பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் கல்த்மாகின் பத்துல்காவும் இணைந்து கவுதம புத்தர் சிலையையும் அவரது பிரதான சீடர்கள் சிலைகளையும் திறந்து வைத்தனர். உலான் பாடோர் என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க காந்தன் டெக்சென்லிங் மடாலயத்தில் இந்தச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
பாரதப் பிரதமர் 2015ம் ஆண்டு மங்கோலியாவில் பயணம் மேற்கொண்டபோது, காந்தன் டெக்சென்லிங் மடாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அதையடுத்து, இந்திய, மங்கோலிய நாடுகளில் போற்றப்படும் புத்தர் பிரானின் பாரம்பரியத்தையும் நினைவு கூர்ந்து, அந்த மடாலயத்துக்கு ஒரு புத்த பகவான் சிலையை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
தனது இரு சீடர்களுடன் புத்தர் அமர்ந்திருக்கும் வகையில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிலை கருணை, அமைதி, இணைந்துவாழ்தல் ஆகிய மூன்று தத்துவங்களையும் உணர்த்துகிறது. காந்தன் டெக்சென்லிங் மடாலயத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் உல்லான்பத்தார் நகரில் கடந்த செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மூன்றாவது உரையாடல் நிகழ்வில் (SAMVAAD) இந்த புத்தர் சிலை நிறுவி, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சம்வாத் நிகழ்ச்சி புத்த மதம் எதி்ரகொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து புத்த மதத் தலைவர்கள், பவுத்த நெறி வல்லுநர்கள், பவுத்த கோட்பாட்டின் அறிஞர்கள் கூடும் ஞான சங்கமம் ஆகும்.
காந்தன் டெக்சென்லிங் மடாலயம் மங்கோலிய பவுத்தர்களின் மிக முக்கியமான மையமாகும். பவுத்த பாரம்பரியம் மிக்க பொக்கிஷமாகவும் திகழ்கிறது. இந்த மடாலயத்தில் அமைதிக்கான ஆசிய பவுத்த மாமன்றத்தின் (ABCP) 11வது மாநாடு கடந்த ஜூன் 21 முதல் 23ம் தேதி வரையில் நடைபெற்றது. அது மாமன்றத்தின் 50வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ரஷ்யா, வங்க தேசம், இலங்கை, பூடான், நேபாளம், தாய்லாந்து, ஜப்பான், லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசு (LPDR) உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் திரு. கல்த்மாகின் பத்துல்காவும் திறந்து வைத்த இந்த புத்தர் சிலை புத்தர் பிரானின் செய்தியைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளும் தங்களுக்கு இடையில் நல்ல மதிப்பையும் அடையாளப்படுத்தும் வகையில் உள்ளது.