

இந்திய புத்தொழில் நிறுவனங்கள் சர்வதேச அளவில் குறிப்பாக எதிர்காலத் துறைகளில் முத்திரை பதித்திருப்பது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புத்தொழில் நிறுவனங்களை மிகவும் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ள இந்தியாவின் இளைஞர் சக்தியின் வலிமை, திறன் ஆகியவை குறித்துப் பெருமிதம் கொள்வதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மைகவ் இந்தியா (MyGov) சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
Delighted that our Indian StartUps are making an international imprint, especially in futuristic sectors. #9YearsOfStartupIndia https://t.co/GC3qokpW9n
— Narendra Modi (@narendramodi) January 16, 2025
"நமது இந்திய புத்தொழில் நிறுவனங்கள் சர்வதேச அளவில் குறிப்பாக எதிர்காலத் துறைகளில் முத்திரை பதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது."
“புத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ள இந்தியாவின் இளைஞர் சக்தியின் வலிமை, திறன்கள் ஆகியவை குறித்து பெருமிதம் கொள்கிறேன்!"
#9YearsOfStartupIndia
Proud of the strength and skills of India’s Yuva Shakti, which has made India among the most attractive places for StartUps! #9YearsOfStartupIndia https://t.co/61L8cRlySL
— Narendra Modi (@narendramodi) January 16, 2025