பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசினா ஆகியோர் இந்தியா-பங்களாதேஷ் நட்புறவுக் குழாய் திட்டத்தை மார்ச் 18, 2023 அன்று மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளனர்.
இது இந்தியா, பங்களாதேஷ் இடையே 377 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் முதலாவது எரிசக்திக் குழாய் திட்டமாகும். இதில் 285 கோடி ரூபாயை இந்தியா உதவித்தொகையாக வழங்குகிறது.
இந்த குழாய் திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அதி-வேக டீசல் விநியோகிக்கப்படும். முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து வடக்கு பங்களாதேஷில் உள்ள 7 மாவட்டங்களுக்கு அதி-வேக டீசல் விநியோகிக்கப்பட உள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் நட்புறவுக் குழாய் திட்ட நடவடிக்கை நீடித்த, நம்பகமான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமையும். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான எரிசக்தி பாதுகாப்பில் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்.