அறிவிப்புகள்
· சர்வதேச சூரியக் கூட்டணியில் இணைவது பற்றிய தனது ஒப்புதலை 29.10.2018 அன்று தாக்கல் செய்திருப்பது குறித்து ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 70 நாடுகள் சர்வதேச சூரியக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 47 நாடுகள் அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 71-வது நாடான ஜப்பான், சர்வதேச கூட்டணிக்கு ஒப்புதல் வழங்கியதில் 48-வது நாடாகும்.
· மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் தொடர்பான ஜப்பான் கட்டுமானப் பணித் திட்டம் உள்ளிட்ட 7 ஜப்பான் யென் (Yen) கடன் திட்டங்களுக்கான குறிப்புகளை பரிமாறிக் கொள்வது. உமியாம்-உம்ட்ரு நிலை-III, நீர்மின் உற்பத்தி நிலையத்திட்டத்தை மறுசீரமைத்து நவீனமயமாக்குவது. தில்லி அதிவேக போக்குவரத்துத் திட்டம் (கட்டம்-3) வடகிழக்கு சாலை தொடர்பை மேம்படுத்தும் நெட்வொர்க் திட்டம், துர்கா நீரேற்று சேமிப்பு நிலைய கட்டுமானத் திட்டம், சென்னை சுற்றுவட்டச் சாலை மற்றும் திரிபுரா நிலையான நீர்ப்பிடிப்பு வன மேலாண்மைத் திட்டம் (மொத்த கடன் வசதி 316.458 பில்லியன் ஜப்பான் யென்).
வ.எண். |
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பெயர் / ஒப்பந்தம் / உடன்படிக்கை |
விளக்கம் |
A. பாதுகாப்பு மற்றும் உருவாக்கம் |
||
1. |
ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படை மற்றும் இந்தியக் கடற்படை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஏற்பாட்டை அமல்படுத்துவது. |
கடல்சார் பகுதியில் இந்தியக் கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படை இடையே கூடுதல் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் |
B. மின்னணு மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் |
||
2. |
மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்திற்கிடையே ஜப்பான் – இந்தியா மின்னணு குறித்த புரிந்துணர்வு ஒத்துழைப்பு பற்றிய பங்களிப்பு |
“ஜப்பான் 5.0 சமூகம்” மற்றும் இந்தியாவின் முன்னணித் திட்டங்களான “டிஜிட்டல் இந்தியா”, “நவீன நகரம்” மற்றும் “தொடங்கிடு இந்தியா” ஆகியவற்றில் அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையதள அம்சங்கள் உள்ளிட்டவற்றிற்கிடையே உந்துசக்தியை திரட்டுவது. |
3. |
நிதி ஆயோக் மற்றும் பொருளாதார வர்த்தக தொழில் அமைச்சகம் (METI) மற்றும் ஜப்பான் செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு இடையேயான நோக்க அறிக்கை |
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தி, மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு |
C. சுகாதார பாதுகாப்பு மற்றும் உடல்நலம் |
||
4. |
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உடல்நலத் துறையில், இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார பாதுகாப்புக் கொள்கை அலுவலகம், அமைச்சரவைச் செயலகம், ஜப்பான் அரசு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒத்துழைப்பை பராமரிப்பது |
ஆரம்ப சுகாதார சேவை, தொற்றா நோய்கள் தடுப்பு, மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பணிகள், துப்புரவு, சுகாதாரம், சத்துணவு மற்றும் முதியோர் நலம் ஆகியவற்றில் இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை கண்டறிந்து மேம்படுத்துவது. |
5. |
இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஜப்பான் அரசின் கனகவா நிர்வாகிகளுக்கு இடையே சுகாதார சேவை மற்றும் உடல்நலத் துறையில் புரிந்துணர்வு ஒத்துழைப்பை பராமரிப்பது |
இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஜப்பான் அரசின் கனகவா நிர்வாகிகளுக்கு இடையே சுகாதார சேவை மற்றும் உடல்நலத் துறையில் புரிந்துணர்வு ஒத்துழைப்பை பராமரிப்பது |
6. |
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, ஜப்பான் உணவுப் பாதுகாப்பு ஆணையம், ஜப்பான் நுகர்வோர் விவகார முகமை, சுகாதார அமைச்சகம் மற்றும் ஜப்பான் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் |
உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது |
D. உணவு மதிப்புத் தொடர் மற்றும் வேளாண் பகுதிகள் |
||
7. |
உணவு பதப்படுத்துதல் தொழில்கள், வேளாண் அமைச்சகம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒத்துழைப்பை பராமரிப்பது |
