சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் எஃப்ஐடிஇ கிராண்ட் சுவிஸ் ஓபனில் சிறப்பான வெற்றிகளைப் பெற்ற விதித் குஜராத்தி மற்றும் வைஷாலிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் டொரண்டோவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளுக்கு இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் எஃப்ஐடிஇ கிராண்ட் ஸ்விஸ் ஓபனில் இந்தியா முதலிடத்தைப் பிடித்ததில் மகத்தான பெருமை. விதித் குஜராத்தி @viditchess வைஷாலி @chessVaishali ஆகியோரின் சிறந்த வெற்றிகளுக்காகவும், டொரண்டோவில் நடைபெறவுள்ள 2024 போட்டிக்குத் தகுதி பெற்றதற்காகவும் வாழ்த்துகள். சதுரங்கப்போட்டிகளில் இந்தியத் திறமைக்கு இது மற்றொரு உதாரணம். இந்தியா உண்மையிலேயே மகிழ்ச்சியில் உள்ளது.”
A moment of immense pride as India takes the top spot in the FIDE Grand Swiss Open.
— Narendra Modi (@narendramodi) November 6, 2023
Congratulations to @viditchess and @chessVaishali for their outstanding victories, and for securing their spots in the prestigious 2024 Candidates, to be held in Toronto.
This is yet another… pic.twitter.com/GgbsWa48D6