பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை  பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வித்துறை பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறை பொது நலனுக்காக நன்மை பயக்கும் என்பதையும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். பிரான்சின் செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, அதிபர் மக்ரோனை வாழ்த்தினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை பிரான்ஸ் வரவேற்றது.

இது பிரதமர் மோடியின் ஆறாவது பிரான்ஸ் பயணமாகும். ஜனவரி 2024-ல் இந்தியாவின் 75வது குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினராக அதிபர் மக்ரோன் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், அதிபர் மக்ரோனும், வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முழு வரம்பு மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து  விவாதங்களை நடத்தினர். இரு தலைவர்களும் மார்சேய்க்குச் சென்றனர். அங்கு அதிபர் மக்ரோன் பிரதமர் மோடிக்கு ஒரு தனிப்பட்ட இரவு விருந்தை வழங்கினார். இது இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த உறவைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் கூட்டாக மார்சேயில் இந்தியாவின் துணைத் தூதரகத்தைத் தொடங்கி வைத்தனர். சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை அணுஉலையையும் பார்வையிட்டனர்.

2024 ஜனவரியில் அதிபர் மக்ரோனின் இந்திய வருகையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும், ஜூலை 2023-ல் பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது பாஸ்டில் தின கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக வெளியிடப்பட்ட ஹாரிசன் 2047 செயல் திட்டத்திலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை அதிபர் மக்ரோனும் பிரதமர் மோடியும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் பாராட்டினர். மேலும் அதன் மூன்று தூண்களிலும் அதை மேலும் விரைவுபடுத்த உறுதிபூண்டனர்.

சமமான மற்றும் அமைதியான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார களங்கள் உட்பட வளர்ந்து வரும் முன்னேற்றங்களுக்கு உலகைத் தயார்படுத்தவும் சீர்திருத்தப்பட்ட மற்றும் பயனுள்ள பன்முகத்தன்மைக்கான தங்கள் அழைப்பை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவையை இரு தலைவர்களும் வலியுறுத்தினர், மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விஷயங்கள் உட்பட பலதரப்பு மன்றங்களில் நெருக்கமாக ஒருங்கிணைக்க ஒப்புக்கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பிரான்ஸ் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது. வீட்டோவைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது குறித்த உரையாடல்களை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். நீண்டகால உலகளாவிய சவால்கள் மற்றும் தற்போதைய சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விரிவான விவாதங்களையும் அவர்கள் நடத்தினர். பலதரப்பு முயற்சிகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தங்கள் உலகளாவிய மற்றும் பிராந்திய ஈடுபாட்டை தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

அறிவியல் அறிவு, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, அந்தத் துறைகளில் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நீடித்த ஈடுபாட்டை நினைவுகூர்ந்தனர். அதிபர் மக்ரோனும் பிரதமர் மோடியும் மார்ச் 2026-ல் புதுதில்லியில் அதன் இலச்சினை வெளியிட்டு இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டை பிரமாண்டமாகத் தொடங்கி வைக்கவுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கான கூட்டாண்மை

இருதரப்பு கூட்டாண்மையின் ஒரு பகுதியாக பிரான்சுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த அதிபர் மக்ரோனும் பிரதமர் மோடியும், 2024-ல் ஒப்புக் கொள்ளப்பட்ட லட்சிய பாதுகாப்பு தொழில்துறை திட்டத்திற்கு ஏற்ப வான் மற்றும் கடல்சார் சொத்துக்களின் ஒத்துழைப்பு தொடர்வதை வரவேற்றனர். இந்தியாவில் ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிப்பதில்  முன்னேற்றம் ஏற்பட்டதை இரு தலைவர்களும் பாராட்டினர். இதில் உள்நாட்டுமயமாக்கல், குறிப்பாக டிஆர்டிஓ உருவாக்கிய ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷனை (ஏஐபி) ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட பணிகள் மற்றும் எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒருங்கிணைந்த போர் அமைப்பை உருவாக்குவது குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகள் ஆகியவை  அடங்கும். ஸ்கார்பியன்-வகைப்பாடு திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீர் ஜனவரி 15, 2025 அன்று செயல்பாட்டுக்கு வந்ததை இரு தலைவர்களும் வரவேற்றனர். ஏவுகணைகள், ஹெலிகாப்டர் என்ஜின்கள் மற்றும் ஜெட் என்ஜின்கள் தொடர்பாக நடந்து வரும் விவாதங்களை இரு தரப்பினரும் வரவேற்றனர். சஃப்ரான் குழுவில் உள்ள தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அவற்றின் இந்திய சகாக்களுக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பையும் அவர்கள் வரவேற்றனர். பினாகா எம்பிஎல்ஆர்-ஐ உன்னிப்பாகக் கவனிக்க பிரெஞ்சு ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அமைப்பை பிரான்ஸ் ஏற்று பயன்படுத்துவது இந்திய-பிரெஞ்சு பாதுகாப்பு உறவுகளில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார். கூடுதலாக, ஓசிசிஏஆர்- ஆல் நிர்வகிக்கப்படும் யூரோட்ரோன் எம்ஏஎல்இ திட்டத்தில் இந்தியாவை ஒரு பார்வையாளராக சேர்க்கும் முடிவை அதிபர் மக்ரோன் வரவேற்றார், இது நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் வலிமையில் மற்றொரு படியாகும்.

