பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள பாக்ட்கோரா விமான நிலையத்தில் 1549 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிவில் என்க்ளேவ் எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட முனைய கட்டிடம் 70,390 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும். 3000 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்படும். ஆண்டுக்கு 1 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இது இருக்கும். சுற்றுச்சூழல் பொறுப்பை வலியுறுத்தும் வகையில், அந்த முனைய கட்டடம் ஒரு பசுமை கட்டடமாக இருக்கும்.
இந்த வளர்ச்சி பாக்டோக்ரா விமான நிலையத்தின் செயல்பாட்டு திறன், பயணிகள் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும். இது பிராந்தியத்திற்கான முக்கிய விமான பயண மையமாக அதன் பங்கை வலுப்படுத்தும்.
Glad to have met you @SubramanianKri! As always, brimming with ideas and insights. Good to see you continue pursuing your passion towards writing and policy. https://t.co/ASeDKSCPFw
— Narendra Modi (@narendramodi) August 16, 2024