மாறிவரும் உலகில் இந்திய ரஷிய நாடுகளின் நீடித்த கூட்டாண்மை

  1. புது தில்லியில் 2018ம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதியும் 5ஆம் தேதியும்  நடைபெற்ற 19வது ஆண்டு இரு தரப்பு உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ரஷியக் கூட்டமைப்பின் அதிபர் திரு. விளாதிமீர் புதினும் சந்தித்துப் பேசினர். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு,  இந்திய அரசுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் 1971ம் ஆண்டு ஏற்பட்ட நிரந்தர உடன்பாடு, நட்புறவு,  ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் 1993ல் இந்திய – ரஷிய  நாடுகளுக்கு இடையிலான நட்புறவு ஒத்துழைப்பு, 2000ம் ஆண்டில் அமைந்த ராஜீய கூட்டாண்மை  2010ல் அமைந்த கூட்டாண்மை மேம்பாட்டுக்கும் சிறப்பு ராஜதந்திர கூட்டறிக்கை ஆகியவற்றின் அடிப்படியலும் வலுவாக அமைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது அரசியல், ராஜீய உறவு, ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார, எரிசக்தி, தொழில், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மனிதநேய உறவுகள் எனப் பல வகையிலும் அமைந்தது.
  2. ரஷியா, கிராஸ்தனார் பிரதேசம் சோச்சியில் கடந்த மே 21ம் தேதி நடைபெற்ற சாதாரண முறையில் நடைபெற்ற உச்சி மாநாடு பொருத்தமானது என்றும், குறிப்பிடத் தக்கது என்றும் இரு தரப்பு நாடுகளும் உயர்வாக மதிப்பிடுகின்றன. அந்த மாநாடு சர்வதேச ராஜதந்திர செயல்பாட்டில் வித்தியாசமானது. பிரதமர் திரு மோடி, அதிபர் திரு. புதின் இடையிலான ஆழ்ந்த நம்பிக்கையைப் பிரதிபலிப்பவை. மேலும், இரு தரப்பினரும் பரஸ்பர விவகாரங்கள் குறித்து தொடர்ந்து உறவுகளை மேற்கொள்ளவும், அடிக்கடி கலந்தாலோசிக்கவும் உறுதி செய்பவை. பல்முனை உலகளாவிய ஒழுங்கினைக் கட்டமைப்பதற்காக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, உரையாடல் ஆகியவற்றை சோச்சி உச்சி மாநாடு வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய சாதாரண சந்திப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும் எல்லா நிலைகளிலும் ராஜீய தொடர்புகளை மேற்கொள்வது என்றும்  இரு தரப்பினரும் இசைந்தனர்.
  3. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிரத்யேக ராஜீய ஒத்துழைப்பைமேற்கொள்வது என்று உறுதி பூண்டுள்ளன. உலக அமைதி, நிலைத்தன்மைக்கு இது மிக அவசியமானது என்றும் இரு தரப்பினரும் பிரகடனம் செய்தனர். அத்துடன், இரு தரப்பினரும் தங்களது பங்களிப்புகளைப் பெரிய சக்தியாகக் கருதிப் பரஸ்பரம் போற்றி வருகின்றனர்.
  4. இரு நாடுகளும் தங்களது உறவு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முதிர்ச்சி பெற்றது என்றும் நம்பிக்கைக்குரியது என்றும் இசைந்தனர். அது பரஸ்பர நம்பிக்கை, புரிதல், மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலானது. இந்தியாவும் ரஷியாவும் பல கலாச்சார, பலமொழிகள், பல மதங்களைக் கொண்டவை என்பதால் நாகரிக ஞானத்தை நவீன கால சவால்களுக்கு அளிக்கின்றன. மேலும், ஒன்றுக்கொன்று இணைந்த பலதரப்பட்ட உலகைப் படைப்பதில் பங்களிப்பு செலுத்துகின்றன.
  5. உலக அளவில் உள்ள பதற்றத்தைக் குறைத்து, நாடுகளுக்கு இடையிலான உறவில் சகிப்புத் தன்மை, ஒத்துழைப்பு, வெளிப்படைத் தன்மை, திறந்தநிலை ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய, ரஷிய நாடுகள் அழைப்பு விடுக்கின்றன. உலகின் பெரும்பாலான இடங்களில் விரைவான, சூழலுக்கு உகந்த நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, வறுமையை ஒழிப்பது,  அரசுகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை நீக்குதல், அடிப்படை சுகாதாரத்தை அளித்தல் ஆகியவை முக்கியமான சவாலாகும் என்பதை உறுதிப்பட இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.இந்தியாவும் ரஷியாவும் இந்த இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைத்துச் செயல்படுவதற்கு இசைந்துள்ளன.
  6. இரு நாடுகளின் அமைச்சர்கள் நிலையில் 50க்கும் மேற்பட்ட முறை பரஸ்பர வருகைகள் இரு தரப்பு உறவுகளுக்குப் புதிய வலுவூட்டியுள்ளன. அத்துடன் அனைத்து நிலைகளிலும் இரு நாடுகளும் தொடர்புகள் வைத்திருப்பது குறித்து திருப்தி அடைந்துள்ளன. 2017-18ம் ஆண்டில் இரு தரப்பு வெளியுறவு அலுவல்களுக்கு இடையில் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, இரு தரப்புகளும் ஆலோசனைகளை 2019 முதல் 2023ம ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்து மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கான கவுரவ தூதரக அலுவலர்களை எகடெரின்பர்க், அஸ்ட்ராகான் ஆகிய நகரங்களில் நியமித்துள்ளதை ரஷியா வரவேற்றுள்ளது. மக்களுக்கும், அந்தந்த மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு இது வழிவகுக்கும் என்று குறிப்பிட்டது.
  7. உள்நாட்டுப் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவை தொடர்பாக 2017ம் ஆண்டு நவம்பரில் இரு தரப்பு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடுகளை இரு தரப்பினரும் வரவேற்றனர். அத்துடன், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் ரஷியக் கூட்டமைப்பின் உள்துறை அமைச்சகத்துக்கும் இடையில் 2010-2020ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் கூட்டு செயல் திட்டம் ஆகியவற்றையும் இரு தரப்பினரும் வரவேற்றனர். பேரிடர் மேலாண்மையில் ரஷியா அளித்துவரும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இந்தியா வரவேற்றது. மேலும், பயிற்சி அளிப்போருக்கு உரிய பயிற்சி தருவதையும் பேரிடர் மேலாண்மைக்கான கருவிகளை வடிவமைத்துத் தருவதையும் வரவேற்றது.
  8. இந்திய – ரஷிய நாடுகளுக்கு இடையிலான ராஜீய உறவுகளின் 70 ஆண்டுகால நிறைவை ஒட்டிய நிகழ்வுகளை இரு தரப்பினரும் கண்டு களித்ததையும் மக்களுக்கு இடையிலான உறவு வலுப்பட்டதையும் இரு நாடுகளும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தன. கடந்த ஆண்டு கையெழுத்தான உடன்பாட்டின்படி 2017-19ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் கலாசார பரிமாற்றத் திட்டம் குறித்து இரு தரப்பினரும் திருப்தி வெளியிட்டனர். இந்தியாவில் ரஷிய பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுவதையும் ரஷியாவில் இந்தியப் பண்பாட்டு விழா நடத்தப்படுவதையும் வரவேற்றன. அதுபோல் தற்போது மேற்கொள்ளப்படும் எழுத்தாளர்கள் இளைஞர்கள் பரிமாற்றத் திட்டம் தேசிய திரைப்பட விழாக்கள் ஆகியவை குறித்தும் போற்றுகின்றன. கடந்த இரு ஆண்டுகளாக மேம்பட்டு வரும் சுற்றுலா பரிமாற்றத் திட்டத்தையும் இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். 2018 உலக கோப்பையை மிகச் சிறப்பாக நடத்தியதற்காக ரஷியாவுக்கு இந்தியா பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது. இந்திய ரஷிய உறவுகளை மேம்படுத்தும் வகையில் ரஷிய அறிவியல் அகாதெமியின் கீழ் இயங்கும் கீழை ஆய்வு நிறுவனத்தின் பல ஆண்டுகளாக செலுத்தி வரும் பங்களிப்பை இரு தரப்பினரும் ஏற்றுப் பாராட்டியுள்ளன. அந்த நிறுவனத்தின் 200வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியா பங்களிப்பு செலுத்தும் என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.