பாதுகாப்பு உபகரணத் திட்டங்களில் ஐபி.

கடல்சார் பயிற்சிகள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்களின் கூட்டு ரோந்து உட்பட அனைத்துத் துறைகளிலும் வழக்கமான ராணுவப் பயிற்சிகளை இரு தலைவர்களும் பாராட்டினர். ஜனவரி 2025-ல் பிரெஞ்சு கேரியர் ஸ்ட்ரைக் குழு சார்லஸ் டி கோல் சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்ததையும், அதைத் தொடர்ந்து பிரெஞ்சு பன்னாட்டுப் பயிற்சியான லா பெரூஸில் இந்திய கடற்படை பங்கேற்றதையும், மார்ச் 2025-ல் நடக்கவுள்ள வருணா பயிற்சியின் எதிர்கால நடத்தையையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆரிசான் 2047 மற்றும் இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு தொழில்துறை செயல் திட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, டிஜிஏ மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட ஃபிரின்ட்- எக்ஸ் (பிரான்ஸ்-இந்தியா பாதுகாப்பு ஸ்டார்ட்அப் எக்ஸலன்ஸ்) டிசம்பர் 5-6, 2024 அன்று பாரிஸில் தொடங்கப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். இந்த கூட்டுத் தளம் பாதுகாப்பு தொடக்க நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் பாதுகாப்பகங்கள், மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட இரு பாதுகாப்பு சூழல் அமைப்புகளிலும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் கூட்டாண்மையின் புதிய சகாப்தத்தை வளர்க்கிறது.

பாதுகாப்புத்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவ்விரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.  ஆயுதத் தளவாடங்களுக்கான இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பிற்கும் இடையே, நவீன தொழில்நுட்பங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் இதில் வலியுறுத்தப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான தொழில்நுட்பங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான துறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மையம் அண்மையில் தொடங்கி வைத்த புலனாய்வு தொடர்பான சவால்கள் குறித்து இருநாட்டு மாணவர்களும் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும் இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பாதுகாப்புத்துறையில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைன் போர், உட்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள்  குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.   இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பரம், ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகள் குறித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், விவாதிப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு நாடுகள் – ஐரோப்பா வழித்தடம் அமைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த வழித்தடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மேற்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த வழித்தடத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தூய்மை எரிசக்திக்கான அணுகுமுறை, நீடித்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் சரக்கு போக்குவரத்து வசதிகள், ஆகிய அம்சங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். மத்தியதரைக்கடலில் அமைந்துள்ள மார்ஷெலி பகுதியில் உத்திசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளனர்.

இந்திய – ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்திய -  ஐரோப்பிய உச்சிமாநாட்டை விரைவில் புதுதில்லியில் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கான முத்தரப்பு கொள்கைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  பிரான்சில் இரு நாட்டு ராணுவமும் இணைந்து மேற்கொண்ட ராணுவப் பயிற்சி ஒத்திகை குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றது.  இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிடையே கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.  பருவநிலை மாற்றத்திற்கான அலையாத்திக் கூட்டமைப்பில் பிரான்ஸ் இணைந்துள்ளது. இதற்கென ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றுவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.    பொருளாதாரம், கண்டுபிடிப்புகள், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, கலாச்சாரம், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்தரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியான, சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான, அனைத்தையும் உள்ளடக்கிய பொது தீர்மானத்தின் அடிப்படையில் செயலாக்குவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். 

