பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜான் ஈவ்ஸ் லெ டிரியோன் புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடி கடந்த ஜூன் 2017ல் பிரான்ஸ் விஜயத்தின் தொடர்ச்சியாக இருதரப்பு நல்லுறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரான்ஸ் அமைச்சர் பிரதமருக்கு விளக்கினார்.
வளர்ந்து வரும் இந்தியா-பிரான்ஸ் பங்கேற்பிற்கு திரு. லெ டிரியோன் தற்போது வகித்து வரும் பதவியிலும் இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக வழங்கிய பங்களிப்பிற்கும் பிரதமர் பாரட்டு தெரிவித்தார்.
இந்தியா-பிரான்ஸ் இடையேயான தளத்தகை கூட்டாண்மை, வெறும் இரு தரப்பு உறவுகளுடன் நின்றுவிடாமல் பிராந்திய மற்றும் உலகளாவிய அளவிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் பாடுபடும் சக்தியாக திகழ வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
அதிபர் மக்ரோனை விரைவில் இந்தியாவில் வரவேற்க தாம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.