மகளிர் தினத்தன்று பிரதமரின் சமூக வலைதள கணக்குகளைக் கையாண்ட டாக்டர் மாள்விகா ஐயர், "(ஏற்றுக்கொள்ளுதல் என்பது தான் நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் மிகப் பெரிய கவுரவம்)," என்று பதிவிட்டார். நமது வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், வாழ்க்கை குறித்த நம்முடைய எண்ணங்களை நிச்சயம் நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும். நமக்கு விடுக்கப்பட்ட சவால்களை நாம் எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்கிறோம் என்பதில் தான் எல்லாமே அடங்கி உள்ளது," என்றார்.
13 வயதில் கோரமான குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றிலிருந்து உயிர் தப்பிய டாக்டர் ஐயர், அந்த சம்பவத்தில் தனது கைகளை இழந்தார். கால்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அவர தனது மன உறுதியை இழந்துவிடவில்லை. கடுமையாக உழைத்து முனைவர் பட்டம் பெறுவது வரை சென்றார். "முடியாதென்று விட்டு விடுதல் எப்போதுமே நல்ல முடிவு இல்லை. உங்களின் குறைகளை மறந்து, உலகத்தை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
மாற்றத்துக்குப் படிப்பறிவு தவிர்க்க முடியாதது என டாக்டர் ஐயர் நம்புகிறார். பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தைக் கையாண்ட அவர், "பாகுபாட்டு அணுகுமுறைகளுக்கு எதிராக இளைஞர்களிடையே நாம் விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம். மாற்று திறனாளிகள் பலவீனமானவர்கள் அடுத்தவர்களை சார்ந்திருப்பவர்கள் என்று காட்டுவதைவிட அவர்களை நாம் முன்மாதிரிகளாகக் காட்டுவது அவசியம்” என்று பதிவிட்டார்.
'அவள் நம்மை ஊக்குவிக்கிறாள்' (#’She Inspires Us’) என்ற பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவித்த டாக்டர் மாள்விகா ஐயர், "உடல் ஊனத்தைக் களைவதில் எண்ணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது கருத்துகளை அவரது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் மகளிர் தினத்தன்று பகிரச் செய்தது, உடல் ஊனம் குறித்து நிலவி வரும் தவறான எண்ணங்களைக் களைந்து இந்தியா சரியான பாதையில் செல்கிறது என என்னை நம்ப வைக்கிறது," என்றார்.
Acceptance is the greatest reward we can give to ourselves. We can’t control our lives but we surely can control our attitude towards life. At the end of the day, it is how we survive our challenges that matters most.
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Know more about me and my work- @MalvikaIyer #SheInspiresUs pic.twitter.com/T3RrBea7T9