குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலையை நிறுவியதற்காகப் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் திரு.எச்.டி.தேவகவுடா பாராட்டு தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையம் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவிடம் அவரது சொந்த ஊரான நாடியாடில் கட்டப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதருக்கு உலகிலேயே மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ள சிலை அதிக ஈர்ப்புடையதாகவும், உள்ளூர் தன்மையுடையதாகவும் இருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இதனைப் பார்வையிட வருகிறார்கள் என்றும் ‘ஒற்றுமையின் சிலை’, ‘சர்தார் சரோவர் அணை’ ஆகியவற்றின் அழகை ரசிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒற்றுமையின் சிலையை முன்னாள் பிரதமர் திரு.எச்.டி.தேவகவுடா பார்வையிட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.