விண்வெளித்துறையில், இந்தியா – பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதென இருதலைவர்களும் வலியுறுத்தினர். இந்தியா – பிரான்ஸ் உத்திசார் விண்வெளி பேச்சு வார்த்தையின் முதல் இரண்டு அமர்வுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டில் 3-வது அமர்விலும் இது தொடர்பான அம்சங்களை விவாதிப்பதென முடிவு செய்யப்பட்டது. பிரான்சின் விண்வெளி ஆய்வுக்கான தேசிய மையமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து விண்வெளித்துறையில் உத்திசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் கடத்தல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்துக்கும் இவ்விரு தலைவர்களும் ஒன்றிணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வது, தீவரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது ஆகியவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தீவிரவாத செயல்களுக்கான நிதியுதவியை தடுத்து நிறுத்துவது, தீவிரவாத செயல்களை முறியடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் எந்தவொரு நாடும் பாதுகாப்பான நாடாக இருக்க முடியாது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஐ.நா பாதுகாப்பு சபையின் தடை உத்தரவு பிறப்பிக்கும் குழுவால் பட்டியலிடப்பட்ட 1,267 தனிநபர்கள்,  குழுக்கள் உட்பட தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை  அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். நிதி நடவடிக்கைகளுக்கான பணிக்குழுவின் பரிந்துரைகளின் பேரில், நிதிசார் தீவிரவாத செயல்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தடுத்து நிறுவத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவ்விரு தலைவர்களும் வலியுறுத்தினர்.  தீவிரவாத செயல்களுக்கான பணப்பரிமாற்றம் மற்றும் பிற இனங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுப்பதில் நிதிசார் பணிக்குழுவுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா – பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தேசிய பாதுகாப்புப் படைகளுக்கிடையே தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் நிலையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டது. இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையே தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், புலனாய்வு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக 2024-ம்ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட தீர்மானங்களை இருதலைவர்களும் வரவேற்றுள்ளனர்.  புதுதில்லியில் 2025-ம் ஆண்டு மலிப்பால்  அமைப்பு  சார்பாக நடத்தப்படும் மாநாட்டை எதிர்நோக்கியிருப்பதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் விரிவான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள்  முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான , வெளிப்பைடையான சுதந்திரமான, பரஸ்பரம் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் வரைபடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் இணைந்து தொடங்கி வைத்தனர்.  இந்தியா – பிரான்ஸ் நாடுகளில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள மின்னணு பணப்பரிவர்த்தனைக்கான ஒருங்கிணைந்த கட்டண நடைமுறையை பிரான்ஸ் நாட்டிலும் பயன்பாட்டுக்குக் கொண்டு சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதை இருதலைவர்களும் வரவேற்றுள்ளனர். இணையவழி செயல்பாடுகளில் சர்வதேச சட்டத்திற்குட்பட்ட கட்டமைப்புகளை செயல்படுத்துவதில் ஐநா அவையுடன் இணைந்து அதனை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.  அதிகரித்து வரும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்  குறித்தும் சட்டவிரோத செயல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை  இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இணையப் பாதுகாப்புத் தொடர்பான இந்தியா – பிரான்ஸ் உத்திசார் பேச்சுவார்த்தைகள்  2025-ம் ஆண்டில் நடத்தப்பட உள்ளதை எதிர்நோக்கியுள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

