பிரதமர் மித்ரா மாண்புமிகு பிரதமரின் 5 எஃப் தொலை நோக்குப் பார்வையையடுத்து ஏற்படுத்தப்படுகிறது பண்ணையிலிருந்து இழை வரை; இழையிலிருந்து தொழிற்சாலைக்கு; தொழிற்சாலையிலிருந்து வடிவமைப்பு; வடிவமைப்பிலிருந்து வெளிநாட்டுக்கு -ஃபார்ம் டு ஃபைபர் டு பேக்டரி டு ஃபேஷன் டு ஃபாரின்
உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பு நவீன தொழில்நுட்பத்தை ஈர்க்கும்; இத்துறையில் எஃப்டி ஐ அந்நிய முதலீட்டையும் உள்ளூர் முதலீட்டையும் அதிகரிக்கும்
பிரதமர் மித்ரா ஒரே இடத்தில் நூற்பு, நெசவு, பதப்படுத்துதல்/சாயமிடுதல் மற்றும் அச்சிடுதல் முதல் ஆடை உற்பத்தி வரை ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்புச் சங்கிலியை உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்கும்.
ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்பு சங்கிலி இருப்பதால் தொழில்துறையின் போக்குவரத்து செலவைக் குறைக்கும்
ஒவ்வொரு பூங்காவிற்கும் 1 லட்சம் நேரடி மற்றும் 2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம்
தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன
பிரதமர் மித்ராவுக்கான தளங்கள

அனைத்து கிரீன்ஃபீல்ட் பிரதமர் மித்ராவிற்கும் அதிகபட்ச வளர்ச்சி மூலதன ஆதரவு (டிசி எஸ்) 500 கோடி ரூபாயும்,  பிரவுன்ஃபீல்ட் பிரதமர் மித்ராவிற்கு பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக (@திட்ட செலவில் 30%) அதிகபட்சம் ரூ. 200 கோடியும் வழங்கப்படும்.  ஜவுளி உற்பத்திப் பிரிவுகளை விரைந்து நிறுவுவதற்காக ஒவ்வொரு பிரதமர் மித்ரா பூங்காவிற்கும் 300 கோடிரூபாய் போட்டி ஊக்க ஆதரவு (சி ஐ எஸ்) வழங்கப்படும். உலகத் தரம் வாய்ந்த தொழிற்பேட்டையை அமைக்க 1,000 ஏக்கர் நிலம் வழங்குவது உட்பட  மாநில அரசுகள் ஆதரவளிக்கும்.

கிரீன்ஃபீல்ட் பிரதமர் மித்ரா பூங்காவிற்கு, மத்திய அரசு மேம்பாட்டு மூலதன ஆதரவு திட்ட செலவில் 30% ஆக இருக்கும். அதிகபட்சம் 500 கோடி ரூபாய். பிரவுன்ஃபீல்ட் தளங்களுக்கு, மதிப்பீட்டிற்குப் பிறகு, மேம்பாட்டு மூலதன ஆதரவு மீதமுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற ஆதரவு வசதிகளின் திட்டச் செலவில் 30% வழங்கப்படும். வரம்பு ரூ. 200 கோடி. இது, திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி திரட்ட தனியார் துறையின் பங்கேற்புக்கு ஏற்ற வகையில் கவர்ச்சிகரமாக மாற்றுவதற்கான வடிவத்தில் உள்ளது.

பிரதமர் மித்ரா பூங்காக்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்:

  1. அடிப்படை உள்கட்டமைப்பு: இன்குபேஷன் சென்டர் & பிளக் & ப்ளே வசதி, வளர்ந்த தொழிற்சாலை தளங்கள், சாலைகள், மின்சாரம், நீர் மற்றும் கழிவு நீர் அமைப்பு, பொதுவான பதப்படுத்தகம் & சிஇடிபி மற்றும் இதர தொடர்புடைய வசதிகள் எ.கா. வடிவமைப்பு மையம், சோதனை மையங்கள் போன்றவை.
  2. ஆதரவு உள்கட்டமைப்பு: தொழிலாளர் விடுதிகள் & வீட்டுவசதி, தளவாடப்போக்குவரத்துப் பூங்கா, கிடங்கு, மருத்துவம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள்

உற்பத்தி நடவடிக்கைகளுக்காக மட்டும் 50% பகுதியையும், பயன்பாடுகளுக்கு 20% பகுதியையும், வணிக வளர்ச்சிக்காக 10% பகுதியையும் பிரதமர் மித்ரா உருவாக்கும்.

பிரதமர் மித்ராவின் திட்ட மாதிரி வரைபடம் கீழே விளக்கப்பட்டுள்ளது:

 

ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆடை பூங்காக்களின்* முக்கிய கூறுகள்  5% பரப்பளவைக் குறிக்கிறது # அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் 10% பகுதியைக் குறிக்கிறது. பிரதமர் மித்ரா பூங்கா ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட இதற்கென ஏற்படுத்தப்படும் நிறுவனத்தால் உருவாக்கப்படும், இது மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பொது தனியார் கூட்டு (பிபிபி) முறையில் உருவாக்கப்படும்.

முதன்மை வளர்ச்சியாளர் தொழில்துறை பூங்காவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் சலுகைக் காலத்தில் அதை பராமரிக்கவும் செய்வார். மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து உருவாக்கிய திட்டத்தின் நோக்க அளவுகோல்களின் அடிப்படையில் இந்த முதன்மை வளர்ச்சியாளர் தேர்வு நடைபெறும்.

மாநில அரசுக்கு பெரும்பான்மை உரிமை உள்ள எஸ் பி வி, வளர்ந்த தொழில்துறை தளங்களிலிருந்து குத்தகை வாடகையின் ஒரு பகுதியைப் பெற உரிமை உண்டு. தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பிற நல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இத்தொகை, பிரதமர் மித்ரா பூங்காவை விரிவாக்குவதன் மூலம் அந்தப் பகுதியில் ஜவுளித் துறையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த உதவும்.

உற்பத்தி யூனிட்களை நிறுவுவதை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு, ஒவ்வொரு பிரதமர் மித்ரா பூங்காவிற்கும் ரூ. 300 கோடி நிதியையும் வழங்கும். இது போட்டித்திறன் ஊக்க ஆதரவு (சிஐஎஸ்) என்று அழைக்கப்படும் மற்றும் பிரதமர் மித்ரா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்ட அலகொன்றின் வருவாயில் 3% வரை அளிக்கப்படும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒரு புதிய திட்டத்திற்கு இத்தகைய ஆதரவு முக்கியமானது, செய்த முதலீட்டைத்திரும்ப எடுத்து சம நிலையை அடைய முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு, உற்பத்தியை அதிகரிக்கவும், அத்தொழிலின் சாதகத்தன்மையை நிலை நாட்டவும் முடியும் வரை இந்த ஆதரவு தேவையாக இருக்கும்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மற்ற திட்டங்களுடன் ஒன்றிணைவது அந்தத் திட்டங்களின் வழிகாட்டுதலின் கீழ் அவர்களின் தகுதிக்கேற்ப கிடைக்கிறது.

இது ஜவுளித் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியடையச் செய்ய உதவுவதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களுக்கு பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். உற்பத்தியை அதிகரித்து, செலவினங்களைக் குறைத்தல் என்ற அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கான இத்திட்டம் இந்திய நிறுவனங்கள் உலகளாவிய சாம்பியன்களாக உருவாக உதவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"