இந்தியாவில் உணவுப் பதப்படுத்தும் தொழிலை அதில் ஈடுபட்டுள்ளவர்களுடன் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து மேம்படுத்துவதை நோக்கமாக கொள்வது. |
8. |
இந்தியாவில் வேளாண் மற்றும் மீன்வளத் துறையில் ஜப்பானின் முதலீடுகளை மேம்படுத்தும் திட்டம் குறித்து இந்தியாவின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஜப்பானின் வேளாண், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கிடையே திட்டத்தை மேம்படுத்துவது |
வேளாண் மதிப்புத் தொடர் மற்றும் மீன்வளம், கடல்சார் வளங்கள் ஆகியவற்றில் ஜப்பான் நிறுவனங்களின் முதலீட்டுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது, |
9. |
மகாராஷ்ட்ராவில் உணவு மதிப்புத் தொடரை மேம்படுத்துவது குறித்து, அம்மாநில அரசு மற்றும் ஜப்பான் வேளாண், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கிடையே புரிந்துணர்வு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது |
மகாராஷ்ட்ராவில் உணவு மதிப்புத் தொடரில், ஜப்பான் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவது. |
10. |
உத்தரப்பிரதேசத்தில் உணவு மதிப்புத் தொடரை மேம்படுத்துவது குறித்து, அம்மாநில அரசு மற்றும் ஜப்பான் வேளாண், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கிடையே புரிந்துணர்வு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது |
உத்தரப்பிரதேசத்தில் உணவு மதிப்புத் தொடரில், ஜப்பான் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவது |
E. பொருளாதாரம் |
||
11. |
இந்தியாவின் ஏற்றுமதி கடன் உறுதி நிறுவனம் மற்றும் ஜப்பானின் நெக்ஸி (NEXI) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இந்தியா – ஜப்பான் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்து, இதர நாடுகளின் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது |
F. அஞ்சல் |
||
12. |
அஞ்சல் துறையில் இந்தியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் ஜப்பான் அரசின் உள்நாட்டு விவகாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கிடையே புரிந்துணர்வு ஒத்துழைப்பை உருவாக்குவது |
தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் உள்நாட்டு விவகாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கிடையே அஞ்சல் சேவை உரையாடலுக்கான அமைப்பை ஏற்படுத்தி, அஞ்சல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது. |
G. S&T அறிவுசார் பரிமாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் |
||
13. |
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே ஆய்வுத்துறை கூட்டுறவு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் |
மின்னணு தொடுஉணர்வு அதிவேக தொலைநோக்கு, ரொபோடிக்ஸ், மின்னணு மற்றும் இயந்திரவியல் சார்ந்த துறையில் உற்பத்தி மேம்பாடு, சுற்றுப்புற சூழல் ஆய்வு, போக்குவரத்து நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சிப் பங்களிப்பை மேம்படுத்துவது |
14. |
இந்தியாவின் அறிவியல், தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில், நவீன அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கிடையே ஆராய்ச்சிப் பங்களிப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி, ரொபோடிக்ஸ், அதிநவீன தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட மின்னணு துறையில் ஆராய்ச்சிப் பங்களிப்பை மேம்படுத்துவது. |
15. |
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் டோக்கியோ புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி நிலையம், ஜப்பான் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுக்கிடையே தொழில்நுட்ப ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான உடன்பாடு |
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் டோக்கியோ புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி நிலையம், ஜப்பான் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுக்கிடையே அதிநவீன உபகரணங்கள் உயிரி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சிக்கான கூட்டுறவை ஏற்படுத்துவது |
16. |
