் எச்சரிக்கையோடு இது செய்யப்படும் போது, இது மறுசுழற்சி, மீள்பயன்பாடு என்ற வகையில், Circular Economy எனப்படும் சுற்றுப்பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது என்கிறது. இது என்ன அளவு என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? மனித வரலாற்றிலே எத்தனை வர்த்தகரீதியான விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தின் எடையையும் ஒன்று கூட்டினாலும் கூட, வெளியேற்றப்படும் மின்பொருள் கழிவுகளுக்கு நிகராகவே ஆக முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு நொடியும் 800 லேப்டாப்புகள் வீசியெறியப்படுவது போன்று உள்ளது. பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியெடுக்கப்பட முடியும் என்பது உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். இதிலே தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் ஆகியன அடங்கும். ஆகையால் மின்பொருள் கழிவினை நல்லவகையில் பயன்படுத்துவது என்பது, குப்பையிலிருந்து கோமேதகம் உருவாக்குதற்கு எந்த வகையிலும் குறைவல்ல. இன்று, இந்தத் திசையில் நூதனமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்புகளுக்குக் எந்தக் குறைவும் இல்லை. இன்று சுமார் 500 மின் பொருள் கழிவு மறுசுழற்சியாளர்கள் இந்தத் துறையோடு இணைந்திருக்கிறார்கள், பல புதிய தொழில்முனைவோரும் இதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்தத் துறையில் ஆயிரக்கணக்கானவர்கள், நேரடியாக வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறார்கள். பெங்களூரூவின் ஈ-பரிசாரா, இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது அச்சிடப்பட்ட சர்க்கியூட் பலகைகளில் உள்ள விலைமதிபற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்க, சுதேசித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மும்பையில் பணியாற்றிவரும் ஈகோரெகோவும் கூட மொபைல் செயலி வாயிலாக மின்பொருள் கழிவை சேகரிக்கும் முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உத்தராகண்டின் ருட்கீயின் ஏடேரோ மறுசுழற்சியானது இந்தத் துறையில் உலகெங்கிலும் பல காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. இதுவும் கூட மின்பொருள் கழிவுத் தொழில்நுட்பத்தைத் தயாரித்து, கணிசமாகப் பெயர் ஈட்டியிருக்கிறது. போபாலில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் கபாடீவாலா வாயிலாக டன் கணக்கான மின்பொருள் கழிவு ஒன்று திரட்டப்பட்டு வருகிறது. இதைப் போலவே, பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இவையனைத்தும் பாரதத்தை உலக அளவிலான மறுசுழற்சி மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கின்றன என்றாலும், இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களின் வெற்றிக்கான முக்கியமான நிபந்தனை – மின் பொருள் கழிவுகளைச் சரியான முறையிலே சமாளிப்பதன் மூலம், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும் என்பது தான். தற்போது ஒவ்வொர் ஆண்டும் 15 முதல் 17 சதவீதம் வரையிலான மின்பொருள் கழிவுகளை மட்டுமே நம்மால் மறுசுழற்சி செய்ய முடிவதாக, மின்பொருள் கழிவுத் துறையில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றார்கள்.
என் அன்பான நாட்டுமக்களே, இன்று உலகெங்கும் சூழல் மாற்றம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்தத் திசையில் பாரதத்தின் சிறப்பான முயற்சிகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். பாரதம் தனது சதுப்பு நிலங்களின் பொருட்டு ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் என்றால் என்ன என்று சிலல நேயர்கள் நினைக்கலாம். ஈரநிலப் பகுதிகள், அதாவது எங்கே சகதியைப் போன்ற நிலம் இருக்கிறதோ, எங்கே ஆண்டுமுழுக்க நீர் நிரம்பி இருக்கிறதோ, அது தான் ஈரநிலமாகும். சில தினங்கள் கழித்து, ஃபெப்ருவரி மாதம் 2ஆம் தேதியன்று உலக சதுப்புநில நாள் வரவிருக்கிறது. நமது பூமியின் இருப்பிற்காக சதுப்புநிலங்கள் மிகவும் அவசியமானவை, ஏனென்றால், இவற்றைச் சார்ந்த பல பறவைகளும், உயிரினங்களும் இருக்கின்றன. இவை உயிரினப் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதோடு, வெள்ளக் கட்டுப்படுத்தலையும், நிலத்தடி நீரை மீள்நிரப்புவதையும் உறுதி செய்கின்றன. Ramsar Sites, ராம்சர் இடங்கள் போன்ற சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஈரநிலங்கள் அல்லது சதுப்புநிலங்கள், எந்தவொரு தேசத்திலும் இருக்கலாம் ஆனால், இவை பல அளவீடுகளை எல்லாம் கடந்த பிறகு தான், Ramsar Sites என்று அறிவிக்கப்படுகின்றன. அங்கே 20,000 அல்லது அதைவிடவும் அதிகமான நீர்ப் பறவைகள் இருக்க வேண்டும். வட்டார மீன் இனங்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கே இருத்தல் அவசியம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, அமுதப் பெருவிழாவின் போது ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களோடு தொடர்புடைய மேலும் ஒரு நல்ல தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது தேசத்தில் இப்போது ராம்ஸர் இடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகியிருக்கிறது, ஆனால் 2014ற்கு முன்பாக தேசத்தில் வெறும் 26 ராம்ஸர் இடங்கள் மட்டுமே இருந்தன. இதற்காக வட்டார சமுதாயங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; இவர்கள் தாம் இந்த உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தளித்திருக்கிறார்கள். இது இயற்கையோடு கூட நல்லிணக்கத்தோடு வாழும் நமது பலநூற்றாண்டுக்கால பழைமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ஒரு மரியாதை ஆகும். பாரதத்தின் இந்த சதுப்பு நிலங்கள் நமது இயற்கைத் திறன்களுக்கான எடுத்துக்காட்டுகள். ஓடிஷாவின் சில்கா ஏரி, 40க்கும் அதிகமான நீர்ப் பறவை இனங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது. கயிபுல்-லம்ஜாஊ, கோக்டாக்கை, சதுப்புநில மானின் ஒரே இயற்கை வாழ்விடமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் வேடந்தாங்கல், 2022ஆம் ஆண்டிலே ராம்ஸர் சைட் என்று அறிவிக்கப்பட்டது. இங்கே பறவைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் மொத்தப் பாராட்டும் அக்கம்பக்கத்தில் இருக்கும் விவசாயிகளையே சாரும். கஷ்மீரத்தில் பஞ்ஜாத் நாக் சமுதாயத்தினரின் வருடாந்திர fruit blossom எனப்படும் பழங்களின் மலர்ச்சித் திருவிழாவில், விசேஷமான வகையிலே கிராமத்தின் நீர்நிலைகளின் தூய்மைப்படுத்தலுக்காக ஒரு நாளை ஒதுக்குகிறார்கள். உலகின் ராம்ஸர் இடங்களிலே அதிகபட்ச தனித்தன்மை வாய்ந்த கலாச்சார மரபும் இருக்கிறது. மணிப்பூரின் லோக்டாக் மற்றும் புனிதமான நீர்நிலையான ரேணுகாவோடு, அந்தப் பகுதியின் கலாச்ச்சாரத்தின் ஆழமான பந்தம் உள்ளது. இதைப் போலவே சாம்பரின் தொடர்பு அன்னை துர்க்கா தேவியின் அவதாரமான சாகம்பரி தேவியோடும் இருக்கிறது. பாரதத்திலே ஈரநிலங்களின் இந்த பரவலாக்கம், ராம்ஸர் பகுதிகளுக்கு அருகிலே வசிப்போரின் காரணமாகவும் அமைந்திருக்கிறது. நான் இந்த மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், மனதின் குரல் நேயர்களின் தரப்பிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த முறை நமது தேசத்தில், குறிப்பாக வட பாரதத்தில், தீவிரமான குளிர் பரவியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் மக்கள் மலைகளில் பனிப்பொழிவின் ஆனந்தத்தையும் நன்கு அனுபவித்தார்கள். ஜம்மு கஷ்மீரத்திலிருந்து வந்திருக்கும் சில காட்சிகள், மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. சமூக ஊடகத்தில் கேட்கவே வேண்டாம், உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படுபவையாக இந்தப் படங்கள் ஆகி இருக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக நமது கஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒவ்வொர் ஆண்டினைப் போலவும் இந்த முறையும் மிக ரம்மியமானதாக ஆகி விட்டிருந்தது. பனிஹால் முதல் பட்காம் வரை செல்லும் ரயிலின் வீடியோவையும் கூட மக்கள் குறிப்பாக விரும்பியிருக்கிறார்கள். அழகான பனிப்பொழிவு, நாலாபுறங்களிலும் வெள்ளைப் போர்வையாகப் பனி, ஆஹா. இந்தக் காட்சி, தேவதைகளின் கதைகளில் வருவதைப் போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பலர் மேலும் என்ன கூறுகிறார்கள் என்றால், இது ஏதோ ஒரு அயல்நாட்டின் படமல்ல, நமது நாட்டின் கஷ்மீர் பற்றிய படங்கள் என்கிறார்கள்.
ஒரு சமூகவலைத்தள பயன்பாட்டாளர் எழுதுகிறார் – இதைவிட அதிக அழகாகவா சுவர்க்கம் இருக்கும்? இது மிகவும் சரி தான். அதனால் தானே கஷ்மீரத்தை, பூமியின் சுவர்க்கம் என்கிறார்கள். நீங்களும் இந்தப் படங்களைக் கண்டு கஷ்மீரத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள நினைப்பீர்கள் என்று நான் நன்கறிவேன். நீங்களும் செல்லுங்கள், உங்கள் நண்பர்களையும் இட்டுச் செல்லுங்கள் என்று நான் கூறுவேன். கஷ்மீரத்தில் பனிமூடிய மலைகள், இயற்கை அழகு இவற்றோடு கூடவே, மேலும் அதிகமாகக் காண வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை பற்பல இருக்கின்றன. கஷ்மீரின் சையதாபாதில் பனிக்கால விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விளையாட்டுக்களின் கருப்பொருள் – ஸ்நோ கிரிக்கெட். என்ன, பனி கிரிக்கெட் அத்தனை சுவாரசியமாகவா இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். கஷ்மீரத்து இளைஞர்கள் பனியிலே கிரிக்கெட்டை மேலும் அற்புதமானதாக மாற்றியிருக்கிறார்கள். இதன் வாயிலாக, வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடக்கூடிய வகையில் கஷ்மீரத்தில் இளைய விளையாட்டு வீரர்களின் தேடல் நடைபெறுகிறது. இதுவும் ஒரு வகையான விளையாடு இந்தியா இயக்கத்தின் விரிவாக்கம் தான். கஷ்மீரத்தில், இளைஞர்களில், விளையாட்டுக்கள் தொடர்பாக உற்சாகம் அதிக அளவில் பெருகி வருகிறது. இனிவரும் காலத்தில் இவர்களில் பலர், தேசத்திற்காக பதக்கங்களை வென்றெடுப்பார்கள், மூவண்ணத்தைப் பறக்க விடுவார்கள். உங்களிடத்தில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கஷ்மீருக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் சற்று நேரம் ஒதுக்குங்கள். இந்த அனுபவம் உங்களுடைய பயணத்தை மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, குடியரசினை மேலும் பலமுடையதாக ஆக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபட்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பால், அனைவரின் முயற்சியால், தேசத்தின் பொருட்டு அவரவர் தங்களுடைய கடமைகளை செவ்வனே ஆற்றும் போது மட்டுமே குடியரசு பலமாக இருக்க முடியும். நமது மனதின் குரல் இப்படிப்பட்ட கடமையுணர்வு மிக்க போராளிகளின் பலமான பெருங்குரல் என்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், கடமையுணர்வு கொண்டவர்களின் சுவாரசியமான, உத்வேகம் அளிக்கும் கதைகளோடு. பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய மனதின் குரல் 96ஆவது பகுதியாகும். மனதின் குரலின் அடுத்த பகுதி 2023ஆம் ஆண்டின் முதல் பகுதியாக அமையும். கடக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டு குறித்துப் பேச உங்களில் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள். கடந்தகாலம் பற்றிய மதிப்பீடுகளும் அலசல்களும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான தயாரிப்புக்களுக்கான உத்வேகத்தை அளிக்கின்றன. 2022ஆம் ஆண்டிலே, நாட்டுமக்களின் திறமைகள், அவர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் மனவுறுதி, அவர்களுடைய பரவலான வெற்றிகள் எந்த அளவுக்கு இருந்தன என்றால், இவற்றையெல்லாம் ஒரே மனதின் குரலில் தொகுத்தளிப்பது என்பது கடினமானதாக இருக்கும். 2022ஆம் ஆண்டு என்பது உண்மையிலேயே பல காரணங்களுக்காக மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக அமைந்திருந்தது, அற்புதமானதாக இருந்தது. இந்த ஆண்டிலே, பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமுதகாலமும் தொடங்கியது. இந்த ஆண்டிலே தான் தேசத்தில் புதுவேகம் உருவானது, நாட்டுமக்கள் அனைவரும் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்குச் செயலாற்றினார்கள். 2022ஆம் ஆண்டின் பல்வேறு வெற்றிகளும், உலகம் முழுவதிலும் பாரதத்திற்கான ஒரு சிறப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. 2022ஆம் ஆண்டிலே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதம் 220 கோடி தடுப்பூசிகள் என்ற வியப்பையும் மலைப்பையும் ஒருசேர ஏற்படுத்தக்கூடிய இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் 400 பில்லியன் டாலர்கள் என்ற மாயாஜால இலக்கை பாரதம் தாண்டி ஆச்சரியமான சாதனையைப் படைத்தது, இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதநாட்டவர் அனைவரும் தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை மேற்கொண்டார்கள், வாழ்ந்தும் காட்டி வருகிறார்கள், 2022 என்ற இந்த ஆண்டில் தான் பாரதத்தின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டது, இதே 2022இலே தான் விண்வெளித்துறை, ஆளில்லா வானூர்தி எனும் ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் பாரதம் தனது முத்திரையைப் பதித்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் அனைத்துத் துறைகளிலும் பாரதம் தனது தாங்கும் உறுதியை வெளிப்படுத்தியது. விளையாட்டு மைதானத்திலும் கூட, அது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகட்டும், அல்லது நமது பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியாகட்டும், நமது இளைஞர்கள் சிறப்பாக ஆடித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.
நண்பர்களே, இந்த ஆண்டு பாரதம், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. கடந்த முறை இது குறித்து விரிவான வகையிலே பகிர்ந்திருந்தேன். 2023ஆம் ஆண்டிலே நாம் ஜி20 அளிக்கும் உற்சாகத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்வோம், இந்த நிகழ்ச்சியை அனைவரையும் பங்கெடுக்கும் இயக்கமாக மாற்றுவோம்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவரது கற்பித்தல்கள் ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டிய தினமாகும் இது. நான் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இன்று, நம் அனைவரின் மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் பிறந்த தினமும் ஆகும். அவர் ஒரு மாபெரும் அரசியல் தலைவர், தேசத்திற்கு அசாதாரணமானதொரு தலைமையை அளித்தார். நாட்டுமக்கள் அனைவரின் இதயங்களிலும் அவருக்கென ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. கோல்காத்தாவைச் சேர்ந்த ஆஸ்தா அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. இந்தக் கடிதத்தில் அவர் தன்னுடைய அண்மைக்கால தில்லிப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தில்லியில் தங்கியிருந்த வேளையில் பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைக் காணச் சென்றிருந்த போது, அங்கே அடல் அவர்களின் காட்சியகம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அடல்ஜியோடு அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தன்னுடைய நினைவில் வைத்துப் போற்றத்தக்கதாய் இருந்தது என்று தெரிவித்திருக்கிறார். அடல்ஜியின் காட்சியகத்திலே, தேசத்திற்காக அவருடைய விலைமதிப்பற்ற பங்களிப்பின் காட்சிகளை நம்மால் காண முடியும். உள்கட்டமைப்பாகட்டும், கல்வி அல்லது அயலுறவுக் கொள்கையாகட்டும், அவர் பாரதத்தை அனைத்துத் துறைகளிலும் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார். நான் மீண்டும் ஒருமுறை அடல்ஜிக்கு என் இதயபூர்வமான வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, நாளை டிசம்பர் 26ஆம் தேதியானது வீர பால தினம் ஆகும்; இந்த வேளையிலே தில்லி மாநகரிலே, இளவரசர் ஜோராவர் சிங்ஜி, இளவரசர் ஃபதேஹ் சிங்ஜி ஆகியோரின் உயிர்த்தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைக்கவிருக்கிறது. இளவரசர்கள், தாய் குஜ்ரீ ஆகியோரின் பிராணத்தியாகத்தை தேசம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.
என் கனிவான நாட்டுமக்களே, நமது நாட்டிலே ஒரு வழக்குண்டு.
சத்யம் கிம பிரமாணம், பிரத்யக்ஷம் கிம பிரமாணம்.
सत्यम किम प्रमाणम , प्रत्यक्षम किम प्रमाणम |
அதாவது சத்தியத்திற்கு எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை, முதல் தோற்றத்திலேயே எது தெளிவாகத் தெரிகிறதோ, அதற்கும் எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை. ஆனால் நவீன மருத்துவ அறிவியல் எனும் போது, அதிலே மிகவும் முக்கியமானது என்றால், அது சான்று எனும் ैEvidence. பல நூற்றாண்டுகளாக பாரத நாட்டவர்களின் வாழ்க்கையின் அங்கமாகத் திகழும் யோகக்கலை, ஆயுர்வேதம் போன்ற நமது சாத்திரங்களின் முன்பாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வின் குறைபாடு எப்போதுமே ஒரு சவாலாக விளங்கி வந்திருக்கிறது. பலன்கள் காணக் கிடைக்கின்றன என்றாலும், சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால் சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட மருத்துவ யுகத்திலே, இப்போது யோகமும் ஆயுர்வேதமும், நவீன யுகத்தின் ஆய்வு மற்றும் அளவுகோல்கள் தொடர்பாகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மும்பையின் டாடா மெமோரியல் சென்டர் பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றில் இந்த அமைப்பு பெரும் உதவிகரமாக விளங்கி வருகிறது. இந்த மையம் வாயிலாகப் புரியப்பட்ட ஒரு தீவிர ஆய்வின் முடிவுகள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகக்கலை மிகவும் பயனளிப்பதாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. டாடா மெமோரியல் சென்டரானது தனது ஆராய்ச்சியின் முடிவுகளை, அமெரிக்காவில் நடந்த மிகவும் பிரபலமான மார்பகப் புற்றுநோய் மாநாட்டிலே முன்வைத்தது. இந்த முடிவுகள், உலகின் பெரியபெரிய வல்லுநர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. ஏனென்றால், நோயாளிகளுக்கு யோகக்கலையால் எப்படி பயன் உண்டானது என்பதை டாடா மெமோரியல் மையமானது சான்றுகளோடு விளக்கியது. இந்த மையத்தின் ஆய்வுகளின்படி, யோகக்கலையின் இடைவிடாத பயிற்சியால், மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் நோய், மீண்டும் வளர்வதிலோ, மரண அபாயத்திலோ 15 சதவீதம் குறைவு ஏற்படுவதாகக் கண்டுபிடித்தது. பாரதநாட்டுப் பாரம்பரிய சிகிச்சையின் முதல் எடுத்துக்காட்டு இது; இதை மேற்கத்திய வழிமுறைகளைப் பின்பற்றுவோர், கடுமையான அளவுகோல்கள் கொண்டு இதை சோதனை செய்தார்கள். மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்கைத்தரம், யோகக்கலையால் மேம்படுகிறது என்பதைத் தெரிவித்த முதல் ஆய்வும் இது தான். மேலும் இதன் நீண்டகால ஆதாயங்களும் வெளிவந்திருக்கின்றன. டாடா மெமோரியல் சென்டர் தனது ஆய்வு முடிவுகளை பாரீஸில் நடந்த மருத்துவப் புற்றுநோயியலுக்கான ஐரோப்பிய சங்கத்தின் மாநாட்டிலே முன்வைத்தது.
நண்பர்களே, இன்றைய யுகத்திலே, பாரதநாட்டு சிகிச்சை முறைகள் எத்தனை அதிகமாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு உலகிலே இதன் ஏற்புத்தன்மையும் அதிகரிக்கும். இந்த எண்ணத்தோடு, தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையும் கூட ஒரு முயல்வினை மேற்கொண்டு வருகிறது. இங்கே, நமது பாரம்பரிய சிகிச்சை முறைகளைச் சரிபார்க்க என்றே ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. இதிலே நவீன, புதுமையான உத்திகள் மற்றும் ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையம், முன்பேயே பிரபல சர்வதேச சஞ்சிகைகளில் 20 ஆய்வறிக்கைகளை வெளியிட்டு விட்டது. அமெரிக்க இதயவியல் கல்லூரியின் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் syncope என்ற உணர்விழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகக்கலையால் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, நரம்பியல் சஞ்சிகையின் ஒரு ஆய்வறிக்கையில், ஒற்றைத்தலைவலிக்கு யோகக்கலையால் கிடைக்கக்கூடிய நிவாரணம் குறித்தும் பதிவிடப்பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர, மேலும் பல நோய்கள் தொடர்பாகவும் யோகக்கலை அளிக்கவல்ல ஆதாயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக இருதய நோய், மன அழுத்தம், உறக்கமின்மை, மகப்பேறுக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, உலக ஆயுர்வேத மாநாட்டிற்காக நான் கோவா சென்றிருந்தேன். இதிலே 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கெடுத்தார்கள், 550க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பாரதம் உட்பட, உலகெங்கிலுமிருந்து சுமார் 215 நிறுவனங்கள் இங்கே தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நான்கு நாட்கள் வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய அனுபவங்களை ரசித்தார்கள். ஆயுர்வேத மாநாட்டிலும் உலகெங்கிலும் இருந்தும் வந்திருந்த ஆயுர்வேத வல்லுநர்கள் முன்பாக, சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு தொடர்பான என்னுடைய வேண்டுகோளை நான் முன்வைத்தேன். எந்த வகையில் கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் யோகம் மற்றும் ஆயுர்வேதத்தின் சக்தியை நாமனைவரும் கண்டு வருகிறோமோ, அதிலே இவற்றோடு தொடர்புடைய சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் மிகவும் மகத்துவம் நிறைந்தவையாக நிரூபிக்கப்படும். யோகம், ஆயுர்வேதம் போன்ற நம்முடைய பாரம்பரியமான சிகிச்சை முறைகளோடு தொடர்புடைய இத்தகைய முயற்சிகள் பற்றி உங்களிடம் தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை சமூக வலைத்தளங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன்.
என் இதயம் நிறை நாட்டுமக்களே, கடந்த சில ஆண்டுகளில் நாம் உடல்நலத் துறையோடு தொடர்புடைய பல பெரிய சவால்களில் வெற்றிகளை அடைந்திருக்கிறோம். நமது மருத்துவ வல்லுநர்கள், அறிவியலார்கள், நாட்டுமக்களின் பேரார்வம் ஆகியவற்றுக்கே இதற்கான முழுப் பாராட்டும் சேரும். பாரதத்திலிருந்து நாம் சின்னம்மை, இளம்பிள்ளை வாதம் மற்றும் கினிப்புழு தொற்று போன்ற நோய்களுக்கு முடிவு கட்டியிருக்கிறோம்.
இன்று, மனதின் குரல் நேயர்களுக்கு நான் மேலும் ஒரு சவால் குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன், இதுவும் முடிவு கட்டப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. இந்தச் சவால், இந்த நோய் தான் காலா அஜார் எனப்படும் கருங்காய்ச்சல். இந்த நோய்க்கான காரணியான ஒட்டுண்ணியான Sand Fly எனும் மணல் கொசுக்கள் கடிப்பதால் இது பரவுகிறது. யாருக்காவது இந்தக் கருங்காய்ச்சல் பீடித்து விட்டால், அவருக்கு மாதக்கணக்கில் காய்ச்சல் இருக்கிறது, குருதிச்சோகை ஏற்பட்டு, உடல் பலவீனப்பட்டு, உடலின் எடையும் வீழ்ச்சி அடைகிறது. இந்த நோய், குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை அனைவரையும் பீடிக்கக்கூடியது. ஆனால், அனைவரின் முயற்சியாலும், காலா அஜார் என்ற கருங்காய்ச்சல் நோய், இப்போது வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. சில காலம் முன்பு வரை, இந்தக் கருங்காய்ச்சல் 4 மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தது. ஆனால் இப்போது இந்த நோய், பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் 4 மாவட்டங்கள் வரை மட்டுமே குறைக்கப்பட்டு விட்டது. பிஹார்-ஜார்க்கண்ட் மாநில மக்களின் வல்லமையால், அவர்களின் விழிப்புணர்வு காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களிலிருந்தும் கூட, கருங்காய்ச்சலை அரசின் முயற்சிகளால் முடிவுக்குக் கொண்டு வர முடியும். கருங்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் இரண்டு விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே. ஒன்று, மணல் கொசுக்களைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது, மிக விரைவாக இந்த நோயை அடையாளம் கண்டு, முழுமையான சிகிச்சை மேற்கொள்ளல். கருங்காய்ச்சலுக்கான சிகிச்சை எளிதானது, இதற்காகப் பயன்படும் மருந்துகளும் மிகவும் பயனளிப்பவையாக இருக்கின்றன. நீங்கள் விழிப்போடு இருந்தால் மட்டும் போதுமானது. காய்ச்சல் வந்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மணல் கொசுக்களுக்கு முடிவு கட்டக்கூடிய மருந்துகளைத் தெளித்து வாருங்கள். சற்றே சிந்தியுங்கள், நமது தேசம், கருங்காய்ச்சலிலிருந்து விடுபடும் போது, நம்மனைவருக்கும் இது எத்தனை சந்தோஷம் அளிக்கும் வேளையாக இருக்கும்!! அனைவரின் முயற்சிகள் என்ற இதே உணர்வோடு நாம், பாரதத்தை 2025க்குள்ளாக காசநோயிலிருந்து விடுபடச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். காசநோயிலிருந்து விடுபட்ட பாரதம் என்ற இயக்கத்தினை கடந்த நாட்களில் நாம் தொடங்கிய போது, ஆயிரக்கணக்கானோர், காசநோயால் பீடிக்கப்பட்டவர்களின் உதவிக்காக முன்வந்தார்கள் என்பதை நீங்களே கண்கூடாகப் பார்த்தீர்கள். இவர்கள் காசநோய்க்கு எதிரான தொண்டர்களாக, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து வருகிறார்கள், அவர்களுக்கான பொருளாதார உதவிகளை நல்கி வருகிறார்கள். மக்கள் சேவை, மக்கள் பங்களிப்பு ஆகியவற்றின் சக்தி, அனைத்துக் கடினமான இலக்குகளையும் அடைந்தே தீருகிறது.
என் அன்புநிறை நாட்டுமக்களே, நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அன்னை கங்கையோடு இணைபிரியா பந்தம் இருக்கிறது. கங்கை ஜலம் என்பது நமது வாழ்க்கையோட்டத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்து வந்திருக்கிறது, நமது சாஸ்திரங்களிலும் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் -
नमामि गंगे तव पाद पंकजं,
सुर असुरै: वन्दित दिव्य रूपम् |
भुक्तिम् च मुक्तिम् च ददासि नित्यम्,
भाव अनुसारेण सदा नराणाम् ||
நமாமி கங்கே தவ பாத பங்கஜம்,
சுர அசுரை: வந்தித திவ்ய ரூபம்.
புக்திம் ச முக்திம் ச ததாசி நித்யம்,
பாவ அனுசாரேண சதா நராணாம்.
அதாவது, ஹே அன்னை கங்கையே!! நீங்கள், உங்களுடைய பக்தர்களுக்கு, அவர்களுடைய உணர்வினுக்கு ஏற்ப இகலோக சுகங்கள், ஆனந்தம் மற்றும் வீடுபேற்றினை அளிக்கிறீர்கள். அனைவரும் உங்களுடைய பவித்திரமான திருவடிகளில் வணங்குகிறார்கள். நானும் உங்களின் புனிதமான திருவடிகளில் என்னுடைய வணக்கங்களை அர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறாக, பல நூற்றாண்டுகளாகக் கலகலவெனப் பெருகியோடும் கங்கை அன்னையைத் தூய்மையாக வைத்திருப்பது என்பது நம்மனைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த நோக்கத்தோடு தான், எட்டாண்டுகள் முன்பாக நாம், நமாமி கங்கே இயக்கத்தைத் தொடங்கினோம். பாரதத்தின் இந்த முன்னெடுப்பு இன்று உலகெங்கும் போற்றப்படுகிறது என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம். ஐக்கிய நாடுகள் அமைப்பு நமாமி கங்கே இயக்கத்தை, சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் உலகின் தலைசிறந்த பத்து முன்னெடுப்புக்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. உலகத்தின் 160 இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களில் நமாமி கங்கே இயக்கத்திற்கு இந்த கௌரவம் கிடைத்திருப்பது என்பது மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம்.
நண்பர்களே, நமாமி கங்கே இயக்கத்திற்கான மிகப்பெரிய ஆற்றல், மக்களின் இடைவிடாத பங்கெடுப்பு மட்டுமே. நமாமி கங்கே இயக்கத்தில், கங்கைக் காவலாளிகள், கங்கைத் தூதர்கள் ஆகியோருக்கும் பெரிய பங்கு உண்டு. இவர்கள் மரம் நடுதல், ஆற்றுத் துறைகளைத் தூய்மைப்படுத்தல், கங்கை ஆரத்தி, தெருமுனை நாடகங்கள், ஓவியங்கள் மற்றும் கவிதைகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் உயிரி பன்முகத்தன்மையிலும் கூட பெருமளவு மேம்பாடு காணப்பட்டு வருகிறது. ஹில்ஸா மீன், கங்கைப்புற டால்ஃபின்கள், பலவகையான முதலைகளின் எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது. கங்கையின் சூழலமைப்பு சுத்தமாவதால், வாழ்வாதாரத்திற்கான வேறுபல வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த இடத்திலே நான் ஜலஜ் ஆஜீவிகா மாடல், அதாவது ஜலஜ் வாழ்வாதார மாதிரி பற்றியும் தெரிவிக்க விரும்புகிறேன், இது உயிரிப் பன்முகத்தன்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்ட படகுப் பயணங்கள் 26 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. நமாமி கங்கே இயக்கத்தின் விரிவாக்கம், அதன் வீச்சு, நதியின் தூய்மைப்படுத்தலைத் தாண்டியும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. எங்கே நமது பேரார்வமும், இடைவிடா முயற்சிகளும் கண்கூடான சான்றுகளாக இருக்கும் வேளையில், அங்கே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திசையில் உலகினுக்கே ஒரு புதிய பாதையைக் காட்டவல்லதாகவும் இது இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, நமது மனவுறுதி திடப்படும் போது, பெரியபெரிய சவால்களையும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும். சிக்கிமின் தேகூ கிராமத்தின் சங்கே ஷெர்பா அவர்கள் இதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக 12,000 அடிக்கும் அதிக உயரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறார். சங்கே அவர்கள், கலாச்சார மற்றும் புராண மகத்துவம் வாய்ந்த சோமகோ ஏரியைச் சுத்தம் செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டார். தனது அயராத முயற்சியால் இவர் இந்த பனிப்பாறை ஏரியின் தோற்றத்தையே மாற்றி விட்டார். 2008ஆம் ஆண்டிலே, சங்கே ஷெர்பா அவர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தைத் தொடங்கிய போது, பல இடர்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் குறைவான காலத்திலேயே இவருடைய சீரிய செயல்களோடு, இளைஞர்களும், கிராமவாசிகளும் தங்களை இணைத்துக் கொண்டார்கள், பஞ்சாயத்தும் முழுமையான ஒத்துழைப்பை அளித்தது. இன்று சோமகோ ஏரியை நீங்கள் காணச் சென்றால், அங்கே நாலாபுறங்களிலும் குப்பைத் தொட்டிகளைக் காணலாம். அங்கே சேரும் குப்பைக் கூளங்கள் மறுசுழற்சி செய்ய அனுப்பப்படுகிறது. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்கள் தங்கள் குப்பைகளைப் போடுவதற்கு வசதியாக, துணியால் ஆன குப்பைப் பைகள் அளிக்கப்படுகின்றன. இப்போது மிகத் தூய்மையாக ஆகியிருக்கும் இந்த ஏரியைக் காண ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றார்கள். சோமகோ ஏரியின் பராமரிப்பு என்ற இந்த அற்புதமான முயற்சிக்காக, சங்கே ஷெர்பா அவர்களை பல அமைப்புகள் கௌரவப்படுத்தி இருக்கின்றன. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக இன்று சிக்கிம், பாரதத்தின் மிகத் தூய்மையான மாநிலமாக அறியப்படுகிறது. சங்கே ஷெர்பா அவர்களுக்கும், அவருடைய நண்பர்களுக்கும், தேசத்தில் இருக்கும் இன்னும் பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் நேரிய முயற்சிகளோடு தொடர்புடைய அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கம் என்பது இன்று அனைத்து இந்தியர்களின் மனங்களிலும் கலந்து விட்ட ஒன்றாகி இருக்கிறது என்பது எனக்கு உவகை அளிக்கிறது. 2014ஆம் ஆண்டிலே இந்த மக்கள் இயக்கத்தினைத் தொடங்கிய வேளையில், இதைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல, பல அருமையான முயற்சிகளை மக்கள் மேற்கொண்டார்கள், இந்த முயற்சிகள், சமூகத்தின் உள்ளே மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரங்கேறி வருகின்றது. தொடர்ந்து இந்த முயற்சிகளின் விளைவாக, குப்பைக்கூளங்களை அகற்றியதால், தேவையற்ற பொருட்களை விலக்கியதால், அலுவலகங்களில் கணிசமான இடவசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, புதிய இடமும் கிடைத்திருக்கிறது. முன்பு, இடப் பற்றாக்குறை காரணமாக அதிக வாடகை கொடுத்து, அலுவலகங்களைப் பராமரிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் இந்த தூய்மைப்படுத்தல் காரணமாக, எந்த அளவுக்கு இடம் கிடைத்திருக்கிறது என்றால், இப்போது ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களும் இடம் பெற்று வருகின்றன. கடந்த நாட்களில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூட மும்பையில், அஹமதாபாதில், கோல்காத்தாவில், ஷில்லாங்கில் என பல நகரங்களிலும் தனது அலுவலகங்களில் முழுமையான முயற்சி மேற்கொண்டதன் காரணமாக, இன்று அவர்களுக்கு இரண்டு அடுக்குகள், மூன்று அடுக்குகள் என முழுமையாக, புதிய வகையில் இடவசதி செயல்படுத்தக் கிடைத்திருக்கின்றன. தூய்மை காரணமாக, நமது ஆதாரங்களின் உகந்த பயன்பாட்டிற்கான சிறப்பான அனுபவங்களாக இவை திகழ்கின்றன. சமூகத்திலும் கூட, கிராமந்தோறும், நகரம்தோறும், இந்த இயக்கம் தேசத்திற்காக அனைத்து வகைகளிலும் பயனுடையதாக அமைந்து வருகிறது.
எனதருமை நாட்டுமக்களே, நமது நாட்டிலே நமது கலை-கலச்சாரம் தொடர்பான ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, ஒரு புதிய விழிப்பு பிறப்பெடுக்கிறது. மனதின் குரலில், நானும், நீங்களும், பல முறை இப்படிப்பட்ட உதாரணங்கள் பற்றி விவாதித்திருக்கிறோம். எப்படி கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன சமூகத்தின் பொதுவான முதலீடுகளாக இருக்கின்றனவோ, அதே போல இவற்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வெற்றிகரமான முயற்சி லக்ஷத்தீவுகளில் நடந்து வருகிறது. இங்கே கல்பேனீ தீவிலே ஒரு கிளப் இருக்கிறது, இதன் பெயர் கூமேல் பிரதர்ஸ் சேலஞ்ஜர்ஸ் கிளப். இந்த கிளப்பானது வட்டார கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளின் பாதுகாப்புக் குறித்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இங்கே இளைஞர்களுக்கு உள்ளூர் கலையான கோல்களி, பரசைகளி, கிளிப்பாட்டு மற்றும் பாரம்பரிய பாடல்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. அதாவது பண்டைய மரபு, புதிய தலைமுறையினரின் கைகளில் பாதுகாக்கப்படுகிறது, முன்னேறுகிறது; மேலும் நண்பர்களே, இவை போன்ற முயற்சிகள் தேசத்தில் மட்டுமல்ல, அயல்நாடுகளிலும் நடந்தேறி வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது தான் துபாயிலிருந்து ஒரு செய்தி வந்தது, அங்கே களறி கிளப்பானது கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் பதிவேற்படுத்தியிருக்கிறது. துபாயிலே ஒரு கிளப் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது, இதிலே பாரத நாட்டிற்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்று எண்ணமிடுவது இயல்பு தான். உள்ளபடியே, இந்தப் பதிவு, பாரதத்தின் பண்டைய போர்க்கலையான களறிப்பாயட்டோடு தொடர்புடையது. ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் மக்கள் களறியில் ஈடுபடுவது தான் இந்தப் பதிவு. களறி கிளப்பானது துபாய் காவல்துறையோடு இணைந்து திட்டமிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தேசிய நாளன்று இதைக் காட்சிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நான்கே வயதான சிறுவர்கள் முதல் 60 வயதானவர்கள் வரை, பங்கெடுத்தவர்கள் களறியில் தங்களுடைய திறமையை, மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தினார்கள். பல்வேறு தலைமுறையினர் எப்படி ஒரு பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள், முழுமையான மனோயோகத்தோடு செயல்படுத்துகிறார்கள் என்பதற்கான அற்புதமான எடுத்துக்காட்டு இது.
நண்பர்களே, மனதின் குரல் நேயர்களுக்கு, கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தில் வசிக்கும் க்வேம்ஸ்ரீ பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். க்வேம்ஸ்ரீ என்பது, தெற்கிலே கர்நாடகத்தின் கலை-கலாச்சாரத்தை மீளுயிர்ப்பிக்கும் குறிக்கோளோடு கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுடைய தவமுயற்சி எத்தனை மகத்தானது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!! முன்பு அவர்கள் ஹோட்டல் நிர்வாகத் தொழிலில் இணைந்திருந்தார்கள். ஆனால் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மீதான அவர்களின் பற்று எத்தனை ஆழமாக இருந்தது என்றால், அவர்கள் இதைத் தங்களுடைய பெருங்குறிக்கோளாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் கலா சேதனா என்ற பெயருடைய ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பு, இன்று கர்நாடகத்தின் மற்றும் உள்நாட்டு-அயல்நாட்டுக் கலைஞர்களின் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இதிலே உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பல நூதனமான செயல்பாடுகளும் இடம் பெறும்.
நண்பர்களே, தங்களுடைய கலை-கலாச்சாரம் தொடர்பாக நாட்டுமக்களின் இந்த உற்சாகம், தங்களுடைய மரபின் மீதான பெருமித உணர்வின் வெளிப்பாடு தான். நமது தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இப்படி எத்தனையோ வண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன. நாமும் அவற்றை அழகுபடுத்தி-மெருகேற்றிப் பாதுகாக்கும் பணிகளில் இடைவிடாது பணியாற்ற வேண்டும்.
என் உளம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல இடங்களில் மூங்கிலால் பல அழகான, பயனுள்ள பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பழங்குடிகள் பகுதிகளில் மூங்கில் தொடர்பான நேர்த்தியான கைவினை வல்லுநர்களும், திறமையான கலைஞர்களும் இருக்கின்றார்கள். மூங்கிலோடு தொடர்புடைய, ஆங்கிலேயர்கள் காலத்துச் சட்டங்களை தேசம் மாற்றியதிலிருந்து, இதற்கென ஒரு பெரிய சந்தை தயாராகி விட்டது. மஹாராஷ்டிரத்தின் பால்கர் போன்ற பகுதிகளிலும் கூட பழங்குடி சமூகத்தவர்கள் மூங்கிலால் பல அழகான பொருட்களைத் தயாரிக்கிறார்கள். மூங்கிலால் ஆன பெட்டிகள், நாற்காலிகள், தேநீர் மேஜைகள், தட்டுகள், கூடைகள் போன்ற பொருட்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இது மட்டுமல்ல, இவர்கள் மூங்கில் புல்லால் அழகான ஆடைகள், அழகுபடுத்தும் பொருட்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறார்கள். இதனால் பழங்குடியினப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, அவர்களின் திறன்களுக்கும் அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
நண்பர்களே, கர்நாடகத்தின் ஒரு தம்பதி, பாக்குமர நார்களால் உருவாக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பொருட்களை சர்வதேச சந்தை வரை கொண்டு சேர்த்து வருகிறார்கள். கர்நாடகத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த இந்த தம்பதியான சுரேஷ் அவர்களும் அவருடைய மனைவி மைதிலி அவர்களும், பாக்குமர நார் வாயிலாகத் தாம்பாளங்கள், தட்டுகள், கைப்பைகள் தொடங்கி, அழகுப் பொருட்கள் உட்பட, பல பொருட்களைத் தயாரித்து வருகிறார்கள். இந்த நாரினால் தயாரிக்கப்படும் காலணிகள் இன்று அதிக அளவில் விரும்பப்படுவதாக இருக்கிறது. இவர்களுடைய பொருட்கள் இன்று லண்டன் மற்றும் ஐரோப்பாவின் பிற சந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தான் நமது இயற்கை ஆதாரங்கள் மற்றும் பாரம்பரிய திறன்களின் அழகு, இவை தான் அனைவரையும் கொள்ளை கொண்டு வருகின்றன. பாரதத்தின் இந்தப் பாரம்பரியமான ஞானத்தில், நீடித்த எதிர்காலத்திற்கான பாதையை உலகம் கண்டு வருகிறது. நாமும் கூட, இந்தப் போக்கில் அதிகப்படியான விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். மேலும் இத்தகைய சுதேசி மற்றும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், பிறருக்கும் இவற்றைப் பரிசாக அளிக்க வேண்டும். இதனால் நமது அடையாளமும் பலப்படுவதோடு, உள்ளூர்ப் பொருளாதார அமைப்பும் பலப்படும், பெரிய அளவில் மக்களின் எதிர்காலம் ஒளிமயமானதாகும்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நாம் மெல்லமெல்ல மனதின் குரலின் 100ஆவது பகுதி என்ற இதுவரை காணாத படிநிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நாட்டுமக்களின் பல கடிதங்கள் எனக்குக் கிடைக்கின்றன, இவற்றில் அவர்கள் 100ஆவது பகுதியைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 100ஆவது பகுதியில் நாம் என்ன பேசலாம், அதை எப்படி சிறப்பானதாக ஆக்கலாம் என்பது தொடர்பாக நீங்கள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும். அடுத்த முறை நாம் 2023ஆம் ஆண்டிலே சந்திப்போம். உங்கள் அனைவருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டும், தேசத்தின் பொருட்டு சிறப்பாக அமைய வேண்டும், தேசம் புதிய சிகரங்களைத் தொடர்ந்து தொட்டு வர வேண்டும், நாமனைவரும் இணைந்து உறுதிப்பாடு மேற்கொள்வோம், அதை சாதித்தும் காட்டுவோம். இந்த சமயம், பலரும் விடுமுறை மனோநிலையில் இருப்பார்கள். நீங்கள் திருநாட்களை, இந்தச் சந்தர்ப்பங்களை ஆனந்தமாக செலவிடுங்கள், ஆனால் சற்று எச்சரிக்கையோடும் இருங்கள். உலகின் பல நாடுகளில் கொரோனா பெருகி வருவதை நீங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் நாம் முககவசம் அணிதல், கைகளைக் கழுவி வருதல் போன்ற முன்னெச்சரிக்கைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், பாதுகாப்பாக இருந்தால், நமது கொண்டாட்டத்தில் எந்தத் தடையும் ஏற்படாது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி 95ஆவது பகுதி, நாம் மிக விரைவாக மனதின் குரலின் சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்த மட்டில் 130 கோடி நாட்டுமக்களையும் இணைக்கின்ற, மேலும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு பகுதிக்கு முன்பாகவும், கிராமங்கள்-நகரங்களிலிருந்து வந்திருக்கும் ஏராளமான கடிதங்களையும் படிப்பது, சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலானவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒலிவழிச் செய்திகளைக் கேட்பது என்பது ஒரு ஆன்மீக அனுபவமாகவே எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, இன்றைய நிகழ்ச்சியை ஒரு அருமையான பரிசோடு நான் தொடங்க விரும்புகிறேன். தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளிச் சகோதரர் தாம் எல்தீ ஹரிபிரசாத் காரு. இவர் ஜி-20 மாநாட்டிற்கான சின்னத்தைத் தனது கைகளாலேயே நெய்து எனக்கு அனுப்பியிருந்தார். இந்த அருமையான பரிசைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். ஹரிபிரசாத் அவர்கள் தனது கலையில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்றால், அவரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட முடிகிறது. ஹரிபிரசாத் அவர்களின் கைகளால் நெய்யப்பட்ட ஜி-20இன் இந்தச் சின்னத்தோடு எனக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அடுத்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டிலே அதை அரங்கேற்றுவது என்பது நமக்கு மிகவும் பெருமிதம் வாய்ந்த ஒன்று. தேசத்தின் இந்தச் சாதனை தொடர்பான மகிழ்ச்சியில் ஜி-20க்கான இந்தச் சின்னத்தைத் தனது கரங்களாலேயே தயார் செய்திருக்கிறார். அற்புதமான இந்த நெசவுக் கலை இவரது தந்தையாரிடமிருந்து பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறது, இன்று முழு ஆர்வத்தோடு இதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் இவர்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக ஜி-20ற்கான சின்னம், பாரதத்தின் தலைமை ஆகியவை தொடர்பான இணையத்தளத்தைத் தொடங்கி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. பொதுப் போட்டி வாயிலாக இந்தச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹரிபிரசாத் காரு அனுப்பிய பரிசு எனக்குக் கிடைத்த போது, என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. தெலங்கானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபரும் கூட, ஜி-20 உச்சி மாநாட்டோடு எந்த அளவுக்குத் தான் தொடர்பு கொண்டிருப்பதாக உணர்கிறார் என்பதைப் பார்க்கும் போது என் மனது இனித்தது. இன்று, இத்தனை பெரிய மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டில் அதை நடத்துவது என்பதை நினைக்கும் போது, தங்கள் நெஞ்சங்கள் பெருமிதத்தால் நிமிர்கின்றன என்று ஹரிபிரசாத் காருவைப் போன்ற பலர் எழுதியிருக்கிறார்கள். புணேயில் வசிக்கும் சுப்பா ராவ் சில்லாரா அவர்கள், கோல்கத்தாவைச் சேர்ந்த துஷார் ஜக்மோஹன் அவர்கள் அனுப்பியிருக்கும் செய்திகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் ஜி-20 மாநாடு தொடர்பான பாரதத்தின் செயலூக்கம் மிக்க முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.
நண்பர்களே, ஜி-20 மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்கு, உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவை. நீங்களே கற்பனை செய்து பாருங்கள் – பாரதம் இப்போதிலிருந்து 3 நாட்கள் கழித்து, அதாவது டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி, இத்தனை பெரிய நாடுகள் குழுவிற்கு, இத்தனை வல்லமை வாய்ந்த குழுவிற்குத் தலைமை தாங்க இருக்கிறது. பாரதத்திற்கும், பாரதவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனை பெரிய வாய்ப்பு!! இது மேலும் ஏன் விசேஷமானது என்றால், இந்தப் பொறுப்பு, பாரத நாட்டு சுதந்திரத்தின் அமுதகாலத்தில் கிடைத்திருப்பது தான்.
நண்பர்களே, ஜி-20இன் தலைமை நமக்கெல்லாம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலக நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். அது உலக நன்மையாகட்டும் அல்லது ஒற்றுமையாகட்டும், சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வாகட்டும் அல்லது நீடித்த வளர்ச்சியாகட்டும், பாரதத்திடம் இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு இருக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளிலிருந்து, வசுதைவ குடும்பகம் என்பதன் மீதான நம்முடைய அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது. நாம் எப்போதுமே கூறிவந்திருப்பது என்னவென்றால்,
ॐ सर्वेषां स्वस्तिर्भवतु ।
सर्वेषां शान्तिर्भवतु ।
सर्वेषां पुर्णंभवतु ।
सर्वेषां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
சர்வேஷாம் சாந்திர் பவது,
சர்வேஷாம் பூர்ணம் பவது,
சர்வேஷாம் மங்களம் பவது,
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.
அதாவது, அனைவரும் நன்றாக இருக்கட்டும், அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும், அனைவரும் முழுமையடையட்டும், அனைவருக்கும் நலன்கள் பயக்கட்டும். இனிவரும் நாட்களில், தேசத்தின் பல்வேறு பாகங்களில், ஜி-20 மாநாடு தொடர்பான பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கின்றன. இதன்படி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்கள் உங்கள் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும். நீங்கள் உங்கள் பகுதியின் கலாச்சாரத்தின் பல்வகையான, தனித்துவமான வண்ணங்களை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதே வேளையில், ஜி-20 மாநாட்டிற்கு வருவோர், இன்று என்னவோ ஒரு பிரதிநிதியாக வரலாம் ஆனால், எதிர்காலத்தில் அவரே ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். உங்களிடம் நான் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்தில்; அது என்னவென்றால், ஹரிபிரசாத் காருவைப் போலவே நீங்களும், ஏதோ ஒரு வகையிலே ஜி-20 மாநாட்டோடு கண்டிப்பாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். துணியில் ஜி-20யின் பாரதநாட்டுச் சின்னத்தை மிகவும் நேர்த்தியாக, அழகாக உருவாக்கலாம், அச்சிடலாம். உங்கள் இடங்களில் ஜி-20யோடு தொடர்புடைய விவாதங்கள், உரைகள், போட்டிகள் போன்றவற்றை அரங்கேற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் G20.in என்ற இணைத்தளத்தில் நுழைந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கே பல விஷயங்கள் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, நவம்பர் மாதம் 18ஆம் தேதி ஒட்டுமொத்த உலகின் விண்வெளித்துறை ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டதைக் கண்டது. இந்த நாளன்று தான் பாரதம் முதன்முதலாக எப்படிப்பட்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது என்றால், இதன் வடிவமைப்பை பாரதத்தின் தனியார் துறையானது உருவாக்கியிருந்தது. இந்த ராக்கெட்டின் பெயர் விக்ரம்-எஸ். ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்ட உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட் அப்பின் இந்த முதல் ராக்கெட், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட போது, பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் சிரமும் பெருமையில் நிமிர்ந்தது.
நண்பர்களே, விக்ரம்-எஸ் ராக்கெட்டின் பல சிறப்பம்சங்கள் உண்டு. பிற ராக்கெட்டுக்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் லகுவானது, விலை குறைவானதும் கூட. இதனை மேம்படுத்துவதற்கான செலவு, விண்வெளிச் செயல்பாட்டோடு தொடர்புடைய பிற நாடுகளுக்கு ஆகும் செலவினத்தை விட மிகவும் குறைவானது தான். குறைந்தபட்ச செலவினம்- உலகத்தரம் வாய்ந்த விண்வெளித் தொழில்நுட்பம் என்பது பாரதத்தின் அடையாளமாக ஆகி விட்டது. இந்த ராக்கெட்டைத் தயாரிக்க, மேலும் ஒரு நவீன தொழில்நுட்பம் பயனாகி இருக்கிறது. இந்த ராக்கெட்டின் சில முக்கியமான பாகங்கள் 3டி பிரிண்டிங், அதாவது முப்பரிமாண அச்சிடுதல் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். உண்மையில், விக்ரம்-எஸ் உடைய ஏவுதல் இலக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தொடக்கப் பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது பாரதத்தில் தனியார் துறை விண்வெளிச் செயல்பாடுகளுக்கான ஒரு புதிய யுக உதயத்தின் அடையாளம். இது தேசத்தின் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு யுகத்தின் தொடக்கம். எந்தக் குழந்தைகள் ஒரு காலத்தில் தங்கள் கைகளால் காகிதத்தால் ஆன விமானங்களை உருவாக்கிப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார்களோ, இப்போது பாரதத்திலேயே விமானங்களை உருவாக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! எந்தக் குழந்தைகள் ஒருகாலத்தில் நிலவையும் விண்மீன்களையும் பார்த்து, வானத்தின் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார்களோ, இப்போது பாரதத்திலேயே ராக்கெட்டை உருவாக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! விண்வெளியை தனியார் துறைக்காகத் திறந்து விட்ட பிறகு, இளைஞர்களின் இந்தக் கனவும் மெய்ப்படத் தொடங்கி இருக்கிறது. ராக்கெட்டை உருவாக்கி வரும் இந்த இளைஞர்கள் என்ன கூறுகிறார்கள் – வானம் எல்லையல்ல, Sky is not the limit!!
நண்பர்களே, பாரதம் விண்வெளித்துறையில் தனது வெற்றியை, தனது அண்டை நாடுகளோடும் பகிர்ந்து கொண்டு வருகிறது. நேற்றுத் தான் பாரதம் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது, இதை பாரதமும் பூட்டான் தேசமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்த செயற்கைக்கோள் மிகவும் சிறப்பான resolution, பிரிதிறன் மிக்க, துல்லியமான படங்களை அனுப்பும்; இது தன்னுடைய இயற்கை ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிக்க பூட்டான் நாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். இந்தச் செயற்கைக்கோளின் ஏவுதல், பாரத-பூட்டான் நாடுகளுக்கு இடையேயான பலமான உறவுகளை பிரதிபலிக்கிறது.
நண்பர்களே, கடந்த சில மனதின் குரல் பகுதிகளில் நாம் விண்வெளி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகியன தொடர்பாக அதிகமாக உரையாடி வருகிறோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; நமது இளைஞர்கள் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள் என்பது ஒன்று. அவர்கள் பெரிதாகச் சிந்தித்து, பெரிதாகச் சாதிக்கிறார்கள். இப்போதெல்லாம் சின்னச்சின்ன சாதனைகளால் அவர்கள் நிறைவெய்துவதில்லை. நூதனக் கண்டுபிடிப்பு மற்றும் மதிப்புருவாக்கலின் இந்த சிலிர்க்கவைக்கும் பயணத்தில் அவர்கள் தங்களுடைய பிற இளைய நண்பர்களையும், ஸ்டார்ட் அப்புகளையும் கூட ஊக்கப்படுத்தி வருகிறார்கள் என்பது இரண்டாவது விஷயம்.
நண்பர்களே, நாம் தொழில்நுட்பம் தொடர்பான நூதனக் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசும் போது, ட்ரோன்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்? இந்தத் தானியங்கி ஆளில்லாமல் பறக்கும் கருவிகள் துறையிலும் கூட பாரதம் விரைவாக முன்னேறி வருகிறது. சில நாட்கள் முன்பாக, எப்படி ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னோரில் இந்த ட்ரோன்கள் வாயிலாக ஆப்பிள்கள் கொண்டு செல்லப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். கின்னோர் என்பது ஹிமாச்சல் பிரதேசத்தின் மிகத் தொலைவான மாவட்டம், மேலும் இங்கே பருவநிலையும் தீவிரமான பனிப்பொழிவு உடையது. இத்தனை பனிப்பொழிவிலும், கின்னோரின் பகுதிகள், மாநிலத்தின் பிற பாகங்களோடு தொடர்பு கொள்வது கடினமாகி விடுகிறது. இந்த நிலையில் அங்கிருந்து ஆப்பிள் பழத்தைக் கொண்டு வருவது என்பது அதே அளவு கடினங்கள் நிறைந்தது. இப்போது ட்ரோன் தொழில்நுட்பத்தால் ஹிமாச்சலுடைய சுவையான கின்னோரி ஆப்பிள்கள் மக்களைச் சென்றடையத் தொடங்கி விட்டன. இதனால் நமது விவசாய சகோதர சகோதரிகளின் செலவு குறைகிறது, ஆப்பிள்களும் சரியான நேரத்தில் சந்தைகளைச் சென்றடைய முடிகிறது, ஆப்பிள்கள் பாழாவதும் குறைந்திருக்கிறது.
நண்பர்களே, இன்று நமது நாட்டுமக்கள் தங்களுடைய நூதனக் கண்டுபிடிப்புகள் வாயிலாக, முன்பெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதனவற்றை எல்லாம் சாத்தியமாக்கி வருகிறார்கள். இதைக் காணும் வேளையில் யாருக்குத் தான் சந்தோஷம் ஏற்படாது? தற்போதைய ஆண்டுகளில் நமது தேசம் சாதனைகளுக்கான நீண்டதொரு பயணத்தை முடிவு செய்தது. பாரத நாட்டுமக்களான நாமனைவரும், குறிப்பாக நமது இளைய தலைமுறையினர் இப்போது தடைப்படுவதாக இல்லை என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே ஒரு சின்ன ஒலிக்குறிப்பை ஒலிக்க இருக்கிறேன்…….
பாடல், வைஷ்ணவ ஜனதோ
நீங்கள் அனைவரும் இந்தப் பாடலை ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள். இது அண்ணலுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஆனால், இதற்கு மெட்டமைத்தவர் கிரேக்க நாட்டவர் என்று நான் சொன்னால் நீங்கள் ஆச்சரியத்தில் அமிழ்ந்து போவீர்கள். இந்தப் பாடலைப் பாடுபவர் கிரேக்க நாட்டுப் பாடகரான கான்ஸ்டாண்டினோஸ் கலாயிட்ஸிஸ், (Konstantinos Kalaitzis). காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் விழாவின் போது இதை இவர் பாடினார். ஆனால் இன்று நான் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. அவருடைய மனதிலே இந்தியா மற்றும் இந்திய இசை தொடர்பாக விசித்திரமான ஒரு ஆர்வம் உண்டு. பாரதத்திடம் அவருக்கு எந்த அளவுக்கு ஈர்ப்பு இருந்தது என்றால், கடந்த 42 ஆண்டுகளில், இவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பாரதம் வந்திருக்கிறார். இவர் பாரதநாட்டு சங்கீதத்தின் தோற்றம், பல்வேறு இந்திய இசையமைப்புகள், பலவகையான ராகங்கள், தாளங்கள், பாவங்களோடு கூடவே, பல்வேறு பாணிகளைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார். இவர் பாரதநாட்டு சங்கீதத்தின் பல ஆகச்சிறந்த ஆளுமைகளின் பங்களிப்புகளைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார், பாரத நாட்டின் பாரம்பரியமான நடனங்களின் பல்வேறு பரிமாணங்களையும் இவர் நெருக்கமாகப் புரிந்து கொண்டிருக்கிறார். பாரதத்தோடு தொடர்புடைய தனது இந்த அனைத்து அனுபவங்களையும் இவர் ஒரு புத்தக வடிவிலே மிக அழகாகக் கோர்த்தளித்திருக்கிறார். இந்திய இசை, Indian Music என்ற பெயர் கொண்ட இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட 760 படங்கள் இருக்கின்றன. இவற்றிலிருக்கும் பெரும்பாலான படங்களை இவரே படம் பிடித்திருக்கிறார். பிற நாடுகளில் பாரத நாட்டுக் கலாச்சாரம் தொடர்பான இத்தனை உற்சாகமும், ஈர்ப்பும் உள்ளபடியே ஆனந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.
நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக மேலும் ஒரு செய்தி காதில் வந்து விழுந்தது, இது நமக்கு பெருமிதம் அளிப்பது. கடந்த 8 ஆண்டுகளாக பாரதத்திலிருந்து இசைக்கருவிகளின் ஏற்றுமதி, மூணரை மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். மின்னிசைக்கருவிகள் பற்றிப் பேசும் போது இவற்றின் ஏற்றுமதி 60 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் மீதான பேரார்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது என்பதையே இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்திய இசைக்கருவிகளின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் தாம். நமது தேசத்தில் இசை, நடனம் மற்றும் கலைகளில் மிகச் செரிவான மரபு இருக்கிறது என்பது நம்மனைவருக்கும் பெரும் பேறு அளிக்கும் விஷயம்.
நண்பர்களே, மகத்தான ஆளுமையான கவி பர்த்ருஹரியை நாம் அவர் இயற்றிய நீதி சதகம் நூலிலிருந்து நன்கறிவோம். ஒரு சுலோகத்திலே அவர், இசை, இலக்கியம் ஆகியவற்றில் நமக்கு இருக்கும் பிடிப்புத் தான் மனித சமூகத்தின் மெய்யான அடையாளம் என்கிறார். உண்மையில், நமது கலாச்சாரம் இதை மனித நேயத்தை விடவும் உயர்வாக இறையுணர்விடமே இட்டுச் செல்கிறது. வேதங்களில் சாமவேதமே நமது பல்வேறு இசை வடிவங்களின் ஊற்றுக்கண் என்று கூறப்படுகிறது. அன்னை சரஸ்வதியின் வீணையாகட்டும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழலாகட்டும், போலேநாத்தின் டமருகமாகட்டும், நமது தேவதேவியரும் கூட இசையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதையே நமக்குத் தெரிவிக்கிறது. பாரத நாட்டவரான நாம், ஒவ்வொரு விஷயத்திலும் இசைத் தேடலில் ஈடுபடுகிறோம். அது நதியின் கலகல ஒலியாகட்டும், மழையின் நீர்த்துளிகளாகட்டும், புள்ளினங்களின் கீச்சொலியாகட்டும், தென்றலின் மென்னொலியாகட்டும், நமது நாகரீகத்தில் இசையானது அனைத்து இடங்களிலும் பரவி விரவி இருக்கிறது. இந்த இசை உடலுக்கு மட்டும் ஓய்வளிப்பதில்லை, மனதையும் உல்லாசத்தில் ஆழ்த்துகிறது. இசையானது நமது சமூகத்தை இணைக்கிறது. பாங்க்டாவிலும், லாவணியிலும் ஆனந்தமும், உற்சாகமும் கொப்பளித்தால், ரவீந்திர சங்கீதத்தில், நமது ஆன்மா கரைந்து போகிறது. நாடெங்கிலும் இருக்கும் பழங்குடியினத்தவரிடம் பல்வேறு இசைப்பாரம்பரியங்கள் உண்டு. இவை நம்மை ஒருங்கிணைப்பதோடு, இயற்கையோடு இசைவான வாழ்வை வாழ உத்வேகம் அளிக்கின்றன.
நண்பர்களே, இசையின் நமது வகைகள், நமது கலாச்சாரத்தை மட்டும் வளப்படுத்தவில்லை, உலகெங்கிலும் இருக்கும் இசையிலும் கூட தங்களுடைய அழிக்கமுடியா முத்திரையை விட்டுச் சென்றிருக்கின்றன. பாரதநாட்டு இசையின் புகழானது, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியிருக்கிறது. நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கிறேன்.
கயானா நாட்டுப் பாடல்
வீட்டுக்கருகிலே ஏதோ ஒரு கோயிலில் நடக்கும் பஜனை-கீர்த்தனை என்று நீங்கள் இதைக் கருதலாம். ஆனால் இந்தக் குரல் கூட, பாரதத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் தென்னமரிக்க நாடான கயானாவிலிருந்து வந்திருக்கிறது. 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையில் நம் நாட்டிலிருந்து மக்கள் கயானாவில் குடியேறினார்கள். அவர்கள் இங்கே பாரதத்தின் பல்வேறு பாரம்பரியங்களையும் தங்களோடு கூடவே கொண்டு வந்தார்கள். எடுத்துக்காட்டாக, நாம் பாரதத்தில் எவ்வாறு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோமோ, கயானாவிலும் கூட ஹோலிப் பண்டிகை வண்ணங்களைக் கொட்டி முழக்குகிறது. எங்கே ஹோலியின் வண்ணங்கள் உள்ளனவோ, அங்கே பக்வா, அதாவது ஃபகுவாவின் இசையும் உண்டு தானே!! கயானாவின் பக்வாவில், பகவான் இராமபிரான், பகவான் கிருஷ்ணனோடு தொடர்புடைய திருமணப் பாடல்களைப் பாடும் ஒரு விசேஷமான பாரம்பரியம் உள்ளது. இந்தப் பாடல்களை சௌதால் என்று அழைக்கிறார்கள். எப்படி நம் நாட்டில் உள்ளதோ அதைப் போன்றே, இவை இந்த மெட்டில், இத்தனை உச்சஸ்தாயியில் பாடப்படுகின்றன. இது மட்டுமல்ல, கயானாவில் சௌதால் போட்டிகளும் உண்டு. இதைப் போலவே பல பாரத நாட்டவர், குறிப்பாக கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஃபிஜிக்கும் சென்றார்கள். இவர்கள் பாரம்பரியமான பஜனைகள்-கீர்த்தனைகளைப் பாடினார்கள், இவற்றில் முக்கியமான ராமசரிதமானஸின் தோஹாக்கள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் ஃபிஜியிலும் கூட பஜனைகள்-கீர்த்தனைகளோடு இணைந்த பல மண்டலிகளை உருவாக்கினார்கள். ஃபிஜியில் இராமாயண மண்டலியின் பெயரில் இன்றும் கூட, 2000த்திற்கும் மேற்பட்ட பஜனை-கீர்த்தனை மண்டலிகள் இருக்கின்றன. இவற்றை இன்று ஒவ்வொரு கிராமம்-பகுதிகளிலும் நம்மால் காண முடியும். நான் இங்கே சில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே உங்களுக்கு அளித்திருக்கிறேன். நீங்கள் உலகெங்கும் பார்த்தால், பாரதநாட்டின் இசைப் பிரியர்களின் இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நாமனைவரும், எப்போதும் பெருமிதப்படும் ஒரு விஷயம் என்றால், நமது தேசம் உலகின் மிகத் தொன்மையான பாரம்பரியங்களின் இல்லம் என்பதே ஆகும். ஆகையால், நாம் நமது பாரம்பரியங்களையும், நமது பாரம்பரியமான ஞானத்தையும் பாதுகாத்தளிக்க வேண்டும், அவற்றைப் போற்ற வேண்டும், இயன்றவரை அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது நம்மனைவரின் பொறுப்பாகும். இந்த வகையிலே பாராட்டுதலுக்குரிய ஒரு முன்னெடுப்பினை வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் சில நண்பர்கள் செய்து வருகின்றார்கள். இந்த முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மனதின் குரல் நேயர்களோடு இதைப் பகிர வேண்டும் என்று என் மனம் அவாவியது.
நண்பர்களே, நாகாலாந்தின் நாகா சமூகத்தவரின் வாழ்க்கைமுறை, அவர்களின் கலை-கலாச்சாரம் மற்றும் இசை ஆகியன அனைவர் மனங்களையும் கொள்ளை கொள்ளக்கூடியவை. இவை நமது தேசத்தின் பெருமிதமான பாரம்பரியத்தின் முக்கியமான அங்கமாகும். நாகாலாந்தின் மக்களின் வாழ்க்கையும் அவர்களுடைய திறன்கள்-நீடித்த வாழ்க்கைமுறை ஆகியவற்றிற்காக பெயர் போனவை. இந்தப் பாரம்பரியங்கள் மற்றும் திறன்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினர் வரை கொண்டு சேர்க்க, அங்கிருப்போர் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள், இதன் பெயர் லிடி-க்ரோ-யூ ஆகும். கலாச்சாரத்தின் பரிமாணங்களை நாகாக்கள் இழந்துவரும் கட்டத்தில், இவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியை இந்த லிடி-க்ரோ-யூ அமைப்பு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக, நாகாக்களின் நாட்டுப்புற இசையானது உள்ளபடியே மிகவும் நிறைவான பாரம்பரியம் கொண்டது. இந்த அமைப்பானது, நாகா மக்களின் இசையினை, தொகுப்புக்களாக்கி வெளியிடத் தொடங்கியது. இதுவரை இப்படிப்பட்ட மூன்று இசைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவர்கள் நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றோடு தொடர்புடைய கருத்துப் பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கும் இவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, நாகாலாந்தின் பாரம்பரியமான பாணியில் ஆடைகளை உருவாக்கல், தைத்தல்-நெசவு செய்தல் போன்ற பணிகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வடகிழக்கில் மூங்கிலிலும் கூட பலவகையான பொருட்கள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய தலைமுறை இளைஞர்களுக்கு மூங்கில் பொருட்களை உருவாக்குதல் கற்பிக்கப்படுகிறது. இதனால் இந்த இளைஞர்களுக்குத் தங்களுடைய கலாச்சாரத்தில் பிடிப்பு ஏற்படுவதோடு, வேலைவாய்பிற்கான புதிய சந்தர்ப்பங்கள் பிறக்கின்றன. நாகா மக்களின் கலாச்சாரம் குறித்து, அதிக அளவில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இதன் பொருட்டு லிடி-க்ரோ-யூ அமைப்பைச் சார்ந்தவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
நண்பர்களே, உங்கள் பகுதியிலும் கூட இப்படிப்பட்ட கலாச்சார மரபுகளும், பாரம்பரியங்களும் இருக்கலாம். நீங்களுமே கூட, உங்களுடைய பகுதிகளில் இதைப் போன்ற முயற்சியில் ஈடுபடலாம். இப்படிப்பட்டதொரு அருமையான முயற்சி உங்கள் பகுதியில் நடைபெறுகிறது என்ற செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால், அதைப் பற்றிய தகவலைக் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நம் நாட்டிலே ஒன்று கூறப்படுவதுண்டு - வித்யாதனம் சர்வதனப்பிரதானம். அதாவது, யாரேனும் ஒருவர் கட்டணமில்லாக் கல்வியை அளிக்கிறார் என்றால், அவரே சமூகத்தின் நலனுக்காக மிகப்பெரிய பணியைச் செய்கிறார் என்று பொருள். கல்வித் துறையில் ஏற்றப்படும் ஒரு சிறிய விளக்கால், சமூகத்திற்கே ஒளிகூட்ட முடியும். இன்று நாடெங்கிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் பல நடந்தேறி வருகின்றன என்பதைக் காணும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. யூபியின் தலைநகரான லக்னௌவிலிருந்து 70-80 கிலோமீட்டர் தொலைவில் ஹர்தோயியைச் சேர்ந்த பான்ஸா என்ற பெயருடைய ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜதின் லலித் சிங் அவர்களைப் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இவர் கல்வியின் ஒளியை ஏற்றி வைப்பதில் ஈடுபட்டு வருகிறார். ஜதின் அவர்கள் ஈராண்டுகள் முன்பாக Community Library and Resource Centre, அதாவது சமூக நூலகம் மற்றும் ஆதாரங்கள் மையம் ஒன்றினைத் தொடங்கினார். அவருடைய இந்த மையத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கில இலக்கியங்கள், கணிப்பொறி, சட்டம் மற்றும் பல அரசுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகளோடு தொடர்புடைய 3000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்களும் முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே இருக்கும் சிறுவர்களுக்கான வேடிக்கைப் புத்தகங்களான காமிக்ஸ் புத்தகங்களாகட்டும், கல்விசார் விளையாட்டுப் பொருட்களாகட்டும், குழந்தைகளிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. குழந்தைகள் விளையாட்டுப் போக்கிலே இங்கே புதியபுதிய விஷயங்களைக் கற்க வருகின்றார்கள். படிப்பு இணையவழியாகவோ, இணையவழி சாராததாகவோ இருந்தாலும், சுமார் 40 தன்னார்வலர்கள் இந்த மையத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் கிராமத்தின் சுமார் 80 மாணவர்கள் இந்த நூலகத்தில் படிக்க வருகின்றார்கள்.
நண்பர்களே, ஜார்க்கண்டின் சஞ்ஜய கஷ்யப் அவர்களும் கூட ஏழைக் குழந்தைகளின் கனவுக்குக்குப் புதிய இறக்கைகளை அளித்து வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் சஞ்ஜய் அவர்களால் நல்ல புத்தகங்களைப் படிக்க முடியாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலையில், புத்தகங்களின் குறைபாடு தனது பகுதியைச் சார்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார். தனது இந்தக் குறிக்கோளின் காரணமாக, இன்று இவர் ஜார்க்கண்டின் பல மாவட்டங்களின் குழந்தைகளுக்காக நூலக மனிதன், Library Man ஆகியிருக்கிறார். சஞ்ஜய் அவர்கள் தனது வேலைத் தொடங்கிய வேளையில், தனது முதல் நூலகத்தை தனது பிறந்த இடத்தில் ஏற்படுத்தினார். பணிக்கிடையில், எங்கெல்லாம் அவருக்கு இடமாற்றம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் ஏழை மற்றும் பழங்குடியினக் குழந்தைகளின் படிப்பிற்காக நூலகத்தைத் திறக்கும் தனது இலக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இப்படிச் செய்து, இவர் ஜார்க்கண்டின் பல மாவட்டங்களின் குழந்தைகளுக்காக நூலகத்தைத் திறந்து விட்டார். நூலகத்தைத் திறப்பதற்கான அவருடைய இலக்கு இன்று ஒரு சமூக இயக்கமாக உருமாறி இருக்கிறது. சஞ்ஜய் அவர்களாகட்டும், ஜதின் அவர்களாகட்டும், இப்படிப்பட்ட பல முயற்சிகளுக்காக சிறப்பான பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரர்கள்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, மருத்துவ அறிவியல் உலகில், ஆய்வுகளும், நூதனமான கண்டுப்பிடிப்புக்களோடு கூடவே, மிக நவீனமான தொழில்நுட்பமும், கருவிகளின் துணையும் மிகவும் முன்னேறியிருக்கிறது என்றாலும், சில நோய்கள், இன்றுவரை மிகப்பெரிய சவாலாகவே விளங்கி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு நோய் தான் muscular dystrophy, தசைநார் தேய்வு. இது முக்கியமாக ஒரு மரபுவழி பரம்பரை நோய், இது எந்த வயதிலும் தாக்கலாம், இதனால் உடலின் தசைகள் பலவீனப்படத் தொடங்குகின்றன. நோயாளியால் தனது சின்னச்சின்ன அன்றாடச் செயல்களைச் செய்வது கூட சிரமமானதாகிறது. இப்படிப்பட்ட நோயாளிகளின் சிகிச்சையும், பராமரிப்பும் செய்ய, பெரிய சேவை உணர்வு அவசியமாகிறது. நம் நாட்டிலே ஹிமாச்சல் பிரதேசத்தின் சோலன் பகுதியில் இப்படிப்பட்ட ஒரு மையம் உள்ளது, இது தசைநார் தேய்மானம் உள்ள நோயாளிகளின் வாழ்வில் ஒரு புதிய ஒளிக்கிரணமாக விளங்குகிறது. இந்த மையத்தின் பெயர் மானவ் மந்திர். இதனை Indian Association of Muscular Dystrophy, அதாவது தசைநார் தேய்வுக்கான இந்தியச் சங்கம் நிர்வகித்து வருகிறது. மானவ் மந்திர், தனது பெயருக்கேற்பவே, மனித சேவையின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. இங்கே நோயாளிகளுக்காக புறநோயாளி மற்றும் சேர்க்கை தொடர்பான சேவைகள் 3-4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. மானவ் மந்திரில் சுமார் 50 நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் உண்டு. இயன்முறைமருத்துவம், மின்முறைமருத்துவம், நீர்முறைசிகிச்சை ஆகியவற்றோடு கூடவே, யோகம்-பிராணாயாமத்தின் துணையோடும் இங்கே நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நண்பர்களே, அனைத்துவிதமான உயர்தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக இந்த மையத்தில் நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தசைநார் தேய்வோடு தொடர்புடைய சவால்கள் பற்றிய விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை. ஆகையால், இந்த மையமானது, ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடெங்கிலும் நோயாளிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே முகாம்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. மிக முக்கியமான நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த அமைப்பை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களே நிர்வாகம் செய்கிறார்கள்; எடுத்துக்காட்டாக சமூக சேவகர், ஊர்மிளா பால்தீ அவர்கள், தசைநார் தேய்விற்கான இந்தியச் சங்கத்தின் தலைவர், சகோதரி சஞ்ஜனா கோயல் அவர்கள், மேலும் இந்தச் சங்கத்தைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றிய விபுல் கோயல் அவர்கள் இந்த அமைப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள். மானவ் மந்திரை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் என்ற வகையில் மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருக்கும் நோயாளிகளுக்கு மேலும் சிறப்பான சிகிச்சை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; கூடவே தசைநார் தேய்மானத்தை எதிர்கொண்டு வரும் அனைவருக்கும் விரைவில் நலன்கள் ஏற்பட என் நல்விருப்பங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலில் நாட்டுமக்களின் ஆக்கப்பூர்வமான, சமூகப் பணிகளைப் பற்றி உரையாடினோம், இவை தேசத்தின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் உதாரணங்கள். நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் இன்று ஏதோ ஒரு துறையில், ஒவ்வொரு நிலையிலும், தேசத்திற்காக வித்தியாசமான ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்றைய உரையாடலில் நாம் என்ன பார்த்தோம்…….. ஜி-20 போன்ற சர்வதேச நிகழ்ச்சியில் நமது ஒரு நெசவாளி நண்பர், எப்படி தனது பொறுப்பினை நிறைவேற்றினார், இதைப் புரிய முன்வந்தார். இதைப் போலவே ஒருவர் சுற்றுச்சூழலுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், ஒருவர் நீருக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார், பலர் கல்வித் துறையில், சிகிச்சை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் தொடங்கி, கலாச்சாரம்-பாரம்பரியங்கள் வரை, அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருவதைக் கண்டோம். இது ஏன் இவ்வாறு என்றால், நமது குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளைப் புரிந்து கொண்டுள்ளார்கள், இப்படிப்பட்ட கடமையுணர்வு எந்த ஒரு தேசத்தின் குடிமக்களிடமும் வந்து விட்டது என்று சொன்னால், அந்த தேசத்தின் பொன்னான எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விடும், தேசத்தின் பொன்னான எதிர்காலம் என்றால் அது நம்மனைவரின் பொன்னான எதிர்காலம் தானே!!
நான், மீண்டும் ஒருமுறை நாட்டுமக்களுக்கும், அவர்களின் முயல்வுகளுக்கும் தலைவணங்குகிறேன். அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இப்படிப்பட்ட பல, உற்சாகமளிக்கும் விஷயங்கள் குறித்து கண்டிப்பாக உரையாடுவோம். உங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் கொள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய கிராமங்கள், தங்கள் இல்லங்கள், தங்களுடைய குடும்பத்தாரிடம் வந்திருக்கின்றார்கள். சட் அன்னை அனைவரின் வளம், அனைவரின் நலம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையாகும்.
நண்பர்களே, மாதம் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு மின்சார ரசீது வருவதற்கு பதிலாக, மின்சாரத்திற்காக உங்களுக்குப் பணம் வரும் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? சூரியசக்தியானது இதையும் செய்து காட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பாக, தேசத்தின் முதல் சூரிய கிராமமான, குஜராத்தைச் சேர்ந்த மோடேரா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். மோடேரா சூரிய கிராமத்தின் பெரும்பான்மையான வீடுகள், சூரியசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. இப்போது அங்கே பல வீடுகளில், மாதத்தின் இறுதியில் மின்சாரத்திற்கான ரசீது வருவதில்லை, மாறாக, மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்த வருமானத்திற்கான காசோலை தான் வருகின்றது. இதைப் பார்த்த பிறகு, இப்போது தேசத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தையும் சூரியசக்தி கிராமமாக மாற்றித் தர வேண்டும் என்று கடிதங்கள் எழுதுகிறார்கள். அதாவது, பாரதத்திலே சூரியசக்தி கிராமங்களின் நிறுவல் என்பது ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை, இதனை மோடேரா கிராமவாசிகள் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
வாருங்கள், மனதின் குரலின் நேயர்களை, மோடேரா மக்களோடு இணைக்கலாம். நம்மோடு இப்போது தொலைபேசியில் இணைந்திருப்பவர், விபின்பாய் படேல் அவர்கள்.
பிரதமர்: விபின்பாய் வணக்கம்! இப்போது மோடேரா கிராமத்தைப் பற்றி தேசம் முழுவதும், ஒரு மாதிரி என்ற வகையிலே பேசி வருகிறது. ஆனால் உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கேட்கும் போது, நீங்கள் அவர்களுக்கு என்ன கூறுகிறீர்கள், என்ன ஆதாயம் அடைஞ்சீங்க?
விபின் ஜி: சார், ஆளுங்க என்கிட்ட கேட்கும் போது நான் சொல்லுவேன், முதல்ல எல்லா சின்ன அளவுல தான் பில் வரத் தொடங்கிச்சு, பிறகு இப்ப சுத்தமா பூஜ்யம் தான் பில் வருது, சில சமயம் 70 ரூபாய் வரும், ஆனா எங்க கிராமம் முழுசுலயும் பொருளாதார நிலை மேம்பாடு அடைஞ்சிட்டு வருது.
பிரதமர்: அதாவது ஒரு வகையில, முன்ன மின்சார பில் பத்தி இருந்த கவலை இப்ப இல்லை, இல்லையா?
விபின் ஜி: ஆமாம் சார். இது என்னவோ உண்மைங்க. இப்ப எல்லாம் கிராமம் மொத்தத்துக்குமே எந்த டென்ஷனும் கிடையாது. சார் செஞ்சது ரொம்பவே நல்லதுன்னு எல்லாருமே இப்ப சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப சந்தோசமா இருக்குங்க. எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு.
பிரதமர்: இப்ப உங்க வீட்டிலேயே மின்சாரத் தொழிற்சாலைக்கு முதலாளி ஆயிட்டீங்க. உங்க வீட்டுக் கூரையிலேயே மின்சாரம் உற்பத்தி ஆயிட்டு இருக்கு,
விபின் ஜி: ஆமாங்கய்யா, சரியாச் சொன்னீங்க.
பிரதமர்: சரி, இந்த மாற்றம் உங்க கிராமத்து மக்கள் கிட்ட என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு?
விபின் ஜி: ஐயா, ஒட்டுமொத்த கிராமவாசிகளும் விவசாயம் செய்யறாங்க. முன்ன மின்சாரம் ஒரு சிக்கலா இருந்திச்சு, இப்ப அதிலேர்ந்து விடுதலை கிடைச்சுப் போச்சு. மின்சாரத்துக்கான பில்லையும் கட்ட வேண்டாம், கவலையே இல்லாம இருக்கலாம்யா.
பிரதமர்: அப்படீன்னா, மின்சாரத்துக்கான பில்லும் இல்லை, வசதிகளும் அதிகமாயிருச்சு, சரியா?
விபின் ஜி: ஐயா, சிக்கல் போச்சுங்கறது ஒரு பக்கம்; நீங்க இங்க வந்த போது 3டி காட்சியை தொடங்கி வச்சதுக்குப் பிறகு மோடேரா கிராமமே வேற லெவலுக்கு போயிருச்சுங்கய்யா. பிறகு ஒரு செயலர்னு யாரோ ஒருத்தர் வந்தாருய்யா….
பிரதமர்: சரி, சரி.
விபின் ஜி: அப்புறமா எங்க கிராமமே பிரபலமாயிருச்சுய்யா.
பிரதமர்: ஆமா, ஆமா, ஐ.நா.வோட செக்ரட்டரி ஜெனரல், அவரே இங்க வர விருப்பம் தெரிவிச்சாரு. இத்தனை பெரிய வேலை செஞ்சிருக்கீங்க, நானே அங்க போயி பார்க்க விரும்பறேன்னாரு. சரி விபின் பாய், உங்களுக்கும், உங்க கிராமத்து மக்களுக்கும், என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள், உலகம் முழுவதும் உங்க கிட்டேர்ந்து உத்வேகம் அடையுது, இந்த சூரியசக்தி இயக்கம் வீடுதோறும் செயல்படணும்.
விபின் ஜி: ரொம்ப நல்லது ஐயா, இதை எல்லாத்துக்கிட்டயும் சொல்றோங்கய்யா, எல்லாரும் சூரியசக்தியைப் பயன்படுத்துங்க, உங்களுக்குப் பணம் மிச்சமாகும்ன்னு சொல்றோங்கய்யா.
பிரதமர்: ஆமா, மக்களுக்குப் புரிய வையுங்க. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி சகோதரா.
விபின் ஜி: நன்றிங்கய்யா, உங்களோட பேசினதே எனக்குப் பெரிய வரப்பிரசாதம்யா.
விபின் பாயிக்கு பலப்பல நன்றிகள்.
வாருங்கள், இப்போது மோடேரா கிராமத்தின் வர்ஷா பேனிடம் பேசிப் பார்க்கலாம்.
வர்ஷாபேன்: ஹெலோ வணக்கம் ஐயா!
பிரதமர்: வணக்கம் வர்ஷா பேன். எப்படி இருக்கீங்க?
வர்ஷாபேன்: ரொம்ப நல்லா இருக்கேங்க. நீங்க எப்படி இருக்கீங்க?
பிரதமர்: நான் நல்லா இருக்கேம்மா.
வர்ஷா பேன்: உங்க கூட பேசறது பெரிய பேறுங்கய்யா.
பிரதமர்: நல்லது வர்ஷாபேன்.
வர்ஷாபேன்: சொல்லுங்கய்யா.
பிரதமர்: நீங்க மோடேராவில இருக்கீங்க, ஒரு முன்னாள் இராணுவ வீரரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க, சரியா?
வர்ஷாபேன்: நான் இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவ. என் கணவர் முன்னாள் இராணுவ வீரர் ஐயா.
பிரதமர்: முன்ன இந்தியாவுல எந்த இடங்களுக்கு எல்லாம் போயிருக்கீங்க?
வர்ஷாபேன்: முதல்ல இராஜஸ்தான் போயிருக்கேன், பிறகு காந்திநகர், பிறகு கச்ரா கஞ்ஜோர் ஜம்முவுக்கு போயிருக்கேன், அங்க அவர்கூட இருந்தும் இருக்கேன். அங்க ரொம்ப வசதியா இருந்திருக்குங்கய்யா.
பிரதமர்: சரி, இராணுவத் தொடர்புல இருந்ததால ஹிந்தியும் நல்லாவே பேசறீங்களோ?
வர்ஷாபேன்: ஆமா ஆமா. நான் கத்துக்கிட்டேன்யா.
பிரதமர்: சரி, மோடேராவுல இத்தனை பெரிய மாற்றம் வந்திருக்கு, இங்க சூரியசக்திக் கருவிகள் கூரைப்பகுதியில பொருத்தப்பட்டிருக்கு. மொதல்ல மக்கள் பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்ட போது உங்க மனசுல என்ன தோணிச்சு, என்ன பெரிய மின்சாரம் வந்துடப் போகுது, இது தேவையில்லாத வேலைன்னு பட்டுதா? இப்ப உங்க அனுபவம் என்னவா இருக்கு? இதனால ஆதாயம் ஏற்பட்டிருக்கா?
வர்ஷாபேன்: ரொம்ப ரொம்ப ஆதாயம் ஏற்பட்டிருக்குய்யா. ஐயா, எங்க கிராமத்தில தினம்தினம் உங்களால நாங்க தீபாவளி கொண்டாடிக்கிட்டு இருக்கோம். 24 மணிநேரமும் எங்களுக்கு மின்சாரத்துக்குக் குறைவே இல்லை, மின்சாரப் பயன்பாட்டுக்கான ரசீது சுத்தமா வர்றதே கிடையாது. எங்க வீட்டுல நாங்க எல்லா பொருட்களையும் மின்பொருட்களாத் தான் வச்சிருக்கோம், எல்லாத்தையும் பயன்படுத்திட்டு இருக்கோம்னா அதுக்கு நீங்க தான் காரணம். சுத்தமா பில்லே வராது, எந்தக் கவலையும் இல்லாம பயன்படுத்திக்கலாம்.
பிரதமர்: இதெல்லாம் சரி, நீங்க அதிகமா மின்சாரத்தைப் பயன்படுத்திக்கணும்ங்கற முடிவுல இருக்கீங்க இல்லையா!
வர்ஷாபேன்: ஆமாங்கய்யா. இப்ப எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை, நாங்க எந்தக் கவலையும் இல்லாம பயன்படுத்திக்கலாம், வாஷிங் மெஷினாகட்டும், ஏசியாகட்டும், எல்லாத்தையும் பயன்படுத்திக்கலாம்.
பிரதமர்: சரி, கிராமத்தைச் சேர்ந்த மத்தவங்கல்லாம் இதனால சந்தோஷமா இருக்காங்களா?
வர்ஷாபேன்: ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறாங்கய்யா.
பிரதமர்: ஆமா, உங்க கணவர் அங்க இருக்கற சூரியனார் கோயில்ல வேலை பார்க்கறாரில்லையா? அங்க நடைபெற்ற லைட் ஷோ, இத்தனை பெரிய நிகழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுக்கவிருந்தும் விருந்தாளிங்க வர்றாங்க இல்லையா?
வர்ஷாபேன்: உலகம் முழுக்கலேர்ந்தும் அயல்நாட்டுக்காரங்க எப்படி வராம இருப்பாங்க? நீங்க தான் எங்க கிராமத்தை உலகப் பிரசித்தி உடையதா ஆக்கிட்டீங்க இல்ல?
பிரதமர்: அப்படீன்னா உங்க கணவருக்கும் வேலை அதிகமாயிருக்கும், விருந்தாளிங்க அங்க கோயிலைப் பார்க்கவும் வருவாங்க.
வர்ஷாபேன்: அட! வேலை எத்தனை அதிகமானாலும் கவலை இல்லைங்க, இது எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. நாங்க விரும்பறது எல்லாம் தொடர்ந்து எங்க கிராமத்தை நீங்க முன்னேத்திக்கிட்டே போகணுங்கறது தான்.
பிரதமர்: இப்ப கிராமத்தோட முன்னேற்றத்தை நாம இணைஞ்சு செய்யணும்.
வர்ஷாபேன்: ஆமா ஆமா. ஐயா, நாங்க உங்களுக்குத் துணை நிக்கறோம்.
பிரதமர்: நான் மோடேராவாசிகளை பாராட்டறேன், ஏன்னு சொன்னா, கிராமம் முழுக்க இதை ஏத்துக்கிட்டாங்க, அவங்க வீடுகள்ல மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுங்கறது மேல அவங்க நம்பிக்கை வச்சாங்க.
வர்ஷாபேன்: 24 மணிநேரம்யா. எங்க வீட்டில 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்குது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.
பிரதமர்: சரிம்மா. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள். மிச்சப்படுற பணத்தை வச்சு பிள்ளைங்க நலனுக்குப் பயனாகற வகையில செலவு செய்யுங்க. அந்தப் பணம் நல்லவிதமா செலவாகணும், அதனால உங்க வாழ்க்கை மேம்படணும். உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். மேலும் அனைத்து மோடேராவாசிகளுக்கும் என்னுடைய வணக்கங்கள்!!
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இதுவரை நான் உங்களிடம் சூரியனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது எனது கவனம் விண்வெளியின்பால் செல்கிறது. ஏனென்றால், நம்முடைய தேசம் சூரியசக்தித் துறையோடு கூடவே, விண்வெளித்துறையிலும் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்று, பாரதத்தின் சாதனைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. ஆகையால் நான் நினைத்தேன், மனதின் குரலின் நேயர்களிடம் இதைச் சொன்னால் அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படுமே என்று இதனைப் பகிர்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மாணவர்கள் பற்றிய பேச்சு வரும் போது, இளைஞர்கள் பற்றிப் பேசும் போது, தலைமைப்பண்பு பற்றிய பேச்சு எழும் போது, நமது மனதில் ஊறியிருக்கும், பழைய, பல கருத்துக்களும், எண்ணங்களும் இடம் பெற்றிருக்கின்றன. மாணவர்கள் சக்தி என்று பேசும் போது, இதை மாணவர் சங்கத் தேர்தல்களோடு மட்டுமே குறுக்குவதை நாம் பல முறை பார்க்கிறோம். ஆனால் மாணவர் சக்தி என்பதன் வீச்சு மிகப்பெரியது, மிகவும் பரந்துபட்டது. மாணவர்சக்தி என்பது பாரதத்தை சக்தி படைத்ததாக ஆக்கும் ஆதாரம். இன்றைய இளைஞர்கள் தாம், பாரதத்தை 2047ஆம் ஆண்டுக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள். சுதந்திர பாரதம் தனது நூற்றாண்டைக் கொண்டாடும் போது, இளைஞர்களின் இந்தச் சக்தி, அவர்களின் உழைப்பு, அவர்களின் வியர்வை, அவர்களின் திறமைகள், பாரதத்தை எந்த உயரத்திற்குக் கொண்டு சேர்க்குமோ, அந்த உறுதிப்பாட்டைத் தான் தேசம் இன்று எடுத்துக் கொண்டு வருகிறது. நமது இன்றைய இளைஞர்கள், எந்த வகையில் செயலாற்றி வருகிறார்களோ, தேசத்தைக் கட்டமைப்பதில் இணைந்திருக்கின்றார்களோ, இதைக் காணும் போது என் மனதில் மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது. எந்த வகையில் நமது இளைஞர்கள் ஹேக்கத்தான்களில், அதாவது கணினி நிரலாக்கங்களைக் கூட்டாகச் செயல்பட்டுச் சிக்கல்களைத் தீர்க்கிறார்களோ, இரவுமுழுக்க கண்விழித்து, மணிக்கணக்காகப் பணியாற்றுகிறார்களோ, இதையெல்லாம் காணும் போது மிகுந்த உத்வேகம் உதிக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த கணினி நிரலாக்கங்களைக் கூட்டாகச் செய்வதில் தேசத்தின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து, பலப்பல சவால்களைத் தீர்த்திருக்கிறார்கள், தேசத்திற்குப் புதிய தீர்வுகளை அளித்திருக்கின்றார்கள்.
நண்பர்களே, நான் செங்கோட்டையிலிருந்து ஜய் அனுசந்தான், அதாவது ஜய் ஆராய்ச்சிகள் என்ற அறைகூவலை விடுத்திருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த தசாப்தத்தை பாரதத்தின் தசாப்தமாக ஆக்கும் விஷயம் குறித்துப் பேசியிருந்தேன். இதற்கான பொறுப்பை நமது தொழில்நுட்பக் கழகங்கள், ஐ.ஐ.டிக்களின் மாணவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் அக்டோபர் 14-15இலே, அனைத்து 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் தங்களுடைய கண்டுப்பிடிப்புகள் மற்றும் ஆய்வுச் செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்த, முதன்முறையாக ஒரு மேடையில் குழுமினார்கள். இந்தக் கூட்டத்தில் நாடெங்கிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும், ஆய்வாளர்களும் 75க்கும் மேற்பட்ட மிகச் சிறப்பான செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்தினார்கள். ஆரோக்கியப் பராமரிப்பு, விவசாயம், ரோபாட்டிக்குகள், குறைக்கடத்திகள், 5ஜி, அதாவது ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தகவல்தொடர்புகள், இப்படி ஏராளமான ஆய்வுப் பொருள்களில் இந்தச் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயல்திட்டங்கள் அனைத்தும் ஒன்றை விட மற்றது சிறப்பானவையாக இருந்தாலும், நான் சில செயல்திட்டங்களை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.டி புவனேஸ்வரின் ஒரு குழு, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வெண்டிலேட்டரை பிறந்த சிசுவிற்காக மேம்படுத்தியிருக்கிறார்கள். இது பேட்டரியில் இயங்குகிறது, தொலைவான இடங்களில் கூட இதனைப் பயன்படுத்த இயலும். குறித்த காலத்திற்கு முன்பே பிறந்துவிடும் அந்த சிசுக்களின் உயிரைக் காக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மின்சார வாகனங்களாகட்டும், ஆளில்லாமல் வானில் பறக்கும் கருவிகளின் தொழில்நுட்பமாகட்டும், ஐந்தாம் தலைமுறை அலகற்றையாகட்டும், நமது பல மாணவர்கள், இவற்றோடு தொடர்புடைய புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இணைந்து ஒரு பன்மொழி செயல்திட்டத்தின் மீது பணியாற்றி வருகின்றார்கள், இது மாநில மொழிகளைக் கற்கும் வழிமுறையை எளிமைப்படுத்தி வருகின்றது. இந்தச் செயல்திட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கை, அதன் இலக்குகளை எட்டவும் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஐஐடி மதராஸும், ஐஐடி கான்பூரும் இணைந்து பாரதத்தின் சுதேசி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை சோதனைக் களத்தைத் தயார் செய்திருப்பதில் முதன்மை பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்வை அளிக்கலாம். கண்டிப்பாக இது ஒரு பிரமாதமான தொடக்கம் என்பதில் ஐயமில்லை. இனிவரும் காலத்தில் இதைப் போன்ற, மேலும் பல முயற்சிகள் கண்டிப்பாகக் காணக் கிடைக்கும். அதே போல ஐஐடிக்களின் கருத்தூக்கத்தாலே உந்தப்பட்டு, பிற நிறுவனங்களும் ஆய்வு மற்றும் மேம்பாட்டோடு தொடர்புடைய தங்களின் செயல்பாடுகளில் வேகத்தைக் கூட்டுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கர்நாடகத்தின் பெங்களூரூவில் வசிக்கும் சுரேஷ் குமாரிடத்திலும் கூட நாம் பல விஷயங்களைக் கற்க முடியும்; இவரிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக மிகப்பெரும் வேகம் இருக்கிறது. 20 ஆண்டுகள் முன்பாக, இவர் நகரத்தின் சஹகார்நகரான புறநகர்ப்பகுதியின் ஒரு காட்டினை மீண்டும் பசுமை நிறைந்த ஒன்றாக ஆக்குவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். இந்தப் பணி சிரமங்கள் நிறைந்தது தான் என்றாலும், 20 ஆண்டுகள் முன்பே நடப்பட்ட செடிகள் இன்று 40 அடி உயரம் வளர்ந்து விசாலமானவையாக ஆகி விட்டிருக்கின்றன. இப்போது இதன் அழகு அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்கிறது. சுரேஷ் குமார் அவர்கள், மேலும் ஒரு அற்புதமான பணியையும் செய்கிறார். இவர் கன்னட மொழி மற்றும் சம்ஸ்கிருதத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலே சஹகார்நகரில் ஒரு பேருந்து நிறுத்துமிடத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் பல்லாயிரம் மக்களுக்குக் கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கும் செப்புத் தகடுகளையும் பரிசளித்திருக்கிறார். சூழலியல், கலாச்சாரம் – இரண்டும் ஒன்றாக வளர வேண்டும், மலர வேண்டும். இதுவே அவர் எண்ணம்….. எத்தனை அருமையான விஷயம் பார்த்தீர்களா!!
நண்பர்களே, இன்று சூழலுக்கு நேசமான வாழ்கை மற்றும் சூழலுக்கு இணக்கமான பொருள்கள் தொடர்பாக மக்களிடம், முன்பை விட அதிக அளவில் விழிப்புணர்வு தென்படுகிறது. தமிழ்நாட்டின் இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான முயல்வு பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அருமையான முயற்சி, கோயம்புத்தூரின் ஆனைக்கட்டியில் இருக்கும் பழங்குடியினப் பெண்களின் ஒரு குழுவினுடையது. ஏற்றுமதி செய்யப்பட, சூழலுக்கு இணக்கமான மண்ணால் ஆன பத்தாயிரம் தேநீர் கோப்பைகளை இந்தப் பெண்கள் உருவாக்கினார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மண்ணாலான தேநீர்க் கோப்பைகளைத் தயாரிக்கும் பொறுப்பினை, இந்தப் பெண்கள் தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். களிமண் கலவை தொடங்கி, இறுதிக்கட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகளையும் இவர்களே செய்தார்கள். இதற்காக இவர்கள் பயிற்சியும் பெற்றார்கள். இந்த அற்புதமான முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
நண்பர்களே, நாளை, அக்டோபர் 31ஆம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு தினம், சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளன்று தேசத்தின் பல்வேறு இடங்களிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டம், தேசத்தில் ஒற்றுமை இழையைப் பலப்படுத்துகிறது, நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. சில நாட்கள் முன்னர், இதே போன்ற உணர்வு, நமது தேசிய விளையாட்டுக்களில் காணக் கிடைத்தது. இணையும் இந்தியா, வெல்லும் இந்தியா என்ற கருத்தோடு, தேசிய விளையாட்டுக்கள் ஒற்றுமை தொடர்பான பலமான செய்தியை அளித்த வேளையில், பாரதத்தின் விளையாட்டுக் கலாச்சாரத்திற்கு ஊக்கமளிக்கும் பணியையும் செய்தது. பாரதத்தின் தேசிய விளையாட்டுக்களில் இதுவரையிலான மிகப்பெரிய ஏற்பாடாக இது அமைந்திருந்தது. இதிலே 36 விளையாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன, இவற்றிலே, 7 புதிய மற்றும் 2 சுதேசிப் போட்டிகளான யோகாசனம் மற்றும் மல்லகம்பமும் இடம் பிடித்தன. தங்கப் பதக்கங்களை வெல்வதில், முதன்மையாக மூன்று அணிகள் இருந்தன – முப்படையினர் அணி, மஹாராஷ்டிரம், ஹரியாணா அணிகள். இந்த விளையாட்டுக்களில் ஆறு தேசிய சாதனைகளும், கிட்டத்தட்ட 60 தேசிய விளையாட்டுக்களின் பதிவுகளும் உருவாக்கப்பட்டன. பதக்கங்களை வென்றவர்கள், புதிய சாதனைகளைப் படைத்தவர்கள், இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் என அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நான் இந்த விளையாட்டு வீரர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும் என் நல்விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான். வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல். இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.
நண்பர்களே, பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் சூழலுக்கேற்ப, இந்த வேங்கைகள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றன என்பதை இந்தப் பணிக்குழு கண்காணிக்கும். இதனடிப்படையில் சில மாதங்கள் கழித்து ஒரு முடிவு எடுக்கப்படும், அப்போது நீங்கள் வேங்கைகளைப் பார்க்கலாம். ஆனால் அதுவரை உங்கள் அனைவருக்கும் நான் ஒரு பணியை அளிக்கிறேன், இதன் பொருட்டு மைகவ் தளத்திலே, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதிலே மக்கள் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வேங்கைகள் தொடர்பாக நடக்கும் இந்த இயக்கத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும்! இந்த வேங்கைகளுக்குப் பெயர் சூட்டுவது குறித்து ஆலோசனைகளை அளிக்கலாம்! இந்தப் பெயர்களும் பாரம்பரியமானவையாக இருந்தால் நன்றாக இருக்கும்; ஏனென்றால், நம்முடைய சமூகம், நமது கலாச்சாரம்-பாரம்பரியம்-மரபோடு தொடர்புடைய எந்த ஒரு விஷயமும், இயல்பாகவே அவற்றை நோக்கி நம்மைக் கவர்கின்றன. இது மட்டுமல்ல, நீங்கள் மேலும் ஒன்றைக் கூற வேண்டும்! நமது அடிப்படைக் கடமைகளிலும் கூட விலங்குகளுக்கு மதிப்பு என்பது குறித்து அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்தப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கெடுங்கள் – உங்கள் வெற்றியின் பரிசாக வேங்கையைக் காணக்கூடிய முதல் சந்தர்ப்பம் உங்களுக்கே கூட அமையலாம், யாரறிவார்கள்?! இதுவே நான் உங்களிடம் வைக்கும் விண்ணப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீவிர மனிதநேயவாதியும், சிந்தனையாளரும், மகத்தான தவப்புதல்வருமான தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளாகும். எந்த ஒரு நாட்டின் இளைஞரும் தங்களுடைய அடையாளம்-கௌரவம் மீது பெருமிதம் கொள்ளும் போது, அவருக்குத் தங்களுடைய அடிப்படை சித்தாந்தம்-சிந்தனை ஆகியவை மீது ஈர்ப்பு ஏற்படும். தீன்தயாள் அவர்களின் சிந்தனைகளின் மிகப்பெரிய அழகு என்னவென்றால், அவர் தன்னுடைய வாழ்க்கையில், உலகின் மிகப்பெரிய கொந்தளிப்புக்களைச் சந்தித்தவர் என்பது தான். அவர் கருத்தோட்டங்களின் மோதல்களின் சாட்சியாக விளங்கினார். ஆகையால், அவர் ஏகாத்ம மானவ்தர்சனம், அந்த்யோதய் ஆகிய எண்ணங்களை தேசத்தின் முன்பாக வைத்தார், இவை முழுமையாக பாரத நாட்டுத் தன்மை வாய்ந்தவை, பாரத நாட்டுக்குரியவை. தீன்தயாள் அவர்களின் ஏகாத்ம மானவ்தர்சனம் என்பது எப்படிப்பட்ட சிந்தனை என்றால், சித்தாந்தத்தின் அடிப்படையிலான மோதல்கள், தப்பான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுதலை அளிக்கிறது. மனிதனை சமமாகக் கருதும் பாரதநாட்டு சித்தாந்தத்தை மீண்டும் உலகின் முன்பாக அவர் இருத்தினார். ஆத்மவத் சர்வபூதேஷு என்று நமது சாஸ்திரங்களிலே கூறப்பட்டிருக்கிறது. அதாவது நாம் அனைத்து உயிர்களையும் ஒன்று போலவே பாவிக்க வேண்டும், நம்மிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். நவீன, சமூக, அரசியல் பின்னணியிலும் கூட, பாரத நாட்டு சித்தாந்தமானது எப்படி உலகிற்கு வழிகாட்ட முடியும் என்பதை தீன்தயாள் அவர்கள் நமக்குக் கற்பித்தார். ஒரு புறத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு தேசத்தில் நலிவுற்ற நிலை நிலவிய வேளையில், அதிலிருந்து விடுவித்து, நம்மிடத்திலே விழிப்புணர்வை அவர் தட்டி எழுப்பினார். “நமது கலாச்சாரம் மற்றும் அடையாளம் எப்போது வெளிப்படுகிறதோ, அப்போது தான் நமது சுதந்திரம் பொருள் படைத்த ஒன்றாக ஆகும்” என்று அவர் கூறுவதும் உண்டு. இந்தக் கருத்தின் அடிப்படையிலே தான் அவர் தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கைத் தீர்மானம் செய்தார். தேசம் அடையும் முன்னேற்றத்தின் தாக்கம், கடைசிப் படிநிலையில் இருக்கும் மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்று, தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் கூறுவார். சுதந்திரத்தின் அமுதகாலத்தில் தீன்தயாள் அவர்களைப் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, எந்த அளவுக்கு அவரிடமிருந்து கற்கிறோமோ, அந்த அளவுக்கு தேசத்தை முன்னேற்றிச் செல்ல நம்மனைவருக்கும் உத்வேகம் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த சத்புத்திரனான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங் அவர்களின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்ஜலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. சண்டீகட்டின் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங் அவர்களின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டீகட், பஞ்ஜாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்தத் தீர்மானத்தின் பொருட்டு பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும், அவர்களின் இலட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும், இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலிகளாகும். உயிர்த்தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின் பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் தேசம், கர்த்தவ்ய பத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களுடைய உருவச்சிலையை நிறுவியதன் வாயிலாகவும் கூட, இதே போன்றதொரு முயற்சியைச் செய்தது; இப்போது உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயரை சண்டீகட் விமானநிலையத்திற்குச் சூட்டியதும் கூட இதே திசையில் வைக்கப்பட்ட மேலும் ஒரு முன்னேற்றப்படி. நாம் எந்த வகையில் அமுதப் பெருவிழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு தொடர்புடைய சிறப்பான சந்தர்ப்பங்களைக் கொண்டாடி வருகிறோமோ, அதைப் போலவே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியின் போதும், ஒவ்வொரு இளைஞரும் புதிய ஒரு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மேலும் எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியைக் கொண்டாட வேறு ஒரு காரணமும் உண்டு. அது என்னவென்று தெரியுமா! நான் இரு சொற்களை மட்டுமே கூறுவேன், ஆனால் உங்களுடைய உற்சாகம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்பதை நானறிவேன். அந்த இரண்டு சொற்கள் – சர்ஜிகல் ஸ்ட்ரைக், துல்லியத் தாக்குதல். உற்சாகம் அதிகரித்து விட்டது இல்லையா!! நமது தேசத்தின் அமுதப் பெருவிழா என்ற இயக்கம் நடைபெற்று வரும் வேளையிலே, அதை நாம் முழுமையான ஈடுபாட்டோடு கொண்டாடுவோம், நமது சந்தோஷங்களை அனைவரோடும் பகிர்ந்து கொள்வோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, வாழ்க்கை என்ற போராட்டங்களின் நெருப்பிலே புடம் போட்ட ஒரு மனிதன் முன்பாக எந்தத் தடையும் ஒரு தடையல்ல என்பார்கள் இல்லையா!! நமது அன்றாட வாழ்க்கையில், நாம் இப்படிப்பட்ட சில நண்பர்களைச் சந்திக்கிறோம், இவர்கள் ஏதோ வகையான ஒரு உடல்ரீதியான சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள். சிலரால் கேட்க முடியாது என்றால் சிலராலோ வாய்மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த இயலாது. இப்படிப்பட்ட நண்பர்களுக்கெல்லாம் மிகப்பெரிய துணையாக இருக்கிறது, Sign Language, சைகை மொழி. ஆனால் பாரதநாட்டிலே, பல்லாண்டுகளாக ஒரு பெரிய கடினம் என்னவென்றால், இந்தச் சைகை மொழிக்கான எந்தவொரு தெளிவான சைகைகளும் தீர்மானிக்கப்பட்டதில்லை, தரநிலைகள் இருக்கவில்லை. இந்த இடர்களைக் களையவே 2015ஆம் ஆண்டில், Indian Sign Language Research and Training Center, இந்திய சைகைமொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இதுவரை, 10,000 சொற்களையும், சைகைகளையும் அடங்கிய ஒரு அகராதியை தயார் செய்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இரண்டு நாட்கள் முன்பாக, அதாவது செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று சைகை மொழி நாளன்று, பல பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் கூட சைகை மொழி ஆரம்பிக்கப்பட்டாகி விட்டது. சைகைமொழியின் தீர்மானிக்கப்பட்ட தரநிலையை நிலைநிறுத்த, தேசியக் கல்விக்கொள்கையிலும் கூட கணிசமான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சைகைமொழியின் அகராதி மீதான காணொளியைத் தயாரித்தும் கூட இது தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. யூ ட்யூபிலே பலர், பல அமைப்புகள், இந்திய சைகைமொழியில் தங்களுடைய சேனல்களைத் தொடங்கி இருக்கிறார்கள், அதாவது 7-8 ஆண்டுகள் முன்பாக சைகைமொழி தொடர்பாக தேசத்தில் தொடங்கப்பட்ட இயக்கம், இப்போது இதனால் ஆதாயம் இலட்சக்கணக்கான என்னுடைய மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கும் கிடைக்கவிருக்கிறது. ஹரியாணாவில் வசிக்கும் பூஜா அவர்கள் இந்திய சைகைமொழியால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். முன்பெல்லாம் இவர் தனது மகனோடு உரையாட முடியாமல் இருந்தார், ஆனால் 2018இல் சைகைமொழியில் பயிற்சி பெற்ற பிறகு, தாய்-மகன் இருவரின் வாழ்க்கை எளிதாகி விட்டிருக்கிறது. பூஜா அவர்களின் மகனும் கூட சைகைமொழியைக் கற்றுக் கொண்டு தனது பள்ளியில் இவர் கதைகூறும் போட்டியில் பரிசுகளை வென்றிருக்கிறார். இதைப் போலவே டிங்காஜி தனது ஆறு வயது நிரம்பிய மகளுக்கு சைகைமொழிப் படிப்புக்கு ஏற்பாடு செய்தார்; ஆனால் அவருக்கு சைகைமொழி விளங்கவில்லை என்பதால் தனது மகளோடு தகவல் பரிமாறிக் கொள்ள இயலாமல் இருந்தார். இப்போது டிங்காஜியும் கூட சைகை மொழியில் பயிற்சி பெற்று விட்டார், தாய்-மகள் இருவரும் இப்போது பரஸ்பரம் நன்றாகக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து வருகிறார்கள். இந்த முயற்சிகளால் மிகப்பெரிய ஆதாயம் கேரளத்தின் மஞ்சு அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மஞ்சு அவர்கள், பிறப்பிலிருந்தே கேட்புத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி என்பதோடு, இவருடைய பெற்றோரின் வாழ்க்கையிலும் இதே நிலைமை நிலவி வந்தது. இந்த நிலையில் சைகைமொழி மட்டுமே குடும்பமனைத்துக்கும் உரையாடலுக்கான ஊடகமாக இருக்கிறது. இப்போது மஞ்சு அவர்கள், சைகைமொழியின் ஆசிரியையாக தானே ஆகும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறார்.
நண்பர்களே, இதைப் பற்றி நான் மனதின் குரலில் ஏன் உரையாட விரும்புகிறேன் என்றால், இந்திய சைகைமொழி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான். இதனால் நாம் நமது மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு மேலும் அதிக அளவில் உதவிகரமாக இருக்க முடியும். சகோதர சகோதரிகளே, சில நாட்கள் முன்பாக, ப்ரைல் மொழியில் எழுதப்பட்ட ஹேமகோசத்தின் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது. ஹேமகோசம் என்பது அசாமிய மொழியின் மிகப் பழமையான அகராதிகளில் ஒன்று. இது 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. மொழி வல்லுநரான ஹேமசந்திர பருவா அவர்கள் இதனைத் தொகுத்திருக்கிறார். ஹேமகோசத்தின் ப்ரைல் பதிப்பு, சுமார் 10000 பக்கங்கள் கொண்டதாகும், இது 15 தொகுதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்பட இருக்கிறது. இதிலே ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சொற்கள் மொழியாக்கம் செய்யப்படவிருக்கின்றன. புரிந்துணர்வுடன் கூடிய இந்த முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். இதைப் போன்ற அனைத்து முயற்சிகளும், மாற்றுத் திறனாளி நண்பர்களின் திறன்கள்-திறமைகளை மேம்படுத்துவதில் உதவி புரிகின்றன. இன்று பாரதம் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் கூட வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது. நாமனைவரும் பல பந்தயங்களில் இதன் சாட்சிகளாக இருக்கின்றோம். மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் உடலுறுதி கலாச்சாரத்தை அடிமட்ட அளவில் ஊக்குவிப்பதில் இன்று பலர் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனால் மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கிறது.
என் கனிவான நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக சூரத்தில், அன்வீ என்ற சிறுமியைச் சந்தித்தேன். அன்வீயுடனும், அன்வீயின் யோகக்கலையுடனும் நிகழ்ந்த என்னுடைய சந்திப்பு, எந்த அளவுக்கு மறக்க முடியததாக இருக்கிறது என்றால், இதைப் பற்றி நான் மனதின் குரலின் அனைத்து நேயர்களோடும் பகிர விரும்புகிறேன். நண்பர்களே, அன்வீ, Down Syndrome, மரபணுக் கோளாறால் பிறப்பிலிருந்தே ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், சிறு பிராயத்திலிருந்தே தீவிரமான இருதய நோயால் இவர் அவதிப்பட்டு வந்திருக்கிறார். வெறும் மூன்று மாதங்கள் நிரம்பிய போதே, இவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் தாண்டி, அன்வீயும் சரி, இவருடைய தாய் தந்தையரும் சரி சற்றும் துவளவில்லை. அன்வீயின் பெற்றோர் இந்த Down Syndrome பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், எப்படி அன்வீ மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கலாம் என்பதை முடிவு செய்தார்கள். எப்படி குடிநீர்க் குவளையை மேலே உயர்த்திப் பிடிப்பது, காலணிகளின் லேஸ்களை எப்படிக் கட்டுவது, உடைகளின் பொத்தான்களை எப்படிப் பொருத்துவது போன்ற சின்னச்சின்ன விஷயங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள் அன்வீயின் பெற்றோர். எந்தப் பொருளின் இடம் எது, எவை நல்ல பழக்கவழக்கங்கள், இவற்றையெல்லாம் மிகவும் பொறுமையோடு அன்வீக்குக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இவற்றைக் கற்றுக் கொள்ள எவ்வாறெல்லாம் குழந்தை அன்வீ ஆர்வம் காட்டினாளோ, தனது திறமையை வெளிப்படுத்தினாளோ, இதனால் அவளின் பெற்றோருக்கும் பெரும் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் அன்வீயை யோகக்கலையைக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தினார்கள். எந்த அளவுக்கு அதிக சிரமங்கள் இருந்தன என்றால், அன்வீயால் தனது இரு கால்களிலும் எழுந்து நிற்க முடியாத நிலை; இந்தச் சூழ்நிலையில் யோகக்கலையைக் கற்றுக் கொள்ள அன்வீக்கு ஊக்கமளித்தார்கள் அவளுடைய பெற்றோர். முதன்முறையாக யோகக்கலை கற்பிக்கும் பயிற்றுநரிடம் அன்வீ சென்ற போது, இந்தச் சிறுமியால் எப்படி யோகம் பயில முடியும் என்று அந்தப் பயிற்றுநரும் குழம்பிப் போனார். ஆனால் அன்வீயின் திறமை என்ன என்பதைப் பயிற்றுநரும் அறிந்திருக்கவில்லை. அன்வீ தனது பெற்றோருடன் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கி, இப்போது இவர் யோகக்கலை வல்லுநராகி விட்டார். அன்வீ இன்று நாடெங்கிலும் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார், பதக்கங்களைக் குவித்து வருகிறார். யோகக்கலையானது, சிறுமி அன்வீக்கு ஒரு புதிய வாழ்வை அளித்திருக்கிறது. யோகம் பயில்வதன் வாயிலாக சிறுமி அன்வீயின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தைக் காண முடிந்தது, அவளுக்குத் தன்னம்பிக்கை வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று அன்வீயின் பெற்றோர் என்னிடத்திலே தெரிவித்தார்கள். யோகக்கலை மூலமாக அன்வீயின் உடல் ஆரோக்கியமும் மேம்பாடு அடைந்திருக்கிறது, மருந்துகளின் தேவையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் இருக்கும் மனதின் குரலின் நேயர்களால், யோகக்கலையால் அன்வீக்குக் கிடைத்த ஆதாயங்களை அறிவியல்பூவமாக ஆய்வு செய்ய முடிந்தால், அன்வீ ஒரு அருமையான விஷய ஆய்வாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. யாரெல்லாம் யோகக்கலையின் வல்லமை குறித்து ஆய்வுகள்-சோதனைகளில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களோ, அப்படிப்பட்ட ஆய்வாளர்கள் முன்வந்து, அன்வீயின் இந்த வெற்றி குறித்து ஆராயட்டும், யோகக்கலையின் வல்லமையை உலகோருக்கு அடையாளம் காட்ட வேண்டும். உலகெங்கிலும் இருக்கும் Down Syndrome கோளாறால் பீடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட எந்த ஒரு ஆய்வும் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடல்ரீதியான, மனரீதியான ஆரோக்கியம் விஷயத்தில் யோகக்கலை அதிக உதவிகரமாக இருக்கிறது என்பதை உலகம் இப்போது ஏற்றுக் கொண்டு விட்டது. குறிப்பாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் யோகக்கலை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. யோகக்கலையின் சக்தியைக் கண்டு ஐக்கிய நாடுகள் சபையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியை சர்வதேச யோகக்கலை தினமாக அறிவித்திருக்கிறது. இப்போது ஐக்கிய நாடுகள் சபை, பாரதத்தின் மேலும் ஒரு முயல்விற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது, அதற்கு கௌரவம் அளித்திருக்கிறது. இந்த முயல்வு தான், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “India Hypertension Control Initiative”, இந்தியா உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு முயற்சி. இதன்படி, இரத்த அழுத்த பிரச்சனைகளில் அவதிப்பட்டு வரும் இலட்சக்கணக்கானோரின் சிகிச்சை, அரசின் சேவை மையங்களில் செய்யப்பட்டு வருகிறது. இந்த முன்முயற்சியானது சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது, இதுவரை காணாத ஒன்று. இதில் நம்மனைவரின் உற்சாகத்தையும் அதிகரிக்கும் விஷயம், யாருக்கெல்லாம் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு பேர்களுடைய இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் இந்த முனைப்பில் செயலாற்றி வரும் அனைவருக்கும் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தங்களுடைய கடுமையான முயற்சியால் இதை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே, மனித வாழ்வின் வளர்ச்சிப் பயணம், நீடித்த வகையிலே நீரோடு தொடர்புடையது – அது கடலாகட்டும், நதியாகட்டும், அல்லது குளமாகட்டும். பாரதத்தின் பேறு என்னவென்றால், சுமார் 7500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரை காரணமாக, கடலோடு நம்முடைய தொடர்பு இணைபிரியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இந்தக் கரையோரப் பகுதிகள் பல மாநிலங்கள்-தீவுகளைக் கடந்து செல்கிறது. பாரதத்தின் பல்வேறு சமுதாயங்கள்-பன்முகத்தன்மைகள் நிறைந்த கலாச்சாரம் மலர்ந்து மணம் பரப்புவதை, நம்மால் இங்கே காண முடியும். இது மட்டுமல்ல, இந்தக் கரையோரப் பகுதிகளின் உணவு முறைகள் மக்களை நன்கு கவர்கின்றன. ஆனால் இந்த சுவாரசியமான விஷயங்களோடு கூடவே ஒரு வருத்தமளிக்கும் பக்கமும் உண்டு. நமது இந்த கரையோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். சூழலியல் மாற்றம், கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அபாயமாக ஒரு புறம் ஆகி வருகிறது என்றால், நமது கடற்கரைகளில் பரவியிருக்கும் மாசு பிரச்சனையாகி இருக்கிறது. இந்தச் சவால்கள் குறித்துத் தீவிரமான, நிரந்தரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது கடமையாகிறது. இந்த இடத்திலே, தேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் ஒரு முயல்வான ஸ்வச்ச சாகர்-சுரக்ஷித் சாகர், அதாவது தூய்மையான கடல்கள்-பாதுகாப்பான கடல்கள் என்பது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன். ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியான விஸ்வகர்மா ஜயந்தி தினத்தன்று நிறைவடைந்தது. கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் நாளும் இதே நாளன்று தான் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 75 நாட்களுக்கு நடைபெற்றது. தொடங்கிய சில காலத்திலேயே மக்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த முயற்சியின்படி, இரண்டரை மாதங்கள் வரை தூய்மை தொடர்பான பல செயல்திட்டங்களைக் காண முடிந்தது. கோவாவில் ஒரு நீண்ட மனிதச் சங்கிலி ஏற்படுத்தப்பட்டது. காகிநாடாவில் கணபதி திருவுருவங்களை நீரில் கரைக்கும் போது, நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. தேசிய சேவைத் திட்டம், என் எஸ் எஸ்ஸின் சுமார் 5000 இளைய நண்பர்கள், 30 டன்களுக்கும் அதிகமான நெகிழிப் பொருட்களை ஒன்று திரட்டினார்கள். ஒடிஷாவில் மூன்று நாட்களுக்குள்ளாக 20,000த்திற்கும் அதிகமான பள்ளி மாணவமாணவியர், தாங்கள் மட்டுமல்ல, தங்களின் குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கும், தூய்மையான கடல்கள் மற்றும் பாதுகாப்பான கடல்கள் குறித்த விழிப்புணர்வை அளிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். யாரெல்லாம் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்களோ அவர்கள் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக நகரத் தலைவர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களோடு நான் உரையாடும் போதெல்லாம், தூய்மை போன்ற முயல்வுகளில் உள்ளூர் சமூகங்களையும், உள்ளூர் அமைப்புக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும், நூதனமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று கேட்டு வருகிறேன்.
Youth For Parivarthan, மாற்றத்திற்கான இளைஞர்கள் என்ற பெயரிலான பெங்களூரூவில் இருக்கும் ஒரு குழு, கடந்த எட்டு ஆண்டுகளாகவே தூய்மை, இன்னும் பிற சமூக விதிமுறைகள் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களின் குறிக்கோள் வாக்கியம் தெளிவானதாக இருக்கிறது - ‘Stop Complaining, Start Acting’, குற்றம் கூறுவதை விடுத்து, செயல்படத் தொடங்குங்கள் என்பதே ஆகும். இந்தக் குழுவானது இதுவரை, நகரெங்கும் 370க்கும் மேற்பட்ட இடங்களை அழகுபடுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் மாற்றத்திற்கான இந்த இளைஞர்களுடைய இயக்கம், நூறிலிருந்து நூற்று ஐம்பது குடிமக்களை இணைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த நிகழ்ச்சி காலை தொடங்கி, நண்பகல் வரை நடைபெறுகிறது. இந்தச் செயல்பாட்டின் மூலம் குப்பைகள் அகற்றப்படுவதோடு, சுவர்களில் ஓவியங்களையும், வரிவடிவக் கலைப்படைப்புக்களையும் ஏற்படுத்துகிறார்கள். பல இடங்களில் பிரபலமான நபர்களின் வரிவடிவ ஓவியங்களையும் அவர்களின் கருத்தூக்கமளிக்கும் மேற்கோள்களையும் உங்களால் காண முடியும். பெங்களூரூவின் இந்த மாற்றத்திற்கான இளைஞர்களின் முயற்சிகளுக்கு அடுத்தபடியாக, மேரட்டின் கபாட் சே ஜுகாட், அதாவது குப்பையிலிருந்து கோமேதகம் என்ற பொருளிலான இயக்கம் குறித்தும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த இயக்கம், சுற்றுச்சூழலின் பாதுகாப்போடு கூடவே, நகரின் அழகுபடுத்தலோடும் தொடர்புடையது. இந்த இயக்கத்தின் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதிலே இரும்புக் குப்பை, நெகிழிக் கழிவுகள், பழைய டயர்கள், டிரம்கள் போன்ற பயனற்றதாகிவிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவில் பொதுவிடங்களை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்பதற்கும் இந்த இயக்கம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இப்போது தேசத்தின் நாலாபுறங்களிலும் கொண்டாட்டங்களின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. நாளை நவராத்திரியின் முதலாம் நாள். இந்த நாளன்று நாம் தேவியின் முதல் சொரூபமான அன்னை சைலபுத்ரியின் உபாசனையில் ஈடுபடுவோம். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் வரையான நியமங்கள்-கட்டுப்பாடுகள் மற்றும் விரதங்கள், பிறகு விஜயதசமி நன்னாள். அதாவது ஒருவகையிலே பார்த்தோமேயானால், நம்பிக்கையும், ஆன்மீகமும் ஊடும் பாவுமாகக் கலந்த எத்தனை ஆழமான செய்தி மறைந்திருக்கிறது என்பதை நமது புனித நாட்களில் நம்மால் காண முடியும். ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு வாயிலாக வெற்றி என்பதற்குப் பிறகு வெற்றிக்கான திருநாள், இது தானே வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் அடையக்கூடியதான மார்க்கமாக இருக்கிறது. தசராவிற்குப் பிறகு தந்தேரஸும், தீபாவளி புனித நாட்களும் வரவிருக்கின்றன.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே, நமது பண்டிகைகளோடு கூடவே, தேசத்தின் ஒரு புதிய உறுதிப்பாடும் இணைந்திருக்கிறது. உங்களனைவருக்கும் தெரியும் அது என்ன உறுதிப்பாடு என்பது – அது தான் ‘Vocal for Local’ உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது. இப்போது நமது பண்டிகைகளின் மகிழ்ச்சியில் நமது உள்ளூர் கைவினைஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாம் இடமளிக்க வேண்டும். வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியான அண்ணலின் பிறந்த நாளின் போது, நாமனைவரும் இந்த இயக்கத்தை மேலும் வேகப்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காதி, கைத்தறி, கைவினைப்பொருள் போன்ற அனைத்துப் பொருட்களோடு கூடவே, உள்ளூர் பொருட்களைக் கண்டிப்பாக வாங்குவோம். நம் மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகைகளின் அங்கமாக ஆனால் தானே இந்தப் பண்டிகைகளின் மெய்யான ஆனந்தம் ஏற்படும். ஆகையினாலே, உள்ளூர் பொருட்களோடு தொடர்புடையவர்களுக்கு நாம் ஆதரவளிக்கவும் வேண்டும். இதற்கான ஒரு நல்ல வழிமுறை என்றால், பண்டிகைக்காலத்தில், நாம் அளிக்கும் பரிசுப் பொருட்களில் இவை போன்ற பொருட்களை நாம் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இப்போது இந்த இயக்கம் ஏன் மேலும் சிறப்பான ஒன்று என்றால், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா வேளையிலே, நாம் தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். இதன் மூலமாகத் தான் சுதந்திர தாகம் படைத்த போராட்ட வீரர்களுக்கு நாம் மெய்யான நினைவாஞ்சலிகளைச் செலுத்த முடியும். ஆகையால் இந்த முறை காதி, கைத்தறி அல்லது கைவினைப்பொருள் போன்ற இந்த வகைப் பொருட்களை வாங்குவதில் நீங்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். பண்டிகைகளின் போது பேக்கிங் மற்றும் பேக்கேஜிங் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதையும் நம்மால் காண முடிகிறது. புனிதக்காலங்களில் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைக்குக் காரணமான குப்பையும் கூட, நமது திருவிழா உணர்வுக்கு எதிரானது. ஆகையால் நாம் வட்டார அளவிலே உருவாக்கப்படும் நெகிழியல்லாத பைகளையே பயன்படுத்துவோம். நம் பகுதிகளிலே சணல், பருத்தி, வாழை போன்றவற்றால் ஆன எத்தனையோ வகையான பாரம்பரியப் பைகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நமது திருவிழாக்காலங்களில் இவற்றுக்கு ஊக்கமளிக்க வேண்டும், தூய்மையோடு கூடவே நமது மற்றும் நமது சுழலின் நலன் குறித்தும் கவனம் செலுத்த வேண்டுவது நமது பொறுப்பல்லவா?
எனதருமை நாட்டுமக்களே, நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால் – பரஹித் சரிஸ் தரம் நஹீன் பாயி, அதாவது பிறருடைய நலனுக்கு இணையான, பிறருக்கு சேவை புரிதல், உதவி செய்வதற்கு இணையான அறம் பிறிதொன்று இல்லை. கடந்த நாட்களில், தேசத்திலே, சமூக சேவை என்ற இந்த உணர்வின் மேலும் ஒரு காட்சியைக் காண முடிந்தது. காசநோய் பீடித்த ஏதோ ஒரு நோயாளிக்குப் பொறுப்பேற்று, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிரம்பிய உணவை அளிக்கும் சவாலை நாட்டில் சிலர் மேற்கொண்டு வருவதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். உள்ளபடியே, இது காசநோயிலிருந்து விடுவிக்கப்பட்ட பாரதம் இயக்கத்தின் ஒரு அங்கமாகும்; இதனடிப்படையில் இருப்பது மக்களின் பங்களிப்பு மற்றும் கடமையுணர்வு. சரியான ஊட்டச்சத்து மூலமாக, சரியான நேரத்தில் கிடைக்கப் பெறும் மருந்துகளால், காசநோய்க்கான சிகிச்சை சாத்தியப்படும். மக்களின் பங்களிப்பு வாயிலாக, இந்த ஆற்றல் துணையோடு, 2025ஆம் ஆண்டுக்குள்ளாக பாரதம் கண்டிப்பாக காசநோயிலிருந்து விடுதலை அடைந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் தமன்-தீவோடு தொடர்புடைய ஒரு எடுத்துக்காட்டு என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது, இது மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் ஜினு ராவதீயா அவர்கள் எழுதியிருக்கிறார், இங்கே நடைபெறும் கிராமங்களைத் தத்து எடுக்கும் திட்டத்தின்படி, மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் 50 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கின்றார்கள். இதிலே ஜினு அவர்களின் கிராமமும் அடங்கும். மருத்துவப்படிப்பு மாணவர்கள், நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள கிராமத்தவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறார்கள், நோய்வாய்ப்படும் போது உதவுகிறார்கள், மேலும், அரசு நலத்திட்டங்கள் குறித்தும் தகவல்களை அளிக்கின்றார்கள். பரோபகார உணர்வானது, கிராமங்களில் வசிப்போரின் வாழ்க்கையில் புதிய சந்தோஷங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் பொருட்டு, மருத்துவக் கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்கும் நான் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, மனதின் குரலில் புதியபுதிய விஷயங்கள் பற்றிய பரிமாற்றம் நடந்து வருகிறது. பலமுறை இந்த நிகழ்ச்சி வாயிலாக சில பழைமையான விஷயங்களின் ஆழங்களைக் காணும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியிருக்கிறது. கடந்த மாதம் மனதின் குரலில் சிறுதானியங்கள், 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த விஷயம் தொடர்பாக மக்களிடம் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. எப்படி சிறுதானியங்களைத் தங்கள் அன்றாட உணவின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்திருக்கின்றன. சிலர் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். இது பெரிய ஒரு மாற்றத்திற்கான அறிகுறி. மக்களின் இந்த உற்சாகத்தைக் காணும் போது, நாம் இணைந்து சிறுதானியங்கள் தொடர்பான ஒரு மின்னணுப் புத்தகத்தினைத் தயாரிக்க வேண்டும், அதிலே சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்கள் குறித்தும், தங்களுடைய அனுபவங்களையும் அதிலே மக்கள் பகிர்வார்கள், இதன் மூலம் சர்வதேச சிறுதானிய ஆண்டு தொடங்கும் முன்பாகவே நம்மிடத்திலே சிறுதானியங்கள் குறித்த ஒரு பொதுக் களஞ்சியமும் தயாராகி விடும், இதைப் பிறகு மைகவ் தளத்திலே வெளியிடலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே என்றாலும், விடைபெறும் முன்பாக, தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். செப்டம்பர் 29ஆம் தேதியன்று குஜராத்திலே தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது பெரிய, சிறப்பான சந்தர்ப்பம்; ஏனென்றால், தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த முறையின் ஏற்பாடுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த நாளன்று விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன். நீங்கள் அனைவரும் கூட தேசிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள், உங்கள் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். இப்போது நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். அடுத்த மாதம் மனதின் குரலில் புதிய விஷயங்களோடு உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன். நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில், உங்கள் அனைவருடைய கடிதங்கள், செய்திகள், தபால் அட்டைகள் ஆகியன என்னுடைய அலுவலகத்தை மூவண்ணமயமாக்கி விட்டன. மூவண்ணம் இல்லாத அல்லது மூவண்ணமும் சுதந்திரமும் இடம்பெறாத ஒரு கடிதமே வரவில்லை என்று கூட சொல்லலாம். பிள்ளைகள், இளைஞர்கள் என அனைவரும் அமுதப் பெருவிழா பற்றிய அழகான ஓவியங்கள், கைவினைத்திறன் பயன்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். சுதந்திரத்தின் இந்த மாதங்களில் நமது தேசமெங்கும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், அமுத காலத்தின் அமுதப்பெருக்கு பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. அமுதப் பெருவிழா மற்றும் சுதந்திரத் திருநாள் என்ற சிறப்பான சந்தர்ப்பத்தில் நாம் தேசத்தின் சமூக சக்தியை தரிசனம் செய்தோம். ஒரு விழிப்பு நிலையை அனுபவிக்க முடிந்தது. இத்தனை பெரிய தேசம், இத்தனை பன்முகத்தன்மை; ஆனால் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுதல் எனும் போது, ஒவ்வொருவரும் ஒரே உணர்வோடு அதைப் பறக்க விடுவதைப் பார்க்க முடிந்தது. முவண்ணத்தின் பெருமையின் முதல் காவலாளியாக ஆகி, மக்கள் தாங்களே முன்வந்தார்கள். அதே போல தூய்மை இயக்கத்தின் போதும், தடுப்பூசி இயக்கத்தின் போதும் தேசத்தின் உணர்வையும் ஊக்கத்தையும் நம்மால் காண முடிந்தது. அமுதப் பெருவிழாவிலே மீண்டும் தேசபக்தியின் அதே போன்ற உணர்வை நம்மால் காண முடிகிறது. நமது இராணுவ வீரர்கள், உயரமான சிகரங்களிலே, தேசத்தின் எல்லைகளிலே, கடல்களுக்கு நடுவினிலே மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள். மூவண்ண இயக்கத்தின் பொருட்டு, பல்வேறு நூதனமான கருத்துக்களும் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக இளைஞரான கிருஷ்னீல் அனில் அவர்கள். அனில் அவர்கள் ஒரு புதிர் விளையாட்டுக் கலைஞர், இவர் சாதனை சமயத்தில் அழகான மூவண்ண மொசைக் கலையை வடிவமைத்தார். கர்நாடகத்தின் கோலாரிலே, மக்கள் 630 அடி உயரமும், 205 அடி அகலமும் கொண்ட மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு, பிரத்யேகமான காட்சியை அளித்தார்கள். அஸாமில் அரசு அலுவலர்கள் திகாலிபுகுரீ போர் நினைவுச் சின்னத்தில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட, தங்களுடைய கரங்களாலேயே 20 அடி மூவண்ணக் கொடியை உருவாக்கினார்கள். இதைப் போலவே மனிதச் சங்கிலி வாயிலாக இந்தியாவின் வரைபடத்தை இந்தோரில் மக்கள் ஏற்படுத்தினார்கள். சண்டீகரில், இளைஞர்கள், மனிதர்களால் ஆன விசாலமான ஒரு மூவண்ணக் கொடியை ஏற்படுத்தினார்கள். இந்த இரண்டு முயற்சிகளும், கின்னஸ் பதிவுகளில் இடம் பிடித்தன. இவற்றுக்கு இடையிலே, ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கோட் பஞ்சாயத்திலிருந்து ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டையும் நம்மால் பார்க்க முடிந்தது. இங்கே பஞ்சாயத்திலே சுதந்திரத் திருநாள் நிகழ்ச்சியிலே, புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் குழந்தைகள் முக்கிய விருந்தினர்களாக ஆக்கப்பட்டார்கள்.
நண்பர்களே, அமுதப் பெருவிழாவின் இந்த வண்ணம், பாரதத்திலே மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் காணக் கிடைத்தது. போத்ஸ்வானாவில் வசிக்கும் அந்த நாட்டைச் சேர்ந்த பாடகர்கள், பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் 75 தேசபக்தி கீதங்களைப் பாடினார்கள். இதிலே மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த 75 பாடல்கள், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, பாங்க்லா, அசமியா, தமிழ், தெலுகு, கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பாடப்பட்டன. இதைப் போலவே, நமீபியாவிலும் பாரதம்-நமீபியா ஆகிய நாடுகளின் கலாச்சார பாரம்பரியமான தொடர்புகள் பற்றிய விசேஷமான தபால்தலை வெளியிடப்பட்டது.
நண்பர்களே, நான் மேலும் ஒரு சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். சில நாட்கள் முன்பாகத் தான், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றிலே பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே அவர்கள் ஸ்வராஜ் என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரைக் காட்சிப்படுத்தினார்கள். அதன் முதல்காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, இதுவரை கேள்விப்படாத நாயகர்கள்-நாயகிகளின் முயற்சிகளை, தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் ஒரு மிகச் சிறப்பான முயற்சியாகும் இது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிற்றுக்கிழமை தோறும், இரவு 9 மணிக்கு இது ஒளிபரப்பு செய்யப்படும். இது 75 வாரங்கள் வரை ஒளிபரப்பப்படும் என்று என்னிடத்திலே கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் சற்று நேரம் ஒதுக்கி, இதைக் காணுங்கள், உங்கள் வீட்டில் உள்ள குழைந்தைகளும் கண்டிப்பாக இதைக் காண ஊக்கப்படுத்துங்கள். பள்ளிகள்-கல்லூரிகளின் நிர்வாகம் இதன் ஒளிப்பதிவினை, திங்கட்கிழமையன்று பள்ளிகள்-கல்லூரிகள் திறக்கும் போது சிறப்பான நிகழ்ச்சி என்ற வகையிலே காட்சிப்படுத்தலாம். சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த இந்த மாமனிதர்களிடத்திலே, நமது தேசத்தில் இதன் மூலம் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்படும். இதை நான் உங்களிடத்திலே வேண்டுகோளாக வைக்கிறேன். சுதந்திரத்தின் அமுதப்பெருவிழா அடுத்த ஆண்டு, அதாவது ஆகஸ்ட் 2023 வரை நடைபெறும். தேசத்திற்காக, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக, கட்டுரைகளுக்கான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டிருந்ததை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நமது முன்னோர்களின் ஞானம், தீர்க்க தரிசனம், அவர்களின் ஏகாக்ரசித்தம் ஆகியன இன்றும் கூட மிகவும் மகத்துவமானவை. இவற்றின் ஆழங்களிலே நாம் மூழ்கிப் பார்த்தால், நமக்குள்ளே ஆச்சரியம் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நம்முடைய ரிக்வேதம் என்ன கூறுகிறது!!
ஓமான் – மாபோ மானுஷீ: அம்ருதக்தம் தாத் தோகாய தனயாய ஷம் யோ:.
யூயம் ஹிஷ்டா பிஷஜோ மாத்ருதமா விஷ்வஸ்ய ஸ்தாது: ஜகதோ ஜனித்ரீ:
ओमान-मापो मानुषी: अमृक्तम् धात तोकाय तनयाय शं यो: |
यूयं हिष्ठा भिषजो मातृतमा विश्वस्य स्थातु: जगतो जनित्री: ||
அதாவது, ஏ ஜலமே, நீங்கள் மனித சமூகத்தின் அணுக்கமான நண்பர் ஆவீர். நீங்கள் உயிர் அளிப்பவர், உங்களிடமிருந்து தான் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் உங்களிடமிருந்தே எங்களுடைய மக்கட்செல்வங்களின் நலன்களும் ஏற்படுகின்றன. நீங்கள் எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவர், அனைத்துத் தீமைகளையும் தூரப் போக்குபவர். நீங்கள், மிகவும் உத்தமமான மருந்தாவீர், மேலும் நீங்களே இந்த பிரும்மாண்டத்தைப் பேணிக்காப்பவர்.
சற்றே சிந்தியுங்கள், நமது சம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நீர் மற்றும் நீர் பாதுகாப்பின் மகத்துவம் விளங்க வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞானத்தை, நாம் இன்றைய காலகட்டத்திலே பார்த்தோமேயானால், நமக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த ஞானத்தை தேசமானது, தனது வல்லமை என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளும் போது, அதன் சக்தி பலமடங்கு அதிகரிக்கின்றது. உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், மனதின் குரலிலே, நான்கு மாதங்கள் முன்பாக நான் அமிர்த சரோவர், அதாவது அமிர்த நீர்நிலை என்று கூறியிருந்தேன், அல்லவா? அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வட்டார நிர்வாகத்தினர், தன்னார்வ அமைப்புகள், அந்தந்தப் பகுதி மக்கள் என இணைந்தார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்டு இது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்தது. தேசத்திற்காக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால், நமது கடமைகள் பற்றிய விழிப்பு இருந்தால், வரவிருக்கும் தலைமுறையினர் பற்றிய நினைப்பிருந்தால், வல்லமை பிறக்கிறது, மனவுறுதி நேரிய கோட்டிலே பயணிக்கிறது. தெலங்கானாவின் வாரங்கல்லின் ஒரு அருமையான முயற்சி பற்றிய தகவல் கிடைத்தது. இங்கே ஒரு புதிய கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது, இதன் பெயர் மாங்க்யா வாள்ள தாண்டா. இந்த கிராமம் வனப்பகுதிக்கு அருகிலே அமைந்திருக்கிறது. இங்கே கிராமத்திற்கருகிலே இருக்கும் ஒரு இடத்திலே, பருவமழைக்காலத்தில் கணிசமான நீர் நிறைந்து விடுகிறது. கிராமவாசிகளின் முயல்வுகள் காரணமாக, இந்த இடம் அமிர்த நீர்நிலை இயக்கத்தின்படி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பருவமழை பெய்த போது, நீர்நிலையில் நீர் நிரம்பி விட்டது.
மத்திய பிரதேசத்தின் மண்டலாவிலிருக்கும் மோசா கிராமப் பஞ்சாயத்திலே உருவாகியிருக்கும் அமிர்த நீர்நிலை பற்றியும் நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அமிர்த நீர்நிலையானது கான்ஹா தேசிய பூங்காவிற்கருகிலே அமைந்திருக்கிறது. இதன் வாயிலாக, இந்தப் பகுதியின் அழகு கூடியிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் லலித்பூரிலே, உயிர்த்தியாகி பகத் சிங் பெயரிலான புத்தம்புதிய அமிர்த நீர்நிலை மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இங்கே நிவாரி கிராமப் பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நீர்நிலை 4 ஏக்கர் நிலப்பரப்பு அளவுக்குப் பரந்திருக்கிறது. நீர்நிலையின் கரையோரங்களில் மரங்கள் நடப்பட்டு, இதன் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நீர்நிலைக்கருகிலே நடப்பட்டிருக்கும் 35 அடி உயரமுள்ள மூவண்ணத்தைப் பார்க்கவும் கூட தொலைவான இடங்களிலிருந்து எல்லாம் மக்கள் வருகின்றார்கள். அமிர்த நீர்நிலையின் இந்த இயக்கம், கர்நாடகத்திலும் கூட தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இங்கே இருக்கும் பாகல்கோட் மாவட்டத்தின் பில்கேரூர் கிராமத்தின் மக்கள் மிகவும் அழகானதொரு நீர்நிலையினை உருவாக்கி இருக்கின்றார்கள். உள்ளபடியே இந்தப் பகுதியில், மலையிலிருந்து வெளியேறும் நீர் காரணமாக, மக்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டன, விவசாயிகளுக்கும் அவர்களின் விளைச்சலுக்கும் கூட பாதிப்பு ஏற்பட்டது. அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்ட பிறகு கிராமத்தவர்கள், நீர் அனைத்தையும் வழிப்படுத்தி ஒரு புறமாகச் செலுத்தினார்கள். இதனால் இந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு பிரச்சினையும் இல்லாமல் போனது. அமிர்த நீர்நிலை இயக்கமானது, நமது இன்றைய அநேகப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குகிறது, நமது வரவிருக்கும் தலைமுறையினருக்கும் இது மிகவும் அவசியமானதும் கூட. இந்த இயக்கத்திற்குட்பட்டு, பல இடங்களிலே, பழைமையான நீர்நிலைகளும் கூட உயிர்ப்படைந்து வருகின்றன. அமிர்த நீர்நிலைகளால் விலங்குகளின் தாகம் தணிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்த நீர்நிலைகள் காரணமாக அருகிலே இருக்கும் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. அதே போல இவற்றின் நாலாபுறங்களிலும் பசுமையும் அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்ல, பல இடங்களில் அமிர்த நீர்நிலைகளில் மக்கள் மீன்வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். உங்களிடத்திலே, அதுவும் குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே சிறப்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அமிர்த நீர்நிலை இயக்கத்திலே பெரிய அளவிலே பங்கெடுங்கள், நீர் சேமிப்பு, நீர்ப் பாதுகாப்புக்கான இந்த முயற்சிகளிலே முழுவீச்சோடு உங்கள் பங்களிப்பை அளியுங்கள், அதை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்பது தான்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, அஸாமிலே போங்காயி கிராமத்திலே ஒரு சுவாரசியமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது ப்ராஜெக்ட் சம்பூர்ணம். இந்தத் திட்டத்தின் பொருள் என்னவென்றால் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டம் மற்றும் இந்தப் போராட்டத்தின் வழிமுறையுமே மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இதன்படி, ஒரு ஆங்கன்வாடி மையத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தையின் தாய், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தையின் தாய் ஒருவரை, ஒவ்வொரு வாரமும் சந்தித்து, ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான அனைத்துத் தகவல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள். அதாவது ஒரு தாய், பிறிதொரு தாயின் நண்பராகி, அவருக்கு உதவுகிறார், கற்பிக்கிறார். இந்தத் திட்டத்தின் உதவியால், இந்தப் பகுதியில் ஓராண்டிலே, 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொலைந்து விட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்க பாடல்கள்-இசை, பஜனைப்பாடல்கள் கூட பயனாகும் என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்திலே என்னுடைய குழந்தை இயக்கம். இந்த என்னுடைய குழந்தை இயக்கத்திலே இது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்திலே பஜனைப் பாடல்கள்-கீர்த்தனைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே ஊட்டச்சத்து குரு என்று அழைக்கப்படும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள். மட்கா நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே பெண்கள், ஆங்கன்வாடி மையத்திற்காக கை நிறைய தானியங்களைக் கொண்டு வருவார்கள், இந்த தானியத்தால் சனிக்கிழமைகளில் பால்போஜுக்கு, அதாவது குழந்தைகளுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வார்கள். இதனால் ஆங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அதிகரிப்பதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடும் குறைந்திருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட வேண்டி, ஒரு பிரத்யேகமான இயக்கம் ஜார்க்கண்டிலே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜார்க்கண்டின் கிரிடீஹிலே பாம்பும் ஏணியும் என்ற வித்தியாசமான பரமபத விளையாட்டு உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் வாயிலாகப் பிள்ளைகள், நல்ல மற்றும் தீய பழக்கங்களைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள்.
நண்பர்களே, ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு தொடர்புடைய இத்தனை புதிய முயற்சிகள் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றால், நாமனைவருமே கூட வரவிருக்கும் மாதங்களில் இந்த இயக்கத்தோடு இணைய வேண்டும். செப்டம்பர் மாதமானது பண்டிகைகளோடு கூடவே ஊட்டச்சத்தோடு தொடர்புடைய இயக்கங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நாம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தை ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கிறோம். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக தேசத்தின் பல படைப்பாற்றலுடன், பன்முகமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு, மக்கள் பங்களிப்பு ஆகியன ஊட்டச்சத்து இயக்கத்தின் மகத்துவமான பகுதியாக ஆகியிருக்கிறது. தேசத்தின் இலட்சக்கணக்கான ஆங்கன்வாடிப் பணியாளர்களுக்கு மொபைல் கருவிகள் அளிப்பது தொடங்கி ஆங்கன்வாடி சேவைகள் சென்று சேர்வதை கண்காணிப்பதற்காக Poshan Tracker என்ற ஊட்டச்சத்து கண்காணிப்பாளர் செயலியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் 14 முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளும் ஊட்டச்சத்து இயக்கத்திலே இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையைக் களையெடுப்பது இந்த முயற்சிகளோடு நின்று போகவில்லை. இந்தப் போராட்டத்திலே மற்ற பிற முயற்சிகளுக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜல்ஜீவன் இயக்கத்தையே எடுத்துக் கொள்வோமே! பாரதத்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுவிக்க இந்த இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சவால்களை எதிர்கொள்ள, சமூக விழிப்புணர்வோடு இணைந்த முயற்சிகள் மகத்துவமான பங்களிப்பை ஆற்றுகின்றன. நீங்கள் அனைவரும் வரவிருக்கும் ஊட்டசத்து மாதங்களில், ஊட்டசத்துக் குறைபாட்டைக் களையும் முயற்சிகளில் கண்டிப்பாகப் பங்காற்றுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
என் கனிவு நிறை நாட்டுமக்களே, சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன் அவர்கள் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார். மைகவ் தளத்திலே தனது கருத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்! “புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சி இருக்கிறது; வரவிருக்கும் புத்தாண்டு International Year of Millets, அதாவது சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற வகையிலே நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று தெரிவித்து, தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை எனக்கு அனுப்பி இருக்கிறார். இது கூடவே, நீங்கள் மனதின் குரலின் வரவிருக்கும் பகுதியில், இது பற்றிப் பேசுவீர்களா என்றும் வினா எழுப்பியிருக்கிறார். நாட்டுமக்களின் இத்தகைய ஆர்வங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையானது, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, ஒரு முன்மொழிவை நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். பாரதத்தின் இந்த முன்மொழிவிற்கு 70ற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இன்று உலகெங்கிலும் இதே சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது. நண்பர்களே, நாம் சிறுதானியங்கள் பற்றிப் பேசும் போது, எனது ஒரு முயற்சியையும் கூட இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், குடியரசுத்தலைவர் வந்தாலும், உணவிலே இந்தியாவின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு உண்ண அளிக்க முயற்சிக்கிறேன்; இதிலே என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த முக்கியஸ்தர்களுக்கு இந்தப் பதார்த்தங்கள் மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன, நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதைப் போலவே புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும். நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன. வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை சிறுதானியங்கள் இல்லையா! பாரதம் உலகிலேயே சிறுதானியங்களின் பெரிய ஏற்றுமதியாளர்; ஆகையால் இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய பெரும் பொறுப்பு பாரத நாட்டவரான நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். மேலும் நண்பர்களே, சிறுதானியங்கள் என்பன விவசாயிகளுக்கும் அதிக இலாபகரமானது, அதுவும் சிறப்பாக சிறிய விவசாயிகளுக்கு என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். உள்ளபடியே மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு இவை தயாராகி விடும், அதுவும் இதற்கு நீருக்கான தேவையும் அதிகம் இருக்காது. நமது சிறிய விவசாயிகளுக்கு, சிறுதானியங்கள் குறிப்பாக ஆதாயமளிப்பவை. சிறுதானியங்களின் காய்ந்த தழைகள் மிகச் சிறப்பான தீவனமாகவும் கருதப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால், சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன நிறைவான அளவில் இருக்கின்றன. பலர் இதை சூப்பர் உணவு என்றும் கூறுகிறார்கள். சிறுதானியங்களில் ஒன்றல்ல, பல ஆதாயங்கள் இருக்கின்றன. உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இருதயம் தொடர்பான நோய்கள் அபாயமாகட்டும், இவற்றைக் குறைக்கிறது. இதோடு கூடவே, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. சற்று முன்பு தான் நாம் ஊட்டச்சத்துக் குறைவு பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன, ஏனென்றால், இவை புரதங்களோடு கூடவே உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றன. தேசத்திலே இன்று சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க, நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள்-உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது; இதன் வாயிலாக விளைச்சலை அதிகரிக்க முடியும். என்னுடைய விவசாய சகோதர சகோரிகளிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், சிறுதானியங்களை நீங்கள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும், இதனால் ஆதாயம் பெற வேண்டும் என்பது தான். இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவற்றிலே சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.
என் அன்பு நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, நான் அருணாச்சல் பிரதேசத்தின் சியாங்க் மாவட்டத்தின் ஜோர்சிங்க் கிராமம் பற்றிய ஒரு செய்தியைக் காண நேர்ந்தது. இந்தச் செய்தி, ஒரு மாற்றம் பற்றியது, இதற்காக இந்த கிராமவாசிகள் பல ஆண்டுகளாகவே காத்திருந்தார்கள். உள்ளபடியே ஜோர்சிங்க் கிராமத்திலே இந்த மாதம், சுதந்திரத் திருநாளின் போது 4ஜி இணையச் சேவைகள் தொடங்கப்பட்டு விட்டன. முன்னர் கிராமத்தில் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டதற்காக மக்கள் மகிழ்ந்தார்கள், இப்போது, புதிய பாரதம், 4ஜி கொண்டு சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறது. அருணாச்சல் மற்றும் வடகிழக்கின் தொலைவான பகுதிகளில் 4ஜி என்ற வகையில் நாம் புதிய விடியலைக் காண்கிறோம். இணைய இணைப்பு ஒரு புதிய உதயத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது. எந்த வசதிகள், ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே இருந்தனவோ, அவை எல்லாம் டிஜிட்டல் இந்தியா மூலமாக கிராமந்தோறும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தேசத்திலே டிஜிட்டல் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றார்கள். ராஜஸ்தானத்தின் அஜ்மேர் மாவட்டத்தில் சேடா சிங் ராவத் அவர்கள், இணையவழித் தையலகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். உள்ளபடியே, சேடா சிங் ராவத் கோவிட்டுக்கு முன்பாக தையல் வேலையைச் செய்து வந்தார். கோவிட் வந்தது, ராவத் அவர்கள் இந்தச் சவாலை ஒரு சிரமமாகக் கருதவில்லை, அதைச் சந்தர்ப்பமாக மாற்றினார். இவர் பொதுச் சேவை மைய இணையவழிக் கடையிலே சேர்ந்தார், இணையவழியில் பணிகளை ஆரம்பித்தார். முகக்கவசங்கள் ஏராளமான எண்ணிக்கையில் வேண்டும் என்று நுகர்வோர் விரும்பும் போது, இவர் சில பெண்களைப் பணிக்கமர்த்தி, முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இதன் பிறகு, இவர் தர்ஜீ ஆன்லைன் என்ற பெயரில் தன்னுடைய இணையவழித் தையலகத்தைத் திறந்தார், இதிலே மேலும் பலவகையான ஆடைகளையும் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். இன்று டிஜிட்டல் இந்தியாவின் சக்தியால் சேடா சிங் அவர்களின் பணி எந்த அளவுக்கு அதிகரித்து விட்டது என்றால், இப்போது இவருக்கு நாடெங்கிலும் இருந்து ஆர்டர்கள் வந்து குவிகின்றன. நூற்றுக்கணக்கான பெண்களுக்கு இவர் வேலைவாய்ப்பினை அளித்து வருகின்றார். டிஜிட்டல் இந்தியா, உத்தர பிரதேசத்தின் உன்னாவிலே வசிக்கும் ஓம் பிரகாஷ் சிங் அவர்களையும் கூட டிஜிட்டல் தொழில்முனைவோராக மாற்றி விட்டது. இவர் தனது கிராமத்தில் ஓராயிரத்துக்கும் மேற்பட்ட Broadband connection, அகண்ட அலைவரிசை இணைப்புக்களை நிறுவியிருக்கிறார். ஒம் பிரகாஷ் அவர்கள் தன்னுடைய பொதுச் சேவை மையத்திற்கு அருகிலே இலவசமாக வைஃபை பகுதியையும் நிறுவி இருக்கிறார், இதனால், தேவையிருக்கும் நபர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஓம் பிரகாஷ் அவர்களின் பணி, இப்போது எந்த அளவுக்குப் பெருகி விட்டது என்றால், இவர் 20க்கும் மேற்பட்ட நபர்களைப் பணிக்கமர்த்தி இருக்கிறார். கிராமப் பள்ளிகள், மருத்துவமனைகள், மாவட்ட அலுவலகங்கள், ஆங்கன்வாடி மையங்கள் வரை அகண்ட அலைவரிசை இணைப்புக்களை இவர்கள் கொண்டு சேர்த்து வருகிறார்கள், இதனால் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. பொதுச் சேவை மையத்தைப் போலவே அரசு இணையவழிச் சந்தை அதாவது ஜெம் தளத்திலும் கூட, இப்படிப்பட்ட எத்தனையோ வெற்றிக் கதைகளை நம்மால் காண முடியும்.
நண்பர்களே, கிராமங்களிலிருந்து எனக்கு நிறைய செய்திகள் கிடைக்கின்றன, இணையம் காரணமாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எனக்கு இவை தெரிவிக்கின்றன. இணையத்தால் நமது இளைய நண்பர்களின் படிப்பு, கற்றல் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டக, உபியில் உன்னாவின் அமோயியா கிராமத்தில் வசிக்கும் குடியா சிங் தனது புகுந்த வீடு சென்ற போது, அவருக்குத் தன்னுடைய படிப்பு பற்றிய கவலை இருந்தது. ஆனால், பாரத்நெட் அவருடைய இந்தக் கவலையைப் போக்கியது. குடியா, தனது படிப்பை இணையம் வாயிலாகத் தொடர்ந்தார், பட்டப்படிப்பு வரை முழுமை செய்தார். கிராமந்தோறும் இப்படி பலரது வாழ்க்கை, டிஜிட்டல் இந்தியா இயக்கத்தினால் புதிய சக்தியை அடைந்து வருகிறது. நீங்களும், கிராமங்களில் இருக்கும் டிஜிட்டல் தொழில்முனைவோர் பற்றி எனக்கு அதிக அளவில் எழுதுங்கள், அவர்களின் வெற்றிக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில காலம் முன்பாக, ஹிமாச்சல் பிரதேசத்தில், மனதின் குரலின் நேயர் ஒருவரான ரமேஷ் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது. ரமேஷ் அவர்கள் தனது கடிதத்தில், மலைகளின் பல அழகுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மலைகளில் வீடுகள் தொலைதூர இடைவெளிகளில் இருந்தாலும், மக்களின் மனம் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருப்பதாக அவர் எழுதியிருந்தார். உண்மையிலேயே, மலைகளில் வசிப்போரின் வாழ்க்கையிலிருந்து நாம் பல கற்றல்களைப் பெற முடியும். மலைகளின் வாழ்க்கைமுறையிடமிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் நாம் பெறும் முதல் படிப்பினை, சூழல்களின் அழுத்தத்தில் அழுந்திப் போகாமல், எளிதாக அவற்றை வெற்றி கொள்ள முடியும் என்பது தான். இரண்டாவதாக, எப்படி நாம் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு தற்சார்பு நிலையை எட்ட முடியும் என்பது. நான் கூறிய முதல் படிப்பினை பற்றிய அழகான வெளிப்பாட்டை, இப்போது ஸ்பீதீ பகுதியில் காண முடிகிறது. ஸ்பீதி என்பது பழங்குடியினத்தவர் வசிக்கும் ஒரு பகுதி. இங்கே இப்போதெல்லாம் பட்டாணியைப் பிரித்தெடுக்கும் பணி புரியப்பட்டு வருகிறது. மலைப்பகுதி வயல்களில் இது உழைப்பும் சிரமமும் நிறைந்த வேலையாகும். ஆனால் இங்கே, கிராமப்புறப் பெண்கள் ஒன்றிணைந்து, பரஸ்பரம் ஒருவர் மற்றவருடைய நிலங்களில் பட்டாணியைப் பிரிக்கிறார்கள். இந்தப் பணியோடு கூடவே பெண்கள் அந்தப் பகுதிப் பாடலான சப்ரா மாஜீ சப்ராவையும் பாடுகிறார்கள். அதாவது இங்கே பரஸ்பர உதவியோடு கூடவே நாட்டுப்புறப் பாரம்பரியமும் ஓர் அங்கமாகிறது. ஸ்பீதியின் அந்தப் பகுதி ஆதாரங்களின் நற்பயன்பாட்டின் இதுவும் ஒரு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாகும். ஸ்பீதியின் பசுபராமரிக்கும் விவசாயிகள், அவற்றின் பசுஞ்சாணத்தை உலர வைத்து, சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கிறார்கள். பனிக்காலங்களில் இந்த மூட்டைகளை, பசுக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள், இவற்றை கூட் என்கிறார்கள், அங்கே பரப்பி விடுகிறார்கள். பனிபொழிவிற்கு இடையே, இந்த மூட்டைகள், பசுக்களுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. குளிர்காலம் கடந்த பிறகு, இதே பசுஞ்சாணம், வயல்களுக்கு உரமாகிறது. அதாவது பசுக்களின் கழிவுப்பொருளிலிருந்து அவற்றுக்கும் பாதுகாப்பு, வயல்களுக்கும் உரப்பொருள். விவசாயத்திற்கான குறைவான முதலீடு, வயல்களின் விளைச்சலும் அதிகம். ஆகையாலே தான் இந்தப் பகுதி இப்போதெல்லாம், இயற்கை விவசாயத்திற்கான கருத்தூக்கமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, இதைப் போன்றே பாராட்டத்தக்க முயற்சி, நமது மேலும் ஒரு மலைப்பகுதி மாநிலமான உத்தராக்கண்டிலே காணக் கிடைக்கிறது. உத்தராக்கண்டிலே பல வகையான மூலிகைகளும், வேர்களும் கிடைக்கின்றன. இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பவை. இவற்றிலே ஒரு பழத்தின் பெயர் பேடூ. இதை, himalayan fig, இமயமலைப்பகுதி அத்தி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இந்தப் பழத்திலே தாது உப்புக்களும், விட்டமின்களும் செறிவாக இருக்கின்றன. மக்கள் இதைப் பழமாகவும் உண்கிறார்கள், கூடவே பல நோய்களுக்கான சிகிச்சைக்காகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழத்தின் சிறப்புக்களைப் பார்க்கும் போது, இப்போது பேடூவின் பழச்சாறு, இதனால் தயாரிக்கப்பட்ட பழ ஊறலான ஜாம், சட்டினி, ஊறுகாய், இதை உலர்த்தித் தயார் செய்யப்படும் உலர் பழங்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள். பித்தௌராகட் நிர்வாகத்தினரின் முயற்சி மற்றும் அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பு காரணமாக பேடூவை சந்தைக்குப் பல வடிவங்களில் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பேடூவை மலைப்புற அத்தி என்ற பெயரிட்டு ப்ராண்டிங்க் செய்து, இணையவழிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகளின் வருவாயில் புதிய வழிவகை செய்யப்பட்டிருப்பதோடு கூடவே, பேடூவின் மருத்துவ குணங்களினால் நன்மையும் தொலைவான தூரங்கள் வரை கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இன்றைய தொடக்கத்தை நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா பற்றிய விஷயத்தோடு செய்திருந்தோம். சுதந்திரத் திருநாளின் மகத்தான தினத்தோடு கூடவே, வரவிருக்கும் காலத்தில் மேலும் பல முக்கியமான தினங்கள் வரவிருக்கின்றன. இன்னும் சில நாட்கள் கழித்து பிள்ளையார் சதுர்த்தி ஆராதனையும் வரவிருக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி என்பது கணபதி பப்பாவின் ஆசிகளுக்கான தினம். பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னதாக ஓணம் பண்டிகையும் தொடங்க இருக்கிறது. விசேஷமாக, கேரளத்தில் ஓணம் என்பது அமைதி-வளம் ஆகிய உணர்வுகளோடு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி என்பது ஹர்தாலிகா தீஜும் கூட. ஓடிஷாவிலே செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று நுஆகாயி பண்டிகையும் கொண்டாடப்படும். நுஆகாயி என்றால், புதிய உணவு, அதாவது, இதுவும் கூட, மற்ற பிற பண்டிகைகளைப் போலவே, நமது விவசாயப் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பண்டிகை. இதற்கிடையே, ஜைன சமூகத்தின் சம்வத்சரி மகத்துவம் வாய்ந்த திருநாளும் வருகிறது. நமது இந்த அனைத்துத் திருநாட்களும், நமது கலாச்சார வளத்தையும், உயிர்ப்புத் தன்மையையும் அடையாளப்படுத்துகின்றன. உங்களனைவருக்கும், இந்தப் பண்டிகைகளுக்கும், சிறப்பான நாட்களுக்காகவும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திருநாட்களோடு கூடவே, மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியான நாளைய தினத்தை தேசிய விளையாட்டு தினமாக நாம் கொண்டாடுவோம். நமது இளைய விளையாட்டு வீரர்கள், சர்வதேசக் களங்களில் நமது மூவண்ணத்தின் பெருமையைப் பரப்பி வருகின்றார்கள், இதுவே நமது தியான்சந்த் அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய சிரத்தாஞ்சலிகளாக இருக்க முடியும். தேசத்தின் பொருட்டு நாமனைவரும் இணைந்து புரியும் செயல்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து வரட்டும் என்ற இந்த நல்விருப்பத்தோடு நான் நிறைவு செய்கிறேன். அடுத்த மாதம், மீண்டும் ஒருமுறை உங்களோடு மனதின் குரல் அரங்கேறும். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் 91ஆவது பகுதி இது. இதுவரை நாம் ஏராளமான விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறோம், பல்வேறு விஷயங்கள் குறித்து நமது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறோம் என்றாலும், இந்த முறை மனதின் குரல் மிகவும் சிறப்பானது. காரணம் என்னவென்றால், இந்த முறை சுதந்திரத் திருநாள், தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை பாரதம் நிறைவு செய்யவிருக்கிறது. நாம் அற்புதமான-சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தின் சான்றுகளாக ஆக இருக்கிறோம். இறைவன் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பேற்றினை அளித்திருக்கிறார். நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் அடிமை வாழ்வின் காலகட்டத்தில் பிறந்திருந்தோம் என்று சொன்னால், இந்த நாள் பற்றிய நமது கற்பனை எவ்வாறு இருந்திருக்கும்? அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைந்திடத் துடிக்கும் தவிப்பு, விடுதலைச் சிறகுகளை அணிந்து பறக்க விழையும் பேரார்வம் – எத்தனை பெரியதாக இருந்திருக்கும். அதே நிலையில் நாம் இருந்திருந்தோம் என்றால், ஒவ்வொரு நாளும், இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் விடுதலை வேண்டிப் போராடுவதையும், துன்பம் சகிப்பதையும், உயிர்த்தியாகங்கள் புரிவதையும் பார்த்திருப்போம். ஒவ்வொரு நாள் காலையும், எப்போது எனது பாரதம் விடுதலை அடையும் என்ற கனவோடு நாம் விழித்தெழுந்திருப்போம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை உதடுகளில் உச்சரித்த வண்ணம் நமது நாட்கள் கழிந்திருக்கும், வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்க்கையை அர்ப்பணித்திருப்போம், நமது இளமையைத் துறந்திருப்போம்.
நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா என்பது ஒரு மக்கள் பேரியக்கமாக வடிவடுத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துத் துறைகள், சமூகத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது போன்றதொரு நிகழ்ச்சி, இந்த மாதம் மேகாலயாவில் தொடங்கப்பட்டது. மேகாலயாவின் வீரம்நிறைந்த போராளி, யூ. டிரோத் சிங் அவர்கள் காலமான நாளன்று, மக்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள். காஸி மலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அங்கே வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை டிரோத் சிங் அவர்கள் வலுவாக எதிர்த்தார். இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் அழகான படைப்புக்களை அளித்தார்கள். வரலாற்றிற்கு உயிர் கொடுத்தார்கள். ஒரு கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்; இதிலே, மேகாலயாவின் மகத்தான கலாச்சாரத்தை நேர்த்தியான முறையிலே காட்சிப்படுத்தினார்கள். சில வாரங்கள் முன்னதாக, கர்நாடகத்தில், அம்ருதா பாரதீ கன்னடார்த்தீ என்ற பெயர் கொண்ட வித்தியாசமான இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதிலே மாநிலத்தின் 75 இடங்களில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு இணைந்த பிரும்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் கர்நாடகத்தின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில் கொள்ளுவதோடு, வட்டார இலக்கிய சாதனைகளையும் முன்னிறுத்தும் முயல்வு மேற்கொள்ளப்பட்டது.
நண்பர்களே, இதே ஜூலை மாதத்தில் ஒரு மிகவும் சுவாரசியமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இதன் பெயர் – சுதந்திரத்தின் ரயிலும் ரயில் நிலையமும். இந்த முயற்சியின் நோக்கம் என்னவென்றால், மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வே துறையின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. தேசத்தில் பல ரயில் நிலையங்களோடு சுதந்திரப் போராட்ட வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. நீங்களும் கூட, இந்த ரயில் நிலையங்கள் பற்றித் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஜார்க்கண்டின் கோமோ ரயில் சந்திப்பு, இப்போது அதிகாரப்பூர்வமாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரயில் சந்திப்பு கோமோ என்ற பெயரால் அறியப்படுகிறது. ஏன் தெரியுமா? அதாவது இந்த ரயில் நிலையத்தில் தான், கால்கா மெயிலில் பயணித்து நேதாஜி சுபாஷ், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தந்திரமாகப் போக்குக் காட்டுவதில் வெற்றி பெற்றார். நீங்கள் அனைவரும் லக்னௌவுக்கு அருகிலே காகோடீ ரயில் நிலையத்தின் பெயரைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையத்தோடு ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் போன்ற தீரர்களின் பெயர் இணைந்திருக்கிறது. இங்கே ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கஜானாவைக் கொள்ளையடித்த வீரமான புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்குத் தங்களுடைய பலம் என்ன என்பதைக் காட்டினார்கள். நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினான்.
நண்பர்களே, பட்டியல் மிகவும் நீளமானது. நாடெங்கிலும் 24 மாநிலங்களில் பரந்து விருந்திருக்கும் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நீங்களும் கூட, கொஞ்சம் நேரம் ஒதுக்கி, உங்கள் அருகிலே இருக்கும் ஏதாவது ரயில் நிலையத்திற்குச் சென்று வாருங்கள். சுதந்திரப் போராட்டம் பற்றி, உங்களுக்கும் தெரியாத தகவல்கள் உடைய, இப்படிப்பட்ட சரித்திரம் பற்றி விரிவாகத் தெரியவரும். அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களிடத்திலே நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் பள்ளியைச் சேர்ந்த சின்னச்சின்ன பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, ரயில் நிலையம் செல்லுங்கள், மொத்த சம்பவத்தையும் அந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், புரிய வையுங்கள்!!
என் மனம்நிறை நாட்டுமக்களே, சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின்படி, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுங்கள், அல்லது அதை உங்கள் வீட்டில் ஏற்றுங்கள். மூவண்ணக் கொடி நம்மை இணைக்கிறது, நாம் தேசத்தின் பொருட்டு பங்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. உங்களிடத்திலே எனக்கு மேலும் ஒரு ஆலோசனையும் உண்டு; அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில், மூவண்ணத்தைப் பதிவிடலாம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதிக்கு, நமது மூவண்ணக் கொடியோடு ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த நாளன்று தான் பிங்கலீ வெங்கையா அவர்கள் பிறந்தார், இவர் தான் நமது தேசியக் கொடியை வடிவமைத்தார். நான் அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். நமது தேசியக் கொடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், மகத்தான புரட்சியாளர் மேடம் காமாவையும் கூட நாம் நினைவுகூருவோம். மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் நடந்தேறி வரும் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அளிக்கும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், நாட்டுமக்களாகிய நாமனைவரும் நமது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும் என்பது தான். அப்போது தான் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நம்மால் நிறைவேற்ற இயலும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும். ஆகையால் நமது அடுத்த 25 ஆண்டுகளின் இந்த அமிர்தகாலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமைக்காலம் போன்றதாகும். தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த, நமது சாகஸமான வீரர்கள், நமக்கெல்லாம் ஒரு பொறுப்பை விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கொரோனாவிற்கு எதிராக நாட்டுமக்களாகிய நம்முடைய போராட்டம் இப்போதும் தொடர்கிறது. உலகம் முழுமையும் கூட இதைச் சந்தித்து வருகிறது. முழுமையான உடல் பராமரிப்பின் மீது அதிகரித்துவரும் மக்களின் ஆர்வம் தான் இந்த கட்டத்தில் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது. பாரதநாட்டுப் பாரம்பரியமான வழிமுறைகள் எந்த அளவுக்கு இதிலே உதவிகரமாக இருக்கிறது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலே, ஆயுஷ் அமைச்சகம், உலகளாவிய அளவில், முக்கியமான பங்களிப்பைப் புரிந்திருக்கிறது. உலகெங்கிலும் ஆயுர்வேதம் மற்றும் பாரதநாட்டு மருந்துகள் மீது ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆயுஷ் ஏற்றுமதிகளில் சாதனை படைக்கும் வேகம் வந்திருப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய காரணம்; மேலும் ஒரு மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்தத் துறையில் பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. தற்போது தான் ஒரு உலக அளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சிமாநாடு நடந்தேறியது. இதிலே கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நடந்த மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனா காலகட்டத்தில் மருத்துவ மூலிகைகள் மீதான ஆய்வுகளிலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தான். இது தொடர்பாக பல ஆய்வுகளும் பதிப்பிடப்பட்டு வருகின்றன. கண்டிப்பாக இது ஒரு நல்ல தொடக்கம் தான்.
நண்பர்களே, தேசத்தில் பலவகையான மருத்துவத் தாவரங்கள், மூலிகைகள் தொடர்பான ஒரு அற்புதமான முயல்வு நடந்திருக்கிறது. சில நாள் முன்பாகத் தான் ஜூலை மாதத்தில் Indian Virtual Herbarium – இந்திய மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு தொடங்கப்பட்டது. டிஜிட்டல் உலகினைப் பயன்படுத்தி, நமது வேர்களோடு நாம் எப்படி இணைய முடியும் என்பதற்கான உதாரணமும் கூட இது. இந்திய மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு, பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது செடி பாகங்களின் டிஜிட்டல் படங்களின் சுவாரசியமான தொகுப்பு, இது இணையத்தளத்தில் எளிதாகக் காணக் கிடைக்கிறது. இந்த மெய்நிகர் மூலிகைத் தொகுப்பிலே இப்போது இலட்சத்திற்கும் மேற்பட்ட வகைமாதிரிகளும், இவற்றோடு தொடர்புடைய அறிவியல் தகவல்களும் கிடைக்கிறது. மெய்நிகர் மூலிகைத் தொகுப்பில், பாரதத்தின் தாவரவியல் பன்முகத்தன்மையின் நிறைவான காட்சியும் காணக் கிடைக்கிறது. இந்திய மெய்நிகர் தாவரத் தொகுப்பு, பாரத நாட்டுத் தாவரங்கள் மீதான ஆய்வுகள் பற்றிய ஒரு முக்கியமான ஆதாரமாக விளங்கும் என்பது என் நம்பிக்கை.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் ஒவ்வொரு முறையும் நாட்டுமக்களின் பலவகைப்பட்ட வெற்றிகள் பற்றி விவாதிக்கிறோம், இவை நம் இதழ்களில் இனிமையான புன்னகையை மலரச் செய்கிறது. ஒரு வெற்றிக்கதை, இனிமையான புன்னகையைத் ஏற்படுத்துகிறது, நாவில் இனிய சுவையை நிரப்புகிறது என்று சொன்னால், இதை நாம் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல் என்போம் அல்லவா!! நமது விவசாயிகள் இப்போதெல்லாம் தேன் உற்பத்தியில் என்னவெல்லாம் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? தேனின் சுவை நமது விவசாயிகளின் வாழ்வையே மாற்றியமைத்து, அவர்களின் வருவாயை அதிகரித்தும் வருகிறது. ஹரியாணாவிலே, யமுனாநகரிலே, ஒரு தேனீ வளர்ப்பாளர் இருக்கிறார் – சுபாஷ் கம்போஜ் அவர்கள். சுபாஷ் அவர்கள் விஞ்ஞான முறைப்படி தேனீ வளர்ப்பிற்கான பயிற்ச்சியைப் பெற்றார். ஆறு பெட்டிகளோடு தன் பணியைத் தொடங்கினார். இன்று இவர் கிட்டத்தட்ட 2,000 பெட்டிகளோடு தேனீக்களை வளர்த்து வருகிறார். இவருடைய தேன் பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜம்முவின் பல்லீ கிராமத்தைச் சேர்ந்த விநோத் குமார் அவர்களும் 1500க்கும் மேற்பட்ட காலனிகளில் தேனீக்களைப் பராமரித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு, இராணித் தேனீ வளர்ப்பில் பயிற்சி பெற்றார். இந்தப் பணி வாயிலாக இவர் ஆண்டுதோறும் 15 முதல் 20 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, மதுகேஷ்வர் ஹெக்டே அவர்கள் பாரத அரசிடமிருந்து 50 தேனீ காலனிகளுக்கான உதவித்தொகை பெற்றார். இவர் வசம் 800க்கும் அதிகமான காலனிகள் உள்ளன, இவர் பல டன்கள் தேனை விற்பனை செய்கிறார். இவர் தனது வேலையில் புதுமையைப் புகுத்தியிருக்கிறார், மேலும் நாவல் தேன், துளசி தேன், நெல்லித் தேன் போன்ற தாவரத் தேன்களையும் ஏற்படுத்தி வருகிறார். மதுகேஷ்வர் அவர்களே, தேன் உற்பத்தியில் உங்களின் நூதனக் கண்டுபிடிப்புகளும் வெற்றியும், உங்களுடைய பெயருக்குப் பொருள் சேர்க்கிறது.
நண்பர்களே, நம்முடைய பண்டைய மருத்துவ முறைகளில் தேனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். ஆயுர்வேத நூல்களில் தேனை அமுதம் என்றே அழைத்திருக்கிறார்கள். தேன் என்பது, நமக்கு சுவையை மட்டும் அளிப்பதில்லை, உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. தேன் உற்பத்தியில் இன்று இந்த அளவுக்கு சாத்தியக்கூறுகள் என்பதால், தொழில்ரீதியான படிப்புகளை மேற்கொள்ளும் இளைஞர்களும் கூட இதன் மூலமாக சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இளைஞர் தான் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த நிமித் சிங்க். நிமித் சிங் அவர்கள் தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார். இவருடைய தந்தையார் மருத்துவர் என்றாலும், படித்த பிறகு நிமித் சிங் அவர்கள் சுயவேலைவாய்ப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இவர் தேன் உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கினார். தரக் கட்டுப்பாட்டிற்காக லக்னௌவில் தனக்கென ஒரு பரிசோதனைக் கூடத்தையும் உருவாக்கி இருக்கிறார். நிமித் அவர்கள் இப்போது தேன் மற்றும் தேன் மெழுகு வாயிலாக நன்கு வருவாய் ஈட்டி வருகிறார். மேலும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். இப்படிப்பட்ட இளைஞர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே இன்று தேசம் இத்தனை பெரிய தேன் உற்பத்தியாளராக ஆகி வருகிறது. தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேனின் அளவு அதிகரித்திருப்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். தேசிய தேனீவளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் போன்ற இயக்கங்களை நாடு முடுக்கி விட்டதாலும், விவசாயிகளின் முழுமையான உழைப்பினாலும், நமது தேனின் சுவை, உலகெங்கிலும் சுவை கூட்டி வருகிறது. இதுமட்டுமல்ல, இந்தத் துறையில் மேலும் பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நமது இளைஞர்கள் இந்த சந்தர்ப்பங்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, இவற்றால் ஆதாயமடைந்து, புதிய சாத்தியக்கூறுகளை சாத்தியமாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மனதின் குரலின் நேயர் ஒருவரான ஆஷீஷ் பஹல் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் தனது கடிதத்தில் சம்பாவின் மிஞ்ஜர் மேலே என்பது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது மக்காச்சோளத்தின் மலர்களையே மிஞ்ஜர் என்று அழைக்கிறார்கள். மக்காச்சோளத்தில் மிஞ்ஜர் அதாவது அதன் மலர்கள் தோன்றும் போது, மிஞ்ஜர் விழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கொண்டாட்டத்தில், நாடெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். தற்போது இந்த மிஞ்ஜர் கொண்டாட்டம் நடைபெற்று வருவது ஒரு தற்செயல் நிகழ்வு. ஒருவேளை நீங்கள் ஹிமாச்சலுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறீர்கள் என்றால், இந்தக் கொண்டாட்டத்தைக் காண சம்பா செல்லலாம். சம்பா மிகவும் அழகான இடம், இங்கே நாட்டுப்பாடல்களில் மீண்டும்மீண்டும் என்ன கூறப்படுகிறது என்றால் – சம்பே இக் தின் ஓணா கனே மஹீனா ரைணா. அதாவது, ஒரு நாள் மட்டும் யாரெல்லாம் சம்பாவுக்கு வருகிறார்களோ, அவர்கள் இதன் அழகைக் கண்டு மயங்கி ஒரு மாதம் வரை தங்கி விடுவார்கள்.
நண்பர்களே, நமது தேசத்தில் கொண்டாட்டங்களுக்கென பெரிய கலாச்சார மகத்துவம் இருந்து வந்துள்ளது. விழாக்கள், மக்களையும் மனங்களையும் இணைக்கின்றன. ஹிமாச்சலில் ஏற்பட்ட மழைக்குப் பிறகு, முன்பட்டப் பயிர்கள் முதிர்ச்சி பெறத் தொடங்குகின்றன, அப்போது செப்டம்பரில், ஷிம்லா, மண்டி, குல்லு, சோலன் ஆகிய இடங்களில் சைரீ அல்லது சைர் கொண்டாடப்படுகிறது. செப்டம்பரில் ஜாக்ரா வரவிருக்கிறது. ஜாக்ராவின் கொண்டாட்டங்களில் மஹாசூ தேவதையை அழைத்து, பீஸூ கீதங்கள் பாடப்படுகின்றன. மஹாசூ தேவதையின் இந்தப் போற்றுதல், ஹிமாச்சலில் ஷிம்லா, கின்னௌர், சிர்மௌர் தவிர, உத்தராக்கண்டிலும் நடக்கிறது.
நண்பர்களே, நமது தேசத்தில் பல்வேறு மாநிலங்களில் பழங்குடியினங்களின் பல பாரம்பரியமான விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சில விழாக்கள் பழங்குடியினக் கலாச்சாரத்தோடு தொடர்புடையன, சில விழாக்கள், பழங்குடியின வரலாறு மற்றும் மரபோடு இணைந்தவை, எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், தெலங்கானாவின் மேடாரமின், 4 நாட்கள் நடக்கக்கூடிய சமக்கா-சரலம்மா ஜாத்ரா விழாவைக் காணக் கண்டிப்பாகச் செல்லுங்கள். இந்த விழாவை தெலங்கானாவின் மஹாகும்பமேளா என்று அழைப்பார்கள். சரலம்மா ஜாத்ரா விழா, இரண்டு பழங்குடியினப் பெண் தலைவிகளான சமக்கா, சரலம்மா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது தெலங்கானாவில் மட்டும் இல்லை, மாறாக சத்தீஸ்கட், மஹாராஷ்ட்ரம், ஆந்திரப் பிரதேசத்தின் கோயா பழங்குடியினத்தவர்களின் நம்பிக்கைகளின் மையக்களம். ஆந்திரப் பிரதேசத்தின் மாரீதம்மா விழாவும் கூட, பழங்குடியினச் சமூகத்தின் நம்பிக்கைகளோடு இணைந்த ஒரு விழா. ஆனி அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை நடைபெறும் இந்த மாரீதம்மா விழாவில், இங்கிருக்கும் பழங்குடியினச் சமூகம், இதை சக்தி உபாசனையோடு இணைக்கிறது. கிழக்கு கோதாவரியின் பெத்தாபுரத்தில் கோயிலும் இருக்கிறது. இதைப் போலவே, ராஜஸ்தானத்தின் கராசியா பழங்குடியினத்தவர் சித்திரையின் வளர்பிறை சதுர்தசியை, சியாவாத் திருவிழா அல்லது மன்கான் ரோ திருவிழா என்று பெயரிட்டுக் கொண்டாடுகிறார்கள்.
சத்தீஸ்கட்டின் பஸ்தரைச் சேர்ந்த நாராயண்புரில் மாவ்லீ விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அருகே இருக்கும் மத்திய பிரதேசத்திலே, பகோரியா விழா மிகவும் பிரசித்தமானது. பகோரியா விழாவின் தொடக்கம், போஜ ராஜா காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது பீல் ராஜாவான காஸூமராவும் பாலூனும், அவரவர் தலைநகரங்களில் முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது முதல் இன்று வரை, இந்த விழாவானது, அதே அளவு உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைப் போலவே, குஜராத்தின் தர்ணேதர், மாதோபூர் போன்ற பல விழாக்கள் மிகவும் பிரசித்தமானவை. திருவிழாக்கள் என்பன இயல்பாகவே நமது சமூகத்தில், வாழ்க்கையில் ஆற்றலுக்கான ஊற்றுக்களாக விளங்குகின்றன. உங்களுக்கு அருகிலே இப்படிப்பட்ட பல திருவிழாக்கள் நடந்து வரலாம். நவீனகாலத்தில், சமூகத்தின் தொன்மையான தொடர்புகள், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை பலப்படுத்த மிகவும் அவசியமானது. நமது இளைஞர்களை இதோடு நாம் இணைக்க வேண்டும், நீங்கள் எப்போதெல்லாம் இத்தகைய திருவிழக்களுக்குச் சென்றாலும், அங்கே காணப்படும் காட்சிகளைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிருங்கள். நீங்கள் விரும்பினால், ஒரு சிறப்பான ஹேஷ்டேகைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக அந்தத் திருவிழாக்கள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் நீங்கள் எடுத்த படங்களைத் தரவேற்றம் செய்யலாம். அடுத்த சில தினங்களில் கலாச்சார அமைச்சகம் ஒரு போட்டியைத் தொடங்க இருக்கிறது, அதிலே திருவிழாக்கள் தொடர்பான மிகவும் அருமையான படங்களை அனுப்புவோருக்குப் பரிசுகள் வழங்கப்படும். சரி, இனியும் ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனே விழாக்களைச் சுற்றிப் பாருங்கள், அவற்றின் படங்களைப் பகிருங்கள், உங்களுக்குப் பரிசு கிடைக்கலாம், இல்லையா!!
என் கனிவுநிறை நாட்டுமக்களே, உங்களுக்கு நினைவிருக்கலாம், மனதின் குரலின் ஒரு பகுதியில், பொம்மைகள் ஏற்றுமதியில் முதலிடம் பெறும் ஆற்றல் பாரதத்திடம் இருப்பதாக நான் கூறியிருந்தேன், அல்லவா? விளையாட்டுக்களில் பாரத நாட்டின் நிறைவான பாரம்பரியம் பற்றிக் குறிப்பாக நான் விவாதித்திருந்தேன். பாரத நாட்டின் வட்டார பொம்மைகள் – பாரம்பரியம், இயற்கை என இரண்டுக்கும் இசைவானதாக இருக்கின்றது, அதாவது சூழலுக்கு இசைவானவையாக இருக்கின்றன. நான் இன்று உங்களோடு பாரத நாட்டுப் பொம்மைகளின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நம்முடைய இளைஞர்கள், ஸ்டார்ட் அப்புகள், தொழில் முனைவோர் காரணமாக நமது பொம்மைத் தொழில் சாதித்திருக்கும் சாதனைகளும், பெற்றிருக்கும் வெற்றிகளும் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இன்று பாரதநாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கையில், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதன் எதிரொலி அனைத்து இடங்களிலிருந்தும் எதிரொலிக்கிறது. பாரதத்தில் இப்போது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் இங்கே 3000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள் வெளியிலிருந்து வந்தன, அதுவே இப்போது 70 சதவீதம் குறைந்திருப்பது சந்தோஷம் அளிப்பதாகும்; அதே வேளையில் பாரதம், 2600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான விளையாட்டுப் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. முன்பெல்லாம் 300-400 கோடி ரூபாய் பெறுமானமுள்ள விளையாட்டுப் பொருட்கள் தாம் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்தச் சாதனைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதத்தின் விளையாட்டுப் பொருட்கள் துறையானது இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியிருக்கிறது. இந்தியத் தயாரிப்பாளர்கள் இப்போது, இந்தியப் புராணங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றார்கள். தேசத்தின் பல இடங்களில் விளையாட்டுப் பொருட்களின் தொகுதிகள், விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் சின்னச்சின்ன தொழில்முனைவோர், இவர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்தச் சிறிய தொழில்முனைவோர் தயாரிக்கும் விளையாட்டுப் பொருட்கள் இப்போது உலகெங்கும் பயணிக்கிறது. பாரதத்தின் விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர்கள், உலகின் முக்கியமான உலக அளவிலான விளையாட்டுப் பொருட்கள் ப்ராண்டுகளோடு இணைந்தும் பணிபுரிந்து வருகிறார்கள். நம்முடைய ஸ்டார்ட் அப் துறையும் கூட, விளையாட்டுப் பொருட்களின் உலகின் மீது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்தத் துறையில் பல சுவாரசியமான விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரூவில், ஷூமி பொம்மைகள் என்ற பெயர் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப், சூழலுக்கு ஏற்புடைய பொம்மைகளின் மீது கவனம் செலுத்தி வருகிறது. குஜராத்தின் Arkidzoo-ஆர்க்கிட்ஜூ என்ற நிறுவனம், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் முன்னேறிய வடிவமான Augmented realityயை ஆதாரமாகக் கொண்ட மின்னட்டைகள், அதனை ஆதாரமாகக் கொண்ட கதைப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. புணேயின் நிறுவனமான ஃபன்வென்ஷன் லேர்னிங், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செயல்பாட்டுப் புதிர்கள் வாயிலாக அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகியவற்றின் மீது பிள்ளைகளுக்கு ஆர்வத்தை அதிகரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. விளையாட்டுப் பொருட்கள் உலகத்தில் இத்தகைய அருமையான செயல்களைப் புரிந்து வரும் அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார்ட் அப்புகளுக்கும் நான் பலப்பல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள், நாமனைவருமாக இணைந்து, பாரதநாட்டு விளையாட்டுப் பொருட்களை உலகெங்கிலும், மேலும் விரும்பத்தக்கவையாக ஆக்குவோம். இதோடு கூடவே, நான் காப்பாளர்களிடம் விடுக்கும் வேண்டுகோள், நீங்களும் இயன்றவரை அதிக அளவில் இந்திய விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், பொம்மைகளை வாங்குங்கள் என்பது தான்.
நண்பர்களே, வகுப்பறையாகட்டும், விளையாட்டு மைதானமாகட்டும், இன்று நமது இளைஞர்கள், அனைத்துத் துறைகளிலும் தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாதம், பி.வி. சிந்து சிங்கப்பூர் ஓப்பன் போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். நீரஜ் சோப்ராவும் தனது மிகச் சிறப்பான வெளிப்பாட்டால், உலக தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார். அயர்லாந்தின் பேரா பேட்மிண்டன் இண்டர்நேஷனல் - மாற்றுத் திறனாளிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டியிலும் கூட, நமது விளையாட்டு வீரர்கள் 11 பதக்கங்களை வென்று தேசத்திற்குப் பெருமிதம் சேர்த்திருக்கிறார்கள். ரோம் நகரில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்தப் போட்டியிலும் பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். நமது தடகளச் சாதனையாளர்கள், இந்த கிரேக்க ரோமானியப் போட்டியில் அபாரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் 32 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்கள். விளையாட்டு வீரர்களைப் பொறுத்த மட்டிலே, இந்த மாதம் முழுவதுமே செயல்பாடுகள் நிறைந்த சுறுசுறுப்பான மாதமாக இருந்திருக்கிறது. சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் புரவலர்களாக இருப்பது கூட, பாரத நாட்டிற்கு மிகப்பெரிய கௌரவம் அளிக்கக்கூடிய விஷயம். ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று இந்தப் போட்டி தொடங்கியது, இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதே நாளன்று, இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுக்களும் தொடங்கின. உற்சாகம் கொப்பளிக்கும் இந்திய இளைஞர் அணி, தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நான் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், தடகள வீரர்களுக்கும் நாட்டுமக்கள் தரப்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீஃபா 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியையும் பாரதம் நடத்த இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும், இது விளையாட்டுக்கள் மீது பெண் குழந்தைகளின் உற்சாகத்தை அதிகரிக்கும்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக நாடெங்கிலும் 10ஆவது, 12ஆவது வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடினமாக உழைத்து, ஈடுபாட்டோடு வெற்றியை அடைந்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். பெருந்தொற்றுக் காலமான, கடந்த ஈராண்டுகள், மிகவும் சவால் நிறைந்தவையாக இருந்தன. இந்தச் சூழ்நிலைகளிலும் நமது இளைஞர்கள் மிகுந்த நெஞ்சுரத்தையும், சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுதல்களுக்கு உரியது. அனைவரின் பொன்னான எதிர்காலத்திற்கான என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் தொடர்பாக, தேசத்தின் பயணத்தோடு நமது விவாதத்தைத் தொடங்கினோம். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, நமது அடுத்த 25 ஆண்டுகளின் பயணம் தொடங்கியிருக்கும். நமது இல்லம், நம்மைச் சேர்ந்தோர் இல்லங்களில், நமக்கு மிகவும் பிரியமான மூவண்ணக் கொடி பறக்கட்டும், இதன் பொருட்டு நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த முறை, சுதந்திரத் திருநாளை எப்படிக் கொண்டாடினீர்கள், சிறப்பாக என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதை எல்லாம் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த முறை நாம் நமது இந்த அமுதகாலத்தின் பல்வேறு வண்ணங்கள் பற்றி மீண்டும் உரையாடி மகிழ்வோம், விடை தாருங்கள் நண்பர்களே, பலப்பல நன்றிகள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, வாழ்க்கையில் வானத்தோடு தொடர்புடைய கற்பனைகளில் திளைக்காதவர்கள் என்று நம்மில் யாருமே இருக்க மாட்டார்கள், இல்லையா!! சிறுவயதில் அனைவரையுமே நிலவு-நட்சத்திரங்கள் பற்றிய கதைகள் என்றுமே கவர்ந்து வந்திருக்கின்றன. இளைஞர்களைப் பொறுத்த மட்டிலே வானைத் தொடுவது, கனவுகளை மெய்ப்படுவதற்கு இணையானதாக இருக்கிறது. இன்று நமது பாரதம், இத்தனைத் துறைகளில் வெற்றிகள் என்ற வானைத் தொடும் வேளையில், வானம் அல்லது விண் என்பது எப்படி விலகி இருக்க முடியும்! கடந்த சில காலமாகவே நமது தேசத்தில் விண்வெளித் துறையோடு இணைந்த பல பெரிய பணிகள் நடந்திருக்கின்றன. தேசத்தின் இந்தச் சாதனைகளில் ஒன்று தான் In-Space என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இது எப்படிப்பட்ட நிறுவனம் என்றால், பாரதத்திலே, விண்வெளித்துறையிலே, பாரதத்தின் தனியார் துறைக்கு சந்தர்ப்பங்களை ஊக்குவிக்கிறது. இந்தத் தொடக்கமானது, நமது தேசத்தின் இளைஞர்களைக் குறிப்பாக கவர்ந்திருக்கிறது. இதோடு தொடர்புடைய பல செய்திகள், பல இளைஞர்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக In-Spaceஇன் தலைமையகத்தைத் திறந்து வைக்கச் சென்றிருந்த போது, அங்கே பல இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகளின் புதிய எண்ணங்களையும், உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. கணிசமான நேரம் வரை நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களைப் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டீர்களானால், நீங்களும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போவீர்கள். எடுத்துக்காட்டாக விண்வெளி தொடர்பான ஸ்டார்ட் அப்புகளின் எண்ணிக்கையையும், வேகத்தையுமே எடுத்துக் கொள்ளலாமே!! இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்புவரை நமது தேசத்திலே, விண்வெளித்துறையில், ஸ்டார்ட் அப்புகள் என்பது குறித்து யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள். இன்று இவற்றின் எண்ணிக்கை நூறையும் தாண்டி விட்டது. இந்த ஸ்டார்ட் அப்புகள் செயல்பட்டு வரும் கருத்து பற்றி ஒன்று முன்பு யாரும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை, அல்லது இது தனியார் துறையால் செய்ய சாத்தியமில்லாததாகக் கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக, சென்னை மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப்புகளான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட். இந்த ஸ்டார்ட் அப்புகள் மேம்படுத்தி வரும் ஏவு வாகனங்களால் விண்வெளியில் சிறிய payloadகளை, அதாவது சுமைகளையும் கொண்டு செல்ல முடியும். இதனால் விண்ணில் ஏவுவதற்கான செலவு மிகவும் குறையும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதைப் போல ஹைதராபாதின் மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான துருவா ஸ்பேஸானது, சேடிலைட் ட்ப்ளாயர், அதாவது, விண்கல வரிசைப்படுத்தி மற்றும் விண்கலங்களுக்காக உயர் தொழில்நுட்ப சூரியத்தகடுகள் பற்றி பணியாற்றி வருகிறது. நான் மேலும் ஒரு விண்வெளி ஸார்ட் அப்பான திகந்தராவின் தன்வீர் அஹ்மதையும் சந்தித்தேன், இவர் விண்வெளியில் இருக்கும் குப்பைக் கூளங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விண்வெளியில் குப்பைகளை அகற்றக்கூடிய வகையிலான ஒரு தொழில்நுட்பத்தை அவர் வடிவமைக்க வேண்டும் என்ற சவாலையும் நான் அவருக்கு விடுத்து வந்திருக்கிறேன். திகந்தராவாகட்டும், துருவா ஸ்பேஸ் ஆகட்டும், இரண்டுமே ஜூன் 30 அன்று இஸ்ரோவின் ஏவு வாகனத்திலிருந்து தங்களுடைய முதல் ஏவுதலை மேற்கொள்ள இருக்கின்றன. இதைப் போலவே, பெங்களூருவின் ஒரு விண்வெளி ஸ்டார்ட் அப்பான Astromeஇன் நிறுவனரான நேஹாவும் கூட ஒரு அருமையான விஷயம் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கி வரும் ஆண்டெனாக்கள், சிறியவையாக மட்டும் இருக்காது, இவை விலை மலிவானவையாகவும் இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்திற்கான தேவை உலகம் முழுவதிலும் ஏற்படும்.
நண்பர்களே, In-Spaceஇன் செயல்திட்டத்திலே, மெஹசாணாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியான தன்வீ படேலையும் நான் சந்தித்தேன். இவர் ஒரு மிகச் சிறிய செயற்கைக்கோள் மீது பணியாற்றி வருகிறார், இது அடுத்த சில மாதங்களிலே விண்வெளியிலே ஏவப்பட இருக்கிறது. தன்னுடைய செயல்பாடு குறித்து மிகச் சரளமாக தன்வீ என்னிடம் குஜராத்தியிலே விளக்கினார். தன்வியைப் போலவே தேசத்தில் கிட்டத்தட்ட 750 பள்ளி மாணவர்கள், அமிர்தப் பெருவிழாவில் 75 செயற்கைக்கோள்கள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார்கள், இதில் மேலும் சந்தோஷமளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் அதிகப்பட்ச மாணவர்கள் தேசத்தின் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் கலந்துரையாட இருக்கும் ஒரு விஷயம் குறித்து நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்கள் மனம் குதூகலத்தில் கூத்தாடும், உங்களுக்கும் கருத்தூக்கம் பிறக்கும். கடந்த நாட்களில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது வெற்றியாளரான நீரஜ் சோப்டா மீண்டும் செய்திகளில் நிறைந்திருக்கிறார். ஒலிம்பிக்கிற்குப் பிறகு இவர், ஒன்றன் பின் ஒன்றாக புதியபுதிய வெற்றிகளை நிறுவிக் கொண்டிருக்கிறார். ஃபின்லாந்தில் பாவோ நூர்மி விளையாட்டுக்களில் நீரஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இதுமட்டுமல்ல, ஈட்டி எறிதலில் இவர் தான் ஏற்படுத்திய பதிவினைத் தானே தகர்த்திருக்கிறார். Kuortane விளையாட்டுக்களில் நீரஜ், மீண்டும் ஒரு முறை தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் அங்கே வானிலை மிக மோசமாக இருந்த சூழ்நிலையிலும் கூட இவர் தங்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தன்னம்பிக்கை தான் இன்றைய இளைஞர்களின் அடையாளம். ஸ்டார்ட் அப்புகள் தொடங்கி விளையாட்டுக்களின் உலகம் வரை, பாரதத்தின் இளைஞர்கள் புதியபுதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் நமது விளையாட்டு வீரர்கள் பல புதிய பதிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த விளையாட்டுக்களில் மொத்தம் 12 பதிவுகள் தகர்க்கப்பட்டன என்பதும், 11 பதிவுகள் வீராங்கனைகளால் செய்யப்பட்டன என்பதும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். மணிப்பூரின் எம். மார்ட்டினா தேவி, பளுதூக்கல் போட்டியில் எட்டு புதிய பதிவுகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதைப் போலவே, சஞ்ஜனா, சோனாக்ஷீ, பாவ்னா ஆகியோரும் கூட தனித்தனியே சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். இனிவரவிருக்கும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பாரதம் எத்தனை வலுவானதாக இருக்கும் என்பதைத் தங்களுடைய கடும் உழைப்பு வாயிலாக இந்த வீராங்கனைகள் அறிவித்துவிட்டார்கள். நான் இந்த அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், வருங்காலத்திற்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் உண்டு. இந்த முறையும், பல புதிய திறமைகள் வெளிப்பட்டன, இவற்றுக்குச் சொந்தக்காரர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய போராடியிருக்கிறார்கள், இன்று வெற்றி என்ற இலக்கை அடைந்திருக்கிறார்கள். இவர்களுடைய வெற்றியில், இவர்களுடைய குடும்பத்தார், தாய் தந்தையருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.
70 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதில் தங்கம் வென்ற ஸ்ரீநகரைச் சேர்ந்த ஆதில் அல்தாஃபின் தந்தை தையல்காரர் என்றாலும் இவர் தனது மகனின் கனவுகளை நிறைவேற்ற, எந்த ஒரு முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. இன்று ஆதில் தனது தந்தைக்கும், ஜம்மு கஷ்மீர் முழுவதற்கும் பெருமிதம் சேர்த்திருக்கிறார். பளு தூக்குதலில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எல். தனுஷின் தந்தையுமே கூட ஒரு எளிய மரத்தச்சர் தான். சாங்க்லியைச் சேர்ந்த பெண்ணான காஜோல் சர்காரின் தந்தை ஒரு தேநீர் விற்பனையாளர்; காஜோல் தனது தந்தையாரின் வேலையில் உதவி செய்து கொண்டே, கூடவே பளு தூக்குதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இவருடைய, குடும்பத்தாருடைய உழைப்பு மணம் சேர்த்திருக்கிறது, பளு தூக்குதல் போட்டியில் காஜோல் பல பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். இதைப் போன்றதொரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் தான் ரோஹ்தக்கைச் சேர்ந்த தனுவும். தனுவின் தந்தை ராஜ்பீர் சிங், ரோஹ்தக்கின் ஒரு பள்ளியில் பேருந்து ஓட்டுநர். மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தனு, தானும், தனது குடும்பத்தாரும், தனது தந்தையும் கண்ட கனவை மெய்ப்பித்திருக்கிறார்.
நண்பர்களே, விளையாட்டு உலகிலே, இப்போது பாரதநாட்டு விளையாட்டு வீரர்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது, கூடவே, பாரதநாட்டு விளையாட்டுக்களும் தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த முறை கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில், ஒலிம்பிக்ஸிலே இடம்பெறும் போட்டிகளைத் தவிர, ஐந்து சுதேசி விளையாட்டுக்களும் இடம் பெற்றிருந்தன. இந்த ஐந்து விளையாட்டுக்கள், கதகா, தாங்க் தா, யோகாஸனம், களறிப்பாயட்டு, மல்லகம்ப் ஆகியன.
நண்பர்களே, பாரதத்திலே ஒரு விளையாட்டிற்கான சர்வதேசப் போட்டி நடைபெற இருக்கிறது; இந்த விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலே பிறந்தது. இந்தப் போட்டி ஜூலை மாதம் 28ஆம் நாள் தொடங்க இருக்கிறது, அது தான் சதுரங்க ஒலிம்பியாட். இந்த முறை, சதுரங்க ஒலிம்பியாடில், 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. விளையாட்டு மற்றும் உடலுறுதி தொடர்பான நமது இன்றைய விவாதப் பொருள், மேலும் ஒரு பெயர் இல்லாமல் போனால் நிறைவானதாக இருக்காது. அந்தப் பெயர் தான் தெலங்கானாவைச் சேர்ந்த மலையேறும் வல்லுநரான பூர்ணா மாலாவத். பூர்ணா செவன் சம்மிட் சேலஞ்ஜ் என்ற ஏழு சிகரச் சவாலை வென்று, மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார். உலகின் ஏழு மிகக் கடினமான, உயரமான மலைகளின் மீது ஏறும் சவால். பூர்ணா தனது அசகாய நம்பிக்கையின் துணையோடு, வடக்கு அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான மவுண்ட் தேனாலீ மீது ஏறி, தேசத்திற்குப் பெருமை சேர்த்தார். பூர்ணா என்ற இந்தப் பெண் யார் தெரியுமா? வெறும் 13 வயதிலேயே, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி, அற்புதமான சாதனையைப் படைத்த வீராங்கனை தான் இந்த பூர்ணா.
நண்பர்களே, விளையாட்டுக்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இன்று பாரதத்தின் அதிகத் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான மிதாலீ ராஜ் பற்றிப் பேச நான் விரும்புகிறேன். இவர், இந்த மாதம் கிரிக்கெட் போட்டியிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார், இது பல விளையாட்டுப் பிரியர்களை உணர்ச்சிவயப்படச் செய்திருக்கிறது. மிதாலி ஒரு அசாதாரணமான விளையாட்டு வீரர் மட்டுமல்ல, பல விளையாட்டு வீரர்களுக்கு இவர் ஒரு உத்வேக காரணியாகவும் இருந்திருக்கிறார். நான் மிதாலிக்கு, அவரது வருங்காலத்திற்கான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, குப்பையிலிருந்து செல்வம் என்ற கருத்தோடு தொடர்புடைய பல முயற்சிகள் பற்றி நாம் மனதின் குரலில் விவாதித்து வருகிறோம். இதனையொட்டிய ஒரு எடுத்துக்காட்டு, மிசோரமின் தலைநகரான ஐஜ்வாலில் நடந்திருக்கிறது. ஐஜ்வாலின் ஒரு அழகான ஆறு, சிடே லுயி. காலப்போக்கிலே இது, குப்பையும் மாசும் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது. கடந்த சில ஆண்டுகளில் இந்த நதியைக் காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதற்காக வட்டார நிறுவனங்கள், சுயவுதவி அமைப்புகள், வட்டார மக்கள் ஆகிய அனைவருமாக இணைந்து, சிடே லுயியைக் காப்பாற்றுவோம் என்பது தொடர்பான செயல் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறார்கள். நதியைத் தூய்மைப்படுத்தும் இந்த இயக்கம், குப்பையிலிருந்து செல்வத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கியளித்திருக்கிறது. உள்ளபடியே இந்த நதியிலும், இதன் கரையோரங்களிலும் பெரிய அளவில் நெகிழிப் பொருட்களின் குப்பை நிறைந்திருந்தது. நதியைக் காப்பாற்ற வேண்டி பணியாற்றி வரும் அமைப்பினர், இந்த நெகிழிப் பொருட்களிலிருந்து, சாலையை உருவாக்கத் தீர்மானம் செய்தார்கள். அதாவது நதியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நெகிழிப் பொருட்களைக் கொண்டு, மிஸோரமின் ஒரு கிராமத்திலே, மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு சாலை போடப்பட்டது, அதாவது தூய்மையோடு கூடவே வளர்ச்சி.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு முயற்சியைத் தான் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய சுயவுதவி அமைப்புகள் வாயிலாகத் தொடங்கி இருக்கிறார்கள். புதுச்சேரி கடலோரப் பகுதி. அங்கிருக்கும் கடற்கரைகளையும், கடலையும் கண்டுகளிக்க மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். ஆனால் புதுச்சேரியின் கடற்கரையிலும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் மாசு அதிகரித்துக் கொண்டிருந்தது. தங்களுடைய கடல் பகுதியில், கடல் கரைகளில், சுற்றுச்சூழலைப் பராமரிக்க, இந்தப் பகுதி மக்கள் ‘Recycling for Life’ வாழ்க்கைக்கான மறுசுழற்சி என்ற இயக்கத்தைத் தொடக்கினார்கள். இன்று புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில், ஆயிரக்கணக்கான கிலோ குப்பைகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு, பகுக்கப்படுகிறது. இவற்றில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது, பிற பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தப்படுகிறது. இதைப் போன்ற முயற்சிகள் உத்வேகம் அளிப்பவையாக இருப்பதோடு, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு எதிராக பாரதம் செயல்படுத்தி வரும் இயக்கத்திற்கு விரைவும் கூட்டுகின்றது.
நண்பர்களே, நான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு விசித்திரமான சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. நான் இதைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தூய்மை பற்றிய செய்தியைத் தாங்கிச் செல்லும் இந்த சைக்கிள் ஓட்டுபவர்களின் ஒரு குழு, சிம்லா தொடங்கி மண்டி வரை செல்கிறது. மலைப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 175 கிலோமீட்டர்கள் தொலைவினை இந்தக் குழுவினர், சைக்கிள் மூலமாக நிறைவு செய்வார்கள். இந்தக் குழுவில் பெரியோரும் இருக்கிறார்கள், சிறுவர்களும் இருக்கிறார்கள். நமது சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும், நமது மலைகளும் நதிகளும், கடல்களும் தூய்மையாக இருந்தால், நமது ஆரோக்கியமும் அதே அளவு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் இது போன்ற முயற்சிகளைப் பற்றிக் கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.
என் இனிய நாட்டுமக்களே, நமது தேசத்திலே பருவமழை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. பல மாநிலங்களில் மழை அதிகரித்து வருகிறது. நீர் மற்றும் நீர் பராமரிப்புத் திசையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. பல நூற்றாண்டுகளாகவே இந்தப் பொறுப்பினை நமது நாட்டிலே, சமுதாயமானது இணைந்து ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது. மனதின் குரலில் நாம் ஒரு முறை step wells, படிக்கிணறுகள் பாரம்பரியம் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். படிகளில் இறங்கி எந்தப் பெரிய குளங்களை நாம் எட்டுகிறோமோ அவற்றைத் தான் நாம் படிக்கிணறுகள் என்று அழைக்கிறோம், இவற்றை வடநாட்டிலே பாவ்டீ என்கிறார்கள். ராஜஸ்தானின் உதய்பூரில் இப்படிப்பட்ட, பல்லாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு படிக்கிணறு இருக்கிறது – சுல்தான் கீ பாவ்டீ. இதனை ராவ் சுல்தான் சிங் தான் உருவாக்கினார் என்றாலும், புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் மெல்லமெல்ல இந்த இடம் வறண்டு போகத் தொடங்கி, இங்கே குப்பைக்கூளங்கள் நிறைந்த ஒன்றாக மாறிப் போனது. ஒரு நாள், சுற்றிப் பார்க்க வந்த சில இளைஞர்கள், இதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டார்கள். இந்த சுல்தான் கீ பாவ்டீ படிக்கிணற்றின் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்போதே இந்த இளைஞர்கள் உறுதி பூண்டார்கள். இவர்கள் தங்களுடைய இந்த உறுதிப்பாட்டிற்கு வைத்த பெயர் சுல்தானிலிருந்து சுர் தான். இது என்னது, சுர் தான் என்று நீங்கள் யோசிக்கலாம்!! உள்ளபடியே, தங்களுடைய முயற்சிகளால் இந்த இளைஞர்கள், இந்தப் படிக்கிணற்றுக்கு உயிரூட்டியது மட்டுமல்ல, இதனை இசையின் ராகம் தானத்தோடும் இணைத்து விட்டார்கள். சுல்தான் கீ பாவ்டீ படிக்கிணற்றின் தூய்மைக்குப் பிறகு, இதை அழகுபடுத்திய பிறகு, அங்கே இசை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இது எந்த அளவுக்கு விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது என்றால், அயல்நாடுகளிலிருந்தும் பலர் இதைப் பார்ப்பதற்காகவே வரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த வெற்றிகரமான முயற்சியில் மிக விசேஷமான விஷயம் என்னவென்றால், இந்த இயக்கத்தைத் தொடங்கிய இளைஞர்கள் பட்டயக் கணக்காயர்கள் தாம். யதேச்சையாக, இப்போதிலிருந்து சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் முதல் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினம் வருகிறது. நான் தேசத்தின் அனைத்துப் பட்டயக் கணக்காளர்களுக்கும் முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நமது நீர் நிலைகளை, இசை, இன்னும் பிற சமூக நிகழ்ச்சிகளோடு இணைத்து, இவை பற்றி இப்படிப்பட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தலாமே. நீர் பராமரிப்பு என்பது உண்மையில் உயிர்ப் பாதுகாப்பு. நீங்களே கவனித்திருக்கலாம், இப்போதெல்லாம் நிறைய நதி உற்சவங்கள் நடைபெறத் தொடங்கி விட்டன. உங்கள் நகரங்களிலும் கூட இதைப் போன்ற நீர்நிலை இருந்தால், அங்கே ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, நமது உபநிஷதங்களில் ஒரு உயிர் மந்திரம் உண்டு – சரைவேதி சரைவேதி சரைவேதி – நீங்கள் கண்டிப்பாக இந்த மந்திரத்தைக் கேட்டிருக்கலாம். இதன் பொருள் – சென்று கொண்டே இரு, சென்று கொண்டே இரு என்பது தான். இந்த மந்திரம் நமது தேசத்திலே ஏன் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்றால், தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருத்தல், இயங்கிக் கொண்டு இருத்தல் என்பது தான் நமது இயல்புநிலை. ஒரு நாடு என்ற முறையிலே, நாம், ஆயிரக்கணக்கான வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டு தான் இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலே, நாம் எப்போதும், புதிய எண்ணங்கள், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் சென்றிருக்கிறோம். இதன் பின்னே, நமது கலாச்சார வேகத் தன்மை, பயணங்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆகையினால் தான் நமது ரிஷிகளும் முனிவர்களும், தீர்த்தயாத்திரை போன்ற தார்மீகக் கடமைகளை நமக்கு அளித்திருக்கிறார்கள். பல்வேறு தீர்த்த யாத்திரைகளை நாம் அனைவரும் மேற்கொள்கிறோம். இந்த முறை சார்தாம் யாத்திரையில் எந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். நமது தேசத்திலே பல்வேறு சமயங்களில் பல்வேறு தேவ யாத்திரைகள் நடைபெறுகின்றன. தேவ யாத்திரைகள், அதாவது, இதில் பக்தர்கள் மட்டுமல்ல, நமது பகவானே கூட யாத்திரை மேற்கொள்கிறார். சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று பகவான் ஜகன்னாதரின் புகழ்மிக்க யாத்திரை தொடங்க இருக்கிறது. ஒடிஷாவின், புரியின் யாத்திரை பற்றி நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும். பகவான் ஜகன்னாதரின் யாத்திரை ஆஷாட மாத துவிதியையில் தொடங்குகிறது. ஆஷாடஸ்ய துவிதீயதிவசே… ரதயாத்திரை, என்று நமது புனித நூல்களில், சம்ஸ்கிருத சுலோகங்கள் வாயிலாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத துவிதியையில் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நான் குஜராத்தில் இருந்தேன், அப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரையில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து வந்தது. ஆஷாட துவிதீயை, இதை ஆஷாடீ பீஜம் என்றும் அழைப்பார்கள்; இந்த தினத்திலிருந்து தான் கட்ச் பகுதியின் புத்தாண்டும் தொடங்குகிறது. கட்ச் பகுதியைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மேலும் ஒரு காரணத்தின் பொருட்டு விசேஷமானது – ஆஷாட துவிதீயாவிலிருந்து ஒரு நாள் முன்பாக, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் திதியன்று நாங்கள் குஜராத்தில் ஒரு சம்ஸ்கிருதக் கொண்டாட்டத்தைத் தொடக்கினோம், இதில் சம்ஸ்கிருத மொழியில் பாடல்கள்-இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ஆஷாடஸ்ய பிரதம திவஸே, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் தினம் என்பதே இதன் பொருள். கொண்டாட்டத்திற்கு இந்த சிறப்பான பெயரைக் கொடுப்பதன் பின்னணியில் ஒரு காரணம் உண்டு. உண்மையில், சம்ஸ்கிருதத்தின் மாபெரும் கவியான காளிதாஸன், ஆஷாட மாதத்திலிருந்து மழையின் வருகையைக் கொண்டு மேகதூதம் காவியத்தை எழுதினான். மேகதூதத்திலே ஒரு ஸ்லோகம் உண்டு – आषाढस्य प्रथम दिवसे मेघम् आश्लिष्ट सानुम् ஆஷாடஸ்ய பிரதம திவஸே மேகம் ஆஸ்லிஷ்ட சானும், அதாவது, ஆஷாட மாதத்தின் முதல் தினத்தன்று மலைச் சிகரங்களைத் தழுவியிருக்கும் மேகங்கள் என்ற இந்த ஸ்லோகம் தான், இந்த நிகழ்ச்சிக்கான ஆதாரமாக அமைந்தது.
நண்பர்களே, அஹ்மதாபாதாகட்டும், புரியாகட்டும், பகவான் ஜகன்னாதர் தனது இந்த யாத்திரை வாயிலாக நமக்குப் பல ஆழமான மனிதநேயம் மிக்க செய்திகளை அளிக்கிறார். பகவான் ஜகன்னாதர் உலகிற்கே ஸ்வாமியாக இருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை; ஆனால் அவரது இந்த யாத்திரையில் ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான பங்களிப்பு இருக்கிறது. பகவானும் கூட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு, நபருடன் இணைந்து பயணிக்கிறார். அந்த வகையில் நமது யாத்திரைகள் அனைத்திலும், ஏழை-செல்வந்தர், உயர்தோர்-தாழ்ந்தோர் என எந்த வேறுபாடும் காணக் கிடைக்காது. அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, யாத்திரை தான் தலையாயதாக விளங்குகிறது. உதாரணமாக, மஹாராஷ்டிரத்தின் பண்டர்பூரின் யாத்திரை பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருக்கலாம். பண்டர்பூரின் யாத்திரையில், யாரும் பெரியவரும் இல்லை, யாரும் சிறியவரும் இல்லை. அனைவருமே வார்கரிகள் தாம், பகவான் விட்டலனின் சேவகர்கள் தாம். இன்னும் 4 நாட்கள் கழித்து ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது. நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கெடுக்க ஜம்மு கஷ்மீரம் வருகிறார்கள். ஜம்மு கஷ்மீரத்தின் வட்டார மக்களும், அதே அளவு சிரத்தையோடு இந்த யாத்திரையின் பொறுப்புக்களை மேற்கொண்டு, தீர்த்த யத்திரிகர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றார்கள்.
நண்பர்களே, தெற்கிலும் இப்படிப்பட்ட மகத்துவமான சபரிமலை யாத்திரை இருக்கிறது. சபரிமலையின் மீது குடிகொண்டிருக்கும் பகவான் ஐயப்பனை தரிசிக்க மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை, பயணிக்கும் பாதை முழுமையாகக் காடுகள் நிரம்பியதாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இன்றும் கூட மக்கள் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்ளும் போது, சமயச் சடங்குகள் தொடங்கி, தங்கும் வசதிகள், ஏழைகளுக்கு இதனால் ஏற்படும் வாய்ப்புகள், அதாவது இந்த யாத்திரைகள் இயல்பிலேயே ஏழைகளுக்குச் சேவை செய்ய ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது, இது அந்த ஏழைகளுக்கு மிகுந்த ஆதாயமாக இருக்கிறது என்பது தான். ஆகையால், தேசமும் கூட இப்போதெல்லாம் ஆன்மீக யாத்திரைகளின் பொருட்டு, பக்தர்களின் வசதிகளை அதிகரிக்க பல முயல்வுகளை மேற்கொள்கின்றது. நீங்களும் ஒரு யாத்திரையை மேற்கொண்டால், உங்களுக்கு ஆன்மீகத்தோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதத்தையும் தரிசிக்க முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, எப்போதும் போலவே இந்த முறையும் மனதின் குரல் வாயிலாக, உங்களனைவரோடும் இணையக்கூடிய இந்த அனுபவம் மிகவும் சுகமளிப்பதாக இருந்தது. நாம் நாட்டுமக்களின் வெற்றிகள், சாதனைகள் பற்றி ஆலோசித்தோம். இவற்றுக்கு இடையே, நாம் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திடம் தடுப்பூசி என்ற வலுவான பாதுகாப்புக் கவசம் இருக்கிறது. நாம் 200 கோடி தடுப்பூசித் தவணைகள் என்ற இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறோம். தேசத்தில் விரைவாக முன்னெச்சரிக்கைத் தவணையும் போடப்பட்டு வருகிறது. இரண்டாவது தவணைக்குப் பிறகு முன்னெச்சரிக்கைத் தவணை போட்டுக் கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டது என்றால், நீங்கள் அந்த 3ஆவது தவணையை உடனடியாகப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாருக்கு, குறிப்பாக மூத்தோருக்கும் முன்னெச்சரிக்கைத் தவணையைப் போடுங்கள். நாம் கைகளைச் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அவசியமான முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலத்தில் நம்மருகிலே இருக்கும் மாசினால் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களிடமிருந்தும் விழிப்போடு இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், மேலும் சக்தியோடு முன்னேறிச் செல்லுங்கள். அடுத்த மாதம், நாம் மீண்டும் ஒருமுறை சந்திக்கலாம், அதுவரை பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மீண்டுமொரு முறை மனதின் குரல் வாயிலாக எனது கோடானுகோடிச் சொந்தங்களான உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன்பாகத் தான் தேசம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது, இது நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. பாரதத்தின் திறமைகள் மீதான ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் டீம் இண்டியாவைச் சேர்ந்த மட்டையாட்டக்காரர் யாராவது சதம் அடித்தார்கள் என்றால் சந்தோஷப்படுவீர்கள் தானே! ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்திருக்கிறது, அதிலும் அது மிகவும் விசேஷமானது. இந்த மாதம் 5ஆம் தேதியன்று தேசத்தின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை எட்டி விட்டது. ஒரு யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 330 பில்லியன் டாலர்கள் ஆகும், அதாவது 25 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமானது. இந்த விஷயம் ஒவ்வொரு இந்தியருக்கும் கண்டிப்பாகப் பெருமிதம் அளிக்கவல்லது. நம்மிடத்திலே மொத்தம் 44 யூனிகார்ன்கள் கடந்த ஆண்டு உருவானது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இது மட்டுமல்ல, இந்த ஆண்டில் 3-4 மாதங்களிலே, மேலும் 14 புதிய யூனிகார்ன்கள் உருவாயின. இதன் பொருள் என்னவென்றால் உலகளாவிய பெருந்தொற்று என்ற இந்த காலகட்டத்திலும் கூட, நமது ஸ்டார்ட் அப்புகள், செல்வத்தையும், மதிப்பையும் உருவாக்கிக் கொண்டே வந்திருக்கின்றன. இந்திய யூனிகார்ன்களின் சராசரி வருடாந்தர வீதம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை விடவும் அதிகமானது. இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு இருக்கும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நமது யூனிகார்ன்கள் பல்வகைப்படுத்தி வருகின்றன. இவை e-commerce மின்னணு வர்த்தகம், Fin-Tech நிதிசார் தொழில்நுட்பம், Ed-Tech கல்விசார் தொழில்நுட்பம், Bio-Tech உயிரி தொழில்நுட்பம் போன்ற பல துறைகளிலும் பணியாற்றி வருகின்றன. மேலும் ஒரு விஷயம், இதை நான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன். அது என்னவென்றால், ஸ்டார்ட் அப்புகள் உலகம், புதிய இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது.
இன்று பாரதத்தின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு பெருநகரங்களோடு மட்டுமே நின்று விடவில்லை. சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகளிலிருந்தும் கூட தொழில்முனைவோர் முன்வருகிறார்கள். பாரதத்திலே புதுமையான எண்ணம் இருக்கிறது, அதனால் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.
நண்பர்களே, தேசத்தின் இந்த வெற்றிக்குப் பின்னாலே, தேசத்தின் இளையோர் சக்தி, தேசத்தின் திறன்கள், அரசு ஆகிய அனைத்தும் இணைந்து முயற்சிக்கிறார்கள், அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது ஆனால், இதிலே மேலும் ஒரு மகத்துவம் வாய்ந்த விஷயமும் இருக்கிறது. அது என்னவென்றால் ஸ்டார்ட் அப் உலகிலே சரியான மெண்டரிங் என்று சொல்லப்படும் வழிகாட்டி உருவாக்குதல் மிக முக்கியமானது. ஒரு நல்ல வழிகாட்டியானவர், எந்த ஒரு ஸ்டார்ட் அப்பையும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வார். நிறுவனர்கள் சரியான முடிவு எடுக்க உதவி செய்து, அனைத்து விதங்களிலும் இவர்கள் வழிகாட்டுகிறார்கள். ஸ்டார்ட் அப்புகளை முன்னே கொண்டு செல்லும் பொருட்டு, தங்களையே அர்ப்பணித்திருக்கும் பல வழிகாட்டிகள் பாரதத்திலே இருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் தரும் விஷயம்.
ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் தான் என்றாலும், தற்போது, மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஸ்ரீதர் அவர்கள் தனது பணியை ஊரகப் பகுதியிலே தொடங்கியிருக்கிறார். அவர் கிராமங்களிலேயே வசித்திருந்து, ஊரகப் பகுதி இளைஞர்களை, இந்தப் பகுதியில் பங்களிப்பு அளிக்கும் வகையில் உற்சாகப்படுத்தி வருகிறார். நமது நாட்டிலே மதன் படாகீ போன்றவர்களும் கூட, ஊரகப்பகுதி தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு 2014இலே One Bridge என்ற பெயருடைய தளத்தை உருவாக்கினார். இன்று இந்த அமைப்பு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் 75ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய 9000த்திற்கும் மேற்பட்ட ஊரகப்பகுதி தொழில்முனைவோர், கிராமப்புற நுகர்வோருக்குத் தங்களுடைய சேவைகளை அளித்து வருகிறார்கள். மீரா ஷெனாய் அவர்களும் கூட இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான். அவர் ஊரக, பழங்குடியின இளைஞர்கள், மாற்றுத் திறனாளி இளைஞர்கள் ஆகியோருக்காக, சந்தையோடு தொடர்புடைய திறன்களுக்கான பயிற்சித் துறையில் குறிப்பிடத்தக்க செயல்களை ஆற்றி வருகிறார். நான் இங்கே சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால், இன்று நம்மிடையே வழிகாட்டிகளுக்குக் குறைவே கிடையாது. தேசம் முழுக்க முழு அளவிலான ஒரு ஆதரவு அமைப்பு தயாராகி வருகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். இனிவருங்காலத்திலே, பாரதத்தின் ஸ்டார்ட் அப் உலக முன்னேற்றத்தின் புதிய முன்னோக்கிய பாய்ச்சலை நாம் காண்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக இதே போன்ற ஒரு சுவாரசியமான, கவர்ச்சிகரமான விஷயத்தைப் பார்க்க நேர்ந்தது, இதிலே நாட்டுமக்களின் படைப்புத் திறன், கலைத்திறன் ஆகியவை பளிச்சிட்டது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுயஉதவிக் குழுவானது எனக்கு ஒரு பரிசினை அனுப்பி இருக்கிறது. இந்தப் பரிசினிலே பாரத நாட்டின் மணம் வீசுகிறது, தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை, இதற்கு புவிசார் குறியீடு கூட இதற்குக் கிடைத்திருக்கிறது. வட்டார கலாச்சார மணம் வீசும் பரிசினை எனக்கு அனுப்பியமைக்கு, நான் தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது, பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் புதிய காதை. தஞ்சாவூர்ப் பெண்களுடைய சுயஉதவிக் குழுக்கள் ஒரு அங்காடியையும், ஒரு சிறுகடையையும் திறந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறுகடை, அங்காடி வாயிலாக, தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் இந்தப் பெண்களால் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிகிறது. இந்த முயல்விற்கு, தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முயற்சியோடு 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன என்பது தான். இந்த மகளிர் சுயவுதவிக் குழுக்கள், பெண்களின் சுயசேவை சமூகமே நடத்தும் இந்த அங்காடியை, தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலே திறந்திருக்கின்றார்கள். இதன் பராமரிப்புப் பொறுப்பு முழுவதையுமே கூட இந்தப் பெண்களே ஏற்றிருக்கின்றார்கள். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிர, பிற பொம்மைகள், தரை விரிப்புகள், செயற்கை நகைகள் ஆகியவற்றையும் கூட தயாரிக்கிறார்கள். ஒரு கடையின் மூலமாக புவிசார் குறியீட்டோடு, கைவினைப் பொருட்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணக் கிடைக்கிறது. இந்த முயல்வு காரணமாக, கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. மனதின் குரல் நேயர்களே, உங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் யாராவது பணியாற்றி வருகிறார்களா என்று நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் விற்பனைப் பொருட்கள் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள், இப்படிப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், நீங்கள் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிப்பீர்கள்.
நண்பர்களே, நமது தேசத்திலே பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள், வழக்கு மொழிகள் என, இது ஒரு நிறைவான பொக்கிஷம். பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆடைகள், உணவுமுறைகள், கலாச்சாரம்….. இவையே நமது அடையாளம். இந்தப் பன்முகத்தன்மை, இந்த வேற்றுமை, ஒரு தேசம் என்ற வகையிலே, நம்மை மேலும் ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதோடு, இணைத்தும் வைக்கின்றது. இதோடு தொடர்புடைய மிகவும் கருத்தூக்கம் அளிக்கும் எடுத்துக்காட்டு, ஒரு சிறுமி கல்பனாவினுடையது, இதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவருடைய பெயர் கல்பனா ஆனால், இவருடைய முயற்சியில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மெய்யான உணர்வு நிரம்பி இருக்கிறது. உள்ளபடியே, கல்பனா இப்போது தான் கர்நாடகத்திலே 10ஆம் வகுப்பிலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்றாலும், இவருடைய வெற்றியின் சிறப்பான விஷயம் என்னவென்றால், கல்பனாவுக்கு சில நாட்கள் முன்பு வரை கன்னட மொழியே சரியாகத் தெரியாது. இவர், மூன்றே மாதங்களில் கன்னட மொழியைக் கற்றுக் கொண்டதோடு இல்லாமல், இவர் கன்னட மொழிக்கான தேர்விலே 92 மதிப்பெண்களையும் பெற்றுக் காட்டினார். இது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம், ஆனால் இது உண்மை. இவரைப் பற்றிய மேலும் பல விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்லாமல், உத்வேகத்தையும் அளிக்க வல்லவை. கல்பனா, அடிப்படையிலே உத்தராகண்டின் ஜோஷீமட்டிலே வசிப்பவர். இவர் முன்பு காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தார், பிறகு இவர் 3ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, இவருடைய கண்களிலே பார்வை இழப்பு ஏற்பட்டது. ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள் இல்லையா?! பின்னர் கல்பனா மைசூரூவில் வசிக்கும் பேராசிரியர் தாராமூர்த்தியின் தொடர்பிலே வந்தார்; இந்தப் பேராசிரியர், கல்பனாவுக்கு ஊக்கம் மட்டும் அளிக்கவில்லை, இவருக்கு உதவிகரமாகவும் இருந்தார். இன்று இவர் தனது உழைப்பின் காரணமாக நம்மனைவருக்கும் எடுத்துக்காட்டாய் மிளிர்கிறார். கல்பனாவின் அனைத்து முயற்சிகளுக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போலவே நமது தேசத்தில் பலரும் கூட, தேசத்தின் மொழிப் பன்முகத்தன்மையை பலப்படுத்தும் பணியைப் புரிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நண்பர் தான் மேற்கு வங்கத்தின் புரூலியாவைச் சேர்ந்த ஸ்ரீபதி டூடூ அவர்கள். டூடூ அவர்கள், புருலியாவின் சித்தோ கானோ பிர்ஸா பல்கலைக்கழகத்தில் சந்தாலி மொழியின் பேராசிரியர். இவர் சந்தாலி சமூகத்திற்காக, அவர்களுடைய ஓல் சிகீ எழுத்து வடிவத்தில், தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியை உருவாக்கி இருக்கிறார். நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம், நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய அதிகாரங்கள்-கடமைகள் குறித்த அறிவை அளிக்கிறது என்று ஸ்ரீபதி டூடூ அவர்கள் கூறுகிறார். ஆகையால் அனைத்துக் குடிமக்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் சந்தாலி சமூகத்திற்காக, அவர்களுடைய எழுத்து வடிவத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து, இதை ஒரு அன்பளிப்பாக அவர்களுக்கு அளித்திருக்கிறார். ஸ்ரீபதி அவர்களின் எண்ணத்திற்கும் அவரது முயற்சிகளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் உணர்விற்கான உயிர்ப்புநிறைந்த ஒரு எடுத்துக்காட்டு. இந்த உணர்வினை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இப்படிப்பட்ட பல முயற்சிகள் பற்றி ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் இணையத்தளத்திலும் கூட பல தகவல்கள் கிடைக்கும். இங்கே உங்களுக்கு உணவுமுறை, கலை, கலாச்சாரம், சுற்றுலா உட்பட இப்படிப்பட்ட பல விஷயங்கள் தொடர்பான செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இயலும். நீங்கள் இந்தச் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம், இதனால் உங்களுக்கு, நமது தேசம் பற்றிய தகவல்களும் கிடைக்கும், மேலும் நீங்களும் தேசத்தின் பன்முகத்தன்மையை உணர ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த சமயத்தில், நமது தேசத்தில் உத்தராகண்டின் சார்தாம் புனித யாத்திரை நடைபெற்று வருகிறது. சார்தாம், அதுவும் குறிப்பாக கேதார்நாத்திலே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் அங்கே குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். மக்கள் தங்களுடைய சார்தாம் யாத்திரை பற்றிய சுகமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் சில பயணிகள் ஏற்படுத்தும் மாசு காரணமாக, பக்தர்களுக்கு வருத்தமும் ஏற்படுகிறது என்பதையும் என்னால் காண முடிகிறது. சமூக ஊடகத்திலும் கூட பலர் தங்களுடைய கருத்தைக் கூறியிருக்கிறார்கள். நாம் புனித யாத்திரையை மேற்கொள்ளும் போது, அங்கே குப்பைக்கூளமாக இருந்தால், அது சரியல்ல. ஆனால் நண்பர்களே, இந்தப் புகார்களுக்கு இடையே பல நல்ல காட்சிகளையும் காண முடிந்தது. எங்கே சிரத்தை உள்ளதோ, அங்கே படைப்புத் திறனும், ஆக்கப்பூர்வமான நிலையும் இருக்கும். பல பக்தர்களும், பாபா கேதாரை தரிசித்துப் பூஜிப்பதைத் தவிர, தூய்மை வழிபாட்டையும் மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கருகே தூய்மைப் பணியை மேற்கொள்கிறார்கள் என்றால், சிலரோ பயணப்பாதையில் இருக்கும் குப்பைக்கூளங்களைத் துப்புரவு செய்கிறார்கள். தூய்மை பாரத இயக்கத்தின் குழுவோடு இணைந்து பல அமைப்புக்களும், சுயசேவை அமைப்புக்களும் கூட பணியாற்றி வருகின்றன. நண்பர்களே, எப்படி நம் நாட்டிலே புனித யாத்திரைக்கு என மகத்துவம் இருக்கிறதோ, அதே போல, புனிதத்தலச் சேவைக்கும் மகத்துவம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது, நான் மேலும் என்ன கூறுவேன் என்றால், தல சேவையில்லாமல், தலயாத்திரை என்பதே கூட முழுமை அடையாது. தேவபூமியான உத்தராகண்டில் எத்தனையோ நபர்கள் தூய்மை மற்றும் சேவை என்ற வழிபாட்டைப் புரிந்து வருகிறார்கள். ருத்ர பிரயாகையில் வசிக்கும் மனோஜ் பேன்ஜ்வால் அவர்களிடமிருந்து கூட உங்களுக்கு நிறைய உத்வேகம் பிறக்கும். மனோஜ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சவாலை எதிர்கொண்டிருக்கிறார். இவர் தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதோடு கூடவே, புனிதத் தலங்களை, நெகிழிப் பொருட்களிலிருந்து விடுவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அதே போல குப்தகாசியில் வசிக்கும் சுரேந்திர பக்வாடி அவர்களும் தூய்மையைத் தனது வாழ்க்கை மந்திரமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் குப்தகாசியில், செம்மையான வகையிலே தூய்மைத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த இயக்கத்தின் பெயரைக் கூட மன் கீ பாத் என்றே வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. இவரைப் போலவே தேவர் கிராமத்திலே சம்பாதேவி அவர்கள் மூன்று ஆண்டுகளாகத் தன் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, கழிவுப் பொருள் மேலாண்மையைக் கற்பித்து வருகிறார். சம்பா அவர்கள், பலநூறு மரங்களையும் நட்டிருக்கிறார், இவர் தனது உழைப்பின் காரணமாக ஒரு பசுமையான வனத்தையே உருவாக்கியிருக்கிறார். நண்பர்களே, இப்படிப்பட்ட மனிதர்களின் முயற்சிகள் காரணமாகவே தேவபூமி மற்றும் புனிதத்தலங்களில் தெய்வீக உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைப் பெறத் தானே நாம் அங்கே செல்கின்றோம்! அப்படியென்றால், இந்த தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும் தொடர்ந்து காத்தளிப்பது என்பது நம்மனைவரின் கடமையாகும். இல்லையா? இப்போது நமது தேசத்திலே சார்தாம் யாத்திரையோடு கூடவே, அமர்நாத் யாத்திரை, பண்டர்புர் யாத்திரை, ஜகன்னாதர் யாத்திரை போன்ற பல யாத்திரைகள் வரவிருக்கின்றன. மழைக்கால மாதங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கும்.
நண்பர்களே, நாம் எங்கே சென்றாலும், இந்தப் புனிதத் தலங்களின் மாட்சிமையை நாம் பாதுகாக்க வேண்டும். தூய்மை, சுத்தம், ஒரு புனிதமான சூழலை பராமரிப்பதை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது, இதைக் கட்டிக் காக்க வேண்டும், தூய்மை பற்றிய நமது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று உலக சுற்றுச் சூழல் நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். சுற்றுச்சூழல் தொடர்பாக நாம் நமது அக்கம்பக்கத்திலே ஆக்கப்பூர்வமான இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும், இது தொடர்ந்து நாம் செய்யக்கூடிய பணி. நீங்கள், இந்த முறை அனைவரோடும் இணைந்து தூய்மைக்காகவும், மரம்நடுதலுக்காகவும், சில முயல்வுகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். நீங்களே கூட மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நடவு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் 8ஆவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்த முறை யோகக்கலை தினத்தின் மையக்கரு, மனித சமூகத்துக்காக யோகக்கலை என்பதே. யோகக்கலை தினத்தை மிகுந்த உற்சாகத்தோடு நீங்கள் கொண்டாடுங்கள் என்று உங்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன். ஆம், கொரோனாவோடு இணைந்த முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்; உலகம் முழுவதிலும் கொரோனா தொடர்பான நிலை, முன்பிருந்ததை விட மேம்பட்டிருக்கிறது, அதிக அளவிலான தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக இப்போது மக்கள் முன்பை விட அதிகமாக வெளியே வரத் தொடங்கி இருக்கிறார்கள். ஆகையால் உலகம் முழுவதிலும் யோகக்கலை தினம் தொடர்பாக பல தயாரிப்பு முஸ்தீபுகளை நம்மால் காண முடிகிறது. நமது வாழ்க்கையிலே, ஆரோக்கியம் என்பது எத்தனை மகத்துவம் வாய்ந்தது, இதிலே யோகக்கலை நம் உடல் நலத்தைப் பாதுகாக்க எத்தனை வலிமையான சாதனம் என்பதை, கொரோனா பெருந்தொற்று நம்மனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது. யோகக்கலையானது உடல்-ஆன்ம-அறிவுசார் நலன்களுக்கு எத்தனை ஊக்கமளிக்கிறது என்பதை மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள். உலகின் தலைசிறந்த வணிகர்கள் முதல் திரைப்பட-விளையாட்டுத் துறை ஆளுமைகள் வரை, மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைவருமே யோகக்கலையைத் தங்களுடைய இணைபிரியா அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். உலகெங்கிலும், யோகக்கலையின் பெருகி வரும் புகழைப் பார்க்கும் போது, உங்கள் அனைவருக்கும் கூட மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நண்பர்களே, இந்த முறை நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, யோகக்கலை தினம் தொடர்பாக நடைபெற உள்ள சில சிறப்பான நூதன எடுத்துக்காட்டுகள் பற்றி எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இவற்றில் ஒன்று தான் guardian ring - ஒரு மிகப்பெரிய தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சி. இதிலே சூரியனின் இயக்கம் கொண்டாடப் படுகிறது, அதாவது சூரியன் எங்கெல்லாம் பயணிக்கிறதோ, உலகின் பல்வேறு பாகங்களில் நாம் யோகக்கலை வாயிலாக சூரியனுக்கு வரவேற்பளிப்போம். பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள், அங்கே உள்ளூர் நேரத்திற்கேற்ப, சூரியோதய வேளையில் யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ச்சிகள் தொடங்கும். கிழக்கு முதல் மேற்கு வரை பயணம் தொடர்ந்தபடி இருக்கும், பிறகு இதே போல சென்று கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சிகளின் நேரலையுமே கூட, இதே போல ஒன்றன்பின் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒரு வகையில், இது தொடர் யோகக்கலை நேரலை நிகழ்வாக இருக்கும். கண்டிப்பாக நீங்களும் இதைப் பாருங்கள்.
நண்பர்களே, நமது நாட்டிலே இந்த முறை அமுதப் பெருவிழாவைக் கருத்திலே கொண்டு, தேசத்தின் 75 முக்கியமான இடங்களிலும் கூட சர்வதேச யோகக்கலை தின ஏற்பாடுகள் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்தில் பல அமைப்புகளும் நாட்டுமக்களும், அவரவர் நிலைகளுக்கேற்ப, அவரவர் பகுதிகளின் சிறப்பான இடங்களில் ஏதோ ஒரு வகையில் புதுமையாகச் செய்யும் தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த முறை யோகக்கலை தினத்தைக் கொண்டாட, நீங்கள், உங்களுடைய நகரத்தில், பகுதியில் அல்லது கிராமத்தில் ஏதோ ஒரு சிறப்பான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்த இடம் ஒரு பழமையான ஆலயமாகவோ, சுற்றுலா மையமாகவோ இருக்கலாம், அல்லது ஒரு பிரசித்தமான நதி, நீர்வீழ்ச்சி அல்லது குளக்கரையாகவும் இருக்கலாம். இதனால் யோகக்கலையோடு கூடவே உங்கள் பகுதியின் அடையாளமும் மிகுந்து, சுற்றுலாவுக்கும் ஊக்கம் கிடைக்கும். இதுவே எனது வேண்டுகோள். இந்த வேளையில், யோகக்கலை தினம் தொடர்பாக 100 நாள் கவுண்ட் டவுன் ஏற்கனவே தொடங்கி இருக்கிறது, அல்லது தனிப்பட்ட மற்றும் சமூக முயல்வுகளோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள், 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. அதாவது தில்லியில் 100ஆவது நாளன்றும், 75ஆவது நாளன்றும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதே போல அஸாமின் சிவசாகரில் 50ஆவது, ஹைதராபாதிலே 25ஆவது கவுண்ட் டவுன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. நீங்களும் உங்கள் இடத்திலே, இப்போதிலிருந்தே யோகக்கலை தினத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்கி விடுங்கள். அதிக அளவிலான மக்களைச் சந்தியுங்கள், அனைவரையும் யோகக்கலை தினத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள், உத்வேகமளியுங்கள். நீங்கள் அனைவரும் யோகக்கலை தினத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு இணைந்து கொள்வீர்கள் என்பதும், கூடவே யோகக்கலையை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தேன். என்னுடைய பல நிகழ்ச்சிகளுக்கு இடையே, சில அற்புதமான மனிதர்களைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்களைப் பற்றி மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், பாரத நாட்டிடம் இவர்களுக்கு அலாதியான ஒரு ஈடுபாடும், பாசமும் இருந்தன. இவர்களில் ஒருவர் தான் ஹிரோஷி கோயிகே அவர்கள், இவர் மிகப் பிரபலமான ஒரு கலை இயக்குநர். இவர் தான் மஹாபாரத நிகழ்ச்சியை இயக்கினார் என்பதை அறிந்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் தொடக்கம் கம்போடியா நாட்டில் நடந்தது; கடந்த 9 ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹிரோஷி கோயிகே அவர்கள் ஒவ்வொரு பணியையும் மிக வித்தியாசமான முறையிலே செய்கிறார். இவர், ஒவ்வொரு ஆண்டும், ஆசியாவின் ஏதோ ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார், அங்கே இருக்கும் உள்ளூர் கலைஞர், இசைக்கலைஞர்களோடு இணைந்து மஹாபாரதத்தின் சில கூறுகளைத் தயாரிக்கிறார். இந்தத் திட்டத்தின் வாயிலாக இவர் இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா உட்பட, 9 நாடுகளில் தயாரிப்பு செய்திருக்கிறார், மேடை நிகழ்ச்சிகளையும் அளித்திருக்கிறார். பல்வேறுபட்ட பாரம்பரிய ஆசிய கலைவடிவங்களின் கலைஞர்களை ஹிரோஷி கோயிகே அவர்கள் ஒன்றாக அழைத்து வருகிறார். இதன் காரணமாக அவருடைய பணியில் பல்வேறு வண்ணங்கள் காணக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், ஜாவா நடனம், பாலீ நடனம், தாய்நாட்டு நடனம் ஆகியவற்றைக் கொண்டு மேலும் கவரக்கூடியதாக ஆக்குகிறார். சிறப்பான விஷயம் என்னவென்றால், இதில் இருக்கும் ஒவ்வொரு கலைஞரும் தனது தாய்மொழியிலேயே பேசுகிறார், நடன அமைப்பும் மிகவும் அழகாக இந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது, இசையின் பன்முகத்தன்மை இந்தத் தயாரிப்பை மேலும் உயிர்ப்புடையதாக ஆக்குகிறது. நமது சமூகத்தில் பன்முகத்தன்மையும், கூட்டாக வாழ்தலும் மிகவும் மகத்துவமானவை என்பதையும், அமைதியான வாழ்க்கைமுறை என்பது எப்படிப்பட்டது என்பதையும் முன்வைப்பதே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தவிர, நான் ஜப்பானில் வேறு இருவரைச் சந்திக்க நேர்ந்தது, அவர்கள் ஆத்சுஷி மாத்சுவோ அவர்கள், பிறகு கேஞ்ஜி யோஷீ அவர்கள். இவர்கள் இருவரும் TEM தயாரிப்பு நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள். இந்த நிறுவனமானது 1983ஆம் ஆண்டு வெளிவந்த ராமாயணம் தொடர்பான ஜப்பானிய அனிமேஷன் – இயங்குபட ரகத் திரைப்படத்தோடு தொடர்புடையது. இந்தத் திட்டம் ஜப்பானின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர் யுகோ சாகோ அவர்களோடு தொடர்புடையதாக இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் முன்பாக, 1983இலே, அவருக்கு இராமாயணம் பற்றி முதன்முறையாகத் தெரிய வந்தது. இராமாயணம் அவருடைய இதயத்தைத் தொட்டது, இதன் பிறகு அவர் இது பற்றி ஆழமான ஆய்வினைத் தொடங்கினார். இது மட்டுமல்ல, அவர் ஜப்பானிய மொழியில் இராமாயணத்தின் 10 விதமான பதிப்புகளைத் தேடிப் படித்ததோடு நிற்கவில்லை, இதை இயங்குபடமாக வடிவமைக்க விரும்பினார். இதிலே இந்திய இயங்குபட வல்லுநர்களின் கணிசமான உதவி இவருக்குக் கிடைத்தது. படத்தில் காட்டப்படும் இந்தியப் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் பற்றியெல்லாம் விளக்குவதிலும், தெரியச் செய்வதிலும் அவர்கள் துணையாக இருந்தார்கள். இந்தியாவிலே மக்கள் எப்படி வேட்டியைக் கட்டுவார்கள், புடவையை எப்படி உடுத்துவார்கள், முடியை எப்படித் திருத்துவார்கள் என்பதெல்லாம் புரிய வைக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துகிறார்கள், ஆசியளிப்பது என்ற பாரம்பரியம் இவை பற்றியெல்லாம் விளக்கப்பட்டது. காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெரியோரை வணங்குவது, அவர்களின் ஆசியைப் பெறுவது என இவை அனைத்தும் இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இயங்குபடம் வாயிலாக 4K யிலே, மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை விரைவாகவே நிறைவேற்றும் சாத்தியக்கூறும் இருக்கிறது. நம்மிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலே இருக்கும் ஜப்பானியர்களுக்கு நமது மொழியும் புரியாது, நமது பாரம்பரியங்களைப் பற்றியும் அதிகம் தெரியாது. ஆனால் அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது இருக்கும் அர்ப்பணிப்பு, சிரத்தை, மரியாதை ஆகியன மிகவும் பாராட்டுதலுக்குரியவை. இதெல்லாம் எந்த இந்தியருக்குத் தான் பெருமிதத்தை அளிக்காது!
என் மனம் நிறை நாட்டுமக்களே, தான் என்ற நிலையிலிருந்து உயர்ந்து சமூகத்திற்கான சேவை எனும் மந்திரம், சமுதாயத்திற்காக நான் எனும் மந்திரம் ஆகியவை நமது நற்பண்புகளின் ஓர் அங்கம். நமது தேசத்திலே எண்ணிலடங்காதோர் இந்த மந்திரத்தைத் தங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரத்திலே இருக்கும் மர்க்காபுரத்தில் வசிக்கும் ஒரு நண்பரான ராம்பூபால் ரெட்டி அவர்கள் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. ராம்பூபால் ரெட்டி அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு தனக்குக் கிடைத்த அனைத்துப் பணத்தையும், பெண் குழந்தைகள் கல்விக்காக தானமளித்து விட்டார் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். அவர் கிட்டத்தட்ட 100 பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ருத்தித் திட்டத்தின்படி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, அதிலே ரூ.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய தொகையைச் செலுத்தி இருக்கிறார். இதே போன்ற சேவைக்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் கசோரா கிராமத்தில் நம்மால் காண முடியும். பல ஆண்டுகளாக இந்த கிராமத்திலே, சுவையான குடிநீர்க்குத் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதற்கிடையே, கிராமத்திலிருந்து 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வயலில், கிராமத்தின் ஒரு விவசாயியான குன்வர் சிங்கிற்கு சுவையான குடிநீர் கிடைத்தது. இது அவருக்கு பேருவகை தரும் விஷயம். இந்த நீரை நான் என் சக கிராமவாசிகளோடு பகிர்ந்து கொள்வேன் என்று அவர் நினைத்தார். ஆனால் வயலிலிருந்து கிராமத்திற்குக் குடிநீரைக் கொண்டு வர 30-32 இலட்சம் ரூபாய் செலவாகும். சில காலம் கழித்து குன்வர் சிங்கின் இளைய சகோதரன் ஷ்யாம் சிங், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று கிராமம் திரும்பினார், இந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்தது. ஷ்யாம் சிங், அவர் ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம் அனைத்தையும் உடனடியாக இந்தப் பணிக்கு அளித்தார், கிராமம் வரையிலான குழாய் இணைப்பை ஏற்படுத்தி, கிராமத்து மக்களுக்கு சுவையான குடிநீர் கிடைக்கச் செய்தார். ஈடுபாடு இருந்தால், தனது கடமைகள் மீது அர்ப்பணிப்பு இருந்தால், ஒரு தனிமனிதனாலும் கூட, சமுதாயத்தின் எதிர்காலத்தை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு இந்த முயற்சி மிகப்பெரிய ஒரு கருத்தூக்கம். நாம் நமது கடமைப்பாதையில் ஏகிக் கொண்டே, சமுதாயத்தை பலப்படுத்த முடியும், தேசத்தை பலப்படுத்த இயலும். சுதந்திரத்தின் இந்த அமுத காலத்தில் இந்த மனவுறுதி ஏற்பட வேண்டும், இதுவே நமது வழிபாடாக இருக்க வேண்டும், இதற்கான ஒரே பாதை – கடமை, கடமை, கடமை மட்டுமே.
என் கனிவான நாட்டுமக்களே. இன்றைய மனதின் குரலில் நாம் சமூகத்தோடு தொடர்புடைய மகத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் பற்றி விவாதித்தோம். நீங்கள் அனைவரும், பல்வேறு விஷயங்களோடு தொடர்புடைய முக்கியமான ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வருகிறீர்கள், இவற்றையே ஆதாரமாகக் கொண்டு நமது ஆய்வு மேற்கொண்டு தொடர்கிறது. மனதின் குரலின் அடுத்த பதிப்பிற்கான உங்களுடைய அருமையான ஆலோசனைகளை அனுப்ப மறந்து விடாதீர்கள். இப்போது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் நீங்களும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், அவை பற்றியும் கூட நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நமோ செயலியிலும், மைகவ் செயலியிலும் நீங்கள் உங்கள் ஆலோசனைகளை அனுப்புங்கள், காத்துக் கொண்டிருப்பேன். அடுத்த முறை நாம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களோடு இணைந்திருக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து நாம் மீண்டும் ஆய்வு செய்வோம். நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் அருகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் பராமரியுங்கள். கோடைக்காலமான இப்போது நீங்கள் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவும் குடிநீரும் அளிப்பது என்பதை, மனித இனத்துக்கான பொறுப்பாக எண்ணிக் கடைப்பிடியுங்கள். இதை மறந்து விடாதீர்கள். அடுத்த முறை சந்திப்போம். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். புதிய விஷயங்களுடன், புதிய கருத்தூக்கம் அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுக்களுடன், புதிய புதிய செய்திகளைத் திரட்டி, மீண்டும் ஒருமுறை உங்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில இணைய நான் வந்திருக்கிறேன். இந்த முறை அதிகபட்ச கடிதங்களும், செய்திகளும் எனக்கு எந்த விஷயம் குறித்து வந்திருக்கின்றன தெரியுமா? இந்த விஷயம் கடந்தகாலம், தற்காலம், வருங்காலம் என மூன்றோடும் கலந்திருக்கின்ற ஒன்று. தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதமமந்திரி அருங்காட்சியகம் குறித்து நான் பேசுகிறேன். இந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளன்று பிரதம மந்திரி அருங்காட்சியகமானது நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இது, தேசத்தின் குடிமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. சார்த்தக் என்ற ஒரு நேயர், குருகிராமில் வசித்து வருகிறார், முதல் வாய்ப்பு கிடைத்தவுடனேயே இவர் இந்த பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார். சார்த்தக் அவர்கள் நமோ செயலியில் அனுப்பி இருக்கும் செய்தியில், இது மிக சுவாரசியமாக இருப்பதாக எழுதி இருக்கிறார். பல ஆண்டுகளாக செய்தி மின்னூடகங்களைப் பார்த்து வருவதாகவும், செய்தித்தாள்களைப் படிப்பதாகவும், சமூக ஊடகங்களோடு தொடர்பு கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு, இவை காரணமாக தன்னுடைய பொது அறிவு மிகவும் நன்றாக இருக்கும் என்று கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரதம மந்திரி அருங்காட்சியகம் சென்ற போது அவர் திகைத்துப் போயிருக்கிறார், தனது நாடு, தனது நாட்டிற்குத் தலைமை தாங்குவோர் பற்றிய பல விஷயங்கள் தனக்குத் தெரியவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். இவர். பிரதம மந்திரி அருங்காட்சியகத்தின் சில அம்சங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். இவை இவருடைய ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக இவர் லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் மாமனார் வீட்டு சீதனமாக அளிக்கப்பட்ட ராட்டினத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்திருக்கிறார். அவர் சாஸ்திரி அவர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் பார்த்திருக்கிறார், இதில் அவருடைய சேமிப்பு எத்தனை குறைவாக இருந்திருக்கிறது என்பதையும் பார்க்க முடிந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறும் முன்பாக மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் குஜராத்தில் துணை ஆட்சியராக இருந்திருக்கிறார் என்பது அப்போது தான் சார்த்தக் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆட்சிப் பணியில் அவருக்கு ஒரு நீண்ட பணி எதிர்காலம் இருந்தது. ஜமீன்தாரி ஒழிப்புத்துறையில் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்தது என்று சரண் சிங் அவர்களைப் பற்றி சார்த்தக் அவர்கள் எழுதுகிறார். இது மட்டுமல்ல, மேலும் அவர் குறிப்பிடுகையில், நிலச் சீர்திருத்தங்கள் விஷயத்தில், பி. வி. நரசிம்ம ராவ் அவர்கள் மிக ஆழமான ஆர்வம் உடையவராக இருந்தார் என்று தனக்குத் தெரிய வந்ததாக அவர் எழுதியிருக்கிறார். இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த பின்னர் தான், சந்திரசேகர் அவர்கள், 4000 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயணம் செய்து, ஒரு வரலாற்று சாதனையாக பாரதப் பயணத்தை மேற்கொண்டார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் அருங்காட்சியகத்தில் அடல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பார்த்திருக்கிறார், அவருடைய உரைகளைக் கேட்டிருக்கிறார், மிகவும் பெருமிதமாக உணர்ந்ததாக எழுதியிருக்கிறார். மேலும் சார்த்தக் அவர்கள் எழுதும் போது, இந்த அருங்காட்சியகத்திலே, அண்ணல் காந்தியடிகள், சர்தார் படேல், டாக்டர். அம்பேட்கர், ஜய் பிரகாஷ் நாராயண் இவர்களைத் தவிர நமது பிரதம மந்திரியாக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் தமக்குக் கிடைத்ததாக எழுதியிருக்கிறார்.
நண்பர்களே, தேசத்தின் பிரதம மந்திரிகளின் பங்களிப்பை நினைவில் கொள்ளும் வகையிலே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தை விடச் சிறப்பான தருணம் வேறு என்னவாக இருக்க முடியும், சொல்லுங்கள்? சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவமானது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்து வருகிறது என்பது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒன்று. வரலாறு தொடர்பாக மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் பிரதம மந்திரி. அருங்காட்சியகமானது இளைஞர்களைக் கவரக்கூடிய ஒரு மையமாக மாறி வருகிறது, அவர்கள் தேசத்தின் விலைமதிப்பில்லாத மரபோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
மேலும் நண்பர்களே, அருங்காட்சியகம் பற்றிய இத்தனை விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், உங்களிடம் சில வினாக்களை எழுப்ப வேண்டும் என்று என் மனம் கூறுகிறது. உங்களுடைய பொது அறிவு எப்படி இருக்கிறது, உங்களுக்கு எந்த அளவுக்குத் தகவல்கள் தெரிந்திருக்கின்றன என்று பார்க்கலாமா? என் இளைய நண்பர்களே, நீங்கள் தயாராக இருக்கிறீர்களா, பேனாவும், காகிதமும் தயாரா? இப்போது நான் எழுப்ப இருக்கும் வினாக்களுக்கான விடைகளை நீங்கள் நமோ செயலியிலோ, சமூக ஊடகத்திலோ, #MuseumQuiz என்பதிலோ பகிர்ந்து கொள்ளலாம், கண்டிப்பாகப் பகிருங்கள். நீங்கள் இந்த அனைத்து வினாக்களுக்குமான விடைகளைக் கண்டிப்பாக அளியுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாடெங்கிலும் இருப்போருக்கு அருங்காட்சியகம் மீதான ஆர்வம், சுவாரசியம் மேலும் அதிகரிக்கும். சரி, தேசத்தில் எந்த நகரத்திலே ஒரு பிரசித்தி பெற்ற ரயில் அருங்காட்சியகம் இருக்கிறது தெரியுமா? இங்கே கடந்த 45 ஆண்டுகளாக, இந்திய ரயிலின் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்து வருகிறது. சரி நான் மேலும் ஒரு துப்பு அளிக்கிறேன். இங்கே நீங்கள் Fairy Queen, Saloon of Prince of Wales முதற்கொண்டு, Fireless Steam Locomotive, அதாவது நெருப்பில்லா நீராவி எஞ்ஜினையும் காண முடியும். அடுத்து, மும்பையின் எந்த அருங்காட்சியகத்தில், மிக சுவாரசியமான முறையில் பணத்தின் பரிணாம வளர்ச்சியைக் காண முடியும் தெரியுமா? இங்கே பொதுவாண்டிற்கு 600 ஆண்டுகளுக்கும் முன்பாக புழங்கிய நாணயங்கள் உள்ளன. அதே மறுபுறத்தில் e-Money என்ற மின்னணுப் பணமும் இருக்கிறது. மூன்றாவது கேள்வி, விராஸத் ஏ கால்ஸா இந்த அருங்காட்சியத்தோடு இணைந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகமானது, பஞ்சாபின் எந்த நகரத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காற்றாடி விடுவதில் உங்களுக்கு எல்லாம் மிகுந்த ஆர்வமும் ஆனந்தமும் உண்டு தானே!! அடுத்த கேள்வி இதோடு தொடர்புடையது. தேசத்தின் ஒரே காற்றாடி அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது? சரி, நான் உங்களுக்கு ஒரு துப்பு கொடுக்கிறேன்; இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய பட்டத்தின் அளவு 22 அடிக்குப் 16 அடி ஆகும். மேலும் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். இது எந்த நகரத்தில் இருக்கிறதோ, அதற்கு அண்ணலோடு விசேஷமான தொடர்பு உண்டு. சிறுவயதில் தபால் தலைகள் சேமிப்பு மீதான ஆர்வம் யாருக்குத் தான் இருக்காது! ஆனால், தபால் தலைகளோடு தொடர்புடைய தேசிய அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது தெரியுமா? நான் உங்களிடத்திலே மேலும் ஒரு வினாவை எழுப்புகிறேன். குல்ஷன் மஹல் என்ற பெயர் கொண்ட கட்டிடத்தில் இருக்கும் அருங்காட்சியகம் என்ன? உங்களுக்கான துப்பு, இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் ஆக முடியும், கேமரா, எடிட்டிங் ஆகியவற்றை நெருக்கமாகக் காண முடியும். சரி, பாரதத்தின் ஜவுளியோடு தொடர்புடைய பாரம்பரியத்தைக் கொண்டாடக்கூடிய அருங்காட்சியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருகிறீர்களா? இந்த அருங்காட்சியகத்தில் சிறிய அளவிலான ஓவியங்கள், ஜைன சமய ஓலைச்சுவடிகள், சிற்பங்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளன. இவை தனித்தன்மையான காட்சிப்படுத்தலுக்காகப் பெயர் போனவை.
நண்பர்களே, தொழில்நுட்பத்தின் இந்தக் காலகட்டத்தில் இவற்றுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. இந்தக் கேள்விகளை நான் ஏன் கேட்கிறேன் என்றால், நமது புதிய தலைமுறையினரின் ஆர்வம் இதனால் அதிகரிக்க வேண்டும், இவை பற்றி அவர்கள் படிக்க வேண்டும், இவற்றைக் காணப் பயணிக்க வேண்டும் என்பதற்காகத் தான். இப்போது அருங்காட்சியகங்களின் மகத்துவத்தை உணர்ந்து, பலர், தாங்களே முன்வந்து, அருங்காட்சியகங்களுக்காகக் கணிசமான அளவு நன்கொடை அளித்து வருகிறார்கள். பலர் தங்களிடம் இருக்கும் பழைமையான பொருட்களையும், சரித்திர முக்கியத்துவம் பெற்ற பொருட்களையும் கூட, அருங்காட்சியகங்களுக்குத் தானமாக அளித்து வருகிறார்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, நீங்கள் ஒரு கலாச்சார மூலதனத்தை, ஒட்டுமொத்த சமூகத்தோடும் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று பொருள். பாரதத்திலும் மக்கள் இப்போது இதன் பொருட்டு முன்வருகிறார்கள். இப்படிப்பட்ட தனிப்பட்ட முயல்வுகள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன். இன்று, மாறிவரும் காலகட்டத்திலே, கோவிட் வழிகாட்டுதல் நெறிமுறைகள் காரணமாக அருங்காட்சியகங்களில் புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களில் டிஜிட்டல் மயமாக்கல் மீதும் கவனம் அதிகரித்திருக்கிறது. மே மாதம் 18ஆம் தேதியன்று உலகம் முழுவதிலும் சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடவிருக்கிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். இதை கவனத்தில் கொண்டு, நமது இளைய நண்பர்களுக்காக என்னிடத்திலே ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஏன் வரவிருக்கும் விடுமுறை நாட்களில், நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இணைந்து, ஏதோ ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வரக்கூடாது! நீங்கள் உங்களுடைய அனுபவங்களை #MuseumMemories என்பதிலே பகிர்ந்து கொள்ளலாமே!! இப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் மனதிலும் கூட அருங்காட்சியகங்கள் மீதான ஆர்வம் விழிப்படையும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல உறுதிப்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம், அவற்றை நிறைவேற்ற கடினமாக உழைத்திருக்கலாம். நண்பர்களே, ஆனால் தற்போது தான், எனக்கு இப்படிப்பட்ட ஒரு மனவுறுதிப்பாடு பற்றித் தெரிய வந்தது, இது உண்மையிலேயெ மிகவும் வித்தியாசமானது, மிகவும் அலாதியானது. ஆகையால், இதைப் பற்றி மனதில் குரல் நேயர்களோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
நண்பர்களே, ஒருவர் தனது வீட்டை விட்டுப் புறப்படும் போது, இன்று நான் நகரெங்கும் சுற்றுவேன், ஆனால் ஒருமுறை கூட ரொக்கப்பணப் பரிவர்த்தனையில் ஈடுபட மாட்டேன் என்ற ஒரு உறுதிப்பாட்டை மனதில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் – சுவாரசியமான உறுதிப்பாடு இல்லையா!! தில்லியில் இரு பெண்களான சாகரிகாவும், ப்ரேக்ஷாவும் இப்படிப்பட்ட ஒரு ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை செய்யும் நாள், என்ற ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். சாகரிகாவும், ப்ரேக்ஷாவும் தில்லியில் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை செய்ய முடிந்தது. யூபிஐ க்யூ ஆர் குறியீடு காரணமாக அவர்களுக்கு ரொக்கப் பணத்தை எடுக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. எந்த அளவுக்கு என்றால், தெருவோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளிலும் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் நிகழ்நிலை பரிவர்த்தனை வசதி கிடைத்தது.
நண்பர்களே, இது தில்லி, மாநகர், இங்கே இவை எல்லாம் கிடைப்பது சுலபம் என்று நினைக்கலாம். ஆனால் இப்போது எல்லாம் யூ பி ஐயின் பரவலாக்கம், தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கிறது என்பது கிடையாது. காஜியபாதிலிருந்து ஆனந்திதா திரிபாடீ அவர்கள் எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். ஆனந்திதா அவர்கள் கடந்த வாரத்தில் தனது கணவரோடு வடகிழக்கு மாநிலப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார். அவர் அஸாம் தொடங்கி மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்க் வரை தனது பயண அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது, பல நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், தொலைவான பகுதிகளிலும் அவர் ரொக்கத்தைத் தனது கணக்கிலிருந்து எடுக்கத் தேவையே இருக்கவில்லை என்பது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கலாம். எந்த இடங்களில், சில ஆண்டுகள் முன்பு வரை, இணையச் சேவைகள் கூட சரிவர இருக்கவில்லையோ, அங்கெல்லாம் கூட இப்போது யூபிஐ வாயிலாகப் பணம் செலுத்தல் வசதிகள் இருக்கின்றன. சாகரிகா, பிரேக்ஷா, ஆனந்திதா ஆகியோரின் அனுபவங்களைக் காணும் போது, நான் உங்களிடத்திலும் வேண்டிக் கொள்வதெல்லாம், ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாத நாள் என்ற பரிசோதனையை நீங்களும் செய்து பாருங்களேன்!!
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில் பீம் யூபிஐ, ஆகியவை விரைவாக நமது பொருளாதாரம் மற்றும் பழக்கங்களின் அங்கமாக மாறிவிட்டன. இப்போது சின்னச்சின்ன நகரங்களிலும், பெரும்பான்மையான கிராமங்களிலும் கூட, மக்கள் யூபிஐ வாயிலாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் முறை பொருளாதாரம் மூலமாக தேசத்தில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாகி வருகிறது. சின்னச்சின்ன தெருக்கள்-சந்துகளில் இருக்கும் சிறிய கடைகளிலும் கூட டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதால், அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிவது எளிதாகி விட்டது. பணத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய சிரமமும் இப்போது இல்லை. நீங்களும் யூபிஐ வசதியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கே சென்றாலும், ரொக்கத்தைக் கொண்டு செல்லுதல், வங்கிக்குச் செல்லுதல், ஏடிஎம்மைத் தேடுதல் போன்ற சங்கடங்களுக்கு முடிவு. மொபைல் வாயிலாகவே அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்து விடுகின்றன, ஆனால் உங்களுடைய இந்தச் சின்னச்சின்ன நிகழ்நிலை பணம் செலுத்தல் காரணமாக தேசத்தில் எத்தனை பெரிய டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகி இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்த சமயத்தில் நமது தேசத்தில் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனைகள், நாளொன்றிற்கு நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், யூபிஐ பரிவர்த்தனை கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டி விட்டது. இதனால் தேசத்தில் வசதிகளும் அதிகரித்து வருகிறது, நாணயமான ஒரு சூழலும் உருவாகி வருகிறது. இப்போது தேசத்தில் நிதித்துறையில் தொழில்நுட்பத்தோடு இணைந்த பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. உங்களிடத்திலும் டிஜிட்டல் வழி பணம் செலுத்தல் மற்றும் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பின் இந்த சக்தியோடு தொடர்புடைய அனுபவம் இருந்தால், அவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவம், நாட்டுமக்கள் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நாம் நமது பார்வையை நம்மைச் சுற்றிச் செலுத்தும் போது, தொழில்நுட்பத்தின் சக்தி எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. தொழில்நுட்பமானது மேலும் ஒரு பெரிய பணியைச் செய்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்களின் அசாதாரணமான திறமைகளின் ஆதாயம், தேசத்திற்கும் உலகிற்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தப் பணி. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் டோக்கியோ பேராலிம்பிக்ஸிலே கண்டோம். விளையாட்டுக்களைப் போலவே, கலைகள், கல்வித்துறை என பல துறைகளிலும் மாற்றுத் திறனாளி நண்பர்கள் அருமையான செயல்பாடுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்றாலும், இந்த நண்பர்களுக்குத் தொழில்நுட்பத்தின் சக்தி கிடைக்கின்ற போது, இவர்கள், மேலும் பெரிய சாதனைகளைப் படைக்கின்றார்கள். ஆகையால், தேசம் இப்போது தொடர்ந்து ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் தொடர்ந்து ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருகிறது. தேசத்தின் பல ஸ்டார்ட் அப் அமைப்புகளுமே கூட, இந்தத் திசையில், கருத்தூக்கம் அளிக்கும் பணிகளை ஆற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அமைப்புத் தான் Voice of specially-abled people, இந்த அமைப்பு உதவும் தொழில்நுட்பத் துறையில் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மாற்றுத் திறனாளிக் கலைஞர்களின் பணியை, உலகெங்கிலும் கொண்டு செல்ல, ஒரு நூதனமான தொடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. Voice of specially-abled people என்ற இந்த அமைப்பு, இந்தக் கலைஞர்களின் ஓவியங்கள் அடங்கிய டிஜிட்டல் கலைக்கூடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்கள் எந்த வகையில் அசாதாரணமான திறமைகள் நிரம்பியவர்களாக இருக்கின்றார்கள், அவர்களிடத்திலே எத்தனை அபாரமான திறன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு இந்தக் கலைக்கூடமே ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுத் திறனாளி நண்பர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவால்கள் இருக்கின்றன, இவற்றிலிருந்து வெளியேறி அவர்கள் எந்த இடத்தைச் சென்றடைய முடியும்!! இப்படி பல விஷயங்கள் குறித்து இந்த ஓவியங்களில் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். உங்களுக்கு யாராவது மாற்றுத் திறனாளி நண்பரைத் தெரியும், அவருடைய திறமையை நீங்கள் அறிவீர்கள் என்றால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு அதை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள். மாற்றுத் திறனாளி நண்பர்களும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் வெப்பம் அதிக தீவிரத்தோடு அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தில், நீரை சேமிப்பது என்ற பொறுப்பும் கூட அதே அளவுக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே போதுமான அளவுக்கு நீர் ஒருவேளை இருக்கலாம். ஆனால், நீர்த்தட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும், அமிழ்துக்கு ஒப்பானதாகும்.
நண்பர்களே, இந்த சமயத்தில், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, தேசம் எத்தகைய உறுதிப்பாடுகளைத் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதிலே நீர் பராமரிப்பு என்பதும் ஒன்றாகும். அமிர்த மஹோத்சவமத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை நாம் உருவாக்குவோம். இது எத்தனை பெரிய இயக்கம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் கேட்டுக் கொள்வதெல்லாம், அவர்கள் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், இதனைத் தங்களின் பொறுப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான். நீங்கள் உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாறு ஏதேனும் இருந்தால், ஏதேனும் ஒரு போராட்ட வீரரின் நினைவுச் சின்னம் இருந்தால், அதையும் கூட நீங்கள் அமிர்த நீர்நிலையோடு இணைக்கலாம். அமிர்ந்த நீர்நிலை அமைப்பது பற்றிய உறுதிப்பாடு மேற்கொண்ட பிறகு பல இடங்களில் இது தொடர்பாகப் பணிகள் படுவிரைவாக நடந்தேறி வருவதாக எனக்குச் செய்திகள் வருகின்றன, இது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூபியின் ராம்புரின் கிராமப் பஞ்சாயத்து பட்வாயி பற்றி எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கே கிராம சபை நிலத்தில் ஒரு குளம் இருந்தது. ஆனால் அது மாசடைந்து, கழிவுகள்-குப்பைகளால் நிரம்பி இருந்தது. கடந்த சில வாரங்களில், தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அந்தப் பகுதி மக்களின் உதவியோடு, வட்டார பள்ளிக் குழந்தைகளின் துணையோடு, இந்த மாசடைந்த குளத்திற்கு மீளுயிர் அளிக்கப்பட்டது. இப்போது இந்தக் குளத்தின் கரைகளில் தடுப்புச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், உணவிடங்கள், நீரூற்றுக்கள், ஒளியமைப்புகள் என பலவகையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ராம்புரின் பட்வாயி கிராமப் பஞ்சாயத்திற்கும், கிராமத்து மக்களுக்கும், அங்கிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், இந்த முயற்சிக்காக, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, நீரின் இருப்பு, நீரின் தட்டுப்பாடு என இவை, எந்த ஒரு தேசத்தின் முன்னேற்றத்தையும், வேகத்தையும் தீர்மானம் செய்பவை. மனதின் குரலில், தூய்மை போன்ற விஷயங்களோடு கூடவே நான் நீர் பராமரிப்பு பற்றி மீண்டும் மீண்டும் கூறிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமது புனித நூல்களில் தெளிவாக எழுதியிருக்கிறது –
பானியம் பரமம் லோகே, ஜீவானாம் ஜீவனம் சம்ருதம்.
पानियम् परमम् लोके, जीवानाम् जीवनम् समृतम् ||
அதாவது, உலகிலே, நீர் மட்டுமே, அனைத்து உயிர்களின், வாழ்வாதாரம் என்பதோடு, நீர் தான் மிகப்பெரிய ஆதாரம்; ஆகையால் தான் நமது முன்னோர்கள், நீர் பராமரிப்பிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரை சேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை மனிதர்களின் சமூக மற்றும் ஆன்மீகக் கடமை என்றே கூறப்பட்டிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தில் நீர் நிலைகளை இணைப்பதன் மீதும், நீர் பாதுகாப்பின் மீதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, மாணவர்களும் நன்கறிவார்கள், சிந்து சரஸ்வதி மற்றும் ஹரப்பா நாகரிகங்களிலும் கூட, பாரதத்தில் நீர் தொடர்பாக எந்த அளவுக்கு மேம்பட்டதொரு பொறியியல் இருந்தது என்பது தெரிய வருகிறது. பண்டைய காலத்தில் பல நகரங்களின் நீர் நிலைகளில், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அமைப்பு முறைகள் இருந்தன, அந்த காலத்தில் மக்கள்தொகை அந்த அளவுக்கு இருக்கவில்லை, இயற்கை வளங்களுக்கான தட்டுப்பாடும் அந்த அளவுக்கு இருக்கவில்லை, ஒரு வகையில் வளம் கொழித்தது எனலாம், இருந்தாலும், நீர் பராமரிப்பு தொடர்பாக அப்போது விழிப்புணர்வு அதிகமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. உங்கள் அனைவரிடத்திலும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய பகுதிகளில் இருக்கும் பழைய நீர்நிலைகள், ஏரிகள்-குளங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அமிர்த சரோவர் இயக்கம் காரணமாக நீர்பராமரிப்போடு கூடவே இந்தப் பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியும். இதன் காரணமாக நகரங்களில், பகுதிகளில், வட்டார சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு அடையும், கண்டு களிக்க மக்களுக்கும் ஒரு இடம் கிடைக்கும்.
நண்பர்களே, நீரோடு தொடர்புடைய ஒவ்வொரு முயற்சியும் நமது எதிர்காலத்தோடு தொடர்புடையது. இதிலே முழுமையாக சமூகத்தின் கடமை இருக்கிறது. இதற்காக பல நூற்றாண்டுக்காலமாக பல்வேறு சமூகங்கள், பல்வேறு முயற்சிகளைத் தொடந்து செய்து வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக, கட்சின் ரணிலே இருக்கும் ஒரு பழங்குடியினமான மால்தாரீ, நீர் பராமரிப்பின் பொருட்டு, வ்ருதாஸ் என்ற பெயர் கொண்ட வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இதன்படி, சிறிய குளங்கள் ஏற்படுத்தப்பட்டு, இவற்றைப் பாதுகாக்க அருகிலே மரங்கள்-செடிகள் நடப்படும். இதைப் போன்றே மத்திய பிரதேசத்தின் பீல் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரியமான ஹல்மா வாயிலாக நீர் பராமரிப்பைச் செய்து வருகின்றார்கள். இந்தப் பாரம்பரியப்படி, இந்தப் பழங்குடியினத்தவர், நீரோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். ஹல்மா பாரம்பரியத்திலே கிடைத்த ஆலோசனைகள் காரணமாக இந்தப் பகுதியில் நீர்த் தட்டுப்பாடு குறைந்திருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்திருக்கிறது.
நண்பர்களே, இப்படிப்பட்ட கடமையுணர்வு உங்கள் மனதிலும் வந்து விட்டால், நீர் பிரச்சனையோடு தொடர்புடைய எத்தனை பெரிய சவாலாக இருந்தாலும், அதற்குத் தீர்வைக் கண்டுவிட முடியும். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவக் காலத்தில், நாம் நீர் பராமரிப்பு, நீர் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாடுகளை மேற்கொள்வோம் வாருங்கள். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாப்போம், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவோம்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, மாணவ நண்பர்களோடு நான் தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த உரையாடலின் போது, சில மாணவர்கள், அவர்களுக்குக் கணிதப் பாடம் பயமுறுத்துவதாக இருக்கிறது என்று கூறியிருந்தார்கள். இதைப் போலவே, பல மாணவர்களும் செய்திகளாக எனக்கு அனுப்பி இருந்தார்கள். கணிதம் தொடர்பாக இந்த முறை மனதின் குரலில் உரையாட வேண்டும் என்று அப்போதே நான் தீர்மானித்தேன். நண்பர்களே, கணிதம் எப்படிப்பட்ட ஒரு விஷயம் என்றால், இது இந்தியர்கள் அனைவருக்கும் சுலபமானதாக இருக்க வேண்டும். உள்ளபடியே, கணிதம் தொடர்பாக மிக அதிகமாக ஆய்வுகளும், பங்களிப்புக்களும் அளித்தவர்கள் என்றால் நம் நாட்டவர் தாம். பூஜ்யம், அதாவது ஜீரோவை அளித்தது, அதன் மகத்துவம் பற்றி நீங்கள் தெளிவாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூஜ்யம் என்பது கண்டுபிடிக்கப்படாதிருந்தால், உலகில் இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்காது என்று பல நேரங்களில் கூறப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். Calculus எனப்படும் நுண்கணிதம் தொடங்கி கணிப்பொறி வரை, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளான இவையனைத்தும், பூஜ்யத்தையே ஆதாரமாகக் கொண்டவை. பாரதத்தின் கணிதவியலாளர்களும் பண்டிதர்களும் எந்த அளவுக்கு எழுதியிருக்கிறார்கள் என்றால்,
யத் கிஞ்சித் வஸ்து தத் சர்வம், கணிதேன பினா நஹி!
यत किंचित वस्तु तत सर्वं, गणितेन बिना नहि !
அதாவது, இந்த பிரும்மாண்டத்தில் எதுவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் கணிதத்தையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன. நீங்கள் விஞ்ஞானத்தில் படித்ததை நினைவு கூருங்கள், இதன் பொருள் உங்களுக்குப் புரிய வரும்!! விஞ்ஞானத்தின் அனைத்துக் கோட்பாடுகளும் ஒரு கணித சூத்திரத்தின் மூலமாகவே விளக்கப்படுகிறது. நியூட்டனின் விதிகளாகட்டும், ஐன்ஸ்டீனின் பிரபலமான கோட்பாடாகட்டும், பிரும்மாண்டத்தோடு தொடர்புடைய அனைத்து விஞ்ஞானமும் ஒரு கணிதத்தோடே தொடர்புடையனவாக உள்ளன. இப்போது விஞ்ஞானிகளும் Theory of Everything என்பது பற்றியும் விவாதித்து வருகிறார்கள், அதாவது ஒரே ஒரு சூத்திரமானது பிரும்மாண்டத்தின் அனைத்து விஷயங்களையும் விளக்குவது எப்படி என்பது தான் அது. கணிதம் வாயிலாக விஞ்ஞானம் பற்றிய புரிதல் மிகவுயரிய அளவுக்கு மேம்பட்டதாக நமது ரிஷிகள் எப்போதுமே செய்து காட்டியிருக்கிறார்கள். நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம் என்றால், இதோடு கூடவே முடிவிலி அதாவது infiniteஐயுமே கூட வெளிப்படுத்தி இருக்கிறோம். பொதுவாகப் பேசும் போது நாம் எண்ணிக்கையை, மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்பது வரை பேசுவது வழக்கம், ஆனால் வேதங்களிலும், பாரதநாட்டு கணித முறையிலும் எண்ணிக்கை மிக மேம்பட்ட நிலையில் கூறப்படுகிறது. நம் முறையில் ஒரு தொன்மையான சுலோகம் உள்ளது.
एकं दशं शतं चैव, सहस्रम् अयुतं तथा |
लक्षं च नियुतं चैव, कोटि: अर्बुदम् एव च ||
वृन्दं खर्वो निखर्व: च, शंख: पद्म: च सागर: |
अन्त्यं मध्यं परार्ध: च, दश वृद्ध्या यथा क्रमम् ||
ஏகம் தசம் சதம் சைவ, சஹஸ்ரம் அயுதம் ததா.
லக்ஷம், ச நியுதம் சைவ, கோடி: அர்புதம் ஏக ச.
விருந்தம் கர்வோ நிகர்வ: ச, சங்க: பத்ம: ச சாகர:.
அந்த்ய ம் மத்யம் பரார்த: ச, தஸ விருத்யா யதா கிரமம்.
இந்த சுலோகத்தில் எண்ணிக்கையின் வரிசைக்கிரமம் உரைக்கப்பட்டிருக்கிறாது. அதாவது -
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் மற்றும் பத்தாயிரம்.
இலட்சம், பத்து இலட்சம் மற்றும் கோடி.
இதைப் போன்றே, எண்ணிக்கை வருகிறது – சங்க, பத்ம மற்றும் சாகர் வரை. ஒரு சாகர் என்பதன் பொருள் பத்து என்ற எண்ணின் 57 அடுக்குகள். அதாவது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 57 பூஜ்யங்கள். இது மட்டுமல்ல, இதனைத் தாண்டி, ஓக் மற்றும் மஹோக் போன்ற எண்ணிக்கைகள் இருக்கின்றன. ஒரு மஹோக் என்பது பத்து என்ற எண்ணின் 62 அடுக்குகள், அதாவது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 62 பூஜ்யங்கள். நாம் இத்தனை பெரிய எண்ணிக்கையை நமது மூளையில் கற்பனை செய்யவே சிரமப்படுவோம், ஆனால் இந்திய கணிதத்தில் இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். சில நாட்கள் முன்பாகத் தான் இண்டெல் கம்பெனியின் தலைவர் என்னை சந்தித்தார். அவர் எனக்கு ஒரு ஓவியத்தையளித்தார்; அதிலே வாமன அவதாரம் வாயிலாக எண்ணிக்கை அளவிடப்பட்டு வரக்கூடிய பாரதிய வழிமுறை அதில் வடிக்கப்பட்டிருந்தது. இண்டெல் எனும் போதே, கணிப்பொறி உங்கள் மூளையில் பளிச்சிடும். கணிப்பொறிக்கான மொழியில், நீங்கள் பைனரி முறை பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் நமது தேசத்திலே ஆச்சார்யர் பிங்களர் போன்ற ரிஷிகள் இருந்தார்கள், இவர்கள் பைனரி பற்றி சிந்தித்திருக்கிறார்கள். இதைப் போலவே ஆரியபட்டர் தொடங்கி ராமானுஜன் வரை, கணிதத்தின் பல கோட்பாடுகள், நம் நாட்டிலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
நண்பர்களே, இந்தியர்களான நமக்கெல்லாம் கணிதம் எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருந்ததில்லை, இதற்கான ஒரு பெரிய காரணம் நமது வேதக்காலக் கணிதமும் கூட. நவீன காலத்தில் வேத கணிதத்தின் மாட்சியை வெளிப்படுத்திய பெருமை முழுக்க ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த ஜி மஹாராஜையே சாரும். அவர் தான் கணக்கீடுகளின் பண்டைய முறைக்கு மீளுயிர் அளித்து, இதற்கு வேத கணிதம் என்ற பெயரளித்தார். வைதிக கணிதத்தின் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் நீங்கள் மிகக்கடினமான கணக்கீடுகளை, கண்ணிமைக்கும் நேரத்தில் மனதிற்குள்ளேயே செய்து விட முடியும். இப்போதெல்லாம் சமூக ஊடங்களில் வேத கணிதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் கூடிய பல காணொளிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் வேத கணிதத்தைக் கற்பிக்கும் அப்படிப்பட்ட ஒரு நண்பர் நம்மோடு இணையவிருக்கிறார். இவர் கோல்காதாவின் கௌரவ் டேகரீவால் அவர்கள். இவர் கடந்த 20-25 ஆண்டுகளாக, வேத கணிதம் என்ற இந்த இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். வாருங்கள், அவரோடு கலந்து பேசுவோம்.
மோதி ஜி: கௌரவ் அவர்களே வணக்கம்.
கௌரவ்: வணக்கம் சார்.
மோதி ஜி: நீங்க வேத கணிதம் தொடர்பா அதிக ஆர்வத்தோட இருக்கீங்கன்னு நான் கேள்விப்பட்டேன். ஆகையால நான் உங்களைப் பத்தி முதல்ல தெரிஞ்சுக்க விரும்பறேன், அப்புறமா இந்த விஷயம் பத்தி உங்களுக்கு எப்படி இத்தனை நாட்டம் வந்திச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க.
கௌரவ்: சார், நான் 20 ஆண்டுகள் முன்னால வணிகப்பள்ளிக்கு விண்ணப்பம் செஞ்சுக்கிட்டு இருந்தேன், அப்ப இதுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வு பேரு CAT. அதில கணிதம் தொடர்பான ஏகப்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டிச்சு. ஆனா இவற்றுக்கு விடை அளிக்க நேரம் குறைவாவே இருக்கும். அப்பத்தான் எங்கம்மா எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க, அதோட பேரு வேத கணிதம். ஸ்வாமி ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்த ஜீ மஹராஜ் தான் அந்தப் புத்தகத்தை எழுதினவரு. அதில அவரு 16 சூத்திரங்களை கொடுத்திருந்தாரு. இதில கணிதம் ரொம்ப சுலபமா இருந்திச்சு, ரொம்ப வேகமா இதுக்கான தீர்வுகள் கிடைச்சுது. அதைப் படிச்ச பிறகு தான் எனக்கு உத்வேகமே பிறந்திச்சு, கணக்கு மேல எனக்குள்ள இருந்த ஆர்வம் விழிப்படைஞ்சுது. இந்தப் படிப்பு பாரதம் உலகுக்கு அளிச்ச கொடை, இது நம்ம மரபுச்சொத்து, இதை நாம உலகத்தின் மூலை முடுகெங்கும் கொண்டு சேர்க்க முடியும்னு நான் உணர்ந்தேன். வேத கணிதத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கணுங்கறதை நான் என்னோட இலக்கா அப்போதிலிருந்து தீர்மானம் செஞ்சுக்கிட்டேன். ஏன்னா, கணிதம் பத்தின பயம் எல்லாரையும் வாட்டுச்சு. ஆனா வேத கணிதம் கணிதப் பாடத்தை மிகச் சுலபமானதா மாத்திக் கொடுக்குது.
மோதி ஜி: கௌரவ் அவர்களே, எத்தனை ஆண்டுகளா நீங்க இந்தப் பணியில ஈடுபட்டிருக்கீங்க?
கௌரவ்: இதோட சுமார் 20 ஆண்டுகளா இதில ஈடுபட்டிருக்கேன் சார். இதில முழு ஈடுபாட்டோட நான் செயல்படுறேன்.
மோதி ஜி: சரி விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்யறீங்க, எப்படி செயல்படுத்தறீங்க, மக்கள் கிட்ட எப்படி எடுத்துக்கிட்டுப் போறீங்க?
கௌரவ்: நாங்க பள்ளிகளுக்குப் போறோம், நிகழ்நிலையில கற்பிக்கிறோம். எங்க அமைப்போட பேரு Vedic Maths Forum India. இந்த அமைப்பு வாயிலா நாங்க இணையம் மூலமா 24 மணிநேரமும் வேத கணிதத்தைக் கற்பிக்கறோம் சார்.
மோதி ஜி: கௌரவ் அவர்களே, தொடர்ந்து குழந்தைகளோட உரையாடறதை நான் ரொம்பவே விரும்பறது மட்டுமில்லாம இதுக்கான வாய்ப்பு இருக்கான்னு ஆராயவும் செய்வேன். தேர்வுகளை எதிர்கொள்வோம், அதாவது exam warrior நிகழ்ச்சி மூலமா இதை அமைப்பு ரீதியானதா ஆக்கியிருக்கோம். இதில என்னோட அனுபவம் என்னென்னா, பெரும்பாலான வேளைகள்ல நான் குழந்தைகளோட உரையாடும் போது, கணிதம்னு சொன்னவுடனேயே அவங்க அந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடறாங்க அப்படீங்கறது தான். ஆனா என்னோட முயற்சி என்னன்னா, காரணமே இல்லாம இப்படி ஒரு பீதி ஏற்பட்டிருக்கே, இதை எப்படியாவது வெளியேத்தணும், இந்த பயத்தைப் போக்கணும், மேலும், சின்னச்சின்ன உத்திகள் அப்படீங்கற பாரம்பர்யமான வழியில இதை செயல்படுத்தணும்னு நினைக்கறேன். உலகத்தில கணிதம் தொடர்பான பழைமையான பாரம்பரியங்கள்ல பாரதநாட்டுப் பாரம்பரியம் ஒண்ணா இருக்குங்கற நிலையில, இந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனசுல இருக்கற பயத்தைப் போக்க உங்க ஆலோசனைகளை சொல்ல முடியுமா?
கௌரவ்: சார், இது பிள்ளைங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும், ஏன்னா, தேர்வு பத்தின அச்சம், ஒவ்வொரு வீட்டிலயும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு. தேர்வுகளுக்காக பிள்ளைங்க டியூஷன் வகுப்புகளுக்குப் போறாங்க, பெற்றோருக்கு ஒரே பதட்டமா இருக்கு. ஆசிரியர்களும் நெருக்கடியை உணர்றாங்க. ஆனா வேத கணிதத்தில இதெல்லாம் மாயமா மறைஞ்சு போயிடுது. இந்த சாதாரணமான கணிதத்தை விடவும், வேத கணிதம் 150 சதவீதம் அதிக வேகமானது, இதனால பிள்ளைங்களுக்கு அதிக தன்னம்பிக்கை ஏற்படுது, மூளை சுறுசுறுப்பா வேலை செய்யுது. இப்ப நாங்க வேத கணிதம் கூடவே யோகக் கலையையும் அறிமுகப்படுத்தியிருக்கோம். இதனால பிள்ளைங்க கண்ணை மூடிக்கிட்டு, வேத கணித வழிமுறைகள் வாயிலா கணக்கீடு செய்ய முடியும்.
மோதி ஜி: இப்ப தியானம் தொடர்பான பாரம்பரியத்திலயும் கூட, இந்த மாதிரியா கணிதச் செயல்பாடுகள்ல, அதிலயும் தியானத்தோட ஒரு அடிப்படை படிப்பாவும் இருக்கு.
கௌரவ்: ஆமாம் சார்.
மோதி ஜி: சரி கௌரவ் அவர்களே, நீங்க இதை ஒரு இலக்கா தீர்மானிச்சுப் பயணிக்கறீங்க அப்படீங்கறது ரொம்ப மகிழ்ச்சி அளிக்குது, அதுவும் குறிப்பா உங்க அம்மா ஒரு நல்ல குருவா இருந்து உங்களை சரியான வழிக்குக் கொண்டு வந்திருக்காங்க. இன்னைக்கு நீங்க இலட்சக்கணக்கான மாணவர்களையும் இந்தப் பாதையில கொண்டு வந்து பயணிக்கறீங்க. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கௌரவ்: ரொம்ப நன்றி சார். நான் உங்களுக்கு என்னோட நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சார். அதாவது வேத கணிதத்துக்கு நீங்க இத்தனை மதிப்பளிச்சு என் கருத்துக்களைக் கேட்டிருக்கீங்க. நாங்க எல்லாருமே உங்களுக்கு எங்க நன்றிகளைத் தெரிவிக்கறோம்.
மோதி ஜி: ரொம்ப ரொம்ப நன்றி, வணக்கம்.
கௌரவ்: வணக்கம் சார்.
நண்பர்களே, கௌரவ் அவர்கள் மிகச் சிறப்பான முறையிலே, வேத கணிதம் கணிதத்தின் சிரமத்தை சுவாரசியமானதாக எப்படி ஆக்குகிறது என்பதைத் தெரிவித்தார். அது மட்டுமல்ல, வைதிக கணிதம் வாயிலாக பெரியபெரிய அறிவியல் சிக்கல்களையும் தீர்க்க முடியும். பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வேத கணிதத்தைக் கற்பியுங்கள் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். இதன் வாயிலாக அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகப்பட்டு, அவர்களுடைய மூளையின் பகுப்பாய்வுத் திறன்களும் அதிகரிக்கும். மேலும் கணிதம் தொடர்பாக குழந்தைகளிடத்திலே இருக்கும் அச்சமும் அகலும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் இன்று அருங்காட்சியகம் முதல், கணிதம் வரையிலான பல அறிவார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்த விஷயங்கள் அனைத்தும், உங்கள் ஆலோசனைகள் காரணமாகவே மனதின் குரலில் இடம் பிடித்திருக்கின்றன. நீங்கள் அனைவரும் இதைப் போலவே, வருங்காலத்திலும் உங்கள் ஆலோசனைகளை நமோ செயலியிலும், மைகவ் வாயிலாகவும் அனுப்பி வாருங்கள். வரும் நாட்களில் தேசத்தில் ஈத் பண்டிகை வரவிருக்கிறது. மே மாதம் 3ஆம் தேதி அட்சய திரிதியையும், பகவான் பரசுராமரின் ஜெயந்தியும் கொண்டாடப்பட இருக்கின்றன. சில நாட்கள் கழித்து பைசாக் புத்த பூர்ணிமை நாட்களும் வரவிருக்கின்றன. இந்தப் பண்டிகைகள் அனைத்தும், ஒழுங்குமுறை, புனிதத்தன்மை, கொடை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்துபவை. உங்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளுக்கான மிகப்பிரியமான நல்வாழ்த்துக்கள். இந்தத் திருநாட்களை உல்லாசமாகவும், சகோதரத்துவத்தோடும் நன்றாகக் கொண்டாடுங்கள். இவை அனைத்திற்கும் இடையே, கொரோனா தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். முகக்கவசம் அணியுங்கள், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், கைகளைக் கழுவுவதை மறவாதீர்கள், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள இவை அவசியமான உபாயங்கள், நீங்கள் இவற்றைக் கடைப்பிடித்து வாருங்கள். அடுத்த முறை மனதின் குரலில் நாம் மீண்டும் சந்திப்போம், நீங்கள் அனுப்பும் மேலும் புதிய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம், விடை கொடுங்கள் நண்பர்களே. பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. முதன்முறையாகக் கேள்விப்படும் போது இது ஏதோ பொருளாதாரம் தொடர்பான விஷயமாகப் பட்டாலும், பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின் வல்லமை, பாரதத்தின் ஆற்றல் ஆகியவற்றோடு தொடர்புடைய விஷயம் இது. ஒரு காலத்தில் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை பற்றிய புள்ளிவிவரம் ஏதோ 100 பில்லியன், சில சமயம் 150 பில்லியன், சில வேளை 200 பில்லியன் டாலர்கள் என்பது வரை இருந்திருந்தது. ஆனால் இன்றோ, பாரதம் 400 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது என்பது ஒன்று; மேலும் இரண்டாவதாக பாரதத்தின் விநியோகச் சங்கிலி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது என்ற மிகப்பெரிய செய்தியையும் இது நமக்களிக்கிறது. நாம் கனவு காண்பதற்கேற்ப மகத்தான உறுதிப்பாடுகளை நாம் ஏற்கும் போது, தேசம் விசாலமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளுக்காக இரவுபகலாக நேர்மையாக முயற்சிகள் செய்யப்படும் போது, அந்த உறுதிப்பாடுகள் மெய்ப்படவும் செய்கின்றன, எந்த ஒரு நபரின் வாழ்க்கையிலும் கூட இவ்வாறே தான் நடக்கிறது என்பதை நீங்களும் கவனித்திருக்கலாம். ஒருவருடைய மனவுறுதிப்பாடு, அவருடைய முயல்வு, அவருடைய கனவுகளை விடவும் பெரியதாக இருக்கும் போது, வெற்றித்திருமகள் தானே அவரை நாடித் தேடி வருகிறாள்.
நண்பர்களே, தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் புதியபுதிய பொருட்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அஸாமின் ஹைலாகாண்டியின் தோல் பொருட்களாகட்டும், உஸ்மானாபாதின் கைத்தறிப் பொருட்களாகட்டும், பீஜாபூரின் பழங்கள்-காய்கறிகளாகட்டும், சந்தௌலியின் கறுப்பு அரிசியாகட்டும், அனைத்து வகைப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றது. நம்முடைய லத்தாக்கின் உலகப் பிரசித்தி பெற்ற ஆப்ரிகாட் பழங்கள் துபாயிலும் கிடைக்கின்றன, தமிழ்நாடு அனுப்பி வைத்த வாழைப்பழங்கள் அரேபியாவில் கிடைக்கிறது. இப்போது பெரிய விஷயம் என்னவென்றால், புதியபுதிய பொருட்கள், புதியபுதிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹிமாச்சல், உத்தராகண்டில் விளையும் சிறுதானிய அனுப்பீடுகள் டென்மார்க் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் விளையும் பங்கனபல்லி, சுவர்ணரேகா மாம்பழ ரகங்கள், தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. திரிபுராவில் விளையும் புத்தம்புதுப் பலாப்பழம், விமானம் வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதன்முறையாக நாகாலாந்தின் கிங் பெப்பர் என்ற மிளகு ரகம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இதே போன்று பாலியா கோதுமையின் முதல் அனுப்பீடு, குஜராத்திலிருந்து கென்யாவுக்கும், இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்போது நீங்கள் பிற நாடுகளுக்குச் சென்றால், அங்கே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் முன்பை விட அதிகமாகக் காணக் கிடைக்கும்.
நண்பர்களே, இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது, எத்தனை நீளமாக இந்தப் பட்டியல் இருக்கிறதோ, அத்தனை பெரியதாக நமது சக்தி உள்ளது இந்தியாவில் தயாரிப்போம் என்பதன் சக்தி, அத்தனை விசாலமானதாக இருக்கிறது பாரதத்தின் திறமைகள். பாரதத்தின் வல்லமைக்கான ஆதாரம் – நமது விவசாயிகள், நமது கைவினைஞர்கள், நமது நெசவாளிகள், நமது பொறியாளர்கள், நமது சிறுதொழில் புரிவோர், நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை, மேலும் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், இவர்கள் அனைவரும் தான் மெய்யான ஆற்றல். இவர்களின் உழைப்பாலேயே 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை எட்ட முடிந்திருக்கிறது, பாரத நாட்டவரின் இந்த வல்லமை, இப்போது உலகின் மூலை முடுக்கெங்கும் புதிய சந்தைகளைச் சென்றடைந்திருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பாரதநாட்டவர் ஒவ்வொருவரும் உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்பவராக இருக்கும் போது, உள்ளூர்ப் பொருட்கள் உலகமயமானவையாக ஆவதற்கு அதிக காலம் பிடிக்காது. வாருங்கள், உள்ளூர் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம், நமது உற்பத்திகளின் செல்வாக்கை மேலும் அதிகரிப்போம்.
நண்பர்களே, குடிசைத் தொழில் என்ற அளவிலும் கூட நமது சிறுதொழில்முனைவோரின் வெற்றி நமக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை மனதின் குரல் நேயர்கள் உண்ர்வார்கள். இன்று நமது சிறு தொழில்முனைவோர், கொள்முதலுக்கான அரசின் தளமான Government e-Market place அதாவது GeM வாயிலாக, பெரிய பங்காண்மை ஆற்றி வருகின்றார்கள். தொழில்நுட்பம் வாயிலாக பெரிய அளவிலான ஒளிவுமறைவற்ற அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஓராண்டில் ஜெம் வலைவாசல் வாயிலாக, அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை வாங்கியிருக்கிறது. தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம் சிறு தொழில்முனைவோர், சிறிய வியாபாரிகள் ஆகியோர் தங்களுடைய பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில், பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடிந்தது. ஆனால் இப்போது தேசம் மாறி வருகிறது, பழைய வழிமுறைகளும் மாறி வருகின்றன. இப்போது சிறிய கடைக்காரர்களும் கூட ஜெம் வலைவாசலில் அரசுக்குத் தங்களுடைய பொருட்களை விற்க முடியும், இது தானே புதிய பாரதம்!! இவர்கள் பெரிய கனவுகளைக் காண்பதோடு, யாருமே இதுவரை எட்டாத, அந்த இலக்கை எட்டும் துணிவையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் துணிவின் துணை கொண்டு பாரதநாட்டவர் நாமனைவருமாக இணைந்து, தற்சார்பு பாரதத்தின் கனவைக் கண்டிப்பாக மெய்யாக்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, தற்போது நடைபெற்ற பத்ம விருதுகள் அளிக்கப்படும் நிகழ்ச்சியில் நீங்கள் பாபா சிவானந்த் அவர்களைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். 126 வயது நிரம்பிய பெரியவரின் சுறுசுறுப்பைப் பார்த்து, என்னைப் போலவே அனைவரும் ஆச்சரியத்திலே ஆழ்ந்து போயிருப்பார்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்கு உள்ளாக அவர் நந்தி முத்திரையில் வணக்கம் செய்யத் தொடங்கியதை கவனித்தேன். நானுமே கூட குனிந்து மீண்டும் மீண்டும் பாபா சிவானந்தருக்கு வணக்கம் தெரிவித்தேன். 126 வயது, பாபா சிவானந்தரின் உடலுறுதி, என இந்த இரண்டும் இன்று தேசத்தின் விவாதப் பொருளாகி இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் பலரின் கருத்துக்களை நான் கவனித்தேன், அதாவது பாபா சிவானந்தர், தனது வயதை விட 4 மடங்கு குறைந்த வயதானவரை விடவும் அதிக உடலுறுதியோடு இருக்கிறார் என்பது போன்று. மெய்யாகவே, பாபா சிவானந்தரின் வாழ்க்கை நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அவருடைய நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவரிடத்திலே யோகக்கலை தொடர்பான ஒரு பேரார்வம் இருக்கிறது, மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அவர் வாழ்ந்து வருகிறார்.
ஜீவேம சரத: சதம்.
जीवेम शरदः शतम् |
நமது கலாச்சாரத்தில் அனைவருக்குமே 100 ஆண்டுக்காலம் வாழ நல்வாழ்த்துக்கள் அளிக்கப்படுகிறது. நாம் ஏப்ரல் 7 அன்று உலக ஆரோக்கிய தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இன்று உலகெங்கிலும் ஆரோக்கியம் தொடர்பாக பாரதநாட்டு எண்ணப்பாடு, அது யோகக்கலையாகட்டும், ஆயுர்வேதமாகட்டும், இவை தொடர்பாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. இப்போது கூட நீங்கள் கவனித்திருக்கலாம், கடந்த வாரத்தில் கத்தார் நாட்டில் ஒரு யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே 114 நாடுகளின் குடிமக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், இது ஒரு புதிய உலக சாதனையாக ஆனது. இதைப் போலவே, ஆயுஷ் தயாரிப்புத் துறையின் சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய மருந்துகளுக்கான சந்தை 22,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றோ, ஆயுஷ் தயாரிப்புத் துறை, ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டி வருகிறது. அதாவது இந்தத் துறையின் சாத்தியக்கூறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் உலகிலும் கூட ஆயுஷ், ஈர்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, உடல்நலத் துறையின் பிற ஸ்டார்ட் அப்புகள் பற்றி நான் முன்பே கூட பலமுறை பேசியிருக்கிறேன்; ஆனால் இந்த முறை ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகள் பற்றி உங்களோடு சிறப்பான வகையில் உரையாட இருக்கிறேன். ஒரு ஸ்டார்ட் அப்பின் பெயர் கபிவா. இதன் பெயரில் தான் இதன் பொருள் மறைந்திருக்கிறது. இதில் இருக்கும் க என்பதன் பொருள் கபம், பி என்பதன் பொருள் பித்தம், வா என்பதன் பொருள் வாதம். இந்த ஸ்டார்ட் அப், நமது பாரம்பரியங்களின்படி ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஆதாரமாகக் கொண்டது. மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான நிரோக்-ஸ்ட்ரீட் உள்ளது, அதே போல ஆயுர்வேத உடல்பராமரிப்புச் சூழலமைப்பில் ஒரு வித்தியாசமான கோட்பாடு உள்ளது. இதன் தொழில்நுட்பத்தால் இயங்கும் தளம், உலகெங்கிலும் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர்களை நேரடியாக மக்களோடு இணைத்து வைக்கிறது. 50000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதைப் போன்றே, ஆத்ரேயா கண்டுப்பிடிப்புகள், ஒரு உடல்பராமரிப்புத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ஆகும்; இது முழுமையான நலன் என்ற துறையில் பணியாற்றி வருகிறது. இக்ஸோரியல் என்பது அஸ்வகந்தா பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருப்பதோடு, தலைசிறந்த தரம் வாய்ந்த தயாரிப்புச் செயல்முறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. க்யூர்வேதா, மூலிகைகளின் நவீன ஆய்வு, பாரம்பரிய ஞானம் ஆகியவற்றின் சங்கமம் வாயிலாக முழுமையான நல்வாழ்விற்குத் தேவையான துணை உணவை ஏற்படுத்தி இருக்கிறது.
நண்பர்களே, நான் இப்போது சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் மிக நீளமானது. இவை பாரதநாட்டின் இளம் தொழில்முனைவோர், பாரதத்தில் உருவாகி வரும் புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடையாளம். உடல் பராமரிப்புத் துறையின் ஸ்டார்ட் அப்புகள், குறிப்பாக ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகளிடத்தில் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விழைகிறேன். நீங்கள் நிகழ்நிலையில் ஏற்படுத்தும் வலைவாசலை, ஐக்கிய நாடுகள் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் கூட உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பது தான் அது. உலகின் பல நாடுகளில் ஆங்கிலம் அதிகம் பேசப்படுவதுமில்லை, புரிந்து கொள்ளப்படுவதும் இல்லை. இப்படிப்பட்ட நாடுகளையும் கூட கவனத்தில் கொண்டு, உங்கள் தகவல்களின் பரப்புரையைச் செய்ய வேண்டும். பாரதத்தின் ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகள், மிகச் சிறப்பான தரமுள்ள பொருட்களோடு கூட, விரைவாக, உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது தூய்மை. மனதின் குரலில் நாம் எப்போதுமே தூய்மை ஆர்வலர்களின் முயற்சிகளைக் கண்டிப்பாக வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு தூய்மை ஆர்வலர் சந்திரகிஷோர் பாடில் அவர்கள். இவர் மஹாராஷ்டிரத்தின் நாசிக்கில் வசித்து வருகிறார். சந்திரகிஷோர் அவர்களுடைய தூய்மை தொடர்பான உளவுறுதி மிகவும் ஆழமானது. இவர் கோதாவரி நதிக்கருகே நின்று கொண்டு, நதியிலே குப்பைக் கூளங்களை வீசி எறியாதிருக்கும் வகையில் மக்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். யாராவது அப்படி வீசினால், உடனடியாக இவர் அவர்களைத் தடுக்கிறார். இந்தச் செயலில் கணிசமான நேரத்தை செலவிடுகிறார் சந்திரகிஷோர் அவர்கள். மாலை நேரத்திற்குள்ளாக, வழக்கமாக நதியிலே வீசியெறியப்பட்டிருக்கும் குப்பைக் கூளப் பொதி இவரிடத்தில் குவிந்து விடுகிறது. சந்திரகிஷோர் அவர்களின் இந்த முயல்வு, விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது, உத்வேகத்தையும் அளிக்கிறது. இதைப் போலவே மேலும் ஒரு தூய்மை ஆர்வலரான ஒடிஷாவின் புரியைச் சேர்ந்த ராஹுல் மஹாராணா. ராஹுல் ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை வேளையில் புரீயில் இருக்கும் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று, அங்கே இருக்கும் நெகிழிக் குப்பைகளை அகற்றுகிறார். இவர் இப்போது வரை ஆயிரக்கணக்கான கிலோ அளவுள்ள நெகிழிக் குப்பைகளையும் கூளங்களையும் அகற்றியிருக்கிறார். புரீயின் ராஹுலாகட்டும், நாசிக்கின் சந்திரகிஷோராகட்டும், இவர்கள் நம்மனைவருக்கும் மிகப்பெரிய கற்பித்தலை அளிக்கிறார்கள். குடிமக்கள் என்ற முறையில் நாம் நமது கடமைகளை ஆற்ற வேண்டும், அது தூய்மையாகட்டும், ஊட்டச்சத்தாகட்டும், அல்லது தடுப்பூசியாகட்டும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவிகரமாக இருக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, முப்பத்தடம் நாராயணன் அவர்களைப் பற்றிப் பேசலாம் வாருங்கள்!! இவர் ஒரு திட்டத்தைத் தொடங்கினார், இதன் பெயர் Pots for water of life, அதாவது வாழ்க்கை என்ற நீருக்கான பானைகள் என்பது இதன் பொருள். நீங்கள் இந்தத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்டால், எத்தனை அருமையான பெயர் இது என்று நினைப்பீர்கள்.
நண்பர்களே, முப்பத்தடம் நாராயணன் அவர்கள் கோடையில் பறவைகளும் விலங்குகளும் நீருக்காகத் தவிக்கக் கூடாது என்பதற்காக, மண் பாத்திரங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தை நடத்தி வருகிறார். கோடையில் பறவைகள்-விலங்குகளின் தாகத்தைப் பார்த்து இவரே கூட வேதனை அடைந்தார். ஏன் தானே மண்கலயங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தைத் தொடங்கக் கூடாது, இதனால் மற்றவர்கள் இதைப் பெற்றுக் கொண்டு இதில் நீர் நிரப்பும் பணியை மட்டுமே செய்யட்டுமே என்ற எண்ணம் இவருக்கு உண்டானது. தற்போது நாராயணன் அவர்கள் விநியோகம் செய்திருக்கும் மண்கலயங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சதைக் கடக்க இருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள். தன்னுடைய இயக்கத்தில் இவர் ஒரு இலட்சமாவது மண் பாத்திரத்தை சாபர்மதியில் உள்ள காந்தியடிகளின் ஆசிரமத்திற்கு தானமளிப்பார். இன்று கோடைக்காலம் அடியெடுத்து வைக்கவிருக்கும் வேளையில், நாராயணன் அவர்களின் இந்தப் பணி நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கிறது, நமது புள்ளின-விலங்கின நண்பர்களுக்கு நீருக்கான ஏற்பாடுகளை நாம் செய்வோம்.
நண்பர்களே, நாம் நமது உள உறுதிப்பாடுகளை மீண்டும் உரைப்போம் என்று நான் மனதின் குரல் நேயர்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இதைத் தவிர நீரின் மறுசுழற்சி குறித்தும் நாம் அதே அளவு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் நீர், பூத்தொட்டிகளுக்கும், தோட்டங்களுக்கும் மறுபயனாகும், இதை நாம் கண்டிப்பாக மீள்பயன்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். சற்றே முயன்றாலும் கூட, நமது வீடுகளில் இதற்குத் தோதான அமைப்பு முறைகளை ஏற்படுத்திவிட முடியும். ரஹீம்தாஸ் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சில காரணங்களுக்காகவே இப்படிக் கூறியிருக்கிறார், ரஹிமன் பானீ ராகியே, பின் பானி ஸப் சூன். அதாவது நீரைச் சேமியுங்கள், நீரில்லா உலகு பாழ் என்கிறான் ரஹீம் என்பதே இதன் பொருள். நீரைச் சேமிக்கும் பணியில் எனக்குக் குழந்தைகள் மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது. தூய்மை விஷயத்தை எவ்வாறு நமது குழந்தைகள் ஒரு இயக்கமாக ஆக்கினார்களோ, அதே போலவே அவர்கள் Water Warriorsஆக, நீருக்கான போராளிகளாக மாறி, நீரைப் பராமரிப்பதில் துணைநிற்க வேண்டும்.
நண்பர்களே, நமது தேசத்தில் நீர்ப் பராமரிப்பு, நீராதாரங்களின் பாதுகாப்பு ஆகியன பல நூற்றாண்டுகளாகவே சமூகத்தின் இயல்பின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. நீர்ப்பராமரிப்பைத் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகவே தேசத்தில் பலர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஒரு நண்பர். அருண் அவர்கள் தனது பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் 150க்கும் மேற்பட்ட குளங்கள்-ஏரிகளில் மாசகற்றும் கடமையை மேற்கொண்டிருக்கிறார், இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதைப் போலவே, மஹாராஷ்டிரத்திலும் ரோஹன் காலே என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். ரோஹன் ஒரு மனிதவள மேம்பாட்டு வல்லுநர். இவர் மஹாராஷ்டிரத்தின் ஆயிரக்கணக்கான படிக்கிணறுகளைப் பராமரிப்பது என்ற குறிக்கோளை மேற்கொண்டிருக்கிறார். இவற்றில் பல, பலநூறு ஆண்டுகள் பழைமையானவை, நமது மரபின் அங்கங்களாக விளங்குகின்றன. செகந்தராபாதின் பன்சீலால் பேட் கிணறு, இப்படிப்பட்ட ஒரு படிக்கிணறு தான். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக, அதில் மண்ணும் குப்பையும் நிரம்பி மூடியிருக்கிறது. ஆனால் இப்போது அங்கே இந்தப் படிக்கிணற்றினை மீளுயிர்ப்பிக்க மக்கள் பங்கெடுப்போடு ஒரு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நான் எந்த மாநிலத்திலிருந்து வந்திருக்கின்றேனோ, அங்கே நீருக்கான தட்டுப்பாடு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். குஜராத்திலே இந்த படிக்கிணறுகளை வாவ் என்று அழைப்போம். குஜராத் போன்ற மாநிலத்தில் வாவ் என்ற இந்த குளங்களின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்தக் கிணறுகள் அல்லது குளங்களின் பராமரிப்புக்காக ஜல் மந்திர் யோஜனா என்ற நீர்க்கோயில் திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறது. குஜராத் நெடுக பல குளங்களின் மீளுயிர்ப்பு புரியப்பட்டிருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க பேருதவியாக இருந்திருக்கிறது. இதே போன்ற இயக்கத்தை நீங்களும் வட்டார அளவில் செயல்படுத்த முடியும். தடுப்பணைகள் கட்டுவதாகட்டும், மழைநீர் சேகரிப்பாகட்டும், இதிலே தனிநபரின் முயற்சி முக்கியமானது, அதே போல கூட்டுமுயற்சிகளும் அவசியமானவை. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் விதத்தில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 75 அமிர்த ஏரிகளை உருவாக்க முடியும். சில பழைய ஏரிகளை மேம்படுத்தலாம், சில புதிய ஏரிகளை ஏற்படுத்தலாம். நீங்கள் இந்தத் திசையில் நல்ல முயற்சிகளைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் அழகே என்னவென்றால், இதில் உங்களிடமிருந்து செய்திகள்-தகவல்கள் பல மொழிகளில், பல வழக்கு மொழிகளில் கிடைப்பது தான். பலர் மைகவ் தளத்தில் ஒலித் தகவல்களையும் அனுப்புகிறார்கள். பாரதத்தின் கலாச்சாரம், நமது மொழிகள், நமது வழக்கு மொழிகள், நமது வாழ்க்கைமுறை, உணவு முறைகள் என இவையனைத்து பன்முகத்தன்மையும் தான் நமது மிகப்பெரிய வலிமை. கிழக்கு முதல் மேற்கு வரை, வடக்கு முதல் தெற்கு வரை பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மை தான் நம்மை ஒருங்கிணைத்து வைக்கிறது, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஆக்கி வைக்கிறது. இதிலும் கூட நமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புராணக் கதைகள், இரண்டிற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்த விஷயம் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். காரணம் மாதவ்பூர் மேளா. இந்த மாதவ்பூர் மேளா என்பது எங்கே தொடங்கியது, ஏன் தொடங்கியது, எப்படி இது பாரதத்தின் பன்முகத்தன்மையோடு இணைந்தது என்பதை மனதின் குரலின் நேயர்களான நீங்கள் அறிந்து கொண்டால் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நண்பர்களே, மாதவ்பூர் மேளா என்பது குஜராத்தின் போர்பந்தரின் கடலோர கிராமமான மாதவ்பூரிலே நடக்கிறது. ஆனால் இந்தியாவின் கிழக்கு எல்லையோரத்தோடும் இதற்குத் தொடர்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம்? இதற்கான விடையை ஒரு புராணக்கதை நமக்கு அளிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமணம் வடகிழக்கின் அரசகுமாரி ருக்மணியோடு நடந்தது என்று கூறப்படுகிறது. இந்தத் திருமணம் போர்பந்தரின் மாதவ்பூரில் நடைபெற்றது, இந்தத் திருமணத்தின் அடையாளமாக இன்றும் கூட அங்கே மாதவ்பூரில் திருவிழா நடக்கிறது. கிழக்கும் மேற்கும் இணையும் அழகான, ஆழமான பந்தம், இதுவே நமது பாரம்பரியம். காலப்போக்கில் இப்போது மக்களின் முயற்சியால், மாதவ்பூரின் திருவிழாவோடு புதியபுதிய விஷயங்களும் இணைந்து விட்டன. எங்கள் பக்கங்களில் பெண்வீட்டாரை கராதீ என்பார்கள்; இந்தத் திருவிழாவில் இப்போது வடகிழக்கிலிருந்து ஏகப்பட்ட கராதீயினர் வரத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு வாரம் வரை நடைபெறும் இந்த மாதவ்பூர் திருவிழாவில் வடகிழக்கின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் வருகிறார்கள், கைவினைஞர்கள் வருகிறார்கள், இந்தத் திருவிழாவின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகிறார்கள். ஒரு வாரம் வரை பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்கின் கலாச்சாரங்களின் இந்த இணைவு, மாதவ்பூரின் இந்தத் திருவிழாவானது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கான மிக அழகான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. நீங்களும் இந்தத் திருவிழா பற்றிப் படியுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தில் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம், இப்போது மக்களின் பங்கெடுப்புக்கான புதிய எடுத்துக்காட்டாக ஆகி வருகிறது. சில நாட்கள் முன்பாக மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று, தியாகிகள் தினத்தன்று தேசத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தேசம் தனது சுதந்திரத்திற்காக உயிர்துறந்த நாயகர்கள் நாயகிகளை, மிகுந்த சிரத்தையோடு நினைவு கூர்ந்தது. இதே நாளன்று கோல்காத்தாவின் விக்டோரியா நினைவகத்தின் பிப்லோபீ பாரத் காட்சியகத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பாரதத்தின் வீரம்நிறைந்த புரட்சியாளர்களுக்கு நினைவாஞ்சலிகளை அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான காட்சியகம் இது. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் இதைக் காணச் சென்று வாருங்கள். நண்பர்களே, ஏப்ரல் மாதத்தில் நாம் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த நாட்களைக் கொண்டாட இருக்கிறோம். இவர்கள் இருவருமே பாரத சமுதாயம் மீது தங்களுடைய ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மாபெரும் ஆளுமைகள் – மஹாத்மா புலேவும், பாபாசாஹேப் அம்பேட்கரும் தான். மஹாத்மா புலேயின் பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று வருகிறது, பாபா சாஹேபின் பிறந்த நாளை நாம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று கொண்டாடுவோம். இந்த இரு மாமனிதர்களும் வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராகப் பெரும் போரைத் தொடுத்தார்கள். மஹாத்மா புலே அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிகளைத் திறந்தார், பெண் சிசுக் கொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார். நீர்த் தட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடையவும் கூட மாபெரும் இயக்கத்தை அவர் நடத்தினார்.
நண்பர்களே, மஹாத்மா புலேயின் இந்தப் போராட்டத்தில் சாவித்ரீபாய் புலே அவர்களின் பங்களிப்பும் அதே அளவுக்கு மகத்துவம் நிறைந்தது. சாவித்ரிபாய் புலே பல சமூக அமைப்புக்களை நிறுவிப் பெரும்பங்காற்றினார். ஓர் ஆசிரியை, ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் அவர் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அதன் தன்னம்பிக்கையையும் அதிகரித்தார். இருவருமாக இணைந்து சத்யஷோதக் சமாஜ் என்ற அமைப்பை நிறுவினார்கள். அனைத்து மக்களின் அதிகாரப்பங்களிப்பு விஷயத்தில் முயற்சி மேற்கொண்டார்கள். பாபாசாஹேப் அம்பேட்கரின் செயல்களிலும் கூட மஹாத்மா புலேயின் தாக்கத்தை நம்மால் தெளிவாகக் காண முடியும். எந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் அளவிட வேண்டுமென்றால், அந்த சமூகத்தில் பெண்களின் நிலையைப் பார்த்துத் தான் செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதுண்டு. மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேட்கர் ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று, நான் அனைத்து தாய் தந்தையர், காப்பாளர்கள் ஆகியோரிடத்திலும் விடுக்கும் வேண்டுகோள்– கண்டிப்பாகப் பெண் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என்பது தான். பள்ளிகளில் பெண் பிள்ளைகளின் சேர்க்கையை அதிகரிக்க சில நாட்கள் முன்பாக பெண் குழந்தைகள் கல்விச் சேர்க்கை விழாவும் தொடங்கப்பட்டிருக்கிறது; எந்தப் பெண் குழந்தைகளின் படிப்பு ஏதோ காரணத்தால் விடுபட்டுப் போயிருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களை மீண்டும் பள்ளிகளுக்குக் கொண்டு வர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நண்பர்களே, நம்மனைவருக்குமே பேற்றினை அளிக்கும் விஷயம் என்னவென்றால், பாபாசாஹேபோடு இணைந்த பஞ்ச தீர்த்தங்களுக்கான பணியில் ஈடுபடும் சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது என்பது தான். அவருடைய பிறந்த இடமான மஹூவாகட்டும், மும்பையில் அவருடைய பூதவுடல் எரியூட்டப்பட்ட இடமான சைத்திய பூமியாகட்டும், லண்டனில் அவருடைய வீடாகட்டும், நாகபுரியில் தீக்ஷா பூமியாகட்டும், தில்லியில் பாபாசாஹேபின் மஹாபரிநிர்வாண, அதாவது மறைந்த இடமாகட்டும், இந்த அனைத்து இடங்களுக்கும், அனைத்துத் தீர்த்தங்களுக்கும் செல்லக்கூடிய பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. மனதின் குரல் நேயர்களான உங்கள் அனைவரிடத்திலும், நான் விடுக்கும் வேண்டுகோள் – மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேட்கரோடு தொடர்புடைய இடங்களைக் கண்டிப்பாகக் காணச் செல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை நாம் பல விஷயங்கள் குறித்துக் கலந்தோம். அடுத்த மாதம், பல பண்டிகைகள்-புனித நாட்கள் வரவிருக்கின்றன. சில நாட்கள் கழித்து நவராத்திரி வரவிருக்கிறது. நவராத்திரியில் நாம் விரதங்கள்-உபவாசங்கள் இருப்பதோடு, சக்தியைப் பூஜிக்கிறோம், சக்திசாதனை புரிகிறோம், அதாவது நமது பாரம்பரியங்கள் நமக்குக் கேளிக்கையையும் கற்பிக்கின்றன, கட்டுப்பாட்டையும் அறிவுறுத்துகின்றன. கட்டுப்பாடும் தவமும் கூட நமக்குப் புனிதமானவை, ஆகையால் நவராத்திரி என்பது எப்போதுமே நம்மனைவருக்கும் மிகவும் விசேஷமானது. நவராத்திரிக்கு முந்தைய நாளன்று குடீ பட்வா திருநாளும் வருகிறது. ஏப்ரல் மாதம் தான் ஈஸ்டரும் வருகிறது, ரமலான் புனித காலமும் தொடங்கவிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம், பாரதத்தின் பன்முகத்தன்மையை மேலும் பலப்படுத்துவோம், அனைவரின் விருப்பமும் இது தான். இந்த முறை மனதின் குரலில் இவை மட்டுமே. அடுத்த மாதம் புதிய விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மனதின் குரலின் தொடக்கத்தை நாம் பாரதத்தின் வெற்றியோடு செய்யலாம். இந்த மாதத் தொடக்கத்தில் மிகவும் விலைமதிப்புள்ள தனது மரபுச்சொத்தினை பாரதம் இத்தாலியிலிருந்து மீட்டெடுத்து வந்திருக்கிறது. அவலோகிதேஸ்வர் பத்மபாணியின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த திருவுருவச் சிலை தான் இந்த மரபுச் சொத்து. இந்தத் திருவுருவச் சிலையானது சில ஆண்டுகள் முன்பாக, பிஹாரின் கயா ஜீயின் தேவீஸ்தானம் குண்டல்புர் ஆலயத்திலிருந்து களவு போனது. ஆனால் பல முயற்சிகளின் பலனாக, இப்போது பாரதத்திற்கு இந்தத் திருவுருவச் சிலை திரும்பக் கிடைத்திருக்கிறது. இதே போன்று தான் சில ஆண்டுகள் முன்பாக தமிழ்நாட்டின் வேலூரிலிருந்து பகவான் ஆஞ்ஜநேயரின் திருவுருவச் சிலை களவு போனது. ஆஞ்ஜநேயரின் இந்தத் திருவுருவச் சிலையானது 600-700 ஆண்டுகள் பழைமையானது. இந்த மாதத் தொடக்கத்தில், ஆஸ்ட்ரேலியாவில் இது நமக்குக் கிடைத்தது, நமது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி இது.
நண்பர்களே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நமது சரித்திரத்தில், தேசத்தின் பல்வேறு மூலைகளிலும், ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய வகையில் அற்புதமான திருவுருவச் சிலைகளும் கலைப்பொருட்களும் உருவாக்கப்பட்டு வந்தன, இதிலே அர்ப்பணிப்பும் இருந்தது, கைவண்ணமும் இருந்தது, திறமை இருந்தது, பன்முகத்தன்மையும் நிறைந்திருந்தது, மேலும் நமது அனைத்து திருவுருவச் சிலைகளிலும், அவை உருவாக்கப்பட்ட காலத்தின் தாக்கமும் காணக் கிடைத்தன. இது பாரதத்தின் சிற்பக்கலையின் அதிஅற்புதமான எடுத்துக்காட்டாக இருப்பதோடு கூடவே, நமது நம்பிக்கையோடு தொடர்புடைய ஒன்றும் கூட. ஆனால், கடந்த காலத்தில் நமது பல திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டு, பாரதத்தை விட்டுச் சென்று கொண்டிருந்தன. உலகின் ஏதோ ஒரு நாட்டிலே இவை விற்கப்பட்டு வந்தன, அவர்களைப் பொறுத்த மட்டிலே இவை வெறும் கலைப்படைப்புகள் மட்டுமே. இவற்றை வாங்குபவர்களுக்கு இவற்றின் வரலாற்றோடு எந்தப் பிடிப்போ, அர்ப்பணிப்போ கிடையாது. இந்தத் திருவுருவச் சிலைகளை மீட்டுக் கொண்டு வருவது என்பது பாரத அன்னையிடத்தில் நமக்கிருக்கும் கடமை. இந்த திருவுருவச் சிலைகளில் பாரதத்தின் ஆன்மாவின், நமது நம்பிக்கையின் அம்சம் உறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் ஒரு சரித்திர-கலாச்சார மகத்துவமும் அடங்கி இருக்கிறது. இந்தப் பொறுப்பினைப் புரிந்து கொண்டு பாரதம் தனது முயல்வுகளை அதிகரித்தது. இதன் காரணமாக என்ன ஆனது என்றால், களவு செய்தல் என்ற இயல்பிலும், ஒரு விதமான அச்சம் ஏற்பட்டது. இந்தத் திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டு எந்த நாடுகளுக்கு எல்லாம் கொண்டு செல்லப்பட்டனவோ, அந்த நாடுகளுக்கு, பாரதத்துடனான உறவுகளில், ராஜரீக வழிகள் என்ற வகையில் இதற்கு பெரிய மகத்துவம் இருக்கிறது என்பது அந்த நாடுகளுக்கும் புரியத் தொடங்கியது. ஏனென்றால் இதோடு பாரதத்தின் உணர்வுகள் இணைந்திருக்கின்றன, பாரதத்தின் அர்ப்பணிப்பு இணைந்திருக்கிறது, ஒரு வகையில் மக்களுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளின் மிகப்பெரிய பலத்தை இது ஏற்படுத்த வல்லது. சில நாட்கள் முன்பாக நீங்கள் கவனித்திருக்கலாம், காசியிலே களவு போன அன்னை அன்னபூரணி தேவியின் திருவுருவச் சிலை மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது பாரதம் தொடர்பாக மாறி வரும் உலக அளவிலான கண்ணோட்டத்தின் எடுத்துக்காட்டு. 2013ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 13 திருவுருவச் சிலைகள் பாரதம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற திருவுருவச் சிலைகளை பாரதத்தால் வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வர முடிந்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, ஃப்ரான்ஸ், கனடா, ஜர்மனி, சிங்கப்பூர் என எத்தனையோ நாடுகள், இந்த உணர்வினைப் புரிந்து கொண்டார்கள், திருவுருவச் சிலைகளை மீட்டுக் கொண்டு வர நமக்கு உதவி புரிந்தார்கள். நான் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்ற போது, அங்கே மிகப் பழைமையான பல திருவுருவச் சிலைகளும், கலாச்சார மகத்துவம் வாய்ந்த பல பொருட்களும் கிடைத்தன. தேசத்தின் விலைமதிப்பற்ற மரபுச் சொத்து மீண்டும் கிடைக்கும் போது, வரலாற்றின் மீது அர்ப்பணிப்பு உடையோர், அகழ்வாராய்ச்சி மீது அர்ப்பணிப்புக் கொண்டோர், நம்பிக்கை மற்றும் கலச்சாரத்தோடு தொடர்புடையோர், மேலும் ஒரு இந்தியன் என்ற முறையில் நம்மனைவருக்கும் பேருவகை ஏற்படுவது என்பது இயல்பான விஷயம் தானே!!
நண்பர்களே, பாரத நாட்டுக் கலாச்சாரம்-பாரம்பரியம் பற்றிப் பேசும் போது, இன்று உங்களுக்கு மனதின் குரலில் இருவரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். டான்ஸானியா நாட்டைச் சேர்ந்த உடன்பிறப்புகளான கிலி பால், இவருடைய சகோதரி நீமா என்ற இவர்கள் இருவரும் முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நீங்களும் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்களுக்கு பாரதநாட்டு இசை மீது அளப்பரிய காதல் இருக்கிறது, ஆழமான பற்று இருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்கள். Lip Sync என்ற உதடுகளின் ஒத்திசைவு மூலம் இவர்கள் எத்தனை அதிகம் முயற்சி மேற்கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்போது, குடியரசுத் திருநாளை ஒட்டி, இவர்கள் நமது தேசிய கீதமான ஜன கண மனவை பாடியவாறு ஒரு அழகான காணொளியை தரவேற்றம் செய்திருந்தார்கள், இது அதிகமாகப் பகிரப்பட்டது. சில நாட்கள் முன்பாக இவர்கள் சகோதரி லதா அவர்களின் பாடலைப் பாடி, அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான சிரத்தாஞ்சலியை அர்ப்பணித்திருந்தார்கள். இவர்களின் அற்புதமான படைப்பாற்றலுக்காக, இந்த சகோதர சகோதரி இணையான கிலி-நீமாவுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்கள் முன்பாக டான்ஸானியாவின் இந்திய தூதரகத்தில் இவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இந்திய சங்கீதத்தின் ஜாலமே அலாதியானது தான், இது அனைவரையும் மயக்கி விடுகிறது. எனக்கு நினைவிருக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பாக உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பாடகர்கள்-இசைக்கலைஞர்கள் இணைந்து அவரவர் நாடுகளிலிருந்து, அவரவருடைய பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு, வணக்கத்துக்குரிய அண்ணலுக்குப் பிரியமான பஜனைப் பாடலான வைஷ்ணவ ஜன தோ பாடலை வெற்றிகரமாகப் பாடினார்கள்.
இன்று பாரதம் தனது 75ஆவது சுதந்திர ஆண்டு என்ற மகத்துவமான வேளையைக் கொண்டாடி வரும் போது, தேசபக்திப் பாடல்கள் வாயிலாகவும் இப்படிப்பட்ட ஒரு பிரயோகத்தைச் செய்யலாமே!! இதிலே அயல்நாட்டுக் குடிமக்களை, அங்கே இருக்கும் பிரபலமான பாடகர்களை, பாரத நாட்டு தேசபக்திப் பாடல்களைப் பாட அழைக்கலாம். இது மட்டுமல்ல, டான்ஸானியாவின் கிலி-நீமாவால் பாரத நாட்டுப் பாடல்களுக்கு உதடுகளின் ஒத்திசைவை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்றால், நமது நாட்டின் பல மொழிகளின் பலவகையான பாடல்களை, குஜராத்திக் குழந்தைகள் தமிழ்ப் பாடலைப் பாடலாம், கேரளத்துக் குழந்தைகள் அஸாமியப் பாடலைப் பாடலாம், கன்னடக் குழந்தைகள் ஜம்மு கஷ்மீரப் பாடலைப் பாடலாம். ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும்படியான ஒரு சூழலை ஏற்படுத்தலாம், அதை அனுபவிக்கலாம். இது மட்டுமல்ல, நாம் சுதந்திரத்தின் அமிர்த காலக் கொண்டாட்டத்தை, ஒரு புதிய முறையில் கண்டிப்பாகக் கொண்டாட முடியும். நான் தேசத்தின் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், இந்திய மொழிகளில் இருக்கும் பிரபலமான பாடல்களை, நீங்கள் உங்கள் எண்ணப்படி காணொளிப்படுத்துங்கள், நீங்கள் மிகவும் பிரபலமடைவீர்கள். மேலும் தேசத்தின் பன்முகத்தன்மை பற்றிய அறிமுகம் புதிய தலைமுறைக்குக் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நாம் தாய்மொழி தினத்தைக் கொண்டாடினோம். ஆன்றோர் சான்றோர்கள், தாய்மொழி என்ற சொல் எங்கிருந்து வந்தது, இது எப்படித் தோன்றியது என்பது பற்றியெல்லாம் நிறைய உள்ளீடுகளை அவர்கள் அளிக்கலாம். ஆனால் தாய்மொழி தொடர்பாக நான் கூறுவது என்னவென்றால், எப்படி நமது வாழ்க்கையை நமது தாயார் செதுக்கி உருவாக்குகிறாரோ, அதே போலத் தான், தாய்மொழியும் கூட, நமது வாழ்க்கையைச் செதுக்கி உருவாக்குகிறது. தாயும் தாய்மொழியும், இரண்டும் இணைந்து வாழ்க்கையின் அடித்தளத்தைப் பலப்படுத்துகின்றன, அமரத்துவமானதாக ஆக்குகின்றன. எப்படி நமது தாயாரை நம்மால் கைவிட முடியாதோ, அதே போல, நமது தாய்மொழியையும் நம்மால் விட்டு விட முடியாது. பல ஆண்டுகள் முன்பாக நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. நான் அமெரிக்கா செல்ல வேண்டி வந்த போது, பல்வேறு குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படித் தான் ஒரு முறை ஒரு தெலுகு குடும்பத்தினர் இல்லம் செல்லவேண்டி இருந்தது, அங்கே ஒரு மகிழ்ச்சியான காட்சியை என்னால் காண முடிந்தது. எத்தனை வேலை இருந்தாலும் சரி, நாங்கள் நகரத்திற்கு வெளியே இல்லை என்றால், முதலாவதாக குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்போம்; இரண்டாவதாக அப்படி உண்ணும் வேளையில் தாய்மொழியாம் தெலுகுவிலேயே பேசுவோம் என்று ஒரு விதியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார்கள். அவர்கள் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இதே விதிமுறை தான். அவர்களின் தாய்மொழி மீது அவர்களுக்கு இருந்த பற்றைப் பார்த்து, நான் மிகவும் கவரப்பட்டேன்.
நண்பர்களே, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் மனப்போராட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; இதன் காரணமாக இவர்கள் தங்கள் மொழி, தங்கள் உடைகள், தங்கள் உணவு முறைகள் ஆகியவை தொடர்பாக கூச்சப்படுகிறார்கள், ஆனால் உலகில் எங்குமே இப்படிப்பட்டதொரு நிலை இல்லை. நமது தாய்மொழியிலே நாம் பெருமிதத்தோடு உரையாட வேண்டும். மேலும் நமது பாரதம் மொழிகள் விஷயத்தில் மிகவும் வளமானது, எந்த நாடும் இதற்கு ஈடு இணையே கிடையாது. நமது மொழிகளில் இருக்கும் மிகப்பெரிய அழகே என்னவென்றால், கஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமாரி வரை, கட்ச் தொடங்கி கோஹிமா வரை, நூற்றுக்கணக்கான மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குகள், ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாக இருந்தாலும் கூட, ஒன்றோடு மற்றது பின்னிப் பிணைந்துள்ளன. பேசும் மொழிகள் பலவானாலும், உணர்வு ஒன்று தான். உலகிலேயே மிகத் தொன்மையான மொழி பாரதத்தின் தமிழ்மொழி, இதை ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் பொங்கக் கூற வேண்டும், இத்தகைய ஒரு பெருமரபு நம்மிடத்திலே இருக்கிறது. இதைப் போலவே, மிகத் தொன்மையான தர்மசாஸ்திர நூல்களும் கூட, நமது சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. பாரத நாட்டவர், கிட்டத்தட்ட, 121, அதாவது 121 வகையான தாய்மொழிகளோடு தொடர்புடையவர்கள் என்பதை நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். இவற்றிலே 14 மொழிகளை, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே பேசி வருகிறார்கள். அதாவது இந்த அளவுக்கு பல ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கட்தொகையே கூட கிடையாது, அதை விட அதிகம் பேர்கள் நமது பல்வேறுபட்ட 14 மொழிகளோடு இணைந்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு, ஹிந்தி மொழி, உலகின் மிக அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த விஷயம் அனைத்து இந்தியர்களுக்கும் நெஞ்சை நிமிர்த்த வைக்கும் ஒன்றாகும். மொழி என்பது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் மட்டும் அல்ல; மாறாக, மொழி என்பது சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காக்கும் பணியையும் புரிகிறது. தங்களுடைய மொழியின் பாரம்பரியத்தைக் காக்கும் இப்படிப்பட்டதொரு பணியை சூரினாமைச் சேர்ந்த சுர்ஜன் பரோஹீ அவர்கள் செய்து வருகிறார்கள். இந்த மாதம் 2ஆம் தேதியன்று அவருக்கு 84 வயதானது. இவருடைய முன்னோர்களும், பல ஆண்டுகள் முன்பாக, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளோடு, தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக, சூரினாம் சென்றார்கள். சுர்ஜன் பரோஹீ அவர்கள் ஹிந்தி மொழியில் மிகச் சிறப்பாகக் கவிதைகள் வடிப்பவர், அங்கிருக்கும் தேசியக் கவிகளில் இவரும் இடம் பெறுகிறார். அதாவது, இன்றும் கூட இவருடைய இதயத்தில் இந்துஸ்தானம் பற்றிய துடிப்பு இருக்கிறது, இவருடைய செயல்களில் இந்தியாவின் மண்ணின் மணம் கமழ்கிறது. சூரினாம் நாட்டு மக்கள், சுர்ஜன் பரோஹீ அவர்களின் பெயரில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டிலே, இவரை கௌரவப்படுத்தும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது என்பது எனக்கு ஒரு சுகமான அனுபவம்.
நண்பர்களே, இன்றைய நாள் அதாவது பெப்ருவரி 27 என்பது மராத்தி மொழியின் பெருமித நாளும் ஆகும்.
“सर्व मराठी बंधु भगिनिना मराठी भाषा दिनाच्या हार्दिक शुभेच्छा|”
அதாவது, அனைத்து மராட்டியர்களுக்கும், மராத்தி மொழி நாளை ஒட்டி என் மனம்நிறை நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளானது மராட்டி மொழிக் கவிஞர், விஷ்ணு பாமன் ஷிர்வாட்கர் அவர்கள், ஸ்ரீமான் குசுமாக்ரஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்று தான் குசுமாக்ரஜ் அவர்கள் பிறந்தார். குசுமாக்ரஜ் அவர்கள் மராட்டி மொழியில் கவிதைகள் எழுதினார், பல நாடகங்களை இயற்றினார், மராட்டி மொழி இலக்கியத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு சென்றார்.
நண்பர்களே, நமது நாட்டிலே மொழிகளுக்கு என பிரத்யேக அழகு உண்டு, தாய்மொழிக்கென ஒரு பிரத்யேக சூட்சுமம் உண்டு. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு தான், தேசியக் கல்விக் கொள்கையில், பிராந்திய மொழிகளில், கல்வி கற்றல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது தொழில்சார் படிப்புகளை பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் என்பது தொடர்பான முயல்வுகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், இந்த முயற்சிகளுக்கு நாமனைவரும் இணைந்து விரைவு கூட்ட வேண்டும், இது சுயமரியாதை பற்றிய விஷயம். அவரவர் பேசும் தாய்மொழிகளின் aழகினைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள், அதிலே ஏதாவது எழுதுங்கள் என்பதே என் விருப்பம்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, கென்யாவின் முன்னாள் பிரதமரும், எனது நண்பருமான ராய்லா ஓடிங்கா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பு சுவாரசியமாக இருந்ததோடு, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம், திறந்த மனத்தோடு பேசுவது உண்டு. நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, ஓடிங்கா அவர்கள் தன்னுடைய மகள் பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய மகள் ரோஸ்மேரிக்கு மூளையிலே கட்டி ஏற்பட்டு, இதன் காரணமாக மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. ஆனால் இதன் மோசமான விளைவாக என்ன ஆனது என்றால், ரோஸ்மேரியின் பார்வைத் திறன் மெல்ல மெல்ல பறிபோனது. அந்த மகளின் நிலையையும், தகப்பனின் நிலையையும் நீங்களே கற்பனை செய்து பாருங்கள், அவருடைய உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்!! அவர் உலகம் முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம், உலகின் அத்தனை பெரியபெரிய நாடுகளில் எல்லாம் மகளின் சிகிச்சைக்காக முழுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் பலனேதும் கிடைக்கவில்லை, ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வேளையில் யாரோ ஒருவர், பாரதத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது பற்றி ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஓடிங்கா அவர்கள் மிகவும் களைத்திருந்தார், சோர்ந்து போயிருந்தார்; இருந்தாலும் கூட, சரி ஒரு முறை முயற்சி தான் செய்து பார்த்து விடலாமே என்று தீர்மானித்து, கேரளத்தில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தன் மகளின் சிகிச்சையை ஆரம்பித்தார். ஆயுர்வேத சிகிச்சையின் பலனாக ரோஸ்மேரியின் கண்களில் பார்வைத்திறன் கணிசமாக மீண்டது. புதியதொரு வாழ்க்கை கிடைத்தாற்போல, ரோஸ்மேரியின் வாழ்க்கையில் ஒளி துலங்கியது மட்டுமல்லாமல், குடும்பம் முழுவதிலும் புதிய ஒளி பாய்ந்தது, புதிய வாழ்க்கை பிறந்தது, ஓடிங்கா அவர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சி வெள்ளத்தில் திளைத்துப் போனார் என்றால், பாரதத்தின் ஆயுர்வேத ஞானம், விஞ்ஞானம் கென்யாவுக்குக் கிடைக்க வேண்டும் என்று என்னிடத்தில் தனது விருப்பத்தை வெளியிட்டார். எந்த மாதிரியான தாவரங்கள் இதற்கு உதவியாக இருக்கின்றனவோ, அந்தச் செடிகளை வளர்க்கலாம், இதனால் ஆதாயம் பலருக்குக் கிடைக்கும், இது தொடர்பாக முழு முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.
நமது மண்ணும், பாரம்பரியமும் ஒருவருடைய வாழ்க்கையின் இத்தனை பெரிய சங்கடத்தைத் துடைத்தெறிந்திருக்கின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம். இது உங்களுக்கும் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. எந்த இந்தியருக்குத் தான் இதில் பெருமிதம் ஏற்படாது? ஓடிங்கா அவர்கள் மட்டுமல்ல உலகின் இலட்சக்கணக்கானோர் ஆயுர்வேதத்தால் ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.
பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்ல்ஸ் அவர்களும் கூட ஆயுர்வேதத்தைப் பாராட்டுபவர்களில் ஒருவர். எப்போதெல்லாம் அவரை நான் சந்திக்க நேர்கிறதோ, அப்போதெல்லாம் ஆயுர்வேதம் பற்றிக் கண்டிப்பாகப் பேசுவார். அவருக்கு பாரதத்தின் பல ஆயுர்வேத அமைப்புகள் பற்றித் தெரியும்.
நண்பர்களே, கடந்த ஏழு ஆண்டுகளில் தேசத்தின் ஆயுர்வேதத்தின் பரவலாக்கம் பரப்புரை குறித்து அதிக கவனம் மேற்கொள்ளப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, சிகிச்சை மற்றும் உடல்நலத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான வழிமுறைகளைப் பிரபலப்படுத்தும் உறுதிப்பாட்டிற்கு மேலும் பலம் கிடைத்திருக்கிறது. கடந்த சில காலமாக ஆயுர்வேதத் துறையிலும் கூட பல புதிய ஸ்டார்ட் அப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் ஆயுஷ் ஸ்டார்ட் அப் சவால் தொடங்கப்பட்டது. இந்த சவாலின் இலக்கு, இந்தத் துறையில் பணிபுரியும் ஸ்டார்ட் அப்புகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஆதரவளிப்பது தான். இந்தத் துறையில் பணிபுரியும் இளைஞர்களிடம் என்னுடைய வேண்டுகோள், நீங்கள் அவசியம் இந்த சவாலில் பங்கெடுங்கள் என்பது தான்.
நண்பர்களே, ஒரு முறை அனைவரும் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டும் என்று உறுதி பூண்டு விட்டால், அற்புதங்கள் நிகழும். மக்களின் பங்கெடுப்பு மற்றும் சமூக முயல்வுகள் காரணமாகவே சமூகத்தில் பல பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. மிஷன் ஜல் தல், அதாவது நீர்-நிலம் இயக்கம் என்ற பெயர் கொண்ட ஒரு இயக்கத்தை கஷ்மீரத்தின் ஸ்ரீநகரில் செயல்படுத்தினார்கள். ஸ்ரீநகரில் இருக்கும் ஏரிகள்-குளங்களைச் சுத்தம் செய்தல், அவற்றின் பழைய உன்னத நிலையை ஏற்படுத்தல் என்ற வித்தியாசமான முயற்சி இது. மிஷன் ஜல் தல் என்பது குஷல் சார் மற்றும் கில் சார் ஏரிகள் மீட்பைக் குறிக்கோளாகக் கொண்டது. மக்களின் பங்கெடுப்போடு கூடவே இதிலே தொழில்நுட்பமும் மிகுந்த உதவி புரிந்திருக்கிறது. எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன, எங்கே சட்டவிரோதமான கட்டுமானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதோடு கூடவே நெகிழிக் கழிவுகளை அகற்றவும், குப்பைகளை நீக்கவும் இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டமாக, பழைய நீர்வழிகள் மற்றும் ஏரியை நிரப்பக்கூடிய 19 நீரூற்றுக்களை மீட்டெடுக்கவும் முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த மீட்டெடுத்தல் திட்டத்தின் மகத்துவம் குறித்து நிறைய விழிப்புணர்வு பரவ வேண்டும் என்பதற்காக, அந்தப் பகுதி மக்களும், இளைஞர்களும் நீர்த் தூதுவர்களாக ஆக்கப்பட்டார்கள். இப்போது இங்கிருக்கும் வட்டார மக்கள் கில்சார் ஏரியில் புலம்பெயர் பறவைகள் மற்றும் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள், இது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று. இந்த அருமையான முயற்சியின் பொருட்டு, ஸ்ரீநகரின் மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, எட்டு ஆண்டுகள் முன்பு, தேசத்தில் தொடங்கப்பட்ட தூய்மை பாரதம் இயக்கம் காலப்போக்கில் விரிவடைந்து வந்தது, புதியபுதிய புதுமைகள் இதோடு இணைந்தன. பாரதத்தில் நீங்கள் எங்கே சென்றாலும், அனைத்து இடங்களிலும் தூய்மை குறித்து ஏதாவது ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதை நீங்கள் கண்டிப்பாகக் காண முடியும். அஸாமின் கோக்ராஜாரில் இப்படிப்பட்ட ஒரு முயல்வு பற்றி எனக்குத் தெரிய வந்தது. இங்கே காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோரின் ஒரு குழு, தூய்மையான பசுமையான கோக்ராஜார் இயக்கத்திற்கு உட்பட்டு, பாராட்டுக்குரிய பல முயல்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் புதிய மேம்பாலப் பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையைச் சுத்தம் செய்து தூய்மை குறித்த உத்வேகம் அளிக்கும் செய்தியை அளித்திருக்கிறார்கள். இதைப் போலவே விசாகப்பட்டினத்திலும் தூய்மை பாரத இயக்கத்தின்படி பாலித்தீனுக்கு பதிலாக துணிப்பைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிருப்போர் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் தயாரிப்பிற்கு எதிராக இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். இதோடு கூடவே இவர்கள், வீட்டிலேயே குப்பைக்கூளங்களைப் பகுக்கக்கூடிய விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள். மும்பையின் சோமையா கல்லூரியின் மாணவர்கள், தூய்மை தொடர்பாக நடத்தும் அவர்களின் இயக்கத்தில் அழகினையும் இணைத்திருக்கின்றார்கள். இவர்கள் கல்யாண் ரயில்வே நிலையத்தின் சுவர்களை அழகான ஓவியங்களால் அழகுபடுத்தி இருக்கின்றார்கள். ராஜஸ்தானின் சவாயி மாதோபுரின் ஒரு உத்வேகமளிக்கும் எடுத்துக்காட்டும் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் இளைஞர்கள், ரண்தம்போரில் மிஷன் பீட் ப்ளாஸ்டிக், அதாவது நெகிழியை ஒழிப்போம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள். இதன்படி ரண்தம்போரின் காடுகளில் இருக்கும் நெகிழிப் பொருட்கள்-பாலித்தீன்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அனைவரின் முயல்வுகளில் இந்த உணர்வு, தேசத்தின் மக்கள் பங்களிப்பை பலப்படுத்துகிறது, இந்த மக்கள் பங்கெடுப்பு காரணமாக மிகப்பெரிய இலக்குகளும் கண்டிப்பாக நிறைவேறுகின்றன.
எனதருமை நாட்டுமக்களே, இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து, மார்ச் மாதம் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. பெண்களின் வல்லமை, திறமை, திறன்களோடு தொடர்புடைய ஏராளமான எடுத்துக்காட்டுக்களை நாம் மனதின் குரலில் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். திறன்மிகு இந்தியாவாகட்டும், சுயவுதவிக் குழுக்களாகட்டும், சிறியபெரிய தொழில்களாகட்டும், பெண்கள் அனைத்து இடங்களிலும் இன்று தலைமை தாங்கி வருகின்றார்கள். நீங்கள் எந்தத் துறையை வேண்டுமானாலும் பாருங்கள், பெண்கள் பழைய கருத்தியல்களைத் தவிடுபொடியாக்கி வருகின்றார்கள். நமது தேசத்தின் பாராளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்துக்கள் வரை, பல்வேறு துறைகளில் பெண்கள் புதிய உச்சங்களை எட்டியிருக்கின்றார்கள். இராணுவத்திலும் கூட பெண்கள் இப்போது புதிய, பெரிய பங்குபணிகளில் தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள், தேசத்தைப் பாதுகாத்து வருகின்றார்கள். கடந்த மாதம் குடியரசுத் தினத்தன்று, நவீன போர் விமானங்களை நமது பெண்கள் தாம் இயக்கினார்கள் என்பதை நாம் கவனித்தோம். தேசத்தின் இராணுவப் பள்ளிகளிலும் கூட பெண்கள் சேர்ப்புக்கு இருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது, தேசம் முழுவதும் பெண்கள் இராணுவப் பள்ளிகளில் சேர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதைப் போலவே நமது ஸ்டார்ட் அப் உலகினைப் பார்க்கும் பொழுது, கடந்த ஆண்டுகளில், தேசத்திலே, ஆயிரக்கணக்கான புதிய ஸ்டார்ட் அப்புகள் தொடங்கப்பட்டன. இவற்றிலே கிட்டத்தட்ட பாதியளவு ஸ்டார்ட் அப்புகளில் பெண்கள் இயக்குபவர்களாக இருக்கின்றார்கள். கடந்த சில காலமாகவே பெண்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரிப்பது போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலே திருமணத்தின் வயது வரம்பை சமமானதாக ஆக்கவும் தேசத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. நீங்கள் தேசத்தின் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை கவனித்திருக்கலாம்!! நமது சமூக இயக்கங்களின் வெற்றி தான் அந்த மாற்றம். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் திட்டத்தையே எடுத்துக் கொள்வோமே, இன்று தேசத்தின் பாலின விகிதாச்சாரம் மேம்பட்டிருக்கிறது. இதிலே நம்முடைய கடமையும் என்னவென்றால், நமது பெண்களின் பள்ளி இடைநிற்றலை நாம் தடுத்தாக வேண்டும். இதைப் போலவே தூய்மையான பாரதம் இயக்கத்தின்படி, தேசத்தில் பெண்களுக்குத் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. முத்தலாக் போன்ற சமூகத் தீமைக்கும் முடிவு கட்டப்பட்டு வருகிறது. முத்தலாக்குக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, முத்தலாக்கு வழக்குகளில் 80 சதவீத வீழ்ச்சி காணப்பட்டிருக்கிறது. இத்தனை மாற்றங்களும், இத்தனை குறைவான காலத்தில் நடந்திருக்கிறதா? இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன என்றால், நமது தேசத்தில் மாற்றம் மற்றும் முன்னேற்ற முயல்வுகளின் தலைமையை பெண்கள் ஏற்றுக் கொண்டதால் தான் ஏற்பட்டன.
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஃபெப்ருவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் நாள் ஆகும். இந்த நாள், ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கானதாக அறியப்படுகிறது. நான் சி.வி. ராமன் அவர்களோடு கூடவே, நமது அறிவியல் பயணத்தை நிறைவானதாக ஆக்கத் தங்களுடைய மகத்துவமான பங்களிப்பை அளித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் மரியாதை கலந்த சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, நமது வாழ்க்கையிலே சுலபத்தன்மை, எளிமை ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதில் தொழில்நுட்பம் கணிசமான பங்கு வகிக்கிறது. எந்தத் தொழில்நுட்பம் நல்லது, எந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு என்ன, என அனைத்து விஷயங்கள் குறித்தும் நாம் நன்கறிந்திருக்கிறோம். ஆனால், நமது குடும்பத்தின் குழந்தைகளுக்கு அந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன, இதன் பின்புலத்தில் இருக்கும் அறிவியல் என்ன என்பதைத் தெரிவிப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மை தான். குழந்தைகளிடத்தில் அறிவியல் உணர்வை வளர்க்க, சின்னச்சின்ன முயற்சிகளைத் தொடங்கலாம் என்பது தான் இந்த அறிவியல் தினத்தன்று அனைத்துக் குடும்பத்தாரிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள். முதலில் தெரியாமல் இருப்பது, கண்ணாடி அணிந்தவுடன் தெளிவாகத் தெரிகிறது என்பதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் குறித்து குழந்தைகளுக்கு எளிமையாகப் புரிய வைக்கலாம். கண்ணாடியைப் போட்டுக் கொண்டோமா ஆனந்தமாக இருந்தோமா என்பதல்ல. இப்போது நீங்கள் நிதானமாக சிறிய ஒரு காகிதத்தைக் கொண்டு இதை விளக்க முடியும். மொபைல், கால்குலேட்டர், ரிமோட் கண்ட்ரோல், சென்ஸார் போன்றவை எப்படி செயல் புரிகின்றன? அறிவியல் விஷயங்கள் குறித்து வீட்டிலே நாம் விவாதம் செய்திருக்கிறோமா? இந்த அறிவியல் பொருட்கள் குறித்து, வீட்டிலே பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் குறித்து, அவற்றின் பின்னணியில் இருக்கும் அறிவியல், இதை இயக்குவது எது என்பதை நாம் புரிய வைக்க முடியும். இதைப் போலவே நாம் நமது குழந்தைகளோடு வானத்தை ஒன்றாகப் பார்த்திருக்கிறோமா? இரவில் நட்சத்திரங்கள் பற்றியும் நாம் விவாதித்திருப்போம். பலவகையான விண்மீன் கூட்டங்கள் தென்படுகின்றன, இவை பற்றிக் கூறலாம். இப்படிச் செய்வதால் நீங்கள் குழந்தைகளிடத்திலே இயற்பியல், மற்றும் வானியல் மீது புதிய ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். இப்போது பல செயலிகள் வாயிலாக நீங்கள் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும், அல்லது நட்சத்திரங்களையும், கோள்களையும் இடம் காண முடியும், அல்லது வானில் தெரியும் நட்சத்திரத்தை அடையாளம் காண முடியும், இதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். நான் எனது ஸ்டார்ட் அப்புகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்களுடைய திறமைகளையும், அறிவியல் உணர்வையும் பயன்படுத்தி, தேசத்தை நிறுவுவது தொடர்புடைய செயல்களில் ஈடுபடுங்கள் என்பது தான். இந்த தேசத்திடம் நமக்குக் கூட்டுப் பொறுப்பும் உள்ளது. நமது ஸ்டார்ட் அப்புகள் மெய்நிகர் உண்மை உலகத்தில் பல நல்ல செயல்களைச் செய்து வருவதை நான் கவனித்து வருகிறேன். மெய்நிகர் வகுப்புகள் நடந்து வரும் இந்த காலகட்டத்தில் ஒரு மெய்நிகர் பரிசோதனைகூடம், குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படலாம். நாம் மெய்நிகர் உண்மை வாயிலாக வீட்டில் இருந்தபடியே குழந்தைகளுக்கு வேதியியல் பரிசோதனைக்கூடத்தின் அனுபவத்தை ஏற்படுத்தித் தர முடியும். நமது ஆசிரியர்களிடத்திலும், காப்பாளர்களிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் மாணவர்கள்-குழந்தைகள் வினா எழுப்பும் இயல்பை ஊக்கப்படுத்துங்கள், அவர்களோடு இணைந்து வினாக்களுக்கான விடைகளைக் கண்டறியுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை நான் இன்று பாராட்ட விரும்புகிறேன். அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி சாத்தியமாயிற்று, இது உலகிற்கு பெருமளவு உதவி வருகிறது. அறிவியல் என்பது மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த முறையும் நாம் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்தோம். வரும் மார்ச் மாதத்தில் பல பண்டிகைகள், திருவிழாக்கள் வரவிருக்கின்றன, சிவராத்திரிக்குப் பிறகு, சில நாட்கள் கழித்து ஹோலிக்கான தயாரிப்புகளில் அனைவரும் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள். ஹோலிப் பண்டிகை நம்மனைவரையும் ஒரே இழையில் இணைத்து வைக்கும் வல்லமை உடையது. இதிலே நம்மவர் அயலார், விருப்பு வெறுப்பு, சிறியோர் பெரியோர் என்ற வேறுபாடுகள் கரைந்து போகின்றன. ஆகையால் தான், ஹோலியின் வண்ணங்களை விடவும் ஆழமான வண்ணம், ஹோலியின் அன்பு மற்றும் சகோதரத்துவத்தில் இருக்கிறது என்று கூறுவார்கள். ஹோலியன்று குஜியா என்ற இனிப்போடு கூடவே உறவுகளின் அருமையான இனிமையும் கலந்திருக்கிறது. இந்த உறவுகளை நாம் மேலும் பலமானதாக ஆக்க வேண்டும், மேலும் உறவு என்பது நமது குடும்பத்தாரோடு மட்டுமே குறுகி விடக்கூடாது, நமது பெருங்குடும்பத்தின் அங்கமாக விளங்குவோரிடத்திலும் இருக்க வேண்டும். இதற்கான சிறந்த வழியையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ’Vocal for Local’, உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற வகையில் நாம் கொண்டாட வேண்டும். நீங்கள் பண்டிகைக் காலங்களில் உங்கள் வட்டாரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள், இதனால் உங்கள் அக்கம்பக்கத்தில் இருப்போரின் வாழ்க்கையிலும் வண்ணங்கள் நிறையும், வண்ணமயமாகத் திகழும், உற்சாகம் பெருகும். நமது தேசம் கொரோனாவுக்கு எதிராக எந்த அளவுக்கு வெற்றிகரமாகப் போராடி வென்று வருகிறதோ, முன்னேறி வருகிறதோ, இதனால் பண்டிகைகளில் உற்சாகமும் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதே உற்சாகத்தோடு நாம் நமது பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும், கூடவே, எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும். வரவிருக்கும் திருநாட்கள்-திருவிழாக்களை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். உங்கள் கருத்துக்கள், உங்கள் கடிதங்கள், உங்கள் செய்திகளுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலின் மேலும் ஒரு பகுதி வாயிலாக நாம் ஒன்றிணைகிறோம். இது 2022ஆம் ஆண்டின் முதலாம் மனதின் குரல். நாடு-நாட்டுமக்கள் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான கருத்தூக்கங்கள்-சமூக அளவிலான முயல்வுகள் நிறைந்திருக்கும் விஷயங்களை இன்று நாம் மீண்டும் முன்னெடுத்துச் செல்வோம். இன்று நமது வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30ஆம் தேதி என்பது அண்ணல் அளித்த கற்பித்தல்களை மீண்டும் நினைவில் கொள்ள வைக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளைக் கொண்டாடினோம். தில்லியின் ராஜ்பத்தில் தைரியம் மற்றும் திறமைகளைப் பார்த்தோம், இவை அனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் நிரம்பச் செய்தன. ஒரு மாற்றத்தையும் நீங்கள் கவனித்திருக்கலாம் - குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி மாதம் 23ஆம் தேதி அதாவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளன்று தொடங்கி, ஜனவரி மாதம் 30ஆம் தேதி, அதாவது காந்தியடிகள் காலமான தினம் வரை நடக்கும். இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவமும் நிறுவப்பட்டிருக்கிறது. இது தேசமெங்கிலும் மிகப் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது மக்கள் ஆனந்தப்பட்டார்கள், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாது.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.
நண்பர்களே, அமிர்த மஹோத்சவத்தின் இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையே தேசத்தில் பல மகத்துவமான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஒன்று, பிரதம மந்திரி சிறுவர்களுக்கான தேசிய விருது. மிகச் சிறிய வயதிலேயே சாகசமும், உத்வேகமும் நிறைந்த செயல்களைப் புரிந்த சிறுவர்களுக்கு வழங்கப்படுவது இது. நமது இல்லங்களில் நாம் இந்தச் சிறுவர்கள் பற்றிக் கண்டிப்பாகக் கூற வேண்டும். இதனால் நமது குழந்தைகளுக்கும் உத்வேகம் பிறக்கும், அவர்கள் மனங்களிலும் தேசத்திற்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்ற உற்சாகம் ஊற்றெடுக்கும். தேசத்தில் இப்பொழுது பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பத்ம விருதுகளைப் பெற்றவர்களில் பலரைப் பற்றி வெகு சிலரே அறிவார்கள். இவர்கள் நமது நாட்டின் பாடப் பெறாத நாயகர்கள், இவர்கள் எளிய சூழ்நிலைகளில் அசாதாரணமான செயல்களைப் புரிந்தவர்கள். எடுத்துக்காட்டாக, உத்தராக்கண்டின் பஸந்தி தேவி அவர்கள் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பசந்தி தேவி தனது வாழ்க்கை முழுவதையும் போராட்டங்களுக்கு இடையே வாழ்ந்திருக்கிறார். சிறிய வயதிலேயே இவருடைய கணவர் காலமானதால், இவர் ஒரு ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினார். இங்கே வசிக்கும் போதே, இவர் நதியைக் காப்பாற்றப் போராடினார், சுற்றுச் சூழலின் பொருட்டு அசாதாரணமான பங்களிப்பை அளித்தார். இவர் பெண்களின் அதிகாரப் பங்களிப்பிற்காகக் கணிசமான பணியாற்றியிருக்கிறார். இதைப் போலவே மணிப்பூரைச் சேர்ந்த 77 வயதான லோரேம்பம் பீனோ தேவி அவர்களும் பல தசாப்தங்களாக மணிப்பூரின் லிபா துணிக் கலையைப் பாதுகாத்து வருகிறார். இவருக்கும் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறது. பைகா - Baiga பழங்குடியினரின் நடனக்கலைக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு, மத்திய பிரதேசத்தின் அர்ஜுன் சிங் அவர்களுக்கு பத்ம விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பத்ம விருது பெறுபவர்களில் ஒருவர், அமாயி மஹாலிங்கா நாயக் அவர்கள். இவர் ஒரு விவசாயி, கர்நாடகத்தில் வசிப்பவர். சிலர் இவரை Tunnel man, சுரங்க மனிதன் என்றும் அழைக்கிறார்கள். தனது வயல்களில் இவர் செய்திருக்கும் புதுமையைப் பார்ப்பவர் அனைவரும் திகைத்துப் போகிறார்கள். இவருடைய முயற்சிகள் காரணமாக மிகப்பெரிய ஆதாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இவரைப் போன்ற பல புகழப்பெறாத நாயகர்கள், தேசத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பிற்காக கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், இவர்ளைப் பற்றித் தெரிந்து கொள்ள கண்டிப்பாக முயலுங்கள். இவர்களால் நமது வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் நண்பர்களான நீங்கள் அனைவரும் ஏகப்பட்ட கடிதங்கள், செய்திகளை, ஆலோசனைகளை அனுப்பி வைக்கிறீர்கள். இந்த வரிசையில் சில விஷயங்களை என்னால் மறக்க முடியாது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய மனதின் குரலை தபால் அட்டை வாயிலாக எழுதி அனுப்பி இருக்கிறார்கள். இந்த ஒரு கோடி தபால் அட்டைகள், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்திருக்கின்றன, அயல்நாடுகளிலிருந்தும் வந்திருக்கின்றன. நேரம் ஒதுக்கி, இவற்றில் சில தபால் அட்டைகளை நான் படிக்க முயன்றேன். நமது தேசத்தின் புதிய தலைமுறையினருடைய எண்ணப்பாடும், சிந்தனையும் எத்தனை பரந்திருக்கிறது, விசாலமானதாக இருக்கிறது என்பதை இந்தத் தபால் அட்டைகள் எனக்கு உணர்த்தின. இவற்றில் சில தபால் அட்டைகளின் உள்ளடக்கத்தை நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அசாமின் கௌஹாடீயிலிருந்து ரித்திமா ஸ்வர்கியாரி எழுதிய தபால் அட்டை இது. ரித்திமா 7ஆம் வகுப்பில் படிக்கிறார், சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டில் பாரதம் உலகிலேயே மிகவும் தூய்மையான நாடாக, தீவிரவாதம் முழுமையாகக் களையப்பட்ட நாடாக, 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற நாடுகளில் ஒன்றாக, விபத்துக்களே இல்லாத நாடாக, நீடித்த உத்திகளால் உணவுப் பாதுகாப்புத் திறனுடைய நாடாக இருக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தியிருக்கிறார். ரித்திமா, நமது பெண்கள் காணும் கனவு எப்போதுமே நிறைவடையும். அனைவரின் முயற்சிகளும் ஒன்றிணையும் போது, இளம் தலைமுறையினரான நீங்கள் இலக்கு வைத்துச் செயல்படும் போது, நீங்கள் எப்படிப்பட்ட பாரதத்தைக் காண விரும்புகிறீர்களோ, அப்படிக் கண்டிப்பாக ஆகும். ஒரு தபால் அட்டை, உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் நவ்யா வர்மாவிடமிருந்து வந்திருக்கிறது. 2047ஆம் ஆண்டு பாரதத்தில் அனைவருக்கும் கௌரவம் நிறைந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும், அங்கே விவசாயிகள் தன்னிறைவு பெற்றவர்களாக, ஊழல் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று தனது கனவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நவ்யா, தேசத்தின் பொருட்டு நீங்கள் கண்டிருக்கும் கனவு பாராட்டப்படக்கூடியது. இந்தத் திசையை நோக்கி தேசம் விரைவாக முன்னேறியும் வருகிறது. நீங்கள் ஊழலற்ற பாரதம் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். ஊழல் என்ற கரையான் தேசத்தை அரித்து விடுகிறது. இதிலிருந்து விடுதலை அடைய 2047 வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? இந்தப் பணியை நாட்டுமக்களான நாம், இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும், விரைவாகச் செய்ய வேண்டும், இதற்கு மிகவும் அவசியம், நாமனைவரும் அவரவர் கடமைகளுக்கு முதன்மை அளிப்பது தான். எங்கே கடமையுணர்வு இருக்கிறதோ, கடமையே தலையாயது என்ற உணர்வு இருக்கிறதோ, அங்கே ஊழலின் சாயல் கூட படியாது.
நண்பர்களே, மேலும் ஒரு தபால் அட்டை என் முன்னே இருக்கிறது, சென்னையைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் எழுதியிருப்பது. 2047ஆம் ஆண்டில் பாரதம் பாதுகாப்புத் துறையில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருப்பதைத் தான் கனவு காண்பதாக இப்ராஹிம் எழுதியிருக்கிறார். நிலவில் பாரதம் தனது ஆய்வு தளம் அமைக்க வேண்டும், செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்தும் பணி தொடங்க வேண்டும், கூடவே, பூமி சூழல் மாசிலிருந்து விடுபட, பாரதம் பெரிய அளவிலான பங்களிப்பை அளிப்பதைக் காண்பதே தனது கனவு என்றும் கூறியிருக்கிறார். இப்ராஹிம், எந்த தேசத்திடம் உங்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கின்றார்களோ, அந்த தேசத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது.
நண்பர்களே, என் முன்பாக மேலும் ஒரு கடிதம் இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் ராய்சேனில் சரஸ்வதி வித்யா மந்திரில் பத்தாம் வகுப்பு படிக்கும் பாவ்னா இதை எழுதியிருக்கிறார். பாவ்னா அவர்களே, நீங்கள் தபால் அட்டையை மூவண்ணத்தால் அலங்கரித்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை நான் முதற்கண் கூறி விடுகிறேன். பாவ்னா புரட்சியாளர் ஷிரிஷ் குமாரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
நண்பர்களே, கோவாவிலிருந்து லாரென்ஷியோ பரேராவிடமிருந்து ஒரு தபால் அட்டை கிடைத்திருக்கிறது. இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர். இவருடைய கடிதத்தின் விஷயமும் சுதந்திரத்தின் பாடப்பெறாத நாயகர்கள். ”பீகாஜி காமா பாரதநாட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, மிகத் துணிவு வாய்ந்த பெண்களில் ஒருவர். பெண்களுக்கு அதிகாரப் பங்களிப்பை உடைமையாக்க, இவர் நாட்டிலும், அயல்நாடுகளிலும் பெரிய இயக்கத்தை நடத்தினார், பல கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். சுதந்திரப் போராட்டக் களத்தில் பீகாஜி காமா அவர்கள் மிகத் துணிச்சல் மிக்க பெண்களில் ஒருவர் என்பதில் எந்த ஐயமுமில்லை. 1907ஆம் ஆண்டிலேயே இவர் ஜெர்மனியில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார். இந்த மூவண்ணக் கொடியை வடிவமைப்பதில் இவருக்குத் துணையாக இருந்தவர் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்கள். ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்கள் 1930ஆம் ஆண்டு ஜெனீவாவில் காலமானார். பாரதநாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவருடைய அஸ்தி பாரதம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இவருக்கு இருந்த கடைசி ஆசையாக இருந்தது. அவருடைய விருப்பத்திற்கிணங்க, 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த நாளே அவருடைய அஸ்தி பாரதத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இது நடைபெறவில்லை. இந்தப் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஒரு வேளை இறைவனுடைய சித்தமாக இருக்கலாம். நான் குஜராத்தின் முதல்வராக இருந்த வேளையில், 2003ஆம் ஆண்டு அவருடைய அஸ்தி பாரதம் கொண்டு வரப்பட்டது. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா அவர்களின் நினைவாக அவர் பிறந்த இடத்தில், கட்சின் மாண்டவியில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டது.
நண்பர்களே, பாரதத்தின் அமிர்த மஹோத்சவத்தின் உற்சாகம் நம் நாட்டோடு மட்டும் நின்று விடவில்லை. பாரதத்தின் நட்பு நாடான க்ரோயேஷியாவிலிருந்தும் 75 தபால் அட்டைகள் கிடைத்திருக்கின்றன. க்ரோயேஷியாவின் ஜாக்ரேபில் School of Applied Arts and Designஐச் சேர்ந்த மாணவர்கள் 75 தபால் அட்டைகளை பாரதநாட்டு மக்களுக்காக அனுப்பி இருக்கிறார்கள், அமிர்த மஹோத்சவக் கொண்டாட்டங்களுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து நாட்டுமக்கள் தரப்பிலிருந்து க்ரோயேஷியா மற்றும் அங்கே இருப்போருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, பாரதம் கல்வி மற்றும் ஞானத்தின் தவபூமியாக இருந்து வந்திருக்கிறது. நாம் கல்வியை வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை; மாறாக இதை ஒரு முழுமையான அனுபவமாகவே பார்த்திருக்கிறோம். நமது தேசத்தின் மிகப்பெரிய ஆளுமைகளுக்கும் கல்வியோடு ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. பண்டித மதன் மோஹன் மாளவியா அவர்களும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார் என்றால், அண்ணல் காந்தியடிகளும் குஜராத் வித்யாபீடத்தை அமைத்து முக்கிய பங்காற்றினார். குஜராத்தின் ஆணந்தில் ஒரு மிக ரம்மியமான இடம் உண்டு, வல்லப் வித்யாநகர். சர்தார் படேல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருடைய இரண்டு நண்பர்களான பாய் காகாவும் பீகா பாயியும், அங்கிருக்கும் இளைஞர்களுக்கான ஒரு மையத்தை அமைத்தார்கள். இதைப் போலவே மேற்கு வங்கத்தில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்களும் சாந்திநிகேகதனை நிறுவினார். மஹாராஜா கெய்க்வாடும் கல்வியின் பலமான புரவலர்களில் ஒருவராக இருந்தார். இவர் பல கல்வி நிறுவனங்களை நிறுவியதோடு, டாக்டர் அம்பேட்கர், ஸ்ரீ அரவிந்தர் உட்பட பல ஆளுமைகளுக்கு உயர்கல்வி படிக்கவும் உத்வேகம் அளித்தார். இப்படிப்பட்ட மிகவுயரிய ஆளுமைகளின் பட்டியலில் ஒரு பெயர் மஹேந்திர பிரதாப் சிங் அவர்களுடையதும். ராஜா மஹேந்திர பிரதாப் சிங் அவர்கள் ஒரு தொழில்நுட்பப் பள்ளியை அமைக்கும் பொருட்டு, தனது வீட்டையே இதற்கென அளித்தார். அலீகட் மற்றும் மதுராவில் கல்வி நிலையங்களை அமைக்க, நிறைய பொருளாதார உதவிகளைப் புரிந்தார். அவரது பெயரால் அலீகடில் ஒரு பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் பெரும்பேறு சில காலம் முன்பாக எனக்குக் கிடைத்தது. கல்வி என்ற விளக்கை, மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் உயிர்ப்புடைய உணர்வு பாரதத்தில் இன்றும் துடிப்போடு இருக்கிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த உணர்வின் மிக அழகான விஷயம் என்ன தெரியுமா? கல்வி பற்றிய இந்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மால் காண முடிவது தான் அது. தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் அவர்களின் எடுத்துக்காட்டு மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. தாயம்மாள் அவர்களிடத்தில் அவருக்கென எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்றுத் தனது வாழ்க்கையை நடத்தி வந்தது. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும், தாயம்மாள் அவர்கள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எந்த முயல்வையும் விட்டு வைக்கவில்லை. இவருடைய பிள்ளைகள் சின்னவீரன்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தார்கள். இந்த நிலையில், பள்ளியில் காப்பாளர்களோடு நடந்த ஒரு கூட்டத்தில், வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாளும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அனைத்தையும் கேட்டார். இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்த போது, அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைப்பட்டுப் போனது. இதன் பிறகு தாயம்மாள் அவர்கள் செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. எந்தத் தாயம்மாள் இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தாரோ, தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாயை பள்ளிக்குக் கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படிச் செய்ய மிகப்பெரிய மனது வேண்டும், சேவையுணர்வு வேண்டும். இப்போது பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிகிறறது ஆனால், பள்ளியின் கட்டமைப்பு மேம்பட்டால், இங்கே உயர்நிலைக்கல்வி வரை படிக்க முடியும் என்று தாயம்மாள் கூறினார். நமது தேசத்தின் கல்வி தொடர்பாக இருக்கும் இந்த உணர்வு பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஐ.ஐ.டி. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரின் இதே மாதிரியான ஒரு கொடை பற்றி எனக்குத் தெரிய வந்தது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜய் சௌத்ரி அவர்கள், IIT BHU FOUNDATIONக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 7 1/2 கோடி ரூபாயை கொடையாக அளித்திருக்கிறார்.
நண்பர்களே, நமது தேசத்தின் பல்வேறு துறைகளோடு இணைந்தவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்து, சமூகத்தின்பால் தங்களுடைய பொறுப்புணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதே போன்றதொரு முயல்வை உயர்கல்வித் துறையில், குறிப்பாக நமது பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற முயற்சிகளுக்குக் குறைவேதும் இல்லை. இதைப் போன்ற முயற்சிகளை மேலும் அதிகரிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில், தேசத்தில் வித்யாஞ்சலி இயக்கமும் தொடங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள், CSR, கார்ப்பரேட் நிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு வாயிலாக நாடெங்கிலும் உள்ள பள்ளிகளின் தரத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். சமூக அளவிலான பங்களிப்பு மற்றும் தங்களுடையது என்ற உணர்வை முன்னெடுத்து வருகிறது வித்யாஞ்சலி. தங்களுடைய பள்ளி-கல்லூரிகளோடு தொடர்ந்து இணைந்திருப்பது, தங்களுடைய சக்திக்கேற்ப ஏதாவது பங்களிப்பை அளிப்பது போன்ற விஷயங்கள் அளிக்கும் மன நிறைவும், ஆனந்தமும் சொற்களில் வடிக்க முடியாதவை.
எனதருமை நாட்டுமக்களே, இயற்கை மீதான நேசம் மற்றும் அனைத்து உயிர்களிடத்திலும் கருணை இவை தாம் நமது கலாச்சாரம், இதுவே நமது இயல்பான சுபாவமும் கூட. நமது இந்தப் பண்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டை, மத்திய பிரதேசத்தின் Pench புலிகள் சரணாலயத்தின் ஒரு பெண்புலியின் இறுதி யாத்திரையின் போது காண முடிந்தது. இந்தப் பெண்புலியை, காலர் உடைய பெண்புலி என்றே மக்கள் அழைப்பது வழக்கம். வனத்துறை, இதற்கு T-15 என்று பெயரிட்டிருந்தது. இந்தப் பெண்புலியின் இறப்பு மக்கள் மனதில் எந்த அளவுக்கு சோகத்தை ஏற்படுத்தி விட்டது என்றால், ஏதோ தங்களுடைய நெருக்கமானதொரு உறவினர் இறந்து போனதாகவே உணர்ந்தார்கள். இதற்கு ஈமக்கிரியைகள் செய்யப்பட்டு, முழு மரியாதையோடும், நேசத்தோடும் விடை கொடுத்து அனுப்பினார்கள். இது தொடர்பான படங்களை நீங்கள் சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருக்கலாம். உலகம் முழுவதிலும் இயற்கையின் மீதும், உயிரினங்களின் மீதும் பாரத நாட்டு மக்களான நம்மனைவரின் உள்ளங்களிலும் எத்தனை பாசம் இருக்கிறது என்பது பாராட்டப்பட்டது. காலர் உடைய பெண்புலி தனது ஆயுட்காலத்தில் 29 குட்டிகளைப் போட்டு, 25 குட்டிகளை வளர்த்துப் பெரிதாக்கியது. நாம் T-15டைய இந்த வாழ்க்கையையும் கொண்டாடினோம், அதே போல அது இந்த உலகை விட்டுப் பிரிந்த போது, அதற்கு உணர்வுப்பூர்வமாக விடைகொடுத்தும் அனுப்பினோம். இது தான் பாரத நாட்டவரின் அழகு. நாம் அனைத்து உயிரினத்தோடும் பாச உறவை ஏற்படுத்திக் கொள்வோம். இதே போன்றதொரு காட்சியை குடியரசுத் திருநாள் அணிவகுப்பின் போதும் காண முடிந்தது. இந்த அணிவகுப்பின் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்களின் சார்ஜர் குதிரையான விராட், தனது கடைசி அணிவகுப்பில் பங்கெடுத்தது. குதிரையான விராட், 2003ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தது, அனைத்துக் குடியரசு தினங்களிலும் கமாண்டண்ட் சார்ஜர் என்ற முறையில் தலைமை தாங்கியது. அயல்நாட்டு குடியரசுத் தலைவர் யாருக்காவது குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படும் போது, அப்போதெல்லாம் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வந்தது. இந்த ஆண்டு, இராணுவ தினத்தன்று குதிரையான விராட்டிற்கு இராணுவத் தளபதி வாயிலாக COAS பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. விராட்டுடைய விசாலமான சேவைகளைப் பார்க்கும் போது, அதன் பணி ஓய்விற்குப் பிறகு மிக விமரிசையாக இது விடை கொடுத்து அனுப்பப்பட்டது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, ஒருமித்த மனத்தோடு முயற்சி மேற்கொள்ளப்படும் போது, நேரிய நோக்கத்தோடு செயல் புரியப்படும் போது, இவற்றுக்குப் பலன்களும் கிடைக்கின்றன. இதற்கான ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு, ஆசாமில் நடந்திருக்கிறது. அஸாம் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, அதன் தேயிலைத் தோட்டங்கள், ஏகப்பட்ட தேசிய சரணாலயங்கள் எல்லாம் மனதில் வந்து போகும். கூடவே, ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகத்துடைய படமும் மனதில் பளிச்சிடும். இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் என்றென்றைக்கும் அசாமின் கலாச்சாரத்தின் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொருவரின் காதினையும் வருடிச் செல்லும் பாரத் ரத்ன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவரான பூபேன் ஹஸாரிகா அவர்களின் பாடல் ஒன்று...
நண்பர்களே, இந்தப் பாடலின் பொருள் மிகவும் உசிதமானது. காசிரங்காவின் பசுமை கொஞ்சும் சூழலில், யானையும், புலியும் வசிப்பதை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை உலகம் காண்கிறது, பறவைகளின் மதுரமான கீச்சொலியைக் கேட்கிறது. அசாமின் உலகப்புகழ்மிக்க ஹத்கர்கா அதாவது கைத்தறி மூலம் நெய்யப்பட்ட மூங்கா மற்றும் ஏரி ஆடைகளிலும் கூட, ஒற்றைக் கொம்பு உருவம் காணப்படுகிறது. அசாமின் கலாச்சாரத்தில் எந்த காண்டாமிருகத்திற்கு இத்தனை மகிமை இருக்கிறதோ, இதுவும் கூட சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2013இலே 37, 2014இலே 32 காண்டாமிருகங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடினார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்ள கடந்த ஏழு ஆண்டுகளில், அசாம் அரசு சிறப்பான முயற்சிகள் மூலம், வேட்டையாடுதலுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கத்தை முடுக்கி விட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உலக காண்டாமிருக நாளன்று, வேட்டைக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2400க்கும் அதிகமான கொம்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. இது வேட்டைக்காரர்களுக்கு விடப்பட்ட கடுமையான செய்தி. இவை போன்ற முயல்வுகளின் பயனாக, அசாமில் காண்டாமிருகங்களின் வேட்டை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2013இலே 37 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டிலே இரண்டும், 2021ஆம் ஆண்டிலே ஒரு காண்டாமிருகம் மட்டுமே கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதில், அசாம் மக்களின் உறுதிப்பாட்டைப் பாராட்டுகிறேன்.
நண்பர்களே, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் மற்றும் ஆன்மீக சக்தி, எப்போதும் உலகெங்கிலும் உள்ள மக்களைத் தன்பால் ஈர்த்து வந்திருக்கிறது. பாரதநாட்டுக் கலாச்சாரம், அமெரிக்கா, கானடா, துபாய், சிங்கப்பூர், மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது என்று நான் சொன்னால், இது உங்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இல்லாமல் போகலாம். ஆனால் பாரத கலாச்சாரம் லத்தீன் அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் கூட பெரிய ஈர்ப்பாக இருக்கிறது என்று சொன்னால் இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மெக்சிகோவில் காதிக்கு ஊக்கமளிக்கும் விஷயமாகட்டும், பிரேசில் நாட்டில் பாரதநாட்டுப் பாரம்பரியங்களைப் பிரபலமாக்க மேற்கொள்ளப்படும் முயல்வுகளாகட்டும், இவை பற்றி எல்லாம் மனதின் குரலில் நாம் ஏற்கெனவே விவாதம் செய்திருக்கிறோம். அர்ஜெண்டினா நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் பாரதநாட்டுக் கலாச்சாரம் பற்றி நான் கூற இருக்கிறேன். அர்ஜெண்டினாவில் நமது கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் விரும்பப்படுகிறது. 2018ஆம் ஆண்டில், அர்ஜெண்டினாவிற்கு நான் பயணம் மேற்கொண்ட போது, yoga for peace என்ற ஒரு யோகக்கலை நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன். அர்ஜெண்டினாவில் இருக்கும் ஒரு அமைப்பின் பெயர் ஹஸ்தினாபூர் ஃபவுண்டேஷன். அர்ஜெண்டினாவில் ஹஸ்தினாபூர் ஃபவுண்டேஷன் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? இந்த ஃபவுண்டேஷன், அர்ஜெண்டினாவில் பாரத நாட்டு வேதப் பாரம்பரியங்களைப் பரப்புவதிலே ஈடுபட்டிருக்கிறது. பேராசிரியர் ஏடா ஏல்ப்ரெக்ட் என்ற ஒரு அம்மையாரால் 40 ஆண்டுகள் முன்பாக இது நிறுவப்பட்டது. அவருக்கு 18 வயது ஆன பொழுது, அவர் முதன்முறையாக பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் சக்தியை அறிந்து கொண்டார். பாரதத்தில் இவர் கணிசமான காலம் தங்கியிருந்தார். பகவத் கீதை மற்றும் உபநிஷதங்கள் பற்றி நுண்மான் புலமை பெற்றார். இன்று ஹஸ்தினாபூர் ஃபவுண்டேஷனில் 40000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள், அர்ஜெண்டினாவிலும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதற்கு சுமார் 30 கிளைகள் இருக்கின்றன. ஹஸ்தினாபுர் ஃபவுண்டேஷன், ஸ்பானிஷ் மொழியில் நூற்றுக்கும் மேற்பட்ட வைதிக மற்றும் தத்துவ நூல்களை வெளியிடவும் செய்திருக்கிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக இதன் ஆசிரமம் அமைந்திருக்கிறது. ஆசிரமத்தில் 12 கோயில்கள் நிறுவப்பட்டு, இவற்றிலே தெய்வத் திருவுருவங்கள் இருக்கின்றன. இவையனைத்தின் மையத்தில் இருக்கும் ஒரு கோயில், அத்வைதவழி தியானத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் எல்லாம், நமது கலாச்சாரம், நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே விலைமதிப்பில்லாத மரபுச் சொத்து என்பதைப் பறைசாற்றுகிறது. உலக மக்கள் அனைவரும் இதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், புரிந்து கொள்ள விழைகிறார்கள், வாழ ஆசைப்படுகிறார்கள். நாமும் முழுப் பொறுப்புணர்வோடு, நமது பாரம்பரியச் சொத்தை, நமது வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொள்வதோடு, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே, குறிப்பாக நமது இளைய நண்பர்களிடத்திலே ஒரு வினா எழுப்ப விரும்புகிறேன். யோசித்துப் பாருங்கள், உங்களால் ஒரே முறையில் எத்தனை தண்டால்களை எடுக்க முடியும். நான் ஒரு விஷயத்தை உங்களிடம் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும். மணிப்பூரில் 24 வயதான இளைஞரான தௌனாஓஜம் நிரஞ்ஜாய் சிங், ஒரு நிமிடத்தில் 109 தண்டால்களுக்கான சாதனையைப் படைத்திருக்கிறார். நிரஞ்ஜாய் சிங்கிற்கு இந்தச் சாதனையைத் தகர்ப்பது என்பது புதியது அல்ல; இதற்கு முன்பாகக் கூட, இவர் ஒரு நிமிடத்தில் ஒரே கையால், மணிக்கட்டை ஊன்றிச் செய்யும் தண்டால்களுக்கான சாதனையை படைத்திருந்தார். நிரஞ்ஜாய் சிங் அளிக்கும் உத்வேகத்தால் நீங்களும் உங்களுடைய உடலுறுதியை உங்கள் வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொள்வீர்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, இன்று உங்களோடு லடாக் பற்றிய ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதைத் தெரிந்து கொண்டு உங்களுக்குப் பெருமிதம் ஏற்படும். லடாக்கில் விரைவிலேயே ஒரு அற்புதமான திறந்தவெளி செயற்கைத் தடகளமும், செயற்கைப் புல்தரைதள கால்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த அரங்கம் 10,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலே உருவாக்கப்பட்டு வருகிறது, விரைவிலேயே இது நிறைவடையும். லடாக்கின் மிகப்பெரிய முதல் திறந்தவெளி அரங்கமான இதிலே 30,000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர முடியும். லடாக்கின் இந்த நவீனமான கால்பந்தாட்ட அரங்கத்தில் 8 தடன்களைக் கொண்ட ஒரு செயற்கைப் புல்தரைத் தடகளமும் இருக்கும். இதைத் தவிர இங்கே ஒராயிரம் படுக்கை வசதி கொண்ட, ஒரு தங்கும் விடுதியும் இருக்கும். அரங்கத்திற்கு, கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய அமைப்பான FIFA சான்றளித்திருக்கிறது. விளையாட்டுக்களுக்கான எந்த ஒரு பெரிய கட்டமைப்பும் தயார் செய்யப்படும் போது, இது தேசத்தின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பையும் கொண்டு சேர்க்கிறது. கூடவே எங்கே அமைப்புமுறை இருக்கிறதோ, அங்கே தேசமெங்கிலும் இருந்தும் மக்களின் வருகை அமைகிறது, சுற்றுலாவுக்கு ஊக்கம் பெருகுகிறது, வேலைவாய்ப்பிற்கான சாத்தியங்கள் பிறக்கின்றன. அரங்கத்தினால் ஆதாயம், லடாக் மற்றும் தேசத்தின் பிற பாகங்களைச் சேர்ந்த பல இளைஞர்களுக்குக் கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை நாம் பல விஷயங்கள் குறித்து அளவளாவினோம். மேலும் ஒரு விஷயம் உண்டு - அது இந்த வேளையில் அனைவரின் மனதிலும் ஒலிக்கக்கூடிய ஒன்று, அது தான் கொரோனா பற்றியது. கொரோனாவின் புதிய அலையோடு பாரதம் மிக வெற்றிகரமாகப் போராடி வருகிறது, இதுவரை கிட்டத்தட்ட 4500 கோடிக் குழந்தைகளுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டாகி விட்டது என்பது பெருமிதம் தரும் விஷயம். அதாவது 15 முதல் 18 வயது வரையிலான சுமார் 60 சதவீத இளைஞர்கள், மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள்ளாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டார்கள். இதனால் நமது இளைஞர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதோடு, அவர்கள் தொடர்ந்து படிக்கவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 20 நாட்களுக்குள்ளாக, ஒரு கோடி பேர்கள் முன்னெச்சரிக்கை கூடுதல் தவணையும் போட்டுக் கொண்டு விட்டார்கள். நமது தேசத்தின் தடுப்பூசி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை நமக்கெல்லாம் வாய்த்த பெரும்பலம். இப்போது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் குறையத் தொடங்கி இருக்கிறது. இது மிகவும் ஆக்கப்பூர்வமான அறிகுறி. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேசத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளின் வேகம் அதிகப்பட வேண்டும் என்பதே பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் மனோரதம். உங்களுக்கே தெரியுமே, மனதின் குரலில் சில விஷயங்களைப் பற்றிப் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்பது. அதாவது தூய்மை இயக்கத்தை என்றுமே மறவாதீர்கள், ஒருமுறையே பயன்படுத்தும் நெகிழிக்கு எதிரான இயக்கத்தை நாம் மேலும் விரைவுபடுத்த வேண்டியது அவசியம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம் ஆகிய இவையெல்லாம் நமது கடமைகள், மேலும் நாம் தற்சார்பு பாரதம் இயக்கத்திற்காக முழுமூச்சோடு ஈடுபட்டிருக்க வேண்டும். நம்மனைவரின் முயற்சிகளால் மட்டுமே தேசம், வளர்ச்சியின் புதிய சிகரங்களை முத்தமிடும். இந்த விருப்பத்தோடு, உங்களனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த நேரத்தில் நீங்கள் 2021ஆம் ஆண்டுக்கான விடையளிப்பு, 2022ஆம் ஆண்டுக்கான வரவேற்பு ஆகியவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பீர்கள். புத்தாண்டு தொடர்பாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும், வரவிருக்கும் ஆண்டிலே சிலவற்றைச் செய்யவும், மேலும் சிறப்பாகச் செயலாற்றவும், ஆக்கம் புரியவும் தீர்மானம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 7 ஆண்டுகளாக நமது மனதின் குரலும் தனிநபரின், சமூகத்தின், தேசத்தின் உச்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, மேலும் சிறப்பாகச் செயலாற்றியும், மேலும் சிறப்பாகக், கருத்தூக்கம் அளித்தும் வந்திருக்கிறது. இந்த ஏழாண்டுகளில், மனதின் குரலில், அரசாங்கத்தின் சாதனைகள் குறித்தும் பேசியிருக்க முடியும். அது உங்களுக்கும் பிடித்திருக்கும், நீங்களும் பாராட்டியிருப்பீர்கள், ஆனால், என்னுடைய பல பத்தாண்டுக்கால அனுபவம் என்னவென்றால், ஊடகங்களின் ஒளிர்விளக்குகளைத் தாண்டி, செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளுக்கு அப்பால், கோடானுகோடிப் பேர்கள் இருக்கிறார்களே, நிறைய நல்லனவற்றைச் செய்கின்றார்களே, அவர்கள் தேசத்தின் பிரகாசமான நாளைக்காக, தங்களுடைய இன்றைய பொழுதை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தேசத்தின் வருங்காலச் சந்ததியினருக்காகத் தங்களுடைய முயற்சிகளை முழுமூச்சோடு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் விஷயங்கள், மிகவும் அமைதியைத் தருகிறது, ஆழமான உத்வேகத்தை அளிக்கிறது. என்னைப் பொறுத்த மட்டிலே, மனதின் குரலானது எப்போதுமே இப்படிப்பட்டவர்களின் முயற்சிகளால் நிரம்பிய, நன்கு அலங்கரிக்கப்பட்ட, பூத்துக் குலுங்கும் அழகானதொரு பூங்காவாகவே இருந்திருக்கிறது; மேலும் மனதின் குரலில் மாதந்தோறும் என்னுடைய முயற்சி என்னவாக இருந்து வந்துள்ளது என்றால், இந்த அழகிய பூங்காவின் எந்த இதழை உங்களுக்காகக் கொண்டு வருவது என்பது தான். பல ரத்தினங்கள் நிறை நமது பூமியின் புண்ணிய செயல்களின் இடையறாத பிரவாஹம் தொடர்ந்து பெருகியோடிக் கொண்டே இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று தேசம் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடி வருகின்ற வேளையில், இந்த மக்களின்சக்தி, ஒவ்வொரு மனிதனின் சக்தி, இதைப் பற்றி விவரித்தல், அவருடைய முயல்வு, அவருடைய உழைப்பு ஆகியன, பாரதத்தின் மற்றும் மனித சமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒருவகையில் உத்திரவாதத்தை அளிக்கின்றது.
நண்பர்களே, இந்த மக்கள் சக்தியின் வலிமை காரணமாகத் தான், அனைவரின் முயற்சிகளால் தான், பாரதம் 100 ஆண்டுகளிலே வந்த மிகப்பெரிய பெருந்தொற்றோடு போராட முடிந்திருக்கிறது. நாம் ஒவ்வொரு கடினமான வேளையிலும் ஒருவரோடு ஒருவர், ஒரு குடும்பத்தைப் போலத் துணை நின்றோம். நமது பகுதி அல்லது நகரத்தில் யாருக்காவது உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றால், அவரவர் தங்களால் முடிந்த அளவைக் காட்டிலும் அதிகமாகவே உதவ முயன்றார்கள். இன்று உலகத்தில் தடுப்பூசி போடப்படும் புள்ளிவிவரங்கள் விஷயத்தில், பாரத நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தேசம் இதுவரை செய்யப்படாத எத்தகையதொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, எத்தனை பெரிய இலக்கை எட்டி இருக்கிறது என்பது புலனாகும். தடுப்பூசியின் 140 கோடி தவணைகள் என்ற கட்டத்தைத் தாண்டுதல் என்ற சாதனை ஒவ்வொரு பாரதவாசிக்கும் சொந்தமாகும். இது ஒவ்வொரு பாரதவாசிக்கும் அமைப்பின் மீது இருக்கும் நம்பிக்கையைச் சுட்டுகிறது, விஞ்ஞானிகளின் மீது உள்ள விசுவாசத்தைத் தெரிவிக்கிறது, அதே வேளையில், சமூகத்தின் பொருட்டு தங்கள் கடமைகளை ஆற்றி வரும் நமது பாரத நாட்டவரின் மனவுறுதிப்பாட்டிற்கு சான்றும் பகர்கிறது. ஆனால் நண்பர்களே, நாம் இப்போதும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனென்றால் கொரோனாவின் புதிய ஒரு மாற்றுரு வந்து விட்டது. கடந்த ஈராண்டுகளாக நமது அனுபவம் என்னவாக இருந்தது என்றால், இந்த உலகளாவியப் பெருந்தொற்றை முறியடிக்க, ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய பங்களிப்பை அளித்தார்கள். இப்போது வந்திருக்கும் புதிய ஓமிக்ரான் மாற்றுரு மீதான ஆய்வை நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய தரவுகள் அவர்களுக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது, அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு, ஒழுங்குமுறையோடு செயல்படுவது, கொரோனாவின் இந்த மாற்றுருவுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்படும் தேசத்தின் மிகப்பெரிய சக்தியாகும். நம்முடைய சமூகசக்தியால் மட்டுமே கொரோனாவை முறியடிக்க முடியும். இந்தக் கடமையுணர்வோடு நாம் 2022ஆம் ஆண்டிற்குள் நுழைய வேண்டும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மஹாபாரத யுத்தம் நடக்கும் வேளையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனைப் பார்த்துக் கூறினார் – ‘नभः स्पृशं दीप्तम्’, நப: ஸ்ப்ருஷம் தீப்தம், அதாவது பெருமிதத்தோடு விண்ணைத் தொட வேண்டும் என்பதே இதன் பொருள். இது பாரத நாட்டு விமானப் படையின் ஆதர்ச வாக்கியமும் கூட. பாரத அன்னையின் சேவையில் ஈடுபட்டுவரும் பலரின் வாழ்க்கை, வானத்தின் இந்த உச்சங்களை தினமும் பெருமிதம் பொங்கத் தொட்டு வருகின்றது, இது நமக்கு நிறைய கற்பித்தல்களை அளிக்கின்றது. இப்படிப்பட்டதொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் க்ரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள். வருண் சிங், இந்த மாதம் தமிழ்நாட்டில் விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரை இயக்கியவர். இந்த விபத்தில் நாம் நமது தேசத்தின் இராணுவ முப்படைகளின் முதல் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், இன்னும் பல வீரர்களை இழந்திருக்கிறோம். பிபின் ராவத் அவர்களின் மனைவியும் இறந்திருக்கிறார். வருண் சிங்கும் கூட, மரணத்தோடு பல நாட்கள் வரை சாகஸம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தினார், ஆனால் அவரும் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்றார். வருண் மருத்துவமனையில் இருந்த வேளையில், நான் சமூக ஊடகத்தில் பார்த்த சில கருத்துக்கள், என் இதயத்தைத் தொட்டன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் அவருக்கு ஷௌர்ய சக்கரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த கௌரவம் அளிக்கப்பட்ட பிறகு தனது பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியருக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். வெற்றியின் உச்சிக்கே சென்ற பிறகும் கூட, அவர் வேர்களுக்கு நீர் வார்க்க மறக்கவில்லை என்பது தான் இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு என் மனதிலே எழுந்த எண்ணம். மேலும், கொண்டாட்டங்களில் ஈடுபட அவரிடத்திலே நேரம் இருந்தாலும், அவருக்கு வருங்காலத் தலைமுறையினர் மீது அக்கறை இருந்தது. தனது கடிதத்திலே வருண் சிங் அவர்கள் தனது பராக்கிரமம் பற்றி விரித்துரைக்காமல், தனது தோல்விகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தில் ஓரிடத்திலே அவர் எழுதியிருந்தார் – ”சராசரியாக இருப்பதில் ஒன்றும் பாதகமில்லை. அனைவருமே பள்ளியில் ஆகச் சிறந்தவர்களாக, 90 மதிப்பெண் என்ற அளவுக்கு மதிப்பெண்களைப் பெற முடியாமல் இருக்கலாம். அப்படி மதிப்பெண்கள் பெற்றால், அது ஒரு அபாரமான சாதனை, பாராட்டப்பட வேண்டியது. ஆனால் பெறவில்லை என்றால், நீங்கள் சராசரியாக இருக்க வேண்டியவர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பள்ளியில் நீங்கள் சராசரியானவராக இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் வரவிருப்பவைகளுக்கு இது ஒரு அளவுகோல் அல்ல. உங்கள் இதயத்தின் குரலுக்குச் செவி சாயுங்கள்; அது கலை, இசை, வரைகலை வடிவமைப்பு, இலக்கியம் என எதுவாகவும் இருக்கலாம். எதிலே நீங்கள் பணியாற்றுகிறீர்களோ, அதிலே அர்ப்பணிப்போடு இருங்கள், மிகச் சிறப்பாகச் செயல்படுங்கள். உறங்கச் செல்லும் முன், நான் மேலும் சிறப்பாக முயன்றிருக்கலாம் என்ற எண்ணத்தோடு உறங்கச் செல்லாதீர்கள்”.
நண்பர்களே, சராசரியை விட மேலெழும்பி அசாதாரணமாக ஆக அவர் அளித்த மந்திரமும் கூட மிகவும் மகத்துவம் நிறைந்தது. இந்தக் கடிதத்திலே வருண் சிங் மேலும் எழுதுகிறார் – ”நம்பிக்கையை இழக்காதீர்கள். நீங்கள் ஆக விரும்பும் துறையில் உங்களால் சிறப்பாக ஆக முடியாது என்று எப்போதும் கருதாதீர்கள். அது சுலபமாகக் கைகூடாது, இதற்கு காலம் பிடிக்கும், சௌகரியங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம். நான் சராசரியாகவே இருந்தேன், ஆனால் இன்று நான் அடைவதற்குக் கடினமான மைல் கற்களை என் பணிவாழ்க்கையிலே அடைந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையக் கூடியவற்றை, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களே தீர்மானம் செய்கின்றன என்று கருதாதீர்கள். உங்களின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், இலக்கை நோக்கி உழையுங்கள்”.
தன்னால் ஒரு மாணவனுக்காவது உத்வேகம் அளிக்க முடிந்தால், அதுவே மிகப்பெரிய விஷயமாகும் என்று வருண் எழுதியிருக்கிறார். ஆனால் நான் ஒரு விஷயத்தை இன்று கூறுகிறேன் – அவர் நாடு முழுவதற்குமே உத்வேகம் அளித்திருக்கிறார். அவருடைய கடிதம், மாணவர்களோடு பேசுவதாக மட்டுமே இருக்கலாம் என்றாலும் நம்முடைய சமூகம் முழுமைக்கும் அது ஒரு செய்தியை அளிக்கிறது.
நண்பர்களே, ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து தேர்வுகளை எதிர்கொள்வோம் என்ற நிகழ்ச்சியை நான் மாணவர்களோடு நடத்துகிறேன். இந்த ஆண்டும் கூட தேர்வுகளுக்கு முன்பாக நான் மாணவர்களோடு விவாதம் செய்யத் திட்டமிட்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சிக்காக, இரு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தொடங்கி MyGov.in தளத்தில் பதிவுகள் தொடங்கப்படவிருக்கின்றன. இந்தப் பதிவு டிசம்பர் 28 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கென இணையவழி போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். நீங்கள் அனைவரும் இதிலே கண்டிப்பாகப் பங்கெடுக்க வேண்டும் என்று நான் விழைகிறேன். உங்களைச் சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும். நாமனைவருமாக இணைந்து தேர்வுகள், தொழில், வெற்றி, கல்விக்காலத்தோடு தொடர்புடைய பல விஷயங்கள் குறித்து கலந்தாய்வு புரிவோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில், நீங்கள் ஒன்றைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன், இது எல்லைகளைக் கடந்து மிகத் தொலைவான இடத்திலிருந்து வந்திருக்கிறது. இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
வந்தே மாதரம். வந்தே மாதரம்
சுஜலாம் சுஃபலாம் மலயஜசீதலாம்
சஸ்யஷாமலாம் மாதரம். வந்தே மாதரம்.
சுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதயாமினீம்
ஃபுல்லகுசுமித த்ருமதளசோமிபினீம்
சுஹாசினீம், சுமதுர பாஷிணீம்.
சுகதாம் வரதாம் மாதரம். 1
வந்தே மாதரம். வந்தே மாதரம்.
இதைக் கேட்டு, உங்கள் மனதுக்கு இதமாக இருந்திருக்கும், பெருமிதத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். வந்தே மாதரத்தில் இருக்கும் உணர்வுகளின் களஞ்சியம், நமக்குள்ளே பெருமித உணர்வையும், பெரும்சக்தியையும் நிரப்பி விடும்.
நண்பர்களே, இந்த அருமையான பாடல் எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது என்று நீங்கள் கண்டிப்பாக யோசிப்பீர்கள். இதற்கான விடை உங்களை மேலும் ஆச்சரியத்திலே ஆழ்த்தும். வந்தே மாதரம் பாடலை அளிக்கும் இந்த மாணவர்கள் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். அங்கே இவர்கள் இலியாவின் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வந்தே மாதரத்தைப் பாடியிருக்கும் அழகும், உணர்வும், அற்புதமானது, போற்றுதற்குரியது. இப்படிப்பட்ட முயல்வுகள் தாம் இரு நாட்டு மக்களிடத்திலும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் கிரேக்க நாட்டின் இந்த மாணவ மாணவியருக்கும் அவர்களுடைய ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவ காலத்தில் செய்யப்பட்டிருக்கும் அவர்களுடைய முயற்சி பாராட்டுதற்குரியது.
நண்பர்களே, நான் லக்னௌவில் வசிக்கும் நிலேஷ் அவர்களுடைய ஒரு பதிவு பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நிலேஷ் அவர்கள் லக்னௌவில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான ட்ரோன் காட்சியை மிகவும் பாராட்டியிருக்கிறார். இந்த ட்ரோன் காட்சி லக்னௌவின் ரெசிடென்ஸி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1857க்கு முன்பு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் அத்தாட்சிகள், ரெசிடென்ஸியின் சுவர்களில் இன்றும் கூட காணப்படுகின்றன. ரெசிடென்ஸியில் நடைபெற்ற ட்ரோன் காட்சியில் பாரத நாட்டு சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு விஷயங்களுக்கு உயிரூட்டப்பட்டன. அது சௌரி சௌரா போராட்டமாகட்டும், காகோரீ ரயில் சம்பவமாகட்டும், நேதாஜி சுபாஷின் அசாத்தியமான சாகஸம்-பராக்கிரமம் ஆகட்டும், இந்த ட்ரோன் காட்சியானது அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விட்டது. நீங்களும் கூட உங்கள் நகரங்களிலே, கிராமங்களிலே, சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வித்தியாசமான விஷயங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லுங்கள். இதிலே தொழில்நுட்பத்தின் துணையையும் நம்மால் துணைகொள்ள முடியும். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவமானது, நமக்கு சுதந்திரம் தொடர்பான நினைவுகளோடு வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை நல்குகிறது, அதை அனுபவித்து உணரும் ஒரு வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. இது தேசத்தின் பொருட்டு புதியதோர் உறுதிப்பாட்டை மேற்கொள்ளவும், சிறப்பாகச் சாதனை படைக்கவும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவுமான உத்வேகம் அளிக்கும் கொண்டாட்டம், கருத்தூக்கமளிக்கும் சந்தர்ப்பம். வாருங்கள், சுதந்திரப் போராட்டத்தின் மகத்தான ஆளுமைகளால் தொடர்ந்து உத்வேகம் அடைந்து வருவோம், தேசத்திற்கான நமது முயற்சிகளை மேலும் பலமடையச் செய்வோம்.
எனதருமை நாட்டுமக்களே, நம்முடைய பாரதம், பல அசாதாரணமான திறமைகள் நிறைந்தது. இவர்களுடைய படைப்புகளும் செயல்களும் பிறருக்கும் உத்வேகம் அளிப்பவை. இப்படிப்பட்ட ஒரு நபர் தான் தெலங்கானாவைச் சேர்ந்த டாக்டர் குரேலா விட்டலாச்சார்யா அவர்கள். இவருக்கு 84 வயதாகிறது. தனது கனவினை நனவாக்குவது என்று வந்து விட்டால், வயது ஒரு தடையல்ல என்பதற்கு விட்டலாச்சார்யா அவர்கள் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. நண்பர்களே, தனது சிறு வயது தொடங்கியே விட்டலாச்சார்யா அவர்களுக்கு ஒரு ஆசை உண்டு, அது பெரிய ஒரு நூலகத்தைத் திறக்க வேண்டுமென்பதே. தேசம் அப்போது அடிமைத்தளையில் இருந்தது, சில சூழ்நிலைகள் காரணமாக, சிறுவயதில் உருவான அந்தக் கனவு, கனவாகவே இருந்து விட்டது. காலப்போக்கில் விட்டலாச்சார்யா அவர்கள் விரிவுரையாளராக ஆனார், தெலுகு மொழியை ஆழமாகக் கற்றார், இதிலே பல படைப்புக்களையும் அளித்தார். 6-7 ஆண்டுகள் முன்பாக ஒரு முறை மீண்டும் தனது கனவுக்கு வடிவம் கொடுப்பதில் ஈடுபட்டார். முதலில் தன்னுடைய படைப்புக்களைக் கொண்டு நூலகத்தை ஏற்படுத்தினார். வாழ்க்கை முழுவதும் தான் சம்பாதித்த செல்வத்தை இதில் செலவு செய்தார். மெல்ல மெல்ல மக்கள் ஆதரவு அளித்தார்கள், தங்கள் பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்கள். யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் ரமன்னாபேட் மண்டலத்தில் உள்ள இந்த நூலகத்தில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. கல்வி கற்பதில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போல பிறருக்கு ஏற்படக் கூடாது என்கிறார் விட்டலாச்சார்யா அவர்கள். இன்று இந்த நூலகத்தால் மாணவர்கள் பெருமளவில் பலனடைந்து வருவது இவருக்கு பெரும் நிறைவை அளிக்கிறது. இவருடைய முயற்சிகளால் கருத்தூக்கம் பெற்று, இன்னும் பிற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நூலகம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நண்பர்களே, புத்தகங்கள் வெறும் அறிவை மட்டும் அளிப்பதில்லை மாறாக, தனித்துவத்தையும் பட்டை தீட்டுகிறது, வாழ்க்கையையும் உருவாக்குகிறது. புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் ஒரு அற்புதமான மன நிறைவை அளிக்கக் கூடியது. நான் இந்த ஆண்டு இத்தனை புத்தகங்களைப் படித்தேன் என்று சிலர் பெருமிதம் பொங்கக் கூறுவதை என்னால் இப்போதெல்லாம் காண முடிகிறது. இனி நான் இந்திந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்கிறார்கள். இது ஒரு நல்ல போக்கு, இதை நாம் வளர்க்க வேண்டும். நானும் மனதின் குரல் நேயர்களிடம் கூறுவதெல்லாம், இந்த ஆண்டுக்கான, உங்களுக்குப் பிடித்த, ஐந்து புத்தகங்களைப் பற்றிக் கூறுங்கள். 2022ஆம் ஆண்டில் படிக்க வேண்டிய நல்ல புத்தகங்களை, இந்த வகையில் பிற வாசகர்களுக்கு நீங்கள் அடையாளப்படுத்த முடியும். திரைகளைப் பார்ப்பதில் நாம் செலவழிக்கும் நேரம் அதிகரித்து வரும் வேளையில், நூல்படிப்பில் பிடிப்பு மேலும் பிரபலமாக வேண்டும், அதிகப்பட வேண்டும் என்ற திசையில் நாமனைவரும் இணைந்து முயல வேண்டும்.
என் இனிய நாட்டுமக்களே, தற்போது என்னுடைய கவனம் ஒரு சுவாரசியமான முயல்வு நோக்கிச் சென்றது. இந்த முயற்சி நம்முடைய பண்டைய நூல்கள் மற்றும் கலாச்சார நற்பதிவுகளை, பாரதத்திலே மட்டுமல்ல, உலகெங்கிலும் அனைவருக்கும் பிரியமானதாக ஆக்குவது. புணேயின் பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், அதாவது, பண்டார்கர் கிழக்கத்திய ஆய்வுக் கழகம் என்ற ஒரு மையம் உள்ளது. இந்த அமைப்பு, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மஹாபாரதத்தின் மகத்துவத்தைப் புரிய வைக்க இணையவழிப் படிப்புக்களைத் தொடங்கி இருக்கிறது. இந்தப் படிப்பு இப்போது தான் தொடங்கப்பட்டிருந்தாலும், இதில் கற்பிக்கப்படும் உள்ளடக்கத்தைத் தயார் செய்யும் பணிகளின் தொடக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டது என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம். இந்தக் கழகம் இதோடு தொடர்புடைய படிப்பைத் தொடங்கிய போது, இதற்கு மிக அருமையான பதில் குறிப்பு கிடைத்தது. நமது பாரம்பரியத்தின் பல்வேறு விஷயங்களை எப்படி நவீன முறையில் அளித்திருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே, நான் இந்த அற்புதமான முயற்சி பற்றி விவாதிக்க விரும்புகிறேன். கடல்களைத் தாண்டி இருப்போருக்கும் இது எப்படி பலனளிக்கும் என்பதற்காக, நூதனமான வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கின்றன.
நண்பர்களே, இன்று உலகம் முழுவதிலும் பாரத நாட்டுக் கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், நமது கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ள விழைவதோடு, அதை மேலும் விரிவாக்கவும் உதவி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நபர் தான், செர்பிய நாட்டு அறிஞரான டாக்டர். மோமிர் நிகிச். இவர் சம்ஸ்கிருத-செர்பிய இருமொழி அகராதி ஒன்றினை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த அகராதியில் இடம் பெற்றிருக்கும் 70,000த்திற்கும் மேற்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களை செர்பிய மொழியில் மொழியாக்கமும் செய்திருக்கிறார். டாக்டர். நிகிச், தனது 70ஆவது வயதிலே சம்ஸ்கிருத மொழியைக் கற்றிருக்கிறார். காந்தியடிகளின் கட்டுரைகளைப் படித்த பிறகே தனக்கு உத்வேகம் பிறந்ததாக இவர் கூறுகிறார். இதைப் போலவே மேலும் ஒரு எடுத்துக்காட்டு, மங்கோலியா நாட்டைச் சேர்ந்த 93 அகவை நிறைந்த பேராசிரியர் ஜே. கேந்தேதரம் அவர்களுடையது. கடந்த 40 ஆண்டுகளாக இவர் பாரதத்தின் சுமார் 40 பண்டைய நூல்கள், மஹாகாவியங்கள், படைப்புக்கள் ஆகியவற்றை மங்கோலிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நமது நாட்டிலேயும் கூட, பலர் இதே போன்ற ஒருமித்த சிந்தையோடு பணியாற்றி வருகின்றார்கள். கோவாவைச் சேர்ந்த சாகர் முலே அவர்களின் முயற்சிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளூம் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. இவர் பல நூறு ஆண்டுகள் பழைமையான காவீ ஓவியக்கலை, வழக்கொழிந்து போவதிலிருந்து காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார். காவீ ஓவியக்கலை என்பது பாரதத்தின் பண்டைய வரலாற்றைத் தன்னோடு இணைந்துக் கொண்டிருப்பது. பார்க்கப் போனால், காவ் என்பதன் பொருள் சிவப்பு மண் என்பதாகும். பண்டைய காலத்தில் இந்தக் கலையில் செம்மண் பயன்படுத்தப்பட்டு வந்தது. போர்ச்சுகல் நாட்டின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், கோவாவிலிருந்து வெளியேறியவர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இந்த அற்புதமான ஓவியக்கலையை அறிமுகம் செய்தார்கள். காலப்போக்கில், இந்த ஓவியக்கலை வழக்கொழிந்து போகத் தொடங்கியது. ஆனால் சாகர் முலே அவர்கள், இந்தக் கலைக்குப் புத்துயிர் அளித்தார். அவருடைய இந்த முயற்சிக்கு இப்போது முழு அளவிலான ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது. நண்பர்களே, ஒரு சிறிய முயற்சி, ஒரு சிறிய முன்னெடுப்பும் கூட, நமது நிறைவான கலைகளைப் பாதுகாக்க, மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். நமது நாட்டு மக்கள் உறுதிப்பாடு மேற்கொண்டு விட்டால், நாடெங்கிலும் நமது பண்டைய கலைகளைப் பாதுகாத்து, பராமரித்து, பேண வேண்டும் என்ற தீவிர ஆர்வம் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்க முடியும். நான் இங்கே சில முயற்சிகளைப் பற்றி மட்டுமே விவரித்திருக்கிறேன். நாடெங்கிலும் இவை போன்று அநேக முயற்சிகள் நடந்தேறி வருகின்றன. இவை பற்றிய தகவல்களை நமோ செயலியின் வாயிலாக எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, அருணாச்சல் பிரதேசத்தின் மக்கள் ஆண்டு முழுவதும் ஒரு வித்தியாசமான இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள், இதற்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர் அருணாச்சல் பிரதேசம் ஏர்கன் சரண்டர் இயக்கம் என்பதாகும். இந்த இயக்கத்திலே, மக்கள், தன்னிச்சையாக வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்புவிக்கிறார்கள், ஏன் தெரியுமா? அருணாச்சல் பிரதேசத்தின் பறவைகள் தாறுமாறாகக் கொல்லப்படுவது தடுப்பதற்காக இப்படிச் செய்து வருகிறார்கள். நண்பர்களே, அருணாச்சல பிரதேசம் 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கும் இடம். இவற்றில் சில உள்நாட்டு இனங்களும் அடங்கும், இவை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாதது. ஆனால் மெல்லமெல்ல இப்போது வனங்களின் புள்ளினங்கள் குறைந்து வருகின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்யவே, இப்போது வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்புவிப்பது இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில், மலைப்பகுதிகள் தொடங்கி சமவெளிகள் வரை, ஒரு சமூகம் முதல் பிறிதொரு சமூகம் வரை, மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள் இதைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அருணாச்சலின் மக்கள், தன்னிச்சையாக இதுவரை 1600க்கும் மேற்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்படைத்திருக்கிறார்கள். நான் அருணாச்சல் மக்களை இதன் பொருட்டு பாராட்டுகிறேன், என் வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, உங்கள் அனைவரிடமிருந்தும் 2022ஆம் ஆண்டு தொடர்பான நிறைய செய்திகளும் ஆலோசனைகளும் வந்திருக்கின்றன. ஒரு விஷயம், ஒவ்வொரு முறையைப் போன்றும் பெரும்பாலான மக்களின் செய்தியாக இருக்கிறது. அது தான் தூய்மை மற்றும் தூய்மை பாரதம் பற்றியது. தூய்மையின் இந்த உறுதிப்பாடு, ஒழுங்குமுறையோடு, விழிப்புணர்வோடு, அர்ப்பணிப்போடு மட்டுமே முழுமையடையும். தேசிய மாணவர் படை வாயிலாகத் தொடங்கப்பட்ட புனீத் சாகர் இயக்கத்திலும் இதன் ஒரு காட்சியை நம்மால் காண இயலும். இந்த இயக்கத்தில் 30000த்திற்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை உறுப்பினர்கள் பங்கெடுத்தார்கள். இந்த மாணவர்கள் கடற்கரைகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள், அங்கே இருந்த நெகிழிப் பொருட்களை அகற்றி, அவற்றை மறுசுழற்சிக்காகத் திரட்டினார்கள். நமது கடற்கரைப் பகுதிகள், நமது மலைகள் எல்லாம் நாம் சுற்றிப் பார்க்க ஏதுவானவையாக எப்போது இருக்கும் என்றால், அவை தூய்மையாக இருக்கும் போது தான். பலர் ஏதோ ஓரிடத்திற்குச் செல்லும் கனவைத் தங்கள் வாழ்க்கை முழுக்க காண்கிறார்கள்; ஆனால் அங்கே சென்ற பிறகு, தெரிந்தோ தெரியாமலோ குப்பைகளை விட்டுச் செல்கிறார்கள். எந்த இடம் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதோ, அதை நாம் மாசுபடுத்தக் கூடாது என்பது நாட்டுமக்களாகிய நம்மனைவரின் பொறுப்பாகும்.
நண்பர்களே, எனக்கு சாஃப்வாட்டர் என்ற ஒரு ஸ்டார்ட் அப் பற்றித் தெரிய வந்தது. இவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் internet of things துணையோடு, அவர்களின் பகுதிகளில் இருக்கும் தண்ணீரின் தூய்மை மற்றும் தரம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு அளிக்கிறார்கள். இது தூய்மை தொடர்பான அடுத்தகட்டம். மக்களின் தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, இந்த ஸ்டார்ட் அப்பின் முக்கியத்துவத்தைக் கண்டு, இதற்கு ஒரு உலக விருதும் கிடைத்திருக்கிறது.
