இந்தியா – ஸ்வீடன் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ உடன்படிக்கைகள்:
- இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அமைச்சகத்திற்கு இடையே, நிலைத்த வருங்காலத்திற்கான இந்திய – ஸ்வீடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கூட்டாண்மை குறித்த கூட்டுப் பிரகடனம்.
இந்தியா – டென்மார்க் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/உடன்படிக்கைகள்:
- இந்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் டென்மார்க்கின் தொழில், வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்கள் அமைச்சத்திற்கிடையிலான நிலைத்த மற்றும் பொலிவுறு நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை, டென்மார்க் சுற்றுச்சூழல் மற்றும் உணவு அமைச்சகம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் உணவு நிர்வாகம் ஆகியவற்றுக்கிடையே கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், டென்மார்க் கால்நடைப் பராமரிப்பு மற்றும் உணவு நிர்வாகத்துறை ஆகியவற்றுக்கிடையே, உணவுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரி்ந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபை மற்றும் டென்மார்க் கோபனஹேகன் பல்கலைக்கழக அறிவியல் புலம் இடையே வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இந்தியா – ஐஸ்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்:
- இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்திற்கிடையே இந்தி மொழிக்காகக் கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இருக்கை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.