    பொருளாதாரம்

  9. இந்திய ரஷிய அரசுகளுக்கு இடையில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், பண்பாட்டுக்கான ஒத்துழைப்பு ஆணையத்தின் 23வது கூட்டம் மாஸ்கோவில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ரஷிய துணைப் பிரதமர் திரு. யூரி ஐ. போரிஸோவ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூட்டுத் தலைமை வகித்தனர். அதை இரு தரப்பு நாடுகளும் பெரிதும் வரவேற்றன.
  10. 2025ம் ஆண்டில் இரு நாடுகளும் பரஸ்பரம் 3000 கோடி டாலர் அளவுக்கு செய்யும் முதலீடு, அதையொட்டி இலக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர். 2017ம் ஆண்டு இரு தரப்பு வர்த்தகம் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளும் (அமெரிக்க டாலர் அல்லாமல்) தங்களது சொந்த நாணயங்களின்  அடிப்படையில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளன.
  11. இந்தியாவின் நித்தி ஆயோக் மற்றும் ரஷியாவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையில் ஆண்டு இறுதியில் ரஷியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் பொருளாதார உத்திகளை இரு தரப்பு விவாதம் குறித்து இரு தரப்பு நாடுகளும் விவாதித்தன.
  12. யூரேஷியன் பொருளாதார ஒன்றியம் அதன்  உறுப்பு நாடுகள் ஆகியவற்றுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த ஆலோசனைகள் தொடங்கப்படுவதை இரு நாடுகளும் வரவேற்றன. விவாதம் விரைவபடுத்தப்படுவதற்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
  13. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாடு, முதலீட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான செயல்கள் குறித்த ராஜீய நிலையிலான கூட்டு ஆய்வை இரு நாடுகளும் வரவேற்றுள்ளன. அதை முன்னெடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டன. அதற்காக இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனமும் அகில ரஷிய வெளிநாட்டு வர்த்தக அகாதமியும்   நியமிக்கப்பட்டுள்ளதை இரு நாடுகளும் ஏற்றுள்ளன.
  14. இந்தியாவில் ரஷிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வழியமைக்கும் “இந்தியாவில் முதலீடு செய்க” திட்டப் பணிகளை இரு தரப்பினரும் வரவேற்றனர். அது போல் இந்தியர்கள் தொழில் தொடங்க உதவும் ரஷியாவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் ஒற்றைச் சாளர சேவை  தொடங்குவதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
  15. புது தில்லியில் அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட 19வது ஆண்டு இந்திய ரஷிய வர்த்தக உச்சி மாநாட்டை இரு நாடுகளும் வரவேற்றுள்ளன. இரு நாடுகளையும் சேர்ந்த ஏராளமான தொழில், வர்த்தகப் பிரமுகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இது இரு தரப்பு நாடுகளுக்கும் இடையில் தொழில், வர்த்தகம், முதலீடு, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அறிகுறியாகவே அமைந்தது.
  16. சுரங்கம், உலோகவியல், மின்சாரம், எண்ணெய், எரிவாயு, ரயில்வே, மருந்துகள், தகவல்தொழில்நுட்பம், வேதியியல், கட்டுமானம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, கப்பல் கட்டுதல், பலவகை கருவிகளின் உற்பத்தி ஆகிய தொழில்களில் முதலீடு செய்வதற்கான திட்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இரு நாடுகளும் ஆய்வு செய்தன. ரஷியாவில் மருந்து கம்பெனி அமைப்பதற்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அது போல் ரஷியாவிலிருந்து உர இறக்குமதியை அதிகரிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது. அலுமினியத் தொழிலை விரிவு படுத்துவதன்வதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர்.
  17.  இந்திய தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுக்கும்  ரஷியாவின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகக் கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு கையெழுத்தாவதை இரு நாடுகளும் பெரிதும் வரவேற்றன.
  18. இரு நாடுகளுக்கும் கட்டமைப்பு மேம்பாடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வலியுறுத்தினர். இதில் இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்பு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்தியாவில் தொழில் கூடங்களின் மேம்பாட்டிலும் சாலை, ரயில் கட்டமைப்பு, பொலிவுறு நகரங்கள்  உருவாக்குதல், சரக்கு ஊர்திகள்  அமைத்தல், கூட்டு பொருள் போக்குவரத்து நிறுவனங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றிலும் ரஷிய நிறுவனங்கள் பங்குபெறும்படி இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேற்கண்ட தொழில்களில் இந்தியாவுடனான கூட்டுத் தொழில் திட்டங்களில் செயற்கைக்கோள் வழி தொழில்நுட்பம் மூலம் வரிவசூலிப்பதற்கான நிபுணத்துவத்தை அளிக்க ரஷிய தரப்பினர் முன் வந்தனர். அதிவிரைவு ரயில் திட்டங்களை இந்தியா மேற்கொள்ளும் போதெல்லாம் சர்வதேச அளவிலான ஏலத்தில் பங்கேற்பதில் ரஷ்யர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தனர். 
    சர்வதேச போக்குவரத்துத் தொழில்களை நிறைவேற்றும்போது, அவற்றில் போக்குவரத்துக் கல்வி, பணியாளர் பயிற்சி, அறிவியல் உதவி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.  அதற்காக பரோடாவில் உள்ள தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்துக்கும் ரஷிய போக்குவரத்துப் பல்கலைக்கழகத்துக்கும் ஒத்துழைப்பு மேற்கொள்வது என இரு தரப்பினரும் இசைந்தனர்.
  19. இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். சர்வதேச  வடக்கு – தெற்கு போக்குவரத்து நடைக் கூடம் அமைப்பது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியாவுக்கும் வடக்கில் உள்ள இதர நாடுகளுக்கும் இடையில் சாலை மற்றும் ரயில்வே கட்டுமானங்கள், சுங்க நடைமுறைகள், நிதி ஏற்பாடுகள் ஆகியவற்றை இரு தரப்பு விவாதங்கள் மூலமாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற “போக்குவரத்து வாரம்-2018” நிகழ்வை ஒட்டி, இந்தியா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் முத்தரப்புக் கூட்டத்திற்கு இந்தக் கூட்டறிக்கையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ஈரான் வழியாக ரஷியாவுக்கு இந்திய சரக்குகளைக் கொண்டு செல்வது குறித்த போக்குவரத்துக்கு இது பெரிதும் துணைபுரியும். இதையொட்டி, சர்வதேச  வடக்கு – தெற்கு போக்குவரத்து கூடத்தின் (INSTC) அமைச்சக நிலையிலான சந்திப்புக்கு இரு நாடுகளும் இசைந்துள்ளன.
  20. ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ளும்போது கால தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் இரு நாடுகளும் தங்கள் நாட்டின் வர்த்தக ஆய்வுகள், வர்த்தக நடைமுறைகள், ஒழுங்குமுறைகளைப் பகிர்ந்து கொள்வும் முடிவு செய்தன.

21. தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் இரண்டு தரப்பிலும் உள்ள ஏற்றுமதியாளர்கள்/ இறக்குமதியாளர்கள் விவரங்களைப் பெற தங்களது வர்த்தக கண்காட்சிகள் பட்டியல்கள் மற்றும் நிறுவனங்கள்/ ஏற்றுமதியை வளர்ப்பதற்கான கவுன்சில்கள் மற்றும் இதர ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

22. இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே கொண்டு செல்லப்படும் சரக்குகள் தொடர்பான சுங்க ஏற்பாடுகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் பசுமைவழித் திட்டத்தை விரைவில் துவங்குவதை இரு தரப்பும் ஆதரித்தன. பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமானதொரு நடவடிக்கையாக இது இருக்குமெனவும் அவை கருதுகின்றன. இத்திட்டம் துவங்கியபிறகு, அதை மேலும் விரிவுபடுத்தவும் இரண்டு நாடுகளிலும் உள்ள சுங்க நிர்வாகங்கள் உறுதிபூண்டுள்ளன.

23. இந்திய மாநிலங்கள், ரஷிய நாட்டின் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தவும், மேலும் உறுதிப்படுத்தவுமான முயற்சிகளையும் இருதரப்பினரும் பாராட்டினர். இந்திய குடியரசின் மாநிலங்கள், துணைநிலை மாநிலங்கள் ஆகியவற்றுக்கும்  ரஷிய கூட்டமைப்பின் அங்கங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வேகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இருதரப்பின் வர்த்தகங்கள், தொழில்முனைவர்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றின் நேரடித் தொடர்புகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இருதரப்பும் அறிவுறுத்தியுள்ளது. அசாம்- சகாலின், ஹரியானா – பஷ்கோர்ட்டோஸ்தான், கோவா- காலினின்க்ராட், ஒடிசா – இர்குட்ஸ்க், விசாகப்பட்டினம்- வ்ளாடிவாஸ்டாக் ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நோக்கத்துடனான தீவிர முயற்சிகளை இருதரப்பும் வரவேற்றன. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பு, கிழக்கு பொருளாதார அமைப்பு மற்றும் பங்கெடுப்பு/முதலீட்டிற்கான உச்சிமாநாடுகள் ஆகிய முக்கிய நிகழ்வுகளில் பிராந்திய அளவிலான பிரதிநிதிகள் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்துவதென இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இந்திய-ரஷிய பிராந்தியங்களுக்கு இடையிலான அமைப்பை செயல்படுத்துவதென்ற நோக்கத்தையும் அது வரவேற்றது.

24. இயற்கை வளங்களை முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் பொருத்தமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாடு மற்ற நாட்டின் இயற்கை வளங்களை உற்பத்தி ரீதியாகவும், சிறப்பான வகையிலும் சிக்கனமாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான கூட்டுத் திட்டங்களைக்கண்டறிய செயல்படுவதென்று இருதரப்பும் ஒப்புக் கொண்டது.

விவசாயத் துறை இத்தகைய ஒத்துழைப்பிற்கான முக்கியமானதொரு பகுதி என்பதையும் இருதரப்பும் ஒப்புக் கொண்டதோடு, விவசாயப் பொருட்களின் அதிக உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றில் உள்ள வர்த்தக ரீதியான இடையூறுகளை அகற்றுவதெனவும் உறுதி பூண்டன.

25. பிஜேஎஸ்சி அல்ரோஸா நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கு கச்சா (பட்டைதீட்டப்படாத) வைரங்களை வழங்குவதற்கான நீண்டகால புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, மும்பை நகரில் அல்ரோஸா நிறுவன பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறப்பது, இந்திய சந்தை உள்பட வைரங்களை பொதுவாக விற்பதற்கான திட்டங்களை வளர்த்தெடுக்க சர்வதேச வைர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான இந்தியாவின் வைர மற்றும் நகை ஏற்றுமதி வளர்ச்சிக்கான கவுன்சிலும் அல்ரோஸாவும் இணைந்து நிதியுதவி வழங்குவது உள்ளிட்டு வைரத் துறையில் எட்டப்பட்டுள்ள ஒத்துழைப்பின் வீச்சை இரு தரப்பும் பாராட்டின. ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியில் வைர உற்பத்தித் தொழிலில் இந்திய நிறுவனங்களின்  சமீபத்திய முதலீட்டை இருதரப்பும் சுட்டிக் காட்டின.

கூட்டுமுதலீடுகள், உற்பத்தி, வகைப்படுத்தல், தனித்திறன் மிக்க தொழிலாளர்கள் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் விலைமதிப்புமிக்க உலோகங்கள், கனிமங்கள், இயற்கை வளங்கள், மரங்கள் உள்ளிட்ட வன உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

26. தூரக் கிழக்கு ரஷியாவில் முதலீடு செய்ய வேண்டுமென இந்திய தரப்பினரை ரஷியத் தரப்புக்கு அழைப்பு விடுத்தது. தூரக்கிழக்கு முகமையின் அலுவலகம் ஒன்றை மும்பை நகரில் திறப்பதென்ற முடிவையும் இந்திய தரப்பு வரவேற்றது. 2018 செப்டெம்பரில் வ்ளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார அமைப்புக் கூட்டத்தில்  மத்திய வணிகம்,தொழில் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரான சுரேஷ் பிரபுவின் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலீடுகளைக் கவர்வதற்கும், தூரக் கிழக்குப் பகுதியில் மேலும் அதிகமான முதலீட்டை வளர்த்தெடுக்கவும் முதலீட்டிற்கான சிறப்பு நிகழ்வுகளை நடத்த ரஷியாவின் உயர்மட்டக் குழு இந்தியாவிற்கு வருகை தரும்.

