அமெரிக்க அதிபராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டொனால்ட் ட்ரம்ப்புடன் இன்று உரையாடிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், திரு மோடி கூறியதாவது:
“எனது நண்பரான அதிபர் திரு டொனால்ட் ட்ரம்ப்புடன் @realDonaldTrump சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன். அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்.”
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024