குறைவான  கார்பன் வெளியேற்றத்திற்கான  பொருளாதார மாற்றங்கள், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது, ஆகியவற்றில் அணுசக்தி முக்கிய அங்கமாக கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அணுசக்தி பயன்பாட்டை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மற்றும்  இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையேயான  சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதென இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.  குறிப்பாக ஜெயிதாப்பூர், அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான திட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. சிவில் அணுசக்திக்கான சிறப்புப் பணிக்குழு முதலாவது கூட்டத்தை வரவேற்றுள்ள தலைவர்கள், சிறு அளவிலான நவீன அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் வரவேற்றுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளிடையே சிவில் அணுசக்தி தொர்பான அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு தொழில்சார் நடைமுறைகள் குறித்த பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பருவநிலை மாற்றம், நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்கான தங்கள் நாடுகளின் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். சுற்றுச்சூழல் அமைச்சகங்களுக்கு இடையே சுற்றுச்சூழல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் புதுப்பித்தலை தலைவர்கள் வரவேற்றனர். வறுமை ஒழிப்பு, பூமியைப் பாதுகாப்பதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளை ஆதரிப்பதற்காக சர்வதேச நிதிய அமைப்பை சீர்திருத்துவதற்காக, மக்கள் மற்றும் பூமிக்கான பாரிஸ் ஒப்பந்தத்தால் நிறுவப்பட்ட கொள்கைகளுக்கு இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச அளவில் கடல்களைப் பாதுகாப்பதற்கும் நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். 2025, ஜூன் மாதத்தில் நைஸில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டின் பின்னணியில், உள்ளடக்கிய மற்றும் முழுமையான சர்வதேச கடல் நிர்வாகத்தின் தூண்களில் ஒன்றாக, கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை பிரான்சும் இந்தியாவும் அங்கீகரிக்கின்றன. ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள அவர்கள், அதை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். 2025 ஜூன்  மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டிற்க்கு பிரான்சுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மூன்றாம் நாடுகளின் பருவநிலை மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு சார்ந்த திட்டங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியா-பிரான்ஸ் இந்தோ-பசிபிக் முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பைத் தொடங்குவதை அவர்கள் பாராட்டினர். அனைவருக்கும் நிதிசார் சேவைகள் கிடைத்தல் மற்றும் மகளிருக்கு  அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் 13 மில்லியன் யூரோ நிதி பங்கு ஒப்பந்தம் புரோபார்கோவிற்கும், சம்பந்தப்பட்ட இந்திய நுண்நிதி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கூட்டாண்மையை இரு தலைவர்களும் வரவேற்கின்றனர். பேரிடர் மீள் கட்டமைப்பு கூட்டமைப்பு, சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பிராங்கோ இந்தியத் தலைமையின் கட்டமைப்பிற்குள் வலுவான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பையும் அவர்கள் பாராட்டினர்.

2024-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தின் சாதனை குறித்து குறிப்பிட்ட அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான பரந்த அளவிலான பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர். பிரான்சிலும் இந்தியாவிலும் முதலீடு செய்யும் நிறுவனங்கள் வலுவான நம்பிக்கையை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர். நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் 2024-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஏராளமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை அவர்கள் பாராட்டினர். 2024 மே மாதத்தில் வெர்சாய்லெஸில் நடைபெற்ற 7-வது பிரான்சை தேர்வு செய் என்ற  உச்சிமாநாட்டில் இந்தியா கௌரவ விருந்தினராகப் பங்கேற்றதை அவர்கள் நினைவு கூர்ந்தனர். 2024 நவம்பர், மற்றும் 2025 பிப்ரவரி மாதத்தில் இருதரப்பு தலைமை செயல் அதிகாரிகள் மன்றத்தின் ஏற்பாட்டிற்காக இரு தலைவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் பாரிஸில் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் இயக்கத்துடன், இரு சுகாதார அமைச்சகங்களுக்கிடையில் ஒத்துழைப்புக்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொடங்கப்பட்ட உத்வேகம் குறித்து இரு தலைவர்களும் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். 2025-ம் ஆண்டில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கிய முன்னுரிமைகளாக மின்னணு சுகாதாரம், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் சுகாதார நிபுணர்களின் பரிமாற்றம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தோ-பிரெஞ்சு வாழ்க்கை அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்குவதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.

மக்களுக்கான கூட்டாண்மை

பிரதமர் திரு மோடி 2023 ஜூலை மாதத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்தபோது கையெழுத்திடப்பட்ட விருப்பக் கடிதத்தின் அடிப்படையிலான இலக்கை நினைவு கூர்ந்த அதிபர் திரு மெக்ரோனும் பிரதமர் திரு மோடியும், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கும் பிரான்ஸ் அருங்காட்சியக மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையே 2024 டிசம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்றனர். இந்த ஒப்பந்தம்  இந்திய நிபுணர்களின் பயிற்சி உட்பட பரந்த அருங்காட்சியக ஒத்துழைப்புக்கும் வழி வகுக்கிறது. தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மேம்பாட்டில் அதன் பங்கேற்பு குறித்து ஆலோசனைகளைத் தொடர பிரான்ஸ் முன்வந்தது.