27. தொழில்நுட்பம் மற்றும் வள ஆதாரங்கள் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று உதவி செய்யும் வகையிலான ரயில்வே, எரிசக்தி மற்றும் இதர துறைகளில் மூன்றாவது நாடுகளில் கூட்டுத் திட்டங்களை தீவிரமாக வளர்த்தெடுக்கவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

அறிவியல்- தொழில்நுட்பம்

28. அறிவியல் – தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதோடு, இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷிய கூட்டமைப்பின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு மேற்பார்வையில் 2018 பிப்ரவரியில் அறிவியல்-தொழில்நுட்பத்திற்கான 10வது இந்திய-ரஷிய செயல்பாட்டுக் குழு வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் அவை வரவேற்றன.

29. இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும்  ரஷிய கூட்டமைப்பின் அடிப்படை ஆய்விற்கான அமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான வெற்றிகரமான ஒத்துழைப்பையும் இருதரப்பும் பாராட்டின. அடிப்படை மற்றும் நடைமுறை அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வின் 10வது ஆண்டை இவை கடந்த 2017 ஜூன் மாதத்தில் கொண்டாடின. இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் இருதரப்பும் திருப்தியுடன் அங்கீகரித்தன. இந்திய குடியரசு மற்றும் ரஷிய கூட்டமைப்பின் அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைந்த நீண்ட கால திட்டத்தின் கீழ் பரஸ்பர முன்னுரிமையுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பகுதிகளில் பல்வேறு ஆய்வுக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே மேலும் ஒத்துழைப்பிற்கான செயல்திட்ட வரைபடத்தை உருவாக்குவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கு உயிரூட்டவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

30. தகவல் மற்றும் தகவல்பரிமாற்றத் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக மின்னணுவியல் முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, மென்பொருள் மேம்பாடு, அதிவேக கணினி, மின் ஆளுகை, பொதுச் சேவைகள் வழங்கல், வலைப்பின்னல் பாதுகாப்பு, தகவல் மற்றும் தகவல்பரிமாற்றத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு, நிதிசார் தொழில்நுட்பம், பொருட்களுக்கான இணையம், தரவரிசைப்படுத்தல், அலைவரிசைக்கான கட்டுப்பாடு, அலைவரிசை ஒலிக்கற்றைகளின் ஒழுங்கமைப்பு ஏற்பாடு ஆகியவற்றில் தங்களது பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதெனவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. பிரிக்ஸ், ஐடியு உள்ளிட்ட பல்வேறு மேடைகளிலும் பரஸ்பரம் உதவிக் கொள்வது, ஒருங்கிணைந்து செயல்படுவதெனவும் இருதரப்பும் தீர்மானித்தன.

31. 2018 மார்ச் மாதத்தில்  புதுதில்லியில் இந்தியாவின் வணிக- தொழில் அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் ரஷிய கூட்டமைப்பின் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சர் மாக்சிம் ஒரேஷ்கின் ஆகியோர் “இந்திய-ரஷிய பொருளாதார ஒத்துழைப்பு: முன்னேறிச்செல்வதற்கான வழி” என்ற கூட்டறிக்கையில் கையெழுத்திட்டதையும் இருதரப்பும் வரவேற்றன. இந்திய தொழில் நிறுவனங்களின்  பெருங்கூட்டமைப்பும் ஸ்கோல்கோவோ ஃபவுண்டேஷனும் இணைந்து 2018 டிசம்பரில் முதல் முறையாக புதிய தொழில்களை துவங்குவதற்கான இந்திய-ரஷிய உச்சிமாநாட்டை நடத்துவது என்ற முடிவையும் அவை பெரிதும் பாராட்டின. இரு நாடுகளிலும் புதிய தொழில்முயற்சிகள் உலக அளவில் பரவவும், அதற்குத் தேவையான ஆதாரங்களை வழங்கவும் புதிய தொழில்கள் துவங்குவோர், முதலீட்டாளர்கள், காப்பாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இணையதளம் ஒன்றை துவக்குவது என்ற கருத்தையும் அவர்கள் வரவேற்றனர்.

32. நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற, இரு தரப்பினக்கும்பயனளிக்கும்படியான விண்வெளியில் இந்திய-ரஷிய ஒத்துழைப்பிற்கான ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை இருதரப்பும் வலியுறுத்தின. அளவீட்டுப் புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கான தரைத் தளத்தை இந்திய பிரதேச திசைவழி விண்கல செயல்முறை (நாவிக்) மற்றும் ரஷிய திசைவழி விண்கல செயல்முறை (க்ளாநாஸ்) ஆகியவற்றை பரஸ்பரம் ரஷிய கூட்டமைப்பு மற்றும் இந்திய குடியரசு ஆகியவற்றில் நிறுவுவதற்கான ஏற்பாட்டையும் இருதரப்பும் வரவேற்றன. மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத்திட்டங்கள், அறிவியல் திட்டங்கள் உள்ளிட்ட அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியைப் பயன்படுத்திக் கொள்வது, முழு அளவிலான ஆய்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. அதைப் போன்றே பிரிக்ஸ் அமைப்பின் தொலை தூர புலனறிதலுக்கான விண்கல தொடரை உருவாக்குவதிலும் தொடர்ந்து செயல்படுவதெனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

33. கூட்டு அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் ஆர்க்டிக் பகுதியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருதரப்பும் ஆர்வம் தெரிவித்தன. அண்டார்ட்டிக் பகுதியில் இந்திய- ரஷிய விஞ்ஞானிகளிடையே நீண்ட நாட்களாக இருந்துவரும் ஒத்துழைப்பு குறித்தும் இருதரப்பும் திருப்தி தெரிவித்தன.

34. பல்கலைக்கழகங்களுக்கான இந்திய-ரஷிய வலைப்பின்னலின் செயல்பாட்டின் விளைவாக இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையேயான தொடர்புகள் மேலும் விரிவடைந்துள்ளது குறித்தும் இரு தரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன. 2015-ம் ஆண்டு துவங்கப்பட்டபிறகு இந்த அமைப்பு மூன்று முறை கூடியுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையும் இப்போது 42-ஐ எட்டியுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம் அதைப்போன்றே கூட்டு அறிவியல் மற்றும் கல்வி திட்டங்கள் ஆகியவை கல்வி ரீதியான பரிமாற்றங்களிலும் இருதரப்பும் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தின.

   எரிசக்தி

35. இயற்கை எரிவாயு உள்ளிட்டு ரஷியாவின் எரிசக்தி ஆதாரங்களில் இந்தியத் தரப்பிற்கு உள்ள ஆர்வத்தையும், மறுசுழற்சிக்கான எரிசக்தி ஆதாரங்கள் துறையில் கூட்டு திட்டங்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட வகையில் இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே எரிசக்தி குறித்த ஒத்துழைப்பினை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பும் எடுத்துரைத்தன.