நண்பர்களே, தூய்மையை நோக்கி ஒரு படி என்ற இந்த முயற்சியில், அமைப்புகளாகட்டும், அரசாகட்டும், அனைவருக்கும் மகத்துவம் நிறைந்த பங்களிப்பு இருக்கிறது. முந்தைய காலத்தில் அரசு அலுவலகங்களில் பழைய கோப்புகளும், காகிதங்களும் எத்தனை பெரிய மலை போலக் குவிந்திருந்தன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். பழைய வழிமுறைகளை மாற்றத் தொடங்கிய பிறகு, இந்தக் கோப்புகளும், காகிதங்களும் அடங்கிய மலை, டிஜிட்டல் முறையில் கணிப்பொறியில் ஒரு உறைக்குள் அடங்கி விட்டது. பழைய, நிலுவையிலிருக்கும் விஷயங்களை அகற்ற அமைச்சகங்களும், துறைகளும் சிறப்பு இயக்கத்தையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த இயக்கம் காரணமாக, சில சுவாரசியமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. தபால் துறையில் இந்தத் தூய்மை இயக்கம் செயல்படுத்தப்பட்ட போது, அங்கே இருந்த குப்பைக்கிடங்கு முழுவதுமாக காலியானது. இப்போது இந்தக் குப்பைக்கிடங்கு முற்றம், தேநீர்-சிற்றுண்டி அருந்தும் இடம் என மாறி விட்டது. மேலும் ஒரு குப்பைக்கிடங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி விட்டது. இதைப் போலவே சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது காலியாகவுள்ள குப்பைகிடங்கை நல்வாழ்வு மையமாக மாற்றியமைத்திருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஒரு தூய்மை ஏடிஎம்மையும் அமைத்திருக்கிறது. மக்கள் குப்பைகளை அளித்து, இதற்கு பதிலாக பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என்பதே இதன் நோக்கம். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துறைகளில் இருக்கும் மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளையும், உயிரி குப்பைகளையும் கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தல் தொடங்கப்பட்டு விட்டது. இந்தத் துறை, குப்பைக் காகிதம் மூலம் எழுது பொருட்களைத் தயாரிக்கும் பணியைப் புரிந்து வருகிறது. நமது அரசுத் துறைகளும் தூய்மை போன்ற விஷயங்களில் இந்த அளவுக்கு புதுமையாகச் செயல்பட முடியும். சில ஆண்டுகள் முன்பு வரை, யாருக்கும் இதன் மீது நம்பிக்கையேதும் இருக்கவில்லை ஆனால், இன்று இது அமைப்பின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. இது தான் தேசத்தின் புதிய கருத்தோட்டம். இதற்கு நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து தலைமை தாங்குகிறார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறையும் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஒவ்வொரு முறையைப் போன்றும், ஒரு மாதம் கழித்து, நாம் மீண்டும் சந்திப்போம், ஆனால், 2022ஆம் ஆண்டிலே. ஒவ்வொரு புதிய தொடக்கமும், நமது திறமைகளை அடையாளம் கண்டு கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. எந்த இலக்குகளை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாமல் இருந்ததோ, இன்று தேசம் இவற்றுக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டிலே,
क्षणश: कणशश्चैव, विद्याम् अर्थं च साधयेत् |
क्षणे नष्टे कुतो विद्या, कणे नष्टे कुतो धनम् ||
க்ஷணச: கணஸ்சைவ, வித்யாம் அர்த்தம் ச சாதயேத்.
க்ஷணே நஷ்டே குதோ வித்யா, கணே நஷ்டே குதோ தனம், என்று கூறப்படுவதுண்டு.
அதாவது, நாம் கல்வி கற்பதாகட்டும், புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதாகட்டும், நாம் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல செல்வத்தைத் திரட்டும் போது, அதாவது உயர்வு-வளர்ச்சி அடைய வேண்டும் போதும், ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு ஆதாரத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கணம் இழந்து போனால், கல்வி, ஞானம் மறைந்து விடும், கணம் இழந்து போனால், செல்வம் மற்றும் வளர்ச்சிக்கான பாதை தடைப்பட்டுப் போகும். இது நாட்டுமக்களாகிய நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்க வல்லது. நாம் நிறைய கற்க வேண்டும், நிறைய புதுமைகள் படைக்க வேண்டும், புதியபுதிய இலக்குகளை அடைய வேண்டும் ஆகையால், நாம் ஒரு கணப் பொழுதைக் கூட வீணடித்து விடக் கூடாது. நாம் தேசத்தை முன்னேற்றப் பாதையில், புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் நாம் நமது அனைத்து ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு வகையில், தற்சார்பு பாரதத்திற்கான ஒரு மந்திரம்; ஏனென்றால், நாம் நமது ஆதாரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால், அவற்றை விரயமாக்காதிருந்தால், அப்போது தான் நம்மால் சொந்த பலத்தை அடையாளம் கண்டு கொள்ள இயலும், அப்போது தான் தேசம் தற்சார்பு உடையதாக ஆகும். ஆகையால், நாம் நமது நெஞ்சுறுதிகளை மீண்டும் உரைப்போம், பெரியதாகச் சிந்திப்போம், பெரிய கனவுகளைக் காணுவோம், அவற்றை நிறைவேற்றும் பொருட்டு, முழுவீச்சில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம், வாருங்கள்!! மேலும் நமது கனவுகள் நம்வரை மட்டுமே குறுகிப் போய் விடக் கூடாது. நமது கனவுகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டுமென்றால், இவற்றோடு நமது சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றம் இணைந்திருக்க வேண்டும், நமது வளர்ச்சியால் தேசத்தின் வளர்ச்சிப் பாதை திறக்க வேண்டும். இதற்காக நாம் இன்றிலிருந்து ஈடுபட வேண்டும், ஒரு கணம் கூட வீணாக்காமல், ஒரு கணம் கூட விரயம் செய்யாமல். இந்த மனவுறுதிப்பாட்டோடு, இனிவரும் ஆண்டில் தேசம் முன்னேற்றம் காணும், 2022ஆம் ஆண்டு, ஒரு புதிய பாரதத்தை நாம் நிர்மாணம் செய்யும் பொன்னானதொரு அத்தியாயமாகும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாம் மீண்டும் ஒரு முறை மனதின் குரலுக்காக இணைந்திருக்கிறோம். இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றது, டிசம்பர் வந்து விட்டாலே மனோவியல்ரீதியாக, ஆண்டு நிறைவடைந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பிறந்து விடும். இது ஆண்டின் இறுதி மாதம், புதிய ஆண்டிற்குத் தயாராகும் நடவடிக்கைகளைத் தொடங்கி விடுவோம். இந்த மாதத்தில் தான் கடற்படை தினம் மற்றும் இராணுவப் படைகளின் கொடிநாளை தேசம் கொண்டாடுகிறது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற போரின் பொன்விழாவினை இந்த ஆண்டு தேசம் கொண்டாடுகிறது என்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் தேசத்தின் பாதுகாப்புப் படைகளை நினைவுகூருகிறேன், நம்முடைய வீரர்களை நினைவில் ஏந்துகிறேன். குறிப்பாக, இப்படிப்பட்ட வீரர்களைப் பெற்றெடுத்த அன்னையரை நினைவுகூருகிறேன். எப்போதும் போலவே இந்த முறையும் நமோ செயலியில், மைகவ் தளத்தில் நீங்கள் எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் என்னை உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக எண்ணி, உங்கள் வாழ்க்கையின் சுகதுக்கங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் இளைஞர்கள் பலருண்டு, மாணவமாணவியர் பலர் உண்டு. மனதின் குரல் என்ற நம்முடைய குடும்பம் தொடர்ந்து பெருகி வருகிறது, மனங்களாலும் இணைந்து வருகின்றார்கள், நோக்கத்தாலும் இணைந்து வருகின்றார்கள், நம்முடைய ஆழமான உறவுகள், நமக்குள்ளே, ஆக்கப்பூர்வமான பிரவாகத்தைத் தொடர்ந்து பெருக்கெடுக்கச் செய்து வருகிறது என்பது எனக்கு உள்ளபடியே மிகுந்த நிறைவினைக் கொடுக்கின்றது.
எனதருமை நாட்டுமக்களே, சீத்தாபூரைச் சேர்ந்த ஓஜஸ்வி, அமிர்த மஹோத்சவத்தோடு தொடர்புடைய விஷயங்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக எழுதியிருக்கிறார். இவர் தனது நண்பர்களோடு இணைந்து மனதின் குரலைக் கேட்டு வருகிறார், சுதந்திரப் போராட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்ளவும், கற்கவும், தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். நண்பர்களே, அமிர்த மஹோத்சவம், கற்றலோடு கூடவே, நல்ல விஷயம் ஒன்றைச் செய்யவும் கருத்தூக்கம் அளிக்கிறது. இப்போது நாடெங்கிலும், அது பொதுமக்களாக இருக்கட்டும், அரசுகளாகட்டும், பஞ்சாயத்துக்கள் தொடங்கி, பாராளுமன்றம் வரை, அமிர்த மஹோத்சவத்தின் எதிரொலி எங்கெங்கும் ஒலிக்கின்றது. இந்த மஹோத்சவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி கடந்த நாட்களில் தில்லியில் நடைபெற்றது. இதன் தலைப்பு குழந்தைகள் ஒலிக்கும் சுதந்திரத்தின் கதை. இதில் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய சம்பவங்களை உணர்ச்சிப் பெருக்கோடு அளித்தார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பாரத நாட்டோடு கூடவே, நேபாளம், மௌரிஷியஸ், டான்ஸானியா, ந்யூசீலாண்ட், ஃபீஜீ நாடுகளுடைய மாணவர்களும் இதில் பங்கெடுத்தார்கள் என்பது தான். நம்முடைய தேசத்தின் மஹாரத்தினம் ஓ.என்.ஜி.சி. இதுவும் சில நூதனமான முறைகளில் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடி வருகிறது. ஓ.என்.ஜி.சி இப்பொது, எண்ணைக் கிணறுகளைக் காண்பதற்கு, மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்தச் சுற்றுலாக்களில் ஓ.என்.ஜி.சியின் எண்ணை வயல்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, நம்முடைய வருங்கால பொறியாளர்கள், தேச நிர்மாண முயற்சிகளில் முழு உற்சாகத்தோடும், தீர்மானத்தோடும் பங்களிக்க வேண்டும் என்பது தான்.
நண்பர்களே, சுதந்திரத்தில் நம்முடைய பழங்குடியினத்தவரின் பங்களிப்பைப் பார்த்து, தேசம் பழங்குடியின கௌரவ வாரத்தையும் கொண்டாடியது. தேசத்தின் பல்வேறு பாகங்களில் இதோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அண்டமான் – நிகோபார் தீவுக்கூட்டங்களில் ஜார்வா மற்றும் ஓங்கி போன்ற பழங்குடியின மக்கள், தங்களுடைய கலாச்சாரம் பற்றிய உயிர்ப்புடைய வெளிப்பாட்டை அளித்தார்கள். ஒரு அருமையான பணியை ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனாவின் மினியேச்சர் ரைட்டரான ராம் குமார் ஜோஷி அவர்கள் செய்திருக்கிறார். இவர் தபால் தலைகளிலே, அதாவது சிறிய தபால் தலைகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் வித்தியாசமான வரிவடிவத்தை உருவாக்கி இருக்கிறார். ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட ராம் என்ற சொல்லின் மீது இவர் வரிவடிவத்தை உருவாக்கினார், இதிலே இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கையையும் சுருக்கமாகப் பொறித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் கட்னியிலும் சில நண்பர்கள் நினைவில் கொள்ளத்தக்க கதை சொல்லும் நிகழ்ச்சி பற்றிய தகவல்களை அளித்திருக்கிறார்கள். இதில் ராணி துர்க்காவதியின் அற்புதமான சாகஸம் மற்றும் உயிர்த்தியாகம் பற்றிய நினைவுகளை புதுப்பித்திருக்கிறார்கள். இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி காசியிலும் நடைபெற்றது. கோஸ்வாமி துளசிதாஸ், சந்த் கபீர், சந்த் ரவிதாஸர், பாரதேந்து ஹரிஷ்சந்திரர், முன்ஷீ பிரேம்சந்த், ஜய்ஷங்கர் பிரசாத் போன்ற பேராளுமைகளுக்கு கௌரவம் சேர்க்கும் வகையிலே மூன்று நாட்கள் வரையிலான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில், இவர்கள் அனைவரும், தேசத்தில் விழிப்புணர்வு ஏற்பட மிகப்பெரும் பங்களிப்பை நல்கியிருக்கின்றார்கள். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், மனதின் குரலின் கடந்த பகுதிகளில், நான் மூன்று போட்டிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதாவது ஒரு தேசபக்திப் பாடலை எழுத வேண்டும், தேசபக்தியோடு தொடர்புடைய, சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய சம்பவங்களைக் கொண்டு கோலம் போடுவது, மேலும் நமது குழந்தைகளின் மனதிலே மகோன்னதமான பாரதம் பற்றிய கனவுகளை விழிப்படையச் செய்யும் தாலாட்டுப் பாடல்களை எழுதுவது. இந்தப் போட்டிகளில் நீங்கள் கண்டிப்பாக உங்கள் நுழைவை அனுப்பி வைத்திருப்பீர்கள், அல்லது இதற்கான திட்டம் தீட்டியிருப்பீர்கள், உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடி இருப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. இந்தியாவின் ஒவ்வொரு இடத்திலும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டிப்பாக உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த விஷயத்திலிருந்து சற்று விலகி, உங்களை நான் இப்போது நேரடியாக விருந்தாவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். பகவானுடைய அன்பின் பிரத்யட்சமான சொரூபம் விருந்தாவனம் என்று கூறப்படுவது உண்டு. நம்முடைய புனிதர்களும் என்ன கூறியிருக்கிறார்கள் பாருங்கள் –
यह आसा धरि चित्त में, यह आसा धरि चित्त में,
कहत जथा मति मोर |
वृंदावन सुख रंग कौ, वृंदावन सुख रंग कौ,
काहु न पायौ और |
அதாவது விருந்தாவனத்தின் மகிமையை, நாமனைவரும், நம்முடைய திறன்களுக்கேற்ப உரைக்கிறோம், ஆனால் விருந்தாவனத்தின் சுகம் இருக்கிறதே, இங்கே இருக்கும் ஆனந்தம் இருக்கிறதே, இதற்கு முடிவே இல்லை, இதை யாராலும் முழுமையாகப் பெற முடியாது, இது எல்லையே இல்லாதது. ஆகையினால் தான் விருந்தாவனம், உலகெங்கிலும் உள்ள மக்களைத் தன்னை நோக்கி ஈர்க்கின்றது. இது பதிக்கக்கூடிய அடையாளம் உலகின் மூலைமுடுக்கெங்கிலும் காணக் கிடைக்கின்றது.
மேற்கு ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் ஒரு நகரம் பெர்த். இந்த இடம் பற்றித் தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது, ஏனென்றால் பெர்த் நகரில் எப்போதும் கிரிக்கெட் ஆட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கும். பெர்த் நகரிலே ஒரு Sacred India Gallery புனித இந்தியா கண்காட்சியகம் உண்டு, இது ஒரு கலைக்கூடம். இந்தக் கூடம் ஸ்வான் பள்ளத்தாக்கின் ஒரு அழகான இடத்திலே உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்ட்ரேலியாவில் வசிக்கும் ஜகத் தாரிணீ தாசி அவர்களின் முயற்சிகளின் பயனாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜகத் தாரிணீ அவர்கள் ஆஸ்ட்ரேலியா நாட்டைச் சேர்ந்தவர் தான், அங்கே தான் பிறந்தவர், அங்கேயே வளர்ந்தவர் என்றாலும், அவர் தன்னுடைய 13 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை விருந்தாவனத்திலே கழித்திருக்கிறார். அவர் ஆஸ்ட்ரேலியாவிற்குத் திரும்பிச் சென்றாலும், தன்னால் விருந்தாவனத்தை மறக்க முடியவில்லை என்று கூறுகிறார். ஆகையால் இவர் விருந்தாவனத்தோடும், அதன் ஆன்மீக உணர்வோடும் இணைந்திருக்க, ஆஸ்ட்ரேலியாவிலேயே விருந்தாவனத்தை உருவாக்கியிருக்கிறார். இதற்குத் தனது கலையையே ஊடகமாக்கி, ஒரு அற்புதமான விருந்தாவனத்தை உருவாக்கினார். இங்கே வருவோருக்குப் பலவகையான கலைப்படைப்புகள் விருந்தை அளிக்கின்றன. காண்போருக்கு பாரதத்தின் மிகவும் பிரபலமான புனிதத்தலங்களான விருந்தாவனம், நவாத்வீபம், ஜகன்னாதபுரியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் காட்சி கிடைக்கும். இங்கே பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதிலே ஒரு கலைப்படைப்பு எப்படி என்றால், இதிலே பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தனது சிறுவிரலில் உயர்த்தியபடி இருப்பது; இதனடியே விருந்தாவனத்தின் மக்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள். ஜகத் தாரிணீ அவர்களின் இந்த அற்புதமான முயல்வு, உண்மையிலேயே நமக்கு கிருஷ்ண பக்தியின் சக்தியின் காட்சியை அமைத்துக் கொடுக்கிறது. இந்த முயற்சிக்காக நான் அவருக்குப் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
என் மனதிற்கினிய நாட்டுமக்களே, ஆஸ்ட்ரேலியாவின் பெர்த்தில் உருவாக்கப்பட்டிருக்கும் விருந்தாவனம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் ஒரு சுவாரசியமான வரலாறு என்று பார்த்தால், ஆஸ்ட்ரேலியாவின் ஒரு உறவு நம்முடைய புந்தேல்கண்டின் ஜான்சியோடும் இருக்கின்றது. உள்ளபடியே ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக, சட்டபூர்வமாகப் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவருடைய வழக்குரைஞராக இருந்தவர் ஜான் லேங்க். இவர் ஆஸ்ட்ரேலிய நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் வசித்து, ராணி லக்ஷ்மிபாய் தரப்பில் வழக்காடிக் கொண்டிருந்தார். நம்முடைய சுதந்திரப் போராட்டத்திலே, ஜான்சியும், புந்தேல்கண்டும் அளித்திருக்கும் மகத்தான பங்களிப்பு என்ன என்பதை நாமனைவரும் நன்கறிவோம். இங்கே ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரீ பாய் போன்ற வீர மங்கையரும் தோன்றியிருக்கின்றார்கள், மேஜர் தியான்சந்த் போன்ற விளையாட்டுத் துறை ரத்தினங்களும் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
நண்பர்களே, வீரம் என்பது யுத்தகளத்திலே மட்டும் வெளிப்படுத்தப்படுவது அல்ல, அப்படி எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதிப்பாடு நிறைவடையும் போதும், அது விரிவடையும் போதும், அனைத்துத் துறைகளிலும் செயல்கள் வெற்றியடையத் தொடங்கும். இப்படிப்பட்ட ஒரு வீரம் பற்றி ஜோத்ஸனா அவர்கள் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். ஜாலௌனில் பாரம்பரியமாகவே பெருகியோடிய ஒரு நதி நூன் நதி. இங்கே இருக்கும் விவசாயிகளுக்கான ஒரு நீராதாரமாக இது இருந்து வந்துள்ளது, ஆனால் மெல்லமெல்ல நூன் நதி வறண்டு போகும் நிலை ஏற்பட்டு, கொஞ்சநஞ்சம் நதியே எஞ்சி இருந்த நிலையில், அது ஒரு ஓடையாக மாறி விட்ட வேளையில், இதிலிருந்து நீர்ப்பாசனம் செய்வது என்பது விவசாயிகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஜாலௌன்வாசிகள் இந்த நிலையை மாற்றும் சவாலை எதிர்கொண்டார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம், இதன் பொருட்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிராமவாசிகளும், அந்தப் பகுதி மக்களும் தாங்களாகவே ஊக்கம் பெற்று இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். இங்கே இருக்கும் பஞ்சாயத்துக்களும், கிராமவாசிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இன்று மிகவும் குறைவான காலத்திலே, மிகவும் குறைவான செலவிலே, இந்த நதி, மீண்டும் உயிர்த்திருக்கிறது. இதனால் எத்தனையோ விவசாயிகளுக்கு பயன் கிடைத்து வருகிறது. போர்க்களத்தை விட வேறுபட்ட வகை வீரத்தின் இந்த எடுத்துக்காட்டு, நமது நாட்டுமக்களின் உறுதிப்பாட்டுணர்வை வெளிப்படுத்துகிறது, மேலும் நாம் மனதிலே உறுதி மேற்கொண்டு விட்டால், சாத்தியமற்றது என்பது ஏதும் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆகையால் தான் நான் கூறுகிறேன் – அனைவருடைய முயற்சி.
என் அன்புநிறை நாட்டுமக்களே, நாம் இயற்கையைப் பாதுகாக்கும் போது, இதற்கு பதிலாக இயற்கையும் நம்மைப் பாதுகாத்தளிக்கிறது. இந்த விஷயத்தை நாம் நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவித்து உணர்ந்திருக்கலாம், இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டினை தமிழ்நாட்டின் மக்கள் பரந்துபட்ட அளவிலே வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தினுடையது. கரையோரப் பகுதிகள் பல வேளைகளில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதை நாம் அறிவோம். தூத்துக்குடியிலும் பல சிறிய தீவுகளும் திட்டுக்களும் இருக்கின்றன, இவை கடலில் மூழ்கும் அபாயம் வலுத்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் மற்றும் வல்லுநர்கள், இந்த இயற்கை அபாயத்திலிருந்து பாதுகாக்க இயற்கையை ஊடகமாகக் கொண்டார்கள். இவர்கள் இப்போது இந்த மணல் திட்டுக்களில் பனை மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல்கள் மற்றும் சூறாவளிகளிலும் நிமிர்ந்து நிற்பவை, நிலத்திற்குப் பாதுகாப்பளிப்பவை. இவற்றால் இந்தப் பகுதியைப் பாதுகாக்க ஒரு புதிய நம்பிக்கைக் கீற்று உதயமாகி இருக்கிறது.
நண்பர்களே, இயற்கை நமக்கெல்லாம் எப்போது அபாயத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால், நாம் அதன் சீர்தன்மையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் தூய்மைத் தன்மையை அழிக்கும் போது தான். இயற்கை, நம்மையெல்லாம் ஒரு அன்னையைப் போலப் பராமரிக்கிறாள், நமது உலகிலே புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்புகிறாள்.
இப்போது நான் சமூக ஊடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மேகாலயாவில் ஒரு பறக்கும் படகு பற்றிய படம் நன்கு பரவலாகி இருந்தது. முதல் பார்வையிலேயே நான் இதன்பால் கவரப்பட்டேன். உங்களில் பலர் இதை இணையத்தில் கண்டிருக்கலாம். காற்றில் மிதக்கும் இந்தப் படகினை நுணுகிப் பார்க்கும் போது, இது நதியில் பயணிப்பது நமக்குப் புரிய வரும். நதியின் நீர் எந்த அளவுக்குத் தூய்மையானதாக இருக்கிறது என்றால், அதன் அடிப்பகுதி வரை பளிங்கு போலத் தெரிகிறது, படகு ஏதோ காற்றிலே துடுப்பு போட்டுச் செல்வது போலத் தோன்றுகிறது. நம்முடைய நாட்டிலே பல மாநிலங்களில் இருக்கும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய இயற்கையின் பாரம்பரியங்களை, சிறப்பாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்தில் இயற்கையோடு இசைவான வாழ்க்கை முறை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. இவை நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கக் கூடியவை. நமக்கருகேயும் கூட இருக்கும் இயற்கை அழகுகளை நாம் பாதுகாக்க வேண்டும், அவற்றை முன்பிருந்த நிலைக்கே நாம் மீட்டுச் செல்ல வேண்டும். இதிலே தான் நம்மனைவரின் நலனும் அடங்கியிருக்கிறது, உலகின் நலனும் அடங்கியிருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, அரசு திட்டங்களைத் தீட்டும் போது, பணத்தைச் செலவு செய்யும் போது, காலத்திற்குள்ளாகத் திட்டங்களை நிறைவேற்றும் போது, அரசு வேலை செய்கிறது என்ற உணர்வு மக்கள் மனதிலே ஏற்படும். ஆனால் அரசு பல பணிகளின் வளர்ச்சிக்காக, பல திட்டங்களுக்கு இடையே செயலாற்றும் வேளையில், மனித உணர்வுகளின் புரிதலோடு தொடர்புடைய விஷயங்கள் எப்போதுமே ஒரு அலாதியான சுகத்தை அளிக்கின்றன. அரசின் முயற்சிகள் காரணமாக, அரசாங்கத்தின் திட்டங்களால் எப்படி ஒருவருடைய வாழ்க்கை மாறுகிறது, அந்த மாறிய வாழ்க்கையை அவர் எப்படி அனுபவிக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் நாம் கேள்விப்படும் போது, நம்முள்ளத்திலேயும் கருணை நிரம்பி விடுகிறது. இது மனதிற்கு நிறைவை அளிக்கிறது, அந்தத் திட்டத்தை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்க உத்வேகம் அளிக்கிறது. ஒரு வகையில், இது ஸ்வாந்த: சுகாய, அதாவது ஆன்மாவிற்குக் கிடைக்கும் ஆனந்தம் என்பது தான். அந்த வகையில் இன்று மனதின் குரலில் நம்மோடு இரண்டு நண்பர்கள் இணைய இருக்கின்றார்கள், இவர்கள் தங்களுடைய துணிவின் துணையால், ஒரு புதிய வாழ்க்கையை வென்றிருக்கிறார்கள். இவர்கள் ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின் உதவியால், சிகிச்சை பெற்றார்கள், ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். நமது முதல் நண்பரின் பெயர் ராஜேஷ் குமார் பிரஜாபதி, இவருக்கு இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது. வாருங்கள், நாம் ராஜேஷ் அவர்களோடு உரையாடுவோம்.
பிரதமர் – ராஜேஷ் அவர்களே வணக்கம்.
ராஜேஷ் பிரஜாபதி – வணக்கம்யா வணக்கம்.
பிரதமர் – ராஜேஷ் அவர்களே உங்களுக்கு என்னங்கய்யா நோய் இருக்கு? நீங்க ஒரு மருத்துவர் கிட்ட போயிருப்பீங்க, பிறகு அந்தப் பகுதி மருத்துவர் உங்களை வேற இடத்துக்கு அனுப்பியிருப்பாரு, அந்த மருத்துவர்கிட்ட நீங்க போயிருப்பீங்க. உங்களால முடிவு எதுவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும், இல்லை முடிவு எடுத்திருந்தா என்ன நடந்திச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!
ராஜேஷ் பிரஜாபதி – எனக்கு இருதயத்தில பிரச்சனைங்கய்யா. என் நெஞ்சுல ஒரே எரிச்சலா இருந்திச்சு, பிறகு நான் ஒரு மருத்துவர் கிட்ட காட்டினேன். அவரு முன்னயே ஒருவேளை, தம்பி உனக்கு அமிலத்தன்மை அதிகமாயிருக்கும் அப்படீன்னதால, நான் ரொம்ப நாள் வரை அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தற மருந்தை எடுத்துக்கிட்டேன். இதனால எனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கலைங்கற போது, நான் டாக்டர் கபூர் கிட்ட காட்டினேன். அப்ப அவரு சொன்னாரு, தம்பி உன்னோட அறிகுறியை புரிஞ்சுக்கணும்னா அதுக்கு ஆஞ்சியோகிராஃபி தான் செய்யணும்னு சொல்லி என்னை ஸ்ரீ ராம மூர்த்தி மருத்துவமனைக்கு பரிந்துரை செஞ்சாரு. அங்க நான் அமரேஷ் அக்ரவால் அவங்களை சந்திச்சேன், அவங்க தான் எனக்கு ஆஞ்சியோகிராஃபியை செஞ்சாங்க. அவங்க தான் என்கிட்ட சொன்னாங்க, தம்பி உனக்கு இரத்தக்குழாய்ல அடைப்பு இருக்குன்னாரு. இதை சரி செய்ய எத்தனை ரூபாய் செலவாகும்னு நான் அவருகிட்ட கேட்டேன். அப்ப அவரு உன் கிட்ட பிரதமர் உருவாக்கிக் கொடுத்திருக்கற ஆயுஷ்மான் அட்டை இருக்கான்னு கேட்டாரு. நான் உடனே, ஆமாம் டாக்டர் இருக்குன்னேன். உடனே அவரு என்கிட்டேர்ந்து அந்த அட்டையை வாங்கிக்கிட்டாரு, என்னோட எல்லா செலவும் அந்த அட்டை மூலமே செய்யப்பட்டிச்சு. ஐயா, நீங்க உருவாக்கிக் கொடுத்திருக்கற இந்த அட்டை இருக்கே, இது எங்களை மாதிரி ஏழைபாழைங்களுக்கு ரொம்ப பெரிய வசதியா, வரப்பிரசாதமா இருக்குங்கய்யா. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியலைங்கய்யா.
பிரதமர் – நீங்க என்ன வேலை பார்க்கறீங்க ராஜேஷ் அவர்களே?
ராஜேஷ் பிரஜாபதி – ஐயா, நான் இப்ப தனியார் நிறுவனம் ஒண்ணுல வேலை பார்த்திட்டு இருக்கேன்யா.
பிரதமர் – உங்களுக்கு என்ன வயசாகுதுங்க?
ராஜேஷ் பிரஜாபதி – 39ங்கய்யா.
பிரதமர் – இத்தனை சின்ன வயசுல உங்களுக்கு இப்படி இருதயத்தில பிரச்சனை ஆகியிருச்சே!!
ராஜேஷ் பிரஜாபதி – ஆமாங்கய்யா, என்னத்தை சொல்ல?
பிரதமர் – உங்க குடும்பத்தில, உங்க அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, இந்த மாதிரி முன்னால ஆகியிருக்கா?
ராஜேஷ் பிரஜாபதி – இல்லைங்கய்யா, இப்படி யாருக்குமே ஆனதில்லை. என் விஷயத்தில தான் இப்படி முதமுறையா நடந்திருக்கு.
பிரதமர் – இந்த ஆயுஷ்மான் அட்டையை இந்திய அரசு செஞ்சு கொடுக்குது, ஏழைபாழைகளுக்கு பெரிய வகையில உதவக்கூடிய பெரிய திட்டம் இது. சரி, உங்களுக்கு இதுபத்தி எப்படி தெரிய வந்திச்சு?
ராஜேஷ் பிரஜாபதி – ஆமாங்கய்யா, ஏழைங்களுக்கு இத்தனை உதவக்கூடிய, இத்தனை ஆதாயமா இருக்கற இது மிகப்பெரிய திட்டம் தாங்கய்யா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்கய்யா. மருத்துவமனையிலேயே இது எத்தனை பேர்களுக்கு எத்தனை உதவிகரமா இருக்குங்கறதை நான் கண்கூடா பார்த்தேன்யா. மருத்துவர் கிட்ட என் கிட்ட அட்டை இருக்குன்னு சொன்னா போதும், உடனே அவங்க உங்க அட்டையை கொண்டு வாங்கன்னு சொல்லி, அந்த அட்டை வாயிலாவே சிகிச்சை அளிச்சுடறாங்கய்யா.
பிரதமர் – சரி, உங்க கிட்ட அட்டை இல்லாம போயிருந்தா, உங்களுக்கு எத்தனை செலவாகியிருக்கும்னு மருத்துவர் சொன்னாரு?
ராஜேஷ் பிரஜாபதி – ஏகப்பட்ட செலவாகும் தம்பின்னு மருத்துவர் சொன்னாருங்கய்யா. அட்டை இருக்கான்னு அவரு கேட்டப்ப, நான் உடனே என் கிட்ட இருக்குன்னு சொன்னவுடனே, காமிக்க சொன்னாரு, நானும் காமிச்சேன். இந்த அட்டை மூலமாவே எனக்கு சிகிச்சை அளிச்சாங்க, நான் ஒரு பைசா செலவே செய்யலைங்க. மருந்துகள் கூட இந்த அட்டை மூலமாவே கொடுத்தாங்க.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, இப்ப உங்களுக்கு மனசுக்குத் தெம்பா இருக்கா, உடம்பு நல்லாயிருச்சா?
ராஜேஷ் பிரஜாபதி – ரொம்பங்கய்யா. உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்யா. என்னென்னைக்கும் நீங்களே ஆட்சியதிகாரத்தில இருக்கற வகையில உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கணும்ங்கய்யா. எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க உங்க கிட்ட எத்தனை சந்தோஷப்படுறாங்கன்னு என்னால வார்த்தையில சொல்ல முடியாது.
பிரதமர் – ராஜேஷ் அவர்களே, தயவு செஞ்சு நான் ஆட்சியதிகாரத்தில இருக்கணுங்கற ஆசிகளை எனக்குக் கொடுக்காதீங்க. நான் இன்னைக்கும் ஆட்சியதிகாரத்தில இல்லை, எதிர்காலத்திலயும் ஆட்சியதிகாரத்தில இருக்க விரும்பலை. நான் சேவை மட்டுமே செய்ய விரும்பறேன். என்னைப் பொறுத்த மட்டிலும் இந்தப் பதவி, பிரதம மந்திரிங்கறது எல்லாம், ஆட்சியதிகாரம் பத்தின விஷயம் இல்லை சகோதரா, இதெல்லாம் சேவைக்கானது மட்டும் தான்.
ராஜேஷ் பிரஜாபதி – எங்க எல்லாருக்கும் இந்தச் சேவை தானேய்யா தேவை, வேற என்ன?
பிரதமர் – பார்த்தீங்களா, இந்த ஆயுஷ்மான் பாரதம் திட்டம் ஏழைகளுக்கு எந்த அளவுக்கு அற்புதமா உதவிகரமா இருக்குன்னு.
ராஜேஷ் பிரஜாபதி – சத்தியமான வார்த்தைங்கய்யா, இது வரப்பிரசாதமே தான்.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, நீங்க ஒரு வேலை செய்யணுமே, செய்வீங்களா?
ராஜேஷ் பிரஜாபதி – சொல்லுங்கய்யா, என்ன செய்யணும்?
பிரதமர் – அதாவது பலருக்கு இது பத்தி தெரியறதே இல்லை, நீங்க ஒரு பொறுப்பை எடுத்துக்கணும், என்னென்னா, உங்க அக்கம்பக்கத்தில எத்தனை ஏழை குடும்பங்கள் இருக்காங்களோ, அவங்க கிட்ட எல்லாம் உங்களுக்கு இதனால என்னவெல்லாம் ஆதாயம் கிடைச்சுதோ, இதைப் பத்தி சொல்ல முடியுமா?
ராஜேஷ் பிரஜாபதி – கரும்பு தின்னக் கூலியா? கண்டிப்பா சொல்றேன்யா.
பிரதமர் – மேலும் அவங்களுக்கு அட்டையை எப்படி அவங்க ஏற்படுத்திக்கணும்னும் சொல்லுங்க; ஏன்னா குடும்பத்தில எப்ப என்ன கஷ்டம் வரும்னு எப்படி சொல்ல முடியும்!! இன்னைக்கு ஏழைக்கு மருந்துகள் கிடைக்காம கஷ்டப்படுறாங்கன்னு சொன்னா அது சரி இல்லை. பணம் இல்லாமை காரணமா அவங்களால மருந்துகளை வாங்க முடியலை இல்லை சிகிச்சை செஞ்சுக்க முடியலைன்னா, இது கவலை தரக்கூடிய விஷயம். இதனால என்ன ஆகுது, இப்ப உங்களுக்கே இந்த இருதய பிரச்சனை காரணமா உங்களால மாசக்கணக்கா வேலைக்கே சரியா போயிருக்க முடிஞ்சிருக்காதில்லையா?
ராஜேஷ் பிரஜாபதி – என்னால தொடர்ந்து ஒரு பத்தடி எடுத்து வைக்க முடியாது, படியேற முடியாதுய்யா.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, எனக்கு ஒரு நல்ல நண்பரா நீங்க இருந்து, ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடர்பா ஏழைகளுக்கு புரிய வைக்கணும், நோய்வாய்ப்பட்டவங்களுக்கு உதவி செய்யணும், இது உங்களுக்கு பெரிய மன நிறைவைக் கொடுக்கும், எனக்கும் அது ரொம்ப சந்தோஷத்தை அளிக்கும். ஒரு ராஜேஷ் அவர்களோட உடல் நலமாச்சு ஆனா பலநூறு நபர்களோட உடல்நலத்துக்கும் உதவியிருக்காரு. இந்த ஆயுஷ்மான் பாரதம் திட்டம், ஏழைகளுக்கானது, மத்தியத்தட்டு மக்களுக்கானது, எளிய குடும்பங்களுக்கானது அப்படீங்கற போது இதை எல்லா வீட்டுகளுக்கும் நீங்க கொண்டு சேருங்க.
ராஜேஷ் பிரஜாபதி – கண்டிப்பா கொண்டு சேர்ப்பேன் ஐயா. நான் மருத்துவமனையில 3 நாள் தங்கியிருந்தேன்ல, அப்ப பல கஷ்டப்படுற மக்கள் அங்க வந்திருந்தாங்க, அவங்களுக்கு எல்லாம் இதில இருக்கற வசதிகளை விளக்கினேன், எல்லாம் இலவசம்னு சொன்னேன்.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, நல்ல ஆரோக்கியத்தோட இருங்க, உங்க உடம்பு மேல கொஞ்சம் அக்கறை செலுத்துங்க, குழந்தைங்க மேல கவனம் செலுத்துங்க, வாழ்க்கையில நிறைய முன்னேற்றம் அடையுங்க, உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, நாம் இப்பொழுது ராஜேஷ் அவர்கள் சொன்னதைக் கேட்டோம் இல்லையா, வாருங்கள், அடுத்து இப்போது நம்மோடு இணைந்திருக்கும் சுக்தேவி அவர்களைச் சந்திக்கலாம். இவருக்கு மூட்டுப் பிரச்சனை, இவர் பட்ட துயரம் பற்றியும், இவர் எப்படி குணமானார் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்!!
மோதி ஜி – சுக்தேவி அவர்களே வணக்கம்!! நீங்க எங்கிருந்து பேசிட்டு இருக்கீங்க?
சுக்தேவி ஜி – தான்தபராவிலேர்ந்து.
மோதி ஜி – இந்த இடம் எங்க இருக்கு?
சுக்தேவி ஜி – மதுராவிலங்க.
மோதி ஜி – மதுராவிலயா? அப்படீன்னா சுக்தேவி அவர்களே, உங்களுக்கு நான் வணக்கமும் சொல்லணும், கூடவே ராதே ராதேன்னும் சொல்லணும்.
சுக்தேவி ஜி – ஆமாம், ராதே ராதே.
மோதி ஜி – உங்களுக்குக் கொஞ்சம் பிரச்சனை இருந்திச்சு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டிச்சுன்னு நான் கேள்விப்பட்டேன். என்ன விஷயம்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
சுக்தேவி ஜி – அது வந்து, என் மூட்டு ரெண்டும் கெட்டுப் போச்சு, அறுவை சிகிச்சை செஞ்சாங்க. பிரயாக் மருத்துவமனையில.
மோதி ஜி – உங்களுக்கு என்ன வயசாகுது சுக்தேவி அவர்களே?
சுக்தேவி ஜி – 40 வயசுங்கய்யா.
மோதி ஜி – 40 வயசு, சுக்தேவ் பேரு, உங்களுக்கு நோய் வந்திருச்சே சுக்தேவி அவர்களே.
சுக்தேவி ஜி – நோய் என்னமோ எனக்கு 15-16 வயசுலயே வந்திருச்சுங்க.
மோதி ஜி – அம்மாடியோவ்! இத்தனை சின்ன வயசிலயா உங்க மூட்டுகள்ல கோளாறாயிருச்சு?
சுக்தேவி ஜி – மூட்டுவாதம்யா. மூட்டுக்கள் இணைஞ்சிருக்கற இடத்தில வலி காரணமா மூட்டுக்கள் மோசமாயிருச்சுன்னாங்க.
மோதி ஜி – அப்படீன்னா 16 வயசிலேர்ந்து 40 வயசு வரைக்கும் நீங்க இதுக்கு எந்த சிகிச்சையுமே எடுத்துக்கலையா?
சுக்தேவி ஜி – செஞ்சுக்கலைங்கய்யா. வலிக்கு மாத்திரை எடுத்துக்குவேன், ஏதோ மருத்துவரகளை பார்ப்பேன், அவங்களும் நாட்டுமருந்துகள் மாதிரி ஏதோ தருவாங்க. போலி மருத்துவர்கள் காரணமா, ஏதோ கொஞ்ச நஞ்சம் நடந்திட்டு இருந்தும் அதுவும் நடக்க முடியாம போச்சு. 1-2 கிலோமீட்டர் நடந்திட்டு இருந்த என்னோட மூட்டு ரொம்ப மோசமா போயிருச்சு.
மோதி ஜி – அப்படீன்னா சுக்தேவீ அவர்களே, அறுவை சிகிச்சை செஞ்சுக்கற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டிச்சு? இதுக்கு பணத்துக்கு என்ன செஞ்சீங்க? இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சு?
சுக்தேவி ஜி - நான் ஆயுஷ்மான் அட்டை மூலமா சிகிச்சை செஞ்சுக்கிட்டேன்.
மோதி ஜி – உங்களுக்கு ஆயுஷ்மான் அட்டை கிடைச்சிருக்கா?
சுக்தேவி ஜி – ஆமாங்கய்யா.
மோதி ஜி – ஆயுஷ்மான் அட்டை மூலமா ஏழைகளுக்கு இலவசமா சிகிச்சை அளிக்கப்படுதுங்கற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
சுக்தேவீ ஜி – பள்ளிக்கூட த்தில கூட்டம் நடந்திட்டு இருந்திச்சு. அங்கிருந்து தான் என் கணவருக்கு தெரிய வந்து, அவரு தான் என் பேர்ல அட்டை எடுத்தாரு.
மோதி ஜி – ஓஹோ.
சுக்தேவீ ஜி – பிறகு அட்டை மூலமா சிகிச்சை அளிச்சாங்க, நான் ஒரு பைசா கூட செலவு செய்யலை. எல்லாம் அட்டையை வச்சுத் தான் நடந்திச்சு. ரொம்ப அருமையா சிகிச்சை செஞ்சாங்க.
மோதி ஜி – சரி, அட்டை இல்லைன்னா எத்தனை செலவாகும்னு மருத்துவர்கள் சொன்னாங்களா?
சுக்தேவீ ஜி – இரண்டரை இலட்சம் ரூபாய்லேர்ந்து மூணு இலட்சம் ரூபாய் ஆகும்னாங்க. 6-7 வருஷமா நான் கட்டில்லயே படுத்துக் கிடக்கேன். நான் கடவுள் கிட்ட வேண்டினதெல்லாம் ஒண்ணே ஒண்ணு மட்டும் தான், கடவுளே எனக்கு சுத்தமா வாழ பிடிக்கலை, என்னைக் கூட்டிக்கோங்கறது தான்.
மோதி ஜி – 6-7 ஆண்டுகளா படுத்த படுக்கையா இருந்தீங்களா? அடக் கடவுளே!!
சுக்தேவீ ஜி – ஆமாங்கய்யா.
மோதி ஜி – கடவுளே!!
சுக்தேவீ ஜி – கொஞ்சம் கூட எழுந்திருக்கவோ உட்காரவோ முடியாது.
மோதி ஜி – இப்ப உங்க மூட்டு முன்னை விட நல்லா ஆயிடுச்சா?
சுக்தேவீ ஜி – நான் நல்லா சுத்தி வர்றேன், சமையலறையில வேலை பார்க்கறேன், வீட்டுவேலை எல்லாம் செய்யறேன், பசங்களுக்கு உணவு சமைச்சுக் கொடுக்கறேன்.
மோதி ஜி – அப்படீன்னா ஆயுஷ்மான் பாரதம் அட்டை உங்களுக்கு நிறைஞ்ச ஆயுளைக் குடுத்திருக்குன்னு சொல்லுங்க!!
சுக்தேவீ ஜி – கண்டிப்பா. உங்களுக்குத் தான் நாங்க கோடானுகோடி நன்றிகளைச் சொல்லணும். உங்களோட இந்தத் திட்டத்தால தான் நான் குணமாகியிருக்கேன், என் கால்கள்ல என்னால நிக்க முடியுது.
மோதி ஜி – இப்ப பசங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குமே!!
சுக்தேவீ ஜி – ஆமாங்க. பசங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அம்மாவுக்குக் கஷ்டம்னா பசங்களுக்கும் தானே கஷ்டம்!!
மோதி ஜி – பாருங்க, நம்ம வாழ்க்கையில ரொம்ப பெரிய சுகம்னா அது நம்மோட ஆரோக்கியம் தான். இந்த சந்தோஷமான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணுங்கறது தான் ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தில இருக்கற உணர்வு. சரி சுக்தேவீ அவர்களே, உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள், மீண்டும் உங்களுக்கு ராதே ராதே.
சுக்தேவீ ஜி – ராதே ராதே, வணக்கம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இளைஞர்கள் நிறைந்த ஒவ்வொரு நாடும் மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அப்போது தான் இளைஞர்களை சரியான வகையில் அடையாளப்படுத்த முடியும். முதல் விஷயம் – Ideas and Innovation, அதாவது கருத்துக்கள் மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்பு. இரண்டாவதாக, இடர்களை எதிர்கொள்ளும் துணிச்சல், மூன்றாவதாக, Can Do Spirit, அதாவது என்னால் முடியும் என்ற உறுதியான உணர்வு, சூழ்நிலைகள் ஏதாக இருந்தாலும் சரி. இந்த மூன்று விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு விட்டால், வியக்கத்தக்க விளைவுகள் பிறக்கும். அற்புதம், அதிசயம் நிகழும். இன்றைய காலத்தில், நாலாபுறத்திலும் நாம் கேள்விப்படும் சொல் ஸ்டார்ட் அப் என்பது தான். சரியான விஷயம் தான், இது ஸ்டார்ட் அப் யுகம், இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் பாரதம் இன்று ஒருவகையில் உலகிற்கே தலைமையேற்றுக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஸ்டார்ட் அப்களின் சாதனை படைக்கும் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் துறை மிகுந்த விரைவோடு முன்னேற்றம் கண்டு வருகிறது. எந்த அளவுக்கு என்றால், தேசத்தின் சின்னச்சின்ன நகரங்களிலும் கூட இப்போது ஸ்டார்ட் அப்களின் எல்லை விரிந்திருக்கிறது. இப்போது யூனிகார்ன் என்ற சொல்லும் புழக்கத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யூனிகார்ன் என்பதன் மதிப்பு குறைந்தபட்சம் ஒரு பில்லியன் டாலர் பெறுமானம் உள்ளது, அதாவது கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்.
நண்பர்களே, 2015ஆம் ஆண்டு வரை தேசத்தில் தேடிப் பார்த்தாலும், 9 அல்லது 10 யூனிகார்ன்களே இருந்தன. இப்போதோ யூனிகார்களின் உலகத்திலேயும் பாரதம் விரைவாகச் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது என்ற செய்தி உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கலாம். ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வெறும் 10 மாதங்களில் மட்டும் பாரதத்திலே, பத்து நாட்களில் ஒரு யூனிகார்ன் என்ற வீதம் உருவாகியிருக்கிறது. இது ஏன் பெரிய விஷயம் என்பதற்கு மேலும் ஒரு காரணம் என்னவென்றால், நமது இளைஞர்கள், இந்த வெற்றியை கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே ஈட்டியிருக்கிறார்கள் என்பது தான். இன்று பாரதத்திலே 70க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உருவாகி விட்டன. அதாவது 70க்கும் அதிக ஸ்டார்ட் அப்களில் ஒரு பில்லியனுக்கும் அதிக மதிப்பீடு என்ற அளவைத் தாண்டியிருக்கின்றன. நண்பர்களே, ஸ்டார்ட் அப்பின் வெற்றியின் காரணமாக அனைவருடைய கவனமும் இவற்றின்பால் சென்றிருக்கிறது, நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளில் இருந்தும், முதலீடுகள் வாயிலாக, முதலீட்டாளர்களின் ஆதரவு இவற்றுக்குக் கிடைத்து வருகிறது. சில ஆண்டுகள் முன்பாக இதைப் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
நண்பர்களே, ஸ்டார் அப்புகள் மூலமாக இந்திய இளைஞர்கள் உலகாயத சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண்பதில் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இன்று நாம், ஒரு இளைஞரான மயூர் பாடில் அவர்களோடு உரையாட இருக்கிறோம். இவர் தனது நண்பர்களோடு இணைந்து, மாசு பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியை புரிந்திருக்கிறார்.
மோதி ஜி – மயூர் ஜி வணக்கம்.
மயூர் பாடில் – வணக்கம் ஐயா.
மோதி ஜி – மயூர் ஜி, எப்படி இருக்கீங்க?
மயூர் பாடில் – ரொம்ப அருமையா இருக்கேன்ங்கய்யா. நீங்க எப்படி இருக்கீங்க?
மோதி ஜி – நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சரி நீங்க சொல்லுங்க, இன்னைக்கு நீங்க ஸ்டார்ட் அப் உலகத்தில இருக்கீங்க, கழிவுகளை செல்வமா மாத்தற முயற்சியில ஈடுபட்டிருக்கீங்க, சுற்றுச்சூழல் விஷயத்திலயும் பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க, உங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன். உங்க வேலை பத்தி, இந்த வேலையை செய்யணுங்கற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டிச்சு??
மயூர் பாடில் – ஐயா, நான் கல்லூரியில படிச்சுக்கிட்டு இருந்தப்ப, என் கிட்ட ஒரு மோட்டார்சைக்கிள் இருந்திச்சு. இதோட மைலேஜ் ரொம்பவே குறைவானதா இருந்திச்சு, புகை அதிகமா வந்திச்சு. அது ஒரு 2 ஸ்ட்ரோக் பைக். இதிலேர்ந்து வர்ற புகையைக் குறைக்கவும், இதோட மைலேஜை கொஞ்சம் அதிகரிக்கவும் நான் முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். ஒரு 2011-12 வாக்கில, என் பைக்கோட மைலேஜை நான் 62 கிலோமீட்டர் வரை குடுக்கற வகையில அதிகரிச்சேன். அப்பத்தான் எனக்குள்ள ஒரு உத்வேகம் பிறந்திச்சு, ஏன் இதை பெரிய அளவுல தயாரிக்க கூடாது, அப்ப பல பேர்களுக்கு இதனால ஆதாயம் கிடைக்குமேன்னு தோணிச்சு. அதனால 2017-18இல நாங்க இதோட தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில ஒரு பத்து பேருந்துகள்ல இதைப் பயன்படுத்தினோம். இதோட விளைவை சோதிச்சுப் பார்த்த போது தான் இதனால கிட்டத்தட்ட 40 சதவீத புகை வெளியேற்றம் பேருந்துகள்ல கட்டுப்படுத்தப்பட்டிருக்குன்னு தெரிய வந்திச்சு.
மோதி ஜி – அம்மாடியோவ். இப்ப இந்தத் தொழில்நுட்பத்தை நீங்க உருவாக்கி இருக்கீங்களே, இதுக்கான உரிமைக்காப்பு எல்லாம் செஞ்சுட்டீங்களா?
மயூர் பாட்டில் – செஞ்சாச்சுய்யா. உரிமைக்காப்பும் செஞ்சு, இந்த வருஷம் அதுக்கான பட்டயமும் கைக்கு வந்தாச்சு.
மோதி ஜி – சரி, அடுத்ததா இதை அடுத்த கட்டம் கொண்டு போக, உங்க திட்டம் என்ன? எப்படி செய்யப் போறீங்க? இப்ப பேருந்து விஷயத்தில பலன் தெரிஞ்சு போச்சு. இது பத்தின விஷயம் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அடுத்து என்ன செய்ய இருக்கீங்க?
மயூர் பாடில் – ஐயா, ஸ்டார்ட் அப் இண்டியாவில, நிதி ஆணையம் மூலமா Atal New India Challenge, அதாவது, அடல் புதிய இந்தியா சவால் இருக்கில்லையா, அங்கிருந்து எனக்கு மானியம் கிடைச்சிருக்கு. இந்த மானிய உதவியோட நாங்க இப்ப ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சிருக்கோம். இதில எங்களால air filters, அதாவது காற்று வடிகட்டிகளை உற்பத்தி செய்ய முடியும்.
மோதி ஜி – சரி பாரத அரசு தரப்பிலேர்ந்து உங்களுக்கு எவ்வளவு மானியம் கிடைச்சுது?
மயூர் பாடில் – 90 இலட்சம்.
மோதி ஜி – 90 இலட்சம்.
மயூர் பாட்டில் – ஆமாங்கய்யா.
மோதி ஜி – இதை வச்சு நீங்க வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா.
மயூர் பாட்டில் – ஆமாங்கய்யா, இப்ப ஆரம்பிச்சாச்சு, செயல்முறைகள் இன்னும் நடந்திட்டு இருக்கு.
மோதி ஜி – சரி நீங்க எத்தனை நண்பர்கள் சேர்ந்து இதை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.
மயூர் பாட்டில் – நாங்க நாலு பேர் ஐயா.
மோதி ஜி – நீங்க நாலு பேரும் ஒண்ணாவே படிச்சீங்க, அதில ஒருத்தருக்கு இதை மேல கொண்டு போகணும்னு எண்ணம் வந்திச்சு.
மயூர் பாடில் – ஆமாங்கய்யா. நாங்க எல்லாரும் கல்லூரியில ஒண்ணா படிச்சோம். கல்லூரியில தான் இதையெல்லாம் நாங்க யோசிச்சோம், என்னோட எண்ணம் என்னென்னா, குறைஞ்சபட்சம் என்னோட பைக்கோட மாசு கொஞ்சம் குறையணும், கொஞ்சம் கூடுதலா மைலேஜ் கொடுக்கணும்ங்கறது தான்.
மோதி ஜி – சரி மாசைக் குறைச்சு, மைலேஜை அதிகப்படுத்தின பிறகு சராசரியா சேமிப்பு எவ்வளவு ஆகும்?
மயூர் பாடில் – ஐயா, பைக்ல நாங்க பரிசோதனை செஞ்ச போது, லிட்டருக்கு 25 கிலோமீட்டர் கொடுத்த அதோட மைலேஜ், லிட்டருக்கு 39 கிலோமீட்டரா அதிகரிச்சது, சுமாரா 14 கிலோமீட்டர் ஆதாயம் கிடைச்சுது. மேலும் இதில 40 சதவீத கரியமில வெளியேற்றம் குறைஞ்சிருந்திச்சு. பேருந்துகள்ல செஞ்ச போது, பிராந்திய போக்குவரத்துக் கழகத்துக்கு 10 சதவீத எரிபொருள் திறன் அதிகரிப்பு கிடைச்சுது, இதிலயும் 35லேர்ந்து 40 சதவீதம் வரை வெளியேற்றம் குறைஞ்சிருந்திச்சு.
மோதி ஜி – மயூர், உங்களோட பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு, உங்க நண்பர்களுக்கும் என் தரப்பிலேர்ந்து வாழ்த்துக்களைச் சொல்லுங்க. கல்லூரி வாழ்க்கையில உங்களுக்கு இருந்த பிரச்சனைக்குத் தீர்வையும் நீங்க கண்டிருக்கீங்க, இப்ப அந்தத் தீர்வு காட்டின பாதையில பயணிச்சு, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்ற சவாலையும் நீங்க கையில எடுத்திருக்கீங்க. நம்ம நாட்டு இளைஞர்கள் பெரிய திறமைசாலிகள், அவங்க எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமை வாய்ஞ்சவங்க, வழி கண்டுபிடிக்கறவங்கன்னு தெரிவிக்குது. உங்களுக்கு என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
மயூர் பாடில் – தேங்க்யூ சார்!! தேங்க்யூ!!!
நண்பர்களே, சில ஆண்டுகள் முன்பாக, தாம் வியாபாரம் செய்ய விரும்புவதாகவோ, ஒரு கம்பெனியைத் தொடக்க விரும்புவதாகவோ கூறினால், குடும்பத்தில் இருக்கும் பெரியோரின் பதில் என்னவாக இருந்தது – நீ ஏன் வேலை பார்க்க விரும்ப மாட்டேன் என்கிறாய், எங்காவது சேர்ந்து வேலை பார், வேலை பார்ப்பதிலே தான் பாதுகாப்பு இருக்கிறது, ஊதியம் கிடைக்கும், சிக்கலைக் குறைத்துக் கொள், என்பார்கள். ஆனால், இன்றோ யாராவது ஒருவர் கம்பெனி தொடங்க விரும்பினால், அவருக்கு அருகே இருப்போர் எல்லாம் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள், அவருக்கு முழு ஆதரவையும் அளிக்கிறார்கள். நண்பர்களே, பாரதத்தின் வளர்ச்சிக் கதையின் திருப்புமுனை இது, இப்போது இங்கே வேலை தேடுபவர்கள் என்ற கனவை காண்பதைத் துறந்து, வேலையை உருவாக்குபவர்களாகவும் மாறி வருகிறார்கள். இதனால் உலக அரங்கிலே பாரத நாட்டின் நிலை மேலும் பலமடைந்து வருகிறது.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரலில் நாம் அமிர்த மஹோத்சவம் குறித்துப் பேசினோம். அமிர்தகாலத்தில் நம்முடைய நாட்டுமக்கள் எவ்வாறு புதியபுதிய உறுதிப்பாடுகளை நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது பற்றிக் கலந்தோம், கூடவே, டிசம்பர் மாதம் வருகின்ற, இராணுவத்தின் வீரத்தோடு தொடர்புடைய நாட்கள் குறித்தும் பேசினோம். டிசம்பர் மாதம் என்றதும், மேலும் ஒரு மிகப்பெரிய நாள் நம் கண் முன்னே வரும், இதிலிருந்து நாம் உத்வேகம் அடைகிறோம். அந்த நாள் தான் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி, பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்கள் மறைந்த நாள். பாபா சாஹேப், தனது வாழ்நாள் முழுவதையும் தேசம் மற்றும் சமூகத்திற்காக, தனது கடமைகளை நிறைவேற்ற அர்ப்பணித்தார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு, நாட்டுமக்களான நாம் அனைவரும், அவரவர் கடமைகளை செம்மையாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அமிர்த மஹோத்சவ காலத்திலே, நாம் நமது கடமைகளை முழுமையான நேர்மையோடு நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்வோம், வாருங்கள்!! இதுவே பாபா சாஹேப் அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய மெய்யான நினைவாஞ்சலியாகும்.
நண்பர்களே, இப்போது நாம் டிசம்பர் மாதத்தில் காலெடுத்து வைக்க இருக்கிறோம். இயல்பாகவே, அடுத்த மனதின் குரல் 2021ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரலாக ஒலிக்கும். 2022ஆம் ஆண்டில் நாம் மீண்டும் நம் பயணத்தைத் தொடருவோம், உங்களிடமிருந்து நிறைய ஆலோசனைகளை எதிர்பார்த்திருக்கிறேன், தொடர்ந்து காத்திருப்பேன். நீங்கள் இந்த ஆண்டிற்கு எப்படி விடையளிக்க இருக்கிறீர்கள், புதிய ஆண்டிலே என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள், இதைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள். அப்புறம்….. மறந்து விடாதீர்கள், கொரோனா இன்னும் முற்றிலுமாகச் அகன்று விடவில்லை. எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது நம்மனைவரின் கடமையாகும். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், கோடானுகோடி வணக்கங்கள். நான் ஏன் கோடானுகோடி என்று கூறுகிறேன் என்றால், 100 கோடி தடுப்பூசித் தவணைகளுக்குப் பிறகு இன்று தேசத்திலே புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி, பாரதத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறது, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே, 100 கோடித் தடுப்பூசிகள் என்ற புள்ளிவிபரம் மிகவும் பெரியது தான் என்றாலும், இதிலே இலட்சோபலட்சம் சின்னச்சின்ன உத்வேகமளிக்கும் கூறுகள், பெருமிதம் கொள்ளச் செய்யும் பல அனுபவங்கள், பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. தடுப்பூசி போடப்படுதல் தொடங்கிய உடனேயே இந்த இயக்கம் இத்தனை பெரிய வெற்றியை எட்டும் என்பது எப்படி எனக்கு தெரியும் எனக் கடிதங்கள் வாயிலாகப் பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஏன் எனக்கு இந்த உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது என்று சொன்னால், நமது தேசம், நம் தேசத்தவருடைய திறமைகளை, ஆற்றல்களை நான் நன்கு அறிவேன். நமது சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி போடப்படுவதைச் செய்து முடிப்பதில் எந்த விஷயத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நமது சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பாலும், மனவுறுதிப்பாட்டாலும் ஒரு புதிய எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறார்கள், அவர்கள் புதுமைகள் படைப்போடு கூடவே மன உறுதிப்பாட்டுணர்வோடு சேவை புரிதலுக்கான ஒரு புதிய அளவுகோலையே நிறுவி இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய எடுத்துக்காட்டுக்கள் கணக்கிலடங்காதவை. இவை எல்லாம் தெரிவிப்பது ஒன்றே ஒன்று தான் – எப்படி இவர்கள் அனைத்துச் சிரமங்களையும் தாண்டி, பெருவாரியான மக்களுக்கு பாதுகாப்புக் கவசத்தை அளித்தார்கள் என்பது தான். நாமெல்லாம் பல செய்தித் தாள்களிலே படித்திருப்போம், வெளியே கேள்விப்பட்டிருப்போம், ஒன்றை விஞ்சும் அளவுக்கு மற்றொன்று என்ற வகையிலே கருத்தூக்கமளிக்கும் உதாரணங்கள் நம் கண்முன்னே வருகின்றன. நான் இன்றைய மனதின் குரலின் நேயர்களுக்கு உத்தராகண்டின் பாகேஷ்வரைச் சேர்ந்த இப்படிப்பட்ட ஒரு சுகாதாரப் பணியாளரான பூனம் நௌடியால் அவர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நண்பர்களே, இந்த உத்தராகண்டானது 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணியை நிறைவேற்றி வைத்திருக்கிறது. இவர் உத்தராகண்டின் பாகேஷ்வர் என்ற பகுதியில் இருந்து வருகிறார் என்றால், உத்தராகண்டின் அரசும் இந்த விஷயத்தில் பாராட்டுதல்களுக்கு உரியது; ஏனென்றால், இங்கே பல கடினமான பகுதிகள், அணுக சிரமமான இடங்கள் இருக்கின்றன. இதைப் போலவே ஹிமாச்சல் மாநிலத்திலும், இப்படிப்பட்ட பல இடர்பாடுங்களைத் தாண்டி, 100 சதவீதம் தவணைகள் பணி நிறைவடைந்திருக்கிறது. தடுப்பூசி போடும் பணியில் இரவு பகலாகப் பணியாற்றினார் பூனம் அவர்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர்: பூனம் அவர்களே, வணக்கம்.
பூனம் நௌடியால்: ஐயா. வணக்கம்.
பிரதமர்: பூனம் அவர்களே, உங்களைப் பத்தி, நாட்டு மக்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்க.
பூனம் நௌடியால்: ஐயா, நான் பூனம் நௌடியால். உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சானீ கோராலீ மையத்தில ANMஆ மகப்பேறுத் தாதியா வேலை பார்த்திட்டு இருக்கேன்.
பிரதமர்: பூனம் அவர்களே, பாகேஷ்வருக்கு வரக்கூடிய பேறு எனக்குக் கிடைச்சது, அதை ஒரு வகையில புனிதத்தலம்னே சொல்லலாம், அங்க பழமையான கோயில்கள்லாம் உண்டு, பல நூற்றாண்டுக்காலம் முன்னாலயே அங்க மக்கள் எப்படி பணியாற்றியிருப்பாங்கங்கற விஷயம் எனக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்சு.
பூனம் நௌடியால்: ஆமாங்கய்யா.
பிரதமர்: பூனம் அவர்களே, நீங்க உங்க பகுதியில இருக்கற எல்லாருக்கும் தடுப்பூசி போட்டாச்சா?
பூனம் நௌடியால்: ஆமாங்கய்யா, எல்லாரும் போட்டுக்கிட்டாங்க.
பிரதமர்: உங்களுக்கு எந்த விதமான பிரச்சனை ஏதும் ஏற்பட்டிச்சா?
பூனம் நௌடியால்: ஆமாங்கய்யா. இங்க தீவிர மழையால பாதையில தடை ஏற்பட்டிரும். நாங்க நதியைக் கடந்து போக வேண்டி இருந்திச்சு. மேலும் வயதானவங்க, மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட் மையங்களோட செயல்பாட்டை மாதிரி நாங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போனோம். தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத வயதானவங்க, மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், இந்த மாதிரியானவங்க.
பிரதமர்: ஆனா, அங்க மலைகள்ல எல்லாம் வீடுகள் ரொம்ப தொலைவுல இல்லையா இருக்கும்!
பூனம் நௌடியால்: ஆமாங்கய்யா.
பிரதமர்: நாளொன்றில உங்களால எவ்வளவு தூரம் போக முடிஞ்சுது?
பூனம் நௌடியால்: கிலோமீட்டர் கணக்குப்படி பார்த்தா சராசரியா 8 லேர்ந்து 10 கிலோமீட்டர்.
பிரதமர்: நல்லது, தாழ்நிலத்தில வசிக்கறவங்க இவங்க, இவங்களுக்கு 8-10 கிலோமீட்டர்ங்கறதுன்னா என்ன அப்படீங்கறது தெரியாது. 8-10 கிலோமீட்டர்ன்னா, இதை பயணிக்க ஒரு நாள் முழுக்க செலவாகும்னு எனக்குத் தெரியும்.
பூனம் நௌடியால்: ஆமாங்க.
பிரதமர்: ஆனா இது ரொம்ப கடினமான வேலை, மேலும் தடுப்பூசிக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வேற சுமந்துக்கிட்டு போகணும். உங்களுக்கு யாராவது உதவியாளர்கள் இருக்காங்களா?
பூனம் நௌடியால்: ஆமாங்க. குழுங்கற வகையில நாங்க ஐந்து பேர்கள்.
பிரதமர்: சரி.
பூனம் நௌடியால்: இதில மருத்துவர், ஒரு மருத்துவத்தாதி, ஒரு மருந்தியலாளர், ஒரு ஆஷா பணியாளர், ஒரு தரவுப் பதிவாளர்.
பிரதமர்: சரி, தரவுப் பதிவாளர்னு சொன்னீங்களே, அங்க இணைய இணைப்பு கிடைக்குமா இல்லை பாகேஷ்வருக்குத் திரும்பி வந்த பிறகு தான் தரவேற்றம் செய்வீங்களா?
பூனம் நௌடியால்: ஐயா, சில இடங்கள்ல கிடைக்கும், சில வேளை, நாங்க பாகேஷ்வர் வந்த பிறகு தான் தரவுப்பதிவும் தரவேற்றமும் செய்வோம்.
பிரதமர்: சரி. பூனம் அவர்களே, நீங்க உங்க கடமை உணர்வைத் தாண்டியும் மக்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கறதா சொன்னாங்க. இப்படி செயல்படணுங்கற உணர்வு உங்க மனசுல எப்படி வந்திச்சு, இதை நீங்க எப்படி செயல்படுத்தினீங்க?
பூனம் நௌடியால்: நாங்க, எங்க குழுவினர் எல்லாரும் ஒரு தீர்மானம் செஞ்சுக்கிட்டோம், ஒருத்தர் கூட இந்த தடுப்பூசி போடப்படுறதிலிருந்து விடுபட்டுப் போயிரக் கூடாதுன்னு. நம்ம நாட்டிலேர்ந்து கொரோனா நோயை நாம விரட்டியாகணும். நானும் ஆஷா செவிலியருமா இணைஞ்சு, கிராமந்தோறும் இருக்கற ஒவ்வொருத்தர் பத்தின தகவல் அடங்கின பட்டியலைத் தயாரிச்சோம். பிறகு இதன்படி, மையத்துக்கு வந்தவங்களுக்கு மையத்திலயே ஊசி போட்டோம். பிறகு நாங்க வீடுவீடா போனோம். ஐயா, இதற்குப் பிறகு யாரெல்லாம் விடுபட்டுப் போனாங்களோ, யாரால எல்லாம் மையத்துக்கு வர முடியாம போனதோ……
பிரதமர்: மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்திச்சா?
பூனம் நௌடியால்: ஆமாங்க, அவங்களுக்குப் புரிய வைச்சோம்.
பிரதமர்: தடுப்பூசி எடுத்துக்கணுங்கற ஆர்வம் மக்கள் மனசுல இன்னும் இருக்கா?
பூனம் நௌடியால்: கண்டிப்பா இருக்குங்கய்யா. இப்ப எல்லாம் மக்கள் நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க. முதல்ல எல்லாம், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது தான், நல்லா வேலை செய்யும், நாங்களுமே போட்டுக்கிடாச்சு நீங்களே பாருங்க, நாங்க நல்லாத் தானே இருக்கோம், உங்க முன்னால தானே இருக்கோம், எங்க பணியாளர்கள் எல்லாருமே போட்டுக்கிட்டாச்சு, நாங்க நல்லாவே இருக்கோம்னு புரிய வைக்க நாங்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்திச்சு.
பிரதமர்: எங்கயாவது தடுப்பூசி போட்டுக்கிட்ட துக்குப் பின்னால ஏதும் குற்றச்சாட்டு வந்திச்சா?
பூனம் நௌடியால்: கிடையவே கிடையாதுய்யா. அப்படி நடக்கவே இல்லை.
பிரதமர்: ஒண்ணுமே ஆகலை, இல்லையா?
பூனம்: ஆமாம்
பிரதமர்: எல்லாருக்கும் சந்தோஷம் தானே!
பூனம் நௌடியால்: கண்டிப்பா.
பிரதமர்: எல்லாம் நல்லபடியா போச்சுன்னு.
பூனம் நௌடியால்: ஆமாங்க.
பிரதமர்: நல்ல வேலை செஞ்சீங்க பூனம் அவர்களே. இந்தப் பகுதி முழுக்கவும் எத்தனை கடினமான ஒண்ணுன்னு எனக்கு நல்லாவே தெரியும், இந்த மலைகள்ல எல்லாம் நடந்து தான் போயாகணும். ஒரு மலையில ஏறணும், பிறகு கீழ இறங்கணும், பிறகு இன்னொரு மலை மேல ஏறணும், மேலும் ஒவ்வொரு வீட்டுக்கு இடையிலயும் இருக்கற தொலைவு வேற. இதையெல்லாம் தாண்டி நீங்க ரொம்ப சிறப்பா பணியாற்றி இருக்கீங்க.
பூனம் நௌடியால்: ரொம்ப நன்றிங்கய்யா. உங்க கூட பேசற சந்தர்ப்பம் எனக்கு இன்னைக்கு வாய்ச்சதே எனக்குப் பெரிய பாக்கியம்ங்கய்யா!!
உங்களை மாதிரியான இலட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களோட கடும் உழைப்பு காரணமாத் தான் இன்னைக்கு பாரதம் 100 கோடி தடுப்பூசித் தவணைகள்ங்கற கட்டத்தைத் தாண்ட முடிஞ்சிருக்கு. இன்னைக்கு நான் உங்களுக்கு மட்டும் நன்றி தெரிவிக்கலை, ஆனா யாரெல்லாம் அனைவருக்கும் தடுப்பூசி, இலவச தடுப்பூசிங்கற இயக்கத்தை இத்தனை பெரிய உச்சத்துக்குக் கொண்டு போய் வெற்றி பெறச் செய்திருக்காங்களோ, அவங்க எல்லாருக்கும் இன்னைக்கு என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள்!!
எனதருமை நாட்டுமக்களே, உங்களுக்கெல்லாம் தெரியும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளாகும். மனதின் குரலின் ஒவ்வொரு நேயரின் தரப்பிலிருந்து, என் தரப்பிலிருந்து, இரும்பு மனிதருக்கு நான் பலப்பல வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம். நாம் ஒற்றுமையின் செய்தியை அளிக்கக்கூடிய ஏதாவது ஒரு நெறியோடு நம்மைக் கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மனைவரின் கடமையாகும். கட்ச்சின் லக்பத் கோட்டை தொடங்கி, ஒற்றுமைச் சிலை வரையிலான ஒரு இரு சக்கர வாகனப் பேரணியை குஜராத் காவல்துறையானது தற்போது தான் நிறைவு செய்தது என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். திரிபுரா காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், ஒருமைப்பாட்டு தினத்தைக் கொண்டாடும் வகையிலே, திரிபுராவிலிருந்து ஒற்றுமைச் சிலை வரையிலான ஒரு இரு சக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது கிழக்கிலிருந்து தொடங்கி மேற்கு வரை பயணித்து தேசத்தை இணைத்து வருகிறார்கள். ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்த காவலர்களும், உரீ தொடங்கி படான்கோட் வரை இப்படியானதொரு இரு சக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு தேசத்திற்கு ஒற்றுமை பற்றிய செய்தியை அளித்து வருகிறார்கள். இந்தக் காவலர்கள் அனைவருக்கும் நான் சிரம் வணங்குகிறேன். ஜம்மு-கஷ்மீரத்தின் குப்வாடா மாவட்டதின் பல சகோதரிகளைப் பற்றியும் எனக்குத் தகவல்கள் கிடைத்தன. இந்தச் சகோதரிகள் கஷ்மீரத்தில் இருக்கும் இராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களுக்காக மூவண்ணக் கொடியை நெசவு செய்யும் பணியாற்றி வருகிறார்கள். இந்தப் பணி தேசபக்தி உணர்வு நிறைந்த ஒன்று. நான் இந்த சகோதரிகளின் இந்த ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் அனைவரும் கூட, பாரத நாட்டின் ஒற்றுமைக்காக, பாரத நாட்டின் உயர்வுக்காக, ஏதாவது ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். உங்கள் மனதிலே ஏற்படும் மன நிறைவை நீங்கள் உணர்வீர்கள் பாருங்கள்!!
நண்பர்களே, சர்தார் ஐயா கூறுவதுண்டு – “நாம் நமது ஒன்றுபட்ட உழைப்பால் மட்டுமே தேசத்தைப் புதிய மகத்தான உச்சங்களுக்குக் கொண்டு செல்ல முடியும். நம்மிடத்திலே ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை என்று சொன்னால், நாம் புதியபுதிய இடர்களில் நம்மை சிக்க வைத்துக் கொண்டு விடுவோம்”. அதாவது, தேச ஒற்றுமை என்றால் சிகரம், முன்னேற்றம். நாம் சர்தார் படேல் அவர்களின் வாழ்க்கையிலிருந்து, அவரது சிந்தனைகளிலிருந்து, ஏராளமானவற்றைக் கற்க முடியும். தேசத்தின் தகவல் ஒலிபரப்புத் துறையும் கூட தற்ப்போது சர்தார் ஐயாவின் வாழ்க்கை சரிதத்தைப் பற்றிய ஒரு படத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நமது இளைய நண்பர்கள் அனைவரும் இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சர்தார் ஐயா பற்றி சுவாரசியமான முறையிலே தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
நண்பர்களே, இதே போல மனதின் குரலின் நேயர் ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனையை அளித்திருக்கிறார். அதாவது அமிர்த மஹோத்சவத்தினை ரங்கோலிக் கலையோடும் இணைக்கலாமே என்பது தான் அது. ரங்கோலி அதாவது கோலம் போடுதல் வாயிலாக பண்டிகைக் காலத்தில் வண்ணங்களால் இட்டு நிரப்புவது என்ற பாரம்பரியம் பல நூற்றாண்டுக்காலமாகவே நமது நாட்டிலே இருந்து வருகிறது. கோலம் போடுதல் என்பது தேசத்தின் பன்முகத்தன்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பெயர்களால், பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தும் ரங்கோலிக் கோலம் போடப்படுகிறது. ஆகையால், கலாச்சார அமைச்சகம் இதோடு தொடர்புடைய தேசியப் போட்டி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யவிருக்கிறது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய ரங்கோலிக் கோலத்தைத் தங்கள் வீடுகளின் வாயில்களில், சுவர்களில் சுதந்திரத்தின் ஒரு சம்பவத்தை வண்ணங்களில் மக்கள் இழைக்கும் போது, அமிர்த மஹோத்சவத்தின் வண்ணம் மேலும் மெருகடையும்.
நண்பர்களே, மேலும் ஒரு பாரம்பரியம் நம் நாட்டிலே இருக்கும் லோரீ, அதாவது தாலாட்டுப் பாடல். நம் நாட்டிலே இந்தத் தாலாட்டுப் பாடல்கள் வாயிலாகப் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன, கலாச்சாரம் அவர்களுக்கு அடையாளப்படுத்தப் படுகிறது. தாலாட்டுப் பாடல்களுக்கே உரித்தான பன்முகத்தன்மை உண்டு. இந்த அமிர்த காலத்திலே, இந்தக் கலைக்கும் புத்துயிர் அளித்து, தேசபக்தியோடு கலந்த இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள், கவிதைகள், பாடல்கள் என ஏதாவது ஒன்றினை நாம் எழுதலாமே!! இவற்றை மிக எளிதாக, ஒவ்வொரு இல்லத்தின் அன்னையும் தங்களுடைய குழந்தைகளுக்கு பாடிக்காட்ட முடியுமே!! இந்தத் தாலாட்டுப் பாடல்கள் நவீன பாரதத்தைப் பின்புலமாகவும், 21ஆம் நூற்றாண்டுப் பாரதம் பற்றிய கனவுகளை படம்பிடித்துக் காட்டும் விதமாகவும் இருக்க வேண்டும். நேயர்களான உங்கள் அனைவரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அமைச்சகம் இதோடு தொடர்புடைய போட்டியை நடத்தவும் தீர்மானித்திருக்கிறது.
நண்பர்களே, இந்த மூன்று போட்டிகளும் அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவுடைய பிறந்த நாளிலிருந்து தொடங்கப்பட இருக்கின்றன. வரவிருக்கும் தினங்களில் கலாச்சார அமைச்சகம் இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அளிக்கும். இந்தத் தகவல்கள், அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் இருக்கும், சமூக ஊடகங்களிலும் இடம் பெறும். நீங்கள் அனைவரும் இதிலே கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது இளைய நண்பர்கள் கண்டிப்பாக இதிலே தங்களுடைய கலை, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இதனால் உங்கள் பகுதிகளின் கலை மற்றும் கலாச்சாரம், தேசத்தின் அனைத்து இடங்களையும் சென்றடையும், உங்களின் கதைகளை தேசம் முழுவதும் செவிமடுக்கும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த வேளையில் நாம் அமிர்த மஹோத்ஸவத்தின் போது, தேசத்தின் வீரர்கள்-வீராங்கனைகளின் மகத்தான புண்ணிய ஆன்மாக்களை நினைவு கூர வேண்டும். அடுத்த மாதம், நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று நமது தேசத்தின் ஒரு மஹாபுருஷர், போராட்ட வீரர், பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாள் வருகிறது. பகவான் பிர்ஸா முண்டா தர்தீ ஆபா என்றும் அழைக்கப்படுகிறார். இதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் பொருள் பூமித் தந்தை. பகவான் பிர்ஸா முண்டா, எந்த முறையில் தனது கலாச்சாரம், தனது காடுகள், தனது பூமி ஆகியவற்றைப் பாதுகாக்க போராடினாரோ, இதை பூமித் தந்தையால் மட்டுமே புரிய முடியும். நம்முடைய கலாச்சாரம் மற்றும் வேர்கள் மீதான பெருமிதத்தை அவர் நமக்குக் கற்பித்திருக்கிறார். அந்நிய எதேச்சாதிகாரம் அவருக்கு விடுத்த ஏராளமான மிரட்டல்கள், அழுத்தங்கள் அனைத்தையும் தாண்டி, அவர் பழங்குடியின கலாச்சாரத்தைத் துறக்கவில்லை. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மூலம் நேசிப்பதை நம்மால் கற்க முடிந்தால், இந்த விஷயத்தில் தர்தி ஆபாவான பிர்ஸா முண்டா நமக்கு மிகப்பெரிய உத்வேகமாக விளங்குகிறார். அந்நிய ஆட்சியின் எந்த விதிமுறைகள் எல்லாம் இயற்கைக்குத் தீமை விளைவிக்குமோ, அந்த அனைத்தையும் அவர் கடுமையாக எதிர்த்தார். ஏழைகள் மற்றும் சிரமங்களில் சிக்கிய மனிதர்களுக்கு உதவ, பகவான் பிர்ஸா முண்டா எப்போதும் முதல் மனிதராக இருப்பார். அவர் சமூகத் தீமைகளுக்கு முடிவு கட்ட சமூகத்திலே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். உல்குலான் போராட்டத்திற்கு அவர் தலைமையேற்று நடத்தியதை யாரால் மறக்க இயலும்? இந்தப் போராட்டம் தான் ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதன் பிறகு ஆங்கிலேயர்கள் பகவான் பிர்ஸா முண்டாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு மிகப் பெரிய வெகுமதியை அறிவித்தார்கள். ஆங்கிலேயர்களின் யதேச்சாதிகாரம் அவரை சிறையில் தள்ளியது, அவரை எந்த அளவுக்குச் சித்திரவதை செய்து துன்புறுத்தியது என்றால், 25 வயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய பூதவுடல் வேண்டுமென்றால் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கலாம்; ஆனால் மக்களின் மனங்களிலே பகவான் பிர்ஸா முண்டா காலகாலத்திற்கும் வீற்றிருந்து உத்வேகம் அளித்து வருகிறார். இன்றும் கூட, அவருடைய சாகஸங்கள் மற்றும் வீரம் நிறைந்த நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் பாரதத்தின் மத்திய பகுதியில் மிகவும் பிரபலமானவையாக விளங்குகின்றன. நான் தர்தீ ஆபா என்ற பூமித் தந்தையான பகவான் பிர்ஸா முண்டாவுக்குத் தலை வணங்குகிறேன், இளைஞர்களே, உங்களிடத்தில் வேண்டிக் கொள்கிறேன், அவரைப் பற்றிப் படியுங்கள். பாரதத்தின் சுதந்திர வேள்வியில் நமது பழங்குடியின சமூகத்தின் சிறப்பான பங்களிப்பு பற்றி நீங்கள் எத்தனை தெரிந்து கொள்கிறீர்களோ, அத்தனை பெருமிதம் கொள்வீர்கள்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று அக்டோபர் மாதம் 24ஆம் தேதி, ஐ.நா. தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று தான் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது, அந்தத் தொடக்கத்திலிருந்தே பாரதம் இதோடு தொடர்பு கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடையும் முன்பாகவே 1945ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகளின் சாஸனத்தில் பாரதம் கையெழுத்திட்டது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஐக்கிய நாடுகளோடு இணைந்த ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், ஐக்கிய நாடுகளின் தாக்கத்தையும் அதன் சக்தியையும் அதிகரிப்பதில் பாரத நாட்டின் பெண்களின் சக்தி மகத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது. 1947-48இல், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் உருவாக்கப்பட்ட போது, அந்தப் பிரகடனத்தில் All Men are created equal, அதாவது அனைத்து ஆண்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் பாரத நாட்டின் ஒரு பிரதிநிதி இதற்குத் தனது ஆட்சேபத்தைத் தெரிவித்த பிறகு, உலகளாவிய பிரகடனத்தில் அந்த வாக்கியம் மாற்றியமைக்கப்பட்டு, All Human Beings are created equal, அதாவது அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று திருத்தப்பட்டது. இந்த விஷயம் பாரத நாட்டின் பழமையான பாலின சமத்துவத்திற்கு இசைவான ஒன்றாகும். அந்தப் பிரதிநிதியின் பெயர் ஹன்ஸா மெஹ்தாவாகும்; இவர் காரணமாகத் தான் இது சாத்தியமானது. இதே சந்தர்ப்பத்தில், மேலும் ஒரு பிரதிநிதியான திருமதி லக்ஷ்மி மேனன் அவர்களும், பாலின சமத்துவம் குறித்து வலுவான முறையிலே தனது தரப்பை முன்வைத்தார். இது மட்டுமல்ல 1953ஆம் ஆண்டிலே திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட், ஐ.நா. பொதுசபையின் முதல் பெண் தலைவராகவும் ஆனார்.
நண்பர்களே, நாம் எத்தகைய பூமியைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?
ॐ द्यौ: शान्तिरन्तरिक्षॅं शान्ति:,
पृथ्वी शान्तिराप: शान्तिरोषधय: शान्ति:।
वनस्पतय: शान्तिर्विश्र्वे देवा: शान्तिर्ब्रह्म शान्ति:,
सर्वॅंशान्ति:, शान्तिरेव शान्ति:, सा मा शान्तिरेधि।।
ॐ शान्ति: शान्ति: शान्ति:।।
ஓம் த்யௌ: சாந்திரந்தரிக்ஷம் சாந்தி:
ப்ருத்வீ சாந்திராப: சாந்திரோஷதய: சாந்தி:.
வனஸ்பதய: சாந்திர்விச்ரவே தேவா: சாந்திர்ப்ரும்ம சாந்தி:,
ஸர்வேசாந்தி:, சாந்திரேவ சாந்தி:, ஸா மா சாந்திரேதி.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.
இப்படிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள், இந்த வகையில் பிரார்த்தனை செய்யும் பூமியைச் சேர்ந்தவர்கள். பாரதம் என்றுமே உலக அமைதிக்காகவே பணியாற்றி வந்திருக்கிறது. 1950 தஸாப்தம் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் பாரதம் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம். ஏழ்மையை அகற்றவும், சூழல் மாற்றம் மற்றும் தொழிலாளர்களோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதிலும், பாரதம் முன்னணிப் பங்கினை ஆற்றி வந்திருக்கிறது. இவை தவிர, யோகக்கலை மற்றும் ஆயுஷினை பிரபலமாக்கவும் பாரதம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறது. மார்ச் மாதம் 2021ஆம் ஆண்டிலே, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு என்னவென்றால், பாரத நாட்டின் பாரம்பரியமான சிகிச்சை முறைகளுக்கென ஒரு உலகளாவிய மையத்தை நிறுவத் தீர்மானித்திருக்கிறது என்பது தான்.
நண்பர்களே, ஐக்கிய நாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே எனக்கு அடல் அவர்களின் சொற்கள் நினைவிற்கு வருகின்றன. 1977ஆம் ஆண்டிலே, அவர் ஐக்கிய நாடுகளில் ஹிந்தி மொழியில் உரை நிகழ்த்தி வரலாறு படைத்தார். இன்று மனதின் குரல் நேயர்களுக்கு அடல் அவர்களின் இந்த உரையின் ஒரு சிறு பகுதியை ஒலிக்க விழைகிறேன். கேளுங்கள், அடல் அவர்களின் உத்வேகமளிக்கும் குரலிலே,
”இங்கே நான் நாடுகளின் அதிகாரம் மற்றும் மாட்சிமை பற்றி எண்ணமிடவில்லை. எளிய மனிதனின் கண்ணியம் மற்றும் முன்னேற்றம் மட்டுமே என்னைப் பொறுத்த மட்டிலே அதிக மகத்துவம் வாய்ந்தது. நிறைவாக, நமது வெற்றிகளும் தோல்விகளும் ஒரே அளவுகோல் கொண்டே அளக்கப்பட வேண்டும், உண்மையிலேயே, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், சிறுவர் சிறுமியருக்கும், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும், நீதியும் கண்ணியமும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்”.
நண்பர்களே, அடல் அவர்களின் இந்தச் சொற்கள், இன்றும் கூட நமக்குப் பாதையைக் காட்டுகிறது. இந்த பூமியை மேலும் சிறப்பானதாக, மேலும் பாதுகாப்பானதாக ஆக்க பாரத நாட்டின் பங்களிப்பு, உலகம் முழுவதற்கும் மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகத் தான் அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று நாம் காவலர் நினைவு தினத்தைக் கடைப்பிடித்தோம். காவலர்களின் எந்த சகாக்கள் நாட்டுப் பணியில் தங்களுடைய உயிரை அர்ப்பணித்திருக்கிறார்களோ, இந்த நாளன்று நாம் அவர்களை சிறப்பான வகையிலே நினைவில் கொள்கிறோம். இன்று நான் நம்முடைய இந்தக் காவலர்களோடு கூடவே, அவர்களின் குடும்பத்தாரையும் நினைவிலே கொள்ள விழைகிறேன். குடும்பத்தின் ஒத்துழைப்பும் தியாகமும் இல்லாமல், காவல்துறைப்பணி போன்ற சிரமமான சேவை புரிவது என்பது மிகவும் கடினமானது. காவல்துறை சேவையில் இணைந்திருக்கும் மேலும் ஒரு விஷயம் குறித்து நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இராணுவம் மற்றும் காவல்துறை போன்ற சேவைகள் ஆண்களுக்கானவை என்ற கருத்து முன்பெல்லாம் நிலவியிருந்தது. ஆனால், இன்றோ அப்படி அல்ல. காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த சில ஆண்டுகளில் பெண் காவலர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2014ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐந்தாயிரமாக கிட்டத்தட்ட இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு வரை இது இரண்டு பங்கிற்கும் அதிகமாகி, கணிசமாக அதிகரித்திருக்கிறது, இப்பொழுது இரண்டு இலட்சத்து பதினையாயிரத்தை எட்டியிருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் மத்திய ஆயுதமேந்திய காவல் படையினரிடத்திலும் கூட, கடந்த ஏழு ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது. மேலும் நான் வெறும் எண்ணிக்கை பற்றி மட்டுமே பேசவில்லை. இன்று தேசத்தின் பெண்கள் மிகவும் கடினமான பணிகளையும் முழுச்சக்தியோடும், தன்னம்பிக்கையோடும் புரிந்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, பல பெண்கள் இப்போது மிகவும் கடினமானதாகக் கருதப்படும் பயிற்சிகளில் ஒன்றான, சிறப்புத்திறன் கொண்ட வனப்போர்ப்பயிற்சிக் கமாண்டோக்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் நம்முடைய கோப்ரா படைப்பிரிவின் அங்கத்தினர்களாக ஆவார்கள்.
நண்பர்களே, இன்று நாம் விமானநிலையங்களுக்குச் செல்கிறோம், மெட்ரோ நிலையங்களுக்குச் செல்கிறோம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் துணிச்சலான பெண்கள், புரிதல் தேவையான ஒவ்வொரு இடத்திற்கும் பாதுகாப்பளித்து வருகிறார்கள். இதன் மிக ஆக்கப்பூர்வமான தாக்கம், நமது காவல்துறையோடு கூடவே, சமூகத்தின் மனோபலத்தின் மீதும் ஏற்பட்டு வருகிறது. பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பதால், மக்களிடத்தில், குறிப்பாகப் பெண்களிடத்தில் இயல்பானதொரு நம்பிக்கை பிறக்கிறது. தங்களில் ஒருவராக அவர்களைப் பெண்கள் பார்க்கிறார்கள். பெண்களின் புரிந்துணர்வு காரணத்தால், மக்கள் அவர்கள் மீது அதிக நம்பிக்கை கொள்கிறார்கள். நமது இந்த பெண் காவலர்கள், தேசத்தின் இலட்சக்கணக்கான பெண்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக உருவாகி வருகிறார்கள். நான் பெண் காவலர்களிடத்திலே விடுக்கும் வேண்டுகோள், பள்ளிகள் திறந்த பிறகு தங்களின் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு அவர்கள் சென்று, பெண் குழந்தைகளோடு உரையாட வேண்டும் என்பது தான். இந்த உரையாடல் காரணமாக நமது புதிய தலைமுறையினருக்குப் புதிய பாதை திறக்கும் என்பது எனது நம்பிக்கை. இனிவருங்காலத்தில், மேலும் அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்கள் காவல்துறைப் பணியில் தங்களை இணைத்துக் கொள்வார்கள், நமது தேசத்தின் புதுயுக காவல் பணிக்குத் தலைமை ஏற்பார்கள் என்று விழைகிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, கடந்த சில ஆண்டுகளில், நமது தேசத்தில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்த வேகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், இது குறித்து நான் மனதின் குரலில் பேச வேண்டும் என்று நேயர்கள் அடிக்கடி கேட்டுக் கொள்கிறார்கள். இன்று நான் பகிரவிருக்கும் இந்த விஷயம், நமது தேசம், குறிப்பாக நமது இளைஞர்கள், நமது சிறார்கள் வரை அனைவரின் கற்பனைகளில் படர்ந்திருக்கும் ஒன்று. அது தான் ட்ரோன், ட்ரோன் தொழில்நுட்பம் பற்றியது. சில ஆண்டுகள் முன்பு வரை, ட்ரோன் என்ற சொல் காதிலே விழுந்தவுடன், மக்களின் மனதில் முதலில் எழும் உணர்வு என்ன? இராணுவம், ஆயுதங்கள், போர் பற்றியது தான். ஆனால் இன்று நமது பல திருமணங்கள், பல விழாக்களில் நாம் ட்ரோன் வாயிலாக படம் பிடிப்பதை, காணொளிகளைப் பதிவு செய்வதைப் பார்க்க முடிகிறது. ட்ரோனின் பயணம், அதன் சக்தி, இந்த மட்டோடு நின்று விடவில்லை. நமது கிராமங்களின் நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் தயாரிப்புப் பணிகளில் ட்ரோன்களை ஈடுபடுத்தும் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக பாரதம் இன்று ஆகி வருகிறது. சரக்குப் போக்குவரத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்து பரவலான வகையிலே பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமங்களின் விவசாயத்திற்காகட்டும், வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், பேரிடர்க்காலங்களில் உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பதாகட்டும். ட்ரோன்கள் நமது அனைத்துத் தேவைகளுக்கும் தயாராக வந்து நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவற்றிலே பல துறைகளில் தொடக்கம் செய்யப்பட்டாகி விட்டது. எடுத்துக்காட்டாக, சில நாட்கள் முன்பாக, குஜராத்தின் பாவ்நகரில் ட்ரோன்கள் வாயிலாக வயல்களில் நேனோ யூரியா தெளிக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசி இயக்கத்திலும் கூட ட்ரோன்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்தன. இதை நாம் மணிப்பூரிலே பார்க்க முடிந்தது. ஒரு தீவிற்கு அங்கே ட்ரோன் வாயிலாக தடுப்பூசி கொண்டு சேர்க்கப்பட்டது. தெலங்கானாவிலே ட்ரோன்கள் வாயிலாகத் தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கும் சோதனை ஓட்டங்கள் முடிந்தாகி விட்டன. இது மட்டுமல்ல, இப்போது கட்டமைப்பின் பல பெரிய திட்டங்களின் மீது கண்காணிப்பு செய்ய வேண்டியும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நான் ஒரு இளம் மாணவனைப் பற்றியும் படித்திருக்கிறேன்; இவர் தனது ட்ரோன் உதவியோடு, மீனவர்களின் உயிர்களைக் காக்கும் பணியைச் செய்திருக்கிறார்.
நண்பர்களே, முன்பெல்லாம் இந்தத் துறையில் ஏகப்பட்ட விதிமுறைகள், சட்டங்கள், கட்டுப்பாடுகள் எல்லாம் போடப்பட்டு, ட்ரோன்களின் மெய்யான திறமை சாத்தியமாகாமலேயே இருந்தன. எந்தத் தொழில்நுட்பத்தை நல்லதொரு சந்தர்ப்பமாக நாம் காண வேண்டுமோ, அது சங்கடமாகப் பார்க்கத் தொடங்கப்பட்டது. ஏதோ ஒரு வேலைக்கு நீங்கள் ட்ரோன்களைப் பறக்க விரும்பினால், இதற்கு உரிமம் மற்றும் அனுமதி என்ற முறையில் இருந்த கட்டுப்பாடுகளைக் கண்டு மக்கள் அந்தத் திசைக்கே ஒரு கும்பிடு போட்டார்கள். இந்த மனோநிலையை மாற்ற வேண்டும், புதிய போக்குகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆகையால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தேசத்தின் ஒரு புதிய ட்ரோன் கொள்கையை அறிமுகப்படுத்தினோம். இந்தக் கொள்கை, ட்ரோன்களோடு தொடர்புடைய தற்போதைய மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதற்காக இப்போது பல படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை, முன்பிருந்ததைப் போல அதிக கட்டணத்தைச் செலுத்தவும் தேவையில்லை. இந்தப் புதிய ட்ரோன் கொள்கை வந்த பிறகு பல ட்ரோன் ஸ்டார்ட் அப்புகளில், அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். பல நிறுவனங்கள் உற்பத்தி அலகுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகள், பாரத நாட்டு ட்ரோன் நிறுவனங்களுக்கு 500 கோடிக்கும் அதிகமான தேவை ஆணைகளை வழங்கியிருக்கின்றன. இது ஒரு தொடக்கம் தான். நாம் இங்கே தாமதப்பட்டு விடக் கூடாது. ட்ரோன் தொழில்நுட்பத்தின் முன்னணி நாடாக நாம் மாற வேண்டும். இதற்காக அரசும் சாத்தியமான அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகிறது. ட்ரோன் கொள்கை ஏற்படுத்தப்பட்ட பிறகு உருவாகியிருக்கும் சந்தர்ப்பங்களால் பயனடைவது பற்றிக் கண்டிப்பாக நீங்கள் சிந்தியுங்கள், முன்வாருங்கள் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உத்தர பிரதேசத்தின் மேரட்டைச் சேர்ந்த மனதின் குரலின் நேயர் ஒருவரான திருமதி பிரபா சுக்லா அவர்கள், தூய்மை இயக்கம் தொடர்பான கடிதம் ஒன்றினை எனக்கு எழுதியிருக்கிறார். அதிலே, “பாரத நாட்டிலே நாம் பண்டிகைகளின் போது தூய்மையைக் கொண்டாடுகிறோம். இதைப் போலவே நாம் தூய்மையை, ஒவ்வொரு நாளும் நமது பழக்கமாகவே ஆக்கிக் கொண்டோமென்றால், நாடு முழுவதுமே தூய்மையாகி விடும்” என்று எழுதியிருக்கிறார். பிரபா அவர்களின் இந்தக் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உண்மையிலேயே, எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே தான் உடல்நலமும் இருக்கிறது, எங்கே உடல் நலம் இருக்கிறதோ, அங்கே தான் வல்லமை இருக்கிறது, எங்கே வல்லமை இருக்கிறதோ, அங்கே தான் நிறைவு இருக்கிறது. ஆகையால் தானே தூய்மை பாரதம் இயக்கத்தின் மீது தேசம் அதிக அழுத்தம் அளித்து வருகிறது.
நண்பர்களே, ராஞ்சியின் ஒரு கிராமமான சபாரோம் நயா சராய் பற்றித் தெரிந்து கொள்ளும் போது இதமாக இருந்தது. இந்த கிராமத்திலே ஒரு குளம் இருந்தது. மக்கள் இந்தக் குளக்கரையிலே திறந்த வெளியிலே மலஜலம் கழித்துக் கொண்டிருந்தார்கள். தூய்மை பாரதம் இயக்கத்தின்படி, அனைவருடைய இல்லங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்ட பிறகு, ஏன் நாம் கிராமத்தைத் தூய்மைப்படுத்துவதோடு கூடவே அழகானதாகவும் ஆக்கக் கூடாது என்று கிராமவாசிகள் சிந்தித்தார்கள். அப்புறமென்ன! அனைவருமாக இணைந்து குளக்கரைப் பகுதியில் ஒரு பூங்காவை அமைத்தார்கள். இன்று இந்த இடம் மக்களுக்கான, குழந்தைகளுக்கான ஒரு பொதுவிடமாகி விட்டது. இதனால் கிராமம் முழுவதன் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுப் போனது. மேலும் நான் சத்தீஸ்கட்டின் தேவூர் கிராமத்துப் பெண்கள் பற்றியும் கூற விரும்புகிறேன். இங்கே இருக்கும் பெண்கள் ஒரு சுயவுதவிக் குழுவை நிர்வகித்து வருகிறார்கள், அனைவரும் இணைந்து கிராமத்தின் தெருமுனை சந்திப்புகளில், சாலைகளில், கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நண்பர்களே, உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த ராம்வீர் தன்வர் அவர்களை மக்கள் குள மனிதன் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ராம்வீர் அவர்கள் இயந்திரவியல் படிப்பு படித்த பிறகு வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருடைய மனதிலே தூய்மை சுடர் விடத் தொடங்கியது, தனது வேலையைத் துறந்து குளங்களைத் தூய்மை செய்யும் பணியிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ராம்வீர் அவர்கள் இப்போது வரை, ஏகப்பட்ட குளங்களைத் துப்புரவு செய்து, அவற்றை மீளுயிர்ப்பித்திருக்கிறார்.
எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகைகளால் அலங்கரிக்கபடுகிறது, சில நாட்கள் கழித்து தீபாவளியும் வரவிருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு கோவர்த்தன் பூஜை, பிறகு பாயி தூஜ். இந்த மூன்று பண்டிகைகளோடு கூடவே சட் பூஜையும் வரவிருக்கிறது. நவம்பரில் தான் குருநானக் தேவின் பிறந்த நாளும் வருகிறது. இத்தனை பண்டிகைகள் ஒருசேர வரும் வேளையில் இவற்றுக்கான தயாரிப்பு ஏற்பாடுகள் முன்பேயே தொடங்கப்பட்டு விடும். இப்போதிலிருந்தே நீங்கள் பொருட்களை வாங்கும் திட்டமிடலில் ஈடுபட்டிருப்பீர்கள் என்றாலும், உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கிறது இல்லையா!! வாங்குவது என்றால், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், VOCAL FOR LOCAL. நீங்கள் உள்ளூர் பொருட்களை வாங்கினால், உங்களுடைய பண்டிகைகளும் பிரகாசிக்கும், ஒரு ஏழை சகோதர சகோதரி, ஒரு கைவினைஞர், ஒரு நெசவாளியின் வீட்டிலேயும் பிரகாசம் ஒளிகூட்டும். இந்த இலக்கை நாம் அனைவருமாக இணைந்து தொடங்கினோம், இந்த முறை பண்டிகைகளின் போது இதற்கு மேலும் வலுகூட்டப்படும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் உள்ளூர் பொருட்களை வாங்குங்கள், இவற்றைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிரவும் செய்யுங்கள். உங்களுடன் இருப்போருக்கும் இதுபற்றிச் சொல்லுங்கள். அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இதைப் போலவே ஏராளமான விஷயங்கள் குறித்து அலசுவோம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஒரு முக்கிய வேலையாக நான் அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால், நான் பயணிக்கும் முன்பேயே மனதின் குரலைப் பதிவு செய்யத் தீர்மானித்தேன். செப்டம்பர் அன்று மனதின் குரல் ஒலிக்கும் நாள், மகத்துவம் நிறைந்த ஒரு நன்னாள். நாம் பல நாட்களை நினைவில் இருத்திக் கொள்கிறோம், பலவகையான நாட்களைக் கொண்டாடுகிறோம். உங்கள் வீடுகளில் இளைஞர்களிடம் நீங்கள் கேட்டீர்கள் என்றால், அவர்கள் ஆண்டு முழுவதிலும் எந்த நாள் என்று வருகிறது என்ற அட்டவணையையே உங்களுக்குப் போட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மேலும் ஒரு நாள் என்றால், இந்த நாள் பாரதநாட்டுப் பாரம்பரியங்களோடு மிகவும் இயைந்து போகும் ஒரு நாள். பல நூற்றாண்டுகளாக, எந்தப் பாரம்பரியங்களோடு நாம் இணைந்து வந்துள்ளோமோ, அதோடு நம்மை இணைக்கும் ஒன்று இது. இது தான் உலக ஆறுகள் தினம் அதாவது World River Day. நம் நாட்டிலே ஒரு வழக்கு உண்டு.
पिबन्ति नद्यः, स्वय-मेव नाम्भः
பிபந்தி நத்ய:, ஸ்வயமேவ நாம்ப:
அதாவது நதிகள் தங்களுடைய நீரைத் தாமே பருகுவதில்லை; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் வகையிலே அளிக்கின்றன. நம்மைப் பொறுத்த மட்டில் நதிகள் என்பன ஏதோ பருப்பொருட்கள் அல்ல, நதிகள் உயிர்ப்பு நிறைந்த அலகுகள், அவற்றை நாம் அன்னையர்களாகவே கருதுகிறோம். நம்மிடத்தில் திருநாட்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், உற்சாகங்கள் என பல இருந்தாலும், நமது இந்த அன்னையரின் மடியினில் தான் அவையெல்லாம் நடைபெறுகின்றன.
உங்கள் அனைவருக்குமே தெரியும் – மாக மாதம் வந்து விட்டால், நமது நாட்டில் பலர் அந்த மாதம் முழுவதிலும், அன்னை கங்கை அல்லது ஏதோ ஒரு நதிக்கரையில் கல்பவாஸம் செய்வது வழக்கம். இப்போதெல்லாம் அந்தப் பாரம்பரியம் இல்லை என்றாலும், முற்காலத்திலே, வீட்டில் நீராடும் போதும் கூட, நதிகளை நினைத்துக் கொள்ளும் பாரம்பரியமும் இன்று வழக்கொழிந்து போய் விட்டது அல்லது அங்கே இங்கே என ஏதோ சில இடங்களில் மட்டுமே எஞ்சி இருக்கிறது. ஆனால் ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் ஒன்று இருந்தது; அது காலையிலே நீராடும் போது, விசாலமான பாரதநாட்டு யாத்திரையைப் புரிய வைத்தது, மானசீகமான யாத்திரை! தேசத்தின் அனைத்து மூலைகளோடும் இணைந்து கொள்ளும் உத்வேகம் அளித்தது. அது என்ன? நீராடும் போது பாரத நாட்டிலே ஒரு சுலோகம் சொல்லும் பாரம்பரியம் –
கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி.
நர்மதே சிந்து காவேரீ ஜலே அஸ்மின் ஸன்னிதிம் குரு.
गंगे च यमुने चैव गोदावरी सरस्वति |
नर्मदे सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु ||
முன்பெல்லாம் வீடுகளில், குடும்பங்களின் பெரியவர்கள் இந்த சுலோகத்தைக் குழந்தைகளுக்கு நினைவூட்டுவார்கள். இதனால் நமது தேசத்தின் நதிகளின் மீதான நம்பிக்கை ஏற்படும். விசாலமான பாரத நாட்டின் ஒரு மானசீகமான சித்திரம் மனதில் பதிந்து விடும். நதிகள் மீதான ஒரு பிடிப்பு உருவாகும். எந்த நதியைத் தாயாக நாம் கருதுகிறோமோ, காண்கிறோமோ, உயிர்ப்பிக்கிறோமோ, அதே நதி மீதான ஒரு நம்பிக்கையுணர்வு ஏற்படும். ஒரு நற்பண்பு பிறப்பெடுக்கும்.
நண்பர்களே, நமது தேசத்திலே நதிகளின் மகிகை பற்றிப் பேசுகையில், அனைவரும் இயல்பாகவே எழுப்பக்கூடிய ஒரு வினா, அதை எழுப்பும் உரிமையும் உண்டு, இதற்கான விடையளிப்பதும் அனைவரின் கடமை ஆகும். நீங்கள் நதிகளைப் பற்றி இந்த அளவு போற்றிப் புகழ்கிறீர்கள், நதிகளை அன்னையர் என்கிறீர்கள் என்றால், ஏன் இவை இத்தனை மாசுபட்டுப் போகின்றன? நதிகளை சிறிதளவு மாசுபடுத்துவதும் கூட தவறு என்றே நமது சாத்திரங்களிலே கூட கூறியிருக்கிறது. நமது நாட்டின் மேற்குப் பகுதியில், குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தானத்தில் நீர்த்தட்டுப்பாடு நிறைய உண்டு, அங்கே பல முறை பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. ஆகையினாலே அங்கே சமூக வாழ்க்கையில் ஒரு புதிய பாரம்பரியம் மேம்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, குஜராத்தில் மழைக்காலத் தொடக்கத்தின் போது ஜல் ஜீலானீ ஏகாதசியைக் கொண்டாடுகிறார்கள். அதாவது இன்றைய யுகத்தில் நாம் Catch the Rain என்று கூறும் அதே விஷயத்தை, நீரின் ஒவ்வொரு சொட்டையும் நாம் சேமிக்க வேண்டும், அதாவது ஜல் ஜீலனீ. இதைப் போலவே மழைக்குப் பிறகு பிஹார் மற்றும் கிழக்குப் பகுதிகளில் ”சட்” என்ற பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த சட் பூஜையை மனதில் கொண்டு நதிக்கரைகள், படித்துறைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு, செப்பனிடப்படும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் நதிகளைத் தூய்மைப்படுத்தி, மாசு நீக்கம் செய்யும் பணியை, அனைவரின் முயற்சிகளோடும் அனைவரின் ஒத்துழைப்போடும் செய்ய வேண்டும். நமாமி கங்கே இயக்கமும் இன்று முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்றால் இந்தப் பணியில் அனைவரின் முயல்வுகளும், ஒரு வகையில் மக்கள் விழிப்புணர்வு, மக்கள் இயக்கம் ஆகிய அனைத்தின் பெரிய பங்களிப்பு இருக்கிறது.
நண்பர்களே, நாம் நதிகளைப் பற்றி, அன்னை கங்கை குறித்துப் பேசும் வேளையில், கண்டிப்பாக ஒரு விஷயம் மீது உங்கள் கவனம் சென்றிருக்கும், குறிப்பாக நமது இளைஞர்களின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும். இப்போதெல்லாம் ஒரு சிறப்பான ஈ ஆக்க்ஷன், ஈ ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த மின்னணு ஏலம் வாயிலாக, அவ்வப்போது எனக்குப் பலர் அளித்திருக்கும் பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் வாயிலாகக் கிடைக்கும் தொகை, நமாமி கங்கே இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்படும். நீங்கள் எந்த உள்ளார்ந்த அன்போடு எனக்குப் பரிசுகளை அளிக்கிறீர்களோ, அதே உணர்வு தான் இந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துகிறது.
நண்பர்களே, நாடெங்கிலும் உள்ள நதிகளுக்கு மீளுயிர்ப்பு அளிக்க, நதியின் தூய்மையின் பொருட்டு, அரசும் சமூகசேவை அமைப்புக்களும் தொடர்ந்து ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றன. இன்று தொடங்கி அல்ல, பல பத்தாண்டுகளாகவே செய்து வருகின்றன. சிலர் இவை போன்ற பணிகளுக்காக தங்களையே அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இதே பாரம்பரியம், இதே முயற்சி, இதே நம்பிக்கை தாம் நமது நதிகளைக் காத்தளித்திருக்கின்றன. இந்தியாவின் எந்த ஒரு மூலையிலிருந்தும் இப்படிப்பட்ட பணிகளை ஆற்றுவோர் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறும் வேளையில், அவர்கள் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையுணர்வு மனதில் தோன்றுகிறது; இவை பற்றி உங்களோடு கலக்க வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது. தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் எடுத்துக்காட்டுக்களை நான் அளிக்கிறேன். இங்கே இருக்கும் ஒரு நதியின் பெயர் நாகநதி. இந்த ஆறு பல ஆண்டுகளுக்கு முன்பேயே வறண்டு விட்டது. இதன் காரணமாக இந்த நிலப்பரப்பில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. ஆனால், இங்கே இருக்கும் பெண்கள் இந்தச் சவாலை சிரமேற்கொண்டு, தங்களுடைய இந்த நதிக்கு மீளுயிர்ப்பளித்தார்கள். இவர்கள் மக்களை இணைத்தார்கள், மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களைத் தோண்டினார்கள், தடுப்பணைகளை உருவாக்கினார்கள், மறுசெறிவுக் குளங்களை வெட்டினார்கள். இந்த நதி இன்று நீர் நிரம்பி இருக்கிறது என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் நண்பர்களே. நதியில் நீர் நிரம்பி இருக்கும் காட்சி மனதிற்கு ஒரு அமைதியை ஏற்படுத்துகிறது, இதை நானே கூட அனுபவித்திருக்கிறேன்.
எந்த சாபர்மதீ நதிக்கரையில் காந்தியடிகள் சாபர்மதீ ஆசிரமத்தை அமைத்தாரோ, அங்கே சில பத்தாண்டுகளுக்கு முன்பிலிருந்தே சாபர்மதீ ஆறு வறண்டு விட்டது. ஆண்டில் 6-7 மாதங்கள் வரை கண்ணுக்கு நீரே தட்டுப்படாது. ஆனால் நர்மதையாறும், சாபர்மதீ ஆறும் இணைக்கப்பட்ட பிறகு, இன்று நீங்கள் அஹ்மதாபாத் சென்றால், சாபர்மதீ ஆற்றில் நீரைக் கண்டு உங்கள் மனம் மலரும். தமிழ்நாட்டின் நமது சகோதரிகள் புரிந்துள்ள இதே போன்ற பல பணிகள் நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்து வருகின்றன. நம்முடைய மதப் பாரம்பரியங்களோடு இணைந்த பல புனிதர்கள், குருமார்கள் உள்ளார்கள், அவர்களும் தங்களுடைய ஆன்மீகப் பயணத்தோடு கூடவே, நீருக்காக, நதிகளுக்காக, பல நதிக்கரைகளில் மரங்களை நடும் இயக்கம் போன்ற பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். இதனால் நதிகளில் பெருகும் மாசுபட்ட நீர் தடுக்கப்படும்.
நண்பர்களே, உலக ஆறுகள் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும், வாழ்த்த வேண்டும். ஆனால் ஒவ்வொரு நதியோரமும் வசிப்போரிடத்திலும், நாட்டுமக்களிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், பாரதத்திலே, அனைத்து பாகங்களிலும் ஆண்டுக்கொரு முறையாவது நதித்திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்பது தான்.
எனதருமை நாட்டுமக்களே, எப்போதும் சிறிய விஷயத்தை, சிறியது என்று கருதி நாம் புறந்தள்ளி விடக் கூடாது. சின்னச்சின்ன முயல்வுகள் கூட சில வேளைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; காந்தியடிகளின் வாழ்க்கையை நாம் நோக்கினால், அவர் ஒவ்வொரு கணமும் சின்னச்சின்ன விஷயங்களுக்குத் தனது வாழ்விலே எத்தனை முக்கியத்துவம் அளித்தார் என்பதும், சின்னச்சின்ன விஷங்களின் பொருட்டு, பெரியபெரிய உறுதிப்பாடுகளை நடத்திக் காட்டினார் என்பதும் தெரிய வரும். தூய்மை இயக்கமானது எவ்வாறு சுதந்திரப் போராட்டத்திற்கு நிரந்தரமான ஒரு சக்தியை அளித்தது என்பதை நமது இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். காந்தியடிகள் தாம் தூய்மையை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றிக் காட்டினார். அவர் தூய்மையை, தன்னாட்சிக் கனவோடு இணைத்து வைத்தார். இன்று இத்தனை தசாப்தங்களுக்குப் பின்னர், தூய்மை இயக்கமானது மீண்டும் ஒருமுறை புதிய பாரதம் என்ற கனவோடு தேசத்தை இணைக்கும் பணியைச் செய்திருக்கிறது. நமது பழக்கங்களை மாற்றும் இயக்கமாக இது ஆகி வரும் அதே வேளையில், தூய்மை என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. தூய்மை என்பது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் நற்பதிவுகளை அளிக்கும் ஒரு கடமை, தலைமுறைத் தொடர்களாக தூய்மை இயக்கம் நடக்கும் போது தான், ஒட்டுமொத்த சமூக வாழ்விலும் தூய்மை என்பது ஒரு இயல்பாகவே பொதியும். ஆகையால் இதை ஏதோ ஓராண்டு-ஈராண்டு என்பதாகவோ, ஒன்றிரண்டு அரசுகளின் செயல்பாடாகாவோ குறுக்கி விடக்கூடாது. தலைமுறை தலைமுறையாக நாம் தூய்மை தொடர்பாக விழிப்போடும், தொடர்ச்சியாகவும், சோர்வடையாமல், தடைப்படாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு இணைந்து, தூய்மை என்ற பேரியக்கத்தைத் தொடர வேண்டும். தூய்மை என்பது வணக்கத்துக்குரிய அண்ணலுக்கு தேசம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய சிரத்தாஞ்சலி, இதை நாம் ஒவ்வொரு முறையும் அளித்து வர வேண்டும், தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் முன்னமேயே கூறியிருக்கிறேன்.
நண்பர்களே, தூய்மை குறித்துப் பேசும் எந்த ஒரு வாய்ப்பினையும் நான் விடுவதில்லை என்பதை மக்கள் அறிவார்கள். ஒருவேளை அதனால் தானோ என்னவோ, மனதின் குரலின் ஒரு நேயர் ரமேஷ் படேல் அவர்கள், நாம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, பொருளாதாரத் தூய்மை என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை அண்ணலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். கழிப்பறைகள் எப்படி ஏழைகளின் கண்ணியத்தை அதிகரித்திருக்கிறதோ, அதே போல, பொருளாதாரத் தூய்மையும், ஏழைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது, அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது. ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடர்பான இயக்கத்தை தேசம் முடுக்கி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாக, இன்று ஏழைகளுக்கு அவர்களுடைய உரிமைத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைகின்றன; விளைவு, ஊழல் போன்ற தடைகள் பெரிய அளவில் குறைந்து விட்டிருக்கின்றன. பொருளாதாரத் தூய்மையில் தொழில்நுட்பம் பெரிய உதவிக்கரமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இன்று ஊரகப் பகுதிகளிலும் கூட, fin-tech UPI, அதாவது நிதிசார் தொழில்நுட்ப UPIஇன் விளைவாக, டிஜிட்டல் முறை பணம் கொடுக்கல் வாங்கல் திசையில், எளிய மக்களும் இணைந்து வருகிறார்கள், இதன் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நான் உங்களோடு ஒரு புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்த ஒரே மாதத்தில், UPI வாயிலாக கிட்டத்தட்ட 350 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் நடைபெற்றிருப்பதில் UPI பயனாகி இருக்கிறது. இன்று சராசரியாக 6 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மின்னணு பணப்பரிவர்த்தனை UPI வாயிலாக நடைபெற்று வருகிறது. இதனால் தேசத்தின் பொருளாதார அமைப்பில் தூய்மை, ஒளிவுமறைவற்ற தன்மை ஏற்பட்டு வருகிறது, இப்போது நிதிசார் தொழில்நுட்பத்தின் மகத்துவம் அதிகரித்து வருகிறது என்பது நமக்கெல்லாம் பெருமிதம் தரும் ஒரு விஷயம்.
நண்பர்களே, தூய்மையை எவ்வாறு தன்னாட்சியோடு அண்ணல் இணைத்தாரோ, அதே போல, காதியையும் நாம் சுதந்திரத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கிறோம். இன்று சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை நாம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவமாகக் கொண்டாடும் வேளையில், விடுதலைப் போராட்டத்தில் காதிக்கு இருந்த அதே பெருமையை, இன்றைய நமது இளம் தலைமுறையினர் அளித்து வருகிறார்கள் என்பது நிறைவை ஏற்படுத்துகிறது. இன்று காதி மற்றும் கைத்தறி ஆடைகளின் உற்பத்தி பல மடங்கு பெருகி இருக்கிறது, தேவையும் அதிகரித்திருக்கிறது. தில்லியின் காதி காட்சியகத்தில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விற்பனை பலமுறை நடந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று வணக்கத்துக்குரிய அண்ணலின் பிறந்த நாளன்று நாம் அனைவரும் மீண்டும் ஒரு முறை ஒரு புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இது பண்டிகைகளுக்கான நேரம், தீபாவளியும் வருகிறது, உங்கள் பகுதியில் எங்கே காதிப்பொருட்கள் விற்பனை ஆகிறதோ, கைத்தறிப் பொருட்கள்-கைவினைப் பொருட்கள் விற்பனை ஆகிறதோ, அங்கே காதி, குடிசைத் தொழில், கைத்தறி தொடர்பாக நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கத்திற்கு வலுவூட்டுவதாக இருக்கும், பழைய பதிவுகள் அனைத்தையும் தகர்ப்பதாக அமையும்.
நண்பர்களே, அமிர்த மஹோத்சவத்தின் இந்தக் காலகட்டத்தில், தேச விடுதலை வரலாற்றின் சொல்லப்படாத பல சம்பவங்கள்-கதைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் இயக்கம் நடைபெற்று வருகிறது, இதன் பொருட்டு, மலரத் துடிக்கும் எழுத்தாளர்களுக்கும், தேசத்திலும், உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்களுக்கும் நான் அறைகூவல் விடுத்தேன். இந்த இயக்கத்தோடு 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள், அதுவும் 14 வேறுவேறு மொழிகளில். 20க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் அயல்நாடுவாழ் இந்தியர்களும் தங்களை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொள்ளத் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட உருவாக விரும்பும் எழுத்தாளர்கள், விடுதலை வேள்வியோடு தொடர்புடைய போராட்டம் பற்றிய கதைகளை ஆராய்ந்து வருகிறார்கள். மறைந்து போன, யாருமறியா நாயகர்களைப் பற்றியும், வரலாற்றுப் பக்கங்களிலிருந்து காணாமல் போன சம்பவங்கள் பற்றியும் எழுதும் சவாலை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அதாவது 75 ஆண்டுக்காலத்தில் யாருமே பேசத் தவறிய, பேசப்படாமல் விடுபட்டுப் போன விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை தேசத்தின் முன்பாகக் கொண்டு வருவோம் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். அனைத்து இளைஞர்களையும் ஊக்கப்படுத்துங்கள் என்று அனைத்து நேயர்களிடமும், கல்வித்துறையோடு தொடர்புடைய அனைவரிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்களும் முன்னே வாருங்கள், சுதந்திரத்தின் அமிர்ந்த மஹோத்சவத்தின் வரலாற்றினை எழுதும் பணியைச் செய்வோர் அனைவரும், வரலாற்றினைப் படைக்கவிருக்கிறார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, சியாச்சின் பனிக்கட்டிப்பாளம் பற்றி நாமனைவரும் அறிவோம். அங்கே வசிப்பது என்பது சாதாரண மக்களுக்கு இயலாத ஒன்று எனும் அளவிற்கு அங்கே தீவிரமான குளிர் இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே பனிமயம், அங்கே மரம்-செடி-கொடி என்பது மாதிரிக்குக் கூட கிடையாது. இங்கே இருக்கும் வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழே 60 டிகிரி வரை கூட செல்லும். சில நாட்கள் முன்பாக, 8 மாற்றுத்திறனாளிகள் கொண்ட ஒரு குழு படைத்திருக்கும் சாதனை, நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் ஏற்படுத்துவது. சியாச்சின் பனிக்கட்டிப் பாளத்தில், 15000 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலே இருக்கும் குமார் போஸ்டில் தங்களுடைய முத்திரையைப் பதித்து, உலக சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது இந்தக் குழு. உடல்ரீதியிலான சவால்களையும் தாண்டி, நமது இந்த மாற்றுத்திறனாளிகள் புரிந்திருக்கும் இந்த சாதனை, தேசத்திற்கே ஒரு பெரிய கருத்தூக்கம். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டால், என்னிடத்தில் நிறைந்தது போலவே உங்களுக்குள்ளேயும் தைரியமும், தன்னம்பிக்கையும் நிறையும். இந்த சாகஸ மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் – மஹேஷ் நெஹ்ரா, உத்தராக்கண்டின் அக்ஷத் ராவத், மஹாராஷ்ட்டிரத்தின் புஷ்பக் கவாண்டே, ஹரியாணாவைச் சேர்ந்த அஜய் குமார், லத்தாக்கைச் சேர்ந்த லோப்சாங் சோஸ்பேல், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் துவாரகேஷ், ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்த இர்ஃபான் அஹ்மத் மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சோஞ்ஜின் ஏங்க்மோ. சியாச்சின் பனிக்கட்டிப் பாளத்தின் மீது கால் பதிக்கும் இந்தச் செயல்பாடு, இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைகளின் நீடித்த அனுபவமுடையோர் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, இதுவரை புரியப்படாத சாதனையைப் புரிந்தமைக்கு, இந்தக் குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டுமக்களின் ”சாதிக்க முடியும் என்ற கலாச்சாரம், சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடு, சாதிக்க முடியும் என்ற கண்ணோட்டத்தோடு” கூடவே, அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய உணர்வினையும் வெளிப்படுத்துகிறது.
நண்பர்களே, இன்று மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல முயல்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடந்தேறிவரும் One Teacher, One Call, அதாவது ”ஒரு ஆசிரியர், ஒரு அழைப்பு” என்ற ஒரு முயற்சி பற்றித் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது. பரேலியில் ஒரு வித்தியாசமான முயற்சியானது, மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு புதிய பாதை ஒன்றினைக் காட்டி வருகிறது. இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று நடத்தி வருபவர், டபோரா கங்காபூரின் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியையான தீப்மாலா பாண்டே அவர்கள். கொரோனா காலகட்டத்தில் இந்த இயக்கம் காரணமாக, அதிகமான எண்ணிக்கையில் பள்ளியில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சேவையுணர்வோடு இத்துடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இந்த ஆசிரியர்கள் கிராமந்தோறும் சென்று மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளை அழைக்கிறார்கள், அவர்களைத் தேடுகிறார்கள், பிறகு இவர்கள் ஏதோ ஒரு பள்ளியில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துகிறார்கள். மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்காக தீப்மாலா அவர்களும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும், இந்த அருமையான முயல்விற்காக, என் மனம் திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித்துறையில் இப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளும் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மேலும் மெருகூட்டும்.
என் இனிய நாட்டுமக்களே, இன்று நமது வாழ்க்கையின் நிலை எப்படி இருக்கிறது என்றால், ஒரே நாளிலேயே பலமுறை கொரோனா என்ற சொல் நமது காதுகளிலே எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது, நூறாண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் மிகப்பெரிய உலகளாவிய பெருந்தொற்றான கோவிட்-19, நாட்டுமக்களுக்கு பல படிப்பினைகளை ஊட்டியிருக்கிறது. உடல்நலத்தைப் பேணுவது குறித்தும், நலவாழ்வு குறித்தும் இன்று பேரார்வமும் அதிகரித்திருக்கிறது, விழிப்புணர்வும் வலுத்திருக்கிறது. நம்முடைய நாட்டில் பாரம்பரியமான இயற்கைப் பொருட்கள் அதிக அளவிலே கிடைக்கின்றன, இவை நலவாழ்வுக்கு மிகவும் பயனுடையவையாக உள்ளன. ஒடிஷாவின் காலாஹண்டியைச் சேர்ந்த நாந்தோலில் வசிக்கும் பதாயத் சாஹூ அவர்கள் இந்தத் துறையில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான செயலைச் செய்து வருகிறார். இவர் ஒண்ணரை ஏக்கர் நிலப்பரப்பில், மருத்துவத் தாவரங்களைப் பயிரிட்டு வருகிறார். இது மட்டுமல்ல, சாஹூ அவர்கள் இந்த மருத்துவத் தாவரங்களை ஆவணப்படுத்தியும் இருக்கிறார். ராஞ்சியைச் சேர்ந்த சதீஷ் அவர்கள் கடிதம் வாயிலாக இப்படிப்பட்ட மேலும் ஒரு தகவலையும் அளித்திருக்கிறார். ஜார்க்கண்டின் ஒரு Aloe Vera Village, அதாவது கற்றாழை கிராமத்தின்பால் என் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ராஞ்சிக்கருகே, தேவரீ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், மஞ்சு கச்சப் அவர்களின் தலைமையின் கீழ், பிர்ஸா விவசாய கல்விசாலையில், கற்றாழை வளர்ப்பு பற்றி பயிற்சி பெற்றார். இதன் பிறகு இவர் கற்றாழை வளர்ப்பில் ஈடுபட்டு, இதனால் உடல்நலத் துறையில் இவருக்கு ஆதாயம் கிட்டியதோடு, இந்தப் பெண்களின் வருவாயும் பெருகியது. கோவிட் பெருந்தொற்றின் போதும் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. காரணம் என்ன தெரியுமா? sanitizer என்ற கிருமிநாசினி தயாரிக்கும் நிறுவனங்கள், நேரடியாக இவர்களிடமிருந்து கற்றாழையை வாங்கியது தான் காரணம். இன்று, இந்தப் பணியில் கிட்டத்தட்ட 40 பெண்கள் அடங்கிய குழு இணைந்திருக்கிறது, பல ஏக்கர் நிலப்பரப்பில் கற்றாழை சாகுபடி செய்யப்படுகிறது, ஒடிஷாவின் பதாயத் சாஹூ அவர்கள் ஆகட்டும், தேவரீயின் பெண்களின் இந்தக் குழுவாகட்டும், இவர்கள் விவசாயத்தை எவ்வாறு உடல்நலத்தோடு இணைத்தார்கள் என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நண்பர்களே, வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளுமாகும். அவரது நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாள் விவசாயத்தில் புதியபுதிய பரிசோதனைகளைச் செய்பவர்களுக்கும் கற்றலை அளிக்கிறது. மருத்துவத் தாவரங்கள் துறையில் ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கமளிக்கும் Medi-Hub TBI என்ற பெயர் கொண்ட ஒரு இன்குபேட்டர், குஜராத்தின் ஆனந்தில் இதற்கான பணிகள் நடந்தேறி வருகின்றன. மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களோடு தொடர்புடைய இன்குபேட்டர், மிகக்குறைவான காலத்திலேயே 15 தொழில்முனைவோரின் வியாபார முனைப்பிற்கு ஆதரவளித்திருக்கிறது. இந்த இன்குபேட்டரின் துணைக்கொண்டு, சுதா சேப்ரோலூ அவர்கள் தன்னுடைய ஸ்டார்ட் அப்பைத் தொடங்கி இருக்கிறார். இவரது நிறுவனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, நூதனமான மருத்துவ வடிவமைத்தல்களின் பொறுப்பு இவர்களிடமே உள்ளது. மேலும் ஒரு தொழில் முனைவோரான சுபாஸ்ரீ அவர்களுக்கும் இதே மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் இன்குபேட்டரிடமிருந்து உதவிகள் கிடைத்துள்ளன. சுபாஸ்ரீ அவர்களின் நிறுவனம், மருத்துவத் தாவர அறை மற்றும் காரின் காற்றினிமைத் திவலைத் துறையில் பணியாற்றி வருகிறது. இவர் ஒரு மருத்துவத் தாவர மாடித் தோட்டத்தையும் ஏற்படுத்தி, அதிலே 400க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயிர் செய்து வருகிறார்.
நண்பர்களே, குழந்தைகளிடத்திலே மருத்துவத் தாவரங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒரு சுவாரசியமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது, இந்தச் சவாலை ஏற்றிருக்கிறார் நமது பேராசிரியர் ஆயுஷ்மான் அவர்கள். சரி, யார் இந்த பேராசிரியர் ஆயுஷ்மான் என்று நீங்கள் யோசிக்கலாம்? உள்ளபடியே, பேராசிரியர் ஆயுஷ்மான் என்பவர் ஒரு காமிக் புத்தகத்தின் கதாபாத்திரம். இதிலே பலவகையான கேலிச்சித்திரங்கள் வாயிலாக, சின்னச்சின்னக் கதைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதோடு கூடவே, கற்றாழை, துளசி, நெல்லி, வேம்பு, சீந்தில், அஸ்வகந்தா, வல்லாரை போன்ற ஆரோக்கியத்திற்கு உதவும் மருத்துவத் தாவரங்களின் பயன்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
நண்பர்களே, இன்றைய நிலையில், எந்த வகையான மருத்துவத் தாவரம் மற்றும் மூலிகைப் பொருட்கள் உற்பத்தி குறித்து உலகம் முழுவதிலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறதோ, அவை தொடர்பாக பாரத நாட்டிடம் அளப்பரிய சாத்தியக்கூறுகள் உள்ளன. கடந்த காலத்திலே ஆயுர்வேத மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
மக்களின் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கக்கூடிய, நமது விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருவாயை அதிகரிப்பதில் உதவிகரமாக இருக்கும் இப்படிப்பட்ட பொருட்கள் மீது நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் உலகோடு தொடர்புடையவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, பாரம்பரியமான விவசாயத்திலிருந்து சற்று முன்னேறி, விவசாயத் துறையில் நடைபெற்றுவரும் புதிய பரிசோதனைகள், புதிய மாற்றுகள் ஆகியன தொடர்ந்து சுயவேலைவாய்ப்புக்கான புதிய சாதனங்களை உருவாக்கித் தருகின்றன. புல்வாமாவின் இரு சகோதரர்கள் பற்றிய கதையும் கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஜம்மு-கஷ்மீரத்தின் புல்வாமாவைச் சேர்ந்த பிலால் அஹ்மத் ஷேக், முனீர் அஹ்மத் ஷேக் ஆகியோர், தங்களுக்கென ஒரு புதிய பாதையை எப்படி அமைத்துக் கொண்டார்கள் என்பது புதிய இந்தியாவின் ஒரு எடுத்துக்காட்டு. 39 வயதான பிலால் அஹ்மத் அவர்கள் உயர்கல்வி படித்தவர், இவர் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தனது உயர்கல்வியோடு தொடர்புடைய அனுபவங்களைப் பயன்படுத்தி, இவர் விவசாயத்திலே தானே ஒரு ஸ்டார் அப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார். பிலால் அவர்கள் தனது வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்கும் ஒரு அலகை உருவாக்கினார். இந்த அலகிலே தயாராகும் உயிரி உரமானது, விவசாயத்திற்கு ஆதாயமானதாக இருப்பதோடு, மக்களுக்கான வேலைவாய்ப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தச் சகோதரர்களின் அலகிலிருந்து விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட 3000 குவிண்டால் மண்புழு உரம் கிடைத்து வருகிறது. இவர்களின் மண்புழு உரத் தயாரிக்கும் அலகில் இன்று 15 பேர் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களின் இந்த அலகைக் காண்பதற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர், விவசாயத் துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள். புல்வாமாவின் ஷேக் சகோதரர்கள் வேலை தேடுபவர்கள் என்பதற்கு பதிலாக, வேலையளிப்பவர்களாக மாறும் உறுதியை இறுகப் பற்றிக் கொண்டார்கள், இன்று ஜம்மு-கஷ்மீரில் மட்டுமல்ல, தேசமெங்கும் இருப்போருக்குப் புதிய பாதையை இவர்கள் காட்டி வருகிறார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, செப்டெம்பர் மாதம் 25ஆம் தேதியன்று தேசத்தின் மகத்தான செல்வன், பண்டித தீன் தயாள் உபாத்தியாயா அவர்களின் பிறந்த நாள். தீன் தயாள் அவர்கள், கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர். இவருடைய பொருளியல் தத்துவம், சமூகத்திற்கு அதிகாரப் பங்களிப்பு அளிக்கவல்ல இவருடைய கோட்பாடுகள், இவர் காட்டிய அந்த்யோதய் மார்க்கம் ஆகியவை இன்றும் கூட பேசப்படும் பொருளாக இருப்பதோடு, உத்வேகம் அளிக்கவல்லதாகவும் இருக்கிறது. மூன்று ஆண்டுகள் முன்பாக, செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி, அவருடைய பிறந்த நாளன்று தான், உலகின் மிகப்பெரிய உடல்நலக் காப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரதம் திட்டம் அமல் செய்யப்பட்டது. இன்று தேசத்தின் இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு, ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின்படி, மருத்துவமனைகளில் ஐந்து இலட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சை இலவசமாகக் கிடைத்திருக்கிறது. ஏழைகளுக்கான இத்தனை பெரிய திட்டம், தீன் தயாள் அவர்களின் அந்த்யோதய் தத்துவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தீன் தயாள் அவர்களுடைய விழுமியங்களையும், இலட்சியங்களையும் இன்றைய இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கடைப்பிடித்தால், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை லக்னௌவிலே தீன் தயாள் அவர்கள், “எத்தனை அருமையான பொருட்கள், எத்தனை அழகான குணங்கள், இவை அனைத்தும் சமூகத்திடமிருந்து நமக்குக் கிடைக்கின்றன. இந்தச் சமூகத்திற்கு நாம் பட்ட கடனை அடைக்க வேண்டும், போன்ற கருத்துக்களை நாம் மனதில் ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதாவது நாம் சமூகத்திடமிருந்தும், தேசத்திடமிருந்தும் நிறைய பெற்றுக் கொள்கிறோம், இவையெல்லாம் தேசத்தின் காரணமாகவே நமக்குக் கிடைக்கிறது; ஆகையால், இப்படிப்பட்ட தேசத்திற்கு நாம் எவ்வாறு கைம்மாறு செய்யலாம் என்ற கோணத்திலே சிந்திக்க வேண்டும் என்ற கற்பித்தலை தீன் தயாள் அவர்கள் அளித்திருக்கிறார். இது இன்றைய இளைஞர்களுக்கான ஒரு மிகப்பெரிய செய்தி.
நண்பர்களே, தோல்வியை ஏற்காமல், தொடர்ந்து முயல வேண்டும் என்ற கற்றலும், தீன் தயாள் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. சாதகமற்ற அரசியல் மற்றும் கொள்கைரீதியிலான சூழ்நிலைகளைத் தாண்டி, பாரதத்தின் முன்னேற்றத்திற்காக, உள்நாட்டு மாதிரி என்ற ஒரு தொலைநோக்கினை அளிப்பதிலிருந்து அவர் சற்றும் சளைக்கவில்லை. இன்று பல இளைஞர்கள் வாடிக்கையான பாதைகளை விட்டு விலகி, முன்னேறிச் செல்ல விழைகிறார்கள். விஷயங்களை இவர்கள் தங்கள் போக்கிலே செய்ய விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில் தீன் தயாள் அவர்களின் வாழ்க்கையிலிருந்து இந்த இளைஞர்கள் பயனடைய முடியும். ஆகையால் இவரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று இளைஞர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, நாம் இன்று பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். நாம் முன்னேயே கூறியதைப் போல, வரவிருக்கும் காலம் பண்டிகைக் காலம். கண்ணியமே உருவெடுத்த மனிதகுலத் தலைவனாம் இராமன், பொய்மை மீது பெற்ற வெற்றியை நினைவு கொள்ளும் திருநாளை தேசம் முழுவதும் கொண்டாடும். ஆனால் இந்தக் கொண்டாட்டத்தில் மேலும் ஒரு போராட்டத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் – அது தான் தேசம் மேற்கொண்டிருக்கும் கொரோனாவுடனான போர். டீம் இண்டியாவின் இந்தப் போரிலே தினமொரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் தேசம் பல சாதனைகளைப் படைத்து விட்டது, இதைப் பற்றித் தான் உலகெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்தப் போரிலே, ஒவ்வொரு இந்தியனுக்கும், சிறப்பானதொரு பங்களிப்பு இருக்கிறது. நமது முறை வரும் போது நாம் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு, இந்தப் பாதுகாப்பு வளையத்திலிருந்து யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நமக்கருகே யாருக்காவது தடுப்பூசி போடப்படவில்லை என்றால், அவரையும் அருகே இருக்கும் தடுப்பூசி மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவசியமான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்தப் போரிலே, மீண்டும் ஒருமுறை டீம் இண்டியா தனது முத்திரையைப் பதிக்கும் என்பதிலே எனக்கு எந்தவிதமான ஐயமும் கிடையாது. நாம் அடுத்த முறை மேலும் பல விஷயங்கள் குறித்து மனதின் குரலில் உரையாடுவோம். உங்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும், பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.
இந்த முறை ஒலிம்பிக்கில் ஹாக்கியில் பதக்கம் கிடைத்திருக்கிறது. அதுவும் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், அவருக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். தியான்சந்த் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் விளையாட்டுக்கே அர்ப்பணம் செய்தார். ஆகையால் இன்று, தேசத்தின் இளைஞர்களில், நமது ஆடவர் பெண்களிடத்தில், விளையாட்டுக்கள் மீது அதிக ஆர்வம் காணக் கிடைக்கிறது. தங்களின் குழந்தைகள் விளையாட்டுக்களில் முன்னேறுகிறார்கள் எனும் போது தாய் தந்தையருக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது, இந்த உற்சாகம் தான் மேஜர் தியான்சந்த் அவர்களுக்கு நாம் அளிக்கக் கூடிய மிகப் பெரிய சிரத்தாஞ்சலிகள்.
நண்பர்களே, விளையாட்டுக்கள் பற்றிப் பேசும் வேளையில், இயல்பாகவே நம் முன்பாக இளைஞர்களின் தலைமுறை முழுவதும் தெரிகிறது. இவர்களை நாம் உற்று நோக்கினோம் என்றால், அவர்களில் தான் எத்தனை மாற்றங்களைக் காண முடிகிறது! இளைஞர்களின் மனம் மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களின் மனங்கள் பழமைவாதமான வழிமுறைகளை விட்டு விலகி, புதிய ஒன்றை சாதிக்க விரும்புகின்றன. இன்றைய இளைஞர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் பாதைகளில் பயணிக்க விரும்புவதில்லை. தாங்களே ஏற்படுத்திக் கொண்ட புதிய பாதைகளில் பயணிக்க விரும்புகிறார்கள். இதுவரை யாரும் செல்லாத பாதைகளில் பயணிக்க நினைக்கிறார்கள். இலக்கும் புதியது, பாதையும் புதியது, விருப்பமும் புதியது…..ஒரு முறை மனதில் முடிவெடுத்துவிட்டார்கள் என்றால், இளைஞர்கள் அதிலே முழுமனதோடு ஈடுபட்டுவிடுகிறார்கள். இரவு பகலாகப் பாடுபடுகிறார்கள். நாமே கூட பார்த்திருக்கிறோம்…. சில காலம் முன்பாகத் தான், பாரதம் தனது விண்வெளித்துறையைத் திறந்து விட்டது, பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில் இளைய தலைமுறையினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள், கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் மிக உற்சாகத்தோடு முன் வந்தார்கள். இனிவரும் காலங்களில், நாம் செலுத்தவிருக்கும் பெரும்பாலான செயற்கைக்கோள்களில் நமது கல்லூரிகளின், பல்கலைக்கழகங்களின், பரிசோதனைக் கூடங்களில் பணியாற்றும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
இதே போன்று இன்று எங்கு பார்த்தாலும், எந்தக் குடும்பத்தில் நோக்கினாலும், அது எத்தனைதான் நிறைவான குடும்பமாக இருந்தாலும் சரி, நன்கு படித்த குடும்பமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் இளைஞர்களிடம் பேசிப் பார்த்தால் என்ன கூறுகிறார்? அவர் தனது குடும்பப் பாரம்பரியங்களிலிருந்து விலகி, நான் ஸ்டார்ட் அப் தொடங்கப் போகிறேன் என்கிறார். அதாவது ஆபத்தை எதிர்கொள்ளும் சாகஸ உணர்வு அவர்கள் மனதிலே இருக்கிறது. இன்று சின்னச் சின்ன நகரங்களிலும் கூட இந்த ஸ்டார்ட் அப் கலாச்சாரம் விரிவடைந்து வருகிறது. இதை நான் பிரகாசமான எதிர்காலத்திற்கான சங்கேதமாகவே காண்கிறேன். சில நாட்கள் முன்பாக நமது தேசத்தில் விளையாட்டு பொம்மைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. சில காலத்திலேயே நமது இளைஞர்களின் கவனம் இந்த விஷயத்தில் சென்றது, உலகில் பாரதத்தை விளையாட்டுப் பொருட்களோடு அடையாளப்படுத்துவது என்று அவர்கள் உறுதி செய்து கொண்டார்கள். புதிய புதிய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள், உலகில் விளையாட்டுச் சாமான்களுக்கென ஒரு மிகப் பெரிய சந்தை உள்ளது, 6-7 இலட்சம் கோடி பெறுமானமுள்ள சந்தை இது. இன்று இதிலே பாரதத்தின் பங்கு மிகவும் குறைவு. ஆனால், விளையாட்டுப் பொருட்களை எவ்வாறு செய்வது, அவற்றிலே இருக்கும் ரகங்கள் என்ன, தொழில்நுட்பம் என்னவாக இருக்கலாம், குழந்தைகளின் மனோவியலுக்கு ஏற்ப அவற்றை எவ்வாறு தயாரிப்பது போன்ற விஷயங்களின் இன்று நமது தேசத்தின் இளைஞர்கள் தங்கள் கவனத்தைக் குவித்திருக்கிறார்கள், தாங்கள் பங்களிக்க விரும்புகிறார்கள். நண்பர்களே, மேலும் ஒரு விஷயம், இது மனதை சந்தோஷங்களால் நிரப்பிவிடுகிறது, நம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்கிறது. நீங்களும் இதை கவனித்திருக்கலாம். பொதுவாக நம்நாட்டிலே இருக்கும் இயல்பு…… ஏதோ நடக்குது, ஏதோ சுமாரா இருக்கு என்பதே. ஆனால் எனது தேசத்தின் இளைஞர்கள் தங்கள் மனதிலே மிகச் சிறப்பான தரம் என்பதை நோக்கி முனைப்போடு இருக்கிறார்கள். மிகச் சிறப்பாகச் செய்ய விரும்புகிறார்கள், மிகச் சிறப்பான வகையிலே செய்ய விழைகிறார்கள். இதுவும் தேசத்தின் மிகப் பெரிய சக்தி என்ற வகையில் பரிமளிக்கும்.
நண்பர்களே, இந்த முறை ஒலிம்பிக்ஸ் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. ஒலிம்பிக்ஸ் விளையாட்டு முடிந்து இப்போது பேராலிம்பிக்ஸ் நடந்து வருகிறது. தேசத்தில் நமது இந்த விளையாட்டு உலகில் எது நடந்திருந்தாலும், உலகத்தோடு ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கலாம் ஆனால், நம்பிக்கை ஊட்டும் வகையில் நிறையவே நடந்திருக்கிறது. இன்று இளைஞர்கள், விளையாட்டுக்களை ரசிக்க மட்டுமே செய்கிறார்கள் என்பதல்ல; அவர்கள் அவற்றோடு தொடர்புடைய சந்தர்ப்பங்களையும் கவனிக்கிறார்கள். அதன் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும், மிக நுணுக்கமாகப் பார்க்கிறார்கள், அவற்றின் வல்லமையைப் புரிந்து கொள்கிறார்கள், ஏதோ ஒரு வகையிலே தன்னை அவற்றோடு இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் வாடிக்கையான விஷயங்களை விடுத்து முன்னேறிச் சென்று, புதிய கிளைகளையும் தங்களுடைய தாக்கிக் கொண்டு வருகிறார்கள். நாட்டின் இனியமக்களே, இந்த அளவுக்கு விரைவு வந்திருக்கும் வேளையிலே, குடும்பங்களில் விளையாட்டுக்கள் குறித்த விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. நீங்களே சொல்லுங்களேன்…. இந்த விரைவினை நாம் தணிக்க வேண்டுமா, தடைப்படுத்த வேண்டுமா? கண்டிப்பாகக் கூடாது. நீங்களும் என்னைப் போன்றே தான் சிந்திப்பீர்கள். இப்போது தேசத்திலே விளையாட்டுக்கள், போட்டித் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை இவற்றை நாம் தடுக்கக்கூடாது. இந்த விரைவினை நாம் குடும்பவாழ்க்கையில், சமூக வாழ்க்கையில், தேசிய வாழ்க்கையில், நிலையானதாக்கிக் கொள்ள வேண்டும். ஆற்றலை இட்டு நிரப்ப வேண்டும், தொடர்ந்து புதிய சக்தியை ஊட்டி வர வேண்டும். வீடாகட்டும், வெளியிலாகட்டும், கிராமமாகட்டும், நகரமாகட்டும், நமது விளையாட்டு மைதானங்கள் நிரம்பி வழிய வேண்டும், அனைவரும் விளையாட வேண்டும், மலர வேண்டும். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறது இல்லையா…. நான் செங்கோட்டையிலிருந்து சொன்னேனே…. அனைவருடைய முயற்சி. ஆம், அனைவருடைய முயற்சி. அனைவரின் முயற்சிகளினால் தான், பாரதம் விளையாட்டுத் துறையில், நம் உரிமைப் பொருளான உச்சியை சென்றடைய முடியும். மேஜர் தியான்சந்த் அவர்கள் போன்றோர் வகுத்தளித்த வழியினிலே, நாம் முன்னேறிச் செல்வது நமது கடமையாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தில் ஒரு காலகட்டம் வந்திருக்கிறது, இப்போது விளையாட்டுக்களிடத்திலே குடும்பங்களும், சமுதாயமும், மாநிலமும், தேசமும், ஒரே மனதோடு அனைவரும் இணைந்து வருகிறார்கள்.
எனக்குப் பிரியமான இளைஞர்களே, நாம் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற வேண்டும். கிராமங்கள் தோறும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரவேண்டும். போட்டிகளின் மூலம் தான் விளையாட்டுக்கள் விரிவாக்கம் பெறும், மலர்ச்சி அடையும், விளையாட்டு வீரர்கள்களும் உருவாவார்கள், உயர்வார்கள். நாட்டு மக்கள் நாமனைவரும் இந்த விரைவினை எத்தனை முன்னேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நமது பங்களிப்பை நல்குவோம், அனைவரின் முயற்சி என்ற இந்த மந்திரத்தை மெய்ப்பித்துக் காட்டுவோம்.
எனதருமை நாட்டு மக்களே, நாளை ஜன்மாஷ்டமி புனிதப் பண்டிகையும் கூட. ஜன்மாஷ்டமி என்ற இந்தப் புனித நன்னாள், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த புனித நாள். நாம் பகவானின் அநேக ரூபங்களை அறிந்திருக்கிறோம், விஷமங்கள் நிறைந்த கன்ஹையா முதல் விராடரூபியான கிருஷ்ணர், சாஸ்திரங்களின் வித்தகரான கிருஷ்ணன் வரை. கலையாகட்டும், அழகாகட்டும், இனிமையாகட்டும், இங்கெல்லாம் கிருஷ்ணன் இருக்கிறான். இவற்றை எல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், ஜன்மாஷ்டமிக்கு சில நாட்கள் முன்பாக, நான் ஒரு சுவாரசியமான அனுபவத்தை ரசித்தேன், இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் விழைகிறது. இந்த மாதம் 20ஆம் தேதியன்று பகவான் சோமநாதரின் கோயிலோடு தொடர்புடைய கட்டுமானப் பணிகளை நான் நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். சோமநாதர் ஆலயத்திலிருந்து 3-4 கிலோமீட்டர் தொலைவில் தான் பாலகா தீர்த்தம் உள்ளது. இந்த பாலகா புனித இடத்தில் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பூமியில் தனது இறுதிக் கணங்களைக் கழித்தார். ஒரு வகையில் இந்த உலகில் அவருடைய லீலைகள், அங்கே நிறைவு பெற்றன. சோமநாதர் அறக்கட்டளை வாயிலாக இந்தப் பகுதியின் வளர்ச்சியில் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. நான் பாலகா தலத்திலும், இங்கே நடைபெறும் பணிகள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்த போது, எனது பார்வை, ஓர் அழகான கலைப் புத்தகத்தின் மீது விழுந்தது. இந்தப் புத்தகத்தை என் வீட்டுக்கு வெளியே யாரோ விட்டுச் சென்றிருந்தார்கள். இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பலரூபங்கள், அநேக அற்புதமான படங்கள் இருந்தன. மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள் அதிலே இருந்தன, அர்த்தமுள்ள ஓவியங்களும் இருந்தன. நான் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன், என்னுடைய ஆவல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தப் புத்தகத்தில் இருந்த அனைத்துப் படங்களையும் நான் பார்த்து முடித்த போது, அதிலே எனக்கு ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த உடன் அந்தச் செய்தியை எழுதியவரை நான் சந்திக்க வேண்டும் என்று என் மனம் அவாவியது. என் வீட்டின் வாயிலிலே புத்தகத்தை விட்டுச் சென்றவரை நான் சந்திக்க வேண்டும். என் அலுவலகத்தார் அவரோடு தொடர்பு கொண்டார்கள். இரண்டாம் நாள் அன்றே அவருக்கு அழைப்பு விடுத்தார்கள், ஸ்ரீகிருஷ்ணரின் பல்வேறு ரூபங்களையும், அந்தக் கலைப்புத்தகத்தையும் பார்த்த பின்னர் என் ஆவல் இந்த அளவுக்கு பேராவலாக வளர்ந்திருந்தது. இந்தப் பெருவிருப்பத்தோடு நான் ஜதுரானீதாஸி அவர்களை சந்தித்தேன். அவர் அமெரிக்கர், அங்கே பிறந்தவர், வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவிலே தான், ஜதுரானீதாஸீ அவர்கள் இஸ்கானோடு தொடர்புடையவர், ஹரேகிருஷ்ணா இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர், அவருடைய மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால், பக்திக்கலைகளில் அவர் நிபுணர். உங்களுக்கே தெரியும், இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீலஸ்ரீபிரபுபாதஸ்வாமி அவர்களின் 125ஆம் பிறந்த நாள் வருகிறது. ஜதுரானீதாசீ அவர்கள் இதனை ஒட்டி பாரதம் வந்திருக்கிறார். என் முன்னே எழுந்த பெரிய கேள்வி என்னவென்றால், எவருடைய பிறப்பு அமெரிக்காவில் நிகழ்ந்ததோ, எவர் பாரதீய உணர்வுகளோடு தொலைவாக இருந்தாரோ, அவர் எப்படி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மீது இத்தனை பிரேமை கொண்ட ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் என்பது தான். மிக நீண்ட நேரம் நான் அவரோடு உரையாடினேன் ஆனால் அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மோதிஜி: ஜதுரானிஜி, ஹரே கிருஷ்ணா! பக்திக்கலை பற்றி நான் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன், ஆனால் நமது நேயர்களுக்கு இது பற்றி மேலும் கூறுங்கள். இதன் மீது உங்களுடைய பேரார்வமும், பெருவிருப்பமும் அருமை.
ஜதுரானீஜீ: இப்ப இந்த பக்திக்கலைன்னும் போது இந்த ஒளிர்வுகள் எல்லாம் இந்தக் கலை மனதிலிருந்தோ, கற்பனையிலிருந்தோ வரலை, இது பண்டைய வேதநூல்களான ப்ரும்மச்ம்ஹிதைலேர்ந்து வருதுங்கறதை, கோஸ்வாமியுடைய விருந்தாவனத்திலிருந்து, பிரும்மதேவனிடமிருந்து வருதுங்கறதை தெளிவுபடுத்த விரும்பறேன். எப்படி அவரு புல்லாங்குழலை ஏந்தி இருக்காரு, எப்படி அவருடைய புலன்கள் ஒன்றுக்கு பதிலாக இயங்கும் சக்தி உடையவை…..அவரு தன்னோட காதில கர்ணிகா மலரை அணிஞ்சுக்கிட்டு, அவருடைய தாமரை மலர்ப் பாதங்களைக் கொண்டு விருந்தாவன் பூமியில தடங்களைப் பதிக்கறாரு, ஆயர்கள் அவருடைய புகழைப் பாடுறாங்க, அவருடைய குழலோசை அனைத்து பாக்கியசாலிகளுடைய இதயங்களையும் மனங்களையும் கொள்ளை கொள்ளுது. ஆக, அனைத்துமே பண்டைய வேத நூல்கள்லேர்ந்து எடுக்கப்பட்டன; இந்த நூல்களோட சக்தி எல்லாம் புனிதமான நபர்கள்கிட்டேர்ந்தும், தூயபக்தர்கள் கிட்டேர்ந்தும் கிடைக்குது, இவர்கள் தான் இந்தக் கலைக்கு சக்தி அளிக்கறவங்க, ஆகையாலதான் இது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது, இதுல என்னோட சக்திங்கறது எதுவுமே இல்லை.
மோதிஜி: ஜதுரானீஜி, என்கிட்ட ஒரு வித்தியாசமான வினா இருக்கு. 1966லேர்ந்து, ஒரு வகையில 1976லேர்ந்து நீங்க இந்தியாவோட தொடர்பு உடையவரா இருக்கீங்க. உங்க மனசுல இந்தியாவுக்கு என்ன மகத்துவம்?
ஜதுரானீஜீ: பிரதம மந்திரி அவர்களே, இந்தியா தான் எனக்கு எல்லாமே. சில நாட்கள் முன்னாலதான்னு நினைக்கறேன், நான் மாண்புமிகு குடியரசுத்தலைவர் கிட்ட சொன்னேன், இந்தியாவில ஏகப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு, டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஐ ஃபோன்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், பல வசதிகள்ல எல்லாம் மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றிக்கிட்டு இருக்கு. ஆனா இதெல்லாம் இந்தியாவோட உண்மையான பெருமை இல்லை. இந்தியாவோட பெருமைன்னு சொன்னா, இந்த பூமியில தான் கிருஷ்ணன் அவதாரம்ஞ்சான், எல்லா அவதாரங்களுமே இங்க தான் நடந்திருக்கு. சிவபெருமான் தோன்றியிருக்காரு, ஸ்ரீஇராமன் தோன்றியிருக்காரு, எல்லா புனித நதிகளும் இங்க இருக்கு, வைணவத்தோட எல்லா புனித இடங்களும் இந்தியாவுல இருக்கு, குறிப்பா விருந்தாவன் தான் உலகத்திலேயே மிக முக்கியமான ஓர் இடம். விருந்தாவனம்தான் வைகுந்தக் கோள்களோட தோற்றம், துவாரகையோட ஆதாரம், உலகத்தின் பருப்பொருள் படைப்பின் தோற்றுவாய், அதனால நான் இந்தியாவை நேசிக்கறேன்.
மோதிஜி: ரொம்ப நன்றி ஜதுரானீஜி. ஹரேகிருஷ்ணா!
நண்பர்களே, உலக மக்கள் இன்று பாரதீய ஆன்மீகம் மற்றும் தத்துவம் பற்றி இந்த அளவுக்கு சிந்திக்கிறார்கள். அந்த வகையில் இந்த மகத்தான பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பல்லவா? வழக்கொழிந்து போனவற்றை நாம் விடுக்கத்தான் வேண்டும், ஆனால் எவை காலத்தைக் கடந்து நிற்பதோ, அவற்றை நாம் முன்னெடுத்துச் செல்லத்தான் வேண்டும். நாம் நமது பண்டிகையைக் கொண்டாடுவோம், அதன் அறிவியல் தன்மையைப் புரிந்து கொள்வோம், அதன் பின்னணியில் இருக்கும் பொருளை அறிந்து கொள்வோம். இது மட்டுமல்ல, ஒவ்வொரு பண்டிகையிலும் ஏதோ ஒரு செய்தி பொதிந்திருக்கும், ஏதோ ஒரு நல்ல பதிவு இருக்கும். நாம் இதனையும் புரிந்தும் கொள்ள வேண்டும், வாழவும் வேண்டும், வருங்காலத் தலைமுறையினருக்கு, நமது பாரம்பரியம் என்ற முறையிலே கொண்டு சேர்க்கவும் வேண்டும். நான் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜன்மாஷ்டமிக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம் நிறைநாட்டு மக்களே, இந்தக் கொரோனா காலகட்டத்திலே தூய்மை விஷயம் தொடர்பாக எத்தனை பகிர வேண்டும் என்று நினைத்தேனோ, அதில் சற்று குறைவுபட்டுப் போய்விட்டது. தூய்மை இயக்கத்தை நாம் சற்றும் கூடத் தொய்வடைய வைக்கக்கூடாது என்பதே என் கருத்து. தேச உருவாக்கத்தின் பொருட்டு அனைவரின் முயற்சி, எப்படி அனைவருக்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு நமக்கு உத்வேகமும் அளிக்கும், புதிய முயற்சியில் ஈடுபடத் தேவையான புதிய சக்தியை நிரப்பும், புதிய நம்பிக்கையையும் உருவாக்கும், நமது உறுதிப்பாடுகளில் உயிர்ப்பையும் ஏற்படுத்தும். நாம் தூய்மை பாரதம் இயக்கம் பற்றிப் பேசும் போது, இந்தோர் நகரம் பற்றிப் பேசியே ஆக வேண்டும் ஏனென்றால், இந்தோரில் தூய்மை தொடர்பாக ஒரு சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்தோர்வாசிகள் இதற்கான சிறப்புப் பாராட்டுக்கு உரியவர்கள். நம்முடைய இந்தோர் பல்லாண்டுகளாகவே தூய்மை பாரத தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இப்போது இந்தோரின் மக்கள் தூய்மை பாரதம் இயக்கத்தின் இந்தத் தரவரிசையோடு நிறைவடைய விரும்பவில்லை, முன்னேற நினைக்கிறார்கள். புதிய ஒன்றைச் செய்ய விழைகிறார்கள். Water Plus நகரமாக இந்தோரை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டார்கள், இதற்காக முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். Water Plus நகரம், அதாவது சுத்திகரிப்பு ஏதும் செய்யப்படாமல், எந்த ஒரு சாக்கடையும் பொது நீர்நிலையில் கொண்டு சேர்க்கப்படாது. இந்நகரின் குடிமக்கள் அனைவரும் தாங்களே முன்வந்து குழாய்களை சாக்கடைக் குழாய்களோடு இணைத்திருக்கிறார்கள். தூய்மை இயக்கத்தையும் செயல்படுத்தியிருக்கிறார்கள், இதன் காரணமாக சரஸ்வதி மற்றும் கான்ஹ் நதிகளில் கலக்கும் மாசுபட்ட நீரும் கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது, மேம்பட்ட காட்சி புலப்படுகிறது. இன்று நமது தேசம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடும் வேளையில், தூய்மை பாரதம் இயக்கம் என்ற உறுதிப்பாட்டை நாம் என்றுமே மந்தமாக விடக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய தேசத்தில் எத்தனைஅதிக நகரங்கள் Water Plus நகரங்களாகஆகின்றனவோ, அந்த அளவுக்குத் தூய்மையும் அதிகரிக்கும், நமது நதிகளும் தூய்மையாகும், நீரைப் பாதுகாக்கும் ஒரு மனிதக்கடமையை நிறைவேற்றும் நல்ல பழக்கமும் உருவாகும்.
நண்பர்களே, பிஹாரின் மதுபனியிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மதுபனியில் டாக்டர்ராஜேந்திரபிரசாத் விவசாயப் பல்கலைக்கழகமும், அங்கே இருக்கும் வட்டார விவசாய விஞ்ஞான மையமும் இணைந்து ஒரு நல்ல முயல்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் பயன் விவசாயிகளுக்கு கிடைக்கிறது, தவிர இதனால் தூய்மை பாரத இயக்கத்துக்கும் புதியதொரு சக்தியும் கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தின் இந்த முன்னெடுப்பின் பெயர் சுகேத் மாடல். அதாவது நல்வேளாண் மாதிரி. இதன் நோக்கம் என்னவென்றால், கிராமங்களில் மாசு உண்டாவதைக் குறைப்பது. இந்த மாதிரியின்படி, கிராமங்களின் விவசாயிகளிடமிருந்து பசுஞ்சாணம் மற்றும் வயல்கள்-வீடுகளிலிருந்து வெளிப்படும் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இதற்கு ஈடாக கிராமமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் கொடுக்கப்படுகிறது. திரட்டப்படும் கிராமப்பகுதிக் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றும் பணியும் செய்யப்பட்டு வருகிறது. அதாவது இந்த நல்வேளாண்மாதிரியால் நான்கு ஆதாயங்கள் நம் நேரடிப் பார்வைக்குப் புலப்படுகின்றன. ஒன்று, கிராமங்கள் மாசடையாமல் இருத்தல், இரண்டாவது, குப்பைகளிலிருந்து விடுதலை, மூன்றாவது, கிராமவாசிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம், நான்காவதாக, கிராமங்களின் விவசாயிகளுக்கு இயற்கை உரம். நீங்களே சிந்தியுங்கள், இதுபோன்ற முயற்சிகள் நமது ஊரகப்பகுதிகளின் சக்தியை எத்தனை அதிகரிக்கமுடியும்!! இதுதான் தற்சார்பு. நான் தேசத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்திடத்திலும் என்ன கூறுகிறேன் என்றால், நீங்களும் இதுபோல உங்கள் தரப்பில் செய்யத் தலைப்படுங்கள். மேலும் நண்பர்களே, நாம் ஒரு இலக்கை மனதில் தாங்கிப் பயணிக்கும் போது, கண்டிப்பாக நல்ல விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். நமது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் காஞ்ஜீரங்கால் பஞ்சாயத்தையே எடுத்துக் கொள்வோமே! இந்தச் சிறிய பஞ்சாயத்து என்ன செய்திருக்கிறது, நீங்களே பாருங்கள். கழிவிலிருந்து செல்வம் என்பதற்கான மேலும் ஒரு மாதிரி இங்கே உங்களுக்குக் கிடைக்கும். இங்கே, கிராமப்பஞ்சாயத்து, உள்ளூர் மக்களோடு இணைந்து குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஓர் உள்ளூர் செயல்திட்டத்தினை அமல் செய்திருக்கிறது. கிராமம் முழுவதிலிருந்தும் குப்பைகள் திரட்டப்படுகின்றன, இதீலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதம் தங்கும் பொருட்கள் கிருமிநாசினியாக விற்பனை செய்யப்படுகின்றன. கிராமத்தின் இந்த மின்னாலையின் திறன் ஒவ்வொரு நாளும் 2 டன்கள் குப்பைகளைப் பதப்படுத்துகிறது. இதனால் உற்பத்தியாகும் மின்சாரம் கிராமத்தின் தெருவிளக்குகளுக்கும், இன்னும் பிற தேவைகளுக்கும் பயனாகிறது. இதனால் பஞ்சாயத்தின் பணம் மிச்சமாவதோடு, இந்தப் பணம் வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. இப்போது நீங்களே சொல்லுங்கள், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சின்ன பஞ்சாயத்து, ஒன்றை செய்து காட்டவேண்டும் என்ற கருத்தூக்கத்தை நம்மனைவருக்கும் அளிக்கிறது இல்லையா? அருமையாகச் செய்து காட்டியிருக்கிறார்கள் இவர்கள்!
என் அன்பான நாட்டுமக்களே, மனதின்குரல் இப்போது பாரதநாட்டு எல்லைகளோடு நின்றுவிடவில்லை. உலகின் பல்வேறு மூலைகளிலும் கூட மனதின்குரல் விவாதிக்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் வசிக்கும் நமது இந்தியர்கள், அவர்களும் எனக்குப் பல புதிய தகவல்களை அளித்து வருகின்றார்கள். எனக்கும் கூட அயல்நாடுகளில் இருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கிறது. இன்றும் கூட, நான் அப்படிப்பட்ட சிலரை அறிமுகப்படுத்தப் போகிறேன்; ஆனால் அதற்கு முன்னதாக நான் ஓர் ஒலிப்பதிவை உங்களுக்குப் போட்டுக்காட்ட விரும்புகிறேன். சற்று கவனமாகக் கேளுங்கள்.
[रेडियो युनिटी नाईन्टी एफ्.एम्.-2]
नमोनमः सर्वेभ्यः | मम नाम गङ्गा | भवन्तः शृण्वन्तु रेडियो-युनिटी-नवति-एफ्.एम् –‘एकभारतं श्रेष्ठ-भारतम्’ | अहम् एकतामूर्तेः मार्गदर्शिका एवं रेडियो-युनिटी-माध्यमे आर्.जे. अस्मि | अद्य संस्कृतदिनम् अस्ति | सर्वेभ्यः बहव्यः शुभकामनाः सन्ति| सरदार-वल्लभभाई-पटेलमहोदयः ‘लौहपुरुषः’ इत्युच्यते | २०१३-तमे वर्षे लौहसंग्रहस्य अभियानम् प्रारब्धम् | १३४-टन-परिमितस्य लौहस्य गलनं कृतम् | झारखण्डस्य एकः कृषकः मुद्गरस्य दानं कृतवान् | भवन्तः शृण्वन्तु रेडियो-युनिटी-नवति-एफ्.एम् –‘एकभारतं श्रेष्ठ-भारतम्’ |
[रेडियो युनिटी नाईन्टी एफ्.एम्.-2]
நண்பர்களே, மொழிஎன்னஎன்பதைநீங்களேஅறிந்திருப்பீர்கள். வானொலியில்சம்ஸ்கிருதத்தில்பேசுபவர்பெயர்கங்கா, இவர்ஒருஆர்.ஜே. ஆர்.ஜே. கங்காஅவர்கள்குஜராத்தின்ரேடியோ
साथियो, भाषा तो आप समझ गए होंगे | ये radio पर संस्कृत में बात की जा रही है और जो बात कर रही हैं, वो हैं RJ गंगा | RJ गंगा, गुजरात के Radio Jockeys के group की एक सदस्य हैं | उनके और भी साथी हैं, जैसे RJ नीलम, RJ गुरु और RJहेतल | ये सभी लोग मिलकर गुजरात में, केवड़िया में इस समय संस्कृत भाषा का मान बढ़ाने में जुटे हुए हैं | और आपको मालूम है न ये केवड़िया वही है जहाँ दुनिया का सबसे ऊँचा statue, हमारे देश का गौरव, Statue of Unity जहाँ पर है, उस केवड़िया की मैं बात कर रहा हूँ | और ये सब ऐसे Radio Jockeys हैं, जो एक साथ कई भूमिकाएं निभाते हैं | ये guide के रूप में भी अपनी सेवा देते हैं, और साथ-साथ Community Radio Initiative, Radio Unity 90 FM, उसका संचालन भी करते हैं | ये RJs अपने श्रोताओं से संस्कृत भाषा में बात करते हैं, उन्हें संस्कृत में जानकारी उपलब्ध कराते हैं |
साथियो, हमारे यहाँ संस्कृत के बारे में कहा गया है –
अमृतम्संस्कृतम् मित्र, सरसम्सरलम्वचः |
एकता मूलकम्राष्ट्रे, ज्ञान विज्ञान पोषकम् |
अर्थात, हमारी संस्कृत भाषा सरस भी है, सरल भी है |
संस्कृत अपने विचारों, अपने साहित्य के माध्यम से ये ज्ञान विज्ञान और राष्ट्र की एकता का भी पोषण करती है, उसे मजबूत करती है | संस्कृत साहित्य में मानवता और ज्ञान का ऐसा ही दिव्य दर्शन है जो किसी को भी आकर्षित कर सकता है | हाल ही में, मुझे कई ऐसे लोगों के बारे में जानने को मिला, जो विदेशों में संस्कृत पढ़ाने का प्रेरक कार्य कर रहे हैं | ऐसे ही एक व्यक्ति हैं श्रीमान्रटगरकोर्टेनहॉर्स्ट, जो Ireland में संस्कृत के जाने-माने विद्वान और शिक्षक हैं और वहाँ के बच्चों को संस्कृत पढ़ाते हैं | इधर हमारे यहाँ पूरब में भारत और Thailand के बीच सांस्कृतिक संबंधों की मजबूती में संस्कृत भाषा की भी एक अहम भूमिका है | डॉ. चिरापतप्रपंडविद्याऔर डॉ. कुसुमारक्षामणि, ये दोनों Thailand में संस्कृत भाषा के प्रचार-प्रसार में बहुत महत्वपूर्ण भूमिका निभा रहे हैं | उन्होंने थाई और संस्कृत भाषा में तुलनात्मक साहित्य की रचना भी की है | ऐसे ही एक प्रोफेसर है, श्रीमान बोरिसजाखरिन, Russia में Moscow State University में ये संस्कृत पढ़ाते हैं |उन्होंने कई शोध पत्र और पुस्तकें प्रकाशित की हैं | उन्होंने कई पुस्तकों का संस्कृत से रुसी भाषा में अनुवाद भी किया है | इसी तरह Sydney Sanskrit School, Australia के उन प्रमुख संस्थानों में से एक है, जहाँ विद्यार्थियों को संस्कृत भाषा पढ़ाई जाती है | ये school बच्चों के लिए Sanskrit Grammar Camp, संस्कृत नाटक और संस्कृत दिवस जैसे कार्यक्रमों का भी आयोजन भी करते हैं |
साथियो, हाल के दिनों में जो प्रयास हुए हैं, उनसे संस्कृत को लेकर एक नई जागरूकता आई है | अब समय है कि इस दिशा में हम अपने प्रयास और बढाएं | हमारी विरासत को संजोना, उसको संभालना, नई पीढ़ी को देना ये हम सब का कर्तव्य है और भावी पीढ़ियों का उस पर हक भी है | अब समय है इन कामों के लिए भी सबका प्रयास ज्यादा बढ़े | साथियो, अगर आप इस तरह के प्रयास में जुटे ऐसे किसी भी व्यक्ति को जानते हैं, ऐसी किसी जानकारी आपके पास है तो कृपया #CelebratingSanskrit के साथ social media पर उनसे संबंधित जानकारी जरुर साझा करें |
मेरे प्यारे देशवासियो, अगले कुछ दिनों में ही ‘विश्वकर्मा जयंती’ भी आने वाली है | भगवान विश्वकर्मा को हमारे यहाँ विश्व की सृजन शक्ति का प्रतीक माना गया है | जो भी अपने कौशल्य से किसी वस्तु का निर्माण करता हैं, सृजन करता है, चाहे वो सिलाई-कढ़ाई हो, software हो या फिर satellite, ये सब भगवान विश्वकर्मा का प्रगटीकरण है | दुनिया में भले skill की पहचान आज नए तरीके से हो रही है, लेकिन हमारे ऋषियों ने तो हजारों सालों से skill और scale पर बल दिया है | उन्होंने skill को, हुनर को, कौशल को, आस्था से जोड़कर हमारे जीवन दर्शन का हिस्सा बना दिया है | हमारे वेदों ने भी कई सूक्त भगवान विश्वकर्मा को समर्पित किए हैं | सृष्टि की जितनी भी बड़ी रचनाएँ हैं, जो भी नए और बड़े काम हुए हैं, हमारे शास्त्रों में उनका श्रेय भगवान विश्वकर्मा को ही दिया गया है | ये एक तरह से इस बात का प्रतीक है कि संसार में जो कुछ भी development और innovation होता है, वो skills के जरिए ही होता है | भगवान विश्वकर्मा की जयंती और उनकी पूजा के पीछे यही भाव है | और हमारे शास्त्रों में ये भी कहा गया है –
विश्वस्य कृते यस्य कर्मव्यापारः सः विश्वकर्मा |
| अर्थात, जो सृष्टि और निर्माण से जुड़े सभी कर्म करता है वह विश्वकर्मा है | हमारे शास्त्रों की नजर में हमारे आस-पास निर्माण और सृजन में जुटे जितने भी skilled, हुनरमंद लोग हैं, वो भगवान विश्वकर्मा की विरासत हैं | इनके बिना हम अपने जीवन की कल्पना भी नहीं कर सकते | आप सोचकर देखिए, आपके घर में बिजली की कुछ दिक्कत आ जाए और आपका कोई electrician ना मिले तो क्या होगा? आपके सामने कितनी बड़ी परेशानी आ जाएगी | हमारा जीवन ऐसे ही अनेकोंskilled लोगों की वजह से चलता है | आप अपने आस-पास देखिए, लोहे का काम करने वाले हों, मिट्टी के बर्तन बनाने वाले हों, लकड़ी का सामान बनाने वाले हो, बिजली का काम करने वाले हों, घरों में पेंट करने वाले हों, सफाईकर्मी हों, या फिर mobile-laptop का repair करने वाले ये सभी साथी अपनी skill की वजह से ही जाने जाते हैं | आधुनिक स्वरूप में ये भी विश्वकर्मा ही हैं | लेकिन साथियों इसका एक और पहलू भी है और वो कभी-कभी चिंता भी कराता है, जिस देश में, जहाँ की संस्कृति में, परंपरा में, सोच में, हुनर को, skill manpower को भगवान विश्वकर्मा के साथ जोड़ दिया गया हो, वहाँ स्थितियाँ कैसे बदल गई, एक समय, हमारे पारिवारिक जीवन, सामाजिक जीवन, राष्ट्र जीवन पर कौशल्य का बहुत बड़ा प्रभाव रहता था | लेकिन गुलामी के लंबे कालखंड में हुनर को इस तरह का सम्मान देने वाली भावना धीरे-धीरे विस्मृत हो गई | सोच कुछ ऐसी बन गई कि हुनर आधारित कार्यों को छोटा समझा जाने लगा | और अब आज देखिए, पूरी दुनिया सबसे ज्यादा हुनर यानिskill पर ही बल दे रही है | भगवान विश्वकर्मा की पूजा भी सिर्फ औपचारिकताओं से ही पूरी नहीं हुई | हमें हुनर को सम्मान देना होगा, हुनरमंद होने के लिए मेहनत करनी होगी | हुनरमंद होने का गर्व होना चाहिए | जब हम कुछ ना कुछ नया करें, कुछ Innovate करें, कुछ ऐसा सृजित करें जिससे समाज का हित हो, लोगों का जीवन आसान बने, तब हमारी विश्वकर्मा पूजा सार्थक होगी | आज दुनिया में skilled लोगों के लिए अवसरों की कमी नहीं है | प्रगति के कितने सारे रास्ते आज skills से तैयार हो रहे हैं | तो आइये, इस बार हम भगवान विश्वकर्मा की पूजा पर आस्था के साथ-साथ उनके संदेश को भी अपनाने का संकल्प करें | हमारी पूजा का भाव यही होना चाहिए कि हम skill के महत्व को समझेंगे, और skilled लोगों को, चाहे वो कोई भी काम करता हो, उन्हें पूरा सम्मान भी देंगे |
मेरे प्यारे देशवासियो, ये समय आजादी के 75वें साल का है | इस साल तो हमें हर दिन नए संकल्प लेने हैं, नया सोचना है, और कुछ नया करने का अपना जज्बा बढ़ाना है | हमारा भारत जब आजादी के सौ साल पूरे करेगा, तब हमारे ये संकल्प ही उसकी सफलता की बुनियाद में नज़र आएंगे | इसलिए, हमें ये मौका जाने नहीं देना है | हमें इसमें अपना ज्यादा से ज्यादा योगदान देना है | और इन प्रयासों के बीच, हमें एक बात और याद रखनी है | दवाई भी, कड़ाई भी | देश में 62 करोड़ से ज्यादा vaccine की dose दी जा चुकी है लेकिन फिर भी हमें सावधानी रखनी है, सतर्कता रखनी है | और हाँ, हमेशा की तरह, जब भी आप कुछ नया करें, नया सोचें, तो उसमें मुझे भी जरूर शामिल करिएगा | मुझे आपके पत्र और messages का इंतज़ार रहेगा | इसी कामना के साथ, आप सभी को आने वाले पर्वों की एक बार फिर ढेरों बधाइयाँ | बहुत-बहुत धन्यवाद |
नमस्कार !
எனதருமை நாட்டுமக்களே,
இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ஆகையால் இந்த முறை அந்தக் கணங்கள் சிலவற்றோடு மனதின் குரலைத் தொடங்கலாம். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய விளையாட்டு வீரர்கள், தங்கள் கரங்களிலே மூவண்ணக் கொடியினை ஏந்திக் கொண்டு பவனி வந்ததைக் கண்டு நான் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிலிர்ப்படைந்தது. நாடெல்லாம் தங்களுடைய இந்த வீரர்களிடம், விஜயீ பவ! விஜயீ பவ! என்று ஒன்றுபட்டுக் கூறியது போலத் தோன்றியது. இந்த வீரர்கள் பாரதம் விட்டுப் போந்த வேளையில், அவர்களுடன் கலந்து அளவளாவ, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, தேசத்திற்கு இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வீரர்கள், வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் கடந்துதான் இந்தக் கட்டத்தினை எட்டியிருக்கின்றார்கள். இன்று இவர்களிடத்தில், உங்கள் அன்பு-ஆதரவு என்ற பலம் இருக்கிறது; ஆகையால் வாருங்கள், நாமனைவரும் இணைந்து அனைத்து வீரர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்போம். சமூக வலைத்தளங்களில் ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நமது Victory Punch Campaign என்ற வெற்றி வீச்சு இயக்கம் இப்பொழுது தொடங்கி விட்டது. நீங்களும் நமது அணியோடு இணைந்து, நமது Victory Punchஐ பகிருங்கள், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
நண்பர்களே, தேசத்தின் பொருட்டு மூவண்ணக் கொடியினை யார் உயர்த்துகிறார்களோ, அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் நமது உணர்வுகள் பெருகுவது என்பது இயல்பான ஒன்று. தேசபக்தியின் இந்த உணர்வு தான் நம்மனைவரையும் இணைக்கிறது. நாளை, ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று கார்கில் விஜய் திவஸும் கூட. பாரதப் படையின் வீரம், ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடையாளம்கார்க்கில் யுத்தம். உலகம் முழுமையும் இதைக் கண்டிருக்கிறது. இந்த முறை, இந்த கௌரவம் நிறைந்த நாளும், அம்ருத மஹோத்ஸவத்திற்கிடையே கொண்டாடப்பட இருக்கிறது. ஆகையால் இது மேலும் சிறப்புத்தன்மை வாய்ந்தததாக ஆகின்றது. சிலிர்ப்பை ஏற்படுத்தும் கார்கிலின் வீரதீரச் சம்பவங்களை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், கார்கில் போரின் வீரர்களை நாமனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நண்பர்களே, இந்த முறை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசம், தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டில் பிரவேசிக்க இருக்கின்றது. எந்த சுதந்திரத்திற்காக தேசம் பல நூற்றாண்டுக்காலமாக காத்திருந்ததோ, அதன் 75 ஆண்டுக்கால நிறைவினுக்கு நாம் சாட்சிகளாக ஆகவிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் வாய்த்த பெரும்பேறு. சுதந்திரத்தின் 75 ஆண்டினைக் கொண்டாட, மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று அண்ணலின் சாபர்மதி ஆசிரமத்திலிருந்து அமிர்த மஹோத்ஸவம் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதே நாளன்று தான் அண்ணலின் தாண்டீ பயணத்திற்கும் மீளுயிர் அளிக்கப்பட்டு, அது முதல், ஜம்மு கஷ்மீரம் தொடங்கி புதுச்சேரி வரையும், குஜராத் தொடங்கி வடகிழக்கு வரையிலும், தேசமெங்கும் அமிர்த மஹோத்ஸவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதிகம் கவனத்தில் வராத பல சம்பவங்கள், பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆனால் இவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது – இப்படிப்பட்டோரின், இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றியும் நாம் கேள்விப்படத் தொடங்கியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, மோய்ராங்க் டேவையே எடுத்துக் கொள்வோமே!! மணிப்பூரின் மிகச் சிறிய கிராமமான மோய்ராங்க், ஒரு காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசியப் படை, ஐ.என்.ஏவின் மிக முக்கியமான மையமாக விளங்கியது. இங்கே, சுதந்திரத்திற்கு முன்பாக, ஐ.என்.ஏவின் கர்னல் ஷௌகத் மலிக் அவர்கள் கொடியேற்றினார்கள். அமிர்த மஹோத்ஸவத்தின் போது, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று மோய்ராங்கில், மீண்டுமொரு முறை மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. இப்படி விடுதலை வேள்வியில் பங்கெடுத்த எண்ணிலடங்கா வீரர்கள், மஹாபுருஷர்கள் ஆகியோரை, அமிர்த மஹோத்ஸவத்தின் போது தேசம் நினைவு கூர்கிறது. அரசு மற்றும் சமூக அமைப்புகளின் தரப்பிலிருந்தும், தொடர்ந்து இதோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி, இந்த முறை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நடைபெற உள்ளது, இது ஒரு முயற்சி தான் – தேசிய கீதம் தொடர்பானது. கலாச்சார அமைச்சகத்தின் முயற்சி இது. இந்த நாளன்று அதிக அளவில் நாட்டுமக்கள் இணைந்து தேசிய கீதம் பாட வேண்டும், இதற்கெனவே ஒரு இணையத்தளமும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது –ராஷ்ட்ரகான்.இன். இந்த இணையத்தளத்தின் வாயிலாக, நீங்கள் தேசியகீதம் பாடி, அதைப் பதிவு செய்ய முடியும், இந்த இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ள இயலும். நீங்கள் இந்த வித்தியாசமான முயற்சியோடு உங்களைக் கண்டிப்பாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இதைப் போன்றே பல இயக்கங்கள், பல முயல்வுகள் ஆகியவற்றை இனிவரும் நாட்களில் நீங்கள் பார்க்கலாம். அமிர்த மஹோத்ஸவம் என்பது, எந்த ஒரு அரசின் நிகழ்ச்சியும் அல்ல, எந்த ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாடும் அல்ல, இது கோடானுகோடி நாட்டுமக்களின் நிகழ்ச்சி. செஞ்சோற்றுக்கடன் உணர்வு கொண்ட சுதந்திர பாரதத்தின் குடிமக்கள், தங்களுடைய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் வணக்கம். இந்த மஹோத்ஸவத்தின் அடிப்படை உணர்வின் வீச்சு மிகவும் பரந்துபட்டது. இந்த உணர்வு என்ன தெரியுமா? சுதந்திரப் போராட்ட வீரர்கள் காட்டிய பாதையில் பயணிப்பது, அவர்களின் கனவு தேசத்தை உருவாக்குவது, இவை தாம். நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அணையா வேட்கை கொண்டவர்கள், தேச விடுதலைக்காக எப்படி ஒன்றுபட்டார்களோ, அதே போல, நாமும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட வேண்டும். நாம் தேசத்தின் பொருட்டு வாழ வேண்டும், தேசத்தின் பொருட்டே பணியாற்ற வேண்டும், இதில் புரியப்படும் சின்னச்சின்ன செயல்களும் கூட, பெரிய விளைவுகளை அளிக்கக்கூடும். நமது அன்றாடப் பணிகளுக்கு இடையேயும் கூட, நாம் தேசத்தின் உருவாக்கத்தைப் புரியலாம். எடுத்துக்காட்டாக, Vocal for Local என்ற உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற நோக்கம். நமது நாட்டின் உள்ளூர் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு ஆதரவளிப்பது ஆகியவை நமது இயல்பான நடைமுறையாக மாற வேண்டும். ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று வரவிருக்கின்ற தேசிய கைத்தறிப் பொருட்கள் நாள் என்பது, நாம் முயற்சி மேற்கொண்டு இந்தப் பணியை நிறைவேற்ற ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பது. தேசிய கைத்தறி தினத்தோடு கூட, மிகப் பெரிய சரித்திரப் பின்புலம் இணைந்திருக்கிறது. இதே நாளன்று தான் 1905ஆம் ஆண்டிலே சுதேஸி இயக்கம் தொடங்கப்பட்டது.
நண்பர்களே, நமது தேசத்தின் ஊரக மற்றும் பழங்குடியினப் பகுதிகளில், கைத்தறி என்பது, வருவாய்க்கான மிகப்பெரிய சாதனமாக விளங்கி வருகின்றது. இந்தத் துறையோடு இலட்சக்கணக்கான பெண்கள், இலட்சக்கணக்கான நெசவாளர்கள், இலட்சக்கணக்கான கைவினைஞர்கள் இணைந்திருக்கின்றார்கள். உங்களுடைய சின்னச்சின்ன முயற்சிகள், நெசவாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உதிக்கச் செய்யும். நீங்கள்அவர்கள் தயாரித்த ஏதோ ஒன்றை வாங்குங்கள், நீங்கள் வாங்கியதைப் பற்றியும், உங்கள் நோக்கம் பற்றியும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள், நாம் நமது சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டினைக் கொண்டாடும் போது, இந்த குறைந்தபட்ச செயலைப் புரிவது நமது கடமையில்லையா சகோதரர்களே!! 2014ஆம் ஆண்டிற்குப் பிறகிலிருந்தே, மனதின் குரலில் நாம் அடிக்கடி கதர் பற்றிப் பேசி வந்திருக்கிறோம். உங்களின் முயற்சிகள் காரணமாகவே, இன்று தேசத்தில் கதராடைகளின் விற்பனை பலமடங்கு பெருகியிருக்கின்றது. கதராடைகள் விற்பனையகம் ஒன்றில் மட்டும் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆகியிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஆனால் இதை நீங்கள் தான் செய்து காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் கதராடை விற்பனையகம் ஒன்றில் வாங்கும் போதெல்லாம்,அதனால் நமது ஏழை நெசவாளர் சகோதர சகோதரிகளுக்கு ஆதாயம் ஏற்படுகிறது. ஆகையால், கதராடைகள் வாங்குவது என்பது ஒரு வகையில் மக்கள் சேவை…… தேச சேவையும் கூட. என் அன்புநிறை சகோதர சகோதரிகள் நீங்கள் அனைவரும், ஊரகப் பகுதிகளில் உருவாக்கம் பெறும் கைத்தறிப் பொருட்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும், இதைப் பற்றி #MyHandloomMyPrideஇலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, சுதந்திரப் போராட்டம் மற்றும் கதர் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், வணக்கத்திற்குரிய அண்ணல் பற்றி நினைத்துப் பார்ப்பது இயல்பான விஷயம். எடுத்துக்காட்டாக, அண்ணலின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தது போலவே, இன்று நாட்டுமக்கள் அனைவரும்,இணைந்து பாரதம் இணைப்போம் இயக்கத்திற்குத் தலைமையேற்க வேண்டும். பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்தை இணைக்க உதவும் வகையில் நமது பணிகள் உதவிகரமாக இருப்பதை உறுதி செய்வது நம்மனைவரின் கடமை. தேசமே நம்மனைவரின் மிகப்பெரிய நம்பிக்கையாக, நம்மனைவரின் மிகப்பெரிய முதன்மையாக நீடித்து இருக்க வேண்டும் என்று நாமனைவரும் இந்த அமிர்த மஹோத்ஸவ வேளையிலே, ஒரு அமிர்தமான உறுதிப்பாட்டை மேற்கொள்வோம், வாருங்கள்!! Nation First, Always First – தேசமே தலையாயது, எப்போதுமே முதன்மையானது என்ற மந்திரச் சொற்களோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலைக் கேட்டுவரும் நமது இளைய நண்பர்களிடம் நான் எனது சிறப்பான நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். சில நாட்கள் முன்பாகத் தான் மைகவ் தளம் தரப்பிலிருந்து, மனதின் குரல் நேயர்கள் குறித்த ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. மனதின் குரலுக்காக தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிப்பதில் முக்கியமானோர் யார் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது. தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிப்பவர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள், அதாவது பாரத நாட்டின் இளையோர் சக்தியின் ஆலோசனைகள் தாம் மனதின் குரலுக்கு திசையளித்திருக்கிறது என்ற முடிவு, ஆய்விற்குப் பிறகு கிடைத்த தகவல். இதை நான் மிகவும் நல்ல அறிகுறியாகவே காண்கிறேன். ஆக்கப்பூர்வமான தன்மையும், புரிந்துணர்வும் தான் மனதின் குரல். இதில் நாம் நேர்மறை விஷயங்கள் குறித்துப் பேசுகிறோம், இதுவே இதன் Charactercollective குணக்கூட்டு. ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகள் நிரம்பிய நமது பாரதநாட்டு இளைஞர்களின் எண்ணமும் செயலும், எனக்கு நிரம்ப ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்களின் மனதின் குரல்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, மனதின் குரல் வாயிலாகக் கிடைப்பது, எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நண்பர்களே, நீங்கள் அனுப்பிவரும் ஆலோசனைகள் தாம் மனதின் குரலின் மெய்யான சக்தி. உங்களின் ஆலோசனைகள் தாம் மனதின் குரல் வாயிலாக பாரதத்தின் பன்முகத்தன்மையை பிரகாசிக்கச் செய்கிறது, பாரத நாட்டவரின் சேவை மற்றும் தியாகத்தின் மணத்தை, நாலாபுறங்களிலும் பரப்புகின்றது, கடினமாக உழைக்கும் நமது இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளால் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. மனதின் குரலுக்கு நீங்கள் பலவகையான கருத்துக்களை அனுப்பி வைக்கின்றீர்கள். நம்மால் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க முடியவில்லை என்றாலும், இவற்றில் பல கருத்துக்களை நான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்.
நண்பர்களே, நான் உங்களோடு சாய் பிரணீத் அவர்களின் முயல்வுகள் பற்றிப் பகிர விரும்புகிறேன். சாய் பிரணீத் அவர்கள், ஒரு மென்பொருள் பொறியாளர், ஆந்திரப் பிரதேசத்தில் வசித்து வருபவர். கடந்த ஆண்டு, அவருடைய பகுதியில் மோசமான பருவநிலை காரணமாக விவசாயிகளுக்குக் கணிசமான பாதிப்பு ஏற்பட்டதை இவர் கவனித்திருக்கிறார். வானிலை ஆய்வியலில் இவருக்குப் பல ஆண்டுகளாகவே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. ஆகையால், இவர் தனது ஆர்வம் மற்றும் திறமை, விவசாயிகளின் நலனுக்குப் பயனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இப்பொழுது இவர் தனித்தனி தரவு ஆதாரங்களிடமிருந்து, வானிலைத் தரவுகளை விலைக்கு வாங்கி, இவற்றைப் பகுப்பாய்வு செய்து, உள்ளூர் மொழியில் பல்வேறு வழிகளில் விவசாயிகளிடம் உறுதியான தகவலைக் கொண்டு சேர்க்கிறார். வானிலை புதுப்பிப்புகள் தவிர, பிரணீத் அவர்கள், பல்வேறு பருவநிலைகளில் இருப்போர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அளிக்கிறார். குறிப்பாக, வெள்ளப்பெருக்கிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும், புயல் அல்லது மின்னல்-இடியால் தாக்கப்படும் போது எப்படி உயிர் தப்புவது என்பது பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்.
நண்பர்களே, ஒரு புறம் இந்த மென்பொருள் பொறியாளர் இளைஞரின் இந்த முயல்வு, மனதைத் தொடும் ஒன்றாக இருக்கும் அதே வேளையில், இன்னொரு புறத்தில் நமது நண்பர் ஒருவர் ஏற்படுத்தியிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் பயன், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இவர் தான் ஓடிஷாவின் சம்பல்புர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஈசாக் முண்டா அவர்கள். ஈசாக் அவர்கள் ஒரு காலத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தவர் என்றாலும், இப்போது இவர் ஒரு இணைய பரபரப்பாக ஆகி விட்டார். தனது யூ ட்யூப் சேனல் மூலமாக கணிசமாகப் பணம் சம்பாதித்து வருகிறார். இவர் தனது காணொளிகளில் உள்ளூர் உணவுப் பதார்த்தங்கள், பாரம்பரியமான உணவுத் தயாரிப்பு முறைகள், உள்ளூர் கிராமங்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள், குடும்பம், உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஒரு யூட்யூப் ஒளிபரப்பாளர் என்ற முறையிலே, இவரது பயணம் மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது தான் இவர் ஓடிஷாவின் பிரசித்தி பெற்ற உள்ளூர் உணவுத் தயாரிப்பு தொடர்பான ஒரு காணொளியைத் தரவேற்றினார். அப்போதிலிருந்து இன்று வரை, இவர் பல நூற்றுக்கணக்கான காணொளிகளைத் தரவேற்றம் செய்திருக்கிறார். இவரது இந்த முயல்வு, பல காரணங்களுக்காகத் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. குறிப்பாக, இதனால் நகரங்களில் வசிப்போர், தாங்கள் அதிகம் அறியாத ஒரு வாழ்க்கைமுறை பற்றிக் கண்டு தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்கிறது. கலாச்சாரம், உணவு தயாரிப்பு என்ற இவை இரண்டையும் கலந்துக் கொண்டாடி வருகிறார், நம்மனைவருக்கும் உத்வேகம் அளித்து வருகிறார்.
நண்பர்களே, தொழில்நுட்பம் பற்றி நாம் பேசும் வேளையிலே, மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் குறித்தும் நான் பேச விரும்புகிறேன். நீங்களே ஒரு விஷயம் குறித்துப் படித்திருக்கலாம், கவனித்திருக்கலாம்…. ஐ.ஐ.டி. மெட்ராசின் முன்னாள் மாணவர்கள் வாயிலாக நிறுவப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப், ஒரு 3 D Printed House, முப்பரிமாண பதிவாலான ஒரு வீட்டை உருவாக்கி இருக்கின்றார்கள். முப்பரிமாணப் பதிவாலான இந்த வீடு எப்படி உருவாக்கம் பெறுகிறது? முதன்மையாக இந்த ஸ்டார்ட் அப்பானது ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் மூலம் ஒரு முப்பரிமாணப் பதிவு உருவரையை ஊட்டி, பிறகு ஒரு சிறப்புவகை கான்கிரீட் வாயிலாக, அடுக்கடுக்காக ஒரு முப்பரிமாண அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இது போன்ற பல சோதனை முயற்சிகள் நாடெங்கும் நடந்து வருகின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். ஒரு காலகட்டத்தில், சின்னச்சின்ன கட்டுமானப் பணிகளுக்குக் கூட பல ஆண்டுகள் ஆகி வந்தன. ஆனால் இன்றோ, தொழில்நுட்பத்தின் காரணமாக, பாரதத்தின் நிலை மாற்றம் கண்டு வருகிறது. சில காலம் முன்பாக, இப்படிப்பட்ட நூதனக் கண்டுபிடிப்பு நிறுவனங்களை வரவேற்கும் வகையில், ஒரு உலகாயத குடியிருப்புத் தொழில்நுட்ப சவாலைத் தொடங்கி வைத்தோம். இது முற்றிலும் வித்தியாசமான ஒரு முயற்சி என்பதால், இதற்கு கலங்கரை விளக்குத் திட்டங்கள் - Light House Projects என்று பெயரிட்டோம். தற்போது தேசமெங்கும் 6 பல்வேறு இடங்களில் Light House Projectகள்மிக விரைவு கதியில் நிறைவேறி வருகின்றன. இந்தத் திட்டங்களில் நவீன தொழில்நுட்பமும், நூதனமான வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கட்டுமானத்திற்குத் தேவைப்படும் காலம் குறைகிறது. கூடவே, உருவாக்கம் பெறும் வீடுகள், அதிக உறுதியாகவும், விலை குறைவானவையாகவும், சுகமளிப்பவையாகவும் இருக்கின்றன. தற்போது தான், நான் ட்ரோன்கள் மூலமாக இந்தத் திட்டங்களை மேற்பார்வையிட்டேன், பணிகளின் முன்னேற்றத்தை நேரடியாகப் பார்த்தேன்.
இந்தோரில் ஒரு திட்டத்தில், செங்கல் மற்றும் சிமெண்டுக் கலவையால் ஆன சுவர்களுக்கு பதிலாக, முன்னமேயே வடிவமைக்கப்பட்ட Sandwich Panel System பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராஜ்கோட்டின் Light House, ஃப்ரெஞ்சு தொழில்நுட்பத் துணையோடு உருவாகி வருகிறது, இதிலே சுரங்கப்பாதை வாயிலாக, Monolithic Concrete construction technology, ஒரே கல்லாலான கான்கிரீட் கட்டுமானத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடுகள், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறம் அதிகம் உடையனவாக இருக்கும். சென்னையில், அமெரிக்கா மற்றும் ஃபின்லாந்தின் தொழில்நுட்பங்களான, Pre-Cast Concrete System என்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட் முறை பயனாகி வருகிறது. இதனால் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்படுவதோடு, செலவும் குறைகிறது. ராஞ்சியில், ஜெர்மானிய முப்பரிமாண கட்டுமான முறை பயன்படுத்தப்பட்டு, கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. இதிலே ஒவ்வொரு அறையும் தனித்தனியே கட்டப்பட்டு, பிறகு ஒட்டுமொத்த அமைப்பும், தொகுப்பு பொம்மைகளை இணைப்பது போன்று இணைக்கப்படும். அகர்தலாவில், ந்யூசீலாந்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது; இங்கே எஃகுச் சட்டத்தோடு இல்லம் உருவாகிறது, இதனால் நிலநடுக்கங்களைத் தாக்குப் பிடிக்க முடியும். இதே போல லக்னௌவில், கானடாவின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதிலே பூச்சு அல்லது அரைசாந்துக்கான தேவையே கிடையாது, விரைவாக இல்லத்தை உருவாக்க, முன்பேயே தயார் நிலையில் இருக்கும் சுவர்கள் பயன்படுத்தப்படும்.
நண்பர்களே, இவை incubation மையங்களைப் போலச் செயல்பட இன்று தேசமெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நமது திட்டமிடல் வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், மாணவர்கள் ஆகியோர், புதிய தொழில்நுட்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும், பரிசோதனைகளையும் செய்ய முடியும். நான் குறிப்பாக இந்த விஷயங்களை இளைஞர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன், நமது இளையோர், தேச நலனுக்காகத் தொழில்நுட்பத்தின் புதியபுதிய துறைகளை நோக்கி உற்சாகமும் ஊக்கமும் அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, ஆங்கிலத்திலே நீங்கள் ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கலாம் –To Learn is to Grow, அதாவது கற்றலே வளர்ச்சி. நாம் புதிய ஒன்றைக் கற்கும் போது, நம் முன்பாக வளர்ச்சிக்கான புதியபுதிய பாதைகள் தாமே திறக்கும். எப்போதெல்லாம் வாடிக்கையை விட்டு விலகி, புதிய முயல்வு மேற்கொள்ளப்படுகின்றதோ, மனித சமுதாயத்திற்கான புதிய நுழைவாயில் அப்போதெல்லாம் திறந்திருக்கிறது, ஒரு புதிய யுகத் தொடக்கம் ஆகியிருக்கின்றது. ஓரிடத்தில், ஏதோ புதிதாக ஒன்று நடக்கும் போது, இதன் விளைவு அனைவரையும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, எந்த மாநிலத்தை நாம் ஆப்பிளோடு இணைத்துப் பார்க்க முடியும் என்று நான் உங்களிடத்திலே கேட்கிறேன் என்று வைத்துக் கொள்வோமே! இயல்பாகவே உங்கள் மனம் முதன்மையாக ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு கஷ்மீரம் மற்றும் உத்தராக்கண்ட் மாநிலங்களின் பால் திரும்பும். இப்போது இதோடு நீங்கள் மணிப்பூரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன் என்றால், நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள். புதியதாகச் செய்து சாதிக்க வேண்டுமென்ற தாகம் உடைய சில இளைஞர்கள், மணிப்பூர் மாநிலத்தில் தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள். இப்போது மணிப்பூரின் உக்கருல் மாவட்டத்தில், ஆப்பிள் சாகுபடி சூடு பிடித்து வருகின்றது. இங்கிருக்கும் விவசாயிகள் தங்களின் பழத்தோட்டங்களில் ஆப்பிளை பயிர் செய்கிறார்கள். ஆப்பிளைப் பயிர் செய்ய இவர்கள் ஹிமாச்சலுக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டார்கள். இவர்களில் ஒருவர் தான் டி. எஸ். ரிங்ஃபாமீ யங். இவர் விமானவியல் பொறியாளர் என்றாலும், தனது மனைவியான டீ.எஸ்.ஏஞ்ஜலோடு இணைந்து ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டார். இவரைப் போலவே அவுங்ஷீ ஷிம்ரே ஆகஸ்டீனாவும் தனது பழத்தோட்டத்தில், ஆப்பிளை சாகுபடி செய்திருக்கிறார். அவுங்ஷீ தில்லியில் வேலை செய்து வந்தார். அதைத் துறந்து விட்டு, இவர் தனது கிராமம் திரும்பினார், ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டார். மணிபூரில் இன்று இப்படிப்பட்ட பல ஆப்பிள் சாகுபடியாளர்கள் இருக்கின்றார்கள், இவர்கள் வித்தியாசமான, புதியதாக ஒன்றை செய்து காட்டியிருக்கின்றார்கள்.
நண்பர்களே, நமது பழங்குடியின சமூகத்திற்கு, இலந்தை மிகவும் பிடித்தமான பழம். பழங்குடியின சமூகத்தவர் எப்போதும் இந்தப் பழவகையை நெடுங்காலமாகவே பயிர் செய்து வந்திருக்கின்றார்கள். ஆனால் கோவிட் 19 பெருந்தொற்றிற்குப் பிறகு, இதன் சாகுபடி குறிப்பாக அதிகரித்து வந்திருக்கிறது. திரிபுராவின் உனாகோடியில், 32 வயது நிரம்பிய என்னுடைய நண்பர் ஒருவர் விக்ரம்ஜீத் சக்மா. இவர் இலந்தையை பயிர் செய்யத் தொடங்கி, கணிசமாக இலாபம் சம்பாதித்திருக்கிறார். மேலும் இவர் இன்னும் பலரை இலந்தை சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தியும் வருகிறார். மாநில அரசும் இப்படிப்பட்டோருக்கு உதவி செய்யும் பொருட்டு முன்வந்திருக்கிறது. அரசுத் தரப்பில் இதன் பொருட்டு சிறப்பான வகையிலே செடிவளர்ப்புப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, இங்கே இலந்தை வளர்ப்பு தொடர்பாக ஆர்வம் உள்ளவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. விவசாயத்தில் நூதனங்கள் நடந்து வருகின்றன, விவசாயத் துணைப் பொருட்களிலும் படைப்பாற்றல் காணக் கிடைக்கிறது.
நண்பர்களே, உத்திரப் பிரதேசத்தின் லகீம்புர் கீரீயில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முயல்வு பற்றியும் தெரிய நேர்ந்தது. கோவிட் காலத்தில் தான் லகீம்புர் கீரீயில் ஒரு வித்தியாசமான முயல்வு மேற்கொள்ளப்பட்டது. வாழையில் வீணாகும் தண்டுகளிலிருந்து நார் தயார் செய்யும் பயிற்சி அங்கே பெண்களுக்கு அளிக்கப்படும் வேலை தொடங்கியது. கழிவிலிருந்து செல்வம் உருவாக்கும் வழி இது. வாழைத்தண்டினை வெட்டி, இயந்திரத்தின் துணை கொண்டு, வாழைநார் தயாரிக்கப்படுகிறது, இது கரும்புஅல்லதுசணல்கயிற்றினைப் போல இருக்கிறது. இந்த நாரின் மூலம் கைப்பைகள், பாய்கள், தரை விரிப்புகள் என பலப்பல பொருட்களை உருவாக்கலாம். இதனால் ஒரு நன்மை, கழிவுப் பொருள் பயன்பாடு, மற்றுமொரு நன்மை, கிராமத்தில் வசிக்கும் சகோதரிகள்-தாய்மார்களின் வருவாய்க்கும் ஒரு வழி கிடைக்கிறது. வாழை நார் ஏற்படுத்தியிருக்கும் இந்த வேலையால் உள்ளூர்ப் பெண்களுக்கு, நாளொன்றுக்கு 400 முதல் 600 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிந்திருக்கிறது. லகீம்புர் கீரீயில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை அறுவடை முடிந்த பிறகு பொதுவாக விவசாயிகள் இதன் தண்டுப் பகுதியை அகற்ற, பிரத்யேகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது. இப்போது இவர்களுக்கு பணம் மிச்சப்படுவதோடு, வருமானமும் கிடைக்கிறது.
நண்பர்களே, ஒரு புறம் வாழை நாரால் பொருட்கள் தயார் செய்யப்படும் அதே வேளையில், இன்னொரு புறத்தில், வாழை மாவு மூலம் தோசை மற்றும் குலாப் ஜாமுன் போன்ற சுவையான பதார்த்தங்களும் தயார் செய்யப்படுகின்றன. கர்நாடகத்தின் உத்தர கன்னரா மற்றும் தக்ஷிண கன்னரா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த வித்தியாசமான செயலைப் புரிந்திருக்கின்றார்கள். இதன் தொடக்கமும் கொரோனா காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது. இந்தப் பெண்கள், வாழை மாவிலிருந்து தோசை, குலாப் ஜாமுன் போன்ற பதார்த்தங்களைச் செய்தது மட்டுமில்லாமல், இவை பற்றிய படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் இருக்கிறார்கள். அதிக பேர்களுக்கு வாழை மாவு பற்றித் தெரிய வந்த போது, இதற்கான கிராக்கியும் அதிகரித்தது, கூடவே இந்தப் பெண்களின் வருமானமும் தான். லகீம்புர் கீரீயைப் போலவே இங்கேயும் கூட, இந்தப் புதுமையான எண்ணத்தையும், பெண்கள் தான் முன்நின்று வழிநடத்தி வருகிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள், வாழ்க்கையில் புதிய சாதனை ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உத்வேகக் காரணிகளாக அமைகின்றன. உங்கள் அருகிலேயும் கூட இப்படிப்பட்ட அநேகர் இருப்பார்கள். உங்கள் குடும்பத்தார் பரஸ்பரம் உரையாடும் போது, நீங்கள் இவர்களையும், இது போன்ற விஷயங்களையும் உரையாடலில் இடம் பெறச் செய்யுங்கள். நேரம் வாய்க்கும் போது, உங்கள் குழந்தைகளோடு இப்படிப்பட்ட முயற்சிகளைக் காணச் செல்லுங்கள், சந்தர்ப்பம் வாய்த்தால், நீங்களே கூட இப்படி ஏதோ புதுமையான ஒன்றைச் செய்து காட்டுங்கள். மேலும், நீங்கள் நமோ செயலியிலும், மைகவ் தளத்திலும் இவை அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இன்னும் சிறப்பாக இருக்கும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் ஒரு சுலோகம் காணப்படுகிறது –
ஆத்மார்த்தம் ஜீவ லோகே அஸ்மின், கோ ந ஜீவதி மானவ:,
பரம் பரோபகாரார்த்தம், யோ ஜீவதீ ஸ ஜீவதி.
आत्मार्थम् जीव लोके अस्मिन्, को न जीवति मानवः |
परम् परोपकारार्थम्, यो जीवति स जीवति ||
அதாவது, உலகில் உள்ள அனைவரும் தங்களுக்காக வாழ்கிறார்கள். ஆனால் உள்ளபடியே யார் ஒருவர், மற்றவர்களுக்காக வாழ்கிறாரோ, அவரே மெய்யாக வாழ்கிறார் என்பதே இதன் பொருள். பாரத அன்னையின் நற்செல்வங்களின் பரோபகார முயற்சிகள் பற்றிய விஷயங்கள் – இது தானே மனதின் குரல்!! இன்றும், நாம் இப்படிப்பட்ட, மேலும் சில நண்பர்கள் பற்றி பேச இருக்கிறோம். ஒரு நண்பர், சண்டீகட் நகரைச் சேர்ந்தவர். சண்டீகடில், நானும் சில ஆண்டுகள் வசித்திருக்கிறேன். இது மிகவும் சந்தோஷம் நிறைந்த, அழகான நகரம். இங்கே வாழும் மக்களும் தாராளமனம் படைத்தவர்கள், இன்னொரு விஷயம்….. நீங்கள் உணவுப் பிரியர் என்றால், இங்கே உங்கள் காட்டில் அமோக மழை தான்!! இந்த சண்டீகடின் செக்டர் 29இல் தான் சஞ்ஜய் ராணா அவர்கள், நடமாடும் உணவுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார், சைக்கிளில் சோலே படூரே பதார்த்தத்தை விற்கிறார். ஒரு நாள் இவரது மகளான ரித்திமாவும், தமக்கை மகள் ரியாவும், ஒரு எண்ணத்தை இவர் முன்பு வைத்தார்கள். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, சோலே படூரே இலவசமாக வழங்கப்படும் என்ற கருத்திற்கு இருவரும் சம்மதிக்கச் செய்தார்கள். அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு, உடனடியாக இந்த நல்ல முயற்சியைத் தொடங்கியும் விட்டார். சஞ்ஜய் ராணாவிடம் இலவசமாக சோலே படூரே சாப்பிடத் தேவையானது, அன்று தான் உங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்பதற்கான சான்று. தடுப்பூசிக்கான குறுஞ்செய்தியைக் காட்டியவுடனேயே உங்களுக்கு சுவையான சோலே படூரே அளித்து விடுவார்கள். சமூக நன்மைக்கான பணிக்கு, பணத்தை விட அதிகமாக சேவையுணர்வு, கடமையுணர்ச்சி தாம் அதிக முக்கியமானவையாக இருக்கின்றன என்பார்கள் இல்லையா!! நமது சகோதரர் சஞ்ஜய் அவர்கள் இதைத் தான் நிரூபித்திருக்கிறார்.
நண்பர்களே, இப்படிப்பட்ட மேலும் ஒரு பணி குறித்து நான் உங்களோடு கலந்து பேச விரும்புகிறேன். இந்தப் பணி நடைபெறும் இடம் தமிழ்நாட்டின் நீலகிரியில். இங்கே ராதிகா சாஸ்திரி அவர்கள் AmbuRx ஆம்புரெக்ஸ் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்தத் திட்டத்தின் நோக்கமே, மலைப்பகுதிகளில் இருக்கும் நோயாளிகளின் சிகிச்சைக்காக, எளிதான வகையிலே போக்குவரத்து வாகனங்கள் ஏற்பாடு செய்து தருவது. ராதிகா அவர்கள் குன்னூரிலே ஒரு காப்பிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை நண்பர்களோடு இணைந்து ஆம்புரெக்ஸ்க்குக்காக நிதி திரட்டினார். நீலகிரி மலைகளில் இன்று 6 ஆம்புரெக்ஸ்கள் சேவையாற்றி வருகின்றன, தொலைவான பகுதிகளுக்கு, அவசர காலங்களில் நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கின்றன. ஆம்புரெக்ஸில் ஸ்ட்ரெச்சர், பிராணவாயு சிலிண்டர்கள், முதலுதவிப் பெட்டி போன்ற பல பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நாம் நமது பணி, நமது தொழில், வேலை ஆகியவற்றைச் செய்து கொண்டே, சேவையில் ஈடுபட முடியும் என்பதையே, சஞ்ஜய் அவர்களாகட்டும், ராதிகா அவர்களாகட்டும், இவர்களின் எடுத்துக்காட்டுகள் நமக்குப் புரிய வைக்கின்றன.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக மிகவும் சுவாரசியமான, மிகவும் உணர்வுரீதியான ஒரு நிகழ்ச்சி நடந்தது, இதன் மூலம் பாரதம்-ஜார்ஜியா நாடுகளின் நட்புக்கு ஒரு புதிய பலம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பாரதம், Saint Queen Ketevan,புனித இராணி கேடேவானுடைய புனித நினைவுச்சின்னத்தை ஜார்ஜியா அரசிடமும், அந்நாட்டு மக்களிடத்திலும் சமர்ப்பித்தது. இந்த நிகழ்ச்சிக்கு நமது அயலுறவுத் துறை அமைச்சரே நேரடியாகச் சென்றிருந்தார். மிகவும் உணர்ச்சிகரமான சூழலில் இந்த நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தது; ஜார்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், அவர்களின் சமயத் தலைவர், அதிகமான எண்ணிக்கையில் ஜார்ஜியக் குடிமக்கள் என, ஏராளமானோர் வந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது பாரத நாட்டைப் பாராட்டிப் பேசப்பட்ட சொற்கள், மிகவும் நினைவில் கொள்ளத்தக்கவை. இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமே இரு நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாது, கோவா மற்றும் ஜார்ஜியாவுக்கு இடையேயான உறவுகளையும், மேலும் ஆழப்படுத்தியது. காரணம் என்னவென்றால், புனிதர் அரசி கேடேவானின் புனித நினைவுச் சின்னம், 2005ஆம் ஆண்டு கோவாவின் புனித அகஸ்டீன் சர்ச்சில் கிடைத்தது.
நண்பர்களே, இதெல்லாம் என்ன, இவை எப்போது, எப்படி நடந்தது என்ற கேள்வி உங்கள் மனங்களில் எழலாம். உள்ளபடியே, இது இன்றிலிருந்து 400-500 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விஷயம். கேடேவான் அரசி, ஜார்ஜியா அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு 1624ஆம் ஆண்டு அவர் உயிர்த்தியாகம் செய்தார். பண்டைய போர்ச்சுகல் நாட்டு ஆவணம் ஒன்றின்படி, புனித அரசி கேடேவானின் சாம்பல், பழைய கோவாவின் புனித அகஸ்டின் கான்வெண்டில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் நீண்ட காலமாகவே, இவர் கோவாவில் எரியூட்டப்பட்டார் என்றும், இவரது பூதவுடல் எச்சங்கள் 1930இல் நடந்த நிலநடுக்கத்தில் காணாமல் போய் விட்டது எனவும் கருதப்பட்டு வந்தது.
பாரத நாட்டு மற்றும் ஜார்ஜியாவின் வரலாற்றியலாளர்களும், ஆய்வாளர்களும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும், ஜார்ஜியா நாட்டு சர்ச்சைச் சேர்ந்தவர்களும், பல பத்தாண்டுகள் விடாமுயற்சி காரணமாக 2005ஆம் ஆண்டு, இந்தப் புனிதமான நினைவுப் பொருள் கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார்கள். இந்த விஷயம் ஜார்ஜியா நாட்டு மக்களுக்குப் பெரும் உணர்வுபூர்வமான ஒன்று. ஆகையால் அவர்களின் வரலாற்று, சமய மற்றும் ஆன்மீக உணர்வுகளை மனதில் கொண்டு, பாரத அரசு இந்தப் புனிதமான நினைவுப் பொருளின் ஒரு பகுதியை ஜார்ஜியா மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தது. ஜார்ஜியா மற்றும் பாரதத்தின் இணைந்த சரித்திரத்தின் இந்த பிரத்யேகமான அடையாளத்தைப் பாதுகாத்து வைத்தமைக்காக, நான் கோவாவின் மக்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கோவா, பல மகத்தான ஆன்மீகப் பாரம்பரியங்கள் நிறைந்த பூமி. புனித அகஸ்டின் சர்ச்சானது, ஐக்கிய நாடுகள் கல்வி, சமூக, கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமான, கோவாவின் சர்ச்சுகள் மற்றும் கான்வெண்டுகளின் ஒரு அங்கம்.
எனதருமை நாட்டுமக்களே, ஜார்ஜியாவிலிருந்து நான் உங்களை நேரடியாக சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறேன். அங்கே இந்த மாதத் தொடக்கத்தில் மேலும் ஒரு பெருமை சேர்க்கும் விஷயம் நடந்தது. சிங்கப்பூரின் பிரதமரும், என்னுடைய நண்பருமான, லீ சேன் லுங் அவர்கள், தற்போது புதுப்பிக்கப்பட்ட சிலாட் ரோட் குருத்வாராவைத் திறந்து வைத்தார். அவர் பாரம்பரியமான சீக்கியத் தலைப்பாகையை அணிந்திருந்தார். இந்த குருத்வாரா, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்டது. இங்கே பாய் மஹாராஜ் சிங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னமும் இருக்கிறது. பாய் மஹராஜ் சிங் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார், நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில் இது மேலும் அதிக கருத்தூக்கத்தை அளிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையே, மக்களுக்கு இடையேயான பரஸ்பர இணைப்பினை, இது போன்ற விஷயங்கள், இவை போன்ற முயற்சிகள் தாம் மேலும் பலப்படுத்துகின்றன. மேலும், சகோதரத்துவமான சூழலில் வசிப்பது, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களைப் புரிந்து நடப்பதில் எத்தனை மகத்துவம் அடங்கியிருக்கிறது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.
எனதருமை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரலில் நாம் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். மேலும் ஒரு விஷயம் என் இதயத்திற்கு மிகவும் அணுக்கமானது என்றால் அது நீர் பராமரிப்பு. சிறுபிராயத்தில் நான் வாழ்ந்த இடத்தில் எப்போதுமே தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தது. நாங்கள் மழைக்காக ஏங்கி இருப்போம் என்ற காரணத்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாத்துப் பராமரிப்பது எங்களுடைய பழக்க வழக்கங்களின் ஒரு அங்கமாகவே மாறிப் போனது. இப்போது, மக்களின் பங்களிப்பு வாயிலாக நீர் பராமரிப்பு என்ற மந்திரம், அந்த இடத்தில் காட்சியையே புரட்டிப் போட்டு விட்டது. ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாப்பது, நீர் வீணாவதை அனைத்து வகைகளிலும் தடுப்பது என்பதெல்லாம் வாழ்க்கைமுறையின் இயல்பான ஒரு அங்கமாகவே மாற வேண்டும். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்ற வகையில், நீர் பாரமரிப்பு என்பது நமது குடும்பங்களின் பாரம்பரியமாகவே மாற வேண்டும்.
நண்பர்களே, இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பது பாரதத்தின் கலாச்சார வாழ்க்கையில், நமது அன்றாட வாழ்க்கையில், ஓருடல் ஈருயிராகக் கலந்திருக்கிறது. அதே போல மழை எப்போதுமே நமது எண்ணங்கள், நமது தத்துவங்கள், நமது கலாச்சாரம் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுத்து வந்திருக்கின்றது. ருதுசம்ஹாரம் மற்றும் மேகதூதத்தில் மஹாகவி காளிதாஸன், மழை பற்றி அழகாக வர்ணித்திருக்கிறார். இலக்கியப் பிரியர்களுக்கு இடையே இந்தக் கவிதைகள், இன்றும் கூட மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ரிக்வேதத்தின் பர்ஜன்ய சூக்தத்திலும், மழையின் அழகு பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே ஸ்ரீமத் பாகவதத்திலும் கூட, இலக்கியச் சுவையோடு நிலம், சூரியன், மழை ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்புகள் விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.
अष्टौ मासान् निपीतं यद्, भूम्याः च, ओद-मयम् वसु |
स्वगोभिः मोक्तुम् आरेभे, पर्जन्यः काल आगते ||
அஷ்டௌ மாஸான் நிபீதம் யத், பூம்யா: ச, ஓத்-மயம் வசு,
ஸ்வகோபி: மோக்தும் ஆரேபே, பர்ஜன்ய: கால ஆகதே.
அதாவது சூரியன் எட்டு மாதங்கள் வரை, நிலத்தின் செல்வமான தண்ணீரை உறிஞ்சியது, இப்போது பருவமழைக்காலத்தில், இப்படி உறிஞ்சப்பட்ட செல்வத்தைநிலத்திற்கே மீண்டும் திரும்ப அளிக்கிறது. உண்மையிலேயே, பருவமழையாகட்டும், மழையாகட்டும், இந்தக் காலம் அழகும், வனப்பும் நிறைந்தது மட்டுமல்ல, இது ஊட்டத்தை அளிக்கவல்லதும் கூட. நமக்குக் கிடைக்கும் மழைநீரானது, நமது வருங்கால சந்ததிகளுக்கானது, இதை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது.
இந்த சுவாரசியமான சந்தர்ப்பங்களோடு, இன்று நமது உரையாடலை ஏன் நாம் நிறைவு செய்யக்கூடாது என்று எனது மனதில் எண்ணம் எழுகிறது. உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் திருநாட்களுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். திருவிழாக்கள், பண்டிகைகள் காலத்தில், கொரோனா பெருந்தொற்று இன்னும் நம்மிடையே தான் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். கொரோனாவோடு தொடர்புடைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மறந்து விடாதீர்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், சந்தோஷமாக இருங்கள்.
பலப்பல நன்றிகள்!
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். எப்போதுமே மனதின் குரலில் உங்களுடைய கேள்விகள் அடைமழை போல வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்த முறை, சற்று விலகி, நான் உங்களிடத்தில் வினா எழுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன். சரி, என்னுடைய வினாக்களை சற்று கவனமாகக் கேளுங்கள்.
……ஒலிம்பிக் போட்டிகளில், தனிநபருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் யார் தெரியுமா?
……ஒலிம்பிக் போட்டிகளில், எந்த விளையாட்டுக்களில் பாரதம் இதுவரை அதிகமான பதக்கங்கள் வென்றிருக்கிறது?
……ஒலிம்பிக் போட்டிகளில் எந்த வீரர் அதிகபட்ச பதக்கங்களை வென்றிருக்கிறார்?
நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள். இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது. நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். முன்பு பாரதம் எப்படி செயல்பட்டது? இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன? – இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சு என்று வரும் போது, மில்கா சிங் என்ற தடகள ஜாம்பவானை யாரால் மறந்து விட முடியும் சொல்லுங்கள்!! சில நாட்கள் முன்பாக, கொரோனா பெருந்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவர் மருத்துவமனையில் இருந்த போது, அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நீங்கள் 1964ஆம் ஆண்டு, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கெடுத்துக் கொண்டீர்கள், ஆகையால் இந்த முறை, நமது விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக்ஸில் பங்கெடுக்கச் செல்லும் போது, நீங்கள் நமது வீரர்களின் மனோபலத்தை அதிகப்படுத்த வேண்டும், உங்கள் செய்தியால் அவர்களுக்கு உத்வேகமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர் விளையாட்டுக்களிடத்தில் எத்தனை அர்ப்பணிப்பு உள்ளவர், எத்தனை உணர்வுமயமானவர் என்றால், நோய்பாதிப்பு இருந்ததையும் தாண்டி, உடனடியாகத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். ஆனால் துர்பாக்கியவசமாக, விதியின் முடிவு வேறு விதமாக இருந்தது. 2014ஆம் ஆண்டு அவர் சூரத் வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் இரவு மாரத்தான் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்தோம். அப்போது அவரோடு நான் கலந்து பேசிய பொழுது, விளையாட்டுக்கள் பற்றிப் பேசினோம், அது எனக்கு மிகுந்த கருத்தூக்கமாக அமைந்தது. மில்கா சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே விளையாட்டுக்களிடத்தில் அர்ப்பணிப்பு உடையது, பாரதத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதை நாமறிவோம்.
நண்பர்களே, திறமை, அர்ப்பணிப்பு, மனவுறுதி மற்றும் போட்டி நேர்மைப் பண்பு எல்லாம் ஒருசேர இணையும் போது, ஒரு சாம்பியன் உருவாகிறார். நம்முடைய தேசத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகள், கிராமங்களிலிருந்து உருவாகிறார்கள். டோக்கியோ செல்லவிருக்கும் நமது ஒலிம்பிக் அணியிலும் கூட, பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நமக்கு பெரும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாய் இருக்கிறது. நம்முடைய பிரவீண் ஜாதவ் அவர்களைப் பற்றி நீங்கள் கேட்டால், எத்தனை கடினமான இடர்ப்பாடுகளை எல்லாம் தாண்டி பிரவீண் அவர்கள் இந்த நிலையை எட்டியிருக்கிறார் என்பதை நீங்களே உணர்வீர்கள். பிரவீண் ஜாதவ் அவர்கள், மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர். அவர் வில்வித்தையில் அற்புதமான வீரர். இவருடைய பெற்றோர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நிர்வாகம் செய்கிறார்கள்; இப்போது இவர்களின் மகன், தனது முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுக்க டோக்கியோ செல்லவிருக்கிறார். இது அவருடைய பெற்றோருக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே கூட பெரும் கௌரவத்தை ஏற்படுத்தும் விஷயம். இதே போல, இன்னொரு விளையாட்டு வீரர் தான் நமது நேஹா கோயல் அவர்கள். டோக்கியோ செல்லவிருக்கும் பெண்கள் ஹாக்கி அணியின் ஒரு உறுப்பினர் தான் இந்த நேஹா. இவருடைய தாயும், சகோதரிகளும், சைக்கிள் தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள். நேஹாவைப் போன்றே, தீபிகா குமாரி அவர்களுடைய வாழ்க்கைப் பயணமும் மேடு பள்ளங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. தீபிகாவின் தந்தை, ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார், தாய் செவிலியாக வேலை பார்க்கிறார், இப்போது டோக்கியோ ஒலிம்பிக்ஸில், பாரதத்தின் பிரதிநிதியாக தீபிகா, தனியொரு பெண் வில்வித்தை வீராங்கனையாக பங்கெடுக்க இருக்கிறார். ஒரு சமயத்தில் உலகிலேயே வில்வித்தைப் போட்டியில் முதலாவதாகத் திகழ்ந்த தீபிகாவுக்கு நம்மனைவரின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நண்பர்களே, வாழ்க்கையில் நாம் எந்த இடத்தை எட்டினாலும், எத்தனை உயரத்தைத் தொட்டாலும், நிலத்துடனான நமது தொடர்பு, எப்போதும் நமது வேர்களோடு நம்மைப் பிணைத்து வைக்கும். போராட்டக்காலங்கள் கழிந்த பிறகு கிடைக்கும் வெற்றியின் ஆனந்தம் அலாதியானது. டோக்கியோ செல்லும் நமது வீரர்களும் வீராங்கனைகளும், தங்கள் சிறுவயதில் கருவிகள்-வசதிகள்-வாய்ப்புகள் குறைபாட்டை எதிர்கொண்டார்கள் என்றாலும், அவர்கள் உறுதியோடு இருந்தார்கள், தொடர்ந்து முயன்றார்கள். உத்திரப்பிரதேசத்தின் முஸஃபர்நகரைச் சேர்ந்த பிரிங்கா கோஸ்வாமி அவர்களின் வாழ்க்கை நமக்கு மிகுந்த படிப்பினையை அளிக்கிறது. பிரியங்கா அவர்களுடைய தந்தையார் ஒரு பேருந்து நடத்துநராகப் பணிபுரிகிறார். சிறுவயதில் பிரியங்காவிற்கு, பதக்கம் வெல்லும் வீரர்களுக்குக் கிடைக்கும் பை மிகவும் பிடித்துப் போயிற்று. இதனால் கவரப்பட்டு, இவர் முதன்முறையாக Race Walking, அதாவது வேகமாக நடத்தல் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார். இன்று, இவர் இந்தப் போட்டியில் மிகப் பெரிய சாம்பியனாக விளங்குகிறார்.
Javelin Throw என்ற ஈட்டியெறிதல் போட்டியில் பங்கெடுக்கவிருக்கும் ஷிவ்பால் சிங் அவர்கள், பனாரஸில் வசிப்பவர். ஷிவ்பால் சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே இந்தப் போட்டியோடு தொடர்புடையது. இவரது தந்தையார், சிற்றப்பா, சகோதரர் என அனைவரும் ஈட்டி எறிதலில் வல்லவர்கள். குடும்பத்தின் இந்தப் பாரம்பரியம் தான் இவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கைகொடுக்க இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கெடுக்கவிருக்கும் சிராக் ஷெட்டியும் இவரது கூட்டாளியுமான சாத்விக் சாய்ராஜ் ஆகியோரின் தன்னம்பிக்கையும் உத்வேகம் அளிக்கவல்லது. தற்போது சிராகின் தாய்வழிப் பாட்டனார், கொரோனா காரணமாக இறந்து விட்டார். சாத்விக்கும் கூட கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால் இந்த இடர்களை எல்லாம் தாண்டி, இந்த இருவரும், Men’s Double Shuttle Competition, அதாவது ஆடவர் இரட்டையர்களுக்கான சிறகுப்பந்தாட்டப் போட்டியில், தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் ஒரு விளையாட்டு வீரரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் தான் ஹரியாணாவின் பிவானீயைச் சேர்ந்த மனீஷ் கௌஷிக் அவர்கள். மனீஷ் அவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயது முதற்கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதிலிருந்தே, மனீஷுக்கு குத்துச் சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டுப் போனது. இன்று இந்த ஆர்வம் இவரை டோக்கியோ கொண்டு போக இருக்கின்றது. மேலும் ஒரு விளையாட்டு வீரரின் பெயர், சீ. ஏ. பவானீ தேவீ அவர்கள். பெயரும் பவானீ, வாட்சிலம்ப வல்லுநர். சென்னையில் வசிக்கும் பவானீ, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய fencer, வாட்சிலம்புக்காரர். பவானீயின் பயிற்சி தொடர வேண்டும் என்பதற்காக இவரது அன்னை தனது நகைகளைக்கூட அடகு வைத்தார் என்பதை நான் ஒருமுறை எங்கோ படிக்க நேர்ந்தது.
நண்பர்களே, இப்படி கணக்கேயில்லாத பெயர்கள் ஆனால், மனதின் குரலில் என்னால் ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட முடிந்திருக்கிறது. டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் போராடி வந்திருக்கிறார்கள், பல்லாண்டுக்கால கடின உழைப்பு உழைத்திருக்கின்றார்கள். இவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை, தேசத்திற்காகச் செல்கிறார்கள். இந்த விளையாட்டு வீரர்கள் பாரதத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும், மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும், ஆகையால் என் இனிய நாட்டுமக்களே, நான் உங்களுக்கும் ஒரு ஆலோசனை அளிக்க விரும்புகிறேன். தெரிந்தோ தெரியாமலோ கூட நாம் நமது இந்த வீரர்கள் மீது எந்த விதமான அழுத்தத்தையும் கொடுத்து விடக் கூடாது; மாறாக திறந்த மனத்தோடு இவர்களுக்கு நமது ஊக்கத்தை அளிக்க வேண்டும், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் உற்சாகத்தையும் அதிகரிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் நீங்கள் #Cheer4India வோடு நமது இந்த விளையாட்டு வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை அளிக்கலாம். நீங்கள் மேலும் புதுமையான ஒன்றைச் செய்ய விரும்பினால், அப்படியும் அவசியம் செய்யுங்கள். உங்கள் மனதில் ஒரு எண்ணம் உதித்தால், அதை தேசம் முழுவதும் இணைந்து நமது விளையாட்டு வீரர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைக் கண்டிப்பாக எனக்கு எழுதி அனுப்புங்கள். நாமனைவரும் இணைந்து டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்போம் – Cheer4India!!!Cheer4India!!!Cheer4India!!!
எனதருமை நாட்டுமக்களே, கொரோனாவுக்கு எதிராக நமது நாட்டுமக்களின் போராட்டம் தொடர்கிறது என்றாலும், இந்தப் போரில் நாமனைவரும் இணைந்து பல அசாதாரணமான இலக்குகளை அடைந்திருக்கிறோம். சில நாட்கள் முன்பாக நமது நாட்டில், இதுவரை நடக்காத ஒரு பணி நடந்தேறியிருக்கிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம் நடந்தது, அதே நாளன்று நாட்டில் 86 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது, அதுவும் ஒரே நாளில். இத்தனை பெரிய எண்ணிக்கையில் பாரத அரசு தரப்பில், இலவச தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரே நாளன்று. இதனைப் பற்றிய விவாதங்கள் நடைபெறுவதும் இயல்பானது தானே!!
நண்பர்களே, ஓராண்டு முன்பாக அனைவர் முன்பாகவும் இருந்த கேள்வி – தடுப்பூசி எப்போது வரும்? என்பதே. இன்று ஒரே நாளில் நாம் இலட்சக்கணக்கான, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை, இலவசமாக அளித்து வருகிறோம் எனும் போது, இது தானே புதிய பாரதத்தின் பலம்!!
நண்பர்களே, தடுப்பூசி தரும் பாதுகாப்பு, தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும், நாம் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும். பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, பல அமைப்புகள், சமூக நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் முன்வந்திருக்கிறார்கள், அனைவரும் இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார்கள். சரி, நாமும் இன்று, ஒரு கிராமம் செல்வோம், அந்த கிராமத்து மக்களிடத்திலேயே நாம் உரையாற்றுவோம். தடுப்பூசி தொடர்பாக மத்தியப்பிரதேசத்தின் பைதூல் மாவட்டத்தின் டுலாரியா கிராமம் போவோம் வாருங்கள்.
பிரதமர் : ஹெலோ
ராஜேஷ்: வணக்கம்
பிரதமர்: வணக்கம் ஐயா.
ராஜேஷ்: என் பேரு ராஜேஷ் ஹிராவே, பீம்புர் ப்ளாக்கைச் சேர்ந்த டுலாரியா கிராம பஞ்சாயத்தில வசிக்கறேன்.
பிரதமர்: ராஜேஷ் அவர்களே, இப்ப உங்க கிராமத்தில, கொரோனா பெருந்தொற்றோட பாதிப்பு என்னெங்கறதை தெரிஞ்சுக்கத் தான் நான் இப்ப உங்களுக்கு ஃபோன் செஞ்சிருக்கேன்.
ராஜேஷ்: சார், இங்க கொரோனாவோட பாதிப்புன்னு சொல்லக்கூடிய வகையில எல்லாம் இல்லை.
பிரதமர்: யாருமே பாதிக்கப்படலையா என்ன?
ராஜேஷ்: ஆமாங்க.
பிரதமர்: கிராமத்தில ஜனத்தொகை எத்தனை? கிராமத்தில எத்தனை பேர் வசிக்கறாங்க?
ராஜேஷ்: கிராமத்தில 462 ஆண்களும், 332 பெண்களும் வசிக்கறாங்க சார்.
பிரதமர்: நல்லது! ராஜேஷ் அவர்களே, நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?
ராஜேஷ்: இல்லை சார், இன்னும் போட்டுக்கலை சார்.
பிரதமர்: அட! ஏன் இன்னும் போட்டுக்கலை?
ராஜேஷ்: சார், அது வந்து, இங்க சிலர் சொன்னாங்க, வாட்ஸப் மூலமா ஒரு பிரமையை ஏற்படுத்தி, இதனால மக்கள் பாதிக்கப்பட்டுட்டாங்க, அதனால தான் போட்டுக்கலை சார்.
பிரதமர்: அப்படீன்னா உங்க மனதிலயும் பயம் இருக்கா?
ராஜேஷ்: ஆமாம் சார், கிராமம் முழுவதிலயும் இப்படி ஒரு பரப்புரையை பரப்பிட்டாங்க சார்.
பிரதமர்: அடடடா, என்ன வேலை செஞ்சிருக்கீங்க நீங்க? பாருங்க ராஜேஷ் அவர்களே….
ராஜேஷ்: சொல்லுங்க சார்.
பிரதமர்: உங்க கிட்டயும் சரி, கிராமங்கள்ல வசிக்கற என்னோட எல்லா சகோதர சகோதரிகள் கிட்டயும் நான் சொல்லிக்க விரும்பறது என்னென்னா, தயவு செஞ்சு உங்க மனசுலேர்ந்து பயத்தை வெளியேத்துங்க.
ராஜேஷ்: சரி சார்.
பிரதமர்: நம்ம நாடு முழுக்கவும் 31 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க.
ராஜேஷ்: சரி சார்.
பிரதமர்: நானும் கூட தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கிட்டாச்சுங்கறது உங்களுக்கே தெரியும் இல்லையா?
ராஜேஷ்: தெரியும் சார்.
பிரதமர்: எங்கம்மாவுக்கு கிட்டத்தட்ட 100 வயசாகுது, அவங்களும் கூட ரெண்டு தவணைகளை போட்டுக்கிட்டாங்க. சில சமயங்கள்ல இதனால காய்ச்சல் ஏற்படலாம், ஆனா இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம் தான், இது சில மணி நேரம் வரைக்கும் தான் இருக்கும். ஆனா பாருங்க, தடுப்பூசி எடுத்துக்கலைன்னா அது பெரிய ஆபத்தில கொண்டு போய் விடலாம்.
ராஜேஷ்: சரி சார்.
பிரதமர்: இதனால நீங்க உங்களை மட்டும் ஆபத்துக்கு உள்ளாக்கலை, உங்க குடும்பத்தையும் கூட அபாயத்துக்கு ஆட்படுத்தறீங்க.
ராஜேஷ்: சரிங்க.
பிரதமர்: அதனால ராஜேஷ் அவர்களே, எத்தனை சீக்கிரத்தில முடியுமோ, அத்தனை சீக்கிரமா தடுப்பூசி போட்டுக்குங்க, கிராமத்திலயும் எல்லார் கிட்டயும் சொல்லுங்க, மத்திய அரசு இலவசமா எல்லாருக்கும் தடுப்பூசி கொடுக்குது, 18 வயசுக்கு மேற்பட்டவங்க எல்லாருக்கும் தடுப்பூசி இலவசம், கண்டிப்பா போட்டுக்கணும்னு சொல்லுங்க.
ராஜேஷ்: சரிங்க சார்.
பிரதமர்: நீங்களும் கிராமவாசிங்க கிட்ட சொல்லுங்க, கிராமத்தில இப்படிப்பட்ட ஒரு பயம் இருக்க எந்த ஒரு காரணமுமே இல்லை.
ராஜேஷ்: இதுக்கெல்லாம் என்ன காரணம்னா சார், சிலர் பொய்யான பரப்புரைகளை பரப்பி விட்டுட்டாங்க சார், இதனால மக்கள் எல்லாம் ரொம்ப பயந்து போயிட்டாங்க. இப்ப உதாரணமா பார்த்தீங்கன்னா, நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டீங்கன்னா காய்ச்சல் வரும், காய்ச்சலால நோய் அதிகம் பரவிடும், இதனால மனிதனுக்கு மரணம் கூட ஏற்படலாம் அப்படீங்கற அளவுக்கு வதந்திகளை பரப்பினாங்க.
பிரதமர்: பார்த்தீங்களா….. இன்னைக்கு ரேடியோவும், டிவியும் இத்தனை செய்திகளை அளிக்கறாங்க, ஆகையனால மக்களுக்கு புரிய வைக்கறது ரொம்ப சுலபமாயிருக்கு. அது மட்டுமில்லாம, ஒரு விஷயம் சொல்லவா…… பாரதத்தில பல கிராமங்கள்ல எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க, அதாவது இந்த கிராமத்தில இருக்கற 100 சதவீத மக்கள். இப்ப நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு சொல்றேன்….
ராஜேஷ்: சரி சார்.
பிரதமர்: காஷ்மீரத்தில பாந்திபுரா மாவட்டம் இருக்கு, இந்த பாந்திபுராவுல இருக்கற வ்யவன் கிராமத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து 100 சதவீதம் தடுப்பூசிங்கற இலக்கைத் தீர்மானம் செஞ்சு போட்டும் முடிச்சுட்டாங்க. இன்னைக்கு காஷ்மீரத்தில இந்த கிராமத்தில 18 வயசுக்கு மேல இருக்கற எல்லாரும் தடுப்பூசி போட்டு முடிச்சாச்சு. இதே மாதிரி நாகாலந்திலயும் மூணு கிராமங்கள்ல எல்லா கிராமவாசிகளும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்கங்கற செய்தியும் எனக்கு கிடைச்சிருக்கு.
ராஜேஷ்: ஓஹோ
பிரதமர்: ராஜேஷ் அவர்களே, நீங்களும் உங்க கிராமம், உங்க அக்கம்பக்கத்து கிராமங்கள்லயும் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கணும், நீங்களே சொல்ற மாதிரி பலர் மனசுலயும் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கு, இது வெறும் பிரமை மட்டும் தான்.
ராஜேஷ்: சரிங்க சார்.
பிரதமர்: அப்ப இந்த பிரமைக்கு சரியான பதிலடி என்னென்னா, நீங்க முதல்ல தடுப்பூசி போட்டுக்கிட்டு, பிறகு எல்லாருக்கும் புரிய வைக்கணும். நீங்க செய்வீங்கல்லே?
ராஜேஷ்: செய்வேன் சார்.
பிரதமர்: கண்டிப்பா செய்வீங்களா?
ராஜேஷ்: கண்டிப்பா செய்வேன் சார். உங்க கிட்ட பேசினதுக்குப் பிறகு, நானும் கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கணும், மத்தவங்களையும் போட உத்வேகப்படுத்தணுங்கற உணர்வு ஏற்பட்டிருக்கு சார்.
பிரதமர்: நல்லது, கிராமத்தில வேற யாரும் அங்க இருக்காங்களா, இருந்தா அவங்க கிட்டயும் நான் பேசறேனே!
ராஜேஷ்: இருக்காங்க சார்.
பிரதமர்: யார் பேசப் போறாங்க?
கிஷோரீலால்: ஹெலோ சார்…. வணக்கம்.
பிரதமர்: வணக்கங்க, யாரு பேசறீங்க?
கிஷோரீலால்: சார், என் பேரு கிஷோரீலால் தூர்வே.
பிரதமர்: ஆங் கிஷோரீலால் அவர்களே, இப்ப ராஜேஷ் அவங்க கிட்டத் தான் நான் பேசிட்டு இருந்தேன்.
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: தடுப்பூசி போட்டுக்கறது பத்தி மக்கள் பல்வேறு விதமா பேசிக்கிட்டு இருக்காங்கன்னு அவரு ரொம்ப வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தாரு.
கிஷோரீலால்: சரிங்க.
பிரதமர்: நீங்களும் இந்த மாதிரியா கேள்விப்பட்டீங்க?
கிஷோரீலால்: ஆமாங்க…. இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், அது வந்து .
பிரதமர்: என்ன கேவிப்பட்டீங்க?
கிஷோரீலால்: அது வந்து சார், இங்க பக்கத்து மாநிலம்னா அது மகாராஷ்டிரம், அங்க சில உறவுக்காரங்க, சில வதந்திகளை பரப்பினாங்க. அதாவது தடுப்பூசி போட்டுக்கறதால எல்லாரும் இறக்கறாங்க, சிலருக்கு காய்ச்சல் வருதுன்னு எல்லாம் பரப்பினாங்க, இதனால தான் மக்கள் மனசுல பெரிய பிரமை, ஒரு பீதி இடம் பிடிச்சிருக்கு சார், அவங்க தடுப்பூசி எடுக்க மாடேங்கறாங்க.
பிரதமர்: அதில்லை… என்ன சொல்றாங்க? இப்ப கொரோனா போயிருச்சு, இப்படியா பேசிக்கறாங்க?
கிஷோரீலால்: ஆமாங்க.
பிரதமர்: கொரோனாவால ஒண்ணும் செய்ய முடியாதுன்னா பேசிக்கறாங்க?
கிஷோரீலால்: இல்லை, கொரோனா போயிருச்சுன்னு எல்லாம் பேசிக்கறதில்லை சார், கொரோனா எல்லாம் இருக்கு, ஆனா தடுப்பூசியை யாரு போட்டுக்கறாங்களோ, அவங்களுக்கு நோய் ஏற்படுது, அவங்க இறக்கறாங்க. இது தான் நிலைமைங்கறாங்க சார்.
பிரதமர்: சரி, அதாவது தடுப்பூசி போட்டுக்கிறதால இறக்கறாங்கன்னு பேசிக்கறாங்க, இல்லையா?
கிஷோரீலால்: எங்க பகுதி ஒரு பழங்குடியினப் பகுதி சார். சாதாரணமாவே இங்க மக்கள் அதிகமா அஞ்சுவாங்க…… இப்ப இப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தின காரணத்தால, யாரும் தடுப்பூசி போட்டுக்கறதில்லை சார்.
பிரதமர்: இதோ பாருங்க கிஷோரீலால் அவர்களே,
கிஷோரீலால்: சொல்லுங்க சார்.
பிரதமர்: இப்படி வதந்திகளைப் பரப்புறவங்க வதந்திகளை பரப்பிக்கிட்டுத் தான் இருப்பாங்க. ஆனா நாம உயிர்களைக் காப்பாத்தியாகணும், நம்ம கிராம மக்களைக் காப்பாத்தியாகணும், நம்ம நாட்டுமக்களைக் காப்பாத்தியாகணும். இப்ப கொரோனா போயிருச்சுன்னு யாராவது சொன்னாங்கன்னா, அந்த பிரமையில இருக்காதீங்க.
கிஷோரீலால்: சரிங்க.
பிரதமர்: இந்த நோய் எப்படிப்பட்டதுன்னா, இது பலவிதமா வடிவெடுக்கக்கூடியது.
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: இது தன் வடிவத்தை மாத்திக்குது….. புதுசு புதுசா நிறம் வடிவங்களை எடுத்து நம்மை பீடிக்கக்கூடியது.
கிஷோரீலால்: சரிங்க.
பிரதமர்: இதிலேர்ந்து தப்பிக்க நம்ம கிட்ட ரெண்டே ரெண்டு வழிகள் தான் இருக்கு. ஒண்ணு, கொரோனாவுக்குன்னு என்ன நெறிமுறை வரையறுத்திருக்காங்களோ, அதாவது முகக்கவசம் போட்டுக் கொள்வது, சோப்பால அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, இது ஒருவகை. ரெண்டாவது வழி என்னென்னா, முன்ன சொன்ன நெறிமுறையோட கூடவே தடுப்பூசி போட்டுக்கறது. இதுவும் ஒரு நல்ல பாதுகாப்பு கவசம், இதன் மேல கவனம் செலுத்துங்க.
கிஷோரீலால்: சரிங்க.
பிரதமர்: சரி கிஷோரீலால் அவர்களே, ஒரு விஷயம் சொல்லுங்க.
கிஷோரீலால்: கேளுங்க சார்.
பிரதமர்: மக்கள் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கும் போது, நீங்க அவங்களுக்கு எப்படி புரிய வைப்பீங்க? நீங்க புரிய வைப்பீங்களா, இல்லை நீங்களும் கூட வதந்திகளுக்கு இரையாயிடுவீங்களா?
கிஷோரீலால்: என்னத்தை புரிய வைக்க சார், அவங்க அதிக எண்ணிக்கையில இருக்காங்க சார், எங்களுக்கும் பயம் ஏற்படும் தானே சார்?
பிரதமர்: இதோ பாருங்க கிஷோரீலால் அவர்களே, நான் இன்னைக்கு உங்ககூட பேசியிருக்கேன், நீங்க என்னோட நண்பர்.
கிஷோரீலால்: சரி சார்.
பிரதமர்: நீங்களும் பயப்படக்கூடாது, மத்தவங்களையும் பயத்திலேர்ந்து மீட்டெடுக்கணும். மீட்டெடுப்பீங்களா?
கிஷோரீலால்: செய்வேன் சார். மீட்டெடுப்பேன் சார். மக்களை பயத்திலேர்ந்து மீட்பேன் சார். நான் முதல்ல தடுப்பூசி போட்டுக்கறேன்.
பிரதமர்: முக்கியமா, வதந்திகளை முற்றிலுமா புறக்கணியுங்க.
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: நம்ம விஞ்ஞானிகள் எத்தனை கடுமையா உழைச்சு இந்த தடுப்பூசியைத் தயாரிச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லை!
கிஷோரீலால்: தெரியும் சார்.
பிரதமர்: ஆண்டு முழுக்க, இரவுபகல் பார்க்காம, பெரிய பெரிய விஞ்ஞானிகள்லாம் பணியாற்றியிருக்காங்க, நாம விஞ்ஞானம் மேல நம்பிக்கை வைக்கணும், விஞ்ஞானிகள் மேல நம்பிக்கை வைக்கணும். மேலும் பொய்களைப் பரப்பவரவங்களுக்கும் என்ன புரிய வைக்கணும்னா, ஐயா, நீங்க சொல்றா மாதிரியெல்லாம் நடக்காது, இத்தனை கோடிப் பேர்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்காங்க, ஒண்ணுமே ஆகலைங்கற போது, நீங்க எப்படி பாதிப்பு இருக்குங்கறீங்கன்னு கேளுங்க.
கிஷோரீலால்: சரிங்க.
பிரதமர்: இந்த வதந்திகள்டேர்ந்து எல்லாம் தப்பி விலகி நாமளும் இருக்கணும், கிராமத்தையும் காப்பாத்தணும்.
கிஷோரீலால்: சரிங்கய்யா.
பிரதமர்: அப்புறம் ராஜேஷ் அவர்களே, கிஷோரீலால் அவர்களே, உங்களை மாதிரியான நண்பர்கள்கிட்ட நான் என்ன சொல்லிக்க விரும்பறேன்னா, நீங்க உங்க கிராமத்தில மட்டுமில்லாம, மேலும் பல கிராமங்கள்லயும் இந்த மாதிரியான வதந்திகளைத் தடுக்கற வேலையை செய்யுங்க, என் கிட்ட இது பத்தி நீங்க பேசினீங்கன்னு மேலும் நிறைய மக்கள் கிட்டயும் சொல்லுங்க.
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: கண்டிப்பா சொல்லுங்க, என் பேரைச் சொல்லுங்க.
கிஷோரீலால்: சொல்றோம் சார், நாங்களும் தடுப்பூசி போட்டுக்கறோம், மத்தவங்களுக்கும் புரிய வைக்கறோம்.
பிரதமர்: கிராமம் முழுவதற்கும் என் தரப்பிலேர்ந்து நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்க, சரியா?
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: எல்லார் கிட்டயும் சொல்லுங்க, எப்ப அவங்களோட முறை வருதோ, அப்ப கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கணும்னு.
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: கிராமத்தில இருக்கற நம்ம பெண்மனிகள், நம்ம தாய்மார்கள்-சகோதரிகள், இவங்களை எல்லாம் இந்தப் பணியில அதிகபட்சம் இணைச்சுக்குங்க, ஆக்கப்பூர்வமான வகையில அவங்களையும் உங்க பயணத்தில சேர்த்துக்குங்க.
கிஷோரீலால்: சரிங்கய்யா.
பிரதமர்: பல வேளைகள்ல தாய்மார்கள்-சகோதரிகள் சொல்லும் போது, மக்கள் சீக்கிரத்துல ஏத்துக்குவாங்க.
கிஷோரீலால்: ஆமாங்கய்யா.
பிரதமர்: உங்க கிராமத்தில தடுப்பூசி முழுமையா போட்டாச்சுன்னா, நீங்க எனக்குத் தகவல் தருவீங்களா?
கிஷோரீலால்: ஆஹா, சொல்றேன் சார்.
பிரதமர்: கண்டிப்பா சொல்வீங்களா?
கிஷோரீலால்: கண்டிப்பா சார்.
பிரதமர்: நான் உங்க கடிதம் வருதான்னு காத்திட்டு இருப்பேன், சரியா?
கிஷோரீலால்: சரிங்க சார்.
பிரதமர்: சரி ராஜேஷ் அவர்களே, கிஷோரீலால் அவர்களே, ரொம்ப ரொம்ப நன்றி. உங்க கூட பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.
கிஷோரீலால்: நன்றி சார். நீங்க எங்க கூட பேசினதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கும் பலப்பல நன்றிகள் ஐயா.
நண்பர்களே, என்றைக்காவது ஒரு நாள், உலகத்திற்கே ஆய்வுக்குரிய ஒரு விஷயமாக இது ஆகும், அதாவது பாரதநாட்டின் கிராமவாசிகள், நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் எல்லாம் இந்த கொரோனா காலகட்டத்தில், எந்த வகையில் தங்களின் வல்லமையையும், புரிதலையும் வெளிப்படுத்தினார்கள் என்று. கிராமவாசிகள் தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்கினார்கள், வட்டாரத் தேவைகளை அனுசரித்து C protocol ஐ ஏற்படுத்தினார்கள். கிராமவாசிகள் யாரையும் பட்டினியோடு இரவு உறங்கச் செல்ல அனுமதிக்கவில்லை, விவசாய வேலைகளையும் நிறுத்தி வைக்கவில்லை. அருகில் இருக்கும் நகரங்களுக்கு பால்-காய்கறிகள் என அனைத்தும் ஒவ்வொரு நாள் காலையும் சென்று கொண்டிப்பதையும் கிராமங்கள் உறுதிப்படுத்தின. அதாவது அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டதோடு, மற்றவர்களையும் கவனித்துக் கொண்டார்கள். இதே போன்று தான் நாம் தடுப்பூசி இயக்கம் விஷயத்திலும் செயல்பட்டு வர வேண்டும். நாமும் விழிப்போடு இருக்க வேண்டும், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு கிராமத்தின் இலக்காக இருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், நான் உங்களிடத்தில் சிறப்பாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்களிடத்திலே நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள் – ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறார்கள் ஆனால், இந்த முடிவான வெற்றியின் மந்திரம் என்ன? முடிவான வெற்றியின் மந்திரம் என்னவென்றால் அது தான் – நிரந்தரச் செயல்பாடு. ஆகையால் நாம் சற்றும் கூட சுணக்கமாக இருந்துவிடக் கூடாது, எந்தவொரு பிரமைக்கும் மனதிலே இடம் கொடுத்தலாகாது. நாம் இடையறாத முயற்சிகள் மேற்கொண்டு, கொரோனா மீது வெற்றி பெற்றாக வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நமது நாட்டிலே இப்போது பருவமழைக்காலம் வந்து விட்டது. மேகங்கள் நமக்காக மட்டுமே பொழிவது இல்லை, மழைமேகங்கள் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தான் பொழிகின்றன. மழைநீரானது நிலத்தடியில் சென்று சேமிக்கப்படும் போது, நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர் நிலைகளையும் மேம்படுத்துகிறது. ஆகையால் தான் நீர் பாதுகாப்பு என்பதை நான் தேசப்பணியாகவே கருதுகிறேன். நம்மில் பலர் இந்தப் புண்ணியச் செயலைத் தங்களுடைய கடமையாகவே கருதிச் செயல்படுவதை நீங்கள் கண்டிருக்கலாம். இப்படிப்பட்ட ஒருவர் தான் உத்தராகண்டின் பௌடி கட்வாலைச் சேர்ந்த சச்சிதானந்த் பாரதீ அவர்கள். பாரதீ அவர்கள் ஒரு ஆசிரியராகப் பணிபுரிகிறார்; இவர் தனது செயல்களின் வாயிலாகவும் பிறருக்கு மிக அருமையான கல்வியளித்திருக்கிறார். இன்று இவருடைய கடினமான உழைப்பின் காரணமாக, பௌடீ கட்வாலின் உஃபரைங்கால் பகுதியில் பெரிய தண்ணீர் சங்கடத்திற்கு ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. எந்தப் பகுதியில் நீர்த்தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வந்தார்களோ, அங்கே இன்று ஆண்டு முழுவதிலும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.
நண்பர்களே, மலைகளில் நீர் சேமிப்பிற்கான ஒரு பாரம்பரியமான வழிமுறை இருக்கிறது, இதை சால்கால் என்றும் அழைக்கிறார்கள். அதாவது நீரைச் சேமிக்க ஒரு மிகப்பெரிய பள்ளத்தைத் தோண்டுவது. இந்தப் பாரம்பரிய வழிமுறையோடு பாரதி அவர்கள் சில புதிய வழிமுறைகளையும் இணைத்தார். இவர் தொடர்ந்து சிறிய-பெரிய குளங்களை உருவாக்கினார். இதனால் உஃபரைங்காலின் மலைப்பகுதியில் பசுமை கொஞ்சியதோடு, மக்களின் குடிநீர் சங்கடமும் முடிவுக்கு வந்தது. பாரதீ அவர்கள் இப்படி 30,000த்திற்கும் அதிகமான நீர்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற தகவல் உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம். முப்பது ஆயிரம். இவரது இந்த பகீரதப் பணி, இன்றும் தொடர்கிறது, பலருக்கு இவர் உத்வேக ஊற்றுக்கண்ணாக விளங்கி வருகிறார்.
நண்பர்களே, இதைப் போலவே யூபீ மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தின் அந்தாவ் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்கள். இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு மிக சுவாரசியமானதொரு பெயரையும் சூட்டினார்கள். ‘खेत का पानी खेत में, गाँव का पानी गाँव में’ அதாவது, வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்திற்கு என்பதே அது. இந்த இயக்கத்தின்படி, கிராமத்தின் பல ஏக்கர் நிலங்களில் உயரமான வரப்புகளை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக மழைநீரானது வயலில் சேரத் தொடங்கியது. இப்போது அனைவரும் வயல்வெளிகளில் இருந்த வரப்புகளில் மரம் நடும் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். அதாவது இப்போது விவசாயிகளுக்கு நீர், மரம் மற்றும் பணம் என மூன்றும் கிடைக்கும். தங்களின் நற்செயல்கள் காரணமாக, இவர்களின் கிராமத்தின் புகழ் தொலைவில் இருக்கும் கிராமங்கள் வரை பரவி வருகிறது.
நண்பர்களே, இவை அனைத்திலிருந்தும் உத்வேகமடைந்து, நாம் நமது அக்கம்பக்கத்தில் எந்த வகையிலாவது நீரை சேமிக்க முடிந்தால், அப்படி கண்டிப்பாகச் செய்ய வேண்டும். பருவமழையின் இந்த மகத்துவமான சமயத்தை நாம் தொலைத்து விடக்கூடாது.
எனதருமை நாட்டுமக்களே, நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?
நாஸ்தி மூலம் அனௌஷதம்.
அதாவது, உலகில் மருத்துவ குணம் இல்லாத தாவரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்பதே இதன் பொருள். நமக்கு அருகிலேயே இப்படி எத்தனையோ மரம்-செடி-கொடிகள் இருக்கின்றன, இவற்றில் அற்புதமான குணங்கள் நிரம்பியிருக்கின்றன என்றாலும் பலவேளைகளில் நமக்கு இவை பற்றி எதுவும் தெரிந்திருப்பதில்லை. நைனிதாலைச் சேர்ந்த நண்பர் ஒருவரான பரிதோஷ் என்பவர், இந்த விஷயம் குறித்து ஒரு கடிதம் வரைந்திருக்கிறார். இவர் சீந்தில் கொடி மற்றும் பிற தாவரங்களின் பல ஆச்சரியமான அற்புதங்கள் நிறைந்த மருத்துவ குணங்கள் பற்றி, கொரோனா வந்த பிறகு தான் தெரிய வந்தது என்று எழுதியிருக்கிறார். அக்கம்பக்கத்தில் இருக்கும் தாவரங்கள் பற்றித் தெரிந்து கொள்வதோடு, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் என்று மனதின் குரலின் அனைத்து நேயர்களிடமும் நான் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். உண்மையில், இவையனைத்தும் நமது பல நூற்றாண்டுக்கால பழமையான மரபுகள், இவற்றை நாம் தான் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இந்தத் திசையில் மத்தியப்பிரதேசத்தின் சத்னாவில் இருக்கும் ஒரு நண்பரான ராம்லோடன் குஷ்வாஹா அவர்கள் மிகவும் மெச்சத்தக்க பணி ஒன்றைச் செய்திருக்கிறார். ராம்லோடன் அவர்கள் தனது வயலிலேயே நாட்டு மூலிகை அருங்காட்சியம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் இவர் பல நூற்றுக்கணக்கான மருத்துவத் தாவரங்களையும், விதைகளையும் சேகரித்து வைத்திருக்கிறார். இவற்றை இவர் தொலைவான பகுதிகளிலிருந்து கொண்டு வந்திருக்கிறார். இதனைத் தவிர, இவர் ஒவ்வொரு ஆண்டும் பலவகையான இந்தியக் காய்கறிகளையும் பயிர் செய்கிறார். ராம்லோடன் அவர்களின் இந்தத் தோட்டம், இந்த நாட்டு மூலிகைகளின் அருங்காட்சியகத்தைக் காண மக்கள் வருகிறார்கள், இவை மூலம் அதிகம் கற்கவும் செய்கிறார்கள். உண்மையிலேயே, இது மிக அருமையான ஒரு செயல்பாடு. இதைப் போலவே தேசத்தின் பல்வேறு பகுதிகளில் செய்ய வேண்டும். உங்களில் யாராலாவது இது போன்ற முயற்சியில் ஈடுபட முடியுமென்றால், கண்டிப்பாகச் செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் உங்களுக்கு வருவாய் ஈட்ட புதியதொரு வாய்ப்பும் ஏற்படும். மேலும் ஒரு ஆதாயம் என்னவென்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த தாவரங்கள் வாயிலாக, உங்கள் பகுதிக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்னும் சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று நாம் தேசிய மருத்துவர்கள் தினத்தைக் கடைப்பிடிக்க இருக்கிறோம். தேசத்தின் மகத்துவம் வாய்ந்த மருத்துவரும், அரசியல் மேதகையுமான, டாக்டர். பீ.சீ. ராய் அவர்களின் பிறந்த நாளுக்கு இந்த நாள் சமர்ப்பிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் கடன் பட்டிருக்கிறோம். நம்முடைய மருத்துவர்கள், தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது, நமக்கெல்லாம் சேவை புரிந்து வருகிறார்கள். ஆகையால் இந்த முறை தேசிய மருத்துவர்கள் தினமும் மேலும் சிறப்படைகிறது.
நண்பர்களே, மருத்துவ உலகின் மிகவும் கௌரவமிக்க நபர்களுள் ஒருவரான ஹிப்போக்ரேட்ஸ் கூறியிருக்கிறார் -
“Wherever the art of Medicine is loved, there is also a love of Humanity.”
அதாவது எங்கே எல்லாம் மருத்துவம் என்ற கலை நேசிக்கப்படுகிறதோ, அங்கே எல்லாம் மனித சமூகத்தின் மீது அன்பு நிறைகிறது. இந்த அன்பின் சக்தி வாயிலாகவே மருத்துவர்களால் நமக்கு சேவையாற்ற முடிகிறது ஆகையால், நாம் அதே அளவு அன்போடு அவர்களுக்கு நமது நன்றிகளை அளித்து, அவர்களின் மனோபலத்தைப் பெருக்க வேண்டியது நமது கடமையாகிறது. மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு, தாமே முன்வந்து செயல்கள் புரிபவர்கள் நமது தேசத்திலே பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு முயல்வு ஸ்ரீநகரில் நடந்திருப்பது என் கவனத்துக்கு வந்தது. இங்கே டல் ஏரியில், ஒரு படகு அவசர வாகனச் சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை ஸ்ரீநகரின் தாரிக் அஹ்மத் பட்லூ அவர்கள் ஆரம்பித்தார்கள், இவர் ஒரு படகு வீட்டுக்குச் சொந்தக்காரர். இவர் தாமே கோவிட் 19 பெருந்தொற்றோடு போராடி வெற்றி பெற்றவர், இது தான் அவசர வாகனச் சேவையைத் தொடங்க இவருக்கு உத்வேகத்தை அளித்தது. இவருடைய இந்த அவசர வாகனத்தால், மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் இயக்கமும் நடைபெற்று வருகிறது, தொடர்ந்து அவசர வாகனத்தில் இவர் அறிவிப்புகளையும் செய்து வருகிறார். மக்கள் முகக்கவசத்தை அணிதல் முதல் இன்னும் பிற அவசியமான எச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே முயற்சி.
நண்பர்களே, மருத்துவர்கள் தினத்தோடு கூடவே, ஜூலை 1ஆம் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினமும் கடைப்பிடிக்கப்படும். சில ஆண்டுகள் முன்பாக, நமது இந்திய கணக்காய்வு நிறுவனங்கள் உலகம் தழுவியவையாக இருக்க வேண்டும் என்று நாட்டின் பட்டயக் கணக்காளர்களிடத்தில் நான் கோரியிருந்தேன். இன்று இதுகுறித்து நான் அவர்களுக்கு நினைவூட்ட விழைகிறேன். பொருளாதாரத்தில் ஒளிவுமறைவற்ற நிலையை உருவாக்க, பட்டயக் கணக்காளர்களால் மிகச் சிறப்பான, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்க முடியும். நான் பட்டயக் கணக்காளர், அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இனிய நாட்டுமக்களே, கொரோனாவுக்கு எதிராக பாரதத்தின் போராட்டத்தில் ஒரு பெரிய சிறப்பம்சம் உண்டு. இந்தப் போரிலே, தேசத்தின் ஒவ்வொரு நபரும், தனது பங்களிப்பை அளித்திருக்கிறார். நானும் மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் சிலரைப் பற்றி நான் அதிக அளவில் குறிப்பிடுவதில்லை என்று அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், சிறிய வணிகர்கள் அல்லது கடை வைத்திருப்பவர்கள், கடைகளில் வேலை பார்க்கும் சிப்பந்திகள், தள்ளுவண்டி செலுத்தும் சகோதர சகோதரிகள், பாதுகாப்புக் காவலாளிகள், தபால்காரர்கள் மற்றும் அஞ்சலகப் பணியாளர்கள் எனப் பலர் கொண்ட இந்தப் பட்டியல் மிக நீண்டது, இவர்களில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள். இதே போல நிர்வாக அலகுகளிலும் எத்தனையோ பேர்கள் அவரவருக்குரிய வகைகளில் சிறப்பாகப் பணிபுரிந்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்திய அரசாங்கத்தில் செயலராக இருந்த குரு பிரஸாத் மஹாபாத்ரா அவர்களின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம். இன்றைய மனதின் குரலில் நான் அவரைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். குருபிரஸாத் அவர்களுக்கு கொரோனா பீடிப்பு ஏற்பட்டு விட்டது, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனது கடமையை ஆற்றி வந்தார். தேசத்தில் பிராணவாயு உற்பத்தி அதிகரிக்க வேண்டும், தொலைவான பகுதிகள் வரை பிராணவாயு சென்று சேர வேண்டும் என்பதற்காக இவர் இரவுபகலாகப் பணியாற்றினார். ஒருபுறத்தில் நீதிமன்றங்களுக்குப் படையெடுப்பு, ஊடகங்கள் அளிக்கும் நெருக்கடி என பல முனைகளில் இவர் போராடி வந்தார், மறுபுறத்திலோ இவர் கொரோனாவால் தாக்குண்ட நிலையிலும் பணியாற்றுவதை நிறுத்தவில்லை. உடல்நலத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட, இவர் பிடிவாதமாக பிராணவாயு தொடர்பான காணொளி மாநாடுகளில் பங்கெடுத்து வந்தார். நாட்டுமக்கள் குறித்த இத்தனை கவலை இவர் மனதில் வியாபித்திருந்தது. மருத்துவமனைப் படுக்கையில் படுத்தவாறே, தன்னைப் பற்றிய கவலை ஏதும் இன்றி, நாட்டுமக்களுக்கு பிராணவாயு கிடைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இந்த கர்மயோகியையும் தேசம் இழந்து விட்டது என்பது நம்மனைவருக்கும் துக்கமளிக்கும் செய்தி. கொரோனாவானது இவரையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. இப்படிப்பட்ட எண்ணிலடங்கா மனிதர்களைப் பற்றி நம்மால் பேசக் கூட முடியவில்லை. நாம் கோவிட் நெறிமுறையை முழுமையான வகையில் பின்பற்றுவதும், தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் தான் இப்படிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாம் அளிக்கக்கூடிய தூய்மையான நினைவாஞ்சலியாக இருக்க முடியும்.
என் கனிவான நாட்டுமக்களே, என்னை விட உங்கள் அனைவரின் பங்களிப்பும் அதிகமாக இருப்பது தான் மனதின் குரலின் மிகப்பெரிய சிறப்பம்சமே. தற்போது தான் MyGov தளத்தில் நான் ஒரு பதிவைப் பார்த்தேன். இதை சென்னையைச் சேர்ந்த திரு. ஆர். குருபிரஸாத் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அவர் எழுதியிருப்பது உங்களுக்கும் மிகவும் பிடிக்கும். தான் மனதின் குரலைத் தவறாது கேட்டு வருவதாக எழுதியிருக்கிறார். குருபிரஸாத் அவர்களின் பதிவிலிருந்து இப்போது நான் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம், என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. நீங்கள் தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவம் குறித்தும், தமிழ்ப் பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளைப் பற்றி பல முறை கூறியிருக்கிறீர்கள். திருக்குறள் மீது உங்களுக்கு இருக்கும் பிரியமும், திருவள்ளுவர் பால் உங்களிடம் இருக்கும் மரியாதையும் விவரிக்க அப்பாற்பட்டவை. ஆகையால் மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ, இவை அனைத்தையும் ஒன்று திரட்டி நான் மின் புத்தகம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறேன். நீங்கள் இந்த மின் புத்தகம் குறித்துப் பேசி, இதை NamoAppஇல் வெளியிட முடியுமா? நன்றி.
குருபிரஸாத் அவர்களின் கடிதத்தை நான் உங்களிடத்தில் வாசித்து விட்டேன். குருபிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்தப் பதிவைப் படிக்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. இப்போது நீங்கள் உங்களின் மின் புத்தகத்தில் மேலும் ஒரு பக்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
நான் தமிழ்க்கலாச்சாரத்தின் பெரிய அபிமானி. நான் உலகத்திலேயே பழமையான தமிழ் மொழியின் பெரிய அபிமானி.
தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறைவு காணாது.
நண்பர்களே, ஒவ்வொரு இந்தியரும், உலகின் மிகப் பழமையான மொழி நம் தேசத்தினுடையது, இதனை நாம் போற்றிக் கொண்டாட வேண்டும், பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழ் மொழி குறித்து எனக்கும் மிகவும் பெருமிதம் பொங்குகிறது. குரு பிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்த முயற்சி எனக்குப் புதிய கண்ணோட்டத்தை அளிக்க வல்லது. ஏனென்றால், மிகவும் எளிய இயல்பான வகையிலே தான் நான் மனதின் குரலில் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். இதில் இப்படிப்பட்ட ஒரு கூறும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நீங்கள் பழைய விஷயங்கள் அனைத்தையும் திரட்டியிருப்பதை நான் ஒருமுறை அல்ல, இரு முறைகள் படித்துப் பார்த்தேன். குருபிரஸாத் அவர்களே, இந்தப் புத்தகத்தை நான் கண்டிப்பாக Namo செயலியில் தரவேற்றம் செய்வேன். உங்களின் வருங்கால முயற்சிகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் கொரோனாவின் கடினங்களையும், முன்னெச்சரிக்கைகளையும் பற்றிப் பேசினோம், நாடு மற்றும் நாட்டுமக்களின் பல சாதனைகள் குறித்தும் அளவளாவினோம். இப்போது மேலும் ஒரு சந்தர்ப்பம் நம்முன்னே காணக் கிடைக்கிறது. ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரவிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் என்ற அம்ருத மஹோத்சவம் என்ற அமுத விழா, நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது. நாம் தேசத்திற்காக வாழப் பழக வேண்டும். விடுதலைப் போர் – தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் சரிதம். நாடு விடுதலை பெற்ற பிறகான இந்த வேளையை நாம் தேசத்திற்காக வாழ்வோரின் கதையாக மாற்ற வேண்டும். India First, இந்தியாவுக்கே முதலிடம் என்பதே நமது மந்திரமாக இருக்க வேண்டும். நமது ஒவ்வொரு தீர்மானம், ஒவ்வொரு முடிவின் ஆதாரமும், India First, இந்தியாவுக்கே முதலிடம் என்பதாக அமைய வேண்டும்.
நண்பர்களே, அமுத விழாவில் தேசத்தின் பல சமூக இலக்குகளும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாம் நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவில் கொள்ளும் வகையில், அவர்களின் வரலாற்றுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும். விடுதலைப் போராட்டத்தின் வரலாறு குறித்துக் கட்டுரைகள், ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று இளைஞர்களிடத்தில் நான் மனதின் குரல் வாயிலாகக் கேட்டிருந்தேன். இளைய சமூகத்தின் திறமைகள் வெளிப்பட வேண்டும், இளையோரின் எண்ணங்கள், அவர்களின் சிந்தனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், இளைஞர்களின் எழுதுகோல்களுக்குப் புதிய சக்தி கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்தப் பணியில் ஈடுபட, மிகவும் குறைந்த காலத்தில் 2,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நண்பர்களே, சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த போராட்டம் குறித்த பேச்சுக்கள் பொதுவாக நடந்து வந்திருக்கின்றன; ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பிறந்த என் இளைய நண்பர்கள், 19ஆம்-20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த சுதந்திரப் போராட்டம் குறித்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியை மேற்கொண்டிருப்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்கள் அனைவரும் MyGov தளத்தில் இதனைப் பற்றிய முழு விபரங்களையும் அளித்திருக்கின்றார்கள். இவர்கள், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம், பாங்க்லா, தெலுகு, மராட்டி, மலையாளம், குஜராத்தி என தேசத்தின் பல்வேறு மொழிகளில், விடுதலைப் போராட்டம் பற்றி எழுதி வருகிறார்கள். சிலர் விடுதலை வேள்வியோடு இணைந்த விஷயங்களை எழுதுகிறார்கள், சிலர் தங்களுக்கு அருகிலே இருக்கும் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற இடங்களைப் பற்றித் தகவல்கள் அளிக்கிறார்கள், சிலர் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம். அமுத விழாவோடு நீங்கள் எந்த வகையில் இணைந்து கொள்ள முடிந்தாலும், அவசியம் இணைந்து கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். நாடு விடுதலை அடைந்த 75 ஆண்டுகள் என்ற தருணத்தின் சாட்சிகளாக நாம் இருப்பது நமது பெரும்பேறாகும். ஆகையால் அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திக்கும் வேளையில், அமுத விழாவின் மேலும் பல தயாரிப்புகள் பற்றியும் பேசுவோம். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வாருங்கள், உங்களுடைய புதிய முயற்சிகள் வாயிலாக, தேசத்திற்கு புதிய வேகத்தை அளித்து வாருங்கள், என்ற இந்த நல்விருப்பங்களோடு, மீண்டும் சந்திப்போம், பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். தேசம் எவ்வாறு தன் முழுபலத்தோடு கோவிட் 19க்கு எதிராகப் போராடி வருகிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். கடந்த 100 ஆண்டுக்காலத்தின் மிகப்பெரிய பெருந்தொற்று இது; இந்த pandemicஆன இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே பாரதம், பல இயற்கைப் பேரிடர்களையும் உறுதிப்பாட்டோடு எதிர்கொண்டும் இருக்கிறது. இதற்கிடையே அம்ஃபான் புயல் வந்தது, நிஸர்க் புயல் வந்தது, பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, சிறிய-பெரிய பூகம்பங்கள் பல ஏற்பட்டன, நிலச்சரிவுகள் நிகழ்ந்தன. கடந்த 10 நாட்கள் முன்பாகத் தான் மீண்டும் இரண்டு பெரிய புயல்களை நாடு எதிர்கொள்ள வேண்டி வந்தது. மேற்குக் கரையோரத்தில் தாஊ தே புயலும், கிழக்குக் கரைப்பகுதியில் யாஸ் புயலும் வந்தன. இந்த இரண்டு சூறாவளிகளும் பல மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தின. நாடும் நாட்டுமக்களும் இவற்றை முழுபலத்தோடு எதிர்கொண்டு, குறைந்தபட்ச உயிரிழப்புக்களோடு தப்பினார்கள். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அதிகபட்ச உயிர்களை நம்மால் காப்பாற்ற முடிந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. இடர்கள் நிறைந்த இந்தக் கடினமான-அசாதாரணமான சூழ்நிலையில், புயலால் பாதிப்படைந்திருக்கும் அனைத்து மாநில மக்களும் தங்களுடைய நெஞ்சுரத்தை வெளிப்படுத்தி இருப்பது, இந்த சங்கடமான வேளையைப் பொறுமையோடும், ஒழுங்குமுறையோடும் எதிர்கொண்டிருப்பது……இதன் பொருட்டு நான் குடிமக்கள் அனைவருக்கும் மரியாதை கலந்த, என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாரெல்லாம் தாமாகவே முன்வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்களோ, அப்படிப்பட்டவர்கள் அனைவரையும் எத்தனை பாராட்டினாலும் அது குறைவு தான். அவர்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். மத்திய-மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புக்களும் இணைந்து இந்தப் பேரிடரை எதிர்கொள்ள ஒன்றுபட்டார்கள். தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேரிடர்களின் இழப்பைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும் இந்த சிரமமான கட்டத்தில் நாமனைவரும் உற்ற துணையாக இருக்கிறோம்.
எனதருமை நாட்டுமக்களே, சவால் எத்தனை பெரியதாக இருக்கிறதோ, அதற்கு இணையான பலத்தோடு, பாரதத்தின் மனவுறுதிப்பாடும் விளங்குகிறது. தேசத்தின் சமூக சக்தியும், சேவையுணர்வும் தாம், தேசத்தை ஒவ்வொரு புயலிலிருந்தும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள வீரர்கள் அனைவரும், தங்களைப் பற்றிக் கவலையேதும் படாமல், இரவுபகலாகப் பணியாற்றினார்கள், பணியாற்றியும் வருகிறார்கள். இவை அனைத்திற்கும் இடையே, கொரோனாவின் இரண்டாவது அலையோடு போராடுவதில் மேலும் பலருடைய மிகப்பெரிய பங்களிப்பும் இருக்கிறது. என்னிடத்தில் மனதின் குரலின் பல நேயர்கள் நமோ செயலியிலும், கடிதங்கள் வாயிலாகவும், இந்த வீரர்கள் பற்றியும் நான் பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இரண்டாவது அலை வந்த போது, திடீரென்று ஆக்சிஜனுக்கான தேவை பல மடங்கு அதிகரித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மருத்துவப் பயன்பாட்டு ஆக்சிஜனை, தேசத்தின் அனைத்துத் தொலைவான பாகங்கள் வரை கொண்டு சேர்ப்பது மட்டுமே ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆக்சிஜன் டேங்கர்கள் விரைவாகச் சென்று சேர வேண்டும். சின்னதாக ஒரு தவறு கூட ஏற்படுமேயானால், அதனால் பெரிய ஒரு வெடிப்பு ஏற்படும் ஆபத்தும் உண்டு. தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனைத் தயாரிக்கும் பல ஆலைகள் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் இருக்கின்றன, இவற்றை அங்கிருந்து பிற மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க பல நாட்களாகி விடும். இந்த நிலையில் தேசத்தின் முன்பாக எழுந்த இந்த சவாலில் உதவியவர்கள், குளிர்ந்த நிலையில் இருக்கும் cryogenic tanker இயக்கும் ஓட்டுநர்கள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், இந்திய விமானப்படை பைலட்டுகள் ஆகியோர். இப்படி அநேகம் பேர்கள், போர்க்கால விரைவோடு பணியாற்றி, ஆயிரக்கணக்கான-இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இன்றைய மனதின் குரலில், நம்மோடு இப்படிப்பட்ட ஒரு நண்பர் இணைந்திருக்கிறார் – உத்தரப் பிரதேசத்தின் ஜோன்பூரில் வசிக்கும் தினேஷ் உபாத்யாயா அவர்கள்……
மோதி ஜி – தினேஷ் ஜி, வணக்கம்.
தினேஷ் உபாத்யாயா ஜி – வணக்கம் ஐயா.
மோதி ஜி – முதன்மையா, நீங்க உங்களைப் பத்திச் சொல்லுங்களேன்.
தினேஷ் உபாத்யாயா ஜி – ஐயா என் பேரு தினேஷ் பாபுல்நாத் உபாத்யாயா. நான் ஜோன்பூர் மாவட்டத்தின் ஜமுவா பகுதியைச் சேர்ந்த ஹஸன்புர் கிராமத்தில வசிக்கறேன்.
மோதி ஜி – உத்திர பிரதேசம், சரியா?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. என் குடும்பத்தில எங்க அப்பா அம்மா, என் மனைவி, பிறகு ஒரு மகனும் ரெண்டு மகள்களும் இருக்காங்க.
மோதி ஜி – நீங்க என்ன செய்யறீங்க?
தினேஷ் ஜி – ஐயா நான் ஆக்சிஜன் டேங்கர் ஓட்டறேன், திரவ ஆக்சிஜன் டேங்கர்.
மோதிஜி – பிள்ளைங்க படிப்பு எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கில்லையா?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. பிள்ளைங்க நல்லா படிச்சுக்கிட்டு இருக்காங்க.
மோதி ஜி – இணையவழி படிப்பு சரியா போயிட்டு இருக்கா?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. நல்லவிதமா போயிட்டு இருக்கு. என் பையன் பொண்ணுங்க மூணு பேருமே இணையவழியில தான் படிச்சுட்டு இருக்காங்க. நான் சுமாரா 15லேர்ந்து 17 ஆண்டுகளா இந்த ஆக்சிஜன் டேங்கரை ஓட்டிக்கிட்டு வரேங்கய்யா.
மோதி ஜி – அது சரி. அப்படீன்னா இந்த 15-17 ஆண்டுகளா நீங்க ஆக்சிஜன் டேங்கரோட ஓட்டுநர் மட்டுமில்லை, ஒரு வகையில இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாத்திட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க.
தினேஷ் ஜி – ஐயா, எங்க வேலையே எப்படீன்னா, நாங்க கொண்டு போகற ஆக்சிஜனை குறிப்பிட்ட இடத்தில கொண்டு சேர்த்து, எங்க டேங்கர் காலியான பிறகு ஒரு அலாதியான சந்தோஷமா இருக்குங்கய்யா. எங்க ஆக்சிஜன் டேங்கர் நிறுவனமான ஐனாக்ஸ் நிறுவனம் எங்களை எல்லாம் ரொம்ப அக்கறையோட கவனிச்சுக்கறாங்க.
மோதி ஜி – ஆனா இப்ப கொரோனா காலத்தில உங்க பொறுப்பு மேலும் அதிகமாயிருச்சு இல்லை?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா, ரொம்பவே அதிகமாயிருச்சு.
மோதி ஜி – நீங்க உங்க ட்ரக்கோட ஓட்டுநர் இருக்கையில அமர்ந்திருக்கும் போது உங்க மனசுல என்ன உணர்வு ஓடும்? முன்ன நீங்க ஓட்டினதோட ஒப்பிடுகையில இப்ப அனுபவம் வித்தியாசமா இருக்கா? நிறைய நெருக்கடியா இருக்குமில்லை? மனதளவுல நிறைய அழுத்தம் இருக்குமோ? குடும்பத்தார் பத்தின கவலை, கொரோனா சூழல், மனிதர்கள் தரப்பிலேர்ந்து அழுத்தம்…… எப்படி உணர்றீங்க சொல்லுங்க.
தினேஷ் ஜி – ஐயா எங்களுக்கு எது பத்தின கவலையும் இருக்காது. எங்க சிந்தை எல்லாம் செய்யற வேலையில மட்டுமே கருத்தா இருக்கும், நேரத்துக்குள்ள நம்ம ஆக்சிஜனைக் கொண்டு சேர்த்து, அதனால யாருடைய உயிராவது காப்பாத்தப்படுதுன்னா, இதுவே எங்களுக்குப் பெரிய கௌரவமான விஷயங்கய்யா.
மோதி ஜி – ரொம்ப சிறப்பா நீங்க உங்க உணர்வுகளை வெளிப்படுத்தினீங்க. அப்புறம் இன்னொரு விஷயம்….. இப்ப இந்தப் பெருந்தொற்று நிலவற இந்த வேளையில, உங்க சேவையோட மகத்துவத்தை மக்கள் நேரடியா பார்க்கறாங்க….. முன்ன ஒருவேளை இந்த அளவுக்கு புரிஞ்சுக்காம இருந்திருக்கலாம்….. ஆனா இப்ப மக்கள் புரிஞ்சுக்கறாங்க அப்படீங்கற போது, உங்களைப் பத்தியும், உங்க வேலை பத்தியும் அவங்களோட பார்வையில மாற்றம் ஏதேனும் ஏற்பட்டிருக்கா?
தினேஷ் ஜி – கண்டிப்பாய்யா. முன்ன எல்லாம் ஆக்சிஜன் ஓட்டுனர்களான நாங்க அங்க இங்க போக்குவரத்து நெரிசல்ல சிக்கிக்கிட்டு இருப்போம்; ஆனா இன்னைய வேளையில, நிர்வாகம் எங்களுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்காங்க. நாங்க எங்க, எப்ப போனாலும், எத்தனை சீக்கிரமா போக முடியுமோ போயி, அங்க உயிர்களைக் காப்பாத்தணும்னு மனசுல ஒரு உத்வேகம் இருக்குதுங்க ஐயா. சாப்பாடு-தண்ணி எது கிடைக்குதோ இல்லையோ, என்ன கஷ்டம் இருந்தாலும், மருத்துவமனைக்குப் போயாகணும்ங்கற உறுதி மனசுல இருக்கும், நாங்க அங்க போய் சேர்ந்தவுடனே, மருத்துவமனைக்காரங்க, அங்க அனுமதிக்கப்பட்டிருக்கறவங்க குடும்பத்தார் எல்லாம் வெற்றின்னு விரல்கள்ல காட்டுவாங்க.
மோதி ஜி – ஆமாமா, வெற்றின்னு தெரிவிக்க V சின்னத்தைக் காமிப்பாங்க இல்லையா?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. Vன்னு காமிப்பாங்க, இல்லை சொல்லுவாங்க. எங்களுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும், அப்பாடா, நாம நம்ம வாழ்க்கையில ஏதோ நல்லதைச் செய்திருக்கறதாலேயே இப்படி ஒரு சேவையை செய்யறதுக்கான சந்தர்ப்பம் வாய்ச்சிருக்குன்னு நினைச்சுக்குவேன்.
மோதிஜி – எல்லாக் களைப்பும் பறந்து போயிடும் இல்லை?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா, சந்தேகமே இல்லாம.
மோதி ஜி – பிறகு வீட்டுக்கு வந்த பிறகு பசங்க கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்துப்பீங்களா?
தினேஷ் ஜி – இல்லைங்கய்யா. எங்க பிள்ளைங்க கிராமத்தில வசிக்கறாங்க. நான் இங்க INOX Air Productஇல, ஓட்டுநரா இருக்கேன். 8-9 மாதங்களுக்குப் பிறகு தான் வீட்டுக்குப் போவேன்.
மோதி ஜி – ஆனா ஃபோன்ல பிள்ளைங்க கூட பேசுவீங்க இல்லையா?
தினேஷ் ஜி – ஆமாங்க, கண்டிப்பா பேசுவேங்கய்யா.
மோதி ஜி – அப்பா, கொஞ்சம் பார்த்து கவனமா இருங்கப்பான்னு அவங்க சொல்லுவாங்க இல்லை?
தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. அப்பா, வேலை பாருங்க, ஆனா பாதுகாப்பா இருங்கப்பா, உங்களையும் கவனிச்சுக்குங்க அப்படீம்பாங்க. எங்களோட மான்காவ் ப்ளாண்டும் இருக்கு. INOX எங்களுக்கு நிறையவே உதவி செய்யறாங்க.
மோதி ஜி – சரி தினேஷ் அவர்களே, உங்க கூட பேசினது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு. நீங்க சொல்றதைக் கேட்ட பிறகு, இந்தக் கொரோனாவுக்கு எதிரான போரில எப்படி எப்படி எல்லாம், எந்த வகையா எல்லாம் மனிதர்கள் பணி செய்திட்டு வறாங்க அப்படீன்னு மக்களுக்குத் தெரிய வரும். நீங்க ஒன்பது மாதங்கள் வரை கூட உங்க பிள்ளைங்களை சந்திக்காம இருக்கீங்க, குடும்பத்தாரை சந்திக்கறதில்லை, மக்களோட உயிர்களைக் காப்பாத்தறதுல மட்டுமே ஈடுபட்டு வர்றீங்க. இதை நாடு கேட்கும் போது, இந்தப் போர்ல நாம கண்டிப்பா வெற்றி பெறுவோம் அப்படீங்கற உறுதிப்பாடும், நம்பிக்கையும், பெருமையும் ஏற்படும்; ஏன்னா தினேஷ் உபாத்யாயா மாதிரியான இலட்சக்கணக்கான மனிதர்கள், தங்களோட உயிரைக் கொடுத்து சேவை செய்திட்டு இருக்காங்க அப்படீங்கறதால.
தினேஷ் ஜி – ஐயா, நாம என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா இந்தக் கொரோனாவை தோக்கடிச்சே தீருவோங்கய்யா.
மோதி ஜி – சரி தினேஷ் அவர்களே, உங்களை மாதிரியானவங்களோட உணர்வு தான் தேசத்தோட பலம். ரொம்ப ரொம்ப நன்றி தினேஷ் அவர்களே. உங்க பிள்ளைங்க மூணு பேருக்கும் என்னோட ஆசிகளைத் தெரிவியுங்க.
தினேஷ் ஜி – கண்டிப்பா ஐயா. வணக்கம்.
மோதி ஜி – நன்றி.
தினேஷ் ஜி – வணக்கங்கய்யா.
மோதி ஜி – நன்றி.
நண்பர்களே, தினேஷ் அவர்கள் கூறியது போல, உண்மையிலேயே ஒரு டேங்கர் ஓட்டுநர் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்றடையும் போது, கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதராகவே அவர் காட்சியளிக்கிறார். இந்தப் பணி எத்தனைப் பொறுப்பானது, எத்தனை மன அழுத்தம் தரவல்லது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நண்பர்களே, சவால்கள் நிறைந்த இந்த வேளையில், ஆக்சிஜனைக் கொண்டு சேர்ப்பதை சுலபமாக்க, இந்திய ரயில்வே முன்வந்திருக்கிறது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஜன் ரயிலானது, சாலைகளில் செல்லும் ஆக்சிஜன் டேங்கரை விட அதிக விரைவாகவும், அதிக அளவிலும் ஆக்சிஜனை தேசத்தின் மூலைகளுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது. ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸானது, முழுக்கமுழுக்க பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை அறியும் போது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெருமையாக இருக்கும். இவர்களுக்கு மட்டுமா, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தும். ஆக்சிஜன் எக்ஸ்பிரஸின் ஒரு லோகோ பைலட்டான ஷிரிஷா கஜினி அவர்களை மனதின் குரலுக்கு நான் வரவேற்றிருக்கிறேன்.
மோதி ஜி – ஷிரிஷா அவர்களே வணக்கம்.
ஷிரிஷா – வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?
மோதி ஜி – நான் நல்லாவே இருக்கேன். சரி, ஷிரிஷா அவர்களே, நீங்க ரயில்வே பைலட்டா பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க, முழுக்க முழுக்க உங்களோட பெண்களின் குழு தான் ஆக்சிஜன் எக்ஸ்ப்ரெஸை இயக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். ஷிரிஷா அவர்களே, கொரோனா காலகட்டத்தில நீங்க மிகச் சிறப்பான பணியாற்றிக்கிட்டு வர்றீங்க. இந்த வேளையில உங்களை மாதிரி பல பெண்கள், தாங்களே முன்வந்து, கொரோனாவோட போரிட தேசத்துக்கு பலம் அளிச்சிருக்காங்க. நீங்களும் பெண்களோட சக்திக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டா விளங்கறீங்க. சரி, உங்களுக்கு இப்படி செயல்பட எங்கிருந்து உத்வேகம் கிடைக்குதுன்னு நானும் சரி, தேசமும் சரி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம், சொல்லுங்களேன்!
ஷிரிஷா ஜி – சார், என்னோட உத்வேகமே என் அப்பா-அம்மா தான் சார். எங்கப்பா ஒரு அரசுத்துறை ஊழியர் சார். உள்ளபடியே எனக்கு ரெண்டு மூத்த சகோதரிகள் உண்டு. எல்லாரும் பெண்களாவே இருந்தாலும், எங்கப்பா எங்களை வேலை பார்க்க ரொம்ப ஊக்கப்படுத்துவாரு. என் மூத்த சகோதரி அரசு வங்கியில பணி புரியறாங்க, நான் ரயில்வேயில பணி புரியறேன். எங்க பெற்றோர் தான் எங்களுக்கு ஊக்கமே.
மோதி ஜி – சரி ஷிரிஷா அவர்களே, சாதாரண நாட்கள்லயும் நீங்க ரெயில்வேயுக்கு உங்க சேவைகளை அளிச்சு வந்திருக்கீங்க. ரயிலை இயல்பா இயக்கியிருக்கீங்க ஆனா, ஒரு புறம் ஆக்சிஜனுக்கு இத்தனை தேவை இருக்கற நிலையில, இதைக் கொண்டு போகறது பெரிய பொறுப்பான வேலை இல்லையா, அதிக பொறுப்பா நீங்க உணர்றீங்களா? வாடிக்கையான சரக்குகளைக் கொண்டு போகறது வேற விஷயம், ஆனா ஆக்சிஜன் ரொம்பவே நாசூக்கானது இல்லையா, உங்க அனுபவம் என்ன?
ஷிரிஷா – இந்த வேலையை செய்யறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார். ஆக்சிஜன் ஸ்பெஷல்னு வரும் போது எல்லாத்திலயும் கவனம் செலுத்துவோம் – பாதுகாப்பு, உரு அமைவு, கசிவு இருக்கான்னு பல கோணங்கள். அடுத்ததா, இந்திய ரயில்வேயும் ஒத்துழைப்பா இருக்காங்க சார். ஆக்சிஜனைக் கொண்டு போக எனக்கு green path, பசுமைப் பாதை அமைச்சுக் கொடுத்திருக்காங்க, இந்த வண்டியை மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில இயக்கலாம். இந்த அளவுக்கு ரயில்வேயும் பொறுப்பேத்துக்கிட்டு இருக்காங்க, நானும் பொறுப்பை மேற்கொண்டிருக்கேன் சார்.
மோதி ஜி – ஆஹா…. சரி ஷிரிஷா அவர்களே உங்களுக்கு பல பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன், உங்க தகப்பனார்-தாயாருக்கு சிறப்பான வகையில என் வணக்கங்களைத் தெரிவிக்கறேன். இவங்க தான் தங்களோட மூன்று பெண்களையும் உத்வேகப்படுத்தி, இந்த அளவுக்கு முன்னேத்தியிருக்காங்க, இப்படி ஒரு தன்னம்பிக்கையை அளிச்சிருக்காங்க. இந்த வகையில நாட்டுக்கு சேவை செய்துவர்ற, உத்வேகத்தோட பணியாற்றற அனைத்து சகோதரிகளுக்கும் சரி, அவங்களைப் பெற்றவங்களுக்கும் நான் என் வணக்கங்களைத் தெரிவிக்கறேன். ரொம்ப ரொம்ப நன்றி ஷிரிஷா அவர்களே.
ஷிரிஷா ஜி – நன்றி சார். தேங்க்யூ வெரி மச். உங்க ஆசீர்வாதம் வேணும் சார் எனக்கு.
மோதி ஜி – ஆண்டவனோட ஆசிகள் என்னைக்கும் உங்களுக்குக் கிடைக்கட்டும்மா. உங்க அப்பா அம்மாவோட ஆசிகள் நிரந்தரமா உங்களோட இருக்கட்டும்மா. ரொம்ப நன்றி.
ஷிரிஷா ஜி – நன்றி சார்.
நண்பர்களே, நாம் இப்போது ஷிரிஷா அவர்கள் கூறியதைக் கேட்டோம். அவருடைய அனுபவங்கள் உத்வேகம் அளிக்கின்றன, உணர்ச்சியில் ஆழ்த்துகின்றன. உள்ளபடியே இந்தப் போர் எத்தனை பெரியதென்றால், இதில் ரயில்வே துறையைப் போலவே, நமது தேசம் நீர், நிலம், வானம் என மூவழிகளிலும் பணியாற்றி வருகிறது. ஒருபுறத்தில் காலியாக இருக்கும் டேங்கர்கள் முதல், ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் வரை இந்திய விமானப் படை விமானங்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. மறுபுறத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கான பணிகள் முழுமை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், cryogenic டேங்கர்கள் எனப் பலவும், தேசத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த வகையில் கடற்படையாகட்டும், விமானப்படையாகட்டும், தரைப்படையாகட்டும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம்-DRDOவாகட்டும், நமது பல அமைப்புகளும் இணைந்து பணியாற்றுகின்றன. நமது பல விஞ்ஞானிகள், தொழில்துறை வல்லுநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவரின் பணிகளைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஆவல் நாட்டுமக்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்மிடையே இந்திய விமானப் படையின் க்ரூப் கேப்டன் பட்நாயக் அவர்கள் இருக்கிறார்.
மோதி ஜி – பட்நாயக் ஜி, ஜெய் ஹிந்த்.
க்ரூப் கேப்டன் – சார், ஜெய் ஹிந்த் சார். நான் க்ரூப் கேப்டன் ஏ.கே. பட்நாயக், இந்திய விமானப்படையின் ஹிண்டன் நிலையத்திலேர்ந்து பேசறேன் சார்.
மோதி ஜி – பட்நாயக் அவர்களே, கொரோனாவுக்கு எதிரான போர்ல, நீங்க மிகப்பெரிய பொறுப்பை நிர்வாகம் செய்திட்டு வர்றீங்க. உலகெங்கிலிருமிருந்து டேங்கர்களைக் கொண்டு வர்றது, அவற்றை இங்க கொண்டு சேர்க்கறதுன்னு. இராணுவத்தைச் சேர்ந்தவர்ங்கற முறையில, நீங்க ரொம்ப வித்தியாசமான வேலைய செய்திருக்கீங்க. மோதல்-சுட்டு வீழ்த்தல்னு சுறுசுறுப்பா இயங்கறது ஒண்ணு, ஆனா இன்னைக்கு நீங்க உயிரைக் காத்தல்ங்கற வகையில பரபரப்பா இயங்கறீங்க. இந்த அனுபவம் எப்படிப்பட்டது?
க்ரூப் கேப் – சார், இந்த சங்கடமான வேளையில நம்ம நாட்டுமக்களுக்கு உதவ முடிஞ்சா, இதை விட எங்களுக்கு வேற என்ன பெரிய பேறு இருக்க முடியும் சார்!! நாங்க மேற்கொள்ளும் செயல் திட்டம், இவற்றை நாங்க ரொம்ப சிறப்பா செயல்படுத்திக்கிட்டு இருக்கோம் சார். எங்களோட பயிற்சி மற்றும் துணை சேவைப்பிரிவுகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கறாங்க. மிகப்பெரிய விஷயம் என்னென்னா, எங்களுக்கு இதில ரொம்ப பெரிய நிலையிலான நிறைவு கிடைக்கறது தான்; இதன் காரணமாவே எங்களால தொடர்ச்சியா செயலாற்ற முடியுது.
மோதி ஜி – கேப்டன், இப்ப நீங்க மேற்கொண்ட முயற்சிகள், அதுவும் ரொம்பவே குறைவான நேரத்தில செய்ய வேண்டி இருந்திச்சு. இதைப் பத்தி உங்க உணர்வுகள் என்ன?
க்ரூப் கேப் – சார், கடந்த ஒரு மாத காலமா நாங்க தொடர்ந்து ஆக்சிஜன் டேங்கர்கள், திரவ ஆக்சிஜன் கண்டெய்னர்களை, உள்நாட்டு இடங்கள் மற்றும் அயல்நாட்டு இடங்கள் – இரண்டு இடங்கள்லேர்ந்தும் எடுத்துகிட்டுப் பயணிக்கறோம். சுமார் 1600க்கும் மேற்பட்ட இப்படிப்பட்ட தனி விமானங்களை இந்திய விமானப்படை இயக்கி முடிச்சிருக்கு. 3000த்திற்கும் மேற்பட்ட மணிநேரத்துக்கு நாங்க பயணம் செஞ்சிருக்கோம். சுமார் 160 சர்வதேச செயல்திட்டங்களை நாங்க செஞ்சு முடிச்சிருக்கோம். முன்ன எல்லாம் ஆக்சிஜன் டேங்கர்கள் உள்நாட்டுல 2 அல்லது 3 நாட்கள்ல கிடைச்சு வந்த நிலை மாறி, இப்ப இவற்றை நாங்க 2 அல்லது 3 மணி நேரத்துக்கு உள்ளாக, தேவையான இன்னொரு இடத்துக்கு இதன் காரணமா கொண்டு சேர்க்க முடியுது சார். மேலும் சர்வதேச செயல்திட்டங்கள்லயும் கூட, 24 மணிநேரம் தொடர்ந்து பணி செய்யறதுல, விமானப் படை முழுக்க இதில ஈடுபட்டிருக்கு. எத்தனை விரைவா அதிகமான டேங்கர்களைக் கொண்டு வர முடியுமோ, தேசத்துக்கு உதவ முடியுமோ, நாங்க செய்யறோம் சார்.
மோதி ஜி – கேப்டன், சர்வதேச அளவுல நீங்க எங்க எங்க எல்லாம் போக வேண்டி இருந்திச்சு?
க்ரூப் கேப் – சார், உத்திரவிட்ட மிகக் குறைவான நேரத்துக்குள்ளா, நாங்க சிங்கப்பூர், துபாய், பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து - இந்த இடங்கள் அனைத்திலயும் பலரக இந்திய விமானப்படைக் குழுக்கள், IL-76, C-17 மற்றும் பிற விமானங்கள் C-130 எல்லாம் மிகக் குறைந்த காலத்தில இந்தத் திட்டங்களுக்காகப் பயணப்பட்டிச்சு. எங்க பயிற்சி மற்றும் உற்சாகம் காரணமா எங்களால இந்த செயல்திட்டங்களை வெற்றிகரமா நிறைவேற்ற முடிஞ்சிச்சு சார்.
மோதி ஜி – இங்க பாருங்க, நீராகட்டும், நிலமாகட்டும், வான்பரப்பாகட்டும்…. நம்மோட இராணுவ வீரர்கள் எல்லாருமே கொரோனாவுக்கு எதிரான போர்ல ஈடுபட்டிருக்காங்கன்னு இந்த முறை தேசம் தாராளமா பெருமிதம் அடையலாம். கேப்டன் நீங்களும் ரொம்ப சிறப்பா உங்க கடமையை நிறைவேத்தி இருக்கீங்க, உங்களுக்கு என் பல பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன்.
க்ரூப் கேப் – சார், தேங்க்யூ சோ மச் சார். முழு அர்ப்பணிப்பு உணர்வோட நாங்க எல்லாரும் முயற்சிகள்ல ஈடுபட்டு வர்றோம் சார். என் பொண்ணும் என் கூட இருக்கா சார், அவ பேரு அதிதி.
மோதி ஜி – ஆஹா. பலே.
அதிதி – வணக்கம் மோதி ஜி.
மோதி ஜி – வணக்கம் செல்லம் வணக்கம். அதிதி, உங்களுக்கு என்ன வயசாகுது?
அதிதி – எனக்கு 12 வயசாகுது, நான் 8ஆம் வகுப்புல படிக்கறேன்.
மோதி ஜி – அப்பா வெளியில போகும் போது சீருடை அணிஞ்சிருப்பாங்களே!!
அதிதி – ஆமா. அவங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க எத்தனை மகத்தான வேலையை செய்யறாங்க!! அவங்க கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு பெரிய அளவுல உதவிட்டு இருக்காங்க, இத்தனை நாடுகள்லேர்ந்து ஆக்சிஜன் டேங்கர்களையும், கண்டெய்னர்களையும் கொண்டு வர்றாங்க.
மோதி ஜி – ஆனா பொண்ணே, நீங்க தான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுவீங்க இல்லை?
அதிதி – ஆமா, நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அவங்களால இப்ப எல்லாம் அதிகமா வீட்டுல இருக்க முடியறதே இல்லை; ஏன்னா ஏகப்பட்ட சர்வதேச பயணங்கள்ல போறாங்க, கண்டெய்னர்களையும், டேங்கர்களையும், ஏன், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளையும் கூட கொண்டுட்டு வர்றாங்க. அப்பத்தானே கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு நேரத்தில ஆக்சிஜன் கிடைச்சு, அவங்களால உயிர் பிழைச்சிருக்க முடியும்!!
மோதி ஜி – சரி பொண்ணே, ஆக்சிஜன் காரணமா மக்களோட உயிரைக் காப்பாத்தற பணி பத்தி இப்ப எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்சிருக்கு.
அதிதி – ஆமா.
மோதி ஜி – உங்க அப்பா ஆக்சிஜன் கொண்டு சேர்க்கற சேவையில ஈடுபட்டிருக்காங்கன்னு உங்க நட்பு வட்டத்தில, உங்க கூட படிக்கற மாணவர்களும் தெரிஞ்சுக்கும் போது, உங்களையும் ரொம்ப மதிப்போட பார்ப்பாங்க இல்லை?
அதிதி – ஆமா, என் நண்பர்கள் எல்லாரும், உன் அப்பா இத்தனை முக்கியமான வேலை பார்க்கறாங்க, உனக்கு பெருமையா இருக்கும் இல்லையான்னு சொல்லும் போது, எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கும். என் குடும்பத்தார் எல்லாரும்…. எங்கம்மாவோட அப்பா அம்மா, எங்க அப்பாவோட அம்மா எல்லாருக்குமே எங்கப்பாவைப் பத்தி ரொம்பவே பெருமை. எங்கம்மா, இரவு பகலா சேவை செய்யற மருத்துவர்கள், இராணுவத்தார் எல்லாரும், எங்கப்பாவோட ஸ்க்வாட்ரனைச் சேர்ந்த uncles எல்லாரும், இராணுவம் முழுக்க பெரிய வேலையில ஈடுபட்டிருக்காங்க. நாம கண்டிப்பா, எல்லாரோட முயற்சிகள் துணையோட, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போர்ல வெற்றி பெறுவோம்னு எனக்கும் ரொம்ப நம்பிக்கை இருக்கு.
மோதி ஜி – நம்ம நாட்டுல ஒண்ணு சொல்லுவாங்க, ஒரு பொண் குழந்தை ஒண்ணு சொன்னா, அவ வாக்குல சரஸ்வதி தேவியே வாசம் செய்யறாம்பாங்க. இப்ப அதிதி சொல்றா, நாம கண்டிப்பா கொரோனாவுக்கு எதிரான போர்ல ஜெயிப்போம்னு, இது ஒருவகையில கடவுளோட வாக்கா அமைஞ்சிருக்கு. சரி அதிதி, இப்ப ஆன்லைன்ல படிக்கறீங்க இல்லையா?
அதிதி – ஆமா, இப்ப எல்லாம் ஆன்லைன்ல தான் வகுப்புகள் நடக்குது, நாங்க எல்லாம் வீட்டுலயும் எல்லா முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக்கறோம், எங்கயாவது வெளிய போகணும்னா, ரெண்டு முகக்கவசங்களை அணிவோம், எல்லா முன்னெச்சரிக்கைகள், தனிநபர் சுகாதாரம்னு எல்லா விஷயங்கள்லயும் கவனமா இருக்கோம்.
மோதி ஜி – சரி செல்லம், உங்க பொழுதுபோக்குகள்லாம் என்ன? உங்களுக்கு என்ன பிடிக்கும்?
அதிதி – என்னோட பொழுதுபோக்குகள்னா, நீச்சல், அப்புறம் கூடைப்பந்து. ஆனா இப்ப இதெல்லாம் தான் நின்னு போயாச்சே. ஆனா இந்த பொது ஊரடங்கு, கொரோனா வைரஸ் காரணமா, எனக்கு விருப்பமான baking மற்றும் சமையல் செஞ்சு, அப்பா வீட்டுக்கு வரும் போது அவருக்காக cookies, cake எல்லாம் செஞ்சு குடுப்பேன்.
மோதி ஜி – சபாஷ், பலே, பலே. சரி செல்லம், ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்பாவோட நேரம் கழிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப அருமையா இருந்திச்சு, கேப்டன் உங்களுக்கும் நான் என் பல பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன், ஆனா நான் கேப்டனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் போது, உங்களுக்கு மட்டுமில்லை, நம்ம இராணுவத்தார் – நீர்-நிலம்-வான்படை வீரர்கள் எல்லாருக்கும்…… அவங்க எல்லாருக்கும் சல்யூட் செய்யறேன். நன்றி சகோதரா.
க்ரூப் கேப் – தேங்க்யூ சார்.
நண்பர்களே, நமது இந்த வீரர்கள் ஆற்றியிருக்கும் பணி, இவற்றுக்காக நாடு இவர்களுக்குத் தலை வணங்குகிறது. இதைப் போலவே இலட்சக்கணக்கானோர், இரவுபகலாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஆற்றும் பணி, இது அவர்களின் வாடிக்கையான பணியாக இல்லை. இதைப் போன்ற ஒரு பேரிடர் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இத்தனை பெரிய சங்கடம்! ஆகையால், இது போன்ற ஒரு பணி குறித்து யாரிடத்திலும் எந்த அனுபவமும் கிடையாது. இவற்றின் பின்னணியில் தேச சேவை என்ற வேட்கை இருந்தது, ஒரு உறுதிப்பாடு இருந்தது. இதன் காரணமாக தேசம் செய்திருக்கும் இந்தப் பணி, முன்னெப்போதும் செய்யப்பட்டதில்லை. சற்று நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள், சாதாரணமாக நம் நாட்டில் 900 மெட்ரிக் டன், மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தியாகி வந்தது. இப்போது இது பத்து மடங்கு அதிகரித்து, கிட்டத்தட்ட 9500 மெட்ரிக் டன் அளவில் தினமும் உற்பத்தி ஆகி வருகிறது. இந்த ஆக்சிஜனை நமது வீரர்கள் தேசத்தின் தொலைவான மூலைகள் வரை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, ஆக்சிஜனைக் கொண்டு சேர்க்க தேசத்தில் இத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இத்தனை பேர்கள் இணைந்து செயல்படுகிறார்கள், ஒரு குடிமகன் என்ற முறையில், இவர்கள் அனைவரும் கருத்தூக்கம் அளிப்பவர்களாக விளங்குகிறார்கள். குழுக்கள் ஏற்படுத்தி, அனைவரும் தங்களுடைய கடமைகளை ஆற்றி இருக்கின்றார்கள். பெங்களூரூவைச் சேர்ந்த ஊர்மிளா அவர்கள், அவருடைய கணவர் பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளர் என்றும், எத்தனையோ சவால்களுக்கும் சிரமங்களுக்கும் இடையே தொடர்ந்து அவர் பரிசோதனைப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நண்பர்களே, கொரோனாவின் தொடக்கக் கட்டத்தில், தேசத்தில் ஒரே ஒரு பரிசோதனைக் கூடம் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ 2,500க்கும் மேற்பட்ட கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் சில நூறு பரிசோதனைகளே செய்ய முடிந்தது, ஆனால் இப்போதோ 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் ஒரே நாளில் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. இதுவரை தேசத்தில் 33 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு விட்டன. இத்தனை பெரிய வேலை, இந்த நண்பர்கள் காரணமாகவே சாத்தியமாகி இருக்கிறது. எத்தனையோ முன்களப் பணியாளர்கள், மாதிரி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். தொற்று பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கிடையே செல்வது, அவர்களிடமிருந்து மாதிரியை எடுப்பது என்பதெல்லாம் எத்தனை பெரிய சேவை!! தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இந்த நண்பர்கள், இத்தனை வெப்பத்திலும் தொடர்ந்து முழுவுடல் பாதுகாப்புக் கவச உடையான PPE KITஐ அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பிறகு இந்த மாதிரியை பரிசோதனைக் கூடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. உங்கள் அனைவரின் ஆலோசனைகள், வினாக்களை நான் வாசித்துக் கொண்டிருந்த போது, இவர்களைப் போன்ற நண்பர்களைப் பற்றியும் நாம் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். இவர்களுடைய அனுபவங்களிலிருந்து நம்மால் நிறைய கற்க முடியும். தில்லியின் ஒரு பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளரான பிரகாஷ் காண்ட்பால் அவர்களோடு உரையாடுவோம் வாருங்கள்.
மோதி ஜி – பிரகாஷ் அவர்களே, வணக்கம்.
பிரகாஷ் ஜி – வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே.
மோதி ஜி – பிரகாஷ் அவர்களே, முதன்மையா, நீங்க மனதின் குரல் நேயர்களுக்கு உங்களைப் பத்தி சொல்லுங்க. நீங்க எத்தனை காலமா இந்தப் பணியில ஈடுபட்டிருக்கீங்க, கொரோனா காலத்தில உங்க அனுபவம் என்ன; ஏன்னா, நாட்டுமக்களுக்கு டிவியிலயோ, செய்தித்தாள்கள்லயோ இந்த மாதிரியா எல்லாம் யாரும் காட்டறது கிடையாது. இருந்தாலும், ஒரு ரிஷியை மாதிரி நீங்க பரிசோதனைக் கூடத்திலயே இருந்து வேலை பார்க்கறீங்க. இப்படிப்பட்ட நீங்க சொன்னீங்கன்னா, நாட்டுல வேலைகள் எப்படி நடந்திட்டு வருதுன்னு நாட்டுமக்களுக்கும் தகவல்கள் கிடைக்கும்.
பிரகாஷ் ஜி – நான் தில்லி அரசோட சுயாதீனமான Institute of Liver and Biliary Sciences, அப்படீங்கற ஒரு மருத்துவமனையில கடந்த பத்தாண்டுகளா பரிசோதனைக்கூட தொழில்நுட்ப பணியாளரா பணியாற்றிக்கிட்டு இருக்கேன். சுகாதாரத் துறையில எனக்கு 22 ஆண்டுக்கால அனுபவம் உண்டு. ILBSக்கு வர்றதுக்கு முன்னால, நான் தில்லியோட அப்போலோ மருத்துவமனை, ராஜீவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனை, ரோட்டரி ரத்தவங்கி மாதிரியான பிரபலமான அமைப்புகள்ல பணிபுரிஞ்சிருக்கேன். சார், எல்லா இடங்கள்லயும் நான் ரத்தப் பரிசோதனைத் துறையில பணி செஞ்சிருந்தாலும், கடந்த ஓராண்டுக்காலமா, ஏப்ரல் 1, 2020லேர்ந்து, நான் ILBSஓட, Virology, அதாவது நச்சுநுண்மவியல் துறையின், கோவிட் பரிசோதனைக் கூடத்தில வேலை செஞ்சிட்டு வர்றேன். கோவிட் பெருந்தொற்று, உடல்நலம் மற்றும் இதோட தொடர்புடைய எல்லா விஷயங்கள் மேலயும் அளவுக்கு அதிகமான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்குங்கறதுல சந்தேகமே இல்லை. ஆனா, நான் இந்தப் போராட்டத்தைத் தனிப்பட்ட முறையில ஒரு சந்தர்ப்பமாவே பார்க்கறேன்; ஏன்னா, தேசம், மனித சமூகம், சமுதாயம் எல்லாம் எங்க கிட்ட அதிக பொறுப்புணர்வு, அதிக உதவி, அதிக திறமை, அதிக வல்லமை எல்லாத்தையும் எதிர்பார்க்குது, நம்பிக்கையோட இருக்காங்க. சார், நாங்க தேசம், மனித சமூகம், சமுதாயம் இவங்களோட எதிர்பார்ப்புக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் ஏற்ப நடப்பது ஒரு மிகச் சிறிய பங்களிப்புத் தான். நாங்க எங்க கடமையைத் தான் செய்யறோம், இதில வெற்றி கிடைக்கும் போது, பெரிய கௌரவ உணர்வு மேலிடுது. சில சமயங்கள்ல குடும்ப உறுப்பினர்களுக்குக் கொஞ்சம் பயம் ஏற்படும் போது, நம்ம நாட்டு இராணுவ வீரர்கள், எப்பவுமே குடும்பத்தை விட்டு விலகி, தொலைவான எல்லைகள்ல, கடினமான, பயங்கரமான சூழ்நிலைகள்ல நாட்டுக்குப் பாதுகாப்பளிப்பதில ஈடுபட்டிருக்காங்க அப்படீங்கற போது, அதோட ஒப்பிட்டுப் பார்க்கையில, நாங்க மேற்கொண்டிருக்கற காரியத்தில சிரமம் ஒண்ணுமே இல்லை அப்படீன்னு சொல்லிப் புரிய வைப்பேன். அப்ப அவங்களும் புரிஞ்சுக்குவாங்க, என்னோட இணைஞ்சு, எனக்கு உதவிகரமா இருப்பாங்க, இந்த பயங்கரமான சூழ்நிலையில தங்களோட பங்களிப்பை அளிப்பாங்க.
மோதி ஜி – பிரகாஷ் அவர்களே, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்க அப்படீன்னு ஒருபுறத்தில அரசு இடைவிடாம சொல்லிட்டு வருது. ஆனா நீங்களோ, நோய்க்கிருமிக்கு முன்னாலயே இருந்துக்கிட்டு, கொரோனா நுண்கிருமிகளுக்கு இடையிலேயே வசிக்க வேண்டியிருக்கு. இதுவே உயிருக்குப் பேராபத்தான விஷயம்ங்கற போது, குடும்பத்தார் கவலைப்படுறதுல அர்த்தம் இருக்கு. ஆனாலும் கூட, பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளர்ங்கற பணி ஒரு வாடிக்கையான, சாதாரணமான ஒண்ணு. ஆனா இப்படிப்பட்டப் பெருந்தொற்று வேளையில நீங்க பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க அப்படீங்கற போது நிலைமையே வேற. பணிபுரியும் நேரம் அதிகமா இருக்கும் இல்லையா? இரவுபகலா பரிசோதனைக்கூடத்திலயே கழிக்க வேண்டியிருக்கும், ஏன்னா, ஏகப்பட்ட மனிதர்களை பரிசோதனை செய்யணுங்கற பணிச்சுமை இருக்குமே? ஆனா உங்க பாதுகாப்புக்கு நீங்க என்னவெல்லாம் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்றீங்க?
பிரகாஷ் ஜி – கண்டிப்பா மேற்கொள்றோம் சார். எங்க ILBS பரிசோதனைக்கூடம் உலக சுகாதார நிறுவனத் தரச்சான்று பெற்றது. அந்த வகையில எல்லா நெறிமுறைகளும் சர்வதேச தரநிலைகளுட்பட்டவை. நாங்க மூன்று நிலைகள் உடைய உடுப்பை அணிஞ்சுக்கிட்டுத் தான் கூடத்துக்குள்ளவே போவோம், இதைப் போட்டுக்கிட்டுத் தான் வேலை பார்ப்போம். இவற்றை முழுமையா நிராகரிக்க, முத்திரையிட, சோதிச்சுப் பார்க்கன்னு முழுமையான நெறிமுறைகள் இருக்கு, இது பிரகாரம் நாங்க பணியாற்றறோம். சார், இறைவனோட அருளால, என் குடும்பமும் சரி, எனக்கு வேண்டியப்பட்டவங்க குடும்பங்கள் பெரும்பாலும் இந்தப் பெருந்தொற்றிலிருந்து காப்பாத்தப் பட்டிருக்காங்க. ஒரு விஷயம் என்னென்னா, எச்சரிக்கையா இருந்தோம்னு சொன்னா, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிச்சோம்னு சொன்னா, கணிசமான அளவுக்கு இதிலேர்ந்து நம்மைத் தற்காத்துக்கலாம்.
மோதி ஜி – பிரகாஷ் ஜி, உங்களை மாதிரி ஆயிரக்கணக்கான பேர்கள் கடந்த ஓராண்டுக்காலமா பரிசோதனைக்கூடத்திலேயே இருந்து, கடினமா உழைச்சுக்கிட்டு வர்றீங்க. நிறைய பேர்களைக் காப்பாத்தற பணியை செஞ்சுக்கிட்டு வர்றீங்க. இதை இன்னைக்கு தேசம் தெரிஞ்சுக்கிட்டு இருக்கு. பிரகாஷ் அவர்களே, உங்க மூலமா, உங்களை மாதிரியான பணியில ஈடுபட்டிருக்கற உங்களோட நண்பர்கள் எல்லாருக்கும் என் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். நாட்டுமக்கள் தரப்பிலிருந்தும் நான் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். நீங்க ஆரோக்கியமா இருங்க, உங்க குடும்பத்தார் எல்லாரும் ஆரோக்கியமா வாழட்டும், என்னோட பல நல்வாழ்த்துக்கள்.
பிரகாஷ் ஜி – நன்றி பிரதமர் அவர்களே. இந்த ஒரு நல்வாய்ப்பை எனக்குத் தந்ததுக்காக நான் உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன்.
மோதி ஜி – நன்றிகள் சகோதரா.
நண்பர்களே, ஒருவகையில், நான் பிரகாஷ் என்ற ஒரு சகோதரனோடு மட்டுமே பேசினேன் என்றாலும், இவரது சொற்களில் ஆயிரக்கணக்கான பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளர்களின் சேவையின் மணம் கமழ்வதை என்னால் உணர முடிந்தது. இந்த வார்த்தைகளில் ஆயிரக்கணக்கான-இலட்சக்கணக்கான மனிதர்களின் சேவையுணர்வு பளிச்சிடுகிறது, நம்மனைவரின் பொறுப்புக்களை இது நினைவூட்டுகிறது. எத்தனை கடுமையாகவும், ஈடுபாட்டோடும் சகோதரர் பிரகாஷ் பணியாற்றி வருகின்றாரோ, அதே அளவு முனைப்போடு அவருடைய ஒத்துழைப்பு, கொரோனாவை முறியடிக்க பேருதவி புரியும்.
என் உளம்நிறை நாட்டுமக்களே, நாம் தற்போது கொரோனா வீரர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கடந்த ஒண்ணரை ஆண்டுக்காலமாக நாம் இவர்களின் முழுமையான அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கண்கூடாகக் கண்டு வந்திருக்கிறோம். ஆனால் இந்தப் போரிலே, மிகப்பெரிய பங்களிப்பு, தேசத்தின் பல துறைகளில் பல வீரர்களுக்கும் கூடச் சொந்தமானது. சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, நம்முடைய தேசத்தில் இத்தனை பெரிய சங்கடம் பூதாகாரமாக வடிவெடுத்திருக்கிறது, இது பாதிக்காத அமைப்போ துறையோ எதுவுமே இல்லை என்ற நிலையில், விவசாயத் துறை இந்தத் தாக்குதலிலிருந்து கணிசமாகத் தன்னைத் தற்காத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னேற்றமும் கண்டிருக்கிறது. இந்தப் பெருந்தொற்றிலும் கூட விவசாயப் பெருமக்கள் சாதனை அளவிலான உற்பத்தியை செய்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? விவசாயிகள் சாதனை அளவிலான உற்பத்தியும் செய்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம் என்றால், தேசத்தில் இதுவரை வரலாறு காணாத வகையில் உணவுதானியக் கொள்முதலும் நடந்திருக்கிறது. இந்த முறை பல இடங்களில் கடுகு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விடவும் அதிக விலை கிடைத்திருக்கிறது. சாதனை படைத்த உணவுதானிய உற்பத்தி காரணமாகவே நமது தேசத்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவு அளிக்க முடிந்திருக்கிறது. இன்று இந்த சங்கடக் காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன, எந்த ஒரு ஏழையின் வீட்டிலும் அடுப்பு எரியாமல் இருக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம்.
நண்பர்களே, இன்று நமது நாட்டின் விவசாயிகள், பல துறைகளில் புதிய அமைப்புக்களால் ஆதாயம் அடைந்து அற்புதங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அகர்தலாவின் விவசாயிகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த விவசாயிகள் மிகச் சிறப்பான வகையில் பலாப்பழ சாகுபடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவற்றுக்கான தேவை உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் இருக்கலாம் என்பதால், இந்த முறை அகர்தலாவின் விவசாயிகள் பலாப்பழத்தை ரயில்கள் வாயிலாக குவாஹாட்டிக்குக் கொண்டு வந்தார்கள். குவாஹாட்டியிலிருந்து இந்தப் பலாப்பழங்கள் லண்டன் மாநகருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதைப் போன்றே பிஹாரின் ஷாஹி லீச்சிப் பழங்களின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 2018ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த ஷாஹி லீச்சிப் பழங்களுக்கு புவியியல் அடையாளமான GI Tagஇனை அளித்தது; இதற்கென ஒரு பலமான அடையாளமும், விவசாயிகளுக்கு அதிக ஆதாயமும் ஏற்பட வேண்டும் என்பதை முன்னிட்டு இவ்வாறு செய்தது. இந்த முறை பிஹாரின் இந்த ஷாஹி லீச்சி, வான் வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கிலிருந்து தெற்கு…. என நமது தேசத்தில் இப்படிப்பட்ட அருமையான சுவைகளும், உற்பத்திப் பொருட்களும் நிறைந்திருக்கின்றன. தென்னிந்தியாவில், விஜயநகரத்தின் மாம்பழம் பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாம்பழத்தை யார் தான் உண்ண விரும்ப மாட்டார்கள்!! ஆகையால் இப்போது விவசாயிகள்-ரயில், ஆயிரக்கணக்கான டன் விஜயநகர மாம்பழங்களை தில்லிக்குக் கொண்டு சேர்த்து வருகிறது. தில்லி மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கு, விஜயநகர மாங்கனிகள் உண்ணக் கிடைக்கும், விஜயநகர விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் உண்டாகும். விவசாயிகள் ரயில் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் டன் விளை பொருட்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இப்போது விவசாயிகளுக்கு மிகக் குறைவான செலவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை தேசத்தின் தொலைவான பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, இன்று மே மாதம் 30ஆம் தேதியன்று நாம் மனதின் குரலில் ஈடுபட்டிருக்கும் வேளையில்…… நமது அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வுப் பொருத்தம். இப்போதெல்லாம் தேசம் அனைவரையும் இணைத்து, அனைவருக்குமான முன்னேற்றம், அனைவரின் நம்பிக்கை என்ற மந்திர வாக்கின்படி பயணித்து வருகிறது. நாமனைவருமே ஒவ்வொரு கணமும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றோம். மனதின் குரலின் 7 ஆண்டுக்காலப் பயணத்தில் உங்களுடைய-நம்முடைய இந்தப் பயணம் குறித்துப் பேச வேண்டும் என்று கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நண்பர்களே, இந்த ஏழாண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள், நாட்டின் சாதனைகள், நாட்டுமக்களின் சாதனைகள். நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் எத்தனையோ பெருமிதமான கணங்களை நாமனைவரும் இணைந்து அனுபவித்திருக்கிறோம். நம்முடைய பாரதம் பிற நாடுகளின் கருத்து-எண்ணம்-அழுத்தத்திற்கு மசிவதில்லை, தனது உறுதிப்படியே அது நடக்கிறது என்பதைக் காணும் போது, அனைவருக்கும் பெருமிதம் உண்டாகிறது. இப்போதெல்லாம் பாரதம் தனக்கெதிராக சூழ்ச்சிகளைப் பின்னுவோருக்கெல்லாம் தாடையைத் தவிடுபொடியாக்கும் பதிலடியைக் கொடுக்கிறது என்பதைப் பார்க்கும் போது, தன்னம்பிக்கை வளர்கிறது. தேசியப் பாதுகாப்பு விஷயங்களில் பாரதம் விட்டுக் கொடுப்பதில்லை, நமது படைகளின் சக்தி அதிகரிக்கிறது என்பதை நோக்கும் போது, நாம் சரியாகவே பயணிக்கிறோம் என்று நமக்குப் படுகிறது.
நண்பர்களே, நாட்டுமக்கள் பலர் அனுப்பியிருக்கும் செய்தி, அவர்களின் கடிதங்கள் நாட்டின் பல இடங்களிலிருந்தும் வந்த வண்ணம் இருக்கின்றன. 70 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் கிராமத்தில் முதன்முறையாக மின்சாரம் வந்திருக்கிறது, தங்களுடைய குழந்தைகளால் மின்விளக்கைக் காண முடிகிறது, மின்விசிறி கீழமர்ந்து அவர்களால் படிக்க முடிகிறது என்று எத்தனையோ பேர்கள் தேசத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறார்கள். எங்களுடைய கிராமம் செப்பனிடப்பட்ட சாலை காரணமாக இப்போது நகரத்தோடு இணைந்து விட்டது என்று எத்தனையோ பேர்கள் கூறுகிறார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது….. ஒரு பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த சில நண்பர்கள் எனக்கு ஒரு தகவலைத் தெரிவித்திருந்தார்கள்….. அதாவது சாலை போடப்பட்ட பிறகு, முதன்முறையாக தாங்களும் பாக்கி உலகத்தோடு இணைந்து விட்டதாக ஒரு உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்கள். இதே போல எங்கோ பலர் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள், வேறு சிலர் பல்வேறு நலத்திட்டங்களின் உதவியோடு புதிய வேலையைத் தொடங்கிய பிறகு, சந்தோஷமாக எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டப்படி வீடு கிடைத்த பிறகு, புதுமனைப் புகுவிழாவிற்கு எத்தனையோ அழைப்பிதழ்கள், நாட்டுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இந்த ஏழாண்டுகளில், உங்களனைவரின் இந்தக் கோடிக்கணக்கான சந்தோஷங்களில் நான் பங்கெடுத்து வந்திருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார், ஜல்ஜீவன் திட்டத்தின்படி, வீட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர்க் குழாயை படம்பிடித்து எனக்கு அனுப்பியிருந்தார்கள். இதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பு என்ன தெரியுமா? என்னுடைய கிராமத்தின் உயிரூற்று. இப்படி எத்தனையோ குடும்பங்கள் உண்டு. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது தேசத்தின் வெறும் மூணரை கோடி கிராமப்புற மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 21 மாதங்களில் மட்டும் நாலரை கோடிக் கிராமப்புற வீடுகளுக்கு, குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 15 மாதங்கள், கொரோனாக் காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்றே மேலும் ஒரு புதிய நம்பிக்கை, தேசத்தின் ஆயுஷ்மான் திட்டம் வாயிலாகவும் பிறந்திருக்கிறது. ஒரு ஏழை, இலவச சிகிச்சை வாயிலாக குணமடைந்து வீடு திரும்பும் போது, தனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருப்பதாக உணர்வார். தேசம் அவருக்கு உற்ற துணையாக இருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படும். இப்படி எத்தனையோ குடும்பங்களின் நல்லாசிகள், கோடானுகோடி தாய்மார்களின் நல்லாசிகளின் துணையோடு, நமது தேசம் மிகுந்த பலத்தோடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிறது.
நண்பர்களே, இந்த ஏழாண்டுகளில் பாரதம் மின்னணு பரிவர்த்தனைகளில் உலகிற்கு ஒரு புதிய திசையைக் காட்டியிருக்கிறது. இன்று எந்த ஒரு இடத்திலிருந்தும், சொடுக்குப் போடும் நேரத்தில் நீங்கள் மின்னணு முறையில் பணம் செலுத்திவிட முடியும். கொரோனா சமயத்தில் இது மிகப் பயனுடையதாக நிரூபணமாகி வருகிறது. இன்று தூய்மை தொடர்பாக நாட்டுமக்கள் மத்தியில் தீவிரத்தன்மையும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. நாம் வரலாறு காணாத அளவிற்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறோம், அதே சாதனை படைக்கும் அளவுக்கு சாலைகளையும் உருவாக்கி வருகிறோம். இந்த ஏழாண்டுகளில் தேசத்தின் பலகாலமாக நிலுவையிலேயே இருந்த பிரச்சனைகளை, முழுமையான அமைதியோடும், சகோதரத்துவத்தோடும் தீர்க்க முடிந்திருக்கிறது. வடகிழக்கு தொடங்கி கஷ்மீரம் வரை அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஒரு புதிய நம்பிக்கை விழிப்படைந்திருக்கிறது. 70 ஆண்டுக்காலமாக நடக்கவே நடக்காத பணிகள், இந்த ஏழாண்டுகளில் எப்படி சாத்தியமானது என்று நீங்கள் சிந்தியுங்கள். நாம், அரசாங்கம் -- குடிமக்கள் என்று தனித்தனியாக செயல்படுவதை விட அதிகமாக, ஒரு தேசமாக, ஒரு குழுவாகப் பணியாற்றியிருக்கிறோம், டீம் இண்டியா என்று செயல்பட்டிருக்கிறோம். தேசத்தை முன்னெடுத்துச் செல்வதில், ஒன்றிரண்டு படிகள் முன்னெடுக்கும் முயற்சிகளில், ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆம், எங்கே எல்லாம் வெற்றிகள் கிடைக்கின்றனவோ, அங்கே எல்லாம் சோதனைகளும் இருக்கத் தானே செய்யும்!! இந்த ஏழாண்டுக்காலத்தில் நாமனைவருமாக இணைந்து பல கடினமான சோதனைகளையும் எதிர்கொண்டோம், ஒவ்வொரு முறையும் நாம் மேலும் பலமடைந்தவர்களாகவே வெளிப்பட்டோம். கொரோனா பெருந்தொற்று வடிவில் இத்தனை பெரிய சோதனை தொடர்ந்து வருகிறது. இது எப்படிப்பட்ட சங்கடம் என்றால் இது, உலகம் முழுவதையும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது, இதனால் பலர் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து வாடுகிறார்கள். பெரியபெரிய தேசங்கள் எல்லாம் இதன் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியவில்லை. இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையே, சேவையும், உதவியும் என்ற உறுதிப்பாட்டோடு பாரதம் முன்னேறி வருகிறது. நாம் முதல் அலையின் போதும், முழு நம்பிக்கையோடும் உறுதிப்பாட்டோடும் போரிட்டோம். இந்த முறையும், வைரஸ் கிருமிக்கு எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கும் இந்தப் போரில் பாரதம் வெல்லும். நான்கடி இடைவெளி, முகக்கவசத்தோடு தொடர்புடைய விதிமுறைகள் ஆகட்டும், அல்லது தடுப்பூசி தொடர்பானவையாகட்டும், நாம் கண்டிப்பாக தளர்ச்சியைக் காட்டக் கூடாது. இதுவே நமது வெற்றிக்கான பாதை. அடுத்த முறை மனதின் குரலுக்காக நாம் இணையும் போது, நாட்டுமக்களின், உத்வேகம் அளிக்கும் பல எடுத்துக்காட்டுக்களோடு பேசுவோம், புதிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்போம். உங்கள் ஆலோசனைகளை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், தேசத்தை இதே போன்று முன்னேற்றப் பாதையில் செலுத்திக் கொண்டே வாருங்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மனைவரின் பொறுமையையும், துன்பத்தைத் தாங்கும் திறனையும் கொரோனாவானது சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நமக்கு உற்றவர்கள் பலர் அசந்தர்ப்பமான வேளையில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், தேசத்தின் மனோநம்பிக்கை பொங்கிக் கொண்டிருந்தது, தன்னம்பிக்கை நிரம்பி இருந்தது, ஆனால் இந்தச் சூறாவளியானது தேசத்தை உலுக்கி விட்டிருக்கிறது.
நண்பர்களே, கடந்த நாட்களில் இந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி, பல்துறை வல்லுநர்களோடு நான் நீண்ட விவாதங்களை மேற்கொண்டேன். நமது மருந்தியல் துறையைச் சார்ந்தவர்களாகட்டும், தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் ஆகட்டும், ஆக்சிஜென் தயாரிப்பில் ஈடுபட்டிருப்போராகட்டும், மருத்துவத் துறை வல்லுநர்கள் என அனைவரும் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு அளித்தார்கள். இந்த வேளையில், நாம் இந்தப் போராட்டத்தில் வெல்வதற்கு, வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். மாநில அரசுகளின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல, இந்திய அரசு முழுச் சக்தியோடு முனைந்திருக்கிறது. மாநில அரசுகளும் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழுவீச்சில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நண்பர்களே, கொரோனாவுக்கு எதிராக இந்த வேளையிலே மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு, தேசத்தின் மருத்துவர்களும், சுகாதாரப்பணியாளர்களும் இப்பொழுது போராடி வருகின்றார்கள். கடந்த ஓராண்டுக்காலத்தில், இந்த நோய்த்தொற்று தொடர்பான அனைத்து விதமான அனுபவமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மிகவும் பிரபலமான, மும்பையைச் சேர்ந்த மருத்துவரான சஷாங்க் ஜோஷி அவர்கள் இப்பொழுது நம்மோடு தொடர்பில் இருக்கிறார். டாக்டர் சஷாங்க் அவர்களிடத்திலே கொரோனாவுக்கான சிகிச்சை, மேலும் இதனுடன் தொடர்புடைய ஆய்வு பற்றிய அடிப்படை அனுபவங்கள் இருக்கின்றன, இவர் Indian College of Physicians, இந்திய மருத்துவர்கள் கல்லூரியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். வாருங்கள், நாம் டாக்டர் சஷாங்க் அவர்களோடு பேசுவோம் –
மோதிஜி – வணக்கம் டாக்டர் சஷாங்க் அவர்களே
டாக்டர் சஷாங்க் – வணக்கம் சார்.
மோதிஜி – சில நாட்கள் முன்னால உங்களோட உரையாடக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சுது. உங்களோட கருத்துக்களின் தெளிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. உங்களோட கருத்துக்கள் பத்தி நாட்டுமக்களுக்கும் தெரியணும்னு நான் விரும்பறேன். காதுகள்ல வந்து விழும் செய்திகளை எல்லாம் திரட்டி ஒரு கேள்வியா உங்க முன்னால நான் வைக்க விரும்பறேன். டாக்டர் சஷாங்க், நீங்க எல்லாரும் இரவுபகல் பாராம மக்களோட உயிர்களைக் காக்கற பணியில ஈடுபட்டு வர்றீங்க. முதன்மையா நீங்க இந்த இரண்டாவது அலை குறித்து மக்களுக்குத் தெரிவிக்கணும்னு விரும்புகிறேன். மருத்துவரீதியாக இது எவ்வாறு மாறுபட்டது, என்னவெல்லாம் எச்சரிக்கைகளை நாம் மேற்கொள்ளணும்.
டாக்டர் சஷாங்க் - நன்றிகள் சார், புதியதா வந்திருக்கக்கூடிய இந்த இரண்டாவது அலை, இது மிக விரைவாகப் பரப்புது. முதலாவதா வந்த அலை பரப்பியதை விட இந்த அலை நுண்கிருமிகளை அதிக விரைவாக பரப்புது. ஆனா ஒரு நல்ல விஷயம் என்னென்னா, இதிலிருந்து மீட்சி வீதம் அதிகம், இறப்பு வீதம் குறைவு. இந்த அலைகளுக்கு இடையே, 2-3 வித்தியாசங்கள் இருக்கு, முதலாவதா இது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிலும் கொஞ்சம் காணப்படுது. இதற்கான அறிகுறிகள், முன்ன மாதிரியே மூச்சிரைப்பு, வறட்டு இருமல், காய்ச்சல்னு எல்லாம் பழைய அலையில் வந்தது மாதிரியே இருந்தாலும், கூடவே முகர்வுத் திறனின்மை, சுவைத்திறனின்மையும் ஏற்படுது. மேலும், மக்கள் பீதியடையறாங்க. இதனால பீதியடைய வேண்டிய அவசியமே கிடையாது. 80-90 சதவீதம் பேர்களுக்கு இவற்றில எந்த அறிகுறியுமே தென்படுறதில்லை, mutationன்னு சொல்லப்படும் மாறுபாட்டால பயப்படத் தேவையில்லை. இந்த மாறுபாடு நிகழ்ந்துக்கிட்டே தான் இருக்கும். எப்படி நாம நம்ம உடைகளை மாத்தறோமோ, இதை மாதிரியே இந்த நுண்கிருமியும் தன்னோட நிறத்தை மாத்திக்குது, ஆகையால கண்டிப்பாக இதனால பீதியடையவே தேவையில்லை, இந்த அலையையும் நாம் கடந்துருவோம். அலைகள் வரும் போகும் அப்படீங்கற மாதிரியே இந்த நுண்கிருமியும் வரும் போகும். ஆக, இவை தான் வேறுபட்ட அறிகுறிகள் அப்படீன்னாலும், நாம மருத்துவரீதியா எச்சரிக்கையோடு இருக்கணும். 14 முதல் 21 நாட்கள் வரையிலான இந்த கோவிடுடைய அட்டவணை இருக்கு, இது தொடர்பா மருத்துவர்களோட ஆலோசனைப்படி நடக்கணும்.
மோதிஜி – டாக்டர் சஷாங்க், எனக்கும் கூட உங்களுடைய இந்த ஆய்வு ரொம்ப சுவாரசியமா இருக்கு, எங்கிட்ட பல கடிதங்கள் வந்திருக்கு, சிகிச்சை குறித்தும் பலர் பல ஐயப்பாடுகளை இவற்றில எழுப்பியிருக்காங்க, சில மருந்துகளின் தேவை அதிகம் இருக்குங்கறதால, கோவிடுக்கான சிகிச்சை பற்றியும் நீங்க மக்கள் கிட்ட பகிர்ந்துக்கணும்னு நான் விரும்புறேன்.
டாக்டர் சஷாங்க் – சரி சார். மருத்துவ சிகிச்சையை சிலர் மிகவும் காலதாமதாகவே மேற்கொள்றாங்க, தானாகவே அது குணமாகி விடும்ங்கற நம்பிக்கையில வாழ்றாங்க. மேலும் மொபைலில வரக்கூடிய செய்திகளை நம்புறாங்க. அரசு அளிக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தா, எந்தவிதமான கடினங்களையும் எதிர்கொள்ளத் தேவை இருக்காது. கோவிடைப் பொறுத்த மட்டில மருத்துவரீதியான சிகிச்சை நெறிமுறை இருக்கு, இதில தீவிரத்தின் அடிப்படையிலான மூன்று வகையான நிலைகள் இருக்கு. ஒன்று mild, லேசான கோவிட், moderate, இடைநிலையிலான கோவிட், மூன்றாவதா severe, தீவிரமான கோவிட்னு இருக்கு. இந்த முதல்வகையான லேசான கோவிடைப் பொறுத்தவரை, நாங்க ஆக்சிஜெனைக் கண்காணிக்கிறோம், நாடித்துடிப்பைக் கண்காணிக்கிறோம், காய்ச்சல் விவரங்களைக் கண்காணிக்கிறோம், காய்ச்சல் அதிகரிச்சுதுன்னா, தேவைப்பட்டா பேராசிடமால் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துறோம். இடைநிலையிலான கோவிட் அல்லது தீவிரமான கோவிட் இருக்குமேயானா, மருந்துகள் விஷயத்தில கண்டிப்பா மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். சரியான, விலைமலிவான மருந்துகள் கிடைக்குது. இவற்றில இருக்கும் steroids, இயக்க ஊக்கிகள் உயிரைக் காக்கக் கூடும். Inhalers, மூச்சிழுப்பு மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றைக் கொடுக்கலாம், கூடவே பிராணவாயுவையும் கொடுக்கறது அவசியமாகுது. இதற்கான சின்னச்சின்ன சிகிச்சைகள் இருக்குன்னாலும், பெரும்பாலும் என்ன நடக்குது அப்படீன்னா, ஒரு புதிய பரீட்சார்த்த மருந்தான Remdesivir இருக்கு இல்லையா? இந்த மருந்தால என்ன ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்குதுன்னு சொன்னா, மருத்துவமனையில சிகிச்சை பெறும் கால அளவு 2-3 நாட்கள் குறையுது, மருத்துவரீதியான மீட்புக்கு இது கொஞ்சம் உதவிகரமா இருக்குது. இந்த மருந்துமே கூட எப்போ வேலை செய்யுதுன்னா, முதல்ல இது 9-10 நாட்களில் கொடுக்கப்பட்டிச்சு, இப்போ ஐந்து நாட்களிலேயே கொடுக்க வேண்டி இருக்குன்னும் போது, இந்த ரெம்டெசிவிரைத் தேடி மக்கள் அலையறாங்க, இந்த ஓட்டம் அவசியமே இல்லாத ஒண்ணு. இந்த மருந்து புரியும் வேலை கொஞ்சம் தான். யாருக்கு ஆக்சிஜென் அளிக்கப்படுதோ, யார் மருத்துவமனைகள்ல சேர்க்கப்பட்டிருக்காங்களோ, அவங்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இதை எடுத்துக்கணும். இதை எல்லாரும் புரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். நாம மூச்சுப்பயிற்சி செய்யலாம், நம்ம உடலின் நுரையீரலை இது சற்று விரிவடையச் செய்யும், நம்ம ரத்தத்தை நீர்க்கச் செய்யும் ஊசியான ஹெபாரின் மாதிரியான சின்னச்சின்ன மருந்துகளை செலுத்தினா, 98 சதவீதம் பேர்கள் குணமாகிடுறாங்க, ஆகையால மனத்தெம்போடு இருப்பது ரொம்ப அவசியம். சிகிச்சை நெறிமுறையை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்றது ரொம்பவும் அவசியம். மேலும், விலை அதிகமுள்ள மருந்துகள் பின்னால ஓடுவது அவசியமே இல்லை சார். நம்மிடத்திலே நல்ல சிகிச்சைகள் இருக்கு, பிராணவாயு இருக்கு, வெண்டிலேட்டர்கள் வசதி அப்படீன்னு எல்லாமே இருக்கு சார். ஒருவேளை இந்த மருந்துகள் கிடைச்சாலும் கூட, அந்த மருந்துகளுக்கான தேவை இருக்கறவங்களுக்கு மட்டுமே அவை அளிக்கப்படணும். இவை தொடர்பா ஒரு பிரமை பரவியிருக்கிறது அப்படீங்கறது ஒரு விஷயம்; தவிர, இந்த இடத்திலே நான் ஏன் தெளிவாக்கம் அளிக்க விரும்பறேன்னா, நம்மகிட்ட உலகிலேயே மிகச் சிறப்பான சிகிச்சை இருக்கு. பாரதத்தில தான் மிகச் சிறப்பான மீட்சி வீதம் இருக்கு அப்படீங்கறதை நீங்களே கவனிச்சிருக்கலாம். நீங்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மாதிரியான நாடுகளோடு, நம்ம நாட்டில இருக்கும் சிகிச்சை நெறிமுறைகளை ஒப்பிட்டுப் பார்த்தீங்கன்னா, நம்ம நாட்டின் சிகிச்சை நெறிமுறையால நோயாளிகள் அதிக அளவில மீட்சி அடையறாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம் சார்.
மோதிஜி – டாக்டர் சஷாங்க், உங்களுக்கு பலப்பல நன்றிகள். டாக்டர் சஷாங்க் அவர்கள் நல்ல பல முக்கியமான தகவல்களை நமக்களித்தார், இவை நமக்கு உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே, நான் உங்கள் அனைவரிடத்திலும் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், உங்களுக்குத் தகவல்கள் ஏதேனும் தேவை என்றால், ஐயப்பாடு ஏதேனும் இருக்குமானால், சரியான இடத்திலிருந்து தகவல்களைப் பெறவும். உங்களுடைய குடும்ப மருத்துவராகட்டும், அருகில் இருக்கும் மருத்துவர்களாகட்டும், அவர்களை தொலைபேசியில் அழைத்து, ஆலோசனை பெறுங்கள். நமது பெரும்பாலான மருத்துவர்களே கூட இந்தப் பொறுப்பைத் தாங்களே ஏற்கிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன். பல மருத்துவர்கள் சமூக ஊடகம் வாயிலாக மக்களுக்குத் தகவல்களை அளிக்கிறார்கள். தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸப் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். பல மருத்துவமனைகளின் இணையதளங்களில் தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன, அங்கே நீங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். இது மிகவும் பாராட்டத்தக்கது.
ஸ்ரீநகரைச் சேர்ந்த டாக்டர் நாவீத் நாஸர் ஷா அவர்கள் இப்பொழுது தொடர்பில் இருக்கிறார். டாக்டர் நாவீத் அவர்கள் ஸ்ரீநகரின் ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார். நாவீத் அவர்கள் தனது பராமரிப்பில் இருந்த பல கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தி இருக்கிறார், ரமலான் புனிதமான மாதத்திலும் கூட, டாக்டர் நாவீத் அவர்கள் தனது பணியை சீரிய முறையில் நிறைவேற்றி வருகிறார். இப்பொழுது நம்மோடு உரையாட அவர் நேரம் ஒதுக்கி இருக்கிறார். அவரோடு உரையாடுவோம் வாருங்கள்.
மோதிஜி – நாவீத் அவர்களே வணக்கம். இந்த கடினமான காலத்தில பேரச்ச மேலாண்மை குறித்த பல வினாக்களை மனதின் குரலின் நம்ம நேயர்கள் எழுப்பியிருக்காங்க. இதை எப்படி சமாளிப்பதுங்கறது குறித்து உங்க அனுபவம் என்ன?
டாக்டர் நாவீத் – வணக்கம் சார். கொரோனா தொடங்கிய போது தான் கஷ்மீரில இதற்கான முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. கோவிட் மருத்துவமனைங்கற வகையில எங்க நகர மருத்துவமனை இது. இது மருத்துவக் கல்லூரிக்குட்பட்டது; அப்ப எல்லா இடங்கள்லயும் பீதி பரவியிருந்திச்சு. ஒருத்தருக்கு கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டுப் போச்சுன்னா, அது மரண தண்டனையாவே கருதப்பட்டிச்சு. இந்த நிலையில தான் எங்களோட மருத்துவமனையில மருத்துவர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றி வந்தாங்க. இவங்க கிட்டயும் ஒரு பேரச்சம் இருந்திச்சு, அதாவது இந்த நோயாளிகளை நாம எப்படி எதிர்கொள்வது, தங்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுமோங்கற பயம் இருந்திச்சு. ஆனா காலம் செல்லச்செல்ல, நாம முழுமையான வகையில பாதுகாப்புக் கவசங்களை அணிஞ்சு, எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்னு சொன்னா, நாமும் பாதுகாப்பாக இருக்கலாம், மற்ற பணியாளர்களையும் பாதுகாப்பாக வச்சிருக்கலாங்கறதை உணர்ந்தாங்க. நோயாளிகள் நோய்வாய்ப்பட்டிருக்கறதுக்கான அறிகுறி இல்லாதவர்களாவும் இருந்தாங்க அப்படீங்கறதை நாங்க சில காலத்திலே உணர்ந்துக்கிட்டோம். கிட்டத்தட்ட 90 முதல் 95 சதவீதத்திற்கும் அதிகமான நபர்களை மருந்து உட்கொள்ளக் கொடுக்காமலேயே குணமாக்க முடியும் அப்படீங்கறதைக் கண்டுக்கிட்டோம். அதே போல, நாட்கள் கடந்து போன போது, மக்களிடத்திலே கொரோனா பத்தின பீதியும் குறையத் தொடங்கிச்சு. இன்றைய நிலையில வந்திருக்கற இந்த இரண்டாவது அலையின் போது கூட, நாம தேவையில்லாம பீதியடைய வேண்டிய அவசியமில்லை. இப்பவும் கூட, பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையா கடைப்பிடிச்சோம்னா, எடுத்துக்காட்டா முகக்கவசம் அணியறது, சோப்புக்களைப் பயன்படுத்தறது, மேலும் ஒருவருக்கொருவர் இடையிலான இடைவெளியைப் பராமரிக்கறது, அல்லது கூட்டங்களைத் தவிர்ப்பது மாதிரியானதைப் பின்பற்றினோம்னா, நம்ம அன்றாடப் பணிகளை நம்மால சிறப்பாச் செய்ய முடியும், இந்தப் பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பையும் பெற முடியும்.
மோதிஜி – டாக்டர் நாவீத் அவர்களே, தடுப்பூசி தொடர்பா மக்களிடத்தில பலவிதமான வினாக்கள் இருக்கு. அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது மூலமா எந்த அளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எப்படி கவலையில்லாம இருக்க முடியும்? நேயர்களுக்குப் பலனளிக்கும் வகையில நீங்க தகவல்களை அளிச்சீங்கன்னா நல்லா இருக்கும்.
டாக்டர் நாவீத் – கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து இன்னைக்கு வரைக்கும், நம்ம கிட்ட கோவிட் 19க்கான எந்த ஒரு திறன் வாய்ந்த சிகிச்சையும் இல்லைங்கற போது, இந்த நோயோடு போராட இரண்டே இரண்டு விஷயங்களை நம்மால் செய்ய முடியும். ஒன்று protective measure, தற்காப்பு நடவடிக்கைகள். நாங்க முன்னாலிருந்தே என்ன சொல்லிட்டு வர்றோம்னா, நம்ம கிட்ட திறன் வாய்ந்த தடுப்பூசி இருந்தா, அதால நம்மை இந்தப் பெருந்தொற்றிலிருந்து விடுவிக்க முடியும் அப்படீன்னு. இப்ப நம்ம தேசத்திலேயே தயார் செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் இருக்கு – கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட். நிறுவனங்கள் செஞ்சிருக்கற பரிசோதனைகள் வாயிலா, இவற்றோட திறன் 60 சதவீதத்திற்கும் அதிகம் அப்படீங்கறதை பார்த்திருக்கோம். ஜம்மு கஷ்மீரை எடுத்துக்கிட்டா, இங்கே இதுவரை 15 முதல் 16 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட்டாச்சு. சமூக ஊடகத்தில இவை பற்றி நிலவும் தவறான புரிதல்கள்-புனைவுகள், இவற்றால இப்படிப்பட்ட பக்கவிளைவுகள் இருக்குன்னு எல்லாம் பரப்பட்டாலும், இதுவரை இங்கே தடுப்பூசி போட்டுக்கிட்டவங்க யார் கிட்டயும் எந்த விதமான ஒரு பக்கவிளைவுகளும் இதுவரை காணப்படலை. பொதுவா எந்த ஒரு தடுப்பூசி எடுத்துக்கும் போதும் ஏற்படக்கூடிய காய்ச்சல், உடல்வலி அல்லது ஊசி போடப்பட்ட இடத்திலே வலி மாதிரியான பக்கவிளைவுகளையே நோயாளிகள் கிட்ட நம்மால காண முடியுதே தவிர, பெரிய தீவிரமான எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படலை. இரண்டாவதா, மக்களிடத்தில மேலும் ஒரு ஐயப்பாடு என்னன்னா, தடுப்பூசி போட்டுக்கிட்ட பிறகு, நோய்த்தொற்று ஏற்பட்டா என்ன செய்யறது அப்படீங்கறது தான். இதற்கும் நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை அளிச்சிருக்காங்க; அதாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, நோய்த்தொற்று ஏற்படலாம், அவங்க பாசிடிவாகவும் ஆகலாம், ஆனா அப்படி ஒருவேளை நோய் உண்டானா, உயிரைக் குடிப்பதா அது இருக்காது அப்படீங்கறதால, தடுப்பூசி பத்தின இந்தத் தவறான புரிதலையும் நீங்க உங்க மனசிலிருந்து விலக்கிடுங்க. ஏன்னா, மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிடும்ங்கற போது, நாங்க மக்களிடம் விடுக்கும் விண்ணப்பம், நீங்களே முன்வந்து தடுப்பூசி போட்டுக்குங்க, கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து உங்களையும் பாதுகாத்துக்குங்க, நம்ம சமுதாயத்துக்கும் பாதுகாப்பளிக்க உதவுங்க அப்படீங்கறது தான்.
மோதிஜி – டாக்டர் நாவீத் அவர்களே உங்களுக்குப் பலப்பல நன்றிகள், ரமலானின் இந்த புனித மாதத்தில உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
டாக்டர் நாவீத் – மிக்க நன்றிகள்.
நண்பர்களே, கொரோனாவின் இந்த சங்கடமான காலத்தில் தடுப்பூசி பற்றிய முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் புரிந்து வருகிறது என்பதால், தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாரத அரசு தரப்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக அனுப்பப் பட்டிருக்கின்றன என்பதும், இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதைப் போட்டுக் கொள்ளலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இனி, வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க இருக்கின்றது. இப்பொழுது தேசத்தின் கார்ப்பரேட் துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களை, தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இயக்கத்தில் பங்கெடுக்கச் செய்யும் பங்களிப்பை ஆற்றுவார்கள். பாரத அரசின் தரப்பிலிருந்து தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இலவசத் தடுப்பூசி வழங்கும் திட்டம், இனிவரும் காலத்திலும் தொடரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பாரத அரசின் இந்த இலவசத் தடுப்பூசித் திட்டத்தின் ஆதாயங்களை அதிகப்படியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று, நான் மாநில அரசுகளிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் பொழுது, நாம் நம்மையும் சரி, நமது குடும்பத்தாரையும் சரி, பராமரிக்க வேண்டும், மனரீதியாக இது எத்தனை சிரமமான ஒன்று என்பதை நாம் நன்கறிவோம். ஆனால் நமது மருத்துவமனைகளின் செவிலியர்களோ இந்தப் பணியை எத்தனை நோயாளிகளுக்குச் செய்ய வேண்டியிருக்கிறது!! இந்தச் சேவையுணர்வு தான் நமது சமூகத்தின் மிகப்பெரிய பலம். செவிலியர்கள் வாயிலாகப் புரியப்படும் சேவையும், கடும் உழைப்பும் பற்றி, ஒரு செவிலியால் மட்டுமே சிறப்பாகக் கூற முடியும். ஆகையால், ராய்பூரின் டாக்டர் பி.ஆர். அம்பேட்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேவையாற்றி வரும் சகோதரி பாவனா த்ருவ் அவர்களை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கெடுக்க அழைத்திருக்கிறோம். அவர் பல கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொண்டு வருகிறார். அவரோடு பேசலாம் வாருங்கள் –
மோதிஜி – வணக்கம் பாவ்னா அவர்களே!
பாவ்னா – மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம்.
மோதிஜி – உங்க குடும்பத்தில பல கடமைகள் எல்லாம் இருக்கும் போது, ஒரே நேரத்தில பல வேலைகளை செஞ்சுக்கிட்டே எப்படி உங்களால கொரோனாவால பீடிக்கப்பட்ட நோயாளிகளையும் பராமரிக்க முடியுதுங்கறதை நீங்க மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிக்கறேன். ஏன்னா சிஸ்டர்கள், அதாவது செவிலியர்கள், இவங்க தான் நோயாளியோடு நெருக்கமாக இருக்கறவங்க, நீண்ட நேரம் அவங்களோட கழிக்கறவங்க அப்படீங்கற போது, ஒவ்வொரு விஷயத்தையும் அதிக நுணுக்கமாப் புரிஞ்சுக்கறவங்க இல்லையா? நீங்க சொல்லுங்க.
பாவ்னா – ஆமாம் சார், கோவிட் தொடர்பா 2 மாசங்களுக்கு ஒரு தடவை எங்களுக்கு முறை வரும் சார். நாங்க 14 நாட்கள் வரை பணியாற்றுகிறோம், இதன் பிறகு எங்களுக்கு ஓய்வு அளிக்கப்படுது. பிறகு 2 மாதங்கள் கழிச்சு எங்களுக்கு இந்த கோவிட் பொறுப்புகள் மறுபடி அளிக்கப்படுது சார். முதன்முதலா எனக்கு கோவிட் பணி விதிக்கப்பட்ட போது, முதன்மையா நான் என்னோட குடும்ப உறுப்பினர்களிடத்தில இதைப் பத்தி பகிர்ந்துக்கிட்டேன். இது மே மாதத்தில நடந்திச்சு. நான் இதைப் பகிர்ந்துக்கிட்ட உடனேயே எல்லாரும் பயந்து போயிட்டாங்க, பதனமாக நடந்துக்க, கவனமா இரு அப்படீன்னாங்க, அது உணர்ச்சிபூர்வமான ஒரு கணம் சார். இடையில என் மகள், அம்மா நீ கோவிட் பணிக்குப் போறியான்னு கேட்ட போது, நான் உணர்வு ரீதியாகக் கலங்கிப் போயிட்டேன் சார். கோவிட் நோயாளிகள் கிட்ட நான் போனப்ப, ஒரு பொறுப்பை வீட்டிலேயே விட்டுட்டு வந்தேன்; ஆனா இந்த கோவிட் நோயாளிகளை நான் சந்திச்சப்ப, வீட்டில இருந்தவர்களை விட அதிகமா பயந்து போயிருந்தாங்க. கோவிட்ங்கற பெயரைக் கேட்டாலே நோயாளிகள் எந்த அளவுக்கு நடுங்கிப் போயிருந்தாங்கன்னா, தங்களுக்கு என்ன ஆயிட்டு இருக்கு, என்ன ஆகப் போகுதுங்கற நிலையே தெரியாம இருந்தாங்க. நாங்க அவங்களோட அச்சத்தை நிவர்த்தி செய்யும் வகையில, மிகச் சிறப்பான ஆரோக்கியமான சூழலை அமைச்சுக் கொடுத்தோம். எங்களுக்கு முதல்ல கோவிட் பணி அளிக்கப்பட்ட போது, முதன்மையா முழு உடல் பாதுகாப்புக் கவச உடைய அணிஞ்சுக்கச் சொன்னாங்க, இதை அணிஞ்சுக்கிட்டு பணியாற்றுவது ரொம்பவும் சிரமமான காரியம் சார். நான் 2 மாதம் பணியாற்றின ஒவ்வொரு இடத்திலயும், 14-14 நாட்கள் வார்டிலயும், தீவிர சிகிச்சைப் பிரிவிலயும், தனிமைப்படுத்தல்லயும் கழிச்சேன்.
மோதிஜி – அதாவது ஒட்டுமொத்தமா நீங்க ஓராண்டுக் காலமா இதே பணியில தான் ஈடுபட்டு வந்திருக்கீங்க.
பாவ்னா – ஆமாம் சார், அங்க போகறதுக்கு முன்பா என்னோடு பணியாற்ற இருக்கறவங்க யார் அப்படீங்கறதே எனக்குத் தெரியாது. நாங்க ஒரு குழு உறுப்பினர்ங்கற முறையில பணியாற்றினோம் சார், நோயாளிகள் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துக்கிட்டாங்க, எங்களால நோயாளிகள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அவங்க மனசுல நோய் தொடர்பான அச்சத்தை அகற்ற முடிஞ்சுது. இவங்கள்ல சிலர் கோவிட் அப்படீங்கற பெயரைக் கேட்டாலே குலை நடுக்கம் அடைஞ்சாங்க. அவங்க கிட்ட எல்லா அறிகுறிகளும் தென்பட்டும் கூட, அவங்க அச்சம் காரணமா பரிசோதனைகளை மேற்கொள்ளலை. அவங்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்திச்சு. பரிசோதனைகளை மேற்கொள்ளாதது காரணமா தீவிரத்தன்மை அதிகரிச்சு, அந்த நிலையில எங்களை அணுகுவாங்க. ஏற்கெனவே பீடிக்கப்பட்டிருக்கும் நுரையீரல்கள் காரணமா, அவங்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போக வேண்டி இருந்திச்சு; அப்ப, கூடவே அவங்களோட குடும்பத்தார் எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பாங்க. இப்படிப்பட்ட ஒன்றிரண்டு சம்பவங்களை நான் பார்த்திருக்கேன், எல்லா வயசுக்காரங்களோடயும் நான் பணியாற்றியிருக்கேன். சின்னஞ்சிறு குழந்தைகள், பெண்கள், ஆண்கள், மூத்தவர்கள்ன்னு பலதரப்பட்டவங்க இருந்தாங்க. அவங்க எல்லாரோடயும் பேசினப்ப, தாங்கள் அச்சம் காரணமாவே முன்பேயே வராம இருந்ததா எல்லாருமே சொன்னாங்க. அச்சப்பட்டு எதுவும் ஆகப் போறதில்லை, நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா, எல்லா நெறிமுறைகளையும் கடைப்பிடிச்சா, இதை நம்மால கடந்து போயிர முடியும்ன்னு அப்ப நாங்க அவங்களுக்குப் புரிய வைப்போம்.
மோதிஜி – பாவ்னா அவர்களே, உங்களோட பேசினது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு, பல நல்ல தகவல்களை நீங்க பகிர்ந்துக்கிட்டீங்க. உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கிட்டிருக்கீங்க, கண்டிப்பா நாட்டுமக்களுக்கு இதிலிருந்து ஒரு நேர்மறை செய்தி வெளிப்படும். உங்களுக்குப் பலப்பல நன்றிகள் பாவ்னா அவர்களே.
பாவ்னா – தேங்க்யூ வெரி மச் சார்…. ரொம்ப நன்றி. ஜெய் ஹிந்த் சார்.
மோதிஜி – ஜெய் ஹிந்த்.
பாவ்னா அவர்களே, செவிலியர்களான உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் மிகச் சிறப்பான வகையிலே தங்கள் கடமைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இது நம்மனைவருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. நீங்கள் உங்கள் உடல்நலத்தையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாரின் நலன் மீதும் அக்கறை செலுத்துங்கள்.
நண்பர்களே, நம்மோடு தொடர்பிலே இப்போது பெங்களூரூவைச் சேர்ந்த சிஸ்டர் சுரேகா அவர்கள் இணைந்திருக்கிறார். சுரேகா அவர்கள் கே. சி. பொது மருத்துவமனையில் மூத்த செவிலியர் அதிகாரியாக இருக்கிறார். அவரது அனுபவத்தைக் கேட்போம் வாருங்கள் –
மோதிஜி – வணக்கம் சுரேகா அவர்களே.
சுரேகா – நம்ம நாட்டின் பிரதமரோடு பேசுவது எனக்கு பெருமிதமாவும் கௌரவமாவும் இருக்கு.
மோதிஜி – சுரேகா அவர்களே, நீங்களும் உங்களுடைய சக செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் மிகச் சிறப்பான சேவையை ஆற்றிக்கிட்டு இருக்கீங்க. இந்தியா உங்க எல்லாருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கு. கோவிட் 19க்கு எதிரான இந்தப் போராட்டத்தில, குடிமக்களுக்கு நீங்க அளிக்கக் கூடிய செய்தி என்ன?
சுரேகா – ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகள் அப்படீங்கற வகையில, தயவு செஞ்சு உங்க அண்டை வீட்டார் கிட்ட பணிவோட இருங்க, முன்னமேயே பரிசோதனை மற்றும் முறையான கண்காணிப்பு மூலமா, இறப்பு வீதத்தைக் குறைக்க எங்களுக்கு உதவுங்க. மேலும் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தயவு செஞ்சு உங்களைத் தனிமைப்படுத்திக்குங்க, அருகில இருக்கற மருத்துவர்களை அணுகி, எத்தனை விரைவா முடியுமோ அத்தனை விரைவா சிகிச்சை மேற்கொள்ளுங்க. சமுதாயம் இந்த நோய் பத்தி தெரிஞ்சுக்கணும், நேர்மறை எண்ணங்களோட இருக்கணும், பீதியடையக் கூடாது, மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கக் கூடாது. இது நோயாளியோட நிலையை மேலும் மோசமாக்கும். நம்மகிட்ட தடுப்பூசி ஏற்படுத்தப்பட்டிருப்பது பெருமையா இருக்கு, அரசுக்கு எங்களோட நன்றிகள். நான் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கிட்டேன், இந்தியக் குடிமக்களுக்கு நான் அனுபவரீதியா சொல்லணும்னா, எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பை உடனடியா அளிக்காது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த சில காலம் பிடிக்கும். தயவு செஞ்சு தடுப்பூசி போட்டுக்க எந்த பயமும் பட வேண்டாம். தயவு செஞ்சு போட்டுக்குங்க, பக்கவிளைவுகள் மிகக் குறைவாத் தான் இருக்கும். வீட்டிலேயே இருங்க, ஆரோக்கியமா இருங்க, நோய்வாய்ப்பட்டவர்களோட தொடர்புல வராதீங்க, உங்க மூக்கு, கண்கள், வாய் இவற்றைத் தேவையில்லாம தொடுவதை தவிர்த்திடுங்க. சமூக இடைவெளியைக் கடைபிடியுங்க, முறையான வகையில முகக்கவசத்தை அணியுங்க, உங்க கைகளை சீரா கழுவிகிட்டு வாங்க, வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய வீட்டு மருத்துவத்தை கடைபிடியுங்க. தயவு செய்து ஆயுர்வேத கஷாயத்தைக் குடியுங்க, நீராவி பிடியுங்க, தினமும் தொண்டையில நீரைத் தேக்கிக் கொப்பளியுங்க, சுவாஸப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்க. நிறைவா ஒரு முக்கியமான விஷயம், முன்னணிப் பணியாளர்கள், வல்லுநர்கள் கிட்ட பரிவோட நடந்துக்குங்க. எங்களுக்கு உங்களோட ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. நாம இணைஞ்சு போராடுவோம். இந்தப் பெருந்தொற்றை வெற்றி கொள்வோம். இது தான் மக்களுக்கு நான் அளிக்க விரும்பும் செய்தி சார்.
மோதிஜி – தேங்க்யூ சுரேகா அவர்களே.
சுரேகா – தேங்க்யூ சார்.
சுரேகா அவர்களே, உண்மையிலேயே அதிக கடினமான காலகட்டத்தில நீங்க பணியாற்றிக்கிட்டு வர்றீங்க. நீங்க உங்களை கவனிச்சுக்குங்க. உங்க குடும்பத்தாருக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
பாவ்னா அவர்களும் சுரேகா அவர்களும் கூறியதைப் போல, கொரோனாவோடு போராட நேர்மறை உணர்வு மிகவும் அவசியமானது, நாட்டுமக்கள் இதை மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடத்தில் நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, மருத்துவர்கள், செவிலியர்களோடு, இந்த நேரத்தில் பரிசோதனைக்கூட தொழில்நுட்பாளர்களும், மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்களும் போன்ற முன்னணிப் பணியாளர்களும், இறைவனைப் போன்றே பணிபுரிந்து வருகின்றார்கள். ஒரு மருத்துவ அவசர ஊர்தி, ஒரு நோயாளியைச் சென்றடையும் போது, அப்போது ஊர்தியின் ஓட்டுனர் ஒரு தேவதூதனாகவே அவர்களுக்குக் காட்சியளிப்பார். இவர்கள் அனைவரின் சேவைகள் பற்றியும், இவர்களின் அனுபவங்கள் பற்றியும் தேசம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்பொழுது தொடர்பிலே இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் இருக்கிறார், இவர் மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநரான ப்ரேம் வர்மா அவர்கள். பெயரிலேயே இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ப்ரேம் வர்மா அவர்கள் தனது பணியை, தனது கடமையை, மிக்க நேசத்தோடும், ஈடுபாட்டோடும் செய்து வருகிறார். அவரோடு உரையாடுவோம் வாருங்கள்!
மோதிஜி – வணக்கம் ப்ரேம் அவர்களே.
ப்ரேம் – வணக்கம் சார்
மோதிஜி – சகோதரனே! ப்ரேம்.
ப்ரேம் – சொல்லுங்க சார்.
மோதிஜி – நீங்க உங்க பணி பற்றி, சற்று விரிவாகச் சொல்லுங்க. உங்களுடைய அனுபவம் என்னன்னு சொல்லுங்க.
ப்ரேம் – நான் CATS AMBULANCEல ஓட்டுநரா வேலை பார்க்கறேன், கட்டுப்பாட்டு அறையிலிருந்து எங்க டேபுக்கு ஒரு அழைப்பு வரும். 102லிருந்து அழைப்பு வந்தவுடனேயே நாங்க நோயாளி இருக்கற இடம் நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சிருவோம். இரண்டு ஆண்டுகளா இந்த வேலையை நாங்க தொடர்ந்து செஞ்சிட்டு வர்றோம். நாங்க எங்களோட கிட்டை அணிஞ்சிக்குவோம், கையுறைகள், முகக்கவசம் எல்லாம் போட்டுக்கிட்டு, நோயாளி எந்த மருத்துவமனைக்குப் போக விரும்பறாங்களோ, அங்க எத்தனை விரைவா கொண்டு சேர்க்கணுமோ, கொண்டு சேர்த்துடுவோம்.
மோதிஜி – நீங்க 2 தவணை தடுப்பூசி போட்டுக்கிட்டீங்க இல்லையா?
ப்ரேம் – கண்டிப்பா சார்.
மோதிஜி – அப்ப மத்தவங்களும் தடுப்பூசி போட்டுக்கறது தொடர்பா நீங்க அளிக்க நினைக்கற செய்தி என்ன?
ப்ரேம் – கண்டிப்பா சார். எல்லாரும் தடுப்பூசித் தவணைகளை எடுத்துக்கணும், இது குடும்பத்துக்கே நன்மை செய்யக்கூடியது. இப்ப எங்கம்மா, இந்த வேலையை விட்டுடுன்னு சொல்றாங்க. அதுக்கு நான் சொன்னேன், அம்மா, நீ சொல்றா மாதிரியே நானும் வேலையை விட்டுட்டு வீட்டில உட்கார்ந்தேன்னா, யாரு நோயாளிகளை கொண்டு சேர்ப்பாங்க? ஏன்னா எல்லாரும் இந்தக் கொரோனா காலத்தில ஓடிக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் வேலையை விட்டுட்டுப் போயிட்டு இருக்காங்க. ஆனாலும் வேலையை விடச் சொல்லி அம்மா சொல்றாங்க. வேலையை விட மாட்டேன்னு, நான் தீர்மானமா சொல்லிட்டேன்.
மோதிஜி – ப்ரேம் அவர்களே, அம்மாவை வருத்தப்பட வைக்காதீங்க. அம்மாவுக்குப் புரிய வையுங்க.
ப்ரேம் – சரிங்க.
மோதிஜி – ஆனா இப்ப நீங்க அம்மா தொடர்பா சொன்னீங்களே, இது மனசை ரொம்பத் தொடும் விஷயம்.
ப்ரேம் – ஆமாங்க.
மோதிஜி – உங்க தாயாருக்கும் என்னோட வணக்கத்தைச் சொல்லுங்க.
ப்ரேம் – சரிங்க.
மோதிஜி – கண்டிப்பா!
ப்ரேம் – கண்டிப்பாங்க.
மோதிஜி – சரி ப்ரேம் அவர்களே, மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்கள் எத்தனை பெரிய ஆபத்தான நிலையில வேலை பார்க்கறீங்க, ஒவ்வொருத்தரோட தாயாரும் என்ன நினைக்கறாங்க? இந்த விஷயங்கள் நேயர்களுக்குப் போய் சேரும் போது,
ப்ரேம் – ஆமாங்க.
மோதிஜி – இது அவங்களோட இதயத்தையும் தொடும்னு நான் உறுதியா நம்பறேன்.
ப்ரேம் – ஆமாங்க.
மோதிஜி – ப்ரேம் அவர்களே, உங்களுக்குப் பலப்பல நன்றிகள். நீங்க ஒருவகையில அன்பெனும் ஊற்றாக எல்லாருக்கும் விளங்கறீங்க.
ப்ரேம் – ரொம்ப நன்றி சார்.
மோதிஜி – நன்றி சகோதரா.
ப்ரேம் – நன்றிங்க.
நண்பர்களே, ப்ரேம் வர்மா அவர்களும், இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர்களும், தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து, மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனவோ, அதில் மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்களின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. ப்ரேம் அவர்களே, உங்களுக்கும், நாடெங்கிலும் உள்ள உங்களுடைய அனைத்து சகாக்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நீங்கள் காலத்தில் சென்று சேருங்கள், உயிர்களைக் காத்து வாருங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கொரோனாவால் பலர் பீடிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது உண்மை தான் என்றாலும், கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதே அளவு அதிகமானது. குருக்ராமைச் சேர்ந்த ப்ரீதி சதுர்வேதி அவர்களும் தற்போது தான் கொரோனாவிலிருந்து வென்று வந்திருக்கிறார். ப்ரீதி அவர்கள் இப்போது மனதின் குரலில் நம்மோடு இணையவிருக்கிறார். அவருடைய அனுபவங்கள் நமக்கெல்லாம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மோதிஜி – ப்ரீதி அவர்களே வணக்கம்.
ப்ரீதி – வணக்கம் சார். நீங்க எப்படி இருக்கீங்க?
மோதிஜி – நான் நல்லா இருக்கேங்க. முதல்ல கோவிட் 19ஓட வெற்றிகரமா போராடி வெற்றி பெற்றதுக்கு உங்களுக்கு நான் என் பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
ப்ரீதி– Thank you so much sir
மோதிஜி – உங்களோட உடல்நலம் மேலும் விரைவா சிறப்பாகணும்னு நான் விரும்பறேன்.
ப்ரீதி – ரொம்ப நன்றி சார்.
மோதிஜி – ப்ரீதி அவர்களே
ப்ரீதி - சொல்லுங்க சார்.
மோதிஜி – இந்த அலையில நீங்க மட்டும் தான் சிக்கினீங்களா இல்லை உங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டாங்களா?
ப்ரீதி – இல்லை சார், எனக்கு மட்டும் தான் பாதிப்பு இருந்திச்சு.
மோதிஜி – கடவுள் அருளால அவங்க தப்பினாங்களே. சரி, இப்ப நீங்க உங்க துன்பமான நிலை பத்தின அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டீங்கன்னா, ஒருவேளை இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டா, அதை எப்படி எதிர்கொள்ளணும்னு மத்தவங்களுக்கு ஒரு வழிகாட்டுதலா அமையும்.
ப்ரீதி – கண்டிப்பா சார். தொடக்க நிலையில எனக்கு அதிக சோர்வு ஏற்படத் தொடங்கிச்சு, பிறகு என் தொண்டையில கரகரப்பு ஏற்பட ஆரம்பிச்சுது. இதுக்கு அப்புறமா எனக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்கின உடனேயே, நான் பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக்கிட்டேன். ரெண்டாவது நாளே நான் பாசிடிவ்னு சொல்லி ரிபோர்ட் வந்திருச்சு. என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன். ஒரு அறையில தனிமைப்படுத்திக்கிட்டு, மருத்துவர்களோட ஆலோசனைகளைக் கேட்டுக்கிட்டேன். அவங்க மருந்துகளை அளிக்கத் தொடங்கினாங்க.
மோதிஜி – அந்த வகையில உங்க விரைவான நடவடிக்கை காரணமா உங்க குடும்பத்தார் தப்பினாங்க.
ப்ரீதி – ஆமாம் சார். பிறகு எல்லாருக்குமே பரிசோதனை செய்தோம். அவங்க எல்லாருக்கும் இல்லைன்னு வந்திருச்சு. எனக்கு மட்டும் தான் பாசிடிவா இருந்திச்சு. இதுக்கு முன்னாலயே, என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன். எனக்குத் தேவையான எல்லா பொருட்களையும் நான் அறைக்குள்ள வச்சுக்கிட்டு என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். உடனடியா மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக்கறதையும் ஆரம்பிச்சிட்டேன். மருந்துகளோட கூடவே, நான் யோகக்கலை, ஆயுர்வேதம், இதையெல்லாம் ஆரம்பிச்சேன். இது தவிர கஷாயமும் குடிக்க ஆரம்பிச்சேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யணுமோ, அதாவது பகல் உணவு எடுத்துக்கும் போது ஆரோக்கியமான உணவு, புரதச்சத்து நிறைஞ்ச உணவை எடுத்துக்கிட்டேன். நிறைய திரவங்களை எடுத்துக்கிட்டேன், நீராவி பிடிச்சேன், இளஞ்சூட்டு நீரை தொண்டையில இருத்திக் கொப்பளிச்சேன். நாள் முழுக்க தினமும் இந்த விஷயங்களை செய்திட்டு வந்தேன். இந்த நாட்கள்ல ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லணும்னா சார், நான் கொஞ்சமும் பயப்படவே இல்லை அப்படீங்கறது தான். இந்த நேரத்தில மனரீதியா ரொம்ப பலமா இருக்கணும், இப்படி இருக்க எனக்கு யோகக்கலையும், சுவாஸப் பயிற்சியும் ரொம்ப உதவிகரமா இருந்திச்சு, இதைச் செய்யும் போது எனக்கு நல்லா இருந்திச்சு.
மோதிஜி – சரி ப்ரீதி அவர்களே, இப்ப உங்களோட மருத்துவச் செயல்பாடு முழுமையாயிருச்சு, நீங்க சங்கடத்திலிருந்து வெளிவந்தாச்சு.
ப்ரீதி – ஆமாங்க.
மோதிஜி – இப்ப உங்க பரிசோதனையும் நெகடிவாயிருச்சு.
ப்ரீதி – ஆமாம் சார்.
மோதிஜி – சரி உங்க ஆரோக்கியத்துக்கும், உங்களோட பராமரிப்புக்கும் இப்ப என்ன செய்து வர்றீங்க?
ப்ரீதி – சார் முதல் விஷயம், நான் யோகக்கலையை தொடர்ந்து செய்திட்டு வர்றேன்.
மோதிஜி – சரி.
ப்ரீதி – அதே போல கஷாயத்தை இன்னமும் குடிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த நான் நல்ல ஆரோக்கியமான உணவை இப்பவும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.
மோதிஜி - சரி.
ப்ரீதி – என்னை நான் அதிகம் கவனிச்சுக்கிட்டது கிடையாது; ஆனா இப்ப அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன்.
மோதிஜி – நன்றி ப்ரீதி அவர்களே.
ப்ரீதி– Thank you so much sir.
நீங்க அளிச்ச தகவல்கள், பலருக்கு உதவிகரமா இருக்கும்னு நான் நம்பறேன். நீங்க ஆரோக்கியமா இருங்க, உங்க குடும்பத்தார் ஆரோக்கியமா இருக்கட்டும். உங்களுக்கு என் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று நமது மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், முன்னணிப் பணியாளர்கள் இரவுபகல் என்றும் பாராது எப்படி சேவையாற்றி வருகிறார்கள் பார்த்தீர்களா? இவர்களைப் போன்றே சமூகத்தின் பிறரும் இந்த வேளையில் சளைத்தவர்கள் இல்லை. நாடு மீண்டும் ஒருமுறை ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இப்போதெல்லாம் தனிமைப்படுத்தலில் இருக்கும் குடும்பத்தாருக்கு சிலர் மருந்துகளைக் கொண்டு சேர்க்கிறார்கள், சிலர் காய்கறிகள், பால், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை எல்லாம் என்னால் காண முடிகிறது. வேறு சிலர் மருத்துவ அவசர ஊர்தி சேவைகளை இலவசமாக அளிக்கிறார்கள். தேசத்தின் பல்வேறு இடங்களில் இந்த சவால்கள் நிறைந்த சூழலிலும், தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்து மற்றவர்களுக்கு உதவும் வகையில், தங்களால் என்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய முயல்கிறார்கள். இந்த முறை கிராமங்களிலும் கூட புதிய ஒரு விழிப்புணர்வைக் காண முடிகிறது. கோவிட் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, தங்கள் கிராமங்களை கொரோனாவிடமிருந்து பாதுகாத்து வருகிறார்கள். யாரெல்லாம் வெளியிலிருந்து வருகிறார்களோ, அவர்களுக்கென சரியான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். நகரங்களிலும் கூட பல இளைஞர்கள் முன்வந்து தங்கள் பகுதிகளில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, வட்டாரப் பகுதி மக்களோடு இணைந்து முயன்று வருகிறார்கள், அதாவது ஒரு புறம் தேசத்தில், 24 மணிநேர மருத்துவமனைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள் ஆகியவை தொடர்பான பணிகளில் மும்முரம் காட்டப்பட்டு வருகிறது என்றால், மறுபுறத்திலோ, நாட்டுமக்களும் முழு ஈடுபாட்டோடு கொரோனா என்ற சவாலோடு சமர் புரிந்து வருகின்றார்கள். இந்த உணர்வு எத்தகையதொரு சக்தியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது!! இந்த முயல்வுகள் அனைத்தும், சமூகத்திற்குப் புரியப்படும் மிகப் பெரிய சேவையாகும். இவை சமூகத்தின் சக்தியை அதிகரிக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரல் முழுவதிலும் நாம் கொரோனா பெருந்தொற்று பற்றியே உரையாடினோம் ஏனென்றால், இன்று நமது தலையாய முதன்மை, இந்த நோயை வெற்றி கொள்வது மட்டுமே. இன்று பகவான் மஹாவீரரின் பிறந்த தினமாகும். இந்த வேளையிலே, நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். பகவான் மஹாவீரருடைய செய்தி, தவம் மற்றும் சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான உத்வேகத்தை நமக்கு அளிக்கக்கூடியது. மேலும் ரமலான் புனித மாதம் இது. அடுத்து புத்த பூர்ணிமை வரவிருக்கிறது. குரு தேக்பஹாதுர் அவர்களின் 400ஆவது பிறந்த ஆண்டும் ஆகும் இது. ஒரு மகத்துவம் வாய்ந்த போசிஷே பொய்ஷாக் – தாகூரின் பிறந்த நாள் ஆகும். நமது கடமைகளை ஆற்ற இவை அனைத்தும் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. ஒரு குடிமகன் என்ற முறையிலே, நாம் நமது வாழ்க்கையை எத்தனை சந்தோஷமாக ஆற்றுகிறோமோ, சங்கடங்களிலிருந்து விட்டு விடுபட்டு, எதிர்காலப் பாதையில் அத்தனை விரைவாக நாம் முன்னேறிச் செல்வோம். இந்த விருப்பத்தோடு உங்கள் அனைவரிடத்திலும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன் – நாம் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும், முழுமையான எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். மருந்தும் தேவை, எச்சரிக்கையும் தேவை. இந்த மந்திரத்தை என்றும் நாம் மறக்கலாகாது. நாம் ஒன்றாக இணைந்து, இந்த சங்கடத்திலிருந்து விரைவாக வெளிப்படுவோம். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்காக வரும் கடிதங்கள், கருத்துக்கள், பலவகையான உள்ளீடுகளின் மீது இந்த முறை பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த போது, ஒரு மகத்துவம் வாய்ந்த விஷயம் பற்றி பலர் எனக்கு நினைவு படுத்தியிருந்தார்கள். MyGov தளத்திலே ஆர்யன் ஸ்ரீ, பெங்களூருவிலிருந்து அனூப் ராவ், நோய்டாவைச் சேர்ந்த தேவேஷ், டாணேவின் சுஜித் ஆகிய இவர்கள் அனைவரும், மனதின் குரலின் 75ஆவது பகுதிக்காக மோதிஜி, உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தனை நுணுக்கமாக மனதின் குரலைப் பின்பற்றி வருகிறீர்கள், இதோடு இணைந்து வந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து உங்களுக்கெல்லாம் நான் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகுந்த பெருமிதமும் சந்தோஷமும் அளிக்கும் விஷயம். மனதின் குரல் நேயர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்; ஏனென்றால் நீங்கள் என்னுடன் பயணிக்கவில்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. இந்தக் கருத்துப் பயணத்தை நாமனைவரும் ஏதோ நேற்றுத்தான் தொடங்கியது போல இருக்கிறது. அக்டோபர் மாதம் 3ஆம் தேதி 2014ஆம் ஆண்டிலே விஜயதசமி நன்னாளன்று நாம் இதைத் தொடங்கினோம்; ஆனால் பாருங்கள் இன்று ஹோலிகா தகனம். ஒரு தீபத்திலிருந்து மற்றது ஏற்றப்படட்டும், நமது தேசம் ஒளி பெறட்டும் என்ற உணர்வை மனதிலே தாங்கியே நாம் நமது பாதையைத் தீர்மானித்தோம். நாம் தேசத்தின் பல்வேறு மூலைகளில் இருக்கும் மக்களோடு பேசினோம், அவர்களின் அசாதாரணமான செயல்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நமது தேசத்தின் தொலைதூர மூலைகளிலும் கூட, எத்தனை அசாதாரணமான திறமைகள் மறைந்து உறைகின்றன என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். பாரத அன்னையின் மடியில் எப்படிப்பட்ட ரத்தினங்கள் ஒளிவீசி வருகின்றன. ஒரு சமூகத்தைப் பார்க்கவும், தெரிந்து கொள்ளவும், சமூகத்தின் திறமைகளை அடையாளம் காணவும் மனதின் குரல் எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்தது. இந்த 75 பகுதிகள் வாயிலாக எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து வந்தோம். சில வேளைகளில் நதிகளைப் பற்றி, சில சமயங்களில் இமயத்தின் சிகரங்களைப் பற்றி, சில வேளைகளில் பாலைவனங்களைப் பற்றி என்றால், சில சமயங்களில் இயற்கைச் சீற்றங்கள் பற்றி, சில வேளைகளில் மனித சேவையின் எண்ணில்லாக் கதைகளை அனுபவித்தோம், சில சமயங்களில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், சில வேளைகளில் யாருமறியா ஒரு மூலையில், ஏதோ ஒன்றை சாதிக்கத் துடிப்பவருடைய அனுபவப் பாடம். சரி இப்போது தூய்மை பற்றிப் பேசினோம் என்றால், அது நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பற்றியாகட்டும், விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பது ஆகட்டும்….. எது தான் இல்லை சொல்லுங்கள்!! ஒருவேளை நாம் கடந்து வந்த பாதையின் சம்பவங்கள் பற்றி பட்டியலிடத் தொடங்கினோம் என்றால் அவை எண்ணிக்கையில் அடங்காமலும் போகலாம். இந்தப் பயணத்தின் போது நாம் அவ்வப்போது பாரத நாட்டின் உருவாக்கத்திற்கு ஈடு இணையற்ற பங்களிப்பு நல்கிய, மகத்தான மாமனிதர்களுக்கு நமது சிரத்தாஞ்சலிகளைச் செலுத்தினோம், அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நாம் உலகம் தழுவிய பல விஷயங்கள் குறித்தும் பேசினோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் அடைய முயன்றோம். பல விஷயங்களை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொண்டீர்கள், பல கருத்துக்களை எனக்கு அளித்திருக்கின்றீர்கள். ஒரு வகையில், இந்தக் கருத்துக்களின் பயணத்தில், நீங்களும் என்னோடு பயணித்தீர்கள், என்னோடு இணைந்து வந்தீர்கள், புதியதாக ஏதாவது ஒன்றை இணைத்துக் கொண்டே இருந்தீர்கள். மனதின் குரலை வெற்றி அடையச் செய்தமைக்கும், நிறைவடையச் செய்தமைக்கும், இதோடு இணைந்திருந்தமைக்கும், இன்றைய இந்த 75ஆவது பகுதியில் ஒவ்வொரு நேயருக்கும் நான் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.
என் இனிய நாட்டுமக்களே, இன்று நாம் 75ஆவது மனதின் குரலை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இதே மாதத்தில் நாடு விடுதலை அடைந்த தனது 75ஆவது ஆண்டினை அம்ருத் மஹோத்சவம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. அம்ருத் மஹோத்சவம், தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தன்று தொடங்கப்பட்டது, இது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நடக்கும். அம்ருத் மஹோத்சவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன, பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் குறித்த படங்கள், தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நமோ செயலியில் இப்படிப்பட்ட படங்களோடு கூடவே ஜார்க்கண்டின் நவீன் எனக்கு ஒரு செய்தியையும் அனுப்பியிருக்கிறார். அம்ருத் மஹோத்சவ நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய குறைந்தபட்சம் பத்து இடங்களுக்கேனும் தான் செல்ல முடிவு செய்திருப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய பட்டியலில் முதல் பெயர், பகவான் பிர்ஸா முண்டா பிறந்த இடம். ஜார்க்கண்டின் பழங்குடியினத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகளை, நாட்டின் வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் தான் கொண்டு சேர்ப்பேன் என்றும் நவீன் அவர்கள் எழுதியிருக்கிறார். சகோதரர் நவீன் அவர்களே, உங்களின் நல்லெண்ணத்திற்கு நான் உங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, எந்த ஒரு சுதந்திரப் போராட்டவீரர் பற்றிய சரிதமாகட்டும், எந்த ஒரு இடத்தின் வரலாறாகட்டும், தேசத்தின் எந்த ஒரு கலாச்சாரக் கதையாகட்டும், அம்ருத் மஹோத்சவ வேளையில், நீங்கள் அவற்றை தேசத்தின் முன்னிலைக்குக் கொண்டு வரலாம், நாட்டுமக்களை அதோடு இணைக்கும் ஊடகமாக ஆகலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அம்ருத் மஹோத்சவம் எத்தனை உத்வேகம் அளிக்கும் அமிர்தச் சொட்டுக்களால் நிரம்பி, அமிர்தம் பெருக்கெடுத்து ஓடும், நாடு சுதந்திரம் அடைந்து தனது 100 ஆண்டுகளை எட்டும்வரை நமக்கு இது உத்வேகம் அளித்துக் கொண்டே இருக்கும். தேசத்தைப் புதிய சிகரங்களுக்கு இட்டுச் செல்லும், ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தும். சுதந்திரப் போராட்டத்தின் போது நமது தேசபக்தர்கள் ஏன் இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டார்கள் என்றால், தேசத்தின் பொருட்டு தியாகமும், உயிரளிப்பும் புரிவதைத் தங்களுடைய கடமையாக அவர்கள் கருதியதால் தான். அவர்களுடைய தியாகமும் உயிரளிப்பும் பற்றிய அமரக்கதைகள், எக்காலத்தும் கடமைப்பாதையிலிருந்து நாம் விலகாதிருக்க இப்பொழுது நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கட்டும். பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே கூட –
नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मण:
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
என்று கூறியிருக்கிறார். இதே உணர்வுடன் நாம் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முழு ஈடுபட்டோடு பின்பற்றி ஒழுக வேண்டும். நாம் புதிய உறுதிப்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதே சுதந்திர வைரவிழாவின் – அம்ருத மஹோத்சவத்தின் மெய்ப்பொருள். இந்த உறுதிப்பாட்டினை மெய்யாக்க, நாம் நமது உடல் பொருள் ஆவியனைத்தையும் ஈடுபடுத்த வேண்டும். நமது உறுதிப்பாடு என்னவாக இருக்க வேண்டுமென்றால், அது சமூகநலனை ஒட்டியே, தேசத்தின் நலனைச் சார்ந்தே, பாரதத்தை ஒளிமயமான எதிர்காலத்திற்கானதாகவே இருக்க வேண்டும். மேலும் இதில், நான், நானே என் முயல்வாக ஆற்றக்கூடிய பொறுப்பு-கடமை, இந்த உறுதிப்பாட்டில் இருக்க வேண்டும். கீதையை வாழ்ந்து காட்டும் ஒரு பொன்னான வாய்ப்பு நம்மிடத்திலே இருக்கிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேசத்தில் முதன்முறையாக மக்கள் ஊரடங்கு என்ற சொல்லாட்சியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த மகத்தான தேசத்தின் மகத்தான மக்களின் மகாசக்தியின் அனுபவத்தைப் பாருங்கள். மக்கள் ஊரடங்கு உலகனைத்தையும் ஓர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒழுங்குமுறையின் அபூர்வமான எடுத்துக்காட்டாக அது இருந்தது; இனிவரும் தலைமுறையினருக்கு, இந்த ஒரு விஷயமே கூட பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதைப் போலவே நமது கொரோனா முன்னணி வீரர்களுக்கு மரியாதை, கௌரவம், தட்டுக்களைத் தட்டுதல், தீபமேற்றுதல் போன்றவையும். கொரோனாவுக்கு எதிரான போரின் முன்னணி வீரர்கள் இதயங்களை இது எந்த அளவுக்குத் தொட்டிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இவற்றின் காரணமாகத் தான் ஆண்டு முழுவதும் அவர்கள் களைக்காமல், சளைக்காமல், தடைப்படாமல், விடாமுயற்சியோடு போராடி வந்தார்கள். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுடைய உயிரைக் காக்க, முழுமூச்சோடு போராடினார்கள். கடந்த ஆண்டு இதே வேளையில் வினா என்னவாக இருந்தது – கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது வரும் என்பதே அது. நண்பர்களே, இன்று பாரதம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை களத்தில் செயல்படுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம். தடுப்பூசித் திட்டம் தொடர்பான படங்கள் குறித்து புபனேஷ்வரைச் சேர்ந்த புஷ்பா ஷுக்லா அவர்கள் எனக்கு எழுதியிருக்கிறார். வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள எத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறித்து நான் மனதின் குரலில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நண்பர்களே, தேசத்தின் மூலைமுடுக்கெங்கிலிருந்தும் நாம் கேள்விப்படும் செய்திகள், காணும் படங்கள் எல்லாம் நம் இதயத்தைத் தொடும் வகையில் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தின் ஜௌன்புரைச் சேந்த 109 வயது நிரம்பிய முதிய தாயான ராம் துலையா அவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். இவரைப் போலவே, தில்லியைச் சார்ந்த 107 வயது நிரம்பிய கேவல் கிருஷ்ணா அவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். ஹைதராபாதைச் சேர்ந்த 100 வயதான ஜெய் சௌத்ரி அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அனைவரும் தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களிடம் கோரிக்கையையும் விடுத்திருக்கிறார். தங்கள் வீடுகளில் இருக்கும் மூத்தோருக்குத் தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களின் புகைப்படங்களை எப்படி ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மக்கள் தரவேற்றம் செய்கிறார்கள் என்பதை என்னால் காண முடிகிறது. கேரளத்தைச் சேர்ந்த இளைஞரான ஆனந்தன் நாயர் இதற்கு, vaccine seva, தடுப்பூசி சேவை என்ற ஒரு புதிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இதே போன்ற செய்தியை, தில்லியைச் சேர்ந்த ஷிவானி, ஹிமாச்சலைச் சேர்ந்த ஹிமான்ஷு ஆகிய மேலும் பல இளைஞர்களும் அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களுக்காக நான் நேயர்களான உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவையனைத்திற்கும் இடையே, மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை, என்ற கொரோனாவுக்கு எதிரான போரின் மந்திரத்தை மறந்து விடாதீர்கள். நான் சொல்ல மட்டும் வேண்டும் என்பதல்ல. நாம் வாழவும் வேண்டும், பேசவும் வேண்டும், கூறவும் வேண்டும், மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை என்ற மந்திரத்தை மக்கள் மத்தியில் பரவச் செய்ய வேண்டும்.
என் நேசம் நிறை நாட்டுமக்களே, இந்தோரில் வசிக்கும் சௌம்யா அவர்களுக்கு நான் இன்று என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஒரு விஷயம் குறித்து என் கவனத்தை ஈர்த்திருக்கிறார், இதைப் பற்றி மனதின் குரலில் நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாரதத்தின் கிரிக்கெட் வீராங்கனையான மித்தாலி ராஜ் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் புதிய பதிவைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதே அது. மித்தாலி அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் குவித்திருக்கும் முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். அவருடைய இந்த சாதனைக்காக பலப்பல பாராட்டுக்கள். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களைப் பெற்றிருக்கும் ஒரே சர்வதேச பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான். பெண்கள் கிரிக்கெட் துறையில் இவருடைய பங்களிப்பு மிகவும் அபாரமானது. இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான இவருடைய விளையாட்டுத் துறைப் பங்களிப்பில், மித்தாலி ராஜ் அவர்கள் ஆயிரக்கணக்கான-இலட்சக்கணக்கானோரின் உத்வேகத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறார். இவருடைய கடினமான உழைப்பு மற்றும் வெற்றி பற்றிய கதை, பெண் கிரிக்கெட் வீராங்கனைகனைகளுக்கு மட்டுமல்ல, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்குமே கூட கருத்தூக்கம் அளிக்கும் ஒன்று.
நண்பர்களே, இதே மார்ச் மாதம், நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடிய போது, பல பெண் விளையாட்டு வீராங்கனைகள், பதக்கங்களுக்கும், பதிவுகளுக்கும் சொந்தக்காரர்களாகி இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான விஷயம். தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ISSF உலகக் கோப்பைக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில், பாரதம் முதலிடத்தை வகித்தது. தங்கப் பதக்கங்களை ஈட்டுவதிலும் பாரதம் முன்னணி வகித்தது. இவையனைத்தும் பாரதத்தின் பெண் மற்றும் ஆண் துப்பாக்கி சுடும் வீரர்களின் அருமையான செயல்பாட்டினால் மட்டுமே சாத்தியமானது. இதற்கிடையில் பி.வி. சிந்து அவர்களும் BWF Swiss Open Super 300 பந்தயத்திலும், வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். கல்வி தொடங்கி தொழில்முனைவு வரை, போர்ப்படைகள் தொடங்கி அறிவியல் தொழில்நுட்பம் வரை, அனைத்துத் துறைகளிலும் நாட்டின் பெண் – மணிகள், தங்களுக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுக்களில் தங்களுக்கென ஒரு புதிய இடத்தை இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். Professional Choice, தொழிலார்ந்த தேர்வு என்ற வகையில், விளையாட்டுக்கள் ஒரு விருப்பமாக மாறி வருகிறது.
எனதருமை நாட்டுமக்களே, சிலகாலம் முன்பாக நடந்த Maritime India Summit, கடல்சார் இந்தியா உச்சிமாநாடு உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த உச்சிமாநாட்டில் நான் என்ன கூறினேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், ஏராளமான விஷயங்களுக்கு இடையே ஒவ்வொரு விஷயமும் நினைவில் இல்லாமல் போகலாம், அத்தனை கவனம் இல்லாது போக நேரலாம், இவை இயல்பானது தான். ஆனால், என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, குரு பிரசாத் அவர்கள் மிகவும் சுவாரசியமான முறையிலே இதை முன்னெடுத்துப் போயிருக்கிறார். கலங்கரை விளக்கு வளாகங்களுக்கு அருகிலே சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது குறித்து நான் உரையாற்றியிருந்தேன். குரு பிரசாத் அவர்கள் தமிழ்நாட்டின் இரண்டு கலங்கரை விளக்கங்களை – சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் மஹாபலிபுரம் கலங்கரை விளக்கம் குறித்த தனது 2019ஆம் ஆண்டு பயண அனுபவங்களைத் தெரிவித்திருக்கிறார். அவர் மிகவும் சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், இது மனதின் குரலைக் கேட்போரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கும். சென்னையில் இருக்கும் கலங்கரை விளக்கம், உலகிலேயே elevator, மின்தூக்கி இருக்கும் வெகுசில கலங்கரை விளக்கங்களில் ஒன்று. இதுமட்டுமல்ல, நகர எல்லைக்குள்ளே அமைந்திருக்கும் இந்தியாவின் ஒரே கலங்கரை விளக்கம் இது மட்டுமே. இதிலே விளக்கிற்காக சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. குரு பிரசாத் அவர்கள் கலங்கரை விளக்கத்தின் பாரம்பரிய அருங்காட்சியகம் பற்றியும் தெரிவித்திருக்கிறார், இது கடல்சார் திசையறிதல் வரலாற்றினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அருங்காட்சியகத்தில் எண்ணையால் எரியும் பெரிய பெரிய திரிகள், சீமெண்ணெய் விளக்குகள், பெட்ரோலியம் ஆவி மற்றும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாரதநாட்டின் மிகப் பழமையான மஹாபலிபுரம் கலங்கரை விளக்கம் குறித்தும் குரு பிரசாத் அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த கலங்கரை விளக்கத்தின் அருகிலே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக, பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மன் கட்டிய உலகனீஸ்வரர் ஆலயம் உள்ளது.
நண்பர்களே, மனதின் குரலின் போது, சுற்றுலாவின் பன்முகத்தினைப் பற்றி அநேக முறைகள் கூறியிருக்கிறேன்; ஆனால் இந்தக் கலங்கரை விளக்கம், சுற்றுலா என்பதையும் தாண்டி தனித்தன்மை வாய்ந்தது. அவற்றின் பிரும்மாண்டமான கட்டுமானம் காரணமாக கலங்கரை விளக்கங்கள் எப்போதுமே மக்களின் கவனத்தை ஈர்க்கும் மையங்களாக இருந்து வந்துள்ளன. சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்க, பாரதமும் 72 கலங்கரை விளக்கங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்தக் கலங்கரை விளக்கங்கள் அனைத்திலும், அவற்றின் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப, அருங்காட்சியகம், amphi theatreகள், திறந்தவெளித் திரையரங்குகள், சிற்றுண்டியகம், சிறுவர் பூங்கா, சூழலுக்கு நேசமான குடில்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைப் பசுமையால் அழகுபடுத்தல் போன்றவை ஏற்படுத்தப்படும். கலங்கரை விளக்கங்கள் பற்றிப் பேசும் வேளையில், நானும் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தக் கலங்கரை விளக்கம் குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தின் ஜிஞ்ஜுவாடா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கலங்கரை விளக்கம் ஏன் சிறப்பானது தெரியுமா? ஏன் சிறப்பானது என்றால், இந்தக் கலங்கரை விளக்கம் எங்கே இருக்கிறதோ, அங்கிருந்து 100 கி.மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் கடற்கரை இப்போது இருப்பது தான். ஒரு காலத்தில் இங்கே மிகவும் சுறுசுசுறுப்பாக இயங்கிவந்த துறைமுகம் ஒன்று இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் கற்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. அதாவது, இதன் பொருள் என்னவென்றால், முன்னதாக கரையோரம் ஜிஞ்ஜுவாடா வரை இருந்திருக்கிறது. கடல் வற்றிப் போதல், கடல் பெருக்கு, பின்வாங்குதல், இத்தனை தொலைவு விலகிப் போதல், இதுவும் அதன் ஒரு இயல்பு தான். இதே மாதத்தில் தான் ஜப்பானை பத்தாண்டுகளுக்கு முன்பாக பயங்கரமான சுனாமி தாக்கியது. இந்த சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். இதே போன்றதொரு சுனாமி பாரதத்தில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்டது. சுனாமியின் போது நமது கலங்கரை விளக்கங்களில் பணியாற்றிய 14 பணியாளர்களை இழந்தோம், அந்தமான் நிகோபாரிலும், தமிழ்நாட்டிலும் உள்ள கலங்கரை விளக்கங்களில் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கடுமையாக உழைக்கும் நமது இந்த light keeperகள் – கலங்கரை விளக்கப் பணியாளர்களுக்கு நாம் மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அளிப்பதோடு, இந்த light keeperகளின் பணிக்கு நிறைவான பாராட்டுதல்களையும் தெரிவிப்போம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், புதுமை, நவீனம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது; இல்லையென்றால் வாழ்க்கையே நமக்கு ஒரு சுமையாகி விடக்கூடும். பாரதத்தின் விவசாயத் துறையில், நவீனமயமாக்கல் என்பது காலத்தின் தேவை. மிகத் தாமதமாகி விட்டது. நாம் பல காலத்தை விரயம் செய்து விட்டோம். விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்களுக்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், பாரம்பரியமான விவசாயத்தோடு கூடவே, புதிய சாத்தியக்கூறுகளையும், புதிய கண்டுபிடிப்புக்களையும் ஏற்பது மிகவும் அவசியமான ஒன்று. வெண்மைப் புரட்சியின் போது, தேசம் இதை அனுபவரீதியாக உணர்ந்தது. இப்போது தேனீ வளர்ப்பும் கூட, இதே போன்றதொரு சாத்தியக்கூறை நமக்கு அளிக்கிறது. தேனீ வளர்ப்பு இப்போது தேசத்தின் தேன் புரட்சி அல்லது sweet revolutionக்கான ஆதாரமாக ஆகி வருகிறது. அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் இதோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள், புதுமைகள் புகுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில், டார்ஜீலிங்கில் இருக்கும் ஒரு கிராமம் குர்தும். உயரமான மலைகளுக்கு இடையே, புவியியல் ரீதியான சங்கடங்கள் இருந்தாலும், இங்கே மக்கள் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்; இன்று இந்த இடத்திலிருந்து பெறப்படும் தேனுக்கென சிறப்புத் தேவை இருக்கிறது. இதனால் விவசாயிகளின் வருவாயும் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் பகுதிகளில் இயற்கையான தேன், உலகெங்கிலும் விரும்பி ஏற்கப்படுகிறது. இதைப் போலவே குஜராத்திலே எனக்கு ஒரு தனிப்பட்ட அனுபவமும் உண்டு. குஜராத்திலே பனாஸ்காண்டாவில் 2016ஆம் ஆண்டிலே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, இங்கே இத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கும் போது, ஏன் பனாஸ்காண்டாவின் விவசாயிகள் இனிப்புப் புரட்சிக்கென ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கக்கூடாது என்று வினவினேன். மிகக் குறைந்த காலத்தில், பனாஸ்காண்டா பகுதி, தேன் உற்பத்திக்கான முக்கியமான மையமாக மாறி விட்டது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ந்து போவீர்கள். இன்று பனாஸ்காண்டாவின் விவசாயிகள் தேன் வாயிலாக இலட்சக்கணக்கான ரூபாய்களை ஆண்டுதோறும் ஈட்டி வருகின்றார்கள். இதே போன்ற ஒரு எடுத்துக்காட்டு ஹரியாணாவின் யமுனா நகரிலும் உண்டு. யமுனா நகரிலே, விவசாயிகள் தேனீ வளர்ப்பின் வாயிலாக, ஆண்டுதோறும் பல நூறு டன்கள் தேனை உற்பத்தி செய்து வருகிறார்கள், தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டும் வருகிறார்கள். விவசாயிகளின் இந்த உழைப்பின் விளைவாலேயே, தேசத்தில் தேன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஆண்டுதோறும் சுமார் இரண்டேகால் இலட்சம் டன் அளவினை இது எட்டியிருக்கிறது; இதிலே பெருமளவு தேன் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.
நண்பர்களே, தேனீ வளர்ப்பிலே, தேன் வாயிலாக மட்டுமே வருமானம் கிடைப்பதில்லை; மாறாக தேன் மெழுகும் கூட வருவாயை அதிகப்படுத்துவதற்கான ஒரு பெரிய வழியாக இருக்கிறது. மருந்தியல் தொழில், உணவுத் தொழில், நெசவு மற்றும் அழகுப் பொருள் தொழில்துறை என அனைத்து இடங்களிலும் தேன் மெழுகிற்குத் தேவை இருக்கிறது. நமது தேசம் தற்போது தேன்மெழுகினை இறக்குமதி செய்து வருகிறது; ஆனால், நமது விவசாயிகள், இந்த நிலையினை விரைவாக மாற்றி வருகிறார்கள். அதாவது ஒருவகையில், தற்சார்பு பாரத இயக்கத்திற்கு வலுகூட்டி வருகிறார்கள். இன்று உலகமனைத்தும் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை ஆரோக்கியப் பொருட்களை ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தேனுக்கான தேவையும் விரைவாக அதிகரித்து வருகிறது. தேசத்தில் அதிக அளவு விவசாயிகள், தங்கள் விவசாயத்தோடு கூடவே, தங்கள் வயலில் தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதோடு, அவர்களின் வாழ்க்கையில் இனிப்புச் சுவையையும் சேர்க்கும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இப்போது சில நாட்கள் முன்பாக உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோரையா, சக்லீ, சிம்னீ, கான் சிரிகா என ஒவ்வொரு இடத்திலும் இதனை ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள். முன்பெல்லாம் நமது வீடுகளின் முற்றங்களில், அக்கம்பக்கத்தில் இருக்கும் மரங்களில் குருவிகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்போதெல்லாம், பல ஆண்டுகள் முன்பாக குருவிகளின் கீச்சொலிகளை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றே நினைவு கூர்கிறார்கள். இந்த நிலையில், நாம் இன்று இவற்றைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எனது வாராணசியைச் சேர்ந்த எனது நண்பரான இந்திரபால் சிங் பத்ரா அவர்கள் ஆற்றியிருக்கும் ஒரு பணியை நான் மனதின் குரல் நேயர்களோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தனது வீட்டிலே குருவிகளுக்கென கூடு கட்டிக் கொடுத்திருக்கிறார் பத்ரா அவர்கள். தனது வீட்டிலே, மரத்தாலான ஒரு கூட்டினை உருவாக்கி, இவற்றில் குருவிகள் எளிதாக நுழையும் வகையில் அமைத்திருக்கிறார். இன்று பனாரசின் பல வீடுகள் இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றன. இதன் காரணமாக வீடுகளில் ஒரு அற்புதமான இயற்கைச் சூழலும் ஏற்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு இயலுமோ, அந்த அளவுக்கு நாம் இயற்கை, சுற்றுச்சூழல், உயிரினங்கள் ஆகியவற்றுக்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்றே நான் விழைகிறேன். எடுத்துக்காட்டாக இன்னொரு நண்பர் விஜய்குமார் காபீ அவர்கள். விஜய் அவர்கள் ஒடிஷாவின் கேந்திரபாடாவில் வசிப்பவர், இது கடற்கரையில் இருக்கும் பகுதி. ஆகையால் இந்த மாவட்டத்தின் பல கிராமங்கள், கடலின் உயரமான அலைகள் மற்றும் சூறாவளியின் ஆபத்தால் நிறைந்திருக்கின்றன. இதனால் பலத்த சேதமும் ஏற்படுகிறது. இந்த அழிவைத் தடுக்கும் ஆற்றல் யாருக்காவது உண்டென்றால் அது இயற்கைக்கு மட்டுமே உண்டு என்று விஜய் அவர்கள் உணர்ந்தார். பிறகென்ன? விஜய் அவர்கள் படாகோட் கிராமத்திலிருந்து தனது இயக்கத்தைத் தொடங்கினார். 12 ஆண்டுகள், நண்பர்களே 12 ஆண்டுகள் அவர் கடினமாக உழைத்து, கிராமங்களுக்கு வெளியே, கடற்கரையிலே 25 ஏக்கர் பரப்பளவுக்கு சதுப்புநிலக் காடுகளை உருவாக்கினார். இன்று இந்தக் காடுகள் கிராமங்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகின்றன. இதே போன்றதொரு பணியை, ஒடிஷாவின் பாராதீப் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரான அமரேஷ் சாமந்த் அவர்களும் செய்திருக்கிறார். அமரேஷ் அவர்கள் சின்னச்சின்னக் காடுகளை உருவாக்கினார்; இவை பல கிராமங்களுக்குப் பாதுகாப்பளித்து வருகின்றன. நண்பர்களே, இவை போன்ற பணிகளில் நாம், சமுதாயத்தினரையும் இணைத்துக் கொண்டு பயணித்தால், பெரிய பலன்கள் கிட்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த பேருந்து நடத்துநரான மாரிமுத்து யோகநாதன் அவர்கள், தனது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்கும் வேளையில், அவர்களுக்கு ஒரு மரக்கன்றையும் இலவசமாக அளிக்கிறார். இந்த வகையில் யோகநாதன் அவர்கள், ஏராளமான மரங்கள் நடுதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். யோகநாதன் அவர்கள், தனது வருவாயின் கணிசமான பகுதியை இந்தப் பணிக்காகவே செலவு செய்து வருகிறார். இப்போது இதைக் கேள்விப்பட்ட பிறகு, மாரிமுத்து யோகநாதன் அவர்களின் பணியை, எந்தக் குடிமகனாலாவது பாராட்டாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்!! அவரது இந்த முயற்சிகளுக்காகவும், அவரது இந்த உத்வேகம் அளிக்கும் செயல்களுக்காகவும் நான் அவருக்கு என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கழிவிலிருந்து செல்வம் ஈட்டுவது பற்றி நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், நாம் மற்றவர்களுக்கும் கூறியும் வருகிறோம். இதனையொட்டி, கழிவுப் பொருட்களை மதிப்பானவைகளாக ஆக்கும் பணியும் நடந்தேறி வருகிறது. இதற்கான ஒரு எடுத்துக்காட்டு கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த புனித தெரெஸா கல்லூரி புரிந்திருக்கும் பணி. எனக்கு நினைவிருக்கிறது, 2017ஆம் ஆண்டில், நான் இந்தக் கல்லூரி வளாகத்தில், புத்தகம் படித்தலை ஆதாரமாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கல்லூரியின் மாணவர்கள், மீள்பயன்பாட்டு பொம்மைகளைத் தயார் செய்து வருகிறார்கள், அதுவும் மிகவும் படைப்பாற்றல் மிக்க வகையிலே. இந்த மாணவர்கள் பழைய துணிகளையும், எறியப்பட்ட மரத்துண்டுகள், பைகள், பெட்டிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தி பொம்மைகள் செய்து வருகிறார்கள். சில மாணவர்கள் புதிர்களை உருவாக்குகிறார்கள், சிலர் கார்களையும், ரயில்களையும் உருவாக்குகிறார்கள். இந்த பொம்மைகள் பாதுகாப்பானவையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு நேசமானவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முயற்சி முழுவதிலும் இருக்கும் மேலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்தப் பொம்மைகள், அங்கன்வாடிப் பிள்ளைகளுக்கு விளையாட அளிக்கப்படுவது தான். இன்று பாரதம் விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பில் கணிசமான முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில், கழிவிலிருந்து மதிப்பூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் இந்த இயக்கம், புதுமையான பரிசோதனை என்ற வகையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் இருக்கும் பேராசிரியர் ஸ்ரீநிவாஸ் பதகாண்டலா அவர்கள் மிகவும் சுவாரசியமான ஒரு செயலைச் செய்து வருகிறார். இவர் வாகன உலோக ஓட்டை உடைசல்களிலிருந்து சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார். இவரால் உருவாக்கம் பெற்ற இந்த பெரிய சிலைகள், மக்கள் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கின்றன, மக்கள் இவற்றை மிகுந்த உற்சாகத்தோடு பார்த்துச் செல்கிறார்கள். மின்னணு மற்றும் வாகன ஓட்டை உடைசல்களை மறுசுழற்சி செய்ய, இது ஒரு நூதனமான முயற்சி. நான் மீண்டுமொரு முறை கொச்சி மற்றும் விஜயவாடாவின் இந்த முயல்வுகளைப் பாராட்டுகிறேன், மேலும் மக்கள் இப்படிப்பட்ட முயல்வுகளில் ஈடுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, பாரதநாட்டு மக்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், நாங்கள் இந்தியர்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்லுவார்கள். நமது யோகக்கலை, ஆயுர்வேதம், தத்துவங்கள் என நாம் பெருமைப்பட என்ன இல்லை நம்மிடத்திலே. அதே வேளையில் நமது வட்டார மொழி, வழக்கு, அடையாளம், உடை, உணவுப் பழக்கம் இவை குறித்தும் பெருமிதம் கொள்கிறோம். புதியனவற்றை நாம் அடைய வேண்டும் தான், இது தான் வாழ்க்கை என்றாலும் கூட, நமது பண்டைய சீர்களை நாம் இழந்துவிடக் கூடாது. நாம் கடினமாக முயற்சிகள் மேற்கொண்டு நம்மருகே இருக்கும், விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் வேண்டும், வருங்கால சந்ததியினருக்கு அவற்றைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். இந்தப் பணியை, இன்று அஸாமில் வசிக்கும் சிகாரீ டிஸ்ஸௌ அவர்கள், மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறார். கார்பி அங்க்லோங் மாவட்டத்தின் சிகாரீ சிஸ்ஸௌ அவர்கள் கடந்த இரு தசாப்தங்களாக, கார்பி மொழியை ஆவணப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில், ஏதோ ஒரு யுகத்தில், கார்பி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மொழியான கார்பி, இன்று பிரதான ஓட்டத்திலிருந்து வழக்கொழிந்து வருகிறது. தனது இந்த அடையாளத்தை, தான் பாதுகாப்பேன் என்று திருவாளர் சிகாரீ டிஸ்ஸௌ அவர்கள் தீர்மானம் மேற்கொண்டு, இன்று, இவரது முயற்சிகள் காரணமாக பல இடங்களில் பாராட்டுக்களும் இவருக்குக் கிடைத்து வருகின்றன, விருதுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மனதின் குரல் வாயிலாக, திருவாளர் சிகாரீ டிஸ்ஸௌ அவர்களுக்கு நான் பாராட்டுக்களை அளிக்கும் அதே வேளையில், தேசத்தின் பல மூலைமுடுக்குகளில், இந்த மாதிரியான ஒருமுனைப்போடு பணியாற்றுவோர், ஒரு பணியை முன்னிட்டுத் தங்களையே அர்ப்பணம் செய்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, எந்த ஒரு புதிய தொடக்கமும் எப்போதும் மிகவும் விசேஷமானதாகவே இருக்கும். புதிய தொடக்கம் என்பதன் பொருள் புதிய முயற்சிகள். புதிய முயற்சிகள் என்றால் புதிய சக்தி, புதிய உற்சாகம். இதன் காரணமாகவே, பல்வேறு மாநிலங்களிலும், பகுதிகளும், பன்முகத்தன்மை நிறைந்த நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு தொடக்கத்தையும் கொண்டாட்டமாகவே கடைப்பிடிக்கும் பாரம்பரியம் இருக்கிறது. இந்த வேளை புதிய தொடக்கம் மற்றும் புதிய கொண்டாட்டங்களின் வருகை. ஹோலிப் பண்டிகையும் கூட, வசந்தகால வருகையைக் கொண்டாட்டமாக மகிழும் ஒரு பாரம்பரியம். எந்தக் காலத்தில் நாம் வண்ணங்களோடு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோமோ, அந்தக் காலம் வசந்த காலம், நமது நாலாபுறங்களிலும் புதிய வண்ணங்கள் இரைந்து கிடக்கும். இந்த வேளையில் மலர்கள் மலரத் தொடங்குகின்றன, இயற்கை மீண்டும் உயிர்ப்படைகிறது. தேசத்தின் பல்வேறு பாகங்களில், புத்தாண்டு விரைவிலேயே கொண்டாடப்பட உள்ளது. அது உகாதியாகட்டும், புத்தாண்டாகட்டும், குடீ பட்வா ஆகட்டும், பிஹூவாகட்டும், நவ்ரேஹ் ஆகட்டும், போய்லாவாகட்டும், போய்ஷாக்காகட்டும், அல்லது பைசாகீயாகட்டும். நாடு முழுவதும் உற்சாகம், உல்லாசம், புதிய நம்பிக்கைகளின் வண்ணங்களில் நனைந்திருக்கிறது. இதே காலத்தில் தான் கேரள புத்திரர்களும், அழகு கொஞ்சும் பண்டிகையான விஷுவைக் கொண்டாடுகிறார்கள். இதன் பிறகு விரைவிலேயே சைத்ர நவராத்திரி புனிதக்காலம் வந்து விடும். சைத்ர மாதத்தின் ஒன்பதாவது நாளன்று இராமநவமித் திருநாள் வரும். பகவான் இராமனின் பிறந்த நாளாக இதைக் கொண்டாடும் அதே நேரத்தில், நீதி மற்றும் பராக்கிரமத்தின் ஒரு புதிய யுகத்தின் தொடக்கம் என்ற வடிவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் நாலாபுறத்திலும், வெகு விமரிசையும், பக்திப்பெருக்கும் நிறைந்த சூழல் நிலவுகிறது; இது மக்களை மேலும் அணுக்கமாக்குகிறது, அவர்களின் குடும்பங்களை சமூகத்தோடு இணைக்கிறது, பரஸ்பர உறவுகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்தப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இந்தக் காலத்தில் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஈஸ்டரும் கொண்டாடப்படும். ஏசு கிறிஸ்து மரித்தெழுந்த நாள் என்ற வகையிலே ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அடையாளப்படுத்திச் சொன்னால், ஈஸ்டர் என்பது வாழ்க்கையின் புதிய தொடக்கத்தோடு இணைந்தது எனலாம். ஈஸ்டர் எதிர்பார்ப்புக்களுக்கான, மறுவாழ்வுக்கான அடையாளம். இந்தப் புனிதமான, மங்கலமான தருணத்தை முன்னிட்டு, நான் இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது, உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரலில் அமிர்த மகோத்சம் மற்றும் தேசத்திற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றி நாம் பேசினோம். நாம் திருநாட்கள் மற்றும் பண்டிகைகள் பற்றியும் பேசினோம். இதற்கிடையில் மேலும் ஒரு திருநாள் வரவிருக்கிறது, இது நமது அரசியல் சாசன உரிமைகள் மற்றும் கடமைகளை நமக்கு நினைவூட்டக் கூடியது. அது தான் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி – டாக்டர் பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள். இந்த முறை அம்ருத் மகோத்சவத்தின் போது, இது மேலும் சிறப்பு உடையதாக ஆகின்றது. பாபா சாஹேபுடைய இந்தப் பிறந்த நாளை நாம் மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்குவோம், நமது கடமைகள் குறித்த உறுதிப்பாட்டை மேற்கொண்டு நாம் அவருக்கு நினைவாஞ்சலிகளை அளிப்போம் என்று நான் உறுதிபட நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடு, உங்களனைவருக்கும், பண்டிகைகளுக்காக மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியோடு பண்டிகைகளைக் கொண்டாடுங்கள். இந்த விருப்பங்களோடு, மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் – மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை. பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நேற்று மாசி மகம் பௌர்ணமி புனிதநாள். மாசி மாதம் சிறப்பாக நதிகள், குளங்கள், நீர்நிலைகளோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. நமது சாஸ்திரங்களில்,
“माघे निमग्ना: सलिले सुशीते, विमुक्तपापा: त्रिदिवम् प्रयान्ति ||”
மாகே நிமக்னா: சலிலே சுஷீதே, விமுக்தபாபா: த்ரிதிவம் ப்ராயாந்தி, என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, மாசி மாதத்தில், எந்த ஒரு புனித நீர்நிலையிலாவது நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது என்பதே இதன் பொருள். உலகின் அனைத்து சமுதாயங்களிலும் நதிகளோடு இணைந்த பாரம்பரியம் ஏதோ ஒரு வகையிலாவது இருக்கத்தான் செய்கிறது. நதிக்கரைகளில் பல நாகரீகங்கள் மேம்பட்டிருக்கின்றன. நமது கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால், இது பற்றி விரிவாக நம்மிடத்திலே காணக் கிடைக்கின்றது. நீரோடு தொடர்புடைய கொண்டாட்டம் இல்லாத ஒரு மாதம் என்பதே பாரதநாட்டில் இல்லை என்று கூட நம்மால் கூற இயலும். மாசிமாத நாட்களில் மக்கள் தங்கள் குடும்பங்களை, வசதிகள்-சந்தோஷங்களை எல்லாம் விடுத்து, மாதம் முழுக்கவும், நதிகளின் கரைகளிலே கல்பவாசம் என்று சொல்லப்படும் இறைசிந்தனையுடன் கூடிய தூய வாழ்க்கை வாழச் சென்று விடுவார்கள். இந்த முறை ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறவிருக்கிறது. நீர் நமக்கெல்லாம் உயிர், நம்பிக்கை, வளர்ச்சிக்கான ஜீவாதாரம். நீர் ஒரு வகையில் பாரஸ் கல்லை விடவும் அதிக மகத்துவமானது. பாரஸ் கல்லில் இரும்பு படும் போது, அந்த இரும்பு பொன்னாக மாறி விடும் என்று கூறப்படுகிறது. இதே போல நீர் நம் மீது படுவதும், வாழ்க்கைக்கு அவசியமானது, வளர்ச்சிக்கும் முக்கியமானது.
நண்பர்களே, மாசி மாதத்தை நீரோடு இணைத்ததில் மேலும் ஒரு காரணமும் உண்டு. இந்த மாதத்தோடு குளிர்காலம் நிறைவு பெறுகிறது, கோடைக்காலம் தன் பதிவினை ஏற்படுத்துகிறது. ஆகையால் நீர் பராமரிப்புக்காக, நாம் இப்போதிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும். சில நாட்கள் கழித்து மார்ச் மாதத்தின் 22ஆம் தேதியன்று உலக நீர் நாள் வரவிருக்கிறது.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆராத்யா அவர்கள், உலகின் கோடிக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை நீர்த் தட்டுப்பாட்டை இட்டுநிரப்புவதிலேயே செலவு செய்கிறார்கள் என்று எனக்கு எழுதியிருக்கிறார். நீரில்லாமல் அனைத்தும் பாழ் என்று பொருளில்லாமல் கூறப்படுவதில்லையே!! நீர்த்தட்டுப்பாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலே ஒரு அருமையான தகவலை மேற்கு வங்கத்தின் வடக்கு தீனாஜ்பூரைச் சேர்ந்த சுஜித் அவர்கள் எனக்கு அனுப்பி இருக்கிறார். இயற்கையானது, நீர் வடிவிலே நம்மனைவருக்கும் பெருங்கொடையை அளித்திருக்கிறது; ஆகையால் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பும் நம்மனைவருக்குமானது என்று எழுதியிருக்கிறார். சமூகத்துக்கான பெருங்கொடை எனும் போது, பொறுப்பும் சமூகத்துக்கானது தானே!! சுஜித் அவர்கள் கூறியிருப்பது மிகவும் சரி தான். நதிகள், குளங்கள், ஏரிகள், மழை அல்லது நிலத்தடிநீர் என இவை அனைத்தும் அனைவருக்குமானது.
நண்பர்களே, ஒரு காலத்தில் கிராமங்களில் ஏரிகள்-குளங்கள் ஆகியவற்றின் பராமரிப்பை அனைவரும் இணைந்தே செய்து வந்தார்கள். இப்போது இதனை ஒட்டிய ஒரு முயற்சி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் தங்களின் குளங்களைப் பராமரிக்க ஒரு இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பகுதியில் பல்லாண்டுக்காலமாக மூடப்பட்டுக் கிடந்த பொதுக் குளங்களைத் தூர்வாரி, மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியப்பிரதேசத்தின் அக்ரோதா கிராமத்தில் பபீதா ராஜ்புத் அவர்களும் செய்து வருவதைப் பற்றி நீங்கள் கேட்டால், உங்கள் அனைவருக்கும் கருத்தூக்கமாக இருக்கும். பபீதா அவர்களின் கிராமம் புந்தேல்கண்ட். இவருடைய கிராமத்திற்கு அருகிலே ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது, இப்போது அது வறண்டு விட்டது. இவர் தனது கிராமத்தைச் சேர்ந்த பிற பெண்களோடு இணைந்து, ஏரிக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் ஒரு கால்வாயை உருவாக்கினார். இந்தக் கால்வாய் வழியாக மழைநீர் நேரடியாக ஏரியைச் சென்று அடையும். இப்போது, இந்த ஏரியில் நீர் நிரம்பி இருக்கின்றது.