1966-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே முதலாவது கலாச்சார ஒப்பந்தம் கையெழுத்தானதன் 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட, 2026- புதுமை கண்டுபிடிப்புகள் ஆண்டை முன்னிட்டு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்முயற்சியான பல கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் திட்டங்களை மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் திரு மெக்ரோனுக்கு பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த இந்தியா முயற்சித்த நிலையில், முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பாதுகாப்பது அளிப்பது தொடர்பான பிரான்சின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள அதிபர் திரு மெக்ரோன் விருப்பம் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

மத்திய தரைக்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களுக்கு இடையே வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், அரசுகளின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து விவகாரங்கள் தொடர்பான நிபுணர்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களை உள்ளடக்கிய உயர்மட்ட பேச்சுகளில் ஈடுபடுவதற்காக, 2025-ம் ஆண்டில் மார்சேயில் மத்தியதரைக் கடல் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட ரைசினா உரையாடலை பிராந்திய  அளவில் தொடங்குவதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

இந்திய மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியை ஒரு வெளிநாட்டு மொழியாக கற்பிப்பதன் அடிப்படையில், சர்வதேச வகுப்புகள் திட்டம் 2024 செப்டம்பரில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

பிரான்சில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு கல்வியாண்டில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்திட்டத்தில் சேருவதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுவதை வரவேற்றனர்.  இது 2030-ம் ஆண்டுக்குள் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்களை சேர்க்கும் இலக்கை அடைவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும். இது சம்பந்தமாக, பிரான்சில் அதிகரித்து வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அவர்கள் வரவேற்றனர், 2025-ம் ஆண்டில்  மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவாக 10,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-பிரான்ஸ் இடம்பெயர்தல் மற்றும் போக்குவரத்து கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் இளம் தொழில் நிபுணர்கள் திட்டத்தை செயல்படுத்துவதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இது இளைஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் இருவழிப் பயணத்தை எளிதாக்கும். இந்தியா மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும். மேலும், திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்வது குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இது இரு நாடுகளுக்கும் இந்தத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கும்.

இருதரப்பு இணையதளப் பாதுகாப்பு, மின்னணு தொழில்நுட்பம் 2047 திட்டமிடலுக்கான இலக்குகளைப் பின்பற்றி, இரு நாடுகளும் தங்கள் துடிப்பான மற்றும் விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையை வளர்ப்பதற்காக, தொடர்ந்து தங்கள் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
GST 2.0 reforms boost India's economy amid global trade woes: Report

Media Coverage

GST 2.0 reforms boost India's economy amid global trade woes: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates space scientists and engineers for successful launch of LVM3-M6 and BlueBird Block-2
December 24, 2025

The Prime Minister, Shri Narendra Modi has congratulated space scientists and engineers for successful launch of LVM3-M6, the heaviest satellite ever launched from Indian soil, and the spacecraft of USA, BlueBird Block-2, into its intended orbit. Shri Modi stated that this marks a proud milestone in India’s space journey and is reflective of efforts towards an Aatmanirbhar Bharat.

"With LVM3 demonstrating reliable heavy-lift performance, we are strengthening the foundations for future missions such as Gaganyaan, expanding commercial launch services and deepening global partnerships" Shri Modi said.

The Prime Minister posted on X:

"A significant stride in India’s space sector…

The successful LVM3-M6 launch, placing the heaviest satellite ever launched from Indian soil, the spacecraft of USA, BlueBird Block-2, into its intended orbit, marks a proud milestone in India’s space journey.

It strengthens India’s heavy-lift launch capability and reinforces our growing role in the global commercial launch market.

This is also reflective of our efforts towards an Aatmanirbhar Bharat. Congratulations to our hardworking space scientists and engineers.

India continues to soar higher in the world of space!"

@isro

"Powered by India’s youth, our space programme is getting more advanced and impactful.

With LVM3 demonstrating reliable heavy-lift performance, we are strengthening the foundations for future missions such as Gaganyaan, expanding commercial launch services and deepening global partnerships.

This increased capability and boost to self-reliance are wonderful for the coming generations."

@isro