இந்தியாவை மாற்றி அமைக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்தி வரும் பணிகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு சர்வதேச முன்னணி நிறுவனங்கள், அமைப்புகள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்துவருகின்றன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2014-15-ம் ஆண்டில் 5,6 சதவீதம் என்று இருந்த நிலையில் அது 2015- 16ம் ஆண்டில் 6.4 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தான் மோடி அரசின் டிவிடெண்ட் என்றும் உலக வங்கி கூறியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்தபோதிலும் மோடி அரசின் கொள்ளை முடிவுகளால் முதலீடுகள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
இந்த சாதகமான நிலையை உலக வங்கியின் தலைவர் திரு. ஜிம் யாங் கிம்- மும் ஆமோதித்துள்ளார். வல்லமைமிக்க தொலைநோக்கு தலைமை -யான பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இந்திய மக்களின் நிதிசேர்ப்பு நடவடிக்கைக்கு வித்திட்டுள்ளது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். சாதாரண மக்களை நிதி சார்ந்த நடவடிக்கை கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான மோடி அரசின் ஜன்தன் யோஜ்னா திட்டமும் பாராட்டுக்குரியது என்று உலகவங்கி தலைவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையிலும் பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட வேகமாக உள்ளது. அத்துடன் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வலிமையாகவும், நீடித்த, ஒங்கிணைந்த வளர்ச்சிப்பாதையிலும் உள்ளதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (ஓ.இ. சி.டி) கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளையும் அது பாராட்டி உள்ளது.
இந்தியாவின் மதிப்பீடு முந்தைய நிலையான நிலையில் இருந்து இப்போது சாதகமான நிலைக்கு மாறி உள்ளதாக மதிப்பிற்குரிய முன்னணி சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஐ.நா.வும் இந்தியாவின் வளர்ச்சியை பற்றி திருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி வீதம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆகையால், பிரதமரின் சீர்திருத்த பெருமுயற்சிகள் மற்றும் இந்தியாவின் விரைவான வளர்ச்சிப்பயணமும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் அதில் மிகையில்லை.