திரு. நரேந்திர மோடியின் பயணம், வடக்கு குஜராத்தின் மேஷானா மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் சாதாரண நகரமான வாத்நகரில் உள்ள குறுகலான தெருக்களில் துவங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்த மூன்றாடுகளுக்கு பின்பு, இந்தியா குடியரசான சில மாதங்களுக்குள்ளாக 1950, செப்டம்பர் 17 அன்று பிறந்த திரு.நரேந்திர மோடி, திரு. தாமோதர்தாஸ் மோடி மற்றும் திருமதி. ஹிராபா மோடி ஆகியோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தார்.  வாத்நகர் நகரம் வரலாற்றில் இடம்பெற்ற ஒன்றாகும். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சிகள், இந்த நகர் கற்றல் மற்றும் ஆன்மிகத்திற்கு பெயர்பெற்று விளங்கியதாக தெரிவிக்கின்றன. சீனப் பயணி ஹியுவான் சுவாங் வாத்நகருக்கு வருகை புரிந்துள்ளார். பலநூற்றாண்டுகளுக்கு முன்பாக, 10,000-க்கும் அதிகமான புத்த பிட்சுகள் இந்நகரில் வாழ்ந்துள்ள மிகப் பெரிய புத்த மத வரலாற்றை வாத்நகர் கொண்டுள்ளது.

vad1

வட்நகர் ரெயில் நிலையம். இங்கு திரு. நரேந்திர மோடியின் தந்தைக்கு சொந்தமான தேநீர் கடை இருந்தது. திரு. நரேந்திர மோடியும் இங்கு தேநீர் விற்றுள்ளார்

திரு.நரேந்திர மோடியின் ஆரம்பகால வருடங்கள் புனைக் கதைகளில் வருவதை விட அப்பாற்பட்டது.  சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவை சேர்ந்த அக்குடும்பம் தனது அன்றாடத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக போராட வேண்டியிருந்தது. மொத்த குடும்பமும் ஒற்றை தளம் கொண்ட சிறிய வீட்டில் வசித்தது (ஏறக்குறைய 40 அடிக்கு 12 அடி). அவரது தந்தை உள்ளூர் ரயில் நிலையத்தில் அமைத்திருந்த தேனீர் கடையில் தேனீர் விற்று வந்தார். அவரது சிறிய வயதில், திரு.நரேந்திர மோடியும் தனது தந்தையாரின் தேனீர் கடையில் உதவி புரிந்து வந்தார்.

இத்தகைய வளரும் பருவம், திரு.நரேந்திர மோடியிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. குழந்தையாக இருந்தபோது, திரு.நரேந்திர மோடி தனது பாடங்கள், கல்வி சாராத வாழ்க்கை, மற்றும் குடும்பத்தின் தேனீர் கடையில் பங்களிப்பு ஆகியவற்றை திறம்பட சமமாக கையாண்டு வந்தார். அவரது பள்ளித் தோழர்கள் திரு.நரேந்திராவை போட்டிகள் மற்றும் படிப்பதில் ஆர்வம் கொண்ட மாணவராக இருந்ததை நினைவு கூர்ந்தனர். அவர் படிப்பதற்காக பள்ளி நூலகத்தில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்து வந்தார். விளையாட்டில், நீச்சலின் மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தது. திரு.நரேந்திர மோடி அனைத்து சமூகங்களிலிருந்து பல்வேறு நண்பர்களை பெற்றிருந்தார்.  குழந்தையாக இருந்தபோது  அவர் இந்து பண்டிகைகள் மற்றும் தமது அண்டை வீடுகளில் இஸ்லாமிய நண்பர்கள் அதிகமாக இருந்ததால் இஸ்லாமிய பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்தார்.

Humble Beginnings: The Early Years
சிறுவனாக இருந்த போது திரு. நரேந்திர மோடி இராணுவத்தில் சேர்ந்து சேவைபுரிய கனவு கண்டார். ஆனால் விதியிடம் வேறு திட்டம் இருந்தது…

இருப்பினும் அவரது சிந்தனைகள் மற்றும் கனவுகள், வகுப்பறையில் துவங்கி, அலுவலகத்தில் முடிவடையும் பாரம்பரிய வாழ்வை தாண்டி இருந்தது. அவர் அதனை நோக்கி செல்ல விரும்பியதோடு, சமூகத்தில் மாறுபாடாக இருந்தது. மக்களின் கண்ணீரையும், துயரத்தையும் துடைக்க வேண்டும். இள வயதில், அவர் துறவு மற்றும் சந்நியாசத்தின் மீது ஈர்ப்பு கொண்டார். அவர் உப்பு, மிளகாய், எண்ணெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை உண்பதை தவிர்த்தார். சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள் மீதான முழுமையான வாசிப்பு, திரு.நரேந்திர மோடியை ஆன்மிக பயணத்திற்கு அழைத்து சென்றதோடு, ஜகத் குரு பாரத் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நிறைவேற்றும் அவரது குறிக்கோளுக்கு அடித்தளம் அமைத்தது.

திரு.நரேந்திர மோடியின் குழந்தைப்பருவம் மற்றும் அவருடைய வாழ்நாள் முழுவதும் இருக்கும் குணாதியசத்தை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், அது சேவை ஆகும். தபி ஆற்றில் வெள்ளக் கரைபுரண்டு ஓடியபோது, 9 வயதான அவரும், அவரது நண்பர்களும் உணவுக் கூடத்தை துவங்கி, அதன் வருமானத்தை நிவாரணப் பணிகளுக்கு அளித்தனர். பாகிஸ்தானுடன் போர் உச்சகட்டத்தில் நடைபெற்று வந்தபோது, அவர் ரயில் நிலையத்திற்கு சென்று, எல்லைப் பகுதிக்கு செல்லும் மற்றும் எல்லை பகுதியிலிருந்து வரும் போர் வீரர்களுக்கு தேனீர் வழங்கினார். அவரது இளம் வயதில், இது சிறிய பணியாக இருப்பினும், தாய்நாட்டின் அறைகூவலுக்கு அவர் பதில் அளிப்பதாக இருந்தது.

குழந்தையாக இருந்தபோது, திரு.நரேந்திர மோடியிடம் ஒரு கனவு இருந்தது – இந்திய இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது. அவரை போன்ற பல இளைஞர்களுக்கு, இராணுவமே தாய் இந்தியாவிற்கு சேவை புரியும் உயர்ந்ததாக கருதப்பட்டது. அதிர்ஷ்டம் இருந்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் இந்த யோசனையை எதிர்த்தனர். திரு.நரேந்திர மோடி, அருகில் உள்ள ஜாம்நகரில் அமைந்திருந்த சைனிக் பள்ளியில் படிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பியபோதும், கட்டணம் செலுத்த வேண்டிய நேரத்தில், வீட்டில் பணம் இல்லாமல் போனது. உறுதியாக, திரு. நரேந்திரா அதிருப்தியடைந்திருப்பார். ஆனால், போர் வீரனின் சீருடையை அணிய வாய்ப்பில்லாமல் போன இந்த இளம் சிறுவனுக்கு காலம் வேறு திட்டங்களை வைத்திருந்தது. பல வருடங்களுக்கு பிறகு, அவர் சென்ற உயர்பாதை, இந்தியா முழுவதும் அவரை கொண்டு சென்று, மனிதகுலநத்திற்கு பணியாற்றும் பெரிய பணியை அளித்தது.

vad4

அன்னையிடம் ஆசி பெறுகிறார்

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.