நேபாள முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவருமான திரு.புஷ்ப கமல் தாஹல் “பிரச்சந்தா” இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இரு தலைவர்களும் இந்தியா-நேபாள் உறவுகளின் முன்னேற்றம் மற்றும் பரஸ்பர அக்கறையுள்ள இதர விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
தங்களுக்கு இடையேயான முந்தைய கலந்துரையாடல்களை அன்புடன் நினைவுக் கூர்ந்த பிரதமர் திரு. மோடி, இந்தியா-நேபாள் உறவுகளை வலுப்படுத்த திரு. தாஹல் ஆற்றிய மதிப்பு மிக்க பங்குப் பணிக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டு நேபாளத்தில் தாம் மேற்கொண்ட இரண்டு பயணங்களை நினைவுக் கூர்ந்த பிரதமர், இந்தியா-நேபாள் உறவுகள் அடிக்கடி நடைபெறும் உயர்நிலை பேச்சுக்கள் மூலம் வலுப்பெற்று வருவதாக கூறினார்.