36. எரிசக்தி துறை இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய தன்மையுள்ள நிலையை இருதரப்பும் அங்கீகரித்தன. மேலும் நீண்ட கால ஒப்பந்தங்கள், கூட்டு முயற்சிகள், இரு நாடுகளிலும் உள்ள எரிசக்தி ஆதாரங்களை கையகப்படுத்தல், மூன்றாவது நாடுகளிலும் இத்தகைய ஒத்துழைப்பை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை தங்கள் நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்கம் தர வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

37. ரஷியாவிலுள்ள வாங்கோர்நெஃப்ட், டாஸ் யுர்யாநெஃப்ட் எகாஸோடோபிச்சா ஆகியவற்றில் இந்திய கூட்டுச் சங்கத்தின் முதலீடுகள், அதைப் போன்றே இந்தியாவின் எஸ்ஸார் ஆயில் மூலதனத்தில் பிஜேஎஸ்சி ரோஸ்நெஃப்ட் எண்ணெய் நிறுவனத்தின் பங்கேற்பு ஆகியவை உள்ளிட்டு இந்திய-ரஷிய எரிசக்தி நிறுவனங்களுக்கிடையே இருந்து வரும் ஒத்துழைப்பையும் இருதரப்பும் வரவேற்றன. முழுமையான ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பதில் இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு இருதரப்பும் திருப்தி தெரிவித்ததோடு, வாங்கோர் தொகுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தன.

38. திரவ வடிவிலான இயற்கை எரிவாயுத் துறையில் ஒத்துழைப்பு குறித்து ரஷிய -இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதையும் இருதரப்பும் ஏற்றுக் கொண்டன. காஸ்ர்பாம் குழுமம் மற்றும் கெய்ல் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுக்கிடையே நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் திரவ வடிவிலான இயற்கை எரிவாயு வழங்கல் துவங்கியுள்ளதையும் அவை வரவேற்றன.

39. பிஜேஎஸ்சி நோவாடெக் நிறுவனத்திற்கும் இந்தியாவிலுள்ள எரிசக்தி நிறுவனங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து விரிவடைவதிலும்   திரவ வடிவிலான இயற்கை வாயுத் துறையில் ஒத்துழைப்பு மேம்படுவதிலும் தங்களது ஆதரவை அவை தெரிவித்துக் கொண்டன.

40. ரஷிய ஆர்க்டிக் பகுதி, பெச்சோரா மற்றும் ஒகோட்ஸ்க் கடற்பகுதிகளில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்டு ரஷியா எண்ணெய் வளப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வாய்ப்புகளைக் கண்டறியவும் இரு தரப்பையும் சேர்ந்த நிறுவனங்களின் முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை இருதரப்பும் தெரிவித்துக் கொண்டன.

41. ரஷியா மற்றும் இதர நாடுகளிலிருந்து எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய்ப் பாதைகள் குறித்து 2017-ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஆய்வினை இருதரப்பும் வரவேற்றன. இந்தியாவிற்கு எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்ப் பாதைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து (எண்ணெய்) நிறுவனங்களுக்கும்   இந்திய-ருஷ்ய அமைச்சகங்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின. இந்த இரு அமைச்சகங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்ய தொடர்ந்து விவாதிப்பது எனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

42. இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையேயான பொது அணுசக்திக்கான கூட்டுறவு என்பது கேந்திரமான பங்களிப்பின் முக்கிய அம்சமாகும் என்பதோடு அது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கும் பங்களிப்பதாகவும்  பருவநிலை மாற்றம் மீதான பாரீஸ் உடன்படிக்கையின் கீழான அதன் உறுதிமொழிகளுக்கு உகந்ததாகவும்  அமைகிறது. கூடங்குளம் அணுசக்தி நிலையத்தில் மீதமுள்ள ஆறு உலைகளை கட்டுவதிலும், உள்நாட்டிலேயே அதற்கான துணைக்கருவிகளை உற்பத்தி செய்வதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின. ரஷியா வடிவமைப்பில் இந்தியாவில் புதிய அணுசக்தி நிலையம் அமைப்பது, அணுசக்திக் கருவிகளை கூட்டாக உற்பத்தி செய்வது, மூன்றாவது நாடுகளில் பரஸ்பரம் இது குறித்து ஒத்துழைப்பது ஆகியவை குறித்த கலந்துரையாடல்களையும் இருதரப்பும் வரவேற்றன.

   வங்கதேசத்தில் ரூபூர் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்துவதில் முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  குறிப்பிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின.  கூட்டாக கண்டறிந்த அணுசக்தி தளத்தில் ஒத்துழைப்பிற்கான பகுதிகளை அமலாக்குவது, முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றுக்கான செயல்திட்டத்தில்  கையெழுத்திடுவது குறித்தும் இருதரப்பும் திருப்தி தெரிவித்தன.

43. பருவநிலை மாற்றத்தில் பாதகமான விளைவுகளை குறைப்பது உள்ளிட்ட நீர் மின், மறுசுழற்சி மின் ஆதாரங்கள், மின்சார செயல்திறன் ஆகியவற்றில் நெருங்கிய ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை கண்டறிய முனைவது என்றும் இருதரப்பும் முடிவு செய்தன.

   ராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு

44. இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவம், ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பது தங்கள் கூட்டணியின் மிக முக்கியமான தூண் என்பதை இருதரப்பும் சுட்டிக் காட்டின. 2018 டிசம்பரில் நடைபெறவுள்ள இந்திய-ரஷியஅமைச்சகங்களுக்கு இடையிலான ஆணையத்தின் ராணுவ- தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த கூட்டத்தை இருதரப்பும் வரவேற்றன. ராணுவரீதியான ஒத்துழைப்பிற்கான பாதை என்பது பயிற்சி, ராணுவங்களின் மூத்த அதிகாரிகளுக்கிடையேயான கலந்துரையாடல், அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள், பயிற்சிகள் உள்ளிட்ட இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே மேலும் தீவிரமான ஒன்றிணைந்த செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும். 2018 ராணுவ விளையாட்டுகள், 2018 ராணுவம், சர்வதேச பாதுகாப்பிற்கான மாஸ்கோ மாநாடு ஆகியவற்றின் இந்தியாவின் பங்கேற்பையும் ரஷியத் தரப்பு சாதகமான வகையில் மதிப்பீடு செய்தது. இந்த்ரா 2018 என்ற முத்தரப்பு ராணுவங்களின் பயிற்சி என்ற முதல் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவுற்றதை இருதரப்பு பாராட்டியதோடு, 2018-ல் இந்த்ரா கடற்படை, இந்த்ரா ராணுவப்படை, அவியா இந்த்ரா ஆகிய கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடர்வது எனவும் உறுதிபூண்டன.

45. இந்தியாவிற்கு தரையிலிருந்து விண்ணுக்கு செலுத்தும் தொலைதூர எஸ்-400 ரக ஏவுகணை வரிசையை வழங்குவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதையும் இருதரப்பு வரவேற்றன.

   பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர பயன்கள் என்ற நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையேயான ராணுவ, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது என இருதரப்பும் உறுதிபூண்டன. ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்தும் இருதரப்பும் திருப்தி தெரிவித்தன. இந்த இருநாடுகளுக்கும் இடையே ராணுவ தொழில்நுட்ப கருவிகளை கூட்டாக ஆய்வு செய்வது, கூட்டாக உற்பத்தி செய்வது ஆகியவை குறித்த சாதகமான மாற்றத்தையும் அவை அங்கீகரித்தன. இந்திய அரசின் ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற கொள்கையை வளர்த்தெடுக்க ராணுவ தொழில் மாநாடு என்ற செயல்முறை மிக முக்கியமானதொரு வடிவமாக இருக்குமெனவும் அவை பெருமளவிற்கு மதிப்பீடு செய்தன.

