இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பகிரப்பட்ட விருப்பங்கள் மற்றும் கனவுகளின் பயணத்தை வரையறுக்கும் ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பகிரப்பட்ட விருப்பங்கள் மற்றும் கனவுகளின் பயணத்தை வரையறுக்கும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. வரலாறு விரிவடையும் நிலையில், இந்த வழித்தடம் மனித முயற்சிக்கும் கண்டங்களைக் கடந்த ஒற்றுமைக்கும் ஒரு சான்றாக இருக்கட்டும்."
Charting a journey of shared aspirations and dreams, the India-Middle East-Europe Economic Corridor promises to be a beacon of cooperation, innovation, and shared progress. As history unfolds, may this corridor be a testament to human endeavour and unity across continents. pic.twitter.com/vYBNo2oa5W
— Narendra Modi (@narendramodi) September 9, 2023