“ஒருவருடைய பாஸ்போர்ட்டின் நிறம் மாறியிருக்கலாம், ஆனால், மனிதநேயம் என்ற பிணைப்பைவிட வேறு எதுவும் வலிமையானதாக இருக்காது,”- இது பிரதமர் திரு.நரேந்திர மோடி அடுத்தடுத்து கூறும் வாக்கியம். இதனை எந்த மாதிரியான பேரிடர் ஏற்பட்டாலும், உடனடியாக செயல்படுத்துபவர் அவர்.
ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மக்கள், போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டது. இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டன. மீட்புப்பணியில் இந்தியாவின் உதவியை பல்வேறு நாடுகளும் கோரின. மீட்புப்பணிகளை இந்தியா மேற்கொண்ட விதம் மற்றும் வேகம் ஆகியவை இதுவரை இல்லாதது. மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவின் வேகமான மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகள், உயர்மட்ட அளவில் கண்காணிக்கப்பட்டன. நிலைமையை வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், தொடர்ந்து கண்காணித்து வந்தார். ஏமன் மற்றும் ஜிபோட்டிக்கு நேரில் சென்ற வெளியுறவு இணை அமைச்சர் திரு.வி.கே. சிங், மீட்புப்பணிகளை தானே மேற்கொண்டார்.
நேபாளத்தில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நேபாள சகோதர, சகோதரிகளின் வலியை பகிர்ந்துகொள்ள தங்களால் முடிந்த அனைத்துப் பணிகளையும் இந்தியா மேற்கொண்டது. நிலநடுக்கப் பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர இந்திய ராணுவப் படையினர், பேரிடர் மேலாண்மைக் குழுவினர், உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் அங்கு முகாமிட்டனர். நிலைமையை கண்காணிக்க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியே நடத்தினார். அதேநேரத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டினரையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா செய்தது.
இந்த முயற்சிகள், உலக அரங்கில் வரவேற்கப்பட்டன. உலகத் தலைவர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்தபோது, பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பிரதமர் ஹார்பர் ஆகியோர், இந்தியாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் திரு.நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, இந்தியாவின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பங்களிப்பை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு.ரிச்சர்டு வர்மா-வும் வரவேற்றார்.
ஆப்கானிஸ்தானில் பிடித்துவைக்கப்பட்டிருந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், 8 மாதகால பிடியிலிருந்து பிப்ரவரி 2015-ல் தாயகம் திரும்பினார். தொண்டு நிறுவனப் பணியாளரான பாதிரியார், தனது பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், மனிதநேயமற்ற சக்திகள், வேறு திட்டங்களை நிறைவேற்றினர். பாதிரியாரை கடத்திச் சென்றனர். பாதிரியார் விடுவிக்கப்படுவாரா என்பதில் சில மாதங்கள் குழப்பம் நீடித்தது. இறுதியாக, இந்திய அரசு வெற்றிபெற்று, பாதிரியாரை தாயகம் அழைத்துவந்து, குடும்பத்தினருடன் சேர்த்துவைத்தது. அவரது குடும்பத்தினர் மிகுந்த உற்சாகமடைந்தனர். அவரை விடுவிக்கச் செய்ததற்காக மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதேபோல, மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு பகுதிகளில் தவித்துவந்த இந்திய செவிலியர்களை அரசு மீட்டு வந்தது. வேறு யாருமல்ல, கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டியே, ஈராக்கிலிருந்து செவிலியர்களை திரும்ப அழைத்துவருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு, சிக்கல்கள் வரும்போதெல்லாம், மனிதநேயம் தான் முக்கியம், ஒருவருடையே பாஸ்போர்ட்டின் நிறம் முக்கியமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும், மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.