   2017 நவம்பரில் உருவாக்கப்பட்ட உயரிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டம் குறித்தும் இருதரப்பும் சாதகமான வகையில் மதிப்பீடு செய்தன. இந்தக் கூட்டம் பரஸ்பர நலன்களைக் கொண்ட துறைகளில் கூட்டு ஆய்வு, கூட்டான மேம்பாடு ஆகியவற்றுக்கான திட்டங்களை கண்டறிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் ஐ.நா. உறுதிமொழியின்படி அரசுகளுக்கு இடையில் நட்புணர்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்த சர்வதேச சட்டத்தின் 1970 ஆம் ஆண்டு அறிவிக்கையின்படியும்  சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் தலையீடு இல்லாமை ஆகியவை குறித்து இரு தரப்பிலும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.”
  2. 2018 ஜூலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 10வது வருடாந்திர பிரிக்ஸ் மாநாட்டின் முடிவுகளைக் குறிப்பிட்டு, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. உறுதிமொழிகளை கடுமையாகப் பின்பற்றுவதன் அடிப்படையில், நேர்மையான, நியாயமான மற்றும் பன்முனை தன்மையான  உலக நியதியின்படி முன்னுரிமைகளை தற்காத்துக் கொள்தல், இணைந்து பணியாற்றுதலில் ராணுவ பங்களிப்பை மேம்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான  செயல்பாடுகளைத் தொடருவதில் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் நல்லெண்ணம் இருப்பதை இரு தரப்பாரும் ஒப்புக்கொண்டனர்.
  3. ஆப்கான் முன்னெடுக்கும், ஆப்கானுக்கு உரிய தேசிய அமைதிக்கான சமரச செயல்பாட்டுக்கு ஆப்கான் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது என்று இரு தரப்பிலும் அறிவிக்கை செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நிலவும், கட்டுப்படுத்த முடியாத வன்முறை மற்றும் மிகவும் மோசமான பாதுகாப்பு நிலைமை பற்றிய அக்கறையிலும், இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் மோசமான விளைவைக் கருத்தில் கொண்டும், மாஸ்கோ வடிவமைப்பு, ஆப்கானிஸ்தானின் எஸ்சிஓ  தொடர்பு குழு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற வடிவமைப்புகளின் மூலமாக ஆப்கானிஸ்தானில் நிலவும் நீண்டகால மோதல்களுக்கு முடிவு கட்டி, பயங்கரவாதிகளின் வன்முறைக்கு முடிவு கட்டவும், வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருப்பதற்கு முடிவு கட்டவும், நாட்டில் போதைப் பொருள் பிரச்சினை மோசமாகி வருவதற்கு முடிவு கட்டவும், நடவடிக்கைகள் எடுப்பது என்று இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் எந்த வெளிநாட்டுத் தலையிடும் இல்லாமல் தடுக்கும் வகையில் சர்வதேச அளவில் அனைவரும் கைகோர்த்து செய்லபட வேண்டும் என்று இருதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்கவும், நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பத்திரமான, ஒருங்கிணைந்த, வளமையான, சுதந்திரமான ஆப்கானிஸ்தானை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கூட்டு மேம்பாடு மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இரு தரப்பினரின் செயல்பாடுகளும் இருக்கும்.
  4. சிரியாவில் நிலவும் மோதல்களுக்கு, சிரியாவால் முன்னெடுக்கப்படும், சிரியாவுக்குரிய அரசியல் செயல்பாடுகளின்படி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவும் ரஷியாவும் ஆதரவு அளிப்பது என்ற உறுதி இரு தரப்பினராலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் 2254 (2015)-ன்படி, சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் எல்லைப்புற ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு காண்பதற்கு இந்த ஆதரவை அளிக்க உறுதி அளிக்கப்பட்டது.  ஐ.நா. முன்வைத்த சமரசத் திட்டம், ஜெனிவா முயற்சி மற்றும் அஸ்தனா செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு முயற்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அமைதியான, ஸ்திரமான மற்றும் இறையாண்மையுள்ள சிரியா தேசத்தை உருவாக்குவதற்கு தொடர்புடையவர்கள் தீவிரமாக ஈடுபாடு காட்ட வேண்டும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் அல்லது வெளியார் தலையீடும் இல்லாமல் சிரியாவுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அவசரமாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தேவைகள், அகதிகள் மற்றும் உள்நாட்டில் குடிபெயர்ந்தவர்களை திருப்பி அனுப்புதல் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு, சிரியா மக்களின் நீண்டகால துன்பங்களுக்கு முடிவை ஏற்படுத்தும் வகையில், தேவையான மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்கு இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
  5. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கவும், அணு ஆயுதப் பரவல் இல்லாத ஆட்சிக் காலத்தை பலப்படுத்தவும், ஈரானுடன் இயல்பான பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்கவும், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக விரிவான கூட்டு செயல் திட்டத்தை செம்மையாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பிலும் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதி வழியில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
  6. கொரிய தீபகற்பப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான முன்னேற்றங்களுக்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்த துணைப் பிராந்தியத்தில், நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் வகையில், தூதரக முயற்சி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கொரிய தீபகற்ப பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறைகளை உருவாக்கும்போது, தங்களின் பரவலாக்கத் தொடர்புகள் குறித்த பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
  7. வான்வெளியில் ஆயுதப் போட்டி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது பற்றி இரு தரப்பிலும் கவலை தெரிவிக்கப்பட்டது. ராணுவ மோதலுக்கான பகுதியாக வான்வெளிப் பகுதி மாறும் வாய்ப்பு உள்ளது பற்றியும் கவலை தெரிவிக்கப்பட்டது. வான்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்கான முயற்சிகள் மூலம், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று இரு நாடுகளும் உறுதிப்படுத்தின. வான்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதைத் தடுக்கும் வகையில், சட்டபூர்வமாகக் கட்டுப்பாடு கொண்ட அம்சங்களை இந்தத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து, அரசுகளிடையேயான ஐ.நா. குழுவின் முதலாவது கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களை வரவேற்பதாக இரு தரப்பாரும் தெரிவித்தனர். நடைமுறையில் வெளிப்படைத்தன்மையாக இருத்தல் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலான செயல்பாடுகள் மூலம், நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
  8. ரசாயன ஆயுதங்கள் உருவாக்குதல், உற்பத்தி, சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்தலைத் தடுப்பது மற்றும் அவற்றை அழிப்பதற்கான கூட்டமைப்பின் செயல்பாட்டை பாதுகாக்கும் வகையிலான முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவு தருவதில் உறுதியாக இருப்பது என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் செயல்பாடுகளை அரசியலாக்குவதைத் தடுக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பது என தெரிவிக்கப்பட்டது. ரஷியா தன்னிடம் வைத்திருந்த ரசாயன ஆயுதங்களை அழிக்கும் செயல்பாடுகளை முன்னதாகவே பூர்த்தி செய்துவிட்டமைக்கு இந்தியாவின் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவது என்ற லட்சியத்தை எட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாக இது இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