நண்பர்களே, உத்தராகண்டின் பாகேஷ்வரில் வசிக்கும் ஜக்தீஷ் குனியால் அவர்கள் ஆற்றியிருக்கும் பணி நமக்குப் படிப்பினையை அளிக்கிறது. ஜகதீஷ் அவர்களின் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பகுதியின் நீர்த்தேவைகளை நிறைவேற்ற ஒரு இயற்கையூற்று இருந்தது. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பாக, இந்த நீர்நிலை வறண்டு போய் விட்டது. இதன் காரணமாக அந்த வட்டார மக்கள் நீர்த்தட்டுப்பாட்டால் அவதியுற்று வந்தார்கள். ஜகதீஷ் அவர்கள் மரம் நடுதல் என்பதைக் கொண்டு இந்த நீர்த்தட்டுப்பாட்டு சங்கடத்தை எதிர்கொள்ளத் தீர்மானித்தார். இவர் இந்தப் பகுதி முழுவதிலும் இருக்கும் கிராமவாசிகளோடு இணைந்து ஆயிரக்கணக்கான மரங்களை நட்டார். இதன் காரணமாக இன்று இந்தப் பகுதியில் வறண்டு போயிருந்த நீர்நிலை மீண்டும் உயிர் பெற்றது.
நண்பர்களே, நீர் விஷயத்தில் நாம் இதே போன்று நமது சமூகப் பொறுப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அநேக பகுதிகளில் மே-ஜூன் மாதங்களில் மழைக் காலம் தொடங்கி விடுகிறது. நாம் இப்போதிலிருந்தே அக்கம்பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, மழைநீரை சேமிக்க, 100 நாட்கள் இயக்கம் என்ற ஏதோ ஒரு இயக்கத்தைத் தொடங்கலாமே!! Catch the Rain என்ற பெயரிலான ஒரு இயக்கமும் தொடங்கப்பட இருக்கிறது. இந்த எண்ணத்தை முன்னிறுத்தியே, சில நாட்கள் கழித்து, ஜல்சக்தி அமைச்சகமும் கூட, ஜல்சக்தி இயக்கமான, Catch the Rain, அதாவது மழைநீரை சேகரிப்போம் என்ற செயல்பாடும் தொடங்கப்பட இருக்கின்றது. இந்த இயக்கத்தின் மூல மந்திரம் என்ன தெரியுமா? Catch the Rain, where it falls, when it falls, அதாவது மழைநீர் எங்கே, எப்போது விழுந்தாலும் அதை சேகரிப்போம் என்பது தான். முன்பேயே இருக்கும் நீர் சேகரிக்கும் அமைப்புகளை செப்பனிடுவோம், கிராமங்களின் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றைத் தூர்வாரி சுத்தம் செய்வோம், நீர்நிலைகள் வரை செல்லும் கால்வாய்களில் இருக்கும் தடைகளை அகற்றி, பெரும்பாலான மழைநீர் அவைவழியே சென்று நீர்நிலைகளை அடைவதை உறுதி செய்வதில் நாம் முழுவீச்சோடு ஈடுபட்டு, நீரை வெற்றிகரமாகச் சேமிப்போம்.
எனதருமை நாட்டுமக்களே, மாசி மாதம் மற்றும் இதோடு தொடர்புடைய ஆன்மீக மற்றும் சமூக மகத்துவம் பற்றி நாம் பேசும் வேளையில், ஒரு பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் ரவிதாஸர் என்ற புனிதர். மாசிமாத பௌர்ணமியன்று தான் புனிதர் ரவிதாஸாரின் பிறந்த தினமாகும். இன்றும் கூட, புனிதர் ரவிதாஸரின் சொற்கள், அவரது ஞானம் ஆகியன, நமது பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவரது பொன்மொழி ஒன்றைக் கூறுகிறேன் –
एकै माती के सभ भांडे,
सभ का एकौ सिरजनहार |
रविदास व्यापै एकै घट भीतर,
सभ कौ एकै घड़ै कुम्हार ||
ஏகை மாதீ கே சப் பாண்டே,
சப் கா ஏகௌ சிர்ஜனஹார்.
ரவிதாஸ் வ்யாபை ஏகை கட் பீதர்,
சப் கௌ ஏகை கடை கும்ஹார்.
நாமனைவருமே ஒரே மண்ணாலான கலயங்கள் தாம், நம்மனைவரையும் உருவாக்கியவன் ஒருவனே என்பதே இதன் பொருள். புனிதரான ரவிதாஸர், சமூகத்தில் புரையோடியிருந்த தீமைகளை தங்குதடையேதுமின்றிச் சாடினார். அவர் இந்தத் தீமைகளை எல்லாம் சமூகத்தின் பார்வைக்கு முன்னே வைத்தார். சமூகம் தன்னை சீர்திருத்திக் கொள்ளும் பாதையைக் காட்டியதாலேயே மீராபாய் அவர்கள்,
‘गुरु मिलिया रैदास, दीन्हीं ज्ञान की गुटकी’ |
குரு மிலியா ரைதாஸ், தீன்ஹீ ஞான் கீ குட்கீ, என்று போற்றிப் பரவினார். அதாவது, ரவிதாஸர் என்ற குரு கிடைத்திருக்கிறார். அவர் மெய்ஞானம் என்ற அருமருந்தை எனக்குப் புகட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள்.
புனிதர் ரவிதாஸரின் பிறந்த இடமான வாராணசியோடு நானும் இணைந்திருக்கிறேன் என்பதை நான் என் பெரும் பேறாகக் கருதுகிறேன். புனிதரான ரவிதாஸர் தன் வாழ்க்கையில் தொட்ட ஆன்மீக சிகரங்களையும், அவரது ஆற்றலையும் நான் புனிதத் தலமான வாராணசியில் அனுபவித்திருக்கிறேன். நண்பர்களே, ரவிதாஸர் அவர்களின் மேலும் ஒரு புனித மொழியைக் கேளுங்கள் –
करम बंधन में बन्ध रहियो, फल की ना तज्जियो आस |
कर्म मानुष का धर्म है, सत् भाखै रविदास ||
கரம் பந்தன் மே பந்த் ரஹியோ, பல் கீ நா தஜ்ஜியோ ஆஸ்,
கர்ம மானுஷ் கா தரம் ஹை, சத் பாகை ரவிதாஸ்.
அதாவது, நாம் இடைவிடாது நமது கடமையை ஆற்றிவர வேண்டும், பலன் என்னவோ கண்டிப்பாகக் கிடைத்தே தீரும். அதாவது செயல்பாடு விளைவை ஏற்படுத்தியே தீரும். நமது இளைஞர்களும் தூயவர் ரவிதாஸரிடமிருந்து கண்டிப்பாக ஒரு பாடத்தைக் கற்றே ஆக வேண்டும். இளைஞர்கள் பணியாற்றும் போது, தங்களைப் பழமையான வழிமுறைகளால் தடைப்படுத்திக் கொள்ளக் கூடாது. உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான வழிமுறைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள், உங்கள் இலக்குகளையும் நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய விவேகம், உங்களுடைய தன்னம்பிக்கை ஆகியன பலமானவையாக இருந்தால், உலகின் எந்த ஒரு சக்தியைப் பார்த்தும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், பல வேளைகளில் நமது இளைஞர்கள், அவர்களின் மனங்களில் தோய்ந்திருக்கும் எண்ணப்பாட்டின் அழுத்தம் காரணமாக, தாங்கள் மிகவும் விரும்பும் செயலைக்கூடச் செய்ய முடியாமல் போக நேர்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஆகையினாலே நீங்கள் அவ்வப்போது புதியதாக சிந்திக்கவும், புதிய வழியினில் செயல்படவும் எந்த கூச்சமும் படாதீர்கள். இதே போல, தூயவரான ரவிதாஸரும் ஒரு புதிய, மகத்துவம் வாய்ந்த செய்தியை அளித்திருக்கிறார். இந்தச் செய்தி, நாம் நமது கால்களில் நிற்பது என்பதே ஆகும். நாம் நமது கனவுகளை மெய்ப்பிக்க, வேறு ஒருவரைச் சார்ந்திருப்பது சரியான ஒன்று அல்ல. எது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்பதன் தரப்பாளர் அல்ல புனிதர் ரவிதாஸர். இன்று நமது நாட்டின் இளைஞர்களும் அவரைப் போலவே சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நம்மால் காண முடிகிறது. இன்று தேசத்தின் இளைஞர்களிடம் இருக்கும் புதுமைகள் படைக்கும் உணர்வைப் பார்க்கும் போது, புனிதர் ரவிதாஸருக்கும் கண்டிப்பாகப் பெருமிதம் உண்டாகும் என்றே எனக்குப் படுகிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று தேசிய அறிவியல் நாளும் கூட. இன்றைய நாள், மகத்தான அறிவியலாளர், டாக்டர் சி.வி. இராமன் அவர்கள் வாயிலாகப் அறியப்பட்ட ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் அவர்கள் நமோ செயலியில், ராமன் விளைவின் கண்டுபிடிப்பானது, ஒட்டுமொத்த அறிவியலின் போக்கையே மாற்றியமைத்து விட்டது என்று பதிவு செய்திருக்கிறார். இதோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான தகவலை, நாசிக் நகரைச் சேர்ந்த ஸ்நேஹில் அவர்களும் எனக்கு அனுப்பி இருக்கிறார். நமது தேசத்தில் எண்ணிலடங்கா அறிவியலாளர்கள் இருக்கிறார்கள், இவர்களின் பங்களிப்பு இல்லாது போயிருந்தால், அறிவியல் இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்காது என்று ஸ்நேஹில் அவர்கள் எழுதியிருக்கிறார். எப்படி நாம் உலகின் பிற விஞ்ஞானிகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோமோ, அதே போன்று, பாரதநாட்டின் விஞ்ஞானிகள் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. நானும் மனதின் குரல் நிகழ்ச்சியின் நேயர்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நமது இளைஞர்கள், பாரதநாட்டின் விஞ்ஞானிகள், அவர்களின் வரலாறு, அவர்களின் கண்டுபிடிப்புகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நன்கு படிக்க வேண்டும் என்று நான் ஆழமாக விரும்புகிறேன்.
நண்பர்களே, அறிவியல் பற்றிப் பேசும் வேளையில், இயற்பியல்-வேதியல் அல்லது பரிசோதனைக் கூடங்கள் என்ற வரையறைகளோடு மட்டுமே பல வேளைகளில் இதைக் குறுக்கி விடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் அறிவியல் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது, தற்சார்பு பாரத இயக்கத்தில் அறிவியலின் சக்திக்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது. அறிவியலை நாம் கூடங்களிலிருந்து களம் நோக்கிக் கொண்டு சென்றாக வேண்டும்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்தளா வெங்கட் ரெட்டி எடுத்துக்காட்டாக விளங்குகிறார். விட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்கள்-அபாயங்கள் குறித்து ரெட்டி அவர்களிடம் ஒருமுறை அவரது மருத்துவ நண்பர் குறிப்பிட்டிருந்தார். ரெட்டி அவர்கள் ஒரு விவசாயி. இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து ரெட்டி அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார். இதன் விளைவாக, கடும் உழைப்பிற்குப் பிறகு, குறிப்பாக விட்டமின் டி சத்து நிறைந்த நெல்-கோதுமை ரகங்களை மேம்படுத்தினார் ரெட்டி அவர்கள். ஜெனீவாவில் இருக்கும் உலக அறிவுசார் காப்புரிமை அமைப்பிலிருந்து, இந்த மாதம் அவருக்கு இதற்கான காப்புரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. வெங்கட் ரெட்டி அவர்களுக்குக் கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டதை அரசின் பேறாகவே நான் கருதுகிறேன்.
இதே போன்ற புதுமையான வழிமுறைகளை லடாக்கைச் சேர்ந்த உர்கேன் ஃபுத்சௌக் அவர்களும் பின்பற்றியிருக்கிறார். உர்கேன் அவர்கள், மிக உயரமான பகுதிகளில், இயற்கைவழி வேளாண்மையைக் கைக்கொண்டு, கிட்டத்தட்ட 20 வகைப் பயிர்களை விளைவித்திருக்கிறார், அதுவும் சுழற்சி முறையிலே. அதாவது, அவர் ஒரு விளைச்சலின் கழிவுப் பொருட்களை, அடுத்த விளைச்சலில், உரமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அருமையாக இருக்கிறது, இல்லையா!!
இதே போன்று, குஜராத்தின் பாடன் மாவட்டத்தில், காம்ராஜ் பாய் சௌத்ரி அவர்கள், முருங்கை விதைகளை, தன் வீட்டிலேயே மேம்படுத்தியிருக்கிறார். நல்ல விதைகளின் உதவியோடு, முருங்கையை விளைவிக்கிறார், இதன் தரமும் சிறப்பாக இருக்கிறது. தனது விளைச்சலை அவர் இப்போது தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி, தனது வருவாயைப் பெருக்கி வருகிறார்.
நண்பர்களே, சியா விதைகள் என்ற பெயரை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வுடையோர் இதனைப் பெரிதும் மதிக்கிறார்கள், உலகில் இவற்றுக்கான தேவை அதிகம் இருக்கிறது. இந்தியாவில் இதை அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். ஆனால் இப்போது சியா விதைகளிலும் கூட, தற்சார்பு என்ற சவாலையும் மக்கள் மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். உத்திரப்பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்த ஹரிஸ்சந்திரன் அவர்கள் சியா விதைகளைச் சாகுபடி செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சியா விதைகளைப் பயிர் செய்வதால் இவருடைய வருவாயும் அதிகரிக்கும், சுயசார்பு பாரத இயக்கத்துக்கும் பலம் உருவாகும்.
நண்பர்களே, விவசாயக் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்கும் பல முயற்சிகள் நாடெங்கிலும் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன. எடுத்துக்காட்டாக, மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர், வாழைக் கழிவுகளைக் கொண்டு, கயிறு உருவாக்கும் ஒரு இயந்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறார். முருகேசன் அவர்களுடைய இந்த நூதனமான கண்டுபிடிப்பால், சுற்றுச்சூழல் மற்றும் கழிவுகளுக்கான தீர்வு பிறக்கும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்திற்கான வழியும் உண்டாகும்.
நண்பர்களே, மனதின் குரல் நேயர்களிடத்தில், இத்தனை நபர்களைப் பற்றி நான் கூறுவதன் நோக்கம் என்னவென்றால், இவர்களிடமிருந்து நம்மனைவருக்கும் உத்வேகம் பிறக்க வேண்டும் என்பது தான். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தனது வாழ்க்கையில் அறிவியலைப் பயன்படுத்தத் தொடங்கினால், ஒவ்வொரு துறையிலும் இவ்வாறு செய்தால், முன்னேற்றப் பாதை தானே திறக்கும், தேசமும் சுயசார்புடையதாக ஆகும். இதை தேசத்தின் அனைத்துக் குடிமக்களாலும் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என் நேசம்நிறை நண்பர்களே, கோல்காத்தாவின் ரஞ்ஜன் அவர்கள், தனது கடிதத்தில் மிகவும் சுவாரசியமான, அதே வேளையில் அடிப்படை வினா ஒன்றை எழுப்பி இருக்கிறார். கூடவே, சிறப்பான வகையிலே இதற்கான விடையையும் அளிக்க முயன்றிருக்கிறார். நாம் தற்சார்பு பற்றிப் பேசும் போது, இதன் பொருள் என்ன என்று வினவியிருக்கிறார். இந்த வினாவிற்கான விடையையும் அவரே அளித்திருக்கிறார். அதாவது தற்சார்பு பாரத இயக்கம் என்பது, ஒரு அரசுக் கொள்கை மட்டுமே அல்ல, இது ஒரு தேசிய உணர்வு என்று கூறியிருக்கிறார். நம்முடைய விதியை நாமே தீர்மானிப்பது தான் தற்சார்புக்கான பொருள் என்று அவர் கருதுகிறார். ரஞ்ஜன் பாபுவுடைய கூற்று நூற்றுக்கு நூறு சரியானது தான். அவருடைய கூற்றை நான் மேலும் முன்னெடுத்துச் செல்கிறேன். தற்சார்புக்கான முதல் விதி, நமது நாட்டில் தயாராகும் பொருட்கள் மீது பெருமிதம் கொள்ளுதல், நமது தேசத்தவர்களின் தயாரிப்புகளின் பெருமை பாராட்டுதல். ஒவ்வொரு குடிமகனும் இப்படி பெருமிதம் கொள்வாரேயானால், ஒவ்வொருவரும் இணைவாரேயானால், தற்சார்பு பாரதம் என்பது, வெறும் ஒரு பொருளாதார இயக்கமாக இருக்காமல், ஒரு தேசிய உணர்வாகப் பரிமளிக்கத் தொடங்கும். விண்ணில் நம் நாட்டில் உருவான போர் விமானமான தேஜஸ் சீறிப்பாய்ந்து வித்தைகள் புரியும் போதும், நமது தேசத்தில் உருவாக்கம் பெற்ற கவசவாகனங்கள், நம் நாட்டின் ஏவுகணைகள், நமக்குப் பெருமை சேர்க்கும் போதும், வளர்ந்த நாடுகளில் நமது மெட்ரோ ரயிலின் இந்தியத் தயாரிப்புக் கோச்சுகள் என்பதைக் காணும் போதும், பல டஜன் நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் சென்று சேர்வதைப் பார்க்கும் போதும், நமது தலை மேலும் நிமிர்கிறது. ஏதோ பெரியபெரிய பொருட்கள் மட்டுமே இந்தியாவை தற்சார்புடையதாக ஆக்குகின்றன என்பது எல்லாம் கிடையாது. பாரத நாட்டிலே தயாரிக்கப்பட்ட துணிகள், பாரதத்தின் திறன்படைந்த கைவினைஞர்கள் தயாரித்த கைவினைப் பொருள்கள், பாரதத்தின் மின்னணுக் கருவிகள், பாரதத்தின் மொபைல்கள் என, அனைத்துத் துறைகளிலும், நாம் இந்த கௌரவத்தைப் பெருக்க வேண்டும். இந்த எண்ணப்பாட்டோடு நாம் முன்னேறும் போது தான், உண்மையாக நம்மால் தற்சார்பு உடையவர்களாக ஆக முடியும் நண்பர்களே. தற்சார்பு பாரதம் என்ற இந்த மந்திரம், தேசத்தின் கிராமங்கள்தோறும் சென்றடைந்து வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிகாரின் பேதியாவில் இது தான் நடந்திருக்கிறது என்பதை ஊடகத்தில் நான் படிக்க நேர்ந்தது.
பேதியாவில் வசித்துவரும் ப்ரமோத் அவர்கள், தில்லியின் எல்இடி பல்ப் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழில்நுட்பப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்ப் தயாரிக்கும் செயல்பாட்டை மிக நுணுக்கமான வகையில் புரிந்து கொண்டார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் பிரமோத் அவர்கள் வீடு திரும்ப வேண்டியிருந்தது. வீடு திரும்பிய ப்ரமோத் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? இவர் எல்இடி பல்ப் தயாரிக்கும் ஒரு சிறிய அலகைத் தொடங்கி விட்டார். தனது பகுதியிலிருக்கும் சில இளைஞர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டு, சில மாத காலத்திலேயே, ஆலைத் தொழிலாளர் என்ற நிலையிலிருந்து ஆலை முதலாளியாக மாறினார். அதுவும் தன் வீட்டில் இருந்தபடியே.
உபி கட்முக்தேஷ்வரின், மேலும் ஒரு எடுத்துக்காட்டும் உள்ளது. கட்முக்தேஷ்வரைச் சேர்ந்த சந்தோஷ் அவர்கள், இந்தக் கொரோனா காலத்தில், எப்படி சங்கடத்தை சந்தர்ப்பமாக மாற்றினார் என்பதை பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் அவர்களின் மூதாதையர்கள் நேர்த்தியான கைவினைஞர்கள், பாய் பின்னுபவர்கள். கொரோனா காலத்தில், பிற பணிகள் தடைப்பட்டிருந்த வேளையில், இவர்கள் பெரும் உற்சாகத்தோடு பாய் பின்னுவதைத் தொடர்ந்தார்கள். விரைவிலேயே, உத்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலிருந்தும் இவர்களுக்கு ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கியது. இதனால் இந்தப் பகுதியின் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான, அழகான கலைக்கும் ஒரு புதிய சக்தி கிடைத்ததாக சந்தோஷ் அவர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்.
நண்பர்களே, தற்சார்பு பாரத இயக்கத்தின் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் நாடெங்கிலும் இருக்கின்றன. வெகுஜனங்களின் மனங்களில் இது ஒரு உணர்வாக இன்று பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனதருமை நாட்டுமக்களே, குட்காவில் வசிக்கும் மயூருடைய ஒரு சுவாரசியமான பதிவை நான் நமோ செயலியில் பார்க்க நேர்ந்தது. இவர் பறவைகளைக் கூர்ந்து கவனிப்பவர், இயற்கையை விரும்புபவர். நான் ஹரியானாவில் வசிக்கிறேன் என்றாலும், நீங்கள் அசாம் பற்றி, குறிப்பாக, காசிரங்கா மக்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு மயூர் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்தப் பகுதியின் பெருமிதங்களான காண்டாமிருகங்களைப் பற்றி மயூர் அவர்கள் கூறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், water fowl-களின் எண்ணிக்கை பெருகியிருப்பது குறித்து, மயூர் அவர்கள் அசாம் மாநில மக்களுக்குத் தன் பாராட்டுக்களைப் பதிவு செய்திருக்கிறார். இந்த water fowl-களை எளிய மொழியில் எவ்வாறு கூறுவது என்று நான் தேடிக் கொண்டிருந்த வேளையில், இவற்றை நீர்க்கோழிகள் எனக் கூறலாம் என்று கண்டுபிடித்தேன். இந்தப் பறவைகள் மரங்களில் வசிப்பவை அல்ல, மாறாக வாத்துக்களைப் போல நீரிலேயே வசிப்பவை. காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் பாதுகாப்பு ஆணையம், சில காலமாகவே வருடாந்திர நீர்க்கோழிகள் கணக்கெடுப்பைச் செய்து வருகின்றது. இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக நீர்க்கோழிகளின் எண்ணிக்கை தெரிய வருகிறது, இவற்றின் விருப்பமான வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 2-3 வாரங்கள் முன்பு தான் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த முறை நீர்க் கோழிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 175 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இந்தக் கணக்கெடுப்பின்படி, காசிரங்கா தேசியப்பூங்காவில் பறவைகளின் 112 இனங்களைக் காண முடியும். இவற்றில் 58 இனங்கள், ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் கிழக்காசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கும் பனிக்கால புலம்பெயர் இனங்கள். இங்கே சிறப்பான நீர்ப்பராமரிப்பும், மனிதக் குறுக்கீடுகள் குறைவாக இருப்பதுமே, இதற்கான மிக முக்கியமான காரணங்களாகும். இதே போன்று சில விஷயங்களில் ஆக்கப்பூர்வமான மனித முயற்சிகள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
அசாமைச் சேர்ந்த ஜாதவ் பாயேங்க் அவர்களைப் பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இவரது சேவைகளுக்காக இவருக்கு பத்ம விருதும் கிடைத்திருக்கிறது. ஜாதவ் பாயேங்க் அவர்கள், அசாமின் மஜூலித் தீவில் சுமார் 300 ஹெக்டேர் பண்ணையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். இவர் வனப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதோடு, பண்ணை மற்றும் உயிரிபன்முகத்தன்மைப் பாதுகாப்பில் மக்களுக்கு உத்வேகமூட்டும் பணியில் செயலாற்றியும் வருகிறார்.
நண்பர்களே, அசாமிலிருக்கும் நமது கோயில்களும் கூட, இயற்கைப் பாதுகாப்பில், தங்களுக்கே உரிய பிரத்யேகமான பங்களிப்பை நல்கி வருகின்றன. நீங்கள் நமது ஆலயங்களை கவனித்தால், ஒவ்வொரு ஆலயத்தின் அருகிலும் ஒரு நீர்நிலை இருப்பதைக் காணலாம். ஹஜோவில் இருக்கும் ஹயக்ரீவ மதேப் ஆலயம், சோனித்புரின் நாகசங்கர் ஆலயம், கவுஹாத்தியில் இருக்கும் உக்ரதாரா ஆலயம் ஆகியவற்றுக்கு அருகிலே இப்படிப்பட்ட பல ஏரிகள் இருக்கின்றன. வழக்கொழிந்து வரும் ஆமையினங்களைப் பாதுகாக்க இவை பயனாகின்றன. அசாமிலே மிக அதிக அளவில் ஆமை இனங்கள் காணப்படுகின்றன. ஆலயங்களின் இந்த நீர்நிலைகள், ஆமைகளின் பாதுகாப்பு, இனப்பெருக்கம், மேலும் இவை பற்றிய ஆய்வுகளுக்கான மிகச் சிறப்பான இடங்களாக ஆக முடியும்.
என் இனிய நாட்டுமக்களே, புதுமைகள் படைத்தலுக்கு, நாம் விஞ்ஞானிகளாக ஆக வேண்டும் என்றும், பிறருக்குக் கல்விபுகட்ட நாம் ஆசிரியர்களாக ஆக வேண்டும் என்றும் சிலர் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணப்பாட்டுக்கு சவால் விடுப்பவர் எப்போதுமே பாராட்டுக்குரியவர். படை வீரனாக ஆக ஒருவருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றால், பயிற்சி அளிப்பவர் படைவீரனாக இருக்க வேண்டுமா என்ன? நீங்கள் என்ன நினைப்பீர்கள் – ஆம் என்று தானே! இங்கே தான் ஒரு திருப்புமுனை இருக்கிறது.
ஊடகத்திலிருந்து ஒரு அறிக்கையை கமல்காந்த் அவர்கள் மைகவ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார், இது வேறுபட்ட ஒரு விஷயத்தைக் கூறுகிறது. ஒடிஷாவின் அராகுடாவில் நாயக் சார் என்ற ஒருவர் இருக்கிறார். இவரது இயற்பெயர் என்னவோ சிலூ நாயக் தான், ஆனால் அனைவரும் இவரை நாயக் சார் என்றே அழைக்கின்றார்கள். இவர் இலக்கு நோக்கிய பயணத்தை மேற்கொள்பவர். இராணுவத்தில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் இலவசப் பயிற்சியை அளித்து வருகிறார். நாயக் சாருடைய அமைப்பின் பெயர் மஹாகுரு பெடாலியன். இதில் உடல் உறுதி தொடங்கி, நேர்காணல்கள், எழுத்தாற்றல், பயிற்சி வரை அனைத்துக் கோணங்களைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படை, எல்லையோரக் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல்படை போன்ற அநேக சீருடைப் பணிகளில் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் பெருவியப்பை அளிக்கலாம். மேலும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், சிலூ நாயக் அவர்களே கூட ஒடிஷாவின் காவல்துறையில் சேரும் முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் இதில் இவரால் வெற்றி பெற இயலவில்லை என்பது தான். இதனைத் தாண்டி, இவர் தனது பயிற்சியளிக்கும் ஆற்றல் காரணமாக அநேக இளைஞர்களை நாட்டுப்பணிக்கு உகந்தவர்களாக ஆக்கி இருக்கிறார். நாமனைவரும் இணைந்து நாயக் சாருக்கு நமது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம் வாருங்கள், அவர் நமது நாட்டிற்காக மேலும் மேலும் நாயகர்களைத் தயார் செய்யட்டும்.
நண்பர்களே, சில வேளைகளில் மிகவும் எளிய வினாக்கள் கூட நம்மைப் பெரிதும் புரட்டிப் போட்டு விடக் கூடும். இந்த வினாக்கள் நீண்டவையாக இருப்பதில்லை, மிகவும் எளியவையாக இருக்கின்றன; என்றாலும் கூட, நம்மை சிந்திக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன. சில நாட்கள் முன்பாக ஹைதராபாத்திலே அபர்ணா ரெட்டி அவர்கள் என்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். நீங்கள் இத்தனை ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறீர்கள், இத்தனை ஆண்டுகளாக முதல்வராக இருந்தீர்கள், ஏதேனும் குறைபாடு இருப்பதாக எப்போதேனும் உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அபர்ணா அவர்களின் கேள்வி எத்தனை இயல்பானதாக இருக்கிறதோ, அத்தனை கடினமானதாகவும் இருக்கிறது. நான் இந்தக் கேள்வி குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தேன், என்னிடத்தில் என்ன குறை என்று கேட்டுக் கொண்டேன், தூண்டித் துருவி அலசிப் பார்த்தேன். ஆம், ஒரு குறை இருக்கிறது என்பதைக் கண்டுணர்ந்தேன். உலகின் மிகத் தொன்மையான மொழி, தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயல என்னால் முடியவில்லையே, செம்மொழியாம் தமிழ் மொழியை என்னால் கற்க முடியவில்லையே என்ற குறை வாட்டுகிறது. தமிழ் அழகு கொஞ்சும் மொழி, உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் மொழி. தமிழ் மொழி இலக்கியத்தின் தரம், இவற்றில் இருக்கும் கவிதைகளின் ஆழம் ஆகியவை பற்றி பலர் என்னிடத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். பாரதம் பற்பல மொழிகள் உறையும் இடம், இவை நமது கலாச்சாரம் மற்றும் கௌரவத்தை எடுத்து இயம்புகின்றன. மொழி குறித்து நாம் பேசும் வேளையில், ஒரு சிறிய, சுவாரசியமான ஒலிக்குறிப்பை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
நீங்கள் இதுவரை கேட்டுக் கொண்டிருந்தது, ஒற்றுமைச் சிலை குறித்து ஒரு வழிகாட்டி, சர்தார் படேல் அவர்களுடைய உலகிலேயே மிக உயரமான சிலை பற்றி சம்ஸ்கிருதத்தில் விளக்கிய ஒரு ஒலிக்குறியீடு. கேவடியாவில் 15க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள், மக்களுக்கு தங்கு தடையேதும் இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மகிழ்வை அளிக்கும். நான் இப்பொழுது உங்களுக்கு மேலும் ஒரு ஒலிக்குறிப்பை அளிக்க விரும்புகிறேன்.
நீங்களும் இதைக் கேட்டு வியப்பில் மூழ்கி இருப்பீர்கள். உள்ளபடியே, இது சம்ஸ்கிருதத்தில் செய்யப்பட்ட கிரிக்கெட் காட்சி வர்ணனை. வாராணசியில், சம்ஸ்கிருத கல்லூரிகளுக்கு இடையேயான ஒரு கிரிக்கெட் பந்தயம் நடக்கும். இந்தக் கல்லூரிகள், சாஸ்த்ரார்த்த கல்லூரி, ஸ்வாமி வேதாந்தி வேத வித்யாபீடம், ஸ்ரீ ப்ரும்ம வேத வித்யாலயம் மற்றும் இண்டர்நேஷனல் சந்திரமௌலி சேரிடபிள் ட்ரஸ்ட் ஆகியன. இந்தப் பந்தயத்தில் நடக்கும் போட்டிகளின் காட்சி வர்ணனை சம்ஸ்கிருதத்திலேயே செய்யப்படுகின்றது. இப்போது நான் அந்தக் காட்சி வர்ணனையின் ஒரு சிறிய பகுதியைத் தான் உங்கள் செவிகளுக்கு அளித்தேன். இதுமட்டுமல்ல, இந்தப் பந்தயத்தில், விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளரும் பாரம்பரிய உடுப்பில் பங்கெடுக்கிறார்கள். உங்களுக்கு சக்தி, உற்சாகம், விறுவிறுப்பு ஆகியவை அனைத்தும் ஒருங்கே தேவை என்றால், நீங்கள் இந்த விளையாட்டுக்களின் காட்சி வர்ணனையைக் கேட்டே ஆக வேண்டும். டிவி எல்லாம் வருவதற்கு வெகுகாலம் முன்பே கூட, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் ஆட்டங்களின் விறுவிறுப்பை நாடெங்கிலும் உணரச் செய்த பெருமை விளையாட்டுக் காட்சி வர்ணனைக்கு உண்டு. டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்டத்தின் காட்சி வர்ணனையும் கூட மிகச் சிறப்பான வகையிலே அளிக்கப்படுகின்றது. எந்த விளையாட்டுக்களின் காட்சி வர்ணனை நிறைவானதாக இருக்கிறதோ, அவற்றின் பரவலாக்கம் மிக விரைவாக நடப்பதை நாம் கவனித்திருக்கிறோம். நம் நாட்டிலேயே கூட, பல விளையாட்டுக்கள், காட்சி வர்ணனை கலாச்சாரமின்மை காரணமாக, வழக்கொழிந்து போகும் நிலையில் இருக்கின்றன. என் மனதிலே ஒரு எண்ணம்…… பல்வேறு விளையாட்டுக்கள், அதிலும் குறிப்பாக நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டுக்களின் சிறப்பான காட்சி வர்ணனை, பல மொழிகளில் இருக்க வேண்டும், இதை நாம் ஊக்கப்படுத்தும் திசையில் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும். விளையாட்டு அமைச்சகமும், தனியார் அமைப்புகளின் நண்பர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு மிகவும் பிரியமான இளைய நண்பர்களே, இனி வரவிருக்கும் சில மாதங்கள் உங்களனைவரின் வாழ்க்கையிலும் அதிக மகத்துவமானதாக இருக்கும். பெரும்பாலான இளைய நண்பர்களின் தேர்வுகள் நடைபெற உள்ளன. என் செல்வங்களே, நினைவிருக்கிறதா நான் முன்பு கூறியது!! நீங்கள் அனைவரும் வீரர்களாக வேண்டும், விசனப் படுபவர்களாக ஆகக் கூடாது, மலர்ந்த முகத்தோடு தேர்வுகளைச் சந்தியுங்கள், அதே மலர்ச்சியோடு வீடு திரும்புங்கள். நீங்கள் போட்டியிட வேண்டியது மற்றவர்களோடு அல்ல, உங்களோடு தான். போதுமான அளவு உறக்கம் தேவை, நேர மேலாண்மையும் தேவை. விளையாட்டையும் நீங்கள் துறந்துவிடக் கூடாது, ஏனென்றால் யார் விளையாடுகிறார்களோ, அவர்களே மலரவும் செய்கிறார்கள். மீளாய்வையும், நினைவில் கொள்ளும் ஆற்றலையும் நீங்கள் கைக்கொள்ள வேண்டும், அதாவது ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமென்றால், இந்தத் தேர்வுகளில், உங்களிடம் இருக்கும் சிறப்பானவற்றை நீங்கள் வெளிக்கொணர வேண்டும். இவையனைத்தும் எவ்வாறு சாத்தியப்படும் என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்!! நாமனைவரும் இணைந்து தான் இதைச் செய்யப் போகிறோம். ஒவ்வொரு ஆண்டினைப் போலவே, இந்த ஆண்டும் நாம் இணைந்து, தேர்வு பற்றிய ஒரு அலசல் புரிவோம். ஆனால் மார்ச் மாதம் நிகழவுள்ள தேர்வு பற்றிய ஒரு அலசலுக்கு முன்பாக நான் தேர்வை சந்திக்க இருக்கும் அனைத்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். நீங்கள் உங்கள் அனுபவங்கள், உதவிகரமான உங்களுடைய குறிப்புகள் ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். நரேந்திரமோடி செயலியில் நீங்கள் பகிரலாம். இந்த முறை தேர்வு பற்றிய ஓர் அலசலில், நான் இளைஞர்களுடன் கூடவே, பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். எப்படி பங்கெடுக்க வேண்டும், எப்படி பரிசுகளை வெல்ல வேண்டும், எப்படி என்னோடு கலந்தாய்வு செய்யும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பது தொடர்பான அனைத்துத் தகவல்களும் ”மைகவ்” தளத்தில் உங்களுக்குக் கிடைக்கும். இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், சுமார் 40,000 பெற்றோரும், கிட்டத்தட்ட 10,000 ஆசிரியர்களும் பங்கெடுத்திருக்கிறார்கள். நீங்களும், இன்றே பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கொரோனா காலகட்டத்தில், நான் சற்று நேரம் ஒதுக்கி, “எக்ஸாம் வாரியர்” புத்தகத்திற்காக பல புதிய உத்திகளை இணைத்திருக்கிறேன். இப்பொழுது இதிலே பெற்றோர்களுக்காக பிரத்யேகமாக சில குறிப்புகளையும் இணைத்திருக்கிறேன். இந்த உத்திகளோடு இணைந்திருக்கும் பல சுவாரசியமான செயல்பாடுகள், நரேந்திரமோடி செயலியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை உங்களுக்குள்ளே இருக்கும் தேர்வு வீரனைத் தூண்டி விடப் பேருதவி புரியும். இவற்றை நீங்கள் கண்டிப்பாக முயன்று பாருங்கள். வரவிருக்கும் தேர்வுகள் குறித்து அனைத்து இளைய நண்பர்களுக்கும் பலப்பல நல்வாழ்த்துகள்.
எனதருமை நாட்டுமக்களே, மார்ச் மாதம் நமது நிதியாண்டின் இறுதி மாதம் ஆகையால், உங்களில் பலர் மிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இப்பொழுது, நாட்டில் பொருளாதார விதிமுறைகள் விரைவு படுவதால், நமது வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் பலரும் முனைப்பாக செயல்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கிடையே, நாம் கொரோனாவிடம் நமது எச்சரிக்கையை எள்ளளவும் குறைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும், கடமைப் பாதையில் உறுதியாக இருக்க வேண்டும், அப்போது தான் தேசம் விரைவான முன்னேற்றம் காணும்.
உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கான நல்வாழ்த்துகள், மேலும் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் விடாமல் பின்பற்றி வாருங்கள், இதிலே சற்றேனும் தளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான அனுபவங்கள், நிறைவான வாழ்க்கை வாழும் உத்வேகத்தை அளிப்பது என்பதன் பெயர் தான் மனதின் குரல். இன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி நாள். இப்போது, சில நாட்கள் முன்பாகத் தானே 2021ஆம் ஆண்டு தொடங்கியது என்று என்னைப் போலவே நீங்களும் சிந்திக்கிறீர்கள் தானே!! ஜனவரி முழுவதும் கடந்து போய் விட்டது என்ற உணர்வே ஏற்படவில்லை; இதைத் தான் காலத்தின் ஓட்டம் என்கிறார்கள். சில நாட்கள் முன்பு தான் நாம் ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம், லோஹ்டி, மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்ந்தோம், ஆனால் இவை அனைத்தும் கடந்து போனதே தெரியாமல் கடந்து விட்டன. நாட்டின் பல பாகங்களிலும் பண்டிகைகளின் கோலாகலம் நிறைந்திருந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று நாம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை, பராக்ரம் திவஸ், அதாவது பராக்கிரம தினம் என்ற பெயரில் கொண்டாடினோம், ஜனவரி 26ஆம் தேதியான நமது குடியரசுத் தினத்தன்று கண்கொள்ளாக் காட்சியான அணிவகுப்பைக் கண்டு களித்தோம். இரு அவைகளின் கூட்டுத் தொடரின் துவக்கமாக குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இவை அனைத்தின் இடையேயும், நாம் வெகுகாலமாகக் காத்திருந்த ஒரு விஷயம் நடந்தேறியது. அது தான் பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு. அசாதாரணமான செயல்கள் புரிந்துவருவோரின் சாதனைகள், மனித சமூகத்தின் பொருட்டு அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு கௌரவம் அளித்தது. பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகச் செயலாற்றியவர்கள், தங்களின் செயல்களால் மற்றவர்களின் வாழ்க்கையில் நல்மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், நாட்டை முன்னேற்றியவர்கள் போன்றோருக்கு இந்த ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கள அளவில் பணியாற்றும் பாராட்டுப்பெறாத நாயகர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் தொடங்கப்பட்ட, பத்ம விருதுகள் வாயிலாக கௌரவம் அளிக்கும் பாரம்பரியம், இந்த முறையும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நபர்களைப் பற்றியும், இவர்களின் பங்களிப்பு பற்றியும் நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்வதோடு, உங்கள் குடும்பங்களிலும் இவர்களைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுங்கள் என்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன். இவற்றால் அனைவருக்கும் எத்தனை உத்வேகம் ஏற்படும் என்பதை அப்போது நீங்களே உணர்வீர்கள்.
இந்த மாதம், கிரிக்கெட் மைதானத்திலிருந்தும் மிக அருமையான செய்தி கிடைத்திருக்கிறது. நம்முடைய கிரிக்கெட் அணியானது, தொடக்ககட்ட சிரமங்களுக்குப் பிறகு, அற்புதமான மீட்சி கண்டு, ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றெடுத்திருக்கிறது. நமது விளையாட்டு வீரர்களின் கடும் உழைப்பும், குழுப்பணியும் கருத்தூக்கம் அளிக்க வல்லன. இவற்றுக்கு இடையே, தில்லியில், ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவண்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. நாம் இனிவரும் காலங்களை நம்பிக்கை-புதுமை ஆகியவற்றால் இட்டுநிரப்ப வேண்டும். நாம் கடந்த ஆண்டு, அசாதாரணமான சுயகட்டுப்பாடு மற்றும் மனவுறுதியை வெளிப்படுத்தினோம். இந்த ஆண்டும் நாம் நமது கடும் உழைப்பு வாயிலாக, நமது உறுதிப்பாடுகளை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். நம்முடைய தேசத்தை, மேலும் விரைவுகதியில் நாம் முன்னேற்றிச் செல்ல வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த ஆண்டின் தொடக்கத்தோடு, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டம் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. எப்படி கொரோனாவுக்கு எதிராக பாரதத்தின் போராட்டம் ஒரு எடுத்துக்காட்டாக ஆகியுள்ளதோ, அதே போல, இப்போது, நம்முடைய தடுப்பூசித் திட்டமும், உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக ஆகி வருகின்றது. இன்று பாரதம் உலகின் மிகப்பெரிய கோவிட் பெருந்தொற்றுத் தடுப்பு இயக்கத்தைச் செயல்படுத்தி வருகின்றது. மேலும் நமக்கு கௌரவம் சேர்க்கும் விஷயம் என்ன தெரியுமா? நமது மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தோடு கூடவே, உலகிலேயே மிக விரைவுகதியில் நாம் நமது குடிமக்களுக்குத் தடுப்பூசிகளையும் போட்டு வருவது தான். வெறும் 15 நாட்களில், பாரதம் தனது 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்குத் தடுப்பூசி போட்டு விட்டது; ஆனால் இந்தப் பணிக்கு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு 18 நாட்களும், பிரிட்டன் போன்ற நாட்டிற்கு 36 நாட்களும் பிடித்தன.
நண்பர்களே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, இன்று பாரதநாட்டின் தற்சார்புக்கான எடுத்துக்காட்டு என்பது மட்டுமல்ல, நாட்டின் சுயகௌரவத்துக்கும் ஒரு பறைசாற்றல். நமோ செயலியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, மனதில் ஒரு புதிய தன்னம்பிக்கையை நிரப்பியுள்ளதாக, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஹிமான்ஷு யாதவ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அயல்நாடுகளில் வாழும் தன்னுடைய பல நண்பர்களும், இந்தியாவிற்குத் தங்கள் நன்றிகளை, தனக்கு செய்தி அனுப்பித் தெரிவிப்பதாக மதுரையைச் சேர்ந்த கீர்த்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பாரதம் உலகின் பிற நாடுகளுக்கு உதவியிருப்பது, பாரதம் பற்றி அவர்களின் மனங்களில் மரியாதையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது என்று செய்திகள் அனுப்பித் தன்னிடத்தில் தெரிவித்திருப்பதாக, கீர்த்தி அவர்கள் கூறியிருக்கிறார். கீர்த்தி அவர்களே, தேசம் பற்றி பெருமை பாராட்டப்படுவதைக் கேட்டு, மனதின் குரலின் நேயர்களும் பெருமைப்படுவார்கள். பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும் இப்போது பாரதம் குறித்த இதே போன்ற செய்திகளை எனக்கும் அனுப்பி வருகிறார்கள். ப்ராஸீல் நாட்டுக் குடியரசுத் தலைவர், தனது ட்வீட் வாயிலாக நாட்டிற்குத் தெரிவித்திருக்கும் நன்றிகள், அனைத்து இந்தியர்களுக்கும் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்பதை நீங்களே கூடப் பார்த்திருக்கலாம். ஆயிரமாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில், உலகின் மறுகோடியில் வசிப்போருக்கும், இராமாயணத்தின் இந்த நிகழ்வு பற்றி எத்தனை நுணுக்கமாகத் தெரிந்திருக்கிறது, அவர்கள் மனதில் எத்தனை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள்!! இது தான் நமது கலாச்சாரத்தின் சிறப்பு.
நண்பர்களே, இந்த தடுப்பூசித் திட்டம் தொடர்பாக உங்கள் கவனம் வேறு ஒரு விஷயம் குறித்தும் கண்டிப்பாகச் சென்றிருக்கும். இந்தச் சங்கடம் நிறைந்த வேளையில், பாரதத்தால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது, தற்சார்பு அடைந்திருக்கிறது என்பதால் தான். தற்சார்பு பாரத இயக்கத்தின் பின்புலத்தில் இருக்கும் கருத்தியலும் இது தான். பாரதநாடு எந்த அளவுக்கு வல்லமை உடையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக ஆதாயம் மனித சமூகத்துக்கான சேவையில் உலகிற்கு உண்டாகும்.
எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையும் உங்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. நமோ செயலியிலும், Mygov தளத்திலும் வரும் உங்கள் செய்திகள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவை வாயிலாக, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. இந்தச் செய்திகளில் ஒரு செய்தி, என் கவனம்கவர்ந்த செய்தி சகோதரி ப்ரியங்கா பாண்டேயிடமிருந்து வந்திருக்கிறது. 23 வயது நிரம்பிய சகோதரி ப்ரியங்கா அவர்கள், ஹிந்தி இலக்கியப்படிப்பு படித்து வருகிறார், பிஹாரின் சீவானில் வசித்து வருகிறார். நாட்டின் 15 சுற்றுலாத் தலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் எனது ஆலோசனையால் அவர் உத்வேகம் அடைந்ததால், ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று, மிகச் சிறப்பானதொரு இடத்திற்குச் சென்றதாக, நமோ செயலியில் குறிப்பிட்டிருக்கிறார். அது என்ன இடம் தெரியுமா? அவரது வீட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்களின் பூர்வீக இல்லம் தான் அது. தேசத்தின் மகத்தான நாயகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் திசையில் தனது முதல் படி இது என்று பிரியங்கா அவர்கள் மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். அங்கே பிரியங்கா அவர்களுக்கு, டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் காணக் கிடைத்தன, பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்களைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே, பிரியங்கா அவர்களின் இந்த அனுபவம், மற்றவர்களுக்கும் கருத்தூக்கத்தை ஏற்படுத்தும்.
நண்பர்களே, இந்த ஆண்டு தொடங்கி பாரதம் தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் கொண்டாட்டமான, அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாட இருக்கிறது. எவர்கள் காரணமாக நமக்கு சுதந்திரம் கிடைத்ததோ, அப்படிப்பட்ட மஹாநாயகர்களோடு தொடர்புடைய வட்டாரப் பகுதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இது ஒரு அற்புதமான, அருமையான சந்தர்ப்பம்.
நண்பர்களே, நாம் சுதந்திரப் போராட்டம் மற்றும் பிஹார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நமோ செயலியில் குறிப்பிடப்படப்பட்டிருக்கும் வேறு ஒரு விஷயம் பற்றியும் பேச விரும்புகிறேன். முங்கேரில் வசிக்கும் ஜெய்ராம் விப்லவ் அவர்கள், தாராபுர் உயிர்த்தியாகிகள் தினம் பற்றி எழுதியிருக்கிறார். 1932ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று, தேசபக்தர்களின் கூட்டம் ஒன்றின் பல வீரம் நிறைந்த இளைஞர்களை, ஆங்கிலேயர்கள் தயவு தாட்சணியமே இல்லாமல் கொன்று போட்டார்கள். அவர்கள் புரிந்த ஒரே குற்றம் – வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியது தான். நான் அந்த உயிர்த்தியாகிகளுக்குத் தலைவணங்குகிறேன், அவர்களின் தைரியத்திற்கு சிரத்தையுடன்கூடிய நினைவாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன். நான் ஜெய்ராம் விப்லவ் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அதிகம் தெரியாத, ஆனால் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இத்தகைய ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
என் இனிய நாட்டுமக்களே, பாரத நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், சுதந்திரப் போர் முழுவீச்சில் போரிடப்பட்டு வந்தது. பாரதபூமியின் அனைத்து மூலைகளிலும் மகத்தான நல்மைந்தர்களும், வீராங்கனைகளும் தோன்றினார்கள்; இவர்கள் தேசத்திற்காகத் தங்களின் வாழ்க்கையையே தியாகம் புரிந்தார்கள். நமக்காகப் புரியப்பட்ட இந்தப் போராட்டங்கள், இவை தொடர்பான நினைவுகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, இவற்றை எழுத்துக்களில் வடித்து, நமது வருங்கால சந்ததிகளுக்கு இவற்றை உயிர்ப்போடு நாம் அளிக்க வேண்டும் என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயம். நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும், சுதந்திரப் போராட்டம் தொடர்பான சம்பவங்கள் பற்றியும் கண்டிப்பாக எழுதுங்கள் என்று நாட்டுமக்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வீரக்காதைகள் பற்றி, புத்தகங்களில் எழுதுங்கள். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை பாரதம் கொண்டாடும் வேளையில், உங்களின் எழுத்துக்கள், சுதந்திரப் போராட்ட நாயகர்களுக்கான உத்தமமான நினைவாஞ்சலிகளாகும். இந்தியாவின் 75 ஆண்டுக்கால சுதந்திரத்தை முன்னிட்டு, இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு முன்னெடுப்பு தொடங்கப்பட இருக்கிறது. இதில் அனைத்து மாநிலங்கள்-மொழிகளைச் சேர்ந்த இளைய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கப்படும். தேசத்தில் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இதனால் உருவாக்கம் பெறுவார்கள், அவர்கள் நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆழமான அறிவு உடையவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட மலரும் மொட்டுக்களுக்கு நாம் முழுமையாக உதவிகள் செய்ய வேண்டும். இதன் காரணமாக எதிர்காலப் போக்கைத் தீர்மானம் செய்யும் சிந்தனாசிற்பிகளின் ஒரு படை தயாராகும். இந்த முயல்வின் அங்கமாக ஆகவும், தங்களின் இலக்கியத் திறமைகளை அதிக அளவில் பயன்படுத்தவும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் எனது இளைய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இது தொடர்பான தகவல்களை நீங்கள் கல்வியமைச்சகத்தின் இணையதளத்தில் பெறலாம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரல் நேயர்களுக்கு விருப்பமானது எது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஆனால் எனக்கு மனதின் குரலில் மிகவும் பிடித்தமானது எது என்றால், அது உங்களிடமிருந்து நான் பெறும் கற்றல் தான். உங்களோடு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், ஒருவகையில், உங்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கிறது. ஒருவருடைய முயற்சி, ஒருவருடைய பேரார்வம், நாட்டிற்காக சாதித்தே தீருவேன் என்ற உணர்வுடைய ஒருவருடைய மனவுறுதி – இவை அனைத்தும் எனக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன, என்னுள் ஆற்றலை நிரப்புகின்றன.
ஹைதராபாதின் போயின்பல்லியில் உள்ள வட்டார காய்கறி சந்தையானது, எப்படி தனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறது என்பதைப் படிக்க நேர்ந்த போது, அது எனக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தியது. பல காரணங்களால் கணிசமான அளவு காய்கறிகள் வீணாகிப் போவதை நாம் அனைவருமே கவனித்திருப்போம். இந்தக் காய்கறிகள் ஆங்காங்கே இரைக்கப்பட்டு, மாசினை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் மீந்து போகும் இந்தக் காய்கறிகளை நாம் ஆங்காங்கே வீசிச் செல்லக்கூடாது என்று போயின்பல்லியின் காய்கறிச் சந்தை தீர்மானம் மேற்கொண்டது, இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று முடிவெடுத்தது. வீணாகிப் போன காய்கறிகளிடமிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது தான் புதுமைகள் படைத்தலின் சக்தி. போயின்பல்லியின் காய்கறிச் சந்தையில் ஏற்படும் கழிவுகள் இன்று செல்வமாக மாறியிருக்கின்றன – இது தான் மாசிலிருந்து மாணிக்கம், கழிவிலிருந்து செல்வம். அங்கே ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன்கள் அளவுக்குக் கழிவுப்பொருள் வெளியேற்றப்பட்டு, இவை ஒரு ஆலையில் குவிக்கப்படுகின்றன. ஆலைக்குள்ளே இந்தக் கழிவுகளிலிருந்து நாளொன்றில் 500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, சுமார் 30 கிலோ உயிரி எரிபொருளும் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்திலிருந்து சந்தை ஒளியூட்டப்படுகிறது; உயிரி எரிபொருள், சந்தையில் இருக்கும் உணவகத்தில் உணவு தயார் செய்யப் பயன்படுகிறது. அருமையான முயல்வு இல்லையா!!
இதே போன்ற ஒரு அருமையான செயல்பாட்டினை, ஹரியாணாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த படௌத் கிராமப் பஞ்சாயத்தும் செய்து காட்டியிருக்கிறது. இந்தப் பஞ்சாயத்துப் பகுதியில் நீர் வெளியேற்றலில் பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது, நோய்கள் உண்டாயின; ஆனால், கழிவுநீரை செல்வநீராக மாற்றுவோம் என்று படௌத்தின் மக்கள் தீர்மானம் செய்தார்கள். கிராமம் முழுவதிலிருந்தும் வெளியேறும் நீரை, ஓரிடத்தில் சேகரித்து, அதை வடிகட்டத் தொடங்கினார்கள். வடிகட்டப்பட்ட இந்த நீர், இப்போது கிராமத்து விவசாயிகளின் வயல்வெளிகளின் நீர்பாசனத் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. அதாவது சூழல்மாசு, கழிவு, நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை ஒருபுறம், வயல்களுக்கு நீர்பாசனம் இன்னொரு புறம்.
நண்பர்களே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாயிலாக, வருவாய்க்கான பாதை எப்படி திறக்கின்றது என்பது தொடர்பான ஒரு எடுத்துக்காட்டு அருணாச்சல் பிரதேசத்தின் தவாங்கிலும் காணக்கிடைக்கிறது. அருணாச்சல் பிரதேசத்தின் இந்த மலைப்பாங்கான பகுதியில் தான் பல நூற்றாண்டுகளாகவே, மோன் ஷுகு என்ற பெயர் கொண்ட ஒரு காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் காகிதம், அந்தப் பகுதிகளில் காணப்படும் ஷுகு ஷேங் என்ற பெயரிலான ஒரு மரத்தின் பட்டைகளிலிருந்து தயார் செய்யப்படுகிறது. ஆகையால் தான் இந்தக் காகிதத்தைத் தயார் செய்ய, இந்த மரங்களை வெட்டத் தேவையில்லாமல் இருக்கிறது. இதைத் தவிர, இதைத் தயார் செய்ய எந்த ஒரு வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுவது கிடையாது. அதாவது இந்தக் காகிதம் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது, உடல்நலத்துக்கும் கேடு விளைவிக்காதது. ஒரு காலத்தில் இந்தக் காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் நவீன தொழில்நுட்பம் பெரிய அளவில் காகிதம் தயாரிக்கத் தொடங்கிய போது, இந்த வட்டாரக் கலை அஸ்தமனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. இப்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகசேவகரான கோம்பூ அவர்கள், இந்தக் கலைக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் இங்கே பழங்குடி சகோதர சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
மேலும் ஒரு செய்தியை நான் கேரளத்திலிருந்து பார்க்க நேர்ந்தது. இது நம்மனைவருக்கும் பொறுப்புணர்வை ஊட்டக் கூடியது. கேரளத்தின் கோட்டயம் பகுதியில் மூத்த மாற்றுத் திறனாளி ஒருவர் இருக்கிறார், இவர் பெயர் என்.எஸ். ராஜப்பன் அவர்கள். ராஜப்பன் அவர்கள் பக்கவாதம் காரணமாக, நடமாட முடியாமல் இருந்தாலும், தூய்மை மீது இவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பில் எந்தக் குறைவும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே இவர் வேம்பநாடு ஏரியில் தனது படகில் பயணித்து, ஏரியில் வீசி எறியப்பட்டிருக்கும் நெகிழிப் பொருட்களை வெளியே எடுத்து வருகிறார். ராஜப்பன் அவர்களின் சிந்தனை எத்தனை உயரியது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!! நாமும் ராஜப்பன் அவர்களிடமிருந்து கருத்தூக்கம் அடைந்து, தூய்மைக்காக நம்மால் இயன்ற பங்களிப்பை நல்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, அமெரிக்காவின் சேன் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரூ வரை, விமானத்தை இடைவிடாது செலுத்தி, நான்கு இந்தியப் பெண்கள் சாதனை படைத்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 10,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து இந்த விமானம், 225ற்கும் மேற்பட்ட பயணிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த, இரண்டு பெண் அதிகாரிகள், புதிய வரலாற்றைப் படைத்திருப்பதை, இந்தமுறை நடைபெற்ற ஜனவரி 26ஆம் தேதி அணிவகுப்பில் நீங்கள் கவனித்திருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் சரி, தேசத்தின் பெண்மணிகளின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், பல வேளைகளில், தேசத்தின் ஊரகப்பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற மாற்றங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பதை நாம் பார்க்கிறோம். ஆகையால் தான், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சார்ந்த ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்த போது, இது குறித்து கண்டிப்பாக மனதின் குரலில் கூறியே ஆக வேண்டும் என்று நான் தீர்மானம் செய்தேன். இந்தச் செய்தி மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. ஜபல்பூரின் சிச்காவைச் சேர்ந்த பெண்கள் ஒரு அரிசி ஆலையில், தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்கள். கொரோனா உலகம் தழுவிய பெருந்தொற்று, உலகின் அனைத்து மக்களையும் பாதித்ததைப் போல, இந்தப் பெண்களும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய அரிசி ஆலையிலும் பணி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டது. ஆனால் இதனால் எல்லாம் நிலைகுலையாத இந்தப் பெண்கள், தாங்களே இணைந்து ஒரு அரிசி ஆலை தொடங்கத் தீர்மானம் செய்தார்கள். எந்த ஆலையில் அவர்கள் பணி புரிந்தார்களோ, அந்த ஆலைக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் இயந்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்தார்கள். இவர்களில் மீனா ராஹங்கடாலே என்பவர், பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுய உதவிக் குழு ஒன்றை ஏற்படுத்தினார், அனைவரும் தங்களின் சேமிப்பு அனைத்தையும் மூலதனமாகத் திரட்டினார்கள். பற்றாக்குறையாக இருந்த தொகையை இவர்கள் ஆஜீவிகா மிஷன், அதாவது வாழ்வாதார இயக்கம் என்பதற்கு உட்பட்டு, வங்கியில் கடனாகப் பெற்றார்கள். இந்த பழங்குடியினப் பெண்கள், தாங்கள் முன்பு வேலை செய்துவந்த ஆலையையே விலைக்கு வாங்கி விட்டார்கள். இன்று இவர்கள் சொந்தமாக ஒரு அரிசி ஆலையை நடத்தி வருகின்றார்கள். மிகக் குறைவான நாட்களில் இந்த ஆலையானது கிட்டத்தட்ட மூன்று இலட்சம் ரூபாய் அளவுக்கு இலாபம் சம்பாதித்திருக்கிறது. இந்த இலாபத்தால் மீனா அவர்களும், அவருடைய கூட்டாளிகளும், முதலில் வங்கிக் கடனை முழுமையாகத் திருப்பிக் கட்டவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் தேவையான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கொரோனா உருவாக்கிய சூழ்நிலைகளுக்கு எதிராக, தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் அற்புதமான பணிகள் அரங்கேறியிருக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, நான் புந்தேல்கண்ட் பகுதியைப் பற்றிப் பேசினேன் என்றால், உங்கள் நினைவுகளுக்கு என்னவெல்லாம் தோன்றும்? வரலாற்று அபிமானிகள், இந்தப் பகுதியை ஜான்சியின் இராணி லக்ஷ்மிபாயோடு தொடர்புபடுத்துவார்கள். வேறு சிலரோ, அழகும், அமைதியும் நிறைந்த ஓர்ச்சாவைப் பர்றி எண்ணமிடுவார்கள். இன்னும் சிலருக்கு, இந்தப் பகுதியின் தகிக்கும் வெப்பம் மீது நினைவு செல்லும். ஆனால், இப்போதெல்லாம் இங்கே, வித்தியாசமானவை அரங்கேறி வருகின்றன. இது மிகவும் உற்சாகமூட்டுவது, இதைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக ஜான்சியில், ஒரு மாதம் வரை நடைபெறக்கூடிய ஸ்ட்ராபெர்ரி கொண்டாட்டம் தொடங்கியது. புந்தேல்கண்டுக்கும் ஸ்ட்ராபெர்ரிக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் இது உண்மை. இப்போது புந்தேல்கண்டில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி தொடர்பாக உற்சாகம் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பெரும்பங்கினை ஒருவர் ஆற்றியிருக்கிறார் என்று சொன்னால், அவர் ஜான்சியின் ஒரு பெண்மணியான குர்லீன் சாவ்லா அவர்கள். சட்டப்படிப்பு படிக்கும் குர்லீன் அவர்கள், முதலில் தனது வீட்டிலும், பின்னர் தனது வயலிலும் ஸ்ட்ராபெர்ரியை பரீட்சார்த்தமாக வெற்றிகரமாக விளைவித்து, ஜான்சியிலும் இதைப் பயிரிட முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். ஜான்சியின் ஸ்ட்ராபெர்ரி கொண்டாட்டம், வீட்டில் இருந்தபடியே என்ற கோட்பாட்டுக்கு வலு சேர்க்கிறது. விவசாயிகளும், இளைஞர்களும் தங்களுடைய இல்லங்களின் பின்புறத்தில் இருக்கும் வெற்றிடங்களிலோ, மாடிகளில் மாடிக்கூரைத் தோட்டமாகவோ, ஸ்ட்ராபெர்ரிகளை விளைவிக்க, இந்தக் கொண்டாட்டம் வாயிலாக ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு, இத்தகைய முயல்வுகள் தேசத்தின் பிற பாகங்களிலும் நடந்தேறி வருகின்றன. மலைகளின் அடையாளமாக விளங்கும் ஸ்ட்ராபெர்ரி இப்போது, கட்ச் பகுதியின் மணல்பாங்கான நிலத்திலும் விளைவிக்கப்பட்டு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வருகிறது.
நண்பர்களே, ஸ்ட்ராபெர்ரி கொண்டாட்டம் போன்ற பரிசோதனைகள், எப்படி புதுமைகள் படைத்தல் உணர்வைப் பிரதிபலிக்கின்றனவோ, அதே நேரத்தில், நமது தேசத்தின் விவசாயத் துறை எந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை அரவணைக்கிறது என்பதற்கும் ஒளி சேர்க்கிறது.
நண்பர்களே, விவசாயத்தை நவீனமயமாக்க அரசாங்கம் கடப்பாடு உடையதாக இருக்கிறது, இதற்கான பல படிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இனிவரும் காலத்திலும் அரசின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, நான் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளி மேற்கு வங்கத்தின் மேற்கு மித்னாபூரில் இருக்கும் நயா பிங்கலா கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஓவியரான சர்முத்தீன் பற்றியது. இராமாயணம் தொடர்பாக அவர் வரைந்த ஓவியம், இரண்டு இலட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதனால் அவரது கிராம மக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காணொளியைக் கண்ட பின்னர், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டானது. இது தொடர்பாக, மேற்கு வங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு மிக நல்ல முன்முயற்சி பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது, இதை உங்களோடு பகிர விரும்புகிறேன். சுற்றுலா அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம், மாதத் தொடக்கத்திலேயே வங்காளத்தின் கிராமங்களில் ஒரு, Incredible India Weekend Gateway, அதாவது அற்புதமான இந்தியா வார இறுதி நுழைவாயில் என்பதைத் தொடக்கியது. இதில், மேற்கு மித்னாபுர், பாங்குரா, பீர்பூம், புரூலியா, கிழக்கு பர்தமான் ஆகிய இடங்களின் கைவினைஞர்களைக் கொண்டு, வருகையாளர்களுக்கென, கைவினைப் பொருட்களின் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அற்புதமான இந்தியா வார இறுதி நுழைவாயில்படி, கைவினைப் பொருட்களின் மொத்த விற்பனை, கைவினைஞர்களுக்கு அதிக ஊக்கமளிப்பதாக இருந்தது. நாடெங்கிலும் உள்ளவர்களும் புதியபுதிய வழிமுறைகள் வாயிலாக, நம்முடைய கலைகளை வெகுஜனங்களுக்குப் பிரியமானவையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒடிஷாவின் ரூர்கேலாவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ சாஹூவையே எடுத்துக் கொள்வோமே!! இவர் பொறியியல் மாணவர் என்றாலும், கடந்த சில மாதங்களாக இவர் சீலைஓவியக்கலையைக் கற்கத் தொடங்கி, இதில் வல்லவரானார். சரி, இவர் எங்கே தனது ஓவியத்தை வரைந்தார் தெரியுமா? மென்கற்களில் தான். கல்லூரி செல்லும் வழியில், பாக்யஸ்ரீ அவர்களுக்கு இந்த மென்கற்கள் தட்டுப்பட்டன, உடனே இவற்றை திரட்டி, சுத்தம் செய்தார். பின்னர், இவர் தினமும் 2 மணிநேரம் இந்தக் கற்களின் மீது, சீலை ஓவிய பாணியில் வரையத் தொடங்கினார். இந்தக் கற்களின் மீது பூச்சுப் பூசி, தனது நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கத் தொடங்கினார். பொதுமுடக்கத்தின் போது, இவர் பாட்டில்களின் மீது வரையத் தொடங்கினார். இப்போதோ இவர், இந்தக் கலை பற்றிய பட்டறைகளை நடத்தி வருகிறார். சில நாட்கள் முன்பாக, சுபாஷ் பாபுவின் பிறந்தநாளின் போது, பாக்யஸ்ரீ அவர்கள், கற்களின் ஓவியம் வாயிலாக வித்தியாசமான நினைவாஞ்சலிகளை செலுத்தினார். இனி வருங்காலத்தில், இவருடைய முயற்சிகள் வெற்றிபெற என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலை மற்றும் வண்ணங்கள் வாயிலாக, மிகப் புதுமையான கற்றல் ஏற்படக்கூடும், ஏற்படுத்த முடியும். ஜார்க்கண்டின் தும்காவில் புரியப்பட்ட ஒரு இணையற்ற முயற்சி பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இங்கே, இடைநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், பிள்ளைகளுக்குக் கற்பிக்க, கிராமத்தின் சுவர்களையே, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி எழுத்துக்களால் நிரப்பி விட்டார். மேலும், இதிலே பலவகையான ஓவியங்களையும் ஏற்படுத்தியதால், கிராமத்தின் பிள்ளைகளுக்கு மிக உதவிகரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரத நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், பல பெருங்கடல்கள், பெருந்தீவுகளைக் கடந்து உள்ள தேசம், சிலே. இந்தியாவிலிருந்து சீலே சென்றடைய அதிககாலம் பிடித்தாலும், இந்தியக் கலாச்சாரத்தின் மணம், அங்கே நெடுங்காலம் முன்பாகவே பரவியிருக்கிறது. மேலும் ஒரு விசேஷமான விஷயம் என்னவென்றால், அங்கே யோகக்கலை, அதிகம் பிரபலமானதாக இருக்கிறது. சீலேயின் தலைநகரான சாண்டியாகோவில் 30க்கும் மேற்பட்ட யோகக்கலைப் பள்ளிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். House of Deputiesஇல் யோகக்கலை தினம் தொடர்பாக, அதிக வரவேற்பு நிறைந்த சூழல் நிலவுவதாக எனக்கு தெரிவிக்கப் பட்டிருக்கிறது. கொரோனா காலகட்டமான இப்பொழுது, நோய் எதிர்ப்புத் திறன் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்தத் திறனை அதிகரிப்பதில் யோகக்கலையிடம் இருக்கும் வல்லமையைப் பார்த்த மக்கள், முன்பை விட இப்பொழுது யோகக்கலைக்கு அதிக மகத்துவம் அளித்து வருகின்றார்கள். சீலேயின் காங்கிரஸ், அதாவது அந்நாட்டு நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தையே இயற்றியிருக்கிறது. அங்கே, நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று தேசிய யோகக்கலை தினமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. சரி, நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று என்ன பெரிய விசேஷம் என்று நீங்கள் எண்ணமிடலாம். 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று தான், முதலாவது யோக அமைப்பினை, ஹோஜே ராஃபால் எஸ்த்ரேதா நிறுவினார். இந்த நாளை தேசிய யோகக்கலை தினமாக அறிவித்து, எஸ்த்ராதா அவர்களுக்கு ச்ரத்தாஞ்சலிகளும் அளிக்கப்பட்டிருக்கிறது. சீலேயின் நாடாளுமன்றம் வாயிலாக இது சிறப்பானதொரு கௌரவம், இந்தியர்களான நமக்கு இது பெருமிதம். மேலும், சீலேயின் நாடாளுமன்றத்தோடு தொடர்புடைய வேறு ஒரு விஷயமும் உங்களுக்கு சுவாரசியமானதாக இருக்கலாம். சீலேயின் senate, அதாவது மூதவையின் துணை குடியரசுத் தலைவரின் பெயர் ரபீந்திரநாத் க்விண்டேராஸ். உலகக்கவியான குருதேவ் டகோரால் உத்வேகம் பெற்று இடப்பட்டிருக்கும் பெயராகும் இது.
எனதருமை நாட்டுமக்களே, MyGovதளத்தில், மஹாராஷ்ட்ரத்தின் ஜால்னாவைச் சேர்ந்த டாக்டர். ஸ்வப்னில் மந்த்ரி அவர்களும், கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த பிரஹலாத் ராஜகோபாலனும் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்கள். அதாவது சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும் மனதின் குரலில் நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வரை, நம்முடைய நாட்டில் சாலை பாதுகாப்பு மாதமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். சாலை விபத்துக்கள் இன்று நமது தேசத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கவலை அளிப்பனவாக இருக்கின்றன. இன்று பாரதநாட்டில் சாலைப் பாதுகாப்பிற்காக, அரசோடு, தனியார் மற்றும் சமூக அளவிலான பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிர்காக்கும் இந்த முயற்சிகளில், நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்களே, எல்லையோர சாலைகள் நிறுவனம் உருவாக்கும் சாலைகளில் பயணிக்கும் போது, பல நூதனமான slogans, அதாவது கோஷங்களை நீங்கள் பார்க்கலாம். This is highway, not runway, அதாவது இது நெடுஞ்சாலை, விமானஓடுபாதை அல்ல. Be Mr. Late than Late Mr., அதாவது கால தாமதமானாலும் பரவாயில்லை, காலமானவர் என்று ஆகி விடாதீர்கள் போன்ற கருத்தைக்கவரும் கோஷங்கள், மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவல்லவையாக இருக்கின்றன. இவை போன்ற கருத்தைக்கவரும் நூதனமான கோஷங்களையோ, சிந்தையை ஈர்க்கும் வாசகங்களையோ நீங்கள் MyGovக்கு அனுப்புங்கள். உங்களுடைய நல்ல கோஷங்களும், இந்த இயக்கத்திற்குப் பயனாகும்.
நண்பர்களே, சாலை பாதுகாப்பு பற்றிப் பேசும் வேளையில், கோல்காத்தாவின் அபர்ணா தாஸ் அவர்கள் நமோ செயலியில் அளித்திருக்கும் ஒரு தகவல் பற்றிப் பேச விரும்புகிறேன். அபர்ணா அவர்கள் நான் Fast Tag திட்டம் பற்றிப் பேச வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். Fast Tag வாயிலாக, பயணத்தின் அனுபவமே மாறி விட்டது என்று இவர் கூறுகிறார். இதனால் நேரம் சேமிக்கப்படுவதோடு, சுங்கச் சாவடியில் தடைப்பட்டு, பணமாகச் செலுத்த வேண்டிய தேவையற்ற கவலைக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. அபர்ணா அவர்கள் கூறுவது சரிதான். முன்பெல்லாம் சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் 7 முதல் 8 நிமிடங்கள் வரை சராசரியாக தாமதிக்க வேண்டியிருந்தது. ஆனால் Fast Tag வந்த பிறகு, இந்த நேரம் ஒண்ணரை முதல் 2 நிமிடங்கள் சராசரி காத்திருப்பு என்று ஆகி விட்டது. சுங்கச் சாவடியில் காத்திருப்பு நேரம் குறைந்து போனதால், வாகனத்தின் எரிபொருள் சேமிப்பு ஏற்படுகிறது. இதனால் நாட்டுமக்களின், கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய்கள் சேமிக்கப்படுகின்றன என்று அனுமானிக்கப் படுகிறது. அதாவது பணமும் மிச்சம், நேரமும் மிச்சம். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுங்கள், உங்களின் மீதும் அக்கறை செலுத்துங்கள், மற்றவர்கள் உயிர் மீதும் கரிசனம் காட்டுங்கள், இதுவே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.
எனதருமை நாட்டுமக்களே, நம் நாட்டிலே ஒரு வழக்குச் சொற்றொடர் உண்டு. जलबिंदु निपातेन क्रमशः पूर्यते घटः” | – ஜலபிந்து நிபாதேன க்ரமஷ: பூர்யதே கட:, ஜ்ஜ்அதாவது, ஒவ்வொரு சொட்டு நீரால் தான் குடம் நிரம்புகிறது. நம்முடைய ஒவ்வொரு முயற்சியும், நம்முடைய மனவுறுதியை மெய்ப்பிக்கும். ஆகையால் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தை, எந்த இலக்குகளோடு நாம் மேற்கொண்டோமோ, அவற்றை நாமனைவருமாக இணைந்து நிறைவேற்ற வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்த ஆண்டினை பொருள்சார்ந்த ஒன்றாக ஆக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம், வாருங்கள். நீங்கள் உங்களுடைய செய்திகளை, உங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று டிசம்பர் மாதம் 27ஆம் நாள். நான்கு நாட்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு தொடங்க இருக்கின்றது. இன்றைய மனதின் குரல், ஒருவகையில் 2020ஆம் ஆண்டின் நிறைவான மனதின் குரலாக ஒலிக்கும். அடுத்த மனதின் குரல் 2021ஆம் ஆண்டில் தொடங்கும். நண்பர்களே, நீங்கள் எழுதியிருக்கும் ஏகப்பட்ட கடிதங்கள் எனக்கு முன்பாகக் காணப்படுகிறன. Mygovஇல் நீங்கள் அனுப்பியிருக்கும் ஆலோசனைகளும் கருத்துக்களும் என் முன்னே இருக்கின்றன. எத்தனையோ பேர்கள் தொலைபேசி வாயிலாகத் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். பரவலான வகையிலே கடந்த ஆண்டின் அனுபவங்களும், 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளும் இருக்கின்றன. கோலாபூரைச் சேர்ந்த அஞ்ஜலி அவர்கள், எப்போதும் போலவே, வரவிருக்கும் புதிய ஆண்டிலும் நாம் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்; ஆனால் இந்த முறை நாம் ஒரு புதிய விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாம் ஏன் நமது நாட்டுக்கு வாழ்த்து தெரிவிக்க கூடாது!!! அஞ்ஜலி அவர்களே, உண்மையிலேயே இது மிகவும் அருமையான ஒரு யோசனை. நமது தேசம், 2021ஆம் ஆண்டிலே, வெற்றிகளின் புதிய சிகரங்களைத் தொட வேண்டும், உலகத்தில் இந்தியாவிற்கென ஒரு அடையாளம் ஏற்படுத்தப்பட வேண்டும், நாடு சக்தி படைத்ததாய் ஆக வேண்டும் என்ற இந்த விருப்பத்தை விடவும் பெரிய விருப்பம் வேறு என்னவாக இருக்க முடியும்!!
நண்பர்களே, NamoAppஇலே, மும்பையைச் சேர்ந்த அபிஷேக் அவர்கள் ஒரு புதிய செய்தியை பதிவிட்டிருக்கிறார். 2020ஆம் ஆண்டு நமக்கு எதையெல்லாம் அளித்ததோ, எவற்றையெல்லாம் கற்பித்ததோ, அவற்றை நாம் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. மேலும் கொரோனாவோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதங்களில், இந்தச் செய்திகளில், ஒரு விஷயம் பொதுவானதாக, சிறப்பானதாக இழையோடுவதை நான் காண்கிறேன். இதையே நான் உங்களோடு பகிர விழைகிறேன். பெரும்பான்மையான கடிதங்களில் தேசத்தின் திறமைகள், நாட்டுமக்களின் சமூக சக்தி ஆகியவற்றை மக்கள் முழுமையாகப் பாராட்டி இருக்கின்றார்கள். பொது ஊரடங்கு போன்ற ஒரு புதுமையான செயல்பாடு, உலகம் முழுமைக்கும் உத்வேகக் காரணியாக அமைந்ததோ, கைகளையும் தட்டுக்களையும் தட்டி நாட்டின் கொரோனா போராளிகளுக்கு எப்படி நாம் மரியாதை அளித்தோமோ, நமது ஒற்றுமையை வெளிப்படுத்தினோமோ, இவற்றையெல்லாம் பலர் நினைவு கூர்ந்தார்கள்.
நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். நான் நாட்டின் விருப்பங்களின் அற்புதமான பெருக்கினைக் கவனித்தேன். சவால்கள் நிறைய வந்தன. சங்கடங்களுக்கும் குறைவேதும் இருக்கவில்லை. கொரோனா காரணமாக உலகிலே விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன, ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டிலே ஒரு புதிய திறனும் பிறப்பெடுத்தது. இதைச் சொற்களில் வடிக்க வேண்டுமென்றால், இந்தத் திறனின் பெயர் தான் தற்சார்பு.
நண்பர்களே, தில்லியில் வசிக்கும் அபினவ் பேனர்ஜி தனது அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார், இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அபினவ் அவர்கள் தனது உறவுக்காரக் குழந்தைகளுக்கு பரிசளிக்க சில விளையாட்டுப் பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. ஆகையால் அவர் தில்லியின் ஜண்டேவாலான் சந்தைக்குச் சென்றார். இந்தச் சந்தை சைக்கிள் மற்றும் பொம்மைகளுக்கு தில்லியில் பெயர் போனது என்று பலர் அறிந்திருப்பீர்கள். முன்பெல்லாம் விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் என்றாலே அவை இறக்குமதி செய்யப்பட்டவை என்று தான் பொருள் கொள்ளப்படும்; மேலும் விலைமலிவான விளையாட்டுப் பொருட்களும் அயல்நாடுகளிலிருந்து தாம் வரும். ஆனால், அபினவ் அவர்கள் தனது கடிதத்தில் எழுதுகிறார், இப்போது அங்கே பல கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம், ஐயா இந்த பொம்மையை தரமானது, ஏனென்றால் இது இந்தியாவில் தயாரிக்கப்படுவது, மேட் இன் இண்டியா என்கிறார்களாம். வாடிக்கையாளர்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளையே கேட்டு வாங்குகிறார்கள். இந்த ஒரு எண்ணத்தில் தான் எத்தனை மாற்றம்!! இது நாம் கண்கூடாகக் காணும் சான்று. நாட்டுமக்களின் கருத்திலே எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். அதுவும் ஒரே ஆண்டுக்குள்ளாக!! இந்த மாற்றத்தைக் கணக்கிடுவது எளிதல்ல. பொருளாதார வல்லுநர்களாலும் இந்த மாற்றத்தை எடை போட முடியாது.
நண்பர்களே, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் முரளிப்ரஸாத் அவர்கள் எழுதியிருப்பதிலும் ஒரு வித்தியாசமான கருத்து இருக்கிறது. வெங்கட் அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான தனது ABCயைப் பட்டியலிட்டு இணைத்திருக்கிறார். இங்கே ABCக்கு என்ன பொருள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது தான் நான் வெங்கட் அவர்கள் கடிதத்தோடு இணைத்திருந்த ஒரு அட்டவணையை கவனித்தேன். அதன் பிறகு தான் எனக்குத் தெளிவானது – ABC க்கு அவரளிக்கும் விளக்கம், ஆத்மநிர்பர் பாரத் ABC சார்ட், அதாவது தற்சார்பு பாரதம் ABC அட்டவணை. இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. வெங்கட் அவர்கள் தாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். இவற்றிலே மின்னணு சாதனங்கள், எழுதுபொருள்கள், உடல்பராமரிப்புப் பொருள்கள் ஆகியவை தவிர மேலும் பல பொருட்கள் அடங்கும். நாம் அறிந்தோ அறியாமலோ, பல அயல்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம், ஆனால் இவற்றுக்கான மாற்றுகள் இந்தியாவிலேயே எளிதாகக் கிடைக்கின்றன என்று வெங்கட் அவர்கள் கூறுகிறார். இனி தாம் நாட்டுமக்களின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கும் பொருட்களையே வாங்கப் போவதாகவும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நண்பர்களே, ஆனால் இதோடு கூடவே அவர் மேலும் சில விஷயங்களைக் கூறியிருக்கிறார், இவை மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. நாம் தற்சார்பு பாரதத்தை ஆதரிக்கிறோம், ஆனால் நமது தயாரிப்பாளர்களும் ஒரு விஷயத்தை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்; அதாவது அவர்கள் தங்கள் தயாரிப்புகளில் சற்றுக்கூட தரக்குறைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சரியான விஷயம் தானே!! பூஜ்யம் பாதிப்பு, பூஜ்யம் குறைபாடு என்ற எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது. நாட்டுமக்கள் உறுதியான முடிவெடுத்திருக்கிறார்கள், பலமான முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எவை உலகளாவிய அளவில் சிறந்து இருக்கின்றனவோ, அவற்றை நாம் இந்தியாவிலே தயாரித்துக் காட்ட வேண்டும். இதன் பொருட்டு நமது தொழில்முனைவுடைய நண்பர்கள் முன்வர வேண்டும். ஸ்டார் அப்புகளும் முன்வர வேண்டும். இதுவே நான் நாட்டின் தயாரிப்பாளர்கள்-தொழில்துறைத் தலைவர்களிடம் விடுக்கும் வேண்டுகோள். மீண்டும் ஒருமுறை நான் வெங்கட் அவர்களின் சிறப்பான முயல்வுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, நாம் இந்த உணர்வைப் பேண வேண்டும், பாதுகாக்க வேண்டும், இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நான் முன்னமேயே கூறியதை இன்று மீண்டும் நாட்டுமக்களிடம் வேண்டுகோளாக முன்வைக்கிறேன். நீங்களும் ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களை எல்லாம் சற்று ஆய்வு செய்யுங்கள். இவற்றில் அயல்நாட்டுத் தயாரிப்புகள் எப்படி நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையில் நுழைந்திருக்கின்றன என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். ஒருவகையில் இவை நம்மைப் பிணைத்திருக்கின்றன. இவற்றுக்கான இந்திய மாற்றுக்களைத் தெரிந்து கொண்டு, இனிமேல் நாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே உருவாக்கம் பெற்ற பொருள்களையே பயன்படுத்துவோம் என்று முடிவு செய்து கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு உறுதிப்பாடுகளை நாம் மேற்கொள்கிறோம் இல்லையா? இந்த முறை நமது தேசத்தின் பொருட்டு நாம் கண்டிப்பாக இப்படி ஒரு உறுதியைச் செய்து கொள்வோம்.
எனதருமை நாட்டுமக்களே, அக்கிரமக்காரர்களிடமிருந்து, ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், பண்பாடு, நமது வழிமுறைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க தேசம் எத்தனையோ தியாகங்களைப் புரிந்திருக்கிறது, இவற்றையெல்லாம் இன்று நாம் நினைவுபடுத்திப் பார்க்கும் நாள். குரு கோவிந்த் சிங் அவர்களுடைய மைந்தர்களான, ஜோராவர் சிங்குக்கும் ஃபதே சிங்குக்கும் இன்றைய நாளன்று தான் உயிரோடு சமாதி எழுப்பப்பட்டது. இளவல்கள் தங்கள் மத நம்பிக்கையைத் துறப்பார்கள், மகத்தான குரு பரம்பரையைக் கைவிட்டு விடுவார்கள் என்று அக்கிரமக்காரர்கள் மனப்பால் குடித்தார்கள். ஆனால், நமது இளவல்கள், குறைவான வயதிலும் கூட, ஆச்சரியமான தைரியத்தை வெளிப்படுத்தினார்கள், உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். கல்லறை எழுப்பப்படும் வேளையிலே, செங்கற்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, சுவர் உயர்ந்து கொண்டே வந்த நேரத்திலே, மரணம் கண் முன்னே தாண்டவமாடிக் கொண்டிருந்தது. இருப்பினும், அவர்கள் சற்றும் கலங்கவில்லை. இன்றைய நாளன்று தான் குரு கோவிந்த் சிங் அவர்களுடைய அன்னையாரான தாய் குஜ்ரி அவர்களின் தியாக தினமும் ஆகும். கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பாக, ஸ்ரீ குரு தேக் பஹாதுர் அவர்களின் தியாக தினமும் ஆகும். நான் தில்லியில் இருக்கும் குருத்வாரா ரகாப்கஞ்ஜிற்குச் சென்று, குரு தேக் பஹாதுர் அவர்களுக்கு என் அஞ்சலி மலர்களைக் காணிக்கையாக்கினேன், தலைவணங்கி வழிபட்டேன். இதே மாதத்தில் தான் ஸ்ரீ குரு கோவிந்த சிங் அவர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற்று, பலர் தரையில் படுத்து உறங்குகிறார்கள். ஸ்ரீ குருகோவிந்த சிங் அவர்களின் குடும்பத்தார் வாயிலாகப் புரியப்பட்ட உயிர்த்தியாகங்களை, மிகவும் உணர்வுபூர்வமாக மக்கள் நினைவில் நிறுத்துகிறார்கள். இந்த உயிர்த்தியாகமானது, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும், நாட்டிற்கும் ஒரு புதிய படிப்பினை. இந்த உயிர்த்தியாகம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் மகத்தான செயலைப் புரிந்திருக்கிறது. நாமனைவரும் இந்த உயிர்த்தியாகத்திற்குக் கடன்பட்டவர்கள். மீண்டுமொரு முறை, ஸ்ரீ குரு தேக் பஹாதுர் அவர்கள், அன்னை குஜ்ரி அவர்கள், குரு கோவிந்த சிங் அவர்கள், அவருடைய நான்கு மைந்தர்கள் ஆகியோரின் உயிர்த்தியாகத்தைப் போற்றுகிறேன். இப்படிப்பட்ட பல உயிர்த்தியாகங்கள் தாம் பாரதநாட்டை இன்றைய வடிவத்தில் பாதுகாத்து வைத்திருக்கின்றன, பராமரித்தும் வைத்திருக்கின்றன.
என் இனிய நாட்டுமக்களே, நான் இப்போது கூறவிருக்கும் விஷயம் உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதத்தையும் ஏற்படுத்தும். இந்தியாவிலே leopards, சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 60 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2014ஆம் ஆண்டிலே நாட்டில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,900ஆக இருந்தது. ஆனால் இதுவே 2019ஆம் ஆண்டிலே 12,852 என்ற எண்ணிக்கை ஆகி இருக்கிறது. யாரெல்லாம் சிறுத்தைப்புலிகள் இயற்கையிலே சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைப் பார்த்ததில்லையோ, அவர்களால் அவற்றின் அழகைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. அவற்றின் வண்ணங்களின் அழகு, அவற்றின் இயக்கத்தில் இருக்கும் கவர்ச்சியை எல்லாம் அளவிட முடியாது என்று சிறுத்தைப்புலிகளைப் பற்றி ஜிம் கார்பெட் கூறியிருக்கிறார். நாட்டின் பெருவாரியான மாநிலங்களில், குறிப்பாக மத்திய இந்தியாவில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சிறுத்தைப்புலிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலங்கள் என்றால் அவை, மத்திய பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்ட்ரம் ஆகியன. மேலும் ஒரு பெரிய சாதனை என்னவென்றால், இந்த சிறுத்தைப்புலிகள் உலகம் முழுவதிலும் பல ஆண்டுகளாக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றன, உலகெங்கிலும் இவற்றின் வசிப்பிடங்களுக்குக் குந்தகம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகப்பட்டு, இது உலகிற்கே ஒரு புதிய பாதையைக் காட்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளிலே, இந்தியாவில் சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு பற்றியும், பாரதநாட்டின் வனப்பகுதிகள் அதிகரிப்பைப் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதன் காரணம், அரசாங்கம் மட்டுமல்ல, பல குடிமக்கள், பல அமைப்புகள் என பலரும் நமது வனப்பகுதிகள் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பில் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான். இவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
நண்பர்களே, தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் ஒரு நெகிழ வைக்கும் முயல்வு பற்றி நான் படிக்க நேர்ந்தது. நீங்களும் சமூக ஊடகங்களில் இவை பற்றிய காட்சிகளைப் பார்த்திருக்கலாம். நாம் அனைவரும் மனிதர்களைச் சுமக்கும் சக்கர நாற்காலிகளைப் பார்த்திருக்கிறோம்; ஆனால் கோவையைச் சேர்ந்த ஒரு பெண் காயத்ரி, தனது தந்தையாருடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாயிற்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்தப் புரிந்துணர்வு உத்வேகம் அளிக்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் தயையும் கருணையும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும். தில்லியின் NCR என்ற தேசிய தலைநகர்ப் பகுதி மற்றும் தேசத்தின் பிற நகரங்களின் நடுங்கவைக்கும் குளிருக்கு இடையே, அநாதரவான பிராணிகளைப் பராமரிக்க பலர், நிறைய பணிகளை ஆற்றி வருகின்றார்கள். அவர்கள் இந்தப் பிராணிகளுக்கு உணவு, அருந்த நீர், இவற்றுக்கென குளிராடைகள், படுக்கைகள் வரை ஏற்பாடுகள் செய்கிறார்கள். வேறு சிலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், இவர்கள் தினசரி பல நூற்றுக்கணக்கான பிராணிகளுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட முயல்வுகள் பாராட்டுக்குரியவை. இதே போன்ற ஒரு நேரிய முயல்வு, உத்திரப்பிரதேசத்தின் கௌஷாம்பியிலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அங்கே சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள், பசுக்களைக் குளிரிலிருந்து காக்க வேண்டி, பழைய மற்றும் கிழிந்த கம்பளிகளைக் கொண்டு போர்வையை உருவாக்கி வருகிறார்கள். இந்தக் கம்பளிகளை, கௌஷாம்பி உட்பட பிற மாவட்ட சிறைகளிலிருந்து ஒன்று திரட்டி, இவற்றைத் தைத்து கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. கௌஷாம்பி சிறையின் கைதிகள் ஒவ்வொரு வாரமும், பல போர்வைகளைத் தயாரிக்கிறார்கள். மற்றவர்களின் நலனுக்காக சேவை உணர்வு நிரம்பிய இந்த வகையிலான முயல்வுகளுக்கு நாம் ஊக்கமளிப்போம் வாருங்கள். உண்மையிலேயே இப்படிப்பட்ட நற்செயல்கள் தாம் சமூகத்தின் புரிந்துணர்வுகளை மேலும் சக்தியுடையதாக ஆக்குகிறது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று என் முன்னே இருக்கும் கடிதங்களில் இரண்டு பெரிய புகைப்படங்கள் உள்ளன. இவை ஒரு கோயிலின் புகைப்படங்கள், முந்தையது, பிந்தையது என்று இருக்கிறது. இந்தப் புகைப்படங்களோடு இணைந்திருக்கும் கடிதத்தில், தங்களைத் தாங்களே இளைஞரணி, youth brigade என்று கூறிக்கொள்ளும் இளைஞர்களின் ஒரு குழுவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு அருகே அமைந்திருக்கும் வீரபத்ரஸ்வாமி பெயரால் அமைந்திருக்கும் ஒரு பழமையான சிவாலயத்தில் இந்த இளைஞரணி உழவாரப்பணியை மேற்கொண்டது. கோயின் நாலாபுறங்களிலும் கோரைப்புற்களும், புதர்களுமாக மண்டிக் கிடந்தன. இவை எந்த அளவுக்கு வளர்ந்திருந்தன என்றால், அங்கே கோயில் இருப்பதேகூட கண்ணுக்குத் தெரியாமல் போனது. ஒரு நாள், சில சுற்றுலாப் பயணிகள், மறந்து போன இந்த கோயில் பற்றிய ஒரு காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்கள். கோயிலைப் புனரமைப்பது என இளைஞரணி தீர்மானம் செய்தது. இவர்கள் கோயிலைச் சுற்றி வளர்ந்திருக்கும் முட்புதர்கள், புற்கள், செடிகளை எல்லாம் அகற்றினார்கள். எங்கே எல்லாம் மராமத்தோ, கட்டுமானமோ செய்யத் தேவை இருந்ததோ, அங்கெல்லாம் அவர்கள் செய்தார்கள். இவர்களின் சிறந்த சேவையைப் பார்த்த உள்ளூர் மக்களும் தங்கள் உதவிக்கரங்களை நீட்டினார்கள். ஒருவர் சிமெண்ட் அளித்தார், வேறு ஒருவர் பூச்சு அளித்தார், இன்னும் சிலரோ வேறு பொருட்களைக் கொடுத்து தத்தமது பங்களிப்பை நல்கினார்கள். இந்த இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள். இந்த நிலையில் இவர்கள் வார இறுதிகளில் நேரம் ஒதுக்கி, உழவாரப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். கோயிற்கதவுகளை அமைத்தது மட்டுமல்லாமல், மின்னிணைப்பும் ஏற்படுத்தினார்கள். இந்த வகையில் இவர்கள் கோயிலின் பழைய மகோன்னதத்தை மீட்டெடுத்தார்கள். முனைப்பும், உறுதிப்பாடும் எந்த ஒரு இலக்கையும் பெற்றுத் தரும் வல்லமை வாய்ந்த இருபெரும் சக்திகள். இந்திய இளைஞர்களை நான் காணும் போது, எனக்குள்ளே ஆனந்தமும், ஆசுவாச உணர்வும் மேலிடுகின்றன. ஏன் ஆனந்தமும் ஆசுவாச உணர்வும் ஏற்படுகின்றன என்றால், நாட்டின் இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற அணுகுமுறையும், செய்தே தீருவேன் என்ற உணர்வும் இருப்பதால் தான். இவர்களுக்கு எந்த ஒரு சவாலும் பெரியதே அல்ல. எந்த ஒரு விஷயமும் இவர்களின் எட்டுதலுக்கு அப்பாற்பட்டது கிடையாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆசிரியை பற்றி நான் படிக்க நேர்ந்தது. N.K. ஹேமலதா என்ற இவர் விழுப்புரத்தில் ஒரு பள்ளியில், உலகின் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார். கோவிட் 19 பெருந்தொற்று நிலவும் வேளையிலும் தனது பயிற்றுவித்தலுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறார். இவருக்கு முன்னால் கண்டிப்பாக சவால்கள் இருந்தன; ஆனால், இவர் ஒரு நூதனமான வழிமுறையைக் கைக்கொண்டார். இவர் படிப்பின் அனைத்து 53 அத்தியாயங்களையும் பதிவு செய்தார், animated video, இயங்குபடக் காணொளிகளை ஏற்படுத்தி, இவற்றை ஒரு பென் ட்ரைவ் கருவி வாயிலாக தனது மாணவர்களுக்கு விநியோகம் செய்தார். இதனால் இவருடைய மாணவர்கள் மிகுந்த பயன் பெற்றார்கள், இந்த அத்தியாயங்களைக் கண்ணால் கண்டு புரிந்து கொள்ள முடிந்தது. இதோடு கூடவே, இவர் தனது மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் உரையாற்றி வந்தார். இது படிப்பின் மீது மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டியது. நாடெங்கிலும் கொரோனா காலத்தில், ஆசிரியர்கள் மேற்கொண்ட நூதனமான முயல்வுகளும், படைப்புத்திறனோடு கூடிய வகையில் பாடங்களை அளித்தலும், இணையவழிப் படிப்பு என்ற இந்த சூழ்நிலையில் விலைமதிப்பில்லாதவை. இந்தப் படிப்புகளை எல்லாம் நீங்கள் கல்வி அமைச்சகத்தின் தீக்ஷா தளத்திலே கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என்று நான் அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாட்டின் தொலைவான பகுதிகளில் இருக்கும் மாணவ மாணவியருக்கு பெரும் ஆதாயம் உண்டாகும்.
நண்பர்களே, இப்போது நாம் ஜார்க்கண்டின் கோர்வா பழங்குடியைச் சேர்ந்த ஹீராமன் அவர்களைப் பற்றிப் பேசுவோம் வாருங்கள். ஹீராமன் அவர்கள், கட்வா மாவட்டத்தின் சிஞ்ஜோ கிராமத்தில் வசித்து வருகிறார். கோர்வா பழங்குடிகளின் எண்ணிக்கை வெறும் 6000 மட்டுமே என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்; இவர்கள் நகரங்களை விட்டுத் தொலைவான மலைகளிலும் காடுகளிலும் வசித்து வருகிறார்கள். தங்களுடைய சமுதாயத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களைப் பாதுகாக்க ஹீராமன் அவர்கள் ஒரு சவாலை மேற்கொண்டார். இவர் 12 ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு, வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்த கோர்வா மொழிக்கான அகராதியை ஏற்படுத்தினார். இந்த அகராதியில் இவர், வீட்டுப்பயன்பாட்டின் சொற்களை, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கோர்வா மொழியிலே ஏராளமான அர்த்தங்களோடு பதிவு செய்திருக்கிறார். கோர்வா சமூகத்திற்கு ஹீராமன் அவர்கள் புரிந்திருக்கும் இந்தச் செயல், நாடு முழுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
எனதருமை நாட்டுமக்களே, அக்பருடைய தர்பாரில் இடம்பெற்ற ஒரு பிரமுகராக அபுல் ஃபஸல் விளங்கினார் என்பார்கள். அவர் ஒருமுறை கஷ்மீரத்துக்குப் பயணப்பட்ட பின்னர், கஷ்மீரத்தில் காணப்படும் ஒரு காட்சியைக் கண்டால், கோபம் கொப்பளிக்கும் நபர்களும் கூட, தங்கள் கோபதாபங்களை எல்லாம் மறந்து ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்று பின்னர் கூறினார். உள்ளபடியே அவர் குங்குமப்பூ வயல்களைப் பற்றித் தான் கூறினார். குங்குமப்பூ, பல நூற்றாண்டுகளாக கஷ்மீரத்தோடு இணைபிரியாமல் இருப்பது. இந்தக் கஷ்மீரத்தின் குங்குமப்பூ, புல்வாமா, பட்காவ், கிஷ்த்வாட் போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில், கஷ்மீரத்தின் குங்குமப்பூவுக்கு geographical tag, GI Tag, அதாவது புவியியல் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக, நாம் கஷ்மீரத்தின் குங்குமப்பூவை ஒரு உலக அளவில் பிரபலமான தர அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். கஷ்மீரத்தின் குங்குமப்பூ உலக அளவிலே, ஒரு மசாலாப் பொருளாக பிரபலமானது, இதிலே பலவகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இது நறுமணத்தை அளிக்கவல்லது. இது அடர்நிறம் உடையது, இதன் இழைகள் நீண்டும், பருத்தும் காணப்படுகின்றன. இதன் மருத்துவ குணத்தை இது மேலும் அதிகரிக்கிறது. இது ஜம்மு மற்றும் கஷ்மீரத்தின் நிறைவான கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. தரம் பற்றிப் பேசினோம் என்றால், கஷ்மீரத்தின் குங்குமப்பூ மிகவும் தனித்தன்மை வாய்ந்தது, பிற நாடுகளின் குங்குமப்பூவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கஷ்மீரத்தின் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீட்டு அங்கீகாரம் கிடைத்திருப்பதன் வாயிலாக, இதற்கென ஒரு தனி அடையாளம் ஏற்பட்டிருக்கிறது. கஷ்மீரத்தின் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீட்டு அடையாளம் கிடைத்த பிறகு, துபாயைச் சேர்ந்த ஒரு பெருவணிக வளாகம் இதை பெரிய அளவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இதன் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. தற்சார்பு பாரதம் உருவாக்கலின் நமது முயற்சிகளை இது மேலும் பலப்படுத்தும். குங்குமப்பூ விவசாயிகளுக்கு இதனால் சிறப்பான ஆதாயம் கிட்டும். புல்வாமாவின் த்ராலைச் சேர்ந்த ஷார் பகுதியில் வசிக்கும் அப்துல் மஜீத் வானியைப் பாருங்களேன்!! இவர் தனது புவியியல் குறியீட்டு அங்கீகாரம் உடைய குங்குமப்பூவை, தேசிய குங்குமப்பூ அமைப்பின் உதவியோடு, பம்போர் வணிக மையத்தில், இணையவழி வர்த்தகம் வாயிலாக விற்று வருகிறார். இவரைப் போன்ற பலர், கஷ்மீரத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த முறை நீங்கள் குங்குமப்பூ வாங்க நினைத்தால், கஷ்மீரத்துக் குங்குமப்பூவை வாங்க முடிவு செய்யுங்கள். கஷ்மீரத்து மக்களின் விருந்தோம்பலும், அங்கே விளையும் குங்குமப்பூவின் சுவையைப் போன்றே அலாதியானதாக இருக்கும்.
என் அன்புநிறை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாகத் தான் கீதா ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நமது வாழ்க்கையிலே அனைத்துச் சூழ்நிலைகளிலும் கீதை நமக்குக் கருத்தூக்கம் அளிக்கிறது. ஆனால், கீதை இத்தனை அற்புதமான நூலாக ஏன் விளங்குகிறது என்று நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? இது ஏனென்றால், இது முழுக்கமுழுக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய சொற்கள் அடங்கியது. கீதையின் மேலும் ஒரு மேன்மை என்னவென்றால், இது அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகத்தில் துவங்குகிறது. ஒரு வினாவோடு தொடங்குகிறது. அர்ஜுனன், பகவானிடத்திலே ஆர்வம் மேலிட வினா எழுப்புகிறான், இதனால் அன்றோ உலகிற்கு கீதையின் ஞானம் கிடைக்கப் பெற்றது!! கீதையைப் போலவே நமது கலாச்சாரத்தில் அடங்கியிருக்கும் அத்தனை ஞானமும், அறிந்து கொள்ளும் பேரார்வத்தின் உந்துதலாலேயே தொடங்கியிருக்கின்றன. வேதாந்தத்தின் முதல் மந்திரமே, அதாதோ ப்ரும்ம ஜிஞ்யாஸா. அதாவது வாருங்கள், பிரும்மத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆகையால் தான் நாம் பிரும்மத்தை அறிந்து கொள்வது பற்றிப் பேசி வந்திருக்கிறோம். அறிந்து கொள்ளும் பேரார்வத்தின் சக்தியே இப்படிப்பட்டது தான். அறிந்து கொள்ளும் பேரார்வம் உங்களுக்குத் தொடர்ந்து புதியனவற்றுக்கான உத்வேகத்தை அளிக்கிறது. சிறுவயதில் நாம் ஏன் கற்கிறோம் என்றால், நமக்குள்ளே கற்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. அதாவது, எப்போது வரை உந்துதல் இருக்குமோ, அதுவரை வாழ்க்கையும் இருக்கும். என்றுவரை கற்கும் பேரார்வம் இருக்குமோ, அன்று வரை புதியனவற்றைக் கற்பதும் தொடரும். இதிலே வயதோ, சூழ்நிலையோ, எதுவும் ஒரு பொருட்டு அல்ல. கற்கும் பேரார்வம் ஏற்படுத்தும் ஆற்றல் பற்றிய ஒரு எடுத்துக்காட்டு எனக்குத் தெரிய வந்தது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த முதியவர் ஸ்ரீ டீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி பற்றியது. ஸ்ரீ டீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமியின் வயது 92. இவர் இந்த வயதிலும் கூட, கணிப்பொறியில் தனது புத்தகத்தை எழுதி வருகிறார், தானே தட்டச்சு செய்கிறார். புத்தகம் எழுதுவது எல்லாம் சரி, ஆனால் ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்களின் காலத்தில் கணிப்பொறியெல்லாம் இருந்திருக்காதே என்று நீங்கள் எண்ணமிடலாம். பிறகு எப்போது இவர் கணிப்பொறியை இயக்கக் கற்றுக் கொண்டார்? அவரது கல்லூரி நாட்களில் கணிப்பொறி இருந்ததில்லை என்பது சரி தான். ஆனால் அவரது மனதிலே கற்க வேண்டும் என்ற பேரார்வமும், தன்னம்பிக்கையும், அவரது இளமைக்காலத்தில் இருந்தது போலவே இன்னும் இருக்கிறது. உள்ளபடியே ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி அவர்கள் சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் பாண்டித்யம் பெற்றவர். இவர் இதுவரை சுமார் 16 ஆன்மீக நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் கணிப்பொறி வந்த பிறகு, இனி புத்தகம் எழுதுதலும், அச்சிடுதலும் மாறி விட்டன என்று இவருக்குப் பட்டவுடன், இவர் தனது 86ஆவது வயதில், கணிப்பொறி இயக்குவதைக் கற்றார், தனது பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருளைக் கற்றார், இப்போது இவர் தனது புத்தகத்தை நிறைவு செய்து வருகிறார்.
நண்பர்களே, எதுவரை வாழ்க்கை ஆற்றல் நிரம்பியதாக இருக்கிறதோ, அதுவரை வாழ்க்கையில் கற்கும் பேரார்வம் இறப்பதில்லை, கற்றுக் கொள்ளும் விருப்பம் மரிப்பதில்லை என்பதற்கு ஸ்ரீ டீ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி அவர்களின் வாழ்க்கையே ஒரு மெய்சாட்சி. ஆகையால் நாம் பின்தங்கி விட்டோம் என்றோ, தவற விட்டுவிட்டோம் என்றோ என்றும் நினைக்கக்கூடாது. நம்மாலும் இதைக் கற்றுக் கொள்ள முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!! நம்மால் கற்க முடியாது, முன்னேறிச் செல்ல முடியாது என்றும் நாம் எண்ணமிடக்கூடாது.
எனதருமை நாட்டுமக்களே, நாம் கற்கும் பேரார்வத்திலிருந்து, புதியனவற்றைக் கற்று, செயல்படுவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். புத்தாண்டில் புதிய உறுதிப்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் சிலரோ, தொடர்ந்து புதிதுபுதிதாக எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள், புதியபுதிய உறுதிப்பாடுகளை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறார்கள். நமது சமுதாயத்திற்காக நாம் ஒரு விஷயத்தைச் செய்யும் போது, மேலும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற ஆற்றலை சமுதாயமே நமக்குள்ளே ஏற்படுத்துவதை நீங்களும் உணர்ந்திருக்கலாம். மிக எளிமையாகத் தோன்றும் உத்வேகங்களிலிருந்து மிகப்பெரிய செயல்கள் நிறைவேறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு இளைஞர் தாம் பிரதீப் சாங்க்வான் அவர்கள். குருகிராமத்தைச் சேர்ந்த பிரதீப் சாங்க்வான் 2016ஆம் ஆண்டு தொட்டு Healing Himalayas என்ற பெயரிலான இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது குழு மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து இமயத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார், அங்கே சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்துகிறார். பிரதீப் அவர்கள் இதுவரை இமயத்தின் பல்வேறு சுற்றுலாப் பகுதிகளிலிருந்து பல டன்கள் எடையுள்ள நெகிழிப் பொருள்களை அப்புறப்படுத்தியிருக்கிறார். இவரைப் போலவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு இளைய இணை, அனுதீப், மினூஷா ஆகியோர். அனுதீப்புக்கும், மினூஷாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் தான் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் பலர் சுற்றிப் பார்க்கச் செல்வது வழக்கம்; ஆனால் இவர்கள் இருவரும் வித்தியாசமான ஒன்றைச் செய்தார்கள். மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி சுற்றிப் பார்க்கச் செல்வதையும், செல்லுமிடங்களில் ஏராளமான குப்பைக் கூளங்களை எப்போதுமே விட்டுச் செல்வதையும் இவர்கள் இருவரும் கவனித்து வந்திருக்கிறார்கள். கர்நாடகத்தின் சோமேஷ்வர் கடற்கரையிலும் இதே நிலைமை தான் நிலவி வந்தது. அனுதீப்பும் மினூஷாவும், சோமேஷ்வர் கடற்கரையில் மக்கள் விட்டுச் செல்லும் குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்துவோம் என்று தங்களுக்குள்ளே முடிவு செய்து கொண்டார்கள். கணவன் – மனைவி இருவரும் திருமணம் முடிந்த பிறகு மேற்கொண்ட முதல் உறுதிப்பாடு இதுதான். இருவருமாக இணைந்து, கடற்கரையில் குவிந்து கிடந்த ஏகப்பட்ட குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்தினார்கள். அனுதீப் தனது உறுதிப்பாடு பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தும் கொண்டார். பிறகு என்ன? இவருடைய இத்தனை உன்னதமான எண்ணப்பாட்டால் கருத்தூக்கம் பெற்ற பல இளைஞர்கள், இவரோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். இவர்கள் அனைவருமாக இணைந்து, சோமேஷ்வர் கடற்கரையிலிருந்து 800 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
நண்பர்களே, இந்த முயல்வுகளுக்கு இடையே, நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இந்தக் குப்பைக்கூளங்கள் கடற்கரைகளிலும், மலைகளிலும் எப்படி வந்தடைகின்றன? நம்மில் யாரோ தாம் குப்பைகளை அங்கே விட்டுச் சென்றிருப்பார்கள். நாமும் பிரதீப், அனுதீப்-மினூஷாவைப் போலவே, தூய்மை இயக்கத்தை முடுக்கி விட வேண்டும். ஆனால், இதற்கும் முன்பாக நாம் குப்பையை ஏற்படுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் முதல் உறுதிப்பாடே இது தானே!! நான் மேலும் ஒரு விஷயம் குறித்து உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொரோனா காரணமாக இந்த ஆண்டு இதுபற்றிய விவாதங்கள் அந்த அளவுக்கு நடைபெற முடியாமல் இருந்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும். இதுவும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளில் ஒன்று. நிறைவாக, புத்தாண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் குடும்பத்தாரையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய விஷயங்கள் மீது மனதின் குரல் ஒலிக்கும். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் தொடக்கத்தில் நான் உங்கள் அனைவரோடும் ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேவி அன்னபூர்ணாவின் ஒரு மிகப் பழமையான விக்ரஹம், கனடாவிலிருந்து மீண்டும் இந்தியா வருகிறது என்பதை அறிந்து இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைவார்கள். இந்த விக்ரஹம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முன்பாக, 1913ஆம் ஆண்டு வாக்கில், வாராணசியின் ஒரு ஆலயத்திலிருந்து களவாடப்பட்டு, நாட்டை விட்டுக் கடத்திச் செல்லப்பட்டது. நான் கனடாவின் அரசு புரிந்திருக்கும் இந்தப் புண்ணியச் செயலுக்கும், இதைச் சாதிக்கக் காரணமாக இருந்த அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அன்னை அன்னபூரணிக்கும், காசிக்கும் இடையே விசேஷமான சம்பந்தம் உண்டு. இப்போது அன்னையின் விக்ரஹம் மீண்டு வருவது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்னை அன்னபூரணியின் விக்ரஹத்தைப் போலவே, நமது பாரம்பரியத்தில் பல விலை மதிப்புமிக்க மரபுச் சின்னங்களும், அடையாளங்களும் சர்வதேச அளவிலான சிலை திருட்டு கும்பல்களுக்கு இரையாகி வந்திருக்கின்றன. இந்தக் கும்பல்கள் சர்வதேச சந்தைகளில், இவற்றை மிக அதிகமான விலைக்கு விற்று விடுகின்றார்கள். இப்போது கடத்தலைத் தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது என்றாலும், ஏற்கெனவே கடத்திச் செல்லப்பட்டவைகளை மீட்டுக் கொண்டு வரும் இந்தியாவின் முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில், பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியும் அடைந்து வருகிறோம். அன்னை அன்னபூரணியின் விக்ரஹத்தை மீட்டுக் கொண்டு வருவதோடு, தற்செயல் பொருத்தம் ஒன்றும் இணைந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாகத்தான் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வாரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு, பழங்காலத்தினுள்ளே செல்லவும், வரலாற்றின் முக்கியமான கட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. கொரோனா காலகட்டத்தையும் தாண்டி, இந்த முறை நாம் நூதனமான வழிவகைகளில் இந்தப் பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்தோம். கலாச்சாரம் என்பது நெருக்கடியில் பெரிதும் கைக்கொடுக்கிறது, நெருக்கடிகளைச் சமாளிப்பதில் பெரும்பங்காற்றுகிறது. தொழில்நுட்பம் வாயிலாகவும் கலாச்சாரம் ஒரு உணர்வுரீதியிலான புதுத்தெம்பைப் போல செயலாற்றுகிறது. இன்று நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் திரட்டுக்களை முழுவதுமாக டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். தில்லியில் நமது தேசிய அருங்காட்சியகம் இது தொடர்பாக பாராட்டத்தக்க முயல்வுகளை மேற்கொண்டிருக்கிறது. தேசிய அருங்காட்சியகம் வாயிலாக சுமார் 10 மெய்நிகர் காட்சிக்கூடங்களை அறிமுகப்படுத்தும் திசையில் பணிகள் நடந்து வருகின்றன. சுவாரசியமாக இருக்கிறது இல்லையா!! இப்போது நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே தில்லியின் தேசிய அருங்காட்சியகக் காட்சிக்கூடங்களைச் சுற்றிப் பார்க்க முடியும். ஒருபுறத்தில் கலாச்சார மரபுகளையும் அடையாளங்களையும் தொழில்நுட்பம் வாயிலாக பெருவாரியான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது முக்கியம் எனும் அதே வேளையில், இந்த அடையாளங்களையும், மரபுச்சின்னங்களையும் பாதுகாக்க தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிக மகத்துவம் வாய்ந்தது. ஒரு சுவாரசியமான திட்டம் பற்றி தற்போது தான் நான் படித்துக் கொண்டிருந்தேன். நார்வே நாட்டின் வடபாகத்தில் ஸ்வால்பார்ட் என்ற பெயர் கொண்ட ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவில் ஒரு செயல்திட்டமான Arctic world Archive அதாவது ஆர்க்டிக் உலக ஆவணக்காப்பகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆவணக்காப்பகத்தில் மிக மதிப்பு வாய்ந்த மரபுத் தரவுகள், மனிதனோ, இயற்கையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான பேரிடர்களால் பாதிப்படையாத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஒரு தகவல் என்னவென்றால், அஜந்தா குகைகளின் மரபுச்சின்னங்களையும் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி, இந்த செயல்திட்டத்தில் இணைக்கப்படவிருக்கிறது. இதிலே அஜந்தா குகைகளின் முழுமையான மகோன்னதமும் காணக் கிடைக்கும். இதிலே டிஜிட்டல் வழிமுறை மற்றும் மீட்டெடுக்கப்பட்ட ஓவியங்களோடு கூடவே, இவற்றோடு தொடர்புடைய ஆவணங்களும் மேற்கோள்களும் அடங்கும். நண்பர்களே, பெருந்தொற்று ஒரு புறத்தில் நாம் பணியாற்றும் வழிமுறைகளை மாற்றியமைத்திருந்தாலும், வேறொரு புறத்தில் இயற்கையை புதியதொரு கோணத்தில் அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. இயற்கையைக் கண்ணுறும் நமது பார்வையிலுமே ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாம் குளிர்காலத்தில் கால்பதிக்க இருக்கிறோம். இயற்கையை பலவகையான வண்ணங்களில் நாம் காண இருக்கிறோம். கடந்த சில நாட்களாக இணையத்தில் செர்ரி பூக்களின் படங்கள் அங்கிங்கெனாதபடி பரவி விரவிக் காணப்படுகின்றன. நான் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால் ஜப்பான் நாட்டின் இந்த பிரபலமான அடையாளம் பற்றிப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணமிடலாம்; ஆனால் அப்படி அல்ல!! இவை ஜப்பான் நாட்டின் படங்கள் அல்ல. இவை நமது மேகாலயாவின் ஷில்லாங்கின் படங்கள். மேகாலயாவின் அழகுக்கு இந்த செர்ரி மலர்கள் மேலும் அழகு கூட்டியிருக்கின்றன.
நண்பர்களே, இந்த மாதம் நவம்பர் 12ஆம் தேதி முதல், டாக்டர் சலீம் அலி அவர்களுடைய 125ஆம் பிறந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது. டாக்டர் சலீம் அவர்கள் பறவைகள் உலகில் bird watching என்று அழைக்கப்படும் பறவைகள் கண்காணிப்பிற்காக அருஞ்செயல்களை ஆற்றியவர். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தவர். நான் என்றைக்குமே பறவைகளைக் கண்காணிப்பதில் நாட்டம் இருப்பவர்களைப் பாராட்டி வந்திருக்கிறேன். மிகுந்த பொறுமையோடு, மணிக்கணக்காக, காலை முதல் மாலை வரை அவர்களால் பறவைகளைக் கண்காணித்து வர முடியும், இயற்கையின் விசித்திரமான காட்சிகளை ரசிக்க முடியும், தங்களின் ஞானத்தை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இந்தியாவிலும் பல பறவைகள் கண்காணிப்பு அமைப்புகள் இயங்கி வருகின்றன. நீங்களும் கண்டிப்பாக இந்தச் செயல்பாட்டோடு இணையுங்கள். எனது பரபரப்பான வாழ்க்கையில், எனக்குமே கூட, கடந்த சில நாட்களின் போது கேவடியாவில், பறவைகளோடு காலம் கழிக்கும் மிகவும் நீங்கா நினைவுகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. பறவைகளோடு கழிக்கும் நேரம், உங்களை இயற்கையோடு இணைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சாத்திரங்கள், என்றுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மையங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவை தொடர்பான தேடலுக்காகவே பலர் இந்தியாவுக்கு வந்தார்கள். இவர்களில் சிலர் இந்தியாவிலேயே தங்கிப் போனார்கள் என்றால், சிலரோ தங்கள் நாடுகளுக்கு மீண்டும் திரும்பி, இந்தக் கலாச்சாரத்தின் பரப்புநர்கள் ஆனார்கள். ஜோனஸ் மேசெட்டியின் பணி பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, இவர் விஷ்வநாத் என்றும் அறியப்படுகிறார். ஜோனஸ் ப்ராஸீலில் இருப்போருக்கு வேதாந்தத்தையும் கீதையையும் கற்பிக்கிறார். விஸ்வவித்யை என்ற பெயர் கொண்ட ஒரு அமைப்பை நடத்தி வருகிறார், இது ரியோ டி ஜெனேரோ நகரத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் வரும் பெட்ரோபோலிஸ் என்ற இடத்தில் இருக்கும் மலைகளில் அமைந்திருக்கிறது. ஜோனஸ் இயந்திரப் பொறியியல் படித்த பிறகு, பங்குச் சந்தையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு, அவரது நாட்டம் இந்தியக் கலாச்சாரம், குறிப்பாக வேதாந்தத்தை நோக்கித் திரும்பியது. பங்குச்சந்தை தொடங்கி ஆன்மீகம் வரை, அவர் நெடிய பயணத்தை மேற்கொண்டார். ஜோனஸ் இந்தியாவுக்கு வந்து வேதாந்தத்தை நன்கு பயின்றார், நான்கு ஆண்டுகள் வரை கோவையில் இருக்கும் ஆர்ஷ வித்யா குருகுலத்தில் வசித்திருக்கிறார். ஜோனஸிடம் இருக்கும் ஒரு சிறப்பியல்பு என்னவென்றால், அவர் தனது செய்தியைக் கொண்டு செல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார் என்பது தான். இணையவழி நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட ஒரு முறையில் நடத்துகிறார். தினமும் பாட்காஸ்ட் என்ற ஒலிபரப்பை நிகழ்த்துகிறார். கடந்த 7 ஆண்டுகளில் வேதாந்தம் பற்றி இலவசப் படிப்புகள் வாயிலாக ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார் ஜோனஸ். இவர் மகத்தானதொரு பணியை மட்டும் புரியவில்லை; மாறாக, அதிக எண்ணிக்கையிலான மக்கள் புரிந்து கொள்ள வசதியான மொழியிலும் முறையிலும் கற்பிக்கிறார். கொரோனா, தனிமைப்படுத்தல் போன்றவை நிலவும் இந்த வேளையிலே, வேதாந்தம் எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து, மக்களிடத்தில் இதுபற்றிய கணிசமான அளவில் ஆர்வம் இருக்கிறது. மனதின் குரல் வாயிலாக நான் ஜோனஸின் முயல்வுகளுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவரது வருங்கால முயல்வுகளுக்கு நல்வாழ்த்துக்களையும் அளிக்கிறேன்.
நண்பர்களே, இதைப் போலவே, இப்போது மேலும் ஒரு செய்தியின் மீது உங்கள் கவனம் சென்றிருக்கும் என்று நம்புகிறேன். நியூசிலாந்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர். கௌரவ் ஷர்மா அவர்கள் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சம்ஸ்க்ருதத்தில் உறுதிமொழி ஏற்றார். ஒரு இந்தியன் என்ற வகையில், இந்தியக் கலாச்சாரத்தின் இந்தப் பரப்புரை, நம்மனைவருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது. மனதின் குரல் வாயிலாக நான் கௌரவ் ஷர்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியூசிலாந்து நாட்டு மக்களின் சேவையில் அவர் பல புதிய சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசைகளும் கூட.
என் இனிய நாட்டுமக்களே, நாளை நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 551ஆவது பிறந்த ஆண்டினை நாம் கொண்டாட இருக்கிறோம். உலகம் முழுவதிலும் குருநானக் தேவ் அவர்களின் தாக்கம் தெள்ளத்தெளிவாகக் காணக் கிடைக்கிறது. வான்கூவர் முதல் வெல்லிங்டன் வரை, சிங்கப்பூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது. குருக்ரந்த் சாஹிபில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், सेवक को सेवा बन आई, சேவக் கோ சேவா பன் ஆயீ, அதாவது சேவை செய்பவருடைய பணி, தொடர்ந்து சேவை ஆற்றி வருவது தான். கடந்த சில ஆண்டுகளாக பல முக்கியமான கட்டங்கள் வந்தன, ஒரு சேவகன் என்ற வகையில் பல செயல்களைச் செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பம் நமக்கெல்லாம் வாய்த்தது. குரு சாஹப் அவர்கள் நமது சேவைகளை ஏற்றார். குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாளன்றே, ஸ்ரீ குருகோவிந்த் சிங்க் அவர்களின் 350ஆவது பிறந்தநாளும், அடுத்த ஆண்டு ஸ்ரீ குரு தேக்பஹாதுர் அவர்களின் 400அவது பிறந்த நாளும் வருகின்றன. என் மீது குரு சாஹிபிற்கு சிறப்பான கருணை இருக்கிறது என்று நான் உணர்கிறேன்; ஏனென்றால் அவர் என்றைக்குமே தனது செயல்களுக்கு மிக நெருக்கமாக என்னை இணைத்திருக்கிறார்.
நண்பர்களே, கட்ச் பகுதியில் இருக்கும் குருத்வாரா பற்றி நீங்கள் அறிவீர்களா? அதன் பெயர் லக்பத் குருத்வாரா சாஹிப். ஸ்ரீ குருநானக் அவர்கள் தனது புனிதப்பயணத்தின் போது லக்பத் குருத்வாராவில் தங்கினார். 2001ஆம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தின் போது இந்த குருத்வாவிற்கும் பாதிப்பு ஏற்பட்டது. குரு சாஹிபின் அருங்கருணை காரணமாகவே என்னால் இதன் ஜீர்ணோத்தாரணத்தை நடத்த முடிந்தது. அந்த வேளையில் குருத்வாரா செப்பனிடப்பட்டதோடு, அதன் மாட்சியையும், மகோன்னதத்தையும் மீண்டும் நிறுவவும் முடிந்தது. எங்கள் அனைவருக்கும் குரு சாஹிபின் நிறைவான ஆசிகளும் கிட்டின. லக்பத் குருத்வாராவின் பராமரிப்பு முயல்வுகளுக்கு 2004ஆம் ஆண்டிலே யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய பசிஃபிக் பாரம்பரிய விருதுக்குட்பட்டு மேன்மைக்கான விருது அளிக்கப்பட்டது. செப்பனிடப்படும் பணியின் போது, சிற்பங்களின் நுணுக்கங்களின் மீது சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்ததை, விருதினை அளித்த நடுவர்கள் பாராட்டினார்கள். நடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கியதோடு, அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இது நடந்திருக்கிறது என்பது தான். லக்பத் குருத்வாராவிற்குச் செல்லும் பேறு, நான் முதல்வராக இல்லாத காலத்திலும் எனக்குக் கிட்டியது. அங்கே செல்லும் போது எனக்கு அளப்பரிய சக்தி பிறந்து வந்துள்ளது. இந்த குருத்வாரா செல்லும் அனைவரும் தாங்கள் பெரும்பாக்கியம் அடைந்தவர்களாக உணர்வார்கள். குருசாஹிப் அவர்கள் தொடர்ந்து என்னுடைய சேவையை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு நான் என் நன்றியறிதல்களைக் காணிக்கையாக்குகிறேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கர்த்தார்புர் சாஹிப் இடைவழித் திறப்பு மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நான் என் வாழ்நாள் முழுக்க எனது இதயத்தில் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பேன். நமக்கெல்லாம் ஸ்ரீ தர்பார் சாஹிபிற்கு சேவை செய்யக்கூடிய மேலும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது நாம் அனைவருமே செய்த பேறு என்று தான் சொல்ல வேண்டும். அயல்நாடுகளில் வசிக்கும் நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு இப்போது தர்பார் சாஹிபில் சேவையாற்ற நிதி அனுப்புவது மேலும் சுலபமாகி இருக்கிறது. இந்த நடவடிக்கை காரணமாக உலகெங்கிலும் இருக்கும் சீக்கிய சமுதாயம் தர்பார் சாஹிபிற்கு மேலும் நெருக்கமாகி இருக்கிறது.
நண்பர்களே, குருநானக் தேவ் அவர்கள் தாம் லங்கர் பாரம்பரியத்தைத் தொடக்கி வைத்தார், இன்று உலகெங்கிலும் சீக்கிய சமூகத்தினர் எந்த வகையில் கொரோனா நிலவும் இந்த வேளையில் மக்களுக்கு உணவளிக்கும் தங்கள் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தார்கள், மனிதசேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கக்கூடிய பணியை நமக்கெல்லாம் புரிகிறது. நாமனைவருமே சேவகர்கள் என்ற உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். குருசாஹிப் என்னிடத்திலும் சரி, நாட்டுமக்களிடத்திலும் சரி இப்படியேதான் சேவையைத் தொடர்ந்து ஏற்றுவர வேண்டும். மீண்டும் ஒருமுறை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எனது பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் நாடெங்கிலும் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களோடு உரையாடவும், அவர்களின் கல்விப்பயணத்தின் மகத்துவம் வாய்ந்த சம்பவங்களில் பங்கெடுக்கவும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தொழில்நுட்பம் வாயிலாக நான் குவாஹாட்டி மற்றும் தில்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், காந்திநகரின் தீன் தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் லக்னௌ பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. நாட்டின் இளைஞர்கள் மத்தியில் இருப்பது புத்துயிரையும், புதுச்சக்தியையும் அளிக்கவல்ல ஒரு நல்ல அனுபவம். பல்கலைக்கழகத்தின் வளாகம் என்பது ஒரு வகையில் ஒரு சிறிய இந்தியாவைப் போன்றே இருக்கும். ஒருபுறம் இந்த வளாகங்கள், பாரத நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலித்தாலும், வேறொரு புறத்தில் அங்கே புதிய இந்தியா தொடர்பான பல பெரிய மாற்றங்களுக்கான தாகங்களும் வெளிப்படுகின்றன. கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு நான் செல்லும் வேளையில், அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுப்பதுண்டு. இந்தக் குழந்தைகள் அந்தக் கூட்டத்தில் எனது சிறப்பு விருந்தினர்களாக இருப்பார்கள். ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு சிறுவன், யாரோ ஒரு இளைஞர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ ஆவதைப் பார்த்தால், ஒருவருக்கு பதக்கம் கிடைப்பதைப் பார்த்தால், அந்தச் சிறுவனிடத்தில் புதிய கனவுகள் உதயமாகும், என்னாலும் இப்படிச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும், அவனுள்ளே மனவுறுதிப்பாட்டுக்கான கருத்தூக்கம் உதிக்கும்.
நண்பர்களே, மேலும் ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள எப்போதுமே எனக்கு ஆர்வம் இருக்கிறது; அதாவது அந்த கல்வி நிறுவனத்தின் பழைய மாணவர்கள் யார், இந்த நிறுவனத்தில் கடந்த கால மாணவர்களோடு தொடர்பு என்ற அமைப்புமுறை இருக்கிறதா, அவர்களின் கடந்தகால மாணவர்களின் தொடர்பு வலைப்பின்னல் எத்தனை உயிர்ப்போடு இருக்கிறது என்பனவற்றை நான் தெரிந்து கொள்ள விரும்புவதுண்டு.
எனக்குப் பிரியமான இளைய நண்பர்களே, எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் நீங்கள் படித்து முடிக்கும் காலம் வரை மட்டுமே மாணவர்களாக இருக்க முடியும்; ஆனால் அந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களாக நீங்கள் நிரந்தரமாக இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து வெளியேறிய பின்னர், இரண்டு விஷயங்களுக்கு முடிவேற்படுவதில்லை – ஒன்று நீங்கள் கற்ற கல்வியின் தாக்கம், மற்றது நீங்கள் படித்த பள்ளி-கல்லூரியின் மீதான நாட்டம். முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ளும் போது பள்ளி, கல்லூரிகளைப் பற்றிய நினைவலைகளில் புத்தகங்கள் மற்றும் படிப்பை விடவும் அதிகமாக வளாகத்தில் கழித்த கணங்கள், நண்பர்களோடு செலவிட்ட காலங்கள் போன்றவற்றிலிருந்து, தாங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தங்களின் பங்களிப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு பிறக்கின்றது. எங்கே உங்களின் தனித்துவம் மலர்ந்ததோ, அந்த இடத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எதையாவது செய்யும் போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் இல்லையா? அப்படிப்பட்ட சில முயல்வுகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன்; இவற்றில் சில முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் முன்னாள் மாணவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் ஊக்கத்தோடு செயல்படுகின்றார்கள். இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு மாநாட்டு மையங்கள், மேலாண்மை மையங்கள், இன்குபேஷன் மையங்கள் போன்ற பலவகையான அமைப்புக்களைத் தாங்களே உருவாக்கி அளித்திருக்கின்றார்கள். இந்த முயற்சிகள் அத்தனையும், தற்போதைய மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும். தில்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு அறக்கட்டளை நிதி தொடங்கப் பட்டிருக்கிறது, இது அருமையான ஒரு திட்டம். உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் இப்படிப்பட்ட அறக்கட்டளைகளை நிறுவும் ஒரு கலாச்சாரம் உண்டு. இவை மாணவர்களுக்கு உதவிகரமாக இருப்பவை. இந்தக் கலாச்சாரத்தை நெறிப்படுத்தி நிறுவனப்படுத்தும் வல்லமை இந்தியாவின் பல்கலைக்கழகங்களிடம் உண்டு என்று எனக்குப் படுகிறது. ஒன்றைத் திரும்பக் கொடுப்பது என்று வரும் போது, சிறியது என்றோ பெரியது என்றோ எதுவுமே கிடையாது. சின்னசின்ன உதவிகூட பெருமதிப்பு உடையதாக இருக்கும். ஒவ்வொரு முயற்சியும் மகத்துவம் வாய்ந்தது தான். பல நேரங்களில் முன்னாள் மாணவர்கள் தங்கள் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு, கட்டிட அமைப்பு, விருதுகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றிலும், திறன் மேம்பாட்டு செயல்திட்டங்களைத் தொடக்குவதிலும், பெரும் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளிக்கிறார்கள். சில பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை தொடங்கியிருக்கின்றார்கள். இவற்றில் அவர்கள் பல்வேறு குழுக்களில் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். தவிர, கல்வி சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதிக்கிறார்கள். பல பள்ளிகளில், அதுவும் குறிப்பாக தங்கிப் படிக்கும் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்கள் மிகவும் வலுவுள்ளவை; விளையாட்டுப் போட்டிகள், சமூகசேவை போன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றார்கள். எந்தப் பள்ளிகளில் நீங்கள் படித்தீர்களோ, அவற்றோடு உங்களின் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் முன்னாள் மாணவர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். அது பள்ளிகளாகட்டும் அல்லது கல்லூரிகளாகட்டும் அல்லது பல்கலைக்கழகங்களாகட்டும். முன்னாள் மாணவர்களுடனான தொடர்புகளில் நீங்கள் புதிய, நூதனமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று நான் நிறுவனங்களிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். படைப்பாற்றல் கொண்ட தளங்களை மேம்படுத்தினால், முன்னாள் மாணவர்களால் ஆக்கப்பூர்வமான ஒரு பங்களிப்பை அளிக்க முடியும். பெரிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல, நமது கிராமங்களில் இருக்கும் பள்ளிகளிலும் கூட பலமான, உயிர்ப்பான செயல்படும் முன்னாள் மாணவர்களின் வலைப்பின்னல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஸ்ரீ அரவிந்தர் மறைந்த நாள். ஸ்ரீ அரவிந்தரை நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குள்ளே ஆழம் ஏற்படுகிறது. எனது இளைய நட்புகளே, ஸ்ரீ அரவிந்தரை எத்தனை அறிவீர்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள், மேம்படுவீர்கள். வாழ்க்கையின் எந்த உணர்வுநிலையில் நீங்கள் இருக்கின்றீர்களோ, எந்த உறுதிப்பாடுகளை சாதிக்க நீங்கள் முயல்கின்றீர்களோ, அவற்றுக்கு இடையே, எப்போதும் ஸ்ரீ அரவிந்தர் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உத்வேகம் அளித்து வருவதை, ஒரு புதிய பாதையைத் துலக்கிக் காட்டுவதை உங்களால் கவனிக்க முடியும்.
இன்று நாம் உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீ அரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வங்காளத்தில் மிகவும் தாக்கம் நிறைந்த கவிதை ஒன்றுண்டு.
ஷுயி ஷுதோ பொர்ஜொந்தோ, ஆஷே துங்கோ ஹோதே.
தியஷலாய் காடீ தாஊ ஆஷே போதே.
ப்ரோதிப்தீ ஜாலிதே கேதே ஷூதே ஜேதே,
கிச்சுதேயி லோக் நோய் ஷாதீன்.
அதாவது, நம்நாட்டிலே ஊசி முதல் தீப்பெட்டி வரையிலான அனைத்துப் பொருள்களுமே அயல்நாடுகளிலிருந்து தான் கப்பல்களில் வருகின்றன. உணவு, உடை, உறக்கம் என்ற எந்த ஒரு விஷயத்திலும் நம் மக்கள் சுதந்திரமாக இல்லை என்பதே இதன் பொருள்.
சுதேசியின் பொருள் பற்றிக் கூறுகையில், நாம் நமது இந்தியத் தொழிலாளர்கள்-கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருள்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும் என்பார் அவர். இதனால் அயல்நாடுகளிடமிருந்து நாம் எதையும் கற்க கூடாது என்பதல்ல ஸ்ரீ அரவிந்தரின் கோட்பாடு. எங்கே புதுமை படைக்கப்படுகிறதோ, அதிலிருந்து நமது தேசத்திற்கு நன்மை பயப்பனவற்றை நாம் கற்க வேண்டும், இவற்றிலிருந்து நாம் பயனடையக் கூடியவற்றிற்கு உதவி செய்து, ஊக்கப்படுத்த வேண்டும், இதுவே தற்சார்பு பாரத இயக்கத்தில், உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தின் உணர்வு. குறிப்பாக சுதேசியைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அவர் கூறியவற்றை இன்று நாட்டுமக்கள் அனைவரும் படிக்க வேண்டும். நண்பர்களே, இதைப் போன்றே கல்வி தொடர்பாகவும் ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் மிகவும் தெளிவானவையாக இருந்தன. இந்தக் கல்வி ஏட்டுக்கல்வியையும், பட்டங்களையும், வேலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதையுமே தனது எல்லைகளாகக் கொள்வதில்லை. நமது தேசியக் கல்வி, நமது இளைய தலைமுறையினரின் மனதிற்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கவல்லதாக இருக்க வேண்டும்; அதாவது மூளைக்கு அறிவியல் ரீதியான மேம்பாட்டையும், மனதில் இந்திய உணர்வுகளை எழுப்பக்கூடியனவாகவும் இருக்க வேண்டும், அப்போது தான் ஒரு இளைஞனால் தேசத்தின் ஆகச்சிறந்த குடிமகனாக மாற முடியும் என்பதே ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் உறுதி. தேசியக் கல்வி பற்றி ஸ்ரீ அரவிந்தருக்கு அந்தக் காலத்தில் இருந்த எதிர்பார்ப்புகள், இன்று புதிய தேசியக் கல்விக் கொள்கை வாயிலாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
என் இனிய நாட்டுமக்களே, இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிமாணம் இணைகிறது. கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சீர்திருத்தங்கள், விவசாயிகளின் வாழ்வுகளில் புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விவசாயிகள் எந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்களோ, அவற்றை ஏதோ ஒரு காலகட்டத்தில், அரசியல் கட்சிகள் அனைத்துமே நிறைவேற்றித் தருவதாக வாக்களித்திருந்தார்கள், அந்தக் கோரிக்கைகள் இன்று நிறைவேறியிருக்கின்றன. தீவிரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் இந்தியப் பாராளுமன்றம் இந்த விவசாயத்துறை சீர்திருத்தங்களுக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தை நல்கியிருக்கிறது. இந்தச் சீர்திருத்தங்கள், விவசாயிகளை பல்வேறு தளைகளிலிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, மாறாக, அவர்களுக்குப் பல உரிமைகளையும் பெற்றுத் தந்திருக்கிறது, புதிய சாத்தியக்கூறுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த உரிமைகள் மிகக்குறைந்த காலகட்டத்தில், விவசாயிகளின் பிரச்சனைகளைக் குறைக்கத் தொடங்கி விட்டன. மஹாராஷ்ட்ரத்தின் துலே மாவட்ட விவசாயியான ஜிதேந்த்ர போயிஜி, புதிய விவசாய சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். ஜிதேந்த்ர போயிஜி மக்காச்சோளத்தைப் பயிரிட்டிருந்தார், சரியான விலைக்கு அதை அவர் வியாபாரிகளிடம் விற்கத் தீர்மானித்தார். விளைச்சலுக்கான மொத்த விலை, சுமார் மூன்று இலட்சத்து, முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஜிதேந்த்ர போயி அவர்களுக்கு 50,000 ரூபாய்க்கான முன்பணமும் கிடைத்தது. பாக்கித் தொகையை அவர்கள் 15 நாட்களுக்கு உள்ளாக செலுத்தி விடுவது என்பதும் தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் சூழ்நிலைகள் காரணமாக எஞ்சிய தொகை அவருக்குக் கிடைக்கவில்லை. விவசாயியிடமிருந்து விளைச்சலை வாங்கிக் கொள், மாதக்கணக்கில் அவருக்குத் தொகையை அளிக்காதே. மக்காச்சோளம் வாங்குபவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த வழக்கத்தினை ஒருவேளை பின்பற்றியிருக்கலாம். நான்கு மாதங்கள் வரை ஜிதேந்த்ர அவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் செப்டெம்பர் மாதம் இயற்றப்பட்ட புதிய விவசாயத் துறைச் சட்டம் அவருக்குப் பேருதவியாக விளங்கியது. விளைச்சலை வாங்கிய மூன்று நாட்களுக்கு உள்ளாக, விவசாயிகளிடம் முழுத் தொகையும் செலுத்தி விடவேண்டும் என்பதும், அப்படி ஒருவேளை பணம் செலுத்தப்படவில்லை என்றால், விவசாயி புகார் அளிக்கலாம் என்பதும் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்தச் சட்டத்தில் மேலும் ஒரு மகத்தான விஷயம் என்னவென்றால், இதன் ஒரு உட்பிரிவுக்கு உட்பட்டு, அந்தப் பகுதியின் சார்பு உட்கோட்ட நீதிபதி ஒரு மாதத்திற்குள்ளாக விவசாயி அளித்திருக்கும் புகாரின் மீது முடிவை எடுத்தாக வேண்டும். இப்படிப்பட்ட வலுவானதொரு சட்டம் விவசாயிக்குப் பக்கபலமாக இருக்கும் போது, அவரது பிரச்சனைக்கான தீர்வு காணப்பட்டே ஆகும். இங்கே ஜிதேந்த்ரா அவர்கள் புகாரளித்தார், இவருடைய புகாரும் சில நாட்களுக்குள்ளாகவே தீர்க்கப்பட்டது. அதாவது சட்டம் பற்றிய சரியான-முழுமையான புரிதலே, ஜிதேந்த்ராவின் பலமானது. எந்த இடமாக இருந்தாலும், அனைத்து வகையான தவறான புரிதல்கள்-வதந்திகளைத் தாண்டி, சரியான தெரிதல், அனைவருக்கும் மிகப்பெரிய வகையில் பலம் சேர்க்கும். விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை ராஜஸ்தான் மாநிலத்தின் பாரா மாவட்டத்தைச் சேர்ந்த மொஹம்மத் அஸ்லம் அவர்கள் செய்து வருகிறார். இவர் ஒரு விவசாயிகள் உற்பத்திச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். ஆம், நீங்கள் சரியாகத் தான் கேட்டிருக்கிறீர்கள், உங்கள் காதுகளில் சரியாகவே ஒலித்திருக்கிறது. விவசாயிகள் உற்பத்திச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இப்போது தேசத்தின் தொலைவான பகுதிகளில் பணியாற்றி வரும் விவசாயக் குழுமங்களிலும் கூட தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாகி வருகிறார்கள் என்பதை அறிந்து பெரியபெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சரி நண்பர்களே, மொஹம்மத் அஸ்லம் அவர்கள் தனது பகுதியின் பல விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு வாட்ஸப் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் ஒவ்வொரு நாளும் அவர் அக்கம்பக்கத்தில் இருக்கும் சந்தைகளின் விலை நிலவரம் பற்றிய தகவல்களை அளித்து வருகிறார். இவருடைய விவசாயிகள் உற்பத்தி அமைப்பே கூட விவசாயிகளிடமிருந்து அவர்களின் விளைச்சலை வாங்கிக் கொள்கிறது, ஆகையால் இவரது முயற்சிகள் காரணமாக விவசாயிகளுக்குத் தீர்மானம் செய்வதில் உதவிகரமாக இருக்கிறது.
நண்பர்களே, விழிப்புணர்வு இருந்தால், உயிர்ப்பிருக்கும். தனது விழிப்புணர்வு வாயிலாக ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் தாக்கமேற்படுத்திய ஒரு முற்போக்கு விவசாயி தான் ஸ்ரீ வீரேந்த்ர யாதவ் அவர்கள். வீரேந்த்ர யாதவ் அவர்கள் முன்னர் ஆஸ்த்ரேலிய நாட்டில் வசித்து வந்தார். ஈராண்டுகள் முன்பாக அவர் பாரதம் வந்து, இப்போது ஹரியாணாவின் கைத்தலில் வசித்து வருகிறார். மற்றவர்களைப் போன்றே இவருக்கும் வயலில் இருந்த பயிர் அடித்தட்டைகள் ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்தது. இதற்கான தீர்வு காணப்பட பரவலான வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாலும், இன்று மனதின் குரலில் நான் வீரேந்த்ரா அவர்களை சிறப்பான வகையில் குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், அவரது முயற்சியே அலாதியானது, ஒரு புதிய திசையைக் காட்டுவது. பயிர் அடித்தட்டைகளுக்கான தீர்வு காணப்பட வீரேந்த்ரா அவர்கள், பயிர் அடித்தட்டைகளைக் கட்டவல்ல straw baler என்ற ஒரு இயந்திரத்தை வாங்கினார். இதை வாங்க இவருக்கு விவசாயத் துறையிடமிருந்து நிதியுதவியும் கிடைத்தது. இந்த இயந்திரத்தைக் கொண்டு இவர் பயிர் அடித்தட்டைகளை தனித்தனிக் கட்டுகளாக ஒன்றிணைத்துக் கட்டத் தொடங்கினார். இப்படிச் செய்த பிறகு இவர் அவற்றை விவசாயப் பொருள்கள் எரிசக்தி ஆலைக்கும் காகித ஆலைக்கும் விலைக்கு விற்று விட்டார். வீரேந்த்ரா அவர்கள் வெறும் பயிர் அடித்தட்டைகளைக் கொண்டு மட்டுமே, ஈராண்டுகளில் ஒன்றரை கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக வியாபாரம் செய்து விட்டார், அதிலும் சுமார் 50 இலட்சம் ரூபாய் அளவுக்கு இலாபம் சம்பாதித்திருக்கிறார் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். எந்த விவசாயிகளின் நிலங்களிலிருந்து இவர் பயிர் அடித்தட்டைகளை அகற்றுகிறாரோ, அவர்களுக்கும் இதனால் ஆதாயம் ஏற்படுகிறது. கழிவைப் பொன்னாக்குவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் பயிர் அடித்தட்டைகளிலிருந்து பணத்தையும், புண்ணியத்தையும் சம்பாதிக்கும் அலாதியான ஒரு எடுத்துக்காட்டு இது. என் மனதுக்கு நெருக்கமான இளைஞர்களே, குறிப்பாக விவசாயப் படிப்பு படிக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களே, உங்களிடத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் – நீங்கள் உங்கள் அருகிலே இருக்கும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு நவீனமுறை விவசாயம் குறித்தும், விவசாயத் துறையில் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இப்படிச் செய்வதால் நாட்டில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் பங்குதாரர்களாக நீங்களும் ஆவீர்கள்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் பலதரப்பட்ட, பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசி வருகிறோம். ஆனால் எதை நினைத்து நாம் சந்தோஷம் அடைய விரும்ப மாட்டோமோ, அப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்து சுமார் ஓராண்டாகி இருக்கிறது. சுமார் ஓராண்டுக்கு முன்பாக கொரோனாவின் முதல் நிகழ்வு பற்றி உலகத்திற்குத் தெரிய வந்தது. அப்போதிலிருந்து இன்றுவரை, உலகெங்கிலும் பல ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்து விட்டோம். பொதுமுடக்கத்திலிருந்து வெளிப்பட்டு இப்போது தடுப்பூசி பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கொரோனா விஷயத்தில், எந்த வகையானதொரு கவனக்குறைவையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது, ஏனென்றால் இது இப்போதும் ஆபத்தானது. நாம் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை முழுச்சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்.
நண்பர்களே, சில நாட்களுக்குப் பின்னர், டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் நினைவுநாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று பாபாசாஹேபுக்கு நாம் நினைவாஞ்சலியைச் செலுத்தும் அதே வேளையில், நாட்டிற்கு நமது உறுதிப்பாடுகளையும், ஒரு குடிமகன் என்ற முறையிலே நமது கடமைகளையும் செவ்வனே நிறைவேற்ற அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றல்களையும், நாம் மீள்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாட்டின் பல பாகங்களில் குளிர்காலம் தீவிரமடையத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. இந்தச் சூழலில் நாம் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள்-பெரியோர், நோயுற்றோர் ஆகியோர் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், நம்மையும் நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்திலிருக்கும் வறியவர்களைப் பற்றியும் மக்கள் கரிசனம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கம்பளி ஆடைகளை அளித்து அவர்களின் குளிரைப் போக்குகிறார்கள். ஆதரவற்ற விலங்குகளுக்கும் குளிர் என்பது மிகுந்த சிரமத்தைக் கொண்டு தருகிறது. இவற்றுக்கு உதவி புரியவும் பலர் முன்வருகிறார்கள். நமது இளைய தலைமுறையினர் இவை போன்ற செயல்களில் மிகவும் ஆர்வத்தோடு பணியாற்றுகிறார்கள். நண்பர்களே, அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திப்போம், 2020 என்ற இந்த ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகளோடு, நாம் முன்னேறுவோம். உங்கள் கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றை எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், நாட்டுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று விஜயதஸமி அதாவது தஸரா புனித நன்னாள். இந்தப் பவித்திரமான நாளன்று உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த தஸரா புனிதநாளானது, பொய்மை மீது வாய்மையின் வெற்றியைக் குறிக்கிறது. ஆனால் இதோடு கூடவே, ஒருவகையில் சங்கடங்களின் மீது மனவுறுதியின் வெற்றியையும் குறிக்கும் நல்வேளை. இன்று, நீங்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறீர்கள், கண்ணியத்தைக் கடைப்பிடித்து, இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறீர்கள் ஆகையால், நாம் எதிர்கொண்டிருக்கும் போரில் நமது வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் துர்க்கையின் பந்தலில், அன்னையை தரிசனம் செய்ய ஏகப்பட்ட கூட்டம் முண்டியடிக்கும் – ஒரு பெரிய திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்; ஆனால் இந்த முறையோ அப்படி நடக்க முடியவில்லை. முன்பெல்லாம் தஸரா என்றால் பிரும்மாண்டமான கண்காட்சிகள் இடம்பெறும்; ஆனால் இந்த முறையோ அவற்றின் வடிவமே வித்தியாசமாகி விட்டிருக்கிறது. ராம்லீலா பண்டிகையும் கூட, மிகவும் கவரக்கூடிய ஒன்று; அதிலேயுமே கூட சிலவகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. முன்பெல்லாம் நவராத்திரியை முன்னிட்டு குஜாராத்திலே கர்பாவின் ஒய்யாரம் அனைத்துத் திசைகளிலும் படர்ந்திருக்கும்; இந்த முறையோ பெரிய அளவிலான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இப்போதும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, பல திருவிழாக்கள்-பண்டிகைகள் வரவிருக்கின்றன. அடுத்து ஈத் வரவிருக்கிறது, சரத் பௌர்ணமி, வால்மீகி ஜெயந்தி, பிறகு தன்தேரஸ், தீபாவளி, பாயிதூஜ், சடீமையா பூஜை, குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் ஆகியன வரவிருக்கின்றன. கொரோனாவின் இந்த பெருஞ்சங்கட காலத்தில், நாம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், வரையறைகளுக்குள்ளாக செயல்பட வேண்டும்.
நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.
நண்பர்களே, பண்டிகைகளின் இந்தக் குதூகலங்களுக்கு இடையே, நாம் பொது முடக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், வீட்டுவேலை செய்வோர், அக்கம்பக்கத்தில் காய்கறி விற்பனை செய்வோர், பால் விற்பனையாளர், காவலாளிகள் போன்ற சமூகத்தின் அங்கத்தினர் – நண்பர்களை பொது முடக்கத்தின் போது நாம் அணுக்கத்தில் அறிந்து கொண்டோம், நமது வாழ்க்கையில் இவர்களின் பங்கு என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொண்டோம். இடர்கள் நிறைந்த வேளையிலே, இவர்கள் நம்மோடு இருந்தார்கள், நம்மனைவருக்கும் தோள் கொடுத்தார்கள். இப்போது பண்டிகைகளின் போது, நமது சந்தோஷங்களின் போது, நாம் இவர்களுக்குக் கரம்நீட்ட வேண்டும். எந்த அளவுக்கு சாத்தியமோ, அந்த அளவுக்கு அவர்களுக்கும் நாம் நமது சந்தோஷங்களில் கண்டிப்பாகப் பங்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்தச் செயல்பாட்டை, குடும்பத்தின் உறுப்பினர்களாகச் செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்கள் சந்தோஷங்கள் எத்தனை பெருகும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.
நண்பர்களே, மேலும் நாம் நமது அசகாய இராணுவ வீரர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்; இந்தப் பண்டிகைகளின் போதும், அவர்கள் எல்லைப்புறங்களில் உறுதியாக இருக்கின்றார்கள். பாரத அன்னையின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பண்டிகைகளைக் கொண்டாடும் வேளையில், அவர்களை நினைத்துக் கொண்டு தான் கொண்டாட வேண்டும். நம் வீட்டில் ஒரு தீபம், பாரத அன்னையின் இந்த வீரம்நிறை மைந்தர்களுக்காக ஏற்ற வேண்டும். எனதருமை வீரர்களே, நீங்கள் எல்லைப்புறங்களில் இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த தேசமும் உங்களோடு நிற்கிறது, உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறது என்று நான் வீரர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். பனிச்சிகரங்களில் எந்த வீரர்கள் இருக்கின்றார்களோ, அவர்களின் குடும்பங்களுக்கும் நான் இன்று என் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். நாட்டுப்பணியில், ஏதோ ஒரு கடமையை ஆற்றிவருவதால், வீட்டிலே தங்கள் குடும்பத்தாரோடு இல்லாதிருக்கும் ஒவ்வொருவருக்கும், நான் என் இதயபூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற நிலைப்பாட்டிலே செயல்படும் வேளையில், உலகத்தார் நமது உள்ளூர் பொருட்களை விரும்புபவர்களாக மாறி வருகிறார்கள். நமது உள்ளூர் பொருட்கள் பலவற்றில் உலக அளவில் வியாபிக்கும் பெரும்சக்தி இருக்கிறது. எடுத்துக்காட்டாக கதராடைகள். நீண்டகாலம் வரை கதராடைகள் எளிமையின் அடையாளமாக இருந்து வந்திருந்தாலும், நமது கதராடைகள் இன்று சூழலுக்கு நேசமான துணிகள் என்ற அளவில் அறியப்பட்டு வருகின்றன. ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் இவை உடலுக்கு உகந்த துணிகள், அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்ற துணிகள் என்பதோடு, இன்று கதராடைகள் என்பது fashion statement என்ற நடப்பு வழக்கின் வெளிப்பாடாகவும் ஆகி வருகின்றன. கதராடைகள் மீதான நன்மதிப்பு பெருகிவரும் அதே வேளையில், உலகின் பல இடங்களில் கதராடைகள் நெசவு செய்யப்பட்டு வருகின்றன. மெக்சிகோவின் ஓஹாகா என்ற இடத்தின் பல கிராமங்களில் வட்டார கிராமப்புற அளவில் கதராடைகள் நெசவுப்பணி நடந்து வருகிறது. இன்று, இங்கு நெசவு செய்யப்படும் கதராடைகள் ஓஹாகா கதராடைகள் என்ற பெயரில் பிரசித்தி பெறத் தொடங்கி விட்டன. ஓஹாகாவிற்கு கதராடைகள் எப்படி போய்ச் சேர்ந்தன என்பதே கூட மிகவும் சுவாரசியமான விஷயம். இன்னும் சொல்லப் போனால், மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு இளைஞரான மார்க் ப்ரவுன் ஒருமுறை அண்ணல் காந்தியடிகள் பற்றிய திரைப்படத்தைப் பார்த்தார். இந்தப் படத்தைப் பார்த்த ப்ரவுன், இதனால் உத்வேகம் அடைந்து, இந்தியாவில் பாபுவின் ஆசிரமம் வந்து, பாபுவைப் பற்றி மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டார். கதர் என்பது வெறும் ஒரு துணியல்ல, இது ஒரு முழுமையான வாழ்க்கைமுறை என்பதை அப்போது தான் ப்ரவுன் புரிந்து கொண்டார். இதன் வாயிலாக எப்படி கிராமப்புற பொருளாதாரமும், சுயசார்பும் இணைந்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட ப்ரவுன், மிகவும் கருத்தூக்கம் பெற்றார். மெக்சிகோ சென்று கதர் தொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ப்ரவுன் உறுதி பூண்டார். இவர் மெக்சிகோவின் ஓஹாகாவில் கிராமவாசிகளுக்குக் கதர் பற்றிய செயல்பாட்டைக் கற்றுக் கொடுத்தார், அவர்களுக்குப் பயிற்சி அளித்தார், இன்று ஓஹாகா கதர் என்பது ஒரு ப்ராண்டாகவே மாறி விட்டது. இந்தத் திட்டம் பற்றிய இணையதளத்தில், The Symbol of Dharma in Motion, அதாவது தர்மத்தின் அடையாளத்தின் இயக்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த இணையதளத்தில் மார்க் ப்ரவுனின் மிகவும் சுவாரசியமான நேர்காணலும் இருக்கிறது. தொடக்கத்தில் கதர் பற்றிய ஐயப்பாடுகள் மக்கள் மனங்களில் இருந்ததாகவும், பின்னர் இதன் மீது அவர்களின் ஆர்வம் அதிகரித்த போது, இதற்கென ஒரு சந்தையும் தயாரானது என்று தெரிவித்திருக்கிறார். இவை ராமராஜ்ஜியம் தொடர்பான விஷயங்கள், நீங்கள் மக்களின் தேவைகளை நிறைவு செய்தால், மக்களே உங்களோடு தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்று கூறுகிறார்.
நண்பர்களே, தில்லியின் கன்னோட் ப்ளேஸ் என்ற இடத்தில் கதர் விற்பனையகத்தில் இந்த முறை காந்தி ஜெயந்தியன்று, ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனை ஆகியிருக்கிறது. இதைப் போல கொரோனா காலத்தில் கதரில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. நாடெங்கிலும் பல இடங்களில் சுய உதவிக் குழுக்களும், பிற அமைப்புகளும் கதர்த் துணியாலான முகக் கவசங்களைத் தயார் செய்து வருகிறார்கள். உத்திர பிரதேசத்தின் பாராபங்கியில் சுமன் தேவி என்ற ஒரு பெண்மணி, தனது சுய உதவிக் குழுவின் சகப்பெண்களோடு இணைந்து, கதரில் தயார் செய்யப்பட்ட முககவசத்தை அணிவதைத் தொடங்கியிருக்கிறார். மெல்ல மெல்ல அவரோடு கூட, பிற பெண்களும் இணையத் தொடங்கினார்கள், இப்போது இவர்கள் அனைவரும் இணைந்து, ஆயிரக்கணக்கில் கதராலான முகக்கவசங்களைத் தயார் செய்து வருகிறார்கள். நமது உள்ளூர் பொருட்களின் அழகே என்னவென்றால், இவற்றோடு பெரும்பாலும் ஒரு முழுமையான நோக்கு பளிச்சிடுகிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது பொருட்கள் மீது நமக்கு பெருமிதம் ஏற்படும் போது, உலகிலும் இவற்றின் மீதான ஆர்வமும் அதிகரிக்கிறது. நமது ஆன்மீகம், யோகக்கலை, ஆயுர்வேதம் ஆகியன உலகனைத்தையும் கவர்ந்திருக்கின்றன. நமது பல விளையாட்டுக்களும் உலகத்தாரை ஈர்த்திருக்கின்றன. இப்போது நமது மல்கம்ப் விளையாட்டு பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இது தமிழ்நாட்டின் வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீரவிளையாட்டினை ஒத்தது. அமெரிக்காவின் சின்மய் பாடன்கரும், ப்ரக்யா பாடன்கரும் தங்கள் வீட்டில் இந்த மல்கம்ப் விளையாட்டைக் கற்பிக்கத் தொடங்கிய போது, அவர்களுக்கு இத்தனை வெற்றி கிடைக்கும் என்பதை அவர்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. அமெரிக்காவில் இன்று பல இடங்களில் மல்கம்ப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரிய எண்ணிக்கையில் அமெரிக்க இளைஞர்கள் இதோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள், மல்கம்பைக் கற்றுக் கொண்டு வருகின்றார்கள். இன்று ஜெர்மனியில், போலந்தில், மலேஷியாவில் என சுமார் 20 பல்வேறு நாடுகளிலும், மல்கம்ப் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இன்று இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் பல நாடுகள் பங்கெடுத்தும் வருகின்றன. பாரதத்திலே பண்டைய காலம் தொட்டு இருந்துவரும் இப்படிப்பட்ட பல விளையாட்டுக்கள், நமக்கு உள்ளே அசாதாரணமான வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நமது மனம், உடலின் சீர்நிலை ஆகியவற்றுக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகின்றன. புதிய தலைமுறையைச் சேர்ந்த நமது இளைஞர்களுக்கு ஒருவேளை மல்கம்ப் பற்றிய தெரிதல் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் இதுபற்றி இணையத்தில் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே, நமது நாட்டிலே எத்தனையோ தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. நமது இளைய நண்பர்கள் இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டு, இவற்றைக் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் காலத்திற்கு ஏற்றவகையிலே, இவற்றில் நீங்கள் புதுமைகளையும் புகுத்த வேண்டும். வாழ்க்கையில் பெரிய சவால்கள் இல்லாது போனால், ஆளுமையின் சிறப்புகள் வெளிப்படாமல் போய் விடும். ஆகையால் உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக் கொள்ளுங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, learning is growing, அதாவது கற்றலே வளர்ச்சி என்பார்கள். இன்று மனதின் குரலில் ஒரு விசித்திரமான தாகம் இருக்கும் ஒரு நபரை உங்களுக்கு நான் அறிமுகம் செய்ய இருக்கிறேன். படித்தல்-கற்றல் ஆகியவற்றில் இருக்கும் சந்தோஷங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாகம் இது. இவர் தான் பொன். மாரியப்பன் அவர்கள். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். தூத்துக்குடி முத்துக்களின் நகரம் என்று அறியப்படுகிறது. ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்களின் மகத்துவம் வாய்ந்த மையமாக இது இருந்தது. இங்கே வசித்துவரும் என்னுடைய நண்பரான பொன் மாரியப்பன் அவர்கள் முடிதிருத்தும் தொழிலைச் செய்து வருகிறார், ஒரு சலூன்கடை நடத்தி வருகிறார். மிகவும் சிறிய சலூன்கடை தான் அது. அதிலே அவர் விசித்திரமான, உத்வேகம்தரும் ஒரு பணியைச் செய்திருக்கிறார். தனது சலூன்கடையின் ஒரு பாகத்தில் அவர் நூலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சலூன்கடைக்கு வருபவர் தனது முறைவரும் வரை காத்திருக்கும் போது, அங்கே ஒரு புத்தகத்தைப் படிக்கிறார், படித்தவை பற்றி எழுதுகிறார் என்றால், பொன். மாரியப்பன் அவர்கள் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு தள்ளுபடி அளிக்கிறார். சுவாரசியமாக இருக்கிறது இல்லையா!! வாருங்கள், தூத்துக்குடி செல்வோம், பொன். மாரியப்பன் அவர்களோடு உரையாடுவோம்.
பிரதமர்: பொன். மாரியப்பன் அவர்களே, வணக்கம். நல்லா இருக்கீங்களா?
பொன் மாரியப்பன்: பெருமதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம்.
பிரதமர்: வணக்கம், வணக்கம்…. உங்களுக்கு இந்த நூலகம் பற்றிய எண்ணம் எபப்டி ஏற்பட்டது?
பொன் மாரியப்பன்: நான் 8ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். என் குடும்பச் சூழ்நிலை காரணமாக என்னால் மேலே படிக்க முடியவில்லை. படித்தவர்களைப் பார்க்கும் போது, என்னால் படிக்க முடியவில்லையே என் மனதிலே என்ற குறை தோன்றும். ஆகையால் நாம் ஏன் ஒரு நூலகத்தை ஏற்படுத்தி, அதனால் பலரும் பலனடையச் செய்யக்கூடாது என்று தோன்றியது, இதுவே எனக்கு உத்வேகம் அளித்தது.
பிரதமர்: உங்களுக்கு எந்தப் புத்தகம் பிடிக்கும்?
பொன் மாரியப்பன்: எனக்குத் திருக்குறள் மிகவும் பிடிக்கும் ஐயா.
பிரதமர்: உங்களோடு பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்.
பொன் மாரியப்பன்: மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, உங்களோடு பேசியது எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
பிரதமர்: நல்வாழ்த்துக்கள்.
பொன் மாரியப்பன்: மிக்க நன்றி ஐயா.
பிரதமர்: தேங்க்யூ.
நாம் இப்போது பொன் மாரியப்பன் அவர்களோடு உரையாற்றினோம். பாருங்கள், எப்படியெல்லாம் அவர் மக்களின் முடியை அழகு செய்வதோடு கூடவே, அவர்களின் வாழ்க்கையையும் அழகுபார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்! திருக்குறள் மீது மக்கள் மனங்களில் இருக்கும் பிரியத்தைப் பற்றிக் கேள்விப்படும் போது மிகவும் நன்றாக இருக்கிறது. திருக்குறள் அனைவரையும் கவர்ந்திருப்பதைப் பற்றி நீங்கள் அனைவருமே கேட்டீர்கள். இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திருக்குறள் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இதைப் படித்துப் பாருங்கள். ஒருவகையில் வாழ்க்கைப் பாதையைக் குறள் துலக்கிக் காட்டும் ஒரு வழிகாட்டி.
நண்பர்களே, நாடெங்கிலும் ஞானத்தைப் பரப்புவதில் பலருக்கு அபாரமான சந்தோஷம் கிடைத்து வருகிறது என்பதை அறிந்து என் மனம் மகிழ்கிறது. அனைவரிடத்திலும் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் நிறைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் நபர்கள் இவர்கள். மத்திய பிரதேசத்தின் சிங்கரௌலியைச் சேர்ந்த ஒரு ஆசிரியையான உஷா துபே அவர்கள், தனது ஸ்கூட்டி வண்டியையே ஒரு நடமாடும் நூலகமாக மாற்றியமைத்திருக்கிறார். இவர் ஒவ்வொரு நாளும் நடமாடும் இந்த நூலகத்தோடு ஏதோ ஒரு கிராமம் செல்கிறார், அங்கே இருக்கும் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். குழந்தைகள் இவரை புத்தக அக்கா என்றே மிகுந்த பிரியத்தோடு அழைக்கிறார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அருணாச்சல் பிரதேசத்தின் நிர்ஜுலியின் ராயோ கிராமத்தில் ஒரு சுய உதவி நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உள்ளபடியே இங்கே வசிக்கும் மீனா குருங்க், திவாங்க் ஹோஸாயி ஆகியோருக்கு ஊரில் எந்த நூலகமும் இல்லை என்பது தெரிய வந்த போது, இவர்கள் இதற்கான நிதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த நூலகத்திற்கென எந்த ஒரு உறுப்பினர் தகுதியும் கிடையாது என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். யார் வேண்டுமானாலும் இருவாரக் காலத்திற்கு புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். படித்த பிறகு புத்தகத்தைத் திரும்ப அளித்து விட வேண்டும். இந்த நூலகம் வாரம் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் திறந்திருக்கிறது. தங்கள் குழந்தைகள் படிப்பதில் ஈடுபடுகிறார்கள் என்பதில் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆர்வலர்களுக்கு மிகுந்த சந்தோஷம்; அதுவும் குறிப்பாக, இணையவழி வகுப்புகளைப் பள்ளிகள் நடத்தும் இந்த வேளையில் இது மிகவும் பயனுடையதாக இருக்கிறது. இதே போல சண்டீகடில் ஒரு அரசு சாரா அமைப்பை நடத்திவரும் சந்தீப் குமார் அவர்கள், ஒரு மினிவேனில் நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்; இதன் வாயிலாக ஏழைக் குழந்தைகள் படிக்கவென இலவசமாகப் புத்தகங்களை அளிக்கிறார். இதைப் போலவே குஜராத்தின் பாவ்நகரிலும் இரு அமைப்புகள் மிகச் சிறப்பான செயல்கள் புரிந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியும். இவற்றில் ஒன்று விகாஸ் வர்த்துல் ட்ரஸ்ட். இந்த அறக்கட்டளை, போட்டித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துவரும் மாணவர்களுக்கென மிகவும் உதவிகரமான செயல்களைச் செய்கிறது. இந்த அறக்கட்டளை 1975ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது, இதில் 5,000 புத்தகங்களோடு கூட, 140ற்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் தருவிக்கப்படுகின்றன. இதைப் போன்றே மேலும் ஒரு அமைப்பான புஸ்தக் பரப் என்பது ஒரு நூதனமான செயல்திட்டம். இங்கே இலக்கிய புத்தகங்களோடு கூடவே, பிற புத்தகங்களும் இலவசமாக தருவிக்கப்படுகின்றன. இந்த நூலகத்தில் ஆன்மீகம், ஆயுர்வேத சிகிச்சை, மேலும் பல விஷயங்களோடு தொடர்புடைய புத்தகங்களும் இருக்கின்றன. உங்களுக்கு இவை போன்ற இன்னும் பிற முயற்சிகள் பற்றித் தெரிந்தால், நீங்கள் சமூக ஊடகங்களில் இவை பற்றி அனைவரோடும் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். இந்த எடுத்துக்காட்டுகள் புத்தகங்கள் படித்தல் அல்லது நூலகத் திறப்பு என்பதோடு மட்டுமே கிடையாது. இவை புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளங்கள், இவற்றில் சமுதாய முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு துறை, ஒவ்வொரு நிலையில் இருப்போரும் புதியபுதிய, நூதனமான வழிமுறைகளைக் கைக்கொண்டு வருகிறார்கள்.
ந ஹி ஞானேன ஸத்ருஷம் பவித்ர மிக வித்யதே
न ற்அहि ज्ञानेन सदृशं पवित्र मिह विद्यते
என்று கீதை கூறுகிறது. அதாவது, ஞானத்திற்கு இணையாக உலகிலே புனிதமான வஸ்து வேறேதும் கிடையாது என்பது தான். ஞானத்தைப் பரப்புவோர் அனைவருக்கும், அனைத்து மஹானுபாவர்களுக்கும் என் இதயபூர்வமான வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து, சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் ராஷ்ட்ரீய ஏக்தா திவஸ், அதாவது தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட இருக்கிறோம். மனதின் குரலில், முன்னரும் கூட நாம் சர்தார் படேல் அவர்களைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம். அந்த மகத்தான ஆளுமையின் பல பரிமாணங்களைப் பற்றி விவாதித்திருக்கிறோம். கருத்தாழம், தீரமான தலைமை, அரசியல் தெளிவு, விவசாயத்துறை பற்றிய ஆழமான ஞானம், தேச ஒற்றுமை குறித்த அர்ப்பணிப்பு உணர்வு, போன்ற பல குணங்கள் ஒருசேர ஒரு ஆளுமையிடத்தில் பொருந்தி இருப்பது என்பது, வெகு சிலரிடத்தில் மட்டுமே காணப்படக் கூடியது. அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? சமஸ்தானங்களோடு உரையாடியவர், வணக்கத்துக்குரிய பாபுவின் மக்கள் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர், ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தவர் – இத்தனை முகங்களைக் கொண்டவரிடம் நகைச்சுவை உணர்வு பூரணமாகக் குடிகொண்டிருந்தது. ஒருமுறை பாபு அவர்கள் சர்தாரைப் பற்றிக் கூறுகையில், சர்தார் தனது நகைச்சுவையால் தம்மை வயிறு வலிக்கச் சிரிக்கச் செய்வார் என்றும், இவ்வாறு நாளில் ஒருமுறை அல்ல பலமுறை இப்படிச் செய்வார் என்றும் தெரிவித்தார். இதில் நமக்கும் ஒரு கற்றல் இருக்கிறது. சூழ்நிலைகள் எத்தனை தான் கடினமாக இருந்தாலும், உங்களுடைய நகைச்சுவை உணர்வை உயிர்ப்போடு வைத்திருங்கள். இது நம்மை இயல்புநிலையில் வைத்திருக்க உதவுவதோடு, நமது பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும். சர்தார் ஐயா இதைத் தான் செய்தார்.
எனதருமை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் தேசத்தை ஒன்றுபடுத்துவதற்கே அர்ப்பணம் செய்தவர். அவர் இந்தியர்களின் மனங்களை சுதந்திரப் போராட்டத்தோடு இணைத்தார். இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தோடு கூடவே, விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் சமஸ்தானங்களை நமது தேசத்தோடு ஒன்றிணைக்கும் பணியைச் செய்து முடித்தார். வேற்றுமையில் ஒற்றுமை காணுவது என்ற விதையை, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைத்து ஊட்டமளித்தார்.
நண்பர்களே, நம்மை ஒன்றுபடுத்தும் விஷயங்களை, நாட்டின் ஒருமூலையில் வசிப்போரை பிறிதொரு மூலையில் வசிப்போரோடு இணைத்து, எல்லோரும் நம்மவரே என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியவற்றை, நமது சொல்-செயல்-நடத்தை ஆகியவற்றின் வாயிலாக ஒவ்வொரு கணமும், அனைத்து விஷயங்களிலும் நாம் இன்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டார்கள். நீங்களே பாருங்கள், கேரளத்தில் தோன்றிய ஆதி சங்கரர், பாரதநாட்டின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, மகத்துவம் வாய்ந்த நான்கு மடங்களை நிறுவினார். வடக்கே பதரிகாஸ்ரமம், கிழக்கில் பூரி, தெற்கிலே சிருங்கேரி, மேற்கில் த்வாரகை. அவர் ஸ்ரீநகருக்கு யாத்திரை மேற்கொண்டதால் தான் அங்கே சங்கராச்சாரியார் குன்று என்ற ஒன்று இருக்கிறது. புனிதப் பயணம் என்பது பாரதத்தை ஒன்றுபடுத்துகிறது. ஜ்யோதிர்லிங்கங்களும் சக்திபீடங்களும் அடங்கிய அழகிய மாலையே, பாரதநாட்டை ஓரிழையில் இணைக்கிறது. த்ரிபுரா தொடங்கி குஜராத் வரை, ஜம்மு கச்மீரம் தொடங்கி தமிழ்நாடு வரை நிறுவப்பட்ட நமது நம்பிக்கையின் மையங்கள் நம்மை ஒருங்கிணைக்கின்றன. பக்தி இயக்கம், பாரதம் முழுவதிலும் ஒரு மிகப்பெரிய மக்கள் பேரியக்கம் ஆனது; இது நம்மை பக்தி வாயிலாக ஒன்றுபடுத்துகிறது. நமது அன்றாட வாழ்க்கையிலும் கூட, இந்த விஷயங்கள் கலந்திருக்கின்றன, இவையே நமக்கு ஒற்றுமை என்ற சக்தியை அளிக்கிறது. இதிலே தொலைவில் வடக்கில் இருக்கும் சிந்து நதி தொடங்கி, தென்னாட்டின் உயிரூட்டமான காவிரி வரை அனைத்தும் அடங்கும். மக்கள் நீராடும் போது, புனிதமான உணர்வுடன், ஒருமைப்பாட்டு மந்திரம் ஒன்றைக் கூறுவதுண்டு.
गंगे च यमुने चैव गोदावरि सरस्वती I
नर्मदे सिन्धु कावेरि जलेSस्मिन् सन्निधिं कुरु II
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.
நர்மதே சிந்து காவேரி ஜலே அஸ்மின் சன்னிதிம் குரு, என்று.
இதைப் போலவே சீக்கியர்களின் புனித இடங்கள், நாந்தேட் சாஹிபும் பட்னா சாஹிபும் அடங்கும். நமது சீக்கிய குருமார்களும், தங்களது வாழ்க்கை மற்றும் நற்காரியங்கள் வாயிலாக, ஒற்றுமை உணர்வின் ஊற்றுக்கண்ணாக விளங்கினார்கள். கடந்த நூற்றாண்டில், நமது நாட்டிலே, டாக்டர். பாபாசாஹேப் அம்பேட்கர் போன்ற மாமனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அரசியலமைப்புச் சட்டம் வாயிலாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே,
Unity is Power, Unity is strength,
Unity is Progress, Unity is Empowerment,
United we will scale new heights
ஒற்றுமையே சக்தி, ஒற்றுமையே பலம்,
ஒற்றுமையே வளர்ச்சி, ஒற்றுமையே அதிகாரமளிப்பு,
ஒன்றுபட்டு நாம் புதிய சிகரங்களை அடைவோம்.
அதே போல, தொடர்ந்து நமது மனதிலே ஐயப்பாடுகளின் விதைகளை விதைக்கும் முயற்சிகளிலும், தேசத்தைப் பிரிப்பதிலும் முயலும் சக்திகளும் இருந்தே வந்திருக்கின்றன. தேசம் ஒவ்வொரு முறையும், இந்த தீய நோக்கங்கள் உடையோருக்கு தக்க பதிலடி கொடுத்தும் வந்திருக்கிறது. நாம் அயராது நமது படைப்பாற்றல் வாயிலாக, நேசத்தோடு, ஒவ்வொரு கணமும் முயற்சிகள் மேற்கொண்டு, நமது சின்னச்சின்ன செயல்கள் வாயிலாக, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அழகு கொஞ்சும் வண்ணங்களை வெளிப்படுத்திவர வேண்டும், ஒற்றுமையின் புதிய வண்ணத்தால் இட்டுநிரப்ப வேண்டும், இதை ஒவ்வொரு குடிமகனும் புரிய வேண்டும். இந்த வேளையில், நீங்கள் அனைவரும் ஒரு இணையதளத்தைக் காண வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ekbharat.gov.in. இதிலே தேசிய ஒருமைப்பாடு என்ற நமது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பல முயல்வுகள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதிலே ஒரு சுவாரசியமான பகுதி உள்ளது, அது இன்றைய வாக்கியம். ஒரு வாக்கியத்தைப் பல்வேறு மொழிகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்று தினமும் இந்தப் பகுதியில் புதியதாக ஒரு வாக்கியம் இடம் பெறுகிறது, இதை நம்மால் கற்க முடியும். நீங்கள் இந்த இணையதளத்தில் உங்கள் பங்களிப்பை அளிக்கலாம், எப்படி ஒவ்வொரு மாநிலத்திலும், கலாச்சாரத்திலும் பல்வேறு வகையான உணவுப் பழக்கங்கள் இருக்கின்றன போன்றவற்றில் நீங்கள் பங்கெடுக்கலாம். அதாவது, உணவுப் பதார்த்தங்கள் வட்டார அளவிலான சிறப்பான மூலப்பொருட்களான தானியம் மற்றும் மசாலாக்கள் உதவியோடு தயாரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட உள்ளூர் உணவு செய்முறையையும், செய்பொருட்களின் பெயர்களையும், ஒரே பாரதம் உன்னத பாரதம் இணையதளம் ekbharat.gov.inஇல் பகிர்ந்து கொள்ளலாமே!! ஒற்றுமை மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க இதைவிடச் சிறந்த வழிமுறை வேறு என்ன இருக்க முடியும்!!
நண்பர்களே, இந்த மாதம் 31ஆம் தேதியன்று கேவடியாவின் வரலாற்று சிறப்புமிக்க, ஒற்றுமைக்கான உருவச்சிலை தொடர்பாக நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும். நீங்களும் இதில் கண்டிப்பாக இணையுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று வால்மீகி ஜெயந்தியை நாம் கொண்டாடவிருக்கிறோம். நான் மஹரிஷி வால்மீகியை வணங்குகிறேன், இந்தச் சிறப்பான வேளையில் நாட்டுமக்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மஹரிஷி வால்மீகியின் மகத்தான எண்ணம் கோடிக்கணக்கான மக்களுக்குக் கருத்தூக்கம் அளிக்கிறது, சக்தி கொடுக்கிறது. அவர் கோடிக்கணக்கான ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக ஒளிர்கிறார். அவர்களுக்குள்ளே நம்பிக்கை எனும் தீபத்தை ஏற்றி வைக்கிறார். எந்த ஒரு மனிதனிடமும் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற உறுதியான விருப்பம் இருந்தால், அந்த மனிதன் மிக எளிதாக எந்தச் செயலையும் சாதிக்க முடியும் என்றே அவர் கூறுகிறார். இந்த பெரும்விருப்பம் தான் பல இளைஞர்களுக்கும் அசாதாரணமான செயல்களைப் புரியும் சக்தியை அளிக்கிறது. மஹரிஷி வால்மீகி ஆக்கப்பூர்வமான சிந்தனைக்குப் பலம் சேர்க்கிறார். அவரைப் பொறுத்த மட்டில், சேவையும், மனித கண்ணியமும் அனைத்திலும் மேலானவை. மஹரிஷி வால்மீகியின் செயல், சிந்தனை மற்றும் நோக்கம் இன்று புதிய இந்தியாவின் நமது உறுதிப்பாட்டிற்கு உத்வேகம் அளிப்பவை, வழிகாட்டுபவை. நாம் மஹரிஷி வால்மீகியிடம் என்றும் மாறாத நன்றியுடைவர்களாய் இருப்போம்; அவர் தான் வருங்காலத் தலைமுறையினருக்கு நல்ல பாதையைக் காட்ட, இராமாயணம் போன்ற மகத்தான இதிஹாஸத்தை அருளியவர்.
அக்டோபர் 31ஆம் தேதியன்று தான் நாம் நமது முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி அம்மையாரை இழந்த நாளும் கூட. நான் அவர்களுக்கு என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று கச்மீரத்தின் புல்வாமா, நாடு முழுமைக்கும் கற்பித்தலுக்கான மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளித்து வருகிறது. இன்று நாடெங்கிலும் குழந்தைகள் தங்களுடைய வீட்டுப் பாடத்தைச் செய்கிறார்கள், குறிப்பெடுக்கிறார்கள் என்றால், ஏதோ ஒரு வகையில் புல்வாமா மக்களின் கடுமையான உழைப்பு அதிலே அடங்கியிருக்கிறது. கச்மீரத்தின் பள்ளத்தாக்குகள், நாடு முழுவதற்கும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பென்சில் ஸ்லேட், மரத்தாலான பட்டியின் தேவையை நிறைவு செய்து வருகிறது. இதில் மிகப்பெரிய பங்களிப்பு புல்வாமாவினுடையது. ஒரு காலத்தில், நாம் அயல்நாடுகளிலிருந்து பென்சில் தயாரிக்க மரத்தை இறக்குமதி செய்து வந்தோம்; ஆனால் இப்போது நமது புல்வாமா பகுதி, தேசத்தைத் தற்சார்பு உடையதாக ஆக்கி வருகிறது. உள்ளபடியே புல்வாமாவின் இந்த பென்சில் ஸ்லேட்டுகள், மாநிலங்களுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறைக்கின்றது. பள்ளத்தாக்கின் சினார் மரங்களில் அதிக ஈரப்பதமும், மென்மையும் இருக்கின்றன, இவை பென்சில் தயாரிக்க மிகவும் உகந்தவையாக இருக்கின்றன. புல்வாமாவின் உக்கூ பென்சில் கிராமம் என்றே அறியப்படுகிறது. இங்கே, பென்சில் ஸ்லேட் தயாரிக்கும் அலகுகள் பல இருக்கின்றன. இவை வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்றன, இதிலே கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
நண்பர்களே, புல்வாமாவுக்கென தனியொரு அடையாளம் எப்போது ஏற்பட்டதென்றால், அங்கே இருக்கும் மக்கள் புதியதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டு, இதன் பொருட்டு துணிந்தார்கள், தங்களை அர்ப்பணம் செய்தார்கள், அப்போது தான். இப்படிப்பட்ட செயல்வீரர்களில் ஒருவர் தான் மன்சூர் அஹ்மத் அலாயி. தொடக்கத்தில் மன்சூல் பாய் மரத்தை வெட்டும் ஒரு எளிய தொழிலாளியாக மட்டுமே இருந்தார். இனிவரும் தலைமுறையினர் ஏழ்மையின் பிடியில் சிக்கி இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில், மன்சூர் பாய் புதியதாக ஒன்றைப் புரிய விரும்பினார். அவர் தனது பூர்வீக நிலத்தை விற்று, ஆப்பிளை சேமித்து வைக்கும் மரப்பெட்டிகளைத் தயாரிக்கும் அலகு ஒன்றைத் தொடக்கினார். அவர் தனது சிறிய வியாபாரத்தைச் செய்து வரும் போது, பென்சில் தயாரிக்க Poplar wood அதாவது சினார் மரம் பயனாகிறது என்று கேள்விப்பட்டார். இந்தத் தகவல் தெரிந்த பிறகு, மன்சூர் பாய் தனது தொழில்முனைவை வெளிப்படுத்தினார், சில பிரபலமான பென்சில் தயாரிக்கும் அலகுகளுக்கான சினார் மரத் தேவைகளை நிறைவு செய்யத் தொடங்கினார். மன்சூர் அவர்களுக்கு இது மிகவும் ஆதாயமாக அமைந்தது, அவரது வருவாய் சிறப்பான முன்னேற்றம் கண்டது. காலத்திற்கு ஏற்ப அவர் பென்சில் ஸ்லேட் தயாரிக்கும் இயந்திரங்களைத் தருவித்தார், பிறகு அவர் நாட்டின் பெரியபெரிய நிறுவனங்களுக்கு பென்சில் ஸ்லேட் அளிக்கத் தொடங்கினார். இன்று மன்சூர் பாயின் வர்த்தகம் பலகோடி ரூபாய்கள் பெறுமானமுடையது, சுமார் 200 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். இன்று மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலும், நான் மன்சூர் பாய் உட்பட, புல்வாமாவின் உழைப்பாளி சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் நாட்டின் இளம் மனங்களுக்குக் கற்பித்தலை ஏற்படுத்தும் வகையில், உங்களின் மகத்தான பங்களிப்பை அளித்து வருகிறீர்கள்.
எனதருமை நாட்டுமக்களே, பொதுமுடக்கத்தின் போது தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்ட சேவையளித்தலின் பல முயல்வுகள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன, இவற்றை ஏதோ மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் தளவாட நிறுவனங்களே அளிக்க முடியும் என்று கிடையாது. ஜார்க்கண்டில் இந்தப் பணியைப் பெண்களின் ஒரு சுயவுதவிக் குழு செய்து காட்டியிருக்கிறது. இந்தப் பெண்கள், விவசாயிகளின் தோட்டங்களிலிருந்து காய்கனிகளை நேரடியாக வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தார்கள். இந்தப் பெண்கள் ‘ஆஜீவிகா ஃபார்ம் ஃப்ரெஷ்’ என்ற பெயர் கொண்ட ஒரு செயலியை ஏற்படுத்தினார்கள். இதன் வாயிலாக, எளிதாக மக்கள் காய்கனிகளை வாங்க முடிகிறது. இந்த ஒட்டுமொத்த முயற்சியால், விவசாயிகளின் காய்கனிகளுக்கு நல்ல விலை கிடைத்தது, மக்களுக்கும் புத்தம்புதிய காய்கனிகள் கிடைத்து வந்தன. அங்கே ‘ஆஜீவிகா ஃபார்ம் ஃப்ரெஷ்’ செயலி கருத்து மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பொதுமுடக்க நாட்களில் இவர்கள் 50 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட காய்கனிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்கள். நண்பர்களே, விவசாயத் துறையில் புதிய சாத்தியக்கூறுகள் உருவாவதைப் பார்த்து, நமது இளைஞர்களும் கணிசமான எண்ணிக்கையில் இதோடு இணையத் தொடங்கி இருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் பட்வானியில் அதுல் பாடீதார் என்பவர் தனது பகுதியில் 4000 விவசாயிகளை டிஜிட்டல் முறையில் இணைத்து விட்டார். இந்த விவசாயிகள் அதுல் பாடீதாரின் இணைய-மேடை-பண்ணை-அட்டை வாயிலாக, விவசாயப் பொருட்களான உரம், விதைகள், பூச்சிகொல்லி, பூசணக்கொல்லி போன்றவற்றை வீட்டுக்கே கொண்டு சேர்த்தலால் பயனடைகிறார்கள், அதாவது விவசாயிகளின் வீடுகளுக்கே அவர்களின் தேவைகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இந்த டிஜிட்டல் மேடையில் நவீன விவசாயக் கருவிகளும் வாடகைக்குக் கிடைத்து வருகின்றன. பொதுமுடக்க காலத்திலும் இந்த டிஜிட்டல் மேடை வாயிலாக விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான பொட்டலங்கள் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பருத்தி மற்றும் காய்கறிகளின் விதைகளும் அடங்கும். அதுல் அவர்களும் அவருடைய குழுவினரும், தொழில்நுட்ப ரீதியிலான விழிப்புணர்வை விவசாயிகளிடத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள், இணையவழியில் பணம் செலுத்துவதையும், பொருட்களை வாங்குவதையும் கற்பித்து வருகிறார்கள்.
நண்பர்களே, இன்றைய நாட்களில் மஹாராஷ்ட்ரத்தில் ஒரு சம்பவம் மீது என் கவனம் சென்றது. அங்கே ஒரு விவசாயி-உற்பத்தியாளர் நிறுவனமானது, மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்கியது. நிறுவனமானது, விவசாயிகளுக்கு இந்த முறை, அசல்விலையோடு, கூடுதலாக உபரித் தொகையையும் வழங்கியது. விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி. இதைப் பற்றி அவர்கள் நிறுவனத்திடம் கேட்ட போது, இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய விவசாய சட்டத்தின் வாயிலாக, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடிவதால், தங்களுக்கு நல்ல இலாபம் கிடைப்பதாகவும், இதனால் கூடுதல் இலாபத்தை விவசாயிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் கருதுவதாக அந்த நிறுவனத்தார் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மீது விவசாயிகளுக்கும் உரிமை இருப்பதால், ஊக்கத் தொகையை அளித்திருக்கிறார்கள். நண்பர்களே, ஊக்கத்தொகை இப்போது குறைவானதாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இந்தத் தொடக்கம் மிகப் பெரியது. புதிய விவசாயச் சட்டங்கள் அடிமட்டத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் காரணமாக, விவசாயிகளுக்கு சாதகமான சாத்தியக்கூறுகள் நிரம்பி இருக்கின்றன என்பது இதிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.
எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலில் நாட்டுமக்களின் அசாதாரணமான சாதனைகள், நமது நாடு, நமது கலாச்சாரம் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியெல்லாம், உங்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. நமது தேசம் திறமைகள் பல படைத்தவர்கள் நிறைந்தது. நீங்களும் இப்படிப்பட்டவர்களைப் பற்றி அறிய நேர்ந்தால், அவர்களைப் பற்றிப் பேசுங்கள், எழுதுங்கள், அவர்களின் வெற்றிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பலப்பல வாழ்த்துக்கள். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், பண்டிகைகளின் போது சற்று விசேஷமாக நினைவில் கொள்ளுங்கள், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பினால் கழுவி வர வேண்டும், ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடித்துவர வேண்டும்.
நண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த
காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இன்று, தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இத்தனை நீண்ட காலம் வரையிலும், ஒன்றாக இருப்பது, எப்படி இருப்பது, நேரத்தை எவ்வாறு செலவிடுவது, ஒவ்வொரு கணத்தையும் எப்படி மகிழ்ச்சி நிறைந்ததாகக் கழிப்பது என்பது ஒரு கேள்வி. ஆனால் பல குடும்பங்கள் இடர்களைச் சந்திக்க நேர்ந்தது.
பாரம்பரியமாக நமது குடும்பங்களில் இருந்து வந்த கலாச்சாரச் சூழல் இல்லாத நிலை இன்று நிலவுகிறது. இதன் காரணமாக, இந்தச் சங்கடமான சூழலைக் கழிப்பதிலும் கூட, குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இதில் ஒரு மகத்துவமான விஷயமும் இருக்கிறது, என்ன அது? ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது மூத்தவர் இருப்பார்கள், கதைகளைச் சொல்லுவார்கள், வீட்டில் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும், ஒரு புதிய ஆற்றல் ஊற்றெடுக்கும். நமது முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்த நெறிமுறைகள் இன்று எத்தனை தேவையானவையாக, மகத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பது அவை இல்லாத இன்றைக்கு நமக்கு உரைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நெறிமுறை தான் நான் முன்னர் கூறியது போல, கதை சொல்லுதல் என்ற Story telling.
நண்பர்களே, மனித நாகரிகம் எத்தனை தொன்மையானதோ அதே அளவுக்குத் தொன்மையானது கதைகளின் வரலாறும்.
‘where there is a soul there is a story’
எங்கே ஆன்மா இருக்கிறதோஅங்கே ஒரு கதையும் உண்டு.
கதைகள், மனிதர்களின் படைப்பாற்றலையும், புரிந்துணர்வையும் முன்னிறுத்துகின்றன. ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டும் வேளையிலோ, அந்தக் குழந்தையைத் தூங்க வைக்கும் வேளையிலோ கதைகளின் வல்லமை என்ன என்பதை நம்மால் பார்க்கமுடியும், உணர முடியும். நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சுற்றித் திரியும் ஒரு துறவியைப் போலவே வாழ்ந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கிராமம், புதிய மனிதர்கள், புதிய குடும்பங்கள் என என் வாழ்க்கை இருந்து வந்தது. நான்குடும்பங்களின் மத்தியில் இருக்கும் போது, குழந்தைகளோடு கண்டிப்பாக அளவளாவுவேன், சில வேளைகளில், சரி நீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்று கேட்பேன். இல்லைங்க, நாங்கள் கதை சொல்லவில்லை, நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு ஏதாவது நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லுங்கள் என்பார்கள். அதாவது அவர்களுக்குக் கதைகள் பற்றி எந்த ஒரு அறிமுகமும் இல்லை என்பதைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்களுடைய பெரும்பாலான வாழ்க்கை நகைச்சுவைத் துணுக்குகளோடே குறுகிப் போயிருந்தது.
நண்பர்களே,
கதை சொல்லுவது என்ற ஒரு வளமான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம். நம் நாட்டிலே ஹிதோபதேசம், பஞ்சதந்திரம் போன்ற பாரம்பரியம் உடையவர்கள் என்பது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்.
இங்கே பசு பட்சிகள், தேவதைகள் அடங்கிய ஒரு கற்பனைமயமான உலகம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவேகம், புத்திக்கூர்மை நிறைந்த விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது. நம்நாட்டிலே கதைகளுக்கான ஒரு பாரம்பரியமே உண்டு. சமயக்கதைகளைச் சொல்வதற்கெனவே ஒரு பழமையான வழிமுறை உண்டு. இதிலே, கதாகாலக்ஷேபமும் அடங்கும். நம் நாட்டிலே பலவகையான நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது. இதை வில்லுப்பாட்டு என்று அழைக்கிறோம். இதிலே கதைகளும், இசையும் என்ற மிகக் கவர்ச்சிகரமான இணைவு காணப்படுகிறது. இந்தியாவில் பொம்மலாட்டம் என்ற ஒரு உயிர்ப்புடைய பாரம்பரியமும் உண்டு. இப்போதெல்லாம் அறிவியல் மற்றும் அறிவியல் புதினத்தோடு இணைந்த கதைகளைச் சொல்லும் பாங்கு, மக்கள் மத்தியிலே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பலர் கிஸ்ஸாகோயி என்ற கதை சொல்லும் கலையை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. gaathastory.in என்ற ஒரு இணையதளம் பற்றிய தகவல்கள் கிடைத்தன, இதை அமர் வ்யாஸ் அவர்களோடு வேறு சிலரும் நடத்தி வருகிறார்கள். அமர் வ்யாஸ் அவர்கள் ஐ.ஐ.எம். அஹ்மதாபாதில் எம்.பி.ஏ. படிப்பு படித்த பிறகு அயல்நாடுகளுக்குச் சென்று, மீண்டும் நாடு திரும்பினார். இப்போது பெங்களூரூவில் அவர் வசித்து வருகிறார், சில நேரம் ஒதுக்கி கதைகளின் உலகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகையாக, அவர் மிக சுவாரசியமான ஒரு பணியை ஆற்றி வருகிறார். இவருடைய முயற்சியைப் போலவே வேறு பலரும் ஊரகப்பகுதி இந்தியாவின் கதைகளை மிகச் சிறப்பான வகையிலே பிரபலப்படுத்தி வருகின்றார்கள். வைஷாலீ வ்யவஹாரே தேஷ்பாண்டே போன்ற பலர் இதை மராட்டி மொழியிலும் வெகுஜனங்களின் விருப்பமாக மாற்றி வருகிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா வீரராகவன் அவர்களும் நமது கலாச்சாரத்திற்கு இசைவான கதைகளைப் பரப்பி வருவதில் ஈடுபட்டிருக்கிறார்.
இதே போல கதாலய் மற்றும் தி இந்தியன் ஸ்டோரி டெல்லிங் நெட்வொர்க் (The Indian Story Telling Network) என்ற பெயர் கொண்ட இரண்டு இணைய தளங்களும் இந்தத் துறையில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றன. கீதா ராமானுஜன் அவர்கள் kathalaya.orgயில் கதைகளை ஒன்று திரட்டியிருக்கிறார். அதே வேளையில் The Indian Story Telling Network வாயிலாகவும் பல்வேறு நகரங்களில் பல்வேறு கதை சொல்பவர்களுடைய ஒரு வலைப்பின்னலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூரூவில் விக்ரம் ஸ்ரீதர் என்பவர், அண்ணலோடு தொடர்புடைய கதைகளில் உற்சாகம் காட்டி வருகிறார். மேலும் பலர் இந்தத் துறையில் செயலாற்றிக் கொண்டிருக்கலாம். கண்டிப்பாக நீங்கள் அவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்று நம்மோடு பெங்களூரு கதை சொல்லும் சங்கத்தைச் சேர்ந்த சகோதரி அபர்ணா ஆத்ரேயாவும், பிற உறுப்பினர்களும் இணைந்திருக்கிறார்கள். வாருங்கள், அவர்களோடு உரையாடி, அவர்களுடைய அனுபவம் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
பிரதமர்: ஹெலோ
அபர்ணா ஆத்ரேயா: வணக்கம் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களே. எப்படி இருக்கிறீர்கள்?
பிரதமர்: நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் அபர்ணா அவர்களே?
அபர்ணா ஆத்ரேயா: மிகவும் நன்றாக இருக்கிறேன் ஐயா. முதன்மையாக பெங்களூரூ கதை சொல்லும் நீங்கள் எங்களைப் போன்ற கலைஞர்களை இந்த மேடைக்கு அழைத்துப் பேச வைத்தமைக்கு, சங்கத்தின் தரப்பில் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர்: உங்களுடைய குழுவினர் அனைவரும் அங்கே உங்களோடு குழுமியிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.
அபர்ணா ஆத்ரேயா: ஆமாம், கண்டிப்பாக, ஆமாம் ஐயா.
பிரதமர்: சரி நல்லதாகப் போயிற்று. உங்களின் குழுவினரை கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன். மனதின் குரல் நேயர்களுக்கு அவர்களின் அறிமுகமும் கிட்டும், அதே வேளையில் அவர்கள் எப்படிப்பட்ட ஒரு பெரிய இயக்கத்தை நடத்தி வருகிறார்கள் என்பதும் புரிய வரும்.
அபர்ணா ஆத்ரேயா: ஐயா, நான் அபர்ணா ஆத்ரேயா, நான் இரு குழந்தைகளுக்குத் தாய், இந்திய விமானப்படையின் ஒரு அதிகாரியினுடைய மனைவி; தவிர கதை சொல்வதிலே எனக்குப் பேரார்வம் உண்டு. நான் கதை சொல்ல ஆரம்பித்து சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன, முன்னர் நான் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தேன். அப்போது நான் CSR என்று அழைக்கப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்களைத் தன்னார்வ அடிப்படையில் நிர்வகித்து வந்தேன். அந்த நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குக் கதைகள் வாயிலாக கல்வியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நான் கூறிய கதையை என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதையைக் கூறும் வேளையில் குழந்தைகளிடத்தில் நான் கண்ட ஆனந்தத்தை சொல்லில் வடிக்க முடியாது. இதைப் பார்த்தவுடன் , கதை சொல்வதை என் வாழ்க்கையின் ஒரு இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் ஐயா.
பிரதமர்: உங்களுடைய குழுவில் வேறு யாரெல்லாம் அங்கே இருக்கிறார்கள்?
அபர்ணா ஆத்ரேயா: என்னுடன் ஷைலஜா சம்பத் இருக்கிறார்.
ஷைலஜா சம்பத்: வணக்கம் ஐயா.
பிரதமர்: வணக்கங்க.
ஷைலஜா சம்பத்: என் பெயர் ஷைலஜா சம்பத். நான் முதலில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தேன். பிறகு என்னுடைய குழந்தைகள் வளர்ந்த பிறகு நான் நாடகத்துறையில் பணியாற்றத் தொடங்கினேன், நிறைவாக கதைகள் கூறுவதில் தான் மிக அதிகமான நிறைவு காண்கிறேன்.
பிரதமர்: நன்றி.
ஷைலஜா சம்பத்: அடுத்து என்னுடன் இருப்பவர் சௌம்யா.
சௌம்யா: வணக்கம் ஐயா.
பிரதமர்: வணக்கங்க.
சௌம்யா: என் பெயர் சௌம்யா ஸ்ரீ நிவாஸன். நான் ஒரு மனோதத்துவ வல்லுநர். என் பணியினூடே நான் பெரியோர்–குழந்தைகள் என அனைவருக்கும் கதைகள் வாயிலாக மனிதர்களில் காணப்படும் நவரசங்களைத் தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறேன், கூடவே இதைப் பற்றி உரையாடலிலும் ஈடுபடுகிறேன். குணப்படுத்தவல்ல, மாற்றமேற்படுத்தவல்ல கதை கூறுதல் என்பதே எனது இலக்கு.
அபர்ணா ஜெய்ஷங்கர்: வணக்கம் ஐயா.
பிரதமர்: வணக்கங்க.
அபர்ணா ஜெய்ஷங்கர்: நான் அபர்ணா ஜெய்ஷங்கர். என்னுடைய தாய்வழித் தாத்தா பாட்டி, தந்தைவழிப் பாட்டி ஆகியோருடன் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆகையால் இராமாயணம், புராணங்கள், கீதை பற்றிய கதைகளின் பாரம்பரியம் ஒவ்வொரு இரவும் எனக்குக் கிடைத்தது. பெங்களூரு கதை சொல்லும் சங்கம் போன்ற அமைப்பில் ஒரு கதை சொல்லுபவர் என்ற வகையில் நான் இணைவது மிக இயல்பான விஷயமாக ஆனது. என்னுடன் என்னுடைய தோழி லாவண்யா பிரசாதும் இணைந்திருக்கிறார்.
பிரதமர்: லாவண்யா அவர்களே, வணக்கம்.
லாவண்யா: வணக்கம் ஐயா. நான் தொழில்பூர்வமாக கதை சொல்பவராக மாறியிருக்கும் ஒரு மின்துறைப் பொறியாளர். என் தாத்தாவிடமிருந்து கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் நான். நான் மூத்த குடிமக்களோடு இணைந்து பணியாற்றுகிறேன். ரூட்ஸ் அதாவது வேர்கள் என்ற எனது சிறப்புச் செயல்திட்டத்தில், இந்த மூத்தோரின் குடும்பங்களுக்காக நான் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை ஆவணப்படுத்த உதவி வருகிறேன்.
பிரதமர்: லாவண்யா அவர்களே, உங்களுக்கு பல பாராட்டுக்கள். நீங்களே இப்போது கூறியதைப் போல நானும் ஒரு மனதின் குரல் நிகழ்ச்சியில் அனைவரிடத்திலும் என்ன கூறியிருந்தேன் என்றால், உங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி ஆகியோர் இருந்தால், அவர்களின் சிறுபிராய நினைவுகள் பற்றிக் கேட்டு, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுங்கள், இது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று கூறியிருந்தேன். நீங்கள் அனைவரும் உங்களைப் பற்றிய அறிமுகங்களை அளித்த போது, அதில் உங்களுடைய கலை, உங்களுடைய தகவல் பரிமாற்றத்திறன் ஆகியவற்றை மிகக் குறைந்த சொற்களில், மிகச் சிறப்பான வகையிலே கூறியிருந்தீர்கள், அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லாவண்யா: நன்றி ஐயா, நன்றி.
பிரதமர்: இப்போது மனதின் குரலில் உங்கள் கதைகளைக் கேட்க நமது நேயர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு கதைகளை உங்களால் கூற முடியுமா?
அனைவரும்: கண்டிப்பாக, இது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் ஐயா.
அபர்ணா ஜெய்ஷங்கர்: சரி நாம் இப்போது ஒரு ராஜா பத்தின கதையைக் கேட்கலாம். அந்த ராஜாவோட பேரு கிருஷ்ணதேவராயர், அவரோட ராஜ்ஜியத்தோட பேரு விஜயநகரம். நம்ம ராஜா இருக்காரே அவரு நிறைய நல்ல குணம் படைச்சவரு. அவரைப் பத்தி குறை சொல்லியே ஆகணும்னு சொன்னா, அவருக்கு தன்னோட மந்திரியான தெனாலி ராமன் மேல ஏகப்பட்ட அன்பு இருந்திச்சுங்கறது ஒண்ணு. அடுத்தபடியா அவருக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்ங்கறது ரெண்டாவது. ஒவ்வொரு நாளும் பகல்நேர உணவு எப்ப வரும்னு அவரு ரொம்ப ஆவலோட காத்திட்டு இருப்பாரு. எந்த அளவுக்குன்னா, இன்னைக்கு சுவாரசியமா என்ன சமைச்சிருப்பாங்க அப்படீன்னு. ஆனா அவரோட சமையல்காரரு இருக்காரே, அவரு, பீர்க்கங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், கோவைக்காய் இவற்றைத் தான் சமைச்சுத் தருவாரு. இப்படித்தான் ஒரு நாள் சாப்பிட்டுக்கிட்டு இருந்த போது கோபம் வந்து தட்டை வீசி எறிஞ்சிட்டாரு, தன் சமையல்காரனைக் கூப்பிட்டு, நாளைக்கு சுவையான வேற ஒரு பதார்த்தத்தை செஞ்சு எடுத்திட்டு வா, இல்லைன்னா உன்னை தூக்குல போட்டுருவேன்னு கோவமா சொன்னாரு.
சமையல்காரன், பாவம் பயந்து நடுங்கியே போயிட்டான். அவன் புது காய்கறிக்கு எங்க போவான்? வேற எங்க….. நேரா ஓடிப் போய் தெனாலி ராமன் கிட்ட போய் எல்லாத்தையும் விவரமா சொல்லி அழுதிருக்கான். இதைக் கேட்ட தெனாலி ராமன் அந்த சமையல்காரனுக்கு ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாரு. அடுத்த நாள் பகல்ல ராஜா சாப்பிட வந்தாரு. சமையல்காரனைக் கூப்பிட்டாரு.
இன்னைக்காவது ஏதும் சுவையா சமைச்சிருக்கியா இல்லை தூக்குக்கயித்தைத் தயார் செய்யச் சொல்லவான்னு கேட்டாரு. பயந்து நடுங்கிக்கிட்டே அந்த சமையல்காரன், உடனடியா தட்டைப் போட்டு, அதில ராஜாவுக்கு சூடான உணவைப் பரிமாறினான். தட்டுல புதுக் காய் இருந்திச்சு. ராஜாவும் படு உற்சாகமா கொஞ்சம் காயை எடுத்து சுவைச்சுப் பார்த்தாரு. அடேங்கப்பா! அருமையான காயா இருக்கே!! பீர்க்கங்காயை மாதிரி சுவையே இல்லாமலும் இல்லை, பரங்கிக்காய் மாதிரியும் இனிக்கலை. சமையல்காரன் அதில் கலந்திருந்த மசாலாப் பொருட்கள் காயிலே நன்கு ஊறியிருந்தன. தன் விரல்களை நக்கி, சுவைச்சு சாப்பிட்ட ராஜா அந்த சமையல்காரனை அழைச்சு, இது என்ன காய், இதோட பேரு என்னன்னு கேட்டாரு. தெனாலி ராமன் சொல்லிக் கொடுத்தபடியே அவனும் பதில் சொன்னான். மகராஜா, இது மகுடம் தரிச்ச கத்திரிக்காய்ன்னான்.
பிரபு, உங்களை மாதிரியே இதுவும் காய்களுக்கு ராஜா அப்படீன்னு சொன்னதும், ராஜாவுக்கு ஏக சந்தோஷம், இனிமே நான் இந்த மகுடம் தரிச்ச கத்திரிக்காயையே சாப்பிடுவேன்னு அறிவிச்சாரு. நான் மட்டுமில்லை, நம்ம ராஜ்ஜியத்தில எல்லாருமே கத்திரிக்காயை மட்டுமே சமைக்கணும், அதையே சாப்பிடணும்னும் உத்தரவு போட்டாரு. ராஜா–பிரஜைகள் ரெண்டு பேருக்குமே பயங்கர சந்தோஷம்.
ஒருபக்கம் ஒரு புது காய் கிடைச்சுதுன்னு எல்லாரும் சந்தோஷப்பட்டாங்கன்னாலும், நாள் போகப்போக உற்சாகம் குறைய ஆரம்பிச்சுது. ஒரு வீட்டுல கத்திரிக்காய் கூட்டு செஞ்சா, இன்னொரு வீட்டுல பொறியலா செஞ்சாங்க. ஒரு வீட்டுல கத்திரிக்காய் சாம்பார்னா, இன்னொரு வீட்டில கத்திரிக்காய் வாங்கிபாத். ஒரே கத்திரிக்காயை எத்தனை விதமாத் தான் சமைக்க முடியும்? மெல்லமெல்ல ராஜாவுக்குமே சலிப்புத் தட்ட ஆரம்பிச்சுது.
ஒருநாள் போனா மறுநாளும் கத்திரிக்காய் தான். ஒரு நாள் ராஜா தன் சமையல்காரனைக் கூப்பிட்டு நல்லா திட்டினாரு. யாரு உனக்கு சொன்னாங்க, கத்திரிக்காயோட தலைமேல மகுடம் இருக்குன்னு. இனிமேல் இந்த ராஜ்ஜியத்தில யாருமே கத்திரிக்காயையே சாப்பிடக்கூடாதுன்னாரு. நாளைலேர்ந்து மத்த எந்தக் காயை வேணும்னாலும் சமை, ஆனா கத்திரிக்காயை மட்டும் சமைக்கவே கூடாதுன்னாரு. உங்க ஆணைப்படியே பிரபுன்னு சொல்லி சமையல்காரன் நேரா தெனாலி ராமன் கிட்ட போயி, அவரு காலைப் பிடிச்சுக்கிட்டு, மந்திரியாரே, ரொம்ப நன்றி, நீங்க தான் என் உசிரைக் காப்பாத்திக் கொடுத்திருக்கீங்க, உங்க ஆலோசனையால தான் என்னால எந்தக் காயை வேணும்னாலும் ராஜாவுக்கு சமைக்க முடிஞ்சிருக்குன்னான். ராஜாவை சந்தோஷப்படுத்தாத மந்திரியும் ஒரு மந்திரியான்னு சிரிச்சுக்கிட்டே தெனாலி ராமன் சொன்னாரு. இந்த மாதிரி தான் தெனாலி ராமன் – கிருஷ்ணதேவராயர் பத்தின கதைகள் உருவாச்சு, மக்களும் ஆர்வத்தோட இதைக் கேட்க ஆரம்பிச்சாங்க. நன்றி.
அனைவரும்: நன்றி ஐயா.
பிரதமர்: உங்களோட கருத்துக்கள் ரொம்ப துல்லியமா இருந்திச்சு, ரொம்ப யதார்த்தமா இருந்திச்சு, இதை சிறியவங்க–பெரியவங்கன்னு எல்லாரும் கேட்டு ஞாபகம் வச்சுக்குவாங்க. ரொம்ப அருமையா சொன்னீங்க, இதில சிறப்பான ஒரு எதேச்சை நிகழ்வுன்னு சொன்னா, நாட்டுல இப்ப ஊட்டச்சத்து மாதம் நடந்துக்கிட்டு இருக்கு, உங்களோட கதையும் உணவைப் பத்தியே தான் அமைச்சிருந்திச்சு.
பிரதமர்: உங்களைப் போலவே கதை சொல்பவர்கள் மேலும் பலர் இருக்கிறார்கள். நாம எப்படி நம்ம நாட்டோட புதிய தலைமுறையினருக்கு நம்ம மகத்தான மனிதர்கள், மகத்தான தாய்மார்கள்–சகோதரிகளைப் பத்தி தெரிவிக்கலாம். கதைகள் மூலமா அவங்களோட நாம எப்படி இணைவது. இந்தக் கதை சொல்லுதல் கலையை நாம எப்படி அதிகமா பிரச்சாரம் செய்வது, இதை எப்படி மேலும் பிரபலப்படுத்துவது, வீடுகள்தோறும் நல்ல கதைகள் சொல்லப்படணும், நல்ல கதைகளைக் குழந்தைகள் கேட்கணும், இப்படி செஞ்சா மக்கள் அனைவருக்கும் பெரிய உபகாரமா இருக்கும். இப்படிப்பட்டதொரு சூழலை எப்படி ஏற்படுத்துவதுங்கற திசையில நாம எல்லாரும் இணைஞ்சு பணியாற்றணும். உங்க எல்லாரோட உரையாடினதும் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளிச்சுது. உங்க எல்லாருக்கும் என்னோட நல்வாழ்த்துக்கள். நன்றி.
அனைவரும்: நன்றி ஐயா.
கதைகள் வாயிலாக, கலாச்சாரத் தொடர் பெருக்கை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதை இந்த சகோதரிகள் கூறக் கேட்டீர்கள். நான் இவர்களோடு உரையாடியது மிக நீண்டதாக இருந்தது, ஆனால் மனதின் குரலுக்கு என ஒரு குறித்த கால அளவு இருப்பதால், காலத்தின் கட்டாயம் கருதி, அவர்களுடனான எனது உரையாடல் முழுவதையும் நான் எனது NarendraModi செயலியில் தரவேற்றம் செய்கிறேன். கதைகள் அனைத்தையும் கண்டிப்பாக நீங்கள் அதில் கேளுங்கள். அவற்றின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நான் மனதின் குரலில் உங்களுக்கு அளித்திருக்கிறேன். குடும்பத்தில், ஒவ்வொரு வாரமும், நீங்கள் கதைகளுக்காகவென்றே கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள் என்று நான் உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். மேலும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு வாரமும், ஒரு விஷயத்தைத் தீர்மானம் செய்து கொண்டு, எடுத்துக்காட்டாக, கருணை, புரிந்துணர்வு, பராக்கிரமம், தியாகம், வீரம், என இப்படி ஏதாவது ஒரு உணர்வு, ரசம் பற்றித் தொடர்புடைய கதையை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தேட வேண்டும், அனைவருமாக இணைந்து ஆளுக்கொரு கதையைக் கூற வேண்டும். குடும்பத்தில் எத்தனை பெரிய கருவூலமே ஏற்பட்டுப் போகும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். இது ஒரு ஆய்வுப்பணி, அனைவரும் மிகவும் மகிழ்வார்கள், குடும்பத்தில் ஒரு புதிய உயிரோட்டம், புதிய சக்தி பிறக்கும். இதைப் போலவே நாம் வேறு ஒரு செயலையையும் செய்யலாம். கதை சொல்பவர்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். நமது கதைகளில் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த இருண்ட காலகட்டம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை நீங்கள் உங்கள் கதைகள் வாயிலாக பரப்புரை செய்ய முடியுமா? குறிப்பாக, 1857 முதல் 1947 வரையிலான அனைத்து சிறிய–பெரிய சம்பவங்களை, நமது புதிய தலைமுறையினருக்கு, கதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தலாமே!! கதை சொல்லும் இந்தக் கலை, தேசத்தை மேலும் பலமுடையதாக ஆக்கும், மேலும் அதிகம் பரப்ப வேண்டும், அவை இயல்பாகவே மாற வேண்டும். வாருங்கள் நாம் இந்தத் திசை நோக்கிப் பயணப்படுவோம்.
எனதருமை நாட்டுமக்களே,
நாம இப்ப கதைகள் உலகத்திலேர்ந்து, ஏழு கடல்கள் தாண்டிப் பயணிக்கலாம், இந்தக் குரலைக் கேளுங்க.
”வணக்கம் சகோதர சகோதரிகளே, என் பேர் சேது தேம்பேலே. நான் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில வசிக்கறேன்.பிப்ர்வரியில இந்தியாவோட மிகப்பெரிய சமயத் திருவிழாவான கும்பமேளாவுல கலந்து கொள்ளக்கூடிய பெரிய பாக்கியம் எனக்குக் கிடைச்சுது. இதை நான் ஒரு பெரிய கௌரவமான விஷயமாத் தான் பார்க்கறேன். கும்ப மேளாவுல பங்கெடுத்துக்கிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு, இந்திய நாட்டோட கலாச்சாரத்தைப் பார்த்து என்னால நிறைய கத்துக்க முடிஞ்சுது. மீண்டும் ஒருமுறை இந்தியா வர்றதுக்கான சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைக்கணும்னு நான் வேண்டிக்கறேன்; ஏன்னா நாங்க இந்தியா பத்தி மேலும் தெரிஞ்சுக்க ஆசைப்படுறோம். வணக்கம்.
பிரதமர்: சுவாரசியமாக இருந்தது இல்லையா? இவர் தான் மாலி நாட்டைச் சேர்ந்த சேது தேம்பேலே. மாலி….. இந்தியாவை விட்டுத் தொலைவில், மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும், நாலாபுறங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு பெரிய நாடு. சேது தேம்பேலே அவர்கள், மாலியின் கிடா என்ற ஒரு நகரத்தில், ஒரு பப்ளிக் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார், குழந்தைகளுக்கு ஆங்கிலம், இசை மற்றும் ஓவியம் வரைதல் பயிற்றுவிக்கிறார். ஆனால் அவருக்கு மேலும் ஒரு அடையாளம் உண்டு. மக்கள் அவரை மாலி நாட்டின் இந்திய பாபு என்றும் அழைக்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது அவர் மிகுந்த பெருமிதம் கொள்கிறார். ஒவ்வொரு ஞாயிறன்றும், பிற்பகலில் மாலி நாட்டில் ஒரு மணிநேரம் வரை வானொலியில் நிகழ்ச்சியை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் பெயர் Indian Frequency on Bollywood songs. இதை இவர் கடந்த 23 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஃப்ரெஞ்சு மொழியோடு கூடவே மாலி நாட்டின் வழக்குமொழியான பம்பாராவிலும் தனது உரையை நிகழ்த்துகிறார். இதை பெரிய நாடக பாணியில் புரிகிறார். இந்தியாவிடம் அவர் மனதில் மிகப்பெரிய அன்பு இருக்கிறது. இந்தியாவிடத்தில் அவருக்கு இருக்கும் பாசத்துக்கு மேலும் ஒரு காரணம் அவருடைய பிறந்த தினமும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தான். சேது அவர்கள் 2 மணிநேரம் கொண்ட மேலும் ஒரு நிகழ்ச்சியை, ஒவ்வொரு ஞாயிறன்று இரவும், 9 மணிக்குத் தொடக்குகிறார்; இதில் அவர் பாலிவுட்டின் ஒரு முழுத்திரைப்படக் கதையை, ஃப்ரெஞ்சு மொழியிலும் பம்பாராவிலும் கூறுகிறார். சில வேளைகளில் ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சி பற்றி விவரிக்கும் வேளையில் இவரே கூட தனது நேயர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்தவும் செய்கிறார். சேது அவர்களின் தந்தையார் தான் இவருக்கு இந்திய கலாச்சாரம் பற்றிய தகவல்களை அளித்தார். அவரது தந்தையார், திரைப்படம், திரையரங்கு ஆகியவற்றில் பணியாற்றியிருக்கிறார், அங்கே இந்தியத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு வந்தன. இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று அவர் ஹிந்தி மொழியில் ஒரு காணொளி வாயிலாக, இந்திய மக்களுக்கு நாட்டின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இன்று அவருடைய குழந்தைகள் இந்தியாவின் தேசிய கீதத்தை மிக எளிதாகப் பாடுகிறார்கள். சேது அவர்கள் கும்பமேளாவுக்கு வருகை புரிந்த போது, அவர் இடம் பெற்றிருந்த குழுவை நான் சந்திக்க நேர்ந்தது. இந்தியாவின் பொருட்டு அவர் மனதில் இருந்த பாசம், நேசம், அன்பு ஆகியன உண்மையிலேயே கர்வம் கொள்ள செய்வதாக இருந்தன. என் மனம் நிறை நாட்டுமக்களே, யார் பூமியோடு திடமான தொடர்புடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் மிகப்பெரிய புயல்களிலும் அதே உறுதிப்பாட்டோடு விளங்குவார்கள் என்பது நாட்டில் நிலவும் ஒரு வழக்கு.
கொரோனாவின் இந்தக் கடினமான வேளையில் நமது விவசாயத் துறையில், நமது விவசாயிகள் இந்த வழக்கிற்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டுகள். இந்தச் சங்கட காலத்திலும் நமது நாட்டின் வேளாண்துறை, தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. நண்பர்களே, நாட்டின் வேளாண்துறை, நமது விவசாயிகள், நமது கிராமங்கள் ஆகியன தற்சார்பு பாரதத்தின் ஆதாரங்கள்.
இவை பலமாக விளங்கினால் தான் தற்சார்பு பாரதத்தின் அஸ்திவாரம் பலமானதாக அமையும். கடந்த சில காலமாகவே இந்தத்துறை, சுயமாகவே பல தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது, பல தவறான கருத்துக்களைத் தகர்க்க முயன்றிருக்கிறது. என்னிடத்தில் பல விவசாயிகள் எழுதியிருக்கிறார்கள், விவசாயிகளின் சங்கங்களோடு நான் பேசியும் இருக்கிறேன். விவசாயத்தில் புதியபுதிய பரிமாணங்கள் ஏற்பட்டு வருகின்றன, வேளாண்மையில் உருவாகிவரும் மாற்றங்கள் ஆகியன பற்றி அவர்கள் கூறுகிறார்கள். அவர்களும் மற்றவர்களும் கூறுவதையும், என் மனம் தெரிவிப்பதையும், இன்று மனதின் குரலில் நான் கூறவிருக்கிறேன். ஹரியாணாவின் சோனீபத் மாவட்டத்தில் நமது விவசாய சகோதரர் ஒருவர் வசிக்கிறார். அவர் பெயர் கன்வர் சௌஹான் அவர்கள். தனது விளைபொருட்களான பழங்கள், காய்கறிகளைச் சந்தைக்கு வெளியே விற்பதில் தனக்கு எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை அவர் தெரிவித்தார். அவர் சந்தைக்கு வெளியே தன் விளைபொருட்களை விற்றால், அவருடைய விளைபொருட்கள் மட்டுமல்லாமல், அவருடைய வண்டியும் கூட கைப்பற்றப்பட்டு விடும் என்று கூறினார். ஆனால் 2014ஆம் ஆண்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் குழுச் சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், அவருக்கும் சரி, அக்கம்பக்கத்திலிருந்த மற்ற விவசாயிகளுக்கும் பெரும் ஆதாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, அவர் தனது கிராமத்தின் சக விவசாயிகளுடன் இணைந்து ஒரு விவசாய விளைபொருள் குழுவை நிறுவியிருக்கிறார். இன்று கிராமத்தின் விவசாயிகள், சோளம், பேபிகார்ன் ஆகியவற்றைப் பயிர் செய்கிறார்கள். அவர்களின் விளைபொருட்களை, இன்று தில்லியின் ஆஸாத்புரின் சந்தை, பெரிய சில்லரை வியாபார சங்கிலித் தொடர் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றில் அளித்து வரப்படுகிறது. இன்று கிராமத்தில்
விவசாயிகள் சோளம் மற்றும் பேபிகார்னை விளைவிக்கிறார்கள், ஏக்கருக்கு 2 ½ இலட்சத்திலிருந்து 3 இலட்சம் ரூபாய் வரை, ஒவ்வொரு ஆண்டும் சம்பாதிக்கிறார்கள். இதே கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் வலைவீட்டை உருவாக்கி, பாலி வீட்டை ஏற்படுத்தி, தக்காளி, வெள்ளரி, சிம்லா மிளகாய், இவற்றின் பலவகைகளை விளைவிக்கிறார்கள், ஒவ்வொரு ஏக்கரிலும், ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். இந்த விவசாயிகளிடத்திலே என்ன வித்தியாசம் தெரியுமா?
தங்களுடைய பழங்கள்–காய்கறிகளை, அவர்களால் எங்கு வேண்டுமானாலும், யாரிடத்தில் வேண்டுமானாலும் விற்கும் சக்தி இருக்கிறது, இந்தச் சக்தி தான் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஆதாரம். இந்தச் சக்தி தான் நாட்டின் பிற விவசாயிகளுக்கும் கிடைத்திருக்கிறது. பழங்கள்–காய்கறிகள் மட்டுமல்லாமல், தங்களுடைய வயல்களில் அவர்கள் பயிர் செய்யும், தானியங்கள், கோதுமை, கடுகு, கரும்பு ஆகியவற்றையும் தங்கள் விருப்பத்திற்கேற்ப, எங்கே அதிக விலை கிடைக்கிறதோ, அங்கே, விற்க இப்போது அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.
நண்பர்களே,
3-4 ஆண்டுகள் முன்பாக, மஹாராஷ்டிரத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகளை வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்தும் குழுக்களின் வரையறையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். இந்த மாற்றம், எப்படி மஹாராஷ்டிரத்தின் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகளின் நிலையை மாற்றியது என்பதற்கான எடுத்துக்காட்டு, ஸ்ரீ சுவாமி சமர்த் விவசாயி உற்பத்தியாளர் நிறுவனம் என்ற விவசாயிகள் சங்கம். புனே மற்றும் மும்பையில் வாராந்திர சந்தையை விவசாயிகளே நடத்துகிறார்கள். இந்தச் சந்தைகளில் சுமார் 70 கிராமங்களின், 4,500 விவசாயிகளின் உற்பத்திப் பொருள்கள், நேரடியாக விற்கப்படுகின்றன. இங்கே இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. ஊரகப்பகுதி இளைஞர்கள், சந்தையில் விவசாயப் பொருள்கள் மற்றும் விற்பனை ஆகியவற்றில் நேரடியாக பங்கெடுக்கிறார்கள். இதன் நேரடி லாபம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது, கிராமங்களின் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
மேலும் ஒரு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் காணக் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் வாழை சாகுபடியாளர்கள் கம்பெனி, பெயருக்குத் தான் ஒரு கம்பெனி. உண்மையில், இது விவசாயிகள் இணைந்து ஏற்படுத்தி இருக்கும் ஒரு சங்கம் தான். அதிக நெகிழ்ச்சித் தன்மை உடைய முறை இது, அதுவும் 5-6 ஆண்டுகள் முன்பாகத் தான் உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த விவசாயிகள் சங்கம், பொது முடக்கத்தின் போது அருகிலே இருக்கும் கிராமங்களிலிருந்து பலநூறு மெட்ரிக் டன் அளவுடைய காய்கறிகள், பழங்கள், வாழை ஆகியவற்றை வாங்கி, சென்னை மாநகரில், காய்கனிகளின் ஒரு combo kitஐ உருவாக்கினார்கள். சிந்தித்துப் பாருங்கள், எத்தனை இளைஞர்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை அளித்திருப்பார்கள்!! மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இடைத்தரகர்கள் இல்லாமையினால், விவசாயிகளுக்கும் ஆதாயம், நுகர்வோருக்கும் ஆதாயம். இதே போல, லக்னௌவிலும், ஒரு விவசாயிகளின் சங்கம் இருக்கிறது. அவர்கள் “இராதா ஃபார்மர் ப்ரொட்யூசர்” என்று இதற்குப் பெயரிட்டார்கள். இவர்களுமே கூட, பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளின் வயல்களிலிருந்து நேரடியாக காய்கனிகளை வாங்கி, நேரடியாகவே லக்னௌவின் சந்தைகளில் விற்பனை செய்தார்கள். இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை, விரும்பிய லாபம் ஆகியன ஒருசேரக் கிடைத்தன. நண்பர்களே, குஜராத்தின் பனாஸ்காண்டாவின் ராம்புரா கிராமத்தில், இஸ்மாயில் பாய் என்ற ஒரு விவசாயியுடைய கதை மிக சுவாரசியமானது.
இஸ்மாயில் பாய் விவசாயம் செய்ய விரும்பினார், ஆனால் இப்போது விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்ற பொதுவான கருத்து நிலவுவதால், அவருடைய குடும்பத்தாருக்கும் சற்றே கவலையாக இருந்தது. இஸ்மாயில் பாய் உடைய தந்தையும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார், ஆனால் பெரும்பாலும் அவருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டு வந்தது. ஆகையினால் தந்தையாருக்கும் கவலையாகவே இருந்தது. ஆனால் குடும்பத்தாருடைய ஆட்சேபங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் இஸ்மாயில் பாய், தான் விவசாயம் செய்யப் போவதாகத் தீர்மானம் செய்தார். விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்ற நினைப்பையும், நிலையையும் மாற்றிக் காட்டப் போவதாக உறுதிப்பாடு கொண்டார். அவர் விவசாயத்தில் ஈடுபட்டு, புதிய நூதனமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டார். அவர் சொட்டுநீர்ப் பாசனம் செய்தார், உருளை நடவு செய்தார், இன்று அவர் சாகுபடி செய்திருக்கும் உருளைக் கிழங்குகள் ஒரு அடையாளமாகவே மாறியிருக்கின்றன. மிகச் சிறந்த தரம் வாய்ந்த உருளைக்கிழங்குகளை அவர் பயிர் செய்து வருகிறார். இஸ்மாயில் பாய், தனது உருளைக்கிழங்குகளை நேரடியாகவே பெரியபெரிய நிறுவனங்களிடம் விற்கிறார்.
இடைத்தரகர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை, இதன் விளைவாக நல்ல இலாபம் ஈட்டி வருகிறார். இப்போது அவர் தன்னுடைய தந்தையின் அனைத்துக் கடன்களையும் அடைத்து விட்டார். ஒரு மிகப்பெரிய விஷயம் தெரியுமா?
இஸ்மாயில் பாய் இன்று தனது பகுதியில், பல நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் உதவி புரிந்து வருகிறார். அவரது வாழ்க்கை இன்று மாறிப் போனது.
நண்பர்களே, இன்றைய தேதியில் வேளாண்மையில் நாம் எத்தனை புதிய புதுமைகளைப் புகுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். இந்தப் புதுமைகளில், புதியபுதிய வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியனவும் அடங்கும். மணிப்பூரில் வசிக்கும் விஜய்சாந்தி அவர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் புகுத்தியதால், அதிகம் பேசப்பட்டு வருகிறார். அவர் தாமரைத்தண்டிலிருந்து நாரினை ஏற்படுத்தும் ஒரு ஸ்டார்ட் அப்பை ஏற்படுத்தினார். இன்று அவருடைய நூதனம், தாமரை விளைச்சல் மற்றும் துணிகளில் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு கடந்த காலத்திலிருந்து ஒரு விஷயத்தை மீள்நினைவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 101 ஆண்டு பழமையான விஷயம். அது 1919ஆம் ஆண்டு. ஆங்கிலேயர்கள் ஆட்சி, ஜலியான்வாலாபாகில், அப்பாவி மக்களைப் படுகொலை செய்தது. இந்தப் படுகொலைக்குப் பிறகு 12 வயதான ஒரு சிறுவன் அந்த சம்பவ இடத்திற்குச் சென்றான். அவன் குதூகலமும், குழந்தைத்தனமும் நிறைந்த சிறுவன் என்றாலும், அவன் ஜலியான்வாலாபாகில் பார்த்தவை அவன் சிந்தையை உலுக்கியது. அவன் பேச்சற்றுப் போனான், எப்படி ஒருவரால் இத்தனை கருணையே இல்லாமல் கொலை புரிய முடியும் என்ற விஷயம் அவன் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. குழந்தைத்தனமே உருவான அந்தச் சிறுவன் மனதில் சீற்றப்புயல் உருக்கொண்டது. அதே ஜலியான்வாலாபாகில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிடுவது என்ற சபதமேற்றார். நான் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? உயிர்த்தியாகம் புரிந்த வீரர் பகத்சிங் பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆம், தியாகி பகத்சிங்கின் பிறந்த தினம் நாளை செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதி, கொண்டாட விருக்கிறோம். நாட்டுமக்கள் அனைவருடனும் இணைந்து வீரம் மற்றும் சாகசத்தின் அடையாளமாக விளங்கும் தியாகி பகத்சிங்கிற்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். உலகின் பெரும்பகுதியில் ஆட்சி செலுத்திவந்தவர்கள், அவர்களுடைய ஆட்சியில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று சொல்லப்பட்டு வந்தவர்கள், இத்தனை மகத்தான பலம் படைத்தவர்களின் யதேச்சாதிகாரத்தை, வெறும் ஒரு 23 வயது நிரம்பிய இளைஞன் குலைநடுங்கச் செய்துவிட்டான் என்பதை உங்களால் சற்றேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தியாகி பகத்சிங் பராக்கிரமம் நிறைந்தவர் மட்டுமல்ல, அவர் மெத்தக் கற்றவர், சிந்தனையாளரும் கூட. தனது வாழ்க்கையைப் பற்றி சற்றும் கவலையேபடாமல், பகத்சிங் அவர்களும் ஏனைய பல புரட்சியாளர் சகாக்களும் புரிந்த சாகசச் செயல்கள், நாட்டின் விடுதலைக்கு மிகப்பெரியதொரு பங்களிப்பை அளித்தன.
தியாகி–வீரன் பகத்சிங்கின் வாழ்க்கையிலிருந்து மேலும் ஒரு அருமையான பக்கம்…… அவர் குழுவாகப் பணியாற்றுவதன் மகத்துவத்தை மிகச் சிறப்பாகப் புரிந்திருந்தார். லாலா லாஜ்பத்ராய் அவர்களிடத்தில் இவருக்கு இருந்த அர்ப்பணிப்பாகட்டும், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய புரட்சியாளர்களுடன் இவருக்கு இருந்த அணுக்கமாகட்டும்….. தனிப்பட்ட கௌரவம் என்பதே இவருக்கு ஒரு பெரிய விஷயமாக எப்போதும் இருந்ததில்லை.
அவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஒரே இலக்கு, ஒரே இலட்சியத்தின் பொருட்டே வாழ்ந்தார், இதை முன்னிட்டே உயிர்த்தியாகமும் புரிந்தார். அவருடைய பெருலட்சியம், இந்தியாவில் அநியாயம் புரிந்து வந்த ஆங்கிலேயக் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவிப்பது தான். நான் Namo செயலியில், ஹைதராபாதின் அஜய் எஸ்.ஜி. அவர்களின் ஒரு கருத்தைப் படித்தேன். இன்றைய இளைஞர்களால் எப்படி பகத் சிங்காக மாற முடியும் என்று அஜய் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். நம்மால் பகத் சிங் அவர்களைப் போல ஆக முடிகிறதோ இல்லையோ, ஆனால் பகத்சிங்கினைப் போல தேசப்பற்று, தேசத்திற்காக ஏதோ ஒன்றை சாதித்துக் காட்டுவது என்ற தீபத்தை நாம் நம் மனங்களிலே ஏற்றிப் பயணிப்போம். தியாகி பகத் சிங்கிற்கு இதுவே நாம் அளிக்கும் மிகப்பெரிய சிரத்தாஞ்சலிகளாக இருக்க முடியும். நான்கு ஆண்டுகள் முன்பாக, கிட்டத்தட்ட இதே சமயத்தில் தான், துல்லியத் தாக்குதல் நடந்த போது, உலகம் நமது இளைஞர்களின் சாகசம், வீரம், அச்சமின்மை ஆகியவற்றைப் பார்த்தது. நமது வீரம்நிறை இராணுவத்தினர் ஒரு மிகப்பெரிய நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள், என்ன விலை கொடுத்தேனும் இந்தியத் தாயின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் காப்பது என்பதே அது. அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பற்றி சற்றேனும் கவலைப்படாமல், தங்களுடைய கடமைப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாது, முன்னேறினார்கள். அவர்கள் எப்படிப்பட்ட வெற்றியை ஈட்டினார்கள் என்பதை நீங்களே பார்த்தீர்கள். பாரத அன்னைக்குப் பெருமை சேர்த்தார்கள்.
என் இனிய நாட்டுமக்களே, இனிவரும் நாட்களில் நாட்டுமக்களான நாமனைவரும் மகத்தானவர்களை நினைத்துப் பார்ப்போம். அவர்கள் இந்தியாவைப் படைக்க, என்றும் அழிக்க முடியாத பங்களிப்பை அளித்துச் சென்றிருக்கிறார்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியானது நம்மனைவருக்கும் பவித்திரமான, கருத்தூக்கம் அளிக்கவல்ல ஒரு நாள். இந்த நாளன்று தான் இந்திய அன்னையின் இரண்டு சத்புத்திரர்களான அண்ணல் காந்தியடிகள், லால் பகாதுர் சாஸ்திரி ஆகியவர்களை நினைவில் கொள்ளும் தினம்.
வணக்கத்திற்குரிய அண்ணலின் சிந்தனைகளும், ஆதர்சங்களும் முந்தைய காலத்தை விட இன்று மேலும் அதிகமாகப் பயனுடையவையாக இருக்கின்றன. அண்ணலின் பொருளாதாரக் கருத்துக்களின் உணர்வினை நாம் பற்றிக் கொண்டிருந்தால், புரிந்து கொண்டிருந்தால், அந்தப் பாதையில் பயணப்பட்டிருந்தால், இன்று தற்சார்பு பாரத இயக்கத்திற்கான தேவையே ஏற்பட்டிருக்காது. காந்தியடிகளின் பொருளாதாரச் சிந்தனையில், பாரதத்தின் நாடி நரம்புகளைப் பற்றிய புரிதல் இருந்தது, அதில் பாரதத்தின் மணம் கமழ்ந்தது. நமது அனைத்துச் செயல்களும், பரம ஏழைக்கும் நலன் ஏற்படுத்துவனவாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் அண்ணலின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அதே நேரத்தில், சாஸ்திரி அவர்களின் வாழ்க்கை, பணிவு மற்றும் எளிமை பற்றிய செய்தியை நமக்களித்துச் செல்கிறது. அக்டோபர் மாதம் 11ஆம் தேதி என்பது நமக்கெல்லாம் மிகவும் விசேஷம் நிறைந்த ஒன்றாகும். இந்த நாளன்று தான், பாரத் ரத்னா, லோக்நாயக் ஜெய் பிரகாஷ் அவர்களை, அவர்களுடைய பிறந்த நாளன்று நாம் நினைவில் இருத்துகிறோம். ஜே.பி. அவர்கள் நமது ஜனநாயக விழுமியங்களைக் காக்க முதன்மையான பங்குப்பணி ஆற்றியிருக்கிறார். பாரத் ரத்னா நானாஜி தேஷ்முக் அவர்களையும் இந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று நினைவு கூர்கிறோம்.
நானாஜி தேஷ்முக், ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஜே.பி. அவர்கள் ஊழலுக்கு எதிராகப் போரிட்டு வந்த போது, பட்னாவில் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
அப்போது நானாஜி தேஷ்முக் அவர்கள், அந்தத் தாக்குதலை தன் மீது வாங்கிக் கொண்டார். இந்தத் தாக்குதல் காரணமாக நானாஜிக்கு கணிசமான காயம் ஏற்பட்டாலும், ஜே.பி. அவர்களைக் காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெற்றார். வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று ராஜ்மாதா விஜய்ராஜே சிந்தியா அவர்களின் பிறந்தநாளாகும். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் மக்களின் சேவைக்கே அர்ப்பணித்திருந்தார். ஒரு ராஜகுடும்பத்தில் பிறந்த அவரிடத்தில், செல்வம், சக்தி, சாதனங்கள் என எந்த ஒரு குறைவுமே கிடையாது. ஆனாலும் கூட அவர் தனது வாழ்க்கையை, ஒரு அன்னையைப் போல, தாய்மை உணர்வோடு, மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர் அவர். இந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று அவருடைய நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நிறைவடையவிருக்கின்றன. மேலும் இன்று நான் ராஜ்மாதா அவர்களைப் பற்றிப் பேசும் வேளையில், மிக உணர்ச்சிபூர்வமான ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அவருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல சம்பவங்களைச் சொல்லலாம். ஆனால் இன்று ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை, நாங்கள் ஒரு ஏகதா யாத்திரையை மேற்கொண்டோம். டாக்டர். முரளி மனோகர் ஜோஷி அவர்களின் தலைமையில் இந்த யாத்திரை நடந்து வந்தது. டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர் அதிகம் இருப்பவை. நாங்கள் இரவில் சுமார் 12-1 மணி வாக்கில் மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் அருகே உள்ள ஷிவ்புரியை வந்தடைந்தோம். காலையிலிருந்து பயணப்படுவதால் களைப்பு நீங்க தங்குமிடம் வந்து குளித்து இளைப்பாறுவது, அடுத்த நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது எங்கள் வழக்கம். சுமார் 2 மணியளவில், நான் குளித்துத் துணி துவைத்த பின்னர் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது வாயிற்கதவு தட்டப்பட்டது. நான் கதவைத் திறந்து பார்த்தால், அங்கே ராஜ்மாதா சாஹிப் நின்று கொண்டிருந்தார். விறைக்க வைக்கும் குளிர்காலம், நான் ராஜ்மாதா சாஹிபைப் பார்த்தவுடனே திகைத்துப் போனேன். அன்னைக்கு வணக்கம் தெரித்து, அம்மா, நடுநிசியில் ஏன் அம்மா வந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை மகனே, முதலில் இந்த சூடான பாலைப் பருகு, பிறகு உறங்கச் செல் என்றார்கள். மஞ்சள் பொடி கலந்த பாலைத் தானே கொண்டு வந்திருந்தார்கள். ஆம், ஆனால் அடுத்த நாள் காலையில் தான் தெரிந்து, அவர் எனக்கு மட்டுமல்ல, எங்கள் யாத்திரையில் இருந்த 30-40 பேர்களுக்கும், அதில் இருந்த ஓட்டுநர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் என அனைவரின் அறைகளுக்கும் சென்று தானே இரவு 2 மணிக்குப் பால் அளித்திருக்கிறார். அத்தகைய அன்னையின் அன்பை என்னால் எவ்வாறு மறக்க முடியும்? அன்னையின் அன்பு என்றால் என்ன, தாய்மை உணர்வு என்றால் என்ன என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர வைத்தது.
இப்படிப்பட்ட மகத்தான மாணிக்கங்களும் நமது பூமியை, தங்களுடைய தியாகத்தாலும், தவத்தாலும் வளப்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் அடைந்திருக்கும் பெரும் பாக்கியம். நாமனைவரும் இணைந்து, இப்படிப்பட்ட மாமனிதர்களுக்குப் பெருமிதம் ஏற்படுத்தக்கூடிய ஒரு பாரதத்தை நிர்மாணிப்போம். அந்த பாரதத்தில் அவர்கள் கண்ட கனவுகளை நமது மனவுறுதியால் நனவாக்குவோம், வாருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, கொரோனா பீடித்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள். முகக்கவசம் அணியாமல் எங்கும் செல்லாதீர்கள். ஒரு மீட்டர் இடைவெளி என்ற விதிமுறை, உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தாரையும் காக்க வல்லது. இந்த சில விதிமுறைகள், இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் நம் வசம் இருக்கும் ஆயுதங்கள். இவையே குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பலப்படுத்தும் பலமான கருவிகள்.
மேலும் ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது. மருந்து கண்டுபிடிக்கப்படாத வரை, நாம் நமது செயல்பாடுகளில் தளர்ச்சியைக் காட்டக் கூடாது. நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் குடும்பத்தாரும் ஆரோக்கியமாக இருக்கட்டும் என்ற இந்த நல்விருப்பங்களைத் தெரிவித்து பலப்பல நன்றிகளை அளிக்கிறேன்.
வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். பொதுவாகப் பார்க்கப் போனால் இந்தக் காலகட்டம் திருவிழாக்களுக்கானது, பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும், சமயரீதியான பூஜை புனஸ்காரங்கள் நடக்கும். கொரோனா பெருந்தொற்று நிலவும் இந்தச் சங்கடமான வேளையில் மக்களிடம் உற்சாகம் இருக்கிறது, ஊக்கமிருக்கிறது என்றாலும் கூட, ஒருவிதமான ஒழுங்குமுறையும் இருக்கிறது. இந்த சமயத்தில் பெரும்பாலான வகையில் குடிமக்களிடம் ஒரு பொறுப்புணர்வும் காணப்படுகிறது. மக்கள் தங்கள் மீது கவனத்தைச் செலுத்தும் அதே வேளையில் மற்றவர்கள் மீதும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள், தங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் நடைபெறும் பண்டிகைக்கான ஏற்பாடுகளில் மக்கள் வெளிப்படுத்தி வரும் ஒழுங்குமுறையும், எளிமையான நடைமுறையும் உண்மையிலேயே இதுவரை காணாத ஒன்று. பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் சில இடங்களில் இணையவழியாகக் கொண்டாடப்பட்டன, பல இடங்களில் இந்த முறை சூழலுக்கு ஏற்றவகையில் பிள்ளையார் திருவுருவங்கள் நிறுவப்பட்டன. நண்பர்களே, நாம் இவற்றை உன்னிப்பாக கவனித்தோமேயானால் ஒரு விஷயம் கண்டிப்பாக நமது கவனத்தைக் கவரும் – அது நமது பண்டிகைகளும், சுற்றுச்சூழலும். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு மிக ஆழமான தொடர்பு உள்ளது. ஒருபுறத்தில் நமது பண்டிகைகளில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆகியவற்றின் இணைவும் இசைவும் அமைந்திருக்கின்றது என்றால், வேறொரு புறத்தில் பல பண்டிகைகள் இயற்கையைப் பாதுகாக்கவே கொண்டாடப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரணில் பல நூற்றாண்டுகளாகவே தாரு பழங்குடியின மக்கள் 60 மணிநேரம் வரையிலான ஊரடங்கு அல்லது அவர்களது சொற்களில் இதை விவரிக்க வேண்டுமென்றால், ’60 மணிநேர காப்பு’ என்ற வழிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இயற்கைப் பாதுகாப்புக்காக வேண்டி இந்தக் காப்புமுறையை தாரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகவே மாற்றி இருக்கிறார்கள், பல நூற்றாண்டுக்காலமாகவே இதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இதன்படி யாரும் கிராமத்திற்குள் வருவதுமில்லை, யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதுமில்லை, அப்படி யாராவது வெளியே வந்தார்கள் என்றாலோ, வெளியிலிருந்து ஒருவர் கிராமத்திற்குள் நுழைந்தார் என்றால் அவர்களின் வருகையால் அல்லது செய்கையால் மக்களின் அன்றாட வழிமுறைகள் காரணமாக, புதிய செடிகொடிகளுக்குத் தீங்கு ஏற்படலாம். இந்தக் காப்பு முறையின் தொடக்கத்தில் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறார்கள், பிறகு இது முடிந்த பிறகு பழங்குடியின பாரம்பரிய இசை, பாடல்கள், நடனம் ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டாடும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.
நண்பர்களே, இந்த வாரத்தில் ஓணம் பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்தப் பண்டிகை சிங்கம் மாதத்தில் வருகிறது. இந்தக் காலத்தில் மக்கள் புதியனவற்றை வாங்குகிறார்கள், தங்கள் இல்லங்களை அலங்காரம் செய்கிறார்கள், பூக்களால் கோலம் வரைகிறார்கள், ஓணம் சாத்யாவை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள், பலவகையான விளையாட்டுக்கள்-போட்டிகளும் நடைபெறுகின்றன. ஓணம் பண்டிகையின் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் தொலைவுகளில் இருக்கும் அயல்நாடுகளையும் சென்றடைந்திருக்கின்றன. அமெரிக்காவாகட்டும், ஐரோப்பாவாகட்டும், வளைகுடா நாடுகளாகட்டும், ஓணம் பண்டிகையின் உற்சாகம் உங்களுக்கு அனைத்து இடங்களிலும் காணக் கிடைக்கும். ஓணம் ஒரு சர்வதேசப் பண்டிகையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, ஓணம் நமது விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகை. இது நமது விவசாயப் பொருளாதாரத்துக்கு ஒரு புதிய தொடக்ககாலம். விவசாயிகளின் ஆற்றலால் மட்டுமே நமது வாழ்க்கை, நமது சமூகம் ஆகியன இயங்குகின்றன. நமது பண்டிகைகள், விவசாயிகளின் கடும் உழைப்பால் மட்டுமே வண்ணம் பெறுகின்றன. நமக்கெல்லாம் உணவு படைப்பவர்களையும், விவசாயிகளின் உயிரளிக்கும் சக்தியையும் மிக உயர்வான வகையில் போற்றுகின்றன நமது வேதங்கள்.
அன்னானாம் பதயே நம:, க்ஷேத்ராணாம் பதயே நம: என்கிறது ரிக்வேத மந்திரம். இதன் பொருள் என்னவென்றால், நமக்கெல்லாம் அன்னமளிப்பவர்களை நாம் போற்றுவோம், விவசாயிகளை நாம் போற்றுவோம் என்பதேயாகும். நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களது ஆற்றலை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நமது நாட்டில் இந்த முறை முன்பட்டப் பயிர் விதை நடவை, கடந்த ஆண்டை விடவும் 7 சதவீதம் அதிகம் செய்திருக்கிறார்கள்.
நெல்வகை விதைகள் இந்த முறை கிட்டத்தட்ட 10 சதவீதமும், பருப்புவகைகள் சுமார் 5 சதவீதமும், தானியங்கள் விதைகள் சுமார் 3 சதவீதமும், எண்ணெய் வித்துக்கள் சுமார் 13 சதவீதமும், பருத்தி சுமார் 3 சதவீதமும் அதிகம் நடவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் பொருட்டு நான் நாட்டின் விவசாயிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், அவர்களின் உழைப்பைப் போற்றுகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கொரோனாவின் இந்தக் காலகட்டத்தில் நாடு பல முனைகளில் ஒரே நேரத்தில் போராடி வருகிறது. ஆனால் இதோடு கூடவே, இத்தனை நீண்ட காலமாக வீட்டில் முடங்கிக் கிடந்த காரணத்தால், எனது சின்னஞ்சிறு நண்பர்கள் தங்கள் நேரத்தை எப்படி கழித்திருப்பார்கள் என்ற வினாவும் மனதில் கூடவே எழுகிறது. இந்தச் சின்னஞ்சிறார்களைக் கருத்தில் கொண்டு, உலகிலேயே வித்தியாசமான வழிமுறையான காந்திநகரில் இருக்கும் சிறுவர் பல்கலைக்கழகம், இந்திய அரசின் பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம், குறு-சிறு-மத்தியரகத் தொழில் அமைச்சகம் ஆகியன இணைந்து சிறார்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய கருத்தாய்வும் அலசலும் மேற்கொண்டார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, பயனளிப்பதாக இருந்தது ஏனென்றால் ஒரு வகையில் இது எனக்கு ஒரு புதிய தகவலை அளித்தது, புதியனவற்றைக் கற்கும் சந்தர்ப்பத்தை அளித்தது.
நண்பர்களே, எங்கள் கருத்தாய்வின் விஷயம் என்னவென்றால், விளையாட்டுப் பொருட்கள், குறிப்பாக இந்திய விளையாட்டுப் பொருட்கள். இந்திய நாட்டுக் குழந்தைகளுக்குப் புதியபுதிய விளையாட்டுப் பொருட்களை எப்படி அளிப்பது, இந்தியா, விளையாட்டுப் பொருட்களின் மையப்புள்ளியாக எப்படி ஆவது என்பதே நாங்கள் இந்த முறை மேற்கொண்ட கருத்தாய்வு. இந்த மனதின் குரலைக் கேட்ட பிறகு விளையாட்டுப் பொருட்களுக்கான புதிய கோரிக்கையை ஒருவேளை அவர்கள் கேட்க நேரலாம், இதற்காக முன்கூட்டியே மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்.
நண்பர்களே, விளையாட்டுப் பொருட்கள் செயல்பாட்டை அதிகரிப்பவனவாக இருக்கும் அதே வேளையில் இவை நமது அபிலாஷைகளுக்கும் சிறகு கட்டி விடுகின்றன. விளையாட்டுப் பொருட்கள் மனதுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதில்லை, மாறாக அவை மனதை செம்மைப்படுத்துவதிலும், நோக்கத்தை ஆழப்படுத்துவதிலும் துணை புரிகின்றன. எங்கோ படித்த ஞாபகம்…… விளையாட்டுப் பொருட்கள் தொடர்பாக குருதேவ் ரவீந்திரநாத் டகோர் என்ன கூறியிருக்கிறார் என்றால், எந்த விளையாட்டுப் பொருள் முழுமையடையாமல் இருக்கிறதோ, அதுவே சிறந்தது என்று அவர் கூறியிருக்கிறார். முழுமையடையாத விளையாட்டுப் பொருள், இதைத் தங்கள் விளையாட்டுக்களின் போது குழந்தைகள் இணைந்து நிறைவு செய்ய வேண்டும். அவரது சிறுபிராயத்தில் அவர் தனது கற்பனையில் முளைத்த, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு, தனது நண்பர்களோடு இணைந்து, தனது விளையாட்டுக்களையும் விளையாட்டுப் பொருட்களையும் உருவாக்கினாராம். ஆனால் ஒரு நாள், குழந்தைப்பருவ அந்த ஆனந்தமான கணங்களில் பெரியவர்களின் தலையீடு ஏற்பட்டது. என்ன நடந்தது என்றால், அவருடைய ஒரு நண்பர், ஒரு பெரிய, அழகான அயல்நாட்டுப் பொம்மையைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் இதைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், பிற நண்பர்களின் முழுக்கவனமும் மெல்ல மெல்ல விளையாட்டை விட அந்தப் பொம்மையின் மீது விழத் தொடங்கியிருக்கிறது. அனைவரின் கவனமும் அப்போது விளையாட்டை விடவும் பொம்மையின் மீதே அமைந்திருந்தது. எந்தச் சிறுவன் நேற்றுவரை அனைவரோடும் விளையாடி வந்தானோ, அனைவரோடும் இருந்தானோ, இணைந்து விளையாடினானோ, அந்தச் சிறுவன் இப்போது விலக ஆரம்பித்தான். ஒருவகையில் பிற சிறுவர்களிடமிருந்து வேற்றுமை உணர்வை அவன் உணரத் தலைப்பட்டான். விலைமதிப்பான பொம்மையில் விளையாடவும் ஏதுமில்லை, கற்றுக் கொள்ளவும் ஒன்றுமில்லை. அதாவது கவரக்கூடிய ஒரு பொம்மை, சிறப்பான ஒரு சிறுவனை அழுத்தி விட்டது, மறைத்து விட்டது, உதிரச் செய்து விட்டது. இந்தப் பொம்மையானது செல்வத்தை, பணத்தை, தான் உயர்வானவன் என்ற உணர்வை வெளிப்படுத்திய அதே வேளையில், அந்தச் சிறுவனின் படைப்பாற்றல் உணர்வை அதிகப்படுத்தி, மலர்வதற்கும் தடை போட்டது. பொம்மை என்னவோ வந்து விட்டது, ஆனால் விளையாட்டு நின்று போனது, குழந்தைகள் மலர்வதும் தேங்கிப் போனது. ஆகையால் குருதேவ் கூறினார், விளையாட்டுப் பொருட்கள் சிறார்களின் குழந்தைத்தனத்தை வெளிக் கொண்டு வர வேண்டும், அவர்களின் படைப்புத் திறனை மலரச் செய்ய வேண்டும் என்றார். குழந்தைகளின் வாழ்க்கையில் பலவகையான கட்டங்களில் விளையாட்டுப் பொருட்கள் ஏற்படுத்தும் தாக்கம் மீது தேசிய கல்விக் கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது. விளையாட்டுக்களின் ஊடேயே கற்றல், விளையாட்டுப் பொருட்கள் உருவாக்குவதைக் கற்றல், விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்களுக்குச் செல்லுதல் ஆகியவை அனைத்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறுகின்றன.
நண்பர்களே, நமது நாட்டிலே விளையாட்டுப் பொருட்கள் தொடர்பான ஒரு மிக வளமான பாரம்பரியம் உண்டு. பல திறன் படைத்த, திறமைசாலிக் கைவினைஞர்கள் உண்டு. இவர்கள் சிறப்பான விளையாட்டுப் பொருட்களை வடிவமைப்பதில் வல்லுநர்கள். இந்தியாவில் சில இடங்கள் Toy Clusters அதாவது விளையாட்டுப் பொருட்களின் மையங்கள் என்ற வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தின் ராமநகரத்தில் உள்ள சன்னபட்னா, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணாவில் இருக்கும் கொண்டப்பள்ளி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர், அஸாமின் துப்ரி, உத்திர பிரதேசத்தின் வாராணசி என இப்படிப்பட்ட இடங்கள் பலவற்றைக் கூறலாம். உலக அளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில், ஏழு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பெறுமானமுடையது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் இந்த ஏழு இலட்சம் கோடி ரூபாய்கள் என்ற இத்தனை பெரிய வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது. எந்த நாட்டிடம் இத்தனை வளமான மரபும். பாரம்பரியமும், பன்முகத்தன்மையும், இளையவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறதோ, அங்கே சந்தையில் அவர்களின் பங்கு மிகவும் குறைவாக இருப்பதைப் பார்க்கும் போது நன்றாகவா இருக்கிறது? கண்டிப்பாக இல்லை. இதைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், உங்கள் மனதிலும் ஏமாற்றமே மிஞ்சும். பாருங்கள் நண்பர்களே, விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் மிகவும் பரந்து பட்டது. குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, MSMEக்களோ, கூடவே பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதை முன்னெடுத்துச் செல்ல நாட்டில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சி.வி. ராஜு அவர்களையே எடுத்துக் கொள்வோமே!! அவருடைய கிராமத்தின் ஏட்டி கொப்பாக்கா பொம்மைகள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. இந்தப் பொம்மைகள் மரத்தாலானவை என்பதும் இவற்றுக்கு எந்த ஒரு கூர்முனைகளும் இல்லை என்பதும் இந்தப் பொம்மைகளின் சிறப்பம்சம். இவை அனைத்துக் கோணங்களிலும் மழமழப்பாக இருப்பதால், குழந்தைகளுக்கு எந்தக் காயமும் படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. சி.வி. ராஜு அவர்கள் ஏட்டி கொப்பாக்கா பொம்மைகள் தயாரிப்பின் பொருட்டு, இப்போது தனது கிராமத்தின் கைவினைஞர்களோடு இணைந்து ஒரு வகையான புதிய இயக்கத்தை முன்னெடுத்து இருக்கிறார். மிகச் சிறப்பான தரம்வாய்ந்த ஏட்டி கொப்பாக்கா பொம்மைகளைத் தயாரித்து, சி.வி. ராஜு அவர்கள், வட்டார பொம்மைகளின் இழந்த மாண்பினை மீட்டெடுத்திருக்கிறார். விளையாட்டுப் பொருட்கள் வாயிலாக நாம் இரண்டு விஷயங்களைச் செய்யலாம் – நம்முடைய பெருமைமிகு கடந்த காலத்தை நமது வாழ்க்கையில் மீண்டும் உயிர்பெறச் செய்யலாம், நமது பொன்னான எதிர்காலத்தை மேலும் மெருகேற்றலாம். நான் இதில் ஸ்டார்ட் அப் நண்பர்களை, நமது புதிய தொழில்முனைவோர்களிடம் கூறுவதெல்லாம் – Team up for toys…. வாருங்கள் இணைந்து பொம்மைகள் தயாரிப்போம். இப்போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது. வாருங்கள், நாம் நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம். குழந்தைகளின் விளையாட்டுத்தனத்தை மலரச் செய்து மகிழ்விப்பவையே விளையாட்டுப் பொருட்கள். நாம் தயாரிக்கும் பொம்மைகள் அதே நேரத்தில் சூழலுக்கு இசைவானவையாகவும் இருக்க வேண்டும்.
நண்பர்களே, இதைப் போலவே, இப்போது கணிப்பொறியும் ஸ்மார்ட்ஃபோனும் நிலவும் இந்தக் காலகட்டத்தில், கணிப்பொறி விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இந்த விளையாட்டுக்களை குழந்தைகள் விளையாடுகிறார்கள், பெரியோரும் இதில் சளைக்கவில்லை. ஆனால் இவற்றில் பெரும்பாலான விளையாட்டுக்களின் மையக்கரு அந்நிய நாடுகளின் கலாச்சாரத்தைத் தழுவி அமைந்திருக்கின்றது. நமது நாட்டில் ஏராளமான கருத்துக்கள், எண்ணங்கள் இருக்கின்றன, நமது பாரம்பரியம் மிகவும் வளமானது. இவற்றை அடியொற்றி நம்மால் விளையாட்டுக்களை வடிவமைக்க முடியும் இல்லையா? நீங்கள் இந்தியாவிலும் விளையாட்டுக்களை வடிவமையுங்கள், இந்தியாவுக்கான விளையாட்டுக்களை வடிவமையுங்கள் என்று நான் என் இளைய திறமைசாலிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். Let the games begin! என்று கூறுவார்கள் இல்லையா, வாருங்கள், விளையாட்டுக்கள் தொடங்கட்டும்!!
நண்பர்களே, தற்சார்பு பாரத இயக்கத்தில் virtual games, மெய்நிகர் விளையாட்டுக்களாகட்டும், பொம்மைகள் துறையாகட்டும், அனைவரும் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பு அளிக்கக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. இன்றிலிருந்து 100 ஆண்டுகள் முன்பாக, ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட வேளையில், ”ஒத்துழையாமை இயக்கமானது நாட்டுமக்களின் சுயமரியாதையையும், ஆற்றலையும் விளங்க வைக்கும் ஒரு முயற்சி” என்றார் காந்தியடிகள்.
இன்று, நமது நாட்டைத் தற்சார்பு உடையதாக நாம் ஆக்கும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் முழுமையான தன்னம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்தின் வடிவில் விதைக்கப்பட்ட விதையை இப்போது தற்சார்பு பாரதம் என்ற ஆலமரமாக மாற்றியமைக்க வேண்டியது நம்மனைவரின் கடப்பாடாகும்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இந்தியர்களின் புதுமைகள் படைத்தல் மற்றும் தீர்வுகள் காணல் வல்லமையைப் பற்றி அனைவரும் அறிவார்கள்; அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால், பலமடங்கு சக்தி பெருகும். இந்த மாதத் தொடக்கத்தில், நாட்டின் இளைஞர்கள் முன்னிலையில் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவால் ஒன்று வைக்கப்பட்டது. இந்த தற்சார்பு பாரதச் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவாலில் நமது இளைஞர்கள் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 7000 பேர்கள் பதிவு செய்தார்கள். இவற்றிலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு செயலிகள் இரண்டாம் அடுக்கு-மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கி இருந்தார்கள். தற்சார்பு பாரதம் படைக்க, தேசத்தின் எதிர்காலத்திற்காக, இது மிகவும் மங்கலமான அடையாளம். தற்சார்பு நூதனமான செயலிகள் போட்டியின் முடிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக அவை உங்களிடம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். கணிசமான ஆய்வுக்குப் பிறகு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 24 செயலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நீங்கள் அவசியமாக இந்தச் செயலிகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், இவற்றோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இப்படிப்பட்ட ஒன்றை ஏற்படுத்த உங்களுக்கும் உத்வேகம் பிறக்கலாம். இவற்றில் ஒரு செயலி இருக்கிறது, இதன் பெயர் Kutuki kids learning app. இது சின்னஞ்சிறார்களுக்கான ஊடாடு செயலி; இதில் பாடல்கள், கதைகள் ஆகியன வாயிலாக எளிய வகையில் குழந்தைகள் கணக்கு-அறிவியல் தொடர்பானவற்றைக் கற்றுக் கொள்ள இயலும். இதில் செயல்பாடுகளும் இருக்கின்றன, விளையாட்டும் இருக்கின்றது. இதைப் போலவே ஒரு blogging – வலைப்பதிவுத் தளம் பற்றிய செயலியும் உண்டு. இதன் பெயர் KOO, கூ. இதைப் போலவே சிங்காரி செயலி என்ற ஒன்றும் இருக்கிறது; இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. மேலும் ஒரு செயலி உண்டு, இதன் பெயர் Ask சர்கார். இதில் chat bot வாயிலாக நீங்கள் ஊடாடலாம். இந்த chat bot என்பது மனிதர்களைப் போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்கான கணினி நிரல். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு அரசுத் திட்டம் பற்றியும் சரியான தகவல்களை நீங்கள் பெறலாம், அதுவும் எழுத்து வடிவத்தில், ஒலி வடிவத்தில் மற்றும் காணொளி வடிவத்தில் நீங்கள் பெறலாம். இது உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். மேலும் ஒரு செயலி இருக்கிறது, இதன் பெயர் step set go, இது ஒரு உடலுறுதிக்கான செயலி. நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள், எத்தனை சக்தியை எரித்திருக்கிறீர்கள் என்பன பற்றிய அனைத்துத் தரவுகளையும் கணக்கில் வைத்துக் கொள்ளும் செயலி இது. மேலும் இது உங்களை உடலுறுதியோடு வைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தவும் செய்கிறது. நான் உங்கள் முன்பாக வெகுசில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே வைத்திருக்கிறேன். மேலும் பல செயலிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றன. பல வணிகs செயலிகளும் இருக்கின்றன, விளையாட்டுக்களுக்கான செயலிகளும் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக, Is Equal to, Books & Expense, Zoho Workplace, FTC Talent போன்றன. இவை பற்றி நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள், உங்களுக்கு அதிகத் தகவல்கள் கிடைக்கும். நீங்களும் முன்னே வாருங்கள், நூதனமான ஒன்றில் ஈடுபடுங்கள், அதைச் செயலாக்கம் செய்யுங்கள். உங்களது முயற்சி, உங்களுடைய சின்னச்சின்ன ஸ்டார்ட் அப்புகள், நாளை மிகப்பெரிய நிறுவனங்களாக மாறலாம், உலகிலே இந்தியாவுக்கான அடையாளமாக அவை ஆகலாம். இன்று உலகிலே மிகப்பெரிய நிறுவனங்களாக வலம் வருபவை அனைத்தும் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப்புகள் என்ற நிலையிலிருந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கின என்பதை நீங்கள் மறவாதீர்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நம் நாட்டின் குழந்தைகள், மாணவர்கள், தங்களுடைய முழுமையான ஆற்றலையும் வல்லமையையும் வெளிப்படுத்த மிகப்பெரிய ஒரு பங்களிப்பு அளிக்கக்கூடியது என்றால் அது ஊட்டச்சத்து தான். நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படும். நாட்டுக்கும் ஊட்டச்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டிலே ஒரு வழக்கு உண்டு – உணவு எப்படியோ, உள்ளமும் அப்படியே. அதாவது நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நமது மனோ-புத்தியின் வளர்ச்சி இருக்கும் என்பதே இதன் உட்பொருள். சிசு கர்ப்பத்தில் இருக்கும் போதும், அதன் குழந்தைப் பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்குக் கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பான வகையில் அதன் மனவளர்ச்சி ஏற்படும், அது ஆரோக்கியமான இருக்கும். குழந்தைகளுக்கு ஊட்டம்நிறை உணவு கிடைப்பது அவசியமானது என்பதால், தாய்க்கும் சிறப்பான ஊட்டச்சத்து நிரம்பிய உணவு கிடைக்க வேண்டும். நீங்கள் என்ன உண்கிறீர்கள், எந்த அளவுக்கு உண்கிறீர்கள், எத்தனை முறை உண்கிறீர்கள் என்பது எல்லாம் ஊட்டச்சத்துக்கான விளக்கமல்ல. உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கூறுகள் எந்த அளவுக் கிடைக்கின்றன என்பது தான் முக்கியமானது. உங்களுக்கு இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, உப்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, விட்டமின்கள் கிடைக்கிறதோ இல்லையோ என்பது அல்ல; இவை அனைத்துமே ஊட்டச்சத்தின் முக்கியமான அம்சங்கள். ஊட்டச்சத்துக்கான இந்த இயக்கத்தில் மக்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. மக்கள் பங்களிப்புத் தான் இதை வெற்றி பெறச் செய்ய இயலும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திசையில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமது கிராமங்களில், மக்கள் பங்களிப்பு வாயிலாக இது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது. ஊட்டச்சத்து வாரமாகட்டும், ஊட்டச்சத்து மாதமாகட்டும், இவற்றின் வாயிலாக மேலும் மேலும் அதிக விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் இதோடு இணைக்கப்படுகின்றன, குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன, இவற்றால் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதன் பொருட்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக வகுப்பில் ஒரு class monitor, வகுப்புத் தலைவன் இருப்பதைப் போல, ஊட்டச்சத்துக் கண்காணிப்பு இருக்க வேண்டும், அறிக்கை அட்டையைப் போல ஊட்டச்சத்து அட்டை தயார் செய்யப்பட வேண்டும், இந்த மாதிரியான ஒரு வழிமுறை தொடங்கப்பட இருக்கிறது. ஊட்டச்சத்து மாதத்தில் MyGov தளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினாவிடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது, இதோடு கூடவே ஒரு மீம் போட்டியும் நடைபெறும். நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் இதில் பங்கெடுக்க ஊக்கப்படுத்துங்கள்.
நண்பர்களே, குஜராத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் ஒற்றுமைச் சிலையைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம்; அல்லது கோவிட் கடந்து சென்ற பிறகு அது பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும் போது அதைக் காணும் சந்தர்ப்பம் அமையலாம். அங்கே தனித்தன்மை வாய்ந்த ஒரு ஊட்டச்சத்துப் பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டாகவே ஊட்டச்சத்து பற்றிய கல்வியை, கேளிக்கையினூடே அங்கே நம்மால் கண்டறிந்து கொள்ள முடியும்.
நண்பர்களே, பாரதம் ஒரு பரந்துபட்ட தேசம், இங்கே பலவகையான உணவுப் பழக்கங்கள் உண்டு. நமது நாட்டில் ஆறுவகையான பருவகாலங்கள் உண்டு, ஒவ்வொரு இடத்திலும் அங்கு நிலவும் பருவநிலைக்கு ஏற்ப பலவகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகையால் மகத்துவமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு இடத்திலும் பருவநிலை, அங்கே இருக்கும் வட்டார உணவு, அங்கே விளையும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப, செரிவான ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுதானிய வகைகளில் ராகி, கேழ்வரகு ஆகியன பயனுள்ள ஊட்டச்சத்து உணவு. ஒரு இந்திய விவசாய சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது; இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யப்படுபவை பற்றியும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றியும் முழுமையான தகவல்கள் இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பாக இருக்கும். இந்த ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டம் நிறைந்த உணவு மற்றும் உடல்நலம் பற்றியும் நாம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் வாருங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த சில நாட்கள் முன்பாக, நாம் நமது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடினோம். அப்போது ஒரு சுவாரசியமான செய்தி மீது என் கவனம் சென்றது. இந்தச் செய்தி நமது இரண்டு சாகசமான படைவீரர்கள் பற்றியது. ஒன்றின் பெயர் சோஃபி மற்றதன் பெயர் விதா. சோஃபியும் விதாவும் இந்திய இராணுவத்தின் பெருமிதங்கள். நாய்களான இவற்றுக்கு Chief of Army Staff க்கான பாராட்டு அட்டைகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. சோஃபியும் விதாவும் தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றியமைக்கு அவற்றிற்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது. நமது இராணுவத்தில், நமது பாதுகாப்புப் படையினரிடத்தில், இப்படிப்பட்ட தைரியம் நிறைந்த நாய்கள் இருக்கின்றன, இவை நாட்டிற்காக உயிர் வாழ்கின்றன, நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணிக்கவும் செய்கின்றன. பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத சூழ்ச்சிகளையும் முறியடிப்பதில் இப்படிப்பட்ட நாய்கள் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. சில காலம் முன்பாகத் தான், நாட்டின் பாதுகாப்பில் நாய்களின் பங்குபணி குறித்து விரிவான தகவல்கள் எனக்குக் கிடைத்தன. பல சம்பவங்கள் குறித்தும் நான் கேள்விப்பட்டேன். பல்ராம் என்ற ஒரு நாய் 2006ஆம் ஆண்டிலே அமர்நாத் புனித யாத்திரைப் பாதையில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தது. 2002ஆம் ஆண்டிலே பாவ்னா என்ற ஒரு நாய், IED வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தது. மறைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளைத் தோண்டும் போது, தீவிரவாதிகள் அதை வெடிக்கச் செய்தார்கள், அதில் அந்த நாய் உயிர்த்தியாகம் செய்தது. 2-3 ஆண்டுகள் முன்னால், சத்திஸ்கட்டின் பீஜாபுரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாயான Crackerம், ஒரு IED குண்டு வெடிப்பில் உயிர்த்தியாகம் செய்தது. சில நாட்கள் முன்பாக, பீட் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் தங்களுடைய தோழனான ராக்கி என்ற நாயிற்கு முழு மரியாதையோடு இறுதி அஞ்சலியைச் செலுத்திய உணர்ச்சிபூர்வமான ஒரு காட்சியை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். ராக்கி, 300க்கும் மேற்பட்ட சம்பவங்களில் காவல்துறையினருக்கு உதவிகரமாக இருந்தது. பேரிடர் மேலாண்மையிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் நாய்களின் பங்குபணி மிகப்பெரியது. இந்தியாவிலே, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான NDRFஇல் பல டஜன் நாய்கள் இதற்காகவே சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருக்கின்றன. நிலநடுக்கம், கட்டிடம் இடிந்து விழுதல், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் நபர்களைத் தேடி வெளிக்கொணர்தல் ஆகியவற்றில் நாய்கள் திறமை படைத்தவைகளாக இருக்கின்றன.
நண்பர்களே, இந்தியரக நாய்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரக நாய்களில் Mudhol Houndகள், ஹிமாச்சலி ஹவுண்டுகள் இருக்கின்றன, இவை மிகவும் அருமையான ரகங்கள். ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவற்றைப் பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதில்லை, இவை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கின்றன. நமது பாதுகாப்புப் படையினர் இந்த இந்தியரக நாய்களைத் தங்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். கடந்த சில காலமாகவே இராணுவம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தேசியப் பாதுகாப்புக் குழு ஆகியோர் முதோல் ஹவுண்ட் ரக நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவற்றை நாய் படைப்பிரிவில் இணைத்திருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் கோம்பை ரக நாய்களை சேர்த்திருக்கிறார்கள். இந்திய விவசாய ஆய்வுக் கழகமும் இந்திய ரக நாய்கள் மீது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்தியரக நாய்களை, மேலும் சிறப்பானவையாக ஆக்குவதும், பயனுள்ளவையாக ஆக்குவதும் தான் இதன் நோக்கம். நீங்கள் இணையதளத்தில் இவை பற்றித் தேடிப் பாருங்கள், இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், இவற்றின் நேர்த்தி, குணங்கள் ஆகியவற்றைப் பார்த்து உங்களுக்கு ஆச்சரிய உணர்வு மேலிடும். அடுத்தமுறை, நாய் வளர்ப்பு பற்றி நீங்கள் எண்ணமிடும் போது, கண்டிப்பாக இவற்றில் ஏதாவது ஒரு இந்திய ரக நாயை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். தற்சார்பு பாரதம், மக்களின் மனங்களில் மந்திரமாக ஒலிக்கும் போது, எந்த ஒரு துறையும் இதிலிருந்து விடுபட முடியாது.
எனக்கு நேசமான நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து, செப்டெம்பர் மாதம் 5ஆம் தேதியன்று நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். நாம் நமது வாழ்க்கையின் வெற்றிகளை நமது வாழ்க்கைப் பயணத்தில் காணும் போது, நம் மனங்களில் நம்முடைய ஏதாவது ஒரு ஆசிரியர் பற்றிய நினைவு கண்டிப்பாக நிழலாடும். விரைவாக மாறிவரும் காலகட்டத்தில், கொரோனா பீடித்திருக்கும் சங்கடமான வேளையில், நமது ஆசிரியர்கள் முன்பாகவும், காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு சவால் உருவாகியிருக்கிறது. நமது ஆசிரியப் பெருமக்கள் இந்தச் சவாலை எதிர்கொள்ள மட்டும் செய்யவில்லை, இதை ஒரு நல்வாய்ப்பாகவே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. படிப்பில் தொழில்நுட்பத்தை எத்தனை அதிக அளவு பயன்படுத்தலாம், புதிய வழிமுறைகளை எப்படிக் கையாளலாம், மாணவர்களுக்கு எப்படி உதவிகரமாக செய்யலாம், இதை மிக இயல்பான, எளிமையான வகையிலே நமது ஆசிரியப் பெருமக்கள் கையாண்டார்கள், தங்கள் மாணவர்களுக்கும் இதைக் கற்பித்தார்கள். இன்று நாட்டில், அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு புதுமை படைத்தல் சம்பவம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து, புதியதாக ஏதோ ஒன்றைப் புரிந்து வருகிறார்கள். நாட்டில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக நிகழவிருக்கும் ஒரு பெரிய மாற்றத்தின் ஆதாயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமது ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.
நண்பர்களே, மேலும் குறிப்பாக எனது ஆசிரிய நண்பர்களே, 2022ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாட இருக்கிறது. சுதந்திரம் அடையும் முன்பாக பல ஆண்டுகள் வரை நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு என மகத்தான வரலாறு உண்டு. இந்த வேளையில் நாட்டின் அனைத்து மூலைமுடுக்கெங்கிலும் விடுதலை வேட்கை நிரம்பியவர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, தங்கள் உடல்-பொருள்-ஆவியனைத்தையும் தியாகம் செய்தார்கள். நமது இன்றைய தலைமுறையினர், நமது மாணவர்கள் ஆகியோருக்கு சுதந்திரப் போராட்டத்தில் நமது நாட்டின் நாயகர்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும், அதை அவர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பது மிக அவசியமானது. தங்களுடைய மாவட்டங்களில், தங்களுடைய பகுதிகளில், சுதந்திரப் போராட்டக்காலத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது, யாரெல்லாம் உயிர்த்தியாகம் செய்தார்கள், யாரெல்லாம் எத்தனை காலம் வரை சிறையில் கிடந்து வாடினார்கள் என்ற விவரங்களை நமது மாணவர்கள் தெரிந்து கொண்டால், அவர்களுடைய ஆளுமையிலும் இதன் தாக்கம் தென்படும். இதன் பொருட்டு நீங்கள் மிகப்பெரிய பங்காற்ற முடியும், இதில் ஆசிரியர்களான உங்களுடைய பங்களிப்பு மகத்தானது. அதாவது நீங்கள் சார்ந்திருக்கும் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக சுதந்திரப் போராட்டம் நடந்திருக்கும், இந்தப் போஎராட்டத்தில் அங்கே பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும், இல்லையா? இதைப் பற்றி மாணவர்கள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளலாம். இதைப் பள்ளிக்கூடத்தில் கையெழுத்துப் பிரதியாக தயார் செய்து கொண்டு, உங்கள் நகரத்தில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்பு கொண்ட ஏதாவது ஒரு இடத்திற்கு, மாணவ மாணவியரைக் கூட்டிச் செல்லலாம். அந்தந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுக்காலத்தில், தங்களுடைய பகுதியில் சுதந்திரத்தின் 75 நாயகர்கள் பற்றிய கவிதைகளை எழுதுவோம், நாடகங்களை எழுதுவோம் என்று தீர்மானம் செய்து கொள்ளவும். நாட்டில் ஆயிரக்கணக்கான, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட நாயகர்கள் ஏராளமானோர், நாட்டுக்காகத் தியாகங்கள் புரிந்தவர்கள், கால ஓட்டத்தில் மறைந்து போனவர்கள் இருக்கின்றார்கள், அவர்களைப் பற்றி நீங்கள் உலகறியத் தெரிய வையுங்கள். இதுதான் நாம் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், அவர்களுக்கு நாம் அளிக்கும் மெய்யான நினைவஞ்சலிகளாக இருக்கும். செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், இதற்கான ஒரு சூழலை நாம் ஏற்படுத்துவோம், அனைவரையும் இணைப்போம், இதை நாமனைவரும் இணைந்து செய்வோம் என்று நான் ஆசிரிய நண்பர்களிடம் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, நாடு இன்று மேற்கொண்டிருக்கும் வளர்ச்சிப் பயணத்தின் வெற்றி எப்போது இனிமையானதாக இருக்கும் தெரியுமா? நாட்டுமக்கள் அனைவரும் இதில் இடம்பெற வேண்டும், இந்தப் பயணத்தில் அவர்கள் பயணிகளாக வேண்டும், இந்தப் பாதையில் நடைபோடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும், அப்போது தான் இனிமை நிறையும். ஆகையால், நாட்டுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருப்பதும், சுகமாக இருப்பதும், நாமனைவரும் இணைந்து கொரோனாவை முழுமையாக முறியடிப்பதும் மிக அவசியமான ஒன்று. நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும். ஒரு மீட்டர் இடைவெளி, முகக்கவசம் நீ அணி என்ற உறுதிப்பாட்டைப் பின்பற்றுங்கள். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு இருங்கள், சுகமாக இருங்கள், என்ற இந்த நல்வாழ்த்துக்களோடு விடைபெறுகிறேன், அடுத்த மனதின் குரலில் நாம் சந்திப்போம்.
பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று ஜூலை மாதம் 26ஆம் நாள், இன்றைய தினம் மிகவும் விசேஷம் நிறைந்தது. இன்று ‘கார்கில் விஜய் திவஸ்’, அதாவது கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றதைக் குறிக்கும் நாள் ஆகும். 21 ஆண்டுகள் முன்பாக, இதே நாளன்று தான் கார்கில் யுத்தத்தில் நமது இராணுவமானது இந்தியாவின் வெற்றிக் கொடியை நாட்டியது. நண்பர்களே, கார்கில் போர் நடைபெற்ற போது நிலவிய சூழ்நிலையை பாரதம் என்றுமே மறவாது. பெரிய பெரிய கனவுகளை மனதில் கொண்டு பாரதநாட்டு பூமியை அபகரிக்கவும், தங்கள் நாட்டில் நிலவி வந்த உள்நாட்டுக் பூசல்களிலிருந்து அவர்களது மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பாகிஸ்தான் இந்த வெற்று சாகசத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பாரதமோ அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது; ஆனால்,
பயரூ அகாரண் சப் காஹூ சோ. ஜோ கர் ஹித் அன்ஹித் தாஹூ சோ.
“बयरू अकारण सब काहू सों | जो कर हित अनहित ताहू सों ||
அதாவது அனைவருடனும் வன்மம் பாராட்டுவது தான் தீயோரின் இயல்பாகும் என்பதே இதன் பொருள். இத்தகைய இயல்பு கொண்டோர், நல்லது செய்வோருக்கும் தீமையை செய்வது பற்றியே சிந்திக்கிறார்கள். ஆகையால் இந்தியாவின் நட்புக் கரத்துக்குப் பதிலாக பாகிஸ்தானம் முதுகில் குத்தும் கயமைத்தனத்தை முயன்றது; ஆனால் பாரதநாட்டின் வீரம் நிறைந்த இராணுவத்தினர் தங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார்கள், உலகம் முழுவதும் இதைக் கண்டது. மலையுச்சிகளில் வீற்றிருக்கும் எதிரிகளோடு அடிவாரத்தில் இருந்தபடி போரிடும் நம் நாட்டு வீரர்கள். ஆனால் வெற்றி என்னவோ மலை உச்சியில் இருப்பவர்களுக்குக் கிடைக்கவில்லை, அடிவாரத்தில் நெஞ்சுரத்தோடும், மெய்யான வீரத்தோடும் போரிட்ட நமது இராணுவத்தினருக்குத் தான் கிடைத்தது, இந்தக் காட்சியை சற்று கற்பனைக்குக் கொண்டு வந்து இருத்திப் பாருங்கள்! நண்பர்களே, அந்த வேளையில் கார்கில் செல்லவும், அங்கே நமது இராணுவத்தினரின் வீரத்தைக் கண்ணாறக் காணவும் எனக்குப் பேறு கிடைத்தது. அந்த நாளை, அன்று வாய்த்த சில கணங்களை, எனது வாழ்வின் மிக விலைமதிப்பே இல்லாத தருணமாக நான் கருதுகிறேன். இன்று கார்கிலில் நாம் பெற்ற வெற்றியை மக்கள் இன்று நினைவுகூருவதை நான் இன்று காண்கிறேன். சமூக ஊடகத்தில் #courageinkargil என்ற ஒரு ஹேஷ்டேகிலே மக்கள் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், உயிர்த்தியாகம் செய்தோருக்கு தங்கள் நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்து வருகிறார்கள். நான் இன்று நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலிருந்தும், நமது இந்த வீரர்களுடன் கூடவே, பாரத அன்னைக்கு இப்படிப்பட்ட சத்புத்திரர்களை ஈன்றளித்த தாய்மார்களுக்கும் என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். இன்று நாள் முழுவதும் கார்கில் வெற்றியோடு இணைந்த நமது வீரர்கள் பற்றிய கதைகளை, வீரம் நிறைந்த தாய்மார்களின் தியாகத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். www.gallantryawards.gov.in என்று ஒரு இணையதளம் இருக்கிறது, இதில் நீங்கள் ஒருமுறை நுழைந்து பாருங்கள் என்ற வேண்டுகோளையும் நான் உங்களிடம் விடுக்கிறேன். அங்கே தீரம் நிறை நமது இராணுவ வீரர்களைப் பற்றியும், அவர்களின் பராக்கிரமம் பற்றியும் ஏகப்பட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும், அந்தத் தகவல்களைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடும் போது உத்வேகத்துக்கான ஊற்றுக்கண் உங்களுக்குள்ளே திறக்கும். கண்டிப்பாக இந்த இணையத்தளத்திற்கு நீங்கள் சென்று பாருங்கள், மீண்டும் மீண்டும் சென்று பாருங்கள் என்று தான் நான் கூறுவேன்.
“காந்தியடிகள் நம்மனைவருக்கும் ஒரு மந்திரத்தை அளித்தார் என்பது நம்மனைவருக்கும் நினைவிருக்கிறது. உங்களுக்கு எப்போதாவது ஒரு சங்கடம் ஏற்பட்டால், அப்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற நிலை ஏற்பட்டால், மிகவும் ஏழ்மையில், நலிவான நிலையில் இருக்கும் இந்தியரைப் பற்றி சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். தாங்கள் செய்ய இருப்பனவற்றால் அந்த மனிதனுக்கு நலன் விளையுமா விளையாதா என்பது தான் அது. காந்தியடிகளின் இந்தக் கருத்தியலை முன்னெடுத்துச் சென்ற அடல் அவர்கள், கார்கில் போரின் போது நமக்கெல்லாம் மற்றுமொரு மந்திரத்தை அளித்தார். எந்த ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவையும் எடுக்கும் முன்பாக, நமது முயல்வுகள், அடைய மிகவும் கடினமான சிகரங்களில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்துவரும் இராணுவத்தினருக்கு கண்ணியம் சேர்ப்பதாக இருக்குமா இருக்காதா என்பது தான் அந்த மந்திரம்.
நண்பர்களே, போர்ச்சூழலில் நாம் செய்யும் செயல்களோ, பேசும் சொற்களோ, எல்லைப்புறங்களில் நெஞ்சுரத்தோடு இருக்கும் வீரர்களின் மனோபலத்தின் மீதும், அவர்களின் குடும்பத்தாரின் மனோபலத்தின் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தை நாம் என்றும் மறந்து விடக் கூடாது; ஆகையால் நமது நடவடிக்கைகள், நமது செய்கைகள், நமது சொற்கள், நமது அறிக்கைகள், நமது வரையறைகள், நமது இலட்சியம், அனைத்தையும் நாம் உரைகல்லில் உரைத்துப் பார்த்தே புரிய வேண்டும்; இதனால் வீரர்களின் மனோபலமும், மரியாதையும் உயர வேண்டும். பெற்ற பொன்னாடு அனைத்தை விடவும் நனிசிறந்தது என்ற மந்திரச் சொற்களுக்காக, ஒற்றுமை என்ற இழையில் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டுமக்கள், நமது இராணுவத்தினரின் வல்லமையை பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கிறார்கள். ‘சங்கே சக்தி கலௌ யுகே’, அதாவது கலியுகத்தில் ஒற்றுமையே சக்தி என்று நாம் கூறுவதுண்டு.
சில வேளைகளில் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நாட்டுக்குக் கேடுதரும் விஷங்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். சில வேளைகளில் ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக சிலர் அவற்றை பகிரவும் செய்கிறார்கள். இது தவறு என்று அறிந்தும் இதைச் செய்து வருகிறார்கள். இன்று, போர் என்பது எல்லைப்புறங்களில் மட்டுமல்ல, நாட்டின் பல முனைகளில் போரிடப்பட்டு வருகிறது, இதில் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். தேசத்தின் எல்லைப்புறத்தில், கடினமான சூழ்நிலைகளில் போரிட்டுவரும் நமது வீரர்களை நினைவில் கொண்டு நாம் நமது போக்கைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் ஒன்றுபட்டு கொரோனா பெருந்தொற்றோடு எவ்வாறு போராடியதோ, அது பல சந்தேகங்களைத் தவறு என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்று நமது நாட்டிலே நோயிலிருந்து மீண்டு வரும் recovery rate என்ற மீட்சி விகிதம், பிற நாடுகளோடு ஒப்பீடு செய்கையில் சிறப்பாக இருக்கிறது; நமது நாட்டில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை உலகத்தின் பல நாடுகளைக் காட்டிலும் கணிசமாகக் குறைவானதாகவே இருக்கிறது. ஒரு மனித உயிரின் இழப்புக்கூட துக்கமளிப்பது தான் ஐயமில்லை என்றாலும் இந்தியா, தனது இலட்சக்கணக்கான நாட்டு மக்களின் உயிர்களைக் காக்க வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் உண்மை. நண்பர்களே, இன்று கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இன்னும் விலகி விடவில்லை. பல இடங்களில் இது வேகமாகப் பரவியும் வருகிறது. நாம் அதிக முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தொடக்கத்தில் இது எந்த அளவுக்கு அபாயகரமானதாக விளங்கியதோ, அதே அளவுக்கு இன்றும்கூட இருக்கிறது என்பதால் நாம் முழுமையான எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், தொடர்ந்து கைகளைக் கழுவி வர வேண்டும், எங்கும் துப்பக்கூடாது, தூய்மையின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். இவையே கொரோனாவிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நம்வசம் இருக்கும் ஆயுதங்கள். சில வேளைகளில் முகக்கவசம் தொல்லையளிப்பதாக இருக்கிறது என்று நாம் கருதி அதை அகற்றுகிறோம். பேசத் தலைப்படுகிறோம். எப்போது முகக்கவசம் அதிகம் தேவையாக இருக்கிறதோ, அந்த வேளையில் அதை அகற்றி விடுகிறோம். முகக்கவசம் காரணமாக சிரமம் ஏதேனும் இருக்கும் வேளையில், அதை அகற்றி விடலாம் என்று எண்ணும் நேரத்தில், ஒரு கணம், கொரோனாவோடு போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனாவுடன் போராடிவரும் பிற போராளிகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்; அவர்கள் மணிக்கணக்காக முகக்கவசம் அணிந்து கொண்டு, மனித உயிர்களைக் காக்கும் பெரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள். 8 மணிநேரம், பத்து மணிநேரம் எனத் தொடர்ந்து முகக்கவசத்தை அணிந்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு சிரமமாக இருப்பதில்லையா!! சற்றே அவர்களை நினைத்துப் பாருங்கள், நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நாமும் அசட்டையாக இருக்கக் கூடாது, மற்றவர்களையும் அப்படி இருக்க அனுமதிக்கக் கூடாது. ஒருபுறத்தில் நாம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு எச்சரிக்கையோடும், விழிப்போடும் போராட வேண்டி இருக்கிறது என்றால் வேறொரு புறத்தில் கடினமான உழைப்பால், தொழில், வேலை, படிப்பு என நாம் ஆற்றிவரும் கடமைகளில் வேகத்தைக் கூட்டியாக வேண்டும், அவற்றையும் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். நண்பர்களே, கொரோனா காலத்தில் நமது கிராமப்புறங்கள் தான் நாடு முழுவதற்கும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது. கிராமவாசிகள், கிராமப் பஞ்சாயத்துக்கள் ஆகியோரிடமிருந்து பல நல்ல முயற்சிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. ஜம்முவில் இருக்கும் த்ரேவா கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் பல்பீர் கௌர். தனது பஞ்சாயத்தில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு quarantine centre, அதாவது தனியிருப்பு மையத்தை ஏற்படுத்தினார் பல்பீர் கௌர் அவர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்துக்கு வருவோருக்கு என வரும் வழியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தங்கள் கைகளைக் கழுவுவதில் யாருக்கும் எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல, தனது தோள்களிலே spray pump, அதாவது தெளிப்பானைத் தொங்க விட்டுக் கொண்டு, தன்னார்வலர்களோடு இணைந்து, பஞ்சாயத்து முழுவதிலும் சரி, அக்கம்பக்கத்துப் பகுதிகளிலும் நோய்நீக்கும் பணியை பல்பீர் கௌர் மேற்கொண்டு வருகிறார். இவரைப் போலவே கஷ்மீரைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் பஞ்சாயத்துத் தலைவர் இருக்கிறார். காந்தர்பல்லின் சௌண்ட்லீவாரைச் சேர்ந்த ஜைதூனா பேகம் தான் அவர். கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில், வருமானத்துக்கும் வழிவகை செய்வது என ஜைதூனா பேகம் அவர்கள் தீர்மானித்தார். அவர் பகுதி முழுவதிலும் இலவச முகக்கவசம், இலவச ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை விநியோகம் செய்ததோடு, மக்களுக்கு நடவுக்கான விதைகளையும், ஆப்பிள் செடிகளையும் அளித்தார்; இதன் வாயிலாக மக்கள் விவசாயத்தில், தோட்டங்களில் தங்கள் தொழிலைத் தொடர முடியும். நண்பர்களே, கஷ்மீரத்திலே மேலும் ஒரு ஊக்கமளிக்கக்கூடிய நிகழ்வு. இங்கே அனந்தநாகின் ஊராட்சித் தலைவர் மொஹம்மத் இக்பால் அவர்களுக்கு தனது பகுதியில் நோய் நீக்கம் செய்ய தெளிப்பான் தேவைப்பட்டது. அவர் தகவல்களைத் திரட்டிய போது, இயந்திரத்தை வேறு ஒரு நகரத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது, மேலும் இதன் விலை ஆறு இலட்சம் ரூபாய் என்பது தெரிய வந்தது. இப்போது இக்பால் அவர்கள் தானே முயன்று ஒரு தெளிப்பானை வடிவமைத்தார், அதுவும் வெறும் 50,000 ரூபாய் செலவில். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும், அனைத்து இடங்களிலும், இப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கவல்ல சம்பவங்கள் தினம் தினம் வந்தவண்ணம் இருக்கின்றன, இவர்கள் அனைவரும் நம் வாழ்த்துக்களுக்கு உரியவர்கள். சவால் என்ற ஒன்று வந்த போது, அதை அதே அளவு வலிமையோடு எதிர்கொள்ளவும் செய்திருக்கிறார்கள் மக்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, சரியான அணுகுமுறை மூலமாக ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக, எப்போதும், சங்கடங்களை சந்தர்ப்பங்களாகவும், வினைகளை வளர்ச்சியாகவும் மாற்றுவதில் பேருதவி கிடைக்கிறது. இப்போது கொரோனா காலகட்டத்திலும் நமது நாட்டின் இளைஞர்களும் பெண்களும், தங்களுடைய திறன்கள்–திறமைகளை ஆதாரமாகக் கொண்டு புதிய வழிமுறைகளை எப்படித் துவக்கினார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஹாரில் பல பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், மதுபனி ஓவியம் வரையப்பட்ட முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள், சில நாட்களிலேயே இது மிகவும் பிரபலமாகிப் போனது. இந்த மதுபனி முகக்கவசம் ஒருபுறம் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அதே வேளையில், மக்களுக்கு ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் அளித்து வருகிறது. உங்களுக்கே தெரியும், வடகிழக்கில் மூங்கில் எப்படி ஏராளமாக விளைகிறது என்ற விஷயம். இப்போது இந்த மூங்கிலைக் கொண்டு திரிபுரா, மணிப்பூர், அஸாமைச் சேர்ந்த கைவினைஞர்கள் உயர்தரமான நீர்பாட்டில்கள், டிஃபன் பாக்ஸ்கள் ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். மூங்கிலில் செய்யப்பட்ட இவற்றின் தரத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அசந்தே போவீர்கள், மூங்கில் பாட்டில் இத்தனை நேர்த்தியா என்று ஆச்சரியப்படுவீர்கள், முக்கியமாக இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. இவற்றைத் தயாரிக்கும் போது, மூங்கில் முதலில் வேம்பு மற்றும் பிற மூலிகைச் செடிகளோடு சேர்த்துக் கொதிக்கவிடப்படுகிறது. இதன் காரணமாக இதில் மூலிகைத் தன்மையும் ஏற்படுத்தப்படுகிறது. சிறிய சிறிய உள்ளூர்ப் பொருட்களிலிருந்து எப்படி பெரும் வெற்றி கிடைக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும் கிடைக்கிறது. ஜார்க்கண்டின் பிஷுன்புரில் இப்போதெல்லாம் முப்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் lemon grass என்ற எலுமிச்சைப் புல்லினை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எலுமிச்சைப்புல் நான்கே மாதங்களில் விளைந்து பயிராகிறது, இதன் எண்ணெய், சந்தைகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இப்போதெல்லாம் இதற்கு அதிகத் தேவை உருவாகியிருக்கிறது. நான் நாட்டின் வேறு இரு பகுதிகளைப் பற்றியும் கூற விரும்புகிறேன். இவை இரண்டுமே ஒன்றிலிருந்து மற்றது பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பன, இந்தியாவை தற்சார்பு உடையதாக ஆக்க, தத்தம் பாணியில் சற்று வித்தியாசமான முயல்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஒன்று லத்தாக், மற்றது கட்ச். லே–லத்தாக் என்ற பெயர்களைக் கேட்டவுடனேயே அழகு கொஞ்சும் பள்ளத்தாக்குகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் கருத்தை அள்ளும், தூய்மையான தென்றல் காற்று நம்மை ஸ்பர்ஸிக்கும் உணர்வு உண்டாகும். அதே வேளையில் கட்ச் பகுதி என்றவுடன் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பாலைவனம், பசுமையேதும் இல்லாத வறண்ட நிலம் ஆகிய காட்சிகளே நம் மனதில் வந்து அலைமோதும். லத்தாக்கிலே ஒரு சிறப்பான பலம் உண்டு, இதன் பெயர் ஆப்ரிகாட் அதாவது பாதாமி. இந்தப் பொருள் ஒரு பகுதியின் பொருளாதார நிலையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்றாலும், விநியோகச் சங்கிலி, தீவிரமான பருவநிலை போன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குறைவான பாதிப்பு ஏற்படும் வகையில் இன்று ஒரு புதுமை புகுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு dual system-இருவகை முறை, இதன் பெயர் solar apricot dryer and space heater, அதாவது சூரிய சக்தியால் இயங்கும் பாதாமி உலர்த்தி மற்றும் சூழல் வெப்பமுண்டாக்கி. இந்தக் கருவி பாதாமியையும் இன்னும் பிற பழங்களையும் காய்கறிகளையும், தேவைக்கேற்ப சுகாதாரமான முறையில் உலர்த்துகிறது. முன்பெல்லாம், பாதாமி நிலங்களுக்கு அருகிலே உலர்த்தும் போது, பாதிப்பு ஏற்பட்டு வந்ததோடு கூடவே, தூசியும், மழைநீரும் காரணமாக பழங்களின் தரம் பாதிக்கப்பட்டு வந்தது. இன்னொரு புறமோ, இப்போது கட்சில் விவசாயிகள் dragon fruits என்ற ட்ராகன் பழங்களைப் பயிர் செய்வதில் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கட்சிலே ட்ராகன் பழங்களா என்று கேட்பவர்கள் ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். ஆனால் அங்கே, இன்று பல விவசாயிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். பழத்தின் தரம், குறைவான நிலத்தில் அதிக விளைச்சல் என்ற திசையில் கணிசமான புதுமை புரியப்பட்டு வருகிறது. இந்தப் பழங்கள் மீது மக்களிடம் இருக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக காலை உணவின் போது இது எடுத்துக் கொள்வது அதிகரித்திருக்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ட்ராகன் பழங்களை நாம் இறக்குமதி செய்யத் தேவையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே கட்ச் விவசாயிகளின் மனவுறுதியாக இருக்கிறது, இது தானே சுயசார்பு பாரதம்!!
நண்பர்களே, புதிய ஒன்றை நாம் புரிய வேண்டும் என்று எண்ணும் போது, யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயங்கள் சாத்தியமாகின்றன. எடுத்துக்காட்டாக, பிஹாரைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாதாரணமான வேலைகளைச் செய்து வந்தார்கள். தாங்கள் இனி முத்துக்களை உருவாக்கப் போவதாக ஒருநாள் அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களுடைய பகுதிகளில் யாருக்கும் இதன் வழிமுறை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் முதன்மையாக அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், ஜெய்புர் மற்றும் புவநேஸ்வர் சென்று பயிற்சி மேற்கொண்டார்கள், தங்கள் கிராமத்திலேயே முத்துக்களை விளைவிக்கத் தொடங்கினார்கள். இன்று இவர்கள் சுயமாக வருமானம் ஈட்டி வருவதோடு, முஸஃபர்புர், பேகுசராய், பட்னா ஆகிய இடங்களில், பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயிற்சியும் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் எத்தனை பேர்களுக்குத் தற்சார்புப் பாதை திறக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்!!
நண்பர்களே, சில நாட்கள் கழித்து ரக்ஷாபந்தன் புனிதமான நாள் வரவிருக்கிறது. பலர், பல அமைப்புகள் இந்த முறை ரக்ஷாபந்தனை வித்தியாசமான முறையில் கொண்டாடும் இயக்கத்தை செயல்படுத்தி வருவதை என்னால் காண முடிகிறது. பலர் இதை உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதோடு இணைத்தும் வருகிறார்கள். நமது பண்டிகைகள் காரணமாக நமது சமூகத்தில், நமது வீடுகளுக்கு அருகே இருப்போருக்கு வியாபாரம் பெருக வேண்டும், அவர்களும் பண்டிகைகளை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் எனும் போது தான் பண்டிகையின் ஆனந்தம் உண்மையில் பெருகி உணரப்படுகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் கைத்தறிப் பொருட்கள், நமது கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் பலநூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான கௌரவம் நிறைந்த நமது வரலாறு பொதிந்திருக்கிறது. இந்தியாவின் கைத்தறிப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு கூடவே இவற்றைப் பற்றி நாம் அதிகம் பேருக்குச் சொல்லவும் வேண்டும் என்பதை நோக்கியே நமது முயற்சிகள் அமைய வேண்டும். இந்தியாவின் கைத்தறிப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் எத்தனை வளமானவையாகவும், வேறுபட்டதாகவும் இருக்கின்றன என்பதை எந்த அளவுக்கு உலகம் உணர்கிறதோ, உணர்கிறதா அந்த அளவுக்கு உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆதாயம் ஏற்படும்.
நண்பர்களே, குறிப்பாக எனது இளைய நேசங்களே, நமது நாடு மாற்றம் கண்டு வருகிறது. எப்படி மாறி வருகிறது? எத்தனை வேகமாக மாறி வருகிறது? எந்தெந்தத் துறைகளில் மாறி வருகிறது? ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு நாம் நமது கவனத்தைச் செலுத்தினால், நமக்குத் திகைப்பு மேலிடும். ஒரு காலத்தில், விளையாட்டு தொடங்கி, பிற துறைகளிலும் பெரும்பாலானோர், ஒன்று பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் அல்லது பெரும் குடும்பங்கள் அல்லது புகழ்பெற்ற பள்ளிகள்–கல்லூரிகளில் படிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போதோ நாடு மாறி வருகிறது. கிராமங்களிலிருந்து, சிறிய நகரங்களிலிருந்து, எளிய குடும்பங்களிலிருந்து நமது இளைஞர்கள் வெளிப்படுகிறார்கள். வெற்றியின் உச்சங்களைத் தொடுகிறார்கள். இவர்கள் சங்கடங்களுக்கு இடையேயும் கூட, புதியபுதிய கனவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறி வருகிறார்கள். இப்படிப்பட்ட சிலரது பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்று மனதின் குரலில் அப்படிப்பட்ட சில திறமைசாலிக் குழந்தைகளிடம் நாம் பேச இருக்கிறோம். இப்படி ஒரு புத்திகூர்மை மிக்கவர் தான் க்ருத்திகா நாந்தல். கிருத்திகா ஹரியாணாவின் பானீபத்தைச் சேர்ந்தவர்.
மோதி ஜி – ஹெலோ, க்ருத்திகா அவர்களே, வணக்கம்.
க்ருத்திகா – வணக்கம் சார்.
மோதிஜி – தேர்விலே சிறப்பான மதிப்பெண்கள் பெற்றமைக்கு பலப்பல வாழ்த்துக்கள்.
கிருத்திகா – நன்றி சார்.
மோதி ஜி – இப்போதெல்லாம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லியே நீங்கள் களைத்துப் போயிருப்பீர்கள், இல்லையா. ஏகப்பட்ட பேர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருப்பார்களே!!
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களை அவர்களுக்குத் தெரியும் என்பதால், உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுபவர்களும் பெருமையாக உணர்வார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
கிருத்திகா – சார், மிகவும் நன்றாக இருக்கிறது. பெற்றோருக்கும் பெருமையாக இருக்கிறது.
மோதி ஜி – சரி, உங்களுக்கு அதிக கருத்தூக்கம் அளித்த விஷயம் என்ன, சொல்லுங்கள்.
கிருத்திகா – சார், என்னுடைய பெரிய உத்வேகம் என்றால் அது என் தாயார் தான்.
மோதி ஜி – பலே, சரி நீங்கள் உங்கள் தாயாரிடம் எதைக் கற்றுக் கொண்டீர்கள்?
கிருத்திகா – சார், அவர் தனது வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களைச் சந்தித்தவர்; இருந்தாலும் கூட, தைரியமும், பலமும் வாய்ந்தவர். அவரைப் பார்த்துப்பார்த்துத் தான் எனக்கு இந்த அளவுக்கு உத்வேகம் கிடைத்தது, நானும் அவரைப் போல ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.
மோதி ஜி – உங்கள் தாயார் எதுவரை படித்திருக்கிறார்?
கிருத்திகா – சார், இளங்கலைப் படிப்பு படித்திருக்கிறார் அவர்.
மோதி ஜி – ஓ, இளங்கலை வரை படித்திருக்கிறாரா?
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி, அப்படியென்றால் உங்கள் தாயார் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாரா?
கிருத்திகா – ஆமாம் சார். கற்றுக் கொடுப்பார், மேலும் உலகின் யதார்த்தங்கள் பற்றியும் நிறைய கூறுவார்.
மோதி ஜி – உங்களை அவர் அதட்டுவார் தானே??
கிருத்திகா – ஆஹா, அதட்டவும் செய்வார் சார்.
மோதி ஜி – சரிம்மா, நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?
கிருத்திகா – சார், நான் டாக்டர் ஆக விரும்புகிறேன்.
மோதி ஜி – அட பரவாயில்லையே!!
கிருத்திகா – MBBS
மோதி ஜி – ஆனால் டாக்டராவது ஒன்றும் எளிதான விஷயம் இல்லையே!!
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – பட்டம் வேண்டுமானால் கிடைக்கலாம், ஏனென்றால் நீங்கள் மிகவும் புத்திக்கூர்மையுடைய குழந்தை; ஆனால் டாக்டர்களுடைய வாழ்க்கை, சமூகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இரவிலும் கூட அவர்களால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது. ஒரு நோயாளியுடைய அழைப்பு வரும், மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும், உடனடியாக விரைய வேண்டியிருக்கும், அதாவது ஒருவகையில் தினமும் 24 மணி நேரம், ஆண்டு முழுக்க 365 நாட்கள் இப்படித் தான். மருத்துவர்களின் வாழ்க்கை, மக்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறது.
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – மேலும் அபாயமும் இருக்கிறது; இன்றைய நிலையில் பலவகையான நோய்கள் இருக்கின்றன எனும் போது மருத்துவர்களும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி க்ருத்திகா, ஹரியாணா மாநிலம் விளையாட்டுத் துறையில் இந்தியா முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது, ஊக்கமளிப்பதில் முன்னணி இடத்தை வகிப்பது.
கிருத்திகா– ஆமாம் சார்.
மோதி ஜி – அப்படியென்றால் நீங்களும் ஏதாவது விளையாட்டுக்களில் ஈடுபடுவதுண்டா, ஆர்வம் இருக்கிறதா?
கிருத்திகா – சார், நான் பள்ளியில் கூடைப்பந்து விளையாடுவதுண்டு.
மோதி ஜி – அப்படி என்றால் அதிக உயரமானவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் உயரம் எத்தனை?
கிருத்திகா – இல்லை சார், என் உயரம் 5 அடி 2 அங்குலம் தான்.
மோதி ஜி – சரி இந்த விளையாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது?
கிருத்திகா – சார், அதன் மீது எனக்கு ஆழமான ஆர்வம் உண்டு.
மோதி ஜி – பலே, சரி கிருத்திகா அவர்களே, உங்கள் தாயாருக்கு என் தரப்பிலிருந்து வணக்கங்களைத் தெரிவியுங்கள், அவர் தான் உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர். உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். உங்கள் தாயாருக்கு வணக்கம், உங்களுக்கு பலப்பல பாராட்டுக்கள், பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கிருத்திகா – நன்றி சார்.
வாருங்கள், இப்போது கேரளத்தின் எர்ணாகுளம் செல்வோம். கேரளத்தின் ஒரு இளைஞரோடு உரையாடுவோம்.
மோதி ஜி – ஹெலோ
விநாயக் – ஹெலோ சார் வணக்கம்.
மோதி ஜி – சரி விநாயக், வாழ்த்துக்கள்.
விநாயக் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – சபாஷ் விநாயக், சபாஷ்
விநாயக் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – உற்சாகம் எப்படி இருக்கு?
விநாயக் – நிறைய இருக்கு.
மோதி ஜி – நீங்கள் ஏதாவது விளையாட்டு விளையாடுவதுண்டா?
விநாயக் – பேட்மிண்டன்
மோதி ஜி – பேட்மிண்டன்
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – பள்ளியிலா அல்லது பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ள சந்தர்ப்பம் வாய்த்ததா?
விநாயக் – பள்ளியிலேயே கொஞ்சம் பயிற்சி கிடைத்தது சார்.
மோதி ஜி – ம்ம்
விநாயக் – எங்கள் ஆசிரியர்கள் அளித்தார்கள்.
மோதி ஜி – ம்ம்
விநாயக் – இதனால் வெளியிடங்களில் பங்கெடுக்க எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது.
மோதி ஜி – பலே.
விநாயக் – பள்ளியின் பிரதிநிதியாக.
மோதி ஜி – எத்தனை மாநிலங்களுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள்?
விநாயக் – நான் கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன்.
மோதி ஜி – கேரளா மற்றும் தமிழ்நாடு மட்டும் தானா.
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி, நீங்கள் தில்லி வர விரும்புகிறீர்களா?
விநாயக் – ஆமாம் சார், இப்போது நான் மேல் படிப்பிற்காக தில்லி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன்.
மோதி ஜி – அட, நீங்கள் தில்லி வருகிறீர்களா?
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – வரும் ஆண்டுகளில் பள்ளி இறுதித் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஏதேனும் செய்தி அளிக்க விரும்புகிறீர்களா?
விநாயக் – கடினமான உழைப்பு, முறையான நேரப் பயன்பாடு.
மோதி ஜி – அதாவது சரியான நேர மேலாண்மை.
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – விநாயக், உங்கள் பொழுதுபோக்குகள் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
விநாயக் – பேட்மிண்டன், துடுப்புப் படகோட்டுதல்.
மோதி ஜி – சமூக ஊடகங்களில் நீங்கள் அதிகம் பங்கெடுப்பவரா?
விநாயக் – இல்லை சார், பள்ளியில் மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது சார்.
மோதி ஜி – அப்படியென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி விநாயக், மீண்டுமொரு முறை வாழ்த்துக்கள், ஆல் தி பெஸ்ட்.
விநாயக் – நன்றி சார்.
வாருங்கள்! நாம் இப்போது உத்திரபிரதேசம் பயணிப்போம். உத்திரபிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த உஸ்மான் சைஃபீயோடு உரையாடுவோம்.
மோதி ஜி – ஹெலோ உஸ்மான், பலப்பல பாராட்டுக்கள்.
உஸ்மான் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – சரி உஸ்மான் சொல்லுங்கள், நீங்கள் எதிர்பார்த்தது போலவே தேர்வு முடிவுகள் இருந்ததா, இல்லை உங்கள் மதிப்பெண்கள் குறைந்ததா?
உஸ்மான் – இல்லை சார், நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் தாம் கிடைத்திருக்கின்றன. என் பெற்றோரும் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
மோதி ஜி – பலே, சரி உங்கள் குடும்பத்தில் சகோதரர்களும் இருக்கிறார்களா, அவர்களும் உங்களைப் போலவே புத்திக்கூர்மை உடையவர்களா?
உஸ்மான் – எனக்கு ஒரு சகோதரன் உண்டு, சேட்டைக்காரன் அவன்.
மோதி ஜி – சரி.
உஸ்மான் – அவனுக்கு என்னைப் பற்றி மிகவும் பெருமையாக இருக்கிறது.
மோதி ஜி – நல்லது. உங்கள் பாடங்களில் உங்களுக்கு அதிகம் பிடித்தமான பாடம் எது?
உஸ்மான் – கணிதம் சார்.
மோதி ஜி – அட, கணிதம் உங்களுக்கு அதிகம் பிடிக்குமா? எப்படி இது? இதில் உங்களுக்கு அதிகம் உத்வேகம் அளித்த ஆசிரியர் யார்?
உஸ்மான் – சார், எங்களுடைய கணித ஆசிரியர் ரஜத் சார் தான். அவர் தான் எனக்கு உத்வேகம் அளித்தவர், மிக அருமையாக பாடம் எடுப்பார். கணிதப் பாடம் எனக்கு தொடக்கத்திலிருந்தே விருப்பமான பாடம், மிகவும் சுவாரசியமானதும் கூட சார்.
மோதி ஜி – ஓ.
உஸ்மான் – எந்த அளவுக்கு பழகுகிறோமோ, அந்த அளவுக்கு அதிக ஆர்வம் ஏற்படும் ஆகையால் இது எனக்கு விருப்பமான பாடம்.
மோதி ஜி – அப்படியா? சரி, online vedic mathematics வகுப்புகள் நடத்தப்படுகிறதே, உங்களுக்குத் தெரியுமா?
உஸ்மான் – ஆமாம் சார்.
மோதி ஜி – இதை எப்போதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?
உஸ்மான் – இல்லை சார்.
மோதி ஜி – கணிப்பொறியைக் கொண்டு எத்தனை வேகமாக நீங்கள் கணக்கிட முடியுமோ அதை விட அதிக வேகமாக vedic mathematics வாயிலாக செய்ய முடியும், நீங்கள் இதைப் பழகும் போது, நீங்கள் ஏதோ மாயாஜாலம் செய்கிறீர்கள் என்பதாக உங்கள் நண்பர்களுக்கு. மிக எளிய உத்திகள் பயன்படுத்தப் படுகின்றன, இவையெல்லாம் இப்போது ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.
உஸ்மான் – சரி சார்.
மோதி ஜி – உங்களுக்குக் கணிதப்பாடத்தில் விருப்பம் இருப்பதால், புதிய புதிய விஷயங்களை நீங்கள் கற்க முடியும்.
உஸ்மான் – சரி சார்.
மோதி ஜி – சரி உஸ்மான், உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
உஸ்மான் – என் ஓய்வு நேரத்தில் நான் ஏதாவது ஒன்றை எழுதுவேன். எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும் சார்.
மோதி ஜி – பலே, அப்படியென்றால் கணிதத்திலும் ஆர்வம், இலக்கியத்திலும் ஆர்வம் என்று சொல்லுங்கள்.
உஸ்மான் – ஆமாம் சார்.
மோதி ஜி – என்ன எழுதுகிறீர்கள்? கவிதைகள்?, பாடல்கள்?
உஸ்மான் – நாட்டுநடப்பு பற்றித் தொடர்புடைய ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதுவேன் சார்.
மோதி ஜி – சரி.
உஸ்மான் – புதியபுதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன, ஜிஎஸ்டி, பிறகு நாணயவிலக்கல், இப்படிப்பட்ட விஷயங்கள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே!! கல்லூரிப் படிப்பு தொடர்பாக உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
உஸ்மான் – கல்லூரிப் படிப்பைப் பொறுத்த மட்டில் jee mainsஇல் எனது முதல் கட்டத் தேர்ச்சி ஆகி விட்டது. வரும் செப்டெம்பர் மாதம் நான் இரண்டாவது முறை முயல இருக்கிறேன். என்னுடைய பிரதான இலக்கு, முதலில் ஐஐடியில் இளங்கலைப் பட்டம் பெற வேண்டும், பிறகு, ஆட்சிப்பணிக்கான தேர்வுகளை எழுதி, அதில் வெற்றி பெற வேண்டும்.
மோதி ஜி – சபாஷ்! அப்படியென்றால் உங்களுக்குத் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் இருக்கிறதா?
உஸ்மான் – ஆமாம் சார். ஆகையினால் தான் நான் தகவல் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அதுவும் சிறந்த ஐஐடியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மோதி ஜி – நல்லது உஸ்மான். என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். உங்கள் சகோதரன் மிகவும் சேட்டை செய்வான் என்பதால் உங்கள் பொழுது நல்லவிதமாகக் கழியும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பெற்றோருக்கும் என் தரப்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம் உங்களுக்கு இப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள், உங்கள் மனோபலத்தைப் பெருக்கியிருக்கிறார்கள், படிப்புடன் கூட நீங்கள் நாட்டு நடப்புகள் மீதும் கவனம் செலுத்துகிறீர்கள், எழுதுகிறீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுதுவதால் என்ன ஆதாயம் என்றால், உங்கள் எண்ணங்களில் கூர்மை உண்டாகிறது, பல நன்மைகள் விளைகின்றன. சரி, பலப்பல பாராட்டுக்கள்.
உஸ்மான் – நன்றி சார்.
வாருங்கள்! தென்னாடு செல்வோம். தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கன்னிகாவோடு உரையாடுவோம், கன்னிகா கூறுவது உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
மோதி ஜி – கன்னிகா அவர்களே, வணக்கம்.
கன்னிகா – வணக்கம் சார்.
மோதி ஜி – எப்படி இருக்கிறீர்கள்?
கன்னிகா – நன்றாக இருக்கிறேன் சார்.
மோதி ஜி – முதன்மையாக நீங்கள் பெற்றிருக்கும் பெரும் வெற்றிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
கன்னிகா – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – நாமக்கல் என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு ஆஞ்ஜநேயர் கோயில் தான் நினைவுக்கு வருகிறது.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இனிமேல் எனக்கு உங்களோடு உரையாடியதும் நினைவுக்கு வரும்.
கன்னிகா – நன்றி சார்.
மோதி ஜி – மீண்டும் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
மோதி ஜி – நீங்கள் தேர்வுகளுக்காக கடுமையாக உழைத்திருப்பீர்கள் இல்லையா? தேர்வுகளுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளும் அனுபவம் எப்படி இருந்தது?
கன்னிகா – நாங்கள் தொடக்கத்திலிருந்தே கடினமாக உழைத்து வருகிறோம் சார். நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்றாலும், முடிவு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.
மோதி ஜி – உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது?
கன்னிகா – 485 அல்லது 486 கிடைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மோதி ஜி – ஆனால் இப்போது?
கன்னிகா – 490.
மோதி ஜி – சரி, உங்கள் குடும்பத்தார் ஆசிரியர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கிறது?
கன்னிகா – அவர்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம், பெருமிதம் சார்.
மோதி ஜி – உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடம் எது?
கன்னிகா – கணிதப்பாடம் சார்.
மோதி ஜி – ஓ, உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
கன்னிகா – நான் முடிந்தால் AFMCயில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன் சார்.
மோதி ஜி – உங்கள் குடும்பத்தாரும் மருத்துவத் துறையில் இருக்கிறார்களா?
கன்னிகா – இல்லை சார், என் தகப்பனார் ஒரு ஓட்டுநர், என் சகோதரி மருத்துவப் படிப்பு படித்து வருகிறாள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே! நான் முதற்கண் உங்கள் தகப்பனாருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உங்களையும் உங்கள் சகோதரியையும் நன்கு கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் செய்து வருவது பெரும் சேவை.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – அவர் அனைவருக்கும் கருத்தூக்கம் அளித்து வருகிறார்.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும், உங்கள் தந்தையாருக்கும், உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
நண்பர்களே,
இப்படி ஏகப்பட்ட இளைய நண்பர்கள் இருக்கிறார்கள், கடினமான சூழ்நிலைகளிலும்கூட, அவர்களின் தன்னம்பிக்கை, அவர்களுடைய வெற்றிக்கதைகள், இவையெல்லாம் நமக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன. இயன்ற அளவு இளைய நண்பர்களோடு உரையாட வேண்டும் என்ற ஆவல் என்னை உந்தியது; ஆனால் காலம் குறைவாக இருப்பதால் இயலவில்லை. நீங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை, உங்கள் எழுத்துக்களிலேயே வடித்து, நாட்டுக்கு ஊக்கமளியுங்கள், உங்களைப் பற்றிய உங்கள் கதையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று என் இளைய நெஞ்சங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஏழு கடல்கள் தாண்டி, பாரத நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலே இருக்கும் சிறிய நாட்டின் பெயர் சூரினாம். இந்தியாவுக்கும் சூரினாமுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 100 ஆண்டுகளை விடவும் வெகு முன்பாக, நம் நாட்டவர் அங்கே சென்றார்கள், அதைத் தங்கள் நாடாக ஆக்கிக் கொண்டார்கள். இன்று 4ஆவது 5ஆவது தலைமுறையாக அங்கே வசிக்கிறார்கள். இன்றைய நிலையில் சூரினாமில் நான்கில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அங்கே இருக்கும் பேசப்படும் மொழிகளில் ஒன்றின் பெயர் சர்நாமீ என்பதை நீங்கள் அறிவீர்களா? இது போஜ்புரியின் ஒரு வழக்குமொழி. இந்தக் கலாச்சாரத் தொடர்புகள் இந்தியர்களான நமக்கு பெரும் பெருமிதத்தைக் கொடுக்கிறது.
உள்ளபடியே, ஸ்ரீ சந்திரிகா ப்ரஸாத் சந்தோகீ என்பவர் சூரிநாம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் இந்தியாவின் நண்பர் என்பதோடு, 2018ஆம் ஆண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கான நாடாளுமன்ற மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டுமிருக்கிறார். ஸ்ரீ சந்திரிகா பிரஸாத் சந்தோகீ அவர்கள் வேத மந்திரங்கள் முழங்க சபதமேற்றுக் கொண்டார், சம்ஸ்க்ருதத்தில் பேசினார். அவர் வேதங்களை மேற்கோள் காட்டி, ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்பதோடு கூடவே, தனது சபதமேற்பை நிறைவு செய்தார். தனது கரங்களில் வேதத்தை வைத்துக் கொண்டு அவர், நான், சந்திரிகா பிரஸாத் சந்தோகீ என்று தொடங்கி மேலே என்ன சொன்னார் தெரியுமா? அவர் ஒரு வேத மந்திரத்தை உச்சரித்தார்.
ஓம் அக்நே வ்ரதபதே வ்ரதம் சரிஷ்யாமி தச்சகேயம் தன்மேராத்யதாம். இதமஹம்ந்ருதாத் சத்யமுபைமி.
अग्ने–व्रतपते व्रतं चरिष्यामि, तच्छकेयं तन्मे राध्यताम।इदं अहं अनृतात् सत्यम् उपैमि।।
அதாவது, ஹே அக்நே, சங்கல்பத்தின் தேவனே, நான் ஒரு உறுதி மேற்கொள்கிறேன். இதை செயல்படுத்த எனக்குத் தேவையான சக்தியையும், திறமையையும் அளியுங்கள். பொய்மையிலிருந்து நான் விலகி இருக்கவும், வாய்மையை நோக்கி என் பயணம் தொடரவும் எனக்கு ஆசிகளை நல்குங்கள் என்பதே இதன் பொருள். உண்மையிலேயே இது நம்மனைவருக்கும் கௌரவத்தை அளிக்கவல்ல ஒரு விஷயம்.
நான் ஸ்ரீ சந்திரிகா ப்ரஸாத் சந்தோகீ அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய நாட்டுப்பணி மிகச் சிறப்பாக நடந்தேற 130 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்ற முறையில் பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இது பருவமழைக்காலமும் கூட. கடந்த முறை நான் உங்களிடம் என்ன கூறினேன்! பருவமழைக்காலத்தில் மாசு காரணமாகவும், அவற்றிலிருந்து பெருகக்கூடிய நோய்களால் அபாயம் இருக்கிறது, மருத்துவமனைகளில் கூட்டம் பெருகலாம் என்பதால், நீங்கள் தூய்மையின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத கஷாயம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வாருங்கள். கொரோனா பெருந்தொற்று நிலவும் இந்த வேளையில், நாம், பிற நோய்களிலிருந்து விலகி இருப்போம். நாம் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் நம்மை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
நண்பர்களே, மழைக்காலத்தில் நாட்டின் ஒரு பெரிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. பிஹார், அஸாம் போன்ற மாநிலங்களில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கணிசமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது, ஒரு புறம் கொரோனா என்றால் மறுபுறமோ இன்னொரு சவால் என்ற நிலையில் அனைத்து அரசுகளும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழுக்கள், மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பேரிடரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து வகைகளிலும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஆதரவாக நாடு ஒன்று திரண்டிருக்கிறது.
நண்பர்களே, அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திக்கும் வேளையில், அதற்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 15 வந்து விடும். இந்த முறை ஆகஸ்ட் 15ம், வித்தியாசமான சூழ்நிலைகளில் இருக்கும் – கொரோனா என்ற பெருந்தொற்றுக்கு இடையே. என்னுடைய இளைய நண்பர்களிடமும், நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நாம் இந்த சுதந்திரத் திருநாளன்று பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மனவுறுதியை மேற்கொள்வோம், தற்சார்பு பாரதம் உருவாக்குவோம், புதியன ஏதாவது ஒன்றைக் கற்போம், கற்பிப்போம், நமது கடமைகளை ஆற்றுவோம் என்ற உறுதிப்பாடுகளை நாம் மேற்கொள்வோம். பல மகத்தான மனிதர்களின் தவம்–தியாகத்தின் காரணமாகவே நாம் இன்று இந்த உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறோம். நாட்டை உருவாக்குவதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த அப்படிப்பட்ட மனிதகுல மாணிக்கங்களில் ஒருவர் தான் லோக்மான்ய திலகர். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி லோக்மான்ய திலகருடைய 100ஆவது நினைவு நாள் வருகிறது. லோகமான்ய திலகருடைய வாழ்க்கை நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய ஒன்று. அது நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம்.
அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, மீண்டும் ஏகப்பட்ட விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோம், புதியன கற்போம், அவற்றை அனைவரோடும் பகிர்வோம். நீங்கள் அனைவரும் உங்களை நன்றாகப் பராமரித்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். நாட்டுமக்கள் அனைவருக்கும், வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில் அதிகம் இடம் பிடித்திருந்தன என்பது இயல்பான விஷயம் தான் என்றாலும், இன்றைய நாட்களில், தொடர்ந்து ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்யப்பட்டு வருகிறது என்றால், ‘இந்த ஆண்டு எப்போது கடந்து போகும்’ என்பது தான். ஒருவர் மற்றவருக்கு தொலைபேசிவழி தொடர்பு கொண்டால், அப்போது இந்த விஷயம் தான் முதன்மையானதாக இருக்கிறது; இந்த ஆண்டு ஏன் விரைவாகக் கடந்து போக மறுக்கிறது?? நண்பர்களுக்கு இடையில் உரையாடல்களில், இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இல்லை, 2020 சுபமானதாக இல்லை என்றே வெளிப்படுத்துகிறார்கள். எப்படியாவது இந்த ஆண்டு விரைவாகக் கடந்து சென்று விடவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள்.
நண்பர்களே, இத்தகைய பேச்சுக்கள் எல்லாம் ஏன் நடைபெறுகின்றன என்று சில வேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. 6-7 மாதங்களுக்கு முன்பாக, கொரோனா போன்றதொரு சங்கடநிலை வரும் என்றோ, அதற்கு எதிரான போராட்டம் இத்தனை நீண்டிருக்கும் என்றோ நாம் நினைத்துப் பார்த்ததுண்டா? இந்தச் சங்கடம் ஒருபுறம் என்றால், நெருப்பிற்கு நெய் வார்த்தது போல தேசம் தினம் சந்தித்துவரும் புதிதுபுதிதான சவால்கள் இன்னொரு புறம். சில நாட்கள் முன்பாகத் தான் நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் அம்ஃபான் சூறாவளியின் கோரத் தாண்டவம்….. தொடர்ந்து மேற்குக் கரையோரத்தை நிஸர்க் சூறாவளியின் தாக்குதல். பல மாநிலங்களைச் சேர்ந்த நமது விவசாய சகோதர சகோதரிகள், வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்….. இன்னும் இவை தவிர, நாட்டின் பல பாகங்களில் சின்னச்சின்ன நிலநடுக்கங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன; இவை போதாதென்றால் நமது அண்டைநாடுகள் சில புரிந்துவரும் செய்கைகளையும், முன்னிறுத்தும் சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில், ஒரே நேரத்தில் இத்தனை பேரிடர்கள், இந்த அளவிலான பேரிடர்கள், மிக அரிதாகவே நடக்கின்றன. இப்போது நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்றால், எங்கோ சின்னச்சின்ன சம்பவம் நடந்தாலும்கூட, அவற்றையும் இந்த சவால்களோடு இணைத்தே மக்கள் நோக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
நண்பர்களே, இடர்கள் வருகின்றன, சங்கடங்கள் வருகின்றன ஆனால், கேள்வி என்னவென்றால், இந்த இடர்கள் காரணமாக 2020ஆம் ஆண்டினை மோசமான ஆண்டாக நாம் கருத வேண்டுமா என்பது தான். முந்தைய ஆறு மாதங்கள் கழிந்த விதத்தைப் பார்த்து, இதன் காரணமாக ஆண்டு முழுவதுமே மோசமானது என்று முடிவு செய்வது சரியா? சரியில்லை. எனதருமை நாட்டுமக்களே, கண்டிப்பாக சரியில்லை. ஓராண்டில் ஒரு சவால் வந்தாலும் சரி, 50 சவால்கள் வந்தாலும் சரி, எண்ணிக்கை கூடுதல்-குறைவாக இருப்பதனால் அந்த ஆண்டு மோசமான ஆண்டாகி விடாது. பாரத நாட்டின் சரித்திரத்தின் ஏடுகளை நாம் புரட்டிப் பார்த்தோமேயானால், எத்தனை எத்தனையோ இடர்கள்-சங்கடங்களை எல்லாம் கடந்து, அவற்றை வெற்றிகொண்டு, மேலும் ஒளிவிட்டுப் பிரகாசித்து வந்திருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக, பல்வேறு தாக்குதல்கள் பாரதத்தின் மீது தொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன, பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன, பாரதம் என்ற நாடே வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும், அதன் கலாச்சாரம் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் மக்கள் கருதினார்கள்; ஆனால், இந்த அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் பாரதம் மேலும் பிரும்மாண்டமானதாக வளர்ந்து தழைத்தது.
நண்பர்களே, நம் மக்கள் மத்தியிலே ஒரு கருத்து உண்டு – படைத்தல் நிரந்தரமானது, படைத்தல் நீடித்திருப்பது என்பது தான் அது. இந்தப் பின்புலத்தில் எனக்கு ஒரு பாடலின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன –
यह कल-कल छल-छल बहती, क्या कहती गंगा धारा ?
युग-युग से बहता आता, यह पुण्य प्रवाह हमारा I
क्या उसको रोक सकेंगे, मिटनेवाले मिट जाएं,
कंकड़-पत्थर की हस्ती,क्या बाधा बनकर आए I
கலகலவெனவே சலசலவெனவே பெருகும் கங்கை என்ன உரைக்கிறது? யுகயுகமாக நமது புண்ணிய பிரவாகம் தொடர்ந்து சீறிப்பாய்கிறது. மேலும் இந்தப் பாடலிலே…….
இந்தப் பெருக்கை தடுப்போர் இருந்தால், அவர்கள் தகர்க்கப்படுவார்கள், இம்மியளவு சிறிய கற்களா பெருக்கைத் தடுக்கும் நீங்கள் சொல்லுங்கள்.
பாரத நாட்டிலும், ஒருபுறம் பெரும் சங்கடங்கள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்த நிலையில், இந்த அனைத்து இடர்களையும் தகர்த்து, பலப்பல புதிய படைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. புதிய இலக்கியங்கள் உருவாயின, புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, புதிய சித்தாந்தங்கள் இயற்றப்பட்டன, சங்கடம்நிறைக் காலத்தில்கூட, படைத்தல் செயல்பாடு ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து நடைபெற்றுவந்தது, நமது கலாச்சாரம் தழைத்து-செழித்து வந்தது, நாடும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்தது. பாரதநாடு எப்போதும் விக்னங்களை, வெற்றிக்கான படிக்ககட்டுகளாக மாற்றிக் கொண்டே வந்தது. இந்த உணர்வோடு நாம், இன்றும் கூட, இந்த அனைத்துச் சங்கடங்களுக்கு இடையேயும் முன்னேறி வர வேண்டும். நீங்களும் இந்த எண்ணத்தை மனதில் தாங்கி முன்னேறினீர்கள் என்றால், 130 கோடி நாட்டுமக்களும் முன்னேறுவார்கள், இந்த ஆண்டு, நாட்டிற்கு ஒரு புதிய சாதனை படைக்கும் ஆண்டாக மிளிரும். இந்த ஆண்டிலே தான், நாடு புதிய இலக்குகளை எட்ட முடியும், புதிய எழுச்சிகளை நோக்கி உயர முடியும், புதிய சிகரங்களை முத்தமிட முடியும். 130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, சங்கடம் என்னதான் பெரியதாக இருந்தாலும், பாரதநாட்டின் பண்பாடு, தன்னலமற்ற சேவை என்ற உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. எப்படி பாரதமானது சங்கடம் ஏற்படும் காலத்திலெல்லாம் உலகிற்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளதோ, அதையொட்டி இன்று அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் நம் நாட்டின் பங்களிப்பு மேலும் பலமாகி இருக்கிறது. உலகமும் இந்த வேளையில் பாரதத்தின் உலக சகோதரத்துவ உணர்வை அனுபவித்திருக்கிறது; அதே வேளையில் தனது இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாரதத்திடம் இருக்கும் ஆற்றலையும், அதன் அர்ப்பணிப்பையும் கண்டது. லத்தாக்கில், பாரதநாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது. பாரதத்துக்கு, நட்பைப் பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும். பாரத அன்னையின் பெருமைக்கு சற்றேனும் களங்கம் ஏற்படுத்த விட மாட்டோம் என்பதை நமது வீரம்நிறை இராணுவ வீரர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.
நண்பர்களே, லத்தாக்கில் வீரமரணத்தைத் தழுவிய நமது இராணுவ வீரர்களின் சாகஸச் செயல்களை நாடு முழுவதும் போற்றுகிறது, தனது சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறது. நாடனைத்தும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது, அவர்கள் முன்னே தலைவணங்குகிறது. இந்த நண்பர்களின் குடும்பத்தாரைப் போலவே, ஒவ்வொரு இந்தியர் மனதிலும், இவர்களின் இழப்பு பெரும்வலியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது வீரம்நிறை நல்மைந்தர்களின் உயிர்த்தியாகத்தின் மீது அவர்களின் உறவினர்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பெருமிதம், தேசத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்று – இவை தான் தேசத்தினுடைய பலம். உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களின் பெற்றோர், தங்களுடைய மற்ற மகன்களையும் கூட இராணுவத்தில் சேவை செய்ய அனுப்பத் தயாராக இருப்பதையும் நீங்களே பார்த்திருக்கலாம். பிஹாரில் வசிக்கும் உயிர்த்தியாகி குந்தன் குமாரின் தகப்பனார் கூறிய சொற்கள் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தனது பேரப்பிள்ளைகளையும் தேசப் பாதுகாப்பின் பொருட்டு இராணுவச் சேவைக்கு அனுப்புவேன் என்றார் அவர். இந்தத் மனவுறுதி அனைத்து உயிர்த்தியாகிகளின் குடும்பங்களிலும் காணப்படுகிறது. உண்மையில், இவர்களின் குடும்பத்தாரின் தியாகம் வழிபாட்டுக்குரியது. பாரத அன்னையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எந்த மனவுறுதியோடு நமது வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ, அதே உறுதிப்பாடு நம்மனைவரின் இலட்சியமாக ஆக வேண்டும். நமது முயற்சிகள் அனைத்தும் இந்தத் திசையை நோக்கியவையாக இருக்க வேண்டும், இதனால் நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் சக்தி அதிகரிக்க வேண்டும், நாடு மேலும் திறம் படைத்ததாக ஆக வேண்டும், நாடு தற்சார்பு உடையதாக ஆக வேண்டும் – இவையனைத்தும் உயிர்த்தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மெய்யான சிரத்தாஞ்சலிகளாக அப்போது தான் அமையும். அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஜனி அவர்கள் எனக்கு எழுதியிருக்கும் மடலில், கிழக்கு லத்தாக்கில் நடைபெற்றதைப் பார்த்த பின்னர் நான் ஒரு சபதமேற்றிருக்கிறேன்; அதாவது நான் உள்ளூர்ப் பொருட்களை மட்டுமே வாங்குவேன், அவற்றுக்காகக் குரல் கொடுப்பேன் என்பது தான் அவரது சபதம். இப்படிப்பட்ட செய்தி தான் எனக்கு நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் வந்த வண்ணம் இருக்கிறது. இவரைப் போலவே தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவர், பாரதம் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு உடையதாக ஆவதைத் தான் காண வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
நண்பர்களே, சுதந்திரத்திற்கு முன்பாக, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை, உலகின் பல நாடுகளைக் காட்டிலும் முன்னேறி இருந்தது. நம்மிடத்தில் பல ஆயுத தளவாடங்கள் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன. அப்போது பல நாடுகள் நம்மை விட அதிகம் பின்தங்கி இருந்தன, இன்றோ அவை நம்மை விட முன்னேறி விட்டன. சுதந்திரத்திற்குப் பின்னர், பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நமது கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய பாடம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இன்று பாதுகாப்புத் துறையில், தொழில்நுட்பத் துறையில், பாரதம் முன்னேற்றம் காணத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, பாரதம் தற்சார்பு நிலை நோக்கி முன்னேறி வருகிறது.
நண்பர்களே, எந்த ஒரு இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாது போனால் அது நிறைவேறாது, வெற்றி பெறாது; ஆகையால் தற்சார்பு பாரதம் என்ற திசையில், ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மனைவருடைய உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, ஒத்துழைப்பு ஆகியன மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை. நீங்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்கினால், அவற்றுக்காகக் குரல் கொடுத்தால், நீங்களும் இந்த தேசம் வலுவடைய உங்கள் பங்களிப்பை ஆற்றுகிறீர்கள் என்பது உறுதி. ஒருவகையில் நீங்களும் நாட்டுப்பணியில் ஈடுபடுகிறீர்கள் என்பது பொருள். நீங்கள் எந்தத் தொழில் வேண்டுமானாலும் புரியலாம், அனைத்து இடங்களிலும் நாட்டுப்பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கின்றன. நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தச் செயலைப் புரிந்தாலும், அது நாட்டுக்கு நீங்கள் செய்யும் சேவையாகும். உங்களுடைய இந்தச் சேவை தேசத்தை ஏதோ ஒருவகையில் பலமுடையதாக்கவே செய்யும். மேலும் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் – நமது நாடு எந்த அளவுக்கு பலமுடையதாக ஆகிறதோ, அந்த அளவுக்கு உலகிலே அமைதிக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும். நாட்டிலே ஒரு சொல்வழக்கு உண்டு –
வித்யா விவாதாய தனம் மதாய, சக்தி: பரேஷாம் பரிபீடனாய.
கலஸ்ய சாதோ: விபரீதம் ஏதத், ஞானஸ்ய தானாய ச ரக்ஷணாய.
विद्या विवादाय धनं मदाय, शक्ति: परेषां परिपीडनाय |
खलस्य साधो: विपरीतम् एतत्, ज्ञानाय दानाय च रक्षणाय||
அதாவது, இயல்பாகவே தீயோனாக இருந்தால், அவன், கல்வியை வீண்வாதத்திலும், செல்வத்தை மமதையிலும், பலத்தை மற்றவர்களைத் துன்புறுத்துவதிலும் செலவு செய்கிறான். ஆனால் சான்றோனான ஒருவன், தனக்கு வாய்க்கப்பெற்ற கல்வியை ஞானத்திற்காகவும், செல்வத்தை பிறருக்கு உதவி புரியவும், சக்தியை பிறரைக் காப்பதிலும் பயன்படுத்துகிறான். பாரதநாடு என்றுமே தனது சக்தியை இந்த உணர்வுப்படியே போற்றி வந்திருக்கிறது. பாரதம் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருக்கிறது – அது என்னவென்றால், நாட்டின் சுயகௌரவம், அதன் இறையாண்மை ஆகியவற்றின் பாதுகாப்பு. பாரதத்தின் இலக்கு, தற்சார்பு பாரதம். பாரதத்தின் பாரம்பரியம், நம்பிக்கை, நட்பு. பாரதத்தின் உணர்வு, சகோதரத்துவம். நாம் இந்த இலட்சியங்களை மனதில் தாங்கி தொடர்ந்து முன்னேறுவோம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கரோனா ஏற்படுத்தியிருக்கும் இந்த சங்கட வேளையில் நாடு ஊரடங்கை விட்டு வெளியேறி வருகிறது. இப்போது நாம் ஊரடங்கு என்ற பூட்டைத் திறந்து கொண்டிருக்கிறோம். இப்படி திறக்கப்படும் வேளையில் நாம் இரண்டு விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவை வீழ்த்த வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும், அதற்கு சக்தியளிக்க வேண்டும். நண்பர்களே, ஊரடங்கை விட அதிக எச்சரிக்கையோடு நாம் இந்த தளர்த்தல் காலத்தில் இருப்பது மிகவும் அவசியம். உங்களின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் உங்களை கரோனாவிடமிருந்து பாதுகாக்கும். நீங்கள் முக கவசத்தை அணியவில்லை, ஒருமீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை அல்லது மற்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்கிறீர்கள் என்பதை மிக முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியோர் விஷயத்தில் இதை நினைவில் வையுங்கள். ஆகையால் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் மீண்டும்மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசட்டையாக இருந்து விட வேண்டாம், உங்களிடத்திலும் அக்கறை காட்டுங்கள், மற்றவர்களிடத்திலும் கூட.
நண்பர்களே, ஊரங்கு தளர்த்தப்படும் இந்த வேளையில், பாரதத்தை பல பத்தாண்டுகளாகப் பிணைத்திருந்த, வேறு பல விஷயங்களும் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக நம்முடைய சுரங்கத் துறை முடக்கப்பட்டிருந்தது. வர்த்தகரீதியான ஏலமுறைக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு தீர்மானமானது, நிலையை முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. சில நாட்கள் முன்பாக, விண்வெளித்துறையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் செய்யப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள்படி, பல்லாண்டுகளாக முடக்கநிலையில் இருந்த இந்தத் துறை, இப்போது சுதந்திரம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக தற்சார்பு பாரத இயக்கத்துக்கு வேகம் மட்டும் கிடைக்கப் போவதில்லை, தேசத்தின் தொழில்நுட்பமும் மேம்பாடு காணும். நமது விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால், இதில் பல விஷயங்கள் பல பத்தாண்டுகளாக தேங்கிப் போய் முடைநாற்றம் வீசி வந்தது. இந்தத் துறையும் இப்போது தளர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் ஒருபுறம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கே வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் தன்னிச்சையாக விற்கலாம்; மறுபுறத்தில் அவர்களுக்கு அதிகப்படியான கடன்வசதிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நமது நாடு இந்தப் பெரும்சங்கடங்களைச் சந்தித்துவரும் வேளையில், இப்படி பல துறைகள் வரலாற்றுரீதியான முடிவுகளை மேற்கொண்டு, புதிய வளர்ச்சிப் பாதையை திறந்து கொண்டிருக்கின்றன.
என் அன்பான நாட்டுமக்களே, ஒவ்வொரு மாதமும் நாம் செய்திகள் பலவற்றை வாசிக்கிறோம், காண்கிறோம், இவை நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகின்றன. எப்படி ஒவ்வொரு இந்தியரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுவதில் சித்தமாக இருக்கிறார்கள், அதில் ஈடுபாட்டுடனும் முனைப்போடும் இருக்கிறார்கள் என்பதை இவையனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன.
அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு கருத்தூக்கம் மிக்க சம்பவத்தை ஊடகத்தில் நான் படிக்க நேர்ந்தது. இங்கே, சியாங்க் மாவட்டத்தின் மிரேம் கிராமவாசிகள் செய்திருக்கும் ஒரு வித்தியாசமான செயல், பாரதநாடு முழுவதற்குமே ஒரு எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர், கிராமத்திற்கு வெளியே பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு, கிராமம் நோக்கி வருவதை கிராமவாசிகள் கவனித்தார்கள். இந்த நிலையில் கிராமவாசிகள், கிராமத்திற்கு வெளியே quarantine, அதாவது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்தார்கள். கிராமத்திலிருந்து சற்று வெளியே, 14 குடிசைகளை உருவாக்கவும், வெளியிலிருந்து வரும் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்களை அவற்றிலே தங்கவைக்கவும் கூடிப்பேசி முடிவெடுத்தார்கள். இந்தக் குடிசைகளில் கழிப்பறை, குடிநீர்-மின்சார வசதிகள், தினசரி தேவைக்கான அனைத்துவிதமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மிரேம் கிராமவாசிகளின் இந்த சமூகமுயற்சியும் விழிப்புணர்வும் அனைவரின் பார்வையையும் இவர்கள்பால் திருப்பியது.
நண்பர்களே, மூதுரை ஒன்று உண்டு……
स्वभावं न जहाति एव, साधु: आपद्रतोपी सन |
कर्पूर: पावक स्पृष्ट: सौरभं लभतेतराम ||
ஸ்வபாவம் ந ஜஹாதி ஏவ, சாது: ஆபத்ரதோபி சன்.
கற்பூர: பாவக ச்ப்ருஷ்ட: சௌரபம் லபதேதராம்.
அதாவது, எப்படி கற்பூரம், தீயினால் சுடப்பட்டாலும் தனது நறுமணத்தைக் கைவிடுவதில்லையோ, அதே போல, நல்லோரும், துன்பம் நேரும் வேளையில் தங்களது நற்குணங்களையும், நல்லியல்பினையும் துறப்பதில்லை. இன்று நம் நாட்டில் இருக்கும் உழைப்பாளி நண்பர்களும், இதற்கான வாழும் எடுத்துக்காட்டுக்கள். இன்றைய காலகட்டத்தில், நாட்டுமக்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நமது புலம்பெயர் தொழிலாளிகள் தொடர்பான எத்தனை நிகழ்வுகளை நாம் கேள்விப்படுகிறோம். உத்திர பிரதேசத்தின் பாராபங்கியில், கிராமத்திற்கு மீண்டுள்ள தொழிலாளர்கள், கல்யாணி நதிக்கு அதன் இயற்கையான நிலையை மீட்டுத்தரும் பணிகளைத் தொடங்கினார்கள். நதியில் ஏற்பட்ட முன்னெற்றத்தைப் பார்த்து, அக்கம்பக்கப் பகுதிகளில் இருந்த விவசாயிகள், ஏனையோர் என அனைவரும் உற்சாகம் அடைந்தார்கள். கிராமத்திற்கு வந்தவுடன், தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவாறே, நமது தொழிலாளி நண்பர்கள், தங்கள் திறன்களை எப்படிப் பயன்படுத்தி, தங்களருகே இருந்த நிலையை மாற்றியமைத்தார்கள் என்பது அற்புதமான விஷயம்; ஆனால் நண்பர்களே, இப்படிப்பட்ட ஏராளமான கதைகள் நமது இலட்சக்கணக்கான கிராமங்களில் காணக்கிடைக்கின்றன, அவை நம்மை இன்னும் அடையவில்லை. உங்களின் அருகிலே இப்படி ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கலாம். உங்களுடைய கவனம் இவற்றில் சென்றிருந்தால், நீங்கள் அப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கவல்ல நிகழ்வுகளை என்னோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளவும். சங்கடம் நிறைந்த இந்த வேளையில், ஆக்கப்பூர்வமான இந்தச் சம்பவங்கள், இந்தக் கதைகள், மற்றவர்களுக்கும் கருத்தூக்கம் அளிக்கும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, கரோனா வைரஸானது, நமது வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்து விட்டது. லண்டனிலிருந்து வெளியாகும் Financial Times பத்திரிக்கையில் ஒரு மிகவும் சுவாரசியமான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கரோனா காலத்தில் இஞ்சி, மஞ்சள் உட்பட பிற மசாலாக்களின் தேவை, ஆசிய நாடுகள் தவிர, அமெரிக்கா வரையிலும்கூட அதிகமாகி இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் நமது நோய் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்வதில் உலகனைத்தின் கவனமும் இருக்கிறது; அதைப் போன்றே நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவல்ல இந்தப் பொருட்களின் தொடர்பு நமது நாட்டுடன் இருக்கிறது. நாம் இவற்றின் சிறப்பம்சத்தை, உலக மக்களுக்கு எளிய, சுலபமான வழிகளில் புரிய வைக்க வேண்டும். ஆரோக்கியமான உலகைப் படைப்பதில் இது நமது பங்களிப்பாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, கரோனா போன்ற பெரும் சங்கடம் வந்திருக்கவில்லை என்றால், ஒருவேளை, வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கை ஏன் ஏற்பட்டிருக்கிறது, வாழ்க்கை எத்தகையது ஆகியன பற்றி நமக்கு நினைவுகூட இல்லாது போயிருந்திருக்கும். பலர் மனஅழுத்தங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு புறம், இந்த ஊரடங்குக் காலத்தில், சந்தோஷங்களின் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட தாங்கள் மீள்கண்டுபிடித்திருத்திருப்பதாக சிலர் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டுக்களை, குடும்பத்தாரோடு சேர்ந்து விளையாடி ஆனந்தமாக இருந்த அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, நமது தேசத்தில் பாரம்பரியமான விளையாட்டுக்களின் நிறைவான மரபு உண்டு. நீங்கள் பச்சீஸீ என்ற ஒரு விளையாட்டின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த விளையாட்டைத் தமிழ்நாட்டில் “பல்லாங்குழி” எனவும், கர்நாடகத்தில் “அலிகுலிமணே” எனவும், ஆந்திரத்தில் ”வாமன குண்டலூ” எனவும் அழைக்கிறார்கள். உத்திகள் நிறைந்த இந்த ஆட்டம், ஒரு பலகையைப் பயன்படுத்தி விளையாடப்படுவது; இதில் பல குழிகள் இருக்கும், இவற்றில் மணிகள், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகள் போன்றவற்றை ஆடுபவர்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்க வேண்டும். இந்த விளையாட்டு தென்னிந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா, பிறகு உலகம் முழுவதிலும் பரவியது என்று கூறப்படுகிறது.
நண்பர்களே, இன்று ஒவ்வொரு குழந்தையும் ஏணி-பாம்பு விளையாட்டு பற்றி அறிந்திருக்கிறது. ஆனால் இதுவும் பாரம்பரியாகவே ஒரு இந்திய விளையாட்டின் வடிவம் தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதை மோக்ஷபாடம் அல்லது பரமபத சோபானம் என்பார்கள். நம் நாட்டிலே மேலும் ஒரு பாரம்பரியமான விளையாட்டு உண்டு – குட்டா. சிறியவர் பெரியவர் என அனைவருக்குமான ஆட்டம் இது. இதற்குத் தேவை ஒரே அளவிலான 5 சிறிய கற்கள், இனி நீங்கள் குட்டா ஆடத் தயார். ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அது அந்தரத்தில் இருக்கும் வேளையில் நீங்கள் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஏனைய கற்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். பொதுவாக நமது உள்ளரங்க விளையாட்டுக்களுக்கென எந்த ஒரு பெரிய கருவிகளும் தேவையாக இருப்பதில்லை. ஒருவர் சாக்கட்டியையோ, கல்லையோ கொண்டு வந்தால், அதைக் கொண்டு நிலத்தில் சில கோடுகளைக் கிழிப்பார்கள், பிறகு ஆட்டம் தொடங்கி விடும். சில விளையாட்டுக்களில் பகடை தேவைப்படலாம், சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
நண்பர்களே, இன்று நான் இந்த விஷயங்கள் குறித்துப் பேசும் போது, பலருக்குத் தங்கள் சிறுபிராய நினைவலைகள் வந்து மோதும் என்பதை நான் நன்கறிவேன். அந்த இனிமைநிறை நாட்களை நீங்கள் ஏன் மறந்து போனீர்கள், அந்த விளையாட்டுக்களை நீங்கள் ஏன் மறந்தீர்கள் என்று தான் நான் கேட்கிறேன். வீட்டிலிருக்கும் தாத்தா-பாட்டிகள், மூத்தோரிடத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புதிய தலைமுறையினருக்கு இந்த விளையாட்டுக்களை நீங்கள் அளிக்க வேண்டும் என்பது தான்; நீங்கள் அளிக்கவில்லை என்றால் வேறு யார் அளிப்பார்கள்? இணையவழிப் படிப்பு பற்றி நாம் பேசும் வேளையில், ஒரு சமநிலையை ஏற்படுத்த, இணையவழி விளையாட்டுக்களிலிருந்து விடுதலை அடையவும், நாம் கண்டிப்பாக இப்படிச் செய்தே ஆக வேண்டும். நமது இளைய தலைமுறையினருக்காக, நமது ஸ்டார்ட் அப்புகளுக்காக, இங்கே, ஒரு புதிய, வலுவான சந்தர்ப்பம் காத்திருக்கிறது. நாம் பாரதநாட்டின் பாரம்பரியமான உள்ளரங்க விளையாட்டுக்களின் ஒரு புதிய-கவர்ச்சிகரமான வடிவத்தை முன்வைக்க வேண்டும். இவற்றோடு தொடர்புடைய பொருட்களைத் திரட்டுவோர், அளிப்போர், ஸ்டார் அப்புகள் ஆகியன மிகவும் பிரபலமடைந்து விடும். நாம் மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்; அதாவது நமது இந்திய விளையாட்டுக்களுமே கூட உள்ளூரைச் சேர்ந்தவை தாமே, உள்ளூர் விஷயங்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற சபதத்தை நாம் ஏற்றிருக்கும் இந்த வேளையில், என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். பிள்ளைகளே, நீங்கள் நான் கூறுவது கேட்டு அதன்படி நடந்து கொள்வீர்கள் தானே!! ஒரு வேலை செய்யுங்கள், உங்களுக்கு சற்று நேரம் கிடைக்கும் போது, உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று, மொபைலை கையிலெடுங்கள், உங்கள் தாத்தா-பாட்டியினிடத்திலோ, வீட்டில் இருக்கும் வேறு பெரியோரிடத்திலோ, அவர்களுடன் நேர்காணல் நிகழ்த்தி அதைப் பதிவு செய்யுங்கள். நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்களே, எப்படி ஊடகத்தார் நேர்முகம் காண்கிறார்கள், அதைப் போலவே நீங்களும் பேட்டி எடுங்கள். சரி அவர்களிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்? நானே இதற்கான துணுக்குகளை அளித்து விடுகிறேன், சரியா? அவர்களின் சிறுபிராயத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது, என்ன விளையாட்டுக்களை விளையாடினார்கள், என்ன நாடகங்களை அவர்கள் பார்த்தார்கள், என்ன திரைப்பட்டங்களைப் பார்த்தார்கள், விடுமுறை நாட்களில் மாமா வீட்டுக்குச் சென்றார்களா, வயல்வெளிகளுக்குச் சென்றார்களா, எப்படியெல்லாம் பண்டிகைகளைக் கொண்டாடினார்கள் என, இப்படிப் பல வினாக்களை நீங்கள் அவர்களிடத்திலே கேட்கலாம். அவர்களுக்குமேகூட, 40-50 ஆண்டுகள் அல்லது 60 ஆண்டுகள் பழமையான நினைவுகளின் மீது படிந்திருக்கும் தூசியினைத் தட்டிப் பார்க்கும் போது ஆனந்தம் உண்டாகும், 40-50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது, அவர்கள் இருந்த இடம், அவர்களின் சூழ்நிலை, மக்களின் வழிமுறைகள் என பல விஷயங்களை அவர்களிடம் கேட்கலாம், இவை உங்களுக்கு எளிதான ஒரு கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும். நீங்களே பாருங்களேன், இது உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும், ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே இது ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக, ஒரு காணொளி ஏடாக ஆகிப் போகும்.
நண்பர்களே, சுயசரிதை அல்லது சரிதை வாயிலாக வெளியாகும் உண்மைகள் மிகவும் பயன்தரும் சாதனங்கள் என்பது சரிதான். நீங்களும் உங்கள் வீட்டுப் பெரியோரிடத்தில் உரையாடும் போது, அவர்கள் காலத்திய விஷயங்கள், அவர்களின் சிறுபிராயம், அவர்களின் இளமைக்காலம் போன்றவற்றை உங்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலும். தங்களது சிறுபிராய நினைவுகளையும் சம்பவங்களையும் பற்றி, இந்த சந்தர்ப்பத்தில் தங்களின் வீட்டுப் பிள்ளைகளிடத்தில் பகிர்ந்து கொள்ள, பெரியோர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.
நண்பர்களே, நாட்டின் மிகப்பெரிய ஒரு பாகத்தில் இப்போது பருவமழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த முறை பருவமழை குறித்து வானிலையாளர்களும் உற்சாகத்தோடும், எதிர்பாப்போடும் இருக்கிறார்கள். மழை நன்றாக இருந்தால் நமது விவசாயிகளின் விளைச்சலும் செழிப்பாக இருக்கும், சூழல் பசுமை நிறைந்து காணப்படும். மழைக்காலத்தில் இயற்கையும் தனக்குத் தானே புதுத்தெம்பை ஊட்டிக் கொள்கிறது. மனிதர்கள், இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, இயற்கை தான் இழந்ததை ஒருவகையில் மழைக்காலத்திலே இட்டு நிரப்பிக் கொள்கிறது. ஆனால் இந்த இட்டு நிரப்புதல் எப்போது நடைபெறும் என்றால், நாமும் இயற்கை அன்னைக்குத் துணை நிற்கும் போது, நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் போது தான். நாம் செய்யக்கூடிய கடுகத்தனை முயற்சிகூட, இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேருதவியாக இருக்கும். நமது நாட்டுமக்கள் பலரும் இது தொடர்பாக பெரிய பணிகளை ஆற்றி வருகிறார்கள்.
கர்நாடகத்தின் மண்டாவலியில் 80-85 வயதுடைய ஒரு பெரியவரின் பெயர் காமேகவுடா ஆகும். காமேகவுடா அவர்கள் ஒரு எளிய விவசாயி என்றாலும், அவருடைய தனித்துவம் அலாதியானது. அவர் செய்திருக்கும் ஒரு வேலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்றால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். 80-85 வயது மதிக்கத்தக்க காமேகவுடா அவர்கள் தனது கால்நடைகளை மேய்க்கிறார், கூடவே அவர் தனது பகுதியில் புதிய குளங்களை வெட்டும் சவாலையும் மேற்கொண்டிருக்கிறார். அவர் தனது பகுதியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க விரும்புகிறார்; ஆகையால் நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒட்டி, சிறியசிறிய குளங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவல்ல விஷயமில்லையா!! 80-85 வயது நிரம்பிய காமேகவுடா அவர்கள், தனது முயற்சி-உழைப்பு ஆகியவற்றின் துணையோடு, 16 குளங்களை இப்போதுவரை தோண்டியிருக்கிறார். அவர் தோண்டியிருக்கும் குளங்கள் பெரியனவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய முயற்சி மிகவும் பெரியது. இன்று, இந்தப் பகுதி அனைத்திற்கும் இந்தக் குளங்கள் காரணமாக புதியதொரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.
நண்பர்களே, குஜராத்தின் வடோதராவின் ஒரு எடுத்துக்காட்டும் கூட அதிக உத்வேகம் அளிக்கவல்லது. இங்கே மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புக்களும் இணைந்து ஒரு சுவாரசியமான இயக்கத்தை நடத்தினார்கள். இந்த இயக்கம் காரணமாக இன்று வடோதராவில், ஓராயிரம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கோடி லிட்டர் நீர், வீணாகிப் போவது தடுக்கப்பட்டு வருகிறது.
நண்பர்களே, இந்த மழைக்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பேணவும், நாம் புதிதாக சிந்திக்க வேண்டும், ஆக்கப்பூர்வமானவற்றை செய்யவும் வேண்டும். பல இடங்களில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிப்பு முஸ்தீபுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த முறை நாம் முயற்சி மேற்கொண்டு, சூழலுக்கு இசைவான பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்கி, அவற்றைப் பூசிக்கலாமா? எந்தப் பொருட்களால் நதிகள்-குளங்களின் நீருக்கும், அதிலே வாழும் உயிரினங்களுக்கும் பங்கம் ஏற்படுமோ, அத்தகைய பொருட்களைப் பயன்படுத்தித் திருவுருவங்களை நாம் படைக்காமல் இருக்க முடிவு செய்வோம். நீங்கள் இந்த விஷயங்களுக்கு இடையே மேலும் ஒன்றை மறந்து விட மாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன் – அதாவது இந்த பருவமழைக்காலமானது தன்னோடு கூடவே பல நோய்களையும் கொண்டு தருகிறது. கொரோனா காலத்தில் நாம் இவற்றிலிருந்து விலகிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆயுர்வேத மருந்துகள், கஷாயம், வெந்நீர் ஆகியவற்றை பயன்படுத்தி வாருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று பாரதம் தனது காலஞ்சென்ற பிரதமர் ஒருவருக்குத் தனது சிரத்தாஞ்சலிகளைச் செலுத்துகிறது. அவர் இக்கட்டான சூழ்நிலையில் தேசத்துக்குத் தலைமை ஏற்றார். நமது இந்த முன்னாள் பிரதம மந்திரி, பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் தான். அவரது நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பற்றிப் பேசும் வேளையில், அவரது அரசியல் தலைமை தொடர்பான பரிமாணமும் நம் முன்னே வருகிறது; அதே வேளையில், அவர் பன்மொழிப் பண்டிதர் என்பதும் அதே அளவு உண்மை. இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் அவரால் பேச முடிந்திருந்தது. அவர் ஒருபுறம் இந்திய பண்பாட்டுப் பதிவுகளில் ஊறியிருந்தாலும், மற்றொரு புறத்தில், அவருக்கு மேற்கத்திய இலக்கியம்-விஞ்ஞானம் ஆகியவை தொடர்பான ஞானமும் இருந்தது. அவர் பாரதத்தின் அதிக அளவு அனுபவமுடைய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். அவருடைய வாழ்கையில் இன்னொரு பக்கமும் உண்டு, இதைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். நண்பர்களே, நரசிம்ம ராவ் அவர்கள் தமது சிறுபிராயத்திலேயே சுதந்திரப் போராட்டக் களத்தில் குதித்து விட்டார். ஹைதராபாதின் நிஜாம், வந்தே மாதரம் பாட அனுமதி மறுத்த போது, அவருக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. சிறிய வயதிலேயே நரசிம்ம ராவ் அவர்கள் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னணி வகித்தார். தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதில் அவர் எந்த முயற்சியையும் விட்டு வைத்ததில்லை. நரசிம்ம ராவ் அவர்களிடம் இருந்த சரித்திரம் பற்றிய புரிதலும் ஆச்சரியமானது. மிக எளிய பின்புலத்திலிருந்து வந்த ராவ் அவர்களின் முன்னேற்றம், கல்வி மீது அவர் அளித்த அழுத்தம், கற்றலில் அவருக்கு இருந்த பேரார்வம், இவை அனைத்துடனும் கூட, தலைமை தாங்கும் திறம் – இவை அனைத்தும் நினைவில் கொள்ள வேண்டியவை. நரசிம்ம ராவ் அவர்களின் நூற்றாண்டின் போது, நீங்கள் அனைவரும், அவருடைய வாழ்க்கை, சிந்தனைகள் ஆகியவை பற்றி எத்தனை முடியுமோ அத்தனை அறிந்து கொள்ள முயலுங்கள். நான் மீண்டும் ஒருமுறை அவருக்கு என்னுடைய சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். அடுத்தமுறை நாம் சந்திக்கும் வேளையில், மேலும் புதிய விஷயங்களை நாம் அலசலாம். நீங்கள், உங்களுடைய செய்திகளை, உங்கள் நூதனமான கருத்துக்களை, கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவோம், இனிவரும் நாட்களில் மேலும் ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படுவோம். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நான் கூறியதைப் போல, இந்த ஆண்டு, அதாவது 2020இல் நாம் மிகச் சிறப்பாக செயல்படுவோம், முன்னேறுவோம், தேசத்தை புதிய சிகரங்களுக்குக் கொண்டு சேர்ப்போம். 2020ஆம் ஆண்டு, வரும் பத்தாண்டிலே பாரத நாட்டுக்கு ஒரு புதிய திசையை அளிக்கவல்லதாக அமையும். இந்த நம்பிக்கையை மனதில் ஏந்தி, நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆக்கப்பூர்வமானவர்களாக வாழுங்கள். இந்த நல்வாழ்த்துக்களோடு, உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். வணக்கம்.
நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கூட்டு முயற்சிகள் மூலம் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன என ‘மன் கி பாத் 2.0’ 12வது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திரமோடி கூறினார். நாட்டின் முக்கியமான பொருளாதாரப் பிரிவுகள் திறக்கப்பட்டாலும் கூட, கோவிட் தொற்றுக்கு மத்தியில் மக்கள் எச்சரிக்கையாகவும், கவனமுடனும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உட்பட ரயில் சேவைகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். விமான சேவைகள் மற்றும் தொழில் துறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். விழிப்புணர்வு இல்லாமல் இருக்கக்கூடாது, மக்கள் 2 அடி தூர தனி நபர் இடவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், முடிந்தஅளவு வீட்டில் இருக்கவேண்டும் என அவர் எச்சரித்தார். பல கஷ்டங்களுக்குப் பிறகு, நாட்டின் நிலைமையைக் கையாள எடுத்த நடவடிக்கைகள் வீண்போகக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
மக்கள் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டிய பிரதமர், இது மிகப்பெரிய பலம் என கூறினார். ‘சேவையே மகிழ்ச்சி, சேவையே திருப்தி’ என்ற கருத்து நமக்கு பழக்கப்பட்டதுதான் என பிரதமர் கூறினார். நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு, தனது ஆழ்ந்த அன்பைத் தெரிவித்த பிரதமர், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களின் சேவை உணர்வையும் பாராட்டினார். இந்த நெருக்கடியான நேரத்தில் சுய உதவிக்குழு பெண்களின் குறிப்பிடத்தக்க பணியையும் அவர் மெச்சினார்.
இந்த சிக்கலான நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கே.சி.மோகன், அகர்தாலவைச் சேர்ந்த கவுதம் தாஸ், பதன்கோட்டை சேர்ந்த ராஜூ ஆகியோர் மற்றவர்களுக்கு உதவிகள் வழங்கியதையும் பிரதமர் எடுத்துக் கூறினார். சுயஉதவிக் குழு பெண்களின் விடாமுயற்சிக் கதைகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வருவதாக அவர் தெரிவித்தார்.
தொற்றை எதிர்கொள்வதில், தனிநபர்கள் முக்கியமான பங்காற்றி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதையும் பிரதமர் பாராட்டினார். நாசிக்கைச் சேர்ந்த ரஜேந்திர யாதவ், அவரது டிராக்டருடன் பொருத்தப்பட்ட கிருமிநாசினி இயந்திரத்தை உருவாக்கியதையும், 2 அடி தூரம் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற கடைக்காரர்கள் பலர் பெரிய பைப்லைன்கள் பொருத்தியிருந்த்தையும் பிரதமர் எடுத்துக்காட்டாக கூறினார். தொற்று நேரத்தில் மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு தனது வேதனையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், கொரோனா வைரஸ் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ள போதிலும், தொழிலாளர்களும், பணியாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றார்.
நிவாரணப் பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள், அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்கள் முழு வேகத்தில் கைகோர்த்துச் செயல்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.
நாட்டில் நடக்கும் விஷயங்களையும், அதற்காக மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சித் துறையினர் 24 மணி நேரமும் கடுமையாகப் பணியாற்றுவதையும் ஒட்டு மொத்த நாடும் நன்கு புரிந்து கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான தொழிலாளர்களை ரயில்களிலும் பஸ்களிலும் அழைத்துச் சென்றவர்களின் பணியையும், அவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தி உணவு அளிக்க ஏற்பாடு செய்தவர்களின் பணியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
புதிய தீர்வைக் காண்பதுதான் இப்போதைய தேவை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த திசையில் அரசு பல நடவடிக்கைகள் எடுப்பதாக அவர் கூறினார். கிராமப்புற வேலைவாய்ப்புகள், சுயவேலைவாய்ப்புகள், சிறுதொழில்களுக்கு அதிக சாத்தியங்களுக்கு, மத்திய அரசின் சமீபத்திய முடிவுகள் வழி செய்துள்ளதாக பிரதமர் கூறினார். சுயசார்பு இந்தியா பிரசாரம், இந்த தசாப்த்தத்தில், நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைய கொரோனா தொற்று நேரத்தில், யோகா, ஆயுர்வேதத்தை அறிந்து அதன் வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவதாக பிரதமர் கூறினார். சமூகத்தின் நன்மைக்கும், எதிர்ப்பு சக்திக்கும், ஒற்றுமைக்கும் யோகாவைப் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். தற்போதைய கொரோனா தொற்று நேரத்தில், யோகா முக்கியமானதாக மாறி விட்டதாகவும், ஏனென்றால், இந்த வைரஸ் சுவாச மண்டலத்தைப் பாதிக்கிறது எனவும் பிரதமர் கூறினார். யோகாவில் பல பிராணாயாமங்கள் இருப்பதாகவும், அவை சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி அதன் பலன்கள் நீண்டகாலம் நீடித்திருக்கச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறினார்.
ஆயுஷ் அமைச்சகம் நடத்தும் ‘மை லைப், மை யோகா’ என்ற சர்வதேச வீடியோ பிளாக் போட்டிக்கு மக்கள் தங்கள் வீடியோக்களை பகிர வேண்டும் என பிரதமர் மேலும் வலியுறுத்தினார். இந்தப் போட்டியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் எனவும், வருகிற சர்வதேச யோகா தினத்ததில் அனைவரும் பங்கு வகிக்கவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அரசின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகள் ஒரு கோடியைக் கடந்துவிட்ட தகவலைப் பகிர்ந்து கொள்வதில் பிரதமர் பெருமை அடைந்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகள், கொரோனா நேரத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களுக்கு அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் நாம் கொரோனாவுக்கு எதிராகவும், உம்.பன் புயல் பாதிப்புக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் கூறினார். அதி தீவிரப் புயல் உம்.பன்-ஐ எதிர்கொண்ட மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மக்களின் தைரியத்தையும், துணிவையும் அவர் பாராட்டினார். இந்த மாநிலங்களின் விவசாயிகள் சந்திந்த இழப்புகளுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்கள் சோதனையை எதிர்கொண்ட விதமும், அவர்கள் மன உறுதியைக் காட்டிய விதமும் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
புயல்பாதிப்போடு, நாட்டின் பல பகுதிகளில் வெட்டுக்கிளித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்று திரு மோடிகூறினார். நெருக்கடியான நேரத்தில், அரசு எவ்வாறு இடைவிடாமல் செயல்படுகிறது என்பதையும், மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறையைச் சந்திக்காததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தநெருக்கடியால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவ, மத்திய, மாநில அரசுகள், வேளாண் துறையினர் முயற்சிகள் மேற்கொள்கின்றனர் என பிரதமர் கூறினார்.
தற்போதைய தலைமுறையினர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தண்ணீரை சேமிக்கும் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மழைநீர் சேமிப்பதையும், நீர்ப்பாதுகாப்புக்கு அனைவரும் பாடுபடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த சுற்றுச்சூழல் தினத்தில் நாட்டு மக்கள் மரம் நட்டு இயற்கைக்கு சேவை செய்ய வேண்டும் எனவும், இயற்கையுடன் அன்றாட உறவை ஏற்படுத்த தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். முடக்கம், வாழ்க்கையை மந்தமாக்கிவிட்டது ஆனால், இயற்கையை முறையாகப் பார்க்கவும் ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளது, மேலும் வன விலங்குகள் அதிகம் வெளிவர தொடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.
கவனக்குறைவாக அல்லது குறைபாடாக மாறுவது ஒரு விருப்பமாக இருக்கமுடியாது என்று கூறி பிரதமர் தனது உரையை முடித்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் அதிக அளவு தீவிரமானது என்றார் பிரதமர்.
எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் பொது ஊரடங்குக் காலத்தில் இந்த மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மனதின் குரலின் பொருட்டு வந்த ஆலோசனைகள், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது, எப்போதும் வருவதை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றது. ஏகப்பட்ட விஷயங்களை தனக்குள் தாங்கிக் கொண்டு, உங்களது இந்த மனதின் குரல் என் வரையில் வந்திருக்கின்றது. இவற்றை எத்தனை அதிகம் முடியுமோ அத்தனை அதிகம் படிக்க வேண்டும், கேட்க வேண்டும் என்று நான் முயற்சி செய்தேன். பரபரப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்தில் கவனம் செலுத்த முடியாத பலவற்றின் மீது நீங்கள் அனுப்பியிருக்கும் விஷயங்கள் கவனத்தைச் செலுத்த வைத்திருக்கின்றன, புதிய பார்வையோடு அணுக வைத்திருக்கின்றன. போருக்கு இடையே நடைபெறும் இந்த மனதின் குரலில், அப்படிப்பட்ட பரிமாணங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்ள மனம் விரும்புகிறது.
நண்பர்களே, பாரதத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பற்றிச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இது மக்களால் இயக்கப்படும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராடி வருகிறார்கள், நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள், மக்களோடு இணைந்து நிர்வாகமும் போரை நேர்கொண்டு வருகிறது. பாரதம் போன்றதொரு விசாலமான தேசம், வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் தேசம், ஏழ்மைக்கு எதிரான தனது அறுதிப் போரை முடுக்கி விட்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரிலே வெற்றி பெற மக்கள் அனைவரின் பங்களிப்பு மட்டுமே வழி. மேலும், நாம் செய்த பெரும்பேறாக எதைக் கொள்ள வேண்டும் என்றால், இன்று நாடு முழுவதும், நாட்டின் அனைத்துக் குடிமக்களும், இந்தப் போரிலே போர்வீரர்களாகத் தலைமையேற்றுப் போராடி வருகிறார்கள் என்பது தான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும், இந்தப் போர் மக்களே தங்களுடையது என்று கருதி நடத்தும் போர் என்பதை உணர்வீர்கள். எதிர்காலத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெறும் வேளையிலே, இதுபற்றிய வழிமுறைகள் பற்றிப் பேசப்படும் காலத்திலே, இந்தியா நடத்திய போராட்டம் மக்கள் ஏற்று நடத்திய போராட்டம் என்பதாகவே விவாதிக்கப்படும். நாடு முழுவதிலும், ஒவ்வொரு தெரு-குடியிருப்புப் பகுதியிலும், அனைத்து இடங்களிலும், இன்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக, உதவியாக இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவளிப்பதாகட்டும், ரேஷன் முறையாகட்டும், பொது ஊரடங்கைப் பின்பற்றுதலாகட்டும்,மருத்துவமனைகள் பின்பற்றும் வழிமுறையாகட்டும், மருத்துவக் கருவிகளை நாட்டிலேயே ஏற்படுத்தலாகட்டும் – இன்று நாடு முழுவதும் ஒரு இலக்கு, ஒரு திசை என்பதை நோக்கிப் பயணித்து வருகிறது. கரவொலிகள், தட்டொலிகள், விளக்கு, மெழுகுவர்த்திகள் என அனைத்து வகைகளிலும் மக்களின் உணர்வுகள் உயிர் பெற்றன. செயல்புரிய வேண்டும் என்ற பேராவல் உந்த, மக்கள் மனதில் உறுதி வடிவெடுத்தது, அனைவரும் இவற்றால் உத்வேகம் அடைந்தார்கள். நகரமாகட்டும், கிராமமாகட்டும், நாட்டிலே ஒரு மாபெரும் யாகம் நடைபெறுவது போலவும், இதில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்கத் துடிப்போடு இருப்பதாகவுமே எனக்குப் படுகிறது. நமது விவசாய சகோதர சகோதரிகளைப் பாருங்கள்…. ஒருபுறம் இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே தங்கள் வயல்களில் இரவுபகலாக உழைத்து வருகிறார்கள்; தேசத்தில் யாரும் பட்டினியோடு உறங்கி விடக்கூடாது என்று மறுபுறம் கரிசனத்தை மனதில் தாங்கி வியர்வை சிந்தி வருகிறார்கள். அனைவரும் தங்களது சக்திக்கு உட்பட்டு இந்தப் போரிலே பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டு வாடகையைத் தள்ளுபடி செய்கிறார்கள் சிலர், வேறு சிலர் தங்கள் ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகையையோ, விருதுப்பணமாக கிடைத்ததையோ PM CARESக்கு அளிக்கிறார்கள். சிலர் வயலில் விளைந்த அனைத்துக் காய்கறிகளையும் தானமாக அளிக்கிறார்கள் என்றால், இன்னும் பிறர் இலவசமாக உணவு அளித்து வருகிறார்கள். சிலர் முகக்கவசங்களைத் தயாரிக்கிறார்கள். தனிமைப்படுத்தலில் இருக்கும் நமது சில ஏழை தொழிலாளர் சகோதர சகோதரிகள் அவர்கள் தற்போது வசிக்கும் பள்ளிகளுக்குச் சுண்ணம் அடித்து வருகிறார்கள்.
நண்பர்களே, மற்றவர்களுக்கு உதவ, உங்களுக்கு உள்ளே, உங்கள் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் உணர்வு இருக்கிறது இல்லையா!! இது, இது தான் கொரோனாவுக்கு எதிராக பாரதம் தொடுத்திருக்கும் பெரும் போருக்கு பலம் அளித்து வருகிறது, இது தான் இந்தப் போரை உண்மையிலேயே மக்கள் இயக்கும் ஒன்றாக மாற்றி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டிலே இது எடுத்துக்காட்டாகவே மாறி இருப்பதோடு, தொடர்ந்து பலம் அடைந்தும் வருகிறது. அது கோடிக்கணக்கானோர் எரிவாயு மானியத்தைத் துறப்பதாகட்டும், இலட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் ரயில்பயண மானியத்தை விட்டுக் கொடுப்பதாகட்டும், தூய்மை பாரதம் இயக்கத்துக்குத் தலைமை ஏற்பதாகட்டும், கழிப்பறைகள் கட்டுவதாகட்டும் – இப்படி எண்ணிலடங்கா விஷயங்களைக் கூறலாம். இந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் ஒன்று நன்கு தெரிய வருகிறது – நாமனைவரும், மனதால், ஒரு பலமான இழையால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு தேசத்துக்காக நமது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க இதுதான் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் மிகவும் பணிவோடும், மரியாதையோடும், இன்று, 130 கோடி நாட்டுமக்களின் இந்த உணர்வுக்குத் தலைவணங்குகிறேன், இதைப் போற்றுகிறேன். இந்த உணர்வுக்கு ஏற்ப, உங்கள் இயல்புக்கு ஏற்ற வகையிலே, உங்கள் நேரத்துக்குத் தக்க முறையிலே நீங்கள் பங்களிப்பு நல்க வேண்டும் என்பதற்காக, ஒரு டிஜிட்டல் தளத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தளத்தின் பெயர் covidwarriors.gov.in. நான் மீண்டும் இதன் பெயரைக் கூறுகிறேன் – covidwarriors.gov.in. அரசாங்கம் இந்தத் தகவின் வாயிலாக அனைத்து சமூக அமைப்புக்களின் தன்னார்வத் தொண்டர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புக்கள் ஆகியோரை ஒருவரோடு ஒருவர் இணைத்திருக்கிறோம். மிகக்குறைந்த காலத்தில், இந்தத் தகவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி நமது ஆஷா பெண்கள், துணை செவிலியர் சகோதரிகள், நமது தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் நண்பர்கள், பல்வேறு துறைகளின் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் இந்தத் தகவினைத் தங்களுடையதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உள்ளூர் அளவிலே நெருக்கடி நிலை மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் மிகுந்த உதவிகரமாக இருக்கின்றார்கள். நீங்களுமே கூட covidwarriors.gov.in தகவோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நாட்டுக்கு சேவை புரியுங்கள், நீங்களும் Covid Warriorஆக, கோவிடுக்கு எதிரான போராளியாக ஆக முடியும்.
நண்பர்களே, ஒவ்வொரு இடர்க்காலமும், ஒவ்வொரு போராட்டமும் ஏதாவது ஒன்றை நமக்குக் கற்பிக்கிறது, ஒரு கற்றலை அளிக்கிறது. சாத்தியக்கூறுகளுக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதோடு, சில புதிய இலக்குகளுக்கான திசையையும் துலக்கிக் காட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டுமக்களான நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் மனவுறுதி வாயிலாக, பாரதத்தில் ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நமது வியாபாரங்கள், நமது அலுவலகங்கள், நம்முடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவத்துறை என அனைத்தும் விரைவாக, புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கி முன்னேறி வருகின்றன. தொழில்நுட்ப நிலையில் என்று வரும் போது, நாட்டிலே புதுமைகள் படைப்போர், கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவோர் என அனைவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலே புதிதுபுதிதாக ஏதோ ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, நாடு ஓரணியாகப் பணியாற்றி வரும் வேளையிலே, என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் நிதர்சனமாக அனுபவித்து வருகிறோம். மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், இவர்களின் அனைத்துத் துறைகளும், அமைப்புக்களும் நிவாரணப் பணிகளில் இணைந்து, முழுமூச்சுடன் வேலை செய்து வருகிறார்கள். நாட்டுமக்களுக்கு பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நமது விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோர், ரயில்வே பணியாளர்கள் ஆகியோர், இரவுபகலாக அயராது உழைத்து வருகிறார்கள். நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் மருந்துகள் கொண்டு சேர்க்கப்பட Lifeline Udan – உயிர்காக்கும் உடான் என்ற பெயரில், சிறப்பான ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இதோடு தொடர்புடைய நம்முடைய நண்பர்கள், மிகக்குறைவான நேரத்தில், நாட்டுக்குள்ளே 3 இலட்சம் கிலோமீட்டர்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, 500 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை, நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இதைப் போலவே ரயில்வேயில் பணிபுரியும் நமது நண்பர்களும், இந்தப் பொது ஊரடங்கு நிலவும் காலகட்டத்திலும்கூட, நாட்டுமக்களுக்கு எந்தவொரு அத்தியாவசியமான பொருளும் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள். இந்தப் பணிக்காகவே இந்திய ரயில்வே சுமார் 60க்கும் மேற்பட்ட ரயில் வழித்தடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்கி வருகிறது. இதைப் போலவே மருந்துகளின் தேவையை நிறைவு செய்வதில், நமது தபால்துறை ஊழியர்களின் பங்களிப்பும் மகத்தானது. நமது இந்த நண்பர்கள் அனைவருமே, உண்மையிலேயே, கொரோனா போராளிகள் தாம்.
நண்பர்களே, பிரதம மந்திரி ஏழைகள் நலத் தொகுப்புக்கு உட்பட்டு, ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. ஏழைகளுக்கு 3 மாதக்கால இலவச எரிவாயு சிலிண்டர், ரேஷன் பொருட்கள் வழங்கல் ஆகிய வசதிகள் அளிக்கப்படுகிறது. இந்த அனைத்துப் பணிகளிலும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வங்கிப் பணியாளர்கள் என அனைவரும் ஓரணியாகத் திரண்டு, இரவு பகல் பாராமல் பங்களித்து வருகிறார்கள். மேலும், இந்தப் பெருந்தொற்றோடு நாம் நடத்திவரும் போராட்டத்தில், ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வரும் நமது நாட்டின் மாநில அரசுகளையும் நான் முழுமனதோடு பாராட்டுகிறேன். உள்ளாட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் ஆகியன பொறுப்புணர்வோடு ஆற்றிவரும் கடமைகள், அவர்களின் உழைப்பு ஆகியன மிகவும் பாராட்டுக்குரியவை.
என் கனிவான நாட்டுமக்களே, நாடு முழுவதிலும் சுகாதார சேவைகளை ஆற்றி வருபவர்கள் தொடர்பாக அறிவித்திருக்கும் அவசரச்சட்டம் அவர்களுக்கு மிகவும் மன நிறைவை அளித்திருக்கிறது, அவர்கள் இதை வரவேற்கிறார்கள். இந்த அவசரச்சட்டப்படி, கொரோனா வீரர்களுக்கு எதிராகப் புரியப்படும் வன்முறை, கொடுமை அல்லது ஏதாவது ஒருவகையில் அவர்களைத் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக, மிகவும் கடுமையான தண்டனை அளிக்கப்படக்கூடிய ஷரத்துக்கள் இருக்கின்றன. நமது மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள், இந்த நாட்டைக் கொரோனாவிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானதாக ஆகியிருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போரிலே நாம் பங்கெடுக்கும் இந்த காலகட்டம், நமது வாழ்க்கை, நமது சமூகம், நம்மைச் சுற்றி நடைபெற்றுவரும் சம்பவங்கள் ஆகியவற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை நமக்கு அளித்திருக்கிறது. சமூகத்தின் பார்வையுமே கூட பரந்தவகையிலே மாற்றம் கண்டிருக்கிறது. நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் நாம் இன்று உணர்கிறோம். நமது வீடுகளில் பணிபுரிபவர்கள் ஆகட்டும், நமது தேவைகளை நிறைவு செய்ய பணியாற்றும் எளிய தொழிலாளியாகட்டும், அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைகளில் பணிபுரிவோர் ஆகட்டும், இவர்கள் அனைவரின் மிகப்பெரிய பங்களிப்பை நாம் நேரடியாக அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. இதைப் போலவே, அவசியமான சேவைகளைக் கொண்டு சேர்ப்பவர்கள், சந்தைகளில் பணிபுரியும் நமது தொழிலாள சகோதர சகோதரிகள், நமது அண்டைப்புறங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் போன்றவர்கள் இல்லாது போனால் நமது அன்றாட வாழ்வு எத்தனை கடினமானதாக இருக்கும் என்பதை நாம் இன்று அனுபவித்து வருகிறோம், இல்லையா?
சமூக ஊரடங்கு இருக்கும் இந்த காலத்திலே மக்கள் தங்களுடைய இந்த நண்பர்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள், அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள், அவர்களைப் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு சமூக ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். துப்புரவுப் பணியாளர்கள் மீது நாட்டின் பல இடங்களில் மக்கள் பூச்சொரியும் படங்களை நாம் பார்க்க நேர்கிறது. முன்பெல்லாம் அவர்களின் சேவையை பெரும்பாலும் யாரும் ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டார்கள். மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அல்லது வேறு சேவைகளில் ஈடுபடுபவர்கள், காவல்துறை நண்பர்கள் போன்றோரைப் பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டம் கணிசமான அளவுக்கு மாறியிருக்கிறது. நமது காவல்துறையினர் இன்று ஏழைகள், தேவையால் வாடுபவர்கள் ஆகியோருக்கு உணவும் மருந்தும் கொண்டு சேர்த்து வருகிறார்கள். எந்த வகையில் இந்தச் செயல்பாடுகள் காவல்துறையினரின் மனிதநேயத்தையும், மனித உணர்வையும் வெளிப்படுத்துகிறதோ, அதே அளவு நமது மனதில் நெகிழ்வையும், நிறைவையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் காவல்துறையினரோடு உணர்வுரீதியிலான ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. நமது காவல்துறையினரும் பொதுமக்களுக்கு சேவைபுரிய கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறார்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தின் வாயிலாக, இனிவரும் காலத்தில் உண்மையிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படலாம், இந்த ஆக்கப்பூர்வமான உணர்வை என்றுமே நாம் எதிர்மறை உணர்வாக ஆகவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, இயற்கை, பிறழ்வு, கலச்சாரம் என்ற இந்த மூன்று சொற்களையும் ஒருசேரப் பார்த்தால் , இவற்றின் பின்னணியில் இருக்கும் உணர்வு, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஒரு புதிய கதவைத் திறக்கும். மனித இயல்பு பற்றி நாம் சிந்திக்கும் போது, ‘இது என்னுடையது’, ’இதை நான் பயன்படுத்துகிறேன்’ – இந்த உணர்வு மிகவும் இயல்பானதாகக் கருதப்படுகிறது. யாருக்கும் இதிலே எந்தவிதமானதொரு ஆட்சேபமும் இருப்பதில்லை. ஆனால் ‘எது என்னுடையது இல்லையோ’, ‘எதன் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லையோ’, அதை நான் மற்றவர்களிடமிருந்து பறிக்கிறேன், பறித்துப் பயன்படுத்துகிறேன் எனும் போது, இதைப் ‘பிறழ்வு’ என்று அழைக்கிறோம். இவை இரண்டையும் தாண்டி, இயற்கை, பிறழ்வு ஆகியவற்றிலிருந்து மேலெழும்பி, பக்குவப்பட்ட மனக்கண் கொண்டு பார்க்கும் போதும், செயல்படும் போதும், அங்கே ”கலாச்சாரம்” புலப்படும். யாராவது தங்களது உரிமைப் பொருட்களை, தங்கள் உழைப்பின் ஊதியத்தை, தங்களுக்கு அத்தியாவசியமாக இருப்பவனவற்றை – அது கூடுதலாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றியோ, தங்களைப் பற்றியோ கவலை கொள்ளாமல், பிறரின் தேவைகருதி, தங்களுக்கு உரித்தானதைப் பிறருக்கு அளித்து அவர்களின் தேவையை நிறைவு செய்வது தான் ‘கலாச்சாரம்’. நண்பர்களே, சோதித்துப் பார்க்கும் காலம் இது, இப்போது தான் இந்த குணங்கள் உரைத்துப் பார்க்கப்படும்.
கடந்த நாட்களில் நீங்களே கவனித்திருக்கலாம், அதாவது இந்தியா தனது கலாச்சாரத்தை ஒட்டி, நமது எண்ணங்களுக்கு ஏற்ப, நமது கலாச்சாரத்தைப் பின்பற்றி சில முடிவுகளை மேற்கொண்டோம். சங்கடம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் மருந்துகளின் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு மருந்துகளை அளிக்க மறுத்தால் யாரும் நம்மைக் குறைகூறப் போவதில்லை. இந்தியாவுக்கு அதன் குடிமக்கள் தாம் முதன்மை என்பதை அனைத்து நாடுகளும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பர்களே, இந்தியா, இயற்கை, பிறழ்வு ஆகியவற்றைத் தாண்டி தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவானது தனது கலாச்சாரத்துக்கு ஏற்றவகையில் முடிவெடுத்திருக்கிறது. நாம் இந்தியாவின் தேவைகளின் பொருட்டு என்ன செய்ய வேண்டுமோ, அது தொடர்பான முயற்சிகளையும் அதிகப்படுத்தியிருப்பதோடு, உலக மனித சமுதாயத்தின் பாதுகாப்புக்கோரும் குரலுக்கு செவிசாய்த்து, அவர்களின் தேவையையும் நிறைவேற்றி வருகிறோம். உலகின் தேவையானவர்கள் அனைவருக்கும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் சவாலை நாம் மேற்கொண்டிருக்கிறோம், மனிதநேயத்துடன் இந்தப் பணியை நாம் நிறைவேற்றி வருகிறோம். பல நாடுகளின் தலைவர்களோடு நான் பேசும் வேளையில் அவர்கள் அனைவருமே இந்திய மக்களுக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். ‘இந்தியாவுக்கு நன்றி, இந்திய மக்களுக்கு நன்றி’ என்று அவ்ர்கள் கூறும்போது, நாட்டின் பெருமை அதிகரிக்கிறது. இதைப் போலவே, இப்போது உலகம் முழுவதிலும் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் யோகக்கலையின் மகத்துவம் பற்றி மிகவும் சிறப்பான வகையிலே பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்களைப் பாருங்கள், அனைத்து வகையிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க, எப்படியெல்லாம் இந்தியாவின் ஆயுர்வேதமும், யோகக்கலையும் அளிக்கும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம், நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க அளித்திருக்கும் நெறிமுறைகளை நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். வெந்நீர், கஷாயம் ஆகியவற்றைக் குடித்தல், இன்னும் பிற நெறிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இவற்றை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
நண்பர்களே, பலவேளைகளில் நாம் நமது ஆற்றல்களுக்கும், நிறைவான பாரம்பரியத்துக்கும் அங்கீகாரம் அளிக்கத் தவறுகிறோம் என்பது மிகவும் துர்பாக்கியமான விஷயம். ஆனால், உலகின் பல்வேறு நாடுகள், ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்படி இதே விஷயத்தைக் கூறுகிறார்கள், நம்முடைய சூத்திரங்களைப் பின்பற்றி அவர்கள் சொல்லுகிறார்கள் எனும் போது நாம் அங்கீகரிக்கிறோம். பல நூற்றாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்பது ஒருவேளை இப்படிப்பட்ட மனோநிலைக்குக் காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக சில வேளைகளில் நம்முடைய ஆற்றல்கள் மீதுகூட நமக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது, நமது தன்னம்பிக்கையில் குறைவு தென்படுகிறது. ஆகையால், நமது நாடு பற்றிய நல்ல விஷயங்களை, நமது பாரம்பரியமான கோட்பாடுகளை, சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை முன்னெடுத்துப் போவதற்கு பதிலாக அவற்றைக் கைவிட்டு விடுகிறோம், கேவலமானவையாகக் கருதுகிறோம். இந்தியாவின் இளைய தலைமுறையினர், இப்போது இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, உலகம் யோகக்கலையை ஏற்றுக் கொண்டிருப்பதைப் போல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளையுமேகூட உலகம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும். ஆம், இதற்காக இளைய சமுதாயத்தினர் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்; உலகம் எந்த மொழியில் சொன்னால் புரிந்து கொள்ளுமோ, அதே விஞ்ஞான மொழியில் நாம் புரிய வைக்க வேண்டும், இதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும்.
நண்பர்களே, கோவிட் – 19 காரணமாக நாம் பணியாற்றும் வழிமுறைகள், நமது வாழ்க்கைமுறை, நமது பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இயல்பான வகையிலே பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம். பல விஷயங்களில், நமது புரிதலையும், விழிப்புணர்வையும் இந்தச் சங்கடமான வேளையானது தட்டி எழுப்பி இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். நம் அனைவரின் அருகிலும் காணப்படும் ஒரு தாக்கம் எனும் போது, முகக்கவசம் அணிதல், நமது முகங்களை மூடி வைத்தல் ஆகியனவற்றைச் சொல்லலாம். கொரோனா காரணமாக, மாறிவரும் சூழ்நிலையில், முகக்கவசமும் கூட, நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது. முகக்கவசம் அணிவதாலேயே ஒருவருக்கு நோய் இருக்கிறது என்பது பொருளல்ல. இப்போது நான் முகக்கவசம் பற்றிப் பேசும் போது, எனக்கு பழைய ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இது உங்களுக்குமேகூட நினைவுக்கு வரலாம். ஒரு காலத்தில், நம்முடைய நாட்டிலே, யாராவது ஒருவர் பழம் வாங்குவதைப் பார்த்தோம் என்றால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவரிடத்தில் கண்டிப்பாக ஒரு வினாவை எழுப்புவார்கள் – என்ன உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா என்பது தான் அது. அதாவது பழம் வாங்குதல் என்று சொன்னால், நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்பார்கள் என்று கொள்ளப்படும். இப்படிப்பட்ட ஒரு கருத்து நிலவிய காலம் உண்டு. காலம் மாறியது, காட்சியும் மாறியது. இதைப் போலவே தான் இன்று இந்த முகக்கவசம் தொடர்பாகவும் கருத்து மாற இருக்கிறது. பாருங்களேன், முகக்கவசம் என்பது இப்போது பண்பட்ட சமூகத்தின் அடையாளமாக மாறி விடும். நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டும். என்னுடைய எளிமையான ஆலோசனை என்ன தெரியுமா? தோளில் கிடக்கும் துண்டைக் கொண்டு முகத்தை மூடுங்கள், சரியா?
நண்பர்களே, நம்முடைய சமூகத்தில், மேலும் ஒரு பெரிய விழிப்புணர்வு என்ன ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், பொதுவிடங்களில் துப்புவதால் என்ன தீங்கு ஏற்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே இங்கே என கண்டவிடங்களிலும் துப்புவது, தவறான பழக்கத்தின் அங்கமாக ஆகியிருந்தது. இது தூய்மைக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரிய சவாலாக வடிவெடுத்து இருந்தது. ஒரு வகையில் பார்த்தோம் என்றால், இந்தப் பிரச்சனை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் சமூகம் சிக்கித் தவித்தது. இப்போது இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் கனிந்து விட்டது. Better late than never, என்று கூறுவார்களில்லையா? கால தாமதமானாலும்கூட, இனிமேல் பொதுவிடங்களில் துப்புவதை விட்டொழித்தே ஆக வேண்டும். இவை அடிப்படை சுகாதார விஷயங்களை மேம்படுத்தும் அதே வேளையில், கொரோனா பரவலைத் தடுப்பதில் பெரும் உதவிகரமாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களோடு இன்று உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்த நாள், அக்ஷய திரிதியை புனிதமான நன்னாள். நண்பர்களே, ‘க்ஷய’ என்ற சொல்லின் பொருள், அழியும் தன்மை உடையது, ஆனால், அழிவே இல்லாமல் வளர்வது என்றால் அது “அக்ஷய்’’. நம்முடைய இல்லங்களில் நாமனைவரும் இந்தப் புனித நன்னாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்றாலும் இந்த ஆண்டு நமக்கு இது விசேஷமான மகத்துவத்தைத் தாங்கி வருகிறது. இன்றைய இந்தக் கடினமான வேளையில், இந்த நாளானது, நமது ஆன்மா, நமது உணர்வு ஆகியன குறைவே இல்லாமல் வளரும் தன்மை உடையன என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த நன்னாள், நமது பாதையில் எத்தனை தான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனை சங்கடங்கள் எதிர்வந்தாலும், எந்தனை நோய்கள் பீடித்தாலும், இவை அனைத்துக்கு எதிராகப் போரிடுவது என்ற மனித உணர்வுகள் குறைவில்லாமல் வளர்வன என்பதைக் குறிக்கிறது. இந்த நன்னாளன்று தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சூரிய தேவன் ஆகியோருடைய நல்லருளால் பாண்டவர்களுக்கு அள்ள அள்ளக்குறையாத அக்ஷ்ய பாத்திரம் கிடைத்தது என்று கருதப்படுகிறது. நம்மனைவருக்கும் அன்னமளிக்கும் வள்ளல்களாம் விவசாயிகள், அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாட்டுக்காக, நமக்காக இதே உணர்வோடு தான் உழைத்து வருகிறார்கள். இவர்களுடைய மகத்தான உழைப்பின் காரணமாகவே, இன்று நம்மனைவருக்கும், ஏழைகளுக்கும், நாட்டில் உணவுப்பொருள் சேமிப்பு நிறைவாகவும் வளமாகவும் இருக்கிறது. இந்த அக்ஷ்ய திரிதியை நன்னாளன்று, நமது வாழ்க்கையில் மகத்துவம் நிறைந்த பங்களிப்பு நல்கிவரும் நமது சுற்றுச்சூழல், வனங்கள், நதிகள், ஒட்டுமொத்த சூழல் அமைப்புப் பாதுகாப்பு பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் குறைவற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், நமது பூமி குறைவற்றதாக இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அக்ஷ்ய திரிதியை என்ற இந்த நன்னாள், அளித்தலின் சக்தி அதாவது power of giving என்பதை செயல்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. இருதயப்பூர்வமாக நாம் எந்த ஒரு பொருளைக் கொடுத்தாலும், மகத்துவம் அளித்தல் உணர்வுக்குத் தானே ஒழிய, கொடுக்கப்படும் பொருளுக்கு அல்ல. நாம் என்ன கொடுக்கிறோம், எத்தனை கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, கொடுக்க வேண்டும் என்ற உணர்வே பிரதானம். இந்தச் சங்கடம் நிறைந்த காலகட்டத்தில் நம்முடைய மிகச்சிறிய முயற்சிகூட, நமக்கு அருகிலே இருக்கும் பலருக்கு மிகப்பெரிய பலமாக ஆகும் வல்லமை உடையது. நண்பர்களே, ஜைன பாரம்பரியத்திலும்கூட, இது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது; இந்த நாள் தான் முதல் தீர்த்தங்கர் பகவான் ரிஷபதேவரின் வாழ்க்கையில் மகத்துவமான நன்னாள். இதை ஜைனர்களும் புனித நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நாளில் தான் மக்கள் எந்த ஒரு மங்கலமான காரியத்தையும் ஆரம்பித்துச் செய்வதை விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், இன்று புதிய செயல் ஒன்றைத் துவக்கும் நாள் என்பதால், நாமனைவருமாக இணைந்து, நம்முடைய முயற்சிகள் காரணமாக நமது பூமியை வளமானதாக, குறைவேதும் இல்லாததாக ஆக்குவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்வோமா? நண்பர்களே, இன்று பகவான் பஸவேஸ்வரின் பிறந்தநாளும் கூட. பகவான் பஸவேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் அளித்திருக்கும் செய்தியினைப் பற்றியும் மீண்டும் மீண்டும் சிந்திக்கவும், கற்கவும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்பதை நான் பெரும்பேறாகவே கருதுகிறேன். நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் பகவான் பஸவேஸ்வரின் அனைத்து சீடர்களுக்கும் அவரது பிறந்தநாளை ஒட்டி பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, ரமலான் புனித மாதம் தொடங்கியிருக்கிறது. கடந்த முறை ரமலான் கொண்டாடப்பட்ட போது, இந்த முறை ரமலான் வேளையில் இத்தனை பெரிய சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் இந்தப் பெரும் சங்கடம் கொரோனா வடிவில் உருவெடுத்திருக்கும் வேளையில், இந்த ரமலானை, சுயகட்டுப்பாடு, சகோதரத்துவம், புரிந்துணர்வு, சேவை உணர்வு ஆகியவற்றின் அடையாளங்களாக மாற்றும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது. இந்த முறை நாம் முன்னர் செய்ததை விட அதிகமாக பிரார்த்தனைகளைச் செய்வோம். இதன் காரணமாக, ஈத் வருவதற்கு முன்பாக கொரோனாவிடமிருந்து நாம் விடுபடுவோம், முன்பைப் போலவே உற்சாகத்தோடும், சந்தோஷத்தோடும் ஈத் நன்னாளைக் கொண்டாடுவோம். ரமலானின் இந்த நாட்களின் போது உள்ளூர் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போரை நாம் மேலும் பலப்படுத்துவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தெருக்களில், சந்தைகளில், குடியிருப்புப் பகுதிகளில், தனி நபர் ரீதியான விலகியிருத்தலின் விதிகளைப் பின்பற்றி நடப்பது இப்போது மிகவும் அவசியமானது. ஒருவர் மற்றவருக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பன போன்ற விஷயங்களில் தங்களது சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும் அனைத்துச் சமுதாயத் தலைவர்களுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே கொரோனாவானது இந்தமுறை பாரதம் உட்பட, உலகெங்கிலும், பண்டிகைகளைக் கொண்டாடும் பாங்கினையே மாற்றி இருக்கிறது, அவற்றின் வடிவங்களை மாற்றி விட்டது. கடந்த நாட்களில் நம் நாட்டிலே பிஹூ, பைசாகீ, புத்தாண்டு, விஷூ, ஒடியா புத்தாண்டு போன்ற பல பண்டிகைகள் வந்தன. எப்படி தங்கள் வீட்டில் இருந்தபடியே, மிக எளிமையான வகையிலே, சமூகத்தின்பால் நல்லெண்ணத்தோடு பண்டிகைகளை மக்கள் கொண்டாடினார்கள் என்பதை நாம் பார்த்தோம். பொதுவாக, அவர்கள் இந்தப் பண்டிகைகளைத் தங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் பெரும் உவகையோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள். வீட்டிலிருந்து வெளியே சென்று தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த முறையோ, அனைவருமே கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள். முழுமையான ஊரடங்கின் விதிமுறைகளின்படி நடந்து கொண்டார்கள். இந்த முறை நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களும், ஈஸ்டர் நாளை வீட்டில் இருந்தபடியே கடைப்பிடித்தார்கள். நம்முடைய சமூகம் மற்றும் நாட்டின் பால், பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது இன்றைய மிக முக்கியமான தேவை. இதன் வாயிலாகத் தான் நாம் கொரோனாவின் பரவலாக்கத்தைத் தடுப்பதில் வெற்றி பெற முடியும், கொரோனா போன்ற உலகம் தழுவிய பெருந்தொற்றைத் தோற்கடிக்க இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையே, உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற முறையில், சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது, ஆலோசனைகள் அளிப்பது ஆகியன என்னுடைய கடமையாகின்றது. நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்….. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாம் அதீத நம்பிக்கையில் சிக்கிக் கொள்ள வேண்டாம், நமது நகரத்தில், நமது கிராமத்தில், நமது தெருவில், நமது அலுவலகத்தில், இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை, இனியும் அது நம்மை அண்டாது என்றெல்லாம் தயவுசெய்து எண்ணங்களை உங்கள் மனதிலே வளர்த்துக் கொள்ள வேண்டாம். உலகம் சந்தித்திருக்கும் அனுபவங்கள் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகளை அளிக்கின்றன. கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும், அழிவுப்பாதை நிச்சயம் என்ற கருத்தை மனதில் தாங்கித் தான் நமது முன்னோர்கள் இந்த அனைத்து விஷயங்களிலும் மிகச் சிறப்பான வகையிலே வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
‘अग्नि: शेषम् ऋण: शेषम् ,
व्याधि: शेषम् तथैवच |
पुनः पुनः प्रवर्धेत,
तस्मात् शेषम् न कारयेत ||
அக்நி: சேஷம் ருண: சேஷம்,
வ்யாதி: சேஷம் ததைவச.
புன:புன: ப்ரவர்தேத்,
தஸ்மாத் சேஷம் ந காரயேத்.
அதாவது, சிறிய அளவில் தானே இருக்கிறது என்று, நெருப்பு, கடன், நோய் ஆகியவற்றை இன்று நாம் லேசாக எடுத்துக் கொண்டோம் என்றால், இவையே வாய்ப்பு கிடைக்கும் போது அதிகமாகி ஆபத்தில் கொண்டு விடும். ஆகையால், இவற்றை முழுமையாக கருவறுப்பது மிக அவசியம். அதிக உற்சாகம் உந்த, உள்ளூர் மட்டத்தில், எந்த விதமான கவனக்குறைவும் இருக்கவே கூடாது. இதை நாம் எப்போதும், என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டும். நான் மேலும் ஒருமுறை கூறுகிறேன். இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம். உங்கள் அனைவருக்கும் சிறப்பான உடல்நலம் வாய்க்கட்டும் என்ற பிரார்த்தனைகளோடு, என் உரையை நான் நிறைவு செய்கிறேன். அடுத்த மனதின் குரலில் நாம் சந்திக்கும் வேளையில், இந்த உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைந்தோம் என்ற செய்தி உலகெங்கிலுமிருந்து கிடைக்கப்பெறட்டும்!! மனித சமுதாயம் இந்தச் சங்கடங்களிலிருந்து வெளியே வரட்டும்!! இந்தப் பிரார்த்தனைகளுடன் உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன். ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் வியாபித்து இருக்கிறது – அது கரோனா உலகளாவிய பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான பிரச்சனை. இந்த நிலையில், நான் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினேன் என்று சொன்னால் அது உசிதமாக இருக்காது. மிகவும் மகத்துவமான விஷயங்கள் குறித்துப் பேச விழைகிறேன், ஆனால் இன்று இந்த பெருந்தொற்று பீடித்திருக்கும் வேளையில் இது தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது. முதற்கண் நான் என் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் அனைவரும் என்னைக் கண்டிப்பாக மன்னிப்பீர்கள் என்று என் ஆன்மா உறுதிபடத் தெரிவிக்கிறது; ஏனென்றால் எடுக்கப்பட்டிருக்கும் சில முடிவுகளால் உங்களுக்குப் பலவிதமான சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதிலும் குறிப்பாக எனது ஏழை சகோதர சகோதரிகளைப் பார்க்கும் போது, ’இவர் என்ன பிரதம மந்திரி, நம்மையெல்லாம் இப்படிப்பட்ட சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாரே, என்று உங்களுக்குத் தோன்றலாம். உங்களிடத்தில் நான் விசேஷமான மன்னிப்பை வேண்டுகிறேன். பலர் என்னிடத்தில் கோபமாக இருக்கலாம், இப்படி வீட்டிற்குள்ளேயே அவர்களை அடைத்து வைத்திருப்பது போல வைத்திருக்கிறேனே என்று வருத்தம் இருக்கலாம். உங்கள் சங்கடங்கள் எனக்குப் புரிகின்றன, உங்கள் சிரமங்கள் எனக்குத் தெரிகின்றன ஆனால், பாரதம் போன்ற 130 கோடி மக்கள் கொண்ட தேசம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராட வேண்டுமென்றால் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கொரோனாவுக்கு எதிரான போர் என்பது, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே நடைபெறும் போர்; இந்தப் போரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதாலேயே இத்தகைய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. யாருமே மனம் ஒப்பி இத்தகைய கடினமான முடிவுகளை எடுக்கவில்லை ஆனால், உலகின் நிலையைப் பார்க்கும் வேளையில் இந்த ஒரு வழிதான் மிஞ்சியது. உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள், கடினங்கள் ஆகியவற்றுக்காக மீண்டும் ஒருமுறை நான் உங்களிடத்தில் மன்னிப்புக் கோருகிறேன். நண்பர்களே, ‘एवं एवं विकारः, अपी तरुन्हा साध्यते सुखं’ ”ஏவம் ஏவம் விகார:, அபி தருன்ஹா சாத்யதே சுகம்”, அதாவது,நோயையும் அதன் பரவலையும் தொடக்கத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். பின்னர் நோய் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இதற்கான சிகிச்சை கடினமானதாகி விடும். இன்று இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு இந்தியரும் இதைத் தான் புரிந்து வருகிறார்கள். சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, பெரியோர்களே, கரோனா வைரஸானது உலகையே கைது செய்திருக்கிறது. இது அறிவுடையோர், விஞ்ஞானிகள், ஏழைகள், பணக்காரர்கள், பலவீனமானோர், சக்தி படைத்தோர் என அனைவருக்கும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. நாடுகளைப் பிரிக்கும் எல்லைகளுக்கு எல்லாம் இது கட்டுப்படுவதும் இல்லை, பிராந்தியம் பார்த்துப் பீடிப்பதும் இல்லை, தட்பவெப்பம் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. இந்த வைரஸ் கிருமியானது மனிதனை உருக்குலைத்து, அவனுக்கு முடிவு கட்டுவது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது என்பதால், அனைவரும், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இந்த வைரஸ் கிருமிக்கு ஒரு முடிவுகட்ட, ஒன்றிணைந்து உறுதி கொள்ள வேண்டும். தாங்கள் முழு ஊரடங்கைப் பின்பற்றி வருவதால், மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பதாகச் சிலர் கருதலாம். ஐயா, தயவு செய்து இப்படிப்பட்ட பிரமை இருந்தால், இதை தூர விலக்கி வைக்கவும். இந்த முழுமையான ஊரடங்கு உங்களை உங்களிடமிருந்து காப்பாற்ற, உங்களைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற, உங்கள் குடும்பத்தாரைக் காப்பாற்ற. இனிவரும் பல நாட்களுக்கு நீங்கள் இதே போன்ற பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், இலக்குவன் கிழித்த கோட்டைக் கடக்காமல் இருக்க வேண்டும். நண்பர்களே, யாருமே சட்டத்தை உடைக்க விரும்பவில்லை, விதிமுறைகளைத் தகர்க்க விரும்பவில்லை என்பதை நானறிவேன்; ஆனால் ஏன் சிலர் இப்படிச் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் பற்றி புரியவில்லை. இப்படிப்பட்டவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம், முழு ஊரடங்கின் விதிமுறைகளை நீங்கள் தகர்த்தீர்கள் என்று சொன்னால், கொரோனாவிடமிருந்து தப்புவது இயலாத காரியமாகி விடும். உலகிலே பலரிடம் இத்தகைய தவறான கற்பனை இருந்தது. இன்று அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் கழிவிரக்கத்தில் காலம் கழிக்கிறார்கள்.
நண்பர்களே, ‘आर्योग्यम परं भागय्म स्वास्थ्यं सर्वार्थ साधनं’ ‘ஆரோக்கியம் பரம் பாக்யம் ஸ்வாஸ்த்யம் சர்வார்த்த சாதனம்’ என்று ஒரு பொன்மொழி வழக்கில் உண்டு; அதாவது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதே இதன் பொருள். உலகிலே அனைத்து சுகங்களைத்தரும் ஒரே வழி என்றால் அது உடல்நலம் தான். இத்தகைய சூழ்நிலையில் விதிமுறைகளைத் தகர்ப்பதால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறீர்கள். நண்பர்களே, இந்தப் போரில் பல வீரர்கள் வீட்டில் இருந்தபடி அல்லாமல், தங்கள் வீடுகளுக்கு வெளியே இந்த வைரஸ் கிருமியோடு போராடி வருகிறார்கள். சிறப்பாக நமது செவிலித் தாய்மார்கள், இப்படிப்பட்ட செவிலியர் பணியில் ஈடுபடும் நமது சகோதரர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகிய இவர்கள் தாம் நமது முன்னணி வீரர்கள். இத்தகைய நமது நண்பர்கள் கரோனாவைத் தோற்றோடச் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் அவர்களிடமிருந்து உத்வேகம் அடைய வேண்டும். கடந்த நாட்களில் அப்படிப்பட்ட சிலரோடு தொலைபேசி வாயிலாக உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அவர்களுக்கு நான் ஊக்கமளித்தேன், அவர்களுடன் உரையாடியதில் எனக்கும் ஊக்கம் உண்டானது. அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது. இந்த முறை அப்படிப்பட்ட நண்பர்களுடைய அனுபவங்கள், அவர்களுடனான உரையாடல் ஆகியவற்றிலிருந்து சிலவற்றை இந்த முறை மனதின் குரலில் உங்களோடு பகிர வேண்டும் என்று நான் பெரிதும் ஆசைப்படுகிறேன். முதலாவதாக நம்மோடு இணையவிருக்கிறார் ராம்கம்பா தேஜா அவர்கள். இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், வாருங்கள் இவருடைய அனுபவம் என்ன, தெரிந்து கொள்வோமா? சொல்லுங்க ராம்….
ராம்கம்பா தேஜா: வணக்கம் ஐயா.
மோதிஜி: ராம் அவர்கள் தானே பேசறீங்க?
ராம்கம்பா தேஜா: ஆமாங்க, ராம் தான் பேசிட்டு இருக்கேன்.
மோதிஜி: சரி ராம், வணக்கம்.
ராம்கம்பா தேஜா: வணக்கம், வணக்கம்.
மோதிஜி: கொரோனா வைரஸ் பரவியிருக்கற இந்த வேளையில நீங்க அயல்நாடு போயிருந்ததா கேள்விப்பட்டேனே, அப்படியா?
ராம்கம்பா தேஜா: ஆமாங்கய்யா.
மோதிஜி: சரி, நான் உங்ககூட பேச விரும்பினேன். சொல்லுங்க ராம், இப்படிப்பட்ட தீவிரமான சங்கடகாலத்தில அயல்நாட்டில இருந்திருக்கீங்க, உங்க அனுபவத்தை நான் தெரிஞ்சுக்க விரும்பறேன்.
ராம்கம்பா தேஜா: நான் தகவல்தொழில்நுட்பத் துறையில பணியாற்றுற ஒரு ஊழியர். வேலை காரணமா சில சந்திப்புக்கள் பொருட்டு நான் துபாய் போயிருந்தேன். நாடு திரும்பினவுடனேயே எனக்கு காய்ச்சல் ஏற்பட்டிருச்சு. ஒரு 4-5 நாட்களுக்குப் பிறகு மருத்துவர்கள் எனக்கு கரோனாவுக்கான பரிசோதனை செஞ்சு பார்த்தப்ப, எனக்கு நோய் பீடிப்பு இருந்ததா கண்டுபிடிச்சாங்க. உடனடியா என்னை ஹைதராபாதில இருக்கற காந்தி அரசு மருத்துவமனையில சேர்த்தாங்க. இதன் பிறகு தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நான் குணமாயிட்டேன், இப்ப என்னை வீட்டுக்கும் அனுப்பிட்டாங்க. இது எல்லாமே கொஞ்சம் பயமாத் தான் இருந்திச்சு.
மோதிஜி: அதாவது நோய் பீடிப்பு பத்தி உங்களுக்குத் தெரிய வந்திச்சு, ஆனா அதுக்கு முன்னாலயே இது எத்தனை பயங்கரமானதுன்னு தெரிஞ்சிருந்திச்சா, ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே!!
ராம்கம்பா தேஜா: ஆமாங்கய்யா.
மோதிஜி: அப்ப இந்தத் தொற்று ஏற்பட்டிருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்ச அந்தக் கணத்தில உங்க உணர்வு என்னவா இருந்திச்சு?
ராம்கம்பா தேஜா: முதல்ல நான் கொஞ்சம் பயந்தேன் தான், எனக்கு இந்த மாதிரி ஆயிப் போச்சுன்னு என்னால நம்பவே முடியலை, இது எப்படி எனக்கு வரலாம்னு தான் நினைச்சேன். ஏன்னா இந்தியாவுல இது அப்ப 2-3 பேர்களுக்குத் தான் வந்திருந்திச்சு, யாருக்கும் இதுபத்தி அதிகம் தெரிஞ்சிருக்காத நேரம். மருத்துவமனையில என்னை அனுமதிச்ச போது என்னை மருத்துவரீதியா தனிமைப்படுத்தி இருந்தாங்க. முத 2-3 நாட்கள் அது பாட்டுக்குப் போயிருச்சு. ஆனா அங்க இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் எல்லாரும் ரொம்ப இனிமையா நடந்துக்கிட்டாங்க. ஒவ்வொரு நாளும் என்னைக் கூப்பிட்டு என்கூட பேசுவாங்க, எனக்கு மனோதைரியத்தை அளிப்பாங்க, ஒண்ணும் ஆகாது, சீக்கிரமாவே சரியாயிருவீங்கன்னு சொல்லுவாங்க. பகல் வேளையில 2-3 முறை மருத்துவர்கள் பேசுவாங்க, செவிலியர்கள் பேசுவாங்க. முதல்ல பயம் இருந்திச்சுன்னாலும், பிறகு மெல்ல மெல்ல, இத்தனை நல்ல ஆளுங்களோட நான் இருக்கேன், என்ன செய்யணும்னு அவங்களுக்குத் தெரியும், நான் சீக்கிரமே சரியாயிருவேன்னு எனக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பிச்சுது.
மோதிஜி: குடும்பத்து உறுப்பினர்களோட மனோநிலை எப்படி இருந்திச்சு?
ராம்கம்பா தேஜா: நான் மருத்துவமனையில சேர்க்கப்பட்ட போது, அவங்க முதல்ல ரொம்ப மன அழுத்தத்தில இருந்தாங்க, அவங்க எல்லாருமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாங்க, ஆனா யாருமே பாதிக்கப்படலை, இது எங்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம். பிறகு ஒவ்வொரு நாளும் மேம்பாடு தெரியத் தொடங்கிச்சு. மருத்துவர்கள் எங்களோட பேசிட்டு இருந்தாங்க. அவங்க குடும்பத்தாருக்கும் இந்தச் செய்தியைத் தெரிவிச்சுட்டு இருந்தாங்க.
மோதிஜி: உங்க தரப்புல நீங்க என்னமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டீங்க, உங்க குடும்பத்தார் என்னஎன்ன நடவடிக்கைகளை மேற்கொண்டாங்க?
ராம்கம்பா தேஜா: குடும்பத்தாரைப் பொறுத்தமட்டில, முதல்ல அவங்களுக்கு இது பத்தி எல்லாம் தெரியவந்த போது, அப்ப நான் தனிமைப்படுத்தல்ல இருந்தாலும், இந்தச் செயல்பாட்டுக்குப் பிறகும் மேலும் ஒரு 14 நாட்கள் நான் வீட்டிலயும் என்னோட அறையிலேயே இருக்கணும், என்னை நானே தனிமைப்படுத்திக்கணும்னு சொன்னாங்க. ஆகையினால வீட்டுக்கு வந்தாலுமேகூட, நான் என் அறையில தனியா இருக்கேன், பெரும்பாலும் நாள் முழுவதும் முகக்கவசம் போட்டுக்கிட்டு இருக்கேன், உணவு எனக்கு அளிக்கப்படும் போது, கைகளை கழுவுதல்ங்கறது ரொம்ப முக்கியமானது.
மோதிஜி: சரி ராம், நீங்க உடல் குணமாகி வந்திருக்கீங்க. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள்.
ராம்கம்பா தேஜா: தேங்க்யூ.
மோதிஜி: நீங்க தகவல்தொழில்நுட்பத் துறையில வேலை செய்யறீங்க இல்லையா!! நீங்க உங்க அனுபவங்களை ஒலிவடிவத்தில பதிவு செஞ்சு, மக்களோட பகிர்ந்துக்கணும்னு நான் விரும்பறேன், இதை சமூக ஊடகங்கள்ல பரப்புங்க. இதனால என்ன ஆகும்னா மக்கள் பயப்பட மாட்டாங்க, அதே சமயத்தில கவனமா இருப்பாங்க, எப்படி தப்புவது அப்படீங்கற விஷயமெல்லாம் ரொம்ப சுலபமா மக்கள் கிட்ட போய் சேரும்.
ராம்கம்பா தேஜா: ஆமாய்யா, வெளிய பார்த்தா, இந்தத் தனிமைப் படுத்தலை மக்கள் எப்படி பார்க்கறாங்கன்னா, ஏதோ சிறைக்குப் போகறா மாதிரியா நினைச்சுக்கறாங்க, ஆனா இது அப்படி கிடையாது. அரசு தனிமைப்படுத்தல்ல ஈடுபடுத்துதுன்னா இது அவங்களுக்காக, அவங்க குடும்பத்தாருக்காகன்னு புரிஞ்சுக்கணும். இதுபத்தி நான் நிறைய பேருக்குத் தெரிவிக்கணும்னு விரும்பறேன்; அதாவது பரிசோதனை செஞ்சுக்குங்க, தனிமைப்படுத்தலைப் பார்த்து பயப்படாதீங்க, மருத்துவரீதியான தனிமைப்படுத்தல்னு சொன்னா, இது எந்த வகையிலயும் களங்கமான விஷயம் இல்லைன்னு தெரிவிக்க விரும்பறேன்.
மோதிஜி: சரி ராம், உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
ராம்கம்பா தேஜா: தேங்க்யூ தேங்க்யூ
மோதிஜி: ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே!!
நண்பர்களே, ராம் சொன்னதைப் போல, கரோனா பெருந்தொற்று ஏற்பட்டவர்களுக்கு என மருத்துவர்கள் பரிந்துரை செய்தவை அனைத்தையும் அவர் தவறாமல் மேற்கொண்டார்; இதன் விளைவாகவே இன்று அவர் முழு உடல்நலன் பெற்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நம்மோடு இப்படி கரோனாவோடு போராடி வெற்றி பெற்ற மேலும் ஒரு நண்பர் இருக்கிறார், ஆனால் இவருடைய ஒட்டுமொத்த குடும்பமுமேகூட இதனால் பீடிக்கப்பட்டார்கள். வாருங்கள், ஆக்ராவைச் சேர்ந்த அஷோக் கபூர் அவர்களோடு நாம் உரையாடலாம்.
மோதிஜி: அஷோக் ஜி வணக்கம்.
அஷோக் கபூர்: வணக்கம் ஜி. இன்னைக்கு நான் உங்ககூட பேசுறது நான் செஞ்ச பெரிய பாக்கியம்.
மோதிஜி: இது என்னோட பாக்கியமும்கூட. நான் ஏன் உங்களுக்குப் ஃபோன் செஞ்சேன்னா, உங்க ஒட்டுமொத்த குடும்பமுமே கொரோனாங்கற இந்தப் பெரும் சங்கடத்தில சிக்கினாங்கன்னு கேள்விப்பட்டேன்.
அஷோக் கபூர்: ஆமாங்க, கண்டிப்பா.
மோதிஜி: உங்க பிரச்சனை பத்தி நான் மேலும் விபரமா தெரிஞ்சுக்க பிரியப்படறேன், இந்தத் தொற்று பற்றி உங்களுக்கு எப்ப தெரிய வந்திச்சு? என்ன ஆச்சு? மருத்துவமனையில என்ன நடந்திச்சு? நீங்க சொல்றதைக் கேட்டு நாட்டுல இதனால மக்களுக்கு பயன் உண்டாகும்னா நான் கண்டிப்பா நாட்டுமக்களோட இவற்றை பகிர்ந்துக்க தயாரா இருக்கேன்.
அஷோக் கபூர்: கண்டிப்பா ஐயா. எனக்கு ரெண்டு மகன்கள். இவங்க இத்தாலிக்குப் போயிருந்தாங்க. அங்க காலணிகள் கண்காட்சி நடந்திச்சு. நாங்க காலணி வியாபாரம் செஞ்சிட்டு இருக்கோம், பட்டறையும் இருக்கு, தயாரிக்கவும் செய்யறோம்.
மோதிஜி: சரி.
அஷோக் கபூர்: இத்தாலிக்குப் போன இவங்க திரும்ப இந்தியா வந்தாங்க. எங்க மருமகப்பிள்ளையும் போயிருந்தாரு, அவரு தில்லியில வசிக்கறாரு. அவருக்கு கொஞ்சம் பிரச்சனையான உடனே அவரு ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனைக்குப் போனாரு. அங்க அவங்க அவருக்கு நோய் தொற்று இருக்கறதா சொன்னாங்க. பிறகு அவங்களே அவரை சஃப்தர்ஜங்குக்கு மாத்திட்டாங்க.
மோதிஜி: சரி.
அஷோக் கபூர்: அங்கிருந்து தான் எங்களுக்கு ஃபோன் வந்திச்சு, நீங்களும் அவருகூட போயிருக்கீங்க, உங்களை பரிசோதனை செஞ்சுக்குங்கன்னு சொன்னவுடனே ரெண்டு பிள்ளைகளும் பரிசோதிச்சுக்க இங்க ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்குப் போனாங்க. ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்காரங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்க கூடாதுங்கறதுக்காக, ஒரு தற்காப்பு நடவடிக்கையா உங்க குடும்பத்தார் எல்லாரையுமே கூட்டிக்கிட்டு வாங்கன்னாங்க. கடைசியா நாங்க எல்லாருமே போக வேண்டி வந்திச்சு.
மோதிஜி: சரி.
அஷோக் கபூர்: அடுத்த நாளே அவங்க சொன்னாங்க, உங்க குடும்பத்தார் ஆறு பேருக்கு – அதாவது உங்க ரெண்டு மகன்கள், நான், என் மனைவி, எனக்கே பார்த்தீங்கன்னா 73 வயசாகுது, என் மருமக, என் 16 வயதான பேரன்னு நாங்க 6 பேர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கறதால உடனடியா தில்லி போயிரச் சொன்னாங்க.
மோதிஜி: அடக்கடவுளே.
