- பிரேசில் ஒன்றியக் குடியரசு, ரஷ்ய ஒன்றியம், இந்தியக் குடியரசு, சீன மக்கள் குடியரசு, தென் ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளின் நாடுகளின் தலைவர்களான நாங்கள் பிரிக்ஸ் அமைப்பின் 8வது உச்சிமாநாட்டையொட்டி இந்தியாவில் கோவாவில் 2016 அக்டோபர் 15-16 தேதிகளில் சந்தித்துப் பேசினேம். இந்த உச்சிமாநாடு “பிரதிபலிப்பும், உள்ளடங்கிய தன்மையும் கொண்ட வகையில், கூட்டாக தீர்வுகளை உருவாக்குவது” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்றதாகும்.
- இதற்கு முன்பு வெளியிடப்பட்ட எங்கள் கூட்டறிக்கைகளை நினைவுகூர்ந்த நாங்கள் எமது பொதுவான நலன்கள், முக்கியமான முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பின் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம். வெளிப்படைத் தன்மை, சகோதரத்துவ உணர்வு, சமத்துவம், பரஸ்பர புரிதல், உள்ளடங்கிய தன்மை மற்றும் பரஸ்பர நலனுக்கான ஒத்துழைப்பு ஆகிய உணர்வுகளுடன் நமது கேந்திரமான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம். உலக அமைதி, பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக உருவாகி வரும் சவால்களை எதிர்நோக்க நமது கூட்டான முயற்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
- நன்கு உணரும் வகையிலான நமது ஒத்துழைப்பின் மூலமாக பிரிக்ஸ் நாடுகள் உலக அரங்கில் செல்வாக்குமிக்கதொரு குரலாக விளங்குகிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதோடு, இது நமது மக்களுக்கு நேரடியான பயன்களையும் வழங்கியுள்ளது. இந்தப் பின்னணியில் சர்வதேச நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்திற்கு பெருமளவிற்குப் பங்களித்துள்ள புதிய வளர்ச்சி வங்கி (என்.டி.பி.), எதிர்பாரா செலவின நிதியம்(சிஆர்ஏ) ஆகியவற்றின் செயலாக்கம் குறித்தும் நாங்கள் மிகுந்த திருப்தியை தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் அதன் முதலாவது ஆண்டின் செயல்பாடு குறித்து வழங்கியுள்ள அறிக்கையையும் நாங்கள் வரவேற்கிறோம். புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்ரிக்கா பகுதிக்கான மையத்தினை நடைமுறைப் படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு இதற்கான எங்களது முழு ஆதரவையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். வரவிருக்கும் ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலும் விரிவான அளவில் புதிய பிரிக்ஸ் முன்முயற்சிகளை வளர்த்தெடுப்பதிலும் நாங்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளோம்.
- புதிய வளர்ச்சி வங்கி தனது முதல் வரிசை கடன்களுக்கு அனுமதி அளித்துள்ளதை, குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளில் மறுசுழற்சியிலான மின்சாரத் திட்டங்களுக்கு வழங்கியுள்ளதை, நாங்கள் பாராட்டுகிறோம். சீன நாணயத்தின் அடிப்படையில் பசுமைக்கடன் பத்திரங்களின் முதல் வரிசையை புதிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ளது குறித்தும் எங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரிக்ஸ் அமைப்பின் எதிர்பாரா செலவின நிதியம் செயல்படத் துவங்கியுள்ளதானது உலகளாவிய நிதிசார் பாதுகாப்பினை வலுப்படுத்தியுள்ளது என்பது குறித்தும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
- நமது சக வளரும், உருவாகிவரும் பொருளாதாரங்களைப் புரிந்து கொள்வதற்கும், இணைந்து செயல்படவும் பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுடன் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் அவுட்ரீச் உச்சிமாநாட்டை நாங்கள் நடத்தவிருக்கிறோம். இதன்படி வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா அமைப்பின் (பிம்ஸ்டெக்) உறுப்பு நாடுகள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றன. இந்தக் கூட்டமானது பிம்ஸ்டெக் நாடுகளுடன் பிரிக்ஸ் நாடுகள் தமது நட்புறவைப் புதுப்பித்துக் கொள்ளவும், வர்த்தகம், வணிக உறவுகள், முதலீடுகள் தொடர்பான ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை கூட்டாகக் கண்டறியவும் ஒரு வாய்ப்பாக அமையும்.அதே நேரத்தில் அமைதி, வளர்ச்சி, ஜனநாயகம், வளம் ஆகிய நமது பொதுவான இலக்குகளை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் இந்தக் கூட்டம் உதவி செய்யும்.
- சர்வதேச சட்டங்களை மதிப்பது, ஐ.நா.வின் மையமான பங்கின் அடிப்படையிலானதொரு நியாயமான, ஜனநாயகபூர்வமான, பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச நிலையை நோக்கி மாறிச் செல்லும் வகையில் ஆழமான மாற்றங்களை உலகத்தில் ஏற்படுத்துவது என்ற எங்களது பொதுவான இலக்கையும் நாங்கள் இத்தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறோம். உலகளாவிய விஷயங்கள் குறித்த முயற்சிகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, சகோதர உணர்வு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை ஆகிய விஷயங்களில் நடைமுறையளவிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் தேவையையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். சர்வதேச பிரச்சனைகளுக்கு கூட்டு முயற்சிகளின் மூலம் தீர்வு காண்பது, சச்சரவுகளை அரசியல் மற்றும் தூதரக உறவுகளின் மூலம் அமைதியான வகையில் தீர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இத்தருணத்தில் நாங்கள் வலியுறுத்துவதோடு, ஐ.நா. சபையின் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள குறிக்கோள்களின் மீதான எங்களின் உறுதிப்பாட்டையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
- சர்வதேச சமூகத்தை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள், தற்போதைய பாதுகாப்பு குறித்த சவால்கள் ஆகியவற்றின் உலகளாவிய தன்மையையும் நாங்கள் கவனித்து வருகிறோம். இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச முயற்சிகளுக்கும், நீடித்த அமைதியை நிறுவவும், சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர பயன்கள், சமநிலை, ஒத்துழைப்பு, சர்வதேச அமைதி, பாதுகாப்பு, உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, மனித உரிமைகளை பாதுகாப்பது, அதை மேலும் வளர்ப்பது ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உலகளாவிய பன்முகத்தன்மை கொண்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மையமான பங்கின் மீதும், சர்வதேச சட்டங்கள் மீதும் வலுவான பற்றுறுதி ஆகிய உணர்வுகளின் அடிப்படையில் நியாயமான, சமநிலையான, ஜனநாயகபூர்வமான, பன்முகத்தன்மை கொண்டதொரு சர்வதேச நிலையை நோக்கி நகர்வதற்கு முழுமையான, தொடர்ச்சியான, உறுதியானதொரு அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தப் பின்னணியில் நமது முயற்சிகளின் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்த விழைகிறோம்.
அதன் பரஸ்பர உறவுகள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச சட்டத்தின் குறிக்கோள்கள், விதிகள் ஆகியவை அனைத்து நாடுகளும் தங்கள் சர்வதேச சட்ட ரீதியான பொறுப்புகளுக்கு இயைந்த வகையில் தொடர்ச்சியாகவும், பரவலாகவும் மதித்துப் பின்பற்றுவதோடு ஐ.நா. சபையின் சாசனத்தின் நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நியாயமான, சமநிலையான வகையில் பாதுகாப்பதில் பங்களிப்பதற்கான எங்களது பற்றுறுதியை மீண்டும் இங்கு உறுதிப்படுத்துகிறோம்.
- சர்வதேச சமுதாயத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஆபத்துகளின் உலகளாவிய தன்மையை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். இந்த சவால்களை சமாளித்து, நீடித்த அமைதியையும், நியாயமான, சம அளவிலான மற்றும் ஜனநாயக பன்முக சர்வதேச அளவில் ஏற்புடைய தீர்வு காண்பதற்கான சர்வதேச முயற்சிகள் எடுப்பதற்கு, ஒட்டுமொத்தமான, உறுதியான, தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை தேவை என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது கூட்டுப் பொறுப்புணர்வு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆதாயம், சமத்துவம் மற்றும் ஒத்துழைப்பு, சர்வதேச சட்டத்தில் உறுதியான கடமைப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது, உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பது ஆகிய பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள பன்முக அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய செயல்பாடுகளுக்கு ஏற்பவும் அது இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நமது முயற்சிகளை மேலும் வலுவாக ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்.
- ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் அவசியங்களின் அடிப்படையில், நியாயமான மற்றும் நடுநிலையான சர்வதேச நடைமுறையிலான வகையில், பாதுகாப்பதற்கு பங்களிப்பு செய்ய வேண்டியதன் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். உறுதியான மற்றும் உலகளாவிய மரியாதைக்கு உள்பட்டதாகவும், சர்வதேச சட்டத்தில் இடை தொடர்பு மற்றும் ஒருமைப்பாட்டு கொள்கைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றியதாகவும் அது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதை அனைத்து அரசுகளும் தங்களின் சர்வதேச சட்டபூர்வ கடமைகளின்படி செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறோம். இரண்டாவது உலகப் போரின் முடிவுகள் பற்றி தவறான தகவல்களை அளிக்கும் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதியாக நிராகரிப்பது என்பதில் நாங்கள் உறுதி தெரிவிக்கிறோம். வளர்ச்சியும், பாதுகாப்பும் நெருக்கமாக தொடர்புள்ளவை, நீடித்திருக்கக் கூடிய அமைதியை ஏற்படுத்துவதில் பரஸ்பரம் பலத்தை அதிகரிப்பது முக்கிய விஷயமாக இருக்கும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
- சர்வதேச பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் மற்றும் தூதரக அளவிலான முயற்சிகள் மூலம் அமைதி வழியில் கூட்டாக முயற்சி மேற்கொள்வதன் மூலம்தான் முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம். நல்ல நம்பிக்கை, அரசுகளின் இறையாண்மை நடுநிலை, அரசுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளை அமல் செய்வது என்பது, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இல்லாத வகையில் தன்னிச்சையாக அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவையாக இருக்கும். சர்வதேச சட்டம் மற்றும் உலக அளவில் சர்வதேச உறவுகளின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் வகையில், தன்னிச்சையான ராணுவத் தலையீடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இதை மனதில் கொண்டு, பிரிக்க முடியாத பாதுகாப்பின் பிரத்யேகமான முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் வகையில் தனது பாதுகாப்பை பலப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.
