புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.
மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸை பிரதமர் நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உத்திபூர்வ கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் முக்கியப் பங்காற்றிய அரசு, தொழில்துறை, சிவில் சமூகம் மற்றும் கல்வித்துறையில் இருதரப்பு ஈடுபாட்டுடன் புதுப்பிக்கப்பட்ட வேகத்தை இரு தலைவர்களும் மனதாரப் பாராட்டினர்.
ஜெர்மனி, இந்தியா மற்றும் இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்திற்கு இடையே பொருளாதார உறவுகள் மற்றும் உத்திபூர்வ கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதில் 7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளுக்கு இணையாக புதுதில்லியில் நடைபெறும் ஜெர்மன் வர்த்தகத்தின் ஆசிய-பசிஃபிக் மாநாட்டின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். ஒட்டுமொத்தமாக. 2024ஆம் ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்தும் முடிவு, இந்தியா-பசிஃபிக் மற்றும் உலக அளவில் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
"புதிய கண்டுபிடிப்பு, இயக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் இணைந்து வளர்தல்" என்ற குறிக்கோளின் கீழ், 7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனை கூட்டம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள், உழைப்பு மற்றும் திறமை, இடம்பெயர்வு மற்றும் நடமாட்டம், காலநிலை நடவடிக்கை, பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி அத்துடன் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது. ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், வளர்ச்சி ஒத்துழைப்பு, கலாச்சாரம், கல்வி, நிலையான இயக்கம், நிலையான வள மேலாண்மை, பல்லுயிர்பெருக்கம், பருவநிலை தாங்குதிறன், மக்களிடையேயான உறவுகள் போன்றவற்றில் மேற்கூறிய களங்கள் தங்களின் பன்முகக் கூட்டாண்மையின் முக்கிய இயக்கிகளாக இருக்கும் என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள். ,
2024-ம் ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஒத்துழைப்புக்கு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்திய-ஜெர்மன் ஒத்துழைப்பு, நெருங்கிய உறவைப் புதுப்பிக்கவும், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கிய தூணாக முன்னுரிமை அளிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. .
6வது ஐஜிசி-யின் போது, இரு அரசுகளும் பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி கூட்டாண்மையை அறிவித்தன. அதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் இடப்பெயர்வு மற்றும் நகர்வு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் டிசம்பர் 2022-ல் கையெழுத்திட்டனர். பிப்ரவரி 2023-ல் "புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியா-ஜெர்மனி பார்வை" தொடங்கப்பட்டது. 6வது ஐஜிசி-யின் விளைவுகளை நினைவுகூர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டன. அதன்பின்னர் இரு அரசுகளும் "இந்தியா-ஜெர்மனி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை சாலை வரைபடத்தை" யும் "இந்தோ-ஜெர்மன் பசுமை ஹைட்ரஜன் சாலை வரைபடத்தை"யும் அறிமுகப்படுத்தின. இதன் நோக்கம் பசுமை ஹைட்ரஜனின் சந்தை வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
எதிர்காலத்திற்கான உடன்படிக்கையை குறிப்பிட்டு, ஜனநாயகம், சுதந்திரம், சர்வதேச அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். . சமகால யதார்த்தங்களை பிரதிபலிக்கவும், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஆதரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் விரிவாக்கம் உட்பட பலதரப்பு அமைப்பை வலுப்படுத்தவும் சீர்திருத்தவும் இரு அரசுகளும் தங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரு தலைவர்களும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்ஐஜிஎன்-ல் உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை திறம்பட சரி செய்வதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவையின் கட்டாய நினைவூட்டலை வழங்குகின்றன என்பதை இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக்கொண்டன. "நால்வர் குழுவின் (ஜி4)" உறுப்பினர்களான, இந்தியாவும் ஜெர்மனியும் 21 ஆம் நூற்றாண்டின் எதார்த்த நிலைமையைப் பிரதிபலிக்கும் திறமையான, பயனுள்ள, வெளிப்படையான பாதுகாப்பு கவுன்சிலுக்கான தங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்தின.
பயங்கரமான மற்றும் சோகமான மனிதாபிமான விளைவுகள் உட்பட உக்ரைன் போர் குறித்து இந்தத் தலைவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். சர்வதேச சட்டத்திற்கு இணங்க, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.