பிரதமரின் கிசான் திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைவதையொட்டி, பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் கிசான் கடன் அட்டைகள் முழுமையாக வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தப் பணியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் பயனடைவதோடு, சாகுபடி செலவு அதிகரிப்புக்கு ஏற்ப விவசாயிகள் வங்கிக் கடனுதவி பெறவும் உதவும் விதமாக மத்திய அரசு இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் பொறுப்பு, கிராமப்புறங்களில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளிடம், வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 4% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். கிசான் கடன் அட்டைதாரர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கடனுதவி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.