இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியும், சீன குடியரசு அதிபர் மேதகு திரு. ஜீ ஜின்பிங் -உம் சீனாவில் உஹான் நகரில் 2018 ஏப்ரல் 27-28 தேதிகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதன்முறையாக சந்தித்துப் பேசினர். இருதரப்பு மற்றும் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால சர்வதேச சூழ்நிலைகளில் தேசத்தின் வளர்ச்சிக்கான தங்களுடைய தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும் இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தியாவும் சீனாவும் ஒரே சமயத்தில் இரு பெரும் பொருளாதார நாடுகளாக வளர்வதும், ராணுவத் திறன் மற்றும் முடிவெடுக்கும் தன்னாட்சி கொண்ட முக்கியமான சக்திகளாக உருவெடுப்பதும், பிராந்திய மற்றும் உலக அளவில் முக்கியத்துவமான விளைவுகளை ஏற்படுத்தும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதியான, ஸ்திரமான மற்றும் சமன்பாடான உறவுகள் இருப்பது உலகளாவிய அளவில் நிச்சயமற்றதாக உள்ள தற்போதைய நிலையில் ஆக்கப்பூர்வமான விஷயங்களாக இருக்கும் என்ற கருத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இருதரப்பு உறவுகளை முறையாகப் பராமரிப்பது இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்ததாக இருக்கும் என்றும், ஆசிய நூற்றாண்டுக்கான சூழ்நிலைகளை உருவாக்கும் என்றும் அவர்கள் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். இந்த வகையில், தேசிய அளவில் நவீனமாக்கல் மற்றும் மக்களின் அதிகமான வளமையை கருதி, நெருங்கிய வளர்ச்சி பங்களிப்பை பரஸ்பரம் பயனுள்ளதாகவும், நீடித்ததாகவும் இருக்கும் வகையில் பலப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.
தளத்தகை மற்றும் நீண்டகால நோக்கில் இந்தியா – சீனா உறவுகளின் வளர்ச்சிகள் குறித்து பிரதமர் மோடியும், அதிபர் ஜீ -யும் ஆய்வு செய்தனர். எதிர்கால உறவுக்கான விரிவான தளத்தை உருவாக்குவதற்காக, நிர்மாணிக்கப்பட்ட நடைமுறைகள் மூலமாக ஒருமித்த கருத்துகளை உருவாக்கும் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். கருத்து வேறுபாடுகளை , ஒட்டுமொத்த உறவுகளுக்கு உள்பட்ட அமைதிப் பேச்சுகள் மூலமாக, பரஸ்பர உணர்வுபூர்வமான விஷயங்கள், கவலைகள் மற்றும் உயர்லட்சியங்களுக்கு மதிப்பளிக்கும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கையாளும் திறனும், பக்குவமும் இருதரப்புக்கும் உள்ளது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா – சீனா எல்லைப்பகுதி குறித்த கேள்வி பற்றி சிறப்பு பிரதிநிதிகளின் பணிகளுக்கு இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். நியாயமான, ஏற்கத்தக்க மற்றும் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வை உருவாக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினர். இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பரந்த நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா – சீனா எல்லையில் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி மற்றும் சுமுக நிலையை பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர். இந்த வகையில், நம்பகத்தன்மை மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்காக தகவல் பரிமாற்றத்தை பலப்படுத்துமாறு தங்களுடைய ராணுவங்களுக்கு அவர்கள் வழிகாட்டும் அறிவுறுத்தல்களை வழங்கினர். எல்லைப்பகுதி விவகாரங்களை கையாள்வதில் ஊகித்தல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் அவர்கள் அறிவுறுத்தினர். பரஸ்பர மற்றும் சமன்பாடான பாதுகாப்பு என்ற கொள்கைக்கு உள்பட்டு இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வகையில், நம்பிக்கைகளை அதிகரிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஊக்கத்துடன் செயல்படுத்துமாறும் தங்களுடைய ராணுவங்களுக்கு இரு தலைவர்களும் அறிவுறுத்தினர். எல்லைப் பகுதியில் சம்பவங்களைத் தடுப்பதற்கு, தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் தகவல் பகிர்தலை பலப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை சமன்பாடான மற்றும் நீடித்து நிற்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரண்டு பொருளாதாரங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை சாதமாகப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்ல அவர்கள் ஒப்புக்கொண்டனர். கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையில் நேரடி தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தனர். இதற்காக புதிய நடைமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களை ஆராய்வது என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவும் சீனாவும் இரண்டு பெரிய நாடுகள் என்ற வகையில் பிராந்திய மற்றும் உலகளாவிய நலன்களில் பரந்த மற்றும் சார்புடைய அம்சங்களைக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடியும், அதிபர் ஜீ -யும் கோடிட்டுக் காட்டினர். பொதுவான நலன்கள் குறித்த அனைத்து அம்சங்களிலும் அதிக அளவில் கலந்தாலோசனை செய்வதன் மூலம் ராணுவத் தொடர்புகளைப் பலப்படுத்துவதன் அவசியம் குறித்து அவர்கள் ஒப்புக் கொண்டனர்.பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில், இது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தங்களுடைய வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு மூலமாக உலகளாவிய அளவில் அமைதி மற்றும் வளமைக்கு இந்தியாவும் சீனாவும் தனிப்பட்ட முறையில் பெரிய பங்களிப்புகள் செய்து வருவதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். எதிர்காலத்தில் உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தொடர்ந்து செயல்படவும் ஒப்புக்கொண்டனர். உலகின் அனைத்துப் பிராந்தியங்களிலும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலையை நீக்குவதற்கு பங்களிப்பு செய்து, எல்லா நாடுகளும் தங்களுடைய வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடச் செய்யும் வகையில், திறந்த, பன்முகத்தன்மையான, பங்கேற்புள்ள உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகளை கட்டமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு தங்களின் முயற்சிகளை மேம்படுத்துவது பற்றி அவர்கள் பேசினர்.
உலகளாவிய அளவில் வளமை மற்றும் பாதுகாப்பு நிலையை எட்டுவதற்கான தங்களின் வெளிநாட்டுக் கொள்கை லட்சியங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டனர். பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு உள்பட உலகளாவிய சவால்களுக்கு நீடித்து நிற்கக் கூடிய தீர்வுகளை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமான முறையில் கூட்டு பங்களிப்பு செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டனர். வளரும் நாடுகளின் தேவைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் பல நிலைகளில் நிதி மற்றும் அரசியல் அமைப்புகளை சீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவும் சீனாவும் இரண்டு பெரிய நாடுகள் மற்றும் வளரும் பொருளாதார நாடுகள் என்ற வகையில், பெரிய வளர்ச்சிகளில் அனுபவங்கள் மற்றும் திறன்களைக் கொண்டவையாக இருப்பதால், 21வது நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதிய சிந்தனைகளுடன் கூடிய, நீடித்த பயன்தரக் கூடிய தீர்வுகளை அளிப்பதற்கு, இரு நாடுகளும் கை கோர்க்க வேண்டும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். நோய்களைத் தடுப்பது, பேரழிவு ஆபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதிப்புகளைக் குறைத்தலுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், பருவநிலை மாற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், டிஜிட்டல்மயமாக்கலால் அதிகாரம் கிடைக்கச் செய்யும் சூழ்நிலைகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தத் துறைகளில் தங்களுடைய நிபுணத்துவத்தையும், ஆதாரவளங்களையும் ஒன்றுசேர்த்து, மனிதகுலத்தின் நன்மை என்ற விஷயத்துக்காக இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு உலகளாவிய அமைப்பை உருவாக்கவும் ஒப்புக்கொண்டனர்.
பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பொதுவான அச்சுறுத்தல்கள் பற்றி பிரதமர் மோடியும், அதிபர் ஜீ -யும் பேசினர். அதற்கு கடும் கண்டனத்தை அவர்கள் பதிவு செய்தனர். எந்த வகையான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது என்பதில் அவர்கள் உறுதி தெரிவித்தனர். பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பது என அவர்கள் உறுதி தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் நேரடியான, தாராளமான, வெளிப்படையான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் மதிப்பீடு செய்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பயன்தரக் கூடிய, பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர். பரந்த நோக்கம் கொண்ட, முன்னுரிமைகள் கொண்ட, தொலைநோக்கு சிந்தனை கொண்ட ராணுவத் தொடர்புகளின் நிலையை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் தங்களுடைய கொள்கைகளின் வாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்திருந்தது. இருதரப்பு வளர்ச்சிக்கான உயர் லட்சியங்களை பரஸ்பரம் மதிக்கும் வகையிலும், கருத்து வேறுபாடுகளை பரஸ்பர முக்கியத்துவத்துடன் ஜாக்கிரதையாக கையாளும் வகையிலும் எதிர்கால இந்தியா – சீன உறவுகளை அமைய வேண்டும் என பொதுவான புரிதலை உருவாக்குவதற்கு உதவும் வகையிலும் இது அமைந்திருந்தது.