வ.

எண் 

புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/

ஒப்பந்தங்களின் பெயர்

புரிந்துணர்வு உடன்படிக்கை/ ஒப்பந்தம் குறித்த விளக்கம்

இந்திய தரப்பு

ஈரான் தரப்பு

1.

இரட்டை வரிவிதிப்பு தடுப்பு மற்றும் வருவாய் மீதான வரிகள் விவகாரத்தில் நிதி ஏய்ப்பை தடுப்பதற்கான ஒப்பந்தம்

முதலீடு மற்றும் சேவைகள் வருவதை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு சுமையைத் தவிர்த்தல்

திருமதி.

சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு அமைச்சர்

டாக்டர். மசூத் கர்பாசியன், நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர்.

2.

தூதரக பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விசா பெற வேண்டிய தேவையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ள இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் மற்ற நாட்டுக்கு செல்லும்போது, விசா வாங்குவதிலிருந்து விலக்கு அளிப்பது

திருமதி.

சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு அமைச்சர்

டாக்டர். முகமது ஜாவத் சரீப், வெளியுறவு அமைச்சர்.

3.

நாடுகடத்துதல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஆவணங்கள் பரிமாற்றம்

இது இந்தியா மற்றும் ஈரான் இடையே கடந்த 2008-ம் ஆண்டில் கையெழுத்தான நாடுகடத்துதல் ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருகிறது

திருமதி.

சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு அமைச்சர்

டாக்டர். முகமது ஜாவத் சரீப், வெளியுறவு அமைச்சர்.

4.

 

ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும் (PMO), இந்தியாவின் துறைமுகங்கள் சர்வதேச நிறுவனத்துக்கும் (IPGL) இடையே, சபாகர் துறைமுகத்தின் முதல் கட்டமான ஷாகித் பெகேஸ்தி துறைமுகத்துக்கு இடைக்கால குத்தகை ஒப்பந்தம்

ஏற்கனவே உள்ள துறைமுகத்தின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்நோக்கு மற்றும் கண்டெய்னர் முனையத்தின் ஒரு பகுதியை ஒன்றரை ஆண்டு (18 மாதங்கள்) காலத்துக்கு  குத்தகைக்கு எடுத்துக் கொள்தல்

திரு.நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்

டாக்டர். அப்பாஸ் அகுண்டி, சாலை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர்

5.

பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை

பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒத்துழைப்பை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். இதில், கற்பித்தல், மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுதல், மருந்துகள் மற்றும் மருந்துகள் இல்லாத சிகிச்சை ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்; அனைத்து மருந்து உபகரணங்கள் மற்றும் ஆவணங்களை விநியோகிக்க வழிவகை செய்தல்; மருத்துவப் பயிற்சி மேற்கொள்வோர், துணை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கற்பிக்கும் பணியில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு பயிற்சி அளிப்பதற்காக வல்லுநர்களை பரிமாறிக் கொள்தல். இவர்களை ஆய்வு, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில்  சேர்த்துக் கொள்தல்; மருந்துப் பொருட்கள் பட்டியல் மற்றும்  வழிமுறைகளை பரஸ்பரம் அங்கீகரித்தல்; கல்வி இருக்கைகளை (academic chairs) அமைத்தல்; ஊக்கத் தொகை வழிமுறைகள்; பரஸ்பரம் மாற்றிக் கொள்தல் அடிப்படையில் பாரம்பரிய முறைகளை அங்கீகரித்தல்;  பரஸ்பரம் பரிமாறிக் கொள்தல் அடிப்படையில் மருத்துவ முறையை பின்பற்ற அனுமதி அளித்தல் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்படுகிறது.

திரு.விஜய் கோகலே, வெளியுறவுச் செயலாளர்.

மேதகு கோலம்ரேசா அன்சாரி, ஈரான் தூதர்.

6.

பரஸ்பரம் பலன் அளிக்கும் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், வர்த்தக தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை உருவாக்க புரிந்துணர்வு உடன்படிக்கை.

