- நேபாள பிரதமர் மாண்புமிகு கே.பி. ஷர்மா ஒலி, அழைப்பின்பேரில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாளத்தில் 2018 மே 11 மற்றும் 12ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
- 2018-ல் இரண்டாவது இருதரப்பு உச்சிமாநாட்டை குறிக்கும் வகையில் 05.2018அன்று இரு பிரதமர்களும் குழு நிலை பேச்சுக்களை நடத்தினார்கள். மிகவும் அன்பான, சுமூகமான சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்புறவு, புரிந்துணர்வு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த பேச்சுக்கள் நடைபெற்றன.
- 2018 ஏப்ரலில் பிரதமர் திரு. ஒலி, இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, புதுதில்லியில் இரண்டு பிரதமர்களும் நடத்திய கூட்டத்தை நினைவுக்கூர்ந்தனர். இந்த பயணத்தில் உருவாக்கப்பட்ட உறவுகள் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகள் ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான திறம்பட்ட நடவடிக்கைகளை எடுத்து உறவுகள் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க ஒப்புக்கொண்டனர். வேளாண்மை, ரயில் இணைப்புகள், உள்நாட்டு நீர்வழிப்பாதை மேம்பாடு ஆகியவை தொடர்பாக பிரதமர் திரு. ஒலியின் இந்திய பயணத்தின்போது ஏற்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கான இருதரப்பு முயற்சிகள் இந்த துறைகளில் மாற்றத்தை நோக்கமாக கொண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரு பிரதமர்களும் தெரிவித்தனர்.
- இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிலைகளில் நிலவும், நெருங்கிய, பன்முகத் தன்மை கொண்ட உறவுகளை ஆய்வு செய்தபோது, இருதரப்பு உறவுகளை மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்ல உறுதி ஏற்பதாக இரு பிரதமர்களும் தெரிவித்தனர். பல்வேறு துறைகளில் தற்போது உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான கூட்டாண்மையை விரிவுப்படுத்துதல், இவற்றை சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, பரஸ்பர நன்மை கொள்கைகள் அடிப்படையில் மேற்கொள்வது என்றும் இரு பிரதமர்களும் உறுதியளித்தனர்.
- வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான இந்தியா – நேபாளம் கூட்டுக்குழு உள்ளிட்ட இருதரப்பு அமைப்புகளின் கூட்டத்தை முறைப்படி நடத்தவேண்டியதன் அவசியத்தை இரு பிரதமர்களும் வலியுறுத்தினார்கள். பொருளாதார, மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களை விரைந்து அமல்படுத்துவதற்கு இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களை ஆய்வு செய்யவும், அவர்கள் உடன்பட்டனர்.
- இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான வர்த்தக பொருளாதார முக்கியத்துவத்தை இரு பிரதமர்களும் வலியுறுத்தினார்கள். இந்தியாவுடனான நேபாளத்தின் வர்த்தகப் பற்றாக்குறை வளர்ந்து வருவது பற்றி கவலைத் தெரிவித்த பிரதமர் திரு. ஒலி, இந்த குறைப்பாட்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறினார். இந்த வகையில் வர்த்தகம், சரக்குப் போக்குவரத்து, கூட்டுறவு ஆகியவை குறித்து சமீபத்தில் நடைபெற்ற அரசுகளுக்கு இடையிலான கூட்டத்தின் முடிவுகளை வரவேற்பதாக இரு பிரதமர்களும் தெரிவித்தனர். அனுமதியற்ற வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரிவாக ஆய்வு செய்யும் நடவடிக்கையை கூட்டாக மேற்கொள்ளவும், சரக்குப் போக்குவரத்து ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த ஒப்பந்தங்களில் தகுந்த திருத்தங்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கவும், இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் இந்திய சந்தைகளுக்கு நேபாளத்தின் வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும் நேபாளத்தின் வழியாக நடைபெறும் வர்த்தகத்திற்கு வசதி செய்து தரவும் இயலும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- இரு நாட்டுப் பிரதமர்களும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதிலும் மக்களின்போக்குவரத்தை உயர்த்துவதிலும் இணைப்பு வகிக்கும் ஊக்கப் பாத்திரத்தைவலியுறுத்தினர். வானிலும் நிலத்திலும் நீர்வழியிலும் இணைப்பை மேம்படுத்துவதுமற்றும் பொருளாதார விஷயங்களில் உயர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றில்மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். மக்களுக்கிடையேயான உயிர்த் துடிப்புள்ள தொடர்புகளையும் இணக்கமானஉறவுகளையும் அங்கீகரித்த அவர்கள், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில்தொடர்புடைய தொழில்நுட்பக் குழுக்கள் மூலம் நேபாளத்திற்குக் கூடுதல் வான்வழிநுழைவு குறித்த முன்னதான தொழில்நுட்ப விவாதங்கள் உள்ளிட்ட ஒத்துழைப்பைவிரிவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
- ஆற்றுப் பயிற்சிப் பணிகள், வெள்ளப் பெருக்கு மற்றும் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் பரஸ்பர நன்மைக்காக நீர்வளத்தில் ஒத்துழைப்பைமுன்னேற்றுவதன் முக்கியத்துவத்தையும் நடைமுறையில் இருந்துவரும் இருதரப்புத்திட்டங்களின் கட்டத்தை உயர்த்துவது குறித்தும் பிரதமர்கள் இருவரும் வலியுறுத்தினர். வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, நீடித்ததீர்வுக்கான உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கூட்டுக் குழுக்களைஅமைத்திருப்பதற்கும் இருவரும் திருப்தி தெரிவித்தனர்.
