இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் நாட்டை உற்பத்தி மற்றும் புதுமைப் படைப்புகளுக்கான சக்தி மையமாக மாற்றுவதற்கான 140 கோடி இந்தியர்களின் கூட்டு தீர்மானத்தை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். அனைத்து வழிகளிலும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்த இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அயராது உழைத்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் நமது நாட்டை உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் கூட்டு தீர்மானத்தை எடுத்துரைக்கிறது. பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது, திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொருளாதாரம் வலுவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து வழிகளிலும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சீர்திருத்தங்களில் இந்தியாவின் முன்னேற்றம் தொடரும். ஒன்றிணைந்து, நாம் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம்!”
Today, we mark #10YearsOfMakeInIndia. I compliment all those who are tirelessly working to make this movement a success over the last decade. ‘Make in India’ illustrates the collective resolve of 140 crore Indians to make our nation a powerhouse of manufacturing and innovation.…
— Narendra Modi (@narendramodi) September 25, 2024