பதுக்கலுக்கு எதிரான மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் போன்ற வர்த்தக தீர்வு நடைமுறைகளில் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

திருமதி. ரீட்டா டோட்டியா,

செயலாளர்

(வணிகத் துறை)

டாக்டர். முகமது காசேய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர்.

7.

வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

 

வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில், கூட்டு நடவடிக்கைகள், திட்டங்கள், தகவல் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றம்; வேளாண் பயிர்கள், வேளாண் விரிவாக்கம், தோட்டக்கலை, இயந்திரங்கள்,  அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், தாவரங்களை பிரிப்பதற்கான நடவடிக்கைகள், கடன் மற்றும் ஒத்துழைப்பு, மண் பாதுகாப்பு, விதை தொழில்நுட்பம், கால்நடைகள் மேம்பாடு, பால் பொருட்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை அடங்கும்.

திரு.எஸ்.கே.பட்நாயக், செயலாளர் (வேளாண்மைத் துறை)

 

டாக்டர்.முகமது காசேய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர்.

8.

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

இருதரப்பு அமைச்சகங்களுக்கு இடையே மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல். இதில், தொழில்நுட்ப, அறிவியல் பூர்வ, நிதி மற்றும் மனிதவளங்கள் தொகுப்பு; தரத்தை மேம்படுத்துதல் மற்றும் மனிதர்களை அடைதல், சுகாதாரம், மருத்துவக் கல்வி, ஆய்வு மற்றும் பயிற்சியில் கட்டமைப்பு வளங்கள்; மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை வல்லுநர்களுக்கு பயிற்சி அனுபவங்களை பகிர்ந்துகொள்தல்; மனித வளங்களை உருவாக்குதல் மற்றும் மருத்துவ வசதிகளை  ஏற்படுத்துவதில் உதவி; மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் ஒழுங்குமுறைகள் மற்றும் அதுதொடர்பான தகவல் பரிமாற்றம்; மருத்துவ ஆய்வில் ஒத்துழைப்பு; பொது சுகாதாரம், நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் சர்வதேச சுகாதாரத்தில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.

திரு.விஜய் கோகலே, வெளியுறவுச் செயலாளர்.

மேதகு கோலம்ரேசா அன்சாரி, ஈரான் தூதர்.

 

9.

அஞ்சல் துறை ஒத்துழைப்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இரு நாட்டு அஞ்சல் அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு. இதில், அனுபவங்கள், மின்னணு வணிகம்/தளவாடங்கள் சேவைகள் தொழில்நுட்பங்கள்  மற்றும் அறிவு புலமையை பகிர்ந்துகொள்தல்; அஞ்சல் தலைகள் சேகரிப்பில் ஒத்துழைப்பு; வல்லுநர்களைக் கொண்ட பணிக்குழுவை உருவாக்குதல்; இரு நாடுகளின் வான்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல் ஆகியவை அடங்கும்.

திரு.ஆனந்த் நாராயண் நந்தா, செயலாளர் (அஞ்சல் துறை)

மேதகு கோலம்ரேசா அன்சாரி, ஈரான் தூதர்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வர்த்தக அமைப்புகளுக்கு இடையே கீழ்க்காணும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:

  1. இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலுக்கும், ஈரானின் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
  2. இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் சபைகள்  கூட்டமைப்பு (FICCI) மற்றும் ஈரானின் வர்த்தகர்கள், சுரங்கங்கள் மற்றும் வேளாண்மை சங்கம் (ICCIMA) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
  3. இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறை இணை சபைகள் (ASSOCHAM) மற்றும் ஈரானின் வர்த்தகர்கள், சுரங்கங்கள் மற்றும் வேளாண்மை சங்கம் (ICCIMA) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
  4. வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் பிஎச்டி சபை (PHDCCI) மற்றும் ஈரானின் வர்த்தகர்கள், சுரங்கங்கள் மற்றும் வேளாண்மை சங்கம் (ICCIMA) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Double engine govt becoming symbol of good governance, says PM Modi

Media Coverage

Double engine govt becoming symbol of good governance, says PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2024
December 17, 2024

Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government