அஷோக் கபூர்: ஆனா ஐயா நாங்க பயப்படலை. சரி நல்லகாலம் இப்பவே நமக்குத் தெரிய வந்திச்சேன்னு நாங்க தில்லி சஃப்தர்ஜங்க் மருத்துவமனைக்குப் போனோம். ஆக்ராவுலேயே எங்களை ரெண்டு ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பி வச்சாங்க. இதுக்கு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கலை. ஆக்ரா மருத்துவர்களையும், நிர்வாகத்தையும் சும்மா சொல்லக்கூடாது, முழு ஒத்துழைப்பும் உதவியும் அளிச்சாங்க.
மோதிஜி: ஓஹோ, நீங்க ஆம்புலன்ஸ்ல வந்தீங்களா?
அஷோக் கபூர்: ஆமாங்கய்யா, ஆம்புலன்ஸ்ல தான். பெரிய பிரச்சனை இல்லை, உட்கார்ந்தபடியே தான் வந்தோம். எங்களுக்கு ரெண்டு ஆம்புலன்ஸ்களை குடுத்தாங்க. கூடவே ரெண்டு மருத்துவர்களும் வந்தாங்க, அவங்க எங்களை சஃப்தர்ஜங்க் மருத்துவமனை வரை கொண்டு விட்டுப்போனங்க. சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில ஏற்கெனவே மருத்துவர்கள் வாசல்லேயே தயாரா நின்னுட்டு இருந்தாங்க, அவங்க எங்களை வார்டுக்கு உடனடியா கொண்டு போனாங்க. எங்க ஆறு பேருக்குமே அவங்க தனித்தனி அறைகளைக் கொடுத்தாங்க. நல்ல அறைகள், எல்லாமே இருந்திச்சு. இப்ப நாங்க அங்க 14 நாட்கள் மட்டுமே தனியா இருந்தோம். மருத்துவர்கள் பத்திச் சொல்லணும்னா, அவங்க ரொம்பவே உதவிகரமா இருந்தாங்க, எங்களை ரொம்ப நல்லா நடத்தினாங்க, மத்த பணியாளர்களுமே இப்படித்தான். அவங்க பாதுகாப்பு உடையில வந்தாங்க இல்லையா, யாரு செவிலியர், யாரு மருத்துவர், யார் வார்ட்பாய்ன்னே தெரியலை. அவங்க சொல்றதை கேட்டு நாங்க நடந்தோம். எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்கலை.
மோதிஜி: உங்க தன்னம்பிக்கை ரொம்ப பலமா இருக்கா மாதிரி தெரியுதே!!
அஷோக் கபூர்: ஆமாம் ஐயா, நான் நல்லா இருக்கேன். என் கால்மூட்டுக்கு வேற நான் அறுவை சிகிச்சை செஞ்சிருக்கேன். இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது.
மோதிஜி: இல்லை, இத்தனை பெரிய சங்கடம் குடும்பத்தார் எல்லாருக்குமே வந்திருக்கு, 16 வயதான பேரன் வரை வந்திருக்கு, இதைத் தாண்டியும் தன்னம்பிக்கையோடு இருக்கீங்களேன்னு கேட்டேன்.
அஷோக் கபூர்: அவன் ICSE தேர்வு எழுத வேண்டியிருந்திச்சு. நாங்க சொன்னோம், தேர்வு எல்லாம் பிறகு பார்த்துக்கலாம், முதல்ல வாழ்க்கைத் தேர்வை பார்ப்போம், கவலைப்படாதேன்னு சொன்னோம்.
மோதிஜி: சரியா சொன்னீங்க. உங்க அனுபவம் தான் இதில கை கொடுத்திருக்கு. குடும்பம் முழுவதுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு, மனோதைரியத்தை ஏற்படுத்தி இருக்கு.
அஷோக் கபூர்: ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருந்ததால, ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்க முடியலைன்னாலும், ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்க முடிஞ்சுது. தொலைபேசி வாயிலா பேசிக்கிட்டோம். மருத்துவர்கள் எங்களை நல்லவிதமா பார்த்துக்கிட்டாங்க. நாங்க அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம், எங்களுக்கு முழுக்க முழுக்க துணை வந்தாங்க. மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், வார்ட் பணியாளர்கள்னு எல்லாருமே நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.
மோதிஜி: உங்களுக்கும் உங்க குடும்பத்தார் எல்லாருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
அஷோக் கபூர்: தேங்க்யூ ஐயா. மிக்க நன்றி. உங்க கூட பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம்யா…. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தறது தொடர்பா எங்கயாவது போகணும், ஏதாவது செய்யணும்னா நாங்க அதுக்கு தயாரா இருக்கோம்.
மோதிஜி: நீங்க உங்க வழியில ஆக்ராவுல செய்யுங்க. யாராவது பசியோட இருந்தா,அவங்களுக்கு உணவு கொடுங்க. ஏழைகளை நல்லா கவனிச்சுக்குங்க, விதிமுறைகளை முறையா பின்பற்றுங்க. உங்க குடும்பம் முழுவதும் இதில சிக்கியிருந்திச்சு, ஆனா சட்டதிட்டங்களைப் பின்பற்றினதால, நீங்களும் உங்க குடும்பத்தாரும் இதிலேர்ந்து தப்பிக்க முடிஞ்சிருக்கு, ஆகையால எல்லாரும் விதிகளை மதிச்சு நடந்தா, நாடு காப்பாத்தப்படும்னு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க.
அஷோக் கபூர்: மோதி ஐயா, நாங்க காணொளிகளை ஏற்படுத்தி சேனல்களுக்கு கொடுத்திருக்கோம்.
மோதிஜி: சரி.
அஷோக் கபூர்: இதை சேனல்காரங்க காமிக்கவும் செஞ்சிருக்காங்க, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வர்றாங்க.
மோதிஜி: இதை சமூக ஊடகங்கள்ல பிரபலமாக்கணும்.
அஷோக் கபூர்: ஆமாம் ஆமாம். நாங்க வசிக்கற காலனி, ரொம்ப சுத்தமான காலனி, அங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம், நாங்க மீண்டு வந்திருக்கோம், யாரும் பயப்பட வேண்டாம். யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. சந்தேகம் இருந்தா பரிசோதனை செய்துக்குங்க. எங்ககூட இந்தக் காலகட்டத்தில பழகினவங்க பரிசோதனை செய்துக்கிட்டாங்க, யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இறையருள்ல இல்லைய்யா.
மோதிஜி: உங்களுக்கு மிக்க நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, நாம அஷோக் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வோம். பீதியடையாமல், பதட்டமே படாமல், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது, சரியான நேரத்தில் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வது, உசிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தப் பெருந்தொற்றை நம்மால் வெற்றி கொள்ள முடியும். நண்பர்களே, நாம் மருத்துவரீதியாக இந்தப் பெருந்தொற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள சில மருத்துவர்களோடும் உரையாடினேன், இவர்கள் தானே இந்தப் போரில் முன்னணி வீரர்களாகப் போராடி வருகிறார்கள்!! நோயாளிகளை கவனித்துக் கொள்வது இவர்களுடைய அன்றாடக் கடமை இல்லையா!! நாம் இப்போது தில்லியைச் சேர்ந்த மருத்துவர் நிதேஷ் குப்தாவுடன் உரையாடலாம் வாருங்கள்!!
மோதிஜி: வணக்கம் டாக்டர்.
டாக்டர். நிதீஷ் குப்தா: வணக்கம் ஐயா.
மோதிஜி: நிதேஷ்ஜி, நீங்க இந்தப் போர்ல விடாப்பிடியா முயற்சி செஞ்சிட்டு வர்றீங்க, மருத்துவமனையில உங்க மத்த நண்பர்களோட மனோநிலை பத்தி சொல்ல முடியுங்களா?
டாக்டர். நிதேஷ் குப்தா: எல்லாருமே ரொம்ப உற்சாகமா இருக்காங்க. உங்க ஆசிகள் எல்லாரோடயும் இருக்கு. எல்லா மருத்துவமனைகளுக்கும் நீங்க கொடுத்து வர்ற ஆதரவு இருக்கே, நாங்க கேட்டதை எல்லாம் கொடுத்திருக்கீங்க. எப்படி இராணுவம் எல்லைப்புறத்தில போரிடுதோ, அதே விடாமுயற்சியோட நாங்க இங்க உறுதியோட இருக்கோம். எங்க கடமை ஒண்ணே ஒண்ணு தான் – நோயாளி உடல்நலம் சீராகி வீடு போகணுங்கறது தான்.
மோதிஜி: நீங்க சொல்றது சரிதான், இது போர்க்கால நிலைமை, நீங்க எல்லாரும் தான் நிலைமையை எதிர்கொள்ளத் தயாரா இருக்கீங்க.
டாக்டர். நிதேஷ் குப்தா: ஆமாம்யா.
மோதிஜி: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கறது மட்டுமில்லாம நீங்க அவங்களுக்கு உளவியல்ரீதியா ஆலோசனைகளையும் அளிக்க வேண்டியிருக்கு இல்லையா?
டாக்டர். நிதேத் குப்தா: ஆமாங்கய்யா. இது ரொம்ப ரொம்ப அவசியம். ஏன்னா நோயாளிகள் தாங்கள் பீடிக்கப்பட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்ட உடனேயே பயந்து போயிடறாங்க. இது ஒண்ணுமில்லை, அடுத்த 14 நாட்கள்ல நீங்க சரியாயிருவீங்க, பிறகு வீட்டுக்குப் போகலாம்னு முதல்ல அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியிருக்கு. இதுவரைக்கும் இப்படி நாங்க 16 நோயாளிகளை குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கோம்.
மோதிஜி: அவங்க உள்ளபடியே எதைக்கண்டு பயப்படுறாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?
டாக்டர். நிதேஷ் குப்தா: எனக்கு என்ன ஆயிடுமோங்கற பயம் தான். அவங்க வெளியுலகத்தைப் பார்க்கும் போது, வெளிய பலர் இறந்துகிட்டு இருக்கறதை பார்க்கறாங்க, இப்படி தங்களுக்கும் ஆயிருமோங்கற கவலை அவங்களை வாட்டுது. ஆனா நாங்க அவங்களுக்கு அவங்க நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கறோம். உங்க நிலைமை அத்தனை மோசமில்லை, சாதாரண கபம்-ஜுரம் மாதிரி தான், ஆகையால நீங்க 7-8 நாட்கள்ல சீராயிருவீங்க. பிறகு உங்களை பரிசோதனை செஞ்ச பிறகு, உங்களுக்கு தொற்று அபாயம் இல்லைன்னு தெரிய வந்தபிறகு வீட்டுக்கு அனுப்பிருவோம்னு சொல்லுவோம். ஆகையால திரும்பத் திரும்ப 2-3 மணிநேரத்துக்கு ஒருமுறை அவங்களைப் போய் சந்திப்போம், விசாரிப்போம், இது அவங்களுக்கு இதமா இருக்கும்.
மோதிஜி: அவங்க தன்னம்பிக்கை அதிகரிக்குது இல்லையா?
டாக்டர். நிதேஷ் குப்தா: தொடக்கத்தில பயம் என்னவோ இருந்தாலும்கூட, நாங்க புரியவச்ச பிறகு, 2-3 நாட்கள்ல அவங்ககிட்ட குணம் தெரிய ஆரம்பிச்சவுடனே, நாம சரியாயிருவோம்னு அவங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை துளிர்க்குது.
மோதிஜி: எல்லா மருத்துவர்கள் மனசிலயும் மிகப்பெரிய சேவை செய்யற வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கற உணர்வு ஏற்படுதில்லையா?
டாக்டர். நிதேஷ் குப்தா: ஆமாங்கய்யா. கண்டிப்பா ஏற்படுது. இதில எந்த பயமும் இல்லைன்னு, நாங்க எங்க குழுவினரை தொடர்ந்து ஊக்கப்படுத்திட்டே இருக்கோம். நாம முழு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டோம்னா, நோயாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பத்தி புரிய வச்சோம்னா, எல்லாம் சரியாயிரும்.
மோதிஜி: சரி டாக்டர். உங்க கிட்ட ஏராளமான நோயாளிகள் வருவாங்க, நீங்க இதில முழுவீச்சில ஈடுபட்டிருப்பீங்க. உங்ககூட பேசினது இதமா இருந்திச்சு. ஆனா உங்க போராட்டத்தில நானும் உங்ககூட இருக்கேன். தொடர்ந்து போராடுங்க.
டாக்டர். நிதேஷ் குப்தா: உங்க ஆசிகள் தொடரணுங்கறது தான் எங்க எல்லாரோட விருப்பமும்கூட.
மோதிஜி: பலப்பல நல்வாழ்த்துக்கள் சகோதரரே.
டாக்டர். நிதேஷ் குப்தா: ரொம்ப நன்றிங்கய்யா.
மோதிஜி: நன்றிகள். நிதேஷ்ஜி உங்களுக்கு பலப்பல நன்றிகள். உங்களைப் போன்றவர்களுடைய முயற்சிகளின் பலனாகத்தான் இந்தியா கொரோனாவுக்கு எதிரான போரிலே கண்டிப்பாக வெல்லும். நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பங்களை பராமரியுங்கள் என்பதே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள். நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கிறது என்று உலகில் கிடைக்கப்பெறும் அனுபவம் என்ன கூறுகிறது. இப்படித் திடீரென்று பெருகும் நோய்த்தொற்றின் விளைவாக மிகவும் சிறப்பாக விளங்கிவரும் உடல்நலச் சேவைகள் இருக்கும் நாடுகள்கூட மண்டியிடுவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் இத்தகைய நிலைமை ஏற்பட்டு விடாமல் இருக்க நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது மேலும் ஒரு மருத்துவர் புணேயிலிருந்து நம்மோடு இணையவிருக்கிறார். அவர் டாக்டர் போர்ஸே அவர்கள்.
மோதிஜி: வணக்கம் டாக்டர்.
டாக்டர் போர்ஸே: வணக்கம்.
மோதிஜி: நீங்க மக்கள் சேவையே மகேசன் சேவைங்கற குறிக்கோளோட பணியாற்றிக்கிட்டு வர்றீங்க. நான் இன்னைக்கு உங்ககூட சில விஷயங்கள் பத்திப் பேச நினைக்கறேன், நாட்டுமக்களுக்கு நீங்க அளிக்க நினைக்கற செய்தி பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறேன். மருத்துவரோட தொடர்பு கொண்டு எப்ப கரோனா பரிசோதனை செஞ்சுக்கணுங்கறது தொடர்பா பலரோட மனங்கள்ல ஒரு வினா இருந்துக்கிட்டு இருக்கு. ஒரு மருத்துவர்ங்கற முறையில, நீங்க உங்களையே முழுமையா கரோனா நோயாளிகளுக்குன்னு அர்ப்பணம் செஞ்சிருக்கீங்க. அந்த வகையில உங்க கருத்துக்கள் மகத்துவம் வாய்ந்தவை, நான் கேட்க ஆவலா இருக்கேன்.
டாக்டர் போர்ஸே: ஐயா, நான் இங்க பி.ஜே. மருத்துவக் கல்லூரியில பணிபுரியற ஒரு பேராசிரியர். இங்க நாயுடு மருத்துவமனைங்கற பெயர்ல, புணேயில நகராட்சி மருத்துவமனை ஒண்ணு இருக்கு. இங்க ஜனவரி 2020லேர்ந்து ஒரு பரிசோதனை மையத்தை ஆரம்பிச்சோம். இன்னைக்கு வரைக்கும் இங்கிருந்து 16 கோவித் 19 நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்காங்க. இந்த 16 பேரையும் நாங்க தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்தினோம், சிகிச்சை அளிச்சோம்,பிறகு 7 பேர்களை விடுவிப்பு செஞ்சோம். பாக்கி இருக்கற 9 பேர்களுமே ரொம்ப சீரா இருக்காங்க. அவங்க உடல்ல வைரஸ் கிருமி இருந்தாலுமே கூட, அவங்க நல்லபடியா ஆயிட்டு வர்றாங்க. இப்ப இங்க மாதிரி அளவு ரொம்ப சின்னது தான், 16 பேர்கள் மட்டும் தான். ஆனா, இளைய சமுதாயத்தினர்கூட இதனால பாதிப்படைஞ்சு வர்றாங்கன்னு தெரிய வருது. இருந்தாலுமேகூட, இந்த நோய் அத்தனை தீவிரமா அவங்களை பாதிக்கலைங்கறதால, அவங்க குணமாயிட்டு வர்றாங்க. பாக்கி இருக்கற 9 பேர்களுடைய நிலைமையும் மோசமாயிரக்கூடாதுங்கறதால நாங்க அவங்களை தொடர் கண்காணிப்புல வச்சிட்டு இருக்கோம், அவங்களும் 4-5 நாட்கள்ல சரியாயிருவாங்க. இங்க சந்தேகத்துக்கு இடமான வகையில வர்றவங்க சர்வதேச பயணம் போனவங்க, அவங்ககூட தொடர்புல வந்தவங்க; இவங்களோட மாதிரியை எடுக்கறோம். இவங்களோட oropharyngeal மாதிரியை, அதாவது உணவுக்குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதியோட மாதிரியை எடுக்கறோம், மூக்கிலேர்ந்து மாதிரியை எடுக்கறோம், இந்த மூக்கிலேர்ந்து எடுக்கப்பட்ட மாதிரி பத்தின அறிக்கை வந்தவுடனே நாங்க அவங்களை நோய்தொற்று வார்டில அனுமதிக்கறோம். ஒருவேளை பாதிப்பு இல்லைன்னா, வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான பரிந்துரை செய்யறோம், இதை எப்படி கடைப்பிடிப்பதுங்கற வழிமுறையை சொல்லிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கறோம்.
மோதிஜி: என்ன புரிய வைக்கறீங்க? வீட்டில தனிமைப்படுத்தல் பத்தி என்ன சொல்லிக் கொடுக்கறீங்க?
டாக்டர் போர்ஸே: நீங்க வீட்டில இருந்தாலுமேகூட, நீங்க அங்க தனிமைப்படுத்திக்கணும், மத்தவங்க கிட்டேர்ந்து குறைஞ்சபட்சம் 6 அடி இடைவெளி வச்சிருக்கணும். அடுத்ததா, முகக்கவசத்தைப் பயன்படுத்தணும், திரும்பத்திரும்ப கைகளை சுத்தம் செய்யணும். உங்ககிட்ட கிருமிநாசினி திரவம் இல்லைன்னா, சாதாரண சோப்பால கையைத் தேய்ச்சு தண்ணியில கழுவணும், அதுவும் திரும்பத்திரும்பக் கழுவணும். உங்களுக்கு இருமலோ, தும்மலோ வந்தா, கைக்குட்டையில மூடிக்கிட்டு செய்யணும். இதனால வெளிப்படும் சின்னச்சின்ன துளிகள் அதிக தொலைவு பயணிக்காது, தரையிலயும் விழாது, அதிகபட்சம் கைக்குட்டையில தான் இருக்கும், ஆகையால பரவறதுக்கான சாத்தியக்கூறு இருக்காது. இதைத் தான் நாங்க அவங்களுக்குப் புரிய வைக்கறோம் ஐயா. ரெண்டாவது விஷயம் என்னென்னா, அவங்க வீட்டில தனிமைப்படுத்தல்ல இருக்கும் போது வெளிய எங்கயும் போகக்கூடாது. இப்ப முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கு; இந்தக் குறிப்பிட்ட காலத்தில அவங்க குறைஞ்சது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்ல ஈடுபட்டிருக்கணும்னு நாங்க அவங்களுக்கு செய்தி அளிச்சு வர்றோம்.
மோதிஜி: சரி டாக்டர், நீங்களும் உங்க குழுவினரும் முழு அர்ப்பணிப்போட சேவை செஞ்சிட்டு வர்றீங்க. உங்ககிட்ட வர்ற எல்லா நோயாளிகளுமே குணமாகித்தான் போவாங்க, இந்த நோய் தொற்றுக்கு எதிரான நம்மோட போர்ல உங்க எல்லாரோட உதவியோடயும் நாம வெல்வோங்கற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு.
டாக்டர் போர்ஸே: நாம ஜெயிப்போங்கற நம்பிக்கை எனக்கும் இருக்கு ஐயா.
மோதிஜி: பலப்பல நல்வாழ்த்துக்கள் டாக்டர் போர்ஸே அவர்களே. நன்றி.
டாக்டர் போர்ஸே: ரொம்ப நன்றிங்கய்யா.
நண்பர்களே, நம்முடைய மருத்துவ நண்பர்கள் அனைவரும் நாட்டுமக்கள் அனைவரையும் இந்தப் பெரும் சங்கடத்திலிருந்து மீட்டெடுக்க கச்சைகட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கூறும் விஷயங்களைக் காதில் மட்டும் போட்டுக் கொள்வதோடு நின்று விடாமல், இவற்றை நம் வாழ்க்கையில் பின்பற்றவும் செய்ய வேண்டும். மருத்துவர்களுடைய தியாகம், தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது, ஆச்சார்யரான சரகர் கூறிய சொற்கள் தாம் என் நினைவுக்கு வருகின்றன. ஆச்சார்ய சரகர் அன்று கூறியதை இன்று நமது மருத்துவர்கள் விஷயத்தில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆச்சார்ய சரகர் என்ன கூறினார் தெரியுமா…..
न आत्मार्थम् न अपि कामार्थम् अतभूत दयां प्रति ||
वर्तते यत् चिकित्सायां सर्वम् इति वर्तते ||
ந ஆத்மார்த்தம் ந அபி காமார்த்தம் அதபூத தயாம் ப்ரதி.
வர்த்ததே யத் சிகித்சாயாம் சர்வம் இதி வர்த்ததே.
அதாவது, செல்வத்தின் பொருட்டோ, வேறு ஏதோ ஒரு ஆசையின் பொருட்டோ அல்லாது, நோயாளிக்கு சேவை செய்வதை, தயை உணர்வோடு செய்பவரே, உண்மையான மருத்துவர் ஆவர் என்பதே இதன் பொருள்.
நண்பர்களே, மனிதநேயம் மனதில் நிறைந்த ஒவ்வொரு செவிலியரையும், இன்று நான் வணங்குகிறேன். நீங்கள் அனைவரும் எந்த சேவை மனப்பான்மையோடு பணியாற்றுகிறீர்களோ, அது ஈடு இணை இல்லாதது. இந்த ஆண்டு அதாவது 2020ஆம் ஆண்டை உலகம் முழுவதும் செவிலியர் மற்றும் பிரசவம் பார்க்கும் தாதியருக்கான சர்வதேச ஆண்டாகக் கொண்டாடி வருகிறது. இது 200 ஆண்டுகள் முன்பாக, 1820ஆம் ஆண்டில் பிறந்த ஃப்லோரென்ஸ் நைட்டிங்கேலுடன் தொடர்பு உடையது. இவர் மனித சேவைக்கு, செவிலியர் சேவைக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தவர். இதை ஒரு புதிய சிகரத்துக்குக் கொண்டு சென்றவர். உலகத்தின் அனைத்து செவிலியர்களின் சேவைத்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆண்டு, கண்டிப்பாக ஒட்டுமொத்த செவிலியர் சமூகத்துக்கும் மிகப்பெரிய சவாலான நேரமாக உருவெடுத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்தத் தேர்விலே வெற்றி பெறப் போவதோடு கூடவே, பல உயிர்களையும் காப்பாற்றப் போகிறீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவர்களைப் போன்ற அனைத்து நண்பர்களின் ஊக்கம் மற்றும் பேரார்வம் காரணமாகவே இத்தனை பெரிய போரை நம்மால் எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. உங்களைப் போன்ற நண்பர்கள் – மருத்துவராகவோ, செவிலியராகவோ, துணை மருத்துவ ஊழியர்களாகவோ, ஆஷா சகோதரிகளாகவோ, துணை செவிலியர்களாகவோ, துப்புறவுத் தொழிலாளர்களாகவோ இருக்கலாம், உங்களது ஆரோக்கியம் பற்றிய கவலையும் நாட்டுக்கு உண்டு. இதை எல்லாம் பார்த்தபிறகு தான், இப்படிப்பட்ட சுமார் 20 இலட்சம் நண்பர்கள் நலனுக்காக 50 இலட்சம் ரூபாய் வரையிலான ஆரோக்கியக் காப்பீடு பற்றிய அறிவிப்பை அரசு செய்திருக்கிறது. இதன் வாயிலாக இந்தப் போரிலே மேலும் அதிக தன்னம்பிக்கையோடு உங்களால் நாட்டை வழிநடத்த முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நம்மைச் சுற்றி இப்படிப் பலபேர்கள் இருக்கிறார்கள், இவர்கள் தாம் சமூகத்தின் நிஜமான ஹீரோக்கள், இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் அவர்கள் முன்னணி வகிக்கிறார்கள். நரேந்திரமோதி செயலியில், NamoAppஇல், பெங்களூரூவைச் சேர்ந்த நிரஞ்ஜன் சுதாகர் ஹெப்பாலே அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்றால், இப்படிப்பட்டவர்கள் தாம் நமது தினசரி வாழ்வின் நாயகர்கள் என்று கூறியிருக்கிறார். இது உண்மை தான். இவர்கள் காரணமாகவே நமது தினசரி வாழ்க்கை சுலபமாக நடக்கிறது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், ஒரு நாள் உங்கள் வீட்டுக் குழாயில் வரும் நீர் தடைப்பட்டுப் போனது என்று சொன்னால், அல்லது உங்கள் வீட்டிற்கு வரும் மின்சார இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டால், அப்போது இந்த நிஜவாழ்க்கை நாயகர்கள் தாம் நமது இன்னல்களைத் தொலைப்பவர்கள். உங்கள் வீட்டுக்கருலே இருக்கும் சிறிய பலசரக்குக் கடை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!! இன்றைய இப்படிப்பட்ட கடினமான வேளையில், அந்தக் கடைக்காரருமேகூட ஆபத்தை எதிர்கொள்கிறார். இவையெல்லாம் யாருக்காக? உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தானே அவர் இத்தனை சிரமங்களை மேற்கொள்கிறார்!! இதைப் போலவே, ஓட்டுனர்கள், தொழிலாளிகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நாடு முழுமைக்கும் அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதன் மூலமாக விநியோகச் சங்கிலியில் எந்தவிதமானதொரு தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தானே அவர்கள் பணியில் இத்தனை மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்!! வங்கிச் சேவைகளை அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். வங்கித் துறையில் பணியாற்றும் நம்மவர்கள் முழு ஈடுபாட்டோடும், மனதைச் செலுத்தி இந்தப் போருக்குத் தலைமையேற்று வங்கிப் பணிகளை ஏற்றுச் செயல்படுத்தி வருகிறார்கள், உங்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழலில் இந்தச் சேவை சிறிய விஷயமல்ல. அப்படிப்பட்ட வங்கிப் பணியாளர்களுக்கு நாம் எத்தனை நன்றிகளைத் தெரிவித்தாலும், அது தகும். பெரிய எண்ணிக்கையில் மின்வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் நமது டெலிவரி சிப்பந்திகள், இந்தக் கடினமான வேளையிலும்கூட பலசரக்குப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த முழுமையான ஊரடங்கு வேளையிலும் கூட, டிவி பார்க்க முடிந்தவர்கள், வீட்டில் இருந்தபடியே எந்தத் தொலைபேசி, இணையத்தைப் பயன்படுத்துகிறார்களோ, இவை அனைத்தையும் சீராக வைத்திருப்பதில் யாரோ சிலர் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகிறார்கள். இன்று நம்மால் டிஜிட்டல் முறையில் பணத்தை சுலபமாகச் செலுத்த முடிகிறது என்றால், இதன் பின்னணியில் பலரின் உழைப்பு அடங்கி இருக்கிறது. ஊரடங்கு வேளையில் இவர்கள் தாம் நாட்டின் பணிகளை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறார்கள். இன்று நாட்டுமக்கள் அனைவர் தரப்பிலும், நான் இப்படிப்பட்ட அனைவருக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அவர்கள் தங்களுக்காகவும்கூட, அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தார் மீது அக்கறை செலுத்துங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட சிலர் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தல் செயல்பாடு பரிந்துரை செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சிலபேர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன். இவை எனக்கு மிகுந்த துக்கத்தை அளிக்கிறது. இது மிகவும் துர்பாக்கியமானது. தற்போதைய நிலைமையில், ஒருவர் மற்றவருக்கு இடையே சமூகரீதியிலான இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும், உணர்வுரீதியான அல்லது மனிதம்ரீதியான இடைவெளி இருத்தல் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை. மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காகவே இவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் மக்கள் தங்கள் பொறுப்புக்களை மிகுந்த கடமையுணர்வோடு புரிந்து வருகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், நோய்க்கிருமி இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாத போதும் கூட, அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தலில் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்றால், இவர்கள் அயல்நாடுகளிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள், அதிகபட்ச எச்சரிக்கையை கடைப்பிடிக்கிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு இந்த நோய்க்கிருமியால் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஆகையால், இப்படிப்பட்டவர்கள் இத்தனை கடமையுணர்வை வெளிப்படுத்தும் போது, அவர்களிடத்தில் மோசமாக நடந்து கொள்வது, முற்றிலும் தவறானது; மாறாக, அவர்களிடத்தில் கருணையோடு நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
கொரோனா வைரசை எதிர்கொள்ள மிகப்பெரிய வலிமையான வழிமுறை சமூகரீதியிலான இடைவெளியைப் பராமரித்தல் தான். சமூகரீதியான இடைவெளி என்பதன் பொருள் சமூகரீதியிலான ஊடாடலை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது அல்ல. உள்ளபடியே இந்த வேளை, நமது பழைய சமூக உறவுகளில், புத்துயிர் ஊட்ட வேண்டிய வேளை. அப்படிப்பட்ட உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணம். ஒருவகையில் இந்த காலகட்டமானது, சமூகரீதியிலான இடைவெளியை அதிகரித்து, உணர்வுரீதியிலான இடைவெளியை குறைக்க வேண்டிய வேளை. நான் மீண்டும் கூறுகிறேன், சமூகரீதியிலான இடைவெளியை அதிகரியுங்கள், உணர்வுரீதியிலான இடைவெளியைச் சுருக்குங்கள். கோடாவிலிருந்து யஷ்வர்த்தன் அவர்கள் நரேந்திரமோதி செயலியில் என்ன எழுதி இருக்கிறார் என்றால், அவர் இந்த முழுமையான ஊரடங்குக் காலத்தில் குடும்பரீதியான உறவுகளை பலப்படுத்தி வருகிறாராம். குழந்தைகளோடு உள்ளரங்கு விளையாட்டுக்கள் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதாகத் தெரிவிக்கிறார். மேலும் சமையலறையில் புதிய புதிய உணவுகளையும் சமைக்கிறாராம். ஜபல்பூரைச் சேர்ந்த நிருபமா ஹர்ஷேய் அவர்கள் முதன்முறையாக கனமான போர்வையைச் செய்ய வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறியதாக, நரேந்திரமோதி செயலியில் தெரிவிக்கிறார். இதுமட்டுமல்ல, அவர் தோட்டப் பராமரிப்பு ஆசையையும் நிறைவேற்ற முடிந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதே போல ராய்புரைச் சேர்ந்த பரீக்ஷித் அவர்கள், குருகிராமைச் சேர்ந்த ஆர்யமன் அவர்கள், ஜார்க்கண்டைச் சேர்ந்த சூரஜ் ஆகியோரது பதிவுகளைப் படிக்க முடிந்தது. இதில் அவர்கள் தங்கள் பள்ளி நண்பர்களுடனான கணினிவழி மீள்சந்திப்பு பற்றி உரையாடியதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய இந்த எண்ணம் மிகவும் சுவாரசியமானது. பல பத்தாண்டுகளாக உங்கள் பள்ளி-கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டாமல் போயிருக்கலாம். நீங்களும் இந்த எண்ணத்தை செயல்படுத்தித் தான் பாருங்களேன்!! புபனேஷ்வரைச் சேர்ந்த ப்ரத்யுஷ் அவர்கள், கோல்காத்தாவைச் சேர்ந்த வசுதா ஆகியோர் தாங்கள் படிக்க முடியாத புத்தகங்களை எல்லாம் இப்போது படிப்பதாக எழுதியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக வீட்டிலே தூசி படிந்து கிடக்கும் தப்லா, வீணை போன்ற இசைக்கருவிகளை தூசிதட்டி, சாதகம் செய்ய ஆரம்பித்து இருப்பதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். நீங்களும் இப்படிச் செய்யலாமே! இதன் மூலம் இசையின் ஆனந்தத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம், பழைய நினைவுகளையும் புதுப்பித்துக் கொள்ளலாம். அதாவது இதுபோன்ற சங்கடகாலத்தில், வாராது வந்த இந்த வேளையிலே, உங்களை நீங்கள் சந்திக்கக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருப்பதோடு, நீங்கள் உங்கள் ஆழ்மன ஆர்வத்தோடும் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் பழைய நண்பர்கள், குடும்பத்தாரோடு இணையக்கூடிய முழுமையான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்.
நமோ செயலியில் ரூர்கியைச் சேர்ந்த சசி அவர்கள், இந்த முழுமையான ஊரடங்குக் காலத்தில், நான் என்னுடைய உடலுறுதிக்காக என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலைகளில், நவராத்திரி விரதத்தை நான் எப்படி கடைப்பிடிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்…. நான் உங்களை வெளியே வரவேண்டாம் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேனே தவிர, உங்களுக்குள்ளே ஆராய்ந்து பார்க்கவும் அமிழ்ந்து போகவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன். உங்களை நீங்கள் அறிந்து கொள்ளூம் முயற்சியில் ஈடுபடுங்கள். நவராத்திரி விரதம் பற்றிக் கூறவேண்டுமென்றால், இது எனது மற்றும் எனது சக்திக்கும், பக்திக்கும் இடையிலான விஷயம். ஆனால் உடலுறுதி என்றால், விஷயம் சற்று நீண்டு விடலாம் என்பதால், சமூக ஊடகத்தில், நான் என்ன செய்கிறேன் என்பது பற்றி சில காணொளிகளை தரவேற்றம் செய்கிறேன். நரேந்திரமோதி செயலியில் நீங்கள் கண்டிப்பாக இந்தக் காணொளிகளைப் பாருங்கள். நான் செய்வதிலிருந்து சில உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்; ஆனால் ஒருவிஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நான் உடலுறுதி வல்லுனர் கிடையாது. அதேபோல நான் யோகக்கலை ஆசிரியரும் கிடையாது. நான் ஒரு மாணவன் மட்டுமே. கண்டிப்பாக சில யோக ஆஸனங்களால் எனக்கு அதிக ஆதாயம் கிடைத்திருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். இந்த முழுமையான ஊரடங்கு காரணமாக இந்த விஷயங்கள் உங்களுக்கும் பயனுடையவையாக இருக்கலாம்.
நண்பர்களே, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டம் இதுவரை காணாதது மட்டுமல்லாமல், சவால்கள் நிறைந்ததும் கூட. ஆகையால், இந்த வேளையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளும்கூட, உலக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத-கேட்டிராதவையாக இருக்கின்றன. கொரோனாவைத் தடுக்க இந்தியர்கள் அனைவரும் மேற்கொண்டுவரும் முயற்சிகள், இவை தாம் கொரோனாவுக்கு எதிரான பெரும்போராட்டத்தில் நமக்கு வெற்றியை அளிக்கும். ஒவ்வொரு இந்தியரின் மனவுறுதியும், சுயகட்டுப்பாடும் தாம் நம்மை இந்தச் சங்கடத்திலிருந்து வெளியே கொண்டு வரும். இவற்றோடு கூடவே, ஏழைகளின் பொருட்டு நமது புரிந்துணர்வு மேலும் ஆழமானதாக, இன்னும் உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். எங்கேயாவது ஒரு ஏழை துயரத்தோடும், பட்டினியோடும் இருக்கிறார் என்றால், இந்தச் சங்கடமான வேளையில் நாம் முதலாவதாக அவரது பசியைப் போக்க வேண்டும், அவருடைய தேவைகள் பற்றி சிந்திக்க வேண்டும். இதை நம் இந்திய தேசத்தால் செய்ய முடியும். நம்முடைய மனிதத்தன்மை இதிலே தான் வாசம் செய்கிறது. இதுவே நமது கலாச்சாரம், இதுவே நமது பண்பாடு.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று ஒவ்வொரு இந்தியரும், தனது உயிரைப் பாதுகாக்க வீட்டிலேயே அமைந்திருக்கிறார். ஆனால் இனிவரும் காலத்தில், இதே இந்தியர், தனது நாட்டின் முன்னேற்றத்துக்காக, அனைத்துத் தடைகளையும் தகர்த்து முன்னேறிச் செல்வார், நாட்டையும் முன்னெடுத்துச் செல்வார். நீங்கள், உங்கள் குடும்பத்தாரோடு வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக, எச்சரிக்கையோடு இருங்கள். நாம் இந்த மஹா யுத்தத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். மனதின் குரலுக்காக, மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம், அதுவரை, இந்தச் சங்கடத்தை முறியடிப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற மனவுறுதியோடு, நல்விருப்பங்களோடு முன்னேறிச் செல்வோம், உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, கட்ச் தொடங்கி கோஹிமா வரை, கஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமரி வரை, நாட்டில் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள மனதின் குரல் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்திருப்பதை நான் என் பேறாகக் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நமது நாட்டின் விசாலத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை நினைவில் இருத்துவது, அதனைப் போற்றுவது ஆகியன அனைத்து இந்தியர்களுக்குக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பன்முகத்தன்மையை அனுபவிப்பது எனும் சந்தர்ப்பம் இருக்கிறதே, அது சிலிர்ப்பை ஏற்படுத்துவது, மனதில் ஆனந்தத்தை நிரப்புவது, ஒருவகையில் உத்வேகம் அளிப்பது. சில நாட்கள் முன்பாக, கைவினைக் கலைஞர்களுக்கான சந்தையான தில்லியின் ஹுனர் ஹாட்டில் ஒரு சின்ன இடத்தில், நமது நாட்டின் விசாலத்தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், உணவுப்பழக்கங்கள், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் காண முடிந்தது. பாரம்பரியமான ஆடைகள், கைவினைப் பொருட்கள், தரைவிரிப்பு, பாத்திரங்கள், பிரம்பு, பித்தளைப் பொருள்கள், பஞ்சாபின் பூத்தையல், ஆந்திரத்தின் அருமையான தோல் பொருட்கள், தமிழ்நாட்டின் அழகான ஓவியங்கள், உத்திர பிரதேசத்தின் பித்தளைப் பொருட்கள், பதோஹீயின் தரை விரிப்புகள், கட்சின் செம்புப் பொருட்கள், பலவகையான வாத்தியக்கருவிகள், எண்ணிலடங்கா விஷயங்கள், ஒட்டுமொத்த பாரதநாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடு, உண்மையிலேயே அற்புதமானதாக இருந்தது; இவற்றின் பின்னணியில், கலைஞர்களின் அயரா உழைப்பும், ஈடுபாடும், தங்கள் திறன்பால் அவர்களுக்கு இருக்கும் நேசம் ஆகியன பற்றிய விஷயங்கள் மிகவும் கருத்தூக்கம் அளிப்பனவாக இருக்கின்றன. ஹுனர் ஹாட்டில் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் கூறியவற்றைக் கேட்ட போது மிகவும் நிறைவாக இருந்தது. முதலில் தான் நடைபாதையில் தனது ஓவியங்களை விற்பனை செய்து வந்ததாகவும், ஹுனர் ஹாட்டுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவரது வாழ்க்கையே மாறிப் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவர் தற்சார்பு உடையவராக இருப்பதோடு, தனக்கென ஒரு வீட்டையும் வாங்கி இருக்கிறார். ஹுனர் ஹாட்டில் பல கலைஞர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஹுனர் ஹாட்டில் பங்கெடுத்துவரும் கலைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஹுனர் ஹாட் வாயிலாக, சுமார் மூன்று இலட்சம் கைவினைஞர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹுனர் ஹாட் என்பது கலையை வெளிப்படுத்த ஒரு மேடையாக இருப்பது என்னவோ சரிதான், அதோடு கூடவே இது, மக்களின் கனவுச் சிறகையும் விரிக்கிறது. இந்த இடத்தில் நாட்டின் பன்முகத்தன்மையைக் கண்டும் காணாமல் இருப்பது இயலாத காரியம். சிற்பக்கலை தவிர, நமது உணவுகளில் இருக்கும் வகைகள் நாவுக்கு விருந்து படைக்கின்றன. ஒரே வரிசையில் இட்லி தோசை, சோலே படூரே, தால் பாடீ, கமன் காண்ட்வீ என ஏராளமான உணவுப் பதார்த்த வகைகள். நானேகூட அங்கே பிஹாரின் சில சுவையான லிட்டீ சோகேவைச் சுவைத்துப் பார்த்து ரசித்தேன், அனுபவித்தேன். நாட்டின் ஒவ்வொரு பாகத்திலும் இத்தகைய மேளாக்கள், கண்காட்சிகள் ஆகியன நடைபெற்று வருகின்றன. இந்தியாவைத் தெரிந்து கொள்ள, இந்தியா பற்றிய அனுபவத்தைப் பெற, எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சென்று பாருங்கள். ஒரே பாரதம் உன்னத பாரதத்தை முழுக்க முழுக்க வாழ்ந்து பார்க்க இது பொன்னான வாய்ப்பாக மலர்கிறது. நீங்கள் தேசத்தின் கலை-கலாச்சாரத்தோடு இணைவீர்கள், கடுமையாக உழைக்கும் கைவினைஞர்கள், குறிப்பாக பெண்களின் தன்னிறைவுக்கு உங்கள் பங்களிப்பையும் அளிப்பீர்கள். அவசியம் போய் வாருங்கள்!!
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது நாட்டில் மகத்தான பாரம்பரியங்கள் பல உண்டு. நமது முன்னோர்கள் இவற்றை நமது சொத்தாக நமக்கு அளித்திருக்கிறார்கள், கற்றல் கற்பித்தல் வாயிலாக இவை நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதில் ஜீவராசிகளிடத்தில் தயையை வெளிப்படுத்துவது, இயற்கையின்பால் நேசம், போன்றவை நமது கலாச்சாரப் பாரம்பரியக் கொடை. நமது தாய்த்திருநாட்டின் இத்தகைய விருந்தோம்பல் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலவகையான புள்ளினங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருகை தருகின்றன. பாரதம் ஆண்டு முழுவதிலும் பல புலம்பெயர் பறவை இனங்களுக்குப் புகலிடமாக விளங்குகிறது. இப்படி வரும் 500க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பற்பல வகையானவை, பற்பல இடங்களிலிருந்து வருபவை எனத் தெரிவிக்கிறார்கள். கடந்த நாட்களில், காந்திநகரில் COP – 13 மாநாடு நடைபெற்றது; இதில் பறவை இனங்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது, ஆய்வு செய்யப்பட்டது, கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன, இந்தியாவின் முயற்சிகள் பாராட்டப்பட்டன. நண்பர்களே, நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், புலம்பெயர் பறவை இனங்கள் குறித்து நடைபெறவிருக்கும் COP மாநாட்டுக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் வரை பாரதம் தலைமை வகிக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாக நீங்கள் உங்கள் ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்.
COP மாநாடு மீது நடைபெற்று வரும் விவாதங்களுக்கு இடையில், என்னுடைய கவனம் மேகாலயத்தோடு தொடர்புடைய ஒரு முக்கியமான தகவல்பால் சென்றது. தற்போது தான் உயிரியலாளர்கள், ஒரு புதிய வகை மீன் இனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், இது மேகாலயத்தின் குகைகளுக்குள்ளே மட்டுமே காணப்படுகிறது. நிலத்துக்கு அடியில் குகைகளுக்கு உள்ளே வசிக்கும் நீர்வாழ் உயிரினங்களிலேயே மிகப் பெரியதாக இந்த மீன் கருதப்படுகிறது. ஒளி புகமுடியாத இடங்களிலும்கூட, இருள்நிறைந்த, ஆழமான நிலத்தடிக் குகைகளுக்கு உள்ளே இந்த மீன் வாழ்கிறது. விஞ்ஞானிகளுக்கும் இந்தத் தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதாவது இத்தனை பெரிய மீனால், இத்தனை ஆழமான குகைகளுக்கு உள்ளே எப்படி உயிர் வாழ முடிகிறது?? நமது பாரதநாடு, குறிப்பாக மேகாலயம் இத்தகைய அரியவகை இனத்துக்கான வாழ்விடமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். பாரதநாட்டின் உயிரினப் பன்முகத்தன்மைக்கான ஒரு புதிய பரிமாணமாகத் திகழ்கிறது. நம்க்கருகே இப்படிப்பட்ட அநேக அற்புதங்கள் இன்னமும்கூட கண்டுபிடிக்கப்படாதவையாக இருக்கின்றன. இந்த அற்புதங்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு தணியாத ஆர்வம் அவசியமாகிறது.
மகத்துவம் வாய்ந்த பெண்புலவரான ஔவையார் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.
நமது நாட்டின் பன்முகத்தன்மை விஷயத்திலும் இதுதான் உண்மை, அது பற்றி நாம் அறிந்திருப்பது மிகக் குறைவே. நமது பல்லுயிர்த்தன்மையும் மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான பொக்கிஷம்; இதை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
என் நெஞ்சம்நிறை இளைய நண்பர்களே, இப்போதெல்லாம் நமது நாட்டின் குழந்தைகளிடம் அறிவியல்-தொழில்நுட்பத்தின் பால் ஆர்வம் தொடர்ந்து கூடி வருகிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் சாதனைகள், புதிய திட்டங்கள் ஆகியன ஒவ்வொரு இந்தியருக்குமே பெருமிதம் அளிக்கக்கூடியவையாக இருக்கிறது. நான் சந்திரயான் 2 ஏவப்பட்ட சமயத்தில் பெங்களூரூவில் இருந்தேன், அங்கே இருந்த குழந்தைகளின் உற்சாகத்தை என்னால் கண்கூடாகக் காண முடிந்தது. சற்றும் அவர்கள் கண் அயரவில்லை. ஒருவகையில் இரவு முழுவதும் அவர்கள் விழித்திருந்தார்கள். அவர்கள் மனங்களில் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகள் படைத்தல் ஆகியவை தொடர்பாக இருந்த உற்சாகத்தை என்னால் என்றும் மறக்கவே இயலாது. குழந்தைகளின், இளைஞர்களின் இந்த உற்சாகத்தை ஊக்குவிக்க, அவர்களிடம் அறிவியல் மனப்பாங்கை வளர்க்க, மேலும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இப்போது ஸ்ரீஹரிக்கோட்டாவில் விண்கலங்கள் ஏவப்படும் போது நீங்கள் அருகிலிருந்தே பார்க்க முடியும். தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து 10000 மக்கள் அமர்ந்து பார்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்ரோவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு வாயிலாக இணையவழியிலேயே நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பல பள்ளிகள் தங்கள் மாணவர்களை விண்கலம் ஏவப்படுவதைக் காணவும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் சுற்றுலாவாகக் கூட்டிக் கொண்டும் வருகிறார்கள். இனிவரும் காலத்தில் இதனால் பயனடையுங்கள் என்று நான் அனைத்துப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நண்பர்களே, நான் உங்களனைவருக்கும் மேலும் ஒரு சுவாரசியமான தகவலை அளிக்க விரும்புகிறேன். நான் நமோ செயலியில் ஜார்க்கண்டின் தன்பாதில் வசிக்கும் பாரஸ் அவர்களின் பதிவைப் படித்தேன். இஸ்ரோவின் யுவிகா திட்டம் பற்றி நான் இளைய நண்பர்களிடம் பேச வேண்டும் என்று பாரஸ் அவர்கள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர்களை அறிவியலோடு இணைப்பதற்காக, இஸ்ரோவின் பாராட்டுதற்குரிய முன்னெடுப்பு தான் யுவிகா. 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் பள்ளிக் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. யுவிகா என்றால் இளைய விஞ்ஞானித் திட்டம். இந்தத் திட்டம் நமது தொலைநோக்கான, ”ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான்” என்ற கோட்பாட்டை அடியொற்றியது. இந்தத் திட்டத்தில், தேர்வுகளுக்குப் பிறகு, விடுமுறை நாட்களில் மாணவர்கள், இஸ்ரோவின் பல்வேறு மையங்களுக்கு வந்து விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல், விண்வெளிப் பிரயோகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். நேரடிப்பயிற்சி எப்படி இருக்கும், எந்த மாதிரியாக இருக்கும், எத்தனை சுவாரசியமாக இருக்கும் என்று எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? கடந்தமுறை யாரெல்லாம் அதில் பங்கெடுத்துக் கொண்டார்களோ அவர்களின் அனுபவத்தை அவசியம் படித்துப் பாருங்கள். நீங்களும் இதில் கலந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இஸ்ரோவின் யுவிகா இணையதளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். எனது இளைய நண்பர்களே, நான் இணையதளத்தின் பெயரைச் சொல்லுகிறேன், உங்கள் பேனா, நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் குறித்துக் கொள்ளுங்கள், அவசியம் இன்றே அந்த இணையதளத்துக்குச் சென்று பாருங்கள், சரியா? www.yuvika.isro.gov.in. குறித்துக் கொண்டீர்களா? சரி, நான் மீண்டும் சொல்கிறேன், www.yuvika.isro.gov.in.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, 2020ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று லத்தாக்கின் அழகான பள்ளத்தாக்குகள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவத்துக்கு சான்றாக விளங்கியது. லேயின் குஷோக் பாகுலா ரிம்போசீ விமானநிலையத்திலிருந்து, இந்திய விமானப்படையின் AN-32ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து வரலாறு படைத்தன. இந்தப் பயணத்தில் 10 சதவீதம் இந்திய உயிரி எரிபொருள் கலவை பயன்படுத்தப்பட்டது. இரு எஞ்ஜின்களிலுமே இந்தக் கலவை பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இதுமட்டுமல்ல, லேயின் எந்த விமானநிலையத்திலிருந்து இந்த விமானம் பயணப்பட்டதோ, அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருக்கும் விமானநிலையமாகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த உயிரி எரிபொருள், உணவுக்குப்பயன்படுத்தப்படாத தாவர எண்ணெயிலிருந்து தயார் செய்யப்பட்டது. இது பாரதத்தின் பல்வேறு பழங்குடியினப் பகுதிகளிலிருந்து வாங்கப்பட்டது. இந்த முயற்சிகள் காரணமாக கரிக்காற்று வெளியேற்றத்தில் குறைவு உண்டாவதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வாய்பிருக்கிறது. இந்த மகத்தான செயலுக்காக இதோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, அறிவியல் தொழிலக ஆய்வுக் குழுமமான CSIR, தெஹ்ராதூனில் உள்ள இந்திய பெட்ரோலியக் கழகத்தின் விஞ்ஞானிகள் தாம் உயிரி எரிபொருள் வாயிலாக விமானம் பறப்பதை சாத்தியமாக்கி இருக்கின்றார்கள். அவர்களின் இந்த சீரிய முயற்சி, நமது மேக் இன் இண்டியாவுக்கு, அதாவது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது புதிய பாரதம், இப்போது பழைய அணுகுமுறையோடு பயணிக்க விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும் அன்னையர்களும் முன்னே கால் பதித்து, சவால்களைத் தாங்களே கையாள்கிறார்கள்; இதனால் சமூகம் முழுவதிலும் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நம்மால் காண முடிகிறது. பிஹாரின் பூர்ணியாவில் நடந்த சம்பவம், நாடு முழுமையிலும் இருக்கும் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி, பல பத்தாண்டுகளாக வெள்ளப் பெருக்கால் அவதிப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், இங்கே விவசாயம் மற்றும் வருவாய்க்கான பிற மூலங்களை திரட்டுவது என்பது மிகவும் கடினமானதாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இதே சூழ்நிலைகளில் பூர்ணியாவைச் சேர்ந்த சில பெண்கள் வித்தியாசமானதொரு பாதையை தேர்ந்தெடுத்தார்கள். நண்பர்களே, முன்பு இந்தப் பகுதியில் பெண்கள், மல்பெரிச் செடிகளில் பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார்கள், இதன்மூலம் அவர்களுக்கு குறைவான வருமானமே கிடைத்து வந்தது. ஆனால் இதைக் கொள்முதல் செய்பவர்கள், இந்தப் பட்டுக்கூட்டிலிருந்து பட்டு இழையை உற்பத்தி செய்து பெரும் இலாபத்தை ஈட்டிக் கொண்டார்கள். ஆனால், இன்று பூர்ணியாவின் பெண்கள் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொண்டார்கள், காட்சியை முழுவதுமாக மாற்றியமைத்தார்கள். இந்தப் பெண்கள் அரசாங்க உதவியுடன், மல்பரி உற்பத்திக் குழு அமைத்தார்கள். இதன் பின்னர், அவர்கள் பட்டுக்கூட்டிலிருந்து பட்டு இழை தயார் செய்தார்கள்; பின்னர் இந்த இழைகளிலிருந்து புடவைகளை நெசவு செய்யத் தொடங்கினார்கள். முன்பெல்லாம் எந்த பட்டுக்கூட்டை விற்பனை செய்து குறைந்த வருவாயை அவர்கள் ஈட்டி வந்தார்களோ, இன்று அதே பட்டுக்கூட்டைப் பயன்படுத்தி புடவைகள் நெசவு மற்றும் விற்பனை மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். ”ஆதர்ஷ் ஜீவிகா மஹிலா மல்பரி உத்பாதன் சமூஹ்”, என்ற பெயரில் ஒரு மகளிர் குழுவை ஏற்படுத்தி இந்தச் சகோதரிகள் படைத்திருக்கும் அற்புதத்தின் தாக்கம் பல கிராமங்களைத் தொட்டிருக்கிறது. பூர்ணியாவின் பல கிராமங்களின் விவசாய சகோதரிகள், இப்போது புடவைகளை மட்டும் நெசவு செய்யவில்லை, பெரிய விழாக்களின் போது, கடைகளை நிறுவி விற்பனை செய்கிறார்கள். இன்றைய பெண்கள், புதிய சக்தி, புதிய எண்ணப்பாட்டோடு எந்தெந்த வகைகளில் புதிய இலக்குகளை அடைகிறார்கள் பாருங்கள்!!
என் மனதிற்கினிய நாட்டுமக்களே, நமது நாட்டின் பெண்களின் துணிவாண்மை, அவர்களின் தைரியம் ஆகியன ஒவ்வொருவருக்கும் பெருமிதம் தரும் விஷயம். உங்கள் அருகிலேயே கூட இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் இருக்கலாம். இவை எல்லாம் எப்படி பெண்கள் பழைய தளைகளைத் தகர்த்து வருகிறார்கள், புதிய சிகரங்களை எட்டிப் பிடித்து வருகிறார்கள் என்பதை நமக்குத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. உங்களிடம் நான் இப்போது 12 வயதான பெண், காம்யா கார்த்திகேயனின் சாதனை பற்றிப் பேச விரும்புகிறேன். காம்யா….. என்ற 12 வயதுப் பெண் Aconcagua மலையுச்சிக்குப் பயணித்து சாதனை படைத்திருக்கிறாள். இவர், தென்னமெரிக்காவின் ANDES மலைகளின் மிகப்பெரிய சிகரமான 7000 மீட்டர்கள் ஏறியிருக்கிறாள். இந்த மாதத் தொடக்கத்தில் சிகரம் தொட்டு அங்கே இந்தியாவின் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார் காம்யா என்பது ஒவ்வொரு இந்தியரின் மனதையும் தொடும் விஷயம். நாட்டுக்கே இப்படி பெருமை சேர்த்திருக்கும் காம்யாவின் புதிய திட்டத்தின் பெயர் மிஷன் சாஹஸ் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அவர் அனைத்துப் பெருந்தீவுகளிலும் இருக்கும் மிக உயரமான சிகரங்களையும் எட்டவிருக்கிறார். இந்த முயற்சிக்காக, அவர் வட மற்றும் தென் துருவங்களிலும் பனிச்சறுக்கு செய்ய வேண்டியிருக்கும். இந்த மிஷன் சாஹஸ் தொடர்பாக நான் காம்யாவுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளபடியே காம்யாவின் இந்தச் சாதனை அனைவரும் உடலுறுதியோடு இருக்க உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இத்தனை குறைவான வயதிலே காம்யா, எந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறாரோ, அதில் உடலுறுதியின் பங்களிப்பு மிகப்பெரியது. A Nation that is fit, will be a nation that is hit. உடலுறுதியோடு இருக்கும் நாடு, உச்சங்களைத் தொடும் நாடு. வரவிருக்கும் மாதங்கள் சாகஸ விளையாட்டுக்களுக்காகவும் மிகவும் உகந்தவை. இந்தியாவின் புவியியல் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்றால், நமது நாட்டில் இப்படிப்பட்ட சாகஸ விளையாட்டுகளுக்கான சந்தர்ப்பங்கள் ஏராளம் ஏராளம். ஒருபுறம் மிகவும் உயரமான மலைகள் என்றால், மறுபுறமோ கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பாலைவனம். ஒருபுறம் அடர்ந்த காடுகள் என்றால், வேறுபுறத்திலோ பரந்துபட்ட கடல்பரப்பு. ஆகையால் நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான இடத்தில், உங்களுக்கு விருப்பமான செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வாழ்க்கையை சாகஸத்தோடு இணையுங்கள் என்று நான் உங்களிடம் விசேஷமான வேண்டுகோளை முன்வைக்கிறேன். வாழ்க்கையில் சாகஸம் இருக்க வேண்டியது தானே!! மேலும் நண்பர்களே, 12 வயதே ஆன குழந்தை காம்யாவின் வெற்றிக்குப் பின்னர், அடுத்ததாக நீங்கள் 105 வயதான பாகீரதி அம்மாவின் வெற்றிக் கதையைக் கேட்டீர்களென்றால் ஆச்சரிப்படுவீர்கள். நண்பர்களே, வாழ்க்கையில் நாம் முன்னேற விரும்பினோம் என்றால், ஏதோ ஒன்றை சாதிக்க நினைத்தோம் என்றால், முதல் கட்டளை…. நமக்குள்ளே இருக்கும் மாணவனை என்றைக்கும் எக்காரணம் கொண்டும் இறக்க விடக்கூடாது. நம்முடைய 105 வயது நிரம்பிய பாகீரதீ அம்மா நமக்கெல்லாம் உத்வேகம் அளித்து வருகிறார். யார் இந்த பாகீரதீ அம்மா என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்!! பாகீரதீ அம்மா கேரளத்தின் கொல்லத்தில் வசித்து வருகிறார். மிகச்சிறிய வயதிலேயே இவர் தனது தாயை இழந்து விட்டார். சிறிய வயதில் திருமணம் நடந்தேறிய பிறகு கணவனையும் இழந்தார். ஆனால், பாகீரதீ அம்மா என்றுமே தனது மனோதைரியத்தைக் கைவிடவில்லை, தனது ஊக்கத்தைத் துறக்கவில்லை. பத்து வயதுக்கும் குறைவான வயதிலேயே அவர் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. தனது 105ஆவது வயதில் இவர் மீண்டும் தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். இத்தனை வயதான பிறகும்கூட, பாகீரதீ அம்மா 4ஆம் நிலைக்கான தேர்வை எழுதினார், மிகவும் ஆர்வத்தோடு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார். தேர்வு முடிவில் அவர் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். இதுமட்டுமல்ல, கணக்கில் அவர் நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அம்மா இப்போது மேலும் படிக்க விரும்புகிறார், மேலும் தேர்வுகளை எழுத விரும்புகிறார். பாகீரதீ அம்மா போன்றோர் தாம் இந்த நாட்டின் பலம். உத்வேகத்தின் வற்றாத ஊற்றுக்கள். நான் இன்று விசேஷமாக பாகீரதீ அம்மாவுக்கு என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, வாழ்க்கையின் விபரீதமான காலகட்டங்களில் நமது மனோதைரியம், பேரார்வம் எந்த ஒரு சூழ்நிலையையும் மாற்றியமைக்க வல்லது. இப்போது, ஊடகத்தில் ஒரு விஷயத்தை நான் படிக்க நேர்ந்தது, இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது முராதாபாதின் ஹமீர்புர் கிராமத்தில் வசிக்கும் சல்மான் பற்றியது. சல்மான், பிறப்பிலிருந்தே மாற்றுத்திறனாளி. அவருடைய கால்கள் செயல்படும் நிலையில் இல்லை. இந்த இடர்ப்பாட்டைத் தாண்டியும்கூட அவர் தோல்வியை ஏற்கவில்லை, சுயதொழில் செய்யும் முடிவை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி புரிய வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டார். அப்புறமென்ன, சல்மான் தனது கிராமத்தில் காலணிகள் மற்றும் சலவைத்தூள் தயாரிக்கும் பணியைத் தொடக்கினார். சில காலத்திலேயே அவருடன் 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்து கொண்டார்கள். சற்றே உங்கள் சிந்தையை செலுத்திப் பாருங்கள்…. சுயமாக நடக்க முடியாத சல்மான் மற்றவர்கள் நடப்பதை சுலபமாக்க காலணிகள் தயாரிக்கும் முடிவை மேற்கொண்டார். இதில் விசேஷமான விஷயம் என்னவென்றால் சல்மான் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயிற்சியும் அளித்தார். இப்போது இவர்கள் அனைவரும் இணைந்து தயாரிப்பு வேலைகளிலும், சந்தைப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் உழைப்பினால் இவர்கள், தங்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனத்துக்கும் இலாபத்தை ஈட்டியிருக்கிறார்கள். இப்போது இவர்கள் அனைவருமாக இணைந்து நாள் முழுவதும் 150 ஜோடிக் காலணிகளைத் தயாரிக்கிறார்கள். இதுமட்டுமல்ல, சல்மான் இந்த ஆண்டு மேலும் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மனவுறுதியை மேற்கொண்டிருக்கிறார். நான் இவர்கள் அனைவரின் துணிவு, இவர்களின் செயலாண்மை ஆகியவற்றுக்கு தலைவணங்குகிறேன். இப்படிப்பட்ட மனோவுறுதியை, குஜராத்தின் கட்ச் பகுதியின் அஜ்ரக் கிராமத்து மக்களிடத்திலும் காண முடிந்தது. 2001ஆம் ஆண்டில் பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு அனைவரும் கிராமத்தைத் துறந்து சென்று கொண்டிருந்த வேளையில், இஸ்மாயில் கத்ரி என்ற பெயர் கொண்ட மனிதர், கிராமத்திலேயே இருந்து, அஜ்ரக் ப்ரிண்ட் என்ற தனது பாரம்பரியமான கலைக்குப் பாதுகாப்பளிக்க அவர் முடிவெடுத்தார். என்ன ஆயிற்று? சில காலத்திலேயே வண்ணங்களால் உருவான அஜ்ரக் கலை, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது, கிராமம் முழுவதும், இந்தப் பாரம்பரியமான கைவினைத்திறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டது. கிராமவாசிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தங்களுடைய இந்தக் கலையைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், இதில் நவநாகரீகத்துக்கு ஏற்றபடி ஜோடனைகள் செய்து கொண்டார்கள். இப்போது பெரிய பெரிய ஆடை வடிவமைப்பாளர்கள், பெரிய பெரிய வடிவமைப்பு நிறுவனங்கள், அஜ்ரக் ப்ரிண்டை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்கள் காரணமாக இன்று அஜ்ரக் ப்ரிண்ட் என்பது ஒரு பெரிய ப்ராண்ட் ஆகி விட்டது. உலகின் மிக அதிக அளவில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இந்தக் கலையின்பால் கவரப்பட்டு வருகிறார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, நாடுமுழுவதிலும் மஹாசிவராத்திரி புனித நன்னாள் கொண்டாடப்பட்டது. சிவபெருமான், அன்னை பார்வதி ஆகியோரின் அருளாசிகளோடு நாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மஹா சிவராத்திரியன்று போலே பாபாவின் ஆசிகள் என்றும் உங்களோடு இருக்கட்டும், உங்களின் அனைத்து மன விருப்பங்களையும் அந்த அருளாளன் சிவன் நிறைவேற்றட்டும், உங்களிடம் அவர் சக்தியை நிறைக்கட்டும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கட்டும், உங்களுக்கு சந்தோஷங்களை அளிக்கட்டும், நீங்கள் நாட்டின் பொருட்டு உங்கள் கடமைகளைக் கடைபிடித்து வாருங்கள்!!
நண்பர்களே, மஹாசிவராத்திரியோடு வசந்தகாலத்தின் அழகு மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இனிவரும் நாட்களில் ஹோலிப் பண்டிகையும், இதனைத் தொடர்ந்து குடீ-பட்வாவும் வரவிருக்கின்றன. நவராத்திரி புண்ணியகாலமும் இதோடு இணையவிருக்கிறது. ஸ்ரீ இராமநவமித் திருநாளும் வரும். திருநாளும் பண்டிகையும் நமது நாட்டின் சமூக வாழ்க்கையின் இணைபிரியா அங்கங்கள். ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் ஏதோவொரு சமூக செய்தி மறைந்திருக்கிறது; இது சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே ஒற்றுமையாக இணைத்து வைக்கிறது. ஹோலிக்குப் பிறகு சைத்ர சுக்ல ப்ரதிபதாவிலிருந்து இந்திய விக்ரமீ புத்தாண்டுத் தொடக்கம் நிகழும். இதற்காகவும், இந்தியப் புத்தாண்டுக்காகவும், நான் உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, அடுத்த மனதின் குரலின் போது, மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் முழுகவனத்தோடு ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாருக்கெல்லாம் தேர்வுகள் நிறைவடைந்து விடுகிறதோ, அவர்களின் ஆனந்தத்துக்கு அளவேது!! யாருக்கெல்லாம் தேர்வுகள் முடிவடையவில்லையோ, அவர்களுக்கு என் அநேக நல்வாழ்த்துக்கள். வாருங்கள், அடுத்த மனதின் குரலில் மேலும் பல விஷயங்களோடு நாம் சந்திப்போம்!! மிக்க நன்றி, வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ஜனவரி 26. குடியரசுத் திருநாளுக்கான அநேக நல்வாழ்த்துக்கள். 2020ஆம் ஆண்டுக்கான முதல் மனதின் குரல்வழி சந்திப்பு இது. இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்பதைத் தவிர, எதிர்வரும் பத்தாண்டுகளின் முதல் நிகழ்ச்சியும் கூட. நண்பர்களே, இந்தமுறை குடியரசு தினக் கொண்டாட்டங்கள் காரணமாக மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒலிபரப்பு வேளையில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வது உசிதமாக இருக்கும் எனத் தோன்றியது. ஆகையால், வேறு ஒரு வேளையைத் தீர்மானம் செய்து உங்களோடு மனதின் குரலைப் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களே, நாட்கள் மாறுகின்றன, வாரங்கள் மாறுகின்றன, மாதங்களும் மாற்றம் அடைகின்றன, ஆண்டு மாறுகிறது என்றாலும்கூட, பாரதநாட்டு மக்களின் உற்சாகமும் நாமும் சற்றும் சளைப்பதில்லை, நாமும் ஆக்கப்பூர்வமான விஷயத்தைச் சாதித்தே தீருவோம், நம்மால் முடியும். நம்மால் முடியும் என்ற இந்த உணர்வு, தீர்மானமாக வடிவெடுத்து வருகிறது. நாடு மற்றும் சமூகத்துக்காக ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒவ்வொரு நாளும், முன்பை விட அதிக அளவில் பலமடைந்து வருகிறது.
எனது நண்பர்களே, மனதின் குரல் என்ற மேடையில், நாமனைவரும் மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைந்திருக்கிறோம். புதியபுதிய விஷயங்கள் குறித்த விவாதங்களைச் செய்யவும், நாட்டுமக்களின் புதியபுதிய சாதனைகளைக் கொண்டாடவும், பாரதநாட்டைக் கொண்டாடவும் ஒன்று கூடியிருக்கிறோம். மனதின் குரல் என்பது பகிர்தல், கற்றல், ஒன்றாக வளர்தல் ஆகியனவற்றுக்கான ஒரு இயல்பான மேடையாகி விட்டது. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பேர்கள், தங்களின் ஆலோசனைகள், தங்கள் முயற்சிகள், தங்களின் அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றிலிருந்து சமுதாயத்துக்குக் கருத்தூக்கம் கிடைக்கும் பொருட்டு, சில விஷயங்கள் குறித்து, மக்களின் அசாதாரணமான முயற்சிகள் பற்றி விவாதிப்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு வாய்க்கிறது.
யாரோ ஒருவர் சாதித்துக் காட்டியிருக்கிறார் – அப்படி என்றால் இதை நம்மால் செய்ய முடியுமில்லையா? அப்படி என்றால் இந்தச் செயல்பாட்டை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தி, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் இல்லையா? இதை சமூகத்தின் இயல்பான பழக்கமாக பரிமளிக்கச் செய்யலாம் இல்லையா? இப்படிப்பட்ட சில வினாக்களுக்கான விடைகளைத் தேடித்தேடி, ஒவ்வொரு மாதமும் மனதின் குரலில், சில அறைகூவல்கள், சில வேண்டுகோள்கள், என ஆக்கப்பூர்வமானதாகச் சாதிக்கும் மனவுறுதி தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நாம் பல சின்னச்சின்ன உறுதிப்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு விடுப்பு, கதராடைகளுக்கும் உள்ளூர் பொருட்களுக்கும் ஆதரவு, தூய்மை பற்றிய அக்கறை, பெண்களை மதித்து அவர்களின் சுயகௌரவத்தைப் போற்றுதல், குறைவான ரொக்கப் பரிவர்த்தனை கொண்ட பொருளாதாரம் என்ற புதிய பரிமாணத்துக்கு ஆதரவளித்தல், என ஏகப்பட்ட உறுதிப்பாடுகளின் பிறப்பு, இந்த எளிய மனதின் குரல்களில் தான் உண்டாயின. மேலும் இதற்கு நீங்கள் தான் வலு சேர்த்தீர்கள்.
எனக்கு மிகவும் இனிமையானதொரு கடிதம் வந்திருக்கிறது. இதை பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷைலேஷ் அவர்கள் எழுதியிருக்கிறார்; ஆனால் தற்போது அவர் பிஹாரில் வசிக்கவில்லை என்பது வேறு விஷயம். அவர் தில்லியில் ஏதோ அரசுசாரா அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஷைலேஷ் அவர்கள் எழுதுகிறார் – மோதிஜி, நீங்கள் ஒவ்வொரு மனதின் குரலிலும் ஏதோ ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறீர்கள். அவற்றில் பல விஷயங்களை நான் பின்பற்றியும் இருக்கிறேன். இந்தக் குளிர்காலத்தில் வீடுதோறும் சென்று, துணிமணிகளைச் சேகரித்து, தேவைப்படும் ஏழைமக்களுக்கு அவற்றை விநியோகம் செய்து வருகிறேன். மனதின் குரலைக் கேட்கத் தொடங்கிய பிறகு, பல விஷயங்களைச் செய்யத் தொடங்கி விட்டேன். ஆனால் மீண்டும் மெல்ல மெல்ல சில விஷயங்களை மறந்து விடுகிறேன் அல்லது சில விஷயங்கள் விடுபட்டுப் போய் விடுகின்றன. இந்தப் புத்தாண்டில் மனதின் குரலை ஒட்டி நான் ஒரு அட்டவணையை ஏற்படுத்தி இருக்கிறேன்; இதில் இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறேன். புத்தாண்டுத் துவக்கத்தில், புத்தாண்டுத் தீர்மானங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். மோதி ஜி, இதுதான் என்னுடைய புத்தாண்டுத் தீர்மானம். இது மிகமிகச் சின்ன விஷயம் தான் என்று எனக்குப் படுகிறது. ஆனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. இந்த அட்டவணையில் உங்கள் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஷைலேஷ் அவர்களே, உங்களுக்குப் பலப்பலப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள். உங்களது புத்தாண்டுத் தீர்மானமான, மனதின் குரல் அட்டவணை என்பது மிகவும் புதுமையானதாக இருக்கிறது. நான் என் தரப்பில் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை அதில் பதிவு செய்கிறேன், கண்டிப்பாக இதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நண்பர்களே, இந்த மனதின் குரல் அட்டவணையை நான் படித்துக் கொண்டிருந்த போது, இத்தனை விஷயங்களா என்று எனக்கே கூட ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஹேஷ் டேகுகளா!! மேலும் நாமனைவருமாக இணைந்து அல்லவா இத்தனை முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளோம்!! சில வேளைகளில் நாம் இராணுவ வீரர்களுக்கான செய்தியுடன், நமது இராணுவ வீரர்களோடு உணர்வுபூர்வமான வகையிலே, பலமாக இணையும் இயக்கத்தை நடத்தியிருக்கிறோம், தேசத்துக்காக கதராடைகள், ஃபேஷனுக்காக கதராடைகள் என்பதை அறிவித்து, கதராடைகள் விற்பனையை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றோம். உள்ளூர் பொருட்களை வாங்குவோம் என்ற மந்திரத்தைக் கைக்கொண்டோம். நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியா உறுதியாக இருக்கும் என்ற முழக்கத்தால், உடலுறுதியின்பால் விழிப்புணர்வைப் பெருக்கினோம். ’என்னுடையதூய்மையானஇந்தியா’ அல்லது ’உருவச்சிலைகளைத்தூய்மைப்படுத்தல்’முயற்சிகளால், தூய்மையை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு சென்றோம். Hashtag NotoDrugs, Hashtag BharatKiLakshmi, Hashtag Self4Society, Hashtag StressFreeExams, Hashtag SurakshaBandhan, Hashtag DigitalEconomy, Hashtag RoadSafety, அடேயப்பா, ஏராளமாக இருக்கின்றன.
ஷைலேஷ் அவர்களே, உங்களது இந்த மனதின் குரல் அட்டவணையைப் பார்த்து, பட்டியல் உண்மையிலேயே மிகவும் நீண்டதாக இருக்கிறது என்று உணர்கிறேன். வாருங்கள், இந்தப் பயணத்தை நாம் மேற்கொண்டு தொடர்வோம். இந்த மனதின் குரல் அட்டவணையில் இருப்பனவற்றில் உங்கள் விருப்பத்திற்கேற்ப, ஏதோ ஒரு நல்ல நோக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஹேஷ்டேகைப் பயன்படுத்தி, அனைவருடனும் மிகுந்த பெருமிதத்தோடு உங்கள் பங்களிப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நண்பர்களை, குடும்பத்தாரை, மற்ற அனைவரையும் உத்வேகப்படுத்துங்கள். ஒவ்வொரு இந்தியரும் ஓரடி முன்னெடுத்து வைப்பாரேயானால், நம்முடைய பாரதநாடு 130 கோடி அடிகள் முன்னெடுத்து வைக்கும். ஆகையால் சரைவேதி சரைவேதி, பயணப்படு, பயணப்படு, பயணப்படு என்ற மந்திரத்தை மனதில் ஏந்தி, நமது முயற்சிகளை நாம் செய்தவண்ணம் இருப்போம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நாம் மனதின் குரல் அட்டவணை பற்றிப் பேசினோம். தூய்மைக்குப் பிறகு, மக்கள் பங்களிப்பு உணர்வு, இன்று மேலும் ஒரு துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது என்றால் அது நீர்ப் பாதுகாப்பு. நீர்ப்பாதுகாப்பிற்காக, பல பரவலான, நூதனமான முயற்சிகள், நாட்டின் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பருவமழைக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஜலசக்தி இயக்கமானது, மக்கள் பங்களிப்பு காரணமாக மிகப்பெரிய வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது என்பதைக் கூறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையில் குளங்கள், நீர்நிலைகள் போன்றவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த இயக்கத்தில் சமூகத்தின் அனைத்து மட்டத்தில் இருப்போரும் தங்களின் பங்களிப்பை நல்கியிருக்கின்றார்கள் என்பது தான். இப்போது ராஜஸ்தானத்தின் ஜாலோர் மாவட்டத்தையே எடுத்துக் கொள்வோமே!! இங்கே இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குளங்கள், குப்பை செத்தைகள் அடங்கிய நீர் மண்டிக் கிடப்பவையாக மாறிப் போயிருந்தன. என்ன ஆயிற்று? பத்ராயு மற்றும் தான்வாலா பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜலசக்தி இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, இந்தக் குளங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சவாலை மேற்கொண்டார்கள். மழைக்கு முன்னதாகவே இந்த மக்கள், இந்தக் குளங்களில் மண்டிக்கிடந்த அசுத்தமான நீர், குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். இந்த இயக்கத்துக்காக, சிலர் தங்கள் உழைப்பை அளித்தார்கள், சிலர் பொருளை அளித்தார்கள். இதன் விளைவாக, இந்தக் குளங்கள், இன்று அந்தப் பகுதியின் வாழ்க்கை ஊற்றாக மாறி விட்டன. இதைப் போன்ற விஷயம் தான் உத்திர பிரதேசத்தின் பாராபங்கீயிலும் நடந்தது. இங்கே 43 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியில் பரவிக் கிடக்கும் ஸராஹீ ஏரியானது தனது இறுதி மூச்சை வெளியிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கிராமத்து மக்கள் தங்களின் மனவுறுதி காரணமாக, இதற்குப் புத்துயிர் ஊட்டினார்கள். இத்தனை பெரிய இலக்கை முன்னெடுத்துக் கொண்ட அவர்கள், எந்த ஒரு குறைபாட்டையும் தடையாக மாற விடவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக பல கிராமங்கள் இணைந்து பணியாற்றத் தொடங்கின. அவர்கள் ஏரியின் நாலாபுறங்களிலும், ஒரு மீட்டர் அளவுக்கு உயரமுள்ள தடுப்புச்சுவர்களை ஏற்படுத்தினார்கள். இப்போது ஏரியில் நீர் முட்டமுட்ட நிறைந்திருக்கிறது, அங்கே அக்கம்பக்கச் சூழல் பறவைகளின் கீச்சொலியால் எதிரொலிக்கிறது.
உத்தராக்கண்டின் அல்மோடா-ஹல்த்வானீ நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுனியாகோட் கிராமத்திலிருந்தும் மக்கள் பங்களிப்பு தொடர்பான இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு வெளியாகி இருக்கிறது. கிராமவாசிகள் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க, தாங்களே கிராமம்வரை நீரைக் கொண்டுவரும் உறுதியை மேற்கொண்டார்கள். பிறகு என்ன!! மக்கள் பரஸ்பரம் நிதி திரட்டினார்கள், திட்டம் தீட்டினார்கள், உழைப்பை அளித்தார்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம் வரை குழாய்களைப் பதித்து விட்டார்கள். நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டது, பார்த்துக் கொண்டிருந்த வேளையிலேயே பல பத்தாண்டுகள் பழமையான பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட்டு விட்டது. இதைப் போலவே தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றை, மழைநீர் சேகரிப்புக்கான சாதனமாக ஆக்கும் மிக நூதனமான செயல்பாடு தெரிய வந்திருக்கிறது. நாடு முழுவதிலும் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய இப்படிப்பட்ட எண்ணிலடங்கா சம்பவங்கள்-நிகழ்வுகள் இருக்கின்றன, இவைதாம் புதிய இந்தியாவின் தீர்மானங்களுக்கு பலம் கூட்டுகின்றன. இன்று நமது ஜலசக்தி சேம்பியன்களின் கதைகளைக் கேட்க நாடு முழுவதும் உற்சாகமாக இருக்கிறது. நீர்சேமிப்பு மற்றும் நீர்ப்பாதுகாப்பு குறித்து உங்கள் முயற்சியோ, உங்கள் அக்கம்பக்கத்தில் நடக்கும் முயற்சிகள் பற்றிய கதைகளோ இருந்தால், அவற்றின் புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை #jalshakti4Indiaவிலே பகிர்ந்து கொள்ளுங்களேன்!!
எனதருமை நாட்டுமக்களே, குறிப்பாக எனது இளைய சமுதாய நண்பர்களே, இன்று மனதின் குரல் வாயிலாக, கேலோ இண்டியாவின் போது உங்களுடைய அற்புதமான விருந்தோம்பலுக்காக நான் அஸாம் அரசு மற்றும் அஸாமைச் சேர்ந்த மக்களுக்கு பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று குவாஹாத்தியில் மூன்றாவது கேலோ இண்டியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
விளையாட்டுக்களின் இந்த பெருங்கொண்டாட்டத்தில், 80 சாதனைகள் படைக்கப்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்; இவற்றில் 56 பதிவுகளை நமது பெண்குல ரத்தினங்கள் தாம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து வெற்றியாளர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதே வேளையில், இதில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வீரர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதோடு கூடவே, கேலோ இண்டியா விளையாட்டுக்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக, இதோடு தொடர்புடைய அனைவருக்கும், பயிற்றுநர்களுக்கும், தொழில்நுட்ப அதிகாரிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் கேலோ இண்டியா விளையாட்டுக்களில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது நம்மனைவருக்கும் ஒரு சுகமான அனுபவம். பள்ளிக்கூட நிலையில் பிள்ளைகளிடம் விளையாட்டுக்களின்பால் எந்த அளவுக்கு நாட்டம் அதிகமாகி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. 2018ஆம் ஆண்டு, கேலோ இண்டியா விளையாட்டுக்கள் தொடங்கப்பட்ட வேளையில், இதில் 3500 பேர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டார்கள், ஆனால் வெறும் மூன்றாண்டுகளிலேயே விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 6000த்துக்கும் அதிகமாகி விட்டது, அதாவது கிட்டத்தட்ட இரண்டு பங்கு. இதுமட்டுமல்ல, வெறும் மூன்றாண்டுகளில் கேலோ இண்டியா விளையாட்டுக்கள் வாயிலாக 3200 திறமைகள்மிக்க பிள்ளைகள் வெளிப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பல பிள்ளைகள், இல்லாமை-ஏழ்மை என்ற நிலையில் வளர்பவர்கள். கேலோ இண்டியா விளையாட்டுக்களில் பங்குபெறும் பிள்ளைகள், அவர்களின் பெற்றோர் ஆகியோரின் பொறுமை, மனவுறுதிப்பாடு பற்றிய கதைகள் எப்படிப்பட்டவை என்றால், இவை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவையாக இருக்கின்றன. இப்போது குவாஹாட்டியின் பூர்ணிமா மண்டலையே எடுத்துக் கொள்வோமே!! அவர் குவாஹாட்டி நகராட்சியில் பணியாற்றும் ஒரு துப்புரவுப் பணியாளர். அவரது மகளான மாளவிகா, கால்பந்தாட்டத்தில் தன் திறமையை வெளிப்படுத்தினார் என்றால், இவரது ஒரு மகனான சுஜித், கோகோ விளையாட்டில், இவரது இன்னொரு மகன் பிரதீப், ஹாக்கியில் அஸாம் மாநில அணியில் விளையாடுகிறார்.
இப்படி பெருமிதமளிக்கும் கதை ஒன்று தமிழ்நாட்டின் யோகானந்தனுடையது. அவர் தமிழ்நாட்டிலே பீடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றாலும், அவரது மகளான பூர்ணஸ்ரீ, பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறார். அவருக்கு என் நெஞ்சார்த்த பாராட்டுக்கள். நான் டேவிட் பெக்கம் என்ற பெயரைச் சொன்னவுடனேயே நீங்கள், பிரபலமான சர்வதேச கால்பந்தாட்ட வீரர் என்பீர்கள். ஆனால் நம்மிடையேயும் கூட, ஒரு டேவிட் பெக்கம் இருக்கிறார், அவர் குவாஹாட்டியின் இளைஞர்களுக்கான ஆட்டங்களில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். அதுவும் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தின், 200 மீட்டர் ஸ்ப்ரிண்ட் போட்டியில்; சிலகாலம் முன்பாக, நான் அண்டமான் நிக்கோபார் சென்றிருந்த போது, கார் நிக்கோபார் தீவில் வசிக்கும் டேவிடின் பெற்றோர், அவரது சிறுவயதிலேயே காலமாகி விட்டார்கள் என்பதை அறிந்தேன். சிற்றப்பா அவரை கால்பந்தாட்ட வீரனாக ஆக்க விரும்பினார் என்ற காரணத்தால் பிரபலமான கால்பந்தாட்ட வீரரின் பெயரை இவருக்குச் சூட்டி விட்டார். ஆனால் இவரது மனமோ சைக்கிள் ஓட்டுவதிலேயே லயித்திருந்தது. கேலோ இண்டியா திட்டத்தின்படி, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பாருங்கள், இவர் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் ஒரு புதிய பதிவை ஏற்படுத்தி இருக்கிறார்!!
பிவானீயைச் சேர்ந்த பிரஷாந்த் சிங் கன்ஹையா, கழி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில், முன்னர் தான் ஏற்படுத்திய தேசியப் பதிவையே முறியடித்திருக்கிறார். 19 வயதான ப்ரஷாந்த் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரஷாந்த் மண்ணில் கழி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டிக்கான பயிற்சியை மேற்கொண்டார் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். இதுபற்றித் தெரிந்த பின்னர் விளையாட்டுத் துறை அவரது பயிற்றுநருக்கு தில்லியின் ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பயிலகம் நடத்த உதவியது, இன்று பிரஷாந்த் அங்கே பயிற்சிகள் பெற்று வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த கரீனா ஷாந்தாவின் கதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தோல்வியை ஏற்காத, துவளாத கருத்தூக்கத்தை யாருக்கும் அளிக்கவல்லது. கரீனா 100 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவின் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, புதிய தேசியப்பதிவை ஏற்படுத்தி இருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் கரீனாவுக்கு, இது எப்படிப்பட்ட சமயமாக இருந்தது என்றால், முட்டியில் அடிபட்டு, பயிற்சியையே துறக்க வேண்டியிருந்தது. ஆனால் கரீனாவும் அவரது தாயும் மனோதைரியத்தை விடவில்லை, அதன் விளைவு இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கிறது. நான் அனைத்து விளையாட்டு வீரர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கான விருப்பங்களைத் தெரிவிக்கிறேன். இது மட்டுமல்லாமல், நாட்டுமக்கள் அனைவரின் சார்பாகவும் இவர்கள் அனைவரின் பெற்றோரையும் போற்றுகிறேன்; இவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஏழ்மை ஒரு தடைக்கல்லாக இருக்க அனுமதிக்கவில்லை. தேசிய விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக, எங்கெல்லாம் தங்கள் பேரார்வத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு வீரர்களுக்குக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் பிற மாநிலங்களின் கலாச்சாரத்தோடும் அறிமுகம் பெறுகிறார்கள். ஆகையால் நாம் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களை ஒட்டியே, ஒவ்வொரு ஆண்டும் கேலோ இண்டியா பல்கலைக்கழக விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே, அடுத்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி முதல், மார்ச் மாதம் 1ஆம் தேதி வரை, ஒடிஷாவின் கட்டக் மற்றும் புவனேஷ்வரில், முதல் கேலோ இண்டியா யூனிவர்சிட்டி கேம்ஸ் நடக்கவிருக்கிறது. இதில் பங்கெடுக்க 3000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
என் இனிய நாட்டுமக்களே, தேர்வுகளுக்கான காலம் வந்தே விட்டது, மாணவர்கள் அனைவரும் தங்கள் தயாரிப்பு முஸ்தீபுகளுக்கு நிறைவானதொரு வடிவத்தைக் கொடுப்பதில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மாணவ நண்பர்களோடு, தேர்வுகளை எதிர்கொள்வோம் அனுபவத்திற்குப் பிறகு, நாட்டின் இளைஞர்கள் மனதிலே தன்னம்பிக்கை நிரம்பி இருக்கிறது, அனைத்துவகைச் சவால்களையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும்.
நண்பர்களே, ஒருபுறம் தேர்வுகள் என்றால் மறுபுறமோ, குளிர்காலம். இந்த இரண்டுக்கும் இடையே எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களை உடலுறுதியோடு வைத்துக் கொள்ளுங்கள் என்பது தான். கொஞ்சம் உடற்பயிற்சியைச் செய்யுங்கள். இப்போதெல்லாம் ஃபிட் இண்டியா தொடர்பாக பல நிகழ்ச்சிகள் நடப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று இளைஞர்கள், நாடுமுழுவதிலும் சைக்ளோதான் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பங்கெடுத்த இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் உடலுறுதி பற்றிய செய்தியை அளித்தார்கள். நமது புதிய இந்தியா, முழுமையான உடலுறுதியோடு இருக்க, அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தெம்பும், உற்சாகமும் அளிக்கவல்லவையாக இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ஃபிட் இண்டியா ஸ்கூல் என்ற இலக்கு, இப்போது பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்போது வரை 65000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இணையவழிப் பதிவைச் செய்து ஃபிட் இண்டியா ஸ்கூல் என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார்கள் என்று என்னிடத்தில் கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் பிற பள்ளிகள் அனைத்திடமும் என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், படிப்புடன்கூட, உடல்ரீதியான செயல்பாடுகளையும் இணைத்து, ’ஃபிட் ஸ்கூலாக’ அவர்கள் ஆக வேண்டும் என்பது தான். அவர்கள் உடல்ரீதியான செயல்பாட்டுக்கு அதிகப்படியான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்பது தான். நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பதனை, தினமும் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இருவாரங்கள் முன்னர், பாரதத்தின் பல்வேறு பாகங்களில் பல்வேறு பண்டிகைகளின் மணம் கமழ்ந்தது. பஞ்சாபில் லோஹ்டீ எனும் போது துடிப்பும் உற்சாகமும் எங்கும் பெருகியோடும். தமிழ்நாட்டின் சகோதரிகளும் சகோதரர்களும், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள், திருவள்ளுவர் பற்றிய நினைவுகளைப் போற்றினார்கள். அஸாமில் பிஹூவின் மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சிகளைக் காண முடிந்தது, குஜராத்தின் அனைத்து திசைகளிலும் உத்தராயணத்தின் கோலாஹலமும், காற்றாடிகள் நிறைந்த வானமும் காணப்பட்டன. இப்படிப்பட்ட வேளையில், தில்லி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு சாட்சியாக அமைந்திருந்தது. தில்லியில், ஒரு மகத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதோடு கூடவே, சுமார் 25 ஆண்டுக்கால ப்ரூ-ரியாங்க் அகதிகள் நெருக்கடி, ஒரு துயரமிகு அத்தியாயம் முடிவுக்கு வந்தது, நிரந்தரமாக அதற்கு முடிவு கட்டப்பட்டது. சுறுசுறுப்பான சூழல் காரணமாகவும், பண்டிகைகள் காலம் காரணமாகவும், ஒருவேளை நீங்கள் இதுபற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆகையால் இதுபற்றி மனதின் குரலில் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்தப் பிரச்சனை 90களைச் சேர்ந்தது. 1997ஆம் ஆண்டு இனங்களுக்கு இடையேயான நெருக்கடி காரணமாக, ப்ரூ ரியாங்க் பழங்குடியின மக்கள், மீஸோரமிலிருந்து வெளியேறி திரிபுராவில் தஞ்சம் புகுந்தனர். இந்த அகதிகள் வடக்கு திரிபுராவின் கஞ்சன்புரில் இருக்கும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். மிகவும் துயரம்மிகு விஷயம் என்னவென்றால், இந்த ப்ரூ ரியாங்க் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளாகத் தங்கள் வாழ்க்கையின் ஒரு மகத்துவம் வாய்ந்த பகுதியை இழந்தே போனார்கள். முகாம்களில் தங்குவதன் பொருள் என்னவென்றால், அனைத்துவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் இருத்தல் தான். 23 ஆண்டுகளாக வீடில்லை, நிலமில்லை, நோய் வந்தால் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இன்மை, குழந்தைகளுக்கு கல்விவசதிகள் இல்லாமை. சற்றே சிந்தித்துப் பாருங்கள், 23 ஆண்டுகள் வரை முகாம்களின் தீவிரமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பது என்பது அவர்களுக்கு எத்தனை துயரம் மிக்கதாக இருந்திருக்கும் தெரியுமா!! வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், நிச்சயமில்லாத ஒரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது என்ற இந்த நிலை எத்தனை சங்கடமானது தெரியுமா!! அரசுகள் வந்தன, சென்றன, ஆனால் இவர்களின் துயரத்துக்கு மட்டும் ஒரு விடிவு பிறக்கவில்லை. ஆனால் இத்தனை கஷ்டங்களைத் தாண்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டமும், கலாச்சாரத்தின்பால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் உறுதியாக, அசைக்கமுடியாதனவாக இருந்தன. அவர்களின் இந்த நம்பிக்கையின் விளைவாக, அவர்களின் வாழ்க்கையில் இன்று ஒரு புதிய விடியல் பிறந்திருக்கிறது. ஒப்பந்தப்படி, இப்போது அவர்களால் ஒரு கண்ணியம் மிக்க வாழ்க்கையை வாழக்கூடிய பாதை திறக்கப்பட்டிருக்கிறது. நிறைவாக, 2020ஆம் ஆண்டின் இந்தப் புதிய பத்தாண்டு, ப்ரூ ரியாங்க் சமூகத்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய எதிர்பார்ப்பின் கிரணத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சுமார் 34,000 ப்ரூ அகதிகள், திரிபுராவில் குடியமர்த்தப்படுவார்கள். இது மட்டுமல்ல, அவர்களின் மறுவாழ்வு மற்றும் முழுமையான வளர்ச்சியின் பொருட்டு, மத்திய அரசு சுமார் 600 கோடி ரூபாய்கள் உதவியும் அளிக்கும். புலம் பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் அளிக்கப்படும். வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும். இதோடுகூடவே, அவர்களுக்கு உணவுப் பொருள்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். அவர்கள் இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களாலும் பயன்பெறலாம். இந்த ஒப்பந்தம் பல காரணங்களுக்காகச் சிறப்பானது. இது கூட்டுறவுக் கூட்டாட்சி உணர்வினை வெளிப்படுத்துகிறது. ஒப்பந்தத்தின் போது, மிஸோராம் மற்றும் திரிபுரா – இரு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இருந்தார்கள். இந்த ஒப்பந்தம், இரு மாநிலங்களின் மக்களின் சம்மதம் மற்றும் நல்வாழ்த்துக்களோடு சாத்தியமாகி இருக்கிறது. இதன் பொருட்டு இருமாநில மக்களுக்கும், அங்கே இருக்கும் முதல்வர்களுக்கும், குறிப்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒப்பந்தம் பாரதநாட்டு கலாச்சாரத்தில் கலந்திருக்கும் கருணை உணர்வு மற்றும் நேசமான மனதை வெளிப்படுத்துகிறது. அனைவரையும் நம்மவர்கள் என ஏற்றுக் கொண்டு நடத்தல் மற்றும் ஒற்றுமையாக இருத்தல் என்பன, இந்த பவித்திரமான பூமியின் குணநலன்களாக என்றுமே இருந்து வந்திருக்கின்றன. நான் மீண்டும் ஒருமுறை இந்த மாநிலவாசிகளுக்கும், ப்ரூ ரியாங்க் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் சிறப்பான என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இத்தனை பெரிய கேலோ இண்டியா விளையாட்டுக்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கும் அஸாம் மாநிலத்தில், மேலும் ஒரு பெரிய பணி நிறைவேறி இருக்கிறது. சில நாட்கள் முன்பாக ஆஸாமில், எட்டு தனித்தனி தீவிரவாதக் குழுக்களின் 644 பேர்கள் தங்கள் ஆயுதங்களைத் தூரப் போட்டு, சரணடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். முதலில் வன்முறையைக் கையாண்ட இவர்கள், அமைதியின் மீது நம்பிக்கை வைத்தார்கள், தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் முடிவினை மேற்கொண்டார்கள், தேசிய நீரோட்டத்தில் மீண்டும் வந்து இணைந்தார்கள். வன்முறை என்பது தீர்வை அளிக்கும் என்று நம்பி ஆயுதங்களை கைகளில் எடுத்தவர்கள், அமைதியும் ஒருமைப்பாடும் மட்டுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை, இன்று திடமாக நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். வடகிழக்கில் கிளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டது என்பது நாட்டுமக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்; இதற்குப் பெரிய காரணம் என்னவென்றால், இந்தத் துறையில் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளும் அமைதியோடும், நேர்மையோடும், விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு தீர்க்கப்பட்டு வருவது தான். நாட்டின் எந்த மூலையிலும், வன்முறை மற்றும் ஆயுதங்களின் பலத்தால் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டுவிடலாம் என்று நினைப்பவர்களிடத்தில், இந்த குடியரசுத்திருநாள் என்ற பவித்திரமான வேளையில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் மீண்டு வாருங்கள் என்பது தான். பிரச்சனைகளை அமைதியான வழிவாயிலாகத் தீர்ப்பதில் நம் மீதும், நமது நாட்டின் திறமை மீதும் நம்பிக்கை வையுங்கள்!! நாம் 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், இது அறிவு-அறிவியல் மற்றும் ஜனநாயகத்தின் யுகம். எந்த இடத்திலாவது வன்முறையால் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது எந்த இடத்திலாவது அமைதி மற்றும் நல்லிணக்கம் காரணமாக வாழ்க்கையில் இடர்கள் ஏற்பட்டன என்று தான் கேள்விப்பட்டதுண்டா? வன்முறை, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது. உலகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வு, வேறு பிரச்சனைகளை உருவாக்குவதால் ஏற்படாது, மேலும் தீர்வுகளைத் தேடுவதன் மூலமே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். நாமனைவரும் இணைந்து, அமைதியின் அடிப்படையில் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணக்கூடிய புதிய பாரதத்தைப் படைப்போம் வாருங்கள். ஒன்றுபடுவது என்பது அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கான முயற்சியில் அமையட்டும். மேலும் சகோதரத்துவமானது, பிரிவினைகள், பிளவுகளுக்கான முயற்சிகளை முறியடிக்கட்டும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, குடியரசுத் திருநாளான இன்று ககன்யான் பற்றிப் பேசும் போது அபரிமிதமான சந்தோஷம் ஏற்படுகிறது. நாடு, இந்தத் திசைநோக்கி மேலும் ஒரு அடியெடுத்து வைத்திருக்கிறது. 2022ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் ககன்யான் திட்டத்துடன் கூட, ஒரு இந்தியரையும் விண்வெளியில் கொண்டு செல்ல நமது தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ககன்யான் மிஷன், 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், பாரதத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும். புதிய பாரதத்தின், ஒரு புதிய மைல்கல்லாக இது அமையும்.
நண்பர்களே, இந்தக் குறிக்கோளுக்காக, விண்வெளிவீரருக்கான தேர்விலே 4 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த நால்வருமே இந்திய விமானப்படையின் இளம் விமானிகள். இந்த புத்திகூர்மை உடைய இளைஞர்கள், இந்தியாவின் திறன்கள், திறமைகள், தைரியம், கனவுகள் ஆகியவற்றின் எடுத்துக்காட்டுக்கள். நமது நான்கு நண்பர்களும், அடுத்த சில நாட்களில் பயிற்சிக்காக ரஷியநாடு பயணப்பட இருக்கிறார்கள். இது பாரதம் மற்றும் ரஷியாவுக்கு இடையே ஒத்துழைப்புக்கான, மேலும் ஒரு பொன்னான அத்தியாயமாக மிளிரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவர்களுக்கு ஓராண்டுக்கும் கூடுதலாக பயிற்சி அளிக்கப்படும். இதன் பிறகு, நாட்டின் ஆசைகள் எதிர்பார்ப்புக்களின் பயணத்தை, விண்வெளிவரை கொண்டு செல்லும் பொறுப்பு, இந்த நான்கு இளைஞர்களில் யாரேனும் ஒருவரிடத்தில் இருக்கும். இன்று குடியரசுத் திருநாள் என்ற சுபவேளையில், இந்த நான்கு இளைஞர்களுக்கும், இந்த குறிக்கோளோடு இணைந்திருக்கும் பாரதம் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கனிவான நாட்டுமக்களே, கடந்த மார்ச் மாதம் ஒரு காணொளி, ஊடகங்கள், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது. விவாதம் என்னவென்றால், எப்படி 107 வயதான ஒரு மூதாட்டித் தாய், குடியரசு மாளிகை நிகழ்ச்சியின் நெறிமுறைகளைத் தகர்த்து, குடியரசுத் தலைவருக்கு ஆசிகள் அளிக்கலாம் என்பது தான் அது. இந்தப் பெண்மணியான சாலூமரதா திம்மக்கா, கர்நாடகத்தின் வ்ருக்ஷ மாதா என்ற பெயரால் புகழ் பெற்றவர். நடைபெற்ற விழா பத்ம விருதுகள் அளிக்கும் விழா. மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து வரும் திம்மக்காவின் அசாதாரணமான பங்களிப்பு பற்றி நாடு அறிந்தது, புரிந்து கொண்டது, கௌரவம் அளித்தது. அவருக்குப் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.
நண்பர்களே, இன்று பாரதம் இப்படிப்பட்ட மகத்தான மனிதர்களுக்காக பெருமிதம் கொள்கிறது. வேர்களோடு தொடர்புடைய மக்களுக்கு கௌரவம் அளிப்பதால் நாடே பெருமைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டினைப் போலவும், நேற்று மாலை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்கள் அனைவரைப் பற்றியும் நீங்கள் கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன். இவர்களின் பங்களிப்புப் பற்றி, குடும்பம் பற்றி விவாதம் செய்யுங்கள். 2020இன் பத்ம விருதுகளுக்காக, இந்த ஆண்டு 46000த்திற்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 20 பங்குக்கும் அதிகமானது. பத்ம விருதுகள், இப்போது மக்கள் விருதுகளாகி விட்டன என்பதையே இந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இன்று பத்ம விருதுகள் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையிலேயே இருக்கின்றன. முன்பெல்லாம் முடிவுகள், குறிப்பிட்ட சிலருக்கிடையே மட்டும் எடுக்கப்பட்டன; ஆனால் இன்றோ இது முழுமையாக மக்களால் எடுக்கப்படுகிறது. ஒருவகையில் சொல்லப்போனால், பத்ம விருதுகள் மீது நாட்டுமக்களுக்கு இப்போது நம்பிக்கையும், நன்மதிப்பும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். இப்போது விருது பெறுவோரில் பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், கடினமான உழைப்பால் மேலே உயர்ந்தவர்கள். குறைவான சாதனங்கள் என்ற இடர்களையும், அக்கம்பக்கம் இருக்கும் தீவிரமான ஏமாற்றம்நிறை சூழலையும் தகர்த்து, இவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். உண்மையில் அவர்களின் பலமான பேரார்வம், சேவையுணர்வு, தன்னலமற்ற உள்ளம் ஆகியவை நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லவை. நான் மீண்டும் ஒருமுறை பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் அவர்களைப் பற்றிப் படிக்க, அவர்களைப் பற்றி அதிகத் தகவல்களைச் சேகரியுங்கள் என்று சிறப்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன். அவர்களின் வாழ்க்கை பற்றிய அசாதாரணமான கதைகள், சமூகத்துக்கு சரியான வகையிலே கருத்தூக்கம் அளிக்கும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மீண்டும் ஒருமுறை குடியரசுத் திருநாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். வரும் இந்தப் பத்தாண்டுகள் முழுவதுமே, உங்கள் வாழ்க்கையில், பாரதநாட்டின் வாழ்க்கையில், புதிய உறுதிப்பாடுகள் உடையனவாக, புதிய சாதனைகளைப் படைப்பனவாக அமையட்டும். மேலும் உலகம், பாரதத்திடமிருந்து எதை எதிர்பார்க்கிறதோ, அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றித் தரும் திறம், பாரதநாட்டுக்குக் கிடைக்கட்டும். இந்த நம்பிக்கையோடு, புதிய பத்தாண்டுக்காலத்தைத் துவக்குவோம் வாருங்கள். புதிய உறுதிப்பாடுகளுடன், பாரத அன்னையின் தாள் பணிவோம். பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2019ஆம் ஆண்டின் இறுதிக் கணங்கள் நம்முன்னே இருக்கின்றன. இன்னும் மூன்று நாட்களில் 2019ற்கு நாம் பிரியாவிடை அளித்து விடுவோம், பின்னர் நாம் 2020ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்பதோடு மட்டுமல்லாமல், புதிய ஆண்டில் கால் பதிப்போம், இன்னுமொரு புதிய பத்தாண்டில் தடம் பதிப்போம், 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டில் நாம் நுழைவோம். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் 2020ஆம் ஆண்டிற்கான இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். இந்தப் பத்தாண்டு பற்றி ஒரு விஷயம் உறுதியாகச் சொல்ல முடியும்; நாட்டின் முன்னேற்றத்துக்கு வேகம் கொடுக்க 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள். அவர்கள் இந்த நூற்றாண்டின் அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டு வளர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இளைய சமுதாயம் பல பெயர்களால் இன்று அறியப்படுகிறது. சிலர் அவர்களை Millennials என்கிறார்கள், சிலரோ அவர்களை, Generation Z அல்லது Gen Z என்று அழைக்கிறார்கள். எது எப்படியோ, மக்கள் மனதில் ஒரு விஷயம் பரவலாகப் பதிந்து விட்டிருக்கிறது – அதாவது இவர்கள் சமூக ஊடகத் தலைமுறையினர் என்பது. இவர்கள் படுசுட்டிகள். புதியனவற்றைச் செய்வது, வித்தியாசமாகச் செய்வது தான் இவர்கள் கனவாக இருக்கிறது. இவர்களுக்கு எனச் சொந்தமாக கருத்து இருக்கிறது என்பதோடு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், குறிப்பாக இந்தியா பற்றி நான் கூற விரும்புகிறேன். அதாவது இப்போதெல்லாம் இளைஞர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் வேளையில், அவர்கள் ஒழுங்கினை விரும்புகிறார்கள், அமைப்புமுறையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுமட்டுமல்ல, அவர்கள் ஒழுங்குமுறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள். ஏதோ சில வேளைகளில் என்பது அல்ல; அந்த அமைப்புமுறை சரியாக பதிலளிக்கவில்லை என்றால், பொறுத்துக் கொள்வதில்லை, தைரியமாக ஏன் ஒழுங்கீனமாக இருக்கிறது என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். இதை நான் சிறப்பானதாகவே காண்கிறேன். ஒரு விஷயம் என்னவோ உறுதி – நம் தேசத்து இளைஞர்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கு அராஜகப் போக்கின் மீது வெறுப்பு இருக்கிறது என்பது தெளிவு. ஒழுங்கீனம், ஸ்திரமற்ற நிலை ஆகியவற்றை அவர்கள் விரும்பவில்லை. குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள், ஆண் பெண் போன்ற வேறுபாடுகளை அவர்கள் விரும்புவதில்லை. சில வேளைகளில் நாமேகூட பார்க்கலாம், விமான நிலையத்தில் நிற்கும் போதோ, திரையரங்குகளில் இருக்கும் போதோ, வரிசையில் நின்று கொண்டிருக்கும் வேளையில் யாரோ ஒருவர் இடையில் நுழைவதைப் பார்த்தால், முதலில் ஓங்கிக் குரல் கொடுப்பவர்கள் யாரென்றால், இத்தகைய இளைஞர்கள் தாம். மேலும் ஒரு விஷயத்தை நாம் பார்த்திருக்கலாம், இப்படி ஏதோ ஒரு சம்பவம் நடக்கும் போது, வேறு ஒரு இளைஞர் உடனடியாகத் தனது மொபைலை எடுத்து அதனைப் படம்பிடிக்கத் தொடங்கி விடுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் காணொளியை தீயைப் போலப் பரப்பி விடுவார். தவறு இழைத்தவர் உடனடியாகத் தான் செய்த தவறு பற்றி உணர்வார். ஆக இது ஒருவகையான ஒழுங்கு, புதியயுகம், புதிய வகையான எண்ணப்பாடு, இதைத் தான் நமது இளைய சமுதாயம் பிரதிபலிக்கிறது. இன்று பாரதத்துக்கு இந்தத் தலைமுறையிடமிருந்து ஏராளமான எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. இந்த இளைஞர்கள் தாம் தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார் – My Faith is in the Younger Generation, the Modern Generation, out of them, will come my workers. அதாவது இளையதலைமுறை, புதிய தலைமுறையினர் மீது எனது நம்பிக்கை இருக்கிறது; அவர்களிலிருந்து தான் என் செயல்வீரர்கள் தோன்றுவார்கள் என்றார் ஸ்வாமி விவேகானந்தர். இளைஞர்கள் பற்றிப் பேசுகையில் அவர் மேலும் என்ன கூறினார் தெரியுமா? “இளமையின் விலையை அளக்கவும் முடியாது, அதை விவரிக்கவும் இயலாது” என்றார். இது வாழ்க்கையின் மிக விலைமதிப்பில்லாத காலகட்டமாகும். நீங்கள் உங்கள் இளமையை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது, உங்கள் எதிர்காலம், உங்கள் வாழ்க்கை ஆகியவற்றையே நம்பியிருக்கிறது. ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி, இளமை என்பது ஆற்றல், சுறுசுறுப்பு ஆகியவை நிரம்பியது; அதிலே மாற்றமேற்படுத்தும் பலம் அடங்கியிருக்கிறது. பாரதநாட்டிலே இந்த பத்தாண்டுக்காலத்தில், இளைஞர்கள் மட்டும் முன்னேறப் போவதில்லை, அவர்களோடு கூடவே, அவர்களின் திறமைகள், நாட்டின் வளர்ச்சி ஆகியவையும் மலரும், பாரதத்தை நவீனமயமாக்குவதில் இந்தத் தலைமுறை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது, இதை நான் தெளிவாக அனுபவிக்கிறேன். வரவிருக்கும் ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று விவேகானந்தரின் பிறந்த நாளன்று, தேசம் இளைஞர்கள் தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு இளைஞரும், இந்தப் பத்தாண்டிலே, தனது இந்தப் பொறுப்பின் மீது கண்டிப்பாகத் தன் சிந்தையைச் செலுத்துவதோடு, இந்தப் பத்தாண்டின் பொருட்டு, அவசியம் ஒரு மனவுறுதியையும் மேற்கொள்வார்.
எனதருமை நாட்டுமக்களே, கன்னியாகுமரியில் ஸ்வாமி விவேகானந்தர் 50 ஆண்டுகளுக்கு முன்பாக எந்தப் பாறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டாரோ, அந்த இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நினைவுப் பாறைக்கு உங்களில் பலர் சென்றிருக்கலாம். கடந்த 50 ஆண்டுகளாக இந்த இடம் பாரதநாட்டின் கௌரவமாக ஆகியிருக்கிறது. கன்னியாகுமரி…… தேசத்தையும் உலகையும் ஈர்க்கும் மையம். தேசபக்தி உணர்வும், ஆன்மீக விழிப்புணர்வும் ஒருசேரப் பெற நினைப்பவர்கள் அனைவரும், இதை ஒரு தீர்த்த யாத்திரைத்தலமாகவே ஆக்கியிருக்கிறார்கள், வழிபாட்டு மையமாக உணர்ந்து வருகிறார்கள். ஸ்வாமிஜியின் நினைவுச் சின்னம், அனைத்துப் பிரிவினர், அனைத்து வயதினர், அனைத்து வகைப்பட்டவர் ஆகியோருக்கு தேசபக்திக்கான உத்வேகம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. ‘’பரம ஏழைகளுக்குச் சேவை’’ என்ற இந்த மந்திரத்தின்படி வாழ்ந்து பார்க்கும் பாதையைக் காட்டுகிறது. அங்கே யார் சென்றாலும், அவர்களுக்குள்ளே ஒரு சக்தி பாய்வதை அவர்களால் உணர முடியும், ஆக்கப்பூர்வமான உணர்வு பெருக்கெடுக்கும், தேசத்துக்காக ஏதோ ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்ற தாகம் பிறக்கும், இவை மிக இயல்பான உணர்வுகள்.
நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர்கூட கடந்த நாட்களில், இந்த 50 ஆண்டுக்கால பழமையான பாறை நினைவகத்தைப் பார்த்து விட்டு வந்தார்; அதே போல நமது குடியரசுத் துணைத்தலைவரும்கூட, குஜராத்தின் கட்சின் ரண் பகுதியில் நடைபெறும் மிகச் சிறப்பான ரணோத்ஸவத்தைத் தொடக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் இந்தியாவின் இத்தகைய மகத்துவம் வாய்ந்த சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் போது, நாட்டுமக்களான நம்மனைவருக்கும் கருத்தூக்கம் பிறக்கிறது. நீங்களும் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, நாம் பல்வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், பள்ளிகளில் படிக்கலாம்; ஆனால் படிப்பு நிறைவடைந்த பிறகு, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என்பது மிகவும் சுகமான அனுபவம், இந்த சந்திப்பின் போது அனைத்து இளைஞர்களுமாக இணைந்து, தங்களின் பழைய நினைவுகளில் ஆழ்ந்து போகிறார்கள், 10, 20, 25 ஆண்டுகள் பின்னோக்கித் தங்கள் நினைவுக் குதிரைகளைத் தட்டி விடுகிறார்கள். ஆனால் சில வேளைகளில் இத்தகைய முன்னாள் மாணவர்களின் சந்திப்பு, விசேஷமான ஈர்ப்புக்கான காரணமாக ஆகி விடுகிறது, நாட்டுமக்களின் கவனமும் இதன்பால் ஈர்க்கப்படுவது அவசியமான ஒன்று தான். கடந்தகால மாணவர்கள் சந்திப்பு என்பது, அந்த நாளைய நண்பர்களைச் சந்திப்பது, பசுமை நிறைந்த நினைவுகளை அனுபவிப்பது….. இவையெல்லாம் ஒரு தனி ஆனந்தத்தை மனதிலே நிறைப்பதாகும். ஆனால் இவற்றோடு கூடவே, பொதுவானதொரு நோக்கம் ஏற்படும் போது, ஒரு தீர்மானம் உருவாகும் போது, ஒரு உணர்வுபூர்வமான ஈடுபாடு இணையும் போது, அப்போது நிறமும் வடிவமும் முற்றிலுமாக மாறிப் போகும். சில சமயங்களில் சில பழைய மாணவர்கள் குழுக்கள் தங்களின் பள்ளிக்கூடங்களுக்கு ஏதாவது ஒரு பங்களிப்பை அளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒருவர் கணினிமயமாக்க முறைகளை ஏற்படுத்தலாம், சிலர் நூலகத்தின் வளத்தைப் பெருக்கலாம், வேறு சிலர் நல்ல குடிநீர் வசதிகளை ஏற்படுத்தலாம், சிலரோ புதிய அறைகளை உருவாக்கலாம், இன்னும் சிலர் விளையாட்டு அமைப்புக்களை ஏற்படுத்தித் தரலாம். இப்படி ஏதாவது ஒன்றை அமைத்துக் கொடுக்கிறார்கள். எந்த இடத்திலே நாம் படித்தோமோ, எங்கே நமது வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட்டதோ, அதற்காக வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் செய்வது என்ற ஆசை அனைவரின் மனதில் இருக்கிறது, அப்படி இருக்கவும் வேண்டும். ஆனால் நான் இன்று ஒரு விசேஷமான சம்பவத்தை உங்கள் முன்னே அளிக்க விரும்புகிறேன். சில நாட்கள் முன்பாக, ஊடகத்தின் வாயிலாக, பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த பைரவ்கஞ்ஜ் உடல்நல மையம் பற்றிய செய்தியை நான் கேள்விப்பட்ட போது, என் மனதிலே இனிமையான உணர்வு ஏற்பட்டது, இதனை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பைரவ்கஞ்ஜ் உடல்நல மையத்திலே இலவசமாக உடல்நல பரிசோதனை செய்து கொள்ள, அக்கம்பக்கத்தின் கிராமங்களிலிருந்து எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் சேர்ந்து விடும். இந்த விஷயம் உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அட, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கூடப்படலாம். மக்கள் வரலாம், என்ன ஆச்சரியம்!! இல்லை நண்பர்களே, இங்கே புதுமை இருக்கிறது. இது அரசு மருத்துவமனை இல்லை, அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உடல்நல மையமுமல்ல. இது அங்கே கே.ஆர். உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இதன் பெயர் ’’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’. அதாவது இந்தத் தீர்மானம் தொண்ணூற்று ஐந்து என்பதன் பொருள் என்னவென்றால், இந்த உயர்நிலைப் பள்ளியில் 1995ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் தீர்மானம். அதாவது இந்தத் தொகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள், வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று யோசித்தார்கள். இதில் அந்த முன்னாள் மாணவர்கள், சமூகத்துக்காக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற வகையில், பொதுமக்களுக்கான உடல்நல விழிப்புணர்வு என்ற கடப்பாட்டை மேற்கொண்டார்கள். ’’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’ என்ற இந்த இயக்கத்தில், பேத்தியாவின் அரசு மருத்துவக் கல்லூரியும், பல மருத்துவமனைகளும் தங்களை இணைத்துக் கொண்டன. இதன் பின்னர், மக்களின் உடல்நலம் தொடர்பான முழுவீச்சிலான இயக்கம் முடுக்கி விடப்பட்டது. இலவச மருத்துவப் பரிசோதனை, இலவச மருந்துகள் விநியோகம் அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றில் ‘’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’ அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக ஆகிப் போனது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், இந்த நாடு 130 கோடி அடிகள் முன்னெடுத்து வைக்கும் என்று நாம் அடிக்கடி கூறி வருகிறோம் இல்லையா!! இப்படிப்பட்ட விஷயங்களை சமுதாயத்தில் கண்கூடாக நம்மால் பார்க்க முடிகிறது, அனைவருக்கும் ஆனந்தம் மேலிடுகிறது, சந்தோஷம் உண்டாகிறது, வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற கருத்தூக்கம் துளிர்க்கிறது. ஒருபுறம், பிஹாரின் பேத்தியாவில் முன்னாள் மாணவர்களின் குழுவானது உடல்நலச் சேவை என்ற சவாலை எதிர்கொண்டது என்றால், உத்திரப் பிரதேசத்தின் ஃபூல்புரைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் உயிர்ப்பான செயல்பாடு காரணமாக இந்தப் பகுதிக்கே உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றார்கள். ஒன்றுபட்டு ஒரு மனவுறுதியை மேற்கொண்டால், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை என்பதை இந்தப் பெண்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள். சில காலம் முன்பு வரை, ஃபூல்புரைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கிப் போனவர்களாக, ஏழ்மையில் வாடுபவர்களாக இருந்தார்கள்; ஆனால் அவர்களுக்குள்ளே தங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஏதோ ஒன்றைச் சாதித்துக் கொடுக்க வேண்டும் என்ற தீராத ஆவல் இருந்தது. இவர்கள் அனைவரும், காதீபுரைச் சேர்ந்த சுயவுதவிக் குழுவோடு இணைந்து காலணிகள் தயாரிக்கும் திறனை வளர்த்துக் கொண்டார்கள்; இதன் வாயிலாக இவர்கள் தங்கள் கால்களைத் தைத்த கடினமான முட்களை மற்றும் வீசியெறியவில்லை, சுயசார்புடையவர்களாக ஆகி, தங்கள் குடும்பங்களையும் பராமரிப்பவர்களாக ஆனார்கள். கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் துணையோடு, இப்போது அங்கே காலணிகள் தைக்கும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு விட்டது, அங்கே நவீன இயந்திரங்கள் வாயிலாக காலணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நான் சிறப்பான வகையிலே அந்தப் பகுதியின் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் உறவினர்களுக்காகவும், இந்தப் பெண்கள் தயாரிக்கும் காலணிகளை வாங்கி இவர்களுக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். இன்று, இந்தப் பெண்களின் உறுதிப்பாட்டினால், அவர்கள் குடும்பங்களின் பொருளாதார நிலை மட்டும் பலப்படவில்லை, இவர்களின் வாழ்க்கைத் தரமுமே கூட உயர்ந்திருக்கிறது. இப்போது ஃபூல்புரைச் சேர்ந்த காவல்துறையினர் அல்லது அவர்களின் உறவினர்கள் பற்றிக் கேள்விப்படும் போது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தில்லியின் செங்கோட்டையிலிருந்து நான் ஒரு விஷயம் குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தேனே, உங்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது உள்ளூரில் தயாராகும் பொருட்களை வாங்குங்கள் என்று நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டேன் அல்லவா!! இன்று மீண்டும் ஒருமுறை என்னுடைய ஆலோசனை என்னவென்றால், அந்தந்த வட்டாரத்தில் தயாராகும் பொருட்களை வாங்கி நம்மால் ஊக்குவிக்க முடியாதா சொல்லுங்கள்? நம்மால் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு முதன்மை அளிக்க முடியாதா சொல்லுங்கள்?? நாம் உள்ளூர் பொருட்களோடு நம்முடைய கௌரவத்தையும் அந்தஸ்தையும் இணைக்க முடியாதா?? இப்படிப்பட்ட உணர்வின் வாயிலாக நமது சக குடிமக்களின் வாழ்வினில் நிறைவை ஏற்படுத்த முடியாதா? நண்பர்களே, காந்தியடிகள், இந்த சுதேஸி உணர்வை, ஒரு இலட்சிய தீபமாகப் பார்த்தார்கள்; இந்த தீபமானது இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வினில் ஒளியேற்றி வைக்கும் திறன் படைத்தது. பரம ஏழையின் வாழ்வினில் நிறைவை நம்மால் ஏற்படுத்த முடியும். நூறாண்டுகள் முன்னதாக காந்தியடிகள், ஒரு மிகப்பெரிய மக்கள் பேரியக்கத்தைத் தொடக்கி வைத்தார். இதன் நோக்கம் ஒன்று தான், இந்தியத் தயாரிப்புக்களுக்கு ஊக்கமளித்தல். சுயசார்பு நிலையை எட்ட இந்தப் பாதையைத் தான் அண்ணல் நமக்கெல்லாம் காட்டித் தந்திருக்கிறார். 2022ஆம் ஆண்டிலே, நாம் நமது சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டினை நிறைவு செய்ய இருக்கிறோம். எந்தச் சுதந்திர பாரதத்தில் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமோ, அந்த பாரதத்தை விடுவிக்க, இலட்சக்கணக்கான சத்புத்திரர்களும், மைந்தர்களும், ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்தார்கள், பலர் தங்கள் இன்னுயிரை வேள்வியில் ஆகுதியாக அளித்தார்கள். இப்படிப்பட்ட கர்மவீரர்களின் சீலம், தவம், உயிர்த்தியாகம் ஆகியவற்றின் காரணமாக நமக்குக் கிடைத்த சுதந்திரத்தின் முழுமையான பலனை நாம் அனுபவித்து வருகிறோம். இத்தகைய வேளையிலே, இப்படிப்பட்ட சுதந்திரத்தை நமக்களித்த, நாட்டுக்காகத் தங்கள் அனைத்தையும் இழந்தவர்கள், தங்கள் வாழ்க்கையையே இன்முகத்தோடு அளித்தவர்கள்…… இப்படிப்பட்ட ஏராளமானோர், முகமோ பெயரோ முகவரியோ எதுவுமே தெரியாத மனிதர்கள்….. இப்படிப்பட்ட தியாகிகளில் வெகுசிலரின் பெயர்களையே நாம் அறிந்திருக்கிறோம், ஆனால், எந்த இலட்சியத்தின் பொருட்டு அவர்கள் தியாகங்கள் செய்தார்கள் – அவர்களின் அந்தக் கனவுகளை நினைவிலே ஏந்தி, சுதந்திர இந்தியாவின் கனவுகளை மனதிலே தாங்கி, தன்னிறைவான, சுகமான, நிறைவான, சுதந்திர இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம் வாருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, 2022ஆம் ஆண்டிலே, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையிலே, குறைந்தபட்சம், இந்த 2-3 ஆண்டுகள், நாம் நம் வட்டாரங்களில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கத் தீர்மானம் மேற்கொள்வோமா? பாரதநாட்டில் உருவான, நம் மக்களின் கைகளால் உருவாக்கம் பெற்ற, நமது நாட்டு மக்களின் வியர்வையில் துளிர்த்த பொருட்களை நாம் வாங்க, மற்றவர்களிடம் வேண்டுகோள் விடுக்க முடியுமா? நான் அதிக நாட்களுக்கு இப்படி வேண்டுகோள் விடுக்க செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்கவில்லை, 2022ஆம் ஆண்டு வரை, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வரை மட்டுமே. இது அரசுரீதியானதாக இருக்க கூடாது, அந்தந்த இடங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வர வேண்டும், சின்னச்சின்ன அமைப்புக்களை உருவாக்குங்கள், மக்களுக்கு உத்வேகம் அளியுங்கள், புரிய வையுங்கள், தீர்மானம் செய்யுங்கள் – வாருங்கள், நாம் உள்ளூர் பொருட்களையே வாங்குவோம், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கமளிப்போம், நாட்டுமக்களின் வியர்வையில் உருவானவை மட்டுமே, என் சுதந்திர இந்தியாவின் இனிமையான கணங்கள் என்ற இந்தக் கனவுகளைத் தாங்கி நாம் பயணிப்போம்.
என் இனிமைநிறை நாட்டுமக்களே, நாட்டின் குடிமக்கள், தன்னிறைவு பெற்றவர்களாக, கௌரவத்தோடு வாழ்வது என்பது நம்மனைவருக்குமே மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயமாகும். நான் இப்போது பேசவிருக்கும் விஷயம், என் கவனத்தை ஈர்த்த முன்னெடுப்பு, அது ஜம்மு கஷ்மீரம் மற்றும் லட்டாக்கின் திறன்மேம்பாட்டுத் திட்டம். திறன்மேம்பாடு என்பது வேலைவாய்ப்போடு தொடர்புடையது. இதிலே 15 முதல் 35 வயது நிரம்பியவர்கள் இடம் பெறுகிறார்கள். இவர்கள் யாரென்றால், படிப்பை ஏதோ காரணத்துக்காக விடுத்தவர்கள், அதை நிறைவு செய்ய முடியாதவர்கள், பள்ளி அல்லது கல்லூரியில் இடைநிற்றலால் பாதிக்கப்பட்டவர்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்தத் திட்டத்தின்படி, கடந்த ஈராண்டுகளில், 18,000 இளைஞர்கள் 77 விதமான திறன்களில் பயிற்றுவிக்கப்பட்டார்கள். இவர்களில் சுமார் 5000 பேர்கள், ஏதோ ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் பலர் சுய வேலைவாய்ப்பினை நோக்கி முன்னேறி வருகிறார்கள். திறன்மேம்பாட்டுத் திட்டத்தால் தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்ட வேளையில், என் மனதில் உள்ளபடியே நெகிழ்ச்சி ஏற்பட்டது.
பர்வீன் ஃபாத்திமா என்பவர் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் அலகில் பதவி உயர்வு கிடைத்த பிறகு, மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியிருக்கிறார். ஓராண்டு முன்பு வரை, அவர் கர்கிலில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். இன்று அவரது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, தன்னம்பிக்கை உருவாகியிருக்கிறது, தனது குடும்பம் முழுவதற்கும் பொருளாதார முன்னேற்றத்தை இது தாங்கி வந்திருக்கிறது. பர்வீன் ஃபாத்திமாவைப் போலவே, திறன் மேம்பாட்டுத் திட்டமானது, லே-லட்டாக் பகுதியைச் சேர்ந்தவர்களின், பிற வட்டாரப் பெண்களின் எதிர்காலத்தையே மாற்றியமைத்திருக்கிறது, இவர்கள் அனைவரும் இப்போது தமிழ்நாட்டின் அதே மையத்தில் தான் பணியாற்றி வருகிறார்கள். இதைப் போலவே திறன்மேம்பாட்டுத் திட்டம் டோடாவைச் சேர்ந்த ஃபியாஸ் அஹ்மதுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கிறது. ஃபியாஸ், 2012ஆம் ஆண்டிலே, 12ஆவது வகுப்புத் தேர்விலே தேர்ச்சி பெற்றார்; ஆனால் உடல் நோய்வாய்ப்பட்ட காரணத்தால், அவரால் படிப்பை மேற்கொண்டு தொடர முடியவில்லை. ஃபியாஸ், ஈராண்டுகள் வரை இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், அவரது ஒரு சகோதரர், ஒரு சகோதரி ஆகியோர் இறந்து போனார்கள். ஒருவகையில் அவரது குடும்பத்தில் தொடர்ந்து பேரிடிகள் இறங்கின. அந்த நேரத்தில் தான் திறன்மேம்பாட்டின் உதவி அவர்களுக்குக் கிடைத்தது. திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் Information Technology enabled services, ITES, அதாவது தகவல் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படுத்தப்படும் சேவைகளில் பயிற்சி கிடைத்தது, அவர் இன்று பஞ்சாபில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஃபியாஸ் அஹ்மதின் பட்டப்படிப்பினை, அவர் வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்தார், அதுவும் நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. தற்போது, திறன்மேம்பாட்டின் ஒரு நிகழ்ச்சியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தனது கதையைக் கூறும் வேளையில், அவரது கண்களில் கண்ணீர் பனித்தது. இவரைப் போலவே, அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த ரகீப்-உல்-ரஹமானாலும், பொருளாதார நிலை காரணமாகத் தன் படிப்பினை மேற்கொண்டு தொடர முடியாமல் போனது. ஒரு நாள், ரகீபின் வட்டத்திலே ஒரு ஆட்சேர்ப்புப் பணி நடைபெற்றது, இதன் வாயிலாக அவருக்கு திறன்மேம்பாட்டுத் திட்டம் பற்றித் தெரிய வந்தது. ரகீப் உடனடியாக retail team leader படிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இதிலே பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு, அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திறன்மேம்பாட்டுத் திட்டத்தால் பயனடைந்த, திறமைமிகு இளைஞர்களின் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன, இவர்கள் ஜம்மு கஷ்மீரத்து மக்களுக்கிடையே மாற்றத்தின் எடுத்துக்காட்டுக்களாகத் திகழ்கிறார்கள். திறன்மேம்பாட்டுத் திட்டமானது அரசு, பயிற்சிக் கூட்டாளி, பணிக்கமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் ஜம்மு கஷ்மீரத்து மக்களுக்கிடையே ஒரு அருமையான ஒருங்கிணைப்புக்கான ஆதர்ஸமான எடுத்துக்காட்டு.
இந்தத் திட்டம் காரணமாக, ஜம்மு கஷ்மீரத்தின் இளைஞர்களின் மனங்களில் ஒரு புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, முன்னேற்றப் பாதையை இது மேலும் துலக்கிக் காட்டியிருக்கிறது.
என் இதயம்நிறை நாட்டுமக்களே, 26ஆம் தேதியன்று நாம் இந்தப் பத்தாண்டின் கடைசி சூரிய கிரஹணத்தைப் பார்த்தோம். இந்த சூரிய கிரஹணம் காரணமாகவே, MYGOVஇலே ரிபுன் மிக சுவாரசியமான ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் என்ன எழுதுகிறார் என்றால், ‘’ வணக்கம் ஐயா, என் பெயர் ரிபுன்…. நான் வடகிழக்கிலே வசிப்பவன், ஆனால் இப்போதெல்லாம் தென்னாட்டிலே பணியாற்றி வருகிறேன். நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் பகுதியில் வானம் தெளிவாகக் காணப்படுவதால் நாங்கள் மணிக்கணக்காக, வானிலே தாரகைகள் மின்னுவதைப் பார்த்தவாறு இருப்போம். இப்படி நட்சத்திரங்களைப் பார்த்தவண்ணம் இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது நான் ஒரு தொழில் வல்லுனராக இருக்கிறேன், என்னுடைய தினசரி வாடிக்கை காரணமாக, இந்த விஷயங்களில் என்னால் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை…….. இது தொடர்பாக நீங்கள் ஏதாவது கூற முடியுமா? விசேஷமாக வானவியலை எப்படி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கலாம் என்பது தொடர்பாக?
எனதருமை நாட்டுமக்களே, என்னிடம் பல ஆலோசனைகள் வருகின்றன ஆனால் இது போன்றதொரு ஆலோசனை எனக்கு வருவது இதுதான் முதல்முறை என்பதை என்னால் கூற முடியும். அதாவது அறிவியலின் பல அம்சங்கள் குறித்துப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிறப்பாக இளைய சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆனால் இது பேசப்படாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. மேலும் 26ஆம் தேதியன்று சூரிய கிரஹணம் நடந்திருக்கும் இந்த வேளையில், ஒருவேளை இந்த விஷயம் குறித்து உங்களுக்கும் ஏதோ ஒருவகை நாட்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று தான் நான் நினைக்கிறேன். நாட்டுமக்களே, குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களைப் போலவே எனக்குமே கூட, சூரிய கிரஹணமான 26ஆம் தேதியன்று மிகுந்த உற்சாகம் இருந்தது, நானும் சூரிய கிரஹணத்தைப் பார்க்க ஆவலாக இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய நாளிலே தில்லியின் வானத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன, என்னால் கிரஹணத்தை ரசிக்க முடியவில்லை என்றாலும் கூட, தொலைக்காட்சியில் கோழிக்கோட்டிலும், பாரதத்தின் மற்ற பகுதிகளிலும் தெரியும் சூரிய கிரஹணத்தின் அழகான படங்கள் காணக் கிடைத்தன. சூரியன், ஒளிரும் வளைய வடிவிலே தெரிந்தது. அன்றைய தினம் இது தொடர்பான வல்லுனர்கள் சிலரோடு பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது; அவர்கள் சொன்னார்கள், இப்படி ஏன் ஏற்படுகிறது என்றால், நிலவு, பூமியிலிருந்து மிகத் தொலைவாக இருப்பதால், இதனால் முழுமையாக சூரியனின் உருவத்தை மறைக்க முடியவில்லை. இதனால் தான் ஒரு வளையத்தின் வடிவமாகத் தெரிகிறது என்றார்கள். இந்தச் சூரிய கிரஹணத்தை, வளைசூரிய கிரஹணம் என்றும் குண்டல கிரஹணம் என்றும் அழைக்கிறார்கள். கிரஹணமானது நமக்கு வேறு ஒரு விஷயத்தையும் நினைவுபடுத்துகிறது – அதாவது நாம் பூமியில் இருந்து கொண்டே விண்வெளியில் பயணித்து வருகிறோம் என்பதை. விண்வெளியில் சூரியன், சந்திரன், பிற கோள்கள் மற்றும் விண்வெளிப் பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சந்திரனின் நிழல் காரணமாகவே கிரஹணத்தின் பல்வேறு வடிவங்களை நம்மால் காண முடிகிறது. நண்பர்களே, வானவியலில் மிகவும் பண்டைய மற்றும் பெருமையான சரித்திரம் பாரதத்துக்கு உண்டு. வானத்தில் மினுமினுக்கும் விண்மீன்களோடு நம்முடைய தொடர்பின் பழமை, நமது பண்டைய நாகரீகத்துக்கு இணையானது. உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், இந்தியாவின் பல்வேறு இடங்களிலே மிகவும் பிரும்மாண்டமான இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் சூரியக் கடியாரங்கள் உண்டு, ஜந்தர் மந்தர்கள் என்று அழைக்கப்படும் இவை பார்த்தேயாக வேண்டியவை. மேலும் இந்த சூரியக் கடியாரங்களுக்கும், வானவியலுக்கும் ஆழமான தொடர்பு உண்டு. மகத்தான ஆர்யபட்டரின் தனிப்பெரும் திறமை பற்றி அறியாதவர்கள் யார் இருப்பார்கள்!!! காலக் கிரியையிலே அவர் சூரிய கிரஹணம் தவிர, சந்திர கிரஹணம் பற்றியும் விளக்கமாக விரிவுரை எழுதியிருக்கிறார். அதுவும் எப்படி….. தத்துவரீதியாகவும், கணிதரீதியாகவும், இரு கோணங்களில் இதை அணுகியிருக்கிறார். பூமியின் நிழலின் அளவை எவ்வாறு கணிப்பது என்று கணிதரீதியாகக் கூறியிருக்கிறார். அதேபோல, கிரஹணத்தின் கால அளவு மற்றும் வீச்சு ஆகியவற்றைக் கணிப்பது தொடர்பான துல்லியமான தகவல்களையும் அளித்திருக்கிறார். பாஸ்கரர் போன்ற பல சீடர்கள் இந்த உணர்வையும், இந்த ஞானத்தையும் மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல முழுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். பின்னர், 14ஆம்-15ஆம் நூற்றாண்டுகளில், கேரளத்தில், சங்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், பேரண்டத்தில் இருக்கும் கோள்களின் நிலையைக் கணிக்க Calculus என்ற நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார். இரவில் தெரியும் வானமானது, ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாக மட்டும் இருக்கவில்லை; அது கணித நோக்கிலே சிந்திப்பவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு மகத்துவமான ஆதாரமாக விளங்கியது. சில ஆண்டுகள் முன்னால், நான் Pre Modern Kutchi Navigation Techniques and Voyages என்ற புத்தகத்தை வெளியிட்டேன். இந்தப் புத்தகம் ஒருவகையில் ‘’மாலமின் நாட்குறிப்பு’’. மாலம் என்ற ஒரு மாலுமியின் அனுபவங்களை அவர் தனது பாணியில் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார். நவீனகாலத்தில், அந்த மாலுமியான மாலமின் நாட்குறிப்பு, அதுவும் குஜராத்தி மொழி கையெழுத்துப் பிரதியின் தொகுப்பு; அதிலே கடலில் வழிகாணும் பண்டைய தொழில்நுட்பம் பற்றி வர்ணிக்கப் பட்டிருக்கிறது; மீண்டும் மீண்டும் இந்த ‘’மாலமின் நாட்குறிப்பில்’’ வானம், விண்மீன்கள், அவற்றின் வேகம் ஆகியவை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. கடலிலே பயணிக்கும் போது, எப்படி விண்மீன்கள் உதவியோடு திசையறியப்படுகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இலக்கைச் சென்றடையத் தேவையான பாதையை நட்சத்திரங்கள் காட்டுகின்றன.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, வானவியல் துறையில் பாரதம் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது, நமது முன்னெடுப்புக்கள் முன்னோடியாகவும் இருக்கின்றன. நம்மிடம், புணேயுக்கு அருகே பிரும்மாண்டமான meter wave telescope இருக்கிறது. இதுமட்டுமல்ல, கோடைக்கானல், உதகமண்டலம், குருஷிகர் மற்றும் ஹான்லே லட்டாக்கிலும் சக்திவாய்ந்த தொலைநோக்குக் கருவிகள் இருக்கின்றன. 2016ஆம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டின் அப்போதைய பிரதம மந்திரியும் நானும் நைனிதாலில் 3.6 மீட்டர் நீளமான ஒரு தொலைநோக்கியை தேவ்ஸ்தல்லில் நிறுவியிருக்கிறோம். இது ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி என்று கூறப்படுகிறது. இஸ்ரோவிடத்திலே ஆஸ்ட்ரோஸாட் என்ற பெயர் கொண்ட ஒரு விண்வெளி செயற்கைக்கோள் இருக்கிறது. சூரியன் பற்றி ஆய்வு செய்ய, இஸ்ரோ ‘’ஆதித்யா’’ என்ற பெயர் கொண்ட மற்றுமொரு செயற்கைக்கோளை ஏவ இருக்கிறது. வானவியல் தொடர்பாக நமது பண்டைய ஞானமாகட்டும், நவீனகால சாதனைகளாகட்டும், நாம் இவற்றை நன்கு புரிந்து கொள்வதும் அவசியம், இவை குறித்து பெருமிதம் அடைவதும் முக்கியம். இன்று நமது இளைய விஞ்ஞானிகளில், நம்முடைய விஞ்ஞான சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவும் செய்கிறது, வானவியலின் எதிர்காலம் தொடர்பான ஒரு உறுதியான பேரார்வமும் இருக்கிறது.
நம்முடைய நாட்டிலே கோளரங்கங்கள், இரவுநேரத்து வானத்தைப் புரிந்து கொள்ளவும், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பணியையும் செய்து வருகின்றன. பலர் அமெச்சூர் தொலைநோக்கிகளை வீட்டின் மாடிகளிலும், மாடி முகப்புகளிலும் பொருத்துகிறார்கள். Star Gazing என்ற நட்சத்திரங்களைக் கூர்ந்து நோக்குதல் காரணமாக, ஊரகப்பகுதி முகாம்கள், ஊரகப்பகுதிச் சுற்றுலா ஆகியவற்றுக்கும் ஊக்கம் கிடைக்கிறது. பல பள்ளிகளும், கல்லூரிகளும் வானவியல் க்ளப்புகளை உருவாக்கி நடத்தி வருகிறார்கள், இந்த முயற்சிகளும் முன்னேற்றம் காண வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நமது நாடாளுமன்றத்தை, மக்களாட்சியின் கோயிலாகவே நாம் கருதுகிறோம். ஒரு விஷயத்தை நான் இன்று மிகுந்த பெருமிதத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதிகள், கடந்த 60 ஆண்டுகளின் அனைத்துப் பதிவுகளையும் தகர்த்திருக்கிறார்கள். கடந்த ஆறு மாதங்களில், 17ஆவது மக்களவையின் இரு அவைகளுமே, மிகவும் ஆக்கவளம் கொண்டவையாக அமைந்திருந்தன. மக்களவை 114 சதவீதம் பணியாற்றியது, மாநிலங்களவை 94 சதவீதம் பணியாற்றியது. இதற்கு முன்பாக, வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின் போது, சுமார் 135 சதவீதம் பணியாற்றியது. இரவிலே நெடுநேரம் வரை நாடாளுமன்றம் செயல்பட்டது. இந்த விஷயத்தை நான் ஏன் கூறுகிறேன் என்றால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். நீங்கள் அனுப்பி வைத்த மக்கள் பிரதிநிதிகள், 60 ஆண்டுக்கால பதிவுகளை தகர்த்திருக்கிறார்கள். இத்தனை பணியாற்றுவது என்பது உள்ளபடியே, பாரதத்தின் ஜனநாயகத்தின் பலத்தையும், மக்களாட்சியின் மேல் கொண்ட நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது. இந்த இரு அவைகளையும் நெறிப்படுத்தியவர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து உறுப்பினர்கள், இவர்கள் அனைவரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்காக பலப்பல பாராட்டுக்களை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் வேகம், கிரஹணத்தை மட்டுமே தீர்மானிப்பதில்லை; பல விஷயங்களும் இவற்றோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. சூரியனின் வேகத்தின் அடிப்படையில், ஜனவரியின் இடைப்பட்ட பகுதியில் பாரதம் முழுவதிலும் பலவகையான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பஞ்சாபிலிருந்து தொடங்கி, தமிழ்நாடு வரையிலும், குஜராத் தொடங்கி, ஆஸாம் வரையிலும், மக்கள், பல பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வார்கள். ஜனவரியில் விமர்சையாக மகர சங்கராந்தியும், உத்தராயணமும் கொண்டாடப்படும். இவை ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதே வேளையில், பஞ்சாபில் லோஹ்டீ, தமிழ்நாட்டில் பொங்கல், ஆஸாமில் மாக-பிஹூ ஆகியவையும் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகைகள், விவசாயிகளின் நிறைவளம், அறுவடை ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவை. இந்தப் பண்டிகைகள் பாரதத்தின் ஒற்றுமை மற்றும் பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை பற்றி நமக்கு நினைவுபடுத்துகின்றன. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளன்று, மகத்தான திருவள்ளுவரின் தினத்தைக் கொண்டாடும் பேறு நம் நாட்டுமக்களுக்குக் கிடைக்கிறது. இந்த நாள் மகத்தான எழுத்தாளரும், சிந்தனையாளருமான புனிதர் திருவள்ளுவருக்கும், அவரது வாழ்க்கைக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.
எனதருமை நாட்டுமக்களே, 2019ஆம் ஆண்டிற்கான கடைசி மனதின் குரல் இது. 2020ஆம் ஆண்டிலே நாம் மீண்டும் சந்திப்போம். புதிய ஆண்டு, புதிய பத்தாண்டுகள், புதிய தீர்மானங்கள், புதிய ஆற்றல், புதிய உற்சாகம், புதுத் தெம்பு – வாருங்கள் பயணிப்போம்!! உறுதிப்பாட்டின் நிறைவுக்காக திறன்களை பெருக்கிக் கொள்வோம். தொலைதூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது, ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க வேண்டியிருக்கிறது, தேசத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. 130 கோடி நாட்டுமக்களின் முயற்சிகளால், அவர்களின் திறமைகளால், அவர்களின் உறுதிப்பாட்டால், எல்லையில்லா சிரத்தை துணை கொண்டு வாருங்கள், நாம் பயணிப்போம். பலப்பல நன்றிகள். பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இளைய பாரதம், இளைஞர்கள், அவர்களின் துடிப்பு, அவர்களின் தேசபக்தி, சேவையில் தங்களை அர்ப்பணித்திருக்கும் இவர்களிடமிருந்து நாம் இன்றைய மனதின் குரலை தொடங்கலாம். நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ஒவ்வொரு ஆண்டும் NCC தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். பொதுவாக நமது இளைஞர்களுக்கு நண்பர்கள்-தினம் கண்டிப்பாக நினைவில் இருக்கும். அதுபோலவே பலருக்கு NCC தினம் பற்றியும் அதிகம் நினைவிருக்கும். ஆகையால் நாம் இன்று தேசிய மாணவர் படை பற்றிப் பேசுவோம் வாருங்கள். இதன் வாயிலாக என்னுடைய சில நினைவுகளையும் என்னால் பசுமைப்படுத்திக் கொள்ள முடியும். தேசிய மாணவர் படையின் அனைத்து முன்னாள் இன்னாள் கேடெட்டுக்களுக்கு முதற்கண் என் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நானும் உங்களைப் போலவே ஒரு கேடெட்டாக இருந்திருக்கிறேன், இன்றும் கூட என்னை நான் ஒரு கேடெட்டாகவே கருதி வருகிறேன். நம்மனைவருக்குமே நன்கு தெரியும், NCC என்றால் National Cadet Corps, அதாவது தேசிய மாணவர் படை என்று. உலகின் மிகப்பெரிய சீருடை அணியும் இளைஞர் அமைப்புக்களில் பாரதநாட்டு தேசிய மாணவர் படையும் ஒன்று. இது ஒரு முப்படை அமைப்பு, இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியன அடங்கும். தலைமைப்பண்புகள், தேசபக்தி, சுயநலமற்ற சேவை, ஒழுங்குமுறை, கடும் உழைப்பு ஆகிய அனைத்தையும் உங்கள் பண்புகளாக ஆக்குதல், உங்கள் பழக்கங்களை சீரமைத்துக் கொள்ளும் ஒரு சுவாரசியமான பயணம், இது தான் NCC. இந்தப் பயணம் பற்றி மேலும் சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள இன்று சில தொலைபேசி அழைப்புகள் வாயிலாக, தங்களுக்கென ஒரு சிறப்பிடம் அமைத்துக் கொண்ட சில இளைஞர்களுடன் உரையாற்ற இருக்கிறோம். வாருங்கள் அவர்களோடு பேசுவோம்.
பிரதமர் : நண்பர்களே, நீங்கள் எல்லோரும் எப்படி
இருக்கிறீர்கள்?
தரன்னும் கான் : ஜெய் ஹிந்த் பிரதமர் அவர்களே.
பிரதமர் : ஜெய் ஹிந்த்
தரன்னும் கான் : சார், நான் தரன்னும் கான், ஜூனியர் அண்டர்
ஆஃபீசராக இருக்கிறேன்.
பிரதமர் : தரன்னும், நீங்கள் எந்தப் பகுதியைச்
சேர்ந்தவர்?
தரன்னும் கான் : நான் தில்லியில் வசிக்கிறேன் சார்.
பிரதமர் : நல்லது. NCCயில் எத்தனை ஆண்டுகளாக
இருக்கிறீர்கள், என்னமாதிரியான
அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?
தரன்னும் கான் : சார், நான் NCCயில் 2017ஆம் ஆண்டில்
சேர்ந்தேன். என்னுடைய இந்த மூன்றாண்டுகள் என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த காலம்.
பிரதமர் : பலே, கேட்கும் போதே அருமையாக
இருக்கிறது.
தரன்னும் கான் : சார், நான் ஒரு விஷயத்தை உங்களிடம்
தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு ஏற்பட்ட மிகச் சிறந்த அனுபவம் என்றால், அது ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம்களில் என்று தான் சொல்ல வேண்டும். எங்களின் இந்த முகாம்கள் ஆகஸ்ட் மாதம் நடந்தன, அவற்றில் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் வந்திருந்தார்கள். அவர்களோடு நாங்கள் பத்து நாட்கள் கழித்தோம். நாங்கள் அவர்களின் வாழ்க்கைமுறையைக் கற்றுக் கொண்டோம். அவர்களுடைய மொழி, அவர்கள் பாரம்பரியம், அவர்களின் கலாச்சாரம் என பல விஷயங்கள் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தன. எடுத்துக்காட்டாக, via zhomi என்றால் ஹெலோ, எப்படி இருக்கிறீர்கள் என்று பொருள். அதே போல எங்களுடைய கலாச்சார இரவு நிகழ்ச்சி…. இதில் அவர்கள் தங்களுடைய நடனத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள், தங்கள் நடனத்தை அவர்கள் தெஹ்ரா என்று அழைக்கிறார்கள். அதே போல எப்படி மேகாலாவை அணிய வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதை அணிந்து கொண்டு நாங்கள் அனைவருமே மிக அழகாக இருந்தோம், அது தில்லிக்காரர்கள் ஆகட்டும், நாகாலாந்தைச் சேர்ந்த நண்பர்கள் ஆகட்டும். நாங்கள் அவர்களை தில்லியைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றோம். அவர்களுக்கு தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் இண்டியா கேட்டைக் காட்டினோம். தில்லியின் சாட் உணவை உண்ணச் செய்தோம், பேல் பூரி அளித்தோம், ஆனால் அவர்களுக்கு அது சற்று காரசாரமாக இருந்தது, ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் சூப்பையே உட்கொள்வதை விரும்புவார்களாம், சற்று வேகவைத்த காய்கறிகளை உண்கிறார்கள் ஆகையால் அவர்களுக்கு இந்த உணவு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை; ஆனால் இதைத் தவிர நாங்கள் அவர்களுடன் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம், நிறைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
பிரதமர் : அவர்களுடன் நீங்கள் தொடர்பில்
இருக்கிறீர்களா?
தரன்னும் கான் : ஆமாம் சார், இப்போது வரை அவர்களுடன்
நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
பிரதமர் : சரி, நல்ல விஷயம் செய்தீர்கள்.
தரன்னும் கான் : ஆமாம் சார்.
பிரதமர் : சரி உங்களோடு வேறு யாரெல்லாம்
இருக்கிறார்கள்?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
ஸ்ரீ ஹரி. ஜீ.வீ : நான் சீனியர் அண்டர் ஆஃபீசர் ஸ்ரீ ஹரி ஜீ.வீ.
பேசுகிறேன் சார். நான் கர்நாடகத்தின்
பெங்களூரூவில் வசிக்கிறேன்.
பிரதமர் : நீங்கள் எங்கே படிக்கிறீர்கள்?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ. : பெங்களூரூவின் க்ரிஸ்து ஜெயந்தி
கல்லூரியில் படிக்கிறேன் சார்.
பிரதமர் : அப்படியா, பெங்களூரூவைச் சேர்ந்தவரா
நீங்கள்?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஆமாம் சார்.
பிரதமர் : சரி சொல்லுங்கள்.
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : சார், நான் இளைஞர்கள் பரிமாற்றத்
திட்டப்படி நேற்றுத் தான் சிங்கப்பூர் சென்று திரும்பினேன்.
பிரதமர் : பலே சபாஷ்!!
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஆமாம் சார்.
பிரதமர் : சிங்கப்பூரில் உங்கள் அனுபவம் எப்படி
இருந்தது?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : அங்கே ஆறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்
வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.
பிரதமர் : நீங்கள் எத்தனை பேர்கள் இருந்தீர்கள் ஹரி?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : 20 பேர்கள் சார். நாங்கள் பத்துப் பேர்
ஆண்கள், பத்துப் பேர்கள் பெண்கள் சார்.
பிரதமர் : சரி, பாரதநாட்டைச் சேர்ந்த இவர்கள்
அனைவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களா?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஆமாம் சார்.
பிரதமர் : சரி, உங்கள் நண்பர்கள் அனைவரும் உங்கள்
அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சரி வேறு யாரெல்லாம் உங்களுடன் இருக்கிறார்கள்?
வினோலே கிஸோ: ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
வினோலே : என் பெயர் வினோலே கிஸோ, நான்
சீனியர் அண்டர் ஆஃபீசராக இருக்கிறேன். நான் வடகிழக்குப் பகுதியின் நாகாலாந்தைச் சேர்ந்தவள் சார்.
பிரதமர் : சரி வினோலே, உங்கள் அனுபவம் எப்படி?
வினோலே : சார், நான் தூய ஜோஸஃப் கல்லூரியில்
வரலாற்றுப் பிரிவில் இளங்கலை ஹானர்ஸ் படிப்பு படிக்கிறேன். நான் 2017ஆம் ஆண்டில் NCCயில் சேர்ந்தேன், என் வாழ்க்கையில் நான் மேற்கொண்ட மிகப்பெரிய, அருமையான முடிவு இதுதான் சார்.
பிரதமர் : NCC வாயிலாக இந்தியாவில் எங்கெல்லாம்
பயணிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது?
வினோலே : சார், நான் NCCயில் இணைந்து பல
விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது, பல வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இவற்றிலிருந்து நான் உங்களுடன் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாமில் பங்கெடுத்துக் கொண்டேன், இது கோஹிமாவில் Sazolie கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் 400 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
பிரதமர் : அப்படியென்றால் நாகாலாந்தைச் சேர்ந்த
உங்கள் நண்பர்கள் அனைவருக்குமே நீங்கள் இந்தியாவில் எங்கே சென்றீர்கள், என்னவெல்லாம் பார்த்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள், உங்கள் அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறீர்கள் இல்லையா?
வினோலே : கண்டிப்பாக சார்.
பிரதமர் : வேறு யாரெல்லாம் உங்களுடன்
இருக்கிறார்கள்?
அகில் : ஜெய் ஹிந்த் சார், என்னுடைய பெயர் அகில்,
நான் ஜூனியர் அண்டர் ஆஃபீஸராக இருக்கிறேன்.
பிரதமர் : சரி சொல்லுங்கள் அகில்.
அகில் : நான் ஹரியாணாவின் ரோஹ்தக்கில்
வசிக்கிறேன் சார்.
பிரதமர் : சரி…..
அகில் : நான் தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங்
கல்லூரியில் இயற்பியல் பிரிவில் ஹானர்ஸ் படிப்பு படித்து வருகிறேன்.
பிரதமர் : சரி… சரி…
அகில் : சார், NCCயில் எனக்கு மிகவும் பிடித்ததே,
அதில் இருக்கும் ஒழுங்குமுறை தான்.
பிரதமர் : சபாஷ்.
அகில் : இது என்னை மேலும் பொறுப்புணர்வுள்ள
குடிமகனாக ஆக்குகிறது சார். NCC மாணவன் என்ற முறையில் உடற்பயிற்சி, சீருடை ஆகியவற்றை நான் மிகவும் விரும்புகிறேன்.
பிரதமர் : எத்தனை முகாம்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு
உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, எங்கெல்லாம் நீங்கள் சென்றிருக்கிறீர்கள்?
அகில் : சார், நான் 3 முகாம்களில் கலந்து
கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் தேஹ்ராதூனில் இருக்கும் இந்திய இராணுவப் பயிற்சிக் கழகத்தில் attachment முகாமில் பங்கெடுத்துக் கொண்டேன்.
பிரதமர் : எத்தனை நாள் முகாம் அது?
அகில் : சார், இது 13 நாட்கள் முகாம்.
பிரதமர் : நல்லது.
அகில் : சார், நான் இந்திய இராணுவத்தில்
அதிகாரியாக விரும்புகிறேன், நான் இராணுவத்தை நெருக்கமாகப் பார்த்த பின்னர், நானும் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக வேண்டும் என்ற மனவுறுதி மேலும் அதிகமாகி இருக்கிறது சார்.
பிரதமர் : சபாஷ்.
அகில் : மேலும் சார், நான் குடியரசுத் திருநாள்
அணிவகுப்பிலும் பங்கு கொண்டேன், இது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த பெருமிதம் அளிக்கும் விஷயம்.
பிரதமர் : பலே.
அகில் : என்னை விட என் அம்மாவுக்குத் தான் அதிக
சந்தோஷம் சார். காலையில் 2 மணிக்கு எழுந்து ராஜ்பத்தில் நான் பயிற்சி மேற்கொள்ள செல்லும் போது எங்களிடம் இருக்கும் உற்சாகத்தை என்னால் சொற்களில் விளக்க முடியாது. மேலும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஊக்கமளிப்பார்கள், ராஜ்பத்தில் அணிவகுப்பில் கலந்து கொண்ட வேளையில் எங்கள் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன சார்.
பிரதமர் : நல்லது உங்கள் நால்வரோடும் உரையாற்றக்
கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது, அதுவும் இந்த NCC நாளன்று. எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம். ஏனென்றால், என் சிறுவயதில் என் கிராமத்துப் பள்ளியில் NCC மாணவனாக நானும் இருந்திருக்கிறேன், இதன் ஒழுங்குமுறை, இதன் சீருடை, இதன் காரணமாக அதிகமாகும் தன்னம்பிக்கை ஆகிய இவை அனைத்தையும் அனுபவித்து உணரக்கூடிய நல்ல வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது.
வினோலே : பிரதமர் அவர்களே உங்களிடம் ஒரு
கேள்வி.
பிரதமர் : ஹாங்… கூறுங்கள்.
தரன்னும் : நீங்களும் NCCயின் அங்கத்தினராக
இருந்திருக்கிறீர்கள்.
பிரதம : யாரது? வினோலே தானே பேசுவது?
வினோலே : ஆமாம் சார், ஆமாம் சார்.
பிரதமர் : சரி வினோலே, சொல்லுங்கள்….
வினோலே : உங்களுக்கு எப்போதாவது தண்டனை
கிடைத்திருக்கிறதா?
பிரதமர் : (சிரித்துக் கொண்டே) அப்படியென்றால்
உங்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கிறது, இல்லையா?
வினோலே : ஆமாம் சார்.
பிரதமர் : இல்லை, எனக்கு எப்போதும் அப்படி
ஏற்பட்டதில்லை ஏனென்றால் நான் ஒருவகையில் ஒழுங்குமுறையை என்றைக்குமே ஏற்று நடப்பவன்; ஆனால் ஒருமுறை கண்டிப்பாக தவறான புரிதல் ஏற்பட்டதுண்டு. நாங்கள் முகாமில் இருந்த போது, நான் ஒரு மரத்தின் மீது ஏறிவிட்டேன். நான் ஏதோ விதிமுறையை மீறிவிட்டதாகத் தான் அனைவருக்கு பட்டது; ஆனால் ஒரு பறவை ஒரு காற்றாடியின் நூலில் சிக்கிக் கொண்டது என்று பின்னர் தான் அனைவர் கவனத்துக்கும் வந்தது. அதைக் காப்பாற்றவே நான் மரத்தின் மீது ஏறினேன். முதலில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோன்றியது, ஆனால் பின்னர் எனக்குப் பாராட்டு மழை குவிந்தது. இந்த வகையில் என்னுடைய அனுபவம் வித்தியாசமாக அமைந்தது.
தரன்னும் கான் : ஆமாம் சார், இது எங்களுக்கு மிகவும்
பிடித்திருக்கிறது.
பிரதமர் : தேங்க்யூ.
தரன்னும் கான் : நான் தரன்னும் பேசுகிறேன்.
பிரதமர் : ஆ தரன்னும், சொல்லுங்கள்.
தரன்னும் கான் : நீங்கள் அனுமதி அளித்தால் நான் உங்களிடம்
ஒரு வினா எழுப்ப விரும்புகிறேன்.
பிரதமர் : ஆஹா, அவசியம் கேளுங்கள்.
தரன்னும் கான் : சார், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மூன்று
ஆண்டுகளில் 15 இடங்களுக்காவது சென்று பார்க்க வேண்டும் என்று நீங்கள் செய்தி விடுத்தீர்கள். நாங்கள் எங்கே செல்லலாம் என்று உங்களால் சொல்ல முடியுமா? எந்த இடத்துக்குச் சென்றால் உங்களுக்கு பிடித்திருக்கிறது?
பிரதமர் : சொல்லப் போனால் எனக்கு எப்போதுமே
இமயமலை மிகவும் பிடிக்கும்.
தரன்னும் கான் : சரி…
பிரதமர் : ஆனால் மீண்டும் நான் பாரதநாட்டு மக்களிடம்
கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் இயற்கையை நேசிப்பவர் என்றால்….
தரன்னும் கான் : சரி…
பிரதமர் : அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் என ஒரு
வித்தியாசமான சூழலைக் கண்டுகளிக்க விரும்பினால் நீங்கள் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டிய இடம் என்றால் அது வடகிழக்குப் பகுதி தான்.
தரன்னும் கான் : சரி சார்.
பிரதமர் : இதன் காரணமாக வடகிழக்குப் பகுதியில்
சுற்றுலா வளர்ச்சியடையும், பொருளாதாரத்துக்குப் பெரும் ஆதாயம் ஏற்படும், மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கனவுக்கும் அங்கே பெரிய அளவில் பலம் சேரும் என்று நான் என்றைக்கும் கூறி வந்திருக்கிறேன்.
தரன்னும் கான் : சரி சார்.
பிரதமர் : ஆனால் இந்தியாவின் அனைத்து இடங்களுமே
மிகவும் பார்க்கத் தகுந்தவை தான், ஆய்வு செய்யப்படக்கூடியவை தான், ஒருவகையில் இவை உள்வாங்கிக் கொள்ளத்தக்கவை.
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : பிரதமர் அவர்களே, நான் ஸ்ரீ ஹரி பேசுகிறேன்.
பிரதமர் : சொல்லுங்கள் ஹரி….
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : அரசியல்வாதியாகவில்லை என்றால்
வாழ்க்கையில் நீங்கள் என்னவாகி இருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பிரதமர் : இது மிகவும் கடினமான கேள்வி தான்
ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் பல கட்டங்கள் வருகின்றன. ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஒரு சமயம் தோன்றும், வேறு சமயத்தில் வேறு ஒன்றைச் செய்ய வேண்டும் என்று மனம் விரும்பும்; என்றைக்குமே அரசியலில் ஈடுபடுவதை நான் விரும்பியவன் இல்லை, ஈடுபடுவேன் என்று நினைத்துப் பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று அடைந்து விட்டேன் எனும் போது, உளப்பூர்வமாக நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது. ஆகையால் இங்கே இல்லை என்றால் எங்கே இருந்திருப்பேன் என்று நான் யோசிக்கவே கூடாது. நான் எங்கே இருந்தாலும் என் முழுமனதோடும் ஆன்மாவோடும் வாழ விரும்புகிறேன், ஈடுபட விரும்புகிறேன், முழு ஆற்றலோடு நாட்டுப்பணியில் ஈடுபட விரும்புகிறேன். இரவா, பகலா என்று பார்ப்பதில்லை, ஒரே நோக்கம்…. என்னை நான் முழுமையாக அர்ப்பணித்து விட்டேன்.
அகில் : பிரதமர் அவர்களே…
பிரதம : சொல்லுங்கள்.
அகில் : நீங்கள் நாள் முழுவதும் இத்தனை
சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறோம்; அப்படி இருக்கும் போது டிவி பார்க்கவோ, திரைப்படம் பார்க்கவோ, புத்தகம் படிக்கவோ எங்கிருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
பிரதமர் : பொதுவாகவே எனக்கு புத்தகம் படிப்பதில்
ஈடுபாடு உண்டு. திரைப்படம் பார்ப்பதில் எனக்கு என்றுமே ஆர்வம் இருந்தது கிடையாது, அதே போல டிவி பார்ப்பதில் அதிக நாட்டம் கிடையாது. மிகவும் குறைவு தான். எப்போதாவது முன்பெல்லாம் டிஸ்கவரி சேனலைப் பார்ப்பதுண்டு, இது என் அறிவை வளர்த்துக் கொள்ள. புத்தகங்களைப் படித்து வந்தேன், ஆனால் இப்போதெல்லாம் படிக்கவே முடிவதில்லை; மேலும் கூகுள் காரணமாகவும் பழக்கங்கள் கெட்டுக் கொண்டு வருகின்றன. ஏனென்றால் ஏதோ ஒரு விஷயத்துக்கான குறிப்பு தேவைப்பட்டது என்றால், உடனடியாக குறுக்குவழியைத் தேடுகிறோம். இப்படி சில நல்ல பழக்கங்கள் அனைவருக்குமே அற்றுப் போய் விட்டன, எனக்கும் தான். சரி நண்பர்களே, உங்கள் அனைவரோடும் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்துவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உங்கள் வாயிலாக NCCயின் அனைத்து மாணவர்களுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள் நண்பர்களே, தேங்க்யூ.
அனைவரும் : ரொம்ப ரொம்ப நன்றிகள் சார், தேங்க்யூ.
பிரதமர் : தேங்க்யூ, தேங்க்யூ.
அனைவரும் : ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
அனைவரும் : ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்.
எனதருமை நாட்டுமக்களே, டிஸம்பர் மாதம் 7ஆம் தேதியன்று முப்படையினர் கொடிநாள் என்பதை நாம் என்றுமே மறந்துவிடக் கூடாது. இந்த நாள் தான் நமது வீரம்நிறைந்த இராணுவத்தினருக்கும், அவர்களின் பராக்கிரமத்துக்கும், அவர்களின் தியாகத்துக்கும் நாம் நன்றி செலுத்தி நினைவுகூரும் நாள், நமது பங்களிப்பை அளிக்கும் நாள். வெறும் மரியாதை செலுத்துவதோடு விஷயம் முடிந்து விடுவதில்லை. இதில் நமது பங்களிப்பை அளிக்க டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று அனைத்துக் குடிமக்களும் மனமுவந்து முன்வர வேண்டும். ஒவ்வொருவரிடமும் அன்றைய தினத்தன்று முப்படையினரின் கொடி இருக்க வேண்டும், அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும். வாருங்கள், இந்த வேளையில் நாம் நமது முப்படையினரின் அளப்பரிய சாகஸம், வீரம், அர்ப்பணிப்பு உணர்வு ஆகிவற்றுக்கு நமது நன்றியறிதலை வெளிப்படுத்துவோம், நமது வீரமான இராணுவத்தினரை நினைவில் கொள்வோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது Fit India இயக்கம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் ஒரு பாராட்டுக்குரிய முயல்வை மேற்கொண்டிருக்கிறது. அதாவது Fit India வாரம். பள்ளிகள், Fit India வாரத்தை டிசம்பர் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடலாம். இதில் உடலுறுதி தொடங்கி பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வினா விடை, கட்டுரை, சித்திரம், பாரம்பரியமான வட்டார விளையாட்டுக்கள், யோகாஸனம், நடனம், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் போட்டிகள் உண்டு. Fit India வாரத்தில் மாணவர்களுடன் அவர்களின் ஆசிரியர்களும், பெற்றோரும் கலந்து கொள்ளலாம். ஆனால் Fit India என்றால், அறிவுபூர்வமான முயல்வு, காகிதத்தோடு அடங்கிவிடும் செயல்பாடுகள் அல்லது கணிப்பொறி வாயிலான செயல்கள், அல்லது மொபைலில் உடலுறுதி தொடர்பான செயலிகளைப் பார்ப்பது என்பது மட்டுமல்ல. கண்டிப்பாக கிடையாது. வியர்வை சிந்த வேண்டும். உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். பெரும்பாலும் செயல்பாடுகளை ஆதாரமாகவே கொண்ட பழக்கம் ஏற்பட வேண்டும். நான் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிக்கல்வி வாரியங்களிடமும், பள்ளிகளிடமும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு பள்ளியும், டிசம்பர் மாதத்தில் Fit India வாரத்தைக் கொண்டாட வேண்டும். இதனால் உடலுறுதிப் பழக்கம் நம்மனைவரின் வாடிக்கையாகி விடும். Fit India இயக்கத்தில் உடலுறுதி தொடர்பாக பள்ளிகளின் தரவரிசைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தரவரிசையைப் பெறும் அனைத்துப் பள்ளிகளாலும் Fit India அடையாளச் சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த முடியும். Fit India வலைவாயிலுக்குள் சென்று, பள்ளிகள் தாங்களே தங்களை Fit என்று அறிவித்துக் கொள்ள முடியும். Fit India மூன்று நட்சத்திரம் மற்றும் Fit India 5 நட்சத்திர மதிப்பீடுகள் அளிக்கப்படும். அனைத்துப் பள்ளிகளும், இந்த Fit India மதிப்பீடுகளில் பங்கெடுக்க வேண்டும், Fit India என்பது நமது இயல்பாகவே மாற வேண்டும் என்று நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மக்கள் இயக்கமாக பரிமளிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது தேசம் மிகவும் விசாலமானது. ஏகப்பட்ட பன்முகத்தன்மைகள் நிறைந்தது. இது எத்தனை பழமையானது என்றால், இதன் பல விஷயங்கள் நம் கவனத்துக்கே கூட வருவதில்லை, இப்படி இருப்பது இயல்பாக நடப்பது தான். அந்த வகையில் நான் உங்களோடு ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில நாட்கள் முன்பாக, MyGovஇல் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்தில் என் கவனம் சென்றது. இந்தக் கருத்தை நவ்கான்வில் ரமேஷ் ஷர்மா அவர்கள் பதிவிட்டிருந்தார். ”ப்ரும்மபுத்ரா நதியில் ஒரு கொண்டாட்டம் நடைபெறுகிறது, இதன் பெயர் ப்ரும்மபுத்ர புஷ்கரம். நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரை இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது, இந்த ப்ரும்மபுத்திரப் புஷ்கரத்தில் இடம்பெற நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் வந்தார்கள்” என்று எழுதியிருக்கிறார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் பாருங்கள்!! இத்தனை மகத்துவம் வாய்ந்த கொண்டாட்டத்துக்கு, நமது முன்னோர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பொறுங்கள், இதன் முழுப் பின்னணியையும் நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்கள் ஆச்சரியம் கரைபுரண்டோடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த அளவுக்கு இது பரந்துபட்ட வகையிலே தெரிந்திருக்க வேண்டுமோ, எந்த அளவுக்கு இது பற்றிய தகவல்கள் நாட்டின் அனைத்து மூலைகளிலும் பரவியிருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இல்லை. இந்த மொத்த ஏற்பாடுமே நமக்கும், நாடு அனைத்துக்கும் அளிக்கும் செய்தி என்னவென்றால், நாமனைவரும் ஒன்று தான். இது அத்தகைய ஒற்றுமை உணர்வை, சக்தியை அளிக்கவல்லது.
நான் ரமேஷ் அவர்களுக்கு முதற்கண் என் பலப்பல நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்களுக்கிடையே இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்கள். இத்தனை மகத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு பற்றிப் பரவலான வகையில் எந்த விவாதமும், பரிமாற்றமும் நடக்கவில்லை, பிரச்சாரம் இல்லை என்று உங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நாட்டுமக்கள் பெரும்பாலானோருக்கு இதுபற்றித் தெரியாது. ஆம், ஒருவேளை யாராவது இதை சர்வதேச நதிக் கொண்டாட்டம் என்று அழைத்திருந்தாலோ, பெரிய பெரிய பகட்டான சொற்களைப் பயன்படுத்தி இருந்தாலோ, ஒருவேளை நம் நாட்டில் சிலர் இதைப் பற்றிக் கண்டிப்பாக விவாதங்களில் ஈடுபட்டிருப்பார்கள், பிரச்சாரம் செய்திருக்கலாம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, புஷ்கரம், புஷ்கராலு, புஷ்கர: இந்தச் சொற்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இது என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? இவை நாட்டின் 12 நதிகளில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களின் பல்வேறு பெயர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நதி இடம்பெறும்; அதாவது அந்த நதியின் முறை மீண்டும் 12 ஆண்டுகள் கழித்துத் தான் வரும். இந்த உற்சவம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் 12 நதிகளில் நடக்கிறது, ஒன்றன்பின் ஒன்றாக நடக்கிறது, இப்படி 12 நாட்கள் வரை நடக்கிறது, கும்பமேளாவைப் போலவே இந்தக் கொண்டாட்டமும் தேச ஒற்றுமைக்கு உரம் சேர்க்கிறது, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துக்கு ஒளிகூட்டுகிறது. புஷ்கரம் எப்படிப்பட்ட கொண்டாட்டம் என்றால், இதில் நதியின் பெருமை, அதன் கௌரவம், வாழ்க்கையில் நதியின் மகத்துவம் ஆகியன இயல்பான வகையிலே வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
நம்முடைய முன்னோர்கள் இயற்கை, சுற்றுச்சூழல், நீர், நிலம், காடுகள் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துப் போற்றி வந்தார்கள். அவர்கள் நதிகளின் மகத்துவத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருந்தார்கள், நதிகளின்பால் ஆக்கப்பூர்வமான உணர்வை சமூகத்தால் எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும், இது ஒரு சம்பிரதாயமாக எப்படி ஆகும், நதியுடன் கலாச்சாரப் பெருக்கு என, நதியுடன் சமூகத்தை இணைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். மேலும் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், சமூகங்கள் நதிகளுடனும் இணைந்தன, ஒன்றோடு ஒன்றும் இணைந்தன. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் தாமிரபரணியில் புஷ்கரம் நடைபெற்றது. இந்த ஆண்டு இதற்கு ப்ரும்மபுத்ரா நதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அடுத்துவரும் ஆண்டில் ஆந்திரத்தில் இருக்கும் துங்கபத்ரை நதியில், தெலங்கானாவிலும், கர்நாடகத்திலும் ஏற்பாடு செய்யப்படும். ஒருவகையில் நீங்கள் இந்த 12 இடங்களின் யாத்திரையை ஒரு சுற்றுலாச் சுற்றாக ஏற்பாடு செய்யலாம். இங்கே ஆஸாம் மக்களின் விருந்தோம்பல் குறித்து நான் என் பாராட்டுதல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இவர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் வந்த தீர்த்த யாத்ரீகர்களுக்கு மிக அருமையான மரியாதை அளித்தார்கள். ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் தூய்மை பற்றி முழுக்கவனத்தை செலுத்தி இருந்தார்கள். நெகிழிப் பொருட்கள் இல்லாத இடங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே உயிரி கழிப்பறைகளுக்கான அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நதிகள் தொடர்பான இந்த வகையான உணர்வைத் தட்டி எழுப்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது கொண்டாட்டங்கள், வருங்கால சந்ததிகளையும் இணைக்கும். இயற்கை, சுற்றுச்சூழல், நீர் என அனைத்து விஷயங்களையும் நாம் சுற்றுலா மையங்களாக மாற்றுவோம், நம் வாழ்க்கையின் அங்கமாக ஆக்குவோம்.
என் பாசம்மிகு நாட்டுமக்களே, நமோ செயலியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண்ணான ஷ்வேதா என்ன எழுதியிருக்கிறார், பார்க்கலாமா? “சார், நான் 9ஆம் வகுப்பு படிக்கிறேன், எனது 10ஆம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இருந்தாலும் நான் exam warriors உட்பட, மாணவர்களுக்கான உங்கள் உரைகளைக் கேட்டு வருகிறேன். நான் ஏன் உங்களுக்கு இப்போது எழுதியிருக்கிறேன் என்றால், தேர்வு தொடர்பான அடுத்த விவாதம், உரையாடல் எப்போது இருக்கும் என்று இதுவரை நீங்கள் தெரிவிக்கவில்லை. தயவு செய்து தாங்கள் இதை விரைவாகவே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை முடிந்தால், ஜனவரியிலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”, என்று எழுதியிருக்கிறார். நண்பர்களே, மனதின் குரல் தொடர்பாக எனக்கு இந்த விஷயம் தான் மிகவும் நெகிழச் செய்கிறது. என்னுடைய இளைய நண்பர்கள், எத்தனை உரிமையோடு, நேசத்தோடு கேள்வி கேட்கிறார்கள், ஆணையிடுகிறார்கள், ஆலோசனைகள் வழங்குகிறார்கள் பாருங்கள்!! இதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷம் மேலிடுகிறது. ஷ்வேதா அவர்களே, நீங்கள் சரியான சமயத்தில் இந்த விஷயத்தை எழுப்பி இருக்கிறீர்கள். தேர்வுகள் வரவிருக்கின்றன, ஒவ்வொரு ஆண்டைப் போலவும் நாம் தேர்வுகள் குறித்த விவாதங்கள் உரையாடல்களில் ஈடுபட வேண்டும். நீங்கள் கூறுவது சரிதான், இந்த நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பலர், இதை மேலும் அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக ஆக்கத் தங்கள் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்கள். மேலும் கடந்த முறை காலம் தாழ்த்தி வந்தது, தேர்வுகளுக்கு மிக நெருக்கமாக வந்தது என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருக்கிறார்கள். ஷ்வேதாவின் ஆலோசனை சரியானது தான். அதாவது நான் இதை ஜனவரி மாதமே செய்ய வேண்டும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், MyGovஇன் குழுவும் இணைந்து இதனை ஒட்டிச் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை தேர்வு பற்றிய விவாதம் ஜனவரியின் தொடக்கத்திலோ, இடையிலோ நடக்குமாறு பார்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். நாடு முழுவதிலும் மாணவர்கள்-நண்பர்களிடம் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. முதலாவதாக, தங்கள் பள்ளியிலிருந்தே இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். இரண்டாவதாக இங்கே தில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். தில்லியில் நடக்கும் நிகழ்ச்சிக்கான மாணவர்கள் தேர்வு, MyGov வாயிலாகச் செய்யப்படும். நண்பர்களே, நாமனைவரும் இணைந்து தேர்வு தொடர்பான அச்சத்தைப் போக்க வேண்டும். என்னுடைய இளைய நண்பர்கள், தேர்வுக்காலங்களில் புன்சிரிப்போடும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும், பெற்றோருக்கு எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது, ஆசிரியர்கள் கவலையில்லாமல் இருக்க வேண்டும், இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக, நாம் மனதின் குரல் வாயிலாக தேர்வுகள் மீதான விவாதத்தை, டவுன் ஹால் மூலமாகவோ, Exam Warriors புத்தகம் மூலமாகவோ தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நோக்கத்துக்கு நாடு முழுவதிலும் இருக்கும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் வேகம் அளித்திருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வரவிருக்கும் தேர்வுகள் தொடர்பான விவாதங்கள் நிகழ்ச்சியில் நாம் இணைந்து பயணிப்போம், இது நான் உங்களுக்கு விடுக்கும் அழைப்பு.
நண்பர்களே, கடந்த மனதின் குரலில் நாம் 2010ஆம் ஆண்டு அயோத்தி விஷயம் தொடர்பாக இலாஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி விவாதம் செய்திருந்தோம். தீர்ப்பு வருவதற்கு முன்பாகவும் சரி, தீர்ப்பு வெளியான பிறகும் சரி, நாட்டில் எந்த வகையில் அமைதியும் சகோதரத்துவமும் காக்கப்பட வேண்டும் என்று நான் அதில் கூறியிருந்தேன். இந்த முறையும், நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்ட போது, 130 கோடி நாட்டுமக்களும், நாட்டுநலனை விட மேலானது வேறொன்றும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற விழுமியங்கள் தாம் அனைத்தையும் விட முக்கியமானவை. இராமர் கோயில் மீதான தீர்ப்பு வந்த போது, நாடு முழுவதும் இதைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டது. முழுமையான இயல்புநிலையோடும் அமைதியோடும் இதைத் தனதாக்கிக் கொண்டது. இன்று மனதின் குரல் வாயிலாக நான் நாட்டுமக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நன்றியறிதல்களைக் காணிக்கையாக்குகிறேன். அவர்கள் எந்த வகையில் பொறுமையையும், சுயக்கட்டுப்பாட்டையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள் என்பதைப் பார்க்கும் போது, என் விசேஷமான நன்றிகளை நான் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒருபுறம், நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டப்பூர்வமான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே வேளையில், இன்னொரு புறத்தில் நீதிமன்றத்தின் மீது நாட்டின் மரியாதை மேலும் அதிகரித்திருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், நமது நீதிமன்றத்துக்குமே கூட இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல் என்று சொன்னால் அது மிகையில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வந்த பிறகு, இப்போது நாடு, புதிய எதிர்பார்ப்புக்கள், புதிய ஆசைகளுடன் புதிய பாதையில், புதிய இலக்குகளை நோக்கி முன்னேறத் தொடங்கி இருக்கிறது. புதிய இந்தியா என்ற இந்த உணர்வை நமதாக்கிக் கொண்டு அமைதி, ஒற்றுமை, சகோதர உணர்வு ஆகியவற்றை மனதில் பூண்டு நாம் முன்னேறுவோம். இதுவே என்னுடைய ஆசை, நம்மனைவரின் விருப்பமும் கூட.
எனதருமை நாட்டுமக்களே, நமது பண்பாடு, கலாச்சாரம், மொழிகள் ஆகியன உலகம் முழுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை அளிக்கின்றன. 130 கோடி நாட்டுமக்கள் கொண்ட இந்த தேசத்தில், தெருவுக்குத் தெரு நீரின் சுவையில் மாற்றம் இருக்கும், பேட்டைக்குப் பேட்டை மொழியே கூட மாறும் என்று கருதப்படுகிறது. நமது பூமியில் பலநூற்றுக்கணக்கான மொழிகள், பல நூற்றாண்டுகளாக மலர்ந்து மணம்வீசி வருகின்றன. ஆனால் அதே வேளையில் இந்த மொழிகளும், வழக்குகளும் எங்கேயாவது காணாமல் போய் விடக்கூடாதே என்ற கவலையும் நமக்கிருக்கிறது. கடந்த நாட்களில் உத்தராக்கண்டின் தார்சுலா பற்றிய ஒரு விஷயத்தை நான் படிக்க நேர்ந்தது. எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. எப்படி தங்களுடைய மொழிகளுக்கு ஊக்கமும் வலுவும் அளிக்கும் வகையில் மக்கள் முன்வருகிறார்கள் என்பது இந்த விஷயத்திலிருந்து தெரிய வந்தது. சில நூதனமான உத்திகள் கையாளப்படுகின்றன, தார்சுலா பற்றிய செய்தி மீது என் கவனம் ஏன் சென்றது என்றால், ஒரு காலத்தில் நான் தார்சூலாவில் தங்கியிருந்திருக்கிறேன். அந்தப் பக்கம் நேபாளம், இந்தப் பக்கம் காளீகங்கை. பித்தோராகட்டின் தார்சூலாவில் ரங் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் வசிக்கிறார்கள்; அவர்களுக்கு இடையே அவர்கள் உரையாடிக் கொள்ளும் மொழியின் பெயர் ரகலோ ஆகும். தொடர்ந்து இவர்களின் மொழியைப் பேசுவோர் குறைந்து வருவதாக இவர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆனால் என்ன நடந்தது, ஒரு நாள், இவர்கள் அனைவரும் தங்கள் மொழியைக் காப்பாற்ற உறுதியை மேற்கொண்டார்கள். சில காலத்திலேயே இந்த நோக்கத்தோடு ரங் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்….இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாக மட்டுமே இருக்கிறது. இது சற்றேறக்குறைய பத்தாயிரம் இருக்கலாம், ஆனால் ரங் மொழியைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்தார்கள். அவர் 84 வயதான மூத்தவரான திவான் சிங்காகட்டும் அல்லது 22 வயது நிரம்பிய இளைஞரான வைஷாலீ கர்ப்யால் ஆகட்டும், பேராசிரியராகட்டும், வியாபாரியாகட்டும்… அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். இந்த நோக்கம் தொடர்பாக சமூக வலைத்தளம் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டது. பல வாட்ஸப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. பலநூற்றுக் கணக்கான மக்களை இதன் வாயிலாகவும் ஒன்றிணைத்தார்கள். இந்த மொழிக்கென எந்த எழுத்துவடிவும் கிடையாது. வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் கதைகள், கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் மொழியைச் சீர் செய்தார்கள். ஒருவகையில் வாட்ஸப்பே கூட வகுப்பறையானது, இங்கே யாரும் ஆசிரியரும் இல்லை, யாரும் மாணவரும் இல்லை. ரங்க்லோக் மொழியைப் பாதுகாக்க வேண்டி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன, பத்திரிக்கை வெளியிடப்பட்டு வருகிறது, இதில் சமூக அமைப்புகளின் உதவியும் கிடைத்து வருகிறது.
நண்பர்களே, சிறப்பான விஷயம் என்னவென்றால், ஐக்கிய நாடுகள் சபையும் 2019ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டை சர்வதேச பூர்வகுடி மொழிகள் ஆண்டாக அறிவித்திருக்கிறது. அதாவது வழக்கொழிந்து போகும் அபாயத்தில் இருக்கும் மொழிகளைப் பாதுகாப்பது என்பது இதன் பொருள். 150 ஆண்டுகளுக்கு முன்னால், நவகால ஹிந்தியின் பிதாமகரான பாரதேந்து ஹரிவன்ஷ்ராய் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம் –
நிஜ பாஷா உன்னதி அஹை, சப் உன்னதி கோ மூல்,
பின் நிஜ்பாஷா-ஞான் கே, மிடத ந ஹிய கோ சூல்.
“निज भाषा उन्नति अहै, सब उन्नति को मूल,
बिन निज भाषा–ज्ञान के, मिटत न हिय को सूल ||”
அதாவது, தாய்மொழி அறிவு இல்லாமல் உயர்வு சாத்தியமில்லை. அப்படி இருக்கும் வேளையில், ரங் சமுதாயத்தின் இந்த முயற்சி உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாக அமையக்கூடியது. உங்களுக்கும் இந்த விஷயம் கருத்தூக்கம் அளிக்கிறது என்றால், இன்றிலிருந்தே, உங்கள் தாய்மொழி அல்லது வழக்கு மொழியையே பயன்படுத்தத் தொடங்குங்கள். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் உத்வேகம் அளியுங்கள்.
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்கள் தமிழ் மொழியில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம். அவரது இந்த வரிகள் நம்மனவைவருக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவையாக இருக்கின்றன.
முப்பது கோடி முகமுடையாள் உயிர்,
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்,
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற்,
சிந்தனை ஒன்றுடையாள்.
அந்தக் காலத்தில் பாடப்பட்டவை இவை. பாரத அன்னைக்கு 30 கோடி முகங்கள் உள்ளன, ஆனால் உடல் ஒன்று தான். அவளுக்கு 18 மொழிகள் இருக்கின்றன, ஆனால் எண்ணம் ஒன்று தான் என்று எழுதி இருக்கிறார்.
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்கள்கூட நமக்கு மிகப்பெரிய செய்தியை அளித்துச் சென்று விடுகின்றன. இப்போது பாருங்கள், ஊடகங்களிலும் ஸ்கூபா டைவர்கள் பற்றிய ஒரு செய்தியை நான் படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் செய்தி நாட்டுமக்கள் அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கல் தொடர்பான பயிற்சி அளிக்கும் ஸ்கூபா டைவர்கள், ஒருநாள் மங்கமரிப்பேட்டா கடற்கரை நோக்கி கடலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கடலில் சில ப்ளாஸ்டிக் பாட்டில்களும், பைகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன. இவற்றைச் சுத்தம் செய்யும் போது, விஷயம் மிகவும் தீவிரமானதாக அவர்களுக்குப் பட்டது. நமது கடல்களில் எந்த அளவுக்குக் குப்பைகள் நிரம்பி இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். கடந்த பல நாட்களாக இவர்கள் கடலில், கரையில், சுமார் 100 மீட்டர் தொலைவுக்குப் பயணித்து, ஆழமான நீரில் மூழ்குகிறார்கள், அங்கே இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வருகிறார்கள். 13 நாட்களிலேயே அதாவது இரண்டு வாரங்களிலேயே, சுமார் 4000 கிலோ எடையுள்ள நெகிழிக் கழிவுகளைக் கடலிலிருந்து வெளியெடுத்திருக்கிறார்கள். இந்த ஸ்கூபா டைவர்களின் இந்தச் சிறிய தொடக்கம், ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்து வருகிறது. இவர்களுக்கு அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அக்கம்பக்கத்தில் இருக்கும் மீனவர்களும் அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளை அளித்து வருகிறார்கள். சற்றே சிந்தியுங்கள், இந்த ஸ்கூபா டைவர்கள் அளித்த உத்வேகத்தால், நாமுமே கூட நம்மருகே இருக்கும் பகுதிக்கு நெகிழிக் கழிவுகளிலிருந்து விடுதலை அளிக்கும் மனவுறுதியை மேற்கொள்வோம், நெகிழிக் கழிவிலிருந்து விடுதலை அடைந்த பாரதம், உலகனைத்துக்குமே ஒரு புதிய எடுத்துக்காட்டாக மிளிரும்.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் மாதம் 26ஆம் தேதி வரவிருக்கிறது. இந்த நாள் நாடனைத்திற்கும் மிகச் சிறப்பானது. நமது மக்களாட்சிக்குக் குறிப்பாக இது அதிக மகத்துவமானது ஏனென்றால், இந்த நாளன்று தான் நாம் அரசியலமைப்புச் சட்ட நாளைக் கொண்டாடுகிறோம். இந்தமுறை அரசியலமைப்புச் சட்ட நாளுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த முறை அரசியலமைப்புச் சட்டத்தை நாம் அமல் செய்து 70 ஆண்டுக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்தமுறை, இந்த வேளையில் நாடாளுமன்றத்தின் விசேஷக் கூட்டத்தொடருக்கு ஏற்பாடு செய்யப்படும், நாடு முழுவதிலும் ஆண்டு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். வாருங்கள், இந்த வேளையை முன்னிட்டு நாம் அரசியலமைப்புச் சட்டசபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நமது மரியாதைகலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும், மரியாதையையும் பாதுகாக்கிறது; இது நமது அரசியல் அமைப்புச் சட்ட வித்தகர்களின் தொலைநோக்கு காரணமாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச்சட்ட தினம் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைப் பாதுகாப்பதோடு, நாட்டை நிர்மாணம் செய்வதில் நமது பங்களிப்பை அளிக்கும் வகையில் நமது அர்ப்பணிப்புக்கு வலுசேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தக் கனவைத் தானே நமது அரசியலமைப்புச்சட்ட நிறுவனர்கள் கண்டார்கள்!!
எனதருமை நாட்டுமக்களே, குளிர்காலம் தொடங்குகிறது, இளம்பனியை நம்மால் உணர முடிகிறது. இமயத்தில் சில பகுதிகள் பனிப்போர்வை போர்த்திக் கொள்ளத் தொடங்கி விட்டன. ஆனால் இந்தப் பருவநிலை, Fit India இயக்கத்துக்கானது. நீங்கள், உங்கள் குடும்பத்தார், உங்கள் நண்பர்கள், உங்கள் கூட்டாளிகள் என அனவைரும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டு விடாதீர்கள். Fit India இயக்கத்தை முன்னெடுத்துப் போக, இந்தப் பருவநிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தீபாவளி புனிதமான நன்னாள். உங்கள் அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பலப்பல நல்வாழ்த்துக்கள். நம்முடைய நாட்டில் ஒரு வழக்கு உண்டு-
शुभम् करोति कल्याणं आरोग्यं धनसम्पदाम |
शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोस्तुते |
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனசம்பதாம்.
சத்ருபுத்திவிநாசாய தீபஜோதிர்நமோஸ்துதே.
என்ன ஒரு அருமையான செய்தி பார்த்தீர்களா? இந்த சுலோகத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒளியானது வாழ்க்கையில் சுகம், உடல்நலம் மற்றும் நிறைவு ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்க்கிறது, இது எதிர்மறையான சிந்தனைகளை அழித்து, நல்ல சிந்தனைகளுக்கு வழிகாட்டுகிறது. இப்படிப்பட்ட இறையருள்மிக்க ஜோதிக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த தீபாவளியை மனதில் தாங்கும் வகையில், ஒளியை மேலும் பரவச் செய்வோம், ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பரப்புவோம். விரோத மனப்பான்மை ஒழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைவிட சிறப்பான எண்ணம் வேறு என்னவாக இருக்க முடியும், கூறுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இதில் ஏதோ இந்திய சமுதாயத்தினர் மட்டுமே பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதல்ல; இப்போது பலநாட்டு அரசுகளும், அங்கிருக்கும் குடிமக்களும், சமூக இயக்கங்களும் கூட, தீபாவளியை முழுமையான குதூகலம், உற்சாகம் ஆகியவற்றோடு கொண்டாடுகிறார்கள். ஒருவகையில் அங்கே பாரத நாட்டையே ஏற்படுத்தி விடுகிறார்கள் என்றுகூடச் சொல்லலாம்.
நண்பர்களே, உலகத்தில் பண்டிகைச் சுற்றுலா எனும் போதே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய நாடே கூட பண்டிகைகளின் நாடு தானே!! இதில் பண்டிகைச் சுற்றுலாவுக்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நம்முடைய முயற்சிகள் எப்படி இருக்க வேண்டுமென்றால், ஹோலி, தீபாவளி, ஓணம், பொங்கல், பிஹு என எந்தப் பண்டிகையாக இருந்தாலும் சரி, அவற்றை நாம் பறைசாற்ற வேண்டும்; அதுமட்டுமல்லாமல் இந்தப் பண்டிகைகளின் குதூகலத்தில் மற்ற மாநிலத்தவரை, மற்ற தேசத்தவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய நாட்டிலே ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன; இவற்றில் மற்ற நாடுகளைச் சார்ந்தவர்கள் அதிக நாட்டம் கொள்கிறார்கள். ஆகையால் பாரதத்தில் பண்டிகைக்காலச் சுற்றுலாவை விரிவுபடுத்துவதில், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்குபணி மிக முக்கியமானது.
எனதருமை நாட்டுமக்களே, நாம் இந்த தீபாவளியன்று வித்தியாசமான சிலவற்றைச் செய்வோம் என்று கடந்த மனதின் குரலில் நாம் முடிவு செய்திருந்தோம், இல்லையா! நாமனைவரும் இந்த தீபாவளியன்று இந்தியாவின் பெண்கள் சக்தியையும் அதன் சாதனைகளையும் கொண்டாடுவோம், அதாவது இந்தியத் நாட்டின் திருமகளுக்கு மரியாதை செய்வோம் என்று கூட கூறியிருந்தேன், அல்லவா? சில நாட்களிலேயே சமூக ஊடகத்திலே எண்ணிலடங்கா உத்வேகம் அளிக்கும் கதைகள் வந்து குவியத் தொடங்கி விட்டன. வரங்கல்லைச் சேர்ந்த கோடிபாக ரமேஷ் அவர்கள் நமோஆப் எனும் செயலியில், தன்னுடைய தாயார் தான் தனது சக்தி என்று குறிப்பிட்டிருக்கிறார். 1990ஆம் ஆண்டிலே, என்னுடைய தகப்பனார் காலமான வேளையிலே என்னுடைய தாயார் ஐந்து பிள்ளைகளை பராமரிக்கும் பொற்ப்பை ஏற்றுக் கொண்டார். இன்று நாங்கள் ஐந்து சகோதரர்களுமே நல்ல வேலைகளில் அமர்ந்திருக்கிறோம். என்னுடைய தாயார் தான் என்னைப் பொறுத்த மட்டில் இறைவன். எனக்கு அவர் தான் எல்லாமே, ஆகையால் என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் தான் பாரதநாட்டுத் திருமகள் என்று பதிவு செய்திருக்கிறார்.
ரமேஷ் அவர்களே, உங்கள் தாயாருக்கும் என் வணக்கங்கள். அடுத்ததாக, ட்விட்டரில் மிகவும் ஈடுபாட்டோடு இருக்கும் கீதிகா ஸ்வாமி அவர்கள் தன்னைப் பொறுத்த மட்டில் மேஜர் குஷ்பூ கன்வர் தான் பாரத நாட்டின் திருமகள் என்று கூறியிருக்கிறார். இவர் ஒரு பேருந்து நடத்துனரின் மகள், இவர் அஸாம் ரைபிள்ஸ் இராணுவப் பிரிவின் ஒரு பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கினார். கவிதா திவாடீ அவர்களைப் பொறுத்த மட்டில், பாரதநாட்டின் திருமகள் என்றால் அவரது மகள் தான், அவர் தான் இவருக்கு சக்தியை அளிக்கிறார். தனது மகள் அருமையாக ஓவியம் வரைகிறார் என்பதில் தாய்க்கு மிகவும் பெருமை. மேலும் அவர் CLAT என்ற சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாராம். இதே போல மேகா ஜெயின் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்றால், 92 வயது நிரம்பிய ஒரு மூதாட்டி, பல ஆண்டுகளாக க்வாலியர் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறாராம்; பாரத நாட்டின் இந்தத் திருமகளின் பணிவு மற்றும் கருணையால் பெருமளவில் உத்வேகம் அடைந்திருப்பதாக மேகா அவர்கள் தெரிவிக்கிறார். இப்படி ஏகப்பட்ட தகவல்களை மக்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள், உத்வேகம் அடையுங்கள், அதில் இடம் பெற்றிருப்பவர்களைப் போலவே நீங்களும் உங்கள் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள், நான் இந்த சந்தர்ப்பத்தில் பாரதநாட்டு இந்த அனைத்துத் திருமகள்களுக்கும் மரியாதை கலந்த என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, 17ஆவது நூற்றாண்டின் பிரபலமான கவிஞர் சஞ்சீ ஹொன்னம்மா அவர்கள், கன்னட மொழியில் ஒரு கவிதையை இயற்றியிருந்தார். இப்போது நாம் பாரதநாட்டுத் திருமகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமே, அதே பாவம், அதே உணர்வு, அதே சொற்கள்….. இதற்கான அடித்தளம் 17ஆம் நூற்றாண்டிலேயே அவர் அமைத்து விட்டதாகவே நமக்குத் தெரிகிறது. என்ன அருமையான சொற்கள், என்ன அருமையான உணர்வு, எத்தனை உன்னதமான எண்ணங்கள், கன்னட மொழியில் இந்தக் கவிதை இதோ –
பெண்ணிந்த பெர்மேகோGண்டனு ஹிமவந்தனு
பெண்ணிந்த ப்ரூகு பேர்ச்சிதdhaனு
பெண்ணிந்த ஜனகராயனு ஜஸுவடேdhaனு
அதாவது இதன் பொருள் என்னவென்றால், இமாலயம் என்ற மலைகளின் அரசன் தனது மகளான பார்வதி காரணமாகவும், ப்ருகு மஹரிஷியானவர் தனது மகள் இலக்ஷ்மி காரணமாகவும், ஜனக மஹாராஜா தனது மகள் சீதை காரணமாகவும் பிரபலமானார்கள். நமது பெண்கள் தாம் நமது பெருமை, இந்தப் பெண்களின் மகத்துவம் காரணமாகவே நமது சமூகத்தில் ஒரு வலுவான அடையாளம் ஏற்பட்டிருக்கிறது, இதற்கு ஒரு பிரகாசமான எதிர்காலமும் காத்திருக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதியன்று, உலகெங்கிலும் ஸ்ரீ குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும். குருநானக்தேவ் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. உலகின் பல நாடுகளில் நம்முடைய சீக்கிய சகோதர சகோதரிகள் வசித்து வருகிறார்கள், அவர்கள் குருநானக்தேவ் அவர்களின் உயரிய நோக்கங்களுக்கு முழுமையாகத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள். நான் வேன்கூவர் மற்றும் தெஹ்ரானில் உள்ள குருத்வாராக்களுக்குச் சென்றதை என்றுமே மறக்க முடியாது. ஸ்ரீ குருநானக்தேவ் அவர்களைப் பற்றிப் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன, ஆனால் இவற்றுக்கு மனதின் குரலின் பல பகுதிகள் முழுமையாகத் தேவைப்படும். நானக்தேவ் அவர்கள் சேவை புரிவதையே அனைத்திற்கும் மேலாகக் கருதினார். குருநானக்தேவ் அவர்கள், தன்னலமற்றுப் புரியும் சேவை விலைமதிப்பில்லாதது என்று கருதினார். தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக பலமாகக் குரல் கொடுத்தார், செயல்பட்டார். ஸ்ரீ குருநானக்தேவ் அவர்களின் செய்தி, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியது. அவரது காலத்தில் அதிக அளவு பயணம் செய்தவர்களில் அவரும் ஒருவர். பல இடங்களுக்குச் சென்றார், எங்கே சென்றாலும் தனது எளிமை, பணிவு ஆகியவை வாயிலாக அனைவரின் மனங்களையும் வெற்றி கொண்டு விடுவார். குருநானக்தேவ் அவர்கள் பல மகத்துவம் வாய்ந்த சமயப் பயணங்களை மேற்கொண்டார், இவை உதாஸீ என்று அழைக்கப்படுகின்றன. நல்லிணக்கம், சமத்துவம் என்ற செய்திகளை அவர் வடக்கு முதல் தெற்கு வரையிலும், கிழக்கு முதல் மேற்கு வரையிலும், அனைத்துத் திசைகளிலும், அனைத்து இடங்களைச் சேர்ந்த மக்களிடத்திலும், இறைநெறியாளர்கள், புனிதர்கள் ஆகியோரிடத்திலும் கொண்டு சென்றார். அஸாமைச் சேர்ந்த புகழ்மிக்க புனிதரான ஷங்கர்தேவ் அவர்கள் கூட, இவரால் உத்வேகம் அடையப் பெற்றார் என்று கருதப்படுவது உண்டு. இவர் ஹரித்வாரின் புண்ணிய பூமிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். காசியின் ஒரு புண்ணிய இடமான குருபாக் குருத்வாராவில் ஸ்ரீ குருநானக்தேவ் அவர்கள் தங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர் பௌத்த சமயத்தோடு தொடர்புடைய ராஜ்கீர் மற்றும் கயா போன்ற புனிதத் தலங்களுக்கும் சென்றிருக்கிறார். தெற்கில் குருநானக்தேவ் அவர்கள் இலங்கை வரை பயணித்திருக்கிறார். கர்நாடகத்தின் பீதருக்கு பயணம் மேற்கொண்ட வேளையில், அங்கே நிலவிய தண்ணீர்த்தட்டுப்பாட்டுக்கு குருநானக்தேவ் அவர்களே தீர்வு கண்டார். குருநானக் ஜீரா சாஹப் என்ற பெயர் கொண்ட ஒரு பிரபலமான இடம் பீதரில் இருக்கிறது, இது அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதை இது நமக்கெல்லாம் நினைவு படுத்துகிறது. ஒரு காலகட்டத்தில் குருநானக் அவர்கள் வடக்கில், கஷ்மீரம் மற்றும் அதனருகில் இருக்கும் பகுதிகளுக்கு யாத்திரை மேற்கொண்டார். இதன் காரணமாக சீக்கிய சமயத்தவர்களுக்கும் கஷ்மீரத்துக்கும் இடையே, மிகவும் வலுவான ஒரு இணைப்பு ஏற்பட்டது. குருநானக்தேவ் அவர்கள் திபெத்திற்கும் சென்றார், அங்கே இருந்த மக்கள் அவரை குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தலயாத்திரை மேற்கொண்ட உஸ்பெக்கிஸ்தான் நாட்டிலும் இவர் வணங்கப்படுகிறார். இவரது புனிதப்பயணத்தின் ஒரு பகுதியாக, இவர் மிகப்பெரிய அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்; இதில் சௌதி அரேபியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் அடங்கும். பல இலட்சக் கணக்கான மக்களின் மனங்களிலும் இவர் இடம் பிடித்தார், அவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் இவரது உபதேசங்களைப் பின்பற்றினார்கள், இன்றும் பின்பற்றி வருகிறார்கள். இப்போது சில நாட்கள் முன்பாக, சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தூதுவர்கள், தில்லியிலிருந்து அம்ருதசரசுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் பொற்கோயிலை தரிசனம் செய்தார்கள், இவையனைத்தும் குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது. அங்கே அனைத்து அரசுத் தூதுவர்களும் பொற்கோயிலை தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல், சீக்கிய பாரம்பரியம், கலாச்சாரம் இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு பல அரசுத் தூதுவர்களும் சமூக ஊடகங்களில் அந்த இடத்தின் படங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் பெருமையான, நல்ல அனுபவங்களை அவர்கள் எழுதினார்கள். என்னுடைய ஆசை என்னவென்றால், குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாள் என்பது அவரது கருத்துக்கள், அவரது இலட்சியங்கள் ஆகியவற்றை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியதொரு உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்பது தான். மீண்டும் ஒருமுறை தலைவணங்கி குருநானக்தேவ் அவர்களுக்கு நான் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, அக்டோபர் 31ஆம் தேதியை நீங்கள் கண்டிப்பாக நினைவில் கொள்வீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த நாளன்று தான் பாரத நாட்டின் இரும்பு மனிதரான சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் பிறந்தார், இவர் தான் நாட்டை ஓரிழையில் இணைத்த சூத்திரதாரி. சர்தார் படேல் அவர்களிடத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் அற்புதமான திறமை இருந்தது, அதே வேளையில், கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தவர்களிடத்தில் இணக்கத்தை ஏற்ப்படுத்தக்கூடிய வல்லமையும் இருந்தது. சர்தார் படேல் அவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களையும் கூட மிகவும் ஆழமாக உரைத்துப் பார்த்தார். அவர் தான் உண்மையில் Man of Detail, நுணுகிப் பார்ப்பதில் சமர்த்தர். இவை தவிர அமைப்புரீதியான செயல்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர். திட்டங்களை ஏற்படுத்துவது, உத்திகளை வடிவமைப்பது ஆகியவை அவருக்குக் கைவந்த கலை. சர்தார் அவர்களின் செயல்பாடு பற்றி படிக்கும் போது, அவரது திட்டமிடல் என்பது எத்தனை பலமானதாக இருந்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. 1921ஆம் ஆண்டு, அஹ்மதாபாதில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் வரவிருந்தார்கள். மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் சர்தார் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. நகரின் குடிநீர் வலைப்பின்னலை சீர்செய்ய, இந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். யாருக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அவர் உறுதி செய்து கொண்டார். அது மட்டுமல்ல, மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்தவொரு பிரதிநிதியின் உடைமைகளோ, காலணியோ களவு போகாமல் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்திய சர்தார் அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், மிகுந்த ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அவர் விவசாயிகளோடு தொடர்பு கொண்டார், அவர்களிடம் கதர்ப் பைகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார். விவசாயிகள் பைகளைத் தயாரித்து, பிரதிநிதிகளிடம் விற்பனை செய்தார்கள். இந்தப் பைகளில் காலணிகளைப் போட்டுக் கொண்டு, தங்களுடனேயே வைத்துக் கொள்ளும் பிரதிநிதிகளின் மனங்களில், காலணி களவு போய் விடுமோ என்ற அழுத்தம் நீங்கியது. அதே வேளையில் கதர் விற்பனையில் கணிசமான அளவு அதிகரிப்பும் உறுதி செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சபையில் மெச்சத்தகுந்த பங்களிப்பு அளித்தமைக்கு, எக்காலத்தும் சர்தார் படேல் அவர்களுக்கு நமது நாடு நன்றிக்கடன் பட்டிருக்கும். அவர் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் மகத்துவம் நிறைந்த பணியாற்றினார்; இதன் காரணமாக சாதி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படக்கூடிய எந்தவிதமான ஏற்றத்தாழ்வுக்கும் இடம் இருக்கவில்லை.
நண்பர்களே, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் என்ற வகையில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள், சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதில், ஒரு மிகப்பெரிய, வரலாற்றின் ஏடுகளில் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க, பகீரத முயற்சியில் வெற்றி பெற்றார். சர்தார் வல்லப்பாய் அவர்களின் சிறப்புத்தன்மை என்னவென்றால், அவரது பார்வையிலிருந்து எந்த ஒன்றும் தப்பாது என்பது தான். ஒரு தரப்பில் அவரது பார்வை ஹைதராபாத், ஜூனாகட் மற்றும் பிற பகுதிகள் மீது பதிந்திருந்தது என்று சொன்னால், மறுபுறத்தில் அவரது கவனம் தொலைவாக உள்ள தெற்கில் இருக்கும் லட்சத்தீவுகளின் மீதும் பதிந்திருந்தது. உண்மையில் நாம் சர்தார் படேல் அவர்களின் முயற்சிகள் பற்றிப் பேசும் வேளையில், நாட்டை ஒருங்கிணைப்பதில் சில குறிப்பிட்ட பகுதிகள் தொடர்பாக அவர் அளித்த பங்களிப்பைப் பற்றி மட்டும் பேசுகிறோம். லட்சத்தீவுகள் போன்ற சிறிய இடம் விஷயத்தில் கூட, அவர் மகத்தான பங்குபணி ஆற்றியிருக்கிறார். இந்த விஷயம் அரிதாகவே நினைவில் கொள்ளப்படுகிறது. லட்சத்தீவுகள் என்பவை சிலதீவுகளின் கூட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவை இந்தியாவின் மிக அழகான பகுதிகளில் ஒன்று. 1947ஆம் ஆண்டு நாடு துண்டாடப்பட்ட வேளையில், நமது அண்டை நாட்டின் பார்வை லட்சத்தீவுகள் மீது பாய்ந்தது; உடனே தனது கொடிதாங்கிய கப்பலை அங்கே அது அனுப்பி வைத்தது. சர்தார் படேல் அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டியவுடனேயே, அவர் ஒரு நொடிகூட தாமதிக்காமல், உடனடியாக தீவிரமான நடவடிக்கையில் இறங்கினார். அவர் முதலியார் சகோதரர்களான ஆர்காட் இராமசாமி முதலியார், ஆர்காட் லக்ஷ்மணசாமி முதலியார் ஆகியோரிடம், உடனடியாக திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சிலரோடு சென்று, அங்கே மூவண்ணக் கொடியை ஏற்றுங்கள் என்றார். லட்சத்தீவுகளில் முதலில் மூவண்ணக்கொடி தான் பறக்க வேண்டும் என்றார் அவர். அவரது ஆணைக்கு உட்பட்டு, உடனடியாக மூவண்ணக்கொடி பறக்க விடப்பட்டது, பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, இலட்சத்தீவுகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எதிரியின் தீய ஆசையில் மண்ணள்ளிப் போடப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, லட்சத்தீவுகளின் வளர்ச்சியின் பொருட்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலியார் சகோதரர்களிடம் சர்தார் படேல் அவர்கள் கேட்டுக் கொண்டார். இன்று லட்சத்தீவுகள், இந்தியாவின் முன்னேற்றத்தில், தங்களது மகத்துவமான பங்களிப்பை அளித்து வருகின்றன. இது ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா இடம். நீங்கள் அனைவரும் இதன் அழகான தீவுகளையும், சமுத்திரக் கரைகளையும் சென்று பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவின் நினைவைப் போற்றும் வகையில், ஒற்றுமைச் சிலை நாட்டிற்கும் உலகிற்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய உருவச்சிலை. அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விட உயரத்தில் இரண்டு பங்கு கொண்ட சிலை இது. உலகின் மிக உயரமான சிலை எனும் போது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் தலையும் பெருமையோடு நிமிர்கிறது. ஒரே ஆண்டில், 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், ஒற்றுமைச் சிலையைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் 8500 பேர்கள் ஒற்றுமைச் சிலையின் பெருமையை தரிசனம் செய்திருக்கிறார்கள். சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் மீது இந்த மக்களின் இதயங்களில் நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவை இருக்கின்றன, இவற்றை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இப்போது அங்கே சப்பாத்திக்கள்ளித் தோட்டம், பட்டாம்பூச்சிகள் தோட்டம், வனச்சுற்றுலா, குழந்தைகள் ஊட்டச்சத்துப் பூங்கா, ஒற்றுமை நர்சரி போன்ற பல கவர்ச்சிமிகு மையங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன; இதனால் அந்தப் பகுதியின் பொருளாதாரம் மேம்பாடு கண்டிருக்கிறது, மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான புதியபுதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன. வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மனதின் கொண்டு, பல கிராமவாசிகள், தங்கள் வீடுகளில், home stay வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இல்லத்தில் தங்குவசதிகளை அமைத்துக் கொடுப்பவர்களுக்கு, தொழில்ரீதியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அங்கிருக்கும் மக்கள் இப்போது Dragon fruit என்ற பழத்தை பயிர் செய்யவும் தொடங்கியிருக்கிறார்கள், விரைவிலேயே இது அங்கிருப்போரின் வாழ்வாதாரத்துக்கான முக்கியமான ஆதாரமாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, நாட்டிற்காக அனைத்து மாநிலங்களுக்காக, சுற்றுலாத் துறைக்காக, இந்த ஒற்றுமைச் சிலை என்பது ஒரு ஆய்வுப் பொருளாக ஆக முடியும். எப்படி ஒரே ஆண்டிற்குள்ளாக, ஒரு இடம், உலகப் பிரசித்திபெற்ற சுற்றுலா இடமாக மாற முடியும் என்பதற்கு நாமனைவரும் சாட்சிகளாக இருக்கின்றோம். அங்கே நம் நாட்டைச் சேர்ந்தவர்களும், அயல்நாடுகளிலிருந்து வருபவர்களும் இருக்கிறார்கள். போக்குவரத்து, தங்குவசதிகள், வழிகாட்டிகள், சூழலுக்கு நேசமான அமைப்புகள், ஒன்றன்பின் ஒன்றாக இப்படி பல அமைப்புகள் மேம்பாடு அடைந்து வருகின்றன. மிகப்பெரிய அளவில் பொருளாதார அமைப்பு மேம்பாடு அடைந்து வருகிறது. பயணிகளின் தேவைக்கேற்ப அங்கே வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுமே கூட தனது பங்குபணியை நிறைவேற்றி வருகிறது. நண்பர்களே, உலகின் மகத்துவம் வாய்ந்த 100 சுற்றுலாத் தலங்களில் ஒற்றுமைச் சிலைக்கு முக்கியமான இடத்தை டைம் பத்திரிக்கை சில நாட்கள் முன்னர் அளித்ததை அறியும் போது, எந்த இந்தியருக்குத் தான் பெருமை ஏற்படாது!! நீங்களும் கூட, உங்கள் விலைமதிப்பில்லாத நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி, ஒற்றுமைச் சிலையைப் பார்க்கச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்; ஆனால் அதே வேளையில், பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியரும், தங்களது குடும்பத்தாரோடு இந்தியாவின் குறைந்தபட்சம் 15 இடங்களுக்காவது சென்று பாருங்கள், அங்கே இரவிலே தங்குங்கள், இந்த என்னுடைய வேண்டுகோளை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே, 2014ஆம் ஆண்டு தொடங்கி, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் தேச ஒற்றுமை தினமாக கடைப்பிடித்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த நாள், நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியை நமக்களிக்கிறது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று, ஒவ்வொரு ஆண்டினைப் போலவும் ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும், ஒவ்வொரு நிலையைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுவார்கள். ஒற்றுமைக்கான ஓட்டம் என்பது, ஒன்றுபட்ட தேசம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இது ஒரே திசையை நோக்கிப் பயணித்து ஒரே இலக்கை எட்ட விரும்புகிறது. அந்த ஒரே இலட்சியம் – ஒரே பாரதம், உன்னத பாரதம்.
கடந்த ஐந்தாண்டுகளாகவே, தில்லியில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல நகரங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், தலைநகரங்களிலும், மாவட்ட தலைமையகங்களிலும், சின்னச்சின்ன இரண்டாம் நிலை நகரங்கள் வரை, மிகப்பெரிய அளவில் ஆண்கள், பெண்கள், நகரவாசிகள், கிராமவாசிகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் மிகப்பெரிய அளவில் இதில் பங்கெடுத்து வருகிறார்கள். உள்ளபடியே, இன்றைய காலத்தில், மக்களுக்கு நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தின் மீது ஒரு பேரார்வம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. ஒற்றுமைக்கான ஓட்டம் என்பதே கூட இதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பு தான். ஓடுவது என்பது உடல்ரீதியாக, மனரீதியாக, மூளைச் செயல்பாட்டு ரீதியாக என அனைத்துக்குமே நலன் பயக்கும் ஒரு விஷயம். ஆனால் இங்கே ஓடுதல் இருக்கிறது, ஃபிட் இண்டியா எனும் வகையில் இதை இயல்பாகவே ஆக்குகிறோம். கூடவே ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கமும் இதில் கலந்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஓட்டம் உடல் மட்டுமல்லாமல், உள்ளம், நற்பண்புகள் ஆகியவற்றுக்காகவும், இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், இந்தியா புதிய சிகரங்களைத் தொடுவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது. நீங்கள் எந்த நகரத்தில் வசித்தாலும் சரி, அங்கே உங்களைச் சுற்றி எங்கேனும் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெறுகிறதா என்பதைப் பற்றி விசாரிக்கலாம். இதன் பொருட்டு runforunity.gov.in என்ற ஒரு இணைய முகப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடுமுழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெறும் இடங்கள் பற்றி இந்த இணைய முகப்பிலே தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று கண்டிப்பாக ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள் என்ற முழுநம்பிக்கை எனக்கு இருக்கிறது – இது பாரதத்தின் ஒற்றுமைக்காக மட்டுமல்ல, உங்கள் உடலுறுதிக்காகவும் தான்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்கள் நாட்டை ஒற்றுமை என்ற இழை கொண்டு இணைத்தார். ஒற்றுமையின் இந்த மந்திரம் நமது வாழ்க்கையில் ஒரு நற்பண்பைப் போன்றது. பாரதம் போன்ற பன்முகத்தன்மை நிறைந்த நாட்டிலே நாம் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு படிநிலையிலும் ஒற்றுமைக்கான இந்த மந்திரத்திற்கு பலம் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எனதருமை நாட்டுமக்களே, நாட்டின் ஒற்றுமை, பரஸ்பர நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வலுசேர்க்க நம்முடைய சமூகம் எப்பொழுதும் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், விழிப்போடும் செயல்பட்டிருக்கிறது. நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்க நீடித்த செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் பற்றிய பல எடுத்துக்காட்டுக்கள் கண்ணுக்குப் புலப்படும். ஆனால் பலவேளைகளில், சமூகத்தின் முயற்சி, அதன் பங்களிப்பு, நினைவுப் பலகையிலிருந்து மிக விரைவாகவே கரைந்து காணாமல் போய் விடுகிறது.
நண்பர்களே, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இராமஜன்மபூமி விவகாரத்தில் இலாஹாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த நாட்களை சற்று நினைவில் இருத்திப் பாருங்கள், எப்படிப்பட்ட சூழல் நிலவியது!! எத்தனை வகைவகையான பேர்கள் களத்தில் குதித்தார்கள்!! எத்தனை வகைவகையான ஆர்வக்குழுக்கள் அந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, என்ன மாதிரியான மொழியை எல்லாம் பயன்படுத்தினார்கள்!! சில கருத்துப் பித்தர்களும், ஊதிப் பெரிதாக்குபவர்களும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள மட்டுமே என்ன மாதிரியான பொறுப்பற்ற சொற்களைப் பேசினார்கள், என்பதெல்லாம் நமக்கு நினைவிருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் ஐந்து நாட்கள், ஏழு நாட்கள், பத்து நாட்கள் வரை தொடர்ந்தது, ஆனால் முடிவு வந்த போது, ஒரு ஆனந்தம் அளிக்க கூடிய ஆச்சரியமான மாற்றம் நாடுமுழுக்க உணரப்பட்டது. ஒரு புறம் இரண்டு வாரங்கள் வரை அனல் பறக்க வேண்டும் என்பதற்காக அனைத்தும் செய்யப்பட்டன. ஆனால் இராமஜன்மபூமி பற்றிய தீர்ப்பு வெளியானவுடன், அப்போதைய அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமுதாயம், அனைத்து சமயங்களின் பிரதிநிதிகள், சாதுக்கள்-புனிதர்கள் ஆகியோர் மிகவும் நிதானமான, நடுநிலையான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். சூழலில் இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் முயல்வு இது. ஆனால் அந்த நாட்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. எப்போதெல்லாம் அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீதிமன்றத்தின் மாட்சிமைக்கு மிகவும் கௌரவம்மிக்க வகையிலே மதிப்பளிக்கப்பட்டது; எந்த நிலையிலும் கருத்து மோதல்களின் அனலும், அழுத்தமும் சூழலை பாதிக்க விடப்படவில்லை. இந்த விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது நமக்கு மிகுந்த ஆற்றலை அளிக்கிறது. அந்த நாட்கள், அந்தக் கணங்கள், நம்மனைவருக்கும் நமது கடமையை நினைவுபடுத்துபவை. ஒற்றுமை நாதமானது தேசத்திற்கு எத்தனை பெரிய பலமளிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, நமது தேசத்தின் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமாகும். நாட்டை ஒரு பேரதிர்ச்சி தாக்கியது. நான் இன்று அவருக்கும் என் ச்ரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
என் இனிய நாட்டுமக்களே, இன்று வீடுதோறும் நடக்கும் ஒரு விஷயம், தொலைவுகளிலும் கேட்கப்படுகிறது, ஒவ்வொரு கிராமம் பற்றியும் ஒரு விஷயம் காதில் விழுகிறது, வடக்கு தொடங்கி தெற்கு வரை, கிழக்கு தொடங்கி மேற்கு வரை, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இந்த ஒரு விஷயம் பற்றி பேசப்படுகிறது கேட்கப்படுகிறது என்றால், அது தூய்மை பற்றிய கதை தான். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு கிராமமும், தூய்மை தொடர்பான தங்களது சுகமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்; ஏனென்றால், தூய்மையின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயல்வு, 125 கோடி இந்தியர்களின் முயல்வு. பலனை அனுபவிக்கும் கடவுளர்களுமே கூட, 125 கோடி இந்தியர்கள் தாம். ஆனால் ஒரு சுகமான அனுபவம், சுவாரசியமான அனுபவமாகவும் இருக்கிறது. நான் கேள்விப்பட்டேன், ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று தோன்றியது, பகிர்கிறேன். சற்றே கற்பனை செய்து பாருங்கள்… உலகின் மிக உயரமான போர்க்களம், அங்கே வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழே 50-60 டிகிரி என்ற நிலை. காற்றில் பிராணவாயு என்பது ஏதோ பெயரளவில் மட்டுமே இருக்கிறது. இத்தனை விபரீதமான சூழ்நிலையில், இத்தனை சவால்களுக்கு இடையிலே வாழ்வது என்பது எந்தவொரு பராக்கிரமச் செயலைக் காட்டிலும் சற்றும் குறைவானது அல்ல. இத்தகைய கடுமையான சூழ்நிலையில், நமது வீரம்நிறைந்த படையினர், நெஞ்சை நிமிர்த்தி மட்டும் எல்லைகளைப் பாதுகாக்கவில்லை, அங்கே தூய்மையான சியாச்சின் இயக்கத்தையும் நடத்தி வருகிறார்கள். இந்திய இராணுவத்தின் இந்த அற்புதமான கடமையுணர்வுக்காக நான் நாட்டுமக்கள் தரப்பிலிருந்து, அவர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அங்கே இருக்கும் கடுமையான குளிரில் எந்தப் பொருளும் மக்குவது என்பது கடினமானது. இந்த நிலையில், குப்பைக் கூளங்களை பகுப்பது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என்பதெல்லாம் மிகவும் மகத்துவம் வாய்ந்த பணிகள். அதே நேரத்தில், பனிப்பாறை மற்றும் அதனருகில் இருக்கும் பகுதிகளில், 130 டன்களுக்கும் மேற்பட்ட குப்பைகளை அகற்றுவது என்பது, அதுவும் அங்கே நிலவும் மிகவும் நுட்பமான சூழல் அமைப்பில்!! எத்தனை மகத்தான சேவை இது!! இங்கே எப்படிப்பட்ட சூழல் அமைப்பு இருக்கிறது என்றால், இது பனிச்சிறுத்தை போன்ற அரியவகை விலங்குகளின் வாழ்விடம். இங்கே ஐபெக்ஸ், ப்ரவுன் கரடிகள் போன்ற அரியவகை விலங்குகளும் வாழ்கின்றன. சியாச்சென் என்பது எப்படிப்பட்ட பனிப்பாறை என்றால், இது நதிகள் மற்றும் சுத்தமான நீரின் ஊற்று; ஆகையால் இங்கே தூய்மை இயக்கத்தை செயல்படுத்துவது என்பதன் பொருள் என்னவென்றால், மலையடிவாரத்தில் வாழும் மக்களுக்கு தூய்மையான நீருக்கான உத்திரவாதம் அளிப்பது என்பது தான். மேலும் Nubra மற்றும் Shyok போன்ற நதிகளின் நீரையும் பயன்படுத்துகிறார்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, கொண்டாட்டங்கள் என்பவை, நம் அனைவரின் வாழ்விலும் ஒரு புதிய விழிப்புநிலையை ஏற்படுத்தவல்ல காலங்கள். மேலும் தீபாவளியன்று குறிப்பாக, ஏதாவது ஒன்றைப் புதியதாக வாங்குவது, சந்தையிலிருந்து எதையாவது கொண்டு வருவது என்பவை ஒவ்வொரு குடும்பத்திலும் கூடக்குறைய நடந்து வருகின்றது. நாம் உள்ளூர் பொருட்களையே வாங்க முயல வேண்டும் என்று கூட நான் ஒருமுறை கூறியிருந்தேன். நமக்குத் தேவையான பொருள் நமது கிராமத்திலேயே கிடைக்கிறது என்றால், வட்டார அளவில் செல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது? வட்டார அளவிலேயே ஒரு பொருள் கிடைக்கிறது என்றால், மாவட்ட அளவுக்குச் செல்ல என்ன தேவை இருக்கிறது? எத்தனை அதிகமாக நாம் உள்ளூர் அளவில் கிடைக்கும் பொருட்களை வாங்க முயல்கிறோமோ, காந்தி 150 தானாகவே ஒரு மகத்தான வாய்ப்பாக மலர்ந்து விடும். நமது நெசவாளிகளின் கைகள் நெசவு செய்த துணிகள், நமது கதர் நெசவு செய்பவர்கள் தயாரித்தவை ஆகியவற்றில் ஏதாவது கொஞ்சமாவது நாம் வாங்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை மீண்டும் முன்வைக்கிறேன். இந்த தீபாவளியை ஒட்டியும், தீபாவளிக்கு முன்பாகவும், நீங்கள் அதிக அளவில் வாங்கியிருப்பீர்கள் ஆனால், தீபாவளிக்குப் பிறகு சென்றால், சற்றே விலை மலிவாக கிடைக்கும் என்று பலர் எண்ணமிடுகிறார்கள். இன்னும் வாங்காதவர்கள் பலர் இருப்பார்கள். தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு கூடவே, நாம் உள்ளூர் பொருட்களை அதிகம் வாங்க விரும்புபவர்களாக மாறுவோம் என்று அறைகூவல் விடுக்கிறேன். இதன் வாயிலாக காந்தியடிகள் கண்ட கனவை நனவாக்க நாம் எத்தனை முக்கியமான பங்களிப்பை அளிக்க முடியும் என்பதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும். நான் மீண்டும் ஒருமுறை இந்த தீபாவளித் திருநாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளியன்று நாம் பலவகையான பட்டாசுகளைக் கொளுத்துகிறோம். ஆனால், சில வேளைகளில் நமது கவனக்குறைவு காரணமாகத் தீப்பற்றிக் கொள்கிறது. காயம் ஏற்பட்டு விடுகிறது. ஆகையால் நீங்கள் உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அதே வேளையில், பண்டிகைகளைக் கொண்டாடியும் மகிழுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். என் பலப்பல தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் நாட்டின் மகத்துவம் வாய்ந்த ஆளுமையைப் பற்றி நான் பேச இருக்கிறேன். நம்மனைவரின் மனங்களிலுமே அவர் மீதான பெரும் மரியாதை இருக்கிறது, பிடிப்பு இருக்கிறது. அவர் மீது மரியாதை கொண்டிராத, அவருக்கு மதிப்பு அளிக்காத இந்தியக் குடிமகன் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர், வயதில் நம்மனைவரையும் விட மிகவும் மூத்தவர், நாட்டின் பல்வேறு நிலைகளிலும், வேறுவேறு காலகட்டங்களிலும் சாட்சியாக அவர் விளங்கியவர். நாமெல்லாரும் அவரை தீதி, அதாவது சகோதரி என்று அழைப்போம் – லதா தீதி. அவருக்கு இந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதியன்று 90 வயதாகிறது. அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக சகோதரியோடு தொலைபேசியில் உரையாடும் பேறு எனக்குக் கிட்டியது. இந்த உரையாடல் எப்படி இருந்தது தெரியுமா? கரிசனமான மனமுடைய ஒரு இளைய சகோதரன், தனது மூத்த சகோதரியோடு எப்படி உரையாடுவானோ அப்படி இருந்தது. நான் பொதுவாகத் தனிப்பட்ட உரையாடல்கள் பற்றிப் பேசுவது இல்லை, ஆனால் இன்று பேச விரும்புகிறேன், நீங்களும், லதா தீதி கூறுவதைக் கேளுங்களேன், எங்கள் உரையாடலைக் கேளுங்களேன். மூப்பு நிறைந்த இந்த நிலையிலும் லதா தீதி, நாடு தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் எத்தனை உற்சாகமாக இருக்கிறார், எத்தனை முனைப்போடு இருக்கிறார் என்பது உங்களுக்கே விளங்கும். வாழ்க்கையின் சந்தோஷங்கள் கூட, இந்தியாவின் முன்னேற்றத்தில் இருக்கிறது, மாறிவரும் இந்தியாவில் இருக்கிறது, புதிய சிகரங்களைத் தொடும் இந்தியாவில் இருக்கிறது. இவை அவரது சொற்களில் பிரதிபலிக்கிறது.
மோதி ஜி: லதா தீதி, வணக்கம்! நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.
லதா ஜீ: வணக்கம்.
மோதி ஜீ: நான் ஏன் ஃபோன் செஞ்சேன்னா, இந்த முறை உங்க பிறந்த நாள் அன்னைக்கு….
லதா ஜீ: ஆமாம் ஆமாம்.
மோதி ஜி: நான் விமானத்தில பயணம் செஞ்சிட்டு இருப்பேன்.
லதா ஜீ: சரி.
மோதி ஜி: அதனால நான் என்ன நினைச்சேன்னா முன்னமேயே…
லதா ஜீ: ஓ சரி சரி.
மோதி ஜி: உங்க பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்க நினைச்சேன், முதல் வாழ்த்துக்கள் என்னோடது தான். நீங்க ஆரோக்கியமா இருக்கணும், உங்க ஆசிகளால நாங்க எல்லாரும் நல்லா இருக்கணும், இது தான் நான் உங்க கிட்ட வைக்கற வேண்டுதல், உங்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிச்சுக்கத் தான், நான் அமெரிக்கா போகறதுக்கு முன்னாடி உங்களுக்குப் ஃபோன் செஞ்சேன்.
லதா ஜீ: உங்க ஃபோன் வரும்னு நான் கேட்டதிலிருந்தே ரொம்ப சந்தோஷமாயிட்டேன், காத்துக்கிட்டு இருந்தேன். சரி, நீங்க எப்ப திரும்பி வருவீங்க.
மோதி ஜீ: சொல்லப்போனா நான் 28ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, இல்லை 29 காலையில தான் வருவேன், ஆனா அதுக்குள்ள உங்க பிறந்த நாள் கடந்து போயிருக்குமே!!
லதா ஜீ: ஓ ஆமாம் ஆமா. என்ன பெரிசா பிறந்த நாளைக் கொண்டாடப் போறேன், எல்லாம் வீட்டுல இருக்கறவங்க தான்…..
மோதி ஜி: தீதி ஒரு வேண்டுதல்…
லதா ஜீ: உங்க ஆசிகள் வேணும்.
மோதிஜி: அட, உங்க ஆசிகளை நாங்க வேண்டறோம், நீங்க என்னடான்னா…… நீங்க எங்க எல்லாரையும் விடப் பெரியவங்க.
லதா ஜீ: வயதில ரொம்ப பெரியவங்க சிலர் இருப்பாங்க, ஆனா யாரு தாங்கள் செய்யற வேலையில மகத்தானவங்களா இருக்காங்களோ, அவங்களோட ஆசிகள் கிடைக்கறது தான் பெரிய விஷயம்.
மோதி ஜி: தீதி, நீங்க வயதிலயும் மூத்தவங்க, பணியிலயும் மூத்தவங்க. நீங்க செய்திருக்கற சாதனை, இதெல்லாம் இடைவிடாத சாதகத்தாலயும், தவம் காரணமாகவும் அடைஞ்சிருக்கீங்க.
லதா ஜீ: ஐயா, நான் இதெல்லாம் என் பெற்றோரோட ஆசிகளால தான்னு நம்பறேன், மேலும் என் பாட்டைக் கேட்கறவங்களோட ஆசிகளும் கூடத் தான். நான் ஒண்ணுமே கிடையாதுங்க.
மோதி ஜி: தீதி, இது தான் உங்களோட பணிவு. நம்ம புதிய தலைமுறையைச் சேர்ந்தவங்க மட்டுமில்லாம, எங்க எல்லாருக்குமே இது ஒரு பெரிய கற்றல் அனுபவம், நீங்க எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய கருத்தூக்கமா விளங்கறீங்க, உங்க வாழ்க்கையில இத்தனை சாதனைகளை நீங்க நிகழ்த்திய பிறகும் கூட, நீங்க எப்பவுமே உங்க பெற்றோருடைய வளர்ப்புக்கும், பணிவான நடத்தைக்குமே முதன்மை அளிச்சு வந்திருக்கீங்க.
லதா ஜி: ஆமாம்.
மோதி ஜீ: உங்க அம்மா குஜராத்திக்காரங்கன்னு நீங்க பெருமிதம் பொங்க சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
லதா ஜீ: ஆமாம்.
மோதி ஜீ: நான் எப்ப எல்லாம் உங்களைப் பார்க்க வந்திருக்கேனோ
லதா ஜீ: ஆமாம்
மோதி ஜீ: நீங்க ஏதாவது ஒரு குஜராத்தி உணவுப்பொருளை உண்ணக் கொடுத்திருக்கீங்க.
லதா ஜீ: ஆமாம். நீங்க யாருங்கறது உங்களுக்கே தெரியாது. நீங்க வந்த பிறகு பாரத நாட்டோட திருவுருவம் மாறிவருதுங்கறது எனக்குத் தெரியும், இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளிக்குது. எனக்கு இந்த உணர்வு ரொம்ப அருமையா இருக்கு.
மோதி ஜி: நன்றி தீதி, உங்க ஆசிகள் என்னைக்கும் எனக்குக் கிடைக்கணும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் உங்க ஆசிகள் கிடைச்சுக்கிட்டே இருக்கணும், எங்களை மாதிரி ஆளுங்க ஏதாவது நல்லது செய்துக்கிட்டே இருக்கணும், இதுக்கான உத்வேகம் அளிக்கறவங்களா நீங்க என்னைக்கும் இருந்து வந்திருக்கீங்க. நீங்க எழுதற கடிதங்கள் எனக்குத் தொடர்ந்து கிடைச்சிட்டு இருக்கு, உங்களை சந்திக்கறதுக்கான பேறும் எனக்கு கிடைச்சு வந்திட்டு இருக்கு. என்னை உங்களோட சொந்தமா நினைக்கற ஒரு குடும்பப்பாங்கான உறவு, எனக்கு சிறப்பான ஆனந்தத்தை அளிக்குது.
லதா ஜீ: சரி சரி. நிஜமா நான் உங்களுக்கு எந்த சிரமமும் கொடுக்க விரும்பலை. ஏன்னா, நீங்க எத்தனை சுறுசுறுப்பா இயங்கறீங்க, உங்களுக்கு எத்தனை வேலை இருக்குன்னு எல்லாம் நான் பார்க்கவும் செய்யறேன், எனக்கும் தெரியும். நீங்க உங்க தாயாரோட பாதங்களைத் தொட்டு ஆசிகளைப் பெறுவதைப் பார்த்துட்டு, நானும் ஒருத்தரை அவங்க கிட்ட அனுப்பி அவங்க ஆசிகளைப் பெற்றேன்.
மோதி ஜீ: ஆமாம், எங்கம்மாவுக்கு நினைப்பு இருந்திச்சு, அவங்க என் கிட்ட சொன்னாங்க.
லதா ஜீ: சரி.
மோதி ஜீ: ஆமாம்.
லதா ஜீ: மேலும் டெலிஃபோன்ல அவங்க எனக்கு ஆசியளிச்சாங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.
மோதி ஜீ: உங்க அன்பு காரணமா, எங்கம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க.
லதா ஜீ: ஓஹோ, அப்படியா?
மோதி ஜீ: என் மேல நீங்க தொடர்ந்து காட்டி வந்திருக்கற அக்கறைக்கு நான் என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். மறுபடி ஒருமுறை உங்களுக்கு என் அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
லதா ஜீ: சரி.
மோதி ஜீ: இந்தமுறை மும்பை வந்த போது, உங்களை சந்திச்சுப் பேச நினைச்சேன்.
லதா ஜீ: ஆஹா, வந்திருக்கலாமே!!
மோதி ஜீ: ஆனா நேரம் ரொம்ப குறைவா இருந்த காரணத்தால என்னால வர முடியலை.
லதா ஜீ: ஓஹோ, சரி.
மோதி ஜீ: ஆனா நான் சீக்கிரமாவே வருவேன்.
லதா ஜீ: அவசியம் வாங்க.
மோதி ஜீ: நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க கையால சில குஜராத்தி உணவுகளை கண்டிப்பா சாப்பிடுவேன்.
லதா ஜீ: ஆஹா, கண்டிப்பா, கண்டிப்பா, அது எனக்குப் பெரிய பாக்கியம்.
மோதி ஜீ: வணக்கம் சகோதரி.
லதா ஜீ: வணக்கம்.
மோதி ஜீ: பலப்பல நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
லதா ஜீ: பலப்பல நல்வணக்கங்கள். நன்றி.
மோதி ஜீ: வணக்கம் சகோதரி.
லதா தீதியுடனான இந்த உரையாடல் உண்மையிலேயே என் மனதுக்கு மிகுந்த ஆசுவாசத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது நண்பர்களே.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நவராத்திரியுடன் கூட, இன்றிலிருந்து, பண்டிகளைகளின் காலம் ஆரம்பமாகி விட்டது, புதிய உற்சாகம், புதிய சக்தி, புதிய உவகை, புதிய தீர்மானங்கள் எல்லாம் நிரம்பி வழியும். பண்டிகைக்காலம் இல்லையா!! இனிவரும் பல வாரங்களுக்கு நாடு முழுவதிலும் பண்டிகளைகளின் பளபளப்பு ஒளிகூட்டும். நாமனைவரும் நவராத்திரி மஹோத்சவம், கர்பா, துர்க்கா பூஜா, தஸரா, தீபாவளி, பையா தூஜ், சட்பூஜை என எண்ணிலடங்கா பண்டிகைகளைக் கொண்டாடுவோம். உங்களனைவருக்கும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். பண்டிகைகளின் போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைவார்கள். வீட்டில் சந்தோஷங்கள் நிரம்பியிருக்கும், ஆனால் நம்மைச் சுற்றியும்கூட சிலர், இந்தப் பண்டிகைகளின் சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் துக்கத்திலும் ஏக்கத்திலும் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். விளக்கு நாலாபுறத்துக்கும் ஒளியளித்தாலும், அதன் அடியில் இருள் இருக்கும் இல்லையா!! இது நமக்கெல்லாம் ஒரு செய்தி, ஒரு தத்துவம், ஒரு கருத்தூக்கம். சிந்தியுங்கள், ஒருபுறம், சில வீடுகளில் விளக்கு வெள்ளம்….. மறுபுறம் இருள் எங்கும் பரவிக் கிடக்கிறது. சில இல்லங்களில் உண்பவர் இல்லாமல் இனிப்புகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன, சில இல்லங்களில், தங்களுக்கு இனிப்புகள் உண்ணக் கிடைக்காதா என்று ஏங்கும் நெஞ்சங்கள். சில வீடுகளிலோ துணிகளை வைக்க அலமாரிகளில் இடமே போதாமல் இருக்கிறது, மறுபுறமோ, உடலை மூடுவதற்கே கூட சிரமப்பட வேண்டிய சூழல். இது தானே விளக்கினடியில் இருக்கும் இருள்!! இந்தப் பண்டிகைகளின் ஆனந்தத்தை நாம் எப்போது உண்மையாக அனுபவிப்போம் என்று சொன்னால், இந்த இருள் நீக்கப்படும் போதும், அங்கே ஒளி பரவும் போது மட்டும் தான். எங்கெல்லாம் சந்தோஷங்கள் இல்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் நாம் சந்தோஷங்களை நிரப்ப வேண்டும், இதுவே நமது இயல்பாக மாற வேண்டும். நமது வீடுகளிலே, இனிப்புக்களை, துணிமணிகளை, பரிசுப்பொருட்களைப் பெறுகிறோம் இல்லையா, அப்போது அவற்றை அளித்தல் பற்றியும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். குறைந்தபட்சம் நம்முடைய வீடுகளில் எது மிகையாக இருக்கிறதோ, எதை நாம் பயன்படுத்துவதில்லையோ, அப்படிப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு அளிக்கலாமே!! பல நகரங்களில், பல அரசுசாரா அமைப்புகள், இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் மக்களின் வீடுகளில் இருக்கும் துணிமணிகள், இனிப்புகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, தேவையானவர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள், எந்த விளம்பரமும் இல்லாமல் இதைச் செய்கிறார்கள். இந்தமுறை, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், முழுமையான விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், விளக்கினடியில் இருக்கும் இருளை நாம் விரட்டுவோமா? பல ஏழைக் குடும்பங்களின் முகங்களில் உதிக்கும் புன்னகை, பண்டிகைக்காலங்களில் உங்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும், உங்களின் முகம், மேலும் பிரகாசமாகும், நீங்கள் ஏற்றும் விளக்கும் மேலும் ஒளியேற்றும், உங்கள் தீபாவளி, மேலும் ஒளிமயமானதாக ஆகும்.
எனக்குப் பிரியமான என் சகோதர சகோதரிகளே, தீபாவளியன்று, பல பேறுகளும், நிறைவான வாழ்க்கையும் அளிக்கும் வகையில் வீட்டிலே திருமகள் வரவேற்கப்படுகிறாள். பாரம்பரியமாக நாம் திருமகளை வரவேற்கிறோம். இந்த முறை நாம் புதிய வழிமுறையில் திருமகளை வரவேற்போமா? நமது கலாச்சாரத்தில், பெண்களை திருமகளின் வடிவமாகப் போற்றி வணங்குகிறோம், ஏனென்றால், பெண் என்பவள் சௌபாக்கியங்கள், நிறைவை அளிப்பவளாகக் கருதப்படுகிறாள். இந்தமுறை நமது சமூகத்தில், நமது கிராமங்களில், நகரங்களில், பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு நாம் ஏற்பாடு செய்யலாமா? பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். தங்கள் கடும் உழைப்பாலும் முனைப்பாலும் சாதனைகள் பல படைத்த பெண்கள் நம்மிடையே, நம் குடும்பங்களிலே, சமூகத்திலே, நாட்டிலே இருப்பார்கள். இந்த தீபாவளியின் போது பாரதத்தின் இந்தத் திருமகள்களுக்கு கௌரவமும், மதிப்பும் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்யலாம் இல்லையா? பல அசாதாரணமான வேலைகளைச் செய்த பெண்கள் நம்மிடையே இருக்கலாம். ஒருவர் தூய்மை மற்றும் உடல்நலத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைந்திருக்கலாம், சிலர் மருத்துவராக, பொறியாளராக, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் என ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபட்டிருக்கலாம். வழக்குரைஞராக, நியாயத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் முயற்சி செய்து கொண்டிருக்கலாம். நம்முடைய சமூகம் அப்படிப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நாடுமுழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும் – இந்தப் பெண்களின் சாதனைகள் பற்றி, சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்தல்கள் அமைய வேண்டும், ஹேஷ்டேக் # பயன்படுத்தி #bharatkilaxmi என்று பகிரலாமே!! எப்படி நாமெல்லாரும் இணைந்து மகளுடனான ஒரு செல்ஃபி என்ற இயக்கத்தை உலகம் முழுவதிலும் இயக்கினோமோ, அதே போல பாரத் கீ லக்ஷ்மீ என்ற இயக்கத்தை முடுக்கி விடுவோம். பாரத நாட்டின் திருமகளுக்கு ஊக்கம் அளிப்பது என்பதன் பொருள் என்னவென்றால், நாடு, நாட்டுமக்கள் ஆகியோரது நிறைவான வாழ்க்கையை உறுதி செய்வது என்பது தான்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் பற்றி நான் முன்னமேயே கூறியிருந்தேன், இதனால் மிகப்பெரிய ஆதாயம், தெரிந்த தெரியாத பலருடன் உரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது என்பது தான். கடந்த நாட்களில், தொலைவான அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாணவரான அலீனா தாயங்க் என்பவர் சுவாரசியமான கடிதம் ஒன்றை எனக்கு எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தையே நான் படித்து விடுகிறேனே, மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே,
என்னுடைய பெயர் அலீனா தாயங்க். நான் அருணாச்சல் பிரதேசத்தின் ரோயிங்க் பகுதியைச் சேர்ந்தவன். இந்தமுறை என்னுடைய தேர்வு முடிவுகள் வந்த போது, நீ எக்ஸாம் வாரியர்கள் புத்தகம் படித்திருக்கிறாயா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் அந்தப் புத்தகத்தைப் படித்ததில்லையே என்று கூறினேன். ஆனால் வீடு திரும்பிய பின்னர், நான் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன், அதை 2-3 முறைகள் திரும்பத் திரும்பப் படித்தேன். இதன் பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவம் மிக இனிமையானதாக இருந்தது. இதே புத்தகத்தை மட்டும் நான் தேர்வு எழுதும் முன்பு படித்திருந்தேன் என்று சொன்னால், மேலும் அதிக ஆதாயங்கள் எனக்குக் கிடைத்திருக்குமே என்று நான் உணர்ந்தேன். இந்தப் புத்தகத்தில் காணப்படும் பல விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, ஆனால் மாணவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் பல விஷயங்கள் இருந்தாலும், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்தப் புத்தகத்தில் அதிகமாக ஏதும் இல்லை என்பதையும் என்னால் காண முடிந்தது. இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பு வரும் போது, அதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பாகவும் சில உத்திகள், கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை கண்டிப்பாக இதில் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பாருங்கள், என்னுடைய இளைய நண்பர்கள், நாட்டின் முதன்மை சேவகனிடம் ஒரு வேலையைச் சொல்லி விட்டால், அது கண்டிப்பாக நடந்தேறி விடும் என்று எத்தனை நம்பிக்கையோடு இருக்கிறார்கள் பாருங்கள்!!
என்னுடைய பாலக மாணவச் செல்வங்களே, கடிதம் எழுதியதற்காக என் முதன்மையான நன்றிகள். எக்ஸாம் வாரியர்ஸை 2-3 முறை படித்தமைக்காகவும் என் நன்றிகள். மேலும் படிக்கும் வேளையில் அதில் இருக்கும் குறைகளை என்னிடம் தெரிவித்தமைக்கு பலப்பல நன்றிகள்; கூடவே என்னுடைய இந்த பாலக நண்பர் இப்போது எனக்கு புதிய ஒரு பணியை இட்டிருக்கிறார். ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறார். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன். நீங்கள் கூறியவற்றை, புதிய பதிப்பு வரும் நேரத்தில் எனக்கு சேர்ப்பு செய்ய நேரம் இருந்தால், கண்டிப்பாகச் செய்வேன். அதில் பெற்றோருக்காக, ஆசிரியர்களுக்காக செய்திகளைத் தெரிவிக்க முயல்கிறேன். ஆனால் இதில் எனக்கு உதவ வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தினப்படி வாழ்க்கையில் உங்கள் அனுபவம் என்னவாக இருக்கிறது? நாட்டின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அழுத்தமில்லாத தேர்வுகளோடு இணைந்த விஷங்கள் குறித்து உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் ஆலோசனைகளைத் தெரிவியுங்கள். கண்டிப்பாக நான் அவற்றை ஆராய்கிறேன், அவற்றில் என் சிந்தனையைச் செலுத்துகிறேன், எது எனக்குச் சரியெனப் படுகிறதோ, அதை என்னுடைய சொற்களில், என் பாணியில் எழுத முயல்வேன், முடிந்தால், உங்கள் ஆலோசனைகள் அதிகம் வந்தால், எனது புதிய பதிப்பும் உறுதியாகி விடும். உங்கள் கருத்துக்களுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அருணாச்சலைச் சேர்ந்த நமது இளைய நண்பர், மாணவரான அலீனா தாயங்கிற்கு மீண்டும் ஒருமுறை நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நீங்கள் செய்தித்தாள்கள் வாயிலாக, டிவி வாயிலாக, நாட்டின் பிரதம மந்திரியின் இடைவிடாத நிகழ்ச்சிகள் பற்றி அறிந்திருப்பீர்கள், ஓய்வு ஒழிச்சல் இல்லாத நிலை பற்றியும் விவாதமும் செய்கிறீர்கள். ஆனால், நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தான் என்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயம் தானே!! ஒரு சாதாரண குடிமகனின் சாதாரணமான வாழ்க்கையில் என்னவெல்லாம் விஷயங்கள் தாக்கத்தை ஏறப்டுத்துகின்றனவோ, அவை அனைத்தும் என்னுடைய வாழ்க்கையிலும் ஏற்படுத்துகின்றன, ஏனென்றால் நானும் உங்களிடமிருந்து வந்தவன் தானே!! இந்த முறை அமெரிக்க ஓப்பன் போட்டியில், வெற்றி பற்றி எத்தனை பேசப்பட்டதோ, அந்த அளவுக்கு இறுதிப் போட்டியில் இரண்டாவதாக வந்த மெட்வெடெவின் உரை பற்றியும் சிலாகித்துப் பேசப்பட்ட்து. சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் உரையை நானும் கேட்டேன், பிறகு ஆட்டத்தைப் பார்த்தேன். 23 ஆண்டுகளே ஆன டேனில் மெட்வெடெவின் எளிமையும் அவரது பக்குவமும், அனைவரையும் ஆட்கொள்ளக்கூடியவையாக இருந்தன. கண்டிப்பாக அவரால் நான் கவரப்பட்டேன். 19 முறை க்ராண்ட் ஸ்லாம் வென்ற, டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் ரஃபேல் நடாலிடம் தோற்ற சில நிமிடங்களிலேயே இந்த உரை ஆற்றப்பட்டது. இந்த வேளையில் வேறு ஒருவராக இருந்திருந்தால், அவர் வருத்தமும், ஏமாற்றமும் கொண்டவராக இருந்திருப்பார், ஆனால், இவரது முகத்தில் எந்த வாட்டமும் இல்லை, மாறாக, தனது சொற்கள் வாயிலாக அனைவரின் சிந்தையிலும் வதனத்திலும் புன்னகையை ஏற்படுத்தினார். அவருடைய பணிவு, எளிமை, விளையாட்டு வீர்ர்களுக்கே உரித்தான தோல்வியையும் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் மெய்யான உணர்வு ஆகியவற்றைப் பார்த்த போது, அனைவரும் கவரப்பட்டார்கள். அவரது பேச்சினை அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் பெரிய அளவில் வரவேற்றார்கள். டேனில் வெற்றி பெற்ற நாடாலை வாய்நிறையப் பாராட்டினார். எப்படி நாடால் இலட்சக்கணக்கான இளைஞர்களை டென்னிஸ் விளையாட்டின் பால் ஈர்த்திருக்கிறார் என்று பாராட்டினார். கூடவே அவருக்கு எதிராக விளையாடுவது எத்தனை கடினமான காரியம் என்பதையும் தெரிவித்தார். கடும் மோதலில் தோல்விக்குப் பிறகு, அவர் தனது போட்டியாளர் நாடாலைப் பாராட்டியது, அவரது sportsman spiritக்கான வாழும் உதாரணமாக விளங்குகிறது. ஆனால் மற்றொரு புறத்தில் சேம்பியனான நாடாலும் கூட, டேனிலின் விளையாட்டு பற்றி மனம் திறந்து பாராட்டினார். ஒரே ஒரு ஆட்டத்தில், தோற்றவரின் உற்சாகம், வெற்றி பெற்றவரின் விநயம் ஆகியன மனதைக் கொள்ளை கொண்டன. நீங்கள் டேனில் மெட்வெடெவின் உரையை இதுவரை கேட்கவில்லை என்று சொன்னால், குறிப்பாக இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து சென்று பாருங்கள், கேளுங்கள். இதில் அனைத்துத் தரப்பினருக்கும், அனைத்து வயதினருக்கும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்தக் கணங்கள் வெற்றி தோல்வி ஆகியவற்றைத் தாண்டியதாக இருக்கின்றன. இந்த நிலையில் வெற்றி தோல்வி என்பவற்றுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை. வாழ்க்கை வெற்றி பெறுகிறது, மேலும் நமது சாத்திரங்கள் மிகச் சிறப்பான வகையில் இந்த விஷயத்தை நமக்கெல்லாம் தெரிவிக்கின்றன. நமது முன்னோர்களின் எண்ணம் உண்மையிலேயே எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. நமது சாத்திரங்கள் என்ன கூறியிருக்கின்றன என்றால் –
வித்யா வினய உபேதா ஹரதி
ந சேதாம்ஸி கஸ்ய மனுஜஸ்ய.
மணி காஞ்சன சம்யோக:
ஜனயதி லோகஸ்ய லோசன ஆனந்தம்
विद्या विनय उपेता हरति
न चेतांसी कस्य मनुज्स्य |
मणि कांचन संयोग:
जनयति लोकस्य लोचन आनन्दम
அதாவது ஒரு நபருக்கு தகுதியும் பணிவும் ஒருசேர அமைந்து விடுமானால், அவரால் யாருடைய இதயத்தைத் தான் ஜெயிக்க முடியாது!! உண்மையில், இந்த இளைய விளையாட்டு வீரர் உலக மக்கள் இருதயங்கள் அனைத்தையுமே வென்று விட்டார்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, குறிப்பாக என் இளைய நண்பர்களே, நான் இப்போது கூறவிருக்கும் விஷயம், அது உங்கள் நேரடி நலனுக்காகவே கூறவிருக்கிறேன். வாத விவாதங்கள் எல்லாம் அவை பாட்டுக்கு நடந்து கொண்டு தான் இருக்கும், தரப்பு எதிர்த்தரப்பு வாதங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும், ஆனால் சில விஷயங்கள், நடைபெறும் முன்னரே தடுத்து நிறுத்தி விட்டோமென்று சொன்னால், அதிக பயன்கள் ஏற்படும். எவை அதிகமாகப் பெருகி விடுகின்றனவோ, வளர்ந்து விடுகின்றனவோ, அவற்றைப் பின்னர் தடுப்பது என்பது சிரமசாத்தியமானதாக ஆகி விடும். ஆனால் தொடக்கத்திலேயே நாம் விழிப்போடு இருந்து அவற்றைத் தடுத்து விட்டோம் என்றால், மிகுந்த பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த உணர்வை மனதில் தாங்கி, குறிப்பாக இளைய சமூகத்திடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். புகையிலை தரும் போதை என்பது உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும், அந்தப் பழக்கத்தை ஒழிப்பது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது. புகையிலை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பீடிக்கும் அபாயம் அதிகமாக இருக்கிறது. இப்படித்தான் அனைவருமே கூறுகிறார்கள். புகையிலை தரும் மயக்கமானது, அதில் இருக்கும் நிக்கோட்டின் காரணமாகவே ஏற்படுகிறது. சிறுவயதில் இதைப் பழகுவதனால் மூளை வளர்ச்சியை இது அதிகம் பாதிக்கிறது. ஆனால் இன்று, நான் உங்களிடம் ஒரு புதிய விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்களுக்கே தெரியும், தற்போது இந்தியாவில் ஈ சிகரெட்டின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண சிகரெட்டை விட வேறுபட்ட ஈ சிகரெட் என்பது, ஒரு வகையான மின்னணு கருவி தான். ஈ சிகரெட்டில் நிக்கோட்டின் உள்ள திரவப் பொருளை வெம்மைப் படுத்துவதால், ஒருவகையான வேதியியல் புகை உருவாகிறது. இதன் வாயிலாக நிக்கோட்டின் உட்கொள்ளப்படுகிறது. சாதாரண சிகரெட்டின் அபாயங்கள் பற்றி நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். ஆனால் ஈ சிகரெட் பற்றிய தவறான கருத்து பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஈ சிகரெட்டால் எந்த ஒரு அபாயமும் கிடையாது என்பது தான் அது. மற்ற சிகரெட்டுக்களைப் போல இதில் துர்நாற்றம் இருக்கக் கூடாது என்பதால், இதில் மணம் தரும் ஒரு வேதிப் பொருளைக் கலக்கிறார்கள். ஒரு வீட்டில் தகப்பனார் தொடர்ந்து புகைப்பவர் என்றால், அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களை புகைப்பிடிக்காது இருக்க விரட்டுவார் என்பதை நமது அக்கம்பக்கத்தில் நாம் பார்த்திருக்கலாம், தனது பிள்ளைகளுக்கும் தன்னைப் போன்ற புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர் விரும்புவார். குடும்பத்தில் யாரும் புகைபிடிக்கக் கூடாது என்பதே அவரது முயற்சியாக இருக்கும். ஏனென்றால் புகை பிடிப்பதாலும், புகையிலைப் பயன்பாட்டாலும், உடலுக்கு எத்தனை கேடு ஏற்படும் என்பதை அவர் நன்கறிவார். சிகரெட் ஏற்படுத்தும் கேடு பற்றி யாருக்கும் எந்த ஐயமும் கிடையாது. இதனால் கேடு மட்டுமே விளையும். இதை விற்பவருக்கும் இது தெரியும். பிடிப்பவரும் தெரிந்தே புகைக்கிறார், இதனைப் பாரப்பவருக்கும் இது நன்கு தெரியும். ஆனால் ஈ சிகரெட் விஷயம் இப்படியல்ல. ஈ சிகரெட் பற்றி மக்களிடம் இத்தனை விழிப்புணர்வு கிடையாது. அவர்களுக்கு இதன் ஆபத்து பற்றி முழுமையாகத் தெரியாது, இதன் காரணமாக சில வேளைகளில் குதூகலமாக ஈ சிகரெட் என்பது அமைதியாக வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது. ஏதோ மாயாஜாலம் காண்பிக்கிறேன் என்ற வகையில் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் புகைத்துக் காண்பிக்கிறார்கள். குடும்பத்தில் பெற்றோருக்கு முன்பாக நான் ஒரு மேஜிக் செய்கிறேன் பாருங்கள், புகை வரும் என்று காட்டுகிறார்கள். நெருப்பே ஏற்றாமல், தீக்குச்சியைப் பற்ற வைக்காமல் எப்படி புகையை வரவழைக்கிறேன் பார்த்தீர்களா என்று காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் குடும்பத்தாரும் விளைவோ, வினையோ தெரியாமல் கைதட்டுகிறார்கள். ஒருமுறை வீட்டில் இருக்கும் சிறுவர்கள், குழந்தைகள் இந்த மாயவலையில் சிக்கி விட்டார்கள் என்றால், மெல்ல மெல்ல இந்த போதைக்கு அவர்கள் நிரந்தர அடிமைகள் தாம். அவர்கள் இந்த மோசமான பழக்கத்துக்கு இரையாகி விடுகிறார்கள். நமது இளைய சமுதாயத்தினரின் பொன்னான இளமை அழிவுப் பாதையை நோக்கிச் செல்லத் தொடங்கும். அறியாமலேயே இது நடக்கும். உண்மையில் ஈ சிகரெட்டில் பல கேடு உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கின்றன, இவை காரணமாக உடல்நலத்துக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் யாராவது புகைபிடித்தால், அதன் நாற்றமே நமக்குக் காட்டிக் கொடுத்து விடும். அவரது பாக்கெட்டில் சிகரெட் இருந்தாலும் கூட வாடை அடையாளம் காட்டிக் கொடுக்கும். ஆனால் ஈ சிகரெட் விஷயத்தில் இப்படி ஏதும் கிடையாது. ஆகையினால் பல சிறுவர்கள், இளைஞர்கள், தெரிந்தோ தெரியாமலோ, சில வேளைகளில் இதை ஒரு ஃபேஷன் என்று நினைத்து, பெரிய பெருமிதமாக நினைத்துக் கொண்டு, தங்கள் புத்தகங்களுக்கு இடையிலே, தங்கள் அலுவலகங்களிலே, தங்கள் பாக்கெட்டுக்களிலே, வைத்துக் கொண்டு திரிவதை நாம் பார்க்கலாம், அவர்கள் இதற்கு இரையாகி விடுகிறார்கள். இளைய சமுதாயத்தினர் நாட்டின் எதிர்காலம். ஈ சிகரெட்டின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஏனென்றால் இந்தப் புதியவகை போதைப் பழக்கமானது நம் நாட்டின் இளைய சமூகத்தினரை அழிக்கக் கூடாது என்பதற்காகத் தான். ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் இது காலில் போட்டு மிதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். குழந்தைகளின் எதிர்காலம் நாசமாகி விடக்கூடாது என்பதற்காகத் தான். இந்த நோய், இந்தப் பழக்கம், சமுதாயத்திலிருந்து அடியோடு களையப்பட வேண்டும்.
புகையிலைப் பழக்கத்தை விட்டொழியுங்கள், ஈ சிகரெட் தொடர்பான எந்த ஒரு தவறான கருத்தையும் மனதிலே கொள்ளாதீர்கள். வாருங்கள், நாமனைவருமாக இணைந்து ஒரு ஆரோக்கியமான பாரதம் படைப்போம்.
ஆம், உங்களுக்கு ஃபிட் இண்டியா பற்றி நினைவிருக்கிறது இல்லையா. ஃபிட் இண்டியா என்பதன் பொருள், ஏதோ காலை மாலை இரண்டு மணி நேரம் ஜிம் சென்று பயிற்சி மேற்கொண்டால் போதும் என்பது கிடையாது. இவை போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதும் அவசியம். நான் கூறுவதை நீங்கள் கசப்பாக உணர மாட்டீர்கள், கண்டிப்பாக நன்றாகவே உங்களுக்கு இது படும் என்று நான் நம்புகிறேன்.
எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, தங்களுக்காக வாழாமல் மற்றவர்களின் நலன்கள் பொருட்டு தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த அசாதாரண மனிதர்களுக்கு நம்முடைய பாரத நாடு பிறந்த நாடாகவும், சேவைக்கான களமாகவும் அமைந்து வந்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெரும் பாக்கியமான விஷயம்.
நமது இந்த பாரத அன்னை, இந்த தாய்த்திருநாடு ஏராளமான ரத்தினங்களைத் தன்வசம் கொண்டது. மனிதகுல மாணிக்கங்கள் பலர் இந்த மண்ணிலிருந்து தான் தோன்றினார்கள். இவர்கள் எல்லாம் தங்களுக்காக வாழாமல், மற்றவர்களுக்காக தங்களையே அர்ப்பணிப்பு செய்தவர்கள். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரைத் தான் அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று வேடிகன் நகரில் கௌரவிக்க இருக்கிறார்கள். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம். போப்பாண்டவர் ஃப்ரான்ஸிஸ் வரவிருக்கும் அக்டோபர் 13ஆம் தேதியன்று மரியம் த்ரேஸியாவை புனிதர் என்று அறிவிக்க இருக்கிறார். சிஸ்டர் மரியம் த்ரேஸியா 50 ஆண்டுக்கால தனது குறைந்த வாழ்நாளில், மனித சமூகத்தின் நலன் பொருட்டு செய்த செயல்கள், ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு எடுத்துக்காட்டு. சமூக சேவை மற்றும் கல்வித்துறையில் அவருக்கு சிறப்பான ஈடுபாடு இருந்தது. அவர் பல பள்ளிகள், தங்கும் இல்லங்கள் மற்றும் அநாதை இல்லங்களை ஏற்படுத்தினார், தனது ஆயுள் முழுவதும் இந்த நோக்கத்துக்காகவே வாழ்ந்தார். சிஸ்டர் த்ரேஸியா செய்த பணிகள் அனைத்தையுமே அதே முனைப்போடு, ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவு செய்தார். அவர் Congregation of the Sisters of the Holy Family என்ற அமைப்பை நிறுவினார். இது இன்றும்கூட, அவரது வாழ்க்கையையும் நோக்கத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. நான் மீண்டும் ஒருமுரை சிஸ்டர் மரியம் த்ரேஸியாவுக்கு என் ச்ரத்தாஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன். மேலும் பாரதநாட்டு மக்களுக்கு, குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு, இந்த சாதனைக்காக பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, பாரதம் மட்டுமல்ல இன்று உலகம் முழுவதற்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று நாம் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, 130 கோடி நாட்டுமக்கள் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியும் நெகிழியிலிருந்து விடுதலை அடைய உறுதி பூண்டிருக்கிறார்கள் என்பது தான். சூழல் பாதுகாப்புத் திசையில், பாரதம் உலகம் முழுவதற்கும் ஒருவகையில் தலைமை தாங்கி வருகிறது. இதைப் பார்த்து இன்று அனைத்து நாடுகளின் பார்வையும் பாரதம் மீது பதிந்திருக்கிறது. நீங்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை ஒரே முறை பயன்படுத்தும் நெகிழியிலிருந்து விடுப்பு அளிக்கும் இயக்கத்தில் பங்கு பெறுவீர்கள் என்ற நம்பிக்கை முழுமையாக எனக்கு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் தங்களுக்கே உரிய பிரத்யேக வழிமுறைகளில் இந்த இயக்கத்துக்குத் தங்களாலான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். ஆனால் நமது நாட்டின் இளைஞர் ஒருவர் மிகவும் விநோதமான இயக்கத்தை நடத்தி இருக்கிறார். அவரின் இந்தப் பணியின் பால் என் கவனம் சென்ற போது, நான் அவருக்கு ஃபோன் செய்து அவரின் இந்தப் புதிய பரிசோதனை பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன். ஒருவேளை அவரது இந்த முயற்சியால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே!! ரிபுதமன் பேல்வீ அவர்கள் ஒரு விநோதமான முயற்சியில் ஈடுபட்டார். இவர் plogging செய்கிறார். முதன்முறையாக நான் plogging என்ற இந்தச் சொல்லைக் கேள்விப்பட்ட போது, எனக்கு இது புதிதாகப் பட்டது. ஒருவேளை அயல்நாடுகளில் இந்தச் சொல் அதிகப் பயன்பாட்டில் இருக்கலாம். ஆனால் பாரதத்தில் ரிபுதமன் பேல்வீ அவர்கள் தாம் இதை அதிகம் பரப்பி வருகிறார். அவரிடமே பேசிப் பார்ப்போமே!!
ஹெலோ ரிபுதமன் அவர்களே, வணக்கம், நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.
ஆமாம் சார் சொல்லுங்க, ரொம்ப ரொம்ப நன்றி.
ரிபுதமன் அவர்களே, நீங்க இந்த plogging தொடர்பா ரொம்பவே அர்ப்பணிப்போட செயல்பட்டுக்கிட்டு வர்றீங்களே,
ஆமாம் சார்.
இது என்ன அப்படீங்கற விவரம் பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான் நான் ஃபோன் செஞ்சிருக்கேன்.
ஓகே சார்.
இந்தக் கற்பனை உங்களுக்கு எப்படி உதிச்சுது? மேலும் இந்தச் சொல், இந்த வழிமுறை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
சார், இளைஞர்களுக்கு இன்னைக்கு கொஞ்சம் cool வேணும். கொஞ்சம் சுவாரசியமா இருக்கணும், அவங்களுக்கு உத்வேகம் அளிக்க கூடிய வகையில இருக்கணும். அப்படி 130 கோடி நாட்டுமக்களையும் என்னோட இந்த முனைப்போட இணைக்கணும்னு சொன்னா, நான் சுவாரசியமான ஒண்ணை செஞ்சாகணும். நானே ஒரு ஓட்டப்பந்தய வீரன், காலையில ஓடிப் பழகும் போது, போக்குவரத்து நெரிசல் குறைவா இருக்கும், மனிதர்கள் குறைவா இருப்பாங்க, குப்பையும் நெகிழியும் அப்ப ஏராளமா தென்படும். ஐயோ இப்படி இருக்கேன்னு ஒப்பாரி வைக்காம, இது தொடர்பா ஆக்கப்பூர்வமா எதையாவது செய்யணுங்கறதுக்காக, நான் எங்க ஓட்டம் தொடர்பான குழுவோட இந்த இயக்கத்தை தில்லியைச் சுற்றியிருக்கற பகுதியில முன்னெடுத்துப் போன பிறகு, நாடு முழுவதுக்கும் இதைக் கொண்டு போனேன். ஒவ்வொரு இடத்திலயும் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சுது…..
சரி தான், அப்படியா. நீங்க என்ன செஞ்சீங்க? கொஞ்சம் விளக்குங்க, ஏன்னா இதை மனதின் குரல் வாயிலாக, நாட்டுமக்கள் கிட்ட கொண்டு போக முடியும்.
கண்டிப்பா சார், ஆகையால நாங்க Run and Clean up, அதாவது ஓடுவோம் சுத்தம் செய்வோம் அப்படீங்கற இயக்கத்தை ஆரம்பிச்சோம். அதாவது ஓடும் பழக்கம் இருக்கற குழுக்கள் அவங்க உடற்பயிற்சி செய்த பிறகு, அவங்களோட ஓய்வு செயல்பாடா என்ன சொன்னோம்னா, நீங்க குப்பைகளை அகற்ற ஆரம்பிங்க, நெகிழிகளை அகற்ற ஆரம்பிங்க, அதாவது நீங்க ஓடவும் செய்யறீங்க, குப்பையை அகற்றவும் செய்யறீங்க, திடீர்னு இதில நிறைய உடற்பயிற்சியும் சேர்ந்திருது. நீங்க வெறுமனே ஓட மட்டும் செய்யலை, உட்கார்றீங்க, குனியறீங்க, தாவறீங்க, எட்டி எடுக்கறீங்க, இப்படி முழுமையான உடற்பயிற்சி செய்ய நேருது. மேலும் கடந்த ஆண்டு நிறைய உடலுறுதி பத்திரிக்கைகள்ல, இந்தியாவோட தலைசிறந்த ஃபிட்னஸ் போக்கு அப்படீங்கற வகையில இதைத் தேர்ந்தெடுத்திருக்காங்க, இந்த ஜாலியான போக்குக்கு இது ஒரு அங்கீகாரம்.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி சார்.
சரி நீங்க செப்டெம்பர் மாதம் 5ஆம் தேதியன்னைக்கு கொச்சியில தான் ஆரம்பிச்சீங்க இல்லையா!!
ஆமாம் சார், இந்த இலக்கோட பேர் Run to make India litter free, அதாவது ஓடுவோம், ஓடிக்கொண்டே இந்தியாவிலிருந்து குப்பையை அகற்றுவோம். நீங்க எப்படி அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்னைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அளிக்கணும்னு சொல்றீங்களோ, அதே போல குப்பை இல்லாத, நெகிழி இல்லாத நாட்டை ஏற்படுத்தறது நம்ம எல்லாரோட பொறுப்புங்கறதால, நான் 50 நகரங்களை உள்ளடக்கி சுத்தம் செய்துக்கிட்டே ஓடிக்கிட்டு இருக்கேன். பலர் சொன்னாங்க இது தான் உலகத்திலேயே மிகப்பெரிய சுத்தம் செய்யும் முன்னெடுப்பா இருக்கும்னாங்க. மேலும் இதோடு ரொம்ப கூலான சமூக வலைத்தள ஹேஷ்டேகை நாங்க பயன்படுத்தறோம். #PlasticUpvaas. இதன் வாயிலா நாங்க என்ன சொல்ல வர்றோம்னா, ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எந்த ஒரு பொருளை, அது நெகிழியா மட்டுமே இருக்கணும்னு அவசியமில்லை, எந்தப் பொருளை உங்க வாழ்க்கையிலேர்ந்தே நீக்கப் போறீங்கன்னு நீங்க சொல்லுங்கன்னு கேட்டிருக்கோம்.
அருமை, நீங்க செப்டெம்பர் 5ஆம் தேதி கிளம்பிய பிறகு உங்க அனுபவம் எப்படி இருந்திச்சு?
சார், இதுவரை ரொம்ப சிறப்பாவே இருந்திச்சு. கடந்த இரண்டு ஆண்டுக்காலமா நாங்க கிட்டத்தட்ட 300 plogging முனைப்புக்களை நாடு முழுவதிலயும் மேற்கொண்டிருக்கோம். நாங்க கொச்சியிலிருந்து ஆரம்பிச்ச போது, ஓடும் பயிற்சி மேற்கொள்ளும் குழுக்கள் இணைஞ்சாங்க, அங்க உள்ளூர்ல சுத்தப்படுத்தல்கள் நடக்கும், அப்படிப்பட்ட குழுக்களையும் எங்க கூட சேர்த்துக்கிட்டோம். கொச்சியிக்குப் பிறகு மதுரை, கோவை, சேலம்னு நாங்க உடுப்பி போனோம், அங்க ஒரு பள்ளியில எங்களை அழைச்சிருந்தாங்க. சின்னச் சின்னக் குழந்தைகள், மூணாங்கிளாஸ்லேர்ந்து, ஆறாம் கிளாஸ் வரைக்குமான பிள்ளைங்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டரை அளிக்க அழைச்சிருந்தாங்க, அரை மணி நேரப் பட்டரை, 3 மணி நேர plogging driveஆ ஆயிருச்சு. சார், ஏன்னா பசங்க ரொம்ப ஆர்வமாயிட்டாங்க. எந்த அளவுக்குன்னா, அவங்க தங்களோட பெற்றோருக்கும், அயலாருக்கும், சக நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்க்க உற்சாகத்தோட இருந்தாங்க. எங்களுக்கு இது என்ன பெரிய உத்வேகம் அளிச்சுதுன்னா, இதை இனி நாம அடுத்த கட்டம் நோக்கிக் கொண்டு போகணும்ங்கற உணர்வை மனதில ஏற்படுத்திச்சு.
ரிபு அவர்களே, இது உழைப்பில்லை, இது ஒரு சாதனை. உண்மையிலேயே நீங்க ஒரு சாதனையை நிகழ்த்திக்கிட்டு இருக்கீங்க.
நன்றி சார்.
என் தரப்பிலேர்ந்து உங்களுக்கு பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன். ஆனா மூணு விஷயங்களை நாட்டுமக்களுக்கு தெரிவிச்சே ஆகணும்னு சொன்னா, குறிப்பிட்ட அந்த மூணு விஷயங்கள் என்னவா இருக்கும்?
பார்க்கப் போனா நான் மூன்று நிலைகளைப் பத்தி தெரிவிக்க விரும்பறேன். குப்பைகளற்ற இந்தியா, அசுத்தங்களற்ற இந்தியா அப்படீங்கற இலக்கை எட்ட, முதல் படி, குப்பைகளைக் குப்பைத் தொட்டிகள்ல மட்டுமே நாம போடணும். ரெண்டாவது படி, எந்த ஒரு குப்பையும் உங்க கண்ணுல பட்டா, அதை எடுத்து கவனமா குப்பைத் தொட்டியில போடுங்க. மூணாவதா, குப்பைத் தொட்டி கண்ணுல தென்படலைன்னா, உங்க பையில வச்சுக்குங்க, இல்லை உங்க வண்டியில வச்சுக்குங்க, வீட்டுக்குக் கொண்டு வாங்க. உலர்கழிவு – ஈரமான கழிவுங்கற வகையில அதைப் பிரிச்சிருங்க. காலையில நகராட்சி வண்டி வரும் போது, அவங்க கிட்ட இதைக் குடுத்திருங்க. நாம இந்த மூணு படிகளைப் பின்பற்றி நடந்தோம்னா, குப்பைக்கூளங்களற்ற இந்தியாவை நாம கண்குளிரக் காண முடியும்.
பார்த்தீங்களா நண்பர்களே, ரிபு அவர்கள் ரொம்ப எளிமையான சொற்கள்ல, பாமர மக்களுக்கும் புரியற வகையில, ஒருவகையில காந்தியடிகள் காட்டிய வழியில அவங்க கனவுகளைத் தாங்கிப் பயணிச்சுட்டு இருக்காங்க. கூடவே காந்தியடிகளை மாதிரியே எளிமையான சொற்கள் வாயிலா தன் கருத்துக்களையும் முன்வைக்கறாங்க.
ரொம்ப நன்றி சார்.
ஆகையினால தான் நீங்க பாராட்டுக்கு உரியவர். ரிபுதமன் அவர்களே, உங்களோட பேசினது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்திச்சு, நீங்க ரொம்பவே நூதனமான வழிமுறைகளைக் கையாண்டு, அதுவும் குறிப்பா இளைஞர்களுக்குப் பிடித்தமான வகையில, இந்த மொத்த நிகழ்ச்சியையும் வடிவமைச்சிருக்கீங்க. நான் உங்களுக்கு பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
மேலும் நண்பர்களே, இந்த முறை வணக்கத்துக்குரிய அண்ணலோட ஜெயந்தி சந்தர்ப்பத்தில் விளையாட்டுத் துறையும் Fit India Plogging Run என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று 2 கிலோமீட்டர் plogging நாடு முழுக்க நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது, நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் ரிபுதமன் அவர்கள் தன்னுடைய அனுபவம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டார். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தொடங்கும் இந்த இயக்கத்தில் நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றால், நாம் 2 கிலோமீட்டர் வரை நிதான ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, வழியில் கிடக்கும் நெகிழிக் குப்பைகளை சேகரிக்க வேண்டும். இதன் வாயிலாக, நாம் நமது உடல்நலத்தின் மீது மட்டும் அக்கறை செலுத்தவில்லை, பூமித்தாயின் உடல்நலத்தின் மீதும் அக்கறை செலுத்தி அதைப் பாதுகாக்கிறோம். இந்த இயக்கத்தில், மக்கள் உடலுறுதியோடு கூடவே தூய்மை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள். 130 கோடி நாட்டுமக்களும் இந்தத் திசையில் ஒரு அடி எடுத்து வைத்தார்களேயானால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களிலிருந்து விடுதலை அடையும் திசையை நோக்கி பாரதம் 130 கோடி அடிகளை முன்வைத்து முன்னேறும். ரிபுதமன் அவர்களே, மீண்டும் ஒருமுறை, உங்களுக்கு என் பலப்பல நன்றிகள். மேலும் உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும், இப்படிப்பட்ட ஒரு புதிய கற்பனைக்காகவும் என் தரப்பிலிருந்து பலப்பல பாராட்டுக்கள். தேங்க்யூ.
எனம் மனம்நிறை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கான தயாரிப்பு முஸ்தீபுகளில் நாடும் உலகும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, ஆனால், நாம் காந்தியடிகள் 150 என்ற கடமைப் பாதையில் பயணிக்க விரும்புகிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாட்டுநலன் கருதி மாற்றம் ஏற்படுத்தி முன்னேற்ற விரும்புகிறோம். முன்கூட்டியே உங்களுக்கு ஒரு விஷயம் பற்றி நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். அடுத்த மனதின் குரலில் அதைப் பற்றி நான் விரிவாக உரைப்பேன் என்றாலும், இன்று சற்று முன்கூட்டியே இதை ஏன் உரைக்கிறேன் என்றால், நீங்களும் இதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும் இல்லையா? உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும், அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது நம்மனைவரின் கனவு, இதன் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று நாம் நாடு முழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம், Run For Unityயை நடத்துகிறோம். சிறுவர்கள், பெரியோர் என அனைவரும், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கானோர், இந்தியாவின் இலட்சக்கணக்கான கிராமங்களில், அந்த நாளன்று ஒற்றுமைக்காக நாம் ஓட்டத்தில் ஈடுபட வேண்டும். ஆகையினால் நீங்களனைவரும் இப்போதிலிருந்தே ஓடிப் பழகத் தொடங்குங்கள். விரிவான வகையில் பின்னர் நான் உங்களோடு பேசுகிறேன், ஆனால் இப்போது இன்னும் நேரமிருக்கிறது, சிலர் பயிற்சி தொடங்கி விடலாம், சிலர் அதற்கான திட்டமிடலிலும் ஈடுபடலாம்.
எனதருமை நாட்டுமக்களே, உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நான் செங்கோட்டையிலிருந்து பேசியிருந்தேன், 2022ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் ஏதாவது 15 இடங்களுக்காவது நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். குறைந்தபட்சம் 15 இடங்கள், முடிந்தால் ஓரிரவோ, ஈரிரவுகளோ அங்கே தங்கி இருக்கும்படியான நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். நீங்கள் இந்தியாவைப் பாருங்கள், அதைப் புரிந்து கொள்ளுங்கள், அனுபவித்து உணருங்கள். நம்மிடத்தில் எத்தனை பன்முகத்தன்மை இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கே தெரிய வரும். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விடுமுறைகள் வரும் வேளையில், மக்கள் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க கிளம்புகிறார்கள் என்பதால், நான் மீண்டும் ஒருமுறை உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன், தயவு செய்து இந்தியாவில் உள்ள ஏதாவது 15 இடங்களுக்குச் சென்று பாருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நேற்றைய முன்தினம் தான் செப்டம்பர் 27ஆம் தேதியன்று, உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. உலகின் சில பொறுப்புணர்வுமிக்க அமைப்புகள் சுற்றுலா பற்றிய தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன. பயணம் மற்றும் சுற்றுலா போட்டிக் குறியீட்டில் இந்தியா மிகவும் மேம்பாடு அடைந்திருக்கிறது என்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கலாம். மேலும் இவை அனைத்தும் உங்களின் ஒத்துழைப்பு காரணமாக மட்டுமே நடந்தேறியிருக்கிறது. குறிப்பாக சுற்றுலாவின் மகத்துவத்தை நாம் புரிந்து கொண்டதால் தான் இது ஏற்பட்டிருக்கிறது. தூய்மை இயக்கமும் இதிலே தனது பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறது. இந்த மேம்பாட்டின் அளவு என்ன என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளவா? தெரிந்து கொண்டால் நீங்களும் அதிக சந்தோஷப்படுவீர்கள்!! இன்று நமது தரநிலை 34 என்ற நிலையில் இருக்கிறது; இதுவே ஐந்தாண்டுகள் முன்பாக உலக அளவில் 65 என்ற நிலையில் இருந்தது. அதாவது, ஒருவகையில் இது மிகப்பெரிய ஒரு பாய்ச்சலாக அமைந்திருக்கிறது. நாம் மேலும் முயன்றோம் என்று சொன்னால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுக்காலத்தை நாம் நெருங்கும் வேளையில், சுற்றுலாத் துறையில் முக்கிய இடங்களில் ஒன்றை நமக்குரியதாக்கிக் கொள்ள முடியும்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பன்முகத்தன்மை நிறைந்த பாரதத்தில், பலவிதமான பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். ஒரு விஷயம்! இதன் மீதும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். தீபாவளி நாட்களில் பட்டாசுகளைக் கொளுத்தும் வேளைகளில் தெரியாத்தனமாக யாருக்கும் எந்த ஒரு தீங்கும் ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பார்த்து, பக்குவமாக, கவனமாக பட்டாசுகளைக் கொளுத்துங்கள், அப்படி நடந்து கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சந்தோஷம், ஆனந்தம், உற்சாகம் எல்லாம் இருக்க வேண்டும். மேலும் நமது பண்டிகைகள் அனைத்தும் சமூக இயல்பின் மணத்தைக் கொண்டு சேர்க்கின்றன. சமூக வாழ்க்கை என்பது ஒரு புதிய வல்லமையை அளிக்கிறது. அந்தப் புதிய வல்லமையைப் உணர்ந்து பார்க்கும் நல்வாய்ப்பை அளிக்கின்றன பண்டிகைகள். அனைவருமாக இணைந்து, உற்சாகத்தோடு, பூரிப்போடு, புதிய கனவுகள், புதிய தீர்மானம் ஆகியவற்றின் துணையோடு, நமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம், வாருங்கள்!! மீண்டும் ஒருமுறை பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் இப்போது, ஒரு பக்கம் மழையளிக்கும் இன்பத்தை அனுபவித்து வருகிறது. அதே வேளையில், மற்றொரு பக்கம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் உற்சவங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என தீபாவளி வரை அனைத்தும் நடக்கின்றன; எந்த ஒரு சூழ்நிலையிலும், சமூகத்தில் எப்போதும் ஒரு மந்தநிலை என்பதே இருக்க கூடாது என்ற வகையில், நம்முடைய முன்னோர்கள் பருவ சுழற்சி, பொருளாதார சுழற்சி மற்றும் சமூக வாழ்க்கை என்ற அமைப்பை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் நாம் பல கொண்டாட்டங்களைக் கொண்டாடினோம். நேற்று இந்தியாவெங்கும் ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தித் திருநாளைக் கொண்டாடினார்கள். எப்படிப்பட்ட ஆளுமை படைத்தவராக பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் இருந்திருக்க வேண்டும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள்…… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, ஒவ்வொரு கொண்டாட்டமும், ஒரு புதுப்பொலிவோடு, புதிய உத்வேகத்தோடு, புதிய சக்தியை தன்னுள்ளே நிரப்பிக் கொண்டு வருகிறது….. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான காலத்தில் வாழ்ந்தாலும், இன்றும் கூட பிரச்சனைகளுக்கான தீர்வு தேடவோ, எடுத்துக்காட்டு அளிக்கவோ, அனைவரும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் வாழ்க்கையிலிருந்தே இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வுகளைத் தேடுகிறார்கள். இத்தனை வல்லமையைத் தாண்டியும் கூட, அவர் சில வேளைகளில் ராஸலீலையில் ஈடுபடுவார், சில வேளைகளில் பசுக்களின் மத்தியில் திளைப்பார், சில சமயங்களில் கோபாலர்களின் இடையே இன்பமாக இருப்பார், சில போதுகளில் விளையாட்டுக்களில் மெய்மறந்து காணப்படுவார், சில வேளைகளில் குழலிசையில் லயித்திருப்பார் …… எத்தனையோ தனித்துவங்கள் நிறைந்த ஒரு ஆளுமை, ஈடு இணையற்ற திறமைகள்-வல்லமைகளின் கருவூலம்; என்றாலும் கூட, சமூக சக்திக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், மக்கள் சக்திக்குத் தன்னை அளித்தவர், உலகை இணைப்பவராக, புதிய சாதனைகள் படைத்த ஆளுமையான ஸ்ரீ க்ருஷ்ணனை நட்பின் இலக்கணமாகக் கூற வேண்டும் என்றால், குசேலன் சம்பவமே முதலில் மனதில் தோன்றும். ஏராளமான பராக்கிரமம் படைத்தவராக இருந்தாலும் கூட, போர்க்களத்தில் தேரோட்டியாக தன் பணியை அவர் ஏற்றுக் கொண்டார். சில வேளைகளில் மலையைத் தூக்கினார், சில சமயங்களில் உணவு உண்ட இலையை அகற்றும் பணியை மேற்கொண்டார், அதாவது அவரது ஒவ்வொரு செயலிலும் ஒரு புதுமையை நம்மால் உணர முடிகிறது. ஆகையால் இன்று நான் உங்களுடன் உரையாடும் போது, என் சிந்தை இரு மோஹன்கள் பால் செல்கிறது. ஒருவர் சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கும் மோஹன், மற்றவர் சர்க்காவைத் தாங்கும் மோஹன். சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கிய மோஹன் யமுனை நதிக்கரையைத் துறந்து, குஜராத்தின் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று, துவாரகை நகரத்திலே நிலை பெற்றார்; ஆனால் சமுத்திரக் கரைகளிலே தோன்றிய மோஹனோ, யமுனையின் கரைகளுக்கு வந்து, தில்லியில் தனது கடைசி மூச்சை விடுகிறார். சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கும் மோஹன், அந்தக்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாகவும் கூட, போரைத் தவிர்க்கவும், மோதலில்லாமல் வாழவும், தனது புத்திகூர்மையை, தனது கடமையை, தனது வல்லமையை, தனது எண்ணங்களை முழுமனதோடு பயன்படுத்தினார்; அதே வேளையில் சர்க்கா தாங்கிய மோஹனோ, நாடு சுதந்திரம் அடைவதற்காக வேண்டியும், மனித விழுமியங்களைப் பாதுகாக்கவும், ஆளுமையின் அடிப்படைக் கூறுகளுக்கு வல்லமை அளிக்கப்படவும், சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு புதிய வடிவம் அளித்தார். ஒட்டுமொத்த உலகுக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒரு புதிய திருப்பமேற்படுத்தினார், இது இன்று வரையும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது. சுயநலமில்லாத சேவையின் மகத்துவம் என்ன, ஞானத்தின் மகத்துவம் என்ன, வாழ்க்கையின் அனைத்து ஏற்ற இறக்கங்களுக்கு இடையே புன்னகையோடு முன்னேறிச் செல்வதன் மகத்துவம் என்ன, என இவையனைத்தையும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள இயலும்; ஆகையால் தானே ஸ்ரீ க்ருஷ்ணரை ஜகத்குருவாக நாம் கண்டு போற்றுகிறோம் – க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.
இன்று நாம் திருவிழாக்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பாரதம் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; பாரதம் மட்டுமல்ல, உலகம் முழுமையுமே இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். 1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, சமுத்திரக் கரையோரம் இருக்கும் போர்பந்தரில், இன்று நாம் கீர்த்தி மந்திர் என்று அழைக்கும் சின்னஞ்சிறிய இல்லத்தில், ஒரு தனிமனிதன் அல்ல, ஒரு யுகம் பிறப்பெடுத்தது. இது தான் மனித வரலாறு முழுமைக்கும் ஒரு புதிய திருப்பத்தை அளித்தது, புதிய சாதனையைப் படைத்தது. அண்ணல் காந்தியடிகளுடன் எப்போதுமே ஒரு விஷயம் இணைந்தே இருந்தது, ஒரு வகையில் அது அவரது வாழ்க்கையின் நிரந்தர அங்கமாகவே மிளிர்ந்தது, அது தான் – சேவை, சேவையுணர்வு, சேவையின் பொருட்டு கடமையுணர்வு. அவருடைய வாழ்க்கை முழுவதையும் நாம் பார்த்தோமேயானால், தென்னாப்பிரிக்காவில் நிறவேறுபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கான சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில், அது சிறிய விஷயம் ஒன்றும் இல்லை ஐயா. சம்பாரண் பகுதியில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்காக அவர் சேவை புரிந்தார். உரிய ஊதியம் கிடைக்காத ஆலைத் தொழிலாளர்களுக்கான சேவையில் அவர் ஈடுபட்டார். ஏழைகள், நிராதரவானவர்கள், பலவீனமானவர்கள், பட்டினியில் வாடினோர் ஆகியோரின் சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், இதைத் தன் பரம கடமையாக அவர் கருதினார். தொழுநோய் தொடர்பான ஏகப்பட்ட தவறான கருத்துக்கள் இருந்தன, அந்தத் தவறான கருத்துக்களை நிராகரிக்க வேண்டி தானே தொழுநோயாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டார், தான், தனது வாழ்க்கை வாயிலாக, சேவை மூலமாக, எடுத்துக்காட்டை முன்வைத்தார். சேவை என்பதை அவர் சொற்களால் அல்ல, செயல்பாட்டால் சொல்லிக் கொடுத்தார். சத்தியத்தோடு காந்தியடிகளுக்கு இருந்த பிரிக்க முடியாத தொடர்பு அளவுக்கு, சேவையின் பொருட்டும் அண்ணலுக்கு இடையறாத பந்தம் இருந்து வந்தது. யாருக்காவது எந்த வேளையிலாவது உதவி தேவைப்படுமானால், எந்த வேளையிலும் சேவை செய்ய அண்ணல் துணைவருவார். அவர் சேவை மீது மட்டும் வலுகூட்டவில்லை, சேவையோடு இணைந்த ஆன்ம சுகத்தின் மீதும் வலுசேர்த்தார். சேவை என்ற சொல்லுக்கு எப்போது பொருள் உண்டாகும் என்றால், அதோடு ஆனந்தம் இணையும் போது தான். சேவா பரமோ தர்ம:, சேவையே தலைசிறந்த அறமாகும் என்பதே இதன் பொருள். ஆனால் இதனோடு கூடவே சிறப்பான ஆனந்தம்,ஸ்வாந்த சுகாய என்ற தன்னிறைவான இன்பஉணர்வின் அனுபவமும் கூட, சேவையினுள்ளே பொதிந்திருக்கிறது. இதை, நாம் அண்ணலின் வாழ்க்கை வாயிலாக, தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அண்ணல் காந்தியடிகள், எண்ணற்ற இந்தியர்களின் குரலாக ஒலித்தார், ஆனால் மனித விழுமியங்கள், மனித கண்ணியத்துக்காக, ஒரு வகையில் அவர், உலகின் குரலாகவே ஒலித்தார் என்றால் அது மிகையாகாது. காந்தியடிகளுக்கு, தனிமனிதனும் சமூகமும், மனிதனும் மனிதமும் தான் அனைத்துமானவை. அது ஆப்பிரிக்காவின் ஃபீனிக்ஸ் பண்ணையாகட்டும் அல்லது டால்ஸ்டாய் பண்ணையாகட்டும், அல்லது சாபர்மதி ஆசிரமம் ஆகட்டும் அல்லது வர்த்தாவாகட்டும், அனைத்து இடங்களிலும் தனக்கே உரிய வித்தியாசமான வகையில், சமூக ஒன்றுதிரட்டல் மீது அவர் எப்போதுமே வலுசேர்த்தே வந்திருக்கிறார். அண்ணலோடு தொடர்புடைய பல மகத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்று, அங்கே என் அஞ்சலிகளைச் செலுத்தக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நான் என்னுடைய மிகப்பெரிய பேறாகவே கருதுகிறேன். காந்தியடிகள் சேவை மனப்பான்மைக்கும், ஒருங்கிணைக்கும் உணர்வுக்கும் என்றுமே வலுகூட்டி வந்திருக்கிறார். சமூக சேவை மற்றும் சமுதாய ஒன்றிணைப்பு ஆகிய இவற்றைத் தான் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கப் பழக வேண்டியிருக்கிறது. இதுவே அண்ணலுக்கு நாம் புரியக்கூடிய மெய்யான ச்ரத்தாஞ்சலியாக, செயல்பாட்டு அஞ்சலியாக இருக்க முடியும். இந்த வகையிலான சந்தர்ப்பங்கள் நிறைய வருகின்றன, நாம் அவற்றோடு இணைந்தும் கொள்கிறோம், ஆனால் காந்தி 150 என்ற சந்தர்ப்பம் அது தன் பாட்டுக்கு வந்து, நாம் பார்க்காமல் மறைந்து செல்வதில் நமக்கு உடன்பாடு உண்டா? கண்டிப்பாக இல்லை நாட்டுமக்களே!! நாமனைவரும் நம்மிடத்திலே வினா எழுப்பிக் கொள்வோம், சிந்தனையில் ஈடுபடுவோம், ஆய்ந்து பார்ப்போம், சமூக அளவிலான உரையாடல்களில் ஈடுபடுவோம். ஒவ்வொரு சமுதாயத்தின் அதிகபட்ச மக்களோடு கலந்து பேசுவோம், அனைத்து நிலைகளிலான மக்களுடன் கலந்துரையாடுவோம், அனைத்து வயதினரோடும் இணைந்து பரிமாறுவோம் – கிராமங்கள், நகரங்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் கலந்து, சமூகத்துக்காக என்ன செய்யலாம், ஒரு தனிநபர் என்ற முறையில் என்னால் இந்த முயற்சிகளுக்கு எதைச் சேர்க்க முடியும் என்று சிந்திப்போம். என் தரப்பில் என்ன மதிப்புக்கூட்டலை என்னால் அளிக்க முடியும்? சமூகம் என்று வரும் போது அதற்கென்று ஒரு பலம் இருக்கிறது. காந்தி 150 என்ற இந்த நிகழ்வில் சமூக வெளிப்பாடு, சேவை என அனைத்தும் இருக்க வேண்டும். நாம் வாழும் பகுதியனைத்தையும் இந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யலாமே!! நாம் ஒரு கால்பந்தாட்ட அணியில் இருந்தால், கால்பந்தாட்டம் ஆடுவது தவிர, அண்ணலின் வழிகாட்டுதல்களில் ஒன்றிரண்டைப் பின்பற்றி, சேவைப்பணிகளில் ஈடுபடலாமே!! நாம் சார்ந்திருக்கும் மகளிர் சங்கம் இருக்குமென்றால், நவீனகால பெண்கள் சங்கத்தின் செயல்பாடுகளுடன்கூட, சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களுமாக இணைந்து, ஏதாவது ஒரு சேவைப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாமே!! ஏகப்பட்ட வேலைகளைச் செய்யலாம். பழைய புத்தகங்களை சேகரித்து, ஏழைகளிடம் பகிர்ந்தளிப்போம், கல்வியறிவை வளர்ப்போம், 130 கோடி நாட்டுமக்களிடம் 130 கோடிக் கற்பனைகள் இருக்கின்றன, 130 கோடி முனைவுகளும் இருக்கலாம். இதற்கு எந்த வரன்முறையும் கிடையாது. மனதிl என்ன தோன்றுகிறதோ – அது நல்ல விருப்பமாக இருக்க வேண்டும், நல்ல நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும், நல்லிணக்கம் வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன்கூடிய சேவையாகவும், ஸ்வாந்த: சுகாய: – இடையறாத ஆனந்த அனுபவத்தை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக அமைய வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, சில மாதங்கள் முன்பாக, நான் குஜராத்தில் தாண்டீ சென்றிருந்தேன். சுதந்திரப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரஹத்துக்குப் பெயர் போன தாண்டீ, ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. தாண்டீயில் நான் அண்ணலுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட அதிநவீன அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தேன். நீங்களனைவரும் அண்ணல் காந்தியடிகளோடு தொடர்புடைய ஏதாவது ஒரு இடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம் – அது போர்பந்தரோ, சாபர்மதி ஆசிரமமோ, சம்பாரண்ணோ, வர்த்தா ஆசிரமமோ, தில்லியில் காந்தியடிகளுடன் இணைந்த இடங்களோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள், இவை போன்ற இடங்களுக்குச் செல்லும் போது, உங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யுங்கள், மற்றவர்களும் இதன்வாயிலாக கருத்தூக்கம் அடைவார்கள், உங்கள் உணர்வுகளை இரண்டொரு வாக்கியங்களில் நீங்கள் வெளிப்படுத்தவும் செய்யுங்கள். உங்கள் மனதில் உதித்த உணர்வுகள், எந்த ஒரு இலக்கிய வரிகளை விடவும் அதிக வல்லமை வாய்ந்தவையாக இருக்கலாம், இன்றைய காலகட்டத்தில், உங்கள் பார்வையில், உங்கள் பேனா வடித்த அண்ணலின் சித்திரம், அதிக உகந்ததாகவும் அது அமையலாம். வரவிருக்கும் காலத்தில் பல நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், ஒரு மிகவும் சுவாரசியமான விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Venice Biennale என்ற பெயர் கொண்ட புகழ்மிக்க கலைக் கண்காட்சி உண்டு. இங்கே உலகெங்கிலும் இருந்தும் கலைஞர்கள் குழுமுவார்கள். இந்த முறை Venice Biennaleஇல் இண்டியா காட்சிக்கூடத்தில் காந்தியடிகளின் நினைவுகள் நிரம்பிய பல சுவாரசியமான காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஹரிபுரா பற்றிய பகுதி, தனி சுவாரசியம் வாய்ந்ததாக உள்ளது. குஜராத்தின் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டின் போது தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் பதிக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தக் கலைப் பகுதிகளில் ஒரு மிக அழகான கடந்த காலம் வடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் ஹரிபுரா மாநாட்டுக்கு முன்னதாக 1937-38இல் அண்ணல், சாந்திநிகேதனத்தின் கலா பவனத்தின் அப்போதைய முதல்வர் நந்த்லால் போஸுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பாரதத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை கலை வாயிலாக காட்சிப்படுத்தப்பட வேண்டும், இந்தக் கலைப்படைப்பு, மாநாட்டில் கண்காட்சியாக்கப்பட வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். இதே நந்த்லா போஸ் அவர்களின் கைவண்ணம் தான் நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கிறது. அவருடைய இந்த கலைத் தவமானது, அரசியலமைப்பை மட்டுமல்ல, நந்த்நால் போஸ் அவர்களையுமே அமரத்துவம் வாய்ந்தவராக ஆக்கி விட்டது. நந்த்லால் போஸ் அவர்கள் ஹரிபுராவை ஒட்டிய கிராமங்களைச் சுற்றிப் பார்த்தார், நிறைவாக கிராமப்புற வாழ்க்கையைக் காட்சிப் படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்தார். இந்த விலைமதிப்பில்லாத படைப்புக்கள் பற்றி வெனிஸில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. மீண்டும் ஒருமுறை காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் தொடர்பான நல்வாழ்த்துக்களுடன், ஒவ்வொரு இந்தியனும் ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாட்டுக்காக, சமூகத்துக்காக, ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும். இது தான் அண்ணலுக்கு நாம் செய்யக்கூடிய நல்ல, உண்மையான செயல்பாட்டு அஞ்சலியாக, வணக்கமாக இருக்க முடியும்.
பாரத அன்னையின் நல்மைந்தர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு முன்பாக, 2 வாரங்கள் வரை தூய்மையே சேவை என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்த முறை இது செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கும். இதன்படி, நாம் நம்முடைய வீடுகளை விட்டு வெளியேறி, உடல் சேவை வாயிலாக, நம் செயல்களால் அண்ணலுக்கு செயல்அஞ்சலி செலுத்துவோம். வீடாகட்டும், தெருக்களாகட்டும், நாற்சந்திகள் ஆகட்டும், கால்வாய்கள் ஆகட்டும், பள்ளிகள்-கல்லூரிகள் தொடங்கி அனைத்துப் பொதுவிடங்களிலும், தூய்மை தொடர்பான பேரியக்கத்தை முடுக்கி விடுவோம். இந்த முறை நெகிழிப் பொருட்கள் அகற்றல் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும், 130 கோடி நாட்டுமக்களும் தூய்மையின் பொருட்டு எப்படி இயக்கங்களை மேற்கொண்டார்களோ, அதே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் நெகிழிப் பொருட்கள் அகற்றல் விஷயத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து கூட நான் கேட்டுக் கொண்டிருந்தேன். திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பை நாம் அடைந்திருக்கிறோம். இதைப் போலவே, ஒரேமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த இயக்கத்தை முன்னிட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடத்திலும் உற்சாகம் இருக்கிறது. எனது வியாபாரி சகோதர சகோதரிகள் எல்லோரும், தங்கள் கடைகளில் ஒரு அறிவிப்புப் பலகையைத் தொங்க விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து வரும் போது துணிப்பையோடு வரவேண்டும் என்று அதில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதனால் பணமும் மிச்சமாகும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுவதில் நமது பங்களிப்பும் இருக்கும். இந்த முறை அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நாம் அண்ணலின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தில், திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியாவை அவருக்கு அர்ப்பணிக்கும் அதே நேரத்தில், நெகிழிப் பொருட்களுக்கு எதிராக ஒரு புதிய மக்கள் இயக்கத்துக்கான அடித்தளத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்த வேண்டும். நான் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், சிறிய பகுதியிலும், நகரவாசிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன், கைக்கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நன்னாளை ஒரு வகையில் நமது இந்த பாரத அன்னைக்கு நெகிழிக் கழிவிலிருந்து விடுதலை அளிக்கும் நோக்கத்தில் நாம் கொண்டாட வேண்டும். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை குறிப்பாக சிறப்பான நாளாக நாம் கொண்டாட வேண்டும். அண்ணலின் பிறந்த நாள் ஒரு சிறப்பான சேவை நாளாக ஆக வேண்டும். நாட்டின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், கிராமப் பஞ்சாயத்துக்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், அனைத்து சங்கங்கள் என, ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பையும், திரட்டுதலையும் உகந்த வழியிலே செய்ய வேண்டும் என்பது தான். நான் தனியார் பெருநிறுவனங்களிடமும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இத்தனை நெகிழிப் பொருட்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, இவற்றை உகந்த வகையில் அகற்ற நீங்கள் முன்வர வேண்டும் என்பது தான். இவற்றை மறுசுழற்சி செய்ய முடியும். இவற்றின் மூலம் எரிபொருள் தயாரிக்க முடியும். இந்த வகையில் இந்த தீபாவளி வரை நாம் இந்த நெகிழிக் கழிவுகளை கவனமாக அகற்றும் செயலில் ஈடுபடலாமே. இதற்கு மனதில் உறுதி வேண்டும். உத்வேகம் பெற அங்கே இங்கே ஆராய வேண்டிய அவசியம் இல்லை. காந்தியடிகளே மிகப்பெரிய உத்வேகமாக நமக்கெல்லாம் இருக்கிறார்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது சம்ஸ்க்ருத பழமொழிகளில் ஞானத்தின் ரத்தினங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் அதிலே கிடைக்கும். இப்போதெல்லாம் நான் இவற்றைப் படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது; ஆனால் முன்போ நிறைய இருந்தது. இன்று நான் ஒரு சம்ஸ்க்ருத பொன்மொழியிலிருந்து அதிக மகத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். இது பல நூற்றாண்டுகள் முன்பாக எழுதப்பட்ட விஷயம் என்றாலும், இன்றும் கூட, இது எத்தனை மகத்துவம் வாய்ந்தது தெரியுமா?
“ पृथिव्यां त्रीणि रत्नानि जलमन्नं सुभाषितम् |
मूढैः पाषाणखण्डेषु रत्नसंज्ञा प्रदीयते” ||
ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்ன சஞ்யா ப்ரதீயதே.
அதாவது பூமியில் நீர், உணவு மற்றும் மூதுரைகள் என்பவை தான் மூன்று ரத்தினங்கள். மூடர்கள் கற்களாலானவைகளை ரத்தினங்கள் என்று அழைக்கிறார்கள். நமது கலாச்சாரத்தில் உணவுக்கு என்றுமே அதிக மகத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், உணவு பற்றிய அறிவைக் கூட நாம் விஞ்ஞானமாக்கி விட்டோம். சமச்சீரான, ஊட்டச்சத்து நிரம்பிய உணவு நம்மனைவருக்குமே தேவையானது. சிறப்பாக, பெண்கள் மற்றும் சிசுக்களுக்கு, ஏனென்றால் இவர்கள் தான் நமது சமூகத்தின் வருங்கால அஸ்திவாரங்கள். போஷண இயக்கம், அதாவது ஊட்டச்சத்து இயக்கத்துக்கு உட்பட்டு, நாடெங்கிலும் நவீன வழிமுறைகளில் ஊட்டச்சத்து அளித்தல், மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது. மக்கள் புதிய மற்றும் சுவாரசியமான வழிகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஒருமுறை என்னுடைய கவனத்திற்கு ஒரு விஷயம் கொண்டு வரப்பட்டது. நாசிக்கில் பிடியளவு தானியம் என்ற ஒரு பெரிய இயக்கம் நடைபெற்றது. இதில் அறுவடை நாட்களில் ஆங்கன்வாடி சகோதரிகள், மக்களிடமிருந்து ஒரு கைப்பிடியளவு தானியங்களை சேகரிக்கிறார்கள். இந்த தானியங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக தயார் செய்யப்படும் சூடான உணவுக்குப் பயன்படுகிறது. இதில் தானம் அளிப்பவர் ஒரு வகையில் விழிப்புணர்வு கொண்ட குடிமகனாக, சமூகசேவகனாக ஆகிறார். இதன் பின்னர், அவர் இந்த இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்த இயக்கத்தில் ஒரு சிப்பாயாக அவர் தன்னை இணைத்துக் கொள்கிறார். நாம் அனைவரும், நமது குடும்பங்களில் அன்னப் ப்ராஸனம் சடங்கு பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இந்தச் சடங்கு, குழந்தைக்கு முதல்முறையாக திடஉணவு கொடுக்கப்படுவது தொடங்கும் போது செய்யப்படுகிறது. திரவ உணவு அல்ல, திடஉணவு. குஜராத்தில் 2010ஆம் ஆண்டில், ஏன் நாம் அன்னப் பிராஸன சடங்கின் போது, குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க கூடாது, அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுமே என்று நான் நினைத்தேன்!! இது ஒரு அருமையான முயற்சி, இதை அனைத்து இடங்களிலும் செயல்படுத்திப் பார்க்கலாம். பல மாநிலங்களில் மக்கள் திதி போஜனம் என்ற இயக்கத்தை நடத்துகிறார்கள். குடும்பத்தில் பிறந்த நாள் என்றாலோ, ஏதோ ஒரு சுபதினம் என்றாலோ, அல்லது நினைவு நாள் என்றாலோ, குடும்பத்தவர்கள், ஊட்டச்சத்து நிரம்பிய உணவை, சுவையான உணவைத் தயார் செய்து ஆங்கன்வாடிக்குச் செல்கிறார்கள், பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், அங்கே குடும்பத்தவர் அனைவரும் தாங்களே குழந்தைகளுக்கு பரிமாறுகிறார்கள், உணவளிக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அப்படி மகிழ்ச்சி பகிரப்படும் போது அது குறைவதில்லை. சேவை உணர்வுடன் ஆனந்த உணர்வும் ஒரு அற்புதமான சங்கமமாக மிளிர்கின்றன. நண்பர்களே, இப்படிப்பட்ட பல சின்னச்சின்ன விஷயங்கள் வாயிலாக நம்முடைய நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிரான பலமான போரை நாம் முடுக்கி விட முடியும். இன்று விழிப்புணர்வு குறைவாக உள்ள காரணத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழைகளும் சரி, தன்னிறைவு உடையவர்களும் சரி, இருசாராருமே இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதத்தை ஊட்டச்சத்து இயக்கம் என்ற வகையில் நாம் கொண்டாடுவோம். நீங்கள் கண்டிப்பாக இதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், தகவல்களைப் பெறுங்கள், அதில் புதிய கருத்துக்களை இணையுங்கள். நீங்களும் பங்களிப்புத் தாருங்கள். நீங்கள் ஒன்றிரண்டு நபர்களையாவது ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தீர்கள் என்றால், நம்மால் தேசத்தையே ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து வெளியே கொண்டு வர இயலும்.
”ஹலோ சார், என் பேர் ஸ்ருஷ்டி வித்யா, நான் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவி. சார், நான் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி, Bear Grylls உடன் நீங்கள் பங்கெடுத்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். நீங்கள் பங்கெடுத்த இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலாவதாக உங்களுக்கு நம்முடைய இயற்கை, வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை மீது எத்தனை அதிக அக்கறை இருக்கிறது, கரிசனம் இருக்கிறது என்பதை அறிந்து உவப்பாக இருந்தது. மேலும் உங்களின் சாகஸ பரிமாணம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் உடலுறுதியைப் பார்க்கும் போது எங்களைப் போன்ற இளைஞர்கள் அதிகம் கவரப்படுகிறார்கள், உங்களைப் பார்த்து அதிகம் உத்வேகம் அடைகிறார்கள்”
ஸ்ருஷ்டிஜி, உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு நன்றிகள். உங்களைப் போலவே ஹரியாணாவின் ஸோஹனாவிலிருந்து கே. கே. பாண்டே அவர்களும் சூரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா அவர்களும், இன்னும் பலரும் டிஸ்கவரி சேனலில் காட்டப்பட்ட Man vs Wild நிகழ்ச்சி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள். இந்த முறை மனதின் குரலுக்காக நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விஷயம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று எனக்கு ஏராளமாக நம்பிக்கை இருந்தது. மேலும் கடந்த சில வாரக்காலமாகவே நான் எங்கே சென்றாலும், மக்களை சந்தித்த வேளையிலெல்லாம், Man Vs Wild பற்றிப் பேசப்பட்டு வந்தது. இளைஞர்கள் மனங்களில் இந்த மாதிரியாக இடம் பிடிப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதே போல, நம்முடைய நாட்டிலும் சரி, உலகத்திலுமே கூட, இளைஞர்கள் பன்முகத்தன்மை நிறைந்த விஷயங்கள்பால் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. உலக அளவிலான இளைஞர்களின் மனங்களில் இடம் பிடிக்க எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. கடந்த வாரம் நான் பூட்டான் சென்றிருந்தேன். பிரதமர் என்ற முறையில் எப்போதெல்லாம் எனக்கு எங்கே செல்ல சந்தர்ப்பம் வாய்த்தாலும் சரி, சர்வதேச யோகதினம் காரணமாக நிலைமை எப்படி ஆகி விட்டது என்றால், உலகில் யாரிடம் சென்று அமர்ந்தாலும், அளவளாவினாலும், ஒரு 5-6 நிமிடங்கள் யோகம் தொடர்பாக என்னிடம் வினா எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள். இதுவரை யோகக்கலை பற்றி என்னிடம் வினவாத உலகத் தலைவரே இல்லை என்ற அளவில் ஆகியிருக்கிறது, இதுவே உலகம் முழுவதிலும் என் அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது. யாரை நான் சந்திக்க நேர்ந்தாலும், எங்கே எப்போது அளவளாவ வாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் வன உயிரினங்கள் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், சுற்றுச்சூழல் தொடர்பான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். புலி, சிங்கம், உயிரினங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் இத்தனை நாட்டமும் ஈர்ப்பும் இருக்கின்றது என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. டிஸ்கவரியின் இந்த நிகழ்ச்சியை 165 நாடுகளும், அவர்களின் மொழியில் ஒளிபரப்பும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இன்று சுற்றுச்சூழல், உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் என்பன தொடர்பான உலகளாவிய கருத்துக் கடைதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி வாயிலாக பாரதமளிக்கும் செய்தியானது, பாரதநாட்டு பாரம்பரியம், பாரதத்தின் கலாச்சாரத்தில் இயற்கையின் மீதான நேசம்-புரிதல் ஆகியவற்றை உலகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில், டிஸ்கவரி சேனலின் இந்த நிகழ்ச்சி பேருதவி புரிந்திருக்கிறது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; மேலும் நம் நாட்டில் பருவநிலைநீதி, சுத்தமான சூழல் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட முயல்வுகளைப் பற்றி இப்போது மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் மேலும் ஒரு சுவாரசியமான விஷயம், சிலர் சற்று சங்கடத்துடன் என்னிடம் ஒரு விஷயத்தை அவசியம் வினவுகிறார்கள், மோதிஜி நீங்களோ ஹிந்தியில் பேசுகிறீர்கள், Bear Gryllsக்கு ஹிந்தி மொழி தெரியாதே எனும் போது, எப்படி உங்களுக்கு இடையே இத்தனை வேகமாக உரையாட முடிந்தது? இது பிறகு தொகுப்பாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டதா? பலமுறை படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? என்ன நடந்தது, என்றெல்லாம் பெரும் ஆர்வத்தோடு வினவுகிறார்கள். பாருங்கள், இதில் எந்த ஒரு ரகசியமும் கிடையாது. யதார்த்தம் என்னவென்றால், Bear Grylls உடன் உரையாடல் நிகழ்த்த தொழில்நுட்பம் முழுமையான வகையில் பயன்படுத்தப்பட்டது. நான் என்ன பேசினாலும், உடனுக்குடன் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விடும். உடனுக்குடன் பொருள்விளக்கம் அளிக்கப்படும், Bear Gryllsஇன் காதுகளில் ஒரு வயரில்லா, சிறிய கருவி பொருத்தப்பட்டு இருந்தது. நான் பேசுவது என்னமோ ஹிந்தி மொழியில், ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் அது கேட்கும், இதன் காரணமாக உரையாடல் மிகவும் எளிதாக அமைந்தது, தொழில்நுட்பத்தின் அற்புதம் இது தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் மக்கள் என்னிடம் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா பற்றியெல்லாம் விவாதங்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். நீங்களும் கூட இயற்கை மற்றும் வன உயிரினங்களுடன் இணைந்த இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். நான் முன்னமேயே கூறியிருந்தேன், அதை மறுபடி இப்போது கூறுகிறேன். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நீங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று பாருங்கள். என்ன ஒரு இயற்கை அழகு அங்கே கொஞ்சுகிறது தெரியுமா? நீங்கள் அசந்து, மெய்மறந்து போய் விடுவீர்கள். உங்களுக்குள்ளே நீங்கள் விசாலப்படுவதை நீங்களே உணர்வீர்கள். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவுக்கு உள்ளே குறைந்தபட்சம் 15 இடங்களுக்குச் சென்று பாருங்கள், 100 சதவீதம் சுற்றுலாவின் பொருட்டு மட்டுமே இந்த 15 இடங்களுக்கும் சென்று பாருங்கள், மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள், அங்கே சற்று நேரம் நிம்மதியாகச் செலவிடுங்கள். பன்முகத்தன்மைகள் நிறைந்த நமது நாடு, உங்களுக்கு இந்தப் பன்முகத்தன்மைகள் வாயிலாக கற்பித்து, உங்களுக்குள்ளே பன்முகத்தன்மைகளை நிரப்பி விடும். உங்கள் வாழ்க்கை விசாலமாகும். உங்கள் எண்ணங்கள் விசாலமடையும். என் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள், இந்தியாவில் மட்டுமே இப்படிப்பட்ட அநேக இடங்களில் உங்களுக்கு புதிய சக்தி, புதிய உற்சாகம், புதிய பூரிப்பு, புதிய கருத்தூக்கம் ஆகியன கிடைக்கும்; ஒருவேளை சில இடங்களை மீண்டும் மீண்டும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உங்கள் மனதிலே எழலாம், உங்கள் குடும்பத்துக்கும் இப்படிப்பட்ட ஆர்வம் துளிர்க்கலாம்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, இந்தியாவிலே சூழல் மீதான அக்கறையும் கரிசனமும் இயல்பாகவே அனைவராலும் காணக்கூடியது. கடந்த மாதங்களில் காட்டுப்புலிகளின் கணக்கெடுப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்தியாவில் எத்தனை புலிகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவிலே புலிகளின் எண்ணிக்கை 2967. சில ஆண்டுகள் முன்பாக இதில் பாதியளவு தான் அவற்றின் எண்ணிக்கையாக இருந்தது. புலிகள் தொடர்பான உச்சிமாநாடு ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலே 2010ஆம் ஆண்டு நடந்தது. இதில் உலகில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது, முடிவிலே உறுதி மேற்கொள்ளப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள்ளாக உலகம் முழுவதிலும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்பது தான் இந்த உறுதிப்பாடு. ஆனால் இது புதிய இந்தியா, இதிலே நாம் இலக்குகளை அதிவிரைவாக எட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தால், நாம் 2019ஆம் ஆண்டிலேயே இங்கே இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி விட்டோம். பாரதம் புலிகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சமுதாய காப்புக்காடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது. நான் புலிகள் தொடர்பான தரவுகளை வெளியிட்ட போது, குஜராத்தின் கீர் காடுகளில் உள்ள சிங்கங்கள் பற்றிய நினைவு எழுந்தது. நான் அங்கே முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது கீர் காடுகளில் சிங்கங்களின் வசிப்பிடங்கள் குறைந்து கொண்டே வந்தன. அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. நாங்கள் கீர் காடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் மேற்கொண்டோம். 2007ஆம் ஆண்டு அங்கே பெண் காவலர்களை பொறுப்பில் அமர்த்த முடிவெடுத்தோம். சுற்றுலாவை அதிகரிக்க கட்டமைப்பிலே மேம்பாடுகளை மேற்கொண்டோம். நாம் இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பற்றிப் பேசும் போதெல்லாம், பராமரிப்பு பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம். ஆனால் நாம் பராமரிப்பு என்பதை முன்னெடுத்துப் போகும் அதே நேரத்தில், பரிவு பற்றியும் சற்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. நம்முடைய சாத்திரங்களில் இந்த விஷயம் குறித்து மிகச் சிறப்பாக வழிகாட்டப்பட்டிருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக நமது சாத்திரங்களில் நாம் என்ன கூறி வந்திருக்கிறோம்?
निर्वनो बध्यते व्याघ्रो, निर्व्याघ्रं छिद्यते वनम |
तस्माद् व्याघ्रो वनं रक्षेत्, वनं व्याघ्रं न पालयेत् ||
நிர்வனோ பத்யதே வ்யாக்ரோ, நிர்வ்யாக்ரம் சித்யதே வனம்,
தஸ்மாத் வ்யாக்ரோ வனம் ரக்ஷேத், வனம் வ்யாக்ரம் ந பாலயேத்.
அதாவது வனம் என்ற ஒன்று இல்லையென்றால், மனிதன் வாழும் இடங்களுக்கு புலிகள் வரும் கட்டாயமேற்படும், பின்னர் அவை கொல்லப்படும்; அதே போல வனத்தில் புலி இல்லை என்றால், மனிதன் வனத்தை வெட்டி, அதை அழித்து விடுகிறான் ஆகையால், உள்ளபடியே புலி வனத்தின் பாதுகாவலனாக இருக்கிறது, வனம் புலியின் பாதுகாவலனாக இல்லை. பாருங்கள்!! எத்தனை அருமையான வகையிலே நமது முன்னோர்கள் விஷயத்தை விளங்க வைத்திருக்கிறார்கள். ஆகையால், நாம் நமது வனங்களை, தாவரங்களை, வன உயிரினங்களை, பாதுகாப்பது மட்டும் போதுமானது அன்று, அவை சிறப்பான முறையிலே தழைக்கும் வகையில், ஒரு சரியான சூழலை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.
எனதருமை நாட்டுமக்களே, 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதியன்று விவேகானந்தர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை யாரால் மறக்க இயலும். உலகம் முழுவதும் இருக்கும் மனித சமுதாயத்தை உறக்கத்திலிருந்து எழுப்பிய இந்திய நாட்டின் இந்த இளைய துறவி, உலகத்திலே பாரதம் பற்றிய ஒரு ஒளிவீசும் அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறார். எந்த அடிமை பாரதத்தை உலகம் ஈனமான பார்வை பார்த்ததோ, அதே உலகம், 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, ஸ்வாமி விவேகானந்தர் என்ற மாமனிதரின் சொற்களைக் கேட்டு, பாரத நாட்டைப் பார்க்கும் பார்வையையே மாற்றிக் கொண்டது. வாருங்கள், ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் பாரதத்தின் எந்த வடிவத்தைப் பார்த்தாரோ, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் பாரதத்தின் எந்த வல்லமையைக் கண்டாரோ, நாம் அதை வாழ்ந்து காட்டும் முயற்சியில் ஈடுபடுவோம். நமக்குள்ளேயே அது இருக்கிறது, அனைத்துமே இருக்கிறது, நாம் தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியை நாம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நாம் நாடு முழுவதிலும் FIT INDIA MOVEMENT – உடலுறுதி வாய்ந்த இந்தியா என்ற இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். நாம் உடலுறுதியோடு இருப்பது. தேசத்திற்கு உரமூட்டுவது. குழந்தைகள், பெரியவர், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்காகவும் மிக சுவாரசியமான இயக்கம் நடைபெறும், இது உங்களுடையதாக இருக்கும். ஆனால் அவற்றின் நுணுக்கமான விஷயங்கள் பற்றி நான் இன்று ஏதும் கூறப் போவதில்லை. ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வரை காத்திருங்கள். நானுமே கூட அன்று விரிவான வகையிலே விவரிக்க இருக்கிறேன், இதோடு உங்களை இணைக்காமல் விடப் போவதில்லை. ஏனென்றால், உங்களனைவரையும் உடலுறுதி உடையவர்களாகப் பார்க்க நான் விரும்புகிறேன். உடலுறுதி பற்றிய விழிப்புணர்வை உங்கள் மனதிலே ஏற்படுத்த விரும்புகிறேன், உறுதியான இந்தியாவுக்காக, நம் தேசத்துக்காக, நாம் இணைந்து சில இலக்குகளைத் தீர்மானம் செய்து கொள்வோம்.
என் மனதுக்கு நெருக்கமான நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்றும், செப்டம்பர் மாத ஊட்டச்சத்து இயக்கத்தின் போதும், குறிப்பாக செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையிலான தூய்மை இயக்கத்தின் போதும், உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள் என்று நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி என்பது முழுக்க முழுக்க நெகிழிப் பொருட்கள் அகற்றலுக்காகவே அர்ப்பணம் செய்யப்பட்ட ஒன்று. நெகிழிப் பொருட்களிலிருந்து விடுதலை பெற நாமனைவரும், வீடு, வீட்டுக்கு வெளியே, என அனைத்து இடங்களிலும் முழுவீச்சோடு ஈடுபடுவோம், சமூக வலைத்தளங்களிலே இதைப் பற்றி நாம் கொட்டி முழக்கிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு புத்துணர்வு, புதிய உறுதிப்பாடு, புதிய சக்தியோடு நாம் முன்னேறிச் செல்வோம், வாருங்கள்!!
எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரல் இம்மட்டே. மீண்டும் சந்திப்போம். நான் உங்கள் கருத்துக்களுக்காக, நீங்கள் தெரிவிக்கும் விஷயங்களுக்காக, உங்கள் ஆலோசனைகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பேன். நாமனைவரும் இணைந்து சுதந்திரப் பித்துப்பிடித்த நமது தியாகிகள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க, காந்தியடிகளின் கனவுகளை மெய்ப்பிக்க முயன்று முன்னேறுவோம் – ஸ்வாந்த: சுகாய: உள்ளே ஆனந்தம் பொங்க சேவை உணர்வை வெளிப்படுத்தி, நாம் முன்னே பயணிப்போம்.
மிக்க நன்றிகள்.
வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்காக எப்போதும் போலவே இப்போதும் என் தரப்பிலும் சரி, உங்களனைவரின் தரப்பிலும் சரி, ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த முறையும் பல கடிதங்கள், கருத்துக்கள், தொலைபேசி அழைப்புக்கள் வந்திருக்கின்றன என்பதை நான் கவனித்தேன். ஏராளமான கதைகள், ஆலோசனைகள், உத்வேகங்கள் – எல்லோரும் ஏதாவது ஒரு செயலாற்ற விரும்புகிறார்கள், தெரிவிக்க விரும்புகிறார்கள் – இவையனைத்திலும் ஒரு உணர்வு பிரதிபலிக்கிறது, இதை நான் உணர்கிறேன்; இவற்றை ஒருங்கிணைக்க விரும்புகிறேன், ஆனால் நேரக்கட்டுப்பாடு காரணமாக, அனைத்தையும் வெளிப்படுத்த என்னால் இயலவில்லை. என்னை நீங்கள் உரைத்துப் பார்ப்பதாகவே எனக்குப் படுகிறது. இருந்தாலும் கூட, உங்கள் கருத்துக்களையும் வெளிப்பாடுகளையும் மனதின் குரல் என்ற இழையில் கோர்த்து, உங்களிடமே அர்ப்பணிக்க நான் முனைகிறேன்.
கடந்த முறை ப்ரேம்சந்த் அவர்களின் கதைகள் அடங்கிய ஒரு புத்தகம் பற்றி நான் பேசினேன் என்பதும், யார் அதைப் படிக்க நேர்ந்தாலும் அது பற்றித் தங்கள் எண்ணங்களை NarendraModi செயலி வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் நான் கேட்டுக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகள் படைத்தல், வரலாறு, கலாச்சாரம், வணிகம், வாழ்க்கைசரிதம் என பல துறைகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் புத்தகங்கள் பற்றியெல்லாம் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வேறு சிலர் நான் வேறு பல புத்தகங்கள் பற்றியும் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக நான் வேறு சில புத்தகங்கள் பற்றியும் பேசுவேன். ஆனால் இப்போதெல்லாம் என்னால் அதிக புத்தகங்களைப் படிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே வேளையில் ஒரு ஆதாயம் கிடைத்திருக்கிறது; அது என்னவென்றால், நீங்கள் எழுதி அனுப்பியிருக்கும் பல புத்தகங்கள் பேசும் விஷயம் பற்றி தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இப்போது எனக்குக் கிடைத்து விட்டது, இல்லையா? ஆனால் கடந்த ஒரு மாதக்காலத்தில் கிடைத்த அனுபவத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே எனக்குப் படுகிறது. நாம் ஏன் NarendraModi செயலியில் ஒரு நிரந்தரமான புத்தகப் பகுதியை ஏற்படுத்தக் கூடாது? நாம் எப்போது நல்லதொரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தாலும், அது பற்றி அதில் எழுதுவோம், வாதம் செய்வோம், நமது இந்தப் புத்தகப் பகுதிக்கு நல்லதொரு பெயரை நீங்கள் பரிந்துரை செய்யலாமே!! இந்தப் புத்தகப் பகுதி வாசகர்களுக்கும் சரி, எழுத்தாளர்களுக்கும் சரி, ஒரு ஆக்கப்பூர்வமான மேடையாக மிளிரும். நீங்கள் படியுங்கள் எழுதுங்கள், அவற்றை எல்லாம் மனதின் குரலின் அனைத்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே, நீர்ப் பாதுகாப்பு குறித்து நான் மனதின் குரலில் தொட்டுக் காட்டியது என்னவோ உண்மை – ஆனால் இதற்கு முன்னரே கூட நீர்ப்பாதுகாப்பு விஷயம் உங்கள் இதயங்களைத் தொடக்கூடிய ஒரு விஷயம், சாதாரண மனிதனுக்கு மிகப் பிடித்தமான விஷயம் என்றே எனக்குத் தோன்றுகிறது. சில நாட்களாகவே ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கும் ஒரு விஷயம் என்றால், அது தண்ணீர் தான். தண்ணீர் பாதுகாப்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் தாக்கமுண்டாக்கும் பல சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் பாரம்பரியமான வழிமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களும் நீர் பாதுகாப்பு தொடர்பான பல நூதனமான இயக்கங்களை முடுக்கி விட்டிருக்கின்றன. அரசாகட்டும், அரசு சாரா அமைப்புகளாகட்டும் – போர் முனைப்போடு ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக உணர்வின் திறனைப் பார்க்கும் போது, மனதுக்கு மிகுந்து மகிழ்ச்சியாக இருக்கிறது, நிறைவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலிருந்து சற்றுத் தொலைவில், ஓர்மாஞ்ஜீ வட்டாரத்தின் ஆரா கேரம் கிராமத்தில், கிராமவாசிகள் நீர் மேலாண்மை தொடர்பாக வெளிப்படுத்தியிருக்கும் மனவுறுதி, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஒளிர்கிறது. கிராமவாசிகள், தாமாக முன்வந்து பணியில் ஈடுபட்டு, மலையிலிருந்து பெருகியோடும் நீர்வீழ்ச்சிக்கு ஒரு உறுதியான பாதையேற்படுத்தியிருக்கிறார்கள்; அதுவும் நம் நாட்டுக்கே உரித்தான பாரம்பரிய வழிமுறையை மேற்கொண்டு. இதனால் மண் அரிப்பும், பயிர்நாசமும் தடுக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், வயல்களுக்கும் தண்ணீர் கிடைத்து வருகிறது. கிராமவாசிகள் செய்திருக்கும் இந்தப் பணியால் ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரு புத்துயிர் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. வடகிழக்கின் மிக அழகான மாநிலமான மேகாலயா, தனக்கென ஒரு water policy; நீர்க் கொள்கையை உருவாக்கியிருக்கிறது என்பதை அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் மாநில அரசுக்கு நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹரியாணாவில் குறைவான நீர்ப்பயன்பாடு, விவசாயிகளுக்கும் பாதிப்பில்லை என்ற அளவிலான பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளோடு உரையாடி, பாரம்பரியமான விவசாயத்திலிருந்து சற்றே விலகி, குறைவான நீரைப் பயன்படுத்தும் பயிர்களை சாகுபடி செய்யக் கருத்தூக்கம் அளித்தமைக்காக, நான் ஹரியாணா அரசுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இனி பண்டிகைகளின் காலம் தொடங்கி விட்டது. பண்டிகைகள் காலத்தில் பல விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நீர்ப் பாதுகாப்பிற்க்காக நாம் ஏன் இந்த விழாக்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? திருவிழாக்களின் போது ஒவ்வொரு பிரிவினரும் வந்து கூடுகிறார்கள். இந்த வேளையில் நீர் மேலாண்மை – நீர் சேமிப்பு பற்றி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை கொண்டு சேர்க்க முடியும். இதை ஒட்டிய காட்சிகளை உருவாக்கலாம், தெருமுனை நாடகங்களை அரங்கேற்றலாம், திருவிழாக்களோடு கூடவே நீர்ப் பாதுகாப்பு பற்றிய தகவலை மிக எளிதாக நம்மால் கொண்டு சேர்க்க முடியுமே!!
நண்பர்களே, வாழ்க்கையில் சில விஷயங்கள் நமக்குள்ளே உற்சாகத்தை நிரப்பி விடுகின்றன; அதுவும் குறிப்பாக பிள்ளைகளின் சாதனைகள், அவர்களின் வெற்றிகள், ஆகியன நம்மனைவருக்குமே உற்சாகம், புதிய ஆற்றல் ஆகியவற்றை அளிக்கிறது. அந்த வகையில் சில குழந்தைகள் பற்றிப் பேச விரும்புகிறேன் – இந்தக் குழந்தைகள் – நிதி பைபொட்டு, மோனீஷ் ஜோஷீ, தேவான்ஷீ ராவத், தனுஷ் ஜெயின், ஹர்ஷ் தேவ்தர்கர், அனந்த் திவாடீ, ப்ரீத்தி நாக், அதர்வ் தேஷ்முக், அரோன்யதேஷ் காங்குலி, ஹ்ரிதிக் அலா மந்தா ஆகியோர் தான் அவர்கள்.
நான் இப்போது சொல்ல இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் ஒருசேர ஏற்படுத்தலாம். புற்றுநோய் என்ற ஒரு சொல் உலகத்தில் எத்தனை நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். மரணம் வாயிற்படிகளில் காத்து நிற்கும் வேளையில், இந்த பத்துக் குழந்தைகளும், வாழ்வா சாவா என்ற தங்கள் போராட்டத்தில் புற்றுநோயைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தது மட்டுமல்லாமல், தங்கள் அற்புதமான செயல்பாடுகள் காரணமாக நாட்டின் பெயருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். பொதுவாக எந்த ஒரு விளையாட்டுப் பந்தயத்திலும் வெற்றிவாகை சூடிய பிறகே பதக்கங்களை ஜெயிப்பார்கள்; ஆனால் விளையாட்டுப் பந்தயத்தில் பங்கு பெறும் முன்னரே வெற்றியாளர்களாகும் மிக அரிய சந்தர்ப்பம் இவர்களுக்கு வாய்த்தது, இவர்கள் வாழ்க்கையின் போராட்டத்தின் வெற்றியாளர்கள்.
இந்த மாதம் தான் மாஸ்கோ நகரில் – World Children’s Winners Games உலக குழந்தை வெற்றியாளர்கள் போட்டிகள் நடைபெற்றன. இந்த வித்தியாசமான விளையாட்டுப் பந்தயத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடிப் பிழைத்த இளம் பிஞ்சுகள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்தப் பந்தயத்தில் துப்பாக்கிச் சுடுதல், சதுரங்கம், நீச்சல், ஓட்டப்பந்தயம், காலபந்தாட்டம், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது நாட்டின் இந்த பத்து வெற்றியாளர்களுமே இந்தப் பந்தயத்தில் பதக்கங்களை வென்றெடுத்தார்கள் என்பதோடு, இவர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களையும் வென்றார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சந்திரயான் 2 – வானத்தையும் தாண்டி, விண்வெளியில் இந்தியா ஈட்டியிருக்கும் வெற்றி உங்களுக்குக் களிப்பையும் பெருமிதத்தையும் அளித்திருக்கும் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது.
ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த சஞ்ஜீவ் ஹரீபுரா, கோல்காத்தாவின் மஹேந்திர குமார் டாகா, தெலங்கானாவின் பி. அர்விந்த் ராவ் போன்ற அநேகர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து NarendraModi செயலியிலும் MyGovஇலும், இந்த சந்திரயான் 2 பற்றி மனதின் குரலில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விண்வெளியைப் பொறுத்த மட்டில் இந்தியாவிற்கு மிக அருமையான ஆண்டு என்றே 2019ஆம் ஆண்டை சொல்ல வேண்டும். நமது அறிவியலார்கள், மார்ச் மாதம் A-Satஐ விண்ணில் செலுத்தினார்கள், இதன் பிறகு சந்திரயான் 2. தேர்தல் பரபரப்பில் A-Sat என்ற பெரிய மகத்துவம் வாய்ந்த விஷயம் பற்றி நாம் அதிகம் பேச முடியாமல் போனது. ஆனால் A-Sat ஏவுகணை, வெறும் 3 நிமிட நேரத்திலேயே பூமிக்கு மேலே 300 கி.மீ. தொலைவிலிருக்கும் செயற்கைக் கோளை வீழ்த்தும் வல்லமை படைத்ததாக இருந்தது. உலகில் இந்த வல்லமையைப் பெற்ற நான்காவது நாடாக இந்தியா ஆகியிருக்கிறது; ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் பெருமிதம் மனதில் பொங்க சந்திரயான் 2 விண்ணில் சீறிப் பாய்வதை உற்றுப் பார்த்தது.
சந்திரயான் 2 – இந்த இலக்கு பல்வேறு கோணங்களில் சிறப்பு வாய்ந்தது. சந்திரயான் 2, சந்திரனைப் பற்றிய நமது புரிதலை மேலும் துலக்கிக் காட்ட உதவும். நிலவைப் பற்றி பல தகவல்கள் விரிவான வகையில் நமக்குக் கிடைக்கும் அதே வேளையில் இதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த இரண்டு பெரிய கற்பித்தல்கள் என்ன என்று கேட்டீர்கள் என்று சொன்னால், அவை நம்பிக்கை, அச்சமின்மை ஆகியன தாம். நாம் நமது அறிவாற்றல், செயல்திறன் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். சந்திரயான் 2 முழுக்க முழுக்க இந்தியாவின் பங்களிப்பு நிரம்பியது, சிந்தனையிலும் உருவாக்கத்திலும் நம்முடையது, சுதேசியமானது. புதிய துறைகளில் புதுமையான செயல்பாடுகள், நூதனமான உத்வேகங்கள் என்று வரும் போது நமது விஞ்ஞானிகள் தலைசிறந்தவர்கள், உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதை இந்தத் திட்டம் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இரண்டாவதாக கிடைத்த மகத்துவம் வாய்ந்த கற்பித்தல் என்னவென்றால், எந்த ஒரு இடையூறு ஏற்பட்டாலும் கலங்கக் கூடாது என்பது தான். இரவு பகலாகப் போராடி அனைத்துத் தொழில்நுட்பச் சிக்கல்களையும் சாதனை படைக்கும் வகையில் எப்படி நமது விஞ்ஞானிகள் சீர் செய்தார்களோ, அதை அலாதியானது என்று தான் நாம் புகழ வேண்டும். விஞ்ஞானிகளின் இந்த மகத்தான தவத்தை உலகமே வைத்த கண் வாங்காமல் கவனித்தது. தடங்கல் ஏற்பட்ட பின்னரும் கூட, கலம் சென்றடையும் நேரத்தை அவர்கள் மாற்றவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு பெருமை அளிக்கும் விஷயம். நமது வாழ்க்கையிலும் கூட நாம் தற்காலிகப் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும்; ஆனால் இவற்றைத் தாண்டிச் செல்லும் திறனும் நமக்குள்ளே இருக்கிறது என்பதை மட்டும் நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்திரயான் 2 ஏவுதல் நம் நாட்டின் இளைஞர்களின் மனங்களில் அறிவியல், புதுமைகள் படைத்தல் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. அறிவியல் தானே முன்னேற்றப் பாதையின் திறவுகோல்? அடுத்து நாம் பேரார்வத்தோடு செப்டம்பர் மாதத்திற்காக காத்திருப்போம்; அப்போது லேண்டர் விக்ரமும் ரோவர் ப்ரஞானும் நிலவின் பரப்பில் தரையிறங்கும்.
இன்று மனதின் குரல் வாயிலாக நாட்டின் மாணவச் செல்வங்களுக்கும் இளைய சமூகத்தினருக்கும் ஒரு மிக சுவாரசியமான போட்டி பற்றிய தகவல்களை நான் முன்வைக்க இருக்கிறேன், இந்த வினாவிடைப் போட்டியில் நமது இளைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். விண்வெளி பற்றிய அறிவார்வம், இந்தியாவின் விண்வெளித் திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியன இந்த வினாவிடைப் போட்டியின் கருக்களாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ராக்கெட் செலுத்துதலில் என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது, செயற்கைக்கோளை எப்படி சுற்றுப் பாதையில் நிலைநிறுத்துகிறார்கள், செயற்கைக்கோளிலிருந்து நாம் என்னென்ன தகவல்களைப் பெறுகிறோம், A-Sat என்றால் என்ன என்று இப்படிப்பட்ட பல விஷயங்கள் இந்தப் போட்டியில் இடம்பெறும். MyGov இணைய தளத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று இந்தப் போட்டி பற்றிய தகவல்கள் இடம்பெறும்.
என் இளைய நண்பர்கள், மாணவச் செல்வங்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கிறேன்….. இந்த வினாவிடைப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள், இதை சுவாரசியமானதாக இனிமையானதாக ஆக்குங்கள். உங்கள் பள்ளியை வெற்றி பெறச் செய்ய உழைப்பை மேற்கொள்ளுங்கள் என்று நான் பள்ளிகள், பெற்றோர், உற்சாகம் நிரம்பிய ஆசிரியர்கள் ஆகியோர் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன். அனைத்து மாணவச் செல்வங்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறேன். இதில் மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இந்திய அரசு தனது செலவிலேயே ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லும்; மேலும் செப்டம்பர் மாதத்தில் நிலவின் பரப்பில் சந்திரயான் தரை தொடும் காட்சியைக் காணும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். வெற்றி பெறும் இந்த மாணவர்களுக்கு இது அவர்கள் வாழ்விலேயே மிக உன்னதமான தருணமாக இருக்கும். இது நடக்க வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக இந்த வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், அதிகபட்ச மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், நீங்கள் வெற்றியாளர்களாக ஆக வேண்டும்.
நண்பர்களே, என்னுடைய இந்த ஆலோசனை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் – சுவாரசியமான கணம் தானே!! பிறகென்ன…. வினாவிடைப் போட்டியில் பங்கெடுங்கள், அதிகபட்ச பங்கெடுப்பை ஏற்படுத்த கருத்தூக்கம் அளியுங்கள்.
என் உயிரினும் மேலான நாட்டுமக்களே, நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நமது மனதின் குரல் பல வேளைகளில் தூய்மை இயக்கத்துக்கு வேகம் அளித்திருக்கிறது; இதைப் போலவே தூய்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளும் மனதின் குரலுக்கு உத்வேகம் அளித்தும் வந்திருக்கின்றன.
ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய பயணம் இன்று அனைவரின் பங்களிப்பின் துணையோடு, தூய்மைக்கான புதிய அளவுகோல்களை நிறுவி இருக்கிறது. நாம் தூய்மையின் ஆதர்ஸ நிலையை எட்டி விட்டோம் என்று நான் கூறவில்லை; ஆனால் திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் தொடங்கி, பொதுவிடங்கள் வரை தூய்மை இயக்கத்துக்குக் கிடைத்து வரும் வெற்றி, 130 கோடி நாட்டுமக்களின் உறுதிப்பாட்டின் வல்லமை; ஆனால் நாம் இதோடு நின்று போய்விடப் போவதில்லை. இந்த இயக்கம் இப்போது அசுத்தமில்லா நிலையிலிருந்து அழகுநிலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான் யோகேஷ் சைனீ அவர்களைப் பற்றியும் அவரது குழுவினர் பற்றியும் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. யோகேஷ் சைனீ ஒரு பொறியாளர், அமெரிக்காவில் தான் பார்த்து வந்த வேலையைத் துறந்து பாரத அன்னைக்கு சேவை செய்ய நாடு திரும்பியிருக்கிறார். சிலகாலம் முன்பாக அவர் தில்லியைத் தூய்மை நிறைந்ததாக மட்டுமல்ல, அழகு நிரம்பியதாகவும் மாற்றும் சவாலை மேற்கொண்டார். அவர் தனது குழுவினரோடு இணைந்து லோதீ கார்டனில் இருக்கும் குப்பைத் தொட்டிகளிலிருந்து தன் பணியைத் தொடங்கினார். வீதிகளில் அழுக்கு மண்டிய சுவர்களில் அழகிய ஓவியங்களைத் தீட்டினார். மேம்பாலங்கள்-பள்ளிகளின் சுவர்கள் தொடங்கி குடிசைகள் வரை, அவர் சித்திரக்கோலங்களைத் தீட்டத்தீட்ட அவருக்கு மேலும் மேலும் ஆதரவு பெருகியது. கும்பமேளாவை ஒட்டி ப்ரயாக் ராஜ் நகரின் வீதிச்சுவர்கள் எல்லாம் எப்படி ஓவியங்களாக மிளிர்ந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். யோகேஷ் சைனீ அவர்களும் அவரது குழுவினரும் தான் தங்களது கைவண்ணத்தை அங்கும் காட்டியிருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. வண்ணங்களும், வரிக்கோடுகளும் ஒலி எழுப்பாது தான் ஆனால், இவற்றால் உருவாக்கம் பெற்ற ஓவியங்களில் வானவில்லின் அற்புதங்கள் பிரதிபலிக்கும்; இவையளிக்கும் செய்தி ஆயிரம் சொற்களையும் தாண்டி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் வல்லமை படைத்தவை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. தூய்மை இயக்கத்தின் அழகிலும் நாம் இதை அனுபவபூர்வமாக உணர்கிறோம். கழிவிலிருந்து செல்வம் என்ற கோட்பாடு நமது சமூகத்தில் வலுப்பெற வேண்டும், இது நமது கலாச்சாரமாகவே ஆக வேண்டும் என்பது அவசியமான ஒன்று.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் MyGovஇல் நான் ஒரு சுவாரசியமான கருத்தை வாசிக்க நேர்ந்தது. இதை ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் பகுதியில் வசிக்கும் முஹம்மத் அஸ்லம் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
மனதின் குரல் நிகழ்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. எனது மாநிலமான ஜம்மு கஷ்மீரத்தில் சமுதாயத்தை ஒன்றுதிரட்டும் கிராமம் திரும்புவோம் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நான் அளித்திருக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் செயல்திட்டத்திற்கான ஏற்பாடு ஜூன் மாதம் நடந்தது. இது போன்ற செயல்திட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதுதவிர, செயல்திட்டங்களை இணையவழி கண்காணிக்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் நேரடியாக அரசாங்கத்தோடு ஊடாடும் முதல் செயல்திட்டம் இதுவாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று முஹம்மத் குறிப்பிட்டிருக்கிறார்.
முஹம்மது அஸ்லம் அவர்கள் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்தைப் படித்த பிறகு கிராமம் திரும்புவோம் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் அதிகரித்தது. இதைப் பற்றி நான் விரிவாகத் தெரிந்து கொண்ட போது, நாடு முழுமையோடும் இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். காஷ்மீரத்து மக்கள், வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க எத்தனை பேரார்வத்தோடு இருக்கிறார்கள் என்பதையே இந்தத் திட்டம் எடுத்துக் காட்டுகிறது. இந்தத் திட்டத்தில் முதன் முறையாக உயர் அதிகாரிகள் நேரடியாக கிராமங்கள் சென்றார்கள். எந்த அதிகாரிகளெல்லாம் இதுவரை கிராமவாசிகளைப் பார்த்ததும் கிடையாதோ, அவர்கள் நேரடியாக கிராமவாசிகளின் வாயிற்படிகளுக்கே சென்று, வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களைப் புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளைச் சீர் செய்யவும் முயற்சி மேற்கொண்டார்கள். இந்தத் திட்டம் ஒருவாரக் காலம் வரை நடைபெற்றது, மாநிலத்தின் கிட்டத்தட்ட 4500 பஞ்சாயத்துக்களில் அரசு அதிகாரிகள் கிராமவாசிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை அளித்தார்கள். மேலும் அரசுச் சேவைகள் அவர்களைச் சென்றடைகின்றதா என்பதையும் தெரிந்து கொண்டார்கள். பஞ்சாயத்துக்களை எவ்வாறு வலுவானவையாக ஆக்கலாம்? மக்களின் வருவாயை எவ்வாறு பெருக்கலாம்? அரசு அளிக்கும் சேவைகள் எந்த வகையில் குடிமகனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? கிராமவாசிகள் மனம் திறந்து தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். எழுத்தறிவு, பாலின விகிதாச்சாரம், உடல்நலம், தூய்மை, நீர்ப்பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர், பெண் குழந்தைகளின் கல்வி, மூத்த குடிமக்களின் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
நண்பர்களே, அதிகாரிகள் ஏதோ நாள் முழுவதும் ஊர்சுற்றிவிட்டுத் திரும்பினார்கள் என்பதாக, இந்தத் திட்டம் வெறுமனே கணக்குக் காட்ட செயல்படுத்தப்பட்ட திட்டமல்ல. இந்த முறை அதிகாரிகள் 2 நாட்கள் ஓரிரவு என பஞ்சாயத்தில் கழித்தார்கள். இதன் வாயிலாக கிராமங்களில் நேரம் செலவிட அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்களும் ஒவ்வொருவரையும் சந்திக்க முயற்சி மேற்கொண்டார்கள். ஒவ்வொரு அமைப்பையும் சென்றடைய முனைந்தார்கள். இந்தத் திட்டத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்க மேலும் பல விஷயங்களும் இதில் இணைக்கப்பட்டன. விளையாடு இந்தியா திட்டப்படி, குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புக்கான பணியட்டைகள், பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிதிசார் அறிவு முகாம்களும், விவசாயம், தோட்டக்கலைத் துறைகளின் அரங்குகளும் அரசு நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அளித்தன. ஒருவகையில் இந்த ஏற்பாடு, வளர்ச்சித் திருவிழாவானது, மக்கள் பங்களிப்புப் பெருவிழாவானது, மக்கள் விழிப்புணர்வின் நல்விழாவானது. காஷ்மீரத்தின் இந்த வளர்ச்சித் திருவிழாவில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கெடுத்துக் கொண்டார்கள். கிராமம் திரும்புவோம் என்ற இந்த செயல்திட்டத்திற்கான ஏற்பட்டுகள் உள்ளடங்கிய கிராமங்களிலும் செய்யப்பட்டிருந்தன என்பது சந்தோஷம் அளிக்கும் விஷயமாக இருக்கும் அதே வேளையில், அப்படிப்பட்ட தொலைவான கிராமங்களுக்கும் சென்றடைய அரசு அதிகாரிகள் கடினமான மலைப் பாதைகளில் எல்லாம் ஏறி இறங்கினார்கள், ஒன்றிரண்டு நாட்கள் நடைப்பயணமாகவும் மேற்கொண்டார்கள். சதாசர்வகாலமும் எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு நடக்கும் எல்லைப்புற கிராமங்களுக்கும்கூட இந்த அதிகாரிகள் சென்றார்கள். இதுமட்டுமல்லாமல் ஷோபியான், புல்வாமா, குல்கான்வ், அனந்த்நாக் மாவட்டங்களின் மிகப் பதட்டமான பகுதிகளுக்கும் எந்த அச்சமும் இன்றி இவர்கள் பயணித்தார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பல அதிகாரிகளுக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அவர்கள் இரண்டு நாட்களுக்கும் கூடுதலாகக் கூட இந்த கிராமங்களில் நேரம் செலவிட்டார்கள். இந்தப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, அதில் பெரிய எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுப்பை உறுதி செய்வது, தங்களுக்கான திட்டங்களை அவர்களே ஏற்படுத்திக் கொள்வது என்ற இவையனைத்தும் சுகமான விஷயங்கள். புதிய உறுதிப்பாடு, புதிய உற்சாகம், அற்புதமான பலன்கள். காஷ்மீரத்தின் நமது சகோதர சகோதரிகள் நல்லாட்சியை விரும்புகிறார்கள் என்பதையே இப்படிப்பட்ட செயல்திட்டங்களில் மக்களின் பங்கெடுப்பு நமக்குத் தெரிவிக்கிறது. மேலும், வளர்ச்சியின் ஆற்றல், துப்பாக்கித் தோட்டாக்களின் ஆற்றலை விட எப்போதுமே அதிக வலிமை வாய்ந்தது என்பதையும் இது நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வளர்ச்சிப் பயணத்தில் யாரெல்லாம் தடைகளையும் வன்மத்தையும் விதைக்க விழைகிறார்களோ, அவர்களின் கொடுமதியில் விளையும் மாபாதகங்கள் ஒருபோதும் வெற்றியடையா என்பதையும் இது தெளிவாக்குகிறது.
என் நெஞ்சம் நிறை நாட்டுமக்களே, ஞானபீட விருது பெற்ற தத்தாத்ரேய ராமச்சந்திர பேந்த்ரே அவர்கள் தனது ஒரு கவிதையில் மாரிக்காலம் பற்றி எவ்வாறு எழுதியிருக்கிறார் தெரியுமா?
ஹொளிகே மத்தே மளிகே ஆக்யேத லக்ன. அதராக பூமி மக்ன.
இந்தக் கவிதை வரியின் பொருள் என்னவென்றால், மாரிக்காலத்தின் பொழிவுக்கும், நீரின் பெருக்குக்கும் இடையே இருக்கும் உறவு விநோதமானது. இதன் அழகைப் பார்த்து பூமி பூரிக்கிறது.
பாரதநாடு முழுவதிலும் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகளைச் சேர்ந்த மக்கள் மாரிக்காலத்தைத் தங்களுக்கே உரிய வகையில் கொண்டாடி மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்தப் பருவத்தில் நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், தன் மீது ஏதோ பசும் போர்வையைப் போர்த்தியது போல பூமி காட்சியளிக்கும். நாலாபுறத்திலும் ஒரு புதிய சக்தி ஊடுறுவிப் பாய்கிறது. இந்தப் புனிதமான மாதத்தில் பல பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள், அமர்நாத் புனிப்பயணத்தை மேற்கொள்கிறார்கள்; பலர் உண்ணாநோன்பு இருக்கிறார்கள், பெரும் உற்சாகத்தோடு ஜன்மாஷ்டமி, நாக பஞ்சமி போன்ற பண்டிகைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் தான் சகோதர சகோதரிகளின் அன்பின் வெளிப்பாடாக ரக்ஷா பந்தன் பண்டிகையும் வருகிறது. மாரிக்காலம் பற்றி நாம் பேசும் போது, இந்த முறை அமர்நாத் யாத்திரையில், கடந்த 4 ஆண்டுகளையும் விட அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கி இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித அமர்நாத் குகையில் தரிசனம் செய்திருக்கிறார்கள். மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்தப் புனித யாத்திரையில் 2015ஆம் ஆண்டு எத்தனை பேர் பங்கெடுத்துக் கொண்டார்களோ, அதைவிட அதிகமாக இந்த முறை, வெறும் 28 நாட்களிலேயே அந்த எண்ணிக்கை கடக்கப்பட்டு விட்டது.
அமர்நாத் புனித யாத்திரையின் வெற்றியின் பின்புலத்தில் இருக்கும் ஜம்மு கஷ்மீரத்தின் மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கும் என் விசேஷமான பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். யாரெல்லாம் யாத்திரை முடித்து திரும்பியிருக்கிறார்களோ, அவர்களனைவரும் மாநில மக்களின் விருந்தோம்பல் மற்றும் அரவணைப்பு உணர்வு ஆகியவற்றால் கவரப்பட்டு இருக்கிறார்கள். இவையனைத்தும் எதிர்காலத்தில் சுற்றுலாவுக்காக மிகவும் பயனுடையதாக இருக்கும். உத்தராக்கண்டிலும் கூட இந்த ஆண்டு சார்தாம் புனித யாத்திரை தொடங்கி விட்டது என்றும் இதில் வெறும் ஒண்ணரை மாதக்காலத்திலேயே 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு மட்டுமே வந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரமான இயற்கைப் பேரிடருக்குப் பிறகு முதன்முறையாக இத்தனை சாதனை படைக்கும் எண்ணிக்கையில் மக்கள் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
பருவமழைக்காலத்தில் அழகு கொஞ்சும் இடங்கள், அவை நாட்டில் எங்கே இருந்தாலும் கண்டிப்பாகச் சென்று களியுங்கள் என்று நான் உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் இத்தகைய அழகு களிக்கும் இடங்களைப் பார்க்க, நம் நாட்டு மக்களின் உணர்வுகளை உணர, சுற்றுலாவையும் புனித யாத்திரையையும் விட மிகப் பெரிய ஆசான் வேறு யாரும் இருக்க முடியாது.
மாரிக்காலம் என்ற இந்த அழகான, உயிர்ப்புநிறை மாதம் உங்கள் அனைவருக்குள்ளும் புதிய ஆற்றல், புதிய எதிர்பார்ப்பு, புதிய அபிலாஷைகளைச் செலுத்தட்டும். இதைப் போலவே ஆகஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுகளைத் தாங்கி வருகிறது. ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்காக சில சிறப்பான முஸ்தீபுகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சுதந்திரத் திருநாளைக் கொண்டாட ஏதாவது புதிய வழிமுறையை ஆராய்வோம். மக்கள் பங்களிப்பு அதிகரிக்கட்டும். ஆகஸ்ட் மாதம் 15ஐ எப்படி மக்கள் திருவிழாவாக மாற்றுவது? இதைப் பற்றி சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!! இன்னொரு புறத்தில் இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைப் பொழிவு இருக்கிறது. பல பகுதிகளில் நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக பல சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. மாநில அரசுகளோடு இணைந்து மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மிக விரைவான வகையில் செய்து வருகிறது என்று, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஆறுதலளிக்க விரும்புகிறேன். நாம் தொலைக்காட்சியில் மழையைப் பார்க்கும் போது நமக்கு ஒரு கண்ணோட்டம் தான் காணக் கிடைக்கிறது – எங்கு பார்க்கினும் வெள்ளம், நிறைந்திருக்கும் நீர், போக்குவரத்து ஸ்தம்பிப்பு. பருவமழையின் மற்றொரு காட்சி…….. ஆனந்தக் கூத்தாடும் நமது விவசாயிகள், குதூகலிக்கும் நமது புள்ளினங்கள், திளைப்பில் பொங்கும் நீர்வீழ்ச்சிகள், பசும்பட்டுப்போர்வை போர்த்திய நிலமங்கை….. இவையனைத்தையும் கண்டு களிக்க நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வெளியே சென்றுத் தான் வர வேண்டும். மழை, புத்துணர்வு, சந்தோஷம் என்ற இரண்டையும் ஒருங்கே அள்ளித் தருகிறது. இந்தப் பருவமழைக்காலம் உங்களனைவருக்கும் நிரந்தர சந்தோஷங்களை வாரி வழங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.
என் இனிய நாட்டுமக்களே, மனதின் குரலை எங்கே எப்படித் தொடங்குவது, எங்கே எவ்விதம் நிறைவு செய்வது என்பது பெரிய சவாலான விஷயம். ஆனால், காலக்கெடு என்ற ஒன்று இருக்கிறதே!! ஒரு மாதக்காலக் காத்திருப்புக்குப் பிறகு நான் மீண்டும் வருவேன். உங்களை வந்து சந்திப்பேன். மாதம் முழுவதும் நீங்கள் என்னிடம் ஏராளமான விஷயங்களை அள்ளித் தாருங்கள். நான் இனிவரும் மனதின் குரலில் அவற்றை இணைக்க முயல்கிறேன். நான் மீண்டும் நமது இளைய நண்பர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்…… நீங்கள் வினாவிடைப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள். உங்களுக்கு ஸ்ரீஹரிக்கோட்டா செல்லும் பொன்னான சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது, இதை எந்தச் சூழ்நிலையிலும் தவற விடாதீர்கள்.
உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள், வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின் குரல் என்ற இனிய தொடரை நாம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறோம். தேர்தல் பரபரப்பில் மிகவும் ஈடுபட்டு இருந்தேன், ஆனாலும் மனதின் குரல் அளித்த மகிழ்ச்சி இருக்கிறதே, அது கிடைக்கவில்லை. ஏதோ ஒன்று குறைந்தது போல உணர்ந்தேன். நம்மவர்களோடு சேர்ந்தமர்ந்து, இனிமையான சூழலில், 130 கோடி நாட்டுமக்களின் குடும்ப உறவுகளில் ஒருவனாக, பல விஷயங்களைக் கேட்க முடிந்தது, சில வேளைகளில் நம்முடைய விஷயங்களே கூட, நம்மவர்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக அமைந்தது. இந்த இடைப்பட்ட காலகட்டம் எப்படி கழிந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். ஞாயிற்றுக் கிழமை, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி என்றவுடன், அட, ஏதோ ஒன்று விடுபட்டுப் போய் விட்டதே என்ற உணர்வு எனக்கு மேலோங்கும், உங்களுக்கும் அப்படித் தானே!! கண்டிப்பாக நீங்களும் அப்படித் தான் உணர்ந்திருப்பீர்கள்!! இது உயிரும் உணர்வும் கலந்த பரிமாற்றம் என்றே நான் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியில் உயிர்ப்பு உண்டு; அவரவர் மனதில் இது தங்களுடைய நிகழ்ச்சி என்ற உணர்வு உண்டு, அவர்கள் மனதிலே ஒரு பிடிப்பு உண்டு, மனங்களில் பந்தம் உண்டு; இவை அனைத்தின் காரணமாகவும், இடைநடுவே கடந்த காலத்தை சற்றுக் கடினமான காலமாக நான் உணர்ந்தேன். ஒவ்வொரு கணமும் நான் எதையோ இழந்தது போல இருந்தது. ஒரு வெறுமை சூழ்ந்தது. தேர்தல் முடிந்தவுடனேயே உங்களிடையே வந்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அப்போது என்ன தோன்றியது என்றால் – இல்லை இல்லை, அது ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால் இந்த ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருந்தேன். ஒருவழியாக அந்த நாளும் இன்று வந்தே விட்டது. ஒரு குடும்பச்சூழலில் மனதின் குரலில் சின்னச் சின்ன, இலகுவான, சமூகம், வாழ்க்கை ஆகியவற்றில் மாற்றமேற்படுத்தும் காரணிகளாக ஆகும் விஷயங்களை, ஒரு புதிய உணர்விற்கு உயிர் கொடுக்கும் வகையில், புதிய இந்தியாவின் உணர்விற்கு ஆற்றல் அளிக்கும் வகையில், இந்தத் தொடர் முன்னெடுத்துச் செல்லட்டும்.
ஏராளமான செய்திகள் கடந்த சில மாதங்களில் வந்திருக்கின்றன; மனதின் குரலின் இழப்பைத் தாங்கள் உணர்வதாக அவற்றில் மக்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நான் படிக்கும் போதும், கேட்கும் போதும் எனக்கு நன்றாக இருக்கிறது. என் சொந்தங்கள் என்ற உறவு மணக்கிறது. நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் இது என்று சில வேளைகளில் எனக்குப்படுகிறது. என்னைப் பொறுத்த மட்டில் உங்களுடனான என்னுடைய இந்த மௌனமான பரிமாற்றம் ஒரு வகையில் என்னுடைய ஆன்மீகப் பயண அனுபவத்தின் ஒரு அங்கமாகவும் இருந்துள்ளது. தேர்தல் பரபரப்புக்கு இடையே ஏன் நான் கேதார்நாத் பயணித்தேன் என்று பலர் என்னிடம் வினா எழுப்பியிருக்கிறார்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது, தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது என்பதையெல்லாம் நான் புரிந்து கொள்கிறேன்; அதே வேளையில் இது தொடர்பான என்னுடைய உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால் நான் அந்த திசையில் பயணிக்கத் தொடங்கினேன் என்றால், மனதின் குரலின் போக்கே மாறிப் போகலாம். ஆகையால் தேர்தல் காலப் பரபரப்பு, வெற்றி தோல்வி பற்றிய அனுமானங்கள், வாக்களிப்பு இன்னும் தொடர்ந்த வேளையில் நான் கிளம்பி விட்டேன். பலர் இதில் அரசியல் உட்பொருள் இருப்பதாக கருதுகிறார்கள். என்னைப் பொறுத்த மட்டில், என்னை நான் சந்திக்க ஒரு சந்தர்ப்பமாகவே அதைக் கருதுகிறேன். ஒருவகையில் என்னையே நான் சந்திக்கச் சென்றேன் என்று கொள்ளலாம். மேலும் விஷயங்களை நான் இன்று கூறப் போவதில்லை; ஆனால் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகச் சொல்லுவேன்….. மனதின் குரலுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய இடைவெளி காரணமாக உண்டான வெறுமையை, சற்றே நிரப்பிக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தை கேதார் பள்ளத்தாக்கும், தனிமை நிறைந்த குகையும் எனக்குக் கண்டிப்பாகக் கொடுத்தன. மற்றபடி உங்கள் மனதில் தோன்றியிருக்கும் ஆர்வத்தைப் பற்றியும் ஒரு சமயம் விவாதிப்போம் என்று நினைக்கிறேன். எப்போது செய்வேன் என்று என்னால் கூற முடியவில்லை, ஆனால் கண்டிப்பாகச் செய்வேன், ஏனென்றால் தெரிந்து கொள்ள விரும்புவது உங்கள் உரிமை, தெரிவிப்பது என் கடமை. கேதார் விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பது போலவே, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு வலுசேர்க்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை, உங்கள் சொற்களில் நான் தொடர்ந்து உணர்ந்து வருகிறேன். மனதின் குரலுக்கு வரும் கடிதங்களில் காணப்படும் உள்ளீடுகள், வாடிக்கையான அரசு அலுவல்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவையாக காணப்படுகின்றன. ஒரு வகையில் உங்களின் கடிதங்கள் எனக்குச் சில வேளைகளில் உத்வேகம் அளிப்பவையாக அமைகின்றன, சில வேளைகளில் சக்திக்கான காரணியாகவும் அமைகின்றன. சில வேளைகளில் என் எண்ண ஓட்டங்களின் இடையே இருக்கும் மடையைத் திறப்பவையாகவும் உங்கள் சொற்கள் இருக்கின்றன. மக்கள், நாடு, சமுதாயம் ஆகியவை எதிர்நோக்கும் சவால்களை முன்வைப்பதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் அவையே அளித்தும் விடுகின்றன. இந்தக் கடிதங்கள் மக்களின் பிரச்சனைகளை விவரிக்கும் அதே வேளையில், அவற்றுக்கான தீர்வுகள், சிலபல ஆலோசனைகள், ஏதாவது ஒரு கற்பனை ஆகியவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி விடுகின்றன. ஒருவர் தூய்மை தொடர்பாக எழுதும் போது அவர் தூய்மையின்மைக்கு எதிராகத் தன் கோவத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தூய்மை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் அளிக்கிறார். ஒருவர் சுற்றுச்சூழல் பற்றி விவாதிக்கிறார் என்றால், அதில் அவருடைய வேதனை பிரதிபலிக்கிறது; ஆனால் அதோடு கூடவே, அவர் தான் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் தெரிவிக்கிறார், அவரது மனதில் உதித்த எண்ணங்களையும் அவர் வர்ணிக்கிறார். அதாவது ஒருவகையில் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒட்டுமொத்த சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் எப்படி இருக்க முடியும் என்பது தொடர்பான ஒரு காட்சி அவரது சொற்களில் பளிச்சிடும். மனதின் குரல் நாடு மற்றும் சமூகத்திற்கு ஒரு கண்ணாடி போலச் செயல்படுகிறது. நாட்டுமக்களின் ஆழ்மனங்களில் இருக்கும் உறுதி, ஆற்றல், திறன் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இல்லை என்பதை இது காட்டுகிறது. அந்த பலங்களையும், திறன்களையும் ஒருங்கிணைப்பதும், அவற்றுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதும், ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுத்துவதும் தான் தேவை. நாட்டின் முன்னேற்றத்தில் 130 கோடி நாட்டு மக்களும் வலுவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இணைந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் மனதின் குரல் நமக்குத் தெரிவிக்கிறது. நான் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கூறுவேன்……. மனதின் குரலுக்கு எனக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன, ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன, நிறைய செய்திகள் வருகின்றன, ஆனால் குற்றச்சாட்டுக்கள் குறைவாகவே இருக்கின்றன; கடந்த 5 ஆண்டுகளில் எனக்கு இது தேவை, எனக்கு அது கிடைக்கவில்லை என்று தனிப்பட்ட வகையிலான கடிதங்கள் ஏதும் என் கவனத்திற்கு வரவில்லை. ஒருவர் நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார், ஆனால் அவர் தனக்காக எந்த ஒரு விண்ணப்பத்தையும் முன்வைக்கவில்லை என்ற ஒரு நிலையை நீங்கள் கற்பனை செய்து பாருங்களேன்…… தேசத்தின் இப்படிப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் எத்தனை உன்னதமானதாக இருக்கும்!! நான் இந்த விஷயங்களை எல்லாம் ஆய்வு செய்யும் போது, எனக்கு எத்தனை ஆனந்தம் ஏற்படுகிறது, என்னுள் எத்தனை உற்சாகம் பிறக்கிறது என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். நீங்களே என்னை இயக்குகிறீர்கள், நீங்களே என்னை துரிதமாக இயங்கச் செய்கிறீர்கள், ஒவ்வொரு கணமும் எனக்குள் உயிர்ப்பினை நீங்கள் தான் ஊட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது…. இந்த உறவு இல்லாமல் தான் நான் தவிப்பில் காத்திருந்தேன். இன்று என் மனம் சந்தோஷங்களால் இட்டு நிரப்பப்பட்டு இருக்கிறது. நாம் 3-4 மாதங்கள் கழித்து சந்திக்கலாம் என்று நான் கூறிய போது, அதிலும் கூட சில அரசியல் தொனியைக் கண்டதோடு, அட, மோதிஜிக்கு எத்தனை நம்பிக்கை பாருங்கள் என்றார்கள். நம்பிக்கை மோதியுடையது கிடையாது – இந்த நம்பிக்கை, உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. நீங்கள் தான் நம்பிக்கையின் ஊற்றாக விளங்கினீர்கள், இதன் காரணமாகத் தான் இயல்பான வகையிலே, சில மாதங்கள் கழித்து நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று எனது கடைசி மனதின் குரலில் நான் கூறியிருந்தேன். உள்ளபடியே நானாக வரவில்லை – நீங்கள் தான் என்னைக் கொண்டு வந்தீர்கள், நீங்களே என்னை அமர வைத்தீர்கள், நீங்களே மீண்டும் ஒருமுறை உரையாடும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்திருக்கிறீர்கள். இந்த உணர்வு உள்ளத்தில் பொங்க, உவகையோடு நாம் மனதின் குரல் தொடரை முன்னெடுத்துச் செல்வோம், வாருங்கள்!!
நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட வேளையில், அதற்கு எதிரான போராட்டங்கள் அரசியல் வரையறைகளுக்கோ, அரசியல் தலைவர்களோடு மட்டுமோ நின்று விடவில்லை; சிறைக் கம்பிகளுக்கு இடையேயும் இது சிறைப்பட்டு விடவில்லை. ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. தொலைக்கடிக்கப்பட்ட ஜனநாயகத்துக்காக ஒரு துடிப்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் வேளை தவறாது உணவு உண்ணுகிறோம் என்ற நிலையில் பசி என்றால் என்ன என்று தெரிய வராது. இதைப் போலவே வழக்கமான வாழ்க்கையில் ஜனநாயகம் அளிக்கும் உரிமைகள், அது அளிக்கும் ஆனந்தம் பற்றி எப்போது தெரிய வரும் என்றால், ஒருவர் நமது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் போது தான். அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், நாடு முழுவதிலும் இருந்த ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய ஏதோ ஒன்று பறிக்கப்பட்டதாகவே உணர்ந்தான். அதை அவன் வாழ்க்கையில் பயன்படுத்தியே இல்லாத நிலையிலும், பறிக்கப்பட்ட அந்த ஒன்று ஏற்படுத்திய வலி, அவனது இதயத்தைத் தைத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சில முறைகளை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக மட்டுமே ஜனநாயகம் தழைத்திருக்கவில்லை. சமூக அமைப்பை செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டமும் தேவைப்படுகிறது, சட்டங்கள், விதிகள், முறைகள் ஆகியனவும் தேவைப்படுகின்றன. உரிமைகள்-கடமைகள் ஆகியவை பற்றியும் பேசப்படுகின்றன. ஆனால் சட்டங்கள், விதிமுறைகள் அனைத்தையும் தாண்டி, ஜனநாயகம் என்பது நமது நற்பண்பு, ஜனநாயகம் நமது கலாச்சாரம், ஜனநாயகம் நமது மரபு. இந்த மரபு காரணமாகவே பாரதம் தழைத்திருக்கும் சமுதாயமாக விளங்குகிறது என்பதை என்னால் மிகுந்த பெருமிதம் பொங்கக் கூற முடியும். இதனாலேயே ஜனநாயகம் இல்லாமையை நாட்டு மக்கள் உணர்ந்தார்கள், அவசரநிலைக்காலத்தில் நாம் இந்த இல்லாமையை அனுபவித்தோம். ஆகையால் நாடு, தனக்காக அல்ல, ஒட்டுமொத்த ஒரு தேர்தலையும் தன் நலனுக்காக அல்ல, ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக அர்ப்பணம் செய்திருந்தது. ஜனநாயகத்தின் பொருட்டு, தங்களது மற்ற உரிமைகளை, அதிகாரங்களை, தேவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஜனநாயகத்துக்காக மட்டுமே உலகின் எந்த ஒரு நாட்டில் வசிக்கும் மக்களாவது வாக்களித்தார்கள் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஒரு தேர்தல் நம் நாட்டிலே 1977ஆம் ஆண்டிலே அரங்கேறியது என்று கூறலாம். தற்போது ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா, மிகப்பெரிய தேர்தல் இயக்கம், நமது தேசத்தில் முழுமை அடைந்தது. வளம் படைத்தோர் முதல் வறியவர் வரை, அனைவரும் இந்தத் திருவிழாவில் உவகையோடு நமது தேசத்தின் எதிர்காலம் பற்றிய முடிவை எடுப்பதில் முனைப்போடு இருந்தார்கள்.
எந்த ஒரு விஷயமோ பொருளோ நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் போது, அதன் மகத்துவத்தை நாம் குறைவாக மதிப்பீடு செய்து விடுகிறோம், அவற்றின் அற்புதங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். விலைமதிப்பில்லாத மக்களாட்சி முறை என்பது நம் கைத்தலப் பொருளாக்கப்பட்டிருக்கிறது; இதை நாம் மிக எளிமையான விளையாட்டுப் பொருளாகவே கருதத் தலைப்படுகிறோம். ஆனால் நமது ஜனநாயகம் மிகவும் மகத்துவம் நிறைந்தது, நமது நாடி நரம்புகளில் எல்லாம் இது விரவிக் கிடக்கிறது – பல நூற்றாண்டுகள் தவத்தால், பல தலைமுறைகளின் பண்புகளால், ஒரு விசாலமான பரந்த மனோநிலை காரணமாக இது வாய்த்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். பாரதநாட்டிலே, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 61 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை நமக்கு மிகச் சாதாரணமானதாகத் தோன்றலாம் ஆனால், உலகின் கண்ணோட்டத்திலிருந்து சீனாவை நாம் விடுத்துப் பார்த்தோமேயானால், உலகின் எந்த ஒரு நாட்டின் ஜனத்தொகையை விடவும் அதிகமான மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். எத்தனை வாக்காளர்கள் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்களோ, அவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கட்தொகையை விடவும் தோராயமாக இரட்டிப்பானது, அது ஒட்டுமொத்த ஐரோப்பாவின் மக்கட்தொகையை விடவும் மிகையானது. இது நமது மக்களாட்சியின் விசாலத்தன்மை மற்றும் பரந்துபட்ட தன்மையை அடையாளம் காட்டுகிறது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், இதுவரை வரலாற்றில் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தலாக அமைந்துள்ளது. இத்தனை பிரும்மாண்டமான ஒரு தேர்தலை நிர்வகிக்க எத்தனை மகத்தான அளவிலே பொருட்களும், மனிதவளமும் தேவைப்படும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என பலர் இரவுபகலாக கடுமையாக உழைத்ததன் பலனாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. ஜனநாயகத்தின் இந்த மாபெரும் வேள்வியை வெற்றிகரமாக நிறைவேற்றியதில், சுமார் 3 இலட்சம் துணை இராணுவப் படையினர் தங்கள் கடமையை ஆற்றினார்கள், பல்வேறு மாநிலங்களில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்கள் உழைப்பை அளித்தார்கள். இவர்கள் அனைவரின் கடுமையான உழைப்பின் காரணமாகவே இந்த முறை, கடந்த முறையை விடவும் அதிகமாக வாக்களிப்பு அரங்கேறியிருக்கிறது. வாக்களிப்பின் பொருட்டு நாடு முழுவதிலும் சுமார் 10 இலட்சம் வாக்குச் சாவடிகள், சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்களிக்கும் இயந்திரங்கள், 17 இலட்சத்திற்கும் அதிகமான வீவீபேட் கருவிகள்…… ஏற்பாடுகளின் பிரும்மாண்டத்தன்மையை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். எந்த ஒரு வாக்காளருக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகத் தான் இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைவான பகுதியில், ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக மட்டுமே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் அங்கே சென்று சேரவே இரண்டு நாட்கள் பிடித்தன என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இது தான் ஜனநாயகத்துக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதை. உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடி இந்தியாவில் தான் அமைந்திருக்கிறது. இந்த வாக்குச்சாவடி ஹிமாச்சல் பிரதேசத்தின் லாஹௌல் ஸ்பிதி என்ற இடத்தில், 15000 அடிகள் உயரத்தில் இருக்கிறது. இதைத் தவிர பெருமை சேர்க்கும் மேலும் ஒரு விஷயமும் இந்தத் தேர்தலுக்கு உண்டு. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் உற்சாகத்தோடு வாக்கெடுப்பில் பங்கு கொண்டார்கள் என்பதும் கூட, வரலாற்றிலேயே இது முதன்முறையாக இருக்கலாம். இந்தத் தேர்தலில் பெண்கள் மற்றும் ஆண்களின் வாக்களிப்பு வீதம் ஏறத்தாழ இணையாகவே இருந்தது. இது தொடர்பான மேலும் ஒரு உற்சாகமளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று அவையில் சாதனை படைக்கும் வகையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 என்ற அளவில் இருக்கிறது. நான் தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தல் வழிமுறையோடு இணைந்த ஒவ்வொரு நபருக்கும், பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மேலும் இந்தியாவின் விழிப்புணர்வுடைய வாக்காளர்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, பூங்கொத்து அல்ல-புத்தகம் என்று நீங்கள் பலமுறை நான் கூறக் கேட்டிருக்கலாம். வரவேற்புகள்-கௌரவமளித்தல் போன்ற தருணங்களின் போது பூக்களுக்கு பதிலாகப் புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போதிலிருந்து பல இடங்களில் மக்கள் புத்தகங்களை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது ஒருவர் எனக்கு ப்ரேம்சந்த் அவர்களின் பிரபலமான கதைகள் என்ற புத்தகத்தை அளித்திருக்கிறார். எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. பல நாட்களாகவே நேரம் கிடைக்கவில்லை, ஆனால் அயல்நாட்டுப் பயணம் காரணமாக அவரது சில கதைகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ப்ரேம்சந்த் தனது கதைகளில் சமூகத்தின் யதார்த்த நிலையை வர்ணித்திருக்கிறார். படிக்கும் போது அந்தக் காட்சிகள் ஓவியமாக உங்கள் மனதில் குடியேறத் தொடங்கி விடுகின்றன. அவர் எழுதிய ஒவ்வொரு விஷயமும் உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன. இயல்பான நடை, எளிமையான மொழி ஆகியவற்றின் மூலம் மனித உணர்வுகளை தூரிகையால் தீட்டும் அவரது சிறுகதைகள் என் மனதையும் வருடின. அவரது சிறுகதைகளில் ஒட்டுமொத்த இந்தியாவின் சாரத்தையும் நாம் காணலாம். நான் அவரது ’நஷா’ என்ற பெயரிலான சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்த வேளையில், சமூகத்தில் விரவிப் போயிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் மீது என் கருத்து இயல்பாகவே சென்றது. என் மனதில் எனது இளமைக்கால நாட்கள் நிழலாடின…… எப்படி எல்லாம் இரவு முழுக்க இந்த விஷயம் குறித்து விவாதங்கள் செய்திருக்கிறோம்!! நிலச்சுவான்தாருடைய மகன் ஈசுவரி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பீர் ஆகியோர் பற்றிய இந்தக் கதை கற்பிக்கும் பாடம் என்ன தெரியுமா? நீங்கள் எச்சரிக்கையோடு இல்லையென்று சொன்னால், கூடாநட்பின் பாதிப்பு எப்போது ஏற்படும் என்பது நமக்குத் தெரியவே வராது. இரண்டாவது சிறுகதை, என் மனதின் ஆழங்களைத் தொட்டது. அதன் பெயர் ’ஈத்காஹ்’. ஒரு சிறுவனின் கருணையுடன் கூடிய புரிதல், அவனுக்கு அவன் பாட்டியிடம் இருக்கும் தூய்மையான அன்பு, இத்தனை சிறிய வயதில் அவனது பக்குவம் நிறைந்த மனம். 4-5 வயதுடைய ஹாமீத் திருவிழாவிலிருந்து ரொட்டியைப் புரட்டிப் போடும் இடுக்கி ஒன்றை வாங்கிக் கொண்டு தனது பாட்டியிடம் வரும் போது, உண்மையிலேயே மனித உணர்வு சிகரத்தைத் தொடுகிறது. இந்தச் சிறுகதையின் இறுதிப் பத்தி மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது ஏனென்றால், அதில் வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மை வெளிப்படுகிறது. “பாலகன் ஹாமித் வயதான ஹாமிதின் பாத்திரத்தை நடித்திருக்கிறான் – மூதாட்டி அமீனா, சிறுமி அமீனாவாகி விடுகிறாள்”.
இதைப் போலவே நெஞ்சைத் தொடும் ஒரு சிறுகதையின் பெயர் ‘பூஸ் கீ ராத்’. இந்தக் கதையில் ஒரு ஏழை விவசாயியின் வாழ்க்கையில் காணப்படும் ஒரு முரண், உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தனது விளைச்சல் நாசமாகிய பிறகும் கூட, ஹல்தூ என்ற விவசாயி ஏன் சந்தோஷமாக இருக்கிறான் என்றால், எலும்பை உருக்கும் குளிரில் அவன் தனது வயலில் உறங்கத் தேவையில்லை என்பதால் தான். ஆனால் இந்தக் கதைகள் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக எழுதப்பட்டவை என்றாலும், இவை இன்றளவும் பொருத்தமானவையாக இருப்பதாக நம்மால் உணர முடிகிறது. இவற்றைப் படித்த பிறகு, நான் அலாதியானதொரு அனுபவத்தை உணர்ந்தேன்.
படிக்கும் விஷயம் பற்றிப் பேச்சு வரும் வேளையில், கேரளத்தில் அக்ஷரா நூலகம் பற்றி ஏதோ ஒரு ஊடகத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த நூலகம் இடுக்கியில் அடர்ந்த காடுகளுக்கு இடையே ஒரு கிராமத்தில் இருக்கிறது என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இங்கே தொடக்கப்பள்ளி ஆசிரியரான பீ. கே முரளீதரனும், சின்னதொரு தேநீர்க் கடை நடத்தி வரும் பீ.வீ. சின்னத்தம்பியும் இணைந்து, இந்த நூலகத்தை நிறுவக் கடினமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு சமயம், புத்தகங்களை மூட்டைகளாகக் கட்டிக் கொண்டும், முதுகில் சுமந்து கொண்டும்கூட வந்திருக்கிறார்கள். இன்று இந்த நூலகம் பழங்குடியினத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே புதியதொரு திசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
குஜராத்தின் வாஞ்சே குஜராத் இயக்கம் என்பது வெற்றிகரமான ஒரு முயற்சி. புத்தகங்களைப் படிக்கும் இந்த இயக்கத்தில், அனைத்து வயதினரும் இலட்சக்கணக்கில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கூகுள் குரு காலகட்டத்தில், உங்கள் தினசரி வாடிக்கைக்கு இடையிலே புத்தகங்களுக்கு கண்டிப்பாக ஒரு இடமளிக்கும் வகையில் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உண்மையிலேயே நீங்கள் இதை மிகவும் ரசிப்பீர்கள் என்பதோடு, நீங்கள் படித்த புத்தகம் பற்றியும் NarendraModi செயலியிலும் எழுதுங்கள், இதனால் மனதின் குரல் நேயர்களும் இதனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நம் நாட்டுமக்கள் நிகழ்காலத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் வருங்காலத்தில் சவால்களாக உருவெடுக்கக்கூடிய விஷயங்கள் பற்றியும் சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்து, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் NarendraModi செயலியிலும், Mygovஇலும் நீங்கள் இட்ட கருத்துக்களைப் படித்துக் கொண்டிந்த போது, தண்ணீர் பற்றிப் பலர் எழுதியதை என்னால் கவனிக்க முடிந்தது. பேல்காவீயைச் சேர்ந்த பவன் கௌராயீ, புவனேஸ்வரைச் சேர்ந்த சிதாம்சு மோஹன் பரீதா ஆகியோரைத் தவிர யஷ் ஷர்மா, ஷாஹாப் அல்தாஃப் என இன்னும் பலர் தண்ணீர் தொடர்பான பல சவால்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தண்ணீருக்கு நமது கலாச்சாரத்தில் மிகப்பெரிய மகத்துவம் உள்ளது. ரிக்வேதத்தின் ஆபஸ்சூக்தத்தில் தண்ணீர் பற்றி இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது –
ஆபோஹிஷ்டா மயோபுவ:, ஸ்தான ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே,
யோவ: சிவதமோரஸ:, தஸ்ய பாஜயதேஹந:, உஷதீரிவ மாதர:
आपो हिष्ठा मयो भुवः, स्था न ऊर्जे दधातन, महे रणाय चक्षसे,
यो वः शिवतमो रसः, तस्य भाजयतेह नः, उषतीरिव मातरः |
அதாவது, தண்ணீர் தான் உயிர்கொடுக்கும் சக்தி, ஆற்றல் என்பதை உணர்த்தும் துதி இது. நீர் என்பது தாய்க்கு சமமானது அதாவது தாய்மை என்பது தனது ஆசிகளை நல்கட்டும். தன்னுடைய கருணையை நம்மீது பொழியட்டும். நீர் தட்டுப்பாட்டினால் நாட்டின் பல பாகங்களில் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு உண்டாகிறது. ஆண்டு முழுவதிலும் மழை காரணமாக கிடைக்கப்பெறும் நீரின் வெறும் 8 சதவீதம் மட்டுமே நமது தேசத்தில் சேமித்து வைக்க முடியும் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வெறும் 8 சதவீதம் தான். ஆகையால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட நேரம் கனிந்து விட்டது. நாம் மற்ற பிரச்சனைகளைப் போலவே மக்கள் பங்களிப்பின் துணைக்கொண்டு, மக்கள் சக்தி வாயிலாக, 130 கோடி நாட்டுமக்களின் திறத்தால், ஒத்துழைப்பால், மனவுறுதியால் இந்தச் சங்கடத்துக்கும் தீர்வு காண முடியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. நீரின் மகத்துவத்தைத் தலையாயதாக கருத்தில் கொண்டு, தேசத்தில் புதிய ஜல்சக்தி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தண்ணீர் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும், விரைவான கதியில் முடிவுகள் எடுக்க ஏதுவாக இருக்கும். சில நாட்கள் முன்பாக, நான் சில விஷயங்களை வித்தியாசமாகச் செய்யத் தலைப்பட்டேன். நான் தேசத்தின் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், கிராமத் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் வரைந்தேன். நீரைச் சேமிக்க, நீரைச் சேகரிக்க, மழைநீரின் ஒவ்வொரு சொட்டையும் பராமரிக்க, அவர்கள் கிராம சபையைக் கூட்டி, கிராமவாசிகளோடு சேர்ந்தமர்ந்து கருத்தாலோசனையில் ஈடுபடலாமே, என்ற வகையில் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவர்கள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது, இந்த மாதம் 22ஆம் தேதியன்று, ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துக்களில், கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். கிராமந்தோறும் மக்கள் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க உறுதி பூண்டார்கள், தங்கள் உடலுழைப்பைப் பங்களித்தார்கள்.
இன்று, மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் உங்களுடன் ஒரு
பஞ்சாயத்துத் தலைவர் பற்றிப் பேச விரும்புகிறேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹஸாரீபாக் மாவட்டத்தைச் சேர்ந்த கடகம்ஸாண்டீ வட்டத்திலுள்ள லுபுங்க் பஞ்சாயத்தின் தலைவர் நமக்கெல்லாம் என்ன அற்புதமான செய்தி அளித்திருக்கிறார் என்பதை அவர் கூறக் கேட்கலாம் –
“என்னுடைய பெயர் திலீப் குமார் ரவிதாஸ். நீரைச் சேமித்து வைக்க பிரதமர் அவர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதிய போது, நாட்டின் பிரதமர் எங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. நாங்கள் 22ஆம் தேதியன்று கிராமத்து மக்களை ஒன்று திரட்டிய போது, அங்கே பிரதமர் எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. இது மக்கள் மனங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி, நீரைச் சேமித்து வைக்க குளத்தைத் தூர் வாரவும், புதிய குளத்தை வெட்ட உடல் உழைப்புப் பங்களிப்பு அளிக்கவும் அனைவரும் தயாராக ஆனார்கள். இந்தத் திட்டத்தை மழைக்கு முன்பாக நாங்கள் செயல்படுத்தினால், எங்களுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது. சரியான நேரத்தில் எங்கள் பிரதமர் எங்களிடம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்தது நல்ல விஷயம்.”
பிர்ஸா முண்டாவின் பூமியில், இயற்கையோடு இசைவாய் வாழ்தலே கலாச்சாரத்தின் அங்கம். அங்கிருக்கும் மக்கள் மீண்டும் ஒருமுறை நீர் சேமிப்புக்காக தங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நிறைவேற்றத் தயாராகி விட்டார்கள். என் தரப்பிலிருந்து ஆக்கப்பூர்வமான செயலாற்றிய அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், அனைத்து கிராமத் தலைவர்களுக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள். நாடு முழுவதிலும் இப்படி நீர் சேமிப்பு என்ற சவாலை மேற்கொண்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் இது மொத்த கிராமத்துக்குமே ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. கிராமவாசிகள் இனி தங்கள் கிராமத்தில் ஏதோ நீருக்குக் கோயில் எழுப்பும் போட்டியில் ஈடுபடுவது போன்றதொரு உணர்வு என் மனதில் ஏற்படுகிறது. நான் கூறியது போல, சமூக முயற்சிகள் வாயிலாக ஆக்கப்பூர்வமான முடிவுகள் கிடைக்கின்றன. நாடு முழுவதும் தண்ணீர் சங்கடத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்ற ஒன்று கிடையாது. இதற்காக நாட்டின் பல்வேறு பாகங்களில், வேறுவேறு வழிமுறைகளில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவரின் இலக்கும் ஒன்று தான், அது நீரைச் சேமிப்பது, நீரைப் பராமரிப்பது.
பஞ்சாபின் கழிவுநீர்க் கால்வாய்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியால் அடைப்புக்கள் என்ற பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். தெலங்கானாவின் திம்மைய்யாபள்ளியில் நீர்த்தொட்டிகள் ஏற்படுத்தப்படுவது காரணமாக, கிராமவாசிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ராஜஸ்தானத்தின் கபீர்தாமில், வயல்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய குளங்கள் காரணமாக, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நான் தமிழ்நாட்டின் வேலூரில் நடைபெற்ற ஒரு சமூக முயற்சி பற்றிப் படித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கே நாக நதிக்கு புத்துயிர் கொடுக்கும் பணியில் 20000 பெண்கள் அணிதிரண்டதாக அறிந்தேன். அதே வேளையில் கட்வால் பகுதியின் பெண்களைப் பற்றியும் படித்தேன், இவர்கள் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக மழைநீர் சேகரிப்பு தொடர்பாக அருமையான பணியைச் செய்திருக்கிறார்கள். இவற்றைப் போன்ற பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் ஒன்றுபட்டு, உறுதியாக முயற்சிகள் செய்தால், இயலாததை இயல வைக்க இயலும், முடியாததை முடித்துக் காட்ட முடியும். மக்கள் ஒன்று திரளும் போது, தண்ணீர் சேமிக்கப்படும். இன்று மனதின் குரல் வாயிலாக நான் நாட்டு மக்களிடம் 3 வேண்டுகோள்களை முன்வைக்கிறேன்.
என்னுடைய முதல் வேண்டுகோள் – எப்படி நாட்டுமக்கள் தூய்மையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்களோ, அதைப் போலவே, வாருங்கள், நீர் சேமிப்பு என்பதையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் தொடக்கத்தை நாம் மேற்கொள்வோம். நாமனைவரும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க உறுதி பூணுவோம். நீர் என்பது இறைவன் அளித்த கொடை, அது ஒரு அற்புதம் பொழியும் ரஸமணி என்பது என் நம்பிக்கை. இந்த ரஸமணி பட்டால் இரும்பு பொன்னாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நீரே கூட இப்படிப்பட்ட ரஸமணி தான், நீரின் ஸ்பரிசத்தால் புதிய உயிர்கள் உற்பத்தி ஆகின்றன. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். இதில் நீரோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்; இது தவிர, நீரைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைக் கொண்டு நீர் சேமிப்பின் பொருட்டு, நூதனமான இயக்கங்களுக்குத் தலைமை தாங்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். திரையுலகினர் ஆகட்டும், விளையாட்டுத் துறையினராகட்டும், ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்களாகட்டும், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாகட்டும், கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாகட்டும், ஆன்மீகப் பேருரைகள் ஹரிகதைகள் செய்பவர்களாகட்டும்….. அனைவரும் தத்தமது வழியில் இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்க வேண்டும். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சமூகத்தை ஒருங்கிணைக்க வேண்டும், சமூகத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும் – அப்போது நம்முடைய கண்களின் முன்பேயே மாற்றம் ஏற்படுவதை நாம் கண்குளிரக் காண முடியும்.
நாட்டுமக்களிடம் என்னுடைய இரண்டாவது விண்ணப்பம் இதோ. நம்முடைய தேசத்தில் நீர்ப் பாதுகாப்பிற்காக பல பாரம்பரியமான வழிமுறைகள், பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. இந்தப் பாரம்பரியமான வழிமுறைகளை நீங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் யாருக்காவது போர்பந்தரில், வணக்கத்திற்குரிய அண்ணல் பிறந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றால், அண்ணலின் இல்லத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு வீட்டில், 200 ஆண்டுகள் பழமையான நீர் சேமிப்புத் தொட்டி ஒன்று இருக்கிறது. இன்றும்கூட அதில் நீர் இருக்கிறது, மழைநீரைச் சேமித்து வைக்கும் முறை இருக்கிறது. ஆகையால் தான், யாரெல்லாம் கீர்த்தி மந்திர் செல்கிறீர்களோ, அவர்கள் கண்டிப்பாக அந்த நீர்த் தொட்டியைப் பார்க்கவும் என்று நான் எப்போதுமே கூறுவதுண்டு. இப்படிப் பலவகையான வழிமுறைகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.
இப்போது உங்கள் அனைவரிடமும் எனது மூன்றாவது வேண்டுகோள். நீர் சேமிப்புக் கோணத்தில் மகத்துவமான பங்களிப்பு அளித்துவரும் நபர்கள், சுய உதவி அமைப்புக்கள் என, இந்தத் துறையில் பணியாற்றி வரும் ஒவ்வொருவரும், உங்களிடம் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்; தண்ணீர் விஷயத்தில் தன்னிறைவு அடைவதில் அர்ப்பணிப்பு உடைய, நீருக்காக ஆக்கப்பூர்வமான பணியாற்றும் அமைப்புகள், நபர்கள் ஆகியோர் அடங்கிய தரவுத்தளங்கள் ஏற்படுத்தப்பட இது ஏதுவாக இருக்கும். வாருங்கள், நாம் தண்ணீர் சேமிப்புடன் இணைந்த நிறைவான பட்டியலை ஏற்படுத்தி, நீர் சேமிப்பில் மக்கள் ஈடுபட உத்வேகம் அளிப்போம். நீங்கள் அனைவரும் #JanShakti4JalShakti# – இதைப் பயன்படுத்தி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் மேலும் ஒரு விஷயம் குறித்தும் உங்களுக்கும், உலக மக்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்க விரும்புகிறேன். மிகுந்த உற்சாகத்துடன், ஆக்கப்பூர்வமான உணர்வுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினர் யோகம் பயில்வது என்ற வகையில், ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று மீண்டும் ஒருமுறை யோகக்கலை தினத்தைக் கொண்டாடினார்கள். முழுமையான உடல்நலப் பராமரிப்பு என்ற வகையில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வில், யோகக்கலை தினத்தின் மகத்துவம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும், உலகின் அனைத்து மூலைகளிலும் யோகக்கலையைப் பயிலும் வேளையில், உதிக்கும் சூரியனுக்கு வரவேற்பு அளித்தார்கள். யோகம் பயிலாத இடமோ நபரோ உலகில் இல்லை என்ற அளவுக்கு யோகக்கலையானது இத்தனை பெரிய வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்தியாவில், இமயம் தொடங்கி இந்தியக் கடல் வரை, சியாச்சென் தொடங்கி நீர்மூழ்கி வரை, விமானப்படை தொடங்கி விமானம் தாங்கிகள் வரை, ஏசி உடற்பயிற்சிக் கூடங்கள் தொடங்கி தகிக்கும் பாலைவனங்கள் வரை, கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை – எங்கெல்லாம் சாத்தியப்படுமோ, அத்தனை இடங்களிலும் யோகாஸனம் பயிலப்பட்டதோடல்லாமல், இது சமூகரீதியாக கொண்டாடவும்பட்டது.
உலகின் பல நாடுகளின் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், பிரபலங்கள், சாதாரண குடிமக்கள் என பலர், அவரவர் தேசங்களில் எப்படி யோகக்கலை பயிலப்பட்டு வருகிறது என்பதை டிவிட்டர் வாயிலாக எனக்குக் காட்டினார்கள். அன்று, உலகமே ஒரு சந்தோஷமான குடும்பமாகக் காட்சியளித்தது.
ஒரு ஆரோக்கியமான சமூகத்தை நிறுவ, ஆரோக்கியமான, புரிந்துணர்வுடன் கூடிய நபர்கள் தேவை என்பதை நாம் அறிவோம், யோகக்கலை இதை உறுதி செய்கிறது. ஆகையால் யோகம் பற்றிய பரப்புரைகள் சமூகசேவையின் ஒரு மகத்தான பணி. இப்படிப்பட்ட சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கௌரவப்படுத்த வேண்டும் இல்லையா? 2019ஆம் ஆண்டு, யோகக்கலையின் முன்னெடுப்புக்கும் மேம்பாட்டுக்கும் மிகச்சிறப்பான பங்களிப்பு அளித்தமைக்காக, பிரதம மந்திரி விருதுகளுக்கான அறிவிப்பைச் செய்தது எனக்கு மட்டற்ற உவகையை அளித்தது. இந்த விருது உலகம் முழுவதிலும் யோகக்கலையின் பரப்புதலுக்காக மகத்துவம் நிறைந்த பங்களிப்பு அளித்த அமைப்புக்களுக்கு அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘ஜப்பான் யோக நிகேதனம்’ அமைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் யோகக்கலையை, ஒட்டுமொத்த ஜப்பானிலும், மக்களின் விருப்பமாக மாற்றியிருக்கிறார்கள். ஜப்பான் யோக நிகேதனம் அங்கே பல கழகங்களையும், பயிற்சிப் படிப்புக்களையும் நடத்துகிறது; இதே போல இத்தாலியைச் சேர்ந்த Ms. Antonietta Rozzi அவர்களையே எடுத்துக் கொள்வோமே!! இவர் ‘சர்வயோக இண்டர்நேஷனல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஐரோப்பா முழுவதிலும் யோகக்கலையைப் பரப்புவதில் ஈடுபட்டார். இவர் கருத்தூக்கம் அளிக்கவல்ல ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். யோகக்கலை தொடர்புடைய விஷயம் என்று வரும் போது, பாரதம் பின் தங்கியிருக்குமா சொல்லுங்கள்!! முங்கேரில் உள்ள பிஹார் யோக வித்யாலயத்திற்கும் கௌரவமளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பு, பல பத்தாண்டுகளாக யோகக் கலையின் பொருட்டு தன்னையே அர்ப்பணித்திருக்கிறது. இதைப் போலவே ஸ்வாமீ ராஜரிஷி முனி அவர்களும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவர் life mission மற்றும் lakulish yoga பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறார். யோகக்கலை பரவலாகக் கொண்டாடப்பட வேண்டும், யோகக்கலை அளிக்கும் செய்தியினை அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு சேர்ப்பவர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற இவையிரண்டும், யோகக்கலை தினத்திற்குச் சிறப்பு சேர்ந்திருக்கின்றன.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நமது இந்தப் பயணம் இன்று தொடங்கி இருக்கிறது. புதிய உணர்வு, புதிய அனுபவங்கள், புதிய உறுதி, புதிய திறம்…. ஆம், எப்போதும் போல உங்கள் ஆலோசனைகள்-கருத்துக்களுக்குக் காத்திருப்பு. உங்கள் கருத்துக்களோடு இணைவது எனக்கு மிக மகத்துவம் வாய்ந்த ஒரு பயணம். மனதின் குரல் என்பது ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே. நாமனைவரும் அடிக்கடி சந்திப்போம், உரையாடி மகிழ்வோம். உங்கள் உணர்வுகளை நான் செவி மடுக்கிறேன், சேகரிக்கிறேன், புரிந்து கொள்கிறேன். சில வேளைகளில் அந்த உணர்வுகளுக்கு ஏற்ப வாழவும் முயல்கிறேன். உங்கள் ஆசிகள் தொடரட்டும். நீங்கள் தான் என் கருத்தூக்கங்கள், நீங்களே எனக்கு சக்தி அளிப்பவர்கள். வாருங்கள் நாமனைவருமாக இணைந்து, மனதின் குரலை அனுபவிப்போம், வாழ்க்கையில் நமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவோம். மீண்டும் ஒருமுறை அடுத்த மாத மனதின் குரலில் மறுபடியும் சந்திப்போம். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது. 10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள், 125 கோடி நாட்டுமக்களான நம்மனைவரையும் காக்கும் பொருட்டுத் தங்களையே இழந்திருக்கிறார்கள். நாட்டுமக்கள் நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக, நம்முடைய இந்த வீர மைந்தர்கள், இரவு பகல் எனப்பாராமல் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். புல்வாமாவின் தீவிரவாதத் தாக்குதலில், நெஞ்சுரம் நிறைந்த நம் வீரர்களின் தியாகத்திற்குப் பிறகு, நாட்டுமக்களின் மனங்கள் காயமடைந்திருக்கின்றன, கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாக நாலாபுறத்திலிருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக உங்கள் மனங்களிலும் என் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆவேசமும் கொதிப்பும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் கனன்று கொண்டிருக்கிறது, மனிதநேயம் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் உலகின் அனைத்து மனிதநேய சக்திகளுக்குள்ளும் கொதிப்பு இருக்கிறது. பாரத அன்னையைக் காக்க, தங்களது உயிர்களை அர்ப்பணம் செய்யும், தேசத்தின் தீரம் நிறை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தத் தியாகம், தீவிரவாதத்தை வேரடி மண்ணோடும் அழிக்க நமக்கு நிரந்தரமாக உத்வேகம் அளிக்கும், நமது மனவுறுதியை மேலும் பலப்படுத்தும். தேசத்தின் முன்பாக இருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ளும் பணியை, நாமனைவரும் சாதியவாதம், மதவாதம், பிராந்தியவாதம் போன்ற அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மேற்கொள்ளவேண்டும்; அப்போது தான் தீவிரவாதத்திற்கு எதிராக நமது முனைப்புகளும் முடிவுகளும் உறுதியாக, கடுமையாக, முடிவேற்படுத்துவதாக அமையும். நமது ஆயுதப்படையினர் என்றைக்கும் எப்போதும் யாருக்கும் சளைக்காத சாகசத்தையும், பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அமைதியை நிலைநிறுத்த ஒருபுறம் அவர்கள் தங்கள் மிகச்சிறப்பான திறமையை வெளிக்காட்டும் அதே வேளையில், தாக்குதல் தொடுப்பவர்களுக்குப் புரியக்கூடிய அதே மொழியிலேயே பதிலிறுக்கும் பணியையும் புரிந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடுக்கப்பட்ட 100 மணி நேரத்திற்குள்ளாகவே எந்த வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நீங்களே பார்க்கலாம். தீவிரவாதிகளையும் அவர்களுக்குத் துணை செல்பவர்களையும் வேரோடு கெல்லி எறியும் உறுதிப்பாட்டை இராணுவத்தினர் மேற்கொண்டிருக்கிறார்கள். வீரம்நிறை இராணுவத்தினரின் உயிர்த்தியாகத்திற்குப் பிறகு, ஊடகங்கள் வாயிலாக அவர்களின் உறவினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் உத்வேகம் அளிக்கும் சொற்களும், கருத்துக்களும் பரவலாக்கம் செய்யப்பட்டு, நாடு முழுமையிலும் மன வலுவைக் கூட்டி பலம் அளித்திருக்கின்றன. பிஹாரின் பாகல்புரைச் சேர்ந்த தியாகி ரத்தன் டாக்குரின் தந்தையார் ராம்நிரஞ்ஜன் அவர்கள், இந்த துக்ககரமான வேளையிலும் கூட, தன் உள்மனக் கிடக்கையை வெளியிட்டிருப்பது நம்மனைவருக்குமே உத்வேகம் அளிக்கிறது. எதிரிகளோடு போரிட தனது இரண்டாவது மகனையும் அனுப்புவேன் என்றும், தேவைப்பட்டால் தானுமே கூட களத்தில் இறங்கத் தயார் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஒடிஷாவில் ஜகத்சிங்புரைச் சேர்ந்த தியாகி பிரசன்னா சாஹூவின் மனைவி மீனா அவர்களின் எல்லையற்ற சாகசத்தை நாடுமுழுவதும் போற்றுகிறது. தனது ஒரே மகனையும் மத்திய எல்லைப்புறப் பாதுகாப்புப் படையில் சேர்ப்பேன் என்று சபதம் அவர் ஏற்றுள்ளார். மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்ட தியாகி விஜய் ஷோரேன அவர்களின் பூதவுடல் ஜார்க்கண்டின் கும்லாவை அடைந்தபோது, அவரது பிஞ்சு மகன், நானும் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று சூளுரைத்தான். இந்தப் பிஞ்சு உள்ளத்தின் பேராவல் தான் இன்று பாரதநாட்டின் ஒவ்வொரு குழந்தையின் உடலுக்குள்ளே, ஊனுக்குள்ளே, உயிருக்குள்ளே கலந்த உணர்வாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படிப்பட்ட உயிர்ப்புள்ள உணர்வுகளைத் தான் நமது வீர தீர பராக்கிரமசாலிகளான தியாகிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் நம்மால் காணமுடிகிறது. நமது எந்த ஒரு வீரருமோ, அவர் தம் குடும்பமுமோ இதற்கு விதிவிலக்கல்ல. அது தேவரியாவின் தியாகி விஜய் மௌர்யாவின் குடும்பத்தாராகட்டும், காங்க்டாவின் தியாகி திலக்ராஜின் பெற்றோராகட்டும் அல்லது கோடாவைச் சேர்ந்த தியாகி ஹேம்ராஜின் ஆறு வயதே நிரம்பிய பாலகனாகட்டும் – தியாகிகளின் ஒவ்வொரு குடும்பத்தின் கதையும், உத்வேகத்தின் ஊற்றுக்கண்ணாய், உள்ளத்தைக் கரைப்பதாய் இருக்கின்றது. இந்தக் குடும்பங்கள் எந்த உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனவோ, எந்த இலக்கை சுட்டுகின்றனவோ, அவற்றை நாம் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று நான் இளைய சமுதாயத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசபக்தி என்றால் என்ன, தியாகம் – தவம் என்றால் என்ன, என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ள நாம் வரலாற்றின் கடந்த கால ஏடுகளைப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. நமது கண்களின் முன்னே, காட்சிப்பொருளாக, தெள்ளத் தெளிவாக, வாழும் எடுத்துக்காட்டுக்களாக இவர்கள் மலையென உயர்ந்து நிற்கிறார்கள், ஒளிபடைத்த பாரதத் திருநாட்டின் எதிர்காலத்துக்கான உத்வேகக் காரணிகள் இவர்கள் தாம், இவர்களே நமது கலங்கரை விளக்கங்கள்!
என் உயிரினும் மேலான என் நாட்டுமக்களே… சுதந்திரம் கிடைத்து இத்தனை நீண்டகாலம் வரை, நாமனைவரும் எந்தப் போர் நினைவுச் சின்னத்துக்காக காத்திருந்தோமோ, அந்தக் காத்திருப்புக் காலம் நிறைவடையவிருக்கிறது. இது தொடர்பாக நாட்டுமக்களின் பேராவலும் உற்சாகமும் இருப்பது இயல்பான விஷயம் தான். NarendraModiAppஇல் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியைச் சேர்ந்த ஸ்ரீ ஓங்கார் ஷெட்டி அவர்கள் தேசிய போர் நினைவுச் சின்னம் உருவாக்கம் அடைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். நம் பாரத நாட்டில் இதுவரை எந்த ஒரு தேசிய அளவிலான போர் நினைவுச் சின்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஒருசேர அளிக்கிறது. தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிர்களையே துச்சமென மதித்து அர்ப்பணம் செய்த வீரர்களின் தீரக்கதைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமாக அது இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படிப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் நாட்டில் கண்டிப்பாக ஏற்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று நான் உறுதி பூண்டேன்.
நாங்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தை நிர்மாணம் செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டோம்; இந்த நினைவுச் சின்னம் இத்தனை குறுகிய காலகட்டத்தில் தயாராகியிருப்பது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. நாளை அதாவது பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியன்று நாம் கோடிக்கணக்கான ந்மது நாட்டு மக்களுக்கும் நமது இராணுவத்துக்கும் இந்த தேசிய இராணுவ நினைவகத்தை அர்ப்பணம் செய்வோம். தேசம், இராணுவத்திற்கு தான் பட்டிருக்கும் கடனைத் திரும்பச் செலுத்தும் வகையிலான மிகச் சிறிய முயற்சியாக இது அமையும்.
தில்லியின் இருதயம் என்று சொன்னால் அது இண்டியா கேட், அமர் ஜவான் ஜோதி ஆகியன இருக்குமிடம் தான். அதற்கு மிக அருகிலேயே, இந்தப் புதிய நினைவகம் உருவாகியிருக்கிறது. இது தேசிய இராணுவ நினைவகமாக நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடிக்கும், ஒரு புனித தலத்திற்கு ஒப்பாக இது அமையும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. தேசிய இராணுவ நினைவகம், சுதந்திரத்திற்குப் பிறகு உச்சகட்ட தியாகத்தைப் புரிந்த வீரர்களின் பொருட்டு தேசத்தின் நன்றியறிதலைக் குறிக்கின்றது.
நினைவகத்தின் வடிவமைப்பு நமது அமரர்களான வீரர்களின் வெல்லமுடியாத சாகசத்தைக் காட்சிப்படுத்துகிறது. தேசிய இராணுவ நினைவகத்தின் கருத்தாக்கம், 4 பொதுமைய வட்டங்கள் அதாவது 4 சக்கரங்களை மையமாகக் கொண்டது; இதிலே ஒரு வீரனின் பிறப்பு தொடங்கி, தியாகம் வரையிலான பயணம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அமர் சக்கரத்தின் ஜ்வாலை, தியாகியான வீரனின் அமரத்துவத்தைக் குறிக்கிறது. இரண்டாவது சக்கரம், வீரத்தைக் குறிக்கும் சக்கரம், இது வீரர்களின் சாகசத்தையும், தீரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிக்கூடத்தின் சுவர்களில் வீரர்களின் வீரதீர சாகசச் செயல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் தியாகச் சக்கரம்; இந்தச் சக்கரம் வீரர்களின் தியாகத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
இதில் தேசத்திற்காக சர்வபரித்தியாகத்தை அளித்த வீரர்களின் பெயர்கள் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் ரக்ஷக் சக்கரம், பாதுகாப்பினைக் குறிக்கிறது. இந்தச் சக்கரத்தில் அடர்ந்த மரங்களின் வரிசை இருக்கிறது. இந்த மரங்கள் வீரர்களைக் குறிக்கின்றன, தேசத்தின் குடிமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இது சொல்லும் சேதி என்ன தெரியுமா?……. நாட்டின் எல்லைகளில் ஒவ்வொரு கணமும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள், ஆகையால் நாட்டுமக்கள் பாதுகாப்பாக உணரலாம் என்பது தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமேயானால், தேசிய இராணுவ நினைவகத்தை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றால், அந்த இடத்தில் நாட்டின் மகத்துவம் நிறைந்த தியாகிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும், நமது நன்றியறிதல்களைக் காணிக்கையாக்கவும், அந்த தியாகிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளவும் மக்கள் அங்கே வருவார்கள்!
தேசத்திற்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் பற்றிய தியாகக் கதைகள் இங்கே இருக்கும்; இவற்றை நாம் கண்ணால் பார்த்து, உணர்வால் உயிர்க்கும் போது, நாம் வாழ, நாம் பாதுகாப்போடு இருக்க, நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இவர்கள் தங்களையே தியாகம் செய்தார்கள் என்ற உணர்வு நம் உயிர் மூச்சுக்களில் நிறையும். நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு நமது ஆயுதப்படையினர், காவல்துறையினர், துணை இராணுவப் படையினர் ஆகியோரின் மகத்தான பங்களிப்பினை, சொற்களில் வடிப்பது என்பது இயலாத ஒன்று. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய காவல்துறை நினைவகத்தை தேசத்திற்கு அர்ப்பணம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. எல்லாக் காலங்களிலும் பாதுகாப்பிலே ஈடுபட்டிருக்கும் நமது காவல்துறையைச் சார்ந்த ஆண்கள்-பெண்களிடத்தில் நாம் நன்றியோடு இருக்கவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாகவே இந்த நினைவகமும் உருவாக்கப்பட்டது. நீங்கள் கண்டிப்பாக தேசிய இராணுவ நினைவகத்துக்கும், தேசிய காவல்துறை நினைவகத்துக்கும் செல்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த இடங்களுக்கு நீங்கள் எப்போது சென்றாலும், அங்கே நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்; இதனால் மற்றவர்களும் இவற்றைப் பார்த்து உத்வேகம் பெற்று, இந்தப் புனிதமான இடங்களுக்குச் செல்லும் ஆர்வம் ஏற்படும்.
எனதருமை நாட்டுமக்களே! மனதின் குரலுக்காக உங்களின் ஆயிரக்கணக்கான கடிதங்களும் கருத்துக்களும், பல்வேறு வழிகளில் என்னை வந்து சேர்கின்றன. இந்த முறை நான் உங்கள் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்த போது, அதில் ஆதிஷ் முகோபாத்யாயா அவர்களின் சுவாரசியமான ஒரு கருத்து என் கவனத்தை ஈர்த்தது. 1900ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று ஆங்கிலேயர்கள் பிர்ஸா முண்டாவைக் கைது செய்த போது அவரது வயது வெறும் 25 தான். அதே போல மார்ச் மாதம் 3ஆம் தேதி தான் ஜம்சேட்ஜி டாடா அவர்களின் பிறந்த நாள் என்பதும் கூட ஒரு தற்செயல் நிகழ்வு தான் என்று எழுதியிருக்கிறார். மேலும் அவர், இந்த இரண்டு மனிதர்களும் முழுமையாக இருவேறுபட்ட குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த இருவருமே ஜார்க்கண்டின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையுமே நிறைவானதாக ஆக்கியிருக்கின்றார்கள். மனதின் குரலில் பிர்ஸா முண்டா, ஜம்சேட்ஜி டாடா ஆகியோருக்கு ச்ரத்தாஞ்சலிகளை அளிப்பது என்பது ஒருவகையில் ஜார்க்கண்டின் கௌரவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுவதற்குச் சமமானதாகும். ஆதிஷ் அவர்களே, நீங்கள் கூறுவதை நான் முழுமையாக ஏற்கிறேன். இந்த இரண்டு மகத்தான மனிதர்கள் ஜார்க்கண்டின் பெயரை மட்டுமல்ல, நாடு முழுவதன் பெயருக்குமே ஒளி கூட்டியிருக்கின்றார்கள். நாடு முழுமையுமே இவர்களின் பங்களிப்பிற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நமது இளைஞர்களுக்கு வழிகாட்டுதலுக்காக ஒரு உத்வேகம் நிரம்பிய மனிதர் இன்று தேவைப்படுகிறார் என்றால், அவர் தான் பகவான் பிர்ஸா முண்டா. ஆங்கிலேயர்கள் கயமைத்தனமாகவும் நயவஞ்சகமாகவும் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஏன் இப்படிப்பட்டதொரு கயமையைக் கைக்கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், அத்தனை பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஆங்கிலேயர்கள் கூட அவரைக் கண்டு அஞ்சினார்கள் என்பதால் தான். பகவான் பிர்ஸா முண்டா தனது பாரம்பரியமான வில் அம்புகளின் துணை கொண்டு, துப்பாக்கிகள் பீரங்கிகளைப் பயன்படுத்தும் ஆங்கிலேய ஆட்சியை உலுக்கியிருந்தார். உண்மையில் மக்களுக்கு கருத்தூக்கம் அளிக்கக்கூடிய ஒரு தலைமை கிடைக்குமானால், ஆயுதங்களின் சக்தியை விட சமூகத்தின் மனவுறுதி மிகப் பெரியதாகி விடுகிறது. பகவான் பிர்ஸா முண்டா ஆங்கிலேயர்களோடு அரசியல் சுதந்திரத்திற்காக மட்டும் போரிடவில்லை, அவர் பழங்குடியினத்தவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் போராடினார். தனது குறுகியகால வாழ்க்கையில் அவர் இவையனைத்தையுமே செய்து காட்டினார். வஞ்சிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு இலக்கானவர்கள் ஆகியோரை இருள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஒளிபடைத்த சூரியனை நோக்கி அழைத்துச் சென்றார். பகவான் பிர்ஸா முண்டா தனது 25 ஆண்டு கால வாழ்க்கை முடிவில் தியாகியானார். பிர்ஸா முண்டாவைப் போல பாரத அன்னையின் சத்புத்திரர்கள், தேசத்தின் அனைத்து பாகங்களிலும் தோன்றியிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த சுதந்திரப் போரில் பங்களிப்பு அளிக்காத பகுதி என்ற ஒன்றை இந்தியாவில் எங்குமே காணமுடியாது எனும்படியாக அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் இப்படிப்பட்ட மஹா புருஷர்கள் நிரம்பியிருந்தார்கள். ஆனால் துர்பாக்கியம் என்னவென்றால் இவர்களின் தியாகம், சூரம், தியாகம் பற்றிய கதைகள் புதிய தலைமுறையினரைச் சென்று சேரவே இல்லை. பகவான் பிர்ஸா முண்டா போன்றவர்கள் நம் இருப்பை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றால், ஜம்சேட்ஜி டாடா போன்ற மனிதர்கள் தேசத்திற்கு மகத்தான நிறுவனங்களை அளித்தார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஜம்சேட்ஜி டாடா அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தீர்க்கதரிசி. அவர் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் பார்க்கவில்லை, அதற்கான பலமான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார். பாரதத்தை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் அச்சாணியாக ஆக்குவது தான் எதிர்காலத் தேவையாக இருக்குமென்று அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார். அவரது தொலைநோக்கு காரணமாகவே Tata Institute of Science நிறுவப்பட்டு, இப்போது அது இந்திய அறிவியல் கழகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல, அவர் டாடா ஸ்டீல் போன்ற நம்பகத்தன்மை மிகுந்த பல நிறுவனங்களையும் தொழில்களையும் நிறுவினார். ஜம்சேட்ஜி டாடாவும் ஸ்வாமி விவேகானந்தரும் அமெரிக்கப் பயணத்தின் போது ஒரு கப்பலில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது இருவரின் உரையாடல்களும், ஒரு மகத்துவம் நிறைந்த விஷயமான, பாரத நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பரவலாக்கத்தை ஒட்டி அமைந்தது. இந்த உரையாடலின் விளைவாகவே இந்திய அறிவியல் கழகம் பிறந்தது.
என் அன்புநிறை நாட்டுமக்களே, நம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி பாய் தேசாய் அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் 29ஆம் நாள். இந்த நாள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். உள்ளபடியே, அமைதி நிரம்பிய நபரான மொரார்ஜி பாய் அவர்கள் மிக ஒழுங்குமுறை நிரம்பிய நாட்டின் தலைவர்களில் ஒருவர். சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் மிக அதிகமாக வரவுசெலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்த சாதனை மொரார்ஜி பாய் தேசாய் அவர்களையே சாரும். மொரார்ஜிபாய் தேசாய் மிகக் கடினமான வேளையில் பாரதத்துக்கு திறன்மிகு வகையில் தலைமை தாங்கினார், அந்தக் காலகட்டத்தில், நாட்டின் மக்களாட்சி முறை பெரும் அச்சுறுத்தலில் இருந்தது. இதன் பொருட்டு இனிவரும் தலைமுறையினரும் கூட நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் ஜனநாயகத்தின் பாதுகாக்க வேண்டி அவசரநிலைக்கு எதிராக தன்னையே அர்ப்பணித்தார். இதற்காக தனது வயோதிகத்தில் அவர் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது. அப்போதிருந்த அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது தேசத்தின் பிரதமரானார் அவர். அவரது ஆட்சிக்காலத்தில் தான் 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது ஏன் மகத்துவம் நிறைந்தது என்றால், அவசரநிலையை பிறப்பிப்பதற்காக 42ஆவது அரசியல்சட்டத் திருத்தம் அப்போது கொண்டு வரப்பட்டது, இதில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைப்பது தவிர, அதில் இடம் பெற்றிருந்த வேறு சில ஷரத்துக்கள், நம்முடைய ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்துவிட்டன, எனவே அவை திரும்பப் பெறப்பட்டன. அதாவது 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் செயல்பாடுகளை, செய்தித்தாள்களில் அச்சிட அதிகாரம் வழங்கும் ஷரத்து ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, உச்சநீதிமன்றத்தின் சில அதிகாரங்கள் மீண்டும் அளிக்கப்பட்டன. 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் உட்பிரிவு 20, 21க்கு உட்பட்டு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகள், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டாலும் கூட, பறிக்கப்பட முடியாத வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அமைச்சரவை எழுத்து வடிவில் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மட்டுமே குடியரசுத்தலைவர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த முடியும் என்ற வழிமுறை முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவசரநிலையின் கால அளவை ஒரு முறையில் 6 மாதங்களுக்கு மேல் அதிகரிக்க முடியாது. அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, 1975ஆம் ஆண்டு எப்படி ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதோ, அது மீண்டும் அரங்கேற முடியாமல் தடுக்க இந்த வகையில் மொரார்ஜி பாய் அவர்கள் உறுதிசெய்தார். இந்திய ஜனநாயகத்தின் மாட்சிமையைப் பாதுகாக்க அவரது பங்களிப்பு மகத்தானது, இனிவரும் தலைமுறையினர் அதை என்றுமே நினைவில் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவருக்கு மீண்டும் ஒருமுறை நான் என் ச்ரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த முறையும் பத்ம விருதுகள் தொடர்பாக மக்களிடையே பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இன்று நாம் ஒரு புதிய இந்தியாவை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் அடிமட்டத்தில் யார் விருப்பு வெறுப்பற்ற நிலையில் பணியாற்றுகிறார்களோ, அவர்களுக்கு கௌரவம் அளிக்க நாம் விரும்புகிறோம். தங்கள் உழைப்பின் துணை கொண்டு பல்வேறு வகைகளில் மற்றவர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் தாம் உண்மையான கர்மயோகிகள். இவர்கள் மக்கள்சேவை, சமூகசேவை, இவை எல்லாவற்றையும் விட நாட்டின் சேவையை சுயநலமே இல்லாத முறையில் செய்கிறார்கள்.
பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் வேளையில், விருது பெற்றிருக்கும் இவர் யார் என்று மக்கள் வினவுவதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒரு வகையில் இதை நான் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன் ஏனென்றால், இவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் ஆகியவற்றின் அட்டைகளில் காணப்படமாட்டார்கள். இவர்கள் பகட்டு நிறைந்த உலகத்திலிருந்து விலகி இருப்பவர்கள். ஆனால், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தங்களுக்குப் பெயர் ஏற்பட வேண்டுமே என்ற கவலை கொஞ்சமும் இல்லாதவர்கள், களத்தில் இறங்கிப் பணியாற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்கள். யோக: கர்மாஸு கௌஷலம் என்ற கீதாவாக்கியத்தை அடியொற்றி இவர்கள் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட சிலரைப் பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒடிஷாவின் தைதாரி நாயக் பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்கலாம், அவரை canal man of Odisha என்று அழைப்பதில் காரணமில்லாமல் இல்லை. தைதாரி நாயக் அவர்கள் தனது கிராமத்தில் தனது கைகளாலேயே மலையை வெட்டி மூன்று கிலோமீட்டர் வரை கால்வாய் பாதையை அமைத்திருக்கிறார். தனது உழைப்பு காரணமாக நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவை ஏற்படுத்தினார். குஜராத்தின் அப்துல் கஃபூர் கத்ரி அவர்களை எடுத்துக் கொள்வோமே!! இவர் கட்ச் பகுதியின் பாரம்பரியமான ரோகன் ஓவிய வடிவத்திற்கு புத்துயிர் அளிக்கும் அற்புதமான செயலைப் புரிந்திருக்கிறார். இந்த அரியவகை ஓவிய முறையை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான வேலையை இவர் புரிந்திருக்கிறார். அப்துல் கஃபூர் வாயிலாக உருவாக்கப்பட்ட Tree of Life ஓவியப் படைப்பைத் தான் நான் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பராக் ஓபாமா அவர்களுக்கு நினைவுப் பரிசாக அளித்தேன். பத்ம விருது பெற்றவர்களில் மராட்வாடாவைச் சேர்ந்த ஷப்பீர் சைய்யத் அவர்கள் பசுத்தாயின் சேவகனாக அறியப்படுபவர். அவர் எப்படிப்பட்ட வகையில் தனது வாழ்க்கை முழுவதையும் பசுத்தாயின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மிகவும் அலாதியானது, அற்புதமானது. மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவர் பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் பங்களிப்பிற்கான முயற்சிகளை முதன்முறையாக தமிழ்நாட்டின் களஞ்சியம் இயக்கம் வாயிலாக மேற்கொண்டார். கூடவே, சமூக அடிப்படையில் குறுநிதியமைப்புக்களைத் தொடக்கினார். அமெரிக்காவின் Tao Porchon-Lynch பற்றிக் கேள்விப்பட்டு உங்களுக்கு இன்பமும் ஆச்சரியமும் ஒருசேர ஏற்படலாம். Lynch இன்று யோகக்கலையின் வாழும் நடமாடும் அமைப்பாக உருவெடுத்திருக்கிறார். நூறு ஆண்டுகள் ஆன போதிலும் கூட உலகம் முழுவதிலும் மக்களுக்கு யோகக்கலையை அவர் பயிற்றுவிக்கிறார், இதுவரை 1500 பேர்களை யோகப் பயிற்றுநர்களாக ஆக்கியிருக்கிறார். ஜார்க்கண்டின் Lady Tarzan என்ற பெயர் கொண்ட பிரசித்தமான பெண்மணியான ஜமுனா டுடூ (Tudu), மரக் கொள்ளையர்கள் மற்றும் நக்சல்களை எதிர்க்கும் சாகசம் நிறைந்த பணியைச் செய்திருக்கிறார், அவர் 50 ஹெக்டேர் காட்டை அழிப்பதைத் தடுத்ததோடு, பத்தாயிரம் பெண்களை ஒருங்கிணைத்து மரங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க உத்வேகம் அளித்தார். இந்த ஜமுனா அவர்களின் அயராத உழைப்பு காரணமாகவே இன்று கிராமவாசிகள் அனைவரும் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் 18 மரங்களையும், ஒவ்வொரு பெண்ணின் திருமணத்தின் போதும் 10 மரங்களையும் நடுகிறார்கள். குஜராத்தின் முக்தாபேன் பங்கஜ்குமார் தக்லீயின் கதை உங்கள் மனங்களில் உத்வேகத்தை நிறைத்து விடும், மாற்றுத் திறனாளியாக இருந்தும் கூட, இவர் பெண்களின் மேம்பாட்டிற்காக செய்திருக்கும் பணிகளைப் பார்க்கும் வேளையில், இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் கிடைப்பது மிகவும் கடினம் என்றே நினைக்கத் தோன்றும். சக்ஷு மஹிலா சேவாகுஞ்ஜ் என்ற பெயருடைய அமைப்பை நிறுவி, பார்வைத்திறன் இல்லாத குழந்தைகளை சுயசார்புடையவர்களாக ஆக்கும் பவித்திரமான பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார். பிஹாரின் முஸஃபர்புரைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமாரி தேவியின் கதை மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. பெண்களின் அதிகாரப்பங்களிப்பு மற்றும் விவசாயத்தை இலாபகரமானதாக ஆக்க இவர் ஒரு எடுத்துக்காட்டை முன்வைத்தார். விவசாயியான இந்தப் பெண்மணி தனது பகுதியைச் சேர்ந்த 300 பெண்களை ஒரு சுய உதவிக் குழுவோடு இணைத்தார், பொருளாதார ரீதியாக தற்சார்பு உடையவர்களாக ஆவதற்கு உத்வேகம் அளித்தார். அவர் கிராமத்தின் பெண்களுக்கு விவசாயத்தோடு கூடவே, பிற வேலைவாய்ப்புகளிலும் பயிற்சி அளித்தார். குறிப்பாக அவர், விவசாயத்தோடு தொழில்நுட்பத்தை இணைத்தார். மக்களே! இந்த ஆண்டு தான் பத்ம விருதுகள் பெற்றவர்களில் 12 விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது முதன்முறையாக இருக்கலாம். பொதுவாக, விவசாய உலகோடு தொடர்புடையவர்களில் குறைவானவர்களுக்குத் தான், மேலும் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் இன்னும் குறைவாகத் தான் பத்மஸ்ரீ பட்டியலில் இடம் பிடிப்பார்கள். ஆனால் இந்த முறை பட்டியலைப் பார்க்கும் போது உள்ளபடியே மாறிவரும் இந்தியாவின் உயிரோவியமாக இது காட்சியளிக்கிறது. விவசாயிகளுக்குப் புதிய இந்தியாவில் எத்தனை மகத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை இது பளிச்செனத் துலக்கிக் காட்டுகிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் இன்று உங்கள் அனைவரிடமும் இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதை கடந்த சில நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன். இப்போதெல்லாம் நான் நாட்டில் எங்கே சென்றாலும், ஆயுஷ்மான் பாரதம் திட்டம் அதாவது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் சில பயனாளிகளைச் சந்திப்பது என்ற முயற்சியில் ஈடுபடுகிறேன். சிலரோடு கலந்து பேசும் வாய்ப்பு கிட்டுகிறது. தனியாக இருக்கும் ஒரு தாயிடம் பணம் இல்லாத காரணத்தால் தனக்கும் தன் குழந்தைக்கும் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. இந்தத் திட்டம் காரணமாக அவளால் தனக்கும் சரி, தனது குழந்தைக்கும் சரி, வைத்தியம் பார்த்துக் கொள்ள முடிந்ததோடு, தாய் – சேய் இருவரும் நலமடைந்தார்கள். குடும்பத் தலைவன் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வரும் போது, விபத்துக்கு இரையாகி அவனால் அவனது வேலையைத் தொடர முடியாத அவலநிலை. இந்தத் திட்டம் காரணமாக அவன் பயனடைந்து மீண்டும் உடல் நலமடைந்தான், புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.