- 2005 ஆம் ஆண்டு உலக உச்சி மாநாட்டு முடிவுகள் ஆவணத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். உலக சவால்களை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு, வளரும் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புக்கவுன்சில் ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இதன் மூலம் பாதுகாப்புக் கவுன்சில் உள்பட ஐ.நா.வை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாக, செயல்பாடுள்ள மற்றும் செயல்திறன்மிக்க அமைப்பாக மாற்ற முடியும் என்று தெரிவிக்கிறோம். பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச விவகாரங்களில் உள்ள பங்கு மற்றும் அந்தஸ்தின் முக்கியத்துவத்தை சீனாவும் ரஷியாவும் வலியுறுத்தின. ஐ.நா.வில் இந்த நாடுகள் அதிக பங்களிப்பு ஆற்றுவதற்கான முனைப்புகளுக்கு இரு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.
- ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் நியமனத்தை அதிக வெளிப்படைத்தன்மையுடனும், பங்கேற்புத் தன்மையுடனும் நடத்துவதில் ஐ.நா. மேற்கொண்ட தனிநிலையான நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
- கடந்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய பணிகளுக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் திரு பான் கீ-மூன் அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. அன்டோனியோ குவெட்டரெஸ் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். அவருக்கு ஆதரவு அளித்து, அவருடன் நெருக்கமாக பணியாற்ற விருப்பம் தெரிவிக்கிறோம். ஐ.நா. அமைதி பாதுகாப்பு செயல்பாடுகளில் கணிசமான பங்களிப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐ.நா. அமைதி பாதுகாப்பு செயல்பாடுகளின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், இவற்றில் ஐ.நா. எதிர்கொள்ளும் சவால்களையும் நாங்கள் உணர்ந்தோம். அமைதிப் பாதுகாப்பின் அடிப்படைக் கொள்கைகளை கடைபிடிக்கும் அதே சமயத்தில், மேற்படி செயல்பாடுகளில் ஐ.நா. தனது பங்களிப்பு, செயல்திறன், செம்மையான செயல்பாடு, பொறுப்பேற்பு ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். தங்களின் கடமைப்பாடுகளின்படியும், சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கிய பொறுப்பின்படியும் குடிமக்களைப் பாதுகாப்பது என்ற கடமையை ஐ.நா. அமைதி பாதுகாப்பு செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள நிலைமை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அந்தப் பிராந்தியத்திற்கு உள்பட்ட நாடுகளின் எல்லை ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மற்றும் சுதந்திரக் கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் வகையில், சர்வதேச சட்டத்தின்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். சிரியாவைப் பொருத்த வரையில், பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமான அமைதியான தீர்வு காண்பதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சிரிய மக்களின் சட்டபூர்வ விருப்பங்களைக் கருத்தில் கொண்டதாகவும், தேசிய அளவில் பங்கேற்புடன் கூடிய விவாதங்கள் மூலமாக உருவாக்கப்பட்டதாகவும் அது இருக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் 2254 மற்றும் 2268 ஆகியவற்றை அடியொற்றியதாகவும், 30 ஜூன் 2012 ஜெனிவா அறிவிக்கையின் அடிப்படையிலும் சிரியாவைச் சேர்ந்த அரசியல் நடைமுறைகளின்படி இது உருவாக்கப்பட வேண்டும். முழுமையாக அதை அமல் செய்ய இவ்வாறு அமைய வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எல்., ஜபாத் அல்-நுஸ்ரா மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தளர்வின்றி தொடரவும் தீர்மானிக்கப்படுகிறது.
- பாலஸ்தீனம் – இஸ்ரேல் பிரச்சினையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்கள், மாட்ரிட் கோட்பாடுகள் மற்றும் அரபு அமைதி முயற்சி ஆகியவற்றின் அடிப்படையிலும், சுதந்ிரமான, சாத்தியமாகக் கூடிய வகையில் பாலஸ்தீன நாட்டு மக்கள் தொடர்ச்சியான பகுதிகளில் சேர்ந்து வாழவும், இஸ்ரேலின் அருகில் வாழவும் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்தப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் இரு அரசுகளுக்கு இடையில் தீர்வு காணப்பட்டு அமல் செய்யப்பட வேண்டியதன் தேவையை நாங்கள் வலியுறுத்துகிறோம். 1967 ஆம் ஆண்டு நிலைமையின்படி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளில் பாதுகாப்புடன், ஐ.நா. தீர்மானங்களில் கூறப்பட்டவாறு, ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு, அமைதியாக வாழ இந்தத் தீர்வு காணப்பட வேண்டும்.
- ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் அங்கு அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்கள் பற்றி நாங்கள் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறோம். ஆப்கனிஸ்தானால் உருவாக்கப்பட்ட, ஆப்கனிஸ்தானால் அமல் செய்யப்படக் கூடிய தேசிய மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவை உறுதியாகத் தெரிவிக்கிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குதல், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை மேம்படுத்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு, அதன் அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளில் சுதந்திரமான அணுகுமுறை, பயங்கரவாதம் மற்றும் போதைமருந்து கடத்தலில் இருந்து விடுபடுதல் ஆகிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உறுதியளிக்கிறோம். ஆப்கனிஸ்தானில் நிலைப்புத்தன்மை ஏற்படுவதற்கு ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையின் (ABSF), சாத்தியப்படக் கூடிய மற்றும் சிறப்பான செயல்பாடு முக்கியமாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில், பிராந்திய நாடுகள் தொடர்ந்து உறதியாக செயல்படுவது, நேட்டோ தலைமையிலான பிரச்சினை தீர்வு ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பரந்த சர்வதேச சமுதாய ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். இது ISAF-ன் வழி வந்தது என்ற வகையில் ANSF-ன் திறன் வளர்ப்பில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. ஆப்கனிஸ்தான் பிரச்சினை குறித்து பலநிலைகளில் பிராந்திய அளவில் கலந்துரையாடல்கள் இருக்க வேண்டும் என்றும், முக்கியமாக ஆப்கனிஸ்தானின் அருகாமை நாடுகள் மற்றும் இதர பிராந்திய நாடுகளின், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு மற்றும் ஆசிய மாநாட்டு இதய அமைப்புகளின் பங்கேற்புடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
- ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான 2063 செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) தொலைநோக்கு, விருப்பங்கள், லட்சியங்கள் மற்றும் முன்னுரிமைகளை நாங்கள் வரவேற்கிறோம். நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்தின் கூடுதல் பகுதியாக இது இருக்கிறது. தங்கள் பகுதியில் அமைதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை அமல் செய்வதில், ஆப்பிரிக்கா மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு எங்களின் ஆதரவை மறு உறுதி செய்கிறோம். ஒன்றுபட்ட உறுதிப்பாடு, ஒற்றுமை, வலிமை ஆகியவற்றை மேம்படுத்த பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி மூலமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் கூட்டாக ஆதரவு அளிப்போம். அங்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றதையும், அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம்..
- ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து அமைதியான மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு மூலமாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண AU மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கிறோம். ஆப்பிரிக்காவில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்யும் வகையில் நடைபெறும் இந்த முயற்சிகளை ஆதரிக்கிறோம்.
- அமைதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளிப்பதற்காக, ஆப்பிரிக்க ஒன்றிய நாடாளுமன்றம் தனது அமைதி நிதியத்தை செயல்படுத்தும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆப்பிரிக்க ஆயத்தநிலை படைகளை (ASF) முழுமையாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். நெருக்கடிகளுக்கு உடனடியாக செயல்படும் ஆப்பிரிக்க திறன் அமைப்பின் (ACIRC) பங்களிப்புகள் உள்பட, இந்த விஷயத்தில் ஏற்படும் முன்னேற்றங்களையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.
- பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் நீடிக்கும் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஸ்திரமற்ற நிலை குறித்து நாங்கள் கவலை தெரிவிக்கிறோம். இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை, ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டாளிகள் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சண்டைக்குப் பிந்தைய மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளும் இதில் அடங்கியிருக்க வேண்டும்.
- நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டம் மற்றும் அதன் நீடித்த வளர்ச்சி லட்சியங்களை 2015 செப்டம்பர் 25-ல் ஐ.நா. நீடித்த வளர்ச்சி உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்டதையும், அட்டிஸ் அபாபா செயல் திட்டத்தை வளர்ச்சிக்கான நிதியளிப்பு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம். 2030 செயல் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்காக மக்கள் நலன் சார்ந்த, முழு மனுதடன் கூடிய அணுகுமுறையை நாங்கள் வரவேற்கேிறோம். அனைவருக்கும் நடுநிலையான, சமத்துவமான, தரமான வாழ்வை இது வலியுறுத்துகிறது. 2030 செயல்திட்டத்தை அமல் செய்வதற்கான, பொதுவான ஆனால் மாறுபட்ட பொறுப்புகள் (CBDR) என்ற கொள்கையை உள்ளடக்கிய வழிகாட்டும் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
- வறுமை ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்தும் 2030 செயல் திட்டம், நீடித்த வளர்ச்சியில் பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் நடுநிலையான, சமமான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வளரும் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவிக்கு 0.7 % ஒட்டுமொத்த வருவாய் உயர்வை எட்டுவதற்கு உதவுதல் என்ற, அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வளர்ச்சியடைந்த நாடுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். SDG-களை செயல்படுத்துவதில் இந்த உறுதிப்பாடுகள் முக்கிய பங்காற்றும். ஐ.நா.வுக்கு உள்பட்டு தொழில்நுட்ப வளர்ச்சி நடைமுறை ஒன்று உருவாக்கப்படுவதையும் நாங்கள் வரவேற்கிறோம். SDG-களை செயல்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை கடமையாக இது கொண்டிருக்கிறது.
- நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல் திட்டத்தை, தேசிய சூழ்நிலைகள் மற்றும் வளர்ச்சி சூழ்நிலையில் தேசிய கொள்கைகளுக்கு மதிப்பளித்து, அமல் செய்வதற்கு உதாரணமாக இருந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியளிக்கிறோம். ஜி 20 ஹாங்ஜவ் உச்சி மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல் திட்டம் குறித்த ஜி 20 செயல் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டாகவும், தனித்தனியாகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், மாற்றத்துக்கு தைரியமான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் அவற்றை அமல் செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.
- உலக பொருளாதாரம் வளரக் கூடிய, புதிய வளர்ச்சி ஆதாரங்கள் உருவாகக் கூடிய, மேம்படுத்தப்பட்ட மறு எழுச்சி சூழ்நிலையில் நாம் சந்தித்திருக்கிறோம். வளர்ச்சியானது எதிர்பார்த்ததைவிட பலவீனமாக இருக்கிறபோதிலும், உலக பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய ஆபத்துகள் தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. பொருட்களின் விலைகள் நிலையில்லாமல் இருப்பது, பலவீனமான வர்த்தகம், அரசு மற்றும் தனியார் துறையில் அதிக கடன்சுமை, சமத்துவமின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பு இல்லாதது உள்ளிட்ட பலதரப்பட்ட சவால்கள் மூலம் இது பிரதிபலிக்கப் படுகிறது. இதற்கிடையில், வளர்ச்சியின் மூலமான பயன்கள் பங்கேற்பு முறையில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பூகோள அரசியல் ரீதியிலான மோதல்கள், பயங்கரவாதம், அகதிகள் வருகை, சட்டவிரோதமான பணப் புழக்கம் மற்றும் பிரிட்டன் கருத்துக் கணிப்பின் முடிவுகள், உலகப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்திவிட்டன.
- நாணய மாற்று, நிதி மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட கொள்கைக்கான அனைத்து அம்சங்களையும் பயன்படுத்துவதில் எங்கள் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம். வலுவான, நீடித்த, சமத்துவமான, பங்கேற்புடன் கூடிய வளர்ச்சியை எட்டுவதற்கு தனித்தனியாகவும், கூட்டாவும் பயன்படுத்த ஆதரவு அளிக்கிறோம். பொருளாதார செயல்பாடுகளுக்கு நாணய மாற்றுக் கொள்கை ஆதரவு அளித்து, மத்திய வங்கியின் உறுதிப்பாட்டின்படி விலைவாசி நிலைப்புத்தன்மை ஏற்படுத்துவதை உறுதி செய்யும். நாணய மாற்றுக் கொள்கை மட்டுமே, சமத்துவமான நீடித்த வளர்ச்சிக்கு அழைத்துச் செல்ல முடியாது. இந்த விஷயத்தில் கட்டமைப்பு மறுசீரமைப்பில் முக்கிய பங்காற்ற வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். நமது பொதுவான வளர்ச்சி நோக்கங்களுக்கு ஆதரவு அளிக்க, நமது நிதிக் கொள்கைகளும் சம அளவு முக்கியமானவை என்பதை வலியுறுத்துகிறோம். சில மறைப்படுத்தப்பட்ட முக்கியமான, முன்னேறிய பொருளாதாரங்களில், சில கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் விடுபட்டுப் போகும் செயல்கள், வளரும் பொருளாதார நாடுகளின் வளர்ச்சி வாய்ப்பை எதிர்மறையாக பாதித்துவிடும் என்பதையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.
- நடுத்தர மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் புதுமைகள்தான் முக்கிய வழிகாட்டி என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். கட்டமைக்கப்பட்ட மாற்றத்தை உருவாக்குவதற்கு, தொழில்மயமாக்கலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும்தான் முக்கியமான தூணாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறோம்.
- தற்போதுள்ள நிதி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கு உகந்த முறையில் வரிக் கொள்கை மற்றும் அரசு செலவினங்களை இன்னும் சீரமைப்பதன் அவசியத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறோம். இந்த முயற்சி பங்கேற்புத் தன்மையை ஊக்குவித்து, மறு எழுச்சியை பராமரித்து, GDP-ல் நீடித்த கடன்களை ஒரு அங்கமாக ஆக்கும் வகையில் அமைய வேண்டும்.
- உலகின் பிராந்தியங்களில், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்க பிராந்தியங்களில் செயலூக்கமான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். சமத்துவம், வெளிப்படைத் தன்மை மற்றும் பங்கேற்புத்தன்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் பிராந்திய ஒருங்கிணைப்பு சூழ்நிலையில், வளர்ச்சியை எட்டுவதில் உள்ள நம்பிக்கையை உறுதி செய்கிறோம். மேம்படுத்தப்பட்ட வர்த்தகம், வணிகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் மூலமாக பொருளாதார விரிவாக்கத்தை இது ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் மேலும் நம்புகிறோம்.
- நீடித்த நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, தொடர்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட கட்டமைப்புத் துறைகளில் அரசு மற்றும் தனியார் முதலீடுகளின் முக்கியத்துவத்தை நாங்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறோம். இந்த விஷயத்தில் பன்முக வளர்ச்சி வங்கிகளின் மேம்படுத்தப்பட்ட பங்கேற்பு உள்ளிட்டவற்றுடன், கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு நிதி வசதி கிடைப்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
- வலுவான, ஒதுக்கீடு அடிப்படையிலான, போதிய ஆதாரங்கள் கொண்டதாக IMF இருக்க வேண்டும் என்பதில் உள்ள உறுதியையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். IMF கடனாக வாங்கும் நிதிகள் தற்காலிக அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஒதுக்கீடு குறித்த பதினைந்தாவது பொது மறு ஆய்வு, புதிய ஒதுக்கீட்டு பார்முலா உள்பட, உரிய கால வரம்புக்குள் இறுதி செய்யப்படுவதற்கு, வளரும் பொருளாதார நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்வதற்கு வலுவாக ஆதரவு அளிப்போம். மிகக் குறைந்த அளவு வளர்ந்த நாடுகள் (LDC), ஏழை நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் குரல்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், உலக பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்வதில் வளரும் பொருளாதார நாடுகளின் செயலூக்கமான குரல்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த மறு ஆய்வு அமைய வேண்டும்.
- சிறப்பு பணம் எடுத்தல் உரிமைகள் (SDR) நாணய தொகுப்பில் 1 அக்டோபர் 2016-ல் RMB சேர்க்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
- IMF நிர்வாகக் குழுவில் இரண்டு இடங்களை விட்டுத் தருவது என்று அளித்த உறுதியை, முன்னேறிய ஐரோப்பிய பொருளாதார நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். IMF-ன் மிக ஏழ்மையான உறுப்பினர்களின், சஹாரா சார்ந்த ஆப்பிரிக்கா உள்பட, பிரதிநிதித்துவம் மற்றும் குரல் வலுப்பெறும் வகையில் IMF மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
- இறையாண்மையுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதில் உள்ள சவால்கள் குறித்த கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். சர்வதேச மூலதனச் சந்தையில் நுழைவதை உறுதி செய்வதற்கு, வெற்றிகரமாக கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது சரியானதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறோம். எனவே அதிக கடன்கள் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியமாகும். கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகளை மேம்படுத்துவதற்குத் தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளையும், மாற்றியமைக்கப்பட்ட கூட்டு செயல்திட்டப் பிரிவுகளையும் (CAC-கள்) நாங்கள் வரவேற்கிறோம்.
- பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக முறைக்கு ஆதரவு அளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். வளர்ச்சியை தனது முக்கிய செயல்திட்டமாகக் கொண்டு, விதி அடிப்படையிலான, திறந்த, வெளிப்படைத்தன்மையான, பாரபட்சமற்ற மற்றும் பன்முகத் தன்மையான வர்த்தக முறைமையை உருவாக்குவதில் WTO மைய அமைப்பாக செயல்பட்டு, முக்கிய திருப்பம் ஏற்படுத்துவதாக இருப்பதையும் ஆதரிக்கிறோம். இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக முறைக்கு பரிசாக இவை அமைவதுடன், WTO-வின் கீழ் பன்முக வர்த்தக முறைமையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்று சேருவதை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். வெளிப்படைத்தன்மை, பங்கேற்புத்தன்மை, WTO விதிகளின்படி செயல்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப இது இருக்க வேண்டும்.
