அ. பரிமாறிக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வ.

எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தத்தின் பெயர்

இந்திய தரப்பிலிருந்து பரிமாறியவர்

பங்களாதேஷ்

தரப்பிலிருந்து பரிமாறியவர்

1

பொது எல்லையில் உள்ள  குஷியாரா ஆற்றிலிருந்து  இந்தியாவும், பங்களாதேஷும் தண்ணீர் பெறுவதற்கு இந்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் பங்களாதேஷ் அரசின்  நீர்வள அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜல்சக்தி அமைச்சக செயலாளர் திரு பங்கஜ் குமார்

நீர்வள அமைச்சகத்தின் மூத்த செயலாளர் திரு கபீர் பின் அன்வர்

2

இந்தியாவில்  பங்களாதேஷ் ரயில்வே ஊழியர்கள் பயிற்சி பெறுவதற்கு இந்திய அரசின்  ரயில்வே அமைச்சகம் (ரயில்வே வாரியம்) பங்களாதேஷ் அரசின் ரயில்வே அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு வினய் குமார் திரிபாதி

இந்தியாவுக்கான பங்களாதேஷ் துணைத் தூதர் திரு முகமது இம்ரான்

3

பங்களாதேஷுக்கு எஃப்ஓஐஎஸ் போன்ற  தகவல் தொழில்நுட்ப முறைகள் மற்றும் இதர தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளில் ஒத்துழைப்பு அளிக்க இந்திய அரசின்  ரயில்வே அமைச்சகம் (ரயில்வே வாரியம்) பங்களாதேஷ் அரசின் ரயில்வே அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு வினய் குமார் திரிபாதி

இந்தியாவுக்கான பங்களாதேஷ் துணைத் தூதர் திரு முகமது இம்ரான்

4

பங்களாதேஷ் நீதித்துறை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்புக்கு இந்திய  தேசிய நீதித்துறைக் கழகம் பங்களாதேஷின் உச்சநீதிமன்றம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பங்களாதேஷுக்கான இந்திய துணைத் தூதர் திரு விக்ரம் கே துரைசாமி

பங்களாதேஷ் உச்சநீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் திரு முகமது கோலம் ரபானி.

5

இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை (சிஎஸ்ஐஆர்)

பங்களாதேஷ் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை  (பிசிஎஸ்ஐஆர்) இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைச்செல்வி.

பிசிஎஸ்ஐஆர் தலைவர் டாக்டர் முகமது அஃப்தாப் அலி ஷேக்

6

விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

என்எஸ்ஐஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு டி ராதாகிருஷ்ணன்

பிஎஸ்சிஎல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷாஜஹான் மஹ்மூத்

7

ஒலிபரப்பில் ஒத்துழைக்க பிரசார் பாரதி, பங்களாதேஷ் தொலைக்காட்சி (பிடிவி) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மயங்க் குமார் அகர்வால்.  

பிடிவி தலைமை இயக்குநர் திரு ஷோரப் உசேன்

 

ஆ) தொடங்கி வைக்கப்பட்ட / அறிவிக்கப்பட்ட / திறக்கப்பட்ட திட்டங்களின் பட்டியல்


1) மைத்ரி மின்திட்டம் திறப்பு - சலுகை நிதியளிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மேம்பாட்டு உறுதியுடன் சுமார்  2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டு செலவில் குல்னாவின் ராம்பாலில் அமைக்கப்பட உள்ள நிலக்கரியைப் பயன்படுத்தும் 1,320 (660 x 2) மெகாவாட் அனல் மின் திட்டம்

2) ரூப்ஷா பாலம் திறப்பு – 5.13 கிலோ மீட்டர் நீளமுள்ள ரூப்ஷா ரயில் பாலம், குல்னா- மூங்லா துறைமுகத்திற்கு இடையேயான 64.7 கிலோ மீட்டர் பாதையின் ஒரு பகுதியாக இந்த ஒற்றை அகலப்பாதை ரயில்வே வழித்தடம் இருக்கும். இது முதன் முறையாக மூங்லா துறைமுகத்துடன் ரயில் மூலம்  குல்னாவை இணைக்கிறது. பின்னர், பங்களாதேஷின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியையும், மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய எல்லைப்பகுதியான பெட்ராபோல், கெடே ஆகியவற்றையும் இணைக்கும். 

3) சாலைக்கட்டுமான சாதனம் மற்றும் இயந்திரங்கள் வழங்குதல் – பங்களாதேஷ் சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கு 25 தொகுப்புகளாக சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமான சாதனம், இயந்திரங்கள் வழங்குதலைக் கொண்டதாக இந்த திட்டம் இருக்கும்

4) குல்னா தர்ஷனா ரயில்பாதை இணைப்புத் திட்டம் – இந்தத் திட்டம் தற்போதுள்ள அடிப்படைக் கட்டமைப்பு இணைப்பை (அகலப் பாதையை இரட்டிப்பாக்குதல்) இணைப்பை மேம்படுத்துவது. இது இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் தொடர்புகளை குறிப்பாக டாக்காவுக்கும், எதிர்காலத்தில் மூங்லா துறைமுகத்துக்கும் விரிவுப்படுத்த கெடே – தர்ஷானாவிலிருந்து குல்னாவுக்கு எல்லை கடந்த ரயில் இணைப்பை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின் செலவு 312.48 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

5) பார்வதிபூர் – கவ்னியா ரயில் பாதை – தற்போதுள்ள மீட்டர்கேஜ்  பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் இந்த திட்டத்தின் செலவு 120.41 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.  எல்லைகளுக்கு அப்பால் தற்போதுள்ள பிரோல் (பங்களாதேஷ்) – ராதிகாபூர் (மேற்கு வங்கம்) ஆகியவற்றை இணைப்பதோடு இருதரப்பு ரயில் போக்குவரத்தை இது  விரிவுபடுத்தும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's export performance in several key product categories showing notable success

Media Coverage

India's export performance in several key product categories showing notable success
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets valiant personnel of the Indian Navy on the Navy Day
December 04, 2024

Greeting the valiant personnel of the Indian Navy on the Navy Day, the Prime Minister, Shri Narendra Modi hailed them for their commitment which ensures the safety, security and prosperity of our nation.

Shri Modi in a post on X wrote:

“On Navy Day, we salute the valiant personnel of the Indian Navy who protect our seas with unmatched courage and dedication. Their commitment ensures the safety, security and prosperity of our nation. We also take great pride in India’s rich maritime history.”