டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்ந்து தொடக்கநிலை பதிவுகள் அதிகரித்து வந்துள்ள பின்னணியில் இந்த நகரங்கள் பொருளாதார செயல்பாடுகளின் புதிய மையங்களாக உருவாகி வருகின்றன என்று கூறினார்.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மிக அதிக அளவிலான ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் தொகையைக் கொண்டுள்ளன என்பதால், முதல் முறையாக அரசு சிறிய நகரங்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது என்று கூறினார். இந்த நகரங்களில் வாழும் மக்களின் உள்ளக்கிடக்கைகளைக் கருத்தில் கொண்டு அரசு பணியாற்றி வருகிறது என்று கூறினார். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் வரை உள்ளவர்களுக்கு வரியில்லை என்ற அரசின் நடவடிக்கையை கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, இத்தகைய நகரங்களில் வாழும் மிகப்பலருக்கு இது பயனளித்துள்ளது என்று கூறினார். மேலும், சிறந்த சாலை மற்றும் விரைவுச் சாலை வசதிகள், புதிய விமான வழித்தடங்கள் ஆகியவற்றின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் விரைவாக இணைப்புவசதி பெற்று வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.