வ. எண் |
புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ ஒப்பந்தங்களின் பெயர் |
புரிந்துணர்வு உடன்படிக்கை/ ஒப்பந்தம் குறித்த விளக்கம் |
இந்திய தரப்பு |
ஈரான் தரப்பு |
1. |
இரட்டை வரிவிதிப்பு தடுப்பு மற்றும் வருவாய் மீதான வரிகள் விவகாரத்தில் நிதி ஏய்ப்பை தடுப்பதற்கான ஒப்பந்தம் |
முதலீடு மற்றும் சேவைகள் வருவதை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு சுமையைத் தவிர்த்தல் |
திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு அமைச்சர் |
டாக்டர். மசூத் கர்பாசியன், நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர். |
2. |
தூதரக பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விசா பெற வேண்டிய தேவையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை |
தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ள இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் மற்ற நாட்டுக்கு செல்லும்போது, விசா வாங்குவதிலிருந்து விலக்கு அளிப்பது |
திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு அமைச்சர் |
டாக்டர். முகமது ஜாவத் சரீப், வெளியுறவு அமைச்சர். |
3. |
நாடுகடத்துதல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஆவணங்கள் பரிமாற்றம் |
இது இந்தியா மற்றும் ஈரான் இடையே கடந்த 2008-ம் ஆண்டில் கையெழுத்தான நாடுகடத்துதல் ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருகிறது |
திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு அமைச்சர் |
டாக்டர். முகமது ஜாவத் சரீப், வெளியுறவு அமைச்சர். |
4. |
ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும் (PMO), இந்தியாவின் துறைமுகங்கள் சர்வதேச நிறுவனத்துக்கும் (IPGL) இடையே, சபாகர் துறைமுகத்தின் முதல் கட்டமான ஷாகித் பெகேஸ்தி துறைமுகத்துக்கு இடைக்கால குத்தகை ஒப்பந்தம் |
ஏற்கனவே உள்ள துறைமுகத்தின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்நோக்கு மற்றும் கண்டெய்னர் முனையத்தின் ஒரு பகுதியை ஒன்றரை ஆண்டு (18 மாதங்கள்) காலத்துக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்தல் |
திரு.நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் |
டாக்டர். அப்பாஸ் அகுண்டி, சாலை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் |
5. |
பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை |
பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒத்துழைப்பை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். இதில், கற்பித்தல், மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுதல், மருந்துகள் மற்றும் மருந்துகள் இல்லாத சிகிச்சை ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்; அனைத்து மருந்து உபகரணங்கள் மற்றும் ஆவணங்களை விநியோகிக்க வழிவகை செய்தல்; மருத்துவப் பயிற்சி மேற்கொள்வோர், துணை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கற்பிக்கும் பணியில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு பயிற்சி அளிப்பதற்காக வல்லுநர்களை பரிமாறிக் கொள்தல். இவர்களை ஆய்வு, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் சேர்த்துக் கொள்தல்; மருந்துப் பொருட்கள் பட்டியல் மற்றும் வழிமுறைகளை பரஸ்பரம் அங்கீகரித்தல்; கல்வி இருக்கைகளை (academic chairs) அமைத்தல்; ஊக்கத் தொகை வழிமுறைகள்; பரஸ்பரம் மாற்றிக் கொள்தல் அடிப்படையில் பாரம்பரிய முறைகளை அங்கீகரித்தல்; பரஸ்பரம் பரிமாறிக் கொள்தல் அடிப்படையில் மருத்துவ முறையை பின்பற்ற அனுமதி அளித்தல் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்படுகிறது. |
திரு.விஜய் கோகலே, வெளியுறவுச் செயலாளர். |
மேதகு கோலம்ரேசா அன்சாரி, ஈரான் தூதர். |
6. |
பரஸ்பரம் பலன் அளிக்கும் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், வர்த்தக தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை உருவாக்க புரிந்துணர்வு உடன்படிக்கை. |
பதுக்கலுக்கு எதிரான மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் போன்ற வர்த்தக தீர்வு நடைமுறைகளில் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. |
திருமதி. ரீட்டா டோட்டியா, செயலாளர் (வணிகத் துறை) |
டாக்டர். முகமது காசேய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர். |
7. |
வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை |
வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில், கூட்டு நடவடிக்கைகள், திட்டங்கள், தகவல் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றம்; வேளாண் பயிர்கள், வேளாண் விரிவாக்கம், தோட்டக்கலை, இயந்திரங்கள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், தாவரங்களை பிரிப்பதற்கான நடவடிக்கைகள், கடன் மற்றும் ஒத்துழைப்பு, மண் பாதுகாப்பு, விதை தொழில்நுட்பம், கால்நடைகள் மேம்பாடு, பால் பொருட்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை அடங்கும். |
திரு.எஸ்.கே.பட்நாயக், செயலாளர் (வேளாண்மைத் துறை) |
டாக்டர்.முகமது காசேய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர். |
8. |
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை |
இருதரப்பு அமைச்சகங்களுக்கு இடையே மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல். இதில், தொழில்நுட்ப, அறிவியல் பூர்வ, நிதி மற்றும் மனிதவளங்கள் தொகுப்பு; தரத்தை மேம்படுத்துதல் மற்றும் மனிதர்களை அடைதல், சுகாதாரம், மருத்துவக் கல்வி, ஆய்வு மற்றும் பயிற்சியில் கட்டமைப்பு வளங்கள்; மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை வல்லுநர்களுக்கு பயிற்சி அனுபவங்களை பகிர்ந்துகொள்தல்; மனித வளங்களை உருவாக்குதல் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதில் உதவி; மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் ஒழுங்குமுறைகள் மற்றும் அதுதொடர்பான தகவல் பரிமாற்றம்; மருத்துவ ஆய்வில் ஒத்துழைப்பு; பொது சுகாதாரம், நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் சர்வதேச சுகாதாரத்தில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும். |
திரு.விஜய் கோகலே, வெளியுறவுச் செயலாளர். |
மேதகு கோலம்ரேசா அன்சாரி, ஈரான் தூதர்.
|
9. |
அஞ்சல் துறை ஒத்துழைப்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை |
இரு நாட்டு அஞ்சல் அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு. இதில், அனுபவங்கள், மின்னணு வணிகம்/தளவாடங்கள் சேவைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவு புலமையை பகிர்ந்துகொள்தல்; அஞ்சல் தலைகள் சேகரிப்பில் ஒத்துழைப்பு; வல்லுநர்களைக் கொண்ட பணிக்குழுவை உருவாக்குதல்; இரு நாடுகளின் வான்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல் ஆகியவை அடங்கும். |
திரு.ஆனந்த் நாராயண் நந்தா, செயலாளர் (அஞ்சல் துறை) |
மேதகு கோலம்ரேசா அன்சாரி, ஈரான் தூதர். |
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வர்த்தக அமைப்புகளுக்கு இடையே கீழ்க்காணும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:
- இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலுக்கும், ஈரானின் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் சபைகள் கூட்டமைப்பு (FICCI) மற்றும் ஈரானின் வர்த்தகர்கள், சுரங்கங்கள் மற்றும் வேளாண்மை சங்கம் (ICCIMA) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறை இணை சபைகள் (ASSOCHAM) மற்றும் ஈரானின் வர்த்தகர்கள், சுரங்கங்கள் மற்றும் வேளாண்மை சங்கம் (ICCIMA) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
- வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் பிஎச்டி சபை (PHDCCI) மற்றும் ஈரானின் வர்த்தகர்கள், சுரங்கங்கள் மற்றும் வேளாண்மை சங்கம் (ICCIMA) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.