சகோதர சகோதரிகளே! கடந்த ஐந்து மாதங்களாக சுமார் 12 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் இந்தத்திட்டத்தால் பயனடைந்திருக்கின்றன. ஏழையின் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதனால் என்னால் கண்கூடாகக் காணமுடிகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற முடியாத ஏழை மனிதன் பற்றி உங்களுக்கும் தெரிய வரலாம். அப்படி உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அவர்களுக்கு இந்தத்திட்டம் பற்றி அவசியம் விளக்கிச் சொல்லுங்கள். இந்தத்திட்டம் அப்படிப்பட்ட அனைத்து ஏழைகளுக்கும் சொந்தமானது.
என் மனதில் வீற்றிருக்கும் என் நாட்டுமக்களே! பள்ளிக்கூடங்களில் தேர்வுக்காலங்கள் தொடங்கவிருக்கின்றன. நாடு முழுவதிலும் பல்வேறு கல்வி வாரியங்கள் அடுத்த சில வாரங்களில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வு செய்ல்பாடுகளைத் தொடங்கிவிடும். தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நான் என் தரப்பிலிருந்து மனம்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில நாட்கள் முன்பாக தில்லியில் பரீக்ஷா பே சர்ச்சா, அதாவது தேர்வுகள் தொடர்பான உரையாடல் என்ற ஒரு பெரிய நிகழ்ச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. இந்த டவுன் ஹால் நிகழ்ச்சியில் முதன்முதலாக தொழில்நுட்பத்தின் வாயிலாக, நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான மாணவர்களோடும், அவர்களின் பெற்றோரோடும், ஆசிரியர்களோடும் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தேர்வுகள் தொடர்பான உரையாடல் நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், தேர்வுகளோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் குறித்து தங்கு தடையே இல்லாமல் விவாதங்கள் நடைபெறுவது தான். மாணவர்களுக்கு நிச்ச்யமாகப் பயனளிக்கும் வகையிலான பல கோணங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும், யூ ட்யூபில் இந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவைக் காணலாம்; வரவிருக்கும் தேர்வுகள் குறித்து அனைத்து தேர்வுப் போராளிகளுக்கும் என் ஏராளமான நல்வாழ்த்துக்கள்!
என் மனம்நிறை நாட்டுமக்களே! பாரதம் பற்றிய பேச்சு என்று வந்தால், பண்டிகைகள் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? முடியாதில்லையா? மகத்துவமே இல்லாத ஒரு நாள் அல்லது பண்டிகையே இல்லாத காலம் என்ற ஒரு நாளே நம் நாட்டில் இருக்க முடியாது என்ற வகையில் தான் நமது நாட்டிலே அனைத்து நாட்களையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கிறோம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரம், மரபுவழி நம்மிடத்தில் இருக்கிறது. சில நாட்கள் கழித்து மஹாசிவராத்திரி புனித நாள் வரவிருக்கிறது, இந்த முறை சிவராத்திரி திங்கட்கிழமையன்று வருகிறது எனும் போது ஒரு சிறப்பான மகத்துவம் நம் மனங்களிலே கொலுவீற்று மணம் பரப்புகிறது. இந்தப் புனிதமான சிவராத்திரித் திருநாளை ஒட்டி உங்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே! சில நாட்கள் முன்பாக நான் காசிக்குச் சென்றிருந்தேன். அங்கே மாற்றுத்திறன் படைத்த சகோதர சகோதரிகள் சிலருடன் சற்று நேரத்தை கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் பல விஷயங்கள் தொடர்பாகப் பேசமுடிந்தது, அவர்களின் தன்னம்பிக்கை உண்மையிலேயே தாக்கம் ஏற்படுத்துவதாக, உத்வேகம் அளிப்பதாக இருந்தது. உரையாடிக் கொண்டிருக்கும் போது கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர், தான் ஒரு மேடைக்கலைஞர் என்று கூறினார். கேளிக்கை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்பவர் என்று தன்னை அறிமுகப்படுத்திய போது, நீங்கள் யார் போலெல்லாம் பேசுவீர்கள் என்று கேட்டேன். அவர் நான் பிரதம மந்திரியைப் போல பேசி மிமிக்ரி செய்வேன் என்றார். உடனே நான், சரி கொஞ்சம் செய்து காட்டுங்களேன் என்ற போது, எனக்கு சுகமான ஒரு ஆச்சரியம் காத்திருந்தது, மனதின் குரலில் எப்படி நான் பேசுவேனோ, அதைப் போலவே அவர் பேசிக் காட்டினார், மனதின் குரலை மிமிக்ரி வாயிலாகச் செய்து காட்டினார். மனதின் குரலை மக்கள் கேட்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அதை நினைவில் கொள்ளவும் செய்கிறார்கள் என்பதை அறிந்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களின் சக்தியைக் கண்டு நான் மிகவும் அசந்து போனேன், அவர்கள் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தினார்கள்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே! மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக உங்கள் அனைவரோடும் இணைவது எனக்கு அலாதியான அனுபவத்தை அளித்து வந்திருக்கிறது. வானொலி வாயிலாக ஒரு வகையில் கோடிக்கணக்கான குடும்பங்களோடு நான் ஒவ்வொரு மாதமும் கலந்து உறவாடி வருகிறேன். பலமுறை உங்களோடு உரையாடும் போதும், நீங்கள் எழுதிய கடிதங்களைப் படிக்கும் போதும், உங்கள் தொலைபேசி அழைப்புக்களைக் கேட்கும் போதும், நீங்கள் என்னை உங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறீர்கள் என்ற எண்ணம் என் மனதில் மேலோங்குகிறது. இந்த உணர்வு என் மனதிலே சுகமான ஒரு அனுபவத்தைத் துளிர்க்கச் செய்கிறது, சுகந்தம் கமழ்கிறது!.
நண்பர்களே! தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய கொண்டாட்டங்கள். அடுத்த இரண்டு மாதங்கள் நாமனைவரும் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போம். நானுமே கூட இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயக பாரம்பரியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில், அடுத்த மனதின் குரல் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம் பெறும். அதாவது மார்ச்-ஏப்ரல்-மே இந்த மூன்று மாதங்களின் எனது உணர்வுகள் அனைத்தையும், தேர்தல்களுக்குப் பிறகு ஒரு புதிய நம்பிக்கையோடு, உங்கள் ஆசிகள் என்ற பலத்தோடு, மீண்டும் ஒருமுறை மனதின் குரல் வாயிலாக நமது உரையாடல் என்ற தொடரைத் தொடக்குவேன், உங்கள் மனதின் குரலோடு பல ஆண்டுகள் இணைந்து பயணிப்பேன். மீண்டும் ஒருமுறை மிகுந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் 21ஆம் தேதியன்று ஒரு ஆழ்ந்த துக்கம் நிறைந்த செய்தி கிடைத்தது. கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தின் ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமிஜி காலமானார். சிவகுமார ஸ்வாமிஜி தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சமூக சேவைக்காகவே அர்ப்பணித்தவர். பகவான் பஸவேஸ்வர், காயகவே கைலாஸ என்பதை நமக்குக் கற்பித்திருக்கிறார். அதாவது கடினமான முயற்சிகளைச் செய்து தனது கடமைகளை ஆற்றிவந்தாலே, சிவபெருமானின் வசிப்பிடமான கையிலாய புனித இடத்திற்கு அது சமமானதாக ஆகிவிடும் என்பதாகும்.
சிவகுமார ஸ்வாமி இந்தத் தத்துவத்தை அடியொற்றி நடப்பவர். அவர் தனது 111 ஆண்டுக்கால வாழ்க்கையில், ஆயிரக்கணக்கான மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக சேவைகள் புரிந்தார். அவரது பாண்டித்தியம் எந்த அளவுக்கு பரந்துபட்டது என்றால், அவருக்கு ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் அருமையான புலமை இருந்தது. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவர் தனது முழு வாழ்க்கையையும் மக்களுக்கு உணவளித்தல், புகலிடமளித்தல், கல்வி புகட்டல், ஆன்மீக ஞானமளித்தல் ஆகியவற்றிலேயே செலவு செய்தார். விவசாயிகளுக்கு அனைத்துவிதமான நலன்களும் கிடைக்கவேண்டும் என்பதே ஸ்வாமிஜி அவர்களின் வாழ்க்கையின் முதன்மை நோக்கமாக இருந்து வந்தது. சித்தகங்கா மடமானது சீரான முறையில் பசு மற்றும் விவசாய விழாக்களுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. வணக்கத்துக்குரிய ஸ்வாமிஜியின் ஆசிகள் கிடைக்கும் பேறு எனக்குப் பலமுறை கிட்டியிருக்கிறது. 2007ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமிஜியின் நூற்றாண்டு உற்சவக் கொண்டாட்டங்களின் போது நம்முடைய முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் தும்கூர் சென்றிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தின் போது வணக்கத்துக்குரிய ஸ்வாமிஜிக்காக எழுதப்பட்ட ஒரு கவிதையை கலாம் ஐயா படித்துக் காண்பித்தார். அதன் சில வரிகள் இதோ –
“O my fellow citizens – In giving, you receive happiness,
In Body and Soul – You have everything to give.
If you have knowledge – share it
If you have resources – share them with the needy.
You, your mind and heart
To remove the pain of the suffering, And, cheer the sad hearts.
In giving, you receive happiness Almighty will bless, all your actions.”
டாக்டர் கலாம் ஐயாவின் இந்தக் கவிதை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமிஜியின் வாழ்க்கை மற்றும் சித்தகங்கா மடத்தின் இலட்சியம் பற்றி அழகான வகையிலே விளக்குகிறது. ஒருமுறை மீண்டும் நான் இப்படிப்பட்ட ஒரு மாமனிதருக்கு என் சிரத்தையுடன் கூடிய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
எனது பேரன்புக்குரிய நாட்டுமக்களே, 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது, அந்த நாளில் தான் தேசம் குடியரசானது, மிகுந்த கோலாகலத்தோடும், மகிழ்ச்சியோடும் நேற்றுதான் நமது குடியரசு தினத்தை நாம் கொண்டாடினோம். ஆனால், இன்று நான் வேறு ஒரு விஷயம் பற்றிப் பேச விரும்புகிறேன். நம்முடைய நாட்டில் அதிக மகத்துவம் நிறைந்த ஒரு அமைப்பு இருக்கிறது; இது நமது ஜனநாயகத்தின் இணைபிரியா அங்கம், நமது ஜனநாயகத்தையும் விடத் தொன்மையானது – நான் பாரதத்தின் தேர்தல் ஆணையம் பற்றிப் பேசுகிறேன். ஜனவரி மாதம் 25ஆம் தேதி தான் தேர்தல் ஆணையத்தின் நிறுவன நாள், இதை நாம் தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படும் அளவினைப் பார்க்கும் போது, உலகமே வியப்பில் மூக்கின் மீது விரலை வைக்கிறது; ஆணையம் இத்தனை சிறப்பாக தேர்தல்களை நடத்துவதைப் பார்த்து, நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் ஏற்படுவது என்பது இயற்கை தான். பாரதநாட்டின் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நாடு உறுதி செய்திருக்கிறது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் 15000 அடிகள் உயரத்தில் இருக்கும் பகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் நிறுவப்படுகின்றன, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கூட்டங்களிலும் கூட வாக்குப்பதிவுக்கான அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. குஜராத் பற்றிய விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்; கிர் வனப்பகுதியில், மிகத் தொலைவான ஒரு இடத்தில், ஒரே ஒரு வாக்காளருக்காக மட்டுமே ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கற்பனை செய்து பாருங்கள் நண்பர்களே…. வெறும் ஒரு வாக்காளருக்காக மட்டுமே ஒரு வாக்குச்சாவடி. இவைபோன்ற விஷயங்களை நாம் கேள்விப்படும் போது, தேர்தல் ஆணையம் மீது பெருமை கொள்வது இயற்கையாக ஏற்படுகிறது. அந்த ஒரு வாக்காளரை மனதில் கொண்டு, அந்த ஒரு வாக்காளரின் வாக்குரிமை பயன்படுத்தப்பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் ஆணையப் பணியாளர்களின் ஒட்டுமொத்தக் குழுவும் தொலைவான பகுதிகளுக்குச் சென்று வாக்குப்பதிவு முறையை மேற்கொள்கிறார்கள் –நமது ஜனநாயகத்தின் அழகே இது தான்.
மக்களாட்சி முறையைப் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவரும் தேர்தல் ஆணையத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நான் அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையங்கள், அனைத்துப் பாதுகாப்புப் படையினர், தேர்தல் பணிகளில் சுதந்திரமாகவும், பாரபட்சமில்லாமலும் ஈடுபடும் பிற பணியாளர்கள் ஆகியோரைப் பாராட்டுகிறேன்.
இந்த ஆண்டு நமது தேசத்தில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன; 21ஆம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் இந்தமுறை தான் மக்களவைத் தேர்தல்களில் முதன்முறையாக வாக்களிக்க இருக்கின்றார்கள். தேசத்தின் பொறுப்பைத் தங்கள் தோள்களிலே சுமக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. இப்போது அவர்கள் தேசத்தின் பொருட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டில் பங்குதாரர்களாக ஆகவிருக்கிறார்கள். தங்கள் கனவுகளை, தேசத்தின் கனவுகளோடு இணைக்கும் வேளை கனிந்து விட்டது. நீங்கள் வாக்களிக்கும் தகுதி படைத்தவர் என்றால், கண்டிப்பாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று இளைய சமுதாய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் வாக்காளராக ஆவது, வாக்குரிமையைப் பெறுவது, ஆகியவற்றில் நாம் ஒவ்வொருவரும் உற்சாகத்தை உணர வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையின் மகத்துவமான சாதனைகளில் ஒரு மகத்துவம் நிறைந்த படிநிலை இது. மேலும் வாக்களிப்பது என்பது எனது கடமையும் கூட, என்ற இந்த உணர்வு நமக்குள்ளே ஏற்பட வேண்டும். வாழ்க்கையில் என்றுமே, ஏதோ காரணத்தால் வாக்களிக்க முடியவில்லை என்றால், அது நமக்கு வருத்தமளிப்பதாக நாம் உணர வேண்டும். தேசத்தில் எங்காவது தவறு நடந்தது என்று சொன்னால் நமக்குள்ளே துக்கம் ஏற்பட வேண்டும். ஆம்! நான் வாக்களிக்கவில்லை, அன்று நான் வாக்களிக்கச் செல்லவில்லை – இதன் காரணமாகத் தான் இன்று என் நாட்டில் இப்படி நடக்கிறது என்று நாம் இந்தப் பொறுப்பை உணர வேண்டும். இந்தச் செயல்பாடு நமது இயல்பாகவே மாற வேண்டும். இது நமது கலாச்சாரமாக ஆக வேண்டும். நாமனைவரும் இணைந்து வாக்காளர் பதிவாகட்டும், வாக்களிப்பு நாளன்று வாக்களிப்பதாகட்டும், இந்த முறை நாம் ஒரு இயக்கத்தை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நான் தேசத்தின் பிரபலங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இளைய தலைமுறை வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்வார்கள், தங்கள் பங்களிப்பை நமது ஜனநாயகத்தின் பொருட்டு நல்குவார்கள், அதனை மேலும் பலப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனக்குப் பிரியமான என் நாட்டுமக்களே, பாரதத்தின் இந்த மகத்தான பூமியில் பலமுறை மகான்கள் தோன்றியிருக்கிறார்கள், அத்தகைய மகான்கள், மனித சமுதாயத்திற்காக சில அற்புதமான, மறக்கமுடியாத செயல்களைச் செய்து சென்றிருக்கிறார்கள். நம்முடைய தேசத்தில் இந்த மகத்தான மனிதர்களின் ரத்தினக் குவியல் அங்கிங்கெனாதபடி ஏராளமாகக் குவிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட மகத்தான மாமனிதர்களில் ஒருவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஒரு புதிய முறையில் அவரது பிறந்தநாளை நாடே கொண்டாடியது. நேதாஜியின் பிறந்த நாளன்று, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு நல்கிய வீரர்களுக்கெனவே பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. செங்கோட்டைக்குள்ளே, சுதந்திரக்காலம் தொடங்கி இதுவரை இப்படிப்பட்ட பல அறைகள், நினைவகங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இப்படி மூடப்பட்டுக் கிடக்கும் செங்கோட்டை அறைகள் மிக நேர்த்தியான அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய இராணுவத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட யாத் ஏ ஜலியான் என்ற அருங்காட்சியகம்; 1857, இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின் நினைவாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் ஆகியன இந்த ஒட்டுமொத்த வளாகத்தையுமே க்ராந்தி மந்திர், அதாவது புரட்சிக் கோயில் என்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகங்களில் உள்ள ஒவ்வொரு செங்கல்லிலும், நமது கௌரவம்மிக்க வரலாற்றின் நறுமணம் வாசம் செய்கிறது. அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கதைகளும் காதைகளும், வரலாற்றிலே மூழ்கி முத்தெடுக்க நமக்குக் கருத்தூக்கம் அளிக்கின்றன. இந்த இடத்திலே தான் பாரத தாயின் வீர மைந்தர்களான கர்னல் ப்ரேம் சைகல், கர்னல் குர்பக்ஷ் சிங் தில்லோன், மேஜர் ஜெனரல் ஷாநவாஸ் கான் ஆகியோர் மீது ஆங்கிலேய அரசு வழக்கு விசாரணை நடத்தியது.
நான் செங்கோட்டையின் புரட்சிக் கோயிலில், நேதாஜியோடு இணைந்த நினைவுகளை கவனித்து வந்த வேளையில், நேதாஜியின் குடும்பத்தார்களில் ஒருவர் எனக்கு மிகவும் சிறப்புமிக்க தொப்பியைப் பரிசாக அளித்தார். ஒருகாலத்தில் நேதாஜி அந்தத் தொப்பியை அணிந்திருக்கிறார். நான் அருங்காட்சியகத்துக்கே அந்தத் தொப்பியை அளித்து விட்டேன், இதன் வாயிலாக அங்கே வரும் மக்களால் அதைப் பார்க்க முடியும், தேசபக்தியின் உத்வேகத்தை அவர்கள் அடைவார்கள். உண்மையிலேயே நம்முடைய நாயகர்களின் வீரத்தையும் தேசபக்தியையும் நமது புதிய தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும், வெவ்வேறு கோணங்களில் நிரந்தரமாகக் கொண்டு சேர்க்கும் தேவை இருக்கிறது. சுமார் ஒரு மாதம் முன்னதாக, டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நான் அந்தமான் – நிகோபார் தீவுகளுக்குச் சென்றிருந்தேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 75 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த இடத்திலே மூவண்ணக் கொடியை ஏற்றினாரோ, அதே இடத்தில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதைப் போலவே 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் செங்கோட்டையிலே நான் மூவர்ணக் கொடியைப் பறக்க விட்ட போது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்; ஏனென்றால் அங்கே ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று மூவண்ணக் கொடியேற்றுவது தான் பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்திலே ஆஸாத் ஹிந்த் அரசு தொடர்பான அறிவிப்பு 75 ஆண்டுகள் முன்பாக அரங்கேறியது. சுபாஷ் பாபு எப்போதுமே ஒரு வீரம்நிறை இராணுவ வீரர், திறமையான நிர்வாகி என்ற முறையிலே நினைவில் கொள்ளப்படுவார். இப்படிப்பட்ட வீரம்நிறை இராணுவ வீரர், சுதந்திரப் போராட்டத்திலே மகத்துவம் நிறைந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். தில்லி சலோ, நீ எனக்கு உதிரம் கொடு, நான் உனக்கு சுதந்திரம் அளிக்கிறேன் என்பன போன்ற விழிப்பும் உத்வேகமும் ஊட்டும் கோஷங்களால் நேதாஜி ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீக்கமற நிறைகிறார். பல ஆண்டுகள் வரை அவரைப் பற்றிய இரகசிய கோப்புகள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வந்தது; இந்தப் பணியை நாங்கள் செய்திருக்கிறோம் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. நேதாஜியின் குடும்பத்தார் அனைவரும் என் வீட்டிற்கு ஒரு நாள் வந்தார்கள், என்று என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. நாங்கள் இணைந்து நேதாஜியோடு தொடர்புடைய பல விஷயங்களைப் பற்றி உரையாடினோம், நேதாஜி போஸுக்கு எங்கள் சிரத்தாஞ்ஜலிகளைக் காணிக்கையாக்கினோம்.
பாரதத்தின் மகத்தான நாயகர்களோடு தொடர்புடைய பல இடங்களை தில்லியில் மேம்படுத்தும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. அது பாபா சாஹேப் அம்பேத்கருடன் தொடர்புடைய 26, அலிப்பூர் ரோடாகட்டும், சர்தார் படேல் அருங்காட்சியகமாகட்டும், கிராந்தி மந்திராகட்டும். நீங்கள் தில்லி வந்தால் இந்த இடங்களைக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள்.
என் மனதில் நிறைந்திருக்கும் என் நாட்டுமக்களே, இன்று நாம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையிலே, அதுவும் மனதின் குரலிலே, நேதாஜியின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்களோடு இணைப்பை உருவாக்கும் ஒரு மகத்துவம் நிறைந்த ஊடகமாக வானொலியை நான் எப்போதுமே கருதி வந்திருக்கிறேன்; இதைப் போலவே நேதாஜியும் வானொலியோடு ஆழமான தொடர்பு கொண்டிருந்தார், அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவதை வானொலி வாயிலாகவே செய்து வந்தார். 1942ஆம் ஆண்டு சுபாஷ் பாபு ஆஸாத் ஹிந்த் வானொலியைத் தொடங்கி, வானொலி வாயிலாகவே ஆஸாத் ஹிந்த் இராணுவ வீரர்களிடத்திலும் நாட்டு மக்களிடத்திலும் உரையாற்றினார். சுபாஷ் பாபு வானொலியில் தனக்கே உரிய பாணியில் உரையாற்றுவார். அவர் உரையாடலைத் தொடங்கும் முன்பாக முதலில் என்ன சொல்லுவார் என்றால் – This is Subhash Chandra Bose speaking to you over the Azad Hind Radio, இந்தச் சொற்களைக் கேட்டவுடனேயே நேயர்கள் மனதிலே ஒரு புதிய உற்சாகம், ஒரு புதிய சக்தி பெருக்கெடுத்து ஓடும்.
இந்த வானொலி நிலையம், வாரமொரு முறை செய்திகளை ஒலிபரப்பி வந்தது என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். இது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பாங்க்ளா, மராத்தி, பஞ்சாபி, பஷ்தோ, உருது ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்த வானொலி நிலைய நிர்வாகத்தில், குஜராத்தில் வாழ்ந்த எம்.ஆர். வ்யாஸ் அவர்களின் பங்களிப்பு மிகக் குறிப்பிடத்தக்கது. ஆஸாத் ஹிந்த் வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சாதாரண மக்களிடையே அதிகப் பிரியமானதாக இருந்தது, இதன் நிகழ்ச்சிகள் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மிகுந்த பலத்தை அளித்தன.
இந்தப் புரட்சிக் கோயிலில் ஒரு காட்சிக்கலை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தை, கருத்தை அதிகம் கவரும் வகையிலே விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 4 கண்காட்சிகள் இருக்கின்றன, அங்கே 3 நூற்றாண்டுகள் பழமையான 450க்கும் மேற்பட்ட ஓவியங்களும் கலைப் படைப்புகளும் இருக்கின்றன. அருங்காட்சியகத்தில் அம்ருதா ஷேர்கில், ராஜா ரவிவர்மா, அவநீந்திரநாத் தாகூர், ககநேந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், ஜாமினி ராய், சைலோஸ் முகர்ஜி போன்ற மகத்தான கலைஞர்களின் மிகச் சிறப்பான படைப்புக்கள், மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. நீங்கள் அனைவரும் அங்கே சென்று பாருங்கள், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் படைப்புக்களைக் கண்டிப்பாகக் காணுங்கள் என்று குறிப்பாக உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அட, என்ன இது, கலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாரே, ஆனால் இங்கு போய் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சிறப்பான படைப்புக்கள் பற்றிப் பேசுகிறாரே என்று நீங்கள் எண்ண முற்படலாம். நீங்கள் அனைவரும் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரை ஒரு எழுத்தாளராக, ஒரு இசைக் கலைஞராகவும் அறிந்திருப்பீர்கள். ஆனால் குருதேவர் ஒரு ஓவியரும் கூட என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் பல விஷயங்கள் மீது ஓவியங்கள் தீட்டியிருக்கிறார். அவர் விலங்குகள்-பறவைகளை வரைந்திருக்கிறார், பல அழகிய காட்சிகளை ஓவியமாக்கி இருக்கிறார். இதுமட்டுமல்ல, அவர் மனிதப் பாத்திரங்களைக்கூட, கலை வாயிலாகத் தூரிகையில் தீட்டியிருக்கிறார். சிறப்பான விஷயம் என்னவென்றால், குருதேவ் தாகூர், தனது பெரும்பான்மைப் படைப்புக்களுக்கு எந்தப் பெயரையும் அளிக்கவில்லை. சித்திரத்தைப் பார்ப்பவர் தானே அதைப் புரிந்து கொள்ள வேண்டும், அந்தச் சித்திரம் வாயிலாக அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அவர் தனது கண்ணோட்டத்தில் காண வேண்டும் என்றே அவர் கருதினார். அவரது ஓவியங்கள் ஐரோப்பிய நாடுகளில், ரஷியாவில், அமெரிக்காவில் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் கிராந்தி மந்திருக்குச் சென்று அவரது ஓவியங்களைக் கண்டிப்பாகப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
என் பாசம்நிறை நாட்டுமக்களே, பாரதம், புனிதர்கள் நிறைந்த பூமி. நமது புனிதர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் வாயிலாக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சமூக அதிகாரப்பங்களிப்பு என்ற செய்திகளை அளித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு புனிதர் தான் சந்த் ரவிதாஸ். பிப்ரவரி 19ஆம் தேதியன்று ரவிதாஸ் அவர்களின் பிறந்த நாள். புனிதர் ரவிதாஸ் அவர்களின் தோஹாக்கள் என்ற கவிதைகள் மிகவும் பிரபலமானவை. ரவிதாஸ் அவர்கள் சில வரிகளிலேயே மிகப்பெரிய செய்தியை அளித்து விடுவார். ஜாதி-ஜாதி மேன் ஜாதி ஹை, ஜோ கேதன் கே பாத், ரைதாஸ் மனுஷ நா ஜுட் சகே, ஜப் தக் ஜாதி ந ஜாத்.
“जाति-जाति में जाति है,
जो केतन के पात,
रैदास मनुष ना जुड़ सके
जब तक जाति न जात”
வாழைத்தண்டின் தோல் உரிக்கப்பட்டு, அந்தத் தோலுக்கு உள்ளே இருக்கும் அடுக்கு, மீண்டும் ஒரு அடுக்கும் மீண்டும் ஒரு அடுக்கு என்று உரித்து முடித்தால், முடிவில் எதுவுமே மிச்சம் இருக்காது, வாழை மரம் முழுக்க எப்படி இல்லாமல் போய் விடுமோ, அதைப் போலவே மனிதனை சாதிகளாகப் பிரித்தோமென்றால், அங்கே மனிதனே இல்லாமல் போகிறான் என்பதே இதன் பொருள். உண்மையில் இறைவன் அனைத்து மனிதர்களிலும் உறைகிறான் என்றால், அவனை சாதி, மதம், பிரிவு என்ற வகைகளில் பிரித்துப் பகுத்துப் பார்ப்பது உசிதமாகாது என்று அவர் கூறுவார்.
குரு ரவிதாஸ் வாராணசியின் புனித பூமியில் பிறந்தார். புனிதர் ரவிதாஸ் தனது செய்திகள் வாயிலாக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் உழைப்பு மற்றும் உழைப்பாளர் மகத்துவத்தைப் புரியவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். உழைப்பின் மகத்துவத்தின் மெய்ப்பொருளை உலகிற்கு அவர் எடுத்துரைத்தார் என்று சொன்னால் மிகையாகாது. மன் சங்கா தோ கடௌதீ மேன் கங்கா. “मन चंगा तो कठौती में गंगा” என்று அவர் கூறுவார். அதாவது உங்கள் மனமும் இதயமும் புனிதமாக இருக்குமேயானால், உங்கள் இதயத்தில் இறைவனே வாசம் செய்கிறான் என்பதே இதன் பொருள். புனிதர் ரவிதாஸ் அவர்களின் உபதேசங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அது சிட்டூர் மஹாராஜா, மஹாராணியாகட்டும், மீராபாய் ஆகட்டும், அனைவருமே அவரைப் பின்பற்றி நடப்பவர்கள் தாம். நான் மீண்டும் ஒருமுறை புனிதர் ரவிதாஸ் அவர்களை என் நினைவில் தாங்குகிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, MyGovஇல் கிரண் சிதர் அவர்கள், இந்திய விண்வெளித்துறை பற்றியும் இதன் எதிர்காலத்தோடு தொடர்புடைய பரிமாணங்கள் குறித்தும் மனதின் குரலில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், மாணவர்கள் மனதிலே விண்வெளி பற்றிய ஆர்வம் பற்றியும், சற்று விலகி, வானத்தையும் தாண்டி சிந்திப்பது தொடர்பாக நான் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் விண்ணப்பித்திருக்கிறார். கிரண் அவர்களே, உங்களுடைய கருத்துக்கள், அதுவும் குறிப்பாக நமது குழந்தைகளுக்காக நீங்கள் அளித்திருக்கும் செய்தியின் பொருட்டு நான் உங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில நாட்கள் முன்பாக, நான் அஹமதாபாதில் இருந்தேன், அங்கே டாக்டர். விக்ரம் சாராபாய் அவர்களின் உருவச்சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. டாக்டர். விக்ரம் சாராபாய் பாரதத்தின் விண்வெளித் திட்டத்திற்கு மகத்தான பங்களிப்பை அளித்திருக்கிறார். நமது விண்வெளித் திட்டத்தில் நாட்டின் எண்ணற்ற இளைய விஞ்ஞானிகளின் பங்களிப்பு அடங்கியிருக்கிறது. நமது மாணவர்கள் வாயிலாக மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களும், sounding
rocket-களும் விண்வெளியை எட்டிக் கொண்டிருக்கின்றன என்பது நம் இதயம் குமுறச் செய்யும் விஷயம். இதே ஜனவரி மாதம் 24-ஆம் தேதியன்று தான் நமது மாணவர்கள் வாயிலாக வடிவமைக்கப்பட்ட கலாம்சாட் விண்ணில் ஏவப்பட்டது. ஒடிஷாவில் பல்கலைக்கழக மாணவர்கள் வாயிலாக உருவாக்கப்பட்ட sounding rocketகளும் கூட புகழை ஈட்டியிருக்கின்றன. தேசம் சுதந்திரம் அடைந்தது முதல் 2014ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை விண்வெளி மிஷன்கள் அளவுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரே விண்வெளிக்கலத்தில் 104 செயற்கைக்கோள்களை நாம் விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்திருக்கிறோம். நாம் விரைவிலேயே சந்திரயான்-2 இயக்கம் வாயிலாக சந்திரனில் இந்தியாவின் இருப்பைப் பதிவு செய்யவிருக்கிறோம்.
நம்முடைய தேசம் விண்வெளித் தொழில்நுட்பப் பயன்பாட்டை உயிர் உடமைகளின் பாதுகாப்பிற்காக மிகச் சிறப்பான வகையிலே செய்து வருகிறது. புயலாகட்டும், ரயில் மற்றும் சாலைப் பாதுகாப்பாகட்டும், இவையனைத்திலும் விண்வெளித் தொழில்நுட்பம் கணிசமாக உதவிகள் செய்து வருகிறது. நமது மீனவ சகோதரர்களிடையே NAVIC கருவிகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன, இவை அவர்களைப் பாதுகாப்பதோடு, பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவி செய்கிறது. நாம் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசு சேவை வழங்குதல் மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை சிறப்பான வகையிலே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் வீட்டுவசதி என்ற திட்டத்தின்படி, 23 மாநிலங்களில் சுமார் 40 இலட்சம் வீடுகளுக்கு ஜியோ டேக் அளிக்கப்பட்டு விட்டது. இதோடு கூடவே மஹாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டப்படி சுமார் மூணரைக் கோடிச் சொத்துக்களையும் ஜியோ டேக் செய்தாகி விட்டது. நமது செயற்கைக்கோள்கள் இன்று நாட்டின் பெருகிவரும் சக்தியின் அடையாளங்கள். உலகின் பல நாடுகளுடன் நாம் சிறப்பான தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பது இதன் பங்களிப்பு காரணமாகத் தான். தெற்காசிய செயற்கைக்கோள்கள் என ஒரு பிரத்யேகமான முயற்சி உண்டு, இது நமது அண்டைப்புறத்தில் இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வளர்ச்சி என்ற வெகுமதியை அளித்திருக்கிறது. தனது சிறப்பான போட்டித்தன்மைமிக்க ஏவுதல் சேவைகள் வாயிலாக பாரதம் இன்று வளர்ந்துவரும் நாடுகளுடையவை மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளுடைய செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியிருக்கின்றது. வானமும் விண்மீன்களும் எப்போதுமே குழந்தைகளைக் கவரும் விஷயங்களாக இருந்து வந்திருக்கின்றன. பெரியதாகச் சிந்திக்க வேண்டும், இதுவரை எதையெல்லாம் இயலாத ஒன்று என்று பார்த்தார்களோ, அந்த எல்லைகளைத் தாண்டி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் நமது விண்வெளித் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. நமது குழந்தைகள் விண்மீன்களால் கவரப்பட்டு இருப்பதோடு, புதிய புதிய நட்சத்திரங்களைத் தேடவும் உத்வேகம் அளிக்கிறது, தொலைநோக்குக் காட்சியை அளிக்கிறது.
எனது பேரன்பிற்குரிய நாட்டுமக்களே, யார் விளையாடுகிறார்களோ அவர்கள் வளர்கிறார்கள், மலர்கிறார்கள் என்று நான் எப்போதுமே கூறுவதுண்டு. இந்த முறை கேலோ இண்டியாவில் ஏகப்பட்ட விளையாட்டு வீரர்கள் பிரகாசித்திருக்கிறார்கள். ஜனவரி மாதம் புனேயில் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 18 விளையாட்டுக்களில் சுமார் 6000 விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். நமது விளையாட்டுக்களின் உள்ளூர் சூழலமைப்பு பலமாக இருந்தால், அதாவது நமது அடித்தளம் பலமாக இருந்தால் தான் நமது இளைஞர்களால் தேசம் மற்றும் உலகம் முழுக்க தங்களது திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். உள்ளூர் மட்டத்தில் விளையாட்டு வீரர் சிறப்பாகச் செயல்பட்டார் என்றால் தான், அவரால் உலக அளவிலே மிகச் சிறப்பான செயல்பாட்டைப் புரிய முடியும். இந்த முறை கேலோ இண்டியாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். பதக்கங்களை வென்ற பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை பலமான உத்வேகம் அளிக்கவல்லதாக இருக்கிறது.
குத்துச்சண்டைப் போட்டியில் இளைய விளையாட்டு வீரரான ஆகாஷ் கோர்க்கா, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆகாஷின் தந்தையார் ரமேஷ் அவர்கள், புனேயில் ஒரு வளாகத்தில் காவலாளியாகப் பணியாற்றுகிறார் என்பதை நான் படித்தேன். அவர் தனது குடும்பத்தோடு ஒரு வண்டி நிறுத்தும் கொட்டகையில் வசிக்கிறார். இவரைப் போலவே 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மஹாராஷ்ட்ரத்தின் கபடிக் குழுவின் கேப்டன் சோனாலி ஹேல்வீ, சதாராவில் வசிக்கிறார். அவர் மிகக் குறைந்த வயதிலேயே தனது தந்தையாரை இழந்திருக்கிறார், அவரது சகோதரரும் அவரது தாயும் தான் சோனாலிக்கு நம்பிக்கை அளித்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். கபடி போன்ற விளையாட்டுக்களில் பெண்களை அதிகம் ஊக்கப்படுத்துவதில்லை என்று நாம் பலவேளைகளில் பார்க்கிறோம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சோனாலீ கபடியைத் தேர்ந்தெடுத்தார், சிறப்பாகச் செயல்பட்டார். ஆஸன்சோலைச் சேர்ந்த 10 வயது நிரம்பிய அபினவ் ஷா, கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களில் மிகக் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். கர்நாடகத்தின் ஒரு விவசாயி-யின் மகள் அக்ஷதா வாஸ்வானீ கம்தீ, பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். அவர் தனது வெற்றிக்கான பெருமையை தனது தந்தையாருக்கு அர்ப்பணித்திருக்கிறார். அவரது தந்தையார் பெல்காமைச் சேர்ந்த ஒரு விவசாயி. நாம் இந்தியாவை நிர்மாணிப்பது பற்றிப் பேசும் வேளையில், இளைய சமுதாயத்தினரின் சக்தியின் உறுதிப்பாடு தானே புதிய இந்தியா!! கேலோ இண்டியாவின் இந்தக் கதைகள், புதிய இந்தியாவின் நிர்மாணம் என்பது பெரிய நகரங்களைச் சேர்ந்த மக்களின் பங்களிப்பால் மட்டுமே அல்ல, சின்னச்சின்ன நகரங்கள், கிராமங்கள், பேட்டைகள் ஆகியவற்றிலிருந்து வரும் இளைஞர்கள், இளம் விளையாட்டுத் திறமையாளர்கள் ஆகியோரின் பங்களிப்பாலும்தான் என்பதையே அறிவிக்கின்றன.
என்மனம் நிறைந்த நாட்டுமக்களே, நீங்கள் புகழ்பெற்ற பல அழகுப் போட்டிகள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கழிப்பறையைப் பளிச்சிடச் செய்யும் போட்டி பற்றி கேள்விப்பட்டதுண்டா? சுமார் ஒருமாத காலமாக நடந்து வரும் இந்த விசித்திரமான போட்டியில் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த விசித்திரமான போட்டியின் பெயர் தூய்மையான அழகான கழிப்பறை. மக்கள் தங்கள் கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருப்பதன் கூடவே, அதை அழகுபடுத்தி மெருகூட்ட, சில ஓவியங்களைப் பயன்படுத்தி நேர்த்தியாக்கி இருந்தார்கள். காஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும், கட்ச் தொடங்கி காமரூப் வரையிலும் தூய்மையான அழகான கழிப்பறைகள் தொடர்பான ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றன. உங்கள் பஞ்சாயத்தில் இப்படிப்பட்ட இயக்கத்துக்கு நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று நான் அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களிடமும், கிராமத் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். உங்களது தூய்மையான அழகான கழிப்பறையின் புகைப்படத்தை #MyIzzatGhar உடன் இணைத்து சமூக வலைத்தளத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே, தேசத்தைத் தூய்மைப்படுத்த மற்றும் திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அடையும் நோக்கத்தோடு, ஒன்றாக இணைந்து 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நினைவில் கொள்ளத்தக்க பயணத்தை நாம் மேற்கொண்டோம். பாரதநாட்டு மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இன்று 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு முன்பாகவே திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அடையும் திசையை நோக்கி விரைந்து பயணித்து வருகிறது; இதன் காரணமாக அண்ணலின் 150ஆவது பிறந்த நாளன்று நாம் அவருக்கு சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்க முடியும்.
தூய்மையான பாரதத்தின் இந்த நினைவில் நிறுத்தக்கூடிய பயணத்தில், மனதின் குரல் நேயர்களின் பங்களிப்பும் மகத்தானது, இதற்காகத் தான் நான் உங்களிடம் இந்த விஷயத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும் வேளையில், ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களும் 600 மாவட்டங்களும் தாங்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அடைந்திருப்பதாக அவர்களே அறிவிப்பு செய்திருக்கிறார்கள். கிராமப்புற இந்தியாவின் தூய்மையின் வீச்சு 98 சதவீத மக்களைச் சென்றடைந்திருக்கிறது, சுமார் 9 கோடிக் குடும்பங்களுக்குக் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனது சின்னஞ்சிறிய நண்பர்களே, தேர்வு நாட்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. நான் தேர்வுகள் பற்றியும் Exam Warriors பற்றியும் பேச வேண்டும் என்று ஹிமாச்சலப் பிரதேசத்தில் வசிக்கும் அன்ஷுல் ஷர்மா MyGovஇல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அன்ஷுல் அவர்களே, இந்த விஷயத்தை முன்வைத்தமைக்கு உங்களுக்கு என் நன்றிகள். ஆம், பல குடும்பங்களுக்கு ஆண்டின் முதல் பகுதி தேர்வுக்காலமாக இருக்கிறது. மாணவர்கள், அவர்களின் தாய் தந்தையர் தொடங்கி, ஆசிரியர்கள் வரை அனைவரும் தேர்வுகளோடு தொடர்புடைய செயல்களில் மும்முரமாக இருக்கிறார்கள்.
நான் அனைத்து மாணவர்கள், அவர்களின் தாய் தந்தையர், அவர்தம் ஆசிரியப் பெருமக்கள் ஆகியோருக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயம் குறித்து மனதின் குரலின் இந்த நிகழ்ச்சியில் விவாதிப்பதை நான் கண்டிப்பாக விரும்புகிறேன்; ஆனால் 2 நாட்கள் கழித்து ஜனவரி மாதம் 29ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு பரீக்ஷா பே சர்ச்சா, அதாவது தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியில் நாடு முழுக்க உள்ள மாணவர்களோடு உரையாடவிருக்கிறேன். இந்த முறை மாணவர்களுடன் சேர்த்து, அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவிருக்கிறார்கள். மேலும் இந்த முறை பல அயல்நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க இருக்கின்றார்கள். இந்த பரீக்ஷா பே சர்ச்சாவில் தேர்வுகளோடு இணைந்த அனைத்துக் கோணங்களும், குறிப்பாக மனவழுத்தமில்லாத தேர்வு தொடர்பாக நமது இளைய நண்பர்களுடன் ஏகப்பட்ட விஷயங்களைப் பேச இருக்கிறேன். இதற்காக பலரிடமிருந்து உள்ளீடுகளையும், கருத்துக்களையும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். MyGovஇல் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவற்றில் சில கருத்துக்களையும் ஆலோசனைகளையும், கண்டிப்பாக டவுன் ஹால் நிகழ்ச்சியின் போது நான் முன்வைப்பேன். நீங்கள் அவசியம் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்….. சமூக ஊடகங்கள் மற்றும் நமோ செயலி வாயிலாகவும் நீங்கள் இதன் நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்.
என் மனம் நிறைந்த நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 30ஆம் தேதி வணக்கத்துக்குரிய அண்ணல் மறைந்த நாள். அன்று காலை 11 மணிக்கு நாடு முழுவதும் தியாகிகளுக்கு சிரத்தாஞ்சலிகளை அளிக்கும். நாமும் கூட எங்கே இருந்தாலும் உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குவோம். வணக்கத்துக்குரிய அண்ணல் பற்றிய புனிதமான நினைவுகளை மனதில் ஏந்தி, அவரது கனவுகளை மெய்ப்பிக்க, புதிய பாரதத்தை நிர்மாணம் செய்ய, குடிமக்கள் என்ற முறையில் நமது கடமைகளை சரிவர நிர்வாகம் செய்வோம் என்ற மனவுறுதியை மேற்கொள்வோம், முன்னேறிச் செல்வோம். 2019ஆம் ஆண்டின் இந்தப் பயணம் வெற்றிகரமானதாக முன்னேறிச் செல்லட்டும். என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2018ஆம் ஆண்டு நிறைவைக் காணவிருக்கிறது, நாம் 2019ஆம் ஆண்டிலே காலெடுத்து வைக்கவிருக்கிறோம். இது போன்ற வேளையிலே, கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கருத்தாய்வுகளில் ஈடுபடுவதும், வரவிருக்கும் ஆண்டிலே மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதிப்பாடுகளைப் பற்றிய பேச்சுக்களும் காதிலே வந்து விழுவது என்பது இயல்பான விஷயம் தானே!! அது தனிமனிதனின் வாழ்க்கையாகட்டும், சமுதாயப் போக்காகட்டும், நாட்டின் வாழ்க்கையாகட்டும் – அனைவருமே பின்னே திரும்பியும் பார்க்க வேண்டும், வரவிருக்கும் நாட்களையும், தொலைவான காலத்தையும் பார்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்; அப்போது தான் அனுபவங்களின் ஆதாயங்கள் நமக்கு வாய்ப்பதோடு, புதிய ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் உதயமாகும். நாம் என்ன செய்தால் நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டையும் சமூகத்தையும் முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு அளிக்க முடியும் என்பது தொடர்பாக நமது எண்ணங்கள் இருக்க வேண்டும். உங்களனைவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான ஏராளமான நல்வாழ்த்துக்கள். சரி, 2018ஆம் ஆண்டினை நாம் எவ்வாறு நினைவில் கொள்ளலாம் என்று நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள், இல்லையா?? பாரத நாடு ஒரு தேசம் என்ற வகையில், தனது 130 கோடி மக்களின் திறன்கள் வடிவில் எப்படி 2018ஆம் ஆண்டினை நினைவில் தாங்கும் – இப்படி நினைவு கொள்வதும் முக்கியமானது. இது நமக்கெல்லாம் கௌரவம் அளிக்கக் கூடியதாக அமையும்.
2018இலே, உலகின் மிகப்பெரிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு கிராமம் வரையிலும் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது. உலகின் மதிப்புநிறைந்த அமைப்புகளெல்லாம், பாரதம் சாதனை படைக்கும் வேகத்தில், ஏழ்மையிலிருந்து விடுதலை அடைந்து வருவதாக அடித்துச் சொல்லியிருக்கின்றன. நாட்டுமக்களும் தங்களது ஆணித்தரமான மனவுறுதி காரணமாக தூய்மை உள்ளடக்கல் அதிகரித்து, 95 சதவீதத்தைக் கடந்து தனது பயணத்தில் முன்னேறி வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு செங்கோட்டையிலிருந்து முதன்முறையாக, ஆஸாத் ஹிந்த் அரசின் 75ஆம் ஆண்டு நிறைவின் போது மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டது. நாட்டை ஒற்றுமை எனும் இழையில் இணைத்த மாமனிதர், சர்தார் வல்லப்பாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலகின் மிக உயரமான திருவுருவச் சிலையான Statue of Unity, ஒற்றுமைச் சிலை, நம் நாட்டில் உருவாக்கம் பெற்றது. உலக அரங்கிலே நாட்டின் பெருமிதம் உயர்ந்தது. நாட்டுக்கு ஐ.நா. அமைப்பின் சுற்றுச்சூழல் துறையில் மிக உயரிய, Champions of the Earth விருது அளிக்கப்பட்டது. சூரியசக்தி மற்றும் சூழல் மாற்றம் துறையில் பாரத நாட்டின் முயற்சிகளுக்கு உலகம் அங்கீகாரம் அளித்தது. பாரதத்தில், சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பின் முதல் மாநாடான International Solar Allianceக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நமது சமூக முயற்சிகள் காரணமாக, நமது தேசம், ease of doing businessஆன வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை தரநிலையில் இதுவரை காணாத அளவுக்கு முன்னேற்றம் கண்டது. நாட்டின் தற்காப்புக்குப் புதிய பலம் வாய்க்கப் பெற்றது. இந்த ஆண்டிலே, நமது தேசம் Nuclear Triadஐ வெற்றிகரமாக நிறைவேற்றியது, அதாவது நமது நீர், நிலம், வானம் – இந்த மூன்றிலும் அணுசக்தி நிறைவை எட்டியிருக்கிறோம். நாட்டின் பெண்கள், நாவிகா சாகர் பரிக்ரமா என்ற படகில் உலகைச் சுற்றி வருதல் முயற்சி வாயிலாக நாட்டின் பெயருக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள். வாராணசியில் பாரதம் முதல் நீர்வழிப் போக்குவரத்தைத் தொடக்கியது. இதன் மூலம் நீர்வழிகள் துறையில் புதிய புரட்சிக்கு வித்திடப்பட்டிருக்கிறது. நாட்டிலே மிக நீளமான ரயில்-ரோடு பாலமான போகிபீல் பாலம் மக்கள் சேவைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் முதலாவதும், தேசத்தின் 100ஆவதுமான விமானநிலையம் – பாக்யோங் நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பைக் க்ரிக்கெட் போட்டியிலும், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டியிலும் பாரதம் வெற்றிவாகை சூடியது. இந்த முறை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாரதம் பெரிய அளவிலே பதக்கங்களை வென்றிருக்கிறது. பாரா ஆசிய விளையாட்டுக்களில் பாரதம் மிக அருமையான செயல்பாடுகளைப் புரிந்திருக்கிறது. நான் ஒவ்வொரு இந்தியரின் முயற்சிகள் பற்றியும், நமது சமூக முயற்சிகளைப் பற்றியும் மட்டுமே பேசினால், நமது மனதின் குரல் மிக நீண்டு, 2019ஆம் ஆண்டு கூட பிறந்து விடும். இவை அனைத்தும் 130 கோடி நாட்டுமக்களின் இடைவிடாத முயற்சிகளால் தான் கனிந்திருக்கின்றன. 2019ஆம் ஆண்டிலும், பாரதம் முன்னேற்றம், வளர்ச்சி என்ற பயணத்திலே முனைப்போடும் முயற்சியோடும், அயர்ச்சியில்லாமல் ஓய்வில்லாமல் வெற்றிநடை போடும் என்பதில் எனக்கு அசையாத ஆணித்தரமான நம்பிக்கை உண்டு, நாடு புதிய சிகரங்களை எட்டும், மேலும் பொலிவுடன் சாதனைகள் படைக்கும், இது என் ஆழ்மன உறுதி.
எனதருமை நாட்டுமக்களே, இந்த டிசம்பர் மாதத்தில் நாம் சில அசாதாரணமான நாட்டுமக்களை இழந்திருக்கிறோம். டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று சென்னையைச் சேர்ந்த டாக்டர். ஜெயச்சந்திரன் இறைவனடி சேர்ந்தார். டாக்டர். ஜெயச்சந்திரனை மக்கள் பிரியத்தோடு ‘மக்கள் மருத்துவர்’ என்று அழைப்பார்கள், ஏனென்றால் அவர் மக்களின் மனங்களிலே வசித்தார். டாக்டர். ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு மிக குறைவான செலவில் சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்றவர். அவர் எந்த நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முனைப்போடு இருந்தார் என்று மக்கள் கூறுகிறார்கள். தன்னிடத்தில் சிகிச்சைக்காக வரும் வயதான நோயாளிகளுக்கு போக்குவரத்து செலவையும் கூட அவரே கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!! சமூகத்துக்குக் கருத்தூக்கம் அளிக்கவல்ல இவரின் சேவை பற்றிய தகவல்களை thebetterindia.com என்ற இணையதளத்தில் நான் படித்திருக்கிறேன்.
இதைப் போலவே கர்நாடகத்தைச் சேர்ந்த சுலகிட்டி நரசம்மாவும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார். சுலகிட்டி நரசம்மா, கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்ப்பதில் உதவும் உதவியாளராக இருந்தார். அவர் கர்நாடகத்திலே, குறிப்பாக அங்கே தொலைவான பகுதிகளில் ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்குத் தனது சேவைகளை அளித்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. டாக்டர். ஜெயச்சந்திரன், சுலகிட்டி நரசம்மா போன்ற பல உத்வேகம் அளிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் சமூகத்தின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள். நாம் உடல்நலப் பராமரிப்பு பற்றிப் பேசும் வேளையில், இங்கே உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்நோரில் மருத்துவர்களின் சமூக முயற்சிகள் பற்றியும் பேச விரும்புகிறேன்.
நகரில் சில இளைய மருத்துவர்கள் முகாம் நடத்தி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக, கடந்த சில நாட்கள் முன்பாக, எங்கள் கட்சியின் சில உறுப்பினர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். இங்கிருக்கும் இருதயம், நுரையீரல்கள் தீவிரப் பராமரிப்பு மையத்தின் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் இப்படிப்பட்ட மருத்துவ முகாங்கள் நடத்தப்படுகின்றன. இங்கே பலவகையான நோய்களுக்கும் இலவச சோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைக்கான முறையும் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பல ஏழை நோயாளிகள் இந்த முகாம் மூலம் இன்று பயனடைந்து வருகிறார்கள். சுயநலமில்லாத உணர்வோடு சேவையில் ஈடுபடும் இந்த மருத்துவ நண்பர்களின் உற்சாகம் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியதாகும். சமூக முயற்சிகள் காரணமாகவே தூய்மை பாரதம் இயக்கம் ஒரு வெற்றிகரமான இயக்கமாக வடிவெடுத்திருக்கிறது என்பதை இன்று இங்கே நான் மிகப் பெருமிதம் பொங்கத் தெரிவிக்க விரும்புகிறேன்.
சில நாட்கள் முன்பாக, மத்தியபிரதேசத்தின் ஜபல்புரில், ஒரே நேரத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தூய்மை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்கள் என்ற தகவல் என்னிடத்தில் சிலர் தெரிவித்தார்கள். தூய்மையின் இந்த மஹாயாகத்தில் நகராட்சி, தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள்-கல்லூரிகளின் மாணவர்கள், ஜபல்புரின் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் மிக உற்சாகத்தோடு பங்கேற்றார்கள். நான் சற்று முன்னதாக thebetterindia.com பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா. அங்கே தான் டாக்டர். ஜெயச்சந்திரன் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது; இவை போன்ற உத்வேகம் அளிக்கவல்ல தகவல்களை நான் thebetterindia.com இணையதளத்திலே சென்று தெரிந்து கொள்ள முயல்கிறேன்.
இப்போதெல்லாம் பல இணையதளங்கள் நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கவல்ல இப்படிப்பட்ட சிறப்பான மனிதர்களின் வாழ்க்கை பற்றி தெரிவிக்கின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது thepositiveindia.comஐயே எடுத்துக் கொள்வோமே!! இதிலே சமூகத்தில் ஆக்கப்பூர்வமான உணர்வைப் பரப்பவும் சமூகத்தில் அதிக புரிந்துணர்வை ஏற்படுத்துவதையும் மேற்கொண்டு வருகிறது. இதைப் போலவே yourstory.comஇலே புதுமை படைக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் பற்றிய வெற்றிக் கதைகள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதைப் போலவே samskritabharati.in வாயிலாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே சம்ஸ்க்ருத மொழியைக் கற்றுக் கொள்ளலாம். சரி, நாம் ஒரு வேலை செய்வோமா? இவை போன்ற இணையத்தளங்கள் பற்றிய தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்வோமா?
நாமனைவரும் ஆக்கப்பூர்வமான உணர்வை நன்றாகப் பரப்புவோம். இதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நமது நாயகர்களைப் பற்றி பெருவாரியான மக்கள் தெரிந்து கொள்வார்கள். எதிர்மறை உணர்வைப் பரப்புவது என்பது மிக எளிதானதாக இருக்கலாம், ஆனால் நமது சமூகத்தில், நமது அக்கம்பக்கத்தில் பல நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன, இவையனைத்தும் 130 கோடி நாட்டுமக்களின் சமூக முயற்சிகள் காரணமாகவே நடைபெற்று வருகின்றன.
அனைத்துச் சமுதாயங்களிலும் விளையாட்டுக்களுக்கென ஒரு சிறப்பிடம், மகத்துவம் இருக்கின்றது. விளையாடும் போது, அதைப் பார்ப்பவர்களின் மனங்களிலும் சக்தி நிரம்புகிறது. விளையாட்டு வீரர்களின் பெயர், அடையாளம், அவர்களிடத்தில் மரியாதை போன்ற பல விஷயங்களை நாம் உணர்கிறோம். ஆனால், சில வேளைகளில் இவற்றின் பின்னணியில் பல விஷயங்கள், விளையாட்டு உலகையும் விடப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. நான் கஷ்மீரத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, ஹனாயா நிஸார் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். இவர் கோரியாவில் நடைபெற்ற கராட்டே போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். ஹனாயா 12 வயது நிரம்பிய சிறுமி, கஷ்மீரத்தின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர்.
ஹனாயாவின் கடின உழைப்பு, முனைப்பின் காரணமாக கராட்டே பயிற்சி பெற்றார், இதனை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டார், சாதனை படைத்துக் காட்டியிருக்கிறார். அவரது எதிர்காலம் பிரகாசமானதாக இருக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகிறேன். ஹனாயாவுக்கு ஏராளமான நல்வாழ்த்துக்கள், நல்லாசிகள். இவரைப் போலவே, 16 வயது நிரம்பிய மற்றொரு சிறுமி ரஜனி பற்றியும் ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்தன, நீங்களும் கண்டிப்பாக படித்திருப்பீர்கள். ரஜனி பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இளநிலை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். ரஜனி பதக்கத்தை வென்றவுடன் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஒரு பால் கடைக்குச் சென்று ஒரு கோப்பை பால் குடித்தார். இதன் பின்னர், ரஜனி தனது பதக்கத்தை ஒரு துணியில் சுற்றி, தனது பையிலே வைத்து விட்டார். ஆமாம், ரஜனி ஏன் ஒரு கோப்பை பால் அருந்தினார் என்று நீங்கள் எல்லோரும் யோசிப்பீர்கள், இல்லையா? அவர் தனது தந்தையார் ஜஸ்மேர் சிங் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதைச் செய்தார், அவர் பானீபத்தில் ஒரு கடையில் லஸ்ஸி விற்பனை செய்து வருகிறார். தான் இந்த நிலையை எட்ட தனது தந்தை மிகுந்த தியாகத்தைச் செய்திருப்பதாகவும், பல கஷ்டங்களைச் சகித்துக் கொண்டதாகவும் ரஜனி பின்னர் தெரிவித்தார். ஜஸ்மேர் சிங் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் ரஜனி, அவரது சகோதர சகோதரிகள் எழுந்திருக்கும் முன்பாக வேலைக்குச் சென்று விடுவார். தான் குத்துச் சண்டை கற்றுக் கொள்ள விரும்புவதாக ரஜனி தன் தந்தையிடம் தெரிவித்த போது, இதற்காக இயன்ற அனைத்து தேவைகளையும் இவரது தந்தையார் சேகரித்து, இவருக்குத் தெம்பை அளித்திருந்தார். பழைய கையுறைகளைக் கொண்டே தன் பயிற்சியை ரஜனி தொடங்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அப்போதெல்லாம் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலைமை சீராக இருக்கவில்லை. இத்தனை இடர்களை எல்லாம் தாண்டிய பின்னரும் கூட, ரஜனி தன்னம்பிக்கையைக் கைவிடவில்லை, தொடர்ந்து குத்துச்சண்டையைக் கற்றுக் கொண்டு வந்தார். அவர் செர்பியா நாட்டிலும் கூட ஒரு பதக்கத்தை வென்றிருக்கிறார். நான் ரஜனிக்கு நல்வாழ்த்துக்களையும் என் நல்லாசிகளையும் தெரிவிக்கிறேன். ரஜனியுடன் இணைந்து பயணித்து அவரது ஊக்கத்துக்குக் குந்தகம் வராமல் காத்தளித்த அவரது பெற்றோரான ஜஸ்மேர் சிங்-உஷா ராணி தம்பதியருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த ஆண்டு புணேயைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய ஒரு இளம்பெண்ணான வேதாங்கீ குல்கர்ணீ, சைக்கிளில் உலகத்தையே மிக விரைவாக வலம் வந்த முதல் ஆசியப் பெண்ணானார். தினம் சுமார் 300 கி.மீட்டர் என்ற வீதத்தில், 159 நாட்கள் அவர் பயணித்தார். சற்றுக் கற்பனை செய்து பாருங்கள், தினம் 300 கி.மீ. சைக்கிள் பயணம்!! சைக்கிள் செலுத்துவதன் மீது அவருக்கு இருக்கும் தீராத ஆர்வம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இவை போன்ற சாதனைகள், இப்படிப்பட்ட வெற்றிகள் பற்றிக் கேள்விப்படும் போது நமக்கு கருத்தூக்கம் பிறக்கிறது இல்லையா?? குறிப்பாக எனது இளைய நண்பர்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போது, நாமுமே கூட இடர்களைத் தாண்டி ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. மனவுறுதியும், தளராத தன்னம்பிக்கையும் இருந்தால், தடைகள் தளர்ந்து போகும். இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுக்களை நாம் கேட்கும் போது, நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஒரு புதிய உத்வேகம் ஊற்றெடுக்கிறது.
मेरे प्यारे देशवासियों, जनवरी में उमंग और उत्साह से भरे कई सारे त्योहार आने वाले हैं –जैसे लोहड़ी, पोंगल, मकर संक्रान्ति, उत्तरायण, माघ बिहू, माघी; इन पर्व त्योहारों के अवसर परपूरे भारत में कहीं पारंपरिक नृत्यों का रंग दिखेगा, तो कहीं फसल तैयार होने की खुशियों मेंलोहड़ी जलाई जाएगी, कहीं पर आसमान में रंग–बिरंगी पतंगे उड़ती हुई दिखेंगी, तो कहीं मेलेकी छठा बिखरेगी, तो कहीं खेलों में होड़ लगेगी, तो कहीं एक–दूसरे को तिल गुड़ खिलायाजायेगा | लोग एक–दूसरे को कहेंगे – “तिल गुड घ्या – आणि गोड़ – गोड़ बोला |”
எனதருமை நாட்டுமக்களே, ஜனவரியில் உற்சாகமும் உல்லாசமும் கொப்பளிக்கும் பல பண்டிகைகள் வரவிருக்கின்றன – லோஹ்டீ, பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயணம், மாக பிஹு, மாகீ என இந்த அனைத்துப் பண்டிகைகளின் வேளையில் பாரதம் நெடுக பாரம்பரியமான பல நடனங்கள் தங்கள் வண்ணங்களை வெளிப்படுத்தும், பல இடங்களில் அறுவடைக்குத் தயாராகும் சந்தோஷத்தில் லோஹ்டீ கொளுத்தப்படும், பல இடங்களில் வானத்தில் வண்ணமயமான காற்றாடிகள் உயர்வதை நாம் காண முடியும், வேறு பல இடங்களில் திருவிழாக் காட்சிகள் கண்முன் விரியும், இன்னும் சில இடங்களில் விளையாட்டுக்கள் அணிவகுக்கும், மேலும் பல இடங்களில் எள்ளும் வெல்லமும் உண்ண அளிக்கப்படும். மக்கள் ஒருவருக்கொருவர், தில் குட் க்யா – ஆணி கோட் – கோட் போலா “तिल गुड घ्या – आणि गोड़ – गोड़ बोला என்று கூறிக் கொள்வார்கள். இந்த அனைத்துப் பண்டிகைகளின் பெயர்களும் வேறுவேறானவையாக இருக்கலாம் ஆனால், அனைத்தையும் கொண்டாடும் உணர்வு ஒன்று தான். இந்தக் கொண்டாட்டங்கள் ஏதோ ஒரு விதத்தில் அறுவடை, உழவு ஆகியவற்றோடு இணைந்தவை, விவசாயியோடு இயைந்தவை, கிராமங்களோடு கலந்தவை, பயிர்பச்சைகளோடு ஒருங்கிணைந்தவை. இந்த நேரத்தில் சூரிய உத்தராயண புண்ணியகாலம், சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் வருகிறது. இதன் பிறகு மெல்ல மெல்ல பகல் வேளை அதிகரிக்கத் தொடங்குகிறது, குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்வது தொடங்குகிறது. நமக்கு அன்னமிடும் விவசாய சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். வேற்றுமையில் ஒற்றுமை – ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் சுகந்தம், நமது பண்டிகைகளின் வாயிலாக மணம் பரப்புகிறது.
நமது பண்டிகைகள், நன்னாட்கள் ஆகியன இயற்கையோடு எத்தனை நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் காண முடிகிறது. பாரத நாட்டுக் கலாச்சாரத்தில், சமூகமும் இயற்கையும் இருவேறுபட்டவையாகக் கருதப்பட்டதே கிடையாது. இங்கே தனிமனிதனும் சமூகமும் ஒன்று தான். இயற்கையுடனான நமது நெருங்கிய பந்தத்துக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு உண்டு – பண்டிகைகளை ஆதாரமாகக் கொண்ட பஞ்சாங்கம். இதில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள், பண்டிகைகளுடன், கிரகங்கள் நட்சத்திரங்களின் குறிப்பு காணப்படுகிறது. இயற்கை மற்றும் வானவியல் நிகழ்வுகளுடன் நமது தொடர்பு எத்தனை பழமையானது என்பது பாரம்பரியமான இந்த பஞ்சாங்கங்களிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரியும். சந்திரன் மற்றும் சூரியனின் வேகத்தை ஆதாரமாகக் கொண்டு, சந்திரன் மற்றும் சூரிய பஞ்சாங்கங்களின்படி, திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் தேதிகள் தீர்மானம் செய்யப்படுகின்றன. யார் எந்த பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து இது அமைகிறது. பல இடங்களில் கிரகங்கள்-நட்சத்திரங்களின் இருப்புக்கு ஏற்றபடி, திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. குடீ பட்வா, சேடீசண்ட், உகாதி ஆகிய இவையனைத்தும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கப்படி கொண்டாடப்படுகின்றன; ஆனால் தமிழ்ப்புத்தாண்டு, விஷு, வைசாக், பைசாகீ, பொய்லா பைசாக், பிஹு என இவையனைத்தும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கத்தின் படி கொண்டாடப்படுகின்றன. நமது பல பண்டிகைகள் நதிகள், நீர் ஆகியவற்றைப் பேணும் உணர்வில், சிறப்பாக உருவாக்கம் பெற்றிருக்கின்றன. சட் புண்ணிய தினத்தன்று நதிகள், நீர்நிலைகளில் சூரிய வழிபாடு செய்யப்படுகிறது. மகர சங்கராந்தியின் போது இலட்சக்கணக்கான-கோடிக்கணக்கான மக்கள் புண்ணிய நதிகளில் புனித நீராடுகிறார்கள். நமது பண்டிகைகளும் திருவிழாக்களும் சமூக விழுமியங்கள் பற்றிய கல்வியை நமக்கு அளிக்கின்றன. ஒருபுறம், இவற்றுக்கு புராணரீதியிலான மகத்துவம் இருக்கின்றது என்றால், வேறு ஒருபுறத்தில் பண்டிகைகள் சகோதர உணர்வுடன் வாழும் உத்வேகத்தை மிக இயல்பான, எளிமையான முறையிலே நமக்குக் கற்றுத் தருகின்றன. இன்று உங்கள் அனைவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்; இனிவரும் பண்டிகைகளில் நீங்கள் முழுமையாகக் களிப்புற்று மகிழுங்கள். இந்த உற்சவங்களின் போது நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் பாரதத்தின் பன்முகத்தன்மை, அதன் கலாச்சாரத்தின் அழகை அனைவரும் கண்டு ரசிக்க முடியும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது கலாச்சாரத்தில் இப்படிப்பட்ட விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, இவை நமக்குப் பெருமிதம் அளிக்கின்றன. நாம் உலகின் முன்பாக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கூற முடியும் பலவற்றில் ஒன்று கும்ப மேளா. நீங்கள் கும்ப மேளா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். திரைப்படங்களிலும் கூட இவற்றின் பெருமை மற்றும் விசாலத்தன்மை பற்றி நிறைய பார்த்திருக்கலாம், இது உண்மையும் கூட. கும்ப மேளா மகத்தான பரிமாணம் கொண்டது. எத்தனை தெய்வீகம் நிறைந்ததோ, அத்தனை மகோன்னதம் நிரம்பியது. நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து கும்பமேளாவுடன் இணைகிறார்கள். கும்பமேளாவில் நம்பிக்கை, ச்ரத்தை ஆகியவற்றுடன் மக்கள் சமுத்திரம் வந்து கலக்கிறது. ஒரே வேளையில் ஓரிடத்தில் நாட்டின் அயல்நாடுகளின் இலட்சோபலட்சம் பேர் இணைகிறார்கள். கும்பமேளா என்ற பாரம்பரியம் நமது மகத்தான கலாச்சார மரபிலே முகிழ்த்து மணக்கும் அருமலர். இந்த முறை ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி, பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற கும்பமேளா உங்கள் அனைவரையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கும்பமேளாவின் பொருட்டு துறவிகளும் புனிதர்களும் வரத் தொடங்கி விட்டார்கள். கடந்த ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு கும்பமேளாவை INTANGIBLE CULTURAL HERITAGE OF HUMANITY, அதாவது மனிதகுலத்தின் அருவமான பண்பாட்டு மரபு என்ற பட்டியலில் இணைத்திருப்பதிலிருந்து இதன் சிறப்பான மகத்துவத்தை நம்மால் கணக்கிட முடியும். சில நாட்கள் முன்னதாக பல நாடுகளின் தூதுவர்கள் கும்பமேளாவுக்காக நடந்துவரும் தயாரிப்புக்களைப் பார்த்துச் சென்றார்கள். அங்கே ஒரே நேரத்தில் பல நாடுகளின் கொடிகளும் பறக்க விடப்பட்டன. பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இந்த கும்பமேளாவில் பங்கெடுக்க 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. கும்பமேளாவின் தெய்வீகத்தன்மையால் பாரதத்தின் மகோன்னதம் உலக அரங்கிலே தன் மாட்சிமையைப் பறைசாற்றும். தன்னைத் தானே உணர்வதற்கு ஒரு மிகப்பெரிய கருவி கும்பமேளா, இங்கே வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்ட அனுபவங்கள் வாய்க்கின்றன. உலகியல் விஷயங்களை ஆன்மீகக் கண்கொண்டு பார்க்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். குறிப்பாக இது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக மிளிரும் வாய்ப்பை இளைஞர்களுக்கு அளிக்கிறது. நான் சில நாட்கள் முன்பாக பிரயாக்ராஜ் சென்றிருந்தேன். அங்கே கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் மிக விமர்சையாக நடைபெறுவதை என்னால் காண முடிந்தது. பிரயாக்ராஜைச் சேர்ந்த மக்கள், கும்பமேளாவின் பொருட்டு அதிக உற்சாகத்தோடு காணப்படுகிறார்கள். அங்கே நான் Integrated Command & Control Centre, ஒருங்கிணைந்த ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மக்களுக்கு அர்ப்பணித்தேன். பக்தர்களுக்கு இதனால் கணிசமாக உதவிகள் கிடைக்கும். இந்த முறை கும்பமேளாவில் தூய்மைக்கு அதிக வலு சேர்க்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளில் சிரத்தையுடன் கூடவே தூய்மையும் இருக்கும், தொலைவான பகுதிகளுக்கும் இதுபற்றிய நற்செய்தி சென்றடையும். இந்தமுறை பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடலுக்குப் பிறகு அக்ஷயவடத்தின் புனித தரிசனத்தையும் செய்ய முடியும். மக்களின் நம்பிக்கையின் சின்னமான இந்த அக்ஷயவடம் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கோட்டையில் அடைபட்டுக் கிடந்தது. இதனால் பக்தர்கள் விரும்பினாலும் இதனை தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இப்போது அக்ஷயவடத்தின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. நான் உங்களனைவரிடமும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எப்போது கும்பமேளா சென்றாலும், அதன் பல்வேறு தன்மைகளையும் படங்களையும் சமூக ஊடகத்தில் கண்டிப்பாகத் தரவேற்றம் செய்து பகிருங்கள். இதன்மூலம் பெருவாரியான மக்களுக்குக் கும்பமேளா பற்றித் தெரிந்து கொள்ள உத்வேகம் கிடைக்கும்.
ஆன்மீகம் நிறைந்த இந்தக் கும்பம், பாரத தத்துவங்களின் மஹாகும்பமாகட்டும்.
நம்பிக்கையின் இந்தக் கும்பம், தேசியத்தின் மஹாகும்பமாகட்டும்.
தேச ஒற்றுமையின் மஹாகும்பமாகட்டும்.
பக்தர்களின் இந்தக் கும்பம், உலக சுற்றுலாப் பயணிகளின் மஹாகும்பமாகட்டும்.
கலைத்திறத்தின் இந்தக் கும்பம், படைப்பு சக்திகளின் மஹாகும்பமாகட்டும்.
என் மனம் நிறைந்த நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசுத் திருநாளை முன்னிட்டு நாட்டுமக்களின் மனதிலே நிறை உற்சாகம் காணப்படும். இந்த நாளின் போது நாமனைவரும் அரசியல் அமைப்புச் சட்டத்தை நமக்களித்த மாமனிதர்களை நினைவு கூர்கிறோம். இந்த ஆண்டு நாம் வணக்கத்துக்குரிய பாபூவின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். தென்னாப்பிரிக்காவின் குடியரசுத்தலைவர் சிரில் ராமாஃபோஸா அவர்கள், இந்த ஆண்டு குடியரசுத் திருநாளின் முக்கிய விருந்தினராக இந்தியா வருகை புரிய இருக்கிறார் என்பது நம்மனைவருக்கும் பேற்றினை அளிக்கும் விஷயம். வணக்கத்துக்குரிய பாபுவிற்கு தென்னாப்பிரிக்காவுடன் இணைபிரியாத ஒரு தொடர்பு இருந்து வந்தது. இதே தென்னாப்பிரிக்காவில் தான் மோஹன், மஹாத்மாவானார். தென்னாப்பிரிக்காவில் தான் காந்தியடிகள் தனது முதல் சத்தியாகிரஹத்தை தொடங்கினார், நிறவேற்றுமைக்கு எதிராகத் தீர்மானமாக குரல் கொடுத்தார். அவர் ஃபீனிக்ஸ் மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகளை நிறுவினார், அங்கிருந்து உலகெங்கிலும் அமைதி மற்றும் நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.
2018ஆம் ஆண்டு – நெல்ஸன் மண்டேலா அவர்கள் பிறந்த நூறாவது ஆண்டு என்ற முறையிலேயும் கொண்டாடப்படுகிறது. அவரை மடீபா என்றும் அழைப்பார்கள். நெல்ஸன் மண்டேலா அவர்கள் இனவேற்றுமைக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார், இவருக்கு உத்வேக ஊற்றாக யார் விளங்கினார்கள் என்பதை நாமனைவரும் அறிவோம். பல ஆண்டுகளை சிறையில் கழிக்கக்கூடிய பொறுமையும் உத்வேகமும் வணக்கத்துக்குரிய அண்ணலிடமிருந்து தான் அவருக்குக் கிடைத்தன. மண்டேலா அவர்கள் அண்ணலைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா? ”காந்தியடிகள் எங்கள் வரலாற்றின் பிரிக்கமுடியாத அங்கமாக விளங்கினார் எனென்றால் இங்கே தான் அவர் வாய்மையுடன் தனது முதல் பரிசோதனையை மேற்கொண்டார்; இங்கே தான் அவர் நீதியின் பொருட்டு தனது உறுதிப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தினார்; இங்கே தான் அவர் தனது சத்தியாகிரஹ தத்துவம் மற்றும் போராட்டத்தின் வழிமுறையை மலரச் செய்தார்”, என்றார். அவர் அண்ணலை தனது முன்மாதிரியாகவே அமைத்துக் கொண்டார். அண்ணலும், மண்டேலாவும் – உலகனைத்திற்கும் உத்வேகத்தின் ஊற்றாக விளங்கியதோடு, அவர்களின் இலட்சியங்கள் நம்மை அன்பு, கருணை நிறைந்த சமூகத்தை அமைக்க என்றுமே, எக்காலத்துமே உத்வேகம் அளித்துவரும்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக குஜராத்தின் நர்மதைக் கரையின் கேவடியாவில், காவல்துறைத் தலைமை இயக்குனர்களின் மாநாடு நடந்தது, அங்கே நாட்டின் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுடன் பொருளார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. நாடு மற்றும் நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கு மேலும் பலமளிக்கும் வகையிலே எந்த வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக விவாதங்கள் நடைபெற்றன. இந்த சந்தர்ப்பத்தில் நான் தேச ஒற்றுமைக்காக “சர்தார் படேல் விருது” என்ற ஒன்றைத் துவக்கி வைக்கும் அறிவிப்பைச் செய்தேன். தேச ஒற்றுமைக்காக தனது பங்களிப்பை எந்த வகையிலாவது செய்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். சர்தார் படேல் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் தேசத்தின் ஒற்றுமைக்காகவே அர்ப்பணித்தார். அவர் என்றுமே பாரதத்தின் ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதில் இணைந்திருந்தார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் தான் பாரத நாட்டின் சக்தி அடங்கியிருக்கிறது என்று சர்தார் படேல் அவர்கள் கருதினார். சர்தார் படேல் அவர்களின் இந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலே இந்த விருது மூலமாக நாம் அவருக்கு நம் தூய அஞ்சலிகளை அளிக்க முடியும்.
என் இனிய நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று குரு கோவிந்த் சிங் அவர்களின் புனிதமான பிறந்த நாள். குரு கோவிந்த் சிங் அவர்கள் பட்னாவில் பிறந்தார். வாழ்க்கையின் பெரும்பகுதி வரை அவரது செயற்களம் வட இந்தியாவாகவே இருந்தது, மஹாராஷ்ட்ரத்தின் நாந்தேடில் அவர் இறையடி சேர்ந்தார். பிறந்த இடம் பட்னா, செயற்களம் வடக்கு இந்தியா, வாழ்க்கையின் இறுதிக் கணங்கள் நாந்தேடில். ஒருவகையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அவரது ஆசிகள் கிடைத்திருக்கின்றது என்றே கூறலாம். பாரத நாட்டு முழுமையான காட்சியை அவரது வாழ்க்கையில் நம்மால் பார்க்க முடிகிறது. தனது தந்தையாரான ஸ்ரீ குரு தேக் பஹாதுர் அவர்கள் உயிர்த்தியாகத்தின் பின்னால் குரு கோபிந்த் சிங் அவர்கள் மிகச் சிறிய வயதான 9 வயதிலேயே குரு என்ற நிலையை எய்தினார். நீதிக்காகப் போராடுவது என்ற தைரியம் குரு கோபிந்த் சிங் அவர்களுக்கு, சீக்கிய குருமார்களிடமிருந்து கிடைத்தது. அவர் அமைதி மற்றும் எளிமையான குணங்களின் கருவூலமாக விளங்கினார்; ஆனால் எப்போதெல்லாம் ஏழைகள், பலவீனமானவர்களின் குரல்கள் நசுக்கப்படும் முயற்சிகள் நடந்தனவோ, அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் குரு கோபிந்த் சிங் அவர்கள் ஏழைகள், பலவீனமானவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார், உறுதியோடு தோளோடு தோள் இணைந்து போராடினார், ஆகையால் தான் கூறுகிறார்கள் –
ஸவா லாக் ஸே ஏக் லடாஊம்,
சிடியோன் சோன் மைன் பாஜ் துடாஊம்,
தபே கோபிந்த்சிங் நாம கஹாஊம்.
“सवा लाख से एक लड़ाऊँ,
चिड़ियों सों मैं बाज तुड़ाऊँ,
तबे गोबिंदसिंह नाम कहाऊँ |
பலவீனவர்களோடு மோதி, தங்கள் சக்தியை வெளிப்படுத்த முடியாது என்று அவர் கூறுவார். மனித சமூகத்தின் துக்கங்களைத் துடைப்பது தான் மிகப்பெரிய சேவை என்று ஸ்ரீ குருகோபிந்த் சிங் அவர்கள் கருதினார். அவர் வீரம், சூரம், தியாகம், அறவழி நடத்தல் என்ற நற்குணங்கள் நிறைந்த மாமனிதராக விளங்கினார். அறம் – ஆயுதம் என்ற இரண்டு பற்றிய அற்புதமான ஞானம் அவரிடம் இருந்தது. அவர் ஒரு அருமையான வில்லாளி; இதுதவிர குருமுகீ, ப்ரஜ்பாஷா, சம்ஸ்க்ருதம், பாரசீகம், ஹிந்தி, உருது எனப் பல மொழிகளிலும் நிபுணராக இருந்தார். நான் மீண்டுமொரு முறை ஸ்ரீ குரு கோபிந்த் சிங் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நாட்டிலே அதிகம் விவாதப்பொருளாகாத பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன; இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி தான் FSSAI. அதாவது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் வாயிலாகச் செய்யப்பட்டு வருகிறது. காந்தியடிகளின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டு வருகின்றன. இந்தத் தொடரில் இந்த அமைப்பு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுக்கு ஊக்கமளிப்பதில் ஈடுபட்டு வருகிறது. Eat Right India, முறையான உணவை இந்தியா மேற்கொள்ளுதல் என்ற இயக்கம் வாயிலாக ஆரோக்கியமான-இந்தியா-யாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறும். சில வேளைகளில் அரசு அமைப்புகளின் அடையாளமாக நெறிப்படுத்தல் அமைகின்றது. ஆனால் FSSAI இதைத் தாண்டி, மக்கள் விழிப்புணர்வு, மக்களுக்குக் கல்வி என்ற முனைப்புகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும். பாரதம் எப்போது தூய்மை நிறைந்ததாக ஆகுமோ, ஆரோக்கியமானதாக ஆகுமோ, அப்போது தான் தன்னிறைவுடையதாக ஆகும். நல்ல உடல்நலத்திற்கு மிக முக்கியமான தேவை ஊட்டச்சத்து நிறைந்த உணவு. இந்த வேளையில், இப்படிப்பட்டதொரு முயற்சியை மேற்கொண்டமைக்கு FSSAI அமைப்பிற்கு நான் என் மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து நீங்களனைவரும் இந்த முனைப்போடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் இதில் இணைவதோடு, குழந்தைகளுக்கும் இவற்றைக் காட்டுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். உணவின் மகத்துவம் பற்றிய அறிவு சிறுவயதிலிருந்தே அவசியமானது.
எனதருமை நாட்டுமக்களே, 2018ஆம் ஆண்டின் நிறைவான நிகழ்ச்சி இது, 2019ஆம் ஆண்டிலே நாம் மீண்டும் இணைவோம், மீண்டும் மனதோடு மனம் உரையாடுவோம். தனிப்பட்ட வாழ்க்கையானாலும், தேசத்தின் வாழ்க்கையானாலும், சமூகத்தின் வாழ்க்கையானாலும், உத்வேகம் தான், வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றது. வாருங்கள், புதிய உத்வேகம், புதிய உற்சாகம், புதிய மனவுறுதி, புதிய வெற்றிகள், புதிய சிகரங்கள் – முன்னேகுவோம், வெற்றிநடை போடுவோம், நாமும் மாற்றம் காண்போம், நாட்டிலும் மாற்றத்தை மலரச் செய்வோம். பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம்தேதி, விஜயதசமித் திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும் ஒன்றாகஒரு யாத்திரையை மேற்கொண்டோம். மனதின் குரல் என்ற இந்த யாத்திரையின்50ஆவது பகுதி இன்றோடு நிறைவடைகிறது. அந்த வகையில் இன்று பொன் விழாபகுதி. இந்த முறை உங்களிடமிருந்து வந்திருக்கும் கடிதங்கள், தொலைபேசிஅழைப்புகள் பெரும்பாலானவை, இந்த 50ஆவது பகுதி தொடர்பாகவேவந்திருக்கின்றன. MyGovஇல், தில்லியைச் சேர்ந்த அன்சு குமார், அமர் குமார், பட்னாவைச் சேர்ந்த விகாஸ் யாதவ், நரேந்திரமோடி செயலியில் (NarendraModiApp) தில்லியைச் சேர்ந்த மோனிகா ஜெயின், மேற்கு வங்கத்தின் பர்த்வானைச் சேர்ந்தபிரசேன்ஜித் சர்கார், நாக்பூரைச் சேர்ந்த சங்கீதா சாஸ்த்ரி போன்றோர் எல்லாம்கிட்டத்தட்ட ஒரே வகையான வினாவையே எழுப்பி இருக்கிறார்கள். அவர்கள் என்னகூறுகிறார்கள் என்றால், நவீன தொழில்நுட்பம், சமூக வலைத்தளம், மொபைல்செயலிகளின் பயன்பாட்டில் காலத்திற்கேற்ப நிபுணத்துவம் பெற்றுள்ள பிரதமர், நாட்டு மக்களோடு தொடர்பு கொள்வதற்காக, வானொலியைத் தேர்ந்தெடுத்ததுஏன்? என்று கேட்டிருக்கிறார்கள். நீங்கள் எழுப்பி இருக்கும் வினா நியாயமானதுதான்; உங்களது ஆர்வம் இயற்கையானதுதான். இன்றைய காலகட்டத்தில், கிட்டத்தட்ட வானொலி மறக்கடிக்கப்பட்ட நிலையில், ஏன் மோடி வானொலிவாயிலாகத் தொடர்பு கொள்கிறார்? என்பதே உங்களது கேள்வி. நான் உங்களுக்குஒரு சம்பவத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன். இது நடந்தது 1998ஆம் ஆண்டு. நான்இமாசலப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மே மாதத்தில் நான் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தேன். இமாசலப் பிரதேசமலைப் பகுதிகளில் மாலை நேரத்திலேயே கடும் குளிர் தொடங்கிவிடும். நான்சாலையோர தேநீர்க் கடையோரமாக தேநீர் அருந்துவதற்காக நின்றேன். அது மிகச்சிறிய கடையாக இருந்தது, ஒரே ஒருவர் மட்டும் அவரே தேநீர் தயாரித்து விற்பனைசெய்து கொண்டிருந்தார். மேலாடை கூட அணியாத அவர், சாலையோரமாக ஒருசின்ன வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்தகண்ணாடிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த லட்டு ஒன்றை எடுத்து தேநீர்தயாராவதற்குள் முதலில் லட்டு சாப்பிடுங்கள் என்றார். நான் ஆச்சரியப்பட்டு, ஏன், என்ன விஷயம், வீட்டில் யாருக்காவது திருமணம் போன்ற வைபவம் நடந்ததா என்றுகேட்டேன். இல்லை இல்லை அண்ணே, உங்களுக்குத் தெரியாதா? ரொம்பசந்தோஷமான விஷயம் என்று கூறி அவர் உற்சாகத்தில் திளைத்தார். அவரிடம்ஏகப்பட்ட சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன, என்ன நடந்தது என்பதைசொல்லுங்கள் என்றேன் நான். அட, இன்னைக்கு இந்தியா வெடிகுண்டுபரிசோதனையை வெற்றிகரமா செஞ்சிருக்கு, என்றார். ஒண்ணும் புரியலையேஎன்றேன் நான். இதோ பாருங்கண்ணே, முதல்ல வானொலியை கேளுங்க என்றார். அப்போது வானொலியில் அது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்றுதான் அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டிருந்ததை, அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள்ஊடகங்களுக்கு அறிவிப்பு செய்த நேரம் அது. இந்த அறிவிப்பைத் தான் இவர்வானொலியில் கேட்டு விட்டு உற்சாகத் துள்ளலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த வனப்பகுதியில், இத்தனை ஆளரவமற்ற பகுதியில், பனிபடர்ந்த மலைகளுக்குஇடையே, ஒரு சாமான்ய மனிதன், தன்னந்தனியனாக தேநீரை விற்பனை செய்துகொண்டே, நாள் முழுவதும் வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்தவானொலி அளிக்கும் செய்தி அவன் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திஇருக்கிறது என்பதை எல்லாம் பார்த்த போது, ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப்பதிந்தது……. அதாவது வானொலி சாமான்ய மனிதனோடு இரண்டரகலந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
தகவல் பரிமாற்றத்தின் இலக்கும், அதன் ஆழமும் எனும்போது வானொலிக்கு ஈடுவானொலி தான் என்பது என் மனதில் நீக்கமற நிறைந்தது, அதன் வீச்சை என்னால்புரிந்து கொள்ள முடிந்தது. ஆகையால் நான் பிரதமரான வேளையில் மிகச்சக்திவாய்ந்த ஊடகமான வானொலியின் பால் என் கவனம் திரும்பியதில்ஆச்சரியமேதும் இல்லை. நான் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பிரதம சேவகன்என்ற வகையில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட வேளையில், தேசத்தின்ஒற்றுமை, நமது உன்னதமான வரலாறு, அதன் வீரம், இந்தியாவின்பன்முகத்தன்மை, நமது கலாச்சாரப் பன்முகத்தன்மை, நமது சமூகத்தின் நாடிநரம்புகளில் பரவியிருக்கும் நல்ல அம்சங்களான, மக்களின் முனைப்புகள், சிக்கனம், பேரார்வம் மற்றும் தியாகம் என பாரதத்தின் இந்தக் கதையை, ஒவ்வொருகுடிமகனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தேசத்தின் தொலைதூர கிராமங்கள்முதல் மாநகரங்கள் வரை, விவசாயிகள் தொடங்கி, இளைய தொழில் வல்லுநர்கள்வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற பேரார்வம்தான், மனதின் குரல்பயணத்திற்கு உத்வேகம் அளித்தது.
ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கடிதங்கள் படிக்கப்பட்டன, தொலைபேசிஅழைப்புகள் கேட்கப்பட்டன, செயலி மற்றும் MyGovஇல் விமர்சனங்கள்கவனிக்கப்பட்டன; இவையனைத்தையும் ஒரே இழையில் இணைத்து, சுவாரசியமான வகையிலே அளிக்கப்பட்டு வந்த இந்த 50 பகுதிகளின் பயணம், இந்த யாத்திரையை நாமனைவருமாக இணைந்து செய்திருக்கிறோம். தற்போதுஅகில இந்திய வானொலி, மனதின் குரல் மீதான ஆய்வையும் மேற்கொண்டார்கள். அதில் கிடைத்த சில பின்னூட்டங்கள் உள்ளபடியே மிக சுவாரசியமாகஇருக்கின்றன. யாரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அவர்களில் 70 சதவீதம் பேர் தொடர்ந்து மனதின் குரலைக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். சமூகத்தில் ஆக்கப்பூர்வமான உணர்வை ஏற்படுத்தி இருப்பதை, மனதின் குரலின்மிகப்பெரிய பங்களிப்பாக பெருவாரியானவர்கள் கருதுகிறார்கள். மனதின் குரல்வாயிலாக பெரிய அளவில் மக்கள் இயக்கங்களுக்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது. #indiapositive தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. இவையெல்லாம் நமது நாட்டுமக்களின் மனதில் இருக்கும் ஆக்கப்பூர்வமானஉணர்வை, நேர்மறை உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மனதின் குரல்காரணமாக தன்னார்வ உணர்வு அதிகரித்திருக்கிறது என்று மக்கள் தங்கள்அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டிருப்பது பெரும் மாற்றமாகும். மனதின் குரல் காரணமாக மக்கள் விரும்பும் ஊடகமாக வானொலி மாறி இருப்பதுஎனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. ஆனால் மக்கள் இந்த நிகழ்ச்சியோடுவானொலி வாயிலாக மட்டுமே இணையவில்லை. தொலைக்காட்சி, எஃப் எம்வானொலி, மொபைல், இணையம், பேஸ்புக் நேரடி ஒலிபரப்பு, பெரிஸ்கோப் தவிரNarendraModi செயலி வாயிலாகவும் மனதின் குரலோடு மக்கள் தங்கள் பங்களிப்பைஉறுதி செய்து வருகிறார்கள். மனதின் குரல் மீது நம்பிக்கை வைத்து, இதன்அங்கமாக மாறியதற்கு நான் மனதின் குரல் குடும்பத்தின் அனைத்துஉறுப்பினர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(தொலைபேசி அழைப்பு – 1)
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம். என் பெயர் ஷாலினி, நான்ஐதராபாதிலிருந்து பேசுகிறேன். மனதின் குரல் என்பது மக்களுக்கு மிகவும்பிடித்த நிகழ்ச்சி. தொடக்கத்தில், இதுவுமே கூட அரசியல் மேடையாகி விடும்என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த நிகழ்ச்சி மேலும்மேலும் தொடர்ந்த போது, இதில் அரசியலுக்குப் பதிலாக, சமூகப்பிரச்சினைகள், சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே அமைந்தது, அந்தவகையில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான சாமான்ய மக்கள்வானொலியோடு இணைந்த வண்ணம் இருந்தார்கள். மெல்ல மெல்லவிமர்சனங்களும் தேயத் தொடங்கின. என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் இந்த நிகழ்ச்சியை எப்படி அரசியலிலிருந்து விலக்கி வைப்பதில்வெற்றி கண்டீர்கள்? இதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்என்று உங்களுக்குத் தோன்றவில்லையா அல்லது உங்கள் அரசின்சாதனைகளைப் பட்டியலிட வேண்டும் என்று நீங்கள் எண்ணவில்லையா? நன்றி.
உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி. உங்களின் ஐயம் சரிதான். உள்ளபடியே ஒருதலைவருக்கு மைக் கிடைத்து விட்டால், கோடிக்கணக்கானவர்கள் கேட்கிறார்கள்என்றால், வேறு என்ன வேண்டும்? சில இளைஞர்களும் கூட மனதின் குரலில் வந்தஅனைத்து விஷயங்கள் பற்றியும் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்கள்அனைத்துப் பகுதிகள் தொடர்பான சொல் பகுப்பாய்வு மேற்கொண்டு, எந்தெந்தச்சொல் எத்தனை முறைகள் பயன்படுத்தப்பட்டன என்று ஆராய்ச்சி செய்தார்கள். எந்தச் சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆய்வுசெய்தார்கள். அவர்களின் ஆய்வின் முடிவில் இந்த நிகழ்ச்சி அரசியல் சார்புஇல்லாத ஒன்று என்பதும் ஒரு முடிவாக இருந்தது. மனதின் குரலைத் தொடங்கியபோது, இதில் அரசியல் என்பதோ, அரசுக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதாகவோஇருக்க கூடாது, இதில் எங்கேயும் மோடி தென்படக் கூடாது என்றுதீர்மானித்திருந்தேன். எனது இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையானஅனைத்து பலங்களும், உத்வேகமும் உங்களிடமிருந்து தான் எனக்குக் கிடைத்தன. ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும் வரும் கடிதங்கள், இணையவிமர்சனங்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றில் நேயர்களின்எதிர்பார்ப்புகள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. மோடி வருவார், போவார், ஆனால் இந்த தேசம் என்றைக்கும் நிலைத்து நீடித்திருக்கும், நமது கலாச்சாரம்காலத்தால் அழியாதிருக்கும். 130 கோடி நாட்டுமக்களின் சின்னச்சின்ன கதைகள்என்றும் மறையாதிருக்கும். புதிய கருத்தூக்கம், உற்சாகத்தின் புதிய சிகரங்களுக்குஇந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும். நானே கூட சற்றே திரும்பிப்பார்க்கையில், எனக்கும் கூட பெரிய ஆச்சரியம் ஏற்படுகிறது. யாரோ ஒருவர்தேசத்தின் ஏதோ மூலையிலிருந்து கடிதம் வாயிலாக, சிறிய கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி விற்பனையாளர்களிடம் எல்லாம் நாம் அதிகம்பேரம் பேசக் கூடாது என்று எழுதுகிறார். நான் கடிதத்தை வாசிக்கிறேன், இதேஉணர்வு வேறு ஒரு கடிதத்தில் வெளிப்பட்டிருந்தால், அதையும் இதோடுஇணைத்துக் கொள்கிறேன். இதோடு எனது அனுபவத்தையும் சேர்த்துஅளிக்கிறேன், உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எப்போது இது, குடும்பங்களுக்கும் வீடுகளுக்கும் சென்று சேர்கிறதோ தெரியாது, ஆனால், சமூகவலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் சுற்றிச் சுற்றி வருகிறது, ஒரு மாற்றத்தைநோக்கி முன்னேறிச் செல்கிறது. நீங்கள் அனுப்பிய தூய்மை பற்றிய விஷயங்களும்சம்பவங்களும், சாமான்ய மக்களின் ஏராளமான எடுத்துக்காட்டுக்களும், ஒவ்வொரு வீட்டிலும் தூய்மைக்கான ஒரு சிறிய தூதுவரை உருவாக்குகிறது, அந்தத்தூதர் வீட்டில் இருப்பவர்களுக்கு விழிப்பையும் ஏற்படுத்துகிறார், சில வேளைகளில்தொலைபேசி வாயிலாக பிரதமருக்கும் ஆணைகள் பிறப்பிக்கிறார். மகளோடுசெல்ஃபி என்ற இயக்கம், அரியானாவின் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி நாடுமுழுவதிலும், ஏன் அயல்நாடுகளிலும் கூடப் பரவியது, இத்தனை பரவலாக்கம்செய்யும், விழிப்பை ஏற்படுத்தும் வல்லமை எந்த அரசிடமும் இருக்க முடியாது. சமூகத்தின் ஒவ்வொரு துறையும், பிரபலங்களும் இணையும் போது, சமூகத்தில்சிந்தனை மாற்றத்தின் ஒரு புதிய பரிபாஷையில் கூறப்படும் போது, இதைஇன்றைய தலைமுறை புரிந்து கொள்கிறது, கண்ணுக்குத் தெரியாத விழிப்புணர்வுஏற்படுகிறது. சில வேளைகளில் மனதின் குரல் பரிகாசம் செய்யவும் படுகிறதுஆனால், என்றுமே எனது மனதில் 130 கோடி நாட்டு மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மனங்கள் அனைத்தும் என்னுடைய மனமே. மனதின் குரல் என்பது அரசுசார்ந்த விஷயமல்ல. இது சமூகம் சார்ந்த விஷயம். மனதின் குரல், எதிர்பார்ப்புகள்நிறைந்த இந்தியா, பெரு இலட்சியங்கள் நிறைந்த பாரதம் பற்றியது. பாரதத்தின்அந்தரான்மா அரசியல் அல்ல. பாரதத்தின் அந்தரான்மா அரசின் சக்தி பற்றியதும்அல்ல. பாரதத்தின் அந்தரான்மா சமூகநீதி பற்றியது, சமூக சக்தி பற்றியது. சமூகவாழ்க்கையின் ஆயிரக்கணக்கான கோணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று தான்அரசியல். அரசியலே அனைத்துமாகி விட்டால், இது ஆரோக்கியமானசமுதாயத்திற்கு ஒரு நல்ல அமைப்புமுறை அல்ல. சில வேளைகளில் அரசியல்சம்பவங்களும் அரசியல்வாதிகளும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்என்றால், சமூகத்தின் வேறுபல திறன்களும், வேறுபல முயற்சிகளும் நசுங்கிப்போகின்றன. பாரதம் போன்ற தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு சாமான்யமக்களின் திறன்கள் திறமைகள் முயற்சிகள் ஆகியவற்றிற்கு உகந்தஇடமளிக்கப்பட வேண்டும், இதுவே நம்மனைவரின் சமூக பொறுப்பாக வேண்டும். மனதின் குரல் என்பது இந்த திசையை நோக்கிய எளிமையான, பணிவான முயற்சிதான்.
(தொலைபேசி அழைப்பு – 2)
வணக்கம் பிரதமர் அவர்களே! மும்பையிலிருந்து நான் புரோதிமா முகர்ஜிபேசுகிறேன். ஐயா, மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமானஅகநோக்கு, தகவல், நேர்மறையான நிகழ்வுகள், சாமான்ய மனிதனின் நல்லசெயல்பாடுகள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பாகவும்நீங்கள் எந்த அளவுக்கு தயாரிப்புகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை அறியவிரும்புகிறேன்.
உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றிகள். ஒரு வகையில் உங்கள்கேள்வி இணக்கம் காரணமாக கேட்கப்பட்டிருக்கிறது. பிரதமரிடம் அல்ல, ஏதோஒரு இணக்கமான நண்பரிடம் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என்ற உணர்வைத்தான் மனதின் குரலின் 50 பகுதிகளின் மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். இது தானே மக்களாட்சி. நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக நான் பதில் கூறவேண்டுமென்றால், எந்த தயாரிப்பு முஸ்தீபுகளிலும் நான் ஈடுபடுவதில்லை என்பதுதான். உண்மையில், மனதின் குரல் என்பது, எனக்கு மிக எளிதான வேலை. ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும், மக்களின் கடிதங்கள் வருகின்றன. MyGovஇலும் NarendraModi Mobile செயலியிலும் மக்கள் தங்கள் கருத்துகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், 1800117800 என்ற கட்டணமில்லாஎண்ணும் இருக்கிறது, இதில் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் செய்திகளைத்தங்கள் குரலிலேயே பதிவும் செய்கிறார்கள். மனதின் குரலுக்கு முன்பாக அதிகஅளவில் கடிதங்களையும், கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்வதே என்முயற்சியாக இருக்கிறது. மனதின் குரல் பகுதி நெருங்கி வரவர, பயணங்களுக்குஇடையே, நீங்கள் அனுப்பிய கருத்துகளையும் உள்ளீடுகளையும் மிக உன்னிப்பாகநான் படிக்கிறேன்.
ஒவ்வொரு கணமும் எனது நாட்டு மக்கள், என் மனதிலே வாசம் செய்கிறார்கள். ஆகையால், எப்போது எந்தக் கடிதத்தைப் படித்தாலும், கடிதம் எழுதியவரின்சூழ்நிலை, அவரது மனோபாவம் ஆகியன எனது கருத்தில் பசுமரத்தாணி போலப்பதிந்து விடுகின்றன. அந்தக் கடிதம் என்னைப் பொறுத்த மட்டில் வெறும் காகிதத்துண்டு அல்ல; உண்மையில் சுமார் 40-45 ஆண்டுகளாகவே நான் ஒரு துறவியின்வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன், தேசத்தின் பெரும்பாலானமாவட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன், தேசத்தின் தொலைதூர மாவட்டங்களில்கணிசமான காலத்தைக் கழித்துமிருக்கிறேன். மேலும், இதன் காரணமாக ஒருகடிதம் வரும் போது, அந்த இடம், சூழல் ஆகியவற்றோடு இயல்பான வகையிலேஎன்னால் என்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. இதன் பிறகு நான் சிலஆதாரபூர்வமான விஷயங்களான கிராமம், நபரின் பெயர் போன்ற விஷயங்களைக்குறித்து வைத்துக் கொள்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனதின் குரலில், குரல் தான் என்னுடையது, ஆனால் எடுத்துக்காட்டுகள், உணர்ச்சிகள், உணர்வு ஆகியன எல்லாம் என்னுடைய நாட்டுமக்களுடையவைதாம். நான் மனதின் குரலில் பங்களிப்பு நல்கிய ஒவ்வொரு நபருக்கும் என்நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். இப்படிப்பட்ட லட்சக்கணக்கானோரின்பெயர்களை இன்றுவரை என்னால் மனதின் குரலில் கூற முடியவில்லை ஆனால், இதனாலெல்லாம் ஏமாற்றமடையாமல், தங்கள் கடிதங்களை, தங்கள் கருத்துகளைஅனுப்பி வருகிறார்கள். உங்களின் கருத்துகள், உங்களின் உணர்வுகள் என்னுடையவாழ்விலே மிகுந்த மகத்துவம் நிறைந்தவையாக இருக்கின்றன. உங்கள்அனைவரின் கருத்துகள் முன்பை விட அதிகமாக என்னை வந்து சேரும், மனதின்குரலை மேலும் சுவாரசியமாக, மேலும் தாக்கமேற்படுத்துவதாக, மேலும்பயனுள்ளதாக ஆக்க உங்கள் கருத்துகளின் பங்களிப்பு இருக்கும் என்ற முழுநம்பிக்கை எனக்கு உள்ளது. எந்தக் கடிதங்கள் எல்லாம் மனதின் குரலில் இடம்பெறவில்லையோ, அந்தக் கடிதங்கள், கருத்துகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகவனிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் ஆல் இண்டியாரேடியோ, எஃப் எம் வானொலி, தூர்தர்ஷன், மற்ற தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் உள்ள எனது நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் முயற்சிகளால் மனதின் குரல் இன்னும்அதிகமான மக்களிடம் சென்று சேர்கிறது. ஆல் இண்டியா ரேடியோவின் குழு, மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியையும் பல மொழிகளிலும் மொழியாக்கம்செய்து ஒலிபரப்புகிறார்கள். சிலர் மிகச் சிறப்பாக மாநில மொழிகளில், மோடிக்குஇணையாக இருக்கும் குரலில், அதே தொனியில் மனதின் குரலை அளிக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் 30 நிமிடங்களுக்கு நரேந்திர மோடியாகவே உருமாறிவிடுகிறார்கள். நான் அவர்கள் அனைவரின் திறன்கள், திறமைகளுக்குப்பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்தநிகழ்ச்சியை உங்கள் மாநில மொழிகளிலும் நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும்என்பது தான். நான் ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்; அவர்கள் தங்கள் சேனல்களில்மனதின் குரலைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்திருக்கிறார்கள். எந்த ஒருஅரசியல்வாதிக்கும் ஊடகங்களிடம் எப்போதும் மகிழ்ச்சி இருக்காது, மிககுறைவான கவரேஜ் தான் கிடைக்கிறது, அதுவும் எதிர்மறையாக இருக்கிறதுஎன்றெல்லாம் கருதுவார்கள். ஆனால் மனதின் குரலில் எழுப்பப்பட்ட பலவிஷயங்களை ஊடகத்தார் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். தூய்மை, சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத இந்தியா, மகளுடன் ஒரு செல்ஃபிபோன்ற பல விஷயங்களை ஊடகத்தார் நூதனமான வழிவகைகளில் கையாண்டு, ஒரு இயக்கம் என்ற வகையில் அதை மாற்றி முன்னெடுத்துச் செல்லும் பணியைச்செய்திருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் இதை அதிகம் கவனிக்கப்பட்டவானொலி நிகழ்ச்சியாக ஆக்கினார்கள். நான் ஊடகங்களுக்கு என்இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள்ஒத்துழைப்பு இல்லாதிருந்தால், மனதின் குரலின் இந்தப் பயணம்நிறைவடையாமல் இருந்திருக்கும்.
(தொலைபேசி அழைப்பு – 3)
வணக்கம் மோடி அவர்களே! நான் உத்தராகண்டின் முசோரியிலிருந்து நிதிபகுகுணா பேசுகிறேன். நான் இரண்டு இளைஞர்களின் தாய். அவர்கள் என்னசெய்ய வேண்டும் என்று கூறப்படுவதை இந்த வயதுடைய பிள்ளைகள்விரும்புவதில்லை என்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அதுஆசிரியர்களானாலும், பெற்றோர்களானாலும், யாருடைய யோசனைக்கும்செவி மடுப்பதில்லை. ஆனால் நீங்கள் மனதின் குரலில் ஒரு விஷயத்தைபிள்ளைகளிடம் கூறும் போது, அதை அவர்கள் இதயபூர்வமாகப் புரிந்துகொள்கிறார்கள், அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். உங்களதுஇந்த ரகசியத்தைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா? அதாவது எந்தவகையில் நீங்கள் பேசுகிறீர்கள் அல்லது விஷயத்தை எழுப்புகிறீர்கள், எப்படிஅவர்கள் நல்ல முறையில் இதைப் புரிந்து கொண்டு அமல் செய்கிறார்கள்என்பதைக் கூறுங்கள். நன்றி.
நிதி அவர்களே, உங்களது தொலைபேசி அழைப்புக்கு மிக்க நன்றி. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. நான் செய்து வருவது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் நடந்து கொண்டுதானிருக்கும் என்று கருதுகிறேன். எளிமையான மொழியில் சொல்லவேண்டுமென்றால், நான் என்னை அந்த இளைஞருக்கு உள்ளே இருந்து பார்க்கமுயற்சி செய்கிறேன். என்னையே நான் அவரது சூழ்நிலையில் பொருத்திப் பார்த்து, அவரது எண்ணங்களோடு இணைவேற்படுத்தி, ஒரு அலைவரிசை இணைப்பைஏற்படுத்த முயல்கிறேன். நம்முடைய வாழ்க்கையிலே இருக்கும் பழஞ்சுமைகள்குறுக்கீடு செய்யாத வரையில், யாரையும் புரிந்து கொள்வது எளிதாகி விடுகிறது. சில வேளைகளில் நமது சார்புநிலைகளே பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ஏற்பு–மறுப்பு, எதிர்வினைகள் ஏதும் இல்லாமல் எந்த ஒருவிஷயத்தையும் புரிந்து கொள்வதே எனக்கு முதன்மையாக இருக்கிறது. இப்படிஅணுகும் போது எதிரில் இருப்பவரும் நம்மை சம்மதிக்க வைக்க பலவகையானவாதங்கள் அல்லது அழுத்தம் உண்டாக்குவதற்கு மாறாக, நமது எண்ண ஓட்டத்தில்இணைய முயல்வார். ஆகையால் தகவல்பரிமாற்ற இடைவெளி என்பது அற்றுப்போகும், ஒரு வகையில் ஒரே எண்ணத்துடன் இருவரும் சகபயணிகளாகிவிடுவோம். எப்போது, எப்படி ஒருவர் தனது கருத்துகளை விடுத்து மற்றவரதுகருத்துகளை ஏற்றுக் கொண்டார் என்பது இருவருக்குமே தெரியாமல் போய் விடும். இன்றைய இளைய சமுதாயத்திடம் இருக்கும் சிறப்பே, தங்களுக்கு நம்பிக்கைஏற்படாத வரை ஒன்றை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் ஒன்றின் மீதுநம்பிக்கை கொண்டு விட்டார்களேயானால், அதற்காக எதையும் துறந்து அதைஎட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டு விடுவார்கள் என்பது தான். பல வேளைகளில், குடும்பங்களில் பெரியவர்களுக்கும் வளரிளம் பருவத்தில் இருப்பவர்களுக்கும்இடையே தகவல்பரிமாற்ற இடைவெளி இருப்பது பற்றிப் பேசுகிறோம். உண்மையில் பெரும்பாலான வளரிளம் பருவத்தினரிடம் உரையாடுவது என்பதுகுறைந்து போய் இருக்கிறது. பெரும்பாலான வேளைகளில் படிப்பு பற்றியவிஷயங்கள் அல்லது பழக்கங்கள் அல்லது வாழ்க்கைமுறை தொடர்பாக, இப்படிச்செய், அப்படிச் செய்யாதே என்பதையெல்லாம் தாண்டி, திறந்த மனத்தோடு பேசும்பழக்கம், மெல்ல மெல்ல குடும்பங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது, இதுகவலைதரும் விஷயம்.
எதிர்பார்ப்புக்கு பதிலாக ஏற்பு, அகற்றுதலுக்கு பதிலாக ஆலோசனை–இப்படிச்செய்யும் போது தான் உரையாடல் வலுப்பெறுகிறது. பிரத்யேகமான நிகழ்ச்சிகள்அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக இளைஞர்களோடு தொடர்ந்துஉரையாட நான் எப்போதும் முயற்சி செய்து வருகிறேன். அவர்கள் என்னசெய்கிறார்கள் அல்லது என்ன நினைக்கிறார்கள் என்பதிலிருந்து நான் எப்போதும்கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். அவர்களிடம் எப்போதும்கருத்துகளின் களஞ்சியம் கொட்டிக் கிடக்கும். அவர்கள் பெரும்பாலும் ஆற்றல்நிரம்பியவர்களாக, புதுமை எண்ணம் படைத்தவர்களாக, ஒருமுகசிந்தனையுடையவர்களாக இருப்பார்கள். மனதின் குரல் வாயிலாக நான்இளைஞர்களின் முயற்சிகளுக்கு, அதிக அளவிலே முக்கியத்துவம் கொடுக்கமுயன்று வருகிறேன். அதிகப்படியான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றகுற்றச்சாட்டு பல வேளைகளில் முன்வைக்கப்படுவதுண்டு. இளைஞர்கள் வினாஎழுப்புவது என்பது நல்லது தானே!! ஏன் இது நல்ல விஷயம் என்றால், அவர்கள்அனைத்து விஷயங்களையும் வேரடி மண்ணோடு ஆராய்ச்சி செய்யவிரும்புகிறார்கள் என்பதே பொருள். இளைஞர்களிடம் பொறுமை என்பது இல்லைஎன்று சிலர் கூறுவார்கள்; ஆனால் இளைஞர்களிடத்திலே வீணடிக்க நேரமில்லைஎன்றே நான் கருதுகிறேன். இந்த விஷயம் தான் இன்றைய இளையதலைமுறையினரை அதிக புதுமைகளைப் படைக்க உதவி செய்கிறது, ஏனென்றால், அவர்கள் காரியங்களை விரைந்து முடிக்க நினைக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் அதிக திறமைசாலிகள், மிகப்பெரிய விஷயங்கள் பற்றிச்சிந்திக்கிறார்கள் என்று நமக்குப் படுகிறது. நல்லது, பெரிய கனவுகளைக்காணட்டும், பெரிய வெற்றிகளை அவர்கள் ஈட்டட்டும். இது தானே புதிய இந்தியா!! இளைய தலைமுறையினர், ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யவிரும்புகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நான் கேட்கிறேன், இதிலென்ன தவறுஇருக்க முடியும்? ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதில் வித்தகர்கள், ஆகையால் செய்கிறார்கள். நாம் நம்மைச் சுற்றி நம் பார்வையைச் செலுத்தினால், அது சமூக தொழில்முனைவாகட்டும், ஸ்டார்ட் அப்புகளாகட்டும், விளையாட்டுக்களாகட்டும், வேறு துறைகளாகட்டும் – சமுதாயத்தில் மிகப்பெரியமாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் இளைஞர்களே. இந்த இளைஞர்கள், வினாக்களைத்தொடுக்கிறார்கள், கனவுகளைக் காணும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். நாம்இளைஞர்களின் எண்ணங்களை பூமியில் நிலைக்கச் செய்தால், அவற்றுக்கு வடிவம்கொடுக்க சுதந்திரமான சூழலமைத்துக் கொடுத்தால், தேசத்தில் ஆக்கப்பூர்வமானமாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். அவர்கள் அப்படிச் செய்தும் வருகிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, குருகிராமிலிருந்து வினிதா அவர்கள்MyGovஇலே, மனதின் குரலில் நீங்கள், நாளை அதாவது, நவம்பர் மாதம் 26ஆம் தேதிவரவிருக்கும் அரசியலமைப்புச் சட்ட தினம் பற்றிப் பேச வேண்டும் என்றுவிரும்புகிறேன். இந்த தினம் ஏன் சிறப்பானது என்றால், நமது அரசியலமைப்புச்சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்ட 70ஆம் ஆண்டில் நாம் கால் பதிக்க இருக்கிறோம்என்று மேலும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
வினிதா அவர்களே, உங்கள் ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றிகள். ஆம், நாளைஅரசியலமைப்புச் சட்ட தினம். நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தமகத்தான மனிதர்களை நாம் நினைத்துப் பார்க்கும் தினம் இது. 1949ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்புச் சட்ட வரைவை ஏற்படுத்திய இந்தசரித்திரபூர்வமான பணியை நிறைவேற்ற அரசியலமைப்புச் சபைக்கு, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் ஆயின. கற்பனை செய்து பாருங்கள், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, இந்த மாமனிதர்கள், இத்தனை பரந்த, ஆழமானஅரசியலமைப்புச் சட்டத்தை நமக்களித்திருக்கிறார்கள். அவர்கள்அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மேற்கொண்ட அதிவிரைவு, இன்றும் கூட, நேர நிர்வாகம் மற்றும் உற்பத்தித் திறனுக்கான ஒரு எடுத்துக்காட்டாகத்திகழ்கிறது. நாமும் நம்முடைய பொறுப்புகளை சாதனை படைக்கும் வகையில்குறித்த நேரத்தில் நிறைவு செய்ய கருத்தூக்கம் அளிக்கிறது. அரசியலமைப்புச்சபை இந்த மாமனிதர்களின் சங்கமமாக இருந்தது. அதிலிருந்த ஒவ்வொருவரும், பாரதத்தின் மக்கள் சக்திபடைத்தவர்களாக, பரம ஏழையும் திறனுடையவராக ஆகவேண்டும் என்று கருதி, அப்படிப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களதுதேசத்திற்கு அளிக்கும் பேரார்வத்தோடு இருந்தார்கள்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், உரிமைகள்மற்றும் கடமைகள் பற்றி விரிவாக இதில் விவரிக்கப்பட்டிருப்பது தான். குடிமக்களின் வாழ்க்கையில் இவை இரண்டும் இணக்கமாக இருக்கும் போது, தேசம் முன்னேறிச் செல்லும். நாம் மற்றவர்களின் உரிமைகளுக்கு மதிப்புஅளித்தோம் என்றால், நமது உரிமைகள் தாமாகவே காக்கப்படும்; இதைப்போலவே நாம் அரசியலமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைநிறைவேற்றினோம் என்றால், நமது உரிமைகளும் தாமாகவே பாதுகாக்கப்படும். 2010ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் இன்னும் எனக்கு பசுமையாகநினைவிலிருக்கிறது. அப்போது பாரதத்தின் 60ஆவது குடியரசு தினம், நான்அப்போது குஜராத் மாநிலத்தில் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை யானைமீதேற்றி ஊர்வலமாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். இளைஞர்களிடையே அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வைஅதிகரிக்கவும், அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறுபரிமாணங்களோடு இணைக்கவும் ஒரு நினைவில் கொள்ளத்தக்க நிகழ்வு அது. 2020ஆம் ஆண்டில், ஒரு குடியரசு நாடு என்ற முறையில் நாம் நமது 70 ஆண்டுப்பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறோம், 2022ஆம் ஆண்டிலே நாம் சுதந்திரம்அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது.
வாருங்கள், நாமனைவரும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைமுன்னெடுத்துச் செல்வோம், நமது தேசத்தில் Peace, Progress, Prosperity – அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றை உறுதி செய்வோம்.
என் பிரியமான நாட்டுமக்களே, அரசியலமைப்புச் சபை பற்றிப் பேசும்வேளையில், அரசியலமைப்பு சபையின் மையமாக விளங்கிய அந்த மாமனிதரின்பங்களிப்பை என்றுமே மறக்க கூடாது. அந்த மாமனிதர் தான் வணக்கத்திற்குரியடாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர். டிசம்பர் மாதம் 6ஆம் தேதி தான் அவரது மஹாபரிநிர்வாண நாள் அதாவது அவர் அமரர் ஆன நாள். நாட்டுமக்கள் அனைவரின்சார்பிலும் பாபா சாஹேபுக்கு என் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்; கோடிக்கணக்கான இந்தியர்கள் கண்ணியத்தோடு வாழும் உரிமையை அவர் தான்பெற்றுத் தந்தார். மக்களாட்சி என்பது பாபா சாஹேபின் இயல்போடு கலந்த ஒன்று; பாரதத்தின் ஜனநாயக விழுமியம் என்பது வெளியிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டது அல்ல என்று அவர் கூறுவார். ஜனநாயகம் என்ன, நாடாளுமன்றமுறை என்ன என்பதெல்லாம் பாரத நாட்டுக்குப் புதிய விஷயங்களல்ல. அரசியலமைப்புச் சபையில் அவர் உணர்ச்சிகரமான ஒரு வேண்டுகோள் விடுத்தார்– இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தைப் பேணிக் காக்க, நாம் நமது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபட வேண்டும் என்றார். இந்தியர்களான நாம் பல்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைத்து விஷயங்களையும் தாண்டி, நாட்டுநலனையே முன்னிறுத்திச் செயல்படவேண்டும் என்றார். India First – இந்தியாவுக்கே முதன்மை என்பது தான் டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கரின் மூலமந்திரமாக இருந்தது. மீண்டுமொரு முறைவணக்கத்திற்குரிய பாபா சாஹேபுக்கு என் பணிவான அஞ்சலிகள்.
என் இனிய நாட்டுமக்களே, 2 நாட்கள் முன்பாக நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்றுகுருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அடுத்த ஆண்டுஅதாவது 2019இல், நாம் அவரது 550ஆவது பிறந்த நாள் விழாவைகொண்டாடவிருக்கிறோம். குருநானக் தேவ் அவர்கள் எப்போதும் மனித சமுதாயநலனைப் பற்றியே சிந்தித்தார். அவர் சமூகத்தில் எப்போதும் வாய்மை, பணியாற்றுதல், சேவை, கருணை, சகோதரத்துவம் என்ற பாதையையே துலக்கிக்காட்டினார். தேசம் அடுத்த ஆண்டு குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடவிருக்கிறது. இதன் ஒளி, நம் நாட்டில்மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் பிரகாசிக்கும். அனைத்து மாநிலஅரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த நன்னாளை மிகச் சிறப்பாககொண்டாடக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதைப் போலவே, குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் உள்ள அனைத்துநாடுகளிலும் கொண்டாடப்படும். மேலும் குருநானக் தேவ் அவர்களோடுதொடர்புடைய புனிதமான தலங்கள் அடங்கிய பாதையில் ஒரு ரயிலும்இயக்கப்படும். தற்போது நான் இதோடு தொடர்புடைய ஒரு கூட்டத்தில்பங்கெடுத்துக் கொண்ட போது, எனக்கு லக்பத் சாஹிப் குருத்வாரா பற்றியநினைவெழுந்தது. குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், அந்த குருத்வாராவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த வட்டாரமக்களோடு இணைந்து, மாநில அரசு அதை புனரமைத்தது என்பது இன்றும் கூடஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இந்திய அரசு, ஒரு மகத்துவம் வாய்ந்த தீர்மானத்தைச் செய்திருக்கிறது; அதாவதுகர்தார்புர் வழித்தடம் அமைத்தல், இதனால் நமது நாட்டின் யாத்ரீகர்கள் எளிதாகபாகிஸ்தானின் கர்தார்புரில் இருக்கும் குருநானக் தேவ் அவர்களின் புனிதமானதலத்தில் வழிபட உதவிகரமாக இருக்கும்.
என் நெஞ்சுக்கினிய நாட்டுமக்களே, மனதின் குரலின் 50ஆவது பகுதிக்குப் பிறகு, நாம் மீண்டும் அடுத்த மனதின் குரலில் சந்திப்போம், மனதின் குரலின்பின்னணியில் இருக்கும் உணர்வுகளை முதன்முறையாக உங்கள் முன்புவெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு இன்று கிட்டியிருக்கிறது, இதற்குக் காரணம்நீங்கள் எழுப்பிய வினாக்கள் தாம், ஆனால் இந்தப் பயணம் தொடர்ந்துநடைபெறும். உங்களுடன் நான் எந்த அளவுக்கு அதிகமாக இணைகிறேனோ, அந்தஅளவுக்கு நமது இந்தப் பயணம் மேலும் ஆழமாக அமையும், அனைவருக்கும்மகிழ்வைக் கூட்டுவதாக அமையும். மனதின் குரலால் எனக்கு என்ன கிடைத்ததுஎன்ற கேள்வி சிலரின் மனங்களில் எழலாம். மனதின் குரல் வாயிலாக எனக்குக்கிடைத்த பின்னூட்டங்கள், இவற்றில் ஒரு விஷயம் என் இதயத்தைத் தொடுகிறதுஎன்பதை நான் இன்று கூற விரும்புகிறேன். குடும்பத்தில் இருக்கும் அனைவரும்ஒன்றாக அமர்ந்து மனதின் குரலைக் கேட்கும் போது, நமது குடும்பத் தலைவர்நம்மிடையே அமர்ந்து, நம்முடைய விஷயங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் என்றே பெரும்பாலானோர் தெரிவித்திருக்கிறார்கள். இந்தவிஷயத்தை நான் பரவலான வகையிலே கேள்விப்பட்ட போது, நான்உங்களுடையவன், உங்களைச் சேர்ந்தவன், உங்களிடையே இருப்பவன், நீங்கள்தான் என்னை வளர்த்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது, நெஞ்சம்பனிக்கிறது. ஒருவகையில் நானும் உங்கள் குடும்ப உறுப்பினராகவே மனதின்குரல் வாயிலாக மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்பேன், உங்களோடுஇணைந்த வண்ணம் இருப்பேன். உங்கள் சுகதுக்கங்கள், என்னுடையசுகதுக்கங்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். உங்களது ஆசை அபிலாஷைகள், என்னுடைய ஆசை அபிலாஷைகள்.
வாருங்கள், இந்தப் பயணத்தை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்வோம். மிக்கநன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். வருகிற அக்டோபர் 31 அன்று நமது பேரன்பிற்குரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் ஆகும். இந்த ஆண்டும் நாட்டிலுள்ள இளைஞர்கள், ‘ஒற்றுமை ஓட்டம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர். தற்போது பருவநிலை இதமாக உள்ளது. எனவே ஒற்றுமை ஓட்டத்தில் இயன்ற அளவுக்கு பெருமளவிலானோர் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைவதற்கு சுமார் ஆறு மாதங்கள் முன்பாக, 1947 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று உலக பிரசித்திப் பெற்ற சர்வதேச பத்திரிகையான ‘டைம்’, அதன் முதல் பக்கத்தில் சர்தார் பட்டேலின் புகைப்படத்துடன் வெளியானது. அந்த நாளிதழின் தலைப்புச் செய்தியில், இந்தியாவின் வரைபடத்தையும் வெளியிட்டிருந்தனர்; ஆனால், அந்த வரைபடம் தற்போது உள்ளது போன்றதாக இல்லை. அந்த வரைபடத்தில் இந்தியா துண்டுதுண்டாக காட்சியளித்தது. 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் அடங்கியதாக அது இருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது அக்கறையின்றி காணப்பட்டனர்; அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது, இந்தியா பல்வேறு துண்டுகளாக உடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். பிரிவினை, வன்முறை, உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் அதிகார அரசியல் போன்ற பல்வேறு அபாயங்களை இந்தியா எதிர்நோக்கியுள்ளதாக டைம் பத்திரிகை கருத்து தெரிவித்திருந்தது.
அத்துடன், நாட்டை ஒருங்கிணைக்கவும், மக்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தவும் சர்தார் வல்லபாய் பட்டேலால்தான் முடியும் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் இரும்பு மனிதரை பற்றிய வாழ்க்கை வரலாற்றின் மறுபக்கத்தையும் அந்த கட்டுரை எடுத்துரைப்பதாக இருந்தது. 1920 ஆம் ஆண்டு வாக்கில் அகமதாபாதில் வெள்ளம் ஏற்பட்ட போது, நிவாரண நடவடிக்கைகளை அவர் கையாண்ட விதத்தையும், பர்தோலி சத்தியாகிரகத்தை அவர் நடத்திச் சென்ற விதமும் அந்த கட்டுரையில் இடம்பெற்றது. அந்த அளவிற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை அவர் மீது முழு நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவரது நேர்மையும், உறுதிப்பாடும் இருந்தது. ஒற்றை நூலைக் கொண்டு இயங்கும் அச்சின் மூலம் போர்வையை நெசவு செய்வது போல, நாட்டை ஒருங்கிணைக்க சர்தார் பட்டேல் ஒவ்வொரு பிரச்சினையாக கையில் எடுத்து தீர்வுகண்டார். நாட்டில் இருந்த அனைத்து சமஸ்தானங்களும் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைவதை அவர் உறுதிசெய்தார். ஜூனாகத், ஹைதராபாத், திருவாங்கூர் சமஸ்தானங்களாக இருந்தாலும் சரி, ராஜஸ்தானில் இருந்த சமஸ்தானங்களாக இருந்தாலும் சரி, தற்போது நாம் காணும் ஒருங்கிணைந்த இந்தியாவை காண முடிகிறது என்றால், அதற்கு சர்தார் பட்டேலின் மதிநுட்பமும், தொலைநோக்குப் பார்வையுமே முக்கிய காரணமாகும். இந்திய தாயாக நாம் கருதும் நம் தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள ஒற்றுமை உணர்வு, தானாகவே சர்தார் வல்லபாய் பட்டேலை நினைவுகூறச்செய்யும். இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று மேலும் ஒரு சிறப்பு சேரவுள்ளது. அன்றைய தினம் நாட்டின் ஒற்றுமை சிலையை நாம் அர்ப்பணிப்பதே சர்தார் பட்டேலுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும். குஜராத்தின் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போன்று இரண்டு மடங்கு உயரம் கொண்டதாகும். இதுவே உலகின் மிக உயர்ந்த விண்ணை முட்டும் சிலையாகத் திகழும். உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் அமைக்கப்பட்டிருப்பதை காணும்போது, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைவார். நமது மண்ணின் உண்மையான மைந்தரான சர்தார் பட்டேல், நமது வான்வெளியையும் அலங்கரிப்பார். இந்திய தாயை தலைநிமிரச் செய்துள்ள இந்த சிலை ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் அடையச் செய்யும் என நான் நம்புகிறேன். ஏனெனில், ஒற்றுமை சிலையை காண வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தோன்றுவது இயற்கையானது. நாடு முழுவதும் உள்ள மக்கள் காண விரும்பும் தலமாக இந்த சிலை அமையும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
எனதருமை சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் நேற்று “காலாட்படை தினத்தை” கொண்டாடினோம். இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன். நமது வீரர்களின் குடும்பத்தினரையும் நான் வணங்குகிறேன். இந்நாளை எதற்காக காலாட்படை தினமாக நாம் கொண்டாடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்திய படைகள் இந்நாளில்தான் காஷ்மீரில் காலடி எடுத்துவைத்து, அந்தப் பள்ளத்தாக்கை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்காமல் காப்பாற்றினர். இந்த சம்பவமும் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் நேரடி தொடர்புடையதாகும். நமது மதிப்பிற்குரிய ராணுவ அதிகாரி ஷாம் மானெக்ஷாவின் பழைய பேட்டி ஒன்றை நான் படித்தேன். அதில், ஃபீல்டு மார்ஷல் ஷாம் மானெக்ஷா, அவர் கர்னலாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்துள்ளார். அந்த காலத்தில்தான் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது. அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில், காஷ்மீருக்கு படைகளை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் எவ்வாறு கடிந்து கொண்டார் என்பதை ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா குறிப்பிட்டுள்ளார். படைகளை அனுப்புவதில் எவ்வித தாமதமும் ஏற்படக்கூடாது என்றும் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் சர்தார் பட்டேல் தமக்கு தெளிவான அறிவுரை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, நமது படைகள் காஷ்மீருக்கு பறந்து சென்றன என்றால், நமது ராணுவம் எவ்வாறு வெற்றிகரமாக பணியாற்றியது என்பதை நாம் அறிய முடிகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் அக்டோபர் 31 அன்றுதான், வருகிறது. இந்திரா காந்திக்கு நமது மரியாதைக்குரிய வணக்கத்தை செலுத்துவோம்.
எனதருமை நாட்டு மக்களே, விளையாட்டை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்..? விளையாட்டு உலகில், மனநிலை, வலிமை, திறன், உடல் வலிமை ஆகிய ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவையாகும். விளையாட்டு வீரர்களின் தைரியத்தை பரிசோதிப்பதற்கு இவை அவசியம். இந்த நான்கு அம்சங்களும்தான் நாட்டிற்கும் அடித்தளமாக அமைந்துள்ளன. நம் நாட்டு இளைஞர்களிடம் இந்த தகுதிகள் இருந்தால், நம் நாடு பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் வளர்ச்சி அடைவதோடு இல்லாமல், விளையாட்டுத் துறையிலும் பெருமையை தேடித்தரும். அண்மையில் நடைபெற்ற இரண்டு சந்திப்புகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானவையாக அமைந்தன. முதலாவது சந்திப்பு, ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட நமது மாற்றுத் திறனாளி தடகள வீரர்களுடனானதாகும். இவர்கள் 72 பதக்கங்களை வென்று இதற்கு முன் கண்டிராத புதிய சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்தவர்களாவர். திறமைமிக்க இந்த தடகள வீரர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்திக்கும் நல்வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் அவர்களை பாராட்டினேன், தடைக்கற்களை தகர்த்தெறிந்து வெற்றியை பெறுவதில் அவர்கள் காட்டிய மனஉறுதி நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதேபோன்று அர்ஜென்டினாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான இளையோர் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. 2018 இளையோர் கோடைகால ஒலிம்பிக்கில், நமது இளைஞர்களின் செயல்பாடு இதுவரை கண்டிராத அளவிற்கு சிறப்பானதாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். இந்தப் போட்டியில் நமக்கு 13 பதக்கங்கள் கிடைத்ததுடன், கலப்பு இரட்டையர் பிரிவிலும், மூன்று பதக்கங்கள் கிடைத்தது. அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நான் “மிகச்சிறந்த அல்லது இதற்கு முன் கண்டிராத சாதனை” என்ற வார்த்தையை அடிக்கடி சுட்டிக்காட்டியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதுவே ஒவ்வொரு நாளும் இந்தியாவின் விளையாட்டுத் துறை அடைந்து வரும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் யதார்த்த நிலையாகும். விளையாட்டுத் துறை மட்டுமின்றி, எண்ணற்றத் துறைகளில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. உதாரணத்திற்கு குறிப்பிட வேண்டுமென்றால், 2018 மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாராயண் தாக்கூர் என்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரரை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர், பிறவியிலேயே ஒரு மாற்றுத் திறனாளி. அவருக்கு எட்டு வயதே ஆகும் போது தந்தையை இழந்துவிட்டார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்துள்ளார். பின்னர் அந்த இல்லத்திலிருந்தும் வெளியேறிய அவர், தில்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளை சுத்தம் செய்தும், சாலையோர உணவகங்களில் பணியாற்றியும் வாழ்க்கையை நடத்தியுள்ளார். அதே நாராயண்தான், சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்றுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல், இந்திய விளையாட்டுத் துறை எந்த அளவிற்கு மிக வேகமாக சிறப்பிடம் பெற்று வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், ஜூடோ போட்டியில் இந்தியா இதுவரை ஜூனியர் அல்லது சீனியர் பிரிவில் பதக்கம் வென்றதில்லை. ஆனால், இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 16 வயதே ஆகும் தபாபி தேவி, மணிப்பூரில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவராவார். அவரது தந்தை ஒரு சாதாரண தொழிலாளி, தாயார் மீன் வியாபாரம் செய்கிறார். உணவு பொருட்களை வாங்க கூட பணம் இல்லாத காலகட்டம் அது. இதுபோன்ற வறுமையான நிலையிலும், அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் சற்றும் குறையவில்லை. நாட்டிற்காக பதக்கம் வென்று அவர் வரலாறு படைத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் என்னற்றவை உள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையும், ஒவ்வொரு மனிதரும் ஊக்கத்தின் பிறப்பிடமாக திகழ்கின்றனர். இளம் விளையாட்டு வீரர்களின் பொறுமையும், அர்ப்பணிப்பு உணர்வும் புதிய இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கின்றன.
எனதருமை நாட்டு மக்களே, 2017 ஆம் ஆண்டில், 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை நாம் வெற்றிகரமாக நடத்தி முடித்தை நீங்கள் அறிவீர்கள். இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது என ஒட்டுமொத்த உலகமும் பாராட்டியது. ஃபிஃபா 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி, மைதானத்தில் நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது. 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு அரங்குகளில் கால்பந்து போட்டிகளை கண்டுகளித்தது, இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டும், 2018 உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிகளை புவனேஷ்வரில் நடத்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 தொடங்கி, டிசம்பர் 16-ல் நிறைவடைகிறது. ஒவ்வொரு இந்தியரும், அவர் எந்த விளையாட்டை விளையாடினாலும், அல்லது எந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், நிச்சயமாக ஹாக்கிப் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஹாக்கி விளையாட்டில், இந்தியா பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை படைத்துள்ளது. பல்வேறு போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கங்களை வென்றிருப்பதுடன், உலக சாம்பியன் பட்டத்தையும் ஒருமுறை வென்றுள்ளது. ஏராளமான சிறந்த ஹாக்கி வீரர்களையும் இந்தியா உருவாக்கியுள்ளது. ஹாக்கி விளையாட்டு பற்றி எப்போது மேற்கோள் காட்டினாலும், நமது சாதனையாளர்களைப் பற்றி குறிப்பிடாமல், அதனை நிறைவு செய்ய முடியாது. ஹாக்கியின் பிதாமகனாகக் கருதப்படும் மேஜர் தியான்சந்தின் பெயர் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றதாகும். மேலும், பல்பீர் சிங் சீனியர், லெஸ்லி கிளாடியஸ் முகமது ஷாகித், உத்தம்சிங் முதல், தன்ராஜ்பிள்ளை வரை இந்திய ஹாக்கி நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டதாகும். தற்போதுகூட, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், தங்களது கடின உழைப்பு மற்றும் இலக்கை நோக்கிய கவனத்தால், இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பவர்களாகத் திகழ்கின்றனர்.
மிக அருமையான போட்டிகளை காண விரும்பும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். புவனேஷ்வருக்கு சென்று, அங்கு விளையாட உள்ள இந்திய அணியினரையும் ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்துங்கள். ஒடிஷா மாநிலம் மிகச்சிறந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதோடு மட்டுமின்றி, கலாச்சார பாரம்பரியமும் மிகுந்த மாநிலமாகும். அந்த மாநில மக்கள் அனைவரும் மிகவும் பாசமானவர்கள். விளையாட்டு வீரர்கள் ஒடிஷாவைக் காண இது ஒரு அரிய வாய்ப்பாகும். அங்குள்ள உலகப் புகழ்பெற்ற புண்ணிய தலங்களான கொனார்க் சூரிய கோவில், பூரி ஜெகன்னாதர் ஆலயம் மற்றும் சில்கா ஏரி போன்றவற்றுடன் விளையாட்டுப் போட்டிகளையும் கண்டு மகிழலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர் அணிக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், 125 கோடி இந்திய மக்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணியினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, சமூகப் பணியாற்ற முன்வருவோரின் மனோபாவம் உண்மையிலேயே, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது. “சேவையே சிறந்தது” என்பது பன்நெடுங்காலமாக இந்தியாவின் பாரம்பரியமாக உள்ளது. அத்துடன், ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற பாரம்பரியத்தை தற்போதும் நாம் உணர்கிறோம். ஆனால், தற்போதைய புதிய சகாப்தத்தில், தத்தமது கனவுகளை நிறைவேற்றக் கூடியவர்களாக, புதிய தலைமுறையினர், புதுமையான வழிமுறைகளுடன் புத்தெழுச்சியும், உற்சாகமும் உடையவர்களாக உள்ளனர். “சமுதாயத்திற்காக நான்” என்ற பெயரிலான புதிய இணையதள தகவு ஒன்றின் தொடக்கவிழாவில் நான் கலந்து கொண்டேன். எனது அரசு என்ற திட்டமும், நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் தொழில்துறையினரும், தொழிலாளர்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், இந்த துறையில் அவர்கள் பணியாற்றுவதற்குமான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த தகவை தொடங்கியுள்ளனர். அவர்களது அர்ப்பணிப்பு உணர்வும், வீரியமும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். நான் இல்லை – நாங்கள், என்ற மாற்றம் தனிநபர்களிடமிருந்து சமுதாயத்தை மனதிற்கொண்டு சமுதாய பணியாற்றுவதற்கான புதிய சூழலை தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே உருவாக்கியுள்ளது. சிலர் வயது முதிர்ந்தவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்; சிலர் தூய்மைப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்; வேறு சிலர் விவசாயிகளுக்கு உதவுகின்றனர். ஆனால், இவர்கள் யாருடைய நடவடிக்கையின் பின்னால், எந்தவொரு உள்நோக்கமும் இல்லை, அவர்களது உறுதிப்பாடே உந்து சக்தியாக அமைந்துள்ளது. ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கூடைப்பந்து விளையாட கற்றுக் கொள்ளும் ஒருவர், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கும், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் உதவ முடியும். இந்த உணர்வும், அர்ப்பணிப்பும் ஒரு பணி முறை செயல்பாடாகும். இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். “நான் அல்ல – நாங்கள்” என்பது நிச்சயமாக நம் அனைவரையும் ஈர்ப்பதாக அமையும்.
எனதருமை சகோதர சகோதரிகளே, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளை பார்த்த போது, புதுச்சேரியைச் சேர்ந்த திரு. மனிஷ் மகபத்ரா என்பவரது கருத்து மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. பழங்குடியின மக்களும், அவர்களது பாரம்பரியம் மற்றும் சடங்குகளும், எவ்வாறு இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உதாரணங்களாக திகழ்கின்றன என்பதை மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்ளுமாறு “எனது அரசு” செயலி மூலம் தெரிவித்துள்ளார். பழங்குடியினரின் பாரம்பரியத்தை நமது வாழ்க்கையில் எவ்வாறு பின்பற்றி நீடித்த வளர்ச்சியை அடைவது மற்றும் அதுபோன்ற பாரம்பரியங்களிலிருந்து எதை அறிந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மனிஷ், மனதின் குரல் நிகழ்ச்சியின் நேயர்களிடையே இந்தப் பிரச்சினையை முன்வைத்ததற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த உலகமும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விவாதித்து, சமச்சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கான புதிய வழிகளை ஆராய்ந்து வரும் வேளையில், நமது கண்ணியமான கடந்த காலத்தையும், பண்டைக்கால பாரம்பரியங்களையும் அறிந்து கொள்ள நமக்கு ஊக்கமளிப்பதாக இது அமையும். நம் நாடும் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நமது கடந்த கால பொற்காலத்தை நினைவுகூறுவதுடன், நமது பாரம்பரிய செழுமைகளை, குறிப்பாக நமது பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வது அவசியம். இயற்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பு கொண்டு இசைந்துவாழ்வது, நமது பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்களை கடவுளாகக் கருதி வணங்குகின்றனர். மத்திய இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் சத்திஷ்கரில் வசிக்கும் ‘பில்’ பழங்குடியின மக்கள், பீப்பால் மற்றும் அர்ஜுன் மரங்களை வழிபடுகின்றனர். ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் வசிக்கும் பிஷ்னோய் வகுப்பினர், சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு நமக்கு வழிகாட்டுகின்றனர். குறிப்பாக மரங்களை பாதுகாக்கும் விஷயத்தில், ஒரு மரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதைவிட, தங்களது உயிரை கொடுக்கக் கூட அவர்கள் தயாராக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தின் மிஷ்மி பழங்குடியின மக்கள், புலிகளுடன் நட்புறவோடு திகழ்கின்றனர். அவர்கள் புலிகளை தங்களது சகோதர சகோதரிகளாகவே கருதுகின்றனர். நாகாலாந்திலும் புலிகள் வனப்பாதுகாவல்களாக திகழ்கின்றன. மகாராஷ்டிராவின் வார்லி இன மக்கள், புலிகளை தங்களது விருந்தினர்களாக கருதுகின்றனர். புலிகள் தங்களுடன் இருப்பது, தங்களது வளமையை பிரதிபலிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். மத்திய இந்தியாவின் கோல் இனத்தவர், புலிகள் தங்களது வாழ்க்கையுடன் நேரடி தொடர்பு கொண்டவையாகக் கருதுவதுடன், புலிகளுக்கு உணவு கிடைக்காவிட்டால், ஒட்டுமொத்த கிராமமும் பட்டினிக்கு ஆளாக நேரிடும் என உணர்கின்றனர். மத்திய இந்தியாவின் கோண்டு இன மக்களும் மீன்கள் இனப்பெருக்க காலத்தில், கைத்தான் நதியில் மீன் பிடிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். இந்தப் பகுதியை மீன்களின் சரணாலயமாகக் கருதும் அவர்கள், தங்களிடையே நிலவும் இந்த நம்பிக்கை காரணமாக சத்துள்ள மீன்கள் பெருமளவில் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர். அத்துடன், பழங்குடியின மக்கள், வலுவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டே தங்களது வசிப்பிடங்களையும் அமைத்துக் கொள்கின்றனர். தென்னிந்தியாவின் நீலகிரி மலைத் தொடரில் உள்ள சில தனிமைப் பகுதிகளில் வசிக்கும் தோடர் இன மக்கள், அப்பகுதியில் கிடைக்கும் பொருட்களை மட்டும் கொண்டுதான் தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொள்கின்றனர்.
எனதருமை சகோதர சகோதரிகளே, பழங்குடியின மக்கள் மிகவும் அமைதியான, இணக்கத்துடன் வாழ்வதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பதற்கு இவையே சான்றாகும். யாராவது தங்களது இயற்கை வளங்களுக்கு பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படுத்த முயன்றால், தங்களது உரிமைக்காக போராடவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களில் முன்னணி வீரர்களாக திகழ்ந்த பலர், பழங்குடி சமுதாயதைச் சேர்ந்தவர்கள் என்பதில் வியப்பேதும் இல்லை. தங்களது வனப்பகுதியை பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட பகவான் பிர்ஸாமுண்டாவை யாரும் மறக்க முடியாது. நான் இதுவரையிலும் குறிப்பிட்டவை தவிர, இயற்கையுடன் எவ்வாறு ஒத்துவாழ்வது என்பது பற்றி நமக்கு போதித்த பழங்குடியின சமுதாயங்கள் ஏராளமானவற்றை பட்டியலிட முடியும். நாட்டில் தற்போதுள்ள வனப்பகுதிகள், தொடர்ந்து வனப்பகுதிகளாகவே இருக்கச் செய்வதற்காக நாம் நமது பழங்குடியின மக்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு நமது நன்றி உணர்வை வெளிப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே, “மனதின் குரல்” நிகழ்ச்சியில் சமுதாயத்திற்காக அளப்பரிய பங்காற்றிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றி நாம் குறிப்பிட்டோம். ஆனால், இந்தப் பணிகள் எல்லாம் போதாது, எனினும், சமுதாயத்திற்காக பாடுபடுவதற்கான புதிய வழியை காட்டுவதற்கு, நமது சிந்தனையில் மிகவும் ஆழமான உணர்வுகளை இவை தூண்டியுள்ளன. சில தினங்களுக்கு முன், பஞ்சாபை சேர்ந்த குர்பச்சன் சிங் என்ற விவசாய சகோதரரை பற்றி படித்தேன். கடுமையாக உழைக்கக் கூடிய அந்த விவசாய சகோதரர் குர்பச்சன் சிங்கின் மகனின் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்த வேண்டும் என மணப்பெண்ணின் பெற்றோரிடம், குர்பச்சன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திருமண வரவேற்பு அல்லது வேறு எந்தவொரு விஷயத்திற்காகவும் பெரும் தொகையை செலவு செய்யத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை மிகமிக சாதாரண ஒரு வைபகமாகவே கருத வேண்டும் என்று கூறிய அவர், திடீரென ஒரு நிபந்தனையை விதித்துள்ளார். இதுபோன்ற நிபந்தனைகள் விதித்தால், பெண் வீட்டார் நிறைவேற்ற முடியாத அளவிற்கு கடுமையான நிபந்தனையாக அது இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கும். ஆனால், குர்பச்சன் சிங் விதித்த நிபந்தனையை கேட்டால், நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். சாதாரண விவசாயியான குர்பச்சன் சிங், பெண்ணின் தந்தையிடம் விதித்த நிபந்தனை, நமது சமுதாயத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. பெண் வீட்டார், அவர்களது விளை நிலங்களில் வைக்கோல் மற்றும் வேளாண் கழிவுகளை எரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்பதே அவர் விதித்த நிபந்தனையாகும். இந்தக் கருத்தின் சமுதாய வலிமையை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். குர்பச்சன் சிங் தெரிவித்த கருத்து மிகவும் சாதாரணமானதாக தோன்றலாம்; ஆனால், அவரது குணநலன் எவ்வளவு உயர்ந்தவை என்பதை இது எடுத்துரைக்கிறது. நமது சமுதாயத்தில் உள்ள ஏராளமான குடும்பங்கள் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் எவ்வாறு தீர்வுகாண்கிறார்கள் என்பதை இதன் மூலம் உணரலாம். திருவாளர் குர்பச்சன் சிங்கின் குடும்பத்தினர் அதுபோன்றதொரு உதாரணத்தை நமக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். பஞ்சாபின் நாபா அருகே உள்ள கல்லர்மஜ்ரா என்ற கிராமத்தைப் பற்றியும் நான் படித்தேன். வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக, அவற்றை மண்ணுடன் சேர்த்து உழவு செய்யும் புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றிய விவசாயிகளால் கல்லர்மஜ்ரா கிராமம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குர்பச்சன் சிங்கிற்கு எனது பாராட்டுகள்! கல்லர்மஜ்ரா கிராம மக்களுக்கும், தத்தமது சுற்றுப்புறங்களில் மாசு ஏற்படாத வகையில் சிறப்பாக பராமரிக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட இந்திய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வழித்தோன்றல்களாகத் திகழ்ந்து வருகிறீர்கள். சிறு துளி தண்ணீர் சங்கமிப்பதால்தான், கடல் உருவாகிறது என்பதைப் போல, ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான செயல்பாடும், நல்ல சுற்றுப்புறத்தை உருவாக்க அவசியமாகும்.
எனதருமை நாட்டு மக்களே, நமது புராணங்களும் இதைத்தான் எடுத்துரைக்கின்றன: –
கடவுளே! மூன்று லோகங்களிலும், நீர், காற்று, நிலம், நெருப்பு, சுவாசம், மருந்து, தாவரங்கள், தோட்டங்கள், ஆழ்மனது என ஒட்டுமொத்த படைப்புகளிலும் எங்களைச் சுற்றி அமைதி நிலவ வேண்டும். எனக்குள்ளும், உங்களுக்குள்ளும் உள்ள ஒவ்வொரு ஆன்மா, ஒவ்வொரு இதயம் மற்றும் இந்த பேரண்டம் எங்கிலும் அமைதி நிலவ வேண்டும். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.
உலக அமைதி பற்றி எங்கு பேச்சு எழுந்தாலும், அங்கு இந்தியாவின் பெயரும், பங்களிப்பும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 11 அன்றுதான் முதல் உலகப் போர் முடிவடைந்தது. அந்தப் போர் நிறைவடைந்து நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், பேரழிவுகள் மற்றும் மனித உயிரிழப்புகள் நிறைவடைந்து ஒருநூற்றாண்டு ஆகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் உலகப் போர் மிகவும் முக்கியமானதாகும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு அந்த போருடன் நேரடித் தொடர்பு கிடையாது. எனினும், நமது வீரர்கள் அந்தப்போரில் துணிச்சலுடன் போரிட்டு, மிக உயர்ந்த தியாகங்களைப் புரிந்துள்ளனர். போர் என்று வந்தால் இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் இந்திய வீரர்கள் எடுத்துரைத்துள்ளனர். சிரமமான பகுதிகளிலும், மோசமான பருவநிலை காலங்களிலும் நமது வீரர்கள் தங்களது துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாக இருந்தது. முதலாம் உலகப்போரின் போது பெருமளவிலான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை இந்த உலகம் அறியும். சுமார் ஒருகோடி ராணுவ வீரர்களும் அதே அளவிற்கு அப்பாவி மக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான், ஒட்டுமொத்த உலகமும் அமைதியின் மகத்துவத்தை உணரச் செய்தது. கடந்த நூறு ஆண்டுகளில் அமைதிக்கான அர்த்தம் மாறியுள்ளது. இன்று அமைதி என்பது போர் மட்டுமல்ல, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிற்கு தீர்வுகாண உலகளாவிய ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. பரம ஏழையின் வளர்ச்சியே, அமைதிக்கான உண்மையான எடுத்துக்காட்டாக அமையும்.
எனதருமை நாட்டு மக்களே, நமது வடகிழக்கு மாநிலங்கள் சிறப்பு வாய்ந்த தனித்துவத்தை கொண்டவையாகும். வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை அழகிற்கு ஈடு இணை ஏதுமில்லை – இப்பகுதி மக்களும் மிகுந்த திறமைசாலிகள். தற்போது தங்களது சிறப்பான செயல்பாடுகளால் வடகிழக்கு மாநிலங்கள் பிரசித்திப் பெற்றுள்ளன. இயற்கை வேளாண்மையில் வடகிழக்கு மண்டலம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. நீடித்த உணவு முறையை ஊக்குவித்ததற்காக, 2018 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க எதிர்கால கொள்கைக்கான தங்க விருதை, சிக்கிம் மாநிலம் சில தினங்களுக்கு முன் பெற்றுள்ளது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது. மிகச்சிறந்த கொள்கை உருவாக்கத்திற்கான இந்த விருது ஆஸ்கார் விருதுக்கு இணையானதாகும். இது மட்டுமின்றி, 25 நாடுகளில் இருந்து வரப்பெற்ற பரிந்துரைகளை பின்னுக்குத் தள்ளி, சிக்கிம் இந்த விருதை வென்றுள்ளது. இதற்காக, சிக்கிம் மக்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, அக்டோபர் மாதம் முடிவடையவுள்ளது, பருவநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. குளிர்காலம் தொடங்கி இருப்பதுடன், பருவநிலை மாற்றத்தால், பண்டிகை காலமும் தொடங்கியுள்ளது. தாண்டிரா, தீபாவளி, பையாதூஜ், சாத் போன்ற பண்டிகைகள் வருவதால், நவம்பர் மாதத்தை பண்டிகைகளின் மாதம் என்றே கூறலாம். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
நீங்கள் அனைவரும் உங்களது நலனில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஆரோக்கியத்திலும், சமூக ஈடுபாடுகளிலும் கவனம் செலுத்துங்கள். இதுபோன்ற பண்டிகைகள், புதிய உறுதி மொழிகளை ஏற்க வாய்ப்பாக அமையும் என நான் நம்புகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமாகும். நீங்கள் வளர்ச்சியடைந்தால், இந்த நாடும் வளர்ச்சியடையும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய முப்படையினர் மீது பெருமிதம் கொள்ளாத இந்தியர் யாராவது இருக்க முடியுமா கூறுங்கள். ஒவ்வொரு இந்தியனும்…. அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும்….. சாதி, சமயம், வழிமுறை அல்லது மொழியாகட்டும்…. நமது இராணுவத்தினர் மீது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவும் எப்பொழுதும் தயாராக இருக்கிறார். நேற்று இந்தியாவின் 125 கோடி நாட்டுமக்களும், பராக்கிரம் பர்வ் என்ற வீரத்தின் வெற்றிவிழாவைக் கொண்டாடினார்கள். நாம் 2016ஆம் ஆண்டில் நடந்த துல்லியத் தாக்குதல் நினைவுகூரப்பட்டது; நமது தேசத்தின் மீது தீவிரவாதப் போர்வையில் கோரமாக நடத்தப்பட்ட மறைமுகப் போருக்கு நமது இராணுவத்தினர் பலமான பதிலடி கொடுத்தார்கள். நாட்டின் குடிமக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு நமது சக்தி என்ன என்பதைத் தெரியப்படுத்தும் வகையில், நாட்டில் பல்வேறு இடங்களில் நமது இராணுவத்தினர் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாம் எத்தனை தகுதி வாய்ந்தவர்கள், எப்படி நமது இராணுவத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நமது நாட்டுமக்களை காக்கின்றார்கள் பாருங்கள். பராக்கிரம் பர்வ போன்ற ஒரு நாள், இளைஞர்களுக்கு நமது இராணுவத்தினரின் பெருமிதமான பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. மேலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய நமக்கு உத்வேகம் அளிக்கின்றது. நானும் வீரபூமியான ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன். யார் நமது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்குகிறார்களோ, நமது இராணுவத்தினர் அவர்களுக்கு பலமான பதிலடி கொடுப்பார்கள் என்பது இப்போது முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் அமைதியில் நம்பிக்கை கொண்டவர்கள், இதற்கு மேலும் உந்துதல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம், ஆனால் அதே நேரத்தில் கண்ணியத்தைக் காவு கொடுத்து தேசத்தின் இறையாண்மையை விலையாகக் கொடுப்பது என்பது எந்நாளும் சாத்தியமல்ல. பாரதம் என்றுமே அமைதியை நிலைநாட்ட தன் உறுதியை அளித்திருக்கிறது, அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்து வந்திருக்கிறது. 20ஆம் நூற்றாண்டின் இரு உலகப் போர்களிலும் நமது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், அமைதியின் பொருட்டு தங்களின் மிகப்பெரிய தியாகத்தைப் புரிந்தார்கள், அதுவும் அந்தப் போர்களிலே நமக்கு எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலே கூட. நமது பார்வை மற்றவர்கள் பூமியின் மீது என்றுமே படிந்ததில்லை. இது அமைதியின்பால் நமக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டுகிறது. இஸ்ரேலின் ஹைஃபா போர் நடந்து 100 ஆண்டுகள் ஆன செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று நாம் மைசூர், ஐதராபாத் மற்றும் ஜோத்பூர் lancersஇன் நமது வீரம் நிறைந்த வீரர்களை நினைவில் கொண்டோம்; தாக்கியவர்களிடமிருந்து ஹைஃபாவுக்கு அவர்கள் விடுதலை பெற்றுக் கொடுத்தார்கள். இதுவும் அமைதியின் திசையில் நமது இராணுவத்தினர் வாயிலாக புரியப்பட்ட ஒரு பராக்கிரமச் செயல் தான். இன்றும் கூட ஐ.நா.வின் பல்வேறு அமைதிகாக்கும் படைகளில் பாரதம் அதிக வீரர்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நமது வீரம் நிறைந்த இராணுவத்தினர் நீல ஹெல்மெட் அணிந்து கொண்டு உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியமான பங்களிப்பை நல்கி வந்திருக்கிறார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, வானம் தொடர்பான விஷயங்கள் என்றுமே வித்தியாசமாக இருக்கும். இந்த வகையில், வானில் தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி இந்திய விமானப் படையினர் நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் கவனத்தையும் தங்கள்பால் ஈர்த்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமேதும் இல்லை. அவர்கள் நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்திருக்கிறார்கள். சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தை ஒட்டி, அணிவகுப்பு தொடர்பாக மிகுந்த ஆசையோடும் ஆவலோடும் மக்கள் எதிர்பார்த்திருப்பவைகளில் ஒன்று விமான சாகஸம்; இதில் நமது விமானப்படையினர் திகைப்பை ஏற்படுத்தும் செயல்பாடுகளுடன் தங்களின் சக்தியை வெளிக்காட்டுவார்கள். அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று நாம் விமானப்படை நாளைக் கொண்டாடுகிறோம். 1932ஆம் ஆண்டில், 6 விமான ஓட்டிகளும் 19 விமானப்படை வீரர்களுடன் ஒரு சிறிய அளவிலான தொடக்கம் மேற்கொண்ட நமது விமானப்படை, இன்று 21ஆம் நூற்றாண்டின் மிக அதிக சாகஸமும் சக்தியும் உடைய விமானப்படைகளில் இடம் பிடித்திருக்கிறது. இது நம் நினைவுகளை இனிக்க வைக்கும் பயணம். நாட்டுக்காக தங்களின் சேவையை அளிக்கும் அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நான் என் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1947ஆம் ஆண்டிலே, எதிர்பாராத வகையிலே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் தொடுத்த வேளையில், நமது விமானப்படையினர் தாம் ஸ்ரீ நகரை தாக்குதல்காரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்தார்கள், இந்திய இராணுவத்தினரின் ஆயுதங்களையும் யுத்த தளவாடங்களையும் போர்க்களத்தில் சரியான நேரத்தில் தரை இறக்கினார்கள். விமானப்படை 1965ஆம் ஆண்டிலே எதிரிகளுக்கு பலமான பதிலடி கொடுத்தார்கள். 1971ஆம் ஆண்டின் வங்கதேச சுதந்திரப் போராட்டம் பற்றி அறியாதவர்கள் யார் இருப்பார்கள் சொல்லுங்கள்?? 1999ஆம் ஆண்டு கார்கில் பிரதேசத்தை ஊடுருவல்காரர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதிலும், நமது விமானப்படை சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது. டைகர் ஹில் பகுதியில் எதிரிகள் ஒளிந்திருந்த இடங்களில் எல்லாம் இரவுபகலாக குண்டு மழை பொழிந்து அவர்களை மண்ணைக் கவ்வச் செய்தார்கள். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளாகட்டும், பேரிடர்காலங்களின் ஏற்பாடுகள் ஆகட்டும், நமது விமானப் படை வீரர்களின் மெச்சத்தக்க செயல்கள் காரணமாக நாடு விமானப்படைக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது. புயல், சூறாவளி, வெள்ளம் முதல், காட்டுத்தீ வரையிலான அனைத்து பேரிடர்களை சமாளிக்கவும், நாட்டுமக்களுக்கு உதவி செய்யவும் அவர்களின் உணர்வு அற்புதமானது. நாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதில் விமானப்படையினர் ஒரு எடுத்துக்காட்டை முன்னிறுத்தி இருக்கிறார்கள், தங்களின் ஒவ்வொரு துறையின் வாயில்களையும் பெண்களுக்காக திறந்து விட்டிருக்கிறார்கள். இப்போது விமானப்படையில் பெண்கள் சேர, குறுகிய காலப் பணியுடன் நிரந்தரப் பணி என்ற மாற்றும் கிடைக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து நான் செய்திருந்தேன். பாரத இராணுவத்தின் இராணுவப் படையினரிடம் ஆண் சக்தி மட்டுமல்ல, பெண் சக்தியின் பங்களிப்பும் அதே அளவுக்கு பெருகி வருகிறது என்று பெருமிதம் பொங்க நம்மால் கூற முடியும். பெண்கள் சக்தி படைத்தவர்கள் தாம், ஆனால் இப்போது ஆயுதபாணிகளாகவும் ஆகி வருகிறார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் கடற்படையைச் சேர்ந்த நமது அதிகாரி ஒருவர் அபிலாஷ் டோமி, வாழ்வா சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டு வந்தார். டோமியை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பாக ஒட்டுமொத்த நாடுமே கவலைப்பட்டது. அபிலாஷ் டோமி மிகவும் சாகஸம் நிறைந்த ஒரு அதிகாரி என்பது உங்களுக்குத் தெரியும். அவர் தனிமனிதனாக, எந்த ஒரு நவீன தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், ஒரு சிறிய படகில் பயணம் செய்து, உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட முதல் இந்தியர் ஆவார். கடந்த 80 நாட்களாக, அவர் இந்தியக் கடலின் தென்பகுதியில் Golden Globe Raceஇல் பங்கெடுக்க, கடலில் தனது வேகத்தைக் குறைக்காமல் முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் பயங்கரமான கடல் சூறாவளி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், பாரத கடற்படையைச் சேர்ந்த இந்த வீரர், கடலில் பல நாட்கள் வரை தத்தளித்துக் கொண்டிருந்தார், போராடி வந்தார். எதையுமே உண்ணாமல் குடிக்காமல் போராடி வந்தாலும், வாழ்க்கையில் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. சாகஸம், மனவுறுதிப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றின் அற்புதமான எடுத்துக்காட்டு அவர். சில நாட்கள் முன்பாக, அபிலாஷை கடலிலிருந்து மீட்டெடுத்து வெளியே கொண்டு வந்த போது நான் அவருடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசினேன். நான் முன்பேயே கூட டோமியைச் சந்தித்திருக்கிறேன். இத்தனை சங்கடங்களைத் தாண்டியும் அவருடைய ஆர்வம் குறையவே இல்லை, நம்பிக்கை இருந்தது, மீண்டும் இதே போல பராக்கிரச் செயலைப் புரிய உறுதிப்பாடு இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தேசத்தின் இளைய சமுதாயத்திற்கு அவர் ஒரு கருத்தூக்கமாக விளங்குகிறார். நான் அபிலாஷ் டோமியின் சிறப்பான உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன், அவரது இந்த சாகஸம், அவரது பராக்கிரமம், அவரது மனவுறுதிப்பாடு, போரிட்டு வெல்லும் சக்தி, கண்டிப்பாக நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
என் இனிய நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நமது தேசத்திற்கு என்ன மகத்துவம் வாய்ந்தது என்பதை நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் நன்கறியும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. இப்போதிருந்து ஈராண்டுகளுக்கு நாம் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். காந்தியடிகளின் கருத்துகள் உலகம் முழுவதையும் உத்வேகப்படுத்தி இருக்கிறது. டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியராகட்டும், நெல்சன் மண்டேலாவாகட்டும்… தங்கள் மக்களுக்கு சமத்துவத்தையும் கௌரவத்தையும் பெற்றுத்தர நீண்ட போராட்டத்தை நடத்தத் தேவையான ஆற்றலை ஒவ்வொருவரும் காந்தியடிகளின் கருத்துகளிலிருந்து பெற்றிருக்கிறார்கள். இன்று மனதின் குரலில், வணக்கத்திற்குரிய அண்ணலின் மேலும் ஒரு மகத்துவம் நிறைந்த செயல் பற்றி நான் உங்களுடன் பேச விரும்புகிறேன், இதை நாட்டுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1941ஆம் ஆண்டு, காந்தியடிகள் Constructive Programme, அதாவது ஆக்கப்பூர்வமான திட்டம் என்ற வகையில் சில சிந்தனைகளை எழுத ஆரம்பித்தார். பின்னர் 1945ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த போது அவர், அந்த சிந்தனைகளின் தொகுப்புப் பிரதியை தயார் செய்தார். வணக்கத்திற்குரிய அண்ணல், விவசாயிகள், கிராமங்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகள் பாதுகாப்பு, தூய்மை, கல்வியின் பரவலாக்கம் போன்ற பல விஷயங்கள் பற்றித் தனது கருத்துகளை நாட்டுமக்கள் முன்பாக வைத்தார். இதை காந்தி சார்ட்டர் என்றும் அழைக்கிறார்கள். மரியாதைக்குரிய அண்ணல் மக்களை ஒன்று திரட்டுபவர், இது இயல்பிலேயே அவருக்கு இருந்தது. மக்களோடு இணைந்திருப்பது, அவர்களை இணைப்பது என்பதெல்லாம் அண்ணலின் சிறப்பம்சங்கள், இவை அவரது இயல்பிலேயே குடியிருந்தன. அவரது தனித்துவத்தின் மிக பிரத்யேகமான வடிவிலே இதை ஒவ்வொருவருமே அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நாட்டிற்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தவர், இன்றியமையாதவர் என்ற உணர்வை அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுத்தினார். இதை ஒரு பரவலான மக்கள் போராட்டமாக மாற்றியது தான் சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய மிகப்பெரிய பங்களிப்பு. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, சமுதாயத்தின் அனைத்துத் துறையினர், அனைத்துப் பிரிவினர் தாங்களே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அண்ணல் நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மந்திரத்தை அளித்துச் சென்றிருக்கிறார், இதை அடிக்கடி காந்தியடிகளின் இரட்சை என்றும் கூறுவார்கள். அதில் அண்ணல் என்ன கூறியிருக்கிறார் என்றால், ‘நான் உங்களுக்கு ஒரு காப்புக் கயிற்றைக் கொடுக்கிறேன், உங்களுக்கு எப்போதெல்லாம் ஐயப்பாடு ஏற்படுகிறதோ, உங்களுக்குள்ளே ’தான்’ என்ற உணர்வு மேலோங்குகிறதோ, இந்த அளவுகோலைக் கைக்கொள்ளுங்கள் – யார் அதிக ஏழையாகவும் பலவீனமானவராகவும் இருக்கிறாரோ, அந்த மனிதனைப் பாருங்கள், அவருடைய முகத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள், உங்கள் மனதிடம் கேளுங்கள், நீங்கள் எந்த செயலைச் செய்ய இருக்கிறீர்களோ, அதனால் அந்த மனிதனுக்கு எத்தனை பயன் ஏற்படும் என்று உங்கள் மனதிடம் கேட்டுப் பாருங்கள். இதனால் அவனது வாழ்க்கையும் எதிர்காலமும் பிரகாசப்படுமா!! வயிற்றில் பட்டினியும், மனதில் வெறுமையும் தாண்டவமாடும் அந்தக் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இதனால் சுயராஜ்ஜியம் கிடைக்குமா!! அப்போது உங்கள் சந்தேகங்கள் கரைவதை உங்களால் காண முடியும், உங்கள் ஆணவம் மறைந்து போகும்.”
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, காந்தியடிகளின் இந்தக் காப்புக் கயிறு இன்றும் அதே அளவு மகத்துவம் வாய்ந்தது. இன்று நாட்டில் பெருகி வரும் மத்தியத்தட்டு மக்கள், அதிகரித்து வரும் அவர்களின் பொருளாதார சக்தி, மேம்பட்டு வரும் அவர்களின் வாங்கும் சக்தி…. நாம் ஏதாவது ஒரு பொருளை வாங்கச் சென்றாலும் அப்போது ஒரு கண நேரம் அண்ணலை நினைவிலிருத்த முடியுமா? அண்ணலின் அந்த காப்புக்கயிற்றை நினைவில் கொள்ள இயலுமா!! வாங்கும் வேளையில், இதனால் என் நாட்டில் இருக்கும் எந்தக் குடிமகனுக்கு பயன் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்க முடியுமா!! யாருடைய முகத்திலே மகிழ்ச்சி மலரும்!! நீங்கள் வாங்குவதால் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாருக்கு நல்விளைவு உண்டாகும்!! இதனால் பரம ஏழைக்கு இலாபம் கிடைக்குமென்றால், என்னுடைய சந்தோஷம் பலமடங்காகும். காந்தியடிகளின் இந்த மந்திரத்தை நினைவில் தாங்கி, இனிவரும் நாட்களில் நாம் அனைவரும் ஏதாவது வாங்கும் போது, காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தருணத்தில், நாம் ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும், நமது நாட்டுமக்கள் யாருக்காவது நல்லது நடக்க வேண்டும், குறிப்பாக யார் இதை உருவாக்க தங்கள் வியர்வையை சிந்தியிருக்கிறார்களோ, யார் தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களோ, யார் தங்களின் திறன்களை அதில் விதைத்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் ஏதாவது வகையில் இலாபம் கிடைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தான் காந்தியடிகளின் மந்திரம்… காப்புக்கயிறு, இதுவே அவரது செய்தி…. பரம ஏழை, அதிக பலவீனமான மனிதன் ஆகியோரின் வாழ்வில் உங்களின் ஒரு சிறிய முயற்சி, மிகப்பெரிய ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, துப்புரவு செய்தால் சுதந்திரம் கிடைக்கும் என்றார் காந்தியடிகள். இது எப்படி நடக்கும் என்று அவருக்குத் தெரியாமலேயே கூட இருந்திருக்கலாம் – ஆனால் இது நடந்தது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. என்னுடைய இந்தச் சின்னஞ்சிறிய பணியால் என்னுடைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டில், பொருளாதார அதிகாரப் பங்களிப்பில், ஏழையிடம் தன் ஏழ்மைக்கு எதிராக போராடக்கூடிய சக்தி கிடைப்பதில் எப்படி மிகப்பெரிய பங்களிப்பு அளிக்க முடியும் என்று இதைப் போலவே இன்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இன்றைய அளவில் இதுவே உண்மையான தேசபக்தி, இதுவே அண்ணலுக்கு நாம் அளிக்கக்கூடிய கார்யாஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். சிறப்பான சந்தர்ப்பங்களில் கதராடை மற்றும் கைத்தறியாடைகளை வாங்குவதால் பல நெசவாளிகளுக்கு உதவி கிடைக்கும். லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பழைய கதராடைகளையோ, கிழிந்து போன துணிகளையோ பாதுகாப்பாக வைத்திருப்பார், ஏனென்றால் அதில் யாரோ ஒருவருடைய உழைப்பு மறைந்திருக்கிறது. இந்தக் கதராடைகள் அனைத்தும் மிகுந்த சிரமத்தோடு நெய்யப்பட்டிருக்கின்றன, இவற்றின் ஒவ்வொரு இழையும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறுவார். நாட்டினிடத்தில் பற்றும், நாட்டுமக்களிடத்தில் பாசமும், சிறிய உருவம் படைத்த அந்த மாமனிதரிடத்தின் ஒவ்வொரு நாடிநரம்பிலும் கலந்திருந்தது. வணக்கத்திற்குரிய அண்ணலுடன் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளையும் இரண்டு நாட்கள் கழித்து நாம் கொண்டாடவிருக்கிறோம். சாஸ்திரி அவர்களின் பெயரை உச்சரிக்கும் போதே பாரதவாசிகளான நம் மனங்களிலும் எல்லைகாணாத ஒரு சிரத்தை பொங்குவதை உணர முடியும். இனிமையான அவருடைய தனித்துவம், நாட்டுமக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் பெருமையை ஏற்படுத்தி வைக்கிறது.
லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் இருந்த சிறப்பம்சம் என்னவென்றால், வெளியிலிருந்து பார்க்கையில் அவர் மிகவும் மென்மையானவராகத் தெரிவார், ஆனால் உள்ளே பாறையைப் போன்ற திட மனத்திராகத் திகழ்ந்தார். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற அவரது கோஷம் தான் அவரது நெடிய தனித்துவத்தின் அடையாளம். தேசத்தின்பால் அவர் கொண்டிருந்த சுயநலமற்ற ஈடுபாட்டின் பலனாகவே, சுமார் ஒன்றரை ஆண்டுகள் என்ற குறைவான காலத்திலேயே, நாட்டின் வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும் வெற்றிச் சிகரத்தை எட்டக்கூடிய மந்திரத்தை அவரால் அளிக்க முடிந்தது.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் மரியாதைக்குரிய அண்ணலை நினைவில் கொள்கிறோம் எனும் போது தூய்மை பற்றிக் குறிப்பிடுவது இயல்பான விஷயம் தானே!! செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று தூய்மையே சேவை என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. கோடிக்கணக்கான பேர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், தில்லியின் அம்பேத்கர் பள்ளிக் குழந்தைகளோடு தூய்மைப்பணியில் சேவை செய்ய எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பள்ளிக்கான அடித்தளத்தை அமைத்தவர் மதிப்பிற்குரிய பாபா சாகேப் தான். நாடு முழுவதிலும், அனைத்து வகையானவர்களும் 15ஆம் தேதியன்று இந்தச் சேவையில் ஈடுபட்டார்கள். அமைப்புகளும் கூட இதில் மிகுந்த உற்சாகத்தோடு தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்டத்தினர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஊடகக் குழுவினர், பெருநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என, அனைவரும் பெரிய அளவில் தூய்மைப்பணியில் சேவைகளைச் செய்தார்கள். நான் இவர்கள் எல்லோருடைய பங்களிப்பிற்காக, அனைத்துத் தூய்மை விரும்பும் நாட்டுமக்களுக்கும் என் இதயப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் ஒரு தொலைபேசி அழைப்பைக் கேட்போம்.
வணக்கம், என் பெயர் ஷைத்தான் சிங், ராஜஸ்தான் மாநிலத்தின் பீகானீர் மாவட்டத்தின் பூகல் பகுதியிலிருந்து பேசுகிறேன். நான் கண்பார்வையற்றவன். என் இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் கிடையாது. தூய்மையான பாரதம் தொடர்பாக மனதின் குரல் வாயிலாக மோதி அவர்கள் மேற்கொண்டு வரும் படிகள் மிகச் சிறப்பானவை என்று நான் கருதுகிறேன். பார்வைத்திறன் இல்லாத நாங்கள் கழிப்பறை செல்ல மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போது என்னவென்றால் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை ஏற்பட்டு விட்டது, எங்களுக்கு இதனால் மிகப்பெரிய ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது. அருமையான ஒரு முன்னெடுப்பை அவர் மேற்கொண்டிருக்கிறார், மேலும் இந்தப் பணி தொடரட்டும்.
பலப்பல நன்றிகள். நீங்கள் மிகப்பெரிய கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். அனைவரின் வாழ்க்கையிலும் தூய்மைக்கென ஒரு மகத்துவம் இருக்கிறது. தூய்மை பாரதம் இயக்கத்தின்படி உங்கள் வீட்டில் கழிப்பறை உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனால் உங்களுக்கு வசதியாக இருக்கிறது, நம்மனைவருக்கும் இதைவிட அதிக சந்தோஷம் தரக்கூடிய விஷயம் வேறு என்னவாக இருக்க முடியும்!! பார்வைத்திறன் இல்லாத காரணத்தால் முன்னர் கழிப்பறைகள் இல்லாத காலத்தில் நீங்கள் எத்தனை இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியிருந்தது என்பதன் ஆழத்தை, இந்த இயக்கத்தோடு தொடர்புடைய மக்களுக்குக்கூட அளவிட முடியாமலிருந்திருக்கலாம். ஆனால் கழிப்பறைகள் ஏற்பட்ட பிறகு இது உங்களுக்கு எப்படி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதை ஒருவேளை நீங்கள் தொலைபேசியில் அழைத்துச் சொல்லாமல் இருந்திருந்தால், இந்த இயக்கத்தோடு தொடர்புடைய மக்களின் கவனத்திற்கு நுணுக்கமான கண்ணோட்டம் கிடைக்காமலேயே போயிருக்கலாம். நான் உங்களுக்கு சிறப்பான வகையிலே என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நெஞ்சம் நிறை நாட்டுமக்களே, தூய்மையான பாரதம் இயக்கம், நம் நாட்டில் மட்டுமல்ல, உலகனைத்திலும் ஒரு வெற்றிக் கதையாகி விட்டிருக்கிறது. இதைப் பற்றி அனைவரும் பேசி வருகிறார்கள். இந்த முறை இந்தியா, வரலாறு காணாத வகையில், உலகத்தின் மிகப்பெரிய தூய்மை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாடு அதாவது Mahatma Gandhi International Sanitation Conventionஇல், உலகம் முழுவதிலும் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை தொடர்பான தங்களின் பரிசோதனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாட்டின் நிறைவு விழா இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, அண்ணலின் 150ஆவது பிறந்த நாள் விழாவின் தொடக்கத்தை ஒட்டி நடைபெறும்.
எனதருமை நாட்டுமக்களே, சம்ஸ்கிருதத்தில் ஒரு வழக்கு உண்டு – நியாயம்மூலம் ஸ்வராஜ்யம் ஸ்யாத், அதாவது சுயராஜ்ஜியத்தின் வேர்கள் நீதியில் இருக்கிறது,, நீதி பற்றிப் பேசும் வேளையில், மனித உரிமைகள் பற்றிய உணர்வு அதில் முழுமையாக நிறைந்திருக்கிறது. சுரண்டப்பட்ட, பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், அமைதி மற்றும் அவர்களுக்கான நீதியை உறுதி செய்ய விசேஷமாக இது முக்கியமானது. டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் அளித்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஏழைகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட பல உட்கூறுகள் இருக்கின்றன. அந்தத் தொலைநோக்கிலிருந்து உத்வேகம் பெற்று 1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று ‘தேசிய மனித உரிமைகள் ஆணையம்’, NHRC நிறுவப்பட்டது. இந்த ஆணையம் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் சில நாட்களில் நிறைவடைய இருக்கின்றது. இந்த ஆணையம் மனித உரிமைகளைக் காப்பதோடு மட்டுமல்லாமல், மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தும் பணியையும் ஆற்றி வருகிறது. நம் இதயங்களுக்கு நெருக்கமான தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், மனித உரிமைகள் என்பவை நமக்கெல்லாம் அந்நியமான கோட்பாடு அல்ல என்பார். நமது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சின்னத்தில் வேதகாலத்திலிருந்து வரும் கொள்கையான ‘ஸர்வே பவந்து சுகின:’ என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையமானது மனித உரிமைகள் மீதான பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது, தவிர இதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் பாராட்டத்தக்க பங்களிப்பை நல்கியிருக்கிறது. இந்த 25 ஆண்டுகாலம் பயணம் நாட்டுமக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு, ஒரு நம்பிக்கை அளிக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு, சிறப்பான ஜனநாயக விழுமியங்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய செயல்பாட்டை இது அளிக்கிறது. இன்று தேசிய அளவில் மனித உரிமைகளின் பணிகளுடன் கூடவே, 26 மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் இயங்கி வருகின்றன. ஒரு சமுதாயம் என்ற வகையில் நாம் மனித உரிமைகளின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதை நடைமுறையில் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இது தான் அனைவருடனும், அனைவருக்கான முன்னேற்றம் என்பதன் ஆதாரம்.
எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதத்தில், ஜெய் பிரகாஷ் நாராயண் அவர்கள், ராஜ்மாதா விஜய்ராஜே சிந்தியா அவர்கள் ஆகியோர் பிறந்த நூற்றாண்டுத் தொடக்கம் வருகின்றன. இந்த மாமனிதர்கள் அனைவரும் நம்மனைவருக்கும் உத்வேகம் அளித்து வந்திருக்கிறார்கள், அவர்களை நாம் நினைவில் கொள்வோம். அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் அவர்களின் பிறந்த நாள் வருகிறது, நான் அடுத்த மனதின் குரலில் இதுபற்றி விரிவான முறையில் பேசுவேன். ஆனால் இன்று அவரைப் பற்றி ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால், சில ஆண்டுகளாகவே சர்தார் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று ஒற்றுமைக்கான ஒட்டம், இந்தியாவின் ஒவ்வொரு சிறிய நகரிலும், பகுதியிலும், கிராமங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நாம் முயற்சிகள் மேற்கொண்டு நமது கிராமங்கள், வட்டாரங்கள், நகரங்கள், பெருநகரங்களில் ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒற்றுமைக்கான ஓட்டம் தான் சர்தார் அவர்களைப் பற்றி நாம் சிறப்பாக நினைத்துப் பார்க்க சிறப்பான வழி ஏனென்றால், அவர் தன் வாழ்க்கை முழுவதும் தேசத்தின் ஒற்றுமைக்காகவே செயல்புரிந்தார். நான் உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன், அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று ஒற்றுமைக்கான ஓட்டம் வாயிலாக சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், தேசத்தின் ஒவ்வொரு அலகிற்கும், ஒற்றுமையின் இழை கொண்டு ஒன்றிணைக்கும் நமது முயற்சிகளுக்கு நாம் பலம் கொடுக்க வேண்டும், இதுவே அவருக்கு நாமளிக்கும் சிறப்பான ஷ்ரதாஞ்சலியாக அமையும்.
எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதசமியாகட்டும். இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயப்பூர்வமான பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே! வணக்கம்! இன்று நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடி வருகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்த புனிதமான நாளை முன்னிட்டு என் நல்வாழ்த்துகள். ரக்ஷாபந்தன் நன்னாள் சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையே அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை முன்னெடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தப் பண்டிகை பல நூற்றாண்டுகளாக சமூக நல்லிணக்கத்திற்கான பெரிய எடுத்துக்காட்டும்கூட. காப்புக் கயிறு என்ற ரக்ஷா கயிறே கூட இரண்டு வேறுபட்ட பகுதிகள் அல்லது சமயங்களைச் சார்ந்த மக்களுக்கு நம்பிக்கை எனும் இழையால் இணைத்த பல சிறப்புக் கதைகள் நாட்டின் வரலாற்றில் நிறைந்திருக்கின்றன. சில நாட்கள் கழித்து ஜென்மாஷ்டமி நன்னாள் வரவிருக்கிறது. சூழல் முழுவதும் யானை, குதிரை, பல்லக்கு – ஜெய் கன்ஹையாலால் கீ, கோவிந்தா-கோவிந்தா என்ற ஜயகோஷம் வானை முட்டும் அளவுக்கு ஒலிக்க இருக்கின்றன. ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் திளைக்கும் ஆனந்த அனுபவமே அலாதி தான். நாட்டின் பல பாகங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தஹீ-ஹாண்டீயிக்கான தயாரிப்பு ஏற்பாடுகளை நமது இளைஞர்கள் செய்து கொண்டிருப்பார்கள். நாட்டுமக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன், ஜென்மாஷ்டமிக்கான என் இதயம் நிறை நல்வாழ்த்துகள்.
பிரதமர் அவர்களே, வணக்கம். நான் சின்மயீ, பெங்களூரு நகரின் விஜயபாரதிவித்யாலயத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். இன்று சமஸ்கிருத தினம். சமஸ்கிருத மொழி மிகவும் எளிமையானது என அனைவரும் கூறுகின்றார்கள். சமஸ்கிருத மொழியில் எங்களால் உரையாற்ற முடிகிறது. ஆகையால் தாங்கள் சமஸ்கிருத மொழியின் சிறப்பு குறித்த உங்களின் மேலான கருத்தினைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
भगिनी ! चिन्मयि !!
भवती संस्कृत – प्रश्नं पृष्टवती |
बहूत्तमम् ! बहूत्तमम् !!
अहं भवत्या: अभिनन्दनं करोमि |
संस्कृत – सप्ताह – निमित्तं देशवासिनां
सर्वेषां कृते मम हार्दिक-शुभकामना:
சகோதரி! சின்மயி!! சமஸ்கிருதத்தில் நீங்கள் எழுதிய கடிதம் படித்தேன். மிகவும் சிறப்பு, மிகவும் சிறப்பு!! உங்களுக்கு என் நல்வாழ்த்துகள். சம்ஸ்கிருத வாரத்தை ஒட்டி நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறப்பான விஷயத்தை முன்வைத்தமைக்கு, சகோதரி சின்மயீ உங்களுக்கு என் மனம்நிறை நன்றிகள். நண்பர்களே, ரக்ஷாபந்தன் தவிர, சிராவண பவுர்ணமி நாளன்று தான் நாம் சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மகத்தான பொக்கிஷத்தை மேலும் சிறப்பாக்கி, மெருகூட்டி, சாமான்ய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது; அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம்அனைவருக்கும் பெருமிதம் உள்ளது.
வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இணைந்திருக்கும் ஞானக் களஞ்சியம்சமஸ்கிருத மொழியிலும் அதன் இலக்கியத்திலும் கொட்டிக் கிடக்கிறது. அது அறிவியலாகட்டும், தொழில்நுட்பமாகட்டும், விவசாயமாகட்டும், நலவாழ்வாகட்டும், வானவியலாகட்டும், சிற்பக்கலையாகட்டும், கணிதமாகட்டும், மேலாண்மையாகட்டும், பொருளாதாரமாகட்டும் அல்லது சுற்றுச்சூழலாகட்டும்…. உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் நமது வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தின் மட்டூர் கிராமவாசிகள் இன்றும்கூட வழக்கு மொழியாக சமஸ்கிருதத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதறிந்து உங்கள் அனைவருக்கும் சந்தோஷம் ஏற்படும்.
பல புதிய சொற்களை உருவாக்குவதற்கான ஏராளமான சாத்தியக்கூறுகள் உடைய மொழி சமஸ்கிருத மொழி என்பதை அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். ஈராயிரம் வார்த்தைமூலங்கள், 200 முன் சேர்க்கைகள் அதாவது prefix, 22பிற்சேர்க்கைகள் அதாவது suffix மற்றும் சமுதாயத்தின் எண்ணில்லா சொற்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன; ஆகையால் எந்த ஒரு சூட்சமமான உணர்வு அல்லது விஷயத்தையும் துல்லியமாக வர்ணிக்க முடிகிறது. சமஸ்கிருத மொழியின் இன்னுமொரு சிறப்பம்சம் இருக்கிறது. இன்றும்கூட, நாம் நமது உரையை மேலும் வலுவாக்க ஆங்கில மேற்கோள்களைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில் உருதுமொழியில் கவிதைகளைப் பயன்படுத்துகிறோம் ஆனால், யார் சமஸ்கிருத பொன்மொழிகளை அறிந்திருக்கிறார்களோ, சமஸ்கிருத மூதுரைகளில் குறைவான சொற்களின் மூலம் நிறைவான பொருளை விளக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும்சமஸ்கிருத மொழி நமது பூமியோடு, நமது பாரம்பரியத்தோடு இணைந்திருப்பதன் காரணத்தால் புரிந்து கொள்வது மிகவும் எளிதாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, வாழ்க்கையில் குருவின் மகத்துவம் பற்றி அறிந்து கொள்ள –
एकमपि अक्षरमस्तु, गुरुः शिष्यं प्रबोधयेत् |
पृथिव्यां नास्ति तद्-द्रव्यं, यद्-दत्त्वा ह्यनृणी भवेत् ||
அதாவது எந்த ஒரு குருவும் தனது சீடனுக்கு ஒரே ஒரு எழுத்தறிவித்தாலும்கூட, நன்றிக்கடனாக அந்த குருவுக்கு அர்ப்பணிக்க சீடனிடத்தில் உலகம் முழுவதிலும் தேடினாலும் இதற்கு இணையாக எந்த ஒரு செல்வமும் இல்லை. வரவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாமனைவரும் இந்த உணர்வை நம் மனங்களில் பதித்துக்கொள்வோம். ஞானமும் குருவும் ஈடிணையில்லாதவை, விலைமதிக்க முடியாதவை, மதிப்புக்கு அப்பாற்பட்டவை. தாயைத் தவிர, ஆசிரியர் மட்டுமே பிள்ளைகளின் சிந்தனைகளை சரியான திசையில் கொண்டு செல்லும் பொறுப்பு கொண்டவர்கள், இவர்கள் ஏற்படுத்தும் மிகப்பெரிய தாக்கத்தை நாம் நம் வாழ்க்கை முழுவதும் பார்க்க முடிகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மகத்தான சிந்தனையாளரும், தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவருமான டா. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை நாம் எப்போதுமே நினைவில் கொள்கிறோம். அவரது பிறந்த நாளைத் தான் நாடு முழுவதிலும் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். நான் தேசத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடவே, அறிவியல், கல்வி, மாணவர்களிடத்தில் ஆசிரியர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே! கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு இந்தப் பருவமழை எதிர்பார்ப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது. கொடூரமான வெப்பத்தில் வாடும் தாவரங்கள், வற்றிய நீர்நிலைகள் ஆகியவற்றை ஆற்றுப் படுத்துகிறது ஆனால் சில வேளைகள் மிகையான மழையுமேகூட நாசமேற்படுத்தும் வெள்ளப்பெருக்கை உண்டாக்கி விடுகிறது. சில இடங்களில் மற்ற இடங்களை விட அதிக மழை பெய்திருக்கும் நிலையை இயற்கை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளத்தின் பயங்கரமான வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை நாமனைவரும் பார்த்தோம். இன்று இந்த கடினமான சூழ்நிலையில் தேசம் கேரளத்துக்குத் துணையாக நிற்கிறது. தங்கள் உடைமைகளை இழந்தவர்கள், வெள்ளமேற்படுத்திய துயரிலிருப்பவர்கள் ஆகியவர்களின் குடும்பங்களின் வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது; அவர்களின் துக்கத்தை நம்மால் முழுமையாக ஈடு செய்ய முடியாது என்றாலும், துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு நான் அளிக்கக்கூடிய நம்பிக்கை என்னவென்றால், 125 கோடி இந்தியர்களும் துக்கம் நிறைந்த இந்தக் கணத்தில் உங்களோடு தோளோடு தோள் நிற்கிறார்கள். இந்த இயற்கைப் பேரிடரில் காயமடைந்தவர்கள் விரைவாக நலம் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மாநில மக்களின் பேரார்வமும், அளப்பரிய ஆற்றலும் கேரளத்தை மீண்டெழச் செய்யும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
பேரிடர்கள் வந்துசென்ற பின்னர் அவை விட்டுச் செல்லும் நாசம் துர்ப்பாக்கியமானது தான் என்றாலும், பேரிடர் காலத்தில் மனிதாபிமானத்தின் காட்சி விரிவதை நம்மால் காண முடிகிறது. கட்சிலிருந்து காமரூபம் வரையும்,காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும் ஒவ்வொருவரும் தங்கள் நிலைக்கேற்ப, துயர் களையும் பொருட்டு ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள்; அது கேரளமாகட்டும், இந்தியாவின் எந்த ஒரு மாவட்டமாகட்டும், பகுதியாகட்டும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப தங்களின் பங்களிப்பை அளிக்கிறார்கள். அனைத்து வயதினரும், அனைத்துத் துறைகளில் இணைந்தவர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கிறார்கள். எப்படி கேரள மக்களின் இடர்களைக் குறைப்பது, அவர்களின் துக்கத்தை எப்படி நாம் பகிர்ந்து கொள்வது என்பது குறித்து அனைவரும் தீர்மானம் மேற்கொண்டு செயல்படுகிறார்கள். இராணுவ வீரர்கள் கேரளத்தில் மீட்புப் பணியின் நாயகர்களாக விளங்கினார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. விமானப்படை, கடற்படை, தரைப்படை, எல்லையோர பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்புப் படை, விரைவுப்படை என அனைவரும் இந்த இயக்கத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த நேரத்தில் நான் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையான NDRFஇன் சூரர்களின் கடினமான உழைப்பு பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். சங்கட வேளைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படையின் திறன், அவர்களின் முனைப்பு உடனடியாக முடிவுகள் எடுத்து சூழ்நிலையை சமாளிக்கும் முயற்சி ஆகியன ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு புதிய சிரத்தையின் மையமாக ஆகியிருக்கிறது. நேற்று தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது, இந்த ஓணம் பண்டிகை தேசத்திற்கு, குறிப்பாக கேரளத்திற்கு சக்தியளிக்க வேண்டும், இந்த பேரிடரின் தாக்கத்திலிருந்து அவர்கள் விரைவாக மேலெழுந்து வரவேண்டும், கேரளத்தின் வளர்ச்சிப் பயணம் அதிவிரைவாக வேண்டும் என்று நாமனைவரும் வேண்டிக் கொள்வோம். ஒருமுறை மீண்டும் நான் நாட்டுமக்கள் அனைவர் தரப்பிலிருந்தும் கேரள மக்களுக்கும், நாடெங்கிலும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பது என்னவென்றால், நாடு முழுமையும் இந்த சங்கடம் நிறைந்த வேளையில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது, துணைவருகிறது என்பது தான்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே! இந்தமுறை நான் மனதின் குரலுக்காக வந்த ஆலோசனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாட்டுமக்கள் எந்த விஷயம் குறித்து அதிகம் எழுதியிருக்கிறார்கள் என்பதை நான் பார்க்க நேர்ந்தது – அது, ‘நம்மனைவருக்கும் பிரியமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்’. காஜியாபாதின் கீர்த்தி, சோனிபத்தைச் சேர்ந்த ஸ்வாதி வத்ஸ, கேரளத்தின் சகோதரர் பிரவீண், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டா. ஸ்வப்ன பேனர்ஜி, பிஹாரின் கடிஹாரைச் சேர்ந்த அகிலேஷ் பாண்டே என ஏராளமானோர் அடல் அவர்களின் வாழ்க்கையின் பன்முகத்தன்மை குறித்து நான் பேச வேண்டும் என்று நரேந்திர மோடி (Narendra Modi Mobile App)செயலியிலும், MyGovஇலும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று தேசமும் உலகமும் அடல் அவர்கள் காலமான செய்தி கேட்டு, சோகத்தில் மூழ்கின. 14 ஆண்டுகள் முன்பாக, பிரதமர் பதவியைத் துறந்தார் அவர். ஒரு வகையில் கடந்த பத்தாண்டுகளாகவே அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்து வந்தார். அவர் செய்திகளில் இடம் பெறவில்லை, பொதுவாழ்விலிருந்து அவர் விலகி வாழ்ந்து வந்தார். புத்தாண்டுகாலம் என்பது மிகப்பெரிய இடைவெளியானாலும், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு, சாமான்ய இந்தியர்களின் மனங்களில் இந்தப் பத்தாண்டு காலம் எந்த இடைவெளியையும் ஏற்படுத்தவில்லை என்று தேசமும், உலகும் கண்கூடாகக் கண்டது. அடல் அவர்களுக்காக வெளிப்பட்ட அன்பு, சிரத்தை, சோகம் ஆகியன தேசத்தில் பெருக்கெடுத்தன, இவை அவரது விசாலமான தனித்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. கடந்த சில நாட்களாகவே அடல் அவர்களின் மிகச் சிறப்பான பரிமாணங்கள் தேசத்தின் முன்பாக வெளிப்பட்டன. மக்கள் அவரை மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக, புரிந்துணர்வுமிக்க எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக, மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட பிரதமராக நினைவு கூர்ந்தார்கள், நினைவு கூர்கிறார்கள். நல்லாட்சி அதாவது good governanceஐ முதன்மை நீரோட்டத்தில் கொண்டு வந்தமைக்காக தேசம் என்றுமே அடல் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும்; ஆனால் நான் இன்று அடல் அவர்களின் பரந்துபட்ட ஆளுமையின் மேலும் ஒரு பரிமாணத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன், அதைத் தொட்டுக் காட்ட விழைகிறேன். அடல் அவர்கள் இந்தியாவிற்கு அளித்த அரசியல் கலாச்சாரம், அதில் மாற்றமேற்படுத்த மேற்கொண்ட முயற்சி, அதை அமைப்புரீதியாக உருவாக்க மேற்கொண்ட முனைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவுக்குக் கிடைத்த ஆதாயம், இனிவரும் நாட்களில் மிகவும் பயனுடையதாக இருக்கும். இது உறுதி. பாரதம் என்றுமே 2003ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 91ஆவது அரசியல் சட்டத்திருத்தத்திற்காக நன்றிக்கடன் பட்டிருக்கும். இந்த மாற்றம் காரணமாக பாரத நாட்டு அரசியலில் இரண்டு மகத்துவம் வாய்ந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
முதலாவதாக, மாநிலங்களின் அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, கட்சித்தாவலுக்கு எதிரான சட்டத்தின்படி, முன்னர் இருந்த மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் என்ற அளவை அதிகரித்து, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் என ஆக்கினார். இதனோடுகூட, கட்சித்தாவலில் ஈடுபடுபவர்களின் உறுப்பினர் பதவியிழப்பை உறுதி செய்யும் தெளிவான நெறிமுறைகள் விதிக்கப்பட்டன.
பல்லாண்டுகளாக இந்தியாவில் பெரிய அளவிலான அமைச்சரவைகளை அமைக்கும் அரசியல் கலாச்சாரம் தான் நிலவி வந்தது, இந்தப் பெரிய பெரிய அமைச்சரவைகள், பணிகளைப் பகிர்ந்தளிக்க அல்ல, அரசியல் தலைவர்களைத் தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டன. அடல் அவர்கள் இந்த நிலையை மாற்றியமைத்தார். அவரது இந்தச் செயல்பாடு காரணமாக பணம், செலவினங்கள் ஆகியவை சேமிக்கப்பட்டன. மேலும் செயல்திறனிலும் முன்னேற்றம் காணப்பட்டது. அடல் அவர்களைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே இது சாத்தியமானது, நமது அரசியல் கலாச்சாரத்தில் ஆரோக்கியமான பாரம்பரியம் தழைக்கத் தொடங்கியது. அடல் அவர்கள் ஒரு உண்மையான தேசபக்தர். அவரது பதவிக்காலத்தில் தான் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாற்றமேற்படுத்தப்பட்டது. முன்பெல்லாம் ஆங்கிலேயர்களின் வழிமுறைப்படி மாலை 5 மணிக்குத் தான் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. 2001ஆம் ஆண்டில் அடல் அவர்கள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தை மாலை 5 மணியிலிருந்து மாற்றி காலை 11 மணி என ஆக்கினார். ’இன்னும் ஒரு சுதந்திரம்’ அடல் அவர்களின் பதவிக்காலத்தில் கிடைத்தது – அது இந்தியக் கொடிச் சட்டம். 2002ஆம் ஆண்டில் இது இயற்றப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட பல விதிமுறைகளின்படி, பொதுவிடங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுவது சாத்தியமானது. இதன் வாயிலாக எண்ணற்ற இந்தியர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் நம் உயிரினும் மேலான மூவண்ணக் கொடியை சாமான்ய மக்களுக்கு வெகு நெருக்கமாக கொண்டு செல்ல முடிந்தது. தேசத்தில் தேர்தல்களாகட்டும், மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான குறைபாடுகளாகட்டும், அவற்றில் தைரியமான முடிவுகளை மேற்கொண்டு அடிப்படை மாற்றங்களை எப்படி அடல் அவர்கள் புகுத்தினார் என்பதை நீங்களே பார்த்தீர்கள், இல்லையா!!! இதைப் போலவே இன்று நாட்டில், மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே வேளையில் தேர்தல்கள் நடத்துவது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாத-பிரதிவாதங்கள் வைக்கப்பட்டு வருவதையும் நம்மால் காண முடிகிறது. இது நல்ல விஷயம் தான், மக்களாட்சி முறைக்கும் இது சுபமான அறிகுறி தான். ஆரோக்கியமான, சிறப்பான மக்களாட்சி முறையை அமைப்பது, நல்ல பாரம்பரியங்களை மலரச் செய்வது, மக்களாட்சி முறையை மேலும் வலுவாக்க தொடர்ந்து முயற்சிகள் செய்வது, விவாதங்களை திறந்த மனதோடு முன்னெடுத்துச் செல்வது ஆகியவை அடல் அவர்களுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறப்பான ஷிரதாஞ்சலியாகும். நிறைவான, வளர்ச்சிமிக்க பாரதம் என்ற அவரது கனவை நனவாக்க நாம் உறுதி ஏற்கும் இந்த வேளையில், நான் அடல் அவர்களுக்கு நம்மனைவரின் சார்பாகவும் ஷிரதாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே! நாடாளுமன்றம் பற்றிய பேச்சு எழும் வேளையில் அவையை முடக்குதல், கூச்சல், ஒத்திவைப்பு ஆகியவை பற்றியே பேசப்படுகிறது. ஆனால் நல்லதாக ஒன்று நடந்தால், அதுபற்றி அதிகம் பேசப்படுவதில்லை. சில நாட்கள் முன்பாக, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மக்களவையின் ஆக்கத்திறன் 118 சதவீதமாகவும், மாநிலங்களவையின் ஆக்கத்திறன் 74 சதவீதமாகவும் இருந்தன என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மழைக்காலக் கூட்டத்தொடரை அதிக பயனுள்ளதாக ஆக்க முயன்றார்கள்; இதன் விளைவாகத் தான் மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளின் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமூக நீதி மற்றும் இளைஞர் நலன் ஆகியவற்றுக்காக என்றுமே நினைவில் கொள்ளத்தக்கவையாக இருக்கும். இந்தக் கூட்டத்தொடரில் இளைஞர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நலன் பயக்கும் மகத்துவம் நிறைந்த பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நாடு இந்த முறை இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை அமைக்கும் உறுதிப்பாட்டை நிறைவேற்றியது, இதற்கு அரசியலமைப்பு அதிகாரம் வழங்கப்பட்டது. சமூகநீதி என்ற நோக்கத்தை அடைய இந்த முன்னெடுப்பு துணை நிற்கும். ஷெட்யூல்ட் வகுப்பினர், ஷெட்யூல்ட் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களின் நலன்களை மேலும் பாதுகாக்கும். மேலும், குற்றம் புரிபவர்களின் கொடுமைகளைத் தடுக்கும், தாழ்த்தப்பட்டவர்களின் மனங்களில் நம்பிக்கை பிறக்கும்.
எந்த ஒரு நாகரீகமான சமூகமும் பெண்சக்திக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் பாதகர்களை தேசம் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை; ஆகையால், நாடாளுமன்றம் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி, கடுமையான தண்டனை விதிக்கப்பட வழி செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகாலசிறைத் தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படும். மத்திய பிரதேசத்தின் மண்டசோரில் உள்ள ஒரு நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இரண்டு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறித்து சில நாட்களுக்கு முன்பாக நீங்கள் படித்திருக்கலாம். இதற்கு முன்பாக, மத்திய பிரதேசத்தின் கட்னீயில் உள்ள ஒரு நீதிமன்றம் வெறும் ஐந்தே நாட்களில் விசாரணையை முடித்து, குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது. ராஜஸ்தானத்திலும் கூட, நீதிமன்றங்கள் இப்படிப்பட்ட வழக்குகளில் தீர்ப்புகளைத் துரிதமாக வழங்கியிருக்கின்றன. இந்தச் சட்டம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுப்பதில் பெருந்துணையாக இருக்கும். சமூக மாற்றமில்லாத பொருளாதார முன்னேற்றம் முழுமையானதாக இருக்காது. மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது; ஆனால் மாநிலங்களவையில் இந்தக் கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற முடியாமல் போனது. நாடு முழுவதும் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு முழு மனதோடு துணை நிற்கிறது என்று நான் இஸ்லாமிய பெண்களுக்கு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன். நாட்டுநலனை முன்னிட்டு நாம் முன்னேறும் போது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சுரண்டப்பட்டோர், வஞ்சிக்கப்பட்டோர் ஆகியவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த முறை அனைவருமாக இணைந்து ஒரு சிறப்பான முன்மாதிரியை ஏற்படுத்தினார்கள். நான் தேசத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே!! இன்றைய நாட்களில் பல கோடி நாட்டுமக்களின் கவனமும் ஜர்தாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மீது இருந்து வருகிறது. ஒவ்வொரு நாள் காலையும் மக்கள் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில், செய்திகளில், சமூக வலைத்தளங்களில் முதலாவதாக பார்ப்பது, எந்த இந்திய வீரர் பதக்கம் வென்றிருக்கிறார் என்பதைத் தான். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. நாட்டிற்காக பதக்கங்கள் வென்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் பாராட்டுகளைத்தெரிவிக்க விரும்புகிறேன். இனிவரும் போட்டிகளில் பங்கெடுக்கவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் என் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்தியாவின் விளையாட்டு வீரர்கள், குறிப்பாக துப்பாக்கிச் சுடும் போட்டி, மல்யுத்தப் போட்டி ஆகியவற்றில் மிகச் சிறப்பான சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள்; ஆனால் நமது செயல்பாடு முன்னர் அத்தனை சிறப்பாக இல்லாத துறைகளான Wushu போட்டி, படகுப் போட்டி ஆகியவற்றிலும்கூட, நமது விளையாட்டு வீரர்கள் பதக்கங்களைப் பெற்று வருகிறார்கள். இவை வெறும் பதக்கங்கள் அல்ல – இந்திய விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விண்ணை முட்டும் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளின் சான்றுகள்… நாட்டிற்காக பதக்கங்கள் வெல்வதில் பெருகிவரும் எண்ணிக்கையில் நமது பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள், இது மிகவும் ஆக்கப்பூர்வமான அறிகுறி. எந்த அளவுக்கு என்றால், பதக்கங்கள் வென்ற இளம் விளையாட்டு வீரர்களில் 15-16 வயதுக்குட்பட்ட நமது இளைஞர்களும் அடங்குவார்கள். இதுவுமே கூட மிக நல்லதொரு அறிகுறி தான். யாரெல்லாம் பதக்கங்கள் வென்றிருக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலானோர் சின்னஞ்சிறிய கிராமங்களில் வசிப்பவர்கள், இவர்கள் தங்களின் கடின உழைப்பினால் இந்த வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று நாம் ‘தேசிய விளையாட்டுகள் தினத்தை’ கொண்டாடவிருக்கிறோம். இந்த வேளையில் நான் அனைத்து விளையாட்டுப் பிரியர்களுக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடவே, ஹாக்கியில் மாயாஜாலம் புரிபவராக கருதப்படும் மகத்தான விளையாட்டு வீரர் தியான்சந்த் அவர்களுக்கு என் ஷிரதாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் விளையாடுங்கள், உங்கள் உடலுறுதியை கருத்தில் கொள்ளுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்; ஏனென்றால் ஆரோக்கியமான பாரதமே நிறைவான, முழுமையான பாரதத்தை நிர்மாணிக்க உதவும். இந்தியா உறுதியாக இருந்தால் மட்டுமே, அதன் எதிர்காலம் பிரகாசமாக இருக்க முடியும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நமது வெற்றியாளர்களுக்கு நான் மீண்டுமொரு முறை பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு, மற்ற விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு என் விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் தேசிய விளையாட்டுகள் தினத்தை முன்னிட்டு என் பலப்பல நல்வாழ்த்துகள்.
‘’ பிரதம மந்திரி அவர்களே வணக்கம்!! நான் கான்பூரிலிருந்து பாவ்னா திரிபாடீ என்ற பொறியியல் மாணவி பேசுகிறேன். பிரதமர் அவர்களே, கடந்த மனதின் குரலில் நீங்கள் கல்லூரி செல்லும் மாணவ மாணவியரிடம் பேசினீர்கள், இதற்கு முன்பாகக் கூட நீங்கள் மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் ஆகியோரிடம் பேசியிருக்கிறீர்கள். செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று வரவிருக்கும் பொறியாளர்கள் தினம் குறித்து, எங்களைப் போன்ற பொறியியல் மாணவ மாணவியரிடத்தில் நீங்கள் பேசினால், எங்கள் மனோபலம் அதிகரிக்கும், எங்களுக்கு அதிக மகிழ்ச்சி உண்டாகும், மேலும் இனிவரும் நாட்களில் தேசத்திற்காக சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எங்கள் மனங்களுக்கு உற்சாகம் கிடைக்கும், நன்றி”
வணக்கம் பாவ்னா அவர்களே, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். நாமனைவரும் செங்கற்களால் வீடுகள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் கட்டுவதைப் பார்த்திருக்கிறோம்; ஆனால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு விசாலமான மலையை, தனிப்பெரும் கல்லாலான ஒற்றை மலையை, ஒரு மிகச் சிறப்பான, பரந்துபட்ட, அற்புதமான கோயிலாக செதுக்கியிருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இது கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டது, ஆனால் இப்படி நடந்திருக்கிறது, அதுவும் இந்தக் கோயில் மகாராஷ்டிரத்தின் எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோயில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடையுள்ள கருங்கல்லாலான ஒரு ஸ்தூபி சமைக்கப்பட்டது என்று உங்களிடம் யாராவது கூறினால், உங்களுக்கு நம்பிக்கையே பிறக்காது, இல்லையா!!! ஆனால், தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தான் கட்டிடக்கலை, பொறியியல் ஆகியவற்றின் நம்ப முடியாத இணைவினைக் காண முடிகிறது. குஜராத்தின் பாடனில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரானீ கீ வாவ்…. இதனைப் பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவார்கள். இந்தியாவின் பூமி பொறியியல் பரிசோதனைக் களமாக இருந்து வந்திருக்கிறது. பாரதத்தில் பல பொறியாளர்கள் தோன்றியிருக்கிறார்கள், இவர்கள் கற்பனையே செய்து பார்க்க முடியாதவற்றை சாதித்திருக்கிறார்கள், பொறியியல் உலகில் அற்புதங்கள் என்று அறியப்படும் எடுத்துக்காட்டுகளை அளித்திருக்கிறார்கள். மகத்தான பொறியாளர்களின் நமது இந்தப் பாரம்பரியத்தில் நமக்குக் கிடைத்த ஒரு ரத்தினம் தான் பாரத ரத்னா டாக்டர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்கள். இவரது செயல்கள் இன்றும் கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டு தானிருக்கிறது. காவிரி நதியின் குறுக்கே இவர் ஏற்படுத்திய கிருஷ்ணராஜ சாகர் அணையின் மூலம் இன்றும் லட்சக்கணக்கான விவசாயிகளும் சாமான்ய மக்களும் பயன் பெற்று வருகிறார்கள். தேசத்தின் இந்த பாகங்களில் இவர் வணங்கப்படுபவராக விளங்கி வருகிறார், தேசமும் இவருக்கு மரியாதையை நெஞ்சார்ந்த வகையில் அளிக்கிறது. இவரது நினைவாகவே செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியை நாம் பொறியாளர்கள் தினமாகக் கடைபிடித்து வருகிறோம். அவர் காட்டிய வழியில் முன்னேறி நமது தேசத்தின் பொறியாளர்கள் உலகம் முழுவதிலும் ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். பொறியியல் உலகின் அற்புதங்கள் பற்றி நாம் பேசும் வேளையில், 2001ஆம் ஆண்டில் குஜராத்தின் கட்ச் பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் ஒரு தன்னார்வமுள்ளத் தொண்டனாக அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இடத்தில் 100 வயதைத் தாண்டிய ஒரு மூதாட்டியை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை கேலி செய்து கொண்டிருந்தார், என்னுடைய வீட்டைப் பார் – கட்ச் பகுதியில் இதை பூங்கா என்று அழைப்பார்கள். அவர் மேலும் கூறுகையில், இந்த என்னுடைய வீடு 3 நிலநடுக்கங்களைப் பார்த்திருக்கிறது. நானுமே 3 நிலநடுக்கங்களை சந்தித்திருக்கிறேன். இதே வீட்டில் தான் அவற்றை உணர்ந்திருக்கிறேன். ஆனால் எங்குமே ஒரு பாதிப்புகூட தென்படாது. இந்த வீட்டை எங்கள் முன்னோர்கள் இயற்கையாக, இங்கிருக்கும் சூழலுக்கு ஏற்ப உருவாக்கியிருக்கிறார்கள் என்றார். அவர் இந்த விஷயத்தை மிகுந்த பெருமிதம் பொங்க என்னிடத்தில் விளக்கிக் கொண்டிருந்தார். பல நூற்றாண்டுகள் முன்னதாகவே அந்தக் காலத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், வட்டார சூழல்களுக்கு ஏற்ற வகையில் எப்படியெல்லாம் கட்டிடங்களைக் கட்டினார்கள், இதன் காரணமாக எப்படி பொதுமக்கள் பாதுகாப்பாக வசிக்க முடிந்தது என்று, அப்போது தான் என் மனதில் உதித்தது. நாம் இன்று பொறியாளர்கள் தினத்தை அனுசரிக்கும் வேளையில், நாம் எதிர்காலத்திற்காக சிந்திக்க வேண்டும். மாறிவரும் காலத்திற்கேற்ப எந்தெந்த புதிய விஷயங்களை கற்க முடியும்? கற்பிக்க முடியும்? இணைப்பு ஏற்படுத்த முடியும்? என்று ஆராய வேண்டும், ஆங்காங்கே பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். இன்று பேரிடர் மேலாண்மை என்பது மிகப் பெரிய பணியாகி விட்டது. இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டுமானப் பொறியியலின் புதிய வடிவம் எப்படி இருக்க வேண்டும், இதனை ஒட்டிய படிப்புகள் என்னவாக இருக்க முடியும், மாணவர்களுக்கு என்ன கற்பிக்கலாம், சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானங்கள் எப்படி இருக்க வேண்டும், உள்ளூரில் கிடைக்கும் பொருள்களின் மதிப்புக்கூட்டல் வாயிலாக கட்டுமானத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது, கழிவுகளே இல்லாத நிலையை எப்படி உருவாக்குவது என்பன போன்ற பல விஷயங்களைப் பற்றி நாம் இன்று பொறியாளர்கள் தினத்தை அனுசரிக்கும் வேளையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
என் மனம் நிறை நாட்டு மக்களே!! பண்டிகைகளின் சூழல் நிலவி வருகிறது, தீபாவளிக்கான தயாரிப்புகள் தொடங்கி விட்டன. மனதின் குரலில் நாம் சந்தித்தபடி இருப்போம், மனம் திறந்து பேசிக் கொண்டிருப்போம், நமது மனங்கள் வாயிலாக தேசத்தை முன்னெடுத்துச் செல்வோம், ஒற்றுமையாக இருப்போம். இந்த உணர்வோடு, உங்கள் அனைவருக்கும் என் பலபல நல்வாழ்த்துகள். நன்றி. மீண்டும் சந்திப்போம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். பல இடங்களில் இப்போது நல்ல மழை பெய்திருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அதிகமழை காரணமாக கவலைதரும் வகையிலும் செய்திகள் வந்திருக்கின்றன, அதேபோல சில இடங்களில் இப்போதும் மக்கள் மழைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதத்தின் விசாலத்தன்மை, பன்முகத்தன்மை ஒருபுறமிருந்தாலும், சில வேளைகளில் மழையும் தன் பாரபட்சத்தைக் காட்டி விடுகிறது. ஆனால் நாம் ஏன் மழையைக் குறை கூற வேண்டும்? மனிதன் தானே இயற்கையோடு மோதல் போக்கை மேற்கொண்டிருக்கிறான்!! இதன் விளைவாகவே சில வேளைகளில் இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால் நாம் இயற்கைப் பிரியர்களாக வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும், இயற்கையைப் பேண வேண்டும் என்பது நமது பொறுப்பாக ஆக வேண்டும், அப்போதுதான் இயற்கையின் கொடைகளில் தாமாகவே ஒரு சீர்நிலை ஏற்பட்டு விடும்.
சில நாட்கள் முன்பாக நடந்த இயற்கைப் பேரிடர் சம்பவம் ஒன்று உலகம் முழுவதின் கவனத்தையும் ஈர்த்தது, மனித சமுதாயத்தை உலுக்கியது. தாய்லாந்தில் கால்பந்தாட்டம் ஆடும் 12 சிறுவர்களின் குழுவும் அவர்களின் பயிற்றுநரும் சுற்றிப் பார்க்க ஒரு குகைக்குச் சென்றதை நீங்கள் எல்லோரும் டிவியில் பார்த்திருக்கலாம். பொதுவாக அந்த குகைக்குள் நுழைந்து வெளியே வர சில மணிநேரம் பிடிக்கும். ஆனால் அன்று விதியின் விளையாட்டு வேறுவிதமாக இருந்தது. அவர்கள் குகையின் உள்ளே வெகுதூரம் சென்ற பிறகு, திடீரென்று அடைமழை காரணமாக குகையின் வாயிற்பகுதியில் கணிசமாக நீர் தேங்கி விட்டது. அவர்கள் வெளியேறும் வழி அடைபட்டுப் போனது. எந்தவழியும் புலப்படாத காரணத்தால் குகைக்குள்ளே ஒரு சிறிய பாறைமீது, ஒரு நாள் அல்ல இருநாட்கள் அல்ல, 18 நாட்கள் வரை தங்கினார்கள். கண்களுக்கு எதிரே மரணம் தாண்டவமாடும் நேரத்தில், அந்தச் சின்னஞ்சிறுவர்கள் ஒவ்வொரு கணத்தையும் கழிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் சற்றே கற்பனை செய்து பாருங்கள்!! ஒருபுறத்தில் பெருஞ்சங்கடத்தில் சிக்கியிருந்தார்கள் அவர்கள், மறுபுறத்தில் மனித சமுதாயம் முழுவதும் ஒன்றுபட்டு, இறைவனளித்த மனிதத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. உலகெங்கிலும் இருந்தும் மக்கள் இந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே கொண்டுவர வேண்டும் என்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள். குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது தொடர்பான அனைத்துவித முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். மீட்புப் பணிகள் சரியான வேளையில் நடைபெறவில்லை என்றால், பருவமழைக் காலம் முடியும் வரை அவர்களை மீட்பது என்பது இயலாத காரியமாகி விடும். ஆனால் நல்லசெய்தி வந்தவுடன் உலகம் முழுமையும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டது, மகிழ்ச்சி நிறைந்தது; ஆனாலும் இவையனைத்திலிருந்தும் ஒரு விஷயம் என் மனதை ஈர்த்தது, முடுக்கி விடப்பட்ட அந்த செயல்பாடு தான். ஒவ்வொரு நிலையிலும் உணரப்பட்ட பொறுப்பு அற்புதமான விஷயம். அனைவரும் – அரசாகட்டும், குழந்தைகளின் பெற்றோராகட்டும், அவர்களின் உறவினர்களாகட்டும், ஊடகங்கள் ஆகட்டும், நாட்டின் குடிமக்களாகட்டும் – அனைவரும் அமைதியாகவும், உறுதியாகவும், அற்புதமான நடத்தையை வெளிப்படுத்தினார்கள். அனைவரும் ஓரணியாகத் திரண்டு நின்று நோக்கத்தை நிறைவேற்றினார்கள். அனைவரும் ஒழுங்குமுறையைக் கைக்கொண்டதைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன். பெற்றோருக்கு வருத்தம் இருக்காது என்பதோ, அன்னையின் கண்களில் கண்ணீர் பெருகாது என்பதோ அல்ல; ஆனால் மனவுறுதியும், கட்டுப்பாடும், ஒட்டுமொத்த சமூகத்தின் அமைதியான செயல்பாடும் அனைவரும் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள். இந்த ஒட்டுமொத்தச் செயல்பாடுகளிலும் கடற்படை வீரர் ஒருவர் உயிர்த்தியாகம் புரிய வேண்டியும் இருந்தது. இத்தனை கடினமான சூழ்நிலைகளைத் தாண்டி, நீர் நிறைந்த ஒரு இருண்ட குகையில் இத்தனை சாகசத்தையும் நெஞ்சுரத்தையும் வெளிப்படுத்திய அதே வேளையில் அந்தச் சிறுவர்கள் நம்பிக்கையைத் தளர விடாமல் இருந்ததைப் பார்த்து உலகம் முழுவதும் வியப்பில் ஆழ்ந்தது. மனித சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கும் போது, அற்புதங்கள் நடக்கின்றன என்பதையே இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் நாம் அமைதியாகவும், திடமனதுடையவர்களாகவும் இருந்து இலக்கையே குறி வைத்து, அதன்பொருட்டு அயராது பணியாற்ற வேண்டும் என்பதே தேவையாக இருக்கிறது.
கடந்த சில தினங்கள் முன்பாக நமது தேசத்தின் பிரியமான கவிஞர் நீரஜ் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்றார். அவரிடத்தில் ஒரு சிறப்புத்தன்மை உண்டு – நம்பிக்கை, தன்னம்பிக்கை, மனவுறுதி ஆகியன. நீரஜ் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இந்தியர்களான நமக்கெல்லாம் அதிக சக்தி அளிக்கும், உத்வேகம் அளிக்கும். அவரது சில வரிகள் இதோ –
இருள் கண்டிப்பாக விலகியே தீரும்,
புயல்கள் நம்மீது ஏவப்படட்டும்,
மின்னல்களால் அவர்கள் தாக்கட்டும்,
தீபம் ஏற்றினால் போதும், இருள் கண்டிப்பாக விலகியே தீரும்.
நீரஜ் அவர்களுக்கு நான் மரியாதை கலந்த எனது அஞ்சலிகளைக்
காணிக்கையாக்குகிறேன்.
வணக்கம் பிரதமர் அவர்களே, என் பெயர் சத்யம். நான் தில்லி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு சேர்ந்திருக்கிறேன். எங்கள் பள்ளியின் பொதுத் தேர்வுக்காலத்தின் போது, நீங்கள் தேர்வுக்கால அழுத்தம், கல்வி போன்றவை பற்றி எங்களுடன் பேசியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என்போன்ற மாணவர்களுக்குத் இப்போது தாங்கள் அளிக்கும் செய்தி என்ன?
ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் விவசாயிகளுக்கும், அனைத்து இளைஞர்களுக்கும் மிக மகத்துவம் நிறைந்த மாதங்கள். ஏனென்றால் இந்த மாதங்கள் தாம் கல்லூரிகளின் உச்ச பருவமாக (peak season) இருக்கின்றன. சத்யம் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் பள்ளியிலிருந்து வெளிப்பட்டு, கல்லூரிகளில் சேர்கிறார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்கள் தேர்வுகள், வினாத்தாள்கள், விடைத்தாள்களுக்கானவை என்றால், ஏப்ரல்-மே மாதங்கள் விடுமுறையில் உல்லாசமாக இருப்பதோடு, தேர்வுமுடிவுகளுக்கானவை, வாழ்க்கையில் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிப்பவை, எந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்பவையாக இருக்கின்றன. ஜூலை மாதத்தில் தான் இளைஞர்களின் குவிமையம் வினாக்களிலிருந்து விலகி, கட் ஆப் (cut-off) மதிப்பெண்கள் மீது செல்கிறது, இது மிக முக்கியமான ஒரு காலகட்டம். மாணவர்களின் கவனம் வீட்டிலிருந்து விலகி மாணவர்கள் விடுதிமீது செல்கிறது. மாணவர்கள் பெற்றோரின் குடையிலிருந்து விலகி பேராசிரியர்களின் குடையின்கீழ் இணைகிறார்கள். என்னுடைய இளைய நண்பர்கள், கல்லூரி வாழ்க்கையைத் தொடங்குவது தொடர்பாக மிகவும் உற்சாகத்தோடு இருப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். முதன்முறையாக வீட்டை விட்டு வெளியேறி, கிராமத்தை விட்டு வெளிப்பட்டு, ஒரு பாதுகாப்பான சூழலை விட்டு அகன்று, தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்ளத் தொடங்கும் வேளை இது. இத்தனை இளைஞர்களும் முதன்முறையாக தங்கள் இல்லங்களை விட்டு விலகி, தங்கள் வாழ்க்கைக்கென ஒரு புதிய திசையை அமைத்துக் கொள்ள வெளிப்பட்டிருக்கிறார்கள். பல மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் சேர்ந்து கொண்டிருப்பார்கள், சிலர் இணையவிருப்பார்கள். உங்களிடத்தில் நான் கூற விரும்புவதெல்லாம், அமைதியாக இருங்கள், வாழ்க்கையில் உங்கள் உள்மனதை முழுமையாக அனுபவியுங்கள், புத்தகங்கள் இன்றியமையாதன என்பதில் ஐயமில்லை, படிப்பது முக்கியம் தான், அதே வேளையில் புதிய புதிய விஷயங்களைத் தேடும் இயல்பையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களுக்கென பிரத்யேகமானதொரு மதிப்பு இருக்கிறது. சிறுவயதுத் தோழர்கள் மிகவும் மதிப்பு நிறைந்தவர்கள், அதே வேளையில் புதிய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, பழகுவது, நட்பைத் தொடர்வது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய புத்திசாலித்தனமான நடவடிக்கை. சில புதிய விஷயங்களைக் கற்கலாம், சில புதிய திறன்கள், புதிய மொழிகள்….. வீட்டைவிட்டு வெளியேறி, வேறோர் இடத்திற்குப் படிக்கச் சென்றவர்கள், அந்த இடங்களை ஆராயலாம், அவை பற்றித் தெரிந்து கொள்ளலாம், அங்கிருக்கும் மக்கள், மொழி, கலாச்சாரம், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று அவற்றைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். புதிய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் என் நல்வாழ்த்துகள். கல்லூரிப் பருவம் பற்றிப் பேசும் வேளையில், மத்திய பிரதேசத்தில் மிகவும் ஏழ்மைநிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவரான ஆஷாராம் சவுத்ரி வாழ்க்கையின் கடினமான சவால்களைக் கடந்து வெற்றியை அடைந்திருக்கிறார் என்ற செய்தி தெரிய வந்தது. அவர் ஜோத்புர் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் மருத்துவநுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவரது தகப்பனார் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து தனது குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். அவரது இந்த வெற்றிக்காக நான் அவருக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட எத்தனை எத்தனையோ ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மோசமான சூழ்நிலைகளைத் தாண்டித் தங்களது அயராத முயற்சி, முனைப்பு காரணமாக சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அது தில்லி போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலைபார்ப்பவரின் மகன் பிரின்ஸ் குமார் ஆகட்டும், கொல்காத்தாவின் தெருவிளக்குகளின் அடியிலமர்ந்து படித்துத் தேர்ச்சி பெற்ற அபய் குப்தாவாகட்டும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் அகமதாபாதைச் சேர்ந்தவருடைய பெண் ஆஃப்ரீன் ஷேக்காகட்டும்……. இவர்களின் சாதனைகள் நமக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன
நாக்பூரைச் சேர்ந்த குஷியின் தகப்பனார் பள்ளிப் பேருந்தில் ஓட்டுநராக இருக்கிறார், அரியானாவைச் சேர்ந்த கார்த்திக்கின் தந்தை காவல்காரராக இருக்கிறார், ஜார்க்கண்டின் ரமேஷ் சாஹூவின் தகப்பனார் செங்கல் சூளையில் பணிபுரிகிறார். மாணவன் ரமேஷேகூட, திருவிழாவில் விளையாட்டுச் சாமான்களை விற்பனை செய்து வருகிறார்; அதேபோல குட்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணான அனுஷ்கா பாண்டா, பிறந்ததிலிருந்தே spinal muscular atrophy என்ற தண்டுவட செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்….. இவர்கள் அனைவரும் மனவுறுதியின் துணைக்கொண்டு, நம்பிக்கையை மனதில் தாங்கித் தடைகளைத் தகர்த்து எறிந்தவர்கள், உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சாதனைகள் படைத்தவர்கள். நம்மருகே நாம் சுற்றிப் பார்த்தோமேயானால் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் நமக்குத் தெரியவரும்.
தேசத்தின் ஏதோவொரு மூலையில் நடக்கும் ஏதோ ஒரு நல்ல சம்பவமும், என் மனதில் ஆற்றலை நிரப்பி விடுகிறது, உத்வேகம் அளித்து விடுகிறது; இத்தகைய இளைஞர்கள் பற்றிக் கூறும் வேளையில் நீரஜ் அவர்களைப் பற்றிய விஷயத்தை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன், இது தான் வாழ்க்கையின் பொருள். நீரஜ் அவர்களின் கவிதை வரிகள் இதோ –
பூமியின் பாடலை வானம் கேட்கச் செய்ய விரும்புகிறேன்
இருளனைத்தையும் ஒளிக்கு அழைக்க விரும்புகிறேன்
வாளின் கொடுமையை மலர்களால் அகற்ற விரும்புகிறேன்
என் பாடலால் மலைகளை துயிலெழுப்ப விரும்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக என் கண்கள் ஒரு செய்தியின் மீது சென்றது, ‘இரண்டு இளைஞர்கள் மோடியின் கனவை நனவாக்கினார்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதை மேலும் விரிவாகப் படிக்கும் போது, எப்படி இன்று நமது இளைஞர்கள் தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி, சாமான்ய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது புரிய வந்தது. ஒருமுறை தொழில்நுட்ப மையமாக அறியப்படும் அமெரிக்காவின் சான் ஜோஸ் (San Jose) நகரத்தில், இந்திய இளைஞர்களுடன் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். தங்களது திறன்களை எப்படி இந்தியாவுக்காக அவர்கள் பயன்படுத்த முடியும் என்பது குறித்து நேரம் எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்று அவர்களிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். அறிவும் திறமையும் அயல்நாடுகளுக்கு வெளியேறுவதை, தாய்நாட்டுக்குப் பயன்படுமாறு எப்படிச் செய்வது என்பது தொடர்பாக வேண்டுகோள் விடுத்தேன். ராய்பரேலியைச் சேர்ந்த 2 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களான யோகேஷ் சாஹூ அவர்களும், ரஜனீஷ் வாஜ்பேயி அவர்களும் எனது இந்த சவாலை ஏற்றுக் கொண்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டார்கள்.
தங்களுடைய தொழில் திறன்களைப் பயன்படுத்தி யோகேஷ் அவர்களும் ரஜனீஷ் அவர்களும் இணைந்து SmartGaon App, புத்திசாலித்தனமான கிராமங்கள் என்ற செயலியை உருவாக்கினார்கள். இந்தச் செயலி கிராமத்தவர்களை உலகோடு இணைப்பதோடு, எந்தவொரு தகவலையும், விஷயத்தையும் தங்கள் மொபைலிலேயே பெற வழிவகை செய்கிறது. ரேபரேலியின் தவுதக்புர்வாசிகள், பஞ்சாயத்துத் தலைவர், மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் என அனைவரும் இந்த செயலியைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்தச் செயலி கிராமத்தில் ஒருவகையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் செயலைப் புரிந்து வருகிறது. கிராமத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை இந்தச் செயலி வாயிலாகப் பதிவு செய்வது, அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வது, கண்காணிப்பது ஆகியன எல்லாம் சுலபமாகி விட்டன. இந்தச் செயலியில் கிராமத்தின் தொலைபேசி அட்டவணை, செய்திப் பிரிவு, நிகழ்ச்சிகள் பட்டியல், மருத்துவ மையம், தகவல் மையம் ஆகியன இருக்கின்றன.
இந்தச் செயலி விவசாயிகளுக்கும் மிகவும் பயனுடையதாக இருக்கிறது; செயலியின் சிறப்பு அம்சம், விவசாயிகளுக்கு உண்மையான விலை நிலவரத்தைத் தெரிவிக்கிறது; இது ஒருவகையில் அவர்களுடைய விளைபொருட்களுக்கு சந்தையைப் போலச் செயல்படுகிறது. இந்த நிகழ்வை நீங்கள் நுணுக்கமாகப் பார்த்தால், இந்த இளைஞர்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு, அங்கே வாழ்க்கைமுறை, எண்ணப்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவை விட்டு வெளியேறினாலும், தங்களது கிராமத்தை நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார்கள், சவால்களைப் புரிந்து கொள்கிறார்கள், தங்கள் கிராமத்தோடு உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறார்கள். இந்தக் காரணத்தால், கிராமத்தின் தேவைகளை நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட முடிந்திருக்கிறது. தங்களுடைய கிராமம், தங்கள் வேர்கள் ஆகியவற்றோடு ஒரு பிடிப்பு, தங்கள் தாய்நாட்டுக்காக எதையாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்ற தாகம், ஒவ்வொரு இந்தியனுக்குள்ளேயும் இயல்பாகவே இருக்கிறது. ஆனால் சில வேளைகளில் காலத்தின் கட்டாயம், தொலைவுகள், சூழ்நிலைகள் ஆகியன காரணமாக இந்த உணர்வு சற்று மங்கிக் காணப்படுகிறது; இதில் சற்று தீப்பொறியைப் பற்ற வைத்தால், இந்த உணர்வு உடனே பற்றிக் கொண்டு, கடந்துபோன தினங்களை நோக்கி அவர்களை தானாகவே இழுத்துக் கொண்டு வருகிறது. நமக்கும் இதுபோல நடந்திருக்கிறதா என்று நாம் சற்று உள்நோக்கிப் பார்க்கலாமே – நிலைமைகள், சூழ்நிலைகள், தொலைவுகள் ஆகியன நம்மை விலக்கி வைக்கவில்லையே, நம்மீது தூசு ஏதும் படிந்து விடவில்லையே!! கண்டிப்பாக சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே!!
‘மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு வணக்கங்கள். நான் சந்தோஷ் காக்டே, மகாராஷ்ட்ரத்தின் கோலாபுரிலிருந்து பேசுகிறேன். பந்தர்புரின் வாரீ என்பது மகாராஷ்ட்ரத்தின் பழமையான பாரம்பரியம். ஒவ்வொரு ஆண்டும் இது மிகப்பெரிய உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 7-8 லட்சம் பக்தர்கள் இதில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இந்த வித்தியாசமான ஏற்பாடு பற்றி நாட்டு மக்கள் அனைவரும் நன்க அறிய வேண்டும் என்பதன் பொருட்டு நீங்கள் வாரீ பற்றிய தகவல்களை அளிக்குமாறு வேண்டுகிறேன்’.
சந்தோஷ் அவர்களே உங்கள் தொலைபேசி அழைப்பிற்காக மிக்க நன்றி. உண்மையிலேயே பண்டர்புரின் வாரீ என்பது ஒரு அற்புதமான யாத்திரை தான். நண்பர்களே, ஆடி மாத ஏகாதசி இந்த முறை ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பண்டர்புரின் வாரீ மிகச் சிறப்பான வகையில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்ரத்தின் சோலாபுர் மாவட்டத்தில் பண்டர்புர் புனிதமான நகரம். ஆடி ஏகாதசியன்று சுமார் 15-20 நாட்கள் முன்னதாகவே வார்க்கரீ அதாவது யாத்ரீகர்கள் பல்லக்குகளுடன் பண்டர்புருக்கு புனித யாத்திரையின் பொருட்டு நடந்து வருகிறார்கள். இந்த யாத்திரையை வாரீ என்று அழைக்கிறார்கள்; இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கெடுக்கிறார்கள். ஞானேஷ்வர் ஸ்வாமிகள், துக்காராம் ஸ்வாமிகள் போன்ற மகான்களின் பாதுகைகளைப் பல்லக்கில் வைத்து, விட்டல்-விட்டல் என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும், வாத்தியங்கள் இசைத்துக் கொண்டும் பண்டர்புரை நோக்கி நடந்து வருகிறார்கள். இந்த வாரீ கல்வி, பண்பாடு, சிரத்தை ஆகியவற்றின் முக்கூடல். தீர்த்த யாத்ரீகர்கள் விட்டோபா அல்லது பாண்டுரங்கன் என்று அழைக்கப்படும் விட்டல் பகவானை தரிசனம் செய்ய அங்கே வந்தடைகிறார்கள். விட்டல் பகவான் ஏழைகள், மறுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பவர். மகாராஷ்ட்ரம், கர்நாடகம், கோவா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களிடம் சிரத்தையும் பக்தியும் நிரம்பி இருக்கிறது. பண்டர்புரின் விட்டோபா கோவிலுக்குச் செல்லுதல், அதன் மகிமை, அழகு, ஆன்மிக ஆனந்தம் என்பன எல்லாம் மிக அலாதியான அனுபவங்கள். மனதின் குரல் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், ஒருமுறை பண்டர்புர் வாரியை அனுபவித்துப் பாருங்கள் என்பது தான். ஞானேஷ்வர் ஸ்வாமிகள், நாமதேவர், ஏக்நாதர், ராமதாஸ் ஸ்வாமிகள், துக்காராம் ஸ்வாமிகள் என எண்ணிலடங்கா மகான்கள் இன்றும் மகாராஷ்ட்ரத்தின் சாமான்ய மக்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றார்கள். மூடநம்பிக்கைக்கு எதிராக போராடும் வல்லமையை அளித்து வருகிறார்கள், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இந்த மகான்களின் பாரம்பரியம் உத்வேகம் அளித்து வருகிறது. பாருட் பாடல் வகையாகட்டும், அபங்காகட்டும், நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மகத்துவம் பற்றிய மகத்தான செய்தி நமக்குக் கிடைக்கிறது. மூடநம்பிக்கைக்கு எதிராக சிரத்தையுடன் சமூகம் போராடுவதற்குத் திறவுகோலான மந்திரம் கிடைக்கிறது. இவர்கள் தாம் அவ்வப்போது சமூகத்தைத் தட்டி, உருட்டி, அதில் உள்ள கசடுகளைப் புரிய வைத்து விழிப்புணர்வை எழுப்பினார்கள். கருணை, சமத்துவம், தூய்மை ஆகியன நமது இயல்பாக ஆக வேண்டும் என்பதைப் புரிய வைத்தார்கள். நமது பாரத பூமி பல ரத்தினங்கள் வாய்க்கப் பெற்றது; இறைவனின் காலடியில் தங்களைக் காணிக்கையாக்கிய மகான்களின் மகத்தான பாரம்பரியம் எப்படி நமது தேசத்தில் இருந்ததோ, அதேபோல பாரத மாதாவின் தாள்களில் தங்களை அர்ப்பணித்த மகத்தான மனிதர்களும் இருந்தார்கள், தங்கள் இன்னுயிரை அவளுக்கு அவர்கள் காணிக்கையாக்கினார்கள். இப்படிப்பட்ட மகத்தான மனிதர் தான் லோக்மான்ய திலகர்; இவர் பல இந்தியர்களின் மனதில் நீங்காத முத்திரையைப் பதித்திருக்கிறார். ஜூலை மாதம் 23ஆம் தேதியை நாம் திலகரின் பிறந்த நாளாகக் கொண்டாடும் அதே வேளையில், ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியன்று அவரது நினைவு நாளைக் கடைப்பிடிக்கிறோம். லோகமான்ய திலகர் சாகசமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தவறுகளை நேருக்கு நேராகச் சுட்டிக் காட்டும் சக்தியும் புத்திக்கூர்மையும் அவரிடத்தில் நிரம்பி இருந்தன. 20 ஆண்டுகளில் அவர்மீது 3 முறை ராஜதுரோகக் குற்றச்சாட்டைச் சுமத்தும் அளவுக்கு ஆங்கிலேயர்கள் திலகரிடத்தில் அச்சம் கொண்டிருந்தார்கள், இது ஒன்றும் சிறிய விஷயம் அல்ல. லோகமான்ய திலகரையும், அகமதாபாத்தில் இருக்கும் அவரது திருவுருவச் சிலையையும் இணைக்கும் சுவாரசியமான சம்பவத்தை இன்று நான் நாட்டு மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1916ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்…. லோகமான்ய திலகர் அகமதாபாத் வந்திருந்த வேளையில், அந்தக் காலகட்டத்தில், அதாவது இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகள் முன்பாக, 40,000த்திற்கும் அதிகமானோர் அவருக்கு அகமதாபாதில் வரவேற்பு அளித்தார்கள். இந்த யாத்திரையின் போது, சர்தார் வல்லப்பாய் படேலுக்கு அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. சர்தார் வல்லப்பாய் படேல், லோகமான்ய திலகரால் மிகவும் ஈர்க்கப்பட்டார். 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியன்று லோக்மான்ய திலகர் மறைந்த போது, அவருக்கு நினைவுச் சின்னம் அமைப்பது என்று படேல் அவர்கள் உறுதி பூண்டார். சர்தார் வல்லப்பாய் படேல் அகமதாபாத் நகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உடனடியாக அவர் லோக்மான்ய திலகரின் நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த இங்கிலாந்து மகாராணியின் பெயரால் விளங்கிய விக்டோரியா கார்டனைத் தேர்ந்தெடுத்தார். உள்ளபடியே ஆங்கிலேயர்கள் இந்தச் செயலைக் கண்டு வெகுண்டனர், அதனால் ஆட்சித்தலைவர் இதற்கான அனுமதி அளிக்கத் தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால் சர்தார் அவர்கள், சர்தார் அல்லவா? தனது பதவியைத் துறக்க நேர்ந்தாலும் சரி, லோக்மான்ய திலகரின் திருவுருவச் சிலையை அங்கேதான் அமைப்பேன் என்று சர்தார் விடாப்பிடியாகத் தெரிவித்தார். கடைசியில், திருவுருவச் சிலை தயாராகிய நிலையில், அதை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று யாரைக் கொண்டு வைத்தார் தெரியுமா? காந்தியடிகளின் கரத்தால் திறக்கச் செய்தார் சர்தார் படேல். மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தத் திறப்பு விழாவில் உரையாற்றிய காந்தியடிகள், சர்தார் படேல் பதவியேற்ற பிறகு அகமதாபாத் நகராட்சிக்கு ஒரு நல்ல மனிதர் மட்டும் கிடைக்கவில்லை, நெஞ்சுரமும் கிடைத்திருக்கிறது, இதன் காரணமாகத் தான் திலகரின் திருவுருவச் சிலை அமைக்க முடிந்திருக்கிறது என்றார். எனது பிரியமான நாட்டுமக்களே, இந்த திருவுருவச் சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திருவுருவச் சிலை மிகவும் அபூர்வமான ஒன்று, இதில் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார். சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று அதனடியில் பொறிக்கப்பட்டிருக்கிறது…. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலகட்டம் பற்றித் தான் நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். லோகமான்ய திலகரின் முயற்சிகள் காரணமாகவே, சமூகரீதியிலான கணேச உற்சவத்தைக் கொண்டாடும் பாரம்பரியம் உண்டானது. மக்களனைவரும் பங்கேற்கும் இந்த கணேச உற்சவம், பாரம்பரிய முறைப்படி, சிரத்தையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் அதே வேளையில், சமூக விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த செயல்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை முன்னெடுத்துச் செல்ல இது வல்லமைமிக்க ஒரு கருவியாக மாறியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு ஈடுபட, இந்தக் கொண்டாட்டங்கள் சாதி, சம்பிரதாயத் தடைகளைத் தகர்த்தன, ஒற்றுமைக்கு வழிகோலின. காலத்திற்கேற்ப இந்தக் கொண்டாட்டங்களின் புகழ் அதிகரித்துக் கொண்டே வந்தது. நமது பழமையான பாரம்பரியமும் சரித்திரத்தின் நமது வீரம் நிறைந்த நாயகர்கள் குறித்து இன்றும் நமது இளைய சமுதாயத்தில் பெரும் ஈர்ப்பு இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இன்று பல நகரங்களின் கிட்டத்தட்ட அனைத்துத் தெருக்களிலும் விநாயகரை ஆராதிக்கும் பந்தல்களை நம்மால் காண முடிகிறது. அந்தந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் அனைத்தும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்தப் பணிகளை குழுவாக இணைந்து செய்கிறார்கள். இது நமது இளைஞர்களுக்கு பொன்னான சந்தர்ப்பம்; இங்கே தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன் போன்ற குணங்களைக் கற்க முடிகிறது, அவற்றை நமக்குள்ளே மேலும் மலரச் செய்ய முடிகிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் கடந்த முறையும் கேட்டுக் கொண்டிருந்தேன், இப்போது லோகமான்ய திலகரை நினைவிலேற்றிக் கொள்ளும் வேளையிலும் வேண்டிக் கொள்கிறேன்…… இந்தமுறையும் நாம் விநாயகர் உற்சவத்தைக் கொண்டாடுவோம், பிரமாதமாகக் கொண்டாடுவோம், மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாடுவோம் ஆனால், சூழலுக்கு நேசமான வகையில் கணேச உற்சவத்தைக் கொண்டாட வேண்டிக் கொள்கிறேன். விநாயகரின் திருவுருவத்தை அலங்கரிப்பது தொடங்கி அனைத்துப் பொருட்களும் சூழலுக்கு நேசமான வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு நகரிலும் சூழலுக்கு நேசமான கணபதி உற்சவத்தை முன்னிட்டு பிரத்யேகமான போட்டிகள் நடக்கட்டும், இவற்றில் பரிசுகள் கொடுக்கப்படட்டும், மைகவ் தளத்திலும் (MyGov), நரேந்திர மோடி செயலியிலும் (NarendraModiApp)இலும் சூழலுக்கு நேசமான விநாயகர்
கொண்டாட்டங்கள் பற்றிய பரவலான பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நான் கண்டிப்பாக உங்களின் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்வேன். லோகமான்ய திலகர் நாட்டுமக்களின் தன்னம்பிக்கையை விழிப்படையச் செய்தார், அவரளித்த மந்திரம் – சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, இதை நான் அடைந்தே தீருவேன் என்பது தான். ஒவ்வொரு இந்தியனையும் நல்லாட்சியும், வளர்ச்சியின் நற்பயன்களும் சென்று சேர வேண்டும். இதுதான் புதிய பாரதத்தை நிர்மாணிக்கும். திலகர் பிறந்து 50 ஆண்டுகள் கழித்து அதே நாளன்று அதாவது ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று பாரத அன்னையின் மற்றுமொரு சத்புத்திரன் பிறந்தார். இவர் நாட்டுமக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும்
என்பதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நான் சந்திரசேகர ஆசாத் அவர்களைப் பற்றித் தான் கூறிக் கொண்டிருக்கிறேன். பாரதத்தின் எந்த இளைஞன் தான் உத்வேகமளிக்கும் இந்த வாக்கியங்களால் ஈர்க்கப்படாதவனாக இருப்பான் –
‘सरफ़रोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है ज़ोर कितना बाज़ु-ए-कातिल में है’
புரட்சி தாகம் எங்களது இதயங்களில் தகிக்கிறது,
எதிரிகளின் ஆற்றலை ஒருகை பார்த்து விடுவோம்.
இந்தக் கவிதை வரிகள் தாம் அஷ்ஃபக்குல்லா கான், பகத் சிங், சந்திரசேகர ஆஸாத் போன்ற பல இளைஞர்களுக்கு கருத்தூக்கமாக அமைந்தன. சந்திரசேகர ஆசாதின் தீரமும், சுதந்திர வேட்கையும், அவரது மனவுறுதியும் பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தன. ஆசாத் அவர்கள் தனது உயிரைப் பணயம் வைத்தார், ஆனால் அந்நிய ஆட்சியிடம் தலைவணங்கவில்லை. மத்திய பிரதேசத்தில் சந்திரசேகர ஆசாதின் கிராமமான அலீராஜ்புருக்கு செல்லும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. அலகாபாதில் சந்திரசேகர ஆசாத் பூங்காவில் மலரஞ்சலிகளை அர்ப்பணம் செய்யும் பெரும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. சந்திரசேகர ஆஸாத் எத்தகைய மாமனிதர் என்றால், அந்நியரின் தோட்டாக்களுக்கு இரையாக அவர் விரும்பவில்லை – வாழ்ந்தால் சுதந்திரத்துக்காகப் போராடுவேன், இறந்தால் சுதந்திரமாகவே இறப்பேன் என்று கருதினார், இதுவே அவரது சிறப்புத்தன்மை. ஒருமுறை மீண்டும் பாரத அன்னையின் இந்த இரண்டு மகத்தான சத்புத்திரர்களுக்கு – லோக்மான்ய திலகர், சந்திரசேகர ஆசாத் இருவருக்கும் சிரத்தையுடனான என் நினைவஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
சில நாட்கள் முன்பாகத்தான் ஃபின்லாந்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பாரதத்தின் வீராங்கனையும், விவசாயியின் மகளுமான ஹிமா தாஸ், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். தேசத்தின் மேலும் ஒரு பெண்மணியான ஏக்தா பயான், எனது கடிதத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து மின்னஞ்சல் வாயிலாக எழுதியிருக்கிறார், இப்போது அவர் அங்கே ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார். “எந்த ஒரு தடகள வீரரின் வாழ்க்கையிலும் மிகவும் மகத்துவம் வாய்ந்த கணம் என்றால், அது உலக மேடையில் மூவண்ணக் கொடியைக் கைகளில் பிடிப்பது தான், இதை நான் செய்து காட்டியிருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது” என்று ஏக்தா தனது மின்ஞசலில் தெரிவித்திருந்தார். ஏக்தா, உங்களை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். துனிசியாவில் (Tunisia) மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகளப்போட்டியான கிராண்ட் பிரீ (Grand Prix) 2018இல் ஏக்தான் தங்கம், வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றிருக்கிறார். அவர் மாற்றுத்திறன் என்ற சவாலையே தனது வெற்றிக்கான சாதனமாக மாற்றிக் கொண்டார் என்பது தான் அவரது சாதனை. 2003இல் நடந்த சாலை விபத்து காரணமாக, ஏக்தா பயான் அவர்களின் உடலின் கீழ்ப்பகுதி அங்கங்கள் செயலற்றுப் போயின என்றாலும், இவர் நெஞ்சுரத்தை இழக்கவில்லை, தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டு, எண்ணிய இலக்கை எட்டிப் பிடித்தார். மேலும் ஒரு மாற்றுத் திறனாளியான யோகேஷ் கடுனியா அவர்கள் பெர்லின் நகரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் – கிராண்ட் பிரீயில், வட்டெறிதலில் தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்திருக்கிறார். அவருடன் இணைந்து சுந்தர் சிங் குர்ஜர் அவர்களும் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். நான் ஏக்தா பயான் அவர்கள், யோகேஷ் கடுனியா அவர்கள், சுந்தர் சிங் அவர்கள் ஆகியோர் அனைவரின் தன்னம்பிக்கை மற்றும் தணியாத தாகத்திற்கு சிரம் தாழ்த்துகிறேன், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மேலும் முன்னேற வேண்டும், மேலும் விளையாட வேண்டும், முகிழ்த்து மலர வேண்டும்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் வரலாற்றின் பல சம்பவங்கள், கொண்டாட்டங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது; ஆனால் பருவநிலை காரணமாக சில வேளைகளில் நோய்களும் வீடுகளில் கால் பதித்து விடுகின்றன. உங்கள் அனைவரின் சிறப்பான உடல்நலத்திற்காகவும், நாட்டுப்பற்று என்ற உத்வேகத்தை எழுப்பும் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கும், பல நூற்றாண்டுகளாக வழிவழியாக வரும் பல கொண்டாட்டங்களுக்கும், எனது பலப்பல நல்வாழ்த்துகள். மீண்டும் ஒரு முறை மனதின் குரலில் நாம் கண்டிப்பாக சந்திப்போம். மிக்க நன்றி.
வணக்கம். எனதருமை நாட்டுமக்களே! இன்று மீண்டும் ஒருமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் பேறு எனக்குக் கிட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பு பெங்களூரூவில் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் ஆட்டம் நடந்தது. இந்தியாவுக்கும் ஆஃப்கனிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஆஃப்கனிஸ்தான் பங்கேற்கும் முதல் சர்வதேச டெஸ்ட் பந்தயம், ஆஃப்கனிஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் பந்தயம் இந்தியாவுடன் நிகழ்ந்திருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே மிகச் சிறப்பாக ஆடினார்கள். ஆஃப்கனிஸ்தானின் பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஏற்கனவே இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடியிருந்தார், ஆஃப்கனிஸ்தானத்தின் குடியரசுத் தலைவர் அஷ்ரஃப் கனி அவர்களும் கூட என்னை டேக் (tag) செய்து ட்விட்டரில், “ஆஃப்கனிஸ்தான் மக்கள் தங்கள் ஹீரோ ரஷீத் கான் குறித்து மிகுந்த பெருமிதம் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு தளம் அமைத்துக் கொடுத்தமைக்கு நான் நமது இந்திய நண்பர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஃப்கனிஸ்தானின் சிறப்பான அம்சங்களின் பிரதிநிதியாக ரஷீத் விளங்குகிறார். அவர் கிரிக்கெட் உலகின் சொத்து என்பதோடு கூடவே, – “நாங்கள் அவரை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை” என்று நகைச்சுவையோடு அவர் எழுதியிருந்தார். இந்த ஆட்டம் அனைவருக்குமே மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும். முதல் ஆட்டம் என்பதாலேயே, இது நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், வேறு ஒரு காரணத்துக்காகவும் இதை நான் சிறப்பான ஒன்றாக கருதுகிறேன். இந்திய அணி, உலகம் முழுவதுக்கும் எடுத்துக்காட்டான ஒன்றைச் செய்து காட்டியது. வெற்றி பெற்ற அணியினர் என்ன செய்யலாம் என்பதைச் செய்து காட்டினார்கள். வெற்றிக் கேடயத்தைப் பெறும் வேளையில் நமது அணியினர், முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கெடுக்கும் ஆஃப்கனிஸ்தானின் அணியினரை அழைத்து, இரு அணிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விளையாட்டு வீரர்களின் தன்மையைப் பற்றி நாம் இந்த நிகழ்விலிருந்து புரிந்து கொள்ள முடியும். விளையாட்டு என்பது உலகை இணைக்கவும், நமது இளைஞர்களிடம் இருக்கும் திறன்கள், திறமைகள் ஆகியவற்றை வெளிக் கொண்டுவரும் அருமையான வழி என்பதையே இது காட்டுகிறது. பாரத-ஆஃப்கானிஸ்தான் இரு அணிகளுக்கும் என் நல்வாழ்த்துகள். இனிவருங்காலத்தில் இதைப் போலவே ஒருவரோடு ஒருவர் விளையாட்டு உணர்வு உடனேயே நாம் விளையாடுவோம், வளர்ச்சி அடைவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே! கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் நான்காவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஒட்டுமொத்த உலகமும் இதில் இணைந்தது. உலகெங்கிலும் மக்கள் முழு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் யோகம் பயின்றார்கள். பிரேசில் நாடாகட்டும், ஐரோப்பிய நாடாளுமன்றமாகட்டும், நியூயார்க்கில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடமாகட்டும், ஜப்பானின் கடற்படையின் போர்க்கப்பலாகட்டும், அனைத்து இடங்களிலும் யோகக்கலை பயின்றதை நம்மால் காண முடிந்தது. சவுதி அரேபியாவில் முதன்முறையாக யோகக்கலையின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மிகப்பெரிய அளவில் ஆசனங்களைப் பெண்கள் செய்து காட்டினார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. லடாக்கின் மிக உயரமான சிகரங்களில் பாரதம் மற்றும் சீனாவின் இராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து யோகம் பயின்றார்கள். யோகம் அனைத்து எல்லைகளையும் தாண்டி, இணைக்கும் செயலைப் புரிகிறது. பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உற்சாகமிக்க மக்கள் சாதி, சமயம், பிராந்தியம், நிறம், பாலினம் என அனைத்து வகையான வேற்றுமைகளைக் களைந்து, இந்த வேளையில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்து இதை ஒரு கொண்டாட்டமாகவே ஆக்கியிருந்தார்கள். உலகெங்கிலும் இருக்கும் மக்கள் இத்தனை உற்சாகத்தோடு ‘யோகக்கலை தின’ நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது, பாரதம் இந்த உற்சாக வெளிப்பாட்டில் பலமடங்கு முன்னணி வகித்தது.
நமது தேசத்தின் இராணுவ வீரர்கள், தரை, வானம், கடல் என மூன்று இடங்களிலும் யோகக்கலையைப் பயில்வதைப் பார்க்கும் நமது தேசத்தின் 125 கோடி நாட்டுமக்களுக்கும் பெருமிதம் பொங்குகிறது. சில வீரர்கள் நீர்மூழ்கிக் கப்பலிலும் யோகம் பயின்றார்கள்; இதைப் போலவே சில வீரர்கள் சியாச்சினின் பனிநிறைந்த மலை உச்சிகளில் யோகம் பயின்றார்கள். விமானப்படையின் நமது வீரர்கள், நடுவானத்தில், பூமியிலிருந்து 15,000 அடி உயரத்தில் யோகாஸனம் செய்து காட்டி, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்கள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்கள் விமானத்தில் அமர்ந்தபடி இதைச் செய்யவில்லை, வானில் மிதந்தபடி இதைச் செய்தார்கள் என்பது தான். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பூங்காக்கள், உயரமான கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் யோகாஸனப் பயிற்சி நடைபெற்றது. அகமதாபாதின் ஒரு காட்சி மனதைத் தொட்டது. அங்கே சுமார் 750 மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் ஓரிடத்தில் குழுமினார்கள், ஒன்றாக இணைந்து யோகப் பயிற்சி மேற்கொண்டு உலகப்புகழ் பெற்றார்கள். சாதி, சமயம், புவியியல் வரையறை என எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் பணியை யோகம் செய்திருக்கிறது. வசுதைவ குடும்பகம், உலகனைத்தும் ஓரினம் என்ற உணர்வோடு நாம் பல நூற்றாண்டுகளாகவே வாழ்ந்து வந்திருக்கிறோம். நமது ரிஷி-முனிகள், புனிதர்கள் ஆகியோர் எதை முன்னிறுத்தி வந்திருக்கிறார்களோ, அதை யோகக்கலை செய்து காட்டியிருக்கிறது. இன்று நலவுணர்வு என்பது புரட்சிகரமான பணியைப் புரிந்து கொண்டிருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். யோகமானது முடுக்கி விட்டிருக்கும் இந்த நலவுணர்வு இயக்கம், மேலும் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். மேலும் மேலும் மக்கள் இதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்வார்கள்.
என் பிரியம்நிறை நாட்டுமக்களே! மைகவ் மற்றும் நரேந்திர மோடி செயலியில் பலர், இந்த முறை மனதின் குரலில் ஜூலை மாதம் முதல் தேதி கடைப்பிடிக்கப்படும் மருத்துவர்கள் தினம் பற்றி நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், சரியான விஷயம் தான். சங்கடங்கள் ஏற்படும் வேளையில் தான் மருத்துவர்களைப் பற்றிய நினைவு நமக்கு வருகிறது; ஆனால் மருத்துவர்களின் சேவைகள், அர்ப்பணிப்பு உணர்வு, சாதனைகள் ஆகியவற்றை நாம் கொண்டாடும் இந்த நாளில், நான் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நாம் பெற்ற தாயை தெய்வமாகப் பூஜிப்பவர்கள், ஏனென்றால் தாய் தானே நமக்கெல்லாம் உயிரளித்தவர்!! அதே வேளையில் மருத்துவர்கள் தான் பலமுறை நமக்கெல்லாம் மறுபிறப்பு அளிப்பவர்கள். நோய்க்கான தீர்வைக் கண்டறிதலோடு மருத்துவர்களின் பணி நின்று போய் விடுவதில்லை. பல நேரங்களில் மருத்துவர்கள் குடும்பத்தின் நண்பரைப் போலத் திகழ்கிறார்கள், நமது வாழ்க்கைமுறையை வழிநடத்துகிறார்கள் அவர்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், நம்மை குணமடையவும் செய்கிறார்கள். இன்று மருத்துவர்களிடம் மருத்துவத் திறன் என்னவோ இருக்கிறது என்றாலும், நமது பொதுவான வாழ்க்கை முறை போக்குகள் பற்றியும், அவை நமது உடல் நலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் ஆழமான அனுபவம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். நம் நாட்டு மருத்துவர்கள் தங்கள் திறமைகள் காரணமாக உலகம் முழுவதிலும் தங்களின் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். மருத்துவத் தொழிலில் திறமைசாலிகளாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கும் அதே வேளையில், நமது மருத்துவர்கள் சிக்கலான மருத்துவ பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பெயர் பெற்றவர்கள். மனதின் குரல் வாயிலாக நாட்டு மக்கள் தரப்பிலிருந்து நமது அனைத்து மருத்துவ நண்பர்களுக்கும், ஜூலை முதல் தேதி வரவிருக்கும் மருத்துவர்கள் தினத்திற்கான ஏராளமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே! பாரத பூமியில் பிறப்பெடுத்த நாமனைவருமே பெரும்பேறு பெற்றவர்கள். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடக்காத ஒரு நாளோ, மாதமோ இல்லை எனும் அளவுக்கு பாரதம் செறிவான வரலாறுமிக்க ஒரு தேசம். பாரதத்தின் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்த இடங்களோடு தொடர்புடைய யாராவது ஒரு புனிதரோ, மாமனிதரோ, பிரபலமானவரோ இருப்பார்கள், அவர்கள் அனைவருமே தங்களுடைய பங்களிப்பை நல்கியிருப்பார்கள், அவர்களுக்கென ஒரு வரலாறும் இருக்கும்.
”பிரதமர் அவர்களே! வணக்கம்!! நான் டாக்டர். சுரேந்த்ர மிஷ்ரா பேசுகிறேன். நீங்கள் ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று மக்ஹர் வருகிறீர்கள் என்று அறிகிறேன். நான் மக்ஹருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமமான டட்வாவில் வசிக்கிறேன், இது கோரக்பூரில் இருக்கிறது. மக்ஹர் கபீர்தாசரின் சமாதி அமைந்திருக்கும் இடம், கபீர்தாசரை மக்கள் சமூக நல்லிணக்கத்திற்காக நினைவில் கொள்கிறார்கள், கபீர்தாசரின் கருத்துகள் தொடர்பான கலந்துரையாடல்கள் ஒவ்வொரு மட்டத்திலும் நடக்கிறது. உங்களின் செயல்திட்டம் வாயிலாக சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் கணிசமான தாக்கம் ஏற்படும். தயவுசெய்து பாரத அரசின் செயல்திட்டங்களின் வாயிலாக கபீர்தாசர் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்”.
தங்களின் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றி. 28ஆம் தேதியன்று நான் மக்ஹர் வருகிறேன் என்பது உண்மை தான். குஜராத்தின் கபீர்வட் என்ற விருக்ஷம் பற்றி நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்; நான் குஜராத்தில் பணியாற்றிய வேளையில், குஜராத்தின் கபீர்வடில், புனிதர் கபீர்தாசரது பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு பெரிய தேசிய அளவிலான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். கபீர்தாசர் மக்ஹருக்கு ஏன் சென்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்ஹரில் காலமானவர்கள் சொர்க்கம் போக மாட்டார்கள், மாறாக காசியில் காலமானால் அவர்கள் சொர்க்கம் புகுவார்கள் என்று அந்த காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை நிலவியது. மக்ஹர் புனிதமற்றதாக கருதப்பட்டது; ஆனால் புனிதர் கபீர்தாசர் இதன்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. தனது காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளையும், தவறான கருத்துக்களையும் தகர்க்கும் வேலையை அவர் புரிந்தார், ஆகையால் தான் அவர் மக்ஹர் சென்றார், அங்கேயே சமாதி அடைந்தார். புனிதர் கபீர்தாசர் தனது சாகீக்கள், தோஹாக்கள் என்ற கவிதை வடிவங்கள் வாயிலாக சமூக ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம் ஆகியவை மீது அழுத்தமளித்தார். இதுவே அவரது குறிக்கோளாக இருந்தது. அவரது படைப்புக்களில் இந்தக் குறிக்கோளே நமக்குக் காணக் கிடைக்கிறது, இன்றைய உலகிலும் இது அதே அளவுக்குக் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. இதோ, அவரது தோஹா ஒன்றைக் கேளுங்கள் -
கபீர் சோயீ பீர் ஹை, ஜோ ஜானே பர் பீர்,
ஜோ பர பீர் ந ஜானஹீ, சோ கா பீர மேன் பீர்.
அதாவது, மற்றவர்களின் துன்பங்களைப் புரிந்து கொள்பவரே, மெய்யான புனிதர்; யார் மற்றவர்களின் துயரங்களைப் புரிந்து கொள்வதில்லையோ, அவர்கள் கொடூரமானவர்கள். கபீர்தாஸர் சமூக நல்லிணக்கம் மீது சிறப்பான அழுத்தம் அளித்தார். அவர் தான் வாழ்ந்த காலத்திற்கு அப்பால் சிந்தித்தார். அந்தக் காலகட்டத்தில் கொந்தளிப்பும், போராட்டமும் நிறைந்திருந்தன, அப்போது அவர் அமைதியையும், நல்லிணக்கத்தையும் செய்தியாக அளித்தார், மக்களின் மனங்களை ஒன்றிணைத்து, வேறுபாடுகளைக் களையும் பணியை ஆற்றினார்.
இன்னொரு தோஹாவில் அவர் என்ன குறிப்பிடுகிறார்…..
ஜஹான் தயா தஹம் தர்ம ஹை, ஜஹான் லோப் தஹம் பாப்.
ஜஹான் க்ரோத் தஹம் கால் ஹை, ஜஹான் க்ஷமா தஹம் ஆப்.
அதாவது எங்கே கருணை இருக்கிறதோ, அங்கே அறம் இருக்கிறது. எங்கே பேராசையும் கருமித்தனமும் இருக்கிறதோ, அங்கே பாவம் இருக்கிறது. எங்கே வன்மம் இருக்கிறதோ அங்கே காலன் அல்லது மரணம் இருக்கிறது. எங்கே சகிப்புத்தன்மை-மன்னித்தல் இருக்கிறதோ, அங்கே இறைவனே வாசம் செய்கிறான். அவர் மேலும்,
ஜாதி ந பூச்சோ சாதூ கீ, பூச் லீஜியே ஞான்.
துறவிகளிடத்தில் அவர்களின் சாதி என்ன என்று கேட்காதீர்கள், அவர்களிடத்தில் ஞானம் வேண்டிப் பெறுங்கள். மக்களிடத்தில் அவர் விடுத்த வேண்டுகோள் – சாதி சமயம் ஆகியவற்றைத் தாண்டி, மக்களை அவர்களின் ஞானத்தைக் கொண்டு ஏற்றுக் கொண்டு, மதிப்பளிக்க வேண்டும் என்பது தான். அவரது கருத்துக்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும்கூட தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்று நாம் அவரது கருத்துக்களைப் பார்க்கும் போது, அவர் இன்றைய அறிவுசார் உலகம் பற்றிக் கூறுவதாகப் படுகிறது.
இப்போது கபீர்தாசர் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது இன்னொரு தோஹா என் மனதில் நிழலாடுகிறது. இதில் அவர் கூறுகிறார் -
குரு கோவிந்த் தோஊ கடே, காகே லாகூன் பாயம்.
பலிஹாரீ குரு ஆபனே, கோவிந்த் தியோ பதாய.
இது குருவின் மஹிமை பற்றி உரக்கப் பேசுகிறது, இது உலகிற்கே குருவாக விளங்கிய, கோடானுகோடி மக்களுக்கு நல்வழி காட்டிய குரு நானக் தேவ் அவர்களைப் பற்றியது, அவர் பல நூற்றாண்டுகளாக உத்வேகம் அளித்து வருகிறார். குருநானக் தேவ் அவர்கள் சமூகத்தில் நிலவிய சாதிரீதியிலான வேற்றுமைகளை வேறருக்க, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் ஒன்றெனக் கருதி அரவணைக்க வேண்டும் என்று புகட்டினார். குருநானக் தேவ் அவர்கள்– ஏழைகளுக்கும், தேவை இருப்பவர்களுக்கும் செய்யப்படும் சேவையே இறைவனுக்கு ஆற்றப்படும் தொண்டாகும் என்று கூறுவார். அவர் எங்கே சென்றாலும், சமூக நன்மைக்காகப் புரிந்த தொண்டுகள் ஏராளம். சமூக வேற்றுமைகளைக் களைய சமையல்முறையை உருவாக்கினார்; இங்கே அனைத்து சாதியினரும், அனைத்துப் பிரிவினரும், அனைத்து சமயங்கள்-வழிமுறைகளைச் சேர்ந்தவர்களும் வந்து உணவு உண்ண முடியும். குருநானக் தேவ் அவர்கள் தான் லங்கர் என்ற சமையல் முறையை அறிமுகப்படுத்தியவர். 2019ஆம் ஆண்டு குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. நாமனைவரும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டினை சமூகம் முழுவதிலும், உலகெங்கிலும் நாம் எப்படிக் கொண்டாடலாம், இது குறித்த புதியபுதிய எண்ணங்கள் என்ன, புதிய ஆலோசனைகள் என்ன, புதிய கற்பனைகள் என்ன என்பது குறித்து நீங்கள் சிந்தியுங்கள், தயாரிப்புகளில் ஈடுபடுங்கள், மிகுந்த பெருமிதத்தோடு நாம் அனைவரும் குருநானக் தேவ் அவர்கள் பிறந்த இந்த ஆண்டை உத்வேகம் அளிக்கும் காலமாகக் கொண்டாடுவோம், என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே! பாரத சுதந்திரப் போர் மிகவும் நீண்டது, பரந்துபட்டது, மிகவும் ஆழமானது, பல தியாகங்கள் நிறைந்தது. பஞ்சாப் மாநிலத்தோடு இணைந்த மேலும் ஒரு வரலாறு இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஜலியான்வாலாபாக் படுகொலை அரங்கேறி 100 ஆண்டுகள் ஆகவிருக்கின்றது, இது மனித சமுதாயத்தை வெட்கத்திலாழ்த்தும் கோர சம்பவமாகும். 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள்… அந்த கருமைபடிந்த நாளை யாரால் மறக்க முடியும்?? அதிகார துஷ்பிரயோகம் வாயிலாக, கொடுமையான வகையிலே, அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி, அப்பாவிகள், நிராயுதபாணிகள், ஏதுமறியா பொதுமக்கள் ஆகியோர் குண்டுகளுக்கு இரையான நாள் அது. இந்தச் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இதை நாம் எவ்வாறு நினைவில் கொள்வது என்பது குறித்தும் நீங்கள் சிந்திக்கலாம்; ஆனால் இந்த துயரம் நமக்களித்த, காலத்தால் அழிக்கமுடியாத செய்தியை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். வன்முறையும் கொடூரமும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகிவிட முடியாது. வெற்றி என்றுமே அமைதிக்கும் அகிம்சைக்கும் கிடைக்கும், தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்குமே உரித்தாகும்.
என் மனதில் நிறைந்த நாட்டுமக்களே, தில்லியின் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த ரமண் குமார் அவர்கள், நரேந்திர மோடி செயலியில், வரவிருக்கும் ஜூலை மாதம் 6ஆம் தேதியன்று டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் என்று கூறியிருப்பதோடு, இந்த நிகழ்ச்சியின் போது, டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களைப் பற்றி நாட்டுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ரமண் அவர்களே, முதலில் நான் எனது நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத சரிதத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து எனக்கு உவப்பாக இருக்கிறது. நேற்றுத்தான் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் காலமான தினம், அதாவது ஜூன் மாதம் 23ஆம் தேதி. டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் பல துறைகளோடு இணைந்தவர் என்றாலும், அவருக்கு மிக நெருங்கிய துறைகள் என்றால் அது கல்வி, நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகும். கோல்காத்தா பல்கலைக்கழகத்தின் மிகக்குறைந்த வயதுடைய துணைவேந்தராக அவர் இருந்தார் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கும். அவர் துணை வேந்தராக இருந்த வேளையில், அவருடைய வயது வெறும் 33 மட்டுமே. 1937ஆம் ஆண்டு டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வங்காள மொழியில் உரையாற்றினார் என்பதும்கூட வெகுசிலருக்கே தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் வங்காள மொழியில் உரையாற்றியது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 1947 முதல் 1950 வரை டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் பாரத நாட்டின் முதல் தொழில்துறை அமைச்சராக இருந்தார்; இன்னும் சொல்லப் போனால் அவர் பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கான அடிக்கல் நாட்டினார், பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் என்றால் அது மிகையல்ல. 1948ஆம் ஆண்டு வெளிவந்த சுதந்திர பாரதத்தின் முதல் தொழில்துறைக் கொள்கையில் அவரது கருத்துகள், தொலைநோக்கு ஆகியவற்றின் அழிக்கமுடியாத முத்திரை வெளிப்பட்டது. டாக்டர். முகர்ஜி அவர்களின் கனவு, பாரதத்தை ஒவ்வொரு துறையிலும் தொழில்சார் சுயசார்புடையதாக ஆக்க வேண்டும், தன்னிறைவு உடையதாக மாற்ற வேண்டும் என்பது தான். பாரதம் பெரிய தொழில்களை மேம்படுத்தும் அதே வேளையில், நடுத்தர மற்றும் சிறுகுறு தொழில்கள், கைத்தொழில்கள், நெசவு மற்றும் குடிசைத் தொழில்கள் ஆகியவை மீதும் தனது முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். சிறு, குறு தொழில்களின் முழுமையான மேம்பாட்டிற்காக நிதி மற்றும் அமைப்புரீதியிலான தளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 1948 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் அவர் அனைத்திந்திய கைவினைஞர்கள் வாரியம், அனைத்திந்திய கைத்தறி வாரியம், கதராடைகள் மற்றும் கிராமப்புறத் தொழில்கள் வாரியம் ஆகியவற்றை நிர்மாணித்தார். டாக்டர். முகர்ஜி அவர்கள் பாரதத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை சுதேசிமயமானதாக ஆக்க சிறப்பு கவனம் அளித்தார். சித்தரஞ்ஜன் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை, இந்துஸ்தான் விமானங்கள் தொழிற்சாலை, சிந்த்ரியில் உரத்தயாரிப்பு ஆலை, தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம் ஆகிய இந்த நான்கு பெரும் திட்டங்களும், பிற ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களின் நிர்மாணமும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் பங்களிப்பே ஆகும். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சி தொடர்பாக அவர் பேரார்வம் கொண்டவராக விளங்கினார். அவரது புரிதல், புத்திகூர்மை, ஆக்கப்பூர்வமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாகவே வங்காளத்தின் ஒரு பெரிய பகுதி காப்பாற்றப்பட்டு, பாரதத்தின் பகுதியானது. பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தான் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. இதன் பொருட்டு குறைவான 52 வயதுக் காலத்திலேயே அவர் தனது உயிரையும் துறக்க நேர்ந்தது. வாருங்கள்! நாம் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் ஒற்றுமைச் செய்தியை என்றும் நினைவில் கொண்டு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் என்ற உணர்வை மனதில் தாங்கி, பாரதத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் முழுமுனைப்போடு ஈடுபடுவோம்.
எனதருமை நாட்டுமக்களே! கடந்த சில வாரங்களில் காணொளி மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கோப்புகளுக்கு அப்பால் சென்று, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் குறித்து நேரடியாக அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை, தங்கள் சுக துக்கங்களை, தாங்கள் சாதித்ததைப் பற்றியெல்லாம் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதை ஏதோ ஒரு அரசு நிகழ்ச்சியாக நான் பார்க்கவில்லை; இதை ஒருவகையில் நான் ஒரு கற்றல் அனுபவமாகவே காண்கிறேன். இதன் மூலமாக மக்கள் முகங்களில் நான் கண்ட மகிழ்ச்சி….. இதைவிட சந்தோஷம் அளிக்கும் கணம் வாழ்க்கையில் என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்!! ஒரு சாதாரண மனிதன் பற்றித் தெரிந்து கொண்டிருக்கும் வேளையில்… அவனது எளிய சொற்கள், அவனது அனுபவ மொழி, அவனைப் பற்றிய நிகழ்வு, மனதைத் தென்றல் போல வருடிக் கொடுத்தது. வெகு தொலைவிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பொதுச்சேவை மையம் வாயிலாக கிராமங்களில் இருக்கும் மூத்த குடிமக்களின் ஓய்வூதியம் முதல் பாஸ்போர்ட் வரையிலான சேவைகளை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரில் ஒரு சகோதரி சீத்தாப்பழத்தை சேகரித்து, அதைக் கொண்டு ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஜார்க்கண்டைச் சேர்ந்த அஞ்ஜன் பிரகாஷைப் போலவே நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள், மக்கள் மருந்தகங்களை நடத்துவதோடுகூட, அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று விலைமலிவான மருந்துகளை கிடைக்கச் செய்தும் வருகிறார்கள். அதேபோல மேற்கு வங்கத்தில் ஒரு இளைஞர் 2-3 ஆண்டுகள் முன்பாக வேலை தேடிக் கொண்டிருந்தார், ஆனால் இப்போதோ வெற்றிகரமாகத் தொழில் செய்து வருகிறார், 10-15 பேர்களுக்கு வேலைவாய்ப்பையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு, பஞ்சாப், கோவா பகுதிகளின் பள்ளிக்குழந்தைகள், தங்கள் சிறுவயதிலேயே பள்ளியில் டிங்கரிங் லேபில் கழிவுப்பொருள் மேலாண்மை போன்ற முக்கியமான விஷயங்கள் மீது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை எத்தனை கதைகள் இருந்தன!! வெற்றிக் கதை இல்லாத பகுதி ஏதும் இல்லை என்ற அளவுக்கு ஏகப்பட்டவை நம் நாட்டில் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி முழுவதிலும், அரசின் வெற்றி என்பதை விட அதிகமாக, எளிய மக்களின் வெற்றி பற்றிய விஷயங்கள், நாட்டின் சக்தி, புதிய பாரதத்தின் கனவுகளின் ஆற்றல், புதிய பாரதத்தின் மனவுறுதியின் வல்லமை – இவற்றையே நான் கேட்டும் கண்டும் உணர்ந்தேன், உயிர்த்தேன். மாறாக, சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் – ஏமாற்றம் பற்றிப் பேசாதவரையில், இயலாமை பற்றிப் புலம்பாதவரையில், நம்பிக்கையின்மையைத் தூண்டாதவரையில், ஒற்றுமை பற்றி அல்லாது வேற்றுமைப் பாதையைத் தேடாதவரையில், அவர்களுக்கு அமைதி என்பதே இல்லாமல் போய் விடுகிறது. இந்தமாதிரியானதொரு சூழலில் எளிய மனிதர்கள், புதிய எதிர்பார்ப்பு, புதிய உற்சாகம் ஆகியவற்றுடன் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றிப் பேசும் போது, இது அரசுக்கு ஏற்பட்ட புகழாக, கிடைத்த வெற்றியாக நான் கருதவில்லை. வெகு தொலைவிலிருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு சின்னப் பெண்ணின் கதை, 125 கோடி நாட்டுமக்களுக்கு உத்வேகமாக மாறி விடுகிறது. தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு, வீடியோ பாலம் மூலமாக, பயனாளிகளுடன் கழித்த கணங்கள்….. மிகவும் சுகமானவை, அதிக ஊக்கம் அளிப்பவை, மேலும் அதிகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற உத்வேகம் அளிப்பவை. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்போரால் நல்லவிதமாக வாழ முடிகிறது எனும் போது பிறக்கும் ஆனந்தம், ஒரு புதிய உற்சாகம், மேலும் ஒரு புதிய கருத்தூக்கத்தை அளிக்கிறது.
நான் நாட்டுமக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 40-50, லட்சம் பேர் இந்த வீடியோ பாலம் நிகழ்ச்சி வாயிலாக இணைந்தார்கள், எனக்குப் புதியதொரு சக்தியை அளிக்கும் பணியை நீங்கள் ஆற்றியிருக்கிறீர்கள். நான் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
என் இனிய நாட்டுமக்களே! நாம் நம்மைச் சுற்றிலும் பார்த்தோமேயானால், எங்கேயாவது, ஏதாவது ஒரு நல்ல விஷயம் கண்டிப்பாக நம் கண்களில் படும் என்பது நான் எப்போதுமே கண்டுதெளிந்த உண்மை. நல்லவை புரியும் மனிதர்கள் இருக்கிறார்கள். நல்லனவற்றின் நறுமணத்தை நம்மாலும் முகர முடியும். கடந்த நாட்களில் ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அது மிகவும் விநோதமான ஒரு இணைவு. இதில் ஒருபுறத்தில் தொழில்வல்லுனர்களும் பொறியாளர்களும் இருக்கிறார்கள் என்றால் மற்றொருபுறத்தில் நிலங்களில் வேலை செய்யும், விவசாயத்தோடு தொடர்புடைய விவசாய சகோதர சகோதரிகளும் இருக்கிறார்கள். இவை இரண்டுமே வேறுவேறுபட்ட துறைகளாயிற்றே என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். இவர்களுக்கிடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், பெங்களூரூவில் கார்ப்பரேட்டில் பணியாற்றும் வல்லுனர்களும், தகவல்தொழில்நுட்ப பொறியாளர்களும் ஒன்றுகூடி, சஹஜ சம்ருத்தா என்ற அறக்கட்டளையை உருவாக்கினார்கள்; விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளையை செயல்படுத்தினார்கள். விவசாயிகள் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், திட்டங்களைத் தீட்டினார்கள், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். விவசாயத்தின் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதோடு, இயற்கை வேளாண்மையை எப்படிச் செய்ய வேண்டும், வயல்களில் ஒரு பயிருடன் சேர்த்து வேறு என்னென்ன பயிர்களை பயிர் செய்யலாம் என்பவை தொடர்பாக, இந்த அறக்கட்டளை வாயிலாக வல்லுனர்களும், பொறியாளர்களும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்கள். முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளில் ஒரே ஒரு பயிரைத் தான் பயிர் செய்து வந்தார்கள். விளைச்சலும் சிறப்பாக இல்லாமல் இருந்து வந்தது, இலாபமும் சரியாக கிடைக்கவில்லை. இன்று இவர்கள் காய்கறிகளை மட்டும் சாகுபடி செய்யவில்லை, தங்கள் காய்கறிகளை சந்தைப்படுத்தலையும் இந்த அறக்கட்டளை மூலமாகச் செய்து நல்ல விலைக்கு விற்றும் வருகிறார்கள். தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளும்கூட, இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். ஒருபுறம், விளைச்சல் முதல் சந்தைப்படுத்தல் வரை ஒரு முழுமையான சங்கிலித்தொடரில் விவசாயிகள் முதன்மை பங்குதாரர்களாக இருக்கிறார்கள்; மறுபுறத்தில், இலாபத்தில் விவசாயிகளின் பங்கும், அவர்கள் உரிமையும் உறுதி செய்யப்படும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மகசூல் நல்லவிதமாக இருக்க வேண்டும், இதற்காக நல்ல வீர்யம் உள்ள விதைகள் இருக்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான விதை வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் இந்த விதை வங்கி தொடர்பான பணிகளை ஆற்றி வருகிறார்கள். இதில் பெண்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நூதனமான முயற்சியை மேற்கொண்டமைக்கு நான் இந்த இளைஞர்களுக்கு என் அளப்பரிய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இன்னொரு வகையில் என்ன சந்தோஷம் என்றால், தொழில் வல்லுனர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாரின் உலகத்தோடு தொடர்புடைய இந்த இளைஞர்கள், தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறி, விவசாயிகளோடு இணைந்து, கிராமங்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, வயல்வெளிகள், பயிர்களோடு ஒன்றாகக் கலந்து பணியாற்றும் பாதையை தங்களுடையதாக்கிக் கொண்டது தான்.
நண்பர்களே! உங்கள் இளமை உண்மையிலேயே எந்த ஒரு இளைஞனுக்கும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. நாட்டின் பிற இளைஞர்களும்கூட கண்டிப்பாக இவர்களது இணையதளம் சென்று, இவர்களுடைய பணிகளை உன்னிப்பாக கவனிப்பார்கள், அவர்களுமேகூட தங்கள் பகுதிகளில் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் எப்படி செயலாற்ற முடியும் என்பது தொடர்பான உத்வேகம் அடைவார்கள். தொடர்ச்சியாக பலகோடி மக்கள் நல்லது எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டுமக்களே! சரக்கு மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி. அமல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் இருந்த ஒரு கனவான, ஒரு தேசம் ஒரே வரி என்பது நனவாகி இருக்கிறது. ஒரே வரிச்சீர்திருத்த முறையை அமல் செய்தமைக்கு யாருக்காவது பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்றால், நான் உள்ளபடியே மாநிலங்களுக்குத் தான் அந்தப் பாராட்டுக்களைத் உரித்தாக்க விரும்புகிறேன். ஜி.எஸ்.டி. என்பது கூட்டுறவுக் கூட்டாட்சிக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, இதில் அனைத்து மாநிலங்களும் இணைந்து நாட்டுநலனுக்காக முடிவெடுத்தார்கள். பின்னரே இது நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமாக முகிழ்த்து மலர்ந்தது. இதுவரை 27 GST கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன, பலவகைப்பட்ட அரசியல் எண்ணப்பாடுகள் கொண்டவர்கள் இதில் அமர்கிறார்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள், வேறுபட்ட முன்னுரிமைகள் கொண்ட மாநிலங்கள் பங்கெடுக்கின்றன; ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, ஜி.எஸ்.டி. குழு இதுவரை மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் அனைவரின் சம்மதத்தின் பேரிலேயே நடந்திருக்கிறது என்பதை என்னால் பெருமிதத்தோடு கூற முடியும். ஜி.எஸ்.டி. அமல் செய்யப்படுவதற்கு முன்பாக, நாட்டில் தனித்தனி வகையான 17 வரிகள் இருந்தன ஆனால், இந்த முறையை மாற்றி இப்போது ஒரேஒரு வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. GST நாணயத்திற்குக் கிடைத்த வெற்றி, நாணயமான நடவடிக்கைகளின் கொண்டாட்டம். முன்பெல்லாம் வரி விஷயங்களில் இன்ஸ்பெக்டர் ராஜ் என்ற தண்டல்காரன் ராஜ்ஜியமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் நிலவின. ஜி.எஸ்.டி.யில் இன்ஸ்பெக்டர் இடத்தை தகவல்தொழில்நுட்பம் எடுத்துக் கொண்டது. வரிக்கணக்கு செலுத்துவது முதற்கொண்டு, பணம் திரும்பப் பெறுவது வரை அனைத்தும் இணையவழி தகவல் தொழில்நுட்பம் வாயிலாக நடக்கிறது. ஜி.எஸ்.டி. வந்ததால், சோதனைச் சாவடிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன, சரக்குப் போக்குவரத்து விரைவாக நடக்கிறது, இவற்றால் நேரம் மிச்சப்படுவதோடு, சரக்கு சேவைத் துறையிலும் கணிசமான இலாபம் கிட்டி வருகிறது. ஜி.எஸ்.டி., உலகின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமாக இருக்கலாம். இந்தியாவில் இத்தனை பெரிய வரிச்சீர்திருத்தம் வெற்றி பெற்றதற்கான காரணம் நாட்டு மக்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள், மக்கள் சக்தி வாயிலாகவே ஜி.எஸ்.டி.யின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது தான். பொதுவாக, இத்தனை பெரிய சீர்திருத்தம், இத்தனை பெரிய தேசம், இத்தனை பெரிய மக்கட்தொகை எனும் போது, இதை முழுமையாக நிலைநிறுத்த 5 முதல் 7 ஆண்டுகள் காலம் பிடிக்கலாம் என்று கருதப்பட்டது; ஆனால் நாட்டில் நாணயமானவர்களின் உற்சாகம், நாணயமானவர்கள் அளித்த அளப்பரிய ஊக்கம், மக்கள்சக்தியின் பங்கெடுப்பு ஆகியவற்றின் பயனாகவே, ஒரே ஆண்டுக்குள்ளாகவே மிகப்பெரிய அளவில் புதிய வரியமைப்பு தனது இடத்தை உறுதி செய்து கொண்டிருக்கிறது. இதிலேயே பொதிந்திருக்கும் அமைப்பு வாயிலாக, இதில் தேவையான மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது உள்ளபடியே மிகப்பெரிய வெற்றி, இந்த வெற்றியை 125 கோடி நாட்டுமக்களும் தான் ஈட்டியிருக்கிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே! மீண்டும் ஒருமுறை மனதின் குரலை நிறைவு செய்யும் வேளையில், அடுத்த மனதின் குரலுக்காகக் காத்திருக்கிறேன், உங்களுடன் உரையாட, உங்கள் மனங்களோடு உறவாட….. உங்களுக்கு அளப்பரிய நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.
வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நாவிகா சாகர் பரிக்கிரமா என்ற பெயர் கொண்ட இந்தக் குழு பற்றித் தான் நான் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன். பாரதத்தின் 6 பெண்கள் கொண்ட இந்தக் குழு, 250 நாட்களுக்கும் மேலாக ஐ.என்.எஸ்.வி. தாரியிணியில் கடலில் பயணித்து, உலகப்பயணம் மேற்கொண்டு, இம்மாதம் 21ஆம் தேதியன்று தான் நாடு திரும்பியிருக்கிறார்கள், நாடுமுழுவதும் அவர்களைக் கோலாகலமாக வரவேற்றிருக்கிறது. அவர்கள் பல்வேறு பெருங்கடல்கள், பல கடல்கள் ஆகியவற்றில் பயணித்து சுமார் 22,000 கடல்மைல் தூரத்தைக் கடந்திருக்கிறார்கள். உலகிலேயே இப்படிப்பட்ட பயணம் முதன்முறையாக நடந்திருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று, இந்தப் பெண் ரத்தினங்களைச் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மீண்டும் ஒருமுறை இவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாகசம், கடற்படையின் பெருமை, நாட்டின் மகத்துவம் ஆகியவற்றை மேலோங்கச் செய்யும் வகையிலான இவர்களின் சிறப்பான செயல்பாடு, குறிப்பாக பாரதத்தின் பெண்கள் உலகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தமைக்கு, மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாகச உணர்வை யார்தான் அறிய மாட்டார்கள். நாம் மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் பயணத்தைப் பார்த்தோமேயானால், ஏதோ ஒரு சாகசத்தின் மையத்திலிருந்து தான் வளர்ச்சி பிறப்பெடுத்திருக்கிறது. வளர்ச்சி என்பது சாகசத்தின் கர்ப்பத்தில் உதித்த சிசு. ஏதாவது ஒன்றை சாதித்துக் காட்ட வேண்டும், வாடிக்கையான செயல்பாடுகளிலிருந்து சற்று விலகி சாதிக்கும் எண்ணம், அசாதாரணமான ஒன்றை செய்துகாட்டும் நோக்கம், என்னாலும் சாதிக்க முடியும் என்ற இந்த உணர்வு சற்று குறைவாக காணப்படலாம், ஆனால் பல யுகங்களாக, பலகோடி மக்களுக்கு இது தான் உத்வேகம் அளித்து வந்திருக்கிறது. எவரஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் பற்றிய பல புதிய புதிய விஷயங்களை கடந்த நாட்களில் நாம் கேள்விப்பட்டு வருகிறோம்; பல நூற்றாண்டுகளாகவே எவரஸ்ட் சிகரம் மனித சமுதாயத்துக்கு ஒரு சவாலாகவே விளங்கி வந்திருக்கிறது, தீரம்நிறைந்தவர்கள் இந்த சவாலை எதிர்கொண்டும் வந்திருக்கிறார்கள்.
மே மாதம் 16ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூரில் இருக்கும் ஒரு ஆசிரமப் பள்ளியைச் சேர்ந்த 5 பழங்குடியின மாணவர்களான மனீஷா துருவே, பிரமேஷ் ஆலே, உமாகாந்த் மட்வி, கவிதாஸ் காத்மோடே, விகாஸ் சோயாம் ஆகியோர் அடங்கிய ஒரு குழு, உலகின் மிக உயர்ந்த சிகரத்தின் மீது ஏறியிருக்கிறார்கள். ஆசிரமப் பள்ளியின் இந்த மாணவர்கள் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். வார்தா, ஐதராபாத், டார்ஜீலிங், லே, லடாக் ஆகிய இடங்களில் இவர்கள் பயிற்சி மேற்கொண்டார்கள். ஷவுர்யா இயக்கத்தின் பயிற்சித் திட்டத்தின்படி, இந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; பெயருக்கேற்ற வகையில், எவரஸ்ட் சிகரத்தில் இவர்கள் தேசத்தின் பெருமையை நிலைநாட்டினார்கள். சந்திரப்பூர் பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும், எனது இந்த இளம் நண்பர்களுக்கும், இதயம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளபடியே பாரதத்தைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணான ஷிவாங்கி பாடக், நேபாளத்திலிருந்து எவரஸ்ட் சிகரத்தை எட்டிய மிகக் குறைந்த வயதுகொண்ட பாரதப் பெண். ஷிவாங்கிக்கு பலபல பாராட்டுகள்.
அஜீத் பஜாஜ் அவர்களும் அவரது மகளான தியாவும், எவரஸ்ட் சிகரம் தொட்ட பாரதநாட்டின் முதல் தந்தை-மகள் இணையாவார்கள். ஏதோ இளைஞர்கள் தான் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகிறார்கள் என்பது அல்ல. மே மாதம் 19ஆம் தேதியன்று 50 வயதுக்கும் அதிகமான சங்கீதா பெஹல் அவர்கள் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார். எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறுபவர்களில் சிலர், தங்களிடம் திறனும் இருக்கிறது, உணர்திறனும் இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். கடந்த நாட்களில் ஸ்வச்ச கங்கா அபியான், தூய்மையான கங்கை இயக்கத்தின்படி, எல்லையோரக் காவல்படையினரின் குழு ஒன்று எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறியது, ஆனால் அவர்கள் கீழே இறங்கி வரும்போது, ஏகப்பட்ட குப்பைக்கூளங்களையும் கையோடு கொண்டு வந்தார்கள். இது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான் அதே வேளையில், தூய்மையின் பொருட்டு, சுற்றுச்சூழலின் பொருட்டு அவர்களுக்கு இருக்கும் முனைப்பை இந்தச்செயல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பல ஆண்டுகளாக மக்கள் எவரஸ்ட் சிகரம் மீது ஏறி வந்திருக்கிறார்கள், இவர்களில் பலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நான் இந்த சாகசம் நிறைந்த அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக பெண்மணிகளுக்கு என் இதயம்நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறைந்த நாட்டுமக்களே, குறிப்பாக எனதருமை இளைய சமுதாய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பாக நான் ஃபிட் இந்தியா (Fit India) பற்றிப் பேசியிருந்த போது, அதற்கு இந்த அளவுக்கு பதிலிறுப்புகள் வரும் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நான் ஃபிட் இந்தியா பற்றிப் பேசும் வேளையில், நாம் எந்த அளவுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு தேசமும் விளையாட்டுகளில் ஈடுபடும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். சமூக ஊடகங்களில் மக்கள் ஃபிட்னஸ் சேலஞ்ஜ் (fitness challenge), அதாவது உடலுறுதி சவால் தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்து வருகிறார்கள், ஒருவரை ஒருவர் டேக் செய்து சவால் விட்டுக் கொள்கிறார்கள். ஃபிட் இந்தியா (Fit India) என்ற இந்த இயக்கத்தோடு இன்று அனைவரும் இணைந்து வருகிறார்கள். அவர்கள் திரைப்படத் துறையினராகட்டும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், தேசத்தின் சாமான்ய மக்களாகட்டும், இராணுவ வீரர்களாகட்டும், பள்ளி ஆசிரியர்கள் ஆகட்டும் – நாலாபுறத்திலும் நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பது எங்கும் எதிரொலிக்கிறது. பாரத கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அவர்கள் எனக்கு சவால் விடுத்திருப்பது எனக்கு மகிழச்சியை அளிக்கிறது, நானும் அவரது சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதுபோல சவால் விடுத்துக் கொள்வது நம்மை நாமே உடலுறுதியோடு வைத்துக் கொள்ள உதவுவதோடு, மற்றவர்களையும் உடலுறுதியை ஏற்படுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே! மனதின் குரலில் பலமுறை விளையாட்டுகள் தொடர்பாக, விளையாட்டு வீரர்கள் தொடர்பாக, ஏதாவது ஒன்றை நான் பகிர்ந்து வருவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், கடந்தமுறை காமன்வெல்த் போட்டிகளில் நமது வீரர்கள், தங்கள் மனதின் குரல்களை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நம்மிடத்தில் தெரிவித்தார்கள் –
வணக்கம் சார், நான் நொய்டாவிலிருந்து சவி யாதவ் பேசுகிறேன், நான் உங்கள் மனதின் குரல் நிகழ்ச்சியைத் தவறாமல் கேட்டுவரும் ஒரு நேயர். இன்று நான் உங்களிடத்தில் என் மனதின் குரலை வெளிப்படுத்த விரும்புகிறேன். இப்போது கோடைக்கால விடுமுறை தொடங்கி விட்டது, ஒரு தாய் என்ற முறையில், குழந்தைகள் அதிக நேரத்தை இணைய விளையாட்டுகள் விளையாடுவதில் கழிக்கிறார்கள் என்பதை நான் பார்த்து வருகிறேன். எங்கள் சிறிய வயதுக்காலத்தில் நாங்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் விளையாடக்கூடிய பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினோம்; எடுத்துக்காட்டாக 7 ஸ்டோன்ஸ் (7stones) – இதில் 7 கற்களை ஒன்றன்மீது ஒன்றாக வைத்து, அதை பந்தால் அடித்து வீழ்த்துவோம். இதே போன்று கோ-கோ (kho-kho) விளையாட்டு இருந்தது. இப்போதெல்லாம் இவை போன்ற விளையாட்டுகளை யாரும் விளையாடுவதே இல்லை. தயவுசெய்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றிக் கூறுங்களேன், இதன் வாயிலாக இவற்றின் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்று நம்புகிறேன், நன்றி.
சவி யாதவ் அவர்களே, உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றி. தெருக்களில் விளையாடப்பட்ட விளையாட்டுகள் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையின் அங்கமாக விளங்கின, இவை இன்று அருகிக் கொண்டே வருகின்றன என்பது உண்மை தான். குறிப்பாக இந்த விளையாட்டுக்கள் கோடைக்கால விடுமுறைகளின் சிறப்பான அங்கமாக விளங்கின என்றே சொல்லலாம். பட்டப்பகல் வேளையில், இரவில் உணவு உண்ட பிறகு, எந்த ஒரு கவலையோ, எதைப் பற்றிய சிந்தையோ கொள்ளாமல், மணிக்கணக்காக பிள்ளைகள் விளையாடுவார்கள்; இவற்றில் சில விளையாட்டுகளில் ஒட்டுமொத்த குடும்பமுமே பங்கெடுத்து விளையாடக்கூடியவையாக இருந்தன. கிட்டிப் புள், பம்பரம், கோலி, ஐஸ்பாய், திருடன் போலீஸ், கண்ணாமூச்சி, கோ-கோ என பல விளையாட்டுகள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கட்ச்சிலிருந்து காமரூபம் வரை இந்த விளையாட்டுகள் சிறுவயதின் இணைபிரியா அங்கமாக விளங்கின. ஆம், வெவ்வேறு இடங்களில் அவை வேறுவேறு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக 7 ஸ்டான்ஸ் (7 stones), என்று ஒருபகுதியில் அழைக்கப்படும் இந்த விளையாட்டு லஹவுரி, பிட்டூ, சாதோலியா, டிகோரி, சதோதியா என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. நான்கு சுவர்களுக்குள்ளே விளையாடுவது, திறந்தவெளியில் விளையாடுவது என பாரம்பரியமான விளையாட்டுகளில் இருவகையானவை இருக்கின்றன. நமது தேசத்தின் பன்முகத்தன்மையின் பின்புலத்தில் இழைந்தோடும் ஒற்றுமையை நாம் இந்த விளையாட்டுகளில் காணலாம். ஒரே விளையாட்டு பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு வருகிறது. நான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன், அங்கே சோமல்-இஸ்தோ என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டைப் பற்றி நான் அறிவேன். புளியங்கொட்டை அல்லது தாயத்தைக் கொண்டு 8 X 8 சதுரமான பலகையில் இது விளையாடப்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விளையாடப்பட்டு வந்தது. கர்நாடகத்தில் இதை சவுக்காபாரா என்றும், மத்திய பிரதேசத்தில் அத்தூ என்றும் அழைப்பார்கள். இதையே கேரளத்தில் பகீடாகாளீ என்றும், மகாராஷ்ட்ரத்தில் சம்ப்பல் என்றும், தமிழ்நாட்டில் தாயம் என்றும், ராஜஸ்தானத்தில் சங்காபோ என்றும் பலபலப் பெயர்களால் அழைப்பார்கள். ஒவ்வொரு மாநில மொழியிலும் எனக்குப் பேசத் தெரியாது என்றாலும், விளையாடிய பிறகு தான் தெரிய வந்தது, அட, இதை நாமும் விளையாடியிருக்கிறோமே என்று உணர முடிந்தது. கிட்டிப் புள், கில்லி தாண்டு ஆடாதவர்கள் நம்மில் யாரேனும் இருக்கிறார்களா? தேசத்தின் பல்வேறு பாகங்களில் இது பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆந்திரத்தில் இதைக் கோட்டிபில்லா அல்லது கர்ராபில்லா என்றும், ஒடிஷாவில் இதை குலீபாடீ என்றும், மகாராஷ்டிரத்தில் இதை வித்திடாலூ என்றும் அழைக்கிறார்கள். சில விளையாட்டுகளுக்கென ஒரு பருவம் இருக்கிறது. காற்றாடி விட என ஒரு பருவம் உண்டு. அனைவரும் காற்றாடி விடும் போது, அனைவரும் விளையாடும் போது, நம்மிடம் இருக்கும் தனிச்சிறப்புவாய்ந்த குணங்களை நாம் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. பல குழந்தைகள் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் விளையாடும் வேளையில் மிகுந்த சுறுசுறுப்புடையவர்களாக மாறி விடுவார்கள். சுயமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், மிக ஆழமானவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள், அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம் வெளிப்படுகிறது. உடல்திறன்களை வளர்க்கும் அதே வேளையில், நமது தர்க்கரீதியான சிந்தனை, மன ஒருமைப்பாடு, விழிப்போடு இருத்தல், உற்சாகம் ஆகியவற்றையும் பெருக்கும்வகையில், பாரம்பரியமான விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. விளையாட்டு, வெறும் விளையாட்டு அல்ல, அது வாழ்க்கையின் விழுமியங்களைக் கற்றுக் கொடுக்கிறது. இலக்கை நிர்ணயம் செய்து கொள்வது, மனோதிடத்தை எவ்வாறு அடைவது, குழு உணர்வை எப்படி உருவாக்குவது, எப்படி பரஸ்பர உதவும் தன்மையை ஏற்படுத்துவது போன்றன. வணிக மேலாண்மையோடு தொடர்புடைய பயிற்சி நிகழ்ச்சிகளில், ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டுக்கும், பரஸ்பர திறன்களின் மேம்பாட்டுக்கும், இப்போதெல்லாம் நமது பாரம்பரிய விளையாட்டுகளைப் பயன்படுத்தி வருவதை என்னால் பார்க்க முடிகிறது. முழுமையான மேம்பாட்டுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் உதவிகரமாக இருக்கின்றன, மேலும் இந்தவகையான விளையாட்டுகளை விளையாட வயது ஒரு தடையல்ல. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் சேர்ந்து விளையாடும் போது, தலைமுறை இடைவெளி என்கிறோமே, அது மாயமாய் மறைந்து விடுகிறது. கூடவே நாம் நமது கலாச்சாரம், பாரம்பரியங்களை அறிந்து கொள்ள முடிகிறது. பல விளையாட்டுகள் சமூகம், சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை அளிக்கின்றன. சில வேளைகளில் நமது விளையாட்டுகள் வழக்கொழிந்து விடுமோ என்ற கவலையும் ஆட்கொள்கிறது; இதனால் நாம் விளையாட்டுகளை மட்டும் இழக்க மாட்டோம், நமது குழந்தைப் பருவத்தையும் சேர்த்தே தொலைக்க நேர்ந்து விடும். பிறகு நாம் இந்தக் கவிதையைத் தான் கேட்டுக் கொண்டிருக்கும் படி ஆகும் –
यह दौलत भी ले लो
यह शौहरत भी ले लो
भले छीन लो मुझसे मेरी जवानी
मगर मुझको लौटा दो बचपन का सावन
वो कागज की कश्ती, वो बारिश का पानी
என் செல்வத்தையும் எடுத்துக் கொள்
என் பெரும்புகழையும் எடுத்துக் கொள்
என்னிடமிருந்து என் இளமையையும் பறித்துக் கொள்
ஆனால் என் சிறுவயது மழையை மட்டும் கொடுத்துவிடு
அந்தக் காகிதக் கப்பல்கள், அந்த மழைக்கால நீர்த்துளிகள்.
நாம் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கும் நிலை ஏற்படலாம்; ஆகையால் நமது பாரம்பரியமான விளையாட்டுகளை நாம் எந்தக்காலத்திலும் இழக்கக்கூடாது, இன்று பள்ளிகளில், குடியிருப்புப் பகுதிகளில், இளையோர் வட்டங்களில் எல்லாம் இவற்றுக்கு ஊக்கம் கொடுப்பது மிகத் தேவையானதாக இருக்கிறது. கூட்டத்தினராகச் சேர்ந்து நாம் பாரம்பரிய விளையாட்டுகளின் மிகப்பெரிய சேகரிப்பை உருவாக்கலாம். இந்த விளையாட்டுகள் பற்றிய காணொளிகளை உருவாக்கலாம், இவற்றில் விளையாட்டுகளின் விதிகள், விளையாடும் முறைகள் போன்றவற்றை வெளிப்படுத்தலாம். அனிமேஷன் படங்களை உருவாக்கலாம், தெருக்களிலும் சந்துகளிலும் விளையாடப்படும், நமது புதியதலைமுறையினருக்கு விநோதமாகத் தோன்றும் இந்த விளையாட்டுகளை அவர்களும் பார்ப்பார்கள், விளையாடுவார்கள், வளர்ச்சியடைவார்கள்.
என் உளம்நிறைந்த நாட்டுமக்களே, வருகின்ற ஜூன் 5ஆம் தேதி, பாரதம் அதிகாரப்பூர்வமாக உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இது பாரதத்திற்கு ஒரு மகத்துவம்வாய்ந்த சாதனை; பருவநிலைமாற்றத்தைக் குறைக்கும் திசையில், வளர்ந்துவரும் பாரதத்தின் பங்களிப்பிற்கு உலகில் அங்கீகாரம் கிடைத்துவருகிறது என்பதற்கு இதுவே சான்று. இந்தமுறை பீட் பிளாஸ்டிக் பொல்யூஷன் (BEAT PLASTIC POLLUTION) என்பதே கருப்பொருளாக இருக்கிறது. உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்தக் கருப்பொருளையொட்டி, இதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, நாமனைவரும் பாலித்தீன், குறைந்த தரமுள்ள பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் முடிவை மேற்கொள்வோம், பிளாஸ்டிக் மாசு இயற்கை மீதும், வன உயிரினங்கள் மீதும், நமது உடல் நலத்தின் மீதும் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.
உலக சுற்றுச்சூழல் தினத்தின் இணையதளமான wed-india2018இல் நுழையுங்கள், அதிலே ஏராளமான ஆலோசனைகள் மிக சுவாரசியமான வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன – காணுங்கள், தெரிந்து கொள்ளுங்கள், அவற்றை உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏற்றுநடக்க முயலுங்கள். கடும் வெப்பம் நிலவும் போது, வெள்ளம் ஏற்படும் போது, மழை நிற்காமல் பெய்யும் போது, தாங்கமுடியாத குளிர் அடிக்கும் போது, அனைவரும் வல்லுநர்களாக மாறி விடுகிறார்கள், உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் போன்றவை பற்றியெல்லாம் பேசுவார்கள்; ஆனால் பேசுவதால் ஆகப்போவது ஏதாவது உண்டா? இயற்கையைப் புரிந்துணர்வோடு அணுக வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பது நமது இயல்பாக மாற வேண்டும், நமது பழக்கவழக்கங்களில் ஊறிப்போக வேண்டும். கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல பகுதிகளில் புழுதிப்புயலும், தீவிரமான காற்று வீசியதையும், கூடவே கடும்மழை பெய்ததையும் நாம் பார்த்தோம், இது இயல்பான பருவநிகழ்வல்ல. இவற்றால் உயிரிழப்பு கூட ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்துமே முக்கியமாக வானிலைப் போக்கின் மாற்றத்தின் விளைவுதான்; நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் ஆகியன இயற்கையோடு நம்மைப் போரிடக் கற்றுக் கொடுக்கவில்லை. நாம் இயற்கையோடு இசைவாக வாழ வேண்டும், இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும். காந்தியடிகள் தனது வாழ்க்கை முழுவதும், தனது ஒவ்வொரு அடியிலும் இந்த விஷயத்தை முன்னிறுத்தி வந்தார். இன்று பாரதம், சூழல்நீதி (climate justice) பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. பாரதம் சி.ஓ.பி.21 ( Cop21), பாரீஸ் உடன்படிக்கை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியது. சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு வாயிலாக, உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறோம் என்றால், இதன் அடிநாதமாக விளங்குவது காந்தியடிகள் கண்ட கனவை மெய்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வு தான். இந்த சுற்றுச்சூழல் தினத்தன்று நாமனைவரும் எப்படி நமது பூமியை தூய்மையாகவும், பசுமையானதாகவும் வைத்திருக்க முடியும், எந்த வகையில் இந்த திசையில் நாம் முன்னேற முடியும், நூதனமாக என்ன செய்ய முடியும் என்ற நோக்கில் நமது சிந்தனைக் குதிரைகளைத் தட்டி விடுவோம். மழைக்காலம் வரவிருக்கிறது, இந்தமுறை நாம் மரம்நடுதலை நமது இலக்காகக் கொண்டு செயல்படுவோம்; மரம் நடுவதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல், அது வளர்ந்து பெரியதாகும் வரை அதைப் பராமரிக்கும் வழிவகைக்கு ஏற்பாடு செய்வோம்.
என் உள்ளம்நிறைந்த நாட்டுமக்களே, குறிப்பாக என் இளைய நண்பர்களே! இப்போதெல்லாம் நீங்கள் ஜூன் மாதம் 21ஆம் தேதியை நன்றாகவே நினைவு வைத்திருக்கிறீர்கள், நீங்கள் மட்டுமல்ல, நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதியை நினைவில் இருத்திக் கொள்கிறது. உலகம் முழுவதிலும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகக்கலை தினமாகக் கொண்டாடப்படுகிறது, இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது, பல மாதங்கள் முன்பிருந்தே மக்கள் தயாரிப்பு முஸ்தீபுகளில் ஈடுபடத் தொடங்கி விடுகிறார்கள். இப்போது ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று வரவிருக்கும் சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் உலகெங்கிலும் பலமாக நடைபெற்று வருகின்றன என்ற செய்திகளைக் கேள்விப்பட முடிகிறது. ஒற்றுமைக்காக யோகக்கலை, நல்லிணக்கம் நிறைந்த சமூகம் தான் இது அளிக்கும் செய்தி, இதைக் கடந்த சில ஆண்டுகளாக உலகம் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தின் மகத்தான கவி பர்த்ருஹரி, பல நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்ட அவரது சதகத்ரயத்தில்,
धैर्यं यस्य पिता क्षमा च जननी शान्तिश्चिरं गेहिनी
सत्यं सूनुरयं दया च भगिनी भ्राता मनः संयमः।
शय्या भूमितलं दिशोSपि वसनं ज्ञानामृतं भोजनं
एते यस्य कुटिम्बिनः वद सखे कस्माद् भयं योगिनः।।
தைர்யம் யஸ்ய பிதா க்ஷமா ச ஜன்னீ சாந்திஸ்சிரம் கேஹினீ
ஸத்யம் சூனுரயம் தயா ச பகினீ ப்ராதா மன: சம்யம:
ஷய்யா பூமிதலம் திசோபி வஸனம் ஞானாம்ருதம் போஜனம்
ஏதே யஸ்ய குடும்பின: வத ஸகே கஸ்மாத் பயம் யோகின:
பல நூற்றாண்டுகள் முன்னரே கூறப்பட்டிருக்கும் இந்தக் கூற்றின் பொருள் – முறையாக யோகம் பயில்வதன் பலனாக சில நல்ல குணங்கள் நெருங்கிய உறவுகளைப் போலவும், நண்பர்களைப் போலவும் மாறி விடுகின்றன. யோகம் பயில்வதன் மூலம் மனோதைரியம் பிறக்கிறது, இது எப்போதும் தந்தையைப் போல நம்மைக் காக்கிறது. பொறுத்தல் உணர்வு பிறக்கிறது, இது குழந்தைகளிடத்தில் அவற்றின் தாயிற்கு இருப்பதைப் போல இருக்கிறது, மன அமைதி நமது நீடித்த நண்பனாக மாறுகிறது. தொடர்ந்து யோகம் பயில்வதன் மூலம் வாய்மை நமது குழந்தைகளாகவும், தயை நமது சகோதரியாகவும், மனக்கட்டுப்பாடு நமது சகோதரனாகவும், பூமியே நமது படுக்கையாகவும், ஞானம் நமது பசியைப் போக்குவதாகவும் ஆகின்றன என்கிறார் பர்த்ருஹரி. இத்தனை குணங்களும் ஒருவனுடைய தோழர்களானால், அந்த யோகியானவர் அனைத்துவகையான அச்சங்கள் மீதும் வெற்றிவாகை சூடுகிறார். யோக பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள், ஆரோக்கியமான, சந்தோஷமான, நல்லிணக்கம் நிறைந்ததொரு தேசத்தை நிர்மாணிப்போம் வாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
என் பாசமிகு நாட்டுமக்களே! இன்று மே மாதம் 27ஆம் தேதி. பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவுநாள். நான் பண்டித்ஜிக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மே மாதம் மேலும் ஒருவரோடு தொடர்புடையது, அவர் தான் வீர சாவர்க்கர். 1857ஆம் ஆண்டு, இதே மே மாதத்தின் போது தான் நம் நாட்டினர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தங்களின் பலத்தை வெளிப்படுத்தினார்கள். தேசத்தின் பல பாகங்களில் நமது வீரர்களும் விவசாயிகளும், அநீதிக்கு எதிராக அணி திரண்டு, தங்கள் தீரத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் துக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், நீண்ட காலமாக, 1857ஆம் ஆண்டு நடந்தவற்றை கலகம் என்றோ, சிப்பாய்க் கலகம் என்றோ கூறிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அந்த நிகழ்வைக் குறைத்து மட்டும் மதிப்பிடவில்லை, நமது சுயமரியாதையையும் சுயகௌரவத்தையும் அவமானப்படுத்த செய்யப்பட்ட முயற்சி தான் இது. 1857ஆம் ஆண்டு நடந்தது, வெறும் கலகமல்ல, அது முதல் சுதந்திரப் போர் என்று அச்சமேதும் இன்றி எழுதியவர் வீர சாவர்க்கார். சாவர்க்காருடன் இணைந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் லண்டனில் உள்ள India Houseஇல், இதன் 50ஆம் ஆண்டு நிறைவை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். எந்த மாதத்தில் நமது முதல் சுதந்திரப் போர் துவங்கியதோ, அதே மாதத்தில் தான் வீர சாவர்க்காரும் பிறந்தார் என்பதும்கூட ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு. சாவர்க்கார் அவர்களிடம் ஆளுமைச் சிறப்புகள் நிறைந்திருந்தன; ஆயுதங்கள்-சாஸ்திரங்கள் இரண்டையும் பூண்பவர், கையாள்வதில் நிபுணர். பொதுவாக அவரது வீரத்திற்காகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவரது போராட்டத்திற்காகவும் வீர சாவர்க்காரை நாம் நன்கறிவோம்; ஆனால் இவையனைத்தையும் தவிர, அவர் சொல்வேகம் நிறைந்த அற்புதமான கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, எப்போதும் நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றுக்கு வலுகூட்டி வந்திருக்கிறார். சாவர்க்கார் அவர்களைப் பற்றி நமக்குப் பிரியமான மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் கூறுவது என் நினைவிற்கு வருகிறது. சாவர்க்கார் என்றால் கூர்மை, சாவர்க்கார் என்றால் தியாகம், சாவர்க்கார் என்றால் தவம், சாவர்க்கார் என்றால் கொள்கை, சாவர்க்கார் என்றால் சீரிய சிந்தனை, சாவர்க்கார் என்றால் முதிர்ச்சி, சாவர்க்கார் என்றால் அம்பு, சாவர்க்கார் என்றால் வாள் என்பார். அடல் அவர்கள் எத்தனை நேர்த்தியாக, அருமையாக சாவர்க்காரை வர்ணித்திருக்கிறார் பாருங்கள்!! சாவர்க்கார், கவிதை, புரட்சி இரண்டையும் கைக்கொண்டு பயணித்தார். புரிந்துணர்வு உள்ள கவிஞர் என்பதோடுகூட, அவர் தைரியம் நிறைந்த புரட்சியாளராகவும் திகழ்ந்தார்.
என் நெஞ்சுக்கினிய சகோதர சகோதரிகளே! நான் டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ராஜஸ்தானத்தின் சீகரின் குடிசை வீடுகளில் நமது ஏழைப் பெண்கள் வசிக்கிறார்கள். நமது இந்தப் பெண்கள் குப்பைகளை அகற்றி வந்தார்கள், யாசித்து வந்தார்கள். இன்று இவர்கள் தையல் திறனை மேம்படுத்திக் கொண்டு, ஏழைகளுக்கான உடைகளைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் பெண்கள், இன்று தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தாரின் உடைகளைத் தவிர, சாதாரண மற்றும் உயர்ரகத் துணிகளைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் பயின்று வருகிறார்கள். நமது இந்தப் பெண்கள் சுயசார்புடையவர்களாகி விட்டார்கள். கௌரவமாகத் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், தத்தமது குடும்பத்தினருக்குப் பெரும்பலமாகத் திகழ்ந்து வருகிறார்கள். ஆசைகளும் எதிர்பார்ப்பும் நிறைந்த நமது இந்த பெண் திலகங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதி இருந்தால், அதற்காக நீங்கள் மனதில் தீர்மானித்துக் கொண்டால், அனைத்துத் தடங்கல்களையும் தாண்டி வெற்றியைப் பெறலாம்; இது சீக்கர் பற்றிய விஷயம் மட்டுமல்ல, இவை போன்ற நிகழ்வுகள் நம் தேசத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காணக் கிடைக்கின்றன. உங்களைச் சுற்றிப் பார்வையைத் திருப்புங்கள், எப்படிப்பட்ட இடர்ப்பாடுகளையெல்லாம் மக்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது உங்களுக்கே விளங்கும். நாம் ஏதாவது ஒரு தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே தேநீரைச் சுவைப்பதோடு, அங்கே இருப்பவர்களிடத்தில் பேச்சுக் கொடுத்து உரையாடலில் ஈடுபடவும் செய்வோம், இல்லையா. உரையாடல் அரசியல் தொடர்பானதாகவோ, சமூகம் பற்றியதாகவோ, திரைப்படங்கள் சம்பந்தப்பட்டதாகவோ, விளையாட்டு, விளையாட்டு வீரர்கள், தேசத்தின் பிரச்ச்ச்சினைகள் என எவை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். பிரச்சினையும், பிரச்சினைக்கான தீர்வும் பற்றி உரையாடல் அமைந்திருக்கும்; பெரும்பாலும் இவை உரையாடலுடனேயே நின்று விடுகின்றன. ஆனால் சிலரோ, தங்கள் செயல்களில், தங்கள் கடும் உழைப்பு மற்றும் முனைப்பு வாயிலாக மாற்றத்தைக் கொண்டுவரும் திசையில் முன்னேறிச் செல்கிறார்கள், இதற்கு வடிவம் கொடுக்கிறார்கள். மற்றவர்களின் கனவுகளைத் தங்களுடையதாகவே கருதி, அவற்றை நிறைவேற்றத் தங்களையே அர்ப்பணிக்கும் சிலர் பற்றிய கதை தான், ஒடிஷாவின் கட்டக் நகரின் குடிசையில் வசிக்கும் டி. பிரகாஷ் ராவ் அவர்களுடையது. நேற்றுத்தான் டி. பிரகாஷ் ராவ் அவர்களைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. டி. பிரகாஷ் ராவ் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக நகரத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார். தேநீர் விற்பனை செய்யும் எளியதொரு மனிதர் இன்று, 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி தீபத்தை ஏற்றி வருகிறார் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள். அவர் குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஆஷா ஆஷ்வாஸன் என்ற பெயர் கொண்ட ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஒரு ஏழை தேநீர் விற்பனையாளர் தனது 50 சதவீத வருமானத்தை இந்தப் பள்ளிக்கே செலவு செய்து வருகிறார். பள்ளிக்கு வரும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி, ஆரோக்கியம், உணவு என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். நான் டி. பிரகாஷ் ராவ் அவர்களின் அயராத உழைப்பு, அவரது முனைப்பு, ஏழைப் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி, புதிய திசையேற்படுத்திக் கொடுப்பதற்காக அவருக்கு பலபல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வாழ்வினில் இருக்கும் இருளை இவர் நீக்கியிருக்கிறார். தமஸோ மா ஜோதிர்கமய என்ற வேத வாக்கியத்தை யார்தான் அறிய மாட்டார்கள்; ஆனால் அதைச் செய்து காட்டிய ஒருவர் உண்டென்றால் அவர் டி. பிரகாஷ் ராவ் அவர்கள் தான். அவரது வாழ்க்கை நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், நாடு முழுமைக்கும் ஒரு கருத்தாக்கமாக இருக்கிறது. உங்களைச் சுற்றியும் இப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கும் சம்பவங்கள் இருக்கலாம். எண்ணில்லா நிகழ்ச்சிகள் நடைபெறலாம். நாமனைவரும் ஆக்கப்பூர்வமான உணர்வுகளை மனதில் தாங்கி முன்னேறிச் செல்வோம் வாருங்கள்!!
ஜூன் மாதத்தில் எந்த அளவுக்கு அதிக வெப்பம் நிலவுகிறது என்றால், மழை எப்போது வருமோ என்று ஏங்கத் தொடங்குகிறார்கள், இந்த எதிர்பார்ப்பை மனதில் தாங்கி வானத்தை நோக்கிப் பார்த்தவண்ணம் இருப்பார்கள். இன்னும் சில நாட்களில் பிறைச்சந்திரனின் வருகைக்காகவும் காத்திருப்பார்கள். சந்திரப்பிறை தெரிகிறது என்று சொன்னால், ஈகை பண்டிகையைக் கொண்டாடலாம் என்று பொருள். ரமலான் மாதத்தில் உபவாஸம் மேற்கொண்ட பின்னர், ஈகை பெருநாள், கொண்டாட்டத்தைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. அனைவரும் ஈகை பெருநாளை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வேளையில் குழந்தைகளுக்குச் சிறப்பான வகையில் நல்ல ஈகை பெருநாள் பரிசு கிடைக்கும். இந்த ஈகை பண்டிகை, நமது சமுதாயத்தில் நல்லிணக்க உறவுகளுக்கு மேலும் உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகள்!
எனதருமை நாட்டுமக்களே! உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். மீண்டும் ஒருமுறை அடுத்த மாதம் மனதின் குரலில் சந்திப்போம் நண்பர்களே. வணக்கம்!!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 21ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பாரதம் உள்ளிட்ட உலகின் 71 நாடுகள் இதில் பங்கு பெற்றன. இத்தனை பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கிறார்கள் எனும் போது, எத்தகைய சூழல் நிலவும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உற்சாகம், எதிர்பார்ப்பு, ஊக்கம், ஆசை, அபிலாஷைகள், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதி – இப்படிப்பட்டதொரு சூழல் நிலவும் வேளையில், இதன் தாக்கம் இல்லாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? இன்று யார் வெற்றிகரமாகச் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டுமக்களிடையே ஒவ்வொரு நாளும் இருந்து வந்தது. பாரதத்தின் செயல்பாடு எப்படி இருக்கும், நாம் எத்தனை பதக்கங்களை வெல்லப் போகிறோம் என்றெல்லாம் சிந்திப்பது இயல்பான விஷயம் தான். நமது விளையாட்டு வீரர்களும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையிலேயே சிறப்பாகச் செயல்பட்டார்கள், ஒன்றன்பின் ஒன்றாக பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அது துப்பாக்கிச் சுடும் போட்டியாகட்டும், மல்யுத்தமாகட்டும், பளுதூக்குவதாகட்டும், டேபிள் டென்னிஸாகட்டும், பூப்பந்தாகட்டும்…… பாரதம் இன்றுவரை காணாத சாதனையைப் படைத்தது. 26 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்களும், 20 வெண்கலப் பதக்கங்களும் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று, நாட்டு மக்களை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறார்கள். பதக்கங்களை வெல்வது வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருந்தாலும், நாடு முழுமைக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வேளையும் ஆகும். போட்டி முடிவடைந்த பிறகு, பதக்கத்துடன் பாரதத்தின் பிரதிநிதிகளாக வீரர்கள் மூவண்ணக்கொடியைப் போர்த்திக் கொண்டு, தேசிய கீதம் ஒலிக்க நிற்கும் போது எழும் உணர்வு இருக்கிறதே, அதில் சந்தோஷம், பெருமிதம், கவுரவம் ஆகியன கலந்திருக்கின்றன, மிகச் சிறப்பான, தனித்தன்மை வாய்ந்த ஒரு உணர்வு அது. உடலும் மனமும் சிலிர்க்கின்றன. உற்சாகமும் ஊக்கமும் கொப்பளிக்கின்றன. நாமனைவரும் ஒரே உணர்வோடு ஒன்றாகக் கலக்கிறோம். இந்த உணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. ஆனால் இந்த விளையாட்டு வீரர்கள் என்னிடம் கூறியவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது, உங்கள் நெஞ்சங்களும் விம்மும் என்று நம்புகிறேன்.
“நான் மனிகா பத்ரா, காமன்வெல்த் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்று வந்திருக்கிறேன். 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம். நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை மனதின் குரல் நேயர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், முதன்முறையாக இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு இத்தனை பிரபலமாக ஆகி வருகிறது என்பதால் தான். இதுவரை ஆடாத அளவுக்கு நான் சிறப்பான வகையில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தை விளையாடினேன். என் பயிற்சிக்காலம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நான் என் பயிற்றுநர் சந்தீப் சாருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு போர்த்துகல் நாட்டில் எங்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்றன, எங்களை அரசாங்கம் பல போட்டிகளுக்கு அனுப்பியது, நான் அரசுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், அவர்கள் தான் எங்களுக்கு இத்தனை பெரிய அளவுக்கு சர்வதேச வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இளைஞர்களுக்கு நான் அளிக்க விரும்பும் தகவல் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் துவண்டு விடாதீர்கள், உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் என்பது தான்.”
“நான் பி குருராஜ்; மனதின் குரல் நேயர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவதெல்லாம், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது என் கனவாக இருந்தது. நான் முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கெடுத்து, பாரதத்துக்கு பதக்கத்தைப் பெற்றுத் தந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் பதக்கத்தை என் கிராமம் குந்தாபுராவுக்கும், என் மாநிலம் கர்நாடகத்துக்கும், என் தேசத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்.”
“நான் மீராபாய் சானூ. நான் 21ஆம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறேன். இது எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இந்தியாவுக்காகவும், மணிப்பூருக்காகவும் சிறப்பான விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. மணிப்பூரில் என் சகோதரியின் சிறப்பான செயல்பாட்டைப் பார்த்த பிறகு, அவர் பற்றிய திரைப்படத்தை முழுவதுமாகக் கண்ட பிறகு நானும் இந்தியாவுக்காக, மணிப்பூருக்காக சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு உண்டானது. நான் வெற்றியடைந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் ஒழுங்குமுறை, என் முனைப்பு, என் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியன தான்.”
காமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருந்தது, விசேஷமாகவும் இருந்தது. ஏன் விசேஷம் என்கிறேன் என்றால், இதில் பல விஷயங்கள் முதன்முறையாக நடந்தேறின. இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் தரப்பில் பங்கெடுத்துக் கொண்ட மல்யுத்த வீரர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்று வந்திருக்கிறார்கள். மனிகா பத்ரா, தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டுகளிலும் பதக்கங்களைத் தட்டி வந்திருக்கிறார். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பாரதப் பெண் இவர் தான். பாரதத்திற்கு அதிக அளவு தங்கம் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கிடைத்தது. 15 வயது நிரம்பிய பாரதத்தின் துப்பாக்கிச் சுடும் போட்டியாளர் அனீஷ் பான்வாலா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிகக் குறைந்த வயது விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். சச்சின் சவுத்ரி காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பாரதநாட்டின் ஒரே பாரா பவர் லிப்டர் (para power lifter). மேலும் இந்தமுறை போட்டிகள் ஏன் விசேஷமானவையாக இருந்தன என்றால், பெரும்பான்மையான வெற்றியாளர்கள் பெண்கள் என்பதால் தான். ஸ்க்வாஷாகட்டும், குத்துச்சண்டையாகட்டும், பளுதூக்குதலாகட்டும், துப்பாக்கி சுடும் போட்டியாகட்டும், பெண் வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
பூப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி பாரதத்தின் இரண்டு வீராங்கனைகளான சாய்னா நெஹ்வாலுக்கும் பி.வி. சிந்துவுக்கும் இடையே நடைபெற்றது. அனைவருக்குமே போட்டி உற்சாகத்தை அளித்தது என்றாலும், இரண்டு பதக்கங்களும் பாரதத்துக்கே கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி, இதை நாடு முழுவதும் கண்டு களித்தது. நானுமேகூட மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். போட்டிகளில் பங்கெடுத்த வீரர்கள், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, சின்னச்சின்ன நகரங்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். பல தடைகள், இடர்களையெல்லாம் தாண்டி இந்த நிலையை எட்டியிருந்தார்கள், சாதித்திருக்கிறார்கள், அவர்கள் இன்று எட்டியிருக்கும் இந்த இலக்கினை அடைய, அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் பெற்றோர், அவர்களின் காப்பாளர்கள், அவர்களின் பயிற்றுநர், விளையாட்டு உதவியாளர்கள், அவர்களின் பள்ளி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் சூழல் என அனைவரின் பங்களிப்பும் கலந்திருக்கிறது, அவர்கள் தான் ஒவ்வொரு கட்டத்திலும் வீரர்களின் நம்பிக்கைக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள். இந்த வேளையில் நான் வீரர்களோடுகூட, இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மாதம் மனதின் குரலில் நான் நாட்டுமக்களிடம், குறிப்பாக நமது இளைஞர்களிடத்தில் ஃபிட் இந்தியா (FIT INDIA) குறித்த அறைகூவல் விடுத்திருந்தேன், அனைவரும் வாருங்கள் என்று அழைத்திருந்தேன். ஃபிட் இந்தியா வுடன் இணையுங்கள், தலைமையேற்க வாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு இதனோடு இணைந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பலர் இதற்காகத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், சமூக ஊடகத்தில் தங்கள் உடலுறுதி தொடர்பான முக்கியமான விஷயங்களையும், ஃபிட் இந்தியா தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சசிகாந்த் போன்ஸ்லே என்ற ஒருவர் நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து கொண்டு, என் உடல் தான் என் ஆயுதம், தண்ணீர் தான் என் தனிமம், நீச்சல் தான் என் உலகம், என்று எழுதியிருக்கிறார்.
ரூமா தேவ்நாத் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? காலை நடைப்பயணத்திற்குப் பிறகு நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன்; என்னைப் பொறுத்த மட்டில் உடலுறுதி என்பது புன்னகை கலந்தது, நாம் சந்தோஷமாக இருக்கும் போது, புன்னகை பூக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். தேவ்நாத் அவர்களே, மகிழ்வாக இருத்தலே உடலுறுதி.
தவல் பிரஜாபதி அவர்கள் மலையேறும் போது எடுக்கப்பட்ட தனது படத்தைத் தரவேற்றம் செய்து, என்னைப் பொறுத்த மட்டில் ஃபிட் இந்தியா என்றால் பயணமும், மலையேறுதலும் தான் என்று தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, பல பிரபலமானவர்களும்கூட ஃபிட் இந்தியாவுக்காக நமது இளைஞர்களுக்கு மிக சுவாரசியமான வழிகளில் உத்வேகம் அளித்து வருவது நன்றாக இருக்கிறது. திரைப்பட நட்சத்திரமான அக்ஷய் குமார் ட்விட்டரில் ஒரு காணொளியைத் தரவேற்றம் செய்திருக்கிறார். அதை நானும் பார்த்தேன், நீங்களும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்; இதில் அவர் மரத்தாலான மணிகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம், இந்தப் பயிற்சி முதுகுக்கும், வயிற்றுத் தசைகளுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். அவருடைய இன்னொரு காணொளியும் அதிக பிரபலமடைந்திருக்கிறது, இதில் அவர் மக்களோடு கைப்பந்து விளையாடுவதைப் பார்க்கலாம். பல இளைஞர்களும் ஃபிட் இந்தியா முயற்சிகளோடு தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்றதொரு இயக்கம் நம்மனைவருக்கும், நாடு முழுமைக்கும் அதிக பயனுள்ளது என்று நான் கருதுகிறேன். மேலும் ஒரு விஷயம் குறித்து நான் தெரிவிக்க விரும்புகிறேன் – எந்தச் செலவும் இல்லாத, ஃபிட் இந்தியா தொடர்பான இயக்கத்தின் பெயர் தான் யோகக்கலை. ஃபிட் இந்தியா இயக்கத்தில் யோகக்கலைக்கென சிறப்பான மகத்துவம் இருக்கிறது, நீங்களும் கூட தயாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கியிருப்பீர்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகக்கலை தினத்தின் மகத்துவத்தை தேசம் முழுவதும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும், இப்போதிருந்தே தயார் செய்து கொள்ளுங்கள். தனியாக அல்ல – உங்கள் நகரம், உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் பள்ளி, உங்கள் கல்லூரி என அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும், யோகக்கலையோடு இணைந்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முழுமையான உடல் வளர்ச்சிக்காக, மனரீதியான வளர்ச்சிக்காக, மனதின் சீர்நிலைக்காக யோகக்கலை எந்த வகையில் பயனளிக்கிறது என்பதை நாட்டுக்கோ, உலகுக்கோ விளக்க வேண்டிய தேவையில்லை; நீங்கள் ஒரு அசைவூட்டப்பட்ட காணொளியைப் பார்த்திருக்கலாம், இதில் என்னைக் காட்டியிருக்கிறார்கள், இன்றைய அளவில் அது மிகவும் பிரபலமடைந்திருக்கிறது. இந்த காணொளியை அசைவூட்டச் செய்தவர்களுக்கு நான் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் மிகவும் நுணுக்கமாகப் பணியாற்றி, ஒரு ஆசிரியர் செய்யக்கூடிய வகையில் அனிமேஷனை அமைத்திருக்கிறார்கள். நீங்களும் இதனால் பலன் பெறுங்கள்.
எனது இளைய நண்பர்களே. நீங்கள் தேர்வு, தேர்வு எனத் தேர்வு சுழற்சியிலிருந்து வெளியேறி, இப்போது விடுமுறைக்காலத்தைக் கழிப்பது பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருப்பீர்கள். விடுமுறைகளை எப்படி அனுபவிக்கலாம், எங்கே செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பீர்கள். நான் இன்று உங்களை ஒரு புதிய பணியாற்ற அழைப்பு விடுக்கிறேன்; பல இளைஞர்கள் இப்போதெல்லாம் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ள தங்கள் நேரத்தைச் செலவு செய்வதை நான் பார்க்க முடிகிறது. கோடைக்காலப் பயிற்சியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இளைஞர்களும் இதுகுறித்த தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள், உள்ளபடியே பயிற்சி என்பது ஒரு புதிய அனுபவம் தான். நான்கு சுவர்களுக்கு வெளியே, எழுத்துவேலைகள், கணிப்பொறியைத் தாண்டி, வாழ்க்கையை புதிய கோணத்தில் வாழும் அனுபவம் கிடைக்கிறது. எனது இளைய நண்பர்களே, சிறப்பான பயிற்சி ஒன்றை மேற்கொள்ள நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாரத அரசின் 3 அமைச்சகங்கள் – விளையாட்டுத் துறையாகட்டும், மனிதவள மேம்பாட்டுத் துறையாகட்டும், குடிநீர்வழங்கல் துறையாகட்டும் – அரசின் இந்த மூன்று அமைச்சகங்களும் இணைந்து தூய்மையான இந்தியா கோடைக்கால பயிற்சி 2018 என்ற ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கல்லூரி மாணவ மாணவியர், தேசிய மாணவர் படையின் இளைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தின் இளைஞர்கள், நேரு யுவ கேந்திரத்தின் இளைஞர்கள் எல்லோரும் சமுதாயத்துக்காக, தேசத்துக்காக என்ன செய்ய நினைக்கிறார்களோ, கற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ, சமுதாய மாற்றத்தின் பொருட்டு, யார் தாங்களாகவே இணைந்து கொள்ளவும், காரணியாக ஆகவும் விரும்புகிறார்களோ, ஆக்கப்பூர்வமான ஆற்றலின் துணை கொண்டு, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு செயல்படும் அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பு; இதனால் தூய்மைப்பணிக்கும் வலுகூட்டப்படும். நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், அதற்கு முன்பாக, ஏதாவது சாதிக்கும் சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்கும், யார் மிகச் சிறப்பாக பயிற்சியில் செயல்படுகிறார்களோ – அவர்கள் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியிருக்கலாம், பல்கலைக்கழகங்களில் செய்திருக்கலாம் – அப்படிப்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும், பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ வாயிலாக ஒரு சான்றிதழும் அளிக்கப்படும். இது மட்டுமல்ல, இதைச் சிறப்பாக யார் நிறைவு செய்கிறார்களோ, பல்கலைக்கழக மானியக்குழு அவர்களுக்கு 2 கூடுதல் புள்ளிகளையும் அளிக்கும். நான் மாணவ மாணவியரிடத்திலும், இளைஞர்களிடத்திலும் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன், பயிற்சியினால் பலனடையுங்கள். நீங்கள் MyGov இணையதளம் சென்று ஸ்வச் பாரத் கோடைக்கால உள்ளுறைப் பயிற்சியில் (Swachh Bharat Summer Internship) பங்கெடுக்க உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நமது இளைஞர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்களிடமிருக்கும் தகவல்களைக் கண்டிப்பாக அனுப்புங்கள், புகைப்படங்களை அனுப்புங்கள், காணொளிகளைத் தரவேற்றம் செய்யுங்கள். வாருங்கள்! புதிய அனுபவம் பெற, இந்த விடுமுறைக் காலத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்வோம்.
எனதருமை நாட்டுமக்களே, எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் குட் நியூஸ் இந்தியா என்ற நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள், நாட்டுமக்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அவசியம் தூர்தர்ஷன் வழங்கும் குட் நியூஸ் இந்தியா நிகழ்ச்சியைப் பாருங்கள், நமது தேசத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை பேர்கள், எந்தெந்த மாதிரியான நல்ல பணிகளை ஆற்றி வருகிறார்கள், நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதெல்லாம் அதில் காணக் கிடைக்கின்றன.
சில தினங்கள் முன்பாக, தில்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரைப் பற்றி ஒரு விஷயத்தை குட் நியூஸ் இந்தியாவில் காட்டிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இளைஞர்கள், தில்லியின் தெருவோரச் சிறார்களுக்கும், குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் மிகப்பெரிய இயக்கம் ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார்கள். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அல்லது சில்லறை வேலைகளில் ஈடுபட்டு வந்த குழந்தைகளின் நிலை அவர்களை உலுக்கியதால், இந்தப் புதுமையான செயலைத் தொடங்கினார்கள். தில்லியின் கீதா காலனிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் 15 குழந்தைகளைக் கொண்டு தொடங்கிய இந்த இயக்கம், இன்று தலைநகரில் 12 இடங்களில் 2000 குழந்தைகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள், ஆசிரியர்கள், பணிகள் நிறைந்த தங்களின் தினசரி அட்டவணையில் 2 மணிநேரம் இவர்களுக்காக ஒதுக்கி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சகோதர சகோதரிகளே, இதைப் போலவே உத்தராகண்டின் மலைப்பகுதியின் சில விவசாயிகள், நாடுமுழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் ஊற்றாக மாறி இருக்கிறார்கள். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, தங்களின் நிலையை மட்டுமல்ல, தங்கள் பகுதியின் எதிர்காலத்தையும் வளமாக்கி இருக்கிறார்கள். உத்தராகண்ட்டின் பாகேஷ்வரில், குறிப்பாக சிறுதானியங்கள், கீரைவகைகள், மக்காச்சோளம், பார்லி ஆகியன பயிர் செய்யப்படுகின்றன. மலைப்பகுதி ஆனதால், விவசாயிகளுக்கு இவற்றுக்கான சரியான விலை கிடைக்காமல் போனது; ஆனால் கப்கோட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இந்த விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்று இழப்பில் வாடுவதை விட, அதிக இலாபம் அடையும் வழிகளை மேற்கொண்டார்கள், மதிப்புக்கூட்டும் உத்தியைக் கைக்கொண்டார்கள். என்ன செய்தார்கள்? அவர்கள் தங்கள் விளைபொருட்களிலிருந்து பிஸ்கட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள், அவற்றை விற்பனை செய்வதில் ஈடுபட்டார்கள். இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட்களை கருத்தரித்திருக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலமான கருத்து நிலவுகிறது. முனார் கிராமத்தில் இவர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினார்கள், அங்கே பிஸ்கட்களைத் தயார் செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்கள். விவசாயிகளின் மனோதிடத்தைப் பார்த்து நிர்வாகமும் இதை தேசிய ஊரகப்பகுதி வாழ்வாதார இயக்கத்தோடு இணைத்து விட்டார்கள். இந்த பிஸ்கட்கள் பாகேஷ்வர் மாவட்டத்தின் சுமார் 50 ஆங்கன்வாடி மையங்களில் மட்டுமல்லாமல் அல்மோடா, கவுசானி வரைகூட கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் உழைப்பின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வருவாய் 10 முதல் 15 லட்சம் ரூபாய்களை எட்டியதோடு மட்டுமல்லாமல், 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்டத்திலிருந்து மக்கள் வெளியேறுவதும் தடைபட்டிருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே! எதிர்காலத்தில் உலகத்தில் தண்ணீருக்காக போர்கள் நடைபெறவிருக்கின்றன என்றெல்லாம் நாம் கேள்விப் படுகிறோம் இல்லையா? ஒவ்வொருவரும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள் ஆனால், நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா? நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா? இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் எவ்வாறு சேமிக்கலாம்? நம் தேசத்து மக்கள் அனைவருக்கும் நீர் சேமிப்பு என்பது புதிய விஷயம் அல்ல, ஏட்டுப் பொருளுமல்ல, மொழி தொடர்பானதும் அல்ல என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முதன்மை அளித்திருக்கிறார்கள். அவர்கள் புதியபுதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, நீரின் ஒவ்வொரு சொட்டையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுகள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்றும், பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விட வேண்டாம். குஜராத்தில் அடாலஜ், பாடனில் உள்ள ரானீ கீ வாவ் ஆகியன ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன, இவற்றின் உன்னதத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; குளங்கள் ஒருவகையில் நீர்க்கோயில்கள் தாம். நீங்கள் ராஜஸ்தானம் சென்றால், ஜோத்பூரில் இருக்கும் சாந்த் பாவ்டீக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். இது பாரதத்தின் மிகப் பெரிய, அழகான நீர்நிலைகளில் ஒன்று. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது வறண்ட நிலத்தின் மேலிருப்பது தான். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் தாம் மழைக்கால நீரை சேமிக்க மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது, முன்கூட்டியே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தயார்நிலையில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன. மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின் வரவுசெலவுத் திட்டத் தொகை, இந்த நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகவே செலவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தாண்டி, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கென சராசரியாக 32,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. 2017-18 பற்றிப் பேச வேண்டுமென்றால், 64,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதில், சுமார் 55 சதவீதம், அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளிலேயே செலவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன. நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக பாரத அரசு வாயிலாக மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி கிடைக்கும் நிதியை அதிக பயனுடையதாக சிலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்குட்பட்டு பணிபுரியும் 7000 பேர்கள், எழுபதே நாட்களில் கடுமையாக உழைத்து கேரளத்தின் குட்டம்பெரூர் நதியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். கங்கை, யமுனை ஆகியன நீர் நிறைந்த ஆறுகள் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சில பகுதிகளில், எடுத்துக்காட்டாக ஃபதேபுர் மாவட்டத்தில் சசுர், கதேரீ என்ற இரண்டு ஆறுகள் வறண்டு விட்டன. மாவட்ட நிர்வாகம் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மிகப்பெரிய அளவில் நிலம் மற்றும் நீர்சேமிப்புச் செயல்பாடுகள் குறித்த சவாலை எதிர்கொண்டார்கள். சுமார் 40-45 கிராமத்து மக்களின் துணையோடு, வறண்டு போன இந்த சசுர், கதேரீ ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டன. விலங்காகட்டும், பறவையாகட்டும், விவசாயியாகட்டும், விவசாயமாகட்டும், கிராமங்களாகட்டும் – இது எத்தனை பெரிய ஆசிகள் நிறைந்த வெற்றி பார்த்தீர்களா? மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரவிருக்கின்றன, நீர்சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்காக நாமும் சில பொறுப்புகளைச் சிரமேற்போம், நாமும் சில திட்டங்களைத் தீட்டுவோம், நாமும் ஏதாவது சாதித்துக் காட்டுவோம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.
என் பாசமிகு நாட்டுமக்களே, மனதின் குரல் ஒலிக்கும் முன்பாக எனக்கு நாலாபுறத்திலிருந்தும் செய்திகள் வருகின்றன, கடிதங்கள் குவிகின்றன, தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மேற்கு வங்கத்திலிருக்கும் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் தேவீதோலா கிராமத்தைச் சேர்ந்த ஆயன் குமார் பேனர்ஜி அவர்கள், MyGovஇல் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் – நாம் ஒவ்வொரு ஆண்டும் ரவீந்திர ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம் என்றாலும், பலர் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூரின் ’அமைதியாக, அழகாக, நேர்மையாக வாழும் தத்துவம்’ பற்றித் தெரிந்திருக்கவில்லை. தயவுசெய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த விஷயம் குறித்துப் பேச வேண்டும், இதன் வாயிலாக மக்கள் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நான் ஆயன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் மனதின் குரலின் அனைத்து நண்பர்களின் கவனத்தை இந்தத் திசையில் திருப்பியிருக்கிறார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஞானம், விவேகம் ஆகியவற்றின் முழுமையான வடிவமாகத் திகழ்ந்தார், அவரது எழுத்துகள் படித்தோர் அனைவரின் மனங்களிலும் அழிக்கமுடியாத முத்திரையைக் பதித்திருக்கிறது. ரவீந்திரநாத் – அறிவுத்திறன் வாய்ந்தவர், பன்முகத்தன்மை நிறைந்தவர், ஆனால் அவருக்குள்ளே ஒவ்வொரு கணமும் ஒரு ஆசிரியர் உயிர்ப்போடு இருந்தார் என்பதை நாம் அனுபவிக்க இயலும். “He, who has the knowledge has the responsibility to impart it to the students“ அதாவது யாரிடத்தில் ஞானம் இருக்கிறதோ, அதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று தனது கீதாஞ்சலியில் அவர் எழுதியிருக்கிறார்.
நான் வங்காள மொழி அறிந்தவனல்ல ஆனால், என் சிறுவயதில் அதிகாலை விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்; கிழக்கு பாரதத்தில் வானொலி ஒலிபரப்பு விரைவாகவே தொடங்கி விடும், மேற்கு பாரதத்தில் தாமதமாகவே தொடங்கும். சுமாராக 5.30 மணிக்கு ரவீந்திர சங்கீத் தொடங்கும், வானொலியில் அதைக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது. மொழி தெரியாது, அதிகாலை எழுந்து, வானொலியில் ரவீந்திர சங்கீத் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுப் போனது. ஆனந்தலோகே, ஆகுனேர், போரோஷ்மோனீ – இந்தக் கவிதைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில், மனதில் மிகப்பெரிய அளவில் உத்வேகம் பிறக்கும். உங்களையும் ரவீந்திர சங்கீத், அவரது கவிதைகள் கண்டிப்பாக வசப்படுத்தியிருக்கும். நான் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு என் மரியாதை கலந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில நாட்களில் ரமலான் புனித மாதம் தொடங்க இருக்கிறது. உலகெங்கிலும் ரமலான் மாதம் முழுமையான சிரத்தையுடனும், மரியாதையுடனும் கொண்டாடப் படுகிறது. நோன்பின் சமூகப் பக்கம் என்னவென்றால், மனிதன் பட்டினி கிடக்கும் போது தான் அவனுக்கு மற்றவர்களின் பசி பற்றிய உணர்வு ஏற்படுகிறது, அவன் தாகத்தோடு இருக்கும் போது தான், மற்றவர்களின் தாகம் பற்றிய உணர்வு உண்டாகிறது என்பது தான். இறைத்தூதர் முகமது நபிகள் விடுத்த செய்தியையும் அளித்த உபதேசத்தையும் நினைத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த பாதையில் பயணிப்பது தான் அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடம். ஒருமுறை ஒரு மனிதன் இறைத்தூதரிடம், இஸ்லாத்தில் எந்தச் செயல் புரிவது மிகவும் சிறப்பானது என்று கேட்டான். இதற்கு இறைத்தூதர், ‘ஏழைகளுக்கும் தேவையிருப்பவர்களுக்கும் உணவளித்தல், நாம் அறிந்திருந்தாலும் சரி, அவர்களை அறியாவிட்டாலும் சரி, அனைவரிடத்திலும் நல்லிணக்கத்தோடு இருத்தல் தான்’ என்றார். இறைத்தூதர் முகமது நபிகள் ஞானம், கருணை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவருக்கு எதன் மீதும் கர்வம் இருக்கவில்லை. செருக்கு தான் ஞானத்தைத் தோற்கடிக்கக் கூடியது என்பார். உங்களிடத்தில் ஏதாவது ஒரு பொருள் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், நீங்கள் அதை தேவைப்படும் மனிதருக்கு அளியுங்கள் என்று இறைத்தூதர் முகமது நபி கூறியிருக்கிறார்; ஆகையால் தான் ரமலான் மாதத்தில் கொடைக்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தப் புனித மாதத்தில் வறியவர்களுக்கு தானங்கள் அளிக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தனது தூய்மையான ஆன்மா காரணமாகவே செல்வந்தனாக ஆகிறானே ஒழிய, அவனிடத்தில் இருக்கும் செல்வத்தினால் அல்ல என்பது இறைத்தூதர் முகமது நபிகளின் கூற்று. நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் மாதத்திற்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தத் தருணம் அமைதி, நல்லிணக்கம் நிறைந்த அவரது போதனைகள்படி நடக்க கருத்தூக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
என் பிரியம்நிறை நாட்டுமக்களே, புத்த பவுர்ணமி ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு சிறப்பான தினம். கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் சக்தியை வெளிப்படுத்திய மகான் பகவான் புத்தரின் பூமி பாரதம் என்பது நமக்குப் பெருமை அளிக்க வேண்டும்; அவர் உலகெங்கும் இருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். இந்த புத்த பவுர்ணமி தினத்தில் பகவான் புத்தரை நினைவில் இருத்தி, அவரது பாதையில் பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளவும், மனவுறுதி பூணவும், அதன்படி நடக்க வேண்டும் என்று நமக்கிருக்கும் பொறுப்பை புத்த பவுர்ணமி மீண்டும் நினைவுறுத்துகிறது. பகவான் புத்தர் சமத்துவம், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உத்வேக ஊற்று. இவை மனிதத்தின் விழுமியங்கள், இன்றைய உலகிற்கு இவற்றின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர், தனது சமூக தத்துவத்துக்கான பெரிய உத்வேகம் புத்தபிரானிடம் இருந்து தான் கிடைத்ததாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
பாபா சாஹேப் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பாதிக்கப்பட்டவர்களாகட்டும், வஞ்சிக்கப்பட்டவர்களாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களாகட்டும், விளிம்பில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஆற்றல் வழங்கினார். கருணைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு ஒன்று இருக்க முடியாது. மக்களின் துயர் துடைப்பதில், கருணையானது புத்தபிரானின் மிகப்பெரிய மகத்தான குணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. புத்த பிட்சுக்கள் பல்வேறு நாடுகளில் யாத்திரைகள் மேற்கொண்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குத் துணையாக பகவான் புத்தரின் செறிவான கருத்துகளைக் கொண்டு சென்றார்கள், இந்தச் செயல்பாடு அனைத்துக் காலகட்டங்களிலும் நடைபெற்று வந்தது. ஆசியா முழுவதிலும் பரவியிருக்கும் புத்தபிரானின் போதனைகள் நமது பாரம்பரியச் சொத்து. பல ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் போன்ற பல நாடுகளில் பவுத்த பாரம்பரியம், புத்தரின் வழிமுறை, அவர்களின் வேர்களோடு கலந்திருக்கிறது. இந்தக் காரணத்தால் தான், நாம் பவுத்த சுற்றுலாவுக்கான கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்தி வருகிறோம். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மகத்துவம் நிறைந்த இடங்களை பாரதத்தின் சிறப்பான பவுத்த சமய இடங்களோடு இணைக்கிறது. பாரத அரசு பல பவுத்த சமய இடங்களைப் புதுப்பிக்கும் செயல்பாடுகளில் பங்களிப்பு நல்கி வருகிறது என்பது எனக்கு ஆழமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் மியான்மாரின் பாகானில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வைபவ்சாலீ ஆனந்த வழிபாட்டு இடமும் அடங்கும். இன்று உலகின் அனைத்து இடங்களிலும் மோதல்களும், மக்களின் துயரமும் காணப்படுகின்றன. புத்தபிரானின் போதனை வெறுப்பைக் கருணையால் அகற்றும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது. நான் உலகெங்கிலும் பரவியிருக்கும், புத்தபிரானிடத்தில் பக்தி பூண்டிருப்போருக்கும், கருணைக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மற்றுமனைவருக்கும் புத்த பவுர்ணமிக்கான மங்கலமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தபிரானிடமிருந்து ஒட்டுமொத்த உலகிற்கும் ஆசிகளை இறைஞ்சுகிறேன்; இதன் வாயிலாக, அவரது போதனைகளின் அடிப்படையில் அமைதியான, கருணைமயமான ஒரு உலகை உருவாக்கும் நமது பொறுப்பை நிறைவேற்ற இயலும். இன்று நாமனைவரும் புத்தபிரானை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கும் புத்தர் (laughing Buddha) உருவச்சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவற்றைப் பற்றிக் கூறும் வேளையில், இந்த சிரிக்கும் புத்தர் அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தருவார் என்று கூறப்படுகிறது, ஆனால் புன்சிரிப்புத் தவழும் புத்தர் பாரதத்தின் பாதுகாப்புச் சரிதத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த சம்பவத்தோடு தொடர்புடையவர் என்பதை வெகு சிலரே அறிவார்கள். அது சரி, புன்சிரிப்பு தவழும் புத்தருக்கும், பாரதப் படையினருக்கும் இடையே என்ன தொடர்பு என்று நீங்கள் சிந்திக்கலாம். இன்றிலிருந்து 20 ஆண்டுகள் முன்பாக 1998ஆம் ஆண்டு, மே மாதம் 11ஆம் தேதி உங்களுக்கு நினைவிருக்கலாம்; அன்று மாலை, அப்போதைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் நாட்டுமக்களுக்கு உரையாற்றியது ஒட்டுமொத்த தேசத்துக்கும் கவுரவம், பராக்கிரமம் ஆகிய உணர்ச்சிகளை ஏற்படுத்தி, மகிழ்ச்சியால் நாடு முழுவதையும் நிறைத்தது. உலகெங்கும் பரவியிருக்கும் பாரத வம்சாவழியினரிடம் புதிய தன்னம்பிக்கை துளிர் விட்டது. அந்த நாளும் ஒரு புத்த பவுர்ணமி தான். 1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி, பாரதம் தனது மேற்கு எல்லையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் அணு ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது. பாரதத்தின் பரிசோதனை வெற்றி பெற்றது. ஒருவகையில் பார்த்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரதம் தனது வல்லமையை பறைசாற்றியது என்று கூறலாம். அந்த நாள், பாரத வரலாற்றிலே, நம்நாட்டுப் படைகளின் ஆற்றலைப் பொன்னெழுத்துகளில் பொறித்த நன்னாள். பகவான் புத்தர், அந்தராத்மாவின் சக்தி, அமைதிக்கு அவசியமானது என்று காட்டினார். இதைப் போலவே இன்று நாம் ஒரு தேசம் என்ற முறையில் பலமாக இருந்தால் தான், நாம் அனைவருடனும் அமைதியாகவும் இருக்க முடியும். 1998ஆம் ஆண்டு மே மாதத்தில் நாம் அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொண்டதால் மகத்துவம் வாய்ந்ததாக ஆகவில்லை; ஆனால் எந்த வகையில் அதை மேற்கொண்டோம் என்பதாலேயே அதன் மகத்துவம் ஏற்படுகிறது. பாரதபூமி மகத்தான விஞ்ஞானிகள் நிறைந்த பூமி, பலமான தலைமையின் கீழ் பாரதம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய இலக்குகளையும், சிகரங்களையும் அடையும் வல்லமை பெற்றது என்பதை உலகுக்கு அன்று தான் நாம் பறைசாற்றினோம்.. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் அளித்த மந்திரம் இது தான் – ஜெய் ஜவான் ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் –1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியின் 20ஆம் ஆண்டினை நாம் கொண்டாடும் வேளையில், பாரதத்தின் சக்திக்காக, அடல் அவர்கள் அளித்த ‘ஜெய் விஞ்ஞான்’ மந்திரத்தை நம்முள் கரைத்துக் கொண்டு, புதிய நவீன பாரதத்தை உருவாக்க, சக்திபடைத்த பாரதம் படைக்க, திறன்மிகு பாரதம் இயற்றப்பட, ஒவ்வொரு இளைஞனும் தனது பங்களிப்பை அளிக்கும் மனவுறுதியை மேற்கொள்ள வேண்டும். தங்களது திறமையை, பாரதத்தின் திறமையோடு இணைக்க வேண்டும். எந்தப் பயணத்தை அடல் அவர்கள் தொடக்கி வைத்தார்களோ, அதை முன்னெடுத்துச் செல்லும் புதிய ஆனந்தம், புதிய மகிழ்ச்சி ஆகியவை கைகூடுவதை நம் கண்முன்னேயே நாம் காணலாம்.
எனதருமை நாட்டுமக்களே, மீண்டும் மனதின் குரலில் இணையலாம், அப்போது மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசுவோம். மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ராமநவமி புண்ணிய தினம். இந்த புனிதமான நாளன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறைந்த நல்வாழ்த்துகள். வணக்கத்திற்குரிய அண்ணலின் வாழ்க்கையில் ‘ராம் ராம்’ என்பதன் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் காண முடிந்தது. கடந்த நாட்களில் ஜனவரி 26ஆம் தேதியன்று ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் அனைத்து தலைவர்களும் இங்கே வந்த வேளையில், தங்களுடன் கலாசாரக் குழுவைக் கொண்டு வந்திருந்தார்கள்; அதிக பெருமிதமளிக்கும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நாடுகள், ராமாயணத்தையே நம் அனைவருக்கும் முன்பாக வழங்கினார்கள் என்பது தான். அதாவது ராமரும், ராமாயணமும், பாரதத்தில் மட்டுமல்ல, உலகின் இந்தப் பகுதியிலிருக்கும் ஆசியான் நாடுகளில், இன்றும்கூட அதே அளவுக்கு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நான் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையைப் போலவும் இந்த முறையும், உங்கள் அனைவரின் அனைத்துக் கடிதங்களும், மின்னஞ்சல்களும், தொலைபேசித் தகவல்களும், கருத்துக்களும் மிகப்பெரிய அளவில் கிடைத்திருக்கின்றன. கோமல் டக்கர் அவர்கள் MyGovஇல் – ஆன்லைன் முறையில் சமஸ்கிருத படிப்புக்களைத் தொடங்குவது தொடர்பாக நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்; அதை நான் படித்தேன். கணிப்பொறித்துறையைச் சேர்ந்தவர் என்பதோடு கூடவே, சமஸ்கிருதத்தின் மீது தங்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை இது தொடர்பாக செய்துவரும் முயற்சிகள் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறேன். மனதின் குரலைக் கேட்கும், சமஸ்கிருதம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவோர் அனைவரிடமும் நான் செய்து கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், நீங்கள் கோமல் அவர்களின் கருத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்பது தான்.
பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் (B) பராகர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஷ்யாம் குமார் அவர்களே, நரேந்திரமோடி செயலியில் தாங்கள் எழுதியிருக்கும் கருத்துகளை நான் படித்தேன். நிலத்தடிநீர் மட்டம் வீழ்ச்சி கண்டுவருவது குறித்து தாங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள், கண்டிப்பாக இது மகத்துவம் வாய்ந்த விஷயம் தான்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஷகல் சாஸ்திரி அவர்களே, உங்களின் சொற்களில் அழகான கவிதைநயம் சொட்டுகிறது; ஆயுஷ்மான் பாரதம் என்பது ஆயுஷ்மான் பூமி இருந்தால் மட்டுமே ஏற்படும்; நாம் வசிக்கும் இந்த பூமி குறித்த சிந்தனை அனைவருக்கும் உண்டானால் தான் ஆயுஷ்மான் பூமி ஏற்படும் என்று எழுதியிருக்கிறீர்கள். கோடைக்காலத்தில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அருந்த நீர் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஷகல் அவர்களே, உங்கள் உணர்வுகளை நான் அனைத்து நேயர்களிடத்திலும் கொண்டு சேர்க்கிறேன்.
யோகேஷ் பத்ரேஷா அவர்கள் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? இந்த முறை உடல் ஆரோக்கியம் குறித்து இளைஞர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார். ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது நமது இளைஞர்கள் உடல்ரீதியாக பலவீனமாக இருப்பதாக அவர் கருதுகிறார். யோகேஷ் அவர்களே, இந்தமுறை நான் உடல்நலம் குறித்து அனைவருடனும் விரிவாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் – உடல் நலம் மிக்க இந்தியா (ஃபிட் இந்தியா) பற்றிப் பேசுகிறேன். இளைஞர்களான நீங்கள் அனைவருமாக இணைந்து, உடல் நலம் மிக்க இந்தியா தொடர்பான இயக்கத்தை செயல்படுத்தலாம்.
கடந்த தினங்களில் ஃப்ரான்ஸ் நாட்டின் அதிபர் நம் நாட்டுக்கு வருகை புரிந்த போது காசிக்குச் சென்றிருந்தார். அந்த யாத்திரையின் காட்சிகள் அனைத்தும் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன, தாக்கத்தை உருவாக்கவல்லதாக அமைந்திருந்தன என்று வாராணசியின் பிரசாந்த் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த அனைத்துப் புகைப்படங்கள், அனைத்துக் காணொளிகள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரசாந்த் அவர்களே, பாரத அரசு, அன்றே சமூக வலைத்தளங்களிலும், நரேந்திரமோடி செயலியிலும் இதைப் பகிர்ந்து விட்டார்கள். இனி தாங்கள் அவற்றை லைக் செய்யுங்கள், ரீ டுவீட் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையைச் சேர்ந்த அனகா, ஜயேஷ், இன்னும் ஏராளமான குழந்தைகள், எக்சாம் வாரியர் (Exam Warrior ) என்ற எனது புத்தகத்தின் பின்புறத்தில் காணப்படும் நன்றி அட்டைகள் (gratitude cards) மீது அவர்கள், தங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை எழுதி எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அனகா, ஜயேஷ், மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், உங்களது கடிதங்களைப் பார்த்தவுடன் எனது அன்றைய நாளுடைய அனைத்துக் களைப்பும் பகலவனைக் கண்ட பனிபோல மறைந்தே போனது. இத்தனை கடிதங்கள், இத்தனை தொலைபேசி அழைப்புக்கள், கருத்துக்கள், இவற்றிலிருந்து என்னால் படிக்க முடிந்தவற்றில், நான் கேட்க முடிந்தவற்றில், அவற்றில் காணப்படும் பல விஷயங்கள் என் மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி மட்டுமே சொல்ல வேண்டுமென்றால் நான் மாதக்கணக்கில் சொல்ல வேண்டியிருக்கும்.
இந்த முறை பெரும்பாலான கடிதங்களைக் குழந்தைகள் எழுதியிருக்கிறார்கள், அவர்கள் தேர்வுகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். தங்கள் விடுமுறைத் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடையில் விலங்குகள்-பறவைகளுக்கான நீர் குறித்து கவலை வெளியிட்டிருக்கிறார்கள். விவசாயிகளின் விழாக்கள், விவசாயம் தொடர்பாக நாடுமுழுவதிலும் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து விவசாய சகோதர சகோதரிகளிடமிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன. நீர்சேமிப்பு குறித்து சில குடிமக்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வந்திருக்கின்றன. எப்போதுமுதல் வானொலி வாயிலாக நாம் மனதின் குரலில் பங்கெடுத்து வருகிறோமோ, அப்போதிலிருந்து என்னால் ஒரு பாங்கினைப் பார்க்க முடிகிறது; கோடைக்காலத்தில் அதிகப்படியான கடிதங்கள், கோடை பற்றியதாக இருக்கின்றன. தேர்வுகளுக்கு முன்பாக மாணவ நண்பர்களின் கவலைகள் தொடர்பான கடிதங்கள் வருகின்றன. பண்டிகைக் காலங்களில் நமது திருவிழாக்கள், நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் தொடர்பான விஷயங்களைத் தாங்கி வருகின்றன. அதாவது, மனதின் விஷயங்கள் பருவநிலைக்கேற்ப மாறுதலும் அடைகின்றன என்பதோடு, உண்மை என்னவென்றால், நமது மனதின் குரல் பலரது வாழ்க்கையின் பருவநிலையையே மாற்றி அமைத்திருக்கிறது. ஏன் மாறுதல் ஏற்படுத்தக் கூடாது! உங்களின் இந்த விஷயங்களில், உங்களின் இந்த அனுபவங்களில், உங்களின் இந்த எடுத்துக்காட்டுக்களில், இத்தனை கருத்தூக்கம், இத்தனை சக்தி, இத்தனை இணக்கம், தேசத்திற்காக ஏதாவது நல்லதைச் செய்ய வேண்டும் என்ற தாகம் ஆகியன பிரதிபலிக்கிறது. இவற்றில் ஒட்டுமொத்த தேசத்தின் சூழலையும் மாற்றியமைக்கும் வல்லமை அடங்கியிருக்கிறது. உங்கள் கடிதங்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் போது, எப்படி அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டுனர் அஹ்மத் அலி, தனது ஆழ்ந்த விருப்பத்தின் துணை கொண்டு, ஏழைக் குழந்தைகள் படிக்க 9 பள்ளிக்கூடங்களை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது; அந்தவேளையில் இந்த தேசத்தின் அபாரமான பேராவல் பற்றிய காட்சி கண்முன்னே விரிந்தது. கான்பூரைச் சேர்ந்த டாக்டர் அஜித் மோஹன் சவுத்ரி நடைபாதைவாழ் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறார், இலவசமாக மருந்துகளும் கொடுக்கிறார் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, இந்த தேசத்தின் சகோதரத்துவ உணர்வு என்னை வருடும் அனுபவம் எனக்கு ஏற்படுகிறது. 13 ஆண்டுகள் முன்பாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாத காரணத்தால் கோல்காத்தாவின் டாக்சி ஓட்டுனர் சைதுல் லஸ்கரின் சகோதரி இறக்க நேர்கிறது. சிகிச்சை பெற முடியாத காரணத்தால் எந்த ஒரு ஏழையும் இறக்கக் கூடாது என்பதற்காக, தானே ஒரு மருத்துவமனையை உருவாக்கும் உறுதியைத் தனது மனதில் அவர் பூண்டார். சைதுல் தனது இந்த இலக்கை அடைய, தனது வீட்டில் இருந்த நகைகளை விற்றார், தானமாகப் பணம் சேகரித்தார். அவரது டாக்சியில் பயணம் செய்யும் பயணிகள் பலர் மனமுவந்து கொடையாக பணம் அளித்தார்கள். ஒரு பொறியாளர் சகோதரி தானமாகத் தன் முதல்மாத சம்பளத்தையே அளித்தார். இந்த முறையில் பணத்தை சேகரித்து, 12 ஆண்டுகள் கழித்து, இறுதியில் சைதுல் லஸ்கர் மேற்கொண்ட பகீரத பிரயத்தனம் பலனை அளித்தது; இன்று அவரது இந்தத் கடுமையான உழைப்பு காரணமாக, அவரது மனவுறுதி காரணமாக, கொல்கத்தா அருகே புனரீ கிராமத்தில், 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று தயாராகி இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவின் பலம். உத்தர பிரதேசத்தின் ஒரு பெண், பல போராட்டங்களைத் தாண்டி, 125 கழிப்பறைகளைக் கட்டும் போது, அவர் மற்ற பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறார். அங்கே தாய்மை சக்தி இதமாய் பனிக்கிறது. இப்படி ஏராளமான கருத்தூக்கம் அளிக்கும் ஊற்றுக்கள் எனது தேசத்திற்கு அறிமுகமாய், அடையாளமாய் மிளிர்கின்றன. இன்று உலகம் முழுவதும் பாரதத்தைப் பார்க்கும் பார்வையே மாறியிருக்கிறது. இன்று, பாரதத்தின் பெயரை மிகுந்த மரியாதையோடு உச்சரிக்கும் போது, இதன் பின்னே பாரத அன்னையின் இந்தக் ஈடிலாச் செல்வங்களின் ஒப்பற்ற செயல்கள் பொதிந்து கிடக்கின்றன. இன்று நாடு முழுவதிலும், இளைஞர்களிடத்தில், பெண்களிடத்தில், பிற்படுத்தப்பட்டவர்களிடத்தில், ஏழைகளிடத்தில், மத்தியத்தட்டு மக்களிடத்தில் என, ஒவ்வொருவர் மனதிலும் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது, ஆம்! நம்மால் முன்னேற முடியும், நமது தேசத்தால் முன்னேற்றம் காண முடியும். ஆசை-அபிலாஷைகள் நிறைந்த ஒரு தன்னம்பிக்கையுடன்கூடிய, ஆக்கப்பூர்வமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த தன்னம்பிக்கை தான், இந்த ஆக்கப்பூர்வமான உணர்வு தான், புதிய இந்தியா என்ற நமது கனவை நனவாக்கும், மனவுறுதியை மெப்பிக்கும்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இனிவரும் மாதங்கள் விவசாய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் மகத்துவம் நிறைந்தவையாக இருக்கும். இதன் காரணமாகத் தான் ஏராளமான கடிதங்கள் விவசாயம் தொடர்பானவையாகவே வந்திருக்கின்றன. இந்தமுறை நான் தூர்தர்ஷனின் விவசாயிகளுக்கான கிசான் அலைவரிசையில் விவசாயிகளுடன் நடைபெறும் விவாதங்களின் காணொளியை பார்த்த போது, தூர்தர்ஷனின் டிடி கிசான் அலைவரிசையோடு ஒவ்வொரு விவசாயியும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும், அதைப் பார்க்க வேண்டும், அங்கே காட்டப்படும் பிரயோகங்களைத் தங்கள் வயல்களில் அமல் படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. காந்தியடிகள் ஆகட்டும், லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் ஆகட்டும், லோஹியா அவர்கள் ஆகட்டும், சவுத்ரி சரண் சிங் ஆகட்டும், அல்லது சவுத்ரி தேவிலால் ஆகட்டும் – அனைவரும் விவசாயம், விவசாயி ஆகியோரை தேசத்தின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாகவே கருதி வந்திருக்கிறார்கள். மண், வயல், களஞ்சியம், விவசாயி ஆகியவைமீது அண்ணலுக்கு எத்தனை ஈடுபாடு இருந்தது என்பதை அவரது இந்த வரிகள் துலக்கிக் காட்டும் –
‘To forget how to dig the earth and to tend the soil, is to forget ourselves.’
அதாவது, நிலத்தைத் தோண்டுவது, மண்ணைப் பராமரிப்பது எப்படி என்பதை நாம் மறந்து போனால், அது நம்மை நாமே மறப்பதற்கு ஒப்பாகும் என்பதே இதன் பொருள். இதைப் போலவே லால் பகதூர் சாஸ்த்ரி அவர்களும் மரம், செடி, தாவரங்களைப் பாதுகாப்பது, சிறப்பான விவசாய அமைப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து அடிக்கடி விரித்துப் பேசுவதுண்டு. டாக்டர் ராம் மனோஹர் லோஹியா நமது விவசாயிகளுக்கான சிறப்பான வருமானம், சிறப்பான நீர்ப்பாசன வசதிகள், இவற்றையெல்லாம் உறுதி செய்யவும், உணவு, பால் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க, பெரிய அளவிலான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். 1979ஆம் ஆண்டு தனது உரையில் சவுத்ரி சரண் சிங் அவர்கள் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, புதிய கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், இதன் தேவை குறித்து வலுவூட்டினார். கடந்த நாட்களில் தில்லியில் நடைபெற்ற விவசாய மேம்பாட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே விவசாய சகோதர சகோதரிகள், விஞ்ஞானிகள் ஆகியோருடன் உரையாடிய போது, விவசாயம் தொடர்பான பல அனுபவங்களைத் தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது, விவசாயத் துறையோடு தொடர்புடைய கண்டுபிடிப்புக்கள் பற்றி அறிந்து கொள்வது ஆகிய இவையனைத்தும் எனக்கு சுகமான அனுபவமாக இருந்தது; ஆனால் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம், மேகாலயாவும், அங்குவாழும் விவசாயிகளின் கடும் உழைப்பும்தான். குறைவான நிலப்பகுதி கொண்ட இந்த பிரதேசம், மிகப்பெரிய பணியை ஆற்றியிருக்கிறது. மேகாலயாவைச் சேர்ந்த நமது விவசாயிகள் 2015-16ஆம் ஆண்டில், கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, மகசூலில் சாதனை படைத்திருக்கிறார்கள். இலக்கு தீர்மானிக்கப்பட்டு விட்டால், ஊக்கம் நிறைந்திருக்குமானால், மனவுறுதி ஆழமாக இருக்குமானால், சாதித்துக் காட்ட முடியும், சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். இன்று விவசாயிகளின் உழைப்பிற்கு தொழில்நுட்பமும் கைகொடுத்து வருகிறது, இதன் காரணமாக விவசாய உற்பத்தியாளர்களுக்கு கணிசமான பலம் கிட்டி வருகிறது. என்னிடத்தில் வந்திருக்கும் கடிதங்களில் பல, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) பற்றியே இருக்கிறது, இதுபற்றி நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உகந்த விலை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான பெரியதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது அறிவிக்கப்பட்ட விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை, அவற்றிற்கான செலவினத்தை விட ஒண்ணரை பங்கு என அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதை விரிவான முறையில் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதரவுவிலையை எட்ட என்னென்ன செலவினங்கள் சேர்க்கப்படுமென்றால், அதில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள், அவர்களின் ஊதியம், விவசாயிகளின் கால்நடைகள், இயந்திரம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்படும் கால்நடைகள் அல்லது இயந்திரத்தின் செலவினம், விதைகளின் விலை, பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துவிதமான உரங்களுக்கான செலவினம், நீர்பாசனத்துக்கான செலவினம், மாநில அரசுக்கு செலுத்தப்பட்ட நிலவரி, வேலை மூலதனத்திற்கு செலுத்தப்பட்ட வட்டி, நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தால், அதற்குண்டான வாடகை மட்டுமல்ல, தானே உழைக்கும் விவசாயி அல்லது அவரது குடும்பத்தில் விவசாயத்தில் அவருக்குத் துணைபுரிவோர், அதற்கான மதிப்பும் உற்பத்திச் செலவினத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசத்தில் விவசாய சந்தைப்படுத்தல் சீர்திருத்தம் மீதான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கிராமத்தில் இருக்கும் வட்டாரச் சந்தைகள், மொத்தவிலைச் சந்தைகள், உலகச் சந்தையோடு இணைக்கப்படும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிக தொலைவு செல்லத் தேவையில்லாத வகையில், நாடெங்கும் 22,000 கிராமப்புறச் சந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி மேம்படுத்தும் அதே வேளையில், APMCயும், e-NAM தளமும் ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒருவகையில், விளைநிலத்திலிருந்து தேசத்தின் எந்த ஒரு சந்தையோடும் இணைப்பு – இப்படிப்பட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
என் அன்புநிறை நாட்டுமக்களே, இந்த ஆண்டு காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் மகோத்சவத்தின் தொடக்கம். இது வரலாற்றுபூர்வமானதொரு சமயம். தேசம் இந்த உற்சவத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்? தூய்மையான பாரதம் என்பது நமது மனவுறுதி, இதைத் தவிர, 125 கோடி நாட்டுமக்களும் தோளோடு தோள் சேர்ந்து எப்படி காந்தியடிகளுக்கு மிகச் சிறப்பான வகையில் நமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்க முடியும்? புதிய-புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா? புதிய-புதிய வழிவகைகளை அமைக்க முடியுமா? உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் MyGov வாயிலாக இதைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘காந்தி 150’இன் சின்னம் என்னவாக இருக்கலாம்? கோஷம் என்னவாக இருக்க முடியும்? இவற்றைப் பற்றி உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நாமனைவருமாக இணைந்து அண்ணலின் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சலியைச் செலுத்துவோம், அண்ணலை மனதில் இருத்தி உத்வேகம் பெறுவோம், நமது தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வோம்.
தொலைபேசி அழைப்பு – வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே… நான் குட்காவிலிருந்து ப்ரீத்தி சதுர்வேதி பேசுகிறேன்… பிரதமர் அவர்களே, தூய்மை இந்தியா இயக்கத்தை வெற்றிகரமானதொரு இயக்கமாக நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள், இனி நாம் ஆரோக்கியமான இந்தியா இயக்கத்தையும் வெற்றிகரமானதாக ஆக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது…. இந்த இயக்கத்திற்காக நீங்கள் மக்களை, அரசுகளை, அமைப்புக்களையெல்லாம் எப்படி ஒன்றிணைக்கிறீர்கள் என்பது பற்றி கொஞ்சம் கூறுங்களேன். நன்றி.
நன்றி, நீங்கள் சரியாகச் சொன்னீர்கள், தூய்மையான பாரதமும், ஆரோக்கியமான பாரதமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யக் கூடியன என்பதை நான் ஏற்கிறேன். ஆரோக்கியத் துறையில் இன்று நாடு முழுவதும் வழக்கமான அணுகுமுறையைத் தாண்டிச் சென்று விட்டது. தேசத்தில் ஆரோக்கியம் தொடர்பான அனைத்துப் பணிகளும் முன்னர் சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பாகவே இருந்து வந்தன, ஆனால் இப்போதோ அனைத்துத் துறைகளும், அமைச்சகங்களும் – அது தூய்மை அமைச்சகமாகட்டும், ஆயுஷ் அமைச்சகமாகட்டும், வேதிப் பொருள் மற்றும் உரங்கள் அமைச்சகமாகட்டும், நுகர்வோர் நலத்துறை அமைச்சகமாகட்டும் அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள்நல மேம்பாடு அமைச்சகமாகட்டும் அல்லது மாநில அரசுகளாகட்டும் – அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவுக்காகப் பணியாற்றி வருகிறார்கள், நோய்தடுப்பு சுகாதாரத்தோடு, குறைந்த செலவிலான ஆரோக்கியம் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறாது. நோய்தடுப்பு சுகாதாரம் மிகவும் குறைவான செலவு பிடிப்பது என்பதோடு, மிகவும் எளிமையானதும் கூட. நாம் நோய்தடுப்பு சுகாதாரம் தொடர்பாக எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறோமோ அந்த அளவுக்கு தனிநபருக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி, சமுதாயத்துக்கும் சரி ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு முதல் தேவை, தூய்மை. நாமனைவரும் ஒரு தேசமாக உறுதி பூண்டிருக்கிறோம், இதன் விளைவாக கடந்த 4 ஆண்டுகளில் சுகாதார பாதுகாப்பு இருமடங்கு அதிகரித்து சுமார் 80 சதவீதமாகி இருக்கிறது. இதைத் தவிர, நாடெங்கிலும் சுகாதார உடல்நல மையங்கள் உருவாக்கும் திசையில் பரவலான வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய்தடுப்பு ஆரோக்கிய பராமரிப்பு என்ற வகையில் யோகாஸனம், புதிய சக்தியோடு உலகெங்கிலும் தனது அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யோகம் – உடலுறுதி, உடல்நலம் ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இது நம்மனைவரின் முனைப்பில் விளைந்த பலன்; இதனால் இன்று யோகக்கலை ஒரு மக்கள் இயக்கமாக மிளிர்ந்து விட்டது, ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருக்கிறது. வரவிருக்கும் சர்வதேச யோக தினமான ஜூன் மாதம் 21ஆம் தேதிக்கு இன்னும் 100க்கும் குறைவான நாட்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த 3 சர்வதேச யோகக்கலை தினங்களில், தேசத்திலும் உலகத்தின் அனைத்து இடங்களிலும், மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். நாமும் யோகம் பயில்வோம், குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் யோகம் பயில உத்வேகம் அளிப்போம் என்று இந்த முறையும் நாம் உறுதி செய்து கொள்வோம். புதிய சுவாரசியமான வழிமுறைகளைக் கையாண்டு, குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து வயதினர்-பாலினரிடத்திலும், இதை மேலும் பிரபலப்படுத்த வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நாடெங்கிலும் இருக்கும் தொலைக்காட்சிகள், மின்னூடகங்கள் ஆகியன ஆண்டு முழுக்க யோகக்கலை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்கள்; ஆனால் இப்போது தொடங்கி யோக தினம் வரை – ஒரு இயக்கமாக யோகக்கலை பற்றிய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த இயலுமா?
எனது இனிமைநிறை நாட்டுமக்களே, நான் யோகாசிரியர் அல்ல. அதே வேளையில் கண்டிப்பாக யோகக்கலையின் மாணவன்; ஆனால் சிலர் தங்களின் படைப்பாற்றல் வாயிலாக என்னை யோகாசிரியராகவே மாற்றி விட்டார்கள். நான் யோகம் பயில்வது போன்ற முப்பரிமாண காணொளிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நான் உங்களனைவருடன் இந்த காணொளியை பகிர்ந்து கொள்கிறேன்; இதன் வாயிலாக நாம் இணைந்து ஆசனம், பிராணாயாமம் ஆகியவற்றைப் பயில்வோம். உடல்நல பராமரிப்பு அனைவராலும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும், சாமான்யர்களுக்கு விலை மலிவானதாகவும், சுலபமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, பரவலான வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதிலும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டு, அங்கே 800க்கும் அதிகமான மருந்துகள் மலிவான விலையில் கிடைத்து வருகின்றன. மேலும் புதிய மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மனதின் குரல் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் – தேவைப்படும் நபர்களுக்கு இந்த மக்கள் மருந்தக மையங்கள் பற்றிய தகவலை நீங்கள் கொண்டு சேருங்கள் என்பது தான். இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். இருதய நோயாளிகளுக்கான இதய ஸ்டென்ட் (heart stent) விலை 85 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு 50 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் சுகதாரத் திட்டத்தின்படி, சுமார் 10 கோடிக் குடும்பங்கள், அதாவது சுமார் 50 கோடி குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட, ஓராண்டில் குடும்பத்துக்கு என, 5 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படவிருக்கிறது. தேசத்தில் இருக்கும் 479 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 68,000ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறப்பான சிகிச்சையும், ஆரோக்கிய வசதிகளும் கிடைக்க வேண்டி இதற்காக பல மாநிலங்களிலும் புதிய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைகள் திறக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 3 மாவட்டங்களுக்கு இடையே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்படும். 2025க்குள்ளாக, தேசம் காசநோயிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வேலை. மக்கள் ஒவ்வொருவரிடத்திலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் உதவி தேவைப்படுகிறது. காசநோயிலிருந்து விடுதலை பெற, நாமனைவரும் சமூகரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாள். பல ஆண்டுகள் முன்பாக டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பாரதத்தை தொழில்மயமான நாடாக ஆக்குவது பற்றிப் பேசியிருந்தார். அவரைப் பொறுத்த மட்டில் தயாரித்தல் என்பது பலமான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு சாதனம்; இதன்மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். இன்று தேசத்தில் மேக் இன் இந்தியா – இந்தியாவில் தயாரிப்போம் என்ற இயக்கம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது; அன்றே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தொழில்துறை வல்லரசாக இந்தியா ஆகும் கனவைக் கண்டார், அவரது தொலைநோக்குத் தான் இன்று நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கிறது. இன்று பாரதம் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான மையமாக மேலெழும்பிக் கொண்டிருக்கிறது, உலகெங்கிலும் மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு – FDI இந்தியாவுக்கு வருகிறது. உலகம் முழுவதும் பாரதத்தை முதலீடு, புதுமை, வளர்ச்சி ஆகியவற்றிற்கான மையக்களமாக நோக்கியிருக்கிறது. தொழில்துறை வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டுமே சாத்தியமாகும் என்ற எண்ணம் இருந்ததால், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பாரதத்தின் நகரமயாக்கல் மீது நம்பிக்கை கொண்டார். அவரது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் சென்று இன்று நாடெங்கிலும் ஸ்மார்ட் நகரங்கள் இயக்கமும், நகர்ப்புற இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கின்றன; இதன் மூலம் தேசத்தின் பெரிய நகரங்களிலும் சிறிய நகரங்களிலும் அனைத்துவிதமான வசதிகளும் – அவை நல்ல சாலைகளாகட்டும், குடிநீர் அமைப்புக்களாகட்டும், ஆரோக்கிய வசதிகளாகட்டும், கல்வியாகட்டும் அல்லது டிஜிட்டல் இணைப்பு என அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யபப்ட்டு வருகிறது. பாபா சாஹேப் சுயசார்பின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். எந்த ஒரு மனிதனும் ஏழ்மையிலேயே தனது காலத்தைக் கழிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதில்லை. மேலும் அவர், ஏழைகளுக்கு ஏதோ சிறிது பகிர்ந்தளித்து விட்டால் அவர்களின் ஏழ்மை விலகி விடும் என்று கருதவில்லை. இன்று முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா முனைவுகள், நமது இளைய சமுதாயத்தைச் சேர்ந்த புதுமை படைப்பாளிகள், தொழில்முனையும் இளைஞர்கள் ஆகியோரை உருவாக்கியிருக்கின்றன. 1930 மற்றும் 1940களில் பாரதத்தில் சாலைகள் மற்றும் ரயில்வே பற்றிய பேச்சாக இருந்த வேளையில், பாபா சாஹேப் அம்பேத்கர் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் பற்றிப் பேசினார். நீர்சக்தியை தேசத்தின் சக்தியாகப் பார்த்தவர் என்றால் அவர் டாக்டர் பாபா சாஹேப் தான். தேசத்தின் வளர்ச்சிக்காக நீர்பயன்பாட்டின் மீது வலு சேர்த்தார். பல ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆணைக்குழுக்கள், நீர்தொடர்பான தனித்தனி ஆணையங்கள் – இவையனைத்தும் பாபா சாஹேப் அம்பேத்கரின் தொலைநோக்குத் தான்.
இன்று தேசத்தின் நீர்வழிகள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பாக வரலாற்றுரீதியிலான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரதத்தின் பல்வேறு கடற்கரைகளில் புதிய துறைமுகங்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன, பழைய துறைமுகங்களில் கட்டமைப்பு வலுகூட்டப்பட்டு வருகின்றது. 40களில் பெரும்பாலான விவாதப் பொருள் 2ஆம் உலகப் போர், உருவாகி வரும் பனிப்போர், நாட்டின் பிரிவினை ஆகியவற்றைச் சுற்றியே அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் டாக்டர் அம்பேத்கர், ஒருபுறத்தில் டீம் இந்தியாவின் (team india) உணர்வுக்கான அடித்தளத்தை அமைத்தார். அவர் கூட்டாட்சியின் மகத்துவம் பற்றிப் பேசினார், தேசத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்கு வலுசேர்த்தார்.
இன்று நாம் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் cooperative federalism – கூட்டுறவுக் கூட்டாட்சி என்பதையும் தாண்டி, competitive federalism – போட்டி சார் கூட்டாட்சி என்ற மந்திரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; இதில் மிகவும் மகத்துவம் நிறைந்த விஷயம் என்னவென்றால், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னைப் போன்ற கோடிக்கணக்கானோருக்கு ஒரு கருத்தூக்கமாக விளங்குகிறார். முன்னேறுவதற்கு பெரிய குடும்பம் அல்லது சீமான் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், பாரதத்தில் ஏழைக் குடும்பங்களில் பிறந்தவர்களும் கனவு காண முடியும், அந்தக் கனவுகளை மெய்ப்பிக்க முழுமுயற்சிகள் மேற்கொள்ள முடியும், அதில் வெற்றியும் காண முடியும் என்பதையும் அவர் நமக்கெல்லாம் காட்டியிருக்கிறார். ஆம், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரை பலர் எள்ளி நகையாடிய போது, இப்படியும் நடந்தது, அவரை பின்னுக்குத் தள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, பின்தங்கிய ஏழைவீட்டுப் பிள்ளை முன்னேறவே கூடாது, எதையும் சாதித்துவிடக் கூடாது, வாழ்க்கையில் நல்லநிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்கானை அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார்கள். தன் கனவுகளை நனவாக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினார்.
ஆனால் புதிய இந்தியாவின் ஓவியம் முற்றிலும் மாறுபட்டது. அது அம்பேத்கர் கண்ட கனவு இந்தியா, ஏழைகளுடையது, பின் தங்கிய மக்களுக்குச் சொந்தமானது. டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் தொடர்பாக ஏப்ரல் மாதம் 14 தொடங்கி, மே மாதம் 5ஆம் தேதி வரை, கிராம சுயராஜ்ஜிய இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, நாடெங்கும் கிராம முன்னேற்றம், ஏழைகள் நலன், சமூகநீதி ஆகியன மீது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நான் உங்கள்முன் வைக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்த இயக்கத்தில் நீங்கள் உற்சாகத்தோடு பங்கெடுக்க வேண்டும் என்பது தான்.
என் பிரியம்நிறை நாட்டுமக்களே, அடுத்த சில தினங்களில் பல பண்டிகைகள் வரவிருக்கின்றன. பகவான் மஹாவீரர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, ஈஸ்டர், பைசாகீ போன்றன. பகவான் மஹாவீரரின் ஜெயந்தி, அவரது தியாகம், தவம் ஆகியவற்றை நம் நினைவுக்குக் கொண்டு வரும் தினமாகும். அஹிம்சை என்ற செய்தியை நமக்களித்த பகவான் மஹாவீரரின் வாழ்க்கையும், தத்துவமும் நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கும். நாட்டுமக்கள் அனைவருக்கும் மஹாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். ஈஸ்டர் பற்றிய பேச்சு வரும் போதே ஏசுநாதரின் உத்வேகம் அளிக்கும் அறிவுரைகள் நினைவுக்கு வந்து விடும். எப்போதும் மனிதகுல அமைதி, நல்லிணக்கம், நியாயம், கருணை, தயை ஆகியவையே அவர் அளித்த செய்திகளாக இருக்கின்றன.
ஏப்ரல் மாதம் பஞ்சாபிலும், மேற்கு பாரதத்திலும் பைசாகீ உற்சவம் கொண்டாடப்படுகிறது; அதே நாட்களில் பீகாரில் ஜுட் ஷீதல் மற்றும் (Sathuvaain) சதுவாயின் பண்டிகையும், அஸாமில் பிஹுவும், மேற்கு வங்கத்தில் போயிலா பைஸாக்கும் மகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நமது வயல்கள்-கிடங்குகள், உணவளிப்பவர் ஆகியவற்றோடு இணைந்திருக்கின்றன. இந்தப் பண்டிகைகள் வாயிலாக விளைச்சல் என்ற வகையில் நமக்குக் கிடைக்கும் விலைமதிப்பில்லாத கொடைகளுக்கு இயற்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஒருமுறை மீண்டும் உங்கள் அனைவருக்கும், வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று தொடக்கத்திலேயே மனதின் குரலை ஒரு தொலைபேசி அழைப்புடன் தொடங்குகிறேன்.
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நான் மீரட்டிலிருந்து கோமல் திரிபாதி பேசுகிறேன்… 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம்…… இந்தியாவின் முன்னேற்றமும் அதன் வளர்ச்சியும், அறிவியலோடு இணைந்திருக்கிறது…. இந்தத்துறையில் நாம் எந்த அளவுக்கு ஆய்வுகளும், புதுமைகளும் ஏற்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது முன்னேற்றம் விரைவானதாக இருக்கும், நாமும் தழைக்க முடியும்… நமது இளைஞர்கள் மனதில் அறிவியல் எண்ணம் ஏற்படும் விதமாக அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சில சொற்களைப் பேசமுடியுமா? இதன் மூலம் அவர்களின் எண்ணம் விசாலப்படுவதோடு, தேசத்தின் முன்னேற்றமும் உறுதி செய்யப்படும்… நன்றி.
உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றி. விஞ்ஞானம் தொடர்பாக ஏராளமான வினாக்களை எனது இளைய நண்பர்கள் என்னிடத்தில் கேட்டிருக்கிறார்கள், சிலர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். கடலின் நிறம் நீலமாகத் தெரிந்தாலும், நமது அன்றாட அனுபவத்தின் காரணமாக நீருக்கு எந்த நிறமும் இல்லை என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நதியாகட்டும், கடலாகட்டும், நீர் ஏன் நிறத்தோடு தெரிகிறது என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இதே கேள்வி 1920களில் ஒரு இளைஞன் மனதில் உதித்தது. இந்தக் கேள்வி தான் நவீன பாரதத்தின் ஒரு மகத்தான விஞ்ஞானியைத் தோற்றுவித்தது. நவீன விஞ்ஞானம் பற்றி நாம் பேசும் போது, பாரத் ரத்னா சர். சி. வி. ராமன் அவர்களின் பெயர் முதன்மையாக நம் முன்வருகிறது. அவர் தான் light scattering அதாவது ஒளிச்சிதறல் செயல்பாடு மீதான மிகச்சிறப்பான ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றார். அவரது ஆய்வு தான் ராமன் விளைவு என்ற பெயரால் பிரபலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடுகிறோம்; ஏனென்றால், இந்த நாளன்று தான் அவர் ஒளிச்சிதறல் மீதான ஆய்வை மேற்கொண்டார் என்று கருதப்படுகிறது. இதற்காகத் தான் அவருக்கு நோபல் பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நம் தேசத்தில் பல மகத்தான விஞ்ஞானிகள் பிறப்பெடுத்துள்ளார்கள். ஒருபுறம் மாபெரும் கணிதவியலாளர் போதாயனர், பாஸ்கராச்சார்யர், பிரம்மகுப்தர், ஆர்யபட்டர் போன்றோரின் பெரும் பாரம்பரியம் இருந்து வந்துள்ளது என்றால், மற்றொரு புறத்தில் மருத்துவத் துறையில் சுஷ்ருதர், சரகர் ஆகியோர் நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சர். ஜகதீஷ் சந்திர போஸ், ஹர்கோவிந்த் குரானா ஆகியோர் தொடங்கி சத்யேந்திர நாத் போஸ் போன்ற விஞ்ஞானிகள் பாரதத்தின் பெருமிதமாக விளங்குகிறார்கள். சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் பெயர், பிரபலமான நுண்துகளுக்கு அளிக்கப்பட்டு, அது போஸோன் என்று அழைக்கப்படுகிறது. சில நாட்கள் முன்பாக மும்பையில் Wadhwani Institute of Artificial Intelligence – வாத்வானி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற நேர்ந்தது. அறிவியல் துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்றித் தெரிந்து கொள்வது மிக சுவாரசியமான விஷயம். ரோபோக்கள், பா(B)ட்டுகள், குறிப்பிட்ட செயலைச் செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் இந்த செயற்கை நுண்ணறிவு பேருதவி புரிகின்றன. இன்று இயந்திரங்கள் இயந்திரங்கள் வாயிலாக தங்களுடைய நுண்ணறிவை, மேலும் கூர்மையானதாகச் செய்து கொண்டே செல்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழைகள், வறியவர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாகச் செய்யமுடியும். செயற்கை நுண்ணறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்வை மேலும் சுலபமானதாக ஆக்க, இந்த செயற்கை நுண்ணறிவு என்பது எப்படி உதவிகரமாக இருக்க முடியும் என்ற கோணத்தில் சிந்திக்கும்படி விஞ்ஞானிகளிடம் கேட்டுக் கொண்டேன். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுதல் குறித்து மேலும் சிறப்பாகத் தெரிந்து கொள்ளமுடியுமா? விவசாயிகளின் விளைச்சல் தொடர்பாக உதவி செய்யமுடியுமா? இந்த செயற்கை நுண்ணறிவு உடல்நலச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதை எளிதாக்கி, நவீன வழிவகைகள் வாயிலாக நோய்கள் கண்டறிதலில் உதவிகரமாகச் செய்யமுடியுமா?
சில நாட்கள் முன்பாக, குஜராத்தின் அகமதாபாத்தில் I Create திட்டத்தைத் துவக்கி வைக்க இஸ்ரேலின் பிரதமருடன் நான் சென்றிருந்தேன். அங்கே ஒரு இளைஞர், டிஜிட்டல் கருவி ஒன்றை தயாரித்திருந்தார்; பேச முடியாதவர்கள் இந்தக் கருவி வாயிலாகத் தாங்கள் பேச நினைத்தவற்றை எழுதிக்காட்டினால், அந்தக் கருவி அதைக் குரலாக மாற்றியமைக்கிறது, ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொள்வது போலவே இது செய்துதருகிறது என்றார் அந்த இளைஞர். இதுபோன்ற வகைகளில் நாம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முடியும் என்று நான் கருதுகிறேன்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நடுநிலை மதிப்பு உடையன. இவற்றுக்கு என்று சுயமாக மதிப்பேதும் கிடையாது. நாம் விரும்பியபடிதான் எந்த ஒரு இயந்திரமும் செயல்படும். ஆனால் இயந்திரத்தைக் கொண்டு நாம் என்ன செயல்பாடு செய்கிறோம் என்பது நம்மையே சார்ந்திருக்கிறது. இந்த இடத்தில் மனித நோக்கத்தை மகத்துவம் வாய்ந்ததாக நாம் கருதுகிறோம். அறிவியலை மனித சமுதாய நலனுக்காகவும், மனித வாழ்வின் மிக உயர்வான சிகரங்களை எட்டவும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
லைட் பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது பல பரிசோதனைகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. ஒருமுறை இதுபற்றி அவரிடத்தில் கேட்கப்பட்ட போது, அவர், “நான் லைட் பல்பை எப்படித் தயாரிக்கமுடியாது என்பதற்கான பத்தாயிரம் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்றாராம். அதாவது எடிசன் தனது தோல்விகளைக்கூட தனது ஆற்றலாக மாற்றியிருக்கிறார். இன்று மகரிஷி அரவிந்தரின் கர்மபூமியான ஆரோவில்லில் இருக்கிறேன் என்பது தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல, எனக்குப் பெரும்பேறும் கூட. ஒரு புரட்சியாளர் என்ற வகையில் அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கினார், அவர்களுக்கு எதிராகப் போராடினார், அவர்கள் ஆட்சியை எதிர்த்து பல வினாக்களை எழுப்பினார். ஒரு மகத்தான ரிஷி என்ற முறையில், வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திற்கு எதிராகவும் வினா எழுப்பினார். அவற்றுக்கான விடைகளையும் கண்டறிந்தார், மனித சமுதாயத்திற்கு பாதை துலக்கிக் காட்டினார். சத்தியத்தை அறிந்து தெளிய, மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பும் உணர்வு மகத்துவம் வாய்ந்தது. விஞ்ஞானிகளின் தேடலின் பின்புலத்தில் இருக்கும் மெய்யான கருத்தூக்கமும் இது தான். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும் வரையில் வாழாவிருக்கக் கூடாது. தேசிய அறிவியல் தினம் தொடர்பாக நமது விஞ்ஞானிகள், விஞ்ஞானத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் வாழ்த்துகளைத் வாழ்த்துகளைத் கொள்கிறேன். நமது இளைய சமுதாயம், சத்தியம், ஞானம் ஆகியவற்றின் தேடலில் உத்வேகம் பெறட்டும், விஞ்ஞானத்தின் துணை கொண்டு சமூக சேவை செய்ய உத்வேகம் பெறட்டும், இதற்காக எனது பல்லாயிரம் நல்வாழ்த்துகள்.
நல்வாழ்த்துகள், நல்வாழ்த்துகள் நல்வாழ்த்துகள், பேரிடர் என்ற விஷயங்கள் குறித்து எனக்கு பலமுறை ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன, மக்கள் இவற்றைப் பற்றி ஏதாவது ஒன்றை எழுதி வருகிறார்கள். புனேயைச் சேர்ந்த ரவீந்திர சிங் அவர்கள் NarendraModi Appஇல் Occupational Safety, அதாவது தொழில்சார் பாதுகாப்பு குறித்து எழுதியிருக்கிறார். நமது தேசத்தில் தொழிற்சாலைகளிலும், கட்டுமானப் பணியிடங்களிலும் பாதுகாப்புத் தரநிலைகள் அந்த அளவுக்கு சிறப்பானவையாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதியன்று தேசிய பாதுகாப்பு தினம் என்பதால் பாதுகாப்பு குறித்துத் தனது மனதின் குரலில் பிரதம மந்திரி பேசவேண்டும், இதன் மூலம் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்கள் மனதில் ஏற்படும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நாம் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிப் பேசும் வேளையில் 2 விஷயங்கள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக இருக்கின்றன – ஒன்று முன்னெச்சரிக்கையாக இருத்தல், மற்றது தயார்நிலையில் இருத்தல். பாதுகாப்பு என்பது இருவகைப்பட்டது, ஒன்று, பேரிடர்காலங்களில் முக்கியமானதாக இருப்பது, மற்றது, தினசரி வாழ்க்கையில் அவசியமானதாக இருப்பது. நாம் நமது அன்றாட வாழ்வினில் பாதுகாப்பு குறித்து விழிப்போடு இல்லை, பாதுகாப்பாக இருக்கவில்லை என்று சொன்னால், பேரிடர் காலங்களில் இந்த நிலையை எட்டுவது என்பது கடினமான விஷயம். பலமுறை நாம் சாலையோரங்களில் எழுதப்பட்டிருக்கும் பலகையைப் படிக்கிறோம். அவற்றில் என்ன எழுதியிருக்கிறது –
விழிப்புணர்வு நீங்கியது, விபத்து நிகழ்ந்தது,
ஒரு தவறு ஏற்படுத்தியது இழப்பு, தொலைந்தது சந்தோஷம், குலைந்தது புன்சிரிப்பு.
இத்தனை விரைவில் வாழ்வைத் துறக்காதீர்கள், பாதுகாப்பு தரும் உறவை நீங்கள் மறுக்காதீர்கள்.
பாதுகாப்போடு விளையாட வேண்டாம், இல்லையென்றால் வாழ்க்கை வினையாகி விடும்.
இதைத் தாண்டி இந்த வாக்கியங்களால் நமது வாழ்க்கையில் பெரும்பாலும் எந்தப் பயனும் இருப்பதில்லை. இயற்கைப் பேரிடர்களை விடுத்துப் பார்க்கும் போது, பெரும்பாலான இடர்கள், நமது ஏதாவது தவறின் விளைவாகவே ஏற்படுகின்றன. நாம் விழிப்போடு இருந்தால், அவசியமான விதிமுறைகளைப் பின்பற்றினோம் என்றால், நம்மால் நமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மிகப்பெரிய இடர்களிலிருந்து நமது சமுதாயத்தையும் நம்மால் காக்க முடியும்.
பல வேளைகளில் நமது பணியிடங்களில் பாதுகாப்பு தொடர்பாக பல வாக்கியங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கலாம், ஆனால் அவை சரிவரப் பின்பற்றாமல் இருப்பதையும் நாம் கண்டிருப்போம். எந்த மாநகராட்சி, நகராட்சிகள் வசம் தீயணைப்புப் படை இருக்கிறதோ, அவர்களைக் கொண்டு பள்ளிகளில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ மாதிரிப் பயிற்சி செய்து காட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் 2 பயன்கள் – ஒன்று தீயணைப்புப் படையினருக்கும் விழிப்போடு இருக்கும் பயிற்சி ஏற்படும், அடுத்ததாக, புதிய தலைமுறையினருக்கும் இதுபற்றிய தெரிதல் உண்டாகிறது, இதற்கென பிரத்யேகமாக செலவேதும் பிடிப்பதில்லை. ஒருவகையில் இது கல்வித்திட்டத்திலேயே அடங்கிவிடுகிறது, எப்போதும் இந்த விஷயம் குறித்து நான் கேட்டுக்கொண்டு வந்திருக்கிறேன். பேரிடர்கள் எனும் போது, பாரதம் பூகோள ரீதியாகவும் கடல்-வான அமைப்பு ரீதியாகவும் பன்முகத்தன்மை நிறைந்த தேசம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தேசத்தில் பல இயற்கைப் பேரிடர்களும், நாம் அனுபவித்த ரசாயன மற்றும் தொழிற்சாலை தொடர்பான மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர்களும் அடங்கும். இன்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை அதாவது NDMA, தேசத்தின் பேரிடர் மேலாண்மை விஷயத்தில் தலைமை வகிக்கிறது. நிலநடுக்கமாகட்டும், வெள்ளப்பெருக்காகட்டும், சூறாவளியாகட்டும், நிலச்சரிவாகட்டும், பலவகையான பேரிடர்கள் ஏற்படும் வேளையில், மீட்புப் பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மேலாண்மை முகமை உடனடியாக சென்றடைகிறது. இதற்கென வழிகாட்டு நெறிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, கூடவே திறன் மேம்பாட்டிற்கென தொடர்ந்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பெருக்கு, புயல் ஆபத்துகள் ஏற்படக்கூடிய மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆபத்துதவியாளர்கள் என்ற பெயரும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இன்றிலிருந்து 2-3 ஆண்டுகள் முன்புவரை, வெப்ப அலை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உயிர் பறிபோய்க் கொண்டிருந்தது. இதன்பின்னர், தேசிய பேரிடர் மேலாண்மை முகமை இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்த பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கத்தை நடத்தியது. வானிலை மையமும் சரியான எச்சரிக்கை விடுத்தது. அனைவரின் பங்களிப்போடு நல்ல விளைவு ஏற்பட்டது. வெப்ப அலை தாக்குதலால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில், எதிர்பார்த்ததை விடக் குறைந்து, சுமார் 220 என்ற எண்ணிக்கையை அடைந்தது. நாம் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தோம் என்றால், நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது இதிலிருந்து புலனாகிறது. சமுதாயத்தில் இது போன்ற பணிகளில் ஏராளமானோர் ஈடுபட வேண்டும் – சமூக அமைப்புகளாகட்டும், விழிப்புணர்வு கொண்ட குடிமக்களாகட்டும் – பேரிடர்கள் எந்த இடத்தில் ஏற்பட்டாலும், அங்கே விரைந்து சென்று மீட்பு மற்றும் துயர்துடைப்பில் ஈடுபடும் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். நமது தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவைகள், தேசிய பேரிடர் உடனடிச் செயல்படையினர், ஆயுதப்படையினர், துணை இராணுவப் படையினர் ஆகியோரும் சங்கடங்கள் ஏற்படும் வேளையில் உடனடியாகச் செல்லும் வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்கு உதவி புரிகின்றார்கள். தேசிய மாணவர் படை, சாரணர்கள் போன்ற அமைப்பினரும் இந்தப் பணிகளில் இப்போதெல்லாம் செயலாற்றி வருகின்றார்கள், இதற்கான பயிற்சிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த நாட்களில் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. உலக நாடுகளுடனான ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சி நடத்தப்படுவது போல, ஏன் அனைத்து நாடுகளுடனான பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒருங்கிணைந்த பயிற்சி மேற்கொள்ளப்படக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைச் செயல்படுத்துவதில் பாரதம் முன்னணி வகித்தது – BIMSTEC – அதாவது வங்கதேசம், பாரதம், மியன்மார், மியன்மார், தாய்லாந்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சி மேற்கொண்டன, இது மனிதாபிமானம் நிறைந்த ஒரு செயல்பாடு. நாம் ஆபத்துக்கு எதிரான எச்சரிக்கையுடன் இருக்கும் சமூகமாக மாற வேண்டும். நமது பாரம்பரியத்தில் நாம் விழுமியங்களைப் பாதுகாப்பது குறித்து அடிக்கடி பேசுவோம் ஆனால் அதே வேளையில் நாம் பாதுகாப்பு குறித்த விழுமியங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டாக வேண்டும். இதனை நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் பலமுறை விமானப்பயணம் மேற்கொண்டிருக்கிறோம், விமானத்தின் உள்ளே விமானப் பணிப்பெண் பயணத் தொடக்கத்திலேயே பாதுகாப்புத் தொடர்பான குறிப்புகளை அளிக்கிறார். நாம் இவற்றை பலநூறு முறைகள் கேட்டிருந்தாலும், பாதுகாப்புத் தொடர்பான எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று, இன்று நம்மிடத்தில் யாராவது கேட்டால், நம்மால் சரியாக பதில் கூற முடியுமா? உயிர்காக்கும் உடுப்பு, லைஃப் ஜாக்கெட் (life jacket) எங்கே இருக்கிறது? அதை எவ்வாறு பயன்படுத்துவது? என்று கேட்டுப் பாருங்கள். நம்மில் யாராலும் இவற்றுக்கான விடைகளைச் சரியாக அளிக்க முடியாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். சரி, தகவல்கள் அளிக்கும் முறை இருந்ததா? இருந்தது. அனைவராலும் நேரடியாக அதைப் பார்க்கும் வாய்ப்பு இருந்ததா? முடிந்தது. ஆனால் நாம் அதை நம் மனதில் பதிவு செய்து கொள்ளவில்லை. ஏன்? ஏனென்றால், இயல்பிலேயே நாம் விழிப்போடு இல்லை என்பதால், விமானத்தில் அமர்ந்த பின்னர், நமது காதுகள் என்னவோ கேட்கத் தான் செய்கின்றன ஆனால், இந்தத் தகவல் எனக்கானது என்று நம்மில் யாருக்குமே உரைப்பதில்லை. இப்படித்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நமது அனுபவம் இருக்கிறது. பாதுகாப்பு என்பது வேறு யாருக்கோ என்றிருக்க கூடாது; நாமனைவரும் நமது பாதுகாப்பு குறித்து விழிப்போடு இருந்தால், சமூகப்பாதுகாப்பு பற்றிய உணர்வு நம்முள்ளே நிறைந்து விடும்.
எனதருமை நாட்டுமக்களே, இந்தமுறை நிதிநிலை அறிக்கையில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், கிராமங்களில் இயற்கை எரிவாயு மூலமாக கழிவிலிருந்து செல்வம், கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பு ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்முயற்சிக்கு GOBAR-Dhan – Galvanizing Organic Bio-Agro Resources, அதாவது உயிரி, வேளாண் ஆதாரங்களை ஒன்றிணைத்தல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களைத் தூய்மையாக்குதல், கால்நடைகளின் சாணத்தையும், வயல்களின் பயிர்க்கழிவுகளையும், தொழு உரமாகவும், இயற்கை எரிவாயுவாகவும் மாற்றுதல், இதன் மூலமாக செல்வத்தையும் ஆற்றலையும் உருவாக்குதல் ஆகியவை தான் இந்த கோபர்-தன் செயல்திட்டத்தின் நோக்கம். உலகிலேயே கால்நடைச் செல்வம் அதிகம் இருக்கும் நாடு நம் நாடு. நம் நாட்டில் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 30 கோடிகள், சாண உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் டன்கள் ஆகும். சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் கால்நடைகளின் சாணத்தையும், உயிரிக் கழிவுகளையும், எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்துகிறார்கள்; ஆனால் பாரதம் இந்தத் துறையில் முழுமையாக செயல்படவில்லை. தூய்மை பாரதம் இயக்கத்தின் கிராமப்புறத் திட்டத்தின் கீழ், இப்போது நாம் இந்தத் திசையில் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.
கால்நடைக்கழிவுகள், விவசாயக்கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியன வாயிலாக இயற்கை எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கோபர்-தன் திட்டத்தின் கீழ் ஊரக இந்தியாவில் விவசாயிகள், சகோதரிகள், சகோதர்கள் ஆகியோருக்கு ஊக்கமளிக்கப்பட்டு, அவர்கள் சாணம் மற்றும் குப்பைக்கழிவுகளை வெறும் கழிவாக மட்டுமே பார்க்காமல் அவற்றை செல்வம் தரும் ஊற்றாகப் பார்க்க வேண்டும். இந்த கோபர்-தன் திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு ஏராளமான ஆதாயங்கள் கிடைக்கும். கிராமப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவிகரமாக இருக்கும். கால்நடைச் செல்வங்களின் நலம் அதிகரிக்கும், உற்பத்தித் திறம் மேம்பாடு காணும். மேலும் இந்த இயற்கை எரிவாயு சமைக்கவும், ஒளி தரவும் உதவிகரமாக இருந்து, தற்சார்பை அதிகரிக்கச் செய்யும்.
விவசாயிகளுக்கும், கால்நடையை பராமரிப்பவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும். கழிவுச்சேகரிப்பு, போக்குவரத்து, இயற்கை எரிவாயு விற்பனை ஆகியவற்றில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். கோபர்-தன் திட்டத்தை செம்மையான முறையில் செயல்படுத்த இணையவழி வணிக தளம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்; கொள்முதல் செய்வோருடன் விவசாயிகளை இணைத்து, விவசாயிகளின் பயிர்க்கழிவுக்கான சரியான விலையை இது ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில்முனைவோர்கள், குறிப்பாக ஊரகப் பகுதிவாழ் சகோதரிகளிடம், முன்வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி, இந்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தூய்மையான எரிசக்தி மற்றும் பசுமைத் தொழில் ஏற்படுத்தும் இந்த இயக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் கிராமங்களில் இருக்கும் கழிவுகளைச் செல்வமாக மாற்றுங்கள், சாணத்திலிருந்து கோபர்-தன் தயாரிக்கும் திசையில் முன்னெடுப்பு செய்யுங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்றுவரை நாம் இசை விழா, உணவு விழா, திரைப்பட விழா என என்னென்னவோ வகையான விழாக்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம். ஆனால் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தனிச்சிறப்பான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது – இங்கே மாநிலத்தின் முதல் குப்பைத் திருவிழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராய்ப்பூர் நகராட்சி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திருவிழாவின் பின்னணியில் இருந்த நோக்கம் என்னவென்றால், தூய்மை குறித்த விழிப்புணர்வு. நகரின் கழிவுகளை புதுமையான முறையில் பயன்படுத்தி, குப்பைகளை மறுபயன்பாடு செய்யும் பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இந்தத் திருவிழாவில் பலவகையான செயல்பாடுகள் அரங்கேறின; இவற்றில் மாணவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள். குப்பைகளைப் பயன்படுத்தி, பலவகையான கலைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன.
கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான அனைத்துப் பரிமாணங்கள் பற்றிய பயிற்சிப் பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூய்மை என்ற கருத்திலான இசை நிகழ்ச்சியும் அரங்கேறியது. கலைப்படைப்புகள் உருவாக்கப்படன. ராய்புர் அளித்த உத்வேகம் உந்த, மற்ற மாவட்டத்தினரும் தங்கள் பங்குக்கு குப்பைத் திருவிழாக்களை நடத்தினார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கோணத்தில் தூய்மை தொடர்பான புதுமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள், விவாதங்களில் ஈடுபட்டார்கள், கவியரங்குகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். தூய்மையை மையமாகக் கொண்டு திருவிழா போன்றதொரு சூழல் நிலவியது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் இதில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்தார்கள், இது அற்புதமான விஷயமாக அமைந்தது. கழிவுப்பொருள் மேலாண்மை, தூய்மையின் மகத்துவம் ஆகியவற்றை மிக நூதனமான முறைகளில் இந்தத் திருவிழாவில் அரங்கேற்றியமைக்கு நான் ராய்புர் நகராட்சியினருக்கும், சத்தீஸ்கரின் மக்களுக்கும், அங்கிருக்கும் அரசுக்கும், அரசு நிர்வாகத்தினருக்கும் என் அளப்பரிய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ஆம் தேதியை நாம் சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். நம் தேசத்திலும் சரி, உலகம் முழுவதிலும் சரி இதனையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. கடந்த நாட்களில் பல்வேறு துறைகளில் முன்மாதிரிச் செயல்கள் புரிந்த பெண்களுக்கு இந்த நாளன்று நாரீ சக்தி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இன்று தேசம் பெண்கள் முன்னேற்றம் என்ற நிலையைத் தாண்டி, பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற திசையை நோக்கிப் பயணித்து வருகிறது.
இந்த வேளையில் எனக்கு சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. the idea of perfect womanhood is perfect independence, அதாவது முழுமையான சுதந்திரமே முழுமையான பெண்மை என்று அவர் கூறியிருக்கிறார். 125 ஆண்டுகளுக்கு முன்பாக விவேகானந்தர் தெரிவித்திருந்த கருத்து, பாரதநாட்டுக் கலாச்சாரத்தில் பெண் சக்தி பற்றிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இன்று, சமூக, பொருளாதார நிலைகளின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு சரிநிகர் சமமாக இருப்பதை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆண்களுக்கு அடையாளம் தரும் பெண்கள் என்ற பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம். யசோதை மைந்தன், கோசலை புத்திரன், காந்தாரிச் செல்வன் – எந்த ஒரு மகனுக்கும் இப்படித்தானே அடையாளம் அளிக்கப்பட்டது. இன்று நமது பெண்கள் சக்தி, தனது செயல்பாடுகளில் ஆன்மபலத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகிறது. தங்களை தற்சார்புடையவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் முன்னேறும் அதே வேளையில், தேசத்தையும், சமூகத்தையும் முன்னேற்றி, ஒரு புதிய இலக்கை நோக்கிப் பயணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கே பெண்கள் சக்திபடைத்தவர்களாகவும், தேசத்தின் அனைத்துவித வளர்ச்சியிலும் பங்குதாரர்களாகவும் இருக்கிறார்களோ, அது தானே நமது புதிய இந்தியா என்ற கனவு. கடந்த நாட்களில் யாரோ ஒருவர் எனக்கு மிக அருமையான ஒரு ஆலோசனையை வழங்கியிருக்கிறார். மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று பெண்கள் தினம் கொண்டாடும் வேளையில் பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் 100 ஆண்டுகள் நிறைவு செய்த பெண்கள் இருக்கலாம் இல்லையா? அப்படிப்பட்ட தாய்மார்கள்-சகோதரிகளை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாமே? அவர்களின் நீண்டநெடிய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தலாமே? அந்த நண்பர் கூறிய கருத்து எனக்குப் பிடித்திருந்தது, இதை உங்கள் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வருகிறேன். பெண் சக்தியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் காணக் கிடைக்கின்றன. உங்கள் அக்கம்பக்கத்தில் பார்வையைச் செலுத்தினால், உங்கள் வாழ்க்கைக்கு கருத்தூக்கம் அளிக்கும் வகையிலான பல உயரிய உண்மைக்கதைகள் கிடைக்கும். தூய்மை இந்தியா இயக்கத்தில், சுமார் 15 இலட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒரு மாதக்கால தூய்மை இயக்கத்தை மேற்கொண்டார்கள் என்ற தகவல் சில நாட்கள் முன்பு தான் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து எனக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கி, வெறும் 20 நாட்களிலேயே இந்தப் பெண்கள், ஒரு லட்சத்து எழுபதாயிரம் கழிப்பறைகளைக் கட்டி, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதில் சுமார் ஒரு லட்சம் மகளிர் குழுக்களும் அடங்கும். 14 லட்சம் பெண்கள், 2000 மகளிர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீர், வடிகால் பணிகளில் ஈடுபட்டிருக்கும் 29,000 பெண்கள், 10000 தூய்மை தன்னார்வ மகளிர், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 50000 மகளிர் ஆகியோர் இதில் பங்கெடுத்தார்கள். இது ஒன்றும் சிறிய எண்ணிக்கை அல்ல. எத்தனை பெரிய நிகழ்வு இதுவென்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!! எளிய மக்களின் வாழ்க்கையில் தூய்மை இயக்கத்துக்கும், தூய்மைக் கலாச்சாரத்துக்கும் வலு சேர்த்து, இதை வெகு ஜனங்களின் இயல்பாக மாற்றக்கூடிய வல்லமையைக் கொண்டது பெண்சக்தி என்பதை ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே, எலிஃபண்டா தீவுகளின் 3 கிராமங்களில், நாம் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சாரம் வந்தது என்பது குறித்து அவர்கள் எத்தனை சந்தோஷப்பட்டார்கள் என்ற செய்தியை, 2 நாட்கள் முன்பாக நான் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தெரிந்து கொண்டேன். எலிஃபண்டா தீவு, மும்பையின் கடல்பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் நிறைந்த ஒரு மையம். எலிஃபண்டா குகைகள், யுனெஸ்கோ அமைப்பினால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இங்கே தினமும் நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இது மகத்தானதொரு சுற்றுலாத் தலமாகும்.
இத்தனை சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாக இருந்தும், இது மும்பைக்கு அருகே இருந்தும்கூட, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் வரை, அங்கே மின்சாரம் சென்று சேரவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. 70 ஆண்டுகள் வரை எலிஃபெண்டா தீவின் 3 கிராமங்களான ராஜ்பந்தர், மோர்பந்தர், சேந்த்பந்தர் என்ற இந்த இடங்களில் இருளில் மூழ்கிக் கிடந்த மக்களின் வாழ்வினில் இருந்து இருள் விலகியது, ஒளி பிறந்தது. அங்கே இருக்கும் நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எலிஃபண்டாவின் கிராமங்களும், எலிஃபண்டாவின் குகைகளும் இனி ஒளி வெள்ளத்தால் நிறைந்திருக்கும். இது வெறும் மின்சாரமல்ல; வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய துவக்கம். நாட்டுமக்களின் வாழ்வு ஒளிமயமாகட்டும், அவர்களின் வாழ்வினில் சந்தோஷங்கள் பெருகட்டும், இதைவிட மகிழ்ச்சியும், ஆனந்தமும் அளிக்கக்கூடிய தருணம் வேறு என்னவாக இருக்க முடியும், கூறுங்கள்!!
என் உயிரினும் மேலான சகோதர சகோதரிகளே, சில நாட்கள் முன்புதான் நாம் சிவராத்திரி உற்சவத்தைக் கொண்டாடினோம். மார்ச் மாதம் என்பது, பசுமை கொழிக்கும் வயல்கள், இதமாய் அசைந்தாடும் பயிர்களின் அழகுக்கூத்து, மனதிற்கு ரம்மியம் அளிக்கும் மாம்பூக்கொத்துக்கள் – இவை தானே இந்த மாதம் அள்ளி இறைக்கும் சிறப்புக்கள். அதே வேளையில், இந்த மாதத்தில் வரும் ஹோலிப் பண்டிக்கையும் நம்மனைவர் நெஞ்சங்களுக்கும் நெருக்கமான ஒன்று. மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று நாடுமுழுவதிலும் ஹோலிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ஹோலிப் பண்டிகையில் வண்ணங்களுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ, அத்தனை முக்கியத்துவம் ஹோலிகா தகனத்திற்கும் இருக்கிறது. ஏனென்றால், இந்த நாளன்று தான், நாம் தீமைகளையெல்லாம் நெருப்பினில் இட்டுப் பொசுக்குகிறோம். அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒருவர் மற்றவரின் சந்தோஷத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் மங்கலமான தருணம் இது, இந்த அரியநற் செய்தியை அளிக்கிறது ஹோலிப் பண்டிகை. நாட்டுமக்கள் அனைவருக்கும் வண்ணங்களின் திருவிழாவாம் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு, வண்ணமயமான நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நாட்டுமக்கள் அனைவரின் வாழ்வுகளிலும் வண்ணங்கள்பல நிறைந்த மகிழ்வுகளை நிறைக்கட்டும், இதுவே எனது மனமார்ந்த வாழ்த்து. எனது பிரியமான நாட்டுமக்களே, மிக்க நன்றி, வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். 2018ஆம் ஆண்டிற்கான என் முதல் மனதின் குரல் இது; 2 நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளை மிகவும் உற்சாகத்தோடு கொண்டாடினோம், வரலாற்றிலேயே முதன்முறையாக, பத்து நாடுகளின் தலைவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, பிரகாஷ் திரிபாதி அவர்கள் நரேந்திர மோடி செயலியில் (NarendraModi App) ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார், அதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் நான் பேச வேண்டும் என்று மிகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி விண்வெளி சென்ற கல்பனா சாவ்லா அவர்கள் மறைந்த தினம். கொலம்பியா விண்வெளிக்கலம் விபத்துக்குள்ளானதன் காரணமாக அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த வகையில் கல்பனா சாவ்லா அவர்கள் மறைந்த தினம் பற்றித் தெரிவித்துத் தனது கடிதத்தைத் தொடக்கியமைக்கு நான் பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இத்தனை சிறிய வயதில் கல்பனா சாவ்லா அவர்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது நம் அனைவருக்குமே பெரும் துக்கம் அளிக்கும் விஷயம் தான் ஆனால், அவர்கள் உலகம் முழுவதிலும், குறிப்பாக பாரதத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, பெண்சக்திக்கு எல்லையே இல்லை என்ற செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். பேராவலும், திடமான தீர்மானமும், சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருந்தால், இயலாதது என்ற ஒன்று இல்லை என்பதையே அவரது வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. இன்று பாரதத்தில் பெண்கள், ஒவ்வொரு துறையிலும் மிகவேகமாக முன்னேறி வருகிறார்கள், தேசத்தின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பண்டைகாலம் தொட்டே, நம் நாட்டில் பெண்களுக்கு மரியாதை, சமுதாயத்தில் அவர்களுக்கென சிறப்பிடம் அளித்திருப்பது, அவர்களின் பங்களிப்பு ஆகியவை உலகம் முழுமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்திருக்கிறது. பாரத நாட்டில் கல்வியில் சிறந்த பெண்கள் என்ற ஒரு பாரம்பரியமே இருக்கிறது. வேதத்தின் சூத்திரங்களை இயற்றியதில் பல கற்ற பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. லோப்பமுத்ரா, கார்க்கி, மைத்ரேயி ஆகியோரைப் பற்றிப் பேசுகிறோம் நாம் இன்று பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம் என்று பேசுகிறோம் ஆனால், பலநூற்றாண்டுகள் முன்பாக நமது சாத்திரங்கள் கந்தபுராணத்தில்,
दशपुत्र, समाकन्या, दशपुत्रान प्रवर्धयन् |
यत् फलं लभतेमर्त्य, तत् लभ्यं कन्यकैकया ||
தஸபுத்ர, ஸமாகன்யா, தஸபுத்ரான் ப்ரவர்த்தயன்.
