புந்தேல்கண்ட் விரைவுச் சாலை உத்தரப்பிரதேச மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர் மக்களை தில்லி உள்ளிட்ட பிற நகரங்களோடு இணைக்கவும் உதவிகரமாக இருக்கும். 296 கிலோமீட்டர் தூரமுள்ள புந்தேல்கண்ட் விரைவுச்சாலைக்கு உத்தரப்பிரதேசத்தின் சித்திரக்கூட்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த விரைவுச்சாலை புந்தேல்கண்ட் பகுதியை, ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை வழியாக நாட்டின் தலைநகர் தில்லியுடன் இணைப்பதோடு, புந்தேல்கண்ட் பகுதியின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த விரைவுச்சாலையும், உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடமும், புந்தேல்கண்ட் பகுதியின் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைப்பதோடு, பாதுகாப்பு வன்பொருள் ஏற்றுமதியை உலகளவில் மேற்கொள்ளவும் உதவுவதுடன், முதலீடுகளை அதிகரிக்கவும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின்கீழ், வருங்காலத்தில் இப்பகுதியை மாபெரும் உற்பத்தி மையமாக மாற்றவும் வழிவகை செய்யும்.