- பாலி மற்றும் நைரோபி அமைச்சர்கள் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். தோஹா வளர்ச்சி செயல் திட்டத்தில் (DDA) மிச்சமுள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, முன்னதாகவே பேச்சுகள் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். MC11 மற்றும் அதற்கு அப்பால் வலுவான வளர்ச்சி யை உறுதி செய்வதற்கு, WTO உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- பிரிக்ஸ் பொருளாதார கூட்டுமுயற்சிகளுக்கான செயல்திட்டத்தை அமல் செய்வதில் உள்ள முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம். 2020 வரையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளுக்கான பிரிக்ஸ் அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். துறைசார்ந்த ஒத்துழைப்பு நடைமுறைகளுக்கு இடையிலும், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களில் பிரிக்ஸ் தொடர்பு குழு, பிரிக்ஸ் செயல்திட்டக் கவுன்சில், புதிய வளர்ச்சி வங்கி மற்றும் பிரிக்ஸ் வங்கிகளிடை ஒத்துழைப்பு நடைமுறை ஆகியவை, பிரிக்ஸ் பொருளாதார கூட்டு முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இந்தச் சூழ்நிலையில், மின்னணு வணிகம், “ஒற்றைச் சாளரம்”, IPR ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் (SME-கள்) ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புகள் போன்ற பிரிக்ஸ் பொருளாதார முன்முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை நாங்கல் வரவேற்கிறோம். கட்டணமில்லா நடவடிக்கைகள் (NTM-கள்), சேவைத் துறை மற்றும் நிலைப்படுத்தல் மற்றும் இணக்க நிலை மதிப்பீடுகள் ஆகியவை எதிர்கால ஒத்துழைப்புக்கு சாத்தியமான அம்சங்களாக உள்ளதை அங்கீகரிக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் புதுடெல்லியில் 2016 அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தைப் பற்றி கருத்தில் கொண்டு, அதில் ஏற்பட்ட கணிசமான முடிவுகளுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
- பிரிக்ஸ் பொருளாதார கூட்டு முயற்சிகளுக்கான செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில், அதிக பங்கேற்பு, மதிப்பு கூட்டல் மற்றும் நமது நிறுவனங்களின் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். கொள்கை சூழ்நிலையை பாதுகாப்பதுடன், தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இதைச் செய்வதும் இதில் அடங்கும்.
- முதலாவது பிரிக்ஸ் தொழில் கண்காட்சியை புதுடெல்லியில் நடத்திய இந்தியாவின் முன்முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். பிரிக்ஸ் பொருளாதார கூட்டு முயற்சி செயல்திட்டத்தை அமல்படுத்துவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் வணிக கூட்டு முயற்சிகளை இது மேலும் உறுதிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். புதுடெல்லியில் 13 அக்டோபர் 2016-ல் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், எடுத்த முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம்.
- பிரிக்ஸ் செயல்திட்டக் கவுன்சிலின் முதலாவது ஆண்டு அறிக்கையை நாங்கள் கருத்தில் கொண்டோம். அதன் பணிக் குழுக்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தி, பன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கவுன்சிலுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். அவ்வாறு செய்வது பரஸ்பரம் பயன் தரும்அடிப்படையிலும், பிரிக்ஸ் பொருளாதார நோக்கங்களுக்கு பங்களிப்பு செய்வதாகவும் இருக்கும்.
- MSME-க்கள் ஒப்பீட்டு அளவில் குறைவான முதலீட்டுச் செலவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராமப் பகுதி மற்றும் வளர்ச்சி அடையாத பகுதிகளில் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அந்த வகையில் தேசிய அளவிலும், உலகளவிலும் சொத்துகள் சமமாக பகிர்ந்து செல்வதை MSME-க்கள் உறுதி செய்கின்றன. MSME துறையில் தொழில்நுட்ப மற்றும் வியாபார தோழமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் MSME குறித்து பிரிக்ஸ் இரண்டாவது வட்டமேசை கூட்டத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்வதை நாங்கள் பாராட்டுகிறோம். பிராந்திய மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளில் MSME-க்களை பெரிய அளவில் ஒருங்கிணைக்க முயற்சிப்பது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- 11வது ஜி 20 தலைவர்களின் மாநாட்டை ஹங்ஜோவில் வெற்றிகரமாக நடத்தியதற்காக சீனாவை நாங்கள் பாராட்டுகிறோம். நடுத்தர மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு, புதுமைகள், கட்டமைப்பு சீரமைப்பு மற்றும் மேம்பாடுகள்தான் முக்கியமானவை என முக்கியத்துவம் கொடுத்தமைக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம். சர்வதேச மற்றும் நிதி ஒத்துழைப்பில் ஜி 20 முதன்மையான அமைப்பாக பங்களிப்பு செய்வதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஜி 20 ஹங்ஜோ மாநாட்டில் எடுத்த முடிவுகளை அமல்படுத்துவதன் முக்கியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அவ்வாறு செய்வது வலுவான, சமத்துவமான, பங்கேற்புடன் கூடிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். மேலும் உலகளாவிய பொருளாதார ஆளுமைக்கு பங்களிப்பு செய்வதுடன், வளரும் நாடுகளின் பங்கையும் அதிகரிக்கும்.
- புதுமையான, எழுச்சியூட்டக் கூடிய, உள்தொடர்புள்ள மற்றும் பங்கேற்புடன் கூடிய உலக பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஜி 20 செயல்திட்டம் குறித்து எங்களது கலந்துரையாடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவோம். குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் முயற்சிகளை மேம்படுத்துவது, புதிய சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு (EMDE-கள்) முக்கியத்துவமான விஷயங்களை மேம்படுத்துவது ஆகியன செய்வோம். பெரிய அளவில் பொருளாதார ஒத்துழைப்புக்கும், புதுமையான சிந்தனையை ஊக்குவித்தல் ஆகியவற்றை வலுப்படுத்த ஜி 20 நாடுகளுடன் நெருக்கமாக தொடர்ந்து செயல்படுவோம். உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல துடிப்பான மற்றும் நீடித்த வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துதல், உலகளாவிய பொருளாதார ஆளுமையை மேம்படுத்துவது, வளரும் நாடுகளின் பங்களிப்பை மேம்படுத்துவது, சர்வதேச நிதி கட்டமைப்பை வலுப்படுத்துவது, ஆப்பிரிக்காவிலும் மிகக் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் தொழில்மயமாக்கலுக்கு ஆதரவு அளிப்பது, மின்சார வசதி பெறுதல் மற்றும் செம்மைப்படுத்துதலில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என இவை அமையும். சட்டவிரோதமாக எல்லைகடந்து பணப் புழக்கம் நடப்பது, வரி ஏய்ப்பு மற்றும் வர்த்தகத்தில் தவறாக கணக்குகாட்டுதலைத் தடுப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
- பிரிக்ஸ் பங்களிப்பும், பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்புத் துறைகளில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகளும், சாதகமான பலன்களைத் தருகின்றன. உலகப் பொருளாதார நிலைப்புத் தன்மைக்கு உதவி, வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு நமது ஒத்துழைப்பு முக்கியம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
- உலக ஆளுமை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, சந்தை சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படையில் சுதந்திரமான பிரிக்ஸ் ரேட்டிங் ஏஜென்சியை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும் நிபுணர்களுக்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம்.
- பிரிக்ஸ் சிந்தனைவாதிகள் கவுன்சில் மற்றும் பிரிக்ஸ் அகடமிக் அமைப்புகளின் அறிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். நமது நிபுணர்கள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதற்கு மதிப்புமிக்க தளங்களாக அவை அமைந்திருந்தன. சந்தை ஆராய்ச்சியை மேம்படுத்துதல், பிரிக்ஸ் மற்றும் வளரும் நாடுகளில் பகுப்பாய்வு, இந்த செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதன் சாத்தியக்கூறு ஆகியவை தொடர்பாக மதிப்புமிக்க ஆலோசனைகளை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். நியாயமான மற்றும் சமத்துவமான கோட்பாடுகளின் அடிப்படையில் உலகளாவிய நிதி கட்டமைப்பாக மாற்றுவதற்கு நமது பார்வையை பகிர்ந்து கொள்வதற்கு, பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்படுவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
- தொழில் துறையில் பிரிக்ஸ் நாடுகளுக்குள் , பிரிக்ஸ் தொழில் அமைச்சர்கள் கூட்டங்கள் உள்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். பிரிக்ஸ் நாடுகளின் மக்களிடம் நீடித்த பொருளாதார வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, ஒட்டுமொத்த தொழில் உறவுகளை வலுப்படுத்துதல், புதுமை மற்றும் வேலை உருவாக்கலை ஊக்குவித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுடன் இதைச் செய்ய வேண்டும்.
- ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO) தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி பாராட்டு தெரிவிக்கிறோம். பங்கேற்புடன் கூடிய மற்றும் நீடித்த தழில் வளர்ச்சியை ஊக்குவித்து, விரைவுபடுத்துவது மற்றும் ஆப்பிரிக்காவில் தொழில்மயமாக்கலை ஊக்குவிப்பதில் பங்களிப்பு என்ற தனித்துவமான அதன் கடமைப்பாட்டை நினைவுகூர்கிறோம். இந்தச் சூழ்நிலையில், UNIDO-BRICS தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.
- பிரிக்ஸ் நாடுகளின் சுங்கவரி ஒத்துழைப்புக் கமிட்டி உருவாக்குவதிலும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதிலும், நமது சுங்கவரித் துறைகளின் நிர்வாகங்களின் பணியைப் பாராட்டுகிறோம். சுங்கவரி கட்டுப்பாட்டுக்கு சட்டபூர்வ அடிப்படையில் ஒத்துழைப்புகளையும் ஊக்குவிக்கும் நடைமுறைகளையும் நோக்கமாகக் கொண்டதாக இவை இருக்கும். சுங்க வரி நிர்வாகங்களுக்கு இடையில் கூட்டு செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கான பிரிக்ஸ் பொருளாதார கூட்டுமுயற்சி செயல் திட்டத்தை அமல் செய்வதைப் போல, பிரிக்ஸின் சுங்கவரி ஒத்துழைப்புக் கமிட்டி கட்டுப்பாடுகள் கையெழுத்தாவதையும் கருத்தில் கொண்டோம்.