யத் பலம் லபதேமர்த்ய, தத் லப்யம் கன்யகைகயா.
என்று கூறியிருக்கின்றது. அதாவது, ஒரு மகள், பத்து மகன்களுக்குச் சமமானவள். பத்து மகன்கள் வாயிலாக எத்தனை புண்ணியம் கிடைக்குமோ, அவையனைத்தும் ஒரு மகளளிக்கும் புண்ணியத்துக்கு சமமாகும். இது நமது சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மகத்துவம் பற்றி விரித்துப் பேசுகிறது. இதனால் தானே நமது சமுதாயத்தில் பெண்களுக்கு சக்தி என்ற அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார்கள்!! இந்தப் பெண்-சக்தி தேசம் முழுமையையும், சமுதாயம் முழுமையையும், குடும்பங்கள் முழுமையையும், ஒற்றுமை என்ற இழையால் இணைக்கிறது. அது வேதகாலத்தின் முற்றும் தெளிந்த லோப்பமுத்ரா, கார்க்கி, மைத்ரேயி ஆகியோரின் பாண்டித்யம், அக்கா மகாதேவி, மீராபாயி போன்றோரின் ஞானம், பக்தி, அஹில்யாபாய் ஹோல்கரின் ஆளுகை அமைப்பு, இராணி லக்ஷ்மிபாயின் வீரம் போன்றவை, பெண்-சக்தி என்பது நமக்கு என்றுமே உத்வேகம் அளித்து வந்திருக்கிறது, தேசத்தின் மாண்பிற்குப் பெருமை சேர்த்து வந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
பிரகாஷ் திரிபாதி அவர்கள் மேலும் பல எடுத்துக்காட்டுகளை அளித்திருக்கிறார். நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் போர்விமானம் சுகோய் 30இல் வானில் பறந்து சாகஸம் புரிந்தது தனக்கு கருத்தூக்கம் அளித்ததாகவும், INSV TARINI கலத்தில் வர்த்திகா ஜோஷீ தலைமையிலான இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண்கள் குழு உலகம் சுற்றும் பயணத்தை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் தெரிவித்திருக்கிறார். பாவனா கண்ட், மோகனா சிங், அவனீ சதுர்வேதி என்ற 3 தீரம்நிறைந்த பெண்கள் போர்விமான ஓட்டிகளாக ஆகியிருக்கிறார்கள், சுகோய் 30யை இயக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். க்ஷமதா வாஜ்பேயியின் தலைமையில் பெண்கள் அடங்கிய குழு, தில்லி தொடங்கி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வரை சென்று, திரும்ப தில்லி வரை ஏர் இந்தியா போயிங் ஜெட்டில் பறந்தார்கள், இவர்கள் அனைவரும் நம்நாட்டுப் பெண்கள். இவற்றையெல்லாம் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி தான். இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதோடு மட்டுமல்லாமல், தலைமை தாங்கியும் வருகிறார்கள். இன்று பல துறைகளில் முதன்முதலாக பெண்-சக்தி சாதனை புரிந்து வருகிறது, ஒரு மைல்கல்லை ஸ்தாபித்து வருகிறது. கடந்த நாட்களில் மேதகு குடியரசுத் தலைவர் ஒரு புதிய முனைப்பை மேற்கொண்டார்.
தத்தமது துறைகளில், முதன்முதலில் சாதனை படைத்த அசாதாரணமான பெண்களின் ஒரு குழுவை நமது குடியரசுத்தலைவர் சந்தித்தார். தேசத்தின் இந்தப் பெண் சாதனையாளர்கள், வாணிபக் கப்பல்களின் முதல் பெண் கேப்டன், பயணிகள் ரயிலின் முதல் பெண் ஓட்டுனர், முதல் பெண் தீயணைப்பாளர், முதல் பெண் பேருந்து ஓட்டுநர், அண்டார்ட்டிகா சென்றடைந்த முதல் பெண், எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண், என்பது போன்று ஒவ்வொரு துறையிலும் முதலில் சாதித்த பெண்கள் – நமது பெண்-சக்தி, சமூகத்தின் பழைமைவாதத் தளைகளைத் தகர்த்து, அசாதாரணமான சாதனைகளைப் படைத்திருக்கின்றார்கள். கடுமையான உழைப்பு, முனைப்பு, மனவுறுதி அளிக்கும் பலம் ஆகியவற்றின் துணைகொண்டு அனைத்துத் தடைகளையும், இடர்களையும் கடந்து, ஒரு புதிய பாதையை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
இந்தப் பாதையில் அவர்கள் தங்கள் காலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் புதியதொரு உற்சாகம், புதியதொரு உத்வேகம் ஆகியவற்றை நிரப்பியிருக்கிறார்கள். தேசம் முழுமையும் இந்தப் பெண்-சக்திகளைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் வாழ்க்கையின் வாயிலாக உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காக, இந்தப் பெண் சாதனையாளர்கள், முதலாவதாக வந்திருக்கும் பெண்கள் பற்றி ஒரு புத்தகமே கூட எழுதப்பட்டு விட்டது; இந்தப் புத்தகம் இன்று e-book வடிவத்தில் NarendraModi Appஇல் கிடைக்கிறது.
இன்று தேசத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களில் பெண்களின் சக்தியின் மகத்துவம்நிறைந்த பங்களிப்பு பளிச்சிடுகிறது. இன்று நாம் பெண்களுக்கு அதிகாரம்வழங்கல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு ரயில்நிலையம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு ரயில்நிலையம், பெண்களின் அதிகாரம்வழங்கல், இவற்றுக்கு இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். மும்பையின் மாடுங்கா ரயில்நிலையத்தில் அனைத்துப் பணியாளர்களும் பெண்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் – அது வர்த்தகத் துறையாகட்டும், ரயில்காவலர்களாகட்டும், பயணச்சீட்டுப் பரிசோதகர்களாகட்டும், அறிவிப்பு செய்பவர்களாகட்டும், தொடர்பு கொள்ளத் தேவையான நபராகட்டும், பணிபுரியும் அனைத்து 40 பணியாளர்களுமே பெண்கள் தாம். இந்த முறை குடியரசுத் திருவிழா அணிவகுப்பைப் பார்த்த பிறகு, டிவிட்டரிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் பலர் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், எல்லையோரக் காவல்படையின் பைக் ஓட்டும் பிரிவு பற்றித் தான், இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் அனைவருமே பெண்கள் தாம்.
அவர்கள் சாகசம் நிறைந்த செயல்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள், இந்தக்காட்சி, அயல்நாடுகளிலிருந்து வந்த விருந்தினர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிகாரம்வழங்கல், சுயசார்புடைமையின் ஒரு வடிவம். இன்று நமது பெண்-சக்தி தலைமை தாங்குகிறது. சுயசார்பாக உருவெடுத்து வருகிறது. சத்திஸ்கரின் நமது பழங்குடியினப் பெண்கள் புரிந்த ஆச்சரியமான வேலை என் கவனத்தில் வருகிறது. அவர்கள் புதியதொரு எடுத்துக்காட்டை அளித்திருக்கிறார்கள். பழங்குடியினப்பெண்கள் பற்றிப் பேசும் போது, அனைவரின் மனங்களிலும் ஒரு தீர்மானமான காட்சி ஏற்படுகிறது.
இந்தக் காட்சியில் காடுகள் இருக்கின்றன, பாதைகள் இருக்கின்றன,, அவற்றில் தலையில் பாரம் சுமந்து செல்லும் பெண்கள். ஆனால் சத்திஸ்கரின் நமது பழங்குடியினப் பெண்கள், நமது பெண்-சக்தி, தேசத்தின் முன்பாக ஒரு புதிய காட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சத்திஸ்கரின் டண்டேவாடா பகுதி மாவோயிஸத் தீவிரவாதிகளால் பீடிக்கப்பட்ட பகுதி. வன்முறை, அடக்குமுறை, குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் என மாவோவாதிகள் இங்கே ஒரு பயங்கரம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இத்தகைய பயங்கரம் நிறைந்த ஒரு சூழலில் பழங்குடியினப் பெண்கள், பேட்டரியால் இயங்கும் ரிக்ஷாக்களை ஓட்டி, சுயசார்புடையவர்களாக ஆகி வருகிறார்கள். மிகக்குறைந்த காலகட்டத்திற்குள்ளாக பல பெண்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். இதனால் 3 ஆதாயங்கள் – ஒருபுறம் சுயவேலைவாய்ப்பு அவர்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது, மறுபுறத்தில், மாவோயிச கொள்கைகளால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் காட்சி மாறுகிறது. இவற்றோடுகூட, சூழல்பாதுகாப்பு தொடர்பாகவும் வலுகூட்டப்படுகிறது. இங்கே இருக்கும் அரசு நிர்வாகத்துக்கும் நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன், அவர்கள் நிதியுதவியளிப்பது முதல், பயிற்சி தருவது வரை, இந்தப் பெண்களின் வெற்றியின் பின்புலத்தில் மகத்தான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள்.
”என்னவோ தெரியலை நம்மை யாராலும் அழிக்க முடியலை” என்ற வழக்கை நாம் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறோம். அப்படியென்ன இதில் சிறப்பு இருக்கிறது என்றால், அது தான் வளைந்து கொடுக்கும்தன்மை, மாற்றமேற்படுத்தும் இயல்பு. வழக்கொழிந்து போனவற்றைக் கைவிடல், தேவையானவற்றில் மாற்றங்களை ஏற்றல். தன்னையே சீர்திருத்திக் கொள்ளும் தொடர்முயற்சி என்ற நம்தேசப் பாரம்பரியம், இது தான் நமது சமுதாயத்தின் சிறப்பு, நமது கலாச்சார மரபு. தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளும் உத்தி தான், துடிப்புடைய சமூகத்தின் அடையாளம். சமூக சீர்கேடுகள், சிதைவுகளுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக தேசத்தில் தனிப்பட்ட ரீதியாகவும், சமூக அளவிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. சில நாட்கள் முன்பாக, பிஹாரில் ஒரு சுவையான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. சமூக சீர்கேடுகளை வேரோடு சாய்க்க, பிஹார் மாநிலத்தில் 13,000த்திற்கும் அதிகமான கி.மீட்டர் தூரத்திற்கான ஒரு மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இயக்கம் வாயிலாக குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை போன்ற தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு தூண்டப்பட்டது. வரதட்சணைக் கொடுமை மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக மாநில மக்கள் அனைவரும் போராடத் தீர்மானம் மேற்கொண்டார்கள். குழந்தைகள், பெரியவர்கள், உற்சாகமும் உத்வேகமும் நிறைந்த இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என அனைவரும் தாங்களாகவே முன்வந்து இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் தொடங்கி இந்த மனிதச் சங்கிலி, மாநிலத்தின் எல்லை வரை, தங்குதடையேதுமில்லாமல் இணைந்து நீண்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மெய்யான முன்னேற்றத்தின் பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால், நமது சமுதாயம் இத்தகைய சீர்கேடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். நாமனைவரும் இணைந்து இத்தகைய சீர்கேடுகளை சமூகத்திலிருந்து காணாமல் போகச் செய்வோம் என்ற சபதமேற்போம்; புதிய இந்தியா, சக்திபடைத்த, வல்லமைமிக்க இந்தியாவை உருவாக்குவோம் வாருங்கள். நான் பிஹாரின் மக்கள், மாநிலத்தின் முதல்வர், அதன் நிர்வாகம் ஆகியோருக்கும் மனிதச்சங்கிலியில் பங்கெடுத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் சமூகநலனுக்காக வழிகாட்ட, இத்தகைய ஒரு சிறப்பான, பரந்துபட்ட முன்னெடுப்பை மேற்கொண்டார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த தர்ஷன் அவர்கள் MyGovஇல் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் – அவரது தந்தையாரின் மருத்துவ சிகிச்சைக்காக மாதம் 6000 ரூபாய் செலவு பிடிக்கிறது என்றும், தனக்கு பிரதமர் மக்கள் மருந்தகத் திட்டம் பற்றித் தெரியாது என்றும், இந்த பிரதமர் மக்கள் மருந்தகத் திட்ட மையம் பற்றித் தெரியவந்தவுடன், அங்கிருந்து மருந்துகளை வாங்கத் தொடங்கி, இப்போது மருந்துகளுக்காகத் தான் செலவு செய்யும் தொகை 75 சதவீதம் குறைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். எனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் இது பற்றிப் பேச வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார், இதன் வாயிலாக அதிகப்படியான மக்களுக்கு இதுபற்றித் தகவல் சென்றுசேர வேண்டும், அவர்களும் பயனடைய வேண்டும் என்றும் விரும்புகிறார். கடந்த சில காலமாகவே இந்த விஷயம் குறித்து மக்கள் எனக்குக் கடிதம் எழுதி வருகிறார்கள், கூறியும் வருகிறார்கள். இந்தத் திட்டம் வாயிலாகப் பயனடைந்தோர் தொடர்பாக நானும் பல காணொளிப்படங்களையும், சமூக ஊடகங்களிலும் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற தகவல்களைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆழமான ஒரு நிறைவு உண்டாகிறது. தர்ஷன் அவர்களுக்கு கிடைத்தது, மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது எனக்கு இதமளிக்கிறது. இந்தத் திட்டத்தின் பின்புலத்தில் இருக்கும் நோக்கம் – உடல்நலச் சேவையை கட்டுப்படியானதாக ஆக்குவது, வாழ்வை எளிமையாக்குவது ஆகியவற்றை ஊக்கப்படுத்தல் தான். மக்கள் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள், வணிகமுத்திரையிடப்பட்ட மருந்துகளைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை விலை குறைவானதாக இருக்கிறது. இதில் எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய, குறிப்பாக தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், மூத்த குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக மிக்க பயனை அளிக்கிறது, இதனால் சேமிப்பு அதிகரிக்கிறது.
இங்கே வாங்கப்படும் generic மருந்துகள், அதாவது அதே வகையைச் சார்ந்த மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளுக்கு ஏற்பவே இருக்கின்றன. இந்தக் காரணத்தால் நல்ல தரமான மருந்துகள், மலிவான விலையில் கிடைக்கப் பெறுகின்றன. இன்று நாடு முழுவதிலும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் மருந்தகங்களை மைய அரசு நிறுவி இருக்கிறது. இதன் வாயிலாக மருந்துகள் மலிவுவிலையில் கிடைப்பதோடு, தொழில்முனையும் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மலிவு விலை மருந்துகள், பிரதமர் பாரதீய மக்கள் மருந்தகங்கள், மருத்துவமனைகளின் அம்ருத் கடைகளில் கிடைக்கின்றன. இவையனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் ஒரே நோக்கம் – தேசத்தில் இருக்கும் மிக ஏழை மக்களுக்கும் தரமான, கட்டுப்படியாகக்கூடிய ஆரோக்கிய சேவையை ஏற்படுத்திக் கொடுப்பது தான், இதன் மூலம் உடல்நலம் நிறைந்த, வளமான இந்தியாவை நிர்மாணிக்க இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மங்கேஷ் அவர்கள், NarendraModi Mobile Appஇல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் ஒரு பேரன் தன் தாத்தாவுடன் இணைந்து ”மோர்னா நதியைச் சுத்தப்படுத்துவோம்” என்ற இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். அகோலாவின் குடிமக்கள் இந்த தூய்மையான பாரதம் இயக்கம் தொடர்பாக, மோர்னா நதியைத் தூய்மைப்படுத்தும் செயல்பாட்டை மேற்கொண்டார்கள். மோர்னா நதி 12 மாதங்களும் பெருக்கெடுத்து ஓடக்கூடிய நதியாக ஒருகாலத்தில் இருந்தாலும், இப்போது அது பருவநதியாக மாறிவிட்டது. இங்கே துயரம் அளிக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், நதியில் காட்டுப்புற்களும், நீர்ப்பாசியும் நிறைந்திருக்கிறது. நதிக்கரைகளில் ஏராளமான குப்பைக்கூளங்கள் வீசப்பட்டு வருகின்றன. இதைச்சீர் செய்ய ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, மகர சங்கராந்திக்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று, ‘மோர்னா நதி தூய்மைத் திட்டத்தின் முதல் கட்டமாக 4 கி.மீ. நீளத்திற்கு 14 இடங்களில் நதியின் இரு கரைகளும் சுத்தம் செய்யப்பட்டன. ‘மோர்னா நதி தூய்மைத் திட்டத்தின்’ இந்த நற்காரியத்தில் அகோலாவின் 6000த்திற்கும் அதிகமான குடிமக்கள், நூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், மாணவர்கள், குழந்தைகள், பெரியோர், தாய்மார்கள்-சகோதரிகள் என அனைவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்றும், இந்தத் தூய்மை இயக்கம் தொடரப்பட்டது, மேலும் மோர்னா நதி முழுமையாக தூய்மை அடையாதவரை இந்த இயக்கம் ஒவ்வொரு சனிக்கிழமையன்று காலையன்று தொடர்ந்து நடைபெறும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. முயன்றேயாக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருவர் மேற்கொண்டு விட்டாரேயானால், அவரால் சாதிக்க முடியாதது என்பது ஏதுமில்லை என்பதையே இது காட்டுகிறது. மக்கள் இயக்கம் வாயிலாக மிகப்பெரிய மாற்றங்களைக்கூட ஏற்படுத்த முடியும். நான் அகோலா மக்களுக்கும், அதன் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும், மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட குடிமக்கள் அனைவருக்கும், இந்த முயற்சிகளுக்காக என் உளம்நிறை பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்களின் இந்த முயற்சி தேசத்தின் மற்ற குடிமக்களுக்கும் கருத்தூக்கம் ஏற்படுத்தும்.
எனதருமை நாட்டுமக்களே, குடியரசுத் திருநாளன்று வழங்கப்படும் பத்ம விருதுகள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது. செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் இதன்பால் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் சற்றே நுணுகிப் பார்க்கும் போது, இது உங்களுக்குப் பெருமிதம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நம்மிடையே மகத்துவம் நிறைந்தவர்கள் இருப்பதும், அவர்களுக்கு எந்த பரிந்துரையும் இல்லாமல் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைப்பதும் நமக்கு உள்ளபடியே மிகுந்த பெருமிதம் ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அளிக்கப்படும் பாரம்பரியம் நம்மிடையே இருக்கிறது என்றாலும் கடந்த 3 ஆண்டுகளில் இதன் ஒட்டுமொத்த செயல்பாடும் மாற்றம் கண்டிருக்கிறது. எந்த ஒரு குடிமகனும் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். இந்த முழுச் செயல்பாடும் ஆன்லைன் வழிமுறை காரணமாக, ஒளிவுமறைவற்ற வகையில் நடைபெறுகிறது. ஒருவகையில் இந்த விருதாளர்களைத் தெரிவு செய்யும் வழிமுறையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் எளிய மனிதர்களுக்குக் கூட பத்ம விருது கிடைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பொதுவாக, பெரு நகரங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், விழாக்களிலும் அதிகம் தென்படாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இப்போது விருதளிக்கப்பட, ஒரு நபர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, மாறாக அவரது செயல்களே அவரது அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. கான்பூர் ஐ.ஐ.டியில் பயின்று தேர்ச்சி பெற்ற அர்விந்த் குப்தா அவர்கள், குழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பதில் தனது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார் என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். அவர் 40 ஆண்டுக்காலமாக குப்பையிலிருந்து, விளையாட்டுச் சாமான்கள் தயாரித்து வருகிறார், இதன்மூலம் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்படும் வகையில் அவர் செயல்படுகிறார். பயனற்ற பொருட்களைக் கொண்டு அறிவியல் பரிசோதனைகளைக் குழந்தைகள் செய்து பார்க்க வேண்டும் என்பதே அவரது முயற்சியாக இருந்து வந்திருக்கிறது; இதற்காக அவர் நாடு முழுவதிலும் 3000 பள்ளிகளுக்குச் சென்று, 18 மொழிகளில் தயாரிக்கப்பட்ட காணொளிப் படங்களைக் திரையிட்டு ஊக்கமளித்து வருகிறார்.
என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை, உன்னதமான அர்ப்பணிப்பு பாருங்கள்!! கர்நாடக மாநிலத்தின் சீதவ்வா ஜோடட்டி அவர்களின் வாழ்க்கையும் இதைப் போன்றது தான். இவரை ‘பெண்களுக்கு அதிகாரமளித்த தேவி’ என்று அவரை அழைப்பதில் பொருளில்லாமல் இல்லை. பெலகாவியைச் சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளாக, எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை மாற்றுவதில் மகத்தான பங்களிப்பு நல்கியிருக்கிறார். தனது 7ஆம் வயதிலிருந்தே, தன்னை தேவதாசியாக அர்ப்பணித்து, தன் வாழ்க்கை முழுவதையும் தேவதாசிகளின் நலன்களுக்காகவே செலவிட்டார். இது மட்டுமல்ல, இவர் தாழ்த்தப்பட்ட பெண்கள் நலனுக்காகவும் இதுவரை யாருமே செய்திராத வகையில் பணியாற்றியிருக்கிறார்.
நீங்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பஜ்ஜூ ஷ்யாம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். பஜ்ஜூ ஷ்யாம் அவர்கள் மிகவும் ஏழ்மையான பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது வாழ்வாதாரத்திற்காக எளிய பணிகளைச் செய்து வந்தாரென்றாலும், அவருக்கு பாரம்பரியமான பழங்குடியினத்தவர் ஓவியக்கலை மீது அபாரமான நாட்டம் இருந்தது. இந்தப் பேராவல் காரணமாகவே இன்று அவருக்கு பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் மதிப்பு இருக்கிறது. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற பல நாடுகளில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அயல்நாடுகளில் பாரதத்தின் பெயரை சிறப்பித்துவரும் பஜ்ஜூ ஷ்யாம் அவர்களின் திறமை அடையாளம் காணப்பட்டது, அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் லக்ஷ்மிகுட்டியின் வாழ்க்கை உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். லக்ஷ்மிகுட்டி அவர்கள் கல்லார் பகுதியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்; இன்றும்கூட அவர் அடர்ந்த காட்டுப்பகுதிகளில், பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு இடையே பனையோலையால் வேயப்பட்ட குடிசையில் வசித்து வருகிறார். 500 மூலிகை மருந்துகளை இவர் தன் நினைவில் வைத்திருக்கிறார். இவர் மூலிகைகளைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்திருக்கிறார். பாம்பு தீண்டிய பிறகு பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து தயாரிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். லக்ஷ்மி அவர்கள் தனது மூலிகை மருத்துவ அறிவின் மூலம் தொடர்ந்து சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறார். யாருக்கும் புலப்படாமல் இருந்த இவரை அடையாளம் கண்டு, சமூகத்தில் அவரது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நான் மேலும் ஒருவர் பற்றிக் கூற வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.
மேற்கு வங்காளத்தின் 75 வயதான சுபாஷிணி மிஸ்த்ரி அவர்கள் விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். சுபாஷிணி மிஸ்த்ரி அவர்கள், மருத்துவமனை ஒன்றை உருவாக்க பலர் இல்லங்களில் பாத்திரங்கள் கழுவினார், காய்கறிகள் விற்பனை செய்தார். இவருக்கு 23 வயதான போது, சரியான மருத்துவ கவனிப்பு இல்லாத காரணத்தால், இவரது கணவர் இறக்க நேரிட்டது. இந்தச் சம்பவம் தான் ஏழைகளுக்கென ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற உந்துதலை இவருக்கு அளித்தது. இன்று, இவரது கடினமான உழைப்பினால் உருவாக்கம் பெற்ற மருத்துவமனை ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது. விலைமதிப்பில்லாத நமது பல ரத்தினங்களில் இப்படிப்பட பல ஆண் – பெண் ரத்தினங்கள் இன்னும் இருக்கின்றார்கள், இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது, இவர்களுக்கென அடையாளம் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கென ஒரு அடையாளம் இல்லாது போனால், அது சமுதாயத்துக்கே பேரிழப்புத் தான். நமது அக்கம்பக்கத்தில் சமுதாயத்திற்காக வாழ்பவர்கள், சமுதாயத்திற்காகத் தியாகம் புரிபவர்கள், ஏதோவொரு குறிக்கோளை முன்னிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் லட்சியவாதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று பத்ம விருதுகள் வாயிலாக நான் நாட்டுமக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களை நாம் சிறப்பிக்க வேண்டும். அவர்கள் விருதுகள்-அங்கீகாரங்களுக்காக செயலாற்றுவதில்லை; ஆனால் அவர்களின் செயல்கள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில வேளைகளில் பள்ளிகளில், கல்லூரிகளில் கூட இப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களின் அனுபவங்களைப் பகிரச் செய்ய வேண்டும். விருதுகளையெல்லாம் தாண்டி, சமுதாயமும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று நாம் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கான தினத்தைக் கொண்டாடுகிறோம். இதே நாளன்று தான் அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். இந்த நாளன்று நாம் பாரதத்திலும், உலகெங்கிலும் இருக்கும் இந்தியர்களுக்கும் இடையே நிலவும், பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாம் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கென ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்; இதில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து உலகெங்கிலும் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மலேஷியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல், மொரீஷியஸ், ஃபிஜி, தான்சானியா, கென்யா, கனடா, பிரிட்டன், சூரினாம், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் எங்கெல்லாம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மேயர்கள் இருக்கிறார்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் பங்கெடுத்தார்கள். அவர்கள் தங்கள் நாட்டுப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், கூடவே, பாரதத்துடனான தங்கள் தொடர்புகளை பலமாகவும் வைத்திருக்கிறார்கள். இந்த முறை ஐரோப்பிய கூட்டமைப்பு, எனக்கு ஒரு அட்டவணையை அனுப்பியிருக்கிறது; இதில் அவர்கள் ஐரோப்பாவில் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றியிருக்கும் பங்களிப்பு பற்றி மிகச் சிறப்பான வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இணையப்பாதுகாப்பு, ஆயுர்வேதம், இசை, கவிதைகள், பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி, இந்திய இலக்கியம் என, பல துறைகளிலும் அவர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள், தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் ட்ரக் ஓட்டினர்களாக இருந்து குருதுவாராக்களை நிர்மாணித்திருக்கிறார்கள், சிலர் மசூதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது நம்மவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அந்த தேசங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் சீர்மை சேர்த்திருக்கிறார்கள். அயல்நாடுவாழ் இந்தியர்களின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளித்தமைக்கும், உலகெங்கும் இருப்போருக்கு இந்தத் தகவல்கள் சென்று சேரும் வகையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியமைக்காகவும், நான் ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனவரி மாதம் 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள்; அவர் நம் அனைவருக்கும் புதிய பாதை ஒன்றைக் காட்டினார். அந்த நாளைத் தான் நாம் தியாகிகள் தினமாகக் கடைபிடிக்கிறோம். தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகள் நினைவைப் போற்றும் வகையிலே நாம் காலை 11 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அமைதி மற்றும் அகிம்சை காட்டும் வழி தான் அண்ணல் காட்டும் வழி. அது பாரதமாகட்டும், உலகமாகட்டும், தனிப்பட்ட குடும்பமாகட்டும், சமுதாயமாகட்டும் – வணக்கத்திற்குரிய அண்ணல் எந்தக் கோட்பாடுகளுக்காக வாழ்ந்தாரோ, எவற்றை நமக்கு உபதேசமாக அளித்தாரோ, அவை இன்றும்கூட, மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
அவர் வறட்டு சித்தாந்தங்களை நமக்கு அளிக்கவில்லை. இன்றைய காலகட்டத்திலும்கூட, அண்ணலின் போதனைகள் எத்தனை சத்தியமானவையாக இருக்கின்றன என்பதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நம்மால் முடிந்த மட்டில், அண்ணலின் அடியொற்றி நாம் செல்லத் தீர்மானம் மேற்கொண்டால், இதைவிடப் பெரிய அஞ்சலி அவருக்கு நம்மால் வேறு என்ன செலுத்த முடியும்?
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் இது, இன்று தான் இந்த ஆண்டின் கடைசி நாளும் கூட என்பது சந்தர்ப்பவசத்தால் அமைந்த ஒன்று. ஆண்டு முழுவதிலும் நாம் பல விஷயங்களைப் பகிர்ந்து வந்துள்ளோம். மனதின் குரலுக்காக உங்களின் ஏராளமான கடிதங்கள், கருத்துகள், எண்ணங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம், என்றுமே எனக்கு ஒரு புதிய சக்தியை அளிப்பதாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் சில மணி நேரங்கள் கழித்து, ஆண்டு மாறி விடும், ஆனால் நமது பகிர்வுகள், எப்போதும் போலவே தொடர்ந்து நடைபெற்று வரும். வரவிருக்கும் ஆண்டில் நாம் புதிய புதிய விஷயங்கள் குறித்துப் பேசுவோம், புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம். உங்கள் அனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துகள். சில நாட்கள் முன்பாகத்தான் டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். பாரதத்திலும் மக்கள் நிறைந்த உற்சாகத்தோடு இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் ஏசுநாதரின் மகத்தான போதனைகளை நினைவில் இருத்திக் கொள்வோம்; அவர் மிக அதிகமாக ஒரு விஷயத்தின் மீது அழுத்தம் கொடுத்தார் என்றால், அது சேவை மனப்பான்மை தான். சேவை மனப்பான்மையின் சாரத்தை நம்மால் விவிலியத்திலும் கூடக் காண முடியும்.
The Son of Man has come, not to be served,
But to serve,
And to give his life, as blessing
To all humankind.
சேவையை ஏற்றுக் கொள்ள அல்ல, சேவை புரியவும், மனிதகுலம் அனைத்திற்கும் தன் வாழ்வை அளித்து ஆசிகள் வழங்கவும் தான் மனிதனின் குழந்தை பூமியில் அவதரித்தது என்பதே இதன் பொருள்.
சேவை மனப்பான்மையின் மகத்துவம் என்ன என்பதை இது நமக்குக் காட்டுகிறது. உலகின் எந்தவொரு இனமாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், பாரம்பரியமாக இருந்தாலும், நிறமாக இருந்தாலும், சேவை மனப்பான்மை என்பது மனித விழுமியங்களின் விலைமதிப்பில்லாத அடையாளமாக இருக்கிறது. நமது நாட்டில், ‘விருப்பு வெறுப்பற்ற செயல்’ பற்றிப் பேசுகிறோம், அதாவது அப்படிப்பட்ட செயல்பாட்டில் பிரதிபலன் பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் இருக்காது. “சேவா பரமோ தரம்” அதாவது சேவையே உன்னதமான அறம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஜீவ் சேவா ஹீ ஷிவ் சேவா” அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் கூறப்பட்டிருக்கிறது, இல்லையா? குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவதுண்டு – சிவனுக்குப் புரியும் தொண்டாகவே உயிர்களுக்கு சேவை புரிய வேண்டும் அதாவது இவற்றிலிருந்து, உலகம் முழுமையிலும் மனித விழுமியங்கள் ஒன்று போலவே இருக்கின்றன என்பது புரிகிறது. வாருங்கள், நாம் மகான்களைப் பற்றிய நினைவுகளை மனதில் தாங்கி, புனித நாட்களை உள்ளத்தில் இருத்தி, நமது இந்த மகத்தான விழுமியங்கள் அடங்கிய பாரம்பரியத்துக்குப் புதிய விழிப்புணர்வை அளிப்போம், புதிய சக்தி ஊட்டுவோம், அப்படிப்பட்ட வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ முயற்சி செய்வோம்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த ஆண்டு குருகோவிந்த் சிங் பிறந்த 350ஆவது ஆண்டு. குருகோவிந்த் சிங் அவர்களின் சாகசமும் தியாகமும் நிறைந்த அசாதாரணமான வாழ்க்கை நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வற்றா ஊற்று. குருகோவிந்த் சிங் அவர்கள் மகத்தான வாழ்க்கை- விழுமியங்கள் பற்றிய உபதேசத்தை அளித்தார், அந்த விழுமியங்களின் அடிப்படையில் அவர் தனது வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து காட்டினார். ஒரு குருவாக, கவியாக, தத்துவ ஞானியாக, மகத்தான போர்வீரனாக, குருகோவிந்த் சிங் அவர்கள் இந்த அனைத்துப் பங்களிப்புகள் வாயிலாக மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் பணியைச் செய்தார். அவர் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகப் போர் தொடுத்தார். இந்தப் போராட்டத்தில் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களை இழக்க நேரிட்டது. மக்கள் சாதி, மதம் ஆகியவற்றின் தளைகளை அறுத்தெறியும் கல்வியை அளித்தார். ஆனால் அவர் எந்தக்காலத்திலும் மனவேற்றுமைக்குத் தன் மனதில் இடமளிக்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அன்பு, தியாகம், அமைதி ஆகியவற்றையே செய்தியாக அளித்தார்; எப்படிப்பட்ட மகத்தான சிறப்புத்தன்மைகள் நிறைந்த தனித்துவம் பார்த்தீர்களா? இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்னாசாஹிபில் நடந்த குருகோவிந்த் சிங் அவர்களின் 350ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபெறும் பேறு எனக்குக் கிட்டியது. வாருங்கள், நாமனைவரும் குருகோவிந்த் சிங் அவர்களின் மகத்தான உபதேசம், அவரது கருத்தூக்கம் அளிக்கும் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முயல்வோம்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, அதாவது நாளை, என்னைப் பொறுத்தமட்டில் மிகச் சிறப்பான ஒரு நாள். புத்தாண்டுகள் வந்து செல்கின்றன, ஜனவரி மாதம் 1ஆம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது, ஆனால் சிறப்பான நாள் எனும் போது, அது உண்மையிலேயே சிறப்பானது தான். யாரெல்லாம் 2000ஆம் ஆண்டோ, அல்லது அதற்குப் பின்னர் பிறந்தார்களோ, அதாவது 21ஆம் நூற்றாண்டில் பிறந்தார்களோ, அவர்கள் 2018ஆம் ஆண்டு வாக்குரிமைத் தகுதி பெறும் வாக்காளர்களாக ஆகத் தொடங்கி விடுவார்கள். பாரதத்தின் மக்களாட்சி முறையில், 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்களை, புதிய இந்தியாவின் வாக்காளர்களை நான் வரவேற்கிறேன். நமது இந்த இளைஞர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் சென்று உங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்பது தான். இந்தியா முழுவதும், 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்கள் என்ற முறையில் உங்களுக்காக ஏங்கிக் கிடக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்கள் என்ற வகையில், நீங்களும் கவுரவத்தை அனுபவிப்பீர்கள், இல்லையா! உங்களது வாக்கு, புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமையும். வாக்கின் சக்தி, மக்களாட்சிமுறையின் மிகப்பெரிய சக்தி. லட்சக்கணக்கானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த, வாக்கு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கருவி. நீங்கள் வாக்களிக்க மட்டுமே அதிகாரம் படைத்தவர்களாக இருக்க மாட்டீர்கள். 21ஆம் நூற்றாண்டின் உங்கள் பாரதம் எப்படி இருக்க வேண்டும்? 21ஆம் நூற்றாண்டு பாரதம் குறித்து உங்கள் கனவுகள் என்ன? உங்களாலும் பாரதத்தின் 21ஆம் நூற்றாண்டின் நிறுவனர்களாக ஆக முடியும், இதற்கான தொடக்கம் தான் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று சிறப்பான வகையில் நடைபெற இருக்கிறது. இன்றைய எனது மனதின் குரலில் நான் 18 முதல் 25 வயது நிரம்பிய, மனவுறுதியும், ஆற்றலும் படைத்த நமது போற்றத்தக்க இளைய சமுதாயம் பற்றிப் பேச விரும்புகிறேன். நான் இவர்களை NEW INDIA YOUTH, அதாவது புதிய இந்தியாவின் இளைஞர்களாகக் கருதுகிறேன். புதிய இந்தியாவின் இளைஞர்கள் என்றால், இளமை, உற்சாகம், ஆற்றல். நமது இந்த சக்திபடைத்த இளைஞர்களின் திறமையாலும், வல்லமையாலும் நமது புதிய இந்தியா என்ற கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் புதிய பாரதம் பற்றிப் பேசும் போது, புதிய பாரதம் சாதியம், மதவாதம், தீவிரவாதம், ஊழல் என்ற நஞ்சு ஆகியற்றிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அசுத்தம் மற்றும் ஏழ்மையிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். புதிய பாரதத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும், அனைவரின் விருப்பங்களும் எதிர்ப்பார்ப்புக்களும் நிறைவேற வேண்டும். புதிய பாரதத்தில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மட்டுமே நமக்கு வழிகாட்டும் சக்திகளாக இருக்க வேண்டும். எனது இந்த புதிய இந்திய இளைஞர்களே, முன்னே வாருங்கள், புதிய இந்தியாவை எப்படி அமைக்கலாம் என்று அலசி ஆய்வு செய்யுங்கள். தங்களுக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்ளும் அதே வேளையில், யார்யார் இணைந்திருக்கிறார்களோ, அவர்களையும் இணைத்துக் கொண்டு கூட்டுப்பயணத்தைத் தொடருங்கள். நீங்களும் முன்னேறுங்கள், தேசத்தையும் முன்னேற்றுங்கள். இப்போது உங்களோடு நான் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாம் ஏன் பாரதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யக் கூடாது? அங்கே 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஒன்றாக அமர்ந்து, புதிய இந்தியா பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம், வழிகளைத் தேடலாம், திட்டங்களை வகுக்கலாமே? 2022ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நமது தீர்மானங்களை எப்படி நிறைவேற்றுவது என்று சிந்திக்கலாமே? நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவு பாரதத்தை நிர்மாணிப்பது என்பது குறித்து ஆலோசிக்கலாமே? காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் பேரியக்கமாக மாற்றினார். எனது இளைய நண்பர்களே, நாமும் 21ஆம் நூற்றாண்டின் உன்னதமான உயர்வான பாரதத்தை உருவாக்க ஒரு மக்கள் பேரியக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இது முன்னேற்றதுக்கான மக்கள் பேரியக்கம். வளர்ச்சிக்கான மக்கள் பேரியக்கம். வல்லமையும் சக்தியும் நிறைந்த பாரதத்தின் மக்கள் பேரியக்கம். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை ஒட்டி தில்லியில் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்து, அங்கே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய இந்தியாவை அமைப்பது என்பது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடலாமே? மனவுறுதி மூலமாக வெற்றி காணல் என்பதை எப்படி அடைவது? இன்று இளைஞர்கள் முன்பாக ஏராளமான புதிய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. திறன் மேம்பாடு தொடங்கி புதுமைகள் படைத்தல் மற்றும் தொழில்முனைவு வரை, நமது இளைஞர்கள் முன்னே வருகிறார்கள், வெற்றியும் கண்டு வருகிறார்கள். இந்த அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தரும் திட்டங்கள் பற்றிய தகவல்களை, புதிய இந்தியாவின் இளைஞர்களுக்கு ஓரிடத்திலேயே கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது; 18 வயது நிரம்பியவுடனேயே இளைஞர்களுக்கு இந்த உலகம் பற்றியும், இந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் இயல்பான முறையில் தகவல்கள் கிடைத்து, அவர்களுக்குத் தேவையான பலன்கள் நிறைய வேண்டும் என்ற வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த மனதின் குரலில் நான் positivity, ஆக்கப்பூர்வமான சிந்தனையின் மகத்துவம் குறித்துப் பேசியிருந்தேன். சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது –
उत्साहो बलवानार्य, नास्त्युत्साहात्परं बलम् |
सोत्साहस्य च लोकेषु न किंचिदपि दुर्लभम् ||
உற்சாகம் நிறைந்த ஒரு மனிதன் மிகவும் பலசாலியாக விளங்குகிறான் ஏனென்றால், உற்சாகத்தை விடப்பெரிய விஷயம் வேறொன்றுமில்லை, Positivity மற்றும் உற்சாகம் மேலிடும் ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்பது தான் இதற்குப் பொருள். ஆங்கிலத்திலும் ஒரு வழக்கு உண்டு – Pessimism leads to weakness, optimism to power. அதாவது, முடியாது என்ற அவநம்பிக்கை பலவீனம் தரும், முடியும் என்ற உற்சாகம் ஆற்றல் நிறைக்கும். 2017ஆம் ஆண்டின் ஆக்கப்பூர்வமான கணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், நாம் 2018ஆம் ஆண்டை ஆக்கப்பூர்வமான சூழலில் வரவேற்போம் என்று கடந்த மனதின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் சமூகவலைத்தளங்களிலும், மைகவ் இணைய தளத்திலும், நரேந்திர மோடி செயலியிலும் ஆக்கப்பூர்வமான பதில்களை அளித்திருக்கிறார்கள், பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. Positive India hashtagஇலும் லட்சக்கணக்கான டுவீட்டுகள் செய்திருக்கிறார்கள், இது சுமார் 150 கோடிக்கும் அதிகமான மக்கள் வரை சென்றிருக்கிறது. ஒருவகையில் நேர்மறையின் இந்த பரவலாக்கம், பாரதத்தில் தொடங்கி உலகம் முழுமையும் பரவிவிட்டது. வந்திருக்கும் டுவீட்டுக்களும் பதில்களும் உண்மையிலேயே கருத்தூக்கம் அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. இது ஒரு சுகமான அனுபவமாக எனக்கு இருந்தது. நாட்டுமக்கள் சிலர், தங்கள் மனதில் சிறப்பான தாக்கத்தை, ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த ஆண்டு நிகழ்ந்த சில சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் தனிப்பட்ட சாதனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் பெயர் மீனு பாட்டியா. நான் தில்லியின் மயூர்விஹாரைச் சேர்ந்த பாக்கேட் ஒன், ஃபேஸ் ஒன்னில் வசிக்கிறேன். என் மகள் எம்.பி.ஏ. படிக்க விரும்பினாள். இதற்காக எனக்குக் கடனுதவி தேவைப்பட்டது, இது எனக்கு மிகச் சுலபமாகக் கிடைத்து விட்டது, எனது மகளும் படிப்பைத் தொடர முடிந்தது.
எனது பெயர் ஜோதி ராஜேந்திர வாடே. நான் (B) போடலில் வசிக்கிறேன். மாதம் ஒரு ரூபாய் தொகை செலுத்தும் விபத்துக்காப்பீட்டை எனது கணவர் செய்திருந்தார். விபத்தில் துரதிர்ஷ்டமாக அவர் உயிர் இழக்க நேரிட்டது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை பற்றி எங்களுக்குத் தான் தெரியும். அரசின் உதவி காரணமாக எங்களுக்கு மிகுந்த பலன் கிடைத்தது, எங்களால் சற்று சுதாரித்துக் கொள்ள முடிந்தது.
எனது பெயர் சந்தோஷ் ஜாதவ். எங்கள் (BHINNAR) பின்னார் கிராமம் வழியே 2017ஆம் ஆண்டு தொடங்கி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. இதன் காரணமாக எங்கள் சாலைகள் மிகச் சிறப்பாக ஆகி விட்டன, எங்கள் வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனது பெயர் தீபான்சு அஹூஜா, உத்திர பிரதேசத்தின் ஷஹாரன்புர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதத்கஞ்ஜ் பகுதியில் வசிக்கிறேன். நம் இராணுவத்தினர் நிகழ்த்திக் காட்டிய இரண்டு சம்பவங்கள் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின – ஒன்று பாகிஸ்தானத்தில் அவர்கள் செய்த surgical strike, இதனால் தீவிரவாதிகளின் launching padsஐ சின்னாபின்னப்படுத்த முடிந்தது, இரண்டாவதாக டோக்லாமில் நமது ராணுவத்தினர் வெளிப்படுத்திய ஈடு இணையில்லாத பராக்கிரமம்.
என் பெயர் சதீஷ் (BEVANI) பேவானீ. எங்கள் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதால், கடந்த 40 ஆண்டுகளாகவே நாங்கள் இராணுவத்தின் குடிநீர்க் குழாயையே நம்பி இருந்து வந்தோம். இப்போது தனியாக எங்களுக்கெனவே ஒரு குடிநீர்க்குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது…. இது எங்கள் 2017ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனை.
தத்தமது நிலைகளில் பலர் செய்யும் பல செயல்கள் காரணமாக, ஏராளமானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், இது தான் புதிய இந்தியா, இதைத் தான் நாமனைவருமாக இணைந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கிறோம். வாருங்கள், இந்தச் சின்னச்சின்ன சந்தோஷங்களோடு நாம் புத்தாண்டில் புகுவோம், புத்தாண்டைத் தொடக்குவோம், positive indiaவிலிருந்து progressive indiaவை நோக்கி – ஆக்கப்பூர்வமான இந்தியாவிலிருந்து, ஆக்கம்நிறைந்த இந்தியாவை நோக்கி உறுதியான அடியெடுத்து வைப்போம். நாமனைவரும் ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பற்றிப் பேசும் வேளையில், எனக்கும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. காஷ்மீர் மாநில ஆட்சிப்பணித் தேர்வுகளில் தலைசிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற அஞ்ஜும் பஷீர் கான் கட்டக்கின் உத்வேகம் அளிக்கும் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் தீவிரவாதம், காழ்ப்பு ஆகியவற்றின் பிணையிலிருந்து வெளிப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சிப்பணித் தேர்வில் தலைசிறந்தவராக விளங்கியிருக்கிறார். 1990ஆம் ஆண்டில், தீவிரவாதிகள் அவரது பூர்வீக வீட்டை எரித்து விட்டார்கள் என்பதை அறிந்து உங்களுக்குத் திகைப்பு ஏற்படும். தீவிரவாதமும் வன்முறையும் தாண்டவமாடிய வேளையில், அவரது குடும்பத்தார் தங்களின் முன்னோர் மண்ணைத் துறந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஒரு சின்னஞ்சிறிய பாலகன் வாழ்வில், அவனது நாலாபுறத்திலும் வன்முறைச் சூழல், மனதில் இருளையும், கசப்பையும் ஏற்படுத்தப் போதுமானது. ஆனால் அஞ்ஜும் இவற்றைக் கண்டு அஞ்சவில்லை, தன் மனதில் அவை தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்கவில்லை. அவர் என்றுமே நம்பிக்கையைக் கைவிடவில்லை. அவர் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டார் – மக்களுக்கு சேவை புரியும் பாதை அது. அவர் விபரீதமான சூழல்களைத் தாண்டி வெளிவந்தார், தனது வெற்றிக்காதையை அவரே இயற்றிக் கொண்டார். இன்று அவர் ஜம்மு கஷ்மீரத்துக்கு மட்டுமல்ல, அனைத்திந்தியாவுக்குமே ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியவராகத் திகழ்கிறார். சூழல் எத்தனை தான் மோசமானதாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான செயல்கள் மூலமாக, ஏமாற்றமேற்படுத்தும் மேகங்களைக் கலைத்துக் கரைந்து போகச் செய்ய முடியும் என்பதை அஞ்ஜும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சில பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் மனங்களில் இருந்த ஊக்கம், உற்சாகம், கனவுகள்…. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தெந்த துறைகளில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்பதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்த மனத்தவர்களாக இருந்தார்கள்!! அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் என் மனதில் சற்றுக்கூட ஏமாற்றத்தின் சாயலே படியவில்லை – உற்சாகம், ஊக்கம், சக்தி, கனவுகள், மனவுறுதி தான் பிரகாசித்தன. அந்தப் பெண்களுடன் நான் செலவிட்ட கணங்கள், எனக்கு உத்வேகம் அளித்தன, இது தான் தேசத்தின் பலம், இவர்கள் தான் என் இளைய செல்வங்கள், இவர்கள் தான் என் தேசத்தின் எதிர்காலம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் உலகின் பிரபலமான புனித இடங்கள் பற்றிய பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் கேரளத்தின் சபரிமலை கோயில் பற்றிய பேச்சும் இடம்பெறுவது இயல்பான விஷயம், இல்லையா!! ஐயப்பனின் அருளைப் பெற, உலகப்பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த அளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் இடத்தில், இத்தனை மகத்துவம் நிறைந்த இந்த புனிதத் தலத்தில், தூய்மையைப் பேணுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும்? மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே அமைந்திருக்கும் இத்தகைய இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது எத்தனை சிரமமானது என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் தூய்மையை எப்படி, கலாச்சாரமாக மாற்றுவது, பிரச்சினையைத் தீர்க்கவொரு வழியை எப்படித் தேடுவது, மக்கள் பங்களிப்பை எப்படி சக்தியாக மாற்றுவது என்பதற்கு சபரிமலைக் கோயில் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பீ. விஜயன் என்ற காவல்துறை அதிகாரி புண்ணியம் பூங்காவனம் என்ற ஒரு செயல்திட்டத்தைத் தொடக்கினார், இதன்படி, தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஊட்ட தூய்மை இயக்கத்தை ஆரம்பித்தார்.
வரும் யாத்ரீகர்கள் தூய்மைப் பணியில் உடல்ரீதியான ஏதாவது ஒரு பங்களிப்பை அளிக்கவில்லையென்றால், அவர்களது யாத்திரை நிறைவு பெறாது என்பது போன்றதொரு பாரம்பரியத்தை அவர் ஏற்படுத்தினார். இந்த இயக்கத்தில் பெரியவர் என்றோ, சிறியவர் என்றோ யாருமில்லை. ஒவ்வொரு யாத்ரீகரும், ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜை இது என்று கருதி, சிறிதளவேனும் நேரத்தைத் தூய்மைப்பணியில் ஒதுக்குகிறார்கள், பணியாற்றுகிறார்கள், மாசுகளை அகற்ற சேவையில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையும் இங்கே காணப்படும் தூய்மை நிறைந்த காட்சி, மிக அலாதியானதாக இருக்கிறது, அனைத்து தீர்த்தயாத்ரீகர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஒருவர் எத்தனை தான் பெரிய பிரபலமாக இருந்தாலும், எத்தனை பெரிய செல்வந்தராக இருந்தாலும், எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு எளிய யாத்ரீகர் என்ற வகையில், இந்த புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நம் நாட்டுமக்களுக்கு இப்படிப்பட்ட அநேக எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. சபரிமலையில் இந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ள இந்த புண்ணியம் பூங்காவனம் இயக்கம், ஒவ்வொரு யாத்ரீகரின் யாத்திரையிலும் இணைபிரியா அங்கமாகி விட்டது. அங்கே கடினமான விரதங்களுடன் கூட, தூய்மை தொடர்பான உறுதியான தீர்மானமும் இணைந்தே பயணிக்கிறது.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியண்ணலின் பிறந்தநாளன்று நாமனைவரும் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டோம்; அண்ணலின் நிறைவடையாத பணி அதாவது தூய்மையான பாரதம், மாசிலிருந்து விடுபட்ட பாரதம். அண்ணலின் வாழ்க்கை முழுவதும் இந்தப் பணிக்காகவே அவர் செலவிட்டார், முயற்சிகள் மேற்கொண்டார். அண்ணலின் 150ஆவது பிறந்த நாளன்று நாம் அவர் கனவு கண்ட பாரதமான, தூய்மையான பாரதத்தை அவருக்குச் சமர்ப்பிப்போம், அந்த திசையில் நம் பங்களிப்பை அளிப்போம் என்று தீர்மானித்திருந்தோம். தூய்மையை நோக்கிய திசையில் தேசம் முழுக்க, பரவலான வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பரவலான வகையில் மக்கள்-பங்களிப்புத் துணையால் மாற்றம் காணப்பட்டு வருகிறது. நகர்ப்புறப்பகுதிகளில் எட்டப்பட்டிருக்கும் தூய்மையின் தரநிலையை அளவிட, வரவிருக்கும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் மார்ச் 10 வரை स्वच्छ सर्वेक्षूण 2018, தூய்மை ஆய்வு 2018 என்ற பெயரிலான, உலகின் மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆய்வு, 4000த்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 40 கோடி மக்களை உள்ளடக்கிச் செய்யப்படும். நகரங்களில் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுபடுதல், குப்பைகள் சேகரிப்பு, குப்பைகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அமைப்பு, அறிவியல்ரீதியாக குப்பைகளைப் பதப்படுத்தல், நடத்தையில் மாற்றம் ஏற்படுத்த செய்யப்படும் முயற்சி, திறன் உருவாக்கமும், தூய்மைக்காக செய்யப்பட்டிருக்கும் புதுமையான முனைவுகளும், இந்தப்பணியில் மக்கள் பங்களிப்பு ஆகியன இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படும் அளவீடுகளாக இருக்கும். இந்த ஆய்வின்படி, வேறுவேறு குழுக்கள் நகரங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். குடிமக்களிடம் பேசி அவர்களிடமிருந்து பதில்களைப் பெறுவார்கள். தூய்மைச் செயலியின் பயன்பாடு மற்றும் பல்வேறு வகையான சேவை மையங்களின் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வார்கள். நகரின் தூய்மை என்பதை மக்களின் இயல்பாக, நகரின் இயல்பாக ஆக்கும் வகையில் அனைத்து அமைப்புக்களும் நகரங்களாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதும் கருத்தில் கொள்ளப்படும். தூய்மை என்பதை அரசு மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமக்கள் அமைப்புக்களுக்கும் இதில் பெரும்பங்கு இருக்கிறது. இனிவரும் நாட்களில் தூய்மை பற்றிய ஆய்வு நடைபெற இருக்கிறது, இதில் நீங்களெல்லாரும் முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பதே நான் ஒவ்வொரு குடிமகன் முன்பாக வைக்கும் விண்ணப்பம். உங்கள் நகரம் பின்தங்கிவிடக் கூடாது, உங்கள் தெருவோ பகுதியோ பின்தங்கிப் போய்விடக் கூடாது என்று எண்ணி நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். வீடுகளில் மக்கும் குப்பைக்கென பச்சைக் குப்பைத்தொட்டியும், மக்காக் குப்பைக்காக நீலக் குப்பைத்தொட்டியும், இப்போது உங்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். குப்பைகளைப் பொறுத்தமட்டில், reduce – குறைத்தல், re-use – மறுபயன்பாடு மற்றும் re-cycle – மறுசுழற்சிக் கோட்பாடு ஆகியன மிகவும் பயனுடையதாக இருக்கும். இந்த ஆய்வின் அடிப்படையில் நகரங்களின் தரநிலை நிர்ணயம் செய்யப்படும் போது, உங்கள் நகரத்தில் மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், தேச-அளவிலான தரநிலையும், ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டதாக இருந்தால், பகுதி அளவிலான தரநிலையும் அளிக்கப்படும்; இதில் உங்கள் நகரம் மிகச்சிறப்பான தரநிலையை எட்ட வேண்டும் என்பதே உங்கள் கனவாக இருக்க வேண்டும், இதை நோக்கியே உங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2018ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள தூய்மை குறித்த ஆய்வில், தூய்மை தொடர்பான இந்த ஆரோக்கியமான போட்டியில் நீங்கள் பின்தங்கிப் போகக் கூடாது என்பதே ஒரு பொதுவான விவாதப் பொருளாக ஆக வேண்டும். எங்களது நகரம், எங்களது முயற்சி; எங்களது முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் என்பதே உங்களனைவரின் கனவாக இருக்க வேண்டும். வாருங்கள், இந்தத் தீர்மானத்தோடு நாம் மீண்டும் ஒருமுறை அண்ணலை நினைவில் இருத்தி, தூய்மையான பாரதம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டு, மனோதிடத்துடன் செயலில் ஈடுபடுவோம்.
என் பாசம்மிகு நாட்டுமக்களே, சில விஷயங்கள் பார்க்கச் சிறியனவாக இருக்கலாம், ஆனால் சமுதாயரீதியாக நமது அடையாளம், தொலைவான இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாக அமைந்து விடுகின்றன. இன்று மனதின் குரலில், இந்த நிகழ்ச்சி வாயிலாக நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாராவது ஒரு இஸ்லாமியப் பெண், ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்பினால், அவர் ‘மஹ்ரம்’ அல்லது தனது ஆண் காப்பாளர் இல்லாமல் செல்ல முடியாது என்ற விஷயம் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைப்பற்றி நான் முதன்முறையாகக் கேள்விப்பட்ட போது, எப்படி இப்படி இருக்க முடியும்? இப்படிப்பட்ட விதியை யார் ஏற்படுத்தி இருப்பார்கள்? ஏன் இந்தப் பாகுபாடு என்றெல்லாம் தோன்றியது. இதை நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த வேளையில், எனக்குத் திகைப்பு ஏற்பட்டது – சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய கட்டுப்பாட்டை விதித்திருப்பவர்கள் நாம் தானே! பல ஆண்டுகளாகவே இஸ்லாமியப் பெண்கள் மீது அநீதி இழைக்கப்பட்டு வந்திருக்கிறது, ஆனால் இது பற்றிய எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. இப்படிப்பட்ட விதிமுறை பல இஸ்லாமிய தேசங்களில் கூடக் கிடையாது. ஆனால் பாரதத்தின் இஸ்லாமியப் பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. நமது அரசு இதன் மீது கவனம் செலுத்தியது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது சிறுபான்மையினர்நலஅமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 70 ஆண்டுக்காலமாக தொடர்ந்துவந்த பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி விட்டது. இன்று இஸ்லாமியப் பெண்கள், ‘மஹ்ரம்’ என்ற ஆண் காப்பாளர் இல்லாமலேயே கூட ஹஜ் யாத்திரை செல்ல முடியும், இந்த முறை 1300 இஸ்லாமியப் பெண்கள் ஆண் காப்பாளர்கள் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கேரளம் முதல், வட இந்தியா வரை, தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி தனியே யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிப்பதை உறுதி செய்ய சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக ஹஜ் செல்லும் யாத்ரீகர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; ஆனால் தனியே செல்ல விரும்பும் பெண்களை இந்தக் குலுக்கல் முறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், அவர்களை தனிச்சிறப்பான பிரிவாகக் கருதி, வாய்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பாரதத்தின் வளர்ச்சிப் பயணம், நமது பெண்கள் சக்தியின் பலத்தாலும், அவர்களின் அறிவுத்திறத்தாலும் தான் முன்னேற்றம் கண்டு வருகிறது, மேலும் முன்னேற்றம் காணவிருக்கிறது என்பதை நான் முழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறேன், இது என் மனவுறுதிப்பாடு. ஆண்களுக்குச் சரிநிகராக அதிகாரங்களும், வாய்ப்புக்களும் பெண்களுக்கும் கிட்ட வேண்டும் என்பதை நோக்கியே நமது நீடித்த முயற்சி அமைய வேண்டும்; அவர்களும் வளர்ச்சிப் பாதையில் அப்போது தான் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பார்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 26ஆம் தேதி நமக்கெல்லாம் வரலாற்றுரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆனால் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி, சிறப்பான வகையில் நினைவில் கொள்ளப்படும். இந்த ஆண்டு குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் ஆசியான் அமைப்பில் இருக்கும் பத்து நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினர்களாக பாரதம் வரவிருக்கிறார்கள். குடியரசுத் திருநாளன்று, இந்த முறை ஒருவரல்ல, பத்து முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பார்கள். பாரதத்தின் வரலாற்றில் இது போன்று இதுவரை நடந்ததே இல்லை. 2017ஆம் ஆண்டு, ஆசியான் அமைப்புக்கும் பாரதத்துக்கும் சிறப்பானதாக அமைந்தது. ஆசியான் அமைப்பு தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது, 2017ஆம் ஆண்டில் தான் ஆசியான் அமைப்புடனான பாரதத்தின் கூட்டு 25 ஆண்டுகளை எட்டியது. ஜனவரி மாதம் 26ஆம் தேதி உலகின் 10 நாடுகளைச் சேர்ந்த இந்த மகத்தான தலைவர்கள் ஒன்றாக இங்கே பங்கேற்பார்கள் என்பது பாரதவாசிகளான நம்மனைவருக்குமே ஒரு பெருமைக்குரிய விஷயம்.
பிரியமான நாட்டுமக்களே, இது பண்டிகளைகளின் பருவம். பார்க்கப் போனால் நமது தேசமே பண்டிகளைகளின் தேசம் தான். மிக அபூர்வமாகத் தான் ஏதோ ஒரு நாளன்று எந்தப் பண்டிகையும் இல்லாமல் இருக்கும். இப்போது தான் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினோம், அடுத்து, புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் ஏராளமான சந்தோஷங்கள், சுகங்கள், நிறைவு ஆகியவற்றை அள்ளி இறைக்கட்டும். நாமனைவரும் புதிய தெம்பு, புதிய உற்சாகம், புதிய ஊக்கம், புதிய தீர்மானத்தோடு முன்னேறுவோம், தேசத்தையும் முன்னேற்றுவோம். ஜனவரி மாதம் சூரியனின் உத்தராயணப் புண்ணிய காலம், இந்த மாதத்தில் தான் மகர சங்கராந்தி கொண்டாடப்படும். இது இயற்கையோடு இணைந்த காலம். சொல்லப் போனால், நமது ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு இணைந்தே இருக்கின்றது என்றாலும், பன்முகத்தன்மை நிறைந்த நமது கலாச்சாரத்தில், இயற்கையின் இந்த அற்புதமான நிகழ்வை பல்வேறு வகைகளில் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. பஞ்சாபிலும் வடமாநிலங்களிலும் லோஹ்ரீயின் ஆனந்தம் பெருக்கெடுக்கிறது என்றால், உத்திரப் பிரதேசத்திலும் பீகாரிலும் கிச்சடீ மற்றும் தில் சங்க்ராந்தி வருவது எதிர்நோக்கப்படுகிறது. ராஜஸ்தானில் சங்க்ராந்த் என்பார்கள், அசாமில் மாக்-பிஹூ என்பார்கள், தமிழ்நாட்டில் பொங்கல் எனப் போற்றுவார்கள் – இவை அனைத்தும் தங்களுக்கே உரிய சிறப்புத்தன்மைகள் பெற்றவை, இவற்றுக்கென பிரத்யேகமான மகத்துவம் இருக்கின்றது. இந்த அனைத்துப் பண்டிகைகளும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்கு இடையிலும் கொண்டாடப்படுகின்றன. பெயரளவில் இவை வேறுபட்டிருந்தாலும், இவற்றின் அடிநாதமாக விளங்கும் தத்துவம் என்னவோ ஒன்று தான் – இயற்கையுடனும், விவசாயத்துடனான பிணைப்பு.
நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகள். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலப்பல.
மிக்க நன்றி அன்புநிறை நாட்டுமக்களே. நாம் மீண்டும் 2018ஆம் ஆண்டில் சந்திப்போம். நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. டைம்ஸ் குழுவினரின் ‘விஜய் கர்நாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ் வெளியிட்டது, இதில் அவர்கள், தேசத்தின் பிரதமருக்குக் கடிதம் எழுதுமாறு சிறுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அந்த இதழில் அவர்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களை பிரசுரித்தார்கள். அந்தக் கடிதங்களை நான் படித்த பொழுது, எனக்கு அவை நன்றாக இருந்தன. இந்தச் சின்னஞ்சிறுவர்கள், தேசத்தின் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள், தேசத்தில் நடைபெற்றுவரும் விவாதங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். பல விஷயங்கள் குறித்து இவர்கள் எழுதியிருந்தார்கள். வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தி ஹெக்டே, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் பாராட்டிய அதே நேரத்தில், நமது கல்விமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவையைப் பற்றியும், இன்றைய காலகட்டத்தில் வகுப்பறைப் படிப்பு மீது குழந்தைகளுக்கு நாட்டமில்லை என்றும், அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு நாம் இயற்கைப் பற்றிய தகவல்களை அளித்தோமேயானால், எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பில் அவர்கள் பேருதவியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
லக்ஷ்மேஸ்வராவிலிருந்து ரீடா நதாஃப் என்ற குழந்தை, தான் ஒரு இராணுவ வீரரின் மகள் என்றும், இது தனக்குப் பெருமிதம் அளிப்பதாகவும் எழுதியிருக்கிறாள். எந்த இந்தியனுக்குத்தான் இராணுவ வீரன் மீது பெருமிதம் இருக்காது? நீங்கள் இராணுவ வீரரின் மகளாக இருக்கையில், உங்களிடத்தில் பெருமிதம் ஏற்படுவது என்பதில் எந்த வியப்பும் இல்லை. கல்புர்கியிலிருந்து இர்ஃபானா பேகம் என்ன எழுதியிருக்கிறார் என்றால், அவரது பள்ளி, அவரது கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும், இதனால் தன் வீட்டிலிருந்து சீக்கிரமாகக் கிளம்பவேண்டியிருப்பதாகவும், பள்ளியிலிருந்து வீடுதிரும்ப இரவு ஆகிவிடுவதாகவும், இதனால் தன்னால் தன் நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை என்றும் எழுதியிருக்கிறார். அருகில் ஏதாவது ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். நாட்டு மக்களே, ஒரு செய்தித்தாள் இப்படிப்பட்ட முனைப்பை எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, இந்தக் கடிதங்கள் என்னை வந்து அடைந்திருக்கின்றன, அவற்றைப் படிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு இதமான அனுபவமாக இருந்தது.
எனதருமை நாட்டுமக்களே, இன்று 26/11. நவம்பர் மாதம் 26ஆம் தேதிதான் நமது அரசியலமைப்புச் சட்ட நாள். 1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான், அரசியலமைப்புச்சட்ட சபையில் பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று, அரசியலமைப்புச்சட்டம் அமலுக்கு வந்தது; ஆகையால் தான் நாம் அதை குடியரசுத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம், நமது ஜனநாயகத்தின் ஆன்மாவாகும். இன்றைய நாளன்றுதான், அரசியலமைப்புச் சட்டசபையின் உறுப்பினர்களை நாம் நினைவு கூரத்தக்க நாளாகும். அவர்கள் பாரத நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிக்க 3 ஆண்டுகள் கடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த விவாதங்களைப் படிப்பவர்களுக்கு, அந்த விவாதங்களில் தேசத்தின் பொருட்டு தொனிக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு எப்படிப்பட்டதாக இருந்தது என்பது நன்கு விளங்கும். பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்திற்கென ஒரு அரசியலமைப்புச்சட்டத்தை இயற்ற, அவர்கள் எத்தனை கடுமையாக உழைத்திருப்பார்கள் என்று தெரியுமா? புரிந்துணர்வோடும், தொலைநோக்குப் பார்வையோடும், தேசம் அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் இதைச் செய்தார்கள். இந்த அரசியலமைப்புச்சட்டம் காட்டும் ஒளியின் துணைகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தவர்களின் தெளிவான சிந்தனைகளை மனதில் தாங்கிப் புதிய பாரதம் அமைப்பது நம் அனைவரின் கடமையாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் விசாலமானது. அதில் காணப்படாத வாழ்க்கையின் அம்சம் இல்லை, இயற்கை பற்றிய விஷயம் இல்லை எனும் அளவுக்கு இருக்கிறது. அனைவருக்கும் சமத்துவம், அனைவரிடத்திலும் புரிந்துணர்வு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாளம். இதில் ஒவ்வொரு குடிமகன், ஏழையாகட்டும் தாழ்த்தப்பட்டவராகட்டும், பிற்படுத்தப்பட்டவராகட்டும், மறுக்கப்பட்டவராகட்டும், பழங்குடியினராகட்டும், பெண்களாகட்டும் – அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக் கூட விடாமல் பின்பற்ற வேண்டியது நம்மனைவரின் கடமையாகும். குடிமக்களாகட்டும், ஆட்சியாளர்களாகட்டும், அரசியலமைப்புச்சட்டத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும். யாருக்கும் எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள். இன்று அரசியலமைப்புச் சட்ட நாளன்று, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்வது என்பது இயல்பான விஷயம். இந்த அரசியலமைப்புச் சபையின் மகத்துவம் நிறைந்த விஷயங்கள் தொடர்பாக, 17 பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் மிகவும் மகத்துவம் வாய்ந்த குழுக்களில் ஒன்று தான் வரைவுக்குழு. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழுவின் தலைவராக இருந்தார். அவர் ஒரு மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை நல்கிக் கொண்டிருந்தார். இன்று நாம் பாரதத்தின் அரசியலமைப்புச்சட்டம் அளிக்கும் பெருமிதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இதை அமைப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் செயல்திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நலன்கள் ஏற்படுவதை அவர் உறுதி செய்து கொண்டார். டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று அவர் மறைந்த நாளன்று, நாம் எப்பொழுதும் போலவே, அவரை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்துவோம். தேசத்தை தன்னிறைவாகவும், வல்லமைபடைத்ததாகவும் ஆக்குவதில் பாபாசாகேபின் பங்குபணி என்றும் நினைவுகொள்ளத்தக்கது. டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சர்தார் வல்லபபாய் படேல் அவர்கள் அமரரான தினம்.. விவசாயியின் மகன் என்ற நிலையிலிருந்து இரும்பு மனிதன் என்ற மாற்றத்தை எய்திய சர்தார் படேல் அவர்கள், தேசத்தை ஒரே இழையில் இழைக்கும் அசாதாரணமான செயலைப் புரிந்தார். சர்தார் அவர்களும் அரசியலமைப்புச் சட்டசபையின் அங்கத்தினராகத் திகழ்ந்தார். அவர் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், பழங்குடியினமக்களின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.
26/11 நமது அரசியலமைப்புச்சட்ட தினம் என்றாலும், 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த 26/11ஐ இந்த தேசத்தால் எப்படி மறக்க முடியும்? அன்று தான் தீவிரவாதிகள் மும்பை மீது கொடும்தாக்குதல் நடத்தினார்கள். வீரம்நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்புப்படையினர் என, உயிர்துறந்த அனைவரையும் தேசம் நினைவுகூர்கிறது, அஞ்சலி செலுத்துகிறது. இந்த தேசம் அவர்களின் தியாகத்தை என்றென்றும் மறக்காது. தீவிரவாதம் என்பது இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒன்று, தினந்தினம் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு அதிபயங்கரமான வடிவத்தில் அது நடைபெறுகிறது. நாம் கடந்த 40 ஆண்டுகளாகவே தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்டு வந்திருக்கிறோம். நமது அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் துறந்திருக்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகள் முன்பாக, உலக அரங்கில் பாரதம் தீவிரவாதம் பற்றிப் பேசிய பொழுது, தீவிரவாதத்தின் பயங்கரங்களை எடுத்துரைத்த பொழுது, இதை உலகில் பலர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று தீவிரவாதம் அவர்கள் நாட்டுக்கதவுகளைத் தட்டும் வேளையில், உலக அரசுகள், தீவிரவாதத்தை மிகப்பெரியதொரு சவாலாகக் காண்கிறார்கள். தீவிரவாதம் உலகின் மனிதத்துவத்துக்கு சவால் விடுகிறது. இது மனிதநேய சக்திகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறது. ஆகையால் பாரதம் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து மனிதநேயசக்திகளும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும். பகவான் புத்தர், பகவான் மகாவீரர், குரு நானக், காந்தியடிகள் ஆகியோர் பிறந்த மண் இது, இந்த மண் அஹிம்சை, அன்பு ஆகியவற்றை உலகிற்கு அளித்திருக்கிறது. தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது சமுதாய அமைப்பைப் பலவீனப்படுத்தி, அதை சின்னாபின்னமாக்கும் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆகையால் மனிதநேய சக்திகள் மிக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.
என் பிரியமான நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நாமனைவரும் கடற்படை நாளைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தியக் கடற்படை, நமது கடலோரங்களைக் காத்துப் பாதுகாப்பளிக்கிறது. நான் கடற்படையோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது கலாச்சாரம் நதிக்கரைகளில் தான் தோன்றியது என்பதை நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள். சிந்து நதியாகட்டும், கங்கையாகட்டும், யமுனையாகட்டும், சரஸ்வதியாகட்டும் – நமது நதிகளும், கடலும், பொருளாதாரம், போர்த்திறம் என இருவகைகளிலும் மகத்துவம் வாய்ந்தவை. ஒட்டுமொத்த உலகிற்கும் இதுவே நமது நுழைவாயில். இந்த தேசத்திற்கும், பூமியின் பெருங்கடல்களுக்குமிடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமேயானால், சுமார் 800-900 ஆண்டுகள் முன்பாக சோழர்களின் கடற்படை, மிகச்சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்தில், அதைப் பொருளாதார பெருஞ்சக்தியாக ஆக்குவதில் அவர்களின் கடற்படையின் பெரும்பங்கு இருந்தது. சோழர்களின் கடற்படைப் படையெடுப்புக்கள், ஆய்வுப் பயணங்களின் பல எடுத்துக்காட்டுகள், சங்க இலக்கியங்களில் இன்றும் காணப்படுகின்றன. உலகின் பெரும்பாலான கடற்படைகள் பலகாலம் கழித்துத்தான் போர்ப்பணிகளில் பெண்களை அனுமதித்திருந்தன. ஆனால் சோழர்களின் கடற்படையில், சுமார் 800-900 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் முக்கியமான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள். பெண்கள் போரிலும்கூட ஈடுபட்டார்கள். சோழ ஆட்சியாளரிடத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான நுணுக்கமான தொழில்நுட்பம் இருந்தது. நாம் கடற்படை பற்றிப் பேசும் வேளையில், சத்திரபதி சிவாஜி மகராஜ், அவரது கடற்படையின் திறம் பற்றிப் பேசாது இருக்க முடியுமா? கடலாதிக்கம் நிறைந்த கொங்கன் கரையோரங்கள், சிவாஜி மகராஜ் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தன. சிவாஜி மகராஜின் சாம்ராஜ்ஜியத்தோடு தொடர்புடைய பல கோட்டைகள், சிந்து துர்க்கம், முருட் ஜஞ்ஜீரா, ஸ்வர்ண துர்க்கம் போன்றவை, சமுத்திரக்கரைகளில் அமைந்திருந்தன அல்லது சமுத்திரத்தால் சூழப்பட்டிருந்தன. இந்தக் கோட்டைகளின் பாதுகாப்பிற்கான பொறுப்பு மராட்டிய சேனையுடையது. மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்கள், சிறிய கப்பல்கள் ஆகியன கலந்திருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரிமீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறன் படைத்தவர்களாக இருந்தனர். மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன? இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர், பல இடங்களில் மராட்டிய கடற்படைத் தளங்களை அமைத்தவர். கோவா விடுவிப்புப் போராகட்டும், 1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் யுத்தமாகட்டும், சுதந்திரம் அடைந்த பிறகு, நமது பாரதத்தின் கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார்கள். கடற்படை என்றாலே, வெறும் யுத்தம் மட்டுமே நம் கருத்துகளில் இடம் பிடிக்கிறது, ஆனால் பாரதத்தின் கடற்படை, மனிதநேய செயல்களிலும் கூட பெரிய அளவில் உதவியிருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் வங்காளதேசம் மற்றும் மியான்மரில் மோரா சூறாவளி பேரிடர் ஏற்பட்ட போது, நமது கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, பல மீனவர்களை, மூழ்கி இறக்காமல் காப்பாற்றி, வங்காளதேசத்திடம் ஒப்படைத்தது. இந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, நமது கப்பற்படையின் 3 கப்பல்கள், உடனடியாக அங்கே சென்றடைந்து, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் பேருதவி புரிந்தன. வங்காளதேசத்தில் செப்டம்பர் மாதத்தில் ரோஹிங்க்யாக்கள் விஷயத்தில் நமது கப்பற்படைக் கப்பல்கள், ஐ.என்.எஸ். கரியால் மனிதநேய செயல்களில் ஈடுபட்டன. ஜூன் மாதம் பப்புவா நியூ கினியா அரசு நம்மிடம் அவசர உதவி கோரித் தகவல் அனுப்பிய போது, அவர்களின் மீன்பிடிப் படகுகளில் இருந்த மீனவர்களைக் காப்பதில் நமது கடற்படையினர் உதவி புரிந்தனர். நவம்பர் மாதம் 21ஆம் தேதி மேற்கு விரிகுடாவில் ஒரு வாணிபக் கப்பல் கடற்கொள்ளையர்களால் பாதிப்படைந்த வேளையில், நமது கடற்படையினரின் ஐ.என்.எஸ். திரிகந்த் உதவிக்கு அங்கே விரைந்தது. ஃபிஜி நாட்டுக்கு மருத்துவ உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், உடனடி நிவாரணமாகட்டும், அண்டை நாடுகளுக்கு சங்கடம் ஏற்படும் வேளைகளில் மனிதநேய உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், நமது கடற்படை, என்றுமே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நமது பாதுகாப்புப் படையினர் மீது பாரதவாசிகளான நாம் என்றுமே மதிப்பும் மரியாதையும், பெருமிதமும் கொண்டு வந்திருக்கிறோம். தரைப்படையாகட்டும், நமது கடற்படையாகட்டும் விமானப்படையாகட்டும், நமது வீரர்களின் தைரியம், வீரம், சாகசம், பராக்கிரமம், தியாகம் ஆகியன ஒவ்வொரு குடிமகனின் வணக்கத்துக்கும் உரியனவாக அவை இருக்கின்றன. 125 கோடி நாட்டுமக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வது, தங்கள் இளமையை நாட்டுக்காகத் தியாகம் செய்யும் படைவீரர்கள் காரணமாகத் தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் இராணுவப்படையினர் கொடிநாளைக் கடைபிடிக்கிறோம். நமது தேசம் இராணுவத்தினர் மீது கொண்டுள்ள பெருமிதத்தையும், பெருமதிப்பையும் வெளிப்படுத்தும் நாள் தான் இந்த நாள். இந்த முறை பாதுகாப்பு அமைச்சகம் டிசம்பர் 1 முதல் 7 வரையிலான காலகட்டத்தில் ஒரு இயக்கத்தை முடுக்கி விட முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தேசத்தின் குடிமக்களை அணுகி, இராணுவத்தினர் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை மகிழ்ச்சி தருகின்றன. இந்த வாரம் முழுக்கவும், சிறியவர்-பெரியவர் என அனைவர்மீதும் கொடியைப் பொருத்துவார்கள். தேசத்தில் படையினர் மீது மதிப்பேற்படுத்துவது என்ற இயக்கம் முன்னிறுத்தப்படும். இந்த சந்தர்ப்பத்தில் நமது இராணுவப்படையினரின் கொடிகளை நாம் விநியோகம் செய்யலாம். நமது அண்டைப்புறத்தில், இராணுவப்படையினரோடு தொடர்புடைய நமக்குத் தெரிந்தவர்களிடத்தில் அவர்களின் அனுபவங்களை, அவர்களின் சாகசச் செயல்களை, அவற்றோடு தொடர்புடைய காணொளிகளை, படங்களை, #armedforcesflagdayயில் தரவேற்றம் செய்யுங்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், இராணுவத்தினரை அழைத்து, அவர்களிடத்தில் இராணுவம் பற்றிய தகவல்களைப் பெறலாம். நமது புதிய தலைமுறையினர், நமது இராணுவத்தின் அனைத்து வீரர்களின் நலனுக்காகவும் நிதிசேர்ப்பில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை கொடிநாள் வாரம் நமக்கு அளிக்கிறது. இந்த நிதி, படைவீரர்களின் நலவாரியம் வாயிலாக போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவரின் நலனுக்காகவும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் செலவு செய்யப்படுகிறது. பொருளாதார பங்களிப்பு நல்க பலவகையான வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் ksb.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம். இதன் பொருட்டு ரொக்கமில்லாப் பரிவர்த்தனையிலும் நீங்கள் ஈடுபடலாம். வாருங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நமது படைவீரர்களின் மனோபலத்தைப் பெருக்கும் பணிகளில் ஈடுபடுவோம். நாமும் அவர்கள் நலனில் நமது பங்களிப்பை அளிப்போம்.
எனதருமை நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலக மண்வள நாள். நமது விவசாய சகோதர சகோதரிகளிடம் சில விஷயங்களைக் கூற நான் விரும்புகிறேன். நாம் உண்ணும் உணவு அனைத்தும் இந்த மண்ணோடு தொடர்புடையது. ஒருவகையில் ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியும், மண்ணோடு தொடர்புடையது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், உற்பத்தி செய்யத் தேவையான இந்த வளமான மண் இந்த உலகில் இல்லாது இருந்தால் என்னவாகும் யோசியுங்கள். மரம் செடி கொடிகள் முளைக்காது, மனித வாழ்வு எப்படி சாத்தியமாகும்? நுண்ணுயிர்கள் எப்படி உருவாகும்? நமது கலாச்சாரம் இதைப் பற்றி முன்னமேயே சிந்தித்திருக்கிறது; இதனால் தான் மண்ணின் மகத்துவம் குறித்து பண்டைய காலத்தில் விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார்கள். நமது பாரம்பரியத்தில் ஒருபுறத்தில் விவசாயம் குறித்தும், மண் குறித்தும், பக்தி மற்றும் நன்றியறிதல் உணர்வு மக்களிடத்தில் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த மண்ணைப் பராமரிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. மண் மீது பக்தி, கூடவே விஞ்ஞான பூர்வமாக அதைப் போற்றிப் பராமரித்தல் எனும் இரண்டு விஷயங்களுக்கு இந்த தேசத்தின் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றார்கள்.
நம் தேசத்து விவசாயிகள், பாரம்பரியத்தோடு இணைந்தவர்களாக இருக்கும் அதே வேளையில், நவீன விஞ்ஞானத்தின் மீதும் நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள், மனவுறுதிப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது. நான் இமாசலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டோஹூ கிராமத்தின் போரஞ்ஜ் பகுதிக்குச் சென்ற போது, அங்கே இருக்கும் விவசாயிகள் பற்றிக் கேள்விப்பட்டேன். இங்கே விவசாயிகள் முன்பெல்லாம் அளவேயில்லாமல் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், இதனால் மண்வளம் பாதிப்படைந்தது. மகசூல் குறைந்து கொண்டே வந்து, வருமானமும் குறைந்தது, மெல்ல மெல்ல மண்ணின் உற்பத்தித் திறனும் மங்கிக் கொண்டே வந்தது. கிராமத்தின் சில விழிப்புணர்வுமிக்க விவசாயிகள், இந்தச் சூழ்நிலையை நுணுக்கமாகப் புரிந்து கொண்டு, பின்னர் சரியான சமயத்தில் தங்கள் நிலத்தின் மண்வளத்தைப் பரிசோதனை செய்தார்கள்; உரம், நுண்ணூட்டம், இயற்கை உரங்கள் ஆகியவற்றைப் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பன சொல்லிக் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கடைபிடித்தார்கள்.
மண்வளப்பரிசோதனை வாயிலாக விவசாயிகளுக்குக் கிடைத்த தகவல், அவர்களின் வழியைத் துலக்கியது, இதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? 2016-17இல் குளிர்காலம் பயிர்களின் விளைச்சல் ஒவ்வொரு ஏக்கரிலும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது, ஒவ்வொரு ஏக்கரிலிருந்து வருமானம் 4 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. இதுமட்டுமில்லாமல், மண்ணின் தரத்திலும் மேம்பாடு காணப்பட்டது. உரத்தின் பயன்பாடு குறைந்த காரணத்தால், பொருளாதார ரீதியாக சேமிப்பும் ஏற்பட்டது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எனது விவசாய சகோதரர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மண்வள அட்டையில் காணப்படும் ஆலோசனைகளை அமல் செய்ய முன்வந்திருக்கிறார்கள், வெளிவரும் முடிவுகளைப் பார்க்கும் போது, அவர்களது உற்சாகம் மேலும் அதிகரிக்கிறது. மகசூலைப் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் பூமித்தாய் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், பூமித்தாயை நாம் கவனித்துக் கொண்டால், இந்த பூமித்தாய், நம்மனைவரையும் கவனித்துக் கொள்வாள் என்பது விவசாய சகோதரர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.
நாடு முழுவதிலும் நமது விவசாயிகள் வசம் 10 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் இருக்கின்றன, இதன் வாயிலாக அவர்கள் தங்கள் நிலத்தை நல்லமுறையில் அறிந்து கொள்ள முடிகிறது, அதன்படி, விதைப்பை மேற்கொள்ள முடிகிறது. நாம் பூமித்தாயை வணங்குகிறோம், ஆனால் அவள் மீது யூரியா போன்ற உரங்களைப் போடுவதால், அவளுக்கு எத்தனை பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா? பூமித்தாயின் மீது அளவுக்கு அதிகமாக யூரியாவைப் போடும் போது கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்பது அனைத்துவகையான அறிவியல் முறைகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விவசாயி பூமித்தாயின் மைந்தன் எனும் போது, பூமித்தாய் நோய்வாய்ப்பட்டால் சகித்துக் கொண்டு சும்மா இருக்க அவனால் எப்படி முடியும்? இந்த தாய்-மகன் உறவை மீண்டும் ஒருமுறை விழிப்படையச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். நமது விவசாயிகள், நமது பூமித்தாயின் புதல்வர்கள், நமது மண்ணின் மைந்தர்கள், 2022இல் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில், அவர்கள் பயன்படுத்தும் யூரியாவை பாதியளவாகக் குறைப்போம் என்று உறுதியேற்க முடியுமா? நமது பூமித்தாயின் புதல்வர்கள், எனது விவசாய சகோதரர்கள், இந்த உறுதிப்பாட்டை ஒருமுறை மேற்கொண்டு விட்டார்களேயானால், பூமித்தாயின் உடல்நலத்தில் மேம்பாடு காணப்படும், உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.
உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் ஆகியவற்றை நாமனைவரும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். தீபாவளிக்கு முன்பாக குளிர் கவியத் தொடங்கி விடும் காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது டிசம்பர் மாதம் தான் குளிர் மெல்ல மெல்ல நுழைகிறது. ஆனால் குளிர்காலம் தொடங்கியவுடனேயே, போர்த்தியிருக்கும் போர்வையிலிருந்து மீண்டு எழ சங்கடமாக இருப்பதை நாம் உணர்கிறோம் என்பது நம்மனைவரின் அனுபவமாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட சதா சர்வகாலமும் விழிப்போடு இருப்போர் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் உத்வேகம் அளிக்கின்றன. மத்திய பிரதேசத்தின் மாற்றுத்திறன் படைத்த ஒரு 8 வயதேயான சிறுவன் துஷார், தனது கிராமத்தவர்கள் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுவிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளான். இத்தனை பரந்துபட்ட அளவில் ஒரு செயலைச் செய்வது, இத்தனை சிறிய வயதிலான பாலகனா? ஆச்சரியம்! ஆனால் அவன் வயதை விடப் பல மடங்கு அவனது மனோதிடமும், ஆர்வமும், ஆழமானவை, அதிகமானவை. 8 வயது நிரம்பிய இந்தச் சிறுவனால் பேச முடியாது, ஆனால் விசிலடிப்பதைத் தன் ஆயுதமாகக் கொண்டான்; காலை 5 மணிக்கு எழுந்து, தனது கிராமத்தின் வீடுதோறும் சென்று, சீட்டியடித்து அவர்களை எழுப்பி, திறந்தவெளியில் மலஜலம் கழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை சைகைகள் வாயிலாகவே ஏற்படுத்தினான். ஒவ்வொரு நாளும் 30-40 வீடுகள் சென்று தூய்மை பற்றிய கல்வியை அளித்த இந்தச் சிறுவன் காரணமாக கும்ஹாரி கிராமம், திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டது.
தூய்மையை முன்னிறுத்தும் வகையில் இந்த சின்னஞ்சிறுவன் துஷார் உத்வேகம் அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். தூய்மைப்பணிக்கு என எந்த வயதும் இல்லை, எந்த வரம்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சிறியவரோ பெரியவரோ, பெண்களோ ஆடவரோ, தூய்மை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று, தூய்மையைப் பேண அனைவரும் ஏதாவது ஒரு பங்களிப்பை ஆற்ற வேண்டியது அவசியம். நமது மாற்றுத்திறன் படைத்த சகோதர சகோதரிகள் மனவுறுதி படைத்தவர்கள், திறம் மிக்கவர்கள், சாகசமும், மனோதிடமும் உடையவர்கள். ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இன்று இவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள். விளையாட்டுத் துறையாகட்டும், வேறு ஏதாவது போட்டியாகட்டும், ஏதாவது சமுதாய நிகழ்ச்சியாகட்டும், நமது மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்லர். நமது மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் ரியோ ஒலிம்பிக் பந்தயத்தில் மிகச்சிறப்பாக விளையாடி 4 பதக்கங்கள் வென்று வந்தார்கள் என்பதும், பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகவும் ஆனார்கள் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். நாடு முழுவதிலும் பலவகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நாட்களில் உதய்பூரில் 17ஆவது தேசிய பாராநீச்சல் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்திருந்த நமது இளைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள், இதில் பங்கு கொண்டு, தங்களின் திறன்களை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவன் தான் குஜராத்தைச் சேர்ந்த 19 வயதுமிக்க ஜிகர் டக்கர், இவனது உடலின் 80 சதவீதத்தில் தசைகளே கிடையாது என்றாலும், இவனது சாகசம், மனோதிடம், உழைப்பு ஆகியவற்றைப் பாருங்கள். தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் 19 வயதான ஜிகர் டக்கர் 11 பதக்கங்களை வென்றிருக்கிறான். 70ஆவது தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் அவன் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறான். அவனது இந்த திறனின் பலனாக பாரதத்தின் இந்திய விளையாட்டு ஆணையம் வாயிலாக, 20-20 பாராலிம்பிக்ஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பாரா நீச்சல்வீரர்களில் ஒருவன் என்ற நிலையில், தற்போது குஜராத்தின் காந்திநகரில் centre of excellences அமைப்பில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்படும். நான் இளைஞன் ஜிகர் டக்கருக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல்தன்மை, வாய்ப்பு ஆகியன மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தேசத்தின் ஒவ்வொரு நபரும் அதிகாரப்பங்களிப்பு உடையவராக ஆக வேண்டும் என்பதே நமது முயற்சியாக இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை நாம் படைக்க வேண்டும். சமநோக்கு, எனது மக்கள் என்ற உணர்வு வாயிலாக சமூகத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கட்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டும்.
சில நாட்கள் கழித்து ஈத்-ஏ-மிலாத்-உன்-நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் தான் இறைத்தூதர் ஹஸ்ரத் முகமது சாஹிப் அவர்கள் பிறந்தார். நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்; இந்த வேளையில், சமூகத்தில் அமைதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் வகையில் ஈத்பெருநாள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும், புதிய சக்தியை வழங்கட்டும், புதிய மனவுறுதிக்கான திறனை அளிக்கட்டும்.
(தொலைபேசி அழைப்பு)
வணக்கம் பிரதமர் அவர்களே, நான் கான்பூரிலிருந்து நீரஜா சிங் பேசுகிறேன். நான் உங்களிடம் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்த ஆண்டு முழுவதிலும் நீங்கள் மனதின் குரலில் கூறியவற்றிலிருந்து பத்து மிக நல்ல விஷயங்களை நீங்கள் எங்களோடு மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்களேன். இதன் வாயிலாக எங்களால் அந்த விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க முடியும், அவற்றிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும். நன்றி.
நீங்கள் கூறுவது சரிதான்; 2017ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கிறது, 2018 வாயிற்கதவுகளுக்கு அருகே வந்து விட்டது. நல்ல ஆலோசனை தான், இதோடுகூட, வேறு ஒன்றையும் இணைத்துப் பார்க்க என் மனம் விரும்புகிறது. நம் கிராமங்களில் மூத்தோர் இருப்பார்களில்லையா, அவர்கள் எப்போதும், துக்கத்தை மறந்து விடு, சுகத்தை மறக்காதே என்பார்கள். இந்தக் கருத்தை நாம் நன்கு பரப்ப வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் 2018ஆம் ஆண்டில் மங்கலத்தை நினைவில் இருத்தி, மங்கலம் ஏற்பட வேண்டும் என்ற உறுதியேற்று புத்தாண்டை வரவேற்போம். கடந்து போனவற்றை ஆண்டுநிறைவில் கணக்குப் பார்க்கிறோம், கருத்துகளின் அலசல்களில் ஈடுபடுகிறோம்; இவற்றின் முடிவுகளை அடியொற்றி அடுத்த ஆண்டுக்கான திட்டங்களைத் தீட்டுகிறோம். ஊடகத்தில் கடந்த ஆண்டின் சுவாரசியமான சம்பவங்களை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறோம். இதில் ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமும் அடங்கியிருக்கிறது, எதிர்மறையான விஷயமும் அடங்கியிருக்கிறது. ஆனால் 2018ஆம் ஆண்டில் நாம் காலெடுத்து வைக்கும் வேளையில் நல்லனவற்றை மட்டும் நினைவிலேற்றிச் செய்யலாமில்லையா, நல்லனவற்றில் ஈடுபட, அவற்றை நினைவில் கொள்ளலாமில்லையா? நான் உங்களனைவருக்கும் ஒரு யோசனை கூறுகிறேன் – நீங்கள் கேள்விப்பட்ட, பார்த்த, அனுபவித்த 5-10 ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டால், நல்லதொரு உணர்வு ஏற்படுமில்லையா. இதில் நீங்கள் பங்களிப்பு நல்க முடியுமா? நாம் இந்த முறை நமது வாழ்க்கையில் 5 ஆக்கப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா? அது புகைப்படமாக இருக்கலாம், சிறுகதையாக இருக்கலாம், சின்னஞ்சிறு காணொளியாகவும் இருக்கலாம் – இவற்றின் மூலம் நாம் 2018ஆம் ஆண்டை சுபமான சூழலில் வரவேற்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நல்ல நினைவுகளோடு வரவேற்போம். ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு ஈடுபடுவோம். ஆக்கப்பூர்வமான நினைவுகளை மனதில் கொள்வோம்.
வாருங்கள், NarendraModiAppஇல், MyGovஇல் அல்லது சமூக வலைத்தளத்தில் #PositiveIndiaவில் ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை நாம் நினைவுபடுத்துவோம். நல்ல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்து நல்லதொரு சூழலை உருவாக்குவோம். நல்ல விஷயங்கள், நல்லனவற்றைச் செய்யத் தேவையான சக்தியை அளிக்கின்றன. சுபமான உணர்வு, சுபமான மனவுறுதிக்கு வழிகோலுகிறது. சுபமான மனவுறுதி, சுபமான பலன்களை அள்ளிக்கொடுத்து, முன்னேற வழிவகுக்கிறது.
வாருங்கள், இந்த முறை நாம் #PositiveIndiaவில் ஈடுபட்டு முயற்சி செய்து பார்ப்போமே! இதன் மூலமாக நாம் மிகப் பலமானதொரு ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்கி, வரவிருக்கும் ஆண்டை வரவேற்போம். இந்தக் கூட்டு உந்துசக்தியின் வலிமையையும் அதன் தாக்கத்தையும் நாமனைவருமாக இணைந்தே ஏற்படுத்துவோம். எனது அடுத்த மனதின் குரலில் நான் உங்களின் இந்த #PositiveIndiaவில் வந்திருக்கும் விஷயங்களை நாட்டுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கண்டிப்பாக ஈடுபடுவேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, அடுத்த மாதம், அடுத்த மனதின் குரலில், நான் மீண்டும் உங்களிடையே வருவேன். பல விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். தீபாவளி முடிந்து 6 நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படும் புனித நாளான சத் வழிபாடு என்பது பல நியமங்களோடும் விதிமுறைகளோடும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். என்ன உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் பாரம்பரியமான நியமங்கள் அனுசரிக்கப்படுகின்றன. சத்-பூஜை எனும் இந்த அருமையான நாள் இயற்கையோடும் இயற்கை வழிபாட்டோடும் முழுமையாக ஒன்று கலந்த நன்னாள். சூரியனும் நீரும் இந்த புனித சத் பூஜையோடு நீக்கமற நிறைந்தவை என்றால், மண்ணால் ஆன கலயங்களும் கிழங்குகளும், பூஜை விதிகளோடு கூடிய பிரிக்க முடியாத பூஜைப் பொருட்கள் ஆகும். நம்பிக்கையை முன்னிறுத்தும் இந்தப் புனித நாளன்று உதிக்கும் சூரிய வழிபாடும், அஸ்தமனம் ஆகும் சூரியனை பூஜை செய்வதும் என்ற இணைபிரியாத கலாச்சாரம் நிறைந்திருக்கிறது. உலகில் உதிப்பவர்களைத் துதிப்பவர்கள் பலர் இருந்தாலும், சத்-பூஜை என்பது மறைவது என்பது உறுதியானது என்பதை உணர்ந்து ஆராதனை செய்யும் கலாச்சாரத்தையும் நமக்களிக்கிறது. நமது வாழ்க்கையில் தூய்மையின் மகத்துவமும் கூட இந்த பண்டிகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது. சத்பூஜைக்கு முன்பாக வீடு முழுக்க சுத்தம் செய்யப்படுகிறது, கூடவே நதிகள், ஏரிகள், நீர்நிலைக்கரைகள், வழிபாட்டு இடங்கள், புனிதத் தலங்கள் ஆகியவற்றின் தூய்மைப் பணியில் அனைவரும் இணைந்து கொள்கிறார்கள். சூரிய வழிபாடு அல்லது சத்-பூஜை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் நிவாரணம், ஒழுங்குமுறை ஆகியவற்றைப் போற்றும் பண்டிகை.
பொதுவாக மக்கள் யாசிப்பதை ஈனமானதாகவே கருதுகிறார்கள், ஆனால் சத்-பூஜையன்று காலையில் நீரால் அர்க்யம் அளித்த பின்னர், பிரஸாதத்தை வேண்டிப் பெற்றுக்கொள்வது என்ற சிறப்பான பாரம்பரியம் நிலவிவருகிறது. ஆணவத்தை அழிப்பது என்ற உணர்வே, பிரஸாதத்தை வேண்டிப் பெற்றுக்கொள்ளும் இந்தப்பாரம்பரியத்தின் பின்புலத்தில் இருக்கிறது. இந்த தீய பண்பானது முன்னேற்றப்பாதையில் பெரும் தடைக்கல்லாக விளங்கக்கூடியது. பாரதத்தின் இந்த மகத்தான பாரம்பரியம் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடியது என்பது இயல்பான விஷயம் தானே.
எனக்குப்பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரல் பாராட்டவும்படுகிறது, விமர்சிக்கவும்படுகிறது. ஆனால் மனதின் குரல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நான் நோக்கும் பொழுது, இந்த தேசத்தின் மக்களின் மனங்களில் மனதின் குரலானது 100 சதவீதம் இணைபிரியாத ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் உண்டாகியிருக்கிறது. கதராடைகள் மற்றும் கைத்தறித்துணிகளின் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோமே. காந்தியடிகள் பிறந்த நாளன்று எப்பொழுதுமே நான் கைத்தறி ஆடைகள் மற்றும் கதராடைகளை ஆதரித்தே பேசி வந்திருக்கிறேன், அதன் விளைவு என்ன என்பதைப் பார்ப்போமே! இதைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இந்த மாதம் அக்டோபர் 17 ‘தன்தேரஸ்’ பண்டிகையன்று தில்லியின் காதி கிராமோத்யோக் பவன் கடையில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான விற்பனை செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு கடையில் மட்டுமே இத்தனை அதிக விற்பனை ஆகியிருக்கிறது என்று கேட்கும் பொழுதே மனதில் ஆனந்தம் மேலிடுகிறது, மகிழ்ச்சி கொப்பளிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு காதி பரிசுச்சீட்டு விற்பனையில் சுமார் 680 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காதி மற்றும் கைவினைப்பொருட்களின் மொத்த விற்பனையின் சுமார் 90 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது. இன்று இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் கதராடைகள் மற்றும் கைத்தறி ஆடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதன் மூலம் எத்தனை நெசவாளிக் குடும்பங்கள், ஏழைக்குடும்பங்கள், கைத்தறியில் பணியாற்றுவோரின் குடும்பங்களுக்கெல்லாம் எத்தனை நன்மை உண்டாகும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. முன்பெல்லாம் ‘தேசத்துக்காக கதராடைகள்’ என்ற நிலையை, ‘ஃபேஷனுக்காக கதராடைகள்’ என்று சற்று மாற்றியமைத்தோம்; ஆனால் கடந்த சில காலமாக ‘தேசத்துக்காக கதராடைகள்’, ‘ஃபேஷனுக்காக கதராடைகள்’ ஆகியவற்றுக்குப் பிறகு, இப்பொழுது ‘மாற்றத்திற்காக கதராடைகள்’ என்ற நிலை உருவாகிவருகிறது என்பதை என்னால் அனுபவப்பூர்வமாக கூறமுடியும். கதராடைகளும் கைத்தறியாடைகளும் பரமஏழைகளின் வாழ்வினில், மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைப் பொருளாதாரரீதியாக வளமானவர்களாக மாற்றக்கூடிய வல்லமை படைத்த கருவியாக ஆகிவருகிறது. கிராமோதய் கோட்பாட்டின் பொருட்டு இது மிகப்பெரிய பங்காற்றிவருகிறது.
பாதுகாப்புப்படையினர் மத்தியில் எனது தீபாவளி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், அவர்கள் எப்படி தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கவேண்டும் என்று NarendramodiAppல் ராஜன் பட் அவர்கள் எழுதியிருக்கிறார். தேஜஸ் கெய்க்வாட் அவர்கள் NarendramodiAppல் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? – நமது வீடுகளிலிருந்து பாதுகாப்புப்படையினருக்கு இனிப்புத் தின்பண்டங்களை அனுப்ப ஏதேனும் வழியிருக்கிறதா?, எங்களுக்கெல்லாம் நமது வீரம் நிறைந்த பாதுகாப்புப்படையினர் பற்றிய நினைவுவருகிறது என்று கேட்டு எழுதி இருக்கிறார். தீபாவளியை நீங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியிருப்பீர்கள். என்னைப் பொறுத்தமட்டில் இந்த முறையும் தீபாவளி சிறப்பான அனுபவத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. மீண்டும் ஒருமுறை எல்லையோரத்தில் இருக்கும் நமது அஞ்சாநெஞ்சம் படைத்த பாதுகாப்புப்படையினரோடு தீபாவளியைக் கொண்டாடும் பேறு கிடைத்தது. இந்தமுறை ஜம்மு-காஷ்மீரின் குரேஜ் பகுதியில் இருக்கும் பாதுகாப்புப்படையினரோடு தீபாவளியைக்கொண்டாடியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. எல்லைப்புறங்களில் மிகுந்த கடினமான, சிரமம் நிறைந்த எத்தனையோ சூழ்நிலைகளை எதிர்கொண்டு நமது பாதுகாப்புப் படையினர் நாட்டைக் காத்துவருகிறார்கள், அந்தப் போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக நான் அனைத்து நாட்டுமக்கள் தரப்பிலிருந்தும் நமது பாதுகாப்புப்படையினர் ஒவ்வொருவரையும் தலைவணங்குகிறேன். எப்போதெல்லாம் நமக்கு சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, வாய்ப்புக்கிட்டுகிறதோ, நமது பாதுகாப்புப்படையினரின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் சாகசச் செயல்களைச் செவிமடுக்கவேண்டும். நமது பாதுகாப்புப்படைவீரர்கள் நமது எல்லைப்பகுதிகளில் மட்டுமல்லாமல், உலகம் முழுக்கவும் அமைதியை நிலைநாட்ட பல மகத்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஐ.நா. அமைதி காப்பவராக அவர்கள் உலகெங்கும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள். கடந்த நாட்களில் அக்டோபர் 24ஆம் தேதி உலகெங்கும் ஐ.நா. தினமாக கடைபிடிக்கப்பட்டது. உலகில் அமைதியை நிலைநிறுத்த ஐ.நா.வின் முயற்சிகள் ஆகியவற்றில் அதன் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அனைவரும் நினைவு கூர்ந்தார்கள். நம்மைப் பொறுத்தமட்டில் நாம் ‘வசுதைவ குடும்பகம்’, அதாவது உலகனைத்தும் ஓர் குடும்பம் என்ற கோட்பாட்டின் வழி நடப்பவர்கள். இந்த உறுதிப்பாடு காரணமாகவே தொடக்கத்திலிருந்தே, ஐ.நா.வின் பல்வேறு மகத்தான முன்னெடுப்புக்களில் நாம் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கி வந்திருக்கிறோம். பாரதத்தின் அரசியல் அமைப்புச்சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் ஆகியவற்றின் முன்னுரை மக்களாகிய நாம் (we the people) என்ற சொற்களோடு தான் தொடங்குகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாரதம் எப்பொழுதுமே பெண் சமத்துவம் மீது அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது; ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனம் இதற்கான கண்கூடான சான்று. இதன் தொடக்கச் சொற்றொடொரில் முன்வைக்கப்பட்டது என்னவென்றால், ‘all men are born free and equal’, இது பாரதத்தின் பிரதிநிதியான ஹன்ஸா மேத்தா அவர்களின் முயற்சிகளின் பலனாக ’all human beings are born free and equal’ என்று மாற்றி அமைக்கப்பட்டது, அதாவது அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், சமமானவர்களாகவும் பிறக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.
மேலோட்டமாகப் பாரக்கையில் இது சிறிய மாற்றமாகத் தெரியலாம் ஆனால் இது நுணுக்கமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஐ.நா.வின் பல்வேறு பணிகளைப் பொறுத்தமட்டில், பாரதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு என்று சொன்னால், அது ஐ.நா. அமைதிகாக்கும் செயல்பாடுகள் என்று கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் செயல்பாடுகளில் பாரதம் எப்பொழுதுமே ஆக்கப்பூர்வமான தனது பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது. இந்தத் தகவல் உங்களுக்கு ஒருவேளை புதியதாக இருக்கலாம். 18000த்திற்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்புப் படையினர் ஐ.நா. அமைதிகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்திருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பாரதத்தின் சுமார் 7000 படைவீரர்கள் ஐ.நா. அமைதிகாக்கும் முனைப்புகளில் இணைந்திருக்கிறார்கள், இவர்கள் உலகனைத்திலும் 3வது அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் 2017ஆம் ஆண்டு வரை பாரதத்தின் படைவீரர்கள் உலகம் முழுக்கவும் 71 அமைதிகாக்கும் செயல்பாடுகளில் சுமார் 50 செயல்பாடுகளில் தங்கள் சேவைகளை அளித்திருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகள் கொரியா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், காங்கோ, சைப்ரஸ், லைபீரியா, லெபனான், சூடான் என உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நாடுகளிலும் நடைபெற்றிருக்கின்றன. காங்கோ மற்றும் தெற்கு சூடானில் பாரதத்தின் இராணுவம் மருத்துவ சேவைகள் வாயிலாக 20000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. பாரதத்தின் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நாடுகளில், அந்த நாட்டுமக்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நேச செயல்பாடுகள் வாயிலாக அவர்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். பாரதத்தின் பெண்களும் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் முன்னிலை வகித்திருக்கிறார்கள். லைபீரியாவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் இயக்கத்தின் மூலமாக முதல் பெண் காவலர் பிரிவை அனுப்பிய முதல் நாடு பாரதம் தான் என்பது மிகச் சிலருக்கே தெரிந்திருக்கும். பாரதத்தின் இந்தச் செயல்பாடு உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு கருத்தூக்கம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதன் பிறகு தான் அனைத்து நாடுகளும் தத்தமது பெண் காவலர் பிரிவுகளை அனுப்பத்தொடங்கின. பாரதத்தின் பங்களிப்பு அமைதி காக்கும் செயல்பாடுகளோடு மட்டும் நிற்கவில்லை, பாரதம் சுமார் 85 நாடுகளின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு வருவோருக்கு பயிற்சி அளிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. காந்தியடிகளும், கௌதமபுத்தரும் வாழ்ந்த இந்த பூமியிலிருந்து நமது தீரம்நிறை அமைதிக்காப்பாளர்கள், உலகெங்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிறுவும் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அமைதிகாக்கும் செயல்பாடுகள் என்பது எளிதான செயல் அல்ல. நமது பாதுகாப்புப் படை வீரர்கள் கடினமான இடங்களுக்கும் செல்லவேண்டியிருக்கிறது. பல்வேறுபட்ட மக்களிடையே வசிக்க நேர்கிறது. பலவகையான சூழ்நிலைகள், வேறுபட்ட கலாச்சாரங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. வட்டாரத்தேவைகள், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. இன்று நாம் நமது வீரம்நிறை ஐ.நா. அமைதிகாப்பாளர்களை நினைவில் கொள்ளும் வேளையில், கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவை யாரால் மறக்க இயலும் ? இவர் ஆப்பிரிக்காவின் காங்கோவில் அமைதியை நிலைநாட்டப்போரிட்டார், தன்னிடம் இருந்த அனைத்தையும் பணயம் வைத்தார். அவரை நினைத்துப் பார்க்கும்பொழுது, நாட்டுமக்கள் அனைவரின் நெஞ்சங்களும் பெருமிதத்தில் விம்முகிறது. பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்ட ஒரே ஐ.நா. அமைதிக்காப்பாளர் இவர் ஒருவர் மட்டுமே. லெப்டினன்ட் ஜெனரல் பிரேம்சந்த் அவர்கள் சைப்ரசில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சிலரில் ஒருவர். 1989ஆம் ஆண்டில், 72 வயதான இவரை நமீபியாவில் செயல்பாடுகளுக்காக படைப்பிரிவு கமாண்டராக (force commander) நியமிக்கப்பட்டார், இவர் நமீபியாவின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் தனது சேவைகளை அர்ப்பணித்தார். இந்திய இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் திம்மைய்யா, சைப்ரசில் ஐ.நா. அமைதிகாக்கும் படைக்குப் பொறுப்பேற்றார், அமைதியை நிலைநாட்டும் செயல்பாடுகளில் முழுமனதோடு ஈடுபட்டார். பாரதம் ஒரு அமைதியின் தூதுவன் என்ற வகையில் உலகில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகிய செய்திகளை எப்பொழுதுமே அளித்துவந்திருக்கிறது. ஒவ்வொருவரும் அமைதி, நல்லிணக்கத்துடன் வாழவேண்டும், ஒரு சிறப்பான, அமைதியான வருங்காலத்தைச் சமைக்கும் திசையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, நமது புண்ணியபூமியை பல மகாபுருஷர்கள் அலங்கரித்திருக்கிறார்கள், இவர்கள் தன்னலமற்ற உணர்வோடு மனித சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சகோதரி நிவேதிதா கூட அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்திகழ்ந்தார். அவர் அயர்லாந்தில் மார்கக்ரெட் எலிசபெத் நோபலாகப் பிறந்தாலும், ஸ்வாமி விவேகானந்தர் அவருக்கு ‘நிவேதிதா’ என்ற பெயரைச்சூட்டினார். நிவேதிதா என்றால் முழுமையாக அர்ப்பணித்தவர் என்று பொருள். பின்வரும் காலத்தில் அவர் தனது பெயருக்கு ஏற்ப, தன்னையே அர்ப்பணித்தார். நேற்று சகோதரி நிவேதிதாவின் 150ஆவது பிறந்த நாள். இவர் ஸ்வாமி விவேகானந்தரால் மிகவும் ஈர்க்கப்பட்டு, தனது சுகமான வாழ்வைத் துறந்து, தனது வாழ்க்கை முழுவதையும் ஏழைகளின் சேவையிலேயே முற்றிலுமாக அர்ப்பணித்தார். சகோதரி நிவேதிதா ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்று வந்த அநியாயங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மட்டும் அடிமைப்படுத்தவில்லை, அவர்கள் நம்மை மனதளவில் அடிமைகளாகவே வைத்திருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார்கள். நமது கலாச்சாரத்தை இழிவானதாகக்காட்டி, நம் மனங்களில் தாழ்வு உணர்வை ஏற்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. சகோதரி நிவேதிதா பாரத கலாச்சாரத்தின் கவுரவத்தை மீண்டும் நிறுவினார். தேசத்தின் விழிப்புணர்வை எழுப்பி மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சனாதன தர்மம் மற்றும் தத்துவங்கள் ஆகியவை பற்றிய தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார். புகழ்பெற்ற தேசியவாதியும் தமிழ்க்கவியுமான சுப்ரமணிய பாரதி புதுமைப்பெண் என்ற புரட்சி ததும்பும் கவிதையில், புதுயுகப்பெண்டிர் பற்றியும் அவர்களின் சரிநிகர் சமநிலை குறித்தும் விளக்கி இருக்கிறார். இந்தக்கவிதைக்கான உத்வேகம் அவருக்கு சகோதரி நிவேதிதாயிடமிருந்து தான் கிடைக்கப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. சகோதரி நிவேதிதா மகத்தான விஞ்ஞானி ஜக்தீஷ்சந்திர போசுக்கும் உதவி செய்திருக்கிறார். அவர் தனது கட்டுரை மற்றும் மாநாடுகள் வாயிலாக போஸ் அவர்களின் ஆய்வைப்பிரசுரிக்கவும், பரப்பவும் ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வது என்பது பாரதத்தின் பல அழகான சிறப்பம்சங்களில் ஒன்று. சகோதரி நிவேதிதாயும், விஞ்ஞானி ஜக்தீஷ் சந்திர போசும் இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு. 1899ஆம் ஆண்டில், கோல்கத்தாவில் பயங்கரமான பிளேக் நோய் ஏற்பட்டது, இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். சகோதரி நிவேதிதா, தனது உடல்நலத்தைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாது, கால்வாய்களையும் தெருக்களையும் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கிவைத்தார். அவர் சுகவாழ்வு வாழ்ந்திருக்கலாம் ஆனால், அவர் ஏழைகளின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது இந்தத் தியாகத்திலிருந்து உத்வேகம் பெற்று, மக்கள் சேவைப்பணிகளில் தங்கள் பங்களிப்பை நல்கத்தொடங்கினார்கள். அவர் தனது பணிகள் வாயிலாக தூய்மை மற்றும் சேவையின் மகத்துவம் பற்றிய பாடத்தைக் கற்பித்தார். Here reposes Sister Nivedita who gave her all to India, அதாவது அனைத்தையும் பாரதத்திற்காக அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஐயமே இல்லாமல் அவர் இப்படித்தான் வாழ்ந்தார். இந்த மகத்தான ஆளுமையின் பொருட்டு, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், அவரது வாழ்க்கையிலிருந்து படிப்பினை பெற்று, தன்னை அந்த சேவைப் பாதையில் ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதை விடச் சிறப்பான நினைவஞ்சலி, இன்று வேறு ஒன்று இருக்க முடியாது.
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, எனது பெயர் டாக்டர். பர்த் ஷா… நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று நாம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்; ஏனென்றால் அது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்ததினம்….. அதே நாளன்று உலக நீரிழிவு நோய் தினத்தையும் நாம் கடைப்பிடிக்கிறோம்….. நீரிழிவு நோய் முதியோருக்கு மட்டுமே வரக்கூடிய நோயன்று, இது பல குழந்தைகளையும் பாதிக்கிறது…. இந்த சவாலை எதிர்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
உங்கள் தொலைபேசி அழைப்புக்கு நன்றி. முதன்மையாக நமது முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளாக நாம் கொண்டாடி வரும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் என் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். குழந்தைகள் புதிய பாரதம் படைத்தலின் மகத்தான நாயகர்கள். உங்கள் கவலை சரியானது தான்; முன்பெல்லாம் நோய்கள் வயதான காலத்திலே தான் உண்டாயின, வாழ்க்கையில் இறுதிக்காலகட்டத்தில் அவை பீடித்தன. ஆனால் இவை இன்றைய குழந்தைகளையும் வாட்டத்தொடங்கியிருக்கின்றன. குழந்தைகளையும் நீரிழிவு நோய் பாதிக்கிறது என்பதைக் கேள்விப்படும் பொழுது, மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. முற்காலங்களில் இப்படிப்பட்ட நோய்களை ராஜரோகம் என்று அழைப்பார்கள். ராஜரோகம் என்றால், இப்படிப்பட்ட நோய்கள் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள், சுகவாழ்வு வாழ்பவர்களுக்கு மட்டுமே வரக்கூடியவை என்று பொருள். இளைஞர்களிடம் இப்படிப்பட்ட நோய்கள் அரிதாகவே காணப்பட்டன. ஆனால் நமது வாழ்க்கைமுறை மாறி விட்டது. இன்று இந்த நோய்களை வாழ்க்கைமுறைக் கோளாறு என்று நாம் அறிகிறோம். இளைய வயதில் இது போன்ற நோய்களால் பீடிக்கப்படுவதற்கு முக்கியமான ஒரு காரணம், நமது வாழ்க்கைமுறையில் உடல்ரீதியான செயல்பாடுகள் குறைந்து வருவதும், உணவுப்பழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் தான். சமூகம் மற்றும் குடும்பம் ஆகியன இவை மீது கவனம் செலுத்துவதும் மிக அவசியமானது. இவை பற்றி எண்ணிப் பார்த்தீர்களானால், அசாதாரணமாக எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள். நமது பழைய பழக்கங்களை சற்று மாற்றி, சின்னச்சின்ன விஷயங்களை சரியான முறையில் செய்யப்பழகி, அப்படிச்செய்வதை நமது இயல்பாக நாம் ஆக்கப் பழகவேண்டும். குழந்தைகள் திறந்த மைதானங்களில் விளையாடும் பழக்கத்தில் ஈடுபடுவதை, குடும்பத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்வோடு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். முடிந்தால், குடும்பத்தில் இருக்கும் பெரியோர், இந்தக் குழந்தைகளோடு கூடச் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபடலாம். குழந்தைகள் லிஃப்டைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, படிகளில் ஏறிச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இரவு உணவுக்குப்பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும், குழந்தைகளோடு சற்று காலாற நடந்து வரலாம். யோகம் என்பது, குறிப்பாக, நமது இளையசகோதரர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஏற்படுத்தவும், வாழ்க்கைமுறைக் கோளாறிலிருந்து தப்பவும் மிக பயனுடையதாக இருக்கிறது. பள்ளி தொடங்கும் முன்பு முதல் 30 நிமிடங்கள் யோகப்பயிற்சி செய்து பாருங்கள், எத்தனை பயன் கிடைக்கும் என்பதை உணர்வீர்கள்!! இதை வீட்டிலேயே கூடச்செய்யலாம்; மேலும் யோகத்தின் விசேஷமான அம்சம் என்னவென்றால், இது சுலபமானது, இயல்பானது, அனைவராலும் செய்யக் கூடியது, அனைவராலும் செய்யக்கூடியது என்று ஏன் கூறுகிறேன் என்றால், எந்த ஒரு வயதுடையவராலும் இதைச் செய்யமுடியும். சுலபமானது என்று ஏன் கூறுகிறேன் என்றால், இதை எளிதில் கற்றுக் கொள்ளமுடியும், ஏன் மிக எளிமையானது என்றால், இதை எங்கு வேண்டுமானாலும் செய்யமுடியும். இதற்கென விசேஷமான கருவிகளோ மைதானமோ தேவையில்லை. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த யோகம் மிகவும் பயனுடையது, இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் இது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது, இதுவரை கிடைத்திருக்கும் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அவை மிகவும் ஊக்கமளிப்பவையாக இருக்கின்றன. ஆயுர்வேதத்தையும் யோகத்தையும் நாம் வெறும் சிகிச்சைகளாகப் பார்க்காமல், அவற்றை நமது வாழ்க்கையின் அங்கங்களாக ஆக்கிக்கொள்வோம்.
எனது நேசம்நிறை நாட்டுமக்களே, குறிப்பாக எனது இளைய நண்பர்களே, விளையாட்டுத்துறையில் கடந்த சில நாட்களில் பல நல்ல செய்திகள் வந்திருக்கின்றன. பலவகையான விளையாட்டுக்களில் நமது விளையாட்டு வீரர்கள் தேசத்திற்குப்பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஹாக்கி விளையாட்டில் பாரதம் அருமையாக விளையாடி ஆசியக்கோப்பையை வென்றிருக்கிறார்கள். நமது வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடியதால் தான் பத்தாண்டுகளுக்குப் பிறகு நம்மால் ஆசியக்கோப்பை வெற்றியாளர்களாக ஆக முடிந்திருக்கிறது. இதற்கு முன்பாக பாரதம் 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் ஆசியக்கோப்பையை வென்றிருந்தது. ஒட்டுமொத்த அணிக்கும், உதவியாளர்களுக்கும் என் தரப்பிலும், நாட்டுமக்கள் தரப்பிலும் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள்.
ஹாக்கியை அடுத்து பேட்மின்டன் விளையாட்டிலும் பாரதத்திற்கு நல்ல சேதி கிடைத்திருக்கிறது. பேட்மின்டன் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக விளையாடி டென்மார்க் ஓபனில் வென்று பாரதத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்தோனேசியா ஓபன் மற்றும் ஆஸ்ட்ரேலியா ஓபன் பந்தயங்களுக்குப் பிறகு இது மூன்றாவது சூப்பர் சீரீஸ் பிரீமியர் பந்தய வெற்றி. நமது இளைய விளையாட்டு வீரர்களுக்கும், அவர்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்கும், பாரதத்துக்குப் பெருமை சேர்த்தமைக்காக என் உளம்நிறை பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இந்த மாதம் FIFA 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கின. உலகெங்கிலுமிருந்து அணிகள் பாரதம் வந்தன, அனைவரும் கால்பந்தாட்ட மைதானத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். எனக்கும் ஒரு ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் அனைவரிடமும் உற்சாகம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. உலகக்கோப்பை என்ற மகத்தான நிகழ்ச்சியை உலகம் முழுமையும் கவனித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை பெரிய ஆட்டம், அனைத்து இளைய வீரர்களின் சக்தி, உற்சாகம், சாதித்துக் காட்டவேண்டும் என்ற தாகம் ஆகியவற்றைப் பார்த்தபோது திகைப்பு மேலிட்டது. உலகக்கோப்பை வெற்றிகரமாகத் தொடங்கியது, அனைத்து அணிகளும் மிகச் சிறப்பாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பாரதத்தால் வெற்றி பெறமுடியாமல் போயிருக்கலாம் என்றாலும் பாரதத்தின் இளைய விளையாட்டு வீரர்கள் மக்கள் அனைவரின் நெஞ்சங்களையும் வெற்றி கொண்டார்கள். பாரதம் உட்பட உலக நாடுகள் அனைத்தும் இந்த மாபெரும் கொண்டாட்டத்தை ரசித்தார்கள், மொத்த பந்தயத் தொடரும் கால்பந்தாட்ட ரசிகர்களைக் கவர்ந்தன, கேளிக்கை அளித்தன. கால்பந்தாட்டத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்பதன் அறிகுறிகள் தென்படத்தொடங்கியிருக்கின்றன. நான் மீண்டும் ஒருமுறை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும், அனைத்து விளையாட்டு ரசிகர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தூய்மையான பாரதம் தொடர்பாக எனக்கு எழுதுவோர் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றால், நான் தினசரி மனதின் குரல் நிகழ்ச்சியை அளிக்கவேண்டியிருக்கும், ஒவ்வொரு மனதின் குரலையும் தூய்மைக்காகவே நான் அர்ப்பணிக்க வேண்டிவரும். சிலர் சின்னஞ்சிறு பாலகர்களின் முயற்சிகள் பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைக்கிறார்கள், சிலர் இளைஞர்களின் குழு முயற்சிகள் பற்றிய தகவல்களை அனுப்புகிறார்கள். சில இடங்களில் தூய்மை தொடர்பான ஏதாவது ஒரு புதுமை படைக்கப்படுகிறது அல்லது யாரோ ஒரு அதிகாரியின் விடா முயற்சியால் ஏற்பட்ட மாற்றம் பற்றிய செய்தி கிடைக்கப்பெறுகிறது. மகாராஷ்ட்ரத்தின் சந்த்ரபுர் கோட்டையில் ஒரு மறுமலர்ச்சிக் கதை பற்றி கடந்த நாட்களில் எனக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. அங்கே Ecological Protection Organisation என்ற பெயர் கொண்ட அரசுசாரா அமைப்பு, தன் மொத்த அணி மூலமாக சந்த்ரபுர் கோட்டையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். 200 நாட்கள் வரை நிகழ்ந்த இந்த இயக்கத்தில், ஓய்வொழிச்சல் இல்லாமல், சளைக்காமல், குழுப்பணியில் ஈடுபட்டு கோட்டையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். தொடர்ச்சியாக 200 நாட்கள். before and after, முன்பும் பின்பும் என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். புகைப்படங்களைப் பார்க்கும் வேளையில் நான் திகைத்துப்போனேன், இவற்றைப் பார்க்கும் யாருடைய மனத்திலும், அக்கம்பக்கத்தில் இருக்கும் கழிவுகளையும் அசுத்தத்தையும் பார்க்கும் போது அவநம்பிக்கை ஏற்படலாம், தூய்மை என்ற கனவு எப்படி மெய்ப்படும் என்ற எண்ணம் எழலாம் – அப்படிப்பட்டவர்கள், Ecological Protection Organisationஇன் இளைஞர்களை, அவர்களின் வியர்வைத்துளிகளை, அவர்களின் நம்பிக்கையை, அவர்களின் மனவுறுதிப்பாட்டை, உயிர்த்துடிப்போடு இருக்கும் இந்தப் புகைப்படங்களில் உங்களால் பார்க்கமுடியும். இதைப் பார்த்தவுடனேயே உங்களின் ஏமாற்றம், நம்பிக்கையாக மாறிவிடும். தூய்மைக்கான இந்த பகீரதப்பிரயத்தனம், அழகு, சமூகரீதியிலான செயல்பாடு, இடைவிடா முயற்சி ஆகியவற்றை முன்னிறுத்தும் அருமையான எடுத்துக்காட்டு. கோட்டை என்பது நமது பாரம்பரியத்தின் சின்னம். வரலாற்று மரபுகளை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் பொறுப்பு நாட்டுமக்களான நம்மனைவருடையது. நான் Ecological Protection Organisationக்கும் அவர்களின் ஒட்டுமொத்த அணிக்கும், சந்த்ரபுர் குடிமக்களுக்கும் பலப்பல பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, வரவிருக்கும் நவம்பர் 4ஆம் தேதி நாம் குருநானக் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறோம். குருநானக் தேவ் அவர்கள், சீக்கியர்களின் முதல் குருவாக மட்டுமில்லாமல், உலகுக்கே குருவாக விளங்கினார். அவர் மனித சமுதாயம் முழுமைக்குமான நலன்கள் பற்றி சிந்தித்தார், அவர் அனைத்து சாதிகளையும் சமமாகவே பாவித்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பு மற்றும் பெண்களுக்கு மரியாதை ஆகியவை மீது அழுத்தம் அளித்தார். குருநானக் தேவ் அவர்கள் 28000 கி.மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்; தனது இந்த யாத்திரையின் மூலமாக அவர் மெய்யான மனிதநேயம் பற்றிய செய்தியை பரப்பினார். அவர் மக்களோடு உரையாடினார், அவர்களுக்கு சத்தியம், தியாகம், செய்யும் கருமத்தில் கருத்தாய் இருத்தல் என்ற மார்க்கத்தை போதித்தார். அவர் சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் செய்தியை அளித்தார், தனது செய்தியை வெறும் சொற்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனது செயல்பாட்டிலும் செய்து காட்டினார். அவர் லங்கர் அதாவது சமூக உணவுக்கூடங்களை நடத்தினார், இதன் வாயிலாக மக்கள் மனங்களில் சேவை பற்றிய உணர்வு துளிர்த்தது. ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதால் மக்கள் மனங்களில் ஒற்றுமையும் சமத்துவமும் மலர்ந்தன. குருநானக் தேவ் அவர்கள் பயனுள்ள வாழ்க்கை வாழ 3 செய்திகளை அருளியிருக்கிறார் – இறைவனின் பெயரை உச்சரித்தல், உழைத்து வாழ், தேவையிருப்போருக்கு உதவிசெய். குருநானக் தேவ் அவர்கள் தனது உபதேசங்களை எடுத்துச் சொல்ல குருகிரந்த் என்ற புனித நூலை இயற்றினார். வரும் 2019ஆம் ஆண்டை நாம் நமது குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டாகக் கொண்டாடவிருக்கிறோம். அவரது உபதேசம் மற்றும் செய்தி காட்டும் பாதையில் நாம் முன்னேறிச் செல்லும் முயற்சிகளை மேற்கொள்வோம் வாருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, 2 நாட்கள் கழித்து அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சர்தார் வல்லப் பாய் படேல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கிறது. ஒன்றுபட்ட புதிய இந்தியாவின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இவர் தான் என்பதை நாம் நன்கறிவோம். பாரத அன்னையின் இந்த மகத்தான மைந்தனின் அசாதாரணமான பயணம் மூலமாக நாம் இன்று பலவற்றைக் கற்றுக் கொள்ள இயலும். அக்டோபர் 31ஆம் தேதியன்று தான் இந்திரா காந்தி அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்ற நாள். சர்தார் வல்லப் பாய் படேலின் சிறப்பு என்னவென்றால், அவர் மாற்றம் தொடர்பான எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துபவராக இருக்கவில்லை, அதை செயல்படுத்தவும், மிகக் கடினமான பிரச்சனையாக வெடித்தாலும், அதற்கான நடைமுறை தீர்வை அளிப்பதில் வல்லவராக விளங்கினார். எண்ணத்தைச் செயல்படுத்துவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். சர்தார் வல்லப் பாய் படேல் அவர்கள் பாரதத்தை ஒரே இழையில் இணைக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கோடிக்கணக்கான நாட்டுமக்களையும் ஒரே தேசம் ஒரே அரசியல் அமைப்புச் சட்டம் என்ற குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதைத் தொடக்கத்திலேயே உறுதி செய்துகொண்டார். தீர்மானம் மேற்கொள்வதில் அவரது திறன் தான் அவருக்கு அனைத்துத் தடைகளையும் கடந்து செல்லக் கூடிய வல்லமையை அளித்தது. எங்கே பேச்சு வார்த்தைகள் தேவையோ அங்கே அவற்றைப் பயன்படுத்தினார்; எங்கே பலப்பிரயோகம் தேவைப் பட்டதோ அங்கே அதனை மேற்கொண்டார். அவர் ஒரு இலக்கைக் குறி வைத்த பிறகு, முழுமையான மனவுறுதியோடு அந்த இலக்கை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டேயிருந்தார். அனைவரும் சமம் என்ற சிந்தனையை யாரால் உணர முடிகிறதோ, அவரால் மட்டுமே தேசத்தை ஒருங்கிணைக்க முடியும் என்று படேல் அவர்கள் கூறியிருக்கிறார். அவரது இந்தக்கூற்று நம்மனைவருக்கும் என்றுமே உத்வேகம் அளிப்பதாய் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அவர், சாதிமத வேறுபாடுகள் நமக்குள் தடையேற்படுத்த அனுமதிக்கக்கூடாது, அனைவரும் பாரதத்தில் புதல்வர்கள் தாம், நாமனைவரும் நம் தேசத்தை நேசிக்கவேண்டும், பரஸ்பர அன்பு மற்றும் நல்லிணக்கம் என்பதன் மீது நம் எதிர்காலத்தை அமைக்கவேண்டும்.
சர்தார் அவர்களின் இந்தப்பொன்மொழி இன்றும் கூட நமது புதிய இந்தியா கனவுக்கு கருத்தூக்கமாக அமைந்திருக்கிறது, இன்றைய அளவில் பொருத்தமானதாகவும் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவரது பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு நாளாக நாம் அனுசரிக்கிறோம். தேசத்திற்கு ஒருங்கிணைந்த ஒரு வடிவத்தை அளித்ததில் அவரது பங்களிப்பு ஒப்பு உவமையில்லாதது. சர்தார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நாடு முழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதில் நாடு முழுக்கவிருந்தும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து வயதுடையவர்கள் என பலர் பங்கேற்கவிருக்கிறார்கள். நீங்களும் இந்த run for unity, ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, பரஸ்பர நல்லிணக்கக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, புதிய உறுதிப்பாட்டோடு, புதிய திடத்தோடு, நீங்கள் அனைவரும் உங்களது தினசரி வாழ்க்கையில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியிருப்பீர்கள். உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட என் நல் வாழ்த்துகள். மிக்க நன்றி.
எமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மனதின் குரல் நாட்டுமக்களோடு இணைந்தது, அவர்கள் உணர்வுகளோடு கலந்தது, அவர்களின் ஆசை அபிலாஷைகளோடு இணைந்த ஒன்று. மனதின் குரலில் நான் மிகக் குறைவான அளவிலே தான் கூற முடிகிறது,
ஆனால் எனக்கு பெருஞ்செல்வக் குவியலாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மின்னஞ்சல் ஆகட்டும், தொலைபேசியாகட்டும், mygovஆகட்டும், NarendraModiApp ஆகட்டும், இவற்றிலிருந்து எல்லாம் எனக்கு நீங்கள் அனுப்பும் தகவல்கள் கிடைக்கின்றன. இவையனைத்தும் அதிக கருத்தூக்கம் அளிப்பவையாக இருக்கின்றன. இவற்றில் பல, அரசு செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவது பற்றியவையாக இருக்கின்றன. சில வேளைகளில் தனிநபர் தொடர்புடைய குறைபாடுகள், சில வேளைகளில் சமூகப் பிரச்சனைகள் போன்றவை மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.
மாதம் ஒரு முறை உங்களுடைய சுமார் அரை மணி நேரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், ஆனால் மக்களோ, மாதம் 30 நாட்களும் மனதின் குரல் தொடர்பாக எனக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் விளைவாக, அரசின் செயல்பாடுகளில் புரிந்துணர்வு ஏற்பட்டு, சமூகத்தின் கோடியில் இருப்போரிடத்திலும் இருக்கும் ஆற்றல் மீது கவனம் சென்றிருக்கிறது. இது இயல்பான அனுபவமாகவே இருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 3 ஆண்டுக்காலப் பயணம், நாட்டுமக்களின், அவர்கள் உணர்வுகளின், அனுபவங்களின் பயணம். இத்தனை குறைவான காலத்தில் தேசத்தின் சாதாரணக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதற்கு, நான் நாட்டுமக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மனதின் குரலில் நான் எப்பொழுதும் ஆச்சார்ய விநோபா பாவேயின் சொற்களை நினைவில் இருத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஆச்சார்ய விநோபா பாவே எப்போதும் கூறுவார், ‘அ-சர்க்காரீ, அசர்க்காரீ’, அதாவது அரசு சாராதது, ஆக்கப்பூர்வமான தாக்கம் நிறைந்தது என்று பொருள். நானும் தேசத்தின் மக்களை மையமாக வைத்துத் தான் மனதின் குரலை ஒலிக்க முயற்சிகள் செய்து வந்திருக்கிறேன். அரசியலின் சாயம் அதில் படியாமல் பார்த்துக் கொண்டேன். தற்போது நிலவும் சூழல், ஆக்ரோஷம் ஆகியவற்றில் நாமும் அடித்துச் செல்லப்படாமல், திடமான மனதோடு, உங்களோடு இணைந்திருக்க முயற்சி செய்திருக்கிறேன். கண்டிப்பாக, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக விஞ்ஞானிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஊடக வல்லுனர்கள் இதனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதில் இருக்கும் குறை-நிறைகள் என அனைத்தையும் அலசி ஆராய்வார்கள். இந்த ஆய்வுகளும் கருத்துப் பரிமாற்றங்களும் எதிர்காலத்தில் மனதின் குரலுக்கு அதிக பயன்பாடாக இருக்கும், அதில் புதிய தெம்பு, புதிய விழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் உணவு உண்ணும் வேளையில் எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும், உணவை வீணாக்கக் கூடாது என்று, நான் முன்பு மனதின் குரலில் ஏற்கனவே கூறியிருந்தேன். இதன் பின்னர், தேசத்தின் ஒவ்வொரு இடத்திலிருந்தும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன, பல சமூக அமைப்புகள், பல இளைஞர்கள் எல்லாம் உணவு வீணாகாமல் இருக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதைத் தெரிவித்திருந்தார்கள். உண்ணப்படாமல் மீந்து போகும் உணவை சேகரித்து, அதை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பணியாற்றுபவர்கள் என் மனதில் வியாபித்தார்கள், என் மனம் குளிர்ந்த்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒரு முறை மகாராஷ்டிரத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரகாந்த் குல்கர்னி அவர்கள் பற்றி மனதின் குரலில் கூறியிருந்தேன், ஓய்வூதியமாக அவருக்கு மாதம் கிடைக்கும் 16,000 ரூபாயிலிருந்து மாதம் 5,000 ரூபாய் வீதம், பின் தேதியிட்ட 51 காசோலைகளாக, தூய்மைப் பணிக்காக தானமாக அளித்திருந்தார். அதன் பின்னர், தூய்மைப்பணிக்காக இந்த வகையில் தங்கள் பங்கு பணியாற்ற எவ்வளவோ பேர் வந்தார்கள் என்பதை நான் கவனித்தேன்.
ஒரு முறை அரியானாவின் பஞ்சாயத்துத் தலைவர் மகளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டதை கவனித்தேன், அதை மனதின் குரலில் சொல்லவும் செய்தேன். பார்த்துக் கொண்டே இருந்த வேளையில் பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கிலுமிருந்தும் மகளுடன் செல்ஃபி என்பது மிகப்பெரிய இயக்கமாகவே பரிமளித்து விட்டிருந்தது. இது சமூக ஊடகங்களின் பிரச்சினை அல்ல. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் புதிய தன்னம்பிக்கை, புதிய பெருமிதம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக மாறிப் போனது. ஒவ்வொரு தாய் தகப்பனுக்கும், தனது மகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தனக்கென்று மகத்துவம் இருக்கிறது என்ற உணர்வு உண்டானது.
கடந்த நாட்களில் பாரத அரசின் சுற்றுலாத் துறையின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்டேன். நீங்கள் எங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அங்கே நீங்கள் வியக்கத்தக்க இந்தியா (incredible india) பற்றிய புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று பயணம் மேற்கொள்வோரிடம் கேட்டுக் கொண்டேன். லட்சக்கணக்கான படங்கள், பாரதத்தின் மூலை முடுக்கெங்கிலுமிருந்தும் வந்தன, ஒருவகையில் இது சுற்றுலாத் துறையில் பணிபுரிவோருக்கு பெரும் சொத்தாக மாறியது. சின்ன சின்ன விஷயம் கூட எப்படி மிகப் பெரிய இயக்கமாக உருமாறுகிறது பாருங்கள்; இதை நான் மனதின் குரலில் நன்கு அனுபவித்து உணர்ந்தேன். இன்று என் மனதில் பட்டது, கூறினேன்; ஏனென்றால், 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் என் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தேசம் சரியான பாதையில் பயணிக்க ஒவ்வொரு கணமும் முனைப்போடு இருக்கிறது. தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் மற்றவர்கள் நலனுக்காக, சமுதாயத்தின் நன்மைக்காக, தேசத்தின் முன்னேற்றத்திற்காக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய விழைகிறார். மனதின் குரலின் இந்த மூன்றாண்டுகால இயக்கத்தில், நான் தேச மக்களிடமிருந்து தெரிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், கற்றுக் கொண்டேன். எந்த தேசத்திற்கும் இது மிகப்பெரிய மூலதனம், மிகப்பெரிய சக்தி. நான் இதயப்பூர்வமாக தேச மக்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
ஒருமுறை மனதின் குரலில் கதராடைகள் விஷயம் பற்றிக் கூறியிருந்தேன். கதராடை என்பது வெறும் துணியல்ல, கருத்து. இப்போதெல்லாம் கதராடைகள்பால் கணிசமான அளவு ஆர்வம் அதிகரித்திருப்பதை என்னால் காண முடிகிறது, நான் யாரையும் கதராடைகளை மட்டுமே அணியுங்கள் என்று கூறவில்லை, ஆனால் பலவகையான துணிகள் அணிகையில், கதராடையையும் அணியலாமே என்று தான் கூறுகிறேன். அது வீட்டில், விரிப்பு, கைக்குட்டை, திரைச்சீலைகள் ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.
இளைய சமுதாயத்தினரிடையே இப்போதெல்லாம் கதராடைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதை என்னால் காண முடிகிறது. கதராடைகள் விற்பனை அதிகரித்திருக்கிறது, இதன் காரணமாக ஏழைகளின் இல்லங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் கதராடைகளில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது, கணிசமான அளவுக்கு இந்தத் தள்ளுபடி இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன், கதராடைகள் தொடர்பான இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம், அதை மேலும் வலிமைப்படுத்துவோம்.
கதராடைகளை நாம் வாங்கும் போது ஏழையின் இல்லங்களில் தீபாவளி தீபங்கள் ஒளிவிடும் என்ற உணர்வை நாம் மனதில் தாங்கிச் செயல்பட வேண்டும். இந்தச் செயல்பாட்டால் நம் தேசத்தின் ஏழைகளுக்கு சக்தி பிறக்கிறது, இதற்காகவே நாம் இதைச் செய்தாக வேண்டும். கதராடைகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதன் காரணமாக, கதராடைகள் துறையில் பணியாற்றுவோரிடத்திலும், பாரத அரசில் கதராடைகள் தொடர்பானவர்களிடத்திலும், புதிய வகையில் சிந்திக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பத்தை எப்படிப் புகுத்துவது, உற்பத்தித் திறனை எவ்வாறு அதிகரிப்பது, சூரியசக்திக் கருவிகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. 20-30 ஆண்டுகளாக வழக்கத்திலிருந்து மறைந்து போயிருந்த பழம்பாரம்பரியத்துக்கு எப்படி புத்துயிர் அளிப்பது என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில், வாராணசியின் சேவாபூரில், சேவாபுரீ காதி ஆசிரமம் 26 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்தது, அது இப்போது புதுத் தெம்போடு செயல்படத் தொடங்கியிருக்கிறது. பலவகையான செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீரத்தின் பம்போரில் மூடப்பட்டுக் கிடந்த காதி மற்றும் கிராமோத்யோக்கின் பயிற்சி மையம், இப்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது, இந்தத் துறையில் கஷ்மீரத்தால் ஏராளமான அளவு பங்களிப்பு நல்க இயலும். இந்தப் பயிற்சி மையம் மீண்டும் திறக்கப் பட்டிருப்பதன் காரணமாக, புதிய தலைமுறையினருக்கு நவீன முறையில் உற்பத்தி, நெசவு, புதிய பொருட்களை உருவாக்கல் ஆகியவற்றில் உதவி கிட்டும். பெரிய பெரிய நிறுவனங்களும் தீபாவளியின் பொருட்டு பரிசுகள் அளிக்கும் வேளையில், அவர்களும் கதராடைப் பொருட்களையே அளிக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்களும் ஒருவருக்கு ஒருவர் கதராடைப் பொருட்களை பரிசாக அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இயல்பான வகையில் எவ்வாறு ஒரு விஷயம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதை நம்மால் நன்றாக உணர முடிகிறது.
எமதருமை நாட்டுமக்களே, கடந்த மாத மனதின் குரலிலேயே நாமனைவரும் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டிருந்தோம்; அதாவது, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு 15 தினங்கள் முன்பாகவிருந்தே, நாம் நாடுமுழுவதிலும் தூய்மைக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தீர்மானித்திருந்தோம். தூய்மை மூலமாக மக்கள் மனங்களை ஒன்றிணைப்போம். நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார், தேசம் இதில் ஒன்றிணைந்தது. பெரியோர்-குழந்தைகள், ஆண்-பெண், நகரம்-கிராமம் என அனைவரும் இன்று இந்த தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் உறுதிப்பாடு மேற்கொண்டு, வெற்றி கொள்வோம் என்று கூறியிருந்தேன், இந்த தூய்மை இயக்கம், நம் உறுதிப்பாட்டின் துணையோடு வெற்றி பெறும் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது, நம் கண்களின் முன்னே விரிந்திருக்கிறது. அனைவரும் இதை தங்களுக்கு உரியதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள், உதவி புரிகிறார்கள், இதை சாதித்துக் காட்ட தங்களாலான பங்களிப்பை அளிக்கிறார்கள். நான் மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவருக்கு என் நன்றியை வெளிப்படுத்தும் அதே வேளையில், இந்த இயக்கத்தோடு இணைந்திருக்கும் தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் இதோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், காவல்துறையினர், இராணுவ வீரர்கள் என அனைவரும் தங்களை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவிடங்களில் அசுத்தப்படுத்தினால் மக்கள் தட்டிக் கேட்கிறார்கள், அங்கே பணியாற்றுவோரிடத்திலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு வகை அழுத்தம் உணரப்பட்டு வருகிறது. இதை நல்ல விஷயமாகவே நான் உணர்கிறேன்; தூய்மையே சேவை இயக்கம் தொடங்கி நான்கே நாட்களில், சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், 40,000த்திற்கும் அதிகமான முன்னெடுப்புகளில் பங்கெடுத்தார்கள், சிலர் இன்னும் விடாது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து பணியாற்றும் உறுதி மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முறை நான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க நேர்ந்தது –தூய்மைப்படுத்துவது என்பது ஒரு விஷயம், நாம் விழிப்போடு இருந்து அசுத்தம் செய்யாமல் இருப்பது என்பது இன்னொரு விஷயம்; அதே நேரத்தில் தூய்மை என்பதே நமது இயல்பாக மாற, ஓர் சிந்தனை இயக்கத்தைச் செயல்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்த முறை தூய்மையே சேவை தொடர்பான பல போட்டிகள் நடைபெற்றன. 2 ½ கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தங்களுடைய கற்பனைத் திறனைக் கொண்டு ஓவியங்களை வரைந்தார்கள். பலர் கவிதைகள் இயற்றினார்கள். சமூக ஊடகங்களில் நமது சின்னஞ்சிறு குழந்தைகள் அனுப்பும் ஓவியங்களை நான் தரவேற்றம் செய்கிறேன், அவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன். தூய்மை பற்றி நாம் பேசும் வேளையில், ஊடகத் துறையினருக்கு என் நன்றிகளைத் தெரிவிப்பதை நான் மறப்பதே இல்லை. இந்த இயக்கத்தை அவர்கள் மிகுந்த தூய்மை உணர்வோடு முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவரவருக்கு உரிய பாணியில், இதோடு தங்களை இணைத்துக் கொண்டு, ஆக்கப்பூர்வமான சூழலை ஏற்படுத்த அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள், அவரவருக்கு உரிய வகையில் தலைமையேற்றுச் செயல்படுத்தியும் வருகிறார்கள். நமது தேசத்தின் மின்னணு ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஆகியன தூய்மையே சேவை இயக்கத்துக்கு எத்தனை பெரிய சேவை செய்து வருகின்றன என்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். சில நாட்கள் முன்பாக, ஸ்ரீநகரைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் பிலால் டார் தொடர்பாக, ஒருவர் என்னிடம் தெரிவித்தார். ஸ்ரீநகர் நகராட்சி, பிலால் டாரை தூய்மை இயக்கத்துக்கான தூதுவராக ஆக்கியது; இயக்கத் தூதுவர் என்றால் திரையுலகத்தைச் சேர்ந்தவராகவோ, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படி அல்ல. பிலால் டார் தனது 12-13 வயதிலிருந்தே, கடந்த 5-6 ஆண்டுகளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆசியாவின் மிகப்பெரிய ஏரி ஸ்ரீநகருக்கருகே இருக்கிறது, அதில் பிளாஸ்டிக், பாலித்தீன், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், குப்பைக் கூளங்கள் ஆகியவற்றை இவர் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார். இதிலிருந்து வருமானத்தையும் ஈட்டி வந்தார். இவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனதால், இவர் தனது வாழ்வாதாரத்துடன் தூய்மைப் பணியை இணைத்துக் கொண்டார். ஆண்டுதோறும் சுமார் 12,000 கிலோவுக்கும் அதிகமான குப்பைக் கூளங்களை இவர் அகற்றியிருக்கிறார் என்று அனுமானம் கூறுகிறது. தூய்மையின் பொருட்டு இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இவரை இயக்கத் தூதுவராக ஆக்கியதற்காக, நான் ஸ்ரீநகர் நகராட்சிக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீநகர் சுற்றுலாத் தலமாக இருப்பதால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஸ்ரீநகர் செல்ல விழைகிறான். இத்தகைய ஓரிடத்தில் தூய்மைக்கு வலு சேர்ப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அவர்கள் பிலாலை இயக்கத் தூதுவராக ஆக்கியதோடு, தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு வாகனம், சீருடை ஆகியவற்றை அளித்திருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது. மேலும் இவர் மற்ற இடங்களுக்கும் சென்று தூய்மை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, உத்வேகம் அளிப்பதோடு, நல்ல பலன்கள் கிடைக்கும் வரை ஓய்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிலால் டார், வயதில் சிறியவரானாலும், தூய்மை மீதான ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கந்தரும் காரணியாகவும் விளங்குகிறார். நான் பிலால் டாருக்கு பலபல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமதருமை நாட்டுமக்களே, வரலாற்றின் இன்றைய பக்கங்களிலிருந்து தான் வருங்கால சரிதம் பிறக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்; வரலாறு பற்றிப் பேசும் வேளையில், மாமனிதர்கள் பற்றிய நினைவு வருவது மிகவும் இயல்பான விஷயம் தானே. இந்த அக்டோபர் மாதம் நமது ஏராளமான மாமனிதர்களை நினைவுகூரும் மாதமாக மிளிர்கிறது. காந்தியடிகள் தொடங்கி, சர்தார் படேல் வரை, இந்த அக்டோபர் மாதத்தில் தான் ஏராளமான மாமனிதர்கள் நம் கண் முன்னே விரிகிறார்கள். இவர்கள் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டில் நமக்கு திசை காட்டினார்கள், தலைமை தாங்கினார்கள், தேசத்திற்காக பல துயரங்களை அனுபவித்தார்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள், அக்டோபர் மாதம் 11 ஜெயப்பிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாள், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாள். நானாஜி, தீன் தயாள் ஆகியோருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டாக அமைந்திருக்கிறது. இந்த அனைத்து மாமனிதர்களின் மையக்கருவுமாக எது இருந்தது தெரியுமா? தேசத்திற்காக வாழ்தல், தேசத்தின் பொருட்டு சாதித்துக் காட்டுதல், வெறும் உபதேசங்களோடு நிற்காமல், தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதல் ஆகியவை தான் இவர்களுக்கிடையே பொதுவான விஷயமாக இருந்தது. காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயண், தீன் தயாள் போன்ற மாமனிதர்கள், அதிகார மையங்களிலிருந்து விலகியே இருந்தாலும், மக்களின் வாழ்வோடு கலந்து வாழ்ந்தார்கள், அவர்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள், அனைவரின் நலனுக்காகவும், சந்தோஷத்திற்காகவும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். நானாஜி தேஷ்முக் அவர்கள் அரசியல் வாழ்வைத் துறந்து கிராமோதய் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார், அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், நாம் கிராமோதய் தொடர்பான அவரது பணிக்கு மதிப்பளித்து அணுகுவது முக்கியமானது. பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களோடு பேசும் போது, எப்போதும் நானாஜி தேஷ்முக் அவர்களின் கிராமப்புற முன்னேற்றம் பற்றிய விஷயங்களை முன்வைப்பார். மிக்க மரியாதையோடு இதை விவரிப்பார், அவரே கூட நானாஜியின் இந்தப் பணிகளைப் பார்க்க கிராமங்களுக்குச் சென்றார்.
காந்தியடிகளைப் போலவே, தீன் தயாள் உபாத்யாயா அவர்களும் சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதன் பற்றியே விரித்துப் பேசுவார். தீன் தயாள் அவர்கள் சமூகத்தில் இருக்கும் ஏழைகள், பாதிக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்வினில், கல்வி, வேலைவாய்ப்பு என எந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய நினைவாகவே இருப்பார். இந்த அனைத்து மாமனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பது, அவர்களுக்கு நாம் ஆற்றும் உபகாரம் அல்ல, இந்த மாமனிதர்களை நாம் ஏன் நினைத்துப் பார்க்கிறோம் என்றால், அப்படி நினைக்கும் போது, முன்னே நாம் செல்ல வேண்டிய பாதை துலங்குகிறது, வழி புலப்படுகிறது.
அடுத்த மனதின் குரலில் நான் கண்டிப்பாக சர்தார் வல்லபபாய் படேல் அவர்களைப் பற்றிக் கூறுவேன், ஆனால் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தேசத்தில், ஒற்றுமைக்கான ஓட்டம், ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் ஆகியன நடைபெறவிருக்கின்றன. தேசத்தின் ஒவ்வொரு நகரிலும் பெரிய அளவில் இந்த ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற வேண்டும், வானிலையும் இதற்கு ஏற்றபடி சுகமாக இருக்கிறது. சர்தார் அவர்களைப் போல இரும்புத் தன்மை வாய்க்கப் பெறவும், இது தேவையாக இருக்கிறது. சர்தார் அவர்கள் அல்லவா தேசத்தை ஒருமைப்படுத்தினார்!! நாமும் ஒற்றுமைக்காக இந்த ஓட்டத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை, இந்தியாவின் சாதனை என்று மிக இயல்பாக நாம் கூறுகிறோம். பன்முகத்தன்மை பற்றி நாம் பெருமைப்படும் அதே வேளையில், நீங்கள் இந்தப் பன்முகத்தன்மையை அனுபவித்து உணரும் முயற்சியில் ஈடுபட்டதுண்டா? நாட்டு மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் நான் மீண்டும் மீண்டும் கூற விரும்புவது என்னவென்றால், நாம் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பது தான். நமது பாரதத்தின் பன்முகத்தன்மையை அனுபவித்துப் பாருங்கள், அதை உணருங்கள், அதன் வாசத்தை முகர்ந்து பாருங்கள். உங்களுக்குள்ளே இருக்கும் தனித்தன்மையின் மலர்ச்சிக்காக, நமது தேசத்தின் இந்தப் பன்முகத்தன்மை ஓர் பள்ளிக்கூடமாக அமையும் என்பதை நீங்களே காண முடியும். விடுமுறைக்காலம், தீபாவளி நேரம், நமது தேசத்தின் நாலாபுறத்திலும், எங்காவது செல்ல வேண்டும் என்ற மனோநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் நமது தேசத்தைச் சுற்றிப் பார்க்காமல், தேசத்தின் பன்முகத்தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், பகட்டுகளால் ஈர்க்கப்பட்டு அயல்நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை விரும்புகிறோம் என்பது சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. நீங்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் பாதகமில்லை, ஆனால் நம் வீட்டையும் சுற்றிப் பார்க்கலாமே!! வட இந்தியாவிலிருப்பவர்களுக்கு, தென்னிந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலிருக்கிறது. மேற்கிந்தியாவில் இருப்பவருக்கு, கிழக்கிந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலிருக்கிறது. நமது தேசத்தில் எத்தனை பன்முகத்தன்மை கொட்டிக் கிடக்கிறது தெரியுமா?
காந்தியடிகள், லோக்மான்ய திலகர், சுவாமி விவேகானந்தர், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் உரைகளை நீங்கள் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஒரு விஷயம் நன்கு புலப்படும் – அவர்கள் பாரதத்தைச் சுற்றிப் பார்த்த போது, பாரதத்தை பார்க்கவும் புரிந்து கொள்ளவும், அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கவும் புதிய உத்வேகம் பிறந்தது. இந்த மாமனிதர்கள் அனைவரும் பாரதத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தார்கள். தங்கள் செயல்பாட்டிற்கு முன்பாக, அவர்கள் பாரதத்தைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பாரதத்தை தங்களுக்குள்ளே வாழ்ந்து பார்க்க முயன்றார்கள். நமது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு சமூகங்கள், குழுக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் பாரம்பரியம், அவர்களின் ஆடையணிகள், அவர்களின் உணவு முறைகள், அவர்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றை மாணவன் என்ற வகையில் கற்றுக் கொள்ள, புரிந்து கொள்ள, வாழ்ந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட முடியுமில்லையா?
சென்று பார்ப்பதோடு நின்று விடாமல், நாம் மாணவனாக புரிந்து கொண்டு மாறுவதில் தான் சுற்றுலாவின் மதிப்புக்கூட்டு இருக்கிறது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. 450க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இரவில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, பாரதத்தின் இந்தப் பொறுப்பை என்னால் தாங்க முடிகிறது என்றால், நான் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் எனக்களித்த அனுபவம் எனக்குக் கைகொடுக்கிறது என்பது தான் காரணம். விஷயங்களைப் புரிந்து கொள்வதால் பெரும் வசதியாக இருக்கிறது. நீங்களும் இந்த விசாலமான பாரதத்தைச் சுற்றிப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்; வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் கோஷமாக மட்டும் நின்று விடக் கூடாது, இது நமது மகத்தான சக்தியின் களஞ்சியம், இதை அனுபவித்துப் பாருங்கள். ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் என்ற கனவு இதில் பொதிந்திருக்கிறது. உணவு முறைகளில் தான் எத்தனை வகைகள்! உங்கள் வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை நீங்கள் உண்டு வந்தால், அதே உணவை மறுமுறை உண்ண வாய்ப்பே இருக்காது, அந்த அளவு வகைகள் உள்ளன. நமது சுற்றுலாவின் இது மிகப்பெரிய பலம். இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதோடு நின்று விடாமல், மாற்றத்திற்காக செல்கிறோம் என்று இல்லாமல், விஷயங்களை அறிந்து-புரிந்து-அடையும் நோக்கத்தோடு வெளியே செல்லுங்கள். பாரதத்தை உங்களுக்குள்ளே கரைத்துக் கொள்ளுங்கள். கோடானுகோடி மக்களின் பன்முகத்தன்மையை உங்களுக்குள்ளே ஐக்கியப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் வாயிலாக உங்கள் வாழ்க்கை நிறைவு பெறும். உங்களின் கண்ணோட்டம் விசாலப்படும். உங்கள் அனுபவங்களை விட பெரிய ஆசான் வேறு யார் இருக்க முடியும், சொல்லுங்கள்!! பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் பெருமளவு சுற்றுலாவுக்கானதாக இருக்கிறது. இந்த முறையும் நீங்கள் சென்றால், எனது இந்த இயக்கத்தை நீங்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றவர்களாவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். #incredibleindiaவில் உங்கள் புகைப்படங்களைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். அங்கிருக்கும் மக்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களின் புகைப்படங்களையும் அனுப்பி வையுங்கள். வெறும் கட்டிடங்களோடு நின்று போகாமல், இயற்கை வனப்புகளை மட்டும் படம் பிடிக்காமல், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பயணம் பற்றிய நல்ல கட்டுரை வரையுங்கள். Mygovஇல், NarendraModiAppஇல் அனுப்புங்கள். என் மனதில் ஓர் எண்ணம் எழுகிறது - பாரதத்தில் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிப்பதற்காக, நீங்கள் உங்கள் மாநிலத்தில் இருக்கும் 7 மிகச் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் என்னவாக இருக்கும் – ஒவ்வொரு இந்தியனும் உங்கள் மாநிலத்தின் அந்த 7 இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், முடிந்தால், அந்த 7 இடங்களுக்குச் செல்ல வேண்டும். இதற்கு உதவியாக, நீங்கள் இது பற்றி ஏதேனும் தகவல்கள் அளிக்க முடியுமா? NarendraModiAppஇல் இதை வெளிப்படுத்தலாமா? #IncredibleIndiaவில் இதை தெரியப்படுத்தலாமா? ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பலர் இப்படித் தெரிவித்தால், இதை ஆராய்ந்து பார்த்து, பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த 7 இடங்கள் கூறப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றைப் பற்றிய விளம்பரக் கையேடுகளை வெளியிட நான் அரசிடம் கூறுவேன். அதாவது ஒரு வகையில் மக்களின் கருத்துகளைக் கொண்டு சுற்றுலாத் தலங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? இதே போல, நாடெங்கிலும் நீங்கள் பார்த்த இடங்கள், அவற்றில் எவை உங்களுக்கு மிகச் சிறப்பான 7 இடங்களாக இருக்குமோ, மற்றவர்களும் இதைப் பார்க்க வேண்டும், இங்கே செல்ல வேண்டும், இவை பற்றித் தகவல்கள் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படிப்பட்ட உங்களுக்குப் பிடித்தமான 7 இடங்கள் பற்றியும் நீங்கள் MyGovஇல், NarendraModiAppஇல் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். பாரத அரசு இதன் மீது செயல்படும். இப்படிப்பட்ட மிகச் சிறப்பான இடங்கள் பற்றிய படங்கள் தயாரிப்பது, வீடியோ உருவாக்குவது, விளம்பரக் கையேடுகள் ஏற்படுத்துவது, அவற்றுக்கு ஆதரவு அளிப்பது – நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை அரசு ஏற்றுச் செயல்படும். வாருங்கள், என்னோடு இணையுங்கள். இந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், தேசத்தின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீங்கள் வினையூக்கியாக ஆகலாம். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
எமதருமை நாட்டுமக்களே, ஒரு மனிதன் என்ற முறையில் பல விஷயங்கள் என் மனதைத் தொடுகின்றன. என் மனதில் அதிர்வலைகளை உருவாக்குகின்றன. என் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! கடந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவம், ஒருவேளை உங்கள் கவனத்தையும் இது வந்து எட்டியிருக்கும் – இதிலே பெண்கள் சக்தி மற்றும் தேசபக்தியின் அற்புதமான எடுத்துக்காட்டை நாட்டுமக்கள் பார்த்திருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு இரண்டு வீராங்கனைகள் - லெஃப்டினன்ட் சுவாதியும், நிதியும் கிடைத்திருக்கிறார்கள், இவர்கள் அசாதாரணமான வீராங்கனைகள். ஏன் அசாதாரணமானவர்கள் என்று கூறுகிறேன் என்றால், பாரதமாதாவின் சேவையில் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் சுவாதி, நிதி இருவரின் கணவர்கள். இந்தச் சிறிய வயதில் அவர்கள் உலகம் உதிர்ந்து விடும் போது, அவர்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!! ஆனால் தியாகி கர்னல் சந்தோஷ் மஹாதிக்கின் மனைவி சுவாதி மஹாதிக், இத்தகைய கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தனது மனதை திடமாக்கிக் கொண்டார். அவர் இந்திய இராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். 11 மாதங்கள் வரை கடினமான பயிற்சி மேற்கொண்டு அவர் இராணுவத்தில் இணைந்தார், தனது கணவரின் கனவை நனவாக்க அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதே போல நிதி துபேயின் கணவர் முகேஷ் துபே, இராணுவத்தில் நாயக்காகப் பணிபுரிந்து வந்தார், தாய்நாட்டுப் பணியில் உயிர் துறந்தார், அவரது மனைவியான நிதி, தான் இராணுவத்தில் சேருவது என்ற விரதத்தைப் பூண்டார், இராணுவத்தில் சேர்ந்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது இந்த தாய்மை சக்தி மீது, நமது இந்த வீராங்கனைகள் மீது மரியாதை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நமது இந்த இரண்டு சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் பலவற்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தேசத்தின் கோடானுகோடி மக்களுக்காக புதிய உத்வேகம், புதிய உயிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நமது இந்த சகோதரிகள் இருவருக்கும் மீண்டும் பலபல வாழ்த்துகள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நவராத்திரி உற்சவம், தீபாவளிக்கு இடையே, நமது தேசத்தின் இளைய சமுதாயத்தினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. ஃபிஃபா (FIFA). 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இங்கே நடைபெறவிருக்கிறது. நாலாபுறத்திலும் கால்பந்தாட்டத்தின் எதிரொலியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் கால்பந்தாட்டம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இந்தியாவின் எந்த பள்ளி-கல்லூரியின் மைதானத்திலும் கால்பந்தாட்டம் விளையாடாத இளைஞர்களே இல்லை எனும் அளவிற்கு அனைவரும் இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டும். வாருங்கள், உலக நாடுகள் அனைத்தும் இந்திய மண்ணில் விளையாட வரும் வேளையில், நாமும் விளையாட்டை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்வோம்.
என்னுயிர் நாட்டுமக்களே, நவராத்திரி நடைபெற்று வருகிறது. அன்னை துர்க்கையை பூஜிக்க வேண்டிய தருணம் இது. சூழல் முழுக்க புனிதமான சுகந்தத்தால் வியாபித்திருக்கிறது. நாலாபுறத்திலும் ஒருவகை ஆன்மிகச் சூழல், உற்சவச் சூழல், பக்திச் சூழல் நிலவுகிறது; மேலும் இவை அனைத்தும் சக்தியின் சாதனை புரிவதற்கான காலமாக கருதப்படுகிறது. இது சாரதா நவராத்திரியாக அறியப்படுகிறது. இதிலிருந்து தான் சரத்காலம் தொடங்குகிறது. நவராத்திரியின் இந்தப் புனிதமான வேளையில், நான் நாட்டுமக்களுக்கு பலபல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், தேசத்தின் சாதாரணக் குடிமகனின் வாழ்க்கையின் ஆசைகள்-அபிலாஷைகள் நிறைவேற வேண்டும், தேசம் புதிய புதிய சிகரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் தேசத்துக்கு வாய்க்கப் பெற வேண்டும். தேசம் துரித கதியில் முன்னேற வேண்டும், 2022இல் பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், சுதந்திரத் தாகம் கொண்டோரின் கனவுகளை நிறைவேற்றும் முயற்சி, 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, இடையறாத உழைப்பு, அசகாய சக்தியும் மனோதிடமும் கிட்ட, புதிய இந்தியாவுக்கான 5 ஆண்டுகாலத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும், அன்னை பராசக்தி நமக்குத் தன் ஆசிகளை அளிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பலபல நல்வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள், குதூகலத்தை பரப்புங்கள்.
மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, மரியாதைக்குரிய வணக்கங்கள். ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, வேறொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே. இந்த நமது தேசம் புத்தரும் காந்தியும் பிறந்த தேசம், தேசத்தின் ஒற்றுமைக்காக முழுமனத்தோடு ஈடுபட்ட சர்தார் படேல் பிறந்த மண்ணிது. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள், பொதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை விழுமியங்களுக்காகவும், அஹிம்ஸைக்காகவும், பெருமதிப்பு அளித்து வந்திருக்கிறர்கள், நமது மனங்களிலும் இது நிறைந்திருக்கிறது. அஹிம்ஸா பரமோதர்ம: - இந்த வாக்கியத்தை நாம் நம் சிறுவயது முதற்கொண்டே கேட்டு வந்திருக்கிறோம், கூறியும் வந்திருக்கிறோம். நம்பிக்கை பெயரால் வன்முறையை நம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று நான் செங்கோட்டையிலிருந்து கூட கூறியிருந்தேன். அது மதம் தொடர்பான நம்பிக்கையாகட்டும், அரசியல் எண்ணப்பாடு தொடர்பான நம்பிக்கையாகட்டும், தனிநபர் மீது கொண்ட நம்பிக்கையாகட்டும், மரபுகள்-பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கையாகட்டும் – நம்பிக்கையின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. டா. பாபா சாஹேப் அம்பேட்கர் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அளித்திருக்கிறார்; அதில் ஒவ்வொருவருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து விதமான அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொள்பவர்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றுபவர்கள் – அவர்கள் தனிநபர்களாகட்டும், ஒரு சமுதாயத்தினர் ஆகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், இந்த தேசமும் அதை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது, எந்த அரசும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்பு தலைவணங்கித் தான் ஆக வேண்டும், சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும், சட்டம் தான் முடிவு செய்யும், சட்டம் கண்டிப்பாக தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கியே தீரும்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் பன்முகத்தன்மைகள் நிறைந்தது; இந்தப் பன்முகத்தன்மை உணவுப் பழக்கம், வசிக்குமிடங்கள், உடுக்கும் உடை என்பதில் மட்டும் காணப்படுவதில்லை; வாழ்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இந்தப் பன்முகத்தன்மை காணப்படுகிறது. எந்த அளவுக்கு இது இருக்கிறது என்றால், நமது பண்டிகைகளிலும் இது நிறைந்திருக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பதால், நமது கலாச்சாரப் பாரம்பரியமாகட்டும், சமூகப் பாரம்பரியமாகட்டும், வரலாற்று நிகழ்வுகளாகட்டும், ஆண்டின் 365 நாட்களில் ஏதாவது ஒரு பண்டிகையோடு தொடர்பில்லாத ஒரு நாளைக் காண்பது அரிதான விஷயமாக இருக்கும். நமது அனைத்துப் பண்டிகைகளும் இயற்கையின் அட்டவணைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவையனைத்தும் இயற்கையோடு நேரடித் தொடர்பு கொண்டிருப்பவை. நமது பல பண்டிகைகள் விவசாயிகளோடும், மீனவர்களோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன.
நான் இன்று உங்களுடன் பண்டிகைகள் பற்றிப் பேசும் வேளையில், உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம் என்று கூற விரும்புகிறேன். ஜைனர்கள் நேற்று சம்வத்ஸரீ விழாவைக் கொண்டாடினார்கள். பாத்ர மாதத்தில் பர்யுஷண் திருவிழா கொண்டாடப்படுகிறது. பர்யுஷண் கொண்டாட்டங்களின் கடைசி நாளாக சம்வத்ஸரீ வருகிறது. இது உள்ளபடியே ஒரு அற்புதமான பாரம்பரியம். சம்வத்ஸரீ என்ற நாள் மன்னித்தல், அகிம்சை, நட்பு ஆகியவற்றைக் குறிப்பது. இது ஒரு வகையில் மன்னிக்கும் சொற்கள் பேசும் திருநாளாகக் கூடக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ஒருவருக்கு ஒருவர் மிச்சாமீ துக்கடம் என்று கூறிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. நமது சாத்திரங்களிலும் கூட, क्षमा वीरस्य भूषणम, அதாவது மன்னித்தல் வீரர்களுக்கு அணிகலன் என்று கூறப்பட்டிருக்கிறது. யாரிடம் மன்னிக்கும் திறன் இருக்கிறாதோ, அவர்களே வீரர்கள். காந்தியடிகள் கூட, மன்னித்தல் தான் சக்திபடைத்த மனிதனின் சிறப்பு என்று அடிக்கடி கூறுவார்.
ஷேக்ஸ்பியர் தனது நாடகமான The Merchant of Veniceஇல், மன்னிக்கும் குணத்தின் மகத்துவம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? Mercy is twice blest, it blesseth him that gives and him that takes, அதாவது மன்னிப்பவர்கள், மன்னிக்கப்படுபவர்கள் – இருவருமே இறைவனின் ஆசிக்குப் பாத்திரமானவர்கள் என்பது இதன் பொருள்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் அனைத்து மூலை முடுக்குகள் எங்கும் பிள்ளையார் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளை இது; பிள்ளையார் சதுர்த்தி பற்றிப் பேசும் போது, சமூக அளவில் கொண்டாடப்படும் திருவிழா பற்றிப் பேசுவது இயல்பான விஷயம். பாலகங்காதர லோகமான்ய திலகர் 125 ஆண்டுகள் முன்பாக, இந்தப் பாரம்பரியத்தை ஏற்படுத்தினார்; கடந்த 125 ஆண்டுகளாக, சுதந்திரம் அடைவதற்கு முன்பு இது சுதந்திரப் போராட்டத்தைக் குறிப்பதாகவும், சுதந்திரம் அடைந்த பிறகு, இது சமூகக் கல்வி, சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டது. பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டக் காலம், ஒற்றுமை, சமத்துவம், தூய்மை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
இப்பொழுது கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாரதத்தின் வண்ணமயமான பண்டிகைகளில் கேரளத்தின் ஓணம் பண்டிகை முதன்மையான ஒன்றாகத் திகழ்கிறது. இந்தத் திருநாள் சமூக, கலாச்சார மகத்துவத்துக்குப் பெயர் பெற்றது. ஓணம் திருவிழாக் காலத்தில் கேரளத்தின் முழுமையான கலாச்சாரப் பாரம்பரியமும் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகிறது. இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் நேசம், சுமூகம் பற்றிய செய்தி பரப்பப்படுவதோடு, மக்கள் மனங்களில் ஒரு புதிய உற்சாகம், புதிய எதிர்பார்ப்பு, ஒரு புதிய நம்பிக்கை ஆகியவற்றைத் தட்டி எழுப்புகிறது. இப்பொழுதெல்லாம் நமது பண்டிகைகள்,, சுற்றுலா ஈர்ப்புக்கான காரணிகளாகி இருக்கின்றன. குஜராத்தில் நவராத்திரி உற்சவமாகட்டும், வங்காளத்தில் துர்க்கா உற்சவமாகட்டும், இவை ஒருவகையில் சுற்றுலா ஈர்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாகி இருக்கின்றன என்பதையே நான் நாட்டுமக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். நமது மற்ற பண்டிகைகளும் கூட, அயல் தேசத்தவர்களை ஈர்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்தத் திசையில் நாம் மேலும் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.
இந்தப் பண்டிகைத் தொடரில் இன்னும் சில நாட்களில் வர இருப்பது ஈத் உல் சுஹா. தேசத்தின் அனைத்து மக்களுக்கும் ஈத் உல் சுஹாவுக்கான நல் வாழ்த்துக்கள். பண்டிகைகள் நம்மிடத்தில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன; அதே வேளையில் புதிய பாரதத்தில், பண்டிகைகள் தூய்மைக்கான காரணிகளாகவும் இருக்க வேண்டும். குடும்ப வாழ்கையில் பண்டிகைகளும் தூய்மையும் இணைந்தே இருக்கின்றன. பண்டிகைக்குத் தயாராவது என்பது, சுத்தம்-சுகாதாரம் மீது கவனம் செலுத்துவது தான். இது நமக்கெல்லாம் புதிய விஷயம் இல்லையென்றாலும், இது ஒரு சமூக இயல்பாகவே மாறுதல் என்பது அவசியமான விஷயம். பொதுவாக தூய்மை தொடர்பான நமது கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றால், தூய்மை என்பது நமது வீட்டில் மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த கிராமத்தில், அனைத்து நகரங்களில், நமது அனைத்து மாநிலங்களில், நமது நாடு முழுக்க என, இது பண்டிகைகளோடு இணைபிரியாத அங்கமாக மாற வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, நவீனமயமாதல் என்பது மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நிலை. இப்பொழுதெல்லாம் ஒரு புதிய கோணம், ஒரு புதிய அளவீடு ஏற்பட்டிருக்கிறது – நீங்கள் எத்தனை தான் நாகரீகமானவராக இருந்தாலும், எத்தனை தற்காலத்தியவராக இருந்தாலும், உங்கள் சிந்தனா செயல்முறை எத்தனை நவீனமானதாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, ஒரு தராசு இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது, அதாவது சுற்றுச்சூழல் தொடர்பாக நீங்கள் எத்தனை விழிப்போடு இருக்கிறீர்கள் என்பது தான் அது. நீங்கள் உங்கள் நடைமுறைகளில் சூழலுக்கும், சுற்றுப்புறத்துக்கும் நேசமான வகையில் செயல்படுகிறீர்களா இல்லையா என்று பார்க்கப் படுகிறது. சூழலுக்கு எதிரான வகையில் நீங்கள் செயல்படுபவர் என்றால், நீங்கள் மோசமானவராகக் கருதப்படுவீர்கள். இந்தக் கண்ணோட்ட மாற்றத்தின் விளைவை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் – பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்களில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்கள், ஒரு பெரிய இயக்கத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் யூ ட்யூபில் சென்று பார்த்தீர்கள் என்று சொன்னால், வீடுதோறும் குழந்தைகள், வெளியிலிருந்து மண்ணெடுத்து வந்து, பிள்ளையார் உருவங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவற்றில் வண்ணங்களைப் பூசுகிறார்கள், ஒருவர் காய்கறி நிறத்தைப் பூசுகிறார், ஒருவர் அதில் காகிதத் துண்டை ஒட்ட வைக்கிறார். பலவகையான பிரயோகங்களை ஒவ்வொரு குடும்பமும் செய்து வருகிறது. ஒருவகையில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்ற மிகப்பெரிய பயிற்சி, இந்த கணேச உற்சவத்தில், முதன்முறையாகக் காணக் கிடைத்திருக்கிறது. ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்களை உருவாக்குவதில் மக்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், வழிகாட்டுகிறார்கள். எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். நமது தேசம் கோடிக்கணக்கான புத்திகூர்மை உடையவர்கள் நிரம்பிய தேசம். புதுமை ஒன்று படைக்கப்படும் போது, மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பொறியாளர் ஒருவர், சிறப்பான வகையில் மண்ணை சேகரித்து, அதன் மூலம் ஒரு கலவையை ஏற்படுத்தி, பிள்ளையார் உருவங்களை உருவாக்குவதில் மக்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார், மேலும் ஒரு சிறிய பக்கெட்டில், நீரில் பிள்ளையார் உருவச்சிலை கரைக்கப்படுகிறது, நீரில் வைத்தால் உடனடியாக கரைந்து விடுகிறது. இதோடு அவர் நின்று விடவில்லை, அதில் துளசிச் செடி ஒன்றையும் நட்டார்.
3 ஆண்டுகள் முன்பாக தூய்மை இயக்கத்தைத் தொடங்கினோம், அக்டோபர் மாதம் 2ஆம் தேதியோடு 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன. இதன் ஆக்கபூர்வமான விளைவுகள் வெளிப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள் இருக்கும் பகுதிகள் 39 சதவீதத்திலிருந்து சுமார் 67 சதவீதத்தை எட்டியிருக்கிறது. 2 இலட்சம் 30000த்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாக அறிவித்திருக்கின்றன.
கடந்த தினங்களில் குஜராத்தில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. கணிசமானோர் இறந்தார்கள், ஆனால் வெள்ளப்பெருக்கு முடிந்து நீர் வடிந்த பிறகு, ஒரே குப்பைக் கூளமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், குஜராத்தின் பனாஸ்காண்டா மாவட்டத்தின் धानेराவில் (தானேராவில்), ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 கோயில்கள் மற்றும் 3 மசூதிகளில் படிப்படியாக தூய்மைப்பணியை மேற்கொண்டார்கள். தாங்களே உழைத்தார்கள், அனைவரும் இதில் ஈடுபட்டார்கள். தூய்மையின் பொருட்டு, ஒற்றுமையை வலியுறுத்தும் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு, அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்ல ஒரு எடுத்துக்காட்டினை, ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். தூய்மையின் பொருட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யப்படும் முயற்சிகள், நமது நிரந்தரமான இயல்பாகவே மாறி விட்டால், நமது தேசத்தால் எந்த சிகரத்தைத் தான் எட்ட இயலாது!!
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் – காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதிக்கு 15-20 நாட்கள் முன்பிருந்தே, ‘தூய்மையே சேவை’ என்ற வகையிலான ஒரு இயக்கத்தை நடத்தலாமே. தேசம் முழுமையிலும் தூய்மை தொடர்பான ஒரு சூழலை உருவக்கலாம். எப்போது வாய்ப்பு கிடைக்கும், எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நாம் சந்தர்ப்பங்களைத் தேடுவோம். ஆனால் இதில் நாம் அனைவருமாக இணைய வேண்டும். இதை தீபாவளியை முன்னிட்ட ஒருவகையான தயாரிப்பு என்றோ, நவராத்திரியை முன்னிட்ட தயாரிப்பு என்றோ, துர்க்கா பூஜையை முன்னிட்ட தயாரிப்பு என்றோ நாம் கருதிக் கொள்வோம். உடல்ரீதியிலான சேவை செய்வோம். விடுமுறை நாட்களிலோ, ஞாயிற்றுக் கிழமைகளிலோ அனைவருமாக இணைந்து பணிபுரிவோம். அக்கம் பக்கத்தில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வோம், அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் செல்வோம், ஆனால் இதையெல்லாம் ஒரு இயக்கமாக நாம் செய்யலாம். நான் அனைத்து அரசு சாரா அமைப்புகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூக-கலாச்சார-அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன் – காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு 15 நாட்கள் முன்னதாகவே, நாம் தூய்மை தொடர்பான ஒரு சூழலை ஏற்படுத்துவோம், இது உண்மையிலேயே காந்தியடிகள் கனவு கண்ட ஒரு அக்டோபர் 2 ஆக இருக்க வேண்டும். குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம், MyGov.inஇல் ஒரு பகுதியை ஏற்படுத்தியிருக்கிறது; கழிப்பறை அமைக்கப்பட்ட பிறகு, உங்கள் பெயர், கழிப்பறை அமைக்க நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்களோ அவர்களின் பெயர் ஆகியவற்றை அதில் பதிவு செய்யலாம். என் சமூகவலைத்தள நண்பர்கள் சில ஆக்கபூர்வமான இயக்கங்களை முடுக்கி விடலாம், களமட்டத்தில் பணிகளை உறுதி செய்யும் வகையில் நீங்கள் கருத்தூக்கத்தை ஏற்படுத்தலாம். ”தூய்மை பற்றிய உறுதிப்பாடு மூலமாக, தூய்மை அடைவதில் வெற்றி”, என்ற கருத்தினடிப்படையிலான போட்டிகள் நடத்தப்படும்; குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம் வாயிலாக நடத்தப்படும் இயக்கத்தில் கட்டுரைப் போட்டி, குறும்படம் தயாரிக்கும் போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பல மொழிகளில் கட்டுரைகள் எழுதலாம், வயதுவரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் குறும்படம் தயாரிக்கலாம், உங்கள் செல்பேசியிலேயே அதைத் தயாரிக்கலாம். 2-3 நிமிடக் குறும்படமாகத் தயாரிக்கலாம், தூய்மைக்கான உத்வேகம் அளிக்க கூடியதாக இது இருக்க வேண்டும். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம், வசனம் ஏதும் இல்லாததாகக் கூட இருக்கலாம். போட்டியில் பங்கெடுப்பவர்களின், சிறந்த 3 படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்படும்; மாவட்ட அளவில் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; இதே போல, மாநில அளவில் மூவர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தூய்மை தொடர்பான இந்த இயக்கத்தில் நீங்கள் அனைவரும் இணையுங்கள் என்று உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
இந்த முறை காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை, தூய்மை நிறைந்த அக்டோபர் 2 என்று கொண்டாட நாம் மனவுறுதி பூண வேண்டும், அதற்காக செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி, ‘தூய்மையே சேவை’ என்ற இந்த மந்திரத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும். தூய்மையின் பொருட்டு நாம் ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நாமே உழைப்பதன் மூலம், இதில் பங்களிப்பு நல்க முடியும். இப்படிச் செய்தால், காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி எப்படி பளிச்சிடும் என்று நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். 15 நாட்கள் தூய்மையே சேவை என்ற இந்தத் தூய்மை இயக்கத்தை நடத்திய பிறகு, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை நாம் கொண்டாடும் பொழுது, வணக்கத்திற்குரிய காந்தியடிகளுக்கு நாம் அளித்திருக்கும் காணிக்கையில், எத்தனை தூய்மையான ஆனந்தம் கிடைக்கும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, நான் இன்று குறிப்பாக உங்கள் அனைவருக்கும் என் நன்றிக்கடனைத் தெரிவிக்க விரும்புகிறேன். என் மனத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்; நீங்கள் நீண்ட காலமாக மனதின் குரலோடு உங்களை இணைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல், இந்த மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இலட்சோபலட்சம் பேர்களோடு என்னால் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்காகவும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மனதின் குரலில் பங்கெடுப்பவர்கள் பல இலட்சங்கள் என்றால், இதைக் கேட்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்; இலட்சக்கணக்கானோர் கடிதங்கள் எழுதுகிறார்கள், தகவல்கள் அளிக்கிறார்கள், பலர் தொலைபேசி வாயிலாகச் செய்திகளை அளித்து வருகிறார்கள், இது என்னைப் பொறுத்த மட்டில் பெரிய செல்வக் களஞ்சியமாக இருக்கிறது.
நாட்டுமக்களின் மனங்களைப் புரிந்து கொள்ள மிகப்பெரியதொரு வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு மனதின் குரலுக்காகக் காத்திருக்கிறீர்களோ, அதை விட அதிகமாக நான் நீங்கள் அளிக்கும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். நான் தாகத்தோடு இருக்கிறேன், ஏனென்றால் உங்களின் ஒவ்வொரு விஷயமும் எனக்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நான் ஈடுபடும் செயலை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இது இருக்கிறது. பல விஷயங்களைப் புதிய கோணத்தில் சிந்தித்துப் பார்க்க, நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ளும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட உதவிகரமாக இருக்கின்றன, ஆகையால் உங்களின் இந்தப் பங்களிப்புக்காக நான் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை வெளிப்படுத்துகிறேன், உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், மேலும் மேலும் நீங்கள் கூறும் விஷயங்களை நானே காண வேண்டும், கேட்க வேண்டும், படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலே தான், என் அனைத்து முயற்சிகளும் இருக்கின்றன. இந்தத் தொலைபேசி அழைப்போடு நீங்கள் ஒத்திசைவாக உணரலாம். ஆமாம், நானுமே கூட இது போன்ற தவறை இழைத்திருக்கிறேன். சில வேளைகளில் சில விஷயங்கள் எந்த அளவுக்கு நம் இயல்பாகவே மாறி விடும் என்றால், நாம் தவறு செய்கிறோம் என்பது கூட நமக்கு உரைக்காது.
”பிரதம மந்திரி அவர்களே, நான் பூனாவிலிருந்து அபர்ணா பேசுகிறேன். நான் என்னுடைய தோழி பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன்; அவள் எப்பொழுதும் அனைவருக்கும் உதவி புரிய முயற்சி செய்து கொண்டிருப்பாள், ஆனால் அவளது ஒரு நடவடிக்கை எனக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது. ஒருமுறை நான் அவளோடு பொருட்கள் வாங்க வணிக வளாகம் சென்றிருந்தேன். ஒரு புடவை வாங்க எந்த சிரமமும் படாமல் 2000 ரூபாய் செலவு செய்தாள், பின்னர் 450 ரூபாய் செலவு செய்து பீட்ஸா வாங்கினாள்; ஆனால் வளாகம் வரப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுனரிடம், 5 ரூபாய்க்கான பேரத்தில் தீவிரமாக ஈடுபட்டாள். திரும்பிச் செல்லும் வழியில் காய்கறி வாங்கிய போது, ஒவ்வொரு காய்கறிக் விலையிலும் பேரம் பேசி, 4-5 ரூபாய் மிச்சப்படுத்தினாள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாம் பெரிய பெரிய இடங்களில் எல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் பொருட்களை வாங்குகிறோம், உழைத்துப் பிழைப்பு நடத்தும் நம் சகோதர சகோதரிகளிடம் சில்லறைப் பணத்துக்காக சண்டை போடுகிறோம். அவர்கள் மீது அவநம்பிக்கை கொள்கிறோம். நீங்கள் உங்கள் மனதின் குரலில் இதைக் கண்டிப்பாகக் கூற வேண்டும்”.
இந்தத் தொலைபேசி அழைப்பைக் கேட்ட பின்னர், உங்களுக்கும் திகைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏன் வெட்கம் கூடப் பிடுங்கித் திங்கலாம், இனி இப்படி நான் நடந்து கொள்ள மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் உறுதி செய்து கொண்டும் இருக்கலாம். நம் வீட்டருகில் பொருள் விற்க வருபவரிடமோ, சிறிய கடை வைத்திருப்பவரிடமோ, காய்கறிக் கடைக்காரர்களிடமோ, சில வேளைகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடமோ – இல்லை இந்த விலை கிடையாது, 2 ரூபாய் குறைச்சுக்குங்க, 5 ரூபாய் குறைச்சுக்குங்க என்று பேரம் பேசுவதில் ஈடுபடுகிறோம்.
நாம் பெரிய பெரிய உணவு விடுதிகளில் உணவு உண்ணச் செல்லும் போது, ரசீதில் என்ன எழுதி இருக்கிறது என்று கவனிப்பது கூட இல்லை. டக்கென்று பணத்தை எடுத்துக் கொடுத்து விடுகிறோம். இது மட்டுமல்ல, பெரிய கடைகளில் புடவை வாங்கச் சென்றால், எந்த பேரம் பேசுவதிலும் நாம் ஈடுபடுவதில்லை; அதே வேளையில் ஒரு ஏழையிடத்தில், பேரம் பேசாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அந்த ஏழையின் மனதில் என்ன ஓடும் என்பதை எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? கேள்வி 2 ரூபாய், 5 ரூபாய் பற்றியதல்ல. அவர் ஏழை என்பதால், அவரது நாணயத்தின் மீது உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, என்று அவரது இதயம் காயப் படுகிறது. 2 ரூபாய், 5 ரூபாய் எல்லாம் உங்கள் வாழ்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் உங்களின் இந்த அற்பப் பழக்கம், அந்த ஏழையின் மனதில் எத்தனை பெரிய வலியை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மேடம், நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன், நீங்கள் மனதைத் தொடும்படியான ஒரு தொலைபேசி அழைப்பு மூலமாக ஒரு தகவலை அளித்திருக்கிறீர்கள். நாட்டுமக்களும் இனி ஏழையோடு பேரம் பேசும் பழக்கத்தைக் கண்டிப்பாக கைவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை இளைய நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியை ஒட்டுமொத்த தேசமும் அனைத்திந்திய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவிருக்கிறது. இது ஹாக்கி விளையாட்டு வீரரும், ஹாக்கி உலகின் மாயாஜாலக்காரர் என்று கருதப்படும் மேஜர் த்யான்சந்த் அவர்களின் பிறந்த நாளாகும். ஹாக்கிக்கு அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. நமது தேசத்தின் இளைய சமுதாயம் விளையாட்டுக்களோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே, நான் இந்த விஷயத்தை நினைவு கூர்கிறேன். விளையாட்டுக்கள் நம் வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். நாம் உலகில் இளையோர் மிகுந்த தேசம் என்பதால், நமது இந்த இளமைத் துடிப்பு விளையாட்டு மைதானங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். உடலுறுதி, விழிப்பான மனம், ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை விளையாட்டுக்கள் அளிக்கின்றன – இவற்றை விட வேறு என்ன வேண்டும் கூறுங்கள். விளையாட்டுக்கள் ஒரு வகையில் மனங்களை இணைக்கும் ஒரு அருமருந்து. நமது தேசத்தின் இளைய தலைமுறையினர் விளையாட்டு உலகில் முன்னேற வேண்டும், அதுவும் இன்றைய கணிப்பொறி உலகில், விளையாட்டு மைதானம், கணிப்பொறி விளையாட்டுக் கருவியை விட மகத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறுதியிட்டுக் கூற விரும்புகிறேன். கணிப்பொறியில் FIFA கால்பந்தாட்டம் எல்லாம் விளையாடலாம், ஆனால் மைதானத்தில் கால்பந்தாட்டம் ஆடித் தான் பாருங்களேன். நீங்கள் கணிப்பொறியில் கிரிக்கெட் விளையாடலாம், ஆனால் மைதானத்தில், வானத்தின் கீழே விளையாடுங்கள், அதன் ஆனந்தமே அலாதி தான். ஒரு காலத்தில் வீட்டில் குழந்தைகள் எல்லாரும் வெளியே செல்லும் போது, அன்னை எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்பாள். இன்றைய காலகட்டத்தில் இது எப்படி மாறி விட்டிருக்கிறது என்றால், குழந்தைகள் வீட்டுக்கு வந்தவுடனேயே, ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, கார்ட்டூன் படம் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் அல்லது மொபைல் கேம்களில் மூழ்கி விடுகிறார்கள்; நீ எப்படா வெளிய போய் விளையாடுவே என்று தாய்மார்கள் அவர்களைப் பார்த்துக் கத்த வேண்டியிருக்கிறது. இது காலத்தின் கோலம், நீ எப்பொழுது திரும்பி வீடு வந்து சேர்வாய் என்று தாய்மார்கள் கேட்டது அந்தக் காலம்; மகனே, நீ எப்பொழுது வெளியே சென்று விளையாடுவாய் என்று தாய் பிள்ளையிடம் கேட்க வேண்டியிருப்பது இந்தக் காலம்.
இளைய நண்பர்களே, விளையாட்டு அமைச்சகம், விளையாட்டுக்களில் திறன்களை இனம்கண்டு அவற்றை மேலும் மெருகேற்ற Sports Talent Search Portal, விளையாட்டுத் திறனாளிகளைத் தேடும் போர்டல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இங்கே விளையாட்டுத் துறையில் ஏதேனும் ஒரு சாதனை படைத்த, தேசத்தின் எந்த ஒரு குழந்தையும், அவர்களிடம் திறமை இருந்தால், அவர்கள் இந்த போர்டலில் தங்களைப் பற்றிய விவரங்கள் அல்லது வீடியோவை தரவேற்றம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு அமைச்சகம் பயிற்சி அளிக்கும், அமைச்சகம் நாளை தான் இந்த போர்ட்டலை தொடக்க இருக்கிறது. பாரதத்தில், 6 முதல் 28 அக்டோபர் வரை, FIFA 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கால்பந்தாட்டக் கோப்பைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் 24 அணிகள் பாரதத்தில் வந்து விளையாடவிருக்கின்றன.
பல நாடுகளிலிருந்து வரும் இளைய சமுதாய விருந்தாளிகளை நாம் விளையாட்டுக் கொண்டாட்டங்கள் மூலமாக வரவேற்போம் வாருங்கள். விளையாட்டுக்களை அனுபவிப்போம், நாட்டில் இப்படிப்பட்டதொரு சூழலை ஏற்படுத்துவோம். விளையாட்டுக்கள் பற்றிப் பேசும் வேளையில், கடந்த வாரங்களில் என் மனதைத் தொடும் நிகழ்வு நடந்தது, அது பற்றி உங்களிடம் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். இளவயது பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, அவர்களில் சில பெண்கள் இமயமலைப் பகுதியில் பிறந்தவர்கள். அவர்கள் தங்கள் வாழ்கையில் கடல்களைப் பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட 6 பெண்கள் கடற்படையில் பணிபுரிகிறார்கள். அவர்களின் உணர்வுகள், அவர்களின் ஊக்கம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த 6 பெண் செல்வங்களும் ஒரு சின்னஞ்சிறிய படகான INS TARINIயில் பயணித்து, கடல்களைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் செயல்பாட்டுக்கு அளிக்கப்பட்ட பெயர் நாவிகா சாகர் பரிக்ரமா, அதாவது பெண் மாலுமிகளின் கடல்சுற்று; அவர்கள் உலகுமுழுக்கச் சுற்றி, பல மாதங்கள் கழித்து பாரதம் திரும்புவார்கள். சில வேளைகளில் சுமார் 40 நாட்கள் நீரிலேயே கழிப்பார்கள். சில வேளைகளில் சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நீரில் கழிக்க வேண்டியிருக்கலாம். கடலின் அலைகளுக்கிடையே, சாகஸத்தோடு நமது 6 பெண் செல்வங்கள் பயணிக்கிறார்கள், உலகிலேயே இப்படி முதல்முறையாக நடைபெறுகிறது. தேசத்தின் எந்தக் குடிமகனுக்குத் தான் இந்தப் பெண்கள் மீது பெருமிதம் பொங்காது. நான் இந்தப் பெண்களின் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன், உங்கள் அனுபவங்களை ஒட்டுமொத்த தேச மக்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். நானும் NarendraModi Appஇல் அவர்களின் அனுபவங்களுக்காக பிரத்யேகமாக ஒரு வழிவகையை உருவாக்கி, நீங்கள் படிக்க ஏற்பாடு செய்கிறேன்; நீங்கள் கண்டிப்பாக அதைப் படியுங்கள், ஏனென்றால், இது ஒருவகையான துணிவு நிரம்பிய கதை, சுய அனுபவம் நிறைந்த கதை, இந்தப் பெண் செல்வங்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் பெண்களுக்கு என் மனம்நிறை வாழ்த்துக்கள், ஏராளமான நல்லாசிகள்.
எனதருமை நாட்டுமக்களே, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நமது தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டா. இராதாக்ருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இது. அவர் குடியரசுத் தலைவராக இருந்தார் என்றாலும், தன் வாழ்நாள் முழுவதும், தன்னை ஒரு ஆசிரியராகவே முன்னிலைப்படுத்திக் கொண்டார். அவர் எப்பொழுதும் ஒரு ஆசிரியராக வாழவே விரும்பினார். அவர் கல்வியிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தார். ஒரு அறிஞராக, ஒரு ராஜதந்திரியாக, பாரதத்தின் குடியரசுத் தலைவராக இருந்தார் என்றாலும், ஒவ்வொரு கணமும் அவர் உயிர்ப்பு கொண்ட ஆசிரியராகவே விளங்கினார். நான் அவரை நினைவு கூர்கிறேன்.
மகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறினார் – ”It is the supreme art of the teacher to awaken joy in creative expression and knowledge - மாணவர்களிடம் படைப்புத் திறனையும் அறிவையும் தட்டி எழுப்புவது தான் ஒரு ஆசிரியரின் மகத்துவம் வாய்ந்த குணம் என்பது அதன் பொருள். இந்த முறை நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாமனைவரும் இணைந்து ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ளலாமா? இலக்கு ஒன்றைக் குறிவைத்து நாம் ஒரு இயக்கத்தை நடத்தலாமா? Teach to Transform, Educate to Empower, Learn to Lead – மாற்றத்தை ஏற்படுத்த பயிற்றுவிப்போம், அதிகாரம் பரவலாக்கப்பட கல்வி அளிப்போம், தலைமையேற்க கல்வி பெறுவோம். இந்த உறுதிப்பாட்டோடு நாம் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமில்லையா? ஒவ்வொருவரையும் 5 ஆண்டுகளுக்கு ஏதாவது ஒரு உறுதிப்பாட்டோடு கட்டிப் போடுங்கள், அதை அடையும் வழியினைக் காட்டுங்கள், அந்த இலக்கை அவர்கள் 5 ஆண்டுகளில் அடையட்டும், வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஆனந்தத்தை உணரட்டும் – இந்த வகையிலான சூழலை நமது பள்ளிகள், கல்லூரிகள், நமது ஆசிரியர்கள், நமது கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும், தேசத்தில் நாம் மாற்றம் என்பது பற்றிப் பேசும் பொழுது, எப்படி குடும்பத்தில் தாய் நினைவுக்கு வருகிறாளோ, அதே போல சமுதாயம் என்ற வகையில், ஆசிரியர் நினைவுக்கு வருகிறார். மாற்றம் ஏற்படுத்துவதில் ஆசிரியருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. தனது முயற்சிகள் காரணமாக, யாருடைய வாழ்விலாவது மாற்றம் ஏற்படுத்துவதில் வெற்றியடைந்த சம்பவங்கள், ஒவ்வொரு ஆசிரியரின் வாழ்கையிலும் கண்டிப்பாக இருக்கும். நாம் சமூகரீதியில் முயற்சிகள் மேற்கொண்டால், தேசத்தில் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், இதில் நம்மால் மிகப் பெரிய பங்களிப்பு நல்க முடியும். மாற்றம் காணக் கல்வி கற்பிப்போம், இந்த மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம், வாருங்கள்.
“வணக்கம் பிரதமர் அவர்களே. என்னுடைய பெயர் டா. அனன்யா அவஸ்தி. நான் மும்பை நகரில் வசிக்கிறேன், howard பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வு மையத்திற்காகப் பணிபுரிகிறேன். ஒரு ஆய்வாளர் என்ற முறையில், financial inclusion, அதாவது நிதிசார் உள்ளடக்கல் மீதும், இதோடு தொடர்புடைய சமூகத் திட்டங்கள் மீதும் எனக்கு சிறப்பான ஆர்வம் இருக்கிறது. நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 2014ஆம் ஆண்டில் நீங்கள் ஜன் தன் திட்டத்தைத் தொடக்கினீர்கள்; இன்று 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், பாரதம் நிதிரீதியாக அதிக பாதுகாப்பானதாக இருக்கிறதா, சக்தி அதிகரித்திருக்கிறதா, இந்த அதிகாரப் பரவலாக்கமும், வசதிகளும் நமது பெண்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, கிராமங்களை, பட்டிதொட்டிகளை எல்லாம் சென்று அடைந்திருக்கிறதா, புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன, சொல்லுங்கள். நன்றி”.
எனதருமை நாட்டுமக்களே, ‘பிரதம மந்திரி ஜன் தன் திட்டம்’ பற்றிக் கேட்கப் பட்டிருக்கிறது. நிதிசார் உள்ளடக்கல் – இது பாரதத்தில் மட்டுமல்ல, பொருளாதார உலகெங்கும் வல்லுனர்களின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மனதில் ஒரு கனவைச் சுமந்து கொண்டு, நான் இந்தத் திட்டத்தைத் தொடக்கினேன். நாளை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியுடன், இந்த பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றது. 30 கோடி புதிய குடும்பங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள், வங்கிக் கணக்குகள் திறக்கப் பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளின் மக்கட் தொகையை விட, இது அதிக எண்ணிக்கை. இன்று, எனக்கு மிகப்பெரிய நிறைவு அளிக்கும் விஷயம் என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் என் ஏழைச் சகோதரன் ஒருவன் கூட, தேசத்தின் பொருளாதார அமைப்பின் பிரதான நீரோட்டத்தில் இணைந்திருக்கிறான், அவனது பழக்கம் மாறியிருக்கிறது, அவன் வங்கிக்குச் சென்று வரத் தொடங்கியிருக்கிறான், பணத்தைச் சேமிக்க ஆரம்பித்திருக்கிறான், பணம் தரும் பாதுகாப்பை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறான் என்பது தான். சில வேளைகளில், பணம் கையில் புழங்கினாலோ, பையில் இருந்தாலோ, வீட்டில் இருந்தாலோ, வீண் செலவு செய்ய மனம் தூண்டும். இப்பொழுது கட்டுப்பாடான ஒரு சூழல் உருவாக்கப் பட்டிருக்கிறது, மெல்ல மெல்ல பணம் குழந்தைகளின் செலவுக்குப் பயனாகும் என்று அவனுக்கும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. வருங்காலத்தில் ஏதாவது நல்ல காரியத்துக்கு இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறான். இதுமட்டுமல்ல, ஒரு ஏழை, தனது பையில் RuPay அட்டை இருப்பதைக் காணும் பொழுது, தன்னை ஒரு செல்வந்தராக எண்ணிக் கொள்கிறான், தெம்படைகிறான்; அவர்கள் பைகளில் கடன் அட்டை இருக்கிறது, என்னிடத்தில் RuPay அட்டை இருக்கிறது என்று எண்ணி, சுய கௌரவத்தை உணர்கிறான். பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் மூலம் நமது ஏழைகள் வாயிலாக, வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் பணம் 65000 கோடி ரூபாய். ஒருவகையில் ஏழைகளின் இந்தச் சேமிப்பு, இது வருங்காலங்களில் அவர்களுடைய பலமாக இருக்கும். பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் வாயிலாக, யார் வங்கிக் கணக்கு திறந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு காப்பீட்டுப் பயனும் கிடைக்கிறது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு, பிரதம மந்திரி விபத்துக் காப்பீடுத் திட்டம் – ஒரு ரூபாய், 30 ரூபாய் என்ற மிக எளிமையான கட்டணம் செலுத்தி, இன்று அந்த ஏழைகளின் வாழ்வில், ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல குடும்பங்களில் இந்த ஒரு ரூபாய் கட்டணம் காரணமாக, ஏழைக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டால், குடும்பத் தலைவன் இறக்க நேர்ந்தால், அந்தக் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாய் கிடைக்கிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம், Start Up திட்டம், Stand Up திட்டம் – இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பழங்குடி இனத்தவர்களாகட்டும், பெண்களாகட்டும், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்களாகட்டும், சொந்தக் கால்களில் நின்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களாகட்டும், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்படி, வங்கிகளிடமிருந்து எந்த வித பிணையும் இல்லாமல், பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது; அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதோடு மட்டுமல்லாமல், ஒன்றிரண்டு பேர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வெற்றிகரமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த நாட்களில் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர், என்னை சந்திக்க வந்திருந்த போது, ஜன் தன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள், RuPay அட்டை, பிரதம மந்திரி முத்ரா திட்டம் ஆகியவை காரணமாக, சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் பயன் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்ட போது, உத்வேகம் அளிக்கக் கூடிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்று சொன்னார்கள். இன்று அதிக நேரமில்லை ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டிப்பாக MyGov.in தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும் என்று நான் வங்கிப் பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்; இதனை மக்கள் படித்து உத்வேகம் அடைவார்கள். எப்படி ஒரு திட்டம் ஒரு நபரின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எப்படி புதிய சக்தியை நிரப்புகிறது, புதியதொரு நம்பிக்கையை தோற்றுவிக்கிறது என்பனவற்றுக்கான ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் என் முன்னே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர, நான் முழு முயற்சிகளையும் மேற்கொள்வேன்; ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கூட, இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிகழ்வுகள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. அவர்களும் இப்படிப்பட்ட நபர்களோடு நேர்காணல்கள் நிகழ்த்தி, புதிய தலைமுறைக்குப் புதிய கருத்தூக்கம் ஏற்படுத்தலாம்.
எனதருமை நாட்டுமக்களே, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம். மிக்க நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மழைக்காலம் என்பது மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் காலமாக அமைந்து விடுகிறது. விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், இயற்கை என அனைத்தும் மழையின் வருகையால் மலர்கின்றன. ஆனால் சில வேளைகளில் இந்த மழை பெருமழையாகும் போது. நீரிடம் தான் எத்தனை பெரிய அழிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. இயற்கை அன்னை தான் நமக்கு உயிர் அளிக்கிறாள், நம்மையெல்லாம் வளர்க்கிறாள், ஆனால் சில வேளைகளில் வெள்ளங்கள், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அவற்றின் கோரமான ரூபம் ஆகியன அதிக அழிவை ஏற்படுத்தி விடுகின்றன. மாறிவரும் பருவச்சக்கரமும் சுற்றுச்சூழல் மாற்றமும், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக பாரதத்தின் சில பாகங்களில் குறிப்பாக, அசாம், வட கிழக்கு, குஜராத், ராஜஸ்தான், வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் அதிக மழை காரணமாக இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கு பாதித்த பகுதிகளில் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகப் பரவலான வகையில் நிவாரண நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. முடிந்த அளவில், அங்கே அமைச்சரவையைச் சேர்ந்த எனது சகாக்களும் சென்று வருகிறார்கள். மாநில அரசுகளும் தங்கள் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதில் பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். சமூக அமைப்புகளும், கலாச்சார அமைப்புகளும், சேவை புரியும் உணர்வுள்ள குடிமக்களும் கூட, இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் தங்கள் முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், என்.டி.ஆர். எப்., அதாவது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், துணை இராணுவப் படையினர் என, இந்திய அரசு தரப்பில் அனைவரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிவதில் மிகுந்த முனைப்போடு ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுப் போகிறது. விளைச்சல், கால்நடைச் செல்வம், கட்டமைப்பு வசதிகள், சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு அமைப்புகள் என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக நமது விவசாய சகோதரர்களின் விளைச்சலுக்கும், அவர்கள் விளைநிலங்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் நாங்கள் விவசாயிகளின் இழப்பீடு கோரிக்கைத் தீர்வு உடனடியாக நிறைவேற்றப்பட, காப்பீடு நிறுவனங்களுக்கு, குறிப்பாக பயிர் காப்பீடு நிறுவனங்கள் உயிர்ப்போடு செயல்படத் திட்டங்கள் தீட்டியிருக்கிறோம். அதோடு கூட, வெள்ளநிலையை சமாளிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி எண்ணான 1078 என்ற முறையும் முழுமையாக இயங்கி வருகிறது. மக்கள் இந்த எண்ணில் தங்கள் கஷ்டங்களைத் தெரிவித்தும் வருகிறார்கள். மழைக்காலம் தொடங்கும் முன்பாக பெரும்பான்மை இடங்களில் பயிற்சிமுறை இயக்கம் செய்து பார்க்கப்பட்டு, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை அணிகள் முடுக்கி விடப்பட்டன. பல இடங்களிலும் பேரிடரில் உதவும் தொண்டர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது குறித்த பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டது, தன்னார்வலர்களைத் தீர்மானிப்பது, ஒரு மக்கள் அமைப்பை உருவாக்கி, இது போன்ற சூழ்நிலைகளில் செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதெல்லாம் வானிலை பற்றி முன்பே கணிக்கப்பட்டு விடுகின்றது, தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது, விண்வெளி விஞ்ஞானம் இதை கணித்துச் சொல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட சரியான கணிப்பு நமக்கு கிடைத்து விடுகிறது. மெல்ல மெல்ல, பருவநிலை கணிப்புக்கு ஏற்றபடி, நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதையும், பேரிடர்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதையும், நாம் நமது இயல்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் நான் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக என்னைத் தயார் படுத்திக் கொள்கிறேனோ, அப்போதெல்லாம் நம் தேசத்தின் மக்களும் அதற்கான தயாரிப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை என்னால் காண முடிகிறது. இந்த முறை சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்திருக்கின்றன; இப்போதும் கூட மக்கள் இந்த சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், எதிர்பார்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்த தொலைபேசி அழைப்பைக் கேளுங்களேன்:
வணக்கம், பிரதமர் அவர்களே, நான் குர்காவ்ன், அதாவது குருகிராமிலிருந்து நீத்து கர்க் பேசுகிறேன். நான் உங்கள் பட்டயக் கணக்காளர்கள் தின உரையைக் கேட்டேன், அது என் மனதைத் தொட்டது. சரியாக ஒரு மாதம் முன்பாக, இதே நாளில் தான் சரக்கு மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி. தொடங்கப்பட்டது. ஒரு மாதம் கழிந்த நிலையில், நீங்கள் எதிர்பார்த்த வகையில் தான் விளைவுகள் இருக்கின்றவா? இது தொடர்பாக நான் உங்கள் எண்ணத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், நன்றி.
சரக்கு மற்றும் சேவை வரி அமல் செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகி இருக்கிறது, அதன் பலன்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஏழைகளுக்குத் தேவையான பொருள்களின் விலை குறைந்திருக்கிறது, மலிவு விலையில் அவை கிடைக்கின்றன என்று ஒரு ஏழை எனக்குக் கடிதம் எழுதும் போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வடகிழக்கில், தொலைவான மலைப் பிரதேசங்களில், காடுகளில் வசிக்கும் ஒரு குடிமகன், முதலில் ஜி.எஸ்.டி. பற்றி பயமாக இருந்தது, இது என்ன என்று தெரியவில்லை; ஆனால் இப்போது நான் கற்றுக் கொண்ட பின்னர், முன்பை விட வேலை சுலபமாக ஆகி விட்டது, வியாபாரம் சுலபமாகி விட்டது என்று கடிதம் வரையும் போது சந்தோஷமாக இருக்கிறது. மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நுகர்வோருக்கு வியாபாரிகள் மீதான நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. போக்குவரத்து மற்றும் சேவைகள் துறையில் எப்படி இந்தப் புதிய வரியமைப்பு முறை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். எப்படி டிரக்குகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது, எத்தனை விரைவாக சென்று சேர முடிகிறது, நெடுஞ்சாலைகள் எப்படி தங்குதடையின்றி இருக்கின்றன என்பதை என்னால் பார்க்க முடிகிறது. டிரக்குகளின் வேக அதிகரிப்பு காரணமாக மாசும் குறைந்திருக்கிறது. பொருள்களும் மிக விரைவாகச் சென்று சேர்கின்றன. இந்த வசதி இருந்தாலும் கூட, முக்கியமாக பொருளாதார வேகத்துக்கும் இது பலம் சேர்த்திருக்கிறது. முதலில் இருந்த தனித்தனி வரிக்கட்டமைப்பு காரணமாக, போக்குவரத்து மற்றும் சேவைத் துறையின் பெரும்பான்மை வளஆதாரங்கள், ஆவணங்களைப் பராமரிப்பதிலேயே கழிந்து வந்தன, ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கென புதிய புதிய கிடங்குகள் ஏற்படுத்த வேண்டியிருந்தது. சரக்கு மற்றும் சேவைவரி – good and simple tax என்று நான் கூறும் இந்த வரி, உண்மையிலேயே நமது பொருளாதார அமைப்பு மீது மிகவும் ஆக்கபூர்வமான தாக்கத்தை, மிகக் குறைந்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. எந்த வேகத்தில் சீரான மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ, எந்த வேகத்தில் புதுப்பெயர்வு உண்டாகியிருக்கிறதோ, புதிய பதிவுகள் பதியப்பட்டிருக்கின்றனவோ, இவையெல்லாம் நாடு முழுமையிலும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. கண்டிப்பாக பொருளாதார நிபுணர்களும், மேலாண்மை வல்லநர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் பாரதத்தின் ஜி.எஸ்.டி. செயல்பாட்டை உலகின் முன்னே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைவார்கள். உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில், இது ஒரு மாதிரி ஆய்வாக மலரும். ஏனென்றால், இத்தனை பெரிய அளவில், இத்தனை பெரிய மாற்றம், இத்தனை கோடி மக்களின் ஈடுபாட்டுடன், இத்தனை பெரிய தேசத்தில் இந்த முறையை வெற்றிகரமாக அமலாக்கம் செய்வது என்பது, உச்சகட்ட வெற்றி என்று கருதலாம். ஜி.எஸ்.டி.யை அமல் செய்ததில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கும் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது. அனைத்து முடிவுகளும் மாநிலங்களும் மத்திய அரசுமாக இணைந்து ஒருமித்த வகையிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவு தான், ஒவ்வொரு அரசுக்கும் இருந்த முதன்மை நோக்கம் – அதாவது இந்த ஜி.எஸ்.டி. காரணமாக ஏழையின் உணவுக்கு அதிக செலவு ஆகக் கூடாது என்பது தான். அதே போல, ஜி.எஸ்.டி. செயலி. ஜி.எஸ்.டி. செயலி வாயிலாக குறிப்பிட்டதொரு பொருளின் விலை இந்த வரியமைப்புக்கு முன்பாக எத்தனை இருந்தது, புதிய வரியமைப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பது எல்லாம் உங்கள் மொபைல் ஃபோனிலேயே கிடைத்து விடுகின்றன. ஒரு தேசம், ஒரு வரி என்ற மிகப்பெரிய கனவு மெய்ப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. விஷயத்தில் நான் பார்த்தது என்னவென்றால், தாலுகா முதல் மைய அரசு வரையிலான அனைத்து அரசு அதிகாரிகளும் கடுமையாக உழைத்தார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்தார்கள், ஒரு வகையான நேசமான சூழ்நிலையை அரசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையேயும், அரசுக்கும் நுகர்வோருக்கு இடையேயும் ஏற்படுத்துவதில் மிகப்பெரிய பங்குபணியாற்றினார்கள். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும், மைய, மாநில அரசுகளின் அனைத்துப் பணியாளர்களுக்கும் நான் என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி.எஸ்.டி. பாரதத்தின் சமூக சக்தியின் வெற்றிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றி, சரித்திர சாதனை. இது வரி சீர்திருத்தம் மட்டுமல்ல, ஒரு புதிய, நேர்மையான கலாச்சாரத்துக்கு பலம் கூட்டும் பொருளாதார முறை. இது ஒருவகையில் சமூக சீர்திருத்த இயக்கமும் கூட. இத்தனை பெரிய முயற்சியை மிக இயல்பான வகையில் வெற்றியடையச் செய்த கோடானுகோடி நாட்டுமக்களுக்கும், என் கோடானுகோடி வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் புரட்சியைக் குறிக்கும் மாதம். இயல்பாகவே இந்த விஷயம் பற்றி நாம் சிறுவயது முதலே கேள்விப்பட்டு வந்திருக்கிறோம், ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி 1920ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது தான் அதற்கான காரணம். பின்னர் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது, இதை ஆகஸ்ட் புரட்சி என்றும் நாம் அறிகிறோம்; அடுத்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நாடு சுதந்திரம் அடைந்தது. ஒரு வகையில் ஆகஸ்ட் மாதத்தின் பல நிகழ்வுகள் விடுதலை வரலாற்றோடு சிறப்பான வகையில் இணைந்திருக்கின்றன. இந்த ஆண்டு நாம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். ஆனால் இந்த வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்தவர் டா. யூசுஃப் மெஹர் அலி என்பது சிலருக்குத் தான் தெரிந்திருக்கும். நமது புதிய தலைமுறையினர், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 1857 முதல் 1942 வரை நாட்டுமக்கள் எத்தனை உற்சாகத்தோடு விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள், கொடுமைகளை சகித்தார்கள் ஆகிய வரலாற்றுப் பக்கங்கள் எல்லாம் மகோன்னதமான பாரதத்தை படைக்க நமக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை விடப் பெரிய கருத்தூக்கம் அளிக்கக் கூடியன வேறு என்னவாக இருக்க முடியும்!! வெள்ளையனே வெளியேறு இயக்கம் பாரத சுதந்திர இயக்கத்தின் மிக முக்கியமான போராட்டம். இந்தப் போராட்டம் தான் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற, ஒட்டுமொத்த தேசத்துக்கும் மன உறுதிப்பாட்டை உண்டாக்கித் தந்தது. அந்த காலகட்டத்தில் தான், ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக, இந்துஸ்தானத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும், கிராமங்கள், நகரங்கள், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். மக்களின் கோபம் உச்சகட்டத்தில் இருந்தது. காந்தியடிகளின் அறைகூவலுக்கு செவிசாய்த்து இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் செய் அல்லது செத்துமடி என்ற மந்திரத்தை நாவிலும் மனதிலும் தாங்கி, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். தேசத்தின் லட்சோப லட்சம் இளைஞர்கள் தங்கள் படிப்பையும், புத்தகங்களையும் சுதந்திர வேள்வியில் ஆஹுதி அளித்தார்கள். சுதந்திரத்தின் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது, அவர்கள் முன்னேறிச் சென்றார்கள். ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு காந்தியடிகள் அழைப்பு விடுத்தார் என்றாலும், தேசத்தின் அனைத்துப் பெரிய தலைவர்களையும் ஆங்கிலேய ஆட்சி சிறைச்சாலைகளில் இட்டு நிரப்பியது; அந்த காலகட்டத்தில் தான் இரண்டாம் கட்டத் தலைவர்களான டா. லோஹியா, ஜெய்பிரகாஷ் நாராயண் போன்ற மாமனிதர்களின் முதன்மையான பங்களிப்பு பளிச்சிட்டது.
1920ன் ஒத்துழையாமை இயக்கம், 1942ன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் – இவை இரண்டிலும் காந்தியடிகளின் இரு வேறுபட்ட கோணங்கள் பளிச்சிடுகின்றன. ஒத்துழையாமையின் பரிமாணம் வேறுபட்டது, 1942இல் சுதந்திர வேட்கை எந்த அளவுக்கு அதிகப்பட்டுப் போனது என்றால், காந்தியடிகள் போன்ற ஒரு மாமனிதர், செய் அல்லது செத்து மடி என்ற மந்திரத்தை முன்வைக்க வேண்டி இருந்தது. அனைத்து வெற்றிகளின் பின்னணியிலும் மக்களின் ஆதரவு பெரும்பலமாக இருந்தது, மக்களின் வல்லமை பளிச்சிட்டது, மக்களின் மனவுறுதி வெளிப்பட்டது, மக்கள் போராட்டத்தின் வலு மிளிர்ந்தது. தேசம் முழுமையும் ஒன்றுபட்டு போராடியது. சில வேளைகளில் நான் நினைத்துப் பார்க்கிறேன்…… வரலாற்றை சற்று இணைத்துப் பார்த்தால், பாரதத்தின் முதல் சுதந்திரப் போராட்டம் 1857ஆம் ஆண்டு நடைபெற்றது. 1857இல் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் 1942 வரை ஒவ்வொரு கணமும் தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நீண்டநெடிய காலகட்டம் நாட்டுமக்களின் நெஞ்சத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதி பூண்டிருந்தார்கள். தலைமுறைகள் மாறின, ஆனால், மனவுறுதியில் சற்றும் தளர்ச்சி காணப்படவே இல்லை. மக்கள் தொடர்ந்து வந்தார்கள், தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள், சென்றார்கள், மேலும் புதியவர்கள் வந்தார்கள், அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள், ஆங்கிலேய ஆட்சியை, கிள்ளி எறிய, தேசத்தில் கணந்தோறும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள். 1857 முதல் 1942 வரை இந்த உழைப்பு, இந்தப் போராட்டம் ஒரு புதிய நிலையை ஏற்படுத்தி இருந்தது; 1942 இந்த நிலையை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றது. அப்போது வெள்ளையனே வெளியேறு என்ற சங்கநாதம் ஒலித்தது, 5 ஆண்டுகளுக்கு உள்ளாக 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. 1857 முதல் 1942க்குள்ளாக சுதந்திர வேட்கை மக்கள் அனைவரையும் சென்று அடைந்திருந்தது. 1942 முதல் 1947 வரையிலான இந்த 5 ஆண்டுகள், மக்களின் மனவுறுதியின் வெளிப்பாடாக விளங்கிய இந்த 5 ஆண்டுகள், வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தன, தேச விடுதலைக்கான காரணமாக அமைந்தன. இந்த 5 ஆண்டுகள் தாம் தீர்மானமான ஆண்டுகள்.
இப்போது நான் இந்தக் கணக்கோடு உங்களை இணைக்க விரும்புகிறேன். 1947ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்தோம். இன்று 2017இல் இருக்கிறோம். சுமார் 70 ஆண்டுகள் ஓடி விட்டன. அரசுகள் வந்தன சென்றன. அமைப்புகள் உருவாயின, மாற்றம் அடைந்தன, மலர்ந்தன, வளர்ந்தன. தேசத்தை அதன் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க ஒவ்வொருவரும் தத்தமது வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டார்கள். தேசத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க, ஏழ்மையை அகற்ற, வளர்ச்சி ஏற்படுத்த என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தத்தமது வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றிகளும் கிடைத்தன. எதிர்பார்ப்புக்களும் விழித்துக் கொண்டன. எப்படி 1942 முதல் 1947 வரையிலான காலகட்டம் வெற்றியடைவதற்கான தீர்மானமான காலமாக அமைந்ததோ, அதே போல 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகள், நமது மனவுறுதியும் தீர்மானமும் வெற்றி அடைய, நம் முன்னே காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை நாம் சபதமேற்கும் நன்நாளாகக் கொண்டாட வேண்டும், 2022ஆம் ஆண்டில் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகியிருக்கும், நாம் மேற்கொண்ட இந்த சபதத்தின் வெற்றிக்கனியை அப்போது அடைந்திருப்போம். 125 கோடி நாட்டு மக்களும் ஆகஸ்ட் 9, புரட்சி தினத்தை நினைவில் கொண்டு இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால், தனி நபர் என்ற முறையில், குடிமகன் என்ற முறையில் – நான் தேசத்துக்காக இந்த அளவு செய்வேன், குடும்பம் என்ற வகையில் இந்த அளவு செய்வேன், சமுதாயம் என்ற வகையில் இப்படிச் செய்வேன், நகரம் என்ற முறையில் இதைச் செய்வேன், அரசுத் துறை என்ற வகையில் இதைச் செய்வேன், அரசு என்ற முறையில் இதைச் செய்வேன் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் சபதமேற்க வேண்டும். அப்படி மேற்கொள்ளப்பட்ட சபதங்களை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் 1942 முதல் 1947 வரையிலான 5 ஆண்டுகள் எப்படி நாட்டின் விடுதலையை உறுதி செய்த தீர்மானமானமான ஆண்டுகளாக ஆனதோ, அதே போல 2017 முதல் 2022 வரையிலான இந்த 5 ஆண்டுகள், பாரதத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆண்டுகளாக மலரும், இதை நாம் இணைந்து செய்தாக வேண்டும். தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கொண்டாட இருக்கிறோம். அதற்கு நாம் அனைவரும் ஒரு உறுதியான அர்ப்பணிப்பை இன்றே மேற்கொண்டாக வேண்டும். இந்த 2017ஆம் ஆண்டு நம் உறுதிப்பாட்டின் ஆண்டாக மாற வேண்டும். இந்த ஆகஸ்ட் மாத உறுதிப்பாட்டோடு நாம் இணைய வேண்டும், நம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். மாசு – பாரதம் விட்டு வெளியேறு, ஏழ்மை – பாரதம் விட்டு வெளியேறு, ஊழல் – பாரதம் விட்டு வெளியேறு, தீவிரவாதம் – பாரதம் விட்டு வெளியேறு, சாதி வேற்றுமை – பாரதம் விட்டு வெளியேறு, மதவாதம் – பாரதம் விட்டு வெளியேறு. இன்றைய தேவை செய் அல்லது செத்து மடி அல்ல; மாறாக, புதிய பாரதம் படைப்பது என்ற உறுதிப்பாட்டோடு நம்மை இணைத்துக் கொள்வது தான்; இதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், உழைக்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டோடு வாழ வேண்டும், செயல்பட வேண்டும். வாருங்கள், இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி முதல் நம் உறுதிப்பாட்டுக்கு செயலூக்கம் கொடுத்து, வெற்றி பெறச் செய்யும் பேரியக்கத்தைத் தொடங்குவோம். ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூக அமைப்பும், உள்ளாட்சி அமைப்புக்களும், பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் புதிய பாரதம் படைக்க, ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்வோம். நமது சபதத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வெற்றியடைச் செய்யும் உறுதிப்பாடாக இது அமையட்டும். இளைஞர் அமைப்புகள், மாணவ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியன பொது கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யலாம். புதிய புதிய கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். ஒரு நாடு என்ற வகையில் நாம் எந்த இலக்கைச் சென்று சேர வேண்டும்? ஒரு தனிநபர் என்ற வகையில் அதில் எனது பங்களிப்பு என்னவாக இருக்க முடியும்? வாருங்கள், இந்த உறுதிப்பாட்டு தினத்தோடு நாம் நம்மை இணைத்துக் கொள்வோம்.
நான் இன்று குறிப்பாக ஆன்லைன் உலகம் பற்றி பேச விரும்புகிறேன், இன்னும் குறிப்பாக எனது இளைய நண்பர்களுக்கும், சகாக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் – புதிய பாரதம் படைக்க, புதுமையான வழிகளில் பங்களிப்பு அளிக்க நீங்கள் முன்னே வாருங்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணொளிகள், போஸ்ட்கள், பிளாகுகள், கட்டுரைகள், புதிய புதிய சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் நீங்கள் முன்னெடுத்து வாருங்கள். இந்த இயக்கத்தை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் வாருங்கள். நரேந்திர மோடி செயலியில் இளைய சமுதாய நண்பர்களுக்காக, வெள்ளையனே வெளியேறு வினாவிடைப் போட்டி நடத்தப்படும். இந்த வினாவிடைப் போட்டி, இளைஞர்களை தேசத்தின் பெருமிதம் நிறைந்த வரலாற்றோடு இணைக்கவும், சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. நீங்கள் இந்தச் செய்தியை நன்கு பரப்பி, பரவலாக்கம் செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, நாட்டின் பிரதம சேவகன் என்ற முறையில் செங்கோட்டையிலிருந்து தேசத்தோடு உரையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நான் ஒரு கருவி தான். அங்கே தனிப்பட்ட மனிதன் பேசவில்லை. செங்கோட்டையில் 125 கோடி நாட்டுமக்களின் குரல் எதிரொலிக்கிறது. அவர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும், அன்று நான் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எனக்கு ஆலோசனைகள் வந்து குவிகின்றன. இந்த முறையும் கூட நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். MyGovஇலோ, நரேந்திர மோடி செயலியிலோ நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கண்டிப்பாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானே அவற்றைப் படிக்கிறேன், ஆகஸ்ட் 15 அன்று என்னிடத்தில் எத்தனை நேரம் இருக்கிறதோ, அன்று இவற்றை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். கடந்த 3 முறையும் நான் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஆற்றிய உரைகள் சற்று நீண்டிருந்தன என்று, என் முன்பாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த முறை அளவு குறைவாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அதிகப்படியாக 40-45-50 நிமிடங்களுக்கு உள்ளாக நிறைவு செய்து விடுவேன். நான் எனக்கென விதிமுறைகளை விதித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்; என்னால் செய்ய முடியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது உரையை எப்படி சுருக்கமாக அமைப்பது என்று இந்த முறை முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம்.
நாட்டுமக்களே, நான் இன்னொரு விஷயம் குறித்தும் உங்களோடு பேச விரும்புகிறேன். பாரதத்தின் பொருளாதார அமைப்பில் ஒரு சமூக பொருளாதாரம் அடங்கியிருக்கிறது. அதை நாம் எப்போதும் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது. நமது பண்டிகைகள், நமது கொண்டாட்டங்கள் எல்லாம் வெறும் ஆனந்தம் சந்தோஷத்துக்கான சந்தர்ப்பங்கள் மட்டுமல்ல. நமது பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் சமூக மறுமலர்ச்சிக்கான ஒரு இயக்கமும் கூட. ஆனால் இதோடு கூட, நமது ஒவ்வொரு பண்டிகையும், பரம ஏழையின் பொருளாதார வாழ்வோடு நேரடி தொடர்பு வைத்திருக்கின்றது. சில நாட்கள் கழித்து ரக்ஷாபந்தன், கிருஷ்ண ஜெயந்தி, பிறகு பிள்ளையார் சதுர்த்தி, பிறகு சவுத் சந்திர, பிறகு அனந்த் சதுர்தசி, துர்க்கா பூஜை, தீபாவளி என ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன; இந்த வேளையில் தான் ஏழைக்கு வருமானம் ஈட்ட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. கூடவே பண்டிகைகளோடு ஒரு இயல்பான ஆனந்தமும் இணைகிறது. பண்டிகைகள் உறவுகளில் இனிமை, குடும்பத்தில் இணக்கம், சமூகத்தில் சகோதரத்துவம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இவை தனிநபரையும் சமூகத்தையும் இணைக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான இயல்பான பயணம் தொடர்ந்து நடக்கிறது. அஹ் சே வியம்ம், அதாவது நான் என்ற நிலையிலிருந்து நாம் என்ற நிலையை நோக்கி முன்னேற ஒரு வாய்ப்பு. பொருளாதார நிலை என்ற வகையில், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு பல மாதங்கள் முன்பிலிருந்தே கூட, பல குடும்பங்கள் சின்னச் சின்ன குடிசைத் தொழில் என்ற வகையில், ராக்கிகளை தயாரிக்கத் தொடங்கி விடுகின்றன. பருத்தி முதல் பட்டு வரையிலான இழைகளைக் கொண்டு பலவகையான ராக்கிகள் உருவாக்கப்படுகின்றன; ஆனால் இன்றளவில் மக்கள் வீட்டிலேயே தயாரிக்கப்படும் ராக்கிகளை அதிகம் விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். ராக்கி தயாரிப்பாளர்கள், ராக்கி விற்பவர்கள், இனிப்புப் பண்டங்கள் தயாரிப்போர் என ஆயிரக்கணக்கானோரின் தொழில், ஒரு பண்டிகையோடு இணைந்திருக்கிறது. நமது ஏழை சகோதர சகோதரிகளின் குடும்பத்தவர் வயிறுகள் இதனால் தான் நிரம்புகின்றன. நாம் தீபாவளியன்று தீபங்கள் ஏற்றுகிறோம், இது மட்டுமே பிரகாசமான திருநாள் என்பதல்ல; இது பண்டிகை நாள் என்பதால் வீட்டை அலங்கரிக்கிறோம் என்பதல்ல. சின்னச் சின்ன அகல் விளக்குகளை தயாரிக்கும் ஏழைக் கைவினைஞர்களோடு இது நேரடித் தொடர்பு உடையது. ஆனால் நான் இன்று பண்டிகைகள் குறித்தும், இவைகளோடு தொடர்புடைய ஏழைகளின் பொருளாதார நிலை பற்றியும் பேசும் அதே வேளையில், நான் சுற்றுச்சூழல் பற்றியும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
சில வேளைகளில் என்னை விட நாட்டுமக்கள் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் இருப்பதை நான் பார்க்கிறேன். கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து, விழிப்புணர்வு மிக்க குடிமக்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக எனக்கு கடிதங்கள் எழுதி வருகிறார்கள். நீங்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு மிக முன்னதாகவே சுற்றுச்சூழலுக்கு உகந்த பிள்ளையார் பற்றிப் பேசுங்கள், அப்போது தான் மண்ணில் செய்யப்பட்ட பிள்ளையார் மீதான விருப்பம் அதிகரிக்க, இப்போதிலிருந்தே திட்டமிட முடியும் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விழிப்புணர்வு மிக்க குடிமக்களுக்கு நான் முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்துக்கு முன்பாகவே இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை சமூக அளவிலான பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. லோக்மான்ய பாலகங்காதர திலகர் தான் இந்த மகத்தான பாரம்பரியத்தைத் தோற்றுவித்தவர். இந்த ஆண்டு சமூகரீதியிலான கணேச உற்சவத்தின் 125ஆம் ஆண்டு. 125 ஆண்டுகள், 125 கோடி நாட்டு மக்கள் – லோக்மான்ய திலகர், எந்த அடிப்படை உணர்வோடு சமூக ஒற்றுமை, சமூக விழிப்புணர்வுக்காக, சமூக கலாச்சாரத்துக்காக, சமூக ரீதியிலான கணேஸோத்ஸவத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பது தொடர்பான கட்டுரைப் போட்டிகள், விவாத மேடைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யலாம், லோகமான்ய திலகரின் பங்களிப்பை நினைவு கூரலாம். திலகரின் உணர்வைக் கருவாக வைத்துக் கொண்டு, அந்த திசையில் சமூகரீதியிலான கணேச உற்சவத்தை நாம் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம். இந்த உணர்வை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும்; கூடவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூழலுக்கு ஏற்ற வகையிலான, மண்ணால் தயாரிக்கப்பட்ட பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்குவது என்பதே நமது உறுதிப்பாடாக இருக்க வேண்டும். இந்த முறை நான் மிகவும் முன்னதாகவே கூறியிருக்கிறேன்; நீங்கள் அனைவரும் என் கருத்தோடு இணைவீர்கள் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன், இதனால் பலன் அடைவது நமது ஏழைக் கலைஞன், பிள்ளையார் திருவுருவங்களைப் படைக்கும் ஏழைக் கலைஞன், அவனுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், ஏழையின் வயிறு நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் பண்டிகைகளை ஏழையோடு இணைப்போம், ஏழையின் பொருளாதார நிலையோடு இணைப்போம், நமது பண்டிகைகளின் சந்தோஷம் ஏழைக் குடும்பத்தின் பொருளாதாரத் திருவிழாவாகட்டும், பொருளாதார ஆனந்தம் ஏற்படட்டும் – இதுவே நம்மனைவரின் முயற்சியாக ஆக வேண்டும். நான் அனைத்து நாட்டுமக்களுக்கும், வரவிருக்கும் பல்வேறு பண்டிகைகளுக்காக, கொண்டாட்டங்களுக்காக, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கல்வித் துறையாகட்டும், பொருளாதாரத் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், விளையாட்டுத் துறையாகட்டும் – நமது பெண்கள் தேசத்தின் நற்பெயருக்கு ஒளிகூட்டி வருகிறார்கள், புதிய புதிய சிகரங்களை எட்டிப் பிடிக்கிறார்கள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டுப் பெண்கள் மீது நம்மனைவருக்கும் பெருமையாக இருக்கிறது, பெருமிதம் பொங்குகிறது. கடந்த சில நாட்கள் முன்பாக நமது பெண்கள், பெண்களுக்கான க்ரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பிரமாதமான செயல்பாட்டைப் புரிந்திருக்கிறார்கள். இந்த வாரம் அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களோடு உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, ஆனால் தங்களால் உலகக் கோப்பையை வெற்றி கொள்ள இயலவில்லையே என்ற சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவர்கள் முகங்களில் இந்த அழுத்தம், இந்த நெருக்கடி கப்பியிருந்தது. நான் என் தரப்பில் ஒரு வித்தியாசமான மதிப்பீட்டை அந்தப் பெண்களுக்கு அளித்தேன். பாருங்கள், இன்றைய காலகட்டம் ஊடக உலகமாக இருக்கிறது, எதிர்பார்ப்புகள் மிகுந்து விட்டன, எந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்றால், வெற்றி கிடைக்கவில்லை என்று சொன்னால், அது கோபமாக மாறி விடுகிறது; பாரதத்தின் விளையாட்டு வீரர்கள் தோல்வி அடைந்து விட்டால், தேசத்தின் கோபம் அந்த விளையாட்டு வீரர்கள் மீது கொப்பளிப்பதை நாம் பல விளையாட்டுக்களில் பார்த்திருக்கிறோம். சிலரோ, வரம்புகளை மீறிப் பேசி விடுகிறார்கள், எழுதி விடுகிறார்கள், இதனால் அதிக வேதனை ஏற்படுகிறது. ஆனால் முதன் முறையாக, நமது பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில், 125 கோடி நாட்டுமக்களும், அந்தத் தோல்வியை தங்கள் தோள்களில் சுமந்து நின்றார்கள். சற்றுக் கூட பாரத்தை, அந்தப் பெண்கள் அனுபவிக்க விடவில்லை. இதோடு நின்று விடாமல், இந்தப் பெண்கள் படைத்த சாதனை குறித்துப் பாராட்டினார்கள், அவர்களைப் பெருமைப் படுத்தினார்கள். இதை நான் நல்லதொரு மாற்றமாகவே காண்கிறேன். இது போன்றதொரு நற்பேறு உங்களுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது என்று நான் அந்தப் பெண்களிடம் கூறினேன். நீங்கள் வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தை, உங்கள் மனதிலிருந்து அடியோடு விலக்கி விடுங்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். நீங்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும், 125 கோடி நாட்டு மக்கள் மனங்களையும் வெற்றி கொண்டு விட்டீர்கள். உண்மையிலேயே நமது நாட்டின் இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதில் பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நான் மீண்டும் ஒருமுறை, இளைய சமுதாயத்தினருக்கு, குறிப்பாக நமது பெண்களுக்கு, என் இதயம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்த்துகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, நான் மீண்டும் ஒருமுறை ஆகஸ்ட் புரட்சியை, ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியை, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை, மறுபடி ஒருமுறை 2022ஆம் ஆண்டினை, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண வேண்டும், அந்த உறுதியை நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கான ஒரு செயல்திட்டத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். நாமனைவரும் தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும், கொண்டு செல்ல வேண்டும், கொண்டு செல்ல வேண்டும். வாருங்கள், நாம் இணைந்து பயணிப்போம், ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டு பயணிப்போம். தேசத்தின் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பானதாகவே அமையும் என்ற நம்பிக்கையை மனதில் தாங்கிப் பயணிப்போம், முன்னேறுவோம். பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். பருவநிலை மாறி வருகிறது. இந்த முறை வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் நல்லகாலம், மழைக்காலம் தக்க தருணத்திலேயே வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் வருகை, பருவநிலையை இனிமையானதாக ஆக்கியிருக்கிறது. மழைக்குப் பிறகு குளிர்ந்த காற்று, கடந்த நாட்களில் கோடை வெப்பத்திலிருந்து சற்று ஆசுவாசம் அளித்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனைதான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனைதான் நெருக்கடி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், பொதுவாழ்வில், மழையின் வருகை, நம் அனைவரின் மனோநிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதை நம்மால் உணர முடிகிறது.
இன்று பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரையை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த முனைப்போடும், மகிழ்வோடும் கொண்டாடி வருகிறார்கள். உலகின் பல பாகங்களிலும் கூட, பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரை கோலாகலமாக நடைபெறுகிறது. பகவான் ஜகன்நாதருடன் நாட்டின் ஏழை ஆன்மபூர்வமாக இணைந்திருக்கிறான். டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் பகவான் ஜகன்நாதரின் கோயில் மற்றும் அதன் பாரம்பரியத்தை மிக உயர்வாகப் போற்றுவதுண்டு என்பதை பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்; ஏனென்றால், இதில் சமூகநீதி, சமூக சமத்துவம் ஆகியன பொதிந்திருக்கின்றன. பகவான் ஜகன்நாதர் ஏழைகளின் தெய்வம். ஆங்கிலத்தில் ஜக்கர்நவுட் ( juggernaut என்ற ஒரு சொல் இருக்கிறது, யாராலும் தடுக்க முடியாத சிறப்பான ரதம் என்பது தான் அதன் பொருள். அகராதியில் பார்க்கும் போது தான், இந்த ஜகர்நவுட் என்ற சொல், ஜகன்நாதரின் ரதயாத்திரையை ஒட்டியே உருவாகியிருக்கிறது என்பது தெரிய வந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, உலகத்தோர் எப்படி எல்லாம் தங்களுக்கே உரிய வழிகளில் இந்த மஹாத்மியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பகவான் ஜகன்நாதரின் யாத்திரை வேளையில் நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், பகவான் ஜகன்நாதரின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
பாரத தேசத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சிறப்பு, பாரதத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சக்தி. புனிதமான ரமலான் மாதத்தில் அனைவரும் தூய பிரார்த்தனைகள் செய்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். இப்போது ஈகை பண்டிகை வந்திருக்கிறது. ரமலான் பண்டிகை வேளையில் நான் அனைவருக்கும் ஈகை திருநாளுக்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதம் புனிதமான ஈகை அளிக்கப்பட வேண்டிய மாதம், சந்தோஷங்களை பகிர்ந்துவக்கும் மாதம், எத்தனை சந்தோஷங்களை நாம் பகிர்ந்தளிக்கிறோமோ, அந்த அளவு சந்தோஷங்கள் நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து இந்த புனிதமான பண்டிகளிலிருந்து உத்வேகம் பெற்று சந்தோஷங்களின் கஜானாவை பகிர்ந்தளித்துச் செல்வோம், நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்.
ரமலானின் இந்த புனித மாதத்தில் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்நோரின் முபாரக்பூர் கிராமத்தைச் சார்ந்த ஒரு மிகக் கருத்தூக்கம் அளிக்கும் நிகழ்வு நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. அங்கே சுமார் 3500 இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்கள் குடும்பத்தோடு இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்கள், ஒரு வகையில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியக் குடும்பங்களின் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இந்த ரமலான் மாதம், கிராமவாசிகள் அனைவருமாக இணைந்து கழிப்பறை கட்டுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டார்கள். இந்த தனிப்பட்ட கழிப்பறைகளைக் கட்ட, அரசு தரப்பிலிருந்து உதவிகள் கிடைக்கின்றன, இதன் வாயிலாக சுமார் 17 லட்சம் ரூபாய் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. நான் இனி கூறவிருக்கும் இந்தச் செய்தி உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், ஆனந்தம் அளிக்கலாம். ரமலானின் இந்த புனிதமான மாதத்தில், நமது அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 17 லட்சம் தொகையை அரசுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இது மட்டுமல்ல, நாங்கள் எங்கள் கழிப்பறைகளை, எங்கள் உழைப்பில், எங்கள் பணத்தில் அமைத்துக் கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆகையால் தாங்கள் இந்த 17 லட்சம் ரூபாயை கிராமத்தின் வேறு வசதிகளுக்காக செலவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். நான் முபாரக்பூரைச் சேர்ந்த அனைத்து கிராமவாசிகளுக்கும் ரமலானின் இந்த புனித வேளையை, சமுதாய நலனுக்காக மாற்றியமைத்ததற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒவ்வொரு விஷயமும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் முபாரக்பூரை திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத கிரமமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது தான். நம் நாட்டில் சிக்கிம், இமாசலப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவைகளாக அறிவித்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வாரம் உத்தராக்கண்டும் அரியானாவும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நான் இந்த 5 மாநிலங்களின் நிர்வாகத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் சிறப்பான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
தனி வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி, ஏதோ சில நல்லவைகளையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நாம் நன்கறிவோம். நமது கையெழுத்து மோசமாக இருக்கிறது என்றால், அதை சரி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நிறைய நேரம் மிக விழிப்போடு இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு பழக்கமாக மாறும். இதே போல வேறு சில மோசமான பழக்கங்கள் நமது இயல்பாகவே ஆகி இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இடைவிடாத முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். ஒவ்வொருவரின் கவனத்தையும் நாம் ஈர்த்தாக வேண்டும். உத்வேகம் அளிக்கக் கூடிய நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாக வேண்டும்.
தூய்மை என்பது இன்று அரசு மட்டத்தோடு நின்று போகவில்லை என்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. இது மக்கள் சமுதாயத்தின் ஒரு இயக்கமாக பரிமளித்திருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் இருப்போரும், இப்படிப்பட்ட மக்கள் பங்களிப்புத் துணையோடு முன்னேகிச் செல்லும் போது, சிந்தித்துப் பாருங்கள், எத்தனை சக்தி வெளிப்படும், எத்தனை சக்தி அதிகப்படும்!!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடந்த மிகச் சிறப்பான ஒரு சம்பவம் என் கவனத்தில் வந்தது, இதை நான் கண்டிப்பாக உங்களிடம் தெரிவித்தே ஆக வேண்டும். இது ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நடந்த ஒன்று. அங்கே இருக்கும் நிர்வாகம் மக்களின் பங்களிப்போடு ஒரு மிகப்பெரிய செயலில் இறங்கினார்கள். மார்ச் மாதம் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் மார்ச் மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி வரை, 100 மணி நேர இடைவிடாத இயக்கம். இதன் இலக்கு என்ன? 100 மணி நேரத்தில் 71 கிராம பஞ்சாயத்துக்களில் 10000 வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது தான். எனதருமை நாட்டு மக்களே, பொதுமக்களும் அரசும் இணைந்து, 100 மணி நேரத்தில் 10000 கழிப்பறைகள் கட்டும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். 71 கிராமங்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறன. நான் ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், விஜயநகர மாவட்டத்தின் அனைத்து கிராமவாசிகளுக்கும் ஏராளமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் உழைப்பால், மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறீர்கள்.
இப்போதெல்லாம் மனதின் குரலுக்கு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நரேந்திர மோடி செயலியில் வருகின்றன, மைகவ்.இன்னில்(MyGov.in) வருகின்றன, கடிதங்கள் வாயிலாகவும், ஆகாசவாணி மூலமாகவும் வருகின்றன.
பிரகாஷ் திரிபாடி அவர்கள், அவசரநிலையை நினைவுகூர்ந்து, ஜூன் மாதம் 25ஆம் தேதி மக்களாட்சியின் வரலாற்றிலேயே மிகப்பெரியதொரு கறை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரகாஷ் திரிபாதி அவர்களுக்கு மக்களாட்சி மீது இருக்கும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது, மக்களாட்சி முறை என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, இது ஒரு கலாச்சாரம். Eternal Vigilance is the Price of Liberty. அதாவது நிரந்தரமாக விழிப்போடு இருப்பது தான், சுதந்திரத்துக்கு நாம் அளிக்கும் விலை என்பது இதன் பொருள். ஆகையால் மக்களாட்சி முறைக்குத் தீங்கு ஏற்படுத்தும் விஷயங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருப்பது அவசியம்; அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் நல்ல விஷயங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி, அது ஒரு கருமையான இரவு, இதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. எந்த ஒரு இந்தியனும் இதை புறந்தள்ளிவிட முடியாது. ஒருவகையில் இது ஒட்டுமொத்த நாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றியமைத்தது. மாற்றுக் கருத்துக்கள் மண்ணோடு மண்ணாக நசுக்கப்பட்டன. ஜெய்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட, நாட்டின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். நீதியமைப்பும் கூட இந்த அவசரநிலையின் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளானது. செய்தித்தாள்கள் எல்லாம் முழுமையாக செயலிழந்து போயின. இன்றைய ஊடக உலகின் மாணவர்கள், மக்களாட்சி முறையில் பணியாற்றுவோர் எல்லாம், அந்த கறைபடிந்த காலகட்டத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊட்டும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அப்படி ஈடுபட்டும் வர வேண்டும். அந்த காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களும் சிறைச்சாலையில் இருந்தார். நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், அடல் அவர்கள் கவிதை ஒன்றை எழுதினார், அந்தக் கவிதையில் அந்த காலகட்டத்தில் நாட்டில் நிலவிய சூழலை வர்ணித்து எழுதியிருந்தார்.
தகிக்கும் கோடைக்கால வெப்பம்
குளிர்கால நிலவின் சோகம்
தகிக்கும் கோடைக்கால வெப்பம்
குளிர்கால நிலவின் சோகம்
கேவல்கள்நிறை மாரிக்காலம்
சுமையை இறக்கியது எங்கும்
ஓராண்டு கடந்து சென்றது,
ஓராண்டு கடந்து சென்றது.
கோரப் பிடியில் உலகு தவிக்குது
உயிர் என்ற பறவை பரிதவிக்குது
கோரப் பிடியில் உலகு தவிக்குது
உயிர் என்ற பறவை பரிதவிக்குது
வானம் முதல் பூமி வரை,
வானம் முதல் பூமி வரை,
விடுதலைகீதம் எங்கும் ஒலிக்குது,
ஓராண்டு கடந்து சென்றது,
ஓராண்டு கடந்து சென்றது.
வழிமேல் எங்கும் விழி இருக்குது,
நாட்களை மனம் எண்ணி உருகுது,
வழிமேல் எங்கும் விழி இருக்குது,
நாட்களை மனம் எண்ணி உருகுது,
மறைந்து போனது, திரும்ப வருமோ,
மறைந்து போனது, திரும்ப வருமோ,
மனதின் நேசம் மீண்டும் வருமோ,
ஓராண்டு கடந்து சென்றது.
மக்களாட்சியை விரும்புவோர் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டார்கள், பாரதம் போன்ற பரந்துபட்ட தேசத்தில், மக்களின் நாடிநரம்புகளில் எல்லாம் எந்த அளவுக்கு மக்களாட்சி முறை என்பது பரவியிருக்கிறது என்பதை, வாய்ப்பு கிடைத்த போது, தேர்தல் வாயிலாக அந்தச் சக்தியை வெளிப்படுத்தினார்கள். மக்களின் உதிரத்தில் கலந்த மக்களாட்சி முறை என்ற உணர்வு தான் நமது நிரந்தரமான பாரம்பரியம். இந்தப் பாரம்பரியத்தை நாம் மேலும் உறுதிபடைத்ததாக ஆக்க வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்த்தி பெரும் கௌரவத்தை உணர்கிறான். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஒட்டுமொத்த உலகும் யோகமயமானது. நீர் முதல் மலை வரை உள்ள மக்கள் அனைவரும், அதிகாலை சூரியக் கதிர்களை, யோகக்கலை வாயிலாக வரவேற்றார்கள். எந்த இந்தியனுக்குத் தான் இது பெருமை அளிக்காத விஷயமாக இருக்க முடியும் சொல்லுங்கள்!! யோகம் என்பது முன்பு இருந்ததில்லை என்பதல்ல, ஆனால் இன்று யோகக்கலை என்ற இழையில் அனைவரும் இணைந்தார்கள், யோகம் உலகை இணைக்கும் ஒரு பாலமாக ஆனது. உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த யோகக்கலை அளிக்கும் வாய்ப்பை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்கள்.
சீனப்பெருஞ்சுவற்றின் மீதும், பெரு நாட்டின் உலக பாரம்பரியச் சின்னமான மாச்சூ பிச்சூவில், கடல்மட்டத்திலிருந்து 2400 மீட்டர் உயரத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபியில் 4000த்திற்கும் மேற்பட்டவர்களும் யோகப்பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆஃப்கனிஸ்தானின் ஹேராத்தில் இந்தியா ஆஃப்கன் நட்பணையான, சல்மா அணையில் யோகத்தில் ஈடுபட்டு, நட்புக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள். சிங்கப்பூர் போன்ற சிறிய இடத்திலும் கூட 70 இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒருவாரக்காலம் முழுக்க அவர்கள் இந்த இயக்கத்தை மேற்கொண்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச யோக தினத்தை ஒட்டி, 10 தபால்தலைகளை வெளியிட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் yoga session with yoga masters, யோக வல்லுனர்களுடன் யோகம் பயில்வோம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிவோர், ஐ.நாவின் அனைத்து நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
இந்த முறை மீண்டும் யோகம் உலக சாதனை படைத்திருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாத்தில் சுமார் 55 ஆயிரம் பேர்கள் இணைந்து யோகம் செய்து, ஒரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்கள். எனக்கும் லக்னவில் யோகக்கலை பயிலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முறையாக கொட்டும் மழையில் யோகம் பயிலும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைந்தது. மைனஸ் 20, 25, 40 டிகிரிகள் வெப்பநிலை உள்ள சியாச்செனிலும் கூட நமது படையினர் யோகக் கலையில் ஈடுபட்டார்கள். நமது இராணுவம், எல்லையோரப் பாதுகாப்புப் படையினர், இந்திய திபேத்திய எல்லையோரக் காவல் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் என அனைவரும் தங்கள் கடமைகளை ஆற்றுவதோடு, யோகப் பயிற்சியிலும் ஈடுபட்டார்கள். இது 3வது சர்வதேச யோக தினமாக இருப்பதால் 3 தலைமுறைகளைச் சேர்ந்த குடும்பத்தார் யோகம் பயில்வதைப் படம் பிடித்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
சில தொலைக்காட்சி சேனல்களும் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். எனக்கு நிறைய பேர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தார்கள், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நரேந்திர மோடி செயலியில் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் யோகக்கலை பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவரும் வேளையில், ஆரோக்கியம் பற்றிய விழிப்புடைய சமுதாயமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாம் உடலுறுதி என்ற நிலையிலிருந்து, உடல்நலம் என்ற திசையை நோக்கிப் பயணிக்கிறோம் என்று மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு யோகக்கலை பேருதவியாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களே, நான் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து டா. அநில் சோனாரா பேசுகிறேன். ஐயா, பல்வேறு இடங்களில் நாம் பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, நினைவுப் பொருளாக நல்ல புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று அண்மையில் நீங்கள் கேரளத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன். இந்த விஷயத்தை நீங்கள் குஜராத்தில் முதல்வராக இருந்த பொழுதே தொடக்கியிருந்தீர்கள், ஆனால் அண்மைக்காலங்களில் இதுபோன்று நடப்பதில்லை. இதை மாற்ற ஏதாவது செய்யலாமே? இந்தக் கருத்தை நாடுமுழுமைக்கும் அமல் செய்யும் வகையில் நம்மால் ஏதாவது செய்ய முடியாதா ஐயா.
கடந்த நாட்களில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிட்டியது. கேரளத்தில் பி.என். பணிக்கர் அறக்கட்டளை வாயிலாக சில ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது; அதாவது, மக்களிடம் படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும், படிக்கும் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக படிக்கும் நாள், படிக்கும் மாதம் என்ற வகையிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இங்கே பூங்கொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை, புத்தகங்களே அளிக்கப்படுகின்றன என்றும் என்னிடத்தில் கூறப்பட்டது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
என் நினைவிலிருந்து தப்பிய ஒரு விஷயம் மீண்டும் எனக்கு நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நான் குஜராத்தில் இருந்த வேளையில், நாம் இனி பூங்கொத்துக்களை அளிக்கக் கூடாது, புத்தகங்களே அளிக்க வேண்டும் அல்லது வரவேற்க வேண்டுமென்றால் கைக்குட்டை அளித்து வரவேற்பளிப்போம் என்ற வழிமுறையை உருவாக்கி இருந்தோம். அதுவும் கதராடைக் கைக்குட்டையையே அளிப்போம், ஏனென்றால் இதன்மூலம் கதராடைகளுக்கு ஊக்கம் அளிக்க முடியும். நான் குஜராத்தில் இருந்த வேளையில் இது பழக்கமாகவே மாறியிருந்தது, ஆனால் அங்கிருந்து நான் வந்த பிறகு, இந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிருக்கிறது. ஆனால் கேரளம் சென்ற போது, மீண்டும் எனக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. நான் இப்பொழுது அரசில் பணிபுரிவோரிடம், இந்தப் பழக்கத்தைத் தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறேன். நாமும் மெல்ல மெல்ல இதை ஒரு இயல்பாகவே ஆக்கப் பழகலாம். பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை. ஒருமுறை கையில் பெற்றுக் கொண்ட பின், அதை நாம் தள்ளி வைத்து விடுகிறோம்.
ஆனால் நாம் புத்தகங்களை அளிக்கும் போது, ஒரு வகையில் அது வீட்டின் ஒரு அங்கமாகவே ஆகி விடுகிறது, குடும்பத்தின் உறுப்பினராக மாறி விடுகிறது. கதர்க்கைக்குட்டைகளை அளித்தும் கூட நாம் வரவேற்பளிக்கலாம், இதனால் எத்தனை ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கிறது தெரியுமா? செலவும் குறைவு, சரியான முறையில் பயன்படவும் செய்கிறது. இந்த விஷயங்களுக்கு வரலாற்று ரீதியிலான மகத்துவம் அதிகம் இருக்கிறது. நான் கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்த போது, லண்டன் மாநகரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே தாய்மை நிறைந்த சூழல் நிலவியது. மிகவும் அன்போடு எனக்கு உணவளித்தார், பிறகு அவர் மிகவும் மரியாதையோடு, ஒரு சிறிய கதர்க் கைக்குட்டையைக் காட்டினார். அவர் கண்களில் ஒரு ஒளி பளிச்சிட்டது, எனக்குத் திருமணமான போது, காந்தியடிகள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்தக் கைக்குட்டையை பரிசளித்தார் என்று உணர்ச்சி பொங்கும் குரலில் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன, ஆனால் எலிசபெத் ராணி, காந்தியடிகள் பரிசளித்த கைக்குட்டையை பாதுகாப்பாக வைத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் ஆனந்தம் மேலிட, எனக்கு அதைக் காண்பித்தார். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அதை நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்றே எனக்குப் பட்டது. காந்தியடிகளின் ஒரு மிகச்சிறிய அன்பளிப்பு அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகியிருக்கிறது, அவரது சரித்திரத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டிருந்தது. இந்தப் பழக்கங்கள் இரவோடு இரவாக மாறி விடுவதில்லை; இப்படிப் பேசுவதால், விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. அதே வேளையில், இது போன்ற உரையாடல்களில் ஈடுபட வேண்டும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நான் எங்காவது செல்லும் பொழுது, யாராவது பூங்கொத்து கொண்டு வந்தால், அதை வேண்டாம் என்று மறுக்க மாட்டேன், அப்படி என்னால் செய்ய முடியாது. விமர்சனங்கள் எழத்தான் செய்யும், நாம் மீண்டும் மீண்டும் கூறத் தான் வேண்டும், மெல்ல மெல்ல ஒரு மாற்றம் ஏற்படும்.
எனதருமை நாட்டு மக்களே, நாட்டின் பிரதமர் என்ற முறையில் பல அலுவல்கள் இருக்கின்றன. கோப்புகளில் மூழ்கி இருக்க வேண்டி இருந்தாலும், நான் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்; அதாவது எனக்கு வரும் கடிதங்களில் சிலவற்றையாவது படித்துப் பார்த்து, சாதாரண மக்களோடு என்னை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டிருக்கிறேன். பலவகையான கடிதங்கள் வருகின்றன, பலதரப்பட்ட மக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் முன்பாக நான் படித்த ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நான் உணர்கிறேன். தென்னகத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த திருமதி. அருள்மொழி சரவணன் என்ற இல்லத்தரசி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். என் குழந்தைகளின் கல்விச் செலவினங்கள் போன்றவற்றை மனதில் இருத்தி, நான் வருமானம் அளிக்கும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம், இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலையில் சற்று மேம்பாடு ஏற்படும் என்று கருதினேன். ஆகையால் நான் முத்ரா திட்டத்தின்படி, வங்கியிலிருந்து பணம் பெற்று, சந்தையிலிருந்து சில பொருட்களை வாங்கி அளிக்கும் பணியை தொடக்கி இருக்கிறேன். இதற்கிடையில், பாரத அரசு government E-Marketplace, அரசு மின்னணுச்சந்தை என்ற அமைப்பின் மீது என் கவனம் சென்றது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் சிலரிடம் விசாரித்துப் பார்த்த பிறகு, நானும் அதில் என்னைப் பதிவு செய்து கொண்டேன். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் இணையத்தில் E-GEM, E – G E Mற்கு சென்று பாருங்கள் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இது மிக புதிய வகையிலானதொரு அமைப்பு. யார் அரசுக்கு ஏதாவது அளிக்க விரும்புகிறார்களோ – மின்சார பல்புகள், குப்பைத் தொட்டிகள், துடைப்பங்கள், நாற்காலிகள், மேஜைகள், போன்ற எதை விற்க நினைத்தாலும், அவர்கள் இந்த தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவரிடம் என்ன தரத்திலான பொருட்கள் இருக்கின்றன, என்ன விலைக்கு அவரால் விற்க முடியும் என்பதை அதில் குறித்து வைக்கலாம். மேலும் அரசுத் துறைகள் இந்த தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டும், யார் குறைந்த விலையில், தரமான பொருட்களை அளிக்கிறார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு பொருட்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்படும். எல்லா வகையிலும் ஒளிவுமறைவற்ற தன்மை பளிச்சிடும். Interface, இடைமுகம் கிடையாது, தொழில்நுட்பம் மூலமாக அனைத்தும் நிகழ்கிறது. அந்த வகையில் E-GEMஇல் யார் பதிவு செய்து கொள்கிறார்கள் என்பதை அரசின் அனைத்துத் துறைகளும் கவனித்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தால் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. இப்பொழுது தன்னால் என்னென்ன பொருட்களை அளிக்க முடியும் என்பதை அருள்மொழி அவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர் எழுதிய கடிதம் மிகவும் சுவாரஸியமானது. எனக்கு முத்ரா திட்டத்தின் மூலமாகக் கடன் கிடைத்தது, நான் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன் என்பது ஒன்று, E-GEM வாயிலாக என்னால் என்ன அளிக்க முடியும் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, எனக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.
உள்ளபடியே இது எனக்கு ஒரு புதிய செய்தி தான்; பிரதமர் அலுவலகத்தில் என்ன வாங்கியிருப்பார்கள் என்று நான் யோசித்த பொழுது, அவர் பிரதமர் அலுவலகத்தில் 2 தெர்மாஸ் பிளாஸ்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இதற்கு எனக்கு 1600 ரூபாய் பணம் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார். இது தான் empowerment, அதிகாரமளிப்பு. இது தான் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வாய்ப்பு. ஒருவேளை அருள்மொழி அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை என்று சொன்னால், இது என் கவனத்தில் வந்திருக்காமல் போயிருக்கலாம். E-GEM வாயிலாக தொலைவான தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு இல்லத்தரசி ஒரு சிறிய வியாபாரம் செய்து வருகிறார், அவர் விற்கும் பொருட்கள் பிரதமர் அலுவலகம் வரை வாங்கிக் கொள்ளப்படுகிறது. இது தான் தேசத்தின் பலம். இதில் ஒளிவுமறைவற்ற தன்மையும் இருக்கிறது, இதில் அதிகாரமளிப்பும் இருக்கிறது, இதில் தொழில்முனைவும் இருக்கிறது. Government E-Marketplace – GEM. யாரெல்லாம் அரசுக்குத் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் எல்லாம் அதிக அளவில் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் நோக்கம் என்ன? குறைந்தபட்ச விலை, அதிகபட்ச எளிமை, திறன் மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மை.
எனதருமை நாட்டுமக்களே, நாம் யோகக்கலை பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், விண்வெளி விஞ்ஞானத்தில் நாம் ஏற்படுத்தி வரும் சாதனைகளும் நம் நெஞ்சை விம்ம வைக்கின்றன. நமது காலடிகள் யோகத்தால் இணைக்கப்பட்ட பூமியில் பதிந்திருக்கும் அதே வேளையில், நாம் தொலைவில் இருக்கும் விண்ணையும் தொட்டுப் பார்க்கும் கனவை மெய்ப்பித்து வருகிறோம் என்பது தான் பாரதத்தின் மிகப்பெரிய சிறப்பு. கடந்த நாட்களில் விளையாட்டிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, பாரதம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இன்று பாரதம் பூமியில் மட்டுமல்ல, விண்ணிலும் கூடத் தன் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது. 2 நாட்கள் முன்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ நிறுவனம் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளுடன், 30 நானோ செயற்கைக்கோள்களையும் விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இந்த செயற்கைக்கோள்களில் பாரதம் தவிர, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா போன்று, சுமார் 14 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. பாரதத்தின் இந்த நானோ செயற்கைக்கோள் இயக்கம் விவசாயத் துறை, இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான தகவல்கள் பெறுதல் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவு உதவிகரமாக இருக்கும். சில நாட்கள் முன்பாகத் தான், இஸ்ரோ நிறுவனம் ஜி.சாட்-19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நினைவிருக்கலாம். இதுவரை பாரதத்தின் அனைத்து செயற்கைக்கோள் ஏவுதல்களிலும், மிகப்பெரிய எடை கொண்ட செயற்கைக்கோள் இது தான். நம் நாட்டின் செய்தித்தாள்கள் அனைத்தும் இதை யானையின் எடையோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, விண்வெளித் துறையில் நமது விஞ்ஞானிகள் எத்தனை பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஜூன் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பி 1000 நாட்கள் முடிந்திருக்கின்றன. செவ்வாய் கிரஹத்துக்கு நாம் செயற்கைக்கோளை அனுப்ப வெற்றிகரமாக சுற்றுப்பாதை ஏற்படுத்தியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் ஆயுட்காலம் வெறும் 6 மாதங்களுக்குத் தான் என்றாலும் கூட, நமது விஞ்ஞானிகளின் முயற்சிகளின் வல்லமை காரணமாக இது 6 மாதங்களையும் கடந்து செயல்பட்டு வருகிறது. இப்பொழுது 1000 நாட்கள் கடந்தும் இது செயலாற்றி வருகிறது, புகைப்படங்கள் அனுப்பி வருகிறது, தகவல்கள் அளிக்கிறது, அறிவியல் தரவுகளை அள்ளித் தருகிறது. காலத்தின் எல்லைகளைத் தாண்டி, தனது ஆயுட்காலத்தையெல்லாம் கடந்து, இது சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. 1000 நாட்கள் கடப்பது என்பது நமது அறிவியல் பயணத்தில், நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த மைல்கல்.
இப்போதெல்லாம் விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்கள் அதிக முன்னேற்றம் அடைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. கல்வியைத் தவிர, அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்கள் எதிர்காலம் இருப்பதை அவர்கள் உணர்ந்து வருகிறார்கள். நமது விளையாட்டு வீரர்கள், அவர்கள் முயற்சிகள், அவர்களின் சாதனைகள் ஆகியவை காரணமாக, நாட்டுக்கு பெருமை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் தான் பாரதத்தின் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் இந்தோனேசியா ஓப்பன் பந்தயத்தில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்த சாதனை படைத்ததற்கு நான் அவருக்கும் அவரது பயிற்றுனருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடகள வீராங்கனை பி.டி. உஷா அவர்களின் உஷா தடகள பள்ளியில், செயற்கைத் ஓடுதளத்தைத் திறந்து வைக்கும் விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு சிலநாள் முன்பு எனக்குக் கிட்டியது.
விளையாட்டுக்கள், விளையாட்டு உணர்வை ஏற்படுத்துகின்றன; ஆகையால் தான் நாம் விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டில், விளையாட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. நமது குடும்பத்திலும் பிள்ளைகள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு கொண்டிருந்தால், அவர்களுக்கு நாம் வாய்ப்பமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களை மைதானத்திலிருந்து விலக்கி, அறைக்குள் பூட்டி வைத்து, படிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. அவன் படிக்கவும் செய்யட்டும், அதிலே அவன் முன்னேற்றமும் அடையட்டும்; ஆனால் அவனுக்கு விளையாட்டில் அதிகத் திறமையோ, ஆர்வமோ இருந்தால், பள்ளிக்கூடம், கல்லூரி, குடும்பம், அக்கம்பக்கத்திலிருப்போர் என அனைவரும் அவனுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் கனவை அனைவரும் காண வேண்டும்.
மீண்டும் ஒருமுறை எனதருமை நாட்டு மக்களே, மழைக்காலம், தொடர் கொண்டாட்டங்களின் காலமாக, ஒரு வகையில் புதியவகை அனுபவங்களை உருவாக்கித் தரும் காலமாக அமைந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்த மனதின் குரலில் உங்களோடு இணைகிறேன். வணக்கம்.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது. ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தில் பிரார்த்தனை, ஆன்மிகம், அறப்பணி ஆகியவற்றிற்கு கணிசமான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து சமயங்களும் பாரத நாட்டில் இருக்கின்றன என்பது நமது நாட்டின் 125 கோடி மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்; இந்த மகத்தான பாரம்பரியத்தை நமக்கு நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் நமது பாக்கியமாகக் கருத வேண்டும். இறைவனை நம்புபவர்களும் இருக்கிறார்கள், இந்த தேசத்தில் இறைவனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள், சிலை வழிபாடு செய்பவர்களும் உண்டு, சிலை வழிபாட்டை எதிர்ப்பவர்களும் உண்டு – இப்படி பலவகைப் பட்டவர்கள் நிறைந்திருப்பது நம் தேசம். பலவகையான எண்ணப்பாடுகள், பலவகையான வழிபாட்டு முறைகள், பலவகையான பாரம்பரியங்கள் என ஒன்றிணைந்து வாழும் கலை நம் உணர்வோடு கலந்து விட்டது. சமயங்கள் ஆகட்டும், வழிமுறைகள் ஆகட்டும், தத்துவங்கள் ஆகட்டும், பாரம்பரியங்கள் ஆகட்டும் – இவை அனைத்தும் நமக்கு அளிக்கும் ஒரே செய்தி – அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், என்பவை தாம். இந்த புனிதமான ரமலான் மாதம் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற பாதையில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு துணை இருக்கும். நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன். ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை, ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன. ஆனால் தோராயமாக நோக்கும் போது, சிலர் சங்கீதம் பயில முயன்றிருக்கிறார்கள், சிலர் புதியதொரு வாத்தியத்தைக் கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள், சிலர் யூ டியூபைப் பயன்படுத்தி புதிய விஷயம் ஒன்றைக் கற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள், புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் முயற்சி செய்திருக்கிறார்கள், சிலர் சமையல் கலையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், சிலர் நாடகத்தில், சிலர் கவிதை இயற்றுவதில் என பலவகையான முயற்சிகளில் இவர்கள் ஆக்கபூர்வமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவரவர் இயல்புகளை அறிந்து கொள்வது, வாழ்வது, புரிந்து கொள்வது என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் ஒலித்த உணர்வை நீங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
“நான் தீக்ஷா கட்யால் பேசுகிறேன். படிக்கும் பழக்கம் என்பது கிட்டத்தட்ட என்னிடமிருந்து விடுபட்டு விட்ட நிலையில் நான் விடுமுறை நாட்களில் படிக்க முடிவெடுத்தேன். விடுதலைப் போராட்டம் பற்றி நான் படிக்கத் தொடங்கிய போது, பாரதம் சுதந்திரம் பெற எத்தனை தியாகங்களையும் போராட்டங்களையும் செயல்படுத்த வேண்டியிருந்தது, எத்தனை போராட்டத் தியாகிகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய வயதிலேயே மிகப் பெரிய சாதனை நிகழ்த்திக் காட்டிய பகத் சிங் அவர்களின் வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளித்தது, ஆகையால் இந்த விஷயம் குறித்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு செய்தி விடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இளைய சமுதாயம் நமது வரலாறு பற்றி, நமது சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் பற்றி, இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவி துறந்த தியாகிகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. எண்ணற்ற மாமனிதர்கள் தங்கள் இளமையைச் சிறைகளில் இழந்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் தூக்குக் கயிறுகளை இன்முகத்தோடு முத்தமிட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை எல்லாம் அனுபவித்ததால் தான், நம்மால் இன்று சுதந்திர இந்தியாவின் சுவாசக் காற்றை சுவாசிக்க முடிகிறது. விடுதலைப் போரில் எந்த மாமனிதர்கள் எல்லாம் காலம் கழித்தார்களோ, அவர்கள் எல்லாம் புத்தகம் எழுதினார்கள், படித்தார்கள், மிகப்பெரிய பணிகள் எல்லாம் புரிந்தார்கள், அவர்களின் எழுத்தும் கூட பாரதத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.
பல ஆண்டுகள் முன்பாக நான் அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் செல்லுலர் சிறைச்சாலையைக் காணச் சென்றிருந்தேன்.. இன்று வீர சாவர்கர் அவர்களின் பிறந்த நாள். வீர சாவர்க்கர் அவர்கள் சிறையில் மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे என்ற புத்தகத்தை எழுதினார்கள். சிறைச் சுவர்களில் அவர் கவிதைகளை எழுதினார். ஒரு சின்ன அறையில் அவரை அடைத்து வைத்திருந்தார்கள். விடுதலைப்பற்று மிக்கவர்கள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தாங்கினார்கள் தெரியுமா? சாவர்க்கர் அவர்கள் எழுதிய மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த பிறகு தான், செல்லுலர் சிறைச்சாலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. அங்கே ஒரு ஒலி-ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அது மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது. காலாபானி என்று அழைக்கப்படும் இந்த அந்தமான் நிக்கோபார் தனிமைச் சிறைச்சாலையில் தங்கள் இளமையை தியாகம் செய்தவர்களில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாரதத்தின் அனைத்து மொழி பேசுபவர்கள் இருந்தார்கள், பல துயரங்களைச் சந்தித்தார்கள்.
இன்று வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள். நான் தேசத்தின் இளைய சமுதாயத்தினரிடம் கூறுவது என்னவென்றால், நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் பொருட்டு என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது, எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நீங்கள் தனிமை சிறைச்சாலைக்குச் சென்று பாருங்கள், அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கு அங்கே சென்ற பிறகு விளங்கும். உங்களுக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால், கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அது ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தின் புனிதத் தலம்.
எனதருமை நாட்டு மக்களே, ஜூன் மாதம் 5ஆம் தேதி, மாதத்தின் முதல் திங்கட்கிழமை. மேலோட்டமாகப் பார்த்தால் இது வாடிக்கையானதாகத் தெரிந்தாலும், ஜூன் மாதம் 5ஆம் தேதி சிறப்பான நாள் ஏனென்றால் “உலக சுற்றுச்சூழல் நாள்” என்ற முறையில் நாம் இதைக் கடைப்பிடிக்கிறோம், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை connecting people to nature, இயற்கையோடு மக்களை இணைப்போம் என்பதை மையக்கருத்தாக அறிவித்திருக்கிறது. அதாவது அடிப்படைகளை நோக்கிய பயணம் என்று கொள்ளலாம்; சரி, இயற்கையோடு இணைவது என்றால் என்ன? என்னைப் பொறுத்த மட்டில், நம்மை நாம் இணைத்துக் கொள்வது, நம்மோடு நாம் இணைவது என்பது தான். இயற்கையோடு இணைப்பை ஏற்படுத்துவது என்றால், சிறப்பான பூமியை உருவாக்குவது. இதை காந்தியடிகளை விடச் சிறப்பாக யாரால் வெளிப்படுத்த முடியும். காந்தியடிகள் ஒருமுறை கூறினார் – one must care about a world one will not see, நம்மால் பார்க்க முடியாத உலகத்தின் மீது அக்கறையாக இருப்பது அதாவது நம்மால் காண இயலாத உலகத்தைப் பற்றியும் அக்கறை காட்டுவது, அதனிடம் கரிசனத்தோடு இருப்பது நமது கடமை என்றார். இயற்கைக்கு என வல்லமை உண்டு என்பதை நீங்களே கூட அனுபவித்து உணர்ந்திருக்கலாம்; சிலவேளைகளில் நீங்கள் மிகுந்த களைப்போடு வந்திருப்பீர்கள், அப்போது நீரை வாரி எடுத்து உங்கள் முகத்தில் தெளித்துக் கொண்டால், எத்தகைய ஒரு புத்துணர்ச்சியை அடைந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்!! அதே போல சில வேளைகளில் நீங்கள் அயர்ந்த நிலையில் வீடு திரும்பும் போது, அறையின் சாளரங்களையும் வாயிற்கதவுகளையும் திறந்து வைத்து, சுத்தமான காற்றை ஆழமாக உள்ளிழுக்கும் போது புதிய விழிப்பு உண்டாகும். எந்த பஞ்ச பூதங்களால் நம் உடல் உருவாக்கம் பெற்றிருக்கிறதோ, அது பஞ்ச பூதங்களோடு தொடர்பு கொள்ளும் போது, புதிய சக்தி வெளிப்படுகிறது. இவை அனைத்தையும் நாம் அனுபவித்திருக்கிறோம், ஆனால் இது நம் மனங்களில் சரியாகப் பதிவு பெறாமல் போயிருக்கலாம், இவற்றை நாம் ஓரிழையில் இணைத்துப் பார்ப்பதில்லை. இதே போல எப்போதெல்லாம் இயற்கை நிலையோடு நமக்கு தொடர்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நமக்குள்ளே புதிய விழிப்பு ஊற்றெடுக்கிறது; ஆகையால் தான் ஜூன் மாதம் 5ஆம் தேதி இயற்கையோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் உலகம் தழுவிய இயக்கம் என்பது நம்மோடு நாம் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் இயக்கமாக ஆக வேண்டும். இயற்கையை நம் முன்னோர்கள் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்தார்கள், அதன் சில நன்மைகள் நமக்கு இன்று கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நாம் இயற்கையைப் பாதுகாத்தோமேயானால், நமக்குப் பின்வரும் சந்ததியினர் இதனால் பயன் அடைவர். பூமியையும் சுற்றுச்சூழலையும் சக்தியின் அடிப்படையாக வேதங்கள் காட்டியிருக்கின்றன. நம் வேதங்களில் இது நன்கு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றிய முழுமையான வழிகாட்டுதலை அதர்வண வேதம் நமக்கு ஒருவகையில் அளிக்கிறது, இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நூல். माता भूमि: पुत्रो अहम प्रुथिव्या: - மாதா பூமி: புத்ரோ அஹம் ப்ருதிவ்யா: என்பது நம் நாட்டில் நிலவும் வழக்கு. நம்மிடம் இருக்கும் தூய்மை பூமியின் காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது என்பது வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. பூமி நமது தாய், நாம் அவளின் மைந்தர்கள். பகவான் புத்தரைப் பற்றிப் பேசும் போது, ஒரு விஷயம் பளிச்சிடுகிறது. மகான் புத்தரின் பிறப்பு, அவருக்கு உதித்த ஞானம், அவரது மஹா-பரிநிர்வாணம், இவை மூன்றும் மரத்தின் அடியில் தான் நிகழ்ந்தன. நம் தேசத்திலும் பல பண்டிகைகள், பல வழிபாட்டு முறைகள் –கற்றவர்கள்-கற்காதவர்கள், நகரவாசிகள்-கிராமவாசிகள், பழங்குடியினர் சமூகம் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இயற்கை வழிபாடு, இயற்கையின்பால் நேசம் என்பது இயல்பான வாழ்கைமுறையாக அமைந்த ஒன்று. என்றாலும், நாம் இதை சமகாலச் சொற்களில், தற்காலக் கருத்துக்களோடு இணைத்துப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
மாநிலங்களிலிருந்து எனக்கு இப்போதெல்லாம் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் மழை வந்தவுடனேயே மரம்நடுதல் என்ற பெரிய இயக்கம் தொடங்கி விடுகிறது. கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன. பள்ளிக்கூடக் குழந்தைகளையும் இதில் இணைத்துக் கொள்கிறார்கள், சமூகசேவை அமைப்புகள் இதில் இணைகின்றன, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைகின்றன, அரசு தன் தரப்பில் முனைப்புக்களை மேற்கொள்கிறது. நாமும் கூட இந்த முறை இந்த மழைக்காலத்தில் மரம்நடுதல் பணிக்கு அதிக முக்கியத்துவமும், பங்களிப்பும் அளிக்க வேண்டும்.
என் இனிய நாட்டுமக்களே, ஜூன் மாதம் 21ஆம் தேதி என்பது உலகம் முழுக்க நன்கு அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாக ஆகி இருக்கிறது. உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகத்தார் அனைவரும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி மிகக் குறுகிய காலகட்டதிலேயே உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவியிருக்கிறது, இது உலக மக்களை இணைக்கிறது. ஒருபுறம் உலகில் பிரிவினைவாத சக்திகள் தங்களின் மோசமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை. யோகக்கலை வாயிலாக நம்மால் உலகை ஓரிழையில் இணைக்க முடியும். யோகம் என்பது எப்படி உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றை இணைக்கிறதோ, அதே போல யோகத்தால் உலகையும் இணைக்க இயலும். இன்று வாழ்க்கைமுறை காரணமாக, அவசரகதி காரணமாக, பெருகிவரும் பொறுப்புகள் காரணமாக, அழுத்தம் காரணமாக, வாழ்க்கை என்பதே பெருங்கடினமாகி விட்டது. சிறுவயதிலேயும் கூட இந்த நிலை ஏற்பட்டு விட்டதை நாம் காண்கிறோம். இணக்கமில்லா மருந்துகளை எடுத்துக் கொண்டு நாட்களைக் கடத்துவது என்ற காலகட்டத்தில் அழுத்தம் நீங்கிய வாழ்க்கையை வாழ யோகக்கலை நமக்கு பேருதவியாக இருக்கும். நலன், உடலுறுதி ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமருந்து யோகம். யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலால், மனதால், எண்ணங்களால், பழக்கங்களால் ஆரோக்கியம் நிறைந்த உள்ளார்ந்த பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது – அப்படிப்பட்ட உள்ளார்ந்த பயணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், அது யோகக்கலை மூலம் மட்டுமே சாத்தியமாகும். இரண்டு நாள்கள் முன்பாக யோகக்கலை நாளை முன்னிட்டு உலகின் அனைத்து அரசுகளுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நான் யோகக்கலை தொடர்பான சில போட்டிகளையும், சில பரிசுகளையும் அறிவித்திருந்தேன். மெல்ல மெல்ல இந்தத் திசையில் பணிகள் முன்னேறி வருகின்றன. எனக்கு ஆலோசனை அளிக்கப்பட்டிருக்கிறது, இந்த அடிப்படையான ஆலோசனை அளித்தவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் சுவாரசியமான விஷயம். வரவிருக்கும் 3வது சர்வதேச யோகக்கலை நாளை ஒட்டி குடும்பத்தின் 3 தலைமுறையினர் இணைந்து ஒன்றாக யோகப் பயிற்சி மேற்கொள்ளலாமே என்று என்னை கேட்டுக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, மகன் மகள் என 3 தலைமுறையினர் சேர்ந்து யோகப்பயிற்சி மேற்கொண்டு, அப்படி செய்யும் புகைப்படத்தை தரவேற்றம் செய்யலாம். நேற்று, இன்று நாளை என்ற வகையில் மங்களகரமான இணைவாக இது அமையும், யோகக்கலைக்கு புதிய பரிமாணம் கிட்டும். இந்த ஆலோசனை வழங்கியவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மகளுடன் செல்ஃபி என்ற இயக்கத்தை எப்படி நாம் முன்னர் நடத்தி, அது சுவாரசியமான அனுபவமாக அமைந்ததோ, அதே போல இணைந்து யோகம் செய்யும் 3 தலைமுறையினரைப் படம் பிடியுங்கள், இது நாட்டுக்கும், உலகுக்கும் ஆர்வத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் அவசியம் NarendraModiAppஇல், MyGovஇல் 3 தலைமுறையினர் எங்கெல்லாம் யோகம் செய்கிறார்களோ, அந்த தலைமுறையினரை ஒன்றாகப் படம்பிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நேற்று, இன்று, நாளையின் படமாக இது அமையும். இது ஒளிமயமான எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தை அளிக்கும். உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். சர்வதேச யோகக்கலை நாளுக்கு இன்னும் 3 வாரகாலம் இருக்கும் நிலையில், இன்றிலிருந்தே பயிற்சியைத் தொடக்கி விடுங்கள். ஜூன் மாதம் 1ஆம் தேதி முதற்கொண்டே நான் டுவிட்டரில் தினமும் யோகக்கலை தொடர்பான செய்திகள் ஏதாவது இட்டுக் கொண்டே இருப்பேன், இது ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை தொடரும். நீங்கள் அனுப்புவதையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்குக்கு யோகம் தொடர்பான விஷயங்களைப் பகிருங்கள், பரப்புங்கள், மக்களை இணையுங்கள். ஒரு வகையில் இது வருமுன் காக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இயக்கம். நீங்கள் அனைவரும் இதில் இணைய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
என்று நீங்கள் எனக்கு பிரதான சேவகன் பணியை ஆற்றும் பொறுப்பை அளித்தீர்களோ? புது தில்லியின் செங்கோட்டையின் மீதிருந்து நான் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று எப்போது உங்கள் மத்தியில் உரையாற்ற எனக்கு முதல் வாய்ப்பு கிட்டியதோ? அப்போதே நான் தூய்மை பற்றிப் பேசினேன். அன்று தொடங்கி நான் பாரதம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். மோடி எங்கு செல்கிறார்? மோடி என்னவெல்லாம் செய்தார்? என மிக உன்னிப்பாக சிலர் கவனிப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு சுவாரசியமான தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது, அதில் கூறப்பட்ட விஷயம் பற்றிய கண்ணோட்டத்தில் நான் யோசித்ததில்லை. ஆனால் அப்படிப்பட்ட மாறுபட்ட கண்ணோட்டத்தை எனக்கு ஏற்படுத்தியதற்கு என் நன்றிகள். இந்த தொலைபேசி அழைப்பு உங்களுக்கும் அப்படி ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
“வணக்கம் மோடி அவர்களே, நான் மும்பையிலிருந்து நைனா பேசுகிறேன். மோடிஜி நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ, அங்கிருக்கும் மக்கள் எல்லாம் தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் இப்போதெல்லாம் நான் அடிக்கடி பார்க்கிறேன். மும்பையாகட்டும், சூரத் ஆகட்டும், உங்கள் அழைப்புக்கு செவிசாய்த்து மக்கள் சமூகமாக, தூய்மையை இயக்கமாகவே உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் ஒருபுறம் என்றால், குழந்தைகள் மத்தியிலும் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பலமுறை அவர்கள் பெரியவர்கள் தெருக்களில் அசுத்தப்படுத்துவதை தட்டிக்கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். காசியின் படித்துறைகளில் நீங்கள் தூய்மை தொடர்பான இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர், உங்களிடமிருந்து உத்வேகம் அடைந்து அது பேரியக்கமாகவே வடிவெடுத்து விட்டது.”
நீங்கள் கூறுவது சரி தான், நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் அரசு இயந்திரம் தூய்மைப்பணியை மேற்கொள்கிறது, ஆனால் இப்போதெல்லாம் சமூகமட்டத்திலேயே கூட தூய்மை கொண்டாட்டமாகவே ஆகி வருகிறது. நான் செல்வதற்கு 5 நாட்கள், 7 நாட்கள், 10 நாட்கள் முன்பாக என, கணிசமான அளவு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ஊடகங்களும் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாக நான் குஜராத்தின் கட்ச் பகுதிக்குச் சென்றிருந்தேன். மிகப்பெரிய அளவில் தூய்மை இயக்கம் அங்கே நடைபெற்றது. இதை நான் இணைத்துப் பார்க்கவில்லை, ஆனால் இந்த தொலைபேசி அழைப்பு எனக்கு வந்த பிறகு தான், ஆமாம் இந்த விஷயம் சரி தானே என்று எனக்கு உதித்தது. நாடு எந்த அளவுக்கு இத்தனை சிறப்பாக, உன்னிப்பாக கவனிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் போது எத்தனை ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா!! இதை விடப் பெரிய மகிழ்ச்சி, என் பயணத்தோடு தூய்மை இணைக்கப்படுகிறது என்பது தான். பிரதம மந்திரியை வரவேற்க மற்ற தயாரிப்பு முஸ்தீபுகள் எல்லாம் நடப்பது சகஜம், ஆனால் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அலாதியான மகிழ்ச்சி அளிக்கிறது. இது தூய்மையை விரும்பும் யாருக்குமே ஒரு ஆனந்தம் அளிக்கக் கூடியது தான், கருத்தூக்கம் அளிக்கக் கூடியது தான். தூய்மைப் பணிக்கு வலுகூட்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனை வழங்கி இருக்கிறார். உள்ளபடியே இது நகைச்சுவை மிகுந்த ஆலோசனை தான். இதை நிறைவேற்ற முடியுமா முடியாதா என்று என்னால் கூற முடியவில்லை. மோடி அவர்களே, உங்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வருபவர்களிடம், நீங்கள் என்னை அழைக்க விரும்பினால், தூய்மை எப்படி இருக்கும்? எத்தனை டன் குப்பைக் கூளங்களை நீங்கள் எனக்கு அளிப்பீர்கள்? அதன் அடிப்படையில் தான் என்னால் என் பயணத்தை உறுதி செய்ய இயலும் என்று கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறார் அழைத்தவர். கருத்து என்னவோ நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் இதைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். ஓர் இயக்கம் உருவாக வேண்டும் என்பது என்னவோ சரிதான், பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதை விட, இத்தனை டன்கள் குப்பைக் கூளங்களை நான் அகற்றுவேன் என்பது சிறப்பானது தான். இதன் மூலம் எவ்வளவு பேர்கள் நோய்வாய்ப்படாமல் நாம் காப்பாற்ற முடியும், சிந்தியுங்கள். எத்தனை மனிதநேயம் மிக்க செயலாக இது இருக்கும், யோசியுங்கள். ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூறுகிறேன், இந்தக் குப்பைக் கூளங்கள் இருக்கிறதே இதை நாம் கழிவுகளாகப் பார்க்கக் கூடாது, செல்வமாகக் கருத வேண்டும், இவை ஒரு ஆதாரம். ஒருமுறை நாம் குப்பைக் கூளங்களை செல்வமாகக் கருத முற்பட்டு விட்டால், கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான பல புதுப்புது வழிமுறைகள் நம் முன்னே தோன்றத் தொடங்கும். Start-upஇல் இணைந்திருக்கும் இளைஞர்கள் கூட புதிய புதிய திட்டங்களை முன்னெடுத்து வருவார்கள். புதிய புதிய கருவிகளைப் படைப்பார்கள்.
பாரத அரசு மாநில அரசுகளின் துணை கொண்டு நகரப் பிரதிநிதிகள் உதவியோடு, கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான ஒரு மிகப்பெரிய மகத்துவம் நிறைந்த இயக்கம் நடத்த முடிவு செய்திருக்கிறது. ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளன்று நாட்டின் சுமார் 4000 நகரங்களில் திடக்கழிவு, திரவக்கழிவு ஆகியவற்றை சேகரிக்கத் தேவையான பொருள்கள் கிடைக்கவிருக்கின்றன. இருவகையான குப்பைத்தொட்டிகள் அளிக்கப்படவிருக்கின்றன, ஒன்று பச்சை நிறத்தில், இரண்டாவது நீல நிறத்தில். இருவகையான கழிவுப்பொருட்கள் வெளிப்படுகின்றன – ஒன்று திரவக் கழிவு, மற்றது உலர் கழிவு. நாம் ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டும், 4000 நகரங்களில், இந்தக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவிருக்கின்றன. உலர் கழிவை நீலநிறத் தொட்டியில் போட வேண்டும், திரவக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் இட வேண்டும். சமையலறைக் கழிவுகள் போன்றவற்றில் காய்கறிகளில் தேவையற்றவை, மிச்சமீதி உணவு, முட்டையோடுகள், மரங்களின் இலைதழைகள் போன்றவை அனைத்தும் மக்கும் கழிவுகள், இவற்றை பச்சைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இவையனைத்தும் வயல்களில் பேருதவியாக இருக்கும். நாம் வயல்வெளிகளின் நிறமான பசுமையை நினைவில் கொண்டால், பச்சைக் குப்பைத் தொட்டிகளில் எதைப் போட வேண்டும் என்பது நினைவுக்கு வந்து விடும். இரண்டாவது வகை குப்பை இருக்கிறதே, அது காகிதக் குப்பைகள், அட்டைப் பெட்டிகள், இரும்புச் சாமான்கள், கண்ணாடித் துண்டுகள், துணிகள், பிளாஸ்டிக், பாலித்தீன், உடைந்து போன டப்பாக்கள், ரப்பர் பொருட்கள், உலோகங்கள் என பல பொருட்கள் இதில் அடங்கும் – இவையனைத்தையும் உலர்ந்த குப்பைகளுக்கான தொட்டியில் இட வேண்டும். இவை மீண்டும் இயந்திரங்களில் இட்டு மறுசுழற்சி செய்யப்படும். எவற்றால் மீண்டும் எந்தப் பயனும் ஏற்படாதோ, அவற்றை நீலநிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இப்படிப்பட்ட நல்ல பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தூய்மையை நோக்கி ஒவ்வொரு முறையும் நாம் ஓர் புதிய அடியை எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் நாம் காந்தியடிகளின் தூய்மை பற்றிய கனவை முழுமையாக நிறைவேற்ற முடியும். இன்று நான் மிக்க பெருமிதம் பொங்க ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் – ஒரே ஒரு மனிதன் மனதில் உறுதி பூண்டு விட்டானேயானால், அது எத்தனை பெரிய மக்கள் இயக்கமாக மாற முடியும் என்பது தான் அது. தூய்மை பற்றிய பணியும் அப்படிப்பட்டது தான். சில நாட்கள் முன்பாக ஒரு விஷயம் காதில் வந்து விழுந்தது. மும்பையில் அசுத்தமான கடற்கரை என்று கருதப்படும் வெர்சோவா பீச் இன்று சுத்தமான, அழகான கடற்கரையாக மாறி இருக்கிறது. இது திடீரென ஏற்பட்டது அல்ல. சுமார் 80-90 வாரங்கள் வரை குடிமக்கள் இடையறாது முயற்சிகள் மேற்கொண்டு, வெர்சோவா கடற்கரையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் குப்பை கூளங்கள் அகற்றப்பட்ட பிறகு, வெர்சோவா கடற்கரை தூய்மையும் அழகும் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இதற்கான ஒட்டுமொத்த பொறுப்பையும், வெர்சோவா குடியிருப்பு தன்னார்வலர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அஃப்ரோஸ் ஷா என்ற ஒரு நல்ல மனிதர் அக்டோபர் மாதம் 2015ஆம் ஆண்டு முதல் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மெல்ல மெல்ல இது வளர்ந்து மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்தப் பணிக்காக அஃப்ரோஸ் ஷா அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் – UNEP, மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது. Champions of the Earth என்ற விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர் தான். நான் அஃப்ரோஸ் ஷா அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி அவர் தன் பகுதியில் உள்ள அனைவரையும் இணைத்து, மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார் பாருங்கள்!! இது அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கக் கூடிய அருமையான எடுத்துக்காட்டு.
சகோதர சகோதரிகளே, இன்று நான் மேலும் சந்தோஷமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘தூய்மையான பாரதம் இயக்கம்’ தொடர்பாக ஜம்மு காஷ்மீரத்தைச் சேர்ந்த ‘ரியாஸீ ப்ளாக்’ பகுதி, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நான் ரியாசீ ப்ளாக் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் குடிமக்களுக்கும், அந்தப் பகுதியைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்றும், விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் தீப்பந்த ஊர்வலங்களை மேற்கொண்டார்கள் என்றும் எனக்கு கூறப்பட்டிருக்கிறது. வீடுதோறும், தெருக்கள்தோறும் சென்று, மக்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்தார்கள். அந்தத் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் என் இதயபூர்வமான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அங்கே இருக்கும் நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நல்ல தொடக்கத்தை அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
என் பிரியமான நாட்டுமக்களே, கடந்த 15 நாட்களாகவும், மாதங்களாகவும், தொடர்ந்து செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும், நடப்பு அரசின் 3 ஆண்டுகால செயல்பாடுகள் பற்றி கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன, விவாதங்களும் பகுப்பாய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 3 ஆண்டுகள் முன்பாக நீங்கள் எனக்கு பிரதான சேவகன் என்ற பொறுப்பை அளித்தீர்கள். ஏகப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, ஏராளமான கருத்துக் கணிப்புக்கள் வந்திருக்கின்றன. நான் இவற்றையெல்லாம் மிகவும் ஆரோக்கியமான அறிகுறிகளாகவே காண்கிறேன். கடந்த 3 ஆண்டுக்காலம் ஒவ்வொரு உரைகல்லிலும் உரைத்துப் பார்க்கப்பட்டது. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இருக்கும் மக்களும் இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். மக்களாட்சி முறையில் இது சிறப்பான செயல்பாடாகும். மக்களாட்சியில் அரசுகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பது என் தெளிவான, ஆணித்தரமான கருத்து, மகேசர்களான மக்களிடம், ஆற்றிய பணிக்கான கணக்கை சமர்ப்பித்தே ஆக வேண்டும். நேரம் செலவிட்டு, எங்கள் பணியை ஆழமாக அலசி ஆராய்ந்து, ஆலோசனைகள் கூறி, ஆதரித்து, குறைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன், இந்த விஷயங்களை நான் மிகுந்த மகத்துவம் நிறைந்தவையாக மதிக்கிறேன். கருத்தில் கொள்ளத்தக்க முக்கியமான பின்னூட்டங்களை அளித்தவர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னென்ன குற்றம்குறைகள் இருக்கின்றனவோ, அவை வெளிப்படுத்தப்படும் போது தான், சீர்செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. செயல்பாடு நன்றாக இருக்கலாம், குறைவான நன்மைகள் பயக்கலாம், மோசமாக இருக்கலாம், எப்படி இருந்தாலும், அவற்றிலிருந்து கற்க வேண்டும், இதன் வாயிலாகத் தான் முன்னேற்றம் காண முடியும். ஆக்கபூர்வமான விமர்சனம் மக்களாட்சி முறைக்கு வலு சேர்க்கிறது. விழிப்புணர்வுமிக்க நாட்டுக்கு, பகுத்தறிவு நிறைந்த தேசத்துக்கு, இந்த அலசலும் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
என் நேசம்நிறை நாட்டுமக்களே, நானும் உங்களைப் போன்ற சாதாரண குடிமகன் தான், சாதாரண குடிமகன் என்ற முறையில் நல்லவை கெட்டவை என அனைத்தும், எந்த எளிய குடிமகனையும் பாதிப்பதைப் போலவே, என்னையும் பாதிக்கின்றன. ‘மனதின் குரலை’ சிலர் தரப்பு உரையாடலாகப் பார்க்கிறார்கள், சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள். ஆனால் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி, பாரதத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக என்னை மாற்றும் என்று நான் இதைத் தொடங்கிய போது உள்ளபடி நினைத்துக் கூட பார்க்கவில்லை, இதை மிக நீண்ட அனுபவத்திற்குப் பிறகு நான் உணர்கிறேன். ஏதோ குடும்பத்தின் மத்தியில், வீட்டில் அமர்ந்து கொண்டு, வீட்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதாகவே எனக்குப் படுகிறது. ஏராளமான குடும்பத்தவர்கள் என்னோடு இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எளிய மனிதன் என்ற முறையில், என் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை நான் பகிர்ந்து கொள்கிறேன். 2 நாட்கள் முன்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில், மேதகு குடியரசுத் தலைவர், மேதகு குடியரசுத் துணைத்தலைவர், மேதகு நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அனைவரும் ‘மனதின் குரல்’ பற்றிய பகுப்பாய்வு நூல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஒரு தனிநபர் என்ற முறையில், எளிய குடிமகன் என்ற முறையில், இந்த நிகழ்வு எனக்கு அதிக உற்சாகம் ஏற்படுத்திய ஒன்று. நான் குடியரசுத் தலைவருக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவர் அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன், இத்தனை உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம், தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, ’மனதின் குரலுக்கு’ முக்கியத்துவம் அளித்தார்கள். ஒரு வகையில் ‘மனதின் குரல்’ புதிய பரிமாணத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நமது நண்பர்கள் சிலர், ‘மனதின் குரல்’ புத்தகம் மீதான பணிகளில் ஈடுபட்டிருந்த போது, என்னுடன் சில சமயம் உரையாடினார்கள். சில காலம் கழித்து இதோடு தொடர்புடைய ஒரு விஷயம் பற்றி எனக்குத் தெரிய வந்த போது, நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அபுதாபியில் அக்பர் சாஹப் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு கலைஞர் வசிக்கிறார். அக்பர் சாஹப் ஒரு கருத்தை முன்வைத்தார் – ‘மனதின் குரலில்’ எந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்ளப்பட்டதோ, அவற்றிற்கான வரிவடிவத்தை தனது கலை வாயிலாக தயார் செய்து அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார், அதுவும் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல். தனது அன்பை வெளிப்படுத்தும் முறையில் அக்பர் சாஹப் மனதின் குரலுக்கு கலைவடிவம் அளித்தார். நான் அக்பர் சாஹபுக்கு கடன் பட்டிருக்கிறேன்.
என் பாசம்நிறை நாட்டுமக்களே, அடுத்த முறை நாம் சந்திக்கும் வேளையில் நாட்டின் அனைத்து இடங்களிலும் மழைக்காலம் வந்திருக்கும், பருவநிலை மாறி இருக்கும், தேர்வுகளின் முடிவுகள் வந்திருக்கும், மீண்டும் கல்வி கற்றல் தொடங்கி இருக்கும். மழை வந்தாலே புதிய மகிழ்வான சூழல், புதிய வாசம், புதிய மணம் தான். வாருங்கள் நாமனைவரும் இணைந்து இந்த சூழலில், இயற்கையை நேசித்து முன்னேறிச் செல்வோம். உங்கள் அனைவருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.
*****
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஒவ்வொரு மனதின் குரல் நிகழ்ச்சிக்கு முன்பாகவும், நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், மனதின் குரல் தொடர்பாக ஏராளமான ஆலோசனைகள் வந்து குவிகின்றன. ஆகாசவாணிக்கு எழுதுகிறார்கள், நரேந்திர மோடி செயலியில் பதிவிடுகின்றனர், மை கவ் (MyGov) இணையதளம் வாயிலாக ஆலோசனைகள் வருகின்றன. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் காலம் ஒதுக்கி அவற்றைப் பார்க்கிறேன், இது எனக்கு சுகமான அனுபவமாக இருக்கிறது. பன்முகத்தன்மை நிறைந்த ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. சாதகனைப் போல சமூகப் பணியில் பலர் ஈடுபட்டு அளவேயில்லாத பங்களிப்பை நல்கி வருகிறார்கள், அவர்கள் பணியாற்றும் துறைகளில் அரசின் பங்களிப்பு கூட இல்லாமல் இருக்கலாம், அந்த அளவு பிரச்சினைகளும் ஏராளமாக காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கு அரசு அமைப்புகளும், மக்களும் பழகிப் போயிருக்கலாம். குழந்தைகளின் எதிர்பார்ப்புக்களும், இளைஞர்களின் பேராவல்கள், பெரியோர்களின் அனுபவங்களின் ஆற்றல் என பலவகையான விஷயங்கள் கண்முன்னே வருகின்றது. ஒவ்வொரு முறையும் இத்தனை ஆற்றல்மிக்க உள்ளீடுகள் மனதின் குரலில் வருகின்றன, இவை பற்றி அரசு தரப்பில் விபரமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. ஆலோசனை எந்த மாதிரியானவை? புகார்கள் எந்த வகைப்பட்டவை? மக்களின் அனுபவம் என்ன? அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது என்பது மனிதர்களின் இயல்பாக இருக்கிறது என்பதை நாம் பொதுவாகப் பார்க்கலாம். ரயில் வண்டிகளில், பேருந்துகளில் நாம் பயணிக்கும் போது, யாருக்காவது இருமல் வந்து விட்டால் உடனே யாராவது ஒருவர் இப்படிச் செய்யுங்கள் என்று ஆலோசனைகள் அளிப்பது, அறிவுரை கூறுவது போன்றவை இங்கே நமது இயல்பாகவே அமைந்திருக்கிறது. தொடக்கத்தில் மனதின் குரலுக்கு ஆலோசனைகள் வந்த போது, அவற்றில் ஆலோசனைகள் என்ற சொல் காணப்பட்டது, பலருக்கு இது ஒரு பழக்கமாக இருக்கலாம் என்று தான் எங்கள் அணியைச் சார்ந்தவர்களுக்குப் பட்டது, ஆனால் நாங்கள் அதை அணுகிப் பார்க்க முயற்சித்த போது, உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன். அதிகப்படியான ஆலோசனைகள் அளிப்பவர்கள், என் காதுகளை எட்ட முயற்சி செய்பவர்கள் யாரென்று பார்த்தால், அவர்கள் தங்கள் வாழ்கையில் ஆக்கபூர்வமாக ஒன்றை செய்து கொண்டிருப்பவர்கள். தங்கள் பணிகளில் தங்கள் புத்தி, ஆற்றல், திறன் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சூழலுக்கு ஏற்ப ஈடுபட்டிருப்பவர்கள். இந்த விஷயங்கள் எல்லாம் என் கவனத்திற்கு வந்த போது இந்த ஆலோசனைகள் சாதாரணமானவை அல்ல என்று நான் உணர்ந்தேன். இவை பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடுகள். சிலரோ, ஒரு கருத்து சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால், அதைப் பற்றி மேலும் பலர் தெரிந்து கொள்ளலாமே, அதன் மூலம் அது மேலும் பரவுமே, இதனால் மேலும் பலருக்கு நலன்கள் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஆகையால் தான் மனதின் குரலில் தங்கள் கருத்துக்கள் இடம்பெற வேண்டும் என்ற இயல்பான ஆவல் அவர்கள் மனதில் இருக்கிறது. இவையனைத்துமே என் பார்வையில் ஆக்கபூர்வமானவை தாம். அதிகப்படியான ஆலோசனைகள் கர்மயோகிகளாக இருக்கும் செயல்வீரர்களிடமிருந்து தான் கிடைக்கப் பெறுகிறது, அவர்கள் மனதில் எப்போதும் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற பேராவல் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்ல, நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அதுபற்றி மக்களிடமிருந்து வரும் வெளிப்பாடுகள் மிகவும் ஆனந்தம் அளிப்பவையாக இருக்கின்றன. கடந்த மனதின் குரலில் உணவு வீணாவது பற்றி சிலர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள், இது தொடர்பாக தங்கள் கவலைகளை வெளியிட்டார்கள், அதை நானும் வெளிப்படுத்தியிருந்தேன். நான் சுட்டிக்காட்டிய பிறகு நரேந்திர மோடி செயலியில், மைகவ் (MyGov) இணையதளத்தில் எல்லாம் நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்து எல்லாம், உணவு வீணாகாமல் தடுக்கும் பொருட்டு புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு என்னவெல்லாம் செயல்களில் ஈடுபட்டார்கள் தெரியுமா? சிறப்பாக நம் நாட்டின் இளைய தலைமுறையினர், நீண்ட காலமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. சில சமூக அமைப்புகள் செய்து வருகின்றன என்பதை நாம் பல ஆண்டுகளாக அறிவோம், ஆனால் என் தேசத்தின் இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் – இது எனக்குப் பின்னர் தான் தெரிய வந்தது. பலர் எனக்கு வீடியோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ரொட்டி வங்கி நடத்தப்படுகின்றன. மக்கள் ரொட்டி வங்கியில், தங்கள் தரப்பிலிருந்து ரொட்டியை அளிக்கிறார்கள், காய்கறிகளை கொண்டு வந்து தருகிறார்கள், யாருக்குத் தேவையோ, அவர்கள் வந்து இவற்றைப் பெற்றுச் செல்கிறார்கள். அளிப்பவருக்கும் மகிழ்ச்சி, வாங்கிச் செல்பவரும் தங்களைத் தாழ்வாக நினைக்கத் தேவை இருப்பதில்லை. சமுதாயத்தில் ஒத்துழைப்போடு எப்படி செயல்படுவது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இன்று ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள். இன்றுடன் ஏப்ரல் மாதம் நிறைவுக்கு வருகிறது. குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களின் நிறுவன நாள் மே மாதத்தில் வருகிறது. இந்த வேளையில் இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த மக்களுக்கும் என் சார்பாக நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகள். இரு மாநிலங்களும் புதிய புதிய வளர்ச்சி சிகரங்களை எட்ட தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. இரு மாநிலங்களிலுமே தொடர்ந்து மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள், சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அவர்களின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறது. இந்த மகாபுருஷர்களை நினைவில் கொண்டு, மாநிலங்களின் உதய நாளன்று, 2022ஆம் ஆண்டு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் நாம் நமது மாநிலங்களை, நமது தேசத்தை, நமது சமூகத்தை, நமது நகரத்தை, நமது குடும்பத்தை எந்த நிலைக்கு உயர்த்துவது என்ற உறுதிப்பாட்டை நாம் மாநிலங்களின் உதய நாளன்று மேற்கொள்ள வேண்டும். அந்த உறுதிப்பாட்டை மெய்யாக்க திட்டங்கள் தீட்ட வேண்டும், அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்போடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நான் மீண்டும் இந்த இரு மாநில மக்களுக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் சூழல் மாற்றம் என்பது கல்வியாளர்கள், கருத்தரங்குகள் மட்டத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ, நமது அன்றாட வாழ்வில், நாம் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், திகைப்பு மேலிடுகிறது. இயற்கை, தனது ஆட்டத்தின் விதிமுறைகளை எல்லாம் மாற்றி அமைத்து விட்டது. நமது தேசத்தில் மே-ஜூன் மாதங்களில் நாம் காணும் வெப்பத்தை இந்த முறை மார்ச்-ஏப்ரல் மாதங்களிலேயே அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. மனதின் குரலுக்கு மக்களின் ஆலோசனைகளை நான் பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், அதிகப்படியான ஆலோசனைகள் வெப்பக்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியவையாக அமைந்திருந்தன. அனைத்து விஷயங்களும் அறியப்பட்டவை தான், புதியவை என்று இல்லை என்றாலும், சரியான வேளையில் அவற்றை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிரசாந்த் குமார் மிஸ்ரா, டி.எஸ். கார்த்திக் போன்ற பல நண்பர்கள் பறவைகள் பற்றிய தங்கள் கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பால்கனியில், மேல்மாடிகளில், தண்ணீர் வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். குடும்பத்தில் சின்னச்சின்ன பாலகர்கள் கூட இந்த விஷயத்தை சிறப்பாக செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பது அவர்கள் கருத்தில் பதிந்து விட்டால், அவர்கள் ஒரு நாளில் பத்து முறை, பாத்திரத்தில் நீர் இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருவார்கள். அது மட்டுமில்லாமல் பறவைகள் வந்து நீர் அருந்துகின்றனவா என்றும் கண்கொத்திப் பாம்பாக கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது ஏதோ ஒரு விளையாட்டுப் போல நமக்குத் தோன்றலாம், ஆனால் உண்மையில், அந்தப் பிஞ்சு மனங்களில் கருணையின் அற்புதமான அனுபவம் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. பறவைகள்-விலங்குகளோடு சற்றாவது ஈடுபாடு ஏற்பட்டு விட்டால் புதிய ஆனந்தம் உங்கள் மனங்களில் துளிர்ப்பதை நீங்களே கூட கண்டு உணரலாம்.
சில நாட்கள் முன்பாக குஜராத்தைச் சேர்ந்த ஜகத் பாய் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார், Save the Sparrows என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில் அவர் குறைந்து வரும் குருவிகள் எண்ணிக்கை குறித்துத் தன் கவலையை வெளிப்படுத்தி இருந்தார். அதே வேளையில் மனமொருமித்த சிந்தையோடு அவற்றைக் காக்க என்ன என்ன முயற்சிகளை மேற்கொண்டார், என்ன மாதிரியான வழிமுறைகளைக் கையாண்டார் என்பது பற்றியெல்லாம் அருமையாக அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தார். நம் நாட்டில் பறவைகள்-விலங்குகள், இயற்கை இவற்றுடனான இசைவான வாழ்க்கை ஆகியன இயல்பாக அமைந்தவை, நம் நாடி நரம்புகளில் கலந்தவை; ஆனால் அதே வேளையில் சமுதாய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது முக்கியம். நான் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வேளையில் ‘தாவூதி போஹ்ரா சமுதாயத்தின்’ தர்மகுரு சையத்னா சாஹிபுக்கு 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர் 103 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார். அவருக்கு 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புர்ஹானி அறக்கட்டளை வாயிலாக, குருவிகளைக் காப்பதற்காக மிகப் பெரிய இயக்கத்தை நடத்தினார்கள். இதைத் தொடக்கி வைக்கும் பேறு எனக்குக் கிட்டியது. சுமார் 52000 பறவைகளுக்கு தானியம் ஊட்டிகள் / பறவைகளுக்கு உணவளிக்கும் கருவிகளை அவர்கள் உலகின் மூலை முடுக்கெங்கும் விநியோகம் செய்தார்கள். கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் கூட இதற்கு இடம் கிடைத்தது.
சில வேளைகளில் நாம் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கிறோம் என்றால், பால்காரர், காய்கறி விற்பனை செய்பவர், தபால்காரர் என யார் நமது வீட்டு வாயிலில் வந்தாலும், இந்தக் கோடை வெப்பத்தில் குடிக்க ஒரு வாய் நீர் அருந்துகிறீர்களா என்று கேட்க கூட நாம் மறந்து போகிறோம்.
என் இளைய நண்பர்களே, சில விஷயங்களை நான் உங்களுடனும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். சில வேளைகளில் நமது இளைய தலைமுறையினரில் பலர் வசதியான இடத்தில், சொகுசு வட்டத்தில் வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள் என்பது எனக்கு சில வேளைகளில் கவலையை அளிக்கிறது. தாய் தந்தையர் அவர்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பேணி வளர்க்கிறார்கள். இப்படி ஒரு ரகம் என்றால் இன்னொரு ரகத்தினரும் இருக்கிறார்கள், ஆனால் அதிகம் பேர்கள் சொகுசு வட்டத்திலேயே இருக்கிறார்கள். இப்போது தேர்வுகள் முடிந்திருக்கின்றன. விடுமுறைகளைக் கழிக்க நீங்கள் திட்டங்களைத் தீட்டியிருப்பீர்கள். வெப்பம் நீங்கிய பிறகு கோடை விடுமுறை தான் சற்று இனிமையாக இருக்கும். ஆனால் உங்கள் நண்பன் என்ற முறையில் விடுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலர் இதைக் கண்டிப்பாக செயல்படுத்துவீர்கள், என்னிடம் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் விடுமுறைக் காலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள நான் 3 ஆலோசனைகளை அளிக்கிறேன், அவற்றில் மூன்றையுமே நீங்கள் செயல்படுத்தினால் சிறப்பு, ஆனால் அவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்ய முயலுங்களேன். ஒரு புதிய அனுபவத்தைப் பெறுங்கள், முயன்று ஒரு புதிய திறனை அடையுங்கள், யாருமே கேள்விப்படாத, பார்க்காத, எண்ணியிராத, தெரிந்திராத ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்து சென்று வாருங்கள். புதிய இடங்கள், புதிய அனுபவங்கள், புதிய திறன்கள் கிடைக்கும். ஒரு விஷயத்தை டிவியில் பார்ப்பது அல்லது புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வது அந்த விஷயத்தைத் தானே அனுபவித்து உணர்வது ஆகியவற்றுக்கு இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான வேறுபாடு இருக்கும். இந்த விடுமுறைக்காலத்தில் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, எதை அறிந்து கொள்ள முயல்கிறீர்களோ, ஒரு புதிய பரிசோதனையாக அதைச் செய்து பாருங்கள். பரிசோதனை ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும், உங்கள் சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். நாம் மத்தியத்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சுகமான குடும்பத்தவர்கள். ஆனால் முன்பதிவு செய்யாமல் ரயிலில் 2ஆம் வகுப்புச் சீட்டு எடுத்து ஏறிச் செல்லுங்கள், குறைந்தது 24 மணி நேரமாவது பயணம் மேற்கொள்ளுங்கள். என்ன அனுபவம் கிடைக்கிறது என்று பாருங்கள். அந்தப் பயணிகள் என்ன பேசிக் கொள்கிறார்கள், அவர்கள் ரயில் நிலையங்களில் இறங்கி என்ன செய்கிறார்கள், ஆண்டு முழுவதும் உங்களால் கற்க முடியாததை நீங்கள் 24 மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத, கூட்ட நெரிசல் மிகுந்த ரயிலில் தூங்கக் கூட முடியாத நிலையில், நின்று கொண்டே பயணிக்கும் அனுபவம் மூலமாக நீங்கள் பெறுவீர்கள். ஒருமுறை அனுபவித்துத் தான் பாருங்களேன்! இப்படி மீண்டும் மீண்டும் செய்யுங்கள் என்று நான் கூறவில்லை, ஒன்றிரண்டு முறையாவது செய்து பாருங்கள். மாலை நேரத்தில் உங்கள் கால்பந்தையோ, கூடைப்பந்தையோ எடுத்துக் கொண்டு அல்லது வேறு விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் பரம ஏழைகளின் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கிருக்கும் ஏழைக் குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள், இதுவரை உங்கள் வாழ்கையில் விளையாடும் போது கிடைத்திராத ஆனந்தம் அப்போது உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் உணர்வீர்கள். சமுதாயத்தில் இப்படி ஏழ்மையில் உழலும் பிள்ளைகளுக்கு உங்களோடு விளையாடும் ஆனந்தம் கிடைக்கும் போது, அவர்கள் வாழ்கையில் எத்தனை பெரிய மாறுதல் ஏற்படும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா? நீங்கள் ஒருமுறை சென்றால், மீண்டும் மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என்று உங்கள் மனம் ஆசைப்படும். இந்த அனுபவம் உங்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும். பல தன்னார்வு அமைப்புகள் சேவையில் ஈடுபடுகின்றன. நீங்கள் கூகுள் குருவோடு உங்களை இணைத்துக் கொண்டு தேடுங்கள். ஏதோ ஒரு அமைப்போடு 15 நாட்கள், 20 நாட்கள் என உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில் கோடை முகாம் நடத்தப்படும், ஆளுமை வளர்ச்சி முகாம் நடத்தப்படும், பலவகையான ஆக்கபூர்வமான முகாம்கள் நடத்தப்படும், அவற்றோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட முகாம்களில் கலந்து கொண்டு நீங்கள் தேர்ச்சி பெற்ற பிறகு, இலவசமாக, ஒரு சேவையாக நீங்கள் கற்றுக் கொண்டவற்றை, இவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏதும் இல்லாத ஏழைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். தொழில்நுட்பம் என்பது தூரங்களைக் குறைக்கவும், எல்லைகளைத் தகர்க்கவும் ஏற்பட்டன என்று கருதினாலும், இவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் என் மனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது. ஒரே வீட்டில் 6 பேர் ஒரே அறையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இடையிலான தொலைவு பற்றிக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஏன்? ஒவ்வொருவரும் தொழில்நுட்பம் காரணமாக அமிழ்ந்து போயிருக்கிறார்கள். சமூக இயல்பு என்பது ஒரு நல்ல விழுமியம், சமூக இயல்பு ஒரு ஆற்றல். நான் தெரிவித்த இன்னொரு விஷயம் திறன்கள் பற்றியது. ஏதாவது புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்கள் மனம் விரும்பவில்லையா? இது போட்டிகள் நிறைந்த உலகம். தேர்வுகளில் நாம் தோய்ந்து போயிருக்கிறோம். மிகச்சிறப்பான மதிப்பெண்களைப் பெற நாம் முனைந்திருக்கிறொம். விடுமுறைக்காலத்திலும் கூட சிலர் பயிற்சி வகுப்புக்களுக்குச் செல்கிறார்கள், அடுத்த தேர்வு பற்றிய கவலை அரித்துக் கொண்டிருக்கிறது. சில வேளைகளில் நமது இளைய தலைமுறை ரோபோவாக மாறி வருகிறதோ என்ற அச்சம் கூட ஏற்படுகிறது. இயந்திர வாழ்கையையா வாழ்கிறது நமது இளைய தலைமுறை?
நண்பர்களே, வாழ்கையில் உயர நாம் காணும் கனவுகள் எல்லாம் நல்ல விஷயங்கள் தாம். ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லது தான், அப்படி சாதித்தும் காட்ட வேண்டும். ஆனால் நமக்குள்ளே இருக்கும் மனிதக் கூறுகளை நாம் குறுக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நமது மனிதத்துவத்தை விட்டு நாம் விலகிச் சென்று விடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். திறன் மேம்பாடு என்பதன் மீது நாம் சற்று கவனம் செலுத்த முடியாதா என்ன? தொழில்நுட்பத்திலிருந்து சற்று விலகி, நம்முடன் நாம் நேரத்தை செலவு செய்யும் முயற்சி. இசைக்கருவி ஏதோ ஒன்றை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், ஏதோ ஒரு புதிய மொழியின் 5 முதல் 50 வாக்கியங்கள் வரை கற்கலாம், அது தமிழோ, தெலுங்கோ, அசாமியாவோ, வங்காளமோ, மலையாளமோ, குஜராத்தியோ, மராட்டியோ, பஞ்சாபியோ, ஏதோ ஒரு மொழியாகட்டும். பன்முகத்தன்மை நிறைந்தது நம் நாடு, நாம் நம் பார்வையை சுற்றும்முற்றும் திருப்பினால், கற்றுக் கொடுக்க யாராவது கிடைப்பார்கள். நீச்சல் தெரியவில்லை என்றால் நீச்சல் கற்றுக் கொள்ளலாம், ஓவியம் வரையக் கற்கலாம், மிகச் சிறப்பாக வரைய வராமல் போகலாம், ஆனால் காகிதத்தில் மைதீட்டக் கற்கலாமே! உங்கள் உள்ளத்தில் உள்ள உணர்வுகள் அதில் பிரதிபலிக்கத் தொடங்கும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட, நாம் ஏன் கற்க கூடாது? கற்றுக் கொள்ளலாமே என்று தோன்றும். நீங்கள் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? ஆட்டோ ரிக்ஷா ஓட்ட மனம் விரும்புகிறதா? ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கலாம், ஆனால் 3 சக்கர சைக்கிளை ஓட்ட முயற்சி செய்யுங்கள். இந்த அனைத்துத் திறன்களும், இந்தச் செயல்பாடுகளும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதை நீங்கள் உணர்வீர்கள், அது மட்டுமில்லாமல் உங்களை ஒரு சார்பாகக் கட்டி வைத்திருந்த கட்டுக்கள் விலகும். வித்தியாசமாக எதையாவது செய்யுங்கள் நண்பர்களே! உங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்ள இது தான் உங்களின் வாய்ப்பு. அனைத்துத் தேர்வுகளும் முடிந்த பிறகு, உங்கள் தொழிலில் புதிய ஒரு நிலைக்கு வந்த பிறகு இதை எல்லாம் நான் கற்பேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்று சொன்னால், அந்த வாய்ப்பு உங்களுக்கு கிட்டவே கிட்டாது. அப்போது நீங்கள் வேறு ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்ள நேரலாம், ஆகையால் தான் நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவென்றால், மேஜிக் கற்றுக் கொள்ளும் நாட்டம் இருக்கிறதா, சீட்டுக்கட்டு மேஜிக்கை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களிடத்தில் இதைச் செய்து காட்டி மகிழுங்கள். உங்களுக்குத் தெரியாத ஏதாவது ஒன்று இருந்தால், அதைக் கற்றுக் கொள்ள முயலுங்கள், இதனால் உங்களுக்கு கண்டிப்பாக நன்மையே ஏற்படும். உங்களுக்குள்ளே இருக்கும் ஆக்கபூர்வமான ஆற்றல்களை விழித்தெழச் செய்யுங்கள். இது வளர்ச்சிக்கான அருமையான தளம் அமைத்துக் கொடுக்கும். என் அனுபவத்தில் நான் கண்டுணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே, உலகில் நாம் கற்றுப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனை இருக்கின்றன என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. புதிய புதிய இடங்கள், புதிய புதிய நகரங்கள், புதிய புதிய கிராமங்கள், புதிய புதிய வட்டாரங்கள் என ஏராளம் இருக்கின்றன. ஆனால் அங்கே செல்லும் முன்பாக, நீங்கள் எங்கே செல்கிறீர்கள் அதைப் பற்றித் தெரிந்து கொண்டு, கற்றுக் கொள்ளும் ஆவலோடு சென்று பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், மக்களோடு கலந்துரையாடுங்கள், உறவாடுங்கள், இந்த முயற்சியில் ஈடுபடும் போது கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்; அதிகம் பயணிக்க நினைக்காதீர்கள். ஓரிடம் சென்று அங்கே 3-4 நாட்கள் செலவிடுங்கள், பிறகு அடுத்த இடம் சென்று அங்கே 3-4 நாட்கள் செலவு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் கிடைக்கும். நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய படங்களை எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அங்கே புதியதாக என்ன பார்த்தீர்கள், எங்கே சென்றீர்கள் என்பது பற்றியெல்லாம் நீங்கள் #Incredible_India என்பதைப் பயன்படுத்தி இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே, இந்த முறை பாரத அரசும் உங்களுக்கு மிக அருமையான வாய்ப்பை அளித்திருக்கிறது. புதிய தலைமுறையினர் கிட்டத்தட்ட ரொக்கப் பரிவர்த்தனையை விடுத்திருக்கிறார்கள். அவர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் என்னவோ இதில் ஈடுபடுகிறீர்கள் ஆனால் இந்தத் திட்டத்தின் மூலமாக நீங்கள் சம்பாதிக்கவும் முடியும். பாரத அரசின் ஒரு திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் BHIM App, அதாவது பீம் செயலியை தரவிறக்கம் செய்திருப்பீர்கள், அதைப் பயன்படுத்தியும் வருவீர்கள். ஆனால் வேறு ஒருவருக்கு இதை பரிந்துரை செய்யலாம். மற்றவர்களை இதனோடு நீங்கள் இணைக்கலாம், அந்தப் புதிய நபர் 3 பரிவர்த்தனைகளை இதன் மூலம் செய்தால், இதற்காக உங்களுக்கு 10 ரூபாய் வருமானம் கிடைக்கும். உங்கள் கணக்கில் அரசு தரப்பில் 10 ரூபாய் சேர்க்கப்படும். ஒரு நாளில் நீங்கள் 20 பேர்களை இதில் சேர்த்தீர்கள் என்று சொன்னால், மாலைக்குள்ளாக உங்கள் இருப்பில் 200 ரூபாய் வரவில் வைக்கப்படும். வியாபாரிகளும் இதன் மூலம் சம்பாதிக்கலாம், மாணவர்களும் இதன் மூலம் வருமானம் காணலாம். இந்தத் திட்டம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வரை இருக்கும். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நீங்கள் உங்கள் பங்களிப்பை நல்குங்கள். புதிய இந்தியாவின் காப்பாளர்கள் நீங்கள். விடுமுறைக்கு விடுமுறையும் ஆயிற்று, சம்பாத்தியத்திற்கு சம்பாத்தியம். பரிந்துரை செய்வேன், பணம் சம்பாதிப்பேன். இந்த முழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.
பொதுவாக நமது தேசத்தில் வி.ஐ.பி. கலாச்சாரத்துக்கு எதிராக வெறுப்பு நிறைந்த ஒரு சூழல் நிலவினாலும், இந்தக் கலாச்சாரம் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறது என்பது எனக்கு இப்போது தான் விளங்கியது. என்னதான் முக்கியஸ்தராக இருந்தாலும், இந்தியாவில் அவரது வண்டியில் சிவப்பு விளக்கைப் போட்டுக் கொண்டு வலம் வரக் கூடாது என்று அரசு தீர்மானித்து ஆணை பிறப்பித்திருக்கிறது. இது ஒரு வகையான வி.ஐ.பி. கலாச்சாரத்தின் அடையாளமாகி விட்டது, ஆனால் சிவப்பு விளக்கு வாகனத்தில் இருந்தாலும், மெல்ல மெல்ல இது மூளையில் இறங்கி, வி.ஐ.பி. கலாச்சாரம் புரையோடி விட்டிருக்கிறது. இப்போது சிவப்பு விளக்கு முடிந்த ஒன்றாகி விட்டது என்றாலும், மூளையில் புரையோடிப் போயிருக்கும் சிவப்பு விளக்கு தடுக்கப்பட்டு விட்டது என்று யாராலும் முடிவாகச் சொல்லி விட முடியாது. எனக்கு ஒரு மிக சுவாரசியமான தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் இது பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தினார் ஆனால் சாதாரணக் குடிமகன் இதை விரும்பவில்லை என்பதை இந்தத் தொலைபேசி அழைப்பு எனக்கு உணர்த்தியது. அவன் விலகியிருப்பதை உணர்கிறான்.
”வணக்கம் பிரதமர் அவர்களே, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்து நான் ஷிவா சவுபே பேசுகிறேன். சுழலும் சிவப்பு விளக்கு பற்றி நான் பேச விரும்புகிறேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சாலையில் வி.ஐ.பி. தான் என்ற ஒரு வாசகத்தை நான் செய்தித்தாளில் படித்தேன். இதைப் படித்த பின்னர் என் மனதில் ஒரு பெருமிதம் குடிகொண்டது, எனது நேரமும் முக்கியமானது தான் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை, யாருக்காகவும் நான் காத்திருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்கள் மேற்கொண்ட இந்த முடிவு காரணமாக நான் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மேற்கொண்டிருக்கும் தூய்மையான பாரதம் இயக்கம் காரணமாக நமது நாடு மட்டும் தூய்மை அடையவில்லை, நமது சாலைகளும் வி.ஐ.பி. செருக்கொழிந்து தூய்மையாகி இருக்கின்றன. இதனை சாதித்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்”.
சிவப்பு விளக்கு ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசு எடுத்த முடிவு என்னவோ அமைப்புரீதியிலான ஒரு நடவடிக்கை தான். ஆனால் மனதில் புரையோடியிருக்கும் இந்தக் கலாச்சாரத்தை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். நாமனைவரும் இணைந்து விழிப்புணர்வோடு முயற்சிகளை மேற்கொண்டால் இதை தூர எறிய முடியும். புதிய இந்தியா என்ற நமது கொள்கை என்பது வி.ஐ.பி. என்ற இடத்தில் இ.பி.ஐ. என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தான். நான் வி.ஐ.பி. என்ற இடத்தில் இ.ஐ.பி. என்று கூறும் போது என் நோக்கம் தெளிவானது – எவரி பர்சன் இஸ் இம்பார்ட்டன்ட், ஒவ்வொருவரும் முக்கியம் தான். ஒவ்வொரு நபருக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது, 125 கோடி நாட்டு மக்களின் முக்கியத்துவத்தை நாம் ஏற்றுக் கொண்டால், 125 கோடி நாட்டு மக்களின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொண்டால், மிகப்பெரிய கனவுகளைக் கூட நனவாக்கும் மிகப் பெரிய ஆற்றல் வசப்படும். இதை நாமனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.
அன்புநிறை நாட்டுமக்களே, நாம் வரலாற்றை, நமது பண்பாட்டை, நமது பாரம்பரியத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். அதிலிருந்து நமக்கு மிகப்பெரிய ஆற்றலும், உத்வேகமும் கிடைக்கிறது. இந்த ஆண்டு 125 கோடி நாட்டு மக்களான நாமனைவரும் மகான் ராமானுஜரின் 1000வது ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். ஏதோ காரணத்தால் நாம் தளைகளில் சிக்கினோம், மிகச் சிறுத்து விட்டோம், நாம் அதிகப்படியாக நூற்றாண்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் பழகி விட்டோம். உலகில் மற்ற நாடுகளில் நூற்றாண்டு என்பதே கூட மிக மகத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. ஆனால் பாரதம் எத்தனை தொன்மையான தேசம் என்றால், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான நினைவலைகளைக் கொண்டாடும் பேறு கிட்டி இருக்கிறது. ஓராயிரம் ஆண்டு முன்னதாக சமுதாயம் எப்படி இருந்தது? அதன் எண்ணப்பாடு எப்படி இருந்திருக்கும்? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இன்றும் கூட சமூக நிலைப்பாடுகளைத் தகர்த்து வெளிவருவது என்பது எத்தனை கடினமாக இருக்கிறது! ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படி இருந்திருக்கும்? சமுதாயத்தில் இருந்த கசடுகளை, உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற உணர்வினை, தீண்டத்தகாதவர் என்ற நிலையை, சாதி என்ற நிலையை எதிர்த்து பெரிய போராட்டத்தைக் கட்டவிழ்த்தார் இராமானுஜர் என்பது சிலருக்குத் தான் தெரிந்திருக்கும். சமூகம் யாரைத் தீண்டத்தகாதவர் என்று கருதியதோ, அவரைத் தழுவிக் கொண்டு, தனது செயல்பாட்டின் மூலம் செய்து காட்டினார். ஆயிரம் ஆண்டுகள் முன்பாக அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்காக அவர் இயக்கம் நடத்தினார், வெற்றிகரமாக ஆலயப் பிரவேசம் நிகழ்த்தினார். ஒவ்வொரு யுகத்திலும் நமது சமுதாயத்தின் கசடுகளைக் களையெடுக்க எப்படிப்பட்ட மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது நாம் எத்தனை பாக்கியம் செய்தவர்கள் என்பதை உணர்கிறோம். புனிதர் இராமானுஜாச்சார்யாரின் 1000வது ஆண்டை நாம் கொண்டாடும் இந்த வேளையில், சமுதாய ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமை தான் சக்தி என்ற உணர்வுக்கு உருவேற்ற நாம் அவரிடமிருந்து உத்வேகம் பெறுவோம்.
பாரத அரசும் நாளை மே மாதம் 1ஆம் தேதி புனிதர் இராமானுஜாச்சாரியாரின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு தபால் தலையை வெளியிடவிருக்கிறது. நான் புனிதர் இராமானுஜாச்சாரியாரை மரியாதையுடன் வணங்குகிறேன், என் பக்தி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, நாளை மே மாதம் 1 ஆம் தேதிக்கு மேலும் ஒரு மகத்துவம் இருக்கிறது. உலகின் பல பாகங்களில் இதை உழைப்பாளிகள் தினம் என்ற வகையில் கடைபிடிக்கிறார்கள். உழைப்பாளர்கள் தினம் என்று பேசும் போது, உழைப்பு பற்றியும், தொழிலாளிகள் பற்றியும் பேச்சு வருகிறது; இயல்பாகவே எனக்கு பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவும் கூடவே வருகிறது. இன்று தொழிலாளிகளுக்கு கிடைத்து வரும் சலுகைகள், மரியாதை இவற்றுக்காக நாம் பாபா சாஹேப் அவர்களுக்குத் தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உழைப்பாளிகள் நலனுக்காக பாபா சாஹேப் அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாத ஒன்றாகும். இன்று நாம் பாபா சாஹேப் பற்றிப் பேசும் போதும், புனிதர் இராமானுஜாச்சாரியார் பற்றிப் பேசும் போது, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடகத்தின் மகத்தான புனிதரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஜகத்குரு பசவேஸ்வர் அவர்களையும் நினைவு கூரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரது பொன்மொழிகளின் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பும் கிட்டியது. 12ஆம் நூற்றாண்டில் கன்னட மொழியில் அவர் உழைப்பு, உழைப்பாளர்கள் ஆகியோர் குறித்து ஆழமான கருத்துக்களை வெளியிட்டார். கன்னட மொழியில் அவர், ‘காய கவே கைலாஸ’ என்று கூறியிருக்கிறார், அதன் பொருள், நீங்கள் உழைப்பின் மூலம் மட்டுமே பகவான் சிவனிருக்கும் கைலாசத்தை அடைய முடியும், அதாவது செயல் புரிவதனால் மட்டுமே சுவர்க்கம் கிட்டும் என்பதாகும். இதை வேறு சொற்களில் கூற வேண்டுமானால், உழைப்பே சிவம். நான் அடிக்கடி “ஷிரமேவ ஜெயதே” உழைப்பே உயர்வு என்று கூறி வந்திருக்கிறேன், உழைப்பின் கண்ணியம் பற்றிப் பேசி வந்திருக்கிறேன். பாரதீய மஸ்தூர் சங்கத்தின் நிறுவனரும், சிந்தனையாளருமான தத்தோபந்த் தேங்கடீ அவர்கள் அடிக்கடி கூறும் விஷயம் ஒன்று எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது – ஒரு புறம் மாவோயிச கொள்கை முன்னிறுத்தும் கருத்து, “உலகின் உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டும்” என்பது தான்; ஆனால் தத்தோபந்த் தேங்கடீ அவர்கள் இதற்கு மாற்றாக, பாரத நாட்டு சிந்தனை ஓட்டத்துக்கு ஏற்ப, “உழைப்பாளிகளே வாருங்கள், நாம் உலகை ஒன்றுபடுத்துவோம்” என்பது தான். உழைப்பாளிகள் பற்றிப் பேசும் வேளையில் தத்தோபந்த் தேங்கடீ அவர்களை நினைத்துப் பார்ப்பது இயல்பான ஒன்று.
என் அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து நாம் புத்த பூர்ணிமாவை கொண்டாட இருக்கிறோம். உலகம் முழுக்க பகவான் புத்தரோடு தொடர்புடையவர்கள் இதை விழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள். உலகம் இன்று சந்தித்து வரும் வன்முறை, போர், அழிவு, ஆயுதங்களின் மோதல் போன்றவற்றைப் பார்க்கும் போது, பகவான் புத்தரின் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. பாரதத்தில் அசோகரின் வாழ்க்கை யுத்தம் துறந்து புத்தம் ஏற்றது உன்னதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புத்த பூர்ணிமை என்ற இந்த மகத்தான நாளை ஐக்கிய நாடுகள் சபை விசக் தினம் என்று கொண்டாடுகிறது. இந்த ஆண்டு இலங்கையில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த புனிதமான நாளன்று இலங்கையில் பகவான் புத்தருக்கு என் அஞ்சலி மலர்களை அர்ப்பணிக்கும் பேறு எனக்குக் கிட்டியிருக்கிறது. புத்தர் பற்றிய நினைவுகளை என் மனதில் நிறைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
என் பிரியமான நாட்டுமக்களே, பாரதத்தில் எப்போதும் ‘அனைவரையும் அரவணைத்துச் சென்று, அனைவருக்குமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல் என்ற தாரக மந்திரத்தை மனதில் இருத்தி முன்னேறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. நாம் அனைவரின் முன்னேற்றம் என்று கூறும் போது, இது பாரதத்தை சேர்ந்தவர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை, உலகில் இருக்கும் அனைவரைப் பற்றியும் கூறுகிறோம். குறிப்பாக நமது அண்டை நாடுகளுக்காகவும் பேசுகிறோம். நமது அண்டை அயல் நாடுகளோடு இசைவாக இருக்க வேண்டும், அவர்களும் முன்னேற வேண்டும் என்றே கருதுகிறோம். பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மே மாதம் 5ஆம் தேதியன்று பாரதம் தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இருக்கிறது. இந்த செயற்கைகோளின் திறன் மற்றும் இதில் இருக்கும் வசதிகள் காரணமாக தெற்காசியாவில் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு கணிசமான உதவி கிடைக்கும். இயற்கை வளங்களை அடையாளம் காணும் விஷயயமாகட்டும், தொலை மருந்து பற்றியதாகட்டும், கல்வித் துறையாகட்டும், அதிக ஆழமான கணிப்பொறி இணைப்பாகட்டும், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகட்டும். தெற்காசியாவின் இந்த செயற்கைக்கோள் ஒட்டுமொத்த பிராந்தியத்தை முன்னெடுத்துச் செல்ல முழுமையாக ஒத்துழைக்கும். ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்தில் கூட்டுறவை பலப்படுத்த பாரதத்தின் மகத்துவம் நிறைந்த முயற்சி இது – விலைமதிப்பில்லாத பரிசு. தெற்காசியா பொருட்டு நமக்கு இருக்கும் முனைப்புக்கான இது உகந்ததொரு எடுத்துக்காட்டு. இந்த தெற்காசிய செயற்கைக்கோளோடு இணைந்திருக்கும் தெற்காசிய நாடுகள், இந்த மகத்துவம் நிறைந்த முயற்சியில் ஈடுபட்டதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துக்கள் அளிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, வெப்பம் அதிகமாக இருக்கிறது, உங்களைச் சார்ந்தவர்களையும் கவனியுங்கள், உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் நல்வணக்கங்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வுக்கான தயாரிப்புக்களோடு ஒன்றியிருக்கிறார்கள். யாருக்கெல்லாம் தேர்வுகள் முடிந்து விட்டதோ, அவர்கள் சற்றே ஆசுவாசமாக இருக்கிறார்கள்; எங்கெல்லாம் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றதோ, அந்தக் குழந்தைகளின் குடும்பங்கள் சற்று அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் மாணவச் செல்வங்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்களை மீண்டும் ஒரு முறை கேளுங்கள், தேர்வுக்காலங்களில் அந்தக் கருத்துக்கள் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்.
இன்று மார்ச் மாதம் 26ஆம் தேதி. இந்த நாள் தான் வங்காளதேசத்தின் சுதந்திரத் திருநாள். அநீதிக்கு எதிரான வரலாற்றுப் போராட்டம்……. பங்க பந்துவின் தலைமையின் கீழ் வங்காளதேசத்தின் மக்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள். இன்று இந்த மகத்துவம் நிறைந்த நாளிலே, நான் வங்காளதேசத்தின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்காளதேசம் மேலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பாரதம் வங்காளதேசத்தின் உறுதியான நண்பன் என்பதை நான் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன், ஒரு நல்ல நண்பன் என்ற முறையில், நாம் தோளோடு தோள் சேர்ந்து ஒட்டுமொத்த பிரதேசத்திலும் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு நமது பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வருவோம்.
ரவீந்திரநாத் டகோர், அவரது நினைவுகள் எல்லாம் நாமெல்லாரும் போற்றிவரும் செல்வங்களாக இருப்பது நமக்குப் பெருமையாக இருக்கிறது. வங்காளதேசத்தின் தேசியகீதம்கூட ரவீந்திரநாத் டகோர் அவர்கள் இயற்றியது தான். குருதேவ் டகோரைப் பற்றி ஒரு மிக சுவாரசியமான விஷயம்….. 1913ஆம் ஆண்டில் நோபல் பரிசைப் பெற்ற ஆசியக்கண்டத்தைச் சேர்ந்த முதல் நபர் ரவீந்திரநாத் டகோர் அவர்கள்; அவருக்கு ஆங்கிலேயர்கள் knight என்ற பட்டத்தையும் அளித்தார்கள். 1919ஆம் ஆண்டு ஜலியான்வாலாபாக் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது; அந்த சமயத்தில் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்த மாமனிதர்களில் ஒருவராக விளங்கினார். இந்தப் படுகொலை பன்னிரெண்டே வயது நிரம்பிய ஒரு பாலகன் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வயல் வெளிகளிலும், மைதானங்களிலும் ஆடிவிளையாடி வந்த அந்த சின்னஞ்சிறு பாலகன் மனதில் இந்தச் சம்பவம் ஆறாத வடுவாக ஆனது. 1919ஆம் ஆண்டில் பன்னிரெண்டே வயது நிரம்பிய அந்த பாலகன் பாரத மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்த தேசபக்தன், தியாகி பகத் சிங். இன்றிலிருந்து 3 நாட்கள் முன்பாகத் தான், மார்ச் மாதம் 23ஆம் தேதி பகத் சிங்கையும் அவரது தோழர்களான சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டார்கள்; மார்ச் மாதம் 23ஆம் தேதி நடந்த இந்த சோகமான சம்பவம் நடந்த போது, தியாகச் செம்மல்களான பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் முகங்களில் பாரத அன்னைக்கு அருஞ்சேவை புரிந்த மகிழ்வு கொப்பளித்தது, சற்று கூட மரணம் பற்றிய அச்சம் காணப்படவேயில்லை. வாழ்கையின் அனைத்துக் கனவுகளையும் பாரத அன்னையின் விடுதலையின் பொருட்டு அவர்கள் ஆஹுதியாக அளித்தார்கள். இந்த மூவரும் இன்றும் கூட நம் அனைவருக்கும் கருத்தூக்கமாகத் திகழ்கிறார்கள். பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் தியாக காதையை நாம் சொற்களில் வடித்து விட முடியாது. ஒட்டுமொத்த ஆங்கிலேய சாம்ராஜ்யமும் இந்த மூவரைக் கண்டு நடுநடுங்கியது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள், தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது, ஆனால் இவர்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆங்கிலேயர்களைக் கவலை அரித்துக் கொண்டிருந்தது. மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று தூக்குத் தண்டனை என்று உறுதி செய்யப்பட்டிருந்தது, ஆனால் மார்ச் மாதம் 23ஆம் தேதியே அவர்கள் தூக்கிலிடப்பட்டு விட்டார்கள். யாருக்கும் இது தெரியாத வகையில் கள்ளத்தனமாக அரங்கேற்றப்பட்டது,. பின்னர் அவர்களின் உடல்கள் இன்றைய பஞ்சாப் மாநிலம் கொண்டு செல்லப்பட்டு, யாருமறியா வண்ணம் எரிக்கப்பட்டது. பல ஆண்டுகள் முன்னே, அங்கே முதல் முறையாக அங்கே செல்லும் வாய்ப்புக் கிட்டிய போது, அந்த மண்ணில் ஒருவிதமான அதிர்வை என்னால் உணர முடிந்தது. உங்களுக்கெல்லாம் எப்போது வாய்ப்புக் கிட்டுகிறதோ, அப்போது பஞ்சாப் செல்லுங்கள், பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, பகத்சிங்கின் அன்னை, படுகேஷ்வர் தத் ஆகியோரின் சமாதிகள் அமைந்திருக்கும் இடத்துக்கு கண்டிப்பாகச் சென்று வாருங்கள் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.
சுதந்திர வேட்கை, அதன் தீவிரம் ஆகியன பரந்திருந்த ஒரு காலகட்டம் அது. ஒரு புறம் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்ற வீரர்கள் ஆயுதப் புரட்சியை மேற்கொள்ள இளைஞர்களுக்கு உத்வேகமளித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 100 ஆண்டுகள் முன்பாக, ஏப்ரல் மாதம் 1917ஆம் ஆண்டு காந்தியடிகள் சம்பாரண் சத்தியாகிரஹத்தை மேற்கொண்டார்கள். இது சம்பாரண் சத்தியாகிரஹத்தின் நூற்றாண்டு. பாரதத்தின் விடுதலைப் போரில் காந்தியடிகளின் சிந்தனைகள், காந்தியடிகளின் வழிமுறை ஆகியவற்றின் வெளிப்பாடு முதன்முறையாக சம்பாரண்ணில் தான் வெளிப்பட்டது. சுதந்திரப் போராட்ட யாத்திரையில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது, குறிப்பாக போராட்டத்தின் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்திலிருந்து. சம்பாரண் சத்தியாகிரஹம், கேடா சத்தியாகிரஹம், அஹ்மதாபாதில் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆகிய இவை அனைத்திலும் காந்தியடிகளின் சிந்தனைகள், வழிமுறைகள் ஆகியவற்றின் ஆழமான தாக்கம் புலப்படத் தொடங்கிய காலகட்டம் அது. 1915ஆம் ஆண்டில் காந்தியடிகள் அயல்நாட்டிலிருந்து திரும்பி வந்தார், 1917ஆம் ஆண்டில் பிஹாரில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிராமம் சென்று, நாட்டுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தார். இன்று நமது மனதில் காந்தியடிகள் பற்றிய கருத்தைக் கொண்டு, சம்பாரண் சத்தியாகிரஹத்தை நாம் மதிப்பிட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், 1915ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய ஒருவர், வெறும் இரண்டே ஆண்டுகள் அனுபவம்…….. நாடு அவரை அறிந்திருக்கவில்லை, அவர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இது ஒரு தொடக்கம் தான். அந்த வேளையில் அவர் எத்தனை துயரங்களை அனுபவித்திருப்பார், எத்தனை உழைக்க வேண்டியிருந்திருக்கும் என்பதை எல்லாம் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. சம்பாரண் சத்தியாகிரஹத்தின் வாயிலாக காந்தியடிகளின் ஒருங்கிணைப்புத் திறன், பாரத சமுதாயத்தின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல், மிகவும் ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருந்த மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக உத்வேகப்படுத்தும் சக்தி, போராட்டக் களத்துக்கு அவர்களை வரவழைப்பது ஆகியவை மூலமாக ஒரு அற்புதமான வல்லமையை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். இன்று நாம் காந்தியடிகளின் மகத்துவம் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்; ஆனால் சுமார் 100 ஆண்டுகள் முன்பிருந்த காந்தியடிகள் பற்றி நினைத்துப் பாருங்கள், சம்பாரண் சத்தியாகிரஹத்தின் மூலமாக காந்தியடிகளின் பொதுவாழ்வு தொடங்கியது, இது அவருக்கு ஒரு கற்றல் அனுபவமாகத் திகழ்ந்தது. பொதுவாழ்வு எப்படித் தொடங்கப்பட வேண்டும், அதற்காக எந்த அளவு உழைக்க வேண்டும், காந்தியடிகள் எப்படி உழைத்தார் என்பதையெல்லாம் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடிகிறது. அந்தக் காலகட்டத்தில் இருந்த மகத்தான தலைவர்களான ராஜேந்திர பாபு, ஆச்சார்ய க்ருபளானி போன்றவர்களை எல்லாம் காந்தியடிகள் கிராமம் செல்லப் பணித்தார். மக்களோடு மக்களாக இணைந்து, அவர்கள் ஆற்றும் பணிகளை எப்படி சுதந்திரப் போராட்டத்தோடு இணைப்பது என்பதை அவர் கற்றுக் கொடுத்தார். காந்தியடிகளின் இந்த வழிமுறை பற்றி ஆங்கிலேயர்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. போராட்டமும் நடைபெற்றது, ஆக்கமும் நிகழ்ந்தது, இரண்டுமே ஒரேநேரத்தில் நடைபெற்றன. ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல காந்தியடிகளின் வழிமுறையில் ஒருபுறத்தில் போராட்டம், இன்னொரு புறத்தில் ஆக்கம். ஒருபுறம் சிறைநிரப்புதல், மற்றொரு புறத்தில் ஆக்கபூர்வமான செயல்கள். மிகப்பெரியதொரு சமநிலை காந்தியடிகளின் செயல்பாட்டில் காண முடிந்தது. சத்தியாகிரஹம் என்றால் என்ன?, ஒத்துழையாமை என்றால் என்ன?, இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தோடு ஒத்துழையாமல் இருப்பது என்றால் என்ன? ஆகியவற்றின் விளக்கம் காந்தியடிகளின் சொற்கள் வாயிலாக அல்ல, அவரது வெற்றிகரமான செயல்பாட்டின் மூலமாகப் பளிச்சிட்டது.
இன்று நாடு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் நூற்றாண்டைக் கொண்டாடி வரும் வேளையில், பாரதத்தின் சாமான்யக் குடிமகனின் சக்தி எத்தனை அளப்பரியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அளவில்லாச் சக்தியை சுதந்திரப் போராட்டத்தில் கையாண்டதைப் போலவே இன்றும் நாம் கையாள வேண்டும்; அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், நலமாக இருக்க வேண்டும் என்ற மந்திரத்தை மனதிலேற்றி, 125 கோடி நாட்டு மக்களின் மனவுறுதி, உழைக்கும் திறன், நாட்டுக்காக, சமுதாயத்துக்காக, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்குவது ஆகியவையே, நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் இன்பொருளாவியை அர்ப்பணித்தவர்களுக்கு நாம் செலுத்தும் சிறப்பான காணிக்கையாகும்.
இன்று நாம் 21ஆம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், இன்றைய காலகட்டத்தில் யார் தான் பாரதத்தில் மாற்றம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள், எந்த இந்தியர் நாட்டின் மாற்றத்தில் பங்கு கொள்வதை விரும்ப மாட்டார்? 125 கோடி நாட்டுமக்களின் இந்த வேட்கை, மாற்றத்திற்க்காக அவர்களின் முயற்சி, இவை தாம் புதிய பாரதம் படைப்பதில் பலமானதொரு அடித்தளமாக அமையும். புதிய பாரதம் என்பது அரசின் ஏதோ ஒரு திட்டமல்ல. புதிய பாரதம் என்பது 125 கோடி நாட்டு மக்களின் அறைகூவல். 125 கோடி நாட்டுமக்களுமாக இணைந்து புதிய பாரதம் அமைக்க வேண்டும் என்ற உணர்வு இது தான். 125 கோடி நாட்டு மக்களின் மனங்களின் ஆழத்தில் இருக்கும் ஒரு விருப்பம், ஒரு ஆசை, ஒரு மனவுறுதி, ஒரு தாகம் இது.
எனதருமை நாட்டுமக்களே, நாம் சற்றே நமது தனிப்பட்ட வாழ்விலிருந்து விலகி, புர்ந்துணர்வுடன் சமுதாயத்தில் இருக்கும் செயல்பாடுகளைப் பார்த்தால், நமக்கருகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். பல இலட்சக்கணக்கானவர்கள், அவர்களின் கடமைகளை ஆற்றுவதைத் தவிர சமூகத்துக்காகவும், அதில் இருக்கும் பாதிக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட-துயரத்தில் இருக்கும் ஏழை எளியவர்களுக்காக, ஆக்கபூர்வமான ஏதாவது ஒன்றை தன்னலமற்ற வகையில் செய்து வருகிறார்கள். அமைதியான முறையில், தவம் இயற்றுபவர்களைப் போல அவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் தினமும் மருத்துவமனை செல்கிறார்கள், நோயாளிகளுக்கு உதவி புரிகிறார்கள். தேவை எனச் செய்தி கேட்டவுடனேயே ஓடோடிச் சென்று ரத்த தானம் அளிக்கும் பலர் இருக்கிறார்கள். யாராவது பட்டினியில் வாடினால், அவர்களுக்கு உணவளிக்கும் நல்ல செயலைப் புரிபவர்களும் பலர் இருக்கிறார்கள். நமது தேசம் இப்படிப்பட்ட பல விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நிறைந்த தேசம். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள், இது நமது நாடி நரம்புகளில் எல்லாம் இருக்கிறது. இதை நாம் ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமேயானால், ஒருங்கிணைந்த வகையில் நோக்கினோமேயானால், இது எத்தனை மகத்தான சக்தி என்பது நன்கு புலனாகும். புதிய பாரதம் பற்றி நாம் பேசும் போது, இந்தக் கருத்து பற்றிய விமர்சனங்கள் எழுவது இயல்பான விஷயம் தான், இது மக்களாட்சி முறையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் 125 கோடி நாட்டுமக்கள் உறுதி பூண்டு விட்டால், தங்கள் பாதையை அவர்கள் முடிவு செய்து விட்டால், ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் அடியெடுத்து வைக்கத் தொடங்கி விட்டால், புதிய பாரதம் சமைப்பது என்ற 125 கோடி நாட்டுமக்களின் கனவு, நாம் பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில் உருப்பெறத் தொடங்கும், நனவாகும். அனைத்து விஷயங்களும் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதோ, அரசின் திட்டமாக இருக்க வேண்டும் என்பதோ, அரசுப் பணத்திலிருந்து செலவு செய்யப்பட வேண்டும் என்பதோ அவசியமில்லை. நான் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டே நடப்பேன், என் கடமைகளை முழுவதுமாக நேர்மையோடு ஆற்றுவேன், வாரத்தில் ஒருநாள் நான் பெட்ரோல்-டீஸல் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண்டு விட்டால், மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாகவே காண முடியும். விஷயம் மிகச் சின்னதாகக் கூட இருக்கலாம். அதாவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகன் என்ற முறையில் தத்தமது கடமைகளை ஆற்ற வேண்டும், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் நான் கூற விரும்புவது. இது தான் ஒரு புதிய பாரதத்தின் மங்களகரமான தொடக்கமாக அமையும்.
2022ஆம் ஆண்டு, சுதந்திரம் அடைந்து 75ஆவது ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்திருப்போம். பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரை நாம் நினைவில் கொள்வோம், சம்பாரண் சத்தியாகிரஹத்தை மனதில் இருத்துவோம். நாம் அடைந்த தன்னாட்சியை நல்லாட்சியாக மலரச் செய்யும் இந்தப் பயணத்தை நாம் ஏன் ஒழுங்குமுறையுடனும், மனவுறுதியுடனும் மேற்கொள்ளக் கூடாது? இந்தப் பயணத்தில் பங்கெடுக்க வாருங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு இன்று என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக நமது நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் செயல்படும் டிஜிதன் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை எப்படி மேற்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்தது. பரம ஏழைகள் கூட இதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், மெல்ல மெல்ல ரொக்கமில்லாத முறையில் எப்படித் தொழில் செய்வது என்ற திசையை நோக்கி முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. நாணய விலக்கலுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் தொகை செலுத்தல் முறையில் பல முன்னேற்றங்களைக் காண முடிகிறது. பீம் செயலியை நாம் ஆரம்பித்து 2-3 மாதங்களே ஆன நிலையில், இதுவரை சுமார் ஒண்ணரை கோடி மக்கள் இதைத் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் நாம் முன்னேற வேண்டும். 125 கோடி நாட்டுமக்கள் இந்த ஆண்டு 2 ½ இலட்சம் கோடி அளவு டிஜிட்டல்வழி பரிவர்த்தனையைச் செய்யும் உறுதி பூண முடியுமா? இதை செயல்படுத்த 125 கோடி நாட்டுமக்களும் விரும்பினால், இதற்காக ஓராண்டுக்காலம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இதை ஆறே மாதங்களில் கூட செய்து விட முடியும். இதை செயல்படுத்தும் வகையில் நாம் பள்ளிக்கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம், நாம் ரயிலிலோ, விமானத்திலோ செய்யும் பயணத்துக்கான பயணச்சீட்டுக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாம், மருந்துகளை டிஜிட்டல் முறையில் வாங்கலாம், நாம் மலிவுவிலை உணவுப்பொருட்கள் கடையை நடத்துபவர் என்றால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். நமது அன்றாடச் செயல்பாடுகளில் இவற்றை நாம் கைக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தேசத்துக்கு மிகப் பெரிய சேவையாற்றுகிறீர்கள் என்பதை நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் களவீரர்களாக செயல்படுவீர்கள். கடந்த நாட்களில், மக்களின் விழிப்புணர்வுக்காக டிஜிதன் கொண்டாட்டங்களுக்கான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாடுமுழுவதிலும் 100 நிகழ்ச்சிகளைச் செய்வது என்ற உறுதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. 80-85 நிகழ்ச்சிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. இவற்றில் பரிசுத் திட்டங்களும் இடம் பெற்றிருந்தன. சுமார் 12 ½ இலட்சம் நுகர்வோர் இதன் மூலம் பயன் பெற்றார்கள். 70,000 வியாபாரிகள் இவர்களுக்கான பரிசுகளை வென்றார்கள். ஒவ்வொருவரும் இந்தப் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் உறுதி பூண்டார்கள். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி டா.பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள். இந்த டிஜிதன் கொண்டாட்டங்கள் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாளன்று நிறைவு பெறும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட விஷயம். 100 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி, ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. மிகப்பெரிய ஒரு குலுக்கலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை காலம் பாக்கி இருக்கிற்தோ, அதற்குள்ளாக முடிந்த மட்டிலும் நாம் பீம் செயலி பற்றிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ரொக்கப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நமது பங்களிப்பு அமைய வேண்டும்.
நேசம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையும் நான் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக உங்களை ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்வதற்கு இணங்க, பலவகைப்பட்ட ஆலோசனைகளை நீங்கள் எனக்கு அளித்து வருகிறீர்கள். ஆனால் உங்கள் ஆலோசனைகளில் தூய்மை பற்றி நீங்கள் அதிக அழுத்தத்தை எப்போதுமே கொடுத்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தெஹ்ராதூனைச் சேர்ந்த காயத்ரி என்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தொலைபேசி வாயிலாக ஒரு செய்தியை அளித்திருக்கிறார் –
மதிப்பிற்குரிய பிரதம ஆசிரியர், பிரதம மந்திரி அவர்களே, உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீங்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் உங்களிடம் என் மனதின் குரலைத் தெரிவிக்க விரும்புகிறேன். தூய்மை என்பது எத்தனை முக்கியமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூற விழைகிறேன். நான் தினமும் கடக்கும் வழியில் இருக்கும் நதியில் மக்கள் அதிக குப்பை கூளங்களைப் போட்டு மாசுபடுத்துகிறார்கள். இந்த நதி ரிஸ்பனா பாலத்தைக் கடந்து வருகிறது, என் வீட்டருகில் இது ஓடுகிறது. நதியை மாசுபடுத்துவதற்கு எதிராக நாங்கள் பகுதி பகுதியாகச் சென்றும், நடைபயணங்களை மேற்கொண்டும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. நீங்கள் உங்கள் தரப்பிலிருந்து ஒரு குழுவை அனுப்பியோ, செய்தித்தாள்கள் வாயிலாகவோ இந்த விஷயம் பற்றிய விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
சகோதர சகோதரிகளே, 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மனதில் எத்தனை வலி இருக்கிறது பாருங்கள். அந்த நதியில் பெருகிவரும் குப்பைக் கூளங்களைப் பார்த்து அவருக்கு எத்தனை கோபம் ஏற்படுகிறது பாருங்கள்!! நான் இதை நல்லதொரு அறிகுறியாகவே காண்கிறேன். 125 கோடி நாட்டுமக்களின் மனங்களிலும் மாசினைக் கண்டால் கோபம் எழ வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். ஒரு முறை கோபம் ஏற்பட்டு விட்டால், அருவருப்பு உண்டாகி விட்டால் சீற்றம் ஏற்படும். அப்போது நாமே கூட, மாசிற்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குவோம். காயத்ரியும் தனது கோபத்தை வெளிப்படுத்துவது நல்ல விஷயம் தான்; அவர் எனக்கு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார்; மாசுக்கு எதிராக அவர் முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை வெற்றி பெறவில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். தூய்மை பற்றிய இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே விழிப்புணர்வும் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொருவரும் இதில் தங்களை ஆக்கபூர்வமாக இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது ஒரு மக்கள் இயக்கமாகவே மலர்ந்திருக்கிறது. அசுத்தத்துக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. விழிப்புணர்வாகட்டும், ஆக்கபூர்வமான பங்களிப்பாகட்டும், இயக்கமாகட்டும், இவற்றுக்கான மகத்துவம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் தூய்மை, இயக்கம் சார்ந்தது அல்ல, இயல்பு சார்ந்தது. இந்த இயக்கம் இயல்பை மாற்றும் இயக்கம். இந்த இயக்கம் தூய்மையை இயல்பாக ஆக்க ஏற்பட்ட இயக்கம். இயக்கம் சமூகரீதியில் செயல்படலாம். பணி கடினமானது தான் என்றாலும், செய்யத்தான் வேண்டும். தேசத்தின் புதிய தலைமுறை, பாலகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடத்தில் உருவாகி இருக்கும் இந்த உணர்வு, நல்லதொரு அறிகுறியைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என்பதில் எனக்குப் பெருநம்பிக்கை இருக்கிறது. இன்று எனது மனதின் குரலில், யாரெல்லாம் காயத்ரியின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்கள் அனைவரிடமும் நான் கூற விரும்புவது ஒன்றைத் தான் – காயத்ரி அளித்திருக்கும் செய்தி நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் செய்தியாக அமைய வேண்டும்.
பாசம்மிகு நாட்டுமக்களே, மனதின் குரல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, எனக்கு உணவை வீணாக்குதல் பற்றி பல ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நாம் நமது இல்லங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் உணவருந்தும் போது நமது தட்டுக்களில் தேவைக்கு அதிகமாக உணவை இட்டுக் கொள்கிறோம் என்பதை நாமனைவரும் அறிவோம். கண்ணில் படும் உணவை எல்லாம் நாம் நமது தட்டுக்களில் போட்டுக் கொள்கிறோம், ஆனால் முழுமையாக உண்ண முடிவதில்லை. நம் தட்டுக்களில் நிரப்பிக் கொள்வதில் பாதியளவு கூட நம் வயிறுகளில் நம்மால் நிரப்பிக் கொள்ள முடிவதில்லை. மிஞ்சிய உணவை அப்படியே போட்டு விட்டு வெளியேறி விடுகிறோம். நாம் விட்டுச் செல்லும் மிச்சம் மீதிகளால் எத்தனை நாசத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை நாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா? நாம் மிச்சம் மீதி வைக்கவில்லை என்றால், இது எத்தனை ஏழைகளுக்கு உணவளிக்க உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறோமா? இது புரியவைக்கப்பட வேண்டிய விஷயமில்லை. நம் வீடுகளில் குழந்தைகளுக்கு அன்னை உணவு படைக்கும் போது என்ன கூறுவார் தெரியுமா? தம்பி, உன்னால எந்த அளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவுக்கு மட்டும் தட்டுல போட்டுக்கோ என்பாள். ஏதோ ஒருவகையில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்பது என்னவோ உண்மை தான்; ஆனாலும் இந்த விஷயத்தில் காட்டப்படும் உதாசீனம், சமுதாயத்துக்கு எதிராக இழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய துரோகச் செயல். இது ஏழைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி. இன்னொரு புறத்தில் உணவை வீணாக்கவில்லை என்றால் சேமிப்பு ஏற்படும், குடும்பம் பொருளாதார ரீதியாக பலன் பெறும். சமுதாயரீதியாக சிந்திக்கும் போதும் இது நல்ல விஷயம் தான், குடும்பரீதியாக நோக்கும் போதும், இது பயன் தரும் விஷயம் தான். நான் இந்த விஷயத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு மொபைல் செயலியை ஏற்படுத்தி இயக்கத்தை நடத்தி வரும் சில இளைஞர்களை நான் அறிவேன்; எங்காவது உணவு மிஞ்சி இருந்தால், இவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இவர்கள் மிஞ்சிய உணவை சேகரித்துச் சென்று, தேவையானவர்களுக்கு அதைப் பகிர்ந்தளிப்பார்கள். உணவை நல்ல முறையில் பயனபடுத்தும் இந்த வழிமுறை, இதற்காக செய்யப்படும் உழைப்பு நம்நாட்டு இளைஞர்கள் செய்து வருகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் எங்காவது இப்படிப்பட்டவர்களை நீங்கள் சந்திக்கலாம். நாம் உணவை வீணாக்கக் கூடாது என்று இவர்களின் வாழ்கை நமக்கு உத்வேகம் அளிக்கும் ஒன்றாக அமைகிறது. எந்த அளவு நம்மால் கொள்ள முடியுமோ, அந்த அளவு மட்டுமே நாம் தட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.
மாற்றம் காண்பதற்கான வழிகள் இப்படிப்பட்டவை தாம் பாருங்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு கொண்டவர்கள், இலையிலும் சற்றுக் குறைவாகப் போட்டுக் கொள், வயிற்றிலும் சற்றுக் குறைவாக நிரப்பிக் கொள் என்று அவர்கள் எப்போதுமே கூறுவார்கள். ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உலக உடல்நல நாள். ஐக்கிய நாடுகள் சபை 2030ஆம் ஆண்டுக்குள்ளாக Universal Health Coverage, அனைவருக்குமான உடல்நலப் பாதுகாப்பு என்ற இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த முறை ஐக்கியநாடுகள் சபை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரும் உலக உடல்நல நாளை முன்னிட்டு மன அழுத்தம் என்ற கருத்தின் மீது அழுத்தம் தர இருக்கிறார்கள். இந்த ஆண்டு அவர்களின் கருப்பொருள் மன அழுத்தம். உலகெங்கும் சுமார் 35கோடிக்கும் அதிகமானோர் மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. நம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு மனவழுத்தம் இருக்கிறது என்பதே கூட பல நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை; சில வேளைகளில் இது பற்றி மனம் திறந்து பேசக் கூட சங்கடம் ஏற்படுவது இன்னொரு சிக்கல். யார் மனவழுத்தத்தில் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ அவரும் எதுவும் தெரிவிப்பதில்லை, ஏனென்றால் அவருக்கு இதை வெளியே சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறது.
மன அழுத்தம் விடுபட முடியாத நிலை என்று கருத வேண்டாம் என்பதையே நான் நாட்டுமக்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். மனோவியல் ரீதியான ஒரு சூழலை ஏற்படுத்துவதன் மூலமாக நாம் ஒரு தொடக்கத்தை உண்டாக்கலாம். மன அழுத்தத்தை அழுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக, அதை வெளிப்படுத்துவது என்பது தான் முதல் உத்தி. நண்பர்களிடம், தாய்-தந்தையரிடம், சகோதர-சகோதரிகளிடம், ஆசிரியர்களிடம் மனம் திறந்து பேசுங்கள், உங்கள் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரையுங்கள். சில வேளைகளில் தனிமை, குறிப்பாக ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடம் சிரமங்கள் அதிகம் காணப்படுகின்றன. நாம் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் என்பது நமது தேசமக்கள் செய்த நற்பயன் என்றே கூற வேண்டும். குடும்பம் பெரியதாக இருக்கும், கலகலப்பான சூழல் நிலவும், இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் மகனோ மகளோ அல்லது வேறு ஒரு உறுப்பினரோ, குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உண்பதற்கு பதிலாக, நான் பிறகு சாப்பிடுகிறேன், என் உணவை மேஜை மீது வைத்து விடுங்கள் என்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியே செல்லும் போது, இல்லை, இல்லை நான் இன்று வெளியே வர விரும்பவில்லை, தனியாக இருப்பதையே விரும்புகிறேன் என்று கூறும் போது தாய்-தந்தையரின் கவனம் அவர்களின் மீது செலுத்தப்பட வேண்டும். அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? கண்டிப்பாக அவர்கள் மன அழுத்தத்தின் முதல் படியில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எல்லோருடனும் கலந்து பழகாமல், தனிமையை நாடுகிறார்கள் என்றால் நிலையை சீர்செய்ய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவர்களுடன் மனம் திறந்து பேசுபவர்களிடம் அவர்களைப் பழக விடுங்கள். கலகலப்பாகப் பேசும் சூழலை ஏற்படுத்தி, அவர்களையும் அதில் பங்கு பெற ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு உளைச்சல் தரும் மனப்பாங்கை வெளியேற்றுங்கள். இது தான் சிறந்த வழி. மன அழுத்தம், மனம் மற்றும் உடல்ரீதியான நோய்களை வாவென்றழைக்கிறது. எப்படி நீரிழிவு நோய் அனைத்து விதமான நோய்களுக்கும் சுகமான தளமமைத்துக் கொடுக்கிறதோ, அதைப் போலவே மன அழுத்தமும் நமது தாக்குப் பிடிக்கும் சக்தி, கடுமையான சூழல்களுக்கு எதிராகப் போராடும் தன்மை, தன்முனைவுத் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் என நமது அனைத்துத் திறன்களையும் முடக்கிப் போட்டு விடுகிறது. உங்கள் நண்பர்கள், உங்கள் குடும்பம், உங்கள் சுற்றம், உங்கள் சூழல் என இவையனைத்தும் தான் உங்களை மன அழுத்தத்திலிருந்து காப்பாற்ற முடியும், அப்படியே நீங்கள் மன அழுத்தத்தில் சிக்கி இருந்தாலும், உங்களை வெளிக் கொணர முடியும். மேலும் ஒரு வழி இருக்கிறது. உங்களைச் சார்ந்தவர்களிடத்தில் நீங்கள் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்றால், உங்கள் அருகில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் சேவை உணர்வுடன் மக்கள் பணியில் ஈடுபடுங்கள். முழுமனதோடு சேவை புரியுங்கள், அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், உங்களின் துக்கம் தானாகவே கரைவதை நீங்கள் கண்கூடாகக் காண முடியும். மற்றவர்களின் துக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அதை சேவை உணர்வோடு அந்தச் செயலைச் செய்தால், உங்களுக்குள்ளே ஒரு தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். மற்றவர்களோடு கலந்து பழகுவதன் மூலமாக, மற்றவர்களுக்கு தன்னலமற்ற சேவை புரிவதன் வாயிலாக, நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் பாரத்தை எளிதில் இறக்கி வைத்துக் கரைக்க முடியும்.
இதைப் போலவே யோகமும் உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு நல்ல வழி. அழுத்தத்திலிருந்து விடுதலை, நெருக்கடியிருந்து ஓய்வு, மலர்ந்த முகம் ஆகியவற்றை அடைய யோகம் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோக தினம்; இது 3வது யோக தினமாகும். நீங்கள் இப்போதிலிருந்தே உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குங்கள். இலட்சக்கணக்கானவர்கள் சமூகரீதியாக யோகதினத்தில் பங்கெடுப்பதை உறுதி செய்யுங்கள். 3வது சர்வதேச யோக தினம் குறித்து உங்கள் மனதில் ஆலோசனைகள் ஏதும் இருந்தால், நீங்கள் மொபைல் செயலி வாயிலாக உங்கள் ஆலோசனைகளை எனக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள், வழிகாட்டுங்கள். யோகம் தொடர்பாக பாடல்கள், படைப்புகள் ஆகியவற்றை நீங்கள் உருவாக்கலாம், இதனால் மக்களின் புரிதல் அதிகப்படலாம்.
அன்னையர்-சகோதரிமார்களிடமும் நான் இன்று ஒரு விஷயம் குறித்துப் பேச விரும்புகிறேன். இன்று உடல்நலம் பற்றி பல விஷயங்களைப் பேசியிருக்கிறோம். கடந்த நாட்களில் அரசு ஒரு மிகப்பெரிய தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது. நம் நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது, அவர்களின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் இதனுடன் கூட பெண்களுகென சில சிறப்பான கடமைகள் இருக்கின்றன. குடும்பத்தின் பொறுப்பை அவரே சுமக்கிறார், வீட்டில் பொருளாதாரப் பொறுப்பிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது; இதன் காரணமாக பிறந்த குழந்தைக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பாரத அரசு மிகப் பெரிய தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் மகளிரின் பேறுக் காலத்தில், முன்பு அவர்களுக்கு 12 வாரக்கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது; இப்போது இது 26 வாரக்கால மகப்பேறு விடுப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. உலகில் 2 அல்லது 3 நாடுகள் தாம் நம்மை விட அதிக மகப்பேறுவிடுப்பு அளித்திருக்கிறார்கள். நமது இந்த சகோதரிகளுக்காகவே பாரத அரசு இப்படிப்பட்ட ஒரு மகத்தான முடிவை எடுத்திருக்கிறது. பாரதத்தின் வருங்காலக் குடிமகனுக்கு பிறந்த நாள்முதல் முறையான கவனிப்பு இருக்க வேண்டும், அன்னையின் முழுமையான அன்பு அந்தச் சிசுவுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்தால் தான், இவர்கள் வருங்காலத்தில் தேசத்தின் செல்வங்களாக ஆவார்கள் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை குறிக்கோள். அப்போது தான் அன்னையரின் உடல்நலமும் சிறந்து விளங்கும். இதன் காரணமாக முறையான துறைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 18 இலட்சம் மகளிருக்கு இதன் பலன் கிட்டும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி புனிதமான இராமநவமி, ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள் ஆகியன வரவிருக்கின்றன. இந்த மஹாபுருஷர்களின் வாழ்கை நமக்கு என்றென்றும் உத்வேகம் அளித்து வரட்டும், புதிய பாரதம் சமைக்க நமக்கு மனவுறுதி அளிக்கட்டும். இரண்டு நாட்கள் கழித்து, சைத்ர சுக்ல ப்ரதிபதா, வர்ஷ் ப்ரதிபதா, புத்தாண்டு ஆகியன வரவிருக்கின்றன. இந்தப் புத்தாண்டை முன்னிட்டு நான் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வசந்தகாலத்திற்குப் பிறகு, பயிர்கள் முதிர்ச்சியடையத் தொடங்கி, விவசாயிகளின் உழைப்பிற்கான பலன் கிடைக்க இருக்கும் வேளை இது. நமது தேசத்தின் பல மூலைகளிலும் இந்தப் புத்தாண்டை பலப்பல வழிகளில் கொண்டாடுகிறார்கள். மஹாராஷ்ட்ரத்தில் குடிபடவா எனவும், ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் உகாதி எனவும், சிந்தி சேடீ-சாந்த் எனவும், (सिन्धी चेटी-चाँद), கஷ்மீரத்தில் நவ்ரேஹ் எனவும், அவத் பிரதேசத்தில் சம்வத்ஸர் பூஜை எனவும், பீஹாரின் மிதிலைப் பகுதியில் ஜுட்-ஷீதல் (जुड-शीतल) எனவும், மகதத்தில் சதுவாநீ (सतुवानी) எனவும் புத்தாண்டு பலவிதமாகக் கொண்டாடப்படுகிறது. பாரதம் இத்தனை வித்தியாசங்கள் நிறைந்த தேசம். உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். பனிக்காலம் இப்பொழுது மறைந்து கொண்டிருக்கிறது. வசந்த காலம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் தன் வருகையைப் பதிவு செய்து வருகிறது. இலையுதிர்க்காலத்திற்குப் பிறகு விருட்சங்களில் புதிய தளிர்கள் துளிர்க்கத் தொடங்கியிருக்கின்றன, மலர்கள் மலர்கின்றன, காடு-கழனி, தோட்டம்-துரவு எல்லாம் பசுமை பொலிந்து கொண்டிருக்கிறது. புள்ளினங்கள் கீசுகீசென்று குதூகலிக்கின்றன. மலர்கள் மட்டுமல்லாமல், கனிகளும் கூட ஆதவனின் கதிரொளியில் பளிச்சிடுகின்றன. கோடைக்காலக் கனியான மாங்கனியின் பிஞ்சுகள் வசந்த காலத்திலேயே தென்படத் தொடங்கியிருக்கின்றன. வயல்வெளிகளில் கடுகுப் பயிரின் மஞ்சள் மலர்கள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பூவரசு மலர்களின் செவ்வண்ண மலர்கள், ஹோலிப் பண்டிகை வருகைக்குக் கட்டியம் கூறுகின்றன. பருவகால மாற்றத்தின் இந்தக் கணங்களை அமீர் குஸ்ரு மிகவும் சுவைபட வர்ணித்திருக்கிறார்.
வயல்கள் எங்கும் கடுகுப் பயிர்கள் பூத்துக் குலுங்குகின்றன,
மாமரமலர்கள் மொட்டவிழ்கின்றன, பூவரசு பூக்கிறது,
குயில்கள் குக்கூ குக்கூவெனக் கூவுகின்றன.
இயற்கை குதூகலத்தில் திளைக்கும் போது, சூழல் சுகமாக அமையும்,, மனிதனும் இந்தச் சூழலின் இனிமையில் இன்பம் அடைகிறான். வசந்த பஞ்சமி, மஹாசிவராத்திரி, ஹோலிப் பண்டிகை ஆகியன மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சிப் பூக்களை உதிர்க்கின்றன. அன்பு, சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவை தவழும் சூழலில் நாம் பங்குனி மாதத்தை நிறைவு செய்யவிருக்கிறோம், புதிய சித்திரை மாதத்தை வரவேற்க தயாராகிறோம். வசந்த காலம் இந்த இரு மாதங்களின் இணைவு.
மனதின் குரலுக்கு முன்பாக நான் உங்கள் ஆலோசனைகளைக் கேட்கும் போதெல்லாம், ஏராளமான ஆலோசனைகளை எனக்கு அனுப்பி உதவுவதற்காக நான் இலட்சோபலட்சம் நாட்டு மக்களுக்கு என் நன்றிகளை முதலில் தெரிவிக்கிறேன். நரேந்திர மோடி செயலியில், டுவிட்டரில், பேஸ்புக்கில், கடிதங்கள் வாயிலாக என அனைத்து வகைகளிலும் பங்களித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
நிறைய பொது மக்களுக்கு ISROவின் சாதனைகள் பற்றித் தெரியவில்லை என்று நரேந்திர மோடி செயலியில் ஷோபா ஜாலான் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், நீங்கள் 104 செயற்கை கோள்கள் பற்றியும் இடைமறிப்பு ஏவுகணை குறித்தும் தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஷோபாஜி, பாரதத்துக்குப் பெருமை சேர்த்திருக்கும் எடுத்துக்காட்டை நினைவு கூர்ந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி. ஏழ்மையை எதிர்கொள்வதாக இருக்கட்டும், நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதாகட்டும், உலகோடு நம்மை இணைத்துக் கொள்வதாகட்டும், அறிவாற்றலையும், தகவல்களையும் கொண்டு சேர்ப்பதாகட்டும், தொழில்நுட்பம், அறிவியல் ஆகியன இவற்றில் தங்களுக்கே உரிய பதிவை ஏற்படுத்தியிருக்கின்றன. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் நாள் பாரதத்தின் சரித்திரத்தில் ஒரு பெருமிதம் அளிக்கும் நன்னாள். நமது விஞ்ஞானிகள் உலக அரங்கில் பாரதத்தை நெஞ்சு நிமிர்த்தச் செய்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பல வியத்தகு சாதனைகளைப் புரிவதில் இஸ்ரோ வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். செவ்வாய்க் கோளுக்கு, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் திட்டப்படி மங்கள்யானை அனுப்பி வெற்றி பெற்றதற்குப் பிறகு, இப்பொழுது சில நாட்களுக்கு முன்பாக விண்வெளித் துறையில் ஒரு புதிய உலக சாதனையை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது. இஸ்ரோவின் இந்த மெகா சாதனை மூலமாக அமெரிக்கா, இஸ்ரேல், கஜிகிஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, யூ.ஏ.இ., பாரதம் என, ஒரே நேரத்தில் பல நாடுகளின் 104 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன. ஒரே சமயத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் நாடாக பாரதம் உருப்பெற்று இருக்கிறது. மேலும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இது பி.எஸ்.எல்.வியின் 38ஆவது வெற்றிகரமான செயல்பாடாகும். இது இஸ்ரோவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாரதத்துக்குமே மாபெரும் வரலாற்று சாதனை. இஸ்ரோவின் குறைந்த செலவிலான விண்வெளித் திட்டம் உலகம் முழுவதற்குமே வியப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒன்றாகியிருக்கிறது, உலகம் முழுமையும் பாரத விஞ்ஞானிகளின் வெற்றியைப் பாராட்டியிருக்கிறது.
சகோதர சகோதரிகளே, இந்த 104 செயற்கைகோள்களில் ஒன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் – கார்ட்டோசாட் 2 டி – இது பாரதத்தின் செயற்கைகோள், இதன் மூலமாக எடுக்கப்படும் படங்கள், கனிம வளங்களை அடையாளம் காண்பது, கட்டமைப்பு, வளர்ச்சி தொடர்பான மதிப்பீடு, நகர்ப்புற மேம்பாடு பற்றிய திட்டமிடுதல் ஆகியவற்றுக்குப் பேருதவியாக இருக்கும். குறிப்பாக, நாட்டில் இருக்கும் நீராதாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?, அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம், எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் அறிந்து கொள்ள நமது புதிய செயற்கைக்கோளான கார்ட்டோசாட் 2டி எனது விவசாய சகோதர சகோதரிகளுக்குப் பேருதவியாக இருக்கும். சென்றடைந்தவுடனேயே நமது செயற்கைகோள் சில படங்களை அனுப்பி இருக்கிறது. அது தனது பணியை ஆற்றத் தொடங்கி விட்டது. இந்த அனைத்து செயல்பாடுகளும் நமது இளைய சமுதாய விஞ்ஞானிகள், நமது பெண் விஞ்ஞானிகள் ஆகியோர் தலைமையில் நடந்திருக்கின்றன என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இளைய விஞ்ஞானிகள், பெண் விஞ்ஞானிகள் ஆகியோரின் இத்தனை சிறப்பான பங்களிப்பு என்பது இஸ்ரோவின் வெற்றிக்கு மிகப் பெருமை அளிக்கும் விஷயம். நாட்டுமக்களான உங்கள் தரப்பில் நான் இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களுக்காக, நாட்டுப் பணியை மனதில் கொண்டு விண்வெளி விஞ்ஞானத்தை செயல்படுத்தியிருக்கும் உங்கள் நோக்கம், இன்று போலவே என்றும் நீங்காது நிலைத்திருப்பதற்காக, தினம் தினம் பல புதிய சாதனைகளை நீங்கள் படைத்துக் கொண்டே இருக்கின்றீர்கள். நமது இந்த விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எத்தனை பாராட்டுக்களை அளித்தாலும், அவையனைத்துமே குறைவு தான்.
ஷோபாஜி கேட்ட இன்னொரு கேள்வி பாரதத்தின் பாதுகாப்பு தொடர்பானது. பாரதம் இந்த விஷயத்தில் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது. இது தொடர்பாக அதிகம் பேசப்படவில்லை என்றாலும், ஷோபா அவர்களின் கவனம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் மீது சென்றிருக்கிறது. பாதுகாப்புத் துறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இடைமறிக்கும் ஏவுகணை ஒன்றை பாரதம் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்திருக்கிறது. இடைமறிக்கும் தொழில்நுட்பம் உடைய இந்த ஏவுகணை, சோதனையின் போது, நிலத்திலிருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் எதிரி ஏவுகணையை சாம்பலாக்கி வெற்றிப்பதிவை ஏற்படுத்தி இருக்கிறது. பாதுகாப்புத் துறையில் இது மிகப் பெரிய சாதனையாகும். உலகில் இந்தத் தொழில்நுட்பத்திறன் நான்கைந்து உலக நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது என்பது உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாரத விஞ்ஞானிகள் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். 2000 கி.மீ. தொலைவிலிருந்தும் கூட பாரதத்தைத் தாக்க ஒரு ஏவுகணை வந்து கொண்டிருக்கிறது என்றாலும் கூட, நமது இந்த ஏவுகணை விண்ணில் அதை அழித்து விடும் வல்லமை வாய்ந்தது என்பது தான் இதன் பலம். நாம் புதிய தொழில்நுட்பத்தைக் காணும் போதோ, ஏதோ ஒரு புதிய விஞ்ஞான சாதனையைப் பார்க்கும் போதோ, நம் மக்களுக்கு ஆனந்தம் உண்டாகிறது. மனித சமுதாய வளர்ச்சிப் பயணத்தில் தேடல் என்பது மிக முக்கிய பங்களிப்பு நல்கி வந்திருக்கிறது. யாரிடத்தில் சிறப்பான புத்திகூர்மை இருக்கிறதோ, அவர்கள் தேடல்களோடு நின்று விடுவதில்லை, அவரவர்களுக்குள்ளே வினா எழுப்பிக் கொள்கிறார்கள், புதிய தேடல்களைத் தோண்டி எடுக்கிறார்கள், புதிய தேடல்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்தத் தேடல், புதியன படைத்தலுக்கான பாதையை வகுத்துக் கொடுக்கிறது. அவர்களுக்குள்ளே எழும்பிய வினாவுக்கான விடை கிடைக்கும் வரையில் அவர்கள் அமைதியாக ஓய்ந்திருப்பதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மனித சமுதாய வாழ்க்கையில், இந்த வளர்ச்சிப் பயணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால், மனித சமுதாயத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் எங்குமே முழுமையான ஓய்வு இருந்ததே இல்லை என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியும். முழுமையான ஓய்வு சாத்தியமே இல்லை. பிரும்மாண்டத்தில், படைப்பின் விதிகளைத் தெரிந்து கொள்ள, மனிதனின் மனம் அயராது முயற்சி செய்து வந்திருக்கிறது. புதிய அறிவியல், புதிய தொழில்நுட்பம் ஆகியன இதிலிருந்து தான் பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு தொழில்நுட்பமும், ஒவ்வொரு புதிய அறிவியல் வடிவமாக, ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
பிரியம்நிறை இளைஞர்களே, விஞ்ஞானம், விஞ்ஞானிகளின் கடின உழைப்பு பற்றிப் பேசும் போது, நமது இளைய தலைமுறையினர் விஞ்ஞானத்தின்பால் ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல முறை மனதின் குரலில் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். பல விஞ்ஞானிகள் தேசத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இன்றைய விஞ்ஞானிகள், இனிவரும் யுகத்தில் தோன்றவிருக்கும் தலைமுறைகளின் வாழ்க்கையில் ஒரு நிலையான மாற்றத்தின் காரணிகளாக ஆகிறார்கள்.
எந்த ஒரு விஞ்ஞானமும் பூரண நிலையில் வானத்திலிருந்து குதிக்கவில்லை. அனைத்து அறிவியல் சாதனைகள் அனைத்தும், அனுபவத்தால் செதுக்கப்பட்டவை என்று அண்ணல் காந்தியடிகள் கூறுவதுண்டு.
உண்மை நாடி ஓயாது உழைக்கும் நம் நவயுக விஞ்ஞானிகளின் தாகம், விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று பெருமதிப்பிற்குரிய பாபு அவர்கள் கூறியிருக்கிறார்.
கோட்பாடுகளை எப்படி நடைமுறைக்கு ஏற்றாற்போல ஆக்குவது, அதற்கான சாதனங்கள் என்ன, எந்த மாதிரியான தொழில்நுட்பத்தைக் கையாள்வது என்பதை விஞ்ஞானம் பொதுமக்களின் தேவையுணர்ந்து செய்ய வேண்டும்; அப்போது தான் எளிய மனிதனுக்கான மகத்துவம் வாய்ந்த பங்களிப்பாக இது ஆக முடியும். கடந்த நாட்களில், நித்தி ஆயோக்கும், பாரதத்தின் அயலுறவுத் துறையும் 14ஆவது அயல்நாடுவாழ் இந்தியர்கள் தினத்தன்று மிகத் தனித்தன்மை வாய்ந்த வகையில் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சமுதாயத்துக்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புக்களை வரவேற்றிருந்தார்கள். இத்தகைய புதுமைகளை அடையாளம் காணல், அவற்றைப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டல், மக்களுக்குத் தகவல்கள் அளித்தல், இத்தகைய கண்டுபிடிப்புக்களை எப்படி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல், பேரளவு உற்பத்தியை எப்படி செயல்படுத்துதல், அதனை வர்த்தகரீதியாக பயன்கொள்ளுதல் ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பவற்றை எல்லாம் நான் பார்த்த போது, எத்தனை எத்தனை மகத்துவம் நிறைந்த வகையில் போட்டியாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.
நான் பார்த்த இப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; இது நமது ஏழை மீனவர்களுக்குப் பயன் அளிப்பதாக அமைந்திருக்கிறது. எளிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது, எங்கே செல்ல வேண்டும், எங்கே அதிகப் படியான மீன்கள் கிடைக்கின்றன, காற்று வீசும் திசை எது, அதன் வேகம் எவ்வளவு, அலைகளின் உயரம் எத்தனை – என்று இந்த மொபைல் செயலியில் அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன. இதனால் நமது மீனவ சகோதரர்களுக்கு மிகவும் குறைவான நேரத்தில், அதிக மீன்கள் கிடைப்பதற்கு அவர்களின் மீன்பிடிப்பில் அது உதவியாக இருக்கிறது. சில வேளைகளில், பிரச்சினையே கூட விஞ்ஞானத்தின் மகத்துவத்தைத் துலக்கிக் காட்டித் தீர்வை அளிக்கிறது. மும்பையில் 2005ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவு மழை கொட்டித் தீர்த்தது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, கடலும் சீற்றத்துடன் காட்சியளித்தது, ஏராளமான இடர்ப்பாடுகள் உண்டாயின. எந்த ஒரு இயற்கை இடர் ஏற்பட்டாலும், அது முதலில் தட்டுவது ஏழை வீட்டின் கதவுகளைத் தான். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று இருவர் முடிவு செய்தார்கள், அவர்கள் இது போன்ற சங்கடங்கள் நிறை காலத்தில் வீட்டைக் காப்பதோடு, வீட்டில் இருப்பவர்களையும் வெள்ளப்பெருக்கிலிருந்து காத்து, நீரினால் பரவும் நோய்களிலிருந்தும் காக்கக் கூடிய ஒரு வீட்டை மேம்படுத்தினார்கள். இப்படி ஏராளமான கண்டுபிடிப்புக்களை என்னால் காண முடிந்தது.
நாட்டில் இந்த வகையிலான பங்களிப்பை பலர் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நான் கூற விழைவது. நமது சமுதாயமும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இயங்கும் சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு வகையில் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் இணைபிரியாத அங்கமாக ஆகிக் கொண்டிருக்கிறது. கடந்த நாட்களில் டிஜிதன் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல மக்கள் ரொக்கப் பரிவர்த்தனை முறையிலிருந்து மாறி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பாரதத்திலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிக விரைவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் தங்கள் செல்பேசியில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப் பழகி வருகிறார்கள். இதை நான் நல்ல அறிகுறியாகக் காண்கிறேன். நமது நாட்டில் கடந்த நாட்களில் லக்கி க்ராஹக் யோஜனா, அதிர்ஷ்டகரமான நுகர்வோர் திட்டம், டிஜிதன் வியாபாரி யோஜனா, டிஜிதன் வியாபாரிகளுக்கான திட்டம் ஆகியவற்றுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒவ்வொரு நாளும் 15000 பேருக்கு ஓராயிரம் ரூபாய் வெகுமதி கிடைத்து வந்திருக்கிறது.
இந்த இரண்டு திட்டங்கள் வாயிலாக, பாரதத்தில் டிஜிட்டல் கொள்முதல் என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாறிக் கொண்டிருப்பது புலனாகிறது, ஒட்டுமொத்த தேசமும் இதை இருகரம் கொண்டு வரவேற்றிருக்கிறது. இது வரை டிஜிதன் திட்டத்தின்படி, 10 இலட்சம் பேருக்கு வெகுமதி கிடைத்திருக்கிறது, 50000க்கும் அதிகமான வியாபாரிகளுக்கு வெகுமதி கிடைத்திருக்கிறது, சுமார் ஒண்ணரை கோடிக்கும் அதிகமான தொகை, இந்தத் திட்டங்களில் பங்கெடுத்து முன்னெடுத்துச் சென்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பது பேருவகை அளிக்கும் விஷயம். இந்தத் திட்டத்தின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்குத் தலா ஒரு இலட்சம் வெகுமதி கிடைத்திருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தலா 50000 ரூபாய் வெகுமதியாகக் கிடைத்திருக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் இதில் அதிக உற்சாகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு இதனால் பயனும் கிடைத்திருக்கிறது. இதை நான் அலசிப் பார்த்த போது, இதில் இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் பங்கெடுத்திருந்தார்கள் என்பது தெரிய வந்தது; இதில் 15 வயதே ஆன இளைஞனும் இருந்தார், 65-70 வயது கொண்ட மூத்த குடிமக்களும் இருந்தார்கள். மைசூரிலிருந்து சந்தோஷ் அவர்கள் தனது மகிழ்ச்சியை நரேந்திர மோடி செயலியில் வெளிப்படுத்தி இருக்கிறார்; அவர் அதிர்ஷ்ட வாடிக்கையாளர் திட்டத்தின் (லக்கி க்ராஹக் யோஜனா) மூலமாக தனக்கு 1000 ரூபாய் கிடைத்ததாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் எழுதியதில் முக்கியமான விஷயமாக நான் கருதுவதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு 1000 ரூபாய் வெகுமதியாகக் கிடைத்தது என்னவோ உண்மை தான் என்றாலும், ஒரு ஏழைத் தாயின் வீட்டில் தீப்பற்றி, அதில் இருந்த அனைத்தும் சாம்பலாகிப் போனதை நான் பார்த்த போது, எனக்குக் கிடைத்த இந்த 1000 ரூபாய் வெகுமதியை நான் அந்த ஏழைத் தாய்க்கு உதவும் வகையில் அளித்து விட்டேன், என் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது என்று கூறியிருக்கிறார். சந்தோஷ் அவர்களே, உங்கள் பெயரும் உங்கள் செயலும் எங்கள் அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கிறது. நீங்கள் மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் செயலைச் செய்திருக்கிறீர்கள்.
தில்லியைச் சேர்ந்த 22 வயதுடைய கார் ஓட்டுநரான சபீர், பண மதிப்பிழப்பிற்கு பிறகு தனது தொழிலில் டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார், அரசின் அதிர்ஷ்ட வாடிக்கையாளர் திட்டத்தில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான வெகுமதி கிடைத்திருக்கிறது. இன்று அவர் கார் ஓட்டினாலும், ஒரு வகையில் இந்தத் திட்டத்தின் தூதராக மாறியிருக்கிறார். தன் காரில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளோடும் இவர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். மிக உற்சாகமாக அவர் விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதோடு, மற்றவர்களையும் இவர் ஊக்கப்படுத்தி வருகிறார்.
மஹாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பரான பூஜா நேமாடே, முதுகலைப் படிப்பு படித்து வரும் மாணவி; இவர் ரூப்பே அட்டை, இ-வாலட் ஆகியவற்றை எப்படி தன் குடும்பத்தார் பயன்படுத்துகிறார்கள், இதில் அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறது என்பது தொடர்பான தனது அனுபவங்களைத் தனது நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார். ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி இவருக்கு பெரியதொரு தொகையாக இருந்தாலும், இவர் இதை லட்சியமாகக் கொண்டு மற்றவர்களையும் இந்த வழிமுறையில் ஈடுபடுத்தி வருகிறார்.
இந்த அதிர்ஷ்டகர நுகர்வோர் திட்டம் அல்லது டிஜிதன் விபாரிகளுக்கான திட்டத்தின் மூலம் வெகுமதி கிடைக்கப் பெற்றவர்கள் இந்த வழிமுறையின் பிரதிநிதிகளாக, நீங்கள் உங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன். இந்த இயக்கத்துக்கு நீங்கள் தலைமையேற்க வாருங்கள். நீங்கள் இதை முன்னெடுத்துச் செல்லுங்கள், ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிரான போரில், இதற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் அனைவருமே என் பார்வையில், ஊழலுக்கு எதிரான புதிய போர் வீரர்கள். ஒரு வகையில் நீங்கள் நேர்மையின் போராளிகள். அதிர்ஷ்டக்கார நுகர்வோர் திட்டம் 100 நாட்கள் நிறைவடைந்த பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் இல்லையா? ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று அண்ணல் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் வருகிறது. இது நினைவில் கொள்ளத்தக்க நன்னாள். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று மிகப் பெரிய பரிசுகளுக்கான குலுக்கல் நடைபெறவிருக்கிறது. இன்னும் சுமார் 40-45 நாட்கள் எஞ்சியிருக்கின்றன. பாபா சாஹேப் அம்பேத்கரை நினைவு கொள்ளும் வகையில், உங்களால் ஒரு வேலை செய்ய முடியுமா? சில நாட்கள் முன்பு தான் பாபா சாஹேப் அம்பேட்கரின் 125வது பிறந்த நாள் கடந்து சென்றது. அவரது நினைவைப் போற்றும் வகையில் நீங்கள் குறைந்தபட்சம் 125 பேரையாவது பீம் செயலியை தரவிறக்கம் செய்யக் கற்றுக் கொடுங்கள். இதன் மூலமாக எப்படி பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதைக் கற்றுத் தாருங்கள், குறிப்பாக உங்கள் அருகிலிருக்கும் சிறு வியாபாரிகளுக்கு இதைச் சொல்லிக் கொடுங்கள்.
இந்த முறை பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளும் பீம் செயலியும், சிறப்பான மகத்துவம் நிறைந்தவையாக மாறட்டும்; பாபா சாஹேப் நிர்மாணித்த அடித்தளத்தை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதை நான் குறிப்பிட விரும்புகிறேன். வீடு வீடாகச் சென்று, அனைவரையும் இதோடு இணைத்து, 125 கோடி நாட்டு மக்களின் கைகளில் பீம் செயலி சென்று சேர்வதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 2-3 மாதங்களில் இந்த இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் காரணமாக, பல நகரியங்களில், பல கிராமங்களில், பல நகரங்களில் பெருவெற்றி கிட்டியிருக்கிறது.
பாசமிகு நாட்டுமக்களே, நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஆணிவேராக விவசாயம் இருக்கிறது. கிராமங்களின் பொருளாதார பலம், தேசத்தின் பொருளாதார வேகத்துக்கு வலு கூட்டுகிறது. நான் இன்று உங்களுடன் ஒரு மகிழ்வு தரும் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது விவசாய சகோதர சகோதரிகள் கடுமையாக உழைத்து களஞ்சியத்தை நிரப்பி இருக்கிறார்கள். நமது தேசத்தின் விவசாயிகளின் உழைப்பு காரணமாக, இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு விளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நமது விவசாய சகோதர சகோதரிகள் பழைய சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறார்கள் என்று அனைத்துக் குறியீடுகளும் தெரிவிக்கின்றன. மகசூலைப் பார்க்கும் போது, ஏதோ இன்று தான் பொங்கலையும் பைசாகிப் பண்டிகையையும் நாம் கொண்டாடுகிறோம் என்பது போல ஒவ்வொரு நாளும் தோன்றத் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு சுமார் இரண்டாயிரத்து 200 இலட்சம் டன்களை விட அதிகமாக மகசூல் கிடைத்திருக்கிறது. நமது விவசாயிகள் கடைசியாக நிகழ்த்திய சாதனையை விட, இது 8 சதவீதம் அதிகம். உள்ளபடியே இது ஒரு வியத்தகு சாதனை. நான் குறிப்பாக தேசத்தின் விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க இன்னொரு காரணமும் இருக்கிறது – அவர்கள் பாரம்பரியமான உணவுப்பயிர்களை விளைவிப்பதைத் தவிர, பலவகையான பருப்புவகைப் பயிர்களையும் பயிர் செய்திருக்கிறார்கள். ஏனென்றால், பருப்பு வகைகளில் தான் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்திருக்கிறது. என்நாட்டு விவசாயிகளின் காதுகளில் ஏழைகளின் குரல் விழுந்திருக்கிறது, அவர்கள் சுமார் இருநூற்று தொண்ணூறு ஹெக்டேர் நிலத்தில் பலவகையான பருப்புவகைப் பயிர்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். இது வெறும் பருப்புவகைகளின் உற்பத்தி மட்டும் அல்ல, இது என் நாட்டு ஏழைகளுக்கு விவசாயிகள் புரிந்திருக்கும் மகத்தான சேவை. நான் விடுத்த ஒரு வேண்டுகோளுக்கு, எனது ஒரு விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து, பருப்புவகைகள் மகசூலில் சாதனை படைத்த நாட்டின் விவசாய சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பான என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
அன்புநிறை நாட்டுமக்களே, நமது நாட்டில், அரசு வாயிலாக, சமுதாயம் வாயிலாக, அமைப்புகள் வாயிலாக, இயக்கங்கள் வாயிலாக, ஒவ்வொருவரும் தூய்மையை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு வகையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு அடைந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அரசு இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த நாட்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கான அமைச்சகத்தின் செயலரின் தலைமையின் கீழ், 23 மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளுக்கான நிகழ்ச்சி, தெலங்கானாவில் நடைபெற்றது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலின் மூடிய அறைகளுக்குள்ளே இந்த கருத்தரங்கம் நடைபெறவில்லை, அடிமட்டத்தில் தூய்மைப்பணிகளின் மகத்துவம் என்ன, அதன் செயல்படுத்தலாக இது அமைந்தது. பிப்ரவரி மாதம் 17-18ஆம் தேதிகளில் ஐதராபாதில் கழிப்பறைத் தொட்டிகளை வெறுமையாக்கும் பயிற்சி தொடக்கி வைக்கப்பட்டது. 6 வீடுகளில் இருக்கும் கழிப்பறைத் தொட்டிகளை வெறுமையாக்கி, அவை தூய்மைப்படுத்தப் பட்டன, இரண்டு தொட்டிகள் கொண்ட கழிப்பறைகளின் தொட்டிகளை அகற்றி, அவற்றை எப்படி மறுபடி பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று அதிகாரிகள் செய்து காட்டினார்கள். இந்தப் புதிய உத்தியைப் பயன்படுத்தும் கழிப்பறை எத்தனை வசதிகரமானது, இவற்றை வெறுமையாக்குவது முதல் தூய்மைப்படுத்துவது வரை எந்த சங்கடமும் ஏற்படுவது இல்லை, எந்த கஷ்டமும் இல்லை, உளவியல்ரீதியிலான எந்தத் தடையும் இல்லை, எந்தத் தடங்கலும் இல்லை என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள். நாம் எப்படி சாதாரணமாக சுத்தம் செய்கிறோமோ, அதைப் போலவே கழிப்பறைத் தொட்டிகளையும் தூய்மையாக்க முடியும். இந்த முயற்சியின் பலனாக, தேசத்தின் ஊடகங்களில் இது நன்கு பரப்பப்பட்டது, இதன் மீது அழுத்தம் அளிக்கப்பட்டது, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தாமே கழிப்பறைத் தொட்டியை சுத்தம் செய்யும் போது, தேசத்தின் கவனம் அவர்கள்பால் செல்வது என்பது இயல்பானது தானே!
இந்தக் கழிப்பறைத் தொட்டியைத் தூய்மைப்படுத்தும் பணியில், கழிவுகள் என்று நாம் கருதுபவற்றை உரம் என்ற கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்த்தோமேயானால், ஒரு வகையில் இதைக் கருப்புத் தங்கம் என்று கொள்ளலாம். கழிவிலிருந்து செல்வம் என்றால் என்ன என்பதை நாம் இங்கே கண்கூடாகக் காணலாம். இது நிரூபிக்கப்பட்டு விட்டது. 6 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, சராசரியான ஒரு இரட்டைத் தொட்டி கழிப்பறை – இது சுமார் 5 ஆண்டுகளில் நிரம்பி விடும். இதன் பின்னர் கழிவுகளை எளிதாக அகற்றி, இரண்டாவது தொட்டிக்கு அதைத் திருப்பி விட முடியும். 6 முதல் 12 மாதங்களில் தொட்டியில் சேர்ந்திருக்கும் கழிவுகள் முழுமையாக மக்கி விடும். இந்த மக்கிய கழிவினைக் கையாள்வது மிகவும் பாதுகாப்பானது, உரம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, இது மிகவும் மகத்துவம் நிறைந்த உரமான என்.பி.கே. விவசாயிகளுக்கு இந்த என்.பி.கே. பற்றி நன்கு தெரியும். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம். – இந்தச் செறிவு, வேதிப் பொருட்கள் நிறைந்தது. இது விவசாயத்தில் மிகவும் சிறப்பான உரமாகக் கருதப்படுகிறது.
எப்படி அரசு தரப்பில் இப்படிப்பட்ட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றதோ, அதே போல பலரும் இப்படிப்பட்ட முன்னெடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இப்போதெல்லாம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தூய்மை பற்றிய செய்திகள் என்ற சிறப்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் எத்தனைக்கெத்தனை விஷயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றனவோ, அத்தனைக்கத்தனை பயனளிக்கும். அரசிலும் கூட, பல்வேறு துறைகள் தூய்மை தொடர்பான இருவாரங்களுக்கு ஒரு முறை நடக்கும் தூய்மை தொடர்பான கூட்டங்களுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்து வருகிறார்கள். மார்ச் மாதம் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து இந்தத் தூய்மை இயக்கத்துக்கு வலு சேர்க்கவிருக்கிறார்கள். மார்ச் மாதத்தின் இரண்டாவது கூட்டத்தில், கப்பல் போக்குவரத்து அமைச்சகமும், நீர் ஆதாரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதிக்கு புத்துயிர் ஊட்டும் அமைச்சகமும் இணைந்து, மார்ச் மாதத்தின் கடைசி 2 வாரங்களுக்கு தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றன.
நமது நாட்டில் எந்த குடிமகன் நல்லதொரு பணியில் ஈடுபட்டாலும், ஒட்டுமொத்த தேசமும் ஒரு புதிய சக்தியை உணர்கிறது, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கிறது. ரியோ பாராலிம்பிக்ஸில், நமது மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களின் சாகசங்களுக்கு நாம் பெரும் வரவேற்பு அளித்தோம். இந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்வைத் திறன் இல்லாதோருக்கான டி-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், பாரதம் பாகிஸ்தானத்தைத் தோற்கடித்து, 2வது முறையாக தொடர்ந்து உலக சாம்பியனாகி, தேசத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். நான் மீண்டும் ஒரு முறை அணியின் அனைத்து வீரர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தில் நமது மாற்றுத் திறனாளி நண்பர்களின் சாதனைகள் நமக்குப் பெருமிதம் அளிக்கின்றன. மாற்றுத் திறன் படைத்த நமது சகோதர சகோதரிகள் அதிகத் திறன் படைத்தவர்கள், மனவுறுதி நிரம்பியவர்கள், சாதனையாளர்கள், மனோதிடம் கொண்டவர்கள் என்று நான் எப்போதுமே கருதி வந்திருக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை இருந்து கொண்டே இருக்கின்றன.
விஷயம் விளையாட்டுத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, விண்வெளி விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, நமது தேசத்தின் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். சரிநிகர் சமானமாக அவர்கள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள், தங்கள் சாதனைகள் மூலம் தேசத்தின் நற்பெயருக்கு ஒளிகூட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் ஆசிய ரக்பி செவன்ஸ் கேடயத்துக்கான போட்டியில், நமது பெண் வீராங்கனைகள் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார்கள். இந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது அளவில்லா பாராட்டுக்கள்.
மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாரதத்திலும் பெண் குழந்தைகளுக்கு மகத்துவம் அளிக்க வேண்டி, குடும்பம், சமுதாயம் ஆகியவற்றில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும், புரிந்துணர்வு பெருக வேண்டும். பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் எனும் இயக்கம் துரித கதியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று இது வெறும் அரசுத் திட்டமாக மட்டும் நின்று போய் விடவில்லை. ஒரு சமூக புரிந்துணர்வாக, அனைவருக்கும் கல்வி என்ற இயக்கமாக இது பரிமளித்திருக்கிறது. கடந்த ஈராண்டுகளில் இந்தத் திட்டம் மக்கள் சமுதாயத்தை இணைத்திருக்கிறது, தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்த முக்கியமான விஷயம் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது, பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் பழைய பழக்க வழக்கங்கள் குறித்து மக்களின் எண்ணப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறது. பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்பது காதில் விழும் போது, மனதில் அதிக ஆனந்தம் ஏற்படுகிறது. ஒரு வகையில் பெண் குழந்தைகள் குறித்து ஆக்கபூர்வமான எண்ணப்பாடு, சமூக ஏற்பின் காரணமாக ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு இயக்கம் காரணமாக, பால்ய விவாஹம் தடுக்கப் பட்டிருக்கிறது என்பதை நான் கேள்விப்பட்டேன். இது வரை சுமார் 175க்கும் மேற்பட்ட பால்ய விவாஹங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் செல்வமகள் சேமிப்பு (சுகன்யா சம்ருத்தி) திட்டத்தின்படி, சுமார் 55-60 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கியிருக்கிறார்கள். ஜம்மு-கஷ்மீரத்தின் கட்டுவா மாவட்டத்தில் convergence model, எனப்படும் ஒன்றிணைதல் மாதிரியின் படி, அனைத்துத் துறைகளும் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன, கிராம சபைகள் கூட்டப்படுவதோடு கூட, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அனாதைப் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல், அவர்களின் கல்வியை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான முழுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் हर घर दस्तक - ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டுங்கள் என்ற திட்டத்தின்படி, கிராமம் தோறும் ஒவ்வொரு வீட்டின் பெண் குழந்தைகளின் கல்விக்காக ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கள் குழந்தை, எங்கள் பள்ளிக்கூடம், अपना बच्चा, अपना विद्यालय இயக்கம் செயல்படுத்தப்பட்டு, பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்தி விடும் பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மீண்டும் அவர்களைப் படிப்பில் ஈடுபடுத்துவது என்ற இயக்கம் நடைபெற்று வருகிறது. நான் கூற வருவது என்னவென்றால், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் எனும் இயக்கம் பல்வேறு வடிவங்களைத் தாங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான். இந்த ஒட்டுமொத்த இயக்கமும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. புதுப்புதுக் கற்பனைகளோடு இது இணைந்து பயணிக்கிறது. வட்டாரத் தேவைகளுக்கு ஏற்ப இது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதை நான் நல்ல அறிகுறியாகவே கருதுகிறேன். மார்ச் மாதம் 8ஆம் தேதியை பெண்கள் தினமாகக் கொண்டாடும் வேளையில், நாம் ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும்
”சக்தி படைத்தவர்கள், எங்கள் பாரதப் பெண்கள்,
சக்தியில் அவர்கள் அதிகம் இல்லை, குறைவும் இல்லை, அவர்கள் அனைவரும் சரிநிகர் சமமே”
பிரியம்நிறை நாட்டு மக்களே, மனதின் குரலில், அவ்வப்போது, ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி உரையாட உங்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் ஆக்கபூர்வமாக இதோடு இணைந்து வந்திருக்கிறீர்கள். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள எனக்கு நிறைய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. உலகநடப்பு, கிராமங்களின் நிலை, ஏழைகளின் மனதில் இழையோடும் உணர்வுகள் எல்லாம் என்னை வந்து சேர்கின்றன. உங்கள் பங்களிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் என் கோடானுகோடி நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். நமது குடியரசுத் திருநாளை ஜனவரி மாதம் 26ஆம் தேதி, நாட்டின் மூலை முடுக்கெங்கும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் நாம் கொண்டாடினோம். பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் கடமைகள், அதிகாரங்கள், மக்களாட்சி முறை மீது நாம் கொண்டிருக்கும் முனைப்பு, என ஒருவகையில் இது கலாச்சார உற்சவமாக திகழ்வதோடு, இனிவரும் தலைமுறையினருக்கு ஜனநாயகப் பொறுப்புக்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை செம்மைப்படுத்துகிறது. ஆனால் இப்போதும் நமது நாட்டில் குடிமக்களின் கடமைகள், உரிமைகள் ஆகியன பற்றி எந்த அளவுக்குப் பரவலாகவும் ஆழமாகவும் வாதவிவாதங்கள் நடைபெற வேண்டுமோ அந்த அளவுக்கு இன்னமும் நடைபெறவில்லை. ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை முக்கியத்துவம் அதிகாரங்களுக்கு அளிக்கப்பட்டதோ, அதே அளவு முக்கியத்துவம் கடமைகள் மீதும் கொடுக்கப்பட்டு வந்தது. அதிகாரங்களும் உரிமைகளும் இரு தண்டவாளங்கள். இந்த இரு தண்டவாளங்களின் மீது தான் பாரத ஜனநாயகம் என்ற ரயில்வண்டி விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நாளை ஜனவரி 30ஆம் தேதி, நமது வணக்கத்துக்குரிய அண்ணல் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு நாம் அனைவரும் 2 நிமிட மவுனம் அனுஷ்டித்து, தேசத்துக்காக உயிர் துறந்த தியாகிகளுக்கு நம் நினைவஞ்சலிகளைக் காணிக்கையாக்குவோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலும், ஒரு நாடு என்ற முறையிலும், ஜனவரி மாதம் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துதல் என்பது நமது அனிச்சை இயல்பாக ஆக வேண்டும். அது இரண்டு நிமிடமே ஆனாலும், அதில் சமூகத் தன்மையும் இருக்கிறது, மனவுறுதியும் இருக்கிறது, தியாகிகள் மீதான நமது அக்கறையின் வெளிப்பாடும் இருக்கிறது.
நம் நாட்டின் இராணுவம் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் இயல்பான மரியாதையை வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இந்த குடியரசுத் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்ட வீரதீரச் செயல்புரிந்தோருக்கான பல்வேறு பதக்கங்களால் கவுரவிக்கப்பட்ட வீரர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு நான் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதக்கங்களில் கீர்த்தி சக்கரம், ஷவுர்ய சக்கரம், பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் என பல படிநிலைகள் இருக்கின்றன. நான் குறிப்பாக இளைஞர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் சமூகவலைத்தளங்களில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற வகையில் நீங்கள் ஒரு வேலை செய்யலாம். இந்த முறை எந்தெந்த வீரர்களெல்லாம் கவுரவிக்கப்பட்டிருக்கின்றார்களோ, அவர்களைப் பற்றி நீங்கள் வலைத்தளத்தில் தேடி இரண்டொரு நல்ல வார்த்தைகளை எழுதுங்கள், உங்கள் நண்பர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த வீரர்களின் சாகசம், வீரம், பராக்கிரமம் பற்றிய செய்திகளை நாம் ஆழமாகத் தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஆச்சரியமும், பெருமிதமும், உத்வேகமும் ஒருசேர ஏற்படும்.
ஜனவரி 26ஆம் தேதி தொடர்பான செய்திகளால் நாம் பெரும் உற்சாகத்தைம் பெருமகிழ்ச்சியையும் அனுபவித்து வந்த அதே நேரத்தில், இன்னொரு புறத்தில் கச்மீரத்தில் நமது நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நமது இராணுவ வீரர்களில் சிலர் பனிச்சரிவு காரணமாக வீர மரணம் அடைந்திருக்கின்றார்கள். நான் இதில் உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் என் மரியாதைகலந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன், வணங்குகிறேன்.
எனது இளைஞர் நண்பர்களே, நான் தொடர்ந்து மனதின் குரலை ஒலித்து வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், இந்த 4 மாதங்களும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சவாலான மாதங்களாக விளங்குகின்றன. வீட்டில் ஏதாவது ஒரு குழந்தைக்குத் தான் தேர்வு இருக்கிறது என்றாலும், ஒட்டுமொத்த குடும்பமுமே தேர்வுகளின் சுமையில் அழுந்திப் போகின்றது. இந்த நிலையில் எனது மாணவ நண்பர்களோடும், அவர்களின் பெற்றோரோடும், அவர்களின் ஆசிரியர்களோடும் நான் இரண்டொரு வார்த்தைகள் பேச விரும்புகிறேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக நான் சென்ற அனைத்து இடங்களிலும், சந்தித்த அனைவரிடமும் இது அழுத்தத்தின் ஒரு பெரிய காரணமாக அமைந்திருப்பதைக் காண முடிந்தது.
குடும்பம், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் மனோரீதியான அழுத்தம் நிறைந்த சூழ்நிலை காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளிவர வேண்டும் என்று நான் எப்போதுமே உணர்வதுண்டு; ஆகையால் நான் இன்று எனது இளைய நண்பர்களோடு சில விஷயங்களை விரிவாகப் பேச விரும்புகிறேன். நான் இந்த விஷயம் குறித்து அறிவித்த பின்னர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலர் எனக்கு தகவல் அனுப்பினார்கள், என்னிடம் கேள்விகள் எழுப்பினார்கள், ஆலோசனைகள் வழங்கினார்கள், தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்; இவற்றையெல்லாம் பார்த்த பிறகு நான் என் மனதின் குரலை இன்று வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.
”ஐயா, தேர்வுக் காலங்களில் எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், நமது சமூகத்தில் மிகப் பெரிய பயங்கரமான, அச்சமேற்படுத்தும் சூழல் நிலவுகிறது; இதன் காரணமாக மாணவர்களுக்கான உத்வேகம் குறைவுபடுவது மட்டுமல்லாமல், அது மிகவும் வீழ்ச்சியும் அடைகிறது. இப்படிப்பட்டதொரு சூழலை எப்படி மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவது என்பதே உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி.”
இந்தக் கேள்வியை சிருஷ்டி கேட்டிருக்கிறார் என்றாலும் இந்தக் கேள்வி உங்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது என்பதை நான் அறிவேன். தேர்வுகள் என்பவை சந்தோஷம் நிறைந்த ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்த பிறகு, மிகுந்த உற்சாகம் கொப்பளிக்க வேண்டிய ஒரு காலகட்டமாக இது அமைய வேண்டும். மிகக் குறைவானவர்களுக்கே தேர்வுக்காலம் சந்தோஷம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது; பெரும்பாலானோருக்கு தேர்வுக்காலம் அழுத்தம் நிறைந்த ஒரு காலமாக அமைந்து விடுகிறது. நீங்கள் இதை சந்தோஷம் தரும் காலமாகக் கருதுகிறீர்களா இல்லை அழுத்தம் தரும் காலமாக உணர்கிறீர்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். யாரெல்லாம் சந்தோஷமான காலமாக இதைக் கருதுகிறார்களோ, அவர்கள் வெற்றி அடைகிறார்கள்; யாரெல்லாம் அழுத்தம் நிறைந்த காலமாக கருதுகிறார்களோ, அவர்கள் வருத்தப் படுகிறார்கள் – pleasure or pressure. ஆகையால் தேர்வுக்காலம் என்பது ஒரு கொண்டாட்டம், ஒரு பண்டிகை என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. பண்டிகை, கொண்டாட்டம் என்பதை எப்போது வருகிறதோ, அப்போது தான் நமக்குள் இருக்கும் சிறப்பான தன்மை வெளிப்படுகிறது. கொண்டாட்ட நேரங்களில் தான் சமுதாயத்தின் சக்தியையும் நம்மால் உணர முடிகிறது. மிகச் சிறப்பான பண்புகள் அப்போது பளிச்சிடுகின்றன. சாதாரண காலங்களில் நாம் ஒழுங்கு குறைவானவர்களாகவே நமக்குத் தோன்றும், ஆனால் 40-45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கும்பமேளாவைப் பார்த்தால், அமைப்பு தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் மத்தியில் ஒழுங்குமுறை எப்படிப் பளிச்சிடுகிறது என்பது நன்றாகத் தெரியும். தேர்வுகளில் கூட ஒட்டுமொத்த குடும்பத்தில், நண்பர்களிடத்தில், அக்கம்பக்கத்தாரிடத்தில் ஒரு கொண்டாட்டச் சூழலே நிலவ வேண்டும். pressure, pleasureஆக, அதாவது மன அழுத்தம் சந்தோஷமாக மாறுவதை நீங்கள் அப்போது பார்க்கலாம். கொண்டாட்டமான சூழல் உங்கள் சுமையைக் குறைத்து விடும். இந்த 3-4 மாதங்களில் கொண்டாட்டம் நிறைந்த சூழலை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என்று நான் பெற்றோரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒட்டுமொத்த குடும்பமுமே ஒரு குழுவாக செயல்பட்டு, இந்தக் கொண்டாட்டத்தை வெற்றியடைச் செய்வதில் தத்தமது பங்களிப்பை உற்சாகத்தோடு ஆற்ற வேண்டும். நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு விடும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, கச்சிலிருந்து காமரூபம் வரை, அம்ரேலியிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை, இந்த 3-4 மாதங்களில் ஒரே தேர்வுமயமாக இருக்கிறது. அவரவர் தத்தமது வழிகளில், தத்தமது பாரம்பரியத்தை அடியொற்றி, தத்தமது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, இந்த 3-4 மாதங்களைக் கொண்டாட்டமாக மாற்றியமைப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
ஆகையால் தான் smile more score more, புன்சிரிப்போடு தேர்வை எதிர்கொள்ளுங்கள், அதிக மதிப்பெண்களைப் பெறுங்கள் என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். எவ்வளவு அதிக மகிழ்ச்சியாக இந்த நேரத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான மதிப்பெண்கள் உங்களை வந்து சேரும், செய்து தான் பாருங்களேன். நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள் என்று சொன்னால், புன்சிரிப்பு தவழும் முகத்தோடு இருந்தீர்கள் என்றால், நீங்கள் ஆசுவாசத்தை உணர்வீர்கள்; இந்த நிலையில் பல ஆண்டுகாலப் பழைய விஷயங்கள் கூட எளிதில் உங்கள் நினைவுகளில் துலங்கத் தொடங்கும். ஓராண்டுக்கு முன்பாக வகுப்பறையில் ஆசிரியர் என்ன சொன்னார் என்பது தெள்ளத்தெளிவாக உங்கள் மனத்திரையில் பளிச்சிடும். நீங்கள் ஆசுவாசமாக உணரும் காலங்களில் தான் உங்கள் நினைவாற்றல் நன்கு பிரகாசிக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மனவழுத்தத்தோடு இருந்தீர்கள் என்று சொன்னால், அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டுக் கிடக்கும், வெளியிலிருப்பவை உள்ளே நுழையாது, உள்ளிருப்பவையும் வெளியே செல்லாது. சிந்தனாசக்தி ஸ்தம்பித்துப் போவதோடு, அதுவே ஒரு சுமையாகவும் கனக்கத் தொடங்கும். தேர்வுகளில் கூட உங்களுக்கு அனைத்தும் நினைவுக்கு வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். புத்தகம் நினைவுக்கு வரும், அத்தியாயம் நினைவுக்கு வரும், பக்கத்தின் எண் நினைவுக்கு வரும், பக்கத்தின் மேல் பகுதியில், அடிப்பகுதியில் கண்டவையெல்லாம் நினைவுக்கு வரும், ஆனால் அந்தக் குறிப்பிட்ட சொல் மட்டும் நினைவிலிருந்து தப்பிச் செல்லும். இது எப்போது நினைவுக்கு வரும்? தேர்வு முடிந்து வெளியே வந்து சிறிது நேரம் அறைக்கு வெளியே இருக்கும் போது, அட, இது தான் அந்தச் சொல் என்று திடீரென்று உங்கள் நினைவில் வந்து குதிக்கும். இதே சொல் ஏன் தேர்வு எழுதும் அறைக்குள்ளே நினைவுக்கு வரவில்லை? அதற்கான காரணம் அழுத்தம், pressure. வெளியே வந்தவுடன் எப்படி நினைவுக்கு வந்தது? வேறு யாரும் உங்களிடம் வந்து சொல்லவில்லையே, உங்களுக்கு தானாகவே அல்லவா உதித்தது!! ஏன் வந்தது என்றால், நீங்கள் ஆசுவாசமாக உணர்ந்தீர்கள் என்பதால் தான். ஆகையால் தான் நினைவுபடுத்திப் பார்க்க மிகச் சிறந்த மருந்து என்று ஒன்று இருக்குமேயானால், அது ஆசுவாசப்படுத்திக் கொள்வது தான். இதை நான் அனுபவித்து உணர்ந்து கூறுகிறேன்; மனவழுத்தம் இருந்தால், நாம் விஷயங்களை மறந்து விடுகிறோம், ஆசுவாசமாக இருந்தோமேயானால், மிகவும் பயனுள்ள பல விஷயங்கள் எப்படி திடீர் திடீரென்று மனதில் வந்து உதிக்கும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உங்களிடம் தகவல்-ஞானம் இல்லை என்பதோ, நீங்கள் கடினமாக உழைக்கவில்லை என்பதோ அல்ல. ஆனால் எப்போது அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போது உங்கள் அறிவு, உங்கள் தகவல் ஞானம் அனைத்தும் அமிழ்ந்து போய் விடும், அழுத்தம் உங்கள் மீது சவாரி செய்யும். ஆகையால் தான் a happy mind is the secret for a good mark-sheet, ஒரு சந்தோஷமான மனது தான் அதிக மதிப்பெண்களுக்கான திறவுகோல் என்று நான் கூறுவேன். தேர்வுகளை நாம் சரியான கண்ணோட்டத்தில் அணுகுவதில்லை என்று சில வேளைகளில் எனக்குப் படுவதுண்டு. இது ஏதோ ஜீவமரணப் போராட்டமாக நமக்குப் படுகிறது. நீங்கள் எழுதவிருக்கும் தேர்வு என்பது நீங்கள் ஆண்டு முழுவதும் படித்தவற்றுக்கான தேர்வு. இது உங்கள் வாழ்க்கைக்கான உரைகல் அல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறீர்கள் என்பவற்றிற்கான தேர்வு அல்ல. வகுப்பறையில், நீங்கள் எழுதும் தேர்வைத் தவிர, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வந்திருக்கும். ஆகையால் தேர்வுகள் என்பவற்றை வாழ்க்கையின் வெற்றி தோல்விகளாக நாம் எடுத்துக் கொள்ளும் எண்ணத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கும் பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவர் விமானப் படையில் சேரச் சென்றார், தோல்வியடைந்தார். ஒருவேளை அவர் அந்தத் தோல்வியில் துவண்டு, வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தார் என்றால், பாரத தேசத்திற்கு இவ்வளவு பெரிய விஞ்ஞானி கிடைத்திருப்பாரா? இவ்வளவு அருமையான குடியரசுத் தலைவர் கிடைத்திருப்பாரா என்று சிந்தித்துப் பாருங்கள்?
ரிச்சா ஆனந்த் அவர்கள் என்னிடத்தில் ஒரு வினா எழுப்பியிருக்கிறார்.