  9. தீவிரவாதம் எந்த வடிவிலும் உருவாகக் கூடாது, பரவக் கூடாது என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான மற்றும் கூட்டு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும், எந்தவிதமான இரட்டை அணுகுமுறையும் இதில் இருக்கக் கூடாது என்ற தேவை  இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது. பயங்கரவாத தொடர்புகளை அழிப்பது, அவற்றுக்கான நிதி ஆதார வழிகளை அழிப்பது, ஆயுதங்கள் மற்றும் தீவிரவாதிகளை சேர்க்கும் வழிகளை அழிப்பது, தீவிரவாதக் கொள்கைகளை ஒழிப்பது, தீவிரவாதப் பிரச்சாரம் மற்றும் ஆள்சேர்ப்பு முயற்சிகளை அழிப்பதில் கூட்டாக முயற்சிகள் மேற்கொள்வது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லை தாண்டிய  பயங்கரவாதம், தீவிரவாதிகளுக்கும் அவர்களின் அமைப்புகளுக்கும் புகலிடம் அளித்தல்  ஆகியவை உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு   அரசுகள் எந்த வகையிலும் ஆதரவு அளிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் நிலுவையில் உள்ள, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான கூட்டமைப்பின் திட்டங்களை சர்வதேச சட்டமாக்குவதற்கு, அவற்றை ஏற்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. அந்த திட்டங்கள் விரைவில் நிறைவு பெறுவதற்கு அனைத்து நாடுகளும் நேர்மையான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. ரசாயன மற்றும் உயிரி தொழில்நுட்ப தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க, அந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கு சர்வதேச கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து, ஆயுத ஒழிப்பு மாநாட்டில், பல நிலைகளிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டியன் அவசியம் இருப்பதை வலியுறுத்தி, அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
  10. சர்வதேச உறவுகளில் ஐக்கிய நாடுகள் சபையை மையப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் சர்வதேச சட்ட கொள்கைகளை ஏற்பதில் இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்ட விதிகள் மற்றும் கொள்கைகளை  நல்ல எண்ணத்துடன் செயல்படுத்தினால், இரட்டை நிலைப்பாடுகள் நீங்கிவிடும் என்றும், சில அரசுகள் மற்ற அரசுகளின் மீது தங்கள் விருப்பம் போல அழுத்தம் தருவது நீங்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இல்லாத வகையில், ஒருதலைபட்சமாக நெருக்குதல் தரும் நடவடிக்கைகளை எடுப்பது இதுபோன்ற ஒரு நடைமுறை என்றும் குறிப்பிடப்பட்டது. உலகளாவிய மற்றும் பங்களிப்பு கொண்ட நலன்களின் அடிப்படையில் ஜனநாயக முறையிலான உலக நியதிகளை மேம்படுத்துவதற்கு இரு தரப்பிலும் கூட்டாக செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
  11. தற்போதைய உலக நியதியை நல்ல முறையில் பிரதிபலிக்கும் வகையிலும், உலகளாவிய புதிய சவால்களை சமாளிப்பதில் இன்னும் செம்மையாக செயல்படுவதற்கும்,  ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தரப்பிலும் உறுதி தெரிவிக்கப்பட்டது. விரிவுபடுத்தப்படும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பதற்கு, உறுதியான ஆதரவை அளிப்பதாக ரஷியா தெரிவித்தது. அமைதியான, பாதுகாப்பான, சமத்துவமான வளர்ச்சியை உறுதிசெய்வதில், பிராந்திய அளவிலும், உலகளாவிய அளவிலும் நெருக்கமாக செயல்படுவது என்று இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது. உலக அளவில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதிலும், நிலைத்தன்மையை உருவாக்குவதிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.
  12. நீடித்த வளர்ச்சிக்கான 2030 ஆம் ஆண்டு செயல் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பது என இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் என மூன்று பரிமாணங்களிலும் நீடித்த வளர்ச்சியை, சமநிலையிலான மற்றும் ஒருங்கிணைந்த வகையில் எட்டுவதற்கு, சம நிலையிலான, திறந்த, அனைத்து துறை, புதுமை சிந்தனையுடன் கூடிய மற்றும் பங்கேற்புடன்கூடிய முயற்சிகளை  முன்னெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 2030 செயல் திட்டத்தை உலக அளவில் அமல் செய்வதை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வு செய்தலில், நீடித்த வளர்ச்சிக்கான உயர்நிலை அரசியல் அமைப்பு உள்ளிட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் உள்ளது பற்றி வலியுறுத்தப்பட்டது. 2030 செயல் திட்டத்தை அமல்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதில், திறன்களை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, ஐ.நா. வளர்ச்சி முறைமையை சீரமைக்க வேண்டிய அவசியம் இருப்பது பற்றியும் ஒப்புக்கொள்ளப்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகள், அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவி உறுதியளிப்புகளை உரிய நேரத்தில் முழுமையாகச் செயல்படுத்தி, வளரும் நாடுகளுக்கு வளர்ச்சிக்கான அதிக நிதி அளிக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்
  13. நீடித்த வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு என்ற கருத்தின் அடிப்படையில், பசுமை மேம்பாடு மற்றும், குறைந்த கார்பனை வெளிப்படுத்தும் வகையிலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது என்று இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் வரையறை கூட்டமைப்பின் கொள்கைகளின்படி, பாரிஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விஷயங்களை அனைத்து நாடுகளும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன. பொதுவான, ஆனால் மாறுபாடுகள் கொண்ட பொறுப்புகள் மற்றும் அவரவர் திறன்களின் படி அவற்றை அமல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  பாதிப்புகளைத் தடுத்தல் மற்றும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு வளரும் நாடுகளுக்கு  வளர்ச்சியடைந்த நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் உருவாக்கல் உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
  14. உலக அளவில் ஆயுதப் பரவலுக்கு எதிரான திட்டங்களை வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பது என இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அணுசக்திப் பொருள் வழங்கும் குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து அளிப்பதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷியா தெரிவித்தது.
  15. தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதில் அரசுகள் பொறுப்பாக நடந்து கொள்வதன் கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள், நடைமுறைகளை விரைவாக உருவாக்குவதன் அவசியம் இருப்பது பற்றி இரு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை கிரிமினல் விஷயங்களுக்காக பயன்படுத்துவதைத் தடுப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, சர்வதேச சட்ட கட்டுப்பாடுகளை உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டது. ஐ.நா. பொது சபையின் 73வது கூட்டத்தில் இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டியதன் அவசியம் பற்றி இரு தரப்பிலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான வரையறையை உருவாக்க வேண்டிய தேவை இருப்பது குறித்து இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த விஷயத்தில் பிரிக்ஸ் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்துக்கு, விளக்கங்கள் உருவாக்க வேண்டியுள்ளது என்ற விருப்பமும் தெரிவிக்கப்பட்டது.
