வ. எண் |
ஒப்பந்தம்/புரிந்துணர்வு உடன்படிக்கை/உடன்பாடு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் |
இந்தியா மற்றும் கம்போடிய தரப்பில் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட அமைச்சர்/அதிகாரிகளின் பெயர் |
1. |
கம்போடியாவுடன் 2018-2022-ம் ஆண்டுக்கான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம். இந்த கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம், இந்தியா மற்றும் கம்போடியா இடையே கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், நட்புறவை வலுப்படுத்தவும் வழிவகை செய்கிறது. |
இந்திய தரப்பு: டாக்டர் மகேஷ் சர்மா, இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம்.
கம்போடிய தரப்பு: திருமதி.போயியுருங் சக்கோனா, கலாச்சார மற்றும் கவின் கலைத் துறை அமைச்சர், கம்போடிய அரசு |
2. |
இந்திய அரசின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (EXIM Bank) மற்றும் கம்போடிய அரசுக்கு இடையே கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம். 36.92 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஸ்டங் ஸ்வா ஹேப் நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதி வழங்குவதற்காக கடன் வழங்க வழிவகை செய்கிறது. |
இந்திய தரப்பு: திருமதி.பிரீத்தி சரண், செயலாளர் (கிழக்கு), வெளிவிவகார அமைச்சகம்.
கம்போடிய தரப்பு: திரு.பான் பல்லா, இளநிலைச் செயலாளர், பொருளாதாரம் மற்றும் நிதியமைச்சகம். கம்போடிய அரசு |
3. |
குற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி. குற்ற விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் சட்ட உதவி மூலம், குற்றங்களைத் தடுத்தல், விசாரணை நடத்துதல் மற்றும் தண்டனை பெற்றுத் தருவதை சிறப்பான முறையில் மேம்படுத்த வழிவகை செய்கிறது. |
இந்திய தரப்பு: திருமதி.பிரீத்தி சரண், செயலாளர் (கிழக்கு), வெளிவிவகாரங்கள் அமைச்சகம்.
கம்போடிய தரப்பு: திரு.சீங் லாப்ரேஸே, நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான அரசு ஆலோசகர், உள்துறை அமைச்சகம், கம்போடிய அரசு |
4. |
மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான ஒத்துழைப்புக்கு புரிந்துணர்வு உடன்பாடு. மனிதக் கடத்தல் தொடர்பான விவகாரங்களில் கடத்தலைத் தடுத்தல், மீட்பு மற்றும் நாடுகடத்துவது தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய வழிவகை செய்கிறது. |
இந்திய தரப்பு: திருமதி.பிரீத்தி சரண், செயலாளர் (கிழக்கு), வெளிவிவகாரங்கள் அமைச்சகம்.
கம்போடிய தரப்பு: திருமதி.சவ் பன் எங், இணைச் செயலாளர், உள்துறை அமைச்சகம் (மனிதக் கடத்தல்), கம்போடிய அரசு. |