இந்திய தகவல் தொடர்பு அமைச்கம் மற்றும் ஜப்பான் அரசின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே அஞ்சல் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது |
தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு இடையே அஞ்சல் சேவைகளுக்கான உரையாடலை ஏற்படுத்த, அஞ்சல் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது |
17. |
சுற்றுச் சூழல் ஒத்துழைப்பில், இந்தியா-ஜப்பான் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது |
இந்தியா – ஜப்பான் இடையே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது ஆகியவற்றில் அதிக அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது |
18. |
இந்தியாவின் மருந்து உற்பத்தி தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய நிலையம், ஜப்பானின் சிசுவோகா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பரிமாற்றங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் |
தேசிய மருந்து உற்பத்தி தொடர்பான கல்வி ஆராய்ச்சி எஸ்.ஏ.எஸ் நகர் மற்றும் சிசுவோகா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி தொடர்பை மேம்படுத்துவது |
19. |
நாகசாகி பல்கலைக் கழகம் மற்றும் ஐ.ஐ.ஐ.டி.ட்டி.எம். காஞ்சிபுரம், இந்தியா ஆகியவற்றுக்கிடையே உலக அளவில் தொழில் தொடங்குவது குறித்த இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இந்தியா-ஜப்பான் உலக அளவிலான தொழில் தொடங்கும் திட்டத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத் துறையை மேம்படுத்துவது |
20. |
ஹைதராபாத் ஐ.ஐ.டி, இந்தியா மற்றும் ஜப்பான் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி மற்றும் கல்வி தொடர்பான பரிமாற்றங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வாய்ப்பு வசதிகளை பரிமாறிக் கொள்வது |
21. |
ஹைதராபாத் ஐ.ஐ.டி, இந்தியா மற்றும் அதிநவீன தொழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய நிலையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வசதிகளை பரிமாறிக் கொள்வது |
22. |
(உடன்பாடு) ஐ.ஐ.டி கான்பூர், பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் கல்வி நிலையம், தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிலையம், ரசாயன அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிலையம், ஹொக்காய்டோ பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்கள் பரிமாற்றம் ஐ.ஐ.டி. கான்பூர் மற்றும் ஹொக்காய்டோ பல்கலைக் கழக கல்வி நிலையங்கள் |
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வசதிகளை பரிமாறிக் கொள்வது |
H. விளையாட்டுத்துறை |
||
23. |
இந்திய விளையாட்டுத் துறை ஆணையம், சுகுபா பல்கலைக் கழகம், ஜப்பான் ஆகியவற்றுக்கிடையே கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
விளையாட்டுத்துறை மேம்பாடு, கூட்டுத் திட்டத்தின் மூலம் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது |
I. கடன் உடன்பாடு தொடர்பான குறிப்புகள் பரிமாற்றம்: |
||
24. |
மும்பை – அஹமதாபாத் அதிவேக ரயில் (II) கட்டுமானப் பணிக்கான திட்டம் |
|
25. |
உமியாம்-உன்ட்ரு நிலை-III நீர்மின் உற்பத்தி நிலைய மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் |
|
26. |
தில்லி அதிவேக போக்குவரத்துத் திட்டம், 3-வது கட்டம் (III) |
|
27. |
வடகிழக்கு நெட்வொர்க் தொடர்பு மேம்பாட்டுத் திட்டம் 3-வது கட்டம் (I) |
|
28. |
திரிபுராவில் நிலையான வன மேலாண்மை நீர்ப்பிடிப்புத் திட்டம் |
|
G2B/B2B ஒப்பந்தங்கள் |
||
29. |
ககோமி கோ லிமிடெட், ஜப்பான் மற்றும் இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
|
30. |
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இவ்வங்கியின் கட்டண சேவை பிரைவேட் லிமிடெட், ஹிட்டாச்சி கட்டண சேவை பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே கூட்டுத் தொழிலுக்கான ஒப்பந்தம் |
|
31. |
ஜப்பான், நிஸான் உருக்கு ஆலை கோ லிமிடெட் மற்றும் இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
|
32. |
57 ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், 15 இந்திய நிறுவனங்கள் ஜப்பானில் முதலீடு செய்வதற்குமான நோக்கங்களின் கடிதம் மற்றும் ஒப்புதல்களுக்கு இருநாடுகளின் அரசும் ஆதரவளிக்கிறது. |
|