வ. எண் |
ஆவணத்தின் பெயர் |
இந்திய தரப்பு கையெழுத்திடடவர் |
கொரியா தரப்பு கையெழுத்திட்டவர் |
நோக்கங்கள் |
1 |
மேம்படுத்தப்பட்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் விரைவான அறுவடை தொகுப்பு குறித்த கூட்டறிக்கை (சிஇபிஏ) |
திரு. சுரேஷ்பிரபு, இந்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் |
மாண்புமிகு கிம் ஹியுயான் சாங், கொரிய வர்த்தகம், தொழில், மின்சார அமைச்சர் |
வர்த்தக தாராளமயமாக்கலுக்கான முக்கிய (இறால், சிற்பிகள், பதனிடப்பட்ட மீன் உள்ளிட்ட ) பகுதிகளை கண்டறிவதன் மூலம் இந்தியா, கொரிய குடியரசுக்கு இடையேயான சிஇபிஏ-யை மேம்படுத்துவது குறித்த தற்போது நடைபெற்று வரும் பேச்சுக்களுக்கு வசதி செய்து கொடுத்தல் |
2 |
வர்த்தகக் குறை தீர்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. சுரேஷ்பிரபு, இந்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் |
மாண்புமிகு கிம் ஹியுயான் சாங், கொரிய வர்த்தகம், தொழில், மின்சார அமைச்சர் |
வர்த்தக குறை தீர்ப்பு துறைகளில் ஒத்துழைப்புக்கானது. அதாவது ஆலோசனைகள், தகவல் பரிவர்த்தனை மற்றும் அரசு அதிகாரிகள், நிபுணர்கள் கொண்ட கூட்டுறவுக் குழுக்களை அமைப்பது ஆகியவற்றின் மூலமான பொருள் குவிப்பு எதிர்ப்பு, மானியங்கள், எதிர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள். |
3 |
எதிர்கால முக்கிய அணுகுமுறை குழுக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. சுரேஷ்பிரபு, இந்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர், மற்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் |
மாண்புமிகு கிம் ஹியுயான் சாங், கொரிய வர்த்தகம், தொழில், மின்சார அமைச்சர் மற்றும் திரு. யு யங் மின், கொரிய அறிவியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் |
4-வது தொழில் புரட்சி பலன்களை பயன்படுத்தி முன்னோடித் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வர்த்தகப் படுத்துவதில் ஒத்துழைப்பு. இண்டர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை அறிவு, பிக் டேட்டா, ஸ்மார்ட் தொழிற்சாலைகள், 3டி பிரிண்டிங், மின்சார வாகனங்கள், வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோருக்கு குறைந்த விலை மருத்துவ பராமரிப்பு மற்றும் உயர்ரகப் பொருட்கள் வழங்குதல் ஆகியவை இதன் முன்னுரிமை விஷயங்களாகும். |
4 |
2018 – 2022க்கான கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம் |
திரு. ராகவேந்திர சிங், இந்திய பண்பாட்டு அமைச்சக செயலாளர் |
மாண்புமிகு ஷின் பாங் ஹில், இந்தியாவில் உள்ள கொரிய குடியரசின் தூதர் |
பண்பாடு, இருநாட்டு மக்களிடையேயான தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல். இசை, நாட்டியம், நாடகம், கலை கண்காட்சிகள், ஆவணக் காப்பகங்கள், மனிதக்கூர் வரலாற்றியல், பொதுமக்கள் ஊடகத் திட்டங்கள், அருங்காட்சியக கண்காட்சிகள் ஆகியத் துறைகளில் நிறுவன ஒத்துழைப்புகளுக்கு வழிவகை செய்வதன் மூலம் இதனை நடைமுறைப்படுத்துதல் |
5 |
இந்திய அறிவியல், தொழிலியல் ஆராய்ச்சி மன்றத்திற்கும், கொரியாவின் அறிவியல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மன்றத்திற்கும் இடையே அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
டாக்டர். கிரிஷ் சாஹினி, அறிவியல், தொழிலியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் |
டாக்டர் ஓஹன் க்வாங் யுன், தேசிய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் |
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு. குறைந்த விலை தண்ணீர் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பங்கள், அறிவுசார் போக்குவரத்து அமைப்புகள், புதிய / மாற்றுப் பொருட்கள், பாரம்பரிய மற்றும் கிழக்கத்திய மருந்துகள், தொழில்நுட்ப தொகுப்புகள் மற்றும் வர்த்தக மயமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு |
6 |
ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புக்கும் கொரியாவின் ரயில்பாதை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
திரு. எம். ஹூசைன், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குநர் |
திரு. நா ஹீ சியங், கொரிய ரயில்பாதை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் |
