வ.எண் |
புரிந்துணர்வு உடன்படிக்கை/செயல் திட்டம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் |
இந்திய தரப்பு |
வியட்நாம் தரப்பு |
1 |
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஊக்குவிப்பை மேம்படுத்துவதற்கான செயல்முறைகளை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் |
திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
மேதகு திரு.டிரான் டுவான் அன், அமைச்சர், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் |
2 |
வேளாண் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலுக்கும், வியட்நாமின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் இடையேயான 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையான செயல் திட்டம் வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயணத்தை பரிமாறிக் கொள்வதற்கான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்த செயல் திட்டத்தின் நோக்கம். |
திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
மேதகு. திரு. நுகுயேன் சுவான் குவோங், அமைச்சர், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் |
3 |
இந்தியாவின் அணுசக்தி ஒத்துழைப்புக்கான சர்வதேச மையத்துக்கும், வியட்நாமின் அணுசக்தி கல்வி நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அமைதிப் பணிகளுக்காக அணுசக்தி துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் |
திரு.சேகர் பாசு, செயலாளர், அணுசக்தி துறை |
மேதகு திரு.டாங் டின் குயூய், வெளியுறவு விவகாரங்கள் துறை துணை அமைச்சர் |