ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி இயக்கம் குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி இயக்கம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது என்றும், இது மூவண்ணக் கொடியின் மீது 140 கோடி இந்தியர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையைக் குறிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திற்கு அருகேயுள்ள மண்டபத்தில், இந்தியக் கடலோரக் காவல்படை நிலையத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி இயக்கக் கொண்டாட்டத்தின் காட்சிகளை அமிர்தப் பெருவிழா தளம் ஒரு எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளது.
அமிர்தப் பெருவிழா தளத்தின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி இயக்கம் #HarGharTiranga இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது, இது 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதையைக் குறிக்கிறது.”
#HarGharTiranga has become popular all across India, indicating the deep respect 140 crore Indians have for the Tricolour. https://t.co/9bvZp5QKAg
— Narendra Modi (@narendramodi) August 14, 2024