”இன்றைய நிலையில் கல்விக்கு முன்பாக நான் காணும் மிகப் பெரிய சவால் என்னவென்றால், கல்வி என்பது தேர்வுகளை மையமாகக் கொண்டிருப்பது தான். மதிப்பெண்கள் அதிக மகத்துவம் வாய்ந்தவையாக ஆகியிருக்கின்றன. இதன் காரணமாக போட்டாபோட்டி என்பது அதிகரித்து, மாணவர்களின் மனங்களில் மிகப் பெரிய அளவில் அழுத்தம் அதிகமாகி இருக்கிறது. இந்த நிலையில் கல்வியின் தற்காலப் போக்கையும் இதன் எதிர்காலத்தையும் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”
ஒருவகையில் விடையை இவரே அளித்து விட்டார், ஆனால் ரிச்சா அவர்கள் இது குறித்து நானும் சில சொற்களைப் பேச வேண்டும் என்று விரும்புகிறார். மதிப்பெண்களுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் குறிப்பிட்டதொரு மகத்துவம் தான் இருக்கிறது. வாழ்ககையில் இவையே அனைத்துமாகி விடாது. வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் நீங்கள் எத்தனை ஞானத்தை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் கற்றவற்றை ஒட்டி நீங்கள் எந்த அளவுக்கு வாழ முயற்சி செய்கிறீர்கள்? வாழ்க்கை என்ற தொடர் பயணத்தில் உங்கள் இலக்கு, உங்கள் லட்சியம், இவற்றுக்கு இடையே இசைவு இருக்கிறதா? இதைத் தான் நீங்கள் உற்று நோக்க வேண்டும். நீங்கள் இந்த விஷயங்கள் மீது நம்பிக்கை கொண்டால், மதிப்பெண்கள், காற்றாடியின் வாலைப் போல உங்கள் பின்னே அடக்கமாக அணைந்து வரும்; நீங்கள் மதிப்பெண்களைப் பின்தொடர்ந்து ஓடத் தேவையே இல்லை. வாழ்க்கையில் உங்களுக்கு அறிவு கைகொடுக்கும், திறன் துணை நிற்கும், தன்னம்பிக்கை தோள் கொடுக்கும், மனோபலம் வலு சேர்க்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவர் மருத்துவராக இருந்தாலோ, உங்கள் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தாலோ, நீங்கள் அவரிடம் சென்று நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சியடைந்தீர்கள் என்றா கேட்டிருக்கிறீர்களா? யாருமே கேட்டிருக்க மாட்டார்கள் இல்லையா!! இவர் நன்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், இவரளிக்கும் சிகிச்சை பலனளிக்கிறது என்று தானே அவரது சேவைகளைப் பயன்படுத்துகிறோம். பெரிய வழக்கை வாதாட வக்கீல் ஒருவரை அணுகும் போது, அந்த வக்கீல் பெற்ற மதிப்பெண்களையா நாம் கவனிக்கிறோம்? அந்த வக்கீலின் அனுபவம் என்ன, அவர் வழக்குகளில் பெற்ற வெற்றிப் பயணம் என்ன என்று அல்லவா பார்க்கிறோம்!! ஆகையால் தான் கூறுகிறேன், மதிப்பெண்கள் என்ற சுமை சில வேளைகளில் சரியான திசையில் நாம் செல்வதற்கு தடை போட்டு விடுகிறது. ஆனால் இதற்காக படிக்கவே வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. உங்களை உரைத்துப் பார்க்க தேர்வுகளின் பயன்பாடு அவசியம் தான். நேற்று வரை என் அறிவின் நிலை என்ன, இன்று நான் எங்கே வந்தடைந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள இது தேவைப்படுகிறது. சில வேளைகளில் நீங்கள் மதிப்பெண்கள் மீது மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தினால், நீங்கள் குறுக்குவழியைக் கையாள நேரும் அல்லது தேர்வு செய்து சில பகுதிகளை மட்டுமே படிக்க நேரலாம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்துப் படித்தவற்றைத் தாண்டி வினாக்கள் வந்தால், உங்கள் மனோபலம் குன்றி, நீங்கள் செயல்பாட்டில் வீழ்ச்சி காண நேரும். உங்கள் கவனம் மதிப்பெண்கள் மீதிருந்தால், நீங்கள் மெல்ல மெல்ல குன்றிப் போய் மதிப்பெண்கள் என்னவோ பெற்று விடுவீர்கள்; ஆனால் வாழ்க்கையில் சில வேளைகளில் தோல்வியைத் தழுவ நேரிடும். மாறாக, நீங்கள் உங்கள் அறிவை மையப்படுத்தினால், பல விஷயங்களைக் கற்கும் முயற்சி வெற்றியடையும்.
ரிச்சா அவர்கள் போட்டி என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். இது மிகப் பெரிய மனோரீதியிலான போராட்டம். உண்மையில், வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல மற்றவர்களோடு போட்டி என்பது உதவி புரிவதில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல என்னுடன் நான் போடும் போட்டி பேருதவியாக இருக்கிறது. கடந்து போன நாளைக் காட்டிலும் வரவிருக்கும் நாளை எப்படி நான் மேம்படுத்துவது? நடந்து முடிந்த விளைவுகளைக் காட்டிலும் ஏற்படவிருக்கும் விளைவுகளை எப்படி சிறப்பாக ஆக்குவது? இந்த எண்ணப்பாட்டை நீங்கள் பெரும்பாலும் விளையாட்டு உலகில் காணலாம். விளையாட்டு உலகம் பற்றிக் கூறினால் இது உடனே மனதில் பதியும் என்பதால் நான் இந்த எடுத்துக்காட்டை எடுத்துரைத்தேன். விளையாட்டு வீரர்கள் தங்களுடனே போட்டிகளைப் போடுவதால் தான் பெரும்பாலான வெற்றிகள் அவர்கள் வாழ்விலே நடக்கிறது. நீங்கள் சச்சின் தெண்டுல்கர் அவர்களின் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்களேன்! 20 ஆண்டுகள் அவர் பல சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறார், ஒவ்வொரு முறையும் தான் ஏற்படுத்திய முந்தைய சாதனையை விஞ்சி புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணம் மிக அற்புதமானது, ஏனென்றால், மற்றவர்களோடு போட்டி என்பதை விடுத்து அவர் தனக்குத் தானே சவால்களை ஏற்படுத்திக் கொள்ளும் வழியைப் பின்பற்றி வந்திருக்கிறார்.
நண்பர்களே, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நீங்கள் தேர்வு எழுத வேண்டியிருக்கும்; அப்போது நீங்கள் 2 மணி நேரம் படிக்க வேண்டிய வேளையில், 3 மணி நேரம் படிக்க முடிகிறதா? முன்பு காலை எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்து, அது தாமதம் ஆகியிருக்கலாம், ஆனால் இப்போது தீர்மானித்த வேளையில் எழுந்திருக்க முடிகிறதா? முன்பெல்லாம் தேர்வு பற்றிய அழுத்தம் உங்கள் உறக்கத்தைக் கெடுத்திருக்கலாம், ஆனால் இப்போது நிம்மதியாக உறங்க முடிகிறதா? உங்களை நீங்களே ஆத்மபரிசோதனை செய்து பாருங்கள்; வெளிச்சூழல்கள் விடுக்கும் சவால்களில் தோல்வி, அழுத்தம், ஏமாற்றம், பொறாமை ஆகியவை ஏற்படுவதை நீங்கள் காணலாம்; ஆனால் உங்களுக்கு நீங்களே விடுக்கும் சவால்கள், சுயபரிசோதனை, சுயபரிசீலனை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும், மனோபலம் அதிகரிக்கும், உங்களை நீங்களே வெற்றி கொள்ளும் போது, மேலும் முன்னேற உற்சாகம் உங்களுக்குள்ளே ஊற்றெடுக்கும், வெளியிலிருந்து எந்த ஒரு கூடுதல் சக்திக்கும் தேவை இருக்காது என்பதை நீங்கள் நன்குணர்வீர்கள். உங்களுக்குள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஆற்றல் தானே பிரவாகமாகப் பெருகும். இதை எளிய நடையில் கூற வேண்டுமென்றால், மற்றவர்களை மையமாக வைத்துப் போட்டி போடும் போது, 3 சாத்தியக்கூறுகள் ஏற்படுகிறது. ஒன்று நீங்கள் அவரை விட மேம்பட்டவர், இரண்டாவது நீங்கள் அவரை விடத் திறன் குறைந்தவர், மூன்றாவது அவருக்கு இணையானவர். நீங்கள் அவரை விட மேம்பட்டவர் என்றால் கவலை இல்லாமல் இருப்பீர்கள், அதிக நம்பிக்கை உங்களுக்குள்ளே நிரம்பியிருக்கும். நீங்கள் மற்றவரை விடத் திறன் குறைவானவர் என்றால், துக்கமும், ஏமாற்றமும் ஏற்பட்டு, பொறாமை கொப்பளிக்கும், இந்தப் பொறாமை உங்களை அரித்துத் தின்று விடும். நீங்கள் அவருக்கு இணையானவராக இருந்தால், மேம்பாடு அடைய வேண்டிய தேவையை நீங்கள் உணரக் கூட மாட்டீர்கள். நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போக்கிலேயே சென்று கொண்டிருப்பீர்கள். ஆகையால் தான் மற்றவர்களோடு போட்டி போடுவதை விடுத்து, உங்களுக்கு நீங்களே சவால்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். முன்பு என் செயல்பாடு எப்படி இருந்தது, இனி நான் எப்படி முன்னேறுவது, சிறப்பாக எப்படி செயல்படுவது என்பது மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தோடு நீங்கள் அணுகினால் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் நன்குணர முடியும்.
எஸ். சுந்தர் அவர்கள் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். தேர்வுக்காலங்களில் பெற்றோரின் பங்குபணி மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார். “எனது தாய் அதிக கல்வியறிவு பெற்றவராக இல்லாத போதிலும், அவர் என்னருகே அமர்ந்து கணித வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள என்னை ஊக்குவிப்பார். அவர் விடைகள் சரியா இல்லையா என்று பாடப்புத்தகத்தை வைத்து சரி பார்ப்பார். தவறுகளை திருத்தச் சொல்லுவார். எனது தாய் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அவரது ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னால் சி.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவே முடியாது” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.
சுந்தர் அவர்களே, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி தான். இன்று கூட என்னிடம் கேள்வி கேட்பவர்கள், எனக்கு ஆலோசனை வழங்குபவர்கள் என்று பார்த்தால், அதில் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்; ஏனென்றால், வீடுகளில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக தாய்மார்கள் எத்தனை விழிப்போடு இருக்கிறார்கள், ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, அவர்கள் பல விஷயங்களை எளிமையாக்கி விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. நாம் 3 விஷயங்கள் மீது அழுத்தம் தர வேண்டும் என்று நான் பெற்றோரிடம் விண்ணப்பிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுதல், கற்பித்தல், நேரம் ஒதுக்குதல். எது இருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் திறனை ஒட்டி, நீங்கள் வழிகாட்டியாக செயல்படுங்கள்; உங்களுக்கு எத்தனை தான் வேலைகள் இருந்தாலும், நேரம் ஒதுக்குங்கள். ஒருமுறை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டால், உங்களின் பெரும்பாலான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் தாம் பிரச்சனைகளின் ஆணிவேராக இருக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் தான் பிரச்சினைகளின் தீர்வுக்கான வழியைத் துலக்கிக் காட்டுகிறது. எதிர்பார்ப்புகள் பாதையை மேலும் கடினமானதாக ஆக்குகிறது. நிலைமையை ஏற்றுக் கொள்வது, புதிய பாதையைத் திறப்பதற்கான திறவுகோலாக இருக்கிறது. ஆகையால் இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். சுமைநீங்கி சுகம் பெறுவீர்கள். நாம் எப்போதும் பள்ளிக் குழந்தைகளின் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையின் சுமை பற்றி பேசி வருகிறோம்; ஆனால் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும், அபிலாஷைகளும் இருக்கிறதே, அவை பள்ளி செல்லும் குழந்தையின் பைச்சுமையைக் காட்டிலும் அதிக கனமானதாக இருக்கிறதோ என்று கூட எனக்கு சில வேளைகளில் படும்.
பல ஆண்டுகள் முன்பான ஒரு விஷயம். எங்களுக்கு அறிமுகமான ஒருவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாரதத்தின் மக்களவையின் முதல் சபாநாயகர் கணேஷ் தாதா மாவ்லங்கரின் மகனும், மக்களவை உறுப்பினராக இருந்தவருமான புருஷோத்தம் மாவ்லங்கர் வந்தார். அந்த சமயத்தில் நான் அங்கிருந்தேன். வந்தவர் அனுமதிக்கப்பட்டவரிடத்தில் அவரது உடல்நிலை பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. வந்தவர் அமர்ந்தார், அங்கே இருந்த நிலை, உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி எதுவும் பேசாமல், நகைச்சுவை துணுக்குகளை உதிர்க்க ஆரம்பித்தார்; அங்கு நிலவிய அழுத்தத்தை முழுவதுமாக இளக்கி விட்டார். ஒரு வகையில் நாம் நோயாளியைக் காணச் சென்று நாம் நோய் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறோம். நாமும் கூட சில வேளைகளில் நம் குழந்தைகளிடம் இப்படி ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறோம் என்றே நான் பெற்றோர்களிடம் கூற விரும்புகிறேன். தேர்வு தினங்களில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு எப்போதேனும் தோன்றியிருக்கிறதா. அப்படி ஏற்படுத்துங்கள், சூழல் முழுவதுமாக மாறிவிடுவதைக் காண்பீர்கள்.
எனக்கு ஒரு அதிசயமான தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அவர் ஏன் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை என்பதை இதைக் கேட்டால் உங்களுக்கே விளங்கி விடும்.
”வணக்கம், பிரதமர் அவர்களே, நான் என் சிறுவயதில் செய்த ஒரு செய்கை காரணமாக என் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. நான் என் சிறுவயதில் ஒரு முறை காப்பியடிக்க முயற்சி செய்தேன், இதை எப்படி செய்வது என்பது தொடர்பாகத் தெரிந்து கொள்ள பல முயற்சிகளில் ஈடுபட்டேன்; இதன் காரணமாக கணிசமான நேரம் விரயமானது. மதிப்பெண்களைப் பெற நான் விரயமாக்கிய நேரத்தில், அவற்றை நான் படித்தே கூட பெற்றிருக்க முடியும். ஆனால் நான் காப்பியடித்து சிக்கிக் கொண்டதால், என் காரணமாக அக்கம்பக்கம் இருந்த பல நண்பர்களுக்கு கணிசமாகத் தொந்தரவு ஏற்பட்டது.”
நீங்கள் கூறுவது சரி தான். குறுக்குவழிகள், காப்பியடிக்க காரணமாக அமைந்து விடுகின்றன. சில வேளைகளில் தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால், பக்கத்தில் இருப்பவர் விடைத்தாளைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாமே, நான் எழுதியது சரியா தவறா என்று சரி பார்த்துக் கொள்ளலாமே என்று தோன்றும்; ஆனால் பக்கத்தில் இருப்பவர் தவறாக எழுதியிருந்தால், நாம் அதை சரியென்று கருதி, அதையே எழுதி, மதிப்பெண்களை இழக்க நேரிடும். காப்பியடிப்பது நல்ல பலனைக் கொடுக்காது. To cheat is to be cheap, so please, do not cheat. ஏமாற்றுவது இழிவானது, ஆகையால் ஏமாற்றாதீர்கள். காப்பியடிக்காதீர்கள் என்ற சொல்லை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள், நானும் அதையே மறுபடி கூறுகிறேன். ஏமாற்றுவது, காப்பியடிப்பது என்பதெல்லாம் உங்களை வீழ்ச்சிப் பாதையை நோக்கி உங்களை இழுத்துச் செல்லும்; தேர்வில் மேற்பார்வையாளரிடம் நீங்கள் சிக்கிக் கொண்டால், உங்கள் எதிர்காலமே பாழாகி விடும். ஒருவேளை நீங்கள் சிக்காமல் தப்பி விட்டால், வாழ்க்கை முழுவதும் நீங்கள் உங்கள் மனதில் பெருஞ்சுமையை சுமக்க நேரிடும், நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க நினைக்கும் போது, குற்றவுணர்வு காரணமாக அவர்கள் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க முடியாது போகும். ஒருமுறை காப்பியடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டால், வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் தாகம் அற்றுப் போய் விடும். இந்த நிலையில் உங்களால் என்ன சாதிக்க முடியும்?
சிலர் காப்பியடிப்பதில் தங்கள் திறமையையும், படைப்பாற்றலையும் விரயமாக்கி விடுகிறார்கள். இதே திறமையையும், படைப்பாற்றலையும், நேரத்தையும் அவர்கள் தேர்வு தொடர்பான விஷயங்களில் செலுத்தினால், காப்பியடிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு ஏற்படாது. தங்கள் சொந்த உழைப்பினால் விளையும் பலன் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அற்புதங்கள் ஏற்படும்.
ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது – ”வணக்கம் பிரதமர் அவர்களே, என் பெயர் மோனிகா. நான் 12ஆம் வகுப்பில் படிப்பதால், என் தேர்வுகள் குறித்து இரண்டு கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். என் முதல் கேள்வி – தேர்வுக்காலங்களில் ஏற்படும் அழுத்தத்தை எப்படிக் குறைப்பது? என் இரண்டாவது கேள்வி, ஏன் தேர்வுகள் என்றாலே படிப்புக்கான நேரம் மட்டுமே, விளையாட்டுக்கான நேரம் அல்ல என்று கருதுகிறோம் ?. நன்றி.”
நான் தேர்வு நாட்களில் விளையாடுவது பற்றிப் பேசினால், இவர் என்ன பிரதமர், பிள்ளைகளுக்குத் தேர்வுகள் இருக்கும் வேளையில், விளையாடு என்கிறாரே என்று உங்கள் ஆசிரியரும், உங்கள் பெற்றோர்களும் என் மீது கோபம் கொள்ளலாம். மாணவர்கள் விளையாட்டுக்கள் மீது கவனம் செலுத்தினால், கல்வியின் மீது கவனக்குறைவு ஏற்பட்டு விடும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இந்த அடிப்படை எண்ணமே தவறு, பிரச்சனையின் ஆணிவேரே இது தான். முழுநிறைவான வளர்ச்சி பெற வேண்டும் என்று சொன்னால், பாடப்புத்தகங்களைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அது மிக விசாலமானது. அந்த வாழ்க்கையை வாழவும், கற்கவும் இது தான் சரியான சமயம்.
முதலில் நான் என் அனைத்துத் தேர்வுகளையும் எழுதி விட்டுப் பின்னர் விளையாடவோ, வேறு செயல்களில் ஈடுபடுவேன் என்று கூறினால், அது சாத்தியமில்லை. வாழ்க்கையைச் செப்பனிட இது தான் சரியான வேளை. இது தான் சரியான கற்றல். தேர்வுகள் தொடர்பாக 3 விஷயங்களை முக்கியமாக நான் கருதுகிறேன் – முறையான ஓய்வு, தேவையான அளவு உறக்கம், மனச் செயல்பாட்டைத் தாண்டி உடலின் செயல்பாடு என்ற இவைகள் அவசியம். நாம் எதிர்கொள்ள வேண்டியவை இத்தனை நம் முன்னே இருக்கும் போது, சில கணங்கள் வெளியே சென்று, வானத்தைப் பார்த்தால், செடிகொடிகள் பக்கம் கவனத்தைத் திருப்பினால், சற்று மனதை லகுவாக்கினால், ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். இந்த புதுத்தெம்போடு நீங்கள் உங்கள் அறைக்குள் நுழைந்து உங்கள் பாடங்களில் மூழ்கினால், விளைவு அற்புதமாக இருக்கும்.
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், எழுந்து வெளியே சென்று வாருங்கள், சமையலறைக்குச் செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்தமானவை ஏதேனும் இருந்தால், அவற்றைத் தேடுங்கள், பிடித்த பிஸ்கட் இருந்தால், அதை உண்ணுங்கள், நகைச்சுவையில் ஈடுபடுங்கள். அது ஐந்தே நிமிட நேரமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக சற்று இளைப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வேலை சிரமமில்லாமல் இருப்பதை உங்களால் உணர முடியும். அனைவருக்கும் இது பிடித்திருக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது தான் எனது அனுபவம். இதுபோன்ற வேளைகளில் மூச்சை இழுத்து விடுங்கள், அதிக நன்மைகள் கிடைக்கும், உங்கள் அழுத்தம் குறையும். இப்படி ஆழமாக மூச்சை உள்ளிழுத்து விடுவதை, அறையிலேயே செய்ய வேண்டும் என்பது இல்லை. திறந்த வெளியிலே, மாடிக்குச் செல்லலாம், 5 நிமிட நேரம் மூச்சை இழுத்து விட்ட பின்னர், படிக்கச் செல்லுங்கள், உங்கள் உடல் முழுமையாக ஆசுவாசமாகி விடும், உங்கள் உடலுக்குக் கிடைக்கும் இளைப்பாறுதலை நீங்கள் முழுமையாக உணர முடியும். இதன் விளைவாக உங்கள் மனதுக்கும் இளைப்பாறுதல் கிடைக்கும். இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படித்தால், அதிகம் படிக்க முடியும் என்று சிலருக்குத் தோன்றுகிறது. அப்படி அல்ல, உடலுக்கு எத்தனை உறக்கம் தேவையோ, அதைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும், இதனால் நீங்கள் படிக்கும் நேரம் வீணாகாது, மாறாக, படிக்கும் போது உங்களுக்குத் தேவையான ஆற்றலை இது அதிகப்படுத்திக் கொடுக்கும். உங்கள் கவனம் அதிகரிக்கும், உங்களுக்குப் புத்துணர்வு பெருகும், உங்கள் ஒட்டுமொத்தத் திறனில் அதிகரிப்புக் காணப்படும். தேர்தல் காலங்களில் நான் மேடைகளில் உரையாற்றும் போது, சில வேளைகளில் என் குரல் ஒத்துழைக்க மறுக்கும். ஒரு முறை நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் என்னை சந்திக்க வந்தார். நீங்கள் எத்தனை நேரம் உறங்குகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நீங்கள் என்ன மருத்துவரா என்று நான் அவரிடம் கேட்ட போது, அவர், இல்லை இல்லை, தேர்தல் காலங்களில் தொடர்ந்து உரையாற்றுவதால் உங்கள் குரலில் கோளாறு ஏற்படுகிறது, நீங்கள் நிறைவாக உறங்கினால், உங்கள் குரல் நாண்களுக்கு முழுமையான ஓய்வு கிடைக்கும் என்றார். இதுவரை என் உறக்கத்துக்கும், என் உரைக்கும், என் குரலுக்கும் இடையே தொடர்பிருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, அவர் அடிப்படை சிகிச்சையை எனக்கு அளித்தார். இப்படிபப்ட்ட அடிப்படை விஷயங்களின் மகத்துவத்தை நாம் புரிந்து கொண்டால், நமக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.
உறங்கிக் கொண்டே இருங்கள் என்பது இதன் பொருளல்ல; ஆனால் பிரதமரே கூறி விட்டார் என்பதால் எழுந்திருக்க வேண்டிய தேவையில்லை என்று சிலர் கருதலாம். அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள், இல்லையென்றால், உங்கள் குடும்பத்தார் என்னிடம் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள். உங்கள் மதிப்பெண் தாள் வரும் நாள் அன்று, நீங்கள் தென்படவில்லை என்றால், அவர்கள் கண்களுக்கு நான் தான் தென்படுவேன். தயவு செய்து அப்படிச் செய்து விடாதீர்கள். ஆகையால் தான் P for prepared, P for play, தேர்வுக்கும் தயாராக இருங்கள், விளையாடவும் தயாராக இருங்கள் என்கிறேன். The person who plays, shines, யாரொருவர் விளையாட்டில் ஈடுபடுகிறாரோ, அவரே பரிமளிக்கிறார். மனம், புத்தி, உடல் ஆகியவற்றை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது மிகப் பெரிய அருமருந்து.
சரி, இளைய தோழர்களே, நீங்கள் உங்கள் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் இன்று கூறியவை உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பவையாக இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் நான் கூறியவற்றையே கூட நீங்கள் சுமையாகக் கருதி விடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் செயல்படுத்திப் பாருங்கள், இல்லை என்றால் செய்யாதீர்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எப்படி சுமையாக ஆகி விடக் கூடாது என்று கூறுகிறேனோ, அந்த விதி எனக்கும் பொருந்தும். நீங்கள் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், தேர்வெழுதச் செல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு சவாலை எதிர்கொள்ளும் முன்பாகவும், அந்தச் சவாலை கொண்டாட்டமாக மாற்றுங்கள். பிறகு சவால், சவாலாகவே இருக்காது. இந்த மந்திரத்தை மனதில் ஏற்றி, முன்னேறிச் செல்லுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி, இந்திய கடலோரக் காவற் படையினரின் 40 ஆண்டுக்காலம் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் கடலோரக் காவற் படை அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோருக்கு, அவர்கள் நாட்டுக்காக ஆற்றி வரும் அரும்பணிக்காக நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். 126 கப்பல்களும், 62 விமானங்களும் கொண்ட நமது கடலோரக் காவற்படை உலகின் 4 மிகப்பெரிய கடலோரக் காவற்படைகளில் 4ஆவதாக இருக்கிறது என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். கடலோரக் காவற்படையின் மந்திரம், வயம் ரக்ஷாம் என்பதாகும். தங்களது இந்தக் குறிக்கோளை அடியொற்றி, நாட்டின் கரையோரப் பகுதிகளையும், கடல்புறங்களையும் காக்கும் பணியில் கடலோரக் காவற்படையினர் பாதகமான சூழ்நிலைகளிலும் இரவுபகலாக விழிப்போடு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கடலோரக் காவற்படையினர் தங்கள் பொறுப்புகளைத் தவிர, நம் நாட்டின் கடல்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தை மேற்கொண்டார்கள், இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்தார்கள். கரையோரப் பாதுகாப்புடன், கரைப்பகுதித் தூய்மை பற்றியும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள், அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். நமது நாட்டின் கடலோரக்யோரக் காவற்படையில் ஆண்கள் மட்டுமே இல்லை, பெண்களும் தோளோடு தோள் நின்று சமமாகத் தங்கள் கடமைகளை வெற்றிகரமாக ஆற்றி வருகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது இருக்கலாம். கடலோரக் காவற்படையின் நமது பெண் அதிகாரிகள், அவர்கள் விமானிகளாகவோ, கண்காணிப்பாளர்களாகவோ இருப்பதோடு, ஹோவர்கிராப்டையும் இயக்கி வருகிறார்கள். கடலோரக் காவல் என்பது உலகின் மிகப்பெரிய விஷயமாக இன்று ஆகியிருக்கும் நிலையில், பாரதத்தின் கரைப்பகுதிப் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்திய கடலோரக் காவற்படைக்கு அவர்களது 40ஆவது ஆண்டை முன்னிட்டு நெஞ்சுநிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிப்ரவரி 1ஆம் தேதி வசந்த பஞ்சமிப் பண்டிகை. வசந்தகாலம் – மிகச்சிறந்த ஒரு பருவகாலம் என்ற வகையில் இது கொண்டாடப்படுகிறது. வசந்தகாலம் பருவகாலங்களின் அரசன். நம் நாட்டில் வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜைக்கான ஒரு மிகப்பெரிய பண்டிகையாகத் திகழ்கிறது. இது கல்வியைத் துதிக்கும் சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது. அது மட்டுமில்லாமல், இது வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு காலம். மேரா ரங் தே பஸந்தி சோலா, என்னை வசந்தகாலத்துக்கு உரியவனாக ஆக்கு - இது உத்வேகம் அளிக்க கூடிய கருத்து. இந்தப் புனிதமான வசந்த பஞ்சமி பண்டிகையை முன்னிட்டு நான் எனது நாட்டுமக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் ஆகாசவாணியும் தனது படைப்புத் திறனுக்கு ஏற்ப எப்போதுமே புதிய புதிய வார்ப்புக்களில், புதிய புதிய வண்ணங்களைக் குழைத்துத் தந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் என் மன் கீ பாத் நிறைவடைந்த உடனேயே மாநில மொழிகளில் மனதின் குரலை ஒலிபரப்புகிறார்கள். இது வெகுவான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொலைவான இடங்களிலிருந்தெல்லாம் மக்கள் கடிதங்கள் எழுதுகிறார்கள். தங்களுக்குத் தாங்களே உத்வேகம் ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஆகாசவாணிக்கு நான் பலப்பல வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். நாட்டுமக்களே, நான் உங்களுக்கும் அளப்பரிய எனது நல்வாழ்த்துகளை செலுத்துகிறேன். மனதின் குரல் வாயிலாக உங்களோடு இணைந்து பயணிக்க எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகள். நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். உங்கள் அனைவருக்கும் க்றிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இன்றைய நாள் சேவை, தியாகம், கருணை ஆகியவற்றுக்கு நமது வாழ்வினில் மகத்துவம் அளிக்க வேண்டிய நன்னாள். ஏசுநாதர், ஏழைகளுக்கு நாம் எந்த உபகாரமும் செய்யத் தேவையில்லை, அவர்களை நாம் ஏற்றுக் கொண்டாலே போதும் என்று கூறியிருக்கிறார். தூய லூக்கா தனது நற்செய்தியில், ஏசுநாதர் ஏழைகளுக்கு சேவை மட்டும் புரியவில்லை, அவர் ஏழைகள் செய்யும் சேவையை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார், என்றார், இது தான் மெய்யான அதிகாரப் பங்களிப்பு. இதனுடன் தொடர்புடைய ஒரு கதை பிரபலமாக இருக்கிறது. ஏசு, கோயில் கஜானா ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார். பல செல்வந்தர்கள் வந்தார்கள், ஏகப்பட்ட செல்வத்தை அளித்தார்கள். கடைசியில் ஒரு ஏழை விதவைத் தாய் வந்து இரண்டு செப்புக் காசுகளை இட்டாள். உள்ளபடியே பார்க்கும் போது, அந்த செப்புக் காசுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது தான். அங்கே நின்றிருந்த பக்தர்களின் மனதில் ஆச்சரியம் ஏற்பட்டது என்பது இயல்பானது தான். ஆனால் அப்போது ஏசுநாதரோ, அந்த விதவைப் பெண் தான் மிகப் பெரிய தானம் அளித்திருப்பதாகக் கூறினார்; ஏனென்றால் மற்றவர்கள் ஏராளமான செல்வத்தை அளித்திருந்தாலும் கூட, இந்த விதவைப் பெண் தன்னிடம் இருந்த அனைத்தையும் அளித்திருக்கிறாள் என்றார்.
இன்று டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மதிப்பிற்குரிய மதன் மோஹன் மாளவீயா அவர்களின் பிறந்த நாள். பாரத நாட்டு மக்கள் மனங்களில் மனவுறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊட்டிய மாளவீயா அவர்கள் நவீன கல்விமுறை வாயிலாக புதியதொரு திசையை அளித்தார். அவர்களின் பிறந்த நாளான இன்று உணர்வுபூர்வமான அஞ்சலிகளை நாம் செலுத்துவோம். இரண்டு நாட்கள் முன்னதாகத் தான் மாளவீயா அவர்களின் தவபூமியான வாராணசியில் பல வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் வாராணசியில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில், பெருமதிப்பிற்குரிய மதன் மோஹன் மாளவீயா புற்றுநோய் மையத்துக்கான அடிக்கல்லை நாட்டினேன். நிறுவப்படவிருக்கும் இந்த புற்றுநோய் மையம், கிழக்கு உத்திர பிரதேசம் மட்டுமல்லாமல், , ஜார்க்கண்ட், பீஹார் ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இன்று பாரத ரத்னா, முன்னாள் பிரதம மந்திரி பெருமதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் பிறந்த நாளும் கூட. இந்த நாடு அடல் அவர்களின் பங்களிப்பை மறக்காது. அவரது தலைமையின் கீழ் நாம் அணுசக்தித் துறையிலும் நாட்டுக்குப் பெருமிதம் சேர்த்தோம். கட்சித் தலைவர் என்ற முறையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், அமைச்சர் அல்லது பிரதமர் என்ற பதவியின் மூலமாகவும், அடல் அவர்களின் பிரத்யேகமான பங்களிப்பு அவரை ஒரு உதாரண புருஷராக ஆக்கியிருக்கிறது. அடல் அவர்களின் பிறந்த நாளான இன்று நான் அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருக்கு சிறப்பான உடல்நலத்தை வழங்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றேன். ஒரு ஊழியன் என்ற முறையில் அடல் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. அவர் பற்றிய நினைவுகள் பசுமையாக என் மனக்கண்கள் முன்பாக நிழலாடுகிறது. இன்று காலை கூட நான் ட்வீட் செய்த போது ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு எளிய ஊழியனிடத்தில் அடல் அவர்களின் பாசமழை எப்படிப் பொழியும் என்பதற்கு அந்த வீடியோவைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்து விடும்.
க்றிஸ்துமஸ் நன்னாளான இன்று, நாட்டுமக்களுக்குப் பரிசாக இரண்டு திட்டங்களின் பயன்கள் கிடைக்க இருக்கின்றன. ஒரு வகையில் பார்க்கப் போனால் இவை இரண்டையும் புதிய திட்டங்களின் தொடக்கம் எனக் கொள்ளலாம். கிராமமாகட்டும், நகரமாகட்டும், படித்தவர்களாகட்டும், பாமரர்களாகட்டும், ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றால் என்ன, ரொக்கமில்லா வியாபாரத்தை எப்படி செய்வது, ரொக்கமில்லாமல் எப்படிப் பொருட்களை வாங்குவது என்பது தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒட்டுமொத்த நாட்டிலும் நிலவி வருவதை நாம் காண முடிகிறது. ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரிடமிருந்து இது தொடர்பான வழிமுறைகளை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இதற்கு ஊக்கமளிக்கும் வகையில், மொபைல் வங்கிச் சேவைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, e-payment, மின்னணு பணம் செலுத்தல் என்ற பழக்கம் உருவாக வேண்டும் என்று பாரத அரசு கருதுகிறது. இதை முன்னிட்டு, நுகர்வோருக்கும் சரி, சிறிய வியாபாரிகளுக்கும் சரி ஊக்கமளிக்கும் விதமாக ஒரு திட்டத்தை அரசு இன்று தொடக்க இருக்கிறது. நுகர்வோருக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் தான் lucky நுகர்வோர் திட்டம்; இதே போல வியாபாரிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஏற்படுத்தியிருக்கும் திட்டம் Digiதன் வியாபாரத் திட்டம்.
டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பரிசு என்ற வகையில், 15000 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசுகள் கிடைக்கும்; அந்த 15000 நபர்கள் ஒவ்வொருவருவரின் வங்கிக் கணக்குகளில் தலா ஆயிரம் ரூபாய் பரிசாக போடப்படும். இது ஏதோ இன்று மட்டும் நடக்கக் கூடிய ஒன்றல்ல; இந்தத் திட்டம் இன்று தொடங்கி 100 நாட்கள் வரை நடைபெறவுள்ள ஒன்று. ஒவ்வொரு நாளும் 15000 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் பரிசுத் தொகை கிடைக்கவிருக்கிறது. 100 நாட்களில், இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசுகளாக கொண்டு சேர்க்கப்படவிருக்கிறது, ஆனால் நீங்கள் மொபைல் வங்கிச் சேவைகள், மின்னணு வங்கிச் சேவைகள், RuPay அட்டை, UPI, USSD போன்ற டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர், இது போன்ற சேவைகளைப் பயன்படுத்துபவர் என்றால் தான் இந்தப் பரிசுகளைப் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவீர்கள், அப்போது தான் உங்கள் பெயர் குலுக்கலில் இடம் பெறும். இதோடு கூடவே, வாரம் ஒரு நாள் பெரியதொரு குலுக்கல் நடைபெறும், அதில் பரிசுத் தொகையும் இலட்சக்கணக்கில் இருக்கும், இப்படி 3 மாதங்கள் நிறைவடையும் வேளையில், ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று, பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாளன்று, ஒரு பம்பர் பரிசுக் குலுக்கல் நடைபெறும்; இதில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். Digi தன் வியாபாரத் திட்டம் முக்கியமாக வியாபாரிகளுக்கானது. வியாபாரிகள் தாங்களே இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்கள் வியாபாரத்தை ரொக்கமில்லா பரிவர்த்தனையாக மாற்றும் வகையில் நுகர்வோரையும் இதில் இணையச் செய்யலாம். இப்படிப்பட்ட வியாபாரிகளுக்கு என பிரத்யேகமான பரிசுகள் அளிக்கப்படும், இந்தப் பரிசுகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். வியாபாரிகளின் வியாபாரமும் அமோகமாய் நடக்கும், பரிகளைத் தட்டிச் செல்லும் அருமையான வாய்ப்பும் கிட்டும். இந்தத் திட்டம், சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தினர், குறிப்பாக ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்ட ஒன்று; யாரெல்லாம் 50 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை பெறுமானமுள்ள பொருட்களை வாங்குகிறார்களோ, அவர்களுக்குத் தான் இதன் பலன் சென்று சேரும். 3000 ரூபாய்க்கு அதிகமாக பொருட்களை வாங்குவோருக்கு இது கிடையாது. கடைநிலை ஏழை கூட USSD, feature phone, எளிமையான ஃபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும், அவற்றை விற்க முடியும், தொகையை செலுத்த முடியும், இவர்கள் அனைவருமே இந்தத் திட்டத்தால் பயன் பெறுவார்கள். கிராமப்புறப் பகுதிகளில் இருப்போர், AEPS வாயிலாக பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியும், பரிசுகளை வெல்லவும் முடியும். இன்று பாரதத்தில் சுமார் 30 கோடி RuPay அட்டைகள் இருக்கின்றன என்பதும், அவற்றில் 20 கோடி அட்டைகள் ஏழைக் குடும்பங்கள், ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுடையவை என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இந்த 30 கோடி மக்கள் உடனடியாக இந்தப் பரிசுத் திட்டத்தில் பங்கெடுக்க முடியும். நாட்டுமக்கள் இந்த வழிமுறையில் நாட்டம் கொள்வார்கள் என்பதிலும், தங்கள் அக்கம் பக்கம் இருக்கும் இளைஞர்களிடம் தேவையான தகவல்களைப் பெற்று ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அட, இதென்ன பெரிய விஷயம், உங்கள் குடும்பத்திலேயே கூட 10ஆவது, 12ஆவது படித்த பிள்ளை இருந்தால், அவர்களுக்கே கூட இந்தப் பயன்பாடுகள் பற்றி நன்கு தெரிந்திருக்கும், அவர்கள் உங்களுக்குக் கற்றுத் தந்து விடுவார்கள். இது மிகவும் எளிமையானது – நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் WhatsApp மூலம் தகவல் அனுப்புவது போல எளிமையானது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நாட்டில் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, மின்னணு முறையில் பணத்தை எப்படி செலுத்துவது, ஆன்லைன் மூலம் தொகையை எப்படி செலுத்துவது ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருவதைக் காணும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக ரொக்கமில்லா வியாபாரம் என்பது 200 முதல் 300 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருக்கிறது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல பாரத அரசு மிகப் பெரிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது. இந்தத் தீர்மானம் எத்தனை பெரிய ஒன்று என்பதை வியாபாரிகள் மிக நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த வியாபாரி டிஜிட்டல் முறையில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறாரோ, தனது வியாபாரத்தில் ரொக்கப் பயன்பாட்டுக்கு பதிலாக ஆன்லைன் முறையில் தொகை செலுத்தி வருகிறாரோ, அப்படிப்பட்ட வியாபாரிகளுக்கு வருமான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
நான் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தத்தமது வழிகளில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு, அவர்கள் பல திட்டங்கள் குறித்து பரிசீலனை செய்து வருகிறார்கள். அதே வேளையில் அரசுகளும் கூட தங்கள் தங்கள் வகைகளில் பல திட்டங்களைத் தொடக்கி இருக்கிறார்கள், அமல் படுத்தியும் வருகிறார்கள். சொத்து வரி, வியாபார உரிமக் கட்டணம் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் செலுத்துவோருக்கு 10 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அஸாம் மாநில அரசு அறிவித்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. . கிராமப்புற வங்கிகளின் கிளைகள், தங்களின் 75 சதவீத கணக்குதாரர்களைக் கொண்டு ஜனவரி முதல் மார்ச் முடிய குறைந்த பட்சம் இரண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்தால், அரசு தரப்பிலிருந்து 50000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு உள்ளாக 100 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற நிலையை எட்டிய கிராமங்களுக்கு அரசு தரப்பிலிருந்து Digi பணப்பரிவர்த்தனைக்கான உன்னதமான பஞ்சாயத்து என்ற வகையில் 5 இலட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று அந்தக் குழு அறிவித்திருக்கிறது. அவர்கள் விவசாயிகளுக்கு டிஜிட்டல் விவசாய சிரோமணி என்ற ஒரு திட்டத்தையும் தீர்மானித்திருக்கிறார்கள். விதையும் உரமும் வாங்க முழுமையாக டிஜிட்டல் முறையில் தொகை செலுத்தும் 10 முதன்மை விவசாயிகளுக்கு தலா 5000 ரூபாய் வெகுமதியாக அளிப்பதாக அஸாம் மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. நான் அஸாம் மாநில அரசுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், இதே போன்ற முனைப்புகள் பலவற்றை மேற்கொண்டிருக்கும் அனைத்து அரசுகளுக்கும் என் பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்.
பல அமைப்புகள் கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு டிஜிட்டல் முறையிலான கொடுக்கல் வாங்கலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் வெற்றிகரமான செயல்பாடுகளை செய்து வருகின்றன. Gujarat Narmada Valley Fertilizers & Chemicals நிறுவனம் முக்கியமாக உரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது; அவர்கள் உர விற்பனை செய்யுமிடத்தில் விவசாயிகள் வசதிக்காக, ஆயிரம் point of sale POS, விற்பனை முனையக் கருவிகளை அமைத்திருக்கிறார்கள்; சில நாட்களிலேயே 35000 விவசாயிகள் 5 இலட்சம் உர மூட்டைகளுக்கான தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தி இருக்கிறார்கள்; இது மட்டுமல்ல, இவையனைத்துமே இரண்டே வாரங்களில் செய்யப்பட்டிருக்கிறது. இதில் சுவையான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டு GNFCயின் உர விற்பனையோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு 27 சதவீதம் விற்பனையில் அதிகரிப்பு காணப்பட்டிருக்கிறது என்பது தான்.
என் சகோதர சகோதரிகளே, நமது பொருளாதார அமைப்பில், நமது வாழ்க்கை முறையில், முறை சாராத் துறை என்பது மிகப் பெரிய ஒன்று; இங்கே பெரும்பாலானோருக்கு உழைப்புக்கான ஊதியம், வேலைக்கான சம்பளம், ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது; இதன் காரணமாக தொழிலாளிகள் மீது அநீதி இழைக்கப்பட்டு வருவதை நாமனைவரும் அறிவோம். 100 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 80 ரூபாயும், 80 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாயும் கிடைப்பதோடு, காப்பீடு, உடல்நலம் ஆகியவற்றின் வசதிகளிலிருந்து வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ ரொக்கமில்லா முறையில் பணம் அளிக்கப்படுகிறது. பணம் நேரடியாக வங்கிக் கணக்குகளைச் சென்று சேர்கிறது. ஒரு வகையில் முறைசாரா துறை, இப்போது முறை சார் துறையாக மாற்றம் கண்டு வருகிறது. அநீதிக்கு ஒரு முடிவு கட்டப்பட்டு வருகிறது. வெட்டு என்று சொல்லப்படும் பங்கு அளிக்கப்பட வேண்டிய அவல நிலை முடிவுக்கு வருகிறது. இதனால் தொழிலாளி, கைவினைஞர்கள் போன்ற ஏழை எளிய மக்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தவிர மற்ற பயன்களுக்கும் அவர்கள் சொந்தக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள்.
நமது நாடு இளைஞரக்ள் பெரும்பான்மையாக உள்ள நாடு. தொழில்நுட்பம் என்பது நமக்குக் கைவந்த கலை. பாரதம் போன்ற ஒரு நாடு இந்தத் துறையில் அனைத்து நாடுகளைக் காட்டிலும் முன்னணியில் இருக்க வேண்டும். நமது இளைஞர்கள் start up மூலமாக கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். இது டிஜிட்டல் இயக்கத்துக்கான பொன்னான வாய்ப்பு. நமது இளைஞர்கள் புதிய புதிய கருத்துக்களையும், புத்தம்புதிய தொழில்நுட்பத்தோடும், நவீனமான வழிமுறைகளைத் துணை கொண்டும் இந்தத் துறைக்கு எத்தனை வலு சேர்க்க முடியுமோ, அதைச் சேர்க்க வேண்டும்; அதே சமயம், கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறும் இயக்கத்தோடு முழு சக்தியுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டும்.
என் பாசம்மிகு நாட்டுமக்களே, உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் என ஒவ்வொரு மாதமும் மனதின் குரலுக்கு முன்பாக உங்களிடம் நான் வேண்டுவது வழக்கம்; இதன்படி பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் MyGovஇலும், narendramodiappஇலும் இந்த முறை ஆலோசனைகளாக வந்து குவிந்திருக்கின்றன; இவற்றில் 80-90 சதவீத ஆலோசனைகள் ஊழல் மற்றும் கருப்புப் பண ஒழிப்பு, நாணய விலக்கல் ஆகியவற்றோடு தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன. இவையனைத்தையும் பார்த்த பிறகு, இவற்றை மூன்று விதமாக பொதுவாக வகைப்படுத்தலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நாணய விலக்கல் காரணமாக குடிமக்களுக்கு என்னென்னவெல்லாம் சங்கடங்களும், கஷ்டங்களும் ஏற்பட்டு வருகிறது என்பது தொடர்பாக விரிவான முறையில் சிலர் எழுதியிருக்கிறார்கள். இன்னொரு வகையினரோ, இத்தனை அருமையான பணி, இத்தனை சிறப்பான வேலை, நாட்டு நலன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தக் காரியம், இத்தனை புனிதமான பணி நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் ஏய்ப்பு நடவடிக்கைகளையும், முறையற்ற செயல்பாடுகளையும் அரங்கேற்ற புதிய புதிய வழிகளை எப்படி கயவர்கள் கைகொள்கிறார்கள் என்பதைப் பற்றி இவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். வேறு வகையினரோ, நடந்திருக்கும் நாணய விலக்கலுக்கு முழு ஆதரவு அளித்ததோடு, இந்தப் போர் மேலும் தொடர வேண்டும் என்றும், ஊழல், கருப்புப் பணம் ஆகியன முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இதன் பொருட்டு எத்தனை தீவிரமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எழுதியிருக்கிறாரகள்.
என் நாட்டுமக்களான நீங்கள் இத்தனை கடிதங்களை எனக்கு எழுதி பேருதவி செய்திருக்கிறீர்கள், இதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் மக்களே. ”கருப்புப் பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வழி பாராட்டுக்குரியது. குடிமக்களான எங்கள் அனைவருக்கும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது உண்மை தான் என்றாலும், நாங்கள் அனைவரும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கியிருக்கின்றோம், இந்தப் போரில் நாங்கள் அளிக்கும் ஒத்துழைப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் ஊழல், கருப்புப் பணம் போன்றவற்றுக்கு எதிராக, இராணுவப் படையினர் போர் புரிவதைப் போல போரிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று குருமணி கேவல் அவர்கள் mygov தளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். குருமணி கேவல் அவர்கள் எழுதி இருப்பது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் எதிரொலிக்கும் மக்கள் குரல். நாமனைவரும் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் துயரங்களை, சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, எந்த மனிதனுக்குத் தான் துயரமாக இது இருக்காது!! உங்களுக்கு எந்த அளவு துன்பமளிப்பதாக இது இருக்கிறதோ, அதே அளவு துன்பமும் துயரமும் எனக்கும் ஏற்படுகிறது!! ஆனால் ஒரு உத்தமமான இலக்கை அடைய, ஒரு உன்னதமான நோக்கத்துக்காக, தூய்மையான குறிக்கோளுக்காக நாமனைவரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்; கஷ்டங்களுக்கு இடையேயும், துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் இடையேயும் என் இனிய நாட்டுமக்கள் மனவுறுதிப்பாட்டோடு திடமாக எதிர்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் தாம் மெய்யான மாற்றமேற்படுத்தும் காரணிகள், agents of change. பல சிரமங்களைத் தாங்களே பொறுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், மக்களைத் தவறான திசையில் இட்டுச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட சிலருக்கு கறாரான பதிலடி கொடுத்த நல்லோருக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னென்ன வகையான புரளிகள் பரப்பப்பட்டன!! ஊழல், கருப்புப் பணம் போன்றவற்றுக்கு எதிரான போருக்கு மதவாதச் சாயம் பூச பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன! ரூபாய்த் தாளில் எழுத்துப்பிழை இருக்கிறது என்று ஒருவர் புரளி பரப்பினார், வேறு ஒருவரோ உப்பு விலை ஏறி விட்டது என்று புரட்டை அவிழ்த்து விட்டார், இன்னொருவரோ 2000 ரூபாய் நோட்டும், 500, 100 ரூபாய் நோட்டும் கூட வழக்கொழிந்து போகவிருக்கின்றன என்று சரடு விட்டார்; ஆனால் ரகம் ரகமான ஏகப்பட்ட புரளிகளையும் புரட்டுக்களையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்கள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் எதிர்கொண்டார்கள் என்பதை நான் கண்கூடாகக் கண்டேன். இது மட்டுமல்லாமல், பலர் களத்தில் குதித்து, தங்கள் படைப்புத்திறனையும், புத்திக்கூர்மையையும் பயன்படுத்தி, புரளி பரப்புபவர்களின் முகத்திரைகளைக் கிழித்துப் போட்டார்கள், உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். நான் மக்களின் இந்த வல்லமைக்கு அனந்த கோடி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பாசம்மிகு நாட்டுமக்களே, இதை நான் தெளிவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு கணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். 125 கோடி என் நாட்டு மக்கள் என்னோடு இணைந்திருக்கும் போது, சாத்தியமில்லாத ஒன்று என்று ஏதாவது இருக்க முடியுமா என்ன!? மகேசனான மக்களின் ஆசிகள் இருந்தால், அது ஈசனின் ஆசிக்கு ஈடல்லவா? நான் நாட்டுமக்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களுக்கு என் வணக்கங்களை உரித்தாக்குகிறேன், ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான இந்த மஹாயாகத்தில் மக்கள் முழு உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஊழல், கருப்புப் பணம் ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போர் குறித்து அரசியல் கட்சிகளுக்காக, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதி தொடர்பாக, விரிவான முறையில் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். அவையில் அமர்வுகள் நடந்திருந்தால், கண்டிப்பாக இது தொடர்பான விவாதம் நடந்திருக்கும்.. அரசியல் கட்சிகளுக்கு அனைத்து வகையிலும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று யாரெல்லாம் புரளிகளைக் கிளப்புகிறார்களோ, அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அது தனிநபராகட்டும், அமைப்பாகட்டும், அல்லது அரசியல் கட்சியாகட்டும், அனைவரும் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும்,, அப்படிச் செய்தே ஆக வேண்டும். யாரெல்லாம் வெளிப்படையாக ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் ஆதரவாக செயல்பட முடியவில்லையோ, அவர்கள் அரசின் குறைகளைத் தேடிக் கொண்டிருப்பதில் தங்கள் முழுக் கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் அடிக்கடி விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த அரசு மகேசர்களான மக்களுக்காக இயங்கும் அரசு. பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைத் தொடர்ந்து செவிமடுத்த வண்ணம் இருக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. எங்கே பொதுமக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது, எந்த விதி காரணமாக சிரமங்கள் ஏற்படுகின்றன, அவற்றுக்கான தீர்வை எப்படி கண்டாக முடியும் – இதன் காரணமாகவே புரிந்துணர்வு கொண்ட இந்த மக்கள்நல அரசு, மக்களின் சௌகர்யங்களை மனதில் கொண்டு தேவைப்படும் அளவு விதிகளை மாற்றியமைக்கிறது; இதன் மூலம் மக்களின் சிரமங்கள் குறைய வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். முதல் நாளான, 8ஆம் தேதி அன்றே, இந்தப் போர் நிகரானவர்களுக்கு இடையே நடைபெறும் போர் அல்ல என்று நான் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 70 ஆண்டுகளாக முறைகேடுகளும் ஊழலும் மலிந்த கயமையான செயல்பாடுகளோடு எந்த மாதிரியான சக்திகள் இணைந்திருக்கின்றன, அவற்றின் ஆற்றல் எத்தகையது என்பதெல்லாம் நன்கு தெரிந்து தான் இப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக நான் போர் முரசு கொட்டினேன், அவர்களும் வாளாவிருக்கவில்லை, அரசை முறியடிக்க நாளொரு உத்தி எனப் புதிய புதிய குயுக்திகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் புதிய புதிய உத்திகளைக் கையாளும் போது, நாமும் அவர்கள் தீய எண்ணத்தை முறியடிக்க புதிய புதிய வழிமுறைகளை கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. விடாக் கண்டன், கொடாக்கண்டன் என்ற வகையில் நடைபெற்று வரும் இந்தப் போரில், ஊழல் பெருச்சாளிகளுக்கும், கயமையான நடைமுறைகளுக்கும், கருப்புப் பணத்துக்கும் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.
மற்றொரு புறத்தில், என்ன மாதிரியான மோசமான நடைமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன, என்ன மாதிரியான புதிய வழிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்தும் பலரிடமிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன. என் பிரியமான நாட்டுமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை நான் இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன். தினமும் புதிய புதிய நபர்கள் பிடிபட்டு வருகிறார்கள், ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன, அதிரடி சோதனைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன, பெரும்புள்ளிகள் சிக்கி வருகிறார்கள் என்பதை எல்லாம் நீங்கள் இப்போது டிவியிலும் செய்தித் தாள்களிலும் பார்த்து வருகிறீர்கள், இல்லையா? இது எல்லாம் எப்படி சாத்தியமாகி இருக்கிறது? நான் அந்த ரகசியத்தை உங்களுக்குக் கூறுகிறேன். ரகசியம் என்ன தெரியுமா? இந்தத் தகவல்கள் எல்லாம் எனக்கு மக்களான உங்களிடமிருந்து தான் கிடைத்து வருகின்றன. அரசு அமைப்பு மூலமாக கிடைக்கப் பெறும் தகவல்களை விடப் பல மடங்கு அதிகத் தகவல்கள் எளிய பொதுமக்களிடமிருந்து இப்போது கிடைத்து வருகின்றன, இதனால் தான் எங்களுக்கு அதிக அளவு வெற்றியும் கிட்டி வருகிறது. இவையனைத்தும் எளிய பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாகவே நடைபெற்று வருகிறது. என் இனிய நாட்டின் விழிப்புணர்வு மிக்க குடிமக்கள், இப்படிப்பட்ட ஊழல் முடைநாற்றத்தில் ஊறித் திளைக்கும் பெருச்சாளிகளின் முகத்திரைகளைக் கிழித்துப் போட என்னவெல்லாம் அபாயங்களை எதிர்கொண்டு தகவல்களைத் தருகிறார்கள் என்பதை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இப்படிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள அரசு பிரத்யேகமாக ஒரு மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தவிர நீங்க MYGov இணையதள முகவரியிலும் அனுப்பி வைக்கலாம். அரசு நீங்கள் சுட்டிக் காட்டும் தீமைகள் போன்ற அனைத்து வகை தீமைகளுக்கு எதிராகவும் தோள் தட்டிப் போர் புரிய கச்சை கட்டியிருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு நீங்காமல் இருக்கும் போது, போர் புரிவது மிக எளிதானது தான்.
கடிதம் எழுதிய மூன்றாவது வகைப்பட்டவர்களும் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். “மோதி அவர்களே, நீங்கள் அயர்ந்து விடாதீர்கள், தயங்கி விடாதீர்கள், எத்தனை தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்ளுங்கள் கவலையில்லை, ஆனால் பயணிப்பது என்று முடிவு செய்து பாதையில் கால் பதித்து விட்டால், முடிவை எட்டியே தீர வேண்டும், பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று எழுதியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கடிதங்களை எழுதி இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சிறப்பான வகையில் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்; ஏனென்றால் அவர்கள் கடிதங்களில் ஒரு வகையான நம்பிக்கையும் இருக்கிறது, ஆசிகளும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கம் தான், முடிவல்ல; இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும், அயர்ந்து போவது என்ற பேச்சுக்கே இடமில்லை; நின்று தாமதிப்பது என்ற எண்ணத்துக்கே வழியில்லை. எந்த விஷயத்தில் எனக்கு 125 கோடி நாட்டுமக்களின் பூரணமான நல்லாசிகள் இருக்கிறதோ, அந்த விஷயத்தில் முன்வைத்த காலைப் பின்னெடுப்பது என்ற நினைப்புக்கே இடமில்லை. நம் நாட்டில் 1988ஆம் ஆண்டில் பினாமி சொத்து தொடர்பான ஒரு சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் அதற்கான விதிகள் ஏதும் இயற்றப்படவில்லை, அது அறிவிக்கை செய்யப்படவுமில்லை, அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாங்கள் அதை தூசி தட்டி வெளியிலெடுத்தோம், அதை நன்கு மேம்படுத்தி, பட்டை தீட்டி, பினாமிச் சொத்துச் சட்டத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இனிவரும் காலகட்டத்தில் அந்தச் சட்டமும் தனது பணியை ஆற்றத் தொடங்கும். நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதுவே எங்கள் முதன்மைப் பணியாக இருக்கும்.
என் நேசம் மிகுந்த நாட்டுமக்களே, கடந்த முறை மனதின் குரல் ஒலித்த போதே கூட, இத்தனை இடர்களுக்கு இடையேயும் கூட நமது விவசாயத் தோழர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு விதை நடவில் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பதிவுகளை முறியடித்துச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தேன். விவசாயத் துறை என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, இது சுபமான அறிகுறி தான். இந்த நாட்டின் தொழிலாளியாகட்டும், விவசாயியாகட்டும், இளைஞனாகட்டும், இவர்கள் அனைவரின் கடும் முயற்சிகள் நாட்டுக்குப் புது மெருகேற்றி வருகின்றன. சில நாட்கள் முன்பாக உலக பொருளாதார மேடையில் பாரதம் பல துறைகளில் தனது பெயரை பெருமிதம் நிறைந்த வகையில் பொறித்திருக்கிறது. தனித்தனிக் குறியீடுகள் மூலமாக உலகதர வரிசைப் பட்டியலில் பாரதம் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது நம் திறன்மிகு நாட்டுமக்களின் தொடர் முயற்சிகளின் பலனாகவே அமைந்திருக்கிறது. தங்குதடையற்ற வர்த்தகம் செய்வது பற்றிய உலக வங்கி அளித்த அறிக்கையில் பாரதத்தின் தரநிலை உயர்ந்திருக்கிறது. நாம் பாரதத்தின் வர்த்தக செயல்பாடுகளை உலக செயல்பாடுகளுக்கு இணையாக ஆக்க விரைந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம், இதில் நமக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது. UNCTAD, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு அளித்திருக்கும் உலக முதலீட்டு அறிக்கைப்படி 2016-18 ஆண்டுகளுக்கான தலைசிறந்த எதிர்கால பொருளாதாரங்கள் பட்டியலில் பாரதம் 3ஆம் நிலையை எட்டியிருக்கிறது. , உலகம் தழுவிய போட்டித்தன்மை குறித்த உலக பொருளாதார அமைப்பின் அறிக்கையில் பாரதம் 32 இடங்களைத் தாண்டி உயர்ந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டுக்கான உலகம் தழுவிய செயல்பாட்டுக் குறியீட்டில் நாம் 16 இடங்கள் முன்னேறி இருக்கிறோம், 2016ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் கட்டமைப்புச் சேவைகள் செயல்பாட்டுக் குறியீட்டில் 19 இடங்கள் முன்னேறி இருக்கிறோம். வேறு பல அறிக்கைகளும் இதே மதிப்பீட்டையே சுட்டிக் காட்டுகின்றன. பாரதம் வேகமாக வளர்ந்து வருகிறது.
என் பாசமிகு நாட்டுமக்களே, இந்த முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீது நாட்டுமக்களின் கோபப்பார்வை படிந்தது. அனைத்து இடங்களிலும் நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்பான கோபம் வெளிப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் ஆகியோர் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இத்தகைய சூழ்நிலையிலும் கூட, சில நல்ல விஷயங்கள் நடக்கும் போது, மனது சந்தோஷப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அமளிக்கு இடையேயும் கூட நடைபெற்ற ஒரு உன்னதமான பணி மீது நாட்டின் கவனம் திரும்பவில்லை. சகோதர சகோதரிகளே, மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு என்ற குறிக்கோளை மனதில் கொண்டு அரசின் முயற்சி அமைந்து வந்திருக்கிறது, இதோடு தொடர்புடைய ஒரு மசோதா இப்போது நிறைவேறியிருக்கிறது என்பதைக் கூறுகையில் எனக்கு சந்தோஷமும், பெருமிதமும் ஒருசேர ஏற்படுகிறது. இதை நிறைவேற்றியதற்காக மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு நான் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், நாட்டின் கோடானுகோடி மாற்றுத் திறனாளிகள் தரப்பில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் நலனில் இந்த அரசு முனைப்போடு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதன் வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் உரிமையும், கௌரவமும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோளாக இருந்தது. Paralympics போட்டிகளில் 4 பதக்கங்களை வென்று, நமது முயற்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகள் வலு சேர்த்தார்கள். அவர்கள் தங்கள் வெற்றிகள் வாயிலாக நாட்டுக்கு கௌரவத்தை மட்டும் ஈட்டித் தரவில்லை, தங்கள் திறமை வாயிலாக மக்களை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தவும் செய்திருக்கிறார்கள். நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகளும் நாட்டின் ஏனைய குடிமக்களைப் போலவே நமது விலைமதிப்பில்லாத சொத்துக்கள், விலைமதிப்பில்லாத ஆற்றல்கள். மாற்றுத் திறனாளிகள் நலன் பொருட்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பது அதிகரித்திருக்கிறது. அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு வரையறை 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் கல்வி,, வசதிகள், புகார்கள் ஆகியவற்றுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் 4350 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, 352 கோடி ரூபாய் செலவில் 5,80,000 மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கு கருவிகள் அளிக்கப்பட்டது என்பதிலிருந்தே மாற்றுத் திறனாளிகளிடத்தில் அரசு எந்த அளவுக்கு புரிந்துணர்வோடு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணர்வினை அடியொற்றி ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது,. முன்பெல்லாம், மாற்றுத் திறனாளிகள் 7 நிலைகளில் வகைப்படுத்தப்பட்டார்கள், ஆனால் இப்போது சட்டம் இயற்றியிருப்பதன் வாயிலாக, இதை 21 விதமாக ஆக்கி இருக்கிறோம். இதில் 14 புதிய நிலைகள் மேலும் இணைக்கப் பட்டீருக்கின்றன. சில வகை மாற்றுத் திறனாளிகளை இதில் இணைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு முதன் முறையாக நீதி கிடைத்திருக்கிறது, வாய்ப்பு கிட்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, Thalassemia, Parkinson’s, பாதிப்புகளுக்கு உள்ளானவர்களையும், பிறப்பிலேயே குட்டையான உருவம் கொண்டவர்கள் போன்றவர்களையும் இணைத்திருக்கிறோம்.
என் இளைய தோழர்களே, கடந்த சில வாரங்களாக விளையாட்டு மைதானம் நமக்கு அளித்து வரும் செய்திகள் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு இந்தியர் என்ற முறையில் நாம் பெருமிதம் கொள்வது என்பது இயல்பான ஒன்று தான். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4க்குப் பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. இதில் சில இளைய வீரர்களின் ஆட்டம் பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது. நம் தேச இளைஞரான கருண் நாயர் 3 சதம் அடித்தார். KL Rahul 199 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி நன்கு பேட்டிங் செய்தது மட்டுமல்லாமல், நன்றாகத் தலைமையும் தாங்கினார். இந்திய க்ரிக்கெட் அணியின் off spinnerஆன பந்து வீச்சாளர் ஆர். அஸ்வினின் பெயரை சர்வதேச க்ரிக்கெட் குழு ICC 2016ஆம் ஆண்டுக்கான Cricketer of the Year, மற்றும் Best Test Cricketer என அறிவித்தது. இவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் பலப்பல, என் நல்வாழ்த்துக்கள் ஏராளம். ஹாக்கித் துறையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருமையான, சிறப்பான செய்தி கிடைத்திருக்கிறது. ஜூனியர் ஹாக்கி அணி உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த சாதனையை படைத்த அனைத்து இளைய ஹாக்கி வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்கள். இந்தச் சாதனை பாரத ஹாக்கி அனியின் எதிர்காலத்துக்கான சுபமான அறிகுறியாக இருக்கிறது. கடந்த மாதம் நமது பெண் வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். பாரதத்தின் பெண்கள் ஹாக்கி அணி ஆசிய சாம்பியன் கோப்பையை வென்றார்கள் என்றால், சில நாட்கள் முன்பாக 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை போட்டியில் பாரதத்தின் பெண் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. நான் க்ரிக்கெட் மற்றும் ஹாக்கி அணிகளைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் உள்ளம் நிறைந்த நாட்டுமக்களே, 2017ஆம் ஆண்டு புதிய உற்சாகமும், புதிய பொலிவும் உடையதாக மலரட்டும், உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறட்டும், வளர்ச்சியின் புதிய சிகரங்களை நாம் கடந்து செல்வோம், அமைதியான வாழ்வு வாழ கடைநிலையில் இருக்கும் ஏழைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும், இப்படிப்பட்ட ஒரு ஆண்டாக நமது 2017ஆம் ஆண்டு முகிழ்க்கட்டும். மொட்டவிழ இருக்கும் 2017ஆம் ஆண்டுக்காக, நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
‘எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். கடந்த மாதங்களில் நாம் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளியின் போது, நான் மீண்டும் ஒரு முறை படை வீரர்களோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ, சீன எல்லைப் பகுதிகளுக்குச் சென்றேன். ITBP, இந்திய திபேத்திய எல்லைப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோருடன் நான் இமயத்தின் சிகரங்களில் தீபாவளியைக் கொண்டாடினேன். நான் ஒவ்வொரு முறையும் செல்கிறேன், ஆனால் இந்த தீபாவளி அளித்த அனுபவம் அலாதியானது. நாட்டின் 125 கோடி மக்களூம் இந்த தீபாவளியை பாதுகாப்புப் படையினருக்கு அர்ப்பணித்தார்கள், இதன் தாக்கம் அங்கே இருந்த ஒவ்வொரு பாதுகாப்புப் படைவீரர் முகத்திலும் பிரதிபலித்தது. அவர்கள் உணர்வுகள் நிறைந்து காணப்பட்டார்கள்; இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் எனக்கு அனுப்பிய நல்வாழ்த்துச் செய்திகள், அவர்கள் தங்கள் சந்தோஷங்களில் நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பங்களித்தது ஆகியன அற்புதமான மறுமொழியாக அமைந்தது. மக்கள் வெறும் தகவல்களை மட்டும் அனுப்பவில்லை, மனதோடு இணைந்தார்கள்; ஒருவர் கவிதைகளை வடித்தார், மற்றவர் படங்கள் வரைந்தார், வேறு ஒருவர் கார்ட்டூன்களை உருவாக்கினார், மற்றுமொருவர் வீடியோ தயாரித்தார். அதாவது ஒவ்வொரு இல்லமும் படைவீரர்கள் வசிக்கும் இடங்கள் போல ஆனது. கடிதங்களைக் காணும் போது, மக்கள் மனங்களில் தான் எத்தனை கற்பனைத் திறன் இருக்கிறது, எவ்வளவு உணர்வுகள் இருக்கின்றன என்று நான் சொக்கிப் போனேன்; இவற்றையெல்லாம் பார்த்த பிறகு இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு காபி டேபிள் புத்தகமாக (coffee table book) வடிவமைக்கலாம் என்று mygovஇல் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, உங்கள் அனைவரின் பங்களிப்பு மூலமாக, நாட்டின் படைவீரர்களின் உணர்வுகளை பற்றிய உங்கள் கற்பனை, நாட்டின் பாதுகாப்புப் படைகள் பற்றிய உங்கள் உணர்வு-உலகம் ஆகியன இந்தத் தொகுப்பில் இடம் பெறும்.
படையின் ஒரு வீரர் எனக்கு எழுதியிருந்தார் – பிரதமர் அவர்களே, படைவீரர்களான எங்கள் அனைவருக்குமே, தீபாவளி, ஹோலி போன்ற ஒவ்வொரு பண்டிகையும் எல்லைப்புறங்களிலேயே அமையும்; ஒவ்வொரு கணத்தையும் நாங்கள் நாட்டின் பாதுகாப்பு பற்றிய எண்ணங்களிலேயே செலவிடுவோம். ஆம், இருந்தாலும், பண்டிகை நாட்களில் வீடு பற்றிய நினைப்பு வந்து விடுகிறது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த முறை அப்படிப்பட்ட நினைப்பே ஏற்படவில்லை. இந்தப் பண்டிகை நாளிலே நாம் வீட்டில் இல்லையே என்ற எண்ணம் கொஞ்சம் கூட ஏற்படவே இல்லை. ஏதோ, 125 கோடி பாரதவாசிகளோடு சேர்ந்து நாங்களும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தோம்.
எனதருமை நாட்டுமக்களே. இந்த தீபாவளிப் பண்டிகையின் போது, நமது நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கிடையில், படைவீரர்கள் மனதில் துளிர்த்த உணர்வு இந்த வேளையில் உண்டான அனுபவம், சில கணங்களோடு மறைந்து போக வேண்டுமா? நாம், ஒரு சமுதாயம் என்ற வகையில், நாடு என்ற முறையில், இந்த உணர்வை ஏற்படுத்துவது நமது இயல்பாக ஆக வேண்டும், நம் உணர்வுகளில் கலக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, பண்டிகையாக இருந்தாலும் சரி, சந்தோஷமான வேளையாக இருந்தாலும் சரி, நமது நாட்டின் படைவீரர்களை நாம் ஏதாவது ஒரு வகையில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதுமே படையினரோடு தோளோடு தோள் நிற்கும் போது, படையின் பலமும் சக்தியும் 125 கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது உறுதி.
சில காலம் முன்பாக ஜம்மு கஷ்மீரத்தின் கிராமங்களைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். இவர்கள் ஜம்மு கஷ்மீரத்தின் பஞ்சாயத்து மாநாட்டைச் சேர்ந்தவர்கள். கஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்தார்கள். சுமார் 40-50 தலைவர்கள் இருந்தார்கள். கணிசமான நேரம் வரை அவர்களோடு உரையாடும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்கள் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி தொடர்பான சில விஷயங்களைப் பேச வந்திருந்தார்கள், சிலர் சில கோரிக்கைகளோடு வந்திருந்தார்கள், ஆனால் உரையாடல் நீளத் தொடங்கிய போது, பள்ளத்தாக்கின் சூழல், சட்டம் ஒழுங்கு நிலைமை, பிள்ளைகளின் எதிர்காலம், என பல்வேறு விஷயங்கள் அதில் இடம் பெற்றன என்பது இயல்பான ஒன்றாக அமைந்தது. மிக்க அன்போடும், திறந்த மனதோடும், கிராமத்தின் இந்தத் தலைவர்கள் உரையாடிய விதம் இதயத்தைத் தொடும்படியாக அமைந்தது. பேச்சு வாக்கில், கஷ்மீரத்தில் எரிக்கப்பட்ட பள்ளிகள் பற்றிய பேச்சு எழுந்த போது, நம் நாட்டுமக்களுக்கு இதனால் எத்தனை துயரம் ஏற்பட்டதோ, அதைப் போலவே இந்த கிராமத் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது; பள்ளிகள் எரிக்கப்படவில்லை, பிள்ளைகளின் எதிர்காலம் தீக்கிரையாக்கப் பட்டிருக்கிறது என்றே அவர்கள் கருதினார்கள். நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பிறகு இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். கஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்த இந்த அனைத்துத் தலைவர்களும் எனக்கு அளித்த வாக்கினை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது; அவர்கள் கிராமங்களுக்குச் சென்று தொலைவில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டினார்கள். சில நாட்கள் முன்பாக வாரியத் தேர்வுகள் நடைபெற்ற போது, கஷ்மீரத்தின் 95 சதவீதக் குழந்தைகள், இந்த வாரியத் தேர்வுகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். வாரியத் தேர்வுகளில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் மாணவ மாணவியர் பங்கு எடுத்துக் கொள்வது என்பது, ஜம்மூ கஷ்மீரத்தின் நமது குழந்தைகள் வளமான எதிர்காலத்துக்காக, கல்வி வாயிலாக, வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்ட மனவுறுதி பூண்டிருக்கிறார்கள் என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவர்களின் இந்த ஊக்கத்திற்காக நான் அந்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களின் பெற்றோர், உறவினர்கள், அவர்களின் ஆசிரியர்கள், அனைத்து கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கும் எனது இருதய பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
அன்பு நிறை சகோதர சகோதரிகளே, இந்த முறை நான் மனதின் குரலுக்காக மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரிய போது, அனைவரின் ஆலோசனைகளும் ஒரு விஷயம் பற்றியே வந்தது. அனைவருமே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் குறித்து நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு நான் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பேரியக்கத்தைத் தொடங்குவது பற்றிப் பேசினேன். எந்த வேளையில் நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேனோ, அதை உங்கள் முன்பாக வைத்தேனோ, அப்போதே இந்த முடிவு சாதாரணமானது அல்ல, கஷ்டங்கள் நிறைந்த ஒன்று என்று நான் பொதுப்படையாகவே கூறினேன். ஆனால் தீர்மானம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியம் அதை செயல்படுத்துவது என்பதும். நமது சராசரி வாழ்க்கையில் பலவகையான புதுப்புது கடினங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது எனக்கு உத்தேசமாகத் தெரியும். அப்போதுமே கூட இந்த முடிவு மிகப் பெரியது, இதன் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வர 50 நாட்கள் ஆகி விடும் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு தான் இயல்பு நிலை நோக்கி நம்மால் அடியெடுத்து வைக்க முடியும். 70 ஆண்டுக்காலமாக நாம் என்னென்ன நோய்களையெல்லாம் சுமந்து வருகிறோமோ, அந்த நோய்களிலிருந்து விடுதலை பெறும் முயற்சி என்பது அத்தனை சுலபமாக இருக்க முடியாது. நீங்கள் சந்திக்கும் கஷ்டங்களை எல்லாம் என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் உங்கள் ஆதரவை நான் பார்க்கும் வேளையில், உங்கள் ஒத்துழைப்பைக் காணும் போதினில், உங்களை திசை திருப்பி மிரள வைக்கும் ஏராளமான முயற்சிகளையும், தொய்வடைய வைக்கும் முயற்சிகளையெல்லாம் தாண்டி, நீங்கள் சத்தியமான இந்த வழியை நன்கு புரிந்து கொண்டு விட்டீர்கள், நாட்டு நலன் கருதி இந்த விஷயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், இத்தனை பெரிய தேசம், இத்தனை அளவு நோட்டுக்கள், பல இலட்சம் கோடி நோட்டுக்கள், இப்படிப்பட்ட தீர்மானம் – ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, ஒவ்வொரு பொருளாதார வல்லுனரும் இதை அதிகம் அலசிக் கொண்டிருக்கிறார்கள், மதிப்பீடு செய்து வருகிறார்கள். இந்துஸ்தானத்தின் 125 கோடி நாட்டு மக்களும் இடர்களை சகித்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்களா என்று ஒட்டு மொத்த உலகமும் இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தோர் மனங்களில் ஒரு வேளை கேள்விக்குறி இருக்கலாம்! பாரதத்துக்கு, பாரதத்தின் 125 கோடி நாட்டு மக்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது, 125 கோடி நாட்டு மக்களும் தங்கள் மனவுறுதிப்பாட்டின் இலக்கை எட்டியே தீர்வார்கள் என்ற உறுதிப்பாடு இருக்கிறது. நமது தேசம் சொக்கத் தங்கத்தைப் போல, ஒவ்வொரு வகையிலும் தகித்துப் பிரகாசிக்கும் என்றால் இதற்கான முழுமுதற் காரணம் நமது நாட்டின் குடிமக்கள் தான், அதற்கான காரணம் நீங்கள் தான், இந்த வெற்றிப் பாதை கூட உங்கள் காரணமாகத் தான் சாத்தியமாகியிருக்கிறது.
நாடு முழுவதிலும் மத்திய அரசு, மாநில அரசுகள், வட்டார உள்ளாட்சி அமைப்புக்களின் அனைத்துப் பிரிவுகள், ஒரு இலட்சத்து 30000 வங்கிக் கிளைகள், இலட்சக்கணக்கான வங்கிப் பணியாளர்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி முகவர்கள், இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு இதில் பங்கு கொண்டார்கள். பலவகையான அழுத்தங்களுக்கு இடையில், இவர்கள் அனைவரும் மிகவும் அமைதியான மனதோடு, இந்த நாட்டுப்பணியை ஒரு வேள்வியாகவே கருதி, ஒரு மகத்தான மாற்றம் ஏற்படுத்தும் ஒரு முயற்சி என்றே கருதி இதில் முழுமனதோடு ஈடுபட்டார்கள். காலையில் தொடங்கி, இரவு எப்போது நிறைவு செய்வார்கள் என்பது தெரியக் கூட செய்யாது, ஆனால் அனைவரும் செய்கிறார்கள். இதன் விளைவாகத் தான் பாரதம் இந்தப் பணியில் வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் கூட, வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் அனைவரும் பணியாற்றுகிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். மனித நேயம் என்ற விஷயம் வரும் போது, அவர்கள் சற்றுக் கூடுதலாகவே பயணித்துத் தான் செயல்பட்டு வருகிறார்கள். கண்டவா என்ற இடத்தில் ஒரு வயதானவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று ஒருவர் என்னிடம் கூறினார். திடீரென்று பணம் தேவைப்பட்டது. அங்கே இருக்கும் வங்கிப் பணியாளர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்ட போது, அவரே நேரில் முதியவர் இல்லம் சென்று பணத்தை சேர்ப்பித்து, சிகிச்சைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கணக்கே இல்லாத பல சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் டிவியில், ஊடகங்களில், செய்தித் தாள்களில், உரையாடல்களில் இடம் பெறுகின்றன. இந்த மகா வேள்வியில் உழைப்பவர்கள், பங்களிப்பு நல்குபவர்கள் என அனைத்துத் தோழர்களுக்கும் நான் என் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதித்துப் பார்க்கும் போது தான் உண்மையான சக்தி என்ன என்பது புரிய வரும். பிரதம மந்திரியின் ஜன் தன் திட்ட இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வந்த போது, வங்கிப் பணியாளர்கள் எப்படி அதை தங்கள் தோள்களில் சுமந்தார்கள், 70 ஆண்டுகளில் முடியாத ஒரு காரியத்தை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்கள் தங்கள் திறமையை அப்போது வெளிப்படுத்தினார்கள். இன்று மீண்டும் ஒரு முறை அதே போன்றதொரு சவாலை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள், 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, அனைவரின் சமுதாய ரீதியிலான முனைப்பு, இந்த தேசத்தை ஒரு புதிய சக்தியாக உருமாற்றி சிறப்புறச் செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் தீயவை எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்றால், இன்றும் கூட சிலரிடமிருந்து தீய நடைமுறைகள் ஒரு பழக்கமாகிப் புரையோடி இருக்கின்றன. இப்போதும் கூட இந்த ஊழல் பணம், இந்த கருப்புப் பணம், கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம், பினாமிப் பணம், ஆகியவற்றை ஏதோ ஒரு வழியைத் தேடிப் பிடித்து உயிர்ப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பணத்தைக் காபந்து செய்ய சட்ட விரோதமான செயல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் ஏழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி. ஏழைகளை மதி மயக்கி, ஆசை வார்த்தைகள் பேசி அல்லது மனதை மயக்கி, அவர்களின் கணக்குகளில் பணத்தைப் போட்டோ, அவர்களிடமிருந்து ஏதோ ஒரு வேலையை வாங்கிக் கொண்டோ, தங்கள் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பேர்வழிகளிடம் நான் இன்று கூறிக் கொள்ள விரும்புவது ஒன்று தான் – திருந்துவதோ, திருந்தாமல் போவதோ உங்கள் இஷ்டம், சட்டத்தை மதித்து நடப்பதோ, நடக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தயவு செய்து நீங்கள் ஏழைகளின் வாழ்கையோடு விளையாடாதீர்கள். பதிவுகளில் ஏழையின் பெயர் வந்து, பின்னர் புலனாய்வின் போது என் பிரியமான ஏழை உங்கள் பாவச்செயல் காரணமாகப் பிரச்சனையில் சிக்கும் வகையில் ஏதும் செய்யாதீர்கள். பினாமிச் சொத்துக்கள் தொடர்பாக மிகவும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது, இது அமலுக்கு வரவிருக்கிறது, அதில் நிறைய கஷ்டங்கள் ஏற்படும். நமது நாட்டுமக்களுக்கு எந்த விதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதையே அரசு விரும்புகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷீஷ் அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாயிலாக ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர் பற்றி எனக்குத் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார், இதைப் பாராட்டினார் –
ஐயா வணக்கம், எனது பெயர் ஆஷீஷ் பாரே. நான் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் இருக்கும் திராலி தாலுகாவின் திராலி கிராமத்தில் வசிக்கிறேன். நீங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் நாணய விலக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. பல அசவுகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட தேசத்தின் முன்னேற்றத்துக்காக இந்தக் கடுமையான முயற்சிக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பல எடுத்துக்காட்டுகள் மூலமாக மனதின் குரலில் விளக்க வேண்டும் என்று விரும்புகிறேன்; இதனால் மக்களுக்கு ஒரு வகையில் உற்சாகம் அதிகரிக்கும், தேசத்தை உருவாக்கும் பணியில் ரொக்கமில்லா வழிமுறை மிகவும் அவசியமானது, நான் ஒட்டுமொத்த நாட்டோடு இசைந்திருக்கிறேன், நீங்கள் இந்த 500-1000 ரூபாய் நோட்டுக்கள் விலக்கி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்று கூறியிருக்கிறார்.
இதே போல கர்நாடகத்தைச் சேர்ந்த யெல்லப்பா வேலான்கர் அவர்களும் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் –
மோடிஜி வணக்கம், நான் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து பேசுகிறேன். உங்களுக்கு நான் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால், நீங்கள் தானே நல்ல நாட்கள் பிறக்கும் என்று சொன்னீர்கள்; ஆனால் இத்தனை பெரிய முயற்சியை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மூலமாக கருப்புப் பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள் ஆகியோருக்கு நல்லதொரு பாடத்தை நீங்கள் புகட்டியிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கா விட்டால், பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல காலம் எப்போதுமே ஏற்பட்டிருக்காது. இதற்காகவே நான் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சில விஷயங்கள் ஊடகம் மூலமாக, மக்கள் வாயிலாக, அரசு தரப்புகளிலிருந்து கிடைக்கப் பெறும் போது பணியாற்ற உற்சாகம் அதிகரிக்கிறது. என் தேசத்தின் சாமான்ய பிரஜையிடம் என்ன ஒரு அற்புதமான திறன் இருக்கிறது என்பது தெரிய வரும் போது அளவில்லாத ஆனந்தமும், பெருமிதமும் உண்டாகிறது. மகாராஷ்ட்ரத்தின் அகோலாவில், தேசிய நெடுஞ்சாலை 6இல் ஒரு உணவு விடுதி இருக்கிறது. அவர்கள் ஒரு மிகப் பெரிய அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறார்கள்; உங்கள் வசம் பழைய நோட்டு இருந்தால் கூட, நீங்கள் உணவு உண்ண விரும்பினால், பணம் பற்றி கவலைப் பட வேண்டாம், இங்கிருந்து பசியோடு மட்டும் திரும்பிச் செல்ல வேண்டாம், உணவை உண்டு விட்டே செல்ல வேண்டும், எப்போதாவது இந்தப் பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டி வந்தால், கண்டிப்பாக பணத்தை செலுத்துங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் செல்கிறார்கள், உணவு உண்கிறார்கள், 2-4-6 நாட்களுக்குப் பிறகு அந்த வழியாக மீண்டும் பயணிக்கும் போது, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்துகிறார்கள். இது தான் என் தேசத்தின் சக்தி, இதில் சேவை மனப்பான்மை, தியாக உணர்வு ஆகியவை பளிச்சிடுகின்றன.
தேர்தல் காலத்தில் நான் தேநீர் வேளை உரையாடலில் ஈடுபட்டேன், உலகம் முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. உலகின் பல நாட்டு மக்கள் தேநீர் வேளை உரையாடல் என்பதை சொல்லவும் தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்த தேநீர் வேளை உரையாடலின் போது திருமணங்கள் கூட நடைபெறும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. நவம்பர் மாதம் 17ஆம் தேதி சூரத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், தேநீர் வேளை உரையாடலுடன் நடந்தது. குஜராத்தின் சூரத்தில் ஒரு பெண் தன் வீட்டு திருமணத்துக்காக வந்தவர்களுக்கு வெறும் தேநீர் மட்டுமே அருந்தக் கொடுத்தார், வேறு எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை, எந்த விருந்துணவையும் படைக்கவில்லை, எதுவும் இல்லை – ஏனென்றால் நாணயவிலக்கல் காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. ஊர்வலத்தாரும் இதையே கௌரவம் என்று கருதினார்கள். சூரத்தின் பரத் மாரூ மற்றும் தக்ஷா பர்மார் – இவர்கள் தங்கள் திருமணம் வாயிலாக ஊழலுக்கு எதிராக, கருப்புப் பணத்துக்கு எதிராக நடைபெற்று வரும் பெரும்போரில் தங்கள் பஙக்ளிப்பை நல்கியிருக்கிறார்கள், இதுவே பெரும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. நவபரிணீத் பரத்துக்கும் தக்ஷாவுக்கும் பலப்பல ஆசிகள் அளிக்கும் அதே வேளையில், திருமண வைபவத்தைக் கூட ஒரு மஹா வேள்வியாக உருமாற்றி, ஒரு புதிய வாய்ப்பாக அதை ஆக்கியதற்காக உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சங்கடங்கள் வரும் போது, மக்கள் அதற்கான தீர்வுகளையும் மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்கிறார்கள்.
தாமதமாக வீடு திரும்பிய வேளையில், ஒரு முறை டிவி செய்தியில் பார்க்க நேர்ந்தது. அசாம் மாநிலத்தின் தேகியாஜுலீ என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமம் இருக்கிறது. தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் கூலி கிடைக்கிறது. இப்போது 2000 ரூபாய் நோட்டு கிடைத்திருக்கும் வேளையில் அவர்கள் என்ன செய்தார்கள்? அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 4 பெண்கள் ஒன்று கூடினார்கள், நால்வரும் ஒன்றாகச் சென்று பொருட்களை வாங்கினார்கள், 2000 ரூபாய் மூலமாக பணத்தை செலுத்தினார்கள், அவர்களுக்கு குறைவான மதிப்பு உடைய நாணயங்கள் தேவை இருக்கவில்லை, ஏனென்றால் நால்வருமாக இணைந்து பொருட்களை வாங்கினார்கள், அடுத்த வாரம் சந்திக்கலாம், அப்போது கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள். மக்கள் தங்களுக்குள்ளாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனியுங்கள். எங்கள் பகுதிக்கு ஏ.டி.எம்.மைக் கொண்டு வாருங்கள் என்று அசாமின் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை பற்றி அரசுக்கு தகவல் கிடைத்தது, கிராமப்புற மக்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன பாருங்கள். இந்த இயக்கம் வாயிலாக சிலருக்கு உடனடியாக பலன் கிடைத்திருக்கிறது. தேசத்துக்கு இனிவரும் நாட்களில் பலன் கிட்டும், ஆனால் சிலருக்கு லாபம் உடனடியாக வசப்பட்டிருக்கிறது. நடந்திருப்பவை பற்றி நான் கேட்ட போது, சின்னச்சின்ன நகரங்களிலிருந்து சில தகவல்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றன. சுமார் 40-50 நகரங்கள் தொடர்பான தகவல்கள் எனக்குக் கிடைத்தன, இந்த நாணய விலக்கல் காரணமாக பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாயின, வரி ஏய்ப்பு செய்தவர்கள் – தண்ணீர் மீதான வரி, மின்சாரம் மீதான வரி போன்றவற்றை செலுத்தாதவர்கள் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும் – ஏழை பாழைகள் எல்லாம் 2 நாட்கள் முன்னதாகவே சென்று செலுத்தி விடும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பார்கள். சக்தி படைத்தவர்கள், சட்டத்தின் கரங்களுக்கு அப்பால் இருப்பவர்கள், அவர்களைக் கேள்வி கேட்பார் யாரும் இல்லை, அவர்கள் தான் பணத்தை செலுத்துவதே இல்லை. அவர்கள் கணக்கில் ஏகப்பட்ட பாக்கி இருக்கும். ஒவ்வொரு நகராட்சியும் மிகவும் சிரமப்பட்டு 50 சதவீதத் தொகையையே ஈட்டுகிறது. ஆனால் இந்த முறை 8ஆம் தேதியின் இந்த தீர்மானம் காரணமாக, அனைவரும் தங்கள் பழைய நோட்டுக்களை செலுத்த ஓடோடி வந்தார்கள். 47 நகர அலகுகளில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் சுமார் 3000-3500 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒரு வாரக்காலத்தில் மட்டும் அவர்களுக்கு 13000 கோடி ரூபாய் பணம் வசூலாகி இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒருசேர அளிக்கலாம். 3000-3500 கோடி ரூபாய் எங்கே, 13000 கோடி எங்கே!! அதுவும் நேரடியாக வந்து செலுத்தியிருக்கிறார்கள். இப்போது இந்த நகராட்சிகளுக்கு 4 மடங்குப் பணம் வந்திருப்பதால், ஏழை மக்களுக்காக கழிவுநீர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதோ, நீர் வழங்கல் அமைப்புக்கள் உருவாக்கப்படுவதோ, ஆங்கன்வாடி மையங்கள் நிறுவப்படுவதோ இயல்பாகவே அமையும் இல்லையா? நேரடிப் பயன்கள் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஏற்பட்டிருக்கும் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
சகோதர சகோதரிகளே, நமது கிராமங்கள், நமது விவசாயிகள், இவர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தின் பலமான தூண்கள். ஒரு புறம் பொருளாதாரத்தின் இந்த புதிய மாற்றம் காரணமாக, இடர்களுக்கு இடையே, ஒவ்வொரு குடிமகனும் அதற்கேற்ப தன்னைத் தானே சீர்செய்து கொண்டு வருகிறார். ஆனால் நான் என் தேச விவசாயிகளுக்கு இன்று சிறப்பாக என் வணக்கங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது தான் நான் இந்தப் பருவத்தின் விதைப்பு தொடர்பான புள்ளி விபரங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். கோதுமையாகட்டும், பருப்பு வகைகளாகட்டும், எண்ணெய்ப் பயிர்கள் ஆகட்டும், நவம்பர் 20ஆம் தேதி வரை என்னிடம் கணக்கு இருக்கிறது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது, விதைப்பு அதிகரித்திருக்கிறது. கஷ்டங்களுக்கு இடையேயும், விவசாயிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அரசுமே கூட பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது, இதில் விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் கூட கஷ்டங்கள் இருக்கின்றன என்றாலும், இயற்கை இடர்களாகட்டும், எந்த ஒரு இன்னலாகட்டும் அவற்றை சகித்துக் கொண்டு உறுதியாக சமாளிக்கும் நமது விவசாயி, இந்த முறையும் மனவுறுதியோடு இதை எதிர்கொண்டிருக்கிறார்.
நமது நாட்டின் சிறிய வியாபாரிகள் வேலைவாய்ப்பையும் அளிக்கிறார்கள், பொருளாதார செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறார்கள். கடந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் நாங்கள் ஒரு மகத்துவம் நிறைந்த முடிவைச் செய்தோம்; பெரிய பெரிய mallகளைப் போலவே, கிராமங்களில் உள்ள சின்னச் சின்ன கடைகளும் கூட 24 மணி நேர வியாபாரம் செய்ய முடியும், எந்த சட்டமும் அவர்களுக்குத் தடை விதிக்காது. ஏனென்றால், பெரிய பெரிய mallகளுக்கு எல்லாம் 24 மணி நேரம் திறக்க வாய்ப்பு கிடைக்கும் போது, கிராமத்தின் ஏழை கடைக்காரருக்கு ஏன் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க கூடாது என்பது என் கருத்தாக இருந்தது. முத்ரா திட்டத்தின்படி அவர்களுக்கு கடன் அளிக்கும் விதமாக முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் முத்ரா திட்டத்தின் படி எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது, ஏனென்றால் இது போன்ற சிறு தொழில்களில் கோடிக்கணக்கான பேர் ஈடுபட்டு வருகிறார்கள், பல இலட்சம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரத்துக்கான வேகத்தை அளிக்கிறார்கள். ஆனால் இந்த தீர்மானம் காரணமாக அவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தான்; இப்படிப்பட்ட நிலையிலும், நமது இந்த சிறு வியாபாரிகளும் கூட தொழில்நுட்பம் வாயிலாக, mobile app வாயிலாக, மொபைல் வங்கி வாயிலாக, கடன் அட்டை வாயிலாக, தங்கள் தங்கள் வழிமுறைகள் மூலம் நுகர்வோர் சேவையில் ஈடுபட்டு வருவதையும், நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதையும் என்னால் பார்க்க முடிந்தது.
இன்று நான் எனது சிறு வணிகம் செய்யும் சகோதர சகோதரிகளிடம் கூற விரும்புவதெல்லாம், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நீங்கள் டிஜிட்டல் உலகில் நுழையுங்கள். நீங்களும் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக வங்கிகளின் appஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கடன் மற்றும் பற்று அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கான விற்பனை முக (Point of Sale) இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் எப்படி ரொக்கப் பணத்தைக் கையாளாமல் வியாபாரம் செய்வது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். எப்படி பெரிய mallகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களோ, அதைப் போல, ஒரு சிறிய வியாபாரியும், எளிமையான பயனாளிக்கு நேசமான தொழில்நுட்பம் வாயிலாக, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதில் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை, சிறப்பான வாழ்க்கையே ஏற்படும். ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயத்தை உருவாக்க உங்கள் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்க முடியும், நீங்கள் உங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள, மொபைல்போன் மூலமாக மொத்த வங்கிச் செயல்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்று நோட்டுக்களை கையாளாமல், வியாபாரத்தை பல வழிகளில் நம்மால் நடத்த முடியும். தொழில்நுட்ப வழிகள் இருக்கின்றன, அவை பாதுகாப்பானவை, விரைவானவை. நீங்கள் இந்த இயக்கம் வெற்றி பெற உங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று மட்டும் நான் விரும்புகிறேன். இது மட்டுமல்ல, மாற்றத்தை நீங்கள் தான் தலைமையேற்றி நடத்திச் செல்ல வேண்டும், இப்படிப்பட்ட தலைமையை உங்களால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த கிராமத்தின் வியாபாரத்தையும் நீங்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உழைப்பாளி சகோதர சகோதரிகளிடத்திலும் நான் கூற விரும்புவது, உங்களுக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது தான். காகிதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஊதியம் ஒன்று, உங்கள் கைகளில் கொடுக்கப்படும் தொகையாக வேறு என்ற நிலைமை ஒன்று. எப்போதாவது மொத்த ஊதியமும் கைகளில் கிடைத்தாலும், வெளியே ஒருவர் நின்று கொண்டிருப்பார், அவருக்கு ஒரு பங்கை உங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்க வேண்டி இருக்கும், பலவந்தமாக இப்படிப்பட்ட கொடுமை நிறைந்த வாழ்க்கையை வாழும் நிலைக்கு கூலித் தொழிலாளி தள்ளப் படுகிறார். இந்த புதிய வழிமுறை வாயிலாக, வங்கிகளில் உங்களுக்கென ஒரு கணக்குத் தொடங்கப்பட்டு, உங்கள் ஊழியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். உங்களுக்கு உங்கள் ஊதியம் முழுக்க கிடைக்க வேண்டும், யாருக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்காது. உங்கள் மீது கொடுமை இழைக்கப்படக் கூடாது. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டால், நீங்களுமே கூட ஒரு சின்ன மொபைல்போன் மூலமாக, அக்கம்பக்கக் கடைகளில் பொருள் வாங்க முடியும், அதன் மூலமாகவே பணத்தை செலுத்தி விடவும் முடியும்; இதற்கு எந்த ஸ்மார்ட் போனும் தேவையில்லை, இப்போதெல்லாம் உங்கள் மொபைல் போனே கூட ஈ-வேலட் என்ற வகையில் உங்கள் பர்ஸ் செய்யும் வேலையைச் செய்து விடுகிறது. ஆகையால் என் உழைப்பாளி சகோதர சகோதரிகளே, இந்தத் திட்டத்தில் உங்கள் பங்களிப்பை நான் சிறப்பாக வேண்டுகிறேன், ஏனென்றால் இத்தனை பெரிய ஒரு முடிவை நான் நாட்டின் ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக, நசுக்கபட்டவர்களுக்காக, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கொண்டிருக்கிறேன்.
இன்று நான் விசேஷமாக இளைஞர்களோடு உரையாட விரும்புகிறேன். பாரதத்தில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உலகம் முழுக்க தண்டோரா போட்டு வருகிறோம். நீங்கள் என்னாட்டின் இளைஞர்கள், யுவதிகள், நான் எடுத்திருக்கும் இந்த முடிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை நான் நன்கறிவேன். நீங்கள் இந்த முடிவை முழுமையாக ஆதரிக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இதை ஆக்கபூர்வமான வழிகளில் முன்னெடுத்துச் செல்ல பெருமளவு பங்களிப்பு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். தோழர்களே, நீங்கள் தான் எனது உண்மையான சிப்பாய்கள், நீங்களே என் உண்மைத் தோழர்கள். அன்னை பாரத மாதாவுக்கு சேவை செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கிறது, இது தேசத்தைப் பொருளாதார சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்லும் பொன்னான வாய்ப்பு. எனது இளைய சமுதாய நண்பர்களே, உங்களால் எனக்கு உதவி செய்ய இயலுமா? எனக்கு துணை நிற்பதோடு மட்டும் வேலை முழுமை பெறாது. இன்றைய உலக நடைமுறை பற்றி உங்களுக்கு இருக்கும் அளவுக்கு, முந்தைய தலைமுறையினருக்கு இல்லை. ஏன், உங்கள் குடும்பத்திலேயே கூட உங்கள் மூத்த சகோதரருக்கு, உங்கள் தாய் தந்தையருக்கு, சித்தப்பா சித்திகளுக்கு, மாமா மாமிகளுக்கு உங்கள் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். App, அதாவது செயலி என்றால் என்ன என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், ஆன்லைன் பேங்கிங், அதாவது கணிணி மூலம் வங்கியலுவல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள், கணிணி மூலம் பயணச்சீட்டுப் பதிவு ஆகியவற்றை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு இந்த விஷயங்கள் மிக எளிமையானவை, நீங்கள் இவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறீர்கள். ஆனால் இன்று நாடு செய்ய விரும்பும் மகத்தான பணி, நமது கனவான ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயம். நூறு சதவீதம் ரொக்கப் பரிவர்த்தனை இல்லா சமுதாயம் என்பது சாத்தியமல்ல என்பது சரி தான். ஆனால் ஏன் நாம் பாரதத்தை குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமுதாயமாக ஆக்க ஒரு தொடக்கத்தைச் செய்யக் கூடாது. ஒரு முறை நீங்கள் இந்தக் குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமூகம் என்பதைத் தொடங்கி விட்டால், ரொக்கப் பரிவர்த்தனையே இல்லாத சமூகம் என்ற இலக்கு தொலைவில் இருக்காது. எனக்கு இந்த விஷயத்தில் உங்கள் உடல்ரீதியான உதவி, உங்கள் நேரம், உங்கள் உறுதிப்பாடு ஆகியன தேவை. நீங்கள் எப்போதும் எனக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது; ஏனென்றால், நாம் அனைவரும் இந்துஸ்தானத்தின் ஏழையின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற ஆசையை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லா சமூகத்தை ஏற்படுத்த, டிஜிட்டல் வங்கி சேவையை அறிமுகப்படுத்த அல்லது மொபைல் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்த இன்று எத்தனை வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு வங்கியும் ஆன்லைன் வசதியை அளிக்கிறது. ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான ஒரு மொபைல் app இருக்கிறது, ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான வாலட் இருக்கிறது. வாலட்டின் நேரடிப் பொருள் e-purse. பலவகையான அட்டைகள் கிடைக்கின்றன. ஜன் தன் திட்டத்தின்படி பாரதத்தின் கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களிடம் ரூபே அட்டை இருக்கிறது, மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வந்த ரூபே அட்டை, 8ஆம் தேதிக்குப் பிறகு, அதிகமாகப் பயன்படத் தொடங்கி விட்டது, சுமாராக 300 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. மொபைல் போனில் வரும் prepaid அட்டையைப் போலவே வங்கிகளிடமும் பணத்தை செலவு செய்ய prepaid அட்டை கிடைக்கிறது. வியாபாரம் செய்ய ஒரு அருமையான தளம் UPI, இதன் மூலமாக நீங்கள் பொருட்களை வாங்கவும் முடியும், பணத்தை அனுப்பவும் முடியும், பணத்தைப் பெறவும் முடியும். இந்தப் பணி நீங்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்புவதைப் போல அத்தனை எளிமையானது. எந்தப் படிப்பும் இல்லாதவருக்குக் கூட இன்று வாட்ஸ்அப்பில் தகவல் எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார், எப்படி ஃபார்வர்ட் செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், இந்த வேலைக்கு பெரிய ஸ்மார்ட் போன் எல்லாம் தேவை என்றில்லாத அளவுக்கு தொழில்நுட்பம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. சாதாரண வசதிகள் கொண்ட போன் மூலமாகக் கூட பணப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். சலவைத் தொழிலாளி, காய்கறி விற்பனையாளர், பால் விற்பனையாளர், செய்தித்தாள் விற்பனையாளர், தேநீர்க்கடைக்காரர், பலகாரம் விற்பனை செய்பவர் என யாராக இருந்தாலும் இதை எந்தச் சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் இந்த வழிமுறையை மேலும் சுலபமாக்கும் முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அனைத்து வங்கிகளும் இதில் ஈடுபட்டிருக்கின்றன, செய்து கொண்டிருக்கின்றன. இப்போது நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கான கூடுதல் கட்டணத்தையும் ரத்து செய்து விட்டோம். மேலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகம் என்ற கருத்துக்கு வலு சேர்க்க, அட்டை தொடர்பான இது போன்ற வரிகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம், இதை நீங்கள் கடந்த 2-4 நாட்களுக்குள்ளான செய்தித்தாள்களில் பார்த்திருக்கலாம்.
எனது இளைய நண்பர்களே, இவையனைத்தும் ஆன பிறகும் ஒரு தலைமுறை முழுவதுக்கும் இது பரிச்சயமில்லாததாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த மகத்தான பணியில் ஆக்கப்பூர்வமாக இணைந்திருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். WhatsAppல் படைப்பாற்றல் மிக்க செய்திகளை நீங்கள் அளித்தல், கோஷங்கள், கவிதைகள், துணுக்குகள், கார்ட்டூன்கள், புதிய புதிய கற்பனை, நகைச்சுவை என அனைத்தையும் நான் கவனித்து வருகிறேன்; சவால்களுக்கு இடையேயும் நமது இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனைப் பார்க்கும் போது எனக்கு என்ன படுகிறது என்றால், போர்க்களத்தில் கூட ஒரு காலத்தில் கீதை பிறந்தது என்பது தான் இந்த பாரத பூமியின் விசேஷம் என்பதைப் போல, இன்று இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தை நாம் சந்திக்கும் வேளையில் உங்களுக்குள்ளே ஒரு அடிப்படையான படைப்பாற்றல் வெளிப்படுவதை நான் பார்க்கிறேன். ஆனால் எனக்குப் பிரியமான இளைய தோழர்களே, நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு இந்தப் பணியில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. ஆம், ஆம் ஆம், நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு உங்கள் உதவி தேவை, நீங்கள், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள் என்று இன்று முதல் உறுதி பூணுங்கள். உங்கள் மொபைல் ஃபோனில் ஆன்லைன் செலவுகளுக்கான அனைத்துத் தொழில்நுட்பத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என உங்களால் எத்தனை நேரம் அளிக்க முடியுமோ, குறைந்த பட்சம் 10 குடும்பங்களுக்கு நீங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள், இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி தத்தமது வங்கிகளின் Appஐ தரவிறக்கம் செய்ய முடியும், தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்யும் வழிமுறை என்ன, எப்படி கடைக்காரருக்குப் பணம் கொடுக்க முடியும் என்று கற்றுக் கொடுங்கள். அதே போல கடைக்காரருக்கும் இந்த வழிமுறையில் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்பதைப் புரிய வையுங்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனையில்லாத சமூகம், நோட்டுக்களின் வலையிலிருந்து வெளிவரும் பேரியக்கம், நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்கும் இயக்கம், கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் இயக்கம், மக்களுக்கு இடர்கள் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரம் அளிக்கும் இயக்கம் – இவற்றுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும். ஒரு முறை மக்களுக்கு Rupay அட்டையின் பயன் எப்படி இருக்கிறது என்பதை நீஙக்ள் கற்றுக் கொடுத்து விட்டால், ஏழை உங்களுக்கு ஆசிகள் அளிப்பார். சாதாரண குடிமகனுக்கு நீங்கள் இந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள் என்றால், அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் இந்தப் பணியில் இந்துஸ்தானத்தின் அனைத்து இளைஞர்களும் ஈடுபட்டார்களேயானால், இதை செய்து முடிக்க அதிக காலம் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஒரே மாதத்திற்குள்ளாக, நம்மால் ஒரு புதிய ஹிந்துஸ்தானமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியும், இந்தப் பணியை நீங்கள் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக உங்களால் செய்ய முடியும்; தினமும் பத்து வீடுகளுக்குச் செல்லுங்கள், தினமும் 10 வீடுகளை இதில் இணையுங்கள். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், உங்கள் ஆதரவு மட்டும் போதாது, நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் களவீரர்களாக மாறுவோம், மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். தேசத்துக்கு கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கும் இந்தப் போரில் நாம் முன்னேறுவோம். இளைஞர்கள் நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாடுகள் உலகிலே உண்டு; அதே போல யார் மாற்றத்தைக் கொண்டு வருகிறாரோ, அவர் இளைஞராகவே இருப்பார், யார் புரட்சியை ஏற்படுத்துகிறாரோ அவர் இளைஞராகத் தான் இருப்பார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். கீன்யா சவாலை ஏற்றுக் கொண்ட வகையில், M-PESA என்ற ஒரு மொபைல் அமைப்பினை புகுத்தியது, தொழில்நுட்பப் பயன்பாட்டினை ஏற்படுத்தியது, M-PESA என்ற பெயரிட்டது. இன்று கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் கீன்யாவின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் இதன் மூலம் நடைபெறக் கூடிய அளவுக்கு தயாராகி விட்டது. இந்த நாடு ஒரு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
என் நெஞ்சம் நிறைந்த இளைஞர்களே, நான் மீண்டும் ஒரு முறை, மீண்டும் ஒரு முறை உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சமுதாய அளவில், தனிப்பட்ட முறையில் என இந்தப் பணியில் ஈடுபட உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வோம். நாட்டுக்கு மிக உன்னதமான சேவை செய்ய நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது, இந்த நல்வாய்ப்பை, பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாது.
என் இனிய சகோதர சகோதரிகளே, நாட்டின் ஒரு மகத்தான கவிஞர், ஹரிவன்ஷ்ராய் பச்சன் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் பிறந்த நாளான இன்று, அமிதாப் பச்சன் அவர்கள் தூய்மை இயக்கத்துக்கான ஒரு கோஷத்தை அளித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அதிகம் விரும்பப்படும் கலைஞரான அமிதாப் அவர்கள், தூய்மை இயக்கத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவரது நாடி நரம்புகளிலெல்லாம் தூய்மை தொடர்பான விஷயம் பரவி விட்டது போலத் தோன்றுகிறது; இதனால் தான் தனது தந்தையாரின் பிறந்த நாளன்று கூட, அவருக்கு தூய்மை பற்றிய நினைவு எழுகிறது. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் ஒரு கவிதையின் சரணங்களைத் தான் எழுதுவதாய் அவர் கூறுகிறார் – மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம். ஹரிவன்ஷ்ராய் அவர்கள் இந்த வரியின் வாயிலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம், என்பதை அடியொற்றி அவரது அருமந்த மகனான அமிதாப் அவர்கள், தூய்மையான உடல், தூய்மையான மனம், தூய்மையான பாரதம், இதுவே என் அடையாளம் என்று எழுதுகிறார். நான் ஹரிவன்ஷ்ராய் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். அமிதாப் அவர்கள் இது போல மனதின் குரலில் இணைவதற்கும், தூய்மைப் பணியை முன்னெடுத்து வழிநடத்திச் செல்வதற்கும் நான் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
என் உளம் நிறைந்த நாட்டுமக்களே, இப்போது மனதின் குரல் வாயிலாக உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் ஆகியன, உங்கள் கடிதங்கள் வாயிலாகவும், myGovஇலும், narendramodiappஇலும் தொடர்ந்து என்னை உங்களோடு இணைத்து வைக்கிறது. இப்போது 11 மணிக்கு மன் கீ பாத் (மனதின் குரல்) ஒலிபரப்பாகும், ஆனால் மாநில மொழிகளில், இது நிறைவடைந்த உடனேயே தொடங்கி விடும். அகில இந்திய வானொலியைச் சேர்ந்தவர்கள் இந்த முனைப்பை மேற்கொண்டிருப்பதற்கு நான் அவர்களுக்குக் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; எங்கெல்லாம் இந்தி மொழி புழக்கத்தில் இல்லையோ, அங்கே இருக்கும் என் நாட்டு மக்களுக்கும் இதோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தீபாவளி உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. 365 நாட்களும், நாட்டின் ஏதாவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு பண்டிகை நடைபெற்று வரும் தேசம் நம் பாரத தேசம். தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு பாரத மக்களின் வாழ்க்கை என்பது பண்டிகைகளின் இன்னொரு பெயர் என்றே படும், இது இயல்பானதும் கூட. வேத காலம் தொட்டு இன்று வரை, பாரதத்தில் பண்டிகைகளின் பாரம்பரியமானது நீடித்து வந்திருக்கிறது, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அடைந்த பண்டிகைகளும் இவற்றில் உண்டு, காலத்துக்கு ஒட்டி வராத பண்டிகைகளை நாம் மனவுறுதியோடு களையவும் செய்திருக்கிறோம்; காலம், சமூகம் ஆகியவற்றின் தேவைக்கேற்ப பண்டிகைகளில் இயல்பான வகையில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் இவை அனைத்திலும் நாம் தெளிவாக காணக்கூடிய ஒரு விஷயம், பாரத நாட்டு பண்டிகைகளின் இந்த முழுமையான பயணம், அவற்றின் பரவல், அவற்றின் ஆழம், மக்களிடம் அவற்றுக்கு இருக்கும் ஏற்புத்தன்மை என இவை அனைத்தும் ஒரு மூல மந்திரத்தோடு இணைந்திருக்கின்றன – தனிமனிதனை சமுதாயத்தை நோக்கி இட்டுச் செல்லுதல் என்பது தான் அது. மனிதனையும் அவனது தனித்துவத்தையும் விசாலப்படுத்தும் அதே வேளையில், அவனது குறுகிய எண்ணப்பாட்டை, சமுதாயத்தின் விசாலத்தை நோக்கி விரிவடையச் செய்யும் முயற்சி, அதை இந்தப் பண்டிகைகள் வாயிலாகச் செய்வது. ஆனால் அவற்றில் கூட, பருவநிலை எப்படி இருக்கிறது, எந்த பருவநிலையில் எதை உண்ண வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்கள் எவை, அந்த விளைச்சலை எப்படி பண்டிகைகளாக மாற்றுவது, உடல்நலக் கண்ணோட்டத்தில் என்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் நம் முன்னோர் அறிவியில் பூர்வமாக, பண்டிகைகளில் கலந்து வைத்திருக்கின்றார்கள். இன்று உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழல் பற்றிய பேச்சாக இருக்கிறது. இயற்கை அழிவு கவலையளிப்பதாக இருக்கிறது. பாரதத்தின் பண்டிகை பாரம்பரியத்தில் இயற்கை மீதான நேசம் வெளிப்படுகிறது, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பண்புடையவர்களாக ஆக்குகிறது. மரம், செடி, நதி, விலங்குகள், மலைகள், பறவைகள் என அனைத்து குறித்தும் பண்டிகைகள் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. இப்போதெல்லாம் நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையைக் கொண்டாடுகிறோம், ஆனால் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், உழைக்கும் வர்க்கமாகட்டும், மீனவர்களாகட்டும், அவர்கள் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விடுமுறையைக் கடைபிடித்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பவுர்ணமி, அமாவாசை நாட்கள் கடல் நீரில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இயற்கை மீது எந்த மாதிரியான தாக்கம் இருக்கிறது என்பதையெல்லாம் அறிவியல் நிரூபித்திருக்கிறது. இது மனித மனதின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது நமது நாட்டில் விடுமுறைகளைக் கூட, பேரண்டம், விஞ்ஞானம் ஆகியவற்றோடு இணைத்துக் கொண்டாடும் பாரம்பரியம் தழைத்திருக்கிறது. இன்று, நாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம், நான் முன்னர் கூறியதைப் போல, நமது ஒவ்வொரு பண்டிகையும் கல்வியூட்டுவதாக இருக்கிறது, ஞானத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்த தீபாவளிப் பண்டிகையும் தமஸோ மா ஜ்யோதிர்கமய, இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற செய்தியை நமக்கு அளிக்கிறது. ஒளி இல்லாததால் உண்டாகும் இருளை மட்டும் இது குறிக்கவில்லை; மூடநம்பிக்கை என்ற இருள், கல்வியறின்மை எனும் இருள், ஏழ்மை எனும் இருள், சமூகத் தீமைகள் எனும் இருள் ஆகியவற்றையும் குறிக்கிறது. தீபாவளி தீபத்தை ஏற்றி, சமூகத்தில் கசடுகளாக கப்பியிருக்கும் இருள், தனிமனிதனின் குறை என்ற இருள், இவற்றிலிருந்து நாம் விடுதலை அடைய முடிந்தால், இது தான் தீபாவளி தீபமேற்றி ஒளி பரப்புவதன் நோக்கம் எனக் கொள்ளலாம்.
ஒரு விஷயம் நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும், இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், அது மிகப் பெரிய செல்வந்தர் இல்லமாகட்டும், அல்லது ஏழ்மை தாண்டவமாடும் ஏழையின் குடிசையாகட்டும், தீபாவளிப் பண்டிகையின் போது, ஒவ்வொரு குடும்பத்திலும் தூய்மை இயக்கம் மிளிர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தூய்மை காணப்படுகிறது. ஏழையிடம் மண்கலயம் இருக்கும், ஆனால் தீபாவளி வந்து விட்டது என்று அவர் தனது மண் கலயத்தைக் கூட சுத்தமாக வைத்திருப்பார். தீபாவளி ஒரு தூய்மை இயக்கமும் கூட. ஆனால் வீட்டில் மட்டும் தூய்மை என்பதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்த சுற்றுப்புறத்திலும் தூய்மை, வட்டாரம் முழுவதிலும் தூய்மை, கிராமம் முழுவதிலும் தூய்மை என நாம் நமது இந்த இயல்பையும், பாரம்பர்யத்தையும் விசாலப்படுத்த வேண்டும், விஸ்தரிக்க வேண்டும். தீபாவளி நன்னாள் என்பது இப்போது பாரத நாட்டு எல்லைகளோடு நின்று விடவில்லை. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தீபாவளிப் பண்டிகையை நினைவில் கொள்கிறார்கள், கொண்டாடி மகிழ்கிறார்கள். உலகின் பல அரசுகளுமே, அங்கேயிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். கிழக்கத்திய நாடாகட்டும், மேற்கின் முன்னேறிய நாடாகட்டும் அல்லது வளர்ந்து வரும் நாடாகட்டும், ஆப்பிரிக்காவாகட்டும், அயர்லாந்தாகட்டும், அனைத்து நாடுகளிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் கண்ணைப் பறிக்கின்றன. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும், அமெரிக்க தபால் துறை இந்த முறை தீபாவளியையொட்டி தபால் தலை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கனடாவின் பிரதமர் தீபாவளியையொட்டி தீபம் ஏற்றும் தனது படத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் லண்டனில் தீபாவளியை முன்னிட்டு, அனைத்து சமுதாயங்களையும் இணைக்கும் வகையில் ஓர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், அதில் தானே கலந்தும் கொண்டார்; பெரும் கொண்டாட்டங்களோடு தீபாவளியைக் கொண்டாடாத இங்கிலாந்து நகரமே இல்லை என்று கூட சொல்லலாம். சிங்கப்பூரின் பிரதமர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை உலகத்தாரோடு மிகுந்த பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார். சரி அந்தப் படம் என்ன தெரியுமா? சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் 16 பெண் உறுப்பினர்கள் பாரத நாட்டுப் புடவை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தின் வாயிலில் நிற்கும் படம் தான் அது, இந்தப் படம் அதிகம் பரவிய படமானது. இவை அனைத்தும் தீபாவளியை முன்னிட்டு செய்யப்பட்டவை. சிங்கப்பூரின் அனைத்து தெருக்களிலும், பகுதிகளிலும் இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் பாரத சமுதாயத்தினருக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, தீபாவளிப் பண்டிகையின் போது ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இருக்கும் அனைத்து சமுதாயத்தினரையும் இணைய அழைப்பு விடுத்தார். இப்போது தான் நியூசீலாந்து பிரதமர் வந்து விட்டுச் சென்றார், தனது நாட்டில் தீபாவளிப் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் விரைவாகச் செல்ல வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். நான் கூற விரும்பும் விஷயம் என்னவென்றால், தீபாவளி என்பது ஒளிகூட்டும் நன்னாள், உலக மக்கள் அனைவரையும் இருளிலிருந்து ஒளியை நோக்கி இட்டுச் செல்லும் ஊக்கத்தை அளிக்கும் பெரு நாள் என்பது தான்.
தீபாவளியின் போது நல்ல துணிமணிகள், நல்ல தின்பண்டங்களோடு சேர்த்து பட்டாசுகளையும் நாம் கொளுத்தி மகிழ்கிறோம். சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இதில் ஆனந்தம் உண்டாகிறது. ஆனால் சிறுவர்கள் சில வேளைகளில் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறார்கள். பல பட்டாசுகளை ஒன்று திரட்டி, பெரிய ஓசை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, விபத்தை வரவேற்கிறார்கள். அக்கம்பக்கத்தில் என்ன பொருட்கள் இருக்கின்றன, அவை தீப்பற்றிக் கொள்ளுமே என்ற எண்ணமே வருவதில்லை. தீபாவளி நாட்களின் போது விபத்துக்கள், தீவிபத்துக்கள், அகால மரணம் ஆகியன பற்றிய செய்திகள் கவலையளிப்பதாக இருக்கின்றன. வேறு ஒரு கஷ்டமும் இருக்கிறது – தீபாவளியை ஒட்டி மருத்துவர்களும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் குடும்பங்களோடு தீபாவளி நன்னாளைக் கொண்டாடச் சென்று விடுகிறார்கள் என்னும் போது ஒரு சங்கடத்தோடு மேலும் ஒரு சங்கடம் இணைந்து கொள்கிறது. குறிப்பாகத் தாய் தந்தையரிடமும், காப்பாளர்களிடமும் நான் விடுக்கும் குறிப்பான வேண்டுகோள் என்னவென்றால், குழந்தைகள் பட்டாசுகள் கொளுத்தும் போது, அவர்களோடு பெரியோர்களும் இருக்க வேண்டும் என்பது தான். எந்தத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, அசம்பாவிதம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் தீபாவளிப் பண்டிகை அதிக நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் விஷயம் அல்ல; கோவர்த்தம் பூஜை, பாய் தூஜ், லாப் பஞ்சமி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், இது கார்த்திகை பௌர்ணமியின் ஒளிமயமான பண்டிகை வரை நீண்டு, ஒரு வகையில் இது நீண்ட நெடிய காலகட்டமாக இருக்கிறது. இவற்றோடு சேர்த்து நாம் தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாடி மகிழ்கிறோம், சட் பூஜைக்கான தயாரிப்பு முஸ்தீபுகளிலும் ஈடுபடுகிறோம். பாரதத்தின் கிழக்குப் பகுதிகளில் சத்-பூஜை பண்டிகை, ஒரு மிகப் பெரிய பண்டிகை. ஒரு வகையில் இது மிகப் பெரிய பண்டிகையாகத் திகழ்கிறது, 4 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது, ஆனால் இதற்கென ஒரு சிறப்பம்சம் இருக்கிறது – இது சமுதாயத்துக்கு ஒரு பெரிய ஆழமான செய்தியை அளிக்கிறது. சூரிய பகவான் நமக்கு அனைத்தையும் அளிப்பவர், அவரிடமிருந்து தான் நாம் அனைத்தையும் அடைகிறோம். நேரடியாகவும் சரி, மறைமுகமாகவும் சரி, சூரிய பகவான் நமக்களிப்பவற்றைக் கணக்குப் பார்த்தல் என்பது கடினம். சத்-பூஜை சூரியனை உபாசிக்கும் நன்னாள். ஆனால் சூர்யோதயத்தை நாம் வணங்குவது என்பது தானே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த சத்-பூஜையின் போது சூரிய அஸ்தமனம் பூஜிக்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய சமுதாய செய்தி அடங்கியிருக்கிறது.
நான் தீபாவளி பற்றிச் சொன்னாலும், சத்-பூஜை பற்றிப் பேசினாலும், இது உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வேளை; மேலும், சிறப்பாக நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கவும் இது நல்லதொரு வாய்ப்பு. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஒரு வடிவம் எடுத்து வருகின்றன; நமது நிம்மதியான வாழ்வுக்காக நமது இராணுவப் படைவீரர்கள் தங்களது அனைத்தையும் பணயம் வைத்துப் பணியாற்றுகிறார்கள். இராணுவ வீரர்களின், பாதுகாப்புப் படைவீரர்களின் இந்தத் தியாகம், தவம், உழைப்பு ஆகியன உணர்வுபூர்வமாக எனது மனதில் வியாபித்திருக்கிறது. இந்த உணர்வுகளின் உலகிலிருந்து ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – இந்த தீபாவளியை பாதுகாப்புப் படையினருக்கு நாம் அர்ப்பணிப்போம். #Sandesh2Soldiers, அதாவது படைவீரர்களுக்கு செய்தி என்ற ஒரு இயக்கத்தில் பங்கெடுக்க நான் நாட்டுமக்களிடம் அழைப்பு விடுத்தேன். நாட்டின் படைவீரர்கள் மீது அளப்பரிய நேசமும், படை மீது பெருமிதமும், பாதுகாப்பு படையினர் குறித்து பெருமையும் இல்லாத குடிமகன் யாரும் இல்லை என்பதை நான் தலை வணங்கித் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வெளிப்பாடு எந்த அளவுக்கு அமைந்திருக்கிறது என்றால், இது ஒவ்வொரு நாட்டுமக்களுக்கும் பலம் அளிப்பதாக இருக்கிறது. அவர்களின் நெஞ்சுரத்தையும் நம்பிக்கையையும் மேலும் வளப்படுத்தும் விதமாக உங்களின் ஒரு தகவல் பலம் சேர்ப்பதாக வெளிப்பட்டிருக்கிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும், மாணவர்களாகட்டும், கிராமங்களாகட்டும், ஏழைகளாகட்டும், வியாபாரிகளாகட்டும், கடைக்காரர்களாகட்டும், தலைவர்களாகட்டும், விளையாட்டு வீரர்களாகட்டும், திரைப்படத் துறையினராகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், நாட்டின் படைவீரர்களுக்காக விளக்கேற்றாத துறையினரோ, அவர்களுக்கு செய்தி அனுப்பாதவர்களோ யாரும் இல்லை என்று சொல்லலாம். ஊடகத்தினரும் இந்த தீப உத்ஸவத்தை படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மாற்றி இருக்கிறார்கள். எல்லையோரப் பாதுகாப்புப் படையினராகட்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையாகட்டும், இந்திய திபத்திய போலீசாகட்டும், அசாம் ரைஃபிள்ஸ் படையாகட்டும், தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை என அனைத்து படைவீரர்களையும் குறிப்பிட்டு நான் கூறுகிறேன். நமது படைவீரர்களான இவர்கள் என்ன மாதிரியான கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கிறார்கள் தெரியுமா? – நாம் தீபாவளியைக் கொண்டாடும் வேளையில் ஒருவர் பாலைவனத்தில் இருக்கிறார், ஒருவர் இமயத்தின் சிகரத்தில் இருக்கிறார், ஒருவர் தொழிற்சாலையைப் பாதுகாக்கிறார், ஒருவர் விமானநிலையத்தில் காவல் புரிகிறார். என்னென்ன வகையில் தங்கள் கடமைகளை ஆற்றுகிறார்கள் பாருங்கள்! நாம் கொண்டாட்ட மனோநிலையில் இருக்கும் போது, அந்த வேளையில் அவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தோமேயானால், அந்த நினைவுகளுக்கு கூட ஒரு புதிய சக்தி பிறந்து விடுகிறது. ஒரு செய்தி கூட பன்மடங்கு சக்தி அளிக்கிறது, நாடு இதை செய்து காட்டியும் இருக்கிறது. நான் உண்மையிலேயே நாட்டுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கைவசம் கலை இருக்கும் பலர், அந்தக் கலை வாயிலாகத் தெரிவித்தார்கள். சிலர் சித்திரங்களை வரைந்தார்கள், கோலம் போட்டார்கள், கார்ட்டூன்கள் உருவாக்கினார்கள். கலைமகளின் அருள் இருப்பவர்கள், கவிதைகளாக வடித்தார்கள். பலர் நல்ல நல்ல கோஷங்களை உருவாக்கினார்கள். எனது narendra modi app அல்லது எனது my govஇல் பொங்கிவரும் உணர்வுக் கடலைக் காணும் போது ………. சொற்கள் வாயிலாக, பேனா மூலமாக, தூரிகை வாயிலாக, நிறங்கள் வடிவில் எண்ணற்ற வகையிலான உணர்வுகள்…… இவை எல்லாம் என் நாட்டின் படைவீரர்களுக்கு எத்தனை பெருமிதம் அளிக்கும் கணம் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. #Sandesh2soldiers என்ற hashtagஇல் இத்தனை விஷயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நான் திரு அஸ்வினி குமார் சவுஹான் அவர்கள் அனுப்பியிருக்கும் கவிதையைப் படிக்க விரும்புகிறேன்.
அஸ்வினி அவர்கள் எழுதுகிறார் –
” நான் பண்டிகை கொண்டாடுகிறேன், மகிழ்கிறேன், புன்னகைக்கிறேன்,
நான் பண்டிகை கொண்டாடுகிறேன், மகிழ்கிறேன், புன்னகைக்கிறேன்,
இவையெல்லாம் நீ இருப்பதால் தான் இருக்கின்றன, இன்று கூறுகிறேன்.
சுதந்திரமாய் நான் இருக்க நீ தானே காரணம், மகிழ்வுகளின் வெகுமதி நீ,
நிம்மதியாய் நான் உறங்க,
நிம்மதியாய் நான் உறங்க, சிகரங்களில் நீ கண் விழித்தாய்,
வானும் மலையும், பூங்காவனமும் உன் முன் தலைவணங்கி நிற்கும்.
நாட்டின் குடிமகன் நானும் உன்னை, வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்.
நாட்டின் குடிமகன் நானும் உன்னை, வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்.”
எனதருமை நாட்டுமக்களே, பிறந்த இடத்திலும் படைவீரர்கள் நிறைந்திருக்கிறார்கள், புகுந்த வீட்டிலும் படைவீரர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்ற நிலையில் ஒரு சகோதரி ஷிவானி எனக்கு தொலைபேசி வாயிலாகத் தகவல் அனுப்பி இருக்கிறார். படைவீரர் குடும்பத்தவர் என்ன கூற விரும்புகிறார்கள் என்பதைக் கேட்போம், வாருங்கள்.
“வணக்கம் பிரதமர் அவர்களே, நான் ஷிவானி மோஹன் பேசுகிறேன். இந்த தீபாவளியன்று நீங்கள் தொடக்கி இருக்கும் #Sandesh2Soldiers இயக்கம் மூலமாக நமது படையின் சகோதரர்களுக்கு பெரும் ஊக்கம் கிடைக்கிறது. எனது கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார், எனது தந்தை, மாமனார் என இருவரும் இராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள். எங்களது குடும்பம் முழுக்க படைவீரர்கள் நிறைந்தது, எல்லைப்புறத்தில் பல அதிகாரிகளுக்கு இத்தனை நல்ல செய்தி கிடைத்து வருகிறது, இராணுவத்தினருக்கு அதிக ஊக்கம் கிடைத்திருக்கிறது. இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோருடன் அவர்களின் குடும்பங்கள், அவர்களின் மனைவிமார்களும் நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். ஒரு வகையில் ஒட்டுமொத்த இராணுவ சமுதாயத்துக்கே கூட ஒரு மிக நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. நான் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து கூற விரும்புகிறேன், நன்றி.”
எனக்கு பிரியமான நாட்டுமக்களே, இராணுவ வீரன் எல்லையில் மட்டுமல்ல, வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்படுகிறார். இயற்கைச் சீற்றமாகட்டும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகட்டும், எதிரிகளோடு சமர் புரிவதாகட்டும், சில வேளைகளில் தவறான பாதையில் பயணிக்கும் இளைஞர்களை மீண்டும் நல்வழியில் கொண்டு வருவதாகட்டும், நமது படைவீரர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பதிலும் தேசிய உணர்வினால் உந்தப்பட்டு பணியாற்றுகிறார்கள். ஒரு நிகழ்வு எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது – இதை நான் உங்கள் முன்பாக வைக்க விரும்புகிறேன். வெற்றியின் அடித்தளத்தில் எப்படிப்பட்ட விஷயங்கள் ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கிறது என்பதனால் இதைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஹிமாச்சல பிரதேசம் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பது, என்ற பழக்கத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தொடக்கத்தில் சிக்கிம் மாநிலம் இந்த நிலையை எட்டியது, இப்போது இமாச்சலமும் இந்த நிலையை அடைந்திருக்கிறது, நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கேரளமும் இந்த நிலையை எட்டவிருக்கிறது. ஆனால் ஏன் இப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது, காரணத்தை நான் கூறுகிறேன். இந்திய திபத்திய எல்லைப் படையில் ஒரு படைவீரரான திரு. விகாஸ் தாக்கூர் என்ற ஒருவர் இருக்கிறார். – அவர் இமாச்சலத்தின் சிர்மவுர் மாவட்டத்தின் சிறிய கிராமம் பதானாவைச் சேர்ந்தவர். நமது இந்த இந்திய திபத்திய எல்லையோரப் படையைச் சேர்ந்த படைவீரர் விடுமுறைகளுக்கு தனது கிராமம் சென்றார். கிராமத்தில் பஞ்சாயத்து கூடும் வேளையில் அவர் அங்கு சென்றார். கிராமப் பஞ்சாயத்தில் கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பணத்தட்டுப்பாடு காரணமாக சில குடும்பங்களால் கழிப்பறைகளைக் கட்ட முடியவில்லை என்பது தெரிய வந்தது. இல்லை இல்லை இந்தக் களங்கத்தை அகற்றியாக வேண்டும் என்ற எண்ணம் தேசபக்தி நிறைந்த நமது இந்திய திபத்திய எல்லையோரப் படையைச் சேர்ந்த வீரனான விகாஸ் தாக்கூர் அவர்களுக்குப் பட்டது. பாருங்கள் இவரது தேசபக்தியை, எதிரிகள் மீது குண்டுகளைப் பொழிந்து மட்டும் அவர் நாட்டுப்பணியாற்றுகிறார் என்பது இல்லை! அவர் உடனடியாக தனது காசோலைப் புத்தகத்தை எடுத்து, 57000 ரூபாய்க்கான காசோலையை பஞ்சாயத்துத் தலைவரிடம் அளித்து, எந்த 57 வீடுகளில் கழிப்பறைகள் இல்லையோ, என் தரப்பிலிருந்து அந்த ஓவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் என அளித்து விடுங்கள், 57 கழிப்பறைகளைக் கட்டுங்கள், பதானா கிராமத்தை திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வையுங்கள் என்றார். விகாஸ் தாக்கூர் அவர்கள் செய்து காட்டியிருக்கிறார். 57 குடும்பங்களுக்குத் தலா 1000 ரூபாயை தானே அளித்து, தூய்மை இயக்கத்துக்கு ஒரு புதிய சக்தியை ஊட்டியிருக்கிறார். இவை போன்றவற்றால் தான் ஹிமாசல பிரதேசம் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அடைந்திருக்கிறது. இதைப் போலவே கேரளத்திலும் நடந்திருக்கிறது, இதற்கு நான் இளைஞர்களுக்கு என் நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன். கேரளத்தின் தொலைவான, பாதைகளே இல்லாத காடுகளில், நாள் முழுக்க நடையாய் நடந்து தான் கிராமத்தை அடைய வேண்டி இருக்கும் இடங்களில் ஒன்று, பழங்குடி இனத்தவர் நிறைந்த இடமாலாகுடி, இங்கே சென்று சேர்வதே கடினமான ஒன்று. அங்கே யாரும் செல்வதே இல்லை. அதன் அருகில் நகர்ப்புறத்தில் இருக்கும் பொறியியல் மாணவர்களின் கவனத்துக்கு இந்த கிராமத்தில் கழிப்பறைகளே இல்லை என்ற விஷயம் வந்தது. உடனே தேசிய மாணவர் படையின் கேடட்டுகள், நாட்டு நலப்பணித் திட்டத்தவர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைவருமாக இணைந்து கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். கழிப்பறைகள் கட்டத் தேவையான பொருட்களான செங்கல், சிமெண்ட் என அனைத்துப் பொருட்களையும் இந்த மாணவர்கள் நாள் முழுக்க தங்கள் தோள்களில் சுமந்து நடந்து, காட்டுக்குச் சென்றார்கள். அவர்களே தங்கள் உழைப்பின் மூலமாக கிராமத்தில் கழிப்பறைகளைக் கட்டினார்கள், இந்த இளைஞர்கள் தொலைவான காட்டில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அளித்தார்கள். இவை போன்றவற்றால் தான் கேரளம் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கப்படாத மாநிலமாக ஆகவிருக்கிறது. குஜராத் மாநிலமும் அனைத்து நகராட்சிகள்-மாநகராட்சிகளில், 150க்கும் மேற்பட்டவைகளை திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவை என்று அறிவித்திருக்கிறது. 10 மாவட்டங்களை இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டவையாக அறிவித்திருக்கிறது. அரியானாவிலிருந்தும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைத்திருக்கிறது, அரியானா நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தனது பொன்விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அவர்களும் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை என்ற நிலையை அடைய வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். 7 மாவட்டங்களில் இந்தப் பணி நிறைவடைந்து விட்டது. அனைத்து மாநிலங்களிலும் மிக துரிதமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. நான் சிலவற்றையே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். நாட்டிலிருந்து அசுத்தம் என்ற இருளை அகற்றும் பணியில் பங்களிப்பு நல்கிய இந்த அனைத்து மாநிலங்களின் குடிமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நேசம் நிறைந்த நாட்டுமக்களே, அரசில் ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. முதல் திட்டத்தைத் தொடர்ந்து, அதனை ஒட்டி இரண்டாவது திட்டம் வரும் போது, முதல் திட்டம் துறக்கப்பட வேண்டும். ஆனால் பொதுவாக இந்த விஷயங்களின் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை. பழைய திட்டமும் நடைபெற்று வரும், புதிய திட்டமும் செயல்படுத்தப்பட்டு வரும், அடுத்து வரும் திட்டமும் எதிர்பார்க்கப்படும், இப்படியே நடந்து கொண்டு வரும். நமது நாட்டில் எந்த வீடுகளில் எரிவாயு அடுப்பு இருக்கிறதோ, எந்த வீடுகளில் மின்சாரம் இருக்கிறதோ, அவர்களுக்கு மண்ணெண்ணெய் தேவை இல்லை. ஆனால் அரசில் யார் கவலைப்படுகிறார்கள், மண்ணெண்ணெயும் அளிக்கப்படுகிறது, எரிவாயும் அளிக்கப்படுகிறது, மின்சாரமும் கிடைத்து வருகிறது, இந்த நிலையில் இடைத்தரகரக்ளுக்கு பணம் பண்ண வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டதற்காக நான் அரியானா மாநிலத்துக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மண்ணெண்ணையிலிருந்து அரியானாவுக்கு விடுதலை அளிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். எந்தெந்த குடும்பங்களில் எரிவாயு அடுப்பு இருக்கிறதோ, எந்தெந்த குடும்பங்களில் மின்சாரம் இருக்கிறதோ, ஆதார் எண் மூலமாக சரிபார்த்து, 7 அல்லது 8 மாவட்டங்களை மண்ணெண்ணையிலிருந்து விடுதலை அடைந்தவைகளாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கும் முனைப்பைப் பார்க்கும் போது, வெகு விரைவிலேயே ஒட்டுமொத்த மாநிலமும் மண்ணெண்ணெயிலிருந்து விடுதலை அடைந்த மாநிலமாகி விடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படிப்பட்ட ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் பாருங்கள், கள்ள மார்க்கெட் விற்பனை தடுக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு நன்மை உண்டாகும், நமது அந்நியச் செலாவணி சேமிக்கப்படும், மக்களுக்கு வசதியும் அதிகரிக்கும். ஆம், இடைத் தரகர்களுக்கும், நாணயமற்றவர்களுக்கும் கஷ்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
எனது பாசம் நிறைந்த நாட்டுமக்களே, காந்தியடிகள் நம்மனைவருக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். நாடு எங்கே செல்ல வேண்டும், எப்படிப் பயணிக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கூற்றுத் தான் தரநிலையை நிர்ணயம் செய்கிறது. நீங்கள் எப்போது எந்தத் திட்டத்தை ஏற்படுத்தினாலும், முதலில் ஏழைகள், நலிவடைந்தவர்கள் ஆகியோரின் முகங்களை நினைவில் கொண்ட பின்னர், நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தால் அந்த ஏழைக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா என்று சிந்தித்து செயல்படுங்கள், இதனால் அவர்களுக்கு எந்தத் துயரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற தரநிலையை அடியொற்றி நீங்கள் முடிவெடுங்கள் என்று காந்தியடிகள் கூறுவார். நாட்டின் ஏழைகளின் ஆசைகள் அபிலாஷைகளின் மீது நாம் கவனத்தை செலுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவர்களுக்கு இடர்களிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும், இதற்காக நாம் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். நமது பழைய எண்ணப்பாடு எப்படிப்பட்டதாக இருந்தாலும், சமுதாயத்தை ஆண்-பெண் என்ற வேறுபாட்டிலிருந்து விடுதலை அடையச் செய்ய வேண்டும். இப்போது பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கும் கழிப்பறைகள் இருக்கின்றன, சிறுவர்களுக்கு எனவும் கழிப்பறைகள் இருக்கின்றன. நமது பெண் குழந்தைகள் வேறுபாடுகளற்ற பாரதம் என்ற நிலையை எட்ட இது ஒரு நல்ல தருணம்.
அரசு தரப்பில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, ஆனாலும் கூட பல லட்சக்கணக்கான பிள்ளைகள் தடுப்பூசி போடப்படுவதிலிருந்து விடுபட்டுப் போக நேர்கிறது, நோய்களுக்கு இலக்காகிறார்கள். மிஷன் இந்திரதனுஷ் என்ற தடுப்பூசி இயக்கம், தடுப்பூசி போடப்படுவதிலிருந்து விடுபட்டுப் போன பிள்ளைகளுக்காக நடத்தப்படுவது, இது பயங்கரமான நோய்களிலிருந்து விடுதலை பெறும் சக்தியை குழந்தைகளுக்கு அளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், ஆனால் கிராமத்தில் இருள் சூழ்ந்திருக்கிறது என்ற நிலை இனி தொடர முடியாது, கிராமத்தில் மின்சாரத்தைக் கொண்டு சேர்க்க ஒரு மிகப் பெரிய இயக்கம் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழைத் தாய், விறகடுப்பில் உணவு சமைத்து, 400 சிகரெட்டுக்கள் உமிழும் புகையைத் தன் உடலில் தாங்கும் போது அவளது உடல்நலம் எப்படி இருக்கும்! 5 கோடி குடும்பங்களுக்கு புகையிலிருந்து விடுதலை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
சிறிய வியாபாரி, சிறுதொழில் செய்வோர், காய்கறி விற்பவர், பால் விற்பனையாளர், முடிதிருத்தும் கடை நடத்துபவர் ஆகியோர் அடகுத் தொழில் புரிவோரிடம் வட்டிக்குக் கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள். முத்ரா திட்டம், stand up திட்டம், ஜன் தன் திட்டம், இவை வட்டிக்குக் கடன் கொடுப்போரிடமிருந்து விடுதலை பெறத் தொடங்கப்பட்டிருக்கும் வெற்றிகரமான இயக்கங்கள். ஆதார் மூலமாக வங்கிகளில் நேரடியாகவே பணத்தை செலுத்தல், உரிமைதாரர்களுக்கு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் கிடைத்தல். சாமான்யர்களின் வாழ்வில் தரகர்களிடமிருந்து விடுதலை பெற ஒரு நல்ல வாய்ப்பு. வெறும் மாற்றத்தையும், மேம்பாட்டையும் மட்டுமே ஏற்படுத்தும் இயக்கமாக இது நின்று விடாமல், பிரச்சனையிலிருந்து விடுதலை அளிக்கும் பாதையை செம்மையாக்க வழிவகை செய்யப்பட வேண்டும், அப்படி நடந்தும் வருகிறது.
என் நெஞ்சில் நிறைந்த நாட்டுமக்களே, நாளை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இந்த நாட்டின் மாமனிதர், பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு தனது வாழ்கையையே தாரக மந்திரமாக்கியளித்தவர், அப்படியே வாழ்ந்தும் காட்டியவரான சர்தார் வல்லப் பாய் படேல் அவர்கள் பிறந்த திருநாள். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, ஒரு புறம் ஒருமைப்பாட்டின், வாழும் மாமனிதரான சர்தார் அவர்களின் பிறந்த நாள் என்றால், மற்றொரு புறம் திருமதி காந்தி அவர்களின் நினைவு நாள். மாமனிதர்கள் பற்றிய நினைவுகளால் நம் நெஞ்சங்களை நாம் நிறைத்துக் கொள்கிறோம், அப்படி செய்யவும் வேண்டும். ஆனால் பஞ்சாபிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அதிலிருந்த வலி, என் மனதைத் தொட்டது –
”பிரதமர் அவர்களே, வணக்கம், சார், நான் பஞ்சாபிலிருந்து ஜஸ்தீப் பேசுகிறேன். சார், அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாள். சர்தார் படேல் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டை ஒன்றிணைக்கப் பாடுபட்டார், அவர் இந்த இலக்கில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அனைவரையும் ஒன்றுபடுத்தியிருக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டம் என்பதா, வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அன்றைய தினத்தில் தான் திருமதி இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் நாட்டில் எப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்தன என்பது நாமனைவருக்கும் நன்கு தெரியும். இப்படிப்பட்ட துர்பாக்கியமான நிகழ்வுகளை நாம் எப்படி தடுப்பது என்பது பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”.
என் உயிரினும் மேலான என் நாட்டுமக்களே, இந்த வலி ஒரு மனிதனுடையது மட்டுமல்ல. சாணக்கியனுக்குப் பிறகு, நாட்டை ஒருங்கிணைக்கும் பகீரதப் பணியை ஒரு சர்தார், சர்தார் வல்லப் பாய் படேல் செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவை ஒரு கொடியின் கீழ் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான முயற்சியை, இத்தனை பெரிய பகீரதப் பிரயத்தனத்தை செயல்படுத்திய அந்த மாமனிதருக்கு அனந்த கோடி வணக்கங்கள். சர்தார் படேல் அவர்கள் ஒருமைப்பாட்டுக்காக முயற்சிகளை மேற்கொண்டார், ஒருமைப்பாடு அவரது முதன்மை நோக்கமாக இருந்த காரணத்தால், பலரது கோபத்துக்கும் அவர் ஆளாக நேர்ந்தது என்றாலும், அவர் ஒருமைப்பாடு என்ற பாதை, இலக்கிலிருந்து சற்றும் தளரவே இல்லை; ஆனால் அதே சர்தாரின் பிறந்த நாளன்று, ஆயிரக்கணக்கான சர்தார்கள், ஆயிரக்கணக்கான சர்தார்களின் குடும்பங்கள், திருமதி இந்திரா காந்தி அவர்களின் படுகொலைக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். ஒருமைப்பாட்டுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த அந்த மாமனிதரின் பிறந்த நாளன்று, சர்தார்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடுமை வரலாற்றின் ஒரு பக்கமாக, நம்மனைவருக்கும் வலியைத் தந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த சங்கடங்களுக்கு இடையிலும் கூட, ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தான் நாட்டின் மிகப் பெரிய பலம். பல மொழிகள், பல சாதிகள், பல ஆடை-அணிகள், பல உணவு முறைகள் என பலவகைப்பட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதத்தின் பலம், பாரதத்தின் சிறப்பு. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு கடமை இருக்கிறது. நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒற்றுமைக்கான வாய்ப்பைத் தேடுவதிலும், ஒற்றுமை சித்தாந்தத்தை முன்னிறுத்துவதிலும் ஒவ்வொரு அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. பிரிவினைவாத எண்ணங்கள், பிளவு ஏற்படுத்தும் இயல்புகளிலிருந்து நாமும் விலகியிருப்போம், நாட்டையும் காப்போம். சர்தார் அவர்கள் நமக்கு ஒன்றிணைந்த பாரதம் ஒன்றினை அளித்திருக்கிறார், அதை உன்னதமான பாரதமாக ஆக்குவதில் நம்மனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒருமைப்பாடு என்ற மூல மந்திரம் தான் உன்னதமான பாரதம் என்ற பலமான அஸ்திவாரத்தை ஏற்படுத்துகிறது.
சர்தார் அவர்களின் வாழ்க்கைப் பயணம் விவசாயிகள் போராட்டத்தில் தான் துவங்கியது. அவர் ஒரு விவசாயியின் புதல்வர். விடுதலை வேள்வியை, விவசாயிகள் வரை கொண்டு செல்ல சர்தார் அவர்கள் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தை கிராமத்தில் வலுவடையச் செய்ததில் சர்தார் அவர்களின் பங்குபணி மகத்தானது. அவரது அமைப்புத் திறன், ஆற்றல் ஆகியவற்றின் விளைவு தான் இது. ஆனால் சர்தார் அவர்கள் வெறும் போராட்டங்களோடு நின்று விடவில்லை, அவர் கட்டமைப்பை உருவாக்குவதிலும் சமர்த்தராக விளங்கினார். இன்று நாம் அமுல் என்ற பெயரைக் கேள்விப்படுகிறோம். அமுலின் ஒவ்வொரு பொருளும் இந்தியாவிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி அறிமுகமான ஒன்று. ஆனால் சர்தார் அவர்களின் தொலைநோக்குப் பார்வை காரணமாகவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது என்பது வெகு சிலருக்கே தெரிய வாய்ப்பிருக்கிறது. கேடா மாவட்டம் அந்த நாட்களில் கேரா என்று அழைக்கப்பட்டது, 1942இல் அவர் இந்தக் கருத்துக்கு வலு சேர்த்தார், அதன் உருவமைப்பாக இன்று மிளிரும் அமுல் நிறுவனம், விவசாயிகளின் நலன்களுக்காக எப்படி சர்தார் அவர்கள் செயல்பட்டார் என்பதற்கான வாழும் ஒரு எடுத்துக்காட்டாக நம் முன்னே இருக்கிறது. நான் சர்தார் அவர்களுக்கு என் மரியாதையுடன் கூடிய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமைப்பாடு நாளான அக்டோபர் 31ஆம் தேதியன்று நாம் எங்கிருந்தாலும், சர்தார் அவர்களை நினைவில் கொள்வோம், ஒற்றுமைக்கான உறுதி பூணுவோம்.
என் உள்ளம்நிறை நாட்டு மக்களே, இந்த தீபாவளித் தொடரில் கார்த்திகை பவுர்ணமி என்பது ஒளி உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. குரு நானக் தேவ் அவர்களின் அறவுரைகள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்குமானது, இது இந்தியாவுக்கு மட்டும் உரைக்கப்பட்டதல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் சொந்தமானது, இது இன்றும் வழிகாட்டியாகத் துலங்குகிறது. சேவை, வாய்மை, சர்பத் தா பலா, அதாவது அனைவருக்குமான நன்மை – இவை தாம் குரு நானக் தேவ் அவர்களின் செய்தி. அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவையே மூல மந்திரங்களாகும். வேற்றுமை, மூடநம்பிக்கை, தீய பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து சமுதாயத்துக்கு விடுதலை அளிக்கும் நோக்கம் தான் குரு நானக் தேவ் அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் அடங்கி இருந்தது. நம்மிடையே தீண்டாமை, சாதிக் கொடுமைகள், உயர்ந்தோர்-தாழ்ந்தோர் ஆகிய சீரழிவுகள் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டத்தில், குரு நானக் தேவ் அவர்கள், Bhai Lalo, பாய் லாலோ ஆகியோரைத் தனது சகாக்களாகத் தேர்ந்தெடுத்தார். நாமும் கூட, குரு நானக் தேவ் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் ஞான மார்க்கத்தில் பயணிப்போம். இது பேதங்களை அகற்ற கருத்தூக்கம் அளிக்கிறது, பேதபாவங்களுக்கு எதிராக போராட ஆணை பிறப்பிக்கிறது; அனைவரையும் அரவணைத்து, அனைவருக்கும் முன்னேற்றம் ஏற்படுத்துவது என்ற இலக்கை இந்த மந்திரத்தின் துணை கொண்டு தான் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; இதற்கெல்லாம் குரு நானக் தேவை விடச் சிறந்த வழிகாட்டி வேறு யாராக இருக்க முடியும். நான் குரு நானக் தேவ் அவர்களுக்கும், ஒளி நிறைந்த உற்சவத்தை ஒட்டி, நெஞ்சு நிறைந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
என் உயிரில் கலந்த என் நாட்டுமக்களே, மீண்டும் ஒரு முறை, நாட்டின் படைவீரர்களின் பெயரால் கொண்டாடப்படும் இந்த தீபாவளியன்று, உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை உரிமையாக்குகிறேன். உங்களின் கனவுகள், உங்களின் உறுதிப்பாடுகள், அனைத்து விதங்களிலும் வெற்றி காணட்டும். உங்கள் வாழ்வு அமைதியாக அமைய, நான் என் மனமார்ந்த வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். மிக்க நன்றி!!
எனதருமை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். கடந்த நாட்களில் ஜம்மு-காஷ்மீரின் உரீ பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, நமது நாட்டின் 18 இராணுவ வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். உயிர் துறந்த, துணிவுமிக்க இராணுவ வீரர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன். இந்த கோழைத்தனமான நிகழ்வு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கிறது. நாட்டு மக்களின் நாடிநரம்புகளில் சோகம் பெருக்கெடுக்கிறது, கோபம் கொப்பளிக்கிறது; இந்த இழப்பு தங்கள் பிள்ளைகளை இழந்த, சகோதரர்களை இழந்த, கணவனை இழந்த அந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல. இந்த இழப்பை நாடு முழுமையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாட்டு மக்களே, அன்று உங்கள் முன்பாக நான் கூறியதையே இன்றும் கூறுகிறேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
எனது பிரியமான நாட்டுமக்களே, நமது இராணுவம் மீது நமக்கு அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் தங்கள் பராக்கிரமத்தால் ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிப்பார்கள், நாட்டின் 125 கோடி மக்களும் நிம்மதியாக, அமைதியாக வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும் முறையில் தங்கள் உச்சகட்ட வீரத்தை வெளிப்படுத்துவார்கள். நமது இராணுவம் குறித்து நாம் அதிக பெருமிதம் கொள்கிறோம். குடிமக்களாகிய நமக்கு, அரசியல் தலைவர்களுக்கு என நமது கருத்துக்களை வெளிப்படுத்த பல வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, நாம் உரைக்கவும் செய்கிறோம். ஆனால் இராணுவம் சொற்களால் உரைப்பது இல்லை; இராணுவம் தனது வீரத்தை வெளிப்படுத்துகிறது.
இன்று சிறப்பாக, காஷ்மீரத்தின் குடிமக்களுடன் நான் பேச விரும்புகிறேன். கஷ்மீரத்தின் குடிமக்கள் நாட்டின் எதிரி சக்திகளை நன்கு புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், அப்படிப்பட்ட நாசகார சக்திகளை தங்களிடமிருந்து விலக்கி, அமைதிப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பள்ளிகளும் கல்லூரிகளும் விரைவாக முழுமையான வகையில் செயல்படத் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு தாய் தந்தையரின் விருப்பமாக இருக்கிறது. விவசாயிகளும் தங்களின் விளைபொருட்களான பழங்கள் போன்றவை விரைவாக பாரதத்தின் சந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்று விழைகிறார்கள், வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த சில நாட்களாக வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற ஆரம்பித்திருக்கிறது. அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவையே நமது பிரச்சனைகளின் தீர்வாக இருக்க முடியும், நமது முன்னேற்றப் பாதையாக இருக்க முடியும், நமது வளர்ச்சியின் பாதையாக இருக்க முடியும் என்பதை நாம் நன்கறிவோம். நமது வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாம் வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்டிப் பிடித்தாக வேண்டும். நாம் அமைதியான முறையில் கலந்தாலோசித்து ஒவ்வொரு பிரச்சனைக்கான தீர்வையும் ஏற்படுத்திப் பாதை வகுத்தோம் என்றால், காஷ்மீரத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு உன்னதமான வழியை நம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. காஷ்மீர் குடிமக்களின் பாதுகாப்பு நிர்வாகத்தின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காக்க நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மிடம் இருக்கும் திறன், சக்தி, சட்டம், விதிகள் அவற்றின் பயன்பாடு எல்லாம் சட்டம் ஒழுங்குக்காக இருக்கின்றன, அவை காஷ்மீரத்தின் சாமான்ய மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவே இருக்கின்றன, அவற்றை நாம் நல்ல முறையில் பின்பற்ற வேண்டும் என்று நாட்டின் பாதுகாப்புப் படையினரிடமும் கேட்டுக் கொள்கிறேன். சில வேளைகளில் நம் கருத்துக்களிலிருந்து வேறுபட்டு சிந்திப்பவர்கள் புதிய கருத்துக்களை முன்வைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் நான் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் கிடைக்கின்றன. இது மக்களாட்சி முறையின் சக்திக்கு வலு கூட்டுகிறது. 11ஆம் வகுப்பு படிக்கும் ஷர்ஷ்வர்த்தன் என்ற இளைஞர் என் கவனத்துக்கு வித்தியாசமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.
”உரி தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு என் மனதில் கவலை அதிகம் சூழ்ந்தது, ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் பேரவா எழுந்தது, ஆனால் செய்வதற்கான வழியேதும் எனக்குப் புலப்படவில்லை. இருந்தாலும், என்னைப் போன்ற ஒரு எளிமையான மாணவனால் பெரியதாக என்ன செய்து விட முடியும்- அப்போது தான் நாட்டு நலனுக்காக என் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. தினமும் நான் 3 மணி நேரம் கூடுதலாகப் படிப்பேன், நாட்டுக்காக உருப்படியாக ஏதாவது செய்யக் கூடிய ஒரு குடிமகனாக ஆகும் உறுதி பூண்டேன்”
என்று தெரிவித்திருக்கிறார்.
ஹர்ஷ்வர்த்தன், ஆவேசம் நிறைந்த இந்தச் சூழலில், இத்தனை சிறிய வயதில், நீங்கள் ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்திருக்கிறீர்கள், இதுவே என் மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. ஆனால் ஹர்ஷ்வர்த்தன், நாட்டு மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் கோபத்துக்கு மிகப் பெரிய மதிப்பு ஒன்று இருக்கிறது. நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடு இது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதிப்பாடு நிரம்பியது இந்த தார்மீகமான கோபம். ஆம், நீங்கள் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை முன்வைத்தீர்கள். ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நாட்டுக்குத் தலைமையேற்றிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும், நாடு முழுவதிலும் இப்படிப்பட்ட உணர்வு தான் மேலோங்கிக் காணப்பட்டது. ஆவேசம் இருந்தது, தேசபக்திக் கனல் இருந்தது. ஒவ்வொரு குடிமகன் மனதிலும் ஏதாவது ஒன்றை செய்தேயாக வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது. அப்போது லால் பஹாதுர் சாஸ்த்ரி அவர்கள் நாட்டின் இந்த உணர்வுகளை மிக உன்னதமான முறையில் வருடிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற மந்திரச் சொற்களை அளித்து, நாட்டின் சாமான்ய மக்கள் நாட்டுப்பணியின் பொருட்டு எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஊக்கத்தை அளித்தார்.
குண்டு வெடிப்புக்களின் ஓசைக்கிடையே தேசபக்தியை வெளிப்படுத்தும் மேலும் ஒரு முயற்சியை, ஒவ்வொரு குடிமகனும் புரிய வேண்டும்; இதைத் தான் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் முன்வைத்தார். காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்த வேளையில், சுதந்திரப் பேரியக்கம் தீவிரமாக கனன்று கொண்டிருந்த காலத்தில், அந்த இயக்கத்துக்கு வேறு ஒரு தளம் தேவைப்பட்ட போது, சமூகத்தில் ஆக்கபூர்வமான பணிகளை நோக்கிய ஊக்கத்தை அளிக்கும் வகையில் வெற்றிகரமாக அவர் செயல்பட்டார். நாமும் நமது இராணுவமும் நமது கடமைகளை ஆற்றுவோம், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது கடமைகளை ஆற்றட்டும், நமது நாட்டு மக்களும், ஒவ்வொரு குடிமகனும் இந்த தேசபக்தி உணர்வோடு நம்மாலான ஏதோ ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்போம், அப்போது நாடு புதிய சிகரங்களைக் கண்டிப்பாக எட்டிப் பிடிக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கச் சென்ற நமது விளையாட்டு வீரர்கள் வரலாறு படைத்திருப்பது மனித ஊக்கத்தின் வெற்றி என்று கார்த்திக் அவர்கள் நரேந்திர மோடி செயலியில் தெரிவித்திருக்கிறார். நமது விளையாட்டு வீரர்கள் அருமையாக செயல் புரிந்திருப்பதாக வருண் விஸ்வநாதன் அவர்கள் நரேந்திர மோடி செயலியில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இதை நீங்கள் உங்கள் மனதின் குரலில் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்கள் இருவருக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரா ஒலிம்பிக்கில் பங்கெடுத்த விளையாட்டு வீரர்களிடம் ஒருவிதமான உணர்வு பூர்வமான இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. விளையாட்டுக்களைத் தாண்டி, இந்த para olympic போட்டிகளும் நமது விளையாட்டு வீரர்களின் சாதனைகளும், மனிதத்துவக் கண்ணோட்டத்தை, மாற்றுத் திறனாளிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்திருக்கிறது. வெற்றியாளர்களான நமது சகோதரி தீபா மலிக் அவர்கள் பதக்கம் வென்ற பிறகு கூறிய சொற்களை நான் என் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன். ”இந்தப் பதக்கத்தை வென்றதன் மூலம் நான் என் உடல் குறைபாட்டை வெற்றி கொண்டேன்” என்று அவர் கூறினார். இந்த வரியில் பெரும் சக்தி பொதிந்திருக்கிறது. இந்த முறை பாரா ஒலிம்பிக்கில் நமது நாட்டின் 3 பெண்கள் உட்பட, 19 விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். மற்ற விளையாட்டுக்களோடு ஒப்பிடும் போது, மாற்றுத் திறனாளிகள் விளையாடும் போது, அவர்களின் உடல்திறன், விளையாட்டில் அவர்களின் திறன் ஆகியவற்றை விடப் பெரிய விஷயம் - மன உறுதியும், தீர்மானமும்.
நமது விளையாட்டு வீரர்கள் இது வரை சாதித்திராத அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு 4 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் இவற்றில் அடங்கும். தங்கம் வென்ற சகோதரர் தேவேந்த்ர ஜஜாரியா ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாகப் பெற்றிருக்கிறார். 12 ஆண்டுகளில் வயது அதிகரிக்கிறது. ஒரு முறை தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஊக்கம் குறைந்து விடும், ஆனால் உடலின் நிலை, வயது அதிகரிப்பு ஆகியன மன உறுதிப்பாட்டை எந்த வகையிலும் குலைத்து விடவில்லை என்பதை தேவேந்த்ர அவர்கள் நிரூபித்திருக்கிறார், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்திருக்கிறார். அவர் பிறவியிலேயே மாற்றுத் திறனாளி அல்ல. மின்சாரம் பாய்ந்ததால் அவர் ஒரு கையை இழக்க நேர்ந்தது. சிந்தித்துப் பாருங்கள், 23 வயதில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மனிதர், மீண்டும் தனது 35ஆவது வயதில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெல்வது என்றால், அவர் எந்த அளவுக்கு பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும்!!
மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். மாரியப்பன் அவர்கள் வெறும் ஐந்தே வயதில் தனது வலது காலை இழந்திருக்கிறார். ஏழ்மை கூட அவரது மனவுறுதிக்கு தடை ஏற்படுத்த முடியவில்லை. அவர் ஒன்றும் பெரிய நகரத்தில் வசிப்பவரும் அல்ல, மத்தியத்தட்டுக் குடும்பத்தையோ, செல்வந்தர்கள் குடும்பத்தையோ சேர்ந்தவர் அல்ல. 21 வயதில் கஷ்டங்கள் நிறைந்த வாழ்கையைத் தாண்டி, உடல் இடர்பாடுகளைப் பொருட்படுத்தாது, மனவுறுதியை மட்டுமே துணை கொண்டு பதக்கத்தை ஈட்டித் தந்திருக்கிறார். விளையாட்டு வீரரான தீபா மலிக் அவர்களின் பெயரோடு பல வெற்றிப் பதாகைகள் ஏற்கெனவே இணைந்திருக்கின்றன.
வருண் சீ. பாஹ்ட்டி அவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். ஒலிம்பிக் பதக்கத்துக்கு என ஒரு மகத்துவம் நமது நாட்டில், நமது சமுதாயத்தில், நமது அண்டைப்புறத்தில் இருக்கிறது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் நமது கவனத்தை அவர்களின் பக்கம் ஈர்க்க மிகப் பெரிய பணியாற்றி இருக்கிறார்கள். நமது உணர்வுகளை அவர்கள் தட்டி எழுப்பி இருக்கும் அதே வேளையில், மாற்றுத் திறனாளிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தையும் மாற்றியிருக்கிறார்கள். இந்த முறை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரியர் ஆற்றியிருக்கும் அருமையான செயல்பாடு பற்றி குறைவானவர்களுக்கே தெரிந்திருக்கும். சில நாட்கள் முன்பாக, இதே இடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. வாடிக்கையான ஒலிம்பிக் போட்டிகளின் பதிவை மாற்றுத் திறனாளிகள் தகர்க்க முடியும் என்று யாரேனும் கற்பனை செய்திருக்க முடியுமா? இந்த முறை அது நடந்தது. 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர் ஏற்படுத்திய பதிவை விட, மாற்றுத் திறனாளிகள் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த அப்துல் லத்தீப் பக்கர் அவர்கள் 1.7 நொடிகள் குறைவான நேரத்தில் நிகழ்த்தினார்; இது 1500 மீட்டர் ஓட்டத்தின் புதிய பதிவாக ஆனது. இது மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கான sprint, தடகள ஓட்டப்பந்தயப் பிரிவில் நான்காவதாக வந்தவருக்கு எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை, அவர் பொதுவான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவரை விடக் குறைவான நேரத்தில் அந்த தூரத்தைக் கடந்தார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான் மீண்டும் ஒரு முறை நமது இந்த விளையாட்டு வீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன், இனிவரும் காலகட்டத்தில் பாரதம் பாரா ஒலிம்பிக்கிற்காக, அதன் வளர்ச்சிக்காக, ஒரு நேர்த்தியான திட்டத்தை ஏற்படுத்தும் திசையில் பயணிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த வாரம் எனக்கு குஜராத்தின் நவசாரியில் மிக வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அது எனக்கு மிக உணர்வுபூர்வமான கணமாக மிளிர்ந்தது. மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு மெகா கேம்ப்புக்கு பாரத அரசு ஏற்பாடு செய்திருந்தது, அதில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அங்கே கண்பார்வை இல்லாத ஒரு சின்னஞ்சிறிய பெண் குழந்தையை நான் சந்திக்க நேர்ந்தது. கௌரி ஷார்துல் அவள் பெயர் - நாங்க் மாவட்டத்தின் நெடுந்தொலைவான காட்டுப் பகுதியிலிருந்து வந்த சின்னஞ்சிறு குழந்தை அவள். இராமகாவியம் முழுவதும் அவளுக்கு மனப்பாடம்; அவள் எனக்கு அதில் சில பாகங்களை சொல்லிக் காட்டினாள், அதை நான் மக்கள் சபை முன்பாக ஒப்பிக்கச் சொன்ன போது, மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அன்று ஒரு புத்தகத்தை வெளியிடும் ஒரு வாய்ப்பு கிட்டியது. அந்தப் புத்தகம் சில மாற்றுத் திறனாளிகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு. அதில் ஊக்கம் அளிக்கும் பல நிகழ்வுகள் இருந்தன. பாரத அரசு நவசாரியில் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியது, இதை மகத்தான ஒன்றாக நான் கருதுகிறேன். கேட்புத் திறன் இல்லாத 600 மாற்றுத் திறனாளிகள் கேட்கக் கூடிய கருவிகள் வாயிலான செயல்முறை எட்டே மணி நேரத்துக்குள்ளாக, நிகழ்த்தப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. ஒரே நாளில் மாற்றுத் திறனாளிகள் வாயிலாக 3 உலக சாதனைகள் ஏற்படுத்தப்படுவது என்பது நமது நாட்டுமக்களுக்கு பெரும் கவுரவம் அளிக்கும் விஷயம்.
எனதருமை நாட்டு மக்களே, 2 ஆண்டுகள் முன்பாக, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியடிகள் பிறந்த நாளன்று தூய்மையான பாரதம் என்ற இயக்கத்தை நாங்கள் தொடக்கி வைத்தோம். தூய்மை என்பது நமது இயல்பாக மாற வேண்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமையாக ஆக வேண்டும், அசுத்தம் அசூயையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அன்று நான் கூறியது நினைவிருக்கலாம். இப்போது அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று 2 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் வேளையில், நாட்டின் 125 கோடி நாட்டு மக்களின் இதயத்தில் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அதே போல, தூய்மையை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைப்போம் என்று கூறியதற்கு ஏற்ப, ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அதாவது நாட்டின் 125 கோடிக் கால்களும் தூய்மையை நோக்கி முன்னேறியிருக்கின்றன. செல்லும் திசை சரியானதாக இருந்தால், கிட்டும் பலனும் நன்றாகவே இருக்கும் என்பது மெய்ப்படுத்தப்பட்டிருக்கிறது. சாமான்ய குடிமகனாகட்டும், ஆட்சியாளராகட்டும், அரசு அலுவலகங்கள் ஆகட்டும், சாலையாகட்டும், பேருந்து அல்லது ரயில் நிலையமாகட்டும், பள்ளி அல்லது கல்லூரியாகட்டும், வழிபாட்டுத் தலமாகட்டும், மருத்துவமனையாகட்டும், பிள்ளைகள் முதல் பெரியோர் வரை, கிராமத்தின் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் தூய்மைக்கான தங்கள் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். ஊடக நண்பர்களும் ஒரு ஆக்கபூர்வமான பணியை ஆற்றியிருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் போதாது, நாம் இன்னும் கூட முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது. ஆனால் தொடக்கம் நல்லவிதமாக அமைந்திருக்கிறது, முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை என் மனதில் துளிர்த்திருக்கிறது. இது மிகவும் தேவை; இதனால் தான் ஊரக பாரதம் பற்றிப் பேசும் போது இது வரை 2 கோடியே 48 இலட்சம், அதாவது சுமார் 2 ½ கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன, இனிவரும் ஆண்டுகளில் மேலும் 2 ½ கோடி கழிப்பறைகள் கட்டும் உறுதிப்பாடு இருக்கிறது. உடல்நலத்துக்காக, குடிமக்களின் கண்ணியம் காக்கப்பட, திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் என்பது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்; ஆகையால் தான் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுதலை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. மாநில அரசுகளுக்கு இடையில், மாவட்டங்களுக்கு இடையில், கிராமங்களுக்கு இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேசம், குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களில் வெகு விரைவில் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்படும். குஜராத்தில் காந்தியடிகளின் பிறந்த இடமான போர்பந்தருக்கு நான் அண்மையில் சென்றிருந்த போது, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்தை முடிவு கட்டும் நாளாக வரும் அக்டோபர் 2ஆம் தேதியை குறித்திருப்பதை அதிகாரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள். இதை சாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்போருக்கு என் நல்வாழ்த்துக்கள்; தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியம் காக்கப்பட, சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக, இந்தப் பிரச்சனையிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்று நான் நாட்டு மக்கள் அனைவரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் மக்களே, நாம் சபதம் பூண்டு முன்னேற்றம் காண்போம். குறிப்பாக எனது இளைய சகோதரர்கள் இன்று தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி வருகிறார்கள், அவர்கள் முன்பாக நான் ஒரு திட்டத்தை முன்வைக்க விரும்புகிறேன். தூய்மையான இந்தியா இயக்கத்தின் நிலை உங்கள் நகரில் எப்படி இருக்கிறது? இதைத் தெரிந்து கொள்ளூம் உரிமை அனைவருக்கும் இருக்கிறது, இதை அறிந்து கொள்ள பாரத அரசு 1969 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. காந்தியடிகளின் பிறந்த ஆண்டு 1869. 1969இல் காந்தியடிகளின் நூற்றாண்டை நாம் கொண்டாடினோம். 2019இல் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டை கொண்டாட இருக்கிறோம். இந்த 1969 எண்ணில் நீங்கள் ஃபோன் செய்து, உங்கள் நகரில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதன் நிலைமை பற்றித் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விண்ணப்பமும் செய்யலாம். நீங்கள் இதன் பயனை கண்டிப்பாக அடையுங்கள். இது மட்டுமல்ல, தூய்மை தொடர்பான குறைகளையும், அவற்றின் தீர்வு பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு தூய்மை appம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் இதை நன்றாகப் பயன்படுத்துங்கள். நீங்களும் முன்வந்து உங்கள் பங்களிப்பை நல்குங்கள் என்று கார்ப்பரேட் உலகுக்கும் பாரத அரசு வேண்டுகோள் விடுக்கிறது. தூய்மைக்காக பணியாற்ற விரும்பும் இளம் தொழில்முறை பணியாளர்கள் தொழில்முறைக்கு ஆதரவு அளியுங்கள். மாவட்டங்கள் தோறும் தூய்மையான இந்தியா கூட்டாளிகள், swachh bharat fellows என்ற வகையில் அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த தூய்மையான இந்தியா இயக்கம் அரசுகளோடு நின்று விட்டால் முன்னேற்றம் காண முடியாது. தூய்மை என்பது இயல்பாக ஆவதோடு நிறைவு பெறாது. இன்றைய யுகத்தில் தூய்மையோடு ஆரோக்கியம் எப்படி இணைகிறதோ அதே போல, தூய்மையோடு வருவாய் மாதிரி, revenue model இணைவதும் முக்கியமானது. கழிவிலிருந்து செல்வம் என்பதும் முக்கியமானது. ஆகையால் தூய்மை இயக்கத்துடன் கூடவே, கழிவிலிருந்து உரம் என்ற திசையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். திடக்கழிவுகளை பதப்படுத்த வேண்டும், காம்போஸ்ட் உரமாக அதை மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அரசு தரப்பில் கொள்கை இடையீடும் தொடங்கப்பட்டு இருக்கிறது. கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட காம்போஸ்ட் உரத்தை வாங்கிக்கொள்ள உரநிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட விரும்பும் விவசாயிக்கு இந்த உரம் கிடைக்க அவர்கள் வழிவகை காண வேண்டும். யார் தங்கள் நிலத்தின் வளத்தை மேம்படுத்த நினைக்கிறார்களோ, நிலத்தின் நலத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்களோ, எந்த நிலத்துக்கு ரசாயன உரங்களால் கணிசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் இந்த உரத்தின் தேவை சிறிதளவே இருந்தாலும் கூட இந்த உரம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அமிதாப் பச்சன் அவர்கள் வணிக தூதர் என்ற வகையில் இந்தப் பணியில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். கழிவிலிருந்து செல்வம் என்ற திசையில் ஸ்டார்ட் அப் முனைப்புக்களை ஏற்படுத்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இது தொடர்பான இயந்திரங்களை மேம்படுத்துங்கள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துங்கள். மலிவு விலையில் பெரும் உற்பத்திப் பணியில் ஈடுபடுங்கள். இது செய்யக் கூடிய பணி தான். மிகப் பெரிய அளவிலான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பணி இது. மிகப் பெரிய பொருளாதார செயல்பாடுகளுக்கான நல்வாய்ப்பை அளிக்கக் கூடியது. கழிவிலிருந்து செல்வம் படைப்பது வெற்றியளிக்கும் முயற்சி. இந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை ஒரு சிறப்பான நிகழ்ச்சியான இந்திய சுகாதார மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநகர மேயர்கள், ஆணையர்கள் என அனைவரும் இணைந்து தூய்மை பற்றி மட்டும், ஆழமான கலந்தாய்வுகள் செய்யவிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தால் என்ன சாதிக்க முடியும்? நிதி மாதிரி என்னவாக இருக்க முடியும்? மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க முடியும்? வேலைவாய்ப்புகளை இதன் மூலம் எப்படி அதிகரிக்க முடியும்? என அனைத்து விஷயங்கள் மீதும் விவாதங்கள் நடைபெற இருக்கின்றன. தொடர்ந்து தூய்மை பற்றிய புதுப்புது செய்திகள் வந்தவண்ணம் இருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 107 கிராமங்களுக்குச் சென்று கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள் என்று அன்றொரு நாள் செய்தித் தாளில் நான் படித்தேன். விங் கமாண்டர் பரம்வீர் சிங் அவர்களின் தலைமையில் ஒரு அணி கங்கையில் தேவப்பிரயாகை தொடங்கி கங்காசாகர் வரை, 2800 கி.மீ. நீந்திப் பயணித்து, தூய்மை பற்றிய செய்தியை கொண்டு சேர்த்தார்கள் என்பதை நாம் கடந்த நாட்களில் கேள்விப்பட்டிருக்கலாம். பாரத அரசும் தன் அமைச்சகங்களில், ஒரு ஆண்டு முழுவதுக்குமான அட்டவணையைத் தயாரித்திருக்கிறது. ஒவ்வொரு துறையும் 15 நாட்கள் சிறப்பாக தூய்மை பற்றி முனைப்பு காட்ட வேண்டும். வரவிருக்கின்ற அக்டோபர் மாதம் 1 முதல் 15 வரை குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை, பஞ்சாயத் ராஜ் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தத்தமது ஆட்சி எல்லைகளில் தூய்மை தொடர்பான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவிருக்கின்றன. அக்டோபர் மாதத்தின் கடைசி 2 வாரங்களில், அக்டோபர் மாதம் 16 தொடங்கி 31 வரை மேலும் 3 அமைச்சகங்களான விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம், உணவு பதனிடும் தொழிற்சாலைகள், நுகர்வோர் விவகாரங்கள் ஆகியன அவற்றின் துறை தொடர்பான ஆட்சி எல்லைகளில் தூய்மை இயக்கத்தை செயல்படுத்துவார்கள். இந்தத் துறைகளோடு ஏதேனும் தொடர்புடையதாக உங்கள் பணி இருக்குமானால், நீங்களும் இதில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நான் குடிமக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தூய்மை தொடர்பான ஆய்வு இயக்கம் நடைபெற்று வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். முதலில் 73 நகரங்களில் தூய்மை எப்படி இருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது நாட்டு மக்கள் முன்பாக வைக்கப்பட்டது. ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட 500க்கும் மேற்பட்ட நகரங்கள் இருக்கின்றன, இப்போது அவற்றின் முறை, ஒவ்வொரு நகரிலும், நாம் பின் தங்கியிருக்கிறோம், அடுத்த முறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தூய்மை தொடர்பான ஒரு போட்டிச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குடிமக்கள் நாமனைவரும் இந்த இயக்கத்துக்கு எத்தனை பங்களிப்பு அளிக்க முடியுமோ, அத்தனை நாம் அளிக்க வேண்டும். வரவிருக்கும் அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். தூய்மையான இந்தியா இயக்கம் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகி இருக்கின்றது. காந்தி ஜெயந்தி தொடங்கி தீபாவளி முடிய, கதராடைகளைக் கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு கதராடையை வாங்குங்கள் என்று மீண்டுமொரு முறை கேட்டுக் கொள்கிறேன்; அப்போது தான் ஏழைகளின் இல்லங்களில் தீபாவளியன்று விளக்கு எரியும். இந்த அக்டோபர் 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மால் தூய்மையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு செயலில் ஈடுபட முடியாதா? 2 மணி நேரம், 4 மணி நேரம் உடல்ரீதியாக நீங்கள் தூய்மைப்பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், அதன் புகைப்படம் ஒன்றை என்னோடு நரேந்திர மோடி செயலியில் பகிர்ந்து கொள்ளுங்கள். வீடியோ இருந்தால், அந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மனைவரின் முயற்சியால் நாடு முழுவதிலும் மீண்டும் ஒரு முறை இந்த இயக்கத்துக்கு பலம் கிடைக்கும், புதிய வேகம் பிறக்கும். காந்தியடிகள், லால் பஹாதுர் சாஸ்த்ரி ஆகியோரை மீண்டும் நினைந்து, நாம் நாட்டுக்காக ஏதாவது ஒன்றைச் செய்யும் மனவுறுதி பூணுவோம்.
எனக்கு பிரியமான நாட்டுமக்களே, யார் அங்கீகாரம் அளிக்கிறார்களோ இல்லையோ, அளித்தலில் இருக்கும் ஆனந்தம் வாழ்க்கையில் அலாதியானது. அளிப்பதில் இருக்கும் சந்தோஷம் அற்புதமானது. கடந்த நாட்களில் எரிவாயு மானியத்தைத் துறக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டுமக்கள் அளித்த பதிலுறைகள், நாட்டின் உயிர்த்துடிப்புக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நாட்டின் பல இளைஞர்கள், சின்னச்சின்ன அமைப்புக்கள், கார்ப்பரேட் உலகில் பணிபுரிவோர், பள்ளிகளில் பணி புரிவோர், சில அரசுசாரா அமைப்பினர் என அனைவருமாக இணைந்து அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை பல நகரங்களில் பிறருக்கு கொடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம் என்ற வாரத்தைக் கொண்டாடவிருக்கிறார்கள். தேவையில் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், துணிமணிகள் ஆகியவற்றை சேகரித்துக் கொண்டு சேர்க்கும் இயக்கம் இது. நான் குஜராத்தில் இருந்த போது, நமது அனைத்துப் பணியாளர்களும் தெருக்களில் இறங்கி, குடும்பங்களில் இருக்கும் பழைய விளையாட்டுச் சாமான்களை தானமாகப் பெற்று, அவற்றை ஏழைகள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஆங்கன்வாடியில் கொண்டு சேர்த்தார்கள். அந்த ஏழைச் சிறுவர்களின் முகத்தில் மிளிரும் அலாதியான ஆனந்தத்தைப் பார்க்கும் போது, மனம் குதூகலிக்கும். அதே போல இந்த joy of giving week எந்த நகரங்களில் நடைபெற இருக்கிறதோ, அதை செயல்படுத்தவிருக்கும் இளைஞர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களின் உற்சாகத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும், அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு வகையில் இது ஒரு தான உத்ஸவம். குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 107 கிராமங்களுக்குச் சென்று கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள் என்று அன்றொரு நாள் செய்தித் தாளில் நான் படித்தேன். அவர்களே பணியாற்றி, சுமார் 9000 கழிப்பறைகள் கட்டுவதில் பங்களிப்பை நல்கினார்கள். இந்தப் பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நான் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பிரியம் மிகுந்த நாட்டு மக்களே, இன்று செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பண்டித தீன் தயாள் உபத்யாயா அவர்களின் பிறந்த நாள்; இன்று அவரது பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகிறது. எந்த அரசியல் சிந்தனைகளால் உந்தப்பட்டு என்னைப் போன்ற இலட்சக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோமோ, அந்த அரசியல் எண்ணங்களுக்கு விளக்கம் கொடுத்தவர் பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்கள்; பாரதத்தின் வேர்களோடு தொடர்புடைய அரசியல் சிந்தனை, பாரத கலாச்சாரத்தின் பாரம்பர்யத்தைப் போற்றும் எண்ணப்பாடு, அந்தப் போக்குக்கு இசைவான அரசியல் தத்துவத்தையும், மனித நேய தத்துவத்தையும் அளித்த பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. சர்வஜன் ஹித்தாய், சர்வஜன் சுக்காய், அனைவரின் நலம், அனைவரின் மகிழ்ச்சி அவரது பங்களிப்பு. காந்தியடிகள் கூட கடைக்கோடியில் இருப்பவரின் நலன் பற்றியே பேசினார். வளர்ச்சியின் பலனை கடைகோடியில் இருக்கும் ஏழையிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது? ஒவ்வொரு கரத்துக்கும் வேலை, ஒவ்வொரு நிலத்திலும் நீர், என்று ஒரே சொற்றொடரில் ஒட்டு மொத்த பொருளாதாரத் திட்டத்தையும் தீன்தயாள் முன்வைத்து விட்டார். நாடு அவரது பிறந்த நூற்றாண்டை ஏழைகள் நலன் ஆண்டாக கொண்டாட வேண்டும். சமூகம், அரசு என அனைவரின் கவனமும், வளர்ச்சியின் பலன்களை ஏழைகளிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதையே குவிமையமாகக் கொண்டிருக்க வேண்டும். பிரதமர் வசிக்கும் இல்லத்தை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து ரேஸ் கோர்ஸ் ரோடு என்றே அழைத்து வந்தார்கள். பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நூற்றாண்டை ஒட்டி, பிரதமர் வசிக்கும் இடம் இருக்கும் சாலை லோக் கல்யாண் மார்க் என்று மாற்றப்பட்டிருக்கிறது. அவரது நூற்றாண்டான கரீப் கல்யாண் வர்ஷ், அதாவது ஏழைகள் நலன் ஆண்டின் ஒரு அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. நம்மனைவரின் கருத்தூக்கமாக விளங்கிய, நமது சிந்தனைகளின் வற்றாத ஊற்றாகத் திகழ்ந்த வணக்கத்துக்குரிய பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா அவர்களை நான் பெரும் மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
என் நெஞ்சில் நீங்காது நிறைந்த நாட்டு மக்களே, விஜயதசமி நன்னாளன்று, ஈராண்டுகள் முன்னதாக, மனதின் குரலை நான் தொடங்கினேன். இந்த விஜயதசமி நன்னாளன்று 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மனதின் குரல் அரசுப் பணிகளுக்கு பரணி பாடும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கக் கூடாது, இந்த மனதின் குரல் அரசியல் தூற்றல்களுக்கான மேடையாக ஆகக் கூடாது, இந்த மனதின் குரல் குற்றாச்சாட்டுக்கள்-எதிர்க்குற்றச்சாட்டுக்களின் களமாக ஆகக் கூடாது என்பது உள்ளபடியே என் முயற்சியாக இருந்து வந்திருக்கிறது. 2 ஆண்டுகளில் பல வகையான அழுத்தங்களைத் தாண்டி, மனதில் உந்துதல் ஏற்படும் வேளையில், மனம் சலிக்கும் தருணங்களையும் தாண்டி எப்போதாவது கோபம் மேலிட சில சொற்களைப் பேச வேண்டிய அழுத்தம் ஏற்பட்டதுண்டு, ஆனால் உங்கள் அனைவரின் ஆசிகளால் மனதின் குரலில் அப்படிப்பட்ட எந்த வலையிலும் வீழ்ந்து விடாமல், சாதாரண மக்களோடு இணையக் கூடிய ஒரு முயற்சியாகவே அணுகி வந்திருக்கிறேன். இந்த நாட்டின் சாமான்யன் எனக்கு எப்படிப்பட்ட ஊக்கங்களை அளித்து வருகிறான். இந்த நாட்டின் சாமான்யனின் ஆசைகள்-அபிலாஷைகள் என்ன? என் மனதிலும் எண்ணத்திலும் பதிந்திருக்கும் சாமான்யன் பற்றிய பதிவு ஆகியவை தான், மனதின் குரலில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. மனதின் குரல் தகவல்கள் நாட்டு மக்களுக்கான பரிமாற்ற சந்தர்ப்பமாக அமையலாம், என்னைப் பொறுத்த மட்டில் மனதின் குரல் என்பது எனது 125 கோடி நாட்டு மக்களுக்கு அவர்களின் சக்தியை உணர்த்தும் நிகழ்ச்சி, எனது நாட்டின் 125 கோடி மக்களின் திறனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் மேடை, இதிலிருந்து அவர்கள் செயலாற்ற ஊக்கம் பெற வேண்டும் என்பதே என் எண்ணப்பாடு, இதுவே இந்த நிகழ்ச்சியின் களம். இன்று இந்த வாரம் நிறைவடையும் வேளையில், ஈராண்டுகள் முழுமை பெறும் இந்தத் தருணத்தில், மனதின் குரலை நீங்கள் எப்படி ஆதரித்தீர்கள், எந்த வகையில் ஊக்கமளித்தீர்கள், எப்படி ஆசி நல்கினீர்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன், மனம் நெகிழ்கிறது, என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். எனது கருத்துக்களை ஒலிபரப்பியதோடு, அதை அனைத்து மொழிகளிலும் கொண்டு சேர்க்க முழுமையான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நான் ஆகாசவாணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தாம் மனதின் குரலுக்குப் பின் கடிதங்களை தொகுத்தளித்து, ஆலோசனைகளை கொடுத்து, அரசின் கதவுகளைத் தட்டி முழக்கினார்கள். அரசின் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள், ஆகாசவாணி இப்படிப்பட்ட கடிதங்களைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து, அரசுத் தரப்பிலிருந்து பிரதிநிதிகளை அழைத்து, பிரச்சனைகளின் தீர்வுக்கான ஒரு தளம் அமைத்துக் கொடுத்தார்கள். மனதின் குரல் என்பது ஏதோ 15-20 நிமிட உரையாடல் என்பதோடு நின்று விடவில்லை, இது சமூக மாற்றத்துக்கான ஒரு புதிய சந்தர்ப்பமாக அமைந்தது. இதை விட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு என்ன இருக்க முடியும்; ஆகையால் இதன் வெற்றியில் பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் நான் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன், அவர்களுக்கு என் வணக்கங்களை செலுத்துகிறேன்.
நேசம் நிறைந்த என் நாட்டு மக்களே, அடுத்த வாரம் நவராத்திரி, துர்கா பூஜை, விஜயதசமி ஆகியன வரவிருக்கின்றன, தீபாவளிக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும், ஒரு வகையில் வித்தியாசமான சூழல் நாடு முழுவதிலும் நிலவுகிறது. இது சக்தி உபாசனைக்கான வேளை. சமூகத்தின் ஒற்றுமை தான் நாட்டின் சக்தி. அது நவராத்ரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், இந்த சக்தி வழிபாட்டை, சமுதாய ஒற்றுமைக்கான வழிபாடாக ஆக்குவது பற்றிச் சிந்திப்போம். அது தான் உண்மையான சக்தி வழிபாடு, இப்படிச் செய்யும் போது தான் நாமனைவருமாக இணைந்து வெற்றியின் திருநாளைக் கொண்டாட முடியும், வாருங்களை சக்தியை வழிபடுவோம். ஒற்றுமை என்ற மந்திரத்தை உச்சரித்துப் பயணிப்போம். நாட்டை புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்ல அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற கருத்துக்களை மனதில் சுமந்து, நவராத்திரி, துர்கா பூஜை ஆகிய புனித நாட்களைக் கடைப்பிடிப்போம். விஜயதசமியை வெற்றித் திருவிழாவாகக் கொண்டாடுவோம்.
மிக்க நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.
ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ஹாக்கி விளையாட்டு வீரர் த்யான் சந்தின் பிறந்த நாள். இந்த நாள் நாடு முழுவதிலும் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நான் த்யான் சந்த் அவர்களுக்கு என் நினைவு மலர்களைக் காணிக்கையாக்குகிறேன். இந்த வேளையில் நான் உங்கள் அனைவருக்கும் அவரது பங்களிப்பு பற்றி நினைவுபடுத்தவும் விரும்புகிறேன். அவர் 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற வேளையில் பாரதத்துக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தரும் மகத்துவம் நிறைந்த பணியை ஆற்றியிருக்கிறார். க்ரிக்கெட் பிரியர்களான நாமனைவரும் ப்ராட்மேன் என்ற பெயரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரே கூட த்யான் சந்த் அவர்களைப் பற்றிப் பேசுகையில் He scores goals like runs, கிரிக்கெட் ஓட்டங்களைப் போல ஹாக்கியில் அவர் கோல்களைப் போடுகிறார் என்றார். த்யான்சந்த் அவர்கள் விளையாட்டில் காட்டிய உத்வேகமும், பெரும்போக்கும் தேசபக்தியும் வாழும் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்தன. கோல்கத்தாவில் ஒரு ஹாக்கி போட்டியின் போது எதிரணியைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் ஆட்டத்தின் போது, த்யான் சந்த் அவர்களின் தலையில் அடித்து விட்டார். அந்த சமயத்தில் ஆட்டம் முடிவு பெற வெறும் 10 நிமிடங்கள் தான் இருந்தன. த்யான் சந்த் அவர்கள் அந்தப் பத்து நிமிடங்களில் 3 கோல்கள் போட்டு, நான் காயத்துக்கு பதிலடியாக கோல்கள் போட்டுவிட்டேன் என்றார்.
எனதருமை நாட்டு மக்களே, எப்போதெல்லாம் மனதின் குரலுக்கான வேளை வருகிறதோ, அப்போது mygov இணையத்திலோ, narendramodiappஇலோ, பல ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை பலவகைப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால் இந்த முறை நான் ரியோ ஒலிம்பிக் பற்றி கண்டிப்பாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அதிகப்பட்ச கோரிக்கைகள்
இருந்தன. பொதுமக்கள் மனதில் ரியோ ஒலிம்பிக் பற்றி இந்த அளவு ஆர்வம், இத்தனை விழிப்புணர்வு, இதைப் பற்றி ஏதாவது பேசுங்கள் என்று நாட்டின் பிரதமர் மீது கொடுக்கப்படும் அழுத்தம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது மிகவும் ஆக்கப்புர்வமானதாக எனக்குப் படுகிறது. க்ரிக்கெட்டுக்கு அப்பாலும் கூட பாரத மக்களுக்கு வேறு விளையாட்டுக்களில் இத்தனை ஆர்வம் இருக்கிறது, இத்தனை விழிப்புணர்வு இருக்கிறது, இத்தனை தகவல்கள் தெரிந்திருக்கின்றன. எனக்கும் கூட இந்த செய்தியை விடுப்பது உள்ளபடியே மிகவும் ஊக்கம் அளிக்கும் காரணியாக ஆகி விட்டது. திரு. அஜித் சிங் என்பவர் narendramodi appஇல் எழுதி இருக்கிறார், தயவு செய்து இந்த முறை மனதின் குரலில் பெண் குழந்தைகளின் கல்வி, விளையாட்டுத் துறையில் அவர்கள் பங்களிப்பு பற்றிக் கண்டிப்பாகப் பேசுங்கள், ஏனென்றால் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று அவர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
அதே போல திரு. சச்சின் என்பவர் எழுதியிருக்கிறார், உங்களிடம் ஒரு வேண்டுகோள், இந்த
முறை மனதின் குரலில் சிந்து, சாக்ஷி, தீபா கர்மாகர் ஆகியோர் பற்றி அவசியம் பேசுங்கள். நமக்குக் கிடைத்த பதக்கங்களை நமது பெண்கள் தாம் ஈட்டித் தந்திருக்கிறார்கள். தாங்கள் எந்த வகையிலும், யாரை விடவும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நமது மகள்கள் மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பெண்களில் ஒருவர் வட இந்தியாவையும், ஒருவர் தென்னிந்தியாவையும், ஒருவர் கிழக்கிந்தியாவையும் சேர்ந்தவர், மற்றவர் இந்தியாவின் இன்னொரு மூலையைச் சேர்ந்தவர். நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் பொறுப்பை பாரதத்தின் மகள்கள் ஏற்றுக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.
MyGov இணையத்தில் ஷிகர் டாகுர் அவர்கள், நாம் ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்று எழுதியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், மதிப்பிற்குரிய மோதி சார், ரியோவில் நாம் பெற்றிருக்கும் 2 பதக்கங்களுக்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் நமது செயல்பாடு உள்ளபடியே சிறப்பாக இருந்ததா என்ற கேள்வி குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், இதற்கு விடை இல்லை என்று தான் கூற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. நமது பெற்றோர் இன்று படிப்பின் மீது மட்டுமே கவனத்தை செலுத்துகிறார்கள். சமுதாயத்தில் இப்போதும் கூட விளையாட்டுக்களை காலவிரயம் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள். நாம் இந்த எண்ணப்பாட்டை மாற்றியாக வேண்டும். சமுதாயத்துக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்தப் பணியை உங்களை விடச் சிறப்பாக வேறு யாரால் அளிக்க முடியும்?
இதைப் போலவே திரு. சத்யப்ரகாஷ் மெஹ்ராவும் narendramodiappஇல் எழுதி இருக்கிறார் – மனதின் குரல் நிகழ்ச்சியில் extra-curricular activities தேவை பற்றி வலியுறுத்த கோரியிருந்தார். ஒரு வகையில் இதே உணர்வு ஆயிரக்கணக்கானோர் எழுத்துக்களில் பிரதிபலித்தது. நமது எதிர்ப்பார்ப்புக்களின்படி நம்மால் செயலாற்ற முடியவில்லை என்ற விஷயத்தில் மாற்றுக் கருத்து
இல்லை என்பது உண்மை. பதக்கப்பட்டியலில் இரண்டே இரண்டு பதக்கங்களே நமக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால் பதக்கங்கள் கிடைக்கவில்லை என்றாலும், சற்று உன்னிப்பாக கவனித்தால், பல விஷயங்களில் முதன் முறையாக பாரதத்தின் விளையாட்டு வீரர்கள் கணிசமான அளவு திறமையைக் காட்டினார்கள் என்று பார்க்கலாம். ஷூட்டிங் பிரிவில் நமது அபினவ் பிந்த்ரா அவர்கள் 4வது இடத்தைப் பெற்றார், மிகவும் சிறிய வித்தியாசத்தில் அவர் பதக்கத்தை இழந்தார்.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தீபா கர்மாகர் 4ஆம் இடத்தையே பெற முடிந்தாலும், ஒரு அற்புதத்தையே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். மிகக் குறைந்த வித்தியாசத்தில் பதக்கம் கைநழுவிப் போனது. ஆனால் ஒலிம்பிக்குக்காகவும், ஒலிம்பிக் இறுதிப் போட்டியிலும் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் அவர் என்பதை எப்படி நாம் மறக்க முடியும்? இதே போலவே டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்ஸா-ரோஹண் போபண்ணா இணை விஷயத்தில் நடந்தது. Athletics பிரிவில் நாம் இந்த முறை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். பி.டி. உஷாவுக்குப் பிறகு, 32 ஆண்டுகளில் முதன் முறையாக லலிதா பாபர் அவர்கள் track field இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். கடந்த 36 ஆண்டுகளில் முதன் முறையாக ஆடவர் ஹாக்கிப் போட்டிகளில் knock out நிலையை எட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நமது அணி மிகவும் பலம் வாய்ந்த அணி, ஆனால் இங்கே சுவையான விஷயம் என்னவென்றால், தங்கப் பதக்கம் வென்ற ஆர்ஜெண்டீனா போட்டித் தொடர் முழுவதிலும் ஒரே ஒரு ஆட்டத்தில் தான் தோற்றார்கள், அவர்களை வீழ்த்தியவர்கள் யார் தெரியுமா! பாரத அணி தான். இனிவரும் காலம் நமக்குக் கண்டிப்பாக நன்றாகவே இருக்கும்.
பாக்ஸிங்கில் விகாஸ் க்ருஷ்ண யாதவ் கால் இறுதி கட்டம் வரை வந்தார், ஆனால் வெண்கலப் பதக்கத்தை அவரால் பெற முடியவில்லை. பல வீரர்கள், எடுத்துக்காட்டாக – அதிதி அஷோக், தத்தூ போக்னல், அதனு தாஸ் என பலரது செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. ஆனால் எனதருமை நாட்டு மக்களே, நாம் செய்ய வேண்டியது மேலும் அதிகம் இருக்கிறது. ஆனால் இது வரை நாம் செயல்பட்டது போலவே தொடர்ந்து செயல்பட்டு வந்தால், ஒரு வேளை நாம் மீண்டும் ஏமாற்றமே அடைய வேண்டி வரலாம். ஒரு குழு அமைப்பது பற்றிய அறிவிப்பை செய்திருக்கிறேன். பாரத அரசு இதை ஆழமாக அலசும். உலகில் என்னென்ன வகை செயல்பாடுகள் இருக்கின்றன என்பதை பரிசீலிக்கும். நாம் என்ன துறையில் நன்றாக செயல்பட முடியும் என்பது பற்றிய செயல்திட்டம் தீட்டப்படும். 2020, 2025, 2028 என ஒரு தொலைநோக்குப் பார்வையோடு நமது திட்டங்களை ஏற்படுத்தியாக வேண்டும். நீங்களும் உங்கள் மாநிலங்களில் இப்படிப்பட்ட குழுக்களை ஏற்படுத்தி விளையாட்டு உலகில் நம்மால் என்ன சாதிக்க முடியும், ஒவ்வொரு மாநிலமும் என்ன பங்களிப்பு நல்க முடியும், என்று பார்த்து தங்களுக்கென்று ஓரிரு விளையாட்டுக்களைத் தேர்வு செய்து, தங்கள் பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் தீவிரமான சிந்தனைகளில் ஈடுபட வேண்டும் என்று விளையாட்டு உலகோடு ஈடுபட்டிருக்கும் சங்கங்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஆர்வமுள்ள அனைத்து இந்தியக் குடிமக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள், narendramodiappஇல் தங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்புங்கள் என்பதுதான். அரசுக்கும் எழுதுங்கள், சிந்தனை அலசலில் ஈடுபட்ட பின்னர் சங்கங்கள் தங்கள் குறிப்பாணைகளை அரசுக்கு அளிக்கட்டும். மாநில அரசுகள் விவாதித்த பின்னர் தங்கள் ஆலோசனைகளை அனுப்பட்டும். ஆனால் நாம் முழுமையாக நம்மை தயார் செய்து கொள்வோம், 65 சதவீதம் இளைஞர்கள் கொண்ட 125 கோடி நாட்டு மக்களாகிய நாமனைவரும் விளையாட்டு உலகிலும் மிகச் சிறப்பான நிலையை எட்டுவோம் என்ற மன உறுதிப்பாட்டோடு முன்னேறிச் செல்வோம்.
எனதருமை நாட்டு மக்களே, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம். நான் பல ஆண்டுகளாக ஆசிரியர் தினத்தன்று மாணவர்களோடு நிறைய நேரம் செலவு செய்து வந்திருக்கிறேன். ஒரு மாணவனாகவே அவர்களோடு இருந்திருக்கிறேன். இந்தச் சின்னச்சின்ன பாலகர்களோடு என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. என்னைப் பொறுத்த மட்டில் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி என்பது ஆசிரியர்கள் தினம் மட்டுமல்ல, இது கல்வி தினமும் கூட. ஆனால் இந்த முறை நான் ஜி 20 உச்சி மாநாட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், இன்று மனதின் குரலிலேயே எனது உணர்வை வெளிப்படுத்தலாமே என்று தோன்றியது.
வாழ்க்கையில் அன்னைக்கு எத்தனை முக்கியமான இடமுண்டோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது ஆசிரியரின் இடமுமாகும். நம்மை விட அதிகமாக நம்மீது அக்கறை கொண்ட ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் தங்கள் சீடர்களுக்காக, தங்கள் மாணவர்களுக்காக, தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள். இன்றைய காலங்களில் ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு நாலாபுறத்திலும், புல்லேலா கோபிசந்த் அவர்களைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அவர் ஒரு விளையாட்டு வீரர் தான், அதே நேரத்தில் ஒரு நல்ல ஆசிரியரும் கூட. நான் இன்று கோபிசந்த் அவர்களை ஒரு விளையாட்டு வீரர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த ஆசிரியர் என்ற ரூபத்தில் காண்கிறேன். ஆசிரியர் தினத்தன்று, புல்லேலா கோபிசந்த் அவர்களுக்கு, அவரது தவத்திற்கு, விளையாட்டின்பால் அவரது முழுமையான ஈடுபாட்டுக்கு, தன்னிடம் பயில்வோரின் வெற்றியில் அவர் ஆனந்தம் அடையும் இயல்புக்கு நான் அவருக்கு வணக்கம் சொல்கிறேன். நம் எல்லோருடைய வாழ்விலும் ஆசிரியர்களின் பங்களிப்பு எப்போதும் உணரப்படுகிறது. செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டா. சர்வேபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்; இந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாகக் கடைபிடித்து வருகிறோம். அவர் தனது வாழ்க்கையில் எந்த நிலையை எட்டியிருந்தாலும், தன்னை அவர் எப்போதுமே ஆசிரியர் என்ற நிலையில் இருந்து வாழவே முயற்சி செய்தார். இது மட்டுமல்ல, அவர் எப்போதுமே, நல்ல ஆசிரியருக்குள்ளே இருக்கும் மாணவன் என்றுமே இறப்பதில்லை என்று சொல்லுவார். குடியரசுத் தலைவர் ஆன பிறகும் கூட ஒரு ஆசிரியராகவே வாழ்ந்தார். தானும் ஒரு மாணவன் என்ற நினைப்பை உயிர்ப்போடு வைத்திருந்தார். இத்தகைய ஒரு அற்புதமான வாழ்க்கையை டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
என்னுடைய ஆசிரியர்கள் பற்றிய ஏகப்பட்ட நினைவுகள் பசுமையாக இருக்கின்றன; ஏனென்றால் நான் வாழ்ந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் எங்களுக்கெல்லாம் அவர்கள் தாம் ஹீரோவாக விளங்கினார்கள். ஆனால் இன்று 90 வயதாகியிருக்கும் நிலையில் எனது ஒரு ஆசிரியரிடமிருந்து எனக்கு மாதா மாதம் கடிதம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாதத்தில் தான் படித்த புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும், அவற்றிலிருந்து மேற்கோள்களும் அதில் காணப்பட்டிருக்கும். மாதம் முழுவதிலும் நான் செய்தவை அவரது பார்வையில் சரியா தவறா என்றும் அதில் ஆராய்ந்து குறிப்பிடப்பட்டிருப்பார். ஏதோ இன்றும் கூட அவர் வகுப்பறையில் எனக்கு பயிற்றுவிப்பது போல
இருக்கும். இன்றும் கூட அவர் எனக்கு ஒரு வகையில் தொலைதூரக் கல்வியை அளித்து வருகிறார். தனது 90ஆவது வயதிலும் அவரது கையெழுத்தைப் பார்க்கும் போது, இந்த பழுத்த வயதிலும் எப்படி இத்தனை முத்து முத்தாக அவரால் எழுத முடிகிறது என்று எண்ணி வியந்து போகிறேன்; ஏனென்றால் எனது கையெழுத்து எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்றால், யாராவது அழகாக எழுதியிருந்தால் என் மனதில் மிகவும் மரியாதை அதிகரிக்கிறது. எனது அனுபவத்தைப் போலவே உங்கள் அனுபவமும் இருக்கலாம். உங்கள் ஆசிரியர்களால் உங்கள் வாழ்க்கையில் என்ன நன்மை உங்களுக்கு கிடைத்திருந்தாலும், அதை நீங்கள் உலகறியச் சொல்வீர்கள் என்றால் ஆசிரியர்களை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும், ஒரு கௌரவம் உண்டாகும். சமுதாயத்தில் ஆசிரியர்களின் கௌரவத்தை அதிகரிப்பது என்பது நம்மனைவரது பொறுப்பாகும். உங்கள் ஆசிரியர்களோடு ஏதேனும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் ஆசிரியருடனான ஏதும் நிகழ்வு நடந்திருந்தால், உங்கள் ஆசிரியரோடு தொடர்புடைய கருத்தூக்கம் அளிக்கும் விஷயம் இருந்தால் கண்டிப்பாக narendramodiappஇல் பகிர்ந்து கொள்ளுங்கள். நாட்டின் ஆசிரியர்களின் பங்களிப்பை மாணவர்களின் பார்வை கொண்டு பார்ப்பது என்பது உள்ளபடியே மதிப்பு நிறைந்த ஒரு விஷயம்.
எனதருமை நாட்டு மக்களே, இன்னும் சில நாட்களில் நாம் விநாயக சதுர்த்தியைக் கொண்டாட இருக்கிறோம். விநாயகர் தடைகளை நீக்குபவர்; நம்முடைய நாடு, நமது சமுதாயம், நம்முடைய குடும்பங்கள், நம்மவர் ஒவ்வொருவரின் வாழ்வும் தடைகள்-இடர்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நாமனைவரும் விரும்புவோம். ஆனால் விநாயக சதுர்த்தி பற்றி நாம் பேசும் போது, லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி நமது நினைவுகள் திரும்புவது என்பது இயல்பான ஒன்று தான். விநாயக சதுர்த்தியை சமுதாய ரீதியில் கொண்டாடும் பாரம்பரியம் என்பது லோகமான்ய திலகரின் கொடையாகும். விநாயக ஊர்வலம் வாயிலாக சமய நிகழ்வினை, தேச விழிப்புணர்வுக்கான நாளாக அவர் மாற்றியமைத்தார். சமுதாய கலாச்சார தினமாகவே
மாற்றி விட்டார். விநாயக சதுர்த்தி, சமுதாய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் அனைத்து வினாக்களைப் பற்றியும் விவாதிப்பதாக அமைந்தது. இதனால் சமுதாயத்தில் ஒரு புதிய எழுச்சி, ஒரு புதிய மலர்ச்சி ஏற்படக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது மட்டுமில்லாமல் அவர் அளித்த மந்திரம் ஒன்று இருக்கிறது – ஸ்வராஜ்யம் என்பது எங்கள் பிறப்புரிமை என்பது மையக்கருவாக அமைய வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கு சக்தி கிடைக்க வேண்டும். மஹாராஷ்ட்ரத்தில் மட்டுமல்லாமல், இன்று விநாயக சதுர்த்தி நாடெங்கிலும் சமுதாய ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறாது. அனைத்து இளைஞர்களும் இதைக் கொண்டாட
ஏகப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னமும் கூட சில பேர்கள் லோகமான்ய திலகர் எந்த உணர்வால் உந்தப்பட்டு இதை ஏற்படுத்தினாரோ அதனை அடியொற்றியே செயல்பட முழுமையாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பொது விஷயங்கள் பற்றி விவாதிக்கிறார்கள், கட்டுரைப்போட்டிகளை நடத்துகிறார்கள், கோலம் வரைவதில் போட்டிகள் நடத்துகிறார்கள். இதில் இடம் பெறும் காட்சிகள் சமுதாயத்தைத் தொடும் விஷயங்களை கலைரீதியாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும். ஒரு வகையில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இயக்கம் சமூகரீதியிலான விநாயக சதுர்த்தி மூலமாக நடக்கிறது. லோகமான்ய திலகர் ஸ்வராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்ற மாமந்திரம் அளித்திருக்கிறார். ஆனால் நாம் இப்போது சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம். இப்போது அதே சமுதாய ரீதியிலான விநாயக சதுர்த்தி தொடர்பாக நல்லாட்சி எங்கள் பிறப்புரிமை என்று கொள்ளலாமல்லவா? நாம் நல்லாட்சியை நோக்கி முன்னேறுவோம். நல்லாட்சி என்பதே நமது முதன்மை நோக்கமாகட்டும், இந்த மந்திரத்தைத் துணையாகக் கொண்டு நாம் சமுதாய ரீதியிலான விநாயக சதுர்த்தி வாயிலாக நல்லாட்சிச் செய்தியை அளிக்க முடியாதா? வாருங்கள், நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கொண்டாட்டங்கள் சமுதாயத்தின் சக்திகள் என்பது உண்மை தான். அவை தனிநபருக்கும், சமூகத்துக்கு ஒரு புதிய உயிர்ப்பை அளிக்கின்றன. கொண்டாட்டங்களில்லாத வாழ்க்கை சாத்தியமில்லை. ஆனால் காலத்தின் தேவைக்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இந்த முறை சிறப்பாக விநாயக சதுர்த்தி பற்றியும், துர்க்கா பூஜா பற்றியும் பலர எழுதியிருக்கிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் கவலை சுற்றுச்சூழல் பற்றி அமைந்திருக்கிறது. திரு சங்கர நாராயன ப்ரஷாந்த் என்பவர், மோதி அவர்களே, plaster of parisஇனால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நீங்கள் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் புரிய வையுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏன் நாம் கிராமத்துக் குளங்களின் மண்ணைப் பயன்படுத்தலாமே! Plaster of parisஇனால் செய்யப்படும் சிலைகள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை அல்ல என்று அவரும் சரி, வேறு பலரும் சரி தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாம் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளையோ, துர்க்கா சிலைகளையோ பயன்படுத்தி, நமது பழைய பாரம்பர்யத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நமது நதிகள்-குளங்களின் பாதுகாப்பு, அவற்றில் ஏற்படும் மாசுபாட்டிலிருந்து நீரில் உயிர் வாழும் நுண்ணிய உயிர்களின் பாதுகாப்பு – இவையுமே கூட இறை சேவை தானே? விநாயகர் சங்கடங்களை போக்குபவர். அப்படி இருக்கும் வேளையில் நாம் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விநாயகர் சிலையை உருவாக்கக் கூடாது. நான் கூறுவதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இப்படி நான் மட்டும் கூறவில்லை, பலர் கூறுகிறார்கள். நான் பலரது
கருத்துக்களை பலமுறை கேட்டும் இருக்கிறேன். புணேயின் ஒரு சிற்பி திரு அபிஜித் தோட்பலே, கோல்ஹாபூரின் அமைப்புக்களான நிசர்க் மித்ர, விக்யான் ப்ரபோதினி, விதர்ப்பாவின் நிசர்க் கட்டா, புணேயின் ஞான ப்ரபோதினி, மும்பையின் கிர்காவாசா RAZA ராஜா. இப்படிப்பட்ட பலவகையான அமைப்புக்களும் தனிநபர்களும் மண்ணாலான விநாயகர் சிலைகளை உருவாக்க அதிக சிரமங்களை மேற்கொள்கிறார்கள், அவை பற்றி பிரச்சாரமும் செய்கிறார்கள். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஒரு விநாயக சதுர்த்தி என்பதும் ஒரு சமுதாய சேவைப்பணி தான். துர்கா பூஜைக்கு இன்னும் சற்று காலம் இருக்கிறது. பாரம்பரியமாக சிலைகளைச் செய்யும்
குடும்பங்களுக்கு இப்படிப்பட்ட மண்ணாலான சிலைகள் வாயிலாக வேலைவாய்ப்பு கிட்டும்; நமது குளங்கள், நதிகளின் மண்ணால் அவை செய்யப்படும் என்பதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்ற தீர்மானத்தை நாம் மேற்கொள்வோம். உங்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்திக்கான எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டு மக்களே, பாரத ரத்னா அன்னை தெரஸா செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று புனிதர் என்ற பட்டத்தால் அலங்கரிக்கப்பட இருக்கிறார். அன்னை தெரஸா தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கான சேவையில் ஈடுபட்டவர். அவர் அல்பேனியாவில் பிறந்தார். அவரது தாய்மொழி ஆங்கிலம் அல்ல. ஆனால் அவர் தனது வாழ்க்கையை உருமாற்றினார், ஏழைகளின் சேவைக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்ளும் முழுமையான முயற்சிகளில் ஈடுபட்டார். பாரதத்தின் ஏழைகளுக்காக சேவை புரிந்த அன்னை தெரஸாவுக்கு இப்போது புனிதர் என்ற பட்டம் வழங்கப்படவிருக்கிறது என்னும் போது நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம்
அடைவது என்பது இயல்பான ஒன்று. செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று இந்த நிகழ்வு நடைபெறும்; அந்த நிகழ்வில் 125 கோடி நாட்டுமக்களின் தரப்பிலிருந்து பாரத அரசு, நமது அயலுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தலைமையில், ஒரு அதிகாரபூர்வமான பிரதிநிதிக் குழுவை அங்கே அனுப்பத் தீர்மானித்திருக்கிறது. புனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள், மஹாபுருஷர்கள் ஆகியோரிடமிருந்தெல்லாம் நமக்கு ஒவ்வொரு கணமும் ஏதோ ஒன்றைக் கற்கும் பாக்கியம் கிடைத்து வந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நாம் ஏதோ
ஒன்றைப் பெற்று வந்திருக்கிறோம், மேலும் கற்று வருவோம், நல்ல செயல்களைப் புரிந்து வருவோம்.
எனதருமை நாட்டு மக்களே, முன்னேற்ற தாகம் என்பது ஒரு இயக்கம் என்று ஆகும் போது, அது எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்! மக்கள் சக்தி மகேசன் சக்தியின் வடிவாகவே பார்க்கப்படுகிறது. பாரத அரசு கடந்த நாட்களில் 5 மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தூய்மையான கங்கையை ஏற்படுத்த, கங்கையை சுத்தம் செய்ய, மக்களோடு இணைந்து ஒரு வெற்றிகரமான முயற்சியில் ஈடுபட்டது. கங்கை நதிக்கரையில் வசிக்கும்
கிராமங்களின் தலைவர்களை இந்த மாதம் 20ஆம் தேதி அன்று இலாஹாபாத்தில் ஒரு சந்திப்புக்கு அழைத்தோம். அவர்களில் ஆண்களும் இருந்தார்கள், பெண்களும் இருந்தார்கள். அவர்கள் எங்கள் அழைப்புக்கிணங்கி இலாஹாபாத் வந்தார்கள், இந்த அனைத்து கிராமத் தலைவர்களும் கங்கை அன்னையை சாட்சியாகக் கொண்டு, கங்கைக் கரைப்பகுதிகளில் திறந்த வெளிகளில் மலஜலம் கழிக்கும் பழக்கத்தை உடனடியாகக் கைவிடுவோம் என்றும், கழிப்பறை கட்டும் இயக்கத்தை முடுக்கி விடுவோம் என்றும், கங்கையின் மாசகற்ற முழுமையான பங்களிப்பை நல்குவோம் என்றும், அவர்கள் கிராமங்கள் கங்கையை அசுத்தம் செய்யாது எனவும் சபதமேற்கொண்டார்கள். சபதமேற்பதற்காகவே இந்த அனைத்து கிராமத் தலைவர்களும் இலாஹாபாத் வந்தார்கள், உத்தர பிரதேசத்திலிருந்தும், உத்தராக்கண்டிலிருந்தும், பீஹாரிலிருந்தும், ஜார்க்கண்டிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் வந்தார்கள்; அப்படி வந்திருந்த அனைவருக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகத்தான பணியை நிறைவேற்றிய பாரத அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், அமைச்சர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களை உரிமையாக்குகிறேன். மக்கள் சக்தியை இணைத்து கங்கையின் மாசகற்ற முக்கியமானதொரு அடி எடுத்து வைக்க உதவிய 5 மாநில அரசுகளின் முதல்வர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனதருமை நாட்டு மக்களே, சில விஷயங்கள், சில வேளைகளில் என் மனதைத் தொட்டு விடுகின்றன; அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் மீது என் மனதில் சிறப்பான ஒரு மரியாதை ஏற்படுகிறது. ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று சத்தீஸ்கட்டின் கபீர்தாம் மாவட்டத்தில் சுமார் 1700க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1.25 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சமூக ரீதியாக தங்கள் பெற்றோருக்குக் கடிதம் எழுதினார்கள். சிலர் ஆங்கிலத்திலும், சிலர் ஹிந்தியிலும், சிலர் சத்திஸ்கடின் மொழியிலும் தங்கள் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் வீடுகளில் கழிப்பறை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். கழிப்பறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தார்கள், சில சிறுவர்கள் இந்த ஆண்டு எனது பிறந்த நாளை நீங்கள் கொண்டாடா விட்டாலும் பரவாயில்லை, ஆனால் கண்டிப்பாக கழிப்பறையை கட்டித் தாருங்கள் என்ற அளவுக்குக் கூட எழுதியிருந்தார்கள். ஏழு முதல் 17 வயது வரையிலான பிள்ளைகள் இந்தப் பணியைச் செய்தார்கள். இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது, எந்த அளவுக்கு உணர்வுபூர்வமான பாதிப்பை உருவாக்கியது என்றால், அடுத்த நாள் அவர்கள் பள்ளிக்கூடம் வந்த போது, பெற்றோர்கள், ஆசிரியருக்கு அளிக்க ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்கள்; அதில் அவர்கள் குறிப்பிட்டதொரு தேதிக்குள்ளாக கழிப்பறை கட்டி முடித்துத் தருவதாக வாக்களித்திருந்தார்கள். யார் மனதில் இப்படிப்பட்டதொரு கருத்து உதித்ததோ, அவருக்கு என் வணக்கங்கள், யார் இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டார்களோ, அந்த மாணவர்களுக்கு என் வணக்கங்கள், தங்களின் பிள்ளைகள் எழுதிய கடிதத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒரு தேதிக்குள் கழிப்பறை கட்டித் தருவதாய் வாக்களித்த அந்த மாணவர்களின் தாய் தந்தையர்களுக்கு என் சிறப்பான வணக்கங்கள். இவையல்லவா நமக்கெல்லாம் கருத்தூக்கம் அளிக்கக் கூடியவை!!
கர்நாடகத்தின் கொப்பால் மாவட்டத்தில் 16 வயது நிரம்பிய மல்லம்மா என்ற ஒரு பெண் இருக்கிறார்; இந்தப் பெண் தனது குடும்பத்துக்கு எதிராக சத்தியாகிரஹம் செய்திருக்கிறார். அவர் உணவு நீர் என அனைத்தையும் எடுத்துக் கொள்வதை விட்டு விட்டாராம்; இதெல்லாம் ஏதோ அவர் தனக்கென ஒன்றை சாதிப்பதற்காகவோ, நல்ல துணிமணி உடுத்தவோ, இனிப்புக்களை உண்ணவோ செய்யவில்லை; பெண் குழந்தை மல்லம்மாவின் பிடிவாதம் நம் வீட்டிலும் ஒரு கழிப்பறை வேண்டும் என்பதற்காகத் தான். குடும்பத்தில் இப்படி ஒரு கழிப்பறை ஏற்படுத்தத் தேவையான பொருளாதார நிலை இல்லை, ஆனால் பெண்ணோ ஒரே கருத்தாக பிடிவாதமாக இருக்கிறாள், தனது சத்தியாகிரஹத்தை கைவிடுவதாயில்லை. கிராமத்தின் தலைவரான மொஹம்மத் ஷாஃபிக்கு, மல்லம்மா கழிப்பறை வேண்டி சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது; கிராமத் தலைவர் மொஹம்மத் ஷாஃபியின் சிறப்பையும் பாருங்கள், அவர் 18000 ரூபாய்க்கான ஏற்பாட்டைச் செய்தார், ஒரு வார காலத்துக்கு உள்ளாக கழிப்பறையை கட்டியும் கொடுத்து விட்டார். பெண் குழந்தை மல்லம்மாவின் பிடிவாதத்தின் சக்தியையும், மொஹம்மத் ஷாஃபி போன்ற ஒரு கிராமத் தலைவரின் பண்பினையும் பாருங்கள். மக்கள் சக்தி என்பது என்ன? எப்படி பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண்பது என்பதற்கான வழிகளை ஆராய்வது தான்.
எனதருமை நாட்டு மக்களே, தூய்மையான பாரதம் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கனவாக ஆகி இருக்கிறது. இது சில இந்தியர்களின் உறுதிப்பாடாகவும் மாறி இருக்கிறது. சிலர் இதை தங்கள் வாழ்வின் இலட்சியமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இதில் இணைந்திருக்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை நல்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெல்லாம் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது பற்றியெல்லாம் தினசரி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நீங்கள் 2 நிமிடங்கள், 3 நிமிடங்கள் கால அளவுக்குள் குறும்படங்கள் தயாரித்து
பாரத அரசுக்கு அனுப்பி வையுங்கள் என்ற கருத்தை அடியொற்றி நாங்கள் அழைப்பு விடுத்திருக்கிறோம், இது பற்றிய விபரங்கள் இணையதளத்தில் கிடைக்கும். அவற்றுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள், அவர்களுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். நீங்களும் இது போல குறும்படங்களைத் தயாரிக்கச் சொல்லி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று நான் தொலைக்காட்சி சேனல்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். படைப்புத் திறன் தூய்மை இயக்கத்துக்கு ஒரு சக்தியைக் கூட்டும், புதிய கோஷங்கள் கிடைக்கப் பெறும், புதிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம், புதிய கருத்தூக்கம் கிடைக்கும், இவை அனைத்தும் பொதுமக்களின் பங்களிப்பு மூலமாக, எளிமையான கலைஞர்கள் வாயிலாக ஏற்படும்; ஒரு படம் தயாரிக்க பெரிய ஸ்டூடியோ தேவை, பெரிய கேமிரா தேவை என்பதெல்லாம் இல்லை; இன்றைய காலகட்டத்தில் உங்கள் மொபைல் ஃபோனில் இருக்கும் கேமிராவையே பயன்படுத்தி நீங்கள் படம் தயாரிக்கலாம். முன்னேறிச் செல்வோம், உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்,
வாருங்கள்.
எனதருமை நாட்டு மக்களே, நமது அண்டை நாடுகளுடன் நமது உறவு ஆழமானதாக, இயல்பானதாக, உயிர்த்துடிப்போடு இருக்க வேண்டும் என்பதே பாரதத்தின் முயற்சியாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. மிகவும் மகத்துவம் நிறைந்த ஒரு விஷயம் கடந்த சில நாட்களில் அரங்கேறியிருக்கிறது; நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் ப்ரணப் முகர்ஜி அவர்கள் கோல்காத்தாவில் ஆகாஷ்வாணி மைத்ரீ சேனல் என்ற ஒரு புதிய நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ஒரு வானொலி சேனலை நாட்டின் குடியரசுத் தலைவரா தொடக்கி வைக்க வேண்டும் என்ற கேள்வி பலர் மனதில் எழலாம். ஆனால் இது ரேடியோவின் ஏதோ சாதாரண சேனல் அல்ல. இது அதிக மகத்துவம் வாய்ந்ததொரு முயற்சி. வங்காளதேசம் நமது அண்டை நாடு. வங்காளதேசமும், மேற்கு வங்கமும் ஒரே கலாச்சாரப் பாரம்பரிய ஊற்றுக்கண் கொண்டு
உயிர்த்திருப்பவை என்பதை நாம் அறிவோம். இங்கே ஆகாஷ்வாணி மைத்ரீயும், பாங்க்ளாதேஷ் பேதார் வானொலியும் எல்லைகளுக்கு அப்பாலும்,. ஒன்றோடு ஒன்று நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளும், இருதரப்பிலும் இருக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் ஆகாசவாணி கேட்டு மகிழ்வார்கள். மக்களோடு மக்களை தொடர்புப்படுத்துவது, ஆகாஷ்வாணியின் மிகப் பெரிய பங்களிப்பு. குடியரசுத் தலைவர் இதைத் தொடக்கி வைத்திருக்கிறார். இந்தப் பணியை நிறைவேற்ற நம்முடன் இணைந்த வங்காளதேச நாட்டுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அயலுறவுக் கொள்கையிலும் கூட தங்கள் பங்களிப்பை நல்கியதற்காக நான் ஆகாசவாணியைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனதருமை நாட்டு மக்களே, நீங்கள் அனைவரும் என்னை நாட்டின் பிரதமராக ஆக்கியிருக்கலாம், ஆனால் நானும் உங்களைப் போல ஒரு மனிதன் தானே! ஆகையால் சில வேளைகளில் என் மனதையும் சில உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் தொட்டு நனைத்து விடுகின்றன. அத்தகைய உணர்வு பூர்வமான சம்பவங்கள் புதுப்புது சக்தியையும், புதிய கருத்தூக்கத்தையும் அளிக்கின்றன; இவை தாம் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் நாட்டு மக்களுக்கு அளிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக எனக்கு வந்த ஒரு கடிதம் என் மனதைத் தொட்டு நனைத்தது. சுமார் 84 வயதான ஒரு தாய் எழுதியது இது; ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளாமல் இருந்திருந்தால், நான் கண்டிப்பாக அவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பேன். நீங்கள் எரிவாயுவுக்கான மானியத்தைத் துறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன்படி நானும் மானியத்தைத் துறந்தேன், அது பற்றி மறந்தும் போனேன். ஆனால் சில நாட்கள் முன்பாக உங்களைச் சேர்ந்தவர் ஒருவர் வந்து உங்களின் கடிதம் ஒன்றை என்னிடம் கொடுத்துச் சென்றார். மானியத்தைக் கைவிட்டதற்காக நன்றி தெரிவித்து நீங்கள் எழுதிய கடிதத்தை எனக்களித்தார். என்னைப் பொறுத்த மட்டில் பாரதத்தின் பிரதமர் எழுதிய கடிதம் என்பது பத்மஸ்ரீ விருதுக்கு ஒப்பானதாகவே நான் கருதுகிறேன்.
நாட்டுமக்களே, யாரெல்லாம் எரிவாயு மானியத்தைத் துறந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் என் தரப்பிலிருந்து ஒரு கடிதம் எழுதப்பட்டு, எனது பிரதிநிதி யாரோ ஒருவர் அதைச் சென்று மானியத்தைத் துறந்தவர்களிடம் அளிப்பார் என்ற முயற்சியை நான் மேற்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு கோடி பேர்களுக்கும் அதிகமானவர்களுக்குக் கடிதம் எழுதுவது எனது முயற்சியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி தான் எனது இந்தக் கடிதம் இந்தத் தாயிடம் சென்றடைந்திருக்கிறது. நீங்கள் நன்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் எழுதியிருந்தார். மேலும் அவர் எழுதுகையில், நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை, இன்னும் சில ஆண்டுகளில் என் வயது 90ஐத் தொட்டு விடும். ஏழைத் தாயமார்களுக்கு கரியடுப்பின்
புகையிலிருந்து விடுதலை அளிக்கும் விதமாக நீங்கள் இயக்கம் மேற்கொண்டு வருவதால், நான் 50000 ரூபாய்க்கான நன்கொடையை அனுப்பி வைத்திருக்கிறேன், ஏழைத் தாய்மார்களுக்கு கரியடுப்பின் புகையிலிருந்து விடுதலை அளிக்கும் பணிக்கு இந்தத் தொகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். தன் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு எளிய ஆசிரியை என்ற முறையில், கரியடுப்பின் புகையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழைத் தாய்மார்களுக்கு அந்தப் புகையிலிருந்து விடுதலை அளிக்கும் முகத்தான் 50000 ரூபாயை நன்கொடையாக அளிப்பது என்பதை உங்களால்
கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! விஷயம் 50000 ரூபாய் பற்றியது அல்ல; விஷயம் அந்தத் தாயின் உணர்வுகள் தொடர்பானது. இப்படிப்பட்ட கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளின் ஆசிகள் காரணமாகவே எனது நாட்டின் பிரகாசமான எதிர்காலம் குறித்த என் நம்பிக்கை வலுவடைகிறது. அவர் எழுதிய கடிதமும் கூட பிரதமர் என்ற முறையில் எனக்கு எழுதப்படவில்லை. மிகவும் எளிமையான வகையில் என்னை சகோதரர் மோதி என்று அழைத்து எழுதியிருந்தார். அந்தத் தாய்க்கு நான் சிரம் தாழ்த்துகிறேன், தாங்கள் கஷ்டங்களைத் தாங்கிக்
கொண்டு மற்றவர்களின் துயர் துடைக்க ஏதாவதொரு முயற்சியில் ஈடுபட்டு வரும் பாரதத்தின் கோடானுகோடி தாய்மார்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த ஆண்டு வறட்சி காரணமாக நாம் அவதிக்காட்பட்டோம். ஆனால் இந்த ஆகஸ்ட் மாதம் தொடர் வெள்ளங்கள் என்ற துயரத்தை அளித்திருக்கிறது. நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநில அரசுகளும், மத்திய அரசும், உள்ளாட்சி அமைப்புக்களும், சமூகநல அமைப்புக்களும், குடிமக்களும் தங்களாலியன்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் இந்த துயரம்தரு வெள்ளங்களுக்கு இடையேயும் நிகழ்ந்த சில செயல்கள் நினைவு கொள்ளத் தக்கவை. ஒன்றுபட்டு வாழ்வதில் இருக்கும் சக்தி என்ன, அனைவருமாக தோளோடு தோளிணைந்து பயணிக்கும் போது விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நமக்கு நினைவுறுத்தும். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எதிரும்புதிருமாக இருக்கும் அரசியல் கட்சிகள், நாடெங்கிலும் இருக்கும் 90 கட்சிகள், நாடாளுமன்றத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகள் என அனைவருமாக இணைந்து சரக்கு சேவை வரி மீதான சட்டத்தை இயற்றினார்கள். இதை நிறைவேற்றியதற்கான பாராட்டுதல்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் சாரும். அனைத்து அரசியல் கட்சிகளுமாக இணைந்து ஒரே நோக்கில் பயணித்தால் என்ன பலன் கிட்டும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டு இது. அதே போல கஷ்மீரத்தில் நடந்தவை தொடர்பாக, அங்கு நிலவும் சூழல் தொடர்பாக நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுமாக இணைந்து, ஒரே குரலில் காஷ்மீரப் பிரச்சனை குறித்து விவாதித்தார்கள். இதன் மூலம் உலகிற்கும் செய்தி விடுக்கப்பட்டது, பிரிவினைவாத சக்திகளுக்கும் செய்தி விடுக்கப்பட்டது, கஷ்மீரத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தங்கள் புரிந்துணர்வும் வெளிப்படுத்தப்பட்டது. காஷ்மீரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு ஒரு விஷயம் நன்கு புலப்பட்டது. அதை இரண்டு சொற்களில் நான் அடக்க வேண்டும் என்று சொன்னால், அவை ஒருமைப்பாடு, நேசம் ஆகியன தாம். இந்த இரண்டு சொற்கள் தாம் மூல மந்திரமாக மிளிர்ந்தன. கஷ்மீரத்தில் எந்த உயிரிழப்பு ஏற்பட்டாலும், அது ஒரு இளைஞனின் உயிராக இருக்கலாம் அல்லது பாதுகாப்புப் படை வீரரின் உயிராக இருக்கலாம், இழப்பு என்னவோ நம்முடையது தான், நம்மவர்களுடையது தான், நமது நாட்டினுடையது தான் என்பது நம் அனைவரது நம்பிக்கை, 125 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை, கிராமத் தலைவர் தொடங்கி நாட்டின் பிரதமர் வரையிலான அனைவரின் நம்பிக்கையும் கூட. கஷ்மீரத்தில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க சின்னஞ்சிறு பாலகர்களை முன்னிலைப்படுத்துபவர்கள், என்றாவது ஒரு நாள் இந்த களங்கமில்லா சிறுவர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். எனதருமை நாட்டு மக்களே, நாடு விசாலமானது, வேற்றுமைகள் நிறைந்தது. வேற்றுமைகள் நிறைந்த இந்த தேசத்தை ஒற்றுமை என்ற சூத்திரத்தால் இணைப்பது என்பது குடிமகன் என்ற முறையில், சமூகம் என்ற முறையில், அரசு என்ற முறையில், நம்மனைவரின் பொறுப்பாகும்; நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விஷயங்களுக்கு அதிக வலு சேர்ப்போம், அவற்றை அதிகம் முன்னிலைப்படுத்துவோம், அப்போது தான் தேசம் ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை நோக்கி நடை போட இயலும், நடை போடும். நாட்டின் 125 கோடி மக்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இத்துடன் இன்றைய மனதின் குரலை நிறைவு செய்கிறேன். மிக்க நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். நேற்று காலை தில்லியின் இளைஞர்களோடு சில கணங்களை கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, இனி வரும் நாட்களில் நாடு முழுவதிலும் விளையாட்டுகள் தொடர்பான உத்வேகம் ஒவ்வொரு இளைஞனின் உற்சாகத்தையும் குதூகலத்தையும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இன்னும் சில நாட்களில் உலக விளையாட்டுக்களின் மிகப் பெரிய கும்பமேளா நடைபெறவுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரியோ என்ற சொல் நமது காதுகளில் தொடர்ந்து ரீங்காரமிடவிருக்கிறது. அனைத்துலகத்தினரும் விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். உலகின் அனைத்து நாடுகளும் தங்களது விளையாட்டு வீரர்களின் வெளிப்பாட்டின் மீது உன்னிப்பான கவனத்தை செலுத்துவார்கள், நீங்களும் கவனம் செலுத்துவீர்கள். நம் மனங்களில் ஏராளமான ஆசைகளும் அபிலாஷைகளும் இருக்கின்றன, அதே வேளையில் ரியோவில் விளையாடச் சென்றிருக்கும் விளையாட்டு வீரர்களின் மனோதிடத்தையும், நம்பிக்கையையும் மேலும் பலப்படுத்தும் பணி 125 கோடி நாட்டு மக்களுடையது. நேற்று தில்லியில் இந்திய அரசு Run for Rio ஓட்டத்தை, விளையாடி, வாழு; விளையாடி, வளர்ச்சியடை என்ற ஒரு அருமையான ஏற்பாட்டை செய்திருந்தது. இனிவரும் நாட்களிலும், நாம் எந்தப் பகுதியில் இருந்தாலும், நமது விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுவோம். இந்த அளவுக்கு ஒரு விளையாட்டு வீரர் எட்டுகிறார் என்றால், அவர் மிகக் கடினமான முயற்சிக்குப் பிறகு தான் இந்த நிலையை எட்டுகிறார் என்று பொருள். இது ஒரு வகையில் மிகக் கடினமான ஒரு தவம். உணவின் மீது எத்தனை ஆசை அதிகம் இருந்தாலும், அவை அனைத்தையும் துறக்க வேண்டியிருக்கிறது. குளிரின் போது போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளும் ஆசை ஏற்படலாம், அப்போதும் கூட படுக்கையைத் துறந்து, மைதானத்தில் ஓடிப்பழக வேண்டியிருக்கிறது; இது விளையாட்டு வீரர்கள் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களின் தாய் தந்தையரும் கூட, அந்த வீரர்கள் காட்டும் அதே தீவிரத்தோடும், மும்முரத்தோடும், பிள்ளைகளின் நலனில் தங்கள் சக்தியை செலவு செய்கிறார்கள். ஒரே இரவில் எந்த விளையாட்டு வீரரும் உருவாவதில்லை. மிகத் தீவிரமான தவத்திற்குப் பிறகே அவர் உருவாகிறார். வெற்றியும் தோல்வியும் மகத்துவம் வாய்ந்தவை தாம் என்றாலும், இவற்றோடு கூடவே, விளையாட்டில் இந்த நிலையை எட்டுவது என்பதே கூட அதை விட மகத்துவம் நிறைந்தது; ஆகையால் நாட்டு மக்கள் நாமனைவரும் ரியோ ஒலிம்பிக்கிற்குச் சென்றிருக்கும் நமது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். உங்கள் தரப்பிலிருந்து இந்தப் பணியை நான் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை நமது விளையாட்டு வீரர்களுக்கு கொண்டு சேர்க்க நாட்டின் பிரதமர் தபால்காரர் ஆகத் தயாராக இருக்கிறார். நீங்கள் narendramodi appஇல் நமது விளையாட்டு வீரர்களுக்கு உங்கள் நல் வாழ்த்துக்களை அனுப்புங்கள், நான் உங்கள் நல் வாழ்த்துக்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். நானும் 125 கோடி நாட்டுமக்களைப் போல ஒரு குடிமகன் என்ற முறையில், விளையாட்டு வீர்களின் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளப்படுத்த உங்களோடு கரம் கோர்க்கிறேன். வாருங்கள், நாம் அனைவரும் இனிவரும் நாட்களில் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் எந்த அளவுக்கு கவுரவப்படுத்த முடியுமோ, அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்க முடியுமோ, அவற்றையெல்லாம் செய்வோம்; இன்று நான் ரியோ ஒலிம்பிக் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்த்தைச் சேர்ந்த ஒரு கவிதை விரும்பும் மாணவர் சூரஜ் பிரகாஷ் உபாத்யாய் எழுதி அனுப்பியிருக்கும் ஒரு கவிதையைப் படிக்கிறேன். இவரைப் போலவே மேலும் பல கவிஞர்கள் இந்தக் கருத்தில் இன்னும் கவிதைகளை எழுதியிருக்கலாம், சிலரோ அவற்றுக்கு மெட்டமைத்துப் பாடல்களாக ஆக்கியுமிருக்கலாம், ஒவ்வொரு மொழியிலும் இது போல நடந்திருக்கலாம், ஆனால் இன்று சூரஜ் அவர்கள் எனக்கு எழுதியனுப்பிய கவிதையை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விளையாட்டின் சவால் தொடங்கிவிட்டது
இனி போட்டிகள் பெருக்கெடுக்கும்.
விளையாட்டுகள் சங்கமிக்கும் இந்த கும்பமேளாவில்…
ரியோ தந்திடும் ஆனந்தத்தில்…
நல்லதொரு தொடக்கம் நமக்கும் கிடைக்கட்டும்.
தங்கம் வெள்ளி வெண்கலம் என்று
பாரதத்திற்குப் பதக்கமழை பொழியட்டும்.
வாய்ப்பு நம் வசமாக முனைப்புகள் பெருகட்டும்.
தங்கதின் மீது குறி வைப்போம்
தோல்வியை நினைத்து துவளவேண்டாம்.
பலகோடி பேர் கொள்ளும் பெருமிதமே
விளையாட்டின் உயிர்ப்பு.
சாதனை படைப்போம்..
ரியோவிலும் நம்கொடி பறக்கட்டும்.
சூரஜ் அவர்களே, உங்கள் உணர்வுகளை நான் இந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அர்ப்பணம் செய்கிறேன், மேலும் நான் என் தரப்பிலிருந்தும், 125 கோடி நாட்டுமக்கள் தரப்பிலிருந்தும், ரியோவில் நமது கொடி பெருமிதத்தோடு பறக்க, உங்களுக்கு ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. அங்கித் என்ற ஒரு இளைஞர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை எனக்கு நினைவுபடுத்தி இருக்கிறார். கடந்த வாரம் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாடும், ஒட்டுமொத்த உலகும் அஞ்சலி செலுத்தியது; ஆனால் எப்போதெல்லாம் அப்துல் கலாம் அவர்களின் பெயர் எடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அறிவியல், தொழில்நுட்பம், ஏவுகணை என்ற வகையில் திறன்கள்மிக்க பாரதம் பற்றிய ஒரு எதிர்காலச் சித்திரம் நமது கண்களில் நிழலாடுகிறது; அந்த முறையில், அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் உங்கள் அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அங்கித் கேட்டிருக்கிறார்? நீங்கள் கூறுவது சரி தான். இனிவரும் காலகட்டம் தொழில்நுட்பத்தால் இயங்குவது, தொழில்நுட்பமானது அதிகம் நிலையில்லாத ஒன்று. ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் மாறிக் கொண்டே வருகிறது, புதிய புதிய வடிவங்களை எடுக்கிறது, புதிய புதிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது, மாற்றங்களைத் தொடர்ந்து கண்டு வருகிறது. நீங்கள் தொழில்நுட்பத்தை பிடித்து இருத்தி வைக்க முடியாது, அப்படியே நீங்கள் பிடிக்கப் போனால், அதற்குள் அது எங்கோ தொலைவான இடத்தில், ஒரு புதிய வடிவத்தோடு பொலிவாக வீற்றிருக்கும். அதோடு நாம் நமது நடையை இசைவாக ஆக்க வேண்டுமென்றால், ஆய்வுகளும், புதுமைகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும், இவை தான் தொழில்நுட்பத்தின் உயிர். ஆய்வுகளும் புதுமைகளும் படைக்கப்படவில்லை என்றால், தேங்கியிருக்கும் நீரில் எப்படி முடைநாற்றம் வீசத் தொடங்கி விடுமோ, அதே போல தொழில்நுட்பமும் நமக்கு ஒரு சுமையாக ஆகி விடும். நாம் ஆராய்ச்சிகளும் புதுமைகளும் மேற்கொள்ளாமல், பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருப்போமேயானால், மாறி வரும் யுகத்தில் நாம் காலாவதியாகி விடுவோம்; ஆகையால் அறிவியலின் பால் நாட்டம், தொழில்நுட்பம், ஆராய்ச்சியின் பால் ஈர்ப்பு ஆகியவற்றை நமது இளைய சமுதாயத்தினர் மனதில் விதைக்க வேண்டும், அரசு இதற்கென பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் தான் நான் let us aim to innovate, புதுமைகள் படைப்பதைக் குறிக்கோளாக்குவோம் என்று கூறுகிறேன். இப்படி நான் AIM என்று கூறும் போது, Atal Innovation Mission என்பதே அதன் பொருள். நீதி ஆணையம் இந்த Atal Innovation Mission, அடல் புதுமைகள் படைத்தல் திட்டத்துக்கு ஊக்கமளித்து வருகிறது. இந்த Atal Innovation Mission வாயிலாக நாடு முழுவதிலும் innovation, experiment, entrepreneurship, அதாவது புதுமைகள், பரிசோதனைகள், தொழில்முனைவு ஆகியவை நிரம்பிய ஒரு சூழல் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெற்றால், நாட்டில் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். நாம் அடுத்த தலைமுறை புதுமை படைப்பவர்களை உருவாக்க வேண்டும் என்றால், நமது சிறுபிராயத்தினரை இந்தத் திட்டத்தோடு இணைக்க வேண்டும்; ஆகையால் தான் இந்திய அரசு Atal Tinkering Labs என்ற முனைப்பை மேற்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பள்ளிக்கூடங்களில் இப்படிப்பட்ட மெருகூட்டும் மையங்கள் நிறுவப்படுகிறதோ, அங்கெல்லாம் 10 இலட்சம் ரூபாய் அளிக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் பராமரிப்புக்காக மேலும் 10 இலட்சம் ரூபாய் அளிக்கப்படும். இதே போல புதுமைகள் படைத்தலோடு incubation centreம் நேரடியாக தொடர்பு உடையதாகிறது. நம்மிடம் சக்திவாய்ந்த, நிறைவான ஆக்க மையம் (incubation centre) இருந்தால், புதுமைகள் படைக்கவும், start upsக்காக பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்க்கவும், அவற்றை ஒருநிலைப்படுத்தவும் தேவையானதொரு அமைப்பு நமக்கு கிடைக்கிறது.
புதிய ஆக்க மையத்தை நிறுவுவதென்பது அவசியமான அதே வேளையில், பழைய மையங்களுக்கு வலுவூட்டுவதும் முக்கியமான ஒன்று. நான் Atal Incubation Centre பற்றிப் பேசும் போது, இதற்கென 10 கோடி ரூபாய் என்ற பெருந்தொகை அளிப்பது பற்றிக் கூட அரசு சிந்தித்திருக்கிறது. பாரதம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நமது அன்றாட வாழ்வினில் நம் கண்களுக்கு சிக்கல்கள் புலப்படுகின்றன. இப்போது நாம் தொழில்நுட்பத் தீர்வுகளைத் தேட வேண்டும். நாம் Atal Grand Challenges என்ற வகையில், எங்கெல்லாம் உங்கள் கண்களுக்கு பிரச்சனைகள் தென்படுகின்றனவோ, அவற்றுக்கு தீர்வேற்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் துணையை நாடுங்கள், ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள், புதுமைகள் படையுங்கள், வாருங்கள் என்று நாட்டின் இளைய தலைமுறையினருக்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கிறோம். பாரத அரசு நமது பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பத்துக்கு சிறப்பு விருது அளித்து ஊக்கமளிக்க விரும்புகிறது. நாங்கள் tinkering lab பற்றிப் பேசும் போது, சுமார் 13000த்துக்கும் அதிகமான பள்ளிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதும், நாங்கள் ஆக்க மையம் பற்றித் தெரிவித்த போது, கல்வி சார் மற்றும் கல்வி சாராத 4000த்துக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அத்தகைய மையங்களை அமைக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆராய்ச்சிகள் மேற்கொள்ளல், புதுமைகள் படைத்தல், நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் வாயிலாக தீர்வுகள் தேடல், நமது இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற எளிமையாக்குதல் ஆகியன தான் அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி என்பதை நான் தீர்மானமாக நம்புகிறேன். இவற்றின் மீது நமது இளைய தலைமுறையினர் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, 21ஆம் நூற்றாண்டின் நவீன பாரதம் சமைப்பதில் அந்த அளவுக்கு அவர்களின் பங்கு மகத்தானதாக இருக்கும், இதுவே அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளுக்கு நாம் செலுத்தக் கூடிய உண்மையான ச்ரத்தாஞ்சலியாகவும் அமையும்.
எனதருமை நாட்டுமக்களே, சில காலம் முன்பாக நம் மனங்களில் பஞ்சம் பற்றிய கவலை குடிகொண்டிருந்தது, இப்போதோ மழை ஆனந்தத்தை அளித்து வருகிறது, அதே வேளையில் வெள்ளப்பெருக்கு பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தோளோடு தோள் இணைந்து முழுமையான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மழை காரணமாக சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு மனித மனத்திலும் மலர்ச்சி ஏற்படுகிறது, ஏனென்றால் நமது அனைத்து பொருளாதார செயல்பாடுகளின் மையப் புள்ளியாக மழை இருக்கிறது, விவசாயம் இருக்கிறது. சில வேளைகளில் வாழ்க்கை முழுவதும் நம்மை வருத்தப்பட வைக்கக் கூடிய நோய்களும் நம்மை பீடித்து விடுகின்றன. ஆனால் நாம் விழிப்போடு இருந்தால், முனைப்போடு இருந்தால், அவற்றிலிருந்து தப்பும் வழிகளும் சுலபமானவை.
டெங்கு காய்ச்சலையே எடுத்துக் கொள்வோமே. டெங்கு காய்ச்சலிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். தூய்மை மீது சற்று கவனத்தை செலுத்த வேண்டும், சற்று விழிப்போடு இருக்க வேண்டும், தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும், குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும், இந்த டெங்கு நோய் ஏதோ ஏழையின் குடிலுக்குத் தான் வருகை புரியும் என்ற எண்ணம் இருக்கிறதே அதை விடுக்க வேண்டும். டெங்கூ அனைத்து வளங்களும் நிறைந்த செழிப்பான வீடுகளைத் தான் முதலில் தாக்கும் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் விளம்பரங்களைப் பார்த்திருந்தாலும், இந்தக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எப்போதாவது சற்றே சுணக்கமாக இருந்து விடுகிறோம். அரசு, மருத்துவமனைகள், மருத்துவர்கள் என்று அனைவரும் தங்கள் பணிகளை செய்து வந்தாலும் கூட, நாமும் நமது வீடுகளில், நமது பகுதிகளில், நமது குடும்பங்களில் டெங்குவை அனுமதிக்க கூடாது, தண்ணீர் மூலம் ஏற்படக் கூடிய எந்த நோயும் நெருங்கக் கூடாது என்பதில் விழிப்போடு இருக்க வேண்டும், இது தான் நான் உங்கள் அனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒரு பிரச்சனை தொடர்பாக எனதருமை நாட்டுமக்களே, நான் உங்கள் கவனத்தைத் திருப்ப விரும்புகிறேன். வாழ்க்கை எந்த அளவுக்கு அவசரகதி கொண்டதாகவும், வேகமானதாகவும் ஆகி விட்டதென்றால், சில வேளைகளில் நம்மைப் பற்றி சிந்திக்கக் கூட நமக்கு நேரமில்லாமல் போய் விடுகிறது. நோய் ஏற்படும் போது, விரைவாக குணமாக வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு antibioticஐ வாயில் போட்டு முழுங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போதைக்கு நோயிலிருந்து விடுதலை என்னவோ கிடைத்தாலும் எனதருமை நாட்டுமக்களே, கிடைத்த போதெல்லாம் ஏதோ ஒரு antibioticஐ போட்டுக் கொள்ளும் பழக்கம் மிகவும் மோசமான சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். சில கணங்களுக்கு வேண்டுமானால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம், ஆனால் மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் antibioticஐ எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் எழுதிக் கொடுக்காதவரை, நாம் அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வோம், நாம் இந்தக் குறுக்குவழியில் பயணிக்காமல் இருப்போம், ஏனென்றால் இதனால் மேலும் புதிய சிக்கல்கள் தான் அதிகரிக்கும். கண்ட கண்ட antibioticகளை எடுத்துக் கொள்வதன் காரணமாக நோயாளிக்கு என்னவோ அந்த வேளைக்கு நிவாரணம் கிடைத்தாலும், நோய் நுண்ணுயிரிகள் இந்த மருந்துகளுக்குப் பழக்கப்பட்டு, மீண்டும் இந்த மருந்துகளை உட்கொள்ளும் வேளையில் அவை பயனளிக்க முடியாதவையாகி விடுகின்றன; இதன் பிறகு மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குகிறது, புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது, அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது என்பவற்றிலெல்லாம் ஆண்டுகள் பல கழிந்து விடுகின்றன, அதற்குள்ளாக நோய்கள் புதிய சங்கடங்களைத் தோற்றுவித்து விடுவதால், நாம் இந்த விஷயத்தில் விழிப்போடு இருப்பது அவசியமாகிறது.
மேலும் ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது – மருத்துவர் 15 antibiotic மாத்திரைகளை 5 நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார் என்றால், தயவு செய்து மருத்துவர் கூறிய அளவு நாட்களில், அந்த பரிந்துரைப்படி நிறைவு செய்யுங்கள்; அரைகுறையாக அதை விட்டுவிடாதீர்கள்; அரைகுறையாக விடுவதன் காரணமாக நுண்ணுயிரிகள் பலமடையும், அதே போல தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், நுண்ணுயிர்க்கிருமிகள் பலமடையும்; ஆகையால் எத்தனை மாத்திரைகள், எத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறதோ அதை நிறைவு செய்ய வேண்டும்; உடல் நலமடைந்து விட்டது என்பதால், இனி தேவையில்லை என்று நாம் அரைகுறையாக விட்டு விட்டால், நுண்ணுயிர்க் கிருமிகளுக்கு ஆதாயமாகி, அவை மேலும் பலமடைந்து விடுகின்றன. மலேரியா, காசநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிர்க்கிருமிகள் மருந்துகள் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத வகையில், மருந்துக்கு எதிரான சக்தியை வளர்த்துக்கொள்கின்றன. மிக வேகமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மருத்துவ பரிபாஷையில் இதை antibiotic resistance என்று அழைக்கிறோம், ஆகையால் எந்த அளவுக்கு antibiotic, எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானதோ, அதே அளவுக்கு அவற்றை எடுத்துக் கொள்ளும் விதிமுறைகளைப் பின்பற்றுவதும் முக்கியமானவை தாம். அரசு antibiotic resistanceஐ தடுப்பதில் உறுதியாக இருக்கிறது; இப்போதெல்லாம் விற்கப்படும் antibioticமருந்துகள் பட்டையின் மேலே சிவப்பு நிறத்தில் ஒரு கோடு வரையப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், இது உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான், இதில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
உடல்நலம் பற்றி நாம் பேசும் போது, இதில் மேலும் ஒரு விஷயத்தை நான் இணைக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் உடல்நலம் சில வேளைகளில் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சுமார் 3 கோடி பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள், ஆனால் சில தாய்மார்கள் பிள்ளைப்பேற்றின் போது இறக்கிறார்கள், சில சிசுக்கள் பிரசவத்தின் போது மரிக்கின்றன. சில வேளைகளில் தாய்-சேய் இருவருமே கூட இறந்து விட நேர்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தாய்மார்களின் அகால மரணத்தின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான் என்றாலும், இன்றும் கூட கர்ப்பிணித் தாய்மார்களின் உயிர்களை அதிகமாக நம்மால் காப்பாற்ற இயலாத நிலை நிலவுகிறது. பிரசவ காலத்திலோ, அதற்குப் பின்னரோ ரத்தக் குறைபாடு, பிரசவம் தொடர்பான நோய் தொற்றுக்கள், உயர் ரத்த அழுத்தம் என எந்த மாதிரியான இடர் அவர்களின் உயிருக்கு உலையாக அமையும் என்பதே தெரியாத அவல நிலை. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பாரத அரசு கடந்த சில மாதங்களாக ஒரு புதிய இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது – பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான், அதாவது பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மைத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும், அரசு மருத்துவ மையங்களில் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதியன்று, கட்டணமில்லா பரிசோதனை நிகழ்த்தப்படும். பைஸா செலவின்றி ஒவ்வொரு மாதம் 9ஆம் தேதியன்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இது மேற்கொள்ளப்படும். உங்கள் வீட்டில் இருக்கும் கருவுற்றப் பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதியன்று அளிக்கப்பட்டு வரும் இந்த சேவையின் பலனை அளியுங்கள் என்று அனைத்து ஏழைக் குடும்பத்தாரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 9ஆவது மாதம் நெருங்கும் சமயத்தில் சிக்கல் ஏதேனும் ஏற்படும் சாத்தியக்கூறு இருக்குமேயானால், அதற்கான தீர்வையும் திட்டமிட்டுக் கொள்ள இது வசதியாக இருக்கும். தாய்-சேய் இருவரின் உயிரும் காப்பாற்றப்பட, சிறப்பாக ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதியன்று ஏழை அன்னையர்களுக்கு என இலவசமாக இப்படிப்பட்ட ஒரு சேவையை செய்ய முடியாதா என்று மகப்பேறு நல மருத்துவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். எனது மருத்துவ சகோதர சகோதரியர்கள் ஓராண்டில் 12 நாட்கள் ஏழைகளுக்காக இந்தப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முடியாதா? கடந்த நாட்களில் பலர் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் என் விண்ணப்பத்துக்கு செவிசாய்த்து செயல்படுத்தியும் வருகிறார்கள், ஆனால் பாரதம் மிகப் பெரிய தேசம், இந்த இயக்கத்தில் இலட்சக்கணக்கான மருத்துவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கண்டிப்பாக இதில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, இன்று உலகம் முழுவதிலும் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் ஆகியன பற்றிய கவலை மேலோங்கி இருக்கிறது. நாட்டிலும் உலகெங்கிலும் மக்கள் மத்தியில் இவை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாரதம் பல நூற்றாண்டுகளாகவே இந்தக் கருத்துக்கு வலு சேர்த்து வந்திருக்கிறது. குருக்ஷேத்திர யுத்தத்தில் கூட பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் மரங்கள் பற்றித் தெரிவிக்கிறார், யுத்தபூமியிலே மரங்கள் பற்றிய விவாதமும், அவை தொடர்பான கவலையும் கொள்வது என்பது அவற்றின் மகத்துவம் பற்றி நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. கீதையில் பகவான் கிருஷ்ணர், அச்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம்,அதாவது மரங்களில் நான் அரசமரம் என்கிறார். சுக்ரநீதியோ, நாஸ்தி மூலம் அனவுஷதம், அதாவது மருத்துவ குணமே இல்லாத எந்த ஒரு தாவரமும் இல்லை என்கிறது. மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் மிக விரிவான முறையில், மரம் வைத்தவனுக்கு அந்த மரம் பெற்ற குழந்தை போன்றது, இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பறைசாற்றுகிறது. எவனொருவன் மரத்தை தானமாக அளிக்கிறானோ, அவன் பெற்ற மக்கட்செல்வத்தைப் போல பரலோகத்தில் அவனை கரை சேர்க்க அந்த மரம் உதவியாக இருக்கும். ஆகையால், தங்கள் நலனைப் பேண நினைக்கும் தாய் தந்தையர் நல்ல மரங்களை நட்டு, அவற்றை தங்கள் மக்கட்செல்வங்களுக்கு இணையாக பராமரிக்க வேண்டும். நமது சாத்திரமான கீதையாகட்டும், சுக்ரநீதியாகட்டும், மஹாபாரதத்தின் அனுசாசன பர்வமாகட்டும், அவற்றில் காணப்படும் விஷயங்களை இன்றும் கூட தங்கள் ஆதர்ஸங்களாகக் கருதி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். புனேயைச் சேர்ந்த ஒரு பெண் சோனலின் எடுத்துக்காட்டு என் கவனத்தைக் கவர்ந்தது, இது என் மனதை வருடியது. மஹாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில், மரங்கள் பரலோகத்திலும் கூட மக்கட்செல்வத்தின் கடமைகளை ஆற்றுகின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. சோனல் தனது தாய் தந்தையின் விருப்பத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்தின் விருப்பங்களையும் நிறைவு செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மஹாராஷ்ட்ரத்தின் புனேயைச் சேர்ந்த ஜுன்னர் தாலுகாவில் நாராயண்பூர் கிராமத்தின் விவசாயி கண்டூ மாருதி மஹாத்ரே; அவர் தனது பேத்தி சோனலின் திருமணத்தை உற்சாகம் அளிக்கும் வகையில் புதுமையாக கொண்டாடினார். சோனலின் திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள், விருந்தாளிகள் அனைவருக்கும் கேஸர் மாஞ்செடி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார்; சமூக வலைத்தளத்தில் நான் படத்தைப் பார்த்த போது, ஊர்வலத்தில் எங்கு பார்த்தாலும் மரங்களே தென்பட்டன. இது மனதைத் தொடக் கூடிய ஒரு அருமையான காட்சி. சோனலே கூட ஒரு விவசாயப் பட்டதாரி, திருமணத்தில் மாமரக் கன்றுகளை அன்பளிப்பாக அளிப்பது என்ற கருத்து அவர் மனதில் உதித்த ஒன்று. பாருங்கள் இயற்கை மீது தான் கொண்ட நேசத்தை என்னவொரு அருமையான வழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வகையில் சோனலின் திருமணம் இயற்கை மீதான நேசத்தின் அமரகாதையாக ஆகியிருக்கிறது. நான் சோனலுக்கும் திரு மஹாத்ரே அவர்களுக்கும் இந்த நூதன முயற்சியை மேற்கொண்டமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட பல முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். நான் குஜராத்தின் முதல்வராக இருந்த காலகட்டத்தில், பாத்ர மாதத்தின் போது அங்கே இருக்கும் அம்பா தேவி கோயிலில், மிகப் பெரிய அளவில் பாதயாத்திரிகள் வருவதைப் பார்த்திருக்கிறேன்; ஒரு முறை ஒரு சமூக சேவை அமைப்பு, கோயிலுக்கு வழிபட வருபவர்களுக்கு பிரசாதமாக ஒரு மரக்கன்றை அளித்து, இதைக் கொண்டு சென்று உங்கள் கிராமத்தில் நட்டு வளர்த்தால், தாய் அம்பா உங்களுக்கு தன் ஆசிகளை தொடர்ந்து அளித்து வருவாள் என்று தெரிவித்தது. வந்த பல இலட்சக்கணக்கான பாதயாத்திரிகளுக்கும் அந்த ஆண்டு பல இலட்சம் மரக்கன்றுகளை அளித்தார்கள். கோயில்களே கூட பிரசாதத்துக்கு பதிலாக மழைக்காலத்தில் மரக்கன்றுகளை அளிக்கும் பாரம்பரியத்தை ஆரம்பிக்கலாம். இது மரம் நடுதல் தொடர்பான ஒரு மக்கள் இயக்கத்துக்கு வழிவகுக்கக் கூடும். நான் மீண்டும் மீண்டும் என் விவசாய சகோதரர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நமது விளைநிலங்களின் எல்லையோரங்களில் மரங்களாலான வேலிகளை அமைத்து நமது நிலங்களை வீணாக்குவதற்கு பதிலாக நாம் ஏன் தேக்கு மரத்தை வளர்க்க கூடாது? இன்று பாரதத்தில் வீடு கட்ட, நாற்காலிகள் போன்ற பொருட்களைத் தயாரிக்க, ஏகப்பட்ட மரத்தை நாம் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டி இருக்கிறது. நாம் நமது வயல்களோரமாகவே இப்படிப்பட்ட மரங்களை நட்டால், அவை மரச்சாமான்கள் செய்ய உதவியாகவும் இருக்கும், 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசின் அனுமதி பெற்று அவற்றை வெட்டி நாம் விற்றுக் காசாக்கவும் முடியும், இது உங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு வழிவகையாக அமையும், பாரதத்தின் மர இறக்குமதிச் செலவும் குறையும். கடந்த சில நாட்களாக பல மாநிலங்கள் இந்த பருவநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பல இயக்கங்களை நடத்தி வந்தார்கள்; பாரத அரசும் CAMPA என்றதொரு சட்டத்தை இப்போது இயற்றியிருக்கிறது; இதன்படி, மரம் நடுவதற்கென்றே சுமார் 40000 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை மாநிலங்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது. மஹாராஷ்ட்டிர அரசு ஜூலை மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலத்தில் சுமார் 2.25 கோடி மரக்கன்றுகளை நட்டிருக்கிறது என்ற தகவல் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு 3 கோடி மரக்கன்றுகளை நடும் தீர்மானமும் மேற்கொண்டிருக்கிறார்கள். அரசு ஒரு மக்கள் இயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தானம் ஒரு பாலைவனப் பிரதேசம். அங்கே கூட மிகப் பெரிய அளவில் ஒரு வன மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டு, 25 இலட்சம் மரங்கள் நடப்படும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இராஜஸ்தானத்தில் 25 இலட்சம் மரக்கன்றுகள் நடுவது என்பது ஒரு சிறிய காரியம் அல்ல. ராஜஸ்தானத்து பூமி பற்றித் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும் இது எத்தனை பெரிய சவாலான விஷயம் என்பது. ஆந்திரப் பிரதேசத்தில் 2029க்குள்ளாக 50 சதவீத அளவுக்கு பசுமையை அதிகரிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் தன் பங்குக்கு green india mission, பசுமை இந்தியா இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இரயில்வேயும் தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது. குஜராத்தில் கூட வன மஹோத்ஸவம் என்பது மிகப் பிரபலமான ஒரு பாரம்பரியம். இந்த ஆண்டு குஜராத்தில் மாமர வனம், ஏகதா வனம், ஷஹீத் வனம் என பலவகைகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன, இதில் பல கோடி மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. என்னால் பாராட்டுக்கு தகுதியான அனைத்து மாநிலங்கள் பற்றியும் தெரிவிக்க முடியவில்லை. என்றாலும் அனைவருமே பாராட்டத் தகுதியானவர்கள் தாம்.
எனதருமை நாட்டு மக்களே, கடந்த நாட்களில் தென்னாப்பிரிக்கா பயணிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இது எனது முதல் தென்னாப்பிரிக்கப் பயணம்; அயல்நாட்டுப் பயணம் என்றாலே ராஜரீகம் / diplomacy என்பது இணைபிரியாத அங்கம், வர்த்தகம் பற்றிய விவாதங்கள், பாதுகாப்பு தொடர்பான உரையாடல்கள் என பல துறைகளில் பன்னாட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் தென்னாப்பிரிக்கப் பயணம் என்பது ஒரு வகையில் ஒரு தலயாத்திரைக்கு ஒப்பானது. தென்னாப்பிரிக்காவைப் பற்றி நினைக்கும் போது காந்தியடிகள், நெல்ஸன் மண்டேலா ஆகியோர் பற்றிய நினைவுகள் மனதில் எழுவது என்பது இயல்பான ஒன்று. உலகில் அகிம்ஸை, நேசம், மன்னித்தல் ஆகிய சொற்கள் காதுகளில் வந்து விழும் போது, காந்தியடிகள், மண்டேலா ஆகியோரின் முகங்களே நமக்கு முன்னால் காட்சியளிக்கும். எனது தென்னாப்பிரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக நான் phoenix குடியிருப்புக்குச் செல்ல நேர்ந்தது; காந்தியடிகள் வசித்த இடம் சர்வோதய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. காந்தியடிகள் எந்த ரயிலில் பயணித்தாரோ, எந்த ரயிலில் நடந்த நிகழ்வு மோஹந்தாஸை காந்தியடிகளாக மாற்றும் விதையை விதைத்ததோ, அந்த பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடிய நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சமத்துவம், சமவாய்ப்பு ஆகியவற்றுக்காக தங்களது இளமைக் காலத்தை தியாகம் செய்த பல மகத்துவம் நிறைந்த மனிதர்களை இந்த முறை என் பயணத்தில் நான் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நெல்சன் மண்டேலாவோடு தோளோடு தோள் சேர்ந்து போராடி, 20-25 ஆண்டுக்காலம் வரை சிறைச்சாலைகளில் அவரோடு கழித்தவர்கள் இவர்கள். ஒரு வகையில் தங்கள் ஒட்டுமொத்த இளமையையும் அவர்கள் தியாகம் செய்திருந்தார்கள், நெல்ஸன் மண்டேலாவுக்கு நெருக்கமான அஹமத் கதாடா அவர்கள், லாலூ (CHEEBA) சீபா அவர்கள், ஜார்ஜ் பெஸோஸ் அவர்கள் ரோனீ காஸ்ரில்ஸ் ஆகிய மகத்துவம் நிறைந்த மனிதர்களை தரிசிக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அவர்கள் பாரத வம்சாவழியினராக இருந்தாலும், அவர்கள் குடிபெயர்ந்த, அந்த நாட்டுக்குரியவர்களாகவே ஆகி விட்டிருந்தார்கள். எவர்கள் மத்தியில் வாழ்ந்தார்களோ, அவர்களுக்காகவே தங்கள் உயிரையும் துறக்கத் தயாராகி விட்டிருந்தார்கள். நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவர்களின் சிறை அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் மனங்களில் யாருக்கெதிராகவும் எந்த ஒரு கசப்புணர்வும் காணப்படவில்லை, துவேஷம் தென்படவில்லை. இத்தனை பெரிய தவமியற்றிய பின்னரும் கூட, தங்கள் தியாகங்களை விலைபொருளாக்கும் உணர்வேதும் அவர்கள் முகங்களில் சிறிதளவும் தென்படவே இல்லை. ஒரு வகையில் கடமையுணர்வு மேலோங்கிக் காணப்பட்டது – கீதையில் உபதேசிக்கப்பட்ட பற்றற்ற கடமையாற்றுபவர்களின் உருவங்களாக அவர்கள் காட்சியளித்தார்கள். என் மனதில் இந்த நினைவலைகள் காலாகாலத்திற்கும் பொதிந்திருக்கும். எந்த ஒரு சமுதாயமாகட்டும், அரசாகட்டும், சமத்துவம், சமவாய்ப்பு என்பதை விடப் பெரியதொரு மந்திரம் வேறேதும் இருக்க முடியாது. அனைவரும் சமம், அனைவரும் நம்மவர்கள் என்ற உணர்வு தாம் நம்மை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும் வழிகள். நாமனைவருமே உன்னதமான வாழ்க்கை வாழ விரும்புகிறோம். நமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொருவரின் தேவையும் வேறுபட்டு இருக்கின்றது, நம்முடைய முன்னுரிமைகள் வித்தியாசமானவை என்றாலும், வழி என்னவோ ஒன்று தான், அந்தப் பாதை முன்னேற்றம், சமத்துவம், சமவாய்ப்பு, அனைவரும் சமமானவர்கள், அனைவரும் எம் மக்கள் என்ற உணர்வு ஆகியவை தாம். வாருங்கள், தென்னாப்பிரிக்காவிலும் கூட நமது வாழ்க்கையின் மூல மந்திரங்களை வாழ்ந்து காட்டியிருக்கும் இந்த இந்தியர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்வோம்.
எனதருமை நாட்டு மக்களே, எனக்கு இந்தத் தகவல் அனுப்பியதற்காக நான் ஷில்பி வர்மா அவர்களுக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன், அவரது இந்தக் கவலை மிகவும் இயல்பான ஒன்று தான். அவர் எனக்கு ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி இருக்கிறார்.
’’ பிரதமர் அவர்களே, பெங்களூரூவிலிருந்து நான் ஷில்பி வர்மா பேசுகிறேன். மோசடி மற்றும் ஏமாற்று மின்னஞ்சல் வலையில் சிக்கிய ஒரு பெண் 11 லட்சம் ரூபாயை இழந்து முடிவாகத் தற்கொலை செய்து கொண்டார் என்று அண்மையில் நான் ஒரு செய்திக் கட்டுரையில் படித்தேன். ஒரு பெண் என்ற முறையிலும் அவரது குடும்பத்தார் நிலை குறித்தும் எனக்கு மிகவும் துயரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மோசடி மின்னஞ்சல்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்.”
நமது மொபைல் போனில், நமது மின்னஞ்சலில் எல்லாம் இப்படிப்பட்ட மிகவும் கவரக்கூடிய விஷயங்கள் வருகின்றன என்ற தகவல் உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது, நீங்கள் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை செலுத்தி, அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று யாரோ ஒருவர் தகவல் அனுப்பியிருப்பார். அந்த வார்த்தைகளில் மயங்கி சிலர் பணத்தாசையில் விழுந்து சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களவாடும் ஒரு புதிய உத்தி உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. எப்படி தொழில்நுட்பம் பொருளாதார அமைப்பில் மிகப் பெரிய பங்காற்றுகிறதோ, அதன் தவறான பயன்பாடும் பெருகி வருகிறது. பணி ஓய்வு பெற்று, மகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டிய கட்டத்தில், சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்டு வாழ இருப்பவருக்கு ஒரு நாள் ஒரு குறுஞ்செய்தி வந்தது, அயல்நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு பெரிய வெகுமதி கிடைத்திருக்கிறது, இதை அடைய வேண்டுமென்றால், சுங்கத் தீர்வைக்காக 2 இலட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் போடுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நபரும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சேமித்த 2 இலட்சம் ரூபாயை எடுத்து, முகம் பெயர் தெரியாத ஒரு மனிதனுக்கு அனுப்பினார். தான் முழுமையாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொள்ள அவருக்கு சில கணங்களே பிடித்தன. மிக நேர்த்தியான வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்களே, இது சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று நீங்களே கூட மயங்கிப் போகலாம். போலியான லெட்டர் பேடை யார் வேண்டுமானாலும் உருவாக்கி அதன் மூலம் அனுப்பி வைக்க முடியும், உங்கள் கடன் அட்டை எண், Debit card எண் ஆகியவற்றைப் பெறுகிறார்கள், தொழில்நுட்பம் வாயிலாக உங்கள் வங்கிக் கணக்கை சுத்தமாகத் துடைத்து விடுகிறார்கள். இது புது விதமான மோசடி, இது டிஜிட்டல் மோசடி. இந்த மோகத்திலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன், விழிப்போடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், இது போன்ற கடிதங்கள் வந்தால், அவற்றை உடனடியாக நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவ வேண்டும். ஷில்பி வர்மா அவர்கள் நல்ல காலம் எனக்கு இதை நினைவூட்டினார்கள். இவை போன்ற கடிதங்கள் உங்களுக்கும் வந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அவற்றின் மீது அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில், நாட்டுமக்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டி வருகிறது. நமது மன்ற உறுப்பினர்களும் கூட தத்தமது தொகுதிகளில் இருக்கும் மக்களை அழைத்து வந்து சந்திக்கச் செய்கிறார்கள், தங்களது இடர்களைப் பற்றித் தெரிவிக்கிறார்கள். இப்படிப்படிப்பட்ட ஒரு சந்திப்பின் போது எனக்கு ஒரு சுகமான அனுபவம் ஏற்பட்டது. அலீகரைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த மாணவ மாணவியரிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, அவர்கள் மிகப் பெரிய ஆல்பம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்கள், அவர்கள் முகங்களில் சந்தோஷம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அலீகட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அலீகட் ரயில் நிலையத்தை அழகுபடுத்தியிருக்கும் படங்களைத் தங்களோடு கொண்டு வந்திருந்தார்கள். ரயில் நிலையத்தில் கலைநயத்தோடு கூடிய ஓவியங்களை வரைந்திருந்தார்கள். அது மட்டுமல்ல, கிராமத்தின் குப்பைக் கூளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது எண்ணை பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றில் மண்ணை இட்டு நிரப்பி, செடிகளை நட்டு, vertical garden எனும் அடுக்குத் தோட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அடுக்குத் தோட்டத்தை அவர்கள் உருவாக்கி, நிலையத்துக்கு ஒரு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். உங்களுக்கும் அலீகட் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால், அவசியம் ரயில் நிலையம் சென்று பாருங்கள். பாரதத்தின் பல ரயில் நிலையங்கள் தொடர்பான இப்படிப்பட்ட தகவல்கள் எனக்கு இப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் ரயில் நிலையங்களின் சுவர்களில் தங்கள் வட்டார கலையம்சங்களைக் கொண்டு அழகுபடுத்துகிறார்கள். ஒரு புதிய உணர்வை உணரமுடிகிறது. மக்கள் பங்களிப்பு வாயிலாக எப்படி மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நாட்டில் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் என் பாராட்டுதல்கள், சிறப்பாக அலீகட்டின் எனது தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டு மக்களே, மழைக்காலத்தோடு ஒட்டி நம் நாட்டில் பல பண்டிகைகளின் பருவமும் தொடங்குகிறது. இனிவரும் காலங்களில் பல இடங்களில் விழாக்கள் நடைபெறவிருக்கின்றன. கோயில்களும், வழிபாட்டு இடங்களிலும் திருவிழாக்கள் நடைபெறவிருக்கின்றன. நீங்களும் உங்கள் இல்லங்களிலும், வெளியிடங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். ரக்ஷா பந்தன் பண்டிகை மிகவும் மகத்துவம் நிறைந்த ஒன்று. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், ரக்ஷாபந்தன் காலகட்டத்தில், நாட்டின் தாய்மார்கள்-சகோதரிகளுக்கு நீங்கள் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையோ ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையோ பரிசாக அளிக்க முடியாதா? சிந்தியுங்கள் சகோதரர்களே, வாழ்க்கையில் உங்கள் சகோதரி உண்மையிலேயே பாதுகாப்பாக உணரக் கூடிய வகையில் ஒரு பரிசை அளியுங்கள். ஏன், நமது இல்லங்களில் உணவு சமைக்கவோ, வீட்டு வேலைகளைச் செய்யவோ ஒரு பெண்ணை நாம் அமர்த்தியிருக்கலாம், அல்லது ஏதேனும் ஏழைத் தாயின் மகளாக அவர் இருக்கலாம். இந்த ரக்ஷாபந்தன் பண்டிகையின் போது அவர்களுக்கும் பிரதம மந்திரி ஆயுள் பாதுகாப்புத் திட்டம் அல்லது ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பரிசாக அளிக்கலாம் இல்லையா? இது தானே சமூகப் பாதுகாப்பு, இது தானே ரக்ஷாபந்தனுக்கான சரியான அர்த்தம்?
எனதருமை நாட்டுமக்களே, நம்மில் பலர் நாடு விடுதலை அடைந்த பிறகு பிறந்திருப்பார்கள். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதம மந்திரி என்றால் அது நானாகத் தான் இருக்கும். அகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவை விட்டு வெளியேறு, பாரதத்தை விட்டு வெளியேறு என்ற இந்த இயக்கம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியொடு நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. நாம் சுதந்திர இந்தியாவின் சுகமான காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமான குடிமக்கள் என்ற பெருமித உணர்வோடும் இருக்கிறோம். ஆனால் நமக்கெல்லாம் இத்தகைய சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவு கூரும் தருணமாக இது இருக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றி 75 ஆண்டுகளும், பாரதம் சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளும் நம் எல்லார் மனங்களிலும் ஒரு புதிய கருத்தூக்கத்தை, ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்த வல்லது… இது நாட்டுக்காக ஆக்கபூர்வமான ஏதோ ஒன்றை செய்யத் தூண்டும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்கலாம். தியாகிகளின் தியாகங்கள் நம் அனைவரின் கண்களையும் மனங்களையும் பனிக்கச் செய்யட்டும். நாலாபுறமும் சுதந்திரத்தின் சுகமான மணம் மீண்டும் ஒரு முறை வீசட்டும். இத்தகைய ஒரு சூழலை நாம் ஏற்படுத்தலாம். சுதந்திரத் திருநாள் என்பது அரசுகளின் நிகழ்ச்சி அல்ல, இது நாட்டு மக்களுடையதாக இருக்க வேண்டும். தீபாவளியைப் போல இந்தத் திருநாளை நாம் நமது பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். தேசபக்தி என்ற கருத்தூக்கத்தோடு இணைந்து நாம் ஏதோ ஒரு ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது தொடர்பான புகைப்படத்தைக் கண்டிப்பாக narendramodiappஇல் அனுப்பி வையுங்கள். நாட்டில் நல்லதொரு சூழலை ஏற்படுத்துங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஒரு நல்வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது. இது ஒரு பாரம்பரியமான நிகழ்வு. உங்கள் மனங்களில் நீங்கள் தெரிவிக்க விரும்பும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம். அதை நீங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க விரும்பலாம். அதை செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து தெளிவுபட உரைக்க நான் உங்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறேன். அப்படிப்பட்ட உங்களின் கருத்துக்களை உங்களின் ஒரு பிரதிநிதியாக, நாட்டின் பிரதம சேவகன் என்ற வகையில் நான் எதிரொலிக்கிறேன். கண்டிப்பாக உங்கள் ஆலோசனைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள், புதிய கருத்துக்களைத் தெரிவியுங்கள். நான் உங்கள் கருத்துக்களை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பிரதமருடையதாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமல்ல. செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து தெரிவிக்கப்படுபவை, 125 கோடிமக்களுடைய உணர்வுகளாக இருக்க வேண்டும். கண்டிப்பாக நீங்கள் உங்கள் உணர்வுகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். நரேந்திர மோடி செயலியிலோ, mygov.in இலோ அனுப்பலாம். தொழில்நுட்பம் மிகவும் எளிமையாக ஆகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் மிக சுலபமாக விஷயங்களை என்னிடம் அனுப்பி வைக்கலாம். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய புண்ணியம் நிறைந்த நினைவுகளால் நம்மை நிரம்பிக் கொள்வோம் வாருங்கள். பாரதத்துக்காக முழுமையான தியாகம் செய்த அந்த மஹா புருஷர்களின் தூய நினைவுகள் நம்மை ஆட்கொள்ளட்டும், நாட்டுக்காக நல்லன செய்வோம் என்ற மன உறுதிப்பாட்டோடு முன்னேறிச் செல்வோம். நெஞ்சார்ந்த வாழ்த்துகள், மிக்க நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். நேற்று காலை தில்லியின் இளைஞர்களோடு சில கணங்களை கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, இனி வரும் நாட்களில் நாடு முழுவதிலும் விளையாட்டுகள் தொடர்பான உத்வேகம் ஒவ்வொரு இளைஞனின் உற்சாகத்தையும் குதூகலத்தையும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இன்னும் சில நாட்களில் உலக விளையாட்டுக்களின் மிகப் பெரிய கும்பமேளா நடைபெறவுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரியோ என்ற சொல் நமது காதுகளில் தொடர்ந்து ரீங்காரமிடவிருக்கிறது. அனைத்துலகத்தினரும் விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். உலகின் அனைத்து நாடுகளும் தங்களது விளையாட்டு வீரர்களின் வெளிப்பாட்டின் மீது உன்னிப்பான கவனத்தை செலுத்துவார்கள், நீங்களும் கவனம் செலுத்துவீர்கள். நம் மனங்களில் ஏராளமான ஆசைகளும் அபிலாஷைகளும் இருக்கின்றன, அதே வேளையில் ரியோவில் விளையாடச் சென்றிருக்கும் விளையாட்டு வீரர்களின் மனோதிடத்தையும், நம்பிக்கையையும் மேலும் பலப்படுத்தும் பணி 125 கோடி நாட்டு மக்களுடையது. நேற்று தில்லியில் இந்திய அரசு Run for Rio ஓட்டத்தை, விளையாடி, வாழு; விளையாடி, வளர்ச்சியடை என்ற ஒரு அருமையான ஏற்பாட்டை செய்திருந்தது. இனிவரும் நாட்களிலும், நாம் எந்தப் பகுதியில் இருந்தாலும், நமது விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுவோம். இந்த அளவுக்கு ஒரு விளையாட்டு வீரர் எட்டுகிறார் என்றால், அவர் மிகக் கடினமான முயற்சிக்குப் பிறகு தான் இந்த நிலையை எட்டுகிறார் என்று பொருள். இது ஒரு வகையில் மிகக் கடினமான ஒரு தவம். உணவின் மீது எத்தனை ஆசை அதிகம் இருந்தாலும், அவை அனைத்தையும் துறக்க வேண்டியிருக்கிறது. குளிரின் போது போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளும் ஆசை ஏற்படலாம், அப்போதும் கூட படுக்கையைத் துறந்து, மைதானத்தில் ஓடிப்பழக வேண்டியிருக்கிறது; இது விளையாட்டு வீரர்கள் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களின் தாய் தந்தையரும் கூட, அந்த வீரர்கள் காட்டும் அதே தீவிரத்தோடும், மும்முரத்தோடும், பிள்ளைகளின் நலனில் தங்கள் சக்தியை செலவு செய்கிறார்கள். ஒரே இரவில் எந்த விளையாட்டு வீரரும் உருவாவதில்லை. மிகத் தீவிரமான தவத்திற்குப் பிறகே அவர் உருவாகிறார். வெற்றியும் தோல்வியும் மகத்துவம் வாய்ந்தவை தாம் என்றாலும், இவற்றோடு கூடவே, விளையாட்டில் இந்த நிலையை எட்டுவது என்பதே கூட அதை விட மகத்துவம் நிறைந்தது; ஆகையால் நாட்டு மக்கள் நாமனைவரும் ரியோ ஒலிம்பிக்கிற்குச் சென்றிருக்கும் நமது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். உங்கள் தரப்பிலிருந்து இந்தப் பணியை நான் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை நமது விளையாட்டு வீரர்களுக்கு கொண்டு சேர்க்க நாட்டின் பிரதமர் தபால்காரர் ஆகத் தயாராக இருக்கிறார். நீங்கள் narendramodi appஇல் நமது விளையாட்டு வீரர்களுக்கு உங்கள் நல் வாழ்த்துக்களை அனுப்புங்கள், நான் உங்கள் நல் வாழ்த்துக்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். நானும் 125 கோடி நாட்டுமக்களைப் போல ஒரு குடிமகன் என்ற முறையில், விளையாட்டு வீர்களின் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளப்படுத்த உங்களோடு கரம் கோர்க்கிறேன். வாருங்கள், நாம் அனைவரும் இனிவரும் நாட்களில் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் எந்த அளவுக்கு கவுரவப்படுத்த முடியுமோ, அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்க முடியுமோ, அவற்றையெல்லாம் செய்வோம்; இன்று நான் ரியோ ஒலிம்பிக் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்த்தைச் சேர்ந்த ஒரு கவிதை விரும்பும் மாணவர் சூரஜ் பிரகாஷ் உபாத்யாய் எழுதி அனுப்பியிருக்கும் ஒரு கவிதையைப் படிக்கிறேன். இவரைப் போலவே மேலும் பல கவிஞர்கள் இந்தக் கருத்தில் இன்னும் கவிதைகளை எழுதியிருக்கலாம், சிலரோ அவற்றுக்கு மெட்டமைத்துப் பாடல்களாக ஆக்கியுமிருக்கலாம், ஒவ்வொரு மொழியிலும் இது போல நடந்திருக்கலாம், ஆனால் இன்று சூரஜ் அவர்கள் எனக்கு எழுதியனுப்பிய கவிதையை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விளையாட்டின் சவால் தொடங்கிவிட்டது
இனி போட்டிகள் பெருக்கெடுக்கும்.
விளையாட்டுகள் சங்கமிக்கும் இந்த கும்பமேளாவில்…
ரியோ தந்திடும் ஆனந்தத்தில்…
நல்லதொரு தொடக்கம் நமக்கும் கிடைக்கட்டும்.
தங்கம் வெள்ளி வெண்கலம் என்று
பாரதத்திற்குப் பதக்கமழை பொழியட்டும்.
வாய்ப்பு நம் வசமாக முனைப்புகள் பெருகட்டும்.
தங்கதின் மீது குறி வைப்போம்
தோல்வியை நினைத்து துவளவேண்டாம்.
பலகோடி பேர் கொள்ளும் பெருமிதமே
விளையாட்டின் உயிர்ப்பு.
சாதனை படைப்போம்..
ரியோவிலும் நம்கொடி பறக்கட்டும்.
சூரஜ் அவர்களே, உங்கள் உணர்வுகளை நான் இந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அர்ப்பணம் செய்கிறேன், மேலும் நான் என் தரப்பிலிருந்தும், 125 கோடி நாட்டுமக்கள் தரப்பிலிருந்தும், ரியோவில் நமது கொடி பெருமிதத்தோடு பறக்க, உங்களுக்கு ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. அங்கித் என்ற ஒரு இளைஞர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை எனக்கு நினைவுபடுத்தி இருக்கிறார். கடந்த வாரம் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாடும், ஒட்டுமொத்த உலகும் அஞ்சலி செலுத்தியது; ஆனால் எப்போதெல்லாம் அப்துல் கலாம் அவர்களின் பெயர் எடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அறிவியல், தொழில்நுட்பம், ஏவுகணை என்ற வகையில் திறன்கள்மிக்க பாரதம் பற்றிய ஒரு எதிர்காலச் சித்திரம் நமது கண்களில் நிழலாடுகிறது; அந்த முறையில், அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் உங்கள் அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அங்கித் கேட்டிருக்கிறார்? நீங்கள் கூறுவது சரி தான். இனிவரும் காலகட்டம் தொழில்நுட்பத்தால் இயங்குவது, தொழில்நுட்பமானது அதிகம் நிலையில்லாத ஒன்று. ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் மாறிக் கொண்டே வருகிறது, புதிய புதிய வடிவங்களை எடுக்கிறது, புதிய புதிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது, மாற்றங்களைத் தொடர்ந்து கண்டு வருகிறது. நீங்கள் தொழில்நுட்பத்தை பிடித்து இருத்தி வைக்க முடியாது, அப்படியே நீங்கள் பிடிக்கப் போனால், அதற்குள் அது எங்கோ தொலைவான இடத்தில், ஒரு புதிய வடிவத்தோடு பொலிவாக வீற்றிருக்கும். அதோடு நாம் நமது நடையை இசைவாக ஆக்க வேண்டுமென்றால், ஆய்வுகளும், புதுமைகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும், இவை தான் தொழில்நுட்பத்தின் உயிர். ஆய்வுகளும் புதுமைகளும் படைக்கப்படவில்லை என்றால், தேங்கியிருக்கும் நீரில் எப்படி முடைநாற்றம் வீசத் தொடங்கி விடுமோ, அதே போல தொழில்நுட்பமும் நமக்கு ஒரு சுமையாக ஆகி விடும். நாம் ஆராய்ச்சிகளும் புதுமைகளும் மேற்கொள்ளாமல், பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருப்போமேயானால், மாறி வரும் யுகத்தில் நாம் காலாவதியாகி விடுவோம்; ஆகையால் அறிவியலின் பால் நாட்டம், தொழில்நுட்பம், ஆராய்ச்சியின் பால் ஈர்ப்பு ஆகியவற்றை நமது இளைய சமுதாயத்தினர் மனதில் விதைக்க வேண்டும், அரசு இதற்கென பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் தான் நான் let us aim to innovate, புதுமைகள் படைப்பதைக் குறிக்கோளாக்குவோம் என்று கூறுகிறேன். இப்படி நான் AIM என்று கூறும் போது, Atal Innovation Mission என்பதே அதன் பொருள். நீதி ஆணையம் இந்த Atal Innovation Mission, அடல் புதுமைகள் படைத்தல் திட்டத்துக்கு ஊக்கமளித்து வருகிறது. இந்த Atal Innovation Mission வாயிலாக நாடு முழுவதிலும் innovation, experiment, entrepreneurship, அதாவது புதுமைகள், பரிசோதனைகள், தொழில்முனைவு ஆகியவை நிரம்பிய ஒரு சூழல் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெற்றால், நாட்டில் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். நாம் அடுத்த தலைமுறை புதுமை படைப்பவர்களை உருவாக்க வேண்டும் என்றால், நமது சிறுபிராயத்தினரை இந்தத் திட்டத்தோடு இணைக்க வேண்டும்; ஆகையால் தான் இந்திய அரசு Atal Tinkering Labs என்ற முனைப்பை மேற்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பள்ளிக்கூடங்களில் இப்படிப்பட்ட மெருகூட்டும் மையங்கள் நிறுவப்படுகிறதோ, அங்கெல்லாம் 10 இலட்சம் ரூபாய் அளிக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் பராமரிப்புக்காக மேலும் 10 இலட்சம் ரூபாய் அளிக்கப்படும். இதே போல புதுமைகள் படைத்தலோடு incubation centreம் நேரடியாக தொடர்பு உடையதாகிறது. நம்மிடம் சக்திவாய்ந்த, நிறைவான ஆக்க மையம் (incubation centre) இருந்தால், புதுமைகள் படைக்கவும், start upsக்காக பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்க்கவும், அவற்றை ஒருநிலைப்படுத்தவும் தேவையானதொரு அமைப்பு நமக்கு கிடைக்கிறது.
புதிய ஆக்க மையத்தை நிறுவுவதென்பது அவசியமான அதே வேளையில், பழைய மையங்களுக்கு வலுவூட்டுவதும் முக்கியமான ஒன்று. நான் Atal Incubation Centre பற்றிப் பேசும் போது, இதற்கென 10 கோடி ரூபாய் என்ற பெருந்தொகை அளிப்பது பற்றிக் கூட அரசு சிந்தித்திருக்கிறது. பாரதம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நமது அன்றாட வாழ்வினில் நம் கண்களுக்கு சிக்கல்கள் புலப்படுகின்றன. இப்போது நாம் தொழில்நுட்பத் தீர்வுகளைத் தேட வேண்டும். நாம் Atal Grand Challenges என்ற வகையில், எங்கெல்லாம் உங்கள் கண்களுக்கு பிரச்சனைகள் தென்படுகின்றனவோ, அவற்றுக்கு தீர்வேற்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் துணையை நாடுங்கள், ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள், புதுமைகள் படையுங்கள், வாருங்கள் என்று நாட்டின் இளைய தலைமுறையினருக்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கிறோம். பாரத அரசு நமது பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பத்துக்கு சிறப்பு விருது அளித்து ஊக்கமளிக்க விரும்புகிறது. நாங்கள் tinkering lab பற்றிப் பேசும் போது, சுமார் 13000த்துக்கும் அதிகமான பள்ளிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதும், நாங்கள் ஆக்க மையம் பற்றித் தெரிவித்த போது, கல்வி சார் மற்றும் கல்வி சாராத 4000த்துக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அத்தகைய மையங்களை அமைக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆராய்ச்சிகள் மேற்கொள்ளல், புதுமைகள் படைத்தல், நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் வாயிலாக தீர்வுகள் தேடல், நமது இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற எளிமையாக்குதல் ஆகியன தான் அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி என்பதை நான் தீர்மானமாக நம்புகிறேன். இவற்றின் மீது நமது இளைய தலைமுறையினர் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, 21ஆம் நூற்றாண்டின் நவீன பாரதம் சமைப்பதில் அந்த அளவுக்கு அவர்களின் பங்கு மகத்தானதாக இருக்கும், இதுவே அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளுக்கு நாம் செலுத்தக் கூடிய உண்மையான ச்ரத்தாஞ்சலியாகவும் அமையும்.
எனதருமை நாட்டுமக்களே, சில காலம் முன்பாக நம் மனங்களில் பஞ்சம் பற்றிய கவலை குடிகொண்டிருந்தது, இப்போதோ மழை ஆனந்தத்தை அளித்து வருகிறது, அதே வேளையில் வெள்ளப்பெருக்கு பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தோளோடு தோள் இணைந்து முழுமையான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மழை காரணமாக சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு மனித மனத்திலும் மலர்ச்சி ஏற்படுகிறது, ஏனென்றால் நமது அனைத்து பொருளாதார செயல்பாடுகளின் மையப் புள்ளியாக மழை இருக்கிறது, விவசாயம் இருக்கிறது. சில வேளைகளில் வாழ்க்கை முழுவதும் நம்மை வருத்தப்பட வைக்கக் கூடிய நோய்களும் நம்மை பீடித்து விடுகின்றன. ஆனால் நாம் விழிப்போடு இருந்தால், முனைப்போடு இருந்தால், அவற்றிலிருந்து தப்பும் வழிகளும் சுலபமானவை.
டெங்கு காய்ச்சலையே எடுத்துக் கொள்வோமே. டெங்கு காய்ச்சலிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். தூய்மை மீது சற்று கவனத்தை செலுத்த வேண்டும், சற்று விழிப்போடு இருக்க வேண்டும், தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும், குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும், இந்த டெங்கு நோய் ஏதோ ஏழையின் குடிலுக்குத் தான் வருகை புரியும் என்ற எண்ணம் இருக்கிறதே அதை விடுக்க வேண்டும். டெங்கூ அனைத்து வளங்களும் நிறைந்த செழிப்பான வீடுகளைத் தான் முதலில் தாக்கும் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் விளம்பரங்களைப் பார்த்திருந்தாலும், இந்தக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எப்போதாவது சற்றே சுணக்கமாக இருந்து விடுகிறோம். அரசு, மருத்துவமனைகள், மருத்துவர்கள் என்று அனைவரும் தங்கள் பணிகளை செய்து வந்தாலும் கூட, நாமும் நமது வீடுகளில், நமது பகுதிகளில், நமது குடும்பங்களில் டெங்குவை அனுமதிக்க கூடாது, தண்ணீர் மூலம் ஏற்படக் கூடிய எந்த நோயும் நெருங்கக் கூடாது என்பதில் விழிப்போடு இருக்க வேண்டும், இது தான் நான் உங்கள் அனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒரு பிரச்சனை தொடர்பாக எனதருமை நாட்டுமக்களே, நான் உங்கள் கவனத்தைத் திருப்ப விரும்புகிறேன். வாழ்க்கை எந்த அளவுக்கு அவசரகதி கொண்டதாகவும், வேகமானதாகவும் ஆகி விட்டதென்றால், சில வேளைகளில் நம்மைப் பற்றி சிந்திக்கக் கூட நமக்கு நேரமில்லாமல் போய் விடுகிறது. நோய் ஏற்படும் போது, விரைவாக குணமாக வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு antibioticஐ வாயில் போட்டு முழுங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போதைக்கு நோயிலிருந்து விடுதலை என்னவோ கிடைத்தாலும் எனதருமை நாட்டுமக்களே, கிடைத்த போதெல்லாம் ஏதோ ஒரு antibioticஐ போட்டுக் கொள்ளும் பழக்கம் மிகவும் மோசமான சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். சில கணங்களுக்கு வேண்டுமானால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம், ஆனால் மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் antibioticஐ எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் எழுதிக் கொடுக்காதவரை, நாம் அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வோம், நாம் இந்தக் குறுக்குவழியில் பயணிக்காமல் இருப்போம், ஏனென்றால் இதனால் மேலும் புதிய சிக்கல்கள் தான் அதிகரிக்கும். கண்ட கண்ட antibioticகளை எடுத்துக் கொள்வதன் காரணமாக நோயாளிக்கு என்னவோ அந்த வேளைக்கு நிவாரணம் கிடைத்தாலும், நோய் நுண்ணுயிரிகள் இந்த மருந்துகளுக்குப் பழக்கப்பட்டு, மீண்டும் இந்த மருந்துகளை உட்கொள்ளும் வேளையில் அவை பயனளிக்க முடியாதவையாகி விடுகின்றன; இதன் பிறகு மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குகிறது, புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது, அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது என்பவற்றிலெல்லாம் ஆண்டுகள் பல கழிந்து விடுகின்றன, அதற்குள்ளாக நோய்கள் புதிய சங்கடங்களைத் தோற்றுவித்து விடுவதால், நாம் இந்த விஷயத்தில் விழிப்போடு இருப்பது அவசியமாகிறது.
மேலும் ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது – மருத்துவர் 15 antibiotic மாத்திரைகளை 5 நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார் என்றால், தயவு செய்து மருத்துவர் கூறிய அளவு நாட்களில், அந்த பரிந்துரைப்படி நிறைவு செய்யுங்கள்; அரைகுறையாக அதை விட்டுவிடாதீர்கள்; அரைகுறையாக விடுவதன் காரணமாக நுண்ணுயிரிகள் பலமடையும், அதே போல தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், நுண்ணுயிர்க்கிருமிகள் பலமடையும்; ஆகையால் எத்தனை மாத்திரைகள், எத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறதோ அதை நிறைவு செய்ய வேண்டும்; உடல் நலமடைந்து விட்டது என்பதால், இனி தேவையில்லை என்று நாம் அரைகுறையாக விட்டு விட்டால், நுண்ணுயிர்க் கிருமிகளுக்கு ஆதாயமாகி, அவை மேலும் பலமடைந்து விடுகின்றன. மலேரியா, காசநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிர்க்கிருமிகள் மருந்துகள் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத வகையில், மருந்துக்கு எதிரான சக்தியை வளர்த்துக்கொள்கின்றன. மிக வேகமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மருத்துவ பரிபாஷையில் இதை antibiotic resistance என்று அழைக்கிறோம், ஆகையால் எந்த அளவுக்கு antibiotic, எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானதோ, அதே அளவுக்கு அவற்றை எடுத்துக் கொள்ளும் விதிமுறைகளைப் பின்பற்றுவதும் முக்கியமானவை தாம். அரசு antibiotic resistanceஐ தடுப்பதில் உறுதியாக இருக்கிறது; இப்போதெல்லாம் விற்கப்படும் antibioticமருந்துகள் பட்டையின் மேலே சிவப்பு நிறத்தில் ஒரு கோடு வரையப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், இது உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான், இதில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
உடல்நலம் பற்றி நாம் பேசும் போது, இதில் மேலும் ஒரு விஷயத்தை நான் இணைக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் உடல்நலம் சில வேளைகளில் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சுமார் 3 கோடி பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள், ஆனால் சில தாய்மார்கள் பிள்ளைப்பேற்றின் போது இறக்கிறார்கள், சில சிசுக்கள் பிரசவத்தின் போது மரிக்கின்றன. சில வேளைகளில் தாய்-சேய் இருவருமே கூட இறந்து விட நேர்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தாய்மார்களின் அகால மரணத்தின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான் என்றாலும், இன்றும் கூட கர்ப்பிணித் தாய்மார்களின் உயிர்களை அதிகமாக நம்மால் காப்பாற்ற இயலாத நிலை நிலவுகிறது. பிரசவ காலத்திலோ, அதற்குப் பின்னரோ ரத்தக் குறைபாடு, பிரசவம் தொடர்பான நோய் தொற்றுக்கள், உயர் ரத்த அழுத்தம் என எந்த மாதிரியான இடர் அவர்களின் உயிருக்கு உலையாக அமையும் என்பதே தெரியாத அவல நிலை. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பாரத அரசு கடந்த சில மாதங்களாக ஒரு புதிய இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது – பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான், அதாவது பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மைத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும், அரசு மருத்துவ மையங்களில் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதியன்று, கட்டணமில்லா பரிசோதனை நிகழ்த்தப்படும். பைஸா செலவின்றி ஒவ்வொரு மாதம் 9ஆம் தேதியன்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இது மேற்கொள்ளப்படும். உங்கள் வீட்டில் இருக்கும் கருவுற்றப் பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதியன்று அளிக்கப்பட்டு வரும் இந்த சேவையின் பலனை அளியுங்கள் என்று அனைத்து ஏழைக் குடும்பத்தாரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 9ஆவது மாதம் நெருங்கும் சமயத்தில் சிக்கல் ஏதேனும் ஏற்படும் சாத்தியக்கூறு இருக்குமேயானால், அதற்கான தீர்வையும் திட்டமிட்டுக் கொள்ள இது வசதியாக இருக்கும். தாய்-சேய் இருவரின் உயிரும் காப்பாற்றப்பட, சிறப்பாக ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதியன்று ஏழை அன்னையர்களுக்கு என இலவசமாக இப்படிப்பட்ட ஒரு சேவையை செய்ய முடியாதா என்று மகப்பேறு நல மருத்துவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். எனது மருத்துவ சகோதர சகோதரியர்கள் ஓராண்டில் 12 நாட்கள் ஏழைகளுக்காக இந்தப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முடியாதா? கடந்த நாட்களில் பலர் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் என் விண்ணப்பத்துக்கு செவிசாய்த்து செயல்படுத்தியும் வருகிறார்கள், ஆனால் பாரதம் மிகப் பெரிய தேசம், இந்த இயக்கத்தில் இலட்சக்கணக்கான மருத்துவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கண்டிப்பாக இதில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, இன்று உலகம் முழுவதிலும் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் ஆகியன பற்றிய கவலை மேலோங்கி இருக்கிறது. நாட்டிலும் உலகெங்கிலும் மக்கள் மத்தியில் இவை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாரதம் பல நூற்றாண்டுகளாகவே இந்தக் கருத்துக்கு வலு சேர்த்து வந்திருக்கிறது. குருக்ஷேத்திர யுத்தத்தில் கூட பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் மரங்கள் பற்றித் தெரிவிக்கிறார், யுத்தபூமியிலே மரங்கள் பற்றிய விவாதமும், அவை தொடர்பான கவலையும் கொள்வது என்பது அவற்றின் மகத்துவம் பற்றி நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. கீதையில் பகவான் கிருஷ்ணர், அச்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம்,அதாவது மரங்களில் நான் அரசமரம் என்கிறார். சுக்ரநீதியோ, நாஸ்தி மூலம் அனவுஷதம், அதாவது மருத்துவ குணமே இல்லாத எந்த ஒரு தாவரமும் இல்லை என்கிறது. மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் மிக விரிவான முறையில், மரம் வைத்தவனுக்கு அந்த மரம் பெற்ற குழந்தை போன்றது, இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பறைசாற்றுகிறது. எவனொருவன் மரத்தை தானமாக அளிக்கிறானோ, அவன் பெற்ற மக்கட்செல்வத்தைப் போல பரலோகத்தில் அவனை கரை சேர்க்க அந்த மரம் உதவியாக இருக்கும். ஆகையால், தங்கள் நலனைப் பேண நினைக்கும் தாய் தந்தையர் நல்ல மரங்களை நட்டு, அவற்றை தங்கள் மக்கட்செல்வங்களுக்கு இணையாக பராமரிக்க வேண்டும். நமது சாத்திரமான கீதையாகட்டும், சுக்ரநீதியாகட்டும், மஹாபாரதத்தின் அனுசாசன பர்வமாகட்டும், அவற்றில் காணப்படும் விஷயங்களை இன்றும் கூட தங்கள் ஆதர்ஸங்களாகக் கருதி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். புனேயைச் சேர்ந்த ஒரு பெண் சோனலின் எடுத்துக்காட்டு என் கவனத்தைக் கவர்ந்தது, இது என் மனதை வருடியது. மஹாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில், மரங்கள் பரலோகத்திலும் கூட மக்கட்செல்வத்தின் கடமைகளை ஆற்றுகின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. சோனல் தனது தாய் தந்தையின் விருப்பத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்தின் விருப்பங்களையும் நிறைவு செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மஹாராஷ்ட்ரத்தின் புனேயைச் சேர்ந்த ஜுன்னர் தாலுகாவில் நாராயண்பூர் கிராமத்தின் விவசாயி கண்டூ மாருதி மஹாத்ரே; அவர் தனது பேத்தி சோனலின் திருமணத்தை உற்சாகம் அளிக்கும் வகையில் புதுமையாக கொண்டாடினார். சோனலின் திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள், விருந்தாளிகள் அனைவருக்கும் கேஸர் மாஞ்செடி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார்; சமூக வலைத்தளத்தில் நான் படத்தைப் பார்த்த போது, ஊர்வலத்தில் எங்கு பார்த்தாலும் மரங்களே தென்பட்டன. இது மனதைத் தொடக் கூடிய ஒரு அருமையான காட்சி. சோனலே கூட ஒரு விவசாயப் பட்டதாரி, திருமணத்தில் மாமரக் கன்றுகளை அன்பளிப்பாக அளிப்பது என்ற கருத்து அவர் மனதில் உதித்த ஒன்று. பாருங்கள் இயற்கை மீது தான் கொண்ட நேசத்தை என்னவொரு அருமையான வழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வகையில் சோனலின் திருமணம் இயற்கை மீதான நேசத்தின் அமரகாதையாக ஆகியிருக்கிறது. நான் சோனலுக்கும் திரு மஹாத்ரே அவர்களுக்கும் இந்த நூதன முயற்சியை மேற்கொண்டமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட பல முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். நான் குஜராத்தின் முதல்வராக இருந்த காலகட்டத்தில், பாத்ர மாதத்தின் போது அங்கே இருக்கும் அம்பா தேவி கோயிலில், மிகப் பெரிய அளவில் பாதயாத்திரிகள் வருவதைப் பார்த்திருக்கிறேன்; ஒரு முறை ஒரு சமூக சேவை அமைப்பு, கோயிலுக்கு வழிபட வருபவர்களுக்கு பிரசாதமாக ஒரு மரக்கன்றை அளித்து, இதைக் கொண்டு சென்று உங்கள் கிராமத்தில் நட்டு வளர்த்தால், தாய் அம்பா உங்களுக்கு தன் ஆசிகளை தொடர்ந்து அளித்து வருவாள் என்று தெரிவித்தது. வந்த பல இலட்சக்கணக்கான பாதயாத்திரிகளுக்கும் அந்த ஆண்டு பல இலட்சம் மரக்கன்றுகளை அளித்தார்கள். கோயில்களே கூட பிரசாதத்துக்கு பதிலாக மழைக்காலத்தில் மரக்கன்றுகளை அளிக்கும் பாரம்பரியத்தை ஆரம்பிக்கலாம். இது மரம் நடுதல் தொடர்பான ஒரு மக்கள் இயக்கத்துக்கு வழிவகுக்கக் கூடும். நான் மீண்டும் மீண்டும் என் விவசாய சகோதரர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நமது விளைநிலங்களின் எல்லையோரங்களில் மரங்களாலான வேலிகளை அமைத்து நமது நிலங்களை வீணாக்குவதற்கு பதிலாக நாம் ஏன் தேக்கு மரத்தை வளர்க்க கூடாது? இன்று பாரதத்தில் வீடு கட்ட, நாற்காலிகள் போன்ற பொருட்களைத் தயாரிக்க, ஏகப்பட்ட மரத்தை நாம் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டி இருக்கிறது. நாம் நமது வயல்களோரமாகவே இப்படிப்பட்ட மரங்களை நட்டால், அவை மரச்சாமான்கள் செய்ய உதவியாகவும் இருக்கும், 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசின் அனுமதி பெற்று அவற்றை வெட்டி நாம் விற்றுக் காசாக்கவும் முடியும், இது உங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு வழிவகையாக அமையும், பாரதத்தின் மர இறக்குமதிச் செலவும் குறையும். கடந்த சில நாட்களாக பல மாநிலங்கள் இந்த பருவநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பல இயக்கங்களை நடத்தி வந்தார்கள்; பாரத அரசும் CAMPA என்றதொரு சட்டத்தை இப்போது இயற்றியிருக்கிறது; இதன்படி, மரம் நடுவதற்கென்றே சுமார் 40000 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை மாநிலங்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது. மஹாராஷ்ட்டிர அரசு ஜூலை மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலத்தில் சுமார் 2.25 கோடி மரக்கன்றுகளை நட்டிருக்கிறது என்ற தகவல் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு 3 கோடி மரக்கன்றுகளை நடும் தீர்மானமும் மேற்கொண்டிருக்கிறார்கள். அரசு ஒரு மக்கள் இயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தானம் ஒரு பாலைவனப் பிரதேசம். அங்கே கூட மிகப் பெரிய அளவில் ஒரு வன மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டு, 25 இலட்சம் மரங்கள் நடப்படும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இராஜஸ்தானத்தில் 25 இலட்சம் மரக்கன்றுகள் நடுவது என்பது ஒரு சிறிய காரியம் அல்ல. ராஜஸ்தானத்து பூமி பற்றித் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும் இது எத்தனை பெரிய சவாலான விஷயம் என்பது. ஆந்திரப் பிரதேசத்தில் 2029க்குள்ளாக 50 சதவீத அளவுக்கு பசுமையை அதிகரிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் தன் பங்குக்கு green india mission, பசுமை இந்தியா இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இரயில்வேயும் தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது. குஜராத்தில் கூட வன மஹோத்ஸவம் என்பது மிகப் பிரபலமான ஒரு பாரம்பரியம். இந்த ஆண்டு குஜராத்தில் மாமர வனம், ஏகதா வனம், ஷஹீத் வனம் என பலவகைகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன, இதில் பல கோடி மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. என்னால் பாராட்டுக்கு தகுதியான அனைத்து மாநிலங்கள் பற்றியும் தெரிவிக்க முடியவில்லை. என்றாலும் அனைவருமே பாராட்டத் தகுதியானவர்கள் தாம்.
எனதருமை நாட்டு மக்களே, கடந்த நாட்களில் தென்னாப்பிரிக்கா பயணிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இது எனது முதல் தென்னாப்பிரிக்கப் பயணம்; அயல்நாட்டுப் பயணம் என்றாலே ராஜரீகம் / diplomacy என்பது இணைபிரியாத அங்கம், வர்த்தகம் பற்றிய விவாதங்கள், பாதுகாப்பு தொடர்பான உரையாடல்கள் என பல துறைகளில் பன்னாட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் தென்னாப்பிரிக்கப் பயணம் என்பது ஒரு வகையில் ஒரு தலயாத்திரைக்கு ஒப்பானது. தென்னாப்பிரிக்காவைப் பற்றி நினைக்கும் போது காந்தியடிகள், நெல்ஸன் மண்டேலா ஆகியோர் பற்றிய நினைவுகள் மனதில் எழுவது என்பது இயல்பான ஒன்று. உலகில் அகிம்ஸை, நேசம், மன்னித்தல் ஆகிய சொற்கள் காதுகளில் வந்து விழும் போது, காந்தியடிகள், மண்டேலா ஆகியோரின் முகங்களே நமக்கு முன்னால் காட்சியளிக்கும். எனது தென்னாப்பிரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக நான் phoenix குடியிருப்புக்குச் செல்ல நேர்ந்தது; காந்தியடிகள் வசித்த இடம் சர்வோதய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. காந்தியடிகள் எந்த ரயிலில் பயணித்தாரோ, எந்த ரயிலில் நடந்த நிகழ்வு மோஹந்தாஸை காந்தியடிகளாக மாற்றும் விதையை விதைத்ததோ, அந்த பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடிய நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சமத்துவம், சமவாய்ப்பு ஆகியவற்றுக்காக தங்களது இளமைக் காலத்தை தியாகம் செய்த பல மகத்துவம் நிறைந்த மனிதர்களை இந்த முறை என் பயணத்தில் நான் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நெல்சன் மண்டேலாவோடு தோளோடு தோள் சேர்ந்து போராடி, 20-25 ஆண்டுக்காலம் வரை சிறைச்சாலைகளில் அவரோடு கழித்தவர்கள் இவர்கள். ஒரு வகையில் தங்கள் ஒட்டுமொத்த இளமையையும் அவர்கள் தியாகம் செய்திருந்தார்கள், நெல்ஸன் மண்டேலாவுக்கு நெருக்கமான அஹமத் கதாடா அவர்கள், லாலூ (CHEEBA) சீபா அவர்கள், ஜார்ஜ் பெஸோஸ் அவர்கள் ரோனீ காஸ்ரில்ஸ் ஆகிய மகத்துவம் நிறைந்த மனிதர்களை தரிசிக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அவர்கள் பாரத வம்சாவழியினராக இருந்தாலும், அவர்கள் குடிபெயர்ந்த, அந்த நாட்டுக்குரியவர்களாகவே ஆகி விட்டிருந்தார்கள். எவர்கள் மத்தியில் வாழ்ந்தார்களோ, அவர்களுக்காகவே தங்கள் உயிரையும் துறக்கத் தயாராகி விட்டிருந்தார்கள். நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவர்களின் சிறை அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் மனங்களில் யாருக்கெதிராகவும் எந்த ஒரு கசப்புணர்வும் காணப்படவில்லை, துவேஷம் தென்படவில்லை. இத்தனை பெரிய தவமியற்றிய பின்னரும் கூட, தங்கள் தியாகங்களை விலைபொருளாக்கும் உணர்வேதும் அவர்கள் முகங்களில் சிறிதளவும் தென்படவே இல்லை. ஒரு வகையில் கடமையுணர்வு மேலோங்கிக் காணப்பட்டது – கீதையில் உபதேசிக்கப்பட்ட பற்றற்ற கடமையாற்றுபவர்களின் உருவங்களாக அவர்கள் காட்சியளித்தார்கள். என் மனதில் இந்த நினைவலைகள் காலாகாலத்திற்கும் பொதிந்திருக்கும். எந்த ஒரு சமுதாயமாகட்டும், அரசாகட்டும், சமத்துவம், சமவாய்ப்பு என்பதை விடப் பெரியதொரு மந்திரம் வேறேதும் இருக்க முடியாது. அனைவரும் சமம், அனைவரும் நம்மவர்கள் என்ற உணர்வு தாம் நம்மை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும் வழிகள். நாமனைவருமே உன்னதமான வாழ்க்கை வாழ விரும்புகிறோம். நமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொருவரின் தேவையும் வேறுபட்டு இருக்கின்றது, நம்முடைய முன்னுரிமைகள் வித்தியாசமானவை என்றாலும், வழி என்னவோ ஒன்று தான், அந்தப் பாதை முன்னேற்றம், சமத்துவம், சமவாய்ப்பு, அனைவரும் சமமானவர்கள், அனைவரும் எம் மக்கள் என்ற உணர்வு ஆகியவை தாம். வாருங்கள், தென்னாப்பிரிக்காவிலும் கூட நமது வாழ்க்கையின் மூல மந்திரங்களை வாழ்ந்து காட்டியிருக்கும் இந்த இந்தியர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்வோம்.
எனதருமை நாட்டு மக்களே, எனக்கு இந்தத் தகவல் அனுப்பியதற்காக நான் ஷில்பி வர்மா அவர்களுக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன், அவரது இந்தக் கவலை மிகவும் இயல்பான ஒன்று தான். அவர் எனக்கு ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி இருக்கிறார்.
’’ பிரதமர் அவர்களே, பெங்களூரூவிலிருந்து நான் ஷில்பி வர்மா பேசுகிறேன். மோசடி மற்றும் ஏமாற்று மின்னஞ்சல் வலையில் சிக்கிய ஒரு பெண் 11 லட்சம் ரூபாயை இழந்து முடிவாகத் தற்கொலை செய்து கொண்டார் என்று அண்மையில் நான் ஒரு செய்திக் கட்டுரையில் படித்தேன். ஒரு பெண் என்ற முறையிலும் அவரது குடும்பத்தார் நிலை குறித்தும் எனக்கு மிகவும் துயரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மோசடி மின்னஞ்சல்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்.”
நமது மொபைல் போனில், நமது மின்னஞ்சலில் எல்லாம் இப்படிப்பட்ட மிகவும் கவரக்கூடிய விஷயங்கள் வருகின்றன என்ற தகவல் உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது, நீங்கள் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை செலுத்தி, அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று யாரோ ஒருவர் தகவல் அனுப்பியிருப்பார். அந்த வார்த்தைகளில் மயங்கி சிலர் பணத்தாசையில் விழுந்து சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களவாடும் ஒரு புதிய உத்தி உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. எப்படி தொழில்நுட்பம் பொருளாதார அமைப்பில் மிகப் பெரிய பங்காற்றுகிறதோ, அதன் தவறான பயன்பாடும் பெருகி வருகிறது. பணி ஓய்வு பெற்று, மகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டிய கட்டத்தில், சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்டு வாழ இருப்பவருக்கு ஒரு நாள் ஒரு குறுஞ்செய்தி வந்தது, அயல்நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு பெரிய வெகுமதி கிடைத்திருக்கிறது, இதை அடைய வேண்டுமென்றால், சுங்கத் தீர்வைக்காக 2 இலட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் போடுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நபரும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சேமித்த 2 இலட்சம் ரூபாயை எடுத்து, முகம் பெயர் தெரியாத ஒரு மனிதனுக்கு அனுப்பினார். தான் முழுமையாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொள்ள அவருக்கு சில கணங்களே பிடித்தன. மிக நேர்த்தியான வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்களே, இது சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று நீங்களே கூட மயங்கிப் போகலாம். போலியான லெட்டர் பேடை யார் வேண்டுமானாலும் உருவாக்கி அதன் மூலம் அனுப்பி வைக்க முடியும், உங்கள் கடன் அட்டை எண், Debit card எண் ஆகியவற்றைப் பெறுகிறார்கள், தொழில்நுட்பம் வாயிலாக உங்கள் வங்கிக் கணக்கை சுத்தமாகத் துடைத்து விடுகிறார்கள். இது புது விதமான மோசடி, இது டிஜிட்டல் மோசடி. இந்த மோகத்திலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன், விழிப்போடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், இது போன்ற கடிதங்கள் வந்தால், அவற்றை உடனடியாக நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவ வேண்டும். ஷில்பி வர்மா அவர்கள் நல்ல காலம் எனக்கு இதை நினைவூட்டினார்கள். இவை போன்ற கடிதங்கள் உங்களுக்கும் வந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அவற்றின் மீது அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில், நாட்டுமக்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டி வருகிறது. நமது மன்ற உறுப்பினர்களும் கூட தத்தமது தொகுதிகளில் இருக்கும் மக்களை அழைத்து வந்து சந்திக்கச் செய்கிறார்கள், தங்களது இடர்களைப் பற்றித் தெரிவிக்கிறார்கள். இப்படிப்படிப்பட்ட ஒரு சந்திப்பின் போது எனக்கு ஒரு சுகமான அனுபவம் ஏற்பட்டது. அலீகரைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த மாணவ மாணவியரிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, அவர்கள் மிகப் பெரிய ஆல்பம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்கள், அவர்கள் முகங்களில் சந்தோஷம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அலீகட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அலீகட் ரயில் நிலையத்தை அழகுபடுத்தியிருக்கும் படங்களைத் தங்களோடு கொண்டு வந்திருந்தார்கள். ரயில் நிலையத்தில் கலைநயத்தோடு கூடிய ஓவியங்களை வரைந்திருந்தார்கள். அது மட்டுமல்ல, கிராமத்தின் குப்பைக் கூளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது எண்ணை பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றில் மண்ணை இட்டு நிரப்பி, செடிகளை நட்டு, vertical garden எனும் அடுக்குத் தோட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அடுக்குத் தோட்டத்தை அவர்கள் உருவாக்கி, நிலையத்துக்கு ஒரு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். உங்களுக்கும் அலீகட் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால், அவசியம் ரயில் நிலையம் சென்று பாருங்கள். பாரதத்தின் பல ரயில் நிலையங்கள் தொடர்பான இப்படிப்பட்ட தகவல்கள் எனக்கு இப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் ரயில் நிலையங்களின் சுவர்களில் தங்கள் வட்டார கலையம்சங்களைக் கொண்டு அழகுபடுத்துகிறார்கள். ஒரு புதிய உணர்வை உணரமுடிகிறது. மக்கள் பங்களிப்பு வாயிலாக எப்படி மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நாட்டில் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் என் பாராட்டுதல்கள், சிறப்பாக அலீகட்டின் எனது தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டு மக்களே, மழைக்காலத்தோடு ஒட்டி நம் நாட்டில் பல பண்டிகைகளின் பருவமும் தொடங்குகிறது. இனிவரும் காலங்களில் பல இடங்களில் விழாக்கள் நடைபெறவிருக்கின்றன. கோயில்களும், வழிபாட்டு இடங்களிலும் திருவிழாக்கள் நடைபெறவிருக்கின்றன. நீங்களும் உங்கள் இல்லங்களிலும், வெளியிடங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். ரக்ஷா பந்தன் பண்டிகை மிகவும் மகத்துவம் நிறைந்த ஒன்று. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், ரக்ஷாபந்தன் காலகட்டத்தில், நாட்டின் தாய்மார்கள்-சகோதரிகளுக்கு நீங்கள் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையோ ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையோ பரிசாக அளிக்க முடியாதா? சிந்தியுங்கள் சகோதரர்களே, வாழ்க்கையில் உங்கள் சகோதரி உண்மையிலேயே பாதுகாப்பாக உணரக் கூடிய வகையில் ஒரு பரிசை அளியுங்கள். ஏன், நமது இல்லங்களில் உணவு சமைக்கவோ, வீட்டு வேலைகளைச் செய்யவோ ஒரு பெண்ணை நாம் அமர்த்தியிருக்கலாம், அல்லது ஏதேனும் ஏழைத் தாயின் மகளாக அவர் இருக்கலாம். இந்த ரக்ஷாபந்தன் பண்டிகையின் போது அவர்களுக்கும் பிரதம மந்திரி ஆயுள் பாதுகாப்புத் திட்டம் அல்லது ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பரிசாக அளிக்கலாம் இல்லையா? இது தானே சமூகப் பாதுகாப்பு, இது தானே ரக்ஷாபந்தனுக்கான சரியான அர்த்தம்?
எனதருமை நாட்டுமக்களே, நம்மில் பலர் நாடு விடுதலை அடைந்த பிறகு பிறந்திருப்பார்கள். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதம மந்திரி என்றால் அது நானாகத் தான் இருக்கும். அகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவை விட்டு வெளியேறு, பாரதத்தை விட்டு வெளியேறு என்ற இந்த இயக்கம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியொடு நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. நாம் சுதந்திர இந்தியாவின் சுகமான காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமான குடிமக்கள் என்ற பெருமித உணர்வோடும் இருக்கிறோம். ஆனால் நமக்கெல்லாம் இத்தகைய சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவு கூரும் தருணமாக இது இருக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றி 75 ஆண்டுகளும், பாரதம் சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளும் நம் எல்லார் மனங்களிலும் ஒரு புதிய கருத்தூக்கத்தை, ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்த வல்லது… இது நாட்டுக்காக ஆக்கபூர்வமான ஏதோ ஒன்றை செய்யத் தூண்டும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்கலாம். தியாகிகளின் தியாகங்கள் நம் அனைவரின் கண்களையும் மனங்களையும் பனிக்கச் செய்யட்டும். நாலாபுறமும் சுதந்திரத்தின் சுகமான மணம் மீண்டும் ஒரு முறை வீசட்டும். இத்தகைய ஒரு சூழலை நாம் ஏற்படுத்தலாம். சுதந்திரத் திருநாள் என்பது அரசுகளின் நிகழ்ச்சி அல்ல, இது நாட்டு மக்களுடையதாக இருக்க வேண்டும். தீபாவளியைப் போல இந்தத் திருநாளை நாம் நமது பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். தேசபக்தி என்ற கருத்தூக்கத்தோடு இணைந்து நாம் ஏதோ ஒரு ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது தொடர்பான புகைப்படத்தைக் கண்டிப்பாக narendramodiappஇல் அனுப்பி வையுங்கள். நாட்டில் நல்லதொரு சூழலை ஏற்படுத்துங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஒரு நல்வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது. இது ஒரு பாரம்பரியமான நிகழ்வு. உங்கள் மனங்களில் நீங்கள் தெரிவிக்க விரும்பும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம். அதை நீங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க விரும்பலாம். அதை செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து தெளிவுபட உரைக்க நான் உங்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறேன். அப்படிப்பட்ட உங்களின் கருத்துக்களை உங்களின் ஒரு பிரதிநிதியாக, நாட்டின் பிரதம சேவகன் என்ற வகையில் நான் எதிரொலிக்கிறேன். கண்டிப்பாக உங்கள் ஆலோசனைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள், புதிய கருத்துக்களைத் தெரிவியுங்கள். நான் உங்கள் கருத்துக்களை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பிரதமருடையதாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமல்ல. செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து தெரிவிக்கப்படுபவை, 125 கோடிமக்களுடைய உணர்வுகளாக இருக்க வேண்டும். கண்டிப்பாக நீங்கள் உங்கள் உணர்வுகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். நரேந்திர மோடி செயலியிலோ, mygov.in இலோ அனுப்பலாம். தொழில்நுட்பம் மிகவும் எளிமையாக ஆகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் மிக சுலபமாக விஷயங்களை என்னிடம் அனுப்பி வைக்கலாம். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய புண்ணியம் நிறைந்த நினைவுகளால் நம்மை நிரம்பிக் கொள்வோம் வாருங்கள். பாரதத்துக்காக முழுமையான தியாகம் செய்த அந்த மஹா புருஷர்களின் தூய நினைவுகள் நம்மை ஆட்கொள்ளட்டும், நாட்டுக்காக நல்லன செய்வோம் என்ற மன உறுதிப்பாட்டோடு முன்னேறிச் செல்வோம். நெஞ்சார்ந்த வாழ்த்துகள், மிக்க நன்றி.
My dear countrymen, namaskar!
Once again I have got an opportunity to talk to you about matters close to my heart, through ‘Mann Ki Baat’. For me, ‘Mann Ki Baat’ is not a matter of ritual; I myself am very eager to talk to you. And I am really happy that I am able to connect with you all in every corner of India, through this programme ‘Mann Ki Baat’. I am grateful to All India Radio that they have also been successfully broadcasting ‘Mann Ki Baat’ in regional languages at 8 pm. I am also very happy that the people who listen to me, later communicate their feelings to me through letters, telephone calls, the website MyGov.in and also through the NarendraModiApp. A lot of what you say is of great help to me in the functioning of the government. How active should the government be in terms of public service? How much priority should be given to public welfare activities? In terms of these matters, this dialogue, this link that I have with you all, is of great use. I hope that you will now be even more actively and enthusiastically involved in ensuring that our democracy should function with people’s participation.
The summer heat is increasing day by day. We were hoping for some respite, instead we are experiencing continual rise in temperature. And in the midst of this came the information that the monsoon will perhaps be delayed by a week, which has added to the worry. Almost the entire country is reeling under the scorching impact of severe heat. The mercury continues to soar. Be it animals, birds or humans…everyone is suffering. These problems have been getting increasingly worse due to environmental degradation. Forest cover has kept receding due to indiscriminate felling of trees. In a way, the human race itself has paved the way for self-annihilation by destroying the environment.
5th June is World Environment Day. On this day, discussions expressing concern on the issue are held all over the world for saving the environment. This time on the occasion of World Environment Day, the United Nations has given the theme “Zero Tolerance for Illegal Wildlife Trade”. This topic will, of course, be discussed, but we also must talk about saving our flora and fauna, conserving water, and how to expand our forest cover. You must have seen in the last few days how forest fires raged in the lap of the Himalayas in Uttarakhand, Himachal Pradesh and Jammu and Kashmir. The main cause of these forest fires was dry leaf littering combined with carelessness, which led to the massive inferno. And so, it becomes the bounden duty of each one of us, to save forests and save water.
Recently, I convered at length with the Chief Ministers of eleven states, reeling under severe drought- Uttar Pradesh, Rajasthan, Gujarat, Maharashtra, Madhya Pradesh, Chhattisgarh, Jharkhand, Karnataka, Andhra Pradesh, Telangana and, Odisha.
As per the conventional Government precedent, I could have had a combined meeting with all the drought affected states, but I chose not to do so. I had a one-on-one meeting with each state, devoting about two to two and a half hours with each one. I carefully heard what each state had to say. Usually such talks do not go beyond discussion on how much money was granted by the Central Government state-wise, and how much money was actually spent by each state. Thus, it came as a surprise even to the officers of the Central Government that some states have indeed made some very commendable efforts related to water, environment, tackling drought, caring for animals as well as affected human beings. Based on inputs from all corners of the country, irrespective of the ruling party there, we found that we had to give a thought to finding not only permanent solutions but also devising practical ways and means to deal with this long-standing problem. In a way, It was a kind of a learning experience too for me. And I have told the Niti Aayog that they should work on how to incorporate the best practices across all the states.
Some states, especially Gujarat and Andhra Pradesh have made full use of technology. I would like that in future, through the Niti Aayog, the exceptionally successful efforts of these states should be applied to other states also. People’s participation is a strong base for solving such problems. And for this, I believe that if there is a confluence of perfect planning, use of appropriate technology, and time-bound action, then we can achieve optimum results in drought management, for water conservation, to save every single drop of water. My faith is that water is a Gift from God. When we go to a temple, we are given an offering of Prasad and even if a small bit of that spills, we feel bad in our hearts. We not only pick it up but also pray five times for God’s forgiveness. Water is also an offering form the God. Even if a drop of water is wasted, then we should feel remorse and pain. And so water storage, water conservation and proper water irrigation are all of equal importance. And so there is need for implementing the maxim ‘Per Drop More Crop’ through Micro-Irrigation and cultivating crops that require minimal water intake. At present, it is indeed good news that in many states, even sugarcane farmers are using micro irrigation, some are using drip irrigation and some are using sprinklers. When I discussed with the eleven states, I noticed that even for cultivating paddy for production of rice, some of them had employed drip irrigation successfully and got higher yields, thereby also reducing the requirement for water as well as for labour. I also found that there were many states which had taken on very big targets, especially, Maharashtra, Andhra Pradesh and Gujarat- these three states have done massive work in the field of drip irrigation. And they are striving to bring every year 2 to 3 lakh hectares additional land under micro- irrigation. If this campaign gets underway in all the states, then not only will it benefit cultivation, but more water will also be conserved. Our farmer brothers in Telangana, through ‘Mission Bhagirathi’ have made a commendable effort to optimally use the waters of Godavari and Krishna rivers. In Andhra Pradesh, ‘Neeru Pragati Mission’ has been using technology for ground water recharging. People are devoting hard work and contributing financially as well to the mass movement that has been started in Maharashtra,. ‘Jal Yukt Shivir’ is one such people’s movement which is really going to be of great help in saving Maharashtra from water crisis in the future- this is what I feel. Chhattisgarh has started the ‘Lok-Suraj, Jal-Suraj’ campaign. Madhya Pradesh has started the ‘Balram Talaab Yojana’- and dug nearly 22,000 ponds, which is no small figure, work is also being carried out on their ‘Kapil Dhara Koop Yojana.’ In Uttar Pradesh there is ‘Mukhya Mantri Jal Bachao Abhiyaan’. In Karnataka water conservation efforts are in the form of ‘Kalyani Yojana’, under which they are trying to revive wells once again. In Rajasthan and Gujarat there are many ancient baodis – deep tanks or masonry wells with steps going down to the water. These states are making a very big effort to revive these as ‘water temples’. Rajasthan has started the Chief Minister’s Jal Swawalamban Abhiyan – Water Self Sufficiency Campaign. Jharkhand, although being a predominantly forest area, still has some parts which face water problem. They have launched a very big campaign for building ‘Check Dams’. They have started an exercise to check and stop the flow of water. Some states have started a campaign and made a number of small dams at distances of 10 to 20 kilometres in the rivers themselves to check the flow of water.
This is a wonderful experience. I urge the people of India that during this June, July, August September, we should resolve that we shall not let a single drop of water be wasted. We should decide right now upon the places where we can conserve water and where we can check the flow of water. The Almighty blesses us with water according to our needs, nature fulfils our needs. But if we become careless during the abundance of water and then during the lean water season land into trouble due to water scarcity, how can this be allowed? And the issue of water is not just for the farmers. This concerns everybody – the villages, the poor, the labourers, the farmers, the urban people, the country folk, the rich and the poor. And for this reason, now that the rainy season is approaching, saving water should be our priority. And when we celebrate Diwali this time, then we should also revel in how much water did we save; how much water we stopped from flowing out. You will see for yourselves that our joy will increase manifold. Water has this power, no matter how tired one is, just a bit of water splashed on the face makes one feel so refreshed. No matter how tired we are; when we see a large lake or an ocean, how magnificent that sight is. What a priceless treasure it is bestowed upon us by the Almighty! Just connect to it with your heart. Conserve it! We should harvest water. We should also store water. We should also modernise water irrigation. This I say as an earnest appeal. We should not let this season go waste. The coming four months should be transformed into a Save the Water Campaign, to save every drop of water. And this is not just for the governments, not just for the politicians, it is a work to be carried out by the people at large. Recently the Media reported about the water crisis in great detail. I hope that the Media will show the path to the people on how to save water, start a campaign, and also share the responsibility to free us from the water crisis forever; I invite then as well.
My dear Countrymen, we have to build a modern India. We have to make a transparent India. We have to make many services uniformly available across the entire country from one corner to another. So we will have to change some of our old habits as well. Today I want to touch upon one topic in which if you can be of help to me, then we can together achieve progress in that direction. We all know and we were taught about it in school that there was a time when there were no coins, no currency notes; there was a barter system. If you wanted vegetables you could give wheat in return. If you wanted salt, you could give vegetables in exchange. Business was carried out only through the barter system. Then gradually came currency, coins came, notes came. But now times have changed. The whole world is moving towards a cashless society. Through the facility of electronic technology, we can get money and also give money; we can buy things and pay our bills too. And with this there is no question of our wallets getting stolen from our pocket. We need not worry about keeping an account; the account will be maintained automatically. In the beginning it may appear to be a bit difficult, but once we get used to it, then this arrangement will seem very easy for us. And this possibility is there because under the Pradhan Mantri Jan Dhan Yojana that we have started recently, nearly all the families in the country have had their bank accounts opened. On the other hand, they have also got their Aadhar numbers. And the mobile phone has reached the hands of almost every Indian. So Jan Dhan, Aadhar and Mobile – Jam – J. A. M. Synchronising these three, we can move ahead towards a cashless society. You must have seen that along with the Jan Dhan account people have been given a RuPay card. In the coming days this card is going to be useful as both- a credit and a debit card. And now-a-days a very small instrument has come which is called ‘point of sale’- P. O. S. – ‘Pos’. With the help of that, be it your Aadhar number or your RuPay card, if you have to pay money to someone, you can do it through that. There is no need to take out any money from your pocket and count it; there is no need to carry around any cash with you. One of the initiatives in this regard taken by the Government of India is about how to make payments through ‘Pos’, how to receive money. The second endeavour we have started is Bank on Mobile. The ‘Universal Payment Interface’ banking transaction- UPI will change the way things work. It will become very easy to do money transactions through your mobile phone. And I’m happy to tell you that the N.P.C.I. and banks are working together to launch this platform through a mobile app. If this happens, perhaps you may not even need to carry a RuPay card with you.
Across the country, nearly 1.25 lakh young people have been recruited as banking correspondents. In a way we have worked towards providing the bank at your door step. Post offices have also been geared up for banking services. If we learn and adapt ourselves to use these services, then we will not require the currency, we will not need notes, we will not need coins. Businesses will function automatically, resulting in a certain transparency. Under-hand dealings will stop; the influence of black money will be reduced. So I appeal to my countrymen, that we should at least make a beginning. Once we start, we will move ahead with great ease. Twenty years ago who would have thought that so many mobiles would be in our hands. Slowly we cultivated a habit and now we can’t do without those. Maybe this cashless society assumes a similar form. But the sooner this happens, the better it will be.
My dear countrymen, whenever the Olympic games come around, and when these begin, we sit and clutch our heads and sigh, “we were left so far behind in the tally of gold medals… did we get a silver or not… should we do with just a bronze or not…” This happens. It is true that in the field of sports we face a lot of challenges. But an atmosphere for sports should be created in the country.
To encourage the sportspersons who are leaving for the Rio Olympics, to boost their morale, everyone should try in one’s own way. Someone could write a song, someone could draw cartoons, someone could send messages with good wishes, somebody could cheer a particular sport, but on the whole a very positive environment should be created in the entire country for these sportspersons. Whatever may be the result, a game is a game, one can win or lose, medals are won sometimes and sometimes not; our spirits should always soar high. And as I speak, I would like to mention our Sports Minister Shri Sarbanand Sonowal for a gesture that has touched my heart. Last week all of us were busy in the ups & downs of Assam election results. Shri Sarbanandji himself was leading the campaign. He was the Chief Ministerial candidate; but he was also the Union Minister. And I was very happy when I came to know that one day before the Assam election results, he discreetly reached Patiala in Punjab. You must be aware of the Netaji Subhash National Institute of Sports- N.I.S. – where the sportspersons going for the Olympics are trained. They all are there. He suddenly reached there, much to the surprise of the sportspersons. And it was a matter of surprise for the world of sports as well, that a Minister personally cares for our sportspersons. What are the arrangements for them? How is the food? Are they getting nutritious food according to their needs or not? Are the appropriate trainers for their body fitness present there? Are all the training machines functioning properly? He surveyed everything in great detail. He personally inspected each and every sportsperson’s room. He spoke to all the players in great detail. He had a word with the management and trainers; he himself ate with the sportspersons. With election results being due, with the distinct possibility of a new responsibility as a Chief Minister, and yet if one of my colleagues, in the capacity of a Sports Minister, displays such concern for his work, then it gives me great joy. And I am confident that like this, we should all realize the importance of sports, we should encourage the people in the world of sports, encourage our sportspersons. This becomes a source of strength in itself, when the sportsperson feels that his 125 crore countrymen are with him, his morale gets boosted.
Last time I spoke to you about the FIFA Under 17 World Cup and recently I got to see the suggestions that have come pouring in. And these days I have noticed that a conducive atmosphere for Football can be seen in the whole country. Many people are taking an initiative to form their own teams. I have received thousands of suggestions on the NarendraModi Mobile App. Maybe many people don’t play the game themselves, but hundreds of thousands of young Indians have displayed such keen interest in the sport, this by itself was a very delightful experience for me. We all know the bond that India has with Cricket, but I saw the same passion for Football as well, and this by itself heralds a very positive signal for the future. For all the selected candidates for the Rio Olympics, and for our favourite sportspersons, we should create a cheerful and positive atmosphere. We should not judge everything in terms of victory and defeat. India should be known in the world for its spirit of sportsmanship. I appeal to my countrymen to contribute their bit in creating an atmosphere that boosts the spirits and enthusiasm of our athletes.
In the last week or so, results have been pouring in from all over the country…. and I am not talking about election results… I am talking about those students who slogged for the entire year, those of 10th and 12th Class. It is clear that our daughters are marching ahead triumphantly. It is a matter of joy. To those who have succeeded in these exams, I extend my congratulations and felicitations. And those who were not able to succeed, I would like to tell them once again that there is a lot to do in life. Life does not get stuck if we do not get results according to our expectations. We should live with hope, we should move ahead with confidence.
But I have been confronted with a new type of question, about which earlier I had never given a thought. I’ve received one email on MyGov.in site, which drew my attention. One Mr. Gaurav, Gaurav Patel of Madhya Pradesh writes that in the M.P. Board exam he has secured 89.33% marks. Reading this I felt elated. But in his continued narration, he tells us his tale of woes. Gaurav Patel says that Sir, afte securing 89.33% marks when I reached home, I was thinking that I would be congratulated by my family and friends, I would be applauded. But I was amazed when everybody in the house, friends and my teachers said the same thing, “Oh Dear, if your had secured just 4 more marks, you would have made it to 90%”. So it seems that my family, my friends, my teachers, nobody was pleased with my 89.33% marks. Everyone was lamenting that I missed my 90% by four marks. Now I’m perplexed and don’t know how to handle the situation. Is this all to life. Was what I did not good enough? Did I not prove myself? I don’t know but I feel a burden on my heart and mind.
Gaurav, I have read your letter very carefully. And I feel that perhaps this pain is not just yours; like you there are many lakhs and crores of other students who share the same pain. Because nowadays there is a trend that instead of finding satisfaction in what we have achieved, we tend to express our dissatisfaction in not achieving unrealistic goals. This is another form of negativity. We can never guide society towards the path of satisfaction if we always find dissatisfaction in everything. It would have been better if your family members, your class mates and your friends had appreciated your 89.33%. Then you would have felt motivated enough to do a lot more. I would like to urge guardians, parents and people all around, to please accept, welcome and express your satisfaction over your children’s results, and motivate them to surge ahead in life. Else, it might happen that a day will come when he brings 100% marks and you will say that, “you have got 100 percent! But still, had you done something more, it would have been better!” There is a limit to everything and that should be accepted.
Santosh Giri Goswami has written to me from Jodhpur something similar, almost along the same lines. He says that the people around him just don’t accept the results. They say that you should have done something better. There was a poem I had read long ago. I don’t remember the complete poem. The poet had written something like this – “I painted a picture of my anguish on the canvas of life. And when it was exhibited, almost all the visiting people commented that it needed some touching up. Someone said, ‘yellow here would have been better in place of blue.’ Someone said, ‘This line would have been better situated there instead of here.’ I wish some odd visitor had also shed a tear or two over the picture of my anguish.” I don’t remember if these were the exact words of the poem, as I read this poem way back. But nobody was able to grasp the pain depicted in that picture; everyone just spoke of touching it up.
Santosh Giriji, you have the same problem that Gaurav has. And there must be crores of students like you. You have the burden on yourself of fulfilling the expectations of millions of others. All that I would like to say to you is that in such a situation, don’t lose your balance. Everyone expresses their expectations; just keep listening, but stick to your point and make an effort to do something even better. But if you are not satisfied over what you have got, you will never be able to create something new. The strong foundation of one success becomes the foundation for another greater success. The dissatisfaction arising out of success never becomes a ladder to success; it guarantees failure. And so I would like to appeal that you should sing in celebration of the success that you have achieved. Possibilities of newer successes will arise out of success achieved earlier. I would like to appeal to parents, friends and neighbours that please don’t impose your expectations upon your children. And friends, does our life come to a standstill if we meet with failure sometimes. Sometimes one is not able to score good marks in exams, but he or she surges ahead in sports, or does well in music, or excels in the fine arts, or forges ahead in business. God has gifted each one of us with a unique talent. Please recognize your internal strength, build upon it and you will be able to march ahead. And this happens everywhere in life.
You must have heard of the musical instrument called santoor. There was a time when the santoor was associated with the folk music of the Kashmir valley. But it was Pandit Shiv Kumar (Sharma) whose magical touch transformed it into one of the prime musical instruments of the world. Shehnai once had a limited space in the world of music. It was mostly played at the threshold of the courts of emperors and kings. But Ustad Bismillah Khan’s mastery over the Shehnai made it one of the finest musical instruments in the world; it has now carved an identity of its own. And so you should stop worrying about what you have and how is that. Just concentrate on what you have and devote your utmost with that you are sure to reap handsome rewards.
My dear countrymen, sometimes I notice that the money that our poor families have to spend on their healthcare, throws their life off the track. It is true that while one has to spend little on preventing illness, the expenditure incurred on regaining health after you have fallen ill, is a lot more. Why can’t we lead life in such a way that we don’t ever fall sick and no financial burden falls upon the family. Cleanliness is one of the strongest protections from disease. The greatest service that can be rendered to the poor is by maintaining cleanliness. And the second thing that I constantly urge you to do is Yog. Some people also call it Yoga. 21st June is the International Day for Yog. People are not only attracted to Yog the world over, they have implicit faith in it and the whole world has embraced it. This is a priceless gift handed over to us by our ancestors, which we have given to the world. To the world which is filled with stress, Yog gives the power to lead a balanced life. Prevention is better than cure. A person practicing Yog, can easily have the achievements of staying healthy, maintaining balance, being richly endowed with a strong will power, nurturing supreme self confidence and to have concentration in every task one does. 21st June, International Yog Day is not just a mere event. It should spread wide, it should find a place in every person’s life. Each person should take 20-25-30 minutes out from his daily routine and spend it on practicing Yog. And for this, the International Yog day on 21st June gives us the inspiration. These collective occasions do become a reason for effecting positive change in an individual’s life. I do hope that on 21st June, wherever you may be, please take the initiative; you have a month with you. If you visit the website of the Government of India, the syllabus for this time, which ‘asanas’ you have to do, how one has to do them, all that has been described in it. Have a look at it. Do get these followed in your village, in your mohallas, in your city, in your school, in your institution, even in offices. Start it from now, one month in advance and you will be a participating partner on 21st June. I have read it several times that there are offices where on a regular basis, when they first meet in the morning, they begin with Yog and Pranayam and the efficiency of the entire office increases. The whole culture of the office gets transformed and the environment also undergoes a positive change. Can we make use of 21st June to bring Yog into our lives? Can we use it to bring Yog into our social life? Can we use it to bring Yog into our surroundings? I will be going this time to Chandigarh to participate in the programme on 21st June. I shall be doing Yog with the people of Chandigarh. You too must connect yourself with it when the whole world will be doing Yog on that day. I urge you all not to get left behind. Your staying healthy is very important to make India healthy.
My dear country men, through Mann Ki Baat, I connect with you regularly. I had given all of you a mobile number earlier, which you could use for listening to ‘Mann Ki Baat’ by giving a missed call on that number. But now we have made it a lot simpler. Now, to be able to listen to this programme, all you have to do is to dial just four digits. That four digit number is 1-9-2-2 . I repeat …One- Nine- Two -Two. By giving a missed call on this number, you will be able to listen to ‘Mann Ki Baat’ at any time, wherever you are and in any language of your choice.
My dear countrymen, Namaskar to all of you once again! Please don’t forget what I had said about water. You will remember it, won’t you? Okay! Thank You. Namaste!
எனதருமை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். விடுமுறை நாட்களில் பல நிகழ்ச்சிகளுக்கு பலர் திட்டமிடுகிறார்கள். விடுமுறை நாட்களில் தான் மாம்பழப் பருவம் வருகிறது, மாம்பழங்களை சுவைத்து மகிழுங்கள்; அதே போல பகல் வேளையில் சில கணங்கள் கண்ணயர்ந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றலாம். ஆனால் இந்த முறை பயங்கரமான வெப்பம் நாலாபுறங்களிலும் அனைத்து வித சந்தோஷத்திலும் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.
தொடர்ந்து வறட்சி ஏற்படும் போதும், அனைத்து நீர் நிலைகளிலும் நீர் வற்றத் தொடங்கும் போதும் நாட்டில் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். சில வேளைகளில் ஆக்ரமிப்புக்கள் காரணமாக, தூர் வாராததன் காரணமாக, நீர் வரும் வழிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் காரணமாக, நீர் நிலைகளும் தங்கள் கொள் திறனை விடக் குறைவான அளவு நீரை சேமிக்கின்றன, பல ஆண்டுக்கால செயல்பாடுகள் காரணமாக அவற்றின் சேமிப்புத் திறன் தொடர்ந்து குன்றி வருகிறது.
வறட்சியை சமாளிக்கவும், நீர் இல்லாமை என்ற சங்கடத்திலிருந்து நிவாரணம் அடையவும் அரசுகள் தங்கள் முயற்சிகளை ஒரு பக்கம் மேற்கொண்டிருந்தாலும், குடிமக்களுமே கூட தங்கள் பங்குக்கு மிகச் சிறந்த வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதை என்னால் காண முடிகிறது. பல கிராமங்களில் விழிப்புணர்வு பரவியிருக்கிறது; நீரின் மகத்துவம் என்ன என்பதை நீருக்காக கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தான் அறிவார்கள்; அதனால் நீர் பற்றி உணர்வுபூர்வமாக ஏதோ ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
மஹாராஷ்ட்ர மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிவ்ரே பாஜார் கிராம பஞ்சாயத்தும் அங்கிருக்கும் கிராம மக்களும் தண்ணீர் பிரச்சனையை உணர்வுபூர்வமான வகையில் அணுகினார்கள் என்று சில நாட்கள் முன்பாக யாரோ ஒருவர் எனக்குத் தெரிவித்தார். நீரை சேமிக்க வேண்டும் என்று விரும்பும் கிராமங்கள் பல இருக்கலாம், ஆனால் இவர்களோ விவசாயிகளோடு உரையாடிய பிறகு ஒட்டு மொத்த cropping pattern, பயிரிடும் முறையையே மாற்றி விட்டார்கள். எந்தப் பயிர் அதிக நீரைப் பயன்படுத்துகிறதோ, அது கரும்பாகவோ, வாழையாகவோ இருக்கலாம், அத்தகைய பயிர்களை பயிர் செய்யாமல் இருப்பது என்ற முடிவை மேற்கொண்டார்கள்.
கேட்பதற்கு என்னவோ விஷயம் எளிமையானதாக இருக்கிறது, ஆனால் இது அத்தனை சுலபம் இல்லை. அனைவரும் இணைந்து எத்தனை பெரிய தீர்மானம் மேற்கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? ஏதாவது தொழிற்சாலை அதிக நீரைப் பயன்படுத்துகிறது என்றால், அந்த தொழிற்சாலையை மூடுங்கள் என்று கூறினால், என்ன விளைவு ஏற்படும் என்று நீங்களே அறிவீர்கள். ஆனால் எனது விவசாய சகோதரர்களைப் பாருங்கள், கரும்புக்கு அதிக நீர் தேவை என்பதால் கரும்பு நடவு செய்யாதீர்கள் என்றவுடன் உடனே விட்டு விட்டார்கள். முழுக்க முழுக்க அவர்கள் பழங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டார்கள், அதாவது எதற்கு மிகக் குறைந்த அளவு நீர் தேவைப்படுகிறதோ அதை மட்டுமே பயிர் செய்தார்கள்.
அவர்கள் தெளிப்பான், சொட்டு நீர் பாசனம், மழைநீர் சேமிப்பு, water recharging அதாவது மழை நீர் மறுசெறிவு என பல முனைப்புக்கள் மூலமாக இன்று தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தங்கள் சொந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள். சரி, நான் சின்னஞ்சிறிய ஒரு கிராமமான ஹிவ்ரே பாஜார் பற்றி பேசியிருக்கிறேன், ஆனால் இப்படி பல கிராமங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட கிராமவாசிகளுக்கும், நீங்கள் சாதித்திருக்கும் சிறப்பான செயல்களுக்காக நான் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாரோ ஒருவர் என்னிடம் மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் மாவட்டத்தில் இருக்கும் கோர்வா GORVA கிராம பஞ்சாயத்து பற்றிக் கூறினார். பஞ்சயத்தார் முயற்சிகள் மேற்கொண்டு, farm ponds பண்ணைக் குளங்கள் அமைக்க ஒரு இயக்கத்தை நடத்தினார்கள். சுமார் 27 பண்ணைக் குளங்கள் அமைக்கப்பட்டு, அதனால் நிலத்தடி நீர் அளவு அதிகரித்தது, நீர் மட்டம் உயர்ந்தது. எப்போதெல்லாம் பயிர்களுக்கு நீர்த் தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நீர் கிடைத்தது, அவர்களின் விவசாய உற்பத்தியில் சுமார் 20 சதவீத அதிகரிப்பு காணப்பட்டதாகவும் அவர்கள் கணக்குத் தெரிவிக்கிறார்கள்.
நீர் சேமிக்கப்பட்டதோடு நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது, நீரின் தரம் மேம்பாடு கண்டது. உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பது வளர்ச்சி காரணமாகத்தான் ஏற்படுகிறது என்று உலகில் கூறப்படுகிறது இல்லையா, உடல் நலம் பற்றி கேட்கவே வேண்டாம். இந்திய அரசு ரயில்கள் மூலமாக தண்ணீரை லாடூருக்கு கொண்டு சேர்க்கும் போது அது உலகிற்கு ஒரு செய்தியாக ஆவதைப் பற்றி எண்ணமிடுகிறேன்.
மிக விரைவான முறையில் நீரைக் கொண்டு சேர்த்ததில் ரயில்வே துறைக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்பது என்னவோ உண்மை தான், அதே சமயம் அந்த கிராமவாசிகளும் பாராட்டுக்குரியவர்களே. என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் இன்னும் கூட அதிகம் பாராட்டப் பட வேண்டியவர்கள். ஆனால் இப்படி பல திட்டங்கள் குடிமக்கள் வாயிலாகவே செயல்படுகின்றன, எப்போதும் அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை. அரசு செயல்படுத்தும் நல்ல விஷயங்களாவது எப்போதாவது தெரிய வருகிறது, ஆனால் நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், வறட்சியை எதிர்கொள்ள எந்தெந்த மாதிரியாக, புதுப்புது வழிமுறைகளை மேற்கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது நமக்குப் புலனாகும்.
எந்த ஒரு சங்கடத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒரு நல்ல செய்தி வந்து விட்டால், மொத்த சங்கடமும் தொலைந்து போனதாக உணர்வது தான் மனித இயல்பு. இந்த முறை மழையளவு 106 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை இருக்கும் வாய்ப்பு உள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, ஏதோ பெரியதொரு மகிழ்வான செய்தி வந்தது போல உணர்கிறேன். மழை பெய்ய இன்னும் காலம் இருந்தாலும், நல்ல மழை பொழிவு பற்றிய செய்தி கூட புத்துணர்வை கொண்டு சேர்த்திருக்கிறது.
ஆனால் எனதருமை நாட்டு மக்களே, நல்ல மழை இருக்கும் என்ற தகவல் எத்தனை ஆனந்தத்தை அளிக்கிறதோ, அதே அளவுக்கு அது வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கிறது, சவாலையும் முன்வைக்கிறது. கிராமம் தோறும் நீரை சேமிக்கும் இயக்கத்தை நம்மால் இப்போதே கூட தொடக்க முடியாதா? விவசாயிகளுக்கு மண் தேவைப்படுகிறது, விளை நிலங்களில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
கிராமங்களின் ஏரிகளில் இருக்கும் மண்ணை தூர் வாரி வயல்வெளிகளில் ஏன் நாம் போடக் கூடாது; அப்போது வயல்களின் மண்வளம் பெருகும் அதே வேளை, நீர் நிலைகளின் நீர் சேமிப்பு அளவும் அதிகரிக்குமே! காலியான சிமெண்ட் சாக்குகள், காலி உரமூட்டைப் பைகள் போன்றவற்றில் கல்லையும் மண்ணையும் நிரப்பி நீர் வெளியேறும் வழிகளில் போட்டு அடைத்து விட்டால் என்ன? நீர் 5 நாட்கள், 7 நாட்கள் என்று தேங்கியிருந்தால், நீர் நிலத்தடி நீராக மாறி விடுமே! தானாகவே நிலத்தடி நீர் மட்டம் உயருமே! நமது குளங்களில் நீர் வரத்து ஏற்படும். முடிந்த மட்டில் நீர் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும். மழை நீர், கிராமத்தின் நீராக இருக்கும், இந்தத் தீர்மானத்தை நாம் மேற்கொண்டு ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும், இது ஒட்டுமொத்த சமுதாயமும் இணைந்து ஈடுபடும் போது தான் இது சாத்தியமாகும். இன்று நீர் தட்டுப்பாட்டு பிரச்சனை இருக்கலாம், வறட்சி நிலை இருக்கலாம், ஆனால் நம்மிடம் ஒன்று ஒன்றரை மாத கால அவகாசம் இருக்கிறது; நான் ஒரு விஷயத்தை எப்போதுமே கூறுவதுண்டு, நாம் எப்போதாவது அண்ணல் காந்தியடிகள் பிறந்த இடமான போர்பந்தருக்குச் செல்லும் போது அங்கே பல்வேறு இடங்களை நாம் பார்க்கலாம், அவற்றில் ஒரு இடம் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது; அதாவது நீரை சேமித்து வைக்க எப்படி வீட்டுக்கு அடியில் குளங்களை 200 ஆண்டுகளுக்கும் முன்பாக அமைத்திருந்தார்கள், அந்த நீர் எத்தனை சுத்தமாக இருக்கிறது என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
திரு. குமார் க்ருஷ்ணா என்ற ஒருவர் mygov இணையதளத்தில் எழுதி இருக்கிறார், ஒரு வகையில் ஏக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நம் வாழ்நாளில் கங்கையை தூய்மைப்படுத்தும் இயக்கம் முழுமை அடையுமா என்று கேட்டிருக்கிறார். அவரது கவலை மிகவும் இயல்பான ஒன்று தான், ஏனென்றால் சுமார் 30 ஆண்டுக்காலமாக இந்தப் பணி நடைபெற்று வந்திருக்கிறது. பல அரசுகள் வந்தன, பல திட்டங்கள் உருவாயின, ஏகப்பட்ட பணம் செலவானது, இதன் காரணமாக, சகோதரர் குமார் க்ருஷ்ணா மாதிரியாக நாட்டில் பல கோடி மக்களின் மனதில் இது போன்றதொரு கேள்வி எழுவது இயல்பான ஒன்று தான். சமய நம்பிக்கை உள்ளவர்கள், வீடுபேற்றை அளிப்பவளாக கங்கையை கருதுகிறார்கள்.
அந்த மஹாத்மியத்தை நானும் கூட ஏற்கிறேன், ஆனால் அதையும் தாண்டி கங்கையை உயிர் அளிப்பவளாக நான் காண்கிறேன். கங்கைதான் நமக்கு உணவளிக்கிறாள்; கங்கையே நமக்கு வேலை தருகிறாள்; கங்கைதான் நமக்கெல்லாம் வாழத் தேவையான சக்தியை அளிக்கிறாள். கங்கையின் பிரவாஹம் எப்படி அமைகிறதோ, அதை ஒட்டித்தான் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளிலும் ஒரு வேகம் கிடைக்கிறது. ஒரு பகீரதன் நமக்கு கங்கையை கொண்டு வந்தார், ஆனால் அதைக் காக்க பல கோடிக்கணக்கான பகீரதர்கள் தேவைப் படுகிறார்கள். மக்கள் பங்களிப்பு இல்லாமல் பணியில் வெற்றி காண முடியாது, ஆகையால் நாமனைவரும் தூய்மைக்கான, சுத்தத்துக்கான ஒரு change agentகளாக, மாற்ற செயலிகளாக மாற வேண்டும். திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும், நினைவுறுத்த வேண்டும்.
அரசு தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கங்கைக் கரைகளில் எந்தெந்த மாநிலங்கள் எல்லாம் இருக்கின்றனவோ, அந்த மாநிலங்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் முயற்சி நடந்து வருகிறது. சமூகம் மற்றும் தூய்மை சார்ந்த அமைப்புக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. Surface cleaning, பரப்பை சுத்தப்படுத்தல் மற்றும் தொழில்துறை மாசினை தடுக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கால்வாய்கள் வழியாக திடக் கழிவுகள் பெரிய அளவில் வந்து கலக்கின்றன. இது போன்ற கழிவுகளை சுத்தம் செய்ய வாராணசி, இலாஹாபாத், கான்பூர், பட்னா போன்ற இடங்களில் செயல்படும் trash skimmer, குப்பை நீக்கி இயந்திரம் நீரில் நீந்தியவாறே நீரில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புக்களுக்கும் இது அளிக்கப்பட்டிருக்கிறது இதைத் தொடர்ந்து செயல்படுத்துங்கள், அங்கிருந்து குப்பையை அகற்றுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. எங்கெல்லாம் நல்ல முறையில் முயற்சி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் 3 டன்கள் முதல் 11 டன்கள் வரை தினமும் குப்பைகள் எடுக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு அசுத்தமடைவது தடுக்கப்பட்டிருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். இனி வரும் நாட்களில் மேலும் பல இடங்களில் இந்த குப்பை நீக்கி இயந்திரத்தைப் பொருத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும், இதன் பயன்களை கங்கை-யமுனைக்கரையோரமாக வசிக்கும் மக்கள் உடனடியாக அனுபவிப்பார்கள்.
தொழிற்சாலை மாசுகள் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்த காகித தொழிற்சாலை, வடிசாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரளவு இது செயல்படுத்தப்படவும் தொடங்கி இருக்கிறது. இதன் வாயிலாகவும் நல்ல விளைவுகள் ஏற்படும் என்று என் மனதுக்கு படுகிறது.
உத்தராகண்ட், உத்திர பிரதேச மாநிலங்களில் இருக்கும் வடிசாலைகளிலிருந்து வந்த வெளியேற்றங்கள், கடந்த சில நாட்களாக zero liquid discharge, அதாவது பூஜ்யம் திரவ வெளியேற்றம் என்ற நிலையில் வெற்றி பெற்றிருப்பதாக சில அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள், இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. காகித ஆலைகளிலிருந்து black liquorஇன் வெளியேற்றம் கிட்டத்தட்ட முழுமையாக முடிவுக்கு வந்திருக்கிறது.
நாம் சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இவை நமக்குக் காட்டுகிறது, ஒரு விழிப்புணர்வு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. கங்கைக் கரைகளில் மட்டுமல்ல, தொலைவான தென்னாட்டைச் சேர்ந்த யாராவது சந்திக்க நேர்ந்தாலும், ஐயா, கங்கை தூய்மையாகி விடுமல்லவா என்று அவசியம் கேட்கிறார்கள். வெகுஜனங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமான இது, கண்டிப்பாக கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் வெற்றியைக் கொண்டு சேர்க்கும். கங்கையைத் தூய்மைப்படுத்த மக்கள் தானங்கள் அளித்து வருகிறார்கள். மிக அருமையான முறையில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனதருமை நாட்டு மக்களே, இன்று ஏப்ரல் மாதம் 24ம் தேதி. இந்தியா இதை பஞ்சாயத் ராஜ் நாளாக கொண்டாடுகிறது. இன்று தான் பஞ்சாயத் ராஜ் அமைப்பு நம் நாட்டில் தொடங்கப்பட்டு, நாளாவட்டத்தில் இந்த அமைப்பு நம் மக்களாட்சி நிர்வாக அமைப்பில், ஒரு மகத்துவம் வாய்ந்த அம்சமாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி பாபா சாஹேப் அம்பேட்கருடைய 125வது பிறந்த நாளை நாம் கொண்டாடினோம், இன்று ஏப்ரல் மாதம் 24ம் தேதி, பஞ்சாயத் ராஜ் நாளைக் கொண்டாடி வருகிறோம்.
இது தற்செயலாக நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம், எந்த மாமனிதர் நமக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தாரோ, அவரது பிறந்த நாள் தொடங்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய இணைப்பான கிராமங்கள், இவை இரண்டையும் இணைக்கும் கருத்தூக்கமாக இது அமைந்திருப்பதால், இந்திய அரசு மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு ஏப்ரல் மாதம் 14 தொடங்கி ஏப்ரல் மாதம் 24 வரை பத்து நாட்களுக்கு கிராமோதயம் முதல் பாரத உதயம் வரை என்ற இயக்கத்தை செயல் படுத்தியது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளின் போது அவரது பிறந்த இடமான MHOWவில் நான் இருந்தேன் என்பதை பெரும் பேறாகவே கருதுகிறேன். அந்த புனிதமான பூமிக்கு அஞ்சலி செலுத்தும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்று ஏப்ரல் மாதம் 24, நமது பெரும்பான்மை பழங்குடி சகோதர சகோதரிகள் வாழும் ஜார்க்கண்டில் பஞ்சாயத் ராஜ் நாளைக் கொண்டாட இருக்கிறேன்,
இந்த இயக்கம் மிகப் பெரிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் கிராம அளவில் ஜனநாயக அமைப்புக்களை எவ்வாறு பலப்படுத்துவது? கிராமங்களை எப்படி சுயசார்புடையவைகளாக ஆக்குவது? தங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படி கிராமங்கள் தாங்களே தீட்டிக் கொள்வது? கட்டமைப்புக்கான மகத்துவம், சமூக கட்டமைப்புக்கான மகத்துவம் ஆகியன இருத்தல், கிராமங்களில் பள்ளிப்படிப்பை அரைகுறையாக நிறுத்துவது தடுக்கப்படல், பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதைத் தடுத்தல், பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம், ஆகியன வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பெண் குழந்தையின் பிறந்த நாள் கிராம விழாவாக கொண்டாடப் பட வேண்டும், சில கிராமங்களில் உணவுதானத் திட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவின் பல கிராமங்களில் பலவகையான நிகழ்ச்சிகள் பத்து நாட்களில் நடைபெற்றிருக்கலாம், இது அளவில் குறைவாக இருக்கலாம். மிக அடிப்படையான வழிகளில் புதுமையான முறையில், இத்தனை நாட்களும் கிராமங்களின் நன்மைக்காக, கிராமங்களின் வளர்ச்சிக்காக, ஜனநாயகம் ஆற்றல் பெற, இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அனைத்து மாநில அரசுகள், கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கு என் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது, அது தான் இந்திய உதயத்துக்கான உத்திரவாதம். பாரத உதயத்தின் ஆதாரம் கிராம உதயத்தில் தான் இருக்கிறது; ஆகையால் கிராம உதயத்தின் மீது நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம், விரும்பிய பலன்களை அடைந்தே தீருவோம்.
மும்பையைச் சேர்ந்த ஷர்மிலா (Dhaarpure) தார்புரே அவர்கள் தொலைபேசி வாயிலாக தனது கவலையைத் தெரிவித்திருக்கிறார்: பிரதம மந்திரி அவர்களே, வணக்கங்கள். நான் உங்களிடம் பள்ளி, கல்லூரிக் கல்வி பற்றி வினாவெழுப்ப விரும்புகிறேன். கல்வித் துறையில் கடந்த பல ஆண்டுகளாகவே மேம்பாடு தேவையாக இருந்து வந்திருக்கிறது. போதுமான பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லாமை அல்லது கல்வித் தரம் இல்லாமை. பிள்ளைகள் தங்கள் கல்வியை நிறைவு செய்தாலும் கூட, பல வேளைகளில் அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள் பற்றிய அறிவே இல்லாமல் கூட இருக்கிறது. இதனால் நமது குழந்தைகளின் உலகில், ஓட்டத்தில் அவர்கள் எப்போதுமே பின் தங்கி விடுகிறார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன, இந்தத் துறையில் நீங்கள் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? இதைப் பற்றி தயவு செய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். நன்றி.
இந்தக் கவலை இயல்பான ஒன்று தான். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் தாய் தந்தையருக்கு முதன்மையான கனவு என்று ஒன்று இருக்குமானால், அது குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பது தான். வீடு, வாகனம் போன்றவை பற்றிய சிந்தனை எல்லாம் பின்னர் தான். இந்தியா போன்ற நாட்டின் மக்கள் மனங்களில், இந்த உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது, இது தான் மிகப் பெரிய பலம். குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, நன்கு படிக்க வைப்பது. நல்ல கல்வி கிடைக்க வேண்டும், இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் – இது மேலும் அதிகரிக்க வேண்டும், மேலும் விழிப்புணர்வு ஏற்பட வெண்டும். எந்தக் குடும்பங்களில் எல்லாம் இந்த விழிப்புணர்வு இருக்கிறதோ, அதன் தாக்கம் பள்ளிகள் மீதும் ஏற்படுகிறது, ஆசிரியர்கள் மனங்களிலும் ஏற்படுகிறது, நான் இதைப் பெறவே பள்ளி செல்கிறேன் என்று குழந்தைகள் மனதிலும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆகையால் நான் தாய் தந்தையர் அனைவரிடத்திலும் வைக்கும் விண்ணப்பம், குழந்தைகளிடம் விரிவான முறையில், சற்று நேரம் எடுத்துக் கொண்டு பள்ளிகளின் நடைமுறைகள் பற்றி கலந்து பேசுங்கள் என்பது தான்.
ஏதோ ஒன்று மனதில் எழுந்தால், தாங்களே பள்ளிக்கூடம் சென்று ஆசிரியர்களிடம் வினவுங்கள். இந்த விழிப்புணர்வு தான் நமது கல்வி முறையில் இருக்கும் பல குறைபாடுகளைக் குறைக்க வழி வகுக்கும், மக்களின் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும். நமது நாட்டில் அனைத்து அரசுகளும் கல்வி மீது அதிக கவனம் செலுத்தி வந்திருக்கின்றன, ஒவ்வொரு அரசும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகளும் மேற்கொண்டிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டும், கல்வி அமைப்பு விரிவாக்கம் பெற வேண்டும், பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட வேண்டும், ஆசிரியர்கள் சேர்க்கப்பட வேண்டும், அதிகபட்ச குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டும் என்றே கணிசமான காலம் நமது மக்களின் கவனம் இருந்து வந்துள்ளது என்பதும் உண்மை தான்.
ஒரு வகையில் கல்வியைப் பரப்பும் முயற்சி முதன்மை பெற்று விளங்கியது, இது அவசியமானதும் கூட. ஆனால் விரிவாக்கத்தின் மீது இருந்த முக்கியத்துவம் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிக முக்கியத்துவம் நமது கல்வி முறையில் மேம்பாடு மீதும் இருப்பது அவசியம். விரிவாக்கத்தின் மிகப் பெரிய பணியை நாம் செய்து விட்டோம். இப்போது நாம் தரமான கல்வி மீது முனைப்பு காட்ட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக இப்போது நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கமாக வேண்டும். இது வரை கணக்கு வழக்குகள் எல்லாம் அமைப்புகளைச் சார்ந்தே இருந்தன, இப்போது நாம் விளைவுகள் பற்றிய முனைப்பில் கவனம் செலுத்த வேண்டும். இது வரை பள்ளிகளில் எத்தனை பேர் வந்தார்கள் என்பதன் மீது நமது கவனம் இருந்தது, இப்போது பள்ளி செல்லுதலை விட, கற்றல் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளியில் சேர்த்தல், சேர்த்தல், சேர்த்தல் – இந்த மந்திரம் தான் சதா சர்வ காலம் ஒலித்து வந்தது, ஆனால் இப்போது எந்தப் பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்றிருக்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல கல்வி, தரமான கல்வி ஆகியவை அளித்தல் மீது நமது குவிமையம் அமைய வேண்டும். தற்போதைய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி அளவை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நல்ல கல்வி மீது கவனம் செலுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். நாம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டாக வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் 125 கோடி நாட்டு மக்களும் தீர்மானித்து விட்டோம் என்றால், நீண்ட பயணமும் சாத்தியமாகி விடும். ஷர்மிலா அவர்கள் கூறியபடி அடிப்படை மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும் என்பது மிகவும் தேவையாக இருக்கிறது.
இந்த முறை நாம் வாடிக்கையான நடைமுறையிலிருந்து விலகி பணியாற்றி இருக்கிறோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பட்ஜெட்டிலேயே, பத்து அரசு பல்கலைக்கழகங்கள், பத்து தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு அரசுக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களித்து, போட்டிகள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தலை சிறந்த பல்கலைக் கழகமாக ஆக என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைக் கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் வகையில் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல்கலைக் கழகங்களும் உலக அளவில் போட்டி போடும் திறன் படைத்த பல்கலைக் கழகங்களாக ஆக முடியும், ஆகவும் வேண்டும். கல்விக்கான முக்கியத்துவம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் திறன்களுக்கும் இருக்கிறது, அதே போல கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு மகத்தானதாக இருக்கப் போகிறது. தொலைதூரக் கல்வி, தொழில்நுட்பம் – இவை தாம் நமது கல்வியை எளிதாக்கும், சில காலத்திலேயே இதன் பலன்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நீண்ட காலமாக ஒரு விஷயம் பற்றி மக்கள் என்னிடம் கேட்டு வருகிறார்கள், சிலர் இணையதளமான mygovஇல் எழுதியும் இருக்கிறார்கள், சிலரோ narendramodiappஇல் தெரிவித்திருக்கிறார்கள், பல இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
பிரதமர் அவர்களே வணக்கங்கள். நான் பிஜ்னோரிலிருந்து மோனா கர்ணவால் பேசுகிறேன். இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு கல்வியோடு கூட விளையாட்டும் அதிக மகத்துவமானதாக இருக்கிறது. அவற்றில் team spirit, குழு உணர்வு இருத்தல் அவசியம், நல்ல தலைவராக ஆகும் இயல்பும் இருத்தல் வேண்டும், இதன் மூலமாக அவர்களின் முழுமையான வளர்ச்சி ஏற்படும். இதை நான் என் அனுபவம் வாயிலாகக் கூறுகிறேன், ஏனென்றால், நான் பாரத சாரண சாரணியர் அமைப்பில் இருந்திருக்கிறேன், இது என் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் அதிக அளவில் இளைய சமுதாயத்துக்கு கருத்தூக்கம் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அரசும் கூட அதிக அளவில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், பாரத் சாரண சாரணியர் அமைப்பு ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் எல்லோரும் எனக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளை அளித்திருக்கிறீர்கள், இதைப் பார்த்த பிறகு, உங்களிடம் உரையாடும் முன்பாக, இந்த அமைப்புக்களிடம் நான் பேச வெண்டும் என்று எனக்குத் தோன்றியது. நீங்கள் அளித்த அழுத்தம் காரணமாக, உங்களின் ஆலோசனைகள் காரணமாக, நான் இப்போது ஒரு கூட்டத்தை கூட்டினேன், அதில் தேசிய மாணவர் படையின் தலைவர் இருந்தார், நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணியர் அமைப்பு, செஞ்சிலுவை சங்கம், நேரு யுவ கேந்திரம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தார்கள். இதற்கு முன்பாக நீங்கள் எப்போது சந்தித்தீர்கள் என்று அவர்களிடம் வினவிய போது, இல்லை இல்லை, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இப்போது தான் முதன் முறையாக இது போன்றதொரு கூட்டம் நடைபெறுகிறது என்றார்கள் அவர்கள்.
முதன்மையாக இந்த அனைத்து பணிகள் குறித்து என் மீது அழுத்தம் அளித்த அத்துணை இளைய நண்பர்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். இதன் விளைவாகத்தான் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த சந்திப்பினால் நன்மை விளைந்தது என்று கருதுகிறேன். அதிக அளவு ஒருங்கிணைப்பு இதற்கு தேவைப்பட்டது. அவரவர்கள் தத்தமது முறையில் நிறைய வேலைகளைச் செய்கிறார்கள், ஆனால் சமூக ரீதியாக, ஒருங்கிணைந்த முறையில் நமது பல்வேறு அமைப்புகள் பணியாற்றும் போது மகத்தான விளைவை ஏற்படுத்த முடியும், இல்லையா? அவர்களின் வீச்சு பரந்ததாக இருக்கிறது, பல குடும்பங்களைச் சென்று அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.
இவர்களின் இந்த அளவு பரவலாக்கம் எனக்கு மன நிறைவை அளித்தது. அவர்களிடம் அதிக உற்சாகம் காணப்பட்டது, ஏதாவது செய்தாக வேண்டும். நானே ஒரு காலத்தில் தேசிய மாணவர் படையில் கேடட்டாக இருந்திருக்கிறேன், இவை போன்ற அமைப்புக்கள் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கிறது என்பதை நான் அறிவேன், ஒரு தேசிய கண்ணோட்டம் ஏற்படுகிறது என்பது உண்மை. என் சிறுபிராயத்தில் நான் நன்மைகளை அனுபவித்தேன், இந்த அமைப்புக்களில் ஒரு புதிய சக்தியை நிரப்ப வேண்டும், புதிய ஊக்கத்தை அளிக்க வேண்டும். இந்த முறை நான் அவர்கள் முன்னிலையில் சில விஷயங்களை வைத்திருக்கிறேன்.
இந்தப் பருவ காலத்தில், நமது இளைஞர்களும், அனைத்து அமைப்பினரும் நீர் சேமிக்கும் மகத்தான பணியில் ஏன் ஈடுபடக் கூடாது என்று வினவினேன். எத்தனை வட்டங்கள், எத்தனை மாவட்டங்களில் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதை நம்மால் தடுக்க முடியும். எப்படி திறந்த வெளி மலஜலம் கழிப்பதிலிருந்து விடுதலை அளிக்க முடியும்? நாட்டை இணைக்க எந்த மாதிரியான திட்டங்களை ஏற்படுத்தலாம், அனைத்து அமைப்புக்களின் பொதுவான இளைஞர்கள் பாடல் என்னவாக இருக்க முடியும்? என அவர்களிடம் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
நம்மிடையே இளைஞர்களுக்கான பலவகையான அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றின் செயல்முறை, திட்டங்கள் ஆகியவற்றில் என்ன மாதிரியான புதிய விஷயங்களை நம்மால் இணைக்க முடியும் என்பது குறித்து நீங்கள் எனக்கு மிகச் சரியான ஆலோசனை வழங்குங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். என் narendramodiappஇல் நீங்கள் எழுதினால், நான் அதை சரியான இடத்துக்கு கொண்டு சேர்க்கிறேன், இந்த சந்திப்புக்குப் பிறகு, அமைப்புக்களின் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும் என்று நான் கருதுகிறேன், நீங்களுமே உங்களை அவர்களோடு இணைத்துக் கொள்ள விரும்புவீர்கள், இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, இன்று நாமனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் விஷயம் பற்றி நான் பேச வேண்டி இருக்கிறது. இதை நான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகவும் பார்க்கிறேன். எந்தக் கட்சி எத்தனை எரிவாயு சிலிண்டர்களை அளிக்கும் என்பது கடந்த பல தேர்தல்களின் விவாதப் பொருளாக அமைந்திருந்தது என்ற அளவில், நமது நாட்டின் அரசியல் நிலைமை இருந்தது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். 12 சிலிண்டரா இல்லை 9 சிலிண்டரா? இது தான் மிகப் பெரிய தேர்தல் விஷயமாக இருந்து வந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், மத்தியதட்டு மக்களை தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும் என்று எண்ணியதால், எரிவாயு சிலிண்டர் மிகப் பெரிய விஷயமாக ஆனது. மற்றொரு புறம், மானியங்களைக் குறையுங்கள் என்று பொருளாதார வல்லுனர்கள் அழுத்தம் அளித்து வந்தார்கள், இதன் காரணமாக பல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை மானியக் குறைப்பு பற்றிய ஆலோசனைகளையும் முடிவுகளையும் அளித்தன. இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் பல கோடி ரூபாய் செலவானது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இது அனைவருக்கும் பொதுவான அனுபவமாக விளங்கியது. இதைத் தாண்டி யாருமே சிந்திக்கவில்லை.
இன்று நாட்டுமக்களே, உங்கள் முன்பாக கணக்கு காட்டுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் 3வது வழிமுறையை மேற்கொண்டேன், மக்களின் மீது நம்பிக்கை வைக்கும் பாதை தான் அது. சில சமயங்களில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் எங்களைப் போன்றவர்கள் தங்களை விட, தங்களைச் சார்ந்தவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். நான் மக்கள் மீது நம்பிக்கை வைத்தேன், நீங்கள் ஓராண்டு செலவினமாக 1500 முதல் 2000 ரூபாய் வரை ஏற்றுக் கொள்ள முடியுமானால், நீங்கள் ஏன் எரிவாயு மானியத்தைத் துறக்கக் கூடாது, இது ஏதாவது ஒரு ஏழைக்கு உதவியாக இருக்குமே என்று இயல்பான வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் இன்று என் நாட்டு மக்கள் மீது கொண்ட பெருமிதத்தால் என் நெஞ்சு விம்முகிறது. ஒரு கோடி மக்கள், தாமே முன்வந்து தங்கள் எரிவாயு மானியத்தைத் துறந்திருக்கிறார்கள், இந்த ஒரு கோடிப் பேர்கள் அனைவருமே சீமான்கள் அல்ல. இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற குமாஸ்தாக்கள், விவசாயிகள், சிறிய கடை வைத்திருப்பவர்கள் என இவர்களில் மத்திய தட்டு மக்கள், கீழ் மத்திய தட்டு மக்கள் இருக்கிறார்கள்; இவர்கள் இந்த மானியத்தைத் துறந்திருக்கிறார்கள்.
இரண்டாவது சிறப்பைப் பாருங்கள், இந்த மானியத்தை அவர்கள் மொபைல் app மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, தொலைபேசியில் மிஸ்ட் கால் தருவதன் மூலமாகவோ, பல வழிகளில் செய்திருக்கலாம். ஆனால் கணக்குப் பார்த்தால், இந்த ஒரு கோடிப் பேர்களில் 80 சதவீதத்துகும் அதிகமானோர் தாங்களே விநியோகஸ்தர்களிடம் சென்றார்கள், வரிசையில் நின்றார்கள், எழுத்து வடிவத்தில் கொடுத்து தங்கள் மானியத்தைத் துறந்தார்கள்.
எனதருமை நாட்டு மக்களே, இது சிறிய விஷயம் அல்ல. அரசு ஏதோ ஒரு வரிவிதிப்பில் சற்று விலக்கு அளித்தால், வாரம் முழுவதும் தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அந்த அரசுக்கு பாராட்டு மழை வந்து குவியும். ஒரு கோடி குடும்பங்கள் மானியத்தைக் கைவிட்டிருக்கின்றன, பார்க்கப் போனால் நம் நாட்டில் மானியங்கள் ஒரு வகையில் உரிமையாகவே ஆகியிருக்கின்றன, அப்படிப்பட்ட மானியத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். நான் முதன் முதலாக, அந்த ஒரு கோடிக் குடும்பங்களுக்கும் என் பல நூறு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகிறேன். ஏனென்றால் இவர்கள் அரசியல் தலைவர்களை புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஒரு நிகழ்வே கூட, நாட்டின் பொருளாதார வல்லுனர்களை புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்கும் கட்டாயத்துக்குத் தள்ளியிருக்கிறது. பலவகையான சாத்தியக்கூறுகளை முன்வைக்கும் உலகின் பொருளாதார வல்லுனர்களுக்குமே கூட, இது அவர்களின் எண்ணப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக அமைந்திருக்கிறது. இது பற்றி ஏதாவது ஒரு கட்டத்தில் சிந்தித்தாக வேண்டும். ஒரு கோடிக் குடும்பங்கள் மானியத்தைக் கைவிடுவது என்பதும், அவர்களுக்கு பதிலாக ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பது என்பதும், ஒரு கோடிக் குடும்பங்கள் மானியத்தைத் துறந்ததால் மிச்சமாகும் நிதி என்பதும், மேலோட்டமாகப் பார்க்கும் போது சாதாரணமான விஷயமாகத் தோன்றினாலும், மக்கள் மீது நம்பிக்கை கொண்டு செயலாற்றும் போது எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதையே காட்டுகிறது, இது தான் அசாதாரணமான விஷயம். நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கண்டிப்பாக ஒரு விஷயத்தையாவது கூற வேண்டும் என்று நான் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத பலன்கள் உங்களுக்குக் கிட்டும். நாம் இந்தத் திசையில் பயணிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 3ம் நிலை, 4ம் நிலைப் பணியாளர்களுக்கு ஏன் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும், அவர்களின் தேர்வு மதிப்பெண்கள் மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று ஏதோ என் மனதில் எண்ணம் உதித்தது. சில இரயில் தடங்களில் டிக்கட் பரிசோதகர்கள் இருக்க மாட்டார்கள் என்று அறிவிப்பு செய்யலாமே என்று கூட என் மனதில் எண்ணம் எழுகிறது. செய்து தான் பார்க்கலாமே! நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைப்போமே! இப்படி பல பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். ஒரு முறை நாம் நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து விட்டால், அபாரமான பலன்கள் கிட்டும். ஏதோ என் மனதுக்குப் பட்டதைக் கூறி வைத்தேன், அவ்வளவு தான். இதை யாரும் அரசின் விதிமுறையாக ஆக்க முடியாது. ஆனால் சூழலை என்னவோ ஏற்படுத்தலாம். அல்லவா? இந்த சூழலை ஏதோ அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தவில்லை, நாட்டின் ஒரு கோடி குடும்பங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.
ரவி என்ற ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார் – good news everyday, தினமும் நல்ல சேதி. ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல விஷயம் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்று உங்கள் அதிகாரிகளுக்குக் கூறுங்கள். ஒவ்வொரு செய்தித் தாளிலும், ஊடகத்திலும் மோசமான செய்தி தான் breaking newsஆக தெரிவிக்கப்படுகிறது. 125 கோடி மக்கள் கொண்ட நமது நாட்டில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடப்பதில்லையா? தயவு செய்து இந்த நிலையை மாற்றுங்கள் என்று ரவி அவர்கள் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரவி அவர்கள் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், அவர் என் மீது கோபம் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன், நிலைமை மீது கோபம் கொண்டிருக்கிறார். இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் APJ Abdul Kalam அவர்கள் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் நல்ல செய்திகளையே அச்சிடுங்கள் என்று எப்போதும் கூறி வந்திருக்கிறார். சில நாட்கள் முன்பாக ஒரு செய்தித் தாள் எனக்கு கடிதம் கூட அனுப்பி இருந்தது. நாங்கள் திங்கட்கிழமையன்று ஒரு மோசமான செய்தியையும் கூட வெளியிட மாட்டோம், ஆக்கபூர்வமான செய்தியையே வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்கள். இப்போதெல்லாம் சில மின்னூடகங்கள் ஆக்கபூர்வமான செய்திகளுக்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருப்பதை நான் பார்க்கிறேன். ஆக்கபூர்வமான செய்திகளுக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். நல்ல செய்திகள், உண்மையான செய்திகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் உணர்கிறார்கள். ஒரு பிரபலமான நபர் என்ன தான் சிறப்பான தகவலை அளித்தாலும், அதை எத்தனை அழகான சொற்கள் வாயிலாகத் தெரிவித்தாலும், அருமையான முறையில் விளக்கினாலும் அதை விட அதிக பலன் நல்ல செய்தியின் மூலம் கிடைக்கிறது. நல்ல செய்தி நல்ல செயல்களுக்கு கருத்தூக்கமாக அமைகிறது. எந்த அளவுக்கு நாம் நன்மைக்கு வலு கூட்டுகிறோமோ, அந்த அளவுக்கு தீயவைகளுக்கான இடம் குறைகிறது என்பது சத்தியம். நாம் தீபத்தை ஏற்றினால், இருள் தாமாகவே விலகி விடும், கண்டிப்பாக விலகும். அரசு தரப்பில் Transforming India என்ற பெயரிலான ஒரு இணைய தளத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் ஆக்கபூர்வமான செய்திகள் வெளிவருகின்றன. அரசின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மட்டுமல்ல, மக்களின் நல்ல பணிகளும் இடம் பெறுகிறது, இந்த portalஇல் நீங்களும் கூட ஏதாவது நல்ல செய்தி இருந்தால், அனுப்பி வைக்கலாம். நீங்களும் அதில் பங்களிப்பு நல்க முடியும். ரவி அவர்களே, நீங்கள் நல்ல ஆலோசனையை அளித்திருக்கிறீர்கள். ஆனால் தயவு செய்து என் மீது கோபம் கொள்ளாதீர்கள். நாமனைவருமாக இணைந்து ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவோம், ஆக்கபூர்வமானவற்றைப் பேசப் பழகுவோம், ஆக்கப்பூர்வமானவற்றைக் கொண்டு செல்லும் முயற்சிகளில் பங்கெடுப்போம்.
கும்ப மேளா நமது நாட்டின் சிறப்பு. கும்ப மேளா சுற்றுலா ஈர்ப்பு மையமாக ஆக முடியும். நதிக் கரையில், பல நாட்களுக்கு கோடிக்கணக்கான மனிதர்கள் வந்து குழுமுகிறார்கள் என்பது உலக மக்களில் பல பேர்களுக்குத் தெரியாமலே இருந்துள்ளது. அமைதியான மனதோடு, அமைதி நிறைந்த சூழலில் விழா நிறைவடைகிறது. இந்த நிகழ்வுகள் அமைப்பு ரீதியாக, நிகழ்ச்சி மேலாண்மைக் கோணத்தில், மக்களின் பங்கெடுப்பு என்ற வகையில், மிகப் பெரிய தரமட்டங்களை சாதிக்கிறது. சிம்ஹஸ்த கும்ப மேளா தொடர்பான படங்களை பலர் தரவேற்றம் செய்து வருவதை கடந்த இரு நாட்களாக நான் கவனித்து வருகிறேன். இந்திய அரசின் சுற்றுலாத் துறை, மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள் இதையொட்டி புகைப்படப் போட்டியை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மிகச் சிறப்பான புகைப்படங்களை நீங்கள் தரவேற்றம் செய்யுங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொள்ளலாம். சூழலில் பெரிய மாற்றத்தை நாம் காண முடியும், அதே வேளையில் கும்ப மேளா விழாவின் போது எத்தனை வேறுபட்ட விஷயங்கள் நடக்கின்றன என்று மக்களுக்கும் தெரிய வரும். இதைக் கண்டிப்பாக செய்ய முடியும். இடையில் மத்திய பிரதேச முதல்வர் என்னை சந்தித்த போது, தூய்மையின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார். தூய்மை என்பது இந்த விழாவின் போது மட்டுமல்ல, அங்கிருந்து தூய்மை பற்றிய கருத்தை மக்கள் தங்கள் மனங்களில் சுமந்து செல்ல வேண்டும் என்பதே நோக்கம். கும்ப மேளா சமயம், ஆன்மீகம் தொடர்பான ஒரு விழா என்பதை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அதுவே கூட ஒரு சமுதாய வாய்ப்பாக ஆக முடியும் என்று நான் கருதுகிறேன். இதை நல்ல பழக்கங்கள் ஏற்படும் வாய்ப்பாகவும் ஆக்க முடியும். அங்கிருந்து நல்ல தீர்மானங்கள், நல்ல பழக்கங்கள் ஆகியவற்றை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கும் காரணியாகவும் அதை உருமாற்ற முடியும். தண்ணீரின் மீது எப்படி நமது நேசத்தை அதிகரிக்கலாம், நீரை எப்படி நாம் போற்றலாம், தண்ணீர் சேகரிப்பு தொடர்பான செய்தியை ஆகியவற்றைப் பரப்ப கும்ப மேளாவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனதருமை நாட்டு மக்களே, பஞ்சாயத்து ராஜின் இந்த மகத்துவபூர்வமான தினத்தன்று எனது அளப்பரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போலவே இப்போதும் உங்கள் மனதின் குரல்களோடு எனது மனதின் குரலும் பிரிக்க முடியாதவையாக ஒலித்தன. இது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. மீண்டும் ஒரு முறை பலப்பல நன்றிகள்!!
எனதருமை நாட்டு மக்களே, உங்களுக்கு என்னுடைய பற்பல வணக்கங்கள். இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். நான் அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கான நல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
என் இளைய நண்பர்களே, நீங்கள் அனைவரும் ஒரு புறம் தேர்வில் முனைப்பாக இருப்பீர்கள். சிலரது தேர்வுகள் நிறைவடைந்திருக்கலாம். சிலருக்கு இது வேறு ஒரு புறம் சவாலாக அமையலாம், ஏனென்றால் ஒரு பக்கம் தேர்வு நடந்து கொண்டிருக்கும் வேளை, மறு புறத்தில் உலகக் கோப்பைக்கான டி 20 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் கூட நீங்கள் இந்தியா ஆஸ்திரேலியா ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பீர்கள். கடந்த நாட்களில் இந்தியா, பாகிஸ்தான் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. ஒரு அருமையான உத்வேகம் புலப்படுகிறது. இன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஆட இருக்கும் வேளையில், நான் இரு அணி வீரர்களுக்கும் என் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
65 சதவீதம் மக்கள் இளைஞர்களாக இருந்தும் விளையாட்டு உலகத்தில் நம்மால் முத்திரை பதிக்க முடியவில்லை என்பது சரியானதாகப் படவில்லை. விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இப்போது கிரிக்கெட்டைப் போலவே இந்தியாவில், கால்பந்தாட்டம், ஹாக்கி, டென்னிஸ், கபடி ஆகிய ஆட்டங்களுக்கு சாதகமான ஒரு மனோநிலை உருவாகி வருகிறது. இளைஞர்களிடம் இன்று நான் ஒரு மகிழ்வான செய்தியைக் கூறும் அதே வேளையில், சில எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்த விழைகிறேன். அடுத்த ஆண்டு 2017இல் இந்தியா FIFA Under-17 உலகக் கோப்பைப் போட்டியை நம் நாட்டில் நடத்தவிருக்கிறது என்பது உங்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம். உலகின் 24 அணிகள் இந்தியாவில் விளையாட வருகின்றன. 1951, 1962 ஆசியப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது; 1956 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த சில பத்தாண்டுகளில் நாம் தரவரிசையில் மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தொடர் வீழ்ச்சியைக் கண்டு வந்துள்ளோம். இன்றோ FIFA வின் தரவரிசையில் நமது நிலை எந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்றால், அதை வாய் விட்டுக் கூறக் கூட சங்கடமாக இருக்கிறது. EPL ஆகட்டும், Spanish League ஆகட்டும், இந்திய சூப்பர் லீக் ஆட்டங்கள் ஆகட்டும், இன்று இந்திய இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை நான் இன்றைய கால கட்டத்தில் காண்கிறேன். இந்தியாவின் இளைஞர்கள் கால்பந்தாட்டம் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள தொலைக்காட்சிகளைப் பார்க்கிறார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், கால் பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்தத் தான். ஆனால் இத்தனை பெரிய வாய்ப்பு இந்தியாவின் கதவங்களைத் தட்டும் போது நாம் புரவலர்களாக மட்டும் இருந்து நம் கடமைகளை ஆற்றுவோமா? இல்லை, நாம் ஆண்டு முழுவதிலும் எங்கும் கால் பந்து எதிலும் கால்பந்து என்றதொரு சூழலை உருவாக்கலாம், பள்ளிகளில், கல்லூரிகளில், இந்தியாவில் மூலை முடுக்கெங்கிலும் இந்திய இளைஞர்கள், நமது பள்ளி மாணவர்கள் என அனைவரும் கால்பந்தாட்டம் ஆடி வியர்வையில் குளிக்கட்டும். நாலாபுறங்களிலும் கால்பந்தாட்டம் விளையாடப்படட்டும். இப்படி நாம் செய்தால், கால்பந்தாட்டப் போட்டிகளில் புரவலர்கள் என்ற சந்தோஷம் ஒரு புறம் நமக்கு ஏற்படும்; அதே சமயம் நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கால்பந்தாட்டத்தை ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் கொண்டு செல்லும் முயற்ச்சிகளில் ஈடுபட முடியும்.
2017 FIFA Under – 17 உலகக் கோப்பை என்பது எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு என்றால், இந்த ஓராண்டில் நாம் நாலாபுறங்களிலும் இளைஞர்களுக்குள்ளே கால்பந்தாட்டம் தொடர்பான புத்துணர்வை, ஒரு புதிய உற்சாகத்தை நரப்ப முயல வேண்டும். இந்த ஆட்டங்களுக்கான புரவலர்களாக நாம் இருப்பதில் ஒரு சாதகமான அம்ஸம் இருக்கிறது, அதாவது கால்பந்தாட்டத்துக்கான கட்டமைப்பு வசதிகள் இதனை ஒட்டி ஏற்படுத்தப்படும். விளையாட்டுக்குத் தேவையான முக்கியமான வசதிகள் மீது கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு இளைஞனும் கால்பந்தாட்டத்தோடு இணைக்கப்படும் போது தான் நான் முழுமையாக மகிழ முடியும்.
நண்பர்களே, நான் உங்களிடம் ஒன்று எதிர்பார்க்கிறேன். 2017ஆம் ஆண்டு போட்டிகளின் புரவலர்களான நாம் எப்படி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், ஆண்டு முழுவதும் நமது கால்பந்தாட்டத் துறையில் உத்வேகத்தை ஏற்படுத்த என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இது பற்றிய தகவல்களை எப்படி பரவலாக்குவது, அமைப்புக்களில் மேம்பாட்டை எப்படிச் செய்ய வேண்டும், FIFA Under – 17 உலகக் கோப்பை வாயிலாக இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டின் பால் எப்படி ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வது, அரசுகளில், கல்வி நிறுவனங்களில், மற்ற சமூக அமைப்புக்களில் விளையாட்டை ஒட்டிய போட்டிகளை எவ்வாறு செயல்படுத்தலாம்? க்ரிக்கெட்டை நாம் அனைவரும் ஆர்வத்தோடு பார்க்கும் அதே வேளையில், இது போன்றதொரு நிலையை மற்ற விளையாட்டுக்களிலும் நாம் கொண்டு வர வேண்டும். கால்பந்தாட்டப் போட்டிகள் ஒரு நல் வாய்ப்பு. நீங்கள் இது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை எனக்கு அளிக்க முடியுமா? உலக அளவில் இந்தியாவை branding செய்ய இது ஒரு வாய்ப்பாக நான் கருதுகிறேன். இந்தியாவின் இளைஞர்கள் சக்தியை அடையாளம் காட்ட அமைந்த ஒரு நல் வாய்ப்பாக நான் இதைக் கருதுகிறேன். ஆட்டங்களில் நாம தோற்றோமா, ஜெயித்தோமா என்ற அர்த்தத்தில் நான் கூற வரவில்லை. இந்தப் பந்தயத்தை நடத்துவதன் வாயிலாக நாம் நமது ஆற்றலை முடுக்கி விட முடியும், சக்தியை வெளிப்படுத்த முடியும், அதே வேளையில் நாம் பாரதத்துக்கு brandingஐயும் செய்ய முடியும். நீங்கள் நரேந்திரமோதிAppஇல் இது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வைப்பீர்கள் இல்லையா? Logo எப்படி இருக்க வேண்டும், விளம்பர கோஷங்கள் / slogans எப்படி இருக்க வேண்டும், இந்தியா இதை விளம்பரப்படுத்த என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், பாடல் எப்படி இருக்க வேண்டும், நினைவுப் பரிசுகள் செய்யப்பட வேண்டும் என்றால் எந்த வகையில் எல்லாம் அவை அமையலாம். உங்கள் எண்ணக் குதிரைகளைத் தட்டி விடுங்கள் தோழர்களே, எனது ஒவ்வொரு இளைஞரும் இந்த 2017 FIFA உலகக் கோப்பைக்கான தூதுவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும் இதில் கலந்து கொள்ளுங்கள், இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தைப் படைக்க இது பொன்னான தருணம்.
எனதருமை மாணவச் செல்வங்களே, விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லலாம் என்று நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள். மிகக் குறைவான பேர்களே அயல்நாடுகளுக்குச் செல்கிறார்கள், பெரும்பாலானோர் அவரவர் மாநிலங்களில் 5 நாட்கள், 7 நாட்கள் என சுற்றுலா சென்று விடுகிறார்கள். சிலரோ தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். நீங்கள் எங்கு செல்கிறீர்களோ, அந்த இடத்தின் புகைப்படத்தை தரவேற்றம் செய்யுங்கள் என, கடந்த முறை கூட நான் உங்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்திருந்தேன். எந்தப் பணியை சுற்றுலாத் துறையால் செய்ய முடியவில்லையோ, எந்தப் பணியை நமது கலாச்சாரத் துறையால் செய்ய முடியவில்லையோ, எந்தப் பணியை மாநில அரசுகள், இந்திய அரசு ஆகியவற்றால் செய்ய முடியவில்லையோ, அந்தப் பணியை நாட்டின் கோடிக்கணக்கான அயல்நாடு வாழ் மக்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் தரவேற்றம் செய்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது, உண்மையிலேயே ஆனந்தம் மேலிடுகிறது. இந்தப் பணியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், அதே போல இந்த முறையும் செய்யுங்கள், ஆனால் இந்த முறை வேறு ஒன்றையும் சேர்த்துச் செய்யுங்கள். வெறும் புகைப்படம் மட்டும் அனுப்பாமல், அதோடு உங்கள் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துங்கள், புது இடங்களுக்குச் செல்லும் போதும் பார்க்கும் போதும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த விஷயங்களை நம்மால் வகுப்பறைகளில் கற்க முடிவதில்லையோ, எவற்றைக் குடும்பத்தில் கற்க முடிவதில்லையோ, எவற்றை நமது நண்பர்களிடத்திலும் கூட தெரிந்து கொள்ள முடிவதில்லையோ, அவற்றை எல்லாம் சில வேளைகளில் பயணிக்கும் போது நம்மால் அதிகம் கற்றுக் கொள்ள முடிகிறது, புதிய இடங்கள் ஒரு புதிய அனுபவத்தை நமக்குள் விதைக்கிறன. மக்கள், மொழி, உணவு, செல்லும் இடங்களில் நிலவும் வாழ்க்கை முறை என எத்தனை விஷயங்களைப் பார்க்க முடிகிறது. A traveler without observation is a bird without wings, அதாவது கவனித்தல் இல்லாத ஒரு பயணி சிறகில்லாத பறவைக்கு இணையானவர் என்று யாரோ கூறியது நினைவுக்கு வருகிறது. காட்சிகளைப் பார்க்கும் ஆர்வம் இருக்குமாயின், அதற்கு ஏற்ப கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு. ஒரு முறை காண வேண்டும் என்று பயணிக்கத் தொடங்கி விட்டால், வாழ்க்கை முழுவதும் பயணித்துக் கொண்டே தான் இருப்பீர்கள், பார்த்து ரசித்துக் கொண்டே தான் இருப்பீர்கள். உங்கள் மனம் எப்போதும் நிறையாது, அந்த வகையில் சுற்றுப் பயணம் செய்யும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது நான் செய்த அதிர்ஷ்டம் தான்.
நான் முதல்வராகவோ பிரதமராகவோ இல்லாத காலத்தில், நானும் உங்களை மாதிரியே சிறு வயதுடையவனாக இருந்த போது நிறைய சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் நான் செல்லாத மாவட்டம் என்ற ஒன்று இருக்குமா என்பது சந்தேகம் தான். நம் வாழ்க்கையை உருவாக்குவதில் சுற்றுலாவுக்கு என மிகப் பெரிய சக்தி இருக்கிறது, இப்போதெல்லாம் இந்திய இளைஞர்கள் சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்களின் உற்சாகம் அதிகரித்து வருகிறது. பழைய மாதிரி எல்லோரும் சென்ற, அல்லது அமைத்துக் கொடுத்த பாதையில் அவர்கள் பயணிப்பதில்லை, ஏதோ ஒன்றை புதியதாக செய்ய விரும்புகிறார்கள், ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் காண விரும்புகிறார்கள். நான் இதை ஒரு நல்ல அடையாளமாகக் கருதுகிறேன். நமது இளைஞர்கள் சாகசமானவர்களாக இருக்க வேண்டும், எங்கே யாரும் கால் பதிக்கவில்லையோ, அங்கே கால் பதித்து முன்னேறும் ஆர்வம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
நான் coal india நிறுவனத்துக்கு என் சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Western coalfields limited, WCL நிறுவனத்துக்கு நாக்பூருக்கு அருகே சாவனேர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன. அந்த நிலக்கரிச் சுரங்கங்களை அவர்கள் Eco Friendly Mine Tourism Circuit, அதாவது சூழலுக்கு இசைவான சுற்றுலாச் சுற்றாக மேம்படுத்தி இருக்கிறார்கள். பொதுவாக நிலக்கரிச் சுரங்கங்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். அங்கிருப்போர் பற்றிய படங்களைப் பார்க்கும் போது அங்கு சென்று என்ன ஆகப் போகிறது என எண்ணுவோம்; நிலக்கரியால் கைகளை கருப்பாக்கிக் கொண்டால் தாமாகவே மற்றவர்கள் விலகி ஓடுவார்கள் என்று எங்கள் பகுதியில் ஒரு வழக்கே கூட இருக்கிறது. ஆனால் அதே நிலக்கரியை வைத்தே சுற்றுலாச் சுற்று ஒன்றை ஏற்படுத்தல் என்பது மகிழ்வை அளிக்கிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே, இது வரை சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாகபுரிக்கு அருகே உள்ள ஸாவனேர் கிராமத்துக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் சூழலுக்கு இசைவான நிலக்கரிச் சுரங்க சுற்றுலாவை அனுபவித்திருக்கிறார்கள். புதுமையான ஒன்றைக் காணும் வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த விடுமுறைக் காலத்தில் நீங்கள் பிற இடங்களுக்குச் செல்லும் போது, தூய்மை தொடர்பாக உங்கள் பங்களிப்பை அளிக்க முடியுமா? இப்போதெல்லாம் ஒரு விஷயம் கண்டிப்பாக காண முடிகிறது, அளவு குறைவானதாக இருக்கலாம், விமர்சனம் செய்யும் அதே வேளையில், இது வாய்ப்பாகவும் இருக்கிறது, ஆனால் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பது என்னவோ உறுதி. சுற்றுலா இடங்களில் மக்கள் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளும் இதை மேற்கொள்கிறார்கள், சுற்றுலா இடங்களில் வசிக்கும் மக்களும் தூய்மை தொடர்பான தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள். இது மிகவும் விஞ்ஞான பூர்வமாக செய்யப்படாமல் இருக்கலாம், ஆனால் நடப்பது என்னவோ உண்மை. நீங்களும் ஒரு சுற்றுலாப் பயணி என்ற முறையில் சுற்றுலா மையத்தில் தூய்மை என்ற கருத்துக்கு வலு கூட்டும் வகையில் செயல்பட முடியுமா? என்னுடைய இளைய நண்பர்கள் இந்தப் பணியில் எனக்கு கண்டிப்பாக உதவியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சுற்றுலா என்பது அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு துறை என்பது உண்மை. சுற்றுலா இடத்துக்கு வந்து விட்டால், பரம ஏழையால் கூட சம்பாதிக்க முடிகிறது. ஏழை சுற்றுலாப் பயணி சென்றாலும் கூட, ஏதோ ஒன்றை வாங்குகிறார். சுற்றுலாப் பயணி சீமானாக இருந்தால், அவர் அதிக செலவு செய்வார். உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவில் சுற்றுலா என்பது மிகவும் பின் தங்கி இருக்கிறது. ஆனால் நமது சுற்றுலாத் துறையை பலப்படுத்த வேண்டும் என்று 125 கோடி மக்களும் ஒரு மனதோடு தீர்மானித்தால், உலகத்தையே நம்மால் கவர்ந்திழுக்க முடியும். உலகின் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பகுதியை நாம் நம்மை நோக்கி ஈர்க்க முடியும், நம் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அரசாகட்டும், அமைப்புக்களாகட்டும், சமுதாயமாகட்டும், குடிமக்களாகட்டும், நாமனைவரும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபடுவோம். வாருங்கள் நாம் இந்தத் திசையில் பயணிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவோம்.
எனது இளைய நண்பர்களே, விடுமுறை நாட்கள் ஏதோ வந்தன, சென்றன என்ற நிலை எனக்குப் பிடிக்கவில்லை. நீங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தியுங்கள். உங்கள் விடுமுறை நாட்கள், வாழ்க்கையின் மகத்துவமான ஆண்டுகள், அவற்றின் மகத்துவம் பொருந்திய கணங்களை வீணே செல்ல விடலாமா? நான் உங்கள் சிந்தைக்கு ஒரு கருத்தை முன்வைக்கிறேன். நீங்கள் உங்கள் விடுமுறைக் காலத்தில் ஒரு திறனை வளர்த்துக் கொள்ளலாம், உங்கள் ஆளுமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு புதிய விஷயத்தை இணைத்துக் கொள்ளலாம் இல்லையா? உங்களுக்கு நீச்சல் தெரியாது என்றால், விடுமுறைக்காலத்தில் நான் நீச்சல் கற்றுக் கொள்வேன் என்றோ, சைக்கிள் ஓட்டத் தெரியாது என்றால், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வேன் என்றோ தீர்மானிக்கலாம். இன்றும் கூட நான் இரண்டு விரல்களைக் கொண்டு கணிப்பொறியில் டைப் செய்கிறேன் என்றால் நான் தட்டெழுத்துப் பயிற்ச்சியை மேற்கொள்ளலாமே? நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ள எத்தனை வகையான திறன்கள் இருக்கின்றன, இல்லையா? நாம் ஏன் அவற்றைக் கற்றுக் கொள்ள முடியாது? நாம் ஏன் நம் குறைபாடுகளை நீக்கிக் கொள்ளக் கூடாது? நாம் ஏன் நமது ஆற்றலை வளர்த்துக் கொள்ளக் கூடாது?
இப்போது சிந்தித்துப் பாருங்கள், இதற்க்கென பெரிய பயிற்ச்சிகள் தேவையில்லை, எந்த பயிற்சியாளரும் அவசியமில்லை, அதிக கட்டணம் தேவையில்லை, பெரிய செலவாகும் என்பதெல்லாம் இல்லை. உங்களுக்கு அருகே இருக்கும் ஒன்றைக் கூட, எடுத்துக்காட்டாக கழிவுப் பொருளிலிருந்து ஆக்கபூர்வமான பொருளை உருவாக்குவேன் என்று கூட நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளலாம். கவனித்துப் பாருங்கள், பிறகு நீங்களே செய்யத் தொடங்குங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும், மாலை நெருங்கும் வேளையில் நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே, குப்பையிலிருந்து நீங்கள் கோபுரத்தை சமைத்திருப்பீர்கள். உங்களுக்கு படம் வரைய விருப்பமா, ஆனால் வரைய வராது என்றால், தொடங்குங்களேன், தானே வரும். விடுமுறைக் காலங்களில் உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள, உங்களிடம் ஒரு புதிய திறனை மேம்படுத்திக் கொள்ள, உங்கள் திறனை அதிகரித்துக் கொள்ள அவசியம் முயலுங்கள், எண்ணிறந்த துறைகளில் நீங்கள் இப்படிச் செய்ய முடியும், நான் சொல்லும் துறைகளில் மட்டுமே செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் ஆளுமை அதன் மூலம் அடையாளம் காணப்படும், உங்களின் தன்னம்பிக்கை ஏராளமான அளவு அதிகரிக்கும். ஒரு முறை செய்து பாருங்கள், விடுமுறை நாட்களுக்குப் பிறகு நீங்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லும் போது, நான் இந்த விடுமுறை நாட்களில் இதைக் கற்றுக் கொண்டேன் என்று கூறுவீர்கள், அந்த நண்பர் எதையும் கற்றுக் கொண்டிருக்க மாட்டார், அந்த நேரத்தில் நண்பா, என் விடுமுறைக் காலத்தை நான் வீணாக்கி விட்டேன், ஆனால் நீ நன்கு சிறப்பாக செயல்பட்டிருக்கிறாய் என்று கூறுவார். இது போல மற்ற நண்பர்களிடமும் உரையாடல் நிகழும். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புதியதாக எதைக் கற்றுக் கொண்டீர்கள் என்று என்னிடம் கூறுங்கள். கூறுவீர்கள் இல்லையா! இந்த முறை மனதின் குரலில், mygov தளத்தில் சில ஆலோசனைகள் வந்திருக்கின்றன.
எனது பெயர் அபி சதுர்வேதி. வணக்கம் பிரதமர் அவர்களே, நீங்கள் கடந்த கோடைக் கால விடுமுறையின் போது, பறவைகளுக்கும் கோடையின் வெப்பம் வாட்டும், ஆகையால் நாம் அவற்றுக்காக பால்கனியிலோ, வீட்டின் மாடியிலோ ஒரு பாத்திரத்தில் நீர் வைக்க வேண்டும், இதன் மூலம் அவற்றுக்கு நீர் கிடைக்கும் என்று கூறி இருந்தீர்கள். நான் இந்த வேலையைச் செய்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இதன் வாயிலாக நிறைய பறவைகளோடு எனக்கு நட்பு மலர்ந்தது. இந்த முறை மீண்டும் இதை உங்கள் மனதின் குரலில் வெளிப்படுத்துங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
எனதருமை நாட்டு மக்களே, நான் அபி சதுர்வேதி அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தச் சிறுவன் நான் மறந்த ஒரு விஷயத்தை எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார். இதைப் பற்றிக் கூற வேண்டும் என்று என் மனதில் உதிக்கவில்லை, ஆனால் கடந்த ஆண்டு நான் பறவைகளுக்காக வீட்டுக்கு வெளியே மண் கலயத்தை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அபி எனக்கு நினைவுபடுத்தியிருக்கிறார். எனதருமை நாட்டு மக்களே, நான் அபி சதுர்வேதி என்ற சிறுவனுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு நல்ல செயலைப் பற்றி எனக்கு நினைவூட்டி இருக்கிறார். கடந்த முறை நான் கூறியது எனக்கு நினைவில் உள்ளது. வெப்பக் காலங்களில் உங்கள் வீட்டுக்கு வெளியே மண் பாத்திரங்களில் நீர் நிரப்பி வையுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆண்டு முழுக்க அவர் இந்தப் பணியை செய்து வருவதாக அபி எனக்குத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பல பறவைகள் அவருக்கு நேசமாகி இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹிந்தி இலக்கிய உலகின் மகத்தான கவிஞர்களில் ஒருவரான மகாதேவி வர்மா அவர்கள் பறவைகளின் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்தார். அவர் தனது கவிதைகளில், உன்னை தொலைவாகச் செல்ல அனுமதிக்க மாட்டேன், தானியங்களால் முற்றத்தை நிரப்புவேன், எங்கும் குளிர்ந்த இன்சுவை நீரை நிறைத்து வைப்பேன், என்று பாடி இருக்கிறார். நான் அபிக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு என் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் எனக்கு மிக முக்கியமான விஷயத்தை நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.
மைசூரைச் சேர்ந்த ஷில்பா கூகே (Kooke) மிகவும் நுட்பமான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். நமது இல்லங்களுக்கு அருகே பால் விற்பனை செய்ய வருகிறார்கள், செய்தித் தாள் விற்பவர்கள் வருகிறார்கள், தபால்காரர் வருகிறார், சில வேளைகளில் பாத்திர விற்பனையாளரோ, துணிமணி விற்பனை செய்பவரோ கடந்து செல்கிறார்கள். கோடையின் வெப்பம் தகிக்கும் வேளையில் அவர்களின் தாகம் தணிக்க நீர் வேண்டுமா என்று எப்போதாவது நாம் கேட்டிருக்கிறோமா? எப்போதாவது நாம் அவர்களுக்கு அருந்த நீர் அளித்திருக்கிறோமா? ஷில்பா, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், நீங்கள் மிகவும் உணர்வுரீதியான கருத்தை மிகவும் இயல்பான முறையில் முன் வைத்திருக்கிறீர்கள். விஷயம் என்னவோ சிறியது தான் என்றாலும் கோடைக்காலத்தின் போது ஒரு தபால்காரர் வீட்டினருகே வரும் போது, நாம் அவருக்கு அருந்த நீர் அளித்தால் அவருக்கு எத்தனை இதமாக இருக்கும். இந்தியாவில் இந்த மனோபாவம் இயல்பாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் இத்தனை நுட்பமான விஷயத்தின் மீது கவனம் செலுத்தியிருப்பதைக் கண்டு நான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, டிஜிட்டல் இந்தியா பற்றி நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலருக்கு இந்த டிஜிட்டல் இந்தியா என்பது ஏதோ நகரத்து இளைஞர்கள் தொடர்பான விஷயமாகப் படலாம். அது தான் இல்லை, உங்களுக்கு வசதியாக விவசாயிகள் வசதிக்கானApp ஒன்று சேவையில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவசாயிகள் வசதிக்கானAppஐ நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் தரவிறக்கம் செய்து கொண்டால், விவசாயம் தொடர்பான, வானிலை தொடர்பான அனைத்துத் தகவல்களும் உங்கள் கைத்தலத்திலேயே கிடைத்து விடும். சந்தைகளில் நிலைமை என்ன, சந்தைக்கூடங்களில் நிலை என்ன, நல்ல அறுவடையின் போக்கு எப்படி இருக்கிறது, எந்த விதமான பூச்சிகொல்லிகள் உகந்தவையாக இருக்கும் என பல தகவல்களை அதிலிருந்து பெற முடியும். அது மட்டுமல்ல, இதில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால், அது உங்களுக்கு விவசாய விஞ்ஞானிகளோடு அல்லது விவசாய வல்லுனரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அவர்களிடத்தில் நீங்கள் ஏதேனும் கேள்விகளைக் கேட்டால் அதற்கு பதில் தருகிறார்கள் அல்லது உங்களுக்கு விளங்கும் வகையில் புரிய வைக்கிறார்கள். எனது விவசாய சகோதர சகோதரிகள் இந்த விவசாயிகள் வசதிக்கானAppஐ தங்கள் மொபைல் ஃபோனில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என்று முயன்று தான் பாருங்களேன். அதில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் குறைகளை என்னிடம் தெரிவியுங்கள்.
எனது விவசாய சகோதர சகோதரிகளே, மற்றவர்களுக்கு எல்லாம் கோடைக்காலம் விடுமுறைக்கான பருவமாக இருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு என்னமோ அது வியர்வை சிந்தும் வேளையாக மாறி விடுகிறது. அவர்கள் மழை எப்போது வரும் என்று வழி மீது விழி வைத்துக் காத்திருகிறார்கள், அது வரும் முன்னதாக, தங்கள் நிலத்தை தயார் நிலையில் வைக்க இரவு பகலாக தங்கள் உயிரைக் கொடுத்து பாடு படுகிறார்கள்; அப்போது தான் மழைநீரின் ஒரு துளி கூட வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும். விவசாயிகளுக்கு விவசாயம் செய்யும் தொடக்க காலம் மிகவும் மகத்துவம் நிறைந்த ஒன்றாகும். ஆனால் நீரில்லாது போனால் என்னவாகும் என்று நாட்டு மக்களாகிய நாமும் சிந்திக்க வேண்டும். நமது நீர் நிலைகள், நம்மருகில் நீர் பெருக்கெடுத்து ஓடும் வழிகள், ஏரிகளில் நீர் வரத்துக்கான கால்வாய்கள் ஆகியவற்றில் குப்பை கூளங்களோ ஆக்கிரமிப்புக்களோ ஏற்பட்டிருந்தால், நீர் வருவது தடைப்பட்டுப் போகும்; இதன் காரணமாக நீர்த் தேக்கம் மெல்ல மெல்ல குறைந்து போகத் தொடங்கும். மீண்டும் ஒரு முறை நாம் அந்தப் பழைய இடங்களைத் தோண்டி சுத்தம் செய்து, அதிக நீர் சேமிப்புக்கான வழிகளில் ஈடுபட முடியாதா? எத்தனை நீரை நம்மால் சேமிக்க முடியுமோ, அதுவும் முதல் மழையிலேயே கூட நாம் நீரை சேமித்து விட்டால், நீர் நிலைகள் நிறைந்து விட்டால், நமது நதிகளும் குளங்களும் நிறைந்து விட்டால், பின்மழை பொய்த்தாலும் கூட, நமக்கு ஏற்படும் இழப்பு குறைவாகவே இருக்கும். இந்த முறை 5 இலட்சம் ஏரிகள், நீர்ப்பாசனக் குளங்களை ஏற்படுத்தும் முயற்ச்சியை மேற்க்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்ரேகா மூலமாக நீர் சேமிப்புக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்ச்சியை எடுத்திருக்கிறோம். கிராமம் தோறும் நீர் சேமிக்க வேண்டும், எதிர் வரும் மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் எப்படி சேமிப்பது. கிராமத்தின் நீர் கிராமத்திலேயே இருத்தல் வேண்டும் என்ற இயக்கத்தை செயல்படுத்துவோம், நீங்கள் திட்டம் தீட்டுங்கள், அரசின் திட்டங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நீர் தொடர்பாக ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கலாம், இதன் மூலம் நீரின் மகத்துவம், முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிய வைக்கப் படுவதோடு, நீர் சேமிப்பில் அனைவரும் ஒன்றிணைய முடியும். நாட்டில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய கிராமங்கள் பல இருக்கலாம், முன்னோடி விவசாயிகள் பலர் இருக்கலாம், பல விழிப்புணர்வு கொண்ட குடிமக்கள் இருக்கலாம். ஆனால் இப்போது இதை மேலும் உத்வேகத்தோடு செய்ய வேண்டிய வேளை வந்திருக்கிறது.
எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, நான் மீண்டும் ஒரு முறை இந்த விஷயத்தை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்கள் முன்பாக இந்திய அரசு ஒரு மிகப் பெரிய விவசாயிகள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது, என்னவெல்லாம் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று அப்போது என்னால் பார்க்க முடிந்தது, என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது விவசாயத் துறையில் என்று உணர முடிந்தது, ஆனாலும் கூட இவை விளைநிலங்கள் வரை கொண்டு சேர்க்கப்பட வேண்டும், உரங்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று விவசாயிகளே கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நான் இதை வரவேற்கிறேன். அதிக உரங்களின் தவறான பயன்பாடு நமது பூமித் தாயை நோய்வாய்ப்படச் செய்கிறது, நாம் நமது பூமித் தாயின் மைந்தர்கள், அப்படி இருக்கையில் நாம் எப்படி நமது தாய் நோய்வாய்ப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? நல்ல மசாலாப் பொருட்களைச் சேர்த்தால், உணவு சுவையும் மணமும் கூடியதாக ஆகிறது, ஆனால் அதே மசாலாவை அளவுக்கு அதிகம் சேர்த்தால், உணவு உண்ண வேண்டும் என்று மனதுக்கு தோன்றுமா? அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் விஷம் தானே?
உரங்கள் விஷயமும் இப்படித் தான், உரம் என்ன தான் உன்னதமானதாக இருந்தாலும், சரி, அளவுக்கு அதிகமாக உரத்தைப் பயன்படுத்தினால், அதுவே கூட அழிவுக்கான பாதையில் கொண்டு சேர்த்து விடும். ஒவ்வொரு விஷயத்திலும் நிதானம் தேவை, இதனால் செலவும் குறைவாகும், உங்கள் பணமும் மிச்சமாகும். குறைந்த செலவு நிறைந்த விளைச்சல், குறைந்த முதலீடு, அதிக லாபம் என்பதே நமது இலக்கு, இந்த மந்திரத்தை மனதில் கொண்டு, அறிவியல் முறைகளைக் கையாண்டு நாம் நமது விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீர் சேமிப்பு விஷயத்தில் நாம் என்னவெல்லாம் முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ, மழை வர இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கையில் நாம் அதிக முனைப்போடு அவற்றில் ஈடுபட வேண்டும். எந்த அளவு நீரை சேமிக்க முடிகிறதோ, அத்தனைக்கத்தனை விவசாயிகளுக்கு பலன் கிட்டும், வாழ்க்கையில் அந்த அளவுக்கு சேமிப்பு அதிகமாகும்.
எனதருமை நாட்டு மக்களே, ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உலக சுகாதார தினம், இதன் மையக்கருத்தாக Beat Diabetes இருக்கிறது, அதாவது நீரிழிவு நோயை முறியடிப்போம் என்பது பொருள். நீரிழிவு நோய் என்ற ஒரு நோய் மற்ற நோய்களின் வருகைக்கு பட்டுக்கம்பள வரவேற்பு அளிக்கும் கேடாக விளங்குகிறது. ஒரு முறை நீரிழிவு நோய் பீடித்து விட்டால், அதன் பின்னர் ஏகப்பட்ட நோய்கள் நங்கூரமிட்டு உடலைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளும். 2014ம் ஆண்டு இந்தியாவில் சுமார் 6½ கோடி நீரிழிவு நோயாளிகள் இருந்தார்கள். ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬ நிகழும் இறப்புக்களில் 3 சதவீதம் நீரிழிவு நோய் காரணமாக நிகழ்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் இரு வகைப்படும், ஒன்று type 1, மற்றது type 2. Type 1 என்பது பரம்பரை பரம்பரையாக வருவது, hereditary, தாய் தந்தைக்கு இருப்பதால் பிள்ளைக்கும் ஏற்படுகிறது. Type 2, பழக்கங்கள் காரணமாக, வயது காரணமாக, உடல் பருமன் காரணமாக ஏற்படுகிறது. நம்மால் இதை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். உலகம் முழுக்க நீரிழிவு நோய் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் இதையே 7ஆம் தேதி உலக சுகாதார தினத்தின் மையக்கருவாக இதை அமைத்திருக்கிறார்கள். நமது வாழ்க்கை முறை இதற்குப் பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. உடல் உழைப்பு குறைந்து கொண்டே வருகிறது.
வியர்வையை சுத்தமாக நாம் பெருக்குவதில்லை, நடைப்பழக்கம் ஏதும் கிடையாது. விளையாட்டுக்களைக் கூட கணிப்பொறியில் தான் விளையாடுகிறோம், கணிப்பொறி இல்லாத விளையாட்டுக்கள் விளையாடுவதில்லை. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியால் கருத்தூக்கம் பெற்று நாம் நமது வாழ்வுகளில் நீரிழிவு நோயைத் தோற்கடிக்கும் விதமாக செயல்பாடுகளில் இறங்க முடியுமா? உங்களுக்கு யோகாசனங்கள் செய்வதில் நாட்டம் இருந்தால் அதில் ஈடுபடுங்கள், இல்லையென்றால் ஓடியோ நடந்தோ பழகலாம். என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாக இருந்தால், எனது பாரதமும் ஆரோக்கியமாக இருக்கும். சில வேளைகளில் சங்கடப் பட்டுக்கொண்டு நாம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதில்லை. நிலைமை மோசமடைந்த பிறகு தான் ஐயோ, ரொம்ப காலமாகவே நீரிழிவு நோய் இருந்திருக்கிறது என்பது தெரிய வரும். பரிசோதனை செய்து கொள்வதால் என்னவாகிப் போய் விடும், இதையாவது செய்யுங்களேன், இப்போது தான் அனைத்து வசதிகளும் இருக்கின்றனவே. இது மிகவும் சுலபமாக நடந்து விடும். கண்டிப்பாக இதைச் செய்யுங்கள்.
மார்ச் மாதம் 24ஆம் தேதி உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. என் சிறு வயதில், டிபி என்ற பெயரைக் கேட்டவுடனேயே மக்கள் பயந்து போய் விடுவது என் நினைவில் இன்னும் இருக்கிறது. அவ்வளவு தான், மரணம் நிச்சயம் என்று தீர்மானித்தே விடுவார்கள். ஆனால் இப்போது காச நோயால் அத்தனை பயம் வருவதில்லை, ஏனென்றால் காசநோய்க்கு நிவாரணம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். காசநோயோடு மரணம் தொடர்பு படுத்தப்பட்ட போது நாம் அஞ்சினோம் என்பது ஒரு காலம், ஆனால் இப்போதோ நாம் காச நோய் தொடர்பாக கவனக் குறைவாக இருக்கிறோம். மற்ற நாடுகளில் இருக்கும் காச நோயாளிகள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் நம் நாட்டில் குறைவு தான். காச நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் சரியான சிகிச்சை அவசியம், முழுமையான சிகிச்சை முக்கியம். அரைகுறையாக சிகிச்சையை இடையில் விட்டு விட்டால், நோய் மீண்டும் வந்து விடும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் கூட, காச நோய் வந்திருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்து பாருங்கள் என்று கூறக் கூடிய அளவுக்கு காச நோய் பற்றி தெரிந்திருக்கிறது. இருமல் வருகிறது, காய்ச்சல் ஏற்படுகிறது, உடல் மெலிந்து கொண்டே வருகிறது என்றால் காச நோய் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயப்பாடு, அக்கம்பக்கத்தாருக்குக் கூட எழுகிறது. அதாவது, நோய் இருக்கிறதா என்று உடனடியாக தெரிந்து கொண்டு சிகிச்சை பெறக் கூடியதாக இது இருக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே, இந்தக் கண்ணோட்டத்தில் ஏகப்பட்ட ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 13,500க்கும் அதிகமான microscopy மையங்கள் இருகின்றன. 4 இலட்சத்துக்கும் அதிகமான dot providerகள் இருக்கின்றன. பல மேம்பட்ட பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன, அனைத்து சேவைகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஒரு முறை பரிசோதனையாவது செய்து கொள்ளுங்கள். சரியான சிகிச்சையால் இந்த நோய்க்கு ஒரு முடிவு கட்ட முடியும். காச நோயாகட்டும், நீரிழிவு நோயாகட்டும், நாம் அவற்றை முறியடித்தாக வேண்டும். இந்தியாவை இந்த நோய்களின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும். ஆனால் உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் அரசுகள், மருத்துவர்கள், மருந்துகளால் மட்டும் இவற்றை ஒழிக்க முடியாது. ஆகையால் நாம் நீரிழிவு நோயை முறியடிக்க வேண்டும், காச நோயை ஒழித்து விட வேண்டும் என்று நான் நாட்டு மக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, ஏப்ரல் மாதம் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பீம்ராவ் பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள். அவரது 125வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. Mhow – மோ அவர் பிறந்த இடம், லண்டனில் அவர் கல்வி பயின்றார், நாகபுரியில் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது, தில்லியின் 26 அலிபூர் ரோட்டில் அவரது மகாபரிநிர்வாண நிகழ்வு அரங்கேறியது, மும்பையில் அவரது அந்திமக் கிரியைகள் நடைபெற்ற இடத்தில் நினைவிடம் என இந்த ஐந்து புனிதமான இடங்களை மேம்படுத்த நாம் முயற்ச்சிகளை மேற்க்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த இடமான Mhowவுக்கு செல்லக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு சிறந்த குடிமகனாக ஆகத் தேவையான அனைத்தையும் பாபா சாஹேப் அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவர் காட்டிய வழியில் பயணித்து, ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்து நாம் அவருக்கு சிறப்பானதொரு அஞ்சலியை காணிக்கையாக்க முடியும்.
