“இந்தியா தான் முதலில்,” என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் நோக்கம், உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. வர்த்தக வாய்ப்புகளுக்கான உடன்பாட்டை (Trade Facilitation Agreement - TFA) எட்டுவதற்காக உலக வர்த்தக அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையின்போது, அதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த உடன்பாட்டால், உணவுப் பாதுகாப்பு என்ற இந்தியாவின் வாக்குறுதியை விட்டுக்கொடுப்பது போல இருப்பதாக தெரிவித்தது. இந்தியாவைப் பொருத்தவரை, ஏழைகளுக்கான உணவு பாதுகாப்பு என்பது உறுதியானது, தனிப்பட்ட முறையில் பிரதமரும் இதனை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.
உணவு தானியங்களை பொதுமக்களுக்காக சேமித்து வைப்பதற்கு நீண்டகால தீர்வு தேவை என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு உலக அரங்கில் ஆதரவு கிடைத்தது. இந்தியாவின் நிலைப்பாட்டை பல்வேறு நாடுகளும் ஆதரித்தன. மேலும், உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுத்தலுக்கும் இடமில்லை என்பதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், உலக சமுதாயத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.