- நேபாளத்தில் 900 மெகாவாட் நீர்–மின்சக்தித் திட்டத்திற்கான (அருண்-III) அடிக்கல்லை இருபிரதமர்களும் இணைந்து நாட்டினர். இரு நாடுகளுக்கும் இடையேயான மின்உற்பத்தியிலும் வணிகத்திலும் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கு இந்தத் திட்டத்தின்அமலாக்கம் உதவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 2018 ஏப்ரல் 17 அன்றுநடைபெற்ற மின் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில்மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இரு தரப்பு மின்வணிக ஒப்பந்தத்தின்படி, மின் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை உயர்த்த அவர்கள்ஒப்புக் கொண்டனர்.
- பிரதமர் மோடி ஜனக்பூர் , முக்திநாத் ஆகிய இடங்களுக்கும் சென்றார். காத்மண்டு மற்றும்ஜனக்பூரில் பொதுமக்களின் வரவேற்பை அவர் பெற்றுக்கொண்டார்.
- இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மத உறவுகளையும்கலாச்சாரப் பிணைப்புகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாட்டுப்பிரதமர்களும் நேபாளம் – இந்தியா ராமாயணச் சுற்றுவட்டத்தைத் துவக்கினர். இது சீதைபிறந்த ஜனகபுரியையும் அயோத்தியையும் ராமாயண காவியத்துடன் தொடர்புடைய பிறபகுதிகளையும் இணைக்கிறது. ஜனகபுரிக்கும் அயோத்தியாவுக்கும் இடையிலானபேருந்துச் சேவையை இரு நாட்டுப் பிரதமர்களும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
- அனைத்துப் பகுதிகளிலும் ஒத்துழைப்பை உயர்த்தும் நோக்கத்துடன், 2018 செப்டம்பர்மாதத்திற்குள் நிலுவையிலுள்ள விஷயங்களைக் கவனிக்கும்படி சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்குப் பிரதமர்கள் இருவரும் உத்தரவிட்டனர்.
- அடையாளம் காணப்பட்ட துறைகளில் பொருள் செறிந்த ஒத்துழைப்பை பிம்ஸ்டெக், சார்க், பிபிஐன் ஆகியவற்றின் கீழ் பிராந்திய மற்றும் பிராந்தியத்திற்குட்பட்டஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் பிரதமர்கள் இருவரும் வலியுறுத்தினர்.
- இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக இருந்துவரும் இணக்கமான உறவைநேபாளத்திற்கு மூன்றாவது முறையாக வருகை தந்திருக்கும் பிரதமர் மோடியின் சிறப்புவாய்ந்த பயணம் மேலும் வலுப்படுத்தும் என்று இரு நாட்டுப் பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். நமது வளர்ந்துவரும் நட்புறவில் ஒரு புதிய உத்வேகத்தை இது ஊட்டும் எனஅவர்கள் கூறினர்.
- நேபாளப் பிரதமர் ஒலியின் அன்பான அழைப்புக்கும் உபசரிப்புக்கும் பிரதமர் மோடிநன்றி தெரிவித்தார்.
- இந்தியாவுக்கு வருகை தருமாறு நேபாளப் பிரதமருக்குப் பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார். அதனை ஒலி ஏற்றுக் கொண்டார். தேதிகள் பின்னர் முடிவு செய்யப்படும்.
Published By : Admin |
May 11, 2018 | 21:30 IST
Login or Register to add your comment
Explore More
பிரபலமான பேச்சுகள்
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Nm on the go
Always be the first to hear from the PM. Get the App Now!

We are proud of our Annadatas and committed to improve their lives: PM Modi
February 24, 2025
The Prime Minister Shri Narendra Modi remarked that the Government was proud of India’s Annadatas and was commitment to improve their lives. Responding to a thread post by MyGovIndia on X, he said:
“We are proud of our Annadatas and our commitment to improve their lives is reflected in the efforts highlighted in the thread below. #PMKisan”
India = Farming Superpower! 🌾
— MyGovIndia (@mygovindia) February 24, 2025
From bumper harvests to massive support for farmers, we lead the world in agriculture.
Discover how India is growing bigger and better! ⬇️ #PMKisan#FarmersFirst#EmpoweringFarmers pic.twitter.com/H2Kox3iNMC