வர்த்தக மற்றும் தளவாடங்களின் கேந்திரமாக மாறும் பாதையில் இந்தியா இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உலக வங்கியின் 2023-ம் ஆண்டுக்கான தளவாட தரவரிசையின் படி மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியத் துறைமுகங்களின் செயல்பாடு மற்றும் உற்பத்தி திறன் முன்னெப்போதும் இல்லாதவகையில் மிகச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“துறைமுகம் தலைமையிலான வளர்ச்சியில் முன்னேறி வரும் இந்தியா வர்த்தகம் மற்றும் தளவாடங்களின் கேந்திரமாக மாறும் பாதையில் உள்ளது.”
Powered by port-led development, India is on way to becoming a hub for commerce and logistics. https://t.co/ex5sLOzwDT
— Narendra Modi (@narendramodi) May 1, 2023