வ.எண்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
நோக்கங்கள்
1
2024 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பு திட்டம், ரஷ்ய கூட்டமைப்பின் ஆர்டிக் மண்டலத்தில் ஒத்துழைப்பு கோட்பாடுகள்
ரஷ்யா, இந்தியா இடையே தூரக்கிழக்கு பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு முதலீட்டுத் திட்டங்களை மேலும் அதிகரிக்க வகை செய்தல்.
2
இந்தியக் குடியரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ரஷ்ய கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையே, பருவநிலை மாற்றம் மற்றும் குறைந்த கார்பன் கொண்ட வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
பருவநிலை மாற்றம் மற்றும் குறைந்த கார்பன் வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளில் கூட்டு பணிக்குழுவை உருவாக்குதல்.
தகவல் / சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம் மற்றும் குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சியை ஒருங்கிணைத்தல்.
3
இந்திய நில அளவை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் காடாஸ்ட்ரே மற்றும் வரைபடவியல் மாநில பதிவுக்கான மத்திய சேவை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
புவியியல், வரைபடவியல் மற்றும் இடம் சார்ந்த தரவு உள்கட்டமைப்பு பற்றிய அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல்; தொழில்முறை பயிற்சி, திறன் வளர்ப்பு; அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு.
4
இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் துருவப் பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் சரக்குப் போக்குவரத்து ஒத்துழைப்புக்காக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் ஆராய்ச்சி நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
வளங்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் துருவ சுற்றுச்சூழல்கள் மற்றும் அவற்றின் மாறுபடும் தன்மை குறித்த ஆய்வில் ஒத்துழைப்பு; துருவப் பகுதிகளில் சரக்குப் போக்குவரத்து ஏற்பாடுகள்; கூட்டு ஆராய்ச்சி; பணியாளர்களின் பரிமாற்றம்; துருவப் பிராந்தியத்தில் சர்வதேச திட்டங்களில் பங்கேற்பு.
5
இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் ரஷ்யாவின் "டிவி-நோவோஸ்டி" (ரஷ்யா டுடே டிவி சேனல்) இடையே ஒளிபரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஒளிபரப்புத் துறை, திட்டங்கள், பணியாளர்கள் பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு.
6
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்தியல் ஆணையம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகத்தின் "மருத்துவப் பொருட்களின் நிபுணத்துவ மதிப்பீட்டிற்கான அறிவியல் மையம்" இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
தகவல் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு மூலம் மனித பயன்பாட்டிற்கு உயர்தர மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்தல்.
7
ரஷ்ய கூட்டமைப்பின் வர்த்தகம் மற்றும் தொழில் சபையில் உள்ள இந்திய சர்வதேச நடுவண் மையம் மற்றும் சர்வதேச வர்த்தக நடுவண் நீதிமன்றம் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்
வணிக இயல்புடைய சிவில் சட்ட மோதல்களைத் தீர்ப்பதற்கான வசதி.
8
இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஜே.எஸ்.சி "ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் மேலாண்மை நிறுவனம்" இடையே கூட்டு முதலீட்டு மேம்பாட்டு கட்டமைப்பு ஒப்பந்தம்
முதலீட்டு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் இந்திய சந்தையில் ரஷ்ய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வசதி செய்தல்.
9
இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் மற்றும் அகில ரஷ்ய பொது அமைப்பான "வர்த்தக ரஷ்யா" இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல், வர்த்தகர்களுக்கு இடையேயான கூட்டங்கள், வர்த்தக மேம்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தல்