இன்னும் சில நாட்களில் விக்ரம் ஆண்டு தொடங்கி விடும். புத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு ரூபங்களில் கொண்டாடப் படுகிறது. சிலர் இதை புதிய சம்வத்ஸரம் அதாவது புத்தாண்டு என்கிறார்கள், சிலர் இதை Gudi-Padwa என்கிறார்கள், சிலர் இதை வர்ஷ பிரதிபதா என்கிறார்கள், சிலர் இதை உகாதி என்கிறார்கள். ஆனால் இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இதற்கென ஒரு மகத்துவம் இருக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனது மனதின் குரலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நான் கடந்த முறையே கூட கூறியிருந்தேன், இதை நீங்கள் அறிவீர்கள். சுமார் 20 மொழிகளில் இதைக் கேட்கலாம். உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் அதைக் கேட்டுக் கொள்ளலாம். உங்கள் மொபைல் ஃபோனில் அதைக் கேட்கலாம். நீங்கள் மிஸ்ட் கால் ஒன்றைக் கொடுத்தால் மட்டும் போதும். இந்தச் சேவை தொடங்கப்பட்டு ஒரு மாத காலம் மட்டுமே ஆகிறது. ஆனால் 35 இலட்சம் பேர்கள் இதனால் பயன் அடைந்திருக்கிறார்கள். நீங்களும் எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் 81908-81908. நான் எண்ணை மீண்டும் அறிவிக்கிறேன். 81908-81908. நீங்கள் மிஸ்டு கால் கொடுங்கள், எப்போது உங்களுக்கு நேரம் வாய்க்கிறதோ அப்போது பழைய மனதின் குரல் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொள்ளலாம், உங்களின் மொழியிலேயே கேட்டுக் கொள்ளலாம். உங்களோடு இணைந்து கொள்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
எனதருமை நாட்டு மக்களே, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
My dear fellow citizens, Namaskar.
While listening to this month’s Mann Ki Baat, my inner thoughts, your mind must also be on your children’s exams which begin soon. Some of them have their 10th and 12th board exams starting from the 1st of March. That must be playing on your mind. I wish to be a part of this journey along with you. I am concerned about your children’s exams as much as you are, but I am not worried. If we were to change the way we look at exams then we would be tension-free.
When I shared my inner thoughts with you during last month’s Mann ki Baat, I had requested everybody to send their experiences and suggestions to me on Narendra Modi App. It makes me immensely happy that teachers and students who have had successful careers, as also parents and social thinkers, have shared their experiences and suggestions with me.
There are two things that have moved me. First, those who have written to me have a good grip on the subject; and, second, the sheer volume of the response to my request shows dealing with exams is an extremely important matter. Usually the issue of exams has largely remained confined to schools, teachers, students and their families. But the way suggestions have come pouring in through my App, it seems this should be a subject of constant discussion for the entire nation.
Today, during my Mann ki Baat, I would like to share my inner thoughts on exams with parents, students and teachers. I will share some of the things that I have heard, what I have read, and what I have been told. I will add my views on some exam-related issues about which I feel strongly. I am confident that students who will be appearing for exams will find what I have to say immensely useful to them. That’s how I feel about it.
My dear students, before I begin, why not let a well-known world opener make the opening comments about the things and experiences that helped him achieve heights of success in his life? That would definitely be useful for you. He is someone the young generation is proud of and inspired by — Bharat Ratna Sachin Tendulkar. He has sent a message that I will read out to you:
“Namaskar, I am Sachin Tendulkar speaking. I know that the 10th Board Exams are going to commence in a few days from now. Many of you are going to be tense about them. I have only one message for you all. Your parents, your teachers, your family members and your friends have a lot of expectations from you. Wherever you go, you will be asked ‘How are the preparations going? How many marks are you likely to score?’ I would like to say that you should set a target for yourself. Don’t come under the pressure of someone else’s expectations. You should definitely work hard but set a realistic and achievable target for yourself, and then try to achieve that target. When I used to play cricket, there were a lot of expectations from me as well. I faced a lot of difficult moments in these last 24 years and many a times there were good moments too. But people always had high expectations from me. As time passed, their expectations kept growing. So it was necessary for me to find a solution to this. That’s when I decided that I would set expectations for myself and set my own targets. If I set my own targets and I am able to achieve them, then I am sure to do something good for my country. And those were the targets that I would always try to achieve for myself. My focus would be on the ball, and slowly-slowly targets were achieved on their own. I would like to tell all of you that you must have a positive thinking. Positive results will follow. So you must be positive and God will surely give you good results. I am hopeful of that. My best wishes to you all. Please go write your exams, free from tension,and get good results. Good luck!”
Friends, you heard what Tendulkar-ji had to say. Don’t buckle under the pressure of expectations. It is you who have to shape your own future. So set your own targets for yourselves. Keep an open mind, think freely, and assess your own abilities. I am sure that what Sachin-ji has said will prove very helpful for you. Also, why should there be rivalry? Why not healthy competition? Why do we waste our time competing with others? Why don’t we compete with ourselves? Why don’t we decide to break our own previous record? If you were to do that, none would be able to stop you from moving ahead. When you break your own record, you will not have to depend on others for happiness and satisfaction. There will be a sense of inner satisfaction.
Friends, don’t look at exams as a game of numbers. “How much did I score, where did I score?” – don’t get trapped in this score-keeping. You should think of a greater purpose in life. You should have a dream to realise and a goal that you are committed to. Exams are there to only gauge whether we are going the right way or not, whether we are moving at the right speed or not. So, if our dreams are big and magnificent, exams will become a joyful experience. Each exam will then become just one more step towards realizing that dream; each success will turn into a key of realizing that goal. So don’t brood over what is going to happen in these exams this year. Have a large perspective and a goal, and move ahead. Once you do that, even if you achieve less than what you had expected, you will not be disappointed. Rather, it will give you the strength and confidence to try harder and better the next time.
Thousands of people have used their mobile phones to post small messages on my app. Shrey Gupta has stressed the point that a healthy mind resides in a healthy body only. Students should care for their health along with their studies so that they are able to write their exams well, in good health and spirit. On the last day before exams begin, I would not really urge you to start doing push-ups, get down on the field, or go for a 3 to 5 km walk. But one thing is for sure, especially during the days when examinations are held. And that is, your schedule matters. In any case, our daily schedule for all the 365 days in a year should be in line with achieving our dreams and goals.
I agree with the message posted by Shri Prabhakar Reddy — he has specially urged that one should go to sleep at a proper time and get up early in the morning to revise one’s preparation. One should arrive at the examination centre equipped with the admit-card and other things well before time. This is what Prabhakar Reddy has said, something which I would have perhaps dared not to say because I am not very particular when it comes to sleeping. My friends complain to me often that I sleep very little. This is my shortcoming which I will try to overcome.
I do agree that a fixed time to go to sleep and a sound sleep are as important as other activities during the day. This is possible. I am fortunate that although I sleep very less, I sleep very soundly and thus am able to manage with that little sleep. But I would like to request you all to get proper sleep. There are some who are in the habit of chatting over the phone for long hours before going to sleep. And then they ponder over things they chatted about. How can they get proper sleep? When I talk of sleep, please don’t think I am asking you to sleep at the cost of your preparation for the exams. At the time of exams, you should get a good sleep so that you are free from stress and tension. I am not saying that you should keep on sleeping. It should not be that you score low marks and when your mother asks you why you have fared so badly, you reply that it’s because Modiji had asked us to sleep, so I dozed off. I hope you will not do that. I am sure you won’t do anything like that.
Discipline plays a major role in laying the foundation of success in our lives. A strong foundation comes from discipline. Those who are un-organized and undisciplined, do those things in the evening that they should have done in the morning and then the work they had to do in the afternoon is done late at night. They might feel that their job is somehow done but it results in so much wastage of energy and they are also saddled with unnecessary tension each moment. You must have experienced that when one part of your body feels a little bit of pain, the entire body doesn’t feel well. Not just that, our entire routine collapses. So we should not view anything as trivial or unimportant. Please see to it that you don’t compromise on the time you have set for things. Don’t get into this mess. Do things the way you have planned them.
Friends, I have seen that there are two types of students. There are students who focus their attention on what they have studied, what they have learnt, and what are their strong points. The other kind are those students who keep worrying about which type of questions will be asked during exams, whether they will be able to attempt answering them, will the question paper be easy or difficult. You must have noticed this too. Those who are tense and worry about what kind of questions will be asked, end up having a negative impact on their results as well. On the other hand, students who have the confidence in what they know are able to tackle whatever comes in the question paper. Someone who can express this better than me is the person who is a master at checkmating others, who has checkmated some of the greatest minds in the world. He is chess champion Vishwanathan Anand and he will relate his experiences. Come, why don’t you learn how to checkmate in exams from him!
“Hello, this is Viswanathan Anand. First of all, let me start off by wishing you all the best for your exams. I will next talk a little bit about how I went to my exams and my experiences for that. I found that exams are very much like problems you face later in life. You need to be well rested, get a good night’s sleep, you need to be on a full stomach, you should definitely not be hungry and the most important thing is to stay calm. It is very, very similar to a game of Chess. When you play, you don’t know, which pawn will appear, just like in a class you don’t know, which question will appear in an exam. So if you stay calm and you are well nourished and have slept well, then you will find that your brain recalls the right answer at the right moment. So stay calm. It is very important not to put too much pressure on yourself, don’t keep your expectations too high. Just see it as a challenge – do I remember what I was taught during the year, can I solve these problems. At the last minute, just go over the most important things and the things you feel, the topics you feel, you don’t remember very well. You may also recall some incidents with the teacher or the students, while you are writing an exam and this will help you recall a lot of subject matter. If you revise the questions you find difficult, you will find that they are fresh in your head and when you are writing the exam, you will be able to deal with them much better. So stay calm, get a good night’s sleep, don’t be over-confident but don’t be pessimistic either. I have always found that these exams go much better than you fear before. So stay confident and all the very best to you.”
Vishwanathan Anand has really said something very important. You must have also seen that when he plays in international tournaments, he sits with such a healthy composure. He is so focussed. You must have seen his eyes don’t wander off the chess board. We have all heard of how Arjun focussed his attention on the eye of the bird. In the same way, when we watch Vishwanathan playing chess we see his eyes set on the target, focussed on the game very attentively, and that is a reflection of his inner tranquillity. It is difficult to bring that inner peace within you just by someone merely asking you to do so, but one should try. Why don’t we try to do that in a light-hearted manner? If we were to keep smiling and laughing all through the exam days, we would find inner peace. If you don’t speak to your friends, walk alone, and your face droops flipping through the pages of so many books at the last moment, then you cannot have peace of mind. Laugh a lot along with your friends, share jokes with them, and just see how a calm atmosphere is created on its own.
Just imagine yourself standing at the edge of a pond and you can see beautiful things at its bottom. Suddenly someone throws a stone into the water and there are ripples on the surface. Would you be able to see those beautiful things at the bottom like before? If the water is still, then no matter how deep it is, everything at the bottom can be seen. But if the water is agitated, we can see nothing through it.
There is a lot within you, the treasure as a result of the hard work of a whole year is filled inside you, but if your mind is troubled, you will not be able to discover that wealth. If you have a peaceful mind, then that treasure of yours is going to surface to the top and your exam will turn so very simple for you.
I would like to tell you a little thing about myself. There are times when while listening to a lecture or trying to understand some aspect of governance about which I need to know more, I have to concentrate on what is being said. There are occasions when if I have to strain myself to concentrate, I feel an inner stress building up. Then I realize that if I relax a bit, I will feel better. So here is a technique I have developed for myself. I do deep-breathing. I breathe deeply three to five times. Not more than 50 seconds are spent on this but my mind is at rest and ready to be focused on matters at hand. This is my experience and it might be of help to you as well.
Rajat Agarwal has told us something good. He wrote on my app that we should spend half an hour every day with friends and family to feel relaxed. We should chat with them. This is something very important Rajat-ji has told us because what most of us do is that when we return after an exam, we sit down to calculate what we did right and what we did wrong. And if we have educated parents, on top of it parents who are teachers themselves, then they almost end up making us re-write the entire paper. They ask us what we wrote, then start adding numbers to calculate how much we will score, whether it will be 40, 80 or 90. In this way, your mind is totally consumed by what is already over. And what do you do? You also talk about the same thing with your friends over the phone. “What did you write, what was your answer, what did you do, what do you think… Oh! I got that one wrong… I made a mistake there… Oh dear, I knew the answer to that question but I couldn’t remember it then…” We just get caught in all that. Friends, please don’t do this. What happens in the examination hall is over and done there itself. Please chat about otherthings with your family, talk of other topics, refresh your mind with some light banter. If you have gone on holidays with your parents, then try and remember what you saw. Just come out of that exam mindset and spend half an hour with your parents. What Rajat ji has said is worth pondering over.
Friends, what can I tell you about peace of mind today, before you go for your exams. A message has come for you from someone, who is essentially a teacher-turned-a-value educator. From giving interpretations of the Ram Charit Manas in the present day context, he is now involved with trying to spread its values in the country and to the whole world. Our revered Murari Bapu has sent some important tips for students. He is a teacher and a thinker, and for this reason what he has to say is a blend of both.
“I am Murari Bapu speaking and I would like to tell my student friends not to carry any load on their minds during the exams. Decide upon clear thinking, focus your mind wholly and go sit for the exam. And whatever situation appears, accept it. My experience has been that we can remain happy by accepting the circumstances. If you progress ahead in your exams fearlessly and happily, you are sure to gain success. And even if you are not successful, you will not have any remorse. Nor will you be arrogant of your success. I would like to conclude my message with a couplet – ‘It cannot be that one succeeds each time. Learn to also live with failures’. I felicitate this program Mann ki Baat presented by our honorable Prime Minister and my best wishes to all.”
I am also grateful to our revered Murari Bapu for such a nice message.
Friends I want to tell you about another thing today. I see that in the experiences that people have shared with me, they have spoken a lot about Yoga. And this is a matter of joy to me. Everybody I meet, no matter for how short a time, has something to say about Yoga. This is irrespective of whether the person is from another country or from India. It’s nice to hear that so much attraction has grown for Yoga, so much curiosity has developed for Yoga.
Just see how many people on my mobile App… Shri Atanu Mandal, Shri Kunal Gupta, ShriSushant Kumar, Shri K.G. Anand, ShriAbhijeet Kulkarni… countless people have spoken about meditation and emphasized the beneficial effect of Yoga. Friends, if I ask you to start doing Yoga from tomorrow morning then that would be unfair. But those who are already practising Yoga should not stop it during exam time. If you do Yoga, keep doing it. One thing is for sure, whether it is your student days or any other phase of your life, Yoga is a major key to the development of your inner mind. It is one of the simplest keys; you must pay more attention to it.
Yes, if you have someone nearby who knows Yoga, and if you ask them during your exams, and even if you have never done Yoga before, they will surely be able to tell you a few things to do in Yoga that can very easily be done in a few minutes. See if you can do it. I have a lot of faith in Yoga.
My dear young friends, you are in a great hurry to enter the examination hall, you are in a rush to quickly be seated in your place. But why should you do these things in a hurry. Why can’t you manage your time in such a way that even if you are held up in traffic, you can still reach in time for your exam. Otherwise such hurdles can cause new stress. One more thing: With the limited time that we have, we feel that going through the question paper with all the instructions is going to consume a lot of our time. It is not like that dear friends. You must read those instructions very carefully, at most five minutes will be spent in that, but it will not cause any loss. In fact, it will be quite profitable as things become clearer for you and later you won’t have any regrets. I have seen that when we get the question paper, sometimes we find that it has been modelled on a new pattern. But if we have read the instructions with due attention, we can cope well with it. We know – Ah! Yes, that’s the way we have to go about it! I urge you all that even though it takes 5 minutes of your time, you must go through the question paper carefully.
Yash Nagar writes on my mobile App that when he read a question paper for the first time he found it quite difficult, but when he read the same paper with self-confidence telling himself, “this is the only paper I have got and no other questions are going to be given, I have to deal with just these many questions, and so when I started thinking over them again”, he writes, “I was able to understand this paper quite easily… When I read the questions the first time, I felt I did not know the answers to them, but when I read them again, then I realised that the questions had been posed in a different way.” It is very important to understand the questions. When we don’t understand the questions, that’s when we sometimes find them difficult. I forcefully support the point that Yash Nagar has made. You must read the questions twice, thrice, four times over and try to match them with the things that you know and you will find that answering them becomes simple even before you have actually answered them.
It gives me great joy to share with you a message from Bharat Ratna C N R Rao, our most esteemed scientist. He has emphasized the virtue of patience. He has given a brief but very beautiful message to all students. Come,let me tell you the message of Shri Rao.
“This is C.N.R. Rao from Bangalore. I fully realise that the examinations cause anxiety. That too competitive examinations. Do not worry, do your best. That’s what I tell all my young friends. At the same time remember, that there are many opportunities in this country. Decide what you want to do in life and don’t give it up. You will succeed. Do not forget that you are a child of the universe. You have a right to be here like the trees and the mountains. All you need is doggedness, dedication and tenacity. With these qualities you will succeed in all examinations and all other endeavours. I wish you luck in everything you want to do. God Bless.”
See the style of talking that a scientist has! What I take half an hour to say, he says in a few minutes. This is the strength of science and this is the strength that the mind of a scientist possesses. I am grateful to Shri Raofor inspiring the children of the country. The things that he mentioned about dedication, determination, diligence… just keep at it my friends. If you keep going, then even fear will be afraid. And a golden future awaits you for doing well.
Ruchika Dabas has sent a message on my App and shared her experience. She writes that in her family during exams there is a constant effort to create a positive atmosphere. This is true for the neighbouring families as well. All contributed to a positive environment. This is the way it should be. Sachin ji also talked of a positive approach, a positive frame of mind. We have to radiate a positive energy.
There are many things that inspire us, and don’t think that they inspire only students. No matter at which point of life you are at, fine examples and true stories give great inspiration, great strength, and pave a new path in times of trouble. We have all read about the inventor of the electric bulb, Thomas Alva Edison. But friends, have you ever thought how many years he spent on his work, how many times he met with failure, how much time had to be devoted, how much money was spent, how much disappointment he must have faced when he met with failures. But today that electric bulb illuminates our lives. This is what is called the seeds of success inherent in failures.
Who doesn’t know of Srinivas Ramanujam, one of the greatest names among modern Indian mathematicians? Do you know that he had no formal education in Mathematics? Yet he made a significant contribution to various topics like mathematical analysis, number theory, etc. He had a life riddled with difficulties. Despite that, he gave a lot to this world before passing away. J.K. Rowling is a fine example to show that success can come in anyone’s life at any time. The Harry Potter series is now popular worldwide. But it was not like that from the start. She had to face many difficulties, many problems. J. K. Rowling has herself said that in times of trouble she would channelize all her energies into tasks that had real significance for her.
Exams are not just for the students, they also put the students’ families, schools and teachers to test. Without the support system of parents and teachers, the students would not stand a good chance. If teachers, parents and even senior students all combine to form a team, a unit with a common thinking, and in a planned way move forward, then exams become a lot easier.
Keshav Vaishnav has written to me on my App, complaining that parents should never put pressure on their children to score more marks. They should only motivate them to prepare well for their exams. They should think about the need for their child to stay relaxed.
Vijay Jindal writes that parents should not burden their children with their own expectations. They should boost the confidence of their children as much as possible. They should help maintain their children’s faith in themselves. And this is so right.
Today, I don’t want to say much to the parents. Please don’t create any pressure for your children. If they are talking to any friend of theirs, please don’t stop them. Build a light-hearted environment for them, a positive environment, and see for yourself, be it your son or daughter, what confidence they are infused with. You will be able to see that confidence in your child yourself.
Friends, one thing is for sure, and I want to say this especially to my young friends, that our life has become very different from what it was for the previous generations. Every moment there is a new innovation, a new technology. We get to see new facets of science all the time. Its impact is overwhelming; we all want to link ourselves to science and technology. We also want to move ahead with the speed of science. I say all this because, friends, today is National Science Day, the festival of science in this country. Every year this day is observed on 28th February. On 28th February 1928, Sir C.V. Raman had declared his discovery of the “Raman Effect”. This was the discovery for which he received the Nobel Prize. And so the nation celebrates this day as National Science Day. Curiosity is the mother of science. Each person should have a scientific thinking, should be attracted to science. Each generation should lay stress on innovation. And innovation is not possible without science and technology. Today on National Science Day we should resolve that innovation should gain importance. Science, knowledge, technology… all these things should be a part of our journey to development. This year the theme for National Science Day is ‘Make in India Science and Technology-driven Innovations’. I humbly pay my homage to Sir C.V. Raman and I appeal to you all to raise the level of your interest in science.
Friends, sometimes success comes very late and when it does come to us, our way of looking at life changes completely. As you have been kept very busy with the coming exams, it might be possible that many news stories may not have registered on your minds. But I want to repeat this for all fellow citizens as well. You must have heard recently there has been a major and important discovery in the world of science. Scientists have labored hard, generations of them have persevered, and after nearly 100 years they have gained a huge success. Gravitational Wave has been brought to light with the efforts of our scientists. This is a success for science which was very difficult to achieve. This discovery not only proves the theory of our greatest scientist of the previous century, Albert Einstein, but is also considered a great discovery for the world of physics. It is going to be of use for the whole of humankind. But being Indians, we should all feel happy that in the entire process of this discovery, the sons of our country, our worthy Indian scientists, were also a part of it. I would like to extend my hearty congratulations to all those scientists. Our scientists will be involved in the future as well to take this discovery forward; India will be a part of future international efforts.
My dear fellow citizens, in the last few days we have taken an important decision. To gain more success about this discovery, the Government of India has decided to install a Laser Interferometer Gravitational-Wave Observatory, in short it is called LIGO, here in India. This kind of a facility exists only in two places in the world. India is going to be the third. This process is going to gain fresh momentum and strength with India joining hands with others. India, with its reputed resources, will surely be an active participant in this superior science discovery which is for the welfare of humankind. I once again congratulate all scientists and send them my best wishes.
My dear fellow citizens, I would like you to note down one number. From tomorrow, you can give a missed call on this number and listen to Mann ki Baat. You can even listen to it in your mother tongue. The number to give a missed call on is 81908-81908. I repeat 81908-81908.
Friends, your exams begin from day after tomorrow. I have to take an exam tomorrow. 125 crore people of this country are going to take my exam. You know it, don’t you? Tomorrow is Budget Day. 29th February. It is a leap year. But, you must have noticed and felt it while you heard me speak how fit and brimming with confidence I am. My exam gets over tomorrow and yours begin the dayafter. Let us hope we all are successful, then the country will surely succeed.
So friends lots of good wishes to you all. Free from all tension of success and failure, move ahead with a free mind. Keep going at it.
Thank You.
मेरे प्यारे देशवासियो, 2016 की ये पहली ‘मन की बात’ है। ‘मन की बात’ ने मुझे आप लोगों के साथ ऐसे बाँध के रखा है, ऐसे बाँध के रखा है कि कोई भी चीज़ नज़र आ जाती है, कोई विचार आ जाता है, तो आपके बीच बता देने की इच्छा हो जाती है। कल मैं पूज्य बापू को श्रद्धांजलि देने के लिये राजघाट गया था। शहीदों को नमन करने का ये प्रतिवर्ष होने वाला कार्यक्रम है। ठीक 11 बजे 2 मिनट के लिये मौन रख करके देश के लिये जान की बाज़ी लगा देने वाले, प्राण न्योछावर करने वाले महापुरुषों के लिये, वीर पुरुषों के लिये, तेजस्वी-तपस्वी लोगों के लिये श्रद्धा व्यक्त करने का अवसर होता है। लेकिन अगर हम देखें, हम में से कई लोग हैं, जिन्होंने ये नहीं किया होगा। आपको नहीं लगता है कि ये स्वभाव बनना चाहिए, इसे हमें अपनी राष्ट्रीय जिम्मेवारी समझना चाहिए? मैं जानता हूँ मेरी एक ‘मन की बात’ से ये होने वाला नहीं है। लेकिन जो मैंने कल feel किया, लगा आपसे भी बातें करूँ। और यही बातें हैं जो देश के लिये हमें जीने की प्रेरणा देती हैं। आप कल्पना तो कीजिए, हर वर्ष 30 जनवरी ठीक 11 बजे सवा-सौ करोड़ देशवासी 2 मिनट के लिये मौन रखें। आप कल्पना कर सकते हैं कि इस घटना में कितनी बड़ी ताक़त होगी? और ये बात सही है कि हमारे शास्त्रों ने कहा है –
“संगच्छध्वं संवदध्वं सं वो मनांसि जानताम” - “हम सब एक साथ चलें, एक साथ बोलें, हमारे मन एक हों।” यही तो राष्ट्र की सच्ची ताक़त है और इस ताक़त को प्राण देने का काम ऐसी घटनायें करती हैं।
मेरे प्यारे देशवासियो, कुछ दिन पहले मैं सरदार पटेल के विचारों को पढ़ रहा था। तो कुछ बातों पर मेरा ध्यान गया और उनकी एक बात मुझे बहुत पसंद आई। खादी के संबंध में सरदार पटेल ने कहा है, हिन्दुस्तान की आज़ादी खादी में ही है, हिन्दुस्तान की सभ्यता भी खादी में ही है, हिन्दुस्तान में जिसे हम परम धर्म मानते हैं, वह अहिंसा खादी में ही है और हिन्दुस्तान के किसान, जिनके लिए आप इतनी भावना दिखाते हैं, उनका कल्याण भी खादी में ही है। सरदार साहब सरल भाषा में सीधी बात बताने के आदी थे और बहुत बढ़िया ढंग से उन्होंने खादी का माहात्म्य बताया है। मैंने कल 30 जनवरी को पूज्य बापू की पुण्य तिथि पर देश में खादी एवं ग्रामोद्योग से जुड़े हुए जितने लोगों तक पहुँच सकता हूँ, मैंने पत्र लिख करके पहुँचने का प्रयास किया। वैसे पूज्य बापू विज्ञान के पक्षकार थे, तो मैंने भी टेक्नोलॉजी का ही उपयोग किया और टेक्नोलॉजी के माध्यम से लाखों ऐसे भाइयों–बहनों तक पहुँचने का प्रयास किया है। खादी अब एक symbol बना है, एक अलग पहचान बना है। अब खादी युवा पीढ़ी के भी आकर्षण का केंद्र बनता जा रहा है और खास करके जो-जो holistic health care और organic की तरफ़ झुकाव रखते हैं, उनके लिए तो एक उत्तम उपाय बन गया है। फ़ैशन के रूप में भी खादी ने अपनी जगह बनाई है और मैं खादी से जुड़े लोगों का अभिनन्दन करता हूँ कि उन्होंने खादी में नयापन लाने के लिए भरपूर प्रयास किया है। अर्थव्यवस्था में बाज़ार का अपना महत्व है। खादी ने भी भावात्मक जगह के साथ-साथ बाज़ार में भी जगह बनाना अनिवार्य हो गया है। जब मैंने लोगों से कहा कि अनेक प्रकार के fabrics आपके पास हैं, तो एक खादी भी तो होना चाहिये। और ये बात लोगों के गले उतर रही है कि हाँ भई, खादीधारी तो नहीं बन सकते, लेकिन अगर दसों प्रकार के fabric हैं, तो एक और हो जाए। लेकिन साथ-साथ मेरी बात को सरकार में भी एक सकारात्मक माहौल पनप रहा है। बहुत सालों पहले सरकार में खादी का भरपूर उपयोग होता था। लेकिन धीरे-धीरे आधुनिकता के नाम पर ये सब ख़त्म होता गया और खादी से जुड़े हुए हमारे ग़रीब लोग बेरोज़गार होते गए। खादी में करोड़ों लोगों को रोज़गार देने की ताकत है। पिछले दिनों रेल मंत्रालय, पुलिस विभाग, भारतीय नौसेना, उत्तराखण्ड का डाक-विभाग – ऐसे कई सरकारी संस्थानों ने खादी के उपयोग में बढ़ावा देने के लिए कुछ अच्छे Initiative लिए हैं और मुझे बताया गया कि सरकारी विभागों के इस प्रयासों के परिणामस्वरूप खादी क्षेत्र में काम करने वाले लोगों के लिए, इस requirement को पूरा करने के लिए, सरकार की आवश्यकताओं को पूरा करने के लिए, अतिरिक्त – extra - 18 लाख मानव दिन का रोज़गार generate होगा। 18 lakh man-days, ये अपने आप में एक बहुत बड़ा jump होगा। पूज्य बापू भी हमेशा Technology के up-gradation के प्रति बहुत ही सजग थे और आग्रही भी थे और तभी तो हमारा चरखा विकसित होते-होते यहाँ पहुँचा है। इन दिनों solar का उपयोग करते हुए चरखा चलाना, solar energy चरखे के साथ जोड़ना बहुत ही सफल प्रयोग रहा है। उसके कारण मेहनत कम हुई है, उत्पादन बढ़ा है और qualitative गुणात्मक परिवर्तन भी आया है। ख़ास करके solar चरखे के लिए लोग मुझे बहुत सारी चिट्ठियाँ भेजते रहते हैं। राजस्थान के दौसा से गीता देवी, कोमल देवी और बिहार के नवादा ज़िले की साधना देवी ने मुझे पत्र लिखकर कहा है कि solar चरखे के कारण उनके जीवन में बहुत परिवर्तन आया है। हमारी आय double हो गयी है और हमारा जो सूत है, उसके प्रति भी आकर्षण बढ़ा है। ये सारी बातें एक नया उत्साह बढ़ाती हैं। और 30 जनवरी, पूज्य बापू को जब स्मरण करते हैं, तो मैं फिर एक बार दोहराऊँगा - इतना तो अवश्य करें कि अपने ढेर सारे कपड़ों में एक खादी भी रहे, इसके आग्रही बनें।
प्यारे देशवासियो, 26 जनवरी का पर्व बहुत उमंग और उत्साह के साथ हम सबने मनाया। चारों तरफ़, आतंकवादी क्या करेंगे, इसकी चिंता के बीच देशवासियों ने हिम्मत दिखाई, हौसला दिखाया और आन-बान-शान के साथ प्रजासत्ताक पर्व मनाया। लेकिन कुछ लोगों ने हट करके कुछ बातें कीं और मैं चाहूँगा कि ये बातें ध्यान देने जैसी हैं, ख़ास-करके हरियाणा और गुजरात, दो राज्यों ने एक बड़ा अनोखा प्रयोग किया। इस वर्ष उन्होंने हर गाँव में जो गवर्नमेंट स्कूल है, उसका ध्वजवंदन करने के लिए, उन्होंने उस गाँव की जो सबसे पढ़ी-लिखी बेटी है, उसको पसंद किया। हरियाणा और गुजरात ने बेटी को माहात्म्य दिया। पढ़ी-लिखी बेटी को विशेष माहात्म्य दिया। ‘बेटी बचाओ-बेटी पढ़ाओ’ - इसका एक उत्तम सन्देश देने का उन्होंने प्रयास किया। मैं दोनों राज्यों की इस कल्पना शक्ति को बधाई देता हूँ और उन सभी बेटियों को बधाई देता हूँ, जिन्हें ध्वजवंदन, ध्वजारोहण का अवसर मिला। हरियाणा में तो और भी बात हुई कि गत एक वर्ष में जिस परिवार में बेटी का जन्म हुआ है, ऐसे परिवारजनों को 26 जनवरी के निमित्त विशेष निमंत्रित किया और वी.आई.पी. के रूप में प्रथम पंक्ति में उनको स्थान दिया। ये अपने आप में इतना बड़ा गौरव का पल था और मुझे इस बात की खुशी है कि मैंने अपने ‘बेटी बचाओ-बेटी पढ़ाओ’ अभियान का प्रारंभ हरियाणा से किया था, क्योंकि हरियाणा में sex-ratio में बहुत गड़बड़ हो चुकी थी। एक हज़ार बेटों के सामने जन्म लेने वाली बेटियों की संख्या बहुत कम हो गयी थी। बड़ी चिंता थी, सामाजिक संतुलन खतरे में पड़ गया था। और जब मैंने हरियाणा पसंद किया, तो मुझे हमारे अधिकारियों ने कहा था कि नहीं-नहीं साहब, वहाँ मत कीजिए, वहाँ तो बड़ा ही negative माहौल है। लेकिन मैंने काम किया और मैं आज हरियाणा का ह्रदय से अभिनन्दन करता हूँ कि उन्होंने इस बात को अपनी बात बना लिया और आज बेटियों के जन्म की संख्या में बहुत तेज़ी से वृद्धि हो रही है। मैं सचमुच में वहाँ के सामाजिक जीवन में जो बदलाव आया है, उसके लिए अभिनन्दन करता हूँ।
पिछली बार ‘मन की बात’ में मैंने दो बातें कही थीं। एक, एक नागरिक के नाते हम महापुरुषों के statue की सफाई क्यों न करें! statue लगाने के लिये तो हम बड़े emotional होते हैं, लेकिन बाद में हम बेपरवाह होते हैं। और दूसरी बात मैंने कही थी, प्रजासत्ताक पर्व है तो हम कर्तव्य पर भी बल कैसे दें, कर्तव्य की चर्चा कैसे हो? अधिकारों की चर्चा बहुत हुई है और होती भी रहेगी, लेकिन कर्तव्यों पर भी तो चर्चा होनी चाहिए! मुझे खुशी है कि देश के कई स्थानों पर नागरिक आगे आए, सामाजिक संस्थायें आगे आईं, शैक्षिक संस्थायें आगे आईं, कुछ संत-महात्मा आगे आए और उन सबने कहीं-न-कहीं जहाँ ये statue हैं, प्रतिमायें हैं, उसकी सफ़ाई की, परिसर की सफ़ाई की। एक अच्छी शुरुआत हुई है, और ये सिर्फ़ स्वच्छता अभियान नहीं है, ये सम्मान अभियान भी है। मैं हर किसी का उल्लेख नहीं कर रहा हूँ, लेकिन जो ख़बरें मिली हैं, बड़ी संतोषजनक हैं। कुछ लोग संकोचवश शायद ख़बरें देते नहीं हैं। मैं उन सबसे आग्रह करता हूँ – MyGov portal पर आपने जो statue की सफ़ाई की है, उसकी फोटो ज़रूर भेजिए। दुनिया के लोग उसको देखते हैं और गर्व महसूस करते हैं।
उसी प्रकार से 26 जनवरी को ‘कर्तव्य और अधिकार’ - मैंने लोगों के विचार माँगे थे और मुझे खुशी है कि हज़ारों लोगों ने उसमें हिस्सा लिया।
मेरे प्यारे देशवासियो, एक काम के लिये मुझे आपकी मदद चाहिए और मुझे विश्वास है कि आप मेरी मदद करेंगे। हमारे देश में किसानों के नाम पर बहुत-कुछ बोला जाता है, बहुत-कुछ कहा जाता है। खैर, मैं उस विवाद में उलझना नहीं चाहता हूँ। लेकिन किसान का एक सबसे बड़ा संकट है, प्राकृतिक आपदा में उसकी पूरी मेहनत पानी में चली जाती है। उसका साल बर्बाद हो जाता है। उसको सुरक्षा देने का एक ही उपाय अभी तो ध्यान में आता है और वो है फ़सल बीमा योजना। 2016 में भारत सरकार ने एक बहुत बड़ा तोहफ़ा किसानों को दिया है - ‘प्रधानमंत्री फ़सल बीमा योजना’। लेकिन ये योजना की तारीफ़ हो, वाहवाही हो, प्रधानमंत्री को बधाइयाँ मिलें, इसके लिये नहीं है। इतने सालों से फ़सल बीमा की चर्चा हो रही है, लेकिन देश के 20-25 प्रतिशत से ज़्यादा किसान उसके लाभार्थी नहीं बन पाए हैं, उससे जुड़ नहीं पाए है। क्या हम संकल्प कर सकते हैं कि आने वाले एक-दो साल में हम कम से कम देश के 50 प्रतिशत किसानों को फ़सल बीमा से जोड़ सकें? बस, मुझे इसमें आपकी मदद चाहिये। क्योंकि अगर वो फ़सल बीमा के साथ जुड़ता है, तो संकट के समय एक बहुत बड़ी मदद मिल जाती है। और इस बार ‘प्रधानमंत्री फ़सल बीमा योजना’ की इतनी जनस्वीकृति मिली है, क्योंकि इतना व्यापक बना दिया गया है, इतना सरल बना दिया गया है, इतनी टेक्नोलॉजी का Input लाए हैं। और इतना ही नहीं, फ़सल कटने के बाद भी अगर 15 दिन में कुछ होता है, तो भी मदद का आश्वासन दिया है। टेक्नोलॉजी का उपयोग करके, उसकी गति तेज़ कैसे हो, बीमा के पैसे पाने में विलम्ब न हो - इन सारी बातों पर ध्यान दिया गया है। सबसे बड़ी बात है कि फ़सल बीमा की प्रीमियम की दर, इतनी नीचे कर दी गयी, इतनी नीचे कर दी गयी हैं, जो शायद किसी ने सोचा भी नहीं होगा। नयी बीमा योजना में किसानों के लिये प्रीमियम की अधिकतम सीमा खरीफ़ की फ़सल के लिये दो प्रतिशत और रबी की फ़सल के लिए डेढ़ प्रतिशत होगी। अब मुझे बताइए, मेरा कोई किसान भाई अगर इस बात से वंचित रहे, तो नुकसान होगा कि नहीं होगा? आप किसान नहीं होंगे, लेकिन मेरी मन की बात सुन रहे हैं। क्या आप किसानों को मेरी बात पहुँचायेंगे? और इसलिए मैं चाहता हूँ कि आप इसको अधिक प्रचारित करें। इसके लिए इस बार मैं एक आपके लिये नयी योजना भी लाया हूँ। मैं चाहता हूँ कि मेरी ‘प्रधानमंत्री फ़सल बीमा योजना’ ये बात लोगों तक पहुँचे। और ये बात सही है कि टी.वी. पर, रेडियो पर मेरी ‘मन की बात’ आप सुन लेते हैं। लेकिन बाद में सुनना हो तो क्या? अब मैं आपको एक नया तोहफ़ा देने जा रहा हूँ। क्या आप अपने मोबाइल फ़ोन पर भी मेरे ‘मन की बात’ सुन सकते हैं और कभी भी सुन सकते हैं। आपको सिर्फ़ इतना ही करना है – बस एक missed call कर दीजिए अपने मोबाइल फ़ोन से। ‘मन की बात’ के लिये मोबाइल फ़ोन का नंबर तय किया है – 8190881908. आठ एक नौ शून्य आठ, आठ एक नौ शून्य आठ। आप missed call करेंगे, तो उसके बाद कभी भी ‘मन की बात’ सुन पाएँगे। फ़िलहाल तो ये हिंदी में है, लेकिन बहुत ही जल्द आपको अपनी मातृभाषा में भी ‘मन की बात’ सुनने का अवसर मिलेगा। इसके लिए भी मेरा प्रबन्ध जारी है।
मेरे प्यारे नौजवानो, आपने तो कमाल कर दिया। जब start-up का कार्यक्रम 16 जनवरी को हुआ, सारे देश के नौजवानों में नयी ऊर्जा, नयी चेतना, नया उमंग, नया उत्साह मैंने अनुभव किया। लाखों की तादाद में लोगों ने उस कार्यक्रम में आने के लिए registration करवाया। लेकिन इतनी जगह न होने के कारण, आखिर विज्ञान भवन में ये कार्यक्रम किया। आप पहुँच नहीं पाए, लेकिन आप पूरा समय on-line इसमें शरीक हो करके रहे। शायद कोई एक कार्यक्रम इतने घंटे तक लाखों की तादाद में नौजवानों ने अपने-आप को जोड़ करके रखा और ऐसा बहुत rarely होता है, लेकिन हुआ! और मैं देख रहा था कि start-up का क्या उमंग है। और लेकिन एक बात, जो सामान्य लोगों की सोच है कि start-up मतलब कि I.T. related बातें, बहुत ही sophisticated कारोबार। start-up के इस event के बाद ये भ्रम टूट गया। I.T. के आस-पास का start-up तो एक छोटा सा हिस्सा है। जीवन विशाल है, आवश्यकतायें अनंत हैं। start-up भी अनगिनत अवसरों को लेकर के आता है।
मैं अभी कुछ दिन पहले सिक्किम गया था। सिक्किम अब देश का organic state बना है और देश भर के कृषि मंत्रियों और कृषि सचिवों को मैंने वहाँ निमंत्रित किया था। मुझे वहाँ दो नौजवानों से मिलने का मौका मिला – IIM से पढ़ करके निकले हैं – एक हैं अनुराग अग्रवाल और दूसरी हैं सिद्धि कर्नाणी। वो start-up की ओर चल पड़े और वो मुझे सिक्किम में मिल गए। वे North-East में काम करते हैं, कृषि क्षेत्र में काम करते हैं और herbal पैदावार हैं, organic पैदावार हैं, इसका global marketing करते हैं। ये हुई न बात!
पिछ्ली बार मैंने मेरे start-up से जुड़े लोगों से कहा था कि ‘Narendra Modi App’ पर अपने अनुभव भेजिए। कइयों ने भेजे हैं, लेकिन और ज़्यादा आयेंगे, तो मुझे ख़ुशी होगी। लेकिन जो आये हैं, वो भी सचमुच में प्रेरक हैं। कोई विश्वास द्विवेदी करके नौजवान हैं, उन्होंने on-line kitchen start-up किया है और वो मध्यम-वर्गीय लोग, जो रोज़ी-रोटी के लिए आये हुए हैं, उनको वो on-line networking के द्वारा टिफ़िन पहुँचाने का काम करते हैं। कोई मिस्टर दिग्नेश पाठक करके हैं, उन्होंने किसानों के लिए और ख़ास करके पशुओं का जो आहार होता है, animal feed होता है, उस पर काम करने का मन बनाया है। अगर हमारे देश के पशु, उनको अच्छा आहार मिलेगा, तो हमें अच्छा दूध मिलेगा, हमें अच्छा दूध मिलेगा, तो हमारा देश का नौजवान ताक़तवर होगा। मनोज गिल्दा, निखिल जी, उन्होंने agri-storage का start-up शुरू किया है। वो scientific fruits storage system के साथ कृषि उत्पादों के लिए bulk storage system develop कर रहे हैं। यानि ढेर सारे सुझाव आये हैं। आप और भी भेजिए, मुझे अच्छा लगेगा और मुझे बार-बार ‘मन की बात’ में अगर start-up की बात करनी पड़ेगी, जैसे मैं स्वच्छता की बात हर बार करता हूँ, start-up की भी करूँगा, क्योंकि आपका पराक्रम, ये हमारी प्रेरणा है।
मेरे प्यारे देशवासियो, स्वच्छता अब सौन्दर्य के साथ भी जुड़ रही है। बहुत सालों तक हम गंदगी के खिलाफ़ नाराज़गी व्यक्त करते रहे, लेकिन गंदगी नहीं हटी। अब देशवासियों ने गंदगी की चर्चा छोड़ स्वच्छता की चर्चा शुरू की है और स्वच्छता का काम कहीं-न-कहीं, कुछ-न-कुछ चल ही रहा है। लेकिन अब उसमें एक कदम नागरिक आगे बढ़ गए हैं। उन्होंने स्वच्छता के साथ सौन्दर्य जोड़ा है। एक प्रकार से सोने पे सुहागा और ख़ास करके ये बात नज़र आ रही है रेलवे स्टेशनों पर। मैं देख रहा हूँ कि इन दिनों देश के कई रेलवे स्टेशन पर वहाँ के स्थानीय नागरिक, स्थानीय कलाकार, students - ये अपने-अपने शहर का रेलवे स्टेशन सजाने में लगे हैं। स्थानीय कला को केंद्र में रखते हुए दीवारों का पेंटिंग रखना, साइन-बोर्ड अच्छे ढंग से बनाना, कलात्मक रूप से बनाना, लोगों को जागरूक करने वाली भी चीज़ें उसमें डालनी हैं, न जाने क्या-क्या कर रहे हैं! मुझे बताया किसी ने कि हज़ारीबाग़ के स्टेशन पर आदिवासी महिलाओं ने वहाँ की स्थानीय सोहराई और कोहबर आर्ट की डिज़ाइन से पूरे रेलवे स्टेशन को सज़ा दिया है। ठाणे ज़िले के 300 से ज़्यादा volunteers ने किंग सर्किल स्टेशन को सजाया, माटुंगा, बोरीवली, खार। इधर राजस्थान से भी बहुत ख़बरें आ रही हैं, सवाई माधोपुर, कोटा। ऐसा लग रहा है कि हमारे रेलवे स्टेशन अपने आप में हमारी परम्पराओं की पहचान बन जायेंगे। हर कोई अब खिड़की से चाय-पकौड़े की लॉरी वालों को नहीं ढूंढ़ेगा, ट्रेन में बैठे-बैठे दीवार पर देखेगा कि यहाँ की विशेषता क्या है। और ये न रेलवे का Initiative था, न नरेन्द्र मोदी का Initiative था। ये नागरिकों का था। देखिये नागरिक करते हैं, तो कैसा करते हैं जी। लेकिन मैं देख रहा हूँ कि मुझे कुछ तो तस्वीरें मिली हैं, लेकिन मेरा मन करता है कि मैं और तस्वीरें देखूँ। क्या आप, जिन्होंने रेलवे स्टेशन पर या कहीं और स्वच्छता के साथ सौन्दर्य के लिए कुछ प्रयास किया है, क्या मुझे आप भेज सकते हैं? ज़रूर भेजिए। मैं तो देखूँगा, लोग भी देखेंगे और औरों को भी प्रेरणा मिलेगी। और रेलवे स्टेशन पर जो हो सकता है, वो बस स्टेशन पर हो सकता है, वो अस्पताल में हो सकता है, वो स्कूल में हो सकता है, मंदिरों के आस-पास हो सकता है, गिरजाघरों के आस-पास हो सकता है, मस्जिदों के आस-पास हो सकता है, बाग़-बगीचे में हो सकता है, कितना सारा हो सकता है! जिन्होंने ये विचार आया और जिन्होंने इसको शुरू किया और जिन्होंने आगे बढ़ाया, सब अभिनन्दन के अधिकारी हैं। लेकिन हाँ, आप मुझे फ़ोटो ज़रूर भेजिए, मैं भी देखना चाहता हूँ, आपने क्या किया है!
मेरे प्यारे देशवासियो, अपने लिए गर्व की बात है कि फ़रवरी के प्रथम सप्ताह में 4 तारीख़ से 8 तारीख़ तक भारत बहुत बड़ी मेज़बानी कर रहा है। पूरा विश्व, हमारे यहाँ मेहमान बन के आ रहा है और हमारी नौसेना इस मेज़बानी के लिए पुरजोश तैयारी कर रही है। दुनिया के कई देशों के युद्धपोत, नौसेना के जहाज़, आंध्र प्रदेश के विशाखापत्तनम के समुद्री तट पर इकट्ठे हो रहे हैं। International Fleet Review भारत के समुद्र तट पर हो रहा है। विश्व की सैन्य-शक्ति और हमारी सैन्य-शक्ति के बीच तालमेल का एक प्रयास है। एक joint exercise है। बहुत बड़ा अवसर है। आने वाले दिनों में आपको टी.वी. मीडिया के द्वारा इसकी जानकारियाँ तो मिलने ही वाली हैं, क्योंकि ये बहुत बड़ा कार्यक्रम होता है और सब कोई इसको बल देता है। भारत जैसे देश के लिए ये बहुत महत्वपूर्ण है और भारत का सामुद्रिक इतिहास स्वर्णिम रहा है। संस्कृत में समुद्र को उदधि या सागर कहा जाता है। इसका अर्थ है अनंत प्रचुरता। सीमायें हमें अलग करती होंगी, ज़मीन हमें अलग करती होगी, लेकिन जल हमें जोड़ता है, समुद्र हमें जोड़ता है। समंदर से हम अपने-आप को जोड़ सकते हैं, किसी से भी जोड़ सकते हैं। और हमारे पूर्वजों ने सदियों पहले विश्व भ्रमण करके, विश्व व्यापार करके इस शक्ति का परिचय करवाया था। चाहे छत्रपति शिवाजी हों, चाहे चोल साम्राज्य हो - सामुद्रिक शक्ति के विषय में उन्होंने अपनी एक नई पहचान बनाई थी। आज भी हमारे कई राज्य हैं कि जहाँ समुन्दर से जुड़ी हुई अनेक परम्पराएँ जीवित हैं, उत्सव के रूप में मनाई जाती हैं। विश्व जब भारत का मेहमान बन रहा है, नौसेना की शक्ति का परिचय हो रहा है। एक अच्छा अवसर है। मुझे भी सौभाग्य मिलेगा इस वैश्विक अवसर पर उपस्थित रहने का।
वैसे ही भारत के पूर्वी छोर गुवाहाटी में खेल-कूद समारोह हो रहा है, सार्क देशों का खेल-कूद समारोह। सार्क देशों के हज़ारों खिलाड़ी गुवाहाटी की धरती पर आ रहे हैं। खेल का माहौल, खेल का उमंग। सार्क देशों की नई पीढ़ी का एक भव्य उत्सव असम में गुवाहाटी की धरती पर हो रहा है। ये भी अपने आप में सार्क देशों के साथ नाता जोड़ने का अच्छा अवसर है।
मेरे प्यारे देशवासियो, मैंने पहले ही कहा था कि मन में जो आता है, मन करता है, आपसे खुल करके बांटूं। आने वाले दिनों में दसवीं और बारहवीं की परीक्षायें होंगी। पिछली बार ‘मन की बात’ में मैंने परीक्षा के संबंध में विद्यार्थियों से कुछ बातें की थीं। इस बार मेरी इच्छा है कि जो विद्यार्थियों ने सफलता पाई है और तनावमुक्त परीक्षा के दिन कैसे गुज़ारे हैं, परिवार में क्या माहौल बना, गुरुजनों ने, शिक्षकों ने क्या role किया, स्वयं ने क्या प्रयास किये, अपनों से सीनियर ने उनको क्या बताया और क्या किया? आपके अच्छे अनुभव होंगे। इस बार हम ऐसा एक काम कर सकते हैं कि आप अपने अनुभव मुझे ‘Narendra Modi App’ पर भेज दीजिये। और मैं मीडिया से भी प्रार्थना करूँगा, उसमें जो अच्छी बातें हों, वे आने वाले फ़रवरी महीने में, मार्च महीने में अपने मीडिया के माध्यम से प्रचारित करें, ताकि देशभर के students उसको पढ़ेंगे, टी.वी. पर देखेंगे और उनको भी चिंतामुक्त exam कैसे हो, तनावमुक्त exam कैसे हो, हँसते-खेलते exam कैसे दिए जाएँ, इसकी जड़ी-बूटी हाथ लग जाएगी और मुझे विश्वास है कि मीडिया के मित्र इस काम में ज़रूर मदद करेंगे। हाँ, लेकिन तब करेंगे, जब आप सब चीज़ें भेजेंगे। भेजेंगे न? पक्का भेजिए।
बहुत-बहुत धन्यवाद, दोस्तो। फिर एक बार अगली ‘मन की बात’ के लिए अगले महीने ज़रूर मिलेंगे। बहुत धन्यवाद।
எனதருமை நாட்டு மக்களே,
உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். ஒரு வகையில் 2015ம் ஆண்டின் என் நிறைவான மனதின் குரல் நிகழ்ச்சி இது. அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சி 2016ம் ஆண்டில் இருக்கும். இப்போதுதான் நாம் க்றிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தோம், இப்போது நாம் புது வருடத்தை வரவேற்க காத்திருக்கிறோம். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு, இங்கே ஏராளமான பண்டிகைகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒன்று கடந்து செல்லும் போதே இன்னொன்று வந்து விடுகிறது. ஒரு வகையில் பார்க்கப் போனால், ஒவ்வொரு பண்டிகையுமே அடுத்த பண்டிகை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை விட்டுச் செல்கிறது என்று சொல்லலாம். சில வேளைகளில் இந்தியா பண்டிகைகளால் முடுக்கி விடப்படும் பொருளாதாரம் என்று கூட சொல்லலாம். சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருக்கும் மக்களின் பொருளாதார செயல்பாடுகளுக்கான காரணமாக இவை அமைகின்றன. இந்தத் தருணத்தில் நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் க்றிஸ்துமஸ் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வரவிருக்கும் 2016ம் ஆண்டுக்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2016ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சியையும் சந்தோஷங்களையும் கொண்டு வரட்டும், புதிய உற்சாகம், புதிய பொலிவு, புதிய உறுதிப்பாடு உங்கள் அனைவரையும் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்லட்டும். உலகம் முழுவதுமே சங்கடங்களிலிருந்து மீட்சி பெறட்டும்; தீவிரவாதமாகட்டும், உலகம் வெப்பமயமாதல் ஆகட்டும், இயற்கைப் பேரிடர்களாகட்டும், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சங்கடமாகட்டும். இவை அனைத்திலுமிருந்து மீட்சி பெற்று மனித சமுதாயம் அமைதி நிறைந்த நல்வாழ்வு வாழ வேண்டும் – இதை விடப் பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்?
நான் தொழில்நுட்பத்தை முழுவதுமாகப் பயன்படுத்துபவன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், இல்லையா? இதன் மூலம் எனக்கு ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்து வருகின்றன. mygov என்ற எனது இணைய தளத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
புணே நகரிலிருந்து கணேஷ் வி. சாவ்லே சவார்க்கர் அவர்கள் இந்தப் பருவம் சுற்றுலாப் பருவமாக இருக்கிறது, மிகப் பெரிய அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், மக்கள் க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக பலவிடங்களுக்குச் செல்கிறார்கள்; அந்த வகையில் சுற்றுலாத் துறையைப் பொறுத்த மட்டில் கிட்டத்தட்ட அனைத்துக் கோணங்களிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் எங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகச் செல்கிறார்களோ, அந்த இடங்களில் எல்லாம் நாம் சுத்தம் பற்றிய நம் சிறப்பு கவனத்தைச் செலுத்துவதில்லை, அந்த கவனத்தை நாம் செலுத்த வேண்டும் என்கிறார். நமது சுற்றுலாத் தலங்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு இந்தியா பற்றிய எண்ணமும் தோற்றமும் மற்றவர்கள் மனங்களில் பொலிவு பெறும் நான் கணேஷ் அவர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். நான் கணேஷ் அவர்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன். நாம் அதிதி தேவோ பவ, அதாவது விருந்தினர்களை இறைவனாகக் காண வேண்டும் என்ற மரபில் வந்தவர்கள் எனும் போது, நம் இல்லங்களுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், உடனே வீட்டைத் துடைப்பது, சுத்தம் செய்வது என்றெல்லாம் ஈடுபடுகிறோம், இல்லையா? இதே போலவே நாம் நம் நாட்டின் சுற்றுலாத் தலங்கள், மையங்கள், யாத்திரை இடங்கள் ஆகியவற்றை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும், இதில் நாம் சிறப்பான வலு சேர்க்க வேண்டுவது அவசியம். தூய்மை பற்றி நாடெங்கிலுமிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகிறது. தொடக்க நாள் முதலாகவே நான் இந்த விஷயம் குறித்து ஊடகத் துறை நண்பர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்த வண்ணம் இருந்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் சின்னச் சின்ன, நல்ல நல்ல விஷயங்களை தோண்டி எடுத்து மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
மத்திய பிரதேச மாநில சிஹோர் மாவட்டத்தின் போஜ்பூரா கிராமத்தில் திலிப் சி. மாளவீய அவர்கள் எளிய ஒரு கட்டுமானக் கலைஞர்; பத்திரிக்கைகளில் அவரைப் பற்றிய செய்தி வரும் அளவுக்கு அவர் நல்லதொரு செயலை செய்து வந்துள்ளார். கிராமத்தில் யாராவது கட்டுமானப் பொருள்களை அளிப்பார்களேயானால், அவர் கழிப்பறை கட்டத் தேவையான கட்டுமானக் கூலையைப் பெறுவதில்லை என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டார். இலவசமாகவே அவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கழிப்பறையைக் கட்டிக் கொடுத்து வருகிறார். இந்தப் பணி மிகவும் புனிதமான ஒன்று என்று கருதி, போஜ்பூரா கிராமத்தில் இவர் தன்னுடைய உழைப்பினால் மட்டுமே நூறு கழிப்பறைகளை இது வரை கட்டிக் கொடுத்துள்ளார் என்ற செய்தியை இப்போது தான் நான் படிக்க நேர்ந்தது, இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் திலிப் சி. மாளவீயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும், மனம் நிறைந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு பற்றி உற்சாகத்தைக் குன்றச் செய்யும் செய்திகள் நம் காதுகளில் சில நேரங்களில் வந்து விழுகின்றன. ஆனால் இந்த நாட்டில் இப்படி கோடிக்கணக்கான திலிப் சீ. மாளவீயாக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் தங்களால் இயன்ற வரைக்கும் நல்ல பணிகளை ஆற்றி வருகின்றார்கள். இது தானே நாட்டின் பலம்! இது தானே நாட்டின் எதிர்பார்ப்பு! இந்த விஷயங்கள் தானே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவை!! ஆகையால் நமது மனதின் குரலில் திலீப் சி. மாளவியாவைப் பாராட்டுவது என்பது, பெருமிதம் கொள்வது என்பது இயல்பான ஒன்றாகவே அமையும்.
பலருடைய இடைவிடாத முயற்சிகள் காரணமாக நாடு மிக விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. நாட்டின் 125 கோடி மக்களும் தோளோடு தோள் சேர்த்து முன்னேற்றப் பாதையில் நடை போட்டு வருகிறார்கள், நாட்டையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பான கல்வி, மேம்பட்ட திறன்கள், அதிகரித்து வரும் வேலை வாய்ப்புக்கள்; குடிமக்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், வங்கி வசதிகள், இடர்கள் இல்லாமல் உலகளாவிய அளவில் வியாபாரம் செய்தல், புதிய தொழில்கள் தொடங்கத் தேவையான அமைப்புகளை நிறுவுதல் போன்றவை ஒரு புறம் நிகழ்ந்து வருகின்றன. வங்கிகளின் அருகே கூட செல்ல முடியாத எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போது முத்ரா திட்டம் வாயிலாக சுலபமாக கடனுதவி பெற முடிகிறது.
இப்போதெல்லாம் உலகம் முழுவதும் யோகக் கலையின் பால் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். உலகம் முழுமையும் சர்வதேச யோக நாளைக் கொண்டாடிய போது, நம் நாடு எத்தனை பெருமை பெற்ற நாடு என்ற உணர்வு நமக்கெல்லாம் ஏற்பட்டது, இல்லையா? நமது எண்ணங்களும் சிந்தனைகளும் விசாலமான அளவில் இருக்கும் போது தான் இந்த உணர்வு நமக்கு ஏற்படும். வெண்ணெய் உண்ட கண்ணனை, அவன் தாய் யசோதை வாயைத் திறந்து காட்டு என்ற போது, அப்படி அவன் திறக்கையில், அங்கே அவள் அண்ட சராசரங்களையும் கண்டதை யாரால் மறக்க முடியும்? அப்போது தான் அவளது பார்வை விசாலப் பட்டது. இதே போலத் தான் யோகா தினமானது இந்தியா பற்றிய மகத்துவத்தை இந்தியர்களான நமக்கு உணர்த்தியது.
இப்போதெல்லாம் தூய்மை பற்றிய பேச்சுக்கள் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்து வருகிறது. இதில் குடிமக்களின் பங்கேற்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் என்ற வசதியைப் பயன்படுத்தி வரும் நகர வாசிகளுக்கு, நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக மின்சார இணைப்பு பெறும் பல கிராம மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய கற்பனை கூட இருக்க முடியாது. மத்திய மாநில அரசுகளின் மின்வழங்கல் துறை முந்தைய காலகட்டங்களில் கூட பணி புரிந்து வந்திருந்தன; ஆனால் அனைத்து கிராமங்களுக்கும் ஆயிரம் நாட்களுக்கு உள்ளாக மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நாள் முதல் கொண்டு, மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்ட கிராமங்களின் பெயர்களுடன் கூடவே அந்தந்த கிராம மக்களின் உற்சாகமும் குதூகலமும் பற்றிய செய்திகளும் தினமும் வரத் தொடங்கி இருக்கின்றன. இன்று வரை இவை பற்றிய செய்திகள் பெரிய அளவில் ஊடகங்களில் வெளி வரவில்லை என்றாலும் கூட, ஊடகங்கள் கண்டிப்பாக அந்த கிராமங்களுக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் அந்த கிராமங்களில் மின்சார வருகையால் ஏற்பட்டிருக்கும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உலகுக்கு எடுத்துரைப்பார்கள். ஒரு விவசாயியாகட்டும், ஏழையாகட்டும், இளைஞனாகட்டும், தாய்க்குலமாகட்டும், அவர்கள் வாழ்வுகளில் புத்துணர்வு ஏற்படுத்தும் ஒரு நல்மாற்றத்துக்குத் தாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம் என்ற உணர்வு மின்சாரத்தை அந்த கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு மிகப் பெரிய மன நிறைவை ஏற்படுத்தும், இதுவே கூட ஒரு மிகப் பெரிய சாதகமான விஷயம். இது நாள் வரை மின்சாரம் கிடைக்காத இந்த மக்களுக்கெல்லாம் இந்தச் செய்தி கிடைக்க வேண்டுமா இல்லையா? எந்த அரசு எதைச் செய்தது, எதைச் செய்யவில்லை என்ற கருத்தினடிப்படையில் தகவல் சென்று சேர வேண்டும் என்று நான் கூறவில்லை, மக்களுக்குப் இதைப் பெற உரிமை இருந்தால், இதை அவர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. தங்களது உரிமைகளைப் பெறுவதில் கூட அவர்களுக்குத் தகவல்கள் கிடைக்க வேண்டும் இல்லையா? சரியான தகவல்கள், நல்ல விஷயங்கள், சாமான்ய மக்களுக்கு உதவக் கூடிய விஷயங்கள் எத்தனை அதிகப் பேர்களுக்குக் கிடைக்க வேண்டுமோ, அத்தனை பேர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும். இது கூட சேவை தானே? நானும் இந்த சேவையில் ஈடுபடும் வகையில் ஒரு சிறிய அளவிலான முயற்சியில் ஈடுபட்டேன். தனியனாய் நான் மட்டுமே அனைத்தையும் செய்து விட முடியாது அல்லவா? ஆனால் நான் இதைப் பற்றிக் கூறும் போது, என் பங்களிப்பை நானும் அளிக்க வேண்டுமல்லவா? ஒரு எளிய குடிமகன் கூட தனது மொபைல் ஃபோனில் நரேந்திர மோதி என்ற ஒரு Appஐ தரவிறக்கம் செய்து என்னோடு இணைந்து கொள்ளலாம். இதில் நான் எளிமையான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறேன். மக்களுமே கூட என்னிடம் ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. நீங்களும் உங்கள் தரப்பில் இந்த முயற்சியில் அவசியம் ஈடுபடுங்கள். 125 கோடி மக்களையும் சென்றடைய வேண்டுமென்றால், உங்கள் உதவியில்லாமல் என்னால் எப்படி சென்று சேர முடியும்? வாருங்கள், நாமனைவருமாக இணைந்து சாமான்ய மக்களின் நலன்கள் பற்றிய விஷயங்களில் ஈடுபடுவோம், சாமான்யனுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்ப்போம், அவர்களின் உரித்தான விஷயங்களைப் பெற்றுத் தர அவர்களுக்கு கருத்தூக்கம் அளிப்போம்.
எனதருமை இளைய நண்பர்களே,
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று நான் செங்கோட்டையிலிருந்து Start up India, Stand Up India தொடர்பான ஒரு அடிப்படை கருத்தை முன்வைத்தேன். அதன் பிறகு அரசின் அனைத்துத் துறைகளிலும் இது தொடர்பான சிந்தனை முடுக்கி விடப்பட்டது. இந்தியாவால் Start Up தலைநகராக ஆக முடியுமா? இதற்காக தயாரிப்புத் துறை, சேவைத் துறை, விவசாயத் துறை என ஒவ்வொரு துறையிலும் புதுமை, புதிய வழிமுறைகள், புதிய எண்ணப்பாடு என இளைஞர்களுக்கு புதிய Start upகள், புதுமைகள் படைத்தல்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு நமது மாநிலங்கள் அளவில் ஏற்பட வேண்டும். புதுமைகள் படைக்கப்படவில்லை என்றால் உலகில் முன்னேற்றம் ஏற்படாது. Start up india, Stand up india இளைய சமுதாயத்துக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பை கொண்டு சேர்த்திருக்கிறது. எனதருமை இளைய நண்பர்களே, ஜனவரி மாதம் 16ம் தேதியை இந்திய அரசு start up india, stand up indiaவுக்கான செயல்பாட்டை முழு வீச்சில் தொடக்க இருக்கிறது. இது எப்படி இருக்கும் என்னவாக இருக்கும், என்பது தொடர்பான ஒரு வரைபடம் உங்கள் முன் வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் என எங்கெல்லாம் இளைய சமுதாயத்தினர் இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் live connectivity, அதாவது நேரடித் தொடர்பு முறை வாயிலாக இணைக்கப்படுவார்கள். Start up என்பது டிஜிட்டல் உலகம், தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தான் என்று start up தொடர்பாக நம்மிடத்தில் ஒரு நிலைபெற்ற கருத்து நிலவி வருகிறது, கண்டிப்பாக இல்லை. இந்தியாவின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நாம் இதில் மாற்றங்களைச் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக ஏழை ஒருவர் உழைப்பில் ஈடுபடும் போது, அவருக்கும் உடல் களைப்பு மேலிடுகிறது. ஆனால் இந்த உடல் களைப்பிலிருந்து தப்பும் வகையில் அவருக்கு உதவியாக ஒரு இளைஞர் புதிய கண்டுபிடிப்பை ஏற்படுத்தினார் என்று சொன்னால், நான் இதையே கூட start upஆக கருதுகிறேன். இத்தகைய இளைஞர்களுக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வங்கிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். துணிந்து உதவி செய்யுங்கள், இதற்கு சந்தை இருக்கிறது என்று என்னால் கூற முடியும். நமது இளைய தலைமுறையினரின் அறிவுத் திறன் நாடெங்கிலும் பரவிக் கிடக்கிறது. இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் உள்ள இளைஞர்களிடம் அபாரமான திறன் நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் வாய்ப்பொன்று மட்டுமே தேவை. இந்த start up india, stand up india ஏதோ சில நகரங்களில் மட்டுமே இருந்து விடக் கூடாது, இது இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் அங்கிங்கெனாதபடி பரவ வேண்டும். ஆகையால் இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளிடமும் விண்ணப்பத்துக் கொள்கிறேன். ஜனவரி மாதம் 16ம் தேதியன்று நான் கண்டிப்பாக உங்களோடு இது தொடர்பாக விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
எனதருமை இளைய தோழர்களே,
ஜனவரி மாதம் 12ம் தேதி ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள். என்னைப் போன்று இந்த நாட்டில் கோடிக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஸ்வாமி விவேகானந்தர் ஆதர்ஸ புருஷராக இருந்து வந்திருக்கிறார். 1995ம் ஆண்டு முதல், ஜனவரி மாதம் 12ம் தேதியன்று வரும் ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தியை நாம் தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி மாதம் 16ம் தேதி வரை இந்தக் கொண்டாட்டங்கள் சத்தீஸ்கட்டின் ராய்பூரில் நிகழவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சி ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுவது; இந்த ஆண்டின் கருப்பொருள் மிக அற்புதமானது, Indian Youth of Development, Skill and Harmony, அதாவது முன்னேற்றம், திறன் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் இந்திய இளைஞர்களின் பங்கு. இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலுமிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கு குழுமி, ஒரு சிறிய அளவிலான இந்தியாவை ஏற்படுத்துவார்கள். இங்கே இளைய இந்தியாவின் காட்சி விரியும். ஒரு வகையில் இங்கே கனவுகளின் வெள்ளப்பெருக்கும் ஏற்படும், உள்ள உறுதிப் பாடுகளின் வெளிப்பாடு உருவாகும். இந்த இளைஞர் திருவிழா தொடர்பாக உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் எனக்கு அளிக்கப்பட இருக்கிறதா? என்னுடைய நரேந்திர மோதி App மூலமாக நீங்கள் நேரடியாக உங்கள் கருத்துக்களை என்னிடம் அனுப்பி வையுங்கள் என்று குறிப்பாக நான் என் இளைய தோழர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மனதில் இருப்பவற்றைப் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தேசிய இளைஞர்கள் விழாவுக்கு உகந்ததாக இருப்பனவற்றை நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த இளைஞர் விழா பற்றிய உங்கள் கருத்துக்களுக்காக narendra modi appல் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நண்பர்களே. குஜராத் மாநிலத்தின் அஹ்மதாபாத்தைச் சேர்ந்த திலீப் சௌஹான் பார்வைத் திறன் அற்ற ஒரு மாற்றுத் திறனாளி. அவர் தனது பள்ளியில் Accessible India நாளைக் கடைபிடித்தார். அவர் தொலைபேசி மூலமாகத் தனது உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.
சார், நாங்கள் எங்கள் பள்ளியில் accessible india இயக்கத்தை அனுசரித்தோம். நான் பார்வைத் திறன் அற்ற ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியர். நான் சுமார் 2000 குழந்தைகளிடம் மாற்றுத் திறன் தொடர்பாக உரையாற்றி, எப்படி அத்தகைய மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம், எப்படி உதவலாம் என்று கூறிய போது, மாணவர்கள் இதை மிக நல்ல முறையில் ஏற்றுக் கொண்டார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்று மாணவர்களுக்கு இதன் கருத்தூக்கம் ஏற்பட்டது. இந்த மகத்தான முனைப்புக்கு நீங்கள் தான் காரணம்.
திலீப் அவர்களே, மிக்க நன்றி. நீங்களே கூட இந்தத் துறையில் பணியாற்றி வருகிறீர்கள், இது பற்றி உங்களுக்கு நன்கு விளக்கமாகத் தெரியும். நீங்களுமே கூட ஏராளமான இடர்ப்பாடுகளை சந்தித்திருப்பீர்கள். சில வேளைகளில் இவரைப் போன்ற மனிதர்களை நமது வாழ்வில் நாம் சந்திக்கும் போது, நம் மனங்களில் ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடும். இவர் போன்ற மனிதர்கள் பற்றிய கண்ணோட்டம் நம் எண்ணங்களின் அடிப்படையில் வெளிப்படும். ஏதோ ஒரு விபத்து காரணமாக தங்கள் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள்; சிலர் பிறவியிலேயே உடல் ஊனங்களோடே பிறக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களைக் குறிக்கும் விதமாக உலகில் பல வகையான சொற்களின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. ஆனால் எப்போதுமே இந்தச் சொற்கள் தொடர்பாக சிந்தனை நிலவி வந்தது. சில சொற்கள் நமக்கே கூட சரியானவை அல்ல என்று தோன்றும். ஒரு சமயம் handicapped அதாவது உடல் ஊனமுற்றவர் என்ற சொற்பிரயோகம் நிலவி வந்தது, சில வேளைகளில் disabled என்ற சொல் பயன்படுத்தப்பட்டது, சிலவேளைகளில் specially abled person, சிறப்புத் திறன் பெற்றவர் என்று பயன்படுத்தப்பட்டது. சொற்களுக்கு என ஒரு மகத்துவம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஆண்டு இந்திய அரசு சுகம்ய பாரதம் திட்டத்தைத் தொடக்கிய போது, அதில் நான் பங்கெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில், குறிப்பாக சென்னையில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு காரணமாக நான் அங்கே செல்ல வேண்டி இருந்ததால், இந்த நிகழ்ச்சியில் என்னால் பங்கெடுக்க முடியாமல் போனது. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போனாலும், என் மனதில் அது தொடர்பான சிந்தனைகள் உதித்துக் கொண்டிருந்தன. இறைவன் சிலரின் உடலில் ஏதோ குறைபாடுகளை அளித்திருக்கிறார், நாம் அவர்களை உடல் ஊனமுற்றவர்கள் என்று கூறுகிறோம். ஆனால் அவர்களோடு நாம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பழகும் போது, அவர்கள் தோற்றத்தில் காணப்படும் குறைபாடு தெரிந்தாலும், இறைவன் அவர்களுக்குக் கூடுதலான, சிறப்பானதொரு திறனை அளித்திருப்பதைப் பார்க்க முடியும். புறக்கண்களுக்கு இந்தத் திறன் தெரியாமல் போனாலும் கூட, அவர்கள் திறன்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும். ஆகையால் நாம் அவர்கள் திவ்யமான திறன்கள், தெய்வீகமான உறுப்புக்கள் கொண்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று ஏன் அழைக்கக் கூடாது என்ற கருத்து என் மனதில் இழையோடியது. சுகம்ய பாரதம் இயக்கத்தின் தொடக்கம் மூலமாக புற ரீதியான மற்றும் virtual ரீதியான கட்டமைப்புக்களில் மாற்றம் ஏற்படுத்தி, அவற்றை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகரமான வகைகளில் அமைப்போம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், எளிதில் அணுகக் கூடிய வாகன நிறுத்துமிடங்கள், லிஃப்டுகள், ப்ரயில் மொழி எழுத்துக்கள் என அனைத்து வகையிலும் எளிமைப்படுத்த புதுமைகள் தேவை, தொழில்நுட்பம் தேவை, அமைப்புகள் தேவை, புரிந்துணர்வு தேவை. இந்த சவாலை மேற்கொண்டிருக்கிறோம். இதில் மக்கள் பங்கெடுப்பும் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. நீங்களும் உங்கள் வகையில் இந்த முயற்சியில் ஈடுபடலாமே!!
எனதருமை நாட்டு மக்களே!
அரசுத் திட்டங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும், செயல்பட்ட வண்ணம் இருக்கும். ஆனால் திட்டங்கள் உயிரோட்டம் உள்ளவையாக இருத்தல் வேண்டும் என்பது அவசியம். திட்டங்கள் கடைநிலையில் இருப்பவர்கள் வரை உயிர்ப்புடன் செயல்பட வேண்டும். அவை கோப்புகளில் முடங்கி மரித்து விடக் கூடாது. திட்டங்கள் என்பவையே கூட சாமான்யர்களுக்கும் ஏழைகளுக்கும் அல்லவா ஏற்படுத்தப் பட்டவை? பயனாளிக்கு எப்படி எளிமையான முறையில் திட்டத்தின் சாதகங்களைக் கொண்டு செல்வது என்பது குறித்து சில நாட்கள் முன்பாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. நம் நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. ஆனால் இதற்கான எந்த கணக்கு வழக்கும் வைக்கப்படவில்லை. மானியம் உண்மையான பயனாளிகளைத் தான் சென்றடைகிறதா இல்லையா, சரியான நேரத்தில் சென்றடைகிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அரசு மானியம் வழங்கலில் ஒரு சிறிய மாற்றத்தை மேற்கொண்டது. ஜன் தன் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை ஆகியவற்றின் துணை கொண்டு உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டத்தின் வாயிலாக நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த மானியங்கள் சென்று சேர்கிறது. அந்த வகையில் வெற்றிகரமாக அமல் படுத்தப்பட்டிருக்கும் உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டம் என்பதற்காக இதற்கு கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது. பஹல் என்ற பெயரில் இந்தத் திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாத நிறைவு வாக்கில் சுமார் 15 கோடி பேர்கள் பஹல் எரிவாயு திட்டத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். இந்த 15 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத் தொகை சென்று சேர்கிறது. இடைத்தரகர்களோ, சிபாரிசோ, ஊழலுக்கான சாத்தியக்கூறோ ஏதும் இல்லாமல் இது நடக்கிறது. ஒரு புறத்தில் ஆதார் அடையாள அட்டைக்கான இயக்கம், மறுபுறத்தில் ஜன் தன் வங்கிக் கணக்குத் திறப்பு, மற்றொரு புறத்திலோ, மத்திய மாநில அரசுகள் இணைந்து பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்து, அதை ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவற்றோடு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான MGNREGA கிராமங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. பல இடங்களில் பணம் வேலை செய்த தொழிலாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக போடப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதிலும் இடர்ப்பாடுகள் நிலவி வந்தன. குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதிலும் கூட உதவித் தொகையை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் திட்டம் அமல் செய்யப்படத் தொடங்கி விட்டது, மெல்ல மெல்ல இதில் மேலும் முன்னேற்றம் இருக்கும். இது வரை சுமார் 35, 40 திட்டங்கள் தொடர்பாக 40000 கோடி ரூபாய் வரை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ளது.
எனதருமை நாட்டு மக்களே,
ஜனவரி மாதம் 26ம் தேதி இந்திய குடியரசைப் பொறுத்த வரை ஒரு பொன்னான கணம். இந்த முறை நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் நிறுவனரான டா. பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் 125வது பிறந்த ஆண்டாக இந்த நாள் இருப்பது மிகவும் மங்களகரமான இணைவு. நாடாளுமன்றத்திலும் கூட 2 நாட்கள் அரசியல் அமைப்புச் சட்டம் மீதான சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. அனைத்துக் கட்சிகளும், அனைத்து உறுப்பினர்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் புனிதம், மாட்சிமை, அதை சரியான வகையில் புரிந்து கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக அருமையான விவாதங்களில் ஈடுபட்டனர். இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குடியரசுத் திருநாள் உள்ளபடியே மக்களை அமைப்புடன் இணைக்க வழி வகை காண முடியுமா? அதே போல அமைப்புகளை பொது மக்களோடு இணைக்க முடியுமா? நமது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு ஏகப்பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. அதிகாரங்கள் பற்றி மக்கள் இயல்பான வகையில் விவாதிப்பார்கள், அப்படி விவாதம் புரிவதும் அவசியம் தான். அதே வேளையில் அரசியல் அமைப்புச் சட்டமானது கடமைகள் பற்றியும் அழுத்திப் பேசும். ஆனால் கடமைகள் பற்றிப் பேசும் போது குரல்கள் தேய்ந்தே ஒலிக்கும். தேர்தல்களின் போது மட்டுமே, ‘வாக்களிப்பது என்பது புனிதமான கடமை’ என்று அதிக விளம்பரங்கள் வெளியாகும், சுவர்களில் எழுதப்படும், தட்டிகள் வைக்கப்படும். தேர்தல் காலங்களில் எல்லாம் கடமை பற்றி நாம் அதிகம் பேசுவோம். ஆனால் அதே கடமை பற்றி ஏன் தினசரி வாழ்கையில் பேசக் கூடாது?
இந்த ஆண்டு நாம் பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் 125வது பிறந்த ஆண்டை விழாவாகக் கொண்டாடும் வேளையில், நாம் ஜனவரி மாதம் 26ம் தேதியை ஒரு காரணமாகக் கொண்டு, பள்ளிகளில், கல்லூரிகளில், நமது கிராமங்கள்-நகரங்களில், பலவகையான சமுதாயங்களில், சங்கங்களில் கடமை என்ற கருத்திலமைந்த கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய முடியும் அல்லவா? 125 கோடி நாட்டு மக்களும் கடமை உணர்வோடு ஒருவர் பின் ஒருவராக அடியெடுத்து வைக்கும் போது, எந்த அளவு பெரியதொரு சரித்திரம் படைக்கப்படும், எண்ணிப் பாருங்கள்!! ஆனால் முதலில் அதைப் பற்றிப் பேசத் தொடங்குவோமே! என் மனதில் ஒரு கருத்து எழுகிறது. நாம் ஜனவரி மாதம் 26ம் தேதிக்கு முன்பாக, Duty, கடமை பற்றி உங்கள் தாய்மொழியிலோ, ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ கட்டுரை அல்லது கவிதை என ஏதோ ஒன்றை எனக்கு எழுதி அனுப்ப முடியுமா? நான் உங்கள் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். mygov என்ற இந்த இணையதளத்தில் அனுப்பி வையுங்கள், கடமை தொடர்பாக என் நாட்டு இளைய தலைமுறை என்ன எண்ணமிடுகிறது என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
சின்னதொரு ஆலோசனை அளிக்க வேண்டும் என்று என் மனம் எண்ணமிடுகிறது. ஜனவரி 26ம் தேதியன்று நாம் குடியரசுத் திருநாளைக் கொண்டாடும் வேளையில், குடிமக்கள் வாயிலாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள் வாயிலாக, நமது நகரத்தில் இருக்கும் நாட்டுத் தலைவர்களின் திருவுருவச் சிலைகளையும், அதைச் சுற்றியிருக்கும் இடங்களையும் மிகவும் சிறப்பான வகையில் தூய்மைப்படுத்தி, அலங்கரிக்க முடியுமில்லையா? அரசு தரப்பிலிருந்து நான் இதைக் கூறவில்லை; குடிமக்கள் என்ற முறையில் இதைச் செய்யலாமே என்ற கருத்தை முன் வைக்கிறேன். எந்தத் தலைவர்களின் திருவுருவச் சிலைகளை வைப்பதில் நாம் மிகவும் உணர்வு பூர்வமாக ஈடுபடுகிறோமோ, அந்தச் சிலைகளைப் பராமரிப்பதில் நாம் பின்னர் உதாசீனத்தையே வெளிப்படுத்துகிறோம். ஒரு சமுதாயம் என்ற முறையிலும், நாடு என்ற வகையிலும் தூய்மைப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்து வர முடியாதா? இந்த ஜனவரி மாதம் 26ம் தேதியன்று நாமனைவருமாக இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுவோம். இதன் மூலம் நாட்டுத் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை, தூய்மை, சுற்றி உள்ள இடங்களில் சுத்தம் ஆகியன செய்யப்படும், இவை அனைத்தும் பொது மக்கள் வாயிலாக, குடிமக்கள் வாயிலாக, இயல்பான முறையில் செயலாக்கம் பெறும்.
எனதருமை நாட்டு மக்களே,
மீண்டும் ஒரு முறை 2016க்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் நன்றி.
எனதருமை நாட்டு மக்களே,
வணக்கம், தீபாவளித் திருநாளை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி இருப்பீர்கள். ஏதாவது இடத்துக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்திருக்கும், ஒரு புதிய உற்சாகத்தோடு தொழில் செய்யத் தொடங்கி இருப்பீர்கள். இன்னொரு பக்கம், க்றிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். சமுதாய வாழ்வில் பண்டிகைகளுக்கு என ஒரு தனியிடம் இருக்கிறது. சில வேளைகளில் பண்டிகைகள் காயங்களை ஆற்றவும் பயனுள்ளவையாகின்றன. சில வேளைகளில் அவை புதிய ஊக்கத்தை அளிக்கின்றன. ஆனால் சில வேளைகளில் பண்டிகை நாட்களில் சங்கடங்கள் வரும் போது, அவை அதிக துயரத்தை அளிக்கின்றன. உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும், தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் பற்றிய தகவல்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இது வரை கேள்வியே பட்டிராத வகையில் கூட பேரிடர் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தனை வேகமாகப் பரவி வருகிறது என்பதை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு வருகிறோம். நம்முடைய நாட்டிலேயே கடந்த நாட்களில் பருவம் தப்பி அதிகப்படியான மழை பெய்திருக்கிறது, அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் இது நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சங்கடம் நிறைந்த சூழலில் நான் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுகள் முழு வீச்சில் மீட்பு மற்றும் இடர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. மத்திய அரசும் எப்போதும் போல தோளோடு தோள் சேர்த்துப் பணியாற்றி வருகிறது. இப்போது மத்திய அரசின் ஒரு குழு தமிழ்நாடு சென்றிருக்கிறது; எனக்குத் தமிழ்நாட்டின் சக்தி மீது அபார நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சங்கடங்களையெல்லாம் தாண்டிக் கூட தமிழ்நாடு மீண்டும் வேகமாக முன்னேற்றப் பாதையில் விரையும் என்பதையும், நாட்டின் முன்னேற்றத்தில் தனது பங்களிப்பை அளிக்கும் என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் நாலாபுறங்களிலும் இப்படி சங்கடமான சூழலை நாம் எதிர்கொண்டு வருகையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இயற்கைப் பேரிடர் என்பது விவசாயத் துறையோடு தொடர்புடையதாகவே இருந்து வந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர் என்றால் வறட்சி, பஞ்சம் என்பதோடு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ அது மாற்றம் அடைந்து விட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் பேரிடர் எதிர்கொள்வதில் நாம் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அரசுகள், மக்கள் சமூகம், குடிமக்கள், சிறியதும் பெரியதுமான அமைப்புக்கள் அறிவியல் பூர்வமாக இந்த திறன் வளர்த்தல் துறையில் செயல்பட வேண்டியிருக்கிறது. நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, நான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் அவர்களுடன் உரையாட நேர்ந்தது. தெற்காசிய நாடுகளான நாமனைவருமாக இணைந்து பேரிடரை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்க ஒரு கூட்டுச் செயல்பாட்டை மேற்கொண்டாக வேண்டும் என்ற ஆலோசனையை தெரிவித்தேன். இது தொடர்பான ஒரு கருத்துப் பட்டறையும் பேரிடரை எதிர்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் பற்றிய ஒரு கருத்தரங்கும் புது தில்லியில் நடை பெற்றது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது.
பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த லக்வீந்தர் சிங் அவர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்….. நான் பஞ்சாப் மாநில ஜலந்தரைச் சேர்ந்த லக்வீந்தர் சிங் பேசுகிறேன். நாங்கள் இங்கே இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டு வருவதோடு, மேலும் பலருக்கும் விவசாயத்தில் வழிகாட்டியும் வருகிறோம். அறுவடை செய்த பிறகு மிஞ்சி இருக்கும் அடித்தாளுக்கு மக்கள் எரியூட்டி விடுகிறார்களே, இதன் மூலம் பூமித் தாயின் மடியில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, அவர்களுக்கு எப்படிப் புரிய வைத்து இதைத் தடுப்பது, மேலும் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் போன்ற இடங்களில் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
லக்விந்தர் சிங்ஜி, உங்களின் கருத்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு ஒரு காரணம் நீங்கள் இயற்கை வழி விவசாயம் செய்து வருபவர் என்பது; இதை நீங்கள் மட்டுமே செய்யாமல், விவசாயிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மேலும் சந்தோஷத்தை அளிக்கிறது. உங்களின் கவலை நியாயமானது தான். ஆனால் இது ஏதோ பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட்டுமே நடப்பது இல்லை; இந்தியா முழுக்கவும் இது நமது வழக்கமாகவே ஆகி இருக்கிறது, பாரம்பரியமாகவே நாம் விளைச்சலுக்குப் பிறகு ஏற்படும் விவசாயக் கழிவுகளை இப்படித் தான் எரித்து வருகிறோம். முன்பெல்லாம் இப்படி எரிப்பதால் ஏற்படும் தீமை பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தது, அனைவரும் செய்கிறார்கள், எனவே நானும் செய்கிறேன் என்பதாக இருந்தது. இரண்டாவதாக, வேறு வழி என்ன என்பது பற்றிய பயிற்சி ஏதும் இல்லாத நிலையிலும் இப்படி நடந்தது. இவற்றின் காரணமாக இது தொடர்ந்து நடந்தது, பெருகி வந்தது. இன்றோ பருவநிலை மாற்றத்தோடு இது இணைந்து கொண்டது. இந்த சங்கடத்தின் தாக்கம் நகரங்களை எட்டத் தொடங்கிய பிறகு, மக்களின் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அந்த வகையில் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கும் கவலை உண்மையானது தான். முதல் கட்டமாக நமது விவசாய நண்பர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உண்மையை விளக்க வேண்டும். இப்படி விளைச்சலுக்குப் பிறகான வேளாண் கழிவுகளை எரிப்பதன் மூலம் நேரம் மிச்சப்படலாம், சிரமத்தைக் குறைக்க முடியலாம், அடுத்த நடவுக்கு நிலம் தயார் நிலையை அடையச் செய்யலாம். ஆனால் இது சரியான நெறிமுறை அல்ல. அறுவடைக்குப் பிறகான வேளான் கழிவுகளும் கூட மிகவும் விலை மதிப்பானவை. அவை இயற்கை வழி உரமாக இருக்கின்றன. நாம் அவற்றை வீணடிக்கிறோம். இது மட்டுமல்ல, நாம் அவற்றைச் சின்னச் சின்ன துண்டுகளாக்கினால், அவை கால்நடைகளுக்கு விருந்தாகலாம். இரண்டாவதாக, நாம் அவற்றை எரிப்பதனால், நிலத்தின் மேல் அடுக்கு எரிய நேர்கிறது. எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்கிறது, நமது இருதயம் நன்றாக செயல்படுகிறது, நமது சிறுநீரகம் சீராக வேலை செய்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது, ஆனால் உடலின் மீது இருக்கும் சருமம் எரிந்து விட்டால் நாம் பிழைத்திருக்க முடியுமா, சொல்லுங்கள்? எப்படி நமது உடலின் சருமம் எரிந்து போய் விட்டால் நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியாதோ, அதே போல விளைச்சலுக்குப் பிறகான அடித்தாளையும், விவசாய விளைபொருள் மிச்சங்களையும் நாம் எரித்து விடுவதானால், பூமித் தாயின் சருமம் எரிந்து போகிறது, நமது நிலத்தின் மேல் அடுக்கு எரிந்து போகிறது; இது நமது விளைநிலங்களை மலட்டுத் தன்மையை நோக்கி இட்டுச் செல்கிறது. ஆகையால் நாம் இந்தத் திசையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடித்தண்டை மீண்டும் நாம் நிலத்தில் புதைத்து விட்டாலும் கூட அதுவே உரமாக மாறி விடும். அல்லது அவற்றை எல்லாம் சேகரித்து ஒரு குழியில் இட்டு நிரப்பி, மண்புழுக்களுடன் நீரையும் அதில் சேர்த்தால், அது மிகச் சிறப்பான தொழு உரமாக மாறும். இதனால் நமது நிலம் பாதுகாக்கப்படுவதோடு, அந்த விளைநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட உரத்தையே அதில் போடும் போது, அது இரட்டிப்பு பலனை அளிக்கிறது.
வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளோடு உரையாடும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர்கள் என்னிடம் தங்களின் அருமையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். முன்பெல்லாம் வாழைத் தார் அறுவடை செய்த பிறகு அவர்கள், வாழைத் தண்டை அப்புறப்படுத்த, ஹெக்டேர் ஒன்றுக்கு 5000, 10000, 15000 ரூபாய்கள் என செலவு செய்ய வேண்டி இருந்தது. அவற்றைப் பிடுங்கி எடுத்துச் செல்ல வேண்டிய ஆட்கள் ட்ராக்டர்களில் வரும் வரை எந்த வேலையும் நடைபெறாமல் இருந்தது. ஆனால் சில விவசாய சகோதரர்களோ அந்தத் தண்டையே 6 முதல் 8 அங்குலங்கள் வரை வெட்டி, அவற்றை நிலத்தில் நட்டு வைத்தார்கள். இந்த வாழைத் தண்டில் ஏராளமான தண்ணீர் இருப்பதால், இதை மரமோ, செடியோ, பயிரோ இருக்கும் இடங்களில் நட்டு வைப்பதன் மூலம் அந்த இடங்களில் சுமார் 3 மாதங்கள் வரை தண்ணீர் இறைக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை என்பதை அனுபவத்தில் கண்டறிந்தார்கள். தண்டில் இருக்கும் தண்ணீரே பயிர்களுக்குப் போதுமானதாக இருந்தது. இன்று அந்தத் தண்டுகளே கூட மிகவும் விலை மதிப்பானவையாக மாறி விட்டிருக்கின்றன இவற்றின் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. முன்பெல்லாம் எந்தத் தண்டை அகற்ற செலவு செய்ய வேண்டி இருந்ததோ, இப்போது, அந்தத் தண்டே அவர்களுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சின்னதொரு பரிசோதனை முயற்சி கூட எந்த அளவுக்கு பலன் தருவதாக அமைந்திருக்கிறது பாருங்கள்!! நமது விவசாய சகோதரர்கள் விஞ்ஞானிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல.
எனதருமை நாட்டு மக்களே!!
வரவிருக்கும் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த முறை மனதின் குரலில் நான் உடல் உறுப்பு தானம் பற்றிப் பேசியிருந்தேன். இது தொடர்பாக NOTO இலவச தொலைபேசி எண் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மனதின் குரலுக்குப் பிறகு தொலைபேசி அழைப்புகள் 7 மடங்கு அதிகரித்து விட்டன, வலைத்தளத்தில் 2 ½ பங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நவம்பர் மாதம் 27ம் தேதியன்று இந்திய உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப் பட்டது. இதில் சமுதாயத்தின் பல பிரமுகர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். திரைப்பட நடிகை ரவீனா டண்டன் போன்ற பல பிரபலங்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். உடல் உறுப்பு தானம் பல உயிர்களைக் காப்பாற்றக் கூடியது. இதை விடப் பெரிய தானம் வேறு என்ன இருக்க முடியும்? உடல் உறுப்புகள் வேண்டிக் காத்திருக்கும் நோயாளிகள், உடல் உறுப்பு தானம் செய்வோர், ஆகியோர் பற்றிய விபரங்கள் அடங்கிய தேசிய அளவிலான உடல் உறுப்பு மாற்றுக்கான பதிவு மையம் நவம்பர் மாதம் 27ம் தேதியன்று தொடக்கப்பட்டது. NOTOவுக்கான முத்திரை, தானமளிப்பவருக்கான அடையாள அட்டை மற்றும் முழக்கத்தை வடிவமைக்க ஒரு தேசிய அளவிலான போட்டிக்கு mygov.in இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல பேர்கள் பங்கெடுத்தார்கள், புதுமையான முறைகளில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள், மிகவும் உணர்ச்சிபூர்வமான வகையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தத் துறையிலும் விழிப்புணர்வு பரவலாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கண்டிப்பாக தேவை இருப்பவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். ஏனென்றால், தானம் செய்ய என்று ஒருவர் இல்லாத வரையில், இந்த உதவி எந்த வகையிலும் கிடைக்காது.
டிசம்பர் மாதம் 3ம் தேதியை நாம் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது என்பதை நான் முன்பே கூறியிருந்தேன். உடல் ரீதியாக, உள்ள ரீதியாக மாற்றுத் திறனாளிகள் இணையற்ற தைரியமும், ஒப்பற்ற திறனும் படைத்தவர்கள். சில வேளைகளில் அவர்கள் கேலிப் பொருள்களாக சித்தரிக்கப்படும் போது, மனதுக்கு வேதனை ஏற்படுகிறது. சில வேளைகளில் அவர்கள் மீது கருணையும், தயையும் வெளிப்படுத்தப் படுகிறது. ஆனால் நாம் நமது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டால், அவர்களை நாம் பார்க்கும் பார்வையை சரி செய்து கொண்டால், இவர்கள் நமக்கே கூட ஒரு கருத்தூக்கமாக அமைவார்கள், சாதனைகள் புரிய நமக்கு ஒரு உந்து சக்தியாக விளங்குவார்கள். சின்னதொரு இடர் வந்தாலும் நாம் கண்ணீர் சிந்த ஆரம்பித்து விடுகிறோம், எனது சங்கடமோ மிகவும் சிறிய அளவிலானது, ஆனால் இவர்கள் எப்படி இந்த நிலையில் சமாளிக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகையால் தான் இவர்கள் அனைவரும் நமக்கெல்லாம் கருத்தூக்கத்தின் ஊற்றுக்கள் என்றே நான் கருதுகிறேன். அவர்களின் மன உறுதிப்பாடு, வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும் பாங்கு, சங்கடங்களைக் கூட சாதகங்களாக மாற்றிக் கொள்ளும் திறன், தாகம், மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. 40-42 வயதாகும் ஜாவேத் அஹ்மத் அவர்களைப் பற்றி நான் இன்று பேச விரும்புகிறேன். 1996ம் ஆண்டு, கச்மீரில் ஜாவத் அஹ்மெத் மீது தீவிரவாதிகள் சுட்டார்கள். ஆனால் அவர் எப்படியோ உயிர் தப்பினாலும், தீவிரவாதிகள் சுட்ட குண்டுகள் அவரது சிறுநீரகத்தை சிதைத்து விட்டன, சிறுகுடலின் ஒரு பகுதி பாதிப்படைந்தது, தண்டுவடத்தில் அபாயகரமான படுகாயம் ஏற்பட்டது, எழுந்து நிற்க முடியாத அளவுக்கு பாதிப்பின் தீவிரம் அமைந்திருந்தது. ஆனால் ஜாவேத் அஹ்மத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிரவாதம் ஏற்படுத்திய காயங்கள் அவரைக் கோழையாக்கி விடவில்லை. அவரது ஊக்கத்துக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. எந்த ஒரு குற்றமும் செய்யாத ஒரு நபருக்கு இப்படிப் பட்ட ஒரு தண்டனை கிடைத்திருந்தது, அவரது இளமையே வீணாகிப் போனது, ஆனாலும் கூட அவர் மனதில் எந்த ஒரு கோபமோ, க்ரோதமோ ஏற்படவில்லை; இந்தச் சங்கடத்தைக் கூட ஹாவேத் அஹ்மத் சாதனையாக மாற்றி விட்டார். அவர் தனது ஒட்டு மொத்த வாழ்கையையுமே சமூக சேவைக்கு என அர்ப்பணித்து விட்டார். உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவர் கடந்த 20 ஆண்டுக்காலமாக குழந்தைகள் கல்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். உடல்ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை எப்படி மேம்படுத்துவது, பொதுவிடங்களில், அரசு அலுவலகங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை எப்படி சிறப்பாக்குவது போன்றவை மீது அவர் பணியாற்றி வருகிறார். சமூகப் பணியில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். ஒரு சமூக சேவகர் என்ற முறையில், ஒரு விழிப்புணர்வு கொண்ட குடிமகன் என்ற வகையில், அவர் மாற்றுத் திறனாளிகளின் இறைதூதுவராக இன்று அவர் ஒரு அமைதிப் புரட்சியை செய்து வருகிறார். ஜாவேத் அவர்களின் வாழ்வு இந்தியர்களுக்கெல்லாம் கருத்தூக்கமாக அமைய போதுமானதாக இருக்கும் அல்லவா? நான் ஜாவேத் அவர்களின் வாழ்கையை, அவரது முனைப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை டிசம்பர் மாதம் 3ம் தேதியை முன்னிட்டு சிறப்பாக நினைவு கூர விரும்புகிறேன். நேரப் பற்றாக்குறை காரணமாக நான் இன்று ஜாவேத் அவர்களைப் பற்றி மட்டுமே பேச முடிந்திருக்கிறது என்றாலும் கூட, இந்தியாவின் மூலை முடுக்கெங்கும், இப்படி கருத்தூக்கம் ஏற்படுத்தும் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன, வாழ்வதற்கு வேண்டிய ஊக்கத்தை அளித்துக் கொண்டு இருக்கின்றன, வழி துலங்கி வருகின்றன. அந்த வகையில் டிசம்பர் மாதம் 3ம் தேதி அவர்களிடமிருந்து நாம் ஊக்கம் பெற வேண்டிய நாளாக அமைந்திருக்கிறது.
பல விஷயங்களில் நாம் அரசுகளைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மத்தியத் தட்டு மக்கள், மத்திய வர்க்கத்துக்கு சற்று கீழே இருப்போர், அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என இவர்கள் அனைவரும் அரசு மற்றும் அரசு தொடர்பான அமைப்புக்களோடு தொடர்ந்து தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண குடிமகன் என்ற வகையில் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசு ஊழியர்களோடு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒன்றிரண்டு மோசமான அனுபவங்கள் அரசு நடைமுறையை அவர்கள் அணுகும் விதத்தை வாழ்கை முழுவதும் பாதிக்கிறது. இதில் உண்மையும் அடங்கி இருக்கிறது. ஆனால் சில வேளைகளில், இதே அரசுத் துறைகளில் இருக்கும் இலட்சக்கணக்கான பேர்கள் சேவை உணர்வோடும், அர்ப்பணிப்பு மனதோடும், மிகவும் சிறப்பான பணிகளைச் செய்கிறார்கள், இது நிரந்தரமாக நமது கண்களுக்குப் புலப்படாமலேயே இருக்கிறது. இதை அரசு இயந்திரமோ, ஒரு அரசு ஊழியரோ செய்திருக்கிறார் என்பதே கூட நமக்குத் தெரியாத அளவுக்கு செயல்பாடு அமைந்திருக்கிறது. நமது நாடு முழுவதிலும் ஆஷா சேவகிகள், அதாவது கிராமப்புற சுகாதார தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆஷா சேவகிகளின் பணி பற்றி நாட்டில் நம்மில் பலர் கேள்விப் படாமலேயே கூட இருக்கலாம். ஆனால் பில் கேட்ஸ் அறக்கட்டளையின் உலகப் பிரசித்தி பெற்ற குடும்பத்தின் பில் கேட்ஸ், மிலிண்டா கேட்ஸ் ஆகியோர் இருவருக்கும் கடந்த முறை நாம் பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவித்தோம். இந்த தம்பதியினர் தங்கள் ஓய்வுக்கால வாழ்க்கையில் தங்கள் செல்வத்தை ஏழைகள் மேம்பாட்டில் செலவு செய்து வருகிறார்கள். அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், தாங்கள் இணைந்து பணியாற்றும் ஆஷா சேவகிகள் பற்றி மிகவும் பாராட்டிப் பேசுகிறார்கள், அந்த சேவகிகளின் அர்ப்பண உணர்வு மிகவும் போற்றுதலுக்கு உரியது, சிறப்பாக உழைக்கிறார்கள், புதிய விஷயங்களைக் கற்றல் தொடர்பாக ஆர்வம் அதிகம் இருக்கிறது என்று ஏராளமான செய்திகளை இந்தத் தம்பதிகள் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் ஒடிஷா மாநில அரசு ஒரு ஆஷா சேவகிக்கு சுதந்திரத் திருநாளன்று சிறப்பான கௌரவத்தை அளித்தது. ஒடிஷா மாநிலத்தின் பாலாஸோர் மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமான தேந்தாகாவின் ஒட்டு மொத்த பேர்களும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏழ்மையில் உழலும் கிராமம் அது, மலேரியாவால் பீடிக்கப்படும் நிலைமை இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆஷா சேவகியான ஜமுனா மணி சிங், நான் இந்த தேந்தாகாவைச் சேர்ந்த யாரும் மலேரியா நோயால் இறக்காமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று தீர்மானித்துக் கொண்டார். அவர் வீடு வீடாகச் செல்வார், யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்தால் போதும் சென்று விடுவார், தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சியை அடியொற்றி அவர் உடனடியாகச் செய்யவேண்டிய மருத்துவ உதவிகளை செய்து விடுவார், ஒவ்வொரு வீட்டிலும் கொசுவலைப் பயன்பாட்டை ஊக்குவிப்பார், எப்படி ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவாரோ, அதே போல ஆஷா சேவகி ஜமுனா மணி சிங் ஒட்டு மொத்த கிராமத்தின் மீதும் அக்கறை செலுத்தி வருகிறார். அவர் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை முடுக்கி விட்டதோடு, ஒட்டு மொத்த கிராமத்தையும் அதை எதிர்கொள்ள தயார் படுத்தினார். இப்படிப்பட்ட எத்தனையோ ஜமுனா மணிகள் நாட்டில் இருக்கலாம். நாம் அவர்களின் பணியை மதிப்பளித்துப் போற்றலாமே!! இப்படிப்பட்டவர்கள் தாம் நமது நாட்டின் மிகப் பெரிய பலங்களாக விளங்குகிறார்கள். சமுதயாத்தின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நான் அப்படிப் பட்ட அனைத்து ஆஷா சேவகிகளுக்கும், ஜமுனா மணி அவர்கள் மூலமாக என் பாராட்டு மழைகளைப் பொழிகிறேன்.
எனதருமை இளைய நண்பர்களே,
சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வரும் என் இளைய நண்பர்களுக்காக mygov.inஇல் மூன்று மின் புத்தகங்களை, அதாவது e booksஐ தரவேற்றம் செய்திருக்கிறேன். ஒன்று, தூய்மையான பாரதம் தொடர்பான கருத்தூக்கம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் பற்றியது, அடுத்தது, நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் தொடர்பானது, மற்றது உடல்நலத் துறை தொடர்பானது. நீங்கள் இதைக் கண்டிப்பாகப் பாருங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் படிப்பதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். ஒரு வேளை நீங்களும் கூட இதில் உங்கள் கருத்துக்களை சேர்க்கலாம். சில விஷயங்கள் உடனடியாக நம் கருத்தைச் சென்று சேராமல் போனாலும் கூட, சமுதாயத்துக்கு மெய்யான ஆற்றல் தருபவை இவை தாம். ஆக்கபூர்வமான சக்தி தான் மிகப் பெரிய ஆற்றலாக இருக்கிறது. நீங்களும் இது தொடர்பான நல்ல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இந்த ஈ புத்தகங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இது பற்றிய கலந்தாய்வுகளை மேற்கொள்ளுங்கள். ஆர்வம் நிறைந்த ஒரு இளைஞர் இந்த ஈ புத்தகங்களை தன் வீட்டருகில் இருக்கும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் 8, 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்று தெரிவித்தால், நீங்களுமே கூட ஒரு சமுதாய வழிகாட்டியாகத் திகழலாம். இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், நாட்டை உருவாக்குவதில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
எனதருமை நாட்டு மக்களே,
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பான கவலையில் ஆழ்ந்திருக்கிறது. பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் பற்றிய பேச்சு அனைத்து இடங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பாகவும் அது சுற்றுச் சூழல் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றி சிந்திப்பது என்பது ஒரு அடிப்படைக் கூறாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உலகின் வெப்பநிலையில் அதிகரிப்பு காணக் கூடாது என்பது அனைவரின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரின் கவலையாகவுமே மாறி இருக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பிலிருந்து தப்ப முதன்மையான வழிமுறைகளில் ஒன்று, எரிசக்தி சேமிப்பு, அதாவது energy conservation. டிசம்பர் மாதம் 14ம் தேதி, தேசிய எரிசக்தி சேமிப்பு தினம். அரசு தரப்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. LED பல்ப் இயக்கம் முனைப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. பௌர்ணமி அன்று இரவில் தெரு விளக்குகளை அணைத்து விட்டு, ஒரு மணி நேரம் முழு நிலவொளியில் நனைய வேண்டும், திளைக்க வேண்டும் என்று ஒரு முறை நான் கூறியிருந்தேன்.
நண்பர் ஒருவர் என் பார்வைக்கு ஒரு இணைப்பை அனுப்பி இருந்தார், அதை பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பார்க்கப் போனால் இதற்கான பாராட்டுதல்கள் zee newsஐயே சாரும். கான்பூரில் நூர்ஜஹான் என்ற பெண்மணி யாருமே சிந்தித்திருக்க முடியாத ஒரு பணியைச் செய்து வருகிறார். அவர் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஏழைகளுக்கு வெளிச்சம் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இருளோடு போராடி வருகிறார், தன் பெயருக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறார். அவர் பெண்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்கிறார். சூரிய சக்தியால் இயங்கக் கூடிய லாந்தர் விளக்குக்கு மின்னூட்டம் அளிக்கக் கூடிய பட்டறை ஒன்றைத் தொடக்கி இருக்கிறார். மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் அவர் இந்த லாந்தர் விளக்குகளை அளித்து வருகிறார். மக்கள் மாலையில் இநத விளக்குகளை வாங்கிச் சென்று, காலையில் இவற்றுக்கு மின்னூட்டம் அளிக்கப்பட கொடுத்துச் செல்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் சுமார் 500 வீடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படி மின்னூட்டம் அளிக்கப்பட லாந்தர்களைக் கொடுக்கிறார்கள் என்று அறிகிறேன். தினசரி 3 அல்லது 4 ரூபாய் செலவில் வீடு முழுக்க ஒளி பெறுகிறது. நாள் முழுவதும் இந்த லாந்தர்களுக்கு மின்னூட்டம் அளிக்கும் பணியில் இந்த நூர்ஜஹான் செயல் பட்டு வருகிறார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பெரிய பெரிய அளவுகளில் பலர் செயல்பட்டு வந்தாலும், நூர்ஜஹான் போன்றவர்கள் மற்றவர்களுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார், பாருங்கள்!! நூர்ஜஹான் என்ற பெயருக்கே கூட, உலகுக்கு ஒளி அளிப்பவர் என்று அல்லவா பொருள்? இந்தப் பணி மூலமாக அவர் மற்றவர்கள் இல்லங்களில் விளக்கேற்றி வைக்கிறார், அவருக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். கான்பூரின் ஒரு மூலையில் நடைபெற்று வரும் இந்த சின்ன நிகழ்வை உலகுக்கு எடுத்துரைத்த zee tv நிறுவனத்தாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன்.
உத்திர பிரதேசத்தின் அபிஷேக் குமார் பாண்டே அவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாகத் தன் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்………… வணக்கம், கோரக்பூரிலிருந்து நான் அபிஷேக் குமார் பாண்டே பேசுகிறேன். நான் இங்கே ஒரு தொழில்முனைவோராக வேலை பார்க்கிறேன். முத்ரா வங்கித் திட்டத்தைத் தொடக்கியதற்காக நான் பிரதமர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன். எந்த முறையில் முத்ரா வங்கி தொழில் முனைவோருக்கு உதவிகள் செய்கிறது என்பதை நான் பிரதமரிடம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கோரக்பூரைச் சேர்ந்த அபிஷேக் அவர்களே, உங்களுக்கு மிக்க நன்றி. Fund the Unfunded, யாரிடம் பணம் இல்லையோ, அவர்களுக்கு நிதியுதவி செய்யப்பட வேண்டும் என்பது தான் முத்ரா வங்கியின் நோக்கம். இதை நான் எளிய நடையில் விளக்க வேண்டுமென்றால், இதில் Enterprise, அதாவது முனைவு, Earning, அதாவது சம்பாத்தியம், Empowerment, அதாவது அதிகாரம் வழங்கல் ஆகிய மூன்று கூறுகள் இருக்கின்றன. முத்ரா திட்டம் தொழில் முனைவோருக்கு ஊக்கமளித்து, வருவாய் ஈட்ட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, உண்மையான முறையில் அதிகாரம் வழங்கப்படுதலை ஊக்குவிக்கிறது. சின்னச் சின்ன தொழில் முனைவோருக்கு உதவி செய்ய இந்த முத்ரா திட்டம் செயல்பட்டு வருகிறது. நான் விரும்பும் வேகத்தில் அது இனி வரும் காலத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் நல்லதொரு தொடக்கம் ஏற்ப்பட்டிருக்கிறது. மிகவும் குறைவான காலத்தில் 66 இலட்சம் பேர்களுக்கு பிரதம மந்திரி முத்ரா திட்டம் வாயிலாக 42000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அவர்கள் வேறு யாருமில்லை…. செய்தித் தாள் விற்பனை செய்பவர்க்ள், பால் விற்பனையாளர்கள் என சின்னச் சின்ன வியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள். இந்த 66 இலட்சம் பயனாளிகளில் 24 இலட்சம் பேர்கள் பெண்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் திட்டத்தை அதிக அளவில் பயன் படுத்தியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பைக் கொண்டு கௌரவத்தோடு குடும்பம் நடத்த விரும்பும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அபிஷேக் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினது உண்மை தான், ஆனால் இது தொடர்பாக எனக்கும் பல தகவல்கள் வந்த வண்ணமிருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த சைலேஷ் போன்ஸ்லே என்ற ஒருவருக்கு முத்ரா திட்டம் வாயிலாக 8 ½ இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அவர் கழிவு நீர் அகற்றல் தொடர்பான தொழிலைத் தொடக்கி இருக்கிறார். தூய்மை இந்தியா இப்படிப்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். சைலேஷ் போன்ஸ்லே அவர்கள் இதை மெய்ப்படுத்தி இருக்கிறார். அவர் tanker வாங்கி இதைச் செய்து வருகிறார், மேலும் குறைவான காலத்திலேயே வங்கிக்கு 2 இலட்ச ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தி இருக்கிறார் என்றும் அறிகிறேன். முத்ரா திட்டம் தொடர்பாக இது தான் நமது குறிக்கோளாக இருக்கிறது.
போபால் நகரைச் சேர்ந்த மம்தா ஷர்மா அவர்கள் விஷயத்திலும் இதே போலத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் படி வங்கியிலிருந்து 40000 ரூபாய் கிடைத்தன. அவர் கைப்பை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். முன்பெல்லாம் அவர் அதிக வட்டிக்கு பணம் பெற்று வந்தார், மிகவும் சிரமப்பட்டுத் தான் கடனை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போதோ கணிசமான தொகை ஒரே தவணையாக கிடைத்திருப்பதால், அவர் தனது வேலையை சிறப்பாக செய்யத் தொடங்கி இருக்கிறார். வட்டி அதிகம் செலுத்த தேவை இல்லாத காரணத்தால் ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 ரூபாய் மிச்சமாகிறது. அவரது குடும்பத்தாருக்கும் ஒரு நல்ல தொழில் அமைந்தது. ஆனால் இந்தத் திட்டம் மேலும் பிரபலமாகி விரிவடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது அனைத்து வங்கிகளும் அதிக புரிதலோடு இதை அணுக வேண்டும், அதிக அளவில் சிறு குறு வியாபாரிகளுக்கு உதவ முன் வர வேண்டும். உண்மையில் இவர்கள் தான் நாட்டின் பொருளாதார இயக்கிகளாகச் செயல் படுகிறார்கள். இவர்கள் தான் நாட்டின் பொருளாதார சக்திகள். இவர்களுக்குத் தான் நாம் ஊக்கம் அளிக்க விரும்புகிறோம். நல்லது நடந்திருக்கிறது, ஆனால் இது மேலும் அதிக அளவில், மேலும் சிறப்பாக நடக்க வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
அக்டோபர் மாதம் 31 அன்று சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்த நாளன்று நான் ஒரே இந்தியா சிறப்பான இந்தியா பற்றிப் பேசினேன். இவை போன்ற விஷயங்கள் தாம் சமுதாயத்தில் நீடித்த ஊக்கங்களாக நமக்கு விளங்க வேண்டும். ராஷ்ட்ரயாம் ஜாக்ரயாம் வயம், Eternal vigilance is the price of liberty, அதாவது நிரந்தரமாக விழிப்போடு இருப்பது தான் சுதந்திரத்துக்கு நாம் அளிக்கும் விலை என்பதே இதன் பொருள். நாட்டின் ஒற்றுமை என்ற நாதம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா என்பதையே ஒரு திட்டமாக வகுக்க நான் நினைக்கிறேன். mygov.inஇல் நான் ஆலோசனைகளை வரவேற்றேன். திட்டம் எபப்டி இருக்க வேண்டும், முத்திரைச் சின்னம் எப்படி இருக்க வேண்டும், மக்கள் பங்களிப்பு எப்படி அமைய வேண்டும், வடிவம் என்னவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தேன். இதில் கணிசமான அளவு ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்று எனக்குத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நான் மேலும் அதிக ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். திட்டம் தொடர்பாக குறிப்பிட்ட வகையில் எதிர்பார்க்கிறேன். இதில் பங்கெடுப்பவர்களுக்கு சான்றுப் பத்திரமும், பெரிய அளவிலான பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நீங்களும் உங்கள் படைப்புத் திறன்களை முடுக்கி விடுங்கள். ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா என்ற மந்திரத்தோடு ஒவ்வொரு இந்தியனையும் இணைக்கும் வகையில் எப்படி திட்டத்தை வடிவமைக்க முடியும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். அது உயிர்ப்போடு இருக்க வேண்டும், அருமையாக இருக்க வேண்டும், துடிப்போடு இருக்க வேண்டும், அதே வேளையில் ஒவ்வொருவரையும் இணைக்கும் சூத்திரமாகவும் இருக்க வேண்டும். அதில் அரசு, பொது மக்கள், சமுதாயம் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் என்னவாக இருக்க வேண்டும் என்று தெரிவியுங்கள். உங்கள் மேலான ஆலோசனைகள் கண்டிப்பாக பலனளிக்கும் வ்கையில் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனதருமை சகோதர சகோதரிகளே,
குளிர்காலம் தொடங்கவிருக்கிறது. ஆனால் குளிர்காலத்தில் உணவு உண்பதிலும் உடைகள் உடுப்பதிலும் இருக்கும் இன்பமே அலாதியானது தான். ஆனால் இவற்றோடு சேர்ந்து உடல் பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த நல்ல பருவ நிலையை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்திலேயே கூட இவற்றுக்கான ஒரு சூழலை ஏற்படுத்துங்கள். ஒரு மணி நேரம் ஒட்டு மொத்த குடும்பமும் இணைந்து இதில் ஈடுபட வேண்டும். நாள் முழுவதிலும் எப்படி உங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் உடல் ஒத்துழைக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். நல்ல பருவ நிலை, நல்ல பழக்கங்களையும் கைவரப் பெறலாமே. எனதருமை நாட்டு மக்களுக்கு மீண்டுமொருமுறை என் நல்வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த்!!
எனதருமை நாட்டு மக்களே,
உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். மீண்டும் மனதின் குரல் வாயிலாக உங்கள் அனைவரோடும் உரையாடும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்று இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் விளையாடப்படுகிறது.. இந்த 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு காந்தி மண்டேலா தொடர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் சுவாரசியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு அணிகளும் தலா இரண்டு பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆகையால், இறுதிப் போட்டி மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
இன்று நான் ஆல் இண்டியா ரேடியோவின் கண்ணூர் நிலைய நண்பர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மனதின் குரலைத் தொடங்கிய வேளையில் பலர் அதோடு தங்களை இணைத்துக் கொண்டு வந்தார்கள், அதில் கேரளத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ச்ரத்தா தாம்மனும் ஒருவர். கண்ணூர் நிலையம் அவரை ஒரு முறை நிலையத்துக்கு அழைத்து, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது; இதில் கணிசமான அளவு கருத்துக்கள் பரிமாற்றம் நிகழ்ந்தது. 12ம் வகுப்பே படித்துக் கொண்டிருக்கும் ச்ரத்தாவின் விழிப்புணர்வைக் கண்டு கண்ணூர் வானொலி நிலையம் பாராட்டி ஊக்கப்படுத்தியது, அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்ணூர் வானொலி நிலையத்தின் இந்தச் செயல்பாடு எனக்கே கூட கருத்தூக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. நாடு முழுவதிலும் இருக்கும் வானொலி நிலையங்களும் இதைப் போலவே தங்கள் பகுதிகளில் இந்த வகையில் விழிப்புணர்வையும் செயலாக்கத்தையும் செய்தால், மக்களின் கவனம் அவர்கள் பால் திரும்பும், மக்கள் பங்களிப்பை முன்னிறுத்தி நாட்டை நிர்வாகம் செய்யும் நமது எண்ணத்துக்கும் புதிய ஒரு சக்தி பிறக்கும். ஆகையால் நான் கண்ணூர் வானொலி நிலையத்தின் அனைத்து தோழர்களுக்கும் என் இதய பூர்வமான பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மீண்டும் ஒரு முறை இன்று கேரளம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். கேரளத்தின் சித்தூர் பகுதியைச் சேர்ந்த தூய மேரி upper primary பள்ளி மாணவிகள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இந்தக் கடிதம் பல வகைகளில் விசேஷம் நிறைந்தது. ஒன்று, இந்த மாணவிகள் தங்கள் கட்டைவிரல் மைப் பதிவு செய்து பாரத மாதாவின் திருவுருவத்தை ஒரு மிகப் பெரிய துணியில் வரைந்திருந்தார்கள். பாரத அன்னையின் திருவுருவப்படத்தை, பாரத வரைபடத்தை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்டைவிரல் மைப் பதிவுகளைக் கொண்டு இந்தப் படத்தை ஏன் வரைந்திருக்கிறார்கள் என்று முதலில் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் எழுதியிருந்த கடிதத்தைப் படித்த பின்னர், அவர்கள் எத்தனை பெரிய குறியீட்டுச் செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. இந்த மாணவிகள் ஏதோ பிரதருக்கு மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அப்படிச் செய்யவில்லை; அவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் குறிக்கோள் உடல் உறுப்புக்கள் தானம் பற்றியது. அவர்கள் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருக வேண்டும் என்பதற்காகவும், இந்த தானம் இயல்பான செயல்பாடாக அமைய வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று நடனம் வாயிலாக இதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த மாணவிகள் தங்கள் கடிதத்தில், நீங்கள் உங்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மஹாராஷ்ட்ராவின் சுமார் 80 வயது மிக்க வசந்த் ராவ் சுடுகே குருஜி நெடுங்காலமாக ஒரு இயக்கத்தையே நடத்தி வந்திருக்கிறார். அவர் உடல் உறுப்பு தானத்தை ஒரு விழாவாகவே கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார். இப்போதெல்லாம் எனக்குத் தொலைபேசி மூலமாகவும் பல செய்திகளும் தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
தில்லியைச் சேர்ந்த தேவேஷ் அவர்களும் கூட இப்படி ஒரு செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறார். தில்லியிலிருந்து தேவேஷ் பேசுகிறேன் – உடல் உறுப்பு தானம் குறித்து அரசு எடுத்து வரும் முயற்சிகளும் அது குறித்த கொள்கைத் திட்டங்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டிய இந்த வேளையில் நாட்டுக்கு இந்த வகையில் பலத்த ஆதரவு தேவையாக இருக்கிறது. சீனா போன்ற நாடுகள் உடல் உறுப்பு தான விஷயத்தில் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறார்கள். அரசு மேற்கொண்டிருக்கும் பத்து லட்சத்துக்கு ஒரு உடல் உறுப்பு தானம் என்ற இலக்கு பாராட்டுக்குரியது
இந்த விஷயம் மிகவும் மகத்துவம் நிறைந்தது என்று எனக்குப் படுகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 ½ இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுநீரகம், இருதயம் மற்றும் கல்லீரல் உறுப்பு தானம் தேவைப்படுகிறது. ஆனால் 125 கோடி மக்கள் கொண்ட நாட்டில் நம்மால் வெறும் 5000 உடல் உறுப்பு மாற்றுகளை மட்டுமே செயல்படுத்த முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கண்களுக்கு ஒளி கொடுப்பது தேவையாக இருக்கிறது. ஆனால் நம்மால் வெறும் 25000 பேர்களுக்கு மட்டுமே கண்ணொளி கொடுக்க முடிகிறது. 4 பேர்களுக்கு கண்களின் அவசியம் இருக்கையில் நம்மால் ஒருவருக்கு மட்டுமே அப்படிக் கொடுக்க முடிகிறது. சாலை விபத்தில் மரணமடைய நேர்ந்தால், உடலின் உறுப்புக்களை தானமாக அளிக்கலாம். சட்ட சிக்கல்கள் இந்த விஷயத்தில் சில இருக்கின்றன என்பது எனக்கு விளங்குகிறது. மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சில மாநிலங்கள் இது தொடர்பான நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தி, இதை முடுக்கி விடும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். பல சமூக அமைப்புக்கள், பல அரசு சாரா சேவை நிறுவனங்கள் இந்தத் துறையில் பாராட்டுதற்குரிய பணிகளை ஆற்றி வருகிறார்கள். உடல் உறுப்பு தானத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் national organ and tissue transplant organization, தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, NOTO நிறுவப்பட்டிருக்கிறது. ஒரு 24 மணி நேரமும் இயங்கும் helpline 1800 11 4770 என்ற எண் வாயிலாகவும் சேவை அளிக்கப் படுகிறது. நம் முன்னோர்களே கூட தேன த்யக்தேன புஞ்ஜீதா என்று அல்லவா முழங்கி இருக்கிறார்கள்! அதாவது தியாகம் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தான் அவர்கள் தேன த்யக்தேன புஞ்ஜீதா என்ற மந்திரச் சொற்கள் வாயிலாக கூறியிருக்கிறார்கள். கடந்த நாட்களில் தில்லியின் ஜி.பி.பந்த் மருத்துவமனையில் ஒரு ஏழை நடைபாதை வியாபாரியின் மனைவியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த கல்லீரல் சிறப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு லக்னௌவிலிருந்து தில்லிக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது, ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. இதை நாமனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். உடல் உறுப்பு தானம் மஹா தானம் – தேத த்யக்தேன புஞ்ஜீதாஎன்ற உண்ர்வை நாம் பயில வேண்டும். இந்த விஷயத்துக்கு நாம் கண்டிப்பாக பலம் அளிக்க வேண்டும்.
எனது பிரியமான நாட்டு மக்களே,
இப்போது தான் நாம் நவராத்திரி மற்றும் விஜயதசமி புனித நாட்களைக் கொண்டாடி இருக்கிறோம். சில நாட்களுக்குப் பின் நாம் தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாட இருக்கிறோம். ஈத், விநாயக சதுர்த்திப் பண்டிகைகளையும் கொண்டாடினோம். ஆனால் இதற்கிடையில் நாடு ஒரு மிகப் பெரிய விழாவைக் கொண்டாட இருக்கிறது. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமிதத்தையும், மகிழ்வையும் அளிக்கக் கூடியது. வரவிருக்கும் அகோபர் மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் இந்திய ஆப்பிரிக்க மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்திய மண்ணில் இப்படி ஒரு பெரிய அளவிலான மாநாடு நடைபெறுவது என்பது இது தான் முதல் முறை. 54 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் யூனியன்களின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவுக்கு வெளியே நடைபெறும் ஆப்பிரிக்க நாடுகளின் மிகப் பெரிய அளவிலான மாநாடுகளில் இது ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய ஆப்பிரிக்க நாடுகளின் உறவு மிகவும் ஆழமானது. இந்தியாவின் மக்கள் தொகை அளவுக்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் தொகையும் இருக்கிறது. நம் இரண்டு நாடுகளின் மக்கள் தொகையையும் கணக்கெடுத்தால் உலகின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இருக்கிறது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒரே பூபாகமாக இருந்திருக்கிறது என்றும் பின்னர் இவை இந்தியப் பெருங்கடலால் இரு பாகங்களாயின என்றும் கூறப்படுகிறது. நமக்கிடையில் பெருமளவு ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்தியாவின் வன விலங்குகளுக்கும், ஆப்ரிக்காவின் வனவிலங்குகளுக்கும் பல ஒப்புமைகளைக் காண முடியும். இயற்கை வளங்களிலும் பெரும் ஒப்புமை இருக்கிறது. சுமார் 27 இலட்சம் இந்தியர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பல ஆண்டுகளாகவே வசித்து வருகிறார்கள். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் ஆகிய துறைகளில் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் விட, ஆப்பிரிக்க நாடுகளின் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. மனித வள மேம்பாடு, திறன் வளர்த்தல் ஆகியவற்றில் 25000க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பெற்றிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் தலைவர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் கல்வி பெற்றவர்களாகவே விளங்குகிறார்கள். பாருங்கள், நமக்கிடையில் எத்தனை நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது!! அந்த வகையில் பார்த்தால், இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பொதுவாக ஒரு மாநாடு நடைபெறும் போது, பல நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள்; இந்த மாநாட்டிலும் அப்படி நடக்கும் என்பது உண்மை தான் என்றாலும், இந்த முறை நாடுகளின் மக்களும் இணைய வேண்டும் என்பதே நமது முயற்சியாக அமையும். இந்த முறை இந்திய அரசு, குறிப்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு மிக சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. CBSEயுடன் இணைக்கப் பட்ட பள்ளிகள் அனைத்தின் மாணவர்களுக்கு இடையே கவிதை எழுதுதல், அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துதல் போன்றவற்றில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 1600 பள்ளிகள் இதில் பங்கெடுத்தன, இதில் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளும் கலந்து கொண்டன. பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் இந்திய ஆப்பிரிக்க தொடர்புகள் குறித்த தகவல்கள் பற்றி எழுதியிருந்தார்கள். இன்னொரு பக்கம் மஹாத்மா காந்தி அவர்களின் பிறப்பிடமான போர்பந்தரில் Memories of Mahatma, காந்தியடிகளின் நினைவலைகள் என்ற தலைப்பிலான மொபைல் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. இது வட மாநிலங்கள் வழியாக புது தில்லிக்கு அக்டோபர் மாதம் 29ம் தேதி வர இருக்கிறது. பல இலட்சம் பள்ளி மாணவர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டார்கள், கிராமத்து மக்கள் பார்த்தார்கள், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான தொடர்பில் அண்ணல் காந்தியடிகளின் பங்களிப்பு என்னவாக இருந்தது, இந்த இரண்டு நிலப்பகுதி மக்கள் மனங்களில் அவரது தாக்கம் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் பல சிறப்பான பங்களிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஒரு கவிதை என் மனதைக் கொள்ளை கொண்டது, இது எனக்கு பிடித்தமாக இருக்கிறது, அதனால் இதை உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். சின்னச் சின்ன ஊர்களில் இருக்கும் குழந்தைகள் கூட எத்தனை புத்திசாலித் தனமாக இருக்கிறார்கள் பாருங்கள். இவர்களின் கண்ணோட்டம் எத்தனை விசாலமாக இருக்கிறது, எத்தனை ஆழமாகச் சிந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் நம்மால் இதில் காண முடியும். உத்திர பிரதேசத்தின் முஸஃபர்நகரைச் சேர்ந்த கரிமா குப்தா இந்த போட்டியில் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார், சிறப்பாக எழுதியிருக்கிறார்.
ஆப்பிரிக்காவில் நீல நதி, ஆனால் கடலின் பெயரோ சிவப்பு
பரந்து பட்ட இந்தத் தீவில் வாழும் இந்தியர்கள் மனதில் மகிழ்வு
சிந்து சமவெளி நாகரீகம் பாரதத்தின் அடையாளம் என்றால்,
நீல நதியும் கார்த்தேஜும் ஆப்பிரிக்க கலாச்சார அடையாளம்.
காந்தியடிகள் தொடக்கி வைத்தார், ஆப்பிரிக்காவிலிருந்தூ பேரியக்கம்
அனைவரையும் கவர்ந்திழுத்தார், மனங்கள் மீது வாகை சூடினார்.
ஜோனஸ்பர்க்கோ, கிங்கஸ்டனோ, ஜிம்பாப்வேயோ, சாடோ,
அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும், கிடைக்கும் நமது ஆலூ சாட்.
எழுத என்னமோ என்னிடத்திலே, வரிகள் உள்ளன பல்லாயிரம்,
ஆப்பிரிக்க காடுகளிடத்திலே, எனக்கு உள்ள அன்பு ஏராளம்.
கவிதை என்னமோ மிகவும் நீண்டதாக இருக்கிறது, இதில் நான் உங்களுக்கு சில பகுதிகளை மட்டுமே படித்துக் காட்டினேன். நடைபெறவிருப்பது இந்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான மாநாடு. ஆனால் இங்கே இருக்கும் மக்களை இணைக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. நான் கரிமாவுக்கும், இப்போட்டியில் பங்கெடுத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், 1600க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களுக்கும், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று சான்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் பின்னர் பல உறுப்பினர் நண்பர்கள் இந்தப் பணியை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதில் அவர்கள் முழு மனதோடு ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் போபாலில் ஒரு கருத்துப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இந்த மாதிரி கிராமத் திட்டம் நிறைவேற்றப்படும் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவருமாக இணைந்து மாதிரி கிராமத் திட்டம் பற்றி ஆழ்ந்த கலந்தாய்வு நடத்தினார்கள். இதன் மூலமாக பல வகையான புதிய கருத்துக்கள் வெளிப்பட்டு, அவை ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தன. சில விஷயங்களை நான் கண்டிப்பாக உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். ஜார்க்கண்ட ஒரு வகையில் அதிக பழங்குடியினர் வசிக்கும் பகுதி. துரதிர்ஷ்டவசமாக அது மாவோ தீவிரவாதிகள், குண்டு கலாச்சாரம், படுகொலைகள் ஆகியவையே ஜார்க்கண்ட் பற்றி நாம் பேசும் போது நினைவுக்கு வருபவை. இந்த இடது சாரி தீவிரவாதிகளின் பாதிப்பினால் பல பகுதிகள் நாசமாகி இருக்கின்றன. ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றி இருக்கும் நமது மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கரிய முண்டா அவர்கள் பழங்குடி மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பர்ஸி கிராம பஞ்சாயத்தை மாதிரி கிராமமாக அமைக்கத் தேர்வு செய்தார். அந்தப் பகுதி இடது சாரி தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அங்கே அரசு இயந்திரம் சரிவர செயல்பட முடியாத நிலை இருப்பதோடு, மருத்துவர்கள் கூட சென்று சேர முடிவதில்லை. அவர் அங்கு செல்ல ஆரம்பித்தார், மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றினார், அரசு அமைப்புகளில் உயிரூட்டம் கொடுக்க முயற்சிகள் மேற்கொண்டார், அதிகாரிகளை அங்கு வந்து பணியாற்ற ஊக்கமளித்தார். நீண்ட காலமாக புறக்கணிப்பில் உழன்று கொண்டிருந்த அந்தப் பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நாட்டத்தை ஏற்படுத்தினார். மாதிரி கிராமத் திட்டத்தில் கட்டமைப்பு வசதிகளைத் தவிர, மக்கள் மனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிகரமான முயற்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் இந்த பர்ஸி கிராமத்தில் ஏற்பட்டது. மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் கரிய முண்டா அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்ற ஒரு தகவல் எனக்கு ஆந்திர மாநிலத்திலிருந்தும் கிடைத்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக் கஜபதி ராஜு அவர்கள் மாதிரி கிராமத் திட்டத்தில் முழுவீச்சில் ஈடுபட்டார். அவர் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும் த்வாராபுடி கிராம பஞ்சாயத்தை மாதிரி கிராமத் திட்டத்துக்காகத் தேர்வு செய்தார். மற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர் இது தொடர்பாக சிறப்பான ஒரு புதுமையை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் அங்கே இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பணியைச் செய்ய ஒப்படைத்தார். ஏனென்றால் கிராமங்களில் இருக்கும் புதிய தலைமுறைக்கு கல்வி பெறும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஆனால் கிராமத்தின் மூத்த தலைமுறையினர் கல்வியறிவு வாய்க்கப் பெறாத நிலை நிலவுகிறது. அவர் மேல் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரை இந்த வகுப்பில் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பள்ளி அந்த வகையில் காலை வேளையில் மாணவர்களுக்கும், மாலை நேரங்களில் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பதாக அமைந்தது. சுமார் 550 கல்வியறிவில்லாத மூத்த குடிமக்களுக்கு இதே பிள்ளைகள் படிப்பு சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எழுத்தறிவை ஏற்படுத்தினார்கள். பாருங்கள், சமுதாயத்தில் எந்த பட்ஜெட்டும் இல்லாமல், சுற்றறிக்கை இல்லாமல், வேறு எந்த சிறப்பு வசதியும் இல்லாமல் வெறும் மன உறுதிப்பாட்டின் மூலமாகவே மட்டும் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது! இது தான் த்வாராபூடி கிராம பஞ்சாயத்து நமக்கு அளிக்கும் பாடம்.
இதே போலவே வடகிழக்கில் இருக்கும் மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த நமது மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் CL ருவாலா அவர்கள் க்வாலாஹிலங்க் கிராமத்தை மாதிரி கிராமத் திட்டத்துக்காக தேர்ந்தெடுத்தார். அங்கே அவர் ஒரு சிறப்பான பணியை ஆற்றினார். இந்த கிராமம் கரும்பு உற்பத்திக்காகவும், கரும்பு விழாவுக்காகவும் பெயர் பெற்றது. ருவாலா அவர்கள் இந்த கிராமத்தில், மார்ச் மாதம் 11ம் தேதியன்று கரும்புத் திருவிழாவைத் தொடக்கினார். அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இதிலே பங்கெடுத்தார்கள். பொதுவாழ்வில் ஈடுபட்ட மூத்தோர், அந்தப் பகுதியைச் சார்ந்த அரசுத் துறை அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டார்கள். கரும்பு மகசூல் அதிகம் விற்பனையாக வேண்டும் என்பதை முன்னிறுத்தும் வகையில் கண்காட்சியும் நடைபெற்றது. எப்படி கிராமங்களை பொருளாதார செயல்பாடுகளின் மையக்களமாக ஆக்குவது, கிராமங்களின் விளைபொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது, மாதிரி கிராமத் திட்டத்தோடு ஒரு சுயசார்புடைய கிராம அமைப்பை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளுக்காக ருவாலா அவர்கள் உண்மையிலேயே பாராட்டுதல்களுக்கு உரிமையானவர் தான்.
எனதருமை சகோதர சகோதரிகளே,
மனதின் குரல் ஒலிக்கும் வேளையில் தூய்மை பற்றிய கருத்துக்கள் இடம் பெறவில்லை என்றால் அது எப்படி? மும்பையிலிருந்து சவிதா ராய் அவர்கள் ஒரு தொலைபேசிச் செய்தியை அனுப்பி இருக்கிறார்கள்.தீபாவளி பண்டிகையின் போது, நாம் ஒவ்வொரு ஆண்டும் நமது வீடுகளை சுத்தம் செய்கிறோம். இந்த தீபாவளியின் போது நமது வீடுகளை மட்டும் சுத்தம் செய்யாமல், நமது வெளிப்புறச் சூழல்களையும் தூய்மைப் படுத்துவதோடு, இந்தத் தூய்மையான நிலையை நீடித்திருக்கச் செய்ய வேண்டும். இவர் சரியான விஷயத்தில் நம் கவனங்களை ஈர்த்திருக்கிறார். எனதருமை நாட்டு மக்களே, நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, நமது நமது நாட்டில் குறிப்பாக ஊடகங்கள் ஒரு இயக்கம் நடத்தின. தீபாவளிக்குப் பிறகு எங்கெல்லாம் பட்டாசுகள் கொளுத்தப்பட்டு இருந்தனவோ, அவற்றையெல்லாம் காட்டினார்கள். இது சரியல்ல என்று கூறினார்கள். அனைத்து ஊடகங்களும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்தினார்கள் இதன் விளைவாக, தீபாவளிக்குப் பிறகு தன்னிச்சையாகவே ஒரு தூய்மைப் படுத்தும் இயக்கம் நடந்தது. பண்டிகைகளுக்கு முன்பாக நாம் தூய்மை பற்றி எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்கிறோமோ, அதே போல பண்டிகைகளுக்குப் பிறகும் கூட இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற உங்கள் கருத்து சரியானது தான். இப்படி நமது செயல்பாடு ஒவ்வொரு பொது நிகழ்ச்சியின் போதும் இருக்க வேண்டும். நான் இன்று இந்தியாவின் அனைத்து ஊடகங்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் தூய்மையான பாரதம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த வேளையில் இந்தியா டுடே குழுமம் ஏற்பாடு செய்திருந்த சஃபாயி கிரி என்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் நல்வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் Clean India விருதுகளை வழங்கினார்கள். பல வகையான செயல்பாடுகள் இடம் பெற்றிருந்ததை என்னால் அறிய முடிந்தது. சில பேர்கள் தங்கள் வாழ்கையை இந்தக் குறிக்கோளுக்காகவே மாற்றியமைத்துக் கொண்டிருப்பதையும். நமது நாட்டில் சில இடங்கள் எப்படி மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. அதைப் பார்த்து விட்டு நான் இந்தியா டுடே குழுமத்தின் போற்றுதலுக்கு உரிய இந்த வேலைக்கு அவர்களுக்கு என் இதய பூர்வமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டேன். தூய்மையான பாரதம் இயக்கம் தொடங்கப் பட்டதிலிருந்து ஆந்திர மாநிலத்திலிருந்தும் தெலங்கானா மாநிலத்திலிருந்தும் வெளிவரும் ஈ டிவி, ஈ நாடு அரும் பணிகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக ராமோஜி ராவ் அவர்களின் வயது அதிகம் இருந்தாலும், அவரது உற்சாகம் எந்த இளைஞனுக்கும் குறைவானதாக இல்லை. அவர் தூய்மை இயக்கத்தை தனது தனிப்பட்ட இலக்காகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஈ டிவி வாயிலாக தொடர்ந்து கடந்த ஓராண்டுக்காலமாக அவர் தூய்மை தொடர்பான வேலைகளுக்கு ஊக்கமளிக்கிறார், அவரது செய்தித் தாள்களில் இது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன, அவர் ஆக்கபூர்வமான பணிகளில் மட்டுமே தனது கவனத்தை செலுத்துகிறார். அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த சுமார் 55 முதல் 56000 பள்ளிகளின் 51 இலட்சம் குழந்தைகளை தூய்மையான பாரதம் இயக்கத்தில் இணைத்திருக்கிறார். பொதுவிடங்களாகட்டும், இரயில் நிலையங்களாகட்டும், வழிபாட்டு தலங்களாகட்டும், மருத்துவமனைகளாகட்டும், பூங்காக்களாகட்டும், பல இடங்களில் தூய்மை பற்றிய இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த செய்திகளே கூட, தூய்மையான இந்தியாவை அமைப்பதில் வலு சேர்க்கிறது. ABP News சேனல் ’இந்தியா எனது நாடு’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியைத் தொடக்கி இருக்கிறது. மக்கள் மத்தியில் தூய்மை பற்றிய விழிப்புணர்வு எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முன்னிறுத்தும் வகையில் நாட்டு மக்கள் மனங்களில் தூய்மை பற்றிய எண்ணத்தை விதைத்தார்கள். NDTV தூய்மையான இந்தியா உருவாகும் என்ற வகையிலான இயக்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. தைனிக் ஜாகரண் செய்தி அமைப்பும் கூட தொடர்ந்து இந்த இயக்கத்தை முன்னிறுத்தி வந்திருக்கிறது. ZEE குழுமத்தார், india tv நிறுவனத்தாரும் தூய்மையான இந்தியா என்ற பிரச்சாரம் தொடக்கி இருக்கிறார்கள். நமது நாட்டில் பல சேனல்கள், பல செய்தித் தாள்கள் இருக்கின்றன. நேரக் குறைபாடு இருப்பதால் நான் அனைவரின் பெயர்களையும் கூறமுடியவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தை கொண்டு சென்றார்கள். ஆகையால் சவிதா ராய் அவர்களே, நீங்கள் அளித்திருக்கும் ஆலோசனையை இன்று நாடு முழுவதும் தனதாக்கிக் கொண்டிருக்கிறது, அதை முன்னெடுத்துச் சென்று கொண்டும் இருக்கிறது.
மேகாலயாவின் நமது ஆளுனர் ஷண்முகநாதன் அவர்கள் எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் மாவல்யன்னோங் கிராமம் பற்றி தெரிவித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த கிராமம் தூய்மையை ஒரு முனைப்பாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது, ஒவ்வொரு தலைமுறையும் தூய்மை விஷயத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சில ஆண்டுகள் முன்பாக, இந்த கிராமத்துக்கு ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று ஆளுனர் அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார். நமது நாட்டின் தொலைவான வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த மேகாலயா மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமம் தூய்மை விஷயத்தில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது என்ற இந்த தகவல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அங்கே இருக்கும் குடிமக்களுக்கு தூய்மை என்பது இயல்பான ஒன்றாகவே மாறி விட்டது. கிராமத்தின் கலாச்சாரமாகவே இது ஆகி விட்டது. நமது நாடு கண்டிப்பாக தூய்மையாக ஆகும் என்பதற்கு இவை போன்ற நிகழ்வுகள் தானே நமக்கெல்லாம் நம்பிக்கையை அளிக்கிறது. இது நாட்டு மக்களின் முயற்சியின் பலனாக பரிமளிக்கும். 2019ம் ஆண்டு நாம் காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாங்கள் எங்கள் பாரத மாதாவை தூய்மைக்கேட்டிலிருந்து விடுவித்து விட்டோம் என்று 125 கோடி நாட்டு மக்களும் மார்தட்டி பெருமிதத்தோடு முழங்கலாம்.
எனதருமை நாட்டு மக்களே,
நான் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பேசும் போது, ஊழல் நாட்டில் மலிந்து விட்டது என்று தெரிவித்திருந்தேன். மிகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் சின்னச் சின்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, சிபாரிசுக்காக அவர்கள் ஏராளமான கஷ்டங்களைப் பட வேண்டி இருக்கிறது, இடைத் தரகர்களின் கும்பல் அவர்களிடமிருந்து பணத்தைச் சுரண்டுகிறது, வேலை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் பணம் பறி போகிறது என்பன போன்ற பல செய்திகளை நாம் கேட்க நேர்கிறது. இதைப் பார்த்த பின்னர் என் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. சின்னச் சின்ன வேலைகளுக்கு நேர்முகத் தேர்வுக்கான அவசியம் என்ன? ஓரிரு நிமிடங்களில் ஒருவரின் திறனைத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனோதத்துவவியலார் உலகில் இருப்பார் என்று நான் கேள்விப்பட்டதில்லை. இந்த எண்ணத்தால் உந்தப்பட்டு, சிறிய மட்டங்களிலான வேலைகளுக்கு ஆள் எடுக்கும் போது, நேர்முகத் தேர்வு என்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவித்தேன். எனதருமை இளைய நண்பர்களே, இது தொடர்பாக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது, மத்திய அரசின் டி பிரிவு, சி பிரிவு மற்றும் பி பிரிவுகளின் non gazetted, அரசிதழ்ப் பதிவு பெறாத அலுவலர்களுக்கான தேர்வுகளில் இனி நேர்முகத் தேர்வு இடம் பெறாது. இது 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி அமலுக்கு வரும். இப்போது நடைபெற்றுவரும் செயல்பாடுகளில் நாங்கள் எந்தக் குறுக்கீடும் செய்யப் போவதில்லை. ஆனால் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் இது அமலாக்கம் பெறும். என் அனைத்து இளைய சமுதாய நண்பர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
கடந்த பட்ஜெட்டில் நாங்கள் ஒரு மகத்துவம் நிறைந்த அறிவிப்பைச் செய்திருந்தோம். நமது நாட்டில் தங்கம் ஒரு வகையில் சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே ஆகி இருக்கிறது. தங்கம் பொருளாதார பாதுகாப்புக்கான ஒரு ஊடகமாக கருதப்படுகிறது. சங்கடங்கள் வரும் நேரத்தில் தங்கமே கை கொடுக்கிறது. இது சமுதாய வாழ்வியலில் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வரும் ஒரு பாரம்பரியம். தங்கத்தின் மீதான நாட்டத்தை யாராலும் கட்டுப் படுத்த முடியாது என்பதே என் கருத்து. ஆனால் தங்கத்தை பயனற்ற வகையில் தேக்கி வைப்பது இன்றைய காலகட்டத்தில் உகந்ததாக இருக்காது. தங்கம் ஒரு ஆற்றலாக பரிமளிக்க முடியும். தங்கம் பொருளாதார சக்தியாக மாறும் திறன் உடையது. தங்கம் நாட்டின் பொருளாதாரச் சொத்தாக மாற முடியும். ஒவ்வொரு இந்தியனும் இந்த முறையில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். பட்ஜெட்டில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை இந்த தீபாவளி பண்டிகையின் போதும் அதற்கு முன்பாக வரும் தந்தேரஸ் பண்டிகை நாள் அன்றைக்கும் மக்கள் சிறப்பான வகையில் தங்கம் வாங்குகிறார்கள். இவற்றுக்கு முன்பாகவே நாங்கள் இந்த மகத்தான திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க இருக்கிறோம். gold monetization scheme தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இதன்படி நீங்கள் உங்கள் தங்கத்தை வங்கியில் செலுத்தி, எப்படி உங்கள் முதலீட்டுத் தொகைக்கு வட்டியைப் பெறுகிறீர்களோ, அதே போல வங்கியில் சேமிக்கப்படும் தங்கத்துக்குமான வட்டியை நீங்கள் பெறலாம். முன்பெல்லாம் தங்கத்தை லாக்கர்களில் வைத்திருப்பார்கள். லாக்கருக்கான வாடகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். இப்போதோ தங்கம் வங்கியில் இருக்கும், ஆனால் பணத்தை வங்கி வட்டி வாயிலாக உங்களுக்கு அளிக்கும். இப்போது சொல்லுங்கள் நாட்டு மக்களே, தங்கம் பணம் கொழிக்குமா இல்லையா? பயனில்லாத வகையில் பூட்டி வைக்கப்பட்ட தங்கம் ஆயுள் முழுக்க சக்தியாக மாறுமா மாறாதா? இந்த வேலையைத் தானே நாம் செய்ய வேண்டும்? இதில் நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். வீட்டில் தங்கத்தை வீணாக வைத்திருக்காதீர்கள். அதன் பாதுகாப்பும், வட்டியும் என இரண்டு லாபங்கள், இதன் பயனைத் தவற விடாதீர்கள்.
இரண்டாவது விஷயம். சவரன் தங்கப் பத்திரம் வாயிலாக உங்கள் கைகளில் தங்கக் கட்டிகள் கிடைக்காது. ஒரு காகிதம் மட்டுமே கிடைக்கும். ஆனால் அந்தக் காகிதத்தின் மதிப்பு தங்கத்தின் மதிப்புக்கு ஈடாகவே இருக்கும். என்று நீங்கள் அந்தக் காகிதத்தைத் திரும்பச் செலுத்துகிறீர்களோ, அன்றிருக்கும் தங்க விலைக்கு ஏற்றபடி உங்களுக்கு பணம் அளிக்கப்படும். இன்று நீங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சவரன் தங்கப் பத்திரத்தை வாங்கி இருந்தால், 5 ஆண்டுகள் கழித்து அந்தப் பத்திரத்தைத் திரும்பச் செலுத்தினால், அன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை 2500 ரூபாயாக இருந்தால், அந்தக் காகிதத்துக்கு பதிலாக உங்களுக்கு 2500 ரூபாய்கள் கிடைக்கும். இதையும் நாங்கள் ஆரம்பிக்க இருக்கிறோம். இதனால் நாம் தங்கம் வாங்க வேண்டி இருக்காது, தங்கத்தைப் பாதுகாக்க வேண்டியிருக்காது, காகிதத்தை யாரும் களவாடவும் மாட்டார்கள். அடுத்த வாரத்தில் பாதுகாப்பை அளிக்கும் இந்தத் திட்டத்தையும் நான் நாட்டு மக்களுக்கு கண்டிப்பாக சமர்ப்பிக்க இருக்கிறேன். நாங்கள் தங்க நாணயத்தையும் வெளியிட இருக்கிறோம். அசோக சக்கரம் உடைய தங்க நாணயம். நாம் சுதந்திரம் பெற்று சுமார் 70 ஆண்டுக்காலம் நிறைவடைந்திருக்கிறது; ஆனாலும் நாம் இது வரை அந்நிய நாட்டுத் தங்க நாணயத்தையே பயன்படுத்தி வந்திருக்கிறோம், அல்லது அயல்நாட்டு தங்கக் கட்டிகளையே பயன்படுத்தி வந்திருக்கிறோம். நமது நாட்டுக்கே உரித்தான சுதேசிக் குறியீடு ஏன் இருக்கக் கூடாது? ஆகையால் வரும் வாரத்தில் தந்தேரஸ் புனித நாளுக்கு முன்பாக, 5 கிராம்கள், 10 கிராம்கள் அசோக சக்கரம் பொறித்த இந்திய தங்க நாணயம் வெளியிடப்படும். இதனோடு கூட 20 கிராம்கள் தங்கக் கட்டிகளும் மக்களுக்கு அளிக்கப்படும். இந்த புதிய திட்டம் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும், இதில் உங்கள் முழு ஒத்துழைப்பும் எனக்குக் கிட்டும் என்று எனக்கு கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே,
அக்டோபர் மாதம் 31ம் தேதி இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த தினம். ஒரே பாரதம், உன்னதமான பாரதம் என்பதற்கு கருத்துருவாக விளங்கிய படேல் அவர்களைப் பற்றி சிந்திக்கும் போது, ஒட்டு மொத்த இந்தியாவும் மனதில் உதிக்கும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக இந்த மகத்தான மனிதர் மிகப் பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறார். இரும்பு மனிதர் என்ற தன் பெயருக்கு ஏற்ற வகையில் அவர் செயல் பட்டிருக்கிறார். சர்தார் அவர்களுக்கு நாம் அவசியம் நமது பணிவான அஞ்சலிகளை உரித்தாக்குவோம். பூகோள ரீதியாக இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக அவர் ஆக்கியிருந்தாலும், இந்தியாவை ஒரே நாடாக்க வேண்டும் என்ற அவரது கனவு, அந்த ஒற்றுமை மந்திரம் நிரந்தரமாக நமது எண்ணம், நடைமுறைகள், வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் உருப்பெற வேண்டும். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு; பல நெறிகள், பல வழிமுறைகள், பல மொழிகள், பல இனங்கள், பல சூழல்கள் என ஏராளமான வேற்றுமைகள் நிறைந்தது நமது நாடு. இந்த வேற்றுமைகள் தாம் நமக்கு அழகு சேர்க்கின்றன. இந்த வேற்றுமைகள் மட்டும் இல்லையென்றால், எந்த அழகு நமக்கு பெருமிதம் அளித்து வந்துள்ளதோ, அது நமக்கு கிட்டாமல் போகும். ஆகையால், வேற்றுமைகள் மட்டுமே ஒற்றுமைக்கான மந்திரம். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவைதாம் வளர்ச்சியின் வேர்கள். கடந்த பல ஆண்டுகளாக அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஒற்றுமை ஓட்டம் நடை பெற்று வந்துள்ளது. அதில் பங்கெடுக்கும் நல்வாய்ப்பு முன்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. இந்த முறையும் பல்வேறு பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், மக்கள் உற்சாகத்தோடு ஒற்றுமை ஓட்டத்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றுமை ஓட்டம் தான் உண்மையில் வளர்ச்சியை நோக்கிய ஓட்டம். இன்னொரு வகையில் இதை கூற வேண்டுமானால், வளர்ச்சி ஓட்டத்துக்கான உத்திரவாதம் தான் ஒற்றுமை ஓட்டம். வாருங்கள், சர்தார் அவர்களுக்கு நம் பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வோம். ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
எனதருமை சகோதர சகோதரிகளே,
நீங்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகைக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள். வீட்டில் தூய்மைப்பணி செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும், புதிய பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பீர்கள், தீபாவளி புனித நன்னாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடப் படுகிறது. தீபாவளி புனித நன்னாளை முன்னிட்டு நான் உங்கள் அனைவருக்கும் என் எண்ணற்ற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தீபாவளி நாட்களின் போது ஏதும் விபத்துக்கள் நேரா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். பட்டாசுகளை வெடிக்கும்போதும், தீபங்களை ஏற்றும் போதும், கவனமாக இருங்கள். தீபாவளிப் பண்டிகையின் ஆனந்தத்தில் திளையுங்கள், ஆனால் யதேச்சையாகக் கூட நமது குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் பெற்றோரிடம் குறிப்பாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் தூய்மைப் படுத்துவதை நாம் செய்தே ஆக வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
தீபாவளிக்கு அடுத்த நாள் நான் பிரிட்டன் நாடு செல்லவிருக்கிறேன். இந்த முறை எனது பிரிட்டன் நாட்டுப் பயணம் மிகவும் சுவாரசியம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு சிறப்பான காரணம் உண்டு. சில வாரங்கள் முன்பாக மும்பையில் பாபா சாஹேப் அம்பேட்கர் உடலுக்கு எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு சிறப்பான நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டச் சென்றிருந்தேன். லண்டனில் பாபா சாஹேப் அம்பேட்கர் வசித்து வந்த இல்லம் இப்போது இந்தியாவுக்குச் சொந்தமாகி இருக்கிறது. 125 கோடி மக்களுக்கு கருத்தூக்கம் அளிக்கக் கூடிய இடமாக அது ஆகி இருக்கிறது. அதை முறைப்படி தொடக்கி வைக்கவே நான் அங்கே செல்லவிருக்கிறேன். தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களாகட்டும், உரிமை மறுக்கப் பட்டவர்களாகட்டும், வஞ்சிக்கப்பட்ட இனத்தவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கட்டும், இடர்பாடுகளைத் தங்கள் வாழ்வில் சந்தித்து வரும் எந்த ஒரு இந்தியராகட்டும், அவர்களுக்கு எல்லாம் பாபா சாஹேப் அம்பேட்கரின் இந்த பவனம் மன உறுதிப்பாடு திடமாக இருந்தால், சங்கடங்களைக் கடந்து கூட தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும், கல்வியறிவு பெற முடியும் என்பதற்கு இந்த இடம் கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் அமையும். இந்த இடத்தில் அமர்ந்து தான் பாபா சாஹேப் அம்பேட்கர் கடுமையாக உழைத்தார். இந்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, சமுதாயத்தின் பாதிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த அயல் நாடுகளில் படிக்கச் செல்லும் புத்திசாலிக் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிக்கின்றன. இந்திய அரசும் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த புத்திகூர்மையுடைய பிள்ளைகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. பிரிட்டனில் நமது பிள்ளைகள் படிக்கச் செல்லும் போது, பாபா சாஹேப் அம்பேட்கரின் இந்த நினைவகம், அவர்களுக்கு யாத்திரைத் தலமாக அமையும், கருத்தூக்கம் ஏற்படுத்தும் நிலையமாக ஆகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்கையில் முடிந்தவரை கற்றலும், பின் நாட்டுக்காக வாழ்தலும் – இது தானே பாபா சாஹேப் அம்பேட்கர் அளிக்கும் செய்தி. அவர் வாழ்ந்தல்லவா காட்டினார்! எனது பிரிட்டன் யாத்திரை எனக்கு சிறப்பான உற்சாகத்தை ஏற்படுத்துகிறது, இந்த விஷயம் பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாமல் இருந்து வந்துள்ளது, இப்போது அந்த பவனம் 125 கோடி இந்திய மக்களின் சொத்தாக ஆக வேண்டும், அது பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவுகளைத் தாங்கியதாக அமைய வேண்டும், அப்போது என்னைப் போன்றவர்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும், நினைத்துப் பாருங்கள். லண்டனில் மேலும் ஒரு வாய்ப்பு எனக்கு கிட்ட இருக்கிறது. அது பகவான் பசவேஸ்வரின் மூர்த்தியை திறந்து வைப்பது தான். பல ஆண்டுகளுக்கு முன்பாக பகவான் பஸவேஸ்வர் ஜனநாயகத்துக்காகவும், பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுதலுக்காகவும் ஆற்றியிருக்கும் பணிகள், எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம். லண்டனில் பகவான் பஸவேஸ்வரின் திருவுருவச் சிலை உலக மக்களுக்கு சமர்ப்பிக்கப் படுதல் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் மகான்களின் சிந்தனையோட்டம் எப்படி இருந்திருக்கிறது, எத்தனை தொலைநோக்குப் பார்வை அமைந்திருந்தது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற ஒரு நிகழ்வு இணையும் போது, நாட்டு மக்கள் அனைவரின் மனங்களும் குதூகலத்தில் நிரம்புகிறது.
எனதருமை நாட்டு மக்களே,
மனதின் குரலோடு நீங்கள் அனைவரும் இணைந்து வந்துள்ளீர்கள். தொலைபேசி வாயிலாக, mygov.in வாயிலாக உங்கள் ஆலோசனைகள் எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பின்னர் உங்கள் கடிதங்களைக் கொண்டு ஆல் இண்டியா ரேடியோவில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன, அரசு அதிகாரிகளை வரவழைத்து விவாதங்கள் நடத்தப்படுகின்றன, சிலர் தங்கள் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் போது அவற்றுக்கான தீர்வுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகளை நாம் கற்கத் தேவையாக இருக்கிறது. சில மொழிகளைக் கற்கும் பேறு எனக்குக் கிட்டியிருந்தாலும், இத்தனை மொழிகளையும் என்னால் கற்க முடியவில்லை என்பது உண்மை தான். ஆனாலும் கூட ஆல் இண்டியா ரேடியோ இந்த மனதின் குரலை ஒவ்வொரு மாநில மொழியிலும் இரவு 8 மணிக்கு ஒலிபரப்பி வருகிறது. அதில் குரல் வேறு ஒருவருடையதாக இருக்கலாம், ஆனால் கருத்து என் மனதினுடையதாக இருக்கிறது. உங்கள் மொழியில், உங்கள் மனங்களில் நுழைய இரவு 8 மணிக்கு நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன். நமது உறவு எத்தனை அருமையாக மலர்ந்திருக்கிறது பாருங்கள். கடந்த முறை ஓராண்டுக் காலம் நிறைவடைந்திருந்தது; இன்று நாம் புதிய ஆண்டில் கால் பதிக்கிறோம்.
எனதருமை நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்!!
எனதருமை நாட்டு மக்களே
உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், இது மனதின் குரலின் 12வது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஓராண்டுக்காலம் நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதியன்று முதல் மனதின் குரலை வெளிப்படுத்தக் கூடிய பேறு எனக்குக் கிட்டியது. மனதின் குரலின் ஓராண்டுக் காலத்தில் பல விஷயங்கள், இதிலிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது எனக்கு பல்வேறு விஷயங்களை அளித்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். மக்களாட்சியில் மக்கள் சக்திக்கு என பெரிய மகத்துவம் இருக்கிறது. என் வாழ்கையில் அடிப்படையாக இருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது, இதன் காரணமாக இந்த மக்கள் சக்தி மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மனதின் குரல் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது, அவை அனுபவங்களாகப் பரிமளித்திருக்கின்றன, இவையெல்லாம் மக்கள் சக்தி எத்தனை மகத்தானது என்பதை நம் எல்லாருக்கும் விளங்க வைத்திருக்கிறது. நம் முன்னோர்கள், மக்கள் சக்தி மகேசன் சக்தி என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மனதின் குரலில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து, நமது முன்னோர்களின் எண்ணத்தில், கருத்தில் பெரும் சக்தி இருக்கிறது, பெரும் உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூற முடியும். ஏனென்றால் இதை நானே உணர்ந்திருக்கிறேன்.
மனதின் குரலுக்காக நான் மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வந்தேன். ஒவ்வொரு முறையும் அவற்றிலிருந்து 4 அல்லது 5 ஆலோசனைகளை மட்டுமே என்னால் வெளிப்படுத்த முடிந்தது. ஆனால், இலட்சக்கணக்கான விழிப்புணர்வு உடைய குடிமக்கள் எனக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள். இதுவே கூட ஒரு மிகப் பெரிய சக்தி. பிரதமருக்கு ஆலோசனைகளை அளித்தோம், mygov.in இணைய தளத்தில் பதிவு செய்தோம், கடிதங்களை அனுப்பினோம், ஆனால் ஒரு முறை கூட நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் அவர்களில் சிலருக்கு ஏற்பட்டிருக்க கூடும், ஆனால் நான் அப்படி கருதவில்லை. இந்த இலட்சக்கணக்கான கடிதங்கள் எனக்கு மிகப் பெரிய கல்வியை அளித்திருக்கின்றன. அரசின் பல நுணுக்கமான இடர்ப்பாடுகள் குறித்து எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த விஷயத்தில் நான் ஆல் இண்டியா ரேடியோவுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் இந்த ஆலோசனைகளை வெறும் காகிதமாகப் பார்க்கவில்லை, இவற்றை வெகுஜனங்களின் எதிர்பார்ப்புக்களாகப் பார்த்தார்கள். இதன் பிறகு, அவர்கள் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை வானொலிக்கு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அழைத்தார்கள். வெகுஜனங்களின் கருத்துக்களை துறைப் பிரதிநிதிகள் முன்பாக வைத்தார்கள். சில விஷயங்களுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டார்கள். அரசின் பல்வேறு துறைகளுமே கூட இந்தக் கடிதங்களை ஆய்வு செய்தார்கள். அவற்றின் எவை கொள்கை ரீதியானவை, எவை தனி நபர் காரணமாக பிரச்சனையாக்கப்பட்டிருக்கின்றன, எவை அரசின் கவனத்திலேயே இல்லை என அடிமட்டத்திலிருந்து தொடங்கி பல விஷயங்கள் அரசின் முன்பாக வரத் தொடங்கின. நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் தகவல் என்பது அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும், வழிகாட்டுதல் என்பது மேலிருந்து கீழ் நோக்கியதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு. தகவல்களின் ஊற்றுக்கண்ணாக மனதின் குரல் ஆகி விடும் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள்? ஆனால் இது அப்படித் தான் ஆகி விட்டது.
இதே போன்று மனதின் குரல் மக்கள் குரலின் வெளிப்பாடாக அமைந்தது. ஒரு முறை நான் யதார்த்தமாக selfie with daughter என்று கூறியிருந்தேன். உலகின் மூலை முடுக்கெங்கும் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல இலட்சம் பேர்கள் தங்கள் மகள்களோடு புகைப்படங்கள் எடுத்து அனுப்பினார்கள்; பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்தது. அவர்கள் selfie with daughter, மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, அவர்களின் மகள்களின் தன்னம்பிக்கை அதிகரித்த அதே வேளையில், அவர்களுக்குள்ளே கூட ஒரு தன்முனைப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்தவர்களின் மனங்களில் கூட, இனி மகள்களை உதாசீனம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உதித்தது. ஒரு அமைதிப் புரட்சி உருவானது.
இந்திய சுற்றுலாத் துறையை மனதில் வைத்து நான் incredible india என்றதொரு கருத்தை முன் வைத்தேன். நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய நல்ல புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். மிக யதார்த்தமாக நான் விடுத்த விண்ணப்பம் இது. ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. பல இலட்சம் பேர்கள் இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலும் எடுக்கப்பட்ட படங்களை அனுப்பி வைத்தார்கள், இவை போன்ற இடங்கள் கூட நம் நாட்டில் இருக்கின்றனவா என்பது குறித்து இந்திய அரசின் சுற்றுலாத் துறையோ, மாநிலங்களின் சுற்றுலாத் துறைகளோ கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். இவை அனைத்தும் ஒரு தளத்தில் வந்து குவிந்தன. இவற்றின் மீது அரசுக்கு கொஞ்சம் கூட பொருட்செலவு ஏற்படவே இல்லை. மக்கள் இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்றார்கள்.
கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்பாக எனது முதல் மனதின் குரலில் காந்தி ஜெயந்தி பற்றித் தெரிவித்திருந்தேன்;. அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று நாம் காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று கூறியிருந்தேன். ஒரு காலத்தில், நாட்டுக்காக கதராடைகள் என்று இருந்தது, ஆனால் இன்றோ பேஷனுக்காக கதராடைகள் என்று ஆக வேண்டும் இல்லையா? நீங்கள் கதராடைகளை வாங்குங்கள் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதிகம் இல்லை, கொஞ்சமாகவாவது வாங்குங்கள் என்றேன். கடந்த ஓராண்டுக்காலத்தில் கதராடைகள் விற்பனை சுமார் இரண்டு பங்காகி இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் அரசு விளம்பரங்கள் வாயிலாக நடைபெறவில்லை, இதை செயல்படுத்த கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படவில்லை, இது மக்கள் சக்தியின் வெளிப்பாட்டால், உணர்வால் ஏற்பட்ட மாற்றம்.
ஏழையின் குடிசையில் விறகடுப்பு எரிகிறது, ஓரிடத்தில் குழந்தை அழுகிறது, ஏழைத் தாய்க்கு எரிவாயு சிலிண்டர் கிடைக்க வேண்டுமா இல்லையா என்று ஒரு முறை நான் மனதின் குரலில் வெளிப்படுத்தி இருந்தேன். இது தொடர்பாக நான் வசதிகளோடு இருப்பவர்களிடம் ஒரு விண்ணப்பம் விடுத்திருந்தேன். மானியத் தொகையை உங்களால் துறக்க முடியாதா என்று கேட்டிருந்தேன். சிந்தியுங்கள். இந்த நாட்டின் 30 இலட்சம் குடும்பங்கள் எரிவாயு மீதான மானியத்தைத் துறந்திருக்கிறார்கள் என்பதை நான் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்படித் துறந்தவர்கள் பணக்காரர்கள் இல்லை. ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர், கணவனை இழந்த ஒரு பெண், மானியத்தைத் துறக்க வரிசையில் நின்று கொண்டிருப்பதை நான் ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். சமுதாயத்தின் சாமான்யர்கள் கூட, மத்தியத் தட்டு மக்கள், மத்தியத் தட்டில் அடிநிலையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு மானியத்தைத் துறப்பது என்பது கடினமான ஒன்று தான். ஆனாலும் கூட, அவர்கள் இதைத் துறந்தாரகள். இது அமைதிப் புரட்சி இல்லையா? இது மக்கள் சக்தியின் வெளிப்பாடு இல்லையா? அரசுத் துறைகளின் அதிகார வட்டத்திற்கு அப்பாலும் ஒரு மிகப் பெரிய மக்கள் சக்தி இருக்கிறது, அது வல்லமை பொருந்தியது, ஆற்றல் மிக்கது, உறுதிப் பாடு உடையது என்ற பாடத்தை அரசுகளும் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அரசுகள் மக்களை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றனவோ, அந்த அளவுக்கு சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தும் ஊக்கியாக அவை வெற்றி காண முடியும்.
எவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததோ, மனதின் குரல் நிகழ்ச்சிக்குப் பிறகு அவையெல்லாம் எனக்கு உறுதிப்பாடாகவே மாறி விட்டன. ஆகையால் இன்று நான் மனதின் குரல் வாயிலாக, மீண்டும் ஒரு முறை மக்கள் சக்திக்கு பல கோடி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மக்கள் நான் கூறிய சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஒரு பொருட்டாக எண்ணி, நாட்டு நலனுக்காக தங்களுடையதாக்கிக் கொண்டார்கள், இதில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். இதை விட சந்தோஷம் அளிக்கக் கூடியது வேறு என்ன இருக்க முடியும்?
இந்த முறை மனதின் குரலில் நான் ஒரு புதிய அணுகுமுறையைக் கையாள நினைத்தேன். நீங்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, உங்கள் கேள்விகள், உங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றைப் பதிவு செய்யுங்கள் என்று நாட்டு மக்களிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். மனதின் குரலில் அவற்றைப் பரிசீலனை செய்வேன் என்று கூறியிருந்தேன். 55000த்துக்கும் மேற்பட்ட குடிமக்களிடமிருந்து எனக்கு அழைப்புக்கள் வந்தன என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். சியாச்சென், கட்ச், காம்ரூப், கஷ்மீர், கன்னியாகுமரி ஆகிய தொலைவான பகுதிகளிலிருந்து எல்லாம் அழைப்புக்கள் வந்திருக்கின்றன. அழைப்புக்கள் வராத பகுதி என்று ஏதும் இல்லை என்ற அளவுக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆலோசனைகள் குவிந்திருக்கின்றன. இது ஒரு சுகமான அனுபவம். அனைத்து வயதினரும் ஆலோசனைகளை அளித்திருக்கிறார்கள். சில ஆலோசனைகளை கேட்பதே கூட சுகமளிப்பதாக இருந்தது, மற்றவை மீது என் குழுவினர் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். நீங்கள் ஓரிரு நிமிடங்கள் வரை பேசியிருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்த வரை உங்கள் ஆலோசனைகளும், செய்திகளும் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அரசு உங்கள் ஆலோசனைகள் மீது கண்டிப்பாக தன் முழுமையான கவனத்தை செலுத்தும்.
நாலாபுறங்களிலும் negativity எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன என்று பொதுவாகத் தோன்றும்; ஆனால் என்னுடைய அனுபவமோ வேறு மாதிரியானது. இந்த 55000 பேர்களும் எந்தத் தங்கு தடையுமின்றி தங்கள் கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தி இருக்க முடியும், எதை வேண்டுமானாலும் கூறியிருக்க முடியும்; ஆனால் அவர்களின் அனைத்துக் கருத்துக்களும் ஆக்கபூர்வமாக, நல்ல ஆலோசனைகள் அளிக்கும் விதமாக, புதுமையானவையாக, மனதின் குரலை ஒட்டியே வெளிப்படுதியிருப்பது போல அமைந்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது, பொதுமக்கள் எத்தனை ஆக்கபூர்வமான எண்ணங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கும் நம் நாட்டுக்கும் எத்தனை பெரிய முதலீடு? ஏதோ ஒன்றிரண்டு சதவீதம் அழைப்புக்களில் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம். ஆனால் எஞ்சியிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அழைப்புக்கள் சக்தியும் ஆனந்தமும் அளிக்கக் கூடிய தகவல்களாகவே இருந்தன. மேலும் குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வந்த அழைப்புக்கள், அதிலும் பார்வைக் குறைபாடு உடையவர்களிடமிருந்து அதிகம் அழைப்புக்கள் வந்தன. இவர்களால் தொலைக்காட்சிகளைப் பார்க்க முடியாது, ரேடியோவை அவசியம் கேட்பார்கள் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு வானொலி என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை இதிலிருந்து என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எனக்கு ஒரு புதிய பரிமாணம் புலப்படுகிறது. அவர்கள் தெரிவித்திருக்கும் அரிய தகவல்கள் அரசு புரிந்துணர்வோடு செயல்பட போதுமானதாக இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் பகுதியைச் சேர்ந்த பவன் ஆச்சார்யா அவர்கள் என்னோடு ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பவன் ஆச்சார்யா அவர்களின் ஆலோசனையை நாட்டு மக்கள் அனைவரும் கேட்க வேண்டும், அதைப் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் பெயர் பவன் ஆச்சார்யா, நான் ராஜஸ்தானின் அல்வர் பகுதியைச் சேர்ந்தவன். தீபாவளி பண்டிகையின் போது நாட்டு மக்கள் அதிக அளவில் மண்ணாலான அகல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதம மந்திரி நரேந்திர மோதி அவர்கள் நாட்டு மக்களிடம் தனது மனதின் குரலில் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்படி மண் அகல்களைப் பயன்படுத்துவன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத அதே நேரத்தில், பல்லாயிரம் மண்பாண்டம் செய்யும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டும், என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பவன் உங்கள் கருத்துக்கள் நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் சென்று அடையும் என்று எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. அவ்ர் மிகவும் அருமையான யோசனையை அளித்திருக்கிறார். மண் என்பது விலை மதிக்க முடியாதது. ஆகையால் மண்ணாலான விளக்குகளுக்கும் மதிப்பு காண முடியாது. சுற்றுச் சூழல் விஷயத்திலும் இதற்கென ஒரு சிறப்பிடம் இருக்கிறது. விளக்குகள் ஏழைகளின் வீடுகளில் தயாரிக்கப்படுகின்றன. மிக எளிய மக்கள் இவற்றைத் தயார் செய்வதன் மூலம் தங்கள் பிழைப்பை நடத்துகிறார்கள். இனி வரும் பண்டிகைகளின் போது, பவன் ஆச்சார்யா அவர்களின் ஆலோசனையை நாம் செவி மடுத்தால், மண் விளக்குகள் நம் இல்லங்களின் ஏற்றப்படும், ஆனால் அதன் ஒளி ஏழையின் குடும்பத்தில் வீசும் என்று நாட்டு மக்களின் முன்பு நான் விண்ணப்பம் வைக்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
விநாயக சதுர்த்தியின் போது, முப்படையினரோடு சிறிது நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பாகிஸ்தானோடு 1965ம் ஆண்டு நடைபெற்ற போர் நிறைவடைந்து 50 ஆண்டுகள் கழிந்த நிலையில், தில்லியில் இண்டியா கேட் அருகே வீரத்துக்கான அஞ்சலி என்ற பொருள்படும் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நான் அதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தேன். அரை மணி நேரம் இருக்கலாம் என்று நான் சென்றிருந்தேன், ஆனால் நான் அங்கிருந்து கிளம்பிய போது இரண்டரை மணி நேரம் ஆகியிருந்தது, ஆனாலும் என்னால் முழுமையாக அதைப் பார்க்க முடியவில்லை. அங்கே என்ன தன் இல்லை? ஒட்டு மொத்த சரித்திரத்தையும் உயிரோட்டத்தோடு வடித்திருந்தார்கள். கலைக்கண்ணோட்டத்தோடு பார்த்தாலும், அற்புதமாக இருந்தது, சரித்திரக் கண்ணோட்டத்தோடு பார்த்தாலும், கல்வி புகட்டுவதாக அமைந்தது, வாழ்கையில் கருத்தூக்கமாக அதை அணுகினாலும், தாய்நாட்டுக்கு சேவை செய்ய இதை விடக் கருத்தூக்கம் ஏற்படுத்தக் கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது. போரின் பெருமை மிக்க கணங்கள், நமது படையினரின் ஈடிணையில்லாத சாகஸம், தியாகம் ஆகியவை பற்றி நாம் கேள்விப் பட்டு வந்திருக்கிறோம். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த புகைப்படங்களோ, படச் சுருள்களோ இல்லை. ஆனால் இந்தக் கண்காட்சி மூலம் அந்தக் கால நிகழ்வுகளின் அனுபவத்தைப் பெற முடிந்தது. ஹாஜி பீர் போராகட்டும், அஸல் உத்தர் போராகட்டும், சாவிந்தா போராகட்டும், ஹாஜி புர் கணவாய் வெற்றிக் காட்சிகள் ஆகிய அனைத்தும் மயிர்க் கூச்செரியும் வகையில் அமைந்திருக்கின்றன. நம் முப்படையினரின் போர் சாகஸம் நம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறது. அந்தக் கண்காட்சியின் போது போரில் பங்கு எடுத்த வீரர்களின் குடும்பங்களையும் தியாகிகளின் குடும்பங்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. போரில் பங்கெடுத்த சில வீரர்கள் தங்கள் வாழ்கையின் மாலைப் பொழுதை எட்டியிருந்தார்கள், அவர்களும் அங்கே வந்திருந்தார்கள். அவர்களோடு நான் கைகுலுக்கிய போது அவர்களின் சக்தியைக் கண்டு நான் வியந்தேன். அது எனக்கு கருத்தூக்கம் அளித்தது. நீங்கள் வரலாறு படைக்க விரும்பினால், வரலாற்றின் நுணுக்கங்களை நீங்கள் ந்ன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு நம்மை நமது வேர்களோடு இணைக்கிறது. வரலாற்றிலிருந்து நமது இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டால், வரலாறு படைக்கும் திறனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விடும் வீரத்தின் இந்த கண்காட்சி மூலம் வரலாறு பற்றிய அனுபவம் ஏற்படுகிறது, வரலாறு பற்றிய அறிவு பிறக்கிறது, புதிய வரலாறு படைக்கும் விதைகளும் விதைக்கப்படுகின்றன. நீங்கள் தில்லிக்கு அருகில் இருப்பவர்கள் என்றால், நீங்களும், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், இன்னும் சில காலம் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியை அவசியம் சென்று பாருங்கள். என்னைப் போல சீக்கிரமாக அங்கிருந்து வந்து விட வேண்டாம், உங்களுக்கு 3 அல்லது 4 மணி நேரம் கண்டிப்பாக இதை முழுமையாகக் காணத் தேவைப்படும். கண்டிப்பாகப் பாருங்கள்.
மக்களாட்சியின் சக்தியைப் பாருங்கள், ஒரு சிறுவன் நாட்டின் பிரதமருக்கு கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் அவசரத்தில் அந்தச் சிறுவன் தனது பெயரைக் குறிப்பிட மறந்திருக்கிறான். அவன் பெயர் என்னிடம் இல்லாததால் அதைக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் கூறிய விஷயம் பிரதமர் தன் கவனத்தை செலுத்தத் தகுந்ததாக இருக்கிறது மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே தங்கள் கவனத்தை செலுத்துவதாக இருக்கிறது.
பிரதமர் அவர்களே, நீங்கள் தூய்மையான இந்தியா என்ற இயக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறீர்களே, இதை செயல்படுத்த ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு தெருவிலும் குப்பைத் தொட்டிகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இந்தச் சிறுவன் கூறியது மிகவும் சரியான விஷயம். தூய்மை என்பது நமது இயல்பாகவே ஆக வேண்டும், அதற்கான சாதனங்களையும் நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்தச் சிறுவன் விடுத்திருக்கும் செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று நான் தூய்மை குறித்த அறிவிப்பை செய்தேன். சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக, நாடாளுமன்றத்தில் பல மணித்துளிகள் தூய்மை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நமது அரசு மீதான விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. மோதி அவர்கள் தூய்மை பற்றி பெரிய பேச்சுக்கள் எல்லாம் பேசினார், ஆனால் பலன் என்ன? என்று கேட்டு என்னை நோக்கியும் விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதை நான் தவறாகவே கருதவில்லை. நாட்டின் நாடாளுமன்றம் கூட தூய்மை பற்றிய விவாதங்களில் ஈடுபடுகிறது என்று நான் இதை நல்லவிதமாகவே பார்க்கிறேன். இன்னொரு புறம் பாருங்கள், ஒரு பக்கம் நாடாளுமன்றம் இன்னொரு பக்கம் நாட்டின் குழந்தை இருவருமே தூய்மை பற்றிப் பேசுகிறார்கள் என்பதை விட நாட்டுக்குப் பெருமை அளிக்கும் விஷயம் வேறு என்னவாக இருக்க முடியும்? கருத்துக்களின் இயக்கம் நடைபெறுகிறதே, மாசுக்கு எதிராக ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறதே, தூய்மை மீதான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசுகளையும் பணியில் கண்டிப்பாக ஈடுபடுத்தும், ஈடுபடுத்தும், ஈடுபடுத்தும். உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி, மாநில மற்றும் மத்திய அரசுகள் வரை அனைத்து அமைப்புக்களும் இதன் மீது பணியாற்றியே ஆக வேண்டும். இந்த இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் சென்றே ஆக வேண்டும். குறைகள் இருந்தாலும், இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம் இந்தியாவை 2019ம் ஆண்டில், நாம் காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், காந்தியடிகளின் கனவை மெய்யாக்கும் விதமாக நாம் செயல்பட வேண்டும். காந்தியடிகள் என்ன சொன்னார் தெரியுமா? ஒரு முறை அவர், சுதந்திரம், தூய்மை இவற்றுக்கு இடையே ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நான் முதலில் தூய்மையையே விரும்புவேன், பிறகு தான் நாட்டின் சுதந்திரம் என்று கூறினார். காந்தியடிகளுக்கு விடுதலையை விட தூய்மையே மகத்துவம் நிறைந்த்தாக இருந்தது. வாருங்கள், நாம் அனைவரும் காந்தியடிகளின் கருத்தை ஏற்றுக் கொள்வோம், அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக செயல்படுவோம்.
தில்லியைச் சேர்ந்த குல்ஷன் அரோடா அவர்கள் mygov இணையதளத்தில் ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறார். தீன் தயாள் உயாத்யாய் அவர்களின் நூற்றாண்டு பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்.
எனதருமை நாட்டு மக்களே, மகத்தானவர்களின் வாழ்கை சரிதம் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கக் கூடியதாக எப்போதுமே இருக்கிறது. அத்தகைய மகான்கள் எந்தக் கொள்கைப் பற்று உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வது நமது வேலையல்ல. நாட்டுக்காக வாழ்ந்து உயிர் துறந்த அனைவருமே நமக்கு கருத்தூக்கம் அளிப்பவர்கள் தாம். இப்போதெல்லாம் பல மகான்களை நினைவு கூரும் சந்தர்ப்பங்கள் நமக்கு வாய்க்கிறது. செப்டம்பர் மாதம் 25ம் தேதி பண்டித தீன் த்யாள் உபாத்யாய் அவர்கள், அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தியடிகள், லால்பஹாதுர் சாஸ்த்ரி, அக்டோபர் 11ம் தேதியன்று ஜெய்ப்ரகாஷ் நாராயண் அவர்கள், அக்டோபர் 31ம் தேதி சர்தார் வல்லப்பாய் படேல் என கணக்கிலடங்காத பெயர்கள், அவற்றில் ஒரு சிலவற்றையே நான் குறிப்பிடுகிறேன். ஏனென்றால் இந்த நாடு பஹுரத்ன வசுந்தரா, அதாவது பல மனிதருள் மாணிக்கங்களைப் பெற்ற நாடு. நீங்கள் எந்த ஒரு தேதியை எடுத்துக் கொண்டாலும், வரலாற்றில் ஏதோ ஒரு மஹாபுருஷரின் பெயர் இடம் பெறும். இனி வரும் காலங்களில் அவர்களைப் பற்றிய நினைவுகளால் நம் மனங்களை நிறைத்துக் கொள்வோம். அவர்கள் வாழ்கை அளிக்கும் செய்தியை நாம் வீடுதோறும் எடுத்துச் செல்வோம். அவர்களிடமிருந்து நாமும் ஏதாகிலும் கற்க முயற்சி செய்வோம். குறிப்பாக, அக்டோபர் 2ம் தேதி பற்றி பதிவு செய்ய விரும்புகிறேன். அக்டோபர் 2ம் தேதி வணக்கத்துக்குரிய காந்தியடிகளின் பிறந்த நாள். கடந்த ஆண்டும் கூட, பல வகையான ஃபேஷன்களின் உடைகள், பல வகையான ஆடைகள் என இருக்கலாம், ஆனால் அவற்றில் கதராடைகளுக்கு என ஓரிடம் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், அக்டோபர் 2ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் வரை, கதராடை விற்பனையில் தள்ளுபடி அளிக்கப்படும், இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், கதராடைகளுடன் சேர்ந்து, கைத்தறியாடைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுங்கள். நமது நெசவாளிகள் எத்தனை கடுமையாக உழைக்கிறார்கள். 125 கோடிப் பேர்கள் கொண்ட நாட்டு மக்கள் 5 ரூபாய், பத்து ரூபாய், 50 ரூபாய் என்ற அளவில் கூட கதராடையையோ, கைத்தறியாடையையோ வாங்கினால், நிறைவாக அந்தத் தொகை நெசவாளிக்குச் சென்று சேரும், கதராடை தயாரிக்கும் ஏழை விதவையைச் சென்று அடையும். ஆகையால் இந்த தீபாவளியன்று நாம் கண்டிப்பாக கதராடைகளுக்கு என ஒரிடத்தை ஒதுக்குவோம், நம் உடலில் அதற்கு என இடமளிப்போம். நீங்கள் முழுமையாக கதராடைகளையே அணிய வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. ஏதோ கொஞ்சமாவது அதற்கு இடமளியுங்கள் என்று தான் வேண்டுகிறேன். கடந்த முறை நீங்கள் விற்பனையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி விட்டீர்கள். இதனால் எத்தனை ஏழைகள் பலனடைந்தார்கள்! எந்தப் பணியை அரசு பல கோடி ரூபாய்கள் செலவு செய்தும் செய்ய முடியவில்லையோ, அதை நீங்கள் சின்னஞ்சிறு உதவியால் செய்து முடித்திருக்கிறீர்கள். இது தானே மக்கள் சக்தி ஆகையால் நான் மீண்டும் உங்களை இந்த விஷயத்தில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
என் மனம் வேறு ஒரு விஷயத்துக்காகவும் கூட சந்தோஷத்தில் ஆழ்கிறது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். மே மாதம் நான் கோல்காத்தா சென்றிருந்தேன். சுபாஷ் போஸ் அவர்களின் குடும்பத்தார் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவரது சகோதரர் மகன் சந்த்ர போஸ் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கணிசமான நேரம் சுபாஷ் போஸ் அவர்களின் குடும்பத்தாருடன் நேரம் செலவு செய்யும் பொன்னான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சுபாஷ் பாபுவின் பெரிய குடும்பம் பிரதமரின் இருப்பிடம் வர வேண்டும் என்று அன்று முடிவானது. சந்த்ர போஸ் மற்றும் அவரது குடும்பத்தார் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். கடந்த வாரம் தான் சுபாஷ் போஸ் அவர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் பிரதமரின் இல்லம் வரவிருக்கிறார்கள் என்பது முடிவானது. இது எனக்கு எத்தனை பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேத்தாஜியின் குடும்பத்தார் அனைவருக்கும் தங்கள் வாழ்கையிலேயே முதன் முறையாக பிரதமரின் இல்லத்துக்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். இதை விட அதிக மகிழ்ச்சி எனக்கு என்னவென்றால், அக்டோபர் மாதம் இவர்களை பிரதம மந்திரி இல்லத்தில் வரவேற்கக் கூடிய கணத்தை விடப் பெரிய விருந்தோம்பல் இருக்க முடியாது. சுபாஷ் பாபுவின் குடும்பத்தார்களில் பலர் வேறு வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். அனைவரும் சிறப்பாக இதற்காகவே வருகிறார்கள் இது எனக்கு எத்தனை பெரிய சந்தோஷத்தை அளிக்கக் கூடிய விஷயம் தெரியுமா? அவர்களை வரவேற்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பார்கவி கானடே எனக்கு ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் விதம், அவரது குரல் ஆகியவற்றைக் கேட்ட பிறகு அவரே கூட ஒரு தலைவி என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை அவரே தலைமைப் பதவியையும் ஏற்கலாம் என்று படுகிறது. என் பெயர் பார்க்கவி கானடே. நீங்கள் இளைய தலைமுறையினருக்கு வாக்காளர் பதிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; இதனால் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு அதிகரிக்கும்; எதிர்காலத்தில் அரசுகளை அமைப்பதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்ற விஷயத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்று நான் பிரதம மந்திரியிடம் கேட்டுக் கொள்கிறேன். வாக்களர் பட்டியலில் பெயர்களைப் பதிவிடுதல் பற்றியும் வாக்களித்தல் பற்றியும் பார்க்கவி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் குறிப்பு சரியானது. மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்காளரும் நாட்டின் விதியை நிர்ணயம் செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. வாக்களிப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது. இதற்காக நான் நாட்டின் தேர்தல் ஆணையத்துக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில ஆண்டுகள் முன்பாக, நமது தேர்தல் ஆணையம் regulator, நெறிப்படுத்தல் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் செயல்பாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று நமது தேர்தல் ஆணையம் நெறிப்படுத்தல் பணியை மட்டும் செய்யவில்லை, அது ஒரு வகையில் facilitatorஆக, எளிதாக்கி துணை புரியும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இது வாக்காளர்களுக்கு உதவி புரிவதாக ஆகி இருக்கிறது. அவர்களின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களின் மையக்கருவாக வாக்காளர்கள் விளங்குகிறார்கள். இது மிகவும் போற்றுதலுக்கு உரிய மாற்றம். ஆனால் வெறும் தேர்தல் ஆணையம் மட்டுமே செயல்படுவது என்பது போதாது. நாமும் கூட பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், நாம் வசிக்கும் பேட்டைகளில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் நாமுமே கூட நமக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாத உரிமைகளை விழிப்போடு கண்காணித்து வர வேண்டும், என் உரிமையை நான் பயன்படுத்துகிறேனா இல்லையா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதை நாம் ஒரு பழக்கமாகவே கொள்ள வேண்டும். நாட்டின் இளைஞர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், வாக்களிப்பிலும் கண்டிப்பாக பங்கு கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேர்தல்காலங்களில் நான் நிச்சியம் ஒரு விஷயத்தைக் கூறி வருகிறேன். முதலில் வாக்களிப்பு, பிறகு தான் மற்றவை எல்லாம். இந்தப் புனிதமான பணியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
சில நாட்கள் முன்பாக நான் வாராணசி சென்றிருந்தேன், அங்கே பலரை என்னால் சந்திக்க முடிந்தது, பல நிகழ்ச்சிகளில் பங்கு எடுத்தேன். பலரை நான் சந்தித்தாலும் கூட, அவர்களில் இரு சிறுவர்கள் பற்றி நான் உங்களோடு பேச விரும்புகிறேன். அவர்களில் க்ஷிதிஜ் பாண்டே என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனை சந்தித்தேன். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் கேந்த்ரிய வித்யாலயாவில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். மிகவும் புத்தி கூர்மையுடைய இந்த சிறுவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது. ஆனாலும் இந்தச் சின்ன வயதிலும் கூட இயற்பியலில் அவனுக்கு இருக்கும் நாட்டத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவன் நிறைய படிக்கலாம், இணையதளங்களில் நிறைய கற்றுக் கொண்டிருக்கலாம், புதிய புதிய பரிசோதனைகளைப் பார்க்கலாம், ரயில் விபத்துக்களை எந்த தொழில்நுட்பம் மூலம் தடுக்க முடியும், குறைவான ஆற்றலைக் கொண்டு எப்படி இயக்கலாம், ரோபோவில் எப்படி மனித உணர்வுகளை ஊட்ட முடியும் என ஏராளமான விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசினான். மிகவும் விசித்திரமான சிறுவன். அவன் கூறியவற்றை என்னால் நுணுக்கமாகப் பார்க்க முடியவில்லை, ஆனால் அவனது தன்னம்பிக்கையையும், நாட்டத்தையும் பார்க்கும் போது, நமது நாட்டின் சிறுவர்களுக்கு அறிவியல் மீது நாட்டம் அதிகரிக்க வேண்டும் என்று புலப்பட்டது. சிறுவர்களின் மனதில் கேள்விகள் தொடர்ந்து எழுந்து வர வேண்டும் – ஏன், எப்படி, எப்போது என்ற கேள்விகள் அவர்கள் மனங்களில் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதே போல சோனம் படேல் என்ற ஒரு சிறுமியை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. வாரணாசியின் சுந்தர்பூரில் வசிக்கும் 9 வயது ஆன இந்தச் சிறுமி சதாவ்ருஜ் படேல் அவர்களின் மகள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண் இவள். இந்தச் சிறுமிக்கு ஒட்டு மொத்த கீதையும் தலைகீழ்ப் பாடம்; ஆனால் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், கீதையின் ஏதாவது ஒரு சுலோகத்தைப் பற்றிக் கேட்டவுடன், அவள் அதை ஒப்பிப்பதுடன் அதன் ஆங்கில விளக்கத்தையும் ஹிந்தி மொழி விளக்கத்தையும் அளித்தாள். அவள் தகப்பனாரிடம் நான் இது பற்றிக் கேட்ட போது அவர் இதை அவள் தன் 5வது வயதிலிருந்து சொல்லி வருவதாகத் தெரிவித்தார். இதை எங்கே கற்றுக் கொண்டாள் என்று நான் கேட்டதற்கு அவர், எங்களுக்கும் இது தெரியாது என்றார். அவள் கீதையை மட்டும் தான் படிக்கிறாளா அவள் படிப்பு என்று வேறு என்ன இருக்கிறது என்று நான் கேட்ட போது, அவர் காலையில் கணிதப் பாடத்தை எடுத்துக் கொண்டால், மாலைக்குள்ளாக அவளுக்கு அனைத்தும் கருதலைப்பாடமாக ஆகி விடுகிறது, சரித்திரத்தை எடுத்துக் கொண்டால், அதுவும் சில மணிகளுக்குள்ளாக கருதலைப் பாடமாகி விடுகிறது என்றார். மேலும் அவர் குடும்பத்தில் உள்ள எங்கள் அனைவருக்குமே கூட இது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார். இது உன்மையிலேயே எனக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சில குழந்தைகளுக்கு பிரபலங்கள் மீது ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது, ஆனால் குழந்தை சோனமுக்கோ அப்படி எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. அவளுக்கு கடவுள் ஏதோ ஒரு விசேஷ சக்தியை அளித்திருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தோன்றியது. இந்த 2 குழந்தைகளையும் எனது இந்த காசி யாத்திரையின் போது நான் சந்தித்தது சிறப்பான ஒரு விஷயம். இதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
மனதின் குரலில் சிலர் எனக்கு நிறைய வேலைகளைக் கொண்டு வருகிறார்கள். ஹரியாணாவின் சந்தீப் கூறுவதைக் கேளுங்கள். மாதம் ஒரு முறை நீங்கள் நிகழ்த்தும் மனதின் குரலை வாரம் ஒரு முறை என்று ஆக்க வேண்டும்; ஏனென்றால், இவற்றிலிருந்து எங்களுக்கு அதிக கருத்தூக்கம் கிடைக்கிறது. சந்தீப் அவர்களே, நீங்கள் என்னிடமிருந்து என்னவெல்லாம் வேலை வாங்க நினைக்கிறீர்களோ, தெரியவில்லையே? மாதம் ஒரு முறை இதைச் செய்யவே எனக்கு ஏகப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. சில வேளைகளில் ஆல் இண்டியா ரேடியோவைச் சேர்ந்த நம் நண்பர்கள் 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள் என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது ஆனால் நான் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன், உங்கள் ஆலோசனைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது மாதமொரு முறை என்பதே உகந்ததாக இருக்கிறது. மனதின் குரலைத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. சுபாஷ் பாபு வானொலையை எந்த அளவு பயன்படுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜெர்மனியில் அவர் ஒலிபரப்பைத் தொடக்கினார். இந்தியாவில் வாழும் மக்களுக்காக அவர் சுதந்திர வேள்வி தொடர்பாக வானொலி வாயிலாக தம் கருத்துக்களைப் பரப்பி வந்தார். ஆஸாத் ஹிந்த் ரேடியோவின் தொடக்கத்தை ஒரு வாராந்திர செய்தி அறிக்கை மூலம் செய்தார். ஆங்கிலம், ஹிந்தி, பங்காலி, மராட்டி, பஞ்சாபி, உருது, பஷ்டூ என பல மொழிகளில் அவர் வானொலி ஒலிபரப்பைச் செய்தார். எனக்குமே கூட மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக என் வானொலி ஒலிபரப்புத் தொடங்கி ஓராண்டுக் காலம் நிறைவடைந்திருக்கிறது. எனது மனதின் குரல், உங்கள் குரலாக மாறியதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் மனங்களின் குரல்களை நான் கேட்கிறேன், அதைப் பற்றி நினைக்கிறேன், உங்கள் ஆலோசனைகளைப் பார்க்கிறேன். அவற்றிலிருந்து தான் என் எண்ண ஓட்டங்கள் சிறகடிக்க ஆரம்பிக்கின்றன. இவை தாம் ஆல் இண்டியா ரேடியோ மூலமாக உங்களை வந்து அடைகின்றன. கூறுவது என்னவோ நானாக இருந்தாலும், கூற்றும் கருத்தும் உங்களுடையது தான். இது தான் என் மகிழ்ச்சியே.
அடுத்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம். உங்கள் ஆலோசனைகள் மேலும் கிடைக்கட்டும், உங்கள் ஆலோசனைகலால் அரசுக்கு நன்மை ஏற்படுகிறது, மேம்பாடு ஏற்படுகிறது. உங்கள் பங்களிப்பு எனக்கு விலை மதிக்க முடியாத ஒன்று. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். நன்றி.
எனது பிரியமான நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். மீண்டும் ஒரு முறை என் மனதின் குரலை உங்களுக்குத் தெரியப்படுத்த ஒரு நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதியில் மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள். நேற்று நாடு முழுவதிலும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்திய அரசு சமுதாய பாதுகாப்புக்காக வேண்டி, பல புதிய புதிய திட்டங்களை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமல் படுத்தி இருக்கிறது. மிகவும் குறைவான நேரத்தில், பரவலான வகையில் அனைவரும் இந்தத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. ரக்ஷா பந்தன் நாளை ஒட்டி, நாம் நமது சகோதரிகளுக்கு இந்த பாதுகாப்புத் திட்டங்களின் நன்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சிறியதொரு விண்ணப்பம் விடுத்திருந்தேன். திட்டம் தொடங்கப்பட்டு சில காலத்திலேயே சுமார் 11 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயனாளிகளில் பாதி பங்குப் பேர்கள் தாய்மார்கள், சகோதரிகள் என்ற வகையில் இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நான் ஒரு நல்ல அறிகுறியாக கருதுகிறேன். அனைத்துத் தாய்மார்கள், சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் புனித நன்னாளில் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் ஓராண்டு முன்பாக, ஜன் தன் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தத் தொடங்கினோம். 60 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட முடியாத ஒரு திட்டம் இத்தனை குறைவான காலத்திற்குள்ளாக செயல்படுத்த முடியுமா, என பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்பு கொண்ட அனைத்துத் துறைகளும், வங்கிகளின் அனைத்துக் கிளைகளும், முழு சக்தியோடும், மனதோடும் இதில் ஈடுபட்டன என்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம். இதில் வெற்றி அடைந்திருக்கிறோம், இது வரை எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சுமார் 17.75 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் விஷயத்தில், ஏழைகளின் தாராளத் தன்மையை நான் பார்த்தேன். பூஜ்யம் இருப்புக் கணக்கைக் கூடத் துவக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்த போதும் கூட, அதில் 22000 கோடி ரூபாய்களை அவர்கள் சேமித்திருக்கிறார்கள். பொருளாதாரத்தின் முக்கிய ஊற்றுக்கண்களில் ஒன்றாக வங்கித் துறையும் விளங்குகிறது. இந்த அமைப்பு ஏழைகளின் இல்லங்களையும் சென்று அடைந்திருக்கிறது. அந்த வகையில் வங்கிகளின் தோழன் திட்டத்துக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று 1.25 லட்சம் வங்கித் தோழர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதன் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இந்த ஓராண்டுக்காலத்தில் வங்கித் துறை, பொருளாதாரம், ஏழைகள் ஆகியோரை இணைக்க ஒரு லட்சத்து முப்பத்தோராயிரம் நிதிசார் கல்வி அளித்தல் தொடர்பான முகாம்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏதோ வங்கிக் கணக்குகளைத் தொடங்கி விட்டு சும்மா இருப்பதோடு இந்த செயல்பாடு நின்று போகக் கூடாது. இப்போது பல்லாயிரம் பேர்கள் இந்த ஜன் தன் திட்டம் காரணமாக overdraft எடுக்கும் அதிகாரம் உடையவர்களாக ஆகி இருக்கிறார்கள், எடுத்தும் இருக்கிறார்கள். ஏழைகளுக்கும் வங்கிக் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு முறை நான் இதோடு தொடர்புடைய அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன். வங்கிகளோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பினை எக்காலத்திலும் துண்டித்துக் கொள்ள வேண்டாம் என்று ஏழைகள் அனைவரிடத்திலும் நான் விண்ணப்பிக்கிறேன். வங்கிகள் உங்களுடையவை, நீங்களை எந்த வகையிலும் இதிலிருந்து விலக வேண்டாம். வங்கிகளை உங்கள் இல்லங்களின் வாயிற்படிகளுக்கு நாங்கள் கொண்டு சேர்த்திருக்கிறோம், இதை விட்டு விடாதீர்கள், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நம் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் பணப் புழக்கம் இருக்க வேண்டும். நீங்கள் இதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
கடந்த சில நாட்கள் முன்பாக, குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களும், வன்முறை வெறியாட்டமும் ஒட்டு மொத்த நாட்டையும் அமைதி இழக்கச் செய்தன, இது இயல்பான ஒரு உணர்வு தான். காந்தி, சர்தார் ஆகியோர் பிறந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு கோர சம்பவம் நிகழ்ந்திருப்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது, வலிக்கிறது. ஆனால் மிகவும் குறைவான காலத்துக்கு உள்ளாக, குஜராத்தின் விவரம் அறிந்தோர், என் குஜராத்தின் அனைத்துக் குடிமக்கள், சகோதர சகோதரிகள் ஆகியோர் இந்த அவல நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள், நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை மேற்கொண்டார்கள். மீண்டும் ஒரு முறை அமைதிப் பாதையில் குஜராத் பயணிக்கத் தொடங்கி விட்டது. அமைதி, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் – இந்தப் பாதை தான் சரியானது; முன்னேற்றப் பாதையில், அனைவரும் தோளோடு தோள் நின்று நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். முன்னேற்றம் மட்டுமே நமது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைய முடியும்.
கடந்த நாட்களில், சூஃபி பாரம்பர்யத்தைச் சேர்ந்த சான்றோர்கள் சிலரை சந்திக்கக் கூடிய நல்வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் நல்லுரைகளைக் கேட்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்களின் பொன்மொழிகளைக் கேட்ட போது, ஏதோ ஒரு மதுரமான இசையைக் கேட்பது போலிருந்தது. அவர்கள் கூறிய சொற்களின் பொருள், உரையாற்றும் முறை ஆகியன என மனத்தைக் கொள்ளை கொண்டன. சூஃபி பாரம்பரியத்தில் இருக்கும் விசாலமான நோக்கு, இனிமை, இசையின் லயம் இவை அனைத்தின் அனுபவம் ஆகியன இந்த சான்றோர்களின் மத்தியில் இருக்கும் போது நான் உணர்ந்தேன். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இஸ்லாத்தை சரியான முறையில், சரியான கண்ணோட்டத்தில் உலக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியாமான ஒன்றாக இருக்கிறது. அன்பு, தாராளத் தன்மை ஆகியவை நிறைந்த சூஃபி பாரம்பர்யம், இந்த செய்தியை அனைத்து மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்க்கும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இது மனித சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும், இஸ்லாத்துக்கும் நலன்கள் சேர்க்கும். நாம் வேறு வேறு வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம், ஆனாலும் கூட சூஃபி பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
இனி வரும் காலத்தில் எனக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் உலகின் பல நாடுகளில் இருக்கும் பௌத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த சான்றோர்கள் புத்த கயாவுக்கு வருகை தர இருக்கிறார்கள். மனித சமுதாயத்தோடு தொடர்புடைய உலகம் தழுவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். என்னையும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்கள். புத்த கயாவுக்கு வருமாறு என்னை அழைத்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நெஹ்ரு அவர்கள் புத்த கயா சென்றிருக்கிறார். உலகம் முழுவதிலிமிருந்தும் பௌத்த மத சான்றோர்கள் பங்கெடுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
எனது பிரியமான விவசாய சகோதர சகோதரிகளே, மீண்டும் ஒரு முறை நான் உங்களோடு என் மனதின் குரலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் முன்னரே கூட என் மனதின் குரலை இந்த விஷயம் தொடர்பாக உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மனதின் குரலாகட்டும், பொது மேடைகளாகட்டும், நாடாளுமன்றமாகட்டும் எனது கருத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக நடைபெறும் விவாதங்களில், அரசு திறந்த மனதோடு இருக்கிறது. விவசாயிகள் நலன் தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன், இதை நான் பல முறைகள் கூறியும் வந்திருக்கிறேன். கிராமங்களுக்கும், விவசாய சகோதர சகோதரிக்குக்கும் நன்மை சென்று சேர வேண்டுமென்றால், வயல்வெளிகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்க கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டுமென்றால், கிராமங்களில் மின்சாரம் கொண்டு சேர்க்க மின் கம்பங்களை நட வேண்டுமென்றால், கிராமங்களில் சாலைகள் அமைக்கப் பட வேண்டுமென்றால், கிராமங்களில் வாழ் ஏழைகளுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றால், கிராமங்களைச் சேர்ந்த ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டுமென்றால், நாம் நிர்வாகச் சிக்கல்கள், தாமதங்களிலிருந்து சட்டத்தை மீட்டெடுத்தாக வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே அனைத்து ஆலோசனைகளும் எங்களுக்கு மாநிலங்களிலிருந்து வந்திருக்கின்றன, கோரிக்கைகளாக முன் வைக்கப் பட்டிருக்கின்றன என்பதை நான் என் விவசாய சகோதர சகோதரிகளுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏகப்பட்ட தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கின்றன., விவசாயிகள் மனதில் பீதி கிளப்பப்பட்டிருக்கிறது.
எனது விவசாய சகோதர சகோதரிகளே, எனதருமை விவசாயிகள் மருள வேண்டாம், கண்டிப்பாக பீதியடைய வேண்டாம். உங்களை மருளச் செய்யும் வகையில், உங்களுக்கு பீதி ஏற்படுத்தும் விதத்தில் யாரும் உங்களைத் தவறான பாதையில் வழிநடத்த முயன்றால், அதற்கு இடமளிக்கும் வகையில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்த வரையில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. ஆனால், விவசாயிகளின் கருத்துக்களுக்கும் குரல்களுக்கும் தனிச்சிறப்பு மிக்க மகத்துவம் இருக்கிறது. நாங்கள் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தோம். நாளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் இந்த அவசர சட்டத்தின் கால வரையறை முடிவடைகிறது. இதை காலாவதியாக விட்டு விடலாம் என்று நாங்கள் முடிவாக தீர்மானித்திருக்கிறோம். இதனால் என்ன ஆகும்? நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இருந்த அதே நிலைமை இப்போதும் தொடரப் போகிறது. நிறைவேற்றப்படாத அதில் 13 விஷயங்கள் ஓராண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், நாங்கள் அவசரச் சட்டம் இயற்றினோம்; ஆனால் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, அது நிறைவேற முடியாமல் சிக்கிக் கொண்டது. அவசரச் சட்டம் காலாவதியாக இருக்கிறது; ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு நேரடிப் பயன், நேரடி பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய அந்த 13 கூறுகளை நாங்கள் விதிமுறைகளாக வடிவமைத்து இன்றே அதை அமல் படுத்த இருக்கிறோம். இதன் மூலமாக விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படாமல் உறுதி செய்யப்படும். எங்களைப் பொறுத்த மட்டில் ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்ற சொற்கள் வெறும் கோஷச் சொற்கள் அல்ல, இது ஒரு மந்திரம் என்பதை நான் என் விவசாய சகோதர சகோதரிகளுக்கு உறுதியாகத் தெரிவிக்கிறேன். கிராமங்களில் வாழ் ஏழை விவசாயிகளின் நலன்கள் தாம் எங்கள் மனங்களில் இருக்கின்றன. ஆகையால் தான் வெறும் விவசாயத் துறை என்று இல்லாமல், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் துறை என்ற கருத்தில் அமைச்சகம் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி நான் என் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த தீர்மானத்தை நாங்கள் விரைவாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனது விவசாய சகோதர சகோதரிகளே, நீங்கள் மருட்சி அடைய வேண்டாம்; மற்றவர்கள் உங்களை பீதியடையச் செய்ய முயற்சி செய்தால், அதில் சிக்கி, நீங்கள் பீதியடையவும் வேண்டாம்.
நான் மேலும் ஒரு விஷயம் பற்றிப் பேச விரும்புகிறேன். 2 நாட்கள் முன்னதாக, 1965ம் ஆண்டுப் போர் முடிவடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. 1965ம் ஆண்டுப் போர் பற்றி நாம் பேசும் போதெல்லாம், லால் பஹாதுர் சாஸ்த்ரி அவர்களைப் பற்றி நினைவு கூர்வது என்பது இயல்பான ஒரு விஷயம். அதே போல ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்ற மந்திரச் சொற்களும் நம் நினைவுக்கும் வரும். இந்தியாவின் மூவண்ணக் கொடியின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்த தியாகிகள் பற்றிய நினைவலைகளும் நம் மனங்களில் உதிக்கும். 1965ம் ஆண்டுப் போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவருக்கும் நான் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வீரர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். இது போன்ற வரலாற்று நிகழ்வுகளிலிருந்து நமக்கு கருத்தூக்கம் தொடர்ந்து கிடைத்து வர வேண்டும்.
எப்படி கடந்த நாட்களில் சூஃபி பாரம்பர்யத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் பேறு கிட்டியதோ, நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளோடு பல மணித் துணிகள் கழித்த போதும் ஒரு இனிமையான அனுபவம் ஏற்பட்டது. அவர்கள் கூறுவதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அறிவியல் துறையில் இந்தியா பல வகைகளில் உன்னதமான வளர்ச்சி கண்டு வருகிறது. நமது விஞ்ஞானிகள் உண்மையிலேயே சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புக்களை எப்படி வெகு ஜனங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திசையில் நாம் முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும். அறிவியல் கோட்பாடுகளுக்கு எப்படி செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும், பரிசோதனைக் கூடங்களின் கண்டுபிடிப்புக்களைக் களத்தில் எவ்வாறு அமல் படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு வாய்ப்பாக மாற்றி முன்னேற்றம் காண வேண்டும். பல புதிய தகவல்கள் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. இது என்னைப் பொறுத்த மட்டில் கருத்தூக்கம் அளிப்பதாகவும், கல்வி அளிக்கக் கூடியதாகவும் அமைந்தது. பல இளைய விஞ்ஞானிகள் மிகவும் துடிப்போடு விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் கண்களில் நான் பல கனவுகளைக் கண்டேன். கடந்த மனதின் குரலில் கூட நான் நம் மாணவச் செல்வங்களை அறிவியலை நோக்கி வழிநடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன். இந்த சந்திப்புக்குப் பிறகு, அப்படி வழிநடத்த பல வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் இருக்கின்றன என்பது தெளிவாகப் புலனாகியது. நான் மீண்டும் அதை உரைக்க விரும்புகிறேன். எனது அனைத்து மாணவ நண்பர்களும் அறிவியல் தொடர்பான நாட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது கல்வி அமைப்புக்களும் இந்த திசையில் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
குடிமக்களிடமிருந்து எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. டாணேயைச் சேர்ந்த பரிமல் ஷா அவர்கள் mygov.in இணைய தளத்தில் கல்வித் துறை சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு தொடர்பாக தன் கருத்துக்களை எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டின் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ப்ரகாஷ் த்ரிபாடி அவர்கள் முதன்மைக் கல்வி அளிப்பதில் நல்ல ஆசிரியர்களின் தேவை குறித்தும், கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் பற்றியும் எனக்கு எழுதியிருக்கிறார். கீழ்நிலைப் பணிகளில் நேர்முகத் தேர்வுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது குறித்து நான் என் சுதந்திர தின உரையின் போதே கூட பேசியிருந்தேன். நேர்முகத் தேர்வு அழைப்பு வரும் போது, ஒவ்வொரு ஏழைக் குடும்பமும், விதவைத் தாய்மார்களும் சிபாரிசு கடிதம் பெறுவது, வேலை கிடைக்க யாருடைய உதவியை நாடுவது, போன்றவை தொடர்பான விஷயங்களில் அலைய வேண்டியிருக்கிறது. அடிமட்டத்தில் ஊழல் நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கீழ் நேர்முகத் தேர்வு என்பது இருக்க கூடாது என்று நான் கூறியிருந்தேன். அப்படி நான் கூறி 15 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், அரசு இந்த திசையில் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது, ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன, இந்த தீர்மானம் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டு விடும், அடிமட்ட நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு என்ற முறை களையப்பட்டு விடும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி ஏழைகள் சிபாரிசு தேடி ஓட வேண்டாம், சுரண்டல் நீங்கும், ஊழல் அகலும்.
இன்றைய நாட்களில் இந்தியாவுக்கு பன்னாட்டு பிரமுகர்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள். தாய்-சேய் இறப்பு வீதம் குறைக்கப்படும் வகையில் call to action செயல்திட்டங்களை அமல் படுத்த உலகின் 24 நாடுகள் ஒருங்கிணைந்து இந்தியாவில் ஒரு மாநாடு நடத்தினார்கள். அமெரிக்காவுக்கு வெளியே முதன் முறையாக இந்த சிந்தனைக் கூட்டம் இந்தியாவில் தான் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சுமார் 50000 தாய்மார்களும், 13 லட்சம் சேய்களும் பிரசவத்தின் போதோ, அதற்குப் பின்னரோ இறக்க நேர்கிறது. இது கவலையளிப்பது, அச்சம் தருவது. இந்த நிலையில் மேம்பாடு என்னவோ காணப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியா பாராட்டுக்களும் பெற்று வருகிறது. இருந்தாலும் கூட, இந்தப் புள்ளிவிபரம் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இல்லை. எப்படி நாம் போலியோவிலிருந்து விடுதலை பெற்றோமோ, அதே போல தாய்-சேய் இறப்புக்களுக்கு ஒரு காரணமான டெடனஸிலிருந்தும் விடுதலை அடைந்திருக்கிறோம். இதை உலகம் ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. ஆனால் இன்றும் கூட நாம் நமது தாய்மார்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும், நமது பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்.
சகோதர சகோதரிகளே, இன்றைய வேளையில், டெங்குகாய்ச்சல் பரவிக் காணப்படுகிறது. டெங்கு காய்ச்சல் அபாயகரமானது என்பது உண்மை தான். ஆனால், இதிலிருந்து தப்புவது என்பது மிகவும் எளிய ஒன்று. தூய்மையான இந்தியா பற்றிய எனது வேண்டுகோள் இதனோடு தொடர்புடையது தான். தொலைக்காட்சிகளில் நாம் விளம்பரங்களைப் பார்த்தாலும் கூட, நமது கவனம் அவற்றின் மீது செல்வதில்லை. செய்தித் தாள்களில் விளம்பரங்கள் அளிக்கப்பட்டாலும், நம் சிந்தை அவற்றில் செலுத்தப்படுவதில்லை. வீடுகளில் சின்னச் சின்ன விஷயங்களிலும் தூய்மை, சுத்தமான குடிநீரைப் பாதுகாப்பதன் வழிமுறைகள் ஆகிய விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது; இருந்தாலும் கூட அதில் நாம் அக்கறை காட்டுவதில்லை. நாம் நல்ல வீடுகளில் வசிக்கிறோம், அதில் பல வசதிகள் இருக்கின்றன, ஆனால் சில வேளைகளில் நம்மைச் சுற்றியே நீர் தேங்கி இருப்பது பற்றி நமக்குத் தெரிவதில்லை. இது டெங்கு காய்ச்சலுக்கு விடுக்கப்படும் அழைப்பு போன்றது. மரணத்துக்கு இத்தனை எளிய முறையில் பட்டுக் கம்பளம் விரிக்கக் கூடாது என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்கை என்பது மிகவும் மதிப்பு நிறைந்த ஒன்று. நீர் தேக்கம் பற்றிய கவனக் குறைவு, தூய்மை புறக்கணிப்பு இவை தான் மரணத்துக்கு விடுக்கப்படும் அழைப்புக்கள், இது சரியல்ல. நாடு முழுவதிலும் சுமார் 514 டெங்கு காய்ச்சல் கண்டறியும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, இங்கே இலவச பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலத்தில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெறுவது தான் உயிர் காத்தலுக்கு உகந்த ஒன்று. இந்த விஷயத்தில் உங்களின் மேலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. தூய்மை மீது அதிக கவனம் செலுத்த வேண்டுவது மிகவும் முக்கியமானது. ரக்ஷா பந்தன் தொடங்கி தீபாவளி வரை நம் நாட்டில் இனி வரும் காலங்களில் கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் நிரம்பி இருக்கும். ஏன் நாம் நமது அனைத்துப் பண்டிகைகளையும் தூய்மையோடு இணைக்கக் கூடாது? நல்ல பதிவுகள் பழக்கமாகவே ஆகி விடும், இல்லையா?
எனது பிரியமான நாட்டு மக்களே, நான் உங்களிடம் ஒரு சந்தோஷமான தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாட்டுக்காக உயிர் துறக்கும் பேறு என்பது என்னவோ கிடைக்காது; ஆனால், நாட்டுக்காக உயிர் வாழக் கூடிய பேறு என்னவோ கிடைத்திருக்கிறது, நம் நாட்டின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் பகுதியைச் சேர்ந்த 2 சகோதரர்கள், இளைஞர்கள், டா. ஹிதேந்த்ர மஹாஜன், டா. மஹேந்த்ர மஹாஜன் ஆகியோரின் மனங்களில் நம் நாட்டு பழங்குடி மக்களின் நலன்களே மேலோங்கி இருக்கிறது. இந்த இரண்டு சகோதரர்களும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அமெரிக்காவில் race across America என்ற பெயரிலான, சுமார் 4800 கி.மீ. அளவிலான, கடினமான ஒரு சைக்கிள் பந்தயம் நடக்கும். இந்த ஆண்டு, இந்த இரண்டு சகோதரர்களும் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த ஒட்டு மொத்த முயற்சிகளிலும் team india, vision for tribals -பழங்குடி இனத்தவர்களின் நலனை மனதில் கொண்டு ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டை முன்னேற்ற எப்படி ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பை அளித்து வருகிறார்கள், பாருங்கள்! இது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படும் போது, நெஞ்சம் பெருமிதத்தில் விம்முகிறது. சில நேரங்களில் நாம் கண்ணோட்டத்தின் காரணமாக நம் இளைய சமுதாயத்தினரிடத்தில் கொடுமையான அநீதிகளை இழைக்கிறோம். புதிய தலைமுறைக்கு எதுவுமே தெரியாது என்ற ஒரு கருத்து பழைய தலைமுறையினரிடம் நிலவுகிறது. இந்தப் போக்கு பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது என்றே நான் கருதுகிறேன். ஆனால் இளைய சமுதாயத்தினரிடம் என்னுடைய அனுபவம் மாறுபட்டது. சில வேளைகளில் இளைஞர்களிடம் பேசும் போது, நமக்கே கூட பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. Sunday on cycle- ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் சவாரி செய்வது என்று தீர்மானம் செய்து செயல்படுத்தும் பல இளைஞர்களை நான் சந்தித்து இருக்கிறேன். சில பேர்கள் வாரத்தில் ஒரு நாள் நான் சைக்கிளில் தான் பயணிப்பேன் என்று அதை cycle day யாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் என் உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை, சுற்றுச் சூழலுக்கும் நன்மை, இளமையினால் உண்டாகும் சந்தோஷமும் எனக்கு இதில் கிடைக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்போதெல்லாம் நம் நாட்டின் பல நகரங்களில் cycle clubகள் இயங்கி வருகின்றன. சைக்கிள் பயணத்துக்கு ஊக்கமளிக்கவும் பலர் இருக்கிறார்கள். இது உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழல் நலத்துக்கும் உகந்த நல்லதொரு முயற்சி. இந்தியாவின் இரண்டு இளைஞர்கள் புரிந்த சாதனை நாட்டுக்கு கௌரவத்தை ஏற்படுத்தி இருப்பதைப் போல, நாட்டின் இளைஞர்களின் கண்ணோட்டமும் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. சிறப்பாக, நான் மஹாராஷ்ட்ரா அரசுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மும்பையின் இந்து மில்ஸ் நிலத்தில் பாபா சாஹேப் அம்பேட்கரின் நினைவுச் சின்னத்தை எழுப்புவது பல காலமாகவே இழுபறியில் இருந்து வந்திருக்கிறது. இந்தப் பணியை மஹாராஷ்ட்ராவின் புதிய அரசு நிறைவேற்றி இருக்கிறது. அந்த இடத்தில் பாபா சாஹேப் அம்பேட்கருக்கு என ஒரு சிறப்பான, அழகான, கருத்தூக்கம் அளிக்கும் நினைவுச் சின்னம் எழுப்பப்படும்; இது தாழ்த்தப்பட்ட, பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மக்களுக்காக பணிகளில் ஈடுபட செயலூக்கம் அளிக்கும். இது மட்டுமல்ல, லண்டன் மாநகரில், 10, கிங் ஹென்ரி ரோட்டில் பாபா சாஹேப் அம்பேட்கர் வசித்த வீடும் இப்போது விலைக்கு வாங்கப் பட்டு விட்டது. உலகம் சுற்றும் இந்தியர்கள் லண்டன் செல்லும் போது, அங்கே மஹாராஷ்ட்ர அரசு அமைக்க இருக்கும் பாபா சாஹேப் அம்பேட்கரின் நினைவுச் சின்னம் கருத்தூக்கம் அளிக்கும். பாபா சாஹேப் அம்பேட்கருக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைக்கப்படவிருக்கும் இந்த இரண்டு நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மஹாராஷ்ட்ர மாநில அரசுக்கு என் மனப் பூர்வமான பிரார்த்தனைகளையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன்.
எனது பிரியமான சகோதர சகோதரிகளே, அடுத்த மனதின் குரல் ஒலிக்கும் முன்பாக, நீங்கள் உங்கள் கருத்துக்களை எனக்குக் கண்டிப்பாகத் தெரிவியுங்கள். ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பைக் கொண்டே இயங்கும், அனைவரும் தோளோடு தோள் இணைந்து பணியாற்றும் போது தான் நாடு வளர்ச்சி காணும் என்பதில் எனக்கு விடாப்பிடியான நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய நிறைவான நல்வாழ்த்துக்கள், மிக்க நன்றி.
எனது பிரியமான நாட்டு மக்களே,
வணக்கம், இந்த ஆண்டு நல்ல விதமாக மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு முன்பருவப் பயிர் விதைப்பு நடவடிக்கைகளில் இது கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் ஒரு விஷயம் என் மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. நமது நாட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணை வித்துக்களின் மிகுந்த குறைபாடு நிலவி வருகிறது. ஏழைகளுக்கு பருப்புக்கள் தேவைப்படுகின்றன, பொரியல் வகைகளில் சேர்த்துக் கொள்ள சிறிது எண்ணையும் தேவைப்படுகிறது. இந்த முறை செய்யப்பட்டிருக்கும் நடவில் பருப்பு வகைப்பயிர்களில் 50சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது. எண்ணை வகைப் பயிர்களில் சுமார் 33 சதவீத உயர்வு தெரிய வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக நான் என் விவசாய சகோதரர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பிரியமான நாட்டு மக்களே,
ஜூலை மாதம் 26ம் தேதி என்பது நமது நாட்டின் வரலாற்றில், கார்கில் போரில் வெற்றி பெற்ற நாளாக பொரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் விவசாயிகளின் தொடர்பு எந்த அளவுக்கு பூமியோடு கலந்திருக்கிறதோ, அதே அளவுக்கு நாட்டைக் காக்கும் போர்வீரர்களின் உணர்வுகளும் இந்த பூமியோடு இணைந்திருக்கிறது. கார்கில் போரில் நமது ஒவ்வொரு வீரரும் நூற்றுக்கணக்கான எதிரிகள் மீது பலமான சேதத்தை ஏற்படுத்தினார்கள். தங்களின் இன்னுயிர்களை சற்றும் பொருட்படுத்தாது, எதிரிகளின் தீய முயற்சிகளை முறியடித்த வீரம் நிறைந்த இராணுவப் படையினருக்கு என் பல நூறு வணக்கங்கள். கார்கில் போர் எல்லைப் புறங்களில் மட்டுமே நடைபெறவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு கிராமம்-நகரமும் தத்தம் பங்களிப்பை இதற்கு அளித்தன. இந்தப் போரில் சமர் புரிந்த அத்துணை இராணுவ வீரர்களின் அன்னையர்களும், சகோதரிகளும் கூட இதில் ஈடுபட்டார்கள். கழுத்தில் ஏறிய மங்கல நாணின் மஞ்சள் கூட கலையாத மகள்களும் கூட இந்தச் சமரில் பங்கெடுத்தார்கள். இராணுவ வீரனாக இருக்கும் தங்கள் மகனைப் போருக்கு அனுப்பிய தந்தைமார்களும் இதில் பங்கெடுத்தார்கள். தந்தையின் கரம் பற்றி நடைபயிலத் தொடங்கி இருந்த மகன்களும் கூட இதில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். இத்துணை பேர்களின் தியாகங்களின் காரணமாகத் தான், இன்று இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நடை போட்டு வருகிறது. அந்த வகையில் கார்கில் போரில் வெற்றி வாகை சூடிய நாளான இன்று, இத்துணை தியாகங்கள் புரிந்த நமது வீர தீரர்களுக்கு என் பல நூறு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூலை 26ம் தேதியை நான் வேறு ஒரு விஷயத்துக்காகவும் மகத்துவம் நிறைந்ததாகக் கருதுகிறேன். 2014ம் ஆண்டு நமது அரசு அமைந்த பிறகு, சில மாதங்களிலேயே ஜூலை மாதம் 26ம் தேதியன்று நாங்கள் mygov இணைய தளத்தைத் தொடக்கினோம். அந்த வகையில், மக்களாட்சியில் மக்களின் பங்கெடுப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் உறுதிப் பாடாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனையும் வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோளாக இருந்து வருகிறது. அரசு அமைந்து சுமார் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் mygov இணைய தளத்துக்கு சென்றிருக்கிறார்கள், சுமார் 5 ½ இலட்சம் பேர்கள் இதில் தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 50000க்கும் மேற்பட்டவர்கள் PMO applicationஇல் தங்கள் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதும், இதற்காக தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்திருக்கிறார்கள் என்பதும், தங்கள் சிந்தையை இதில் செலுத்தி இருக்கிறார்கள் என்பதும், மேலும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதை அவர்கள் மகத்துவம் நிறைந்த ஒன்றாகக் கருதி இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அருமையான ஆலோசனைகளை அளித்து இருக்கிறார்கள். கான்பூரைச் சேர்ந்த அகிலேஷ் வாஜ்பேயி அவர்கள் ஒரு நல்ல கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். உடல் ஊனமுற்றவர்களுக்கு இரயில்வேத் துறையின் IRCTC இணையதளம் வாயிலாக ஒதுக்கீடு முறையில் பயணச்சீட்டு வழங்கலாமே என்பது தான் அது. உடல் ஊனமுற்றவர்களும் பயணச்சீட்டு பெறுவதில் மற்றவர்கள் சந்திக்கும் அதே இடர்பாடுகளைச் சந்திப்பது என்பது எந்த வகையில் சரியானது? விஷயம் என்னவோ எளிமையானதாக இருக்கலாம். ஆனால் இது தொடர்பாக அரசில் இருப்பவர்களுக்கு இது வரை கவனம் செல்லவில்லை. ஆனால் சகோதரர் அகிலேஷ் வாஜ்பேயி அவர்களின் ஆலோசனையை, அரசு முனைப்போடு பரிசீலனை செய்ததோடு, இன்று நாங்கள் அதை அமல் படுத்தியும் இருக்கிறோம். இன்று அரசின் எந்த ஒரு திட்டத்துக்கும் logo, tag line ஏற்படுத்தப் படுகிறது, திட்டங்கள் தீட்டப்படுகின்றன, கொள்கைகள் உருவாக்கம் பெறுகின்றன. Mygov இணைய தளத்தில் மிகவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பெறப்படுகின்றன. ஆட்சி நிர்வாகத்தில் ஒரு புதிய தென்றல் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. ஒரு புத்துணர்வு உணரப்படுகிறது. இப்போதெல்லாம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நான் எது பற்றி உரையாற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் கூட mygov முகவரியில் எனக்கு ஆலோசனைகள் வரத் தொடங்கி இருக்கின்றன.
சென்னையைச் சேர்ந்த சுசித்ரா இராகவாச்சாரி அவர்கள் பல ஆலோசனைகளை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், தூய்மையான கங்கை, தூய்மையான இந்தியா பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது என் மனதில் ஒரு எண்ணத்தை முடுக்கி விட்டிருக்கிறது. இந்த முறை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று நான் எது பற்றி உரையாற்ற வேண்டும் என்று நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே! Mygov முகவரியில் அனுப்பலாம், வானொலிக்கு எழுதலாம், பிரதம மந்திரியின் அலுவலகத்துக்கு அனுப்பலாம். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்கான எனது உரையில் என்ன இடம் பெற வேண்டும் என்பதை நான் பொது மக்களிடமிருந்து பெற வேண்டும் என்பது அருமையான யோசனையாக இருக்கிறது. கண்டிப்பாக நீங்கள் அருமையான யோசனைகளை எனக்கு அளிப்பீர்கள் என்று கருதுகிறேன்.
ஒரு விஷயம் தொடர்பாக நான் என் கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த ஒரு உபதேசமும் அளிக்க விரும்பவில்லை, அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புக்கள் போன்றவை தங்கள் பொறுப்புக்கள் மற்றும் கடமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்த ஒரு வழியையும் நான் தேடவில்லை. இரண்டு நாட்கள் முன்பாக தில்லியில் நிகழ்ந்த ஒரு விபத்து மீது என் சிந்தை சென்றது. அந்த விபத்துக்குப் பின்னர், ஸ்கூட்டரில் பயணம் செய்த அந்த நபரின் உயிர் பத்து நிமிடங்கள் வரை துடிதுடித்துப் பிரிந்தது. அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நீங்கள் சாலைப் பாதுகாப்பு பற்றி ஏதேனும் உரையாற்ற வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெங்களூரூவின் ஹோஷாகோட்டையைச் சேர்ந்த அக்ஷை, பூணேயின் அமய் ஜோஷி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூர்பித்ரியின் ப்ரஸன்னா காகுஞ்ஜே தவிர மேலும் பல பேர் இந்த விஷயம் தொடர்பாக தங்கள் கவலையை வெளிப் படுத்தி இருக்கிறார்கள். உங்கள் அனைவரின் கவலையும் சரி தான். புள்ளி விபரங்களை நாம் அலசினால், இருதயமே நின்று போகும் அளவுக்கு இருக்கிறது. நமது நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. சாலை விபத்து காரணமாக, 4 நிமிடத்துக்கு ஒரு மரணம் நிகழ்கிறது. மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், மரணத்தைத் தழுவும் 3ல் ஒரு பங்கு பேர்களின் வயது 15 முதல் 25க்கு உள்ளாக இருக்கிறது. ஒவ்வொரு மரணமும் அவர்களின் குடும்பங்களை உலுக்கிப் போடுகிறது. நிர்வாகம், தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஆனால் பிள்ளைகள் ஓட்டும் வாகனம் 2சக்கர வாகனமோ, 4 சக்கர வாகனமோ, எதுவாக இருந்தாலும், பாதுகாப்புத் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டும் என்பது தொடர்பான ஒரு சூழலை குடும்பத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நான் பெற்றோர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ”அப்பா, சீக்கிரம் வீடு திரும்புங்கள்” என்ற வாக்கியம் சில ஆட்டோ ரிக்ஷாக்களின் பின்புறத்தில் எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இது இதயத்தை எந்த அளவுக்கு தொடும் விதமாக இருக்கிறது, இல்லையா? இந்த விஷயம் தொடர்பாக அரசு கூட பல முனைப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறது. சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வாகட்டும், சாலை அமைத்தல் தொடர்பான பொறியியல் ஆகட்டும், சட்ட அமலாக்கமாகட்டும், விபத்துக்குப் பின்னர், காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதாகட்டும், இவை அத்தனையையும் மனதில் கொண்டு தான் நாங்கள் ”சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை” கொண்டு வர இருக்கிறோம். இனி வரும் நாட்களில் தேசிய அளவிலான சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் சாலைப் பாதுகாப்பு செயல்திட்டத்தை அமல் செய்யும் விதமாகவும் நாங்கள் பல மகத்துவம் நிறைந்த முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். மேலும் ஒரு செயல்திட்டத்தையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம், அது தான் cashless treatment, அதாவது பணம் செலுத்தா சிகிச்சை. குட்காவ், ஜெய்பூர் மற்றும் வடோதரா தொடங்கி, மும்பை, ராஞ்சி போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் நாங்கள் cashless treatment தொடர்பாக முக்கியத்துவம் அளிக்க இருக்கிறோம். இதன் படி, பணம் இருந்தாலும் இல்லா விட்டாலும், யார் பணம் அளிப்பார்கள் என்பது தொடர்பான விஷயங்களைத் தள்ளி வைத்து விட்டு, முதல் 50 மணி நேரத்தில் மிகச் சிறப்பான உயிர் காப்பு நடவடிக்கைகள் பற்றியும், பராமரிப்பும் எப்படி கிடைக்கச் செய்வது என்பது பற்றியும் நாங்கள் சிந்தித்து வருகிறோம். நாடு முழுவதிலும் நடைபெறும் விபத்துக்கள் பற்றிய தகவலை அளிக்கும் விதமாக இலவச தொலைபேசி எண்ணான 1033, ஆம்புலன்ஸ் வசதி போன்ற அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் விபத்துக்குப் பிறகு நடைபெற வேண்டியவை. விபத்துக்களே நடைபெறாமல் இருப்பது எப்படி என்ற கண்ணோட்டத்திலேயே முதன்மையாக நாம் இதை அணுக வேண்டும். உண்மையிலேயே ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பானது.
பணியாளர்கள் கர்ம யோகிகளாக இருக்க வேண்டும் என்று நான் சில வேளைகளில் கூறுவதுண்டு. கடந்த சில நாட்களில் இந்தக் கருத்தை ஒட்டிய என் மனத்தைத் தொட்ட சில நிகழ்வுகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சில வேளைகளில் இடைவிடாது பணியாற்றிய பின் ஊழியர்கள் களைப்படைந்து விடுவார்கள். “ஊதியம் தான் கிடைக்கிறதே, வேலையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்ற எண்ணப்பாடு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படலாம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரயில்வேயில் பணி புரியும் ஒரு ஊழியர் பற்றிய தகவல் கிடைத்தது. நாக்பூர் பிரிவில், விஜய் பிஸ்வால் என்ற பெயரிலான ஒரு பயணச் சீட்டு பரிசோதகர் பணி புரிகிறார். அவருக்கு சித்திரம் வரைவதில் அதிக நாட்டம் இருக்கிறது. அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று சித்திரம் வரைந்திருக்கலாம். ஆனால் அவர் இரயில்வேப் பணியையே தன் முனைப்பாகக் கொண்டிருக்கிறார். அவர் இரயில்வேயில் தனக்கு விதிக்கப்பட்ட பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இரயில்வே தொடர்பான பல வகையான ஓவியங்களை தீட்டியும் வருகிறார். அவருக்கு ஒரு புறம் இதனால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது, மறு புறம் தனது வேலையில் ஈடுபாடும் நாட்டமும் அதிகரிக்கவும் செய்கிறது. அவரவர் தாங்கள் புரியும் வேலைகளிலும் கூட எப்படி உயிரூட்டத்தைக் கொண்டு வர முடிகிறது என்பதைப் பார்க்கும் போது நல்லதொரு உணர்வு ஏற்படுகிறது. தனது நாட்டம், தனது கலையுணர்வு, தனது திறம் ஆகியவற்றை தனது பணியோடு கூட எப்படி இணைக்க முடிகிறது என்பதை விஜய் பிஸ்வால் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் பிஸ்வால் அவர்களின் சித்திரம் இனி வரும் நாட்களில் பேசப் படும் ஒரு பொருளாக அமையலாம் என்று நம்புகிறேன்.
மேலும் ஒரு விஷயம் எனக்குத் தோன்றியது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் ஒரு பெரிய குழு செயல் படுத்தி வரும் ஒரு திட்டம் என் மனதைத் தொடுகிறது, இது எனக்கு விருப்பமானதாகவும் இருக்கிறது. அவர்கள் “ஆப்பரேஷன் மலயுத்தம்” என்ற ஒரு இயக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் தூய்மையான இந்தியா திட்டத்துக்கு ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி, தனது சகோதரிக்கு கழிப்பறை வசதி அமைத்துக் கொடுப்பரே சிறந்த சகோதரன் என்ற கருத்திலான “ப்ரதர் நம்பர் ஒன்” என்ற பெயர் கொண்ட ஒரு இயக்கத்தையே அவர்கள் ஒட்டு மொத்த மாவட்டத்திலும் உருவாக்கி இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் எந்த ஒரு தாயோ அல்லது சகோதரியோ திறந்த வெளியில் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லக் கூடாது என்பதற்காக கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரனையும் ஊக்குவிக்கும் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், ரக்ஷா பந்தன் பண்டிகையின் பொருள் எப்படி மாறி விட்டது! நான் ஹர்தா மாவட்டத்தின் அரசு அதிகாரிகளின் ஒட்டு மொத்த குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது தான் ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். சில வேளைகளில், சில சின்னச்சின்ன விஷயங்கள் கூட மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன. ஆகையால் தான் நான் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சத்தீஸ்கட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்நந்த்காவில் கேஷ்லா என்ற ஒரு கிராமம் இருக்கிறது; கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து கழிப்பறைகள் அமைக்கும் ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த யாருக்கும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது என்னமோ நடந்தேறி இருந்தாலும், இது முழுமை பெற்ற போது, ஏதோ ஒரு பெரிய திருவிழாவைப் போல ஒட்டு மொத்த கிராமமுமே இதைக் கொண்டாடியது. இதை ஒரு சாதனையாகவே கருதி அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். சமூக வாழ்வில் விழுமியங்கள் எப்படி மாற்றம் அடைகின்றன, மக்களின் கண்ணோட்டம் எப்படி மாறுபாடு அடைந்து வருகிறது, நாட்டின் குடிமக்கள் நாட்டை எந்த வகையில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் என்பதை அறிவுறுத்தும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் வெளிப்பட்டு வருகின்றன.
கௌஹாத்தியைச் சேர்ந்த பாவேஷ் டே எனக்கு வடகிழக்கு மாநிலங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எழுதி இருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள், எனக்கு கணிசமாக அவர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். வடகிழக்கு மாநில மக்களுக்கெனவே பிரத்யேகமானதொரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது; அடல் பிஹாரி வாஜ்பேயி நாட்டின் பிரதமராக இருந்த போது, DONER என்ற பெயரிலான ஒரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, அதாவது வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கான அமைச்சகம் என்பது தான் அதன் பொருள். சரி, வடகிழக்கு மாநிலங்களின் நலன்களை நாம் தில்லியில் அமர்ந்து கொண்டு தீர்மானிக்க முடியாது, இல்லையா? ஆகையால், இந்திய அரசின் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அஸாம், நாகாலாந்து, மிஸோரம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் ஆகியன அடங்கிய வடகிழக்கு பிரதேசம் சென்றார்கள்; அங்கே 7நாட்கள் முகாமிட்டார்கள்; கிராமங்கள்-மாவட்டங்கள் ஆகியவற்றுக்குச் சென்று, அங்கிருக்கும் உள்ளாட்சி அமைப்புக்களின் பொறுப்பாளர்களைச் சந்தித்தார்கள்; மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசினார்கள்; குடிமக்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டார்கள். பிரச்சனைகளைக் கேட்டு, அவற்றை தீர்க்கும் முகமாக இந்திய அரசின் பங்களிப்பைப் பற்றி புரிந்து கொண்டார்கள். எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த DONER அமைச்சகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானமாக நாங்கள் இதை நிறைவேற்றினோம். இந்த முயற்சி தான் இனி வரும் நாட்களில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இத்தனை அழகான பிரதேசம், இத்தனை அருமையான மக்கள் இதை எல்லாம் பார்த்த பின்னர், இவர்களை முன்னேற்றியே ஆக வேண்டும், அவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும் என்று அங்கு சென்று வந்த அதிகாரிகள் மனதிலும் கூட ஒரு உணர்வு ஏற்பட்டது, ஒரு உறுதிப்பாடு தொனித்தது. அவர்கள் தில்லி திரும்பிய பிறகு கூட, அந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது எளிதாகி விட்டது. இது ஒரு அருமையான முயற்சி, தில்லியிலிருந்து தொலைவான பகுதிகளுக்குச் செல்லும் ஒரு முயற்சி. நான் ACT EAST கொள்கை என்று சொல்வது இதைத் தான். இது தான் என் மனதிற்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
எனது பிரியமான நாட்டு மக்களே,
செவ்வாய் கோள் பயணத் திட்டத்தின் வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த சில நாட்கள் முன்பாக இந்தியா தனது PSLV C28 மூலமாக இங்கிலாந்து நாட்டின் 5 செயற்கைக் கோள்களை ஏவி இருக்கிறது. இது தான் இது வரை இந்தியா ஏவியிருக்கும் மிக கனரக செயற்கைக்கோள். இந்தச் செய்தி அதிக கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லாது போனாலும், இது மிகப் பெரிய சாதனை. சில நேரங்களில் நாம் நாட்டின் இளைய சமுதாயத்தினரிடம், நீங்கள் வளர்ந்த பிறகு என்னவாக விரும்புகிறீர்கள் என்ற வினாவை எழுப்பும் போது, அவர்களில் நூற்றில் ஒருவர் தான் அதிகபட்சமாக நான் விஞ்ஞானியாக விரும்புகிறேன் என்று பதில் அளிப்பார். அறிவியல் தொடர்பாக நாட்டம் குறைவாக காணப்படுவது கவலை தரும் ஒரு விஷயமாக இருக்கிறது. அறிவியல்-தொழில்நுட்பம் என்பது வளர்ச்சியின் குறியீடாக அமைகிறது. நமது புதிய தலைமுறையினர் அறிவியலாளர்களாகும் கனவு காண வேண்டும், ஆய்வுகள்-புதுமைகள் படைப்பதில் நாட்டம் கொள்ள வேண்டும், அவர்களுக்குத் தேவையான ஊக்கம் அளிக்கப்பட வேண்டும், அவர்கள் திறமைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் – இது மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. இதனை அடியொற்றி இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு தேசிய கண்டுபிடிப்புக்கள் இயக்கத்தைத் தொடக்கி இருக்கிறது. நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இதனைத் தொடக்கி இருக்கிறார்கள். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்-IIT, தேசிய தொழில்நுட்பக் கழகங்கள்-NIT, மத்திய-மாநில பல்கலைக் கழகங்கள் ஆகியன mentor-வழிகாட்டிகளாக செயல்படும். எங்கெல்லாம் சாத்தியக்கூறு இருக்கிறதோ, அங்கெல்லாம் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பது, அவர்களுக்கு வழிகாட்டுவது, உதவிகள் செய்வது ஆகியவை மீது இந்த அமைப்புக்கள் தங்கள் முனைப்பை வெளிப்படுத்தும். நீங்கள் மெத்தப் படித்து வெகுவாக முன்னேறி இருக்கிறீர்கள், நீங்களும் கூட வாரத்தில் ஒன்றிரண்டு மணி நேரங்களை உங்கள் அருகில் இருக்கும் பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செலவு செய்யுங்கள், உங்கள் அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இது கண்டிப்பாக அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நான் அரசைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நமது கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வேண்டும், இல்லையா? இந்தப் பணி கடினமானது தான் என்றாலும், இதை நிறைவேற்றியே ஆக வேண்டும். இதற்கான வேலைகளும் முடுக்கி விடப் பட்டிருக்கிறன. இனிவரும் காலங்களில் அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும், அங்கே கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுக்காலங்களில் படிக்கும் போது, மின்சாரமின்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது, கிராமங்களில் சிறு-குறு தொழில்கள் செய்ய வேண்டும் எனும் போது, மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற சவாலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இன்றைய நிலையில், மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும் என்றாலும் கூட, வேறு ஒரு கிராமத்துக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. நகரங்களுக்குக் கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் கிராமங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும், கடைநிலை ஏழைக்கும் இந்த வசதிகள் வாய்க்கப் பெற வேண்டும். இதன் பொருட்டுத் தான் நாங்கள் “தீன் தயால் உபாத்யாய் கிராம் ஜோதி” திட்டத்தை தொடக்கி இருக்கிறோம். நமது நாடு மிகப் பெரிய நாடு, இங்கே பல்லாயிரம் கிராமங்கள் இருக்கின்றன, மிகத் தொலைவான பகுதிகளுக்கும் மின்சார வழங்கலை உறுதி செய்ய வேண்டும்; ஆனால் இவற்றை ஏழை பாழைகளுக்காக நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். இதைத் தொடக்கி விட்டோம், கண்டிப்பாக இதை நிறைவேற்றியே தீருவோம்.
இன்று மனதின் குரலில் பல விதமான விஷயங்களைப் பற்றி வெளிப்படுத்தத் தோன்றியது. ஒரு வகையில் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்கள் நம் நாட்டில் பண்டிகைகள்-கொண்டாட்டங்களின் மாதங்களாகத் திகழ்கின்றன. இந்தக் கொண்டாட்டங்களை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியை முன்னிட்டு நீங்கள் கண்டிப்பாக உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் கருத்துக்கள் எனக்கு பேருதவியாக இருக்கும். மிக்க நன்றி
எனதருமை நாட்டு மக்களே,
உங்கள் அனைவருக்கும் என் நல்வணக்கங்கள்! கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில்,. விடுமுறைக்காக நீங்கள் ஏதேனும் இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால், அங்கே ஏதும் அற்புதமான காட்சிகளை நீங்கள் காண நேர்ந்தால், அவற்றை incredible india hashtagஇல் பதிவு செய்யுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அவ்வாறு கூறிய போது, இந்த அளவுக்கு பிரும்மாண்டமான அளவுக்கு பதில்கள் உங்களிடமிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இலட்சக்கணக்கான பேர்கள், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் ஆகியவை மூலமாக புகைப்படம் அனுப்பி இருந்தார்கள். அவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இல்லை என்பதை மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். இந்தியா எத்தனை வகைப்பாடுகள் நிறைந்தது!! சின்னங்கள் ஆகட்டும், கலைகள் ஆகட்டும், இயற்கையாகட்டும், நீர்வீழ்ச்சிகள் ஆகட்டும், மலைகள்-ஆறுகள்-கடல்கள் ஆகட்டும், சுற்றுலா மூலமாக இந்த அளவுக்கு செயல்பட முடியும் என்று, நீங்கள் செய்திருக்கும் அளவுக்கு, இந்திய அரசு கூட யோசித்திருக்காது. அவற்றில் என் கருத்தைக் கவர்ந்த சிலவற்றை நானும் retweet செய்திருக்கிறேன். ஆந்திர பிரதேசத்தின் (B)பேலம் குகைகளின் புகைப்படங்களை சிலர் பதிவு செய்யவில்லை என்று சொன்னால், நாட்டின் பல பேர்களுக்கு அப்படிப்பட்ட குகைகள் இருக்கின்றன என்பது தெரியாமலே போயிருக்கும். மத்திய பிரதேசத்தின் ஓர்ச்சாவின் புகைப்படமும் இப்படித் தான்; ராஜஸ்தானத்தை நாம் எப்போதுமே நீர் குறைவான மாநிலம் என்று அறிவோம்; ஆனால் அங்கிருந்து ஒருவர் மேனால் நீர்வீழ்ச்சி பற்றிய புகைப்படங்களை அனுப்பும் போது, மிகவும் ஆச்சரியம் ஏற்படுகிறது. அதாவது உண்மையிலேயே, ஒரு அற்புதமான விஷயம் நடந்திருக்கிறது. இதை நாம் முன்னெடுத்துச் செல்வோம், தொடர்ந்து செயல்படுத்துவோம். உலகமே பார்த்து வியக்கும்; நமது நாட்டினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவார்கள்; வருங்கால சமுதாயம் இவை பற்றித் தெரிந்து கொள்ளும்.
எனதருமை நாட்டு மக்களே!
நீங்கள் என்னமோ என்னை நாட்டின் பிரதமர் ஆக்கி இருக்கிறீர்கள்! ஆனால் எனக்குள்ளே இருக்கும் மனிதன் சில வேளைகளில், பதவி, பட்டம் போன்ற வெளிப்புற நிலைகளிலிருந்து விலகி தனக்குள்ளே ஆழ்ந்து போகிறான். ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோக தினமும் இப்படித் தான் என்னை தன்னிலை மறக்கச் செய்தது. இந்த தினம் பற்றி நான் ஐ.நா. சபையில் உரையாற்றிய போது, ஒரு நல்ல விஷயம் நடக்கட்டுமே என்று தான் நினைத்தேன். ஆனால் ஜூன் மாதம் 21ம் தேதி நான் பார்த்த காட்சிகள் இருக்கிறதே - எங்கெல்லாம் சூரியன் உதித்தானோ, எங்கெல்லாம் அவன் கதிர்கள் புகுந்தனவோ..... யோகப் பயிற்சிகள் வாயிலாக சூரியனை வரவேற்காத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதிலும் இது வியாபித்திருந்தது. யோகப் பயிற்சிகள் உலகத்தில், சூரியன் மறைவதே இல்லை என்று நான் உறுதிபடச் சொல்ல முடியும். யோகத்தை உலகம் எந்த அளவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தனதாக்கிக் கொண்டிருக்கிறதோ, இதைப் பார்க்கும் போது, எந்த இந்தியனுக்குத் தான் மனதில் கௌரவமும் பெருமிதமும் பொங்காது?! நானுமே கூட ஆனந்த வெள்ளத்தில் திளைத்தேன்; மனம் புளகாங்கிதம் அடைந்தது. ஃப்ரான்ஸ் நாட்டு மக்களுக்கு சீன் நதியும் ஈஃபில் கோபுரமும் மிகவும் பெருமிதம் அளிக்கும் சின்னங்களாக இருக்கையில், அவர்களும் யோகப் பயிற்சி மேற்கொள்ள இந்தச் சின்னங்களை பின்புலமாகக் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ந்யூயார்க் மக்கள் யோகப்பயிற்சி மேற்கொள்ள டைம்ஸ் சதுக்கத்தை தெரிந்தெடுத்தார்கள். ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி பற்றிக் கூறும் போது மனதில் உடனடியாக, ஆபெரா ஹவுஸ் காட்சிகள் பளிச்சிடுகின்றன. ஆஸ்ட்ரேலிய நாட்டவர்கள் ஆபெரா ஹவுஸ் சின்னத்தின் முன்பாக யோகப் பயிற்சிகள் மேற்கொண்டார்கள். வட அமெரிக்கா மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு, மிலன் நகர டுமோ தேவாலயம் போன்ற பாரம்பரியம் மிக்க சின்னங்கள் பின்புலத்தில் யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது கௌரவம் அளிக்கும் விஷயம். ஜூன் மாதம் 21ம் தேதியன்று ஐ.நா. பொதுச் செயலாளர் பன் கீ மூன் அவர்கள் ஐ.நா. தலைமையகத்தில் யோகப் பயிற்சிகள் மேற்கொள்வதைப் நான் பார்த்த போது அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். அதே போல, ஐ.நா. அமைதி காக்கும் படையும் யோகப் பயிற்சிகளை அருமையாக செய்து காட்டினார்கள். இந்தியாவிலும் கூட, சியாச்செனின் வெண் கம்பளத்தின் மீது, நமது ராணுவ வீர்ர்கள் யோகப் பயிற்சி மேற்கொண்டார்கள். கடலில் நமது கடற்படையினர் நாற்புறமும் நீலக் கடல்கள் சூழ யோகப் பயிற்சிகள் செய்து காட்டினார்கள். தில்லியிலோ. அதிக எண்ணிக்கையில் யோகப் பயிற்சிகள் செய்து, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. ராஜ்பத் யோக்பத் ஆனது. நாட்டுக்கும் உலகுக்கும் நான் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஏதோ நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சடங்காக நடத்தப்பட்ட ஒன்று அல்ல. உலகின் அனைத்துக் கோடிகளிலும் ஒரு புதிய எழுச்சி, ஒரு புதிய உணர்வு, ஒரு புதிய ஆர்வம், ஒரு புதிய உற்சாகம் பெருக்கெடுத்ததை உணர முடிந்தது. சில நாட்கள் முன்பு வியட்நாமைச் சேர்ந்த ஒரு குழந்தை யோகப் பயிற்சி செய்த புகைப்படத்தை அதன் குடும்பம் ட்வீட் செய்திருந்தது; அது மிகவும் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது, உலகம் முழுவதிலும் அது பிரபலமானது. யோகப் பயிற்சி மேற்கொள்வதில் பெண்கள், ஆண்கள், வயதானோர், சிறுவர்கள், கிராமத்தவர்கள், நகரவாசிகள், வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என அனைவரும் இணைந்தார்கள். யோகம் உண்மையிலேயே உலகை இணைக்கும் ஒரு காரணியாக அமைந்தது. அறிவு ஜீவிகள் உலகம் இந்த நிகழ்வை எப்படி அலசும், விமர்சிக்கும் என்று எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தை நான் உணர்கிறேன், உலகம் இந்தியா பற்றித் தெரிந்து கொள்ள மிக ஆர்வம் கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இந்தியா பற்றிய ஒரு ஆர்வம் அதிகரித்திருக்கிறது, இந்தியாவின் விழுமியங்கள், பாரம்பரியம், பண்பாடு ஆகியவை பற்றி உலகம் தெரிந்து கொள்ள விருப்பப் படுகிறது. நமது இந்த மகத்தான பாரம்பரியத்தை எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல் உலகம் முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது நம் அனைவரின் கடமையாகும். உலகத்துக்கு இதை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். ஆனால் நமக்கு நமது பாரம்பரியம் பற்றிய பெருமிதமும் கௌரவமும் இருந்தால் தான், நாம் உலகுக்கு இதைச் சிறப்பாக எடுத்துரைக்க முடியும். சில வேளைகளில் ‘இதில் என்ன புதுமை இருக்கிறது’ என்று நாம் சிந்திக்கிறோம், எடுத்துக்காட்டாக நமது குடும்ப விழுமியங்களைச் சொல்லலாம். உலக மக்களுக்கு இந்தியாவின் குடும்ப விழுமியங்கள் மிகப் பெரிய விஷயம் என்பது நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. நமது குடும்ப பாரம்பரியங்கள், விழுமியங்கள் ஆகியன பற்றி நாம் ஏன் உலகுக்கு உரைக்கக் கூடாது? உலகம் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, கண்டிப்பாக தன் மூக்கின் மீது விரல் வைக்குமே. இப்படி நமது முன்னோர்கள் நமக்கு பரிசுகளாக விட்டுச் சென்ற பல பொக்கிஷங்கள் நம் வசம் புதைந்து கிடக்கின்றன. சிறப்பாக உள்ளவை மீது உலகுக்கு அதிகாரம் இருக்கிறது. சர்வதே யோக தினத்தின் வெற்றி மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றுடன் கூட ஒரு பொறுப்புணர்வை உண்டாக்குகிறது. உலகுக்கு மிக சிறப்பான யோகப் பயிற்றுனர்களை நாம் அளிக்க வேண்டும் என்பது நமது கடமையாகிறது. யோகத்தின் அனைத்து பாரம்பரியங்களையும் உலகம் ஒரே மேடையில் பார்க்க வைப்பது நமது பொறுப்பாகிறது. நான் நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் இளைஞர்களிடம் வைக்கும் விண்ணப்பம் இது தான் - இளைஞர்களான நீங்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் யோக செயல்பாடுகள் குறித்த திட்டம் தீட்டுங்கள். யோகம் தொடர்பான அமைப்புகள் பற்றிய அறிமுகம் கிடைக்கும், யோக குருமார்கள் பற்றிய அறிமுகம் ஏற்படும்; யோகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறும்; யோகம் பயில வேண்டுமென்றால் எங்கே பயில்வது, யோகப் பயிற்றுனர்கள் தேவை என்றால் எங்கே கிடைப்பார்கள் என்ற வகையிலான தரவுப்பட்டியல் தயார் செய்யப்படவேண்டும். இதை உங்களால் செய்ய முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வாருங்கள், ஏதோ ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் தொடங்கலாமே! இதுவுமே கூட ஒரு புதிய சக்தியாக உருவெடுக்குமே.
கடந்த சில நாட்களின் நிகழ்வுகளை வேறு கண்ணோட்டத்தில் கூடக் காண்கிறேன். பணியாற்றும் அரசு!, விரைந்து செயல்புரியும் அரசு! இலக்கு என்று ஒன்றை விதித்துக் கொண்ட பின்னர் எப்படி வேலை முடுக்கி விடப் படுகிறது என்பதை நாம் கடந்த சில நாட்களில் பார்க்க முடிந்தது. நாலாபக்கமும் நிராசையும் ஏமாற்றமும் நிறைந்திருந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஓராண்டு முன்பாக, நாலா திசைகளிலும், “எதுவுமே நடக்கவில்லை, எதுவுமே நடப்பதில்லை” என்ற உணர்வு தான் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அரசில் ஆயுஷ் என்ற ஒரு துறை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? யாருடைய கவனமும் அதன் பக்கம் திரும்பவே செய்யாது. 5 ஆண்டுகளில் 2, 4 முறைகள் அது பற்றிய செய்தி வெளிவரும், ஒரு மூலையில் இருந்த ஒரு சிறிய துறை. ஆனால் யோக தினத்தின் போது அது தான் தலைமை வகித்தது. மிகச் சிறிய இந்தத் துறை உலக அளவில் மிகப் பெரிய பணியாற்றிக் காட்டியிருக்கிறது. இலக்கு நம் முன்பாக இருக்கும் போது, மிகச் சிறிய அமைப்புகள் கூட எத்தனை மகத்தான பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நம்மவர்கள் எப்படி ஏமன் நாட்டில் சிக்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களை மீட்டார்கள் என்பதை உலகமே வியந்து பார்த்தது. சில மணி நேரத்திலேயே இந்தியர்கள் நேபாளம் விரைந்து சென்று உதவிக் கரம் நீட்டினார்கள் என்பதை உலகம் பார்த்து மலைத்தது. பணியாற்றும் அரசு இது. மக்கள் நிதித் திட்டத்தின் படி வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அனைத்து வங்கிப் பணியாளர்களும் களத்தில் குதித்து, சில நாட்களிலேயே கோடிக்கணக்கான நாட்டு மக்களை வங்கிகளோடு இணைத்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று நான் செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பள்ளிகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தேன்; அடுத்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்கு உள்ளாக இந்த வேலையை நாம் செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். 60 ஆண்டுகளாக எந்த வேலை முடிக்க முடியாமல் போனதோ, அதை ஒரே ஆண்டில் முடிக்க வேண்டும் என்றால் அது சாகஸம் நிறைந்த முனைப்பு தான். சுமார் 4 1/2 இலட்சம் கழிப்பறைகள் உருவாக்கப்பட வேண்டும்; ஆனால் இன்று, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டும் பணி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது என்பது எனக்கு பெருமிதம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதாவது அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற வகையில் அரசு, மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் சுயநலமில்லாத முறையில், நாட்டுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள விரும்புகிறார்கள். நாம் மனதில் உறுதி பூண்டு செயல்படத் தொடங்கினோமேயானால், அரசும் விரைந்து செயல்படும், அரசுப் பணியாளர்களும் விரைந்து செயல்படுவார்கள், சாமான்யனும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவான். இது என்னுடைய சொந்த அனுபவம். இது தான் நாட்டை முன்னேற்றும் உண்மையான சக்தி.
கடந்த மாதம் கோல்காத்தாவிலிருந்து 3 மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருந்தோம். மிகக் குறைவான காலத்தில், மிகவும் ஆக்கபூர்வமான முறையில் பலன்கள் கிடைத்தன. இந்தியாவில் மக்களுக்கான ஆயுள் காப்பீடு என்ற வகையில் அதிக திட்டங்கள் தீட்டப்பட்டதில்லை. ஆனால் இந்த 3 திட்டங்கள் வாயிலாக, சமூக நலத் துறையில் ஒரு மிகப் பெரிய பாய்ச்சலில் நாம் ஈடுபடுகிறோம். இத்தனை குறைவான காலகட்டத்தில் பத்து கோடிகளுக்கும் அதிகமானோர் இந்த மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் தங்களை ஏதோ ஒரு வகையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். என் மனதில் ஒரு எண்ணம் எழுகிறது, அதை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் பண்டிகை வருகிறது, நாட்டு மக்கள் நாம் அனைவரும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்பாக ஒரு பலம் மிக்க மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கலாமே! நமது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளுக்கு, இந்த மக்கள் ஆயுள் காப்பீட்டின் பயன்களை அளிக்கலாமே! நமது இல்லங்களில் உணவு சமைக்கும் பெண்ணோ, வீட்டுப் பாத்திரங்களைக் கழுவும் சகோதரியோ, வயல் வெளிகளில் பணி புரியும் மகளிரோ, ஏன், நமது குடும்பத்தின் சகோதரியாக கூட இருக்கலாம். புனித ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாம் 12 ரூபாய்கள் அல்லது 330 ரூபாய்கள் மதிப்பிலான, அவர்கள் வாழ்கை முழுவதுக்குமான மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டப் பாலிஸியை, அவர்களுக்கு பரிசாக அளிக்கலாமே!! இது ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ஒரு சகோதரன் தன் சகோதரிக்கு அளிக்க கூடிய மிகச் சிறந்த பரிசாக அமையலாம். ரக்ஷா பந்தன் என்ற புனித நாளை இலக்காக கொண்டு நாம் ஏன் 2 கோடி, 4 கோடி, 6 கோடி, 10 கோடி என நாடு முழுவதிலும் இருக்கும் சகோதரிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் செயல்பட முடியாது? வாருங்கள், அனைவருமாக என்னோடு இணைந்து, இந்த உறுதிப் பாட்டை நிறைவு செய்யும் வகையில் முயற்சி செய்வோம்.
நான் மனதின் குரலை ஒலிக்கும் போது, பல மக்கள் எனக்கு ஆலோசனைகளை அளிக்கிறார்கள். இந்த முறை, பருவ மழை குறித்து நான் ஏதும் தெரிவிக்க வேண்டும் என்று பல பேர்கள் எனக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்கள். திருவாளர்கள், நாகபுரியின் யோகேஷ் தாண்டேகர், மைசூரின் ஹர்ஷ்வர்த்தன், ப்ரவீண் நாட்கர்ணி, திவ்யான்ஷு குப்தா ஆகியோர் பருவமழை குறித்து நீங்கள் கண்டிப்பாக மனதில் குரலில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல யோசனைகளையும் அவர்கள் தங்கள் பங்குக்கு அளித்திருக்கிறார்கள். பொதுவாகவே பருவமழைக்காலம் என்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்க கூடிய ஒரு பருவம். முதல் மழை என்பது அனைத்து வயதினரின் மனதையும் கவரக் கூடியது. நீங்களும் கூட, இந்த மழைக்காலத்தில், சூடான பக்கோடா, பஜ்ஜி, சோளம் ஆகியவற்றை ஆவி பறக்கும் தேநீருடன் சேர்த்து அருந்தி ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கலாம். எப்படி சூரியனின் கதிர்கள் நமக்கெல்லாம் உயிர்ப்பு அளிக்கிறதோ, அதே போலவே, மழையும் கூட நமக்கு சக்தி கொடுக்கிறது. ஒவ்வொரு சொட்டு மழைத் துளியும் மதிப்பு நிறைந்தது. ஒரு குடிமகன் என்ற முறையிலும், சமுதாயம் என்ற வகையிலும் நாம் ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்கும் உணர்வை வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும். கிராமத்தில் இருக்கும் நீர் கிராமத்திலேயே இருக்க வேண்டும், அதே போல நகரத்தில் இருக்கும் நீர் நகரப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதுவே நமது உறுதிப்பாடாக இருக்க வேண்டும்; மழைநீரை சேமிக்கும் முயற்சிகளில் நாம் தீவிரமாக ஈடுபட வேண்டும். மழை நீர் சேகரிக்கப்பட்டால், அது நிலத்தடி நீராக மாறும், நிலத்தின் நீர்வளம் பெருகும், ஆண்டு முழுவதும் நமது நீர்த் தேவைகள் நிறைவு காணும். மழை நீர் சேகரிப்பு என்பது ஒன்றும் புதிய கோட்பாடு அல்ல; இது பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்று தான். தடுப்பணைகள் ஆகட்டும், நீர்ப்பிடி மேலாண்மை ஆகட்டும், சிறிய குளங்களாகட்டும், ஏரிகள் ஆகட்டும், நாம் ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டும். காந்தியடிகளின் பிறந்த இடமான போர்பந்தருக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், அவரின் இல்லத்தைப் பார்க்க முடிந்தால், 200 ஆண்டுகள் பழமையான அவரது வீட்டினுள்ளே நீரைச் சேமிக்க நிலத்தடியில் ஒரு தொட்டி இருப்பதை காண முடியும் அதில் மழை நீர் நேரடியாகச் செல்லக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். 200 ஆண்டுகளுக்குப் பின்பு கூட இது இன்னமும் செயல்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் நீர் கொஞ்சம் கூட கெட்டுப் போவதில்லை. கடலோர நகரம் போர்பந்தர்; ஆனால் மழைநீரை சேமிப்பதன் வாயிலாக ஆண்டு முச்சூடும் இனிமையான நீர் கிடைக்கப் பெறுகிறது. அந்தக் காலத்திலேயே கூட இந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. இப்படி நாமும் கூட செய்யலாமே! இது ஒரு மக்கள் இயக்கமாக பரிமளிக்க வேண்டும். கிராமம் தோறும் இந்த முறை பின்பற்றப்பட வேண்டும்.
இதே போல பசுமை நமது கண்களை கொள்ளை கொள்கிறது. பசுமை நிறைந்த வாழ்க்கை எத்தனை ரம்மியமாக இருக்கிறது! மரம் செடிகொடிகள், தோட்டங்கள், பூங்காக்கள் என இவை அனைத்தும் வாழ்கையையே பசுமை நிறைந்த ஒன்றாக மாற்றி விடுகிறது, அல்லவா? நாம் அனைவரும் இந்த மழைக் காலத்தில் மரம் நடுதல், இது தொடர்பான இயக்கம் ஆகியவற்றை சமூக அமைப்புக்கள் மூலமாக, இளைஞர்கள் வாயிலாக மிகப் பெரிய அளவில் செயல்படுத்த வேண்டும். நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு ஆலோசனை வழங்குகிறேன், இந்த கிராமிய தொழில்நுட்பம் மிகவும் வெற்றிகரமான ஒன்று. நீங்கள் செடி நடும் போது, செடியின் அருகே, ஒரு பழைய மண்பானையை வைத்து விடுங்கள், அதில் நீர் நிரப்பி விடுங்கள். மாதம் ஒன்றிரண்டு முறைகள் நீங்கள் அதில் நீர் நிரப்பினால் கூட போதுமானது, மரம் மிக விரைவாக வளர்ச்சி காணும். நீங்கள் செய்து தான் பாருங்களேன்!! பழைய மண்பானை கிடைப்பதில் ஒன்றும் சிரமம் இருக்காது. நீங்கள் உங்கள் வயல்வெளியோரங்களில் வேலியை அமைப்பதற்கு பதிலாக, மரம் நடுங்கள்; இது உங்கள் செல்வமாக மாறும் என்று நான் என் விவசாய நண்பர்களிடம் கூறுவதுண்டு. மழை மிகவும் விரும்பப்படும் ஒன்று, ஆனந்தம் அளிக்கக் கூடியது என்றாலும் கூட, மழைக் காலத்தில் நிறைய நோய்கள் பரவக் கூடிய சாத்தியக்கூறும் இருக்கிறது. சிகிச்சை அளிக்க நேரம் கிடைக்காத அளவுக்கு மருத்துவர்களிடம் நோயாளிகள் அலைமோதுவார்கள். மழைக் காலத்தில் நீர் வாயிலாகப் பரவும் நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. சூழலில் ஈரப்பதம் நிறைந்திருக்கும் காரணத்தால், நுண்ணுயிர்க் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன என்பதால் சுகாதாரம் மிக அவசியமான ஒன்றாகிறது. சுத்தம் மிகவும் முக்கியமானதாக ஆகிறது. சுத்தமான நீரைக் குடிப்பது அவசியமாகிறது. பெரும்பாலான பேர்கள் இந்தப் பருவத்தில் நீரைக் கொதிக்க வைத்தே பருகுகிறார்கள். இதனால் நற்பலன்களும் உண்டு. நாம் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. நீரும் தேவை, மழையும் தேவை, ஆனால் நோய் நொடியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதும் முக்கியம்.
நாட்டுமக்களே,
நாம் இப்போது தான் 3 புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறோம், குறிப்பாக நகர்புற மக்களுக்காக. நமது நாட்டில் சிறியதும் பெரியதுமாக, சுமார் 500 நகரங்கள் இருக்கின்றன. waste to wealth - குப்பையிலிருந்து செல்வம் ஈட்ட முடியும்; உரங்கள் செய்ய முடியும், கட்டுமானக் கற்கள் தயாரிக்க முடியும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும், மாசடைந்த நீரைக் கூட சுத்திப்பு செய்து வயல் வெளிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும் - இந்த இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அம்ரித் திட்டத்தின் படி, நாம் நமது நகரங்களை வாழ உகந்தவைகளாக ஆக்கும் இயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இதே போல, உலகத் தரத்துக்கு இணையாக நம் நாடு ஆக வேண்டும். அந்த வகையில் நாட்டில் smart cities, ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப் பட வேண்டும். இன்னொரு புறம், நாட்டில் மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் கூட வாழ ஒரு வீடு இருக்க வேண்டும். அந்த வீடு நீர், மின்சாரம், கழிப்பறை ஆகியவை கொண்டதாக இருக்க வேண்டும். அருகாமையில் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூட வசதி இருக்க வேண்டும். 2022இல் இந்தியா, தான் சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இந்தியர்கள் அனைவருக்கும் வீடு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்த மூன்று விஷயங்களைக் கருத்தில் கொண்டு, நாம் ஒரு பெரிய திட்டத்தைத் தொடக்கி இருக்கிறோம். நகர்ப்புற வாழ்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படும் என்று எனக்கு அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது. நானே கூட சமூக வலைத்தளங்கள் வாயிலாக உங்களோடு தொடர்பு கொண்டிருக்கிறேன், மிகவும் புதுமையான யோசனைகள் எனக்கு உங்களிடமிருந்து வந்த வண்ணம் இருக்கின்றன, அரசு செயல்பாடுகள் பற்றிய நல்ல அம்சங்கள் - குறைகள் எனக்கு கிடைக்கிறன. சில வேளைகளில், தொலைவான ஊரகப்பகுதிகளில் இருக்கும் நபர்கள் அளிக்கும் ஆலோசனைகள் மனதைத் தொடுவதாக அமைகிறது.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்பது அரசின் நலத்திட்டங்களில் ஒன்று. ஆனால் அரசின் திட்டத்தை ஒரு தனி நபரோ, சமுதாயமோ, கிராமமோ தனதாக்கிக் கொள்ளும் போது, அதன் சக்தி அளப்பரியதாக மாறுகிறது. கடந்த நாட்களில், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பீபிபுர் கிராமத் தலைவர் சுனில் ஜகலான் அவர்கள் மிகவும் சுவாரசியமான முனைப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் selfie with daughter என்ற பெயரில் தன் கிராமத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தினார். இது அனைத்து தந்தைமார்கள் மத்தியிலும் தங்கள் மகள்களுடன் selfie புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய ஒரு உத்வேகத்தை அளித்தது. இந்தக் கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது; இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஹரியாணாவில் ஆண்குழந்தைகளோடு ஒப்பிடுகையில், பெண் குழந்தைகளின் விகிதம் மிகக் குறைவாக காணப்படுகிறது. நாட்டில் இது போல கவலை அளிக்கக் கூடிய விகிதாசாரம் உடைய 100 மாவட்டங்கள் இருக்கின்றன. ஹரியாணா மாநிலத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இதே ஹரியாணா மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தின் தலைவர், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கத்துக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகிறார் என்னும் போது அது மனதிற்கு அலாதியான ஆனந்தத்தை அளிக்கிறது, ஒரு புதிய நம்பிக்கை துளிர்க்கிறது. இது ஒரு புறம் எனக்கு மகிழ்வை அளித்தாலும், இந்த நிகழ்வு எனக்கு ஒரு கருத்தூக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகையால் நானும் உங்கள் முன் ஒரு கோரிக்கை வைக்கிறேன் - நீங்களும் selfie with daughter என்ற வகையில் உங்கள் மகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து hashtag selfie with daughterஇல் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள். கூடவே, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், படிக்க வைப்போம், இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு tag lineஐ நீங்கள் எழுதி அனுப்புங்கள், சிறப்பான வரிகளை எழுதி அனுப்புங்கள் - ஆங்கிலம், ஹிந்தி அல்லது உங்கள் தாய் மொழி என அது எந்த மொழியிலும் இருக்கலாம், மிகவும் கருதூக்கம் அளிக்கும் வகையில் நீங்கள் அனுப்பும் tag line இருந்தால், அது தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்களும் உங்கள் மகளும் இருக்கும் selfie புகைப்படத்தை retweet செய்வேன். நாமனைவரும் ஏதோ ஒரு வகையில் ”பெண் குழந்தையைப் பாதுகாப்போம், படிக்க வைப்போம்” என்ற திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அமைப்போம். சகோதரர் சுனில், ஹரியாணா மாநில பீபிபுர் கிராத்தில் தொடக்கி வைத்த இந்தப் பணியை நாம் அனைவருமாக இணைந்து முன்னெடுத்துச் செல்வோம். hashtag selfie with daughterஇல் நீங்கள் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பார்த்துக் கொண்டே இருங்கள், மகள்களின் உயர்வு, கௌரவம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்; நம் மீது படிந்திருக்கும் களங்கம் நீங்கி விடும்.
இந்த பருவமழைக்காலத்தில் உங்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்! மழைக்காலத்தை நன்றாக ரசியுங்கள்! நமது நாட்டை பசுமை மிக்கதாக மாற்றுங்கள்! சர்வதேச யோக தினத்தை ஒரு நாள் நிகழ்வாக மட்டுமே கருதாமல், தினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு நற்பலன்கள் கைகூடும். இதை நான் அனுபவரீதியாக கூறுகிறேன். இதை முன்னெடுத்துச் செல்லுங்கள். உங்கள் வாழ்கையில் அங்கமாகவே யோகப் பயிற்சிகள் மாறட்டும். இதே போல incredible india தொடர்பான உங்கள் பதிவுகளையும் எனக்கு அனுப்பி வையுங்கள். நமது நாட்டில் எத்தனை வகைப்பாடுகள் இருக்கின்றன என்பதை உலகின் அனைத்து நாடுகளுக்கும் இதன் மூலம் தெரியப் படுத்தலாமே!! ஆனால் இதில் கைவினை பற்றிய பதிவுகள் மிகவும் குறைவானதாகவே வந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் பகுதியில் இருக்கும் கைவினைத் திறம் பற்றிய பதிவுகளை எனக்கு கண்டிப்பாக incredible indiaவில் அனுப்பி வையுங்கள். ஏராளமான பொருள்கள் உங்கள் நகரில் தயாரிக்கப்படலாம், ஏழைகள் இதில் ஈடுபட்டிருக்கலாம், யாரிடம் திறன் இருக்கிறதோ, அவர்கள் தயாரிக்கலாம், அதையும் நீங்கள் பதிவு செய்யுங்களேன்!! உலகின் மூலை முடுக்கெங்கிலும் இந்தியாவின் சிறப்புக்களை கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கான எளிமையான வழிவகை ஒன்று நம்மிடம் இருக்கிறது. கண்டிப்பாக இதை நாம் கொண்டு சேர்க்கலாம்.
எனதருமை நாட்டு மக்களே!!
இன்று என் மனதின் குரலில் இவை ஒலித்தன. அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சிக்காக அடுத்த முறை உங்களை நான் சந்திக்கிறேன். நான் என் மனதின் குரல் நிகழ்ச்சியில் அரசின் நலத் திட்டங்கள் பற்றியே அறிவிக்க வேண்டும் என்று சில வேளைகளில் சிலர் கருதுகிறார்கள்; ஆனால் அவ்வாறு நான் கருதவில்லை. இந்த திட்டங்களைப் பற்றி நான் வேறு பல இடங்களில் பேசினாலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னமோ உங்களுடன் ஜனரஞ்சகமான முறையில் உரையாடவே விரும்புகிறேன். இது தான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நெஞ்சார்ந்த நன்றிகள்!!
मेरे प्यारे देशवासियो, पिछली बार जब मैंने आपसे मन की बात की थी, तब भूकंप की भयंकर घटना ने मुझे बहुत विचलित कर दिया था। मन बात करना नहीं चाहता था फिर भी मन की बात की थी। आज जब मैं मन की बात कर रहा हूँ, तो चारों तरफ भयंकर गर्म हवा, गर्मी, परेशानियां उसकी ख़बरें आ रही हैं। मेरी आप सब से प्रार्थना है कि इस गर्मी के समय हम अपना तो ख़याल रखें... हमें हर कोई कहता होगा बहुत ज़्यादा पानी पियें,शरीर को ढक कर के रखें... लेकिन मैं आप से कहता हूँ, हम अपने अगल-बगल में पशु-पक्षी की भी दरकार करें। ये अवसर होता है परिवार में बच्चों को एक काम दिया जाये कि वो घर के बाहर किसी बर्तन में पक्षियों को पीने के लिए पानी रखें, और ये भी देखें वो गर्म ना हो जाये। आप देखना परिवार में बच्चों के अच्छे संस्कार हो जायेंगें। और इस भयंकर गर्मी में पशु-पक्षियों की भी रक्षा हो जाएगी।
ये मौसम एक तरफ़ गर्मी का भी है, तो कहीं ख़ुशी कहीं ग़म का भी है। एग्ज़ाम देने के बाद जब तक नतीजे नहीं आते तब तक मन चैन से नहीं बैठता है। अब सी.बी.एस.ई., अलग-अलग बोर्ड एग्ज़ाम और दूसरे एग्ज़ाम पास करने वाले विद्यार्थी मित्रों को अपने नतीजे मिल गये हैं। मैं उन सब को बधाई देता हूँ। बहुत बहुत बधाई। मेरे मन की बात की सार्थकता मुझे उस बात से लगी कि जब मुझे कई विद्यार्थियों ने ये जानकारी दी, नतीजे आने के बाद कि एग्ज़ाम के पहले आपके मन की बात में जो कुछ भी सुना था, एग्ज़ाम के समय मैंने उसका पूरी तरह पालन किया था और उससे मुझे लाभ मिला। ख़ैर, दोस्तो आपने मुझे ये लिखा मुझे अच्छा लगा। लेकिन आपकी सफलता का कारण कोई मेरी एक मन की बात नहीं है... आपकी सफलता का कारण आपने साल भर कड़ी मेहनत की है, पूरे परिवार ने आपके साथ जुड़ करके इस मेहनत में हिस्सेदारी की है। आपके स्कूल,आपके टीचर, हर किसी ने प्रयास किया है। लेकिन आपने अपने आप को हर किसी की अपेक्षा के अनुरूप ढाला है। मन की बात, परीक्षा में जाते-जाते समय जो टिप मिलती है न, वो प्रकार की थी। लेकिन मुझे आनंद इस बात का आया कि हाँ, आज मन की बात का कैसा उपयोग है, कितनी सार्थकता है। मुझे ख़ुशी हुई। मैं जब कह रहा हूँ कहीं ग़म, कहीं ख़ुशी... बहुत सारे मित्र हैं जो बहुत ही अच्छे मार्क्स से पास हुए होंगे। कुछ मेरे युवा मित्र पास तो हुए होंगे, लेकिन हो सकता है मार्क्स कम आये होंगे। और कुछ ऐसे भी होंगे कि जो विफल हो गये होंगे। जो उत्तीर्ण हुए हैं उनके लिए मेरा इतना ही सुझाव है कि आप उस मोड़ पर हैं जहाँ से आप अपने करियर का रास्ता चुन रहे हैं। अब आपको तय करना है आगे का रास्ता कौन सा होगा। और वो भी, किस प्रकार के आगे भी इच्छा का मार्ग आप चुनते हैं उसपर निर्भर करेगा। आम तौर पर ज़्यादातर विद्यार्थियों को पता भी नहीं होता है क्या पढ़ना है, क्यों पढ़ना है, कहाँ जाना है, लक्ष्य क्या है। ज़्यादातर अपने सराउंन्डिंग में जो बातें होती हैं, मित्रों में, परिवारों में, यार-दोस्तों में, या अपने माँ-बाप की जो कामनायें रहती हैं, उसके आस-पास निर्णय होते हैं। अब जगत बहुत बड़ा हो चुका है। विषयों की भी सीमायें नहीं हैं, अवसरों की भी सीमायें नहीं हैं। आप ज़रा साहस के साथ आपकी रूचि, प्रकृति, प्रवृत्ति के हिसाब से रास्ता चुनिए। प्रचलित मार्गों पर ही जाकर के अपने को खींचते क्यों हो? कोशिश कीजिये। और आप ख़ुद को जानिए और जानकर के आपके भीतर जो उत्तम चीज़ें हैं, उसको सँवारने का अवसर मिले, ऐसी पढ़ाई के क्षेत्र क्यों न चुनें? लेकिन कभी ये भी सोचना चाहिये, कि मैं जो कुछ भी बनूँगा, जो कुछ भी सीखूंगा, मेरे देश के लिए उसमें काम आये ऐसा क्या होगा?
बहुत सी जगहें ऐसी हैं... आपको हैरानी होगी... विश्व में जितने म्यूज़ियम बनते हैं, उसकी तुलना में भारत में म्यूज़ियम बहुत कम बनते हैं। और कभी कभी इस म्यूज़ियम के लिए योग्य व्यक्तियों को ढूंढना भी बड़ा मुश्किल हो जाता है। क्योंकि परंपरागत रूप से बहुत पॉपुलर क्षेत्र नहीं है। ख़ैर, मैं कोई, कोई एक बात पर आपको खींचना नहीं चाहता हूँ। लेकिन, कहने का तात्पर्य है कि देश को उत्तम शिक्षकों की ज़रूरत है तो उत्तम सैनिकों की भी ज़रूरत है, उत्तम वैज्ञानिकों की ज़रूरत है तो उत्तम कलाकार और संगीतकारों की भी आवश्यकता है। खेल-कूद कितना बड़ा क्षेत्र है, और खिलाडियों के सिवाय भी खेल कूद जगत के लिए कितने उत्तम ह्यूमन रिसोर्स की आवश्यकता होती है। यानि इतने सारे क्षेत्र हैं, इतनी विविधताओं से भरा हुआ विश्व है। हम ज़रूर प्रयास करें, साहस करें। आपकी शक्ति, आपका सामर्थ्य, आपके सपने देश के सपनों से भी मेलजोल वाले होने चाहिये। ये मौक़ा है आपको अपनी राह चुनने का।
जो विफल हुए हैं, उनसे मैं यही कहूँगा कि ज़िन्दगी में सफलता विफलता स्वाभाविक है। जो विफलता को एक अवसर मानता है, वो सफलता का शिलान्यास भी करता है। जो विफलता से खुद को विफल बना देता है, वो कभी जीवन में सफल नहीं होता है। हम विफलता से भी बहुत कुछ सीख सकते हैं। और कभी हम ये क्यों न मानें, कि आज की आप की विफलता आपको पहचानने का एक अवसर भी बन सकती है, आपकी शक्तियों को जानने का अवसर बन सकती है? और हो सकता है कि आप अपनी शक्तियों को जान करके, अपनी ऊर्जा को जान करके एक नया रास्ता भी चुन लें।
मुझे हमारे देश के पूर्व राष्ट्रपति श्रीमान ए.पी.जे. अब्दुल कलाम जी की याद आती है। उन्होंने अपनी किताब‘माई जर्नी – ट्रांस्फोर्मिंग ड्रीम्स इनटू एक्शन’, उसमें अपने जीवन का एक प्रसंग लिखा है। उन्होंने कहा है कि मुझे पायलट बनने की इच्छा थी, बहुत सपना था, मैं पायलट बनूँ। लेकिन जब मैं पायलट बनने गया तो मैं फ़ेल हो गया, मैं विफल हो गया, नापास हो गया। अब आप देखिये, उनका नापास होना, उनका विफल होना भी कितना बड़ा अवसर बन गया। वो देश के महान वैज्ञानिक बन गये। राष्ट्रपति बने। और देश की आण्विक शक्ति के लिए उनका बहुत बड़ा योगदान रहा। और इसलिये मैं कहता हूँ दोस्तो, कि विफलता के बोझ में दबना मत। विफलता भी एक अवसर होती है। विफलता को ऐसे मत जाने दीजिये। विफलता को भी पकड़कर रखिये। ढूंढिए। विफलता के बीच भी आशा का अवसर समाहित होता है। और मेरी ख़ास आग्रहपूर्वक विनती है मेरे इन नौजवान दोस्तों को, और ख़ास करके उनके परिवारजनों को, कि बेटा अगर विफल हो गया तो माहौल ऐसा मत बनाइये की वो ज़िन्दगी में ही सारी आशाएं खो दे। कभी-कभी संतान की विफलता माँ-बाप के सपनों के साथ जुड़ जाती है और उसमें संकट पैदा हो जाते हैं। ऐसा नहीं होना चाहिये। विफलता को पचाने की ताक़त भी तो ज़िन्दगी जीने की ताक़त देती है। मैं फिर एक बार सभी मेरे सफल युवा मित्रों को शुभकामनाएं देता हूँ। और विफल मित्रों को अवसर ढूँढने का मौक़ा मिला है, इसलिए भी मैं इसे शुभकामनाएं ही देता हूँ। आगे बढ़ने का, विश्वास जगाने का प्रयास कीजिये।
पिछली मन की बात और आज जब मैं आपके बीच बात कर रहा हूँ, इस बीच बहुत सारी बातें हो गईं। मेरी सरकार का एक साल हुआ, पूरे देश ने उसका बारीकी से विश्लेषण किया, आलोचना की और बहुत सारे लोगों ने हमें डिस्टिंक्शन मार्क्स भी दे दिए। वैसे लोकतंत्र में ये मंथन बहुत आवश्यक होता है, पक्ष-विपक्ष आवश्यक होता है। क्या कमियां रहीं, उसको भी जानना बहुत ज़रूरी होता है। क्या अच्छाइयां रहीं, उसका भी अपना एक लाभ होता है।
लेकिन मेरे लिए इससे भी ज़्यादा गत महीने की दो बातें मेरे मन को आनंद देती हैं। हमारे देश में ग़रीबों के लिए कुछ न कुछ करने की मेरे दिल में हमेशा एक तड़प रहती है। नई-नई चीज़ें सोचता हूँ, सुझाव आये तो उसको स्वीकार करता हूँ। हमने गत मास प्रधानमंत्री सुरक्षा बीमा योजना, प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना, अटल पेंशन योजना - सामाजिक सुरक्षा की तीन योजनाओं को लॉन्च किया। उन योजनाओं को अभी तो बीस दिन नहीं हुए हैं, लेकिन आज मैं गर्व के साथ कहता हूँ... शायद ही हमारे देश में, सरकार पर भरोसा करके, सरकार की योजनाओं पर भरोसा करके, इतनी बड़ी मात्रा में सामान्य मानवी उससे जुड़ जाये... मुझे ये बताते हुए ख़ुशी होती है कि सिर्फ़ बीस दिन के अल्प समय में आठ करोड़, बावन लाख से अधिक लोगों ने इन योजनाओं में अपना नामांकन करवा दिया, योजनाओं में शरीक हो गये। सामाजिक सुरक्षा की दिशा में ये हमारा बहुत अहम क़दम है। और उसका बहुत लाभ आने वाले दिनों में मिलने वाला है।
जिनके पास अब तक ये बात न पहुँची हो उनसे मेरा आग्रह है कि आप फ़ायदा उठाइये। कोई सोच सकता है क्या, महीने का एक रुपया, बारह महीने के सिर्फ़ बारह रूपये, और आप को सुरक्षा बीमा योजना मिल जाये। जीवन ज्योति बीमा योजना - रोज़ का एक रूपये से भी कम, यानि साल का तीन सौ तीस रूपये। मैं इसीलिए कहता हूँ कि ग़रीबों को औरों पर आश्रित न रहना पड़े। ग़रीब स्वयं सशक्त बने। उस दिशा में हम एक के बाद एक क़दम उठा रहे हैं। और मैं तो एक ऐसी फौज बनाना चाहता हूँ, और फौज भी मैं ग़रीबों में से ही चुनना चाहता हूँ। और ग़रीबों में से बनी हुई मेरी ये फौज, ग़रीबी के खिलाफ लड़ाई लड़ेगी, ग़रीबी को परास्त करेगी। और देश में कई वर्षों का हमारे सर पर ये बोझ है, उस ग़रीबी से मुक्ति पाने का हम निरंतर प्रयास करते रहेंगे और सफलता पायेंगे।
दूसरी एक महत्वपूर्ण बात जिससे मुझे आनंद आ रहा है, वो है किसान टीवी चैनल । वैसे तो देश में टीवी चैनेलों की भरमार है, क्या नहीं है, कार्टून की भी चैनलें चलती हैं, स्पोर्ट्स की चैनल चलती हैं, न्यूज़ की चलती है, एंटरटेनमेंट की चलती हैं। बहुत सारी चलती हैं। लेकिन मेरे लिए किसान चैनल महत्वपूर्ण इसलिए है कि मैं इससे भविष्य को बहुत भली भांति देख पाता हूँ।
मेरी दृष्टि में किसान चैनल एक खेत खलियान वाली ओपन यूनिवर्सिटी है। और ऐसी चैनल है, जिसका विद्यार्थी भी किसान है, और जिसका शिक्षक भी किसान है। उत्तम अनुभवों से सीखना, परम्परागत कृषि से आधुनिक कृषि की तरफ आगे बढ़ना, छोटे-छोटे ज़मीन के टुकड़े बचे हैं। परिवार बड़े होते गए, ज़मीन का हिस्सा छोटा होता गया, और तब हमारी ज़मीन की उत्पादकता कैसे बढ़े, फसल में किस प्रकार से परिवर्तन लाया जाए - इन बातों को सीखना-समझना ज़रूरी है। अब तो मौसम को भी पहले से जाना जा सकता है। ये सारी बातें लेकर के,ये टी० वी० चैनल काम करने वाली है और मेरे किसान भाइयों-बहिनों, इसमें हर जिले में किसान मोनिटरिंग की व्यवस्था की गयी है। आप उसको संपर्क ज़रूर करें।
मेरे मछुवारे भाई-बहनों को भी मैं कहना चाहूँगा, मछली पकड़ने के काम में जुड़े हुए लोग, उनके लिए भी इस किसान चैनल में बहुत कुछ है, पशुपालन भारत के ग्रामीण जीवन का परम्परागत काम है और कृषि में एक प्रकार से सहायक होने वाला क्षेत्र है, लेकिन दुनिया का अगर हिसाब देखें, तो दुनिया में पशुओं की संख्या की तुलना में जितना दूध उत्पादन होता है, भारत उसमें बहुत पीछे है। पशुओ की संख्या की तुलना में जितना दूध उत्पादन होना चाहिए, उतना हमारे देश में नहीं होता है। प्रति पशु अधिक दूध उत्पादन कैसे हो, पशु की देखभाल कैसे हो, उसका लालन-पालन कैसे हो, उसका खान पान क्या हो - परम्परागत रूप से तो हम बहुत कुछ करते हैं,लेकिन वैज्ञानिक तौर तरीकों से आगे बढ़ना बहुत ज़रूरी है और तभी जा करके कृषि के साथ पशुपालन भी आर्थिक रूप से हमें मजबूती दे सकता है, किसान को मजबूती दे सकता है, पशु पालक को मजबूती दे सकता है। हम किस प्रकार से इस क्षेत्र में आगे बढें, किस प्रकार से हम सफल हो, उस दिशा में वैज्ञानिक मार्गदर्शन आपको मिले।
मेरे प्यारे देश वासियों! याद है 21 जून? वैसे हमारे इस भू-भाग में 21 जून को इसलिए याद रखा जाता है कि ये सबसे लंबा दिवस होता है। लेकिन 21 जून अब विश्व के लिए एक नई पहचान बन गया है। गत सितम्बर महीने में यूनाइटेड नेशन्स में संबोधन करते हुए मैंने एक विषय रखा था और एक प्रस्ताव रखा था कि 21 जून को अंतरराष्ट्रीय योग-दिवस के रूप में मनाना चाहिए। और सारे विश्व को अचरज हो गया, आप को भी अचरज होगा, सौ दिन के भीतर भीतर एक सौ सतत्तर देशो के समर्थन से ये प्रस्ताव पारित हो गया, इस प्रकार के प्रस्ताव ऐसा यूनाइटेड नेशन्स के इतिहास में, सबसे ज्यादा देशों का समर्थन मिला, सबसे कम समय में प्रस्ताव पारित हुआ, और विश्व के सभी भू-भाग, इसमें शरीक हुए, किसी भी भारतीय के लिए, ये बहुत बड़ी गौरवपूर्ण घटना है।
लेकिन अब जिम्मेवारी हमारी बनती है। क्या कभी सोचा था हमने कि योग विश्व को भी जोड़ने का एक माध्यम बन सकता है? वसुधैव कुटुम्बकम की हमारे पूर्वजों ने जो कल्पना की थी, उसमें योग एक कैटलिटिक एजेंट के रूप में विश्व को जोड़ने का माध्यम बन रहा है। कितने बड़े गर्व की, ख़ुशी की बात है। लेकिन इसकी ताक़त तो तब बनेगी जब हम सब बहुत बड़ी मात्रा में योग के सही स्वरुप को, योग की सही शक्ति को, विश्व के सामने प्रस्तुत करें। योग दिल और दिमाग को जोड़ता है, योग रोगमुक्ति का भी माध्यम है, तो योग भोगमुक्ति का भी माध्यम है और अब तो में देख रहा हूँ, योग शरीर मन बुद्धि को ही जोड़ने का काम करे, उससे आगे विश्व को भी जोड़ने का काम कर सकता है।
हम क्यों न इसके एम्बेसेडर बने! हम क्यों न इस मानव कल्याण के लिए काम आने वाली, इस महत्वपूर्ण विद्या को सहज उपलब्ध कराएं। हिन्दुस्तान के हर कोने में 21 जून को योग दिवस मनाया जाए। आपके रिश्तेदार दुनिया के किसी भी हिस्से में रहते हों, आपके मित्र परिवार जन कहीं रहते हो, आप उनको भी टेलीफ़ोन करके बताएं कि वे भी वहाँ लोगो को इकट्ठा करके योग दिवस मनायें। अगर उनको योग का कोई ज्ञान नहीं है तो कोई किताब लेकर के, लेकिन पढ़कर के भी सबको समझाए कि योग क्या होता है। एक पत्र पढ़ लें, लेकिन मैं मानता हूँ कि हमने योग दिवस को सचमुच में विश्व कल्याण के लिए एक महत्वपूर्ण क़दम के रूप में, मानव जाति के कल्याण के रूप में और तनाव से ज़िन्दगी से गुजर रहा मानव समूह, कठिनाइयों के बीच हताश निराश बैठे हुए मानव को, नई चेतना, ऊर्जा देने का सामर्थ योग में है।
मैं चाहूँगा कि विश्व ने जिसको स्वीकार किया है, विश्व ने जिसे सम्मानित किया है, विश्व को भारत ने जिसे दिया है, ये योग हम सबके लिए गर्व का विषय बनना चाहिए। अभी तीन सप्ताह बाकी है आप ज़रूर प्रयास करें,ज़रूर जुड़ें और औरों को भी जोडें, ये मैं आग्रह करूंगा।
मैं एक बात और कहना चाहूँगा खास करके मेरे सेना के जवानों को, जो आज देश की सुरक्षा में जुटे हुए उनको भी और जो आज सेना से निवृत्त हो करके अपना जीवन यापन कर रहे, देश के लिए त्याग तपस्या करने वाले जवानों को, और मैं ये बात एक प्रधानमन्त्री के तौर पर नहीं कर रहा हूँ। मेरे भीतर का इंसान, दिल की सच्चाई से, मन की गहराई से, मेरे देश के सैनिकों से मैं आज बात करना चाहता हूँ।
वन-रैंक, वन-पेंशन, क्या ये सच्चाई नहीं हैं कि चालीस साल से सवाल उलझा हुआ है? क्या ये सच्चाई नहीं हैं कि इसके पूर्व की सभी सरकारों ने इसकी बातें की, किया कुछ नहीं? मैं आपको विश्वास दिलाता हूँ। मैंने निवृत्त सेना के जवानों के बीच में वादा किया है कि मेरी सरकार वन-रैंक, वन-पेंशन लागू करेगी। हम जिम्मेवारी से हटते नहीं हैं और सरकार बनने के बाद, भिन्न-भिन्न विभाग इस पर काम भी कर रहे हैं। मैं जितना मानता था उतना सरल विषय नहीं हैं, पेचीदा है, और चालीस साल से उसमें समस्याओं को जोड़ा गया है। मैंने इसको सरल बनाने की दिशा में, सर्वस्वीकृत बनाने की दिशा में, सरकार में बैठे हुए सबको रास्ते खोज़ने पर लगाया हुआ है। पल-पल की ख़बरें मीडिया में देना ज़रूरी नहीं होता है। इसकी कोई रनिंग कमेंट्री नहीं होती है। मैं आपको विश्वास दिलाता हूँ यही सरकार, मैं फिर से कहता हूँ - यही सरकार आपका वन-रैंक, वन-पेंशन का मसला, सोल्यूशन लाकर के रहेगी - और जिस विचारधारा में पलकर हम आए हैं , जिन आदर्शो को लेकर हम आगे बढ़ें हैं, उसमें आपके जीवन का महत्व बहुत है।
मेरे लिए आपके जीवन के साथ जुड़ना आपकी चिंता करना ये सिर्फ़ न कोई सरकारी कार्यक्रम है, न ही कोई राजनितिक कार्यक्रम है, मेरे राष्ट्रभक्ति का ही प्रकटीकरण है। मैं फिर एक बार मेरे देश के सभी सेना के जवानों को आग्रह करूंगा कि राजनैतिक रोटी सेंकने वाले लोग चालीस साल तक आपके साथ खेल खेलते रहे हैं। मुझे वो मार्ग मंज़ूर नहीं है, और न ही मैं कोई ऐसे क़दम उठाना चाहता हूँ, जो समस्याओं को जटिल बना दे। आप मुझ पर भरोसा रखिये, बाक़ी जिनको बातें उछालनी होंगी, विवाद करने होंगे, अपनी राजनीति करनी होगी, उनको मुबारक। मुझे देश के लिए जीने मरने वालों के लिए जो कर सकता हूँ करना है - ये ही मेरे इरादे हैं, और मुझे विश्वास है कि मेरे मन की बात जिसमें सिवाय सच्चाई के कुछ नहीं है, आपके दिलों तक पहुंचेगी। चालीस साल तक आपने धैर्य रखा है - मुझे कुछ समय दीजिये, काम करने का अवसर दीजिये, और हम मिल बैठकर के समस्याओं का समाधान करेंगे। ये मैं फिर से एक बार देशवासियों को विश्वास देता हूँ।
छुट्टियों के दिनों में सब लोग कहीं न कहीं तो गए होंगे। भारत के अलग-अलग कोनों में गए होंगे। हो सकता है कुछ लोग अब जाने का कार्यक्रम बनाते होंगे। स्वाभाविक है ‘सीईंग इज़ बिलीविंग’ - जब हम भ्रमण करते हैं,कभी रिश्तेदारों के घर जाते हैं, कहीं पर्यटन के स्थान पर पहुंचते हैं। दुनिया को समझना, देखने का अलग अवसर मिलता है। जिसने अपने गाँव का तालाब देखा है, और पहली बार जब वह समुन्दर देखता है, तो पता नहीं वो मन के भाव कैसे होते हैं, वो वर्णन ही नहीं कर सकता है कि अपने गाँव वापस जाकर बता ही नहीं सकता है कि समुन्दर कितना बड़ा होता है। देखने से एक अलग अनुभूति होती है।
आप छुट्टियों के दिनों में अपने यार दोस्तों के साथ, परिवार के साथ कहीं न कहीं ज़रूर गए होंगे, या जाने वाले होंगे। मुझे मालूम नहीं है आप जब भ्रमण करने जाते हैं, तब डायरी लिखने की आदत है कि नहीं है। लिखनी चाहिए, अनुभवों को लिखना चाहिए, नए-नए लोगों से मिलतें हैं तो उनकी बातें सुनकर के लिखना चाहिए, जो चीज़ें देखी हैं, उसका वर्णन लिखना चाहिए, एक प्रकार से अन्दर, अपने भीतर उसको समावेश कर लेना चाहिए। ऐसी सरसरी नज़र से देखकर के आगे चले जाएं ऐसा नहीं करना चाहिए। क्योंकि ये भ्रमण अपने आप में एक शिक्षा है। हर किसी को हिमालय में जाने का अवसर नहीं मिलता है, लेकिन जिन लोगों ने हिमालय का भ्रमण किया है और किताबें लिखी हैं उनको पढ़ोगे तो पता चलेगा कि क्या आनन्ददायक यात्राओं का वर्णन उन्होंने किया है।
मैं ये तो नहीं कहता हूँ कि आप लेखक बनें! लेकिन भ्रमण की ख़ातिर भ्रमण ऐसा न होते हुए हम उसमें से कुछ सीखने का प्रयास करें, इस देश को समझने का प्रयास करें, देश को जानने का प्रयास करें, उसकी विविधताओं को समझें। वहां के खान पान कों, पहनावे, बोलचाल, रीतिरिवाज, उनके सपने, उनकी आकांक्षाएँ,उनकी कठिनाइयाँ, इतना बड़ा विशाल देश है, पूरे देश को जानना समझना है - एक जनम कम पड़ जाता है,आप ज़रूर कहीं न कहीं गए होंगे, लेकिन मेरी एक इच्छा है, इस बार आप यात्रा में गए होंगे या जाने वाले होंगे। क्या आप अपने अनुभव को मेरे साथ शेयर कर सकते हैं क्या? सचमुच में मुझे आनंद आएगा। मैं आपसे आग्रह करता हूँ कि आप इन्क्रेडिबल इंडिया हैश टैग, इसके साथ मुझे अपनी फोटो, अपने अनुभव ज़रूर भेजिए और उसमें से कुछ चीज़ें जो मुझे पसंद आएंगी मैं उसे आगे औरों के साथ शेयर करूँगा।
देखें तो सही आपके अनुभवों को, मैं भी अनुभव करूँ, आपने जो देखा है, मैं उसको मैं दूर बैठकर के देखूं। जिस प्रकार से आप समुद्रतट पर जा करके अकेले जा कर टहल सकते हैं, मैं तो नहीं कर पाता अभी, लेकिन मैं चाहूँगा आपके अनुभव जानना और आपके उत्तम अनुभवों को, मैं सबके साथ शेयर करूँगा।
अच्छा लगा आज एक बार फिर गर्मी की याद दिला देता हूँ, मैं यही चाहूँगा कि आप अपने को संभालिए, बीमार मत होना, गर्मी से अपने आपको बचाने के रास्ते होतें हैं, लेकिन उन पशु पक्षियों का भी ख़याल करना। यही मन की बात आज बहुत हो गयी, ऐसे मन में जो विचार आते गए, मैं बोलता गया। अगली बार फिर मिलूँगा, फिर बाते करूँगा, आपको बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद।
मेरे प्यारे देशवासियो,
नमस्कार,
मन की बात करने का मन नहीं हो रहा था आज। बोझ अनुभव कर रहा हूँ, कुछ व्यथित सा मन है। पिछले महीने जब बात कर रहा था आपसे, तो ओले गिरने की खबरें, बेमौसमी बरसात, किसानों की तबाही। अभी कुछ दिन पहले बिहार में अचानक तेज हवा चली। काफी लोग मारे गए। काफी कुछ नुकसान हुआ। और शनिवार को भयंकर भूकंप ने पूरे विश्व को हिला दिया है। ऐसा लगता है मानो प्राकृतिक आपदा का सिलसिला चल पड़ा है। नेपाल में भयंकर भूकंप की आपदा। हिंदुस्तान में भी भूकंप ने अलग-अलग राज्यों में कई लोगों की जान ली है। संपत्ति का भी नुकसान किया है। लेकिन नेपाल का नुकसान बहुत भयंकर है।
मैंने 2001, 26 जनवरी, कच्छ के भूकंप को निकट से देखा है। ये आपदा कितनी भयानक होती है, उसकी मैं कल्पना भली-भांति कर सकता हूँ। नेपाल पर क्या बीतती होगी, उन परिवारों पर क्या बीतती होगी, उसकी मैं कल्पना कर सकता हूँ।
लेकिन मेरे प्यारे नेपाल के भाइयो-बहनो, हिन्दुस्तान आपके दुःख में आपके साथ है। तत्काल मदद के लिए चाहे हिंदुस्तान के जिस कोने में मुसीबत आयी है वहां भी, और नेपाल में भी सहाय पहुंचाना प्रारंभ कर दिया है। सबसे पहला काम है रेस्क्यू ऑपरेशन, लोगों को बचाना। अभी भी मलबे में दबे हुए कुछ लोग जीवित होंगे, उनको जिन्दा निकालना हैं। एक्सपर्ट लोगों की टीम भेजी है, साथ में, इस काम के लिए जिनको विशेष रूप से ट्रेन किया गया है ऐसे स्निफ़र डॉग्स को भी भेजा गया है। स्निफर डॉग्स ढूंढ पाते हैं कि कहीं मलबे के नीचे कोई इंसान जिन्दा हो। कोशिश हमारी पूरी रहेगी अधिकतम लोगों को जिन्दा बचाएं। रेस्क्यू ऑपरेशन के बाद रिलीफ का काम भी चलाना है। रिहैबिलिटेशन का काम भी तो बहुत लम्बा चलेगा।
लेकिन मानवता की अपनी एक ताकत होती है। सवा-सौ करोड़ देश वासियों के लिए नेपाल अपना है। उन लोगों का दुःख भी हमारा दुःख है। भारत पूरी कोशिश करेगा इस आपदा के समय हर नेपाली के आंसू भी पोंछेंगे, उनका हाथ भी पकड़ेंगे, उनको साथ भी देंगे। पिछले दिनों यमन में, हमारे हजारों भारतीय भाई बहन फंसे हुए थे। युद्ध की भयंकर विभीषिका के बीच, बम बन्दूक के तनाव के बीच, गोलाबारी के बीच भारतीयों को निकालना, जीवित निकालना, एक बहुत बड़ा कठिन काम था। लेकिन हम कर पाए। इतना ही नहीं, एक सप्ताह की उम्र की एक बच्ची को जब बचा करके लाये तो ऐसा लग रहा था कि आखिर मानवता की भी कितनी बड़ी ताकत होती है। बम-बन्दूक की वर्षा चलती हो, मौत का साया हो, और एक सप्ताह की बच्ची अपनी जिन्दगी बचा सके तब एक मन को संतोष होता है।
मैं पिछले दिनों विदेश में जहाँ भी गया, एक बात के लिए बहुत बधाइयाँ मिली, और वो था यमन में हमने दुनिया के करीब 48 देशों के नागरिकों को बचाया था। चाहे अमेरिका हो, यू.के. हो, फ्रांस हो, रशिया हो, जर्मनी हो, जापान हो, हर देश के नागरिक को हमने मदद की थी। और उसके कारण दुनिया में भारत का ये “सेवा परमो धर्मः”, इसकी अनुभूति विश्व ने की है। हमारा विदेश मंत्रालय, हमारी वायु सेना, हमारी नौसेना इतने धैर्य के साथ, इतनी जिम्मेवारी के साथ, इस काम को किया है, दुनिया में इसकी अमिट छाप रहेगी आने वाले दिनों में, ऐसा मैं विश्वास करता हूँ। और मुझे खुशी है कि कोई भी नुकसान के बिना, सब लोग बचकर के बाहर आये। वैसे भी भारत का एक गुण, भारत के संस्कार बहुत पुराने हैं।
अभी मैं जब फ्रांस गया था तो फ्रांस में, मैं प्रथम विश्व युद्ध के एक स्मारक पर गया था। उसका एक कारण भी था, कि प्रथम विश्व युद्ध की शताब्दी तो है, लेकिन साथ-साथ भारत की पराक्रम का भी वो शताब्दी वर्ष हैI भारत के वीरों की बलिदानी की शताब्दी का वर्ष है और “सेवा परमो-धर्मः” इस आदर्श को कैसे चरितार्थ करता रहा हमारा देश , उसकी भी शताब्दी का यह वर्ष है, मैं यह इसलिए कह रहा हूँ कि 1914 में और 1918 तक प्रथम विश्व युद्ध चला और बहुत कम लोगों को मालूम होगा करीब-करीब 15 लाख भारतीय सैनिकों ने इस युद्ध में अपनी जान की बाजी लगा दी थी और भारत के जवान अपने लिए नहीं मर रहे थेI हिंदुस्तान को, किसी देश को कब्जा नहीं करना था, न हिन्दुस्तान को किसी की जमीन लेनी थी लेकिन भारतीयों ने एक अदभुत पराक्रम करके दिखाया थाI बहुत कम लोगों को मालूम होगा इस प्रथम विश्व युद्ध में हमारे करीब-करीब 74 हजार जवानों ने शहादत की थी, ये भी गर्व की बात है कि इस पर करीब 9 हजार 2 सौ हमारे सैनिकों को गैलेंट्री अवार्ड से डेकोरेट किया गया थाI इतना ही नहीं, 11 ऐसे पराक्रमी लोग थे जिनको सर्वश्रेष्ठ सम्मान विक्टोरिया क्रॉस मिला थाI खासकर कि फ्रांस में विश्व युद्ध के दरमियान मार्च 1915 में करीब 4 हजार 7 सौ हमारे हिनदुस्तानियों ने बलिदान दिया था। उनके सम्मान में फ्रांस ने वहां एक स्मारक बनाया है। मैं वहाँ नमन करने गया था, हमारे पूर्वजों के पराक्रम के प्रति श्रध्दा व्यक्त करने गया था।
ये सारी घटनायें हम देखें तो हम दुनिया को कह सकते हैं कि ये देश ऐसा है जो दुनिया की शांति के लिए, दुनिया के सुख के लिए, विश्व के कल्याण के लिए सोचता है। कुछ न कुछ करता है और ज़रूरत पड़े तो जान की बाज़ी भी लगा देता है। यूनाइटेड नेशन्स में भी पीसकीपिंग फ़ोर्स में सर्वाधिक योगदान देने वालों में भारत का भी नाम प्रथम पंक्ति में है। यही तो हम लोगों के लिए गर्व की बात है।
पिछले दिनों दो महत्वपूर्ण काम करने का मुझे अवसर मिला। हम पूज्य बाबा साहेब अम्बेडकर की 125 वीं जयन्ती का वर्ष मना रहे हैं। कई वर्षों से मुंबई में उनके स्मारक बनाने का जमीन का विवाद चल रहा था। मुझे आज इस बात का संतोष है कि भारत सरकार ने वो जमीन बाबा साहेब अम्बेडकर के स्मारक बनाने के लिए देने का निर्णय कर लिया। उसी प्रकार से दिल्ली में बाबा साहेब अम्बेडकर के नाम से एक इंटरनेशनल सेंटर बने, पूरा विश्व इस मनीषी को जाने, उनके विचारों को जाने, उनके काम को जाने। ये भी वर्षों से लटका पड़ा विषय था, इसको भी पूरा किया, शिलान्यास किया, और 20 साल से जो काम नहीं हुआ था वो 20 महीनों में पूरा करने का संकल्प किया। और साथ-साथ मेरे मन में एक विचार भी आया है और हम लगे हैं, आज भी हमारे देश में कुछ परिवार हैं जिनको सर पे मैला ढ़ोने के लिए मजबूर होना पड़ता है।
क्या हमें शोभा देता है कि आज भी हमारे देश में कुछ परिवारों को सर पर मैला ढोना पड़े? मैंने सरकार में बड़े आग्रह से कहा है कि बाबा साहेब अम्बेडकर जी के पुण्य स्मरण करते हुए 125 वीं जयन्ती के वर्ष में, हम इस कलंक से मुक्ति पाएं। अब हमारे देश में किसी गरीब को सर पर मैला ढोना पड़े, ये परिस्थति हम सहन नहीं करेंगे। समाज का भी साथ चाहिये। सरकार ने भी अपना दायित्व निभाना चाहिये। मुझे जनता का भी सहयोग चाहिये, इस काम को हमें करना है।
बाबा साहेब अम्बेडकर जीवन भर शिक्षित बनो ये कहते रहते थे। आज भी हमारे कई दलित, पीड़ित, शोषित, वंचित समाज में, ख़ास करके बेटियों में, शिक्षा अभी पहुँची नहीं है। बाबा साहेब अम्बेडकर के 125 वीं जयन्ती के पर्व पर, हम भी संकल्प करें। हमारे गाँव में, नगर में, मोहल्ले में गरीब से गरीब की बेटी या बेटा, अनपढ़ न रहे। सरकार अपना कर्त्तव्य करे, समाज का उसमें साथ मिले तो हम जरुर संतोष की अनुभूति करते हैं। मुझे एक आनंद की बात शेयर करने का मन करता है और एक पीड़ा भी बताने का मन करता है।
मुझे इस बात का गर्व होता है कि भारत की दो बेटियों ने देश के नाम को रौशन किया। एक बेटी साईना नेहवाल बैडमिंटन में दुनिया में नंबर एक बनी, और दूसरी बेटी सानिया मिर्जा टेनिस डबल्स में दुनिया में नंबर एक बनी। दोनों को बधाई, और देश की सारी बेटियों को भी बधाई। गर्व होता है अपनों के पुरुषार्थ और पराक्रम को लेकर के। लेकिन कभी-कभी हम भी आपा खो बैठते हैं। जब क्रिकेट का वर्ल्ड कप चल रहा था और सेमी-फाइनल में हम ऑस्ट्रेलिया से हार गए, कुछ लोगों ने हमारे खिलाड़ियों के लिए जिस प्रकार के शब्दों का प्रयोग किया, जो व्यवहार किया, मेरे देशवासियो, ये अच्छा नहीं है। ऐसा कैसा खेल हो जिसमें कभी पराजय ही न हो अरे जय और पराजय तो जिन्दगी के हिस्से होते हैं। अगर हमारे देश के खिलाड़ी कभी हार गए हैं तो संकट की घड़ी में उनका हौसला बुलंद करना चाहिये। उनका नया विश्वास पैदा करने का माहौल बनाना चाहिये। मुझे विश्वास है आगे से हम पराजय से भी सीखेंगे और देश के सम्मान के साथ जो बातें जुड़ी हुई हैं, उसमें पल भर में ही संतुलन खो करके, क्रिया-प्रतिक्रिया में नहीं उलझ जायेंगे। और मुझे कभी-कभी चिंता हो रही है। मैं जब कभी देखता हूँ कि कहीं अकस्मात् हो गया, तो भीड़ इकट्ठी होती है और गाड़ी को जला देती है। और हम टीवी पर इन चीजों को देखते भी हैं। एक्सीडेंट नहीं होना चाहिये। सरकार ने भी हर प्रकार की कोशिश करनी चाहिये। लेकिन मेरे देशवासियो बताइये कि इस प्रकार से गुस्सा प्रकट करके हम ट्रक को जला दें, गाड़ी को जला दें.... मरा हुआ तो वापस आता नहीं है। क्या हम अपने मन के भावों को संतुलित रखके कानून को कानून का काम नहीं करने दे सकते हैं? सोचना चाहिये।
खैर, आज मेरा मन इन घटनाओं के कारण बड़ा व्यथित है, ख़ास करके प्राकृतिक आपदाओं के कारण, लेकिन इसके बीच भी धैर्य के साथ, आत्मविश्वास के साथ देश को भी आगे ले जायेंगे, इस देश का कोई भी व्यक्ति...दलित हो, पीड़ित हो, शोषित हो, वंचित हो, आदिवासी हो, गाँव का हो, गरीब हो, किसान हो, छोटा व्यापारी हो, कोई भी हो, हर एक के कल्याण के मार्ग पर, हम संकल्प के साथ आगे बढ़ते रहेंगे।
विद्यार्थियों की परीक्षायें पूर्ण हुई हैं, ख़ास कर के 10 वीं और 12 वीं के विद्यार्थियों ने छुट्टी मनाने के कार्यक्रम बनाए होंगे, मेरी आप सबको शुभकामनाएं हैं। आपका वेकेशन बहुत ही अच्छा रहे, जीवन में कुछ नया सीखने का, नया जानने का अवसर मिले, और साल भर आपने मेहनत की है तो कुछ पल परिवार के साथ उमंग और उत्साह के साथ बीते यही मेरी शुभकामना है।
आप सबको मेरा नमस्कार।
धन्यवाद।
मेरे प्यारे किसान भाइयो और बहनो, आप सबको नमस्कार!
ये मेरा सौभाग्य है कि आज मुझे देश के दूर सुदूर गाँव में रहने वाले मेरे किसान भाइयों और बहनों से बात करने का अवसर मिला है। और जब मैं किसान से बात करता हूँ तो एक प्रकार से मैं गाँव से बात करता हूँ, गाँव वालों से बात करता हूँ, खेत मजदूर से भी बात कर रहा हूँ। उन खेत में काम करने वाली माताओं बहनों से भी बात कर रहा हूँ। और इस अर्थ में मैं कहूं तो अब तक की मेरी सभी मन की बातें जो हुई हैं, उससे शायद एक कुछ एक अलग प्रकार का अनुभव है।
जब मैंने किसानों के साथ मन की बात करने के लिए सोचा, तो मुझे कल्पना नहीं थी कि दूर दूर गावों में बसने वाले लोग मुझे इतने सारे सवाल पूछेंगे, इतनी सारी जानकारियां देंगे, आपके ढेर सारे पत्र, ढेर सारे सवाल, ये देखकर के मैं हैरान हो गया। आप कितने जागरूक हैं, आप कितने सक्रिय हैं, और शायद आप तड़पते हैं कि कोई आपको सुने। मैं सबसे पहले आपको प्रणाम करता हूँ कि आपकी चिट्ठियाँ पढ़कर के उसमें दर्द जो मैंने देखा है, जो मुसीबतें देखी हैं, इतना सहन करने के बावजूद भी, पता नहीं क्या-क्या आपने झेला होगा।
आपने मुझे तो चौंका दिया है, लेकिन मैं इस मन की बात का, मेरे लिए एक प्रशिक्षण का, एक एजुकेशन का अवसर मानता हूँ। और मेरे किसान भाइयो और बहनो, मैं आपको विश्वास दिलाता हूँ, कि आपने जितनी बातें उठाई हैं, जितने सवाल पूछे हैं, जितने भिन्न-भिन्न पहलुओं पर आपने बातें की हैं, मैं उन सबके विषय में, पूरी सरकार में जागरूकता लाऊँगा, संवेदना लाऊँगा, मेरा गाँव, मेरा गरीब, मेरा किसान भाई, ऐसी स्थिति में उसको रहने के लिए मजबूर नहीं किया जा सकता। मैं तो हैरान हूँ, किसानों ने खेती से संबधित तो बातें लिखीं हैं। लेकिन, और भी कई विषय उन्होंने कहे हैं, गाँव के दबंगों से कितनी परेशानियाँ हैं, माफियाओं से कितनी परेशानियाँ हैं, उसकी भी चर्चा की है, प्राकृतिक आपदा से आने वाली मुसीबतें तो ठीक हैं, लेकिन आस-पास के छोटे मोटे व्यापारियों से भी मुसीबतें झेलनी पड़ रही हैं।
किसी ने गाँव में गन्दा पानी पीना पड़ रहा है उसकी चर्चा की है, किसी ने गाँव में अपने पशुओं को रखने के लिए व्यवस्था की चिंता की है, किसी ने यहाँ तक कहा है कि पशु मर जाता है तो उसको हटाने का ही कोई प्रबंध नहीं होता, बीमारी फैल जाती है। यानि कितनी उपेक्षा हुई है, और आज मन की बात से शासन में बैठे हुए लोगों को एक कड़ा सन्देश इससे मिल रहा है। हमें राज करने का अधिकार तब है जब हम इन छोटी छोटी बातों को भी ध्यान दें। ये सब पढ़ कर के तो मुझे कभी कभी शर्मिन्दगी महसूस होती थी, कि हम लोगों ने क्या किया है! मेरे पास जवाब नहीं है, क्या किया है? हाँ, मेरे दिल को आपकी बातें छू गयी हैं। मैं जरूर बदलाव के लिए, प्रामाणिकता से प्रयास करूंगा, और उसके सभी पहलुओं पर सरकार को, जगाऊँगा, चेताऊंगा, दौडाऊंगा, मेरी कोशिश रहेगी, ये मैं विश्वास दिलाता हूँ।
मैं ये भी जानता हूँ कि पिछले वर्ष बारिश कम हुई तो परेशानी तो थी ही थी। इस बार बेमौसमी बरसात हो गयी, ओले गिरे, एक प्रकार से महाराष्ट्र से ऊपर, सभी राज्यों में, ये मुसीबत आयी। और हर कोने में किसान परेशान हो गया। छोटा किसान जो बेचारा, इतनी कड़ी मेहनत करके साल भर अपनी जिन्दगी गुजारा करता है, उसका तो सब कुछ तबाह हो गया है। मैं इस संकट की घड़ी में आपके साथ हूँ। सरकार के मेरे सभी विभाग राज्यों के संपर्क में रह करके स्थिति का बारीकी से अध्ययन कर रहे हैं, मेरे मंत्री भी निकले हैं, हर राज्य की स्थिति का जायजा लेंगे, राज्य सरकारों को भी मैंने कहा है कि केंद्र और राज्य मिल करके, इन मुसीबत में फंसे हुए सभी किसान भाइयों-बहनों को जितनी ज्यादा मदद कर सकते हैं, करें। में आपको विश्वास दिलाता हूँ कि सरकार पूरी संवेदना के साथ, आपकी इस संकट की घड़ी में, आपको पूरी तत्परता से मदद करेगी। जितना हो सकता है, उसको पूरा करने का प्रयास किया जायेगा।
गाँव के लोगों ने, किसानों ने कई मुददे उठाये हैं। सिंचाई की चिंता व्यापक नजर आती है। गाँव में सड़क नहीं है उसका भी आक्रोश है। खाद की कीमतें बढ़ रही हैं, उस पर भी किसान की नाराजगी है। बिजली नहीं मिल रही है। किसानों को यह भी चिंता है कि बच्चों को पढ़ाना है, अच्छी नौकरी मिले ये भी उनकी इच्छा है, उसकी भी शिकायतें हैं। माताओं बहनों की भी, गाँव में कहीं नशा-खोरी हो रही है उस पर अपना आक्रोश जताया है। कुछ ने तो अपने पति को तम्बाकू खाने की आदत है उस पर भी अपना रोष मुझे व्यक्त करके भेजा है। आपके दर्द को मैं समझ सकता हूँ। किसान का ये भी कहना है की सरकार की योजनायें तो बहुत सुनने को मिलती हैं, लेकिन हम तक पहुँचती नहीं हैं। किसान ये भी कहता है कि हम इतनी मेहनत करते हैं, लोगों का तो पेट भरते हैं लेकिन हमारा जेब नहीं भरता है, हमें पूरा पैसा नहीं मिलता है। जब माल बेचने जाते हैं, तो लेने वाला नहीं होता है। कम दाम में बेच देना पड़ता है। ज्यादा पैदावार करें तो भी मरते हैं, कम पैदावार करें तो भी मरते हैं। यानि किसानों ने अपने मन की बात मेरे सामने रखी है। मैं मेरे किसान भाइयों-बहनों को विश्वास दिलाता हूँ, कि मैं राज्य सरकारों को भी, और भारत सरकार के भी हमारे सभी विभागों को भी और अधिक सक्रिय करूंगा। तेज गति से इन समस्याओं के समाधान के रास्ते खोजने के लिए प्रेरित करूँगा। मुझे लग रहा है कि आपका धैर्य कम हो रहा है। बहुत स्वाभाविक है, साठ साल आपने इन्तजार किया है, मैं प्रामाणिकता से प्रयास करूँगा।
किसान भाइयो, ये आपके ढेर सारे सवालों के बीच में, मैंने देखा है कि करीब–करीब सभी राज्यों से वर्तमान जो भूमि अधिग्रहण बिल की चर्चा है, उसका प्रभाव ज्यादा दिखता है, और मैं हैरान हूँ कि कैसे-कैसे भ्रम फैलाए गए हैं। अच्छा हुआ, आपने छोटे–छोटे सवाल मुझे पूछे हैं। मैं कोशिश करूंगा कि सत्य आप तक पहुचाऊं। आप जानते हैं भूमि-अधिग्रहण का कानून 120 साल पहले आया था। देश आज़ाद होने के बाद भी 60-65 साल वही कानून चला और जो लोग आज किसानों के हमदर्द बन कर के आंदोलन चला रहे हैं, उन्होंने भी इसी कानून के तहत देश को चलाया, राज किया और किसानों का जो होना था हुआ। सब लोग मानते थे कि कानून में परिवर्तन होना चाहिए, हम भी मानते थे। हम विपक्ष में थे, हम भी मानते थे।
2013 में बहुत आनन-फानन के साथ एक नया कानून लाया गया। हमने भी उस समय कंधे से कन्धा मिलाकर के साथ दिया। किसान का भला होता है, तो साथ कौन नहीं देगा, हमने भी दिया। लेकिन कानून लागू होने के बाद, कुछ बातें हमारे ज़हन में आयीं। हमें लगा शायद इसके साथ तो हम किसान के साथ धोखा कर रहे हैं। हमें किसान के साथ धोखा करने का अधिकार नहीं है। दूसरी तरफ जब हमारी सरकार बनी, तब राज्यों की तरफ से बहुत बड़ी आवाज़ उठी। इस कानून को बदलना चाहिए, कानून में सुधार करना चाहिए, कानून में कुछ कमियां हैं, उसको पूरा करना चाहिए। दूसरी तरफ हमने देखा कि एक साल हो गया, कोई कानून लागू करने को तैयार ही नहीं कोई राज्य और लागू किया तो उन्होंने क्या किया? महाराष्ट्र सरकार ने लागू किया था, हरियाणा ने किया था जहां पर कांग्रेस की सरकारें थीं और जो किसान हितैषी होने का दावा करते हैं उन्होंने इस अध्यादेश में जो मुआवजा देने का तय किया था उसे आधा कर दिया। अब ये है किसानों के साथ न्याय? तो ये सारी बातें देख कर के हमें भी लगा कि भई इसका थोडा पुनर्विचार होना ज़रूरी है। आनन–फानन में कुछ कमियां रह जाती हैं। शायद इरादा ग़लत न हो, लेकिन कमियाँ हैं, तो उसको तो ठीक करनी चाहिए।…और हमारा कोई आरोप नहीं है कि पुरानी सरकार क्या चाहती थी, क्या नहीं चाहती थी? हमारा इरादा यही है कि किसानों का भला हो, किसानों की संतानों का भी भला हो, गाँव का भी भला हो और इसीलिए कानून में अगर कोई कमियां हैं, तो दूर करनी चाहिए। तो हमारा एक प्रामाणिक प्रयास कमियों को दूर करना है।
अब एक सबसे बड़ी कमी मैं बताऊँ, आपको भी जानकर के हैरानी होगी कि जितने लोग किसान हितैषी बन कर के इतनी बड़ी भाषणबाज़ी कर रहें हैं, एक जवाब नहीं दे रहे हैं। आपको मालूम है, अलग-अलग प्रकार के हिंदुस्तान में 13 कानून ऐसे हैं जिसमें सबसे ज्यादा जमीन संपादित की जाती है, जैसे रेलवे, नेशनल हाईवे, खदान के काम। आपको मालूम है, पिछली सरकार के कानून में इन 13 चीज़ों को बाहर रखा गया है। बाहर रखने का मतलब ये है कि इन 13 प्रकार के कामों के लिए जो कि सबसे ज्यादा जमीन ली जाती है, उसमें किसानों को वही मुआवजा मिलेगा जो पहले वाले कानून से मिलता था। मुझे बताइए, ये कमी थी कि नहीं? ग़लती थी कि नहीं? हमने इसको ठीक किया और हमने कहा कि भई इन 13 में भी भले सरकार को जमीन लेने कि हो, भले रेलवे के लिए हो, भले हाईवे बनाने के लिए हो, लेकिन उसका मुआवजा भी किसान को चार गुना तक मिलना चाहिए। हमने सुधार किया। कोई मुझे कहे, क्या ये सुधार किसान विरोधी है क्या? हमें इसीलिए तो अध्यादेश लाना पड़ा। अगर हम अध्यादेश न लाते तो किसान की तो जमीन वो पुराने वाले कानून से जाती रहती, उसको कोई पैसा नहीं मिलता। जब ये कानून बना तब भी सरकार में बैठे लोगों में कईयों ने इसका विरोधी स्वर निकला था। स्वयं जो कानून बनाने वाले लोग थे, जब कानून का रूप बना, तो उन्होंने तो बड़े नाराज हो कर के कह दिया, कि ये कानून न किसानों की भलाई के लिए है, न गाँव की भलाई के लिए है, न देश की भलाई के लिए है। ये कानून तो सिर्फ अफसरों कि तिजोरी भरने के लिए है, अफसरों को मौज करने के लिए, अफ़सरशाही को बढ़ावा देने के लिए है। यहाँ तक कहा गया था। अगर ये सब सच्चाई थी तो क्या सुधार होना चाहिए कि नहीं होना चाहिए? ..और इसलिए हमने कमियों को दूर कर के किसानों का भला करने कि दिशा में प्रयास किये हैं। सबसे पहले हमने काम किया, 13 कानून जो कि भूमि अधिग्रहण कानून के बाहर थे और जिसके कारण किसान को सबसे ज्यादा नुकसान होने वाला था, उसको हम इस नए कानून के दायरे में ले आये ताकि किसान को पूरा मुआवजा मिले और उसको सारे हक़ प्राप्त हों। अब एक हवा ऐसी फैलाई गई कि मोदी ऐसा कानून ला रहें हैं कि किसानों को अब मुआवजा पूरा नहीं मिलेगा, कम मिलेगा।
मेरे किसान भाइयो-बहनो, मैं ऐसा पाप सोच भी नहीं सकता हूँ। 2013 के पिछली सरकार के समय बने कानून में जो मुआवजा तय हुआ है, उस में रत्ती भर भी फर्क नहीं किया गया है। चार गुना मुआवजा तक की बात को हमने स्वीकारा हुआ है। इतना ही नहीं, जो तेरह योजनाओं में नहीं था, उसको भी हमने जोड़ दिया है। इतना ही नहीं, शहरीकरण के लिए जो भूमि का अधिग्रहण होगा, उसमें विकसित भूमि, बीस प्रतिशत उस भूमि मालिक को मिलेगी ताकि उसको आर्थिक रूप से हमेशा लाभ मिले, ये भी हमने जारी रखा है। परिवार के युवक को नौकरी मिले। खेत मजदूर की संतान को भी नौकरी मिलनी चाहिए, ये भी हमने जारी रखा है। इतना ही नहीं, हमने तो एक नयी चीज़ जोड़ी है। नयी चीज़ ये जोड़ी है, जिला के जो अधिकारी हैं, उसको इसने घोषित करना पड़ेगा कि उसमें नौकरी किसको मिलेगी, किसमें नौकरी मिलेगी, कहाँ पर काम मिलेगा, ये सरकार को लिखित रूप से घोषित करना पड़ेगा। ये नयी चीज़ हमने जोड़ करके सरकार कि जिम्मेवारी को Fix किया है।
मेरे किसान भाइयो-बहनो, हम इस बात पर agree हैं, कि सबसे पहले सरकारी जमीन का उपयोग हो। उसके बाद बंजर भूमि का उपयोग हो, फिर आखिर में अनिवार्य हो तब जाकर के उपजाऊ जमीन को हाथ लगाया जाये, और इसीलिए बंजर भूमि का तुरंत सर्वे करने के लिए भी कहा गया है, जिसके कारण वो पहली priority वो बने।
एक हमारे किसानों की शिकायत सही है कि आवश्यकता से अधिक जमीन हड़प ली जाती है। इस नए कानून के माध्यम से मैं आपको विश्वास दिलाना चाहता हूँ कि अब जमीन कितनी लेनी, उसकी पहले जांच पड़ताल होगी, उसके बाद तय होगा कि आवश्यकता से अधिक जमीन हड़प न की जाए। कभी-कभी तो कुछ होने वाला है, कुछ होने वाला है, इसकी चिंता में बहुत नुकसान होता है। ये Social Impact Assessment (SIA) के नाम पर अगर प्रक्रिया सालों तक चलती रहे, सुनवाई चलती रहे, मुझे बताइए, ऐसी स्थिति में कोई किसान अपने फैसले कर पायेगा? फसल बोनी है तो वो सोचेगा नहीं-नहीं यार, पता नहीं, वो निर्णय आ जाएगा तो, क्या करूँगा? और उसके 2-2, 4-4, साल खराब हो जाएगा और अफसरशाही में चीजें फसी रहेंगी। प्रक्रियाएं लम्बी, जटिल और एक प्रकार से किसान बेचारा अफसरों के पैर पकड़ने जाने के लिए मजबूर हो जाएगा कि साहब ये लिखो, ये मत लिखों, वो लिखो, वो मत लिखो, ये सब होने वाला है। क्या मैं मेरे अपने किसानों को इस अफसरसाही के चुंगल में फिर एक बार फ़सा दूं? मुझे लगता है वो ठीक नहीं होगा। प्रक्रिया लम्बी थी, जटिल थी। उसको सरल करने का मैंने प्रयास किया है।
मेरे किसान भाइयो-बहनो 2014 में कानून बना है, लेकिन राज्यों ने उसको स्वीकार नहीं किया है। किसान तो वहीं का वहीं रह गया। राज्यों ने विरोध किया। मुझे बताइए क्या मैं राज्यों की बात सुनूं या न सुनूं? क्या मैं राज्यों पर भरोसा करूँ या न करूँ? इतना बड़ा देश, राज्यों पर अविश्वास करके चल सकता है क्या? और इसलिए मेरा मत है कि हमें राज्यों पर भरोसा करना चाहिये, भारत सरकार में विशेष करना चाहिये तो, एक तो मैं भरोसा करना चाहता हूँ, दूसरी बात है, ये जो कानून में सुधार हम कर रहे हैं, कमियाँ दूर कर रहे हैं, किसान की भलाई के लिए जो हम कदम उठा रहे हैं, उसके बावजूद भी अगर किसी राज्य को ये नहीं मानना है, तो वे स्वतंत्र हैं और इसलिए मैं आपसे कहना चाहता हूँ कि ये जो सारे भ्रम फैलाए जा रहे हैं, वो सरासर किसान विरोधी के भ्रम हैं। किसान को गरीब रखने के षड्यन्त्र का ही हिस्सा हैं। देश को आगे न ले जाने के जो षडयंत्र चले हैं उसी का हिस्सा है। उससे बचना है, देश को भी बचाना है, किसान को भी बचाना है।
अब गाँव में भी किसान को पूछो कि भाई तीन बेटे हैं बताओ क्या सोच रहे हो? तो वो कहता है कि भाई एक बेटा तो खेती करेगा, लेकिन दो को कहीं-कहीं नौकरी में लगाना है। अब गाँव के किसान के बेटों को भी नौकरी चाहिये। उसको भी तो कहीं जाकर रोजगार कमाना है। तो उसके लिए क्या व्यवस्था करनी पड़ेगी। तो हमने सोचा कि जो गाँव की भलाई के लिए आवश्यक है, किसान की भलाई के लिये आवश्यक है, किसान के बच्चों के रोजगार के लिए आवश्यक है, ऐसी कई चीजों को जोड़ दिया जाए। उसी प्रकार से हम तो जय-जवान, जय-किसान वाले हैं। जय-जवान का मतलब है देश की रक्षा। देश की रक्षा के विषय में हिंदुस्तान का किसान कभी पीछे हटता नहीं है। अगर सुरक्षा के क्षेत्र में कोई आवश्कता हो तो वह जमीन किसानों से मांगनी पड़ेगी।..और मुझे विश्वास है, वो किसान देगा। तो हमने इन कामों के लिए जमीन लेने की बात को इसमें जोड़ा है। कोई भी मुझे गाँव का आदमी बताए कि गाँव में सड़क चाहिये कि नहीं चाहिये। अगर खेत में पानी चाहिये तो नहर करनी पड़ेगी कि नहीं करनी पड़ेगी। गाँव में आज भी गरीब हैं, जिसके पास रहने को घर नहीं है। घर बनाने के लिए जमीन चाहिये की नहीं चाहिये? कोई मुझे बताये कि यह उद्योगपतियों के लिए है क्या? यह धन्ना सेठों के लिए है क्या? सत्य को समझने की कोशिश कीजिये।
हाँ, मैं एक डंके की चोट पर आपको कहना चाहता हूँ, नए अध्यादेश में भी, कोई भी निजी उद्योगकार को, निजी कारखाने वाले को, निजी व्यवसाय करने वाले को, जमीन अधिग्रहण करने के समय 2013 में जो कानून बना था, जितने नियम हैं, वो सारे नियम उनको लागू होंगे। यह कॉर्पोरेट के लिए कानून 2013 के वैसे के वैसे लागू रहने वाले हैं। तो फिर यह झूठ क्यों फैलाया जाता है। मेरे किसान भाइयो-बहनो, एक भ्रम फैलाया जाता है कि आपको कानूनी हक नहीं मिलेगा, आप कोर्ट में नहीं जा सकते, ये सरासर झूठ है। हिंदुस्तान में कोई भी सरकार आपके कानूनी हक़ को छीन नहीं सकती है। बाबा साहेब अम्बेडकर ने हमें जो संविधान दिया है, इस संविधान के तहत आप हिंदुस्तान के किसी भी कोर्ट में जा करके दरवाजे खटखटा सकते हैं। तो ये झूठ फैलाया गया है। हाँ, हमने एक व्यवस्था को आपके दरवाजे तक लाने का प्रयास किया है।
एक Authority बनायी है, अब वो Authority जिले तक काम करेगी और आपके जिले के किसानों की समस्याओं का समाधान उसी Authority में जिले में ही हो जायेगा।..और वहां अगर आपको संतोष नहीं होता तो आप ऊपर के कोर्ट में जा सकते हैं। तो ये व्यवस्था हमने की है।
एक यह भी बताया जाता है कि भूमि अधिग्रहित की गयी तो वो पांच साल में वापिस करने वाले कानून को हटा दिया गया है। जी नहीं, मेरे किसान भाइयो-बहनो हमने कहा है कि जब भी Project बनाओगे, तो यह पक्का करो कि कितने सालों में आप इसको पूरा करोगे। और उस सालों में अगर पूरा नहीं करते हैं तो वही होगा जो किसान चाहेगा। और उसको तो समय-सीमा हमने बाँध दी है। आज क्या होता है, 40-40 साल पहले जमीने ली गयी, लेकिन अभी तक सरकार ने कुछ किया नहीं। तो यह तो नहीं चल सकता। तो हमने सरकार को सीमा में बांधना तय किया है। हाँ, कुछ Projects ऐसे होते हैं जो 20 साल में पूरे होते हैं, अगर मान लीजिये 500 किलोमीटर लम्बी रेलवे लाइन डालनी है, तो समय जाएगा। तो पहले से कागज़ पर लिखो कि भाई कितने समय में पूरा करोगे। तो हमने सरकार को बाँधा है। सरकार की जिम्मेवारी को Fix किया है।
मैं और एक बात बताऊं किसान-भाइयो, कभी-कभी ये एयरकंडीशन कमरे में बैठ करके जो कानून बनाते हैं न, उनको गाँव के लोगों की सच्ची स्थिति का पता तक नहीं होता है। अब आप देखिये जब डैम बनता है, जलाशय बनता है, तो उसका नियम यह है कि 100 साल में सबसे ज्यादा पानी की सम्भावना हो उस हिसाब से जमीन प्राप्त करने का नियम है। अब 100 साल में एक बार पानी भरता है। 99 साल तक पानी नहीं भरता है। फिर भी जमीन सरकार के पास चली जाती है, तो आज सभी राज्यों में क्या हो रहा है की भले जमीन कागज़ पर ले ली हो, पैसे भी दे दिए हों। लेकिन फिर भी वो जमीन पर किसान खेती करता है। क्योंकि 100 साल में एक बार जब पानी भर जाएगा तो एक साल के लिए वो हट जाएगा। ये नया कानून 2013 का ऐसा था कि आप खेती नहीं कर सकते थे। हम चाहते हैं कि अगर जमीन डूब में नहीं जाती है तो फिर किसान को खेती करने का अवसर मिलना चाहिये।..और इसीलिये वो जमीन किसान से कब्ज़ा नहीं करनी चाहिये। ये लचीलापन आवश्यक था। ताकि किसान को जमीन देने के बावजूद भी जमीन का लाभ मिलता रहे और जमीन देने के बदले में रुपया भी मिलता रहे। तो किसान को डबल फायदा हो। ये व्यवस्था करना भी जरूरी है, और व्यावहारिक व्यवस्था है, और उस व्यावहारिक व्यवस्था को हमने सोचा है।
एक भ्रम ऐसा फैलाया जाता है कि ‘सहमति’ की जरुरत नहीं हैं। मेरे किसान भाइयो-बहनो ये राजनीतिक कारणों से जो बाते की जाती हैं, मेहरबानी करके उससे बचिये! 2013 में जो कानून बना उसमे भी सरकार नें जिन योजनाओं के लिए जमीन माँगी है, उसमें सहमती का क़ानून नहीं है।...और इसीलिए सहमति के नाम पर लोगों को भ्रमित किया जाता है। सरकार के लिए सहमति की बात पहले भी नही थी, आज भी नहीं है।..और इसीलिये मेरे किसान भाइयों-बहनो पहले बहुत अच्छा था और हमने बुरा कर दिया, ये बिलकुल सरासर आपको गुमराह करने का दुर्भाग्यपूर्ण प्रयास है। मैं आज भी कहता हूँ कि निजी उद्योग के लिए, कॉर्पोरेट के लिए, प्राइवेट कारखानों के लिए ये ‘सहमति’ का कानून चालू है, है...है।
...और एक बात मैं कहना चाहता हूँ, कुछ लोग कहतें है, PPP मॉडल! मेरे किसान भाइयो-बहनो, मान लीजिये 100 करोड रुपए का एक रोड बनाना है। क्या रोड किसी उद्योगकार उठा कर ले जाने वाला है क्या? रोड तो सरकार के मालिकी का ही रहता है। जमीन सरकार की मालिकी की ही रहती है। बनाने वाला दूसरा होता है। बनाने वाला इसीलिए दूसरा होता है, क्योंकि सरकार के पास आज पैसे नहीं होते हैं। क्योंकि सरकार चाहती है कि गाँव में स्कूल बने, गाँव में हॉस्पिटल बने, गरीब का बच्चा पढ़े, इसके लिए पैसा लगे। रोड बनाने का काम प्राइवेट करे, लेकिन वो प्राइवेट वाला भी रोड अपना नहीं बनाता है। न अपने घर ले जाता है, रोड सरकार का बनाता है। एक प्रकार से अपनी पूंजी लगता है। इसका मतलब ये हुआ कि सरकार का जो प्रोजेक्ट होगा जिसमें पूंजी किसी की भी लगे, जिसको लोग PPP मॉडल कहतें हैं। लेकिन अगर उसका मालिकाना हक़ सरकार का रहता है, उसका स्वामित्व सरकार का रहता है, सरकार का मतलब आप सबका रहता है, देश की सवा सौ करोड़ जनता का रहता है तो उसमें ही हमने ये कहा है कि सहमति की आवश्यकता नहीं है और इसीलिये ये PPP मॉडल को लेकर के जो भ्रम फैलाये जातें हैं उसकी मुझे आपको स्पष्टता करना बहुत ही जरुरी है।
कभी-कभार हम जिन बातों के लिए कह रहे हैं कि भई उसमें ‘सहमति’ की प्रक्रिया एक प्रकार से अफसरशाही और तानाशाही को बल देगी। आप मुझे बताईये, एक गावं है, उस गॉव तक रोड बन गया है, अब दूसरे गॉव के लिए रोड बनाना है, आगे वाले गॉव के लिए, 5 किलोमीटर की दूरी पर वह गॉव है। इस गॉव तक रोड बन गया है, लेकिन इन गॉव वालों की ज़मीन उस गॉव की तरफ है। मुझे बताईये उस गॉव के लोगों के लिए, रोड बनाने के लिए, ये गॉव वाले ज़मीन देंगे क्या? क्या ‘सहमति’ देंगे क्या? तो क्या पीछे जो गॉव है उसका क्या गुनाह है भई? उसको रोड मिलना चाहिए कि नहीं, मिलना चाहिये? उसी प्रकार से मैं नहर बना रहा हूँ। इस गॉव वालो को पानी मिल गया, नहर बन गयी। लेकिन आगे वाले गॉव को पानी पहुंचाना है तो ज़मीन तो इसी गावंवालों के बीच में पड़ती है। तो वो तो कह देंगे कि भई नहीं, हम तो ज़मीन नहीं देंगे। हमें तो पानी मिल गया है। तो आगे वाले गावं को नहर मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए?
मेरे भाइयो-बहनो, ये व्यावहारिक विषय है। और इसलिए जिस काम के लिए इतनी लम्बी प्रक्रिया न हो, हक और किसान के लिए, ये उद्योग के लिए नहीं है, व्यापार के लिए नहीं है, गावं की भलाई के लिए है, किसान की भलाई के लिए है, उसके बच्चों की भलाई के लिए है।
एक और बात आ रही है। ये बात मैंने पहले भी कही है। हर घर में किसान चाहता है कि एक बेटा भले खेती में रहे, लेकिन बाकी सब संतान रोज़ी–रोटी कमाने के लिए बाहर जाये क्योंकि उसे मालूम है, कि आज समय की मांग है कि घर में घर चलाने के लिए अलग-अलग प्रयास करने पड़ते हैं। अगर हम कोई रोड बनाते है और रोड के बगल में सरकार Industrial Corridor बनाती है, प्राइवेट नहीं। मैं एक बार फिर कहता हूँ प्राइवेट नहीं, पूंजीपति नहीं, धन्ना सेठ नहीं, सरकार बनाती है ताकि जब Corridor बनता है पचास किलोमीटर लम्बा, 100 किलोमीटर लम्बा तो जो रोड बनेगा, रोड के एक किलोमीटर बाएं, एक किलोमीटर दायें वहां पर अगर सरकार Corridor बनाती है ताकि नजदीक में जितने गाँव आयेंगे 50 गाँव, 100 गाँव, 200 गाँव उनको वहां कोई न कोई, वहां रोजी रोटी का अवसर मिल जाए, उनके बच्चों को रोजगार मिल जाए।
मुझे बताइये, भाइयों-बहनो क्या हम चाहतें हैं, कि हमारे गाँव के किसानों के बच्चे दिल्ली और मुंबई की झुग्गी झोपड़ियों में जिन्दगी बसर करने के लिए मजबूर हो जाएँ? क्या उनके घर और गाँव के 20-25 किलोमीटर की दूरी पर एक छोटा सा भी कारखाना लग जाता है और उसको रोजगार मिल जाता है, तो मिलना चाहिये की नहीं मिलना चाहिये? और ये Corridor प्राइवेट नही है, ये सरकार बनाएगी। सरकार बनाकर के उस इलाके के लोगों को रोजगार देने का प्रबंध करेगी। ..और इसीलिए जिसकी मालिकी सरकार की है, और जो गाँव की भलाई के लिए है, गाँव के किसानो की भलाई के लिए है, जो किसानों की भावी पीड़ी की भलाई के लिए हैं, जो गाँव के गरीबों की भलाई के लिए हैं, जो गाँव के किसान को बिजली पानी मोहैया कराने के लिए उनके लिए हैं, उनके लिए इस भूमि अधिग्रहण बिल में कमियाँ थी, उस कमियों को दूर करने का हमारे प्रामाणिक प्रयास हैं।...और फिर भी मैंने Parliament में कहा था की अभी भी किसी को लगता है कोई कमी हैं, तो हम उसको सुधार करने के लिए तैयार हैं।
जब हमने लोकसभा में रखा, कुछ किसान नेताओं ने आ करके दो चार बातें बताईं, हमने जोड़ दी। हम तो अभी भी कहतें कि भाई भूमि अधिग्रहण किसानों की भलाई के लिए ही होना चाहिये। ..और ये हमारी प्रतिबद्धता है, जितने झूठ फैलाये जाते हैं, कृपा करके मैं मेरे किसान भाइयों से आग्रह करता हूँ कि आप इन झूठ के सहारे निर्णय मत करें, भ्रमित होने की जरुरत नहीं है। आवश्यकता यह है की हमारा किसान ताकतवर कैसे बने, हमारा गाँव ताकतवर कैसे बने, हमारा किसान जो मेहनत करता है, उसको सही पैसे कैसे मिले, उसको अच्छा बाज़ार कैसे मिले, जो पैदा करता है उसके रखरखाव के लिए अच्छा स्टोरेज कैसे मिले, हमारी कोशिश है कि गाँव की भलाई, किसान की भलाई के लिए सही दिशा में काम उठाएं।
मेरे किसान भाइयो-बहनो, हमारी कोशिश है कि देश ऐसे आगे बढ़े कि आपकी जमीन पर पैदावार बढ़े, और इसीलिए हमने कोशिश की है, Soil Health Card. जैसे मनुष्य बीमार हो जाता है तो उसकी तबीयत के लिए लेबोरेटरी में टेस्ट होता हैं। जैसा इंसान का होता है न, वैसा अपनी भारत-माता का भी होता हैं, अपनी धरती- माता का भी होता है। और इसीलिए हम आपकी धरती बचे इतना ही नहीं, आपकी धरती तन्दुरूस्त हो उसकी भी चिंता कर रहे हैं।
....और इसलिये भूमि अधिग्रहण नहीं, आपकी भूमि अधिक ताकतवर बने ये भी हमारा काम है। और इसीलिए “Soil Health Card” की बात लेकर के आये हैं। हर किसान को इसका लाभ मिलने वाला है, आपके उर्वरक का जो फालतू खर्चा होता है उससे बच जाएगा। आपकी फसल बढ़ेगी। आपको फसल का पूरा पैसा मिले, उसके लिए भी तो अच्छी मंडियां हों, अच्छी कानून व्यवस्था हो, किसान का शोषण न हो, उस पर हम काम कर रहे हैं और आप देखना मेरे किसान भाइयो, मुझे याद है, मैं जब गुजरात में मुख्यमंत्री था इस दिशा में मैंने बहुत काम किया था। हमारे गुजरात में तो किसान की हालत बहुत ख़राब थी, लेकिन पानी पर काम किया, बहुत बड़ा परिवर्तन आया। गुजरात के विकास में किसान का बहुत बड़ा योगदान बन गया जो कभी सोच नही सकता था। गाँव के गाँव खाली हो जाते थे। बदलाव आया, हम पूरे देश में ये बदलाव चाहते हैं जिसके कारण हमारा किसान सुखी हो।
...और इसलिए मेरे किसान भाइयो और बहनो, आज मुझे आपके साथ बात करने का मौका मिला। लेकिन इन दिनों अध्यादेश की चर्चा ज्यादा होने के कारण मैंने ज़रा ज्यादा समय उसके लिए ले लिया। लेकिन मेरे किसान भाइयो बहनो मैं प्रयास करूंगा, फिर एक बार कभी न कभी आपके साथ दुबारा बात करूंगा, और विषयों की चर्चा करूँगा, लेकिन मैं इतना विश्वास दिलाता हूँ कि आपने जो मुझे लिख करके भेजा है, पूरी सरकार को मैं हिलाऊँगा, सरकार को लगाऊंगा कि क्या हो रहा है। अच्छा हुआ आपने जी भरके बहुत सी चीजें बतायी हैं और मैं मानता हूँ आपका मुझ पर भरोसा है, तभी तो बताई है न! मैं ये भरोसे को टूटने नहीं दूंगा, ये मैं आपको विश्वास दिलाता हूँ।
आपका प्यार बना रहे, आपके आशीर्वाद बने रहे। और आप तो जगत के तात हैं, वो कभी किसी का बुरा सोचता, वो तो खुद का नुकसान करके भी देश का भला करता है। ये उसकी परंपरा रही है। उस किसान का नुकसान न हो, इसकी चिंता ये सरकार करेगी। ये मैं आपको विश्वास दिलाता हूँ लेकिन आज मेरी मन की बातें सुनने के बाद आपके मन में बहुत से विचार और आ सकते हैं। आप जरुर मुझे आकाशवाणी के पते पर लिखिये। मैं आगे फिर कभी बातें करूँगा। या आपके पत्रों के आधार पर सरकार में जो गलतियाँ जो ठीक करनी होंगी तो गलतियाँ ठीक करूँगा। काम में तेजी लाने की जरुरत है, तो तेजी लाऊंगा और और किसी को अन्याय हो रहा है तो न्याय दिलाने के लिए पूरा प्रयास करूँगा।
नवरात्रि का पावन पर्व चल रहा है। मेरी आपको बहुत-बहुत शुभकामनाएं।
नमस्ते, युवा दोस्तो। आज तो पूरा दिन भर शायद आपका मन क्रिकेट मैच में लगा होगा, एक तरफ परीक्षा की चिंता और दूसरी तरफ वर्ल्ड कप हो सकता है आप छोटी बहन को कहते होंगे कि बीच - बीच में आकर स्कोर बता दे। कभी आपको ये भी लगता होगा, चलो यार छोड़ो, कुछ दिन के बाद होली आ रही है और फिर सर पर हाथ पटककर बैठे होंगे कि देखिये होली भी बेकार गयी, क्यों? एग्जाम आ गयी। होता है न! बिलकुल होता होगा, मैं जानता हूँ। खैर दोस्तो, आपकी मुसीबत के समय मैं आपके साथ आया हूँ। आपके लिए एक महत्वपूर्ण अवसर है। उस समय मैं आया हूँ। और मैं आपको कोई उपदेश देने नहीं आया हूँ। ऐसे ही हलकी - फुलकी बातें करने आया हूँ।
बहुत पढ़ लिया न, बहुत थक गए न! और माँ डांटती है, पापा डांटते है, टीचर डांटते हैं, पता नहीं क्या क्या सुनना पड़ता है। टेलीफोन रख दो, टीवी बंद कर दो, कंप्यूटर पर बैठे रहते हो, छोड़ो सबकुछ, चलो पढ़ो यही चलता है न घर में? साल भर यही सुना होगा, दसवीं में हो या बारहवीं में। और आप भी सोचते होंगे कि जल्द एग्जाम खत्म हो जाए तो अच्छा होगा, यही सोचते हो न? मैं जानता हूँ आपके मन की स्थिति को और इसीलिये मैं आपसे आज ‘मन की बात’ करने आया हूँ। वैसे ये विषय थोड़ा कठिन है।
आज के विषय पर माँ बाप चाहते होंगे कि मैं उन बातों को करूं, जो अपने बेटे को या बेटी को कह नहीं पाते हैं। आपके टीचर चाहते होंगे कि मैं वो बातें करूँ, ताकि उनके विद्यार्थी को वो सही बात पहुँच जाए और विद्यार्थी चाहता होगा कि मैं कुछ ऐसी बातें करूँ कि मेरे घर में जो प्रेशर है, वो प्रेशर कम हो जाए। मैं नहीं जानता हूँ, मेरी बातें किसको कितनी काम आयेंगी, लेकिन मुझे संतोष होगा कि चलिये मेरे युवा दोस्तों के जीवन के महत्वपूर्ण पल पर मैं उनके बीच था. अपने मन की बातें उनके साथ गुनगुना रहा था। बस इतना सा ही मेरा इरादा है और वैसे भी मुझे ये तो अधिकार नहीं है कि मैं आपको अच्छे एग्जाम कैसे जाएँ, पेपर कैसे लिखें, पेपर लिखने का तरीका क्या हो? ज्यादा से ज्यादा मार्क्स पाने की लिए कौन - कौन सी तरकीबें होती हैं? क्योंकि मैं इसमें एक प्रकार से बहुत ही सामान्य स्तर का विद्यार्थी हूँ। क्योंकि मैंने मेरे जीवन में किसी भी एग्जाम में अच्छे परिणाम प्राप्त नहीं किये थे। ऐसे ही मामूली जैसे लोग पढ़ते हैं वैसे ही मैं था और ऊपर से मेरी तो हैण्डराइटिंग भी बहुत ख़राब थी। तो शायद कभी - कभी तो मैं इसलिए भी पास हो जाता था, क्योंकि मेरे टीचर मेरा पेपर पढ़ ही नहीं पाते होंगे। खैर वो तो अलग बातें हो गयी, हलकी - फुलकी बातें हैं।
लेकिन मैं आज एक बात जरुर आपसे कहना चाहूँगा कि आप परीक्षा को कैसे लेते हैं, इस पर आपकी परीक्षा कैसी जायेगी, ये निर्भर करती है। अधिकतम लोगों को मैंने देखा है कि वो इसे अपने जीवन की एक बहुत बड़ी महत्वपूर्ण घटना मानते हैं और उनको लगता है कि नहीं, ये गया तो सारी दुनिया डूब जायेगी। दोस्तो, दुनिया ऐसी नहीं है। और इसलिए कभी भी इतना तनाव मत पालिये। हाँ, अच्छा परिणाम लाने का इरादा होना चाहिये। पक्का इरादा होना चाहिये, हौसला भी बुलंद होना चाहिये। लेकिन परीक्षा बोझ नहीं होनी चाहिये, और न ही परीक्षा कोई आपके जीवन की कसौटी कर रही है। ऐसा सोचने की जरुरत नहीं है।
कभी-कभार ऐसा नहीं लगता कि हम ही परीक्षा को एक बोझ बना देते हैं घर में और बोझ बनाने का एक कारण जो होता है, ये होता है कि हमारे जो रिश्तेदार हैं, हमारे जो यार - दोस्त हैं, उनका बेटा या बेटी हमारे बेटे की बराबरी में पढ़ते हैं, अगर आपका बेटा दसवीं में है, और आपके रिश्तेदारों का बेटा दसवीं में है तो आपका मन हमेशा इस बात को कम्पेयर करता रहता है कि मेरा बेटा उनसे आगे जाना चाहिये, आपके दोस्त के बेटे से आगे होना चाहिये। बस यही आपके मन में जो कीड़ा है न, वो आपके बेटे पर प्रेशर पैदा करवा देता है। आपको लगता है कि मेरे अपनों के बीच में मेरे बेटे का नाम रोशन हो जाये और बेटे का नाम तो ठीक है, आप खुद का नाम रोशन करना चाहते हैं। क्या आपको नहीं लगता है कि आपके बेटे को इस सामान्य स्पर्धा में लाकर के आपने खड़ा कर दिया है? जिंदगी की एक बहुत बड़ी ऊँचाई, जीवन की बहुत बड़ी व्यापकता, क्या उसके साथ नहीं जोड़ सकते हैं? अड़ोस - पड़ोस के यार दोस्तों के बच्चों की बराबरी वो कैसी करता है! और यही क्या आपका संतोष होगा क्या? आप सोचिये? एक बार दिमाग में से ये बराबरी के लोगों के साथ मुकाबला और उसी के कारण अपने ही बेटे की जिंदगी को छोटी बना देना, ये कितना उचित है? बच्चों से बातें करें तो भव्य सपनों की बातें करें। ऊंची उड़ान की बातें करें। आप देखिये, बदलाव शुरू हो जाएगा।
दोस्तों एक बात है जो हमें बहुत परेशान करती है। हम हमेशा अपनी प्रगति किसी और की तुलना में ही नापने के आदी होते हैं। हमारी पूरी शक्ति प्रतिस्पर्धा में खप जाती है। जीवन के बहुत क्षेत्र होंगे, जिनमें शायद प्रतिस्पर्धा जरूरी होगी, लेकिन स्वयं के विकास के लिए तो प्रतिस्पर्धा उतनी प्रेरणा नहीं देती है, जितनी कि खुद के साथ हर दिन स्पर्धा करते रहना। खुद के साथ ही स्पर्धा कीजिये, अच्छा करने की स्पर्धा, तेज गति से करने की स्पर्धा, और ज्यादा करने की स्पर्धा, और नयी ऊंचाईयों पर पहुँचने की स्पर्धा आप खुद से कीजिये, बीते हुए कल से आज ज्यादा अच्छा हो इस पर मन लगाइए। और आप देखिये ये स्पर्धा की ताकत आपको इतना संतोष देगी, इतना आनंद देगी जिसकी आप कल्पना नहीं कर सकते। हम लोग बड़े गर्व के साथ एथलीट सेरगेई बूबका का स्मरण करते हैं। इस एथलीट ने पैंतीस बार खुद का ही रिकॉर्ड तोड़ा था। वह खुद ही अपने एग्जाम लेता था। खुद ही अपने आप को कसौटी पर कसता था और नए संकल्पों को सिद्ध करता था। आप भी उसी लिहाज से आगे बढें तो आप देखिये आपको प्रगति के रास्ते पर कोई नहीं रोक सकता है।
युवा दोस्तो, विद्यार्थियों में भी कई प्रकार होते हैं। कुछ लोग कितनी ही परीक्षाएं क्यों न भाए बड़े ही बिंदास होते हैं। उनको कोई परवाह ही नहीं होती और कुछ होते हैं जो परीक्षा के बोझ में दब जाते हैं। और कुछ लोग मुह छुपा करके घर के कोने में किताबों में फंसे रहते हैं। इन सबके बावजूद भी परीक्षा परीक्षा है और परीक्षा में सफल होना भी बहुत आवश्यक है और में भी चाहता हूँ कि आप भी सफल हों लेकिन कभी- कभी आपने देखा होगा कि हम बाहरी कारण बहुत ढूँढ़ते हैं। ये बाहरी कारण हम तब ढूँढ़ते हैं, जब खुद ही कन्फ्यूज्ड हों। खुद पर भरोसा न हो, जैसे जीवन में पहली बार परीक्षा दे रहे हों। घर में कोई टीवी जोर से चालू कर देगा, आवाज आएगी, तो भी हम चिड़चिड़ापन करते होंगे, माँ खाने पर बुलाती होगी तो भी चिड़चिड़ापन करते होंगे। दूसरी तरफ अपने किसी यार-दोस्त का फ़ोन आ गया तो घंटे भर बातें भी करते होंगें । आप को नहीं लगता है आप स्वयं ही अपने विषय में ही कन्फ्यूज्ड हैं।
दोस्तो खुद को पहचानना ही बहुत जरुरी होता है। आप एक काम किजीये बहुत दूर का देखने की जरुरत नहीं है। आपकी अगर कोई बहन हो, या आपके मित्र की बहन हो जिसने दसवीं या बारहवी के एग्जाम दे रही हो, या देने वाली हो। आपने देखा होगा, दसवीं के एग्जाम हों बारहवीं के एग्जाम हों तो भी घर में लड़कियां माँ को मदद करती ही हैं। कभी सोचा है, उनके अंदर ये कौन सी ऐसी ताकत है कि वे माँ के साथ घर काम में मदद भी करती हैं और परीक्षा में लड़कों से लड़कियां आजकल बहुत आगे निकल जाती हैं। थोड़ा आप ओबजर्व कीजिये अपने अगल-बगल में। आपको ध्यान में आ जाएगा कि बाहरी कारणों से परेशान होने की जरुरत नहीं है। कभी-कभी कारण भीतर का होता है. खुद पर अविश्वास होता है न तो फिर आत्मविश्वास क्या काम करेगा? और इसलिए मैं हमेशा कहता हूँ जैसे-जैसे आत्मविश्वास का अभाव होता है, वैसे वैसे अंधविश्वास का प्रभाव बढ़ जाता है। और फिर हम अन्धविश्वास में बाहरी कारण ढूंढते रहते हैं। बाहरी कारणों के रास्ते खोजते रहते हैं. कुछ तो विद्यार्थी ऐसे होते हैं जिनके लिए हम कहते हैं आरम्म्भीशुरा। हर दिन एक नया विचार, हर दिन एक नई इच्छा, हर दिन एक नया संकल्प और फिर उस संकल्प की बाल मृत्यु हो जाता है, और हम वहीं के वहीं रह जाते हैं। मेरा तो साफ़ मानना है दोस्तो बदलती हुई इच्छाओं को लोग तरंग कहते हैं। हमारे साथी यार- दोस्त, अड़ोसी-पड़ोसी, माता-पिता मजाक उड़ाते हैं और इसलिए मैं कहूँगा, इच्छाएं स्थिर होनी चाहिये और जब इच्छाएं स्थिर होती हैं, तभी तो संकल्प बनती हैं और संकल्प बाँझ नहीं हो सकते। संकल्प के साथ पुरुषार्थ जुड़ता है. और जब पुरुषार्थ जुड़ता है तब संकल्प सिद्दी बन जाता है. और इसीलिए तो मैं कहता हूँ कि इच्छा प्लस स्थिरता इज-इक्वल टू संकल्प। संकल्प प्लस पुरुषार्थ इज-इक्वल टू सिद्धि। मुझे विश्वास है कि आपके जीवन यात्रा में भी सिद्दी आपके चरण चूमने आ जायेगी। अपने आप को खपा दीजिये। अपने संकल्प के लिए खपा दीजिये और संकल्प सकारात्मक रखिये। किसी से आगे जाने की मत सोचिये। खुद जहां थे वहां से आगे जाने के लिए सोचिये। और इसलिए रोज अपनी जिंदगी को कसौटी पर कसता रहता है उसके लिए कितनी ही बड़ी कसौटी क्यों न आ जाए कभी कोई संकट नहीं आता है और दोस्तों कोई अपनी कसौटी क्यों करे? कोई हमारे एग्जाम क्यों ले? आदत डालो न। हम खुद ही हमारे एग्जाम लेंगें। हर दिन हमारी परीक्षा लेंगे। देखेंगे मैं कल था वहां से आज आगे गया कि नहीं गया। मैं कल था वहां से आज ऊपर गया कि नहीं। मैंने कल जो पाया था उससे ज्यादा आज पाया कि नहीं पाया। हर दिन हर पल अपने आपको कसौटी पर कसते रहिये। फिर कभी जिन्दगी में कसौटी, कसौटी लगेगी ही नहीं। हर कसौटी आपको खुद को कसने का अवसर बन जायेगी और जो खुद को कसना जानता वो कसौटियों को भी पार कर जाता है और इसलिए जो जिन्दगी की परीक्षा से जुड़ता है उसके लिए क्लासरूम की परीक्षा बहुत मामूली होती है।
कभी आपने भी कल्पना नहीं की होगी की इतने अच्छे अच्छे काम कर दिए होंगें। जरा उसको याद करो, अपने आप विश्वास पैदा हो जाएगा। अरे वाह! आपने वो भी किया था, ये भी किया था? पिछले साल बीमार थी तब भी इतने अच्छे मार्क्स लाये थे। पिछली बार मामा के घर में शादी थी, वहां सप्ताह भर ख़राब हो गया था, तब भी इतने अच्छे मार्क्स लाये थे। अरे पहले तो आप छः घंटे सोते थे और पिछली साल आपने तय किया था कि नहीं नहीं अब की बार पांच घंटे सोऊंगा और आपने कर के दिखाया था। अरे यही तो है मोदी आपको क्या उपदेश देगा। आप अपने मार्गदर्शक बन जाइए। और भगवान् बुद्ध तो कहते थे अंतःदीपो भव:।
मैं मानता हूँ, आपके भीतर जो प्रकाश है न उसको पहचानिए आपके भीतर जो सामर्थ्य है, उसको पहचानिए और जो खुद को बार-बार कसौटी पर कसता है वो नई-नई ऊंचाइयों को पार करता ही जाता है। दूसरा कभी- कभी हम बहुत दूर का सोचते रहते हैं। कभी-कभी भूतकाल में सोये रहते हैं। दोस्तो परीक्षा के समय ऐसा मत कीजिये। परीक्षा समय तो आप वर्तमान में ही जीना अच्छा रहेगा। क्या कोई बैट्समैन पिछली बार कितनी बार जीरो में आऊट हो गया, इसके गीत गुनगुनाता है क्या? या ये पूरी सीरीज जीतूँगा या नहीं जीतूँगा, यही सोचता है क्या? मैच में उतरने के बाद बैटिंग करते समय सेंचुरी करके ही बाहर आऊँगा कि नहीं आऊँगा, ये सोचता है क्या? जी नहीं, मेरा मत है, अच्छा बैट्समैन उस बॉल पर ही ध्यान केन्द्रित करता है, जो बॉल उसके सामने आ रहा है। वो न अगले बॉल की सोचता है, न पूरे मैच की सोचता है, न पूरी सीरीज की सोचता है। आप भी अपना मन वर्तमान से लगा दीजिये। जीतना है तो उसकी एक ही जड़ी-बूटी है। वर्तमान में जियें, वर्तमान से जुड़ें, वर्तमान से जूझें। जीत आपके साथ साथ चलेगी।
मेरे युवा दोस्तो, क्या आप ये सोचते हैं कि परीक्षा आपकी क्षमता का प्रदर्शन करने के लिए होती हैं। अगर ये आपकी सोच है तो गलत है। आपको किसको अपनी क्षमता दिखानी है? ये प्रदर्शन किसके सामने करना है? अगर आप ये सोचें कि परीक्षा क्षमता प्रदर्शन के लिए नहीं, खुद की क्षमता पहचानने के लिए है। जिस पल आप अपने मन्त्र मानने लग जायेंगे आप पकड़ लेंगें न, आपके भीतर का विश्वास बढ़ता चला जाएगा और एक बार आपने खुद को जाना, अपनी ताकत को जाना तो आप हमेशा अपनी ताकत को ही खाद पानी डालते रहेंगे और वो ताकत एक नए सामर्थ्य में परिवर्तित हो जायेगी और इसलिए परीक्षा को आप दुनिया को दिखाने के लिए एक चुनौती के रूप में मत लीजिये, उसे एक अवसर के रूप में लीजिये। खुद को जानने का, खुद को पह्चानने का, खुद के साथ जीने का यह एक अवसर है। जी लीजिये न दोस्तो।
दोस्तो मैंने देखा है कि बहुत विद्यार्थी ऐसे होते हैं जो परीक्षाओं के दिनों में नर्वस हो जाते हैं। कुछ लोगों का तो कथन इस बात का होता है कि देखो मेरी आज एग्जाम थी और मामा ने मुझे विश नहीं किया. चाचा ने विश नहीं किया, बड़े भाई ने विश नहीं किया। और पता नहीं उसका घंटा दो घंटा परिवार में यही डिबेट होता है, देखो उसने विश किया, उसका फ़ोन आया क्या, उसने बताया क्या, उसने गुलदस्ता भेजा क्या? दोस्तो इससे परे हो जाइए, इन सारी चीजों में मत उलझिए। ये सारा परीक्षा के बाद सोचना किसने विश किये किसने नहीं किया। अपने आप पर विश्वास होगा न तो ये सारी चीजें आयेंगी ही नहीं। दोस्तों मैंने देखा है की ज्यादातर विद्यार्थी नर्वस हो जाते हैं। मैं मानता हूँ की नर्वस होना कुछ लोगों के स्वभाव में होता है। कुछ परिवार का वातावरण ही ऐसा है। नर्वस होने का मूल कारण होता है अपने आप पर भरोसा नहीं है। ये अपने आप पर भरोसा कब होगा, एक अगर विषय पर आपकी अच्छी पकड़ होगी, हर प्रकार से मेहनत की होगी, बार-बार रिवीजन किया होगा। आपको पूरा विश्वास है हाँ हाँ इस विषय में तो मेरी मास्टरी है और आपने भी देखा होगा, पांच और सात सब्जेक्ट्स में दो तीन तो एजेंडा तो ऐसे होंगे जिसमें आपको कभी चिंता नहीं रहती होगी। नर्वसनेस कभी एक आध दो में आती होगी। अगर विषय में आपकी मास्टरी है तो नर्वसनेस कभी नहीं आयेगी।
आपने साल भर जो मेहनत की है न, उन किताबों को वो रात-रात आपने पढाई की है आप विश्वाश कीजिये वो बेकार नहीं जायेगी। वो आपके दिल-दिमाग में कहीं न कहीं बैठी है, परीक्षा की टेबल पर पहुँचते ही वो आयेगी। आप अपने ज्ञान पर भरोसा करो, अपनी जानकारियों पर भरोसा करो, आप विश्वास रखो कि आपने जो मेहनत की है वो रंग लायेगी और दूसरी बात है आप अपनी क्षमताओं के बारे में बड़े कॉंफिडेंट होने चाहिये। आपको पूरी क्षमता होनी चाहिये कि वो पेपर कितना ही कठिन क्यों न हो मैं तो अच्छा कर लूँगा। आपको कॉन्फिडेंस होना चाहिये कि पेपर कितना ही लम्बा क्यों न होगा में तो सफल रहूँगा या रहूँगी। कॉन्फिडेंस रहना चाहिये कि में तीन घंटे का समय है तो तीन घंटे में, दो घंटे का समय है तो दो घंटे में, समय से पहले मैं अपना काम कर लूँगा और हमें तो याद है शायद आपको भी बताते होंगे हम तो छोटे थे तो हमारी टीचर बताते थे जो सरल क्वेश्चन है उसको सबसे पहले ले लीजिये, कठिन को आखिर में लीजिये। आपको भी किसी न किसी ने बताया होगा और मैं मानता हूँ इसको तो आप जरुर पालन करते होंगे।
दोस्तो माई गोव पर मुझे कई सुझाव, कई अनुभव आए हैं । वो सारे तो मैं शिक्षा विभाग को दे दूंगा, लेकिन कुछ बातों का मैं उल्लेख करना चाहता हूँ!
मुंबई महाराष्ट्र के अर्णव मोहता ने लिखा है कि कुछ लोग परीक्षा को जीवन मरण का इशू बना देते हैं अगर परीक्षा में फेल हो गए तो जैसे दुनिया डूब गयी हैं। तो वाराणसी से विनीता तिवारी जी, उन्होंने लिखा है कि जब परिणाम आते है और कुछ बच्चे आत्महत्या कर देते हैं, तो मुझे बहुत पीड़ा होती है, ये बातें तो सब दूर आपके कान में आती होंगी, लेकिन इसका एक अच्छा जवाब मुझे किसी और एक सज्जन ने लिखा है। तमिलनाडु से मिस्टर आर. कामत, उन्होंने बहुत अच्छे दो शब्द दिए है, उन्होंने कहा है कि स्टूडेंट्स worrier मत बनिए, warrior बनिए, चिंता में डूबने वाले नहीं, समरांगन में जूझने वाले होने चाहिए, मैं समझता हूँ कि सचमुच मैं हम चिंता में न डूबे, विजय का संकल्प ले करके आगे बढ़ना और ये बात सही है, जिंदगी बहुत लम्बी होती है, उतार चढाव आते रहते है, इससे कोई डूब नहीं जाता है, कभी कभी अनेच्छिक परिणाम भी आगे बढ़ने का संकेत भी देते हैं, नयी ताकत जगाने का अवसर भी देते है!
एक चीज़ मैंने देखी हैं कि कुछ विद्यार्थी परीक्षा खंड से बाहर निकलते ही हिसाब लगाना शुरू कर देते है कि पेपर कैसा गया, यार, दोस्त, माँ बाप जो भी मिलते है वो भी पूछते है भई आज का पेपर कैसा गया? मैं समझता हूँ कि आज का पेपर कैसा गया! बीत गयी सो बात गई, प्लीज उसे भूल जाइए, मैं उन माँ बाप को भी प्रार्थना करता हूँ प्लीज अपने बच्चे को पेपर कैसा गया ऐसा मत पूछिए, बाहर आते ही उसको कह दे वाह! तेरे चेहरे पर चमक दिख रही है, लगता है बहुत अच्छा पेपर गया? वाह शाबाश, चलो चलो कल के लिए तैयारी करते है! ये मूड बनाइये और दोस्तों मैं आपको भी कहता हूँ, मान लीजिये आपने हिसाब किताब लगाया, और फिर आपको लगा यार ये दो चीज़े तो मैंने गलत कर दी, छः मार्क कम आ जायेंगे, मुझे बताइए इसका विपरीत प्रभाव, आपके दूसरे दिन के पेपर पर पड़ेगा कि नहीं पड़ेगा? तो क्यों इसमें समय बर्बाद करते हो? क्यों दिमाग खपाते हो? सारी एग्जाम समाप्त होने के बाद, जो भी हिसाब लगाना है, लगा लीजिये! कितने मार्क्स आएंगे, कितने नहीं आएंगे, सब बाद में कीजिये, परीक्षा के समय, पेपर समाप्त होने के बाद, अगले दिन पर ही मन केन्द्रित कीजिए, उस बात को भूल जाइए, आप देखिये आपका बीस पच्चीस प्रतिशत बर्डन यूं ही कम हो जाएगा
मेरे मन मे कुछ और भी विचार आते चले जाते हैं खैर मै नहीं जानता कि अब तो परीक्षा का समय आ गया तो अभी वो काम आएगा। लेकिन मै शिक्षक मित्रों से कहना चाहता हूँ, स्कूल मित्रों से कहना चाहता हूँ कि क्या हम साल में दो बार हर टर्म में एक वीक का परीक्षा उत्सव नहीं मना सकते हैं, जिसमें परीक्षा पर व्यंग्य काव्यों का कवि सम्मलेन हो. कभी एसा नहीं हो सकता परीक्षा पर कार्टून स्पर्धा हो परीक्षा के ऊपर निबंध स्पर्धा हो परीक्षा पर वक्तोतव प्रतिस्पर्धा हो, परीक्षा के मनोवैज्ञानिक परिणामों पर कोई आकरके हमें लेक्चर दे, डिबेट हो, ये परीक्षा का हव्वा अपने आप ख़तम हो जाएगा। एक उत्सव का रूप बन जाएगा और फिर जब परीक्षा देने जाएगा विद्यार्थी तो उसको आखिरी मोमेंट से जैसे मुझे आज आपका समय लेना पड़ रहा है वो लेना नहीं पड़ता, वो अपने आप आ जाता और आप भी अपने आप में परीक्षा के विषय में बहुत ही और कभी कभी तो मुझे लगता है कि सिलेबस में ही परीक्षा विषय क्या होता हैं समझाने का क्लास होना चाहिये। क्योंकि ये तनावपूर्ण अवस्था ठीक नहीं है
दोस्तो मैं जो कह रहा हूँ, इससे भी ज्यादा आपको कईयों ने कहा होगा! माँ बाप ने बहुत सुनाया होगा, मास्टर जी ने सुनाया होगा, अगर टयूशन क्लासेज में जाते होंगे तो उन्होंने सुनाया होगा, मैं भी अपनी बाते ज्यादा कह करके आपको फिर इसमें उलझने के लिए मजबूर नहीं करना चाहता, मैं इतना विश्वास दिलाता हूँ, कि इस देश का हर बेटा, हर बेटी, जो परीक्षा के लिए जा रहे हैं, वे प्रसन्न रहे, आनंदमय रहे, हसंते खेलते परीक्षा के लिए जाए!
आपकी ख़ुशी के लिए मैंने आपसे बातें की हैं, आप अच्छा परिणाम लाने ही वाले है, आप सफल होने ही वाले है, परीक्षा को उत्सव बना दीजिए, ऐसा मौज मस्ती से परीक्षा दीजिए, और हर दिन अचीवमेंट का आनंद लीजिए, पूरा माहौल बदल दीजिये। माँ बाप, शिक्षक, स्कूल, क्लासरूम सब मिल करके करिए, देखिये, कसौटी को भी कसने का कैसा आनंद आता है, चुनौती को चुनौती देने का कैसा आनंद आता है, हर पल को अवसर में पलटने का क्या मजा होता है, और देखिये दुनिया में हर कोई हर किसी को खुश नहीं कर सकता है!
मुझे पहले कविताएं लिखने का शौक था, गुजराती में मैंने एक कविता लिखी थी, पूरी कविता तो याद नहीं, लेकिन मैंने उसमे लिखा था, सफल हुए तो ईर्ष्या पात्र, विफल हुए तो टिका पात्र, तो ये तो दुनिया का चक्र है, चलता रहता है, सफल हो, किसी को पराजित करने के लिए नहीं, सफल हो, अपने संकल्पों को पार करने के लिए, सफल हो अपने खुद के आनंद के लिए, सफल हो अपने लिए जो लोग जी रहे है, उनके जीवन में खुशियाँ भरने के लिए, ये ख़ुशी को ही केंद्र में रख करके आप आगे बढ़ेंगे, मुझे विश्वास है दोस्तो! बहुत अच्छी सफलता मिलेगी, और फिर कभी, होली का त्यौहार मनाया कि नहीं मनाया, मामा के घर शादी में जा पाया कि नहीं जा पाया, दोस्तों कि बर्थडे पार्टी में इस बार रह पाया कि नहीं रह पाया, क्रिकेट वर्ल्ड कप देख पाया कि नहीं देख पाया, सारी बाते बेकार हो जाएँगी , आप और एक नए आनंद को नयी खुशियों में जुड़ जायेंगे, मेरी आपको बहुत शुभकामना हैं, और आपका भविष्य जितना उज्जवल होगा, देश का भविष्य भी उतना ही उज्जवल होगा, भारत का भाग्य, भारत की युवा पीढ़ी बनाने वाली है, आप बनाने वाले हैं, बेटा हो या बेटी दोनों कंधे से कन्धा मिला करके आगे बढ़ने वाले हैं!
आइये, परीक्षा के उत्सव को आनंद उत्सव में परिवर्तित कीजिए, बहुत बहुत शुभकामनाएं!
(Hon’ble Shri Narendra Modi):
Today, Shri Barack Obama, President of the United States, joins us in a special programme of Mann Ki Baat. For the last few months, I have been sharing my "Mann Ki Baat" with you. But today, people from various parts of the country have asked questions.
But most of the questions are connected to politics, foreign policy, economic policy. However, some questions touch the heart. And I believe if we touch those questions today, we shall be able to reach out to the common man in different parts of the country. And therefore, the questions asked in press conferences, or discussed in meetings – instead of those – if we discuss what comes from the heart, and repeat it, hum it, we get a new energy. And therefore, in my opinion, those questions are more important. Some people wonder, what does "Barack" mean? I was searching for the meaning of Barack. In Swahili language, which is spoken in parts of Africa, Barack means, one who is blessed. I believe, along with a name, his family gave him a big gift.
African countries have lived by the ancient idea of ‘Ubuntu’, which alludes to the ‘oneness in humanity’. They say – “I am, because we are”. Despite the gap in centuries and borders, there is the same spirit of Vasudhaiva Kutumbakam, which speak of in India. This is the great shared heritage of humanity. This unites us. When we discuss Mahatma Gandhi, we remember Henry Thoreau, from whom Mahatma Gandhi learnt disobedience. When we talk about Martin Luther King or Obama, we hear from their lips, respect for Mahatma Gandhi. These are the things that unite the world.
Today, Barack Obama is with us. I will first request him to share his thoughts. Then, I and Barack will both answer the questions that have been addressed to us.
I request President Barack Obama to say a few words.
(Hon’ble Shri Barack Obama):
Namaste! Thank you Prime Minister Modi for your kind words and for the incredible hospitality you have shown me and my wife Michelle on this visit and let me say to the people of India how honoured I am to be the first American President to join you for Republic Day; and I’m told that this is also the first ever Radio address by an Indian Prime Minister and an American President together, so we’re making a lot of history in a short time. Now to the people of India listening all across this great nation. It’s wonderful to be able to speak you directly. We just come from discussions in which we affirmed that India and the United States are natural partners, because we have so much in common. We are two great democracies, two innovative economies, two diverse societies dedicated to empowering individuals. We are linked together by millions of proud Indian Americans who still have family and carry on traditions from India. And I want to say to the Prime Minister how much I appreciate your strong personal commitment to strengthening the relationship between these two countries.
People are very excited in the United States about the energy that Prime Minister Modi is bringing to efforts in this country to reduce extreme poverty and lift people up, to empower women, to provide access to electricity, and clean energy and invest in infrastructure, and the education system. And on all these issues, we want to be partners. Because many of the efforts that I am promoting inside the United States to make sure that the young people get the best education possible, to make sure that the ordinary people are properly compensated for their labour, and paid fair wages, and have job security and health care. These are the same kinds of issues that Prime Minister Modi, I know cares so deeply about here. And I think there’s a common theme in these issues. It gives us a chance to reaffirm what Gandhi ji reminded us, should be a central aim of our lives. And that is, we should endeavour to seek God through service of humanity because God is in everyone. So these shared values, these convictions, are a large part of why I am so committed to this relationship. I believe that if the United States and India join together on the world stage around these values, then not only will our peoples be better off, but I think the world will be more prosperous and more peaceful and more secure for the future. So thank you so much Mr. Prime Minister, for giving me this opportunity to be with you here today.
(Hon’ble Shri Narendra Modi):
Barack the first question comes from Raj from Mumbai
His question is, the whole world knows about your love for your daughters. How will you tell your daughters about youre experience of India? Do you plan to do some shopping for them?
(Hon’ble Shri Barack Obama):
Well first of all they very much wanted to come. They are fascinated by India, Unfortunately each time that I have taken a trip here, they had school and they couldn’t leave school. And in fact, Malia, my older daughter, had exams just recently. They are fascinated by the culture, and the history of India, in part because of my influence I think, they are deeply moved by India’s movement to Independence, and the role that Gandhi played, in not only the non-violent strategies here in India, but how those ended up influencing the non-violent Civil Rights Movement in the United States. So when I go back I am going to tell them that India is as magnificent as they imagined. And I am quite sure that they are going to insist that I bring them back the next time I visit. It may not be during my Presidency, but afterwards they will definitely want to come and visit.
And I will definitely do some shopping for them. Although I can’t go to the stores myself, so I have to have my team do the shopping for me. And I’ll get some advice from Michelle, because she probably has a better sense of what they would like.
(Hon’ble Shri Narendra Modi):
Barack said he will come with his daughters. I extend an invitation to you. Whether you come as President, or thereafter, India looks forward to welcoming you and your daughters.
Sanika Diwan from Pune, Maharashtra has asked me a question. She asks me, whether I have sought assistance from President Obama for the Beti Bachao, Beti Padhao Mission
Sanika you have asked a good question. There is a lot of worry because of the sex ratio in India. For every 1000 boys, the number of girls is less. And the main reason for this is that, there is a defect in our attitudes towards boys and girls.
Whether or not I seek help from President Obama, his life is in itself an inspiration. The way he has brought up his two daughters, the way he is proud of his two daughters.
In our country too, I meet many families who have only daughters. And they bring up their daughters with such pride, give them such respect, that is the biggest inspiration. I believe that inspiration is our strength. And in response to your question, I would like to say, to save the girl child, to educate the girl child, this is our social duty, cultural duty, and humanitarian responsibility. We should honour it.
Barack, there is a question for you. The second question for President Obama comes through e-mail: Dr. Kamlesh Upadhyay, a Doctor based in Ahmedabad, Gujarat - Your wife is doing extensive work on tackling modern health challenges like obesity and diabetes. These are increasingly being faced in India as well. Would you and the First Lady like to return to India to work on these issues after your Presidency, just like Bill and Melinda Gates?
(Hon’ble Barack Obama):
Well, we very much look forward to partnering with organizations, and the government and non-governmental organizations here in India, around broader Public Health issues including the issue of obesity. I am very proud of the work that Michelle has done on this issue. We’re seeing a world-wide epidemic of obesity, in many cases starting at a very young age. And a part of it has to do with increase in processed foods, not naturally prepared. Part of it is a lack of activity for too many children. And once they are on this path, it can lead to a life time of health challenges. This is an issue that we would like to work on internationally, including here in India. And it is a part of a broader set of issues around global health that we need to address. The Prime Minister and I have discussed, for example, how we can do a better job in dealing with issues like pandemic. And making sure that we have good alert systems so that if a disease like Ebola, or a deadly flu virus, or Polio appears, it is detected quickly and then treated quickly so that it doesn’t spread. The public health infrastructure around the world needs to be improved. I think the Prime Minister is doing a great job in focusing on these issues here in India. And India has a lot to teach many other countries who may not be advancing as rapidly in improving this public health sector. But it has an impact on everything, because if children are sick they can’t concentrate in school and they fall behind. It has a huge economic impact on the countries involved and so we think that there is a lot of progress to be made here and I am very excited about the possibilities of considering this work even after I leave office.
(Hon’ble Shri Narendra Modi):
Mr. Arjun asks me a question. An interesting question. He says he has seen an old photo of me as a tourist outside the White House. He asks me what touched me when I went there last September.
It is true that when I first went to America, I was not lucky enough to visit the White House. There is an iron fence far from the White House. We stood outside the fence and took a photograph. White House is visible in the background. Now that I have become Prime Minister, that photo too has become popular. But at that time, I had never thought that sometime in my life, I would get a chance to visit the White House. But when I visited the White House, one thing touched my heart. I can never forget that. Barack gave me a book, a book that he had located after considerable effort. That book had become famous in 1894. Swami Vivekananda, the inspiration of my life, had gone to Chicago to participate in the World Religions Conference. And this book was a compilation of the speeches delivered at the World Religions Conference. That touched my heart. And not just this. He turned the pages of the book, and showed me what was written there. He had gone through the entire book! And he told me with pride, I come from the Chicago where Swami Vivekananda had come. These words touched my heart a lot. And I will treasure this throughout my life. So once, standing far from the White House and taking a photo, and then, to visit the White House, and to receive a book on someone whom I respect. You can imagine, how it would have touched my heart.
Barack there is a question for you. Himani from Ludhiana, Punjab. Question is for you ……:
(Hon’ble Shri Barack Obama):
Well the question is “Did you both imagine you would reach the positions that you’ve reached today?”
And it is interesting, Mr. Prime Minister, your talking about the first time you visited White House and being outside that iron fence. The same is true for me. When I first went to the White House, I stood outside that same fence, and looked in, and I certainly did not imagine that I would ever be visiting there, much less living there. You know, I think both of us have been blessed with an extraordinary opportunity, coming from relatively humble beginnings. And when I think about what’s best in America and what’s best in India, the notion that a tea seller or somebody who’s born to a single mother like me, could end up leading our countries, is an extraordinary example of the opportunities that exist within our countries. Now I think, a part of what motivates both you and I, is the belief that there are millions of children out there who have the same potential but may not have the same education, may not be getting exposed to opportunities in the same way, and so a part of our job, a part of government’s job is that young people who have talent, and who have drive and are willing to work for, are able to succeed. And that’s why we are emphasizing school, higher education. Making sure that children are healthy and making sure those opportunities are available to children of all backgrounds, girls and boys, people of all religious faiths and of all races in the United States is so important. Because you never know who might be the next Prime Minister of India, or who might be the next President of United States. They might not always look the part right off the bat. And they might just surprise you if you give them the chance.
(Hon’ble Shri Narendra Modi):
Thank you Barack.
Himani from Ludhiana has also asked me this question – did I ever imagine I would reach this high office?
No. I never imagined it. Because, as Barack said, I come from a very ordinary family. But for a long time, I have been telling everyone, never dream of becoming something. If you wish to dream, dream of doing something. When we do something, we get satisfaction, and also get inspiration to do something new. If we only dream of becoming something, and cannot fulfil the dream, then we only get disappointed. And therefore, I never dreamt of becoming something. Even today, I have no dream of becoming something. But I do dream of doing something. Serving Mother India, serving 125 crore Indians, there can be no greater dream than this. That is what I have to do. I am thankful to Himani.
There is a question for Barack from Omprakash. Omprakash is studying Sanskrit at JNU. He belongs to Jhunjunu, Rajasthan. Om Prakash is convener of special centre for Sanskrit Studies in JNU.
(Hon’ble Shri Barack Obama):
Well this is a very interesting question. His question is, the youth of the new generation is a global citizen. He is not limited by time or boundaries. In such a situation what should be the approach by our leadership, governments as well as societies at large.
I think this is a very important question. When I look at this generation that is coming up, they are exposed to the world in ways that you and I could hardly imagine. They have the world at their fingertips, literally. They can, using their mobile phone, get information and images from all around the world and that’s extraordinarily powerful. And what that means, I think is that, governments and leaders cannot simply try to govern, or rule, by a top-down strategy. But rather have to reach out to people in an inclusive way, and an open way, and a transparent way. And engage in a dialogue with citizens, about the direction of their country. And one of the great things about India and the United States is that we are both open societies. And we have confidence and faith that when citizens have information, and there is a vigorous debate, that over time even though sometimes democracy is frustrating, the best decisions and the most stable societies emerge and the most prosperous societies emerge. And new ideas are constantly being exchanged. And technology today I think facilitates that, not just within countries, but across countries. And so, I have much greater faith in India and the United States, countries that are open information societies, in being able to succeed and thrive in this New Information Age; than closed societies that try to control the information that citizens receive. Because ultimately that’s no longer possible. Information will flow inevitably, one way or the other, and we want to make sure we are fostering a healthy debate and a good conversation between all peoples.
(Hon’ble Shri Narendra Modi):
Omprakash wants me too, to answer the question that has been asked to Barack.
Barack has given a very good answer. It is inspiring. I will only say, that once upon a time, there were people inspired primarily by the Communist ideology. They gave a call: Workers of the world, Unite. This slogan lasted for several decades. I believe, looking at the strength and reach of today's youth, I would say, Youth, Unite the world. I believe they have the strength and they can do it.
The next question is from CA Pikashoo Mutha from Mumbai, and he asks me, which American leader has inspired you
When I was young, I used to see Kennedy's pictures in Indian newspapers. His personality was very impressive. But your question is, who has inspired me. I liked reading as a child. And I got an opportunity to read the biography of Benjamin Franklin. He lived in the eighteenth century. And he was not an American President. But his biography is so inspiring – how a person can intelligently try to change his life.
If we feel excessively sleepy, how can we reduce that?
If we feel like eating too much, how can we work towards eating less?
If people get upset with you that cannot meet them, because of the pressure of work, then how to solve this problem?
He has addressed such issues in his biography. And I tell everyone, we should read Benjamin Franklin's biography. Even today, it inspires me. And Benjamin Franklin had a multi-dimensional personality. He was a politician, he was a political scientist, he was a social worker, he was a diplomat. And he came from an ordinary family. He could not even complete his education. But till today, his thoughts have an impact on American life. I find his life truly inspiring. And I tell you too, if you read his biography, you will find ways to transform your life too. And he has talked about simple things. So I feel you will be inspired as much as I have been.
There is a question for Barack, from Monika Bhatia.
(Hon’ble Shri Barack Obama):
Well the question is “As leaders of two major economies, what inspires you and makes you smile at the end of a bad day at work?”
And that is a very good question. I say sometimes, that the only problems that come to my desk are the ones that nobody else solves. If they were easy questions, then somebody else would have solved them before they reached me. So there are days when it’s tough and frustrating. And that’s true in Foreign Affairs. That is true in Domestic Affairs. But I tell you what inspires me, and I don’t know Mr. Prime Minister if you share this view - almost every day I meet somebody who tells me, “You made a difference in my life.”
So they’ll say, “The Health-Care law that you passed, saved my child who didn’t have health insurance.” And they were able to get an examination from a Physician, and they caught an early tumour, and now he is doing fine.
Or they will say “You helped me save my home during the economic crisis.”
Or they’ll say, “I couldn’t afford college, and the program you set up has allowed me to go to the university.”
And sometimes they are thanking you for things that you did four or five years ago. Sometimes they are thanking you for things you don’t even remember, or you’re not thinking about that day. But it is a reminder of what you said earlier, which is, if you focus on getting things done as opposed to just occupying an office or maintaining power, then the satisfaction that you get is unmatched. And the good thing about service is that anybody can do it. If you are helping somebody else, the satisfaction that you can get from that, I think, exceeds anything else that you can do. And that’s usually what makes me inspired to do more, and helps get through the challenges and difficulties that we all have. Because obviously we are not the only people with bad days at work. I think everybody knows what it is like to have a bad day at work. You just have to keep on working through it. Eventually you make a difference.
(Hon’ble Shri Narendra Modi):
Indeed Barack has spoken words from the heart (Mann Ki Baat). Whatever position we may hold, we are human too. Simple things can inspire us. I also wish to narrate an experience. For many years, I was like an ascetic. I got food at other people's homes. Whoever invited me, used to feed me as well. Once a family invited me over for a meal, repeatedly. I would not go, because I felt they are too poor, and if I go to eat at their place, I will become a burden on them. But eventually, I had to bow to their request and love. And I went to eat a meal at their home. It was a small hut, where we sat down to eat. They offered me roti made of bajra (millet), and mik. Their young child was looking at the milk. I felt, the child has never even seen milk. So I gave that small bowl of milk to the child. And he drank it within seconds. His family members were angry with him. And I felt that perhaps that child has never had any milk, apart from his mother's milk. And maybe, they had bought milk so that I could have a good meal. This incident inspired me a lot. A poor person living in a hut could think so much about my well-being. So I should devote my life to their service. So these are the things that serve as inspiration. And Barack has also spoken about what can touch the heart.
I am thankful to Barack, he has given so much time. And I am thankful to my countrymen for listening to Mann Ki Baat. I know radio reaches every home and every lane of India. And this Mann Ki Baat, this special Mann Ki Baat will echo forever.
I have an idea. I share it with you. There should be an e-book made of the talk between Barack and me today. I hope the organizers of Mann Ki Baat will release this e-book. And to you all, who have listened to Mann Ki Baat, I also say, do participate in this. And the best hundred thoughts that emerge out of this, will also be added to this e-book. And I want you to write to us on Twitter, on Facebook, or online, using the hashtag #YesWeCan.
• Eliminate Poverty - #YesWeCan • Quality Healthcare to All - #YesWeCan • Youth empowered with Education - #YesWeCan • Jobs for All - #YesWeCan • End to Terrorism - #YesWeCan • Global Peace and Progress - #YesWeCan
I want you to send your thoughts, experiences and feelings after listening to Mann Ki Baat. From them, we will select the best hundred, and we will add them to the book containing the talk that Barack and I have had. And I believe, this will truly become, the Mann Ki Baat of us all.
Once again, a big thank you to Barack. And to all of you. Barack's visit to India on this pious occasion of 26th January, is a matter of pride for me and for the country.
Thank you very much.
My Dear Fellow Countrymen,
Today I have this great opportunity of interacting with you again. You must be wondering why a Prime Minister should be interacting the way I am doing it. Well, first and foremost, I am a less of your Prime Minister and more of a Pradhan Sewak (serving the people). Since childhood I have been hearing that by sharing, our intensity of pain become less while the intensity of our joys grow manifold. Well I think, this is the guiding thought behind Mann ki Baat. It is an opportunity for me to sometimes share my concern and sometimes my joy. Sharing my deepest concerns with you makes me feel light hearted and sharing my joy just doubles my happiness.
Last time, I mentioned my concern about the youth of the country. It is not because you chose me as the Prime Minister but because I feel concerned as an individual. Sons and daughters of many families are caught in the trap of drugs. It just does not destroy the person involved, but his entire family, the society and the Nation at large. Drug is such a grave menace which destroys the most powerful individuals.
While serving as the Chief Minister of Gujarat, my officers with good records would often come to ask for leave. Initially they would hesitate to spell out the reasons, however on insisting they revealed that their child had fallen into the drug trap and they now need to spend time with their kids and rehabilitate them. I could see the bravest of my officers struggling to control their tears. I met suffering mothers too. In Punjab I had the chance to meet some mothers who were very angry and yet concerned about their children who had fallen into the trap of drugs.
We have to work together as a society to tackle this menace. I understand that the youth who fall into this drug trap are often blamed. We blame these youth as being careless and irresponsible. We perceive that the victims are bad but the fact is that the drugs are bad. The youth are not wrong; it is this addiction which is wrong. Let us not blame and wrong our kids. Let us get rid of this habit of addiction and not victimize our kids. Blaming the kids would push them further into addiction. This is in fact a psycho-socio-medical issue and let us treat it as such a problem. This menace needs to be handled carefully as its solution is not limited to medical intervention only. The individual concerned, his family, friends, the society, the government and the legal system all have to work in tandem to tackle this menace. Each one of us have to contribute to get rid of this menace.
A few days ago, I had organized a DGP level conference in Assam. I expressed my concern over this issue and my displeasure at the non-serious attitude of the people concerned. I have asked the police department to seriously discuss this issue and come out with relevant solutions. I have suggested the department to launch a toll free helpline. The families often feel ashamed to come out in open about the addiction problem of their children. They have no one to confide in. Parents from any part, any corner of the country can freely approach the police if their children have fallen a victim to addiction. The department has taken this suggestion seriously and working towards its fulfillment.
The drug menace brings about the Three D’s. These Three D’s are not the ones related to entertainment but I am talking about the Three D’s related to the three vices.
First D is Darkness, the second D is Destruction and the third D is Devastation.
Drugs lead a person to a blind path of destruction. There is nothing left in its trail but devastation. This is a topic of great concern and demands total attention.
I had mentioned this topic in my last address in Mann ki Baat. We received more than 7000 letters on our Akashvani address. Some letters were received in the government offices. We received responses on government portal, Mygov.in, online and through e-mails. Lakhs of comments were received on twitter and facebook. Hence, a deep rooted concern in the society’s psyche has found a voice.
I am especially thankful to the media of our country for carrying this concern forward. Many channels conducted hour long programs. These programs were not just meant to criticize the government. They were forums for open discussion, a concern and an effort to come out with workable solutions. These initiatives created background for healthy discussions. The government was also sensitized to its responsibilities in this direction. The government can no longer remain neutral to these concerns.
There is a question I want to ask these youth caught in the drug trap. I want to ask these youth that when for three or four hours they are in a state of intoxication, they might be feeling free of all concerns, free of all tensions and in a different world altogether. But have you ever lent a thought to the fact that when you buy drugs where does this money go to? Have you ever thought about it? Just make a guess. What if this drug money goes to the terrorists? What if this money is spent by the terrorists to procure weapons? And with this weapon the very same terrorist might be pumping bullets in the heart of my soldiers. The soldier of my country gets martyred. Have you ever thought about our soldiers- a soldier who is so dear to his mother, the treasured son of Mother India, the brave son of the soil is hit by a bullet probably funded by the money spent on purchasing drugs. I know and firmly believe that you too love your motherland and have tremendous respect for our soldiers. Then how can you support a habit which funds drug mafia and the terrorists.
Some people feel that when a person is in despair, faces failures and when he is directionless, he is an easy prey to drugs. But I feel that people who lack ambition, do not have any set goals and targets, who have a deep vacuum in their lives, are the ones where drugs will have an easy access. If you want to avoid drugs and save your children from this menace then foster ambition in them, give them dreams to pursue and make them individuals with a desire to achieve something in life. Then you will see that they will not be easily distracted. Their aim then will be to achieve something in life.
Have you ever followed a sportsman’s life? A sportsman is motivated forever. In the bleak winters everyone feels like sleeping in the warmth of a quilt but a sportsman will still rise at 4 or 5 and go for his workouts. Why? because the goal is set. Similarly, if your child would be aimless, there are chances of him/her to fall prey to menace like drugs.
I remember the words of Vivekananda. These words are very apt for all the young people. Just keep repeating this thought over and over again. “Take a thought, make it your life. Ponder on it and dream about it. Make it an integral part of your dreams. Make it a part of your mind, brain, veins and each and every part of your body and forget everything else”.
This thought of Vivekananda is apt for every young person and that is why I say that each person should have an ambition in life. Having an ambition does not allow your focus on unnecessary things.
Some take it under peer pressure because it looks “cool”, some consider it as a style statement. So sometimes the youth inadvertently fall into this serious trap, due to the wrong mental perception. Addiction is neither cool nor a style statement. In reality, it is a precursor to destruction. So whenever your friends boast about their drug habits, do not applaud and enjoy such conversation. Do not be a mute spectator to such absurdities. Have the courage to stand against such conversations and say NO. Have the guts to despise such a conversation, reject such a conversation and have the guts to tell the person that he is wrong.
I would like to share some views with the parents too. These days none of us have time. All of us are running against time to earn our livelihood. We are racing against time to improve the quality of our lives. But in this blind race, do we have the time to spare for our kids. Do we ever work for our kid’s spiritual progress and discuss it with them, rather we discuss only material progress. How are they doing in their studies, what has been their progress in exam, what to eat and what not to eat, where to go and where not to go – majorly these topics form the core of the entire interactions. Do we share such a relationship that our children can bare their hearts to us? I request all of you to do this. If your children share a frank relationship then you can very well know what is going on in their life. Children do not take to bad habits suddenly. It happens gradually and it also impacts the home. Observe the changes that are happening in your home. If you observe closely then I believe that you may be successful in detecting the problem at the very beginning. Be aware of your child’s friend circle and don’t keep your conversations focused just about progress. Your concern should extend to their inner depths, their thoughts, their logic, their books, their friends and their mobiles - how and where are they spending their time. These need to be taken care of. I believe that no one else can do what a parent can for their kids. Our ancestors have left us certain pearls of wisdom and that is why they are known as statesmen. A saying goes like this:
Paanch Varsh Laaw Lijiye
Dass Laaw Tadan dei
Paanch Varsh Laaw Lijiye
Dass Laaw Tadan dei
Sut Hi Solah Varsh Mein
Mitra Sarij Gani Dei
This means that till 5 years of age a child should grow in the loving and tender care of his parents, by the time he is 10 the values of discipline should be inculcated in him. Sometimes we see that an intelligent mother gets angry and does not speak with her child throughout the day. This is a big punishment for the child. The mother punishes herself but the child too gets punished in turn. The mother just has to say that I will not talk and the 10 year old will remain worried the whole day long. He changes his habit and by the time he is of 16 years then the relationship should turn like a friend towards him. There should be an open conversation with him. This is a brilliant advice which has been passed on by our ancestors. I would like to see this inculcated in our family life.
Another thing brought to our notice is the role of the pharmacists. Some of the medicines lead to addiction. So such medicines should not be distributed without a doctor’s prescription. Sometimes a simple thing like a cough syrup can trigger addiction. It becomes the starting point for addiction. There are quite a few things that I would not like to raise from this platform. But we will have to follow and accept this discipline.
These days many children from villages go to city for higher education and start living in a hostel or a boarding school. I have heard that sometimes these avenues become the entry point of such addiction. For this the education system, the society and the security force will have to act as a vigilante. Each one will have to fulfill their roles and responsibilities. The government will fulfill the responsibilities on its end. We should constantly strive to fulfill our obligations.
I would also like to mention about the letters we have received. Some of them are interesting, some are filled with grief and some are inspiring. I cannot mention all, but I would like to mention one. There was a certain Mr. Dutt. He was deep into addiction .He was also jailed where he had several restrictions. Then later his life changed. He studied in jail and then his life was transformed. His story is very famous. He was in Yerawada Jail. There might be many such inspiring stories. Many people have been victorious in their fight against addiction. We too can come out of such habits and so we should definitely try. We should make efforts for de-addiction and rehabilitation. I would ask celebrities to be a part of this initiative - be it from the field of cinema, sports or someone concerned with public life. Be it the cultural or spiritual world, we should use every possible platform to create awareness. There should be constant messages in public interest. They will certainly have an effect. Those active on the social media, I would request them to create a continuous online movement by joining #DrugsFreeIndia hash-tag. This is more relevant because most of the addicted youth are a part of the social media. If we take this #DrugsFreeIndia hash-tag movement forward then we will do a great service for public awareness and education.
I want to take this concern forward. I would request all those who have successfully come out of this addiction to share their stories. I touched this topic because like I said in the beginning grief becomes less on sharing. This is a topic of national concern and I am not here to sermonize. And neither am I entitled to preach. I am just sharing my grief with you. Those families who are suffering from this menace, I want to share their pain as well. I want to create a responsible environment. There can be difference of opinions but let us make a beginning somewhere.
Like I mentioned before, I want to share happiness. Last week I had the opportunity to meet the Blind Cricket Team. They had won the world cup. What joy and excitement, they were exuding great self confidence. God has given us everything, eyes, hands, legs i.e. we are totally capable yet we lack this kind of determination and passion which I could see in the blind cricketers. What zeal and enthusiasm, really it was contagious. I felt super charged after meeting them. Such incidents bring great pleasure in life.
In the past few days there was yet another important news. The cricket team from Kashmir defeated Mumbai on their home ground. I do not view it as a matter of someone’s victory and other’s loss. I view it differently. All the stadiums in Kashmir have been inundated after the floods. Kashmir is passing through a tough phase. The circumstances have been extremely grim with these boys not standing any chance to practice. But the Team Spirit shown by these boys, their conviction and determination is awe inspiring. These boys have shown us that one can overcome the most trying and testing circumstances if one remains focused on our goals. This news gave me immense pleasure and I take this opportunity to congratulate all these players on their victory.
Two days back, the United Nations has decided to celebrate June 21st as International Yoga Day. It is a matter of great pride and honour for India. Our ancestors developed a beautiful tradition and today the entire world is associated with it. It does not merely benefit one personally but it has the potential to bring all the people together globally. The entire world came together on the issue of Yoga in the UN and a unanimous resolution was passed just two days back. 177 countries became the co-sponsors. In the past when it was decided to celebrate the birthday Mr. Nelson Mandela, 165 countries became co-sponsors. Before that efforts were on for International Toilet Day and 122 nations became co-sponsors to that initiative too. For celebrating Oct 2nd as Non Violence Day 140 Countries became co-sponsors, before that. But 177 countries co- sponsoring Yoga is a world record of sorts. I am thankful to all the countries that have come out in support and have honored the sentiments of the Indians and decided to observe World Yoga Day. It is now our duty that Yoga reaches out to the masses in its true essence.
Last week I had the chance to have a meeting with the Chief Ministers of all the states. This tradition has been going on for the past 50-60 years. This time it was organized at the Prime Minister’s residence. We started it as a retreat program with no papers, no files and no officers. It was a simple interaction where the Prime Minister and Chief Minister were all the same, seated together like friends. For an hour or two, matters of national concern were seriously discussed in a friendly atmosphere. Everyone just poured their hearts out. There was no political agenda involved. This too was a memorable experience that I wanted to share with you.
Last week I had the chance to travel to the North East. I had been there for three days. Many a times youth express their desire to see the Taj, Singapore or Dubai. But I would urge all the nature lovers, all who want to experience the divinity in nature, to take a tour of the North East. I had gone earlier too. This time when I went as the Prime Minister, I tried to explore its potential. Our North east has tremendous potential and possibilities. It’s a land of beautiful people and beautiful surroundings. I was filled with immense joy visiting that place. Sometimes people ask Modi ji don’t you get tired? I want to say that whatever little fatigue I had, well the North East took it away completely, I am thoroughly rejuvenated. Such is the pleasure that I derived from that visit. The love and respect accorded by the people there is something that will stay with me forever. The kinship and affinity showed by the people of the North East touched me deeply. I will also tell you, it is not a joy for only Modi to enjoy, it is there for you to enjoy too. So do travel to the North East and enjoy.
The next edition of Mann Ki Baat will happen in 2015. This is probably my last program in 2014. I wish you all a Merry Christmas. I would like to wish all the very best of New Year hes in advance. It gives me immense pleasure to know that this program Mann Ki Baat is broadcast in regional languages by the Local Radio stations that same night at 8 pm. And it is surprising to know some of the regional voice-over artists also speak in the voice very similar to me. I am surprised at the brilliant work being done by the artists associated at Akashvani and I would like to congratulate them. I consider this as an effective medium to connect to the masses. We have had tremendous response. Seeing the response Akashvani has devised a new method. They have taken a new Post Box number. So now if you wish to write into me you can write on this Post Box number.
Mann Ki Baat
Post Box no 111, Akashvani
New Delhi.
I will be awaiting your letters. You do not realize that your letters become my inspiration. Some suggestions penned down can do good to the entire nation. I am thankful to you all. We will meet next in 2015 and on some Sunday morning we will again have our own Mann Ki Baat.
Thank you very much.
My dear fellow countrymen,
I am with you again almost after a month. A month is quite a long time. Lots of things keep happening in the world. You all have recently celebrated the festival of Diwali with great fervour and joy. It is these festivals which bring happiness in our daily lives from time to time. Be it poor or rich, people from village or from urban areas, festivals hold a different significance in everyone’s lives. This is my first meeting after Diwali, so I convey my very warm wishes to you all.
Last time we had some general conversation. But then I came to some new realizations after that conversation. Sometimes we think leave it… nothing is going to change, people are indifferent, they will not do anything, our country is like this. From my last conversation in Mann Ki Baat to this one, I would urge you all to change this mindset. Neither is our country is like this nor our people indifferent. Sometimes I feel the Nation is way ahead and the government is lacking behind. And from my personal experience I will say that the governments too needs to change their mindsets. And I say that because I can see tremendous sense of commitment in the Indian youth. They are very eager to do their bit and are just seeking an opportunity where they can do their bit. And they are making efforts at their own end. Last time I had asked them to buy at least one khadi outfit. I had not asked anyone to be Khadidhari, But the feedback I got from Khadi stores was that in a week’s time the sales had jumped up by 125%. In this way, as compared to last year the sales this year is more than double in the week following 2nd Oct. This means, the people of our country is many times more than we think of. I salute all my fellow Indians.
Cleanliness……….. Can anyone imagine that cleanliness will become a such a huge public movement. The expectations are high and they should be so. I can see some good results, cleanliness can now be witnessed in two parts. One is those huge garbage piles which keep lying in the city; well the people in the government will work to remove those. It is a big challenge but you cannot run away from your responsibilities. All state governments and all municipalities will now have to take concrete actions due to the rising public pressure. Media is playing a very positive role in this. But there is the second aspect which gives me immense pleasure, happiness and a sense of satisfaction that the general public has started feeling that leave what happened in the past, now they will not dirty their surroundings. We will not add to the existing dirt. A gentleman Mr Bharat Gupta has sent me a mail on mygov.in from Satna, Madhya Pradesh. He has related his personal experience during his tour of the railways. He said that people eat on trains and usually litter around. He continues to say that he has been touring from the past many years but it is this time around no one was littering, rather they were looking for dustbins to throw their trash. When they could not see any arrangements they collected all their litter in a corner. He says that it was a very gratifying experience for me. I thank Bharat ji for sharing this experience with me.
What I am seeing is that this campaign has had a great influence on kids. Many families mention that now whenever kids eat a chocolate they themselves pick the wrapper and disposes it. I was seeing a message on the social media. Someone had posted a picture with the Title “My hero of the Day”. This picture was that of a little kid who, picks up trash, wherever he goes, even when going to school. He is himself motivated to do this. Just see…people now feel it is their country and they will not make it dirty. We will not add to the existing dirt pile. And those do litter feel ashamed for someone is around to point it out to them. I consider all these to be good omens.
Another thing is that many people come to meet me who are from all the sections of the society. They can be government officers, from film world, sports world, industrialists, scientists ……. All of them, whenever they interact with me, in ten minutes discussion, about four to five minutes the discussion is on social issues. Someone talks about cleanliness, while some others talk about education, while someone talks about social reforms. Some people discuss the ruining of family life. I initially thought if a businessman comes, he will definitely talk of things of his personal interest. But I am seeing a major change.
They talk less about their interest and more about taking on some or the other social responsibility. When I add up all these small incidents I see a larger picture and I realize that we are moving in the right direction. It is true that unhealthy environment leads to diseases and sickness, but where does sickness strike first. It first strikes the poor household. When we work towards cleanliness, we make a major effort in the direction of helping the poor. If the poor families are saved from diseases, then they will be saved from a lot of financial problems. If a person is healthy, then he will work hard, earn for the family and help in running the family smoothly. And so this cleanliness drive is directly related to the health and welfare of my poor brethren. We may not be able to do something to help the poor, but even keeping the environs clean helps the poor in a big way. Let us view it from this perspective; it will be very beneficial.
I receive different kinds of letters. Last time I had mentioned about our specially abled children. Whom God has given some kind of deficiencies; I had expressed my feelings regarding those people. I see that people who work in this field are sending me their success stories. But I came to know about two things from my people in the government. The people from the HRD ministry after hearing my talk, felt the need to do something. And the officers came together to work out an action plan. This is an example of how changes are coming about in governance. One they have decided that those specially abled who want to pursue technical education, a thousand of them who are good will be selected for Special Scholarships, and a plan has been made. I congratulate the officials who could think in those lines. Another important decision is that all the Kendriya Vidyalaya’s and all Central Universities will have a special infrastructure for the specially abled, for example if they can’t climb stairs then there will be provision for ramps to facilitate movement by wheel chair. They need different kinds of toilets. The HRD ministry has decided to allocate an additional Lakh rupees to the Kendriya Vidyalays and Central universities. This fund will be used by these institutions to create infrastructure for the specially abled. This is an auspicious beginning……………these things will lead us to change.
I had the chance to visit Siachin a few days back. I spent Diwali with the Jawans who are ready to lay down their lives for the nation. When the nation was celebrating Diwali I was at Siachin. It is because of them that we were able to celebrate Diwali, so I wanted to be with them. I experienced the difficulties in which they spent their time there. I salute all my Jawans. But I want to share another matter of great pride with you. Our Jawans work in the field of security. In calamities, they risk their lives to save our life. They also fetch medals for us in sporting events. You will be glad to know that these Jawans have won a gold medal in a very prestigious event in Britain called Cambrian Patrol, defeating contestants from 140 nations. I offer these Jawans my heartiest congratulations.
I also got an opportunity to meet, the young and dynamic students, boys and girls over tea who had won medals in Sports. They give me renewed energy. I was seeing their zeal and enthusiasm. The facilities in our country are quite less as compared to other nations, but instead of complaining they were just sharing their joy and excitement. For me, this tea programme for these players was very inspiring, and I felt really good.
I would like to tell you something more and that too from my heart. I truly believe that people of my country trust my words and my intentions. But, today one more time, I want to reiterate my commitment. As far as black money is concerned, my people, please trust your Prime Servant, for me this is the Article of Faith. This is my commitment that the hard-earned money of the poor people stashed abroad, every penny of that should be brought back. The ways and means to be followed can be different. And this is very obvious in a democratic country, but on the basis of as much I understand and as much I know, I assure you that we are on the right track. Today, nobody, neither me, nor the government, nor you, nor even the previous government knew how much money is stashed abroad. Everyone gives estimate calculated in his/her own way. I don’t want to get lost in some such figures and estimates, Its my commitment that, be it 2 rupees, or 5 rupees, or millions or even billions, this is the hard-earned money of the poor people of my country and it has to come back. And I assure you that I will keep trying till the end. No efforts will be spared. I want your blessings to be always with me. I assure you that I will do whatever and whenever something is required to be done for you. I give my commitment to you.
I have received a letter. It has been sent by Sri Abhishek Pareekh. The same sentiments were expressed to me by many mothers and sisters when I was not even the Prime Minister. Some doctor friends had also expressed their concern and I too have expressed my views on this issue a number of times in the past. Mr. Parikh has drawn my attention towards the increase of drug addiction that is fast catching up with our young generation. He has asked me to discuss this topic in “Mann ki Baat.” I agree with his concern and I will definitely include this topic, in my next edition of Mann Ki Baat. I will discuss the topic of drugs, drug addiction and drug mafia and how they are a threat to our country’s youth. If you have some experience, any information in this regard, if you have ever rescued any child from this drug addiction, if you know of any ways and means to help, if any government official has played a good role, if you give me any such information, I will convey such efforts to the public and together we will try to create an environment in each family that no child ever thinks of choosing this vice out of sheer frustration. I will definitely discuss this in detail in the next edition.
I know I am choosing those topics which put the government in the dock. But how long will we keep these things hiding? How long will we brush these important concerns under the carpet? Some day or the other we need to take a call, follow our instincts and for grand intentions tough calls are equally important. I am mustering the courage to do so because your love inspires me to do so. And I will continue to do such things because of your love.
Some people told me “ Modi ji you asked us to send you suggestions on Facebook, twitter or email. But a large section of the social class does not have access to these facilities, so what can they do. Your point is very valid. Everyone does not have this facility. Well then, if you have something to say related to Mann Ki Baat, that you hear on the radio even in the villages then do write into me on the following address
Mann Ki Baat
Akashvani
Sansad Marg
New Delhi.
Even if you send some suggestions through letters they will definitely reach me. And I will take them seriously as active citizens are the biggest asset for development. You write one letter, it indicates that you are very active. When you give your opinion, it means that you are concerned with national issues and this is strength of the nation. I welcome you.
For my Mann Ki Baat, your mann ki baat sould also reach me. Maybe you will definitely write a letter. I will try and interact with you again next month. I will try, that whenever I talk, it is Sunday, around 11 am. So I am getting closer to you.
The weather is changing. Winters are slowly setting in. This is a good month for health. Some find it a good season for eating. Some find it good for wearing nice clothes. Besides food and clothes it is a good season for health. Don’t let it go waste. Make the most of it.
Thank You.
My Dear Countrymen,
Today is the holy festival of Vijay Dashami. My heartiest greetings on this occasion of Vijay Dashami to one and all.
Through the medium of radio, I would like to share few heartfelt thoughts with you today. And, I hope that not only today, this series of conversation may be carried out regularly in future. I will try my best, if possible, to take out time twice a month or even once to speak with you. In future, I have also decided that whenever I will speak to you, it would be on Sunday morning at 11am. It would be convenient for you too and I will be content to have shared my thoughts with you.
We are celebrating the festival of Vijaya Dashami today, which is a symbol of victory of Good over Evil. A gentleman named Ganesh Venkatadari, a native of Mumbai, has sent me a mail writing that we must take a vow to eliminate ten bad habits from within ourselves on the occasion of Vijaya Dashami. I express my gratitude to him for this suggestion. As individuals, all of us must be thinking to put an end to our bad habits and win over them. For the sake of our nation, I believe all of us should come together and take a vow in getting rid of the dirt and filth from our country. On the occasion of Vijaya Dashami, we must take a vow to eliminate dirt and filth and we can do so.
Yesterday, on 2nd October on the eve of Mahatma Gandhi’s birth anniversary, more than 1.25 crore countrymen have started the ‘Swachh Bharat’ movement. I had shared one thought yesterday that I will nominate nine people and they need to upload their videos of cleaning the nation on social media websites, and nominating nine more people to do the same. I want you all to join me, clean up the nation, and nominate nine more people in this drive. Eventually, the entire nation will be filled with this atmosphere. I strongly believe that all of you will join hands with me to carry this movement forward.
Whenever we think of Mahatma Gandhi, we are reminded of Khaadi. You may be wearing variety of clothes with different fabrics and company brands in your family. But is it not possible to include Khaadi too? I am not telling you to use only Khaadi products. I am just insisting to use, at least one Khaadi product, like handkerchief, or a bath towel, a bed sheet, a pillow cover, a curtain or anything of that kind. If you have an inclination for all kinds of fabrics and clothes in your family, you can also buy Khaadi products on a regular basis. I am saying this as when you buy Khaadi products, it helps poor people to light lamps on Diwali. Also, you can avail a special discount on Khaadi products from 2nd October for a month. It is a very small thing, but has a very big impact which binds you with the poor. How you see this as a success. When I speak of 1.25 crore countrymen and assess the outcome, we might assume that government will take care of everything and as individuals we stand nowhere. We have seen that if we intend to move ahead, we need to identify our potential, understand our strengths and I can swear that we form the incomparable souls of this world. You all know that our own scientists have been successful in reaching Mars, with least expenditure. We do not lack in our strengths, but have forgotten our fortes. We have forgotten ourselves. We have become hopeless. My dear Brothers and Sisters I cannot let this happen. I always remember one of the sayings by Swami Vivekananda Ji as he always used to emphasize on one thought and possibly, he might have shared this thought with many others.
Vivekananda ii used to say, once a lioness was carrying her two cubs on the way and came upon a flock of sheep from a distance. She got a desire to prey upon them and started running towards the flock. Seeing her running, one of the cub too, joined her. The other cub was left behind and the lioness moved on, post preying upon the flock. One of the cub went with the lioness but the other cub was left behind, and was brought up by a mother sheep. He grew among the sheep, started speaking their language and adapted their ways of life. He used to sit, laugh and enjoy with them. The cub who went with the lioness, was a grown-up now. Once, he happened to meet his brother and was shocked to see him. He thought in his mind,” He is a lion and is playing with sheep, talking like sheep. What is wrong with him? “He felt that his ego was at stake and went to talk to his brother. He said,” What are you doing, brother? You are a lion.” He gets a reply from his brother, “No, I am a sheep. I grew up with them. They have brought me up. Listen to my voice and the way I talk.” He said, “Come, I will show you, who you really are.” He took his brother to a well and told him to look in the water his own reflection, and asked him, if both of them had similar faces. “I am a lion, you, too, are a lion.” His brother’s self-esteem got awakened; he attained self-realization through this and even a lion brought up among sheep started roaring like a lion. His inner soul was awakened. Swami Vivekananda Ji used to say the same. My countrymen, 1.25 crore Indians have infinite strength and capabilities. We need to understand ourselves. We need to identify our inner strengths and like Swami Ji always used to say, we need to carry our self-respect, identify ourselves and move forward in life and be successful, which in turn, make our nation a winning and successful country. I believe, all our countrymen with a population of 1.25 crores are efficient, strong and can stand against any odds with confidence.
These days, I have been getting many letters through social media websites, like Facebook, from my friends. One of them, Mr. Gautam Pal, has addressed an issue regarding the specially-abled children. He has floated the idea of a separate Municipality, Municipal Corporation or councils for them. We need to plan something for them and extend moral support. I liked his suggestion and I have experienced this during my tenure as the Chief Minister of Gujarat. A Special Olympics was held in Athens in 2011. After the Olympics, I invited all the participants and winners of specially abled category from Gujarat to my home. I spent two hours with them, and it was the most emotional and inspiring incident in my life. As I believe, a specially-abled child in not only the responsibility of the parents in a family, it is the responsibility of the entire society. God has chosen this family to support a specially abled child, but a child is a responsibility of the entire nation. After this incident, I got so emotionally attached with them, that I started organizing separate Olympics for them in Gujarat. Thousands of children with their parents used to come and attend, I, too, used to attend the Olympics. There was an atmosphere of trust and, this is the reason, I liked the suggestion given by Mr. Gautam Pal and felt like sharing it with you.
It reminds me of another story. Once, a traveller was sitting at the corner of a road, and was asking everyone the way to a specific place. He continued asking the route from many people. A man, sitting beside him was observing. The traveller stood up and started asking passers-by again. He stood up and said,” The way to your destination is here.” The traveller, then, said,” Brother, you were sitting next to me for so long, saw me asking the route from everyone. If you knew the route, why didn’t you tell me before?” The man answered,” I was waiting to verify if you really intend to reach your destination or you are asking people just for your knowledge. But, when you stood up, I was assured that you truly wish to reach your destination, and decided to give confirm the address”.
My countrymen, till the time we do not decide to walk, stand on our own, we will also not get the guidance from others in our journey. We will not get the people to hold our fingers and help us in walking. We need to take the initiative in walking and I trust all my 1.25 crore Indians, who are capable of walking on their own and will keep moving.
For the past few days, I have been getting very interesting suggestions from people. I am aware, when to adapt to these suggestions. But, I want everyone to actively participate in these suggestions as we all belong to our nation, the nation does not only belong to any Government. We are the citizens of our Nation and we all need to unite without any exceptions. Some of you have suggested simplifying the registration process for Small Scale Industries. I will definitely put this under government’s notice. Some of you have written to me to incorporate skills development courses in the school curriculum from 5th standard. This will help the students to learn various skills and crafts. I loved this idea. They have also suggested that even the adults should learn skills development courses along with their studies. One of the suggestions given was to keep a dustbin at every 100 meters and a putting in place a cleaning system.
Some of you have written to me, to abolish the use of plastic bags. I am receiving numerous suggestions from people. I have always been telling you, to write to me and narrate a true incident, which is positive and inspiring to me and our Countrymen, along with the evidence. If you do this, I can promise this to you, that I will share all those heartfelt thoughts or suggestions with all our Countrymen, through Mann ki Baat.
I have only one intention in speaking with you all,” Come, let us serve our Mother India. Let us all take our nation to the new heights. Let us all take a step forward. If you take one step, our nation takes 1.25 crore steps to move forward, and for this purpose, on this auspicious occasion of Vijaya Dashami, we all need to defeat all of our inner evils and pledge to do something good for the nation. A beginning has been made today. I will be sharing my heartfelt thoughts with one and all. Today, I have shared all the thoughts coming directly from my heart. I will meet you all next at 11 am on Sundays, but I trust our journey shall never end and will continue receiving love and suggestions from you.
After listening to my thoughts, please do not hesitate in sharing your thoughts or advice to me, I will appreciate that your suggestions keep flowing coming. I am glad to talk with you through this simple medium of Radio, which serves each and every corner of the nation. I can reach the poorest homes, as mine, my nation’s strength lies within the hut of Poor, within the villages; my nation’s strength lies with the Mothers, Sisters and Youths; my nation’s strength lies with the Farmers. Nation will only progress, if you believe in it. I am expressing my trust towards the nation. I believe in your strength, hence, I believe in our nation’s future.
I would once again, like to thank one and all for taking out time and listening to me. Thank you all!