ரயில் ஆராய்ச்சி, ரயில்வே தொடர்பான அனுபவங்கள் பரிவர்த்தனை, ரயில்வே தொழிற்சாலைகள் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு. இந்தியாவில் உயர்நிலை ரயில்வே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை அமைத்தல் உள்ளிட்ட கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்துவது குறித்து சாத்தியக்கூறுகளை இருதரப்பினரும் ஆராய்வார்கள். |
7 |
உயிரி தொழில் நுட்பம் மற்றும் உயிரி- பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
டாக்டர் ஹர்ஷ்வர்தன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் |
திரு. யூ யங் மின், கொரிய குடியரசின் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைச்சர் |
உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம், மருத்துவம், வேளாண் மீன் வளப் பொருட்கள், டிஜிட்டல் சுகாதார சேவை, நுட்பமான மருந்து, மூளை ஆராய்ச்சி மற்றும் அடுத்த தலைமுறைக்கான மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கான உயிரி – பெரும் புள்ளி விவரத்தை பயன்படுத்த ஒத்துழைப்பு |
8 |
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. மனோஜ் சின்ஹா, மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் |
திரு. யூ யங் மின், கொரிய குடியரசின் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைச்சர் |
அதி நவீன தொலைத் தொடர்பு / தகவல் தொடர்பு தொழில் நுட்ப சேவைகள் மற்றும் 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங், பெரும் புள்ளி விவரம், ஐ.ஓ.டி, ஏ.ஐ. போன்ற அடுத்த தலைமுறை கம்பியில்லா தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு, பேரிடர் மேலாண்மை, அவசர கால மீட்புப் பணி மற்றும் இணைய பாதுகாப்புத் துறைகளில் நவீன மயம், மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கான ஒத்துழைப்பு |
9 |
இந்தியா மற்றும் கொரிய குடியரசின் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (செயலாண்மை அமைப்புகள்: என். எஸ்.ஐ.சி.- இந்திய தேசிய சிறுதொழில் கழகம் மற்றும் கொரிய குடியரசின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக கழகம்) ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. ரவீந்திர நாத், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தேசிய சிறுதொழில் கழகம் (என்.எஸ்.ஐ.சி) |
திரு. லீ சாங் ஜிக், தலைவர் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகக் கழகம் |
இருநாடுகளிலும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சந்தையில் போட்டித் தன்மையை மேம்படுத்துதல். இந்தியா-கொரிய குடியரசில், தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை இருதரப்பிலும் ஆய்வு செய்தல். |
10 |
குஜராத் அரசு மற்றும் கொரிய வர்த்தக அபிவிருத்தி முகமை (கோத்ரா) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. எம். கே. தாஸ், குஜராத் அரசின் தொழில் மற்றும் சுரங்கத் துறை முதன்மைச் செயலாளர். |
திரு. க்வான் பியூங்-ஓ, கொரிய வர்த்தக- முதலீட்டு அபிவிருத்தி முகமையின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. |
நகர்ப்புற கட்டமைப்பு, உணவுப் பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த தொழில்கள், சுற்றுச் சூழலியல், திறன் பயிற்சி மற்றும் வளர்ச்சி மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் குஜராத் அரசு, தென் கொரிய நிறுவனங்களிடையேயான தொழில் மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதில் ஒத்துழைப்பு. கோத்ரா நிறுவனம் அகமதாபாத்தில் ஒரு அலுவலகத்தை அமைப்பதன் மூலம், வலிமையான குஜராத் சர்வதேச மாநாடு 2019-ல் ஒரு பங்குதாரர் அமைப்பாக மாறுதல். |
11 |
அரசி சூரிரத்னா நினைவுத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
திரு. அவனீஷ் குமார் அவஸ்தி, உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலாத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர். |
மேதகு. ஷின் பாங் கில், கொரிய குடியரசின் தூதர். |
கி.பி. 48 ஆம் ஆண்டில் கொரிய சென்று, அந்நாட்டு மன்னர் கிம் சூரோவை திருமணம் செய்து கொண்ட (ஹர் ஹ்வாங் – ஓக் அரசி) அயோத்தியா இளவரசி சூரிரத்னா நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை மேம்படுத்தி விரிவுப்படுத்துவதில் ஒத்துழைத்தல். பழம்பெரும் இளவரசியின் மூதாதையர்களை ஏராளமான கொரிய மக்கள் தேடி வருகின்றனர். இந்தியா-கொரியா குடியரசு இடையிலான கலாச்சார பாரம்பரியம் மற்றும் நீண்டகால நட்புறவின் அடையாளச் சின்னமாக புதிய நினைவுச் சின்னம் அமையும். |