- போர்ட்டலெஜா பிரகடனத்தை நாங்கள் நினைவுகூர்கிறோம். திறன்களை ஒரு தொகுப்பாக சேர்ப்பதற்கு பிரிக்ஸ் காப்பீடு மற்றும் மறுகாப்பீட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகள் அதில் கூறப்பட்டதை அங்கீகரிக்கிறோம். இந்த விஷயத்தில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
- உலகளாவிய அளவில் நியாயமான மற்றும் நவீன வரி முறைமையில் உள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தரங்களை சிறப்பாகவும் பரவலாகவும் அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கிறோம். அடிப்படை அரிமானம் மற்றும் லாபத்தை எடுத்துச் செல்லும் திட்டத்தை (BEPS) அமல் செய்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். நாடுகளின் தேசிய உண்மை நிலவரங்களுக்கு ஏற்ப இது அமைய வேண்டும். வளரும் நாடுகள் தங்களின் வரி திறனை உருவாக்கிக் கொள்வதற்கு நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உதவிட வேண்டும் என்று நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
- தீவிரமான வரி திட்டமிடலும், வரி நடைமுறைகளும், சமத்துவமான மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டோம். அடிப்படை அரிமானம் மற்றும் லாபத்தை எடுத்துச் செல்லும் திட்டத்தை நல்ல முறையில் கையாள வேண்டும். பொருளாதார நடவடிக்கை நிகழும் மற்றும் மதிப்பு கூட்டப்படும் பகுதியின் வரம்புக்கு உள்பட்டு, லாபத்துக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கு ஆதரவு தருவது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இதில் வரி தகவல்களை தானாக பரிமாறிக் கொள்ளும் பொதுவான தகவல் அளிப்பு தரம் (AEOI) அடங்கும்.
- சர்வதேச வரி விதிப்பு விஷயங்களில் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை கருத்தில் கொண்டோம். இந்த விஷயத்தில் வளர்ச்சிக்கு நிதியளிப்பது குறித்த அட்டிஸ் அபாபா செயல்பாட்டு செயல் திட்டத்தை நாங்கள் நினைவுகூர்கிறோம். சர்வதேச வரி விவகாரங்களில் தேசிய வரி ஆணையங்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை மற்றும் பங்கேற்புடன் கூடிய ஒத்துழைப்பை வலியுறுத்துதல், வளரும் நாடுகளுக்கு அதிக பங்களிப்பு அளித்தல், வெவ்வேறு வரி முறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு போதுமான, சமத்துவமான, பூகோள ரீதியில் பரந்ததாக இருப்பதற்கு அது உதவுகிறது.
- பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு பணிக் குழு மூலமாக இருப்பது உள்பட, ஊழலுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சொத்துகளை மீட்பது மற்றும் ஊழல் தொடர்பாக தேடப்படும் நபர்கள் மீது நடவடிக்கை ஆகியவற்றை ஆதரிக்கிறோம். சட்டவிரோத பணப்புழக்கம், கள்ளப் பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பணம் பதுக்குவது ஆகியவை உலகளவில் சவாலாக உள்ளது என்பதை ஏற்கிறோம். பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த மேம்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை இது ஏற்படுத்தக் கூடும் என்பதையும் ஏற்கிறோம். இந்த விஷயத்தில் எங்களது அணுகுமுறையை ஒருங்கிணைக்க தீவிரமாக செயல்படுவோம். ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் பிர சர்வதேச சட்டபூர்வ விதிகளின் அடிப்படையில் ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும் வலுவாக போராடுவதை ஊக்குவிப்போம்.
- 2015 பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகளை எட்டுவதற்கு, நீண்டகால அடிப்படையில் பசுமைஇல்ல வாயு வெளியாதலைத் தடுப்பதற்கு, சில பிரிக்ஸ் நாடுகளுக்க அணுசக்தி கணிசமான பங்காற்றும் என்பதை அங்கீகரிக்கிறோம். இந்த விஷயத்தில், தொழில்நுட்பத்தைப் பெறுதல் மற்றும் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்ட விரிவாக்கத்துக்கு நிதி வசதி பெறுதல் ஆகியவற்றை ஊகித்தறிவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறோம். இது பிரிக்ஸ் நாடுகளில் நீடித்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும்.
- வான்வெளிப் பகுதி அனைத்து நாடுகளுக்கும் அமைதி வழி ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியாகும். சர்வதேச சட்டத்தின்படி அனைத்து நாடுகளும் சமத்துவத்துடன் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை வலியுறுத்துகிறோம். வான்வெளிப் பகுதி எந்த வகையான ஆயுதம் அல்லது ராணுவ பயன்பாடு இல்லாமல் இருக்கும் என்பதை வலியுறுத்துகிறோம். வான்வெளியில் ஆயுதப்போட்டியைத் தடுப்பதற்கு சர்வதேச ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தங்களை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்துவது ஆயுதப்பரவல் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். சீனா மற்றும் ரஷிய சம்மேளனம் சமர்ப்பித்த வான்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவது, அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அல்லது வான்வெளி பொருள்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடுப்பதற்கு, மேம்படுத்தப்பட்ட வரைவு ஒப்பந்தம் அடிப்படையிலான கணிசமான முயற்சிகளை ஆதரிக்கிறோம். வான்வெளியில் முதலாவதாக ஆயுதங்களை நிலைநிறுத்த மாட்டோம் என்ற அரசியல் வாக்குறுதிக்கு சர்வதேச அளவில் முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறோம்.
- வான்வெளியில் நீண்டகாலம் நீடித்த வகையிலான செயல்பாடுகளை உறுதி செய்வதிலும், எதிர்கால தலைமுறையினருக்கு வான்வெளியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் முன்னுரிமை தரப்பட வேண்டும். வான்வெளியில் அமைதிவழி பயன்பாடுகள் (UNCOPUOS) குறித்த ஐ.நா. கமிட்டியின் தற்போதைய செயல்திட்டத்தில் இது ஒரு முக்கியமான நோக்கமாக இருப்பதைக் கருத்தில் கொண்டோம். இதுதொடர்பாக, வான்வெளியை நீடித்த கால பயன்பாட்டு செயல்பாடுகள் குறித்த, UNCOPUOS அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணை கமிட்டி பணிக் குழுவின் சமீபத்திய முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நீடித்த காலத்துக்கு வான்வெளி செயல்பாடுகள் குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை முடித்து, ஒருமித்த கருத்துகளை 2018 ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று இதில் குறிப்பிட்டுள்ளது. வான்வெளியை அமைதிக்காக பயந்படுத்துதல் மற்றும் ஆய்வு நடத்துதலுக்கான ஐ.நா. மாநாட்டு அமைப்பின் (UNISPACE + 50) 50வது ஆண்டு நிறைவை ஒட்டி 2018க்குள் இதை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா உள்பட, பிரிக்ஸ் நாடுகள் பலவற்றுக்கு எதிராக, சமீபத்தில் பல தாக்குதல்கள் நடைபெற்றதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எந்த வகையிலான பயங்கரவாதத்தையும், அதன் பரவலையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். கொள்கை அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, அரசியல், மரபு, இனம் அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்கள் எதுவாக இருந்தாலும், எந்த வகையிலான பயங்கரவாதச் செயல்களுக்கும் எந்த வகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறோம். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இருதரப்பு மற்றும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறோம்.
- ரசாயன மற்றும் உயிரியல் சார்ந்த பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்க, ஆயுதப்பரவல் தடுப்பு மாநாடு உள்பட ரசாயனம் மற்றும் உயிரியல் சார்ந்த பயங்கரவாதச் செயல்களை ஒழிப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பில் பல நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆதரிக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், பேரிழப்புகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் (WMD) – பயங்கவாதத் தொடர்பை சமாளிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை பலப்படுத்தும் நோக்கத்தில் 2018ல் மாநாடு நடத்துவதற்கு இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்கிறோம்.
- பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒட்டுமொத்தமான அணுகுமுறையை கையாள வேண்டும் என அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். பயங்கரவாதம், அடிப்படைவாதம், ஆள்தேர்வு, அன்னிய தீவிரவாதிகள் நடமாட்டம், தீவிரவாதிகளுக்கு நிதி கிடைக்கும் வழிகளைத் தடுப்பது, பண மோசடி உள்ளிட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், போதை மருந்து கடத்தல், கிரிமினல் நடவடிக்கைகள், தீவிரவாத முகாம்களை அழிப்பது, தீவிரவாத அமைப்புகள் சமூகவலைதளத்தை பயன்படுத்துவது உள்பட இன்டர்நெட் தொடர்பை தவறாகப் பயன்படுத்துவது, தகவல் தொழில்நுட்ப (ICT) வசதிகளை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடுப்பதும் இதில் அடங்கும். தீவிரவாதத்தை வெற்றிகரமாக ஒழிப்பதற்கு முழு மனதுடனான அணுகுமுறை தேவை. பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தை மதிப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் இருக்க வேண்டும்.
