2016 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய காவல் பணியைச் சேர்ந்த (ஐ.பி.எஸ்) 110-க்கும் மேற்பட்ட பயிற்சி அலுவலர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்து பேசினர்.
பயிற்சி அலுவலர்களிடையே பேசிய பிரதமர், காவலர் சேவையில் மனிதத் தன்மை கொண்ட அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நாட்டின் சுதந்திரம் முதல் இதுவரை பணியில் இருந்த போது, 33,000க்கும் மேற்பட்ட காவலர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்த கலந்துரையாடலின் போது உடன் இருந்தார்.