புதுதில்லி ராஜ்பாத்தில், இந்தியாவின் 72-வது குடியரசு தின கோலாகல கொண்டாட்டதைக் குறிக்கும் வகையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போர் வீரர்களின் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இதர படைப் பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு, முதன்முறையாக பங்களாதேஷ் படைப்பிரிவும் அணிவகுப்பில் பங்கேற்றது. அணிவகுப்பில் கலந்து கொண்ட பல்வேறு அலங்கார ஊர்திகள் இந்தியாவின் எழுச்சிமிகு பன்முக கலாச்சாரத்தைப் பறைசாற்றியதுடன், பல்வேறு துறைகளில் நாடு அடைந்துள்ள
விரைவான முன்னேற்றத்தையும் பிரதிபலித்தன. உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு குரல் கொடுங்கள், தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் கருப்பொருளுடான வாகனங்களும் அணிவகுத்தன. நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த ஆண்டைக் குறிக்கும் வாகனமும் அணிவகுப்பில் பங்கேற்றது.