புவிசார் தரவுகளின் கையகப்படுத்தலும், தயாரிப்பு கொள்கைகளும் தாராளமயமாக்கப்பட்டிருப்பது, தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நமது தொலைநோக்குப் பார்வையின் மிகப்பெரிய நடவடிக்கை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் விவசாயிகள், புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்ஸ்), தனியார் துறை, பொதுத்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், தீர்வுகளை உருவாக்கவும் இந்த சீர்திருத்தம் பயனளிக்கும்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு முடிவை நமது அரசு எடுத்துள்ளது. புவிசார் தரவுகளின் கையகப்படுத்தலும், தயாரிக்கும் கொள்கைகளும் தாராளமயமாக்கப்பட்டிருப்பது, தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நமது தொலைநோக்குப் பார்வையின் மிகப் பெரிய நடவடிக்கை.
நமது நாட்டின் விவசாயிகள், புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்ஸ்), தனியார் துறை, பொதுத்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், தீர்வுகளை உருவாக்கவும் தேவையான அபரிமிதமான வாய்ப்புகளை இந்தச் சீர்திருத்தம் ஏற்படுத்தும். வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
புவிசார் மற்றும் தொலையுணர்வு தரவுகளின் ஆற்றலைப் பயன்படுத்தி இந்திய விவசாயிகளும் பயனடைவார்கள். பெரும்பான்மையான மக்களுக்குப் பயன்படும் தரவுகள், வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களின் எழுச்சியை ஏற்படுத்தும்.
கட்டுப்பாடுகளைத் தளர்த்தி எளிதான வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ளும் நமது உறுதித்தன்மையை இந்த சீர்திருத்தங்கள் எடுத்துரைக்கின்றன”, என்று குறிப்பிட்டுள்ளார்.
The reforms will unlock tremendous opportunities for our country’s start-ups, private sector, public sector and research institutions to drive innovations and build scalable solutions. This will also generate employment and accelerate economic growth. #Freedom2MapIndia pic.twitter.com/OoN1rDTwoW
— Narendra Modi (@narendramodi) February 15, 2021
India’s farmers will also be benefited by leveraging the potential of geo-spatial & remote sensing data. Democratizing data will enable the rise of new technologies & platforms that will drive efficiencies in agriculture and allied sectors. #mapmakingsimplified #Freedom2MapIndia
— Narendra Modi (@narendramodi) February 15, 2021
These reforms demonstrate our commitment to improving ease of doing business in India by deregulation.#mapmakingsimplified #Freedom2MapIndia
— Narendra Modi (@narendramodi) February 15, 2021