- தேசிய பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உயர் பிரதிநிதிகளின் சமீபத்திய கூட்டத்தை நாங்கள் சரியானதென்று ஏற்றுக் கொள்கிறோம். இந்தச் சூழ்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு பிரிக்ஸ் கூட்டு பணிக் குழு உருவாக்கப்பட்டு முதலாவது கூட்டம் புதுடெல்லியில் 14 செப்டம்பர் 2016ல் நடத்தப்பட்டதை வரவேற்கிறோம். பயங்கரவாத ஒழிப்பு விஷயங்கள் தொடர்பாக பிரிக்ஸ் நாடுகளுக்குள் பேச்சுவார்த்தைகளையும் புரிதல்களையும் இது ஊக்குவிக்கும் என்றும், பயங்கரவாதத்தின் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம்.
- சர்வதேச பயங்கரவாதம், குறிப்பாக இராக் மற்றும் லெவாந்தில் இஸ்லாமிய மாநில அமைப்பு (ISIL, டாயேஸ் என்றும் கூறப்படுகிறது) மற்றும் சார்பு பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, உலகளாவிய வகையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற உண்மையை ஏற்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிராக பலநிலைகளில் அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா.வின் மத்திய பங்கை வலியுறுத்தும் நேரத்தில், இதுதொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். பயங்கரவாத வரம்புகளை ஒழிக்கும் ஐ.நா. செயல்பாடுகளை செம்மையாக செயல்படுத்துவதில் உள்ள உறுதியைக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம். ஐ.நா. பொது சபையில், சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு குறித்த ஒட்டுமொத்த கூட்டமைப்பை (CCIT) ஏற்பதை, எந்தத் தாமதமும் இல்லாமல், விரைவுபடுத்துவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். தங்கள் எல்லையில் இருந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்காமல் தடுப்பதில் எல்லா அரசுகளுக்கும் உள்ள பொறுப்புகளை நினைவுபடுத்துகிறோம்.
- பண மோசடி மற்றும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் பரவலுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதில் FATF சர்வதேச விதிகளில், உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பதைத் தடுப்பதற்கு FATF வலுப்படுத்தப்பட்ட செயல்திட்டத்தை விரைவாக, சிறப்பாக, உலகளவில் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். செயல் திட்டத்தை அமல்படுத்துவதும் இதில் அடங்கும். FATF மற்றும் FATF முறையிலான பிராந்திய அமைப்புகளில் (FSRB) நமது ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
- உலக போதை மருந்து பிரச்சினை குறித்து நியூயார்க்கில் 19- 21 ஏப்ரல் 2016ல் நடைபெற்ற பொது சபையின் சிறப்பு அமர்வில் வெளியிடப்பட்ட ஆவணத்தை வரவேற்கிறோம். சட்டவிரோதமாக போதை மருந்துகள் குறிப்பாக ஓப்பியம் வகைகள், உற்பத்தி செய்து கடத்தப்படுவதால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலை ஒழிப்பதில், சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். போதை மருந்து கடத்தலுடன் பயங்கரவாதம், பண மோசடி, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்கு தொடர்பு அதிகரித்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிடுகிறோம். பிரிக்ஸ் போதை மருந்து தடுப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம். புதுடெல்லியில் 8 ஜூலை 2016ல் நடைபெற்ற, போதை மருந்து தடுப்பு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வரவேற்கிறோம்.
- தகவல் தொழில்நுட்ப வசதிகள் விரிவாக்கம், நீடித்த வளர்ச்சி, மனித உரிமைகளுக்காக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பை மேம்படுத்துவது, கிரிமினல் மற்றும் பயங்கரவாதசெயல்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப் படுவதைத் தடுப்பது, நமது தொழில்நுட்ப, சட்ட அமலாக்க, R & D மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதுமைகள் மற்றும் திறன் வளர்ப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக்கொள்கிறோம். டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகளைக் குறைப்பதில், குறிப்பாக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பதில் உள்ள உறுதியை வலியுறுத்துகிறோம். நமது அணுகுமுறை பன்முகத்தன்மை கொண்டதாகவும், பங்கேற்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதையும், அணுகுதல், அந்த அணுகுதலின் தரத்தை வலியுறுத்துவதில் புரிதல் ஏற்பட வேண்டும் என்பதையும் அங்கீகரிக்கிறோம்.
- தகவல் தொழில்நுட்ப வசதிகள் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் மூலமாக நடைபெற வேண்டும், சர்வதேச அளவில், ஐ.நா. பிரகடனம் உள்பட, ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்; குறிப்பாக அரசியல் சுதந்திரம், எல்லை ஒருமைப்பாடு, அரசுகளின் இறையாண்மை சமத்துவம், பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்த்துக் கொள்வது, மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல், அந்தரங்க உரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு மதிப்பு தருவது, ஆகியவை, தகவல் தொழில்நுட்ப வசதிகளை அமைதியான, பாதுகாப்பான, திறந்த மற்றும் ஒத்துழைப்புடன் பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான விஷயங்களாக உள்ளன என்பதையும் வலியுறுத்துகிறோம்.
- தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயங்கரவாத மற்றும் கிரிமினல் பயன்பாட்டுக்கு கையாளப்படுவதைத் தடுப்பதில், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக எதெக்வினி, போர்டலெஸா மற்றும் உபா பிரகடனங்களில் கூறப்பட்ட பொது அணுகுமுறைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம். தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதில் ஐ.நா.வுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதையும் வலியுறுத்துகிறோம். UNGGE நடைமுறைகள் உள்பட, மாநிலங்கள் பொறுப்பாக செயல்படுவதற்கு விதிகள், அளவுகோல்கள் மற்றும் கோட்பாடுகளை ஏற்பதற்கு ஒன்றுபட்டு செயல்படுவதை நாம் தொடர்ந்திட வேண்டும். தகவல் தொழில்நுட்ப சேவை பயன்பாட்டில் நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என ஒப்புக்கொள்கிறோம்.
- திறந்த, பிரிக்கப்படாத மற்றும் பாதுகாப்பான இன்டர்நெட் தொடர்பை நாங்கள் வற்புறுத்துகிறோம். இன்டர்நெட் என்பது உலகளாவிய வசதி என்பதையும், அரசுகள் சமத்துவத்துடன் அதில் பங்கேற்க வேண்டும் என்பதையும், அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களின் பொறுப்புகளை அறிந்து பங்காற்ற வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
- நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மின்சார சேமிப்பு மற்றும் மின்சாரத்தை செம்மையாக பயன்படுத்துதலின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்கிறோம். இதுதொடர்பாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்.
- மின்சார உற்பத்தியை அதிகரிப்பது, செம்மையாக பகிர்ந்தளிப்பது ஆகிய சவால்களை ஒப்புக் கொள்கிறோம். குறைந்த கார்பன் எரிபொருள் பயன்பாடு மற்றும் சுத்தமான எரிசக்தி தீர்வுககளை அதிகரிப்பதன் அவசியத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் செய்ய வேண்டிய முதலீடு பற்றியும் அறிந்திருக்கிறோம். எனவே, தூய்மையான எரிசக்தி மற்றும் நிதி வசதி பெறுவதில் கவனம் செலுத்துவதற்கு, சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று நம்புகிறோம். நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் தூய்மையான எரிசக்திக்கு குறிப்பிடத்தக்க பங்குள்ளதையும் கவனத்தில் கொள்கிறோம். நீடித்த வளர்ச்சி, எரிசக்தி வசதி கிடைத்தல், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை பூமியின் எதிர்காலம் மற்றும் வளமைக்கு முக்கியமானவை என்பதை ஏற்கிறோம். தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
- நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தின்படி பசுமை இல்ல வாயு உற்பத்தியைக் குறைக்கவும், பொருளாதார ரீதியில் சிக்கனமான மற்றும் தூய்மையான எரிபொருளாக பரவலாக பயன்படுத்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
- பிரிக்ஸ் நாடுகள் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் உள்ளிட்ட நோய்களின் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளதைக் கருத்தில் கொண்டுள்ளோம். இதுதொடர்பாக, 2020க்குள் எச்.ஐ.வி. சிகிச்சையில் 90–90–90 என்ற நிலையை எட்டுவதில் பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியைக் குறிப்பிடுகிறோம். எச்.ஐ.வி மற்றும் காசநோய் சிகிச்சையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மேம்பட்ட ஒத்துழைப்பு அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினோம். இதில் தரத்துக்கு உத்தரவாதமான மருந்துகள் தயாரிப்பு மற்றும் நோயறியும் முறைகளும் அடங்கும்.
- ஜூன் 2016க்குள் எய்ட்ஸ் நோய்க்கு முடிவு கட்டுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நிலைக் கூட்டம் குறித்தும், மாஸ்கோவில் 2017ல் WHO அமைப்பின் ஆதரவில் நடைபெறவுள்ள காசநோய் குறித்த உலகளாவிய மாநாடு குறித்தும் நாங்கள் கவனத்தில் கொண்டோம்.
- உலகளாவிய சுகாதார சவால்களை ஏற்றுக் கொண்டு, ஆட்கொல்லி நோய்களுக்கு முடிவு கட்டுவதற்கான நோய் கண்டறியும் வசதிகளை உருவாக்கவும், மருந்துகளை உருவாக்கவும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். பாதுகாப்பான, செம்மையான, தரமான, கட்டுபடியாகும் விலையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கச் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
- UNGA-71ன் போது நுண்கிருமி தடுப்பு (AMR) குறித்த உயர்நிலைக் கூட்டத்தை வரவேற்கிறோம். பொது ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் AMR எந்த வகையில் தீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது என அதில் பேசப்படுகிறது. நாம் கையாளும் சிறந்த சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, சவால்களை விவாதிப்பது, கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காக, நமது ஆரோக்கியம் மற்றும் / அல்லது கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கு இடையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அடையாளம் காண விரும்புகிறோம்.