  16. தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் பயன்பாடில் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் பொதுவான அணுகுமுறை தேவை என்றும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. தகவல்  தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவதில், அரசுகள் அளவிலான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்துடன், இருதரப்பு அமைப்புகளுக்கு இடையில் நடைமுறை ரீதியிலான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
  17. ஆசியாவிலும், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சம அளவிலான, பிரிக்க முடியாத பாதுகாப்பை அளிப்பதற்கு, பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கலாம் என்ற யோசனைக்கு இரு தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, கிழக்காசிய மாநாடுகள் மற்றும் பிற பிராந்தி அமைப்புகளின் வரையறைகளுக்கு உள்பட்டு பல நிலைகளிலான பேச்சுவார்த்தைகளைத் தொடருவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பாரும் வலியுறுத்தினர். பிராந்திய ஒழுக்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து புதிய முயற்சிகளும், பல நிலைகளைக் கொண்டவையாகவும், வெளிப்படைத்தன்மையின் கொள்கைகளைக் கொண்டதாகவும், பங்கேற்புடன் கூடியதாகவும், பரஸ்பர மரியாதை கொண்டதாகவும், வளர்ச்சி மற்றும் வளமை என்பனவற்றில் பொதுவான நோக்கம் கொண்டவையாகவும், எந்த நாட்டுக்கும் எதிரானதாக இல்லாத வகையிலும் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த விஷயத்தைப் பொருத்த வரையில், 2018 ஆகஸ்ட் 24-ல் மாஸ்கோவில் ரஷிய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் இகோர் மோர்குலோவ் மற்றும் இந்தியக் குடியரசின் வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே இடையில் நடைபெற்ற ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
  18. பிரிக்ஸ், ஜி-20, எஸ்சிஓ, ரிக் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகள் போன்ற பல நிலைகளிலான பிராந்திய அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் கலந்துரையாடலை மேம்படுத்துவதில் உறுதியாக செயல்படுவது என்று இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. யூரோ ஆசியன் பொருளாதார யூனியனுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக உள்ளதாக இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  19. 2018 ஜூன் மாதம் க்விங்டாவ் நகரில் நடைபெற்ற எஸ்சிஓ தலைவர்கள் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றது, இந்த அமைப்பின் பணியில் முழு உறுப்பினராக இந்தியாவின் வெற்றிகரமான பங்கேற்பை உறுதி செய்வதாக இருந்தது என்று இரு தரப்பிலும் குறிப்பிடப்பட்டது. எஸ்சிஓ அறிவிப்புகள், நடைமுறைகள் மற்றும் சர்வதேச சட்ட கொள்கைகளை செயல்படுத்துவதற்கு இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் அனைத்து செயல்பாடுகளிலும், அதற்குள்ள வாய்ப்புகளை இன்னும் கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, சட்டவிரோதமாக போதைப் பொருள் கடத்துவதை ஒழிப்பது,  திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை ஒழிப்பது, அதன் மூலம் எஸ்சிஓபிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்புக்குள் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. "அமைதி இயக்கம் – 2018” என்ற பயங்கவாத எதிர்ப்பு ராணுவ ஒத்திகையில் இந்தியா பங்கேற்பதற்கு ரஷியா வரவேற்பு தெரிவித்தது. எஸ்சிஓ–வுக்கு பொருளாதார அமைப்பை உருவாக்கும் நோக்கம் முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. மேற்பார்வையாளர்கள், பங்கேற்பு நாடுகள் மற்றும் ஆர்வம் கொண்ட நாடுகளுடன், போக்குவரத்து வசதி ஏற்படுத்தல், எஸ்சிஓ அமைப்புக்குள் தொடர்புகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டமைப்பு வசதித் திட்டங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். சர்வதேச விவகாரங்களில் எஸ்சிஓ –வின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. மற்றும் அதன் அமைப்புகளுடனும், இதர சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனும் எஸ்சிஓ தனது தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. எஸ்சிஓ வுக்கு உள்பட்டு கலாச்சார மற்றும் மனிதாபிமான உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  20. திறந்த, பங்கேற்புடன் கூடிய, வெளிப்படையான, பாரபட்சமற்ற, விதிகளின் அடிப்படையிலான வழிகளில் பலமுனை வர்த்தக முறைமையை பலப்படுத்துவதில் உறுதியாக இருப்பது என தெரிவிக்கப்பட்டது. சர்வதேச வர்த்தக உறவுகள் சிதைந்து போகாமல் தடுக்கவும், அனைத்து வகைகளிலும் வர்த்த உறவை பாதுகாக்கவும் உறுதியளிக்கப்பட்டது.
  21. ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கான செம்மையான தளத்தை உருவாக்கும் அக்கறையுடன்  தேச வளர்ச்சி அணுகுமுறைகள் மற்றும் பலநிலை ஒருங்கிணைப்புத் திட்டங்களில், பெரிய அளவிலான யூரோ ஆசிய பங்கேற்பு அமைப்பை உருவாக்க ரஷியா முயற்சி மேற்கொண்டிருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது. இது சர்வதேச சட்டங்களைப் பின்பற்றியதாகவும், சமநிலை கோட்பாடுகளைக் கொண்டதாகவும், பரஸ்பர மரியாதை கொண்டதாகவும், பரஸ்பர தேசங்களின் தொலைநோக்கு பார்வையைக் கருத்தில் கொண்டதாகவும் இருக்கும் வகையில் திட்டமிடப்படுகிறது.
  22. இந்தியா – ரஷியா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும்  பரஸ்பர நலன்கள் மற்றும் இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச முக்கியத்துவமான விஷயங்களில் ஒரே மாதிரியான நிலைப்பாடுகள் குறித்தும்  இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவும் ரஷியாவும் பரஸ்பரம் வளமை பெறும் வகையில், சிறப்பு மற்றும் முன்னுரிமையுடன் கூடிய ராணுவ பங்கேற்பு நிலைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைத்தல், உறுதிப்படுத்தல் என்ற செயல்பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

தமக்கு அளிக்கப்பட்ட உபசரிப்புக்காக இந்தியக் குடியரசின் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துக் கொண்டார். 2019ல் நடைபெறும் 20வது ஆண்டு உச்சி மாநாட்டிற்கு ரஷியாவுக்கு வருமாறு திரு. நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

 
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg

Media Coverage

5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister urges the Indian Diaspora to participate in Bharat Ko Janiye Quiz
November 23, 2024

The Prime Minister Shri Narendra Modi today urged the Indian Diaspora and friends from other countries to participate in Bharat Ko Janiye (Know India) Quiz. He remarked that the quiz deepens the connect between India and its diaspora worldwide and was also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

He posted a message on X:

“Strengthening the bond with our diaspora!

Urge Indian community abroad and friends from other countries  to take part in the #BharatKoJaniye Quiz!

bkjquiz.com

This quiz deepens the connect between India and its diaspora worldwide. It’s also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

The winners will get an opportunity to experience the wonders of #IncredibleIndia.”