7 செப்டம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ள
தேசிய கல்விக் கொள்கை-2020 குறித்த ஆளுநர்களின் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள்.
‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு’ என்னும் தலைப்பிலான இந்த மாநாட்டை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கை-2020, முந்தைய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
7 செப்டம்பர் அன்று நடக்கவிருக்கும் ஆளுநர்களின் மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இந்த மாநாட்டில் அனைவருக்கும் வழங்கும் உரை, டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்