மகாத்மா காந்தி தமது வாழ்நாள் காலத்தில் போலவே, இக்காலத்திற்கும் பொருத்தமானவர் என்று நான் நம்புகிறேன்: திரு.நரேந்திர மோடி.

திரு.நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல், மகாத்மா காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகள், போதனைகள் ஆகியவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் போற்றப்படும் வகையில் தனது பேச்சுக்களையும், செயல்களையும் அமைத்துக் கொண்டு உறுதி செய்தார்.

2019, ஜனவரி 30-ஆம் தேதி பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்ட தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவிடம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கட்டங்களை அவற்றின் ஆற்றலோடும், உணர்வோடும் மீண்டும் எழுப்புவதாக அமைந்துள்ளது. மகாத்மா காந்தியும், அவரது தொண்டர்களான 80 சத்தியாக்கிரகிகளும் தண்டிக்கு யாத்திரை புறப்பட்டு, எடுத்த சிட்டிகை உப்பானது அப்போதைய காலனி ஆட்சியையே புரட்டிப்போட்டது.

மகாத்மா காந்தியின் மரபுகளை முன்னெடுத்துச் செல்வதில் பிரதமர் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றுதான் உப்பு சத்தியாக்கிரக நினைவிடம்.
திரு. நரேந்திர மோடியின் விருப்பத் திட்டமான “தூய்மை இந்தியா திட்டம்” மகாத்மா காந்தியடிகளின் போதனைகளால் தூண்டப்பட்டு உருவானது. இத்திட்டம் காந்தி ஜெயந்தி தினமான 2014, அக்டோபர் 2-ஆம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், “தூய்மையான இந்தியாதான் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் 2019-ல் கொண்டாடப்படும்போது, நாடு அவருக்கு வழங்கும் மிகச் சிறந்த நினைவுப் பரிசு” என்று கூறினார்.

பிரதமர் மேற்கொண்ட முயற்சியால் “தூய்மை இந்தியா” மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இது, மகாத்மா காந்தியடிகள் சுதந்திர தாகத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதை நினைவுபடுத்துவதாக அமைகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டின் மொத்தபரப்பையும் இந்தத் திட்டம் மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம், மக்களிடையே தூய்மை பற்றிய மிக உயரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்தன. இதனையடுத்து இந்தியா ஏறக்குறைய 100 சதவீத கிராமப்புற கழிவறை வசதி பெற்றதாக மாறியுள்ளது. https://twitter.com/narendramodi/status/973583560308293632

 

மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான காதி, விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியாவின் மனசாட்சிக்கு அடித்தளமாக விளங்கியது. அதற்குப் பின்னர், காதி குறித்த ஆர்வம் தேயத் தொடங்கியது. ஆனால், பிரதமர் அந்த உணர்வுக்கு தமது பேச்சுக்களின் மூலம் புத்துயிரூட்டியுள்ளார். திரு. நரேந்திர மோடி தனது மாதாந்தர “மனதின் குரல்” நிகழ்ச்சியில் மக்கள் காதிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை ஊக்குவித்தார். இதன்மூலம் காதி மற்றும் குடிசைத் தொழில்கள் மறுமலர்ச்சி அடைவதை வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலுக்கு சிறந்த பலன் கிடைத்தது. காதி பொருட்கள் விற்பனை பல மடங்கு உயர்ந்ததிலிருந்து இது தெரியவருகிறது.

 

 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இரண்டாண்டு கொண்டாட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் தொலைநோக்கை நினைவுகூறும் வகையில், 2018 செப்டம்பர் 29முதல் அக்டோபர் 2 வரை புதுதில்லியில், மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாடு நடைபெற்றது. இந்த நான்குநாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை தலைவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து பங்கேற்று, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

 

மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான “வைஷ்ணவ் ஜன் தோ” உலகெங்கும் பிரபலமாகியது. இந்தப் பாடலுக்கு உலக நாடுகளைச் சேர்ந்த 124 கலைஞர்கள் இசையமைத்து பங்களித்தனர். இதனையடுத்து, இந்த அருமையான இந்திய பஜனைப் பாடலுக்கு உலகெங்கும் மரியாதையை கிடைத்தது.

மகாத்மா காந்தி அகமதாபாதில் உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்தை திரு. நரேந்திர மோடி இந்திய ராஜீய உறவுகளின் முன்னிலையில் கொண்டு வந்தார். அவருடன் முக்கிய உலகத் தலைவர்களான சீன அதிபர் திரு. ஜீ ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நேத்தன் யாஹு, ஜப்பான் பிரதமர் திரு. ஷின்ஜோ அபே ஆகியோர் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்து மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர். சீன அதிபர் தமது சபர்மதி ஆசிரம வருகையை தனது வாழ்க்கையின் அதிகம் நினைவுகூரத்தக்க ஞானம் பெற்ற நேரம் என்று போற்றியுள்ளார். உலகத் தலைவர்கள், ராட்டையை பயன்படுத்தும் படங்கள், மகாத்மா காந்தியடிகள் அவரது காலத்தில் ராட்டையை தற்சார்பு சின்னமாகப் பயன்படுத்தியதை நினைவுகூர்வதாக அமைந்தன.

 

 

 

பிரிஸ்பேன், ஹனோவர், அஸ்காபாத் போன்ற இடங்களில் பிரதமர் பாபுவின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்து உலக நாடுகளில் மகாத்மா காந்தி குறித்த நிரந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.https://twitter.com/narendramodi/status/533948745717526528

2018-ல் ராஜ்கோட்டில் ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில்தான் மகாத்மா காந்தி படித்து, 1887-ல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார்.

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் பிரதமர். அவரது கொள்கைகள் 21-ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானவை என்பதை பிரதமர் நிறுவியுள்ளார். மக்களை எழுச்சியடையச் செய்வதற்கு பிரதமர் மகாத்மா காந்தியின் போதனைகளைப் பயன்படுத்தினார். இதன்மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியை அவர் முன்னெடுத்துச் சென்றார். அவரது செயல்கள் மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், நெறிகளையும் நிறைவேற்றுபவையாக அமைந்துள்ளன.


பாபுஜியின் மரபுகளை பரவலாக்குவதற்கான தொலைநோக்கை பிரதமர் திரு. மோடி 2018 அக்டோபர் 2-ஆம் தேதி தனது ப்ளாக்கில் எழுதிய பதிவு வெளிக்கொண்டு வந்துள்ளது. பிரதமர் எழுதியது, “இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. இந்திய மக்களை ஒருங்கிணைத்த ஒரு நபர் உண்டென்றால், மக்களை வேறுபாடுகளை மறந்து எழுச்சி பெறச் செய்தார் என்றால், உலக அரங்கில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தி காலனி ஆதிக்கத்தை எதிர்க்க உதவினார் என்றால், அது மகாத்மா காந்திதான். இன்று 130 கோடி இந்தியர்களாகிய நாம், எந்த நாட்டுக்காக அவர் உயிர்த் தியாகம் செய்தாரோ, அந்த நாட்டுக்கான பாபுவின் கனவுகளை நனவாக்குவதில் இணைந்து உழைக்க உறுதியேற்றுள்ளோம்”.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report

Media Coverage

Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 27, 2024
December 27, 2024

Citizens appreciate PM Modi's Vision: Crafting a Global Powerhouse Through Strategic Governance