அரசு மின்னணு சந்தை தளமான ஜிஇஎம் (GeM) தளம் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த தளம் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் இது அதிக பங்கு வகித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"8 ஆண்டுகளை நிறைவு செய்த தளமான ஜிஇஎம் (@GeM_India) சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் பாராட்டுக்கள். இந்த தளம் சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த விற்பனையை எட்டியுள்ளது. மிக முக்கியமாக இது தொழில்முனைவோருக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், எஸ்.சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அரசு மின் சந்தை தளம், மகளிருக்கு அதிகாரமளித்தலிலும் பெரிய பங்கு வகித்துள்ளது.
Compliments to all stakeholders of @GeM_India on the platform completing 8 years. This platform has achieved an impressive cumulative sale of nearly Rs. 10 lakh crore. But, most importantly it has provided opportunities to entrepreneurs, particularly those associated with MSMEs,…
— Narendra Modi (@narendramodi) August 9, 2024