- நீண்ட கால அடிப்படையிலான சமத்துவமான பூகோள ரீதியிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் உள்ள உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம். 2015- 2020க்கான பிரிக்ஸ் மக்கள் தொகை விவகாரங்களுக்கான செயல்திட்டத்தின்படி, மக்கள் தொகை தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பைத் தொடரவுள்ளோம்.
- 9 ஜூன் 2016ல் ஜெனிவாவிலும், 27 – 28 செப்டம்பர் 2016ல் புதுடெல்லியிலும் நடந்த பிரிக்ஸ் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரவேற்கிறோம். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், திறன் வளர்ப்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் சிறந்த செயல்பாடுகளை பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதற்காக, முன்னணி தொழிலாளர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம். கண்ணியமான பணி செயல் திட்டம் உள்பட தரமான வேலைவாய்ப்பு, நீடித்த சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியில் உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவை பங்கேற்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதை ஒப்புக்கொண்டோம்.
- புதுடெல்லியில் 30 செப்டம்பர் 2016ல் நடைபெற்ற பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் நான்காவது கூட்டத்தின் முடிவுகளையும், கல்வி குறித்த புதுடெல்லி பிரகடனத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி மற்றும் திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். உயர் தரமான கல்வி எல்லோருக்கும் கிடைப்பதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். பிரிக்ஸ் பல்கலைக்கழக நெட்வொர்க் (BRICSNU), மற்றும் பிரிக்ஸ் பல்கலைக்கழக லீக் (BRICSUL) , ஆகியவற்றின் முன்னேற்றங்கள் திருப்திகரமாக உள்ளன. அவை 2017ல் செயல்பாடுகளைத் தொடங்கும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் உயர் கல்வியில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியை இந்த இரு முயற்சிகளும் ஊக்குவிக்கும்.
- கொல்கத்தாவில் 3 – 6 செப்டம்பர் 2016ல் இளம் தூதர்கள் அமைப்பின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததைப் பாராட்டுகிறோம். அறிவு மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிப்பதற்கு, பிரிக்ஸ் தூதரக கல்வி நிலையங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை வரவேற்கிறோம்.
- 8 அக்டோபர் 2016ல் நடைபெற்ற பிரிக்ஸ் STI அமைச்சர்களின் நான்காவது கூட்டத்தின் முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம். ஜெய்ப்பூர் பிரகடனம் அதில் ஏற்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனை, குறிப்பாக சமூக சவால்களை எதிர்கொள்வதில் இளம் அறிவியல் திறமையாளர்களை பயன்படுத்திக் கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேம்படுத்திய செயல் திட்டத்துக்கு (2015 – 2018) ஒப்புதல் தரப்பட்டது; பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகளுக்கு இணைந்த தளத்தை உருவாக்குதல் ; புதிய அறிவை உருவாக்குதல் மற்றும் புதுமையான பொருட்கள், சேவைகள், செயல்முறைகளை உருவாக்குதல்; பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் மற்றும் கூடுதல் தகவல்களைப் பயன்படுத்தி பொதுவான உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் சமூக – பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
- பிரிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் புதுமை முயற்சிகள் திட்டத்தை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். இளம் விஞ்ஞானிகளுக்கு பிரிக்ஸ் புதுமை சிந்தனை பரிசை ஏற்படுத்தி, முதலாவது பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை இந்தியாவில் நடத்துவதை வரவேற்கிறோம். பிரிக்ஸ் STI வரம்பு திட்டத்தின் முதலாவது அழைப்பிற்கு, பத்து அம்சங்கள் தொடர்பாக வரவேற்பு கிடைத்து, ஐந்து பிரிக்ஸ் STI அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடைய நிதி அமைப்புகளிடம் இருந்து நிதிக்கான உத்தரவாதங்களும் கிடைத்திருப்பதைக் கவனத்தில் கொள்கிறோம். பிரிக்ஸ் உலகளாவிய ஆராய்ச்சி மேம்பாட்டு கட்டமைப்பு நெட்வொர்க் (BRICS-GRAIN) வலுப்படுத்த ஆராய்ச்சி கட்டமைப்பு மற்றும் மெகா அறிவியலுக்கான பிரிக்ஸ் பணிக் குழு ஏற்படுத்தப்பட்டதை வரவேற்கிறோம்.
- 23 செப்டம்பர் 2016ல் நடைபெற்ற வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவுகளை, கூட்டுப் பிரகடனம் உள்ளிட்டவற்றை நாங்கள் வரவேற்கிறோம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது, ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்சினையைக் கையாள்வது, பட்டினி, சமத்துவமின்மை மற்றும் ஏழ்மையை வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, உற்பத்தித் திறன், இயற்கை வளங்களை நீடித்த காலத்துக்கு பயன்படும் வகையில் மேலாண்மை செய்வது, பிரிக்ஸ் நாடுகளுக்குஇடையே வேளாண் வர்த்தகம் போன்றவை மூலம் ஒழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். உலகின் முன்னணி வேளாண் உற்பத்தியாளர்களாக, உலகில் பெரும்பகுதி மக்கள் தொகையை கொண்ட நாடுகளாக, வேளாண்மைத் துறையில் பிரிக்ஸ் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். அறிவியல் அடிப்படையிலான வேளாண்மையின் அவசியத்தையும், தகவல் தொழில்நுட்ப சேவைகளை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஏற்கிறோம்.
- வேளாண்மை ஆராய்ச்சிக் கொள்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு மற்றும் திறன் உருவாக்கல், பிரிக்ஸ் நாடுகளில் சிறிய அளவு நிலத்தில் வேளாண்மை செய்யும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, பிரிக்ஸ் வேளாண்மை ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடதை நாங்கள் வரவேற்கிறோம்.
- தண்ணீரை நம்பியே வேளாண்மை இருப்பதைக் கருத்தில் கொண்டு, வறட்சிக் காலத்தில் சமாளிப்பதற்கு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாசன கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம்.
- தகவல் தொழில்நுட்ப வசதிகளை (ICT) மின்னணு நிர்வாகம், நிதி உள்ளடக்கம், குறிப்பிட்ட பிரிவினருக்கு பலன்கள் கிடைக்கச் செய்தல், மின்னணு வணிகம், திறந்த அரசு நிர்வாகம், டிஜிட்டல் தகவல்கள் மற்றும் சேவைகள் ஆகியவை டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் வகையில் பயன்படுத்தப் படுவதற்கு, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மதிப்பை உறுதியாக ஏற்கிறோம். பகிர்ந்தளிக்கப்படும் பலன்களை உறுதி செய்வதற்கு, மின்னணு வணிகத்தில் சிறப்பாக பங்கேற்பதற்கு திறன் உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
- எதிர்வரும் பிரிக்ஸ் தொலைத் தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்தை வரவேற்கிறோம்.தொழில்நுட்ப டிரெண்ட்கள், வளர்ச்சிக்கான தர அளவுகள், திறன் மேம்பாடுகள் மற்றும் கொள்கை வரம்புகள் உள்பட, நமது ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதாக இது இருக்கும்.
- மென்பொருள் மற்றும் IT சாதனங்களில் உலக சந்தையில் விரிவாக்கத்தை நோக்கி கூட்டு முயற்சிகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ICT ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் பணிக் குழு வரம்புக்கு உள்பட்டு ICT ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பலப்படுத்தவும் வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- 19 – 20 ஏப்ரல் 2016ல் புனித பீட்டர்ஸ்பெர்க்கிலும், 22 ஆகஸ்ட் 2016ல் உதய்ப்பூரிலும் நடைபெற்ற, பேரழிவு நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரிக்ஸ் அமைச்சர்களின் கூட்டத்தின் முடிவுகளை வரவேற்கிறோம். இரண்டாவது கூட்டத்தில் ஏற்கப்பட்ட உதய்ப்பூர் பிரகடனத்தை நாங்கள் வரவேற்று, பேரிடர் நிர்வாகத்துக்கான பிரிக்ஸ் கூட்டு பணிக் குழு அமைக்கப் பட்டதைப் பாராட்டுகிறோம்.
- மாத்யூ சூறாவளியால் உயிரிழந்த ஹைதி மற்றும் கரீபியன் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரத்திற்கு உதவும் வகையில் ஐ.நா.வும் மனிதாபிமான நாடுகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
- சுற்றுச்சூழல் குறித்து கோவாவில் 15 – 16 செப்டம்பர் 2016ல் நடைபெற்ற பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவுகளை, சுற்றுச்சூழல் குறித்த கோவா அறிக்கை உள்ளிட்டவற்றை, நாங்கள் வரவேற்கிறோம். காற்று மற்றும் தண்ணீர் மாசுபடுதலைத் தடுத்து நிறுத்துவது, கட்டுப்படுத்துவது , கழிவுகளை சிறப்பாகக் கையாள்வது, பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் முடிவை வரவேற்கிறோம். சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு முயற்சிகளில் பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஏற்கிறோம். இதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அமைப்பு உருவாக்குவதும் அடங்கும்.
- தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற, அழியும் நிலையில் உள்ள காட்டு மூலிகைகள், மலர் செடிகளின் சர்வதேச வர்த்தகம் குறித்த கூட்டமைப்பின் 17வது மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் முடிவுகளை வரவேற்கிறோம். 24 செப்டம்பர் – 4 அக்டோபர் 2016 வரை நடந்த மாநாட்டில், அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், வர்த்தகக் கட்டுப்பாட்டை அடையாளம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது.
- பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் வரம்பு குறித்த கூட்டமைப்பை (UNFCCC)ஆதாரமாகக் கொண்ட பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றதையும், 22 ஏப்ரல் 2016ல் பல நாடுகள் அதில் கையெழுத்திட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம். ஒருங்கிணைந்த, சமத்துவமான, நல்ல நோக்கம் கொண்ட இயல்புடைய பாரிஸ் ஒப்பந்தம், UNFCCC-ன் கோட்பாடுகளை மறு உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. அது வெவ்வேறு தேசிய சூழ்நிலைகளில் சமத்துவமான மற்றும் பொதுவான, ஆனால் மாறுபட்ட பொறுப்புகள் மற்றும் திறன்களை (CBDR & RC) உள்ளடக்கியதாக இருக்கிறது.
- பாரிஸ் ஒப்பந்தத்தையும், 4 நவம்பர் 2016ல் கட்டாய உள்நுழைவையும் வரவேற்கிறோம். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, பருவநிலை பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கும், ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கு ஏற்ப மாறிக் கொள்வதற்கும், வளரும் நாடுகளுக்கு நிதி வசதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் உருவாக்கல் உதவிகளை தேவையான அளவுக்கு வழங்கி, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என வளர்ந்த நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.
- 2030 செயல்திட்டத்தில் உள்ளவாறு அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்துக்கான உறுதிமொழியை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். வளர்ச்சியின் பிரதிநிதிகளாக பெண்கள் முக்கிய பங்காற்றுவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மற்றும் குறிக்கோள்கலை அடைவதில் முன்னேற்றம் காண்பதில், பெண்களின் சமத்துவமான பங்கேற்பு முக்கிய பங்காற்றுகிறது என்பதையம் ஒப்புக்கொள்கிறோம். இந்த உறுதிமொழிகளை அமல் செய்வதில் பெண்களின் பொறுப்பேற்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம்.
- நமது நாடுகளில் இளைஞர்கள் மக்கள் தொகையின் திறன் மற்றும் பன்முகத்தன்மையையும், அவர்களின் தேவைகள் மற்றும் பேரார்வத்தையும் அறிந்துள்ள நிலையில், குவாஹாட்டியில் நடைபெற்ற பிரிக்ஸ் இளைஞர் மாநாட்டின் முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம். இளைஞர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெறுவதற்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் திறன் பயிற்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் “குவாஹாட்டி பிரிக்ஸ் இளைஞர் 2016 செயல்பாட்டுக்கான அழைப்பு” அதில் அடங்கியுள்ளது.
- மத்தியப் பிரதேசம் கஜுராஹோவில் 1 – 2 செப்டம்பர் 2016ல் நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுலா மாநாட்டை வரவேற்கிறோம். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே சுற்றுலா ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பயனுள்ளதாக ஆக்கவும் அது உதவியது.
- உலக மக்கள் தொகையில் 43% கொண்டதாகவும், வேகமாக நகரமயமாக்கல் நடந்து வரும் பகுதியாகவும் இருப்பதால், நகரமயமாக்கலில் பன்முக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளதை நாம் கண்டிருக்கிறோம். வீட்டுவசதி மற்றும் நீடித்த நகர்ப்புற வளர்ச்சி – ஹேபிடேட் III (கிவிட்டோ, 17 – 20 அக்டோபர் 2016) குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் புதிய நகர்ப்புற செயல்திட்டம் ஏற்கப்படுவதற்கு இது வழிவகுக்கும் என்று நம்புகிறோம். விசாகப்பட்டினத்தில் 14 – 16 செப்டம்பர் 2016லும், மும்பையில் 14 – 16 ஏப்ரல் 2016லும் நடைபெற்ற பிரிக்ஸ் நகரமயமாக்கல் அமைப்பு, பிரிக்ஸ் நட்புணர்வு நகரங்கள் மாநாட்டை வரவேற்கிறோம். நமது நகரங்களுக்கு இடையிலும், தொடர்புடைய மக்களுக்கு இடையிலும் தொடர்புகள் அதிகரிப்பதற்கு இந்த மாநாடுகள் உதவின. நகர்ப்புற நிர்வாகத்தை பலப்படுத்துதல், நமது நகரங்களைப் பாதுகாப்பானதாகவும் பங்கேற்புள்ளதாகவும் ஆக்குதல், நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துதல், நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளுக்கும் நீடித்த காலம் நிலைத்திருக்கும் நகரங்களை உருவாக்கவும் நிதி அளிப்பதற்கு, ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- வரவிருக்கும் பிரிக்ஸ் உள்ளாட்சி அமைப்புகளின் மாநாட்டில் நிபுணத்துவங்கள், உள்ளாட்சி பட்ஜெட்கள் உள்ளிட்ட சிறந்த செயல்பாடுகள் பற்றி தகவல் பரிமாற்றம் நடப்பதற்கான முயற்சியாக இருக்கும் என கவனத்தில் கொள்கிறோம்.
- ஒழுங்கான, பாதுகாப்பான, வழக்கமான மற்றும் பொறுப்புமிக்க வகையில் இடம் பெயர்வு மற்றும் மக்கள் நகர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 8 அக்டோபர் 2015ல் ரஷிய சம்மேளனம், சோச்சியில் நடைபெற்ற முதலாவது பிரிக்ஸ் இடம்பெயர்வு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவுகளை வரவேற்கிறோம்.
- நீடித்த வளர்ச்சியிலும், பரஸ்பர புரிதலை வளர்ப்பதிலும், நமது மக்களுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் கலாச்சாரத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பிரிக்ஸ் நாடுகளின் மக்களுக்கு இடையில் கலாச்சார பரிமாற்றத்தை விரிவாக்கம் செய்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், புதுடெல்லியில் 2 – 6 செப்டம்பர் 2016ல் முதலாவது பிரிக்ஸ் திரைப்பட விழா நடத்தப்பட்டதைப் பாராட்டுகிறோம்.
- 23 அக்டோபர் 2016ல் ஜெனிவாவில் இரண்டாவது பிரிக்ஸ் நாடாளுமன்ற சம்மேளனத்தின் கூட்டம், “SDG-க்கள் அமல்படுத்துவதில் பிரிக்ஸ் நாடாளுமன்ற ஒத்துழைப்பு” என்ற பொருளின் மீது நடைபெறுவதை வரவேற்கிறோம்.
- ஜெய்ப்பூரில் 20- 21 ஆகஸ்ட் 2016ல் நடைபெற்ற பிரிக்ஸ் பெண் நாடாளுமன்றவாதிகள் அமைப்பு கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும், SDG-க்களை மையமாகக் கொண்ட, ஜெய்ப்பூர் பிரகடனம் ஏற்கப்பட்டது குறித்தும் பாராட்டு தெரிவிக்கிறோம்.நீடித்த வளர்ச்சி, பாலின சமத்துவம் வளர்ப்பு மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் என மூன்று பரிமாணங்களிலும் நாடாளுமன்ற செயல்பாடுகளை பலப்படுத்துவதில் உறுதியாக இருப்பதையும் மாநாடு வலியுறுத்துகிறது.
- நமது பொருளாதாரங்களில் சிக்கனமான செலவில், நீடித்த தன்மையுடன் ரயில்வே துறையில் வளர்ச்சி காண்பதை நோக்கமாகக் கொண்ட பிரிக்ஸ் ரயில்வே ஆராய்ச்சி நெட்வொர்க் கலந்துரையாடல்களை கவனத்தில் கொள்கிறோம்.
- 17 வயதுக்கு உள்பட்டோருக்கு முதலாவது பிரிக்ஸ் கால்பந்து போட்டிகளை கோவாவில் 5 0 15 அக்டோபர் 2016ல் நடத்தியமைக்காக இந்தியாவைப் பாராட்டுகிறோம். இந்த விஷயத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் பரிமாற்றங்களை வளர்க்கும் வகையில் பிரிக்ஸ் விளையாட்டுக் கவுன்சிலுக்கான முயற்சியாக இதைக் காண்கிறோம்.
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம், வியாபாரம் மற்றும் முதலீடுகள் அதிகரித்து வருவதை அறிந்து, பிரிக்ஸ் வங்கிகளிடை ஒத்துழைப்பு நடைமுறையின் முக்கிய பங்கையும் அறிந்துள்ளோம். பிரிக்ஸ் நாடுகளின் தேசிய வளர்ச்சி வங்கிகள் மற்றும் புதிய வளர்ச்சி வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்கிறோம். பிரிக்ஸ் நாடுகளில் பொருளாதார ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஆண்டுதோறும் பிரிக்ஸ் பொருளாதார ஆராய்ச்சி விருதை ஏற்படுத்திய இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் முயற்சியை வரவேற்கிறோம்.
- பொதுவான வளர்ச்சிக்கு நமது கூட்டு முயற்சிகளை பலப்படுத்துவதில் உள்ள உறுதியை வலியுறுத்துகிறோம். இந்த விஷயத்தில், கோவா செயல் திட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
- பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவின் தலைமையை சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷியா ஆகியவை பாராட்டின. பிரிக்ஸ் ஒத்துழைப்பு செயல்திட்டம் நல்ல வேகத்துடன் உள்ளதாகவும் பாராட்டின.
- பிரிக்ஸ் மாநாடுகளின் முடிவுகள் மற்றும் வெளியிடப்பட்ட ஆவணங்களை பரிசீலித்தல் மற்றும் அமல் செய்வது குறித்த தொடர் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். இந்த செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கிறோம்.
- எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் நடத்தியமைக்காக இந்திய அரசுக்கும், மக்களுக்கும் சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷிய நாடுகள் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொண்டன.
- ஒன்பதாவது பிரிக்ஸ் மாநாட்டை 2017ல் நடத்துவதற்கு முன்வந்தமைக்காக சீனாவுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷிய நாடுகள் பாராட்டு தெரிவித்து, அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்தன.